[] நூல் பெயர்: கனவுப்பறவை (குறுங்கவிதைகள்) ஆசிரியர்: ப.மதியழகன் மின்னஞ்சல்: mathi2134@gmail.com கைபேசி: 9597332952, 9095584535 வாட்ஸ்அப்: 9384251845 பதிப்பு: பிப்ரவரி 2018 வெளியீடு: freetamilebooks.com மின்னூலாக்கம்: ப.மதியழகன் அட்டைப்படம்: ப.மதியழகன் Creative Commons Attribution-ShareAlike 4.0 International License You are free: to Share — to copy, distribute and transmit the work; to make commercial use of the work     என்னுரை புழுதி எழும்பும் வீதி மணல்களில் அவள் காலடியைத் தேடுகிறேன். வானவீதியில் மேக ரதங்களில் நாம் ஊர்வலம் போவோம் வா. அந்தி சூரியன் போல் பிரகாசிக்கிறது உன் சிவப்புக்கல் மூக்குத்தி. என் உள்ளக்கடலில் உன்னைப் பற்றிய எண்ணங்கள் அலையலையாய் எழும்புகிறது. பரிசுத்தமானதெதுவும் இந்தப் பூமிக்கு அப்பாற்பட்டது என உன்னைப் பார்த்ததும் புரிந்து கொண்டேன். உனது பார்வையால் எனது பாவங்கள் கழுவப்படுகின்றன. வானமெங்கும் உன் பிம்பத்தைத் தான் பார்க்கிறேன். கனவுச்சிறையிலிருந்து விடுதலையளிக்க நீ வருவாயா? உன் நினைவு சிலுவையென கனக்கிறது. சிலைகளை உயிர்ப்பிக்கும் உனதழகு என்னைத் தூங்கவிடாமல் செய்கிறது. துயரம் நிறைந்த இந்தப்பூமிப் பந்தைவிட்டு நாம் வானமண்டலத்தில் பறந்துவிடுவோம் கனவுப்பறவையாக… ப்ரியமுடன்                                                தேதி:      02.02.2018 ப.மதியழகன் 115,வள்ளலார் சாலை, ஆர்.பி.சிவம் நகர், மன்னார்குடி – 614001. திருவாரூர் மாவட்டம் தமிழ்நாடு கைபேசி:9597332952, 9095584535 Whatsapp:9384251845 மின்னஞ்சல்: mathi2134@gmail.com     ஆயுள் முழுவதும் தோண்டினேன் புதையலைக் கண்டெடுத்த பின்பு வந்து கூடினார்கள் தங்களுக்கும் பங்கு வேண்டுமென்று.       மாலைக் கதிரவனின் தங்கக் கிரணங்களை அள்ளிப் பருகியபடியே வானத்தை அளக்கிறது பறவைகள்.       காதல் அகராதியில் அவள் பார்வைக்கு பொருள் தேடினேன்.         ஊர்கூடி தேர் இழுக்கும் நிலைக்கு வந்தவுடன் கூட்டம் ஆர்ப்பரிக்கும்.       சமுத்திரம் வாவென்றழைக்கும் அலைகள் பாதங்களில் குழிபறிக்கும்.       பசியோடு படுத்தால் கனவில் சோற்றுப் பருக்கைகள் தான் தோன்றும்.                     விலை கொடுத்து எதை வேண்டுமானாலும் வாங்கிவிடலாம் என்பதால் தான் வாழ்க்கை பொருளற்று போய்க் கொண்டிருக்கிறது.         பத்தினிமார்களின் கண்ணீரில் குளிக்கக் கூடாது சாபம் பெற்ற அகலிகை ராமன் பாதம் பட்டவுடன் உயிர்த்தெழுந்தது வேறு கதை.         ஓடிக்கொண்டிருக்கிறது நதி கொட்டிக் கொண்டிருக்கிறது அருவி உள்ளே உறங்கிக் கொண்டிருக்கிறது மிருகம்.         தென்றல் இதமளிக்கிறது புயல் பயமளிக்கிறது நான்கு திசைகளும் காற்றுக்கு அபயமளிக்கிறது.         குழந்தைகள் பொம்மைக்காக பெரியவர்கள் பணத்துக்காக கவிஞன் வார்த்தைகளுக்காக முத்துக் குளிப்பது போல் தான் கவிதைகள் படைப்பது.         படிப்பு என்ற போர்வையில் பிள்ளைகளிடம் குழந்தைமையை கொன்று விடுகிறோம்.       தேவிகுமரி கண்ணைச் சுற்றி கருவட்டம் விழக் காத்திருக்கிறாள் சிவன் எந்தச் சுயம்வரத்திலும் தலை காட்டுவதில்லை.         எல்லோரும் முகம் சுளிக்கிறார்கள் மழையைப் பார்த்து வானம் பொய்த்தால் சோறு கிடைக்காது.       சூல் கொண்ட மேகம் பாரத்தை இறக்கி வைக்க வழி தேடும்.         கொட்டிக் கிடக்கும் சில்லறையாய் நட்சத்திரங்கள் எண்ணி முடிக்க ஆயுள் போராது.         அலைகள் வந்து வந்து விசாரித்துப் போகிறது கரையின் நலத்தை.         மார்கழி கடந்துவிட்டது வண்ணக் கோலமிடுவதற்கு அவள் வாசலில் காட்சி தர இன்னும் ஒரு வருடம் காத்திருக்க வேண்டும். வயிற்றை ஊமையாக படைத்திருந்தால் ஏழைகள் கேவலத்தை தேர்ந்தெடுத்திருக்க மாட்டார்கள்.         கல்கண்டாய் இனிக்கும் நதி நீர் சென்று சேர்வதென்னவோ உப்புக் கடலில்.         தொழிற்சாலைகள் உற்பத்தியை பெருக்குகின்றன பாடசாலைகள் கல்வியை அளிக்கின்றன அடுக்களையில் சோறு பொங்குகிறது இவன் கவிதை எழுதிக் கொண்டிருக்கிறான்.         வட்ட எல்லைக்குள் கட்டப்பட்ட விலங்குகள் பசியக் காட்டில் மேய்ந்து திரிந்ததெல்லாம் கனவாக.         உடலை வருத்தி வேலை செய்பவர்களின் கூலியின் பாதியை டாஸ்மாக் பறித்துக்கொள்ளும்.     வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகிறது குருவிக் கூடு எந்தப் பறவை வந்து ஏமாந்து போகுமோ. கூண்டுச் சிங்கம் கர்ஜிக்கலாம் கோபத்தில் கம்பியை அறையலாம் சாப்பிட அடம்செய்யக்கூட அனுமதியுண்டு ஆனால் வேட்டையாட மட்டும் கூடாது.         கூண்டுப் புழுவின் கனவெல்லாம் பறப்பதாக வண்ணத்துப்பூச்சியாக இது போதும்.         தனிமையை கலைக்காதீர்கள் வலையில் சிக்கிக்கொண்ட வார்த்தைகள் உங்களால் தப்பிச் செல்வதைப் பாருங்கள்.         விழித்த பின்பும் நம்ப முடியவில்லை அது கனவென்று.       விலங்கிடப்படவில்லை தான் அதனால் என்ன பூமியில் எல்லோரும் மரண தண்டனைக் கைதிகளே வரையறுக்கப்பட்ட ஒன்றையும் மனிதனால் மீற முடியாது.     விதவிதமான ஆஷ்ட்ரேயை வீட்டில் வாங்கி வைத்துள்ளேன் சாம்பல் கிண்ணத்தை வெறுமனே பார்க்கச் சகிக்கவில்லை எனவே புகைத்துக் கொண்டிருக்கிறேன். மலை மாறுவதில்லை பயணிப்பதும் இல்லை நதி ஓடுகிறது உப்புப் பாறையாக மாறுகிறது.   பிணந்தின்னிக் கழுகுகள் தான் ஜனங்களை காத்து ரட்சிக்கும் பெருமாளின் வாகனம்.       வந்த வேலையை முடித்தால் சென்று சேர வேண்டியதுதான்.       இருட்டு ஆடைகளை அவிழ்த்து விடுகிறது ஆதிமனிதர்கள் இப்படித்தான் இருந்திருப்பார்கள் போல.         தோற்றவர்களின் சரிதம் படிக்கிறோம் ஆனால் ஜெயித்தவர்கள் பக்கமே நிற்கிறோம்.         புயல் வலுக்கிறது பேய் மழையால் வாழ்க்கை வீட்டுக்குள் முடங்குகிறது.             கண்ணுக்குத் தெரிவதில்லை மரத்தின் பாரத்தைச் சுமந்து கொண்டு மண்ணுக்குள் இருக்கும் வேர்கள்.           புஸ்தகங்கள் உங்களுக்கு சிறகை கொடுக்கும் கை விலங்கை உடைத்து விடுதலை அளிக்கும்.         அவள் பெருக்கி கோலமிட்ட வாசல் புழுதி படிந்து கிடக்கிறது காற்று கதவிடுக்கில் புகுந்து அவர்கள் எங்கே எங்கே என்று தேடுகிறது.         உன் வீட்டு நிலைக்கண்ணாடியானாலும் உன்னுடைய உண்மைத் தோற்றத்தைத் தான் அது பிரதிபலிக்கும்.         வெயில் காலத்தில் தான் தெரிகிறது நிழலின் அருமை.         குழம்பித் தவிக்காதே ஞானம் வேறுமார்க்கமாக உன்னை வந்து சேரும்.   கவிஞனுக்கு ஆறாவது விரலாய் ஆனது சிகரெட்.         வட்டி குட்டிப் போடுகிறது கடனில் மூழ்கிய பின் கோவணம் கூட மிச்சமிராது.   அவள் பத்துப் பாத்திரத்தை தேய்த்துக்  கொண்டிருக்கிறாள் இவன் தபால்காரனை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான் கவிஞனென்றாலும் வயிறு பசிக்கிறதே என்ன செய்வது.         பார்க்க படிக்க எழுத நிரம்பவே அது பயன்படுகிறது மூக்குக் கண்ணாடியைத் தொலைத்துவிட்டால் அன்றைய வாழ்வு சாதாரணமாய் கழியாது.         கலங்கித் தெளிந்த குளத்து நீரில் பரிதியின் பிம்பம்.     பொசிப்பேயில்லை அடுக்களையில் வெந்து போகும் அம்மாவுக்கு ஒரு காட்டன் புடவை வாங்கிக் கொடுக்க. ஒன்றும் சொல்லிக்கொள்ள முடியவில்லை கவலைப்படுவதால் ஒரு  அங்குலமேனும் உயரத்தில் அதிகப்படுத்த முடியுமா என்ன.       இவனுக்கு கனவுகள் அதிகம் மெய்ப்படாதது அநேகம் குடும்பத்தில் மற்றவர்கள் கனவை கொன்ற தரித்திரம் இவனை சும்மா விடாது. அவளை மறக்கச் சொல்லாதீர்கள் என் இதயத்தை அவளிடம் தொலைத்துவிட்டேன்.         கோடி நட்சத்திரங்கள் வானில் கொட்டிக் கிடந்தாலும் என் மனம் சந்திரனையே தேடுகிறது.         உன் கண்கள் தூண்டில் போடுகிறது வலைவீசி பிடித்த என்னை உன் வீட்டிற்கு எடுத்துச் செல்வாயா?         நீ என் காதலை ஏற்றுக் கொள்ள வேண்டாம் உனது ஞாபகங்கள் போதும் நான் உயிர் வாழ.         என் நெஞ்சத்தில் கோட்டை கட்டுகிறேன் உன்னை குடிவைக்க.         உன்னை நெஞ்சத்தில் சுமப்பதை நடத்துனர் அறியமாட்டார் இல்லையேல் உனக்கும் சேர்த்து டிக்கெட் எடுக்கச் சொல்லி இருப்பார்.   நான் சும்மா உட்கார்ந்திருந்தாலும் என் மனசு மட்டும் உன்னைச் சுற்றியே வட்டமடிக்கிறது.         