[] [காமராஜ் நெஞ்சில் நிற்க்கும் நிகழ்ச்சிகள்] காமராஜ் நெஞ்சில் நிற்க்கும் நிகழ்ச்சிகள் இலசை சுந்தரம் மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com சென்னை ஆக்குநர் பெயர் கட்டாயம் குறிப்பிடப்படவேண்டும். மாற்றம் செய்தல், புத்தாக்கங்களுக்கு அடிப்படையாக பயன்படுத்துதல் அனுமதிக்கப்படவில்லை. வர்த்தக நோக்கம் கருதிய பயன்பாடு அனுமதிக்கப்படவில்லை இதே உரிமத்தினடிப்படையிலேயே பகிர்தல் நிகழும். இந்த ஆறு உரிமங்களில் ஒன்றை உங்கள் படைப்புகளுக்கு அளிப்பதன் மூலம், அவை பலரால் பகிரப்பட்டு சாகாவரம் பெறுகின்றன. உங்கள் வலைப்பதிவுகள், கட்டுரைகள், புகைப்படங்கள், காணொளிகள் என எந்த படைப்பையும் இந்த கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமைகளில் வெளியிடலாம். This book was produced using PressBooks.com. உள்ளடக்கம் - அறிமுகம் - சமர்பணம் - பதிப்புரை - என்னுரை - ஓர் மாமனிதரின் பாண்பு - 1. 1. திருடனைப் பிடித்த தீரச் சிறுவன் - 2. 2. பிடியரிசிப் பள்ளிக்கூடம் - 3. 3. முட்டை நடனம் - 4. 4. நாடகத்தில் மட்டும் நடித்தவர் - 5. 5. குடுகுடுப்பைக்காரன் செய்த குழப்பம் - 6. 6. விளையும் பயிர் - 7. 7. உதவிக் கரம் - 8. 8. உரிமைக்குரல் - 9. 9. விளையாட்டிலும் விடுதலை உணர்வு - 10. 10. வியாபாரத்தில் நேர்மை - 11. 11. நியாயம் வேண்டும் - 12. 12. விளையாட்டிலும் விவேகம் - 13. 13. சத்திய சங்கிலி - 14. 14. அரசியல் பிரவேசம் - 15. 15. சிறைப்பறவை - 16. 16. சிறையிலும் செம்மை - 17. 17. காந்தி உண்டியல் - 18. 18. வெள்ளையனே வெளியேறு - 19. 19. முதல் மேடைப்பேச்சு - 20. 20. கண்டிப்பிலும் கருணை - 21. 21. விடுதலைக்குப் பின் - 22. 22. ஆறு நிமிடப் பதவி - 23. 23. மனித நேயம் - 24. 24. உயிர்களிடத்தே அன்பு வேணும் - 25. 25. முதல்வரான முதல்வர் - 26. 26. பத்திரிகை தர்மம் - 27. 27. நிருபர்களுக்கு மத்தியில்... - 28. 28. நினைத்ததை முடித்தவர் - 29. 29. கல்விக் கண்ணைத் திறந்தவர் - 30. 30. பசிப்பிணி மருத்துவர் - 31. 31. உறவு ஒரு பொருட்டல்ல - 32. 32. சி‘பாரிச’ நோய் - 33. 33. ஏழைச் சிறுவனின் இதயம் கவர்ந்தவர் - 34. 34. மக்களை மதித்தவர் - 35. 35. மனதைக் கடிக்காதீர்கள் - 36. 36. உணவா? உணர்வா? - 37. 37. தீண்டாமையைத் தீண்டாதவர் - 38. 38. தாயே ஆனாலும்... - 39. 39. தொழில் வளம் கண்ட தூயவர் - 40. 40. எதிர்ப்பவர்கள் எதிரிகள் இல்லை - 41. 41. சட்டத்தை மதித்த சாதனையாளர் - 42. 42. நாட்டையே நினைத்த நல்லவர் - 43. 43. சமதர்மம் விரும்பிய சான்றாளர் - 44. 44. நம்பிக்கையின் நாயகர் - 45. 45. சூழ்நிலைக்கேற்ற சொற்பொழிவு - 46. 46. தற்புகழ்ச்சி விரும்பாத தகைமையாளர் - 47. 47. குருவிக்கு இரங்கிய குணாளர் - 48. 48. தொண்டர்களை மதித்த தூயவர் - 49. 49. மலை குலைந்தாலும் நிலை குலையாதவர் - 50. 50. நலிந்தோரின் நாயகன் - 51. 51. ஆடம்பரம் விரும்பாத அண்ணல் - 52. 52. மனிதரை மதித்த மாமனிதர் - 53. 53. குழந்தைகளைக் கவர்ந்த குணசீலர் - 54. 54. நடுநிலைமை போற்றிய நாயகர் - 55. 55. பாரபட்சம் காட்டாத பண்பாளர் - 56. 56. மாற்றான் தோட்டத்து மல்லிகை - 57. 57. பணியாளரை மதித்த பண்பாளர் - 58. 58. ஆன்மீக உணர்வு கொண்ட அருந்தலைவர் - 59. 59. குருவைப் போற்றிய குருநாதர் - 60. 60. தன்னம்பிக்கை மிகுந்த தலைவர் - 61. 61. நாட்டை நேசித்த நல்லவர் - 62. 62. காந்தியப் பெருந்தலைவர் - 63. 62. காந்தியப் பெருந்தலைவர் - 64. 63. ஏழை பங்காளன் - 65. 64. உண்மை ஒளிர்ந்த உரை - 66. 65. ஜீவாவின் ஜீவன் - 67. 66. உழைப்பு தந்த உயர்வு - 68. 67. தீரர் தீட்டிய திட்டம் - 69. 68. புவனேஷ்வரம் வந்த புனிதர் - 70. 69. வழிகாட்டிய வள்ளல் - 71. 70. சேவைக்கு ஒரு சிலை - 72. 71. தமிழ் முழக்கம் - 73. 72. முதல் மரியாதை யாருக்கு - 74. 73. பிறர் நலம் பேணிய பெருந்தகை - 75. 74. இறை பக்தி - 76. 75. மாலைகளை வெறுத்த மாண்பாளர் - 77. 76. பகட்டை வெறுத்த பண்பாளர் - 78. 77. தோல்வியில் துவளாத தூயவர் - 79. 78. இடைத் தேர்தலில் இணையற்ற வெற்றி - 80. 79. சமுதாய சந்நியாசி - 81. 80. சிவ பூஜையில் கரடி - 82. 81. நமது நாகரிகம் - 83. 82. பூகோளம் புரிந்தவர் - 84. 83. வீரஉரை - 85. 84. அரசின் கடமை - 86. 85. பெரியார் போற்றிய பெருந்தகை - 87. 86. பிறர் நலம் பேணுவோம் - 88. 87. பட்டங்கள் வேண்டாம் - 89. 88. ஆசிய ஜோதி அணைந்தது - 90. 89. மகுடம் சூட்டிய மாமனிதர் - 91. 90. வீரர்கள் மத்தியில் மாவீரர் - 92. 91. மக்களின் மகரிஷி - 93. 92. அறிஞர் பாராட்டிய அறிஞர் - 94. 93. குரு சிஷ்யன் - 95. 94. எதிரி வீட்டு விருந்து - 96. 95. இவரைப் பற்றிய இனிய செய்திகள் - 97. 96. நாடாளுமன்றத்தில் நன்மதிப்பு - 98. 97. எளிமையும் உயிரிரக்கமும் - 99. 98. காமராசர் கடவுள் பக்தி - 100. 99. காமராசர் ஒரு புதிர் - 101. 100. மாற்றாரும் போற்றிய மாமனிதர் - 102. 101. எல்லைப் போராட்டத்தில் எளிய தலைவர் - 103. 102. மனிதத்தை மதித்த மாபெரும் தலைவர் - 104. 103. வரிப்பணத்தில் விளம்பரமா? - 105. 104. காமராசர் சொன்ன அறிவுரை - 106. 105. மதுரைக்குப் போகவும் - 107. 106. வரலாறு ஆகிவிட்ட "கே-பிளான்" - காமராஜ் திட்டம் - 108. 107. உலகம் சுற்றிய உத்தமர் - 109. 108. ரஷ்யப் பயணம் - 110. 109. காந்தியத்தோடு இணைந்த காந்தியம் - 111. 110. இதயத்தில் இணைந்த தலைவன் - 112. மின் நூல் பங்களிப்பு - 113. ஓர் மாமனிதரின் பாண்பு - வேண்டுகோள் - எங்களைப் பற்றி freetamilebooks - உங்கள் படைப்புகளை வெளியிடலாமே 1 அறிமுகம் காமராஜ் நெஞ்சில் நிற்க்கும் நிகழ்ச்சிகள் படைப்பு இளசை சுந்தரம் [] மதுரா வெளியீடு சென்னை மின் நூல் வெளியீடு [] தமிழ்நாடு பொதுநூலகத்துறை தெரிவு செய்யப்பட்ட நூல் காமாராஜ் இளசை சுந்தரம் © முதல் பதிப்பு – டிசம்பர் , 2002 வள்ளுவராண்டு 2033 இரண்டாம் பதிப்பு – டிசம்பர் , 2008 வள்ளுவராண்டு 2039 வெளியீடு – மதுரா வெளியீடு மதுரா டிராவல்ஸ் சர்வீஸ் ( பி ) லிட் ., வெளியீட்டுப்பிரிவு எழும்பூர் தொடர்வண்டி நிலையம் எதிரில் , சென்னை -600 008, பேசி 9444078671 முகப்பு – மோசஸ் ரவிராஜ் வடிவமைப்பு - ஜேம்ஸ் அச்சகம் – ஜோதி எண்டர்பிரைசஸ் , சென்னை -5   2 சமர்பணம் ஊழலும் லஞ்சமும் அற்ற ஒளிமயமான சமுதாயம் உருவாக உழைத்தவர்களுக்கும் உழைக்கப் போகிறவர்களுக்கும் 3 பதிப்புரை [] தொலைபேசி : 98410 78674 E-mail:balan@maduratravel.com மாமனிதர் காமராஜ் இன்று வரலாறாய் வாழ்ந்து கொண்டிருப்பவர் , அவரது வாழ்வின் நெகிழ்ச்சியான 110 நிகழ்ச்சிகளை இளசை சுந்தரம் அவர்கள் பதிவு செய்திருக்கிறார் , அந்த நூலின் இரண்டாம் பதிப்பை மதுரா வெளியீடாக வெளியிடுவது நான் செய்த பாக்கியம் , என்றும் அன்புடன் “கலைமாமணி” வீ.கே.டி. பாலன் செல்பேசி - 9841078674 20-12-2008 தொலைபேசி : 98410 78674 E-mail:balan@maduratravel.com 4 என்னுரை தெற்கில் ஓர் இமயம் இல்லையே என்பதால் பாரதத் தாய் பெருந்தலைவரை விருதுபட்டியில் பிறக்க வைத்தாள் இந்த நூற்றாண்டில் இப்படியொரு மனிதரா ! என்றே வியக்க வைக்கும் ஏற்றமிகு தலைவர் நேர்மையின் நிறைகுடம் நிஜத்தின் உறைவிடம் தேசத்தை நேசிப்பதே இவருக்கு சுவாசம் எத்துணை இடர் வந்தாலும் எவர் எவர் ஆசை காட்டி தத்துவம் பேசினாலும் தன் கொள்கைமாறாச் செல்வர் தரணியை வென்ற செம்மல் . தனக்கென எதுவுமின்றி தன்னலம் அறவே போக்கி தியாகத்தின் திருவுருவாய் திகழ்ந்தவர் காமராசர் இத்தகைய அருங்குணமே இவரைப் பற்றி என்னை எழுதத் தூண்டியது இன்றைய தலைமுறை நிச்சயம் படிக்க வேண்டிய இன்னுமொரு ‘சத்திய சோதனை’ இவர் வழியில் புதிய பாரதம் படைக்கப் புறப்படுவோம் இவண் இளசை சுந்தரம்   இவண் இளசைசுந்தரம் , மதுரை வானொலி முன்னாள் , இயக்குநர் , நிர்மல் BS- 3, அக்ரிணி குடியிருப்பு , மதுரை - 625 003.மின் அஞ்சல் http://ilasaisundaram.com/ humourkingilasai@yahoo.com 5 ஓர் மாமனிதரின் பாண்பு தெலுங்குக் கவிஞர் வேணுரெட்டி சிறந்த கவிஞர் . அவர் எழுதிய தெலுங்குக் கவிதையின் சாராம்சம் இது . படைப்புக் கடவுள் பிரம்மா ஒரு குழந்தையைப் படைத்துக் கொண்டிருந்தார் அப்போது அங்கே மன்மதன் வந்தான் இந்தக் குழந்தைக்கு நான் போழகைக் கொடுக்கப் போழகைக் கொடுக்கப் போகிறேன் என்றான் வேண்டாம் என்றார் பிரம்மா உன் உதவியில்லாமலேயே ஒரு குழந்தையை உருவாக்கப் போகிறேன் நீ போகலாம் என்றார் கொஞ்ச நேரத்தில் அங்கே கல்விக் கடவுள் கலைமகள் வந்தாள் இந்தக் குழந்தைக்கு கல்விச் செல்வத்தை வாரி வழங்கப் போகிறேன் என்றாள் வேண்டாம் என்றார் பிரம்மா உன் உதவி இல்லாமலேயே உருவாக்கப்போகிறேன் என்றார் கலைமகளும் கவலையோடு போய் விட்டாள் அடுத்து செல்வக் கடவுள் லெட்சுமி வந்தாள் இந்தக் குழந்தைக்கு வளமான செல்வத்தை வழங்கப்போகிறேன் என்றாள் வேண்டாம் என்றார் பிரம்மா உன் உதவியில்லாமலேயே உருவாக்கப்போகிறேன் நீ போகலாம் என்றார் அவளும் போய் விட்டாள் மன்மதன் வழங்கும் பேரழகும் இல்லாமல் கலைமகள் வழங்கும் கல்வியும் இல்லாமல் லட்சுமி வழங்கும் கல்வியும் இல்லாமல் லட்சுமி வழங்கும் செல்வமும் இல்லாமல் உலகப் புகழ் பெறப்போகும் ஒரு குழந்தையை உருவாக்கப் போகிறேன் என்றார் பிரம்மா அந்தக் குழந்தைதான் ளுலகம் புகழும் உன்னதத் தலைவராய் உயர்ந்த பெருந்தலைவர் காமராசர் . [pressbooks.com] 1 1. திருடனைப் பிடித்த தீரச் சிறுவன் அந்த ஊருக்குப் புதிதாக வந்த ஒருவர் , பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த பையனைப் பார்த்து “ தம்பி ! உங்கள் ஊரில் பெரியவர்கள் யாரும் பிறந்திருக்கிறார்களா ? ” என்று கேட்டார் . அவரை நிமிர்ந்து பார்த்த பையன் , எங்கள் ஊரில் பெரியவர்களாக யாரும் பிறப்பதில்லை . எல்லோரும் குழந்தைகளாகத்தான் பிறக்கிறார்கள் என்று பதில் சொன்னான் . உண்மைதான் . பிறக்கும் போது எல்லோரும் குழந்தைகள்தான் . பலர் உடலால் மட்டும் பெரியவர்கள் ஆவார்கள் . சிலர் மட்டும் உள்ளத்தால் பெரியவர்கள் ஆவார்கள் . இறைவன் வானத்திலிருந்து பூமிக்கு அவ்வப்போது சில கடிதங்கள் எழுதுவான் . அத்தகைய கடிதங்கள் பல செய்திகளைத் தாங்கி வரும் . அந்தக் கடிதங்களே பூமியில் மகான்களாக அவதரிக்கின்றன . அப்படியொரு கடிதம் தமிழகத்தில் விருதுபட்டி என்ற ஊருக்கு 1903 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15 ஆம் தேதி அனுப்பப்பட்டது . குமாரசாமி நாடார் , சிவகாமி அம்மையார் என்ற தம்பதிகள் அந்தக் கடிதத்தை பத்திரமாக ‘ டெலிவரி ’ செய்தார்கள் . அந்தக் கடிதத்திலும் சிறப்பான செய்திகள் பல இருக்கின்றன என்ற தகவல் போகப்போக எல்லோருக்கும் புரிந்தது . கழுத்தில் ஒரு கயிறு , கையில் காப்பு , குடுமி இத்தகைய தோற்றத்தில் காட்சியளித்த “ காமாட்சி ராஜா ” என்ற சிறுவன் எதிர்காலத்தில் காமராஜர் என்ற பெருந்தலைவராக உருவாகப் போகிறான் என்பதற்கான அடையாளம் அப்போதே தெரிந்தது . விருதுபட்டியில் திருடன் ஒருவன் தனது கைவரிசையைக் காட்டிக் கொண்டிருந்தான் . எல்லோருக்கும் குலை நடுக்கம் . பெரியவர்கள் கூட பயந்து நடுங்கினார்கள் . இருட்டத் தொடங்கியதுமே பலர் தங்களுடைய வீடுகளைப் பூட்டிக்கொண்டார்கள் . திருடனைப் பிடிப்பதற்குப் பதிலாக தங்களைப் பாதுகாத்துக் கொள்வதிலேயே பலர் கவனம் செலுத்தினார்கள் . தவறுகளைத்தட்டிக் கேட்க வேண்டும் என்ற தைரியம் , அதனால் ஆபத்து வந்தால் ஏற்றுக்கொள்கிற அஞ்சாநெஞ்சம் சமுதாயத்துக்கு நாம் பயன்பட வேண்டும் என்ற தொண்டுள்ளம் இவையெல்லாம் சிறுவனாக இருந்த காமராசரிடம் நிரம்பியிருந்தது . அதனால் திருடனைப் பிடிக்க அவரே திட்டமிட்டார் . தனக்கு உதவியாக சில நண்பர்களைச் சேர்த்துக் கொண்டார் . திருடன் வரும் இருட்டு வழியில் குறுக்காக ஒரு கயிரைக் கட்டி வைத்தார்கள் . அவன் விழுந்ததும் கண்ணில் தூவ மிளகாய்ப் பொடி தயாராக இருந்தது . பாதையின் ஓரத்தில் பதுங்கியிருந்து திருடன் வரும் நேரத்தை எதிர்பார்த்திருந்தார்கள் . திட்டமிட்டபடி திருடன் வந்தான் . கயிறு தடுக்கி தடுமாறி விழுந்தான் . கணநேரத்தில் கண்ணில் மிளகாய்ப்பொடி தூவப்பட்டது . சாக்குப்பையில் போட்டு குண்டுக்கட்டாகக் கட்டிவிட்டார்கள் . திருடனைப் பிடித்த சிறுவனின் தீரச் செயல் கண்டு ஊரே வியந்தது . இத்தகைய திருடர்கள் எந்தத்துறையிலும் ஊடுருவாமல் பார்த்துக்கொள்வது நல்லது . 2 2. பிடியரிசிப் பள்ளிக்கூடம் ஆசிரியர் மாணவனிடம் கேட்டார் . “ இமயமலை எங்கே இருக்கிறது ? ” பையன் விழித்தான் . “ பெஞ்சு மேல ஏறு ” என்று உறுமினார் ஆசிரியர் . “ பெஞ்சு மேல ஏறினா இமயமலை தெரியுமா சார் ? ” இப்படி குறும்புத்தனமாக பேசுகிற மாணவர்களை இப்போது பார்க்கிறோம் . ஆனால் சிறுவனாயிருந்து பள்ளியில் படித்த போது அப்பச்சி காமராசர் ஆசிரியருக்குப் பெரிதும் மரியாதை கொடுப்பார் . இத்தனைக்கும் அவர் படித்தது மாபெரும் பள்ளிக்கூடம் அல்ல . பிடியரிசிப் பள்ளியென்றும் , நொண்டி வாத்தியார் பள்ளி என்றும் அழைக்கப்பட்ட சாதாரண கிராமத்துப் பள்ளிக்கூடம்தான் . படிப்புக்காக ஆசிரியருக்கு அரிசியும் நெய்யும்தான் வழங்கப்படுமாம் . பொதுவாக அந்தக்காலத்துப் பிள்ளைகள் ஆசிரியர்களிடம் அதிக மரியாதை வைத்திருப்பார்கள் . என்றாலும் காமராசர் மிக அதிகமாகவே ஆசிரியருக்கு மரியாதை கொடுத்தார் . பெரியோரை மதிக்கும் இந்தப் பண்பே பிற்காலத்தில் காந்தியடிகள் , சத்தியமூர்த்தி போன்றோரிடம் மரியாதை காட்ட அவருக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது . வகுப்பறையில் ஒரு நாள் கணக்கு ஆசிரியர் மாணவர்களிடம் கணக்குப் போடச்சொன்னார் . எப்போதும் காமராசரைப் பார்த்து காப்பியடிக்கிற ஒரு மாணவன் அன்றைய தினம் ஆசிரியர் கவனித்து விட்டதை உணர்ந்து கதையை மாற்றி விட்டான் . காமராசர் கணக்கைக் காட்டச்சொல்லி கட்டாயப்படுத்தியதாக புகார் செய்தான் . உண்மையை உணராத ஆசிரியர் காமராசரை அடித்து விட்டார் . தவறாகத் தண்டிக்கப்படுகிறோம் என்று தெரிந்தும் எதிர்ப்புத் தெரிவிக்காமல் தண்டனையை ஏற்றார் , பொறுமையாக நின்றார் . ஆம் . ஒரு சத்தியாக்கிரகி அப்போதே உருவாகிவிட்டார் . மாணவர்கள் ஆசிரியரிடம் சென்று , புகார் செய்த மாணவன்தான் உண்மையில் காப்பியடிப்பவன் என்பதைக் கூறியதும் , ஆசிரியர் மனம் வருந்தினார் . காமராசரின் பொறுமையைக் கண்டு வியந்தார் . அவரை அன்போடு வருடிக்கொடுத்தார் . ஒரு காந்தியத் தலைவன் உருவான கதை இது . 3 3. முட்டை நடனம் மற்றவர்களைப் பாராட்டுவதற்குப் பதிலாக அவர்களின் மனதைப் புண்படுத்துவதே சிலருக்கு வாடிக்கையாக இருக்கும் . காலையில் ஒருவர் நாயைக் கூட்டிக் கொண்டு வாக்கிங் போனார் . எதிரே வந்த ஒருவர் இவரைப் பார்த்து “ என்ன காலையில் குரங்கை கூட்டிக் கொண்டு எங்கேயோ போற மாதிரி இருக்கு ” என்றார் . “ குரங்கா ? நான் நாயைத்தானே கூட்டிக்கொண்டு போகிறேன் ” என்றார் அவர் . “நான் உங்களிடமா கேட்டேன், நாயிடமல்லவா கேட்டேன்”என்று இவர் சொல்ல, குரங்காகிப்போனவர் கொதித்துப்போனார். “ஓகோ! நாயிடம் கேட்டீங்களா? சரிதான். இனம் இனத்தோடுதானே பேசும்”பதிலுக்கு கடித்தார். இப்படி இல்லாமல் மற்றவர்களை மதிக்கவும் , பாராட்டவும் கூ டிய பண்பைப் பெறுவதே சிறப்பு . இத்தகைய பண்புகளைப் பெருந்தலைவர் காமராசர் சிறு வயதிலேயே பெற்றிருந்தார் . விருதுபட்டியில் ஒரு தடவை வில்சன் என்பவர் வந்து வித்தைகளைச்செய்தார் . வீரதீரச்செயல்களைச் செய்தார் . மக்கள் வியப்போடு கண்டு களித்தனர் . காமராசரும் அங்கு இருந்தார் . 144 அடி உயரமான கம்பத்திலிருந்து கீழே குதித்து சாகசம் செய்தார் வில்சன் . மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர் . அதற்கு மேல் அவர்களுக்கு எதுவும் செய்யத் தோன்றவில்லை . யாரும் எதிர்பாராத வகையில் ஒரு சம்பவம் நடந்தது . கையில் ஒரு முறுக்கு மாலையுடன் சிறுவன் காமராசர் வித்தை அரங்கத்துக்குள் நுழைந்தார் . கூட்டம் மீண்டும் ஆரவாரம் செய்தது . முறுக்கு மாலை போடவந்தது தனக்கு பாராட்டா அல்லது அவமதிப்பா என்று தெரியாமல் கடுகடுப்பாக முகத்தை காட்டினார் வித்தைக்காரர் . ரொம்ப நல்லா வித்தை காட்டினீங்க . இந்தாங்க முறுக்கு சாப்பிடுங்க என்று ஒரு முறுக்கை ஒடித்து வித்தைக்காரர் வாயில் ஊட்டப்போனார் காமராசர் . வித்தைக்காரர் நெகிழ்ந்துபோனார் . கள்ளங்கபடமற்ற அந்த பாராட்டுரையைக் கேட்டு முறுக்கு மாலையைப் பெற்றுக்கொண்ட வித்தைக்காரர் காமராசரின் முதுகில் தட்டிக்கொடுத்தார் . இப்படி ஏதாவது ஒரு சாதனையை செய்து மற்றவர்களின் கவனத்தை கவர வேண்டும் என்ற ஆர்வம் சிறு வயதிலேயே காமராசருக்கு உண்டு . ஒரு நாள் நண்பர்களை அழைத்து வைத்துக்கொண்டு ஒரு முட்டையை நடனமாட வைத்து வித்தை காட்டினார் . நண்பர்கள் ஆச்சரியப்பட்டு இது காமராசர் மந்திரம் என்று பாராட்டினார்கள் . இதில் மந்திரம் ஒன்றுமில்லை . எல்லாம் நமது மதி நுட்பம்தான் என்று அதை விவரித்தார் காமராசர் . “ முட்டையில் சிறு துளை உண்டுபண்ணி உள்ளே இருப்பதை அப்புறப்படுத்திவிட்டு அதில் பாதரசத்தை ஊற்ற வேண்டும் . பிறகு அதை வெயிலில் காய வைத்தால் சூடு ஏற பாதரசம் விரிவடைந்து முட்டை அசையத் தொடங்கும் . இதுதான் விஷயம் ” நண்பர்கள் ஆச்சரியப்பட்டார்கள் . ஆம் பின்னாளில் காமராசர் திட்டம் என்று ஒன்று வந்தபோது நாடே , உலகே ஆச்சரியப்பட்டதே . அதற்கு அடிப்படை இந்தப் புதுமை உணர்வுதான் . 4 4. நாடகத்தில் மட்டும் நடித்தவர் மேடை நாடகங்களில் திடீரென்று சில பிரச்சினைகள் ஏற்பட்டு விடும் . அவற்றை சமயோசிதமாகச் சமாளிப்பது ஒரு கலை . ஒரு பள்ளிக் கூடத்து ஆண்டு விழாவில் பாஞ்சாலி சபதம் நாடகம் நடந்தது . மாணவர்கள் மட்டுமே படிக்கக் கூடிய பள்ளி என்பதால் பாஞ்சாலியாக நடிப்பதற்கு ஒரு மாணவரையே தேர்ந்தெடுத்திருந்தார்கள் . பாஞ்சாலி மீது சுற்றப்பட்டிருக்கும் புடவைகளை மெதுவாக இழுக்க வேண்டும் என்று துச்சாதனனாக நடித்த குண்டு மாணவனுக்குச் சொல்லி வைத்திருந்தார்கள் . ஆனால் முன் விரோதம் காரணமாக அந்தப் பையன் பாஞ்சாலியின்சேலையை ஒரே இழுப்பாக இழுத்து விட்டான் . பாஞ்சாலி இப்போது டவுசரோடு நிற்க வேண்டியதாயிற்று . ஆனால் அந்தப் பையன் அற்புதமாகச் சமாளித்தான் “ கண்ணா ! நிறையப் புடவைகளை கொடுத்து என் மானத்தைக் காப்பாத்துவேன்னு நெனைச்சேன் . பரவாயில்லை என்னை ஆணாகவே மாற்றிக் காப்பாற்றி விட்டாய் . ” இதைக் கேட்டு கூட்டமே ஆரவாரம் செய்தது . இப்படிப்பட்ட சுவையான சம்பவம் ஒன்று காமராசர் வாழ்க்கையிலும் நடந்ததுண்டு . வாழ்க்கையில் என்றைக்குமே நடிக்காத அவர் , நாடகத்தில் நன்றாக நடிப்பாராம் . சிறு வயதில் அவர் மார்க்கண்டேயன் என்ற நாடகத்தில் நடித்திருக்கிறார் . அதில் அவருக்கு மார்க்கண்டேயனைக் காப்பாற்றும் சிவபெருமான் வேடம் . பதினாறு வயது ஆனதும் மார்க்கண்டேயனுக்கு ஆயுள் முடிந்துவிடும் என்பது அவனது பெற்றோருக்கு ஆண்டவன் போட்டிருந்த நிபந்தனை . அதன்படி பதினாறு வயது முடிந்ததும் எமதர்மன் பாசக் கயிற்றோடு வந்து விட்டான் . மார்க்கண்டேயன் ஓடிச் சென்று சிவபெருமானின் கால்களைப் பிடித்துக்கொள்கிறான் . இறைவா என்னைக் காப்பாற்று ! என்று மன்றாடுகின்றான் . இவன் எனது பக்தன் என்னிடம் சரணடைந்து விட்டான் . இவனை விட்டுவிடு என்று சிவபெருமான் சொல்கிறார் . யாராயிருந்தாலும் எனது கடமையை நிறைவேற்றுவேன் என்று கர்ஜிக்கிறான் . சிவபெருமானாக நடித்த காமராசருக்கும் எமனாக நடித்தவருக்கும் வாக்கு வாதம் வந்து விடுகிறது . சிவபெருமான் எவ்வளவோ சொல்லியும் எமன் கேட்பதாக இல்லை . துன்பப்படுகிறவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தை இயல்பாகக் கொண்டிருந்த காமராசர் , தான் போட்டிருந்த சிவபெருமான் வேடத்தை மறந்தார் . அது நாடகம் என்பதையும் மறந்தார் . “ இந்தப் பையனை ஒண்ணும் செய்யாதேன்னு சொல்றேன் கேட்க மாட்டேங்கிறயே ” என்றபடி எமனாக நடித்தவரை மேடையிலேயே அடித்து நொறுக்கிவிட்டார் . கூட்டம் இந்தக் காட்சியைக் கண்டு ஆரவாரம் செய்தது . கொடுமையை கண்டு கொதித்து எழும் காமராசரின் உணர்ச்சியைப் பாராட்டியது . அநீதியைத் தட்டிக் கேட்கும் இந்தப் பண்பு கடைசிவரைக்கும் காமராசரிடம் நிலைத்திருந்தது . அந்த உணர்வே வெள்ளையரை எதிர்த்துப் போராட உதவியது . 5 5. குடுகுடுப்பைக்காரன் செய்த குழப்பம் இரவு நேரத்தில் சுடுகாட்டில் மந்திர ஜெபம் செய்துவிட்டு அதே நேரத்தில் அதே வேகத்தில் விடிவதற்குள் குடுகுடுப்பை அடித்து தெருத்தெருவாகக் குடுகுடுப்பைக்காரன் வருவது அந்த காலத்தில் மிகவும் அதிகம் . ‘பாருங்க பாருங்க இந்தத் தெருவுக்கு கிழக்கு கோடியிலே அய்யோனு போகுது’என்ற குடுகுடுப்பைக்காரனின் குரல் கேட்டு தூங்கிக் கொண்டிருந்த காமராசர் விழித்தார். அந்தக் குரலையே கேட்டுக்கொண்டிருந்தார். ‘ஆமாம் தாயே! ஐந்து வயது பாலன். அறியாத பருவம் அகப்பட்டுக்கொண்டான். பறி கொடுத்தவர் வந்து ஜோசியம் கேளுங்க. கண்மாய் அடி மண்டபம்; பாழடைந்த பிசாசு பீடம். வாருங்க தாயே’என்று மீண்டும் குரல் கேட்டது. குடுகுடுப்பைக்காரன் பேச்சில் ஏதோ வித்தியாசம் தெரிவதை உணர்ந்த காமராசர் அதே சிந்தனையோடு இருந்தார் . பொழுது விடிந்தது . காலை வெயில் சூடுபிடிக்காத நேரத்தில் காமராசர் நண்பன் தங்கப்பனைத் தேடிச் சென்றார் . தோழர்கள் எல்லாரும் ஒன்றாகக் கூடினார்கள் . மோட்டார் டயர் துண்டுகள் சேகரித்தார்கள் . ரயில்வே ஸ்டேஷனுக்கு தெற்கே கீழ் புறத்தில் சுரங்க வாய்க்கால் . வேலாயுத மடைகுளம் நிறைந்து தண்ணீர் பெரிய தெப்பக்குளத்துக்கு வரவேண்டும் . காமராசரின் தோழர்கள் சுரங்க பாதையை அடைந்தார்கள் . டயர் துண்டில் தீப்பற்ற வைத்தனர் . காமராசர் அந்த இருண்ட சுரங்க வாய்க்காலில் மெதுவாக நடந்தார் . திடீரென காமராசர் இருளுக்குள் பாய்ந்தார் . போராடி பிடித்தார் . தாடி மீசையுடன் ஒருவன் பிடிபட்டான் . தரையில் ஐந்தாறு வயதுடைய பையனும் கிடைத்தான் . காணாமல் போன பையன்தான் அவன் . சுரங்கப் பாதையிலிருந்து வெளியே வந்த தோழர்கள் பிள்ளை பிடிக்கும் தாடிக்காரனைக் கட்டி கூட்டிப்போய் போலீஸில் ஒப்படைத்தார்கள் . குடுகுடுப்பைக்காரன் தொல்லை இனி இல்லை . பிள்ளைப் பிடிக்கிறவன் பற்றிய பயமும் குறைந்தது . வெறும் பிச்சையில் திருப்தியடையாத குடுகுடுப்பைக்காரன் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கத்திட்டமிட்டான் . சின்ன பிள்ளைகளைப் பிடித்து மறைத்து வைத்து விட்டு பிறகு அவர்கள் வீட்டுப் பக்கம் சென்று குறி சொல்வது போலச் சொல்வான் . பிள்ளையைப் பறி கொடுத்தவர்கள் வந்து கேட்டால் நிறைய பணம் பெற்றுக் கொண்டு குழந்தையை மறைத்து வைத்திருக்கும் இடம் பற்றித் தகவல் கொடுப்பது . இதுதான் அவனது திட்டம் . ஆனால் காமராசர் தனது சாதுரியத்தால் குடுகுடுப்பைக்காரன் திட்டத்தைக் கண்டுபிடித்து முறியடித்தார் . இதன் மூலம் ஊர் மக்களின் கவலைகளைத் தீர்த்தார் . 6 6. விளையும் பயிர் ஒரு வீட்டில் இரவு சாப்பாடு நேரம் முடிந்ததும் குடும்பத்தார் அனைவரும் மொட்டைமாடிக்கு வந்தனர் . குழந்தைகள் ஒவ்வொருவரும் தங்கள் சந்தேகங்களைக் கேள்வியாகக் கேட்க தந்தை பதில் கூறினார் . ஒரு சிறுவன் “ வானத்துலே இவ்வளவு நட்சத்திரம் இருக்குதே எதுக்குப்பா ” என்றான் . “ராத்திரியானா வரத்தான்செய்யும்”என்றார் அப்பா. “இல்லைப்பா அதுக்கு ஒரு காரணம் கட்டாயம் இருக்கும்”என்ற பையன் அம்மாவிடம் அதே கேள்வியினைக்கேட்டான். “தெரியவில்லைப்பா. நீயே சொல்லிவிடு”என்றார் அம்மா. உடனே அச்சிறுவன் “இரவு நேரத்தில யாராவது தவறு செய்கிறார்களா என்று ஆண்டவன் கோடிக்கணக்கான கண்களைக்கொண்டு பார்த்துக்கொண்டிருக்கிறான். அதுதான் நட்சத்திரங்கள்”என்றான் பையன். இப்படிப்பட்ட புத்திசாலிக் குழந்தையாகத் தான் பெருந்தலைவர் காமராசரும் வளர்ந்தார் . காமராசரின் தாய்மாமன் கருப்பையா நாடார் . இவர் நாட்டாமை , கிராம முன்சீப் , கோவில் தர்மகர்த்தா எனப் பலப் பதவிகளை வகித்தவர் . மாலையில் ஐந்து கோவில்களுக்கு வரிசையாகப் போய்விட்டு அவரது ஜவுளிக்கடைக்கு வருவார் . விருதுபட்டியில் உள்ள நாடார்களில் பெரும்பாலோர் வியாபாரத்தில் நாட்டமுடையவர்கள் . அரசாங்க உத்தியோகங்களில் அவர்களுக்கு ஆர்வம் இருந்தது இல்லை . பிள்ளைகளுக்கு ஓரளவுக்கு படிக்க எழுதத் தெரிந்தால் போதும் படிப்பை நிறுத்தி விடுவார்கள் . இந்த நிலையில் ஒருநாள் அரசியல் பேச்சுக்களை காமராசர் உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தபோது அவரது மாமா கருப்பையா நாடார் கவனித்துவிட்டார் . நம் வீட்டுப் பிள்ளைக்கு அரசியல் ஒத்து வருமா ? என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது . காமராசருக்குத் தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்து விட்டது . கணக்கு , இங்கிலீசு கொஞ்சம் தெரியும் . இனி படித்தது போதும் கடையில் அனுபவம் பெறட்டும் என குடும்பத்தார் முடிவு செய்து ஆறாம் வகுப்பு முழுப்பரீட்சை எழுதும் முன்பே பள்ளிப் படிப்பு நிறுத்தப்பட்டது . தாய்மாமன் கடையில் வியாபார அனுபவம் பெற காமராசர் அனுப்பப்பட்டார் . காமராசர் படித்து ஆளாகி கடைக்குப் போனதற்காக தெருவில் பெரியவர்கள் எல்லோரும் வாழ்த்தினார்கள் . தினந்தோறும் இரவு பத்து மணிக்கு வரவு செலவுத் தொகை சரிபார்த்துக் கடைக்கணக்கு முடிந்ததும் காமராசர் நேரே வீட்டுக்குப் போகமாட்டார் . தெப்பக்குளம் கைப்பிடிச் சுவரில் நண்பர்களோடு அமர்ந்து யுத்தச் செய்திகள் , அரசியல் பற்றிய காரசார விவாதங்களெல்லாம் நடந்து முடிந்த பிறகு , நள்ளிரவுக்கு மேல்தான் வீடு திரும்புவார் . கூட்டங்கள் , பத்திரிக்கை படிப்பது , இவைதான் காமராசருக்கு அதிக விருப்பத்தைக் கொடுத்தன . ஆனால் பெரியவர்கள் , காமராசரைக் கூட்டத்திற்கு போக விடாமல் தடுப்பதற்காக முயன்றனர் . கூட்டம் நடக்கும்நேரத்தில் காமராசரைத் தனி ஆளாகக் கடையில் விட்டனர் . இதனால் பல கூட்டங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு தவறிப் போனது . அன்று அம்மன்கோவில் திடலில் கூட்டம் . டாக்டர் வரதராஜூலு நாயுடு பேசுகிறார் என்று தண்டோராப்போட்டனர் . “ இன்றைக்கு ராத்திரிக் கூட்டம் . அதனாலே நேரத்துக்குக் கல்லாவுக்கு மாற்று ஆள் வந்திட வேணும் ; இல்லாவிட்டால் பின்னாலே என்மேல் குறைபடக் கூடாது ” என்று முதலிலேயே எச்சரித்து விட்டார் காமராசர் . மாலைநேரம் கூட்டம் தொடங்கும் நேரமாகியும் மாற்ற ஆள் யாரும் வராததால் இருப்புக் கொள்ளாத காமராசர் கல்லாவைப் பூட்டிவிட்டு வீடு நோக்கிச் சென்று சாவியை வீசிவிட்டு பொட்டல் நோக்கிச் சென்றார் . 7 7. உதவிக் கரம் அண்ணன் தம்பிக்கு இடையே கூட போட்டி பொறாமை நிலவும் இந்தக் காலத்தில் தன் உயிரைக் கூடப் பெரிதாக எண்ணாமல் அடுத்தவர் ஆபத்தில் உதவிக்கரம் நீட்டியவர் பெருந்தலைவர் . விருதுநகர் புல்லக்கோட்டை ரோடு வடபுறம் சுண்ணாம்புக் கால்வாய்களும் , செங்கற் சூளைகளும் அதிகம் . அதில் நான்கு சூளைகளுக்குச் சொந்தக்காரர் வேல் கொத்தனார் என்பவர் . அவரிடம் பத்தொன்பது வயதே ஆன சின்னராமு என்பவன் உதவியாளராகப் பணியாற்றி வந்தான் . கலவைக்குக் களிமண் சுமந்து வருவது முதல் சூளை பிரிப்பது வரை நல்ல பயிற்சி உண்டு சின்னராமுவுக்கு . அது மட்டுமல்லாமல் கொத்தனாருக்குச் சுருட்டு வாங்கிக் கொடுப்பது என்று சின்ன வேலைகளையும் விசுவாசமாகச் செய்து வந்தான் . ஒருநாள் கொத்தனார் , “ பவளக்காரர் வீட்டுக்குடா ! பார்த்து நாளைக் காலையிலே மறுசூளை வைக்கணும் ” என்று சின்னராமுவிடம் கூறினார் . இரவுப் பொழுது முடிந்தால் சூளை ஆறிவிடும் . மேல் பக்கமிருந்து எளிதாகச் சூளையைப் பிரிக்கலாம் . ஆனால் அவசரத்தில் குறுக்கு வழியில் சின்னராமு சூளையைப் பிரித்தான் . வேலைக்காரி ராக்கு தூக்கிச் சுமந்தாள் . ஆனால் திடீரென்று சூளை சரிய ஆரம்பித்து , சின்னராமு சாய்ந்தான் . வேலைக்காரி ராக்கு , “ அய்யா சாமி ராமு போச்சே ! ” என்று கதற ஆரம்பித்தாள் . அந்த அபயக்குரல் தோழர்களுடன் உலா வந்து கொண்டிருந்த காமராசர் காதில் கேட்க , ஓடிப்போய் சூளையில் ஏறி சின்னராமுவின் கையைப் பற்றி வெளியே தூக்க முயன்றார் . மற்ற நண்பர்களும் சுவரில் தாவி ஏறி கை கொடுக்க சின்னராமு காப்பாற்றப்பட்டான் . அன்று இரவு ஓட்டல் அதிபர் பாலு அய்யர் , ஞானம் பிள்ளை , கோவில் தலைவர் சண்முக சுந்தர நாடார் மற்றும் பலர் காமராசரை முதுகில் தட்டிப் பாராட்டினர் . 8 8. உரிமைக்குரல் மாவீரன் அலெக்சாண்டரின் ஆசிரியராக விளங்கியவர் தத்துவ மேதை டயோஜெனிஸ் . இவர் ஒரு நாள் இரு மண்டை ஓடுகளை மேஜையின் மேல் வைத்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார் . அப்போது அங்கு வந்த அலெக்சாண்டர் , “ ஆசிரியர் அவர்களே ! மண்டை ஓடுகளைப் பார்த்து என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் ” என்று கேட்டார் . அதற்கு அவர் “ இந்த இரண்டு மண்டை ஓடுகளுக்கு இடையே ஏதாவது வேறுபாடு கண்டுபிடிக்க முடிகிறதா என்று பார் ! ” என்றார் . அலெக்சாண்டரும் பார்த்து விட்டு “ எந்த வேறுபாடும் இல்லை ” என்றார் . “இந்த இரண்டில் ஒன்று உன் தந்தையுடையது; மற்றொன்று அவரது அடிமையுடையது. எது உன் தந்தையுடையதாக இருக்கும் என்று கண்டுபிடிக்க முயன்றேன் முடியவில்லை”என்றார். இதைக்கேட்டதும் ஆணவம் மிக்க அலெக்சாண்டரின் அறிவுக் கண்கள் திறந்தன. இறைவனின் படைப்பில் எல்லோரும் சமம் என்ற இந்தத் தத்துவம் சிறுவனாக இருக்கும் போதே காமராசர் மனதில் நன்கு பதிந்தது . எனவே சாதியால்தாழ்த்தப்பட்டவர் என்று சொல்லப்பட்டவரின் உரிமைக்காகப் போராடினார் . பங்குனி மாதம் வளர்பிறை ! மாரியம்மன்கோவில் தீச்சட்டி விழா . நையாண்டி மேளமும் நாதசுரமும் முழங்க ஊர்வலம் ஆரம்பித்தது . பம்பை இசைக்குத் தக்கபடி , தீச்சட்டி எடுத்தவர்கள் கால்களை எடுத்து வைத்து ஆடுவார்கள் . குமரன் என்ற வாலிபன் நல்ல உடல் அமைப்பு உடையவன் . பள்ளர் தெருவைச் சேர்ந்தவன் . பயிற்சி முறை இல்லாத இந்த ஆட்டத்தில் குமரன் தனித் திறமை காட்டினான் . எல்லோரும் அவனுடைய ஆட்டத்தை ஆர்வமுடன் பார்த்தனர் . இனிமேல் அம்மன் கோவிலில் தீச்சட்டி செலுத்த வேண்டும் . கோவிலின் மேல்புறம் உள்ள அக்கினிச் சட்டிக் கிடங்கை நோக்கிக் குமரன் நடக்க ஆரம்பித்தான் . அப்போது “ இந்தா குமரா இங்கே வா …! ” என்று கணீரென்று குரல் ஒலித்தது . குமரன் மட்டுமின்றி கூட்டமே திசை திரும்பியது . “இவ்வளவு நேரமும் அருமையாக ஆடினாய். இப்போது கோயிலுக்குள் போய்ச் சட்டியை செலுத்தாமல் வேறெங்கோ போகிறாயே”என்று காமராசர் அழைத்தார். குமரனின் இடது கையை தன் கையில் பிடித்தபடி அம்மனிடம் கொடுப்பது போல பூசாரியிடம் சமர்ப்பித்து உண்டியலில் காணிக்கை போட்டு விபூதி வாங்க வேண்டும். “வா கோயிலுக்குள் போகலாம்”என்று கூறி காமராசர் முன்னேறினார். கோவில் வாசற்படியில் நின்ற பூசாரி இரண்டு கைகளையும் விரித்து தடுத்தார் . “வேண்டாம் தம்பி! குமரன் பள்ளர் தெருவாச்சே, அவங்க எல்லாம்கோவிலுக்கு வெளியே அக்கினிச் சட்டி மாடம் இருக்கிறது இல்லையா. அங்கேதான் காணிக்கைச் செலுத்தணும்”என்றார் பூசாரி. “இன்னைக்கு சாயந்திரம் தெருத்தெருவா வீடுகளில் பால் கறந்து கொடுத்தான். அவன் கைப் பட்ட பாலை அம்மன் அபிஷேகத்திற்குக் கொடுக்கிறீங்க. ஆனால் இவன் மட்டும் கோவிலுக்குள் நுழையக்கூடாதா?”என்று காமராசர் கோபமாகக் கேட்டார். ஞானம்பிள்ளை என்பவர் “ நாட்டாமைக்காரர் வீட்டுத் தம்பி ! இது ஊர்க் கட்டுப்பாடு . பள்ளர் பறையர்களுக்கு தனி இடம் இருக்கு ” என்றார் . உடனே காமராசார் இடைமறித்தார் . “ஆவாரங் காட்டு நிலத்தைப் பள்ளர் தெருக்காரர்கள் உழுதபோதுதானே இந்த அம்மன் சிலை கிடைச்சது. இந்த அம்மன் கிட்ட இவங்க நேர்த்திக் கடன் செலுத்தக் கூடாதா” “அவங்களுக்கு உரிமை தர வேண்டியது ஊர்க்காரங்க தான்.அவங்க மனசு மாறணும். “நாட்டாமைக்காரர் வீட்டுப் பிள்ளையே கட்டுப்பாட்டை மீறினால் எப்படித் தம்பி” அப்போதும் காமராசர் குமரன் கையை விடவில்லை . மேற்குப் புறமுள்ள வெளிப்புற மாடத்தில் அக்கினிச் சட்டி இடப்பட்டது . அங்கு இருந்த தனி உண்டியலில் குமரனின் காணிக்கை போடப்பட்டது . பூசாரி கொடுத்த விபூதியை காமராசர் நண்பர் குழுவோடு பெற்றுக் கொண்டார் . 9 9. விளையாட்டிலும் விடுதலை உணர்வு விருதுநகரில் மேலக்கடைத் தெருவைச்சேர்ந்தவன் ராமச்சந்திரன் . அந்த ஊரிலேயே அவன்தான் நல்ல சிவப்பு . தலைமுடியைக் கோணல் கொண்டை போட்டிருப்பான் . வெள்ளைக்காரன் போலிருந்ததால் ராமச்சந்திரனை ‘ ஒயிட் ராமன் ’ என்று அழைப்பார்கள் . ஊரெங்கும் பஞ்சாப் படுகொலை பற்றிய செய்தி தீவிரமாகப்பேசப்பட்டுக்கொண்டிருந்த நேரம் . அன்று வாலிபர்கள் குழு சடுகுடு விளையாடிக் கொண்டு இருந்தபோது , “ மேலக்கடை வெள்ளைக்காரன் என்பதால் என்னோடு ஜோடி கட்டப் பயமா ? ” என்று கேட்டான் ராமச்சந்திரன் . உடனே காமராசருக்கு பஞ்சாபில் வெள்ளையன் நடத்திய படுகொலையும் , பயங்கரமும் கண்முன் தெரிந்தது . ஆவேசம் வந்தது . களத்தில் குதித்தார் . சடுகுடு ஆட்டம் மீண்டும் தொடங்கியது . காமராசர் கோஷ்டி அன்று காட்டிய வேகம் சொல்லிமாளாது . ராமச்சந்திரன் கோஷ்டியை வெள்ளைக்காரன் கோஷ்டியாகவே தீர்மானித்துக் கொண்டு ஆவேசத்தோடு பிடித்து அமுக்கினார்கள் . ‘ஒயிட் ராமச்சந்திரன் மூச்சு எடுத்து வந்தான்.’“இந்தா பாரு செத்தாண்டா வெள்ளைக்காரன்”என்று பாய்ந்தார் காமராசர். சரியான உடும்புப்பிடி ‘ஒயிட்’கீழே சாய்ந்தான். மற்ற தோழர்களும் அமுக்கினர். பெருமிதத்தோடு வீடு திரும்பினார். மறுநாள் பத்திரிகை வந்தது . பஞ்சாப் படுகொலையைக் கண்டித்துத் தலைவர்கள் அறிக்கை வெளியிட்டிருந்தனர் . நாடெங்கும் கண்டனக் கூட்டங்கள் நடந்தன . அன்றே காமராசர் தேசியத் தொண்டனாகி விட்டார் . ஜவுளிக் கடைக்குப் போவதில் நாட்டம் குறைந்தது . வாசக சாலையில் பத்திரிக்கைச் செய்திகளையும் , தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளையும் படிப்பதிலேயே முழு கவனமும் செலுத்தினார் . பெருந்தலைவர் ஜவுளிக்கடைக்குப் போவதை நிறுத்திவிட்டு எந்நேரமும் பத்திரிக்கை படிப்பது , காங்கிரஸ் கட்சி பற்றிய பேச்சு இப்படியே இருந்தார் . பாட்டி பார்வதி அம்மாள் காமராசரின் தாடையைப் பிடித்துத் தாங்க ஆரம்பித்தாள் . எவ்வளவோ சொல்லியும் பயனில்லை . பாட்டியின் கண்ணீருக்கு காமராசர் பதில் சொன்னார் . “நான் ஒண்ணு சொல்றேன் பாட்டி. நம்ப எண்ணெய்க் கடை அண்ணாச்சி பெரியசாமி இருக்காரே அவங்க வீட்டு சடை நாய் அழகாத்தான் இருக்கிறது. அதை அவங்க பிரியமாத்தான் வளர்க்கிறாங்க. நீங்க கூட அதைப் பார்த்தா சந்தோஷப்படறீங்க. ஆனா அது நம்ம வீட்டுக்குள்ளே வந்தா நீங்கதானே விரட்டுறீங்க. அதே மாதிரிதான்வெள்ளைக்காரன். நம்ம நாட்டிலே அவனுக்கு என்ன வேலை? அதிகாரம் பண்றான். சுட்டுக்கொலை பண்றான் அதைக் கண்டிக்காம எப்படி விடறது?” இந்தப் பேச்சைக் கேட்ட பெரியசாமி நாடார் , வெள்ளையர் மீது விசுவாசமாக இருந்தவர் மனம் மாறினார் . இதுபோலவே ஊரில் தன்னிடம்பேச்சுக் கொடுக்கும் பலரிடமும் காமராசர் வாதம் பிரதிவாதத்தில் ஈடுபடுவார் . அதிக நேரம் வளவளவெனப்பேசுவதில்லை . நறுக்காக பேசி தனது கருத்தை அடுத்தவர் மனதில் பதிய வைப்பார் . 10 10. வியாபாரத்தில் நேர்மை பல்பொருள் அங்காடி வைத்திருந்த ஒருவர் மதியச் சாப்பாட்டிற்கு வீட்டிற்குச்செல்ல நினைத்தார் . அப்போதுதான் பள்ளியிலிருந்து வந்த தன் மகனைக் கடையில் உட்கார வைத்தார் . போகும் முன் கடையிலுள்ள சில பொருட்களின் விலையை மேலோட்டமாகச்சொல்லி விட்டுச் சென்றார் . அவர் சென்ற பிறகு கடைக்கு வந்த ஒருவர் ஒரு டஜன் பேனாக்கள் உள்ள ஒரு அட்டைப் பெட்டியை எடுத்து இது என்ன விலை என்று கேட்டார் . பையன் , ஐந்து ரூபாய் , என்றான் . வந்தவருக்கோ ஆச்சரியம் . இந்தக் கடையில் இவ்வளவு மலிவாக இருக்கிறதே ஒரு டஜன் 5 ரூபாயா பரவாயில்லை , என்று நினைத்து வாங்கிக் கொண்டு போய்விட்டார் . சிறிது நேரத்தில் வீட்டுக்குச்சென்ற கடைக்காரர் திரும்பி வந்தார் . “ ஏதாவது விற்றாயா ” என்று கேட்டார் . உடனே பையன் “ ஆமாப்பா ஐந்து ரூபாய்க்கு பேனாக்கள் உள்ள அட்டைப் பெட்டியை விற்றேன் ” என்றான் . அவருக்குக் கோபம் வந்துவிட்டது . “ ஒரு பேனா ஐந்து ரூபாய் என்று சொன்னேன் . நீ ஒரு டஜன் பேனாக்களை ஐந்து ரூபாய்க்குக் கொடுத்திருக்கிறாயே ” என்று திட்டினார் . பையன் அழத் தொடங்கினான் . அப்போது அவர் என்ன சொன்னார் தெரியுமா , “ அப்படி விற்றதிலும் நமக்கு ஐம்பது பைசா லாபம் இருக்கிறது ” பேராசை கொண்ட வியாபாரிகள் இப்படி நடந்து கொள்வார்கள் . ஆனால் பெருந்தலைவர் கதையோ வேறு . இரவு எட்டு மணி நாட்டாமைக்காரர் ஜவுளிக்கடையில் காமராஜ் தனி ஆளாக இருந்தார் . அப்போது அம்மணி அம்மாள் எனும் கீரை விற்கும்பெண் , மகள் தமயந்திக்குப் பாவாடை தைக்கத் துணி வாங்கினார் . சீட்டித் துணி பூப்போட்டது . ஐந்து ரூபாய் நோட்டைக் கொடுத்து மீதிச் சில்லரை வாங்கிக் கொண்டு தெற்கு ரத வீதி நோக்கிச் சென்றார் . திடீரெனப் பின்னால் யாரோ ஓடி வரும் சத்தம் கேட்டுத் திரும்பிய அம்மணி அம்மாள் காமராசைப்பார்த்ததும் “ ஏன் தம்பி இப்படி ஓடி வந்தே ? ” என்று கேட்டார் . அதற்கு காமராசர் , “ ஓர் அணாவைக் கடையிலே கீழே போட்டுட்டு வந்துட்டீங்க . அதைக்கொடுக்கத்தான் ஓடியாந்தேன் ” என்று கூறி ஓர் அணாவை நீட்டினார் . அம்மணி அம்மாள் வியந்து மகிழ்ந்து “ சங்கலி கருப்பசாமி ! ராசாவுக்கு நீ என்னைக்கும் துணை இருக்கணும் ! ” என்று கைகூப்பி வணங்கினார் . மறுநாள் ஒரு கூடை நிறையக் கொடுக்காப்புளி பழம்கொண்டு வந்து காமராசர் வீட்டில் சேர்த்து விட்ட அம்மணி அம்மாள் நடந்த விஷயத்தையும் , காமராசரின் நேர்மையையும் எடுத்துச்சொன்னார் . பாட்டியும் அன்னையும் பூரிப்புக் கொண்டார்கள் . 11 11. நியாயம் வேண்டும் ஒரு வீட்டில் , நவராத்திரி கொலு சமயத்தில் , சாமிக்கு அவல் , பொரி , சுண்டல் , பொங்கல் , லட்டு , பலகாரம் எல்லாம் படைக்கப்பட்டிருந்தது . பூஜை செய்து முடித்த பிறகு , குழந்தைகளுக்கு பலகாரங்களை எடுத்துக் கொடுக்க வேண்டும் என்று தாய் திட்டமிட்டிருந்தாள் . ஒரு பையன் பலகாரத்தைப் பார்த்து ஆசையோடு “ அம்மா நான் ஒரு லட்டு எடுத்துக்கிடவா ” என்று கேட்டான் அதற்கு அம்மா , “இப்போ லட்டு சாப்பிட்டா சாமி கண்ணைக் குத்திடும், பூஜை முடியட்டும் அப்புறம் சாப்பிடலாம்”அப்படின்னாங்க. உடனே அந்தப் பையன் சாமி கண்ணைக் குத்தாதும்மா. நான் தான் ஏற்கனவே இரண்டு லட்டு சாப்பிட்டுட்டேனே என்றான். இதுதான் குழந்தைகள் இயல்பு . ஆனால் பிரசாதம் , பலகாரம் வழங்கப்படுவது கூட நியாயமாக இருக்க வேண்டும் என்று குழந்தைப்பருவத்திலேயே நினைத்தவர் பெருந்தலைவர் . பெருந்தலைவர் காமராசர் தனது சிறு வயது பருவத்தில் , ஷத்திரிய வித்தியாசாலாவில் படித்து வந்தார் . அன்று விநாயகர் சதுர்த்தி . மாணவர்களிடம் தலா ஒன்றே காலணா வசூலிக்கப்படும் . பிறகு பூஜை முடிந்த பிறகு அவல் , பொரி , தேங்காய்ச்சில் , வெல்லக்கட்டி , வாழைப்பழம் , விளாம்பழம் , பேரிக்காய் போன்றவை பிரசாதமாக வழங்கப்படும் . அன்றும் பூஜை முடிந்த பிறகு மாணவர்கள் கூட்டம் பிரசாதம் பெற முண்டியடித்தது . ஒரே போட்டி , மோதி தள்ளி குதித்துக் கொண்டனர் . இதனால் தலையில் குட்டும் பட்டுக் கொண்டனர் . இதனைப் பார்த்த சிறுவன் காமராசர் , ஒதுங்கி ஒரு மூலையில் ஆடாமல் , அசையாமல் , உட்கார்ந்து விட்டான் . இதைப் பார்த்த மற்ற மாணவர்கள் மூலைப் பிள்ளையார் என்று கேலி செய்தனர் . மாணவர் கூட்டம் குறைந்தது . கடைசியாக பிரசாதம் பெற்றார் காமராசர் . வீட்டில் அவரது தாய் “ என்ன ராஜா , வெல்லம் தேங்காய் இல்லை . உனக்குப்போடலியா என்றார் . ” எனக்கு இவ்வளவு தான் போட்டாங்கம்மா என்றார் தலைவர் . ராஜாவும் முண்டியடிச்சு முதல்லேயே பிரசாதம் வாங்கியிருக்கனும் என்று தாய் கூறியதற்கு முண்டியடிச்சு சண்டை போட்டாதான் பிரசாதம் சரியா கிடைக்குமா ? நானும் எல்லாரையும் போல காசு சரியாத்தானே கொடுத்தேன் . பொரி குறைவா போட்டது அவங்க தப்புதானே என்று தெளிவோடும் , திடமோடும் பதிலளித்தார் காமராசர் . பள்ளிப் பருவத்தில் காமராசருக்கு இரண்டு விஷயங்களில் ஆர்வம் ஏற்பட்டது . அதில் ஒன்று அரசியல் பொதுக்கூட்டப்பேச்சுகள் , மற்றொன்று பத்திரிக்கை செய்திகள் . பள்ளியில் பிற சாதிகளைச் சேர்ந்த சிறுவர்கள் பழக்கமும் உண்டு . விஸ்வகர்மா சமூகத்தைச்சேர்ந்த முத்துசாமிக்குத் தனிச்சிறப்பு உண்டு . பிற்காலத்தில் அரசியல் வாழ்க்கையிலும் இருவர் நட்பும் வளர்ந்தது . ‘எம்டன்’என்ற ஜெர்மானியக் கப்பல் சென்னையில் குண்டு போட்ட உலக யுத்தச் செய்தியைப் பத்திரிக்கை படித்துத் தெரிந்து கொள்வார். அந்த நேரத்தில் வந்து கொண்டிருந்த ஒரேதமிழ்ப் பத்திரிக்கையான சுதேசமித்திரனைத் தவறாது படிப்பதில் ஆர்வம் காட்டினார். பொது விஷயங்களில் வயதுக்கு மீறிய ஆர்வம் இருந்தாலும் , அந்த நேரத்தில் நடந்த அரையாண்டுத் தேர்வில் சரித்திரம் , பூகோளம் , ஆங்கிலம் போன்றவற்றில் நல்ல மதிப்பெண்கள்பெற்று நல்ல மாணவராகவும் திகழ்ந்தார் . 12 12. விளையாட்டிலும் விவேகம் ஒரு ஆசிரியர் மாணவர்களுக்கு முதலுதவி பற்றிப் பாடம் நடத்திக் கொண்டு இருந்தார் . தண்ணீரில் மூழ்குபவர்களைக் காப்பாற்றும் முறை பற்றி எடுத்துக் கூறத் தொடங்கினார் . “யாராவது நீச்சல் தெரியாதவர்கள் தண்ணீரில் விழுந்து விட்டால் அவர்களது கையையோ, காலையோ பிடித்துத் தூக்கக் கூடாது. விழுந்தவரின் தலைமுடியைக் கொத்தாகப் பிடித்துத் தூக்க வேண்டும்”என்றார். உடனே ஒரு பையன் எழுந்து, “சார் ஒருவேளை தண்ணீரிலே விழுந்தவர் தலை உங்களை மாதிரி வழுக்கையா இருந்தா எதைப் பிடிச்சு தூக்கறது?”என்று குறும்பாகக் கேட்டான். இப்படி விளையாட்டு மட்டுமே உலகம் என்றிருக்கும் மாணவப் பருவத்தில் விவேகத்துடன் செயல்பட்டவர் பெருந்தலைவர் காமராசர். பள்ளி நாட்களில் பெருந்தலைவரின் அலங்காரம் விசேஷமானது . தொங்கு சடை பின்னி பூச்சூட்டி அழகு பார்ப்பார் பாட்டி . இது ஐந்தாம் வகுப்பு படிக்கும் வரை . பிறகு நாகரிகம் மாறியது . கோணல் வகிடு எடுத்து சீவிய தலை , நெற்றியில் சந்தனப்பொட்டு , வெள்ளை வேட்டி , சட்டை அணிவார் . வீட்டில் மிகவும் பிரியமான சாப்பாடு பழைய சோறும் ஆடைத் தயிரும்தான் . விடுமுறை நாட்களில் காமராசரின் நண்பர்கள் குழு குளிப்பதற்காக புல்லக்கோட்டை ரோட்டில் கைலாச செட்டியார் கிணற்றிற்குச் செல்வார்கள் . மூன்று முறை பல்டி அடித்து குதிப்பது சாதனையாக கருதப்பட்டது . காமராசரின் நண்பர்களில் ஒருவன் தனுஷ்கோடி மற்ற விளையாட்டுகளில் ஆர்வம் காட்டினாலும் , கிணற்றில் குதிக்க முன்வருவது இல்லை . காரணம் நீச்சல் தெரியாது . ஒரு நாள் காமராசர் தனுஷ்கோடியை கிணற்றில் தூக்கிப் போட்டார் . நீரில் விழுந்தால்தான் நீச்சல் வரும் என்றார் . ஆனால் தனுஷ்கோடி தண்ணீரில் தத்தளித்து தவித்தபோது காமராசரே அவரைத்தூக்கிக் கரை சேர்த்தார் . அந்த தனுஷ்கோடிதான் பிற்காலத்தில் எம் . தனுஷ்கோடி என்ற பெயரில் ‘ நவசக்தி ’ நாளிதழை நடத்துபவர் ஆனார் . விடுமுறை நேரங்களில் காமராசரின் நண்பர் குழு சப்பாத்திக் கள்ளிகளுக்கு இடையே இருக்கும் கத்தாழம் பழங்களைப் பறித்துச் சாப்பிடச் செல்வார்கள் . மிகுந்த சுவையுடைய அந்தப் பழத்தின் உள்ளே ஒரு முட் சக்கரம் இருக்கும் . பழத்தைப் பிதுக்கிச் சாப்பிடும் போது அந்த முள் சக்கரம் தொண்டையில் மாட்டிவிடாமல் சாப்பிட வேண்டும் . இல்லாவிட்டால் உயிருக்கே ஆபத்தாகிவிடும் . காமராசர் ஒரு சமயம் நண்பர்களோடு கத்தாழம் பழம் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது சின்னமணி என்ற சிறுவனுக்கு தொண்டையில் சக்கரம் சிக்கிக் கொண்டது . வாயிலிருந்து ரத்தம் கொட்டியது . காமராசர் அவனைத் தோளில் தூக்கிக்கொண்டு ஊருக்குள் ஓடினார் . வைத்தியர் ஊதுகுழல் மூலம் ஊதி எடுத்து சக்கரத்தை அப்புறப்படுத்தினார் . சின்னமணி கண் திறந்து எழுந்தான் . மெலிந்த உடல் கொண்ட காமராசர் , உருவத்திலும் வயதிலும் பெரியவனான சின்னமணியின் உடலைத் தூக்கி வந்து காப்பாற்றியதை அறிந்த ஊர் மக்கள் அனைவருமே காமராசரைப் பாராட்டினர் . 