[] [ஓஷோ விழிப்புணர்வுக் கதைகள்] ஓஷோ விழிப்புணர்வுக் கதைகள் ஓஷோ சித் http://www.freetamilebooks.com சென்னை Creative Commons Attribution-NonCommercial-NoDerivs குறிப்பிடுதல் – இலாபநோக்கமற்ற, வழிப்பொருளற்ற (CC-BY-NC-ND) This book was produced using Pressbooks.com. உள்ளடக்கம் - ஓஷோ விழிப்புணர்வுக் கதைகள் - ஓஷோ விழிப்புணர்வுக் கதைகள் - ஆசிரியரை பற்றி - 1. மனதின் இடைவிடா தீர்மானங்கள் - 2. போதிதர்மரின் வழிகள் - 3. போதிதர்மரின் வழிகள் – தொடர்ச்சி - 4. மரணத்தை மறக்காதே - 5. செயலும் அதைக்கடந்த நிலையும் - 6. அங்குலிமால் - 7. முல்லா நசுரூதீன் - 8. உறங்கும் மனிதன் - 9. மனதின் கதை - 10. வேரும் இறக்கையும் - 11. அடக்கி வைத்தலின் விளைவு - 12. மனிதனின் முடிவுகள் - 13. ஆன்மீக வியாபாரம் - 14. குரு செய்யும் வேலை - 15. ஆன்மீக வியாபாரம் - 16. திறன் பிறந்தது - 17. இரவு அரசன் - 18. ஆன்மீகத்தேடல் - 19. குரு மலர்தல் - 20. தன்ணுணர்வின் கதை - 21. ஆணவத்தின் ஏமாற்றம் - 22. வாழ்வின் உண்மை - 23. இணைப்புணர்வின் கதை - 24. இருப்பின் புனிதம் - 25. ஞானத்தின் பக்குவம் - 26. அறிவுரைக்கான தகுதி - 27. பந்தமின்றி இருத்தல் - 28. புத்தரின் புரிதல் - 29. காலிக் கோப்பை - 30. கூட்டத்தின் பலம் - 31. நீ யார் ? - 32. தேடல் - 33. யார் பிராமணன் - 34. கூட்ட மனப்பான்மை - 35. சொர்க்கம் மற்றும் நரகத்தின் கதவுகள் - 36. பிடிப்பின் வலை - 37. தீட்சை - 38. மனதின் வழி - 39. கடவுளுக்கான சான்று - 40. மோஜுத் விவரிக்கமுடியாத வாழ்க்கையை கொண்ட மனிதன் - 41. பிரபஞ்ச தன்னுணர்வு - 42. சரணாகதியின் கதை - 43. சாட்சிபாவம் - 44. சீடனின்தன்மை - ஓஷோ சாஸ்வதம் - ஓஷோவின் வாழ்க்கைக் குறிப்பு - Free Tamil Ebooks - எங்களைப் பற்றி - உங்கள் படைப்புகளை வெளியிடலாமே 1 ஓஷோ விழிப்புணர்வுக் கதைகள் ஓஷோ விழிப்புணர்வுக் கதைகள்  [Cover Image]   ஓஷோ சித் 2 ஓஷோ விழிப்புணர்வுக் கதைகள் ஓஷோ விழிப்புணர்வுக் கதைகள் ஆசிரியர் – ஓஷோ சித் அட்டைப்படம் – மனோஜ் குமார் – socrates1857@gmail.com மின்னூலாக்கம் –  நவீன் ராஜ் தங்கவேல் naveenrajthangavel@gmail.com மின்னூல் வெளியிடு : http://FreeTamilEbooks.com சென்னை Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International You are free to: Share — copy and redistribute the material in any medium or format.The licensor cannot revoke these freedoms as long as you follow the license terms.   Under the following terms: Attribution — You must give appropriate credit, provide a link to the license, andindicate if changes were made. You may do so in any reasonable manner, but not in any way that suggests the licensor endorses you or your use.   NonCommercial — You may not use the material for commercial purposes.     NoDerivatives — If you remix, transform, or build upon the material, you may not distribute the modified material. No additional restrictions — You may not apply legal terms or technological measures that legally restrict others from doing anything the license permits.   காப்புரிமை தகவல்: நூலில் எந்த ஒரு மாறுதலும் செய்ய அனுமதியில்லை என்ற நிபந்தனையின் கீழ் பதிப்புரிமை வழங்கப்படுகிறது.   3 ஆசிரியரை பற்றி ஓஷோ விழிப்புணர்வுக் கதைகள் ஆசிரியர் – ஓஷோ சித்   http://www.osho-tamil.com எனும் இணையதளத்தை நிறுவியதும் நடத்துவதும் மற்றும் அதில் ஓஷோவின் பேச்சுக்களை தமிழ் மொழியாக்கம் செய்வதும் ஆகியவற்றை செய்துவரும் எனது பெயர் ஓஷோ சித் எனும் ராஜகோபால். எனது இணையதளத்தில் வந்துள்ளவற்றில் தலையங்கம் மற்றும் கவிதைப் பகுதிகள் எனது சொந்த எழுத்துகள். மற்றவை ஓஷோவின் மொழிபெயர்ப்புகள். அன்பும், வாழ்த்தும், சித். 3/184 கந்தம்பாளையம், அவிநாசி, திருப்பூர், தென்னிந்தியா – 641654. கைபேசி: 9789482630, 9894982630        மின்னஞ்சல்: dhyansiddharth@yahoo.com   [pressbooks.com] 1 மனதின் இடைவிடா தீர்மானங்கள் நான் மிகவும் நேசிக்கும் ஜென் கதை ஒன்று உள்ளது. நண்பர்கள் மூவர் காலைநேரத்தில் உலாவ சென்றிருந்தினர். அப்போது அவர்கள் திடீரென மலையில்  ஜென் துறவி ஒருவர் நின்றிருப்பதை கண்டனர். அந்த மூன்று நண்பர்களில் ஒருவன், “அவர் அவருடைய நண்பர்களுடன் வந்திருக்க வேண்டும், இவர் அவர்களை விட முன்னால் வந்திருக்க வேண்டும். அதனால் இவர் அவர்களுக்காக காத்திருக்கிறார் என்று நான் நினைக்கிறேன்” என்று கூறினான். இன்னொருவன், “நீ கூறுவதை என்னால் ஒப்புக் கொள்ள முடியாது. ஏனெனில் அந்த மனிதரை பார்க்கும் போது ஒரு விஷயத்தை என்னால் நிச்சயமாக கூற முடியும். அவர் யாரோ ஒருவருக்காக காத்திருக்கவில்லை என்பதே அது. ஏனெனில் அவர் ஒருபோதும் பின்னால் திரும்பி பார்க்கவில்லை. அவர் வெறுமனே ஒரு சிலையைப் போல நின்று கொண்டிருக்கிறார். தனியாக விடப்பட்டு மற்றவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கும் யாராக இருந்தாலும் சிறிது நேரத்திற்கு ஒருமுறை அந்த நபர் வந்துவிட்டாரா இல்லையா என்று பார்ப்பார்கள். ஆனால் இவர் நகரவே இல்லை. அவர் எந்த நண்பனுக்காகவும் காத்துக் கொண்டிருக்கவில்லை. இந்த துறவியை நான் அறிவேன். அவரிடம் ஒரு பசுமாடு இருக்க வேண்டும், அந்த பசு இந்த அடர்த்தியான காட்டிற்க்குள் தொலைந்து போயிருக்க வேண்டும். இதுதான் இருப்பதிலேயே மிகவும் உயரமான இடம், எனவே அங்கிருந்து அவரால் இந்த காடு முழுவதையும் பார்த்து அந்த பசு எங்கிருக்கிறது என்று கண்டறிய முடியும் என்று அவர் அங்கிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார் ” என்றான். மூன்றாவது நபர், “ உன்னுடைய சொந்த வாதத்தை நீயே மறுத்துவிட்டாய். அவர் பசுவை தேடிக் கொண்டிருந்தால் அவர் சுற்றிலும் பார்த்துக் கொண்டிருப்பார், அவர் ஒரு திசையை பார்த்தபடி வெறுமனே ஒரு சிலையைப் போல அங்கு நின்று கொண்டிருக்கமாட்டார். தொலைந்து போன பசுவை தேடும் வழி இதுவல்ல “ என்று கூறினான். அவன், “ எனக்கு தெரிந்த வகையில் அவர் அவருடைய காலை நேர தியானத்தை செய்து கொண்டிருக்கிறார் “ எனக் கூறினான். ஆனால் மற்ற இருவரும், “ ஜென்னின் அடிப்படை தத்துவமே நீ எங்கு வேண்டுமானாலும் தியானம் செய்யலாம், எதை செய்து கொண்டிருந்த போதிலும் தியானம் செய்யலாம் என்பது தானே. எனவே அந்த மலைக்கு அதிகாலையில் குளிரில் சென்று நின்று கொண்டு தியானம் செய்ய வேண்டிய அவசியம் என்ன?” என்று கேட்டார்கள். “ அவர் அவருடைய கதகதப்பான மடாலயத்தில் அவர்களுடைய தனிச்சிறப்பு வாய்ந்த தியான ஆலயத்தில் தியானம் செய்திருக்க முடியும். அவர் அங்கு இருந்திருக்கலாம் – மலைக்கு செல்ல வேண்டிய தேவை என்ன ? இல்லை இதை நாங்கள் ஒத்துக் கொள்ள முடியாது “ என்று கூறினார்கள். அவர்கள் விவாதித்தனர். முடிவில் அவர்கள் நாம் மலைக்கு செல்வதுதான் சிறந்ததாக இருக்கும். அது நேரத்தை வீணடிப்பதாக இருக்கலாம், ஆனால் அவர் என்ன செய்கிறார் என்று முடிவு செய்ய இதைத் தவிர வேறு எந்த வழியும் இல்லை என்று கூறினார்கள். மனதின் ஆர்வம் அத்தகையது – மிகவும் குரங்குத்தனமானது எதற்காக நீ இப்போது உன்னை சிரமப்படுத்திக் கொள்கிறாய் ? அவர் செய்வது என்னவாக இருந்தாலும் செய்துவிட்டு போகட்டும். அவர் ஒருவேளை அவருடைய பசுவை தேடிக் கொண்டிருந்தால் அது அவருடைய பிரச்னை. ஒருவேளை அவர் அவருடைய நண்பருக்காக காத்துக் கொண்டிருந்தால் அது அவருடைய விருப்பம். ஒருவேளை அவர் தியானித்துக் கொண்டிருந்தால் அது அவருடைய சொந்த விஷயம் – நீ எதற்காக உன்னுடைய மூக்கை  அதற்குள் நுழைக்கிறாய் ? ஆனால் மக்கள் அப்படித்தான் இருக்கிறார்கள். ஒருவருக்கொருவர் விவாதம் செய்ததில் மிகவும் உற்சாகமடைந்து அவர்கள் நாம் மேலே சென்றாக வேண்டும் என்று முடிவு செய்தனர். அவர்கள் வெறும் சிறிய காலை நேர உலாவலுக்குத்தான் வந்தனர் என்பதை மறந்து விட்டனர். மேலும் மலைக்கு செல்வதற்கு பல மணி நேரம் ஆகும் என்பது மட்டுமல்ல மலையிலிருந்து கீழே இறங்கி வரும்போது சூரியன் கிட்டத்தட்ட உச்சியில் இருப்பான் என்றாலும் கூட கேள்வி……… அவர்கள் ஒரு முடிவுக்கு வந்தாக வேண்டும். அது மட்டுமல்ல, உண்மையில் அவர்கள் தாங்கள்தான் சரி என்று நிரூபிக்க விரும்பினார்கள். ஒவ்வொருவரும் நான்தான் சரி என்பதை நிரூபிக்க விரும்பினார்கள். இப்போது அதனை முடிவு செய்யக்கூடிய ஒரே மனிதன் அந்த துறவிதான். அவர்கள் மூச்சு வாங்கிக் கொண்டு அங்கு அடைந்தனர். துறவி அரைக் கண்ணை மூடிக்கொண்டு அங்கு நின்றிருந்தார். அது புத்த மத வழி  –  நீ தியானம் செய்யும்பொழுது, கண்களை பாதி மூடிக் கொள்வது — ஏனெனில் ஒருவேளை நீ கண்களை முழுவதுமாக மூடிவிட்டால் நீ தூக்கத்தில் விழுந்துவிடக்கூடும். அப்போது தியானத்தில் செல்வதை விட தூக்கத்தில் விழ அதிக சாத்தியக்கூறு உள்ளது. நீ ஒருவேளை உன்னுடைய கண்களை முழுவதுமாக திறந்திருந்தால் நீ ஆயிரத்தோரு விஷயங்களில் ஆர்வம் கொள்வாய். ஒரு அழகான பெண் கடந்து செல்கிறாள், அப்போது தியானம் தொலைந்து விடுகிறது. எது வேண்டுமானாலும் தொல்லை கொடுக்கலாம். எனவே கண்களை பாதி மூடிக் கொண்டிருந்தால் நீ வெளியில் என்ன நடக்கிறது என்று சரியாக பார்க்கமாட்டாய், நீ பாதி கண்களை திறந்து வைத்திருக்க வேண்டும் எனவே நீ தூக்கத்தில் விழுந்து விட மாட்டாய். முதல் மனிதன் கேட்டான், “குருவே, நாங்கள் உங்களைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம், ஆனால் நாங்கள் உங்கள் மடாலயத்திற்கு வரும் வாய்ப்பை பெற்றதில்லை. காலை நேர நடைக்காக வந்த நாங்கள் அதிர்ஷ்டவசமாக உங்களைக் கண்டோம். எங்களுக்கு ஒரு கேள்வி உள்ளது. அதற்கு நீங்கள் விடையளிக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். நீங்கள் நண்பருக்காக காத்திருக்கிறீர்களா ?” அரைகண் மூடிய நிலையில் அந்த துறவி, “ எனக்கு யாரும் இல்லை, நான் தனியாக உள்ளேன். நான் தனியாக பிறந்தேன், நான் தனியாகத்தான் இறப்பேன், மற்றும் இந்த இரு தனிமைகளுக்கிடையில் என்னுடன் யாரோ இருக்கிறார்கள் என்று என்னை நானே முட்டாளாக்கிக் கொள்ள முயற்சி செய்யவில்லை. நான் தனியாக உள்ளேன், மேலும் நான் யாருக்காகவும் காத்திருக்கவில்லை “ என்று கூறினார். இரண்டாவது மனிதன் மகிழ்ச்சியோடு, “ அப்படியானால் நிச்சயமாக உங்களுடைய பசு இந்த அடர்த்தியான காட்டில் தொலைந்திருக்க வேண்டும், நீங்கள் கண்டிப்பாக அதனைத்தானே தேடிக் கொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்டான், துறவி, “ வித்தியாசமான அடி முட்டாள்கள்தான் இங்கு வருவார்கள் போலத் தெரிகிறது. என்னிடம் ஒரு பொருளும் இல்லை. என்னிடம் எந்த பசுவும் இல்லை, மடாலயத்தில்தான் அது உள்ளது, அது என்னுடைய வேலை அல்ல, அதனால் நான் எதற்காக பசுவைத் தேடி என்னுடைய நேரத்தை வீணடிக்கவேண்டும் ? என்று கூறினார். மூன்றாவது மனிதன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். அவன், “ இப்போது நீங்கள் மறுக்கமுடியாது. நீங்கள் கண்டிப்பாக தியானம் செய்து கொண்டிருக்கவேண்டும். அப்படித்தானே நீங்கள் உங்களுடைய காலை நேர தியானத்தை செய்து கொண்டிருக்கிறீர்கள்தானே ?” என்று கூறினான். துறவி சிரித்தார். அவர் “ நீதான் மூவரில் மோசமான முட்டாள். தியானம் செய்யப்படுவதல்ல, அது ஒரு செயலல்ல. நீ தியானத்தில் இருக்கலாம். ஆனால் அதை நீ செய்ய முடியாது. அது ஒரு நிலை. எனவே நிச்சயமாக நான் தியானம் செய்து கொண்டிருக்கவில்லை. நான் தியானத்தில் இருக்கிறேன், ஆனால் அதற்காக இந்த மலைக்கு வர வேண்டியதில்லை, எங்கு இருந்தாலும் நான் தியானத்தில் இருக்கிறேன். தியானம் எனது தன்னுணர்வு. எனவே நீங்கள் அனைவரும் சென்று விடுங்கள். மேலும் அரைக் கண்ணை மூடியபடி இருக்கும் யாரையும் ஒருபோதும் தயவுசெய்து தொந்தரவு செய்யாதீர்கள். அதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் “ என்று கூறினார். அப்போது அவர்கள் மூவரும் மன்னித்துவிடுங்கள்….. நாங்கள் முட்டாள்தனமாக நடந்து கொண்டுவிட்டோம், நிச்சயமாக மைல்கணக்கில் கடந்து வந்து உங்களிடம் இப்படிப்பட்ட……. எங்களுக்கு அவமானமாக உள்ளது. நாங்கள் முட்டாள்கள்தான், ஆனால் இப்போது எங்கள் மூவரிடம் இருந்தும் தனித்தனியாக இல்லாமல் ஒரே கேள்விதான். பிறகு நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டனர். அப்போது அந்த துறவி ஏதும் சொல்லவில்லை. அந்த ஏதும் அற்ற தன்மையே சாட்சிபாவம். நீ சாட்சிபாவமாக இருக்கும் பொழுது, நீ ஆச்சரியமடைவாய். அதாவது சலிப்பு. சோகம், ஆனந்தம், பரவசம் – எதுவாக இருந்தாலும் அது உன்னை விட்டு விலகி செல்லத் தொடங்குகிறது. உன்னுடைய சாட்சிபாவத்தன்மை ஆழமாக மாற மாற, சக்தி மிக்கதாக ஆகும்போது, அதிக ஒருமை தன்மை கொண்டதாக மாற மாற எந்த அனுபவமாக இருந்தாலும் – நல்லது அல்லது கெட்டது அழகானது அல்லது அசிங்கமானது – அது மறைந்து விடுகிறது. அங்கு தூய்மையான ஏதும் அற்ற தன்மை உன்னை சுற்றி நிலவுகிறது. சாட்சிபாவம் ஒன்று மட்டுமே உன்னைச் சுற்றியுள்ள அளவிடமுடியாத ஏதும் அற்ற தன்மையை குறித்த உணர்வை உனக்கு ஏற்படுத்தும். மேலும் அந்த அளவிடமுடியாத ஏதும் அற்ற தன்மையில்……அது காலியானது அல்ல, நினைவில் கொள். புத்தமத வார்த்தையான சூன்யதா என்பதை மொழி பெயர்க்க ஆங்கிலத்தில் வேறு எந்த வார்த்தையும் இல்லை. அந்த ஏதும் அற்ற தன்மையில்….. அது காலியானது அல்ல, அது உன்னுடைய சாட்சிபாவத்தால் நிரம்பியுள்ளது, உன்னுடைய சாட்சிபாவத்தன்மையால் நிறைந்துள்ளது, உன்னுடைய சாட்சிபாவத்தின் ஒளியால் நிறைந்துள்ளது. 