ஓயாமல் எழும் அலைகளைப் போல் உனது இருப்பு தீயாக என்னை எரிக்கிறது.     இடைவெளி அதிகரிக்க அதிகரிக்க காதல் எரிமலை சீற்றம் கொள்கிறது.   கனவில் குடித்தனம் நடத்துவது அலுத்துப் போய்விட்டது நாம் எப்போது நிஜத்தில் குடித்தனம் நடத்துவது.         அனுமனைப் போன்று நெஞ்சத்தில் வைத்து பூஜிக்கிறேன் என் காதல் தேவதையை.         நிலைக்கண்ணாடியை பார்த்த போது தான் தெரிகிறது அவள் என்னை முழுவதுமாய் ஆக்ரமித்துக் கொண்டிருப்பது.             உன்னை நினைத்து என்னை மறப்பதும் என்னை மறந்து உன்னை நினைப்பதும் வாடிக்கையாகிவிட்டது.         தீக்குச்சி தேவையில்லை கண்ணாலேயே உண்டாக்கிவிடுவாய் காதல் நெருப்பை.         காதல் தேவதையால் சிறைவைக்கப்பட்டிருக்கிறோம் நானும் அவளும்.     உன் கூந்தலை அலங்கரிக்கும் ரோஜாப் பூவை நான் தேடிக் கொண்டிருக்கிறேன்.         ஒரு மழை நாளில்தான் உன்னை முதல் முறையாக பார்த்தேன் உன்னை மறக்க நினைக்கும் போதெல்லாம் மழை வந்து ஞாபகப்படுத்திவிடுகிறது.         சாலையில் நிலவு குடை பிடித்துக் கொண்டு போவதை நான் நேரில் பார்த்தேன்.             உன்னைப் பார்க்கவேண்டும் என்ற உந்துதலால் விடியலிலேயே  படுக்கையிலிருந்து எழுந்து விடுகிறேன்.         உன்னைச் சுற்றிச் சுற்றியே வட்டமிடுகிறேன் பட்டாம் பூச்சியைப் போல்.         நீ வரைந்த கோலத்தின் நடுவே பூசணிப் பூவை வைத்துவிட்டுச் செல்வது யாரென்று உனக்குத் தெரியுமா?   என்னை மறந்தே சுற்றிக் கொண்டிருக்கிறேன் அவளுடைய நினைவு நாடாக்களால் கட்டப்பட்டு கிடக்கிறேன்.         ஜம்புலன்களும் வெவ்வேறு திசையில் பயணிக்கின்றன தேடுவதென்னவோ உன் ஒருவளைத் தான்.         எல்லா காதலர்களுக்காகவும் நான் சிலுவை சுமக்கிறேன்.         யேசுவிடம் நான் வேண்டினேன் அவளுடைய பிரார்த்தனை நிறைவேற வேண்டுமென. தேவதை என நினைத்து கிட்ட நெருங்கினால் ராட்சசியாகி விடுகிறாள்.         சிவராத்திரியன்று கண் விழிப்பதற்காக எல்லோரும் தொலைக்காட்சியில் படம் பார்ப்பார்கள் அவளைக் கண்ட நாள் முதல் எனக்கு சிவராத்திரி தான்.     ரோஜாவைப் பறித்து அணிய வேண்டும் என நெருங்கும்போதுதான் முட்கள் கண்களில் படுகிறது.         உன் தலைக்குப் பின்னே பிரகாசிக்கும் ஒளிவட்டத்தில் நான் பார்க்கும் சக்தியை இழந்து போகிறேன்.         வழித்தடத்தை மறந்து நான் வேறு பேருந்தில் ஏறிவிட்டேன் பாதியில் இறக்கிவிடப்பட்ட நான் வீட்டு முகவரியையும் மறந்துவிட்டேன்.         கடற்கரையில் வரிசையில் வருகின்றன அலைகள் உன் கால்களை நனைக்க.           உதிர்ந்த கண்ணீர்த் துளிகளில் நீந்திக் கொண்டிருக்கிறது ஓர் எறும்பு.           தானே உருகி தரணிக்கு ஒளிதரும் சுடரை பிரசவிக்கும் மெழுகுவர்த்தி.     இயற்கையை அலங்கரிக்கும் மலர்கள் இறைவனுக்கு சூட்டுவதற்காக செடிகளிலிருந்து பறிக்கப்படுகின்றன.         சந்திர சூரிய விளக்குகள் தங்கள் கிரணங்களை பயன்படுத்திக் கொள்ள கட்டணம் வசூலிப்பதில்லை.         வாடகை இல்லா வீடு இவ்வுலகம்.         இரவெனும் காலி கோப்பை மதுவால் நிரப்பப்படுகிறது.             இன்னும் கோலம் வரையப்படாமல் காட்சி அளிக்கிறது நட்சத்திர புள்ளிகள்.           நட்பு நீடிக்க வேண்டுமென்றால் லெட்சுமணக் கோட்டை தாண்டக்கூடாது.     மரங்கள் வானை நோக்கி வளருகிறது மழை மண்ணை நோக்கிப் பெய்கிறது.         வெட்டப்பட்ட மூங்கில்கள் புல்லாங்குழலின் துளைகள் வழியே அழுகிறது.         சிக்னலில் எரிச்சலுடன் நின்று கொண்டிருக்கும் வாகன ஓட்டி மீது வந்தமரும் வண்ணத்துப்பூச்சி.         வெளிச்சத்தை உமிழும் மின்விளக்குக் குமிழ் மீது மோகம் வளர்க்கும் விட்டில் பூச்சி.       பிறந்த குழந்தை யாரோ ஒருவர் சாயலில் இருந்தே ஆகவேண்டும்.         பாற்கடலில் கடைந்தெடுத்த அமிர்தத்தை பங்கிட்டுக் கொள்வதில் தொடங்கியது அரசியல்.   ஒருக்களித்த கதவுகளை மூடி மூடி திறக்கும் காற்று.         மூக்குக் கண்ணாடியைத் தேடினேன் வைத்த இடத்தை விட்டுவிட்டு வேறு எல்லா இடத்திலும்.       இறக்கைகள் பிய்க்கப்படாதிருந்தால் வானத்தை அளந்திருக்கும் வெண்புறா.         வசந்தகால நிலா தனது குளுமையான கதிர்களால் உயிர்களை நனையச் செய்கிறது.         சற்று ஓய்ந்திருக்கிறேன் உனது ஞாபகங்களை மீட்டியபடி.       இலையுதிர் காலத்தில் பழுத்த இலைகள் சருகுகளாளான மெத்தையில் வீழ்கிறது.           பூப்பறிக்கிறேன் பனி உடல் நனைக்கிறது.         விரிந்த கூந்தலை முடிவதற்குள் அவன் வர வேண்டும்.         இருளுக்கு வேலையில்லை மின்மினிகள் உலகத்தில்.         உனது கூந்தலை அலங்கரிக்க தவமிருக்கும் மலர்கள்.         உனது நினைவுகளூடே ஆழத்தில் மூழ்கினேன் தண்ணீரின் மேற்புறத்தில் ஆகாயத் தாமரைகள்.       வைகறையில் குயில் பாடுது ஆனால் எனக்கு அதன் மொழி தெரியாது. களையும், பூண்டும் உள்ள குளத்தில் நிலவு பிரதிபலிக்கிறது.         நான்  காத்திருப்பதில் ஒன்றும் பிரயோஜனமில்லை எப்போதும் போல் அவள் இல்லாமல் கழியும் இரவுகள்.         எல்லாவற்றையும் துறந்துவிட்டேன் பட்டினத்தார் கரும்பு போல உனது நினைவுகள்.         சந்திப்புகள் பிரிவில் தான் முடியும் ஆனால் கனவுக் குடித்தனம் எல்லையில்லா சுகம் தரும்.         இலையுதிர்கால இரவு வானில் மினுமினுக்கும் நட்சத்திரங்கள்.           உனக்கு புரையேறுகிறது நான் அருகில்  இருக்கையில் யார் உன்னை நினைப்பது.         சோடை போகாமல் எப்படி இருப்பது இந்த மானங்கெட்ட உலகத்தில்.         வீராப்பு காட்டுபவன் பின் நின்று சிரிக்கிறது மரணம்.         குருட்டு ஆந்தை இருட்டை அழைக்கும்.       கல் இருக்கையில் காதலர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள் ரயில் வந்தது தெரியாமல்.         மௌனத்தின் ஆழத்தில் ஞாபக நீர்க்குமிழிகள மேலே வரும் சில நொடிகளில் அவைகள் உடைந்து தண்ணீரில் கலந்துவிடும்.         நிலைக்கண்ணாடி முன் நிற்க பிம்பம் தோன்றும்.         சருகுகளின்  மேல் கால் வைத்து நடக்கிறேன்  வனத்தினூடே.   சமையலறையில் தேனீர் சுடச்சுட வெளியே பனித்திப்பிகள் முத்துச் சிதறலாய்.         நிலவை வெகு நிதானமாய் கவனித்துக் கொண்டிருக்கிறது அந்தப் பூனை.         சில்லறையற்ற பிச்சைப் பாத்திரத்தில் காற்று அடிக்க சருகுகள்  நிரம்பும்.         குருடனின் பிச்சைப் பாத்திரத்தில் மழையில் ரூபாய் நோட்டுக்கள் நனையும்.         பூக்கள் நனைகின்றன குளிர்ந்த காற்று வேறு அடிக்கிறது.     விடியலில் எழுந்து வானம் பார்த்தேன் மஞ்சள் நிற சூரியன்.               உறைந்து கிடக்கும் பனி கதிரவனின் கிரணங்களால் கொஞ்சம் கொஞ்சமாக விடுதலையாகிறது இயல்பிலிருந்து.         காடு முழுக்க சருகுகள் காலடி  வைக்கும் போது நொறுங்குகிறது.         ஈமக்காட்டில் வெட்டியான் பேய்களோடு படுத்துறங்குவான்.         இருதிசைகளிலும் ஒரே ஒரு பறவை பறந்தது காண்.         சாலையெங்கும் மேடு பள்ளம் குலுங்கி குலுங்கி பேருந்து செல்லும்.           அக்காக் குருவி வசந்தத்தை அழைக்கும் மலர்கள் எனைப் பார்த்துச் சிரிக்கும்.         குரிசிலேறிய இயேசுவின் இரத்தத் துளிகள் மண்ணை நனைத்தன.         கூண்டிலே வாசம் செய்யும் புனுகுப்பூனையின் கழிவு கமகமக்கும்.       கார்கால மாலையில் அடர்ந்த மேகக் கூட்டத்தின் பின்னே சூரியன் தகிக்க குடையைத் தேடுகிறது கண்கள்         பௌர்ணமி நிலவு வீடு வரை வந்து வழி அனுப்பும்.         இரவல் வெளிச்சம் தான் ஆனாலும் ரசிக்காமல் இருக்கமுடியவில்லை நிலவை.       சிறகடிக்கும் வண்ணத்துப்பூச்சிகளின் நிறங்கள் தூரிகையில் சிக்க மறுக்கின்றன.       எல்லா செயல்களுக்குப் பின்னாலும் மரணம் கைகொட்டிச் சிரிக்கிறது.   என்னை புதைக்கப் போகும் முன்பு மதுப்    பீப்பாயால் குளிப்பாட்டுங்கள் இரண்டாம் முறை இறப்பதற்கு மீண்டும் பிறந்துவிடாமல் இருப்பதற்கு.         இந்தக் குளிரில் ஆஷ்ட்ரேவை நிரப்புவதே வாடிக்கையாகிவிட்டது.         நீரில் எழும்பும் சிற்றலைகள் கரைக்குச் செய்தி அனுப்புகின்றன.       வசந்தம் விடைபெறுகிறது மீன்கள் ஏரியையும் மரங்கள் வனத்தையும் கண்ணீரால் நிரப்புகின்றன.     