[] [கவிதையும் காதலே!] கவிதையும் காதலே! கவிதையும் காதலே! பூபதிராஜ் மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com சென்னை Creative Commons Attribution-ShareAlike 4.0 International License You are free: to Share — to copy, distribute and transmit the work; to make commercial use of the work Under the following conditions: Attribution — You must attribute the work in the manner specified by the author or licensor (but not in any way that suggests that they endorse you or your use of the work). No Derivative Works — You may not alter, transform, or build upon this work. காப்புரிமை தகவல்: நூலில் எந்த ஒரு மாறுதலும் செய்ய அனுமதியில்லை என்ற நிபந்தனையின் கீழ் பதிப்புரிமை வழங்கப் படுகிறது. இதனை விலையில்லாமல் விநியோகிக்கவோ, அச்சிட்டு வெளியிடும் செலவினை ஈடுகட்டும் விதமாக கட்டணம் வசூலித்து விற்பனை செய்யவோ முழு உரிமை வழங்கப்படுகிறது. This book was produced using PressBooks.com. உள்ளடக்கம் - கவிதையும் காதலே! - சமர்ப்பணம் - உள்ளடக்கம் - 1. நினைவுகளில் வரும் முதல் கனிகை - 2. சூழ்ச்சிக்கார சூரியன்... - 3. கடைசி வரம் தருவாயா பெண்ணே!! - 4. மௌனமொழி ஏன் தோழி ??? - 5. என் கண்ணீர் துளிகள் மதிபிழந்ததே.... - 6. என் பயணத்தில் ஒரு நாள்.... - 7. உனக்காக என் காதல் கடிதம்.... - 8. மழையில் நனைய பிடிச்சிருக்கு - 9. உன்னோடு ஒருநாள்...... - 10. ஒரு யுகம் உன்னோடு வாழப் போதாதடி.... - 11. என்னுயிரே நீதானோ - 12. தெரியாமலே போகட்டும் போ..... - 13. காதலை காகிதங்களாய் கசக்கி எறிந்ததேனோ - 14. எல்லாமே மாறிக்கொண்டிருக்கின்றன.... - 15. ஞாபகங்களின் சாரலில் - 16. காதல் பிரியங்கள் - 17. மண் வாசம் - 18. திராவிட தமிழா, விழித்தெழு - 19. விழித்தெழு நண்பா... - 20. கடவுள் இருந்திருந்தால்... - 21. இறைவா, நாங்கள் வேண்டுவது உன் சமாதனம் அல்ல - 22. யாரும் அறியப் போவதில்லை.... - 23. இயற்கையின் திருமண வாழ்த்து.... - 24. அதைத்தான் நீயும் விரும்புகிறாயா? - 25. என் வானத்தின் இயற்கையை உன்னைப்போல் மாற்ற வேண்டும்.. - ஆசிரியர்  குறிப்பு : - Free Tamil Ebooks – எங்களைப் பற்றி - உங்கள் படைப்புகளை வெளியிடலாமே 1 கவிதையும் காதலே! [Cover Image] உருவாக்கம் & மின்னூலாக்கம்: பூபதிராஜ் மின்னஞ்சல் : boopathybitit@gmail.com மேலட்டை உருவாக்கம்: மனோஜ் குமார் மின்னஞ்சல்: socrates1857@gmail.com மின்னூல் வெளியீடு: சிவமுருகன் பெருமாள் மின்னஞ்சல் : sivamurugan.perumal@gmail.com வெளியீடு: http://FreeTamilEbooks.com உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம். 2 சமர்ப்பணம் நட்பின் இலக்கணம் கற்றுத் தந்த என் உயிரினும் மேலான நண்பர்கள் ஐவருக்கும், எனது முயற்சித் திரிகளை எனது வாழ்வெனும் அகல்விளக்குகளில் தீண்டி விடும் என் பெற்றோருக்கும் , எனது இந்த முதல் நூலை சமர்பிக்கிறேன்… 3 உள்ளடக்கம் 1) நினைவுகளில்  வரும்  முதல் கனிகை 2) சூழ்ச்சிக்கார சூரியன்… 3) கடைசி வரம் தருவாயா பெண்ணே!! 4) மௌனமொழி ஏன் தோழி ??? 5) என் கண்ணீர் துளிகள் மதிபிழந்ததே…. 6) என் பயணத்தில் ஒரு நாள்…. 7) உனக்காக என் காதல் கடிதம்…. 8) மழையில் நனைய பிடிச்சிருக்கு 9) உன்னோடு ஒருநாள்…… 10) ஒரு யுகம் உன்னோடு வாழப் போதாதடி…. 11)என்னுயிரே நீதானோ 12)தெரியாமலே போகட்டும் போ….. 13)காதலை மட்டும் வெறும் காகிதங்களாய் கசக்கி எறிந்ததேனோ 14) எல்லாமே மாறிக்கொண்டிருக்கின்றன…. 15) ஞாபகங்களின் சாரலில் 16) காதல் பிரியங்கள் 17) மண் வாசம் 18) திராவிட தமிழா, விழித்தெழு 19) விழித்தெழு நண்பா… 20) கடவுள் இருந்திருந்தால்………… 21) இறைவா, நாங்கள் வேண்டுவது உன் சமாதனம் அல்ல 22) யாரும் அறியப் போவதில்லை…. 23) இயற்கையின் திருமண வாழ்த்து…. 24) அதைத்தான் நீயும் விரும்புகிறாயா? 25) என் வானத்தின் இயற்கையை உன்னைப்போல் மாற்ற வேண்டும்.. [pressbooks.com] 1 நினைவுகளில் வரும் முதல் கனிகை பழகியதுமில்லை அதிகமாகப் பேசியதுமில்லை உன்னிடம் ஆனால் பாத்தவுடன் பேசதூண்டும் அழகிய பள்ளிகாலங்களின் இறுதி வருடம் இந்த வருடம் பழகியதுமில்லை அதிகமாகப் பேசியதுமில்லை உன்னிடம் ஆனால் பாத்தவுடன் பேசதூண்டும் அழகிய பள்ளிகாலங்களின் இறுதி வருடம் இந்த வருடம் பதினொன்றாம் வகுப்பு ஒரு பள்ளியில், பன்னிரெண்டாம் வகுப்பு இப்பள்ளியில் ஏன் மாற்றம் செய்தேனோ தெரியவில்லை கடவுள் கொடுத்த வரமோ உன்னை காண ….. இலக்கிய பெயரை கேட்டபோது என்னுள் ஒரு சுகம் உந்தன் விழி தொடர்ந்தேன், நடை தொடர்தேன் நீயும் என்னை பார்ப்பாய் என எனினும் மறுத்தாய் மறைத்தாய் இன்னும் இல்லை என! உந்தன் காந்தப் பார்வை என்மேல் பட்டபோது நானும் காதல் வயப்பட்டேன் உன்னுள் முப்பொழுதும் உன்னைத் தொடர்ந்தேன் என் உள்ளத்தில் முயற்சி செய்து தொடர்ந்தேன் உன்னிடம் பேசவேண்டி என் காலங்கள் அழகானது, கசக்கும் பாடங்கள் இனிமையானது தேர்வு அறை முழுதும் உன் நினைவானது வினாத்தாள்களில் வரும் தெரியாக்கேள்விகளுக்கு பதிலாய் நீ . காரணமில்லாமல் சிரித்துக்கொண்டேன் ஒரு பைத்தியக்காரனாய். நீரில் நீந்தி மகிழும் நீர்ப்பறவை ஆனேன், வானில் மிதக்கும் விண்கலனை ஆனந்தித்தேன் நினைவில் நிலவினை நிகர் செய்து பார்த்தேன் உன் முகத்தோடு உந்தன் மேல் மயக்கத்தோடு நிலவும் சொன்னது, இந்தப் பாவை முன் நானும் தோற்றேன் என்று…. தினமும் சிரித்தாய் உன் தோழிகளுடன் ஆனாலும் மறைத்தாய் எனைப்பார்க்கும் பொழுது உன் தமிழ்ப் பெயரை கிறுக்கி திரிந்தேன் என் புத்தகங்களில் FLAMES போட்டு பார்த்தேன் பல வண்ணங்களில்…. மனம் சொக்கிப் போனேன் முதல் முறை நீ என்னைப் பார்த்தபோது, இன்னும் நினைத்து சி ரித்துக்கொள்வேன் யாழினி அங்காடியில் கடவுள் வரமே கிடைத்தது போல் இன்னும் உணர்கிறேன், உடல் சிலிர்த்து…. இரவு முழுவதும் உறக்கம் இல்லை , நீயும் என்னை நினைத்தாயா என்று தெரியவில்லை ஊஞ்சலில் ஆடும் நிணைவுகள் போல் என் ,மனதில் எப்பொழுதும் நீ… காலையில் எழும் சூரியன் ஆனேன் உன் முகம் காண உந்தன் விழிபடும் இடத்தில் இருக்கை மாற்றினேன் நாட்டிய நடைக்காக உனைத் தொடர்ந்து வந்தேன் உன் பொற்கரம் பட்ட தேர்வுத்தாளை தேர்ந்தெடுத்தேன் என் கரம் அதில் பொருத்தி அதிசயித்தேன் ……. உன்னைக்கான வேண்டி காலந்தாழ்த்தாமல் தினமும் காத்திருந்தேன் பேருந்து நிறுத்தத்தில் கண்டும் காணாமல் நீ என்னை கடந்து சென்றாய் எனினும் என்னுடன் நடைபோடத் துடிக்கும் உன் கால்கள் …. தினம்தோறும் விரும்பி வந்தேன் விடுப்பு எடுக்காமல் வகுப்புகளுக்கு நீயும் வந்தாய் என் மனம் தெரிந்து ….. உன்னை அலைகழிக்கும் அறிவியல் ஆசிரியரை இன்னும் நினைத்தாலும் கோபம் வரும் நீ வாங்கிய பிரம்படிகள்,பேச்சுக்கள் என்னையும் மனம் நோகச் செய்தனவே! இதுதான் என்னுள் நீ கலந்தாய் என்பதா…. குயில் குரல் கேட்க எண்ணி, தேடி அலைந்தேன் உன் வீடு போன் நம்பருக்காக yellow directory ல் தெரிந்து கொண்டேன் உனக்கொரு தம்பி என்று அவனிடம் அறிந்து கொண்டேன் , நேர்த்தியாய் டயல் செய்து மகிழ்ந்தேன், உன் குரல் மட்டும் கேட்டேன் சங்கீதமாய் நீயும் என்னை ரசித்திருப்பாய் என…….. பள்ளிச் சன்னலோரம் பார்துக்கிடந்தேன், என் பாவை முகம் காண பல முறை கேட்டார்கள் இது ஒரு தலைக்காதலா என்று, இல்லை என்று நிச்சயம் சொன்னேன் நீயும் என்னை செய்தாய் காதல் என்று…. என்னிடம் ஆழப்பதிந்த ரவிவர்மன் ஓவியம் ஆனாயடி நீ கண்ணாடி முன்னின்று எந்தன் காதல் சொல்லிப் பார்த்தேன் நீயும் பிம்பம் போல் என்முன் தோன்ற… மயக்கத்தில் நானும் மிதந்தேன் மதிகேட்டவனாய். மறந்து தொலைத்தேன் உன்னிடம் பிரிவென்ற வார்த்தையை ……. வாழ்கையில் என்றும் வேண்டாத இறுதி நாட்களும் வந்தது வலிகளுடன் எதிர்கொண்டேன் நீ இல்லாத நாட்களை உன்னைக் காணமல் அழும் என் கண்கள் உந்தன் கால்தடம் தேடும் என் கால்கள் தேடியும் வந்தேன் உன் வீட்டுப் பக்கத்தில் …. இறுதித்தேர்வுகள் முடிந்து சென்றது,இனியும் பொறுக்கக் கூடாதென என் காதல் சொல்ல நானும் வந்தேன் கடிதங்களுடன் காலங்களின் மயக்கம் என்றே நானும் விலகி நின்றேன் திரும்பும் திசையெல்லாம் நீதான் தெரிந்தாய்…. முடிவுகள் வெளியானது,முதல் வகுப்பில் இருவரும் தேர்வானது இன்னும் இமைகளில் இருக்கின்றன என் காதலியே இனிப்புகளை வழங்கியதும் இமைகளில் நீரைத் தேக்கியதும் காலங்கள் சொல்லும் நான் உன்னைக் காதலித்தேன் என …. தனிமையில் அழுதேன் உன்னை மறக்க முடியாமல் வாழ்வும் கசந்தது, வயதும் சென்றது நினைவுகளால் என்னை நீயும் தொடர்ந்தாய் எந்தன் மனம் முழுவதும் மாறாமல் நிறைந்திருந்தாய் எந்நாளும் உனை மறக்க முடியாது என் தேவதையே…. கல்லூரிக் காலங்கள் ஒரு இடைவெளியானது நமக்குள் இடைவெளி அன்பை உருவாக்கிற்று மென்மேலும் கண்டுகொண்டேன் உன் கல்லூரியினை காண வந்தேன் பல நாள் கழித்து பார்த்துக்கொண்டே இருந்தோம் பலமணி நேரம் இன்னும் நம் காதல் சொல்லாமல் …………… குறுஞ்செய்தி அனுப்பி பகிர்ந்து கொண்டோம் நம் வாழ்க்கை பாதைகளில் நடந்தவை நடப்பவை பற்றி தூரம் சென்றேன் என் லட்சியம் தேடி தொலைவில் இருந்தேன் உன் குரல் கேளாமல் பிரிவாய் உணர்த்தேன் உன் முகம் காணாது ஒரு நாள் பிரிந்தோம் பேசாது… என் கணக்குகள் யாவின் கடவுச்சொல் ஆனாயடி நீ உன்னை காண ஏங்கி நிற்கிறேன் தினம்தோறும் வேலைச் சுமையால் நீயும் மறுத்தாய் மனதும் தவித்தேன் உன் மாற்றமும் வெறுத்தேன் ஆயினும் என்றும் எப்பொழுதும் சொல்வேன் உன்னைப்போன்ற பெண்ணைப் பார்க்கும் பொழுது’ எனக்கும் ஒரு தோழி என் பேரழகி என எந்தன் வாழ்க்கைப் பயணத்தில் என்றும் வெற்றிக்கொடி நீ என்று கனவுகளில் நினைவுகளில் எத்தனை பெண்கள் வந்தாலும் என் நினைவில் வரும் முதல் கணிகை என்றுமே நீ !!! உன் நினைவுகளில் நானும் கலந்திருப்பேன் என்று…… பதினொன்றாம் வகுப்பு ஒரு பள்ளியில், பன்னிரெண்டாம் வகுப்பு இப்பள்ளியில் ஏன் மாற்றம் செய்தேனோ தெரியவில்லை கடவுள் கொடுத்த வரமோ உன்னை காண ….. இலக்கிய பெயரை கேட்டபோது என்னுள் ஒரு சுகம் உந்தன் விழி தொடர்ந்தேன், நடை தொடர்தேன் நீயும் என்னை பார்ப்பாய் என எனினும் மறுத்தாய் மறைத்தாய் இன்னும் இல்லை என! உந்தன் காந்தப் பார்வை என்மேல் பட்டபோது நானும் காதல் வயப்பட்டேன் உன்னுள் முப்பொழுதும் உன்னைத் தொடர்ந்தேன் என் உள்ளத்தில் முயற்சி செய்து தொடர்ந்தேன் உன்னிடம் பேசவேண்டி என் காலங்கள் அழகானது, கசக்கும் பாடங்கள் இனிமையானது தேர்வு அறை முழுதும் உன் நினைவானது வினாத்தாள்களில் வரும் தெரியாக்கேள்விகளுக்கு பதிலாய் நீ . காரணமில்லாமல் சிரித்துக்கொண்டேன் ஒரு பைத்தியக்காரனாய். நீரில் நீந்தி மகிழும் நீர்ப்பறவை ஆனேன், வானில் மிதக்கும் விண்கலனை ஆனந்தித்தேன் நினைவில் நிலவினை நிகர் செய்து பார்த்தேன் உன் முகத்தோடு உந்தன் மேல் மயக்கத்தோடு நிலவும் சொன்னது, இந்தப் பாவை முன் நானும் தோற்றேன் என்று…. தினமும் சிரித்தாய் உன் தோழிகளுடன் ஆனாலும் மறைத்தாய் எனைப்பார்க்கும் பொழுது உன் தமிழ்ப் பெயரை கிறுக்கி திரிந்தேன் என் புத்தகங்களில் FLAMES போட்டு பார்த்தேன் பல வண்ணங்களில்…. மனம் சொக்கிப் போனேன் முதல் முறை நீ என்னைப் பார்த்தபோது, இன்னும் நினைத்து சி ரித்துக்கொள்வேன் யாழினி அங்காடியில் கடவுள் வரமே கிடைத்தது போல் இன்னும் உணர்கிறேன், உடல் சிலிர்த்து…. இரவு முழுவதும் உறக்கம் இல்லை , நீயும் என்னை நினைத்தாயா என்று தெரியவில்லை ஊஞ்சலில் ஆடும் நிணைவுகள் போல் என் ,மனதில் எப்பொழுதும் நீ… காலையில் எழும் சூரியன் ஆனேன் உன் முகம் காண உந்தன் விழிபடும் இடத்தில் இருக்கை மாற்றினேன் நாட்டிய நடைக்காக உனைத் தொடர்ந்து வந்தேன் உன் பொற்கரம் பட்ட தேர்வுத்தாளை தேர்ந்தெடுத்தேன் என் கரம் அதில் பொருத்தி அதிசயித்தேன் ……. உன்னைக்கான வேண்டி காலந்தாழ்த்தாமல் தினமும் காத்திருந்தேன் பேருந்து நிறுத்தத்தில் கண்டும் காணாமல் நீ என்னை கடந்து சென்றாய் எனினும் என்னுடன் நடைபோடத் துடிக்கும் உன் கால்கள் …. தினம்தோறும் விரும்பி வந்தேன் விடுப்பு எடுக்காமல் வகுப்புகளுக்கு நீயும் வந்தாய் என் மனம் தெரிந்து ….. உன்னை அலைகழிக்கும் அறிவியல் ஆசிரியரை இன்னும் நினைத்தாலும் கோபம் வரும் நீ வாங்கிய பிரம்படிகள்,பேச்சுக்கள் என்னையும் மனம் நோகச் செய்தனவே! இதுதான் என்னுள் நீ கலந்தாய் என்பதா…. குயில் குரல் கேட்க எண்ணி, தேடி அலைந்தேன் உன் வீடு போன் நம்பருக்காக yellow directory ல் தெரிந்து கொண்டேன் உனக்கொரு தம்பி என்று அவனிடம் அறிந்து கொண்டேன் , நேர்த்தியாய் டயல் செய்து மகிழ்ந்தேன், உன் குரல் மட்டும் கேட்டேன் சங்கீதமாய் நீயும் என்னை ரசித்திருப்பாய் என…….. பள்ளிச் சன்னலோரம் பார்துக்கிடந்தேன், என் பாவை முகம் காண பல முறை கேட்டார்கள் இது ஒரு தலைக்காதலா என்று, இல்லை என்று நிச்சயம் சொன்னேன் நீயும் என்னை செய்தாய் காதல் என்று…. என்னிடம் ஆழப்பதிந்த ரவிவர்மன் ஓவியம் ஆனாயடி நீ கண்ணாடி முன்னின்று எந்தன் காதல் சொல்லிப் பார்த்தேன் நீயும் பிம்பம் போல் என்முன் தோன்ற… மயக்கத்தில் நானும் மிதந்தேன் மதிகேட்டவனாய். மறந்து தொலைத்தேன் உன்னிடம் பிரிவென்ற வார்த்தையை ……. வாழ்கையில் என்றும் வேண்டாத இறுதி நாட்களும் வந்தது வலிகளுடன் எதிர்கொண்டேன் நீ இல்லாத நாட்களை உன்னைக் காணமல் அழும் என் கண்கள் உந்தன் கால்தடம் தேடும் என் கால்கள் தேடியும் வந்தேன் உன் வீட்டுப் பக்கத்தில் …. இறுதித்தேர்வுகள் முடிந்து சென்றது,இனியும் பொறுக்கக் கூடாதென என் காதல் சொல்ல நானும் வந்தேன் கடிதங்களுடன் காலங்களின் மயக்கம் என்றே நானும் விலகி நின்றேன் திரும்பும் திசையெல்லாம் நீதான் தெரிந்தாய்…. முடிவுகள் வெளியானது,முதல் வகுப்பில் இருவரும் தேர்வானது இன்னும் இமைகளில் இருக்கின்றன என் காதலியே