2 போதிதர்மரின் வழிகள் புத்தருக்கு 600 ஆண்டுகளுக்குப் பிறகு போதி தர்மர் சீனா போய் சேர்ந்த பொழுது அங்கு ஏற்கனவே 30,000 புத்தமத கோவில்களும் மடாலயங்களும் மேலும் 2,00,000 புத்த பிட்சுக்களும் சீனாவிலிருந்தனர். இரண்டு லட்சம் புத்த பிட்சுக்கள் எனபது சிறிய எண்ணிக்கையல்ல. அது சீனாவின் மொத்த மக்கள் தொகையில் 5 சதவிகிதம். பிரயக்தாரா, போதிதர்மருடைய குரு, அவரை சீனாவுக்கு அனுப்பினாள், ஏனெனில் அவருக்கு முன்பு சீனாவுக்கு சென்ற மக்கள் ஞானமடைந்தவர்களாக இல்லாத போதிலும் ஒரு சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தனர். அவர்கள் சிறந்த பண்டிதர்கள், மிகவும் கட்டுக்கோப்பான மக்கள், மிகவும் அன்பானவர்கள், அமைதியானவர்கள், கருணை கொண்டவர்கள் ஆனால் யாரும் ஞானமடைந்தவர்களல்ல. மேலும் இப்போது சீனாவுக்கு இன்னொரு கௌளதமபுத்தர் தேவைப்பட்டார், நிலம் தயாராயிருந்தது. சீனாவை சென்றடைந்த முதல் ஞானமடைந்த மனிதர் போதிதர்மர்தான். நான் தெளிவாக்க விரும்பும் விஷயம் என்னவென்றால் கௌளதமபுத்தர் அவருடைய சங்கத்தில் பெண்களுக்கு தீட்சையளிக்க அச்சப்பட்டார். போதிதர்மர் கௌளதமபுத்தரின் பாதையில் வந்த போதிலும் ஒரு பெண்ணால் தீட்சை பெறும் அளவுக்கு தைரியமுடையவராயிருந்தார். அங்கு மற்ற ஞானமடைந்த மக்கள் இருந்தனர். ஆனால் அவர் ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்தார். இந்த காரணம் என்னவென்றால் ஒரு பெண்ணாலும் ஞானமடைய முடியும், அது மட்டுமல்ல, அவளுடைய சீடர்களும் ஞானமடைய முடியும் என்பதை காட்டுவதற்காகவே. எல்லா புத்தமத ஞானமடைந்த மக்களுக்கிடையிலும் போதிதர்மர் பெயர் தனித்து நிற்கிறது. அது கௌளதமபுத்தருக்கு அடுத்ததாக இருக்கிறது. இந்த மனிதரைப்பற்றி பல செவிவழி செய்திகள் உள்ளன. அவை அனைத்திலும் ஏதோ ஒரு முக்கியத்துவம் உள்ளது. முதல் செவிவழி செய்தி : அவர் சீனாவை அடைந்தபோது – சீனாவை சென்றடைய அவருக்கு மூன்றாண்டுகள் ஆயின. – அவரை வரவேற்க சீனப்பேரரசர் வூ வந்திருந்தார். போதிதர்மருடைய புகழ் அவருக்கு முன்பாக அங்கு சென்றடைந்திருந்தது. பேரரசர் கௌதமபுத்தருடைய தத்துவத்திற்கு சிறந்த சேவை செய்திருந்தார். ஆயிரக்கணக்கான பண்டிதர்கள், புத்தமத புத்தகங்களை பாலிமொழியிலிருந்து சீனமொழிக்கு மொழிபெயர்த்துக் கொண்டிருந்தனர், மேலும் பேரரசர் மொழிபெயர்ப்புகளுக்கு ஒரு சிறந்த காவலராக விளங்கினார். அவர் ஆயிரக்கணக்கான கோவில்கள் மற்றும் மடாலயங்களை கட்டியிருந்தார். மேலும் அவர் ஆயிரக்கணக்கான பிட்சுக்களுக்கு உணவளித்துக் கொண்டிருந்தார். அவர் அவருடைய முழு பொக்கிஷத்தையும் கௌதமபுத்தரின் சேவைக்காக செலவழித்துக் கொண்டிருந்தார். அதனால் போதிதர்மருக்கு முன்பு அங்கு சென்ற புத்தபிட்சுக்கள் அனைவரும் பேரரசரிடம் அவர் பெரிய புண்ணியத்தை சம்பாதித்துக் கொண்டிருப்பதாகவும், அவர் சொர்க்கத்தில் ஒரு கடவுளாக அவதரிப்பார் எனவும் சொல்லி வந்திருந்தனர். எனவே அவர் போதிதர்மரிடம் கேட்ட முதல் கேள்வியே, “நான் பல மடாலயங்களை கட்டியுள்ளேன், பல பண்டிதர்களுக்கு உணவளித்து வருகிறேன், புத்த தத்துவங்களை படிப்பதற்காக நான் ஒரு பல்கலைகழகத்தையே நிறுவியுள்ளேன், நான் இந்த முழு பேரரசையும் அதன் பொக்கிஷங்களையும் கௌதமபுத்தரின் சேவைகளுக்காக அர்ப்பணித்துள்ளேன். அதற்குப் பரிசாக எனக்கு என்ன கிடைக்கும்?” என்பதாக இருந்தது. போதிதர்மரைப் பார்த்து அவருக்கு சிறிது அதிர்ச்சியாகவே இருந்தது. மனிதர் இப்படி இருப்பார் என அவர் நினைக்கவேயில்லை. போதிதர்மர் மிகவும் கோபக்காரராக காட்சியளித்தார். அவர் மிகப்பெரிய கண்களை கொண்டிருந்தார். ஆனால் அவர் ஒரு மென்மையான மலர் போன்ற இதயத்தை – ஒரு தாமரை மலரை போன்ற இதயத்தை – கொண்டிருந்தார். ஆனால் அவருடைய முகம் உன்னால் எவ்வளவு அபாயகரமாக கற்பனை செய்ய முடியுமோ அவ்வளவு கடுமையானதாக காட்சியளித்தது. ஒரு கண்ணாடி போட்டிருந்தால் அவர் ஒரு மாபியாகும்பல்காரரைப் போல இருந்திருப்பார். மிகுந்த அச்சத்துடன் பேரரசர் வூ அந்த கேள்வியை கேட்டார். அதற்கு போதிதர்மர், “எதுவுமில்லை, எந்த பரிசுமில்லை அதற்கு பதிலாக நீ ஏழாவது நரகத்தில் விழ தயாராக இரு” என்று கூறினார். பேரரசர், “நான் எந்த தவறும் செய்யவில்லையே? எதற்காக ஏழாவது நரகம்? புத்த பிட்சுக்கள் கூறும் எல்லாவிஷயங்களையும் நான் செய்து வருகிறேனே” என்று கேட்டார். அதற்கு போதிதர்மர், “நீ உன்னுடைய சொந்த குரலை கேட்கத் தொடங்கும்வரை உனக்கு யாரும் உதவ முடியாது. அது புத்த மதத்தை சேர்ந்தவர்களாயினும் சரி, சேராதவர்களாயினும் சரி. மேலும் நீ இன்னும் உனது உள் குரலை கேட்கவில்லை. நீ அதைக் கேட்டிருந்தால் நீ இப்படி முட்டாள்தனமான கேள்வியை கேட்டிருக்க மாட்டாய். கௌதமபுத்தரின் பாதையில் எந்த வெகுமதியும் கிடையாது. ஏனெனில் வெகுமதிக்கான ஆசையே ஒரு பேராசையாக மனதிலிருந்துதான் வருகிறது. கௌதமபுத்தரின் முழு கற்பித்தலும் ஆசையற்ற தன்மையே. மேலும் புண்ணிய செயல்கள் என்று கூறப்படும் கோவில்கள் மற்றும் மடாலயங்கள் கட்டுதல், ஆயிரக்கணக்கான துறவிகளுக்கு உணவிடுதல் போன்ற எல்லா செயல்களும் உள் மனதில் ஒரு ஆசையோடு நீ செய்திருந்தால் நீ நரகத்தை நோக்கிச் செல்லும் உனது பாதையை தயார் படுத்துகிறாய். நீ இந்த செயல்களை உனது ஆனந்தத்தின் விளைவாக, உனது ஆனந்தத்தை முழு பேரரசுடன் பகிர்ந்து கொள்ளும் விதமாக செய்தால், எந்த வெகுமதிக்குரிய ஒரு சிறு ஆசைகூட உனக்கு இல்லாமல் இருந்தால் அந்த செயலே அந்த செயலின் வெகுமதியாகும். இல்லாவிடில் நீ முழுவிஷயத்தையும் தவறவிட்டுவிடுகிறாய். என்றார். பேரரசர் வூ, “என் மனது எண்ணங்களால் நிரம்பி வழிகிறது. நான் எனது மனதை அமைதிபடுத்த முயன்று வருகிறேன், ஆனால் நான் தோற்றுவிடுகிறேன். இந்த எண்ணங்களாலும் அதன் சத்தத்தின் காரணமாகவும் நீங்கள் உள்குரல் என்று கூறும் விஷயத்தை என்னால் கேட்க முடியவில்லை. எனக்கு அதைப்பற்றி எதுவும் தெரியாது. “ என்று கூறினார். போதிதர்மர், “அப்படியென்றால் நாளை அதிகாலை 4 மணிக்கு நான் மலையில் தங்கப்போகும் இடத்திற்க்கு எந்த மெய்க்காப்பாளனும் இல்லாமல் தனியாக வா. அங்கு நான் உனது மனதை எப்போதும் அமைதியோடு இருப்பதாக ஆக்கிவிடுகிறேன்“ என்று கூறினார். பேரரசர் இந்த மனிதர் உண்மையிலேயே வரம்புமீறிய மூர்க்கத்தனமானவர் என்று எண்ணினார். அவர் ஏராளமான பிட்சுக்களை சந்தித்திருக்கிறார். அவர்கள் மிகவும் பரிவு காட்டுபவர்கள். ஆனால் இவரோ ஒரு பெரிய தேசத்தின் பேரரசர் என்று கூட கவலைப்படவில்லை. மேலும் அதிகாலை இருட்டில் 4 மணிக்கு அவரிடம் செல்வது என்பது…………… மேலும் இந்த மனிதன் ஆபத்தானவனாக தோன்றுகிறான். போதிதருமர் எப்போதும் தன்னுடன் ஒரு கைத்தடியை வைத்திருப்பார். பேரரசர் முழு இரவும் தூங்கவில்லை. “போவதா? வேண்டாமா? இந்த மனிதன் என்ன வேன்டுமானாலும் செய்யக்கூடும், அவர் நம்பமுடியாத மனிதராக தோன்றுகிறார்” மற்றும் இன்னொரு பக்கம் அவரது இதயத்தின் ஆழத்தில் அவர் போதிதருமருடைய நேர்மையை உணர்ந்தார். அவர் நடிப்பவரல்ல, அவர் நீ ஒரு அரசர், தான் ஒரு புத்தபிட்சு என்பதைப்பற்றி ஒரு துளிகூட கவலைப்படவில்லை. அவர் தான் ஒரு பேரரசர் போலவும் அவருக்கு முன்பு நீ ஒரு பிச்சைக்காரன் என்பது போலவும் நடந்து கொள்கிறார். நான் உனது மனதை எப்போதும் அமைதியாக இருக்கும்படி செய்துவிடுகிறேன் என்று சொன்ன விதமும்…… பேரரசருக்கு புதிராயிருக்கிறது, ஏனெனில் “இந்தியாவிலிருந்து வரும் ஞானவான்களை கேட்டு வருகிறேன். அவர்கள் அனைவரும் எனக்கு யுக்திகளையும் வழிமுறைகளையும் அளித்தனர், அவற்றை நான் பயிற்சி செய்து வருகிறேன், ஆனால் எதுவும் நடைபெறவில்லை. ஆனால் இந்த புதிய மனிதன் கிட்டத்தட்ட ஒரு கிறுக்கனைப்போல, மது அருந்தியவனைப்போல, அவ்வளவு பெரிய கண்களையுடைய, பயத்தை உருவாக்கக்கூடிய ஒரு வித்தியாசமான முகத்தைக் கொண்டவராக இருக்கிறார். ஆனால் அவர் நேர்மையானவராகவும் தோன்றுகிறார். அவர் ஒரு காட்டுத்தனமான மனிதன். ஆனால் இந்த அபாயம் தகுதியுடையதே.! அவர் என்ன செய்யக்கூடும், அதிகபட்சம் அவர் என்னைக் கொல்ல முடியும்” என்று எண்ணினார். முடிவில் அவரால் ஆர்வத்தை அடக்க முடியவில்லை. ஏனெனில் ‘அந்த மனிதன் நான் உனது மனதை எப்போதும் அமைதியாக இருக்கும்படி செய்துவிடுகிறேன்’ என்று வாக்களித்துள்ளார். பேரரசர் வூ அதிகாலை 4 மணிக்கு தனியாக இருளில் அவரது இடத்தைச் சென்றடைந்தார். அந்த கோவில் படிகளில் போதிதர்மர் அவருடைய தடியுடன் நின்று கொண்டிருந்தார், அவர், “இரவு முழுவதும் போவதா வேண்டாமா என்று குழம்பினாலும் நீ வருவாய் என எனக்குத் தெரியும். ஒரு ஏழை பிட்சுவைப் பார்த்து, ஒரு ஏழை பிச்சைக்காரனைப்பார்த்து, இந்த உலகத்தில் ஒரு தடியைத் தவிர ஏதும் இல்லாதவனைப் பார்த்து இவ்வளவு பயப்படும் நீ எப்படிப்பட்ட பேரரசன் ?  நான் இந்த தடியை வைத்து உனது மனதை அமைதியாக்கப் போகிறேன். “ என்று கூறினார். பேரரசர், “கடவுளே ஒரு தடியை வைத்து மனதை அமைதிபடுத்துவதை யாராவது எப்போதாவது கேள்விபட்டதுண்டா? அவனை முடித்துவிடலாம், தலையில் ஓங்கி அடிக்கலாம், பிறகு முழு மனிதனும் அமைதியாகிவிடுவான். ஆனால் மனம் அமைதி அடையாதே. ஆனால் இப்போது திரும்பி போவது என்பது முடியாத காரியம்” என எண்ணினார். போதிதர்மர், “இங்கே கோவில் வராண்டாவில் உட்கார், சுற்றிலும் ஒரு மனிதன் கூட இல்லை, கண்களை மூடிக்கொள், உனக்கு முன்னால் நான் எனது தடியுடன் உட்கார்ந்து கொள்கிறேன். மனதை பிடிப்பதே உனது வேலை. வெறுமனே உனது கண்களை மூடிக்கொண்டு உள்ளே சென்று அது எங்கே இருக்கிறதென்று தேடு. நீ அதனை பிடிக்கிற நொடியில் வெறுமனே எனக்கு அது இங்கே இருக்கிறதென்று கூறு, மற்றதை எனது தடி பார்த்துக்கொள்ளும்” என்று கூறினார். உண்மையை, அமைதியை, மௌனத்தை தேடும் தேடுதலையுடையவன் அடையக்கூடிய, அடைந்த அனுபவங்களிலேயே மிகவும் வித்தியாசமான அனுபவம் அது. பேரரசர் வூக்கு இப்போது வேறு வழியில்லை. கண்களை மூடி அங்கே அமர்ந்தார். போதிதர்மர் சொல்வதை செய்யக்கூடியவர் என்பதை பேரரசர் நன்றாக உணர்ந்தார். அவர் தன்னுள்ளே எல்லாபக்கமும் தேடினார், அங்கு மனமில்லை. அந்த தடி அதன் வேலையை செய்துவிட்டது. முதன்முறையாக அவர் அப்படி ஒரு சூழலில் இருந்தார். செய்தாகவேண்டும் …… நீ மனதை ஒருவேளை கண்டுபிடித்தால், இந்த மனிதன் அவருடைய தடியை வைத்து என்ன செய்யப்போகிறார் என்று உனக்குத் தெரியாது. மேலும் அந்த மௌனமான மலைப்பகுதியில், போதிதர்மருடைய இருப்பில்…. அவருக்கென ஒரு சக்தி வட்டமிருந்தது……. பல ஞானமடைந்த மக்கள் இருந்திருக்கிறார்கள், ஆனால் போதிதர்மர் தனியாக எதிலும் ஒட்டாமல் எவரெஸ்ட் சிகரம் போல தனித்து நிற்கிறார். அவருடைய ஒவ்வொரு செயலும் தனித்துவமானது மற்றும் ஆணித்தரமானது. அவருடைய ஒவ்வொரு அசைவும் அவருடைய சொந்த கையெழுத்தைக் கொண்டது, அது கடன் வாங்கப்பட்டதல்ல. பேரரசர் மனதை கடுமையாகத் தேடினார், ஆனால் முதன்முறையாக அவரால் அதை கண்டுபிடிக்க முடியவில்லை. அது ஒரு சிறிய தந்திரம். நீ ஒருபோதும் உன் மனதை தேடாததால் மட்டுமே அது அங்கே இருக்கிறது. நீ ஒருபோதும் அதைப்பற்றிய விழிப்புணர்வோடு இருப்பதில்லை என்பதாலேயே அது அங்கே இருக்கிறது. நீ அதைத் தேடும்போது, நீ அதைப்பற்றிய விழிப்புணர்வோடு இருக்கும்போது விழிப்புணர்வு நிச்சயமாக அதனை முழுமையாக கொன்று விடுகிறது. மணிநேரங்கள் கடந்துவிட்டன. சூரியன் மௌனமாக மலைகளின் மீது, ஒரு குளிர்ந்த தென்றலுடன் உதயமாகிக்கொண்டிருக்கிறான். போதிதர்மரால் பேரரசர் வூ வின் முகத்தில் அப்படி ஒரு அமைதியையும், அப்படியொரு மௌனத்தையும், அப்படியொரு அசைவற்ற தன்மையையும் அவர் ஒரு சிலையைப் போல இருப்பதையும் பார்க்க முடிந்தது. போதிதர்மர் வூ வை உலுக்கி, நிறைய நேரமாகிவிட்டது. நீ மனதை கண்டுபிடித்துவிட்டாயா?” என்று கேட்டார். பேரரசர் வூ, “உங்களது தடியை உபயோகிக்காமலேயே நீங்கள் எனது மனதை முழுமையாக அமைதிபடுத்திவிட்டீர்கள். எனக்கு எந்த மனமுமில்லை, நீங்கள் கூறிய உள் குரலை நான் கேட்டேன். இப்போது நீங்கள் கூறியது சரி என்று நான் உணர்கிறேன். எதையும் செய்யாமலேயே நீங்கள் என்னை நிலை மாற்றமடையச் செய்துவிட்டீர்கள். இப்போது எல்லா செயல்களுக்கும் அதைச் செய்வதே அதன் வெகுமதியாக இருக்க வேண்டும், இல்லாவிடில் அதனை செய்ய வேண்டியதில்லை என்று நான் உணர்ந்து கொண்டேன். உனக்கு வெகுமதியளிக்க அங்கு யார் இருக்கிறார்கள்? இது ஒரு குழந்தைதனமான சிந்தனை, அங்கு தண்டனை கொடுக்க யார் இருக்கிறார்கள்? உன்னுடைய செயலே தண்டனை. உன்னுடைய செயலே வெகுமதி. நீ சென்றடையும் இடத்தை தீர்மானிக்கும் அதிகாரம் உன்னிடமே உள்ளது என்பதை நான் அறிவேன் இப்போது.” என்று கூறினார். போதிதர்மர், “நீ ஒரு அபூர்வமான சீடன். வெறும் ஒரு அமர்தலிலேயே மனதின் எல்லா இருட்டும் மறைந்துவிடும் அளவிற்கு விழிப்புணர்வையும் மிகுந்த ஒளியைக் கொண்டுவரும் துணிச்சலும் உள்ள மனிதனாக இருக்கிறாய். நான் உன்மீது அன்பு செலுத்துகிறேன், நான் உன்னை மதிக்கிறேன், ஆனால் ஒரு பேரரசனாக அல்ல.” என்று கூறினார். வூ அவரை அரண்மனைக்கு வருமாறு வற்புறுத்தினார். போதிதர்மர், “அது என்னுடைய இடமல்ல, நான் காட்டுத்தனமானவன். நான் என்ன செய்வேன் என்று எனக்கேத் தெரியாது என்பதை நீ பார்க்கலாம். நான் நொடிக்கு நொடி இயல்பாக வாழ்கிறேன். நான் மிகவும் கணிக்க இயலாதவன். நான் தேவையில்லாமல் உனக்கும் உனது சபைக்கும் உன்னைச் சேர்ந்தவர்களுக்கும் பிரச்னைகளை உருவாக்கலாம். நான் அரண்மனைகளுக்காக ஆக்கப்பட்டவனல்ல. என்னை என்னுடைய காட்டுத்தனத்தில் வாழவிடு.” என்று கூறினார். 3 போதிதர்மரின் வழிகள் – தொடர்ச்சி இரண்டாவது செவிவழி செய்தி என்னவென்றால் டாய் என்ற பெயர் கொண்ட இந்த மலையில் வசித்த போதிதர்மர்தான் தேநீரை உருவாக்கிய முதல் மனிதர் என்பதாகும். டீ என்னும் பெயர் டாய் என்னும் பெயரிலிருந்து வந்ததாகும். ஏனெனில் அது டாய் என்னும் மலையில் உருவாக்கப்பட்டது. எல்லா மொழியிலும் உள்ள தேநீரை குறிக்கும் சொற்கள் ஒரே மூலத்திலிருந்தே வந்துள்ளன. ஆங்கிலத்தில் அது டீ, ஹிந்தியில் அது சாய், சைனீஸ் வார்த்தை ச்சா என்றும் கூறப்படுகிறது. மராத்தியில் அது ச்சா என்றழைக்கப்படுகிறது. போதிதர்மர் தேநீரை உருவாக்கிய விதம் சரித்திரபூர்வ உண்மையாக இருக்க முடியாது. ஆனால் அது முக்கியத்துவமானது. அவர் கிட்டதட்ட எல்லா நேரங்களிலும் தியானம் செய்து கொண்டிருந்தார். ஆனால் இரவில் சில நேரங்களில் தூங்கத் தொடங்கி விடுவார். எனவே தூங்காமல் இருப்பதற்காக, அவருடைய கண்களுக்கு ஒரு பாடத்தை கற்றுக் கொடுப்பதற்காக அவரது கண் இமைகளின் முடிகள் அனைத்தையும் பிடுங்கி அவர் கோவில் நிலத்தில் எறிந்து விட்டார். கதை என்னவென்றால் இந்த கண் இமைகளிலிருந்துதான் தேநீர் செடி வளர்ந்தது. அவைதான் முதல் தேநீர் செடிகள். அதனால்தான் தேநீரை குடித்தபிறகு உன்னால் தூங்க முடியாது. மேலும் புத்த மதத்தில் தியானத்திற்காக தேநீர் அருந்துவது பழக்கமாகி விட்டது. தேநீர் மிகவும் உதவி புரியக் கூடியது. எனவே முழு புத்த உலகமும் தியானத்தின் ஒரு பகுதியாக தேநீர் அருந்துகிறது. ஏனெனில் அது உன்னை சுறுசுறுப்புடனும் விழிப்புடனும் வைத்திருக்கிறது. இரண்டு லட்சம் புத்த மத பிட்சுக்கள் சீனாவிலிருந்தாலும் கூட போதிதர்மர் தனது சீடர்களாக ஏற்றுக் கொள்ள தகுதியுடையவர்களாக நான்கு பேரை மட்டுமே கண்டு பிடிக்க முடிந்தது. அவர் உண்மையாகவே மிகவும் குறிப்பாக தேர்ந்தெடுத்தார். அவரது முதல் சீடரான ஹூய்கோவை கண்டுபிடிக்க அவருக்கு கிட்டதட்ட ஒன்பது ஆண்டுகள் பிடித்தது. இது ஒரு சரித்திர உண்மை. ஏனெனில் மிகவும் பழமையான குறிப்புகள் உள்ளன. கிட்டதட்ட போதிதர்மருடைய காலத்திய குறிப்புகள் எல்லாவற்றிலும் இது குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றவை குறிப்பிட படா விட்டாலும் வூ வை அரண்மனைக்கு திருப்பி அனுப்பிய பிறகு அவர் கோவில் சுவற்றைப் பாரத்தபடி அமர்ந்திருந்தார் என்பது குறிப்பிடப்படுள்ளது. அவர் அதனை ஒரு சிறந்த தியானமாக ஆக்கிக் கொண்டார். அவர் வெறுமனே எளிமையாக சுவற்றை பார்த்துக் கொண்டே இருப்பார். அதிகநேரம் நீ சுவற்றை பார்த்துக் கொண்டேயிருந்தால் உன்னால் யோசிக்க முடியாது. மெதுமெதுவாக அந்த சுவற்றைப் போலவே உனது மனதின் திரையும் காலியாகி விடுகிறது. மேலும் அதற்கு இரண்டாவது காரணமும் இருந்தது. என்னுடைய சீடனாக இருக்கும் தகுதியுடைய யாராவது ஒருவர் வரும்வரை நான் யாரையும் பார்க்க மாட்டேன் என அவர் அறிவித்தார். மக்கள் வருவார்கள், அவருக்கு பின் அமர்வார்கள். அது ஒரு வித்தியாசமான சூழ்நிலை. இந்த முறையில் யாரும் பேசியதில்லை. அவர் சுவற்றிடம் பேசுவார். மக்கள் அவருக்கு பின் அமர்ந்திருப்பார்கள். ஆனால் அவர் வருபவர்களை பார்க்க மாட்டார். ஏனெனில் அவர் வருபவர்கள் என்னை அதிகமாக காயப்படுத்துகிறார்கள். அவர்கள் வெறும் சுவறைப் போல இருக்கிறார்கள். யாரும் புரிந்து கொள்வதில்லை. இப்படிப்பட்ட ஒரு அறியாமை நிலையில் மக்களைப் பார்ப்பது ஆழமான வலியை ஏற்படுத்துகிறது. ஆனால் உண்மையான ஒரு சுவறைப் பார்ப்பது கேள்வியேயில்லை. ஒரு சுவர் எப்படியிருந்தாலும் அது சுவரே. அது கேட்க முடியாது. எனவே காயப்பட தேவையில்லை. யாராவதொருவர் அவருடைய செயலின் மூலம் அவர் எனது சீடராக தயாராக இருக்கிறார் என்று நீரூபித்தால் மட்டுமே நான் வருபவர்களைப்பார்த்து திரும்புவேன் என்று கூறினார், ஒன்பது வருடங்கள் கடந்து விட்டன. மக்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. எந்த செயல் அவருக்கு திருபதியளிக்கும் என்று அவர்களால் கண்டறிய முடியவில்லை. பிறகு அந்த இளைஞன் ஹூய்கோ வந்தான். அவன் அவனுடைய கைகளில் ஒன்றை வாளால் வெட்டி அந்தக் கையை போதிதர்மர் முன் வீசிவிட்டு, இது ஆரம்பம்தான். நீங்கள் திரும்புங்கள் அல்லது என் தலை உங்கள் முன் உருளும். நான் எனது தலையையும் வெட்டப்போகிறேன் என்றான். போதிதர்மர் திரும்பி, நீ எனக்கு சீடனாக தகுதியுடைய மனிதன். தலையை வெட்ட வேண்டியதில்லை. நாம் அதனை உபயோகப்படுத்த வேண்டும் என்று கூறினார். இந்த மனிதன் ஹூய்கோதான் அவரது முதல் சீடர். முடிவில் போதிதர்மர் சீனாவை