என்னுடைய கல்லறை வருந்தி  அழைக்கிறது நீ வர காலதாமதமானால் வேறொருவரை அனுப்பு என்று.         கோயில் சுற்றுச் சுவரில் நரகல்களைத் தின்று பெருத்த பன்றி தொம்பனின்  கண்ணை உறுத்துகிறது.     புற்களைத் தின்று அசைபோடும் மாடுகளின் தவத்தினைக் கலைக்க நாளை இந்தக் குளத்தில் நீர் வந்துவிடும்.         கடிதத்தைப் பிரித்தேன் பக்கம் முழுவதும் உனது உதட்டுச் சாயங்கள்         கதவை சார்த்தினேன் பனிக் காற்று முகத்தில் அறைந்தது.     விடுதி அறையில் நள்ளிரவு வரை விளக்கு எரிந்தது கூடவே விசும்பல் சத்தம்.   கூவும் சேவலுக்குத் தெரியாது தான் குழம்பாகப் போவது.         நள்ளிரவு நிலவு  வெளிச்சம் போதும் வீடுபோய்ச் சேர.         மழை பெய்கிறது மரங்களின் நெடுநாள் தாகம் தணிகிறது.     எத்தனை தொலைவைக் கடந்தேன் புழுதியில் கால்தடம் பதிய.         மேகக் கூட்டம் மிதந்து செல்கிறது காற்றின் அலைவரிசையில்.         வெள்ளைக் காகிதத்தில் வண்ணத்துப்பூச்சி அமர கவிதை வெள்ளமென கரை கடந்தது.               குளத்தின் மீது விழுந்த நிழல் அவசரமாய்க் குளித்து கரையேறியது.         விருட்சத்தின் கீழே வளராது விதைகள்.         கால் உடைந்த முக்காலி என்னை கீழே விழவைத்தது.             அழித்து அழித்து எழுதி வார்த்தைகளைச் செதுக்கி செதுக்கி செப்பனிடுகிறேன் உனக்கான கடிதத்தை.             வண்ணத்துப்பூச்சியின்  சிறகசைப்பில் ஒவ்வொரு நிறமும் வீழ்ந்து கொண்டிருந்தது.             இறந்து பார்த்துவிடலாம் இறப்பைப் பற்றிய பயம் சிறிதுமின்றி. என் கல்லறைக்கு வருபவர்கள் துக்கிக்கும் போது நான் சந்தோஷமடைகிறேன்.         காற்றில் விழும் பூக்களுக்காக மரங்கள் துக்கம் அனுசரிப்பதில்லை.         எல்லாவற்றையும் மூட்டை கட்டிவைத்துக் கொண்ட திருடன் தனது அங்கியை மறந்துவிட்டு குளிரில் மறைந்துவிட்டான்.     நேற்றிரவு திருடர்கள் கன்னம் வைத்த உனது வீட்டில் பொக்கிஷமான உன்னை அவர்களிடமிருந்து எப்படி பத்திரப்படுத்தினார்கள்.     வேண்டுமென்றே இன்று தாமதித்தேன் உனது தவிப்பை இந்த மரத்தோடு சேர்ந்து நானும் பார்க்கிறேன்.       கைபேசியை உடனே எடுக்கமாட்டாய் காலர் டியூனை நான் கேட்டு ரசி்க்கட்டும் என்று.   தட்டப்படும் போதெல்லாம் கதவை நோக்கி விரைகிறேன் நீயாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டே தாழ்ப்பாளை திறக்கிறேன்.         மண்ணில் கால் பாவாமல் நடக்கிறாய் உனது காலடிச்சுவடுகளைத் தேடி ஏமாறுகிறேன் நான்.         நீ ஏற்க மறுக்கிறாய் அதை கேட்க மறுக்கிறது என் இதயம்.         இத்தனை அழகையும் கூட்டுப் புழுவாய் இருந்த போது எங்கே புதைத்து வைத்திருந்தது வண்ணத்துப்பூச்சி . வண்ணங்களை உதிர்த்துச் சென்றது பட்டாம்பூச்சி எனக்கோ  நிறக்குருடு.         சிக்னலில் பிச்சையெடுக்கும் பிச்சைக்காரன் எந்த வியாபாரத்தில் நஷ்டமடைந்ததால் இந்த நிலைக்கு வந்திருப்பான்.   அலைகள் குளிப்பாட்ட எத்தனை முறை நனைந்திருக்கும் கரை.         கண்ணாடி பார்த்து பழகியாகிவிட்டது இது தான் உண்மையான முகமென்று  யாரிடம் சான்றிதழ் வாங்குவது.         ஓடுகின்ற ஆறு கடலை அடையும் வரை அதன் வேகம் குறையாது.         நேற்றைவிட ஆற்றில் தண்ணீர் மட்டம் கூடியிருந்தது என்றாலும் மனம் மட்டும் தவறவிட்ட மூக்குத்தியையே சுற்றிச் சுற்றி வந்தது.           விருப்பங்களை மாலையாக கோர்க்க எந்தக் கேள்விக்கு முன்னிலை கொடுப்பது என்று தெரியாமல் நகர்கிறது நாட்கள்.     தட்டப்படும் கதவுக்கு உள்ளே கோப்பையில் நிரப்பப்பட்டிருக்கும் தனிமை துளித்துளியாக தரையில் சிந்தப்படுகிறது. இலையுதிர் காலத்தில் பாடல் இசைத்துக் கொண்டே விழும் பழுத்த இலைகள் வசந்த காலம் வரப்போகிறது என்று வேர்கள் கிளைகளுக்கு செய்தி அனுப்பும்.       ஓடுகின்ற தேர்ச்சக்கரமாகும் வாய்ப்பு எனக்கு வழங்கப்படவில்லை சக்கரங்களில் நசுங்கிச் சாகும் எறும்பாகவே நான் என்றென்றும் இருக்கிறேன்.       பேரரசுகள் தோன்றும் வீழும் ஆனாலும் மலர்கள் மணம் பரப்புவதை எதனாலும் தடுத்து நிறுத்த முடியாது.       ஒவ்வொரு குழந்தையையும் பூமிக்கு அனுப்பும் போது கடவுள், இன்னும் நான் மனிதனின் மீது வைத்த நம்பிக்கையை இழக்கவில்லை என்ற செய்தியை அவர்களுக்கு தெரியப்படுத்துகிறார்.   மனம்  துணிச்சலுடன் செயலில் இறங்கும் இதயம் குற்றவுணர்வுடன் கண்ணீர் வடிக்கும்.       மூடுபனி விலகியது கதிரவனின் கிரணங்கள் மொட்டின் மீது பட்டவுடன் செடிகள் பெருமூச்செறிந்தது. கொஞ்சம் காது கொடுத்துக் கேளுங்கள் ஏகாந்தப் பறவைகள் ஏரியை நோக்கி சாரை சாரையாக பயணித்து வருவதைப் பாருங்கள்.       மரணத்திற்கு பயந்து வனங்களில் பயணித்தான் இளைப்பாறிய ராட்சச மரத்திலிருந்து கிளை முறிந்து அவன் மீது விழுந்தது.       ஒரு உலகம் அவரவர் பார்வையில் எத்தனை எத்தனை வடிவம் பெறுகிறது.       சிதைக்காக மூட்டப்பட்ட நெருப்பு அணையாது கங்கை கரையோரத்தில்.         குற்றம சுமத்த ஒன்றுமில்லை என்னும் போது நீண்ட கோடையும் பாசிபடர்ந்த குளமும் ஞாபகத்திற்கு வருகின்றன. தண்டிப்பது மனித மனம் மன்னிப்பு வழங்குவது கடவுள் குணம்.     ஆகாயத்தில் மிதக்கும் மேகங்கள் செல்ல வேண்டிய திசையை தீர்மானிப்பதில்லை.         இரவு தன் கண்ணீர்த்துளியை கதிரவன் காணும் விதமாக புற்களின் மீது விட்டுச் செல்கிறது.       உளியின் நேர்த்தியான அடிகள் தான் கல்லை சிற்பமாக்குகிறது.       சாத்தியமில்லாதது நிகழும் போது நாளைய பொழுது தன் திரையை விலக்கி தனது எழிலைக் காட்டும்.       வார்த்தைகள் மரணிக்கும் பொழுது மௌனம்  ஆத்மனை நாடுகிறது.       பகல் பொழுது முழுவதும் பணியாற்றிக் களைத்த கதிரவன் இரவில் தனது கடமைகளை அகல்  விளக்கிடம் கொடுத்து விடைபெற்றான். சிலந்தி வலையில் காற்று சிக்காது அது பிடிப்பதென்னவோ மலத்தின் மீதமரும் ஈக்களைத்தான்.       மோசடி பேர்வழிகள் எல்லோரும் செல்வந்தர்களாக இருந்தார்கள் கடவுள் கோயிலுக்கு வெளியே கைநீட்டி யாசித்துக் கொண்டிருந்தார்.       இருள் ஒளியை நாடுகிறது ஒளி  இருளை நாடுகிறது உயிர்கள் மட்டும் மரணப் புதைகுழியை நோக்கி வீறுநடை போடுகிறது.       கரையை வாரியணைத்து முத்தமிட அழைக்கிறது கடல் கரையோ அலையுடனான தன் உறவை விடுவித்துக் கொண்டு தேசாந்தரம் போகத் துடிக்கின்றது       தொட்டால் புனிதம் கெட்டுவிடுமென்று விலகி  விலகிச் செல்கிறது வானம்.       விலாசம் தொலைத்த வெண்மேகம் காற்றின் போக்கில் செல்லும்.         மலரின் இதழ்களிடமிருந்து பனித்துளி விடை பெற்றுச் சென்றது காலைக் கதிரவனின் ரதத்தின் குளம்படிச் சத்தம் கேட்டது.       உண்மையின் பாதை முட்கள் நிறைந்தது ஆனால் சென்று சேரும் இடம் சொர்க்கம் போன்றது.       வானம் பூமியிடம் சொன்னது எத்தனை நாள் இப்படியே தூரத்தில் பார்த்துக் கொண்டே காலம் கழிப்பது என்று அதற்கு பூமி பிரிவு தான் காதல் வளர்க்கும் என்றது.       உன் நினைவுகளோடு உறங்குவது உன் நினைவுகளோடு எழுவது இதைத் தவிர உருப்படியான ஒன்றும் செய்வதில்லை நான்.     அனுதினமும் தென்றல் வரும் திசையை கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தால் ஏன் விழிகள் சிவக்காது.     காதலில் விழுந்த பிற்பாடுதான் இயற்கை எழிலை ரசிக்க முடிகிறது.         நீ பெயர் சொல்லி அழைத்தால் கல்லறையில் உறங்கிக் கொண்டிருந்தாலும் உயிர்த்தெழுந்து ஓடிவருவேன்.       அப்போது நான் கொடுத்த ரோஜாவை மறுதலித்த நீ இப்போது வருடந்தோறும் வந்து என் கல்லறைக்கு மலர் வளையம் வைக்கிறாய்.       கொஞ்சம் பொறு சுயம்வரத்தில் சிவதனுசை ஒடிக்கிறேன் ஊரார் வியக்கும் வண்ணம் உன்னை கரம் பிடிக்கிறேன்.       விழிகளால் கோலம் போடுவாய் தேவாலயத்தில் மெழுகுவர்த்தி ஏந்துவாய் என்னைப் பார்க்க கூந்தலில் பூச்சூடுவாய் கடலுக்கு ஏங்கும் நதியைப் போல் எனை நாடுவாய்.     காதல் நதியில் நீந்துவதற்கு கற்றுத்தர தேவையில்லை கார்முகிலைப் பார்த்துச் சொல்லிவிடலாம் மழை வருமென்று.     காதல் பிசாசு என்னுள் புகுந்துகொண்டது உன்னைப் பார்க்கும் போதெல்லாம் உதிரம் உறிஞ்ச துடிக்கிறது. உன் அழகு முகத்தை மறைக்கும் முடிகளை என்ன சொல்லி சபிப்பேன்.         