13 13. சத்திய சங்கிலி ஒரு இடத்தில் கிளிகளை ஒருவன் ஏலம் போட்டுக் கொண்டிருந்தான் . பேசுங்கிளிகள் என்பதால் எல்லாக் கிளிகளும் விற்றுக் கொண்டிருந்தன . வேடிக்கைப் பார்த்துக்கிட்டிருந்த ஒருவனுக்கு ஒரு பேசுங்கிளி வாங்கலாமா என்ற எண்ணம் வந்தது . காலம் கடந்து கொண்டே இருந்தது . கடைசியிலே ஒரு கிளி தான் மிச்சம் , யாராவது ஏலம் எடுக்கிறீங்களா , என்றார் விற்பவர் . வேடிக்கை பார்த்தவன் ஏலம் கேட்க ஆரம்பித்தான் . இவன் கேட்க , கேட்க ஏலத் தொகை கூடிக்கொண்டே போனது . ஏலம் முடிந்து கிளியைக் கையில் வாங்கினான் . அப்பதான் அவனுக்கு சந்தேகம் வந்தது . “ இந்த கிளி நல்லா பேசுமா ? ” ன்னு கேட்டான் . அப்பதான் ஏலக்காரன்சொன்னான் . “ நல்லா பேசுமாவது . இவ்வளவு நேரம் உங்களுடன் போட்டியா ஏலத் தொகையை கூட்டினது இந்தக் கிளிதான் ” என்றான் . இப்படி பறவை விலங்குகளுக்கும் சில நுட்பமான அறிவு உண்டு . அதைப் புரிந்து கொண்டு மதம் பிடித்த யானையையே அடக்கிய சம்பவம் காமராசர் வாழ்க்கையில் உண்டு . விருதுநகர் இந்து நாடார்களுக்குப் பாத்தியப்பட்ட எல்லாக் கோவில்களுக்கும் பொதுவான யானை ஒன்று உண்டு . அதன் பெயர் மாரியாத்தா என்பதாகும் . மழை பெய்ததால் நிறைந்திருந்த தெப்பக்குளத்தில் பாகன் காலை வேளையில் யானையைக் குளிப்பாட்டுவார் . ஒருநாள் வழக்கம்போல் நன்றாகத் தேய்த்துக் குளிப்பாட்டினார் . குளித்துவிட்டுக் கரையேறிய யானை தலையில் அங்கும் இங்கும் தேடியது . சப்தமாக பிளிறியது . பாகன் சமாதானப்படுத்தியும் கேட்காமல் பாகனைக் கீழே தள்ளிவிட்டு துதிக்கையை தரையில் பட்பட்டென்று அடித்தது . பிளிறியபடி அம்மன் கோவில் மைதானத்தை நோக்கி ஓடியது . பாதையில்போய்க்கொண்டிருந்த மக்கள் நாலாபுறமும் ஓடினார்கள் . யானைப்பாகன் என்ன செய்வதென்று புரியாமல் பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில் முன் தவித்தபடி நின்றார் . பரிபாஷையில் கத்தினார் . இந்த நிலையில் காமராசரும் தங்கப்பனும் மைதானத்துக்குள் வந்தனர் . நிலைமையைக் காமராசர் புரிந்து கொண்டார் . மெதுவாகப் பதுங்கியபடி முன்னேறிச் சென்று யானை கட்டும் மண்டபத்துக்குள் நுழைந்தார் . எந்தச் சமயத்திலும் எப்போதும் யானையின் துதிக்கை பக்கம் போட்டு வைத்திருக்கும் சத்திய சங்கிலியை எடுத்து வந்தார் . யானையைப் பிடித்துப் பழக்கும் போதும் சத்தியச் சங்கிலி என்ற ஒரு சங்கிலியை முதலில் கொடுப்பது வழக்கம் . யானையை மண்டபத்தில் கட்டியிருக்கும்போது இந்தச் சங்கிலி யானையின் முன்பாகக் கிடக்கும் . வெளியே சென்றால் அதைத் துதிக்கையில் எடுத்துக்கொண்டுதான் கிளம்பும் . சங்கிலி நினைப்பு வராத வரை ஒன்றுமில்லை . நினைவு வந்துவிட்டால் சங்கிலியை உடனே கையில் கொடுத்து விட வேண்டும் . இல்லாவிட்டால் யானைக்குக் கோபம் வந்துவிடும் . அன்று அது குளிக்கக் கிளம்பியபோது சங்கிலியை மறந்து மண்டபத்திலேயே விட்டு விட்டதால் குளித்துக் கரையேறியதும் அதற்கு நினைவு வர தரையில் தட்டி பிளிறிக் காட்டியிருக்கிறது . இது பாகனுக்குப் புரியவில்லை . ஆனால் எப்போதும் யானையை வேடிக்கை பார்த்து வரும் காமராசருக்குப் புரிந்திருக்கிறது . அதனால்தான் சத்திய சங்கிலியை எடுத்து வந்து காமராசர் யானையின் முன்னே வீசினார் . துதிக்கையில் சங்கிலியை எடுத்துக்கொண்ட யானை சாதாரணமாக மண்டபத்தை நோக்கிச் சென்றது . ஆபத்தான சமயத்தில் கூட காமராசர் துணிச்சலுடன் செயல்படும் தன்மையைப் பற்றித் தங்கப்பன் எப்போதும் பேசுவது வழக்கம் . பிற்காலத்தில் இந்தியச் சீர்திருத்தச் சட்டம் பற்றிய பேச்சு வந்தபோது பேசிய தலைவர் சத்தியமூர்த்தி , யானைக்குத் சத்திய சங்கிலி எடுத்துக்கொடுத்த காமராசர் காட்டும் வழியைப் பின்பற்ற விருதுநகர் பொதுமக்கள் ஒருபோதும் தவறமாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு என்று கூறினார் . 14 14. அரசியல் பிரவேசம் எந்தக் காரியத்தை எதற்காகச் செய்கிறோம் என்று தெரியாமலேயே பல பேர் செயல்பட்டுக்கொண்டிருப்பார்கள் . ரெயில் நிலையத்தில் ரெயில் வந்து நின்றதும் பெட்டிகளுக்கு இடையே உள்ள இணைப்பை சுத்தியலால் அடித்து சரி செய்யும்வேலையில் ஒருவர் அமர்த்தப்பட்டார் . அவர் ஓய்வுபெறும் நாள் வந்தது . வழியனுப்பு விழாவும் நடைபெற்றது . அதற்கு நன்றி தெரிவித்துப் பேசும்போது இவ்வாறு குறிப்பிட்டார் . “ ரெயில் வந்து நின்றதும் இணைப்புகளில் சுத்தியலால் அடிக்கும் வேலையை இவ்வளவு நாளும் தவறாமல் செய்து வந்தேன் . ஆனால் ஒரு விஷயத்தை இன்றைக்கு இங்கு வந்திருக்கிற அதிகாரிகள் தெளிவுபடுத்தும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் . எதற்காக சுத்தியலால் அடித்தேன் என்று இது வரைக்கும் எனக்குத் தெரியவில்லை , இன்றைக்காவது சொல்லுங்கள் ” என்றார் . அதிகாரிகளில் ஒருவர் சொன்னார் . “ எங்களுக்கும் அது சரியாகத் தெரியவில்லை . மேலிடத்தில் கேட்டுச்சொல்கிறோம் . ” இப்படிப் பலபேர் இருக்கையில் , காமராசர் தன்னுடைய வாழ்வைத் திட்டமிட்டு அமைத்துக் கொண்டார் . ஆறாம் வகுப்பு வரையே படிக்க முடிந்தது . அதற்குப்பின் தாய்மாமனார் ஜவுளிக்கடையில் வேலை செய்ய வேண்டியதாயிற்று . ஆனாலும் அவரது நாட்டமெல்லாம் அரசியலிலேயே இருந்தது . பத்திரிகைகள் படிப்பதும் , சத்தியமூர்த்தி , திரு . வி . க ., வ . உ . சி . போன்ற தலைவர்களின் உரைகளையும் , எழுத்துக்களையும் ஊன்றிக் கவனிப்பதும் இவரது அன்றாடப் பணிகளாகிவிட்டன . ஞானப்பிள்ளை என்பவர் விருதுபட்டியில் பொடிக்கடை வைத்திருந்தார் . விடுதலைப் போராட்டத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் கூடிப்பேசும் இடமாக அது அமைந்தது . ஏதேனும் மறைபொருளை உள்வைத்துப் பேசும்பேச்சை பொடி வைத்துப்பேசுதல் என்பார்கள் . ஆனால் விடுதலைப் போராட்டச்செய்திகளை மறைவாகப் பேசுவதற்குப் பொடிக்கடையே களமாக அமைந்தது பொருத்தம்தான் . ‘ ஞானப்பிள்ளைக் கூட்டம் ’ என்றே அந்தக் குழுவுக்குப் பெயர் வந்துவிட்டது . காமராசரும் அந்தக் குழுவில் ஒருவரானார் . அரசியல் ஈடுபாடு அதிகமாயிற்று . அவரது வீட்டில் இதைக்கண்டு அஞ்சினார்கள் . அவரை விருதுபட்டியை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று நினைத்தார்கள் . அதன்படி திருவனந்தபுரத்திலிருக்கும் தாய்மாமன் கடைக்கு அனுப்பி வைத்தனர் . தாய்மாமனின் கண்காணிப்பு அதிகமாயிருந்தது . அதனால் விருதுபட்டி நண்பர்களிடமிருந்து வரும் கடிதங்களை அஞ்சலகத்துக்கே சென்று வாங்கி மறைத்து வைத்தே படிப்பார் . ஆனால் இந்த ஏற்பாட்டையும் தாண்டி ஒரு நாள் ஒரு கடிதம் மாமனின் கையில் சிக்கி விட்டது . அவ்வளவுதான் , மறு வண்டியிலேயே அவர் விருதுபட்டிக்கு அனுப்பப்பட்டார் . அங்கு வந்ததும் காமராசரின் அரசியல் ஈடுபாடு அதிகமாயிற்று . குடும்பத்தினர் பயந்தனர் . பேரனுக்கு வெள்ளைக்காரர்களால் ஆபத்து வருமோ என்று பாட்டியார் நடுங்கினார் . ஆனால் இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் காமராசர் தமது கடமையில் ஈடுபட்டார் . வாய்ப்பினால் உருவானவன் அல்ல மனிதன் . வாய்ப்பை உருவாக்குபவனே மனிதன் . ஒவ்வொரு நாளையும் உன்னதமான நாளாக எண்ணி உழைத்தால் உலகம் நம் கையில் . கடமையை உணர்ந்தவர்களுக்குக் காலம் வசப்படும் . வெற்றி நிசப்படும் . 15 15. சிறைப்பறவை சிறைச்சாலையில் கைதிகள் இருவர் பேசிக் கொண்டிருந்தனர் . “ என்ன குற்றம் செய்ததற்காக நீ இங்கு வந்தாய் ? ” என்று ஒருவன் மற்றவனைக்கேட்டான் . “தும்மினேன், அதனால் இங்கு கொண்டு வந்து விட்டார்கள்” “அதற்காகவா இங்கு கொண்டுவந்து விட்டார்கள்” “ஆமாம். ஒரு வீட்டின் பீரோவிலிருந்து நகைகளைத் திருடும்போது தும்மிவிட்டேன். அதனால் கைதியாகி விட்டேன். அது சரி நீ எப்படி இங்கு வந்தாய்?” “ரெயிலில் போகும் போது தேவைப்பட்டால் சங்கிலியை இழு என்று என் அப்பா சொல்லி இருந்தார். அப்படியே செய்தேன். மாட்டிக்கொண்டேன்” “அதற்கு அபராதம் தானே போடுவார்கள்.” “நான் இழுத்தது ரெயிலின் அபாயச் சங்கிலியை அல்ல. ஒரு பெண்ணின் கழுத்துச் சங்கிலியை.” இப்படிப் பலபேர் குற்றவாளிகளாகச் சிறைபுகுவோர் உண்டு . நாட்டின் நன்மைக்காக தன்னை அர்ப்பணித்துச் சிறை சென்றவர்கள் சிலரே . நாட்டுக்காகப் போராடுவதையும் அதற்காக சிறை செல்வதையுமே தமது வாழ்நாளாகக் கொண்டிருந்தவர் காமராசர் . 1930- ல் உப்பு சத்தியாக்கிரகம் தமிழ் நாட்டில் வேதாரண்யத்தில் நடந்தது . அப்பச்சி அதிலும் தீவிரம் காட்டினார் . இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைத்தது . 1932- ல் சட்டமறுப்பு இயக்கம் . ஓராண்டு சிறை . அரிசனங்களின் உரிமைக்கென்றும் போராடினார் . 1925- ல் அரிசனங்களுக்கு வழிபாட்டு உரிமை கேட்டு வைக்கம் போராட்டத்திலும் சுசீந்திரம் போராட்டத்திலும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது . 1934- ல் விருதுநகர் அஞ்சல் நிலையத்தின் மீதும் திருவில்லிபுத்தூர் காவல் நிலையத்தின் மீதும் வெடிகுண்டு வைத்ததாக பொய்க்குற்றம்சாட்டப்பட்டார் . 1941- ல் தனியார் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கலந்து கொள்வோர் பட்டியலை காந்தியடிகளிடம் கொடுக்கப்போகும் வழியில் கைது செய்யப்பட்டு வேலூர்ச் சிறையில் அடைக்கப்பட்டார் . 1942- ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கு கொண்டதற்காகக் கைதாகி ஓராண்டு கடுங்காவல் தண்டனை அனுபவித்தார் . அம்ரோட்டி சிறைக்கொடுமைகள் பற்றி அவரே குறிப்பிட்டுள்ளார் . வெப்பத்தின் கொடுமை தாங்காமல் , நாளெல்லாம் தண்ணீர் தொட்டியில் இருந்தே கழித்ததை அவர் குறிப்பிடும் போது நமது கண்கள் கலங்குகின்றன . வாழ்நாளில் மொத்தம் 3000 ( மூவாயிரம் ) நாட்கள் அவர் சிறைக்காற்றை சுவாசித்தார் என்று புள்ளி விவரம் கூறுகிறது . வாழ்க்கை என்பது நீண்ட நாட்கள் வாழ்வது அல்ல . ஒவ்வொரு வினாடியும் நாம் வாழுகிறோம் என்று உணர்ந்து வாழ்வதே வாழ்க்கை . அப்படிப்பட்ட வாழ்க்கை நாட்டுக்காக தன்னை அர்ப்பணித்தவர்களுக்கே அமையும் . 16 16. சிறையிலும் செம்மை தங்களின் சுய நலனுக்காக நாட்டு மக்களின் நலனில் அக்கறையில்லாத அரசியல்வாதிகளுக்கு மத்தியில் நாட்டு நன்மைக்காக வீட்டு உணர்ச்சிகளைக் கூட விலக்கி வைத்தவர் பெருந்தலைவர் . உப்புச் சத்தியாகிரகம் நடந்த நேரம் . உப்பு வரியை ஒழிக்க வேண்டும் என்று பெருந்தலைவர் கடும் குரல் கொடுத்தார் . அந்த ஆண்டுதான் பெருந்தலைவர் வாழ்க்கையில் முக்கியமான ஆண்டு ஆகும் . அந்த ஆண்டில்தான் முதன்முதலாக இரண்டு வருட சிறைத் தண்டனை அனுபவித்தார் . சங்கு சுட்டாலும் வெண்மை தரும் என்பது போல பெருந்தலைவரும் வாழ்ந்து வந்தார் . பெல்லாரிச் சிறையிலே அவர் இருந்தபோது அவரது சிறைவாசத்தை தாங்கிக்கொள்ள முடியாத பாட்டியார் பார்வதியம்மாள் படுக்கையில் விழுந்து நோயுற்றார் . உடலும் , உள்ளமும் சோர்ந்து போனது . பிழைப்பது அரிது என்றாகிவிட்ட நிலையில் , காமராசர் வந்தால் தான் உயிர் தாங்கும் என்றார்கள் . சீரும் சிறப்புமாக பாலூட்டி , சீராட்டி வளர்த்த பாட்டியிடம் காமராசருக்கு அன்பு அதிகம் இருந்தது . உறவினர்கள் தலைவர் சத்தியமூர்த்தி அவர்களிடம் கூறி பரோலுக்கு ஏற்பாடு செய்தார்கள் . காமராசரை அழைத்துச்செல்ல வந்த அவரின் தாய்மாமனிடம் நாட்டு நடப்பை விசாரித்தார் . “உங்களைக் காணாமல் பாட்டியார் உயிருடன் போராடிக்கொண்டிருக்கிறார். உங்களைப் பரோலில் எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்தாகிவிட்டது”என்றார். ஆனால் காமராசர் “தண்டனை முடியாமல், நான் பரோலில் வர முடியாது. ஊரிலே எத்தனையோபேர் இருக்காங்களே! முனிசிபாலிடி இருக்கில்லே. அவங்க எடுத்துப் போடுவாங்க. பாட்டி அனாதையாய் போகாது கவலைப்படாதீங்க”என்று கூறி அனுப்பி வைத்தார். பொதுவாழ்வு என்ற பெயரில் ஆடம்பர வாழ்க்கை நடத்துபவர்கள் எத்தனை பிறவி எடுத்தாலும் பெருந்தலைவரின் தளராத உறுதியைப் பெறுவது அரிது . 17 17. காந்தி உண்டியல் ஒரு கோவில் திருப்பணிக்காக நிதி வசூல் செய்ய மூவர் திட்டமிட்டனர் . வசூலாகும் தொகையில் பாதியை கோவிலுக்குக் கொடுத்து விட்டு மீதியை மூவரும் பங்கிட்டுக்கொள்வது என்று முடிவு செய்தனர் . வசூல் முடிந்ததும் சாமிக்கு உரிய தொகையை எப்படிக் கொடுப்பது என்று மூவரும் யோசிக்கத் தொடங்கினார் . அதிலும் கொஞ்சம் சுருட்ட வேண்டும் என்று ஆசை . ஒருவன் சொன்னான் . “ தூரத்தில் ஒரு கோடு போடுவோம் . வசூலான தொகையை எடுத்து வீசுவோம் . கோட்டுக்கு அந்தப் பக்கம் விழுவதெல்லாம் சாமிக்கு . இந்தப் பக்கம் விழுவதெல்லாம் நமக்கு . ” அடுத்தவன் சொன்ன ஆலோசனை . “ தூரத்தில் ஒரு சிறு வட்டம் போடுவோம் . பணத்தை இங்கிருந்து வீசுவோம் . வட்டத்துக்குள் விழுந்ததெல்லாம கடவுளுக்கு , மீதியெல்லாம் நமக்கு . ” மூன்றாவது ஆள்சொன்ன யோசனை “ இதெல்லாம் சரிபட்டு வராது . வசூலான தொகையையெல்லாம் நாணயங்களாக மாற்றுவோம் . எல்லாவற்றையும் மேலே தூக்கி வீசுவோம் . கடவுள் தனக்கு வேண்டியதைப் பிடித்துக்கொண்டு மீதியைக் கீழே விட்டுவிடுவார் . அதை நாம் வைத்துக் கொள்ளலாம் ” என்றான் . இந்த யோசனையே எல்லாருக்கும் பிடித்திருந்தது . பொது வாழ்வில் ஈடுபடும் பலர் இப்படித்தான் இருக்கிறார்கள் . ஆனால் பெருந்தலைவர் காமராசர் விதி விலக்கானவர் . 1920- ஆம் ஆண்டு அவரது 16- வது வயதில் காங்கிரஸ் கட்சியில் உறுப்பினர் ஆனார் . அதிலிருந்து தன்னையே அதற்கு அர்ப்பணித்தவர் . எந்தவித பிரதிபலனையும் எதிர்பாராமல் தொண்டனாகவே செயல்பட்டார் . அரசியல் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்வது , தலைவர்களை வரவேற்பது , பணவசூல்களை செய்வது - இதுவே அவரது தலையாய பணிகளாக இருந்தன . கட்சிக்குப் பணம் சேகரிப்பது என்றால் அவருக்கு மிகவும் உற்சாகம் வந்துவிடும் . ஒரு பைசா கூட வீணாகாமல் கட்சிக்காகச் செலவிடுவார் . ‘காந்தி உண்டியல்’என்ற பெயரில் ஓர் உண்டியல் கலசத்தை ஏற்பாடு செய்து “காந்தி உண்டியல் காசு போடுங்கள்”என்று கடைகடையாக ஏறி இறங்குவார். ஒரு நாள் வசூல் கொஞ்சம் குறைவாக இருந்தது. கொஞ்சம் கூட வெட்கப்படாமல் தண்டோராவை அடித்து வந்தேமாதரம் என்று முழங்கியபடி வசூலில் இறங்கிவிட்டார். இந்த முறை பல நேரங்களில் அவருக்குப் பயன்பட்டது. வசதியான தாய்மாமன் இருந்தும் வியாபாரம் செய்ய நல்ல வாய்ப்பிருந்தும் இவர் இப்படி உண்டியல் வசூல் செய்து திரிவதை உறவினர் வெறுத்தனர். அவருக்கு ஒரு கால் கட்டுப்போட்டு விடலாமா என்று முயன்றனர். திருமணப்பேச்சை எடுத்தால் வீட்டை விட்டே ஓடி விடுவேன் என்று பயமுறுத்தி விட்டார். நாட்டுப்பணிக்கு எந்தவிதத் தடையும் இருக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தார் அவர். குறிக்கோளை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கும் மனிதன் எக்காரணம் கொண்டும் பின்னோக்கி திரும்பி ஓடமாட்டான் . ஏனென்றால் அவனது ஒரே லட்சியம் எண்ணிய இலக்கை அடைவதுதான் . எண்ணிய எண்ணியாங்கு எய்துபர் எண்ணியார் திண்ணிய ராகப் பெறின் என்ற பொய்யாமொழிப் புலவர் வள்ளுவரின் வாக்குக்கு ஓர் எடுத்துக்காட்டாக கர்மவீரர் காமராசர் விளங்கினார் . 18 18. வெள்ளையனே வெளியேறு இந்திய நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட தலைவர்களுள் ஒருவர் திலகர் . அவரைத் தீவிரவாதி என நினைத்த பிரிட்டிஷ் அரசாங்கம் அவரைக் கண்காணிக்கப் பல்வேறு முறைகளைக் கையாண்டது . பிரிட்டிஷ் அரசாங்கம் எப்படி ஒற்றர்களை வைத்துத் திலகரைக் கண்காணித்ததோ அதைப்போல அரசாங்கத்தின் ஒவ்வொரு செயலையும கண்காணித்து வந்தார் திலகர் . திலகரிடம் சமையல்காரராக இருந்த ஒருவன் ஒருநாள் எனக்கு நீங்கள் கொடுக்கும் சம்பளம் போதவில்லை என்றான் . திலகர் புன்சிரிப்புடன் “ ஏன் தம்பி ! சமையல்காரன் என்ற முறையில் நான்வேறு தனியாக உனக்குச் சம்பளம் கொடுக்கிறேன் . என்னிடம் ஒற்றர் வேலை பார்ப்பதற்காக ஆங்கில அரசாங்கம் வேறு உனக்கு மாதா மாதம் ஊதியம் கொடுக்கிறது , அவ்வப்போது நீ இங்கிருந்து அனுப்பும் செய்திகளுக்குப் பணம் தருகிறது . இவ்வளவும் போதாதா ? ” என்று திலகர் கேட்டார் . அன்றே சமையல்காரன்வேலையை விட்டு விட்டு ஓடிவிட்டான் . இப்படி வெள்ளைக்காரர்களின் சூழ்ச்சி வலையில் சிக்காமல் சாமர்த்தியமாகச்செயல்பட்டனர் தேசியத் தலைவர்கள் . பெருந்தலைவர் வாழ்க்கையிலும் இத்தகைய நிகழ்ச்சி நடந்தது . 1942- ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 8 ம் தேதி இந்திய தேசிய காங்கிரஸ் மகாசபை பம்பாய் நகரில் கூடியது . தமிழக காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் காமராசரும் அவருடைய குருநாதரான தீரர் சத்தியமூர்த்தி உட்பட பலரும் அவருடன் பம்பாய் சென்றனர் . மௌலானா அபுல்கலாம் ஆசாத் தலைமை தாங்கிய அக்கூட்டத்தில் காந்தியடிகள் விருப்பத்திற்கேற்ப ‘ வெள்ளையனே வெளியேறு ’ என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்மானத்தை நேருஜி முன் மொழிந்தார் . சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்கள் வழி மொழிந்தார் . தலைவர்கள் பலரும் அத்தீர்மானத்தை வரவேற்றுப்பேசினார்கள் . இறுதியில் பேசிய காந்திஜி சுதந்திரம் உடனே கிடைக்க வேண்டும் . ‘ செய் அல்லது செத்து மடி ’ என்ற தாரக மந்திரத்தை மக்களுக்குக் கொடுத்தார் . மறுநாள் காலை காந்திஜி , நேரு மற்றும் பிற தலைவர்களை பிரிட்டிஷ் அரசாங்கம் கைது செய்தது . எங்கும் கொந்தளிப்பு , தடியடி , அடக்குமுறை மக்கள் கிளர்ந்து எழுந்தனர் . பெருந்தலைவரைப் பிடிக்கவும் ஆங்கிலேய அரசாங்கம் வலை விரித்தது . ஆனால் பெருந்தலைவர் எதற்கும் அஞ்சவில்லை . பம்பாயிலிருந்து சென்னை வரும் ரயிலில் ஏறிக்கொண்டார் . பம்பாய் மாநாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை எல்லோருக்கும் விளக்கிச் சொல்ல வேண்டும் என்பதற்காக இரகசியமாக தமிழகம் எங்கும் சுற்றி வந்து ‘ வெள்ளையனே வெளியேறு ’ என்ற முழக்கத்திற்கு விளக்கம் தந்தார் காமராசர் . செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் சிறப்பாக முடித்துவிட்டு விருதுநகர் வந்த பெருந்தலைவர் ஆகஸ்டு 16 ஆம் தேதி கைது செய்யப்படுவதற்குத் தயாராக இருப்பதாகக் கூறி உள்ளூர் போலீசாருக்குத் தகவல் அனுப்பினார் . தலைவர் அனுப்பிய தகவலைக் கேட்டு எழுத்தச்சன் என்ற சப் - இன்ஸ்பெக்டர் விரைந்து வந்தார் . அவரும் தேசியவாதியாக இருந்ததால் தலைவரைக் கைது செய்ய அவருக்கு மனம் வரவில்லை . “காமராஜ், நீங்கள் அவசரப்படவேண்டாம். உங்களைக் கைது செய்ய வாரண்டுடன் வந்த போலீஸ்காரர் அரியலூர் சென்றிருக்கிறார். அவர் வரும் வரைமேலும் சில நாட்கள் நீங்கள் ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள்”என்றார் அதிகாரி. ஆனால்பெருந்தலைவரோ “என் பணிகள் எல்லாவற்றையும் சிறப்புறச் செய்து முடித்துவிட்டேன். என் அருமைத்தலைவர்கள் எல்லாரும் கண்காணாச் சிறையில் வாடும்போது நான் மட்டும் சுகமாக ஓய்வெடுப்பதா? விடுதலை இல்லாத நாட்டின் சிறையில் இருப்பதுதான் விடுதலை வீரர்களுக்கு சுகானுபவம். எனவே என்னை உடனே கைது செய்து சிறைக்கு அனுப்புங்கள்”என்றார். இன்ஸ்பெக்டர் கண்கலங்கியபடி காமராசரைக் கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றிச் சென்றார். 19 19. முதல் மேடைப்பேச்சு தமிழ் நாட்டில் டாக்டர் வரதராஜூலு நாயுடு திரு . வி . க ., டாக்டர் டி . எஸ் . எஸ் . ராஜன் ஆகியோரின் பேச்சு முறை மக்களைக் கவர்ந்தது . திரு . வி . க . வின் இனிய தமிழ் பலரது உள்ளங்களை ஈர்த்தது . அனைவரும் விடுதலை உணர்வு பொங்கப் பேசினார்கள் . ஈ . வே . ரா - வின் பேச்சு கர்ஜனையாக எதிரொலித்தது , சிக்கலான , நுணுக்கமான அரசியல் விஷயங்களை எல்லாம்அவர் பாமர மக்களும் புரிந்து கொள்ளக் கூடிய எளிய முறையில் விளக்கிப்பேசிய அந்தத் திறமை எல்லாருக்கும் பிடித்தது . இதை காமராசரும் மிகவும் ரசித்தார் . எல்லாத் தலைவர்களின் பேச்சும் பத்திரிக்கைகளில் வெளிவரும் . அதனைக் காமராசர் படிக்கத்தவறுவதில்லை . இதனால் காமராசரின் அரசியல் அறிவு விரிந்தது . விவாதத் திறமை வளர்ந்தது . குறைந்த வார்த்தைகளில் தெளிவு நிறைந்த எதிரிகளை வசீகரிக்கக் கூடிய பேச்சாகப் பேசுவார் . வெள்ளைக்காரன்மேல் அபிமானம் கொண்டவர்களையும் காமராசரின் பேச்சு மாற்றியது . காங்கிரஸ் கூட்டத்தில் வெளியூர் ஆட்கள் மட்டுமின்றி உள்ளூர் ஆட்களும் பேசலாம் என்ற எண்ணம் எழுந்ததால் உள்ளூர்ப் பேச்சாளர்களைப் பேச வைத்தார்கள் . இந்நிலையில் அடித்துப்பேசும் ஆற்றல் கொண்ட காமராசரும் மேடையில் பேச வேண்டும் என்று காங்கிரசார் விரும்பினார்கள் . தோழர் தங்கப்பன் வற்புறுத்தி காமராசரை சம்மதிக்கச் செய்தனர் . விருதுநகருக்கு மேற்கே பாவாடி ஜமீன் பக்கம் உள்ள எளியநாயக்கன்பட்டியில் குமாரசாமித் தேவர் என்பவர் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்தார் . காமராசர் முதன் முதலாக அந்த மேடையில் பேச்சைத் தொடங்கினார் . காமராசர் சாதாரணமாகப் பேச்சுத்தமிழில் பேசினார் . “கூட்டத்தை நடத்தித் தர முன்வந்த பெரிய தனக்காரருக்கு நமஸ்காரம். உங்கள் முன்னாலே பேச சந்தர்ப்பம் கிடைச்சதுக்கு ரொம்ப சந்தோஷம். இப்போ நம் வீட்டுக்குள்ளே பக்கத்து வீட்டுக்காரன் வந்து அதிகாரம் செஞ்சா நீங்க விடுவீங்களா ? இப்படித்தான் ஆறாயிரம் மைலுக்கு அப்பால் இருக்கிற ஊரிலே உள்ள வெள்ளைக்காரன் நம்ம நாட்டுக்கு வந்து இருக்கான் . நம்ம நிலத்திலே பயிர் செஞ்சு சாப்பிடுறோம் . அதே மாதிரி நம்ம ஊர்ப் பருத்தியை நாமே நூற்று வேட்டி கட்டினா இவனுக்கு என்ன ? ” என்று கேள்விக் குறி போட்டுப் பேசினார் . விவசாயிகள் சிரித்துச் சிரித்து ரசித்து கேட்டார்கள் . இவ்வாறாக காமராசரின் முதல்மேடைப்பேச்சு வெற்றிகரமாக அமைந்தது . தோழர்களிடத்திலும் காங்கிரஸ் வட்டாரத்திலும் பெரும் பாராட்டு கிடைத்தது . பிறகு நகரங்களில் காமராசர் மாபெரும் கூட்டத்திலும் , அருமையாகப்பேசினார் . தமிழ் நடை மாறினாலும் , கூட்டத்தினரோடு உரையாடும் முறையை மாற்றாமல் பேசிவந்தார் . 20 20. கண்டிப்பிலும் கருணை ஒருவர் இன்னொருவரிடம் பத்தாயிரம் ரூபாய் கடன் வாங்கி இருந்தார் . குறித்த தேதியில் திருப்பித் தருவதாக வாக்குறுதி அளித்தார் . ஆனால் பணம் கிடைக்கவில்லை . அந்தக் கவலையில் இரவு தூக்கம் வராமல் , உருண்டு புரண்டு படுத்தார் . திடீரென்று எழுந்து கடன் கொடுத்தவர் வீட்டை நோக்கிச்சென்று வீட்டுக் கதவைத் தட்டினார் . கதவைத் திறந்த வீட்டுக்காரர் இவரைப் பார்த்ததும் , “என்ன! பணத்தை இப்போதே கொண்டு வந்துட்டீங்களா”என்றார். “இல்லை, நாளையும் பணம் கொடுக்க முடியாது அதைச் சொல்லத்தான் வந்தேன்.” “அதை நாளைக்கே சொல்லியிருக்கலாமே. இந்த இராத்திரியிலே ஏன் வரவேண்டும்?” “பணம் கொடுக்க முடியலியேங்கிற கவலையில் எனக்குத் தூக்கம் வரவில்லை. நீங்கள் மட்டும் நிம்மதியா இருக்கலாமா? பணம் வரலியேங்கிற கவலையிலே நீங்களும் தூங்காமல் கஷ்டப்படணும். அதுக்குத்தான்சொல்ல வந்தேன்”என்றார். கடனை கொடுக்கிறாரோ இல்லையோ கவலையைக் கொடுத்துவிட்டார். இப்படிப்பட்டவர்களுக்கு மத்தியில் தன்னால் பாதிக்கப்பட்ட ஒருவர் மீது கூட கருணை கொண்டு உதவியவர் பெருந்தலைவர். காமராசரின் சிறு பருவம் வேடிக்கையும் விளையாட்டும் கலந்தது . ஊரில் பருத்தி வெடித்து இருக்கும் காலம் என்றால் சிறுவர்களுக்கு ஒரே கொண்டாட்டம்தான் காரணம் . வேலி ஓரம் உள்ள பருத்தியைப் பறித்துக்கொண்டு கடையில் கொடுத்தால் பண்டமாற்றாக காராசேவு , பக்கோடா , வறுத்த கடலை , மொச்சை , சீனிக்கிழங்கு இப்படி எதையாவது ஒன்றை மகிழ்ச்சியோடு வாங்கிச் சாப்பிடுவார்கள் . அதே போல உளுந்து , துவரை காய்த்துத் தொங்கினால் போகிற போக்கில் பறித்து சாப்பிடுவதும் உண்டு . பருத்தி ஏற்றிப் போகும் வண்டிகளிலும் சிறுவர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டுவதுண்டு . பெரியவர்கள் இதைக் கண்டும் காணாததுபோல இருந்து விடுவார்கள் . ஆனால் கருப்பையா என்பவர் ரொம்ப கவனமாக இருப்பார் . சிறுவன் பச்சையப்பன் கருப்பையாவின் பஞ்சுப் பொதியில் கை வைத்துவிட்டான் . கோபப்பட்ட கருப்பையா பளார் என்று பச்சையப்பன் கன்னத்தில் அடித்து விட்டான் . இதை அறிந்த காமராசரும் , நண்பர்களும் கோபத்தோடு கருப்பையாவிற்கு பாடம் புகட்ட நினைத்து அவரது வண்டியில் அச்சாணிகளை கழற்றி விட்டனர் . வண்டி உருண்டது . கருப்பையா லோகல் பண்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டான் . மறுநாள் காமராசர் ஆஸ்பத்திரிக்குச் சென்று கருப்பையாவைப் பார்த்து அவனுக்கு சுக்குத் தண்ணீர் வாங்கிக் கொடுத்துவிட்டு விசாரித்தார் . ஆறுதல் கூறிவிட்டுத் திரும்பினார் . விருதுபட்டியில் சந்திக்கூடத்தெரு என்று ஐந்து வீதிகள் சந்திக்கும் இடத்துக்கு பெயர் . இது பார்க்க பெரிய மைதானம்போன்ற தோற்றத்தில் இருக்கும் . ஊரில் பொதுவான விழாக்களில் நிகழ்ச்சிகள் நடப்பது இந்த சந்திக்கூடத் தெருவில்தான் . அந்த ஊரில் பெரியநாயகி என்ற பெயரில் ஒரு மூதாட்டி கண் இழந்தவர் , நெற்றியில் திருநீறு , சந்தனம் , குங்குமப்பொட்டு உடையவர் . உடுக்கை அடித்துக் கொண்டு கணீரென்ற குரலில் கதை சொல்வார் . ராத்திரி எட்டு மணி அளவில் சரியான கூட்டம் கூடும் . மத்தியில் பெரியநாயகி , காத்தவராயன் கதை சொல்வார் . கதை சொல்வதன் நிறைவு நாளன்று பட்டாபிஷேகம் ! பெரியநாயகி அம்மாளுக்கு ஊரில் உள்ளோர் மாலையும் , பரிசும் , பாராட்டும் கொடுத்தனர் . புடவை , ரவிக்கைத் துண்டு , மலர்மாலை என்று வந்து குவிந்தது . அதற்கு இடையில் பெரியநாயகி அம்மாளின் கழுத்தில் சுருட்டு வெற்றிலை , பாக்கு , கருப்பட்டி , முறுக்கு , மஞ்சள் கிழங்கு வைத்து கட்டிய மாலையை சிறுவன் காமராசர் போட்டார் . எல்லோரும் திட்டினர் . ஆனால் அவங்க என்னென்ன விரும்பி பிரியமா சாப்பிடுவாங்களோ அதையே மாலையாப் போட்டேன் என்றார் காமராசர் . “ என்னைப்போல கருப்பு , நெற்றியிலே சந்தனக் காப்பு , எங்கக் காமராசா , நாட்டை ஆள்வான் ராசா ” என்ற பெரியநாயகி அம்மாள் உடுக்கை அடித்து கயம்பாடி காமராசரை வாழ்த்தினார் . அந்த வாழ்த்து பின்னாளில் உண்மையாகிவிட்டது . 21 21. விடுதலைக்குப் பின் ஒரு கோரிக்கையை வலியுறுத்தி பல பேர் சேர்ந்து உண்ணாவிரதப்போராட்டம் நடத்தினார்கள் . அதில் பாதிப்பேர் ஒரு குழுவாகவும் மீதிப்பேர் இன்னொரு குழுவாகவும் அமர்ந்திருந்தனர் . ஒரே கோரிக்கைக்காகத்தானே போராட்டம் , பிறகு ஏன் இரண்டு பிரிவாக அமர்ந்திருக்கிறீர்கள் ? என்று கேட்டபோது கிடைத்த பதில் “ இதில் பாதிப்பேர் அசைவம் சாப்பிடுகிறவர்கள் . மீதிப்பேர் சைவம் . அதற்கேற்ற மாதிரி அமர்ந்து இருக்கிறார்கள் ” உண்ணாவிரதப் போராட்டம் படுகிறபாடு இது . பல போராட்டங்கள் இப்படித்தான் போலித்தனமாக அமைந்து விடுகின்றன . விடுதலைப்போராட்டத்தில் தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர் பெருந்தலைவர் காமராசர் . போராட்டத்தில் வெற்றி கிடைத்த பின் அதன் பலனை அனுபவிப்பதிலேயே பலர் நாட்டம் செலுத்துவார்கள் . இதிலும் மாறுபட்டே விளங்கினார் . காமராசர் விடுதலைக்குப்பின் நாட்டில் ஏற்பட்டப் பிரச்சினைகளைப் பற்றிச் சிந்திப்பதிலும் அடிமைத்தனத்தால் சீர்கெட்டுக் கிடந்த நாட்டை வளப்படுத்துவதிலுமே அவரது நாட்டம் இருந்தது . பாகிஸ்தான் பிரிவினை காந்தியடிகளின் மரணம் ஆகிய நிகழ்ச்சிகளால் கவலை கொண்டிருந்த நேருஜி போன்ற தலைவர்களுக்கு உறுதுணையாக இருந்து உரிய ஆலோசனை சொல்லும் மாமனிதராக அவர் திகழ்ந்தார் . அகில இந்திய அளவில் முக்கியமான காலங்களில் வேண்டப்பட்ட ஒரு நபராக அப்போதே அவர் உருவாகி விட்டார் . அதே நேரத்தில் தமிழ்நாட்டின் மீதும் அவருக்கிருந்த பாசத்துக்கு அளவே இல்லை . 1936- இல் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயலாளர் ஆனார் . 1937 ல் விருதுநகர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் . 1940 முதல் 1952 வரை மொத்தம் 12 ஆண்டுகள் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக பெருமளவு வெற்றி கிடைக்காததற்கு தாமே பொறுப்பேற்று தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் . சத்தியமூர்த்தி கர்மவீரர் காமராசருக்குக் குருவாக இருந்து வழிகாட்டினார் . தனுஷ்கோடி நாடார் என்பவர் உற்ற நண்பராக இருந்தார் . 1954- ல் மூதறிஞர் ராஜாஜி தமிழக முதலமைச்சர் பொறுப்பை ராஜினாமா செய்தபோது அந்தப்பொறுப்பைத் தாமே ஏற்றுக்கொண்டார் . 13-04-1954 தமிழ்ப்புத்தாண்டு தினத்தன்று அந்த தவப்புதல்வர் தமிழகத்தின் முதல்வரானது மிகப்பொருத்தம் . யார் தங்களுடைய மனநிலை , சுபாவம் ஆகியவற்றை சூழ்நிலைகளுக்குப் பொருந்தி இருப்பதாக மாற்றிக் கொள்கிறார்களோ அவர்களே உயர்ந்து நிற்பார்கள் . 22 22. ஆறு நிமிடப் பதவி இருவர் பேசிக்கொண்டிருந்தனர் . ஒருவர் சொன்னார் “ வானவெளி ஆராய்ச்சியில் வேகம் போதவில்லை . சந்திர மண்டலத்துக்கும் , செவ்வாய்மண்டலத்துக்கும் தான் ராக்கெட் அனுப்புகிறார்கள் . அந்தத் துறைக்கு நான் தலைவரானால் புதுமை செய்து பரபரப்பை உண்டாக்குவேன் . ” “அப்படி என்ன செய்வீர்கள்?” “சூரிய மண்டலத்துக்கே ராக்கெட் விட ஏற்பாடு செய்வேன்” “சூரியனில் உஷ்ணம் அதிகம் ஆயிற்றே ராக்கெட் அங்கு சென்றால் எரிந்து விடும்” “அது எனக்கு தெரியாதா? பகலில் ராக்கெட் அனுப்பினால் தானே பிரச்சினை இரவில் அனுப்ப ஏற்பாடு செய்வேன்” இப்படி அடிப்படையே தெரியாமல் பதவிக்கு வருபவர்கள் உண்டு . ஆனால் எல்லா ஆற்றலும் இருந்தும் பதவியை துச்சமென நினைப்பவரும் உண்டு . பெருந்தலைவர் காமராசர் இரண்டாம் வகையைச்சேர்ந்தவர் . இவரது அரசியல் பணி விரிவடைந்து விடுதலைப் போராட்டமானது . எண்ணற்ற போராட்டங்களை முன் நின்று நடத்தினார் . தண்டனைகளையும் உறுதியோடு ஏற்றார் . 1920- ல் ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டார் . 1923- இல் மதுரையில் கள்ளுக்கடை மறியலை வெற்றிகரமாக நடத்தினார் . 1928- ல் சைமன் கமிஷன் குழுவை எதிர்த்துப் போராடினார் . 1925- ல் கர்மவீரர் காமராசர் தானாக ஒரு தொண்டர் படையைத் திரட்டிக்கொண்டுபோய்ச் சென்னை வந்திருந்த காந்தியடிகளைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது . வெள்ளைக்காரத்தலைவர் நீல் என்பவனின் சிலையை சென்னை மவுண்ட் ரோட்டிலிருந்து அகற்றும்போராட்டம் பற்றிய சந்திப்பு அது . காங்கிரஸ் மாநாட்டிலேயே அதுபற்றி தீர்மானம் நிறைவேற்றப்படும் அளவுக்கு அப்பச்சியின் போராட்டம் நாடு தழுவிய அளவில் பெயர் பெற்றிருந்தது . நீல் சிலை நீக்கப்பட்ட பின்னரே போராட்டம் ஓய்ந்தது . இப்படி போராட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போதே தேர்தலையும் சந்திக்கின்ற வாய்ப்புக் கிட்டியது . விருதுநகர் நகர சபைத் தேர்தலில் சிறையில் இருந்தபடியே வெற்றி வாகை சூடினார் . நகர சபைத்தலைவர் பதவி வழங்கப்பட்ட போது அதை ஏற்க மறுத்தார் . வெள்ளைக்காரன் காலத்து பதவி அவருக்குப் பிடிக்கவில்லை . ஆனால் நண்பர்கள் விடாப்பிடியாக வற்புறுத்தினார்கள் . அவர்களுக்காக ஆறு நிமிடங்கள் மட்டுமே அந்த நாற்காலியில் இருந்து விட்டு எழுந்துவிட்டார் காமராசர் . இத்தகைய அரசியல் அற்புதங்கள் அவரது வாழ்நாளில் பல உண்டு . வெறும் அரசியல்வாதி தேர்தலையே எண்ணுகிறான் . அரசியல் ஞானியோ வரும் தலைமுறையை எண்ணுகிறான் . 23 23. மனித நேயம் ஒரு பெரியவர் மிகவும் கஞ்சர் . அவருக்கு உடல் நலமில்லை என்பதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் . அவரைப் பார்க்க வந்த ஒருவர் இரண்டு ஆப்பிள் பழங்களுடன் வந்தார் . அந்தப் பெரியவர் ஆப்பிளின் விலை , யாரிடம் வாங்கினீர்கள் ? என்பது போன்ற விபரங்களைக்கேட்டு அறிந்தார் . வந்தவர் “ இந்த விபரங்களை ஏன் இவ்வளவு விரிவாகக் கேட்கிறீர்கள் ” என்று கேட்டார் . அதற்கு அவர் “ எனக்கு பழங்களை விட பணம்தான் தேவை ; எனவே என்னைப் பார்க்க வருபவர்கள் வாங்கி வரும் பழங்களை விற்று காசாக்க மருத்துவமனை வாசலிலேயே ஆள் வைத்திருக்கிறேன் . அவன் நாணயமானவனாக நடந்து கொள்கிறானா ? என்பதற்காகத்தான் உங்களிடம் விசாரித்தேன் ” என்றார் . உடல் நலமில்லாத நிலையில் வாங்கி வரக்கூடிய பழங்களைக் கூட பணமாக்கும் சமுதாயத்தில் தன்னோடு வரும் உதவியாளர்களும் உரிய நேரத்தில் பசியாற வேண்டும் என்று நினைப்பவர் பெருந்தலைவர் . 1960- இல் காஞ்சிபுரத்தில் காங்கிரஸ் கமிட்டி கூட்டத்துக்கு பெருந்தலைவர் வந்தார் . அங்கு நடந்த வேறு சில விழாக்களிலும் கலந்து கொண்டு இரவு உணவுக்காய் யாதவாள் சத்திரத்தை அடைந்தார் . காஞ்சிபுரம் இட்லி தலைவருக்கு விருப்பம் என்பதால் அதனைக்கொடுத்தனர் . சாப்பிட்ட பிறகு இரவே காரில் சென்னை திரும்புவதாக ஏற்பாடு . எனவே உடன் வந்தவர்களை விரைவு படுத்தினார்கள் . அதனைக் கண்ட பெருந்தலைவர் தடுத்தார் . “வேண்டாம், அவர்களை அவசரப் படுத்தினால், அரைகுறையாகச் சாப்பிட்டு விட்டு எழுந்து விடுவார்கள். டிரைவர் விழித்துக்கொண்டு கார் ஓட்ட வேண்டாமா? அவர்களெல்லாம் மெதுவாகச் சாப்பிட்டு விட்டு சற்று ஓய்வெடுத்த பிறகே கிளம்பலாம். ஒன்றும் அவசரமில்லை”என்றார். மற்றவர்களின் உணர்வுகளையும் மதிக்கின்ற இந்த மனித நேயம் எல்லாருக்கும் இருந்தால் நல்லது . 24 24. உயிர்களிடத்தே அன்பு வேணும் வேகமாகப் போய்க் கொண்டிருந்த ஒரு பேருந்து மரத்தின் மீது மோதி பலத்த விபத்துக்குள்ளானது . பேருந்தில் வந்த அனைவரும் சிதறி வெளியே விழுந்தனர் . கையிலே அடி , கால்லே அடி , ஐயோ அம்மாங்கிற கூக்குரல் எல்லாப் பக்கமும் . அந்த நேரத்துலே எல்லோரையும் மருத்துவ மனையைக் கண்டுபிடிச்சு சேர்க்கிறதுக்குப் பதிலா கண்டக்டர் அடிபட்டு விழுந்தே கிடக்கிற பயணிகளோட சட்டைப் பையிலே என்னவோ தேடிக்கிட்டிருந்தார் . “ என்னன்னு ” கேட்டா ? “ யாரோ ஒரு ஆள் டிக்கெட் வாங்கலை பஸ் கிளம்பின நேரத்திலே இருந்து பார்க்கிறேன் . கணக்கு சரியா வரலை ” ங்கிறார் . அதுகூட பரவாயில்லை . கை ஒடிந்து விழுந்து கிடக்கிற ஒரு ஆள் “ எனக்கு மூணு ரூபா சில்லரை பாக்கி தரணும் மறந்துடாதீங்க ” அப்படிங்கிறார் . இப்படி மனிதர்களே மனிதர்களை மதிக்காத சூழ்நிலையில் மனிதர்களை மட்டும் அல்ல மற்ற உயிரினங்களையும் , சட்டத்தையும் மதித்து நடந்த மாபெரும்தலைவர் காமராசர் . பெருந்தலைவர் பிறரிடம் அன்பு காட்டுகின்ற அதே நேரத்தில் பிறரிடம் காணும் குறைபாடுகளையும் கண்டிப்பார் . ஒரு சமயம் வண்ணாரப் பேட்டையிலே கூட்டம் ஒன்றை முடித்துக்கொண்டு திரும்பிய போது சென்ட்ரல் அருகே கார் வலது புறம் திரும்ப முயன்றது . உடனே பெருந்தலைவர் “ வழக்கமாகப் போவது போல அந்தக் கோடி வரை போய் வந்துதான் திரும்ப வேண்டும் . இரவு நேரம் போக்குவரத்து இல்லை என்பதற்காக இப்படி குறுக்கே போய்ப் பழகினால் பகலிலும் அப்படித்தானே போகத் தோன்றும் , நம்ம காரே இப்படிப் போனா மத்தவங்க என்ன நினைக்க மாட்டாங்க ? அதனாலே நேராகப் போ ” என்று பொரிந்தார் . ஒருநாள் காஞ்சிபுரத்திலிருந்து சென்னைக்கு இரவு திரும்பிக்கொண்டிருந்த போது கார் திடீரென ஒரு குலுக்கலுடன் நின்றது . ஒளி வெள்ளத்தால் கண்கள் கூசின . காமராசர் கோபத்துடன் , எதிரே வந்த லரியை நிறுத்தச் சொன்னார் . எப்படி வெளிச்சத்தோடு வர்ரான் . இரவு நேரம் எதிரே வரும் வாகனம் ஓட்டுபவருக்கு கண் கூசாது . இந்த விதி தெரியாமல் வருபவரை இனிமேல் இந்த அஜாக்கிரதையோடு வராமல் வண்டி ஓட்டுங்கள் என்று கண்டித்து அனுப்பினார் . இதே போன்று ராயபுரம் கல் மண்டபம் வந்து கொண்டிருந்தார் பெருந்தலைவர் . எதிரே ஒரு மாட்டு வண்டி வந்து கொண்டு இருந்தது . அதற்குப் பின்னால் வந்த லாரி மாட்டு வண்டியை முந்திச் செல்ல முயன்ற போது லாரி டிரைவர் பெரியதாக ஹாரன் அடித்துக்கொண்டிருந்தார் . வண்டியோட்டி மாட்டை அடித்து விரட்டிக் கொண்டிருந்தார் . இதைப் பார்த்த தலைவர் காரை விட்டு இறங்கி வண்டியோட்டியிடம் ஏம்பா இறங்கு . மாடு எப்படி தவிக்குது பாரு என்றவர் , லாரி டிரைவர் ஹாாரன் அடிப்பதைக் கண்டித்து , மாடு மிரளுது நீ ஓயாமல் ஹாரன் அடிக்கிறாயே என்று கூறினார் . சாதாரண ஜீவன்கள் கூட துன்பப்படுவதைப் பொறுத்துக் கொள்ளாத பெருங்கருணை உடையவர் பெருந்தலைவர் . 25 25. முதல்வரான முதல்வர் மனிதர்கள்அதிகம் உழைப்பதால் சோர்வடைவதில்லை . கவலையாலும் , வீணான உரசல்களாலும் அதிகம் சோர்வடைகிறார்கள் . உழைப்பு உடலைப் பலப்படுத்தும் , உழைக்காமல் முன்னேற நினைப்பவர் பலர் உண்டு . ஒருவர் தன்னுடைய நண்பரிடம் , “ நடக்கக் கூடாதது நடந்து போச்சுங்க ” என்று சலித்துக் கொண்டார் . “ அப்படி என்ன நடந்து போச்சு ” என்று கேட்டதற்கு , “ நான் ரேஸில் பணம் கட்டிய குதிரை ஓடுவதற்கு பதிலா நடந்து போச்சுங்க ” என்றாராம் . இப்படி இல்லாமல் உழைப்பையே உயிராகக் கொண்டவர்கள் உன்னதம் அடைகிறார்கள் . இதற்கு உதாரணமாகத் திகழ்ந்தவர் கர்மவீரர் காமராசர் அவர்கள் . மந்திரி பதவியை காமராசர் நாடிச்செல்லவில்லை . ஆனால் முதல் மந்திரி பதவி அவரை நாடி வந்தது . 1954 ல் நாடி வந்த பதவியை 1963 ல் அவராகவே ராஜினாமா செய்தார் . இவ்வளவு நீண்ட காலம் முதலமைச்சர் பதவியை வகித்த முதல் முந்திரி பெருந்தலைவர்தான் . பெருந்தலைவர் முதல்வரானதும் தமிழக மக்களுக்குக் கூறியதாவது , “ நாள் முழுவதும் உழைக்கிறவர்களை வேலைக்காரர் , கூலிக்காரர் என்று குறை கூறுகிறோம் . உழைப்பே இல்லாமல் பிறர் உழைப்பால் வாழ்ந்து வரும் சோம்பேறிகளை , எஜமானர் , மகராசர் என்கிறோம் . ஏழைகளின் துயரம் நீங்கவே நான் முதல்வர் பதவி ஏற்றுள்ளேன் . இல்லாவிட்டால் எனக்கு பதவியே தேவையில்லை ” என்றார் . கொஞ்சமும் மனம் தளராமல் குன்றாத ஊக்கத்துடன் தனது ஓயாத மக்கள்சேவையினால் சென்னை மாநிலத்தில மட்டுமல்லாது , இந்தியா முழுவதுமே பெருந்தலைவர் புகழ்பெற்றார் . “பல ஆண்டுகளாக நண்பர் என்ற முறையில் அவரை அறியும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. அவருடன் பழகப் பழக அவரிடத்தில் எனக்குள்ள மதிப்பு உயர்ந்து கொண்டே போகிறது. திறமை, நல்லாட்சி இவைகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் ஓர் அரசாங்கத்துக்குத் தலைவர் என்ற முறையில் அவர் சென்னை முதலமைச்சராக இருக்கிறார்”என்று நேருஜி பெருந்தலைவரின் சேவையைப் பாராட்டினார். காமராசரின் ஆட்சித் திறனை கேள்விப்பட்டு இங்கிலாந்து தேச மகாராணியின் கணவர் , எடின்பரோ கோமகன் , காமராசரைப் பாராட்டிக் கைகுலுக்கி , “ மீண்டும் நான் பாரத நாட்டுக்கு வரும்போது , சென்னை வந்தால் நீங்களே முதல் மந்திரியாக இருப்பீர்கள் ” என்று ஆசி கூறிச் சென்றார் . இப்படிப்பட்ட பாராட்டுகளுடன் பெருந்தலைவர் தமிழகத்தை நடத்திச் சென்றார் . 26 26. பத்திரிகை தர்மம் ஒரு பத்திரிகை அலுவலகத்தில் ஒருவர் நிருபர்வேலை கேட்டு வந்தார் . ஆசிரியர் அவரிடம் முதன் முதலாக ஒரு பணி கொடுத்தார் . “ஒரு பிரமுகரின் வீட்டில் திருமணம் நடக்க இருக்கிறது. அங்கு போய் செய்தி சேகரித்து வாருங்கள். அதில் உங்களது திறமையைப் பார்த்துப் பணி தருகிறேன்”என்றார் ஆசிரியர். புதிய நிருபரும் திருமணத்துக்குச் சென்றார் . ஆனால் அங்கு எதிர்பாராத விதமாக ஒருபெரிய கலாட்டா நடந்து விடவே திருமணம் நின்று விட்டது . நிருபர் வெறும் கையோடு ஆசிரியரிடம் வந்தார் . “திருமணம் கலாட்டாவால் நின்று விட்டதால் செய்தி சேகரிக்க இயலவில்லை”என்றார். உடனே ஆசிரியர், “அடப்பாவி கலாட்டாவை கோட்டை விட்டு விட்டாயே. அதுதானே இன்று பெரிய செய்தியாக வரும். எதற்கு முக்கயத்துவம் கொடுப்பது என்று தெரியாமல் நீ எப்படி நிருபர் பணிக்கு வந்தாய்”என்று திட்டி அவரை அனுப்பினார். பொதுவாக பத்திரிக்கை நிருபர் பணி என்பது மிகவும் பொறுப்பு வாய்ந்ததும் , சிக்கல் நிறைந்ததும் ஆகும் . பெருந்தலைவரிடம் பத்திரிகை நிருபர்கள் படும்பாடு சொல்லி மாளாது . சரளமாகப்பேசிக் கொண்டிருப்பார் . பேச்சில் நகைச்சுவை இழையோடும் . ஆனால் முக்கியமான விஷயம் பற்றி வாய் திறந்து எதுவும் சொல்ல மாட்டார் . ஏதாவது தகவல் பெற முயற்சித்து கேள்வி கேட்டால் பெருந்தலைவரிடமிருந்து ஒரு வார்த்தை கூட வராது . 1962 ல் தேர்தல்கள் முடிந்து அமைச்சரவை அமைக்க இருந்த நேரத்தில் நிருபர்கள் காமராசரைச் சந்தித்தனர் . “என்ன! யார் யாரெல்லாம் மந்திரி ஆகப் போகிறார்கள் என்று கேட்கப் போகிறீர்கள் என்றவர் கேலியாக இப்போது நாங்கள் முடிவு செய்யுமுன் நீங்களே யோசித்து ஒரு அமைச்சரவை அமைத்து விடுகிறீர்களே. இந்திந்த மாவட்டத்தில் இன்னார் அமைச்சராக வருவார். இந்த இலாகா இவருக்கு உரியது என்று எட்டு பத்து பேரை போட்டு விடுவீர்கள். இன்னம் நாலு பேரைப்போட்டு இவர்களுக்கும் பதவி கிடைக்கலாம் என்று எழுதி விடுவீர்கள். உடனே மக்கள் அதனை நம்பி அந்த ஆட்களுக்கு மாலை மரியாதை செய்து பாராட்டுவார்கள். மறுநாள் அந்த மந்திரி சபையை நீங்களே கலைத்து விட்டு வேறு அமைச்சரவை அமைப்பீர்கள்”என்று கூறி சிரித்தார். சிறிது நேரம்பேசிப்பார்த்தாலும் அவரிடமிருந்து சில எண்ணங்களை வெளியிட வைக்க முடியாது . அதுதான் அவரது தனி சாமர்த்தியம் . அதே நேரம் சில சமயங்களில் இயல்பாக அவரது பேச்சில் எதிர்காலத் திட்டம் பற்றிய அறிகுறி வரும் . ஆனால் அவை பத்திரிகையில் வருவதை விரும்ப மாட்டார் . ஏன் போட வேண்டாம் என்று நிருபர்கள்கேட்டபோது பெருந்தலைவர் அருமையான காரணம் சொன்னார் . “அரைகுறையாகப் போட வேண்டாம். நம் அரசாங்க எந்திரம் பற்றி மக்களுக்கு ஒன்றும் தெரியாது. ஒரு திட்டம் அறிவிக்கப்பட்டுவிட்டால் உடனே திட்டத்தைச் செயல்படுத்த முடியாது. அதிகாரிகள் அதுபற்றி ஆலோசித்து, பண ஒதுக்கீடு செய்து அப்படி இப்படி என்று 6 மாதம், ஒரு வருடம் கூட ஆகிவிடும். எனவே திட்டம நடந்த பிறகு சொல்வதே சரியாக இருக்கும்”என்று பெருந்தலைவர் கூறியது எல்லாக் காலத்துக்கும் பொருந்தக் கூடிய கருத்து ஆகும். பத்திரிகையாளர்களிடம் அன்பாகவும் , அதே சமயம் செய்தி போடும் முறை பற்றியும் பொது நன்மை கருதி செயல்படுவது பற்றியும் தெளிவான எண்ணம் கொண்டிருந்தார் தலைவர் . 27 27. நிருபர்களுக்கு மத்தியில்... வெளிநாட்டுக்குச் சென்று திரும்பிய ஒருவர் தன் நண்பரிடம் வெகுவாகப் பெருமை அடித்துக் கொண்டார் . “நான் பேசுவது இங்கிலீஷில்தான், படிக்கிறது இங்கிலீஷ் புக்தான். பார்க்கிறது இங்கிலீஷ் மூவிதான்”என்றார். அதற்கு நண்பர், “சரி இங்கே ஒரு இங்கிலீஷ் படம் ஓடுகிறது போய் பார்ப்போமா”என்றார். “போகலாம். ஆனால் நேரமாகிவிட்டதே”என்றார் வெளிநாட்டுத் தமிழர். உடனே நண்பர்“We will go by taxi”என்றார். அதற்கு அவர் “அந்தப் படத்தை நான் ஏற்கெனவே பார்த்து விட்டேனே”என்றாராம். இப்படிப் போலித்தனமான ஆங்கில மோகம் கொண்டவர்கள் பலர். ஆங்கிலத்தைச் சரியாகப் பயன்படுத்தும் ஆற்றல் பெற்றிருந்தவர் பெருந்தலைவர் . 1962 ல் பொதுத் தேர்தல்கள் முடிந்து முடிவுகள் வெளியாகி விட்டன . அந்த சமயத்தில் முதலமைச்சர் காமராசரை சந்திக்க பத்திரிக்கை நிருபர்கள் வந்தார்கள் . தேர்தலில் தி . மு . க . கட்சி சட்டசபையில் 50 இடங்களைக் கைப்பற்றிவிட்டதைப் பற்றிக் கருத்து கேட்டனர் . அதற்கு பெருந்தலைவர் “ அதிக இடங்களைப் பிடித்து விட்டார்கள் என்பது உண்மை . ஆனால் நாட்டு மக்களை பிரிக்க நினைப்பதையே கொள்கையாக வைத்துக்கொண்டிருக்கின்ற ஒரு கட்சி எப்படி நல்ல எதிர்க்கட்சியாக விளங்க முடியும் ? ” என்றார் . பிறகு பெருந்தலைவர் ஆங்கில தினசரிகளின் நிருபர்களைப் பார்த்து “ நான் நல்ல எதிர்க்கட்சி அல்ல என்று சொன்னேனே . அதில் நல்ல என்பதற்கு ஆங்கிலத்தில் என்ன வார்த்தை போடப்போகிறீர்கள் ” என்று கேட்டார் . ஒரு நிருபர் ‘ Good’ என்றார் . மற்றொருவர் ‘ Strong’ என்றார் . தலைவர் திருப்தியடையவில்லை . நிருபர்கள் தங்களுக்குள் கிசுகிசுவென பேசினார்களே தவிர சரியான ஆங்கிலப் பதம் கிடைக்கவில்லை . கடைசியில் காமராசரே ‘ Sound’ என்று போட்டால் சரியாக இருக்குமா ? என்று கேட்டார் . உடனே நிருபர்கள் அனைவரும் மகிழ்வோடு அதனை ஏற்றுக்கொண்டனர் . ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு மத்தியில் அவர்களுக்கே தெரியாத பதத்தை சரியாக எடுத்து பயன்படுத்திய பெருமை பெருந்தலைவரைச் சாரும் . 28 28. நினைத்ததை முடித்தவர் பிரெஞ்சு நாட்டுக் கலையரங்கம் ஒன்றில் புகழ்பெற்ற அமைச்சர்கள் , வீரர்கள் பலரின் ஓவியங்களை வைத்திருந்தனர் . ஒருநாள் அந்த அரங்கத்திற்கு நெப்போலியன் வந்திருந்தார் . அவரைப் பார்த்து ஒருவர் “ உலகிலேயே மிகச் சிறந்த படைத்தலைவராக யாரைக் கருதுகிறீர்கள் ” என்று கேட்டார் . அதற்கு நெப்போலியன் “ எனக்குத் தெரிந்த வரையில் உலகத்திலேயே இரண்டாம் இடம் பெறும் சிறப்புப் படைத்தவர் ஜூலியஸ் சீசர்தான் ” என்று பதில் தந்தார் . தான் மட்டும் தான் மிகச் சிறந்த படை வீரர்களில் முதன்மையானவர் என்ற அசைக்க முடியாத தன்னம்பிக்கை நெப்போலியனுக்கு இருந்ததால் புகழ் பெற்றார் . அதே போல பெருந்தலைவரும் தான் நினைத்த காரியத்தைச் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை நிறைந்தவர் என்பதை அறியலாம் . இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு சென்னையில் ராயபுரம் கடற்கரை அப்பகுதி மக்களுக்கு உல்லாசபுரியாக விளங்கியது . ஆங்கிலோ இந்திய பெருமக்கள் அப்பகுதியில் அதிகமாக வசித்து வந்தனர் . பகல் பொழுது பல அலுவலகங்களில் பணியாற்றி விட்டு மாலை நேரத்தில் தங்கள் துணைவர்களோடு கடற்கரையில் உலா வருவார்கள் . ஆனால் அந்த ராயபுரம் கடற்கரையும் அங்கே காதலர்கள் உலாவும் காட்சியும் மறைந்து விட்டது . தொழிற்பெருக்கம் , துறைமுகம் விரிவாக்கம் போன்றவற்றால் அவை மறைந்து போயின . இந்தியரா ஆங்கிலேயரா என்று இரண்டு நிலையிருந்த ஆங்கிலோ இந்திய மக்களில் பெரும்பான்மையினர் ஆஸ்திரேலிய நாடு தந்த வரவேற்பை ஏற்றுக்கொண்டு அங்கு குடியேறினர் . தூய்மையான கடற்கரைக்கு ஏங்கிய சென்னை மக்கள் விரும்பிச் செல்லும் மாலை நேர இடமாக செயின்ட் ஜார்ஜ் கோட்டை எதிரில் அமைந்த பரந்த கடற்கரை கிடைத்தது . கடற்கரைக்குச் செல்லும் வழியில் ரெயில்வே கிராஸிங் ஒன்று குறுக்கிடும் . இதனால் மக்கள் கூட்டம்போக்குவரத்து நெரிசலும் ரெயில்வே கதவடைப்பால் தடைப்படும் . இந்த தொல்லைகளில் இருந்து மக்களுக்கு வசதி செய்து தரவேண்டும் என்றால் மேம்பாலம் அல்லது தரைவழிப்பாலம் கட்டப்படவேண்டும் . வடபுறம் பாரிமுனை இருப்பதால் மேம்பாலம் கட்ட முடியாது . தரைவழிப் பாலம் அமைத்தால்தான் வசதியாகும் என முடிவெடுத்து பொதுப்பணித்துறையினர் ஆய்வுமேற்கொண்டனர் . ஆய்வின் முடிவில் தரைப்பாலம் கட்டினால் ரிசர்வ் வங்கியின் கட்டிட அடித்தளம் பாதிக்கப்படும் . பாலத்தில் நீரூற்று ஏற்படும் . அதைக் கட்டுப்படுத்த முடியாது என்று பெருந்தலைவரிடம் விளக்கிக் கூறினார்கள் . அதற்கு செயல்வீரர் காமராசர் “ முடியாதுன்னு சொல்றதுக்காகவா டெல்லியிலேயிருந்து வந்தீங்க . தரைவழிப் பாலம் கட்டுறோம் . நீங்க சொல்ற எந்தக் குறைபாடும் இல்லாமல் கட்டி முடிக்கிறோம் ” னு சொல்லி அனுப்பினார் . பிறகு சரியாகத் திட்டமிட்டு தொழில் வல்லுநர்களோடு கலந்து கட்டிட வல்லுநர்களை வரவழைத்தார் . தரைவழிப் பாலம் அமைக்கும் பணியினை ஒப்படைத்தார் . எழில்மிகு வசதியான பாலம் உருவானது . இன்றைய காமராசர் சாலை தரைவழிப் பாலம் உருவான சூழல் இது . இப்படியாக பெருந்தலைவர் ஒரு செயலைக் கருதி விட்டால் அதற்கு எந்தத் தடைவரினும் அதனை ஏற்காது செய்து முடிப்பார் . 