விட்டு செல்லும்போது அவர் ஹூய்கோவிற்குப்பிறகு மேலும் மூன்று சீடர்களை சேர்த்திருந்தார். அவர் சீனாவை விட்டு செல்ல முடிவெடுத்த பிறகு தனது நான்கு சீடர்களையும் அழைத்து, எளிமையான வார்த்தைகளில், சிறிய வாக்கியங்களில், தந்தி முறையில் என்னுடைய போதனைகளின் மூலத்தைக் கூறுங்கள். நாளைக்காலையில் நான் இமயமலைக்கு திரும்பிச் செல்ல முடிவெடுத்துள்ளேன். அதனால் உங்கள் நால்வரில் ஒருவரை வாரிசாக தேர்ந்தெடுக்க விரும்புகிறேன். என்றார். முதலாமவன், மனதை தாண்டிச் செல்வது, முற்றிலும் மௌனமாக இருப்பது, அதன்பிறகு அனைத்தும் தானாகவே நடக்கிறது எனக் கூறினான். போதிதர்மர், நீ கூறியது தவறல்ல, ஆனால் நீ என்னை திருப்திபடுத்தவில்லை. உன்னிடம் எனது தோல் உள்ளது என்றார். இரண்டாமவன், நான் இல்லை, பிரபஞ்சம் மட்டுமே உள்ளது, என்பதை அறிந்து கொள்வதே உங்களது அடிப்படையான போதனை என்றான். போதிதர்மர், சிறிது பரவாயில்லை, ஆனால் அது எனது தகுதியளவிற்கில்லை. உன்னிடம் எனது எலும்புகள் உள்ளன. என்றார். மூன்றாவது மனிதன், அதைப்பற்றி ஏதும் சொல்ல முடியாது. எந்த வார்த்தையும் அதை கூறும் சக்தியற்றது என்றான். போதிதர்மர், நன்று, ஆனால் நீ ஏற்கனவே அதைப் பற்றி ஏதோ ஒன்றைக் கூறிவிட்டாய் உனக்கு நீயே முரண்பட்டு விட்டாய் வெறுமனே உட்கார். உன்னிடம் எனது சதை உள்ளது என்றார் நான்காவதாக அவரது முதல் சீடன் ஹூய்கோ அவரது காலில் விழுந்தான். அவனது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. போதிதர்மர், நீ அதை சொல்லிவிட்டாய். நீதான் எனது வாரிசாகப் போகிறாய் என்றார். ஆனால் இரவில் ஏதோ ஒரு சீடன் அவன் வாரிசாக தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதற்காக அவருக்கு விஷமளித்துவிட்டான். எனவே அவர்கள் அவரை புதைத்தனர். ஆனால் வித்தியாசமான மூன்றாவது செவிவழி செய்தி என்னவென்றால் ஒரு அரசாங்க அதிகாரி மூன்று வருடங்களுக்குப் பிறகு சீனாவிற்கு வெளியே இமயமலையை நோக்கி போதிதர்மர் நடந்துபோய்க் கொண்டிருப்பதை பார்த்தார். போதிதர்மருடைய கையில் அவருடைய தடியிருந்தது. மேலும் அவருடைய செருப்பு அந்த தடியிலிருந்து தொங்கிக் கொண்டிருந்தது. மேலும் அவர் வெறும் காலில் நடந்து கொண்டிருந்தார். அந்த அதிகாரிக்கு அவரைத் தெரியும். அந்த அதிகாரி அவரிடம் பலமுறை வந்திருக்கிறார். அவர் ஒருமாதிரி இருந்தாலும்கூட போதிதர்மர் மீது அந்த அதிகாரி அன்பு செலுத்தினார். அதிகாரி அவரிடம் இந்த தடிக்கும் இதில் ஒரு செருப்பு தொங்குவதற்கும் என்ன அர்த்தம் என்று கேட்டார். போதிதர்மர் விரைவில் நீ அறிந்து கொள்வாய். நீ எனது மக்களை சந்தித்தால் வெறுமனே அவர்களிடம் நான் ஒரேடியாக இமயமலைக்கு செல்கிறேன் என்று கூறிவிடு என்று கூறினார். அதிகாரி, அவரால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவாக போதிதர்மர் வாழ்ந்து கொண்டிருந்த மலையில் இருக்கும் மடாலயத்திற்கு சென்றார். அங்கு அவர் போதிதர்மருக்கு விஷம் வைக்கப்பட்டதையும் அவர் இறந்து விட்டதையும் கேள்விப்பட்டார். அங்கு அவரது சமாதியிருந்தது. அதிகாரி பேரரசரின் எல்லைப்பகுதியில் நியமிக்கப்பட்ட காரணத்தால் இதைப்பற்றி கேள்விப்பட வில்லை. அவர், கடவுளே, நான் அவரைப் பார்த்தேன். நான் ஏமாந்திருக்க முடியாது. ஏனெனில் நான் முன்பே அவரை பலமுறை பார்த்திருக்கிறேன். அவர் அதே மனிதன்தான். அதே கோபக்கண்கள், அதே தீப்போன்ற காட்டுத்தனமான உருவம், மேலும் உச்சக்கட்டமாக அவர் அவருடைய தடியில் அவருடைய ஒரு செருப்பை சுமந்திருந்தார் என்று கூறினார். சீடர்களால் அவர்களது ஆர்வத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. அவரது சமாதியைத் திறந்தனர். அவர்கள் அங்கு கண்டதெல்லாம் ஒரே ஒரு செருப்பு மட்டுமே. அந்த காரணத்தை விரைவில் நீ அறிந்து கொள்வாய் என்று போதிதர்மர் ஏன் கூறினார் என்று அந்த அதிகாரி புரிந்து கொண்டார். நாம் யேசுவின் உயிர்த்தெழுதல் பற்றி மிகவும் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் யாரும் அதிகமாக போதிதர்மரின் உயிர்த்தெழுந்தது பற்றி பேசுவதில்லை. ஒருவேளை அவர்கள் அவரை புதைத்தபோது அவர் கோமாவில் இருந்திருக்கலாம், அவர் சுயநினைவுக்கு வந்தவுடன் சமாதியிலிருந்து வெளியே வந்து ஒரு செருப்பை அங்கேயே விட்டுவிட்டு இன்னொரு செருப்பை அவரது தடியில் கட்டிக் கொண்டு திட்டமிட்டப்படி அவர் சென்று விட்டார். அவர் அழிவற்ற இமயமலையின் பனிக்கட்டிகளில் இறக்க விரும்பினார். அவர் அவரைக் குறித்து எந்த சமாதியும், எந்த சிலையும் இருக்கக்கூடாது என விரும்பினார். அவர் அவருக்கு பின்பு தொழுவதற்கு எந்த காலடி தடத்தையும் விட்டு வைக்கவில்லை. அவரை நேசிப்பவர்கள் அவரது சொந்த இருப்பினுள் நுழைய வேண்டும். நான் தொழப் போவதில்லை மற்றும் அவர் கிட்டதட்ட காற்றில் மறைந்துவிட்டார். என்ன நடந்தது, எங்கு அவர் இறந்தார் என்பது குறித்து யாரும் எதையும் கேள்விப்படவில்லை. அவர் கண்டிப்பாக இமயமலையின் அழிவற்ற பனிகளில் எங்கோ புதைந்திருக்கவேண்டும். 4 மரணத்தை மறக்காதே ஒரு பெண்ணின் கணவன் இறந்து விட்டான். அவளுக்கு இளம் வயது, ஒரே ஒரு குழந்தை இருந்தது. அவள் தனது கணவனுடன் சிதையில் குதித்து உடன்கட்டை ஏற விரும்பினாள். ஆனால் இந்த சின்ன குழந்தை அதை தடுத்து நிறுத்தி விட்டது. அவள் அந்த குழந்தைக்காக வாழ்ந்தாக வேண்டும். ஆனால் பின் இந்த சின்ன குழந்தையும் இறந்துவிட்டது. இப்போது பாதிப்பு அதிகமாகி விட்டது. அவள் கிட்டத்தட்ட பைத்தியமாகி விட்டாள். “என்னுடைய குழந்தையை திரும்பவும் உயிர்ப்பித்து தரக் கூடிய மருத்துவர் யாரேனும் இங்கு உண்டா” நான் அவனுக்காகவே வாழ்ந்தேன். ஆனால் இப்போது எனக்கு எனது முழு வாழ்வும் இருளாகி விட்டது.” என்று கேட்டு அலைந்து திரிந்தாள். இந்தியாவில் நீ மறுமணம் செய்து கொள்ள முடியாது. அதிலும் குறிப்பாக அந்த காலத்தில் அது சாத்தியமே இல்லாத ஒன்று. ஒரு பெண் மறுமணம் செய்து கொள்ள முடியாது. ஆணின் ஆளுமை வெறி அத்தகையது. ‘ நான் இறந்து விட்டாலும்கூட………. நீ சிரமபட்டாலும் சரி, ஆனால் நீ வேறு யாரையும் மறுமணம் செய்து கொள்ளக் கூடாது.’ அப்படிப்பட்ட பொறாமை…. இதுதான் ‘இந்தியாவின் பாரம்பரியம்’ என்று அழைக்கப்படுகிறது. அப்போது புத்தர் அந்த நகரத்தின் வழியே வந்தார். அதனால் மக்கள் அவளிடம், “எங்களுக்கு எந்த மருத்துவரையும் தெரியாது. ஆனால் புத்தர் வருகிறார். இது ஒரு சிறந்த தருணம். நீ உனது குழந்தையை தூக்கிக் கொண்டு புத்தரிடம் செல். நீ இந்த குழந்தைக்காவே உயிர் வாழ்ந்தாய் என்பதைக் கூறி இப்போது இது இறந்துவிட்டது என் மேல் கருணை காட்டுங்கள். இவனை உயிர்பித்து தாருங்கள் நீங்கள் ஞானமடைந்தவர் என்று கேள்.” என்றனர். ஆகவே அவள் புத்தரிடம் சென்றாள். இறந்த குழந்தையின் உடலை புத்தரின் காலடியில் கிடத்தி, “இவனை உயிர்பித்து தாருங்கள். உங்களுக்கு வாழ்வின் அனைத்து மர்மங்களும் தெரியும். நீங்கள் பிரபஞ்சத்தின் உச்சியை தொட்டு விட்டீர்கள். இந்த ஏழை பெண்ணுக்காக ஒரு சிறிய அற்புதத்தை நீங்கள் செய்யக் கூடாதா?” என்று வேண்டினாள். புத்தர், “நான் செய்கிறேன், ஆனால் ஒரு நிபந்தனை!” என்றார். அவள், “அது எதுவானாலும் நான் செய்கிறேன்” என்றாள். புத்தர், “அப்படியென்றால் சரி.! நிபந்தனை இதுதான். இந்த நகரத்தைச் சுற்றி வந்து யார் வீட்டில் இது வரை சாவு எதுவும் நடக்கவில்லையோ அந்த வீட்டிலிருந்து கொஞ்சம் கடுகு விதைகள் வாங்கி வா.” என்றார். அந்த கிராமத்தில் கடுகு பயிர் அறுவடை செய்து வந்தனர். எனவே புத்தர் அவளிடம், “இந்த நகரத்தை சுற்றி வந்து…………. என்றார். அந்த பெண்ணால் இதை புரிந்து கொள்ள முடிய வில்லை. அவள் ஒரு வீட்டிற்கு சென்று கேட்டாள். அவர்கள், “கொஞ்சம் கடுகென்ன? புத்தரால் உனது குழந்தைக்கு உயிர் தர முடியுமென்றால் ஒரு மாட்டு வண்டி நிறைய கடுகு வேண்டுமானாலும் தருகிறோம். ஆனால் எங்களது குடும்பத்தில் ஒருவர் அல்ல, ஏகப்பட்ட பேர் இறந்து போயிருக்கின்றனர். காலங்காலமாக நாங்கள் இங்கிருக்கிறோம். தாத்தாவுக்கு தாத்தா, தாத்தாவுக்கு பாட்டி, தாத்தாவின் அப்பா, தாத்தாவின் அம்மா, தாத்தா, பாட்டி என எல்லோரும் இறந்து விட்டிருக்கின்றனர். நாங்கள் பலர் இந்த குடும்பத்தில் சாவதை பார்த்திருக்கிறோம். ஆதலால் இந்த கடுகினால் பயன் இல்லை. ‘எந்த குடும்பத்தில் இது வரை சாவு விழ வில்லையோ’ என்பதுதானே புத்தரின் நிபந்தனை.” என்றனர். அது ஒரு சிறிய கிராமம். அவள் ஒவ்வொரு வீட்டிற்க்கும் சென்று கேட்டாள். அந்த கிராமத்தில் உள்ள எல்லோரும் கடுகு தர தயாராக இருந்தனர். “எவ்வளவு கடுகு வேண்டும் உனக்கு?” ஆனால் அந்த நிபந்தனை அதுதான் சாத்தியமற்றதாக இருந்தது. எங்களுடைய குடும்பத்தில் பலர் இறந்திருக்கின்றனர்.” மாலையில் அவள் புத்தரின் நடவடிக்கை பற்றி உணர்ந்தாள். மேலும் அவளுக்கு உண்மையையும் புரிந்தது. பிறக்கும் யாவரும் இறந்தே தீருவர் என்பது அவளுக்கு புரிந்தது. குழந்தையை திரும்ப உயிர்பித்து என்ன பயன் அவனும் ஒருநாள் இறந்தே தீருவான். அதற்கு பதிலாக எது இறப்பதும் பிறப்பதும் இல்லையோ அந்த அழிவற்றதை நானே தேட வேண்டியதுதானே. என்பதை உணர்ந்தாள்.   மாலையில் அவள் வெறும் கையுடன் திரும்பி வந்தாள். புத்தர், “எங்கே கடுகு?” என்று கேட்டார். அவள் சிரித்தாள். காலையில் அவள் அழுதவண்ணம் வந்தாள், இப்போது சிரித்தாள். அவள், “நீங்கள் தந்திரம் செய்து விட்டீர்கள், பிறக்கும் யாரும் இறக்கத்தான் வேண்டும். இந்த கிராமத்தில் மட்டுமல்ல, இந்த உலகத்திலேயே யாரும் இறக்காத குடும்பமே கிடையாது. அதனால் நான் எனது மகனை உயிர்பித்துத் தர கேட்கப் போவதில்லை, என்ன பயன்? – சில தினங்களுக்குப் பிறகு, அல்லது சில நாட்களுக்குப் பிறகு, அல்லது சில வருடங்களுக்குப் பிறகு அவன் திரும்பவும் இறந்துவிடுவான். வாழும் அத்தனை வருடங்களும் அவன் துயரத்திலும் துன்பத்திலும் எல்லா விதமான வேதனைகளிலும் இருப்பான். அவனை திரும்பவும் வாழ்வுக்கு கொண்டு வராத உங்களது கருணை மிகவும் பெரியது.   குழந்தையை மறந்து விடுங்கள். எனக்கு தீட்சை கொடுங்கள். பிறப்பும் இறப்பும் நிகழாத அழிவற்ற, அந்த உலகத்திற்கு நான் செல்ல எனக்கு தியானமென்னும் வழி காட்டுங்கள்,”   என்றாள்.   புத்தர், “நீ மிகவும் புத்திசாலியான பெண். நீ அதை உடனே புரிந்து கொண்டு விட்டாய்.” என்றார்.   நான் இதைத்தான் அதிசயம் என்றழைப்பேன், ஜீஸஸ் லசாரஸை உயிர்பித்ததை நான் அதிசயம் என்று கூற மாட்டேன். அது பார்ப்பதற்கு அதிசயம் போல தோன்றலாம், ஆனால் தோன்றுவதெல்லாம் உண்மை அல்ல. நான் புத்தரின் நடவடிக்கையைத் தான் அதிசயம் என்று கூறுவேன். எல்லோரும் இறந்து போகத் தான் போகிறார்கள். அதில் எந்த வித்தியாசமும் இல்லை. பிறப்பிலிருந்தும் இறப்பிலிருந்தும் ஒருவர் வெளியே வர வேண்டும்.   புத்தர் அந்த பெண்ணிற்கு தீட்சை கொடுத்தார். அவள் புத்தரின் ஞானமடைந்த சீடர்களில் ஒருவராக விளங்கினாள். அவளது தேடுதல் அத்தகையது….. அவளுக்கு என்னுடைய கணவன் இறந்து விட்டான், என்னுடைய குழந்தை இறந்து விட்டது, இப்போது என்னுடைய முறை, எந்த கணமும் நான் இறப்புக்கு பலியாகி விடலாம். நேரமில்லை, எந்த நேரம் மரணம் வரும் என்று எனக்குத் தெரியாது. எனவே நான் முழுமையாக இந்த தேடுதலில் ஈடுபடவேண்டும், புத்தர் என்னிடம், ‘உள்ளே செல். உன்னுடைய இருப்பின் மையத்திற்குச் செல், நீ பிறப்பையும் இறப்பையும் தாண்டி செல்வாய்.’ என்று கூறியுள்ள படியால் நான் தேடி சென்றடைய வேண்டும் என்பதை அவள் அறிந்திருந்தாள்.   இதைதான் நான் ஆணித்தரமான தேடுதல் என்றழைக்கிறேன். எல்லா பிரச்சனைகளையும் வேரறுத்து விடுவது. 5 செயலும் அதைக்கடந்த நிலையும் மிக மிக அழகான விஷயங்கள் இருக்கின்றன. அதில் பல்வேறு விதங்கள் உண்டு. இசையும் நடனமும் மிகவும் உடல் சார்ந்த விஷயங்கள். அவற்றோடு செல்லும்போது அவை அழகானவை, ஆனால் ஒருவர் அதோடு நின்று விடக் கூடாது, அவற்றால் தடை பட்டுவிடக் கூடாது. அவை மேலும் உயர்ந்த நிலை செல்லும் வாயிலை திறந்து விடும். உதாரணமாக, நீ இசையை நேசித்தால் விரைவில் இசை கரைந்து நீ மௌனத்தில் ஆழ்ந்து விடுவாய். நீ நடனத்தில் மிகவும் ஆர்வமாக இருந்தால் விரைவில் நடனம் மறைய வேண்டும், அப்போதுதான் உன்னால் இருப்பு நிலையின் அசையாத தன்மையினுள் இருக்க முடியும். சைனாவில் ஒரு பழமையான கதை ஒன்று உண்டு. ஒருவன் தன்னைத் தானே மிகவும் சிறந்த வில்வீரனாக கூறிக் கொண்டான். அவன் அரசரிடம் சென்று, “நான் யாருடைய சவாலையும் ஏற்கத் தயார். நான் வில்வித்தையை முப்பது வருடங்களாக பயிற்சி செய்து வருகிறேன். இந்த ராஜ்ஜியம் முழுவதிலும் எனக்கு இணையாக போட்டியிடக்கூடிய யாரும் இல்லை எனபது எனக்குத் தெரியும். ஆனால் இது அறிவிக்கப்பட வேண்டும்……. ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் தரப்படும். அதற்க்குள் யாராவது என்னுடன் போட்டியிட வந்தால் நான் தயார். அப்படி யாரும் வராவிடில் அல்லது வந்து என்னால் தோற்கடிக்கப்பட்டுவிட்டால், இந்த ராஜ்ஜியத்தின் பிரதான வில்லாளனாக, சிறந்த வில் வித்தையாளனாக என்னை நீங்கள் அறிவிக்க வேண்டும்” என்று கேட்டான். அவன் கூறுவது யாவும் உண்மையே, எதுவும் மிகையாக கூறப்பட்டதல்ல என்று அரசருக்குத் தெரியும். அவர் பார்த்ததிலேயே மிகவும் சிறப்பான வில்வித்தையாளன் அவன். அந்த அரசிலேயே அவனுக்கு நெருக்கமாக வரக்கூடிய அளவில் கூட யாரும் இல்லை. அவன் அந்த கலையை மிகவும் ஆழமாக பயின்றிருந்தான். அரசரிடம் ஒரு வயதான வேலைக்காரன் இருந்தான். அவன் எப்போதும் அரசருடன் இருப்பான். ஏனெனில் அரசரின் தந்தை அரசரின் சிறு வயதிலேயே இறந்துவிட்டதால் இவன்தான் தந்தை போல கூடவே இருந்து அவரை கவனித்து வளர்த்து ஆளாக்கி பயிற்சி கொடுத்து பாதுகாத்து அவரை அரியணையில் அமர்த்தி அரசராக்கினான். ஆகவே அரசர் எப்போதும் அவனுக்கு தந்தை போல மரியாதை கொடுப்பார். இப்போது அரியணையின் கீழே அமர்ந்திருந்த அவன் சிரித்தான். அரசர், “ஏன் சிரிக்கிறாய்? அவன் கூறியது உண்மைதானே. எனக்கு இவரையும் இவரது வில்வித்தையையும் தெரியும். கண்களை கட்டிக் கொண்டு கூட இவர் குறி பார்த்து அம்பு விடுவார். கண்களை கட்டிக் கொண்டு பறக்கும் ஒரு பறவையைக் கூட இவர் வீழ்த்திவிடுவார். இவர்க்கு எந்த வகையிலும் ஈடு இணையே கிடையாது.” என்றார். அதற்கு அந்த வேலைக்காரன், “நீங்கள் வயதில் இளையவர். எனக்கு தெரிந்த ஒருவர் முன் இவர் ஒரு கத்துக்குட்டி. அவர் மிகவும் வயதானவர். கிழவர். என்னைவிடவும் வயதானவர். அவர் மலை பள்ளத்தாக்கில் வசிக்கிறார். இவரை நீங்கள் சிறப்பானவன் என்று அறிவிப்பதற்கு முன்னால் இவர் போய் அவரை சந்தித்துவிட்டு வரட்டும். அவரை பார்ப்பது மட்டுமே போதும். போட்டி என்பது தேவையேயில்லை.” என்றான். இது ஒரு மிகபெரிய சவால். ‘அவரை பார்ப்பது மட்டுமே போதுமா? போட்டி எதுவும் தேவையில்லையா’ என்ற போது “அவர் ஒரு குரு, அவருடன் போட்டியிட முடியாது” என்று கூறிய வயதானவன் அந்த கிழவர் இருக்கும் குகைக்கு செல்லும் வழியை கூறினான். இதைக்கேட்டு அந்த வில்வீரன் மலையில் மைல்கணக்கில் சென்று இறுதியில் அந்த குகையை கண்டு பிடித்தான். அங்கே பார்த்தவுடன் அவன் சிரித்தான். ஏனெனில் ஒரு கிழவன் மட்டுமே அங்கிருந்தான். அந்த குகையில் அம்பும் இல்லை, வில்லும் இல்லை. ‘என்ன விதமான வில்லாளன் இவர்.?’ மிகவும் வயதாகி விட்டிருந்தது. தொண்ணுறு, தொண்ணுறு ஐந்து, அதற்கு மேலும் இருக்கக் கூடும். அவரால் குறி பார்த்து அம்பு எய்ய முடியாது, அவரது கைகள் நடுங்கும். அவர் மிகவும் வயதானவர். “அரசர் உங்களை சந்திக்க என்னை அனுப்பினார்” என்று கூறினான். அந்த கிழவன், “அரசரிடமிருந்து எனக்கு தகவல் வந்தது. ஆனால் உனக்கு ஒரு சிறிய பரிசோதனை செய்த பின் தான் எதையும் முடிவு செய்ய முடியும். நான் எல்லோரையும் சந்திப்பதில்லை. குறைந்த பட்சம் நீ வில்லாளனாக இருக்கிறாய். அதனால் ஒரு சிறிய பரீட்சை வைக்க வேண்டும். ‘சிறந்த வில்லாளனாக இருப்பது அப்புறம். முதலில் அவர் இவனுக்கு வில்வித்தையில் ஏதாவது திறமை இருக்கிறதா, ஏதாவது ஆற்றல் இருக்கிறதா, ஏதாவது கூர்மை இருக்கிறதா’ என்று பரிசோதிக்க விரும்புகிறார். கிழவன் அந்த இளைஞனை தன்னுடன் அழைத்துக் கொண்டு குகையை விட்டு வெளியே வந்தார். “நீ உன்னுடைய அம்பையும் வில்லையும் உன்னுடன் எடுத்துக் கொண்டு வரும்போதே நீ கத்துக்குட்டி என்று கண்டேன். ஏனெனில் சிறந்த வில்லாளனுக்கு எதுவும் தேவையில்லை. ஒருவர் தனது திறமையின் இறுதி நிலையை எட்டும்போது அவர் வில்லாளனாக இருந்தால் தனது வில்லையும் அம்பையும் வீசி விடுவார், அவர் இசைக் கலைஞனாக இருந்தால் தனது இசைக் கருவியை வீசியெறிந்து விடுவார். அவர் ஓவியராக இருந்தால் தனது பிரஷ்ஷையும் பலகையையும் வீசி விடுவார் என்ற மூதுரையை கேள்விப்பட்டதில்லையா?” என்று கேட்டார். அதற்கு இவன், “கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் புரிந்ததில்லை.” என்றான். “இப்போது நீ புரிந்து கொள்ளக் கூடிய இடத்திற்குத்தான் வந்திருக்கிறாய். என்னுடன் வா.” என்றான் கிழவன். அங்கே ஒரு பாறை ஒரு இடத்தில் மிகவும் வெளியே நீட்டிக்கொண்டிருந்தது. அதன் கீழே ஆயிரக்கணக்கான அடிகள் ஆழமான கிடுகிடு பள்ளம். கீழே விழுந்தால் எலும்பு கூட மிஞ்சாது. உயிர் வாழ வாய்ப்பே இல்லை. அந்த அளவு அபாயகரமான பள்ளத்தாக்கு. அந்த பாறைக்குச் சென்றான் அந்த கிழவன். இளைஞன் நடுங்கிக் கொண்டு இருந்தான். அவன் அந்த பாறைக்கு கூட செல்லவில்லை. கிழவன் சென்றான், ஆனால் இவன் செல்லவில்லை. நடுங்கிகொண்டே நின்று கொண்டிருந்தான். கிழவன், “நடுக்கத்தை நிறுத்து. இது வில்லாளனுக்கு அழகல்ல.” என்றான். மேலும் அந்த கிழவன் அந்த பாறையின் முனைக்கு சென்றான். பாறையின் நுனியில் பாதி பாதம் வெளியே இருக்குமாறு நின்றான். அங்கே இருந்தவாறே இளைஞனை அழைத்து, “வந்து என் அருகில் நில்” என்று அழைத்தான். இளைஞன் ஒரு அடி எடுத்து வைத்தான், இரண்டாவது அடி எடுத்து வைத்தான். பின் கீழே படுத்து விட்டான். நடுங்கி வியர்த்து விருவிருத்து வெலவெலத்து போனான். “என்னை மன்னித்து விடுங்கள். என்னால் நீங்கள் நிற்க்கும் இடத்திற்கு வர முடியாது. ஒரு சிறிது தப்படி எடுத்து வைத்தாலும், ஒரு காற்று பலமாக அடித்தாலும், ஒரு வினாடி மறந்து விட்டாலும் போதும் நாம் முடிந்தோம். நான் உங்களை இங்கே பார்க்கத்தான் வந்தேனே தவிர தற்கொலை செய்து கொள்ள வரவில்லை. நீங்கள் அங்கு நிற்கிறீர்கள் என்பதையே என்னால் நம்பமுடியவில்லை.” என்றான். கிழவன், “வில்வித்தை ஒரு மனிதனுக்கு தருவது அசையாத உள்ளம், நடுங்காத இதயம். இப்போது எனக்கு வில்லும் அம்பும் தேவையில்லை. நீ என் குகையை சுற்றி பார்த்ததையும் வில்லும் அம்பும் அங்கில்லாததால் இவர் எப்படி ஒரு வில்லாளனாக இருக்க முடியும் என்று நினைத்து புன்னகை செய்ததையும் நான் அறிவேன். இப்போது நான் என் வில்திறமையை உனக்கு காட்டப் போகிறேன்.” என்றார். அவர் மேலே பார்த்தார். மேலே ஒன்பது பறவைகள் பறந்து கொண்டிருந்தன. அவர் அந்த ஒன்பது பறவைகளையும் கூர்ந்து பார்த்தார். அந்த ஒன்பது பறவைகளும் கீழே இறந்து விழுந்தன. அவர், “நீ உள்ளே அசையாமல் இருந்தால் பார்வையே போதும். அம்புகள் தேவையில்லை. ஆகவே திரும்பி சென்று வில்வித்தையை பயிற்சி செய். பட்டம் எல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம். நான் உயிரோடு இருக்கும்வரை பட்டம் என்பதை நினைத்துக் கூட பார்க்காதே. நான் போட்டியாளன் அல்ல தான். நீ உன்னை சிறப்பானவன் என்று அறிவித்துக் கொண்டால்கூட நான் கவலைப்பட போவதில்லை. யாருக்கு வேண்டும்? உங்களுடைய பட்டம், பதவி, சிறப்பானவன் என்ற பாராட்டு என்பதெல்லாம் என்னைப் பொறுத்தவரை குழந்தைகளின் விளையாட்டு. ஆனால் அரண்மனையில் இருக்கும் அவனுக்கு என்னைத் தெரியும். அதனால் நான் இருக்கும் வரை உன்னை வெற்றியாளன் என்று அறிவிப்பது நடக்காது. நீ உண்மையாக வில்வித்தையில் ஆழ்ந்து சென்று பயிற்சி செய்தால் நீ வெற்றியாளன் ஆகலாம். மேலும் நான்தான் உன்னை வெற்றியாளன் ஆக்க முடியும். அரசர் அல்ல. அவருக்கு வில்வித்தையைப் பற்றி என்ன தெரியும். அதனால் அவரிடம் சொல்லிவிடு. ‘உங்களுக்கு எந்த அதிகாரமும் கிடையாது’ என்று கூறி விடு. சரியான சமயத்தில் நான் உயிரோடு இருந்தால் நானே வருவேன். நான் இறந்துவிட்டால் வேறு யாரையாவது அனுப்புவேன், அல்லது வேறு ஏதாவது ஏற்பாடு செய்வேன். என்றார். பத்து வருடங்கள் கடந்து விட்டன. அந்த கிழவன் இறந்து கொண்டிருந்தார். அவர் சமவெளியில் வசித்து வந்த தனது மகனை அழைத்து – அவருக்கும் வயதாகியிருந்தது – அவரிடம் அந்த வில்லாளனைப் பற்றிக் கூறி, “சென்று அவரைப் பார்த்து நிலைமை என்னவென்று வந்து கூறு” என்றார். மகன் அங்கே சென்றார். அந்த வில்லாளன் கிழவர் இன்னும் தன்னை நினைவில் வைத்திருந்து மகனை அனுப்பியதைக் குறித்து மிகவும் சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைந்தார். மகன் ஒரு பெரிய வில் சுவரில் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அவர் “இது என்ன?” என்று கேட்டார். அதற்கு வில்லாளன் “அது எனக்குத் தெரிந்த ஏதோவொன்றாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஆனால் இப்போது எனக்குத் தெரியாது. நான் கேட்க வேண்டும், யாருக்காவது தெரிந்திருக்கலாம்” என்றார். அதற்கு மகன், “நீங்கள் ஒரு வில்லாளன் என்று கேள்விப்பட்டேன்.” என்றார். அவர், “என் இள வயதில் இருந்தேன், ஆனால் எல்லோரும் இளவயதில் முட்டாளாக இருப்பது இயல்புதானே. நானும் அப்படித்தான் இருந்தேன். ஆனால் உன் தந்தைதான் என்னை எனக்கு புரிய வைத்தார்.” என்றார். அந்த வில்லாளன் வில் என்ற பெயரையே மறந்து விட்டார் என்பது அந்த கிழவனிடம் கூறப்பட்டது. அதற்கு அந்த கிழவர், “அவன் தான் யார் என்று நிரூபித்து விட்டான் என்பது தெரிகிறது. நான் இறப்பதற்கு முன் கீழே சென்று அவன் வெற்றியாளன், வில்வித்தையில் நிபுணன் என்பதை அறிவிக்க வேண்டும்” என்றார். இப்போது அவனும் பார்த்த மாத்திரத்திலேயே பறவையை வீழ்த்தும் திறன் கொண்டவனாகிவிட்டான். அவனது இருப்பு அசையாத தன்மை கொண்டு விட்ட படியால் அவனது இரண்டு கண்களில் இருந்து புறப்படும் பார்வையே போதும், அவையே அம்புகளாகி விடும். அவன், “ஒரு இசைக்கலைஞன் இசையில் மிகவும் தேர்ச்சி பெற்று விட்டால் அவன் தனது இசைக் கருவியை உடைத்துவிடுவான் என்று சொல்லப்படும் பழமொழியின் பொருள் எனக்கு இப்போது புரிகிறது. அப்போது கருவியால் என்ன பயன் ஏனெனில் அவை இன்னும் இந்த சத்தம் சார்ந்த உலகின் பாகம்தான். உண்மையான இசை மௌனம்தான்” என்றான். நீ இசையை கேட்கும்போது கூட உண்மையிலேயே உனது இதயத்தை தொடுவது அந்த ஒலி அல்ல, அந்த இரண்டு ஒலிகளுக்கு இடையே இருக்கும் மௌனம்தான், இடைவெளிதான். அந்த மௌனத்தை உனது இதயத்துக்கு கொண்டு வருவது எப்படி என்பதுதான் இசையெனும் கலையே. ஆனால் ஒரு மனிதன் அந்த மௌனத்தை தன்னுடைய இருப்பில் கொண்டு வர முடிந்தால், அப்போது நீ ஆழமான மௌனத்தில் ஆழ்கிறாய், அப்போது உனக்கு உண்மையான இசை என்பது என்னவென்று தெரியும். அப்போது இசை என்று நாம் இதுவரை நினைத்துக் கொண்டிருந்தது ஆரம்ப பாடம் என்பது உனக்குப் புரியும். இதுவே நடனத்திற்க்கும் பொருந்தும், மற்றும் எல்லா படைப்பு திறன் கொண்ட கலைகளுக்கும் பொருந்தும். தோன்றும் எதுவும் உண்மையல்ல. அது ஒரு கருவி. அதன்மூலம் நீ மறைந்திருக்கும், கடந்த, அறியாத ஒன்றைப் பற்றி விழிப்பு கொள்வாய். ஆகவே இசையை ரசிப்பது நல்லது, நடனத்தை ரசிப்பது நல்லது, இசையை வாசிப்பது நல்லது, நடனமாடுவது நல்லது – நினைவில் கொள் – அது இறுதியல்ல. நீ இன்னும் தூரம் சென்றாக வேண்டும் – இசையிலிருந்து, நடனத்திலிருந்து – அந்த கலையைப் பற்றி புரிய நீ அதில் ஆழமாக செல்ல வேண்டும். ஒவ்வொரு படைப்புக் கலையும் உன்னை உன் உள் மையத்திற்கு – எங்கே அமைதியும் மௌனமும் சாந்தமும் உள்ளதோ அங்கே – கொண்டு சேர்க்கும். பின் உன்னால் “நான் கேட்க இயலாததை கேட்டேன், பார்க்க இயலாததை பார்த்தேன்” என்று சொல்ல முடியும். 6 அங்குலிமால் தன்னுணர்வை நீ எடை போடவே முடியாது. தன்னுணர்வு கண்ணாடி போன்றது. கண்ணாடி பிரதிபலிக்கும், ஆனால் அது எடை போடாது. ஒரு அழகான பெண்ணோஅசிங்கமான பெண்ணோ யார் எதிரில் நின்றாலும் அது பிரதிபலிக்கும். எந்த விதபாகுபாடும் இல்லாமல் அது பிரதிபலிக்கும். அதற்கு விருப்பு வெறுப்பு கிடையாது. அதன் வேலை அதன் எதிரில் நிற்பது பாவியோ, ஞானியோ யாராக இருந்தாலும் எதுவாக இருந்தாலும் சரி, அதை அப்படியே அசலாக பிரதிபலிக்கும். தன்னுணர்வு வெறுமனே பிரதிபலிக்கும் – ஆகவேதான் தன்னுணர்வு உள்ள  மக்களை விழிப்புணர்வுள்ள மனிதனை உன்னால் புரிந்து கொள்ளவே முடியாது. கௌதம புத்தர் வாழ்ந்த காலகட்டத்தில் ஒரு மனிதன் இருந்தான், அவன் மிகவும்கோபக்காரனாகவும் வன்முறையாளனாகவும் இருந்தான். எந்த காரணத்தினாலேயோ அவன் கொலைகாரனாகி ஆயிரம் பேரை கொன்று அவர்கள் தலைகளை வெட்டுவேன் என்று சபதம் எடுத்திருந்தான். எத்தனை பேரை கொன்றோம் என்ற எண்ணிக்கை தெரிவதற்காக அவன் தான் கொன்ற மனிதனின் கட்டை விரலை வெட்டி விடுவான். அப்படி வெட்டப்பட்ட விரல்களை மாலையாக்கி கழுத்தில் அணிந்திருந்தான். அவன் படிப்பறிவில்லாதவன், எனவே எண்ணிக்கை தெரிவதற்காக அவன் கழுத்தில் அணிந்திருந்தான். ஆயிரம் என்பது பெரிய எண் அல்லவா? மேலும் ஆயிரம் பேரை கொல்வதற்க்கு பல ஆண்டுகள் பிடித்தன. அவன் அந்த ஊரை விட்டு வெளியே போயும் பல பேரை கொன்றான். அவன் கிட்டத்தட்ட 999 பேரை கொன்று விட்டான். அவனது பெயரே அங்குலிமால் – விரல்களை மாலையாய் அணிந்திருப்பவன் – என்று மாறி விட்டது. அவனைப்பற்றிய பயம் மிகவும் அதிகமாகி விட்டதால் அவன் இருக்கும் பாதையே வெறிச்சோடி விட்டது. யாரும் அந்த பாதையை பயன்படுத்துவதேயில்லை. அவன் இருக்கும் திசைக்கே யாரும் வருவதில்லை. அரசர்கள் கூட தங்களது படை செல்லக் கூட அந்த பாதையை பயன்படுத்துவதில்லை. ஒரு தனி மனிதன் அந்த அரசையே நடுங்க வைத்துக் கொண்டிருந்தான். அவன் ராஜா பிரஜென்ஜீதாவின் அரசினுள் இருந்தான். கௌதம புத்தர் பிரஜென்ஜீதாவின் ராஜ்ஜியத்தினுள் இருந்து வேறொரு அரசிற்கு செல்ல வேண்டி பயணப்பட்டார். மிக அழகான பாதையொன்று வெறிச்சோடிக் கிடப்பதைப் பார்த்த அவர் அந்த பாதையை பயணம் செய்ய தேர்ந்தெடுத்தார். அவரது சீடர்கள், “நீங்கள் என்ன செய்கிறீர்கள்? அங்குலிமாலைப் பற்றி கேள்விப்பட்டதில்லையா? அவனை எப்போதும் வந்து பார்த்து விட்டு போகும். அவனது சொந்த தாய் கூட பயந்து கொண்டு அவனை பார்க்க வருவதில்லை. அவனுக்கு அவனது மாலையை பூர்த்தி செய்ய இன்னும் ஒரே ஒரு விரல் தான் வேண்டும். அவன் தனது தாயாக இருந்தாலும் கூட தலையை வெட்ட தயங்காத ஆள் அவன். ஆகவே அவனது தாய் கூட அவனை பார்க்க செல்வதில்லை. ஆகவே போக வேண்டாம்.” என்று கூறினார்கள். கௌதம புத்தர், “நீங்கள் என்னிடம் இதை சொல்லியிருக்காவிட்டால் நான் பாதையை மாற்றி போயிருக்க கூடும். ஆனால் இப்போது அது சாத்தியமில்லை. ஏனெனில் அந்த மனிதனுக்கு இன்னும் ஒரே ஒரு விரல்தான் வேண்டும், இன்னும் ஒரே ஒரு தலையை தான் வெட்ட வேண்டும். ஆனால் யாரும் கிடைக்காமல் சிரமப் பட்டுக் கொண்டிருக்கிறான். என்னிடம் ஒரு தலை உள்ளது, பத்து விரல்கள் இருக்கிறது. இப்படி யாருமே இந்த வழியில் போகாமல் இருந்தால் பாவம் அவனால் எப்படி தனது சபதத்தை பூர்த்தி செய்ய முடியும்? நான் போகப் போகிறேன். நானே போக வில்லையென்றால் வேறு யார்  போவார்கள்?” என்றார். சீடர்களால் அவர் கூறுவதை புரிந்து கொள்ள முடிய வில்லை. தானே தன் தலையை கொண்டு போய் மரணத்தின் வாயில் வைப்பதா…….. ஆனால் கௌதம புத்தர் போவேன் என்று கூறும்போது வேறு வழியில்லை, அவர்கள் பின் தொடர்ந்து போய்தானாக வேண்டும். எப்போதும் சீடர்களிடையே யார் புத்தரின் அருகில் நடந்து செல்வது என்பதில் போட்டியிருக்கும், ஆனால் இன்று அது தலைகீழ். யார் கடைசியாக வருகிறார்கள் என்பதில்தான் போட்டி இருந்தது. ஆகவே முன்பு எப்போதும் இல்லாத அளவு புத்தருக்கும் சீடர்களுக்கும் இடையே இடைவெளி இருந்தது. அங்குலிமால் தனது கத்தியை மிகவும் கூராக்கி வைத்துக் கொண்டான். பல நாட்களாக யாருமே இந்த பாதையில் வரவில்லை, இன்று தூரத்தில் யாரோ வருவதை பார்த்தவுடன் அவன் கத்தியை பாறையில் கல்லில் தேய்த்து தயாரித்துக் கொண்டான். அவன் தயாராக இருந்தான். இன்று அவனது ஆசை பூர்த்தியடையப் போவதை நினைத்து அவன் மிகவும் மகிழ்ந்தான். ஆனால் கௌதம புத்தர் சிறிது தொலைவில் நெருங்கி வந்த போது, அவன் அவரை பார்த்தான். அவனால் அவரது அழகை, அவரது அமைதியை, அவரது அன்பை, அவரது கருணையை பார்க்க முடிந்தது. எந்தவிதமான கவலையுமின்றி 999 பேரை கொன்ற மனிதன் கூட ஒரு கணம் தயங்கினான். ‘இந்த மனிதனைக் கொல்லக் கூடாது, இந்த உலகத்திற்கு இது போன்ற மனிதர்கள்தான் மேலும் மேலும் அதிக அளவில் தேவை. நான் ஒரு பாவிதான், கொலைகாரன்தான். ஆனாலும் இது போன்ற ஒரு அப்பாவியான மனிதனை கொல்லக் கூடிய அளவிற்கு நான் தரையிறங்க மாட்டேன்.’ என்று நினைத்துக் கொண்டான். ஆகவே அவன் கௌதம புத்தரை பார்த்து, “என்னை நோக்கி இன்னும் ஒரு அடி கூட எடுத்து வைக்க கூடாது. திரும்பி போங்கள். ஒருவரை உயிரோடு நான் திரும்பி போக சொல்வது இதுதான் முதன் முறை. உங்களுக்கு என்னைப் பற்றி எதுவும் தெரியாமல் இருக்கலாம். என் பெயரே அங்குலி மால். விரல்கள் என் கழுத்தில் மாலையாக கிடப்பதைப் பாருங்கள். நான் இது வரை 999 பேரை கொன்றிருக்கிறேன். இன்னும் ஒரு அடி முன்னால் வந்தால் கூட நீங்கள் யாரென்பதைப் பற்றி சிறிதும் கவலைப் பட மாட்டேன். நீங்கள் சாதாரணமானவர் இல்லை என்பதை என்னால் பார்க்க முடிகிறது. நான் பல அரசர்களை கூட கொன்றிருக்கிறேன். ஆனால் யாரிடமும் இத்தகைய அழகையும் ஜொலிப்பையும் நான் கண்டதில்லை. இப்படி ஊடுருவக் கூடிய கண்கள் யாரிடமும் இருந்து நான் பார்த்ததில்லை. நீங்கள் தனித்துவமானவர். தயவுசெய்து நான் சொல்வதை கேளுங்கள், திரும்பி போய் விடுங்கள். உங்களை கொலை செய்ய என்னை தூண்டாதீர்கள்.” என்று கத்தினான். கௌதம புத்தர், “அங்குலிமால், நீ தவறாக புரிந்து கொண்டிருக்கிறாய். நான் முப்பது வருடங்களுக்கு முன்பே நகர்வதை நிறுத்தி விட்டேன். என்னுடைய மனம் நகர்வதை நிறுத்திய அந்த கணமே எனது அசைவுகள் அனைத்தும் நின்று விட்டன. ஆசை தான் மக்களை ஆட்டுவிக்கிறது. என்னிடம் எந்த ஆசையும் கிடையாது. என்னால் எப்படி நகர முடியும்? நான் நகர்வதில்லை அங்குலிமால், நீதான் நகர்ந்து கொண்டிருக்கிறாய். உன்னுடைய மனதில் ஏகப்பட்ட ஆசைகள், எண்ணங்கள் இருக்கின்றன. அதனால் நீதான் தூக்கத்தில் கூட நகர்ந்து கொண்டே இருக்கிறாய். ஆகவே நீதான் நிற்க வேண்டும். நான் நிறுத்தப் போவதில்லை,. ஏனெனில் முப்பது வருடங்களுக்கு முன்பே நான் நிறுத்தி விட்டேன். நீதான் நிறுத்த வேண்டும்.” என்றார். அங்குலிமால், “நீங்கள் வெறும் அழகான அப்பாவி மட்டுமல்ல, ஒரு தனிசிறப்பானவரும் கூட. மேலும் பைத்தியகாரனும் கூட. நான் நின்று கொண்டிருக்கிறேன், நீங்கள் நகர்ந்து வந்து கொண்டிருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் நின்று கொண்டிருப்பதாகவும் நான் நகர்ந்து கொண்டிருப்பதாகவும் நீங்கள் கூறுகிறீர்கள்.” என்றான். புத்தர், “ஆனால் இது கேலியல்ல. இதை நீ சரியாக புரிந்து கொள்ள வேண்டும்”. என்றார். அங்குலிமால், “என் கையில் உள்ள வாள் சூரிய ஒளியில் பளபளப்பதை காண்கிறாயா? இது விரைவில் உனது தலையை வெட்டிவிடும். நான் சொல்வதை கேள்.” என்று கத்தினான். புத்தர், “என்னால் எதுவும் செய்ய முடியாது. ஒருவர் இரண்டு முறை நிற்க முடியாது. நீ என்னை மன்னித்து விடு. எல்லாமும் நின்று விட்டது. காலம் நின்று விட்டது, மனம் நின்று விட்டது. என்னைப் பொறுத்தவரை எல்லாமும் நின்று விட்டது. முப்பது வருடங்களாக என்னிடம் எந்த