தோட்டத்து பூக்களை எல்லாம் விட்டுவிட்டு உன் இதழ்களைத் தேடி வருகிறது இந்த வண்ணத்துப்பூச்சி.         நீ வரைந்த கோலத்தை காப்பாற்ற நான் மழையில் நனைகிறேன்.       உன்னை பின்தொடர்கிறேன் உன் நிழலின் மீது கால் பதியாமல்.         புத்தாண்டில் எது வாங்குகின்றோமோ அது நிறையுமாம் தயவு செய்து ஒரு முத்தம் கொடேன்.         என்னை உன்னிடம் ஒப்படைத்துவிட்டேன் என்னை உளியால் செதுக்கி தெய்வச் சிலையாய் செய்வாயா.       வீட்டை துப்புரவு செய்யும் போது கிடத்த உன் கடிதத்தை ஈரமாக்கியது என் கண்ணீர்த் துளி. அக்கரையில் நீ இருந்தால் இந்த நதியின் ஆழம் எனக்கு துச்சம்.       உன்னிடம் பேச ஆயிரம் இருக்கிறது ஆனால் உன்னைக் கண்டவுடன் எல்லாம் மறக்கிறது.       நான் காகிதமாக உன்னைக் கடந்து செல்கிறேன் உன் நிழல் பட கவிதையாகிறேன்.       அப்படிப் பார்க்காதே உன் உள்ளச் சிறையில் கைதியாக இருக்கும் எனக்கு விடுதலையாக விருப்பமில்லை.       இனிக்கும் இதழில் தேன் பருக நடுநிசியில் வந்து இறங்கும் நிலவு.         என் விரல் நகம் கூட உன் மீது பட்டதில்லை ஆனால் நிழலுக்கு முத்தமிடுகிறேன்.       நீ என் கண் நோக்கும் போதெல்லாம் காதல் தீ பற்றி எரிகிறது என் நெஞ்சத்தில்.   நீ சந்திக்க வருவாய் என்ற நம்பிக்கை போதும் நான் வாழ்ந்திருக்க.       நிலைக்கண்ணாடியைப் பார்த்து உடையை சரி செய்து கொள்கிறாய் தானே புயலைப் போல் எனைக் கடந்து செல்கிறாய்.       உன் கண்கள் வீசிய வலையில் விழுந்துவிட்டேன் இனி உன் நெஞ்சத்தில் நீச்சலடிப்பேன்.       உன்னிடம் காதலை தெரிவிக்க ரோஜாச் செடியை விதவையாக்கினேன்.               உன்னிடமிருந்து சிறுபுன்னகை உதிர்கிறது அதைப் பார்த்து எத்தனைப் பூக்கள் மலர்கிறது.       ஜன்னலோர இருக்கையில் நீ கை அசைத்து போன போது விடைபெற்றது சூரியன் மிச்சமிருந்த வெளிச்சம் உன்னை துரத்திச் சென்றது.       உனக்காக காத்திருப்பது சொர்க்கத்தின் வாசலில் வரிசையில் நிற்பது போல் உள்ளது.       நேற்று உன்னை குளத்தில் பார்த்தேன் மீன்கள் கொடுத்து வைத்தவை.       தவறி விழுந்த போது அனிச்சையாய் உன் பெயர் சொல்லி அழைத்தேன்.       காதல் தீயில் பற்றி எரிகிறது இருவர் உடலும்.         செடியில் இரண்டு பூக்கள் உன்னையும் சேர்த்து.       குளிரில் மேனி கதகதப்பாய் இருக்கிறது உனது நினைவுகளால்.       காதல் புயலை எப்படி எதிர்கொள்கிறாய் முகத்தில் சலனமில்லாமல்.       என்னால் குடை பிடிக்கத்தான் முடிகிறது நான் வருணனல்ல மழையை நிறுத்துவதற்கு.   அவள் அருகில் இருக்கும் போது காலம் பம்பரமாய்ச் சுழல்கிறது.       வேண்டுதல்களோடு வடம் பிடித்தேன் நிலைக்கு வந்த தேரின் அருகில் நீ தரிசனம் தந்தாய்.             வார்த்தைகளில் வெளிப்படுத்தாததை கண்கள் காட்டிக் கொடுத்துவிடுகிறது.       மின்னலின் பிரகாசம் உன் கண்களில் தெரிந்தது.       பசி, தூக்கம் இல்லை உன்னைச் சந்தித்த பிறகு.       என்னை மறந்து அனுதினமும் உன்னை நினைக்க வைக்க என்ன வசியம் செய்தாயோ.       காதல் பயணிகள் எந்த நிறுத்தத்திலும் இறங்க மாட்டார்கள்.       புனிதமென்பதற்கு அகராதியில் பொருள் தேடினேன் அதற்கு அர்த்தமாய் உன்பெயர் இருந்தது.       கல்லை சிற்பமாக்கும் கைத்திறனை யாரிடமிருந்து கற்றாய்.       நான் அடம் பிடித்தால் வாங்கிக் கொடுப்பார்களா உன்னை.       டைரியில் உன் பெயரை இறை மந்த்ரம் போல் எழுதி வைத்திருக்கிறேன்.       சற்றென்று விடைபெறும் வானவில் இல்லை நீ தனது கிரணங்களால் குளுமை தரும் பௌர்ணமி நிலவு.       உனது பெயரைக் கொண்டவர்களிடம் ஏனோ தோற்றுவிடுகிறேன்.       நீ நனைவதைக் கண்டு கையில் குடை இருப்பதை மறந்தேன்.         உன் கன்னக் குழியில் தடுக்கி விழுந்த என்னை யாரும் காப்பாற்ற வேண்டாம்.       இனிமேல் என்னை சந்திக்க வராதே என்று கூறியிருந்தாய் மறுநாளும் அதே நிறுத்தத்தில் ஏன் காத்திருந்தாய்.       நீ சம்மதமென்று சொல்லி காதல் தேவதையிடம் சிறகைப் பெற்றுத் தந்திருக்கிறாய்.       தலையணை நனைந்து விடுகிறது பிரிவுகளின் ஏக்கம் தாங்காமல்.       சற்று அண்ணாந்து பாருங்கள் மேகங்களற்ற வானின் நிர்வாணத்தை.       மணல் வீட்டில் அலை குடித்தனம் செய்கிறது வாடகையின்றி       தாழிடப்படாத கதவு ரகசியத்தை மூடிவைக்கிறது.           நள்ளிரவில் கதவு இழுத்து சார்த்தப்படுவது எத்தனையாவது முறை.       ஆற்றில் கலந்த அஸ்தி கரைவதற்குள் வீட்டில் இன்னொரு இழவு.       அவள் வெயிலில் நடக்கும்போது முகில் குடை பிடிக்கிறது.     அணைந்து எரியும் தெருவிளக்கு பூரண நிலவு கைப்பற்றி என்னை அழைத்துச் சென்றது.     தேவாலயத்தில் பாவிகள் ஒன்று கூடி பாவமூட்டையை விட்டுச் செல்வர் குட்டி தேவதைகளை பிரிய முடியாத கர்த்தர் வாசல் வரை வந்து வழியனுப்புவார்.       அவள் பருகிய தேநீர்க் கோப்பையின் விளிம்பில் ஒட்டிக் கொண்டிருந்தது உதட்டுச் சாயம்      அடையாளங்களை தொலைத்துக் கொண்டே வந்தவர்கள் காத்திருக்கிறார்கள் கல்யாணச் சந்தையில் விலை போவதற்கு. மழைக்கால இரவு தூங்குபவர்களை இம்சிக்கும் சுவர்க்கோழி சப்தம்.           கடிதத்தைப் பிரித்தேன் அஞ்சல் பெட்டி எப்படி தாங்கியது இவ்வளவு பாரத்தை.         எவ்வளவு பெய்தாலும் நிரம்ப மறுக்கிறது பிச்சை பாத்திரம்.         நீல மலர்களை தேடிப் போக வெடவெடக்கும் கைகள்.           கடைசி இலையையும் உதிர்த்துவிட்டு வசந்தம் விடைபெறும்.         ஆற்றின் போக்கில் மிதந்து செல்லும் விரிசல் படகு.                   அடுக்கடுக்காய் வெண்மேகங்கள் கிழக்கு நோக்கி.         ஓய்வு நாளில் இரையைத் தேடும் எறும்புகள்.         கர்ப்பிணிப் பூனை கணப்பு அருகே ஓய்வெடுக்கும்.           ஷு தடத்தில் கண்டேன் இறந்த தவளையை         கறுத்த மேகத்தை ஏனோ காற்று கலைத்தது.           வாணங்களால் பற்றி எரிகிறது வைக்கோல் போர்.         குழந்தை தொட்டவுடன் வெற்றுக் காகிதம் கவிதை சுமந்தது.   விரிந்த கூந்தல் நியாயம் கேட்டது உச்சி வெயில் மேனியை வாட்டுது.         புட்டத்து உண்ணி ஒட்டியிருக்கும் எச்சில் இலைச்சாப்பாடு.         நரகல் தின்னும் சொறி நாய் திருட்டுப்பூனையை விரட்டிப் போகும்.           சுவரொட்டியைத் தின்னும் பசுக்களுக்குத் தெரியாது அவள் ஆடை குறைப்புக்கு எவ்வளவு வாங்கினாலென்று.         ஒன்றுக்கிருக்க தெருவோரத்தில் ஒதுங்கியவனின் காலில் நரகல் பட மலம் கழித்தவனின் வம்சாவளியை திட்டியபடியே சைக்கிளை மிதிப்பான்.       பின்நிலவுப் பொழுதில் குட்டியை விழுங்கிய பெட்டை நாய் பின்தொடர்ந்து வரும் ஆண் நாய்க்கு பயந்து வாலால் புட்டத்தை மறைக்கும். இணையை பறிகொடுத்த புறா தன்னுயிரை மாய்த்துக் கொள்ளும்.         பேசப் பழகிய கிளி முதலில் எசமானனை பேர் சொல்லி அழைக்கும்.         ஒப்பனைகளை களைந்துவிட்டு ராமர் வேடமணிந்தவன் மேடைக்கு பின்புறம் சென்று சிகரெட் பற்ற வைப்பான் நாடகம் முடிந்ததும் சீதை ராவணனுடன் இரு சக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந் பயணிப்பாள்.         தண்டவாளத்தில் தடதடவென்று வரும் ரயில் சிறுபுள்ளியாய் மறையும் வரை பிளாட்பாரத்தில் இருந்து குழந்தை வேடிக்கைப் பார்க்கும்.         தொம்பச்சியின் ஆடை விலகலை கிட்டத்தில் பார்க்கும் கிளுகிளுப்புக்காக வேலைக்கு அழைப்பான் எதிர்வீட்டு மிராசு.       புத்தி பேதலித்த ஒரு விபச்சாரி ஆடை விலகலை பொருட்படுத்தாமல் நோட்டை எண்ணிக் கொண்டிருப்பாள்.         கால்ஷுட் கிடைக்காத கதாநாயகனின் போஸ்டரை வாய் வைத்து பார்க்கும் கழுதைகள்.         பல்கலைக்கழக பட்டம் கையேந்த மட்டுமே கற்றுத் தரும் அடிமை வேலை ஆகாதுண்ணு ஜோதிடர் சொல்லித்தானா தெரிய வேணும்.         பரமஹம்சர்களின் அருட்பார்வை சீக்கிரம் கிடைக்காது வி.ஐ.பிக்கள் விலை பேசுவார்கள் சொர்க்கத்தின் சாவியால் காதைக் குடைந்து கொண்டிருக்கும் குருமார்களிடம் பெருமாள் கோவிலில் கூட்டம் வரிசையில் நின்று தரிசிக்கும்.       மழையில் நனைய மனமில்லாமல் குடையை விரிக்கிறோம்.         கண்ணில் விழுந்தது சிறுதூசி என்றாலும் உறுத்துவதைப் பொறுக்க சிரமமாயிருக்கும்.         ஓடிவந்து பேருந்தைப் பிடித்த நபர் சாவதானமாய் சகபயணிகளைப் பார்த்து சிரிப்பார்.       