[] [காதல் காதல் - குறுநாவல்] காதல் காதல் - குறுநாவல் காதல் காதல் - குறுநாவல் மெக்னேஷ் திருமுருகன் மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com சென்னை இக்கவிதைத் தொகுப்பு கிரீயேட்டிவ் காமன்ஸ் உரிமத்தில் பகிரப்பட்டுள்ளது., இவ்வுரிமத்தின் படி இக்கவிதைத் தொகுப்பினை வர்த்தக ரீதியாக பயன்படுத்திக் கொள்ள இயலாது. மற்றபடி வாசகர்கள் படிக்கவும், பகிரவும் உரிமம் உண்டு. This book was produced using PressBooks.com. உள்ளடக்கம் - காதல் காதல் நூல் அறிமுகம் மெக்னேஷ் திருமுருகன் - 1. மதன் - 2. காதல்மையல் - 3. காந்தவிழிகள் - 4. பையன் யாரு - 5. ஐ லவ் யூ டி - 6. ஐ லவ் யூ டா - 7. பிடிக்கல - 8. காதல் - Free Tamil Ebooks – எங்களைப் பற்றி - உங்கள் படைப்புகளை வெளியிடலாமே 1 காதல் காதல் நூல் அறிமுகம் மெக்னேஷ் திருமுருகன் [Cover Image] மின்னஞ்சல் – joinmegu@gmail.com வகை – கட்டுரை வெளியீடு: http://FreeTamilEbooks.com எல்லாக் கருத்துக்களும் நூல் ஆசிரியருடையவையே. உரிமை Creative Commons Attribution-Non Commercial-No Derives 3.0 Un ported License மேலட்டை உருவாக்கம்: மனோஜ் குமார் மின்னஞ்சல்: socrates1857@gmail.com காதல் – இந்த வார்த்தையை உச்சரிக்கும்போதே மனதில் ஒருவித அழகியல் உணர்வு குடியேறும் . இன்றைய தலைமுறையில்  சில காதல்கள் திருமணத்தில் முடிகிறது . பல காதல்கள் திருமணமாகாமல் தொடர்கிறது . காதல் தோல்வி என்று எல்லோராலும் அது அழைக்கப்பட்டாலும் , என்னைப்பொறுத்தவரை தோற்ற காதலர்களிடம் மட்டுமே காதல் தொடர்ந்து இருக்கும் . காதல் காதல் எனும் இக்கதை  என் வாழ்வின் மிக அருகில் நடந்த சம்பவங்களின் தொடர்ச்சியாய் புத்தகமாகியிருக்கிறது . நான் ஒன்றும் பெரிய எழுத்தாளன் இல்லை . நடந்த சம்பவங்களை இலக்கிய விதிகளின்படி வர்ணிக்க எனக்கு போதுமான அறிவு இல்லை . இருந்தாலும் இக்கதை படிப்பவர்களுக்கு பிடிக்கும் . இந்த கதை , உங்களுடைய வாழ்விலும் நடந்திருக்கலாம் , அல்லது நடந்திருந்தால் நன்றாய் இருக்கும் என நினைத்திருக்கலாம் . என் தளத்தில் நான் எழுதிய இக்கதையை , குறுநாவலாக தயாரித்து வெளியிட்டுள்ள  நண்பர்களுக்கு் குறிப்பாக இந்நூலை உருவாக்க உதவிய நண்பர் ஶ்ரீனிவாசனுக்கும் என் நன்றியைத்தெரிவித்துக்கொள்கிறேன் . மேலும் என்னை எழுதத்தூண்டிய  ‘சிவகாசிக்காரன் ‘ராம்குமார் , அதிஷா , பாலகணேஷ் , சரவணன் கார்த்திகேயன் மற்றும் வலையுலகில் என்னை அறிமுகப்படுத்திய ஶ்ரீனிவாசன் , என்னுடைய எழுத்துகளுக்குத்தொடர்ந்து ஆதரவளித்துவரும் ஜோக்காளி பகவான்ஜீ , கில்லர்ஜீ ஆ்கியோருக்கு இந்நூலின்வழியே என் நன்றியைத்தெரிவித்துக்கொள்கிறேன் . [pressbooks.com] 1   ‘மச்சி !  ஒரு பொண்ணு பஸ்ல உன்ன பாக்குதுனு வச்சிக்கோயேன் . அவள நீ அடிச்சி போட்ட மாதிரி பாக்கனும் . அவ பாக்கறப்போலாம் நீ அவ கண்ணையே பாத்துட்டு இருக்கனும் . தப்பித்தவறி அவ பாக்கற நேரத்துல நீ அவள பாக்காம வேற எங்கயாச்சும் வேடிக்க பாத்தனு வச்சிக்கோ , அவ்ளோ தான் . அதுக்கப்றம் நீ தலகீழா நின்னா கூட அவ உன்ன பாக்கமாட்டா . அதே மாதிரி அவ கண்ண மட்டும்தான் பாக்கனும் . வேற எங்கயும் பாக்கக்கூடாது . முக்கியமா அவ கழுத்துக்கு கீழ தப்பித்தவறி கூட உன் கண்ண ஓடவிட்றாத  . ’ என்று தன்னுடைய அட்வைஸ்களை அள்ளிவீசினான் கண்ணன் . இந்த அறிவுரைகளில் ஒருவார்த்தை விடமால் மனப்பாடம் செய்துகொண்டிருந்த மதனுக்கு காதல் வந்துவிட்டது என்று தனியாக சொல்லவேண்டுமா ?   ‘அப்றம் மச்சி ’ கண்ணனின் அடுத்தகட்ட அட்வைஸ்களில் மெய்யுருகி தவித்தவாறே கேட்டான் மதன் .   ‘அப்பறம் , பொண்ணுங்களுக்கு பஸ்ல கமெண்ட் அடிக்கறது ரொம்ப பிடிக்கும் . ஆனா பிடிக்காதமாதிரியே சிணுங்குவாங்க . அட் த சேம் டைம் , அவங்கள கலாய்க்கற மாதிரி கமெண்டக்கூடாது . அவங்க கிட்ட நாம கெஞ்சுறமாதிரி தான் பேசனும் .’   ‘அது எப்படி மச்சி ?’   ‘அது ரொம்ப சிம்பிள் மச்சி . எப்பவும் உன் பக்கத்துல உன்னவிட மொக்கையான பசங்களையே வச்சிருக்கனும் . அவ உன்ன பாக்கற நேரம் , என்னப்பா இப்போலாம் கண்டுக்கவே மாட்டேன்ற ?, அச்சோ உன்னோட கண்ணாலயே என்ன கொன்னுடுவ போல இருக்கே ! இந்த மாதிரி அந்த பொண்ண பாத்துட்டே உன் பக்கத்துல இருக்க ஃப்ரண்டுகிட்ட பிட்டு போடனும் மச்சி . அதேநேரம் உன் பக்கத்துல க்ரௌட மட்டும் அண்டவிட்ராத. நீ ரொமான்டிக்கா பேசுற டயலாக்ஸ்லாம் உல்டா பண்ணிவிட்ருவாய்ங்க . மறந்துடாத மச்சி . நீ போட்ற பிட்டு நல்லா கடல்ல போடற நங்கூரம் மாதிரி வலுவா இருக்கனும் . புரியுதா ?’   ம் ம் என்று பசுமாடு கணக்காய் தலையை ஆட்டிவிட்டு அஞ்சேகால் 68 பஸ்சுக்காக காத்திருந்தான் . மனதெல்லாம் அவளிடம் பேசப்போகிற டென்சனில் இருந்தவனுக்கு கண்ணனின் அறிவரைகள் பிராக்டிகல் மார்க்கைப்போல் கைக்கொடுத்தது எனலாம் . 14 வயதினில் தாய் , தந்தையை இழந்த மதனுக்கு எல்லாமே அவனுடைய மாமன் தான் . பத்தாவது முடித்ததும் எப்படியெப்படியோ அடித்து பிடித்து ஒரு பாலிடெக்னிக்கில் எலக்ட்ரானிக்ஸ் டிப்ளமோ பிரிவில் சேர்த்துவிட்டார் அவனுடைய மாமா . வழக்கம்போல கல்லூரி முதல் வாரத்தில் முதல் பெஞ்சில் தன்னுடைய படிப்புக் கனவுகளை அடுக்கிக்கொண்டே அமர்ந்தவன் அடுத்த வாரத்திலேயே கடைசி பெஞ்சிற்கு தெரித்து ஓடும் நிலைக்குத்தள்ளப்பட்டான் . கடைசி பெஞ்ச்சிற்கு உரித்தான சிகரெட் , சரக்கு போன்றவைகளை சரியாய் ஒரு செமஸ்டருக்குள் கற்றுத்தேர்ந்து அதில் அவுட்ஸ்டான்டிங் ஸ்டூடன்ட் ஆகிவிட்டான் . ஒருமுறை அரைத்தூக்கத்தில் இருந்த மதனை எழுப்பிய புரபசர் ஒரு கேள்வியைக்கேட்டு அவனை மடக்கமுயல , அவனோ தட்டுத்தடுமாறி காதல்கொண்டேன் தனுஷ் மாதிரி விடையளித்து தேவியை மடக்கிவிட்டான் . புதுத்தோழியாய் அறிமுகமான தேவி  , பின்னாளில் மதனின் பைனான்சியர் ஆனாள் . மதனின் மாமாவிற்கு இவன்மேல் இருக்கும் பாசமளவிற்கு , அவனுடைய அத்தைக்கு இல்லை . பெரும்பாலான நாட்கள் காலையில் சமைக்கமாட்டார்கள் . பசியுடன்தான் திரிவான் . அவனுக்கும் சேர்த்து சாப்பாடு எடுத்துவந்த தேவி , மதனை மகன்போல் நடத்தினாள் . திடுதிப்பென ஒரு நாள் ‘I LOVE YOU ’ என்று அவள்சொல்லிவிட , அதேநேரம் இவனின் ஆரூயிர்த்தோழன் கண்ணன் அவளைக்காதலிப்பதாய் இவனிடம் சொல்ல , நட்புக்காக அவளைத்தியாகம் செய்தான் .   இதோ கல்லூரி இறுதி ஆண்டு . இன்று அவனுக்குள் பதட்டமும் படபடப்பும் கொஞ்சம் அதிகமாய்த்தானிருந்தது . காலையில் அவளை மட்டும் பார்த்திராமல் இருந்திருந்தால் இப்பிரச்சனையே வந்திருக்காது . வெள்ளைநிறச்சுடிதாரில் , ஆங்காங்கே பிங்க் கலர் பூக்களும் , அதற்கு மேட்சாக வெள்ளைக்கலர் சாலும் மின்ன , சந்தன நிறத்தில் பெரும் அழகாய் காட்சியளித்துக்கொண்டிருந்தாள் அவள் . பஸ்ஸில் நிறைந்திருந்த கூட்டமும் வேர்வை நாற்றமும் தாண்டி அவளின் கருங்குழலில் இருந்த பிங்க் நிற ரோஜா , அவள் தாக்கியதுபோலவே இவனின் நாசியைத்தாக்கியது . மெல்ல திரும்பியவளின் முகத்தைப்பார்த்த நொடி , அவ்வளவு அழகாய் அவனைக்கடந்தது எனலாம் . கரும்நிறத்தில் விழும் அருவிபோலிருந்த அவளின் கூந்தல் நேர்த்தியாய் பின்னப்பட்டு , வகிடு எடுத்து சீவப்பட்டிருக்க , இருபுருவங்களுக்கும் இடைபட்ட இடத்தில் ஒரு கருநிற ஸ்டிக்கர் பொட்டும் , , அதற்கு கொஞ்சம் மேல் சிவன்கோயில் திருநீறும் இருந்தது . தங்கத்தால் ஆன ஜிமிக்கி , இவளால் அழகாய்த்தெரிந்தது அவனுக்கு . பெண்களுக்கு சாதரணமாகவே கண்கள் கவர்ந்திழுக்கும்படியாய் இருக்கும் . இவளுக்கு சொல்லவா வேண்டும் . நல்லவேளை , பஸ்ஸாக இருந்ததால் அவளின் உதட்டைப்பார்த்துவிட்டு மட்டும் வந்தான் . என்ன செய்ய ? தேனிருக்கும் மலரைத்தேடி வண்டு வரத்தானேச்செய்யும் . இவளின் காந்த சிரிப்பை படிக்கட்டில் இருந்தவாறே பார்த்தவன் , அடுத்தநிமிடமே இரும்புத்துகளாய் அவளிடம் சென்றடைந்தான் . அவளின் அழகில் கால்பங்கை ரசிப்பதற்குள் பஸ் ஸ்டாண்ட் வந்துவிட , வேறுவழியே இல்லாமல் அவளின் பின்னாலயே சென்று அவளின் காலேஜைக்கண்டுபிடித்தான் .   அதன்பின் கண்ணனுக்கு போன்செய்து காலேஜை கட் அடித்துவிட்டு வர சொன்னான் .   ‘எந்த காலேஜ் மச்சி ?’   ‘டிபிடி பாலிடெக்னிக் டா . பர்ஸ்ட் இயர் ஜாய்ன் பண்ணிருக்கா . இன்னும் என்ன டிபார்ட்மென்ட்னு தெரில .’   ‘பொண்ணு பேரு மச்சி ?’   ‘தெரில டா . அவள இன்னைக்குக்காலைல தான் பார்த்தேன் . சான்ஸே இல்ல மச்சி .  சண்டாளி , கண்ணாலயே கொல்றா மச்சி . என்னால முடில மச்சி . அப்படியே சுர்ருனு ஏறுது . ஓடிப்போய் எதிருல வருதுபாரு , அந்த பைக்க அப்படியே எட்டி ஒதைக்கனும்னு தோனுது .  ’ என்று புலம்ப ஆரம்பித்தவனிடம் கண்ணன் அன்றைய நாள்முழுதும் மாட்டி வதைபட்டுக்கொண்டிருந்தான் .   ‘மச்சி ! நீ என்ன  பண்ணுவியோ எனக்குத்தெரியாது . உன் தங்கச்சிய கரெக்ட் பண்ண ஒரு வழி சொல்லு .’ என்று சாயங்காலம் பஸ்ஸுக்கு காத்திருந்த கண்ணனிடம் மதன் கேட்டபின்தான் தன்னுடைய அட்வைசை பொழிந்தான் .   காலையிலிருந்து புலியைப்போல் இருந்தவன் , அவள் வந்தபின் அப்படியே எலியானான் . கண்ணன் மட்டுமல்ல , அங்கிருந்த கல்லூரி மாணவர்கள் பலரின்கண் அவள்மேல்தான் இருந்தது . அவளோ இவர்கள் யாரையும் மதிக்காமல் அவளின் தோழியுடன் சிரித்து பேசிக்கொண்டிருந்தாள் . டீக்கடையில் தம்மடித்துக்கொண்டிருந்த ஒரு இளைஞன் இவளைப்பார்த்ததும் பார்க் செய்திருந்த பைக்கை எடுத்து எட்டுபோட்டு படம் ஓட்டிக்கொண்டிருந்தான் . ஒவ்வொருத்தனும் தங்களின் அடிமையாய் இருக்கும் நண்பர்களிடம் தங்களின் அதீத பாசத்தைக்காட்டிக்கொண்டிருந்தனர் . ‘மாப்ள . ஆக்சுவலா இந்த எக்சாம்லாம் எனக்கொரு சப்ப மேட்டுருடா ’ என்றான் ஒருவன் . ‘ஹே டூட் . ஐ யம் கோன்னா பை எ நியூ ஐ போன் ’ என்றான் ஒருவன் . ‘என்னடா பஸ் இது ? நேரநேரத்துக்கு வரவே மாட்டேங்குது . நாளைல இருந்து கார்லயே வரபோறேன் மச்சி’ என்றவாறு ஒவ்வொருவனும் அவனுடைய நண்பர்களிடம் கத்தி சொல்லிக்கொண்டிருந்தனர் .இன்னும் சிலரோ அவளை விழுங்கிவிடுவதுபோல் பார்த்துக்கொண்டிருந்தனர் . தனித்து இருந்த இளைஞர்களோ , இவளை கண்டும் காணாததுபோல் தங்களின் ணெல்போனை எடுத்து அம்பானி ரேஞ்சுக்கு நோண்டி கொண்டிருந்தனர் . அவர்களை எல்லாம் பார்க்கும்போது காண்டின் உச்சத்திற்கே சென்றுவிட்டான் மதன் . மதனை ஓரளவு சமாதான படுத்தியவாறு ஆறுதலாய் உடனிருந்தான் கண்ணன் .அந்நேரத்திற்கு பஸ் வரவும் , பெண்கள் எல்லாம் முன்னால் ஏற , ஆண்கள் எல்லாம் பின் வாயிலில் ஏறினார்கள் . மதன் வேகவேகமாய் பஸ்ஸினுள் புகுந்து அவள் இருக்குமிடத்தை அடைந்தான் . பதட்டத்தை ஓரங்கட்டியவாறே அவளிடம் பேசத்துணிந்து வாயெடுக்கும்முன் அவளே பேசினாள் .   ‘அண்ணா ! கொஞ்சம் பின்னாடி தள்ளி நில்லுங்கணா . எல்லாரும் நெருக்கறாங்க . ப்ளீஸ் ’ 2 காதல்மையல்   ஓய் குயில்களே ! உங்களுக்கு போட்டியாக ஒருத்தி வந்துவிட்டாள் என்று உரக்கக்கூற நினைத்த மதனுக்கு  ‘அண்ணா’ என்ற வார்த்தை நாராசமாய் அவன் காதில் ஒலித்துவிட்டது . இவ்வளவு அழகான நாளில் இப்படியொரு கொடூரமான வார்த்தையைக்கேட்க கூடும் என்று அவன் அறிந்திருந்தால் நிச்சயம் மாலைவேளையில் அந்த பேருந்தினுள் ஏறியிருக்கவேமாட்டான் . அவனுக்குள் சுர்ரென்று கோவம் உச்சந்தலைக்குள் ஏறியிருந்தது .   ‘அண்ணா ப்ளீஸ் . தள்ளி நில்லுங்க’ என்று மறுபடியும் அவள் கூறியபோது வெடித்தே சிதறிவிட்டான் .   ‘யாருடீ உனக்கு அண்ணன் ? அப்படியே பளார்னு விட்டன்னு வச்சிக்கோ , அவ்ளோதான் .’   ‘நா என்ன தப்பு பண்ணேன் . எதுக்கு திட்ரிங்க ’ என்று கண்கலங்கியவாறே அவள் கேட்டாள் . பாவம் , அந்த 18 வயது மங்கைக்கு கல்லூரியின் முதல்நாளன்று யாரென்றே தெரியாத ஒருவனிடம் திட்டு வாங்கியது அதிர்ச்சியையும் சிறிது கலக்கத்தையும் உண்டாக்கிவிட்டது .   ‘நீ ஒரு வெங்காயமும் பண்ணல . எல்லாம் என் தப்பு தான் . இன்னொரு தடவ அண்ணானு சொன்ன , மூஞ்சு மொவரையெல்லாம் பேத்துடுவேன் .’ என்றவாறே திரும்பி வேகவேகமாய் எதிரில் இருக்கும் கூட்டத்தை விலக்கியவாறே படியை நோக்கி கிளம்பினான் மதன் . மதனின் நிலையைக்கண்டு அங்கிருந்த போட்டி கோஸ்டியினருக்கு உள்ளுக்குள் ஆனந்தம் ஏற்பட , இன்னும் சிலருக்கு நாம தப்பித்தோம் என்று ஆத்வாசப்பட்டுக்கொண்டிருந்தார்கள் .   ‘டே கண்ணா ! இறங்கு டா .’ என்று கூறியவாறே கண்ணனின் பதிலை எதிர்பாராமல் அடுத்த நிறுத்தத்தில் வேகவேகமாய் இறங்கி , எதிரில் தென்பட்ட டீக்கடையை நோக்கி நடந்தான் மதன் .அவனுக்குள் கோவம் கொப்பளித்துக்கொண்டிருந்தது . படுபாவி மகள் , ஒரு கொடுவாளை எடுத்து கழுத்தை வெட்டியிருந்தால் கூட சிரித்தவாறே இறந்திருப்பான் . ஆனால் வார்த்தையால் வதைத்துவிட்டாளே என்று மனதினுள் அழுதவாறே ஒரு சிகரெட்டைப்பற்ற வைத்தான் .   ‘என்ன மச்சி ஆச்சு ?’ என்ற கண்ணனின் கேள்விக்கு பத்துநிமிடம் கழித்து பதில் கூறினான் .   ‘இல்ல மச்சி ! இவ செட் ஆகமாட்டா . ’   ‘ஏன்டா ? அவளுக்கு புடிக்கலையா ?’   ‘இல்ல மச்சி . அவ என்ன அண்ணானு சொல்லிட்டாடா ’ என்று தொண்டை தழுதழுக்க கூறினான் . கிட்டத்தட்ட அழுதுவிடும் நிலையில் இருந்தான் . கண்டிப்பாய் வீட்டை அடைந்ததும் அவனுடைய படுக்கை கண்ணீரால் நனையப்போவது உறுதி .   ‘விடு மச்சி . இவளாம் ஒரு ஆளு . அவ மூஞ்சப்பாத்தியா ? நல்லா வெள்ள எலிக்கு பவுடர் பூசுன மாதிரி . குள்ளக்கத்திரிக்காயாட்டம் இருந்துகிட்டு ஓவர் சீனு போடுறா மச்சி . நா அப்பவே வேண்டாம் விடுடானு சொல்லிருப்பேன் . உனக்கு மனசு கேக்காதுனு தான் விட்டுட்டேன் ’ என்றான் கண்ணன் .   அப்போதைய வார்த்தைகள் ஓரளவு மதனுக்கு ஆறுதலாக இருந்திருக்கும் . அடுத்த பேருந்து வந்தபின் அதில் ஏறிய மதனுக்கு வீட்டைச்சென்றடையும் நேரம் எல்லாம் முழுக்கவனமும் அவள் அண்ணா என்று கூறிய அந்த ஒரு வினாடியில் மாத்திரமே இருந்தது . ச்சே ! நாம இன்னைக்கு அவகிட்டபோயிருக்கவேகூடாது . அவசரப்பட்டுட்டோம் . அவ மட்டும் என்ன செய்வா ? முன்னபின்ன தெரியாத ஒரு பையன அண்ணானு சொல்லாம மாமானா சொல்லுவா ? அவமேல தப்பு இல்ல . அவளும் காலைல நல்லா பார்த்தாளே ! அப்பறம் எதுக்கு அண்ணானு சொல்லிருப்பா ? ஒருவேள என்ன புடிக்கலையோ ? எல்லாத்துக்கும் காரணம் எங்கப்பா தான் . அவரு மாதிரியே என்னோட தலையும் கொஞ்சம் வழுக்கையா இருக்கறதால தான் அவளுக்கு நம்மள புடிக்கல . இதுபோன்று ஏதேதோ நினைத்துக்கொண்டே வீட்டை அடைந்தான் . மற்றநாட்களில்  வீட்டினுள் எல்லாரையும் சிரிக்கவைத்துக்கொண்டிருந்தவன் அன்றைய தினம் மௌனமாய்  தன்னுடைய அறையினில் முடங்கிக்கிடந்தான் . இதுமாதிரியான துன்பகர தினம் ஒருநாளும் அவனுக்கு இருந்தது இல்லை . ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாய் மனதினுள் விதைத்துக்கொண்டான் . வாழ்வு அவளோடு தான் .   அடுத்தநாள் மீண்டும் வேகவேகமாய்க்கிளம்பி அவள் பயணிக்கும் அதேபேருந்தில் ஏறினான் .நேற்றைய தினம் அவள் மட்டும் அப்படி இவனை அழைக்காமலிருந்தால் அவளின் வீடுவரை சென்றிருப்பான் . அவனுக்கென்று கடைசி படியில் சிறிது இடவிட்டு ‘வா தல’ என்ற ஜூனியர் மாணவர்களின் மரியாதையை கண்டுகொள்ளாமல் உள்ளே நுழைந்தான் . எப்போதும் கடைசிப்படியில் மட்டுமே பயணிப்பவன் முதல்முறையாய் உள்ளே நுழைவது , கண்டக்டர் உட்பட அவனை அறிந்த அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது . அவளைப்பார்த்ததும் பல கால்களை மிதித்து , சிலரைத்தள்ளியவாறே உள்ளே நுழைந்தான் . அவள் நின்றுகொண்டிருந்த இடத்தை அடுத்த ஒருநிமிடத்தில் அடைந்தான் . நேற்று அவளை சைட் அடித்துக்கொண்டிருந்த அதே முகங்கள் இன்றும் தத்தம் இடத்தில் தென்பட்டன .இன்றைய தினம் வெள்ளைநிற சுடிதார் , ஆனால் மெல்லிய நீலநிறப்பூக்களுக்குள் தனது தங்கத்தை , சாரி அங்கத்தை மறைத்திருந்தாள் .  ஆனால் நேற்று பார்த்திருந்த பொலிவான முகம் அவனுக்குக்காட்சியளிக்கவில்லை . மாறாய் இரவு முழுதும் துயில் கொள்ளாத களையிழந்த முகம்தான் காணப்பட்டது . நேற்றைய சிரிப்பொலி இன்று அவளிடம் இல்லை . அவளுடைய தோழிகள் மாத்திரம் ஜாலியாய் கதையடித்துக்கொண்டிருந்தார்கள் . அவர்களுக்குள் பெரும்பாலான பேச்சுகள் தங்களை எவனெவன் எப்படியெல்லாம் சைட் அடிக்கிறார்கள் என்பதைப்பற்றியே இருந்தது . கண்ணன் கல்லூரிக்கு கிளம்ப இன்னும் ஒருமணிநேரம் ஆகிவிடும் என்பதால் , மதன் அவனில்லாமல் சோலோவாய் அவளை நெருங்கினான் .   ‘அப்றம் . எந்த காலேஜ் நீங்கலாம் ?’ என்றவாறே அவளின் தோழிகளைப்பார்த்துக்கேட்டான்  மதன் .   ‘டிபிடி ணா . நீங்க ?’ கொஞ்சம் உடல்பூசினாற்போல் அதேநேரம் வழவழவென வாயாடிக்கொண்டிருந்தவள் இவனின் கேள்விக்கு பதிலளித்தவாறே கேள்வியை எழுப்பினாள் .   ‘நா சென்ட்ரல் பாலிடெக்னிக் . என்ன டிபார்ட்மென்ட் ?’   ‘நாங்க நாலுபேரும் சி.எஸ் , இவ மட்டும் இ.சி.ஈ ’ என்றாள் அவள் . தன் மனதுக்கு பிடித்தவள் , தான் நினைத்தவாறே கம்ப்யூட்டர் சயின்ஸ் எடுத்திருப்பது அவனுக்கு ஆச்சரியத்தை அளிக்கவில்லை .   ‘இளம்பிள்ளையா நீங்க ?’   ‘ஆமாங்ணா . எப்படி கண்டுபிடிச்சிங்க ?’   ‘லென்ஸ் வச்சி கண்டுபிடிச்சேன் .’   ‘அண்ணா ! ச்சும்மா ஓட்டாதிங்க .’   ‘நீங்க என்ன காரா ? பைக்கா ? ஓட்ரதுக்கு .’   ‘ஹலோ ! நாங்க ஓட்டுனா நீங்க தாங்கமாட்டிங்க .’   ‘நா ரெடிப்பா . நல்லா ஓட்டுங்க .’   பின் மொக்கையாய் தொடர்ந்த உரையாடல்கள் ஜாலியாய் மாறத்துவங்கியது . மதனிடம் வரிக்குவரி வாயாடியவள் பெயர் மாலினி என்பதும் , ஓரமாய் எலும்புந்தோலுமாய் இருந்தவளின் பெயர் வைதேகி எனவும் , இன்னொருத்தி பெயர் ரம்யா எனவும் தெரிந்துகொண்டான் . பதிலுக்கு இவனின் பெயரையும் அவர்கள் தெரிந்துகொண்டார்கள் . இவர்களின் பேச்சை முயற்சியின்றி கேட்பதுபோலிருந்த அவள் , தன்னிடம் இவன் பேசமாட்டானா என்பதுபோல் சிறிது ஏக்கத்துடன் பார்த்தாள் .   ‘அப்றம் மாலினி . உன்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட் பேர சொல்லாம விட்டுட்ட ?’ என்றவாறு அவளின்மேல் தன் பார்வையைத்திருப்பினான் . அவள் முகத்தில் சிறிது வெட்கமும்  , நிறைய ஆவலும் இருந்தது .   ‘ஓ இவளா ? இவ பேரு மையல் விழி  .  ’ என்ற மாலினி .   அடுத்தநொடியே   ‘ஹலோ ! என் பேரு மதன் . நைஸ் டு மீட் யூ மையல் . உங்க பேரு செமையா இருக்கு ’ என்றான் .   அவள் பதிலேதும் கூறாமல் தலையைக்குனிந்தவாறே சிரிப்பை உதிர்த்தாள் .   ‘என்ன உங்க ப்ரெண்ட் பேசமாட்டாங்களா ? பாவம் ஊமை போல ?’   ‘சீச்சீ . அப்படியெல்லாம் இல்ல . அவ ஒரு பயந்தாங்கொள்ளி . யார்கிட்டயும் அவ்வளவா பேசமாட்டா . பத்தாததுக்கு நீங்க வேற நேத்து அவள திட்டிவிட்டுட்டிங்க . அதான் ’ என்றாள் மாலினி .   ‘ம் . ஹே மாலினி . நீயே சொல்லுப்பா . நீ ஒரு பையனா இருந்து , இவள பாத்து பேசலாம்னு நீ வர . திடீர்னு உன்ன இவ அண்ணானு சொன்னா நீ என்ன செய்வ ?’   ‘சப் சப்புனு ரெண்டு அர விட்ருப்பேன்ணா .’   ‘அடடா ! நா கொஞ்சம் சாஃப்டா ஹேண்டில் பண்ணிட்டேன் மாலினி . நீ சொல்ற மாதிரி ரெண்டு அர விட்ருக்கனும் ’ என்ற மதனை ஒரு நொடி நிமிர்ந்து பார்த்து முறைத்தாள் மையல் . அவளின் கண்கள்  ‘விடுவ விடுவ . அது வரைக்கும் என் கை என்ன பூப்பறிச்சிட்டு இருக்குமா ?’ என்பதுபோல் அவனிடம் பேசியது .அதற்குள் பேருந்து நிலையம் வந்துவிட அனைவரும் இறங்கி பை அண்ணா என்று உதட்டின்மூலம் பிரியாவிடை பெற்றுக்கொண்டு சென்றனர் .  மையல் மாத்திரம் ஒருமுறை திரும்பி பை என்பதுபோல தலையசைத்துவிட்டு செல்ல , மதனுக்கு மையல் மேல் காதல்மையல் கொண்டது . 