[] []   Sengai Podhuvan’s ebook no. 1 செங்கைப் பொதுவன் மின்னூல் எண் 1   KURINJI-PATTU A Culture of Conjugal Love of the Tamils   குறிஞ்சிப் பாட்டு தமிழர் திருமண பண்பாட்டை உணர்த்தும் நூல் கி. மு. மூன்றாம் நூற்றாண்டுப் பாடல்   களவுப் புணர்ச்சி திருமணத்துக்கு முன் காதல் உறவு கி. மு. மூன்றாம் நூற்றாண்டு     கபிலர் பாடிய பாட்டு     A poem on Conjugal bliss before marriage Author of the poem Kapilar belongs to third century B. C.     விளக்கம் முனைவர். செங்கைப் பொதுவன் Dr.Sengai Podhuvan M. A., M. Ed., Ph. D.         உரிமை - Creative Commons Attribution-ShareAlike 4.0 International You are free: to Share — to copy, distribute and transmit the work; to make commercial use of the work with attributing this original work. உரிமை  - கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம். இவ்வுரிமை நூலின் எழுத்துகளுக்கு மட்டுமே.  படங்களுக்கு அல்ல.     பொருளடக்கம் பொதுக் குறிப்பு 9  சிறப்புக் குறிப்பு 10  பாடலும் விளக்கமும் 11  1 தோழி, தாயிடம் சொல்கிறாள். தன் தோழி தலைவியின் நோய்க்குக் காரணம் என்னவென்று ஊரெல்லாம் கேட்டறிந்தும், முருகு-விழா நடத்தியும் தீரவில்லையே என்று வருந்திக்கொண்டிருக்கிறாய். 12  2 யாருக்கும் சொல்லக்கூடாது என்று மறைத்துவைத்திருந்த செய்தியை என்னிடம் மட்டும் என் தோழியாகிய தலைவி சொன்னாள் 13  3 அணிமணிகள் போனால் திரும்பவும் பெற்றுக்கொள்ளலாம். சால்பு குன்றினால் திரும்பப் பெற இயலாது என அறிஞர் கூறுவர் 14  4 தலைவிக்கு மன்றல் நடந்துவிட்டது. இது நானும் அவளும் ஆராய்ந்து மேற்கொண்ட முடிபு. இது தாயாகிய உனக்கும் தெரிந்தால் பழி ஒன்றும் இல்லை. 15  5 இந்த மன்றல்-மணம் முறைப்படி நடக்கவில்லையே என்று இவள் தேம்பிக்கொண்டிருக்கிறாள் 17  6 இருபெரு வேந்தர்க்கிடையே போர் நிகழும்போது இடைநிற்கும் சான்றோர் போல நானும் கலங்கிக்கொண்டிருக்கிறேன் 18  7 குடி, குலம் போன்றவற்றைப் பார்க்காமல் நிகழ்த இந்த மன்றல்-மணம் பற்றிச் சொல்கிறேன். சினம் கொள்ளாமல் கேட்பாயாக 19  8 தினைப்புனம் காத்து மாலையில் திரும்புக என நீ அனுப்பிவைத்தாய் 20  9 நீ சொன்னபடி, தழல், தட்டை, குளிர் கருவிகளில் இசை எழுப்பிக்கொண்டு தினைப்புனம் காத்துக்கொண்டிருக்கும் வேளையில், 22  10 பெருமழை பொழிந்தது 24  11 அருவியில் தண்ணீர் கொட்டியது. நாங்கள் நீராடினோம் 25  12 பாயம் பாடிக்கொண்டு கூந்தலை உலர்த்தினோம் 26  13 அங்கே பூக்கள் (99) பூத்துக்கிடந்தன 27  14 அவற்றைப் பறித்துப் பாறையில் குவித்துவிட்டு, கிளி ஓட்டும் ஓசையை எழுப்பிக்கொண்டிருந்தோம் 36  15 குவித்த பூக்களால் தழையாடை செய்து உடுத்திக்கொண்டு அசோக மரத்தின் அடியில் இருந்தோம். 37  16 அகன்ற மார்பில் பூமாலை சூடிக்கொண்டு கையில் வில்லேந்திய ஒருவன் அங்கு வந்தான் 39  17 வேட்டை-நாய்கள் அவனைச் சூழ்ந்து வந்தன 41  18 நாங்கள் பயந்து வேறிடம் சென்றோம். பசுவைக் கண்ட காளை போல அவன் பின்தொடர்ந்தான் 42  19 ‘ஏன் நடுங்குகிறீர்கள். ஏதாவது துன்பம் நேர்ந்ததா’ என மெல்ல வினாவினான். நாங்கள் எதுவும் பேசவில்லை 43  20 ’ஏதாவது பேசக்கூடாதா’ எனக் கெஞ்சினான் 44  21 பூத்த கொம்புகளை ஒடித்துத் தட்டிக் குரைக்கும் நாய்களின் வாயை அடக்கினான் 45  22 அப்போது, மதம் கொண்ட ஆண்யானை ஒன்று சிங்கம் போல அங்கு வந்தது 46  23 செய்வது அறியாமல் நாணத்தை விட்டுவிட்டு  என் தோழி அவனைத் தழுவிக்கொண்டு நடுங்கினாள் (முருகள்-வள்ளி கதை - முளைத்த வரலாறு) 48  24 அவன் யானையின் முகத்தில் அம்பைப் பாய்ச்சினான். புண் பட்ட யானை திரும்பிப் போய்விட்டது. 49  25 பெருவெள்ளம் பாயும்போது கரையிலிருக்கும் வாழைமரம் போல அவள் நடுங்கினாள் 50  26 ‘அஞ்சாதே, உன் நலத்தை உண்கிறேன்’ என்று என் தோழியிடம் சொல்லிக்கொண்டு, அவன் என்னைப் பார்த்துச் சிரித்தான் 51  27 நாணமும், அச்சமும் கொண்டு நான் பிரிந்துவிட்டேன். அது மயிலாடும் பாறை 52  28 அவன் குன்றத்துத் தலைவன். பெருமை மிக்கவன் 54  29 ‘உன் திருமணத்தில் ஊரார் விருந்து உண்ணும்போது நானும் உன்னுடன் சேர்ந்து உணவு உண்பது மேலானது’ – என்று அறநெறியும் கூறித் தேற்றினான் 55  30 கடவுள் பெயரால் வஞ்சின-வாய்மை (சத்தியம்) கூறிக்கொண்டு முத்தமிட்டான் 57  31 பொழுது மறைந்த மாலைநேரம் 59  32 வானம் இருண்டது 60  33 ‘நாடறியத் திருமணம் செய்துகொள்வேன்’ – என்று முன்னங்கைகளைப் பிடித்துக்கொண்டு சொன்னான். பசுவுடன் வரும் காளை போல அவன் வந்தான் 61  34 அன்று முதல் இரவில் வருதல் அவனுக்கு வழக்கமாயிற்று 63  35 ஊர்க்காவலர் உலாவல், நாய் குரைத்தல், தாயாகிய நீ விழித்துக்கொள்ளல், நிலா-வெளிச்சம் போன்ற இடையூறுகளால் இவளை அடையமுடியாமல் போனாலும், சலித்துக்கொள்ளாமல் வருகிறான் 64  36 அவனுக்காக இவள் தூங்காமல் கிடக்கிறாள் 65  37 புலி, உளியம், ஆளி, ஆமான், பாம்பு, முதலை முதலான இடையூறுகளுக்கு இடையே வருகிறானே என்று இவள் அழுகிறாள் 67  38 இடுக்கு, வழுக்கு, மலைப்பாம்பு உள்ள பாதையில் வருகிறானே என்று இவள் அழுகிறாள் 68  தனிப்பாடல் 1 69  தனிப்பாடல் 2 70  பாட்டு கூறும் மலர்கள் 71    மலர்கள் - அகர வரிசை - உள்ளே   1. அடும்பு,  2. அதிரல்,  3. அவரை, நெடுங் கொடி அவரை,       4. அனிச்சம்,              5. ஆத்தி, அமர் ஆத்தி,  6. ஆம்பல்,  7. ஆரம்,  8. ஆவிரை, விரி மலர் ஆவிரை,  9. இருள்நாறி, நள்ளிருள் நாறி,               10. இலவம்,  11. ஈங்கை,  12. உந்தூழ், உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ்,  13. எருவை,  14. எறுழம், எரி புரை எறுழம்,  15. கண்ணி, குறுநறுங் கண்ணி,               16. கரந்தை,  17. கருவிளை, மணிப் பூங் கருவிளை,              18. காஞ்சி,  19. காந்தள், வள் இதழ் ஒண் செங் காந்தள்,  20. காயா, பல் இணர்க் காயா,     70  21. காழ்வை,  22. குடசம், வான் பூங் குடசம்,   23. குரலி, சிறுசெங்குரலி,              24. குரவம், பல் இணர்க் குரவம்,              25. குருக்கத்தி, பைங் குருக்கத்தி,          26. குருகிலை,  27. குருந்தம், மா இருங் குருந்தும்,  28. குல்லை,  29. குவளை, தண் கயக் குவளை,  30. குளவி,  31. குறிஞ்சி,  32. கூவிரம்,  33. கூவிளம்,  34. கைதை,  35. கொகுடி, நறுந் தண் கொகுடி,              36. கொன்றை, தூங்கு இணர்க் கொன்றை,     37. கோங்கம், விரி பூங் கோங்கம்,         38. கோடல்,  39. சண்பகம், பெருந் தண் சண்பகம்,    40. சிந்துவாரம்,         41. சிறுமாரோடம்,                 42. சுள்ளி,  43. சூரல்,          44. செம்மல்,  45. செருந்தி,  46. செருவிளை,  47. சேடல்,  48. ஞாழல்,  49. தணக்கம், பல் பூந் தணக்கம்,             85  50. தளவம்,  51. தாமரை, முள் தாள் தாமரை,  52. தாழை,  53. திலகம்,  54. தில்லை,  55. தும்பை,  56. துழாஅய்,  57. தேமா,  58. தோன்றி, சுடர்ப் பூந் தோன்றி,  59. நந்தி,  60. நரந்தம்,  61. நறவம்,  62. நாகம்,  63. நாகம், புன்னாகம், நறும் புன் நாகம்,        64. நெய்தல், நீள் நறு நெய்தல்,                 65. நெய்தல், மணிக் குலைக் கள் கமழ் நெய்தல்,    66. பகன்றை,  67. பசும்பிடி,  68. பயினி,  69. பலாசம்,  70. பாங்கர்,  71. பாதிரி, தேங் கமழ் பாதிரி,     72. பாரம்,  73. பாலை,  74. பிடவம்,  75. பிண்டி, பல் பூம் பிண்டி,            76. பித்திகம்,  77. பீரம்,  78. புழகு, அரக்கு விரித்தன்ன பரு ஏர்அம் புழகுடன்,            79. புன்னை, கடி இரும் புன்னை,             80. பூளை, குரீஇப் பூளை,  81. போங்கம்,  82. மணிச்சிகை,       83. மராஅம்,  84. மருதம்,  85. மா, கடி கமழ் கலி மா,               86. முல்லை, கல் இவர் முல்லை,        87. மௌவல்,  88. வகுளம்,  89. வஞ்சி,  90. வடவனம்,  91. வழை, கொங்கு முதிர் நறு வழை,                 92. வள்ளி,  93. வாகை,  94. வாழை,  95. வானி,  96. வெட்சி,     97. வேங்கையும்,  98. வேரல்,  99. வேரி, செங் கொடு வேரி,    செங்கைப் பொதுவன் பற்றி   பொதுக் குறிப்பு       குறிஞ்சி     மலையும் மலைசார்ந்த நிலமும் குறிஞ்சி நிலம் குளிர்காலமும், யாமப்பொழுதும் குறிஞ்சி நிலத்துக்கு உரியன என்று தொல்காப்பியம் முதலான இலக்கண நூல்கள் கூறுகின்றன     காதலர் புணர்ச்சி பற்றிக் கூறுவது குறிஞ்சித் திணைக்கு உரிய பொருள் என்றும் இலக்கணம் கூறுகிறது     குறிஞ்சி நிலத்தின் தெய்வம் முருகன். இவனைச் சேயோன் என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது     இந்த நூலில் காதலர் வாழ்ந்த மலைநிலத்தில் பூத்திருந்த 96 வகையான பூக்கள் கூறப்பட்டுள்ளன. தலைவி தன் தோழிமாருடன் கூடி அவற்றை மழை பொழிந்து கழுவிய பாறைமீது குவித்து விளையாடியதாகப் பாடல் தெரிவிக்கிறது.     