முற்றத்தில் நிலவு பார்க்கும் குழந்தையிடம் நிலா சோற்றுக் கவளம் கேட்கும்.       கனவெனப்படுவது இன்னொரு வாசல் எனது மேட்டு நிலத்தில் உனது ஆடுகள் மேய்வது போல்.       ஊருக்கு நீதி வழங்கும் நாட்டாமைக்கு வீதிக்கொரு மனைவி.       ஆதாம் அறிவுக்கனியை உண்ட பொழுதிலிருந்து அர்த்தமிழந்தது வாழ்க்கை.       இருள் கவிந்த வானம் நிலவு வெளிச்சத்தில்  வீடு அடையாளம் தெரிந்தது.   நீரோடையில் ஒற்றைக் காலில் தவமிருக்கும் கொக்கு.        வசந்தத்தை நோக்கி பயணிக்கும் நாரைகள்.        பனிப்பொழிவில் இந்த பாதச் சுவடுகள் தேவாலயம் நோக்கி என்னை அழைத்துச் செல்கிறது.        விடியற்காலை விடைபெறும் நிலவுவிடும் கண்ணீர்  பனித்துளியாகச் சொட்டுகிறது.        குளத்து நீரில் தனது பிம்பத்தைப் பார்த்து குரைத்துக் கொண்டிருந்தது நாய்க்குட்டி.        சூறாவளியிலும் சேதமடையாமல் தூக்கணாங்குருவிக் கூடு.        காலை மூடுபனி போர்த்தியிருந்தது மறுகரையை பாலத்தின் வழியே எப்படி அடைவது.          நள்ளிரவு அடுக்களையில் வெற்றுப் பாத்திரத்தை உருட்டியபடி  கர்ப்பிணிப் பூனை. வில்       அஸ்தமன வானத்தில் வில் போன்ற வானவில்.        சிதிலமடைந்த கோயில் பக்தர்களை எதிர்பார்த்து கடவுள்.        எப்போதோ சுவரில் அடிக்கப்பட்ட ஆணியில் எனது புகைப்படம்.        பருவத்தைக் கடந்த பின்பு தான் அதன் அருமை தெரிகிறது.        நடைபாதை காங்கிரீட்டில் பதிந்துள்ள பாதத்தடம் யாருடையது.        சடலத்தின் அருகில் ஊதுபத்தி எரிகிறது துக்க வீட்டைச் சுற்றிலும் பிணவாடை.   குடையின் ஓட்டை இரவல் தந்தவரை நிந்தனை செய்கிறது.   இருண்ட வானில் எத்தனை துளைகள் வேறெப்போதும் இல்லாமல்.          இந்த மழை துவைத்த துணிகளை உலர விடுவதில்லை.          அன்பையும் வெறுப்பையும் பொம்மையிடம் வெளிப்படுத்துவது குழந்தையின் வாடிக்கையாகிவிட்டது.         எனக்கும் உலகுக்கும் பாலமாய் இந்த ஜன்னல்.            வசந்த காலத்தில் ஓர் வருத்தம் குழந்தைகள்  ஆசையாய் கட்டிய பனிக்கோட்டைகள் உருகி தண்ணீராக ஓடியது.      அணைந்து எரிந்த மின்விளக்கு வெளிச்சத்தில் பிரிந்து சென்ற என் அன்னையின் முகம்.      பனிபொம்மை வேனிற் காலத்தில் உருகிட விழிகள் வழியனுப்பும் உப்பு நீர் கண்ணீர்.   இருட் குகையில் கேட்பாரற்று புலித்தோல் தண்டம்.        கார்காலம் வெளியே செல்லமுடியாதபடி கூரையை பிளக்கும் மழை.        கை கழுவாமல் படுத்த என் கரங்களை பிறாண்டிப் பார்த்துப் போயிருந்தது பூனை.        பனித்திப்பி போக்குவரத்து சாலையின் குறுக்கே.          ஓவியம் தன்னைத் தானே வரைந்து கொள்கிறது.          தியானம் செய்வோரை கோபம் கொள்ளச் செய்தது கூடத்தில் காலணிகளுடன் நுழைந்தது.          வேண்டுதல்கள் நிறைவேறுவதற்கு சில்லறைகளை எதிர்பார்க்கும் ஞான குருக்கள்.          வெளியே சன்னமான தூறல் நத்தை போல் ஊர்கிறது கடிகார முட்கள்.        மழையால் வெறிச்சோடிய வீதிகளில் பரிசுப் பொருட்களுடன் கிறிஸ்துமஸ் தாத்தா.          கொல்லை பொம்மை தலையில் செய்தித்தாள் சுருள்கள்.          தபால்காரருக்கு சுமந்து வரும் கடிதங்களின்  கனம் தெரியாது.          அமர்ந்தவர் எழுந்துச் சென்ற பிறகும் ஆடிக்கொண்டிருந்தது ஊஞ்சல்.            செத்த ஈயை ஊர்வலமாக அழைத்துச் சென்றது எறும்புகள்.      தேகத்தின் நிழல் ஆற்றைக் கடக்கும் தோணி இல்லாமல்.   வேற்று மனிதருக்கும் சேர்த்து வாலாட்டிது வீட்டு நாய்.            செல்லும் தடங்களிலெல்லாம் வண்ணங்களை உதிர்த்துச் செல்கின்றது பட்டாம்பூச்சி.        மழைத்துளிக்காக சிப்பி தவமிருக்கும்          கதவை சார்த்தினேன் சப்தம் எதிர்வீட்டுக்காரர்களை தொந்தரவு செய்யும் என்ற சிந்தனையின்றி.          எங்கே பயிற்சி எடுத்து என்னை உளவு பார்க்கிறது இந்த நிழல்.            தெரு விளக்கு எரியவில்லை மேடு பள்ளம் எதுவென்று யூகிக்க முடியவில்லை தூரத்தில் நாயொன்று கொலை வெறியுடன் குரைக்கிறது மின்சாரத்துக்கு தெரியாது இன்று அமாவாசை என்று.        லாந்தர் விளக்கு வெளிச்சத்தில் மேற் கூரை இல்லாத தங்குமிடத்தில் கிழிந்த ஆடையை தைத்துக் கொண்டிருக்கிறான் நாடோடி.      படுக்கையில் நிலவு என்னோடு வைகறையில் எப்போது எழுந்து சென்றதோ.          மழையின் ஒவ்வொரு துளியும் உடலைத் துளைத்து உள்ளே செல்கிறது.          விடிகாலையில் முதலாய் எழுந்து பார்ப்பாள் புத்தகத்தின் நடுவில் வைக்கப்பட்ட மயிலிறகை.          கால்களை நனைத்தால் அலைகள் கூட குழி பறிக்கும்.         மரத்தை உலுக்கி மழையின் பிரதியில் நனையும் பிஞ்சுகள்.           நள்ளிரவு சுவர்க்கோழி சத்தம் விடியலை நோக்கி ஓடும் கடிகார முட்கள்.     அந்தி விடைபெறும் பரிதி நிலாச்சோறுக்கு ஏங்கும் மொட்டை மாடி.         கைகளில் ஏந்தியுள்ள மெழுகுவர்த்தியை வெளிச்சம் பின்தொடரும்.         நாட்கள் கடந்து போனதால் கிழிந்து போனது காலண்டர் தாள்கள்.           மின்வெட்டு இருளுக்குப் பழகிப்போனது குழந்தைகளின் கண்கள்.           நீலவானம் அந்தியில் தனது ஆடையை மாற்றிக் கொள்ளும்.                 அவளுடைய பாதத் தடத்தில் நிரம்புகிறது மழைநீர்.       தேரோட்டி சன்னாவின் வழித்தடத்தில் எத்தனை பிணங்களோ.         போதி மரம் காத்திருந்தது சாமானியனை புத்தனாக்க.         அசையும் மரங்கள் காற்றின் கரங்கள் கிளையை உலுக்கும்.           குளிர்ந்த காற்று மேனியில் மோதுகையில் தூக்கம் கலைகிறது.           கவலை ரேகைகள் தெரிகின்றன நெற்றிச் சுருக்கங்களில்.       பனிப்பொழிவை பொருட்படுத்தாமல் தனது அங்கியை கொல்லை பொம்மைக்கு போர்த்தி சென்று இருக்கிறான் ஒருவன்.   எத்தனை சூரியோதத்தை சந்தித்திருக்கும் இந்தப் பூமி.         புல்லிதழ்களினன் மீது படிந்திருக்கும் பனித்துளியில் ஆகாயம் பிரதிபலிக்கிறது.         டைரிக் குறிப்பு ஆறின காயங்களுக்கு மருந்திடுகிறது.         பாபம் செய்தபடி நடமாடும் பிணங்களுக்கு கல்லறைகள் எதற்கு.           இணையை இழந்தவுடன் தன்னையும் மாய்த்துக் கொள்கிறது அறுதலிப்புறாக்கள்.             குடும்பத்தில் சிலரது பெயர்கள் நீத்தார் நினைவுத் தூணில் மட்டுமே இடம்பெறுகிறது.         மறையும் குமிழிக்காக கவலை கொள்வதில்லை அலை.         நரகத்தின் பெருங்கதவுகள் மூடப்படுவதில்லை சொர்க்கத்தின் பெருங்கதவுகள் திறக்கப்படுவதில்லை.         இந்த இடுகாடு என்னுடைய மரண ஊர்வலத்துக்காக காத்திருக்கிறது.         அப்பாவின் பிரிவை ஜீரணிக்கும் முன்பே அம்மாவுக்கு அழைப்பு வந்துவிட்டது.       எத்தனை பேரின் தலையெழுத்தை மாற்றி எழுதுகிறார் ஜோதிடர்.         ஜாதகக் கட்டங்கள் நிர்ணயிக்கிறது பெண்ணின் வாழ்வை.         விதியே என்று சகித்துக் கொள்ளாமல் போனால் வாழ்வை எதிர்கொள்வது இன்னல் தரக்கூடும்.   பாதத்தின் கீழே குழிபறிக்கும் அலைகளுக்குத் தெரியாது இவன் ஏற்கனவே இறந்தவனென்று.           உறக்கத்தில் இருக்கும் மரங்களை உசுப்பிவிட்டுப் போகிறது மழை.             பொங்கலுக்கு வீட்டை சுத்தம் செய்யும் போது பரண் மீது அணில் கட்டிய கூட்டினை கலைத்துவிட்டோம் அந்தியில் கூடு திரும்பிய அணில் எப்படித் தவித்திருக்கும் என்ற குற்றவுணர்வு மட்டும் அடுத்த பொங்கல் வரை நெஞ்சைவிட்டு நீங்கவில்லை.         புளிய மரம் கல்லடிபட்டது பக்கத்திலுள்ள தென்னை மரம் போல ஆகியிருக்கலாமே  என ஆசைகொண்டது அந்தத் தென்னை மரத்திலிருந்து தேங்காய் தோட்டத்து முதலாளியின் கையில் விழுந்து அவரை முடமாக்கியது அடுத்த நாளே தென்னைமரம் வெட்டப்பட்டது இப்போது இல்லாமல் போய்விட்ட தென்னை மரத்தைப் பார்த்து புளியமரம் இரக்கப்பட்டது.         காலடியில் மலர்கள் பூத்தது இவன் பார்த்தும் பறிக்காத மலர்கள்.           மேகம் மூடிய வானத்தில் மின்மினிப்பூச்சியையே விண்மீன் என சுட்டிக் காட்ட நேர்ந்தது.         குளிர்காலத் தனிமை கணப்பு அணைந்துவிட்டது கிடுகிடுத்தது பற்கள்.         மலைகள் எதிரொலிக்கின்றன, இறந்தவர்களை அழைத்துப் பாருங்கள் அவர்கள் உங்களுக்காக இந்த மலைமுகட்டில் காத்துக் கிடக்கலாம்         அருவருப்புக் கருதியே ஈக்களை அடித்து எறும்புக்கு வழங்குகிறோம்.     