அசைவும் இல்லை.” என்றார். மேலும் அவர் அங்குலிமாலை நெருங்கி வந்து கொண்டே இருந்தார். இறுதியில் அவர் அவன் முன்னால் வந்து நின்று அங்குலிமாலிடம், “நீ எனது தலையை வெட்ட விரும்பினால் வெட்டிக் கொள். உண்மையில் நான் உனக்காகவே வந்தேன். ஒரே ஒரு தலையை வெட்டுவதற்காக நீ வருடக்கணக்கில் காத்துக் கொண்டிருக்கிறாய் என கேள்விப்பட்டேன். இது மிகவும் அதிகம். யாராவது உன்னிடம் கருணை காட்ட வேண்டும். நான் இந்த தலையை உபயோகிப்பதில்லை, இந்த உடலால் வாழவில்லை. என்னால் இந்த உடல் இன்றியும் வாழ முடியும். நீ இந்த தலையை எடுத்துக் கொள். என்னுடைய விரலை வெட்டிக் கொள். என்ன வேண்டுமானாலும் செய்து கொள்……… ஆனால் அதை செய்வதற்கு முன் இறக்கப்போகும் மனிதனின் கடைசி ஆசையை நிறைவேற்றி வைப்பாயா?” என்று கேட்டார். அங்குலிமால், “சரி, நான் யார் கேட்பதையும் நிறைவேற்றி வைப்பதில்லை. ஆனால் நீ மிகவும் தைரியசாலியாக இருக்கிறாய். நீ என்னைக் கூட பயமுறுத்தி விட்டாய். உன்னுடைய விருப்பம் எதுவாக இருந்தாலும் நான் அதை நிறைவேற்றிவைக்கிறேன்.” என்றான். கௌதம புத்தர், “நாம் நிற்கும் இந்த மரத்தின் இந்த கிளையை வெட்டு.” என்றார். அங்குலிமால் உடனடியாக அந்த கிளையை வெட்டி விட்டு, புத்தரிடம், “மறுபடி  மறுபடி நீ வித்தியாசமானவன் என்பதை நிரூபிக்கிறாய். என்ன ஆசை இது?” என்று கேட்டான். புத்தர், “இது ஆசையின் ஒரு பாதி தான், மறு பாதி திரும்பவும் அதை அந்த மரத்திலேயே ஒட்ட வைத்து விடு.” என்றார். அங்குலிமால், “கடவுளே, இவன் ஒரு பைத்தியகாரனாக இருக்கிறானே, எப்படி ஒட்ட வைக்க முடியும்?” என்று கேட்டான். புத்தர், “உன்னால் ஒட்ட வைக்க முடியாது எனும்போது வெட்ட உனக்கு என்ன  உரிமை இருக்கிறது? இரண்டாவது வெட்டுவதால் நீ உன்னை மிகச் சிறந்த வீரனாக நினைத்துக் கொண்டிருக்கிறாயா? குழந்தை கூட அதை செய்து விடும். உனக்கு ஏதாவது துணிச்சலும் புத்திசாலித்தனமும் இருக்குமானால் அதை ஒட்ட வை. அதுதான் உன்னை நிரூபிக்கும். வெட்டுவது அல்ல” என்றார். அங்குலிமால், “அது இயலாத காரியம்” என்றான். அப்போது புத்தர், “அப்படியானால் இந்த 999 விரல் மாலையை வீசியெறி. அதை விட்டுவிடு. வாளையும் எறிந்து விடு. இவை தைரியசாலிகளுக்கானவை அல்ல, இவை கோழைகள் தங்களது கோழைத்தனத்தை மறைக்க உபயோகப்படுத்துபவை. நான் உன்னை உண்மையான வீரனாக மாற்றுகிறேன்.” என்றார். அங்குலிமால், “இதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. நான் பார்த்ததிலேயே இவ்வளவு தைரியமுள்ள மனிதன் நீங்கள் தான்.” என்றான். அவன் வாளையும் அந்த விரல் மாலையையும் விட்டெறிந்து விட்டு, புத்தரின் காலடியில் விழுந்து, “எனக்கு தீட்சை கொடுங்கள். நீங்கள் கௌதம புத்தரைத் தவிர வேறு யாராகவும் இருக்க முடியாது. நான் கௌதம புத்தரைப் பற்றி கேள்விப்பட்டேன். என் எதிரில் நிற்பது கௌதம புத்தர்தான் என்பதை என்னால் பார்க்க முடிகிறது.”என்றான். புத்தர் அங்குலிமாலுக்கு தீட்சை கொடுத்தார். இதைத்தான் நான் விழிப்புணர்வு கொண்ட மனிதன் என்று கூறுகிறேன். அவருக்கு எந்த வரையறையும் கிடையாது. அவர், “நீ ஒரு பாவி. நீ தன்னந்தனியாக இத்தனை மனிதர்களை கொன்று குவித்திருக்கிறாய். மனித குல வரலாற்றிலேயே தனியனாக வேறு யாரும் உன்னுடன் போட்டியிட முடியாத அளவு கொலை செய்திருக்கிறாய். இப்போது நீ துறவியாக விரும்புகிறாயா?” என்று அவர் கேள்வி கேட்க வில்லை. அவர் அவனுக்கு தீட்சை கொடுத்தார். இவர் இப்படி செய்வார் என்று அவரது சீடர்களாலேயே நம்ப முடிய வில்லை. அவர் மிகப் பெரிய பண்டிதர்களை, அறிவாளிகளை, தீட்சை கொடுக்காமல் திருப்பி அனுப்பியிருக்கிறார். ஆனால் ஒரு கொலைகாரனுக்கு மறுக்கவில்லை. மிகவும் காலதாமதமாகிவிட்ட படியால் அவர்கள் திரும்பவும் பிரஜென்ஜீதாவின் அரசிற்கே திரும்பி வந்தனர். அரசன் நடந்தவற்றை கேள்விப்பட்டான். அவனே அங்குலிமாலுக்கு பயந்து கொண்டு அந்த வழியே போவதை நிறுத்திவிட்டிருந்தான்.அங்குலிமால் ஒரு கிறுக்கன், அவன் அரண்மனைக்கு அருகில் இருப்பது ஆபத்தானது என அரசன் கவலைப்பட்டான். பிரஜென்ஜீதா அடுத்த நாள் புத்தரைப் பார்க்க வந்தான். அவன் எப்போதும் அவரை மிகவும் மதிப்பவன். ஆகவே அவர் சொற்பொழிவுகளை கேட்க தினமும் வருவான். ஆனால் முதல்தடவையாக அவன் புத்தரை பார்க்க தனது உடைவாளுடன் வந்தான். நீ ஞானமடைந்த ஒருவரின் சொற்பொழிவை கேட்க உடைவாளுடன் வர வேண்டிய அவசியமில்லை. ஆனால் பிரஜென்ஜீதா, “என்னை மன்னித்து விடுங்கள். நீங்கள் அங்குலிமாலுக்கு தீட்சை கொடுத்திருக்கிறீர்கள் என்பதை கேள்விப்பட்டதால் நான் வாளுடன் வந்தேன்.” என்றான். அவன் மிகவும் பதட்டத்தோடு காணப்பட்டான். அவனுக்கு வேர்த்துக் கொட்டியது. புத்தர், “ஆம், ஆனால் வாளுக்கு இங்கே வேலையில்லை. அங்குலிமால் இப்போது ஒரு சன்னியாசி, புத்தபிக்கு, அவனைப் பார்த்து நீங்கள் பயப்பட வேண்டிய அவசியமில்லை.” என்றார். ஆனால் அரசன், “அதெல்லாம் சரிதான். எங்கே அவன்? நான் அவன் முகத்தை பார்க்க வேண்டும். என்னுடைய வாழ்வில் அவன் ஒரு அச்சுறுத்தலாகவே இருந்திருக்கிறான்.” என்றான். அங்குலிமால் புத்தரின் அருகில்தான் அமர்ந்திருந்தான். புத்தர், அவனைக் காட்டி, “இதோ பார் – இவன்தான் அங்குலிமால்!” என்றார். அங்குலிமால் என்ற பெயரைக் கேட்டு அவனைப் பார்த்தவுடனே பிரஜென்ஜீதா தனது வாளை உருவினான். அவனது பெயரே குலைநடுங்கச் செய்வதாக இருந்தது. புத்தர் சிரித்தார், அங்குலிமாலும் சிரித்தான். அவன் அரசனிடம், “உனது வாளை உறையினுள் வை. நீ இப்பேற்பட்ட வாள்வீரனாக இருந்தால் நான் அங்குலிமாலாக இருந்த போது வந்திருக்க வேண்டும். நான் இப்போது ஒரு சன்னியாசி. வாளை உறையினுள் வை.” என்றான். அவன் சொன்ன முறையை கேட்ட பிரஜென்ஜீதா அப்படியே செய்தான். அங்குலிமால் எங்கே இருந்தாலும் அங்குலிமால்தான். அரசன் கூட அவன் சொன்னதை கேட்டாக வேண்டும். புத்தர், “அங்குலிமால்! நீ உனது தொனியை மாற்றிக் கொண்டாக வேண்டும். நீ உனது வழிமுறைகளை மாற்றிக் கொள்ள வேண்டும். நீ இப்போது ஒரு சன்னியாசி. நீ இன்று பிச்சையெடுக்கப் போகும்போது எது வேண்டுமானாலும் நடக்கலாம். ஏனெனில் இந்த முழு அரசும் உன்னைக் கண்டு பயந்து நடுங்கிக் கொண்டிருக்கிறது. நீ பிச்சை எடுக்கப் போகும்போது உனக்காக எந்த கதவும் திறக்காமல் போகலாம். பயத்தினால்….. எதிர்க்காதே. இந்த எளிய மக்களால் உன்னுடைய மாறுதலை பார்க்க முடியாது. அவர்கள் பழி தீர்க்கக் கூட செய்யலாம். ஆனால் நீ ஒரு சன்னியாசி என்பதை நீதான் நிரூபிக்க வேண்டும்” என்றார். அங்குலிமால் சென்றான். புத்தர் என்ன நடக்கப் போகிறதென்று அறிந்துகொள்ள அவன் பின்னே சென்றார். அவர் சொன்னதுதான் நடந்தது – கதவுகள் எதுவும் திறக்கவில்லை, அவனுக்கு சாப்பிட யாரும் எதுவும் கொடுக்க வில்லை. மக்கள் தங்களது வீட்டின் மாடியில், கூரையில் நின்று கொண்டு அவன் மேல் கற்களை வீசினார்கள். – நெருங்கி வர பயந்து கொண்டு தூரத்தில் இருந்த படியே மாடியில் கூரையில் நின்றபடி அவன் மேல் கற்களை மழையாக பொழிந்தனர். இறுதியில் அங்குலிமால் தெருவில் வீழ்ந்த பின்னும் அவர்கள் அவன் மேல் கற்களை வீசிக் கொண்டே இருந்தனர். அவன் உடல் முழுவதும் ரத்தகாயமாக இருந்தது. புத்தர் அவனை நெருங்கி வந்த போது அவன் கற்களால் மூடப் பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தான். அவனை அந்த கற்களிலிருந்து வெளியே இழுத்த போது அவன் தனது கடைசி நிமிடங்களில் இருந்தான். புத்தர், “அங்குலிமால், நீ ஒரு சன்னியாசி என்பதை நிரூபித்து விட்டாய். ஒரு வினாடியில் ஒரு பாவி துறவியாக முடியும் என்பதை நீ நிரூபித்து விட்டாய். நீ ஒரு பாவியாக வாழ்ந்தாய். ஆனால் ஒரு துறவியாக இறக்கிறாய்” என்றார். அங்குலிமால் புத்தரின் பாதங்களை தொட்டவண்ணம் உயிரை விட்டான். 7 முல்லா நசுரூதீன் முல்லா நசுரூதீனின் கதை ஒன்று……………….. அவர் ஈரானில் பிறந்தவர், அவரது கல்லறை இன்னும் ஈரானில் உள்ளது. இந்த முழு உலகத்திலும் இல்லாத புது விதமான தனித்துவமான வித்தியாசமான கல்லறை அது. கோடிகணக்கான கல்லறைகள் இருந்தாலும் முல்லா நசுரூதீனின் கல்லறை போல எதுவும் கிடையாது. கல்லறை மீது ஒரு பெரிய பூட்டுடன் கதவு ஒன்று நிற்கிறது. அந்த பூட்டு……. முல்லா தான் சாகும் முன் எல்லா ஏற்பாடுகளையும் செய்தார். “நீங்கள் அந்த பூட்டின் சாவியை என்னுடன் புதைத்து விடுங்கள், அப்போதுதான் யாரும் இந்த கதவை திறக்க முடியாது.” சக்ரவர்த்தி வந்து கூட பார்த்து விட்டு, “என்ன மடத்தனம் இது,  இவரை புத்திசாலி என்று நினைத்துக் கொண்டிருந்தோமே, கொஞ்சம் கிறுக்குத்தனம் உண்டு என்றாலும் எல்லோராலும் இவர் நேசிக்கப்பட்டாரே” என்று கேட்டார். நசுரூதீனின் முக்கிய சீடர்களைப் பார்த்து சக்ரவர்த்திக் கேட்டார், “என்ன விஷயம்?” அவர்கள், “இது புதிதல்ல. அவர் எங்கு சென்றாலும் இந்த கதவை தூக்கிக் கொண்டு செல்வார். நாங்கள் அவரை ஏன் என்று கேட்டோம். அவர், நான் கதவை என்னுடன் தூக்கிக் கொண்டு சென்று விட்டால் யாரும் என் வீட்டினுள் நுழைய முடியாது. எல்லோரும் கதவின் வழியாகத்தான் வீட்டினுள் நுழைந்தாக வேண்டும். வீட்டைக் காப்பாற்றுவதற்காக நான் இந்த கதவை என்னுடன் எடுத்துச் செல்கிறேன் என்பார். இறப்பதற்கு முன் அவர், இந்த கதவை என்னுடைய கல்லறை மீது பொருத்தி பூட்டி விடுங்கள். சாவியை என்னுடன் புதைத்து விடுங்கள். எப்போது நான் சுத்தமான காற்றை சுவாசிக்க விரும்பினாலும் நான் கதவை திறந்து வெளியே வர முடியும் என்றார்”. என்றனர். சக்ரவர்த்தி என்ன முட்டாள்தனம் என்று கூறினார். ஆனால் அவரும் முல்லாவை விரும்பினார். முக்கிய சீடர் கூறினார், “அதில் ஒரு விஷயம் இருக்கிறது. அவர் நான் இறந்து விட்டேன் என்று நினைக்காதீர்கள். என்னுடைய உடலைத்தான் நீங்கள் கல்லறையினுள் வைத்திருக்கிறீர்கள். நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன். என்னுடைய வாழ்வு அழிவற்றது என்றார்.” ஆனால் அவர் எப்போதும் சிறிது கிறுக்கனாகத்தான் இருப்பார். வாழ்வு அழிவற்றது என்னும் இந்த கூற்றை நிரூபிக்கத்தான் அவர் கதவை கல்லறை மீது வைத்தார். “நான் வெளியே வர விரும்பினால் எந்த கணமும் என்னிடம் சாவி இருந்தால் நான் யாரிடமும் அனுமதி கேட்க வேண்டிய அவசியம் இல்லை. நான் கதவை திறந்து வெளியே வந்து நகரைச் சுற்றி சிறிது உலா வரலாம். உங்களால் என்னை பார்க்க முடியாது, ஆனால் நான் உங்களை பார்க்கலாம்.” ஒரு முறை ஈரான் சக்ரவர்த்தி சார்பாக பெரும் பரிசுகளுடன் இந்திய சக்ரவர்த்தியை சந்திக்க முல்லாநசுரூதீன் அனுப்பப் பட்டார். முல்லா இந்திய சக்ரவர்த்தியை முழு நிலவு என புகழ்ந்தார். முல்லாவின் எதிரிகள் இந்த சேதியை கேள்விப்பட்டு அரசரிடம், “நீங்கள் அனுப்பிய ஆள் சரியில்லை. அவர் இந்திய அரசரை முழு நிலவு என்று புகழ்ந்து இருக்கிறார்.” என்று குற்றஞ்சாட்டினர். சக்ரவர்த்தி, “அவர் வரட்டும், அவர் இதற்கு சரியான பதில் கூற வேண்டும், இல்லாவிடில் அவர் தனது தலையை இழக்க நேரிடும்.” என்றார். முல்லா நசுரூதீன் திரும்பி வந்தார். இந்திய அரசர் அவர் புகழ்ந்து கூறியதில் மிகவும் மகிழ்ந்து பல பரிசுகளை அளித்திருந்தார். அதை பார்த்த ஈரானின் அரசர் மிகவும் ஆத்திரமடைந்து, “நசுரூதீன், உனது வாழ்வே மிகவும் அபாயத்தில் இருக்கிறது.” என்றார். நசுரூதீன், “ஒவ்வொருவருடைய வாழ்வும் அபாயத்தில்தான் இருக்கிறது. உங்கள் வாழ்வு அபாயத்தில் இல்லை என்று நீங்கள் நினைக்கிறீர்களா?” என்று கேட்டார். சக்ரவர்த்தி, “தத்துவம் பேசாதே. நீ பதில் சொல்ல வேண்டும். நீ இந்திய அரசரை முழு நிலவு என்று புகழ்ந்து கூறியிருக்கிறாய். அது என்னை அவமரியாதை செய்வதாகும்.” என்று கூறினார். நசுரூதீன், “நீங்கள் ஒரு முட்டாள். நீங்கள் அதன் பொருளை புரிந்து கொள்ளவில்லை. நீங்கள் வளரும் நிலா, ஒரு சிறிய பிறை போல இருப்பது சில நாட்கள்தான். பின் முழு நிலவாக மலரும். முழு நிலவு என்றால் தேயும் நாட்கள் வந்து விட்டன. அந்த இந்திய அரசர் ஒரு முட்டாள். அவர் நான் அவரை புகழ்ந்ததாக நினைத்துக் கொண்டிருக்கிறார். நான் அவரிடம் உங்களது நேரம் முடிந்து விட்டது. இனிமேல் வளர்ச்சி இல்லை. இனிமேல் தேயும் காலம்தான் என்று கூறினேன். ஆத்திரப்படும் நீங்கள் ஒரு முட்டாள். நீங்கள் வளரும் நிலா. நீங்கள் இன்னும் வெற்றியடைய வேண்டும். பெருக வேண்டும். நீங்கள் முழு நிலவாக மாற இன்னும் காலமிருக்கிறது” என்றார். சக்ரவர்த்தி இந்த விளக்கத்தால் மிகவும் மகிழ்ந்தார். நசுரூதானின் எதிரிகள் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் இவர் இப்படி ஒரு விளக்கமளிக்கக் கூடும் என்று எதிர் பார்க்கவேயில்லை. யாரும் இப்படி நினைக்கவில்லை. அவர் எல்லோரும் முல்லா அரசரை அவமதித்துவிட்டதாகத்தான் நினைத்துக் கொண்டிருந்தனர். நசுரூதீன் ஒரு சூபி ஞானி. ஒரு சிறிது கிறுக்குத்தனம் பிடித்தவர். ஆனால் மிகவும் புத்திசாலித்தனம் படைத்தவர். ஒரு நாள் அவர் அந்த நகருக்கு வந்திருந்த அரிதான ஓவியங்கள் கண்காட்சியை காண தனது சீடர்களுடன் சென்றார். இங்கு விஷயம் என்னவென்றால் அவர் தனது கழுதையின் மீது சவாரி செய்ய வேண்டும். அவர் தனது சீடர்களிடம், “இப்போது என்ன செய்வது? நான் எனது கழுதையின் மீது வழக்கமான முறையில் அமர்ந்து சவாரி செய்தால் அப்போது எனது முதுகைத்தான் நீங்கள் பார்க்க முடியும். அது அவமரியாதையாகும். என்னால் எனது சீடர்களை அவமதிக்க முடியாது. நீங்கள் முன்னாடி நடந்தால் உங்களது முதுகுதான் என்னை நோக்கி இருக்கும். நீங்கள் அது போல என்னை அவமதிப்பீர்கள் என்று எனக்கு தோன்றவில்லை. ஆகவே நான் கழுதை மீது உங்களை நோக்கியவாறு அமர்ந்து செல்வது ஒன்றுதான் சாத்தியமான ஒன்றாக தெரிகிறது” என்றார். சீடர்கள், “ஆனால் இந்த நகரம் முழுவதும் அதை பார்த்து சிரிக்குமே!. நீங்கள் எங்களையும் முட்டாள்கள் போல தோன்ற செய்கிறீர்கள். ஆனால் இதிலும் ஒரு பாயிண்ட் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் உங்களுடன் எங்கு சென்றாலும் தொந்தரவுதான்”. என்றனர். இந்த ஊர்வலம் நகரம் முழுவதும் சென்றது. எல்லோரும் பார்த்தனர். இது என்ன புது மாதிரியாக இருக்கிறது. யாரும் இது போல கழுதை மீது பின்புறமாக அமர்ந்து போனதை பார்த்ததேயில்லை. இறுதியில் ஒரு கூட்டம் கூடி, “எங்களுக்கு இது போல அமர்ந்து போவது ஏன் என்று தெரியும்வரை நாங்கள் உங்களை போக விட மாட்டோம்.” என்றனர். நசுரூதீன், “விளக்கம் எளியது. நான் எனது சீடர்களை அவமதிக்க விரும்பவில்லை எனவே எனது முதுகை அவர்களுக்கு நான் காண்பிக்க முடியாது. எனது சீடர்கள் என்னை அவமதிப்பதை நான் விரும்பவில்லை. எனவே அவர்கள் எனக்கு முதுகை காண்பித்தபடி எனக்கு முன்னால் நடக்க முடியாது. எனக்கு பின்னால்தான் அவர்கள் நடந்தாக வேண்டும். இப்போது என்ன செய்வதென்று நீங்கள் சொல்லுங்கள். இதை எப்படி சமாளிப்பது? இது ஒன்றுதான் வழி.”