இனிப்புகளை வழங்கியதும் இமைகளில் நீரைத் தேக்கியதும் காலங்கள் சொல்லும் நான் உன்னைக் காதலித்தேன் என …. தனிமையில் அழுதேன் உன்னை மறக்க முடியாமல் வாழ்வும் கசந்தது, வயதும் சென்றது நினைவுகளால் என்னை நீயும் தொடர்ந்தாய் எந்தன் மனம் முழுவதும் மாறாமல் நிறைந்திருந்தாய் எந்நாளும் உனை மறக்க முடியாது என் தேவதையே…. கல்லூரிக் காலங்கள் ஒரு இடைவெளியானது நமக்குள் இடைவெளி அன்பை உருவாக்கிற்று மென்மேலும் கண்டுகொண்டேன் உன் கல்லூரியினை காண வந்தேன் பல நாள் கழித்து பார்த்துக்கொண்டே இருந்தோம் பலமணி நேரம் இன்னும் நம் காதல் சொல்லாமல் …………… குறுஞ்செய்தி அனுப்பி பகிர்ந்து கொண்டோம் நம் வாழ்க்கை பாதைகளில் நடந்தவை நடப்பவை பற்றி தூரம் சென்றேன் என் லட்சியம் தேடி தொலைவில் இருந்தேன் உன் குரல் கேளாமல் பிரிவாய் உணர்த்தேன் உன் முகம் காணாது ஒரு நாள் பிரிந்தோம் பேசாது… என் கணக்குகள் யாவின் கடவுச்சொல் ஆனாயடி நீ உன்னை காண ஏங்கி நிற்கிறேன் தினம்தோறும் வேலைச் சுமையால் நீயும் மறுத்தாய் மனதும் தவித்தேன் உன் மாற்றமும் வெறுத்தேன் ஆயினும் என்றும் எப்பொழுதும் சொல்வேன் உன்னைப்போன்ற பெண்ணைப் பார்க்கும் பொழுது’ எனக்கும் ஒரு தோழி என் பேரழகி என எந்தன் வாழ்க்கைப் பயணத்தில் என்றும் வெற்றிக்கொடி நீ என்று கனவுகளில் நினைவுகளில் எத்தனை பெண்கள் வந்தாலும் என் நினைவில் வரும் முதல் கணிகை என்றுமே நீ !!! உன் நினைவுகளில் நானும் கலந்திருப்பேன் என்று…… 2 சூழ்ச்சிக்கார சூரியன்... வெயிலின் தாகம் சற்றும் குறையாமல் உச்சியை பிளக்கும் சூரியனின் வெப்பம் தாகம்பெருக்கெடுத்துதடுமாறும்தருணத்தில் கண்களில்நீர்பொங்கும்வேலையில் சாலையை கடக்க முயன்றேன் நிழல் தேடி…   சட்டென்று மாறுதல்கள் இயற்கையில் சூரியனின்வெப்பம்குறைந்துதட்பவெப்பம்தடுமாறியது மேகங்கள் முழுவதும் இருட்டத் தொடங்கியது….   மழைவரும் மையல் தோன்றியபோது… வானில்வந்ததேவதைபோல், அவளும் என்னைக்கடந்துசென்றாள், அழகுப்பதுமையாய் கண்ணைப் பறிக்கும் வெண்மை உடையில்..   தோன்றியதேவதைஇவளைக்கண்டு, ஜில்லென்று ஸ்பரிசம் சிலிர்த்தது, தென்றலும் அடித்தது.. துடித்ததுஎன்உள்ளம்இவள்தான்நீதேடும்தேவதைஎன்று கால்கள் தொடர்ந்தன எனையறியாமல் அவளிடம்..   மின்னல்போல்மறைந்துவிட்டால்நொடிப்பொழுதில் அவள்மறைந்தவுடன்கதிரவன்  தன்னுருவம்காட்டத்தொடங்கினான் மேகங்கள்களைந்துசென்றன, கணப்பொழுதில்   காரிருள்மேகத்தின்கடும்சூழ்ச்சியைகண்டேன் பார்த்தவுடன் காதல் கொள்ள தூண்டும் உன்னைப் பார்த்து தன்னிலை மறந்து உன்னுள் மோகத்தில் திளைக்க மேகமும்உன்னைக்காதலித்ததோஎன்று உனக்காக சூரியன் வெப்பம் தனித்தோ என்று …   3 கடைசி வரம் தருவாயா பெண்ணே!! வரமொன்று கிடைத்தது, தவமேதும் செய்யாமல் உன் நினைவுகளுடன்  நித்தம்  நடக்கும்  வாய்ப்பு  கிடைத்தால் என் வாழ்க்கைப் பாதையில் நீ நடந்த காலடிச் சுவடுகள் …. என்றும் மகிழ்ச்சிக்  கடலாய் ஓயாமல்அலையடித்து என்  நினைவோடு உரசுதடி   உன் நினைவென்னும் கடலில் ஒரு கட்டு மரம் கிடைத்த மகிழ்ச்சியில் நான் . என்  வாலிப பாலைவனம் கூட, பூஞ்ச்சோலையானது  உன் காலடிச்சுவடால்!   தமிழில் இயற்றிய இலக்கியம் கண்டு இன்புற்றேன் உந்தன் பெயரால் என்னை பரவசமூட்ட….. உன்னிடம் பேச வார்த்தைகள் தேடி அலைந்தேன்   உன் விழி பேசும் மொழிக்கு பதிலேதும் தெரியாமல் …. இரவுகளின் நீளம்அன்று தான் தெரிந்தது , எனினும் இரவு முழுவதும் நிலாவென உன் நினைவுகள்….   இயல்பான மனிதனும் கவிஞனாகிறான் உன் முகம் பார்த்த காரணத்தால் உயிரற்ற பொருட்கள் கூட மீண்டும் மீண்டும் பிறக்கின்றன உன் சுவாசம் பட்ட காற்றால் ஒருநாளி ல்வாடிடும்பூக்கள்கூடபெருமிதம் கொள்கின்றன உன் கூந்தல் சேரும் பாக்கியம் கொண்டு   கணக்கிட்டு பார்த்தேன், உன் மேல் நான் கொண்ட காதல் எவ்வளவென்று எப்படி உன் மேல் இவ்வளவு ஈர்ப்பு வந்ததென்று ….. என் நாட்கள் என்றும் உதிக்கின்றன, நெஞ்சில் உன் புன்னகை மலர்ந்த முகத்தின் நினைவுகளுடன்…   என் தோட்டத்துப் பூக்களெல்லாம் ஏங்கித் தவிக்கின்றன நீ சூடும் மலர் ஆக வேண்டுமென்று என்  வீட்டுப்  பொருட்கள்  எல்லாம்  எதிர்பார்த்துக்கிடக்கின்றன உன் விரல் படும் வரம் கிடைக்குமா என்று என்  வீட்டின் வழியெல்லாம்  மரங்கள்   பூக்கள்  உதிர்த்து  காத்துக்கிடகின்றன உன்  பாதம் பட்டு  வாடும்   மோட்சம்  வேண்டும்  என்று     என்  வீட்டு  இசைப் பொருட்கள் இன்றும் தவம் செய்கின்றன உன் கொலுசுகளின் ஓசையில் தோற்கவேண்டும் என்று பூஜையறை கடவுள் படங்கள் கூட மௌனமாய் யாசிக்கின்றன உன் கைபடும் வரம் வேண்டுமென்று     ஆயினும் முதல் காதல் என்றும் முடிவில்லாத தொடர்கதையாய் உன் நினைவுகளோடு  தினம்  தவிக்கிறேன் உந்தன்  கை  கோர்த்து நடக்கும்  கடைசி வரம்  தருவாயா பெண்ணே இவையெல்லாம் நடக்காது என்று அறிந்திருந்தும் எந்தன்மனது உன்னை நினைக்காமல் இருக்க மறுக்குதடி கை சேராக் காதலாய்….   உன் நினைவுகளுடன் வாடும்….. 4 மௌனமொழி ஏன் தோழி ??? முதல்முறை நீ என்னைப் பார்த்த பொழுது உன் காந்தப் பார்வையில் கந்தலாகிப் போனேனடி என் உயிரின் அணுவில் உன் பெயரை உச்சரிக்க வைத்தாயடி ஒவ்வொரு முறையும் என் இதயத்துடிப்பின் உச்சரிப்பு நீயனாயடி தோழி   காதோரம் உன் கம்மல்கள் என்றும் என் முகம் பார்த்து உனைப்பிடிக்கும் என்று தலையசைத்ததே என் தோழி .. உன் மைபேனா கூட என் பெயரை அதிகமாக கிறுக்கித்திரிந்த  போதுதான் உணர்ந்துகொண்டேன், என் மேல் நீ கொண்ட காதலை உன் மனம் திருடிய கள்வனாய்..   நான் உன்னைக் கடக்கும்போது , உன்னையறியாமல் உன் வளையல்களின் ஓசை என் பெயரை அழைத்து மகிழுதடி, நீ சூடும் மலர் கூட நான் விரும்பும் மல்லிகையாய் என் வீட்டு திசையை நோக்கி மணம்வீசுதடி தோழி   நான் விரும்பும் வண்ணத்தில் உடையணிந்து நீ, நான் போகும் பாதையில் எனைக் காண காத்திருந்தது இன்னும் நினைவில் நிழலாடுதடி, ஒவ்வொரு முறை நீ  விடுமுறைக்குச்  செல்லும்போதும் உன்  நினைவாய்  பொருட்கள்  சிலவற்றை  என்னிடம்  விட்டுச்  சென்றது, நான் வாங்கிய பதக்கங்களாய் ஞாபகமிருக்கின்றது ஆருயிர் தோழி   நீ சோர்ந்து நின்ற பொழுதும், தவறிவிழும் பொழுதும் உன் கைகள் என் தோள்களை மட்டும் தேடிப்பிடிததே தோழி,   உன்னைப் பிடிக்கும் என்று நான் சொன்னதும், இதழோரம்  புன்னகை உதிர்த்துத் திரும்பியதும், காதல் கடிதம் கொடுத்து என் காலங்களை கார்காலமாய் மாற்றியது நீ தோழி யுகங்கள்பலகடப்பினும்நான்உன்நாயகனென்றுஉன்தோழிகளிடம் நீ கூறிய நிஜம் இன்னும் என்னை சிரிக்க வைக்குதடி …..   இத்தனைமுறையும்உனைநினைக்கச்செய்துவிட்டுநான்இன்று கேட்கும்விரும்புகிறாயாஎன்றகேள்விக்குமட்டும் இன்னும் மௌனமொழி ஏன் தோழி?   கல்லூரிமாறினாலும்காலங்கள்கடந்தாலும்நமக்குள்காதல்மாறாது என்று தினம்தினம் நீ சொன்னது பொய்யானது ஏன் தோழி?   உனக்குப்பிடித்தபாடல்சிலஒலிக்கும்போதுகுறுஞ்செய்திஅனுப்பி எனைப்பார்க்கசெய்துஎனக்காகபிறந்தவள்நீ என்று உணரச்செய்தது ஏன் தோழி?   