அந்தப் பூக்கள் படத்துடன் இந்த நூலில் காட்டப்பட்டுள்ளன   சிறப்புக் குறிப்பு     இந்தக் குறிஞ்சிப் பாட்டு கபிலர் ஆரிய அரசன் பிரகத்தனைத் தமிழ் (தமிழ்ப்பண்பு) அறிவித்தற்குப் பாடியது – என்று கூறப்படுகிறது   காதலர் தாமே கூடிப் பின் மணந்துகொள்ளும் தமிழ்நெறியை ஆரிய அரசன் பிரகத்தன் உணராமல் ஏதோ பேசினான்.   அவனுக்குத் தமிழ்நெறி இத்தகையது என்று காட்டுவதற்காகக் கபிலர் இந்தக் குறிஞ்சிப்பாட்டைப் பாடினார்.   பண்பு கெடாமல் நிகழ்ந்த தற்செயல் இயல்புப் புணர்ச்சியை இப்பாடலில் காணலாம்.   குறிஞ்சிநிலத் தெய்வம் முருகன். அவனுக்கு விழாஎடுக்கும் காட்சியுடன் நூல் தொடங்குகிறது.   தோழியின் தாய் தலைவிக்குச் செவிலித்தாய்.   பெற்ற தாய் நற்றாய். நற்றாயையும், செவிலித்தாயையும் தாய் எனக் கருதி (அன்னை) என்று விளித்தல் தமிழ்மரபு.   தோழி அன்னையை ‘அன்னாய்’ என விளித்துத் தலைவியின் நிலையைச் சொல்வதாக அமைந்துள்ளது இந்தப் பாடல்.   பாடலும் விளக்கமும்       பாட்டு இது போன்ற பின்னணி வண்ணத்தில் பதிவாக்கப்பட்டுள்ளது         விளக்கம் இதே கருநிற எழுத்தில் பதிவாக்கப்பட்டுள்ளது     பாட்டு முதலிலும் விளக்கம் பின்னரும் வைக்கப்பட்டுள்ளது   1  தோழி, தாயிடம் சொல்கிறாள். தன் தோழி தலைவியின் நோய்க்குக் காரணம் என்னவென்று ஊரெல்லாம் கேட்டறிந்தும், முருகு-விழா நடத்தியும் தீரவில்லையே என்று வருந்திக்கொண்டிருக்கிறாய்.   'அன்னாய், வாழி! வேண்டு, அன்னை! ஒள் நுதல், ஒலி மென் கூந்தல், என் தோழி மேனி               விறல் இழை நெகிழ்த்த வீவு அருங் கடு நோய்          அகலுள் ஆங்கண் அறியுநர் வினாயும்,             பரவியும், தொழுதும், விரவு மலர் தூயும்,      5 வேறு பல் உருவின் கடவுள் பேணி,     நறையும் விரையும் ஓச்சியும், அலவுற்று,   எய்யா மையலை நீயும் வருந்துதி        தோழி, தாயிடம் சொல்கிறாள். அன்னையே! வாழி. நான் வேண்டுகிறேன். கேட்டருள் அன்னையே. என் தோழியாகிய தலைவி ஒளிதிகழ் முகம் கொண்டவள். தழைத்த கூந்தலை உடையவள். அவளது மேனியில் இருந்ததால் பெருமை பெற்றிருந்த அணிகலன்கள் இப்போது அவளை நெகிழச் செய்து கொண்டிருக்கின்றன. இது சாகடிக்காமல் சாகடித்துக் கொண்டிருக்கும் கொடிய நோய். பருவப் பெண்ணைத் தலைவிரி கோலத்துடன் பூசாரி வேலன் ஆட்டிவைப்பது வெறியாட்டம் இதற்கு என்ன காரணம் என்று தெருவில் உள்ளவர்களை யெல்லாம் கேட்கிறாய். அவர்களுக்கெல்லாம் என்ன தெரியும்? பல்வேறு உருவங்களில் காட்சி தரும் முருகக் கடவுள்தான் காரணம் என்று தெருவில் உள்ளவர்கள் சொல்லக் கேட்டு முருகனைத் தணிவிக்க அவனுக்கு விழா எடுக்கின்றாய். இனிக்கும் பொருள்களும், மணக்கும் பொருள்களும் படைக்கின்றாய் வேலனைக் கொண்டு இவளை ஓச்சுக்கின்றாய். (அடிக்கச் செய்கிறாய்)  அதனால் இவள் துன்புறுகிறாள். நீயும் துன்புறுகிறாய். இவளது துன்பத்தைத் தாங்க முடியாமல் நீ பித்தேறி மயங்குகிறாய்.   2 யாருக்கும் சொல்லக்கூடாது என்று மறைத்துவைத்திருந்த செய்தியை என்னிடம் மட்டும் என் தோழியாகிய தலைவி சொன்னாள்   []       நல் கவின் தொலையவும், நறுந் தோள் நெகிழவும்,             புள் பிறர் அறியவும், புலம்பு வந்து அலைப்பவும்,    10 உள் கரந்து உறையும் உய்யா அரும் படர்        செப்பல் வன்மையின் செறித்து, யான் கடவலின்,     யாருக்கும் சொல்லக்கூடாது என்று மறைத்துவைத்திருந்த செய்தியை என்னிடம் மட்டும் என் தோழி தலைவி சொன்னாள் இவளது நல்லழகு தொலைந்துபோய் விட்டது. இனிக்கும் தோள்கள் இளைத்து விட்டன. ’புள்’என்பது பிறர் அறிந்து கொள்ளக்கூடிய குறிப்புகள். இவளது நிலையைப் பிறர் உணர்ந்து கொண்டனர். அன்றியும் தனிமை இவளை வருத்துகிறது. அதனால் இவளுக்கு உட்சுரம். இந்த உட்காய்ச்சலோடு இவள் உயிர் வாழ்கிறாள். இவளுக்கு உய்தி தராத பெருந்துன்பம் இது. இவளால் அதனை வெளிப்படுத்த முடியவில்லை. நான் அவளை வற்புறுத்திக் கேட்டேன். அவள் என்னிடம் சொன்னாள் தலைவி தோழியிடம் சொன்னாள்.    3 அணிமணிகள் போனால் திரும்பவும் பெற்றுக்கொள்ளலாம். சால்பு குன்றினால் திரும்பப் பெற இயலாது என அறிஞர் கூறுவர்   "முத்தினும் மணியினும் பொன்னினும், அத் துணை,        நேர்வரும் குரைய கலம் கெடின், புணரும்,    சால்பும் வியப்பும் இயல்பும் குன்றின்,               15 மாசு அறக் கழீஇ வயங்கு புகழ் நிறுத்தல்,       ஆசு அறு காட்சி ஐயர்க்கும், அந் நிலை,             எளிய என்னார், தொல் மருங்கு அறிஞர்:      போன சால்பு பூத்து வருமா? தலைவி சொல்கிறாள்   முத்து, மணி, பொன் போன்றவற்றாலான அணிகலன்களை இழக்கலாம். தேடி ஈட்டினால் அவை மீண்டும் வந்து சேர்ந்துவிடும். சான்றாண்மை ஒழுக்கம், பிறர் வியக்கத்தக்க பெருமை, நல்லியல்பு ஆகியவை, குன்றிப்போனால் அவற்றை மீண்டும் தூக்கிப் புகழ்நிலையில் நிறுத்துதல் யாராலும் முடியாது குற்றமற்ற மெய்யறிவுடைய ஐயர்க்கும் அது எளிதன்று என்று தொன்னெறி உணர்ந்த அறிஞர்கள் கூறுகின்றனர். அதனால் …   4 தலைவிக்கு மன்றல் நடந்துவிட்டது. இது நானும் அவளும் ஆராய்ந்து மேற்கொண்ட முடிபு. இது தாயாகிய உனக்கும் தெரிந்தால் பழி ஒன்றும் இல்லை.   []       மாதரும் மடனும் ஓராங்குத் தணப்ப, நெடுந் தேர் எந்தை அருங் கடி நீவி,        20 இருவேம் ஆய்ந்த மன்றல் இது என,   நாம் அறிவுறாலின் பழியும் உண்டோ?     தலைவிக்கு மன்றல் நடந்துவிட்டது. இது நானும் அவளும் ஆராய்ந்து மேற்கொண்ட முடிபு. இது தாயாகிய உனக்கும் தெரிந்தால் பழி ஒன்றும் இல்லை   தலைவி சொல்கிறாள் ஆசையும், அறியாமையும் என்னிடம் ஓராங்கு காட்டி விளையாடிக் கொண்டிருக்கின்றன. என் தந்தை தேர்ப்படைத் தலைவன். அவனது கட்டுக் காவலை மீறி என்னவனும், நானுமாக மயங்கிய நிலையில் எங்களுக்குள் நிகழ்ந்த உடலுறவு இதுதான். இதைத் தாய்மாரிடம் சொல்லிவிட்டால் பழியும் உண்டோ – என்று தலைவி தன் தோழியிடம் சொன்னாள். அவள் சொன்னாள் என்று இப்போது தோழி தாயரிடம் கூறுகிறாள்.     பாடலில் வரும் ‘ஓராங்கு தணப்ப’ என்பதன் விளக்கக் கண்ணோட்டம் ’ஓராங்கு’என்பது சங்ககால விளையாட்டுகளில் ஒன்று. தரையில் கட்டம் போடுவர். ஐந்து பேர் விளையாடும் ஆட்டம் இந்த ஓராங்கு. நான்கு மூலைகளிலும் நான்கு பேர். ஏதோ ஒரு உத்தியைக் கையாண்டு பட்டவர் ஒருவரைக் கண்டறிவர். பட்டவர் கட்டத்திற்கு நடுவில் வந்துவிடுவார். காலியாக உள்ள மூலைக்குப் பிறர் ஓடுவர். இரண்டு பேர் ஒரே மூலையில் நிற்கக்கூடாது. அடுத்த மூலையை அடைவதற்கு முன் பட்டவர் ஓடுபவரைத் தொடவேண்டும். தொடப்பட்டவர் பட்டவர் ஆகி ஆட்டம் தொடரும். காலியாக உள்ள இடத்தை நிரப்புவதே ஓராங்கு ஆட்டம்.   பெண்மைத்தன்மையும் அறியாமையும் ஓருமுகமாக நின்று எங்களிடமிருந்து விலகிவிட்டன. அதனால் வெளியிடத்துக்கு நாங்கள் சென்றோம். மன்றலாகிய உடலுறவு நிகழ்ந்துவிட்டது.   5 இந்த மன்றல்-மணம் முறைப்படி நடக்கவில்லையே என்று இவள் தேம்பிக்கொண்டிருக்கிறாள்   []   இரண்டும் தமிழ் நெறி     ஆற்றின் வாரார் ஆயினும், ஆற்ற          ஏனை உலகத்தும் இயைவதால், நமக்கு" என            மான் அமர் நோக்கம் கலங்கி, கையற்று,        25 ஆனாச் சிறுமையள் இவளும் தேம்பும்            இந்த மன்றல்-மணம் முறைப்படி நடக்கவில்லையே என்று இவள் தேம்பிக்கொண்டிருக்கிறாள் இது அறவழியில் வராத அறநெறி   ஊர் அறிய நடக்கும் திருமணம் அறமணம். இங்கு நடந்தது மறைமணம்.   இந்தப் புறவுலகத்துக்கு இது பொருந்தாவிட்டாலும் அந்த அகவுலகத்துக்கு பொருந்தும். வானோர் வாழ்த்துவர்.   தோழி தொடர்கிறாள். இப்படி அவள் (தலைவி) சொல்லும்போது மான் விரும்பும் அவளது மயக்கப் பார்வை கலங்கி விட்டது. வேறு வழி தெரியாமல் கையைப் பிணைந்துகொண்டாள். தாங்க முடியாத துன்பத்தோடு தேம்பித் தேம்பிச் சொன்னாள்.   6 இருபெரு வேந்தர்க்கிடையே போர் நிகழும்போது இடைநிற்கும் சான்றோர் போல நானும் கலங்கிக்கொண்டிருக்கிறேன்   []   இரு பெரு வேந்தர்களுக்கு இடையே போர்   இகல் மீக் கடவும் இரு பெரு வேந்தர்   வினையிடை நின்ற சான்றோர் போல,             இரு பேர் அச்சமோடு யானும் ஆற்றலென்;     இருபெரு வேந்தர்க்கிடையே போர் நிகழும்போது இடைநிற்கும் சான்றோர் போல நானும் கலங்கிக்கொண்டிருக்கிறேன் தோழியின் நிலை இரு பெரு வேந்தர்கள் தங்களுக்குள் இருந்த கருத்து மாறுபாட்டினால் போரிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை ஒன்று சேர்க்க நினைத்த சான்றோர் போர்க்களத்துக்குச் சென்று அவர்களுக்கு அறிவுரை கூறும்போது எத்தகைய அச்சத்துடன் இருப்பாரோ அத்தகைய அச்சத்துடன் இருந்துகொண்டு என் உள்ளம் தாங்கிக்கொள்ள முடியாத உண்மையை உங்களிடம் (தாயரிடம்) சொல்கிறேன். – என்கிறாள் தோழி.           7 குடி, குலம் போன்றவற்றைப் பார்க்காமல் நிகழ்த இந்த மன்றல்-மணம் பற்றிச் சொல்கிறேன். சினம் கொள்ளாமல் கேட்பாயாக   []     கொடுப்பின் நன்கு உடைமையும், குடி நிரல் உடைமையும்,        30 வண்ணமும், துணையும், பொரீஇ எண்ணாது,          எமியேம் துணிந்த ஏமம் சால் அரு வினை    நிகழ்ந்த வண்ணம் நீ நனி உணரச்          செப்பல் ஆன்றிசின்; சினவாதீமோ!         குடும்பத்தை ஒத்திட்டுப் பார்க்காத கூடல் மணம்   உயர்ந்த பண்பு, ஒத்த குடிப்பிறப்பு, ஒத்த செல்வவளம், ஒத்த குலப்பிறப்பு, உதவும் துணைப்பாங்கு முதலானவற்றை யெல்லாம் பொருத்திப் பார்த்து மணமக்களைக் கூட்டுவிப்பது அக்கால வழக்கம்.   