29 29. கல்விக் கண்ணைத் திறந்தவர் கிராமவாசிகள் இரண்டு பேர் பட்டணத்துக்குப் போனார்கள் . பல மாடிக் கட்டிடம் ஒன்றை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர் . அப்போது அங்கே இருந்த லிஃப்ட் மூலமாக மேலே போக வயதான பெண்ணொருத்தி ஏறினாள் . மீண்டும் கொஞ்ச நேரத்தில் லிஃப்ட் கீழே வந்தது . பதினெட்டு வயது இளம் பெண் ஒருத்தி அதிலிருந்து வெளியே வந்தாள் . இருவருக்கும் ஆச்சரியம் தாங்கவில்லை . “ பட்டணத்தில் அதிசயம் நடக்குது ; பாத்தியா கிழவி ஒருத்தி கூண்டுக்குள்ளே போனா , கொஞ்ச நேரத்தில் குமரியா மாறி வெளியே வாறாளே “ என்றான் ஒருவன் . “ இப்படியெல்லாம் வசதி இருக்குன்னு தெரிஞ்சிருந்தா எம் பொஞ்சாதியையும் கூட்டி வந்து குமரியாக்கியிருப்பேனே ” என்றான் மற்றவன் . இப்படி அறியாமையில் மூழ்கிக் கிடப்பவர்கள் மிகுந்த நாடு இது . முதலில் மக்களின் அறியாமையைப் போக்க வேண்டுமென்று முனைப்புடன் செயல்பட்டார் கர்மவீரர் காமராசர் . அனைவருக்கும் கல்வி வழங்கல் என்பதை ஒரு சபதம் போலவே ஏற்றார் அவர் . “ இருநூறு ஆண்டு காலத்தில் பெற்ற கல்வி வளர்ச்சிக்கு மேலான வளர்ச்சியை எட்டாண்டு காலத்தில் வழங்கியவர் காமராசர் ” என்று கல்வித்துறை அறிஞர் நெ . து . சுந்தரவடிவேலு குறிப்பிடுகிறார் . “ கல்விக்கண் கொடுத்த வள்ளல் ” என்று பெரியார் ஈ . வே . ரா . அவர்கள் பாராட்டுரை வழங்கி உள்ளார் . காமராசர் காலத்தில் மட்டும் தமிழகத்தில் தோன்றிய பள்ளிகளின் எண்ணிக்கை 6 ஆயிரம் . முந்நூறு பேர் ஜனத்தொகை கொண்ட ஓர் ஊருக்கு ஒரு பள்ளி என்று திட்டமிடப்பட்டு காரியம் நடந்தது . இலவச கல்வித் திட்டமும் மதிய உணவுத் திட்டமும் செயல்படுத்தப்பட்டன . சுமார் 4 லட்சம் என்றிருந்த கற்றோர் எண்ணிக்கை 13 லட்சம் என்ற எண்ணிக்கையை எட்டியது . இப்படி உயர்ந்த நோக்கத்துக்காக அவர் செயல்பட்டுக்கொண்டிருந்த போது சாதாரண காரியங்களுக்காக அவரை அணுகி சிரமப்படுத்தியர்வளும் உண்டு . ஓர் ஊரில் சிலர் அவரை அணுகி “ எங்கள் ஊர் சுடுகாட்டுக்கு நல்ல பாதை போட்டுத்தர வேண்டும் ” என்று கேட்டார்களாம் . காமராசர் கொஞ்சமும் கோபப்படாமல் “ உயிரோடு இருக்கிறவங்க நல்லா வாழ நான் வழி தேடிக்கிட்டிருக்கேன் . நீங்க செத்துப் போனவங்களுக்கு வழி கேட்கிறீங்களே “ என்று நகைச்சுவையாக பதில் சொன்னாராம் . ஒவ்வொருவருக்கும் சிறந்த குறிக்கோள் வேண்டும் . குறிக்கோள் இல்லாதவர்களின் வாழ்க்கை திசைகாட்டும் கருவி இல்லாத கப்பல் போன்றது . 30 30. பசிப்பிணி மருத்துவர் ஓர் ஊரில் சாப்பாட்டுப் போட்டி நடந்தது . அதிகம் உண்பவர்களுக்கு முதல் பரிசு . மற்றவர்களைவிட மிக அதிகமாக சாப்பிட்டு ஒருவன் முதல் பரிசு பெற்றான் . பரிசைப் பெற்றுக் கொண்டதும் அவையோரிடம் அவன்செய்து கொண்ட விண்ணப்பம் ; “ இங்கு நான் அதிகமாக சாப்பிட்டதை என் மனைவியிடம் சென்று யாரும் சொல்லிவிடாதீர்கள் . வீட்டுக்குப் போனதும் சோறு போட மாட்டாள் . ” இப்படிப்பட்ட சாப்பாட்டு ராமர்கள் நாட்டில் உண்டு . பசியால் வாடுவோர் பலருண்டு . அவர்களின் துன்பம் தீர்க்கப்பாடுபடுபவர்களே உண்மையான மனிதர்கள் . சங்க கால அரசியலில் கூட மிகவும் அச்சப்பட வைத்த ஒரு பிரச்சினை பசி . பசியைப் பிணிக்கு ஒப்பவைத்துப் பேசினர் . பசிக்கு உணவளித்த அரசரை மருத்துவர் என்றும் அரண்மனையை மருந்தகம் என்றும் இலக்கியங்கள் புகழும் பசி என்னும் நெருப்பு ஒருவன் வயிற்றில் பற்றி எரியும்போது அதை அணைக்க முயல்வதற்கு பெயர்தான் ஜீவகாருண்யம் என்று புது விளக்கம் தந்தார் காந்தியடிகள் . அவரின் சொல்லையெல்லாம் செயல் வடிவமாக மாற்றும் சபதத்தை மேற்கொண்டவர் கர்ம வீரர் காமராசர் . அந்த வகையில் அவர் கொண்டு வந்ததே மதிய உணவுத் திட்டம் . இதனால் 30,000 பள்ளிகளைச் சார்ந்த 15 லட்சம் குழந்தைகள் உணவும் , கல்வியும் ஒருங்கே பெற்றனர் . அதுபோலவே அதிகமான உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து மக்களின் பசிப்பிணியைப் போக்குவதில் ஆர்வமாயிருந்தார் . எல்லோருக்கும் இதயம் “ லப்டப் - லப்டப் ” என்று அடித்துக்கொள்ளும்போது பெருந்தலைவர் காமராசரின் இதயமோ “ உற்பத்தி தன்னிறைவு ” என்றே அடித்துக் கொள்ளுமாம் . காமராசர் பேசும்போது அவர் கூறும் உவமைகளில் வயலும் வரப்பும் , மழையும் ஆறும் , குளமும் ஊருணியுமே அதிகம் வரும் என்று கூறுகிறார் அவரோடு நெருங்கிப் பழகிய மு . நமச்சிவாயம் அவர்கள் . ஐந்தாண்டு திட்ட பிரசாரத்துக்கு அவர் நெல்லையே உதாரணமாக கூறும் அழகைப் பாருங்கள் . நெல் வயலைப் பார்க்காத ஒருவன் வயல் பக்கம் போகிறான் . உழவர்கள் நிலத்தை உழுது சகதியாக மாற்றி நாற்றங்காலில் நெல் விதைக்கிறார்கள் . விவரம் தெரியாத அந்த மனிதன் , “ இவ்வளவு நெல்லை சேற்றில் போடுகிறீர்களே ; வீணாகப் போயிவிடுமே என்கிறான் . ஐந்தாண்டு திட்டங்களுக்கு செய்யப்படும்செலவுகளை வீண் செலவு என்று சொல்பவர்களும் இந்த மனிதனைப் போன்றவர்கள்தான் . ” பல இடங்களில் இருந்து பெருந்தலைவரைப் பார்க்க வருபவர்களிடம் அவர் கேட்கும் முதல் கேள்வி இரண்டேதானாம் . ஒன்று , சாப்பிட்டீர்களா ? மற்றொன்று உங்கள் பக்கம் மழை உண்டா ? இப்படிப்பட்ட மகத்தான மக்கள் தலைவரைப் பார்ப்பது அரிது . ‘உண்டாலம்ம இவ்வுலகம் தமக்கென முயலா நோன்றாள் பிறர்க்கென முயலுநர் உண்மையானே’ என்கிறது புறநானூறு அதற்கு இலக்கணமாய்த்திகழ்ந்தவர் பெருந்தலைவர் காமராசர். 31 31. உறவு ஒரு பொருட்டல்ல ஒரு முறை தலைவர் தனது வீட்டின் முன்னறையில் அமர்ந்து வந்தவர்களோடு பேசிக்கொண்டிருந்தார் . அப்போது யாரும் எதிர்பாராத நிலையில் பதினெட்டு வயது நிரம்பிய அழகிய சிவந்த நிறமுடைய இளைஞன் ஒருவன் உரிமையோடு தலைவரின் அருகில் வந்து நின்றான் . அவனைப் பார்த்த தலைவர் அவனோடு உரையாடத் தொடங்கினார் . “என்னமா கனகவேல் என்ன விஷயம்? என்ன காகிதம்?”என அவன் கையில் வைத்திருந்த காகிதத்தை கூர்ந்து படித்தார். “தாத்தா எம்.பி.பி.எஸ்-சுக்கு அப்ளிகேஷன் போட்டேன். இண்டர்வியூ நடந்திருச்சி. நீங்க ஒரு வார்த்தை சி.எம்.கிட்டே சொன்னீங்கன்னா நிச்சயம் இடம் கிடைக்கும். லிஸ்ட் போடறதுக்குள்ளே சொல்லுங்க தாத்தா. எங்க குடும்பத்துலே நான் ஒருத்தனாவது படிச்சு டாக்கடராயிடுவேன் தாத்தா”என்ற இளைஞன் கெஞ்சினான். அந்த இளைஞன் பெருந்தலைவரின் ஒரே தங்கை திருமதி நாகம்மாளின் மகள் வழிப்பேரன். “சரி. அப்ளிகேஷன்னிலே என் பேரை எதுக்கு எழுதினே”என்று கேட்டார் தலைவர். “இல்லை தாத்தா. என் மெட்ராஸ் அட்ரஸ் கேட்டிருந்தாங்க. எனக்கு உங்களைத் தவிர இங்கே யாரையும் தெரியாதே. இன்டர்வியூவிலும்கேட்டாங்க. நான் எங்க தாத்தான்னு சொன்னேன்.” உடனே தலைவர் , கனகவேலு இந்த டாக்டர் படிப்பு என்சினியர் படிப்புக்கு எல்லாம் அரசாங்கம் ஒரு கமிட்டி போட்டிருக்கும் . அவுங்க தேர்ந்தெடுக்கிறவங்களுக்குத்தான் இடம் கிடைக்கும் . அதனாலே சிபாரிசு பண்றது சரியில்லை . நீ நல்லா பதில் சொல்லி இருந்தீன்னா உனக்குக் கிடைக்கும் . கிடைக்கலைன்னா பேசாம கோயமுத்தூர்லே பி . எஸ் . சி . அக்ரிகல்ச்சர் பாடம் எடுத்துப் படி . அதுக்கு நல்ல எதிர்காலம் இருக்கும் . என்னாலே சிபாரிசு பண்ண முடியாது என்று சொல்லி அவன் தந்த தாளையும் அவனிடம் கொடுத்து அனுப்பி விட்டார் . அந்த வருடம் அவனுக்கு மருத்துவர் படிப்புக்கு அனுமதி கிடைக்கவில்லை . நாம் போட்ட சட்டங்களை நாமே மீறுவது என்பது தலைவருக்கு ஏற்கமுடியாத செயல் என்பதோடு மற்றவர்கள் அவர் உறவுமுறையைச் சொல்லிப் பயன் பெற வந்தாலும் பொதுவாழ்வில் அவர் இந்த ஆசாபாசங்களுக்கு அப்பாற்பட்டவராக இருந்தார் . 32 32. சி‘பாரிச’ நோய் ஒரு முறை கலைவாணர் என் . எஸ் . கே . யை சந்திக்க ஒருவர் வந்தார் . “ ஐயா மூன்று வேளை சாப்பாடு போட்டு மாதம் 5 ரூபாய் கொடுங்க நீங்கள் விரும்பும் போதெல்லாம் நாதஸ்வரம் வாசிப்பேன் ” என்றார் . “ அப்படியா சரி ” இப்போதே வாசி என்றார் கலைவாணர் . வந்தவர் நாதஸ்வரம் வாசித்தார் . வாசிப்பில் சுருதி , தாளம் , ராகம் எதுவும் அமையவில்லை . இசையைக் கேட்டுக்கொண்டிருந்த கலைவாணர் அதை நிறுத்தச் சொல்லிவிட்டு நூறு ரூபாய் பணத்தை எடுத்து அவரிடம் கொடுத்து “ நீர் நாதஸ்வரம் வாசிக்கவில்லை . உமது வறுமையை வாசித்தீர் . நன்றாகக் கற்றுக் கொண்டு வந்து பிறகு வாசியுங்கள் . இப்போது சாப்பிட்டுவிட்டு போங்கள் ” என்றார் கலைவாணர் . தங்கள் தகுதிகளை உயர்த்திக் கொள்ளாமல் சிபாரிசின் மூலமே முன்னேற வேண்டும் என்று பலபேர் நினைக்கிறார்கள் . அதற்கு சில அரசியல்வாதிகளும் ஏஜண்டாக இருக்கிறார்கள் . இந்தத் தவறான போக்கிற்கு பெருந்தலைவர் சவுக்கடி கொடுத்த சந்தர்ப்பம் ஒன்று உண்டு . பெருந்தலைவர் முதல்வராக இருந்த போது அவருக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் தன்னுடைய புதல்விக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் வேண்டும் என்று சிபாரிசிற்காகச் சென்றார் . “ஒவ்வொரு மந்திரிக்கும் பத்து பதினைந்து கோட்டா உண்டாம். உங்களுக்குச் சற்று அதிகமாக உண்டாம்”என்று கேட்டார் வந்தவர். உடனே பெருந்தலைவர் “நீங்கள் படித்தவராக இருக்கிறீர்கள். நான் வெளியூரிலிருந்து வந்ததும் என்னைப் பார்க்க வந்து இருக்கிறீர்கள். விபரம் தெரிந்தவர்களே இப்படி என்றால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்? அட்மிஷனுக்கு என்று ஒரு முறை உண்டு. ஒரு கமிட்டி உண்டு. நடுநிலை மனிதர்கள் கமிட்டியில் இருக்கிறார்கள். அவர்கள் தான் அட்மிஷன் குறித்து முடிவு செய்வார்கள். இப்படி ஒரு பக்கம் கமிட்டி அமைத்துவிட்டு இன்னொரு புறம் சிபாரிசு செய்தால் எப்படி? அது நியாயமில்லையே. இப்போது நீங்கள் வெளியே போய், முதல்வரைப் பார்த்தேன். அட்மிஷன் கிடைத்து விட்டது என்று கூறினால் அது பரவி ஒரு தப்பான எண்ணம் ஏற்பட்டுவிடும். மனசாட்சிப்படி முறையோடு நடந்து கொள்ள வேண்டும். அதுதான் நல்லது. முறைப்படி முயற்சி செய்யுங்கள்”என்றார். 33 33. ஏழைச் சிறுவனின் இதயம் கவர்ந்தவர் ஒரு சமயம் குருநானக் ஒரு கிராமத்துக்குச் சென்றிருந்தார் . அந்தக் கிராமத்து செல்வந்தர் வீட்டில் குருநானக்கிற்கு உணவு தயாரிக்கப்பட்டது . ஆனால் அந்த உயர்ந்த உணவை உண்ணாமல் ஒரு ஏழைக் குடியானவன் வீட்டில் அவன்கொடுத்த காய்ந்த ரொட்டித் துண்டுகளைச் சாப்பிட்டார் . “குருஜி ஏன் இப்படி?”என்றார் செல்வந்தர். “நீ தயாரித்த ரொட்டியைக் கொண்டு வா”என்றார் குருநானக். உடனே செல்வந்தர் தன் வீட்டில் தயாரிக்கப்பட்ட ரொட்டிகளைக் கொண்டு வந்தார். குருநானக் ரொட்டியைப் பிளந்தார். அதிலிருந்து இரத்தம்கொட்டியது. அதைப் பார்த்து ஒன்றும் புரியாமல் வியந்து நின்றார். உடனே குருநானக் “ நீ எந்த ஏழைகளை கசக்கிப் பிழிந்து பொருள் சம்பாதித்தாயோ அந்த ஏழைகளின் இரத்தந்தான் இது ” என்றார் . பொதுவாக ஏழைகளை துன்பப்படுத்துபவர்கள் தான் அதிகம் . ஆனால் அப்படிப்பட்ட ஏழைகளிடம் தம் இதயங்கனிந்த அன்பைச் செலுத்தியவர் பெருந்தலைவர் . 1962 ல் தேர்தல் நேரம் பெருந்தலைவரின் கார் வீதியில் நிற்பதைப் பார்த்து ஒரு சிறுவன் காரை நெருங்கி “ வணக்கம் ஐயா ” என்றான் . “என்ன… படிக்கிறாயா?”என்று மலர்ச்சியோடு சிறுவனை விசாரித்தார் முதல்வர். சிறுவன் உடனே பதில் கூறாமல் சுற்றுமுற்றும் சென்று பார்த்து ஒரு நோட்டீசை எடுத்து தனது கால் சட்டையில் துடைத்து தலைவரிடம் நீட்டி “கையெழுத்து வேண்டும்”என்றார். “சரி என்ன படிக்கிறே”என்று மீண்டும் கேட்டார். பையன் தயங்கியபடி “படிக்கலை அந்த டீ கடையில வேலை பார்க்கிறேன்”என்றான். அந்தச் சிறுவனிடம் வயது, சம்பளம் எல்லாம் பற்றி அன்போடும், கனிவோடும் விசாரித்து விட்டு அந்தச் சிறுவனின் கன்னத்தில் செல்லமாகத் தட்டியபடி கையெழுத்திட்டுக்கொடுத்தார். அப்போது அங்கு பணியில் இருந்து போலீஸ்காரர் வந்து அந்தச் சிறுவனை அப்புறப்படுத்த முயன்றார் . காமராசர் அந்த போலீசை தடுத்து “ நீ பார்த்துக்கொண்டிருந்த வேலையைப் போய்ப்பார் . எங்களுக்கு பாதுகாப்பு தேவையில்லை . பையனை விடு ” என்றார் . இவ்வாறு ஏழைச் சிறுவனின் சிறிய ஆசையைக் கூ ட உளமாரச் செய்து கொடுத்து அவனது முக மகிழ்ச்சியில் இறைவனைக் கண்டார் பெருந்தலைவர் . 34 34. மக்களை மதித்தவர் ஒரு சமயம் வேலூர் சிறையில் சர்தார் இருந்தார் . கடுங்காவல் தண்டனை பெற்ற அரசியல் கைதிகளும் சிறைக்குள்வேலை செய்ய வேண்டும் என்ற விதி இருந்தது . ஆனால் கொடுக்கப்பட்ட வேலைகளைச் சரியாகச் செய்யத் தெரிந்தவர்களால்தான் ஒழுங்காகச் செய்ய முடியும் . பெரும்பாலான கைதிகள் தொழிலாளியாக இல்லாத காரணத்தினால் கொடுத்த வேலையைச் சரியாக செய்ய முடியாத காரணத்தினால் மூலப்பொருட்கள் அதிக அளவில் வீணாகின . இது சிறை அதிகாரிகள் கவனத்துக்குப் போனது . கைதிகளை விசாரித்து , அவர்களுக்கு என்ன வேலை செய்யத் தெரியும் ? என்று கேட்டு அதன்படி தெரிந்த வேலைகளைக்கொடுப்பது என முடிவானது . இதை சர்தாரும் அறிந்து கொண்டார் . அரசியல் கைதிகளை கடுங்காவல் கைதிகள்போல நடத்துவது சர்தாருக்குப் பிடிக்கவில்லை . மறுநாள் விசாரிக்கப்பட இருந்த நண்பர்கள் மூவரிடம் இரகசியமாய் சில யோசனைகள் கூறினார் . மறுநாள் அதிகாரிகள் இந்த மூன்று கைதிகளிடமும் என்ன வேலை செய்யத் தெரியும் ? என்று விசாரித்தார்கள் . ஒருவர் கூட்டத்தில் சொற்பொழிவு செய்யத் தெரியும் என்றார் . அடுத்துவர் சத்தியாக்கிரகம் செய்வேன் என்றார் . மூன்றாவது ஆள் இறந்து போனவர்களுக்கு கருமாதி சடங்கு செய்வேன் என்றார் . துரை கோபப்பட்டு இனி மற்றவர்களை விசாரிக்க விரும்பவில்லை . அரசியல் கைதிகளுக்கு இனிமேல் சிறையில் எந்த வேலையும் கொடுக்க வேண்டாம் . கடுங்காவல் கைதிகளையும் வெறும் கைதிகள் போலவே நடத்துங்கள் என்று உத்தரவிட்டார் . இப்படித் தொண்டர்களுக்காகவும் , மக்களுக்காகவும் வாழ்ந்த தலைவர்கள் பலர் ; அவர்களில் காமராசரும் ஒருவர் . பெருந்தலைவரின் தயாள குணம் அவரது பேச்சு , செயல் எல்லாவற்றிலுமே வெளிப்படும் . வெளியூர்ப் பொதுக்கூட்டம் ஒன்றில் முதலமைச்சர் காமராசர் வருவதற்காகத்திரளான மக்கள் கூட்டம் அவருக்காகக் காத்துக்கொண்டிருந்தது . மலர் மாலைகளோடு பிரமுகர்களும் , தொண்டர்களும் இருப்பதைப் பார்த்த பெருந்தலைவர் “ பேச்சு முன்னே மாலை பின்னே ” என்று கூறிவிட்டார் . அதற்கு காமராசர் சரியான காரணமும் சொன்னார் . “ பொதுமக்கள் நம் கருத்தைக் கேட்பதற்காகத் தான் பொதுக்கூட்டம் நடத்துகிறோம் . அவர்களும் வெகு நேரமாக நமக்காக் காத்துக் கொண்டிருக்கிறார்கள் . அதனால் முதலில் அவர்கள் நன்மைக்கான விஷயங்களைப் பேசிவிட்டு பிறகு மாலை மரியாதையை ஏற்றுக் கொள்ளலாம் ” என்றார் பெருந்தன்மையோடு . அதேபோன்று மேடையில் அதிக வெளிச்சம் பொதுமக்கள் இருக்கும் பகுதியில் வெளிச்சக் குறைவாகவும்இருந்தால் கடிந்து கொள்வார் . மக்களைப் பார்க்கத்தான் வந்தேன் . அவர்களது முக உணர்ச்சிகளைப் பார்த்தால்தான் நாம் செய்வது சரியா தவறா என்று தெரியவரும் . எனவே விளக்குகளை அவர்களைப் பார்த்துத் திருப்புங்கள் என்பார் . இப்படி ஒவ்வொரு சிறு விஷயத்திலும் மக்களின் உணர்வுகளைக் கவனித்து அதற்கேற்ப நடந்து கொள்வதால்தான் மக்கள் அவரைப் பெருந்தலைவராக ஏற்றுக் கொண்டார்கள் . 35 35. மனதைக் கடிக்காதீர்கள் மற்றவர்கள் மனதைக் கடித்துக் குதறி புண்படுத்தி வேடிக்கை பார்ப்பது நம்மில் பலருக்குக் கைவந்த கலை . அது மனைவியாக இருந்தாலும் விட மாட்டார்கள் . ஒரு காரில் கணவன் , மனைவி இருவரும் பயணம் செய்து கொண்டிருந்தனர் . அப்போது வழியை மறித்தபடி சில கழுதைகள் படுத்துக்கொண்டிருந்தன . உடனே காரை நிறுத்திய கணவன் மனைவியைப் பார்த்து , “உன்னோட உறவுக்காரங்க எல்லாரும் படுத்திருக்காங்க பார்”என்றார். உடனே மனைவி “உறவுக்காரங்கதான்; உங்களைக் கல்யாணம் பண்ணின பிறகு வந்த உறவு”என்றார். இப்படி ஒருவரை ஒருவர் கடித்துக் கொள்வதால் என்ன பயன் ? தன்னைப் பழித்துப் பேசியவர்களைக் கூட மனம் நோகாமல் தான் நடந்து கொண்டது மட்டுமின்றி மற்றவர்கள் அவ்வாறு நடப்பதையும் தடுப்பவர் பெருந்தலைவர் . சென்னை நகர சபைக்குத் தேர்தல் நடந்த சமயம் . திருவல்லிக்கேணி பார்த்தசாரதி நாயுடு தெருவில் காங்கிரஸ் தேர்தல் பிரசாரக் கூட்டம் . மேடையில் காமராசர் அமர்ந்திருந்தார் . “காமராசர் திருமணம் ஆகாதவர். குடும்பம் இல்லை. குடும்பம் இல்லாதவருக்கு கஷ்ட நஷ்டம் எப்படித் தெரியும்? என்ன பொறுப்பு இருக்கும்? பொறுப்பு இல்லாதவருக்கு எப்படி ஆட்சியைச் சரிவர நடத்த முடியும்?”என்று ஒரு தலைவர் குறை கூறியிருந்தார். அதற்குப் பதிலளிப்பதற்காக எழுந்த ஒரு பேச்சாளர் அந்தத் தலைவரை முன்னிலைப்படுத்தி பதில் கூற முயன்றார். பேச்சின் தரம் வசவாக மாறத் தொடங்கியது. அதுவரை கேட்டுக் கொண்டிருந்த பெருந்தலைவர் தாங்க முடியாமல் கோபத்துடன் எழுந்து “ நீங்கள் அதிகம் பேசி விட்டீர்கள் . போதும் அமருங்கள் அடுத்தவர் பேசட்டும் ” என்று கூறி வரம்பு மீறிப் பேச முயன்றவரைத் தடுத்தார் . தனக்குத் துன்பம் வரும்படி பேசியவர் கூட மனம் நோகக் கூடாது என்று நினைக்கக் கூடிய உயர்ந்த பண்பினைப்பெற்றவர் பெருந்தலைவர் . யார் மீதும் புழுதி வாரித் தூற்றாதீர்கள் . ஒரு வேளை குறி தவறலாம் . ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் . உங்கள் கைகள் அழுக்காகி விடும் . 36 36. உணவா? உணர்வா? ஒரு கூட்டத்தில் கூடியிருந்தவர்களிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது . பூக்களிலே சிறந்த பூ எது ? சிலர் ரோஜா என்றார்கள் . சிலர் தாமரை என்றார்கள் . இன்னும் சிலர் மல்லிகை என்றார்கள் . இப்படி பலரும் பல பூக்களைச்சொல்ல ஒருவர் மட்டும் பருத்திப்பூ என்றார் . அந்தப்பூ அழகாய் இல்லையே . அதை ஏன் சொல்கிறீர்கள் என்று கேட்டபோது அவர் சொன்ன பதில் அழகை மட்டும் பார்த்து முடிவு எடுக்கக் கூடாது . பயன்பாட்டையும் பார்க்க வேண்டும் . இந்தப் பூ பருத்தியாகி பஞ்சாகி , நூலாகி , ஆடையாகி அனைவரின் மானத்தையும் காப்பாற்றுகிறதே என்றார் . இதே உணர்வுடையவர்தான் பெருந்தலைவர் காமராசர் . ஒருமுறை மத்திய அரசுக்கு , தமிழக அரசு , சென்னைத் துறைமுகத்தை விரிவு படுத்தும்திட்டம் பற்றிக் கடிதம் எழுதிக் கேட்டது , “ கோட்டைக்கு எதிரே துறைமுக விஸ்தரிப்பு செய்தால் சென்னையின் அழகு கெட்டு விடும் . ஆகவே ராயபுரம் பகுதியில் விஸ்தரிக்கலாம் ” என்று ஒரு அமைச்சர் சிபாரிசு செய்தார் . அதற்கு மத்திய அரசு “ பாறைகள் நிறைந்துள்ள பகுதியில் விஸ்தரிப்பு செய்ய இயலாது . ஆகவே உங்களுக்கு வேண்டியது உணவா ? அழகா ? (Do you want bread or beauty) ” என்று கேட்டது . உடனே காமராசர் “ எனக்கு அழகை விட உணவுதான் தேவை (I want bread rather than beauty) ” என்று எழுதினார் . காமராசர் அன்று அவ்வாறு எழுதியதன் பலன்தான் விரிவு படுத்தப்பட்ட துறைமுகத்தை இன்று காண முடிகிறது . 37 37. தீண்டாமையைத் தீண்டாதவர் சிலர் சாதி ஒழிப்பு பற்றி ஆரவாரமாகப்பேசுவார்கள் . ஆனால் நடைமுறையில் கடைப்பிடிக்கமாட்டார்கள் . ‘ சாதிகளை ஒழிப்போம் , சாதிகளை ஒழிப்போம் ’ என்ற ஒரு அரசியல் தலைவர் ஆரவாரமாகப்பேசினார் . அப்போது ஒரு தொண்டர் அவர் காதருகே சென்று “ நம்ம சாதியையுமா ? ” என்று கேட்டார் . உடனே தலைவர் சுதாரித்துக் கொண்டு நம்ம சாதியைத்தவிர மற்ற சாதிகளை ஒழிப்போம் என்று பேசத் தொடங்கினார் . வேளாளர் சங்க கல்யாண மண்டபத்தில் ராமமூர்த்தி முதலியார் அரங்கில் , நாச்சியப்ப கவுண்டர்தலைமையில் , சுப்புநாயக்கர் முன்னிலையில் கருப்பசாமி நாடார் அனுசரணையில் நடக்கிறது சாதி ஒழிப்பு மாநாடு . இந்தப் போலித்தனங்களுக்கு ஆட்படாமல் அமைதிப் புரட்சி செய்தார் பெருந்தலைவர் . பெருந்தலைவர் அமைத்த மந்திரி சபையில் எம் . பக்தவச்சலம் , சி . சுப்பிரமணியம் , ஏ . ப . ஷெட்டி , எம் . ஏ . மாணிக்க வேலு நாயக்கர் , ராமநாதபுரம் ராஜா , ராமசாமிப் படையாச்சி , பரமேஷ்வரன் ஆகியோர் இடம் பெற்றனர் . மந்திரிகளுக்கு இலாகாக்களை அளித்ததிலும் பெருந்தலைவர் ஒரு சமுதாயப் புரட்சி செய்தார் . அரிசன மந்திரியான பரமேஷ்வரனுக்கு இந்து அறநிலையத் துறையை அளித்தார் . மதுவிலக்கு இலாக்காவும் அவருக்கு அளிக்கப்பட்டது . வேண்டும் என்றே பெருந்தலைவர் செய்தாரா என்றெல்லாம் கூட அப்போது பேசப்பட்டது . ஆனால் அவர் இப்படிச் செய்ததன் குறிக்கோள் இலக்குத் தவறவில்லை . அறநிலையத்துறை மந்திரியாகப் பரமேஷ்வரனை ஆக்கியதன் மூலம் , தமிழ் நாட்டிலுள்ள கோவில் தர்மகர்த்தாக்கள் ஒரு அரிசனுக்கு மதிப்பையும் மரியாதையும் அளிக்கும் நிலையைக் காமராசர் உருவாக்கினார் . இப்படிச்செய்ததால் அரிசன மக்களுக்கு பெருந்தலைவர் ஒரு விடிவெள்ளியாகக் காட்சியளித்தார் . புதிய சமுதாயத்தில் தங்கள் சமூகம் பெருந்தலைவர் மூலம் பெருமை பெற்றுவிட்டதாக அவர்கள் எண்ணி மனம் மகிழ்ந்தனர் . 38 38. தாயே ஆனாலும்... கோயில்களில் சுண்டல் கொடுப்பவர் நம்மவராய் இருந்தால் நாம் வரிசையில் நிற்கு வேண்டியதில்லை . நாம் நிற்கும் இடத்துக்கு சுண்டல் வரும் . சுண்டல் விநியோகத்திலே இப்படிச் சுரண்டல் நடந்தால் பொதுச் சொத்துகளைப் பாதுகாக்கும்அதிகாரம் படைத்தவர்களின் நிலை என்ன ? அதிகாரத்தில் இருப்பவர்களின் வீட்டு நாய்களுக்குக் கூட ஆடம்பரமான உணவு கிடைக்கும் . வட நாட்டிலிருந்து தென் நாட்டுக்கு வந்திருந்த ஒரு எம் . எல் . ஏ ., இங்குள்ள ஒரு எம் . எல் . ஏ ., வீட்டில் தங்கினாராம் . பங்களாவைப் பார்த்தவர் “ இவ்வளவு செலவு செய்து எப்படிக் கட்டினீர்கள் ” என்று கேட்டாராம் . அதற்குத் தென்னாட்டுக்காரர் அவரை அழைத்துச் சென்று “ அதோ ஒரு பாலம் கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறதே அதில் பாதிதான் இந்த பங்களா ” என்றாராம் . பின்தென்னாட்டுக்காரர் வடநாட்டுக்குப் போனபோது “ என் பங்களாவைவிடப் பெரியதாக இருக்கிறதே எப்படிக் கட்டினீர்கள் ” என்று கேட்டபோது , அவரை மாடிக்கு அழைத்துப்போன வடநாட்டு எம் . எல் . ஏ ., “ அதோ ஒரு பாலம் தெரிகிறதா ? ” என்று கேட்க இவர் “ தெரியவில்லையே ” என்று சொல்ல , “ ஆமாம் அந்த முழுப் பாலம் தான் இந்த பங்களா ” என்றாராம் . ஆனால் பெருந்தலைவர் தனது தாயாரின் பராமரிப்புக்குக் கூட அளவாகத்தான் பணம் கொடுத்தார் . பெருந்தலைவர் தன் தாயின் செலவுக்கு மாதம் ரூ .120 கொடுக்க ஏற்பாடு செய்திருந்தார் . பெருந்தலைவர் முதல்வர் ஆன பிறகு அவர் தாயாருக்கு செலவுக்குக் கொடுத்த பணம் போதவில்லை . அதன் காரணமும் உருக வைக்கக் கூடியதுதான் . “அய்யா முதல்வராக இருப்பதால் என்னைப் பார்க்க யார் யாரெல்லாமோ வருகிறார்கள். அப்படி வருபவர்களுக்கு காபி, சோடா, கலர் கூட கொடுக்காமல் எப்படி அனுப்புவது? எனவே அய்யாவிடம் சொல்லி மாதம் 150 ரூபாய் கிடைக்க ஏற்பாடு செய்தால் நலமாக இருக்கும்”என்றாராம். இந்த விஷயம் பெருந்தலைவரிடம் சொல்லப்பட்டது. ஆனால் அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. “யார் யாரோ வருவார்கள். உண்மைதான். அவர்கள் சோடா, கலர் கேட்கிறார்களா? அவர்களுக்கு ஒன்றும் கொடுக்க வேண்டாம். தவிர கையில் கொஞ்சம் ரூபாய் போய்ச் சேர்ந்தால் அம்மா எங்காவது கோவில், குளம் என்று போய் விடுவார்கள். வயதான காலத்தில் வெளியூர் போவது நல்லதல்ல. எனவே இப்போது கொடுத்து வரும் 120 ரூபாயே போதும்”என்று சொல்லிவிட்டார். அதே போலவே பெருந்தலைவரின் தங்கை மகன் ஜவகருக்குத் திருமண ஏற்பாடு நடந்தது . எனவே வீட்டில் உடனடியாக ஒரு கழிப்பறை கட்ட வேண்டும் . அதற்குத் தோதாக வீட்டை ஒட்டிய ஒரு இடம் விலைக்கு வந்தது . அதன் விலை 3000 ரூபாய் . எனவே இதை அய்யாவிடம் சொல்லி ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தலைவரின் தாயார் விரும்பினார் . ஒரு முதலமைச்சரின் வீட்டில் இந்த வசதி கூட இல்லாவிட்டால் எப்படி ? இந்தச் செய்தி தலைவரிடம் கூறப்பட்டது . அதற்குத் தலைவர் “ கழிப்பறைக்கு நான் இடம் வாங்கினால் ஊரில் உள்ளவன் நான் பங்களா வாங்கி விட்டதாகப் பத்திரிக்கைகளில் கூட எழுதுவார்கள் எனவே அதெல்லாம் வேண்டாம் ” என்று மறுத்துவிட்டார் . மீண்டும் மீண்டும் வற்புறுத்திய பிறகே அவரின் அனுமதி கிடைத்து தாயாரின் விருப்பப்படி அந்த இடமும் வாங்கப்பட்டது . 39 39. தொழில் வளம் கண்ட தூயவர் ஒரு வகுப்பில் ஆசிரியர் மாணவர்களைப் பார்த்து கேள்வி கேட்டார் . மிக மிகக் குறுகிய காலத்தில் பல கோடிக்கு அதிபதி ஆவது எப்படி ? “உழைப்பால்”என்றான் முதல் மாணவன். “தவறு”என்றார் ஆசிரியர். “வியாபாரத்தால்”என்றான் மற்றவன். “அதுவும் தவறு”என்று கூறிவிட “கடத்தல் மூலம்”என்றான் மற்றவன். ஆசிரியர் “நோ”என்றார் கடைசியாக அமர்ந்திருந்த பையன் அமைதியாக எழுந்து, “நான் அரசியலில் சேர்ந்து அமைச்சராகி சம்பாதித்து விடுவேன்”என்றதும், “வெரிகுட்”சரியான விடை என்றார் ஆசிரியர். அரசியலுக்கு வருவதே பணம் சம்பாதிப்பதற்குத்தான் என்ற நிலைமை நிலவுகின்ற நாட்டில் மக்கள் பணி ஒன்றே வாழ்வின் லட்சியம் என்று வாழ்ந்தவர் பெருந்தலைவர். தொழில் வளர்ச்சிதான் நாட்டை முன்னேற்றும் என்பதை உணர்ந்த பெருந்தலைவர் , கோடிக்கணக்கான மூலதனம் போட்டுப் பல தொழிற்சாலைகளை அரும்பாடுபட்டு உருவாக்கினார் . நெய்வேலி நிலக்கரி திட்டம் , நீலகிரி கச்சா பிலிம் தொழிற்சாலை , கிண்டி ரண சிகிச்சைக் கருவித் தொழிற்சாலை , சர்க்கரை ஆலைகள் , சோடா உப்புத் தொழிற்சாலைகள் , சிமெண்ட் தொழிற்சாலைகள் , ஆவடி ரெயில்வே வாகன தொழிற்சாலைகள் , மேட்டூர் காகிதத் தொழிற்சாலை ஆகியவை பெருந்தலைவர் ஆட்சியில் ஏற்பட்டன . நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த இவை பயன்பட்டன . 1955-61 ல் 13,300 கிராமங்கள் மின்சார வசதி பெற்றன . நீர்ப்பாசன வசதிக்காக மின்சாரம் பயன்படுதல் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில்தான் அதிகம் . மின்சாரம் உயயோகிக்கும் மாநிலங்களில் தமிழகமே முதலிடம் பெறுகின்றது . 1959 இல் 27 கோடி ரூபாய் செலவில் சென்னை மின்சார நிலையம் விரிவுபடுத்துபட்டது . 9 கோடி ரூபாய் செலவில் பெரியாறு நீர் மின்சாரத்திட்டம செய்து முடிக்கப்பட்டது . இத்திட்டத்தின் மூலம் 1 லட்சம் கிலோ வாட் மின்சக்தி உற்பத்தியானது . குந்தா திட்டம் 3.5 கோடி ரூபாய் செலவில் அமைந்தது . இத்திட்டம் மற்ற நாடுகளும் பார்த்து அதிசயிக்கக் கூடிய முறையில் வெகு விரைவில் நமது எஞ்சீனியர்களால் கட்டி முடிக்கப்பட்டது . இதை நேருஜி துவக்கி வைத்தார் . இவ்வாறு பெருந்தலைவர் ஆட்சி காலத்தில் தொழிற்துறை பொற்காலம் என்றே சொல்லத்தக்க அளவில் முன்னேறியது . 40 40. எதிர்ப்பவர்கள் எதிரிகள் இல்லை கடைத்தெருவில் இரு நண்பர்கள் சந்தித்தனர் . “ எப்படி இருக்கே , பொருளாதாரமெல்லாம் எப்படி ? ” என்றான் ஒருவன் . “ நான் நல்ல வசதியா இருக்கிறேன் . ” “ கடன் கிடன் உண்டா ? ” “ இல்லே . ” “ பேங்கிலே பணம் போட்டு வச்சிருக்கியா” “ஆமாம்” “கையிலே பையிலே ? ” என்றான் . “ பணத்துக்கு பஞ்சம் இல்லை . ஆமாம் ஏன் இவ்வளவு விளக்கமா கேட்கிறே ” என்றான் மற்றவன் . “சும்மாதான் ஒரு நூறு ரூபா கைமாத்து வேணும். முன்னாடியே கேட்டுட்டா அடடே. இப்ப பணம் இல்லையேன்னு பலபேரு கை விரிச்சிடறாங்க. அதுதான் இப்படி விசாரிச்சுட்டு கேட்டேன். தர்றியா”என்றான். இப்படி நண்பர்களைக் கூட சமயம் பார்த்துத் தலையைத் தடவுகிற மனிதர்கள் மத்தியில் தன்னை எதிர்ப்பவர்களைக் கூட நேசித்தவர் பெருந்தலைவர் . ராஜாஜி முதல்வராக இருந்து குலக்கல்வித் திட்டத்தை உருவாக்கி வந்த நேரம் . ஒரு நாள் காலை 7 மணியளவில் திருப்பூர் வின்செண்ட் , காமராசரை அவரது வீட்டில் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தார் . ராஜாஜியின் தன்னிச்சைப்போக்கால் வருத்தமடைந்து இருந்தார் பெருந்தலைவர் . அதை வின்சென்டிடம் கூறிக்கொண்டிருந்தார் . அன்று தலைவருக்கு உடல்நலக் குறைவாக இருந்தது . அந்தச் சமயத்தில் உதவியாளர் வைரவன் ஓடி வந்து இராஜாஜி வந்து கொண்டிருக்கிறார் என்ற தகவலைக் கூறினார் . என்ன பெரியவரா ? அவர் படியேற வேண்டாம் . நானே கீழே வருகிறேன் என்று கூறி விட்டு , கட்டிலில் இருந்து துள்ளி எழுந்து கீழே வந்து விட்டார் . ராஜாஜி காரில் இருந்து இறங்கிக் கொண்டே “ என்ன உடம்புக்கு ” என்று கேட்டார் . கைகூப்பி வணக்கம் தெரிவித்த பெருந்தலைவர் , “ நான் நல்லாத்தான் இருக்கிறேன் . சொல்லி அனுப்பி இருந்தா நானே வந்திருப்பேனே ” என்றார் . “எனக்கு வேறு எந்த விசேஷமும் இல்லை. உங்களுக்கு உடம்பு சரியில்லைன்னு இப்பத்தான்கேள்விப்பட்டேன். உடனே வந்துட்டேன். வாங்கோ”என்றவாறு இராஜாஜி வீட்டிற்குள் வந்தார். கீழே இருந்த ஒரு தனியறையில் இருவரும் பத்து நிமிடம் பேசினர் . பிறகு இருவரும் வணக்கம் தெரிவித்துக்கொண்டனர் . ராஜாஜி விடைபெற்றார் . பிறகு பெருந்தலைவர் வின்சென்டைப் பார்த்து , “ பாவம் பெரியவர் , ரொம்ப தளர்ந்து தெரியறார் . பொறுப்புன்னா சும்மாவா ? ” என்றார் . பெருந்தலைவரின் இதயத்தில் உள்ள பாசத்தையும் மரியாதையையும் இதன் மூலம் காணலாம் . 41 41. சட்டத்தை மதித்த சாதனையாளர் ஒரு பெண்மணி வீட்டின் ஜன்னல் ஓரத்தில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார் . கழுத்தில் தங்கச் சங்கிலி கிடந்தது . ஒரு திருடன் ஜன்னல் வழியாகக் கையை விட்டு சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடி விட்டான் . ஆனால் போலீசாரிடம் மாட்டிக் கொண்டான் . வழக்கு நடந்தது . ஐந்து ஆண்டுகள் ஜெயில் தண்டனை கொடுத்து நீதிபதி தீர்ப்புக் கூறினார் . குற்றவாளிக் கூண்டில் நின்று கொண்டிருந்த திருடன் நீதிபதியைப் பார்த்து சாமர்த்தியமாக “ ஐயா ! திருடியது எனது வலது கைதான் , அப்படியிருக்க எனது உடல் முழுவதற்கும் தண்டனை கொடுப்பது சரியல்ல . வேண்டுமானால் என் கைக்கு மட்டும் தண்டனை கொடுங்கள் ” என்றான் . அவன் வழியிலேயே சென்று அவனை மடக்க நினைத்த நீதிபதி சரி உனது வலது கைக்கே தண்டனை கொடுக்கிறேன் . அது உனது உடம்பில்தானே உள்ளது . வெட்டி எடுத்துக்கொள்ளலாமா என்றார் . “அந்த சிரமம் உங்களுக்க வேண்டாம். நானே தருகிறேன்”என்றபடி செயற்கைக் கையைக் கழட்டிக்கொடுத்துவிட்டு நடையைக் கட்டினான் திருடன். இப்படி சமுதாயத்திலும் சட்டத்தை ஏமாற்றுகிற பெரிய மனிதர்கள் உண்டு. உயர்ந்த பதவியில் இருந்தாலும் சட்டத்தின் உயர்வுக்கு மதிப்புக் கொடுத்தவர் பெருந்தலைவர் காமராசர் . அவர் முதலமைச்சராக இருந்தபோது இப்படி எத்தனையோ சம்பவங்கள் நடந்ததுண்டு . ஒரு மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி பிரமுகர் திரைப்பட அரங்கம் ஒன்றைக் கட்டியிருந்தார் . ஆனால் அதைத் திறப்பதற்கு மாவட்ட ஆட்சியாளரின் அனுமதி கிடைக்காமலேயே இருந்தது . அந்த மாவட்டத்தில் காமராசர் சுற்றுப்பயணம் செய்யப்போகிறார் என்பதை அறிந்துகொண்ட அந்தப் பிரமுகர் காமராசரை அணுகி திரையரங்கத்தைத் திறக்க ஒரு தேதி வாங்கி விட்டார் . அதற்குப் பயந்து கலெக்டர் அனுமதி வழங்கி விடுவார் என்பது அந்தப் பிரமுகரின் எண்ணம் . குறிப்பிட்ட நாள் வந்தது . காமராசரும் அந்தத் திரையரங்கத்திற்கு வந்து சேர்ந்தார் . அது வரையிலும் அனுமதி கிடைக்காததால் “ எல்லா ஏற்பாடுகளும் ரெடி ; ஆனா கலெக்டர் மட்டும் இன்னும் லைசென்சு கொடுக்கவில்லை ” என்று காமராசரிடம் புகார் செய்தார் அந்தப் பிரமுகர் . சுற்றுப் பயணத்தில் தன்னோடு இருந்த கலெக்டரிடம் விவரம் கேட்டார் காமராசர் . “ இந்தத் திரையரங்கைக் கட்டியதில் சில விதிமுறைகள் மீறப்பட்டிருக்கின்றன . அதனால்தான் அனுமதி கொடுக்கத் தாமதமாகிறது . இப்போது நீங்கள் விரும்பினால் உடனே அனுமதி கொடுத்து விடுகிறேன் ” என்றார் கலெக்டர் . உடனே காமராசர் “ அய்யய்யோ வேண்டாம் சட்டத்தை மீறி யார் நடந்தாலும் அது தப்புதான் . உங்களுக்கு திருப்தி ஏற்பட்ட பிறகே அனுமதி கொடுங்கள் ” என்று கலெக்டரிடம் சொல்லிவிட்டுத் திரையரங்கத்தைத் திறக்காமலேயே சென்று விட்டார் . தனது செல்வாக்கைக் காட்டி கலெக்டரை மடக்கி விடலாம் என நினைத்த பிரமுகர் ஏமாந்து நின்றார் . பயிர்களைச் சுமந்து நிற்கும் போது நிலம் அழகுபெறுகிறது . தாமரையைச் சுமந்து நிற்கும்போது குளம் அழகு பெறுகிறது . நாணத்தைச் சுமந்து நிற்கும் போது பெண் அழகு பெறுகிறாள் . நேர்மையைச் சுமந்து நிற்கும்போது தலைவன் அழகு பெறுகிறான் . 42 42. நாட்டையே நினைத்த நல்லவர் ஒருவர் ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்துகொண்டிருந்தார் . டிக்கெட் பரிசோதகர் வந்ததும் மாட்டிக்கொண்டார் . ஆனாலும் சாமர்த்தியமாகப் பேசித் தப்பிக்க நினைத்தார் . “ஏங்க இந்த நாடு நம்ம நாடு தானே” “ஆமா” “அப்போ இந்த நாட்டில் உள்ள பொருட்களெல்லாம் நம்ம பொருளுங்க மாதிரித்தானே” “ஆமா” “அப்போ இந்த ரயிலும் நம்ம ரயிலுதானே” “ஆமா” “அப்போ நம்ம ரயில்ல போறதுக்கு நாமே டிக்கெட் எடுத்தா நல்லாயிருக்குமா? அதுதான் நான் டிக்கெட் எடுக்கல” டிக்கெட் பரிசோதகர் ஒரு கணம் திகைத்து விட்டார் . ஆனாலும் சுதாரித்துக் கொண்டு நிலைமையைச் சமாளித்தார் . “நீங்க சொல்றதெல்லாம் உண்மைதான். இங்க ஒரு ஜெயில் இருக்கு. அதுவும் நம்ம ஜெயில்தான், மூணுமாசம் அங்க இருந்துட்டுப் போங்க” நாட்டையே தங்கள் நலனுக்காக அடகு வைப்பவர்கள் உண்டு . ஆனால் நாட்டுக்காகத் தன்னேயே அர்ப்பணித்தவர் காமராசர் . எப்போதும் அவருக்கு நாட்டைப் பற்றிய சிந்தனைதான் . ஒருமுறை பெருந்தலைவரைச் சந்திக்க வந்த ஒருவர் , “ ஐயா நல்லா இருக்கீங்களா ? ” என்று எல்லோரும் கேட்பது போல பொதுப்படையாகக் கேட்டார் . உடனே காமராசர் நான் நல்லாத்தான்இருக்கேன் . செத்தா போயிட்டேன் . “ நான் மட்டும் நல்லாயிருந்தாப் போதுமா ? நாடு நல்லா இருக்க வேணாமா ? அதைப்பத்தி எல்லாரும் யோசிக்கணும் ” என்றாராம் . தீபம் நா . பார்த்தசாரதி பெருந்தலைவருக்கு அறிமுகமான நேரம் . தமது சொந்த ஊரைப் பற்றிக் குறிப்பிடும் போது சிவகாசிக்கு அருகில் ஆறு மைல் தொலைவில் உள்ள எனது ஊர் என்றாராம் . உடனே காமராசர் “ உங்க ஊர்க் கண்மாயிலே மீன்பிடிக் குத்தகையிலே வருஷா வருஷம் சண்டை வருமே இப்ப எப்படி இருக்கு ” என்றாராம் . தமிழ் நாட்டிலுள்ள ஒவ்வொரு கிராமத்தைப் பற்றியும் அறிந்து வைத்திருக்கிற தலைவரின் அக்கறையைக் கண்டு அசந்து போனாராம் நா . பார்த்தசாரதி . ஒரு முறை தமிழ்நாட்டுக்கு வருகை தந்திருந்த வெளிநாட்டு வல்லுநர் குழுவினர் “ உங்கள் முதலமைச்சர் நாட்டின் பூகோளத்தையே தமது தலைக்குள் வைத்திருக்கிறாரே ” என்று வியந்து பாராட்டினார்களாம் . கோபத்தை அன்பால் வென்றிட வேண்டும் பாசத்தை விவேகத்தால் வென்றிட வேண்டும் பொய்யை மெய்யால் வென்றிட வேண்டும் தீயதை நன்மையால் வென்றிட வேண்டும் பேராசையை உதாரண குணத்தால் வென்றிட வேண்டும் தன் நலத்தை பொது நலத்தால் வென்றிட வேண்டும் . இதுவே நல்ல மனிதர்களை உருவாக்கும் . 43 43. சமதர்மம் விரும்பிய சான்றாளர் உனது அடுத்த வீட்டுக்காரன் பசித்திருக்க நீ மட்டும் உண்ணாதே என்ற வாக்கை நான் கடைபிடிக்கத் தொடங்கி விட்டேன் என்றார் ஒருவர் . அப்படியா ? “ அடுத்த வீட்டுக்காரரின் அரும்பசியைப்போக்க உதவி செய்யத் தொடங்கி விட்டீர்களா ? ” என்று கேட்டார் மற்றவர் . “ அதுதான் இல்லை . ஏழைகள் இல்லாத பகுதியில் பங்களா வாங்கிவிட்டேன் . அங்கே அடுத்த வீட்டுக்காரர்கள் யாரும் பசித்திருக்க மாட்டார்களே “ என்றார் அவர் . சமத்துவத்தை இப்படிக் கடைப்பிடிப்பவர்கள் உண்டு . சமதர்மத்தின் மூலம் எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்று விரும்பியவர் பெருந்தலைவர் காமராசர் . ஜனநாயக சோஷியலிசம் என்ற கொள்கையை புவனேஸ்வர காங்கிரஸ் மாநாட்டில் முழங்கியவர் காமராசர் . இந்த சித்தாந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் இரண்டு முறை இருந்தது . ஒன்று தார்மீக முறை . மற்றொன்று கட்டாய முறை . இதனை விளக்க பெருந்தலைவர் அருமையான உதாரணம் ஒன்றைச் சொன்னார் . தரையில் உறங்குகிறான் ஒருவன் . பாயில் படுத்திருக்கிறான் மற்றொருவன் . இதில் சமத்துவம் இல்லை . இந்த ஏற்றத்தாழ்வை இரண்டு விதங்களில் போக்கலாம் . பாய் விரித்து உறங்குபவனிடமிருந்து பாயைப் பிடுங்கிக்கொண்டு அவனையும்தரையில் படுக்க வைப்பது . இது ஒரு முறை . புதிதாக ஒரு பாயை உருவாக்கி தரையில் படுத்திருப்பவனும் அதைப் பயன்படுத்திக்கொள்ளும் சூழ்நிலையை ஏற்படுத்துதல் . இந்த முறையே சிறப்பானது . சமவாழ்வு சமுதாயத்தை அமைக்கும் பணியை கட்டாயத்தின் மூலம் செய்ய விரும்பவில்லை . போதனை முறைகளையே கையாண்டு உடைமை வர்க்கத்தின் உள்ளத்தில் மனித நேயத்தை வளர்ப்பதே முக்கியம் என்றார் . இதற்கு ஏற்ற வகையில் தன்னுடைய வாழ்க்கையையும் அமைத்துக் கொண்டார் காமராசர் . ஒரு தடவை ஒரு மன்றத்தில் பேசப்போனார் . குடிசை வாழ் மக்கள் சங்கம்அது . தொடக்கத்திலேயே பெயர்ப் பலகையைச் சுட்டிக் காட்டி “ குடிசை வாழ் மக்கள் என்று போட்டிருக்கிறிர்கள் . நீங்கள் எங்கே வாழ்கிறீர்கள் , எப்படி இருக்கிறீர்கள் என்று சொல்ல வேண்டும் . எல்லா வசதிகளும் கிடைத்தால் தான் நீங்கள் வாழ்வதாக அர்த்தம் ” என்று பேசினார் . அதனால்தான் அரசுக் கவிஞர் எஸ் . டி . சுந்தரம் . “ ஏழை எளியேரின் ஏகப்பிரதிநிதி எங்கள் தலைவர் என்றும் வாழியவே ஏழேழ் பிறப்பிற்கும் இந்திய நாட்டின் இமயம் போல் புகழ் வாழியவே “ என்று வாழ்த்துகிறார் . 44 44. நம்பிக்கையின் நாயகர் ஒரு நிறுவனம் இப்படியொரு விளம்பரம் செய்திருந்தது . “ நீங்கள் ஒரு வாரத்தில் லட்சாதிபதி ஆகலாம் . அந்த ரகசியத்தை உங்களுக்கு எழுதி அனுப்புகிறோம் . ஐந்து ரூபாய் கட்டணத்துடன் விண்ணப்பிக்கவும் .” லட்சாதிபதி ஆகும்ஆசையில் பலர் விண்ணப்பம் செய்தனர் . எல்லோருக்கும் ஆலோசனை கூறிக் கடிதம் வந்தது . அதில் குறிப்பிட்டிருந்த வாசகம் , “ எங்கள் விளம்பரத்தைப் பார்த்து ஆயிரக்கணக்கான பேர் விண்ணப்பம் செய்ததால் இந்த ஒரு வாரத்தில் எங்களுக்கு ஒரு லட்ச ரூபாய்க்கு மேல்சேர்ந்து விட்டது . நீங்களும் இது போன்ற வழிகளைப் பின்பற்றினால் லட்சாதிபதி ஆகலாம் .” விண்ணப்பம் செய்தவர்கள் மண்டையைப் பிய்த்துக்கொண்டார்கள் . இதைப்போலவே இன்னொரு விளம்பரம் “ எலித் தொல்லையிலிருந்து நீங்க எளிய வழி . ஐந்து ரூபாயுடன் விண்ணப்பிக்கவும் .” விண்ணப்பித்தவர்களுக்கு வந்த பதில் :- “ எலித் தொல்லையுள்ள இப்போதைய உங்கள் பழைய வீட்டை மாற்றிவிட்டு எலிகள் இனம் வராத புத்தம் புதிய வீட்டுக்குக் குடிபோகவும் .” இப்படி ஏமாற்றுகிறவர்கள் தான் சமுதாயத்தில் அதிகம் . நம்பிக்கையின் நாயகமாகத்திகழ்ந்தவர்பெருந்தலைவர் காமராசர் . அவர் முதல்வராய் இருந்த காலத்தில் சென்னை பூவிருந்தவல்லிக்கு அருகில் பார்வையற்றோர் பள்ளி ஒன்று இயங்கி வந்தது . தனியார் அறக்கட்டளையைச்சேர்ந்த அந்தப் பள்ளி அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது . பல ஏக்கர் பரப்பைக்கொண்டிருந்த அந்தப் பள்ளி வளாகம் அப்போதைய அமைச்சர் ஒருவரின் கண்ணில் பட்டு விட்டது . அந்தப் பள்ளியை வேறு ஒரு இடத்துக்கு மாற்றிவிட்டால் அந்த இடத்தை வேறு காரியத்துக்குப் பயன்படுத்தலாம் என்று அவர் திட்டமிட்டார் . இதை அறிந்ததும் காமராசர் கொதித்துப்போய்விட்டார் . மாற்றும் முயற்சியைத் தடுத்து நிறுத்தினார் . அப்போது அவர் கூறினார் . “ மற்றவர்கள் மேல் நம்பிக்கை வைக்காமல் நம்மிடம் ( அரசிடம் ) நம்பிக்கையோடு கொடுத்து விட்டுப் போயிருக்கிறார்கள் . இந்தப் பள்ளியை நடத்தாமல் போனால் மட்டும் நம்பிக்கைத் துரோகம் என்பதல்ல . இந்த இடத்தை மாற்றினாலே நம்பிக்கைத் துரோகம்தான் . அரசிடம் ஒப்படைக்கப்பட்ட அறக்கட்டளையே சரியா நடக்கவில்லை என்றால் மற்றவர்கள் எந்த நம்பிக்கையோடு அறக்கட்டளைகளை நிறுவ முன்வருவார்கள் . சாமர்த்தியமான பேச்சு நம்பிக்கையைக் காப்பாற்றாது . நாணயமாக நடக்கணும் . அப்போது தான் நாலுபேர் நம்புவார்கள் .” ஒருமுறை ஏழுத்தாளர் சாவி காமராசரைச் சந்தித்து புராண இதிகாசங்களை மக்கள் மத்தியில் பரப்ப குழு அமைப்பது பற்றிக் கலந்து பேசினார் . அவருக்குக் காமராசர் சொன்ன அறிவுரை - “ நல்லா செய்யுங்க . இதுல கட்சிக்காரங்க யாரையும் சேர்த்துக்காதீங்க . நம்பிக்கைத் துரோகம் நடந்திடும் .” “ முயற்சியுடையோர்க்கு அவர் ஒரு நம்பிக்கை நட்சத்திரம் .” தொழிலாளர்களுக்கு அவர் ஒரு தோன்றாத்துணை . சோம்பித் திரியும் மனிதருக்கு அவர் ஒரு தூண்டுகோல் . முன்னேறத் துடிக்கும் சமுதாயத்திற்கு அவர் ஒரு சிறந்த தலைவர் என்று முன்னாள் அமைச்சர் கக்கன் அவர்கள் காமராசரைப் புகழ்கின்றார் . 45 45. சூழ்நிலைக்கேற்ற சொற்பொழிவு அலங்கார நடையில்பேசுவது மட்டுமல்ல . அவசியமானதைப் பேசுவதும் சிறந்த சொற்பொழிவுதான் . சிலர் சூழ்நிலையைப் புரிந்து கொள்ளாமல் ஏதேதோ சொல்லிக் கொண்டிருப்பார்கள் . பிரமுகர் ஒருவரை அந்த ஊர்ப் பள்ளிக்கூடத் திறப்பு விழாவுக்கு அழைத்திருந்தார்கள் . “ உங்கள் ஊருக்குப் பள்ளிக்கூடம் வந்துவிட்டது பாராட்டுக்குரியது . நீங்கள் எல்லோரும் இதை நன்றாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் ” என்று பேசினார் . ஆனால் ஓர் ஊரில் பைத்தியக்கார ஆஸ்பத்திரி திறப்பு விழாவிற்கு அதே பிரமுகரை அழைத்திருந்தார்கள் . “ இந்த ஊருக்கு பைத்தியக்கார ஆஸ்பத்திரி வந்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியது . நீங்கள் எல்லோரும் இதை நன்றாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் ” என்று பேசியபோது கூட்டத்தினர் திகைத்துவிட்டனர் . சூழ்நிலைக்கேற்றவாறு சுருக்கமாகவும் , சுருக்கென்றும் பேசக்கூடியவர் காமராசர் . மூதறிஞர் ராஜாஜி அவர்கள் தமிழக முதலமைச்சராய் இருந்தபோது மதுரையில் டி . வி . எஸ் நிறுவன கட்டிடத்திறப்பு விழாவில் கலந்து கொள்ள வந்திருந்தார் . அந்த விழாவில் காமராசரும் கலந்து கொண்டார் . ராஜாஜி அவர்கள் பேசும்போது , “ ஸ்ரீமான் டி . வி . சுந்தரம் அய்யங்கார் தாம் வயோதிகம் அடைந்த பின் தொழிலைத் தமது புதல்வரிடம் ஒப்படைத்து விட்டார் . இளைஞர்களிடம் இப்படி பொறுப்பை ஒப்படைப்பது பாராட்டுக்குரியது ” என்று குறிப்பிட்டார் . பின்னர் பேசிய காமராசர் இவ்வாறு குறிப்பிட்டார் . “ வயதானவர்கள் இளைஞர்களிடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்று இராஜாஜி கூறியதை நானும் வரவேற்கிறேன் . தொழில் வர்த்தகத்துறைகளில் மட்டுமல்ல . அரசியலிலும் கூட வயோதிகர்கள் அந்த வழியைப் பின்பற்றினால் நாட்டுக்கு நன்மை உண்டு .” இதைக் கேட்டதும் கூடியிருந்தவர்கள் மகிழ்ச்சியில் கை தட்டி ஆரவாரம் செய்தனர் . ஒரு முறை சேலம் மாட்டம் ஆத்தூரில் காங்கிரஸ் கட்சியின் மாநாடு நடந்து கொண்டிருந்தது . பெருந்திரளாகக் கூடியிருந்த பெண்கள் பகுதியில் பேச்சு சத்தம் அதிகமாக இருந்தது . அமைதியாக இருக்கும்படி வேண்டுகோள் விடுத்தும் பயன் இல்லை . காமராசர் கூட்டத்துக்கு வந்த பிறகும் இந்த நிலை நீடித்தது . காமராசர் கைமக் முன் சென்று “ தாய்மார்களே ரொம்ப நாளைக்கு அப்புறம் இங்கு தெரிஞ்சவங்களையெல்லாம் சந்திக்கிறீங்கன்னு நெனைக்கிறேன் . அதனால நீங்களெல்லாம் உங்கள் பிரச்சினைகளைப் பேசி முடியுங்கள் . அதற்குப் பிறகு மாநாட்டை நடத்திக் கொள்வோம் ” என்றார் . பெண்கள் பகுதியில் பேச்சு சத்தம் கப்சிப் என்று அடங்கியது . சொற்கள் நமது சிந்தனைகளின் உடைகள் , அவைகளை கந்தல்களாகவும் , கிழிசல்களாகவும் அழுக்காகவும் அணியக் கூடாது . 46 46. தற்புகழ்ச்சி விரும்பாத தகைமையாளர் தம்மைப் பற்றித் தற்புகழ்ச்சியாகப் பேசிக் கொண்டிருப்பதே சிலருக்கு வேலையாக இருக்கும் . அல்லது மற்றவர்களை வைத்துத் தம்மைப் புகழ்ந்து பேசச் சொல்வார்கள் . ஒருவர் தம்முடைய பிள்ளைகள் மூன்று பேருமே கலெக்டராக இருப்பதாக தம்பட்டம் அடித்துக் கொண்டிருந்தார் . ஒரே குடும்பத்தில் மூன்று பேர் கலெக்டராக இருக்கும் அதிசயத்தை பத்திரிகையில் எழுத ஒரு நிருபர் அந்தப் பெரியவரிடம்பேட்டி எடுக்க வந்தார் . பேட்டி தொடங்கியது “ உங்கள் பிள்ளைகள் மூன்று பேரும் கலெக்டர்களா ?” “ ஆமாங்க “ “ மூணு பேரும் எங்க படிச்சாங்க “ “ இந்த ஊர்ல தாங்க “ இப்ப எந்த மாவட்டங்களுக்கு கலெக்டரா இருக்காங்க ?” “ வேற ஊர்ல இல்லீங்க . எல்லாம் இந்த ஊர்ல தான் இருக்காங்க “ “ ஒரே ஊர்ல மூணு கலெக்டர்கள் இருக்க முடியாதே “ “ ஏன் முடியாதுங்க ? மூணு பேருமே இந்த சென்னைப் பட்டணத்தில்தான் இருக்காங்க “ “ அப்படியா “ “ ஆமாங்க மூத்தவன் கார்ப்பரேஷனில் பில் கலெக்டரு . அடுத்தவன் சினிமா தியேட்டர்ல டிக்கெட் கலெக்டரு . இளையவன் ஓட்டல்ல டோக்கன் கலெக்டரு ” நிருபர் மயங்கி விழுந்தார் . தன்னைப் பற்றித் தானே புகழ்ந்து பேசாதது மட்டுமல்ல . மற்றவர்கள் புகழும் போதும் தடுத்து நிறுத்தியவர் பெருந்தலைவர் காமராசர் . ஒரு சமயம் சென்னைக்கு அருகில் காந்தி சிலைத் திறப்பு விழா நடைபெற்றது . காமராசர் தலைமை வகித்தார் . முதலில் பேச வந்தவர் காமராசரைப் பற்றி வெகுவாகப் புகழ்ந்து பேச ஆரம்பித்தார் . அலங்கார நடையில் காமராசரின் சாதனைகள் , திறமை , அரசியல் அனுபவம் , தியாகம் ஆகியவற்றை விலாவாரியாக விவரித்துக்கொண்டிருந்தார் . இதை காமராசரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை . சீக்கிரம் பேச்சை முடிக்கும்படி குறிப்புக் காட்டினார் . அப்போதும் அவர் பேச்சை நிறுத்தவில்லை . காமராசரால் தாங்க முடியவில்லை . “ நீங்க பேசியது போதும்னேன் ” என்று கூறியபடி காமராசர் எழுந்து மைக்கைப் பிடித்துக் கொண்டார் . “ இவரு பேசினதை எல்லாரும் கேட்டீங்க . இவருக்கு என்மேல் பிரியம் அதிகம் . அதனால இல்லாதது பொல்லாததையெல்லாம் எடுத்துப்பேசுகிறார் . அதுக்காகவா இங்க கூட்டம் போட்டிருக்கோம் . காந்தி சிலையைத் திறக்கப் போறோம் . அவரோட பெருமைகளைப் பத்தி பேசுவோம் .” கர்ம வீரர் காமராசரின்பெருந்தன்மையைக் கண்டு கூட்டமே வியந்தது . ஒருமுறை பெருந்தலைவர் ஓர் ஊருக்குப் பயணம் செய்து கொண்டிருந்தார் . செருப்பு அறுந்து விட்டது . புதுச்செருப்பு வாங்குவதற்காக ஒரு கடைக்குப்போனார் . உடனே செருப்பைக் கொடுக்காமல் தாமதப்படுத்திக் கொண்டிருந்தார் . காமராசர் விரைவுபடுத்தினார் . அப்போதுதான் கடைக்காரர் உண்மையைச்சொன்னார் . “ அய்யா உங்களோட சேர்ந்து போட்டோ எடுத்துக்கணும்னு ஆசை , பெரியவங்க வந்திருக்கீங்க போட்டோ ஸ்டூடியோவுக்கு ஆள் அனுப்பியிருக்கேன் ; கொஞ்சம் பொறுங்க ” காமராசருக்கு கோபம் வந்துவிட்டது . இந்த வேலையெல்லாம்வேணாம் . நீங்க நெனைக்கிற மாதிரி நான் ஒண்ணும்பெரிய ஆளு இல்ல . சாதாரணமான ஆளுதான் . இப்படி விளம்பர ஆசையெல்லாம் வேணாம்னேன் . போட்டோ பிரியர்களாக அலையும் தலைவர்கள் மத்தியில் தனித்து விளங்கினார் தலைவர் காமராசர் . ஒருவரிடம் தற்பெருமை எங்கு முடிவடைகின்றதோ , அங்கு தான் ஒழுக்கம் துவங்குகின்றது . 