பிரிவுகள்என்றும்காதலைஆழப்படுத்தும்என்றுபாடும் கவிஞனின் கூற்றையும் பொய்க்கவைத்தாயடி  தோழி, கண்ணோரம்காதல்காட்டிஇதழோரம்என்னைப்பிடிக்கவில்லை என்ற புதுமொழி புரியவில்லை தோழி.   எனக்கும்இருக்கும்இத்தனைநண்பர்களுடன்பழகினினும்நீசொல்லும் நட்போடு பழகினேன் என்ற நட்பின் இலக்கணம் விளங்கவில்லை தோழி   இதோநான்உன்னைப்பிரியும்இறுதிநொடிஇதுதான் என்னைப் பிடித்ததென்று காதலித்தாய் என்று சொல்லாமல் கொல்லும் மௌனமொழி இன்னும் ஏன் தோழி?   என்வாழ்க்கைத்தேர்வுத்தாளில்நான்எழுதியவினாக்களுக்கு விடைதெரியாமல்இன்னும்தோல்வியடைகிறேன் உனை எண்ணும் பொழுது மட்டும்….   நீர்கோர்த்துத்திரியும்மேகம்போல்உன்நினைவுகளை என் மனது சுமையாக்கித் திரிகின்றன, மழையாகப் பெய்யத் தெரியாமல்…….   இன்னும் மௌனமொழி ஏன் தோழி? 5 என் கண்ணீர் துளிகள் மதிபிழந்ததே.... உன் நினைவே ஒரு சாபம், உன் பிரிவை என் மனம் ஒரு முறை நினைத்தாலே..     பார்வையில் பட்டவை எல்லாம் நிறமற்று தோன்றுகின்றன  பெண்ணே உன்னைப் பிரிந்து பல நாட்கள் ஆனதால்…     மழைக் காலமும் வெறுக்குதடி என் மனதும் இங்கு தவிக்குதடி உன் மடியில் என்றும் தலை சாய்க்க நேசிக்கும் மனது…     என் கர மெல்லாம் வலுவிழந்தன,  உன் கரம் பற்றிக் கொள்ள என் வாழ்வில் நான் தவறியதால்…     சிட்டுக் குருவியாய் பறந்து திரிந்த என் மனது சிறகொடிந்து கிடக்கிறது, உன் பிரிவே ஒரு துயரமாய்…     எதையும் முழுமையாய் செய்கிறாய் நீ, என்னை நீ வருத்த போதும் , மனம் மயங்கி நேசித்த போதும்..   உன்னை ஒரு நொடி மறக்காது என் மனது…   கனவில் மட்டும் முத்தங்களை தந்துவிட்டு, நிஜத்தில் மட்டும் ஏன் வலியை தருகிறாய் என் தேவதையே..     ஓவியமே உன்னை என் மனதில் இருந்து அழித்தேனடி என் ஆறறிவை உன் காதலில் இழந்தேனடி..   நம் பிரிவின் நிமிடங்கள் பல யுகமாய் கழிகிரதடி…   உன் நினைவுகள் மட்டும் நிரந்தரமாகிறது,   மகிழ்ச்சியின் அலைகளை மறந்துவிட்டு..   என் கண்ணீர் துளிகளும், உன் கல் நெஞ்சத்தில் மதிப்பிழந்து…… 6 என் பயணத்தில் ஒரு நாள்.... நினைவுகள் என்னும் இரவுகள்.. என்னுள் உன்னைப் பற்றி நிஜம் தேடும் கனவுகள்…   இசையில் மயங்கும் ஆண்களை விட உன் விழியின் மொழியில் பதில் பேசத் தெரியா கவிஞ்ர்களைக் கண்டேன் நேற்று…   உன்னால் உறக்கத்தை தொலைத்தேன் எனினும் எனை நீ நினைப்பாய் என்ற கனவுகளை மட்டும்  கண்டேன் இக்கவிதையிலே   இயற்கையை வேண்டினேன் இந்த இரவின் இயல்பை மாற்ற உன்னைப் பார்த்த நொடி நான் இங்கு சரிய   மலைச்சாரல் உன்னை தொட்டு தவழ நான் அதை ரசிக்க…   மனம் மயங்கும் மாயஜாலம் என்னுள் உன் நினைவால் மட்டும்….   காண்பவனின்  இதயம்  திருடும் கள்ளியாய் நீ, உன் விழியின் ஈர்ப்பினையும், அழகின் அதிசயத்தையும் எனையறியாமல் திருடிச் செல்கிறேன் ஒரு  நிழற்படமாய் என் நினைவாலே ஒரு கள்வனாய் நான்….   7 உனக்காக என் காதல் கடிதம்.... உன் சுவாசக் காற்றே, முதல் தென்றலாய் என் காலைப் பொழுதில்…   உன்வளையல்ஓசை என் மனம் விரும்பும் சங்கீதமாய்…   உன் புன்னகை என்றும், என்நாட்களைஅலங்கரிக்கும்வர்ணங்களாய்   உன் விரல் தொட்டு  விளையாடும் தோழனாய்… உன் மடி மீது தவழ்ந்து விளையாடும் குழந்தையாய்.. வாழ்ந்து பார்க்க துடிக்கிறேன்.. சம்மதம் என்ற உன் புன்னகை பூவை உதிர்த்து என் வாழ்வை வளமாக்கு பெண்ணே, பல வர்ணங்களால்…   வார்த்தைகள் தேடி அலைந்து வருத்தமுற்று திரும்புகிறேன் உன்னை பார்த்தும் பேசாத பொழுதுகளில்..   உறக்கத்தை தொலைத்த நாட்களில்.. உனக்காக எழுதும் கவிதை கிறுக்கல்கள்…   இறைவனுக்கு நன்றி சொல்கிறேன்… என் மனம் கவரும் என்னவளை விட யாரையும் எனக்கு அழகில் பண்பில் சிறந்தவளாய் காட்டவில்லை என்பதனால்…   என் இளமை என்னும் வாசலிலே என்றும் உன் நினைவுகளின் பொன் ஊஞ்சல்..   மழைக்கும் ஒரு ஆனந்தம் மழைச் சாரல் உன்மேல் தூறும் போது… மகிழ்ச்சியாய் உன் உடல் சிலிர்த்து மழையில் ஆடும் போது….   உன்னை தொட்டு விளையாடும் தென்றலாய் நான்…. உன் மனதை மயக்கிடும் நிலவென்னும் நினைவாய் நான்… உன்னை தொடர்கிறேன் ஒவ்வொரு நொடியும்…   உன்னை வட்டமிட்டு பறக்கிறேன் வண்ணத்து பூச்சியாய் நான்…   நிழல் மரங்களாய், நீ செல்லும் பாதையில் பூக்கள் உதிர்த்து பரவசப்படுகிறேன் உன்  நினைவை தாங்கி நிற்கிறேன்.. பூக்களை மட்டும் எடுத்துக் கொண்டு பரவசப்படுகின்றாயே காதலி…   என் உயிரற்ற காதல் வார்த்தைகள் சொல்லும் இயற்கையின் மொழி உனக்கு புரியவில்லையா… உறக்கத்தை தொலைத்த நாட்களில்.. உனக்காக நான் எழுதும் கவிதை கிறுக்கல்கள்… 8 மழையில் நனைய பிடிச்சிருக்கு மழையில் நனைய பிடிச்சிருக்கு நீ என்னோட நடக்கும் போது லைப் உம் ரொம்ப இனிச்சிருக்கு உன்னோட நானும் சேரும் போது…..   எத்தனை தரம் பார்த்தாலும் எவ்வளவு நேரம் உன்னோட இருந்தாலும் இன்னொரு தரம் உன்னோட முகம் பாக்கணும் போல இருக்குமே …..   எவ்வளவு தூரம் போனாலும் யாருகூடபேசிசிரிச்சாலும் மனசு கெடந்து தவிக்குது உன்னோட நெனப்பால…   உன்னோட கொலுசு சத்தம் கேக்கவே ஓடி வந்து பார்த்தேனே, என் வீட்டு  முன்னாடி.. மயங்கி சரிஞ்சு விழுந்தேனே.. உன்னோட தாவணி எம்மேல பட்டவுடனே…   உன்னோட உதட்டுச் சாயம் என் கன்னத்துல  பட்டபோது holy ஆ, எனக்கும் மட்டும் holy ஆ, happy ஆ, நானும் ஆடுறானே happy ஆ,   என் தோளுமேல உன் கைய போட்டு, நீகொடுத்தபுதுcoolingglassபோட்டு Jolly ah , ஒரு ரைடு போலாம் ஜாலியா….   உனக்காக லீவும் போட்டு, நீகொடுத்தபுது dress உம்போட்டு park  பக்கம் wait  பண்ணுறேன் busy ஆ, நீ என்ன ரொம்ப busy  ஆ,   சீக்கிரமா வரேன்னு, சாயங்காலம் வந்துபுட்டு சாக்கு போக்கு சொல்லிக்கிட்டு sorry ஆ, இதுக்கு ஒரு sorry ஆ…   நீயும்  நானும்  காதலிச்சி, ரெண்டு பேரும் புரிஞ்சுகிட்டு மனசு ஒன்னா வாழுவோமே… easyah , life உம் ரொம்ப ஈஸி யா….   9 உன்னோடு ஒருநாள்...... என் தேவதை வாழ்கிற இந்த நகரத்தில், ஒரு நாளாவது என்னவளை விட அழகில் சிறந்தவள் நானென்று நிரூபிக்க பௌர்ணமி நாளில் தோன்றியது நிலா இன்று…   உன் முகம் தேடி அலைந்து கொண்டிருக்கின்றது.. நிச்சயம் சொல்வேன் அது உன் முகம் பார்த்து தோற்றுவிடும் என்று…   தயவுசெய்து இன்று  ஒரு நாளாவது இந்த நிலவை ஜெயிக்க வைத்துவிடு என் தேவதையே.. உன் முகம் காட்டாமல்…. உன் பிறப்பு முதல் தோற்று கொண்டிருக்கும் நிலா….   உன்னோடு  விவாதம்  செய்ய வேண்டாமென நிலவுக்காக  நான்  உன்னை கேட்கிறேன்  உன் கண் பார்த்து புன்னகையுடன்……   10 ஒரு யுகம் உன்னோடு வாழப் போதாதடி.... யாரும் இல்லா கடற்கரை நகரம் நீயும் நானும் இருவர் மட்டும் கடல் அலைகள் நம் இருவரின் காலடிச்சுவடுகள் தொட்டு விளையாட   உன் பாதச் சுவடுகள் பட்டு கடல் மகிழ்ச்சி நுரை பொங்க என் தீண்டலில் உன் புன்னகை மலரும் பூத்திருக்க   ஒரு யுகம் உன்னோடு வாழப் போதாதடி….   