இவற்றில் எதையும் எண்ணிப் பார்க்காமல் நாங்களாகவே துணிந்து எங்களுடைய பாதுகாப்புக்காக மறைவில் மணம் செய்து கொண்டோம். அந்த மணம் எப்படி நிகழ்ந்தது என்பதை நீ நன்றாக உணருமாறு சொல்கிறேன். தாயே! பொறுத்தருள்க. எங்கள் மேல் சினம் கொள்ளாமல் கேட்டருள்க. 8 தினைப்புனம் காத்து மாலையில் திரும்புக என நீ அனுப்பிவைத்தாய்   []     தினைக்கதிர் யானையின் துதிக்கை போல வளைந்திருக்கும்   "நெல் கொள் நெடு வெதிர்க்கு அணந்த யானை,        35 முத்து ஆர் மருப்பின் இறங்குகை கடுப்ப,       துய்த் தலை வாங்கிய புனிறு தீர் பெருங் குரல்          நல் கோள் சிறு தினைப் படு புள் ஓப்பி,               எல் பட வருதியர்" என, நீ விடுத்தலின்,      தினைப்படு புள் ஓப்பல்   யானை விளைந்த மூங்கில் நெல்லைக் கசக்கித் தின்னும். அதன் முத்துப் போன்ற கொம்புகளுக்குக் கீழே அதன் கை தொங்கும். அந்தக் கையைப் போல தினை விளைந்திருந்தது.   உவமை நலம்   விளைந்திருக்கும் தினைக்கதிர் யானையின் கைபோல் வளைந்திருக்கும். விளைந்த கதிருக்கு மேல் இரண்டு தினையிலைத் தோகைகள் நிமிர்ந்திருப்பது யானையின் தந்தங்கள் போல் இருக்கும். துதிக்கையிலுள்ள மடிப்புவளைவுகள் போல தினைக்கதிர் திட்டுத் திட்டாகக் காணப்படும்.   தினைக்கதிர்களை உண்ண வரும் பறவைகளை ஓட்டிக் கொண்டிருந்துவிட்டுப் பகல்பொழுது கழிந்த பின் வீடு திரும்புக – என்று சொல்லி எங்களை நீ அனுப்பி வைத்தாய்.   9 நீ சொன்னபடி, தழல், தட்டை, குளிர் கருவிகளில் இசை எழுப்பிக்கொண்டு தினைப்புனம் காத்துக்கொண்டிருக்கும் வேளையில்,   கலி கெழு மரமிசைச் சேணோன் இழைத்த   40 புலி அஞ்சு இதணம் ஏறி, அவண,            சாரல் சூரல் தகை பெற வலந்த,                தழலும் தட்டையும் குளிரும், பிறவும்,             கிளி கடி மரபின, ஊழ் ஊழ் வாங்கி,       உரவுக் கதிர் தெறூஉம் உருப்பு அவிர் அமயத்து       45   தழல், தட்டை, குளிர் கருவி இசையால் கிளியை ஓட்டல்   செழுமையான மரத்துண்டுகளைக் கொண்டு பரணிப்பந்தல் போடுபவன் தினைவயலில் பரணிப்பந்தல் அமைத்திருந்தான். மரமேறும் புலிகூட அதில் ஏற அஞ்சும் தகைமையது அந்தப் பரணிப்பந்தல். அதன்மேல் ஏறி இருந்துகொண்டு நாங்கள் கிளிகளை ஓட்டிக் கொண்டிருந்தோம். தழல், தட்டை, குளிர் போன்ற இசைக் கருவிகளைத் தட்டி ஒலி எழுப்பி ஓட்டிக் கொண்டிருந்தோம். அந்த நேரத்தில்…   []     []     குளிர் சிறுவர் தாமே செய்துகொண்டு சுழற்றி ஒலியெழுப்பி விளையாடும் கருவி   தினைப்புனம் காக்கும் மகளிர் பயன்படுத்தியது இது போன்ற வலிமையான இசைக்கருவி   10 பெருமழை பொழிந்தது   விசும்பு ஆடு பறவை வீழ் பதிப் படர,    நிறை இரும் பௌவம் குறைபட முகந்து கொண்டு,              அகல் இரு வானத்து வீசு வளி கலாவலின், முரசு அதிர்ந்தன்ன இன் குரல் ஏற்றொடு,       நிரை செலல் நிவப்பின் கொண்மூ மயங்கி,   50 இன் இசை முரசின், சுடர்ப் பூண், சேஎய்             ஒன்னார்க்கு ஏந்திய இலங்கு இலை எஃகின்,               மின் மயங்கு கருவிய கல்மிசைப் பொழிந்தென,   முருகனின் வேல்போல்மின்னல். காற்றுமழை   அள்ள அள்ளக் குறையாத கடலிலிருந்து மேகமானது நீரை முகந்துகொண்டு காற்றால் உந்தப்பட்டு வானில் மிதந்து அல்லாடிக்கொண்டிருந்தது. வீசிய பெருங்காற்றில் தள்ளாடிய பறவைகள் தம் இருப்பிடங்களுக்குச் சென்றுகொண்டிருந்தன. முரசு அதிர்வது போல் மேகங்கள் இனிமையாக முழங்கின. ஏராளமாகச் சென்ற மேகங்கள் ஒன்றோடொன்று தழுவிக்கொள்ளும்போது, முரசு முழக்கத்துடன் செல்லும் முருகனின் வேல் மின்னுவது போல மின்னல்கள் தோன்றின. அவை மலைமேல் மழையாகப் பொழிந்தன.   11 அருவியில் தண்ணீர் கொட்டியது. நாங்கள் நீராடினோம்   அண்ணல் நெடுங் கோட்டு இழிதரு தெள் நீர்,              அவிர் துகில் புரையும், அவ் வெள் அருவி,     55 தவிர்வு இல் வேட்கையேம் தண்டாது ஆடி, பளிங்கு சொரிவு அன்ன பாய் சுனை குடைவுழி,     அருவியாடலும், சுனை குடைதலும்   மழைநீர் உச்சிமலையிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தது. அருவியில் அது இறங்கும்போது விரிந்தாடும் வெள்ளைத்துணி போல் காணப்பட்டது. அந்த அருவியில் நீங்காத ஆசையோடு கட்டுப்பாடின்றி நீராடிக்கொண்டிருந்தோம். பளிங்கு போன்ற அந்தச் சுனையில் மூழ்கு-நீச்சல் போட்டுக் கொண்டிருந்தோம்   12 பாயம் பாடிக்கொண்டு கூந்தலை உலர்த்தினோம்   நளி படு சிலம்பில், பாய் அம்பு ஆடி, பொன் எறி மணியின் சிறு புறம் தாழ்ந்த எம்                பின் இருங் கூந்தல் பிழிவனம் துவரி,                60 உள்ளகம் சிவந்த கண்ணேம், வள் இதழ்       கூந்தலை உலர்த்திக்கொண்டிருந்தோம்   கொட்டும் அருவியில் ஆடினோம். குட்டச் சுனையைக் குடைந்து விளையாடினோம். குளிர்ந்த மலையில் பாயும் நீரிலும் அங்குமிங்கும் பாய்ந்தோடினோம். ஈரம் கோத்துக்கொண்டு பின்னிக்கிடந்த எங்களது கூந்தலில் நீர்த்திவலைகள் சொட்டிக்கொண்டிருந்தன. அவை பொன்னிழையில் பதிக்கப்பட்டுள்ள மணிபோல் எங்களது கூந்தலிலிருந்து தோள்பக்கமாக விழுந்துகொண்டிருந்தன. அவற்றைப் பிழிந்து நாங்கள் உலர்த்திக் கொண்டிருந்தோம்.   13 அங்கே பூக்கள் (99) பூத்துக்கிடந்தன     மகளிர் குவித்து விளையாடிய மலர்கள் பாடல்   13   ஒண் செங் காந்தள், ஆம்பல், அனிச்சம்,           தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,                செங் கொடுவேரி, தேமா, மணிச்சிகை,             உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்,       65 எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்,          வடவனம், வாகை, வான் பூங் குடசம்,               எருவை, செருவிளை, மணிப் பூங் கருவிளை,           பயினி, வானி, பல் இணர்க் குரவம்,      பசும்பிடி, வகுளம், பல் இணர்க் காயா,                70 விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,        குரீஇப் பூளை, குறுநறுங் கண்ணி,         குருகிலை, மருதம், விரி பூங் கோங்கம்,          போங்கம், திலகம், தேங் கமழ் பாதிரி,               செருந்தி, அதிரல், பெருந் தண் சண்பகம்,         75 கரந்தை, குளவி, கடி கமழ் கலி மா,       தில்லை, பாலை, கல் இவர் முல்லை,               குல்லை, பிடவம், சிறுமாரோடம்,         வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல்,          தாழை, தளவம், முள் தாள் தாமரை,   80 ஞாழல், மௌவல், நறுந் தண் கொகுடி,            சேடல், செம்மல், சிறுசெங்குரலி,          கோடல், கைதை, கொங்கு முதிர் நறு வழை,              காஞ்சி, மணிக் குலைக் கள் கமழ் நெய்தல், பாங்கர், மராஅம், பல் பூந் தணக்கம்,     85 ஈங்கை, இலவம், தூங்கு இணர்க் கொன்றை,              அடும்பு, அமர் ஆத்தி, நெடுங் கொடி அவரை,               பகன்றை, பலாசம், பல் பூம் பிண்டி,      வஞ்சி, பித்திகம், சிந்துவாரம்,   தும்பை, துழாஅய், சுடர்ப் பூந் தோன்றி,              90 நந்தி, நறவம், நறும் புன்னாகம்,               பாரம், பீரம், பைங் குருக்கத்தி,   ஆரம், காழ்வை, கடி இரும் புன்னை,    நரந்தம், நாகம், நள்ளிருள் நாறி,               மா இருங் குருந்தும், வேங்கையும், பிறவும்,       95 அரக்கு விரித்தன்ன பரு ஏர்அம் புழகுடன்,         பூப்பறி விளையாட்டு   பூக்களைப் பறித்துவந்து குவித்து விளையாடுவது சங்ககால விளையாட்டுகளில் ஒன்று. குவித்த பூக்களைத் தலையில் சூடி ஒப்பனை செய்து கொள்ளுதல், மாலையாகக் கட்டி அணிந்து கொள்ளுதல், தழையோடு கூடிய பூக்களைக் கொண்டு தழையாடை செய்து உடுத்திக் கொள்ளுதல் முதலானவையும் பூ விளையாட்டில் அடங்கும். தழையாடை என்பது உடுத்திக் கொண்டிருக்கும் நூலாடையின் மேல் ஒப்பனைக்காக அணிந்து கொள்ளும் அணியாடை.   மழை பெய்து கழுவிய பாறையின்மேல் அவர்கள் குவித்த பூக்கள் இங்கு அகரவரிசையில் அடுக்கித் தரப்படுகின்றன. பூக்களின் எண்ணிக்கை இங்கு 99 என்று எண்ணிட்டுக் காட்டப்பட்டுள்ளது. நுண்ணறிவாளர்களின் எண்ணிக்கை கூடலாம் அல்லது குறையலாம்.   பாடலில் காணப்படும் அடுக்கு-முறை பின்வருமாறு உள்ளது.   இதில் பூவினை விளக்கும் அடைமொழி வலப்புறம் தரப்பட்டுகிறது.   அடுத்து அகர-வரிசை அடுக்கும் உள்ளது.   