47 47. குருவிக்கு இரங்கிய குணாளர் ஒருவர் தன்னுடைய நண்பரின் பிறந்த நாளுக்குப் போகமுடியாததால் பரிசுப் பொருளை அனுப்ப நினைத்தார் . ஒரு கிளியை நன்றாகப் பேசப்பழக்கியிருந்தார் . அந்தக் கிளியையே பரிசுப்பொருளாக அனுப்பி வைத்தார் . கொஞ்ச நாள் கழித்து கிளி எப்படி இருக்கிறது என்று விசாரித்து கடிதம் எழுதினார் . “ மிகவும் சுவையாக இருந்தது . இன்னொரு கிளி அனுப்பி வைக்கவும் ” என்று பதில் வந்தது . பேசுங்கிளியை அனுப்பி வைத்த நண்பர் நொந்தே போனார் . இப்படிப்பட்ட மனிதர்கள் மத்தியில் பறவைகளிடம் பாசம் காட்டியவர் பெருந்தலைவர் காமராசர் . ஒருமுறை அவர் தமது அறையில் எதையோ தேடிக்கொண்டிருந்தார் . அவரைப் பார்க்கப்போன தங்கவேலன் என்பவர் எதைத் தேடுறீங்க அய்யா என்று கேட்டார் . “ செய்தி கேட்பதற்காக வைத்திருந்த டிரான்சிஸ்டர் ரேடியோ ரிப்பேராப்போச்சு . பழைய ரேடியோ ஒண்ணு உண்டு . அதை எங்க வச்சேன்னு தெரியல . ரொம்ப நாளா அதைப்பார்க்கவே இல்லை . எங்க இருக்கோ ” என்று சொல்லிக்கொண்டே தேடினார் . திடீரென்று அவர் முகத்தில் பிரகாசம் தென்பட்டது . இதோ இங்க இருக்கு என்றவர் எதையோ உற்றுப்பார்த்து விட்டு திகைத்தார் . ரேடியோவின் பின்பகுதி திறந்து கிடந்தது . ஒரு குருவி அதில் கூடு கட்டி இருந்தது . குஞ்சுகளும்இருந்தன . என்ன செய்யலாம் என்று பெருந்தலைவர் யோசித்துக் கொண்டிருந்தபோது அவரைப் பர்க்க வந்த நண்பர் , “ அய்யா கவலைப்படாதீர்கள் குருவிக்கூட்டை அப்புறப்படுத்திவிட்டு ரேடியோவை சரி செய்து தருகிறேன் ” என்றார் . வங்கதேச விடுதலைப்போர் உச்சகட்டத்தை அடைந்திருந்த நேரம் . இந்திய ராணுவம் வங்க தேசத்துக்கு உதவியாகப் போரில் குதித்துவிட்ட நேரம் . பரபரப்பாக செய்திகள் வந்து கொண்டிருந்தது . உடனே செய்திகளைக்கேட்க பெருந்தலைவருக்கு ஆவல்தான் . ஆனாலும் குஞ்சுகளோடு இருந்த குருவிக் கூட்டைக் கலைக்க காமராசருக்கு மனம் வரவில்லை . அதை ஒன்றும் செய்ய வேண்டாம் என்றவர் தனது அந்தரங்கச்செயலாளர் வெங்கட்ராமனை அழைத்துக் குஞ்சுகள் பெரிதாகி குருவி தன் கூட்டை விட்டுக் காலி செய்கிறவரை அங்கேயே இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும என்று உத்தரவு போட்டார் . குருவியிடம கூட அவர் காட்டிய கருணையை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை . மனிதர்கள் மட்டுமல்ல மற்ற உயிர்களையும் நேசிக்கத் தெரிந்தவர்களே மாமனிதர்கள் ஆக முடியும் . 48 48. தொண்டர்களை மதித்த தூயவர் ஓர் ஊரில் ஒரு கட்சியின் தொண்டருக்குப் பாராட்டு விழா நடைபெற்றது . அவர் கட்சிக்காகப் பல தியாகங்களைச்செய்திருந்தார் . அவரது அறுபது வயது நிறைவையொட்டி விழா ஏற்பாடு செய்திருந்தார் . கட்சியின் பெரிய தலைவர் பாராட்டுரை வழங்க வந்திருந்தார் . அவர் பேசும்போது , இங்கே பாராட்டுப்பெறுகிறவர் எனக்கு மிக நெருக்கமான நண்பர் . போராட்டங்களில் கலந்து கொண்டு ஜெயிலுக்குப்போனபோது நானும் இவரும் ஒரே அறையில் பல நாட்கள் இருந்திருக்கிறோம் . பல விஷயங்களைக் கலந்து பேசியிருக்கிறோம் . நான் இந்தப் பகுதிக்கு வரும்போதெல்லாம் இவரைச் சந்திக்காமல் சென்றதில்லை . இவரது வீட்டுக்குக் கூட சென்று விருந்து உண்டிருக்கிறேன் . நானும் இவரும் அவ்வளவு நெருக்கம் . கடிதத் தொடர்பு கூட அடிக்கடி உண்டு என்று அடுக்கிக் கொண்டே போனார் . திடீரென்று பேச்சை நிறுத்தி , பாராட்டுப்பெறுகிறவரின் காதருகே கொஞ்சம குனிந்து “ ஏங்க உங்க பேரு என்ன ?” என்று கேட்டதும் கூடியிருந்தவர்கள் சிரித்துவிட்டனர் . இப்படிப்போலியாகப்பேசுகிறவர்களும் நடப்பவர்களும் தான் நாட்டில் அதிகம் உண்டு . பெருந்தலைவர் காமராசர் தொண்டர்களை மதிக்கும் தூயவராகத் திகழ்ந்தார் . இவருடன் வெளியூர் சுற்றுப் பயணம் செய்வதென்றால் கூட இருப்பவர்கள்அந்தந்தப் பகுதியிலுள்ள தொண்டர்களைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும் . கார் ஊரைக் கடக்கும்போது ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு அவர் எப்படி இருக்கார் என்று கேட்பார் . உடனே சொன்னால் சந்தோஷப்படுவார் . சொல்லாவிட்டால் இது கூடத் தெரியலையா என்று கோபித்துக்கொள்வார் . ஒரு முறை அவர் சிவகிரியில் தங்கியிருந்தார் . வெளியே போலீஸ்காரர் யாரோ ஒருவரை விரட்டிக்கொண்டிருந்தார் . அந்த நபர் கையெடுத்துக் கும்பிட்டு “ நான் உள்ளே போகவில்லை . ஓர் ஓரமாக நிற்கிறேன் . தலைவரைப் பார்த்து விட்டுப் போய்விடுகிறேன் .” என்று கெஞ்சினார் . அவரது ஏழ்மையான கோலத்தைக் கண்ட போலீஸ்காரர் நீயெல்லாம் இங்கே நிற்கவே கூடாது என்று விரட்டுகிறார் . ஜன்னல் வழியாக இதைக் கவனித்து விட்ட பெருந்தலைவர் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தார் . அந்த மனிதரை உற்றுப் பார்த்தார் . முகத்தில் மலர்ச்சி , வேலு வாப்பா .. வா .. நல்லாயிருக்கியா .. என்று அழைத்தபடி அந்த மனிதரின் தோளில் கை போட்டு அறைக்குள் அழைத்துச்சென்றார் . போலீஸ்காரர் திகைத்து நின்றார் . அதை விடவும் அந்த மனிதருக்கு திகைப்பு அதிகமாயிருந்தது . பல ஆண்டுகளுக்கு முன் சிறைக்கொட்டடியில் ஒன்றாகக் இருந்ததை நினைவு கூர்ந்து , பெயரையும் நினைவில் வைத்து வாய் மணக்க “ வேலு வா ” என்று அழைத்தால் வியப்பு ஏற்படாமலிருக்குமா ? அந்த மகிழ்ச்சியில் தனது வறுமை நிலையைக் கூட சொல்லாமல் அவர் விடை பெற்றுச் சென்று விட்டார் . ஆனால் பெருந்தலைவர் மற்றவர்கள் மூலம் அவரது நிலையை விசாரித்து அறிந்து ஒருவரிடம் சொல்லி காவலாளி வேலையை வாங்கிக் கொடுத்தாராம் . உயர்ந்தவர் என்பதால் தேவையில்லாமல் புகழ்வதும் , எளியவர் என்பதால் இகழ்ந்து ஒதுக்காமலும் இருப்பவரே சிறந்த மனிதர் என்று புறநானூறு கூறுகிறது . அதற்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் பெருந்தலைவர் . 49 49. மலை குலைந்தாலும் நிலை குலையாதவர் தேர்தல் என்றாலே சில தில்லுமுல்லுகள் நடக்கும் என்பார்கள் . ஒரு கட்சிப்பிரமுகரிடம் உங்கள் கட்சி எந்தக் கட்சியோடு கூட்டணி வைத்திருக்கிறது என்று ஒருவர் கேட்டார் . “ அதை இப்போது சொல்ல மாட்டோம் . தேர்தல் முடிந்த பிறகு தான் அறிவிப்போம் ” என்றாராம்அந்தப் பிரமுகர் . எவ்வளவு சாமர்த்தியம் பாருங்கள் , சிலரை பெரும்புள்ளி ஆக்குவதற்கு பலரின் கைகளில் கரும்புள்ளி வைப்பதே தேர்தல் என்றார் ஒருவர் . தேர்தல் நேரத்தில் ஓட்டுப்போட இறந்து போனவர்கள் எல்லாம் எழுந்து வந்துவிடுவார்கள் . ஆம் கள்ள ஓட்டுப்போடும் ஆசாமிகளின் கை வரிசை இது . எப்படியாவது தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்செய்யும் குளறுபடிகள் இவை . தேர்தலில் வென்றாலும் தோற்றாலும் அதை மக்கள் தீர்ப்பாக ஏற்று மகிழ்ச்சி அடையும் மனோபாவம் எல்லோருக்கும் வராது . ஆனால் பெருந்தலைவர் காமராசர் இதற்குச் சிறந்த உதாரணமாகத்திகழ்ந்தார் . 1967 ல் பெருந்தலைவர் தேர்தலில் தோற்றபோது அவரது கதை இத்தோடு முடிந்து விட்டது என்று பலர் நினைத்தார்கள் . ஆனால் அது பொய்த்துவிட்டது . குமரி மாட்டத்தில் தமிழர்களின் தந்தை என்று அனைவராலும் பாராட்டப்பட்ட நேசமணி அவர்கள் காலமானதையொட்டி நாகர்கோவில் நாடாளுமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது . பெருந்தலைவர் காமராசர் போட்டியிட்டார் . அகில இந்தியாவின் கவனத்தை ஈர்த்துக்கொண்டது அந்தத் தொகுதி . “ இந்தத் தேர்தலில் யார் ஜெயித்தாலும் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தான் ஜெயிப்பார்கள் . நிலைமை மதில்மேல் பூனையாக இருக்கிறது என்று பத்திரிகைக்காரர்கள் எழுதினார்கள் . ஆனால் “ அப்பச்சி பாஸ் , அப்பச்சி பாஸ் என்று குமரி மாவட்டத்து மக்கள் குதூகலிக்கத் தொடங்கிவிட்டார்கள் . அவர்கள் எண்ணம் ஈடேறியது . வாக்குகள் முடிந்து ஓட்டு எண்ணப்படும் நாளில் ஆரம்பத்திலிருந்தே பெருந்தலைவர் முன்னிலையில் இருந்தார் . பிற்பகலில் அவரது வெற்றி நிச்சயம் என்று தெரிந்ததும் மக்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர் . தொண்டர்கள் எல்லோருக்கும் இனிப்புகள் வழங்க ஆரம்பித்தார்கள் . வெடிகள் வெடித்தார்கள் . வெற்றி ஆரவாரம் செய்தார்கள் . பெருந்தலைவருக்கு மாலை அணிவிக்க அவரைத் தேடிச்சென்றனர் . ஆனால் பெருந்தலைவர் நிம்மதியாகத் தூங்கிக்கொண்டிருந்தார் . ஐந்து மணிக்குத்தான் எழுந்திருப்பார் என்று தெரிவிக்கப்பட்டது . மதிய உணவுக்குப்பின் உறங்குவது அவரது பழக்கம் . ஓட்டு எண்ணப்படும் நாளில் கூட அவர் பதட்டமடையவில்லை . பரபரப்பு அடையவில்லை . கடமையைச்செய்து விட்டேன் . பலனைப் பற்றிக் கவலையில்லை என்று கீதையின் நாயகனாய் அவர் அமைதியாக உறங்கிக்கொண்டிருந்தார் . ஆனால் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் தோற்றது . ஓட்டு எண்ணப்படும் நாளில் தொடர்ந்து வந்த தோல்விச்செய்தி தொண்டர்களைச் சோர்வடையச் செய்தது . பெருந்தலைவரோ பழைய தேர்தல்களில் நடந்த செய்திகளைத் தொண்டர்களுக்குச் சொல்லிச் சோர்வை அகற்றுகிறார் . தோல்விச் சாயல் கொஞ்சம் கூட முகத்தில் இல்லாமல் எல்லோரையும் உற்சாகப்படுத்துகிறார் . அந்த நேரத்தில் கூட கலகலப்பாகப் பேசி எல்லோருக்கும் தைரியம் சொல்லிக்கொண்டிருக்கும் அவரது ஆற்றலை எண்ணி எல்லோரும் மலைத்து நின்றார்கள் . வெற்றியின் போது கொக்கரிக்காமலும் தோல்வியின்போது துவளாமலும் இருக்கின்ற மனநிலை மகான்களுக்கே வரும் . “ அற்றேமென்று அல்லற்படுபவோ செல்வம் பெற்றேமென்று ஓம்புதல் தேற்றாதவர் ” என்ற வள்ளுவர் வாக்கிற்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் பெருந்தலைவர் . 50 50. நலிந்தோரின் நாயகன் பல பேர் மனிதர்களை மனிதர்களாக மதிப்பதில்லை . மற்றவர்களின் மனங்களைப் புண் படுத்துவதிலேயே குறியாக இருப்பார்கள் . ஒருவர் புதியதாக ஒரு நாய் வாங்கிக்கொண்டு வந்து தன் வீட்டில் கட்டினார் . அதற்கு மணி என்று பேர் வைத்தார் . அடிக்கடி அதை மணி நாயே மணி நாயே என்று கூப்பிடுவார் . மணி நாயே ஒழுங்கா இரு இல்லாட்டி உதை விழும் என்று திட்டுவார் . மணி நாய்க்கு எச்சிலைப்போடு திங்கட்டும் என்று மனைவியிடம் சொல்வார் . திடீரென்று அவர் நாய் வாங்கிய ரகசியம் பலருக்குத் தெரியவில்லை . ஆனால் எதிர்த்த வீட்டுக்காரருக்குப் புரிந்து விட்டது . அவர் பேர் மணி , தன்னை மறைமுகமாகத் திட்டுவதற்கே இந்த ஏற்பாடு என்று புரிந்து கொண்ட அவர் தன் வீட்டிலும் ஒரு நாய் வளர்க்க ஏற்பாடு செய்தார் . உயர்வு தாழ்வு என்ற உணர்ச்சிகளை நாம் தான் உற்பத்தி செய்துகொள்கிறோம் . உண்மையில் யாரும் தாழ்ந்தவரில்லை . இதனைச் சரியாகப் புரிந்து கொண்ட எல்லோரையும் மதித்தவர் பெருந்தலைவர் . அதனால்தான் எல்லோராலும் மதிக்கப்பட்டார் . ஒருமுறை பெருந்தலைவரின் கார் கரூரை நோக்கிச் சென்று கொண்டிருந்தது . புதிதாக வாங்கிய செருப்பை காலில் போடுவதும் , மாட்டுவதுமாக இருந்தார் அவர் . அது காலுக்குப் பொருந்தவில்லை என்று தெரிந்தது . கரூர் போனதும் வேறு செருப்பு வாங்கி விடலாம் ஐயா , என்று கூடயிருந்தவர்கள்சொன்னார்கள் . கரூரில் காங்கிரஸ் தலைவர் நல்லுசாமியுடன் பேசிக்கொண்டிருந்தார் . அப்போது சாக்குப்பையுடன் ஒரு சிறுவன் உள்ளே நுழைந்தான் . “ தம்பிக்கு என்ன வேணும் ?” என்றார் தலைவர் . ஐயா காலுக்கு செருப்புத் தைக்க அளவெடுக்க வந்தேனுங்க என்றான் பையன் . “ நல்லாத் தைப்பியா ?” என்று தலைவர் கேட்க , “ என்னோட திறமையைப் பாருங்க அப்புறம் ஒவ்வொரு தடவையும் என்னைத்தான் தைச்சுத்தரச் சொல்லுவீங்க ” என்றான் பையன் . தலைவர் அசந்து போனார் . இரவு கூட்டம் முடிந்து தலைவர் அறையில் பேசிக்கொண்டிருந்தபோது அந்தச் சிறுவன் வந்தான் . அதற்குள் எப்படியப்பா தைச்ச என்று வரவேற்றார் தலைவர் . செருப்பை கால்களில் மாட்டினார் . எழுந்து நடந்தார் . செருப்பு கால்களுக்கு கனகச்சிதமாகப் பொருந்தியது .” இந்தாப்பா . இதை நீயா தைச்சே என்று மகிழ்ச்சியோடு ” கேட்டார் தலைவர் . “ ஆமய்யா உங்களுக்கு செருப்பு தைக்க கொடுத்து வைச்சிருக்கணுமே , வேற ஒருத்தருக்கு விட்டுக்கொடுப்பேனா ” என்று படபடவென்று பேசினான் பையன் . தலைவர் தலையணைக்கு அடியிலிருந்து பத்து ரூபாய் நோட்டை எடுத்து அவனிடம் நீட்டினார் . பையன் பணத்தை வாங்க மறுத்துவிட்டான் . “ இன்னம் எவ்வளவு வேணும் சொல்லு ” என்று தலைவர்கேட்க , “ பணமே வேண்டாம் . உங்களுக்கு இதைச் செய்ய வாய்ப்புக் கிடைச்சதே பெரும்பாக்கியம் ” என்றான் பையன் . இறுதியில் தலைவரின் வற்புறுத்தலுக்காக ஒரு ரூபாய் நோட்டு ஒன்றை மட்டும் பெற்றுக்கொள்ள சம்மதித்தான் . அதைத் தலைவரிடமே கொடுத்து “ அய்யா இதுல உங்க கையெழுத்தைப்போட்டுக் குடுங்க . காலங்காலமா இதைப் பொக்கிஷமா பாதுகாப்பேன் ” என்றான் . தலைவர் உருகிவிட்டார் . மறு வருடம் கரூர் சென்றிருந்தபோது , தலைவரைச் சந்திக்க அந்தச் சிறுவன் வந்தான் . வா … வா … நல்லாயிருக்கியா … என்று தலைவர் அவனை வரவேற்றபோது எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள் . அன்று ராமருக்கு ஒரு குகன் தலைவருக்கோ ஒரு சிறுவன் அன்புக்கு முன்னே அனைவரும் சமமே . 51 51. ஆடம்பரம் விரும்பாத அண்ணல் ஆடம்பரத்திலேயே பலருக்கு அதிக நாட்டமிருக்கும் . மற்றவர்கள் தன்னைப் பற்றி உயர்வாக நினைக்க வேண்டும் என்பதற்காக போலித்தனமான நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் . ஒருவன் தனது பகட்டைக் காட்டுவதற்காக ஐந்து விரல்களிலும் மோதிரங்களை மாட்டிக் கொண்டான் . மற்றவர்களைச் சந்திக்கும்போதெல்லாம் கையை உயர்த்திப்பேசினான் . ஆனால் யாரும் அதைக் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை . கொஞ்ச நேரம் கழித்து ஒரு வைக்கோல் படப்பு தீப்பற்றி எரிந்தது . அதை அணைக்க பலர் ஓடி வந்தார்கள் . சீக்கிரம் போங்க சீக்கிரம் போங்க என்றபடி மோதிரக் கையை ஆட்டினான் அவன் . அப்போது ஒரு பெரியவர் ஓடிக் கொண்டே மோதிர மெல்லாம் நல்லாயிருக்கே . எப்போ வாங்கினே என்று கேட்டார் . அப்போது மோதிரக்காரன் நினைத்துக் கொண்டான் “ இந்த வார்த்தையை முன்னாலேயே யாராவது சொல்லியிருந்தா வைக்கோல் படப்புக்கு தீயே வச்சிருக்க மாட்டேன் .” பெருந்தலைவர் காமராசர் ஆடம்பரங்களுக்கு அப்பாற்பட்டவர் . அவரது பண்புகளில் முன் நிற்பது எளிமையே . நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையாளர் ஒருவர் இவரது எளிமையான தோற்றம் குறித்து இவ்வாறு எழுதியுள்ளார் . தென்னிந்தியக் குடியானவனின் முரட்டுத்தோற்றத்தை மூடி மறைக்க எந்த விதமான மெருகும் ஏற்றப்படாதவர் . மலை போன்ற கருப்புமனிதர் . ஒளிவிடும் கண்கள் எளிமையின் சின்னமாகவும் , தேசியத்தின் அடையாளமாகவும் , கதராடையையே அவர் அணிந்தார் . மிகச் சிறந்த காங்கிரஸ் தலைவரான அவர் பெயர் டெல்லி வட்டாரத்தை அசைக்கத் தொடங்கிய வேளை பண்டித நேரு முதன் முதலில் காமராசரைக் காணத் தென்னகம் வருகிறார் . உயர்ந்த அந்தஸ்தை நாடியிருப்பவர் என்ற கற்பனையில் வருகிறார் நேரு . ஆனால் ஓய்வறையில் முதன்முதலில் அவரைக் காணுகிறபோது ஒரு சாதாரண பெஞ்சில் தலைக்கடியில் கையை வைத்துப் படுத்திருந்த எளிமை நிலையைக் கண்டு வியந்து போகிறார் . தோற்றத்தால் மட்டுமல்ல . உள்ளத்தாலும் எளிமையானவர் பெருந்தலைவர் . அடைக்கலம் என்ற பெயருடைய சிறுவன் தொழுநோயால் பாதிக்கப்பட்டிருந்தான் . அவனது தந்தை தனது மகன் சிகிச்சைக்காக தலைவரிடம் உதவி கேட்க வந்தபோது “ சாமி , சாமி ” என்று அடிக்கொருதரம் சொன்னார் . இது பெருந்தலைவருக்குப் பிடிக்கவில்லை . “ இந்தா பாருப்பா நானும் எல்லோரையும் போல மனுஷன்தான் வெறும் ஆசாமிதான் . உன்னைப்போல மனுஷ ஜென்மம் தான் . என்னைப்போயி சாமி ஆக்கிடாதே ” என்று கூறினாராம் . கையில் கடிகாரம் கூட கட்டிக்கொள்ளாத முதலமைச்சர் ஒருவரை இந்த உலகம் இதுவரையில் கண்டதுண்டா ? அத்தனை எளிமையாக வாழ்ந்தவர் அவர் . “ காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல் மீக்கூறும் மன்னன் நிலம் “ என்ற குறளுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் பெருந்தலைவர் . 52 52. மனிதரை மதித்த மாமனிதர் ஒருவர் மற்றவரிடம் நான் தொலைக்காட்சியில் தோன்றிப் பேசப்போகிறேன் பாருங்கள் என்றார் . அதைக் கேட்டுக் கொண்டிருந்தவர் பரபரப்படைந்தார் . டைரியைத் தேடினார் . பேனாவைத் தேடினார் . எந்தத் தேதியில் எந்த நேரத்தில் பேசப்போறீங்க . விவரமாகச் சொல்லுங்க என்று கேட்டு டைரியில் குறித்துக் கொண்டார் . பேசப் போகிறவருக்கு மிகவும் மகிழ்ச்சி . என்னுடைய நிகழ்ச்சியைப் பார்க்க அவ்வளவு ஆர்வமா ? என்றார் . “ அட போய்யா ! அந்த நேரம் டி . வி - யை திறந்திடக் கூடாதேன்னுதான் எச்சரிக்கையா குறிச்சுக்கிட்டேன் .” என்று பதில் வந்தது . மற்றவர்களின் மனதைப் புண்படுத்துவ தென்றால் பலருக்கு அவ்வளவு மகிழ்ச்சி . பெருந்தலைவர் காமராசர் மற்றவர்களை மதிக்கத் தெரிந்தவர் . இந்திய பாகிஸ்தான் போர் மூண்ட நேரம் எல்லையோரத்தில் ராணுவ வீரர்கள் கூட்டத்தில் காமராசர் ஒருமுறை கலந்து கொண்டார் . அப்போது ஓர் ராணுவ வீரர் தமிழில் அய்யா வணக்கம் என்று கூறினார் . தமிழ்க்குரலை கேட்டதும் காமராசர் உருகிப்போனார் . அவரைத் தனியே அழைத்துக் கனிவாகப் பேசினார் . தைரியமூட்டினார் . “ உங்கள் ஊர் , முகவரி , குடும்பத்தார் விவரங்களைச் சொல்லுங்கள் நான் தமிழ் நாட்டுக்குப் போனதும் அவர்களைச் சந்தித்து தைரியம்சொல்கிறேன் .” என்று அவர் கூறியதும் அந்த ராணுவ வீரர்மெய்சிலிர்த்துப்போனார் . ஒரு சாதாரண மனிதனின் உணர்வைக்கூட மதித்து கவுரவிக்க நினைக்கும் அந்தமாமனிதரை மீண்டும கைகூப்பி வணங்கினார் அந்த வீரர் . எதிரிகளை ஈர்க்கும் ஆற்றல் படைத்தவர் பெருந்தலைவர் . நாகர்கோவில் நாடாளுமன்றத் தேர்தலில் அவர் போட்டியிட்ட நேரம் ஊர்வலமாகச்சென்று பிரசாரம் செய்தார் . ஊர்வலம் ஒரு தெருமுனையைத் தாண்டும் நேரம் . அதற்கு மேல் போக வேண்டாம் என்று கட்சித் தொண்டர்கள் பெருந்தலைவரைத் தடுத்தார்கள் . எதிரிகள் அவரைத் தாக்குவதற்காகக் காத்திருப்பதாகவும் ஊர்வலத்தை வேறு திசையில் திருப்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள் . கர்மவீரர் கலங்கவில்லை . காரை விட்டு இறங்கி நடந்து சென்றார் . கலகக்காரத்தலைவனை நெருங்கி நேருக்கு நேர் சந்தித்தார் . “ தம்பி உன்னை எனக்கு நல்லாத்தெரியுமே . போன தடவை நான் இங்க வந்தப்போ எனக்குச் சந்தன மாலை போட்டு வரவேற்றியே நல்லாயிருக்கியா ?.” என்று அவர் கேட்டதும் அந்த வாலிபன் வியந்து போனான் . உண்மைதான் . சில நாட்களுக்கு முன்னால் அவன் அவருக்காக உழைத்தவன் ; எதிரிகளின் தூண்டுதலால் மாறியவன் . அவரையே தாக்குவதற்கு முற்பட்டவன் . ஆனால் பெருந்தலைவரின் மனித நேயம் அவனை உலுக்கிவிட்டது . இந்த நிலையிலும் என்னை மதித்து அன்பு காட்டினாரே என்று அவன் மனதில் விசுவாச உணர்வு ஊற்றெடுக்கத் தொடங்கியது . அவன் உண்மையை உணர்ந்து மனம்மாறினான் . அவரது அணியிலே இணைந்து செயல்பட்டான் . இப்போதெல்லாம் மனிதர்கள் சந்திக்கிறார்கள் . மனங்கள் சந்திப்பதில்லை என்று சொல்லப்படுகிறது . ஆனால் பெருந்தலைவரோ மனிதர்களை மட்டுமல்லாது அவர்களின் மனங்களைச் சந்தித்தவர் . 53 53. குழந்தைகளைக் கவர்ந்த குணசீலர் தெருவில் நடந்து கொண்டிருந்த ஒரு பையனைப் பார்த்து ஒருவர் தம்பி தலைமுடி நெறைய வளர்ந்திருக்கே முடி வெட்டிக்கிறியா ? என்றார் . பையனும் சந்தோஷமாக சரி என்றான் . ஒரு சலூனுக்கு அழைத்துப்போனார் . முதலில் அவர் தனக்கு முடி வெட்டிக் கொண்டார் . நான் கடைத்தெரு வரை போய் வருகிறேன் . அதற்குள் பையனுக்கு வெட்டுங்கள் என்று சலூன்காரரிடம் சொல்லி விட்டு நடையைக் கட்டினார் . அந்த பையன் அவருடைய மகன் என்று நினைத்து சலூன்காரரும் முடி வெட்டி முடித்தார் . நெடுநேரமாகியும் போனவர் திரும்பவில்லை . உன் அப்பா ஏன் இன்னும் வரவில்லை என்று சலூன்கார் கேட்க , “ அவர் என் அப்பா இல்லை . தெருவில்போகும்போது முடி வெட்டிக்கிறியா என்றார் . நானும் சரின்னு வந்தேன் . அவர் யாருன்னே எனக்கு தெரியாது .” என்று பையன் பதில் சொல்ல அப்போது தான் பையனை அழைத்து வந்தவரின் ஏமாற்று வேலை புரிந்தது . தங்களின் சுயநலத்துக்காக குழந்தைகளை இப்படிப் பயன்படுத்துபவர்கள் உண்டு . குழந்தைகளின் கல்வி மேம்பாட்டுக்காக இலவசக் கல்வித் திட்டமும் மதிய உணவுத் திட்டமும் கொண்டு வந்தவர் பெருந்தலைவர் . அது தவிர தனிப்பட்ட முறையிலும் அவர் குழந்தைகளிடம் அன்பு காட்டியவர் . நவசக்தி அம்பி என்பவர் எழுதியிருக்கும் அந்த நிகழ்ச்சி நம் நெஞ்சை நெகிழ வைக்கிறது . பெருந்தலைவர் ஒருநாள் வீட்டில் அமர்ந்து மற்றவர்களுடன் பேசிக்கொண்டிருக்கிறார் . அப்போது அவரைப் பார்க்க ஒரு சிறுமியும் சிறுவனும் உள்ளே நுழைகிறார்கள் . பரட்டைத் தலையும் அழுக்குத் துணியும் அவர்களின் நிலைமையைப் பறைசாற்றுகின்றன . பணியாளர் ஒருவர் அவர்களை அடித்து விரட்டுகிறார் . கேட் வரை ஓடிய குழந்தைகள் தயங்கித் தயங்கி நிற்கின்றன . மீண்டும் வீட்டுக்குள்ளே வர முயற்சிக்கின்றன . தம்மைப் பார்க்க வந்த பிரமுகர்களை வாசல் வரை வந்து வழியனுப்பிய பெருந்தலைவரின் கூரிய கண்களில் அந்தக் குழந்தைகள் பட்டுவிட்டன . அவ்வளவுதான் அடுத்த நிமிடம் உற்சாகம் பொங்க “ என்ன யாரைப் பார்க்க வந்தீங்க .?” என்று கேட்டபடி அவரே குழந்தைகளிடம் வந்து விட்டார் . சிறுமி தயங்கித் தயங்கிப் பேசினாள் . உங்களைத் தான் பார்க்க வந்தோம் . எங்களுக்கு அப்பா இல்லை . அம்மா மட்டுந்தான் . அண்ணனுக்கு டைப்ரைட்டிங் பரிட்சை பீஸ் கட்ட பணம் இல்லை . உங்களைப் பார்த்தா உதவி செய்வீங்கன்னு எல்லோரும் சொன்னாங்க அதுதான் வந்தோம் . அவர்களை அன்போடு தட்டிக் கொடுத்தபடி “ அம்மா தான் அனுப்பிச்சாங்களா ?” “ இல்லை . நாங்களாகத்தான் வந்தோம் , அம்மா அப்பளம் போட்டு வீடு வீடா விக்கிறாங்க . அதுல தான் எங்களைப் படிக்க வைக்கிறாங்க ” என்று சிறுமி சொன்னதும் அதற்குமேல் கேட்டுக்கொண்டிருக்க தலைவரால் முடியவில்லை . அன்பு உள்ளம் உருகியது . வீட்டுப்படிகளில் ஏறி மாடிக்குச் சென்ற அவர் கையில் ஒரு கவருடன் வந்தார் . சிறுமியிடம் கொடுத்து “ இதில் கொஞ்சம் பணம் இருக்கு . அண்ணனுக்கு பீஸ் கட்டிடுங்க . அம்மா பேச்சை கேட்டு நல்ல பிள்ளைங்களா நடந்துக்கணும் ” என்று ஆலோசனை சொல்லி அனுப்பி வைத்தார் . மறுநாள் மீண்டும் அந்தக் குழந்தைகள் வந்தன . வைரவன் குழந்தைகளை அழைத்து வந்தார் . வாங்க … வாங்க … என்று வாய் நிறைய வரவேற்றார் பெருந்தலைவர் . பரிட்சைக்கு பணம் கட்டி விட்டோம் அய்யா . அந்த ரசீதை அம்மா உங்களிடம் காட்டிட்டு வரச்சொன்னாங்க என்று ரசீதை தலைவரிடம் சிறுமி நீட்டினாள் . பெருந்தலைவர் கண் கலங்கி விட்டார் . ஏழ்மையிலும் இவ்வளவு நேர்மையா ? குழந்தைகள் அவரை வணங்கின . அவர் குழநதைகளை அன்போடு தட்டிக்கொடுத்து வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தார் . நேர்மையுள்ளவர்கள் யாரும் ஏழையில்லை . நேர்மை தவறியவர்கள் யாரும் செல்வந்தரில்லை . 54 54. நடுநிலைமை போற்றிய நாயகர் சிலர் நடுநிலைமையோடு நடப்பதாக நடிப்பார்கள் . தங்கள் சுயநலத்தை அதில் கலந்து விடுவார்கள் . ஒரு வீட்டில் குழந்தை பிறந்தது . அதற்கு என்ன பேர் வைப்பது என்பதில் பெற்றோருக்குள்போட்டி வந்துவிட்டது . தனது தந்தையின் பெயராகிய சிவசாமி என்பதைத் தான் வைக்க வேண்டும் என்று குழந்தையின் தாய் விரும்பினாள் . தனது தந்தையின் பெயராகிய கிருஷ்ணசாமி என்பதைத்தான் வைக்க வேண்டுமென்று அப்பா விரும்பினார் . இருவருக்கும் வாக்குவாதம் முற்றிவிட்டது . எதிர்த்த வீட்டுக்காரர் சமாதானப்படுத்த வந்தார் . இருவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் நடுநிலைமையோடு தீர்ப்புச் சொல்வதாக சொன்னார் . இருவரும் சம்மதித்தார்கள் . குழந்தைக்கு சிவராமகிருஷ்ணன் என்று பேர் வைத்தார் . அம்மாவின் அப்பா பெயரிலுள்ள சிவசாமியில் சிவனும் , அப்பாவின் அப்பா பெயரிலுள்ள கிருஷ்ணசாமியில் கிருஷ்ணனும் இருந்தது . பெற்றோருக்கு திருப்தி ஏற்பட்டது . ஆனாலும் ஒரு சந்தேகம் எழுந்தது . இடையில் ராமன் என்று வருகிறதே … என்று இழுத்தார்கள் . அது என்னோட அப்பாவின் பெயர் என்றார் தீர்ப்புக் கூறியவர் . நடுநிலைமை தவறாது நடப்பது நல்ல தலைவனுக்கு மகுடமாக அமையும் . இதனை ஜனநாயக பாரம்பரிய கருத்தோடு பேணியவர் பெருந்தலைவர் காமராசர் . பகைவனுக்கும் அருள்வாய் என்ற ஆன்மீக நெறியை அரசியலுக்கும் ஆக்கிக் காட்டியவர் அவர் . 1954 க்குப் பிறகு கட்சித் தலைமைக்குத் தலைவர் காமராசருக்கும் , சி . சுப்பிரமணியம் அவர்களுக்கும் போட்டி ஏற்பட்டது . காமராசரே வெற்றி பெற்றார் . அவருக்கு 93 வாக்குகளும் சி . எஸ் . அவர்களுக்கு 41 வாக்குகளும் கிடைத்தன . ஆனால் கொஞ்சநாளில் அந்தப் போட்டி முனைப்புகளையெல்லாம் பெருந்தலைவர் மறந்தார் . 8 பேர் அடங்கிய தமது அமைச்சரவையில் சி . சுப்பிரமணியம் அவர்களையும் சேர்த்துக்கொண்டார் . அது மட்டுமல்ல , அந்தப்போட்டியில் சி . எஸ் . அவர்களை முன்மொழிந்த பக்தவச்சலம் அவர்களையும் சேர்த்துக்கொண்டார் . தந்தை பெரியாரோடு கொள்கை அடிப்படையில் கருத்து வேற்றுமை இருந்த போதும் , அவரோடு நல்லுறவு கொண்டிருந்தார் . காமராஜ் என்றிருந்த பெருந்தலைவரின் பெயரை மேடைகள் தோறும் ‘ காமராசர் ’ என்ற நல்ல தமிழில் குறிப்பிட்டு அப்பெயரை மக்கள் நடுவே புழக்கத்தில் கொண்டு வந்தவர் பெரியார் . ‘ பச்சைத்தமிழன் ’ ன்று அவரைக் குறிப்பிட்டார் பெரியார் . ஊர்மேடைகளில் வேறுபட்டு நின்றாலும் உள்ள மேடைகளில் ஒன்றாய் விளங்கினார்கள் அறிஞர் அண்ணாவும் , பெருந்தலைவரும் . அண்ணா அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே மூன்றுபடி அரிசி கேட்டுப் போராட்டம் வெடித்தது . “ புது அரசாங்கத்திற்கு 6 மாத கால அவகாசம் போதுமானதல்ல . திட்டங்களை நிறைவேற்ற மக்கள்மேலும் அவகாசம் தர வேண்டும் ” ன்னு அறிக்கை விட்டுப் போராட்டத்திற்கு முடிவு கண்டார் பெருந்தலைவர் . போட்டியாக வந்தவர் என்ற பொறாமைக் குணம் பெருந்தலைவரிடம் தோன்றவே இல்லை . “ தமர் எனக்கோல் கோடாது பிறர் எனக்குணங்கொள்ளாது ” செயல்படுவது சிறந்த நடுநிலையாளருக்கு அழகு என்று புறநானூறு கூறும் . அதற்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் பெருந்தலைவர் . 55 55. பாரபட்சம் காட்டாத பண்பாளர் சூழ்நிலைக்குத தக்கபடி பாரபட்சம் காட்டுகின்ற குணம் பலரிடம் உண்டு . ஒரு பெண்மணி ஒரு ஜவுளிக்கடைக்குள் நுழைந்தாள் . சீக்கிரமாக ஒரு சேலை கொடுங்கள் என்றார் . கடை ஊழியர் நூற்றுக்கணக்கான சேலைகளை அள்ளிப்போட்டு செலக்ட் பண்ணுங்கள் என்றார் . அதற்கெல்லாம் நேரமில்லை . நீங்களே ஏதாவது ஒன்றை எடுத்துப்போடுங்கள் என்றார் அந்த பெண்மணி . நாங்களாக எடுத்துக்கொடுத்தால் ஏதாவது குறை சொல்வீர்கள் . கலர் பிடிக்க வேண்டும் தரத்தைப் பார்க்க வேண்டும என்று நீட்டிக் கொண்டே போனார் கடைக்காரர் . “ அதைப்பற்றியெல்லாம் எனக்குக் கவலை இல்லை . சுமாரான விலையில் ஒரு புடவையை நீங்களே எடுத்துக் கொடுங்கள் . ஏன்னா புடவை எனக்கில்லை . என்னோட நாத்தனாருக்கு . அவளுக்குப் பிறந்த நாளாம் . புடவை எடுக்கச்சொல்லி அடம் பிடிக்கிறார் என் வீட்டுக்காரர் ” என்றார் அந்தப் பெண்மணி . தன்னோடு கொள்கையில்வேறுபட்டிருந்தாலும் அவர்களோடும் பாரபட்சம் காட்டாமல் பழகியவர் பெருந்தலைவர் காமராசர் . இவரும் மூதறிஞர் இராஜாஜி அவர்களும் கொள்கையில் வேறுபட்டு நின்றவர்கள் . இராஜாஜி சுதந்திரக் கட்சியைத் தொடங்கிய நேரம் . அரசியல் மோதல் உச்சகட்டத்தை எட்டியிருந்த வேளை சென்னை இல்லத்தில் கட்சித் தொண்டர்களோடு இராஜாஜி குறித்து விவாதம் செய்துகொண்டிருந்தார் பெருந்தலைவர் “ மூதறிஞர் ” அவரைத் தேடி அங்கு வருகிறார் என்ற செய்தி அறிந்ததும் முன் வாசலுக்கே ஓடி வந்து வரவேற்றார் பெருந்தலைவர் . “ ஐயா , வணக்கம் . நீங்க இங்க வரணுமா ? சொல்லலி விட்டிருந்தா நானே ஓடி வந்திருப்பேன் . உங்களது அறிவுக்கும் அனுபவத்திற்கும் நீங்கள் என்னைத் தேடி வருவதா ” என்று துடித்தார் தலைவர் . அதைக்கண்டு இராஜாஜியே உருகிப்போனார் . தமது கடைசி காலத்தில் இராஜாஜி தமது கட்சியினருக்கே காமராசர்தான் தலைவர் . சுதந்திரக் கட்சியினர் அவரிடமே ஆலோசனை கேட்டுச்செயல்பட வேண்டும் என்று கட்டளை பிறப்பித்தார் . பொதுவுடைமைக் கட்சித் தலைவர் ஜீவா அவர்கள் காமராசர் அவர்களோடு கொள்கையில் மாறுபட்டு நின்றவர்தான் . ஆனாலும் அவர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறுதி நிலை வந்த நேரத்தல் அவர் சொன்ன வார்த்தைகள் “ என் மனைவிக்குத் தந்தி கொடுங்கள் காமராசருக்குப் போன் செய்யுங்கள் . ” டாக்டர் கலைஞர் அவர்கள் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது அவரின் அன்னையார் இயற்கை எய்தினார் . அதை அறிந்ததும் பெருந்தலைவர் விரைந்து அவர் இல்லம் சென்று அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் ஆறுதல் கூறினார் . காதலைப் பற்றி குறுந்தொகை கூ றும் கருத்து இது “ நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று நீரினும் ஆரளவின்றே ” இதனையே பெருந்தலைவரின் கருணைக்கும் ஒப்பிட்டுச் சொல்லலாம் . 56 56. மாற்றான் தோட்டத்து மல்லிகை ஒருவர் மற்றொருவரிடம் கோபமாகக்கேட்டார் : “ ஏங்க உங்க பையன் என்னைப்போலவே பேசி என்னைப் போலவே நடித்து கேலி செய்கிறான் . கண்டித்து வைக்கச்சொன்னேன் . கண்டிச்சீங்களா ? ” “ ஆமா , கண்டிச்சேன் ஒரு முட்டாளைப்போலப் பேசி நடிச்சி நீயும் முட்டாளாயிடாதே உனக்கு வேற நல்ல ஆள் கிடைக்கலியா ? என்று கண்டிச்சேன் . இனிமே உங்களை மாதிரி என் மகன் எதுவும் செய்யமாட்டான் . ” புகார் சொன்னவர் முகத்தில் அசடு வழிந்தது . இப்படி மற்றவர்களை மட்டம் தட்டுகிறவர்கள்தான் அதிகம் உண்டு . நல்ல காரியங்கள்செய்து மாற்றரிடமும் மதிப்பை பெறுகின்றவர்கள் ஒரு சிலர்தான் உண்டு . அதில் பெருந்தலைவர் சிறப்பிடம் பெறுகிறார் . 1955 ஆம் வருடம் டிசம்பர் மாதம் பெருந்தலைவர் முதல்வராய் இருந்த காலம் தென் மாவட்டங்களில் திடீரென்று புயலும் பேய் மழையும் தாக்கின . வானம் பார்த்த சீமை எனப்படும் ராமநாதபுரம் மவாட்டத்தில் வெள்ளப் பெருக்கால் பலர் வீடிழந்தனர் . தங்கள் உடமைகளை எல்லாம் இழந்து பல்லாயிரக்கணக்கான பாட்டாளி மக்கள் தேவையில் துடித்தனர் . அப்போது பெருந்தலைவர் அப்பகுதிகளைப் பார்வையிடவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறவும் ஓடோடி வந்தார் . ஒரு கிராமத்தை முற்றிலும் நீர் சூழ்ந்துகொண்டது . வெளித் தொடர்பே அற்றுப்போனது . உணவுக்குக் கூட வழியில்லாமல் மக்கள் பட்டினியால் தவித்தனர் . அதைக் கேள்விப்பட்ட பெருந்தலைவர் அவர்களுக்கு நிவாரணம் வழங்க அதிகாரிகளோடு புறப்பட்டார் . ஆனால் ஊசலாடிக் கொண்டிருந்த ஒரு பாலமும் உடைந்துபோனது . அதிகாரிகள்பெருந்தலைவரிடம் , “ அய்யா இதற்கு மேல் கார் செல்லாது அந்த மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியை நாங்கள் சில பேர் கவனித்துக் கொள்கிறோம் . நீங்கள் வேறு இடத்துக்குச் செல்லுங்கள் ” என்றார்கள் . ஆனால் பெருந்தலைவர் “ அதிகாரிகளே எல்லாத்தையும் கவனிக்கச் சொல்லி கோட்டையிலிருந்தே நான் உத்தரவு போடலாமே . மக்களின் கஷ்டத்தை நான்நேரடியாப் பாக்கணும் . தேவையான நிவாரணத்துக்கு உடனடியாக ஏற்பாடு செய்யணும் . அவங்களுக்கு ஆறுதல் சொல்லணும் அதனால்தான் நானே வந்தேன் ” என்று சொல்லியபடியே வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு தலையில் முண்டாசு கட்டிக் கொண்டு தண்ணீரில் இறங்கிவிட்டார் . அதிகாரிகளும் வேறு வழியின்றி அவரைப் பின் தொடர வேண்டியதாயிற்று . பெருந்தலைவரின் இந்தச் சேவையைப் பாராட்டிப் பேரறிஞர்அண்ணா திராவிட நாடு இதழில் ஒரு கடிதமே எழுதியிருந்தார் . “ சேரிகள் , பாட்டாளிகளின் கு டிசைகள் . உழவர் உழன்று கிடக்கும் குச்சுகள் . இவை யாவும் நாசமாகிவிட்டன . வீடில்லை . வயலில்லை . உள்ளத்தில் திகைப்பின்றி வேறில்லை . ஆனால் தம்பி , நமது முதலமைச்சர் காமராசர் அந்த மக்கள் மத்தியில் இருக்கிறார் . பெருநாசத்துக்கு ஆளான மக்களின் கண்ணீரைத் துடைத்திடும் காரியத்தில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார் என்பதை எண்ணும்போது இதோ எமக்கு ஆறுதல் அளிக்க எமது முதலமைச்சர் வந்துள்ளார் . எமது கண்ணீரை காணுகிறார் . தமது கண்ணீரைச் சிந்துகிறார் . ஆறுதலை அள்ளித் தருகிறார் . கோட்டையிலே அமர்ந்து கொண்டு உத்தரவுகள் போடும் முதலமைச்சர் அல்ல இவர் . மக்களை நேரில் சந்திக்கும் தலைவர் என்று மக்கள் வாழ்த்துகின்றனர் . தம்பி சொல்லித்தானே ஆக வேண்டும் முதலமைச்சர் காமராசரின் பொறுப்புணர்ச்சி கண்டு நாம் பெருமைப் படுகிறோம் . ” மற்றவர்களை நாம் மதிப்பது மட்டுமல்ல . மற்றவர்களும் நம்மை மதிக்கும்படி நடந்துகொள்ள வேண்டும் . 57 57. பணியாளரை மதித்த பண்பாளர் ஒரு பெரிய பணக்காரரின் பங்களாவில் பல வேலைக்காரர்கள் இருந்தார்கள் . அதில் ஒருவனுக்குத் தோட்டத்தை கவனிக்கும்வேலை . நன்றாக மழை பெய்து கொண்டிருந்ததால் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றும் வேலையை செய்யாமல் உட்கார்ந்திருந்தான் . இதைக் கவனித்து விட்ட முதலாளி “ ஏன் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் வேலையை நீ செய்யவில்லை ” என்றார் . “ மழை பெய்கிறதே அய்யா ” என்றான் அவன் . “ அதைப்பற்றி நீ யோசிக்கக் கூடாது . குடை பிடித்துக் கொண்டாவது தண்ணீர் ஊற்றும்வேலையைச் செய்ய வேண்டும் ” என்று கட்டளை இட்டார் அவர் . இப்படி அறிவின்மையும் குரூரத்தனமும் கொண்டவர்கள் பணியாளர்களை வாட்டி வதைப்பார்கள் . பெருந்தலைவர் காமராசர் தன்னிடம் பணியாற்றிய பணியாளர்களைக் கூட தன்னைப்போல் பாவித்த பண்பாளர் . 1975 ஆம் வருடம் வடஆற்காடு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் . இரவு 9-30 மணியிருக்கும் . ஆலங்காயம் என்ற சிற்றூர் . நிகழ்ச்சிக்காக காரில் சென்று கொண்டிருக்கிறார் தலைவர் . மணி என்பவர் காரை ஓட்டி வருகிறார் . ஆறுமுகம் , சிவசாமிபோல் இவர்களும் திறமைமிக்க டிரைவர்கள் . இவர்கள் வெறும் டிரைவர்கள் மட்டுமல்ல . தலைவரின் தாயாகவும் சகோதரியாகவும இருந்து கண்ணை இமை காப்பதுபோலக் காத்தவர்கள் . அன்று தங்கும் விடுதியிலிருந்து புறப்பட்டதிலிருந்தே டிரைவர் மணியை பெருந்தலைவர் கவனித்துக்கொண்டே வந்தார் . இன்று இவன் வழக்கம்போல் இல்லை . ஏதோ மாறுதல் தெரிகிறது என்பதைக் கவனித்து அவர் காரை நிறுத்தப்பா என்றார் . பிறகு உனக்கு என்ன செய்கிறது என்று கேட்டார் . “ அய்யா ! வயிறு கோளாறு செய்கிறது . குமட்டிக்கொண்டு வருகிறது . ” என்ற டிரைவர் காரை விட்டு இறங்கிப்போய் குபீரென்று வாந்தி எடுத்தார் . பித்தக் கோளாறு அதிகமாக கண் விழிக்காதேன்னா கேட்கிறியா என்று செல்லமாகக் கடிந்துகொண்டார் தலைவர் . முகத்தைக் கழுவிக்கொள் . காற்றாட அப்படியே கொஞ்சநேரம் இரு . நிகழ்ச்சிக்குக் கொஞ்சம் தாமதமாகக்கூட போலாம் என்று கனிவாகச்சொன்னார் . நிகழ்ச்சி முடிந்து திரும்பியபோது தலைவருக்கு நிறைய ஆரஞ்சப் பழங்கள் கிடைத்திருந்தன . அவைகளை மணியிடம் கொடுத்து வேறு எதையும் சாப்பிடாதே . ஆரஞ்சுப் பழத்தை உரித்துச் சாப்பிட்டுவிட்டு நன்றாக ஓய்வு எடுத்துக்கொள் என்று கனிவோடு கூறினார் . இப்படி பணியாளரையும் மதிக்கும் பண்பு மிக்கவர் பெருந்தலைவர் . ஏழைகளை மதிப்பவர்களே இறைவனால் மதிக்கப் படுகிறார்கள் . 58 58. ஆன்மீக உணர்வு கொண்ட அருந்தலைவர் தேர்வுக் காலங்களில் மாணவர்கள் பாடங்களை நம்புவதை விட அதிகமாக கடவுளைத்தான் நம்புவார்கள் . கொஞ்சமாகப் படித்திருக்கிறேன் . அதற்குள்ளேயே கேள்வி வரவேண்டும் என்று வேண்டிக்கொள்வார்கள் . படிக்காமலேயே இருந்தவிட்டு பாஸ் பண்ணினால்தேங்காய் உடைப்பதாக பிள்ளையாரிடம் வேண்டிக் கொள்வார்கள் . ஆனால் ஒருமாணவர் பிள்ளையாரிடம் வேண்டியது வினோதமாக இருந்தது . “ பிள்ளையாரப்பா எல்லாக் கேள்விகளையும் படித்துவிட்டேன் . எந்தக் கேள்வி கேட்டாலும் எழுதிவிடுவேன் . நூற்றுக்கு நூறு மார்க் வாங்கிவிடுவேன் . அந்த நம்பிக்கை இருக்கிறது . ஆனாலும் உன் துணை வேண்டும் . ஏன் தெரியுமா ? எனக்கு காக்காய் வலிப்பு நோய் உண்டு . பரிட்சை எழுதும்போது அந்த நோய் வந்து விடாமல் நீதான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் . ” ஆக மனிதனுக்கு நம்பிக்கை , முயற்சி , உழைப்பு என்று எவ்வளவு இருந்தாலும் அவனையும் மீறி சில காரியங்கள் நடந்து விடுகின்றன . அங்கேதான் அவனுக்கு மீறிய சக்தி ஒன்று உண்டு என்பது உண்மையாகிறது . ஆலயங்களுக்கு அடிக்கடி சென்று வழிபாடு செய்யாவிட்டாலும் ஆன்மீக உணர்வு கொண்டவர் பெருந்தலைவர் . காமராசரை ஆன்மீகத்தில் கண்ணன் என்று வர்ணித்தார் கவிஞர் கண்ணதாசன் . காமராசரின் பக்தி எனும்போது கடவுள் பக்தி , தேசபக்தி , குருபக்தி என்று மூன்று கோணங்களில் அமையும் . பெருந்தலைவரின் ஆட்சிக் காலத்தில் புராண இதிகாசங்களைப் பரப்பும் திட்டம் ஒன்று செயல்பட்டது . சத்யசபா என்ற பெயரில் ஒரு மன்றம் நிறுவப்பட்டு அதன் வழி கதாகாலட்சேபங்கள் நடத்தப்பட்டன . அயராத பணிகளுக்கு நடுவேயும் பெருந்தலைவர் வருகை தந்து ஊக்கம் தந்தார் . பிற மதங்களையும் மிகவும்மதித்தவர் , பேணியவர் பெருந்தலைவர் . திருமுருக கிருபானந்த வாரியாரின் சொற்பொழிவின் போது ஒரு சுவையான நிகழ்ச்சி நடந்தது . அன்றைய நிகழ்ச்சிக்கு பெருந்தலைவர் வரப்போகிறார் என்பதை முன்கூட்டியே அறிந்திருந்த வாரியார் சுவாமிகள் சமயம் பார்த்து ஒரு செய்தியினை வெளியிட்டார் . எந்தக் காரியத்தை ஒப்படைத்தாலும் அதைச் சிறப்பாக செய்து முடிப்பவர் ஆஞ்சநேயர் . காரணம் அவர் ஒரு பிரம்மச்சாரி . பிரம்மச்சாரிகள்தான் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட காரியத்தைச் சரியாகச் செய்யக்கூடிய ஆற்றலும் வல்லமையும் பெற்றவர்கள் . அது அந்தக் காலத்தில மட்டுமல்ல . இந்தக் காலத்துக்கும் பொருந்தும் . இப்படி அவர் சொல்லிக் கொண்டிருந்தபோதே பெருந்தலைவர் அங்கு வந்து கொண்டிருந்தார் . செய்தி சூழ்நிலைக்குப் பொருத்தமாக அமைந்ததால்மக்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர் . பிரம்மச்சாரி என்று நான் குறிப்பிட்டது யார் என்பதை நீங்கள் புரிந்துகொண்டீர்கள் என்று வாரியார் குறிப்பிட்டதும் மக்களின் ஆரவாரத்துக்கு அளவே இல்லை . “ பக்தி உடையார் காரியத்தில் பதறார் . வித்து முளைக்கும் தன்மையைப் போல் வினைகளை முடிப்பர் ” என்கிறார் பாரதியார் . அதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தவர் பெருந்தலைவர் . 59 59. குருவைப் போற்றிய குருநாதர் குருபக்தி என்பது மிகவும் முக்கியமானது . அது இப்போது குறைந்து வருவதை அறிவோம் . அதற்கு என்ன காரணம் என்பதை ஆராய்ந்தால் ஓர் அடிப்படை உண்மை புரியும் . முன்பெல்லாம் குருகுல வாசத்தில் குரு அமர்ந்திருப்பார் . மாணவர்கள் நின்று கொண்டு பாடம் கேட்பார்கள் . அதனால் மரியாதை இருந்தது . இப்போது கல்விக் கூடங்களில் ஆசிரியர் நின்று கொண்டிருக்கிறார் . மாணவர்கள் உட்கார்ந்து பாடம் கேட்கிறார்கள் . அதனால் மரியாதை போய்விட்டது . அதனால்தான் இப்படியொரு சம்பவம் நடந்தது . ஒரு மாணவர் தன்னுடைய ஆசிரியரை மதியச் சாப்பாட்டுக்குத் தன் வீட்டுக்கு வரும்படி அன்போடு அழைத்தார் . அதற்கு ஆசிரியர் காரணம் கேட்டார் . அதற்கு பையன் சொன்ன பதில் , “ வேறு ஒண்ணுமில்ல சரி எங்க அப்பா நேத்து ஒரு அல்சேஷன் நாய் வாங்கி வந்தார் . அந்நியர் வந்தால் கடிச்சுக் குதறும்னார் . அது உண்மையான்னு பாக்கத்தான் உங்களை கூப்பிடுகிறேன் . ” பெருந்தலைவர் அரசியலில் பலருக்கு குருவாக இருந்தவர் . அரசியல் நுணுக்கங்களை அவரிடம் படித்தவர்கள் அநேகர் பேர் . அவருக்கே குருவாக இருந்தவர் தீரர் சத்தியமூர்த்தி . தன்னுடைய குருநாதரிடம் அளவில்லாத பக்தி கொண்டிருந்தார் பெருந்தலைவர் . எல்லா அரசியல் நுணுக்கங்களையும் ஒரு சீடனுக்கு உரிய பணிவோடு அவரிடமிருந்து அறிந்துகொண்டார் . அது போலவே காமராசர் காட்டும் அரசியல் சாதுர்யததைக் கண்டு வியந்து போனார் குருநாதர் . அதனால்தான் வாய்ப்பு வரும்போது தனக்குக் கிடைக்க வேண்டிய பதவியைக் கூட காமராசருக்கு விட்டுக் கொடுத்தார் சத்தியமூர்த்தி . 1940 ஆம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித்தலைவர் பதவிக்கு மிகுந்த போட்டியிருந்தது . சத்தியமூர்த்தி தான் போட்டியிலிருந்து விலகி காமராசரைத் தேர்தலில் நிற்க வைத்தார் . அதோடு மட்டுமல்ல . அவரது வெற்றிக்காக அரும்பாடுபட்டு உழைத்தார் . வெற்றியும் தேடித் தந்தார் . திருச்சியில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் வைத்து காமராசரை மக்களுக்கு அறிமுகப்படுத்திப் பேசும்போது சத்தியமூர்த்தி இவ்வாறு குறிப்பிட்டார் . காமராசர் ஆர்வம் மிக்கவர் , சிறந்த தொண்டர் , ஆற்றல் மிகுந்தவர் . நேர்மையானவர் . ஒரு காலத்தில் இவர் சென்னைக் கோட்டையில் முதல்வராக அமரப்போகிறார் . 1954 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி தமிழ் வருட பிறப்பன்று சத்தியமூர்த்தியின் வாக்கு பலித்தது . தனது குருநாதரிடம் தான் கொண்டிருந்த பக்தியை மிகச் சரியாக வெளிக்காட்டினார் பெருந்தலைவர் . முதல்வராக பதவியேற்றதும் காந்தியடிகளின் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு நேராக சத்தியமூர்த்தியின் இல்லம் சென்றார் . அப்போது சத்தியமூர்த்தி இயற்கை எய்தியிருந்தார் . அவரது துணைவியாரிடம் ஆசி பெற்றுத் திரும்பினார் பெருந்தலைவர் . குருபக்தி கொண்டவர்களும் குருஅருள் பெற்றவர்களும் உயர்வு பெறுவர் என்பதற்குப் பெருந்தலைவரின் வாழ்க்கையே சான்று . 60 60. தன்னம்பிக்கை மிகுந்த தலைவர் படித்துப் பட்டம் பெற்ற இளைஞர்கள் சிலர் சாலையில் நடந்து கொண்டிருந்தார்கள் . அவர்களைச் சந்தித்த ஒரு நிருபர் எதிர்காலத்தில் என்ன செய்யலாம் என்று திட்டம் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டார் . எதிர்காலத்தில் என்ன ஆவோம்னு எங்களுக்கே தெரியவிலலை என்றார்கள் . தன்னம்பிக்கை இல்லாததால் வந்த தகராறு இது . ஒருவர் இன்னொரு இளைஞரிடம் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டார் . அப்பாவுக்கு உதவியாக இருக்கிறேன் என்று பதில் வந்தது . அப்பா என்ன செய்கிறார் ? என்ற அடுத்து கேள்விக்கு அப்பா சும்மாதான்இருக்கிறார் என்று பதில் வந்தது . உழைப்பில் நம்பிக்கையில்லாததால் வந்த விளைவு இது . பெருந்தலைவர் காமராசர் தன்னம்பிக்கையின் சிகரமாகவே திகழ்ந்தார் . எந்த நிலையினும் துன்பத்தைக் கண்டு துவளும் நிலை அவருக்கு ஏற்பட்டதில்லை . 1967 இல் காங்கிரஸ் செல்வாக்கு இழக்க , காமராசரும் தோற்றுப் போகிறார் . மாற்றுக் கட்சித் தலைவர்கள் கூட பெருந்தலைவர் தோற்கும் நிலை ஏற்பட்டிருக்கக் கூடாதென்றே வருந்தினர் . ஆனால் பெருந்தலைவர் அதைத் தோல்வி என்று எண்ணாமல் ஜனநாயகத்தின் வெற்றி என்றே மகிழ்ந்தார் . இத்தகைய சிந்தனை மாபெரும் தலைவருக்கே ஏற்படும் . திரு . லால்பகதூர் சாஸ்திரி பிரதமராய் இருந்த போது , டெல்லியில் தங்கியிருந்த பெருந்தலைவரைக் கொலை செய்ய முயற்சி மேற்கொள்ளப்ட்டது . அதிலிருந்து தப்பிய பெருந்தலைவர் தன்னம்பிக்கை இழக்கவில்லை . அரசியலைத் துறக்கவிலலை . தாக்க வந்தவர்களைக் கோபித்து அறிக்கையும் விடவில்லை . அவரது பணிகளில் வேகம் கூடியதே தவிரக் குறையவில்லை . கட்சியில் சேர்ந்து உடனே பதவிக்கு வரவேண்டும் என்று ஆசைப்படுபவர்களைப் பார்த்து அவர் சொன்னார் . “ என்னால் காத்திருக்க முடியாது . உடனே பதவியில் உட்கார வேண்டுமென்றால் முடியுமா ? நெல்லை இன்றைக்கு விதைத்து விட்டு நாளைக்கே அறுவடை செய்ய வேண்டுமென்றால் சாத்தியப்படுமா ? ” “ நேற்று இன்று நாளை என்று முக்காலத்தையும் உணர்ந்து வாழ்க்கையில் நம்பிக்கை வைக்க வேண்டும் ” என்று இளைஞர்களுக்கு அறிவுரை கூறினார் . தான் தளராமல் இருப்பது மட்டுமல்ல . தன்னை நம்பியிருப்பவர்களையும் தளரவிடாமல் பாதுகாப்பவர் பெருந்தலைவர் . ஒருமுறை நாகப்பட்டினம் ஒய் . எம் . சி . ஏ - யின் சார்பில் பாரதியாரின் படத்திறப்பு விழா ஒன்று நடந்தது . அனந்தராமன் என்பவர் பாரதியாரின் பாடல்களைப்பாடுமாறு பணிக்கப்பட்டார் . பாரத தேசமென்று பெயர் சொல்லுவோம் என்ற பாடலைப் பாடி வரும் போது ஓரிடத்தில் மறதியால் பாட முடியாமல் திண்டாடினார் அவர் . உண்மைகள் செய்வோம் பல வன்மைகள் செய்வோம் என்று அந்த வரியை மேடையிலேயே எடுத்துக்கொடுத்தார் பெருந்தலைவர் . அவையோர் அனைவரும் ஆச்சரியப்பட்டனர் . நம்பிக்கை இருந்தால் நதி மீதும் நடைபோடலாம் வெம்பி வீழாமல் விதியையும் வெல்லலாம் எம்பிக்குதித்து நிலாவுக்கு ஒரு முத்தம்கொடுக்கலாம் அத்தகைய நம்பிக்கையின் நாயகராகத்திகழ்ந்தவர் பெருந்தலைவர் . 