3 காந்தவிழிகள்       அன்றைய நாள்முழுதும் மதன் , கண்ணனிடம் அன்றுநடந்த நிகழ்ச்சிகளை மிகைப்படுத்திக் கூறியவாறே இருந்தான் . இவனின் காதலைப்பற்றி கேள்விபட்ட தேவி , மதனைவிட அதீத சந்தோஷத்தில் மிதந்தாள் . தனக்குப்பிறகு மதனைப்பார்த்துக்கொள்ள ஒருத்தி கிடைத்துவிட்டாள் என்கின்ற நினைப்பே அவளுக்கு ஒரு பெரும்சுமையையும் கவலையும் தீர்த்துவைத்தது போலிருந்தது . அவளும் தனக்குத்தெரிந்த டிப்ஸ்களை மதனிடம் கூறிக்கொண்டே இருந்தாள் .   ‘டேய் மதன் . அவளுக்கு உன்ன பிடிச்சிருக்கு . அதுனால தான் அவ உன்ன திரும்பி பாத்தா . இனிமேல் தான் ஜாக்ரதையா இருக்கனும் . எப்பவும் பொண்ணுங்க கிட்ட கோவத்தமட்டும் காட்டிடாத . இனிமேல் இந்த மாதிரி கன்றாவியா ட்ரஸ் பண்ணாத . நல்ல டீசென்டா , ஜென்யூனா ட்ரஸ் பண்ணு . இது என்னடா பெர்ஃப்யூம் ? நல்லாவே இல்ல . பார்க் அவென்யூ ஸ்மெல்லாம் எந்த பொண்ணுக்கும் பிடிக்காது . ஃபா மாத்திக்கோ . குங்குமம் இட்டா உனக்கு எவ்ளோ அழகா இருக்கும் தெரியுமா ? இனிமேல் குங்குமம் வச்சிகிட்டே வா . அப்றம் தப்பித்தவறி தம் அடிச்சிட்டு அவ பக்கம் போய்டாத . ’ என்று தேவி ஏதேதோ கூறியவாறு இருந்தாள் . இதெல்லாம் ஏற்கனவே அவள் கூறியிருந்தாலும் , அப்போதெல்லாம் கேட்காத மதன் , இப்போதுமட்டும் அவள் கூறவதையெல்லாம் சிரத்தையுடன் கேட்டுக்கொண்டான் . ரேடியோ அலைகள் பற்றி பாடம் நடந்துகொண்டிருந்தபோது , இவனுடைய மனதில் காதல் அலைகள் ஓடிக்கொண்டிருந்தன . சீக்கிரம் 4.30 மணி ஆகாதா ? ஓடிப்போய் பஸ் ஸ்டான்டில் காத்திருக்கக்கூடாதா என்றவாறு எண்ணிக்கொண்டிருந்தான் . நாலரையிலிருந்து ஐந்து வரை கால்வலியே தெரியாமல் நின்றுகொண்டிருந்தான் . காதல்வலி ஆட்கொண்டிருக்கும்போது கால்வலி மாத்திரம் எப்படி தெரியும் ?   மையல் எனும் காதல்புயல் பஸ் ஸ்டாண்டில் மையம் கொண்டுவிட்டாள் என்பது அங்கிருக்கும் இளவட்டங்களின் சிகையலங்காரம் மற்றும் காத்திருப்புகளைவைத்தே அறிந்துகொள்ளலாம் . அவள் வந்ததும் வழக்கம்போல சிலகூத்துகளை , பல யூத்துகள் நடத்திக்கொண்டிருந்தனர் .காலையில் மாலினி மற்றும் சகதோழிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை ஓரளவு வெற்றிகரமாக முடிந்ததால் அடுத்தகட்ட நடவடிக்கையை மாலையில் முடித்துவிடவேண்டும் என்ற உறுதி மதனுக்குள் பிறந்தது . இயற்கையின் மொத்த அழகையும் குத்தகைக்கு எடுத்தவள்போல் மையல்விழி வர , வின்சென்ட் வேன் காக்கின் , டாக்டர் கெச்சட் ஓவியம்போல அவள்வரும்திசையை  மதிமயங்கி பார்த்துக்கொண்டிருந்தான் . பேருந்துகளின் சத்தம் மறைந்து எங்கோ தூரத்தில் கிறிச்சிடும் சிட்டுக்குருவிகளின் சத்தம் அவன் காதுக்குள் கேட்கத்துவங்கியது. அவனுடைய கண்கள் அவளை மட்டும் ஃபோகஸ் செய்யும் தொழிலைச்சிறப்பாகச் செய்தது . அவளின் கால் சுண்டுவிரலில் புதிதாய் அடித்திருந்த ரோஜா நிற நெய்ல்பாலிஷ் கூட கவிதைகளால் வர்ணிக்கப்படவேண்டியவைதான் . அவளுக்கும் இவனைப்பார்த்ததும் தனக்குள் இருக்கும் பெண்மை ஊறிப்பெருக்கெடுக்கத் துவங்கியிருக்கவேண்டும் . நாணத்தாலோ அல்லது பயத்தாலோ தலைகுனிந்தவாறு , அவளின் தோழிகள் பேசும் பேச்சுக்கு சிந்தியும் சிந்தாமலும் சிரிப்பை உதிர்த்தவண்ணம் பஸ் ஸ்டாண்டில் வந்து நின்றாள் . இன்னும் பஸ் வரவில்லை.  மதன் நேராக மாலினியை நோக்கி நடந்தான் .   ‘என்ன காலேஜ் போனிங்களா ? இல்ல இங்கயே ரவுண்ட் அடிச்சிட்டு இருக்கிங்களா ?’ என்றாள் மாலினி .   ‘அதெல்லாம் போய்ட்டு வந்தாச்சு . இங்க எதுக்கு ரவுண்ட் அடிக்கனும் ?’   ‘ஓ ! நாங்க கூட நீங்க எங்க ஃப்ரண்ட சைட் அடிக்கறதுக்காக இங்கயே நின்னுட்டு இருப்பிங்கனு நினச்சோம் ’ என்றாள் மைதிலி .   ‘ஆமா ! உங்க ஃப்ரெண்ட் பெரிய கத்ரினா கைஃப் . அவங்களுக்கு வெயிட் பண்றதுக்கு .’ என்ற மதனின் விடையைக்கேட்ட மையலோ கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டாள் என்பதை அவளின் கண்கள் உணர்த்தியது .   ‘ஹேய் ! வாங்கடி அங்க போலாம் .’ என்று மாலினிக்கு மட்டும் கேட்கும் வண்ணம் மெதுவாய்க்கூறிவிட்டு  , யாருடைய பதிலையும் எதிர்பாராமல் அவள் முன்னே சென்றாள் . படக்கென்று அவளின் கையைப்பிடித்து இழுத்தான் மதன் .அவனைப்பார்த்ததும் கோவத்தின் உச்சிக்கே சென்று அவன் கன்னத்தில் ‘பளார்’ரென்று ஒரு அறை விட்டாள் . அவள் கை அவன் கன்னத்தைத்தொடும் தருணத்தில் அவளை கிராஸ் செய்து ஒரு பஸ் சென்றது . அப்போதுதான் அவள் உணர்ந்திருந்தாள் . மதன் இவளை கலாய்த்ததும் கோபத்தில் அவளின் இடப்புறம் ஹார்ன் அடித்துக்கொண்டே வந்த பஸ்சைக்கூட கவனிக்காமல் முன்னேறியிருந்தாள் . அவளை அடித்துத்தூக்க வேகவேகமாய் வந்த பஸ்ஸை கன்ட்ரோல் செய்ய உள்ளே ட்ரைவர் தடுமாறிக்கொண்டிருந்தார் .அந்நேரத்தில் மதன் உள்ளே புகுந்து அவள் கையைப்பிடித்து இழுத்து அவளைக்காப்பாற்றினான் .   அவள் அடித்ததைப்பார்த்ததும் அங்கிருந்த சிலர் மதனை கொலைக்குற்றாவாளியைப்பார்ப்பதைப்போல் பார்த்தனர் . அங்கு நடக்கவிருந்த விபத்தை அறியாதவர்கள் , அவனை பொம்பளைப்பொறுக்கி , திருட்டு நாய் என்று வாய்க்கு வந்தவாறு திட்ட , அவமானத்தால் கூனிக்குறுகினான் . இனியும் அங்கிருப்பது , நரகத்தில் இருப்பதற்கு சமம் என்றுணர்ந்தவன் அங்கிருந்து அடுத்தநொடியே காலிசெய்தான் . அவமானப்பட்டவனுக்கு கிங்ஸ் ஆறுதலை அளிக்கமுயற்சித்துக்கொண்டிருந்தது . கண்ணனும் ஆறுதலாய் அவனுடனிருந்தான் . அரைமணிநேரம் அப்படியே கழிந்தது . அஞ்சேகால் பேருந்து கிளம்பி கால்மணிநேரம் ஆகியிருக்கும் . மீண்டும் பேருந்துநிலையத்திற்குச்சென்றான் . அடுத்தபஸ் கிளம்பிக்கொண்டிருந்தது .கூட்டமாய் இருந்ததால் தன் கையில் இருக்கும் நோட்டுகளை படிக்கட்டின் முன்னிருக்கும் சீட்டில் இருந்தவர்களிடம் கொடுத்துவிட்டு , படியில் தொங்கியவாறு தன் பயணத்தைத்துவங்கியிருந்தான் . கால்மணிநேரப்பயணம் ரோட்டில் புழுதிவீசிக்கொண்டே நன்றாக சென்றுகொண்டிருக்கும்போது , திடீரென பஸ் ஓரமாகச்செல்ல , அங்கிருந்த கருவேலமரத்தின் முட்கள் பஸ்ஸை அரக்கியது . மதன் படிக்கட்டிலிருந்து உள்ளே நுழைய முயற்சித்துக்கொண்டிருக்க ‘மதன் பாத்து  ! முள்ளு பட்ரப்போவுது’ என்று கிரங்கடிக்கும் பெண் குரல் ஒலித்தது . அந்த குரலில் பச்சாதாபமும் பாசமும் ஒருசேரசேர்ந்து ஒலித்தது .அந்த குரலுக்கு சொந்தக்காரி மையல்தான் என்று சொல்லவேண்டுமா ? குரல்வந்த திசையைப்பார்த்தவன் , திகைத்தான் . தனக்காக அவள் ஒரு பஸ்ஸை தவறவிட்டு அடுத்த பஸ்ஸில் காத்திருக்கிறாள் என்ற நினைப்பே அவனுக்குள் போதையை உண்டாக்கியிருக்கவேண்டும் . அவ்வளவுநேரம் மனதில் இருந்த இறுக்கமான விஷயங்கள் மாறி சுமூகமான சூழலுக்கு மனம் சென்றது . அதுவரை புழுதியாய் இருந்த பயணம் , பூக்களாய் மாறியிருந்தது . கூட்டத்தை விலக்கியவாறே உள்ளே நுழைந்து மையலின் சீட்டருகே வந்துநின்றான் . மாலினி அவனைப்பார்த்து மெல்ல சிரித்தாள் . மையலோ , அவன்முகத்தைப்பார்க்க தடுமாறினாள் .   ‘சாரி மையல்விழி ’ என்ற மதனின் குரல்வந்த திசையினை நோக்கி நிமிர்ந்தாள் .   ‘எதுக்கு சாரி ?’   ‘நேத்து உன்ன திட்டுனதுக்கு .இன்னைக்கு உன்கிட்ட அப்படி பிகேவ் பண்ணதுக்கு . ’   ‘இல்ல . நாந்தான் சாரி . நேத்து உங்கள அண்ணானு கூப்டதுக்கு . அப்றம் இன்னைக்கு அடிச்சதுக்கு . ’ என்று எதிர்சீட்டை நோக்கியபடி அவனிடம் கூறினாள் .   ‘பரவாயில்ல அம்மு’ என்றான் மதன் . அதைக்கேட்டதும் நிமிர்ந்து பார்க்காமல் கண்ணை மட்டும் மேலே உருட்டி , ஒரு காந்த பார்வையை வீசினாள் . அந்த பார்வையின் அர்த்தம் அவனுக்கு மட்டும்தான் புரியும் . நா உன்னோட அம்முவா ? என்று கேட்பது போலவும் போய் அந்த கத்ரினாவையே கூப்டவேண்டியதுதான ? என்ற ஆதங்கமான கேள்வியும் விழியின்வழி வினா எழுப்பினாள் .   ‘என்ன அம்முனு கூப்டாதிங்க ’ என்றாள் தீர்மானமாக .   ‘இல்லப்பா ! உன்பேரு ரொம்ப லென்த்தா இருக்கு . சோ நா இப்படியே கூப்டறேன் . ’   ‘பரவால்ல . லென்த்தா இருந்தாலும் பேர் சொல்லியே கூப்டுங்க . ’   ‘ஓ.கே . அப்றம் நம்ம மேரேஜ்கு பின்னாடியும் நா உன்னோட பேர்சொல்லிதான் கூப்டுவேன் . தங்கம் , பவுனு , செல்லம்னுலாம் கூப்டமாட்டேன் பரவாயில்லையா ?’   ‘ம் பரவாயல்லை ’ என்றவள் அடடா ! அவசரப்பட்டு பரவாயில்லை என்றுகூறிவிட்டோமே என்றுணர்ந்து கண்ணை ஒருநொடி மூடி பல்லைக் கடித்து பின் கேட்டாள் .   ‘என்ன சொன்னிங்க ?’   ‘நா ஒன்னும் சொல்லலையே !’   ‘ம் . இந்த மாதிரி எண்ணத்தோட எங்கிட்ட பழகாதிங்க . நாம ரெண்டுபேரும் நல்ல ஃப்ரெண்ட்ஸா இருக்கலாம் .’   ‘ம் . சரி ’   ‘ஒருவேள நீங்க எங்கிட்ட ப்ரபோஸ் பண்ணா , நா உங்க கிட்ட பேசமாட்டேன் .’   ‘ம் . சரி .’ என்றவாறு அவளைப்பார்த்துக்கொண்டே இருந்தான் . மாலினியைத்தவிர பிற தோழிகள் 5.15 பஸ்ஸிற்கே சென்றுவிட்டதால் , மாலினி மாத்திரம் இவளுடன் இருந்தாள் . மதனிடம் மையல் பேச ஆரம்பித்த நிமிடங்களிலிருந்து சிறிது நேரம் அநாதையாக்கப்பட்டிருந்தாள் . அதன்பின் மௌனமாக நேரங்கள் உருண்டோட , மதனின் ஊர் அருகில் பேருந்து நெருங்கியது . ஓரளவு கூட்டமும் பஸ்ஸினுள் குறைந்தது . மதன் , மையலின் அருகினில் நெருங்கி , அவளிடமிருந்த தன்னுடைய நோட்டுகளை வாங்கினான் . ‘பை பை’ சொன்ன மாலினியிடம் திருப்பி ஒரு பை சொல்லிவிட்டு படிக்கட்டினருகில் சென்றான் . முன்னால் வாயிலில்முதல் சீட்டிலேயே மாலினியும் , மையில்விழியும் அமர்ந்திருந்தபடியால் படிக்கட்டில் நின்ற மதனைக்கவனித்தபடியே இருந்தனர் . கண்டக்டர் விசிலடிக்கும் தருவாயில் மதன் , மையலிடம்   ‘அம்மு ’ என்றான் . கோவமாய்ப்பார்த்த அவளின்விழிகளைப்பொருட்படுத்தாமல்   ‘ஐ லவ் யூ’ என்றான் .   அவளின் கண்கள் ஆச்சரியத்தால் விரிய ‘ என்ன ?’ என்று கொஞ்சம் சத்தமாகவே அவள் கேட்டாள் .   ‘ஐ லவ் யூ சோ மச் இன் த வேர்ல்ட் ’ என்றவாறே படிக்கட்டில் இருந்து ஓடி இறங்கினான் . பஸ் ஒரு பத்துஅடி தள்ளி நின்றது . இவன் இறங்கியவாறே அவள் இருந்த திசையைப்பார்த்துக்கொண்டிருந்தான் . பஸ் பத்துவிநாடிகளில் கண்டக்டரின் விசிலுக்கு கட்டுப்பட்டு கிளம்ப , அந்நேரத்தில் ஜன்னலில் வழி , இரு அகன்ற விழி தென்பட்டன . அவ்விழிகள் ‘இரு இரு நாளைக்கு உன்ன பாத்துக்கறேன் ’ என்று செல்லமாய் மிரட்டியது . அந்த விழிகள் , மதனுக்குச்சொந்தமாகும் மையல்விழியின் காந்தவிழிகள் .   4 பையன் யாரு     அன்றைய இரவு , கொசு கடிப்பதுகூட அழகாய் இருந்தது மதனுக்கு . படுக்கையில் உருண்டு புரண்டு பாழ்படித்துக்கொண்டிருந்தான் . வீட்டில் அனைவரிடமும் சம்பந்தமே இல்லாமல் சந்தோஷமாய்ப்பேசினான் .அவனின் அதீத சந்தோஷத்தின் காரணம் புரியவில்லை . கண்ணனிடம் ஏற்கனவே  பஸ்ஸினுள் நடந்த நிகழ்ச்சிகளை தெரிவித்திருந்தான் .   ‘மச்சி ! நாளைக்கு மார்னிங் அவ வர்ற பஸ்ல வந்துடாத . அப்படி போனா சப்புனு முடிஞ்சிடும் . அவள ஏங்க வைக்கனும் . அப்போதான் ஈவ்னிங் மீட் பண்றப்ப , செம டச்சிங்கா இருக்கும் ’ என்ற கண்ணனின் அறிவுரை  , மதனை வாட்டினாலும் கஷ்டப்பட்டாவது காலையில் அவளைத்தவிர்க்க வேண்டும் என்று முடிவெடுத்திருந்தான் . ஆனாலும் முடியவில்லை . மறுநாள் காலை 5 மணிக்கே குளித்து ரெடியாகி விட்டான் . கண்ணனின் பேச்சைக்கேட்பதா ? கன்னியின் பேச்சைக்கேட்பதா ? என்று குழப்பிக்கொண்டிருந்தான் . 7 மணிக்கே பஸ் ஸ்டாப்பில் வந்துநின்றான் . தயிர்க்கூடையைத்தூக்கி கொண்டு பால் மார்க்கெட் செல்வதற்காக ஒரு கிழவி காத்திருந்தாள் . பஸ் ஸ்டாப்பில் உள்ள டீக்கடைகளில் வழக்கம்போல் வெட்டிநாயம் பேசிக்கொண்டு சிலர் இருந்தனர் . வேறுவழியே இன்றி நேரத்தைக்கடத்த தினத்தந்தியின் வரிவிளம்பரங்கள் உட்பட அனைத்தையும் படித்துக்கொண்டிருந்தான் . அவர்களிருவரும் பயணிக்கும் 8.15 பேருந்து வந்தது . அதைத்தூரத்திலிருந்து பார்த்ததும் ஓடிச்சென்று டீக்கடைக்குள் ஒண்டிக்கொண்டான் . அங்கிருந்தபடியே தன் காதலியைத்தேடியவனுக்கு அவளின் முகம் தெரியவில்லை . அவள் இருக்கிறாளா என்பது கூடத்தெரியவில்லை . ஆனால் மாலினி இருப்பது மாத்திரம் நன்றாய் தெரிந்தது . பஸ் கிளம்பியபின் சோகமாய் அடுத்த பஸ்ஸுக்காக காத்திருந்தான் . அன்றைய தினம் வாழ்வின் ஒட்டுமொத்த வெறுமையையும் ஒன்றுகூடி இவனை வெறுத்தாற்போல ஏங்கித்தவித்தான் . கண்ணனிடம் கூட சரியாய் பேசவில்லை . அவளின் முகத்தைப்பார்த்திருந்தாலாவது சந்தோஷத்துடன் இருந்திருப்பான் . அவனை ஆட்கொண்ட அவளின் முகம் , அவனை எந்தவொரு விஷயத்திலும் ஈடுபடாமல் தடுத்து்ககொண்டிருந்தது . வேறுவழியே இல்லை என்று முடிவெடுத்தவன் மதியமே காலேஜ் காம்பவுன்டை எகிறிக்குதித்து , அவளின் காலேஜ் செல்லத் தீர்மானித்தான் . அவளின் காலேஜுக்கு எதிரே இருக்கும் பார்க்கில் அமர்ந்தவாறு நேரத்தைக்கடத்திக்கொண்டிருந்தான் . கண்ணனும்  தேவியுடன் சினிமாவுக்கு சென்றுவிட்டான் .   அப்படி இப்படி என்று நேரம்கடந்தது . எல்லாம் சிறையிலிருந்து விடுபட்ட கைதிகளாய் உற்சாகமாய் கேட்டை பிளந்து கொண்டு வந்தனர் . அவன் பெரிதும் எதிர்பார்த்தவளும் தோழிகள் படைசூழ வந்தாள் . நேராய் அவர்களுக்கருகே கிளம்பியவன்   ‘ஹாய் மாலினி !’ என்றான் .   ‘ஏன்ணா காலைல வர்ல ?’   ‘இல்லம்மா ! கொஞ்சம் பிஸியா இருந்ததால வரமுடியல . ஏன் , உன் ஃப்ரெண்டு ரொம்ப ஃபீல் பண்ணாலா ?’   ‘ஆமாங்ணா ’ என்றாள் பரிதாபமாக . அவளின் முகம்  மட்டுமல்ல , மதனின் உயிரின் முகமும் வாடியிருந்தது . கண்ணங்கள் லேசாய் வீங்கியது போன்றிருக்க , கண்களோ அழுது சிவந்தது போலிருந்தது . அதைக்கண்டவனுக்கு எப்படி இருக்கும் என்று சொல்லவா வேண்டும் ?   ‘ஹேய் அம்மு ! என்னடி ஆச்சு ?’   ‘ம்ஹும் . ஒன்னுமில்ல ’   ‘ஹேய் சொல்லுடிங்றேன்ல ’   ‘அதான் ஒன்னுமில்லனு சொல்றேன்ல .’   ‘மாலினி ! என்ன ஆச்சு ?’   ‘அது ’ என்று மாலினி வாயெடுக்கும்முன் அவளை ‘ஷட் அப்’ என்று முறைத்தாள் மையல் .   ‘அவ கிடக்கறா . நீ சொல்லு மாலினி ’   ‘காலைல ஒரு பையன் வந்து மையல மிரட்டுனான் ண்ணா . அவன இவ லவ் பண்ணனுமாம் . இல்லாட்டி நாசம் பண்ணிடுவேன் அது இதுனு மிரட்டுறான் ணா . இப்போ அவன் பஸ் ஸ்டான்ட்ல வெயிட் பண்ணிட்ருப்பான் . இவ போய் அவங்கிட்ட லவ்வ சொல்லனும்னு சொல்லிருக்கான் .’   உச்சந்தலைக்கும் உள்ளங்காலுக்கும் ஒரு மைக்ரோவிநாடியில் ரத்தம் பாய்வதுபோல வெகுன்டெழுந்த மதன் , ஒரு நிமிடம் அக்கோபத்தை அடக்கிக்கொண்டு கேட்டான் .   ‘ஹே  அம்மு . அவன நீ லவ் பண்றியாடி ?’   அவன் கேட்டதும் அவனைச் சுட்டுச்சாம்பலாக்குவது போல் தன் விழியால் எரித்தாள் . உஷ்ணம் தாங்காத மதன் , அவளிடம் நைசாக நழுவ பார்த்தான் .   ‘ஹேய் மாலினி . அவகிட்ட காசு இருக்கா ?’   ‘இருக்குணா .’   ‘சரி . நீங்கலாம் இந்தக்கடைல ஐஸ்கிரீம் சாப்புட்டு பொறுமையா பஸ் ஸ்டான்டுக்கு வாங்க . இன்னைக்கும் நேத்து மாதிரியே 5.45 பஸ்ஸுக்கே போயிடலாம் . நா பஸ் ஸ்டாண்ட்ல வெயிட் பன்றேன் . மாலினி ! நீ மட்டும் எங்கூட வா .’   ‘எதுக்குணா ?’   ‘வா சொல்றேன் .’   மாலினி தயங்கியவாறே உடன் வர பஸ் ஸ்டான்டை நோக்கி நடந்தான் . வேகவேகமாய் ஐஸ்கிரிமை விழுங்கிவிட்டு , தோழிகளையும் வேகமாய் சாப்பிடுமாறு ஆனையிட்டுக்கொண்டிருந்தாள் மையல் . பஸ் ஸ்டாண்டில் என்ன நடக்கோப்போகிறதோ என்ற பயம் வேறு அவளுக்கு . எதுக்கு இவன் மாலினிய கூட்டிட்டுப்போனான்னு தெரியலையே என்று குழம்பியவாறே சென்றடைந்தாள் . தங்களின் பஸ் நிற்குமிடத்தில் மாலினி மாத்திரம் நின்றுகொண்டிருந்தாள் . பெரும்பாலான கல்லூரி இளைஞர்களை அங்கு காணவில்லை.   ‘எங்கடி அவங்க ?’   ‘மதன் அண்ணா அந்த பையன் யாருனு கேட்டாரு . நான் கை காமிச்சேன் , அவன்கிட்ட பேசுறதுக்கு போறேன்னு சொல்லிட்டு போனாரு . அப்புறம் கொஞ்ச நேரத்துல ரெண்டு பசங்க வந்தானுங்க . அவனுங்க கூட இங்க இருந்த பசங்களும் கிளம்பி போனாங்க . என்ன ஆச்சுனு தெரியலை டி ’ 5 ஐ லவ் யூ டி   காத்திருப்பு என்பது ஒருசில நேரங்களில் இனிமையாகவும் , பல நேரங்களில் கடினமாகவும் இருக்கும் . ஆனால் மொத்தமாக ,  காத்திருக்கும் ஒவ்வொரு விநாடியும் ஒரு யுகமாகவே இருக்கும் . அதுவும் காதலில் விழுந்தவர்களின் காத்திருப்பு என்பது அனல்மேல் துடிக்கும் புழுவைப்போல் தான் .விட்டில் பூச்சி ஒளியைத்தேடுவதுபோல் , இங்கு ஒரு கன்னியின் விழிகள் தன் காதலனைத்தேடிக்கொண்டிருக்கிறது . நேரம் ஆக ஆக அவள் இருதயம் துடிக்கும் வேகமும் அதிகரித்தது . எல்லாம் இந்த மாலினியால்தான் . அவள் மட்டும் இவ்விஷயத்தை மதனிடம் சொல்லாமல் இருந்திருந்தால் தனக்கு இந்நிலையே வந்திருக்காது என்று மனதினுள் துடிதுடித்தாள் மையல் . போனவன் இன்னும் வரவில்லையே என்ற கவலையில் இவள் ஆழ்ந்திருக்க , கூட நிற்கும் தோழிகளோ நேரமாகிறது என்று கூப்பாடு போட ஆரம்பித்தார்கள் . மனதை பேருந்து நிலையத்திலேயே விட்டுவிட்டு  பேருந்தினுள் ஏறிச்சென்றாள் .   இந்த மதனைப்பார்த்த நாளில் இருந்து தனது தூக்கத்தைத்தொலைத்தவளுக்கு , பெரும்பாலான இரவுகள் துக்கத்தையே கொடுத்திருந்தது . இன்றைய இரவு நீண்டதொரு இரவாய் , பல யுகங்கள் கடப்பதுபோல கடந்தது . பூமியில் ஒருவேளை கருந்துளைகள் இருந்திருந்தால் , அன்றைய காலைப்பொழுதிற்கு டைம்ட்ராவல் செய்து மூர்க்கத்தனமாக மிரட்டிய அந்த கரியன் பயணித்த பேருந்தில் ஏறாமல் இருந்திருப்பாள் . அவன் மிரட்டியதைக்காட்டிலும் , மதன் அவனிடம் சண்டைக்குச்சென்றதே பெருங்கவலையாய் அவளை வாட்டியெடுத்தது . அடுத்தநாள்  விடிந்தது . கவலை இன்னும் தீர்ந்தபாடில்லை . மதனைப்பார்த்தால் மட்டுமே மனதை விட்டு அந்த கவலையின் ரேகைகள் ஓடும் . எதுக்கு இந்த தேவையில்லாத வேலை என்று அவனைப்பார்த்து நன்றாகத்திட்ட வேண்டும் என்று முடிவெடுத்தவாறே பேருந்தில் ஏறினாள்  . நேற்று மிரட்டியவன் இன்று இல்லை .ஏதோ பெரிதாய் நடந்திருக்கவேண்டும் . தோழிகளின் அரட்டை அன்று அவளை ஈர்க்கவில்லை .சில நிமிடங்களில் மதனின் பஸ் ஸ்டாப் வந்தது . அதோ ஏறுகிறான் . பொறுக்கி . தெருவில் போய் சண்டையிடும் பொறுக்கி என்றவாறு மனதினுள் நினைத்தாள் . வரட்டும் , கவனித்துக்கொள்ளலாம் என்றவாறே அவனைப்பார்த்துக்கொண்டிருந்தாள் . அவனுடைய கன்னம் லேசாய் சிவந்திருந்தது . இரண்டுவிரல்கள் பதிந்த அடையாளம் தெரிந்தது ., அவளுக்கோ கோவம் பீறிட்டது . இப்போது மாத்திரம் நேற்று மிரட்டியவன் இருந்திருந்தாள் , அவனை சட்டையைப்பிடித்து உலுக்கி காட்டில் வசிக்கும் காளியைப்போல் ருத்ரநடனம் ஆடியிருப்பாள் .   மதன் படிக்கட்டிலேயே இருந்தான் . உள்ளே வரவில்லை . அவன் வருவான் என்று ஏக்கப்பார்வை பார்த்தவளுக்கு பெரும் ஏமாற்றமாய் இருந்தது . நேரம் ஆக ஆக , பேருந்து நிலையத்துனுள் பேருந்து நுழைந்து தன் அப்போதைய பயணத்தை முடித்தது . மதன் வேகவேகமாய் இறங்கி அவன் கல்லூரிக்குச்செல்லும் பாதையினில் பயணிக்க ஆரம்பித்திருந்தான் . இவள் பேருந்து நின்றதும் அவன் சென்ற திசையினை நோக்கி பயணித்தாள் .   ‘மதன்’ என்ற அவளின் குரல் கேட்டதும் சிலைபோல் அவன் நின்றான் . மெல்ல திரும்பியவன் ‘என்ன’ என்பது போல் பார்த்தான் .   ‘நேத்து என்ன ஆச்சு ?’   ‘ஒன்னுமில்ல . அந்த பையன பாத்து பேசுனேன். தட்ஸ் ஆல் ’   ‘கன்னத்துல என்ன  ?’   ‘அதுவா ! அவன் கொஞ்சம் ஓவரா சீன் போட்டான் . பேசிட்ருக்கும்போதே கை வச்சான் . அப்பறம் நானும் கைவச்சேன் . சண்ட பெருசாயிடுச்சி . கடைசில அவன் ஓடிட்டான் . இனிமேல் உன் பக்கம் அவன் வரமாட்டான்  .’ என்று சொல்லிவிட்டு அவன் நேராய் கிளம்பினான் .   அவனைத்திட்ட வாயெடுத்தவள் அவன் செல்வதைப்பார்த்ததும் கடுப்பின் உச்சத்திற்கே சென்றுவிட்டாள் . கோவமாய்த்திரும்பி தனக்காக காத்திருக்கும் தோழிகளை மதிக்காமல் அவர்களைக்கடந்து அவள் நேராய் கல்லூரி சென்றடைந்தாள் .   ‘தேவி ! நீ சொன்னமாதிரியே அவ பஸ் ஸ்டான்ட்ல பேசுனா . மேடம் செம கோவத்துல இருந்தாங்க . நேத்து நைட் நீ சொன்னமாதிரியே , நடந்தத சொல்லிட்டு ஓடிவந்துட்டேன் . அங்க மட்டும் நின்னுருந்தா , அவ என்ன திட்டிதீத்துருப்பா . அப்பா ! அவ்வளவு கோவம் அவளுக்கு வரும்னு நா நினச்சுக்கூட பாக்கல . பஸ்ல வரும்போது அவள பாக்கனுமே ! நானே பயந்துட்டேன்டீ ’ என்றவாறு தேவியிடம் தெரிவித்தான் . நேற்றைய சண்டை முடிந்தபின் தேவியிடம் இதைப்பற்றி பேசியிருந்தான் . அவள்தான் இன்று அவளை கண்டுகொள்ளாதே ! அவளுக்கு உன்மேல் இருக்கும் ஈர்ப்பு , பயங்கர கோபத்தை உண்டாக்கியிருக்கும் என்றவாறெல்லாம் தெரிவித்திருந்தாள் . அன்றைய மாலை பேருந்தில் மையலின் அருகே நின்று கொண்டிருந்தான் . அவளின் கோவம் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்து காதல் மிகுந்திருப்பதை கண்ணால் கண்டான் .   ‘எதுக்கு நீ பொறுக்கி மாதிரி சண்டைக்கு போன ?’   ‘அவன் உன்ன திட்டிட்டான் . அதான் ’   ‘ஓ ! திட்டுனா சண்டைக்கு போவிங்களா ?’   ‘ஆமா !’   ‘நீ கூடத்தான் முதல்நாளே என்ன திட்டுன ’ என்று அவள் கூறிமுடிக்கும்போது , மதனின் முழுக்கை சட்டையை மடித்தான் . அவனின்  முழுங்கைக்கு அருகில் சிகரெட்டால் உண்டாகியிருந்த காயம் தெரிந்தது .   ‘ஹேய் ! என்னடா ஆச்சு ?’   ‘அன்னைக்கு உன்ன திட்டுனப்போ மனசு கேட்காம , நானே சூடு வச்சிகிட்டேன் .’   ‘லூசாடா நீ ! அறிவில்ல உனக்கு …’ என்று திட்டிக்கொண்டே இருந்தாள் . அவள் திட்டிமுடிக்கவும் அவன் ஊரைப்பேருந்து நெருங்கவும் சரியாய் இருந்தது . அவளிடம் ஒரு பேப்பரை நீட்டினான் . ‘என்ன இது ? லவ் லெட்டரா ?’ என்று சிறிய கோவப்பார்வை பார்த்தாள் .   ‘அதெல்லாம் இல்ல . என்னோட போன் நம்பர் . ’   ‘எதுக்கு எங்கிட்ட கொடுக்கற ?’   ‘உங்கிட்ட பேசலாம்னு தான் .’   ‘எங்கிட்ட மொபைல் இல்ல .’   ‘இந்த காலத்துப்பொண்ணுங்க கிட்ட வெட்கம்கூட இல்லாம இருக்கும் . மொபைல் இல்லாம இருக்காது .’   ‘எங்கிட்ட போன் இல்லடா . அதுவுமில்லாம எங்கிட்ட ப்ரபோசல் பண்ணக்கூடாதுனு நா உங்கிட்ட ஆல்ரெடி சொல்லிருக்கேன் . அப்படி ஏதாச்சும் நீ ட்ரை பண்ண , உன்னவிட்டு போய்டுவேன்னும் சொல்லிருக்கேன் . இதுக்குமேல உன் இஷ்டம் ’ என்றாள் . அவளின் பேச்சுகளை காதில் போட்டுக்கொள்ளாமல் பேருந்தில் இருந்து இறங்கினான் . உண்மையாகவே அவளிடம் போன்  இல்லையோ ? நாம் புதிதாய் ஒரு போன் வாங்கிக்கொடுத்துவிடவேண்டியதுதான் . அடடா ? போன் வாங்க  காசு ? சரி அதான் ஸ்காலர்ஷிப் பணம் வருமே! என்றவாறே வீட்டினுள் நுழைந்தான் . இரவெல்லாம் அவள் அவனைப்பொறுக்கி என்று செல்லமாய்த்திட்டியதே ஞாபகம் வந்தது . உருண்டு புரண்டு படுக்க முயற்சித்தவனை தொல்லை செய்வதற்கென்றே போன் வந்தது . கண்ணன் தான் லைனில் .   ‘சொல்லு மச்சி .’   ‘மச்சி ! நாளைக்கு காலேஜ் போலாமா இல்ல கட் அடிக்கலாமா ?’   ‘அத காலைல முடிவு பண்ணிக்கலாம் மச்சி’ என்றவாறு போனை கட் செய்தான் .  உடனே புது எண்ணிலிருந்து ஒரு அழைப்பு வந்தது .   ‘ஹலோ ’ என்றவனுக்கு ஒரு பெண்குரல் கேட்டது .   ‘உங்க நம்பர் ஒரு போட்டியில வின் பண்ணிருக்கு . கோவா போற சான்ஸ் கிடைச்சிருக்கு மிஸ்டர் மதன் ’ என்று அவள் சொல்ல , கடுப்பாகி போனை அணைத்தான் .  மீண்டும் ஒரு அழைப்பு வர அட்டன்ட் செய்தான் .   ‘ஹே ! நா மையல் பேசுறேன் . இதுதான் என்னோட நம்பர் . திருப்பி கால் , மெசேஜ் எதுவும் பண்ணிடாத . பை ’ என்றவாறு வேகவேகமாக கூறிவிட்டு போனை கட் செய்தாள் . உடனே அவளின் நம்பருக்கு போன் செய்தான் . கடைசி ரிங்  அடித்தபின்பு அவள் போன் எடுத்தாள் .   ‘ஹேய் ! நான்தான் சொல்லிருந்தேன்ல . எதுக்கு கால் பண்ண ?’ செல்லமாக கோவித்தபடி , சிணுங்கியவாறே பேசினாள் .   ‘ஏன்டி ? போன் பண்ணாதனு சொல்றதுக்கு யாராச்சும் போன் பண்ணுவாங்களா ? ’   ‘சரி . சரி . ஏதுவா இருந்தாலும் சீக்கிரம் சொல்லு . நா படிக்க போகனும் ’   ‘ஐ லவ் யூ டி .’ 6 ஐ லவ் யூ டா     ‘ஐ லவ் யூ டி’ என்ற அவனின் ஹஸ்கியான குரலைக்கேட்டதும் சிலவிநாடிகள் அமைதியாய் இருந்தாள் . ஒருவித குறும்புடன் நக்கலும் சேர்த்து ஒலிக்கும்படி அவனிடம் கேட்டாள் .   ‘இத சொல்றதுக்குத்தான் போன் பண்ணியா ?’   ‘இன்னும் சொல்ல நிறைய இருக்கு .’   ‘எங்க சொல்லு . கேட்கலாம் ’ என்று ஆவலோடு அவள் கேட்டது இவனுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தியிருக்கக்கூடும் . எழுந்து வீட்டை விட்டு தெருவுக்கு வந்தான் . அவனுடைய ஊர் ஒரு கிராமம் என்பதால் வீடுகள் தள்ளி , தள்ளி தூரமாய்த்தானிருக்கும் . ஒரு ஒத்தையடி பாதையில் இரவு பத்துமணிக்கு நடந்துகொண்டே பேச ஆரம்பித்தான் . அவனுடைய பேச்சு முடிவதற்கு முக்கிய காரணமாய் அவனுடைய செல்போன் பேட்டரி இருந்தது . அது மட்டும் ஆஃப் ஆகாமல் இருந்திருந்தால் , மதன் இன்னும் எவ்வளவு நேரம் பேசுவான் என்பது அவனுக்கேத்தெரிந்திருகாது . இரவு 1 மணிக்கு மீண்டும் தன் தனியறைக்கு வந்து படுத்தான் . அன்றைய இரவைப்போல் நிம்மதியான ஒரு இரவினை அவனால் அனுபவித்திருக்கமுடியாது . உலகம் அழிந்தாலும் சிரித்துக்கொண்டே இறக்கத்துணிந்துவிட்டான் . அவனுக்கு அவளிடம் மிகவும் பிடித்தமான ஒரு விஷயம் என்னவென்றால் , அவ்வளவு நேரம் பேசியும் அவள் ஒருமுறைக்கூட இவனிடம் தன் காதலை சொல்லவில்லை . அதன்பின்  காலையில் சந்தோஷமான பேச்சும் , மாலையில் ஒரு சின்ன சண்டையும் , அதை சமாளிக்க இரவினில் பேச்சுமென பேசிப்பேசியே பொழுதுகள் கழிந்தன . அவள் கூறுவதைச்செய்யத்தான் , தான் இந்த உலகில் பிறந்ததாய் நினைக்கொண்டான் . அவளும் தன்னுடைய திருமணத்திற்கு முன்பே ஒரு மகன் கிடைத்துவிட்டான் என்பதுபோல , மதனை சீராட்டி அன்பமுதம் காட்டி அவனுடன் வாழ்ந்தாள் . அவர்களிருவருக்கும் சண்டை என்பது ஒன்று வருவதற்கு முக்கிய காரணமாய் இருந்தது ஒரே விஷயம்தான் .   ‘தம் அடிக்காதனு எத்தன தடவ சொல்றேன் . கேட்க மாட்டியா ?’ என்று ஆரம்பத்தில் சண்டையிட்டவள் , இவன் திருந்தவே மாட்டான் என்றுணர்ந்து ‘சரி ! ஒருநாளை ஒன்னே ஒன்னு தான் . என்மேல பிராமிஸ் பண்ணு’ என்றவரைக்கும் வந்துவிட்டாள் . ஆனால் அவன் சத்தியம் செய்யமாட்டான் . ‘ஹே ! எனக்குனு நா நினைக்கிற ஒரு விஷயத்துல இதுவும் ஒன்னுடி . உனக்காக என்னால நிறுத்தமுடியாது . நீ கம்பல் பன்றத முதல்ல நிறுத்து . எனக்கா தோனுச்சுனா நா விட்டுடுவேன் ’ என்பான் . உடனே அவளுக்கு முகம் கோணிக்கும் . பஸ்ஸில் அதைப்பற்றி தொடர்ந்து பேசமாட்டாள் . வீட்டிற்கு வந்ததும் போன் செய்துஅவனை கடையோ கடையென்று கடைவாள் . அவனும் சமாதானப்படுத்துவான் . கடைசியில் இருவரும் உருகிக்கொள்வார்கள் . இருவரும் காதலித்து ஒரு வருடம் தாண்டியபின்பும் இன்னும் அவள் காதலை அவனிடம் சொல்லவில்லை . அவள் உதட்டிலிருந்து அதைக்கேட்க வேண்டும் என்ற ஆசையில் அவனும் ஏதேதோ தகிடுதத்தம் வேலைகள் எல்லாம் செய்து பார்த்தான் . அவள் மசியவே இல்லை .   அவ்வப்போது மையலிடம் ஒருசிலர் ப்ரபோசல் செய்வார்கள் . மதன் அதையெல்லாம் பார்த்துக்கொண்டு சிரிப்பான் . ‘ஹே ! நல்ல பையன்டி . உனக்காக உயிரையும் கொடுப்பான் . பாவம் அக்சப்ட் பண்ணிக்கோடி’ என்று அவளை ஓட்டுவான் . அச்சமயங்களில் அவளுக்குப் பற்றிக்கொண்டு வரும் . அந்த கோவத்தையெல்லாம் தனிமையில் தான் அவனிடம் காட்டுவாள் . நடுவே அவளின் பிறந்தநாளுக்கு விஷ் பண்ண மறந்து , அவளிடம் அடியும் வாங்கிக்கட்டிக்கொண்டான் .   அவளின் அறிவுரைப்படி இருந்த அரியர்ஸ் எல்லாம் கிளீன் செய்தான் மதன் . ஒரு எஞ்சினியரிங் கல்லூரியில் கொஞ்சமாய் டொனேஷனும் ரெக்கமென்டேசனுடனும் சீட் வாங்கி சேர்ந்துவிட்டான் . கண்ணன் மற்றும் தேவியும் அதே கல்லூரியில் சேர்ந்தார்கள் . கல்லூரிக்கு செல்கிறானோ இல்லையோ ! தினமும் மையலைப்பார்ப்பதற்கே கிளம்பி விடுவான் . ஒருநாள் காலை மையல் ‘எங்கயாச்சும் வெளிய கூட்டிட்டுப்போடா’ என்று ஆசையுடன் கேட்க , அதுவரை ஒருநாள் கூட கட் அடித்துவிட்டு வராத அவளே கேட்கிறாளே என்ற சந்தோஷத்தில் முதலில் ஒரு ஐஸ்கிரீம் பார்லருக்குக் கூட்டிச்சென்றான் . அவனுடன் ஒன்றுசேர்ந்து அமர்ந்தாள் . அவளுக்குப்பிடித்த ஸ்ட்ராபெரி ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்த நேரத்தில் , மதனின் கையைப்பிடித்தவாறே அவன் தோளில் தலை சாய்ந்தாள் . கைவிரலைப்பிடித்தாலே கதறும் அவள் , இன்று மதனின் தோளில் சாய்ந்திருப்பது இன்ப அதிர்ச்சியாய் இருந்தது . ஐஸ்கிரிம் வந்ததும் அவளே அவனுக்கு ஊட்டினாள் .   ‘என்னடி ஆச்சு உனக்கு ? இன்னைக்கு ரொம்ப பாசத்த காட்ற ?’   ‘ஐ லவ் யூ டா ’ என்றாள் . இரண்டு வருடங்களுக்குப்பிறகு இன்று தான் அவனிடம் அவள் வாய் திறந்து ஐ லவ் யூ என்று கூறுகிறாள் . அவளின் காதலை நன்றாய் மதன் உணர்ந்திருந்தாலும், அவளிடமிருந்து அதைக்கேட்கும்போது இதுவரை அவன் கேட்ட பாடல்களிலேயே இனிமையானதாக ஒலித்தது . ஐஸ்கிரிமை ஊட்டிவிட்ட பின் படத்திற்கு கூட்டிச்செல்லுமாறு அவள் கேட்க , தியேட்டரை அடைந்தார்கள் . வழக்கம்போல காதலர்களை ஆதரிக்கும் கார்னர் சீட்டுகளில் அடைக்கலம் அடைந்தனர் . படம் ஓட ஆரம்பித்ததும் அவன்  கையைப்பிடித்தபடியே அவன் தோளில் சாய்ந்தாள் .   ‘என்ன கிஸ் பண்ணனும்னு உனக்கு ஒருநாள் கூட தோனுனதே இல்லையாடா ?’ என்றாள் ஏக்கமாக . அவளின் பார்வையில் காதல் கொந்தளித்தது . அது காமத்தைத்தாண்டிய பார்வை .  காதலின் தவிப்பால் முத்தம் கேட்கும் பார்வை .   ‘என் மனசுக்குள்ள உன்ன கிஸ் பண்ணாத நாளே இல்லடி  ’ என்று மெல்லிய புன்னகையுடன் சிரித்தான் .   ‘எனக்கு ஒரு கிஸ் வேணும்டா . ப்ளீஸ் ’ என்றாள் ஏக்கமாக . உண்மையான காதலை அனுபவித்தவர்களுக்கு அந்த முத்தம் எத்தகைய உணர்வு என்று தெரியும் . அவள் தன்னுடைய உடல்தாகத்தை அணைக்க அவ்விடத்தில் முத்தத்தைக்கேட்கவில்லை . அவனோ , அவள் கேட்டதும் இன்பஅதிர்ச்சியின் உச்சத்திற்கு சென்றான் . அவளின் இதழைப்பற்றிக்கொள்ள  , அவனின் உதடுகள் துடித்தன . அவனின் கண்கள் , அவளின் பாதி சொருகிய விழிகளைப்பார்த்து உருகியது . மூச்சுக்காற்று மெல்ல உள்ளே சென்று பெருமூச்சாய் வெளிவந்தது . குரல் தழுதழுத்தவாறே அவளிடம் மென்மையாக பேச ஆரம்பித்தான் .   ‘இல்ல மையல் . கல்யாணத்துக்கு முன்னாடி உன்ன எச்சப்பண்ண எனக்குஇஷ்டமில்லடி . நீ முழுசா எனக்கு வேணும். நம்மோட முதல்முத்தத்துக்காகத்தான் நா வாழ்க்கைல போராடிட்டுருக்கேன் . அது திருட்டுத்தனமா  கிடைக்கறதுல எனக்கு இஷ்டமில்லடி . நீ எனக்குனு மட்டும் ஆன பின்னாடி , முழு உரிமையோட உன்ன தொடனும் .   ’ என்றான் காதலோடு .   அவன் தோளைப்பற்றியிருந்த அவளின் கைகள் இருக்கத்தைக்காட்டியது . அவனை அவள் இறுகப்பற்றிக்கொண்டாள் . அவளின் முகம் அவனின் தோளின் மேல் அழுத்தமாய் பதிந்தது . சூடான கண்ணீர் அவன் தோளில் பட்டதும் ‘அம்மு ! என்ன ஆச்சு ?’ என்று கவலையுடன் அவன் கேட்டான் . மெல்லமாய் அவன் முகம் நோக்கி தன் தலையைத்தூக்கியவளின் கண்கள் கலங்கியவாறு இருந்தது . ‘அம்மு’ என்று மறுபடியும் அவன் அழைக்க ,   ‘ஏன்டா என்ன இவ்ளோ லவ் பண்ற ? ப்ளீஸ் . என்ன இவ்ளோ அதிகமா லவ் பண்ணாத . நாந்தான் உன்ன அதிகமா லவ் பண்ணனும் .  என்ன தோக்கடிச்சிடாதடா’ என்று அழுதவாறே கூறினாள் . மதனின் கண்களும் கொஞ்சம் கொஞ்சமாய்க்கண்ணீரில் நனைய , அவனின் கைகள் மையலின் விழிகளில் ஓடிய கண்ணீரைத்துடைத்தது . அவள் அப்படியே இவனின் தோளின்மேல் சாய்ந்து கிறங்கிக்கிடந்தாள் . இவனோ அவளின் தலையின்மீது தன்னுடைய கன்னங்களை வைத்து கண்களை மூடியவாறு அவளின் அருகாமையை உணர்ந்தான் . அங்கு உண்மையாகவே ஈருடல்களில் ஓருயிர் உலவிக்கொண்டிருந்தது . 7 பிடிக்கல   ‘எங்கப்பாவுக்கு நம்ம விஷயம் தெரிஞ்சிடுச்சி மதன் ’ என்று கண்கலங்கியவாறே மதனிடம் மையல் கூறினாள் . எவ்வளவோ இனிமையான நினைவுகளை அவர்களுக்குத்தந்த அந்த பேருந்து பயணம் இன்று கொடுமையானதாக இருந்தது . நியூட்டனின் மூன்றாம் விதி இவ்வளவு சீக்கிரமாக இவர்களின் வாழ்க்கையில் அப்ளை ஆகும் என்று எதிர்பார்த்திருக்கமாட்டார்கள் .   ‘எப்படி தெரிஞ்சது ?’   இடைப்பட்ட காலங்களில் இவர்களின் காதலுக்குள் பிரிவினை ஏற்படுத்த ஒருவன் உள்நுழைந்தான் . அவன் மையலின் தூரத்து உறவினன் . பார்க்க  போந்தாக்கோழி போல் இருக்கும் அவன் மையலுக்கேத்தெரியாமல் அவளை கபளிகரம் செய்ய முயற்சித்தான் . மதனின் கெத்தும் , நண்பர்கள் செட்டையும் பார்த்து மிரட்சியுடன் ஒதுங்கி நின்றான் . தினந்தோறும் மையலின் அருகில் அமர்ந்து வேறு சாதியைச்சார்ந்த மதன் , அவள் கையைப்பிடிப்பது இவனுக்கு அருவெருப்பை உண்டாக்கியிருந்தது .  மதனிடம் மையல் சிரித்து பேசும்போதெல்லாம் இவனுக்கு நரம்புகள் புடைக்கும் . அவனின் கோவத்தை நேரடியாகக்காட்டாவோ , மையலைக்கண்டிக்கவோ போதுமான தைரியம் இல்லாதவன் . அவனுக்கு மையல் வேண்டும் . அவ்வளவே அவன் எண்ணம் . அதற்காக குறுக்கவழியைக்கண்டறிந்து அதன்படி சென்றான் .மையலின் வீட்டில் சொல்லிவிட்டான் .   ‘யாரோ எங்க வீட்டுல சொல்லிட்டாங்க .’ என்று அழுதவாறே கூறினாள் .   ‘அம்மு . அழாத ! இப்போ என்ன ? உங்க வீட்ல தெரிஞ்சிடுச்சி . அவ்ளோதான . நா உங்க வீட்டுல வந்து பேசறேன் .’   ‘அதெல்லாம் வேண்டாம் . என்ன இன்னைக்கே எங்கயாவது கூட்டிட்டு போய்டு . ப்ளீஸ் .’ என்று மீண்டும் அழுதாள் .   ‘ஹே ! லூசாடி நீ . நா இன்னும் காலேஜ் முடிக்கல . அதுவுமில்லாம என்ன பெத்த பையனவிட பாத்துப்பாத்து என்னோட அங்குள் வளர்த்திருக்காரு . அட்லீஸ்ட் அவருகிட்டயாச்சும் ஒரு வார்த்தை சொல்லனும் .’   ‘எனக்கு பயமா இருக்குடா . ப்ளீஸ் . என்ன விட்டுட்டு போய்டாத டா .’   ‘ஒருநிமிஷம் பொறுமையா யோசிச்சு பாரு அம்மு . நா உன்ன கல்யாணம் பண்ணி ராணிமாதிரி வச்சி்க்காப்பாத்தனும்னு நினைக்கிறேன் .  இப்போ இருக்க நிலைமைல எப்டிடி ? நா ஆல்ரெடி சொல்லிருக்கேன்ல . உங்க வீட்ல உன்னப் பாத்துக்கரத விட நல்லா உன்னப்பாத்துக்கனும் . அதுதான் எனக்கு முக்கியம் .கொஞ்சம் பொறுமையா இரு தங்கம் . ’ என்று ஒருமாதிரியாக சமாதானப்படுத்தினான் . அவனின் ஆறுதலான வார்த்தைகள் மனதின் காயத்திற்கு ஒத்தடம் கொடுத்தது போலிருந்தது . வீட்டிற்கு வந்தவன் சிறிது நேரம் யோசித்தான் . இதன்பின்னும் பொறுத்திருப்பது ஆபத்து என்றுணர்ந்தான் . அவன் அங்கிளிடம் எல்லா உண்மையைப்பற்றியும் உடைத்தாகவேண்டிய கட்டாயத்திற்குத்தள்ளப்பட்டான் . அவருக்காக காத்திருந்தான் . சப்-இன்ஸ்பெக்டரான அவருக்கு எப்போது வேலை முடியும் , எப்போது வீடுதிரும்புவார் என்பது கேள்விக்குறியே . ஆனால் அவனுடைய நேரத்திற்கு அன்று சீக்கரமாகவே வீட்டிற்குள் நுழைந்தார் . மனதைத்தைரியப்படுத்தியவாறே அவரிடம் சென்றான் .   ‘அங்குள் ’   ‘ம் ’   ‘உங்க கிட்ட கொஞ்சம் பேசனும் ’ என்றவனை நிமிர்ந்து பார்த்தார் . அவரின் முகம் என்ன என்று வினவியது .   ‘நா ஒரு பொண்ண மூனு வருஷமா லவ் பன்றேன் .’   என்னது மூனு வருஷமா என்பது போல் அவருடைய முகம் ஆச்சரியமானது .   ‘அதுக்கு ?’   ‘அவங்க வீட்ல தெரிஞ்சிடுச்சி . ’   அவர் அவனின் கண்களை கூர்மையாய் நோட்டம் விட்டவாறே கேட்டார் .   ‘அவள கல்யாணம் பண்ணிக்கனுமா ?’   இவன் தலைகுனிந்தவாறே நின்றுகொண்டிருந்தான் .   ‘உன் வயசு என்ன ? என்ன வேலைக்கு போற ? ஒருபடி பொன்னி அரிசி விலை என்னன்னு தெரியுமா ?’ என்ற அவரின் கேள்விகளுக்கு பதில் கூறாமல் நின்றிருந்தான் . அவனுக்கு பொன்னி அரிசியைப்பற்றிய கவலை இல்லை . உள்ளுக்குள் தன் காதல் இளவரசியைப்பற்றிதான் கவலை .   ‘பொண்ணு என்ன ஜாதி ?’   ‘******* அங்குள் .’   ‘செட் ஆகாது . விட்ரு .’   ‘அங்குள் ’ என்று ஏமாற்றத்துடன் அவரைப்பார்த்தான் . அவனின் கண்களில் பிச்சைக்கேட்பவனின் ஒளி தெரிந்தது . அவரோ அவனைக்கவனிக்காமல் எழுந்து சென்று பீரோவைத்திறந்து சில பைல்களை கொண்டுவந்தார் .   ‘மீறி கல்யாணம் பண்ணிக்கனும்னு நினைச்சினா இங்க இருக்கமுடியாது . உங்க அப்பனோட இன்சூரன்ஸ் பணம் , உன் பேர்ல வாங்கி வச்சிருக்க நிலம் பத்தின எல்லா பைலும் இதுல இருக்கு . எடுத்துகிட்டு கிளம்பிடு .’ என்று குரல் தழுதழுத்தவாறே கூறினார் .  அவனை எப்படியாவது நல்ல நிலைமைக்குக்கொண்டு வந்து சேர்த்துவிடவேண்டும் என்று வாழ்க்கைமுழுமைக்கும் போராடிக்கொண்டிரு்ககும் ஜீவனின் கண்கள் கலங்கியிருந்தது . அவன் தம் அடிக்கிறான் எனத்தெரிந்திருந்தாலும் அதை அவனிடம் அதைப்பற்றி நேருக்குநேர் ஒருமுறைக்கூட பேசியதில்லை . ஒரே ஒரு தடவை குடித்துவிட்டு வந்தவனிடம் ‘உங்கப்பன மாதிரி நீயும் ஆகிடாதடா ’ என்று கெஞ்சியவர் . அன்றிலிருந்து குடிப்பதை நிறுத்தியவன் . இன்றோ , அவனை தராசுபோல் மாற்றிவிட்டார் .ஒருபக்கம் தன்னையே நம்பி காத்திருக்கும் மையல் , இன்னொருபுறம் தனக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த மாமன் .   மதன் அதற்கடுத்து எதுவும் பேசவில்லை . அவனுக்கு நன்றாய்த்தெரியும் . அவனுடைய வீட்டில் ஜாதிப்பிரச்சனை பெரிதளவில் இருக்குமென்பது நன்றாய் தெரியும் . அவ்வளவு ஏன் , அவனே நண்பர்களைக்கூட ஜாதிவாரியாகத்தான் பிரித்து வைத்திருந்தான் . காதலிக்கும்போது கூட அடிக்கடி மையலின் ஜாதியைக்கிண்டலடிக்காமல் இருக்கமாட்டான் . அவளும் இவனைப்போல் ஜாதி பார்த்திருந்தால் , இவர்களின் காதல் அப்போதே முடிந்திருக்கும் .  இனி யோசிக்க ஒன்றுமில்லை . கடைசியாய் ஒருமுறை மையலின் வீட்டில் மோதிப்பார்த்துவிட வேண்டியதுதான் என்றவாறு அவளின் வீடு நோக்கி தன் பைக்கை கிளப்பினான் .   கிளம்பும்முன் கண்ணனுக்கு போன் செய்து மையலின் வீட்டினருகே இருக்கும் டீக்கடைக்கு வருமாறு கூறியிருந்தான் . அவளின் வீடுநோக்கி செல்லும்போதெல்லாம் எதிர்காலத்தைப்பற்றிய பயத்துடன் தானிருந்தான் . அவனுடைய மாமாவிற்கு ஜாதியைக்காட்டிலும் அவனே முக்கியம் . இருந்தாலும் அவனுடைய கிராமம் முழுமையும் அவருக்கு அங்காளி , பங்காளி , மாமன் , மச்சான் உறவினராகவே இருந்தனர் . இவன் வேற்றுசாதிப்பெண்ணைத்திருமணம் செய்துவிட்டான் என்று அவர்கள் அறிந்தால் ஊருக்குள் தலைநிமிர்ந்து எங்கும் செல்லமுடியாது . தான் அவமானப்படுவதோடு மட்டுமில்லாமல் ‘தங்கை மகனை ஊர்ப்பொறுக்க வைத்துவிட்டான் . வளர்ப்பின் லட்சணம் இதுதானா ?’ என்று ஊரே அவமானப்படுத்தும் . தன் மகளுக்கு நாளை வரன்தேடினாலும் இந்த பிரச்சனை குறுக்கில் வரும் . இவனைக்காட்டிலும் இக்கட்டான சூழலுக்கு அவர்தான் தள்ளப்பட்டார் .   மதன் அவளின் வீட்டை அடைந்தான் . கண்ணனிடம் வெளியில் காத்திருக்குமாறு கூறிவிட்டு அவளின் வீட்டிற்கு சென்று காலிங்பெல்லை அடித்தான் . அவனுடைய அம்முவின் தங்கைதான் கதவைத்திறந்தாள் . அவள் மதனைப்பார்த்ததும் ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் உறைந்தாள் .   ‘அச்சோ ! இங்க எதுக்கு வந்திங்க ? ஏற்கனவே நிறைய பிரச்சன ஓடுது .அப்பா வேற வீட்டுல இருக்காரு . தயவு செஞ்சு கிளம்புங்க ’ என்று அவள் கூறும்முன்பாக  அவளின் தந்தையின் குரல் வந்தது .   ‘யாரும்மா ?’   ‘யாருனு தெரிலப்பா  . ’ என்றவாறு அவள் கதவைவிட்டு வேகமாக அக்காவின் அறைக்கு ஓடினாள் . மதனைப்போலவே அவர்களும் நடுத்தட்டு வர்க்கம்தான் என்பது அவர்களின் வீட்டின் பெயிண்டின்வாயிலாகவே அறியமுடிந்தது .   ‘யாருப்பா நீங்க ?’   ‘சார் . நா உங்க கிட்ட கொஞ்சம் பேசனும் .’   ‘உள்ள வாங்க ’ என்று அழைத்தவர் அவனை அமர சொன்னார் .   ‘சொல்லுப்பா .’   ‘சார் . எம்பேரு மதன் . ’ என்றவுடன் அவருடைய கண்கள் விரிந்தது . அவருடைய முகம் மாறியது நன்றாகவே தெரிந்தது .   ‘நானும் உங்க பொண்ணும் லவ் பன்றோம் .’ என்று தட்டுத்தடுமாறி கூறிமுடித்தான் .   மையலின் தந்தை எதுவும் பேசவில்லை . அவளின் தாயோ ஒரு ஓரமாய் நின்று இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள் .   ‘அம்மா . இங்க கொஞ்சம் வாம்மா ’ என்று சத்தமாக யாரையோ அழைத்தார் . அதுவரை கதவருகில் நின்று நடப்பதை படபடப்புடன் பார்த்துக்கொண்டிருந்த மையல் அவரின் அருகில் வந்து நின்றாள் .   ‘இந்த பையன நீ லவ் பன்றியாமா ?’ என்றார் அழுத்தமாக .   அவள் தொடர்ந்து மௌனம் சாதித்தாள் .   ‘சரி தம்பி . நீங்க உங்க வீட்டுல இருக்கவங்கள வர சொல்லி பொண்ணு கேளுங்க . எனக்குப்பிடிச்சிருந்தா மேற்கொண்டு பேசலாம் .’ என்றவாறு அவர் எழுந்து நின்றார் .   ‘சார் . எங்க வீட்ல ….’   ‘என்னப்பா ?’   ‘எங்க வீட்டுல ஜாதி மாத்தி கல்யாணம் பன்றத ஏத்துக்க மாட்டாங்க சார் . ’   ‘அப்றம் எப்டிப்பா ?என்ன பாத்தா மட்டும் இளிச்சவாயன் மாதிரி தெரியுதா ? சரி நீ வேல செய்ற ?’   ‘படிச்சிட்ருக்கேன் சார் .பி.இ. பைனல் இயர் .’   ‘ஓ ! நல்ல படிப்பு தான் . இவளுக்கும் இன்னும் 6 மாசம் இருக்கு படிப்பு முடிய . அதுக்குள்ள நீ உங்க வீட்ல பேசி அவங்க மனச மாத்து . அதுக்கப்றம் பாத்துக்கலாம் . ’ என்றவாறு அவனின் பதிலை எதிர்பாராமல் கிளம்பி உள்ளே சென்றார் . வந்த காரியம் ஓரளவு சக்ஸஸ் ஆனது மதனுக்கு சந்தோஷமாய்த்தானிருந்தது . எப்படியாவது அவன் வீட்டில் மட்டும் மனமாறம் செய்யவேண்டும் . கண்ணனிடம் நடந்ததைக்கூறிவிட்டு , ஓரளவு தெளிந்த மனதுடன் தன் வீட்டை அடைந்தான் . அவனுடைய மாமா ஒருமாதிரியாக அவனைப்பார்த்தாலும் ஏதும் சொல்லவில்லை . காலையில் வழக்கம்போல பேருந்தில் அவளைச்சந்தித்தான் .  சந்தோஷ ரேகை அவனுடைய முகத்தில் மின்ன , அவளைத்தேடினான் . ஆனால் அவளோ இவனை்ககண்டும் காணதது போல் இருந்தாள் . அவளிடம் சென்று ஆசையாக இவன் பேச , அவள் பதிலேதும் சொல்லாமல் விரைத்தவாறு நின்றிருந்தாள் . மாலினியும் அதேபோலவே தான் இருந்தாள் . இவர்களிருவருக்கும் நடக்கும் சண்டையை தீர்த்துவைப்பவளே  அமைதியாய் இருந்தாள் . என்ன நடக்கிறதென்று புரியாமல் இருந்தான் . மாலையிலும் அதேநிலை தான் . ஓரளவு கெஞ்சிப்பார்த்தவன் , கடைசியில் மையலிடம் கோவப்பட்டு கேட்டான் .   ‘ஹே ஏன்டி பேசமாட்டேன்ற ?’ அவ்வளவு நேரம் அமைதியாய் இருந்தவள் பொறுமையாய் தெளிவாய்க்கூறினாள் .   ‘எனக்கு உன்ன பிடிக்கல . இனிமேல் எங்கிட்ட பேசாத . என்ன தயவு செஞ்சு டிஸ்டர்ப் பண்ணாத .’ 8 காதல்     அவள் எதற்காக கோவப்படுகிறாள் என்பது புரியாமல் குழம்பிய மதன் , ஏதேதோ முயற்சி செய்தும் அவளிடமிருக்கும் காரணத்தைக் கண்டறியமுடியவில்லை . இப்படியே இரு நாட்கள் முடிந்தது . அவள் கல்லூரியே கதி என்றிருந்தான் இன்றைய தினம் அவளிடம் பேசி என்னவென்று அறிந்துகொள்ளவேண்டும் என்றவாறு முடிவெடுத்தவன் அவள் கல்லூரியை விட்டு வரும் வழியில் நின்றுகொண்டிருந்தான் . அவளும் வந்தாள் . அவள் கையைப்பிடித்து இழுத்து நிறுத்தினான் .   ‘எங்கிட்ட ஏன் அம்மு பேசமாட்டேன்ற ?’ என்று குரல் தழுதழுத்தவாறே கேட்டான் . கண்கள் வழக்கம்போல கண்ணிருக்கு பழகியிருந்தது . காதலித்தால் அதிகம் சுரப்பது கண்ணிர் தான் . அவள் தலைகுனிந்தவாறே நின்றிருந்தாள் . அவளின் முகத்தைப்பிடித்து நிமிர்த்தினான் . அவளும் கண்ணிரை மறைக்கத்தான் தலைகுனிந்து நின்றிருந்தாள் . அவன் கண்களைப்பார்த்ததும் , அவளின் மனதினில் குடிகொண்டிருந்த சோகம் கண்களின் வழியே கண்ணீராக பீறிட்டது .   ‘எங்கிட்ட எதுவும் கேட்காதடா. என்ன இப்பவே எங்கயாச்சும் கூட்டிட்டு போய்டு ’ என்று அழுதவாறே கூறினாள் .   ‘நாம ஒன்னும் அனாத இல்லைடி . யாருக்கும் தெரியாம கல்யாணம் பண்ணிக்க . அதான் உங்க வீட்டுல ஓ.கே சொல்லிட்டாங்கள .’ என்றான் . உண்மையில் மையலின் தந்தை , மதனை அனுப்பிவைத்தபின் மாலினியை அழைத்து பேசியிருந்தார் . அவளும் பயந்துகொண்டு மையலுக்கு மதனின்மேல் இருக்கும் காதல் பற்றியும் , இவர்களைப்பிரிக்க நினைத்தால் ஓடிச்சென்றாவது திருமணம் செய்துகொள்வார்கள் என்பதனையும் தெரிவித்திருக்கிறாள் . இனி இவர்களிருவரும் பேசுவதைக்கண்காணிக்கும் பணியை மாலினியிடம் ஒப்படைத்துவிட்டு , மையலுக்கு அன்று இரவே மாப்பிள்ளைத்தேடும் பணியைத்தொடங்கியிருந்தார் . மையலோ தந்தையிடம் புரியவைக்க முயற்சிக்க ,   ‘உனக்குப்பின்னாடி இவ வாழ்க்கைய நீ நினைச்சிப்பாத்தியாமா ? . தயவு செஞ்சு என் குடும்ப மானத்த அழிச்சிடாதமா ’ என்று அழுதார் . அவளும் அழுதுகொண்டே அவளின் தந்தையின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டாள் . தன்னைப்பெற்றவருக்காக , தான் பெறாத தன் காதலனை கைவிட முயற்சித்தாள் . கையை மட்டும் பிடித்திருப்பவனாக இருந்தால் அவனை கைவிட்டிருக்கலாம் . ஆனால் அவளின் உயிரைப்பிடித்திருக்கும் மதனை எப்படி விட முடியும் ? இரண்டு நாட்களிலேயே அவளின் தந்தை பாசத்தை வென்றது அவளின் காதல் .   இப்போது மதனும் ஒருவாறு யோசித்தான் . இவளின் வீட்டில் ஏதோ பிரச்சனை என்பது மாத்திரம் புரிந்தது .   ‘சரி  . கவலப்படாத அம்மு .நா பாத்துக்கறேன் ’ என்றவாறு அவளுடன் பேருந்து நிலையத்திற்கு கிளம்பினான் . இரண்டு நாட்களாய் துடிதுடித்துக்கொண்டிருந்தவன் இன்று ஆறுதலாய் இருந்தான் . மனதில் மாத்திரம் பயமும் , என்ன செய்யலாம் என்ற குழப்பமும் ஓடியது . பஸ் ஸ்டான்டில் காத்திருந்த கண்ணனிடம் கேட்டபின் ஒரு நல்ல யோசனை தோன்றியது . நாளை மறுநாள் நல்ல முகூர்த்த தினம் . அன்றைய காலைப்பொழுதில் ரிஜிஸ்டர் ஆபிஸ் அழைத்துச்சென்று அவளை மனம் புரிந்துகொள்ளலாம் . அதன்பின் அவள் வீட்டிலேயே அவள் இருக்கட்டும் . யார்வீட்டிலும் சொல்லவேண்டாம் . அடுத்தவாரம் வரவிருக்கும் கேம்பஸ் இன்டர்வியுவில் எப்படியாவது வேலையை வாங்கிவிட்டால் சாமாளித்துவிடலாம் என்று முடிவெடுத்தான் . அதை மையலிடமும் தெரிவித்தான் . மையல் ஓரளவு ஆறுதலடைந்தாள் . ஆனால் இவற்றையெல்லாம் பார்த்து இன்னொருத்தி பதறிக்கொண்டிருந்தாள் . இவர்களிருவருக்கும் மூன்று வருடமாய் இணைப்புப்பாலமாய் இருந்த மாலினி தான் . மையலின் தந்தை அன்றைய பொழுது இவளை மிரட்டியது இவளின் நினைவுக்கு வந்தது .   ‘இங்க பாருமா . நீ செஞ்சத எல்லாம் உங்க வீட்டுல சொன்னா என்ன ஆகும்னு தெரியும் தான ?’ என்ற அவரின் குரல் அவளுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியிருந்தது . ஒருவேளை அவளின் வீட்டில் இதெல்லாம் தெரிந்தால் அவளின் படிப்பு பாதியில் நின்றுவிடும் . அதன்பின் அடுத்த ஒரு மாதத்தில் அவளுக்கும் மாப்பிள்ளை பார்த்து திருமணம் நடந்துவிடும் . அவளுக்கு அதில் துளிகூட உடன்பாடில்லை . அவள் வாழ்க்கையை நன்றாய் அனுபவிக்க நினைப்பவள் மாலினி .   அடுத்த இரு தினங்கள் மையல் அந்த பேருந்தில் வரவில்லை . அவளின் தோழிகளிடம் கேட்டபின் தான் தெரிந்தது , அவளின் தந்தையே கல்லூரிக்கு கொண்டுவந்துவிடுகிறார் என்று .எப்படியாவது அவளைப்பார்த்து பேசியாகவேண்டும் என்று அவளின் கல்லூரிக்குள் நுழைந்தான் . அவளின் வகுப்பறையின்வழியாக சைகை செய்து வெளியே வர சொன்னான் . அவளின் முகம் முற்றும் பொலிவிழந்து கிடந்தது . கணவனை இழந்த கைம்பெண் போல் காட்சியளித்தாள் .   ‘என்ன ஆச்சு மையல் ?’   ‘நமக்குள்ள செட் ஆகாது மதன் . நாம பிரிஞ்சிடலாம் .’   ‘ஹேய் என்ன விளையாட்றியா ?’     ‘ ப்ளீஸ் மதன் . ’ என்றாள் அழுதுகொண்டு . அவளின் அழும் முகத்தைப்பார்த்து அவனுக்கு கோவம் தான் வந்தது .   ‘ஈஸியா வருதுனு உடனே அழ ஆரம்பிக்காத . எப்போப்பாரு அழுறது . இப்போ என்னடி உன் பிரச்சன . நா உன்ன விட்டு போகனுமா ?’   அவள் பதிலேதும் சொல்லவில்லை.  ஒருவாறு கோத்தைக்குறைத்தபடியே மென்மையாக அவளிடம் கூறினான் .   ‘நா உங்கிட்ட ப்ராமிஸ் பண்ணத மறந்துட்டியா ? உன்ன விட்டு போற நாள் வந்துச்சுனா என் உயிர் என்ன விட்டு போய்டும் அம்மு .’   அவள் இன்னும் அதிகமாய் விசும்ப ஆரம்பித்தாள் . ‘எங்கப்பாவுக்கு இது பிடிக்கல ’   ‘ உங்க அப்பன் பெரிய இவன் . அவனோட பாசம் உன்ன அப்படியே தடுக்குதா ?என்னோட அங்குளுக்குக்கூட தான் இது பிடிக்கல . அதுக்காக நா உன்ன விட்டுட்டேனா ?’   ‘உனக்கு அப்பா இருந்தா தெரிஞ்சிருக்கும் ’ என்று யோசிக்காமல் கூறினாள் . அவனோ தலையில் இடி இறங்கியதைப்போல் சிலையாய் நின்றான் . தன்னை ஏறத்தாழ அநாதை என்று கூறிவிட்டாளே என்பதை அவனால் ஜீரனிக்கமுடியவில்லை . அம்மா இல்லாத குறைய தீர்த்தவள் , இன்று நீ ஒரு அநாதை என்று சொல்லாமல் சொல்லியது அவனுக்குள் பெரும் துக்கத்தை வார்த்தது . கண்களில் தன்னையும் அறியாமல் கண்ணீர் பெருக்கெடுக்க ஆரம்பித்தது .   ‘சரி ! நா உன்ன விட்டுப்போறதுதான் உனக்கு சந்தோஷம்னா , உன் சந்தோஷத்துக்காக நா போறேன் ’ என்றவாறு அங்கிருந்து கிளம்பினான் . அவனுக்குள் விவரிக்கமுடியாத துயரம் தாண்டவமாடியது . அவனின் தாய் மட்டும் இருந்திருந்தால் , அவளின் மடியினில் முகம்புதைத்து அழுதுகொண்டே இருந்திருப்பான் . அந்நேரத்தில் கண்ணன் கூட அங்கில்லை .  திக்கற்ற வழியினில் மனம் முழுமையும் துயரத்தில் ஆழ்த்தி , கால் போனபோக்கில் பயணிக்க ஆரம்பித்தான் . என்ன பெண் இவள் ? ஒருநாள் வேண்டும் என்கிறாள் , இன்னொருநாள் வேண்டாம் என்கிறாள் . சுயமாய் முடிவெடுக்கத்தெரியாத முட்டாள் இனத்தைச்சார்ந்தவள் . இவள் படித்துக்கிழித்தால் மட்டும் போதுமா ? வாழ்க்கைச்சார்ந்த ஒரு முக்கியமான முடிவினைக்கூட எடுக்கத்துணிவில்லாத பேடி . என்று ஆள்மனது அவனுக்குள் அவனை சமாதானப்படுத்த முயன்று தோற்றது .   ‘உனக்கு அப்பா இருந்திருந்தா தெரிஞ்சிருக்கும் ’ என்ற குரலே அவனுக்குள் ஒலித்துக்கொண்டிருந்தது . பேருந்து நிலைத்தை அடைந்ததிலிருந்து எத்தனை சி்கரெட் அடித்திருப்பான் என்று சிகரெட்டுக்கேத்தெரியாது . அவன் மனதில் இருக்கும் துக்கத்தைத்தீர்க்க , நுரையீரலுக்குள் கார்பன் படிமத்தையும் பொலேனியம் 210 ஐயும் கிங்ஸின் வழியாக செலுத்திக்கொண்டிருந்தான் . அவனுக்கு அப்போது தனிமையின் துணை தேவைப்பட்டது .   