பாடலில் கூறப்பட்டுள்ள வரிசையில் பூக்கள் காந்தள், வள் இதழ் ஒண் செங் காந்தள், ஆம்பல், அனிச்சம்,             குவளை, தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,    வேரி, செங் கொடு வேரி, தேமா, மணிச்சிகை,      உந்தூழ், உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம், எறுழம், எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம், வடவனம், வாகை, குடசம், வான் பூங் குடசம், எருவை, செருவிளை, கருவிளை, மணிப் பூங் கருவிளை,             பயினி, வானி, குரவம், பல் இணர்க் குரவம்,             பசும்பிடி, வகுளம், காயா, பல் இணர்க் காயா,      ஆவிரை, விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,         பூளை, குரீஇப் பூளை, கண்ணி, குறுநறுங் கண்ணி,              குருகிலை, மருதம், கோங்கம், விரி பூங் கோங்கம்,        போங்கம், திலகம், பாதிரி, தேங் கமழ் பாதிரி,    செருந்தி, அதிரல், சண்பகம், பெருந் தண் சண்பகம்,   கரந்தை, குளவி, மா, கடி கமழ் கலி மா,              தில்லை, பாலை, முல்லை, கல் இவர் முல்லை,       குல்லை, பிடவம், சிறுமாரோடம்,                வாழை, வள்ளி, நெய்தல், நீள் நறு நெய்தல்,                தாழை, தளவம், தாமரை, முள் தாள் தாமரை, ஞாழல், மௌவல், கொகுடி, நறுந் தண் கொகுடி,             சேடல், செம்மல், குரலி, சிறுசெங்குரலி,             கோடல், கைதை, வழை, கொங்கு முதிர் நறு வழை,                காஞ்சி, நெய்தல், மணிக் குலைக் கள் கமழ் நெய்தல்,   பாங்கர், மராஅம், தணக்கம், பல் பூந் தணக்கம்,              ஈங்கை, இலவம், கொன்றை, தூங்கு இணர்க் கொன்றை,    அடும்பு, ஆத்தி, அமர் ஆத்தி, அவரை, நெடுங் கொடி அவரை,      பகன்றை, பலாசம், பிண்டி, பல் பூம் பிண்டி,           வஞ்சி, பித்திகம், சிந்துவாரம்,        தும்பை, துழாஅய், தோன்றி, சுடர்ப் பூந் தோன்றி, நந்தி, நறவம், நாகம், நறும் புன்னாகம்,       பாரம், பீரம், குருக்கத்தி, பைங் குருக்கத்தி,         ஆரம், காழ்வை, புன்னை, கடி இரும் புன்னை,            நரந்தம், நாகம், இருள்நாறி, நள்ளிருள் நாறி,              குருந்தம், மா இருங் குருந்தும், வேங்கையும், புழகு, அரக்கு விரித்தன்ன பரு ஏர்அம் புழகுடன்,             பிறவும்,              அங்கே பூக்கள் (99) பூத்துக்கிடந்தன. இவற்றின் அகரவரிசை   அடும்பு, அதிரல், அவரை, நெடுங் கொடி அவரை,      அனிச்சம்,             ஆத்தி, அமர் ஆத்தி, ஆம்பல், ஆரம், ஆவிரை, விரி மலர் ஆவிரை, இருள்நாறி, நள்ளிருள் நாறி,              இலவம், ஈங்கை, உந்தூழ், உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், எருவை, எறுழம், எரி புரை எறுழம், கண்ணி, குறுநறுங் கண்ணி,              கரந்தை, கருவிளை, மணிப் பூங் கருவிளை,             காஞ்சி, காந்தள், வள் இதழ் ஒண் செங் காந்தள், காயா, பல் இணர்க் காயா,     70 காழ்வை, குடசம், வான் பூங் குடசம், குரலி, சிறுசெங்குரலி,             குரவம், பல் இணர்க் குரவம்,             குருக்கத்தி, பைங் குருக்கத்தி,         குருகிலை, குருந்தம், மா இருங் குருந்தும், குல்லை, குவளை, தண் கயக் குவளை, குளவி, குறிஞ்சி, கூவிரம், கூவிளம், கைதை, கொகுடி, நறுந் தண் கொகுடி,             கொன்றை, தூங்கு இணர்க் கொன்றை,    கோங்கம், விரி பூங் கோங்கம்,        கோடல், சண்பகம், பெருந் தண் சண்பகம்,   சிந்துவாரம்,        சிறுமாரோடம்,                சுள்ளி, சூரல்,         செம்மல், செருந்தி, செருவிளை, சேடல், ஞாழல், தணக்கம், பல் பூந் தணக்கம்,             85 தளவம், தாமரை, முள் தாள் தாமரை, தாழை, திலகம், தில்லை, தும்பை, துழாஅய், தேமா, தோன்றி, சுடர்ப் பூந் தோன்றி, நந்தி, நரந்தம், நறவம், நாகம், நாகம், புன்னாகம், நறும் புன் நாகம்,       நெய்தல், நீள் நறு நெய்தல்,                நெய்தல், மணிக் குலைக் கள் கமழ் நெய்தல்,   பகன்றை, பசும்பிடி, பயினி, பலாசம், பாங்கர், பாதிரி, தேங் கமழ் பாதிரி,    பாரம், பாலை, பிடவம், பிண்டி, பல் பூம் பிண்டி,           பித்திகம், பீரம், புழகு, அரக்கு விரித்தன்ன பரு ஏர்அம் புழகுடன்,           புன்னை, கடி இரும் புன்னை,            பூளை, குரீஇப் பூளை, போங்கம், மணிச்சிகை,      மராஅம், மருதம், மா, கடி கமழ் கலி மா,              முல்லை, கல் இவர் முல்லை,       மௌவல், வகுளம், வஞ்சி, வடவனம், வழை, கொங்கு முதிர் நறு வழை,                வள்ளி, வாகை, வாழை, வானி, வெட்சி,    வேங்கையும், வேரல், வேரி, செங் கொடு வேரி,   14 அவற்றைப் பறித்துப் பாறையில் குவித்துவிட்டு, கிளி ஓட்டும் ஓசையை எழுப்பிக்கொண்டிருந்தோம்   மால், அங்கு, உடைய மலிவனம் மறுகி,         வான் கண் கழீஇய அகல் அறைக் குவைஇ, புள் ஆர் இயத்த விலங்கு மலைச் சிலம்பின்,              வள் உயிர்த் தெள் விளி இடைஇடைப் பயிற்றி,   100   The lady, an un-named heroine of clandestine love and her friend-maid gather (99) various kinds of flower and heap them on rock-table washed by rain. Then, they attended their duty driving away the birds stealing their yield raising loud voice that echo’s in the mountain.     கூறப்பட்ட (99) வகைவகையான பூக்களைப் பாறையில் குவித்தோம். மழைநீர் பெய்து கழுவிய பாறைமேல் குவித்தோம். அந்தப் பூக்களின் மேல் எங்களுகுக் கொள்ளை ஆசை [மால்]. தினைப்புனத்தில் பறவைகளின் ஒலி. நாங்களும் அவ்வப்போது பெரிய உயிர்ப்புக்குரல் கொடுத்துப் பறவைகளை ஓட்டினோம். எங்கள் குரலொலி மலையில் சிலம்பி எதிரொலித்தது.   15 குவித்த பூக்களால் தழையாடை செய்து உடுத்திக்கொண்டு அசோக மரத்தின் அடியில் இருந்தோம்.   கிள்ளை ஓப்பியும், கிளை இதழ் பறியா,           பை விரி அல்குல் கொய்தழை தைஇ, பல் வேறு உருவின் வனப்பு அமை கோதை, எம்      மெல் இரு முச்சி, கவின் பெறக் கட்டி,                எரி அவிர் உருவின் அம் குழைச் செயலைத்      105 தாது படு தண் நிழல் இருந்தனம் ஆக   We are driving away the parrots stealing the yields in fields. We make attractive leaves-dress gathering nearby bunch of leaves and wear to decorate our waist. We make suitable kinds of garlands with the heaped flowers and wear them on our head and neck. Then we are taking rest in shadow of an Asoka-tree that spreads flower-carpet.     []     தினைக்கதிர்களைக் கவர வரும் கிளிகளை ஓட்டிக் கொண்டிருந்தோம். செடிகொடிகளைத் தளிரோடு பறித்துத் தழையாடையாக்கி இடுப்பாடை மறைய உடுத்திக் கொண்டோம். குவித்த பூக்களால் பல்வேறு வகையான மாலைகள் தொடுத்து அணிந்துகொண்டோம். பின்னிய கூந்தலும், உச்சிக் கொண்டையும் அழகு பெறுமாறு பூக்களைச் சூடிக்கொண்டோம். அங்கே, அசோகமரம் எரியும் தீயைப்போல் பூத்திருந்தது. அப்பூக்கள் உதிர்ந்து சிவப்புக் கம்பளம் விரிந்தது போல் இருந்த அதன் மரத்தடியில் நிழலுக்காகத் தங்கியிருந்தோம்.   16 அகன்ற மார்பில் பூமாலை சூடிக்கொண்டு கையில் வில்லேந்திய ஒருவன் அங்கு வந்தான்   எண்ணெய் நீவிய, சுரி வளர் நறுங் காழ்,           தண் நறுங் தகரம் கமழ மண்ணி,            ஈரம் புலர விரல் உளர்ப்பு அவிழா,         காழ் அகில் அம் புகை கொளீஇ, யாழ் இசை   110 அணி மிகு வரி மிஞிறு ஆர்ப்ப, தேம் கலந்து                மணி நிறம் கொண்ட மா இருங் குஞ்சியின், மலையவும் நிலத்தவும் சினையவும் சுனையவும்               வண்ண வண்ணத்த மலர் ஆய்பு விரைஇய தண் நறுந் தொடையல், வெண் போழ்க் கண்ணி,     115 நலம் பெறு சென்னி, நாம் உற மிலைச்சி,        பைங் கால் பித்திகத்து ஆய் இதழ் அலரி         அம் தொடை ஒரு காழ் வளைஇ, செந் தீ           ஒண் பூம் பிண்டி ஒரு காது செரீஇ,        அம்தளிர்க் குவவு மொய்ம்பு அலைப்ப, சாந்து அருந்தி,120 மைந்து இறை கொண்ட, மலர்ந்து ஏந்து அகலத்து,                தொன்று படு நறுந் தார் பூணொடு பொலிய,   செம் பொறிக்கு ஏற்ற, வீங்கு இறைத் தடக் கையின்             வண்ண வரி வில் ஏந்தி, அம்பு தெரிந்து,            நுண் வினைக் கச்சைத் தயக்கு அறக் கட்டி,  125   A man came. His hair was curling. It was skinning oiled. Tagaram-cent was applied in, spreading good smell. He was combing his hair with his fingers. Bees-like flies were rounding his hair falling on the smell. Furthermore he wears some flowers in his hair. The flowers in various colors were gathered from trees and ponds of mountain valley. He was wearing flower-garlands and diamond-jewelry on his chest. Sandal-cream was applied on his chest. He was placing an Ashoka-flower on one of his ear. His chest was appealing as a mountain but soft. His shoulder was hiking. He wears a belt on his waist gripping his dress.       ஒருவன் வந்தவன் அவன் தலைமயிர் சுருண்டிருந்தது. எண்ணெய் தடவிப் பளபளப்பாக இருந்தது. வயிரம் பாய்ந்த தகரக் கட்டையிலிருந்து வடித்தெடுத்த செண்டை மணம் கமழும்படி தடவியிருந்தான். மழையால் ஈரமாயிருந்த தலைமயிரை விரல்களை விட்டுப் பிரித்து உலர்த்திக் கொண்டிருந்தான். புகையும் அகில்கட்டையும் ஈரத்தைப் புலர்த்தின. அதன் மணத்தில் மயங்கிப் பொறிவண்டுகள் ஒலித்துக்கொண்டு அவனது குஞ்சியைச் சூழ்ந்து சுழன்று கொண்டிருந்தன. மணக்கும் மலர்க்கண்ணித் தொடையல் அவன் சென்னியை அழகுறுத்திக் கொண்டிருந்தது. தொடையலில் இருந்த பூக்கள் மலையிலும், நிலத்திலும் பூத்தவை. சினையிலும், சுனையிலும் பூத்தவை. ஆராய்ந்து பொறுக்கியெடுத்த பல்வேறு வண்ணம் கொண்டவை. அவன் மார்பில் வைரமாலையுடன் பூவிதழ்களாலான பித்திகைத் தொடையலும் தொங்கியது. ஒருபக்கம் காதோரத்தில் தலையொப்பனையாக அசோகப்பூவைச் செருகியிருந்தான். மலைக்குவடுபோல் நிமிர்ந்திருந்த அவன் நெஞ்சு தளிர் போன்று தளதளப்பாகவும் இருந்தது. மார்பில் சந்தனம் பூசியிருந்தான். மார்பின் அகலம் வலிமையும் விம்மித ஏற்றத்தன்மையும் கொண்டு மலர்ந்திருந்தது. அகலத்தில் பூண்மாலையும், பூமாலையும் பொலிந்தன. செம்மாந்து உயர்ந்த தோளோடு சேர்ந்த கைகளில் எய்யும் அம்போடு வரிந்துள்ள வில் இருந்தது. உடுத்தியிருந்த ஆடை நழுவாமல் இருக்க வேலைப்பாடுகள் கொண்ட கச்சை அணிந்திருந்தான்.   