61 61. நாட்டை நேசித்த நல்லவர் நாட்டுப்பற்று ஒன்றையே மூச்சாக நினைத்து வாழ்ந்தவர் பெருந்தலைவர் . நாட்டையே வீடாக்கி வாழ்ந்தவர் அவர் ; தாயைக் காட்டிலும் தாய் நாட்டின் மீது பாசம் வைத்தவர் . அவரது அன்னையார் தனது மகனைப் பற்றிப் புலம்பிய புலம்பல் நம் மனதை உருக வைக்கும் . அவன் நாட்டுக்காக உழைக்கிறது எனக்கு சந்தோஷம்தான் . ஊருக்கு ராஜான்னாலும் தாய்க்குப் பிள்ளைதானே . ஆனா இங்க வந்தா ஒரு நிமிஷம்தான் நிற்பான் . வீட்டுக்குள்ளே வரும்போதே என்னம்மா சவுக்கியமாம்னான் . அப்படிக்கேட்டுக்கிட்டே உள்ள வருவானா . வந்த சுவட்டோட தெருப்பக்கமா திரும்பி நான் வர்றேம்மான்னு புறப்பட்டு விடுவான் . ஆற அமர அம்மா கூட பேசக்கூட அவனுக்கு நேரமில்ல . அவனுக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணி வச்சுடனும்னு எவ்வளவோ ஆசைப்பட்டேன் . கடைசி வரைக்கும் அந்த ஆசை நிறைவேறல . தன்னையும் தன் குடும்பத்தாரையும் நினையாது நாட்டுக்கென்றே தன்னை அர்ப்பணித்தவர் அவர் . அவரது பிறந்த நாள் விழாவில் பாடப்பட்ட கவிதை ஒன்றை இங்கே குறிப்பிடலாம் . காங்கிரசை ஏற்றார் ராட்டையிலே நூற்றார் அன்னையாரைப் பேணவில்லை அன்புத் தங்கை பார்க்கவில்லை என்னுயிரே மக்களென்று வாழ்ந்து விட்டார் பாரத நாட்டின் மிக உயர்ந்த பட்டமான பாரத ரத்னா பட்டம் பெற்றவர் காமராசர் . விருதுபட்டியில் ஒரு வியாபாரியின் மகனாகப் பிறந்தவர் நிகழ்த்திய சாதனை இது . இதற்குக் காரணம் அவருடைய நாட்டுப் பற்றே . பால் புளிப்பினும் பகல் இருளினும் நால்வகை வேத நெறி மாறினும் தான் திரியாச்சுற்றம் கொள்கைப் பிடிப்பாளர் பற்றிப் புறநானூறு கூறும் படப்பிடிப்பு இது . இதற்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் பெருந்தலைவர் . 62 63 62. காந்தியப் பெருந்தலைவர் ஒரு காலத்தில் சென்னையில் குடியிருக்க வாடகை வீடு கிடைப்பதே பெரும்பாடாக இருந்ததாம் . அதையொட்டி ஒரு நிகழ்ச்சி சொல்லப்படுவதுண்டு . மயிலாப்பூர் தெப்பக்குளத்தில் தவறி விழுந்துவிட்ட ஒருவன் நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கித் தத்தளித்துக் கொண்டிருந்தான் . கரையில் போன ஒருவன் “ யாரப்பா நீ ? உன் பெயர் என்ன ? எந்தத் தெரு ? வீட்டு நம்பர் என்ன ? ” என்று விசாரித்தார் . “ அதெல்லாம் அப்புறம் சொல்கிறேன் . முதலில் என்னைக் காப்பாற்றுங்களேன் ” என்றான் . “ முதலில் உன் விலாசத்தைச் சொல் ” என்றான் கரையிலிருந்தவன் . தண்ணீரில் கிடந்தவன் திக்கித் திணறி விலாசத்தைச் சொன்னான் . அவ்வளவுதான் அவனை அம்போ என்று விட்டு விட்டு அநத் விலாசததை நோக்கி ஓடினான் விசாரித்தவன் . வீட்டுக்காரரிடம் “ உங்கள் வீட்டில் கு டியிருந்தவர் மயிலாப்பூர் குளத்தில் விழுந்து விட்டார் . அந்த வீட்டை எனக்கு வாடகைக்கு கொடுங்கள் ” என்றான் . “ அது முடியாதே அரை மணி நேரத்துக்கு முந்தி ஏற்கனவே ஒருவர் அதற்கு அட்வான்ஸ் கொடுத்துவிட்டார் . அவர்தான் இதற்கு முந்தி குடியிருந்தவரை தெப்பக்குளத்தில் தள்ளி விட்டாராம் . அவர் உறுதி சொன்ன பிறகுதான் அட்வான்ஸ் வாங்கினேன் . ” சுயநலத்துக்காக மற்றவர்களை நோக வைப்பது தான்மனித இயல்பு . மற்றவர்கள் நலனுக்காகத தன்னை நோகவைத்துக்கொள்வது தான் காந்தியம் . கர்ம வீரர் காமராசர் அவர்களுக்குக் கறுப்புக் காந்தி என்ற பெயர் உண்டு . உள்ளத் தூய்மையில் , அகிம்சை உணர்வில் மனிதாபிமானத்தில் , ஏழைகளை நேசித்ததில் காமராசர் காந்தியடிகள் போன்றவரே . மேல் சட்டையைக் கழற்றிவிட்டு கையில் ஓர் ஊன்று கோலைக் கொடுத்து விட்டாால் காமராசர் காந்தியாகவே மாறிவிடுவார் என்று எழுத்தாளர் சாவி சொன்னது மிகப்பொருத்தம்தான் . தமிழகத்தில் பெருந்தலைவர் செய்த ஆட்சி மக்கள் நலனையே குறிக்கோளாகக் கொண்டிருந்தது . முழு உரிமை , வறுமை ஒழிப்பு , சமவாய்ப்பு , அறியாமை போக்கல் என்ற ஜனநாயகப் பண்புகளை அடிப்படையாகக்கொண்டது அவரது ஆட்சி . வன்முறையை , அடக்குமுறையைக் கையாளாமல் சமதர்ம ஆட்சியை அமைக்க இயலும் என்று உறுதியாக நம்பினார் . ஜனநாயக சோஷலிசம் என்ற கொள்கை வகுக்கப்பட்டிருந்தாலும் பெயர் விளக்கத்தை விட செயலாக்கத்திற்கே சிறப்பிடம் கொடுத்தார் பெருந்தலைவர் காமராசர் . “ நாட்டிலுள்ள கோடிக்கணக்கான மக்கள் சம உரிமையும் , சமவாய்ப்புக்களும் பெற்று வாழ வேண்டும் . அதற்குப் பயன்படும் திட்டத்தின் பெயர் எதுவாக இருந்தாலென்ன ? ” என்றார் . அவர் சட்டமும் விதிமுறைகளும் மக்களுக்காக ஏற்பட்டவை . சட்டத்திற்காகவும் விதிமுறைகளுக்காகவும் மக்கள் இல்லை என்பது அவரது கொள்கை . மற்றவர்களை அடிக்கடி மன்னித்து விடு , உன்னை மட்டும் ஒரு நாளும் மன்னிக்காதே . இதுவே மாமனிதர்களின் தாரக மந்திரம் . 64 63. ஏழை பங்காளன் டெல்லிக்கு வேலைக்குப் போன ஒருவன் . தன் தாயாருக்காக 500 ரூபாய்க்குப் புடவை வாங்கி அனுப்பினான் . உண்மையான விலையை எழுதினால் ஊதாரித்தனமாக செலவு செய்துவிட்டாயே என்று அம்மா திட்டுவார்கள் என்று பயந்து புடவையின் விலை 300 ரூபாய் என்று எழுதினான் . அடுத்த வாரம் அவனது அம்மாவிடமிருந்து கடிதம் வந்தது . நீ அனுப்பிய புடவையை 400 ரூபாய்க்கு விற்று விட்டேன் . அதற்கு இங்கு நல்ல டிமாண்ட உள்ளது . இன்னும் பத்துப் புடவைகளை உடனே அனுப்பவும் . இப்படி எதையும் லாபமாக்கத் துடிப்பது பொதுவான மனித இயல்பு . இதிலிருந்து மாறுபட்டு நிற்பவர்கள் ஒரு சிலரே . அதில் பெருந்தலைவர் காமராசர் முதன்மையானவர் . ஆராய்ச்சி மணி கட்டி ஆண்ட முற்காலத் தலைவர்கள் போலவே ஏழைகளின் குறைகளைக் கேட்டறிய எப்போதும் தன் வீட்டுக் கதவைத் திறந்து வைத்திருந்தார் கர்ம வீரர் காமராசர் . காண வருவோரை உடன் இருப்பவர் தடுத்தால் அவர்களைக் கண்டித்து , “ கந்தா அவரை வர விடுன்னேன் . அவர் வரட்டுன்னேன் . ” என்று கூறி குறை கேட்க முந்தும் கருணைத் தலைவராகவே அவர் விளங்கினார் . இது குறித்து நெல்லை மாவட்ட சுதந்திரப் போராட்ட வீரர் சோமயா ஜு லு கூறுகிறார் . “ இவரின் இல்லமே ஒரு தேசிய இல்லம் தான் . முன்புறக் கதவுகள் சாத்தப்படுவதே இல்லை ஒரு தலைவர் இறந்த பிறகே அவர் வாழ்ந்த இல்லத்தை நாட்டுடமையாக்குவார்கள் . ஆனால் காமராசரைப் பொறுத்தவரை அவர் வாழ்ந்த காலத்திலேயே அவரது உள்ளமும் இல்லமும் நாட்டுடமையாகியிருந்தன . ” பெருந்தலைவர் கூறுகிறார் , “ கோடி வைத்திருப்பவனைக் கோடீஸ்வரன் என்று புகழ்கிறார்கள் . பணம் படைத்தவன் என்பதற்காக ஒருவனை கடவுளாக்கி விடும் இந்தப் புத்தி நன்மையைத் தராது . ” தமிழ்நாட்டை வெள்ளம் பாதித்த ஒரு சமயம் அவ்விடத்தைப் பார்வையிட அதிகாரிகளுடன் சென்றார் பெருந்தலைவர் . அதிகாரிகள் தடுத்தும் தண்ணீரில் இறங்கி வெகுதூரம் சென்று விட்டார் . ஒரு முதல்வரா இப்படிச் செய்வது ? சம்பிரதாயம் என்னாவது என்று அதிகாரிகள் கையைப் பிசைந்தனர் . இதை நேரில் பார்த்த சவுந்தரபாண்டியன் என்பவர் ஒரு பேட்டியில் கூறுகிறார் . “ பேசிக்கொண்டேயிருந்த பெருந்தலைவர் திடீரென்று வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு மேல் துண்டை எடுத்து முண்டாசு கட்டிக்கொண்டு மட மட வென்று தண்ணீருக்குள் இறங்கி விட்டார் . ” இப்படிப்பட்ட கடமை வீரர் பெருந்தலைவர் . 65 64. உண்மை ஒளிர்ந்த உரை இந்த உலகத்திலே ஒரு கெட்ட பழக்கமும் இல்லாத ஒருவனைப் பார்க்கவே முடியலே என்று ஒரு பெரியவர் கடுமையாகக் குறைபட்டுக்கொண்டார் . “ உடனே பக்கத்தில் இருந்த இளைஞன்பொதுவா அப்படிச்சொல்லாதீங்க . நான் இல்லையா ?. ” என்றான் . “ தம்பி , நீ சிகரெட் , பீடி , மது ஏதாவது குடிப்பியா ? ” “ நோ” “ பொடி , வெத்திலை பாக்கு ? காஃபி , டீ ? ” “ அந்த பக்கமே திரும்ப மாட்டேன் . ” “ போகட்டும் . மாது , திருட்டு , மோசடி , வன்சொல்” “ இல்லே சார் , அது மாதிரி எதுவுமே இல்லை” “ ஆச்சரியமா இருக்கே . ஒரு கெட்ட பழக்கமும் இல்லையா உன்கிட்டே” “ ஒரே ஒரு கெட்ட பழக்கம் தான் சார் . பொய் மட்டும் சொல்வேன் ” என்றான் இளைஞன் . இப்படி பொய்மையையே வாழ்க்கையாகக் கொண்டவர்கள் மத்தியில் உண்மை ஒன்றை மட்டுமே உரைத்து வாழ்ந்தவர் பெருந்தலைவர் . குமுதம் வார இதழில் , கே . ஆர் . நாயர் என்பவர் - இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஓர் ஒப்பந்தத்தையே முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார் . அப்போதைய பாரதப் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி , ராஜ்பவனில் நிருபர் கூட்டம் நடந்தது . தற்போதைய ஒப்பந்தத்தை அடுத்து இலங்கையில் ஆட்சிக்கு வரும் அரசியல் கட்சியினர் மதித்துக் காப்பாற்றுவார்களா ? என்று சாஸ்திரியிடம் கேட்டனர் . அதற்கு சாஸ்திரி சற்றுத் தயங்கினார் . ஆனால் பெருந்தலைவர் மிகவும் அழகான தெளிவான ஆங்கிலத்தில் பதிலளித்தார் . “Don’t go and print such suggestions in the paper. This is an agreement signed by two Democratic Governments, just as any Democratic Government in India would honour this agreement. We expect any successor Government in ceylon to honour this agreement” என்றார் பெருந்தலைவர் . “I agree with kamaraj Ji” சாஸ்திரி மகிழ்வுடன் கூறினார் என்று குமுதம் ஏட்டில் எழுதியிருந்தார் . உள்நாட்டு விவகாரங்களில் மட்டுமின்றி வெளிநாட்டு விவகாரங்களிலும்பெருந்தலைவரின் அரசியல் ஞானம் தெளிவாக திட்டவட்டமாக இருந்தது என்பதற்கு இது சான்று . 1966 ஆம் ஆண்டு பிப்ரவரியில் ஜெய்ப்பூரில் காங்கிரஸ் மகாசபைக் கூட்டம் நடந்தது . விலைகளை வீழ்ச்சியடையச்செய்து பாமரருக்கு அத்தியாவசியமான பொருட்களைத் தர அரசாங்கம் உடனடியாக நிறையத் தொழில்களை மேற்கொள்ள வேண்டும் என்று பெருந்தலைவர் கேட்டுக்கொண்டார் . பொருளாதாரத் துறைகளில் ஒரு நிலையான தன்மை ஏற்படவும் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மத்திய மாநில அரசுகள் நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் . இதற்குப் பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை என்றும்பெருந்தலைவர் தனது தலைமை உரையில் பேசினார் . அவரது பேச்சில் இருந்த தீர்க்க தரிசனம் மக்களின் சிந்தனையைத் தூண்டியது . 66 65. ஜீவாவின் ஜீவன் நீண்ட நாளைக்குப் பிறகு இரண்டு நண்பர்கள் சந்தித்துக்கொண்டார்கள் . “ வாப்பா உன் பையன் எப்படி இருக்கிறான் ? ” என்று நண்பர் கேட்க , “ அவன் பெரிய குடிகாரன் . ஊர்லே ரவுடிகளோட தொடர்பு , அடிதடி , சும்மாவே இருக்க மாட்டான்” “ திருத்த முயற்சிக்கிறது தானே ? ” “ எவ்வளவோ முயற்சித்தும் முடியலே . எந்த வேலையில் சேர்த்தாலும் நீடிக்க மாட்டான் . அதான் நானே தண்ணி தெளிச்சி விட்டுட்டேன் . ” “ பரவாயில்லை . இப்ப எந்த கட்சியிலே எம் . எல்ஏ . வா இருக்கிறார் ” என்றார் . “ எந்தக் கட்சி ஆட்சியிலே இருக்கோ ? அதுலேதான் இருப்பான் ” என்றார் . இப்படி சுயலாபத்துக்காக அரசியலில் இருப்பவர்கள் பலர் . ஆனால் எந்தக் கட்சிக்காரர் என்றாலும் அவர்களிடமும் அன்பு செலுத்துபவர் தலைவர் . சென்னை - தாம்பரம் குடிசைவாசிகளுக்குப் பட்டா தரவேண்டும் என்று கம்யூனிஸ்டு கட்சித் தலைவர் ப . ஜீவானந்தம் போராடிக்கொண்டிருந்தார் . அப்போது காமராசர் முதலமைச்சராக இருந்தார் . தாம்பரத்தில் ஓர் ஆரம்பப் பள்ளிக் கட்டிடத்தைத் திறந்து வைக்க பெருந்தலைவர் சென்றார் . அந்த வழியில் தான் ஜீவாவின் வீடு இருந்தது . காரை நிறுத்தச்சொல்லி ஜீவாவின் வீட்டிற்குள் நுழைந்தார் . அது ஒரு கூரை பிய்ந்துபோன குடிசை வீடு . அந்த நேரத்தில் தலைவரை ஜீவா எதிர்பார்க்கவில்லை . “ என்ன இந்த வீட்டில் இருக்கிறீர்களே ” என்று கண்கலங்கினார்தலைவர் . “ எல்லாரையும் போலத்தானே நானும் ” என்றார் ஜீவா . “ ஆரம்பப் பள்ளிக் கட்டிடத்தை திறந்து வைக்க வந்தேன் . வழியில் உங்கள் வீடு இருந்ததால் உங்களையும் பார்க்க வந்தேன் ” என்ற தலைவர் அந்தப் பள்ளிக்கு அடிக்கல் நாட்டியவர் ஜீவாதான் என்பதைத் தெரிந்து கொண்டு அவரையும் தன்னுடன் விழாவுக்கு அழைத்துச் சென்றார் . சிறிது காலத்தில் ஜீவாவின் துணைவியாருக்கு ஒரு உத்தியோகம் கிடைத்தது . அது பெருந்தலைவரால்தான் கிடைத்தது என்பது பின்னால் தெரியவந்தது . பிறகு ஜீவா ஒரு நல்ல வீட்டில் இருக்க வேண்டும என விரும்பிய பெருந்தலைவர் அதற்காகவும் உதவி செய்தார் . நோய்வாய்ப்பட்டு சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியில் இருந்து ஜீவா கடைசியாக சொன்ன வார்த்தை காமராசருக்கு டெலிபோன் பண்ணுங்க என்பது தான் . உயிர் பிரியும் வேளையில் கூட ஜீவாவின் உள்ளத்தில் பெருந்தலைவர் இருந்தார் . நாட்டை சமதர்மப் பாதையில் நடத்திச்செல்கிறார் என்பதும் அவரது மனித நேயமும் ஜீவாவின் நெஞ்சில் பெருந்தலைவரை நிறுத்தியதில் வியப்பில்லை . 67 66. உழைப்பு தந்த உயர்வு ஒரு வயலுக்கு நடுவே ஒரு குருவி கூடுகட்டி தன் குஞ்சுகளோடு வசித்து வந்தது . தாய்குருவி இரைதேடப்போய்விட்டது . இப்போது வயலின் சொந்தக்காரன்தன் மகனோடு வயலுக்கு வந்து பார்த்தான் . “ தம்பி பயிர் முற்றி விட்டது . நாளைக்கே ஆட்களை அழைத்து வந்து அறுவடை செய்து விடு ” என்று கூறினார் . மாலையில் தாய்க்குருவி கூடு திரும்பியதும் . அதனிடம் குஞ்சுகள் நடந்ததைக் கூறி வேறு இடம் பார்க்கச்சொல்லின . தாய்க்குருவி “ அவசரமில்லை ” என்றது . இரண்டு நாட்கள் கழித்து வயலுக்குச் சொந்தக்காரனும் மகனும் வந்தார்கள் . அடடா தானியம் மிகவும் முற்றிவிட்டது நாளைக்கு எப்படியும் ஆட்களை அழைத்து வந்து அறுவடை செய்தே ஆகவேண்டும் என்றான் . அன்று மாலை வந்த தாயிடம் குஞ்சுகள் கேட்டதை சொல்லின . “ அவசரமில்லை ” என்றது தாய்க்குருவி . ஒரு வாரம் சென்றது . மீண்டும் வயலுக்கு வந்த சொந்தக்காரன் வயலைப் பார்த்துவிட்டு தன் மகனிடம் “ மிகவும் முற்றிவிட்டது . இனி ஆட்கள் கிடைப்பார்களா என்று பார்ப்பது நல்லதல்ல . நாளைக்கு நானும் நீயும் அறுவடை செய்து விடுவோம் ” என்றான் . இந்த விஷயத்தை குஞ்சுகள் தாய்க்குருவியிடம் கூறியதும் “ நேரம் வந்து விட்டது . வாருங்கள்வேறு இடம் போகலாம் ” என்றது . பிறரை நம்பாமல் சுயமாகவே வேலை செய்பவர்களின் வாழ்க்கை முன்னேறும் என்பதில் சந்தேகமில்லை . பெருந்தலைவர் தனது சொந்த உழைப்பையே பெரிதும் நம்பினார் . அதுவே அவர் பல உயர்வுகளைப் பெறக் காரணம் . 1963 ம் ஆண்டு நவம்பர் மாதம் 3,4 ஆகிய தேதிகள் அப்போதைய அகில இந்திய காங்கிரஸ் தலைவர் டி . சஞ்சீவய்யா தலைமையில் ஜெய்ப்பூர் காங்கிரஸ் மகாசபைக் கூட்டம் நடந்தது . இதில் காமராசர் திட்டம்செயல்படுத்தப்படும் விதமும் - விளைவுகளும் என்பது பற்றி 6 மணி நேரம் விவாதம் நடந்தது . காமராசர் திட்டம் பல அதிசயிக்கத் தக்க நல்ல பலன்களை விளைவித்திருக்கிறது . புது வேகத்தையும் புத்துணர்ச்சியையும் உண்டாக்கி இருக்கிறது என்று கமிட்டி அறிக்கையில் கூறப்பட்டிருந்தது . அப்போது நேரு , “ இந்தத் திட்டம் புதிய புரட்சிகரமான திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது . அகில இந்தியக் காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் பொருத்தமானவர் காமராசர்தான் ” என்று குறிப்பிட்டார் . முன்னதாக அக்டோபர் 9 ஆம் தேதி டெல்லியில் காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம் நடந்தது . இதில் காமராசர் , லால்பகதூர் சாஸ்திரி , அதுல்யா கோஷ் ஆகியோர் பெயர்கள் தலைவர் பதவிக்குப் பரிந்துரைக்கப்பட்டன . ஆனால் நேரு பெருந்தலைவரை விரும்பியதால் காங்கிரஸ் கமிட்டி காமராசரை அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ஒரு மனதாகத் தீர்மானித்தது . ஜூலை மாதம் (1963) நேருஜியை காமராசர் சந்தித்துத் தனது காமராசர் திட்டம் பற்றிக் கூறியபோதே அகில இந்தியக் காங்கிரஸ் தலைவராகப் பெருந்தலைவர் தான் வரவேண்டும் என்று தனது விருப்பத்தைத் தெரிவித்தார் நேரு . “ தமிழ்நாட்டில் கட்சி வேலை பார்க்கவே முதல்வர் பதவியை ராஜினாமா செய்தேன் . எனவே தலைவராக விரும்பவில்லை ” என்று அப்போது நேருஜியிடம் பெருந்தலைவர் கூறினார் .; ஆனால் நேருஜியின் ஆசை 3 மாதம் கழித்து நிறைவேறியது . அகில இந்திய காங்கிரஸ் தலைவராகப் பெருந்தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார் . 68 67. தீரர் தீட்டிய திட்டம் ஊருக்குப் புதிதாக வந்த ஒருவர் , எதிரே வந்த ஒருவரைப் பார்த்துக்கேட்டார் . சார் ராகவன் என்பவரைத் தெரியுமா ? யார் ராகவனா ? உயரமா இருப்பாரா ? உயரமுமில்லை , குள்ளமுன்னும்சொல்லமுடியாது சரி நிறம் கருப்பா ? சிவப்பா ? கருப்புன்னும் சொல்ல முடியாது . சிவப்பும் இல்லை சரி எங்கேயாவதுவேலை பார்க்கிறாரா ? முன்பு வேலை பார்த்தார் . இப்ப வேலை பார்க்கிறாரா ? இல்லையான்னு தெரியலை அவரைத் தெரியுமா ? தெரிஞ்ச மாதிரியும் இருக்கு தெரியாத மாதிரியும் இருக்கு என்றார் மற்றவர் . இப்படி சாதாரண செயல்கள் கூடப் புரியாமல் குழப்பத்துடன் வாழும் மனிதர்கள் பலர் . ஆனால் பெருந்தலைவரோ தொலைநோக்குப் பர்வையுடன் பல அரிய திட்டங்களைத் தீட்டிய அறிஞர் . பிறப்பால் உயர்ந்தவர் . செல்வத்தால் உயர்ந்தவர் . படிப்பால் உயர்ந்தவர் என்று பல செயற்கைக் காரணங்கள் பலரைப் பெரிய மனிதர்களாக்கியது உண்டு . ஆனால் இவற்றில் எதுவுமே இல்லாது தமது உழைப்பு ஒன்றால் மட்டுமே பெருந்தலைவர் உயர்ந்தார் . பெருந்தலைவர் ஒரு தலை சிறந்த தேசியத் தலைவராக மட்டும் அல்ல . சர்வதேசப் புகழும் மரியாதையும் பெற்ற ஒரு தலைவராகத்திகழ்ந்தார் . இதற்கு அவர் வகுத்த காமராசர் திட்டம் உதவியது . ஒவ்வொரு காங்கிரஸ்காரரும் காரியக் கமிட்டியின் ஆணைக்குக் கட்டுப்பட்டவர் . அவர் தனது பதவியைத்துறக்க , அல்லது காரியக் கமிட்டி விரும்பும் எந்த வேலையையும் செய்ய தயாராக இருக்க வேண்டும் என்பது காமராசர் திட்டத்தின் குறிக்கோள் . க ô ங்கிரஸ் கட்சிக்குள் கட்டுப்பாடு இன்மையும் பதவி ஆசையும் வளர்ந்து வருவதைக் கண்டு நேருஜி வருந்தினார் . காரியக் கமிட்டியின் அதிகாரத்தை நிலைநாட்டப் புதுமையான நடவடிக்கைகளை அதிரடியாகச் செயல்படுத்தாவிட்டால் காங்கிரசின் ஐக்கியமும் , கட்டுப்பாடும் சீர்குலைந்து விடும் என நேருஜி நினைத்த நேரத்தில் உத்தமர் காமராசர் தமது திட்டத்தை நேருஜியிடம் தெரிவித்தார் . 1963 ஆம் அண்டு ஆகஸ்டு 9 ஆம் தேதி காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம் நடந்தது . காமராஜ் திட்டம் “ பதவி ” துறப்புத் தீர்மானம் , காமராசரால் இக்கூட்டத்தின் முன்மொழியப்பட்டது . அரசாங்கப் பதவிகளில் உள்ள அனுபவம் மிக்க தலைவர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்த வேலை செய்ய முன் வரவேண்டும் என்று அந்தத் தீர்மானம் கூறியது . அத்திட்டம் ஒரு மனதாக நிறைவேறியது . மாநில முதலமைச்சர்கள் , அமைச்சர்கள் தங்கள் ராஜினாமா கடிதத்தை நேருஜியிடம் கொடுத்துவிட வேண்டும் . அதில் யார் யாருடைய ராஜினாமாவை நேருஜி ஏற்கிறாரோ அவர்கள் கட்சி வேலைக்குத் திரும்பி விடலாம் என்று தீர்மானிக்கப்பட்டு அவ்வாறு நடந்தது . இதன்படி நேருஜியும் தனது பதவியை ராஜினாமா செய்ய முன் வந்தார் . காமராசர் உட்பட அனைவரும் எதிர்த்தனர் . நேரு ராஜினாமா செய்யக்கூடாது . அவர் விலகினால் இந்திய அரசு ஆட்டம் கண்டு விடும் . நேரு ராஜினாமா செய்தால் என் திட்டத்தையே கைவிட்டு விடுகிறேன் என்று உணர்ச்சிகரமாகப் பேசி தன் எதிர்ப்பைக் காட்டினார் . நேருஜியே ராஜினாமா செய்யப்போவதாகக் கூறியது காமராசர் திட்டத்துக்கு மேலும் வலு சேர்த்தது . தாம்மட்டும் பதவியில் இருந்து கொண்டு எனது அருமை நண்பர்களின் ராஜினாமாக்களை ஏற்றுக் கொள்ள வேண்டிய இக்கட்டான நிலை வருத்தத்தைத் தந்தாலும் நாட்டு மக்களின் நலனுக்காகவும் காங்கிரஸ் கட்சியின் கட்டுப்பாட்டுக்காகவும் முதலில் 42 பேர்களின் ராஜினாமாக்களை ஏற்றிருப்பதாகவும் ஆகஸ்டு 12 ஆம் தேதி நேருஜி அறிவித்தார் . நேருஜி அறிவித்த அந்தப் பட்டியலில் பெருந்தலைவர் பெயரும் இருந்தது . உலகத்திலேயே முதன்முதலாக அதிகாரத்தில் உள்ள மந்திரிகள் தாங்களாகவே முன்வந்து பதவி துறந்த இந்த நிகழ்ச்சி உலகையே வியப்பில் ஆழ்த்தியது . அவர்களுக்குப் பெருந்தலைவரின் பெருமை தெரிய வந்தது . இது கே - பிளான் என்று அழைக்கப்பட்டது . 69 68. புவனேஷ்வரம் வந்த புனிதர் ஒரு மதப் பிரசாரம் செய்பவர் பல இடங்களுக்கு சென்று கவர்ச்சிகரமாகப்பேசக் கூடியவர் . ஒரு சமயம் கூட்டத்தில் அரிச்சந்திரன் கதையை மிக மிக உருக்கமாகச் சொல்லிக்கொண்டு இருந்தார் . பொய் சொன்னால் நாடு , செல்வம்திரும்பக் கிடைக்கும் என்றாலும் வாய்மை காத்த திறனைச்சொன்னார் . இதனால் மனைவி அடிமையானாள் . மகன்லோகிதாசன் பாம்பு கடித்து இறந்தான் என்பதையும் கேட்பவர் கண்கலங்க பிரச்சாரம் செய்தார் . பிறகு தன் பேச்சால் மக்கள் எந்த அளவு நீதியை உணர்ந்து கொண்டார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள கூட்டத்தில் ஒருவரை அழைத்து , இந்தக் கதை மூலம் நீங்கள் அறிந்து கொண்டது என்ன ? என்றார் . ஐயா உண்மை பேசினால் ரொம்ப , ரொம்ப கஷ்டப்படணும்னு தெரியுது என்றார் . பேச்சாளர் இடிந்து போய் அடுத்தவரிடம்கேட்டார் . அந்த ஆள் , ஐயா வாழ்க்கையிலே ஒரு கஷ்டம் வந்தா அவசரத்துக்கு மனைவியை அடகு வைக்கலாம்னு தெரிஞ்சுகிட்டேன் என்றார் . இதுதான் பொதுவாக மக்கள் நிலை . ஆனால் இப்படிப்பட்டவர்களையும் தனது எளிமையான சொற்பொழிவால் கவர்ந்து கருத்துக்களை அவர்கள் மனதில் சரியாகப் பதிய வைத்தவர் பெருந்தலைவர் . “ காந்தியடிகள் தலைமையில் விடுதலை பெற்று 17 ஆண்டுகளாகி விட்டன . சுதந்திரம் பெற்றால் வசதியாக எல்லோரும் வாழலாம் என்று அன்று காந்தி கூறினார் . ஆனால்இப்போது மூன்று ஐந்தாண்டுத் திட்டங்களை நிறைவேற்றிக் கோடிக்கணக்கான பணத்தைச் செலவழித்தும் ஏழை மக்கள் நலமடையவில்லை . உணவு , உடை , வீடு போன்ற அடிப்படை வசதி கூட இல்லாமல் அவதிப்படுகின்றனர் . நிறைந்த செல்வங்களும் , திட்டங்களின் பலன்களும் கடலில் கலந்து விட்டதா ? அல்லது ஆவியாகி வானத்துக்குப்போய் விட்டதா ? இல்லை . அது இங்கே ஒரு சிலரிடம் மட்டும் குவிந்து கிடக்கிறது . அதை எடுத்து அனைவருக்கும் சமமாக விநியோகிக்க வேண்டும் . இந்தியர் அனைவருக்கும் உணவு , உடை , வீடு , கல்வி , சமவாய்ப்பு இவற்றை அளிப்பதே காங்கிரஸின் லட்சியம் . இதற்காக ஒரு திட்டம் வகுத்து இதற்கு மக்கள் ஆதரவைப்பெறவே புவனேஷ்வரம் செல்கிறோம் . அதற்கு உங்கள் ஒத்துழைப்பு அவசியம் தேவை .” இப்படி சுருக்கமாகவும் , திட்டவட்டமாகவும் காமராசர்பேசினார் . எல்லா இடங்களிலும் சமதர்ம சமுதாயம் அமைப்பது பற்றியே பேசினார் . ஆந்திர மக்கள் அமைதியுடனும் , ஆர்வத்துடனும் கேட்டனர் . தலைவர் காமராசரை ஒரிசாவின் முன்னாள் முதல் மந்திரியும் வரவேற்புக் கமிட்டித் தலைவருமான பட்நாயக்கும் , ஒரிசா முதல்வர் பிரேன் மித்ராவும் , ஒரிசா காங்கிரஸ் தலைவர் பிஜய் பாணியும் , லால்பகதூர் சாஸ்திரியும் வரவேற்று வெளியே அழைத்து வந்தனர் . ரெயில் நியைத்திற்கு எதிரே இருந்த மைதானத்தில் லட்சக்கணக்கான மக்கள்பெருந்தலைவரைப் பார்க்கக் கூடியிருந்தனர் . காமராசரைக் கண்டதும் , காமராஜ் நாடார் கி ஜே என்ற முழக்கம் விண்ணைப் பிளந்தது . தலைவர் காமராசும் பட்நாய்க்கும் , பிரேன்மித்ராவும ஒரு திறந்த காரில் ஊர்வலமாகச் சென்றனர் . 1,500 சேவா தளத் தொண்டர்கள் காருக்குப் பின்னால் அணி வகுத்துச் சென்றனர் . 70 69. வழிகாட்டிய வள்ளல் சார் … சார் ..- எதிரே வந்த வயதானவரை நிறுத்தினார் சேகர் . “ ஏன் .. என்னப்பா ?” என்றபடி நின்றார் பெரியவர் . “ சார் ராமசாமி வீடு எந்தப் பக்கம் ?” “ நேரே வலது புறம்போய் … பிறகு இடது புறம் திரும்புங்க அங்கே ஒரு ஆலமரம் இருக்கும் . அதன் எதிர்புறம்போய் வடக்கே ஒரு ரோடு பிரியும் . அதுலே போங்க . ஒரு கோவில் இருக்கும் . மேற்கே திரும்புங்க . கடைத்தெரு வரும் . அதில் ஒரு டீக்கடை இருக்கும் . “ அங்கே தான் ராமசாமி வீடா ?” “ தெரியாது எனக்கு . நான் ஊருக்குப் புதுசு . அந்த டீக்கடையில் நிறைய பேர் இருப்பாங்க . அவங்க கிட்டே கேட்டா யாராவது நிச்சயம் உங்களுக்கு வழி சொல்வாங்க .” இப்படிக் குழப்பத்துடன் வழிகாட்டும் மக்கள் அதிகம் பேர் உண்டு . வழிகாட்டுவதில் வள்ளலாகத் திகழ்ந்தார் பெருந்தலைவர் . அகில இந்திய காங்கிரஸ் தலைவரானதும் நாடெங்கிலும்பெருந்தலைவர் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார் . மக்கள் அவரை காலா காந்தி ( கருப்பு காந்தி ) என்று அழைத்து மகிழ்ந்தனர் . பஞ்சாப் , நேபாள எல்லை , ஒரிசா , உத்திர பிரதேசம் , ஆந்திரா , மைசூர் என்று தனது பயணத் திட்டங்களை மேற்கொண்டார் . 1956 ஆம் ஆண்டு மே 18 ஆம் நாள் தமிழகத்திற்கு வந்தார் . அந்தப் பயணம் சமதர்ம யாத்திரை என்று தமிழ் மக்களால் அழைக்கப்பட்டது . இந்தப் பயணத்தில் காமராசர் ஒரு அறிவிப்பை வெளியிட்டார் . என்னுடைய சமதர்ம சமுதாய அமைப்புப் போராட்டம் இதுதான் . இந்த இறுதிப்போரில் குதிக்க நான் முடிவு செய்து விட்டேன் . பொதுமக்களே உங்களுடைய ஆதரவு எனக்குத் தேவை . தருவீர்களா ? என்று கேட்டார் . லட்சக்கணக்கான மக்கள் “ தருகிறோம் . தருகிறோம் ” என்று எழுந்து நின்று முழங்கினர் . இந்த வரலாற்றுப் புகழ் பெற்ற நிகழ்ச்சி 18 ஆம் நாள் சுற்றுப் பயணத்தின்போதுதான் நடந்தது . அதனால் இந்த சுற்றுப் பயணம் புனித யாத்திரை என்று அழைக்கப்பட்டது . 18 நாள்கள் , 300 ஊர்கள் , 200 மைல்கள் , 1 கோடி மக்கள் என விரிந்தன . இந்த சமதர்மயாத்திரை பற்றி புள்ளி விபரங்கள் . இந்தச் சுற்றுப்பயணத்தில் ஒரு நாளைக்கு இருபது , முப்பது ஊர்களுக்குச்சென்ற தலைவர் குறைந்தது 15 சிறிய கூட்டங்களிலும் , 5 பெரிய கூட்டங்களிலும் கலந்து கொண்டு பேசினார் . இந்தக் கூட்டங்களில்பெருந்தலைவர்முதலில் சமதர்ம தத்துவத்தைப்பற்றிப் பொதுப்படையான விளக்கம்அளித்தார் . பின்னர் அந்தச் சமுதாய அமைப்பிற்கு எதிரிகள் , எதிர்ப்புச் சக்திகள் , அவற்றைச் சமாளிக்கும் முறை குறித்து விளக்கினார் . அவரது பேச்சில் சிறந்த உண்மை மின்னி மக்களுக்குப் புத்துணர்வு ஊட்டியது . 71 70. சேவைக்கு ஒரு சிலை சென்னை நகரை ஒட்டி மனை வாங்கி வீடு கட்டி வாழ வேண்டும் என்பது ஒருவருடைய நீண்ட நாள் ஆசையாக இருந்தது . பத்திரிக்கையில் அப்போது ஒரு விளம்பரம் வந்தது . அம்போ ரியல் எஸ்டேட் , முப்பது நிமிட பயணம் , நகரை ஒட்டிய வீட்டு மனை , குடிநீர் , மின்சார வசதி , பள்ளி , கல்லூரி , வெளியூர் பஸ் வசதி , மனை வாங்குவோருக்கு குலுக்கல்முறையில் ஹீரோ ஹோண்டா , மாருதிக்கார் - இந்த விளம்பரம் அவரை ஈர்த்தது . ஒரு ஞாயிறன்று அந்த ரியல் எஸ்டேட் வேனில் ஏறி மனையைப் பார்க்கச்சென்றார் . வண்டி விழுப்புரம் , கடலூர் பண்ருட்டி , திண்டிவனம் , நெய்வேலி , கும்பகோணம் என போய்க்கொண்டே இருந்தது . கடைசியில் தஞ்சாவூர் தாண்டி , புதுக்கோட்டை பகுதியில் ஒரு அந்திரான வனப்பகுதி போன்ற திடலில் அரோகரா நகர் பகுதியைக் காட்டினார் . “ சார் இதுரொம்ப தூரமாச்சே ” என்று இவர் கேட்க . “ என்ன சார் தூரம் இது பக்கத்துலே தான் விமான நிலையம் வரப்போகுது . ப்ளைட்ல ஏறினா 30 நிமிடத்துலே சென்னை வந்துடலாம் ” என்றார் ரியல் எஸ்டேட்காரர் . இப்படிப்பட்ட மோசடிக்காரர்கள் வாழும் உலகில் தன்னலம் சிறிதும் இன்றிப் பிறர் நலத்துக்காவே சேவை செய்த காமராசருக்குச் சிலை வைக்க முடிவு செய்யப்பட்டது . 1961 ஆம் ஆண்டு அக்டோபர் 9 ஆம்தேதி பெருந்தலைவர் திருவுருவச் சிலையை நேருஜி திறந்து வைத்தார் . விழாவிற்கு தலைமை வகித்த சென்னை நகர மேயர் , “ தன்னலமற்ற தியாகத் தலைவர் , மக்களின் மன இருளைப்போக்க கல்வி எனும் விளக்கேற்றியவர் ” என்று பாராட்டினார் . சிலையைத்திறக்க வந்த நேரு , “ உயிரோடு இருப்பவர்களுக்கு சிலை அமைப்பதை நான் விரும்புவதில்லை . மறைந்த பிறகு மரியாதை செலுத்துவதே சிறந்தது என நினைப்பவன் நான் . ஆனால் காமராசர் செயலில் தன்னை மறந்து ஈடுபடும் ஆற்றலுடையவர் . மக்களிடமிருந்து தோன்றிய தலைவர் எனது நண்பர் என்ற முறையில் அவரது சிலையை திறந்து வைக்கிறேன் ” என்று கூறினார் . 48 ஆண்டுகளுக்கு முன் நேருஜி சென்னை வந்தபோது சத்தியமூர்த்தியின் வீட்டில் தங்கினார் . அலைந்த களைப்பில் இரவில் படுத்துத் தூங்க முயன்றார் . ஆனால் அவரைக் கண் மூடவிடாமல் வராண்டாவில் தூங்கக் கொண்டிருந்த இளைஞனின் குறட்டை சத்தம் கெடுத்தது . கோபம் கொண்ட நேருஜி “ சத்தியமூர்த்தி இதோ இந்த பையனை சென்னையை விட்டே வெளியேற்று , அல்லது எனது படுக்கையைத் தூக்கி கடற்கரையில் போடு ” என்றார் . அன்று அவ்வாறு குறட்டை விட்டுத் தூங்கிய காமராசரை வெளியேறச்சொன்ன நேருஜிதான் அவரது திருவுருவச் சிலையைப் பின்னாளில் மகிழ்ச்சியோடு திறந்து வைத்தார் . 72 71. தமிழ் முழக்கம் ஓர் அமெரிக்கத்தளபதி பாகிஸ்தான் இராணுவத் தளத்தைப் பார்வையிடச்சென்றார் . அவருக்குத் துணையாய் வந்த பாகிஸ்தானி , தளபதிக்கு மொழிபெயர்ப்பு ஆளாக மிக இங்கிதமாக நடந்து கொண்டார் . ஒரு இடத்தில் மிக நீளமாக நகைச்சுவையை அமெரிக்கர் சொன்னார் . அதையொட்டி பாகிஸ்தானி உருதுவில் ஒரு சில வார்த்தைகள்பேசியவுடன் எல்லோரும் கலகலவெனச் சிரித்தனர் . அமெரிக்கர் “ நான் மிக நீளமாகச்சொன்ன நகைச்சுவை . இவ்வளவு சுருக்கமாக எப்படிச்சொன்னீர்கள் ” என்று ஆச்சரியப்பட்டார் . அதற்கு மொழிபெயர்ப்பாளர் சிரித்துக்கொண்டே “ நீங்கள்சொன்ன நகைச்சுவை மிக நீளமாக இருந்தது . அதை மொழிபெயர்க்க முடியவில்லை . எனவே அமெரிக்க துரை இப்போது ஒரு நகைச்சுவை சொல்லியிருக்கிறார் . எல்லோரும் சிரியுங்கள் என்றேன் ” என்றார் . மொழிபெயர்ப்பினால் இப்படிப்பட்ட சிக்கல்கள் வருவது உண்டு . பெருந்தலைவர் எளிய , இனிய தமிழில உணர்ச்சி பொங்க பேசக் கூடியவர் . பிற மாநிலங்களுக்கு செல்லும்போது அந்தந்த மொழித் தலைவர்கள் பேசினால் கூட்டத்தார் போதும் , போதும் என்று கூச்சலிடுவார்கள் . காமராசரை மட்டும் அதிக நேரம் பேசச் சொல்வார்கள் . இதன் காரணத்தைக் கேட்ட போது , இவர் எங்களுக்குப் புரியாத தமிழ் மொழியில்பேசினாலும் அந்த உணர்வு எங்களுக்குப் புரிகிறது என்றார்களாம் . தலைவர் காமராசர் ஜனவரி 9 ஆம் தேதி மாலை 5 மணிக்கு லட்சோப லட்சம் வீரர்கள் அணிவகுத்து நிற்க 45 கோடி இந்தியர்களின் வறுமையை ஓட்ட முழங்கினார் . மகத மாமன்னன் அசோகனின் புது மண்ணான புவனேஷ்வரத்தில் இல்லாமை , கல்லாமை , அறியாமை , பிணி , ஏற்றத்தாழ்வு நீங்க காமராசர் முழங்கினார் . இந்திய தேசிய காங்கிரஸ் மகா சபையின் நிர்வாகத்தை நடத்திச் செல்லும்பெரும் பொறுப்பை சாதாரணத் தொண்டனான எனக்கு அளித்திருக்கிறீர்கள் . உங்கள் அன்புக்கும் , நம்பிக்கைக்கும் ஏற்ற வகையில் நான் என்னுடைய கடமைகளை நிறைவேற்ற உங்கள் மனப்பூர்வமான ஒத்துழைப்பையும் ஆதரவையும் அளிப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன் . சமதர்ம சமுதாயமே நமது லட்சியமாக இருப்பதால் , பொருளாதார பலம் சிலரிடம் குவிவதையும் அது பரம்பரையாகத் தொடர்வதையும் தடுக்க வேண்டும் . இந்நாட்டின் சட்ட திட்டங்களும் , நிர்வாக முறைகளும் , மக்கள் தங்களுக்கு என்று அமைத்துக்கொண்டிருக்கும் சமதர்ம சமுதாய லட்சியத்தை நிறைவேற்றி வைப்பவையா என்று நாம் கவனிக்க வேண்டும் . ஏக போகத் தொழில் வளர்வதைத் தடுக்க , அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் . புதிய பகுதிகளை வளர்த்துத் தொழில்களை ஆரம்பிக்க வேண்டும் என்ற பெருந்தலைவர் , எல்லா மாநிலங்களுமே செகண்டரிக் கல்வி வரையில் இலவசக் கல்வி முறையைப் படிப்படியாக அமுலாக்க முயற்சி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார் . 73 72. முதல் மரியாதை யாருக்கு ஒரு குருநாதர் இருந்தார் . அவருகிட்டே இரண்டு சீடர்கள் இருந்தாங்க . ரெண்டு பேரும் ஆரம்பத்துலே ஒருத்தருக்கு ஒருத்தர் நல்லாதான் பழகிட்டிருந்தாங்க . திடீர்னு ரெண்டு பேருலே ஒருத்தருக்கு பொறாமைக் குணம் வளர ஆரம்பிச்சது . குருகிட்டே தான் மட்டும் நல்லபேர் வாங்கிடணும் . தன் நண்பர்கெட்ட பேர் வாங்கணும் என்ற எண்ணம் வந்திடுச்சி . என்ன பண்ணலாம்னு யோசிச்சான் . ஒருநாள் விடியற்காலையிலே எழுந்திரிச்சான் . நேரே குருகிட்ட போயி நின்னான் . “ குருவே ! என்னைப் பாருங்க நான் எவ்வளவு சீக்கிரம் எழுந்திருச்சி , குளிச்சி முடிச்சிட்டு உங்களை வணங்கிறதுக்காக வந்து நிக்கிறேன் . ஆனா அவன் இன்னமும் கண்ணு முழிக்கலே . இன்னும் தூங்கிக்கிட்டே இருக்கான் ” அப்படின்னார் . குருநாதர் பர்த்தார் . “ அப்படியா ? அப்படின்னா நீயும் கூட இன்னும் கொஞ்ச நேரம் தூங்கியிருந்தா நல்லா இருக்குமே “ ன்னார் பொறுமையா . என்ன இது ? நாம இவ்வளவு தீவிரமா ஒரு விஷயத்தை சொல்றோம் . அதுக்கு நம்ம குருநாதர்ரொம்ப பொறுமையா இப்படி சொல்றாரேன்னு நினைச்சான் . குருநாதர் சொன்னர் “ ஆமாம்பா நீயும் தூங்கிட்டு இருந்திருந்தா அடுத்தவனைப் பற்றிக் குறை சொல்றதுக்கு இங்கே வந்திருக்க மாட்டே இல்லையா ? அதனாலே அப்படி சொன்னேன் “ னார் . இந்தப் பொறாமைக் குணம் எதுவுமில்லாமல் உரியவருக்கே உரிய மரியாதை சென்று சேர வேண்டும் என்று நினைத்தவர் பெருந்தலைவர் . 1952 ஆம் ஆண்டின் சென்னை மாகாண அரசின் வருமானம் 45 கோடி ரூபாய் மட்டும் தான் . திரு . சி . சுப்பிரமணியம் அன்றைய நிதியமைச்சராக இருந்தார் . அவர் அந்த ஆண்டில் தாக்கல் செய்த பட்ஜெட் தொகை ரூ .99 கோடி . அப்போதைய சென்னை ராஜ்ஜியத்தில் மலை நாட்டு நீர்வளம் இருந்தும் ஆங்கிலேய அரசு நாட்டின் மின் உற்பத்தியில் அக்கறை காட்டவில்லை . பைகாரா , பாபநாசம் என்ற இரண்டு நீர்வழி மின்னுற்பத்தி நிலையங்கள் மட்டுமே செயல்பட்டு வந்தன . அந்நிலையில் நீலகிரி மலை மீது திட்டமிட்ட குந்தா மின் திட்டம் நிறைவேற்றப்படுமானால் நாட்டின் மின் பற்றாக்குறை நீங்கும் என அரசின் மின்பொறி வல்லுநர்கள் திட்டம் தந்தனர் . அதற்குத் தேவையான தொகையோ முப்பது கோடி ரூபாய் . ஆனாலும் நிதியமைச்சர் மலைக்கவில்லை . முதல்வர் ராஜாஜியின் அனுமதியோடு அன்றைய நடுவண் அரசின் நிதியமைச்சர் திரு . சி . டி . தேஷ்முக்கின் உதவியை நாடினார் . திரு . சி . டி . தேஷ்முக்கின் முயற்சிக்குக் கனடா நாடு நேசக்கரம் நீட்டியது . சுமார் மூன்று மில்லியன் டாலர்கள் தர முன் வந்தது . குந்தா திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டு சேவைகள் தொடங்கி விட்டன . அதே நேரம் நாட்டில் அரசியல் நிகழ்ச்சிகளில் சில மாற்றங்கள் ஏற்பட்டன . சென்னை மாகாண முதல்வராக இருந்த ராஜாஜி பதவி விலக திரு . காமராசர் முதல்வரானார் . முந்திய அமைச்சரவையின்பொறுப்பில் இருந்த திரு . தேஷ்முக் பதவி விலகி விட்டார் . அந்தச் சூழலில் குந்தா திட்டம் வளர்ந்து முற்றுப்பெற்று விட்டது . இப்போது அதை யார் திறந்து வைப்பது ? என்ற கேள்வி எழுந்தது . நாட்டின் முதல்வர் காமராசர் . திட்டத்துக்கு உதவியவர் எந்தப் பதவியிலும் இல்லாத தேஷ்முக் . வேறு யாராக இருந்தாலும் அந்தப் பெருமை பதவியில் இருக்கும் தனக்கே கிடைக்க வேண்டும் என்று விரும்புவார்கள் . ஆனால் காமராசரோ தேஷ்முக் அவர்கள் பதவியில் இல்லாவிட்டாலும் அவரே திறக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார் . சம்மதிக்க மறுத்த தேஷ்முக்கையும் , திரு . சி . எஸ் . மூலம் சம்மதிக்க வைத்துப் பின் 1956 ஆம் ஆண்டு அவரே திறந்தார் . இப்படி தகுதியுடையோர்களுக்கே முதல் மரியாதை கிடைக்க வேண்டும் என்பதை மதித்துப் பின்பற்றும் உயர்ந்த குணமுடையவர் பெருந்தலைவர் காமராச ர் . 74 73. பிறர் நலம் பேணிய பெருந்தகை ஓரிடத்தில் ஒரு ஆங்கிலேயன் , ஒரு பிரெஞ்சுக்காரன் , ஒரு டச்சுக்காரன் மூவரும் பயணம் செய்தனர் . அங்கே ஒரு கல்லறையைக் காட்டிய கவிஞர் “ இவர் மிகப்பெரிய கவிஞர் . ஆனால் வாழ்ந்த காலத்தில் வறுமையில் வாடியவர் ” என்றார் . அடடா ஒரு கவிஞர் வறுமையில் வாடலாமா என உணர்ச்சி வசப்பட்ட பிரெஞ்சுக்காரன் தனது பர்ஸை எடுத்து நூறு டாலர் நோட்டை வைத்து அஞ்சலி செய்தான் . அதைப் பார்த்த ஆங்கிலேயன் அவனை விட நான் குறைந்தவனா என்றெண்ணி இருநூறு டாலர் நோட்டை வைத்து அஞ்சலி செலுத்தினான் . இதைப் பார்த்த டச்சுக்காரன் “ ச்சே ! கவிஞருக்கு நீங்கள் செலுத்துகின்ற அஞ்சலியின் லட்சணம் இதுதானா ? நான் ஆயிரம் டாலர் தரப்போகிறேன் . எல்லாருக்கும் சேர்த்து செக்காக எழுதி விடுகிறேன் . என்று கூறி விட்டு 1300 டாலருக்கும் செக்கை எழுதி வைத்து விட்டு அவர்களது முன்னூறு டாலர் நோட்டுகளை எடுத்துச் சென்றான் . இப்படி அடுத்தவர்களை ஏமாற்றிப் பிழைப்பவர்கள் வாழும் நாட்டில் பிறர் நலத்தை மட்டுமே கவனத்தில் கொண்டு வாழ்ந்தவர் தலைவர் . ஒருநாள் பெருந்தலைவரைப் பார்க்க ஒரு விடுதலைப் போராட்டத் தியாகி வந்தார் . தன் இல்லத் திருமணத்துக்கான அழைப்பிதழ் எடுத்து வந்திருந்தார் . பெருந்தலைவர் அவரை அழைத்து அமரச்செய்து நலம் விசாரித்தார் . அதே நேரம் அவருடைய ஏழ்மையினையும் புரிந்து கொண்டார் . திருமண நாளில் தனக்கு வேறு வேலை இருப்பதாகக் கூறி வாழ்த்துக்களைக் கூறி அனுப்பினார் . வந்தவர் மனம் வருந்தி விடைபெற்றார் . “ காமராஜ் இன்று பெரிய தலைவராகி விட்டார் . அந்தக் காலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு ஒரே சிறையில் அடைபட்டோம் . இன்று மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் . ஏழையான நம் இல்லத்துக்கு வர அவர் அந்தஸ்து இடம் தருமா ” என்றெண்ணியபடி ஊர் போய்ச் சேர்ந்தார் . விழா நாளும் வந்தது . அந்தச் சிற்றூரில் தன் பொருளாதார வசதிக்கேற்ப மிக எளிமையாக விழாவை நடத்திக் கொண்டிருந்தார் . திடீரென வீதியில் பரபரப்பு , ஆரவார ஒலி சத்தம் கேட்டுத் தியாகி வெளியே வந்து பார்த்தார் . அவர் கண்களையே அவரால் நம்ப முடியவில்லை . வந்து நின்ற காரிலிருந்து புன்னகை பூத்த முகத்தோடு காமராசர் இறங்கினார் . தியாகியின் கைகளைப் பற்றிக் கொண்டார் . தியாகிக்கோ கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் வழிந்தது . அவரைத் தட்டிக்கொடுத்த தலைவர் , “ வா விழா மேடைக்குப்போவோம் ” என்று கூறி உள்ளே சென்று மணமக்களை ஆசீர்வதித்தார் . அவரை அமரச்செய்ய சரியான ஆசனம் கூட இல்லையே என்று தியாகி ஏக்கத்தோடு எண்ணமிட்டார் . அப்போது காமராசர் , “ நீ அழைப்பிதழ் கொடுக்க வந்த அன்றே நான் திருமணத்துக்கு வர்றதை முடிவு பண்ணிட்டேன் . ஆனா நான் அப்பவே வர்றதாச்சொல்லியிருந்தா முதலமைச்சரே வர்றாருன்னு சொல்லி கடனை வாங்கித் தடபுடலாப் பண்ணியிருப்பே . உன்னை மேலும் கடன்காரனாக்க நான் விரும்பல . இப்ப வந்துட்டேன் . உனக்கு திருப்திதானே ” என்றார் . கூடியிருந்த கூட்டத்தைப் பெருமிதத்தோடு பார்த்தார் தியாகி . மெய்சிலிர்த்தது . “ சரி வரட்டுமா . மேற்கொண்டு காரியத்தைக் கவனி ” என்று சொல்லிவிட்டு விடை பெற்றார் தலைவர் . 75 74. இறை பக்தி எல்லாவற்றையும் கடந்து நிற்கும் கடவுள் பக்தி மனிதருக்கு அவசியம் . ஆனா எந்த இடத்திலேயும மனதாரக் கும்பிட்டாப் போதும் என்ற எண்ணம் வேண்டும் . தலைவர் காமராசருக்கு இறைபக்தி உண்டு . ஆனால் அதனைப் புறச்சின்னங்கள் மூலமாகவோ , ஆரவாரக்கோவில் தரிசனங்கள் மூலமோ அவர்வெளிப்படுத்தியது இல்லை . தாழ்த்தப்பட்ட மக்களின் ஆலயப் பிரவேச உரிமைக்காக கேரளத்தில்பெரியார் நடத்திய சத்தியாக்கிரகத்தில் “ வைக்கம் ” என்ற இடத்தில் கலந்து கொண்டார் . 1939 இல் மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தினுள் தாழ்த்தப்பட்ட வகுப்பினரைத் திரு . வைத்தியநாதய்யர் அழைத்துச் சென்றபோது பெருந்தலைவரும் , திரு . சத்தியமூர்த்தி அவர்களும் உடன் சென்றனர் . ஒருமுறை ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய தலைவர் , “ இந்த நாட்டு ஏழை எளிய மக்களின் வாழ்வு உயர்த்தப்பட வேண்டும் . உணவு , உடை , வீடு , வேலை வாய்ப்பு , அனைவருக்கும் தரப்பட வேண்டும் . அதை நிறைவேற்றும் வரை ஓய மாட்டேன் . கடவுளே இதை எதிர்த்துக் குறுக்கே வந்தாலும் , “ சற்றே எட்டி நில்லுங்கள் என்று கூறுவேன் ” என்று உணர்ச்சி வசப்பட்டுப்பேசினார் . இறைபக்தியை விட மக்கள் உரிமையே பெரிது என்று காமராசர் கருதினார் . தமிழ்நாட்டு ஆலயங்கள் மற்ற மாநில ஆலயங்களுக்கு எந்த வகையிலும் குறைந்தவை அல்ல . இராமேஸ்வரம் கோவில் , மீனாட்சியம்மன்கோவில் , ஸ்ரீரங்கம் கோவில் , பழனி முருகன்கோவில் , சிதம்பரம்கோவில் போன்றவை நாயன்மார்களாலும் , ஆழ்வார்களாலும் பாடப்பட்ட வரலாற்றுப் புகழ்மிக்கவை . ஆனால் தமிழக மக்களுக்குத் தம் கோவில் பெருமை தெரிவதில்லை . சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கும் திருமலை வெங்கடேசப்பெருமாளுக்கும் தருகின்ற மரியாதையை நம் தமிழகத் தெய்வங்களுக்குத் தருவதில்லை . இந்த பக்தி விஷயம் பொருளாதார ரீதியாகவும் , தமிழகத்தைப் பாதித்து வருவதாகும் . திருப்பதி உண்டியலின் ஓராண்டு வருமானம் ரூ .235 கோடி . அதே நேரம் அதிக வருவாய் தரும் தமிழகக் கோவிலான பழனி உண்டியல் வருவாய் ரூ .20 கோடி மட்டும் தான் . காமராசர் காலத்திலும் இந்த நிலை இருந்தது . திருப்பதி வருமானத்தில் நூற்றில் ஒரு பங்கே திருவரங்கத்துக்குக் கிடைத்தது . இதை நினைத்து ஆதங்கப்பட்ட தலைவர் “ தமிழ்நாட்டுப் பக்தர்கள் தங்கள் காணிக்கைகளை மிக அதிக அளவில் திருப்பதி கோவில் உண்டியலில் செலுத்துகிறார்கள் . நம் நாட்டு ஸ்ரீரங்கம் , திருப்பதிக்கு எந்த விதத்திலும் குறைந்தது கிடையாது . உங்கள் காணிக்கைகளை ஸ்ரீரெங்கநாதர் உண்டியலில் போட்டால் அது நம்ப நாட்டுக்குப் பெரிய பயனாக இருக்கும் . மக்களுக்குச்செய்ய வேண்டிய நல்ல காரியங்களுக்குப் பயன்படுமே “ நம்ம சாமியும் பெரிய சாமிதான் ” என்பதே தலைவரின் வேண்டுகோளாக இருந்தது . ஆனால் இந்த நியாயமான வேண்டுகோள் இன்றுவரை புறக்கணிக்கப்பட்டே வருகிறது . இப்போது ஆந்திர திருப்பதிக்கு அடுத்தபடியாகக் கேரள சபரிமலைக்குக் கொண்டுபோய் காணிக்கைகளைக் குவிக்கிறார்கள் . 76 75. மாலைகளை வெறுத்த மாண்பாளர் ஒரு செல்வந்தருக்கு மூன்று மகன்கள் இருந்தனர் . அவரோ தன் நம்பிக்கைக்குரிய அடிமை ஒருத்தனது சொல்படி மட்டுமே நடந்து வந்தார் . செல்வம் மேலும் மேலும் பெருகியது . திடீரென கடும் நோய் வாய்ப்படட செல்வர் படுக்கையில் விழுந்தார் . வஞ்சக அடிமை தன் விருப்பம் போல அவரை உயில் எழுதச்செய்தான் . அவரும் அப்படியே செய்துவிட்டு இறந்தார் . அந்த உயிலில் எனது மூன்று மகன்களும் எனது செல்வத்தில் அவர்கள் விரும்பும் ஒரு பொருளை எடுத்துக்கொள்ள வேண்டும் . மீதி உள்ள அனைத்துச்செல்வங்களும் எனது அடிமைக்கு என்று எழுதப்பட்டிருந்தது . மூத்த மகன் விலை உயர்ந்த மாளிகையையும் , இரண்டாமவன் வணிகம் நடக்கும் கடையையும் எடுத்துக்கொண்டனர் . கடைசி மகன் அறிவுக் கூர்மையுடன் என் தந்தைக்கு அடிமையாக இருந்த இவர் எனக்கும் அடிமையாக இருக்க வேண்டும் என்று கேட்டான் . அடிமையோடு சேர்ந்த செல்வம் அவனுக்குக் கிடைத்தது . கிடைப்பதெல்லாம் தனக்கே கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மத்தியில் தனக்குக் கிடைப்பதைக் கூட பிறருக்குக் கொடுத்து மகிழ்பவர் தலைவர் . பெருந்தலைவருக்கு ஒரு பழக்கம் உண்டு . கூட்டங்களில் கலந்து கொள்ளும் போது அன்பர்கள் அவருக்குப் பயன்படக்கூடிய கதர்த் துண்டுகள் , சால்களை அணிந்தால் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வார் . விலை உயர்ந்த பளபளக்கும் சால்வைகளை ஏற்கும்போது அவருக்கு மகிழ்ச்சி இருக்காது . மாலை அணிவித்தால் விரும்பவே மாட்டார் . 1974 ஆம் ஆண்டு தலைவரது பிறந்த நாள் விழா . காலை நேரத்தில் அவரது இல்லத்தில் பெருங்கூட்டம் . ஆண்டு தோறும் அவருக்குப் பிறந்த நாள் கேக்கொண்டு வருபவர் திருவல்லிக்கேணி திரு . எம் . எஸ் . சம்பந்தப்பா என்பவர் . தலைவருக்கு இந்த மாதிரிச் செயல்களில் உள்ள நாணத்தோடு கேக் வெட்டினார் . முண்டியடித்து நின்ற தொண்டர்களின் கதர்த்துண்டு சால்வைகளை முகத்தில் சிரிப்போடு ஏற்றுக் கொண்டார் . மலர் மாலைகளை கையில் பிடித்து வாங்கினார் . தொண்டர்கள் அணிவிக்கும் மாலை , துண்டில் ஏன் இந்த வேறுபாடு ? என்று பலரும் சிந்திப்பார்கள் . தலைவரின் உதவியாளர் வைரவன் இதற்கு விடையளித்தார் . தலைவருக்கு பூமாலைகள் பிடிக்காமல் போனதுக்கு காரணம் உண்டு . அவை அனைத்தும் எந்தப் பயனும்இன்றி உடனடியாக எருக்குழியைச்சென்று சேரும் . அது மட்டும் அல்லாமல் பூக்களிடையே உள்ள புழுக்கள் கழுத்தைக் கடித்துப் புண்ணாக்கி விடுவதும் உண்டு . ஜரிகை நூல் சுற்றிய மாலைகள் என்றால் அந்த நூல் கழுத்தில் அறுத்து கீறல்கள் உண்டாகும் நீரிழிவு தாக்கிய உடலானதால் கழுத்தில் மாலைகள் ஏற்படுத்தும் கீறல்களால் துன்புற்றத் தலைவர் மலர் மாலைகளை விரும்புவது இல்லை . ஆனால் தலைவருக்கு அணிவிக்கப்படும் துண்டுகள் அனைத்தும் “ பாலமந்திர் ” என்ற அனாதைச் சிறுவர் பள்ளிக்கு அனுப்பப்படும் . அது அந்தக் குழந்தைகளுக்கு உடனடியாகப் பயன்பட்டு உதவும் . எனவே தலைவர் துண்டுகளை விரும்புவார் . அது மட்டும் அல்லாமல் தொண்டர்கள்அவர் காலில் விழுந்து கும்பிடுவதை ஏற்கமாட்டார் . “ அதென்ன மனுஷனுக்கு மனுஷன் காலில் விழுந்து கும்பிடுறது ” என்று கூறுவார் . சில நேரங்களில் காலில் விழுபவர்களை அடித்தும் விடுவார் . அந்தச் செல்லத் தட்டு பெறுவதற்காகவே சிலர் அவர் காலில் விழுவதுண்டு . 