மலை உச்சியை அடைந்த பிறகு நான் விட்டுச் செல்வது என் தடங்களை மட்டுமே.       பாதங்களை மரத்துப் போக வைக்கும் கடுங்குளிர் கணப்பு அணையாமலிருக்க இன்னமும் வேண்டும் காய்ந்த  சுள்ளிகள்.         சூறாவளியில் சாய்ந்த மரத்தின் வேர் வானம் பார்த்துக் கிடந்தது.       வீழ்ந்த இலைகளை அப்புறப்படுத்துகிறது காற்று வசந்தகாலத்தை வரவேற்கும் விதமாக.           மூடுபனியினூடே சத்தமும், வெளிச்சமும் பயணிக்க முடியவில்லை.         மனிதர்களுக்கு அப்பால் மறைந்து போனாலும் நிழல் துரத்திக் கொண்டு வருகிறது.         புனித நதிகளில் எல்லாம் சடலம் மிதக்கிறது. புகைப்படத்தில் இருப்பவர் மரித்தாலும் நிழற்படம் நம்பிக்கை கொடுக்கிறது.         வாழ்க்கையில் பிடிப்பிழந்தவர்கள் கடைசியாகத் தேடுவது கிளிஜோசியனை.       பலியிடப்படவேண்டிய ஆடுகளுக்குத் தான் அனைத்து அலங்காரங்களும்.       தர்காவில் தீனி தின்று தேவாலயத்தின் மீதமர்ந்து இறகு கோதி கோயிலில் தஞ்சமடைகின்றன அறுதலிப் புறாக்கள்.       சல்லடை போட்டு தேடியாகிவிட்டது கடல் தான் களவாடிப் போயிருக்கும் உன் காலடிச்சுவடை.         தேவதைகளின் பயிற்சிக் கூட்டத்தில் குழந்தைகள் வகுப்பெடுத்தன.             புழங்குவதற்கு காவேரி அஸ்தியைக் கரைப்பதற்கோ கங்கை.         அடர் வெண்பனி மூடியிருந்தது சாலையை விடியலை வரவேற்கும் விதமாக கருங்குயில் மரக்கிளையில் அமர்ந்து ஆனந்தமாக பாடிக் கொண்டிருந்தது.           தீபத்தை ஏற்றி வைத்து தீக்குச்சி கரியானது.       நகர்ந்து கொண்டிருக்கும் நதியலையில் எனை பார்த்துச் சிரிக்கும் என் பிம்பம்.         மலை முகட்டில் சூரியன் இனி எல்லோருடைய கால்களிலும் மிதிபடும் கிரணங்கள்.         வளர்ந்து தேய்கிற நிலவு அமாவாசையன்று வருத்தப்பட்டிருக்குமா?       மலையின் மௌனம் பீதியடையச் செய்கிறது செடியிலுள்ள ஒற்றை மலரை.       மரணக் குகையில் நுழையும் வசந்தகாலத்தை பின்தொடர்வதில்லை மலர்கள்.       உணர்ந்து கொண்ட உண்மையால் சிலை போல் சமைந்தேன் தேடி வருகிறார்கள் மது, மாமிசத்துடன் வெகு ஜனங்கள்.   முற்றாக அழிந்த பின்பே முளைவிடுகிறது விதை.         நிலவை சுட்டிக் காட்டும் போது மற்றது அனைத்தும் மறைந்து போய்விடுகிறது.         போதி மரத்தடி தேடுகிறது இன்னொரு புத்தரை.         நித்யத்திற்கு ஆசைப்பட்ட எவரும் மரணத்திற்கு தப்பியதில்லை.     வார்த்தைக்கு ஒரே அர்த்தம் மௌனத்திற்கு ஆயிரம் அர்த்தம்.         மயானப் பாதையில் சிதறிக் கிடக்கும் பூக்களிலிருந்து பிணவாடை.         பந்தியில் சோறு மீந்தது வெளியே பிச்சைக்காரர்கள் பசியோடு.       கல்யாண வீட்டில் களவாடிய செருப்பு திருவிழாக் கூட்டத்தில் தொலைந்து போனது.         கருப்பசாமிக்கு நேர்ந்துவிட்ட கோழியும், ஆடும் தன்னுடைய விதி தெரியாமல் மேயும், கூவும்.         விடுமுறை நாளில் இயேசுவுக்கு வேலை பாவிகள் சுமந்து வரும் குழந்தைகளே ஒரே ஆறுதல்.       திருவோட்டில் இட சில்லறையைத் துழாவும் போது நான் கையேந்த நேர்ந்தால் நாலு பேர் பிச்சை போடுவார்களா என்று எண்ணாமல் இருந்ததில்லை.   சிதைக்கு தீ மூட்டிய பின்பு சிகரெட்டை புகைத்தபடி வெட்டியான் விறைத்து எழும் பிணத்தை தலையில் அடிப்பான்.       நீண்ட மௌனத்திற்குப் பிறகு வெளிப்படும் வார்த்தைகளில் ஏதோ உண்மை இருக்கிறது.       சுவரொட்டியில் கிரிக்கெட் போட்டிக்கு அழைப்பு காசு சம்பாதிக்க இது சீஸன் பொழப்பு.         நேற்றிரவு பெய்த மழை என்னை மட்டும் நனைக்கவில்லை.           இனி உடை உடுத்தும் போது என்னை நினைத்துக் கொள்.       காகம் கத்தியது அதற்குத் தெரியாது உன்னைத் தவிர எனக்கு வேறு சொந்தம் இல்லையென்று.   உன் காலடித்தளத்தில் தாமரை பூக்கக் கண்டிருக்கிறேன்.       காதல் சந்திப்பை கடந்து சென்றுவிட்டது நாம் பயணிக்கும் ரயில் சந்திப்பில் இறங்கியவர்களை இனி எப்போது சந்திப்போம்.       குடை கொண்டு வந்தால் கூட எல்லை மீற சமயம் பார்க்கிறது மழை.       தாழிடப்பட்ட கதவின் உள்ளே நானும் அவள் நினைவுகளும்.         அவிழ்ந்த கூந்தலில் அவளைப் பார்க்கையில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் மனதில் சிறகடிக்கும்.         வருடங்கள் விரைந்தோடுகிறது கனவில் முத்தமிட்டு மறைந்து போனவள் இனி எப்போது வருவாள்.   அந்தியில் ஆயத்தமானேன் என்னவளை வரைவதற்கு விடியலுக்குள் ஓவியம் உயிர் பெற்றுவிடுமா.       காதலிக்கும் போது குளத்துநீர் தெளிவாயிருந்தது கல்யாணத்திற்கு பிறகு களையும், பூண்டும் மிகுந்துவிட்டது.         தலையை நீட்டாதே பாழும் கிணற்றிலிருந்து யாரேனும் பார்த்துவிடுவார்கள் உன்னை.       உனக்காக நதிக்கரையில் காத்திருந்தேன் தோன்றிய கணமே மறைந்துவிடுகின்றன நீர்க்குமிழிகள்.     உனது புன்னகையில் வழுக்கி விழுந்தேன் இன்னும் எழமுடியவில்லை.     நந்தனைப் போன்று வாயிலில் நிற்கிறேன் நந்தி எப்போது நகரும்.   நாடோடியாய் வந்தேன் நீ விலாசம் தந்தாய்.   அலைபேசியை அணைத்து வைக்கிறாய் நிலைகொள்ளாமல் நான் பரிதவிக்கிறேன்.       மீட்டாத வீணையாய் நீ இருக்கின்றாய் நான் தினமும் தண்ணீரில் மூழ்கி சாதகம் செய்கின்றேன்.       நீ வரலாறு படிக்கிறாய் நானல்லவோ தெருவெங்கும் மரம் நடுகிறேன்.       என்னைப் பற்றிக் கேட்கும் போதெல்லாம் உன்னைப் பற்றிச் சொல்கிறேன்.       நான் துறவி தான் தேவதையை நினைத்து தேசத்தை துறந்தவன்.       ருசி பார்ப்பவனிடம் தான் சிக்குகின்றன அறுதலிப்புறாக்கள்.       பாசிபடர்ந்த படித்துறையில் வழுக்கி விழுந்தது நீ காயம்பட்டது நானல்லவா.     பிரபஞ்சத்தில் எவருமில்லை உன்னையும் என்னையும் தவிர       உன் காலடித்தடங்கள் பூமியில் பதிவதே இல்லையே ஏன்?       உன்னை சுற்றியதற்கு கோயில் பிரகாரத்தை சுற்றி இருந்தால் கூட வரம் கிடைத்திருக்கும்       பண்பலையில் ஒலிபரப்பாகும் சோக கீதங்கள் உன் கல் நெஞ்சைக் கரைக்காதா?   மருத்துவர் ஸ்டெதஸ்கோப்பை நெஞ்சில் வைத்தார் இதயம் லப்டப் என்று துடிக்காமல் உனது பெயரைச் சொல்லி துடித்தது       மதுக்கிண்ணங்கள் தான் போதை தரும் என எண்ணியிருந்தேன் உன் இரு கண்களைக் காண்பதற்கு முன்           நீ திரும்பிப் பார்த்தால் எரிமலை கூட பனிமலையாய் மாறும்         நீ தொட்டவுடன் வீணையிலிருந்து புது நாதம் எழுந்தது         விரும்பியே விழுகிறேன் காதலில் மட்டும்       உன்னை ஏற்றிக் கொண்டு சென்றால் நம் காதல் படகு ஆற்றில் கவிழாது   கண்ணாமூச்சி ஆட்டத்தில் கண்கள் கட்டப்பட்டிருந்தாலும் என் இதயத்தை திருடியவளை என்னால் கண்டுபிடிக்க முடியாதா?       தேவதைகளுக்கு பொறாமை இறக்கையின்றி காதல் வானில் நாம் பறப்பதைக் கண்டு       காதலன் என்ற ஸ்தானத்திலிருந்து கணவனாக எப்போது பதவி உயர்வு தரப்போகிறாய்         பலுானில் இருவரின் மூச்சுக்காற்று பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன் காற்றில் கலப்பதற்கு முன் உன்னிடம் காண்பிக்க         எவ்வளவு சீர் கொண்டு வருவாய் என்று பார்கப்போவதில்லை என்னை திக்குமுக்காடச் செய்யும் அளவு காதல் கொண்டு வந்தால் போதும்         உன் வீட்டு நிலைக்கண்ணாடி மீது எனக்கு கோபம் எனக்கு முன் உன் அழகைப் பருகுகிறதே என்று       உன்னை சந்திக்காத நாட்களில் தலையணை கண்ணீரால் நனைகிறது       என் வாழ்க்கையில் சோகம் இழையோடும் நீ பிரவேசித்த பிறகு சுவர்க்கம் வாயிலைத் திறந்து என்னை வரவேற்கும்     உச்சி வெயிலில் நின்றால் கூட வராத மயக்கம் உனது பெயரைச் சொன்னவுடனே வந்து விடுகிறது திடீரென்று என் இதயத்தில் எடை அதிகரித்தது உன்னையும் சேர்த்து சுமப்பதால்         மோனலிசா ஓவியம் வரைந்தவன் உன்னைப் பார்த்திருக்க மாட்டான்       கோபுரம் தாங்கி சிற்பமொன்று என்னிடம் ஒன்று சொல்லிச் சென்றது அவள் வருகையால் புனிதமடைந்தது கோயில் என்று       கடற்கரையில் சிற்றலை சேதி சொல்லியது மன்மதனே அவள் அழகில் மயங்கியவன் தானென்று       உன் கண்ணோடு கண் நோக்குகையில் காலம் ஓடுவது தெரிவதேயில்லை       நீ சூடிய பூக்களெல்லாம் மற்றொரு முறை மலர்கிறதே எப்படி?       நீ நலம் விசாரிக்கும் போது தலைவலி தானாய்ப் பறந்து விடுகிறது.   புழக்கமில்லாத வீட்டில் சிட்டுக்குருவி புதுக்குடித்தனம்.       