17 வேட்டை-நாய்கள் அவனைச் சூழ்ந்து வந்தன   இயல் அணிப் பொலிந்த ஈகை வான் கழல்    துயல் வரும் தோறும் திருந்து அடிக் கலாவ                முனை பாழ் படுக்கும் துன் அருந் துப்பின்       பகை புறம் கண்ட பல் வேல் இளைஞரின்      உரவுச்சினம் செருக்கி, துன்னுதொறும் வெகுளும், 130 முளை வாள் எயிற்ற, வள் உகிர், ஞமலி          திளையாக் கண்ண வளைகுபு நெரிதர,   He was wearing anklets in his legs as a token of gift and was treading majestically with his followers holding spear in hand. They seemed as hunters. Hunting dogs were following hanging their tongue and glad-less look in their eyes without getting prey in their hunt.      அவன் ஈகைக்கழலில் வாகை நடை போட்டு நடந்துவதான். அவனது கால்களில் கழல். அது அவனது உயர்ந்த கொடைத்திறனின் அடையாளச் சின்னம். நடந்து வரும்போது அதில் ஒரு பொலிவு. போரில் பகைவரைப் பாழாக்கும் திறப்பகட்டும் அதில் தென்பட்டது. அவனைச் சூழ்ந்து இளைஞர்கள் வந்து கொண்டிருந்தனர். பகைவரைப் புறங்கண்ட வேலுடன் அவர்கள் காணப்பட்டனர். அவன் இப்போது வேட்டைக்கு வந்துகொண்டிருந்தான். வேட்டை வாய்க்காததால் மகிழ்ச்சியில்லாத கண்களோடு வேட்டைநாய்கள் பல் தெரிய அவனைச் சூழ்ந்து வந்தன.   18 நாங்கள் பயந்து வேறிடம் சென்றோம். பசுவைக் கண்ட காளை போல அவன் பின்தொடர்ந்தான்   நடுங்குவனம் எழுந்து, நல் அடி தளர்ந்து, யாம்          இடும்பை கூர் மனத்தேம் மருண்டு புலம் படர          மாறு பொருது ஓட்டிய புகல்வின் வேறு புலத்து      135 ஆ காண் விடையின், அணி பெற வந்து எம்   அலமரல், ஆயிடை, வெரூஉதல் அஞ்சி,       அவன் பசுவைப் பார்த்த காளை ஆனான்.   அவனைப் பார்த்ததும் நாங்கள் நடுங்கினோம். எழுந்து நடக்க முடியாமல் தள்ளாடினோம். நெஞ்சு படபடத்தது. மிரண்டு பார்த்துக்கொண்டே வேறிடம் நோக்கி நகர்ந்தோம். அவன் நிலையோ மாறுபட்டிருந்தது. விரும்பத்தக்க இனிய நிலத்தில் பசுவைக்கண்ட காளைபோல அவன் நெருங்கி வந்தான். நாங்கள் திண்டாடி மருள்வதைப் பார்த்து அவன் அஞ்சினான்.   We are afraid of his approach. We replace our standing position moving a little distance. He is looking the lady in love-appetite as a bull in love, have a chance to meet a cow in a suitable place to mate. We are standing in shock.   19 ‘ஏன் நடுங்குகிறீர்கள். ஏதாவது துன்பம் நேர்ந்ததா’ என மெல்ல வினாவினான். நாங்கள் எதுவும் பேசவில்லை   மெல்லிய இனிய மேவரக் கிளந்து, எம்             ஐம்பால் ஆய் கவின் ஏத்தி, "ஒண் தொடி,        அசை மென் சாயல், அவ் வாங்கு உந்தி,            140 மட மதர் மழைக் கண், இளையீர்! இறந்த        கெடுதியும் உடையேன்" என்றனன் அதன் எதிர்       சொல்லேம்ஆதலின், அல்லாந்து "கலங்கிக்       கெடுதி செய்துவிட்டேன் போலும் – என்றான்   மென்மை, இனிமை, விருப்பம் மூன்றும் கலந்து அவன் பேசினான். தலைவி கூந்தலின் ஒப்பனையழகைப் பாராட்டினான். ஒளிரும் வளையலும், ஒய்யாரமாக அசையும் மேனியழகும், அழகால் வளைந்து குழிந்த உந்தியும், மடமைத் திமிரி மழைபோல் ஈரப்பார்வை தரும் கண்களும் கொண்ட இளமான்களே! – என்று அழைத்தான். வரம்பு கடந்த கெடுதி செய்துவிட்டேன் போலும் – என்றான். அவன் சொல்லுக்கு நாங்கள் மறுமொழி கூறவில்லை. எனவே அவன் அல்லாந்தான், துன்புற்றான், கலங்கினான்.   He opened his mouth with humble and sweet words. He excelled my hair style and other parts of my body and poses of moving. He addresses us female-deer of young to fall us on his words. “Am I did anything wrong?” he pleaded. Anyone of us didn’t reply.       20 ’ஏதாவது பேசக்கூடாதா’ எனக் கெஞ்சினான்   கெடுதியும் விடீஇர் ஆயின், எம்மொடு             சொல்லலும் பழியோ, மெல் இயலீர்?" என,  145   மென்மைத்தன்மை உள்ளவர்களே! கெடுதியை விடுவித்துச் சொல்லாவிட்டாலும் வாய்ச்சொல் தரலாமே. பேசினால் உங்களுக்குத் தீங்கு நேர்ந்துவிடுமோ? - என்றான்     He beseeched them to speak some words “Is there any harm if you speak?”   21 பூத்த கொம்புகளை ஒடித்துத் தட்டிக் குரைக்கும் நாய்களின் வாயை அடக்கினான்   நைவளம் பழுநிய பாலை வல்லோன்               கை கவர் நரம்பின், இம்மென இமிரும்              மாதர் வண்டொடு, சுரும்பு நயந்து இறுத்த,    தாது அவிழ் அலரித் தா சினை பிளந்து,            தாறு அடு களிற்றின் வீறு பெற ஓச்சி,                150 கல்லென் சுற்றக் கடுங் குரல் அவித்து, எம்   சொல்லல் பாணி நின்றனன் ஆக         அவன் என் சொல்லுக்காகக் காத்துக்கொண்டு நின்றான்.   பாலையாழில் நைவளப்பண்ணை மீட்டவல்லவன் அவன். காதல் கொண்ட வண்டினமும், சுரும்பினமும் விரும்பி அமர்ந்திருக்கும் பூங்கொத்துள்ள சிறுகிளை ஒன்றை ஒடித்துத் தன்னைச் சூழ்ந்து வரும் நாய்களை ஓட்டினான். களிறு மரக்கொம்புகளை ஒடித்து மதம் ஒழுகும் தன் காதோரத்தில் மொய்க்கும் வண்டுகளை ஓட்டுவது போல ஓட்டினான். தலைவியின் சொல்லுக்காகக் காத்துக்கொண்டு நின்றான். காதலில் மயங்கி வரும் யானைபோல் தலைவியின் முன் வந்தான்.   He drove away the hounds rounding him with a bunch of flower-stick broken for that purpose at the moment. It looks like an elephant fanning its ear with a small branch of a green tree. He approached me as a male-elephant moving towards a female.     22 அப்போது, மதம் கொண்ட ஆண்யானை ஒன்று சிங்கம் போல அங்கு வந்தது   இருவி வேய்ந்த குறுங் காற் குரம்பை,               பிணை ஏர் நோக்கின் மனையோள் மடுப்ப,   தேம் பிழி தேறல் மாந்தி, மகிழ் சிறந்து,            155 சேமம் மடிந்த பொழுதின், வாய்மடுத்து,         இரும் புனம் நிழத்தலின், சிறுமை நோனாது,             அரவு உறழ், அம் சிலை கொளீஇ, நோய் மிக்கு,         உரவுச் சின முன்பால் உடல் சினம் செருக்கி,              கணை விடு(பு), புடையூ, கானம் கல்லென,   160 மடி விடு வீளையர் வெடி படுத்து எதிர,             கார்ப் பெயல் உருமின் பிளிறி, சீர்த் தக              இரும் பிணர்த் தடக் கை இரு நிலம் சேர்த்தி,               சினம் திகழ் கடாஅம் செருக்கி, மரம் கொல்பு,             மையல் வேழம், மடங்கலின், எதிர்தர,             165   அப்போது, மதம் கொண்ட ஆண்யானை ஒன்று சிங்கம் போல அங்கு வந்தது.   கதிர் அறுத்தபின் உள்ள தினைத்தட்டைப் புல்லை அறுத்து வேயப்பட்ட குடிசை. அதன் தலைவி மனையோள். மானைப்போல் மருண்டு பார்த்துக் கொண்டே தன் கணவனுக்குத் தேனில் பிழிந்தெடுத்த தேறல் கள்ளை ஊரெல்லாம் உறங்கும் நேரத்தில் ஊட்டிவிட்டாள். உண்ட அவன் யானைக் காவலுக்குச் சென்றான். பாம்பு போல் வளைந்த வில்லுடன் சென்றான். யானை விளைச்சலைப் பாழாக்குவது அவன் நெஞ்சை நோகச் செய்தது. அதனால் உரத்திலும், உடலிலும் தோன்றிய சினச் செருக்குடன் அம்பெய்யப் புடைத்துக் கொண்டும், வீளையொலி எழுப்பிக் கொண்டும், வெடி போட்டு முழக்கம் செய்து கொண்டும் காடெல்லாம் கலங்கும்படி சென்றான். மழை பெய்ய உருமும் இடிபோல் வெடி முழக்கம் கேட்ட யானை பிளிறிற்று. மதம் பிடித்தது போல் தன் கையை நிலத்தில் போட்டு மரங்களை அடியோடு சாய்த்தது. இரவு வேளையில் வெடி சத்தம் கேட்டு மருண்டு போயிருந்த யானை அப்போது பகல் வேளையில் மடங்கல் சிங்கத்தைக் கண்டு மேலும் மருண்டுபோய் அதனை எதிர்த்துத் தாக்கும் நிலையினதாய் அவளும் அவனும் இருக்கும் இடத்துக்கு ஓடி வந்தது. தினைப்புனம் காக்கும் பணியில் இளைஞர்களும், இளம்பெண்களும் ஈடுபடுவது வழக்கம். மகளிர் தினைக்கதிர்களைக் கவரவரும் பறவைகளை ஓட்டுவர். காளையர் அதனைக் கவரவரும் விலங்குகளை ஓட்டுவர். இப்பகுதியில் விலங்குகளை ஓட்ட வேட்டையாடிக்கொண்டு வரும் காளையர் பேசப்படுகின்றனர்.   Hill dwellers cultivate yellow-millet (Tinai). Young girls are used to drive away the birds from the yield while the men gourds the yield from elephants’ eat destroying. While the man pleading the lady to speak, an elephant proceeded to attack the girls.     