77 76. பகட்டை வெறுத்த பண்பாளர் அமெரிக்க ஜனாதிபதி ஆபிரஹாம் லிங்கன் ஒரு நாள் தன் கோச் வண்டியிலே தலைநகரான வாஷிங்டனுக்கு போய்க்கிட்டு இருந்தார் . அந்தச் சாலைப் பக்கத்திலே ஒரு சதுப்பு நிலம் புதை குழி . லிங்கன் ஒரு அரசாங்க வேலையாப் போய் விட்டு திரும்பிக்கிட்டிருந்தார் . நல்ல விலை உயர்ந்த ஆடைகள் அணிந்திருந்தார் . அந்த சமயம் அந்தப் புதை குழியிலே ஒரு பன்றிக் குட்டி விழுந்து தவிச்சுக்கிட்டிருந்தது . அதைப் பார்த்து இரக்கப்பட்ட லிங்கன் வண்டியை விட்டு இறங்கிப் போய் அந்தச் சகதியிலே இருந்து பன்றிக் குட்டியைக் காப்பாற்றினார் . அப்புறம் வண்டி ஏறி வெள்ளை மாளிகைக்கு வந்து சேர்ந்தார் . உடையெல்லாம் சகதி அழுக்கு . இதைத் தெரிஞ்சுகிட்ட எல்லாரும் ஆபிரஹாம் லிங்கனைப்புகழ்ந்தாாகள் . உடனே லிங்கன் , “ தயவுசெய்து என்னைப் புகழாதீங்க . அந்தச் சின்னப் பிராணி சகதியிலே மாட்டிக்கிட்டு துடிச்சிக்கிட்டிருந்தது . அதைப் பார்த்ததும் என் இதயத்துலே முள் பாய்ந்தது போன்ற உணர்ச்சி . அந்த முள்ளைப் பிடுங்கி எறிஞ்சேன் . அவ்வளவுதான் . உண்மையிலே அந்த பிராணிக்கு நான் உதவினேன் என்கிறதை விட எனக்கு ஏற்பட்ட இன்னலைப் போக்கிக்கிட்டேன்ங்கிறது தான் உண்மை ” என்றாராம் . உயர்ந்தவர்கள் எப்போதும் பகட்டை விரும்புவதில்லை . பெருந்தலைவரும் அந்த முறையில் பண்பாளராகத் திகழ்ந்தார் . 1954- ஆம் ஆண்டு தமிழ்ப்புத்தாண்டு நாளன்று முதல்வர் பொறுப்பு ஏற்பதற்காகப் புறப்பட்டார் பெருந்தலைவர் . தொண்டர்கள் கூட்டம் வாழ்த்து கோஷம் முழங்க , தன் காரில் ஏறினார் . உடனே முன்னால் நின்ற காவலர் வண்டியில் இருந்து சைரன் ஒலிக்கத் தொடங்கியது . காரை நிறுத்தச் சொன்ன தலைவர் , காவல் அதிகாரியை அழைத்து “ அது என்னய்யா சத்தம் ” என்றார் . “ ஐயா , முதலமைச்சர் செல்லும் போது போக்குவரத்தை உஷார் படுத்த எழுப்பும ஒலி இது . வழக்கமான சம்பிரதாயம் என்றார் அதிகாரி “. இதோ பாருங்க . முன்னாலே இந்தப் பழக்கம் இருந்திருக்கலாம் . எனக்கு இதெல்லாம் வேண்டாம்னேன் . சத்தம் போடாமப் போங்க என்றார் தலைவர் . நுங்கம்பாக்கம் சந்திப்பில் போக்குவரத்தைச் சீர் செய்து கொண்டிருந்த காவலர் இவர் சென்ற வண்டியை நிறுத்தி எதிர்ப்புறத்தில் வந்த வண்டிகளுக்கு இடம் கொடுத்து அனுப்பிய பின் இவர் வண்டி செல்ல அனுமதி அளித்தார் . தலைவருடன் சென்ற காவல்துறை மேலதிகாரிகள் சினமுற்றனர் . காமராசரோ அந்தக் காவலரின் கடமையைக் கண்டு பூரித்தார் . வண்டியைப் பார்த்த பிறகுதான் காவலுக்கு விஷயம் புரிந்தது . முதல்வர் காரையே நிறுத்திவிட்டோமே என்று கலங்கினார் . அன்று மாலையே பெருந்தலைவர் வீடு திரும்பியபோது வாசலில் காத்து நின்று மன்னிப்புக் கேட்ட காவலரைத் தட்டிக்கொடுத்த தலைவர் , அவரது கடமையுணர்வைப் பாராட்டினார் . தன்னைத்தலைவராக எண்ணிக்கொள்ளாமல் மக்களில் ஒருவராகவே பாவித்துக் கொண்டது தான் தலைவரின் சிறப்பு . 78 77. தோல்வியில் துவளாத தூயவர் 1967 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் காமராசர் இந்தியா முழுவதும் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் . ஒவ்வொரு மாநிலத்திலும் போருளாதார நிலையை எடுத்துச்சொன்னார் . தலைவர் அகில இந்திய காங்கிரஸின் தலைவராக இருந்த போதுதான் அசோக் மேத்தா காங்கிரசுக்கு வந்தார் . தேர்தலில் பெருந்தலைவர் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டார் . பிரச்சாரத்துக்காக தலைவர் திருநெல்வேலி நோக்கிச் சென்று கொண்டிருந்த போது கார் விபத்து ஏற்பட்டு அதில் அவருக்கு பலத்த அடி ஏற்பட்டது . எல்லோரும் திருநெல்வேலி நோக்கிச்சென்று பார்த்தபோது தலைவர் தேர்தல் நிலைமை பற்றியே விசாரித்தார் . தமிழ்நாட்டில் உருவாகியிருந்த கடுமையான அரிசிப் பஞ்சம் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்குக் காரணமாக அமைந்தது . விருதுநகர் தொகுதியில் சுமார் 500 ஓட்டு வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சி தோல்வியுற்றது . இந்தத் தேர்தல் முடிவு இந்தியாவையே ஒரு உலுக்கு உலுக்கியது . காமராசர் பெற்ற முதலும் கடைசியுமான தோல்வி கண்டு இந்திய மக்கள் அதிர்ச்சியடைந்தனர் . “ காங்கிரசுக்குக் கிடைத்த தோல்வியை நான் ஒப்புக் கொள்கிறேன் . மக்கள் தீர்ப்பை நான் தலை வணங்கி ஏற்றுக்கொள்கிறேன் . மக்களின் நம்பிக்கைகளைப் பெற மீண்டும் நாம் கடுமையாக உழைப்போம் ” என்று பெருந்தலைவர் தோல்வியைப் பெருந்தன்மையோடு ஏற்றுக் கொண்டார் . “ காமராசர் போன்ற பெருந்தலைவர்கள் தோற்கும் நிலை ஏற்பட்டிருக்கக் கூடாது ” என்று தமிழகத்தில் வெற்றி பெற்ற தி . மு . க . தலைவர் சி . என் . அண்ணாத்துரையே கூறினார் . நேராக தன் நண்பர்களுடன் காமராசர் வீட்டுக்கு வந்து அவர் ஆசியும் பெற்றார் . அரசியலில் எதிர் அணியில் உள்ளவர்களையும் கவரக் கூடியவர் காமராசர் . 79 78. இடைத் தேர்தலில் இணையற்ற வெற்றி வகுப்பில் பாலுச்சாமியின் தொல்லை தாங்க முடியவில்லை . ஆசிரியருக்குப் பல முறை கண்டித்துப் பார்த்தும் திருந்துகிற வழியே தெரியவில்லை . பக்கத்துப் பையனை அடிப்பான் , கெட்ட வார்த்தை பேசுவான் . பீடி புகைப்பான் , ரோட்டில் ஓடும் பஸ் மீது கல் வீசிட ஆரம்பிப்பான் . அரசியல் , கட்சி , ஊர்வலம் நடத்தினால் அதில் சேர்ந்து ஓடுவான் . ஆசிரியர் அவனை இழுத்துப் போய் , தலைமையாசிரியரிடம்அவன் செய்த தவறுகளை எடுத்துச்சொல்லி டி . சி . கொடுக்கச்சொன்னார் . தலைமையாசிரியர் , “ சார் நம்ம பாலுச்சாமி நடவடிக்கைகளைப் பார்க்கும் போது , அவன்தான் எதிர்கால அமைச்சர்னு தோணுது . மினிஸ்டர் படிச்ச ஸ்கூல்னு பேர் வரலாம் . அவன் படிச்சா படிச்சிட்டுப்போகட்டும் ” என்றார் . இப்படியே பழகி விட்ட நமக்குத் தூய்மையான வாழ்வுடன் ஒரு தலைவர் நம் சமகாலத்தில் வாழ்ந்தார் என்று கேள்விப்படுவதே அதிசயம் தான் . மார்ஷல் நேசமணி மரணம் அடைந்ததால் 1969 ஆம் ஆண்டு ஜனவரியில் நாகர்கோவில் இடைத்தேர்தல் நடந்தது . நெடுமாறன் , சிரோன்மணி இரு இளைஞர்களும் தொகுதி நிலவரத்தைக் கூறினர் . நாகர்கோவில் தொகுதியில் தலைவர் போட்டியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்கு இணங்கினார் . 1969 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் தேதி இடைத்தேர்தல் நடந்தது . அப்பச்சி , அப்பச்சி என்று குமரி மக்கள் அன்போடு பெருந்தலைவரை அழைத்தனர் . காமராசர் பேட்ஜை உடம்பிலே குத்திக் கொண்ட காட்சி நெகிழ வைத்தது . ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 201 ஓட்டுகள் வித்தியாசத்தில் பெருந்தலைவர் வெற்றி பெற்றார் . நாகர்கோவிலுக்கு நாயகனாகி குமரி மக்களின் அப்பச்சி ஆனார் பெருந்தலைவர் . அன்னை சிவகாமி அம்மையார் சுகவீனமாய் இருப்பதாகத் தலைவருக்குத் தகவல் வந்தது . தாயார் முகத்தில் எந்தவிதமான பரபரப்போ , பதட்டமோ காணப்படவில்லை . விருதுநகரில் வீட்டிற்குள் சென்ற தலைவர் மயங்கிய நிலையில் இருந்த அன்னை அருகில் அமர்ந்தார் . கண் விழித்துப் பார்த்த அன்னையின் விழிகளில் நீர் வழிந்தது . எந்தவிதச் சலனமும் இன்றி தாயின் உணவு மற்றும் மருந்து பற்றி காமராசர் விசாரித்தார் . “ ஒரு வாய் சாப்பிட்டு விட்டுப் போ ” என்று அன்னை சிவகாமி கூறினார் . தலைவரும் அவசர அவசரமாகச் சாப்பிட்டு விட்டு “ அப்போ நான் வரட்டுமா ” என்று கை கூப்பினார் . “ மகராசனாய்ப்போய் வா ” என்று தாய் விடை கொடுத்தார் . வீட்டில் சாப்பிட்டு எவ்வளவு நாளானது ? என்று உடன் இருந்தவர்கள்கேட்டார்கள் . “ ஒரு 25 அல்லது 30 வருடம் இருக்கும் ” என்றார் தலைவர் . அனைவரும் திகைத்தனர் . மரணப் படுக்கையில் இருந்த தாயின் கடைசி ஆசையை நிறைவேற்றிய தலைவர் உடனே நாட்டைப் பற்றிப் பேச ஆரம்பித்தார் . 80 79. சமுதாய சந்நியாசி ஓவியர் ரவிவர்மா அவர்களுக்கு கவர்னர் அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்தது . கவர்னர் தலைமையேற்கும் நிகழ்ச்சிக்கு வருமாறு கவர்னரே கைப்பட கடிதம் எழுதியிருந்தார் . அந்த அழைப்பை ஏற்க மறுத்து ரவிவர்மா கவர்னருக்கு ஒரு கடிதம் எழுதினார் . “ தன்னுடைய குதிரை வண்டியோட்டி உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் இருப்பதால் தான் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாது என்று எழுதினார் . கவர்னர் நிகழ்ச்சியை விட அது அவ்வளவு முக்கியமா ? என்று அவரிடம்கேட்டபோது கவர்னர் நிகழ்ச்சி ஆடம்பரமானது பெருமக்கள் நிறைய பேர் கலந்து கொள்வார்கள் . எனவே நான் வரவேண்டுமென்று அவசியமில்லை . ஆனால் உயிரோடு போராடிக் கொண்டிருக்கும் இந்த நோயாளியை நான் அருகிலிருந்து கவனித்தால் தான்அவனைக் காப்பாற்ற முடியும் . எனக்கும் ஆத்ம திருப்தி ஏற்படும் என்றாராம் . மக்களுக்காக வாழ்பவர்களின் நெஞ்சில் இப்படித்தான் எண்ணங்கள் தோன்றும் . இப்படி இதோ ஒரு நிகழ்ச்சி . காந்தியடிகள் தமிழ்நாடு விஜயம் செய்த நேரத்தில் திருப்பத்தூர் அருகே அவரது கார் வந்து கொண்டிருந்தது . அந்த நேரத்தில் கொடிய வெய்யில் வியர்த்துக் கொட்டியது . பெரிய பாறைக் கற்களை சில தொழிலாளிகள் வெட்டி எடுத்துக்கொண்டிருந்தார்கள் . பாறைகளைச் சிறு துண்டுகளாக உடைத்துக்கொண்டிருந்த ஒருவன் அருகில் காந்தியடிகள் வந்தார் . இப்படி அழுக்கான வியர்வை நாற்றமுடைய ஆடை அணிந்திருக்கிறாயே குளிப்பது இல்லையா ? என்று கேட்டார் . “ சுவாமி ! இருப்பதே ஒன்றுதானே ! இதையும் துவைத்துக் காயப்போட்டால் கட்டிக் கொள்ள ஒன்றும் இருக்காதே . அதனாலேதான் நாங்கள் குளிப்பது கூட இல்லை ” என்றார் தொழிலாளி . மதுரைக்கு வந்து சேர்ந்த காந்தியடிகள் அன்று இரவு முழுவதும் தூங்கவில்லை . மனதில் தொழிலாளிகள் நினைவு தான் இருந்தது . படுக்கையை விட்டு எழுந்த அண்ணல் தான் கட்டியிருந்த எட்டு முழ வேட்டியை மூன்றரை முழம்போட்டுக் கிழித்தார் . அதை மட்டும் இடுப்பில் சுற்றிக்கொண்டு மிச்சமிருந்த துணியை மேலே போர்த்திக் கொண்டார் . ஏழை இந்தியக் குடிமகனின் இந்த ஆடைதான் இனி எனக்கும் ஆடை என உறுதி கொண்டு அதே கோலத்தில் அன்றைய கூட்டத்தில் மேடை ஏறினார் . “ காந்தியோ பரம ஏழை சந்நியாசி , கருதும் சுதந்திர ஞான விஸ்வாசி என்று இந்திய மக்கள் பெருமையோடு பாட்டுப் பாட காரணமான வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்த நிகழ்ச்சி தமிழ் மண்ணில் தான் நடந்தது . பின் காந்தியடிகள் திருநெல்வேலிக்குச் சென்றார் . காமராசரும் , ஞானம்பிள்ளையும் அந்தக் கூட்டத்துக்குச் சென்றனர் . மதுவிலக்கு , பிரம்மச்சரியம் , கதர் இயக்கம் , சத்தியாக்கிரகம் பற்றிய காந்தியடிகளின் பேச்சுக்கள் காமராசருக்குப் புத்துணர்ச்சியை ஊட்டின . கண் கொட்டாது காமராசர் காந்தியடிகளையே பார்த்தார் . தமிழகத்து மண்ணில் மதுரையம்பதியில் காந்தியடிகள் பூண்ட எளிய சன்னியாசிக்கோலமும் , சுதந்திர தாகம் தீர்வதற்காக மேற்கொண்டு வந்த பிரம்மச்சர்ய வாழ்வும் காமராசர் மனதில் பசுமரத்தாணி போலப் பதிந்தன . 81 80. சிவ பூஜையில் கரடி மாவீரன் அலெக்சாண்டரைப் பார்க்க வந்த அயல்நாட்டு விருந்தினர் ஒருவர் , “ பேரரசே ! உங்கள் நகரிலுள்ள தோட்டங்களில் வீரமரணம் அடைந்த எண்ணற்ற வீரர்களின் சிலைகளை வைத்திருக்கிறீர்கள் . தங்களின் சிலையை மட்டும் ஏன் வைக்கவிலலை ?” என்று கேட்டார் . அதற்கு அலெக்சாண்டர் “ என்னுடைய உருவச் சிலையை நான் இங்கு வைத்தால் எதிர்காலத்தில் என் பெயர் மறைந்துவிடும் . இது யாருடைய சிலை என்று என் சிலையைப் பார்த்துக் கேட்பார்கள் . அதைவிட என் சிலை வைக்கப்படாதிருந்தால் “ இவ்வளவு சிலைகள் இருக்கும்போது அலெக்சாண்டரின் சிலை மட்டும ஏன் இல்லை ? என்று கேட்கட்டும் . அதைத் தான் நான் விரும்புகிறேன் .” என்றார் . இப்படித் தற்பெருமையோடு நடப்பவர்களால் தான் சில சமயம் சலசலப்புகள் ஏற்படும் . தங்களை முன்னிறுத்திக் கொள்ள எதையாவது செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள் . இல்லாவிட்டால் அதற்கான சூழ்நிலையை ஏற்படுத்துவார்கள் . இந்த மாதிரியான வீண் பந்தாக்கள் எல்லாம் பெருந்தலைவரிடம் கிடையாது . அம்மாதிரி நடப்பவர்களையும கண்டிப்பார் . திராவிடர் கழக , திராவிட முன்னேற்றக் கழக கட்சிகள்வேகமாக வளர்ந்து கொண்டிருந்த காலம் , எந்த நேரத்தில் கூட்டம் என்றாலும் பெரியார் குறிப்பிட்ட நேரத்தில் மேடையில்இருப்பார் . ஆனால் கூட்டம் தொடங்கி ஒரு மணி நேரத்துக்குப் பிறகுதான் அண்ணா வருவார் . அவரைப் பார்த்ததும் கூட்டத்தினர் “ அண்ணா வாழ்க ” என்று உரத்த குரலில் முழக்கமிடுவர் . அந்த ஒலிக்கிடையே வந்து மேடையில் அமர்வார் . இதனால் அவர் வரும் நேரத்தில் மேடையில் யார் முழங்கிக் கொண்டிருந்தாலும் , தொடர்ந்து பேசமுடியாமல் போகும் . சர்வக் கட்சிக் கூட்டமாக இருந்தால் அதில் பேசுகின்ற மற்ற கட்சித் தலைவர்களுக்கும் இந்த சோதனை நடக்கும் . எந்தக் கூட்டமாக இருந்தாலும் நிறைவாக முத்தாய்ப்புப்பேச்சாளர் அண்ணா என்பதால் வீணாகச் சிலமணி நேரம் மேடையில் ஏன் கழிக்க வேண்டும் ? என்று அவர் எண்ணியிருக்கலாம் . ஆனால் அந்த அண்ணாவுக்கு இதுபோல் ஒரு சோதனை ஏற்பட்டது . திலகர் கட்டிடத்தில் 1960 ஆம் ஆண்டு ஒரு கூட்டம் நடந்தது . அதில் அண்ணா உரையற்றிக்கொண்டிருந்த போது திரு . எம் . ஜி . ஆர் . வந்தார் . உடனே அவரைக் கண்ட கூட்டத்தினர் ஆரவாரக் குரல் எழுப்ப அண்ணாவாலேயே சில நொடிகள்பேச முடியாத நிலை ஏற்பட்டது . இதே போன்ற சோதனை பெருந்தலைவருக்கு ஏற்பட்டபோது அதை சாமர்த்தியமாகச் சமாளித்தார் . 1964 ஆம் ஆண்டு தமிழ் தேசியக் கட்சி இந்திய தேசியக் காங்கிரசோடு இணைந்த கூட்டம் நடந்தது . அதில் இனிமையாகப் பேசக் கூடியவர் திரு . ஈ . வி . கே சம்பத் . மென்மையான சொற்களால் வன்மையாகப் பேசக் கூடியவர் கண்ணதாசன் . திருச்சியில் இரு கட்சி இணைப்புக்கும் பின் நடந்த காங்கிரஸ் மாநாட்டின் மாலை நேரப் பொதுக்கூட்டம் . பலர்பேசிய பின் காமராசர் பேசிக் கொண்டிருந்தார் . நாட்டு நடப்பு , மக்கள் நிலை பற்றி ஆழமாகவும் , அழுத்தமாகவும் உரையாற்றிக்கொண்டிருந்தார் . அப்போது திடீரென கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது . கைதட்டல் வந்த இடத்தை தலைவர் கூர்ந்து பார்த்தார் . அங்கே வந்து கொண்டிருந்தவர் கவியரசர் கண்ணதாசன் . அவரைப் பார்த்து விட்ட தலைவர் “ யாரு ? கண்ணதாசனா ? ஏ கிறுக்கா அப்படியே உட்காரு ” என்று ஒலி பெருக்கியிலேயே ஒரு போடு போட்டார் . கண்ணதாசனும் அப்படியே தரையில் அமர்ந்தார் . தவைர் உரை தொடர்ந்து நடந்து முடிந்தது . அதன் பின்னர் கண்ணதாசன் என்ற எரிமலை முழங்கிட கூட்டம் நிறைவு பெற்றது . தலைவர் தன்னைக் “ கிறுக்கா ” என்று சொல்லி வாழ்த்த மாட்டாரா என்று ஏங்கியவர்கள் பலர் உண்டு . ஏனெனில்தலைவர் தனது இதயபூர்வமான அன்பை அந்தச்சொல் மூலமே வெளிப்படுத்துவார் . 82 81. நமது நாகரிகம் ஒருத்தர் வீட்டு வசதி வாரியத்தில் வீடுகட்ட ஆசைப்பட்டு ஒரு நிறுவனத்தில் கடன் பெற்று வீடுகட்டினார் . திடீரென ஒருநாள் வீடு சுவர் விரிந்து மேல் கூரையும பிளந்து விரிசல் ஏற்பட்டு விட்டது . வீடு கட்டியவர் கோபத்துடன் நிறுவன அதிகாரியிடம் வந்து கத்தினார் . “ வீடு பிளந்து இரண்டு வீடா ஆயிட்டது சார் ” என்று அழாக்குறையாகப் புலம்பினார் . “ கோபப்படாதீங்க . விளக்கமா பேப்பர்லே எழுதிக்கொடுத்துட்டுப்போங்க . ஒரே வாரத்துலே ஆக்ஷன் எடுக்கிறோம் ” என்றார் அதிகாரி . சில நாட்கள் கழித்து இவருக்கு ஒரு கடிதம் வந்தது . பதில் , “ வணக்கம் . எங்களிடம் 2.5 லட்சத்தில் ஒரு வீடு வாங்கி மாதம் 2000 கட்டி வருகிறீர்கள் . அது வெடித்து இரண்டு வீடாக ஆகி விட்டதாக எழுதியுள்ளீர்கள் . மகிழ்ச்சி . இந்த மாதம் முதல் இரண்டு வீட்டுக்கும் சேர்த்து மாதம் நாலாயிரம் கட்ட வேண்டும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம் ” இதைப் படித்த வீட்டுக்காரர் மயங்கி விழுந்தார் . வீடு கட்டுவதில் திட்டமிடாவிட்டால் சிக்கல் வரும் . அதே போல நகரத்தைத் திட்டமிடுவதிலும் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் . சென்னை நகரம் திட்டமில்லாமல் வளர்ந்த நகரமாகும் . முதலில் வந்த போர்ச்சுகீசியர்கள் சாந்தோம் என்ற சிற்றூரை அமைத்தனர் . பின் ஆங்கிலேயர்கள் ஜார்ஜ் கோட்டையை கட்டி அதனுள் தங்கள் குடியிருப்பை அமைத்துக்கொண்டு தங்களின்சேவை புரிவோருக்கான தங்குமிடங்களையும் உருவாக்கினார் . ஆனால் 1640 இல் செயிண்ட ஜார்ஜ் கோட்டை அமைக்கப்படுவதற்கு முன்பே மயிலாப்பூர் , திருஅல்லிக்கேணி , திருவான்மியூர் , சேத்துப்பட்டு , திருஒற்றியூர்போன்ற அழகிய சிற்றூர்கள் பழமையோடு விளங்கி வந்தன . சென்னையில் மக்கட் பெருக்கமும் வளர்ந்தது . 1940 ஆம் ஆண்டு சென்னையின் மக்கள் தொகை 7 லட்சம் . காமராசர் ஆட்சி ஏற்ற பிறகு அது மும்மடங்காக உயர்ந்தது . நகர அபிவிருத்திக் கழகம் ஏற்பட்டு (C.I.T.) புதிய குடியிருப்புப் பகுதிகள் தோன்றின . சென்னை நகரின் புறநகர்ப் பகுதியில் மேலைநாட்டுப் பாணியில் குட்டி நகரங்களை அமைக்க நகர அபிவிருத்திக் கழக அதிகாரிகள் திட்டமிட்டனர் . இதற்காக மேல் நாடு சென்று ஆய்வு செய்ய கூடிப்பேசினர் . துறை சார்ந்த அமைச்சரையும் நேரில் சந்தித்துக்கோப்பில் ஒப்புதல் பெற்றனர் . இனி முதலமைச்சர் ஒப்புதல் பெறுவது தான் பாக்கி . அதுவும் கிடைத்து விட்டால் அரசுப் பணத்தில் விமானத்தில் வெளிநாட்டுக்குப் பறக்கலாம் . காமராசர் 1954 ஏப்ரல் 13 ஆம் நாள் பதவியேற்ற போது “ ஹிந்து ” நாளிதழ் காமராசரின் பரந்த கட்சி அனுபவத்தைப் புகழ்ந்து எழுதியதே தவிர , அரசை நடத்தும் விவசாகரத்தில் ராஜாஜியின் ஆற்றலை இவரிடம் எதிர்பார்க்க முடியாது என்பது போல எழுதியிருந்தது . லண்டனிலே படித்த ஐ . சி . எஸ்உயர் அதிகாரிகள்தான் மேனாட்டுப் பயணத்துக்கான கோப்பைக் காமராசரிடம் பரிந்துரைத்தார்கள் . எல்லாரும் அவர் அதில் கையெழுத்திட்டு விடுவார் என்றே நம்பினார்கள் . கோப்பைப் படித்த தலைவர் சிந்தித்தார் . திட்டமிட்டு அமைக்கபட்ட ஊர் நம் நாட்டில் இல்லையா ? மேல நாட்டுக்காரனா நமக்கு இதில் வழி காட்டுவது ? அதிகாரிகள்சென்று பார்த்துவரக் கூடிய இடங்கள் நம் பண்பாட்டுக்கு ஒத்து வரக்கூடியதுதானா மக்கள் வரிப்பணத்தில் இந்த மேனாட்டுப் பயணம் தேவையா ? என்ற எண்ணம் அவர் மனதில் தோன்றியது . அப்போது அவர் மனத்தில மதுரை மாநகர் தோன்றியது . ஊரின் மையத்தில் மீனாட்சி அம்மன்கோவில் சுற்றி ரத வீதிகள் , அடுத்த சுற்றில் அளவெடுத்தது போல மாட வீதிகள் , அதற்கடுத்த ஆவணி வீதிகள் , இடையில் இவற்றை இணைக்கும் சாலைகள் , அந்தக் காலத்திலேயே தொலை நோக்கோடு நகரை அமைத்திருக்கிறார்கள் . இதற்கு மேல் திட்டமிட என்ன இருக்கிறது எனச் சிந்தித்தவர் , “ இதற்காக மேனாட்டுப் பயணம்தேவையில்லை . எக்காலத்திற்கும் ஏற்ற மதுரை நகரைக் கண்டு ஆய்வுசய்து வாருங்கள் .” என்று கோப்பில் குறிப்பெழுதிக் கையெழுத்திட்டார் . இப்படி எந்த விஷயத்திலும் சிந்தித்துச் செயலாற்றக் கூடிய வல்லமை பெருந்தலைவருக்கு உண்டு . 83 82. பூகோளம் புரிந்தவர் ஒரு பெரிய நதியில் ஒரு படகு சென்று கொண்டிருந்தது . அதில் ஒரு விஞ்ஞானி , ஒரு பண்டிதர் , ஒரு வரலாற்றுப்பேராசிரியர் ஆகியோர் பயணம் செய்து கொண்டிருந்தனர் . விஞ்ஞானி படகோட்டியைப் பார்த்து “ உனக்கு வானிலை சாஸ்திரம் தெரியுமா ?” என்று கேட்டார் . படகோட்டி தெரியாது என்றார் . அடடா உன் வாழ்க்கையில் 25 சதவீதம் வீணாப்போச்சு என்றார் விஞ்ஞானி . பண்டிதர் படகோட்டியிடம் “ உனக்கு இலக்கணம் தெரியுமா ” என்று கேட்டார் . “ தெரியாது ” என்றான் படகோட்டி . “ அடடா உன் வாழ்க்கையில் 50 சதவீதம் வீண் ” என்றார் பண்டிதர் . வரலாற்றாசிரியர் , உனக்கு பழங்கால நாகரிகம் பற்றித் தெரியுமான்னு கேட்டார் . அதுக்கும் தெரியாதுன்னான் படகோட்டி . அடடா உன் வாழ்க்கையிலே 75 சதவீதம் வீணாப்போச்சே என்றார் வரலாற்றாசிரியர் . அந்த நேரம் படகிலே ஓட்டை விழுந்து தண்ணீர் உள்ளே வர ஆரம்பித்தது . படகோட்டி மற்ற மூவரையும் பார்த்து “ உங்களுக்கு நீந்தத் தெரியுமா ? படகு மூழ்கப்போவுதே “ ன்னான் . மூவரும் தெரியாதுன்னு அலறினார்கள் . உங்க வாழ்க்கை 100 சதவீதம் வீண் என்ற படகோட்டி நீந்தித் தப்பித்தான் . பள்ளிப்பாடங்களை விட அனுபவமே சிறந்தது . “ எற்றிற் குரியர் கயவர் ஒன்றுற்றக்கால் விற்றற் குரியர் விரைந்து “ என்று இன்றைய அரசியல் நிலையை அன்றே கூறியவர் வள்ளுவர் பெருமான் . அதாவது கயவர்கள் தனக்கு இலாபம் வருகிறது என்றால் நாட்டைக் கூட விற்றுவிடுவார்கள் என்று அரசியல் என்ற அதிகாரத்தில் கூறினார் வள்ளுவர் . ஆனால் பெருந்தலைவரோ நாட்டு விடுதலையைப் போற்றி நாட்டின் நலத்தையும் வளத்தையும் பெருக்குவதே தனது உயிர் மூச்சாகக் கொண்டவர் . தொழில் வளம்பெருகினால் மக்கள் வளம் பெறுவர் என்ற தொலைநோக்குப் பார்வை கொண்டவர் தலைவர் . கனரக கொதிகலன் தொழிற்சாலை என்ற மிகு அழுத்த மின் சக்தி மூலம் செயல்படும் ஒரு மாபெரும் தொழிற்சாலையை இந்தியாவில் அரசின் சார்பின் நிர்மானித்துத் தர ஒரு செக் நாட்டு நிறுவனம் முன் வந்தது . இதைத் தமிழகத்தில் தொடங்கத் தலைமையாட்சியரிடம் ஒப்புதல் வாங்கினார் பெருந்தலைவர் . செக் நாட்டு தொழில் விற்பன்னர்களும் , நடுவண் அமைச்சின் துறை அதிகாரிகளும் தமிழகம் வந்தனர் . அவர்களுடன் தமிழக அரசுத் துறை அதிகாரிகளும் இணைந்து தமிழகத்தில் பொருத்தமான இடத்தைத் தேடி வலம் வந்தனர் . பரந்த வெளி , தூய நீர் , தேவையான மின் சக்தி , போக்குவரத்துக்கான தொடர் வண்டி வசதி இத்தனையுங் கூடிய ஓர் இடத்தைத் தமிழக அதிகாரிகளால் காட்ட முடியவில்லை . அலைந்து சோர்ந்த செக் நாட்டு விற்பன்னர்கள்தமிழகத்தில் இடம் இல்லை என முடிவெடுத்துக் கிளம்பத் தயாரானார்கள் . இதைக் கேள்விப்பட்ட தலைவர் காமராசர் அவர்களையும் , உடன் சென்ற நம் அதிகாரிகளையும் அழைத்து விசாரித்தார் . அதிகாரிகள் சென்று காட்டிய இடங்களைப் பட்டியலிட்டு அவர்கள் கேட்கும் வசதிகள் ஒரு சேர அமைந்த இடம் கிடைக்கவில்லை என்றனர் . ஆனால் தமிழகத்தின் மூலை முடுக்குகள் எல்லாம்தனது சுற்றுப் பயணத்தின்போது அறிந்திருந்த காமராசர் , ஒரு கணம் சித்தித்துவிட்டு “ திருச்சிக்குக் கிழக்கே காவிரி ஆற்றங்கரையில் திருவெறும்பூர் என்ற ஊர் இருக்கிறதே அந்த இடத்தைக் காட்டினீர்களா ?” என்று தமிழக அதிகாரிகளைக் கேட்டார் . அவர்கள் இல்லை என்றனர் . “ ஏன் ? அவங்க கேட்கிற எல்லா வசதிகளும் அங்கே இருக்கே . போய் முதல்லே அந்த இடத்தைக் காட்டிட்டு வாங்க ” என்றார் . என்ன ஆச்சரியம் . அந்த இடத்தைப் பார்வையிட்டு செக் நாட்டு வல்லுநர்களுக்கு அந்த இடம் எல்லா வகையிலும் பொருத்தமானதாகத் தோன்றியது . அங்கு உருவாகி இன்று உலக நாடுகளுக்குத் தன் செய்பொருளை ஏற்றுமதி செய்யும் “ பெல் ” என்றழைக்கப்படும் பாரத ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் என்ற பெருமை வாய்ந்த நிறுவனமே அது . எதிர்க்கட்சிக்காரர்கள் காமராசர் உயர்நிலைப் படிப்பைக் கூட முடிக்காதவர் இவருக்கு ஆளும் ஆற்றல் எப்படியிருக்கும் ? என்று கிண்டல் செய்வதுண்டு . அப்போது பெருந்தலைவர் அடக்கமாக “ பூகோளம் என்பது நதிகள் , மலைகள் , பயிர் வகைகள் , மக்கள் வாழ்க்கை என்பதைப் பற்றிக் கூறும் கல்வி என்றால் அதை நான் நன்கு அறிவேன் . ஆனால் புத்தகப் படிப்புதான் பூகோளம் என்றால் அது எனக்குத் தெரியாது அது எனக்குத் தேவையுமில்லை ” என்றே கூறுவார் . 84 83. வீரஉரை ஒரு இடத்தில் ஒரு இந்தியன் , ஒரு ரஷ்யன் , ஒரு அமெரிக்கன் மூவரும் கூடி இறைவனைப் பிரார்த்தித்தார்கள் . கடவுள்தோன்றினார் . ரஷ்யர் , “ ரஷ்யா எப்போது முன்னேறும் ” என்று கேட்டார் . உடனே கடவுள் “ இன்னும் 50 வருடம் ஆகும் ” என்றார் . உடனே ரஷ்யர் “ அதைப் பார்க்க நான் இருக்க மாட்டேனே ” என்று கூறி அழுதார் . அமெரிக்கரும் கடவுளிடம் அதே கேள்விகளைக்கேட்க “80 வருடம் ஆகும் ” என்றார் கடவுள் . “ அவ்வளவு காலம் வாழ்ந்து நான் அதைப் பார்க்க முடியாதே ” என்று அமெரிக்கரும் அழுதார் . இறுதியாக இந்தியர் “ எங்கள் இந்தியா எப்போது முன்னேறும் ?” என்று கேட்டது தான் தாமதம் கடவுள் அழ ஆரம்பித்தார் . ஏன் என்று கேட்டால் “ அதைப் பாாக்க நானே இருக்க மாட்டேனே ” என்றாராம் . ஆனால் பெருந்தலைவர் காமராசர் போன்ற தலைமை கிடைத்தால் இந்தியா உலகிலேயே முதன் முதலில் முன்னேறி இருக்கும் என்று கடவுள் கூறி இருப்பார் . 1973 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி சென்னை கண்ணப்பர் திடலிலும் , சைதாப்பேட்டை தேரடித்திடலிலும் , காங்கிரஸ் கூட்டங்கள் நடந்தன . சுதந்திரம் பெற்ற பிறகு காங்கிரசார் அதிலும் தமிழக காங்கிரசார் எதற்கும்போராட வேண்டிய அவசியம் நேரவில்லை . காரணம் தமிழகத்தில் பெருந்தலைவர் கட்சிப்பொறுப்பு ஆட்சிப்பொறுப்பையும் திறம்பட நடத்தியதுதான் . ஆட்சிக்கு வந்த தி . மு . க . அரசு மதுவிலக்கை ரத்து செய்தது . காங்கிரசார் இதனை எதிர்த்து போராட்டம் நடத்த முடிவு செய்தனர் . விலைவாசி உயர்வு , விவசாயிகள் பிரச்சினை , மதுவிலக்கை மீண்டும் அமுல்படுத்துதல் , நெசவாளர் பிரச்சினை போன்ற பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு தமிழ் நாட்டில் போராட்டம் நடத்த காங்கிரசார் முடிவு செய்தார்கள் . காமராசரின் கட்டளைக்காக காத்துக் கிடந்த பல ஆயிரக்கணக்கான காங்கிரஸ் இளைஞர்கள் உற்சாகத்துடன் போராட்டத்தில் குதித்தார்கள் . இந்தச் சூழலில் சைதாப்பேட்டை கண்ணப்பர் திடல் இரண்டு கூட்டங்களில்பேசிய பெருந்தலைவர் , “ நாட்டின் இன்றைய நெருக்கடிகளுக்குப் பொருளாதார அரசியல் சூழ்நிலைதான் காரணம் , வேகமாக திட்டம்போட்டார்களே தவிர வேலை வாய்ப்பு இல்லை , உறைவிட வசதியில்லை ; ஏமாற்றுபவர்கள் அதிகமாகி விட்டதால் பணவெறி பதவி வெறியில் நாடு நிலைகுலைந்து விட்டது . காந்தீய வழியில் போராடுவோம் . இதில் வன்முறை , முறைகேடு இருக்காது . அறப்போராட்டத் தொண்டர்கள் போலீசாரால் எத்தகைய துன்பம் வந்தாலும் பொறுமையோடு தாங்கிக்கொள்ள வேண்டும் . வாய்மையே வெல்லும் என்று கூறினார் . இந்த வீர உரை இளைஞர்களுக்கு எழுச்சியை உண்டாக்கியது . தமிழ் நாட்டில் காங்கிரஸ் தலைவர்கள் , தொண்டர்கள் உட்பட 35000 பேர் கைது செய்யப்பட்டு சிறை வைக்க இயலாததால் மீண்டும் விடுதலை செய்யப்பட்டனர் . 85 84. அரசின் கடமை அறிஞர் கான்பூசியஸ் அவர்களிடம் “ நல்ல அரசுக்கு உரிய அம்சங்கள் எவை ?” என்று கேள்வி கேட்கப்பட்டது . அதற்கு கான்பூசியஸ் “ மூன்று அம்சங்கள் தேவை . மக்களுக்குப்போதிய அளவு உணவுப்பொருட்கள் , படைபலம் , பொதுமக்களின் நம்பிக்கை , இந்த மூன்றில் ஒன்றைக் கைவிட நேரிட்டால் முதலில் படை பலத்தைக் கைவிடலாம் . அடுத்து ஒன்றைக் கைவிட நேரிட்டால் உணவைக் கைவிடலாம் . ஆனால் பொதுமக்களின் நம்பிக்கை இல்லாவிட்டால் எந்த அரசுமே இராது ” என்றார் . அப்படி மக்களின் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்த்து அவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமான நல்ல தலைவராக இருந்தவர் பெருந்தலைவர் . அரசு மருத்துவமனைகளில் உள்ள பயிற்சி மருத்துவர்கள்வேலை நிறுத்தம் மேற்கொண்டனர் . மருத்துவப் பட்டப்படிப்பின் ஐந்தாண்டுக் காலப்படிப்பை முடித்த பின் ஓராண்டுக் காலம் அவர்கள் அரசு மருத்துவமனைகளில் பயிற்சி பெற வேண்டும் . அதை வெற்றிகரமாக முடித்த பின்னரே மருத்துவப் பட்டச் சான்றிதழ் வழங்கப்படும் . இந்த ஓராண்டுப் பயிற்சிக் காலத்தில் அவர்களுக்கு மாதம் ரூ .2500 கொடுக்கப்பட்டு வந்தது . இதை ரூ .3000 ஆக உயர்த்தித் தர வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துப் போராட்டம் நடத்தினார்கள் . இந்த மருத்துவப் படிப்பு தோற்றுவிக்கப்பட்ட நாளில் இருந்து 1963 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை இந்த பயிற்சிக் காலத்தில் மாணவர்களுக்கு எந்தவிதப் பொருளுதவியும் வழங்கப்படவில்லை . அவர்கள் தங்கள் கைக்காசுகளைச் செலவழித்தே ஓராண்டு பயிற்சியை முடித்தனர் . அவ்வப்போது உள்ள துறை அமைச்சரிடம் மாணவர்கள் தங்கள் குறைகளை எடுத்துக் கூறினாலும் எந்தத் தீர்வும் ஏற்படவில்லை . பெருந்தலைவர் முதல்வராக இருந்த காலத்தில் அத்துறை அமைச்சராயிருந்த திருமதி ஜோதி வெங்கடாச்சலம் அம்மையார் அவர்கள்மாணவர்கள் தரும் கோரிக்கை விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்வாரே தவிர அவர்களது குறை தீர்த்து வைக்க முன்வரவில்லை . இந்நிலையில் பயிற்சி மருத்துவர்கள் இருபது பேர் சேர்ந்து பெருந்தலைவரைப் பார்க்க முடிவெடுத்து தலைமைச்செயலகம் சென்றனர் . பெருந்தலைவர் வந்தார் . “ நீங்களெல்லாம் யாரு ?” தலைவர் “ ஐயா நாங்களெல்லாம் ஹவுஸ் சர்ஜன்கள் ” என்றார் ஒரு டாக்டர் . “ அப்படின்னா என்ன ?” ன்னார் தலைவர் . “ ஐந்து வருடம் டாக்டர் படிப்பை முடிச்சிட்டு ஒரு வருடம் பயிற்சி டாக்டராக வேலை பார்ப்பவர்கள் . நாங்கதான் இந்த ஒரு வருடம் நோயாளிகளைப் பார்த்து சிகிச்சை அளிப்போம் . இந்த ஒரு வருடம் முடிஞ்ச பிறகுதான் டாக்டர்கள் - ங்கிற பேர்லே வேலை பார்க்க முடியும் . “ சரி இப்ப என்னை எதுக்குப் பார்க்க வந்தீங்க ?” தலைவர் “ ஐயா இந்த ஒரு வருடப் பயிற்சிக் காலத்துக்கு எங்களுக்கு ஏதாவது உதவித் தொகை தரணும்னு கேட்டுக்கொள்கிறோம் ” என்று டாக்டர்களில் ஒருவர் சொன்னார் . “ இதென்னய்யா அநியாயமா இருக்கு 5 வருடம் படிச்சுட்டு ஒரு வருடம் ஓசியா வேலை வாங்கிறதா ? சரியில்லையே நீங்க போங்க . இதை நான் என்னன்னு பார்க்கிறேன் ” என்றார் தலைவர் . நான்கே நாட்களில் பயிற்சி டாக்டர்கள் அனைவருக்கும் மாதம் ரூ .105 வழங்கப்படும் என்ற உத்தரவு வந்தது . நியாயம் என்றால் உடனடி முடிவெடுப்பதில் தலைவர் காமராசர் தான் அனைவருக்கும் முன்னோடி ஆவார் . அன்று அவர் உத்தரவு இட்ட ரூ .105 தான் இப்போதைய விலைவாசிக்கு ஏற்ப உயர்த்தப்பட்டுள்ளது . 86 85. பெரியார் போற்றிய பெருந்தகை பெரியார் ஈ . வெ . ரா . அவர்கள் கூட்டத்தில்பேசுவதற்காக மேடையில் அமர்ந்திருந்தார் . அப்பொழுது கூட்டத்தின் முன் வரிசையில் இருந்த இளைஞர் ஒருவன் சிறிதும் மரியாதை இன்றித் தன் கால்மேல் காலைப்போட்டு உட்கார்ந்திருந்தான் . மேடையில் இருந்த இன்னொருவர் பெரியாரிடம் , “ அந்த இளைஞனைப் பார்த்தீர்களா ? நாம் எல்லாம் மேடையில் இருக்கிறோம் . கால்மேல் காலைப் போட்டுக்கொண்டு கொஞ்சம்கூட மரியாதை இல்லாமல் இருக்கிறான் ?” என்றார் . அதற்குப் பெரியார் “ அவன் கால்மேல் அவன் காலைப் போட்டுக் கொண்டு இருக்கிறான் . இதில் நம்ம மரியாதை எங்கு குறைகிறது ? என்று பதில் சொன்னார் . இப்படி எதையும் பகுத்தறிவோடு பார்க்கிற பெரியார் பெருந்தலைவரைப் பற்றிப் பெருமிதமாகப் பேசியவர் . தந்தைப்பெரியாரின் நீண்ட கால ஏக்கம் நிறைவேறியது போல அமைந்தது காமராசர் ஆட்சி . அந்தக் காலத்தில் சேலம் நகர் மன்றத் தலைவராக சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் இருந்தார் . இருவரும் நெருங்கிய நண்பர்கள் . ராஜாஜியின் வேண்டுகோளை ஏற்று பெரியார் அரசியலுக்கு வந்தார் . ராஜாஜி மிதவாதி , பெரியாரோ தீவிரவாதி . காந்தியின்மேலுள்ள பற்றுதலால் அவரது மதுவிலக்குக் கொள்கையை ஏற்று தன் தோட்டத்துத் தென்னை மரங்களை வெட்டினார் . கதராடைக் கொள்கைக்காக பிரச்சாரம் செய்தார் . காந்தியின் “ ஹரிஜன முன்னேற்றம் ” என்ற கொள்கைக்கு ஆதரவாக வைக்கம் போராட்டத்தில் ஈடுபட்டு “ வைக்கம் வீரர் ” என்ற பெயர் பெற்றார் . தமிழரிடையே வறுமை , அறியாமை , கல்லாமை , சாதியுணர்வுச் சிறுமை போன்ற குடி கெடுக்கும் “ ஆமைகளை ” ஒழிப்பதற்குப் பொதுவாழ்வே சிறந்தது என உணர்ந்து சொல்லாற்றலை வளர்த்து கொண்டார் . நாட்டில் அமைந்த மக்களரசுகளின் பிரதமர்களாக பனகல் அரசர் , முனுசாமி ரெட்டியார் , ராஜாஜி ( ஆரியர் ), டி . பிரகாசம் , ஓமந்தூர் ராமசாமி ரெட்டியர் , குமாரசாமி ராஜா போன்றவர்கள் ஆட்சி செய்தார்களே அன்றி தமிழ்நாட்டின் தமிழன் ஒருவன் கூட இல்லையே என்று வருந்திய நிலையில் காமராசர் முதல்வரானதும் பெரியார் மிகவும் மகிழ்ந்தார் . காமராசரின் எளிமை “ பண்பாடு ” முழு அர்ப்பணிப்பு , செயல்திறன் கண்டு அவரைத் தமிழரின் துயர் துடைக்க வந்த “ பச்சைத் தமிழர் ” என்று பாராட்டினார் . பெரியார் அவர்கள் , “ இன்றைய காமராசர் ஆட்சியில் நமது நாடு அடைந்த முன்னேற்றம் ஆயிரம் ஆண்டுகளில் என்றுமே நடந்ததில்லை . மூவேந்தர்கள் , நாயக்கர்கள் , மராட்டியர்கள் , முஸ்லீம்கள் , வெள்ளைக்காரர்கள் , இவர்கள் ஆட்சியில் எல்லாம் நமது கல்விக்கு வகை செய்யப்படவில்லை . தோழர்களே என்சொல்லை நம்புங்கள் . இந்த நாடு உருப்பட வேண்டுமானால் இன்னம் பத்து ஆண்டுகளுக்காவது காமராசரை விடாமல் பிடித்துக் கொள்ளுங்கள் . அவரது ஆட்சி மூலம் சுகமடையுங்கள் . காமராசரைப் பயன்படுத்திக்கொள்ள நாம் தவறிவிட்டால் தமிழர்களுக்கு வாழ்வளிக்க வேறு ஆளே சிக்காது ” என்று பேசினார் . காமராசர் திட்டத்துக்கே பெருந்தலைவர் , முதல்வர் பதவியைத் துறக்க முடிவெடுத்த போது எதிர்த்துக் குரல் கொடுத்தவர் பெரியார் . பிறகு காமராசர் குடியாத்தம் தொகுதியில் போட்டியிடப்போவதாகக் கூறிய உடன் முதலில் ஆதரவு தெரிவித்தவர் பெரியார்தான் . இப்படி எதிர்க்கட்சியாக இருந்தாலும் கூட பெரியாரால்போற்றப்பட்ட பெருமை பெருந்தலைவருக்குக் கிடைத்தது . 87 86. பிறர் நலம் பேணுவோம் லுக்மான் ஹக்கீமிடம் “ யாரைக் கண்டாலும் இப்படி மரியாதை காட்டுகிறீர்களே இதை யாரிடமிருந்து கற்றீர்கள் ?” என்று கேட்டார் அவருடைய நண்பர் . “ முட்டாளிடமிருந்து ” என்று பதில் சொன்னார் ஹக்கீம் . “ என்ன முட்டாளிடமிருந்தா ?” என்று வியப்புடன்கேட்டார் நண்பர் . “ அந்த முட்டாள்கள் செய்யும் அவமரியாதையை எல்லாம் தெரிந்து கொண்டு அவற்றை எல்லாம் விட்டு விட்டேன் . அவ்வளவுதான் ” என்றார் ஹக்கீம் . பிறருக்கு இடைஞ்சல் செய்யாமல் இருப்பதே ஒரு பண்புதான் என்பதை நன்கு உணர்ந்தவர் பெருந்தலைவர் . இந்தப் பண்பு பற்றி தினமணி ஆசிரியர் ஏ . என் . சிவராமன் கூறும் செய்திகளைப் பார்க்கலாம் . நாளேட்டு உலகின் பிதாமகர் என்று அழைக்கப்பட்டவர் திரு . ஏ . என் . சிவராமன் ஆவார் . 53 ஆண்டுகள் தினமணி நிறுவனத்தில் பணியாற்றிப் பல ஆண்டுகள் அந்த நாளேட்டின் ஆசிரியராகவும் பணியாற்றியவர் . பெருந்தலைவர் காமராசர் மீது மிகுந்த அன்பு கொண்டவர் . அவரது கடைசிக் காலம் வரை நண்பராக இருந்தவர் . 13-2-2002 ஆண்டுக்கான ஆனந்த விகடன் வார ஏட்டில் அவர் பேட்டி அளித்தார் . அதில் “1930 ஆம் ஆண்டு வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டேன் . போராட்டத்தை ஆதரித்துப் பிரசங்கம் செய்தேன் . இப்படி ஒரு நாள் பேசிக்கொண்டிருந்த போதே உப்பளங்களை நோக்கி நடக்கத் தொடங்கினேன் . ஒரு கான்ஸ்டபிள் ஓடிவந்து என் மார்பில் ஒரு லத்தியை வைத்துப் பலமாக அழுத்தினார் . இதைப் பார்த்துப் பதறிய கலெக்டர் “ ஏய் குச்சியை எடுடா மூச்சு திணறிச் செத்துப் போகப் போறான் “ னு கத்தினார் . பிறகு விசாரணை நடத்தி ஒரு வருடம் சிறைத் தண்டனை கிடைத்தது . திருச்சி , சென்னை , மத்தியச் சிறைகளில் சில காலம் இருந்தேன் . கடைசியில் அலிப்புரம் ஜெயிலில் அடைத்தார்கள் . வெறும் கருங்கல் தரைதான் எழுபதுக்கு நாற்பதடி பெரிய ரூம் . அதிலே வரிசையா படுத்துக் கிடப்போம் . காலையிலே நாலு அவுன்ஸ் கஞ்சி , மதியம் சாதம் , குழம்பு சாயந்திரம் கஞ்சி . இந்தச் சிறையிலே எனக்கு எதிரே தான் காமராசர் படுத்திருப்பார் . படிச்சவங்களுக்கு இந்தப் படிக்காத மேதை தந்த மரியாதையை வேறு எவரும தந்ததில்லை . ஜெயில்லே நான் ஒரு ஓரமா உட்கார்ந்து சதா புத்தகம் படிச்சுட்டே இருப்பேன் . குறுக்கும் நெடுக்குமா போறவங்க பேசிகிட்டே நடப்பாங்க . அப்போ காமராசர் “ நமக்குத் தான் படிப்பறிவு இல்லை . படிக்கிறவங்களையாவது தொந்தரவு பண்ணாம இருங்கண்ணேன் “ னு சொல்வாரு . கடைசி வரைக்கும் எனக்கும் அவருக்கும் அந்த நட்பு இடைவெளியில்லாமல் இருந்தது . யான் பெற்ற பேறு பெறுக இவ்வையகம் என்று பெருமக்கள் கூறினார்கள் . ஆனால் இன்றைய கால கட்டத்தில் தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை . எதிரிக்கு இரண்டு கண்ணும்போக வேண்டும் என்று நினைப்பவர் பலர் உண்டு . ஆனால் பெருந்தலைவர் தனக்கு கிடைக்காத கல்வி எனும்பேறு இந்த உலகத்தில் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று நினைத்த உயர்ந்த உள்ளம் படைத்தவர் என்பதை ஏ . என் . சிவராமனது பேட்டி மூலம் நாம் அறிந்து கொள்ளலாம் . 88 87. பட்டங்கள் வேண்டாம் அரசன் ஒருவன் பக்கத்து நாட்டின் மீது படையெடுப்பதற்காக தன் நாட்டு எல்லையோரம் பாசறை அமைத்துத் தங்கியிருந்தான் . வீரர்களுக்கு எல்லாம் சமையல் நடந்து கொண்டிருந்தது . அரசரிடம் வந்த சமையல்காரன் ஒருவன் “ சமைப்பதற்கு உப்புக் குறைவாக உள்ளது . கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யுங்கள் ” என்றான் . உடனே அரசன் வீரன் ஒருவனை அழைத்துப் பக்கத்திலுள்ள ஊருக்குச் சென்று விலை கொடுத்து உப்பு வாங்கி வா என்றான் . அப்போது அருகிலிருந்தவர்கள் “ உப்பு தானே சும்மா கேட்டாலே கிடைக்குமே விலைக்கு வாங்க வேண்டுமா ” என்று கேட்டார்கள் . அதற்கு அரசன் “ என் அதிகாரத்தைப் பயன்படுத்தி நான் ஐந்து கோழி முட்டைகளை இலவசமாக வாங்கினால் என் படையினர் இவ்வூரிலுள்ள கோழிகளை எல்லாம் சுட்டுத்தின்று விடுவார்கள் ” என்றான் . பொதுவாழ்வில் இருப்பவர்கள் சுயலாபத்திற்காக பதவிகளைப் பயன்படுத்தக் கூடாது . அதற்காக பட்டங்களைக் கூட வெறுத்தவர் காமராசர் . ஒரு முறை தமிழ்ப் புலமை , சில அரசியல் சாதனை இவற்றுக்காக ஒருவருக்கு ஒரு பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம வழங்கியிருந்தது . பொதுவாக மேன்மக்கள் இப்படிப்பட்ட டாக்டர் பட்டத்தை பொருட்டாக கருதுவதில்லை . பிறரைப் போட அனுமதிக்கவும் மாட்டார்கள் . திரு . ஜவஹர்லால் நேருவும் இது போன்ற எண்ணமுடையவர் தான் . ஆனால் சில குறைகுடங்கள் தளும்பி வெற்று ஆரவாரம் எழுப்புவதில் ஆர்வம் காட்டுவார்கள் . டாக்டர் பட்டம் பெற்ற அறிஞரை ஒரு விழாவுக்குப்பேச அழைத்திருந்தார்கள் . மிகுந்த பொருட்செலவில் சுவரொட்டி ஒட்டப்பட்டது . ஆனால் அவர் அன்று அந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை . விழா ஏற்பாடு செய்த நண்பர் பதறிப்போய் தலைவரின் வீட்டுக்குச் சென்று அழைத்தார் . ஆனாலும் அவர் வரவில்லை . அவர் பெயருக்கு முன்னால் டாக்டர் என்ற பெயரைப் போடாமல் விளம்பரம் செய்தது அவருக்குக் கோபத்தை ஏற்படுத்திவிட்டது . இன்றைக்கும் இந்த நிலை தொடரத்தான் செய்கிறது . பல நிறுவனங்களிடம் காசுக்கு பட்டம் வாங்கிக் கொள்ளும் போலி மனிதர்கள் நம்மிடையே பலர் உள்ளனர் . ஆனால் இவர்களிடமிருந்து மாறுபட்ட உயர்ந்த உள்ளம் கொண்டவர் பெருந்தலைவர் . காமராசருக்கு ஒரு சிறந்த பல்கலக் கழகம் தனது பேரவையைக் கூட்டி இந்தியாவிலேயே எந்த மாநில அரசும் நினைத்துப் பாராத வகையில் கல்வித் துறையில் சிறந்த சாதனை புரிந்தமைக்காக டாக்டர் பட்டம் தரத் தீர்மானம் போட்டு அவரைத் தேடி வந்தனர் . அவர்களிடம் பெருந்தலைவர் “ டாக்டர் பட்டமா ? எனக்கா ? நான் என்ன பெரிய சாதனை செஞ்சுட்டேன்னு இந்த முடிவெடுத்தீங்க ? இதெல்லாம் வேண்டாம் . நாட்டிலே எத்தனையோ விஞ்ஞானிகள்மேதாவிகள் இருக்கிறார்கள் . அவங்களைக் கண்டு பிடிச்சு இந்தப் பட்டத்தைக் கொடுங்க , எனக்கு வேண்டாம் . நான் ஒத்துக் கொள்ளவே மாட்டேன் . போய் வாங்க ” என்று சொல்லி அனுப்பிவிட்டார் . டாக்டர் ஜன்ஸ்டீன் மகாத்மா காந்திஜியின் மறைவின்போது விடுத்த செய்தி “ இப்படிப்பட்ட ஒரு மாமனிதர் இந்த நிலவுலகத்தில் ஊனோடும் உதிரத்தோடும் உலவினார் என்பதை நமக்கு நம்புவதே கடினம் “ இப்படி சேவை ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு அதற்காகத் தன்னை நாடி வந்த பட்டங்களைக் கூட வெறுத்துத் தள்ளிய உயர்ந்த மனிதர் பெருந்தலைவர் காமராசர் .   89 88. ஆசிய ஜோதி அணைந்தது வடநாட்டில் பக்ராநங்கல் அணை கட்டப்பட்டுக்கொண்டிருந்த நேரம் . ஏராளமான தொழிலாளர்கள் அப்பணியில் ஈடுபட்டிருந்தனர் . பிரதமராய் இருந்த நேருஜி அவர்கள் , அந்த அணையின் கட்டுமானத்தைப் பார்வையிடச்சென்றார் . கல் சுமந்து வந்த ஒரு தொழிலாளியைப் பார்த்து , “ இங்கு என்ன பணி செய்து கொண்டிருக்கிறீர்கள் ?” என்று கேட்டார் . “ கல் சுமந்து கொண்டிருக்கிறேன் “ “ எதற்காக ?” “ வேலை முடிந்ததும் கூலி தருவாங்க . அதுக்காகத்தான் .” இந்தப் பதிலைக் கேட்டதும் , நேருஜி நொந்து போனார் . “ தேசிய நிர்மாணப் பணியில் ஒரு மாபெரும் திட்டம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது . அதில் என் பங்கை செலுத்திக்கொண்டிருக்கிறேன் ” என்று அந்தத் தொழிலாளி சொல்வார் என்று எதிர்பார்த்தார் . இந்தியக் குடிமகன் ஒவ்வொருவனுக்கும் இத்தகைய தேசிய உணர்வு வேண்டும என்பது அவரது உள்ளக் கிடக்கை . வேலைக்கு கூலி வாங்கினாலும் தேசத்துக்காக உழைக்கிறோம் என்ற உணர்வு வேண்டும் . இதற்கு உதாரணமான தன்னையே நாட்டுக்கு ஒப்படைத்தவர் தான் ஆசிய ஜோதி நேரு . ஆனால் அவரையும் காலன்கொண்டு போகும் காலம் வந்து விட்டதே . 1964 ஆம் ஆண்டு , மே 27 ஆம் தேதி , தமிழ்நாட்டில் சுற்றுப் பயணம்மேற்கொண்டிருந்த காமராசருக்கு ஒரு அவசரச் செய்தி வந்தது . நேருஜியின் உடல் நிலை மோசமாகி விட்டதை அறிந்ததும்தலைவர் விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார் . பெங்களூரில் அதுல்யாகோஷூம் , நிஜலிங்கப்பாவும் தலைவருடன் சேர்ந்து சென்றனர் . விமானத்தில் சென்று கொண்டிருந்த போதே பிற்பகல் 2 மணிக்கு நேருஜி அமரராகிவிட்டார் என்ற செய்தி பேரிடியாகத் தாக்கியது . விமானத்தில் கண்ணீர் வெள்ளம் கரை புரண்டது . ஒரு சகாப்தம் முடிந்தது . 17 ஆண்டுகள் நாட்டின் தலைமகனாய் இருந்து , 45 கோடி மக்களை வழி நடத்திச் சென்ற உலக அரங்கில் இந்தியாவுக்குப் பிரதான இடத்தைப் பெற்றுத் தந்த நேரு நாயகன் உடல் தகனம் செய்யப்பட்டு அஸ்தி இந்தியா முழுவதும் கரைக்கப்பட்டது . பிரதமர் நேருவின் மரணம் உலகம் முழுவதையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கியது . குல்சாரிலால் நந்தா இந்தியாவின் தற்காலிகப் பிரதமரானர் . எந்தச் சூழலிலும் மக்களை திசை திருப்பாத சக்தி படைத்தது காங்கிரஸ்தான் என்பதை காங்கிரஸ் தலைவர்கள் மீண்டும் நிரூபித்தார்கள் . 540 காங்கிரஸ் எம் . பி . க்கள் , 15 மாநில முதல்வர்கள் மற்றும் சில முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் ஆகிய அனைவரையும் சந்தித்து அவர்களது கருத்தை அறிந்து தனது விருப்பத்தையும் மக்கள் எண்ணத்தையும் அவர்களுக்கு உணர்த்தினார் பெருந்தலைவர் . இறுதியில் எல்லோரையும் ஒரு முடிவுக்குக்கொண்டு வந்து அடுத்த பிரதமரைத் தேர்ந்த சாதனை , எளிய சாதனை அல்ல . எஸ் . கே . பட்டீலும் , நந்தாவும் குறிப்பிட்டது போல “ வரலாற்றுப் புகழ் பெற்ற மாபெரும் சாதனையாகும் ” இந்தச் சிறப்பையும் தமிழகம் தந்த தவப் புதல்வர் காமராசர் அடக்கத்தோடு ஏற்றார் . 90 89. மகுடம் சூட்டிய மாமனிதர் ஏமாறுகிறவன் இருக்கிற வரையில் ஏமாற்றுகிறவனும் இருக்கத்தான் செய்வான் . அண்ணன் தம்பி இருவர் தந்தை விட்டுச் சென்ற நிலத்தை பங்கிட்டனர் . “ நிலத்தின் வருவாயில் ஆளுக்குப் பாதி ” என்றான் அண்ணன் . இதில் அண்ணன் ஏமாற்றுக்காரன் தம்பி அப்பாவி . முதல் வருடம் வயிலில் நெல் , சோளம் பயிரிட்டனர் . அண்ணன் , “ தம்பி மேல் பகுதி எனக்கு கீழ்பகுதி உனக்கு ” என்று பிரித்தான் . அதன்படி அண்ணனுககு மேலே உள்ள விளைச்சலும் தம்பிக்கு கீழே உள்ள வைக்கோலும் கிடைத்தன . மறுவருடம் “ அண்ணா மேலே எனக்கு கீழே உனக்கு ” என்றான் தம்பி . அதன்படி ஏமாற்றுக்கார அண்ணன் முள்ளங்கி , நிலக்கடலை போன்றவற்றைப் பயிரிட்டான் . பேசியபடி தம்பிக்குத் தழையும் அண்ணனுக்கு விளைபாருட்களும் கிடைத்தன . மூன்றாவது வருடம் அண்ணனிடம் ஏமாறக் கூடாது என்று முடிவுசெய்த தம்பி “ அண்ணா மேலேயும் , கீழேயும எனக்கு . நடுவில் உனக்கு ” என்றான் . அண்ணன்அந்த ஆண்டு கரும்பு பயிர் செய்தான் . தோகையும் , வேரும் தான் தம்பிக்கு கிடைத்தது . சகோதரர்களுக்கு இடையே கூட இப்படி ஏமாற்று வேலை நடக்கின்ற போது தன்னலம் கருதாது மற்றவர்களை பதவியில் அமர்த்தி அழகு பார்த்தார் பெருந்தலைவர் . ஜூன் 2 ஆம் தேதி பாராளுமன்ற கூட்டத்தை நடு மண்டபத்தில் கூட்டிப் பெருமை சேர்த்தார் தலைவர் . நேருஜிக்குப் பிறகு யார் ? கேள்விக்குப் பெருந்தலைவர் பதிலளித்த நாள் அது . நம்மை விட்டுப பிரிந்த மாபெரும் தவைர் நேருஜியின் இடத்தை நிரப்புவது நமக்கு சாத்தியமல்ல . இப்போது நம் கடமையை நிறைவேற்ற கூட்டுத் தலைமையும் , பொறுப்பும் , ஒருமித்த கருத்தும் தேவைப்படுகிறது என்று காமராசர் கூறினார் . பாராளுமன்ற காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் தலைவர் , மந்திரிகள் ஆகியோர் இருந்த அந்தச் சபையில் பெருந்தலைவர் ஒரு எச்சரிக்கையும விடுத்தார் . “ நேருஜி என்ற ஒரு குடைக்கீழ்இவ்வளவு நாளும் இருந்தோம் . அவர் அபயம் நமக்குக் கடைத்தது . நாம் தவறு செய்தால் நேருஜிக்காக மக்கள் நம்மை மன்னித்தாாகள் . அந்த நிலை இனி இல்லை . ஆகவே எதிர்காலத்தில் எல்லோரும் மிகவும் எச்சரிக்கையுடனும் கவனத்துடனும்செயலாற்ற வேண்டும் ” என்றார் . ஆறு நாட்கள் தற்காலிக பிரதமராக இருந்த நந்தா , காங்கிரஸின் பாராளுமன்றத் தலைவராக லால் பகதூர் சாஸ்திரி பெயரை முன்மொழிந்தார் . அதை மொரார்ஸிதேசாய் வழி மொழிந்தார் . ஏகமனதாக லால் பகதூர் சாஸ்திரி தேர்ந்தெடுக்கப்பட்டார் . லால் பகதூர் சாஸ்திரி பிரதமரானார் . மொரார்ஜி தேசாய் , எஸ் . கே . பட்டீல் , ஜெகஜீவன்ராம் , கிருஷ்ண மேனன் ஆகியேர் புதுப் பிரதமரை ஆதரித்துப் பாராட்டினார்கள் . இந்தியாவின் முதல் பிரதமரை ( நேருஜி ) அண்ணல் காந்தியடிகள் நமக்கு வழங்கினார் . இந்தியாவின் இரண்டாவது பிரதமரைத் தென்னாட்டுக்காந்தியான தலைவர் காமராசர் நமக்கு வழங்கினார் . 