கடற்கரைத் தீவில் காதலர் நகரத்தில் யாரும் அறியா ஆதாம் ஏவாளாய் நாம் நேரம்  அறியாமல் நாம் இருவரும் கடற்கரை மணலில் சிறுபிள்ளைகளாய்   உன்னில் என்னையும் என்னில் உன்னையும் தொலைத்து விட்டு தேடி தேடி அலைவோமடி தேவதையே   தொலைப்பதில் ஒரு சுகம், தேடலில் ஒரு சுகம் கற்றுத் தந்தாயடி காதலியே…   உன்னைக் காதல் செய்ய ஒரு யுகம் என்றும் போதாதடி பேரழகே….   11 என்னுயிரே நீதானோ நிறைவேறாத கனவுகள் என்றும் என் மனதில் ஆறாத வடுவாய் நீ யாரென்று என்னுள் தேடி அலைகிறேன்…   உறக்கம் வராத நாட்களில் உனக்காக எழுதும் கவிதை கிறுக்கல்கள்…   என்வாழ்வின்வசந்தகால நிகழ்வுகளின்மிகச்சிறந்தவர்ணங்களால் என்வாழ்க்கைதீட்டப்பட காரணமாய் இருந்த உயிரோவியம் நீ…   என்னை  வசீகரிக்கும் வர்ண ஜாலங்கள் உன் விழியில் ….   என் உலகை மறந்தேன் உனக்குள்ளே உன்னோடு வாழ்ந்த நாட்கள் யாவும்..   உன் காலை மலர்ந்ததும், என் ஞாபகங்கள் உன்னை சுற்றி சிறகு விரிந்து பறக்கின்றன உன் நினைவின் நதியில் நித்தம் பயணிக்கிறேன்….     லேசான காற்று அலைகளால் உன் முகம் முத்தமிடும் மழைத் தூறல்களாய், உன்ஸ்பரிசம்சிலிர்க்கச்செய்து கவி பாடிச் செல்லும் தென்றலாய் , பயணித்துக் கொண்டே இருக்கிறேன் நீ யாரென்று என் மனதில் ஆழத்தில்….   காலை பூத்த ரோஜாமலர்கள் உன் கன்னம் தொட்டு நீ சிரிக்கும் போது உணர்ந்து கொள்ளும் உன் உதட்டிதழ்  மென்மையை..   உன் கண்களில் வரும் கண்ணீருக்கு காரணமாய் உன் கைகளால் கொடுக்கும் மரணத்தையே விரும்புகிறது வெங்காயம் கூட உன் வீட்டு சமையல் அறையில்…..   உன் மலர்ப்பாதம் சுமக்க ஒவ்வொரு இரவும் தவம் செய்கின்றன உன் காலணிகள் கூட….   என் அகராதியில் பெண்மையின் பெயர்க்காரணம் நீதானோ என்று கூட சில நேரம் சிந்திக்க வைத்து விட்டாயடி….   உன் உருண்ட விழிகளால் எனைப்பார்த்து என் உறக்கத்தை தொலைத்த தேவதை நீயடி…..   என் நாட்குறிப்பில் கருஇல்லா வெற்றுப்பக்கங்களை உன்னைப் பற்றி மட்டும் எழுதும் கவிதைகள் ஆக்கினாய்… என் கவிதைச் சோலையில் காதல்மலர்களை மட்டும் பூக்கச் செய்தாயடி நீ… ஒவ்வொரு நாளும் பூத்துக்குலுங்கும் மலராய் உன் முகம் உன் மலர்களில் கவிதை தேனெடுக்கும் தேனீக்களாய்  என் மனது….   கானகத்தேதொலைந்திருப்பினும்கவலை கொண்டிருப்பேனோ அறியவில்லை… ஆனால்உனைக்காணாநொடிகளில் கண் இமைக்கவும் மறந்து உன்னைத் தேடுகிறேன்….   கண்களாலே பேசும் மொழிகள், எனை நினைத்து உனை பார்க்க வைக்கும் கலைகள், உன் காலடிச்சுவடுகள் தொட்டு நடக்க விரும்பும் என் கால்கள் , இவையாவும் கற்றுத் தந்தாயடி உன் காதல் மொழியில்..   உன் கை வரைந்த ஓவியங்கள் காலத்தில் அழியாத நினைவுகளாய் என் வீட்டு சுவற்றில் புதுப்பொலிவுடன் பதித்துவிட்டேன், அஜந்தா எல்லோரவாய்… என் காதல் இலக்கியங்களை தினம் பாடட்டும் என்று…   உன்னைப்பற்றி என்னும்போது எல்லாவற்றிலும் முதலாவதாக ஆசைப் படுகிறேன்….   காலங்கள் பல சென்றாலும் காதலுடன் உன் பிறந்தநாளை மறவாது மனம் விரும்பி வாழ்த்து சொல்வதிலும்…   முன்பொழுதே நான் கண்விழித்து நீ தூங்கும் அழகை பார்த்து ரசிப்பதிலும்….   சோம்பல் முகமாய் குறுநகையுடன் உனக்குகாலைவணக்கம்சொல்வதிலும் என்றுமே ஆசைபடுகிறேன் முதலாவதாக…   நீதரும்காலைத்தேநீரை உன் கையில் முத்தமிட்டு வாங்கிப் பருகுவதும்…   சமைக்கத் தெரியவில்லை எனினும், சமயலறையில் உனக்கு உதவிகள் செய்து உன்னைஓரக்கண்ணால்ரசிப்பதே என் காலைப் பொழுதின் காதல் காட்சிகள்….   வாரவிடுமுறையில்மழைவரும்நாளில் நீ நனைந்து விளையாட நீதலைதுவட்டவரும்என்னை மழை முத்துக்களோடு முத்தமிடும் காட்சி கண்ணுக்குள்ளே நிழலாடும்….   சிறு பிள்ளைகளுடன் நீ விளையாடும் போது, குழந்தையாய் மாறத் துடிக்கும் என்ன மனம்…   நிலவொளியில்உன்மடிமீது தலை சாய்த்து கதைகள் பேசிய நேரம் உன் புன்னகை முகத்தை பார்க்க, விண்மீன்கள் ஏங்கி இந்த பூமி நோக்கி சரிய இந்த ஜென்மம் இப்படியே தொடராதா என்ற ஏக்கம் தோன்றிற்று முதன் முதலாய்…   நம்பிவிடாதே உன்னோடு ஒரு ஜென்மம் வாழ்ந்தால் போதும் என்று நான் கூறும் பொய்யையும்… ஒரு ஜென்மனும் உனைப்பிரிய தோன்றாது உன்னோடு ஒரு நாள் நான் வாழ்ந்துவிட்டால்….   விம்மும் போதும் தும்மும் போதும் நீதான் நினைக்கிறாய் என எண்ணும் போது ஆமாம் என்ற சாட்சியாய் மீண்டும் வர மறுக்குதடி என் தேவதைப் பெண்ணே….   கவிதையும் இசையும் சேரும்போது தான் இனிமை இருக்கும் தமிழில்…. என்கவிதைகளின்இசைஎன்றுமே நீயாய் தொடர நாளும் விரும்புதடி என் மனமே…   எனக்கு தமிழ் மொழியின் நேசம் என் பிறப்பால் வந்ததா, அல்லது உன் பிறப்பால் வந்தாதா என இன்னும் நினைத்து சிரித்துக்கொள்கிறேன் உன்னை நினைக்கும் நொடிகளில்…   நாட்கள் நகர்ந்ததும் தெரியவில்லை நாளை என்னும் சொல்லும்  அறியவில்லை, உன் நினைவால் நம் பிரிவையும் ஏற்க முடியவில்லை என்னால்…   உன் பெயரை எங்கு பார்ப்பினும், யார்சொல்லக்  கேட்பினும், ஒரஞ்சென்று  தனியே புன்னகை புரிவதிலும் பைத்தியக்காரனாய் சிரிப்பதிலும் மகிழ்ச்சியடைகிறேன்  மடத்தனமாய்  இருந்தாலும்….   நீ சென்ற திசை  பார்த்து என் மனம் ஏங்குதடி பெண்ணே…. தோற்றத்தால் நீ என்னை விலகிச்சென்ற பாதை வெறுமையைத் தந்தாலும் உன் நினைவுகள் என்றும் இன்பமான வலியினையும், போலியான புன்னகையையும் தருகிறது பெண்ணே, சில கண்ணீர்த்  துளிகளோடு…   உன் காதலன் என்ற கனவுகள் தொலைந்தாலும் நான் உன்மேல் கொண்ட காதல் என்றும் மறைவதில்லை என் நெஞ்சத்தில்..   உன்னோடு வாழ்ந்துவிட இன்னொரு ஜென்மம் நான் ஏன் எங்க வேண்டும்…   உன் மடி தூங்க, முத்த மழை நனைய, உன் தோள் சாய மறு ஜென்மம் வரை உன்னை மறந்திருக்க முடியாதடி காதலியே…   ஜனனித்து விடுகிறேன் உன் முதல் குழந்தையாய் நானே… இது காமம் அல்ல காதலியே உனது அன்பின் பாசத்துக்காக ஏங்கும்மனது…….   என்னுயிரே நீதானோ!…..   12 தெரியாமலே போகட்டும் போ..... உன்னைத் தொட்டு விளையாடும் மழைத் துளிகளும், உன் ஸ்பரிசம் தொட்டுச்  செல்லும் என் மூச்சுக் காற்று கலந்த தென்றலும், என் காதலை உன்னிடம் சொல்ல மறந்தால் என் காதல் உனக்கு தெரியாமலே போகட்டும் போ…..   நீ நனையும் மழை, ரசிக்கும் இயற்கை உணரும் தென்றல், குளிர் பனிக் காற்று உன்னை தொட்டு  மெய்மறக்க செய்யும் போது உன் மனம் என்னை நினைக்கச் செய்திடாவிடில் என்காதல்உனக்கு தெரியாமலே போகட்டும் போ…..   நீண்ட தொடர் வண்டிப் பயணம், நீரில் மிதக்கும் மேகங்கள், நீ காணும் கனவுகள், இவையாவும் உன் நாட்களில் ஒரு முறை கூட என்னை நினைவுபடுத்தவில்லை எனில் என் காதல் உனக்கு தெரியாமலே போகட்டும் போ…..   என்னுள் நீயும் உன்னுள் நானும் நினைவுகளாய் வாழ்ந்த நாட்கள், உனக்காக நான் எழுதிய கவிதைகள், அதை உன் விரல் தொட்டு ரசிக்க வைத்த உன்கண்கள் மறுமுறை நீ புதுகவிதைகள் படிக்கும் போது என்னை உன் மனதில் நிறைக்காவிடில் என் காதல் உனக்கு தெரியாமலே போகட்டும் போ…..   