23 செய்வது அறியாமல் நாணத்தை விட்டுவிட்டு  என் தோழி அவனைத் தழுவிக்கொண்டு நடுங்கினாள் (முருகள்-வள்ளி கதை - முளைத்த வரலாறு)   உய்வு இடம் அறியேம் ஆகி, ஒய்யென,            திருந்து கோல் எல் வளை தெழிப்ப, நாணு மறந்து,                விதுப்புறு மனத்தேம், விரைந்து அவற் பொருந்தி, சூர் உறு மஞ்ஞையின் நடுங்க வார் கோல்    24   முருகள்-வள்ளி கதை - முளைத்த வரலாறு   யானையைக் கண்டதும் பயந்து ஓடினோம். தப்பிக்கும் இடம் தெரியவில்லை. வளையல் குலுங்கி ஒலிக்கும்படி ‘ஒய்’ என்று கூவிக்கொண்டு ஓடினோம். நாணம் மறந்துபோய் விட்டது. நெஞ்சம் படபடத்தது. அவனை அணைத்துக்கொண்டு தலைவி நடுங்கினாள். மழைமேகத்தைக் கண்டால் மயில் ஆடுமல்லவா. அப்படி மழைமேகப்பேய் பிடித்த மயில்போல் நடுங்கினாள்.   When the elephant was moving the ladies the heroine ran to the hero and hugged him in fear leaving her modesty. She was shivering as a peacock trembling towards rain-cloud.     24 அவன் யானையின் முகத்தில் அம்பைப் பாய்ச்சினான். புண் பட்ட யானை திரும்பிப் போய்விட்டது.   உடு உறும் பகழி வாங்கி, கடு விசை,   170 அண்ணல் யானை அணி முகத்து அழுத்தலின்,       புண் உமிழ் குருதி முகம் பாய்ந்து இழிதர,       புள்ளி வரி நுதல் சிதைய, நில்லாது,    அயர்ந்து புறங்கொடுத்த பின்னர் நெடு வேள்               அணங்கு உறு மகளிர் ஆடுகளம் கடுப்ப,          175   அவன் யானை முகத்தில் அம்பு எய்தான் நீண்ட கோலில் விண்மீன்போல் முனையுள்ள அம்பைக் கடுவிசையோடு அவன் எய்தான். களிற்றின் அழகிய முகத்தில் அது பாய்ந்தது. அப்புண்ணிலிருந்து குருதி பாய்ந்து ஒழுகியது. அதன் நெற்றியிலிருந்த புள்ளிகளும், வரிக்கோடுகளும் சிதைந்தன. அயர்ந்து போன அந்த ஆண்யானை அங்கே நிற்காமல் திரும்பி ஓடிவிட்டது. உடனே நாங்கள் முருகனுக்கு வெறியாடும் களத்தில் மகளிர் கைகோத்துக் கொண்டு ஆடுவதுபோல் கைகோத்துக் கொண்டோம்.   He shot arrows at the fore-head of the elephant. It retreated from the field. Hence after he and the lady clubbed their hands in love.     25  பெருவெள்ளம் பாயும்போது கரையிலிருக்கும் வாழைமரம் போல அவள் நடுங்கினாள்   திணி நிலைக் கடம்பின் திரள் அரை வளைஇய        துணை அறை மாலையின், கை பிணி விடேஎம்,    நுரையுடைக் கலுழி பாய்தலின், உரவுத் திரை           அடும் கரை வாழையின் நடுங்க, பெருந்தகை     கை கோத்துக்கொண்டிருந்த நாங்கள் நுரைத்துக்கொண்டு வரும் வெள்ளத்தில் பாய்ந்தோம் முருகனுக்கு வெறியாடுவோர் கடப்பம்பூ மாலையை அணிந்திருப்பர். அந்த மாலை நெருக்கமாகப் பிணிக்கப் பட்டிருப்பது போல் நாங்கள் எங்களுடைய கைகளை ஒருவருக்கொருவர் இறுக்கிப் பிடித்துக்கொண்டு நுரைத்துக்கொண்டு வரும் வெள்ளத்தில் பாய்ந்தோம். வெள்ளம் அரிக்கும்போது கரையோர வாழைமரம் ஆடுவது போல அப்போது தலைவி நடுங்கினாள்.   We plunge into the flood of the river nearby with our clubbing hands. Floating in flood-water she was rolling sink as a plantain tree at the bank of a river fell down and roll on in flood.     26 ‘அஞ்சாதே, உன் நலத்தை உண்கிறேன்’ என்று என் தோழியிடம் சொல்லிக்கொண்டு, அவன் என்னைப் பார்த்துச் சிரித்தான்   "அம் சில் ஓதி! அசையல்; யாவதும்     180 அஞ்சல், ஓம்பு; நின் அணி நலம் நுகர்கு" என,             மாசு அறு சுடர் நுதல் நீவி, நீடு நினைந்து,        என் முகம் நோக்கி நக்கனன். அந் நிலை,     அவன் அவளை வெள்ளத்திலிருந்து தூக்கிக்கொண்டு கரைக்கு வந்தான். அவன் பெருந்தகையாளன். அழகே! அசையாதே. எதற்கும் அஞ்சாதே. உன் அழகை நான் சுவைக்க வேண்டும் – என்றான். வந்தான். அவளது நெற்றியைத் தடவிக்கொடுத்தான். ஏதோ நெடுநேரம் எண்ணிப்பார்த்தான். என்னைப் பார்த்தான். ஒரு சிரிப்பு சிரித்துவிட்டன். அவளை அவன் நுகர நான் விலகிக்கொள்ளவேண்டும் என்பது அந்தச் சிரிப்பின் பொருள்.   He saved her from the flood. He smoothly applied his hand on her fore-head. Furthermore, he polite some sweet words; you, the beauty! Don’t move; don’t be afraid off. I want to enjoy your beauty. Saying these words, he enjoys her beauty with his eyes and turns his sight at me and laughed. By this laughter he conveyed me to move away letting him to enjoy her mating.     27 நாணமும், அச்சமும் கொண்டு நான் பிரிந்துவிட்டேன். அது மயிலாடும் பாறை   நாணும் உட்கும் நண்ணுவழி அடைதர,           ஒய்யெனப் பிரியவும் விடாஅன், கவைஇ      185 ஆகம் அடைய முயங்கலின், அவ் வழி,           பழு மிளகு உக்க பாறை நெடுஞ் சுனை,             முழு முதற் கொக்கின் தீம் கனி உதிர்ந்தென,             புள் எறி பிரசமொடு ஈண்டி, பலவின்    நெகிழ்ந்து உகு நறும் பழம் விளைந்த தேறல்,     190 நீர் செத்து அயின்ற தோகை, வியல் ஊர்ச்       சாறு கொள் ஆங்கண் விழவுக் களம் நந்தி,     அரிக் கூட்டு இன் இயம் கறங்க, ஆடு மகள்   கயிறு ஊர் பாணியின் தளரும் சாரல், வரைஅர மகளிரின் சாஅய், விழைதக,              195   நாணமும், அச்சமும் கொண்டு நான் பிரிந்துவிட்டேன். அது மயிலாடும் பாறை. சுனையில் பலாப்பழத் தேன் ஒழுகியது      அச்சமும் நாணமும் ஓடிப்போக வேண்டிய இடத்துக்கு ஓடிப் போய்விட்டன. ’ஒய்’ என்று அவள் நெஞ்சை அவன் தன் நெஞ்சில் அணைத்துத் தழுவிக்கொண்டான். அவள் பிரிய முயன்றாள். அவன் விடவில்லை. பழுத்த மிளகு உதிர்ந்து கிடந்த பாறை. பக்கத்தில் நீண்ட சுனை. அதில் முழு மாம்பழம் ஒன்று விழுந்தது.   உள்ளுறை சுனை – பெண்ணுறுப்பு மிளகு – பெண்ணுறுப்பில் உள்ள பருப்பு மாம்பழம் – ஆண் விந்து     பக்கத்து மரத்தில் பழுத்திருந்த பலாப்பழத்தில் ஈக்கள் மொய்த்துக் கொண்டிருந்தன. அதிலிருந்து பலாத்தேன் சுனையில் ஒழுகியது. அதைத் தண்ணீர் என்று கருதி மயில் பருகியது. மயங்கி ஆடியது.   உள்ளுறை பலாத்தேன் – அவள் உறுப்பின் ஊறல் மயில் – தலைவி மயக்கம் – கலவி மயக்கம்   ஊரிலே திருவிழா. கயிற்றில் ஏறிப் பெண் ஆடினாள். உறுமுதலும் தட்டலும் கேட்கும் மேளத்தின் பாணிக்கேற்ப ஆடினாள். இந்த ஆடுமகள் கயிற்றின்மேல் ஏறி ஆடுவதுபோல் மயில் மரக்கிளையில் ஏறி ஆடியது. மலையில் வாழும் அரம்பையர் போல் சாயல் கொண்டவை அந்த மயில்கள்.   உள்ளுறை கயிறூர் பாணி – அவர்கள் மோதி விளையாடியது.   He and she played in lust.   28 அவன் குன்றத்துத் தலைவன். பெருமை மிக்கவன்   விண் பொரும் சென்னிக் கிளைஇய காந்தள்                தண் கமழ் அலரி தாஅய், நன் பல           வம்பு விரி களத்தின் கவின் பெறப் பொலிந்த              குன்று கெழு நாடன், எம் விழைதரு பெரு விறல்,      தலைவியைத் தழுவிய தலைவன் யார்? குன்றுகள் நிறைந்த நாட்டுக்குத் தலைவன். எல்லாரும் விரும்பும் பெருமையும் பீடும் உடையவன். அவன் மலையுச்சியில் காந்தள் மலர்ந்திருக்கும். அவை உதிர்ந்து கிடக்கும் பரப்பில் புதியதோர் மணம் கமழும். இப்படிப்பட்ட நிலப்பரப்புகள் கொண்ட நாட்டுக்குத் தலைவன்.   He is the man of the mount where forest lily spread fragrant.   29  ‘உன் திருமணத்தில் ஊரார் விருந்து உண்ணும்போது நானும் உன்னுடன் சேர்ந்து உணவு உண்பது மேலானது’ – என்று அறநெறியும் கூறித் தேற்றினான்   உள்ளத் தன்மை உள்ளினன் கொண்டு,             200 "சாறு அயர்ந்தன்ன, மிடாஅச் சொன்றி              வருநர்க்கு வரையா, வள நகர் பொற்ப,               மலரத் திறந்த வாயில் பலர் உண,         பைந் நிணம் ஒழுகிய நெய்ம் மலி அடிசில்    வசை இல் வான் திணைப் புரையோர் கடும்பொடு 205 விருந்து உண்டு எஞ்சிய மிச்சில், பெருந்தகை,          நின்னோடு உண்டலும் புரைவது" என்று, ஆங்கு,    அறம் புணை ஆகத் தேற்றி, பிறங்கு மலை     []     ஊரறியத் திருமணம் செய்துகொள்வேன், இல்லறத்தில் விருந்தோம்பல் என்னும் தெப்பத்தில் ஏறி இன்பமாகச் செல்லலாம் - என்றான்.   எங்களுடைய உள்ளக் கிடக்கையை அவன் படித்தான். எங்களைத் தேற்றினான். என்ன சொல்லித் தேற்றினான்?   திருமண விழாவை ஊர்த்திருவிழாவாக நடத்துவேன். மிடாமிடாவாய்ச் சமைத்த சோற்றை வந்தவர்க்கெல்லாம் வழங்குவேன். திருமண வளநகர் (வளமனை) ஊரார் எல்லாருக்கும் திறந்திருக்கும். அதற்குள் எல்லாரும் தடையின்றி நுழையலாம். வந்தவர்களுக்கெல்லாம் புலவுச்சோறு. (பிரியா1ணி) அதில் நெய்யும் ஒழுகும். குடும்பத்தைச் சேர்ந்த உற்றார் உறவினர்களும் விருந்தினரோடு விருந்து உண்பர். அவர்கள் உண்டபின் மீதம் இருப்பதைப் பிணைந்து கவளமாக உன்னோடு சேர்ந்து நான் உண்பது எனக்குப் பெருமை தரும் செயல். இல்வாழ்க்கை நீரோட்டத்தில் விருந்தோம்பல் என்னும் அறநெறிப் புணையில் ஏறிக்கொண்டு நாம் இன்பமாகச் செல்வோம் – என்று தேற்றினான்.   I like to host the entire village in our marriage ceremony.   