என்றார். மக்கள், “இது பைத்தியகாரத்தனமாக இருக்கிறது. ஆனால் இது ஒன்றுதான் வழி. உன் முதுகை பார்ப்பது யாருக்காவது அவமரியாதையாகிறது எனும்போது இது ஒன்றுதான் வழி. ஆதலால் நிச்சியமாக நீங்கள் செய்வது சரியானதுதான்.” என்றனர். ஒரு சாதாரண மனிதன் நிச்சலனமாக இருக்கும்போது அவனது ஒவ்வொரு செயலும் முழுமையான தெளிவோடு இருக்கும், ஆனால் மேல்மட்டத்தில் அது கோமாளித் தனமானதாக தோன்றலாம். அவர் போதிதர்மர், மஹாகாஸியப் போன்றவர்கள் வரிசையில் இருப்பவரே. ஆனால் அவர் அவர்கள் எல்லோரையும் விட ஒரு சிறிது அதிக கிறுக்குத்தனம் உள்ளவராக இருக்கிறார். நிச்சலனமான இதயத்தில் இருந்து வெளிவருபவை யாவும் புத்திசாலித்தனம் போல மக்களால் புரிந்துகொள்ளப்பட வேண்டும் என்பது அவசியம் கிடையாது. அவை உனக்கு பொருந்தினால் போதும், யார் உன்னை புரிந்து கொள்கிறார்களோ அவர்கள் உன்னுடன் பொருந்தி இருப்பார்கள். ஆனால் இந்த உலகில் நிச்சலனமான இதயத்தின் தெளிவை புரிந்து கொள்ளும் மக்களை கண்டுபிடிப்பது மிகவும் அரிதான ஒன்றாகவும் கஷ்டமானதாகவும் இருக்கிறது. ஆனால் அது ஒன்றும் பிரச்னையில்லை. நிச்சலனமான இதயத்திற்கு எந்த அங்கீகாரமும் தேவையில்லை. அவர் தன்னுள் நிறைவடைந்து இருப்பதால் அது வெளிஉலகிற்கு பைத்தியக்காரத்தனமாக தோன்றலாம், ஆனால் அது அவரது இயல்பிலிருந்து வெளிவந்தால் அதைப் பற்றிய அக்கறை பட வேண்டிய அவசியம் இல்லை. அக்கறை கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் அது பொய்யானதாகவோ, போலியானதாகவோ, பாசாங்கு செய்வதாகவோ இருக்கக் கூடாது. அது உனது நிச்சலனமான இதயத்திலிருந்து வெளிவருவதாக இருக்க வேண்டும். பின் மக்கள் அதை அங்கீகாரம் செய்கிறார்களோ இல்லையோ செய்யும் ஒவ்வொன்றும் தெளிவானதாக இருக்கும். எத்தனை பேர் முல்லா நசுரூதீனை அங்கீகரித்தார்கள்? மிகவும் சிலரே. எத்தனை பேர் போதிதர்மரை அங்கீகரித்தார்கள்? மிகச் சிலரே. எத்தனை பேர் மஹாகாஷ்யபர் திடீரென சிரித்தவுடன் அங்கீகரித்தார்கள்? கௌதமபுத்தர் மட்டுமே. பத்தாயிரம் புத்த பிக்குகள் அங்கு கூடி இருந்தனர். ஆனால் யாராலும் அந்த கிறுக்குத்தனமான செய்கையை புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் அது நிச்சலனமான இதயத்திலிருந்து, தெளிவான கண்ணோட்டத்திலிருந்து வந்தது. அதே போல தெளிவான கண்ணோட்டம் கொண்ட மனிதனால் மட்டுமே அதை புரிந்து கொள்ள முடியும். மனீஷா,  யார் தங்களது நிச்சலனத்தில் நுழைந்து விட்டார்களோ அவர்களால் மட்டுமே மற்ற நிச்சலனமான  இதயத்தை புரிந்து கொள்ள முடியும். மற்றவர்களுக்கு அது ஒரு புதிராக, கிறுக்காக, மடத்தனமாக தோன்றும். பல் வேறு விதமான அழகான புத்தர்கள் இருக்கின்றனர். அவர்களது செயல்கள் அவர்களது நிச்சலனமான இதயத்துடன் இணைந்ததாக இலயத்துடன் இருக்கின்றன. வேறு எதை பற்றியும் அக்கறை இல்லை. அதை அறிவாளித்தனத்தினால் புரிந்து கொள்ள முடியாது. அதை பொதுவான மக்கள் புரிந்து கொள்வது கடினம். 8 உறங்கும் மனிதன் நான் மிகவும் அழகான யூத கதையைப் பற்றி கேள்விபட்டிருக்கிறேன் அது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது – அது ஒரு மனிதனைப் பற்றிய கதை. அவன் எப்போதும் தூக்க கலக்கத்தில் இருந்தான். எல்லா இடங்களிலும் எப்போதும் தூங்குவதற்கு தயாராக இருந்தான். பெரிய பொது கூட்டங்களிலும், எல்லா இசை நிகழ்ச்சிகளிலும், எல்லா முக்கிய ஆலோசனை கூட்டங்களிலும், அவன் அமர்ந்து தூங்கிகொண்டிருப்பதை பார்க்கமுடியும். உனக்கு கண்டிப்பாக அந்த மனிதனை தெரிந்திருக்கும் ஏனெனில் நீதான் அது. நீ அந்த மனிதனை பலமுறை கடந்திருப்பாய், ஏனெனில் அவனை நீ எப்படி ஒதுக்க முடியும்? — அது நீ. நினைத்து பார்க்ககூடிய நினைத்து பார்க்க முடியாத அனைத்து நிலைகளிலும் அவன் தூங்கினான். அவன் தனது முழங்கையை காற்றில் மடித்து தனது கைகளை தனது தலைக்கு பின்னால் வைத்துக்கொண்டு தூங்கினான். அவன் நின்றுகொண்டு, விழாமல் இருப்பதற்காக சாய்ந்துகொண்டு தூங்கினான். அவன் திரை அரங்கத்திலும், தெருக்களிலும், மசூதிகளிலும் தூங்கினான். அவன் எங்கே சென்றாலும் அவனுடைய கண்கள் தூக்க மயக்கத்திலேயே இருக்கும். அவன் இந்துவாக இருந்திருந்தால் அவன் தலைகீழாக நின்றுகொண்டு சிரசாசனத்தில் கூட தூங்கியிருப்பான். நான் இந்துக்கள் அவ்வாறு தூங்குவதை பார்த்திருக்கிறேன். பல யோகிகள் தலைகீழாக நின்றுகொண்டு தூங்குவதில் திறமைசாலிகள். அது கடினம், கஷ்டமான காரியம், அதற்கு மிக பயிற்சி தேவை – ஆனால் அது நடக்கிறது. அவன் ஏற்கனவே ஏழு பெரிய அக்னிகளை தூங்கி கடந்துவிட்டதாக பக்கத்து வீட்டுகாரர்கள் கூறுவார்கள், ஒருமுறை ஒரு பெரிய தீ விபத்தில் அவனை படுக்கையில் இருந்து தூக்கி பக்கத்து சந்தில் வைத்துவிட்டனர், அவன் இன்னமும் தூங்கிகொண்டிருந்தான். ரோந்து வந்தவர்கள் அவனை கூட்டிசெல்லும் வரை அவன் சில மணிநேரங்கள் அந்த சந்தில் தூங்கிகொண்டிருந்தான். அவன் கல்யாணத்தில் மந்திரம் சொல்லும் போது பாதியில் தூங்கிவிட்டான் அவனுடைய தலையில் பலமணிநேரம் அடித்து அவனை எழுப்பினார்கள். அவன் மெதுவாக அடுத்த வார்த்தையை சொல்லிவிட்டு திரும்பவும் தூங்கிவிட்டான். நீ தாலி கட்டியதை நினைத்துப் பார். உன்னுடைய தேன் நிலவை நினைத்துப் பார். உன்னுடைய கல்யாணத்தை நினைத்துப் பார். எப்போதாவது விழித்துகொண்டுள்ளாயா? நீ எப்போதாவது தூங்ககூடிய வாய்ப்பை தவறவிட்டுள்ளாயா? நீ எப்போதும் தூங்கிகொண்டேயிருக்கிறாய்! நம்முடைய கதாநாயகனை பற்றி சொல்லபோகும் கதையை நீ நம்புவாய் என்பதற்காகவே இவ்வளவும் சொல்கிறேன். ஒருமுறை, அவன் தூங்கிவிட்டான், அவன் தூங்கினான், தூங்கினான், தூங்கிகொண்டேயிருந்தான், ஆனால் தூக்கத்தில் வெளியே தெருக்களில் இடிஇடிப்பது போல சத்தம் கேட்பதாக பட்டது, அவனுடைய படுக்கையும் லேசாக ஆடியது, எனவே அவன் அவனுடைய தூக்கத்தில் வெளியே மழை பெய்கிறது என நினைத்துக்கொண்டான், அதன் காரணமாக அவனுடைய தூக்கம் இன்னும் இனிமையானதாக மாறியது. அவன் போர்வையிலும், அதனுடைய இதமான சூட்டிலும் தன்னை சுருட்டிக்கொண்டான். தூக்கத்தில் எத்தனை முறை விஷயங்களை எப்படியெல்லாம் அர்த்தபடுத்தியுள்ளாய் என நினைவு இருக்கிறதா? சில சமயங்களில் நீ அலாரம் வைத்திருப்பாய், அது சத்தம் போடும்போது நீ சர்ச்சில் இருப்பதாகவும் அங்கு மணிகள் சத்தமிடுவதாகவும் கனவு காணத் தொடங்குவாய். அலாரத்தை ஒதுக்குவதற்கான, அலாரம் உண்டாக்கும் தொந்திரவை ஒதுக்குவதற்கான மனதின் ஒரு சாதுரியம். அவன் எழுந்தபோது அவன் ஒரு ஆச்சரியகரமான சூனியத்தை கண்டான், அவனுடைய மனைவி இல்லை, அவனுடைய படுக்கை இல்லை, அவனுடைய போர்வை இல்லை. அவன் ஜன்னல் வழியாக பார்க்க விரும்பினான்,  ஆனால் பார்ப்பதற்கு அங்கு ஜன்னல் இல்லை. அவன் மூன்று மாடிகள் கீழே ஓடி உதவி என கத்த விரும்பினான் ஆனால் ஓடுவதற்கு படிகளும் இல்லை கத்துவதற்கு காற்றும் இல்லை. அவன் வெறுமனே வெளியே செல்ல விரும்பியபோது, வெளியே என்று ஏதுமில்லை என்பதை அவன் கண்டான். அனைத்தும் காணாமல் போய்விட்டது சிறிது நேரம் என்ன நடந்துள்ளது என்பதை கிரகிக்கமுடியாமல் குழப்பத்தில் அங்கேயே நின்றான். ஆனால் பிறகு அவனுக்கு அவனே நினைத்துக்கொண்டான், நான் தூங்கபோகிறேன். ஆனால் அப்படித் தூங்குவதற்கு இனி எந்த பூமியும் இல்லை என்பதை அவன் கண்டான்.பிறகுதான் அவன் இரண்டு விரல்களை நெற்றியில் வைத்துக்கொண்டு யோசிக்க தொடங்கினான். உலகத்தின் முடிவு வரை தூங்கிவிட்டேன் என்பது தெளிவாகிறது. இது, “நான் என்ன செய்திருக்கிறேன் பார்!” என்று கர்வப்பட்டுக்கொள்ளப்படவேண்டிய ஒன்றுதான். ஆனாலும் அவன் சோகத்தில் ஆழ்ந்தான். இனி உலகம் இல்லை, அவன், உலகமில்லாமல் நான் என்ன செய்வேன், நான் எங்கு வேலைக்கு செல்வேன், நான் எவ்வாறு வாழ்வை மேற்கொள்வேன், முக்கியமாக இப்போது தினசரி செலவினங்கள் மிக அதிகமாகிவிட்டன, ஒரு டஜன் முட்டை விலை இருபது டாலராகிவிட்டது. அவை புதியனவா என்பது யாருக்கும் தெரியாது, அது தவிர கேஸ் கம்பெனி எனக்கு தர வேண்டிய ஐந்து டாலர்கள் என்னவாவது? என்னுடைய மனைவி எங்கே சென்றிருக்கிறாள்? அவளும் இந்த உலகத்தோடு நான் பாக்கெட்டில் வைத்திருந்த முப்பது டாலர் பணத்தோடு மறைந்திருக்ககூடிய வாய்ப்பு உண்டா? அவள் மறைந்துபோகக்கூடிய குணமுடையவள் அல்ல, என்று அவனே அவனுக்குள் நினைத்துக்கொண்டான். திடீரென உலகம் மறைந்துவிட்டால் நீயும் இவ்வாறே நினைப்பாய். உனக்கு வேறெதுவும் நினைக்கத் தெரியாது. நீ முட்டையின் விலையைப் பற்றியும், அலுவலகத்தை பற்றியும், மனைவி மற்றும் பணம் குறித்தும் நினைத்துக்கொள்வாய். வேறெதைபற்றியும் சிந்திக்க உனக்குத் தெரியாது. முழு உலகமும் மறைந்துவிட்டது – ஆனால் நீ உன்னுடைய சிந்தனையில் இயந்திரத்தனமாகிவிட்டாய். நான் தூங்க நினைத்தால் என்ன செய்வது? உலகம் இல்லாவிட்டால் நான் எதில் படுப்பேன்? என்னுடைய முதுகு வலித்தால்?, கடையில் இருக்கும் வேலைகளை யார் முடிப்பது? எனக்கு மால்ட் வேண்டுமென்றால் எங்கு கிடைக்கும்?. ஒரு மனிதன் தூங்கும்போது  உலகம் அவன் தலைக்கடியில் இருந்தது ஆனால் எழும்போது உலகம் இல்லை என்பதை போல எங்காவது பார்த்திருக்கிறீர்களா? என்று அவன் நினைத்துக்கொண்டான். இது ஒருநாள் இல்லை ஒருநாள் நடக்கப்போகிறது – சாகும்போது ஒவ்வொரு மனிதனுக்கும் இதுதான் நடக்கிறது. திடீரென முழு உலகமும் மறைந்துவிடுகிறது. தீடீரென அவன் இந்த உலகத்தின் பகுதியல்ல. திடீரென அவன் இன்னொரு பரிமாணத்தில் இருக்கிறான். இது இறக்கும் எல்லோருக்கும் நடக்கிறது, ஏனெனில் நீ அறிந்தவை எல்லாம் மேலோட்டமானவையே. நீ இறக்கும் பொழுது, திடீரென உனது மேல்தளம் மறைந்துவிடுகிறது – நீ உனது மையத்தை நோக்கி தூக்கி எறியப்படுகிறாய். உனக்கு அந்த மொழி தெரியாது. உனக்கு மையத்தை குறித்து எதுவும் தெரியாது. அது சூனியத்தை போல, வெறுமையாக காட்சியளிக்கிறது. வெற்றிடமாக, ஏதுமின்றி இருப்பது போல தெரிகிறது. நமது கதாநாயகன் உள்ளாடையுடன் நின்று என்ன செய்வது என யோசித்துகொண்டிருந்தபொழுது, அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. போனால் போகட்டும், எந்த உலகமும் இல்லை, அது யாருக்கு வேண்டும்? மறைந்தது மறைந்துவிட்டது – நான் திரைப்படத்துக்கு சென்று நேரத்தை கழிக்கிறேன். ஆனால் அவன் ஆச்சரியபடும்படி உலகத்தோடு திரையரங்குகளும் மறைந்துவிட்டன என்பதைக் கண்டான். மிகவும் குழப்பத்தை உண்டாக்கிக் கொண்டுவிட்டேன், என நினைத்துக்கொண்டே நமது கதாநாயகன் மீசையை தடவத் தொடங்கினான். தூங்கியதன் மூலம் மிகப்பெரிய குழப்பத்தை உண்டாக்கிவிட்டேன் நான் ஆழ்ந்து தூங்காமல் இருந்திருந்தால் எல்லாவற்றோடும் நானும் மறைந்திருப்பேன் என அவனை அவனே திட்டிக்கொண்டான். அப்படி பார்த்தால் நான் அதிர்ஷ்டம் இல்லாதவன், எனக்கு மால்ட் எங்கு கிடைக்கும் காலையில் அதை குடிக்க எனக்கு பிடிக்கும். என்னுடைய மனைவி? அவள் யாரோடு மறைந்தாள் என யாருக்கு தெரியும்? அது மேல்தளத்தில் இருக்கும் அந்த துணி தேய்ப்பவனாக இருந்தால், நான் அவளை கொன்றுவிடுவேன். கடவுளே எனக்கு உதவி செய். எவ்வளவு நேரம் கடந்துவிட்டது என்று யாருக்கு தெரியும்? இந்த வார்த்தைகளை கூறியபடியே நமது கதாநாயகன் அவனுடைய கைகடிகாரத்தை பார்க்க விரும்பினான் ஆனால் அது எங்கே என்று தெரியவில்லை. அவன் இரு கைகளாலும் முடிவில்லாத வெற்றிடத்தில் வலது இடது பைகள் இருக்குமிடங்களில் தேடினான் ஆனால் தொடுவதற்கு எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. நான் இப்போதுதான் கடிகாரத்திற்கு இரண்டு டாலர்கள் கொடுத்துள்ளேன் இதோ அது ஏற்கனவே மறைந்துவிட்டது, என அவனுக்கு அவனே நினைத்துக்கொண்டான். சரி உலகம் பாதாளத்திற்கு போயிருந்தாலும், அது பாதாளத்திற்கு போய்விட்டது. அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. அது எனது உலகமல்ல. ஆனால் கடிகாரம்! ஆனால் என்னுடைய கடிகாரம் ஏன் பாதாளம் போகவேண்டும்? புதிய கடிகாரம். இரண்டு டாலர்கள். அது காயப்படாதது. மால்ட் எனக்கு எங்கு கிடைக்கும் காலையில் மால்ட்டை விட சிறந்தது வேறு ஒன்றுமில்லை. யாருக்கு தெரியும் ஒருவேளை என்னுடைய மனைவி…. மோசமான அழிவின் போது தூங்கியிருக்கிறேன், எனக்கு மோசமானதுதான் நடக்கும். உதவி, உதவி, உ-த-வி! என்னுடைய மூளை எங்கே? முன்பே என் மூளை எங்கு போயிற்று? உலகத்தையும் என்னுடைய மனைவியையும், அவள் இளமையாக இருக்கும் போதே பார்த்துக்கொள்ளவில்லை, நான் ஏன் அவைகளை மறைந்து போக விட்டுவிட்டேன்? நமது கதாநாயகன் சூனியத்தில் தலையை முட்டிக்கொள்ள தொடங்கினான், ஆனால் சூனியம் மிகவும் லேசாக இருந்த காரணத்தால் அது அவனை காயப்படுத்தவில்லை, அதனால் அவன் இக்கதையை சொல்வதற்கு உயிரோடு இருந்தான். இது மனித மனத்தின் கதை. நீ உன்னைச் சுற்றி கற்பனை உலகத்தை உருவாக்கியுள்ளாய். நீ சாகும்போது உன்னுடன் வரமுடியாத பொருட்கள் மீது பற்று வைத்துக்கொண்டே செல்கிறாய். உன்னிடம் இருந்து எடுத்துகொள்ளபடக்கூடிய பொருட்களோடு உன்னை நீ அடையாளபடுத்திக் கொள்கிறாய். 9 மனதின் கதை ஓரு பிரபல திபெத்திய கதை…….. ஓரு மனிதன் ஓரு வயதான குருவுக்குத் தினமும் சேவை புரிந்து வந்தான்.  உணவு தருவது, கிணற்றிலிருந்து நீர் இறைப்பது, கால்களை அமுக்கிவிடுவது போன்ற சேவைகள். வயதான குருவோ, “ஏன் உன் நேரத்தை வீண் செய்கிறாய்“ என்று கூறுவது வழக்கம். ஏனெனில் அந்த குருவுக்கு இந்த சேவையின் நோக்கம் ஏதோ ஆசைதான் என்பது தெளிவாகப் புரிந்திருந்தது. முடிவில் ஓரு நாள் அந்த மனிதன்,  “நான் உங்களுக்கு சேவை புரியக் காரணம் – எனக்கு ஏதாவது ஓர் அதிசயம் – ஒரே ஒரு அதிசயமாவது செய்ய கற்றுக் தர வேண்டும்” என்றான். அதற்கு அந்த வயதான குரு, “ஆனால் எனக்கு எந்த அதிசயமும் செய்யத் தெரியாது. நீ உன் நேரத்தை தேவையின்றி வீண் செய்து விட்டாய். நீ வேறு யாராவது அதிசயங்கள் செய்ய தெரிந்தவரைப் போய் பார்” என்று கூறினார். ஆனால்  அந்த மனிதனோ,  ”உங்களுக்கு அதிசயம் செய்யத் தெரியாது என்று எப்போதும் நீங்கள் மறுத்து வருகிறீர்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால் நீங்கள் எப்போதும் அதிசயங்களை நடத்திதான் வருகிறீர்கள். பிறர் என்னிடம் கூறியுள்ளார்கள் – நீ அவர் கூறுவதைக் கேட்காதே. அவருக்கு சேவை செய்துகொண்டே வா. ஓருநாள் அவர் உனக்கு ஏதாவது ரகசியம் கூறுவார்.  ஆனால் அதற்கு நீ ஏற்றவனாக இருக்கிறாயா என்று பார்த்துவிட்டுத்தான் கூறுவார் என்று கூறியுள்ளனர்.  ஓருவேளை  நான் இன்னும் அதற்குத் தக்கவாறு கனியவில்லையோ என்னவோ” என்று கூறினான். சில நாட்கள் கழித்து, அந்த வயதான குரு, இந்த மனிதன் இன்னும் தேவையேயின்றி வேலை செய்து வருவதைக் கண்டார். யாரோ இவன் மனதில் நான் அதிசயம் புரிபவன் என்ற எண்ணத்தை விதைத்து விட்டனர்.  “ஒருவேளை அதிசயங்கள் நடக்கலாம். ஆனால் அவை தாமாகவே நடப்பவை.  நான் அவற்றை செய்வதில்லை.” உயர்ந்த தன்னுணர்வு நிலை அடைந்த மனிதர்களிடம், இப்படிப் பல விஷயங்கள் தானாகவே நடக்கும். எப்படி சூரியன் உதிக்கும்போது பறவைகள் பாடுகின்றனவோ அப்படித்தான். சூரியன் இந்த அதிசயத்தை செய்வதில்லை. மலர்கள் தங்கள் இதழ்களை தாமாகவே திறக்கின்றன. சூரியன் இந்த அதிசயத்தை புரிவதில்லை. சூரியன் இருந்தால் போதும், இந்த அதிசயங்கள் தாமே நடக்கும். இப்படி தன்னுணர்வு நிலையில் விழிப்பு பெற்ற ஓரு மனிதனின் இருப்பே பல மலர்கள் இதழ் மலரவும், பல பறவைகள் கானம் பாடவும் போதுமானதாக இருக்கும். அந்த வயதான குரு, “நான் உனக்கு ஏதாவது ரகசியத்தைக் கூறினால் அன்றி நீ என்னை விட்டுப் போகமாட்டாய் போலிருக்கிறதே” என்றார். அந்த மனிதன், “அது உண்மைதான்” என்றான். ஆகவே குரு “நான் உனக்கு ஓரு ரகசிய மந்திரம் கூறுகிறேன். ஓரு சிறு மந்திரம். திபெத்திய மந்திரம் “ஓம் மணி பத்மீ ஹம்” என்பதை எழுதித்தருகிறேன்” என்றார். ஓம்  என்பது வாழ்விருப்பின் நிரந்தர ஓசை, மணி பத்மீ ஹம் என்றால் தாமரைப் பூவில் இருக்கும் வைரமணி. மணி என்றால் வைரம், பத்மம் என்றால் தாமரை. ஆக அதன் அர்த்தம் நிரந்தர ஓசையும், தாமரை பூவுக்குள் இருக்கும் வைரமும் என்பதாகும். இது முக்தி நிலை என்பதன் அர்த்தமாகும். எங்கும் பரந்து உள்ள நிரந்தர ஓசையும், தாமரையின் அழகும், மேலும் தாமரையின் உள்ளிருக்கும் வைரத்தின் ஓளியும். ஓரு சின்ன மந்திரத்திற்குள் அவர்கள் முக்தி அனுபவத்தின் முழுமையையும் சுருக்கி விவரித்துள்ளனர். அந்த வயதான குரு,  “இந்த மந்திரத்தை எடுத்துச் சென்று, இதை ஐந்து முறை, வெறும் ஐந்தே ஐந்து முறை கூறு. முதலில் குளி. புத்தாடைகளை உடுத்திக்கொள். கதவுகளை மூடிக்கொண்டு தனியே ஓரிடத்தில் அமர்ந்து  இந்த மந்திரத்தை ஐந்தே ஐந்து முறை கூறு. பிறகு நீ எந்த அதிசயம் வேண்டுமானாலும் செய்யலாம்” என்று கூறினார். அந்த மனிதன் வேகமாக வெளியேறத் துவங்கினான். அவன் தன் நன்றி உணர்வைக் காட்டக்கூட முயலவில்லை. நன்றி என்று கூறக்கூட முயலவில்லை. உடனே கோயில் படிகளில் இறங்கி ஓடி விட்டான். அவன் பாதிதூரம் போனபோது, அந்த குரு, “நில்! ஓன்றைக் கூற மறந்து விட்டேன். இந்த மந்திரத்தைக் கூறும்போது ஒன்று நினைவிருக்கட்டும். குரங்கைப் பற்றி  நினைக்கவே கூடாது!