என் காதல் நீயென்று நானும், உன் வாழ்வின் வசந்தம் நானென்று நீயும், கைகோர்த்து நடந்து திரிந்த நம்மனது என் கன்னம் தொட்டு விளையாடிய உன் கைகள், வேறொருவன் உன் கைசேரும் போது உன் மனம் என்னை யோசிக்காமல் இருந்தால், என்காதல்உனக்கு தெரியாமலே போகட்டும் போ…..   என் காதல் சொன்ன நாட்களில் பதில்ஏதும்பேசாமல், வெட்கத்துடன் உன் புன்னகையை மட்டும் பரிசாய்த் தந்ததும், உன் பிறந்தநாளன்று முத்தங்களை மட்டும் பரிசாய்த் தந்து ஏமாற்றியதும், வேறொருவன் உன்னை முத்தமிடும் போது, உன்மேல் நான் கொண்ட காதலை உன்மனம் அறியாவிடில் என்காதல்உனக்கு தெரியாமலே போகட்டும் போ…..   கோவிலுக்கு சென்று நீ கடவுளை வணங்கும் போது, என் கண்களை மூடாமல் உன்னைகண்டு ரசித்ததும், அதை பார்த்து என்னை நீ செல்லமாய் கடிந்ததும், இன்னொருமுறை நீ கோவிலுக்கு செல்லும் போது என்னை நினைக்கவில்லை எனில், என்காதல்உனக்கு தெரியாமலே போகட்டும் போ…..   நாம் முதலாய் சந்தித்த இடங்களும், உனக்காக காத்திருந்த மலர் சோலைகளும், உனக்காகவே வாழ்ந்த நாட்களையும், நீ தனிமையில் இருக்கும்போது உன்மனம் என்னை நினைக்கமறந்தால் என் காதல் உனக்கு தெரியாமலே போகட்டும் போ…..   13 காதலை காகிதங்களாய் கசக்கி எறிந்ததேனோ நிலவை கூட விண்ணில் வைக்காமல் வாரிக்கொண்டு வெற்று வானமாய் விட்டுச்  சென்றதேனோ?   நிலவைப்பார்த்துஉன்நினைவால் சிக்கித் தவிப்பேன் என்று கொண்டு சென்றாயோடி?   இன்று முதல்முறை நானும் வானும் சேர்ந்தே அழுகிறோமடி.. நாளைகூட வெண்ணிலவும் வானைப் பார்த்து திரும்பி விடக் கூடும்… நம் காதல் மறவாமல் நீயும் திரும்பி வருவாயோ அன்பே!!   நான் உன்னுடன் சென்ற பயணங்கள் யாவும் பாதைகள் அற்று போனதோ அன்பே! உன்னில் என்னைக் கொடுத்திருந்தேன் என்னை எங்கோ தொலைதுவிட்டாயடி……   என் கவிதைகளை மட்டும் ஏற்றுக்கொண்டு நம் காதலை மட்டும் வெறும் காகிதங்களாய் கசக்கி எறிந்ததேனோ….   உனக்காய் காத்திருந்”தேன்” உன் நின்வால் மகிழ்ந்”தேன்” என்னும் தமிழ்த்”தேன்”களை மட்டும் தந்து விட்டு தமிழைஉயிரற்றவெறும்வார்த்தையாக என் வாழ்வில் விட்டுச் சென்றயோடி? 14 எல்லாமே மாறிக்கொண்டிருக்கின்றன.... ஒரு நாள் காலைப் பொழுது உன் நினைவின் சாயல் துளியும் இல்லாமல் என் காலை விடிகிறது…   என் வீட்டு சாளரங்கள் உன் மூச்சுக்காற்று கலந்த தென்றலை என் முகத்தில் தெளிக்க மறந்து விடுகிறது…   பூக்கள் உதிர்க்கும் மரத்தின் அடியில் உன் புன்னகையை உதிர்த்து மகிழ்ந்திருப்பாய் அந்த முகம் என் ஞாபகத்தில் மறைந்தே விடுகிறது….   அடைமழை பெய்த அடுத்தநாளில் மரங்கள் உன்மேல் தெளித்த மழைநீர் சாரலில் நீ உடல் சிலிர்த்து குதிக்கும் குழந்தையாய் உன்முகம் என் மனதில் தோன்றாமலே போகிறது……   மழைத் தூரலில் நாம் நடந்து சென்ற பூஞ்சோலை, உன் பாதம் பட்ட மலர்ச்சருகுகள் நான் தனிமையில் செல்லும் போது உன்னைப் பற்றி விசாரிப்பதே இல்லை…   மேகங்களாவது உன்னை நினைக்க வைக்கும் என்றிருந்தேன்… ஆனால் மேகங்களும் காற்றிலே கரைந்து கொண்டே இருக்கின்றன…   பிரிவின் வலிகள் மிகச்சாதரணமாய் உள்ளன, நீ தந்த அந்த பிரிவெனும் பரிசுகள் அதை ஏற்றுக்கொள்ள பழக்கிவிட்டிருந்தது..   வேறந்த விபரீதமும் நிகழ்ந்துவிடவில்லை….   தனிமையில் வாட நினைக்கிறேன் உன் பிரிவை எண்ணி… தயவுசெய்து உன் ஞாபகங்களை என்னுள் திணித்து, என்னை உன்னோடு வாழ வைக்காதே இனி ஒரு முறை…… 15 ஞாபகங்களின் சாரலில் உன் காதல் அழைப்பின் இசையில் என் கவிதைகளை உன் பாதையில் பயணிக்க வைத்தேனடி.. பாதி தூரம் சென்றதும் உன் கால் தடம் கூட மண்ணில் பதிக்காமல் காணாமல் போனாயோடி ?   உன்னைத் தொடரவும் முடியாமல் விலகவும் தோன்றாமல் என் கவிதைகளின் தேடல் என்றும் நீயாகவே இருக்கிறாய்..   நீ எனக்காய்த் தந்த சிறந்த பரிசுகள் உன் ஞாபகங்கள் மட்டுமே….   ஞாபகங்களின் சாரலில்…… 16 காதல் பிரியங்கள் உன்னுடனான என் நாட்களை என் மகிழ்ச்சியை மட்டும் பிரதிபலிக்கும் என் ஞாபகப் புத்தகங்களில் பதித்து வைத்துக் கொள்கிறேன்…   உன்னோடு இருந்த நாட்களில் உன்னைப் பிடித்திருக்கிறது என்பதை சொல்வதா வேண்டாமா என்ற குழப்பங்களை உருவாக்கியே என் பொழுதுகளைக் களவாடிக் கொண்டிருக்கிறாய் நீ..   உன் முகம் பார்த்து, கண் நோக்கி என்பிரியங்களை பகிர நினைக்கும் தருணங்களில் ஆண்மைக்கும் நாணமுண்டு என்பதை அறிய வைக்கிறாயடி நீ..   என் வாழ்வின் நினைவூஞ்சளில்  நீ ஆடும் போது, என் ஞாபகப் புத்தகங்களின் பக்கங்களில் உள்ள காய்ந்த ரோஜா மலர்களின் இதழ்கள் மனம் வீசுவதைப் போல் உன் நினைவுப் பிரியங்கள் மனம் வீச நான் மகிழ்ந்திருப்பேன்….   17 மண் வாசம் சேற்றில்  விளையாடும் நெற்பயிர்களின் வாசம் நெல்மணி தாங்கிய நெற்பயிர்களின் தலை நோகாமல் இருக்க, சாமரம் வீசும் தென்னை மர கீற்றுக்கள்… பூவரசு  மரங்களின் ஒளிந்து விளையாடும் பறவைகள், எந்தப்  பூக்களில் தேனெடுப்பது என்று குழம்பித் திரியும் தேனீக்கள்… பல வண்ண மலர்களில் எந்த வண்ணம் தன்னுடல்  சேருமோ என்று மகிழ்ச்சியாய் பறந்து  திரியும் வண்ணத்துப் பட்டாம் பூச்சிகள்…. மூங்கில் கற்றைகளுக்கிடையில் பாடித் திரியும் பாடகன்/பாடகி பறவைகளுக்காக மெட்டுக்கள் சேர்க்கும் நீரோடைகளும் அருவிகளும் பௌர்ணமி நிலா வீதி உலா வர இரவுகளின் மௌனத்தில் தவம் செய்யும் ரீங்காரப் பூச்சிகள்…. மரங்களும் தங்களுக்குள் போட்டியிட்டுக்கொள்ளும் பூக்களைத் தலையில் சூடிக்கொண்டு யாவருக்கழகு அதிகமென்று.. எங்கள் நிலமகள், வான்மகள் வாரி இரைத்த நீரில் விளையாடிய நாட்களில் பார்க்கும் இடங்களில் எல்லாம் பச்சைக் கம்பளியைப் பரவிடச் செய்வாள், பூக்களும் பூத்து…. வயல்களுக்குள் நட்ட பயிர்களெல்லாம் பூப்படைந்து களிப்புறும் முள்வேளிகளின் பாதுகாப்பினால்..நிலமகள் வீட்டு வயல்வெளிகளில் எங்கள் காளைகள் களிப்புடன் ஏர் பூட்டிக் கோலமிடும்… மார்கழி மாத வெண்ணிலவு, பனிப் போர்வை போர்த்தி எங்களை உறங்கவைக்க, போர்வையை விலக்கிக்கொண்டு குளத்து நீரில் தன் முகம் பார்த்துக் கொண்டு கதிரவன் எழுவான் மிகவும் கதகதப்பாய்… கோவில் மாடங்களில் உள்ள அகல்விளக்குகள் காற்றோடு விளையாடிக் கொண்டிருக்கும் யார் ஜெயிப்பதென்று.. இது என்ன அற்புத மலரோவென்று செந்நிற வெண்ணிற தாமரைகளைச் சுற்றி வரும் வாத்துகள்… பொன்னிற மாலை கதிரவனை கண்டு அதன் காதில் தன் காதலை சொல்ல பறந்து செல்லும் வெண்ணிற கொக்குகள்… கடும் உழைப்பினால் களைப்புற்று வரும் காளையர்களை, கதைகள் பேசி , நிழலில் இளைப்பார வைக்கும் ஆலமரக் கிளிகள்… இவையென்றும் என் மனதில் மாறாத எங்கள் கிராமத்தின் மண் வாசம்…   18 திராவிட தமிழா, விழித்தெழு உருண்டோடும் உலகம், உணர்சிகளற்ற வாழ்க்கை மனிதம் இல்லாமனது, இவற்றின் மத்தியில் திராவிட லட்சியம் பரப்ப எண்ணி வழிதேடும் வழிப் போக்கனாய் நான்!   