30  கடவுள் பெயரால் வஞ்சின-வாய்மை (சத்தியம்) கூறிக்கொண்டு முத்தமிட்டான்   மீமிசைக் கடவுள் வாழ்த்தி, கைதொழுது,      ஏமுறு வஞ்சினம் வாய்மையின் தேற்றி,       210 அம் தீம் தெள் நீர் குடித்தலின், நெஞ்சு அமர்ந்து,       அரு விடர் அமைந்த களிறு தரு புணர்ச்சி,      வான் உரி உறையுள் வயங்கியோர் அவாவும்            பூ மலி சோலை, அப் பகல் கழிப்பி,         எல்லை செல்ல, ஏழ் ஊர்பு, இறைஞ்சி,               215 பல் கதிர் மண்டிலம், கல் சேர்பு மறைய              வாய்மைத் தேற்றம் பின்னர் புணர்ச்சி   அறப்புணையில் செல்லலாம் என்று சொல்லித் தேற்றியபின் அதனை உறுதிப்படுத்துவானாய் மலைத்தெய்வம் முருகன் பெயரைச்சொல்லி முருகனையும் என்னையும் வாழ்த்தினான். அவனையும் என்னையும் தொழுதான். சொன்னசொல் தவறமாட்டேன் என்று வஞ்சினம் கூறினான். அதனை என் நெஞ்சம் விரும்பியது. துன்பம் இன்பமாக மாறியது. யானை தந்த புணர்ச்சி இது. []   வானம் அவளுக்கு ஆடையாயிற்று. மயங்கியவர்கள் விரும்பும் பூஞ்சோலையில் அன்றைய பகல் பொழுதை அவனோடு கழித்தேன். ஞாயிறு மேலைமலையில் மறைந்தது.   He and she dressed the sky in their love.   31 பொழுது மறைந்த மாலைநேரம்   மான் கணம் மரமுதல் தெவிட்ட, ஆன் கணம்            கன்று பயிர் குரல மன்று நிறை புகுதர,              ஏங்கு வயிர் இசைய கொடு வாய் அன்றில்    ஓங்கு இரும் பெண்ணை அக மடல் அகவ,    220 பாம்பு மணி உமிழ, பல் வயின் கோவலர்        ஆம்பல் அம் தீம் குழல் தெள் விளி பயிற்ற, ஆம்பல் ஆய் இதழ் கூம்பு விட, வள மனைப்               பூந் தொடி மகளிர் சுடர் தலைக் கொளுவி,      அந்தி அந்தணர் அயர, கானவர் 225     பொழுது போனபின் இரவும் பகலும் மால்-மயங்கம் கொள்ளும் மாலைக்காலம் வந்தது. மான்கூட்டம் மரத்தடியில் படுத்துக்கொண்டு அசைபோட்டது.   பசுக்கள் கன்றுகளுக்காகக் கனைத்துக்கொண்டே மன்று திரும்பின.   அன்றில்கள் பெண்ணைமரத்தில் இருந்துகொண்டு அகவின. அக்குரல் கொம்பூதுவது போல் இருந்தது.   பாம்புகள் வெளிச்சத்துக்காக மணியைக் ககக்கின. (நம்பிக்கை)   கோவலர் ஆம்பல்கொடியில் செய்த புல்லாங்குழலை ஊதிக்கொண்டும், இடையிடையே தம் ஆனிரைகளைத் தெளிவாகப் பெயர்சொல்லி விளித்து அவற்றை விரைந்து செல்லுமாறு தூண்டிப் பயிற்றுவித்துக் கொண்டும் சென்றனர்.   ஆம்பல் பூவின் போது விரியத் தொடங்கியது.   வளமனைகளில் வாழும் மகளிர் விளக்கேற்றித் தூண்டி விடலாயினர்.   அந்தணர்கள் அந்தி வேளையைத் தொழும் விழாவினைக் கொண்டாடிக்கொண்டிருந்தனர்.   It is evening. Deer are chewing under trees. Cows are coming home. Antril-birds are blowing raising horn sound. Cow-herd men are fluting. The cow-herd men call each of their cows with a separate name they christened for which they respond. Women are putting light in lamps. Brahmans lit evening ceremonial fire.   32 வானம் இருண்டது   விண் தோய் பணவை மிசை ஞெகிழி பொத்த,            வானம் மா மலை வாய் சூழ்பு கறுப்ப, கானம்              கல்லென்று இரட்ட, புள்ளினம் ஒலிப்ப,           சினைஇய வேந்தன் செல் சமம் கடுப்பத்      மலைவயல்களில் பணவை என்னும் பந்தலின் மேல் ஏறி இருந்துகொண்டு கானவர் பயிரை அழிக்கவரும் விலங்குகளை அச்சுறுத்துவதற்காக ஞெகிழி என்னும் தீப்பந்தத்தை ஏற்றினர். வானம் கறுத்தது. புள்ளினங்கள் ‘கல்’லென ஒலித்துக்கொண்டு இருப்பிடம்நோக்கி வானமெங்கும் பறந்து சென்றன. அது சினங்கொண்ட வேந்தன் போர் முடிந்தபின் வீடு திரும்புவது போல இருந்தது.   The people of hill are driving away the beasts come to destroy their yields being at a ladder-shed. Dark is spreading. Birds are singing like the warrior in camp.   33 ‘நாடறியத் திருமணம் செய்துகொள்வேன்’ – என்று முன்னங்கைகளைப் பிடித்துக்கொண்டு சொன்னான். பசுவுடன் வரும் காளை போல அவன் வந்தான்   துனைஇய மாலை துன்னுதல் காணூஉ          230 "நேர் இறை முன்கை பற்றி, நுமர் தர, நாடு அறி நல் மணம் அயர்கம்; சில் நாள்         கலங்கல் ஓம்புமின், இலங்கு இழையீர்!" என,           ஈர நல் மொழி தீரக் கூறி, துணை புணர் ஏற்றின், எம்மொடு வந்து,           235 துஞ்சா முழவின் மூதூர் வாயில்,           உண்துறை நிறுத்துப் பெயர்ந்தனன். அதற் கொண்டு,        []     நாடறியும் திருமணம்   நெருக்கமாகக் கட்டிய மாலையைப் போட்டு உன் பெற்றோர்கள் உன் முன்கைகளைப் பற்றி எனக்குத் தர நான் நாடறியும் நல்ல திருமணம் செய்துகொள்ளும் விழா எடுப்பேன். சிலநாள் கலங்காதிருப்பாயாக – என்றான். அன்பு மொழிகள் அனைத்தையும் சொன்னான். பசுவுக்குத் துணையாக வரும் காளைபோல் என்னுடன் வந்தான். ஊருக்குள் நுழையும் வாயில் வரையில் வந்தான். ஊரில் மாலைக்காலத்து முழவொலி கேட்டது. அங்கே என்னை நிறுத்திவிட்டுத் திரும்பிவிட்டான். அன்றுமுதல் ---   He assured that he will marry me soon, with the ceremony of my father giving me to his hands. Saying these words, he followed me up to the border our village. Leaving me there he takes his farewell. There was band music in the village at that time.   34 அன்று முதல் இரவில் வருதல் அவனுக்கு வழக்கமாயிற்று   அன்றை அன்ன விருப்போடு, என்றும்,             இர வரல் மாலையனே; வருதோறும்   அன்று முதல் இரவில் வருதல் அவனுக்கு வழக்கமாயிற்று   பின்னர், நாள்தோறும் இரவில் வந்து கெஞ்சினான் அன்று என்னை அடைந்த அதே ஆவலோடு ஒவ்வொரு நாளும் என்னிடம் வந்து என்னைத் தனக்குத் தரும்படி கெஞ்சினான். மாலைபோல் தொடர்ந்து நெருங்கிக் கேட்டான்.   35 ஊர்க்காவலர் உலாவல், நாய் குரைத்தல், தாயாகிய நீ விழித்துக்கொள்ளல், நிலா-வெளிச்சம் போன்ற இடையூறுகளால் இவளை அடையமுடியாமல் போனாலும், சலித்துக்கொள்ளாமல் வருகிறான்   காவலர் கடுகினும், கத நாய் குரைப்பினும்,  240 நீ துயில் எழினும், நிலவு வெளிப்படினும்,      வேய் புரை மென் தோள் இன் துயில் என்றும்,            பெறாஅன்; பெயரினும், முனியல் உறாஅன்,        தடைகள் நேர்ந்து இவள் இன்பம் கிடைக்காவிட்டால் சலிப்பில் சினம் கோள்ளமாட்டான் ஊர்க்காவலர் விரைந்து வரினும், புதியவனாகிய இவனைக் கண்டு சினந்து நாய் குரைப்பினும், அன்னையாகிய நீ துயில் எழுந்துவிடாலும், நடமாடுபவர் தெளிவாகத் தெரியும்படி நிலாவெளிச்சம் காய்ந்தாலும் அவன் இவளை அடைவதற்குத் தடையாக இருக்கும். இவளோடு இன்பத் துயில் கொள்ளும் வாய்ப்பு கிட்டாமல் போகும். அப்போதெல்லாம் அதற்காக அவன் சினம் கொள்ளமாட்டான்.   When he comes some disturbance may appear. Night-gourd roaming, dog barking at stranger, clear moon light and you, the mother of the lady awakes – are some of the obstacles to him to get her. If it happens, he will not worry or become anger. He will come on the next day. It is his character.     36 அவனுக்காக இவள் தூங்காமல் கிடக்கிறாள்   இளமையின் இகந்தன்றும் இலனே; வளமையின்                தன் நிலை தீர்ந்தன்றும் இலனே; கொன் ஊர்       245 மாய வரவின் இயல்பு நினைஇ, தேற்றி,          நீர் எறி மலரின் சாஅய், இதழ் சோரா    ஈரிய கலுழும், இவள் பெரு மதர் மழைக்கண்;           ஆகத்து அரிப் பனி உறைப்ப, நாளும், வலைப் படு மஞ்ஞையின், நலம் செலச் சாஅய்,      250 நினைத்தொறும் கலுழுமால், இவளே கங்குல்,           அவன் அழவில்லை இவள் அழுகிறாள் அவன் இளமை மாறாதவன், வளமை குறையாதவன், தன் தகைமையிலிருந்து நழுவாதவன், சும்மாக் கிடக்கும் ஊரில் இப்படி மாய நிகழ்வுகள் நடக்கத்தான் செய்யும் என்பதனை நன்கு உணர்ந்தவன். இந்நிகழ்வுகளை வெறுக்காமல் இவளைப் போற்றுவான். மலரை அடிக்கும் மழைநீர் போன்றவை அவை என்று எண்ணிக்கொள்வான்.   அவன் அப்படி, இவள் எப்படி?   இவளது கண்ணில் ஈரம், []     பெருகிய மதமதப்பு. அது மழையாக மாறியது. அவள் மார்பகத்தில் அரிக்கும் பனியாகிப் பொழிந்தது. வலையில் பட்ட மயில்போல் மேனியழகு குன்றி வதங்குகிறாள். நினைக்கும் போதெல்லாம் திரும்மத் திரும்ப அழுகிறாள்.   He didn’t tear, but she does. He is young and rich and worries less in character. He will take the disasters as rain dashing the flowers. In total he is a gentle man.   But, what is her position? She is crying as a peacock caught in net.   37 புலி, உளியம், ஆளி, ஆமான், பாம்பு, முதலை முதலான இடையூறுகளுக்கு இடையே வருகிறானே என்று இவள் அழுகிறாள்   அளைச் செறி உழுவையும், ஆளியும், உளியமும்,               புழற் கோட்டு ஆமான் புகல்வியும், களிறும்,              வலியின் தப்பும் வன்கண் வெஞ் சினத்து       உருமும், சூரும், இரை தேர் அரவமும்,             255 ஒடுங்கு இருங் குட்டத்து அருஞ் சுழி வழங்கும்       கொடுந் தாள் முதலையும், இடங்கரும் கராமும்,      இவள் கலங்குவதெல்லால் அவன் வரும் வழியில் இடர்ப்பாடுகள் உள்ளனவே என்பதுதான்.   குகையில் பதுங்கும் புலி, சிங்கம், கரடி, முட்டித் தள்ளும் கொம்புகளையுடைய காட்டாட்டுக் கடா, எதிர்த்துப் போரிடும் ஆண்யானை போன்றவற்றைத் தாக்கி அழிக்கும் வெஞ்சினம் அவனுக்கு இருந்தது. என்றாலும் இடி, பேய், இரை தேடும் மலைப்பாம்பு ஆகியவற்றிற்கு அவன் என் செய்வான்? நீர்க்குழிகள், நீர்ச்சுழிகள், அவற்றில் இரைதேடும் முதலை, இடங்கர், கராம் முதலான முதலையினத்துக்கு அவன் என்ன செய்வான்? – என்று கலங்குகிறாள்.   