ஐந்தாவது மாடியிலிருந்து கீழே பார்க்க எறும்புகளாய் ஜனங்கள்.       நிலவுத்தட்டில் பரிமாறப்பட்ட உணவு நான் நீ என்ற போட்டியால் நாய்க்குப் போனது.       புல் தயங்குகிறது விடியலில் பனித்துளிக்கு விடைகொடுக்க.       நீர் ஊறுவதற்கு முன்பே நரபலி கேட்கிறது ஆழ்துளைக் கிணறு.       சாளரம் வழியே சவஊர்வலக் காட்சி எத்தனைப் பூக்கள் சிதைந்து அழியும் செருப்புக்கால்களால்.         அடுக்களையில் வியர்வை வழிய சமையல் செய்தவள் சாப்பிடுவதென்னவோ மிச்சத்தைத் தான்.     உன்னைப் பார்க்கத்தானோ கடல் கரை தாண்டி வந்தது.         யாருக்கும் தெரியாது நீ பகலில் உலாவும் வான் நிலவென்று.       திருவோடு ஏந்தி உன் முன்பு நிற்கிறேன் காதல் பிச்சையிடுவாயா?         வண்டாக சுற்றிவருகிறேனே கல்லான உன் இதயம் கரையாதா?       உலகை இரட்சிக்க வந்த ரட்சகன் கூட உன்னைப் பார்த்ததும் தன்னை மறப்பான்.       உனது பார்வைகளால் எனது பாவங்கள் கழுவப்படுகின்றன.       நீ அலங்கரித்துக் கொண்டு வந்திருந்தால் நான் தவத்தினை கலைத்திருக்க மாட்டேன்.     உனது சுயம்வரத்தில் கலந்து கொள்ள நான் இளவரசனல்ல இருந்தாலும் எறும்பு மலை ஏற ஆசைப்படுவதில் தவறில்லையே!       நீ வெயிலில் நடந்தால் வானம் குடை விரிக்கிறதே.       கண்கள் கூசுகிறது உன் சிரசை சுற்றி ஒளிவட்டம்.         எனது பாதத்தின் மீது கால்களை வை துாரத்தை நாம் சேர்ந்தே கடப்போம்.       உனது கால்களில் மிதிபடுவதற்கு கூட பூக்கள் வரம் வாங்கி வந்திருக்குமோ.       விழிகள் போடும் கோலங்களை எவரால் அழிக்க இயலும்.           சொல்லாத காதல் ஊமை பேசா வார்த்தைகள் ஆகிப்போகும்.           கண்களால் பற்ற வைத்துவிட்டேன் பற்றி எரிவதால் கூட உன் இரும்பு இதயம் கரையாதா?       உனது பார்வையை அர்த்தப்படுத்திக் கொண்டால் நீ எனக்கு முன்னூறு முத்தமல்லவா தந்திருக்க வேண்டும்.       மகுடம் அணிவதில் பெருமை இல்லை காதல், சிலுவையில் அறைந்தாலும் ஏற்றுக் கொள்வேன்.       மார்கழியில் வீட்டு வாசலில் வண்ணக்கோலமிட்டாய் நானல்லவோ பூசணிப்பூவுக்காக காடு,கரையெங்கும் அலைந்து திரிந்தேன்.     இதயத்தில் காதை வைத்து கேளேன் உன் பெயரைச் சொல்லி துடிப்பதை.   எந்நேரமும் உன் நினைப்பிலேயே இருக்கிறேனே உனக்கு புரையேறுவதில்லையா?           பேருந்தில் உன் மூச்சுக் காற்று மேனியில் பட செயலற்று நின்றிருந்தேன் இப்படியே இருந்துவிடக்கூடாதா.       இன்னும் புகைந்து கொண்டிருக்கிறது நீ ஏற்றிய காதல் தீயால் எனதுள்ளம்.       இரு கரைகளுக்கு மத்தியில் ஓடிக்கொண்டிருக்கிறாய் நான் சமுத்திரமாய் உன் வரவை எதிர்பார்த்திருக்கிறேன்.         அலைகளில் கால் நனைத்தாய் ஜலமெங்கும் அமிர்தமானது.         கடைக்கண் பார்வை போதும் வற்றிய பேராற்றில் ஜீவ நீர் ஓடும்.   கங்கையே உன் பாதம் பட்டுத்தான் புனிதப்பட்டது.       உனது சதங்கை சத்தம் அருகில் கேட்க ஒரு வினாடி நின்று துடித்தது இதயம்.   உனக்கு வெளிச்சத்தை பரிசளித்து நான் மெழுகாய் உருக தயாராய் இருக்கிறேன்.       தேவி காத்திருக்க தேவன் தோன்றவில்லை எங்கும் வியாபித்து இருப்பவன் உடலெடுத்து எப்படி இறங்கி வருவான்.       விழி இரண்டால் சமர் புரிகிறாய் நான் நிராயுதபாணியாய் உன் காலில் விழுகிறேன்.       மென்பஞ்சுப் பாதங்களால் மண் அளக்கிறாய் நான் சாதாரண மானிடனாய் உன்னை வணங்கி நிற்கிறேன்.   ஆசையை உள்ளத்தில் பூட்டி வைக்கிறாய் எங்கே அந்த சாவியை வீசித் தொலைக்கிறாய். கலைத்துப் போடப்பட்ட பொருட்களின் மத்தியில் வெளிநபர்களின் பார்வையிலிருந்து மறைக்கப்பட்ட மதுக்கிண்ணங்கள்.       இவ்வளவு அவசரப்பட்டிருக்க வேண்டாம் தாழிடப்படாத கதவை திறப்பதற்கு அலங்கோலமாக உள்ள வரவேற்பறைதான் எத்தனை அழகு.       அலுவலக பணி நிமித்தம் முகமன் கூறி கைகுலுக்கும் போது புன்னகைப் பிரதி ஒன்றை வெளிப்படுத்த நேர்கிறது.       எவராலும் கண்டுபிடிக்க முடியாத மறைவிடம் தேடினேன் எங்கேயும் பின்தொடர்ந்து வந்துவிடுகிறது நிழல்.           அவள் நனைவதால் கரைந்துவிடுவதில்லை தான் இருந்தாலும் அவளின்றி குடையில் செல்ல எனக்கு மனமில்லை.     தேவாலயத்தில் காலணி காணாமல் தேடினாயே களவாடியது நான் தான் நீ இதயத்தை தர மறுத்தாய் உன்னைத் தாங்கியதாவது என்னிடம் இருக்கட்டும் என்று உன் நினைவாய் பத்திரப்படுத்தி வைத்தேன்.       பூக்களுக்கு புனிதர் பட்டம் உன் கூந்தலை அலங்கரித்ததினால்.       மாலையில் தான் பூங்காவில் அவளைப் பார்த்து வந்தேன் இருந்தாலும் கதகதப்பு தேடும் இரவு தான் எத்தனை நீளம்.       அஸ்தமனத்துக்கு பின் பூமியில் பிரகாசம் உனது சிரசைச் சுற்றி ஒளிவட்டம்.       பனியால் உடல் நனைகிறது இருந்தாலும் நீ ஆசைப்பட்டுவிட்டாயல்லவா மலையில் தனித்திருக்கும் மலரொன்றை.   உறக்கம் வரவில்லை அவளுக்கு, படுக்கையில் கண்மூடியபடி உன் நினைவெனும் சப்த நெசவை அசைபோட்டவாறு நேரம் கழிகிறது.       நீரலைகளில் அசைகிறது நிலவின் பிம்பம் அள்ளிய தண்ணீரிலும் அதே பிம்பம்.       சிகரெட் கொஞ்சம் கொஞ்சமாக சாம்பலாய்ப் போவதைப் போல நினைவுகளும்.       நீண்ட இரவு ஆடைகளின்றி வானம் விடைபெற்றுக் கொள்ளும் நிலவு அந்தியில் உதயமான அதே நிலவு தானா?   மார்கழி அதிகாலை இலைகளிலிருந்து வழியும் பனித்துளி சேலையால் முக்காடிட்டால் அழகு புதைந்துவிடுமா?       வாழ்க்கை கதையின் இறுதி அத்தியாயத்தை யார் எழுதுவது.   உதிர்ந்த இலை சருகாகி கூட்டிய வாசலை குப்பையாக்கும்.         பேசியது பேசியபடியே எல்லை மீறிபடியே நீ விளக்கை அணைத்தாலும் இருளையும் ஊடுருவும் அவன் கண்கள்.       கடந்த காலக் குப்பையில் எது கிடைத்தாலும் புதையல் தான்.       வேண்டுதல்களோடு வரிசையில் பக்தர்கள் தவழும் குழந்தையை தூக்கி கொஞ்ச பத்து கரங்கள் போதவில்லை கடவுளுக்கு.         காலி ஊஞ்சல் காற்றில் ஆடுகிறது முன்னும் பின்னும்         சத்தமிடாதீர்கள் அவன் கல்லறையிலாவது நிம்மதியாக உறங்கட்டும்   ஆயுளில் ஒரு முறையாவது ஆணியில் அறையப்படுகிறோம்       விரிசலடைந்த சுவரில் ஆணி இறங்குகிறது கையை காயப்படுத்தி       கிளிஞ்சல்கள் பொறுக்கும் முன்பு கடலைப் பாருங்கள்       யாருமற்ற அறையில் காற்று புரட்டுகிறது புத்தகங்களின் பக்கங்களை       எப்படி குடை பிடித்தாலும் நிழல் நனைகிறது       கடக்க கடக்க தொலைவு குறைகிறது நடக்க நடக்க கால்கள் நோகிறது விழுதுகள் தானே மரத்தினைத் தாங்குகிறது       நீல வானம் சிற்றலைகள் கடலோரத்தில் கிளிஞ்சல்கள் பொறுக்கும் சிறுவர்கள்.   நள்ளிரவு அடுக்களையில் பாத்திரத்தை உருட்டும் பூனை       அந்தகார இருளில் கொல்லை பொம்மையின் வெள்ளை உடை பளிச்சிடுகிறது       விடிந்ததும் தான் தெரிந்தது கொல்லை பொம்மையின் மீது மின்னல் விழுந்தது       இன்னொரு விடியல் நேற்று பார்த்த அதே வானம்       காலணி சேற்றில் பதிய எதிர்பார்க்காத கோடை மழை         இலையுதிர் கால மாலை தனித்திருப்பது ஏக்கத்தைத் தருகிறது அவளை எங்கே தேடுவது       அவள் கூந்தலை அலங்கரிக்க தவமிருந்ததா ரோஜா       இம்சிக்க வேண்டாம் கவனமாய்க் கடந்து செல்லுங்கள் விலங்குகள் பசித்தால் மட்டுமே வேட்டையாடும்         அனுமதியின்றி உனைத் தீண்ட மழையாக இருந்திருக்க வேண்டும்       திரும்பிப் பார் நான் உன் நிழலுக்கு குடை பிடிப்பதை         தேவாலயத்தில் உன்னைப் பார்த்தேன் உனக்கு கூட வேண்டுதல் இருக்குமா?       வெள்ளத்தில் மிதக்கும் காகித கப்பல் நனைந்துவிடாதபடி குடை பிடித்துக் கொண்டிருந்தார் கடவுள்.       போக்கிடம் வேறு இல்லை சத்திரத்தில் பசியாறுவதும் திண்ணையில் படுத்துறங்குவதும் நாடோடிக்கு புதிதில்லை.         