தவிப்புகளோடு தனியே வாழும், சாதிகள் இல்லையென்று உள்ளம் துடிக்கும் வர்ணம் தீட்டாத நிழற்சித்திரமாய் திராவிட வாழ்கையின் தொடக்கம் இது…   எத்திசை செல்ல, எவ்வழி நோக்க, பாதைகளின்றி பரிதவிக்கிறேன் இரவென்னும் சாதியை விழுங்கிய காடுகளாய் இந்த சமூகம்….   மனிதம் மறத்தல், லட்சியம் தொலைத்தல் மனித பாகுபாடு அறிதல், தீண்டாமை தொடர்தல் இம்மானுட வாழ்வில் வாழ அங்கீகார காரணிகள் அதோ அந்த சாதி எனும் பூதம் மனிதர்களை மதியிழக்கச் செய்துவிட்டது…   ஆ, என்ன இது!… சமுத்திரமாயினும் நீந்தி கரை கண்டிருப்பேன் சாதி எனும் ஆகாயத் தாமரை மூடிய சமுத்திரமானதே…. கரை தெரிந்தும் கால் நகர்த்த முடியவில்லையே…   தவறென்று அறிந்தும் சாதி என்ற கட்டமைப்பில் இருந்து மனிதர்கள் வெளிவர மறுப்பதேனோ….. மானிடம் தொலைத்த தமிழ் மறவர் கூட்டம்!   சாதியை காரணம் கொண்டு உலகக்கடலை கலங்கச் செய்தவர் பல பேர்… சாதிக்கடல் நீர்தெளியும் முன், கலங்கள் கழிகள் விட்டு மேலும் கலங்கச் செய்யும் சில பேர்…   சாதியும் பெயரால் வேறுபட்டுக்  கிடக்கும் தமிழா, உண்ணும்உணவும், உடுக்கும்உடையும் பல சாதிகளை கடந்து வந்துவிட்டன….   சாதியின் பெயரால் காதலை இழந்தாய், சாதியின் ஆதீக்கத்தால் வேலை இழந்தாய், கடவுளை நம்பி நிம்மதி இழக்கிறாய், உன் கையாளாகத்தனத்தை ஏன் கடவுளிடம் சேர்க்கிறாய்…   என்ன கற்றுத் தந்துவிட்டது உன் சாதியும் கடவுளும் உன் வியர்வை மட்டுமே வாழ்வில் என்றும் பன்னிர் துளிதெளிக்கும் இதில் உன்சாதியின் பங்கும், கடவுளின் பங்கும் கால்துளி அளவும் இல்லை… சமத்துவம் கொள்ள, திராவிடம் பயில, விழித்தெழு தமிழா…   தமிழன் என்ற அடையாளமே, உன் தேசத்தில் மிகுந்த பெருமை. அதை உடைத்து விடாதே ஒருநாளும், உன் வழிவந்த சாதியினால் விழித்தெழு தமிழா, வீறுகொண்டு ஓடிவா…   வாழ்ந்து விட்டோம் பலவருடங்களாய் சாதியின் பெயரால்.. இதுவே போதும், இனி இவையனைத்தும் விட்டொழி…. சரித்திரம் படைத்திடு தமிழனாய்… தோள்தட்டி எழுந்து நடந்திடு திராவிடனாய்……..   19 விழித்தெழு நண்பா... என்றும் உதிக்கும் சூரியன் உன் வாழ்வில் நிச்சயம் உதிக்கும் நட்சதிரப்ப் பூக்களைக் கொண்டு அலங்கரிக்கும்.. உன்முயற்சியைமட்டும்கூலியாய்கேட்கும் விழித் தெழு நண்பா…   பட்டு போன மரம் கூட நம்பிக்கையோடு காத்திக்ருக்கும் வான் மழைக்காக.. உன்தோல்விகளும்தொல்லைகளும்ஓடிப்போகதுடித்திடும் உன் முயற்சிக்காக மட்டும் ஏங்கும் விழித் தெழு நண்பா…   ஒழிகுறையும்தீபமும்கூடசுடர்விட்டு ஒளிரும்தூண்டலினால் உன்தோல்விகளும்வெற்றிமாலைகளும் முயற்சி என்னும் தூண்டுதலினால்.. விழித் தெழு நண்பா…   பற்றிஎரியும்காட்டுத்தீகூடசிறு ஜுவாலையாகத்தான்  பிறக்கின்றன… உன்சிறுமுயற்சிகூடசிறுமுன்னேற்றம்தரும் முயன்றுவென்றிடலாம் விழித் தெழு நண்பா…   கடலில் தத்தளிக்கும் கப்பலுக்கும் கலங்கரை விளக்கமுண்டு… உன் வாழ்வில் நிச்சயம் கலங்கரை ஒளியுண்டு.. பயணித்து பார் சிறுது தூரம் நம்பிக்கையுடன்… விழித் தெழு நண்பா…   முன்னேற்றம் என்பது சாதனை அல்ல… இன்று தொடங்கிடும்  சிறு முயற்சிதான்… முன்னேற்றம் வாழ்வில் பெற்றிட.. முழு மூச்சாய் எழுந்திடு நண்பா..         20 கடவுள் இருந்திருந்தால்... கோவில் தெருவில் பிச்சைஎடுக்கும் மனிதர்களின் வறுமையும் , இறைவனை தினம்வேண்டி கொட்டிதீர்க்கும் மனிதனின் கவலைகளும் , மனிதனை கடவுள் பெயரால் மயங்கச்செய்து அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களின் கடன் சுமைகளும் , என்றோ மறைந்திருக்கும் கடவுள் இருந்திருந்தால்..   கோவிலின் வாயிலில் காலணியைத்  தொலைத்துவிட்டு எடுத்தவனை சபிக்கும் இகழ்ச்சிப் பேயும், ஒரு பருக்கைச் சோற்றுக்காக கோவிலைச் சுற்றிவரும் கால்நடை, பறவைகளின் பசிக் கொடுமையும், பலவகைப்பொருட்கள்கிடைக்கவில்லைகடைத்தெருவில் என்ற குழந்தையின் ஏக்கமும், என்றோ மறைந்திருக்கும் கடவுள் இருந்திருந்தால்..   கடவுளை நம்பி செயலில்லாமல் சாதிக்கதுடிக்கும் இளைஞனின் தோல்வியும், இறைவனை காணவரும் செல்வந்தனின் பணம் சேர்க்க வேண்டும் என்ற பேராசைகளும், நோய் தீர்க்கவைத்தியம் பாராமல் கடவுளிடம் குறை சொல்லும் நோயாளியின் பிணியும், கோவில்தெருவில் அன்றாடப்பிழைப்புக்கும் அடுத்தவேளை சோற்றுக்கும் நடத்தும் வியாபாரியின் கவலைகளும், என்றோ மறைந்திருக்கும் கடவுள் இருந்திருந்தால்..   இறைவனை பூஜித்து பூக்கள் விற்கும் பூக்காரியின் வரதட்சணை கொடுமையும், ஜாதகம் பொருத்தம் பரிகாரணங்களால்  கல்யாணம்   தடைபட்டு போகும் முதிர்கன்னியின் சோகமும், முயற்சிசெய்யாமல்கடவுளைநம்பிகாத்திருக்கும் கலைஞர்களின் கலக்கங்களும், சாதி மதம் பெயரால் கடவுளை கூறுபோட்டுகொண்டு சண்டையிட்டுக்கொள்ளும் மனிதர்களின் கலகங்களும்,   என்றோமறைந்திருக்கும் கடவுள் இருந்திருந்தால்………………………   21 இறைவா, நாங்கள் வேண்டுவது உன் சமாதனம் அல்ல இல்லாத கடவுளே , இருத்தும் பயன் தரா இயற்கை அன்னையே… உன் விளையாட்டில் இதுவும் ஒன்று என்று கூறினால், உங்களை இப்போதே நிராகரிக்க / எரிக்க தயார் நாங்கள்… என் மலர்க் குழந்தைகளின் மொட்டுக்களை மலர விரியும்போது தீயிட்டு கருக்கியது ஏனோ? இறக்கைகளை பயிற்று பறக்க நினைக்கும் போது, சிறகுகளைப் பொசுக்கியது ஏனோ? அப்பிஞ்சுகளின் பூஞ்சிரிப்பை ஒருமுறை கூட நீ பார்த்ததில்லையோ…. அக்குழந்தைகள் மலர்ப்பாதம் தரைமேல் நடவும் போது உன் கன்னத்தின் முத்தமென உன் கன்னத்தில் குழி வில சிரித்து மகிழ்ந்தது ஏனோ பூமித்தாயே?…… மலர்களைக் கருக்கும் நெருப்புக் கங்குகளை மனிதனைப் படைப்பதேனோ சொல்லிவிடு?….. நாங்கள் வேண்டுவது உன் சமாதனம் அல்ல… தீயிட்டு கொளுத்திய பிள்ளைகளுக்கான பிரார்த்தனை அல்ல தீவிரவாதம் கொல்லப் போராடும் போர்க்குணம் அல்ல மானுடர்களைப் படைக்கும் நீ, மனிதத்தை கொடுக்க மறப்பதேனோ??? மனிதம் இல்லாத மலட்டு மண்டைகளைப் படைப்பதேனோ? (Peshwar school attack by terrorists) 22 யாரும் அறியப் போவதில்லை.... நீச்சல் குளத்தில் பன்னீர் நிரப்பி நீந்தி மகிழும் மனிதர்கள் எம் மக்களின் தண்ணீர் தாகத்தைப் பற்றி என்றும் அறியப் போவதில்லை…   மகிழ்வுந்துகளில் சாலைகளில் பறந்து செல்லும் செல்வந்தர்கள்  எம்மக்கள் கழனியிலும் கடும் கோடையிலும்  வாடும் வருத்தத்தை என்றும் அறியப் போவதில்லை…. ஆண்டுக்கொருமுறை சமுதாயப் பனி என்று வரும் சமூகப் போராளிகள் சிலர், பல ஆண்டுகளாய் எம்மக்கள் பஞ்சத்தில் மாண்டதையும் பகல் கனவுகளாய் உணவுகள் உண்டதையும் யாரும் அறியப் போவதில்லை…..   கேளிக்கை விருந்துகளில் பல ஆயிரங்களைக் கரைத்து, விருந்துகள் சமைத்து வீண் செய்யும்போது அதை உருக்கொணர பாடுபட்ட எம்மக்களின் உழைப்பை யாரும் அறியப் போவதில்லை…   சாலைகள் மட்டும் சீராய்அமைத்து செப்பணிடும் அரசியல் புள்ளிகள், காலணி இல்லாமல் களத்து மேடுகளில் முட்கள் தைத்திடும் மனவேதனைகளை என்றும் அறியப் போவதில்லை…..   செயற்கை நீரூற்றுகளிலும். செயற்கை மழைகளிலும் விளையாடித் திரியும் வாலிப வீணர்கள், கடும் மலையிலும், வாடைக் காற்றிலும் வாடி வதங்கும் எம்மக்களின் வருத்தங்களை என்றும் அறியப் போவதில்லை…….   