38 இடுக்கு, வழுக்கு, மலைப்பாம்பு உள்ள பாதையில் வருகிறானே என்று இவள் அழுகிறாள்   நூழிலும், இழுக்கும், ஊழ் அடி முட்டமும்,   பழுவும், பாந்தளும், உளப்படப் பிறவும்,           வழுவின் வழாஅ விழுமம், அவர்          260 குழு மலை விடரகம், உடையவால் எனவே.'                குறிஞ்சிப்பாட்டு முற்றும்   அவனுக்கு நேரக்கூடிய மேலும் பல இடர்ப்பாடுகளை எண்ணி இவள் கலங்குகிறாள்.   வழிப்பறி செய்வோர் பதுங்கும் இடம், வழுக்கு நிலம், கால் போன போக்கில் சென்று வழியின்றி முட்டிக்கொள்ளும் இடங்கள், பேய், மலைப்பாம்பு, போன்றவை உளப்படப் பிறவற்றால் நேரும் வழித்துன்பங்களும் மலை பிளந்திருக்கும் பாதையில் உண்டாயிற்றே என்று கலங்குகிறாள்.   எனவே இவளை அவனுக்கு ஊரறிய திருமணம் செய்துவைத்துச் சேர்த்துவைக்க வேண்டும் - என்று தாயரிடம் தோழி அறத்தொடு நிற்கிறாள்.     தனிப்பாடல் 1   நின் குற்றம் இல்லை; நிரை தொடியும் பண்பு உடையள்; என் குற்றம் யானும் உணர்கலேன்; - பொன் குற்று அருவி கொழிக்கும் அணி மலை நாடன்          தெரியுங்கால், தீயது இலன்.        1   அன்னையே! நீ இவளை தினைப்புனம் காவலுக்கு அனுப்பிவைத்தாயே! அதுவும் குற்றம் இல்லை. வளையல் வரிசையை உடைய இவளும் பண்புள்ளவள். என் குற்றமும் எனக்குத் தெரியவில்லை. எண்ணிப் பார்த்தால் அவனும் தீய செயல் புரியவில்லை. மேலும் அவன் மலையிலிருந்து விழும் அருவிகூடப் பொன்னைக் கொட்டும் அளவுக்கு அவன் செல்வவளம் மிக்கவன். எனவே திருமணம் செய்து கொடுத்துவிடலாம் என்கிறாள் தோழி.     தனிப்பாடல் 2   ஆற்றல் சால் கேள்வி அறம் பொருள் இன்பத்தைப்              போற்றிப் புனைந்த பொருளிற்றே- தேற்ற     மறையோர் மணம் எட்டின் ஐந்தாம் மணத்தின்       குறையாக் குறிஞ்சிக் குணம்.     2   []     வடமொழி வேதத்தில் கூறப்பட்டுள்ள 8 வகையானதிருமண முறைகளில் இது ஐந்தாவதாகக் கூறப்பட்டுள்ள முறை. அந்த 8 திருமணங்கள் இன்பம் நுகரச் செய்துவைக்கப்பட்டவை. இந்தக் குறிஞ்சிக் குணத் திருமணமோ அறம், பொருள், இன்பம் என்னும் மூன்றையும் நுகர்வதற்காக இயல்பாக ஒன்று கூடி நிகழ்ந்தது. எனவே அந்த ஐந்தாவதை விட இது மேலானது.       கி. மு. இரண்டாம் நூற்றாண்டு கபிலர் இயற்றிய குறிஞ்சிப் பாட்டு பாட்டு கூறும் மலர்கள் 99 வகை & பிறவும் என்று குறிப்பிடுகிறது மலர்களின் பெயர்கள் அகர வரிசையில் அடுக்கப்பட்டுப் படங்கள் தரப்பட்டுள்ளன   மலர்களைக் காட்டும் படங்கள் பல மலர்களுக்கு மிகைப் படங்கள் சேர்க்கப்பட்டுள்ளன                                           72 []   அடும்பு     []   அதிரல்     []   அவரை     []   அனிச்சம்       []       []   ஆத்தி     []         []   ஆம்பல்         []   ஆரம்     []   ஆரம்     []   ஆரம்     []   ஆவிரை     []       []   இருள்நாறி     []       []   இலவம்       []   ஈங்கை     []       []   உந்தூழ்     []   எருவை []       []   கண்ணி என்னும் கண் போல் இருக்கும் குன்றிமணி     []   கண்ணி என்னும் கண் போல் இருக்கும் குன்றிமணி     []   கரந்தை     []       []   கருவிளை     []         []   காஞ்சி     []         []   காந்தள் (ஒண் செங் காந்தள்)     []       []   காயா \ காயாம்பூ     []       []   காழ்வை     []                     []   குடசம் \ பூவரசம் பூ     []   கார்காணிகா காட்டும் படம்           []   குரலி     []         []       []   குரவம்     []   குருக்கத்தி என்னும் மாதவி மலர்     []   குருக்கத்தி என்னும் மாதவி மலர்     []       []   குருகிலை     []       []   குல்லை     []   குவளை     []   குளவி மலர்     []   குளவிக் கூடு     []   குறிஞ்சி     []   கூவிரம்     []       []           []   கைதை     []   கைதை       []       []         []   கொன்றை     []       []         []       []   கோடல் என்னும் வெண்காந்தள் மலர்       []   கோடல் என்னும் வெண்காந்தள் மலர்     []       []   சிந்துவாரம்       []   சிறுமாரோடம் என்னும் சங்கருங்காலி         []   சிறுமாரோடம் என்னும் செங்கருங்காலி     []       []   சுள்ளி     []   சூரல்     []   சூரல்     []       []   செம்மல் எனக் கொள்ளத்தக்க மலர்     []         []       []           []   சேடல்       []   சேடல்     []   ஞாழல்       []     []   தணக்கம் என்னும் நுணாப் பூ       []       []       []   வெண்முல்லை & செம்முல்லை செம்முல்லை = தளவம்     []   தாமரை     []   தாழை எனவும் கூறப்படும் தென்னை     []       []   திலகம் எனக் கூறப்படும் மஞ்சாடி மலர்     []       []   தும்பை           []   துழாய் என்னும் துளசி []   தேமா \ இனிக்கும் மா \ பூ     []       []   தோன்றி     []       []         []       []       []   நாகம்     []       []   நீள்நறு நெய்தல்         []       []       []   பசும்பிடி எனப்படும் மருக்கொழுந்து     []         []       []   பயினி என்னும் அரக்குமரம் \ பூ     []   பலாசம்     []       []   பாங்கர் = உகாய் = அரப்பு = மருக்காளம் பட்டைசெடி     []       []   பாதிரி     []   பாரம் என்னும் வேலிப்பருத்தி       []   பாரம் என்னும் வேலிப்பருத்தி       []   பாரம் என்னும் வேலிப்பருத்தி     []   பாலை     []   பிடவம்     []   பிண்டி = அசோகு = செயலை     []       []   பித்திகம்     []         []         []   புழகு \ எருக்கு     []       []   புன்னை     []       []   பூளை \ பூளாப்பூ []       []   போங்கம் என்னும் புன்கம்     []   மணிச்சிகை       []         []   மராம்     []   மராம்     []       []       []   புளிமா     []   முல்லை \ காட்டு முல்லை     []   முல்லை \ கொடி முல்லை     []   முல்லை \ கல் இவர் முல்லை     []   மௌவல் \ மர மல்லிகை     []   மௌவல் \ மர மல்லிகை     []       []   வகுளம்     []       []   வடவனம் \ திருநீற்றுப் பச்சை     []   வழை     []       []       []   வள்ளிக் கிழங்கு     []   வாகை     []   வாழை     []       []       []       []   வெட்சி மலர்     []   வேங்கை மலர்     []   வேரல் \ சிறுமூங்கில்     []       []   வேரல் \ வெட்டி-வேர்  \ மணம்  கமழும் வேர்   நூல் முற்றும்   www.vaiyan.blogspot.com                       ஆசிரியர் செங்கைப் பொதுவன்   வயலை உழும் தொழிலில் வாழ்க்கையைத் தொடங்கி, பள்ளி-ஆசிரியர், பல்கலைக் கழக விரிவுரையாளர், அரசு ஆராய்ச்சி வரலாற்றுப் பதிப்பாசிரியர், அரசு வெளியீடு விளையாட்டு இதழ்-ஆசிரியர் என்று பல பணிகளை மேற்கொண்டிருந்தார்.   தற்போது தமிழை உழுது பயிரிட்டு விளைச்சலை மக்களுக்கு வழங்கிவருகிறார்.   தந்தை பொன்னுசாமி. தாய் செல்லம்மமாள். மனைவி செங்கைச் செல்வி. ஐந்து பெண்மக்கள், ஒரு மகன், 11 பேரக்குழந்தைகள், 6 கொள்ளுப்பேரக் குழந்தைகள் என்று இவர் செல்வப் பேறு பெற்றவர்.   ஊர் செங்காட்டுப்பட்டி (திருச்சி, தமிழ்நாடு, இந்தியா). செங்காட்டுப்பட்டி பொன்னுசாமி மகன் துரைசாமி = செங்கைப் பொதுவன். பொதுவன் = பொதுவானவன், பொதுவில் நடனம் ஆடும் சிவன், மாடு மேய்க்கும் பொதுவனாகிய (இடையனாகிய) மால், என்றெல்லாம் அறிஞர்கள் இவரது பெயருக்கு விளக்கம் கூறி இவரை வாழ்த்தினர்.   பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவர், தானாகவே படித்து, ஆசிரியர் பணிச் சலுகையில் தேர்வுகள் எழுதி தமிழ்-வித்துவான், B.A., M.A., Ph.D., ஆகிய பட்டங்களையும், B.T., M.Ed. ஆகிய பட்டங்களைக் கல்லூரியில் பயின்றும் பெற்றார்.   தமிழ் மன்றங்கள் பல இவரது தொண்டுகளைப் பாராட்டி விருதுகள் வழங்கியுள்ளன. பணி ஓய்வுக்குப் பின்னர் 2005-ல் கணினி ஒன்று வாங்கி அன்பர் சிலர் உதவியுடன் தானே பயின்று சில தமிழ் நூல்கள் உருவாக்கி வெளியிட்டுள்ளார்.   பின்னர் விக்கிப்பீடியாவில் நுழைந்து, தமிழ்-இலக்கணம், சங்ககாலப் புலவர்கள், மன்னர்கள், மலர்கள், விளையாட்டுக்கள், தமிழில் தோன்றிப் பதிப்பாகிய 700-க்கு மேற்பட்ட நூல்கள் முதலானவை பற்றி 2700-க்கு மேற்பட்ட புதிய தலைப்புகளில் கட்டுரைகள் எழுதியுள்ளார்.   en.Wikisource பகுதியில் தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார்.   இதன் பட்டறிவால் இப்போது www.vaiyan.blogspot.com என்னும் தளத்தில் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு, சிலப்பதிகாரம், மணிமேகலை, போன்ற நூல்களுக்கு விளக்கம் எழுதி மூலத்துடன் பதிவேற்றியுள்ளார்.     அகநானூறு, புறநானூறு, நற்றிணை, குறுந்தொகை ஆகிய நூல்களுக்கு ஆங்கிலத்திலும் விளக்கம் தந்துள்ளார்.   மேலும் பலவற்றை எழுதிவருகிறார். இப்போது அவற்றை மின்னூல் வடிவமாக்க முயன்றுவருகிறார்.   தொடர்பு Podhuvan9@gmail.com