“ என்று சத்தமாகக் கூறினார். அந்த மனிதன், “நான் ஏன் குரங்கைப் பற்றி நினைக்கப் போகிறேன், என் வாழ்வில் இதுவரை நான் நினைத்ததே இல்லை” என்றான். குரு, “சரிதான், ஆனால் நினைவிருக்கட்டும்! குரங்கு மட்டும் கூடவே கூடாது.  குரங்கின் நினைவு வந்தால் நீ மறுபடி ஐந்து தடவை மந்திரம் கூற வேண்டும்” என்றார். அந்த மனிதன் “குரங்கு எதற்காக வரும்?” என்றான். குரு, “எனக்குத்  தெரியாது. நான் உனக்கு இரகசியத்தைக் கூறிவிட்டேன். இதுதான் எனது குரு எனக்குக் கூறிய இரகசியமாகும்.” என்றார். ஆனால் அவன் படிகளில் இறங்கத் துவங்கும் முன்பே குரங்குகளைப் பற்றி நினைக்கத் துவங்கி விட்டான். அவன், “அடக் கடவுளே நான் இன்னும் மந்திரம் கூறக் கூட ஆரம்பிக்கவில்லை. ஆனால் குரங்குகள் வந்துவிட்டனவே!” என்று கூறினான். அவன் கண்களை மூடியபோதும் குரங்குகள். குரங்குகள் இளித்துக் கொண்டு, அவனைப் பார்த்து மூஞ்சியைக் காட்டின. அவன், “இது ஓரு விநோத மந்திரம்தான். நான் இன்னும் துவங்கவேயில்லை, அதற்குள்ளா?” என்றான். அவன் வீட்டைச் சென்றடைந்தபோது குரங்குகளால் சூழப்பட்டிருந்தான். அவன் எங்குப் பார்த்தாலும் குரங்கைத்தான் கண்டான். உள்ளே சென்று குளித்தான். ஆனால் அதனால் எந்தப் பயனுமில்லை. குளியலறையில் மூடிய கதவிற்குப்பின்  குரங்குகள் சுற்றி அமர்ந்திருந்தன. அவன், “அந்தக் கிழவன் ஓரு முட்டாள். இந்தக் குரங்குதான் பிரச்னை என்றால் அவன் இதைப் பற்றி குறிப்பிட்டிருக்கவே கூடாது. யானைகள் வரவில்லை. ஓட்டகங்கள் வரவில்லை. சிங்கங்களும் வரவில்லை. குரங்கைக் தவிர வேறெதுவுமே வரவில்லை.” என்று நினைத்தான். பிறகு அவன் கால்களை மடித்து பத்மாசன நிலையில் அமர்ந்து கண்களை மூடிக் கொண்டான். ஆனால் அதற்கு எந்த பயனுமில்லை. குரங்குகள் அவனை இடித்தன. குரங்குகள் மடியில் உட்கார்ந்து கொண்டன. சுற்றிலும் ஓரே குரங்குக் கும்பல்தான். அவனுக்கு மிகவும் கவலையாகி விட்டது.   அவன் மனைவி அவனை கடந்து சென்றபோது அவன் பார்த்தான். அப்போது அவளும் கூட ஓரு குரங்கு போல…..  இல்லை, இல்லை, அவள் என் மனைவி. அவன் தந்தை கடந்து போனார். பார்த்தால் கிழக் குரங்குபோல…… சிலமுறை அவன் தந்தைபோலத் தெரிந்தார். அந்த மனிதன், “ஐயோ நான் பைத்தியமாகி விடுவேன்” என்று நினைத்துக் கொண்டான். ஐந்து தடவை என்பது மிக அதிகம். அந்த மந்திரமான ஓம் மணி பத்மீ ஹம் என்ற நான்கு வார்த்தைகளை ஓரு முறை கூட முடிக்கவிட வில்லை. அத்தனை குரங்குகள். அன்றிரவு முழுவதும் அவன் முயன்றான். நிறைய முறை குளித்தான். ஒருவேளை அவனது உடுப்புகள் போதுமான அளவு தூய்மையாக இல்லையோ என நினைத்துக் கொண்டு நடு இரவில், அந்த குளிர்காலத்தில் அவன் நிர்வாணமாக நின்றான். இப்போது அழுக்கு துணிகள் பற்றியோ, அல்லது வேறு எது பற்றியோ எந்தக் கேள்வியும் இல்லை. ஆனால் குரங்குகளும் சுற்றிலும் காலை மடித்துகொண்டு பத்மாசனம் போட்டு அமர்ந்திருக்கின்றன. அவன் அவற்றைப் பார்த்துச் சப்தமிட்டான். அவை சிரித்தன. காலையில் அவன் கிட்டதட்ட பைத்தியமாகிவிட்டான்.  “அந்த கிழவன் தந்திரக்காரன். எத்தனை வருடங்களாக நான் சேவை செய்தேன். முடிவில் அவன் எனக்கு இரகசியத்தையும் தந்து, கூடவே இந்தக் குரங்குகளையும் தந்து அந்த இரகசிய மந்திரத்தை நாசமாக்கி விட்டானே!” என்றான் அவன். அவன் அந்த குருவிடம் திரும்பிச் சென்று, அந்த மந்திரத்தை திருப்பி தந்துவிட்டு, “நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அந்தக் குரங்குகள்……” என்றான். அந்தக் குரு, “அவை உன்னிடம் வரவே வராது என்றாயே” என்றார். அவன், “நான் இதுவரை என் வாழ்வில் ஓரு குரங்கைப் பற்றிக்கூட எண்ணியதோ, கனவில் கண்டதோ நேரில் கூட கண்டதோ கிடையாது. இலட்சக்கணக்கான விலங்குகளைப் பற்றி நான் யோசித்ததேயில்லை, அவசியமுமில்லை.  நீங்கள் அந்த வார்த்தையைக் கூறாமலிருந்திருந்தால் என்னால் அதிசயங்களை நிகழ்த்தி இருக்க முடியும். ஆனால் அது இப்போது நடவாத காரியமாகி விட்டது.” என்றான். குரு. “நான் என்ன செய்வது? குரங்கு அந்த மந்திரத்துடன் இணைந்து வரும். குரங்கு இல்லையேல் அந்த மந்திரம் பயனில்லை. குரங்கைத் தவிர்க்கும் வழி தெரியாவிட்டால் உன்னால் அதிசயங்களை நிகழ்த்த முடியாது.” என்றார். அந்த மனிதன், “நான் எல்லா அதிசயங்களை பற்றியும் மறந்தே போய்விட்டேன். இந்த மந்திரத்தைத் திருப்பி எடுத்துக் கொண்டு என்னை குரங்குகளிடமிருந்து விடுவியுங்கள். ஏனெனில் எனக்கு மந்திரம் போனாலும் குரங்குகள் போகாதோ என்று பயமாக இருக்கிறது. எனக்கு மனைவியும் வயதான தகப்பனாரும், சிறு குழந்தைகளும் உள்ளனர். நான் அவர்களை கவனித்தாக வேண்டும். என்னால் இரவும் பகலும் அந்த குரங்குகளுடன் சண்டையிட முடியாது.” என்று வேண்டினான். குரு, “அந்த மந்திரத்தை நீ என்னிடம் திருப்பி தந்து விட்டதால் இனிமேல் குரங்குகள் வராது. அவை மிகவும் நேர்மையான பக்திமான்கள்.” என்றார். அந்த மனிதன் சென்று நாலாபக்கமும் பார்த்தபோது எங்குமே குரங்குகள் தென்படவில்லை. அவன் ஆச்சரியமடைந்தான். வீடு சென்று பார்த்தபோது மனைவி மனைவியாகவே தோற்றமளித்தாள். தகப்பனார் தகப்பனாராகவே தோன்றினார். குழந்தைகள் குழந்தைகளாகவே இருந்தனர். அவன் இது விநோதம்தான் என்று குளித்தான். குளியலறை காலியாகவே இருந்தது! “அந்த மந்திரம் சிறியதுதான், குரு எழுதிக்கொடுத்த மந்திரத்தை நான் திருப்பித் தந்து விட்டாலும் கூட, அதை இரவு முழுவதும் கூறியபடியிருந்ததால் எனக்கு அது நினைவிருக்கிறது. இப்போது எந்த ஆபத்துமில்லை…. நான் கூறிப் பார்க்கிறேன்.” என்று நினைத்தான். அவன் ஓம் என்று துவங்கிய கணமே, ஓரு குரங்கு தோன்றிவிட்டது. கூடவே இரண்டு குரங்குகள் சுற்றி அமர்ந்து ஓம் என்றன. அந்த எண்ணம் முழுவதையும் கைவிட்டுவிட்டான். அவன் நான் கடைக்குப் போய் என் வேலையைப் பார்க்கிறேன். இந்த அதிசயங்களை நிகழ்த்தும் எண்ணம் இனிமேல் சரியாக வராது என்று போய்விட்டான். 10 வேரும் இறக்கையும் நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.  ஓரு முறை பணக்கார கெளரவமான குடும்பத்தை சேர்ந்த ஓரு இளைஞன், ஓரு ஜென் குருவிடம் வந்தான்.  அவன் எல்லாவற்றையும் அனுபவித்தவன். எல்லா ஆசைகளிலும் ஈடுபட்டவன்.  அவனிடம் போதுமான பணம் இருந்தது.  எனவே பிரச்சனை இல்லை. ஆனால் பிறகு அவனுக்கு சலித்து விட்டது.  காமத்துடன், பெண்களுடன், மதுவுடன் சலித்துவிட்டது.  அவன் ஜென்குருவிடம் வந்து,  எனக்கு உலகம் சலித்து போய்விட்டது.  நான் யார் என்பதை நான் அறிந்து கொள்ள ஏதாவது வழி உள்ளதா என கேட்டான். தொடர்ந்து அந்த இளைஞன் ஆனால் நீங்கள் ஏதும் சொல்வதற்க்கு முன்னால் நான் என்னைப் பற்றி ஓன்றை சொல்லி விடுகிறேன். என்னால் முடிவெடுக்க இயலாது. என்னால் எதையும் நீண்டகாலம் செய்ய முடியாது. எனவே நீங்கள் எனக்கு ஏதாவது முறையை கொடுத்தால் அல்லது என்னை தியானிக்கும் படி கூறினால் நான் ஓரு சில நாட்கள் செய்யக் கூடும். அதன் பின் நான் உலகில் ஓன்றுமில்லை என நன்றாக தெரிந்திருந்தும், அங்கு துன்பம், மரணம் மட்டுமே காத்திருக்கிறது என நன்றாக தெரிந்திருந்தாலும், தப்பித்துக் கொள்வேன். இதுதான் என் மனதின் வழி. என்னால் தொடர்ந்து செய்யமுடியாது, என்னால் எந்த காரியத்திலும் ஆழ்ந்து ஈடுபட முடியாது, எனவே நீங்கள் எதையாவது தேர்ந்தெடுப்பதற்க்கு முன், இதனை நினைவில் கொள்ளுங்கள். எனக் கூறினான். குரு, நீ ஆழமாக ஈடுபடாவிட்டால் பிறகு அது மிகவும் கடினம். ஏனெனில் நீ கடந்த காலத்தில் செய்த அனைத்தையும் அழிப்பதற்க்கு நீண்ட முயற்சி தேவைப்படும். நீ பின்புறமாக பயணிக்க வேண்டும். அது திரும்பி செல்லுதலாக இருக்கும். நீ புதிதாக, இளமையாக, பிறந்த கணத்திற்கு செல்ல வேண்டும். அந்த புத்துணர்வை மீண்டும் அடைய வேண்டும். அது முன்னால் செல்வதல்ல, நீ பின்னால் செல்ல வேண்டும். திரும்பவும் குழந்தையாக வேண்டும். ஆனால் நீ என்னால் எதிலும் ஆழமாக ஈடுபட முடியாது எனக் கூறினால் சில நாட்களுக்குள் நீ தப்பி சென்று விடுவாய். அது கஷ்டமாக இருக்கும். ஆனால் நான் உன்னை ஓரு கேள்வி கேட்கிறேன், எப்போதாவது நீ உன்னை முழுமையாக மறந்து போகும் அளவிற்க்கு ஆர்வத்துடன் ஆழமாக எதையாவது செய்ததுண்டா? இளைஞன் சிந்தித்து பார்த்துவிட்டு, ஆமாம், சதுரங்கத்தில் மட்டுமே அது நடந்துள்ளது. சதுரங்க விளையாட்டில் எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. எனக்கு அது மிகவும் பிடிக்கும். அது மட்டுமே என்னை காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. மற்றவை அனைத்தும் வீழ்ந்து விட்டன. சதுரங்கம் மட்டுமே இன்னும் என்னுடன் உள்ளது. அதன்மூலம் நான் எப்படியோ என்னுடைய நேரத்தை கடத்திக் கொண்டிருக்கிறேன், எனக் கூறினான். குரு அப்படியென்றால் ஏதாவது செய்யலாம். நீ காத்திரு எனக் கூறிவிட்டு அவர் தன் உதவியாளனை அழைத்து பணிரெண்டு வருடங்களாக மடாலயத்தில் தியானம் செய்து கொண்டிருக்கும் ஓரு துறவியை சதுரங்க அட்டையோடு அழைத்து வரும்படி கூறினார். சதுரங்க அட்டை கொண்டு வரப் பட்டது. துறவி வந்தார். அவருக்கு சிறிது சதுரங்கம் தெரியும், ஆனால் பணிரெண்டு வருடங்களாக அவர் ஓரே அறையில் தியானித்துக் கொண்டிருந்தார். அவர் உலகம், சதுரங்கம் அனைத்தையும் மறந்து விட்டார். குரு அவரை பார்த்து துறவியே கேள், இது ஓரு ஆபத்தான விளையாட்டாக இருக்கப் போகிறது. நீ இந்த இளைஞனால் தோற்கடிக்கப் பட்டால், இதோ இந்த வாளால் நான் உனது தலையை வெட்டி விடுவேன். ஏனெனில் நான் தியானதன்மையுள்ள ஓரு  துறவி, பணிரெண்டு வருடங்களாக தியானித்துக் கொண்டிருக்கும் ஓருவர், ஓரு சாதாரண இளைஞனிடம் தோற்றுப்போவதை விரும்பமாட்டேன். ஆனால் நீ என்னுடைய கையால் இறந்தால் பிறகு நீ மிக உயர்ந்த சொர்க்கத்தை அடைவாய். எனவே கவலைப் படாதே, எனக் கூறினார். இளைஞன் சிறிது சங்கடமடைந்தான். பிறகு குரு அவனிடம் திரும்பி, இதோ பார், நீ சதுரங்கத்துள் மூழ்கி விடுவாய் என நீ கூறியுள்ளாய். எனவே இப்போது முழுமையாக முழ்கிவிடு – ஏனெனில் இது வாழ்வா சாவா என்பதற்க்கான கேள்வி. நீ தோற்றுவிட்டால் நான் உன்னுடைய தலையை வெட்டிவிடுவேன். நினைவில் கொள். ஆனால் நான் உனக்கு சொர்க்கத்தை பற்றி உறுதியளிக்க முடியாது. அந்த துறவி எப்படியிருந்தாலும் போய்விடுவார். ஆனால் நான் உனக்கு எந்த சொர்க்கத்தைப் பற்றியும் உறுதியளிக்க முடியாது. நீ இறந்தால் நரகம்தான்.- உடனடியாக நீ ஏழாவது நரகம் சென்று விடுவாய் எனக் கூறினார். ஓரு நொடி இளைஞன் தப்பி செல்ல நினைத்தான். இது ஆபத்தான விளையாட்டாக இருக்கப் போகிறது, இதற்காக அவன் இங்கு வரவில்லை. ஆனால் பிறகு அது கெளரவ குறைச்சலாக தெரிந்தது. அவன் ஓரு சாமுராய், ஓரு வீரனின் மகன். மரணத்தின் காரணமாக தப்பிச் செல்வது அவன் இரத்தத்தில் இல்லை. எனவே அவன் சரி எனக் கூறினான். விளையாட்டு தொடங்கியது. இளைஞன் வேகமான காற்றினால் ஆடும் இலையைப் போல நடுங்கத் தொடங்கினான். முழு உடலும் நடுங்கியது. அவனுக்கு வியர்க்க, விறுவிறுக்க தொடங்கியது. அவனுக்கு தலைமுதல் பாதம் வரை வியர்த்துக் கொட்டியது. அது வாழ்வா, சாவா என்பதற்குரிய கேள்வியல்லவா? சிந்தனை நின்றுவிட்டது. ஏனெனில் இப்படிப் பட்ட ஓரு அவசரத்தில் நீ சிந்திக்க முடியாது. சிந்தனை ஓய்வு நேரத்திற்கு உரியது. எந்த பிரச்னையும் இல்லாத போது நீ சிந்திக்கலாம். உண்மையிலேயே ஓரு பிரச்னை எழும்போது சிந்தனை நின்றுவிடுகிறது. ஏனெனில் மனதிற்கு நேரம் தேவை. அபாயம் உள்ளபோது நேரம் இருப்பதில்லை. உடனடியாக நீ ஏதாவது செய்தாக வேண்டும். ஓவ்வொரு நொடியும் இறப்பு அருகில் வந்து கொண்டிருக்கிறது. துறவி விளையாடத் தொடங்கினார். அவர் சாந்தமாகவும் அமைதியாகவும் காட்சியளித்தார். இளைஞன், தனது சாவு நிச்சயம் என நினைத்துக் கொண்டான். ஆனால் எண்ணங்கள் மறைந்த பிறகு, அவன் அந்த நொடியில் முழுமையாக முழ்கி விட்டான். எண்ணங்கள் மறைந்த பிறகு, அவன் இறப்பு காத்திருக்கிறது என்பதையும் மறந்து விட்டான். ஏனெனில் மரணம் கூட ஓரு எண்ணமே. அவன் மரணத்தை மறந்து விட்டான். அவன் வாழ்க்கையை பற்றி மறந்துவிட்டான். அவன் விளையாட்டின் ஓரு பகுதியாகி விட்டான். ஆட்கொள்ளப் பட்டு அதில் முழுமையாக முழ்கி விட்டான். போக, போக மனம் முழுமையாக மறைய, மறைய அவன் அருமையாக விளையாடத் தொடங்கினான்.  அவன் அதுபோல இதுவரை விளையாடியதேயில்லை. ஆரம்பத்தில் துறவி வெற்றி பெற்றுக் கொண்டிருந்தார். ஆனால் இளைஞன் அதில் முழ்கிய ஓரு சில நிமிடங்களில் அருமையாக காய்களை நகர்த்த தொடங்கினான். துறவி தோற்றுப் போக ஆரம்பித்தார். அந்த நொடி மட்டுமே இருந்தது. நிகழ்காலம் மட்டுமே இருந்ததால் அங்கு எந்த பிரச்னையும் இல்லை. உடல் சரியாகி விட்டது, நடுக்கம் நின்றுவிட்டது. வியர்வை ஆவியாகி விட்டது. லேசானவனாக, இறக்கை போல எடையற்றவனாக உணர்ந்தான். வியர்வை கூட உதவியது. அவன் எடையற்றவனானான். அவனுடைய முழு உடலும் பறந்துவிடலாம் போல இருந்தது. அவனுடைய மனம் இல்லை. பார்வை தெளிவடைந்தது. மிகவும் தெளிவடைந்தது. அவனால் முன்னால் பார்க்க முடிந்தது. ஐந்து நகர்தல் முன்பே பார்க்க முடிந்தது. அவன் இதுவரை இவ்வளவு அழகாக விளையாடியதேயில்லை. மற்றவரின் விளையாட்டு குலையத் தொடங்கியது. ஓரு சில நிமிடங்களில் துறவி தோற்றுவிடுவார். அவனுடைய வெற்றி நிச்சயமாகி விட்டது. அப்போது திடீரென அவனுடைய கண்கள் தெளிவாக இருந்த போது, கண்ணாடி போல பார்வை கச்சிதமாக, ஆழமாக இருந்தபோது, அவன் அந்த துறவியை பார்த்தான். அவர் மிகவும் வெகுளித்தனமாய் இருந்தார். பணிரெண்டு வருட தியானம் அவரை மலர் போல ஆக்கியிருந்தது. பணிரெண்டு வருட எளிமை – அவர் மிகவும் தூய்மையடைந்திருந்தார். ஆசைகளற்று, எண்ணங்களற்று, இலக்கற்று, காரணமற்று இருந்தார். அவர் எவ்வளவு வெகுளியாக இருக்கமுடியுமோ அவ்வளவு வெகுளியாக இருந்தார்……ஓரு குழந்தை கூட அவ்வளவு வெகுளியாக இல்லை. அவருடைய அழகிய முகம், அவருடைய தெளிந்த வான்நீலம் கொண்ட கண்கள்…….இந்த இளைஞன் அவரிடம் கருணை கொண்டான்.  இப்போதோ, பிறகோ அவருடைய தலை வெட்டப்படும். அவன் இந்த கருணையை உணர்ந்த அந்த நொடியில், தெரியாத கதவுகள் திறந்தன. தெரியவே தெரியாத ஏதோ ஓன்று அவனுடைய இதயத்தை நிரப்பத் தொடங்கியது. அவன் மிகவும் பரவசமாக உணர்ந்தான். அவனுடைய உள்ளிருப்பு முழுவதிலும் மலர்கள் கொட்டத் தொடங்கின. அவன் மிகவும் பரவசமாக உணர்ந்தான். அவன் இதுவரை இந்த பரவசத்தை, இந்த அழகை, இந்த ஆசீர்வாதத்தை அறிந்ததேயில்லை. பிறகு அவன் தெரிந்தே காய்களை தவறாக நகர்த்தினான். ஏனெனில் நான் இறந்தால் எதுவும் இழப்படையப் போவதில்லை.  என்னிடம் மதிப்புக்குரியது ஏதுமில்லை. ஆனால் இந்த துறவி கொலை செய்யப் பட்டால் அழகான ஓன்று அழிந்துவிடும். ஆனால் நான் பயனற்றவன்.  துறவியை வெற்றி பெறச் செய்வதற்க்காக தெரிந்தே அவன் தவறாக காய்களை நகர்த்தத் தொடங்கினான். அந்த நொடியில் குரு மேசையை தலைகீழாக கவிழ்த்துவிட்டு சிரிக்கத் தொடங்கினார். அவர்,  இங்கு யாரும் தோற்கவில்லை. நீங்கள் இருவரும் வென்று விட்டீர்கள். எனக் கூறினார் இந்த துறவி ஏற்கனவே சொர்க்கத்தில் இருக்கிறார். அவர் செழிப்பாக இருக்கிறார். அவருடைய தலையை வெட்ட வேண்டிய தேவை இல்லை. “உன்னுடைய தலை வெட்டப் படும்” என குரு கூறிய போது அவர் கவலைப் படவே இல்லை. ஓரு எண்ணம் கூட அவர் மனதில் உதயமாகவே இல்லை. தேர்ந்தெடுக்கும் கேள்வியே இல்லை.