எம்மக்களின் துயரங்கள் எல்லைக்கு உட்பட்டதல்ல… மாண்டாலும் மனத்தைக் கீறிப் பாருங்கள்… துயரங்களின் தடயங்கள் வலுவாகப் பதிந்திருக்கும் எஞ்சிய மக்களின் மனச் சிதைவுகளை யாரும் அறியப் போவதில்லை…..         23 இயற்கையின் திருமண வாழ்த்து.... வான்எங்கும்  இடிமுழக்கங்களாய் மங்கள முரசு கொட்ட இன்னிசை குயில்களும், பறவைகளும் வாழ்த்து கானங்கள் பாட   சாலை ஒர மரங்கள் யாவும் வழியெங்கும் பூக்கள் உதிர்த்து பரவசமூட்ட…   இதோ இந்த திருமண நாளில் இயற்கையின் வாழ்த்துக்களாய் மேகப் பூக்களின் இந்த வான் மழைத் தூறல்…     24 அதைத்தான் நீயும் விரும்புகிறாயா? என்னால் உனக்காக, நமக்காய்ப் பிறந்த கவிதைக் குழந்தைகள் அனாதையாகபட்டுவிடும் நம் காதலின் பிரிவினால்… அதைத் தான் நீயும் விரும்புகிறாயா?   நீ என்னை விலகிச் சென்ற நாட்களில் நீயும் உன் நினைவுகள் மட்டும் சூழ்ந்த உலகத்தில் கவிதைக் கிறுக்கனாகிறேன்… அதைத் தான் நீயும் விரும்புகிறாயா?   தூரிகையால் வண்ணங்கள் பல குழைத்து உன்னை வரைய நினைக்கும் ரவிவர்மன் கூட தோற்று போவானடி, உன் பேரழகை வரைய முடியாமல், அதைதான் நீயும் விரும்புகிறாயா?   என் வீட்டுச் சுவற்றில் பல்லி சொல்லும் சகுனம் கூட நீ தரும் முத்தத்தின் சப்தங்களாய் என்னை தூக்கத்திலும் இன்பமடைய வைத்து இம்சிக்குதடி… அதைதான் நீயும் விரும்பிகிறாயா?   உன் ஒரு நிமிட அணைப்பு வேண்டும் என்பதற்காகவே எனக்கு குளிர்சுரம் அடிக்கடி வர அடம்புடிக்குதடி… அதைதான் நீயும் விரும்பிகிறாயா? 25 என் வானத்தின் இயற்கையை உன்னைப்போல் மாற்ற வேண்டும்.. நீ வந்த என் வாழ்வின் வானத்தில் விண்மீன் பூக்களுக்கு திரும்ப உன் போல் மிளிர கற்றுக்கொடுக்க வேண்டும்..   நிலவுக்கு உன்முகம் போல் என்றும் பிரகாசமாய் ஒளிர கற்றுக்கொடுக்க வேண்டும் தேய்பிறை இல்லாமல்….   உன்போல் வெட்கத்தில் நாணுவதை தென்றலில் ஆடும் மலர்ச் செடிகளுக்கு தோகையை விரித்து ஆடும் மயில்களுக்கு பயிற்றுவிக்க வேண்டும்…   உன் மேனி சிலிர்க்க, கூந்தல் முடி அலைபாய, பனிக்காலங்களில் வீசும் மெல்லிய தென்றலைப் பழக்க வேண்டும், குளிரினால் என்னை அணைத்துக் கொள்ள…   உன்னால் என் வாழ்வின் இயற்கையை திரும்பவும் மாற்ற வைக்கிறாய்…   பகல் இரவுகளில் பூக்கும் மலர்களுக்கு என்றும் வாடா வண்ணங்களாய் உன் புன்னகைப் பூ பூக்கும் விதைகளைக் கற்றுத் தர வேண்டும்…   உன் கண்களின் கருவிழியில் விநாடிக் கொரு முறை மிளிரும் காந்த ஒளியைப் போல் மின்மினிப் பூச்சிகளுக்கு மின்ன கற்றுக் கொடுக்க வேண்டும்…   பூக்களின் நிறங்களாய், வானவில் வண்ணங்களாய் வழக்கமாய் நீ உடையணியும் கலைகளை வண்ணத்துப் பூசிகளுக்கு கற்றுத் தர வேண்டும்…   உன்னோடு உலவிக் கொண்டிருக்கும் நாட்களை மகிழ்ச்சியை தாங்கி நிற்கும் வசந்த காலமாகவும்   என்னை தோள் சாய்ந்து உன் நாணத்தை வெளிப்படுத்தும் காலங்களை கார் காலமாகவும்   என்னை நீ செல்லமாய் கடிந்து கொண்ட பொழுதுகளை இளவேனிற் காலமாகவும் மாற்ற வேண்டும்…   என்னை மகிழ்ச்சியின் சிலிர்ப்புகளால் பொதித்து வைத்துக் கொள்ளும் உன் தேகத்தின் மாய வித்தைகளை, வெண் மேகங்களுக்கு விளக்க வேண்டும்….   என்னை நீ நினைத்துக் கொண்டிருக்கும் நொடிகளில், என் முத்தங்களை மழைத்துளிகளாய் அனுப்பி உன் முகத்தினில் மழைத் துளியை முத்தமிட பழக்க வேண்டும்… 1 ஆசிரியர்  குறிப்பு :   பெயர்: க. பூபதிராஜ் தந்தை-தாய்: திரு கருணையப்பன்-ராதாமணி ஊர்: ஈரோடு மாவட்டம், சானார்பதி கிராமம். கல்வி: தகவல் தொழிற் நுட்ப பொறியாளர், 2011, பண்ணாரி அம்மன் தொழிற் நுட்ப கல்லூரி. தற்போது: HCL மென்பொருள் நிறுவனம், மென்பொருள் பொறியாளர் மின்னஞ்சல்: boopathybitit@gmail.com அலைபேசி: +91 9751515625 2 Free Tamil Ebooks – எங்களைப் பற்றி மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. எனவே ஒரு தமிழ் வாசகர் மேற்கூறிய “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகளை” வாங்கும்போது, அவரால் எந்த ஒரு தமிழ் புத்தகத்தையும் இலவசமாகப் பெற முடியாது. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FreeTamilEbooks.com இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1.ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2.தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3.சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. www.vinavu.com 2. www.badriseshadri.in 3. http://maattru.com 4. kaniyam.com 5. blog.ravidreams.net எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். <துவக்கம்> உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்]. தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/ நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : freetamilebooksteam@gmail.com FB : https://www.facebook.com/FreeTamilEbooks G +: https://plus.google.com/communities/108817760492177970948   நன்றி. 3 உங்கள் படைப்புகளை வெளியிடலாமே உங்கள் படைப்புகளை வெளியிடலாமே   உங்கள் படைப்புகளை மின்னூலாக வெளியிடலாம். 1. எங்கள் திட்டம் பற்றி – http://freetamilebooks.com/about-the-project/ தமிழில் காணொளி  – http://www.youtube.com/watch?v=Mu_OVA4qY8I 2.  படைப்புகளை யாவரும் பகிரும் உரிமை தரும் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் பற்றி – http://www.wired.co.uk/news/archive/2011-12/13/creative-commons-101 https://learn.canvas.net/courses/4/wiki/creative-commons-licenses உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தை இங்கே தேர்ந்தெடுக்கலாம். http://creativecommons.org/choose/ 3. மேற்கண்டவற்றை பார்த்த / படித்த பின், உங்கள் படைப்புகளை மின்னூலாக மாற்ற பின்வரும் தகவல்களை எங்களுக்கு அனுப்பவும். 1. நூலின் பெயர் 2. நூல் அறிமுக உரை 3. நூல் ஆசிரியர் அறிமுக உரை 4. உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் 5. நூல் – text / html / LibreOffice odt/ MS office doc வடிவங்களில்.  அல்லது வலைப்பதிவு / இணைய தளங்களில் உள்ள கட்டுரைகளில் தொடுப்புகள் (url) இவற்றை freetamilebooksteam@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்பவும். விரைவில் மின்னூல் உருவாக்கி வெளியிடுவோம். ——————————————————————————————————– நீங்களும் மின்னூல் உருவாக்கிட உதவலாம். மின்னூல் எப்படி உருவாக்குகிறோம்?  – தமிழில் காணொளி – https://www.youtube.com/watch?v=bXNBwGUDhRs இதன் உரை வடிவம் ஆங்கிலத்தில் – http://bit.ly/create-ebook எங்கள் மின்னஞ்சல் குழுவில் இணைந்து உதவலாம். https://groups.google.com/forum/#!forum/freetamilebooks நன்றி !