91 90. வீரர்கள் மத்தியில் மாவீரர் ஒரு சிப்பாய்தான் ஒரு சண்டையில் எதிரியின் காலை வெட்டியதாகப்பெருமை பேசினான் . இதைக்கேட்ட ஒருவர் , “ எதிரியின் தலையை வெட்டாமல் காலைப்போய் வெட்டியிருக்கும் காரணம் என்ன ?” என்றார் . அதற்கு அந்தச் சிப்பாய் “ நான் என்ன செய்வேன் ? எதிரியுடைய தலைமை வேறொருத்தன் எனக்கு முன்னமே வெட்டி விட்டானே ” என்றான் . ஆனால் நமது வீரர்கள்இப்படிப்பட்டவர் அல்லர் . தேச பக்தியும் அபரிமிதமான ஆற்றலும் கொண்டு எதிரியை நேருக்கு நேர் நின்று போரிட்டு விரட்டி அடிப்பார்கள் . 1965 இல் இந்தியா - பாகிஸ்தான்போர் மூண்ட போது பஞ்சாபில் போர் முனையில் காமராசர் சூறாவளிச் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டார் . நூற்றுக்கணக்கான வீரர்களை சந்தித்துப்பேசி உற்சாகமூட்டினார் . அவரின் பேச்சை வீரர்கள் உற்சாகத்தோடும் , ஆர்வத்தோடும் கேட்டனர் . ஒரு வீரர் தூய தமிழில் வணக்கம் என்று காமராசரின் கைகளைக் குலுக்கினார் . உடனே விழி விரிய அந்த வீரரிடம ஊர் , உறவினர்கள் முகவரி எல்லாம் கேட்டுக்கொண்டார் . வேறு பல வீரர்களின் தமிழக முகவரிகளையும் குறிததுக் கொண்டு , நான் அந்தப் பக்கம் போகும்போது அவர்களைச் சந்திக்கிறேன் என்று கூறினார் . வீரர்கள் மகிழ்ச்சிக் கூத்தாடி காமராசரை எங்கள் அண்ணன் என்று கூறினார்கள் . 1965 இல் லால் பகதூர் சாஸ்திரி சென்னைக்கு வந்தார் . யுத்த நிதியை தமிழக மக்கள் அவரிடம் கொடுத்தனர் . சென்னையில் இறுதி நிகழ்ச்சியாக அன்று மாளிகையில் காங்கிரஸ் ஊழியர் கூட்டம் நடந்தது . அங்கு சாஸ்திரி பேசிய பேச்சு கேட்பவர்கள் மனதை நெகிழச் செய்தது . காமராஜ் ஜீ , காமராஜ் ஜீ என்ற அவர் குறிப்பிட்ட போதெல்லாம் கரகோஷம் எழுந்தது . “ யுத்த களத்தில் நம் வீரர்கள் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள் . அதற்குப் பிரதானமாக உதவியவை காமராஜ் ஜியின் யோசனைகளே . காமராஜ் ஜீ உடன் பிறவாச் சகோதரர் . அவர் எனக்கு வழி காட்டியாக விளங்கி என் மூலம் நாட்டை நடத்திச்செல்கிறார் . பகை முடிக்க அவர் கூறிய யோசனைகள் மிகப்பெரிய அளவில் உதவின ” என்று லால்பகதூர் சாஸ்திரி குறிப்பிட்டபோது எழுந்த கரவொலிஅடங்க நீண்ட நேரம் பிடித்தது . 92 91. மக்களின் மகரிஷி 18 மாதங்கள் , பாராட்டுமளவிற்குத் திறமையாக நிர்வாகத்தை நடத்தி வந்தார் லால் பகதூர் சாஸ்திரி . ரஷ்யாவில் தாஷ்கண்ட் என்ற இடத்தில் இந்தியா பாகிஸ்தான் போரை நிறுத்த சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு விட்டு அங்கே அகால மரணம் அடைந்தார் . இது மக்களுக்கு மீண்டும் அதிர்ச்சியை அளித்தது . இரண்டு ஆண்டு கூட முடியவில்லை . அதற்குள் மீண்டும ஒரு புதிய பிரதமரைத தேர்ந்தெடுக்கும் நிலை ஏற்பட்டது . “ காமராசர் கைகளில் இந்தியா பத்திரமாக இருக்கிறது - இனியும் இருக்கும் . சாஸ்திரிக்குப் பின் யார் என்பதற்கு அவர் விடை காண்பார் ” என்று உலகமே காமராசர் மீது பார்வை பதித்தது . 1965 ஜனவரி 14 ஆம்தேதி அகில இந்திய காங்கிரஸ் காரியக் கமிட்டிக்கூட்டம கூட்டப்பட்டது . பாராளுமன்ற காங்கிரஸ் தலைவரைத் தேர்ந்தெடுக்க விவாதிக்கப்பட்டது . காரியக் கமிட்டி புதுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தைக் காமராசருக்கு வழங்கியது . பெருந்தலைவர் இந்திய அரசியலில் புதுமைக்கு ஒரு சின்னமாகச் செயல்பட்டார் . அழைத்தவர்களில் மாறுபட்ட கருத்துக்கொண்டவர்களையும் தன்பேச்சை ஒப்புக் கொள்ள வைத்தார் . அவரது அறிவுத் திறனை டெல்லியில் கூடிய எம் . பி . க்கள் நாளெல்லாம் சொல்லிப் பாராட்டினர் . அப்போது அதுல்யாகோஷ் காமராசரே பிரதமராக வரவேண்டும என்ற கருத்தை வெளியிட்டார் . “ என்னுடைய பெயரை இதில் இழுக்காதீர்கள் ” என்று கூறி நேருக்கு நேர் கூறி மறுத்து விட்டார் . மக்கள் அவரை மகரிஷி காமராஜ் என்று அழைத்தனர் . இந்திரா காந்தி அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்துள்ளார் . இதனால் நாட்டு மக்களுக்கு அவரை நன்றாகத் தெரியும் . ஒரு பெண் பிரதமராக வருவதை எல்லோரும் விரும்புவார்கள் என்பதால் இந்திரா காந்தியை பிரதமராக்க பெருந்தலைவர் முடிவு செய்தார் . மாநில முதல் மந்திரிகள் இந்திராகாந்திக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தனர் . 1966 ஜனவரி 16 ஆம்தேதி 16 முதல்வர்களில் 14 பேர் இந்திரா காந்தியை ஆதரிப்பதாக பகிரங்கமாக அறிவித்தார்கள் . மொரார்ஜி தேசாயும் அவரது ஆதரவாளர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைத் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டார்கள் . ஜனவரி 18 ஆம்தேதி பெருந்தலைவர் மொரார்ஜி தேசாய் வீட்டுக்குச் சென்று பேச்சு வார்த்தை நடத்தினார் . இந்திரா காந்திக்கு மெஜாரிட்டி இருக்கிறது . ஏகமனதாக பிரதமரைத் தேர்ந்தெடுக்க வழி விடுங்கள் என்றார் . ஆனால் தேசாய் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை . ஓட்டுப்பெட்டி உண்மை பேசும் என்று கூறினார் . பெருந்தலைவர் பொறுமையுடன் வெளியேறினார் . 1966 ஜனவரி 19 ஆம் தேதி புதுத்தலைவரை தேர்ந்தெடுக்க பாராளுமன்றத்தில் கூட்டம் கூடினார்கள் . சுதந்திரம் அடைந்த பிறகு பிரதமர் பதவிக்குப் போட்டி என்ற ஒன்று அன்றுதான் முதன்முறையாக நடந்தது . இந்திரா காந்தியின் பெயரை நந்தா முன்மொழிய , சஞ்சீவரெட்டி வழி மொழிந்தார் . மொராஜி தேசாயின்பெயரை கே . அனுமந்தையா முன்மொழிய டி . ஆர் . பாலிவால் வழி மொழிந்தார் . ரகசிய ஓட்டெடுப்பு 2 மணி நேரம் நடந்தது . ஓட்டுப் பெட்டி பேசியது ; 355 ஓட்டுகள் பெற்று இந்திரா காந்தி வென்றார் . 169 ஓட்டுகள் பெற்று மொரார்ஜி தேசாய் தோல்வி அடைந்தார் . காமராசரின் வலிமை என்பது அவரது சிறந்த பண்பிலும் , அரசியல் அறிவுக் கூர்மையிலும் இருந்ததை இந்தத் தேர்வு மீண்டும் நிரூபித்தது . 93 92. அறிஞர் பாராட்டிய அறிஞர் கிரேக்க நாட்டு அறிஞராக விளங்கிய சாக்ரடீசின் நண்பன் ஒருவன் டெல்லா என்ற தேவதையின் கோவிலுக்குச்சென்றான் . அந்த தேவதையைப் பார்த்து “ சாக்ரடீசை விடச் சிறந்த அறிஞன் யாராவது இருக்கிறானா ?” என்று கேட்டான் . இல்லை எனப் பதில் வந்தது . சாக்ரடீசிடம் ஓடிவந்த அவன் “ உன்னையே சிறந்த அறிஞன் என டெல்லா சொல்லக் காரணம் என்ன ” என்று கேட்டான் . அதற்குச் சாக்ரடீஸ் “ மற்றவர்களுக்கு ஒன்றுமே தெரியாத போதும் தங்களுக்கு எல்லாம் தெரியும் என நினைக்கிறார்கள் . எனக்கு ஒன்றும் தெரியாது . அப்படித் தெரியாது என்பதை நான்தெரிந்து வைத்திருக்கிறேன் . இதுதான் எனக்கும் மற்றவர்களுககும் உள்ள வேறுபாடு ” என்று விளக்கம் தந்தார் . உண்மையான அறிஞர்கள் இப்படி அடக்கமானவர்களாகவே இருப்பார்கள் . இதற்கு அண்ணா ஒரு சான்று . பெருந்தலைவர் ஒரு சான்று . காஞ்சிபுரம் பச்சையப்பன் உயர்நிலைப்பள்ளி ஆண்டு விழாவில் பெருந்தலைவர் படத்தைத் திறந்து வைத்து அறிஞர் அண்ணா உரையாற்றினார் . அதில் காமராசர் தனது பணிகளின் மூலம் நாட்டின் தரத்தை உயர்த்த முயன்றார் . தமிழர்களுக்கு நற்பணி ஆற்றினார் . தமிழர்கள் பெருமைப்படக் கூடிய நல்ல காரியங்களைச் செய்தார் . உண்மையான மக்களாட்சி இருக்கும் நாட்டில்தான் ஒரு கட்சித்தலைவர் அடுத்த கட்சித் தலைவரை மதிப்பார் . ஆனால் சர்வாதிகார நாட்டில் ஒரு கட்சித் தலைவர் இன்னொரு தலைவருக்கு சமாதிதான் கட்டுவார் . அரசியலில் கருத்து வேறுபாடு இருக்கலாம் . ஆனால் கசப்பு இருக்கக் கூடாது . கட்சிவேறுபாடு இருக்கலாம் . கத்திக் குத்து வரை சென்று விடக் கூடாது . கட்சி வேறுபாடு என்பது சந்து முனையிலிருந்து கத்துவதாக இருக்கக் கூடாது . சிலர்தான் படிக்காமலேயே மேதை ஆக முடியும் . ஆனால் அனைவருமே மேதையாக வேண்டும என்றால் படிக்காமல் இருக்க வேண்டும என்று பொருள் அல்ல . காமராசர் படித்துப் பட்டம் பெறவில்லையே தவிர படிக்கவே இல்லை என்று பொருள் கொள்ளக்கூடாது . அவர் தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் படித்துக்கொண்டே தான் இருப்பார் . என்னைப்போல நெருங்கிப் பழகுகிறவர்கள் தான் அவரது படிப்பார்வத்தைப் புரிந்து கொள்வார்கள் . காமராசர் கல்லூரியில் படிக்கவில்லையே தவிர வாழ்க்கைப்பாடத்தைப் படித்தார் . மக்களின் புன்னகையை மக்களின் பெருமூச்சை , மக்களின் கண்ணீரைப் படித்துப் பாடம் பெற்றவர் காமராசர் . 30 வருடம் 40 வருடம் என்று மக்களிடம் தொண்டாற்றினால் தான் இந்தப் பாடத்தைப் பெற முடியும் . ஒருவர் காலமான பின்தான் அவரைப் பாராட்ட வேண்டும் என்ற பண்பு எவ்வளவுக்கு எவ்வளவு நாட்டில் குறைகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது . நான் திறந்து வைத்த காமராசர் படத்தை இந்தத் தமிழ்ச் சமுதாயத்துக்கே பரிசாகத்தருகிறேன் . 94 93. குரு சிஷ்யன் காமராசரின் குருநாதர் சத்தியமூர்த்தி . அவரது மகள் லட்சுமி கிருஷ்ணமூர்த்தி காமராசரைப் பற்றி உருக்கமான தகவல்களைக் கூறியுள்ளார் . இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பு 1930 ஆம் ஆண்டு நாங்கள் சென்னை திருவல்லிக்கேணியில் தேரடி வீதியில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தோம் . அப்பா சத்தியமூர்த்தி சுதந்திரப் போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருப்பார் . அப்போது எனக்கு 5 வயது . காமராசர் அப்பாவை பார்ப்பதற்காக அடிக்கடி வீட்டுக்கு வருவார் . அவருக்கு 18 வயது இருக்கும் . அவர் என்னிடம் அய்யா இருக்கிறாரா ? என்று பணிவுடன் கேட்பார் . அப்பாவை அவர் எப்போதும் அய்யா என்றுதான் அழைப்பார் . நான் துள்ளிக் குதித்து வீட்டுக்குள் சென்று அப்பாவிடம் “ அப்பா , அப்பா காமராசர் உங்களை பார்க்க வந்துள்ளார் ” என்று கூறுவேன் . அவர் உடனே என்னிடம் மரியாதையாக பேசு அம்மா என்பார் . ஏன் என்றால் நான் சிறுபிள்ளைத்தனமாக துடுக்குடன் அவர்பெயரைச் சொன்னதை அப்பா மரியாதைக் குறைவாக நினைத்து விட்டார் . காமராசரை அப்பா வீட்டுக்குள் அழைத்து பேசுவார் . அவர்களது பேச்சு நாட்டைப் பற்றியும் , நாடு சுதந்திரம் அடைய வேண்டும் என்பதைப் பற்றியும் தான் இருக்கும் . நான் சிறுமியாக இருந்ததால் அப்போதைய நாட்டின் அரசியல் நிலவரம் பற்றி அதிகம் தெரியாது . சிறிது நேரம் காமராசர் அப்பாவிடம் பேசி விட்டுச் சென்று விடுவார் . அப்பாவை காமராசர் எப்படிக் கவர்ந்தார் ? என்பதை நான் இங்கு சொல்லியாக வேண்டும் . மதுரையில் அப்பா ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார் . இந்த கூட்டத்தில் 15 வயது ஒரு சிறுவன் துடிப்புடன் சுறுசுறுப்புடன் செயல்பட்டுக் கூட்டத்தை ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்தான் . அந்தச் சிறுவன் அப்பாவின் கவனத்தை மிகவும் கவர்ந்து விட்டான் . அந்தச் சிறுவனை அப்பா கூட்ட மேடைக்கு அழைத்து உன் பெயர் என்ன ? என்று கேட்டார் . “ என் பெயர் காமராசர் அய்யா ” என்று பணிவுடன் கூறினார் . அப்பா “ நீ என்னை சென்னையில் வந்து பார் ” என்று கூறினார் . இப்படித்தான் அப்பாவிடம் காமராசருக்கு நெருக்கம் ஏற்பட்டது . காமராசர் அப்பாவை குருநாதராகவும் , தன்னை சீடராகவும்தான் நினைத்துப் பழகி வந்தார் . அவருடைய செயல்பாடுகள் அப்பாவுக்கு மிகவும் பிடித்தது . அப்பாவுக்கு நம்பிக்கை உரியவர் ஆனார் . 1940 ஆம் ஆண்டு காங்கிரஸ் ராஜாஜி ஆதரவாளர்கள் என்றும் சத்தியமூர்த்தி ஆதரவாளர்கள் என்றும் இரு பிரிவினர்செயல்பட்டார்கள் . மாநில காங்கிரஸ் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடந்தது . இந்த தேர்தலில் ராஜாஜி தன்னுடைய ஆதரவாளரான கோவை சுப்பையாவை போட்டியிடச் செய்தார் . அப்பா தன்னுடைய சீடரான காமராசரை நிறுத்த முடிவு செய்தார் . இதை காமராசரிடம் சொன்ன போது அவர் ஏற்றுக்கொள்ளவில்லை . “ உங்கள்தொண்டனான நான் தலைவராவதா ? என்று காமராசர் உருக்கமாக அப்பாவிடம்கேட்டார் . அப்பா அவரிடம் “ நாட்டின் நன்மையைக் கருதி நீங்கள் தலைவர் ஆக வேண்டும் . தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று திட்டவட்டமாகக் கூறினார் . அப்பா கூறியதைத் தட்ட முடியாத காமராசர் போட்டியிட்டார் . தேர்தல் தியாகராயர் நகரில் உள்ள இந்தி பிரசார சபாவில் நடந்தது . அப்பா இந்தி பிரசார சபா வெளிவாசல் அருகில் நின்று கொண்டு ஓட்டு போட வந்தவர்களைக் கைகூப்பி வணங்கியபடி “ நாட்டின் நலனை கருத்தில் கொண்டு காமராசருக்கு ஓட்டுப்போடுங்கள் ” என்று கேட்டுக்கொண்டார் . தலைவர் தேர்தலில் காமராசர் வெற்றி பெற்று மாநில காங்கிரஸ் தலைவர் ஆனார் . அப்பா காங்கிரஸ் மாநிலச் செயலாளர் ஆனார் . காமராசர்தன்னைப் பற்றியோ தனது வீட்டைப்பற்றியோ சிந்திப்பதே கிடையாது . இதற்கு ஒரு சம்பவத்தை என்னால் கூறமுடியும் . காமராசர் முதல் அமைச்சர் ஆனபிறகு தியாகராயர் நகரில் இந்தி பிரசார சபா எதிரில் தணிகாசலம் சாலையில் தற்போது நாங்கள் குடியிருக்கும் வீட்டுக்கு அவர் அடிக்கடி வருவார் . அவர் எங்களிடம் “ என்னைப் பார்க்க நீங்கள் வரவேண்டாம் . நானே வருவேன் ” என்று கூறுவார் . அவர் எங்கள் குடும்பம் மீது அளவு கடந்த அன்பும் பாசமும் வைத்திருந்தார் . முதல் அமைச்சராக இருந்தபோது அவரும் , நாங்களும் திருப்பதி கோவிலுக்குச் சென்றிருந்தோம் . ஆந்திர முதல் மந்திரியாக இருந்த பிரமானந்த ரெட்டியும் கோவிலுக்கு வந்திருந்தார் . திரும்பி காரில் வரும்போது ரேணிகுண்டாவில் புதைமணலில் காரின் டயர்கள் சிக்கிக் கொண்டது . கார் நகரவில்லை . காரில் இருந்த காமராசர் கீழே இறங்கி காரைத் தள்ளினார் . முதல் அமைச்சராக இருந்த அவர் எந்தவித கவுரவமும் பார்க்காமல் காரைத் தள்ளியது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது . எங்கள் தந்தையை குருவாக மதித்து அந்த குருவுக்கு பெருமையும் புகழும் சேர்த்த முதன்மை சிஷ்யராகவே காமராசர் வாழ்ந்து மறைந்தார் . 95 94. எதிரி வீட்டு விருந்து “ பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர் “ என்றார் வள்ளுவப் பெருந்தகை . இத்தகைய இங்கிதம் எல்லோருக்கும் வராது . விருந்துக்கு அழைக்கும் சிலர் கூட மனப்பூர்வமாக அழைக்கிறார்கள் என்று சொல்ல முடியாது . உள்ளத்தில் வன்மத்தை வைத்துக்கொண்டு , உதடுகளால் உபசரிப்பார்கள் . கடைத்தெருவில் எதிரில் வருபவரைப் பார்த்து , “ வாங்க , வணக்கம் ! உங்களைப் பார்த்து ரொம்ப நாளாச்சு . நம்ம வீடு பக்கத்திலேதான் . வந்து ஒருவாய் சாப்பிட்டுவிட்டுப் போலாமே ” என்றார் ஒருவர் . கூப்பிட்டவர் ஒரு மாதிரியான ஆள் என்பதைத் தெரிந்து வைத்திருந்த அவர் , “ பரவாயிலலைங்க உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம் ” என்று கூறி தப்பிக்கப் பார்த்தார் . கூப்பிட்ட ஆள் விடவில்லை . “ ஒண்ணும் சிரமம் இல்லீங்க . எந்ததெந்த நாயெல்லாமோ நம்ம வீட்டுக்கு வந்து சாப்பிட்டு போகுது . நீங்க வர்றதுக்கு என்ன ?” என்றார் . அப்புறம் அந்த ஆள் போவானா ? எதிரி வீட்டு விருந்தைக் கூட ஏற்றுக்கொண்டவர் பெருந்தலைவர் . விருதுநகர் ஒரு காலத்தில் ஜஸ்டிஸ் கட்சிக் கோட்டையாக இருந்தது . ஜஸ்டிஸ் கட்சிக்காரர்களால் காங்கிரஸ்காரர்கள் பட்ட துன்பங்கள் பல . முதலமைச்சராக பெருந்தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டதும் , விருதுநகரில் ஜஸ்டிஸ் கட்சிப் பிரமுகர் ஒருவர் பெருந்தலைவருக்கு விருந்து வைக்க விரும்பினார் . அதைப்பெருந்தலைவர் ஏற்றுக் கொண்டார் . விருந்துக்கு முதல் நாள் தான் காங்கிரஸ் நண்பர்களுக்கு விருந்து பற்றித் தெரிய வந்தது . இந்த விருந்துக்கு மகன் செல்வது பெருந்தலைவரின் தாயாருக்குப் பிடிக்கவில்லை . விருந்துக்குப் போக வேண்டாம் என்று உறவுக்காரர் ஒருவர் மூலம் தாயார் சிவகாமி அம்மாள் பெருந்தலைவருக்குச் சொல்லி அனுப்பினார் . அந்தப் பிரமுகர் கட்சிக்குச்செய்த தீமைகளைக் காங்கிரஸ் நண்பர்களும் பெருந்தலைவரிடம் எடுத்துக்கூறி விருந்துக்குப்போக வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்கள் . ஆனால் பெருந்தலைவர் , “ ஒப்புக்கொண்டாகிவிட்டது . போய்த்தான் ஆக வேண்டும் ” என்றார் . அப்படியே விருந்துக்குப் போய் வந்தார் . பெருந்தலைவரிடம் உள்ள பெருங்குணம் எதிரிகள் செய்யும் கேடுகளை மறந்து விடுவார் . நண்பர்கள் செய்யும் நல்லவைகளை மறக்க மாட்டார் . 96 95. இவரைப் பற்றிய இனிய செய்திகள் ஒரு முறை ஒரு அரசன் கிராமம் வழியாக வந்து கொண்டிருந்தான் . அப்போது வழியில் தள்ளாடும் கிழவன் ஒருவன் ஒருமரக்கன்றினை நட்டுக்கொண்டிருந்தான் . அவனைப் பார்த்த அரசன் “ என்ன கிழவரே காடு வா வா என்கிறது . வீடு போ போ என்கிறது . இந்த நிலையில் மரம் நட்டு அது பயனளிக்கும் வரையில் உயிரோடு இருப்பீர்களா ?” என்று கேட்டான் . அதற்கு கிழவன் “ அரசே என் முன்னோர்கள் நான் பயன்பெறுவதற்காக இந்த மரங்களை நட்டுச்சென்றுள்ளார்கள் . அதே போல நானும் என் பின்னால் வருபவர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்பதால் இந்தக் கன்றை நடுகிறேன் ” என்றார் . இது போன்ற உயர்ந்த குணம் உடையவர்களால் தான் நாடு வளமுடனும் , நலமுடனும் திகழ முடியும் , அப்படிப்பட்ட குணமுடையவர் நம் பெருந்தலைவர் . எளிமை பெருந்தலைவர் காமராசர் காங்கிரஸ் காரியக் கமிட்டித்தலைவராக இருந்த போது ஜெய்ப்பூரிலே ஒரு மாநாடு நடந்தது . அங்கே உள்ள மக்களில் பெரும்பாலோருக்கு இந்திதான் தெரியும் . கூட்டத்திலே ஆங்கிலத்திலே பேசினவர்களை எல்லாம் மக்கள் “ பைட்டோ பைட்டோ இந்தி மே போலே “ ன்னு கத்தினாங்க . அதாவது இந்தியிலே பேசு இல்ல உட்காருன்னு ” அர்த்தம் . பெருந்தலைவர் மனதுக்குள் சங்கடப்பட்டார் . அவருக்குத் தமிழைத் தவிர ஆங்கிலம் கூட சரியாக வராத நிலை . வேறு வழியில்லாமல் சுருக்கமாக இரண்டொரு வார்த்தை பேசி விட்டு அமர்ந்தார் . ஆனால் மக்கள் இன்னும் பேசுங்க தமிழிலேயே பேசுங்க பரவாயில்லைன்னு கத்தினார்கள் பெருந்தலைவருக்கு குழப்பமாகி விட்டது . கூட்டத்திலே ஒருத்தர் மக்களிடம் “ அதென்ன அவர் மட்டும் பேசலாம்னு சொல்றீங்க என்று கேட்டார் . அதற்கு அந்த மக்கள் காமராசர் எங்களை மாதிரி ரொம்ப எளிமையா தெரியறாரு . அவரினால் எங்களுக்கு நன்மை கிடைக்கும் . அவர் எங்கள் “ கறுப்புக் காந்தி ” என்று புகழ்ந்தார்கள் . காமராசரின் எளிமை மொழி தெரியாத ஊரிலும் மரியாதையைக் கொடுத்தது . நேர்மை காமராசர் முதலமைச்சராக இருந்த நேரம் . ராஜாஜி எதிரணியில் இருக்கிறார் . மாம்பலம் சி . ஐ . டி . நகரத்தில் ராஜாஜி சேவா சங்கம் என்ற அமைப்பைச் சார்ந்த கட்டிடம் கட்டியிருந்தார்கள் . ஆனால் சி . ஐ . டி . நிறுவனத்தினர் அந்தக் கட்டிடம் தங்களோட விதிமுறைகளுக்கு முரணாக கட்டப்பட்டதாகக் கூறி அந்தக் கட்டிடத்தை இடித்து விட்டார்கள் . இந்த விஷயம் பெருந்தலைவருக்குத் தெரிய வந்தது . ராஜாஜி எதிரணி என்பதால் பெருந்தலைவர் இதைக் கண்டு கொள்ள மாட்டார் என்று எல்லோரும நினைத்தார்கள் . ஆனால் பெருந்தலைவர் சி . ஐ . டி . நிறுவனத்தினரை அழைத்து விசாரித்து அவர்கள் அதிகார துஷ்பிரயோகம் பண்ணியிருப்பதைக் கண்டுபிடித்து அவர்கள்செலவிலேயே உடனடியாக அந்தக் கட்டிடத்தைப் புதிதாகக் கட்டிக்கொடுக்க வேண்டும் என்று அறிக்கையோடு உத்திரவு பிறப்பித்தார் . அதே போலவே சி . ஐ . டி . நிறுவனத்தினர் புதிய கட்டிடத்தைக் கட்டிக்கொடுத்தனர் . இப்போதும் அந்தக் கட்டிடம் மாம்பலம் சி . ஐ . டி . நகரில் இருக்கிறது . பெருந்தலைவரின் பெருந்தன்மைக்கு இதுவும் ஒரு சான்றாகும் . 97 96. நாடாளுமன்றத்தில் நன்மதிப்பு 1967 தமிழகத்தின் அரசியலில் முக்கிய பங்கு வகித்தது . தொடர்ந்து ஆட்சியிலிருந்த காங்கிரசிடமிருந்து தமிழக ஆட்சியை திராவிட முன்னேற்றக் கழகம் கைப்பற்றியது . தேர்தலின்போது தமிழகத்தின் முன்னேற்றத்திற்குத் தன்னலமில்லாது இரவு பகலாக உழைத்த பெருந்தலைவரை விருதுநகர் மக்கள் தோற்கடித்து விட்டனர் . தோற்றவுடன்பெருந்தலைவரைப் பேட்டி கண்டபோது தோல்வியைப் பற்றிய அபிப்பிராயம் கேட்டபோது இதுதான் ஜனநாயகம் , மக்களின் தீர்ப்பை மதிக்கிறேன் என்றார் . காமராஜர் யார் மீதும் குறை கூறாமல் தன் பெருந்தன்மையைக் காட்டி ஜனநாயகத்தின் பெருமையை உயர்த்தினார் . அதன்பின் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் தொகுதியில் தேர்தல் நடந்தது . அந்த பாராளுமன்றத் தேர்தலில் உள்ளூர் முக்கிய பிரமுகரை எதிர்த்து பெருந்தலைவர் போட்டியிட்டார் . அந்தத் தேர்தலில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் பெருந்தலைவரை வெற்றி பெறச்செய்து கன்னியாகுமரி மாவட்ட மக்கள் தங்கள் பெருமையினை உயர்த்திக் கொண்டனர் . திருமதி இந்திராகாந்தி அவர்களை இந்தியாவின் பிரதமர் பதவிக்குக் கொண்டு வந்த பெருமை பெருந்தலைவருக்குண்டு . பிற்காலத்தில் காலத்தின் கோலத்தால் பிரதமருக்கும் , பெருந்தலைவருக்கும் அபிப்பிராய வித்தியாசம் ஏற்பட்டது . நாகர்கோவில் தொகுதியில் வெற்றி பெற்ற பின் முதல்முறையாக பாராளுமன்ற அங்கத்தினர் என்ற முறையில் பாராளுமன்றத்தில் நுழைந்தார் காமராஜ் . பெருந்தலைவரைப் பார்த்தவுடன் அனைத்துப் பாராளுமன்ற அங்கத்தினர்களும் எழுந்து வணக்கம் தெரிவித்து தங்கள் மரியாதையைத் தெரிவித்தனர் . திருமதி இந்திராகாந்தி அவர்களும் தன் அபிப்பிராய பேதத்தையும் மறந்து தன் இருக்கையிலிருந்து எழுந்து வணக்கம் தெரிவித்தார் . ஒரு பாராளுமன்ற அங்கத்தினருக்கு அனைவரும் எழுந்து மரியாதை செய்தது இதுவே முதல் முறை . அத்தகைய பெருமைக்குரிய அங்கத்தினரைத் தேர்வு செய்தது கன்னியாகுமரி மாவட்டத்திற்கே பெருமை . நாடாளுமன்றத்தில் காமராஜரின் புகழும் , கன்னியாகுமரி மாவட்டத்தின் மதிப்பும் உயர்ந்து நின்றது . இந்நிகழ்ச்சியை அந்நேரத்தில் எல்லா நாளிதழ்களும்மிகவும் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டன . 98 97. எளிமையும் உயிரிரக்கமும் மாவீரன் நெப்போலியனை அறியாதவர்கள் எவருமே இருக்கமுடியாது . பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்ககால வரலாற்றைத் தன் போர்த்திறத்தால் எழுதியவன் . 1815- ஆம் ஆண்டு வாட்டர்லூ என்ற இடத்தில் நடந்த போரில் தோற்று சையிண்ட் ஹெலீனா என்ற தீவில் சிறைவைக்கப்படும் வரை எழை விவசாயியின் மகனாகப் பிறந்து பிரான்ஸ் நாட்டின் மன்னனாக உயர்ந்தவரை , அவனது ஆற்றல் அளவிடமுடியாத ஒன்று . பல இலட்சக்கணக்கில் அவன் நடத்திய போரினால் மக்கள் மரிக்க நேரிட்டாலும் , மனிதாபிமானம் என்ற உயரிய குணம் அவன் நெஞ்சில் எங்கோ ஒரு மூலையில் குடியிருக்கவே செய்தது . பிரான்ஸ் நாட்டில் பகைவரின் எல்லைப் பகுதியில் பாடிவீடமைத்து ஒரு குடிலில் தங்கியிருந்தான் நெப்போலியன் . அவனது குடிலைச் சுற்றி ஆயிரக்கணக்கான குடில்களில் அவனது படை அதிகாரிகளும் ராணுவ வீரர்களும் தங்கியிருந்தனர் . ஒரு நாள் நடு இரவு , போரைப்பற்றிய சிந்தனைகளால் உறக்கம் வராமல் ராணுவ வீரர்களின் படைவீடுகளில் ஒரு தெருவில் நடந்துகொண்டிருந்தான் . அந்த இருட்டில் அவனை எவராலும் அடையாளம் காண முடியவில்லை . அப்போது ஒரு வீதியின் நடுவே ஒரு சம்பவம் நிகழ்ந்து கொண்டிருந்தது . ஒரு ராணுவ துணை அதிகாரி ஒரு சாதாரண வீரனை சவுக்கால் அடித்துக் கொண்டிருந்தார் . ஒரு தனிமனிதனால் தூக்கமுடியாத ஒரு ராணுவ தளவாடச் சாமானை அந்த வீரன் தூக்க முடியாமல் துவண்டு விழுந்ததற்காகச் சுடுசொல்சொல்லி சவுக்கடி தண்டனை கொடுத்துக் கொண்டிருந்தார் . இதைக் கண்ணுற்ற நெப்போலியனின் மனம் கொதித்தது . தன்னை யாரென்று அறிந்து கொள்ளாத அந்த இருவரிடையே சென்றான் . ராணுவ அதிகாரியின் கையிலிருந்த சவுக்கைப் பிடுங்கி வீசினான் . அதிகாரிக்கோ கோபம் . யார் நீ ? என் பணியில் தலையிடுகிறாய் என்று கோபத்துடன் கேட்டார் . நெப்போலியனோ பொறுமையாக நான் யாரென்று பிறகு சொல்லுகிறேன் , கொஞ்சம் பொறுமையாக இருங்கள் என்று சொல்லிவிட்டு ராணுவ வீரனிடத்திலே வந்து நண்பா ! நான் ஒரு கை கொடுக்கிறேன் . இரண்டு பேரும் சேர்ந்து இதை எங்கே சேர்க்க முடியுமோ அங்கே சேர்த்து விடுவோம் என்று சொல்லி அக்காரியத்தை முடித்தான் . மீண்டும் அந்த ராணுவ துணை அதிகாரியிடம் வந்தான் . நண்பரே ! உங்கள் கடமையுணர்வை மெச்சுகிறேன் . ஆனால் என்னைப்போல அந்த வீரனுக்கு நீங்களும் உங்கள் உயர்பதவியைக் கருதாது உதவி செய்திருந்தால் இந்தச் சவுக்குக்கு வேலை இருந்திருக்காதே … மேலும் உங்களுக்கு இன்னொன்று சொல்லிக்கொள்கிறேன் . எப்போதாவது இதே போன்று ஒரு சூழ்நிலை ஏற்படுமானால் உங்களுக்கு உதவி தேவைப்பட்டால் அதோ அந்தப் பாடி வீட்டில் நெப்போலியன் போனபார்ட் என்ற பெயர் கொண்ட நானிருப்பேன் , என்னைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு அவ்விடத்தை விட்டு நகர முயன்றான் . அடுத்த கணம் ராணுவ துணைத்தளபதியின் தலை நெப்போலியனின் காலடியில் கிடக்க அவர் கைகள் இருகால்களையும் பற்றிக்கிடந்தன . இப்போது வாசகர்களை விருதுநகருக்கு அழைக்கிறேன் . விருதுநகரின் வடமேற்கு மூலையில் உள்ள கிராமம் மல்லன்கிணறு என்ற மல்லாங்கிணர் . முழுமையும் ஏழை மக்கள் வாழும் , வளர்ந்து வரும் புறநகர்ப்பகுதி . சிறுசிறு பெட்டிக்கடைகள் , சிற்றுண்டி விடுதிகள் . பாதையோரங்களில் பழம்காய் கறிக்கடைகள் . குண்டுங்குழியுமான வீதிகள் . ஒரு சமூகத்தவரின் உயர்நிலைப் பள்ளி . இதுதான் 1950 களின் பிற்பகுதி மல்லாங்கிணர் . ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை என்ற பழமொழியை மெய்யாக்குவது போல் அங்கு ஒரு நூல் நூற்பு ஆலை உண்டு . பருத்தி வணிகத்தில் புகழ் பெற்ற விருதுநகர் பஞ்சு வணிகர்கள் லாரிகளிலும் இரட்டை மாட்டு வண்டிகளிலும் பென்னம் பெரிய பொதிகளை அந்த ஆலைக்கு அனுப்பி வைப்பர் . விருதுநகர் எல்லையிலிருந்து மல்லாங்கிணருக்குள் நுழையும் பாதை சராசரியை விடச் சற்று உயர்ந்து செல்லும ஒன்று . லாரிகள் இப்பாதையை எளிதாகக் கடந்து சென்றுவிடும் . ஆனால் இரட்டைமாட்டு வண்டிகளுக்கு மூவர் துணை வேண்டும் . ஒருநாள் உச்சிவேளை , ஒரு பெரியவர் எவர் துணையுமில்லாமல் தன் இரட்டை மாட்டு வண்டி நிறையப் பஞ்சுப் பொதியை ஏற்றிக்கொண்டு ஆலையை நோக்கி விரைந்தார் . ஆனால் மேட்டில் ஏறும்போது பொதிகளின் பளு பின்னால் அழுத்த மாடுகள் இரண்டும் கட்டப்பட்ட ஏர்க்கால்களோடு முன்னம் கால்களைத் தூக்கித் தொங்கின . வீதியில் பலர் குரல் கொடுத்தனர் . உதவ முன்வரவில்லை . ஆனால் வண்டியின் பின்னால் வந்து கொண்டிருந்த கருப்பு வண்ணக்காரில் அமர்ந்திருந்த கதர்சட்டைக்காரர் நிலைமையை உணர்ந்து மின்னல் வேகத்தில் காரை விட்டிறங்கி தொங்கிக்கொண்டிருந்த மாடுகளின் முன்புறம் வந்து ஏர்க்காலைத் தன் பலங்கொண்ட மட்டும் பிடித்துத் தொங்கினார் . மாடுகள் முன்னங்கால்களைத் தரையில் ஊன்றின . ஒரு மாட்டின் கழுத்துக் கயிற்றை அவிழ்த்து விட்டார் . வண்டியோட்டி வந்த பெரியவர் கீழிறங்கித் தன் பங்குக்கு மற்ற மாட்டையும் அவிழ்த்துவிட்டார் . இதற்குள் கூட்டங்கூடிவிட்டது . எல்லோருடைய உதடுகளும் அவர் பெயரை உச்சரிக்கத் தொடங்கின . அவர் சாதாரணமாக மக்களிடம் பேசினார் . “ ஏம்பா ! வண்டிகள் ஏற சிரமப்படுகிற இந்த மேட்டை சமதளமாக்க வேண்டாமா ? முனிசிபாலிட்டி என்ன செய்கிறது ? ரெண்டு , மூன்று நாள்களிலேயே இதைச் சரிசெய்யச் சொல்கிறேன் ” என்று கூறி விட்டுக் காரிலேறினார் . சூழ்ந்திருந்த கூட்டம் ஏழை பங்காளர் காமராஜ் வாழ்க என்று முழங்கி அவரை அனுப்பி வைத்தது . ஒரு நாட்டின் முதலமைச்சர் இவ்வளவு இரக்கத்தோடு வாழ்ந்தார் என்று நெப்போலியனுக்கு அடுத்தபடியாக நடந்து கொண்டாரென்று ஒரு நிகழ்ச்சியை நினைத்துப் பார்த்துச் சொல்லுங்களேன் பார்க்கலாம் !. 99 98. காமராசர் கடவுள் பக்தி மனிதன் தன் சக்தியால் வாழவில்லை . கடவுள் பக்தியால் வாழ்கிறான் . மனித முயற்சிகள் - லட்சியங்கள் வெற்றிபெறக் கடவுள் அருள வேண்டும் . கடவுள் அருள் பயிருக்கு நீர்போல - குஞ்சுக்கு தாயின் கருணை போல அமைகிறது . பெருந்தலைவர் காமராசருக்குக் கடவுள் பக்தி உண்டா ? அவர் கோயிலுக்குச் செல்வாரா ? சமய நூல்களைக் கற்பாரா ? முதலிய கேள்விகளுக்கு விடை கண்டால் அவருடைய கடவுள் பக்தி பற்றிய தெளிவு கிடைக்கும் . கடவுள் பக்தி வெறும் வெளிவேடத்தால் அறியப்படுவதல்ல . பல சிறந்த பக்தர்கள் சமயச் சின்னங்களைத் தரித்துக் கொள்வதில்லை . காமராசர் சமயச் சின்னங்களைப் பிறர் காணுமாறு பிற்காலத்தில் அணிவதில்லை . எனவே அவர் கடவுள் பக்தி பற்றிய கேள்வி எழுந்தது . அவர் வரலாற்றை முழுமையாகப் பார்த்தால் அவர் கடவுள் பக்தி பற்றிய பல சான்றுகளைக் காணலாம் . காமராசர் விருதுநகர்தெப்பக்குளம் மாரியம்மனின் பக்தராக மிக இளமையிலேயே பக்குவப் பட்டிருந்தார் . அந்தக் கோவில் யானை மதம் பிடித்த போது அதை அவர் அடக்கிய வரலாறு எல்லோருக்கும் தெரிந்ததுதானே ? முதல் முதலில் தேர்தலில் அவர் வெற்றி பெற்றபோது ஒரு ஊர்வலம் நடத்தப்பட்டது . அதில் பேசிய காமராசர் எனக்குக் கர்வம் வந்துவிடாமல் இருக்க அருள்புரியுமாறு கடவுளை வேண்டிக்கொள்ளுங்கள் என்று மக்களை வேண்டிக்கொண்டார் . காமராசர் திருக்கோவில் தொண்டர் குழாத்தில் ஒருவராகத் திகழ்ந்தார் . கோவில் கொடைவிழாவின்போது ஒரு ஹரிஜன் கோயிலுக்குள் வரக்கூடாது என்று தடுக்கப்பட்டபோது தடைகளை மீறி அவரைக் கோயிலுக்குள் அழைத்துச் சென்று வழிபாடு செய்தார் . இளமையில் அவர் கல்வி பயின்ற சத்திரிய வித்யாலயா பள்ளியின் விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்பார் ; பக்திப் பாடல்கள் பாடுவார் . பயணங்களின்போது அவர் எடுத்துச்செல்லும் நூல்களில் கம்பராமாயணம் ஒன்று . இராமன்மேல் உள்ள பக்தியால் அதைத் தொடர்ந்து படித்து வந்தார் . தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்தபோது கன்னியாகுமரிக்கு வருகை தந்தார் . நண்பர்களையெல்லாம் கடற்கரைக்கு அனுப்பிவிட்டு பகவதி கோவிலுக்குச் சென்று உட்கார்ந்திருப்பவர் வரிசையில் அமர்ந்து வழிபாடு செய்தார் என்று விஜய கரிசல்குளம் திரு . ஏ . சுப்பிரமணியன் எழுதியுள்ளார் . ( மகாஜனம் 13-1-1997) குற்றாலத்தில தங்கியிருந்தபோது தினமும்மாலையில் அய்யா வைகுண்டசாமியின் வரலாற்றுக் காவியமான அகிலத்திரட்டு நூலினை ஓர் அன்பரை வாசிக்கச்சொல்லி முழுமையாகக்கேட்டார் என்று கூறினார் . ச . கணபதி ராமன் ( பாளையங்கோட்டை ) ஒரு பேட்டியில் புலவர் பச்சைமாலிடம் கூறினார் . சத்திய மூர்த்தி குடும்பத்தைத் திருப்பதிக்கு அழைத்துச் சென்றபோது தாமும் மொட்டை போட்டுத் திரும்பினார் . - இப்படிக் காமராசர் பக்தி பற்றிய எவ்வளவோ செய்திகள் உள்ளன . சுருக்கமாக இங்கே கூறப்பட்டுள்ளது . விருதுநகர் காமாட்சி அம்மன் காமராசரின் குலதெய்வம் . அந்த காமாட்சி பெயரையே அவருக்கு இட்டார்கள் . காமாட்சி என்ற அம்மன்பெயரும் , ராஜா என்ற செல்லப்பெயரும் சேர்ந்துதான் காமராஜ் என்ற பெயர் உருவாயிற்று என்பது வரலாறு . இந்த காமராஜ் சமய சமரசக்கொள்கை உடையவர் . ஆர்ப்பாட்டம் இல்லாத ஆன்மீகவாதி . எல்லா சமயங்களின்மேலும் மரியாதை உள்ளவர் . சமயத் தலைவர்கள்மேல் பற்று உள்ளவர் . திருமுருக . கிருபானந்த வாரியார் ., யோகி சுந்தானந்த பாரதி , தவத்திரு குன்றக்குடி அடிகளார் காஞ்சி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்போன்ற சமயப்பெரியோர்களால் மிகவும் போற்றப்பட்டவர் என்பதைக் காமராசர் வரலாறு உணர்த்துகிறது . பக்தி என்பது உள்ளத்தின் கீதம் . இலட்சிய போதம் . பிறர் பார்க்கும் படி வழிபாடு செய்யக்கூடாது என்பது இயேசுநாதர்கோட்பாடு . இறைவனோடு மனிதன் நேரடித் தொடர்புகொள்வதே சிறந்த வழிபாடு . காமராசர் இதில் தேர்ந்தவர் . காமராசரின் உறுதிக்கும் இலட்சியங்களுக்கும் அசையாத கடவுள் பக்தியே ஆதாரம் . குன்றாத பக்தியால் அந்த தேசியத்தலைவர் குன்றம் போல் வாழ்ந்தார் . 100 99. காமராசர் ஒரு புதிர் காமராஜ் எனக்கு ஓர் புதிராகத் தோன்றுகிறார் என்றார் வடநாட்டுப் பத்திரிகையாளர் ஒருவர் . அதிகம் படிக்காத சாமராசரால் , நிர்வாக நுணுக்கங்கள்அறியாத காமராசரால் , தமிழக அரசு நிர்வாகத்தை முறையாகவும் , சரியாகவும் , முழுமையாகவும் இயக்க முடிந்தது எப்படி ? ஆங்கிலம் அல்லது இந்தியில் அதிகப் பாண்டித்தியம் பெற்றவர்கள் மட்டுமே பிரகாசிக்க முடியும் என்ற நிலையில் உள்ள இந்திய அரசியல் அரங்கில் , இரண்டிலும் பாண்டித்தியம் பெறாத காமராசரால் பரிணமிக்க முடிந்தது எப்படி ? இத்தகைய வினாக்களுக்கு விடை காண முடியாதவர்களின்பார்வையில் , காமராசர் ஒரு புதிராகத்தான் விளங்கினார் . ஆனால் காமராசர் புரிந்து கொள்ள முடியாத புதிரா என்றால் , இல்லவே இல்லை . சாதாரணக் குடும்பத்தில் பிறந்து , சாதாரண மனிதனாக வளர்ந்து , சாதாரண மக்களின் பிரச்சினைகளைப் புரிந்து , அவைகளுக்குத் தீர்வு காண்பதையே , தனது வழியாக , நெறியாக , லட்சியமாகக்கொண்டு வாழ்ந்தவர் அவர் . அத்தகைய லட்சிய வாழ்க்கைதான்அவரது வெற்றிக்கு அடிப்படைக் காரணம் . இதைப் புரிந்தவர்களுக்கு அவர் புதிரல்ல . முதல்வராகப்பொறுப்பேற்ற முதல் நாளில் , கோப்புகளைப் பார்க்க அமருகிறார் காமராசர் . அவருக்கு முன்னர் கோப்புகள் 2 வரிசையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன . இது என்ன இரண்டு வரிசை ? முதல் வரிசையிலே சில கோப்புகள் . இரண்டாவது வரிசையில் பல கோப்புகள் ?- என அவர் கேட்க , நேர்முக உதவியாளர் சொல்லுகிறார் “ முதல்வரிசையில் உள்ளவை முக்கயமானவை 2- வது வரிசையில் உள்ளவை முக்கியமில்லாதவை ” இதனைக்கேட்டு அதிர்ந்து போன அவர் கூறுகிறார் “ முதல்வருக்கு வரும்கோப்புகளில் முக்கியம் இல்லாதவையும் உண்டா , என்ன ? எனக்கு வரும் ஒவ்வொரு கோப்பும் முக்கியமானதுதான் . அவற்றை நான் அன்றே - உடனுக்குடன் பார்த்து அனுப்ப வேண்டும் . அதுதான் முக்கியம் “. அக்கால கட்டத்தில் ஒவ்வொரு வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் கல்வி , பொதுப்பணி , தொழில்வளர்ச்சி , பஞ்சாயத்து , கதர் வளர்ச்சி என்று பல விரிவாக்க அலுவலர்கள் பணிபுரிந்து வந்தனர் . அவர்களில் பஞ்சாயத்து விரிவாக்க அலுவலர்களுக்குப்போதுமான வேலை இல்லை , அப்பணி இடங்கள் அவசியம் இல்லை , அதில் பணிபுரியும் 234 பணியாளர்களைப் பணி நீக்கம் செய்யலாம் என்றும் , அதனால் அரசுக்கு பல லட்சம் ரூபாய் செலவு மிச்சமாகும் என்றும் தலைமைச்செயலாளர் பரிந்துரைக்க , சம்பந்தப்பட்ட அமைச்சரும் , நிதி அமைச்சரும் அதற்கு ஒப்புதல் அளித்த பின்பு , முதல் அமைச்சருக்கு வருகிறது கோப்பு . கோப்பினைப் படித்த காமராசர் தலைமைச் செயலாளரை அழைத்து , “ ஏன் சார் ? 234 அலுவலர்களைப் பணி நீக்கம் செய்ய சிபாரிசு பண்ணியிருக்கீங்க . அவங்க ஒவ்வொருவரும் பட்டதாரிங்க ; அஞ்சு வருஷமா இந்த அரசாங்கத்திலே வேலை பாக்கிறவங்க ; அவங்க ஒவ்வொருத்தரும் தனிநபர் இல்லே ; அவங்களை நம்பி 234 குடும்பங்கள் இருக்கு , அவங்களை வீட்டுக்கு அனுப்பினா , 234 குடும்பங்கள் வீதிக்கு வந்திடுமே அது பெரிய பாவம்ங்க . அவங்களுக்குப் போதுமான வேலை இல்லேண்ணா , புதிய பொறுப்புகளைக்கொடுங்க . நல்லா வேலை வாங்குங்க . வீட்டுக்கு அனுப்பக் கூடாதுங்க . அரசின் பணம் மட்டும் எனக்கு முக்கியமில்லை . அரசை நம்பி வாழும் பணியாளர்களின் நலனும் முக்கியம் - என்றார் முதல்வர் . 234 குடும்பங்களின் வாழ்வு காப்பாற்றப்பட்டது . 1962- ல் சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட செல்லப்பாண்டியனை , முதல்வரும் , ஆளுங்கட்சி , எதிர்க்கட்சித் தலைவர்களும் பாராட்டிப்பேசுகிறார்கள் . கூட்டம் முடிந்தவுடன் , சபாநாயகர் தன் இல்லம் செல்ல , தன் காரை நோக்கிப் புறப்படுகிறார் . இதனைக் கவனித்துவிட்ட காமராசர் , விருட்டென்று எழுந்து முன்னால்சென்று , காரில் அமர்ந்து விட்ட சபாநாயகரைப் பார்த்து சரி போயிட்டு வரீங்களா ? என்று வணங்கி வழி அனுப்புகிறார் . இதனைப் பார்த்த உறுப்பினர்களோ திகைக்க , சபாநாயகரோ சங்கடத்தால் மௌனியாகிறார் . அன்று இரவே செல்லப்பாண்டியன் காமராசரிடம் , ஐயா நீங்கள் காலையில் என்னை வழி அனுப்பிய விதம் , எனக்கு மனச்சங்கடத்தை ஏற்படுத்திவிட்டது என்று சொல்கிறார் . அதற்கு காமராசர் வேணுமிண்ணுதான் நான் அப்படிச்செய்தேண்ணேன் . சபாநாயகர் பதவி எவ்வளவு உயர்ந்தது என்பது எல்லோருக்கும் தெரியணுமில்லையா ? அப்பத்தானே மத்த மந்திரிகளும் , எம் . எல் . ஏக்களும் உங்களை மதிப்பாங்க ; சட்டசபையும் ஒழுங்கா நடக்கும் என்றார் . பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி திடீரென்று காலமாகிவிட்ட காலகட்டம் . அடுத்த பிரதமர் யார் என்பது அனைவர் மனத்திலும எழுந்து நின்ற கேள்வி . அப்பொழுது செல்லப்பாண்டியன் காமராசரிடம் , “ தேச நலன் கருதி , நீங்களே பிரதமர்பொறுப்பை ஏற்றுக்கொண்டால் என்ன ?” – என்று சொல்ல , அதற்கு காமராசர் , “ நீங்க சொல்றது நல்ல யோசனை இல்லையே . பிரதமர் பொறுப்பு ஏற்க ஏற்கெனவே - நந்தா , இந்திரா , மொரார்ஜி , சவாண் , ஜகஜீவன்ராம் பட்டீர் , அதுல்யா கோஷ் - என்று ஏழு பேர் களத்திலே இருக்காங்க என்னை எட்டாவது ஆளா குதிக்கச் சொல்றீங்களா ? தப்பு தப்பு இந்த யோசனையே நமக்கு வந்திருக்கக் கூடாது . நான் ஒண்ணு சொல்றேன் . அரசியலில் ஆசையை வளர்த்துக்கொள்ளக் கூடாது . அரசியலில் ஒவ்வொருவரும் காத்திருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் ” என்று சொன்னாராம் . இந்த அறிவுரை , இன்றைய அரசியல் தலைவர்கள் அனைவருக்கும் சொன்ன அறிவுரையாக எடுத்துக் கொள்ளலாம் . இந்த அறிவுரையை ஏற்றால் , கடைப்பிடித்தால் போட்டி இல்லை , பொறாமை இல்லை . சண்டை இல்லை . சச்சரவு இல்லை . ( முன்னாள் சபாநாயகர்செல்லப்பாண்டியன் மூத்த மகள் கூறியது ) 101 100. மாற்றாரும் போற்றிய மாமனிதர் காமராசரின் அரிய சேவையைக் கண்டு மகிழ்ந்த பேரறிஞர் அண்ணா , “ காமராசர் கல்லூரியில் படிக்கவில்லையே தவிர வாழ்க்கைப் பாடத்தை நன்றாகப் படித்தவர் . மக்களின் புன்னகையை , பெரு மூச்சை , கண்ணீரைப் படித்து அவர் பட்டம் பெற்றார் . முப்பது ஆண்டு நாற்பது ஆண்டு தொண்டாற்றினால் தான் இந்தப் பாடத்தைப் பெற முடியும் . காமராசர் தன்னுடைய பணிகள் மூலம் நாட்டின் தரத்தை உயர்த்த முயன்றார் . தமிழர்களுக்கு நற்பணியாற்றினார் . தமிழர்கள் பெருமைப்படத்தக்க பல நல்ல காரியங்களைச் செய்தார் ” என்று பாராட்டிக் கூறியுள்ளார் . “ சாமானிய மக்களின் எண்ணங்களைப் புரிந்து கொண்டு காமராசர் திட்டங்கள் தீட்டினார் ” என்று காமராசர் பற்றி கலைஞர் கருணாநிதி புகழாரம் சூட்டினார் . மேலும் “1951- ல் தமிழகத்தில் ஒரு புரட்சி நடந்தது . இட ஒதுக்கீட்டுக்கு வேட்டு வைக்க முயற்சித்தனர் . பிற்பட்டவர்கள் முன்னேற உச்சநீதிமன்றமே இடையூறாக இருந்தபோது பெரியாரும் அண்ணாவும் களம் புகுந்தனர் . அதற்கு ஆதரவாக காங்கிரசில் இருந்தும் குரல் ஒலித்தது . கே . டி . கோசல்ராம் , சாமி நாதன் போன்றவர்கள் ஆதரவு தெரிவித்தனர் . அதைவிட வீரமிக்க , வல்லமை மிக்க ஒரு குரல் வந்தது . அந்தக் குரல் நேருஜியைச் சந்தித்து அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்யக் கோரியது . அந்தக் குரல்தான் காமராசரின் குரல் “ மேலும் கலைஞர் கூறுகையில் நான் ஒன்று சொல்லிக்கொள்கிறேன் . காமராசர் மொழிப் பிரச்சினையில் உறுதியாக இருந்தார் . சட்டப்பேரவையில் அறிஞர் அண்ணா எதிர்க்கட்சித் தலைவராக இருந்த நேரம் . முதல் வரிசையில் அண்ணாவும் அவருக்குப் பின்னால் நானும் இருந்தோம் . விவாதம் நடந்து கொண்டிருந்தது . “ கம்யூனிஸ்டு தலைவர் கல்யாண சுந்தரம் கல்லூரிப் படிப்பில் இருந்து ஆங்கிலத்தை அகற்ற வேண்டும் ” என்று பேசிய உடனே அண்ணாவைப் பார்த்து பக்கத்தில் வருமாறு சைகை காட்டினார் . இருவரும் இடையே ஒரு பலகையில் கைகளை வைத்துக் கொண்டு முகத்தோடு முகம் அருகருகே வைத்து எதையோ பேசினார்கள் . காமராசர் என்னையும் அழைத்தார் . “ என்ன தமிழ் , தமிழ் என்கிறார் . நான் தமிழுக்கு விரோதியா ? ஆங்கிலத்தை அகற்றி விட்டால் என்ன ஆகும் . அந்த இடத்தில் இந்தி வந்து குந்திக்கும்னேன் ” என்றார் காமராசர் . “ அண்ணா இதைக்கேட்டுப் புன்னகைத்தார் . கூட்டம் முடிந்து வழக்கம் போல நானும் அண்ணாவும் ஒரே காரில் புறப்பட்டுச்சென்றோம் . முன் இருக்கையில் அமர்ந்திருந்த அண்ணா என்னை நோக்கி எவ்வளவு பெரிய பிரச்சனை , ஒரே வார்த்தையில் எப்படி பதில் சொன்னார் பார்த்தாயா ?.” என்று கேட்டார் . இந்தி திணிக்கப்படக்கூடாது என்பதில் அவ்வளவு உறுதியாக இருந்து காமராசர் திராவிடக்கொடியைப் பிடிக்காமலேயே தமிழ்மொழிக்காகப் போராடினார் . இந்தியாவில் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என்பதில் காமராசர் உணர்வு பூர்வமான கருத்து கொண்டிருந்தார் . அதனால் தான் நெருக்கடி நிலையின் போது துடித்தார் . உடல் நலம்குன்றிப் படுத்தார் என்கிறார் கலைஞர் . திருத்தணியில் நடந்த கூட்டத்தில் , “ தேசம் போச்சு , தேசம் போச்சு ” – என்றார் . அவர் மிகப்பெரிய ஜனநாயகவாதி . கலைஞர் , “ சாமானியர்களின் காவலர் ” – என்று தன் உரையில் கூறினார் . முதல் அமைச்சர் எம் . ஜி . ஆர் அவர்கள் பெருந்தலைவர் காமராசின் மகத்தான இயல்புகள் பற்றிக் கூறும்போது , “ போராடி , போராடி வாழ்க்கையில் எதிர்நீச்சல்போட்டுக்கொண்டு தன்னை உயர்த்திக் காட்டியவர் காமராசர் . இன்றைக்கு நான் பல கோப்புகளைப் பார்க்கிறேன் . பார்க்கும்போது காமராசர் முதல்வராய் இருந்த காலத்தில் வீணாகச் சட்ட பிரச்சினையை வைத்து அவர் செய்ய வேண்டிய காரியங்களைத்தள்ளிப்போட்டதில்லை . மக்களுக்காகச் சட்டமே ஒழிய சட்டத்திற்காக மக்கள் அல்ல என்பதைச் செயலில் காட்டினார் . ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட அழுத்தப்பட்ட தூக்கி எறியப்பட்ட மக்களின் உள்ளத்திலே உறுதியும் , வீரமும் , துணிவும் அறிவும் வரச் செயல்பட்டவர் காமராசர் ” என்றார் . முதல்வர் ஜெயலலிதா கூறும்போது “ படிக்காத மேதை என்றும் கர்மவீரர் என்றும் தமிழ்நாட்டு மக்கள் போற்றிப் பாராட்டும் பெருந்தலைவர் காமராசர் மக்களுக்காகவே சட்டம் மக்களுக்காகவே திட்டம் என்ற எண்ணத்தை மனதில் கொண்டு புதிய சட்டங்களையும் புதிய திட்டங்களையும் வகுத்து செயல்பட்டவர் ” என்றார் . 102 101. எல்லைப் போராட்டத்தில் எளிய தலைவர் “ திருவிதாங்கூர் தமிழ்நாடு எல்லைப் பகுதி , கர்நாடகத் தமிழக எல்லைப் பகுதி , ஆந்திர தமிழக எல்லைப் பகுதி ஆகிய இடங்களில் தமிழர் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும் என்ற கருத்து காமராசருக்கு ஏற்பட்டது . தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித்தலைவராக இருந்த அவர் சி . என் . முத்துரங்க முதலியாரைத் தலைவராக நியமித்து , “ தமிழ்நாடு எல்லைக் குழு ” ஒன்றை அமைத்தார் .” இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பாக ஆந்திரர்கள் சென்னை நகரத்தின் மீது உரிமை கொண்டாடும் வகையில் மதராஸ்மனதே என்ற முழக்கத்தை எழுப்பினர் . ஐக்கிய கேரளம் வேண்டுமென்போர் கோவை மாவட்டம் , நீலகிரி மாவட்டம் , திருநெல்வேலி மாவட்டம் , குமரி மாவட்டம் ஆகியவற்றுடன் அமைய வேண்டுமென்று விரும்பினர் . ம . பொ . சி . முதன்முதலாக வடவேங்கடம் முதல் குமரி வரை உள்ள தமிழகம் அமைக்கப்பட வேண்டுமென்பதை வற்புறுத்தினார் . இதற்காக ம . பொ . சி . ஒரு அறிக்கையை 1946 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெளியிட்டார் . அதில் காமராசர் கையெழுத்துப் போட்டிருந்தார் . சென்னை நகரை ஆந்திரருக்கே உரியது என நீதிபதி வாஞ்சு தனது பரிந்துரையில் கூறினார் . உடனே தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் காமராசர் , “ சென்னை நகரில் ஆந்திரருக்கு எந்தவிதமான பங்கு தந்தாலும் சரி , இதுவரை கண்டிராத அளவிற்குப் பெரும் கிளர்ச்சி எழும் ” என்று எச்சரித்துள்ளார் . ஆனாலும் சென்னை நகரம் தமிழகத்தை விட்டு வழுகிப் போக இருந்தது . இந்தச் சூழலில் மத்திய உள்துறை அமைச்சர் லால்பகதூர் சாஸ்திரி காமராசர் சந்திப்பு நடைபெற்றது . அப்போது காமராசர் தமிழ்நாட்டிலிருந்து வந்த ஆயிரக்கணக்கான தந்திகள் பற்றி அவரிடம் குறிப்பிட்டார் . காமராசரின் கூற்றைக் கேட்ட சாஸ்திரி சென்னை நகரம் பற்றிய மத்திய அரசின் முடிவினை மறுபரிசீலனை செய்வதாகவும் உறுதி கூறினார் . ( தமிழன் இழந்த மண் - பழ . நெடுமாறன் ) காமராசர் சாஸ்திரி சந்திப்பு நடைபெறவில்லையென்றால் சென்னை நகரம் ஆந்திரர் கைக்கு மாறியிருக்கும் . நீலகிரி மாவட்டத்தைத் தமிழகத்திலிருந்து பிரித்து எடுக்க கன்னடியரும் , தெலுங்கரும் , மலையாளிகளும்சேர்ந்து போராடினர் . “ நீலகிரி தமிழகத்தில் ஒரு பகுதி . அதைப்பற்றி பேசுவதற்கே இடமில்லையென்று ” காமராசர் மறுத்தார் . பின்னர் ஊட்டியைக் கேட்டனர் . “ ஊட்டி தமிழகத்தின் காஷ்மீர் . அதை விட்டுக்கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை ” என்று நெஞ்சுரத்தோடு கூறினார் . காமராசரின் நெஞ்சரத்தால் ஊட்டி இன்று தமிழகத்தோடு இருக்கின்றது . திரு - தமிழகப் போராட்டத்தில் தென் எல்லைக் காவலன் மார்ஷல் நேசமணியை அடிக்கடி சந்தித்து ஆலோசனை வழங்கினார் . நதானியேல் கட்சி தாவிய போதும் தாணுலிங்க நாடார் புதிய கட்சியை உருவாக்கிய போதும் நேசமணியோடு இணைந்து செயல்படுங்கள் என்று ஆலோசனை கூறினார் . எல்லைப்போராட்டத்தில் அவருடைய பங்கு மகத்தானது . மறக்க முடியாதது . 