கல்லூரியில் இருந்த மையலுக்கு நெருப்பின் மேல் அமர்ந்திருப்பது போல் இருந்தது . அவ்வார்த்தையைக்கூறியபின் அவனை விட அதிகமாய் துன்புற்றவள் அவள்தான் . சிங்கப்பூர் மாப்பிள்ளை என்று ஒருவனை அவர் கொண்டுவந்து நிறுத்தியிறா விட்டால் இவ்வளவு தூரம் ஆகியிருக்காது . அன்று அவளின் தந்தைக்கு எதிராய் பெரும்போரேத்தொடுத்திருந்தாள் .   ‘எனக்கு மதன் போதும் பா . நீங்கள்லாம் வேண்டாம் . அவனவிட்டு என்னால இருக்கமுடியாது’ என்று தீர்மானமாய் கூறினாள் . அடிக்க வந்த அவளின் தாயின் கையினைத்தடுத்தாள் . அதுவரைப்பொறுமையாய் பார்த்துக்கொண்டிருந்த அவளின் தந்தை அப்படி மட்டும் செய்யாமல் இருந்திருந்தால் , இந்நேரம் மதனின் கையால் தாலிகட்டிக்கொண்டு எங்கேனும் சென்றிருப்பாள் .   ‘இங்க பாருடி .நீ மட்டும் அந்த பள்ளிப்பையனோட ஓடிப்போன , நாங்கலாம் குடும்பத்தோட தற்கொலைப்பண்ணிப்போம் ’ என்றால் அவளின் தாய் .   ‘நீங்க வாழ்ந்து என்ன பண்ண போறிங்க ? பெத்த பொண்ணோட மனசுல என்ன இருக்குனு தெரியாம  இருக்க நீங்கலாம் வாழ்ந்து என்னத்த சாதிக்கப்போறிங்க ?’   இவளைவிட்டாள் இன்றே கிளம்பிவிடுவாள் என்று முடிவெடுத்த அவளின் தந்தை , யாரும் செய்யாத காரியத்தைத்துணிந்து செய்தார் . எழுந்து வேகமாக மையலிடம் வந்தவர் , சிறிதும் யோசிக்காமல் அவள் காலில் விழுந்து அழ ஆரம்பித்தார் . அதுவரை அவள் மனதில் இருந்த திடம் , சுக்குநூறாய் உடைந்துபோனது .   5.15 பேருந்தில் வழக்கம்போல முன்வாயில் சீட்டில் அவள் கன்னங்கள் வீங்கி அமர்ந்திருந்தாள் . படிக்கட்டில் தொங்கியவாறு தன் பயணத்தைத்தொடர்ந்துகொண்டிருந்தான் மதன் . இருவருமே பேசிக்கொள்ளவில்லை . இன்னும் ஒரு நிமிடத்தில் மதனின் ஊர் வந்துவிடும் .   ‘மதன்’ என்று அவளின் குரலுக்கு மெல்ல திரும்பினான் . கண்கள் சிவந்து , முகம் வெளிறிப்போயிருந்தான் .   ‘எனக்கு யாரும் வேண்டாம் . நீ மட்டும் போதும் . இப்பவே என்ன எங்கயாவது கூட்டிட்டுப்போய்டு . ப்ளீஸ் ’  என்றாள் . அவள் முகம் கெஞ்சலின் உச்சத்தில் இருந்தது . அவன் மட்டும் சரி என்று சொன்னால் அப்போதே கிளம்பிவிடுவாள் . அவன் மௌனமாய் இருந்தான் . அருகில் மாலினியோ இன்று நடப்பதை வீட்டினுள் சொல்லக்காத்திருந்தாள் .   ‘மதன்’ என்று மறுபடியும் அவள் அழைக்க திரும்பினான் . ஒருவாறு தீர்மானமாய் கூறினான் .   ‘சாரி மையல் . எனக்கு என்னோட அங்குள் தான் முக்கியம் . அவரோட பெருமைய எனக்கு புரியவச்சதுக்கு தேங்ஸ் .’ என்று திரும்பினான் . அவள் கண்களில் நீர் ஓட ஆரம்பித்தது என்று சொல்லவா வேண்டும் . மதனின் ஊர் வந்துவிட்டது . பஸ் மெல்ல நிற்க ஆரம்பித்தது . மையல் அவனின் கைகளைப்பிடித்துக்கொண்டு கண்ணீரோடு இருந்தாள் . அவள் கிட்டத்தட்ட அவன் காலைப்பிடித்துக்கெஞ்சும் மனநிலையில் இருந்தாள் . அவனோ  தன் மனதில் இருக்கும் காதலை ஓரங்கட்டிவிட முயன்று கொண்டிருந்தான் . அவளே வருகிறாள் , பேசாமல் அவளோடு சென்றுவிடலாம் என்று மனம் ஒருபுறம் அலைபாய ஆரம்பித்தாலும் மறுபுறம் அவளின் தீச்சொற்களும் , முடிவெடுக்கத்தெரியாத சிந்தனையையும் நினைத்து பயந்தான் . கடைசியில் ஒருவாறாய் முடிவெடுத்து அவளின் உயிரை அவனின் கையிலிருந்து பிரித்துவிட்டான் .  உயிரற்ற பிணமாய் அவனுடைய ஊரில் இறங்கி முன்னே நடந்தான் . அவளின் சத்தமான அழுகுரல் பேருந்திலிருந்து வந்தது . இவனின் கண்களில் கண்ணீரும் மனதினுள் வலியும் ஒருசேர இருந்தது . பஸ் மெல்ல நகர்ந்தது .அவள் இவனைப்பார்த்து ‘மதன்’ என்று அழுதவாறே கத்திக்கொண்டு சென்றாள் . ஓடிப்போய் அவள் கண்களில் ஓடும் கண்ணீரைத்துடைக்க , இவனின் புலன்கள் துடிதுடித்தன .     ***** நான்கு வருடங்களுக்குப்பிறகு ,   ‘செமயா படம் போகுதுல்ல ?’ என்றான் பிரபு .   ‘ஆமா டூட் ’ என்று பதில் கூறியவனின் குரல் மதனுடையதுதான் . பிரபு , மதனின் ஊர்க்காரன் . கண்ணனுக்கும் தேவிக்கும் திருமணம் முடிந்தபின் , கண்ணன் இல்லறவாழ்க்கையில் பிசியானான் . அந்நேரத்தில் பிரபுதான் மதனுக்கு எல்லாமுமாக இருந்தான் .   ‘தியேட்டர்ல வந்து இனிமே படமே பாக்கக்கூடாது டூட் .’ என்றான் பிரபு .   ‘ஏன் டூட் ’   ‘பின்ன . சன்டிவில போடற விளம்பரத்தவிட அதிகமாக போடுரானுங்க .’ என்று சொன்னான் .   வழக்கம்போல இடைவேளை நேரத்தில் செல்லை நோண்ட ஆரம்பித்திருந்தான் மதன் .   ‘ஹே டூட் . இத நா உங்கிட்ட காட்டிட்டனா ?’ என்று ஒரு புகைப்படத்தைக்காட்டினான் மதன் .   ‘இல்ல டூட் ’ என்றவாறே அதைப்பார்த்தான் . ஒரு அழகிய குழந்தை செரலாக் மற்றும் ஜூனியர் ஹார்லிக்ஸின் உதவியால் கொழுக் மொழுக் என்றிருந்தது .   ‘நல்லா இருக்குடா பாப்பா ’ என்றான் பிரபு . தொடுதிரையைப்பிடித்து இழுக்க , அந்த படம் ஜூம் அவுட் ஆகி ஒரு குடும்பப்போட்டோவைக்காண்பித்தது . ஒரு ஆண்டி , அவளின் கையில் தன்னுடைய குழந்தையை வைத்திருந்தாள் .   ‘யாரு டூட் இது ?’ என்றான் பிரபு .   ‘என்னோட மையல்விழி டா . பார்த்தியா ? அவ பேபி எவ்ளோ அழகா இருக்கு . அப்படியே அவளோட கண்ணு . இவ பாரேன் . காலேஜ் படிக்கும்போது விலுவிலுனு இருந்தா . இப்போ என்னடானா நல்லா ஊறிட்டா .கல்யாணமானாலே பொண்ணுங்க பொதபொதன்னு ஆயிடுவாங்க போல .’ என்றான் மதன் .   ‘டேய் . இவ மொவரைய எதுக்குடா வச்சிருக்க ? அறிவில்ல உனக்கு ?’ என்று கோவப்பட்டவாறே திட்டினான் பிரபு . அவனுக்கு மதனின் காதலைப்பற்றி நன்கு தெரியும் . அவள் ,. அவனைவிட்டு சிங்கப்பூர் மாப்பிள்ளையைத்திருமணம் செய்துகொண்டு சென்றால் என்பதனை அறிந்து அவனை விட அதிகமாய்த்துடித்தவன் . திருமணத்தன்று மதன் மெல்லிய சிரிப்பை உதிர்த்தவாறே ‘அவ என்னோட மையல்டா . கண்டிப்பா என்ன தேடி வருவா’ என்று கூறியதெல்லாம் இன்னும் ஞாபகத்திலிருந்தது .   பிரபுவின் கேள்விக்கு மதன் பதிலேதும் தெரிவிக்காமல் அந்த போட்டோவையே பார்த்துக்கொண்டிருந்தான் . ஓரளவு கோவத்திலிருந்து வெளிவந்து அவனிடம் கேட்டான் .   ‘நீ இப்படில்லாம் பன்றதுக்கு பேர் என்னனு தெரியுமா ?’ என்று கேட்டான் .   ‘ம் . தெரியும் டூட் . காதல்’ என்று அவன் கூறும்போது தியேட்டரில் படம் போட்டிருந்தார்கள் . அந்த சத்தத்தில் பிரபுவுக்கு மதன் கூறியது காதில் விழவில்லை .   ‘என்ன டூட் ’ என்று சத்தமாய் மீண்டும் கேட்டான் பிரபு . மீண்டும் கூறினான் மதன் , கொஞ்சம் சத்தமாக , மனதில் உணர்ச்சி பொங்க   ‘காதல் ……………………………………………………………………………………. காதல் ’     ——— முற்றும் ——– 1 Free Tamil Ebooks – எங்களைப் பற்றி மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. எனவே ஒரு தமிழ் வாசகர் மேற்கூறிய “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகளை” வாங்கும்போது, அவரால் எந்த ஒரு தமிழ் புத்தகத்தையும் இலவசமாகப் பெற முடியாது. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FreeTamilEbooks.com இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1.ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2.தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3.சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. www.vinavu.com 2. www.badriseshadri.in 3. http://maattru.com 4. kaniyam.com 5. blog.ravidreams.net எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். <துவக்கம்> உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்]. தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/ நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : freetamilebooksteam@gmail.com FB : https://www.facebook.com/FreeTamilEbooks G +: https://plus.google.com/communities/108817760492177970948   நன்றி. 2 உங்கள் படைப்புகளை வெளியிடலாமே உங்கள் படைப்புகளை வெளியிடலாமே   உங்கள் படைப்புகளை மின்னூலாக வெளியிடலாம். 1. எங்கள் திட்டம் பற்றி – http://freetamilebooks.com/about-the-project/ தமிழில் காணொளி  – http://www.youtube.com/watch?v=Mu_OVA4qY8I 2.  படைப்புகளை யாவரும் பகிரும் உரிமை தரும் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் பற்றி – http://www.wired.co.uk/news/archive/2011-12/13/creative-commons-101 https://learn.canvas.net/courses/4/wiki/creative-commons-licenses உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தை இங்கே தேர்ந்தெடுக்கலாம். http://creativecommons.org/choose/ 3. மேற்கண்டவற்றை பார்த்த / படித்த பின், உங்கள் படைப்புகளை மின்னூலாக மாற்ற பின்வரும் தகவல்களை எங்களுக்கு அனுப்பவும். 1. நூலின் பெயர் 2. நூல் அறிமுக உரை 3. நூல் ஆசிரியர் அறிமுக உரை 4. உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் 5. நூல் – text / html / LibreOffice odt/ MS office doc வடிவங்களில்.  அல்லது வலைப்பதிவு / இணைய தளங்களில் உள்ள கட்டுரைகளில் தொடுப்புகள் (url) இவற்றை freetamilebooksteam@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்பவும். விரைவில் மின்னூல் உருவாக்கி வெளியிடுவோம். ——————————————————————————————————– நீங்களும் மின்னூல் உருவாக்கிட உதவலாம். மின்னூல் எப்படி உருவாக்குகிறோம்?  – தமிழில் காணொளி – https://www.youtube.com/watch?v=bXNBwGUDhRs இதன் உரை வடிவம் ஆங்கிலத்தில் – http://bit.ly/create-ebook எங்கள் மின்னஞ்சல் குழுவில் இணைந்து உதவலாம். https://groups.google.com/forum/#!forum/freetamilebooks நன்றி !