கண்ணெதிரே பனிப்பாறை சிற்பியின் பார்வையில் சிலை       மருந்துச்சீட்டில் நோயாளியின் தலையெழுத்து       நோய்ப்படுக்கையில் விழுந்தவனின் நாட்களும் இலையுதிர்த்து மூளியாய் நிற்கும் மரங்களும்       வெள்ளம் அடித்துச் சென்ற சிலை மீனவனின் வலையில்       அகன்ற கடலில் இறந்த மீன் கரை ஒதுங்கும்         மழை ஓய்ந்தது தேங்கிய குட்டையில் வெள்ளம் வடிந்தது         சாலையை கடக்கும் ஆட்டு மந்தையை ஒழுங்குபடுத்தும் ஆட்டிடையன்       வசந்தகாலத்தை வரவேற்க பாடல் பாடும் அக்காக்குருவி         அடை மழை சிள்வண்டுகள் பூவை நாடும்         நள்ளிரவு நிற்கவில்லை சுவர்க்கோழி சத்தம்     கத்தும் தவளை அறிந்திருக்கவில்லை பாம்பின் பசியை         இயேசு படத்தை சுவரில் மாட்ட ஆணி அறைகிறேன்           மழை காலத்தில் எத்தனை குளியல் மரங்களுக்கு       மொட்டைப் பனைமரத்தில் ஒரு காகம் தூக்கத்தில் கூட யோசிக்க வைக்கிறது   புரியாத சிலபஸ் சுமையாகும் புத்தகப்பை ஏட்டில் சுதந்திரம்         தரித்திரம் விளக்கேற்றும் வேளையில் வாசல் கதவைத் தட்டும்         காட்டுப்பாதை இதழ் விரித்த ரோஜா சூடிக் கொள்ள யாருமில்லை மென் முத்தம் கூட சப்தம் கேட்கும் வனம்           மனிதர்களுக்கு அடுத்த பிறவியில் விருப்பமில்லை கடவுள் குழந்தையுடன் தூங்கும் பொம்மையாக மாற பேரவா கொண்டிருந்தார்         தொண்டை கிழிய பாகவதர் கத்தியும் செவிமடுக்காத கடவுள் தொட்டிலில் குழந்தை சிணுங்கியதும் ஓடோடி வந்தார்         குருட்டு பிச்சைக்காரன் திருவோட்டில் ரூபாய் நோட்டு             சிக்னலில் கையேந்தும் பிச்சைக்காரி கார் கண்ணாடிக் கதவு மூடியபடியே கடந்து செல்லும் வாகனம்       பழுத்த இலை உதிர்ந்த சிறகு வாடிய மலர் இயற்கை, தோன்றும் போது மகிழாது மறையும் போது வருந்தாது.           நேற்று வரை கம்பீரமாய் நின்ற கொல்லை பொம்மை இன்று சூறைக்காற்றில் வானம் பார்த்தபடி       தேவாலய மணியோசை கேட்டு கண்விழிக்கையில் இன்னுமொரு நாள் வாழ்வதற்று வாய்ப்பளித்த தேவனுக்கு நன்றி சொல்லச் சொல்லி அக்காக் குருவி கீதம் பாடியது.         தினமும் ஒரு பொம்மையை உடைத்து விளையாடுகிறது குழந்தை பொம்மைகளுடன் காத்திருந்த கடவுள் குழந்தையின் கைப்பட வரிசையில் நின்றிருந்தார்.         காந்தி சிலை வருடத்துக்கொருமுறை மலர் மாலை         சிதிலமடைந்த சுவர்களுக்குக் கீழே தான் அவர்களின் படுக்கை         முன்பனி காலம் ஜன்னல் வழியே ஒரு பழைய பாடல்       இரைக்கு ஆசைப்படும் மீன் மீனவனின் தூண்டிலில் சிக்குகிறது.             காற்று ஓய்ந்துவிட்டது தூறல் நின்றுவிட்டது நிலவு தோன்றிவிட்டது என்றாலும் குடையையே கைகள் துழாவுகிறது.         மூடுபனி மங்கலாய் வெளிச்சம் கணப்பு அணையவில்லை.         கதவை திறக்க பயம் காவல் நாய்க்கு மாமிசம் தேவைப்படலாம்.           கண்விழிக்கிறேன் எதிரில் எதுவும் தென்படவில்லை வெளியே மழை.         காற்றின் சீற்றம் தடதடக்கும் மழை ஜன்னல் அருகே சாரல்.         கடைசி இலை மரத்தின் பிணைப்பை விடுவதாய் இல்லை பனிக்காற்று பற்கள் கிடுகிடுக்க.       கொல்லை பொம்மை காற்று வீசும் திசையில் சாய்ந்தபடி.           கதகதப்பூட்டும் கணப்பு நகர்வதற்கு இடம் தரவில்லை வெளியே பனிமழை       நள்ளிரவு பூனை பிறாண்டியது உணவுப் பருக்கைகள் ஒட்டியிருந்த கைகளை         திருமண விருந்தில் கொஞ்சமாவது மிச்சம் வையுங்கள் எச்சில் தொட்டிலில் மிச்சத்தை எதிர்பார்த்து நாய்கள்.         தாய்ப் பறவை வழி தவறியது குஞ்சுகளை இயற்கை பொத்தி பாதுகாத்துக் கொள்ளும்.         படுக்கையறையில் நான் வெளியே வானம் விழித்திருக்கிறது.       இப்போது மின்கம்பங்கள் துணி உலர்த்தவே உதவுகிறது.       இரு கரைகளுக்கு மத்தியில் ஆங்காங்கே தண்ணீரின் ரேகைகள்.       வானை முட்டி நிற்கும் மூங்கிலில் புல்லாங்குழலாவது எது?       முன்னிரவில் தூக்கம் தூண்டில் போட வைகறை வீட்டின் கதவைத் தட்டியது.         கண்ணாடி அணிந்து கொள்வது ஆடம்பரமாகத்தான் தெரிந்தது கண்ணாடியுள்ளிருந்து பார்த்தேன் அப்போது நினைத்தது பைத்தியக்காரத்தனம் என்று தெரிந்தது.         அகம் காட்டும் நிலைக்கண்ணாடிக்கு முன்பு யாரும் வர அச்சப்பட்டார்கள்.           பிறர் டைரியை வாசிப்பது அந்தரங்கத்தை வேவு பார்ப்பது போன்றது.     நிலாச் சோறு வானில் சந்திரனைக் கணோம்.       அலைகளில் மிதக்கும் நிலவு வெள்ளித் தட்டு என கைவிட்டு  துழாவும் குழந்தை.     வானத்தில் உள்ள வெண்ணிறப் பந்து எப்போது தன் கைமேலே விழும் என கைநீட்டுகிறது குழந்தை. வண்ணத்துப்பூச்சி தேன் உண்ட மயக்கத்தில் அசைவேதும் இல்லாமல் கோபுரத்தில் ஓய்வெடுக்கும்.       பின் தொடர்வார் யாருமில்லை நிலவைத் தவிர.     அஸ்தமனச் சூரியன் கிழக்கில் நிலவு வெளிச்சம் விடைபெற்றுக் கொள்ள வானம் இரவு ஆடை அணிகிறது.   போர்க்களத்தில் குருதி வாடை இருதரப்பு வீரர்களும் மாண்டால் ஒன்றாகத்தான் எரியூட்டுவார்கள்.         வேரும் தண்டும் இலையும் நீரினுள்ளே வர்ணிக்க முடியாத பேரழகோடு தாமரை இதழ் விரித்தது தண்ணீருக்கு மேலே.       பாலம் அப்படியே இருக்கிறது வண்டி மாடு நீரின் குறுக்கே செல்கிறது.             வீட்டைப் பிரகாசமாக்க சிறிய தீக்குச்சியை கிழித்தால் போதும்.       உறக்கம் வராத நீண்ட இரவில் இம்சிக்கும் குறட்டை சத்தம்     விடிகாலை காகத்தின் கூட்டில் குயில் குஞ்சு   பூட்டப்பட்ட கதவு எவரெவர் எங்கெங்கு     விழித்தபின் தான் உணர்ந்தேன் புதிய வீட்டிற்கு குடிபெயர்ந்திருப்பதை     இடுகாட்டின் அருகில் வசிப்பவன் போதையில் பிணம் போல் படுத்துக் கிடந்தான்     குளிர் இரவு கணப்பு அணைந்தது உடல் விறைத்தது     கீறல் விழுந்த குறுந்தகடு குப்பைக் கூடையில். கதவு தாழிடப்பட்டது திருட்டுப் பூனை தவித்துப் போனது     பேருந்து நிறுத்தத்தில் நிற்கவில்லை கொளுத்தும் வெயில்     மழை கொட்டியது குடையை மறந்து வந்த நாளில்     சந்தடி இல்லாத வீதி நிழல் மட்டும் துணை வரும்     காயம் பட்ட புறா விழுந்து துடித்தது என்னை அழைத்ததோ     இரவு மேஜையில் உணவு அருகே கணப்பு எரிகிறது     நெளியும் எதைக்கண்டாலும் அருவருப்பாய் இருக்கிறது     வெளிச்சம் இருளை விரட்டியது இரவு இருட்டின் கரங்களில் உலகை ஒப்படைத்துச் சிரித்தது. வீதி உலா ராட்சச ராட்டினம் மக்கள் கூட்டம்     மண்வாசம் கதவு திறக்க மழை வலுக்கும் ஜோடிப் பொருத்தம் கண் பட்டது மணமக்கள் மீது     மைதானம் சிறுவர்கள் உடைந்த பந்து     உச்சி வெயில் கொதிக்கும் மண் அறுந்த செருப்பு     மரங்கள் உரச தீப்பிடிக்கும் மழை அணைக்கும்     கண்கள் இருள தலை சுற்ற மரணத்தின் முன் அறிவிப்பு     வீதி வெறிச்சோடியது கோயிலில் தங்கப் புதையல்.     வெற்றுக் காகிதம் வெளியே மழைத் தூறல் இயற்கை கவிதை எழுதுகிறது. மனக்கதவு திறந்தது மழைத் தூறல் தேகம் தொட்ட போது. பெருமழையில் தேவாலய மணியோசை சன்னமாக கேட்கிறது. புதிய ஆண்டு கடந்த காலம் ஞாபகங்களில் மட்டும் நிழலாடுகிறது. குடையில்லை நனையவில்லை கனவில் பெய்த மழை. காகிதக் கப்பலுக்கு குடை பிடிக்கிறாள் மழையில் தொப்பலாக நனைந்து கொண்டே... மாலையில் வீடு திரும்பினேன் மழைக்கு முன்பாக… கடும் காற்று மரம் சாய்ந்தது குருவிக் குஞ்சுகள் வெள்ளத்தில். மழை இரவு கொசுவர்த்தி இல்லை இந்த இரவை எப்படி கழிக்க. அஸ்தமனம் பறவைகள் கூடடையும் மேற்கே ஒரே ஒரு நட்சத்திரம்.   முழு நிலவு ரசிக்கவிடாத பசித்த வயிறு. பிச்சைக்காரன் ஓசையை வைத்தே சொல்லிவிடுவான் தட்டில் எத்தனை பைசா விழுந்ததென்று.                         [photo.jpg]ப.மதியழகன்(28.3.1980)   திருவாரூர் மாவட்டம் – மன்னார்குடி எனும் நகரத்தைச் சேர்ந்தவர் ப.மதியழகன்.நாகை வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக்கில் மெக்கானிக்கல் பிரிவில் டிப்ளமா பெற்றவர்.கீற்று, வார்ப்பு, திண்ணை, உயிரோசை, பதிவுகள், மலைகள் ,உன்னதம் ஆகிய இணைய இதழ்களிலும், நவீன விருட்சம், அம்ருதா, தாமரை,இனிய உதயம் ஆகிய இலக்கிய இதழ்களிலும், குங்குமம் போன்ற வெகுஜன இதழ்களிலும் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளது. முதல் கவிதை தொகுப்பு தொலைந்து போன நிழலைத் தேடி 2008ல் வெளிவந்தது.இரண்டாவது கவிதை தொகுப்பு சதுரங்கம் 2011ல் வெளிவந்தது. மூன்றாவது கவிதை தொகுப்பு புள்ளிகள் நிறைந்த வானம் 2017ல் வெளிவந்தது. நான்காவதாக கட்டுரைகளும்,கவிதைகளுமாக துயர்மிகுவரிகள் 2017ல் வெளிவந்தது.இணைய இதழ்களில் இவரது சிறுகதைகளும் வெளிவந்துள்ளது. படைப்பு, காற்றுவெளி ஆகிய மின்னிதழ்களிலும் இவரது படைப்புகளைக் காணலாம். தற்போது மன்னார்குடியில் தனியார் மையத்தில் கணினி பயிற்றுனராக வேலை செய்து வருகிறார்.