103 102. மனிதத்தை மதித்த மாபெரும் தலைவர் சாத்தூர் ஜெயராம ரெட்டியார் காமராசர் வீட்டிற்கு வந்தார் . அப்பழுக்கில்லா அரசியல்வாதி . காமராசரை இதயத்தில் குடிவைத்திருக்கும் இனிய நண்பர் . இருவரும் அமர்ந்து இரண்டு மணி நேரம் தமிழ்நாட்டு அரசியல் போக்கு , மத்திய அரசின் நிர்வாகம் , காங்கிரஸ் கட்சியின் நிலவரம் , மக்களின் மனநிலை இவைபற்றி அலசி ஆராய்ந்தனர் . இரவு மணி பத்தரை . பெருந்தலைவரிடம் விடை பெற்றுக்கொண்டு ரெட்டியார் வெளியேறப் போனார் . “ இனிமேல் எங்கே போய் என்னத்தைச் சாப்பிடப்போகிறீர் ? இங்கு சாப்பிட்டு விட்டுப் பிறகு புறப்படும் .” என்றார் தலைவர் . “ வைரவா , ஐயாவிற்கு இருக்கை எடுத்துப்போடு .” என குரல் கொடுத்தார் . ரெட்டியார் உள்ளே போய் உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு காத்திருந்த காரில் கிளம்பிப்போனார் . ஏற்கனவே சாப்பிட்டிருந்த தலைவர் தூங்குவதற்கு அறைக்குள் நுழைந்தார் . கடகடவென்று சப்தம் . வைரவன் இருக்கும்இடத்திற்குப்போனார் . அவன் பாத்திரம் விளக்கிக்கொண்டிருந்தான் . சாப்பிட்டு விட்டாயா ? பதில் இல்லை . தனக்கிருந்த சாப்பாட்டை ஜெயராம ரெட்டியாருக்குக் கொடுத்துவிட்டு பட்டினியோடு படுக்கப்போயிருக்கும் வைரவனை உற்றுப் பார்த்தார் . வேதனையாக இருந்தது . கையில் பத்து ரூபாயைக்கொடுத்து எங்காவது போய் எதையாவது வாங்கிச் சாப்பிட்டுவிட்டு முதலில் வா என்றார் அவன் தயங்கினான் . கட்டாயப்படுத்திப் போகச் சென்னார் . கடைகள் அடைக்கபட்டிருந்ததால் இரண்டு வாழைப் பழங்கள் வாங்கிச் சாப்பிட்டு விட்டு மீதியைத்தலைவரிடம் கொடுத்தான் . தலைவர் இதையறிந்து வருந்தினார் . “ வைரவா , நீ எத்தனை நாள் இதைப் போல் வந்தவருக்குச் சாப்பாடு போட்டுவிட்டுப் பட்டினாயகப் படுத்தாயோ ? உன்னை மிகவும் கஷ்டப்படுத்தி விட்டேன் , இனிமேல் என்னைப் பார்க்க வருகின்ற எவரையும் இரவு இங்கே சாப்பிடும்படி சொல்ல மாட்டேன் . இனி இப்படிப்பட்ட பட்டினி உனக்கு வரக்கூடாது .” என்று உருக்கமாகக் கூறினார் பெருந்தலைவர் . இந்தச் சம்பவத்திற்குப் பிறகு முன்னறிவிப்பின்றி வருகின்ற எவருக்கும் காமராசர் இல்லத்தில் இரவு உணவு தரப்பட்டதில்லை . இராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுப் பயணம்செய்த தலைவர் இரவு வந்தார் . இரவு பதினொரு மணி . நல்ல களைப்பு , சுற்றுலா மாளிகையில் தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குச் சென்று படுக்கத் தயாரானார் . திடீரென்று மின்தடை ஏற்பட்டு விட்டது . ஒரே இருட்டு , புழுக்கம் , ஜெனரேட்டர் கொண்டுவர தாசில்தார் ஏற்பாடு செய்வது கண்டு அவரைத் தடுத்து நிறுத்தினார் . சுற்றுலா மாளிகைக்கு எதிரிலுள்ள இரு வேப்ப மரங்களுக்கிடையில் அங்கு கிடந்த ஒரு நார்க் கட்டிலைததூக்கிவந்து போடச்சொன்னார் . ஜிலு ஜிலு காற்று . ஒரு தலையணை மட்டும் வைத்துக் கொண்டு தூங்கத் தொடங்கினார் . திடீரென்று எழுந்து உட்கார்ந்தார் . பக்கத்து அறையில் தங்கியுள்ள டி . எஸ் . பி - யை அழைத்து வரச்சொன்னார் . கூப்பிடப்போன ஆளை நிறுத்தி , “ டி . எஸ் . பி . உடை மாற்றியிருப்பார் . உத்தியோகத்திற்குரிய உடை அணிய வேண்டாம் . இப்போது அணிந்திருக்கும் இரவு உடையில் வந்தால்போதும் , வீண் சிரமம் எதற்கு ? உடனே அழைத்து வா .” என்றார் . டி . எஸ் . பி . கூச்சத்துடன் வந்தார் . இரண்டு நிமிடங்களில் சொல்ல வேண்டியதைச்சொல்லி விட்டு அவரை அனுப்பி வைத்தார் . முதலமைச்சராக இருந்த நம் தலைவர் . கட்டிலில் படுத்தார் . கண்ணை மூடினார் . டக் , டக் , என்று சத்தம் , தலையைத் தூக்கிப் பார்த்தார் . இரண்டு போலீஸ்காரர்கள் கையில் துப்பாக்கியுடன் இங்குமங்குமாக காவலுக்கு நடந்து கொண்டிருந்தனர் . தலைவர் அவர்களை அழைத்து , எனக்குக் காவல் இருந்தது போதும் உங்களுக்குக் களைப்பு இருக்குமல்லவா போய் இந்த உடுப்புக்களை மாற்றிவிட்டு ஓர் இடத்தில் நிம்மதியாகப் படுத்துத் தூங்குங்கள் என்றார் . போலீஸ்காரர்கள்இருவரும் போன பிறகு தூங்கப்போனார் . தேர்தல் நேரம் கோவில்பட்டியிலிருந்து திருநெல்வேலி வந்து கொண்டிருந்த பெருந்தலைவர் காமராசரின் கார் தாழையூத்துப்பக்கம் ஒரு பள்ளத்தில் விழுந்து விபத்திற்குள்ளானது . காமராசரையும் டிரைவர் நாயரையும் செல்லப் பாண்டியன் அவர்கள் விரைந்து எடுத்துக் கொண்டுபோய் மருத்துவனையில் சேர்த்தார் . கட்டுக்களோடு படுக்கையில் கிடந்த தலைவர் டிரைவர் நாயரை எங்கே என்று கேட்டார் . அடுத்துள்ள ஓர் அறையில் வைத்திருப்பதாகச் செல்லப் பாண்டியன் சொன்னார் . காமராசர் , “ டிரைவரை அழைத்துவந்து என் பக்கத்துக் கட்டிலில் படுக்கவையுங்கள் , எல்லா டாக்டர்களும் என்னைக் கவனித்துக் கொண்டு அவனைச் சரியாகக் கவனிக்காமல் விட்டாலும் விடலாம் . என்மீது பற்றுகொண்ட சிலர் என்னை இப்படிக் கவிழ்த்து விட்டானே என்ற கோபத்தில் அவனைத் தாக்கினாலும் தாக்கலாம் . நாயர் நல்லவன் . இவ்வளவு நாளும் என்னைப் பத்திரமாகப் பார்த்துக் கொண்டான் . எதிரே வருகின்ற வண்டிக்காரன் தவறாலதான் இந்த விபத்து நேர்ந்தது . அவனை ஒன்றும் சொல்லாதீர்கள் ” என்று கேட்டுக்கொண்டார் . டிரைவர் நாயரைப் பக்கத்துக் கட்டிலில் படுக்க வைத்த பிறகுதான் அவர் முகத்தில் அமைதி ஏற்பட்டது . 104 103. வரிப்பணத்தில் விளம்பரமா? தமிழகத்தின் தேசியக் கவிஞராக தன் ‘ கவியின் கனவு ’ நாடகத்தின் மூலம் மிகுபுகழ் பெற்றிருந்த திரு . எஸ் . டி . சுந்தரம் அவர்களுக்கு இதயத்திலே அமைதியில்லை . தமிழ் நாட்டை ஒரு ‘ ராக்கெட் ’ வேகத்தில் முன்னேற்ற முடிவெடுத்து , அல்லும் பகலும் அதைப் பற்றியே சிந்தித்துச் செயலாற்றி இந்தியாவிலேயே அனைத்து மாநிலங்களையும் ஒப்பீடு செய்து பார்க்கையில் இரண்டாமிடத்துக்குக் கொண்டுவந்து விட்ட நிலையிலும் பொதுத் தேர்தல்களில் எதிர்க்கட்சியாக வெறும் மேடை முழக்கவாதிகளாகயிருந்த திராவிட முன்னேற்றக் கழகம் தன் ஆதரவு வாக்காளர் விகிதத்தை உயர்த்திக் கொண்டே வருவது ஒரு புரியாத புதிராகவே அக்கவிஞர் மனதை உறுத்தியது . நீள நினைந்த அக்கவிஞருக்கு இதற்கு விடையாகத் தோன்றியதெல்லாம் காமராஜர் அரசு தன் சாதனைகளைப் பாமர மக்களின் கவனத்துக்குக் கொண்டு செல்லாமையே என்பதுதான் . அக்காலக் கட்டத்தில் இந்தியாவிலே மிக அதிகமான சினிமா என்னும் திரையரங்குகளை உடைய மாநிலமாக இருந்தது தமிழ்நாடே என்பதை உணர்ந்தார் . திரையரங்கு எண்ணிக்கை வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியை எட்டிவிட்ட ஒரு நாட்டின் மேலுமொரு வளர்ச்சியே என்று நிபுணர்கள் கூறினாலுங்கூடத் திரையுலக வளர்ச்சியில் பெரும் பங்கைத் திராவிட முன்னேற்ற கழகத்தினரே கையகப்படுத்தி இருப்பதையும் உணர்ந்தார் . எனவே அச்சாதனத்தைக் காங்கிரஸ் இயக்கமும் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று மிகத்தீர்க்கமான முடிவுக்கு வந்தார் . அந்த எண்ணத்தை நெஞ்சிலே ஏந்தித் தலைவர் காமராஜரைச் சென்று கண்டார் . ‘ ஜயா ! நாட்டு மக்களின் முன்னேற்றத்துக்காக எண்ணற்ற சாதனைகளை நீங்களும் உங்கள் நல்லாட்சியும் செய்திருந்தாலும் நமக்குக் கிட்ட வேண்டிய மக்களாதரவு எதிர்க்கட்சிக்கே செல்வதைப் பார்க்கும் போது நாம் நமது சாதனைகளைப் பாமரமக்களின் கவனத்துக்குக் கொண்டு செல்வதில் சற்றே பின் தங்கியே இருக்கிறோம் என்று நினைக்கிறேன் ’ என்றார் கவிஞர் . அவர் கூற்றைக் கூர்ந்து கேட்ட காமராசர் , ‘ அப்படியா ?… சரி , அதற்கென்ன செய்யலாம்னு நினைக்கிறீங்க ? என்று அவரிடமே யோசனை கேட்டார் . உடனே கவிஞர் , ‘ ஐயா ! திரைப்படங்கள் மிக வலிமை மிக்க சாதனங்கள் . நாட்டின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் நாட்டு நடப்புகளைக் கொண்டு செல்வது அவைகள் தான் . இதை நாமும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் . நமது ஆட்சியின் சாதனைகளையெல்லாம் தொகுத்து ஒரு செய்திப்படம் ( டாகுமென்டரி ) ஒன்றைத் தயாரித்து வெளியிட்டால் எல்லாத் தரப்பு மக்களையும் அவை சென்றடையும் ’ என்றார் . ‘ நாம்ப மக்களுக்காகச் செய்கிற காரியங்களை நாம்பளே விளம்பரப்படுத்தனுமா ?… சரி , இதுக்கு எவ்வளவு செலவாகும் ’ என்று கேட்டார் காமராசர் . ‘ சுமாரா ஒரு மூன்று லட்சம் ரூபா இருந்தா எடுத்துடலாம்னு நினைக்கிறேன் ஐயா ’ என்று கவிஞர் கூற துடித்துப்போன காமராஜர் , ‘ ஏ … அப்பா … மூணுலட்சமா ? மக்கள் தந்த வரிப்பணத்தில் நமக்கு விளம்பரமா ? அந்த மூன்று லட்ச ரூபாய் இருந்தா நான் இன்னும் மூணு பள்ளிக் கூடத்தைத் திறந்திடுவேனே … வேண்டாம் … படமெல்லாம் எடுத்துக் காட்ட வேண்டாம் ’ என்று சொல்லிக் கவிஞரை அனுப்பிவிட்டார் . இன்றைய அரசியல்வாதிகள் தாங்கள் திறக்கும் பாலங்களுக்குக் கூட எல்லா நாளேடுகளிலும் முழுப்பக்க விளம்பரம் செய்து பல லட்சங்களில் விழா எடுக்கிறார்கள் . எல்லாம் ஏழையழுது தந்த கண்ணீரான வரிப்பணத்தில் . ஆனால் இவர்களிலிருந்து முற்றும் மாறுபட்ட தலைவராக விளங்கினார் காமராசர் . 105 104. காமராசர் சொன்ன அறிவுரை காமராசர் தமிழக முதல்வராக இருந்த சமயம் சென்னையில் உள்ள பெண்கள் காப்பகம் விழா ஒன்றிற்கு அழைக்கப்பட்டிருந்தார் . காமராசரை வரவேற்றுப் பேசிய காப்பகத் தலைவி , “ இந்தக் காப்பகத்தில் முன்னூறு பெண்கள் இருக்கின்றனர் . தமிழ்நாட்டில் பல பகுதிகளில் இருந்து புதிதாகப் பெண்களை சேர்த்துக்கொள்ள கடிதங்களும் வந்துகொண்டே இருக்கின்றன . இம்மாதிரி விடுதிகளை மாவட்டத்திற்கு ஒன்று என ஏற்படுத்திவிட்டால் அந்தந்த மாவட்டங்களிலுள்ள பெண்களை அங்கேயே சேர்த்துக் கொள்ளலாம் ” என்று பேசினார் . காமராசர் பேச எழுந்தார் . “ இந்தக் காப்பகத்தில் உள்ள பெண்களைப் பார்க்கும்போது யாரும் அறிந்து தவறு செய்தவர்களாக எண்ணத் தோன்றவில்லை . அநேகப் பெண்கள் வறுமையின் காரணமாக தவறான வழிகளில் தள்ளப் பட்டதாகவும் தோன்றுகிறது . எனவே பெண்கள் சுயமாக , கவுரவமாக பிழைக்கும் வழியை அரசு காட்டவேண்டியதன் அவசியமே இங்குள்ள நிலைமையைப் பார்க்கும் போது புரிகிறது . எனவே அது சம்பந்தமாக இனி அரசு பணிகளைச் செய்ய வேண்டுமே தவிர இந்தக் காப்பகத்தின் தலைவி அவர்கள் குறிப்பிட்ட மாதிரி இதே நிலையில பெண்களை மேன்மேலும் எதிர்பார்ப்பது மாதிரி இத்தகையக் காப்பகங்களைப் பெருக்கிக்கொண்டு போகக்கூடாது ” என்றார் . 106 105. மதுரைக்குப் போகவும் இன்றைய உலகில் மிகப்பழமையான நகரங்கள் என ஒரு பட்டியல் தயாரிப்பதானால் அதில் பாபிலோன் , ஏதென்ஸ் , ஜெருசலம் , அலெக்சாண்டிரியா , வாரனாசி , காஞ்சிபுரம் , பாடலிபுத்திரம் ( பாட்னா ), உரோமாபுரி , பீகிங் , இந்திரப் பிரஸ்தம் ( பழைய டெல்லியின் ஒரு பகுதி ) என்று பட்டியலிடலாம் . அழகிய நகரங்கள் என்று பட்டியிலிருவதானால் இதற்குப் போட்டி அதிகம் . இலண்டன் , பாரிஸ் , ஆம்ஸ்டர்டாம் , நியூயார்க் , லாஸ் ஏஞ்சல்ஸ் , ரியோடிஜனிரோ , பியூனஸ் அயர்ஸ் , பெர்லின் , வியன்னா , நேப்பில்ஸ் , வெனிஸ் , சிட்னி , மெர்ல்போர்ன் , டோக்கியோ , மணிலா , சிங்கப்பூர் , ஹாங்காங் , பாங்காக் , மாஸ்கோ , பீட்டர்ஸ்பர்க் , ஷாங்காய் , சியோல் , வாஷிங்டன் , மும்பை என்று பட்டியல் நீளும் . சில நகரங்கள் தான் பெருக்க வேண்டிய அளவைத் தாண்டியவுடன் துணை நகரங்களுக்கு வழியமைத்து “ இரட்டை நகரங்க ” ளென்று பெயர் பெற்று விளங்கும் . இந்தியாவில் பழைய டெல்லி - புதுடெல்லி , ஹைதராபாத் - சிக்கந்தராபாத் , திருநெல்வேலி - பாளையங்கோட்டை , வடஅமெரிக்காவில் மினியோபோலிஸ் - செயிண்ட் பால் , கல்கத்தா - ஹூப்ளி போன்ற நகர்களைக் குறிப்பிடலாம் . அண்மைக் காலத்தில் திட்டமிட்டுக் கட்டப்பட்ட நகர்களில் இஸ்ரேலின் டெல்அவீவ் , அமெரிக்காவில் ஹூஸ்டன் ( டெக்ஸாஸ் ), இந்தியாவில் சண்டீகர் , ஐரோப்பாவில் ராட்டர் டாம் ( ஹாலந்து ) போன்ற நகரங்கள் அப்படிப்பட்டவை . சென்னை நகரம் என்ற மெட்ராஸ் திட்டமில்லாது வளர்ந்த நகரம் . முதலில் வந்த போர்த்துக்கீசியர்கள் சான்தோம் என்ற சிற்றூரை அமைத்தனர் . பின்னர் வந்த ஆங்கிலேயர்கள் சாந்தோமுக்கு வடக்கே சென்னைப் பட்டணம் என்ற மதராசில் ஜார்ஜ் கோட்டையைக் கட்டி அதனுள் தங்கள் குடியிருப்பை அமைத்துக் கொண்டு தங்களின் சேவைபுரிவோருக்காகத் தங்குமிடங்களை முத்தியால் பேட்டை , பெத்தநாயக்கன் பேட்டை , இராயபுரம் , வண்ணாரப்பேட்டை , சின்னதரிப் பேட்டை ( சிந்தாதிரிப் பேட்டை ) வேப்பேரி போன்ற பகுதிகளை உருவாக்கினர் . இவர்களின் வருகைக்கு முன்னரே வந்த ஆர்மீனியர்கள் வசித்த தெருதான் இன்றைய அரண்மனைக்காரத் தெரு . ஆனால் 1739- ல் செயிண்ட் ஜார்ஜ் கோட்டை அமைக்கப்பட்டதற்கு முன்னரே மயிலாப்பூர் , திருஅல்லிக்கேணி , திருவான்மியூர் , சேத்துப்பட்டு , திருஒற்றியூர் போன்ற அழகிய சிற்றூர்கள் கால எல்லை காட்டமுடியாப் பழமையோடு இலங்கிவந்தன . சென்னை நகரின் வேகமான வளர்ச்சிக்கு ஈடுகொடுக்க முடியா நிலையில் மக்கட் பெருக்கம் வளரவே ஒரு கட்டுத்திட்டமில்லா நிலையில் சென்னை நகரம் பென்னம் பெரிய நகராக உருவெடுத்தது . துறைமுகம் அமைத்து ஆழப்படுத்தப்பட்ட போது தெற்கே அழகிய மெரினாக் கடற்கரை உருவெடுத்தது . 1940 ஆம் ஆண்டைய சென்னை நகரின் மக்கள் தொகை ஏழுலட்சங்கள் . காமராசர் ஆட்சியின் போது அது மும்மடங்காக விரிந்தது . நகர அபிவிருத்திக் கழகம் (C.I.T.) அமைக்கப்பட்டுப் புதிய குடியிருப்புப் பகுதிகள் தோன்றிய வண்ணமிருந்தன . அமைந்தகரை ஷெனாய் நகர் , அடையாற்று காந்தி நகர் , கஸ்தூரிபாய் நகர் , நந்தனம் சி . ஐ . டி . நகர்கள் அப்படித் தோன்றியவையே . இதேபோல மதுரை , திருச்சி , கோவை , சேலம் போன்ற நகர்களும் விரியத் தொடங்கின . பெருநகரங்களின் சுற்றுப்புறங்களில் பரப்பிற் பெரிதான அரசு இடங்கள் பரந்து பிரிந்து கிடந்தன . அந்த நேரத்தில்தான் நேருஜியவர்கள் மாநில அரசுகளுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார் . வேகமாக மாறிவரும் நாட்டின் தொழிற்பெருக்கத்துக்கேற்ப பெருநகரங்களின் சுற்றுப்புற காலி இடங்களை மாநில அரசுகள் கையகப்படுத்தி வைக்க வேண்டும் என்பது தான் அவ்வேண்டுகோள் . ஆனால் மாநில அரசுகள் இதில் கவனம் செலுத்துவதற்கு முன்னரே பல தனியார்கள் இதில் முந்திக் கொண்டனர் . அதேபோல ஏழை மக்கள் சென்னை நகருக்குக் குடிபெயர்ந்து பல சேரிகளை அமைத்து வாழத் தொடங்கிவிட்டனர் . சென்னை நகரின் புறநகர்ப்பகுதியில் குட்டி நகரங்களை மேலை நாட்டுப் பாணியில் திட்டமிட்டு அமைக்க நகர அபிவிருத்திக் கழக அதிகாரிகள் திட்டமிட்டனர் . ஒரு குழுவினர் மேலைநாடுகள் சென்று அவர்கள் புதிதாகத்திட்டமிட்டுக் கட்டிய நகரங்களை நேரிலே பார்த்து வடிவமைப்புப் படங்கள் தயாரித்து வந்து அதைத்தமிழகத்தில் செயற்படுத்தக் கூடிப்பேசினர் . துறை சார்ந்த அமைச்சரையும் நேரில் சந்தித்துக் கோப்பில் ஒப்புதலும் பெற்றுவிட்டனர் . இனி முதலமைச்சரின் பார்வைக்கு அனுப்பி அவர் ஒப்புதல் பெற்றுவிட்டால் அரசுப் பணத்தில் விமானத்தில் பறக்க வேண்டியது தான் பாக்கி . காமராசர் 1954 ஏப்ரல் 13 ஆம் நாள் பொறுப்பேற்ற போது நாட்டின் நடுநிலை ஆங்கில நாளேடான ‘ ஹிந்து ’ காமராசரின் பரந்த கட்சி அனுபவத்தைப் புகழ்ந்து எழுதியதே தவிர அரசை நடத்தும் விவகாரத்தில் ராஜாஜியின் ஆற்றலை இவரிடம் எதிர் பார்க்க முடியாது என்பது போல எழுதியிருந்தது . (It will be a no easy thing to succeed him (Rajaji). Mr.Kamaraj Nadar is a seasoned Politician with a shrewd sense of his own limitations, who has so far preferred influence to power. He has no experiences of ministerial office. It is of course Mr.Nadar himself to determine whether these might not be handicaps if it should be decided that he should himself undertake the responsibilities of Chief Ministership) “Hindu”- 15-4-1954 காமராசரிடம் எந்தக் கோப்பைப் பரிந்துரைத்தவர்கள் அக்கால ஐ . சி . எஸ் . என்ற உயரிய அரசுப் பணிப்பட்டத்தைப் பெற்றவர்கள் , இலண்டனிலே படித்தவர்கள் . அதே போல மேனாட்டுப் பயணத்துக்குத் தயார் நிலையிலேயிருந்த அதிகாரிகளும் காமராசர் நிச்சயம் இதில் கையெழுத்திட்டு விடுவார் என்றே நம்பினர் . கோப்பை படித்து முடித்த காமராசர் ஒரு கணம் சிந்தித்தார் . ஓர் ஊரைத் திட்டமிட்டு அமைத்த நிலை நம் இந்தியாவிலோ , தமிழ்நாட்டிலோ இல்லவே இல்லையா ! இதில் கூட மேல் நாட்டுக்காரன்தானா நமக்கு வழிகாட்டி ? இந்த அதிகாரிகள் சென்று பார்த்து வருவதாகச்சொல்லும் இடங்கள் நம் பண்பாட்டுக்கு ஒத்து வரக் கூடியவைதானா ? நாமும் நாடு பூராவும் சுற்றி வந்திருக்கிறோமே . நம் மூதாதையர்கள் இந்த நகரமைப்புக்கலையில் நம்மைப் பிறநாட்டைப் பார்த்து , ஏங்க வைக்கவா செய்திருப்பார்கள் ? மக்கள் ஒரு துட்டு , இரண்டு துட்டாகத் தந்த வரிப்பணத்தில் இந்த உலக உலா தேவைதானா ? என்றெல்லாம் சிந்தித்தபோது அவர் மனத்தகத்தே மதுரை மாநகர் தோன்றியது . ஊரின் மையத்தில் ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் , சுற்றிலும் தேரோடும் ரதவீதிகள் , அடுத்த சுற்றில் அளவெடுத்து அமைத்தாற்போல நான்கு மாடவீதிகள் , அதற்கடுத்து ஆவணி வீதிகள் , இடையில் இவைகளை இணைக்கும் சாலைகள் . அக்காலத்திலேயே எவ்வளவு தொலைநோக்கோடு நகரை அமைத்திருக்கிறார்கள் நம்முன்னோர் . இந்த அமைப்புக்கு மேல் திட்டமிட என்ன இருக்கிறது ? என்று சிந்தித்தவுடன் கோப்பிலே எழுதினார் , ‘ இதற்காக மேலை நாட்டுப்பயணம் தேவையில்லை , எக்காலத்துக்கும் ஏற்றாற்போல அமைக்கப்பட்டிருக்கும் நம் மதுரை நகரைச் சென்று கண்டு ஆய்வு செய்து வாருங்கள் ’ என்று குறிப்பெழுதிக் கையெழுத்திட்டு சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு அனுப்பினார் . தன் ஆற்றலுக்கு மீறிய முதலமைச்சர் பொறுப்பை ஏற்குமுன் திரு . காமராசர் நன்கு சிந்திப்பது நல்லது என்றெழுதிய ‘ ஹிந்து ’ ஏட்டின் வாசகத்தைத் தான் ஆட்சிபுரிந்த ஒன்பது ஆண்டுகளின் ஒவ்வொரு நாளிலும் வென்று காட்டினார் காமராசர் . 107 106. வரலாறு ஆகிவிட்ட "கே-பிளான்" - காமராஜ் திட்டம் 1885 ஆம் ஆண்டு திரு . ஆலன் ஆக்டேவியன் ஹ்யூம் என்ற பரந்த மனிதாபிமானம் மிக்க ஓர் ஆங்கிலப் பெருமகனின் உள்ளக் கருவறையில் உருவாகிப் பிறந்த இந்திய தேசியக் காங்கிரஸ் இயக்கம் தன் 115 ஆண்டு வளர்ச்சியில் குளிரோடைகளை மட்டுமல்ல , பல நெருப்பாறுகளையும் தாண்டி வந்திருக்கிறது . பெற்றவன் அனாதையாக விட்டு விட்டுச் செல்ல பெருமக்கள் தாதாபாய் நௌரோஜி , பிரோஷ்ஷாமேத்தா , விபின் சந்திரபாலர் , பாலகங்காதர திலகர் , சித்தரஞ்சன்தாஸர் , சேலம் விஜயராகவாச்சாரியார் , கோபாலகிருஷ்ண கோகலே , அயர்லாந்து நாட்டு அன்னி பெசண்ட் , கப்பலோட்டிய தமிழர் வ . உ . சி . ஆகியோரின் மடியிலே தவழ்ந்தும் அன்புக் கரங்களால் அரவணைக்கப்பட்டும் முப்பது வயது இளைஞனாக இருந்த போது தான் அண்ணல் மகாத்மா காந்திஜியின் அன்புமகவாக வந்து சேர்ந்தது . பாசத்தோடு அதனை அரவணைத்த அன்னிபெசண்ட் அம்மையாரின் உணர்ச்சி மிக்க தலைமையால் அதினின்று “ ஹோம்ரூல் இயக்கம் ” கிளைத்து அதன்பின் பாதை மாறிய அவர் கைவிட்டுச் சென்றார் . பாலகங்காதர திலகர் , விபின் சந்திரபாலர் , வ . உ . சிதம்பரனார் போன்ற தீவிரவாதிகள் ஒருபுறமும் , கோபாலகிருஷ்ண கோகலே , மோதிலால் நேரு போன்ற மிதவாதிகள் ஒருபுறமும் நின்று கயிறு இழுக்கும் போராட்டம் நிகழ்த்திய நிகழ்வுகளிலும் அது சிக்குண்டு தவித்ததுண்டு . காந்திஜியின் தலைமை கிட்டியபிறகு அன்று உலகத்தையே உலுக்கிய ரஷியப் புரட்சியின் காரணமாக பொதுவுடைமைச் சித்தாந்தவாதிகள் காங்கிரசின் அரவணைப்பிலிருந்து விலகிப் பொதுவுடைமை இயக்கம் கண்டு பிரிந்து சென்றனர் . ஜவகர்லால் நேருஜி தன் குருநாதர் ஹெரால்டு லாஸ்கி என்ற பேராசிரியரிடம் பயின்று நெஞ்சிலே சோஷலிஸ சித்தாந்தத்தைச் சுமந்து வந்து இந்த இயக்கத்தில் சங்கமித்தபோது ஜெயப்பிரகாஷ் நாராயணன் , அசோக் மேத்தா , ராம் மனோகர் லோகியா , அச்சுதப்பட்ட வர்த்தனன் , அருணா ஆசப் அலி போன்ற இளைஞர் பட்டாளம் காங்கிரசுக்குள்ளேயே சோஷலிஸ அணியை உருவாக்கிப் பின் தாயிடமிருந்து அகன்று சென்று தனி அணி கண்டதும் உண்டு . அகில இந்தியக் காங்கிரஸ் தலைமைப் பதவியில் போட்டியிட்டு பட்டாபி சீதாராமையா போன்ற காந்திய வாதியினரைத் தோல்வி காணச்செய்த பின் காந்திய அகிம்சை நெறிக்குக் கட்டுப்படாது வன்முறையிலே நாட்டங்கொண்டு தாயிடமிருந்து பிரிந்து போய் “ பார்வார்டு பிளாக் ” கட்சியை நிறுவிய சுபாஷ் சந்திர போஸால் காங்கிரஸ் ஸ்தாபனம் அதிர்ச்சிக்கு ஆளானதுண்டு . முகம்மதலி , சௌகத் அலி , முகம்மதலி ஜின்னா போன்ற அடிநாள் காங்கிரசின் ஆதரவாளர்கள் பின்னாளில் மதவாத அடிப்படையில் முஸ்லிம் லீக் கண்டு எதிரிகளாக மாறியதுண்டு . காந்திய நெறிச் செல்வரான ஆச்சார்யகிருபளானி அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டித் தேர்தலில் பாபு புருஷோத்தமதாஸ் தாண்டனிடம் தோற்றவுடன் தோன்றிய வெறுப்பில் “ பிரஜா கட்சி ” என்ற ஓர் அமைப்பை ஏற்படுத்திக் கொண்டு தனிவழியில் சென்றதுண்டு . காந்திஜியின் சம்பந்தியாய் அவரது மனசாட்சியாய் , விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாய் , நடுவண் அரசில் அமைச்சராய் , தமிழக முதல்வராய் செயலாற்றிய மூதறிஞர் ராஜாஜி காங்கிரஸின் சோஷலிஸக் கொள்கைகள் , மக்கள் வாழ்வில் அரசின் அதீத தலையீடுகள் , லைசென்ஸ் ராஜ்யம் , அதிகாரவர்க்க ராஜ்யம் போன்ற செயல்முறைகள் பிடிக்காமல் தனியே பிரிந்து சென்று சுதந்தராக் கட்சி என்ற அகில இந்திய அமைப்பைத் தோற்றுவித்துத் தேர்தல் களத்திலேயும் எதிர்த்ததுண்டு . ஆனாலும் காந்திஜி , வல்லபாய் படேல் போன்ற மாபெரும்தலைவர்களின் மறைவுக்குப் பின்னரும் காங்கிரஸ் என்ற ஆலமரத்தைக்கட்டிக்காக்கும் காவற்காரனாக நேருஜி இருந்தமையால் எத்தகைய உட்கட்சிச் சூறாவளிகளையும் அவ்வியக்கம் தாங்கி நின்று இந்திய மக்களின் ஒருமித்த ஆதரவால் ஐந்தாண்டுக்கொருமுறை நடந்த தேர்தல் களங்களையும் சந்தித்துச் செம்மார்ந்து நின்றது . இந்திய மக்களிடம் தனது தியாகம் , அரசியல் பட்டறிவு , அறிவுமுதிர்ச்சி , உலகப்புகழ் காரணமாக அவர் ஓங்கி நின்றபோதும் மாநிலங்களில் தக்க பணியாற்றிய தலைவர்களை அவர் அணைத்துக் கொண்டார் . அவர்களை அகில இந்தியத் தலைமையை ஏற்கத் தகுதியுடையவர்களாக உயரும் போது அதை வரவேற்றார் . தமிழகத்தில் காமராசர் , ஆந்திராவில் சஞ்சீவிரெட்டி , கேரளாவில் பனம்பள்ளி கோவிந்தமேனன் , கர்நாடகத்தில் நிஜலிங்கப்பா , ஒரிஸாவில் ஹரிகிருஷ்ணமேதாப் , மராட்டியத்தில் எஸ் . கே . பாட்டீல் , வங்காளத்தில் டாக்டர் பி . சி . ராய் , பீஹாரில் ஜகஜீவன்ராம் , உத்தரபிரதேசத்தில் கோவிந்த வல்லப் பந்த் , குஜராத்தில் ஜீவராஜ் மேத்தா , பஞ்சாபில் பிரதாப் சிங் கெய்ரோன் என மாநிலங்களில் தேர்தல் யுக்தியுடன் மக்களின் செல்வாக்குப் பெற்ற தலைவர்களிருந்தனர் . மத்திய அமைச்சரவையில் தனது சகாக்களாக பாபு ராஜேந்திரர் , மொரார்ஜிதேசாய் , லால்பகதூர் சாஸ்திரி , கே . எம் . முன்ஷி , சி . டி . தேஷ்முக் , அபுல்கலாம் ஆசாத் போன்ற நல்லோரை வைத்துக் கொண்டு ஆட்சித் தேரைச் செலுத்தினார் . ஆனாலும் ஒவ்வொரு தேர்தலின் போதும் தேசிய எதிர்ப்புச் சக்திகள் காலூன்றுவது கண்டு காங்கிரஸ் கட்சியின் எதிர்காலங்குறித்துக் கவலையுற்றார் . மேலும் காங்கிரஸ் இயக்கத்துக்குள்ளேயே பதவி வெறிகாரணமாக சுயநல சக்திகள் தலை தூக்குவது கண்டு மிக மனச்சோர்வடைந்தார் . அப்போது தான் அரசியல் அனுபவ மேதையான தலைவர் காமராசருக்கு ஓர் அற்புத யோசனை தோன்றியது . விடுதலைப் போராட்ட காலத்துத்தலைவர்களிடம் இந்திய நாட்டின் விடுதலை என்ற இலட்சியம் தவிர வேறு எந்தச் சிந்தனையும் இருந்ததில்லை . ஆனால் நாடு விடுதலை பெற்றபின் மத்திய அரசிலும் மாநிலங்களிலம் நாடறிந்த தலைவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்க வேண்டியவர்களாயினர் . காலத்தின் கட்டாயமாக இந்நிலை ஏற்பட்டாலும் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி கேள்விக் குறியாகி விட்டது . எனவே ஆட்சிப்பொறுப்பேற்றுள்ள மூத்தத் தலைவர்கள் தகுதியான இரண்டாம் நிலைத் தலைவர்களிடம் ஆட்சிப் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு கட்சியைப் பலப்படுத்த முன்வர வேண்டும் என்ற திட்டத்தைக் காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டத்தில் தனது திட்டமாக வைத்தார் . கீழ்வான இருளை நீக்க வந்த விடிவெள்ளியாக இத்திட்டம் அனைவர்க்கும் தோன்றியது . சிறப்பாக நேருஜியை இத்திட்டம் மிகக் கவர்ந்தது . நேருஜி தானும் பிரதமர் பதவியை விடுத்துக் கட்சிப்பணியாற்ற விருப்பம் தெரிவித்தார் . ஆனால் எவரும் அதை ஏற்கவில்லை . ஒருவேளை அது ஏற்கப்பட்டிருந்தால் பிரதம அமைச்சர் என்ற அதீதமனயிறுக்கத்திலிருந்து விடுபட்டு மக்களைச் சந்திப்பது என்ற அவருக்கு மிகவிருப்பமான பணி மூலம் மேலும் சில ஆண்டுகள் நம்மோடிருந்திருப்பார் என்று சிந்திக்கத் தோன்றுகிறது . “ காமராஜ் திட்டம் ” செயல்படத் தொடங்கியது . திட்டம் தந்த காமராஜரே முதலில் வழிகாட்டினார் . தமிழகத்தில ஒன்பது ஆண்டுக்கால பொற்கால ஆட்சியைத் தந்துவிட்டு வெளியேறினார் . மொரார்ஜி தேசாய் , லால்பகதூர் சாஸ்திரி போன்ற தலைவர்களும் வழிகாட்டினர் . ஆனால் விதியின் கை வேறு விதமாக எழுதிவிட்டது . நேருஜியின் விருப்பத்தை மீறமுடியாமல் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர்பொறுப்பை ஏற்கவேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டார் . ஒரிசாவிலுள்ள புவனேஸ்வர் காங்கிரஸ் மாநாட்டில் தலைமைவகித்த போது தன் தலைவனை இழந்து தனியனாக ஆனார் . அனைத்திந்திய காங்கிரஸ் கட்சிப்பொறுப்பை ஏற்றமையால் நஷ்டம் தமிழகத்துக்குத்தான் . எந்தத் தமிழகத்தில் காங்கிரஸ் இயக்கத்துக்குப் புத்துணர்ச்சியூட்ட விரும்பிப் பதவியைத் துறந்தாரோ அப்பணியை அவரால் ஆற்ற முடியாது போயிற்று . ஆயினும் “ காமராஜ் திட்டம் ” என்ற “ கே - பிளான் ” வரலாறாகி விட்டது . 108 107. உலகம் சுற்றிய உத்தமர் இத்தாலியிலிருந்து சுவிட்சர்லாந்து வியாபாரி ஒருவருக்கு அருமையான தேன் வந்து கொண்டிருந்தது . வியாபாரி அதை விற்றுக் கொள்ளை லாபம் சம்பாதித்துக் கொண்டிருந்தார் . இத்தாலியத் தேன் சுவிட்சர்லாந்துக்கு வரக்கூடாது என்று ஒரு தடையுத்தரவு விதித்து விட்டார்கள் . தமக்கு தேன் சப்ளை செய்யும வாடிக்கைக்காரருக்கு வியாபாரி ஒரு தகவல் அனுப்பினார் . “ நாட்டின் எல்லையில் முள் கம்பி வேலிபோட்டிருக்கிறது அல்லவா ? வேலிக்கு அந்தப் பக்கத்தில் உம்முடைய தேன் ஜாடியை வைத்துவிடுங்கள் மற்றவற்றை நான் பார்த்துக்கொள்கிறேன் ” என்றார் சுவிட்சர்லாந்துக்காரர் . இத்தாலிய வாடிக்கைக்காரர்அப்படியே தேன் நிறைந்த ஜாடிகளைக்கொண்டுவந்து வைத்தார் . சுவிட்சர்லாந்து வியாபாரி வேலிக்கு இந்தப் பக்கம் சிறிது தூரத்தில தம்முடைய தேனீக்கூண்டைக்கொண்டு வந்து வைத்து விட்டார் . தேனீக்கள் புஸ்ஸென்று கிளம்பிப்போய் ஜாடித் தேனை எல்லாம் உறிஞ்சி , கூண்டில்கொண்டு வந்து சேர்த்தன . மூன்றே நாளில் இவ்விதமாக 200 பவுண்டு இத்தாலியத் தேன் சுவிட்சர்லாந்துக்கு வந்து சேர்ந்து விட்டது . சட்டத்தை மீறிய தேனீயை என்ன செய்வது . இப்படி தேசங்களுக்கு மத்தியில் மோசம் வளர்ப்பவர்கள் மத்தியில் நேசத்தை வளர்ப்பதற்காகவே உலகச் சுற்றுப் ப யணம் மேற்கொண்டார் பெருந்தலைவர் . ஜூலை 31 ஆம்தேதி பெருந்தலைவர் கிழக்கு ஜெர்மனி சென்றார் . கிழக்கு ஜெர்மன் தேசிய சபைத் தலைவர் டாகடர் எரி சாம்ஸ் , துணை வெளி உறவு இலாகா அமைச்சர் ஸ்டிபி , இந்தியாவிற்கான கிழக்கு ஜெர்மனி வர்த்தகப் பிரதிநிதி திரு . ஷெர்பர்ட் பிஷர் ஆகிய தலைவர்கள் விமான நிலையத்தில் காமராசரை வரவேற்றனர் . ஆகஸ்ட் 1 ஆம் தேதிதலைவர் சோஷலிஸ்ட் ஐக்கிய முன்னணியின் முக்கிய நிர்வாகிகளான ஆல்பர்ட் மார்ட்டன் ஹெர்மன் டேர்ன் ஆகியோரைச் சந்தித்தார் . ஆகஸ்ட் 2 ஆம்தேதி செக்கோஸ்லோவோகியா நாட்டின் தலைநகரமான பிராக் நகரில் தலைவர் காமராசர் வந்து இறங்கிய போது சோஷலிஸ்ட் கட்சித் தலைவரும் , சட்டம் நீதி இலாகா அமைச்சர் அலைஸ் நியூமனும் மற்றும் அரசாங்க அதிகாரிகளும் , இந்தியத் தூதுவர் கோஹக் ஆகியோரும் வந்து வரவேற்றார்கள் . தலைவர் காமராசர் அந்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சியின்மத்தியக் கமிட்டிக்காரியதரிசி திரு . காடர் , வெளிநாட்டு விவகார இலாகா அமைச்சர் தற்காலிகப் பிரதமர் க்ரேயிர் , பார்லிமெண்ட உபதலைவர் ஆகியோர்களைச் சந்தித்து மக்களின் வாழ்க்கைத் தரம் பற்றி உரையாடினார் . ஆகஸ்ட் 5 ஆம்தேதி காலை இந்தியத் தூதுவர் காமராசருக்கு ஒரு விருந்தளித்தார் . அந்த விருந்துக்குத் தலைவர்கள் , தமிழ் மாணவர்கள் , அமைச்சர்கள் போன்றோர் வந்திருந்தனர் . ஆகஸ்ட் மாதத்திலேயே ஹங்கேரி நாட்டின் தலைநகரான புடாபெஸ்ட் நகரில் வந்து இறங்கினார் பெருந்தலைவர் . மூன்று நாட்கள் அங்கே தங்கினார் . அங்கே புடாபெஸ்ட் நகரை பார்வையிட்டார் . பின் அந்நாட்டுப் பிரதமர் திரு . கலாய் அவர்களைப் பார்லிமெண்ட் மாளிகையில் சந்தித்தார் . பேச்சு வார்த்தையில் மக்கள் முன்னணி உதவிப் பொதுக் காரியதரிசியான திருமதி . பனோஜ்பஹோவா அவர்களும் கலந்து கொண்டார்கள் . ஆகஸ்ட் 7 ஆம் தேதி அன்று பிற்பகல் 2 மணிக்கு பல்கேரியா நாடடின் தலைநகரான சோபியா விமான நிலையத்தில் இறங்கினார் பெருந்தலைவர் . பல்கேரியத்தலைவர்கள் அனைவரும் வரவேற்றனர் . பல்கேரிய நாட்டின் தந்தையான ஜியார்ஜ் டிட்ரோவின் உடல் தைலமிட்டுப் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் சமாதிக்குச்சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலிசெய்தார் பெருந்தலைவர் . ஆகஸ்ட் 8 ஆம் தேதி யுகோஸ்லேவியா நாட்டின் தலைநகரமான பெல்கிரேடில் பெருந்தலைவர் இறங்கியபோது அந்நாட்டு சோஷலிஸ்ட் அலையன்ஸ் தலைவரும்மாஸிடோனியா ஜனாதிபதியுமான கோலியா செபஸ்கி , தம் துணைவர்களுடன் வந்து சிறப்பான வரவேற்பு அளித்தார்கள் . அன்று காலை யுகோஸ்லேவியா மத்தியக் கமிட்டி அலுவலகத்தில் கோலியா செபஸ்கியை சந்தித்தார் . மார்ஷல் டிட்டோ , பிரியோனி எனப்படும் தனித்தீவில் வசித்து வருவதால் அவரைச் சந்திக்கச் சென்றார் . பெருந்தலைவரை டிட்டோ மிகவும் உற்சாகமாகக் கைகுலுக்கி வரவேற்றார் . பின்னர் இரு தலைவர்களும் உலகப் பிரச்சனைகளைப் பற்றி மனம் விட்டுப் பேசினர் . சுமார் 1 மணி நேரம் உரையாடிய பின்னர் , தான் டெல்லி வரும்போது சந்திப்பதாகக் கூறினார் டிட்டோ . ஆகஸ்ட் 12 இல்பெருந்தலைவரின் இருபது நாள் சுற்றுப் பயணம் நிறைவடைந்தது . 109 108. ரஷ்யப் பயணம் சொர்க்கத்தைப் பற்றியும் நரகத்தைப் பற்றியும் ஒரு வாதம் நடந்தது . ஆனால் மார்க் ட்வைன் மட்டும் ஏதும் பேசாமல் அமைதியாக இருந்தார் . அவரிடம் காரணம் கேட்டனர் . அதற்கு மார்க் ட்வைன் எந்த இடம் என்றாலும் பரவாயில்லை . ஏனென்றால் சொர்க்கத்திலும் நரகத்திலும் எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள் என்றார் . இப்படிப்பட்ட சொர்க்கம் , நரகம் பற்றிய சிந்தனை ஏதுமில்லாமல் நாட்டு மக்களின் நலன் பற்றியே சிந்தித்தவர் பெருந்தலைவர் . நம் நாட்டு முன்னேற்றத்திற்காக உலகச் சுற்றுப் பயணம் செய்யப் புறப்பட்டார் . 1966 ஜூலை மாதம் 22 ஆம் தேதி பகல் 1-45 மணியளவில் பெருந்தலைவர் ரஷ்யா தலைநகர் மாஸ்கோ விமான நிலையத்தில் இறங்கினார் . சுப்ரீம்சோவியத் சபையின் தலைவர் ஸ்பிரிதினோவ் , உதவித் தலைவர் ஜான்தீவ் வெளிவிவகார அமைச்சர் பிருபின் மற்றும் பல முக்கிய அதிகாரிகள் காமராசரை வரவேற்றனர் . சுமார் 65 லட்சம் பேர் உள்ள மாஸ்கோ நகர மேயருடன்அந்த நகரத்தின் பிரச்சினைகள் குறித்து விவாதித்தார் . பிறகு ஜூலை 23 ஆம்தேதி கிரெம்ளின் மாளிகையைப் பார்வையிட்டார் . பிறகு லெனின் உடல் தைலமிடடு கெடாமல் பாதுகாக்கப்பட்டிருக்கும சமாதியைப் பார்வையிட்டு மலர் வளையம் வைத்தார் . பிறகு அருகில் இருந்த ஆர் . வெங்கட்ராமனிடம் “ காந்திஜியின் உடலையும் இப்படிப் பாதுகாக்காமல் போய் விட்டோமே “ என்றார் . பெருந்தலைவர் ரஷ்யப் பிரதமர் கோஸிஜினைச் சந்தித்தார் . தவைர்கள்இருவரும் உலகப் பிரச்சினைகள் பற்றிச் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் பேசினார்கள் . பின்னர் இன்டான் துஷான்பே நகரப்பொழுது போக்குப் பூங்காவைச் சுற்றிப் பார்த்தார் . ஜூலை 15 ல் தாஜிக் கம்யூனிஸ்ட் கட்சிக் காரியதரிசியான திரு . ரசலோவைச் சந்தித்தார் . அந்தக் கட்சி அலுவலகத்தில் பணியாற்றும ஊழியர்களையும சந்தித்துப்பேசினார் . கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் தங்கள் வருவாயில் ஒரு பகுதியைக் கட்சிக்குக் கொடுத்து விடுவதைக்கேட்டு வியப்புற்றார் . ஜூலை 26 ஆம்தேதி ஹிட்லரை எதிர்த்துப் போரிட்ட வால்காகிராட் நகரில் காலடி வைத்தார் . பூங்கா யுத்த கால நினைவுச் சின்னங்களைப் பார்வையிட்டார் . அதன் பிறகு வரலாற்றுப் புகழ் பெற்ற லெனின் கிராட் நகரத்துக்குச் சென்றார் . அங்கு பெருந்தலைவருக்கு அந்த நகர மேயர் விருந்தளித்தார் . விருந்தில் பேசிய காமராசர் ருஷ்யப் புரட்சியையும் , ருஷ்யத்தலைவர் லெனினையும் வெகுவாகப் புகழ்ந்து பேசினார் . அப்போது பாரதியார் பாடிய , “ ஆகாவென் றெழுந்தது பார் யுகப் புரட்சி கொடுங்கோலன் ஜார் மன்னன் அலறி வீழ்ந்தான் “ என்ற பாடலையும் பாடி போரின் கொடுமையில் இருந்து உலகத்தை விடுவிப்பதற்காகப் பாடுபடும் சமாதானக் காவலனாம் ரஷ்யாவோடு இந்தியா தோளோடு தோள் நின்று ஒத்துழைக்கும் என்றும் கூறினார் . 110 109. காந்தியத்தோடு இணைந்த காந்தியம் இந்தி எழுத்தாளர் பிரேம்சந்த் மிகவும உடல் நலம் இல்லாத நிலையில் கூட ஏதோ எழுதிக் கொண்டிருந்தார் . இதைக் கண்ட அவர் மனைவி “ ஏன் இந்த நிலையில் கூட எழுதுகிறீர்கள் ? நன்றாக ஓய்வெடுத்துக் கொண்டு உடல் நலத்தைக் கவனிக்கக் கூடாதா ” என்று கேட்டார் . அதற்கு பிரேம்சந்த் “ ஒரு விளக்கின் கடமை வெளிச்சம் தருவதுதான் . எண்ணெயும்திரியும் எவ்வளவு காலம் இருக்கிறதோ , அவ்வளவு காலம் அது ஒளி வீசிக்கொண்டுதான் இருக்கும் . எண்ணெய்தீர்ந்தவுடன் தானே விளக்கு அணைந்து விடும் ” என்று பதில் கூறினார் . இப்படிப்பட்ட நேரம் பெருந்தலைவர் வாழ்விலும் வந்தது . 1975 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம்தேதி காலை 6-30 மணிக்குத் தவைர் காமராசரிடம் காலைப் பத்திரிகைகள் அனைத்தும் கொடுக்கப்பட்டது . படித்து விட்டுக் குளித்துச் சிற்றுண்டி சாப்பிட்டார் . 10 மணிக்கு டாக்டர் வந்து இன்சுலின் ஊசிபோட்டார் . 11 மணி அளவில் சட்டக் கல்லூரி மாணவர்கள் 50 பேர்தலவைரைப் பார்க்க வந்தனர் . 3 நிமிடம் அவர்களுடன் இருந்த தலைவர் அதற்கு மேல் நிற்க முடியாமல் விடை பெற்றார் . 12 மணியளவில் காங்கிரஸ் செயலாளர்களுக்குப் போன்செய்து தன்னை வந்து பார்க்கும்படிக் கூறினார் . பத்திரிக்கை நிருபரான தணிகைத் தம்பி என்பவர் தலைவரைச் சந்தித்தார் . 1-30 மணியளவில் மதிய உணவு உண்டார் . தலையில் அதிகம் வியர்ப்பதாகத் தலைவர் கூறினார் . அதற்கு உதவியாளர் , “ நீங்கள் எப்போது பார்த்தாலும் அதிகமாக யோசனை செய்வதால் வியர்ப்பது போலப் பிரமை ” என்றார் . சாப்பிட்டபின் பாத்ரூம் சென்று வந்து தனது படுக்கையறையில் ஓய்வடுத்தார் . அவர் மணி அடித்தால்தான் உதவியாளர் உள்ளே செல்வாா . இரண்டு மணிக்கு மணி அடித்து உதவியாளரை அழைத்தார் . தலைவா உடம்பெல்லாம் வியர்த்திருக்கிறது . ஏர்கண்டிஷன் செய்யப்பட்டிருந்த அறையில் வியர்ப்பதைப் பார்த்து உதவியாளர் “ டாக்டரைக் கூப்பிடட்டுமா ” என்று கேட்டார் . டாக்டர் சௌரிராஜனுக்கு போன் செய்து பார்த்தும் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை . பின் டாகடர் ஜெயராமைத் தொடர்பு கொண்டு அவரை உடனே வருமாறு அழைத்தனர் . “ டாக்டர் வந்தால் எழுப்பு விளக்கை அணைத்துவிட்டுப்போ ” என்று கூறி உதவியாளரை வெளியே அனுப்பினார் தலைவர் . மூன்று மணிக்கு டாக்டர் சௌரிராஜன் வந்தார் . தலைவர் கட்டிலில் இடதுபுறம் திரும்பி இரண்டு கைகளையும் தலைக்கு முட்டுக்கொடுத்தபடி , கால்களை மடக்கியவாறு படுத்திருந்தார் . வழக்கமான அவரது குறட்டை ஒலி கேட்கவில்லை . அது கண்டு சௌரிராஜன் துணுக்குற்றார் . இரண்டு முறை தலைவர் தோளை அசைத்து எழுப்பினார் . பதில் இல்லை . நாடித்துடிப்பைப் பார்க்கலாம என்று ஒரு கையை எடுத்தார் . கை ஜில்லென்று இருந்தது . “ பெரியவர் போய் விட்டாரே ” என்று கதறி அழுதார் . ஸ்டெதஸ்கோப்பையும் , ரத்த அழுத்தக் கருவியையும் தூக்கி வீசி விட்டு கீழே விழுந்து புரண்டார் . தொடர்ந்து டாக்டர் ஜெயராமன் , டாக்டர் அண்ணாமலை ஆகியோர் வந்து தலைவர் பிரிந்து விட்டார் என்பதை அறிவித்தனர் . காந்தீயத்தோடு காந்தீயம் இணைந்தது . 111 110. இதயத்தில் இணைந்த தலைவன் பெருந்தலைவரின் இறுதிச் சடங்கு நடந்தது . சிதைக்கு தீ மூட்டுமுன் பீரங்கிகள் மூன்று முறை முழங்கின . தலைவா தலைவா என மக்கள் மனமுருக கதறியழுத குரல் விண்ணைத் தொட்டது . தலைவரின் தங்கை பேரன் கனகவேல் சிதைக்குத் தீயிட்டார் . சிதையில் இருந்து தீ எழுந்தது . கூடி இருந்த அனைவரும் உணர்ச்சி வசப்பட்டுக் கதறினர் . தன்னைப் பிரதமராக்கி நாட்டின் மானம் காத்த தியாகத்தலைவனின் உடலைத் தீ தீண்டியதைக் கண்ட இந்திரா காந்தியால் அழுகையை அடக்க இயலவில்லை . கையால் வாயைப்பொத்திக் கொண்டு கதறினார் . நம்முடைய வாழ்வின் ஒளி விளக்கு அணைந்து பேரிருள் சூழ்ந்து விட்டது . அன்புக்கும் , மரியாதைக்கும் உரிய அந்தப் புனிதர் இப்போது இல்லை . இத்தனை வருடங்களாக அனைவருடன் வாழ்ந்து ஆலோசனையும் , ஆறுதலும் தந்த தலைவன் இனி இல்லை . காந்திஜியோடு காமராசரும் சென்று கலந்து விட்டார் . தலைவர் மறையும்போது நாகர்கோவில் எம் . பி . ஆக இருந்தார் . 1969 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம்தேதி முதல் இறுதிப் பேச்சு அடங்கும் வரை 6 ஆண்டுகள் 8 மாதம் 24 நாட்கள் அவர் எம் . பி . யாக இருந்தார் . காந்திஜி அமரத்துவம் அடைவதற்கு முன் கடைசியில் “ ஹே ராம் ” என்று கூறினார் . நேருஜி கடைசியாக “ எல்லாப் பைல்களையும் பார்த்துவிட்டேன் ” என்றார் . தலைவர் இறுதியாக கூறிய வார்த்தை “ விளக்கை அணை ” என்பதாகும் . பாரதத்திற்கு வழி காட்டும் ஒளியாக விளங்கிய விளக்கும் அணைந்து அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது . 1975 ஜனவரி 26 இல் தலைவர் குடியரசு தினச் செய்தி விடுத்தார் . “ அன்புக்குப் பணிவோம் . கட்டுப்படுவோம் . அதிகாரத்துக்கு கட்டுப்பட மாட்டோம் . பலாத்காரத்திற்கு அஞ்ச மாட்டோம் என்ற உறுதியை இந்தக் குடீயரசு தின விழாவில் எடுத்துக் கொண்டு காரியம் செய்யத் தயாராக இருக்க வேண்டும் ” என்று அந்தச் செய்தியில் கூறியிருந்தார் . இதுதான்தலைவர் கடைசியகா மக்களுக்குக் கூறிய செய்தி . 1975 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையில் தலைவர் நாடெங்கும சுற்றுப் பயணம் செய்து காங்கிரசுக்கு தேர்தல் நிதி திரட்டினார் . அப்போது இன்புளூயன்சா ஜூரத்தால் பாதிக்கப்பட்டார் . பின் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதைத் தவிர்த்தார் . பிரதமர் இந்திரா காந்தி பெருந்தலைவரின் உடல் நிலையை விசாரித்துக் கடிதம எழுதினார் . பதிலுக்கு காமராசரும் உடல் நலம் தேறி வருகிறது என்று பதில் எழுதினார் . பிரதமர் இந்திராவுக்கு எழுதிய கடைசிக் கடிதம் இதுதான் . 1975 ஜூலை 2,3 ம் தேதிகளில் நடந்த காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் பெருந்தலைவர் கலந்து கொள்ளவில்லை . அவர் கலந்து கொள்ளாத முதல் காரியக் கமிட்டிக் கூட்டம் இதுதான் . 1975 அக்டோபர் 1 ஆம் தேதி பெருந்தலைவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இல்லத்துக்குச்சென்று அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்களைக் கூறிவிட்டு 4 தடவை “ போய் வருகிறேன் ” என்று கூறி சிவாஜி கணேசனிடம் விடை பெற்றார் . சென்னை காந்தி மண்டபத்தில் 1975 அக்டோபர் 2 ஆம்தேதி காந்தி ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ளுமாறு தமிழக கவர்னர் கடிதம் எழுதியிருந்தார் . ஆனால் பெருந்தலைவரோ காந்திஜியோடு அமரராகச் சென்று கலந்து விட்டார் .   112 மின் நூல் பங்களிப்பு மின் நூல் ஆக்கம் GNUஅன்வர் gnuanwar@gmail.com மூலங்கள் பெற்றது GNUஅன்வர்,ரமசாமி நன்றி திரு பாலன் மதுரா டிராவல்ஸ் 113 ஓர் மாமனிதரின் பாண்பு தெலுங்கு க் கவிஞர் வேணுரெட்டி சிறந்த கவிஞர் . அவர் எழுதிய தெலுங்குக் கவிதையின் சாராம்சம் இது . படைப்பு க் கடவுள் பிரம்மா ஒரு குழந்தையைப் படைத்துக் கொண்டிருந்தார் அப்போது அங்கே மன்மதன் வந்தான் இந்த க் குழந்தை க் கு நான் போழகை க் கொடு க் கப் போழகை க் கொடு க் கப் போகிறேன் என்றான் வேண்டாம் என்றார் பிரம்மா உன் உதவியில்லாமலேயே ஒரு குழந்தையை உருவாக்கப் போகிறேன் நீ போகலாம் என்றார் கொஞ்ச நேரத்தில் அங்கே கல்விக் கடவுள் கலைமகள் வந்தாள் இந்தக் குழந்தைக்கு கல்விச் செல்வத்தை வாரி வழங்கப் போகிறேன் என்றாள் வேண்டாம் என்றார் பிரம்மா உன் உதவி இல்லாமலேயே உருவாக்கப்போகிறேன் என்றார் கலைமகளும் கவலையோடு போய் விட்டாள் அடுத்து செல்வக் கடவுள் லெட்சுமி வந்தாள் இந்தக் குழந்தைக்கு வளமான செல்வத்தை வழங்கப்போகிறேன் என்றாள் வேண்டாம் என்றார் பிரம்மா உன் உதவியில்லாமலேயே உருவாக்கப்போகிறேன் நீ போகலாம் என்றார் அவளும் போய் விட்டாள் மன்மதன் வழங்கும் பேரழகும் இல்லாமல் கலைமகள் வழங்கும் கல்வியும் இல்லாமல் லட்சுமி வழங்கும் கல்வியும் இல்லாமல் லட்சுமி வழங்கும் செல்வமும் இல்லாமல் உலகப் புகழ் பெறப்போகும் ஒரு குழந்தையை உருவாக்கப் போகிறேன் என்றார் பிரம்மா அந்தக் குழந்தைதான் ளுலகம் புகழும் உன்னதத் தலைவராய் உயர்ந்த பெருந்தலைவர் காமராசர் . 1 வேண்டுகோள் வாசகர்கள் இந்த நூலில் எழுத்து பிழைகள் தவறுகள் இருந்தால் மின் நூல் ஆக்குனருக்கு மின் அஞ்சலில் சுட்டி காட்டவும் gnuanwar@gmail.com 2 எங்களைப் பற்றி freetamilebooks மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. எனவே ஒரு தமிழ் வாசகர் மேற்கூறிய “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகளை” வாங்கும்போது, அவரால் எந்த ஒரு தமிழ் புத்தகத்தையும் இலவசமாகப் பெற முடியாது. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FreeTamilEbooks.com இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. www.vinavu.com 2. www.badriseshadri.in 3. http://maattru.com 4. kaniyam.com 5. blog.ravidreams.net எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். <துவக்கம்> உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்]. தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/ நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : freetamilebooksteam@gmail.com  FB : https://www.facebook.com/FreeTamilEbooks G +: https://plus.google.com/communities/108817760492177970948   நன்றி. மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைfreetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது ? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும். மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும். நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம். தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும். எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். - email : freetamilebooksteam@gmail.com - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948 இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? - Shrinivasan tshrinivasan@gmail.com - Alagunambi Welkin alagunambiwelkin@fsftn.org - Arun arun@fsftn.org -  இரவி Supported by - Free Software Foundation TamilNadu, www.fsftn.org - Yavarukkum Software Foundation http://www.yavarkkum.org/   3 உங்கள் படைப்புகளை வெளியிடலாமே உங்கள் படைப்புகளை வெளியிடலாமே   உங்கள் படைப்புகளை மின்னூலாக வெளியிடலாம். 1. எங்கள் திட்டம் பற்றி – http://freetamilebooks.com/about-the-project/ தமிழில் காணொளி  – http://www.youtube.com/watch?v=Mu_OVA4qY8I 2.  படைப்புகளை யாவரும் பகிரும் உரிமை தரும் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் பற்றி – http://www.wired.co.uk/news/archive/2011-12/13/creative-commons-101 https://learn.canvas.net/courses/4/wiki/creative-commons-licenses உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தை இங்கே தேர்ந்தெடுக்கலாம். http://creativecommons.org/choose/ 3. மேற்கண்டவற்றை பார்த்த / படித்த பின், உங்கள் படைப்புகளை மின்னூலாக மாற்ற பின்வரும் தகவல்களை எங்களுக்கு அனுப்பவும். 1. நூலின் பெயர் 2. நூல் அறிமுக உரை 3. நூல் ஆசிரியர் அறிமுக உரை 4. உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் 5. நூல் – text / html / LibreOffice odt/ MS office doc வடிவங்களில்.  அல்லது வலைப்பதிவு / இணைய தளங்களில் உள்ள கட்டுரைகளில் தொடுப்புகள் (url) இவற்றை freetamilebooksteam@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்பவும். விரைவில் மின்னூல் உருவாக்கி வெளியிடுவோம். ——————————————————————————————————– நீங்களும் மின்னூல் உருவாக்கிட உதவலாம். மின்னூல் எப்படி உருவாக்குகிறோம்?  – தமிழில் காணொளி – https://www.youtube.com/watch?v=bXNBwGUDhRs இதன் உரை வடிவம் ஆங்கிலத்தில் – http://bit.ly/create-ebook எங்கள் மின்னஞ்சல் குழுவில் இணைந்து உதவலாம். https://groups.google.com/forum/#!forum/freetamilebooks நன்றி !