- குரு இது இப்படித்தான் எனக் கூறினால் அது சரி. துறவி அவருடைய முழு இதயத்துடன் “சரி“ எனக் கூறிவிட்டார். அதனால்தான் வியர்வையோ, நடுக்கமோ இல்லை. துறவி சதுரங்கம் விளையாடிக் கொண்டிருந்தார். இறப்பு ஓரு பிரச்சனையே அல்ல. குரு நீ வெற்றி பெற்றுவிட்டாய். உன்னுடைய வெற்றி இந்த துறவியின் வெற்றியை விடவும் பெரியது. நான் இப்போது உன்னை சீடனாக்கி கொள்கிறேன். நீ இங்கு இருக்கலாம். விரைவில் நீ ஞானமடைவாய் எனக் கூறினார். இரண்டு அடிப்படையான விஷயங்களும் நடந்து விட்டன, தியானம் மற்றும் கருணை. இவை இரண்டையும் புத்தர் அடிப்படையானவை எனக் கூறியுள்ளார். பிரக்ஞை, கருணை. தியானம் மற்றும் கருணை. இளைஞன் எனக்கு விளக்கமளியுங்கள் எனக் கேட்டான். எனக்கு தெரியாத ஏதோ ஓன்று நடந்துள்ளது. நான் ஏற்கனவே நிலைமாற்றம் அடைந்துவிட்டேன். நான் ஓரு சில மணி நேரங்களுக்கு முன்னால் உங்களிடம் வந்த அதே இளைஞன் அல்ல. அந்த மனிதன் ஏற்கனவே இறந்துவிட்டான். ஏதோ ஓன்று நடந்தது. நீங்கள் அதிசயம் நிகழ்த்தி விட்டீர்கள். எனக் கூறினான். குரு, இறப்பு மிக விரைவில் நேரிடக்கூடியதாக இருந்ததால், உன்னால் சிந்தனை செய்ய முடியவில்லை. எண்ணங்கள் நின்றுவிட்டன. இறப்பு மிகவும் பக்கத்தில் இருந்ததால் சிந்தனை இயலாத காரியமாகி விட்டது. இறப்பு மிக அருகில் இருந்ததால் உனக்கும் இறப்புக்கும் இடையே இடைவெளி இல்லை. எண்ணங்கள் நகர இடம் தேவை. இடம் இல்லை, எனவே சிந்தனை நின்றுவிட்டது. தியானம் தன்னிச்சையாக நிகழ்ந்தது. ஆனால் அது போதுமானதல்ல. ஏனெனில் அபாயத்தில் நடைபெறும் இந்த வகையான தியானம் தொலைந்து விடும். அபாயம் போனவுடன் தியானமும் போய்விடும். எனவே நான் சதுரங்க அட்டையை எறிய முடியாது. நான் காத்திருக்க வேண்டியிருந்தது. எனக் கூறினார். உண்மையிலேயே தியானம் நிகழ்ந்தால் காரணம் என்னவாக இருந்தாலும் கருணை பின் தொடர வேண்டும். தியானத்தின் மலர்ச்சி கருணை. கருணை வரவில்லை எனில் உனது தியானம் ஏதோ ஓரு இடத்தில் தவறாகவே உள்ளது. பிறகு நான் உனது முகத்தை பார்த்தேன். நீ பரவசத்தில் திளைத்திருந்தாய். உன்னுடைய கண்கள் புத்தரைப் போல இருந்தன. நீ துறவியை பார்த்து  இந்த துறவிக்காக என்னை தியாகம் செய்வது சிறந்தது. இந்த துறவி என்னை விட மதிப்பு வாய்ந்தவர். என உணர்ந்து நினைத்துக் கொண்டாய். இதுதான் கருணை. உன்னை விட மற்றவர் முக்கியமாக படும்போது, நீ மற்றவருக்காக உன்னை தியாகம் செய்யும் பொழுது அது அன்பு. நீ வழியாகவும், மற்றவர் குறிக்கோளாகவும் ஆகும்போது அது அன்பு. நீ குறிக்கோளாகவும், மற்றவர் வழியாகவும் ஆகும்போது அது காமஇச்சை. காமஇச்சை எப்போதும் தந்திரமானது. அன்பு எப்போதும் கருணை மயமானது. பிறகு நான் உனது கண்களில் கருணை எழுவதை கண்டேன். பிறகு நீ தோற்றுப் போவதற்க்காகவே காய்களை தவறாக நகர்த்தினாய். எனவே நீ கொல்லப்பட்டு இந்த துறவி காப்பாற்றப்படுவார். அந்த வினாடியில் நான் சதுரங்க அட்டையை கவிழ்த்தாக வேண்டும். நீ வெற்றி பெற்றுவிட்டாய். இப்போது நீ இங்கே இருக்கலாம். நான் உனக்கு தியானம் கருணை இரண்டையும் கற்றுக் கொடுத்துவிட்டேன்.  இப்போது இந்த வழித் தடங்களை பின் தொடர். அவை உனது தன்னிச்சையான நிலையாகட்டும். – சூழ்நிலையை பொறுத்தோ, எந்த அபாயத்தையும் சார்ந்தோ அல்ல. அவை உனது இருப்பின் ஓரு இயல்பாகட்டும். இந்த கதையை உனக்குள் சுமந்து கொள். உனது இதயத்தில் சுமந்திரு. அது உனது இதயத்தின் துடிப்பாகட்டும். நீ தியானத்தில் வேர் கொண்டு கருணையின் இறக்கைகளை கொண்டிருப்பாய். அதனால்தான் நான் உனக்கு இரண்டு விஷயங்களை கொடுக்க விரும்புகிறேன் எனக் கூறுகிறேன்.  இந்த பூமியில் வேர்களும் அந்த சொர்க்கத்தில் இறக்கைகளும். தியானம் இந்த பூமி, இது இப்போது இங்கே, இந்த நொடியில் நீ உனது வேர்களைப் பரப்பலாம் அதனைச் செய். வேர்கள் இருக்குமானால் உனது இறக்கைகள் உயர்ந்த வானத்தை அடையும். கருணை என்பது வானம், தியானம் என்பது பூமி. தியானமும், கருணையும் சந்திக்கும்பொழுது ஓரு ஞானி பிறக்கிறார். தியானத்திற்குள் மிக மிக ஆழமாக செல், அப்போதுதான் நீ கருணையில் மிக மிக உயரமாக செல்லமுடியும். எவ்வளவு ஆழமாக மரத்தின் வேர் இருக்கிறதோ, அந்த அளவிற்கு உயரமான சிகரங்களை மரம் அடையும். நீ மரத்தை பார்க்கமுடியும், நீ வேர்களை பார்க்க இயலாது, ஆனால் அவை எப்போதும் ஓரே விகிதத்திலேயே இருக்கும். மரம் வானத்தை அடைந்தால் வேர்கள் கண்டிப்பாக பூமியின் இறுதிவரைச் சென்றிருக்கும். விகிதாச்சாரம் ஓன்றே. உன்னுடைய தியானம் எவ்வளவு ஆழமாக உள்ளதோ, அதே ஆழத்தை உனது கருணையும் கொண்டிருக்கும். எனவே கருணைதான் அளவுகோல். உன்னிடம் கருணை இல்லை, ஆனால் நீ தியானத்தன்மையுடன் இருப்பதாக நீ நினைத்துகொண்டிருந்தால் பிறகு நீ உன்னையே ஏமாற்றிக்கொள்கிறாய். கருணை கண்டிப்பாக நடைபெறவேண்டும், ஏனெனில் அதுவே மரத்தின் மலர்தல். தியானம் கருணையை அடைவதற்குரிய வழிமுறை. கருணைதான் வாழும்வழி. 11 அடக்கி வைத்தலின் விளைவு எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது. ஒரு ஞாயிற்றுக்கிழமை ஏழைவிவசாயி ஒருவன் வீட்டிலிருந்து வெளியே கிளம்பும்போது அவனது பால்யபிராயத்து நண்பன் அவனை காண வந்தான். விவசாயி,“வா!வா! இத்தனை வருடங்களாக எங்கே போயிருந்தாய்? உள்ளே வா, நான் சிலரை சந்திக்க போய்க்கொண்டிருக்கிறேன். இப்போது விட்டுவிட்டால் அவர்களை திரும்ப பிடிப்பது கஷ்டம். அதனால் நீ வீட்டில் சிறிதுநேரம் ஓய்வெடுத்து கொண்டிரு. ஒரு மணிநேரத்தில் நான் திரும்பி வந்து விடுவேன். வந்தபின் நாம் பேசலாம்.” என்றான். அந்த நண்பன்,“இல்லையில்லை, நானும் உன்னுடன் வருகிறேன். ஆனால் என்னுடைய உடை மிகவும் அழுக்காக இருக்கிறது. நீ எனக்கு வேறு மாற்றுடை கொடு. நான் மாற்றிக் கொண்டு உன்னுடன் வருகிறேன்,’’ என்றான். பல நாட்களுக்கு முன், அரசர் சில விலை மதிப்பான ஆடைகளை விவசாயிக்கு பரிசாக கொடுத்திருந்தார். அவன் அதை விசேஷ காலங்களில் அணிய என்று பாதுகாப்பாக வைத்திருந்தான். அதை எடுத்து சந்தோஷமாக நண்பனிடம் கொடுத்தான். நண்பன் மேல்அங்கி, தலைப்பாகை, வேட்டி, அழகான ஆடம்பரமான செருப்பு என எல்லாவற்றையும் போட்டுக் கொண்டான். அவன் இப்போது அரசனைப் போல காட்சியளித்தான். தன்னுடைய நண்பனை பார்த்த விவசாயிக்கு சிறிது பொறாமை ஏற்பட்டது. ஒப்பிடும்போது இவன் ஒரு வேலைக்காரன் போல தோன்றினான். தன்னுடைய அழகிய ஆடைகளை கொடுத்து, தான் தவறு செய்துவிட்டோமோ என்று வருத்தப்பட்டான். தன்னை தாழ்வாக உணர்ந்தான். இப்போது எல்லோரும் தன் நண்பனையே பார்ப்பார்கள், தான் ஒரு வேலைக்காரன் போல தோன்றுவோம் என நினைத்தான். அவன் தன்னை நல்ல நண்பன் என்றும் தெய்வம் போன்றவன் என்றும் தன் மனதை தேற்றிக் கொள்ள முயற்சித்தான். தெய்வத்தைப் பற்றியும் நல்ல விஷயங்களை பற்றியும் மட்டுமே நினைப்பதாக முடிவு செய்தான். `நல்ல அங்கி, விலையுயர்ந்த தலைப்பாகையில் என்ன முக்கியத்துவம் இருக்கிறது? இதனாலென்ன?’ என நினைத்தான். ஆனால் அவன் என்ன முயற்சி செய்தாலும் திரும்ப திரும்ப அங்கியும் தலைப்பாகையும் தான் அவன் மனதில் அலை மோதின. அவர்கள் நடந்து செல்லும்போது வழியில் கடந்து செல்வோர் அனைவரும் நண்பனையே கவனித்தனர். யாரும் விவசாயியை கவனிக்க வில்லை. அதனால் அவன் வருத்தமடைந்தான். தன் நண்பனுடன் பேசிக் கொண்டே இருந்தாலும் அவனுள்ளே அங்கியும் தலைபாகையுமே ஓடிக்கொண்டிருந்தன. போகவேண்டிய வீட்டிற்கு போய் சேர்ந்தவுடன் அவன் தன் நண்பனை அறிமுகம் செய்தான். “இவன் என் நண்பன், சிறுவயதுமுதல் நண்பன், மிகவும் அன்பானவன்.’’ என்றவன் திடீரென,“ஆனால் இந்த துணிமணிகள் என்னுடையவை’’ என்றான். நண்பன் திகைத்து நின்றான். வீட்டிலுள்ளவர்கள் ஆச்சரியப் பட்டனர். இதை சொல்லியிருக்கக் கூடாது என உணர்ந்தான். ஆனால் காலம் கடந்து விட்டது. அவன் தனது தவறுக்காக வருத்தப்பட்டான், உள்ளுக்குள்ளே தன்னை கடிந்து கொண்டான். அந்த வீட்டிலிருந்து வெளியே வந்தபின், தன் நண்பனிடம் அவன் மன்னிப்பு கேட்டுக் கொண்டான். நண்பன், “நான் திகைத்துவிட்டேன். அந்தமாதிரி ஏன் சொன்னாய்’’ எனக் கேட்டான். விவசாயி,“மன்னித்துவிடு, வாய் தவறி விட்டது. நான் தப்பு செய்து விட்டேன்.’’ என்றான். ஆனால் நாக்கு பொய் சொல்லாது. மனதில் இருப்பது மட்டுமே வாயிலிருந்து குதித்து வெளி வரும். நாக்கு ஒருபோதும் தவறு செய்யாது. விவசாயி, “என்னை மன்னித்து விடு. நான் எப்படி அந்தமாதிரி சொன்னேன் என எனக்கு தெரியவில்லை’’ என்றான். ஆனால் அந்த எண்ணம் தனது மனதிலிருந்து தான் வெளி வந்தது என்பது மிக நன்றாக அவனுக்குத் தெரியும். மற்றோர் நண்பனின் வீட்டிற்கு போனார்கள். இப்போது விவசாயி இந்த துணிமணிகள் தன்னுடையது என சொல்லக்கூடாது என்று உறுதியான தீர்மானம் செய்துகொண்டான். தனது மனதை நிலைப் படுத்திக் கொண்டான். அந்த நண்பனின் வீட்டு கேட்டை அடையும் போது அந்த துணிமணிகள் பற்றி எதுவும் பேசக் கூடாது என மாற்றமுடியாத தீர்மானம் செய்துகொண்டான். அந்த அப்பாவி மனிதனுக்கு, எதுவும் சொல்லக் கூடாது என தீர்மானம் செய்ய செய்ய, அந்த உறுதியான தீர்மானமே இந்த துணிமணிகள் என்னுடையவை என்பதை உள் மனதில் ஆழமாக கொண்டு செல்லும் என்பது தெரியாது. மேலும் இந்த உறுதியான தீர்மானம் எங்கு செய்யப் படுகிறது. ஒருவன் பிரம்மச்சரிய விரதம் பூணும்போது அவன் தன்னுடைய காம உணர்ச்சியை வலுக்கட்டாயமாக உள்நோக்கி தள்ளுவது போல, உணவு கட்டுப்பாட்டில் இருப்பதாகவோ, பட்டினி கிடப்பதாகவோ முடிவு செய்தால் அவன் அதிகமாக சாப்பிடும் ஆசையை அடக்கி வைப்பது போல, இது போன்ற முயற்சிகள் உள்ளே தவிர்க்கமுடியாத பின்விளைவுகளை ஏற்படுத்தும். எதிர்விளைவை ஏற்படுத்தும். நமது பலவீனம் எதுவோ அதுவே நாம். ஆனால் நாம் அதை அடக்கி ஆள முடிவு செய்கிறோம். அதை எதிர்த்து போராட தீர்மானிக்கிறோம். – இது தானாகவே ஆழ்மனதில் தகராறு உருவாக ஒரு அடிப்படையாக அமைகிறது. ஆகவே உள்ளே இந்த சச்சரவுடன், நமது விவசாயி அந்த வீட்டிற்க்குள் சென்றான். அவன் மிகவும் ஜாக்கிரதையாக, ‘இவன் எனது நண்பன்.’ என்றான். யாரும் அவன் சொல்வதை கவனிக்கவில்லை. எல்லோரும் நண்பனையும் அவன் துணிமணியையுமே ஆச்சரியத்தோடு கவனித்தனர். இது என்னுடைய அங்கி இது என்னுடைய தலைப்பாகை என அவனுக்கு தோன்றியது. ஆனால் உடையை பற்றி பேசுவதில்லை என்ற தீர்மானத்தை நினைவு படுத்திக் கொண்டான். அவன் உறுதி எடுத்திருந்தான். எல்லோரிடமும் எளிமையானதோ அழகானதோ உடைகள் உண்டு. இது ஒரு விஷயமே அல்ல என தனக்குதானே விளக்கம் கூறிக் கொண்டான். ஆனால் அந்த உடைகள் அவனது கண்களுக்கு முன் பெண்டுலம் போல ஆடிக் கொண்டிருந்தது. அவன் மறுபடியும் அறிமுகம் செய்தான். “இவன் எனது நண்பன். சிறுவயது முதலே நண்பன். நாணயமானவன். ஆனால் இந்த உடைகள் அவனுடையவைதான், என்னுடையவை அல்ல” எல்லோரும் ஆச்சரியமடைந்தனர். யாரும் இப்படி ஒரு அறிமுகத்தை கேட்டதேயில்லை. “உடைகள் அவனுடையவைதான், என்னுடையவை அல்ல.” அங்கிருந்து வந்தபின் திரும்பவும் மனபூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொண்டான். ‘மிகப் பெரிய தப்பு!’ என்று அவன் ஒத்துக்கொண்டான். இப்போது அவன் என்ன செய்யக்கூடாது, என்ன செய்ய வேண்டும் என்பதில் குழப்பமடைந்தான். ‘உடைகள் இதற்கு முன் இதுபோல நினைவில் இருந்ததேயில்லை. கடவுளே எனக்கு என்ன நடந்தது.?’ அவனுக்கு என்ன நடந்தது ? அவன் தன்னைக் கட்டுப் படுத்திக்கொண்ட முறையை கடவுளே முயற்சி செய்தால் கூட அந்த உடைகளை பற்றிய நினைப்பு கடவுளையும் பற்றிக்கொண்டு விடும். அந்த செயல்முறை அப்படிப் பட்டது என்பது அந்த அப்பாவி விவசாயிக்குத் தெரியாது. நண்பன் மிகுந்த மன வருத்தத்துடன்,“இனி நான் உன்னுடன் வரவில்லை” என்றான். விவசாயி அவன் தோளைப் பற்றி, “அப்படிச் செய்யாதே! என் வாழ்நாள் முழுவதும் ஒரு நண்பனிடம் இப்படி நடந்து கொண்டேனே என சங்கடத்துடனேயே நான் இருக்க நேரிடும். நான் சத்தியமாக திரும்பவும் இந்த உடைகளை பற்றி குறிப்பிட மாட்டேன். இதயபூர்வமாக, கடவுள் சத்தியமாக நான் உடைகளை பற்றி எதுவும் கூறவே மாட்டேன்.” என்றான். ஆனால் ஒருவர் சத்தியம் செய்யும்போது அதைப் பற்றி அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். ஏனெனில் ஒரு உறுதியான முடிவு எடுக்கும்போது அடி ஆழத்தில் வேறு ஏதோ அதனுடன் இணைந்துள்ளது. உறுதியான முடிவு மேல் மட்ட மனதில் எடுக்கப் படுகிறது, அதற்கு எதிரானது உள் மனதில் எங்கோ செருகப் படுகிறது. மனம் பத்து பிரிவுகளாக இருந்தால், மேற் பகுதியில் உள்ள ஒரு பிரிவு மட்டுமே முடிவு செய்கிறது. ஆனால் மீதி உள்ள ஒன்பது பிரிவுகளும் அந்த முடிவுக்கு எதிராக உள்ளன. பிரம்மச்சரியம் ஒரு பிரிவால் எடுக்கப் படும் முடிவு எனில் மீதி உள்ள மனம் அனைத்தும் உடலுறவுக்கு அலைகின்றன. இறைவனால் மனிதனுக்கு கொடுக்கப்பட்ட ஈடு செய்யமுடியாத அந்த முக்கியத்துவம் வாய்ந்த விஷயத்துக்காக ஏங்குகின்றன. அவர்கள் மூன்றாவது நண்பனின் வீட்டிற்கு சென்றனர். விவசாயி தன்னை மிகவும் கட்டுப் படுத்திக் கொண்டான். இறுக்கமானவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். ஏனெனில் ஒரு எரிமலையே அவர்களுக்குள் குமுறிக் கொண்டிருக்கிறது. வெளிப்பார்வையில் அவர்கள் கண்டிப்பானவர்களாக, கட்டுபாடானவர்களாக, இருப்பார்கள். ஏனெனில் அவர்களது இயல்பான போக்கை தன்னிச்சையாக விடாமல் உள்ளே பிடித்துவைத்து சிரமப் பட்டுக் கொண்டிருக்கின்றனர். நினைவில் கொள், கட்டாயமாக திணிக்கப்படும் எதுவும் தொடரவும் முடியாது, நிறைவு பெறவும் முடியாது. ஏனெனில் அதில் அளவற்ற சிரமம் ஏற்படுகிறது. நீ சில சமயங்களில் ஓய்வாக இருக்கவேண்டும். சில சமயங்களில் தளர்வு கொள்ள வேண்டும். உன்னுடைய முஷ்டியை நீ எத்தனை நேரம் இறுக்க மூடி வைத்திருக்க முடியும் 24 மணி நேரமுமா? நீ இறுக்க இறுக்க அது சோர்வடைந்து விடும். அதனால் அந்த அளவு வேகமாக அது திறந்து விடும். கடின வேலை செய்தால் அதிக சக்தி செலவாகி சீக்கிரத்தில் சோர்வாகி விடுவாய். எப்போதும் ஒரு செயலுக்கு ஒரு எதிர்செயல் இருக்கும், அந்த எதிர்செயல் எப்போதும் உடனடியாக நிகழும். உனது கைகள் எல்லா நேரமும் திறந்தே இருக்கலாம், ஆனால் முஷ்டியை இறுக்கமாக எல்லா நேரமும் வைத்திருக்க முடியாது. அது உன்னை சோர்வடைய செய்யும் அதன்பின் எந்த விஷயமும் வாழக்கையின் இயற்கையான பாகமாக இருக்க முடியாது. எப்போதெல்லாம் நீ கட்டாயப்படுத்துகிறாயோ, அப்போதெல்லாம் ஓய்வு நேரம் தொடர்ந்து வந்தே தீரும். அதனால் ஒரு துறவி எந்த அளவு கட்டுப்பாடானவனோ, அந்த அளவு அவன் ஆபத்தானவன். இருபத்தி மூன்று மணி நேரம் இறுக்கமாக சடங்குகளையும், சம்பிரதாயங்களையும் பின்பற்றிய பின், குறைந்தபட்சம் ஒரு மணிநேரம் தன்னை தளர்த்திக் கொள்ள வேண்டும். அந்த ஒரு மணி நேரத்திற்க்குள் அவன் தன்னுள் அடக்கிவைத்த அத்தனை தேவையற்றவைகளையும் வெளியேற்றியாக வேண்டிய அவசரம் ஏற்படுகிறது. இந்த விவசாயி உடைகளை பற்றி பேசக் கூடாது என்ற கட்டுப்பாட்டை இறுக்கமாக வைத்துக் கொண்டான். அவனது நிலையை கற்பனை செய்து பார். உனக்கு ஒரு சிறிதளவு மத அனுபவம் இருந்தால் போதும், அவனது மனநிலையை உன்னால் கற்பனை செய்து பார்க்க முடியும். சத்தியம் செய்திருந்தாலோ அல்லது சபதம் எடுத்திருந்தாலோ அல்லது விரதம் என்பதற்க்காக உன்னை கட்டுப் படுத்தி வைத்திருந்தாலோ உனக்கு அனுபவம் இருக்கும். இப்போது அந்த விவசாயியின் பரிதாபத்துக்குரிய மனம் என்ன பாடுபடும் என்பதை உன்னால் நன்றாக புரிந்து கொள்ள முடியும். அவர்கள் மற்றொரு வீட்டிற்க்கு சென்றனர். அந்த விவசாயி களைத்துபோய்விட்டான், வியர்த்துக் கொட்டியது அவனுக்கு. அந்த நண்பன் கவலைப் பட்டான். விவசாயி வேதனையால் உறைந்து போய்விட்டான். மெதுவாகவும் ஒவ்வொரு வார்த்தையையும் ஜாக்கிரதையாகவும் பேசியவாறே அவன் அறிமுகம் செய்தான். ‘இவன் எனது நண்பன், சிறு வயது நண்பன், மிகவும் நல்லவன்.’ ஒரு வினாடி அவன் தடுமாறினான். அவன் உள்ளிருந்து ஒரு உந்துதல் வந்தது. தான் மதியிழப்பது அவனுக்கு நன்றாகத் தெரிந்தது. அவன் சத்தமாக,“இந்த உடைகள் என்னை மன்னித்து விடுங்கள். நான் அதைப் பற்றி எதுவும் சொல்லமாட்டேன். ஏனெனில் நான் அதைப் பற்றி எதுவும் சொல்லமாட்டேன் என சத்தியம் செய்திருக்கிறேன்.!” இந்த மனிதனுக்கு என்ன நிகழ்ந்ததோ, அதுவேதான் மனிதஇனம் முழுமைக்கும் நிகழ்கிறது. ஏனெனில் கட்டுப்படுத்தப்படுவதால், காமம் என்பது ஒரு வெறியாக, ஒரு நோயாக, நெறி தவறிய ஒன்றாக மாறிவிட்டது. அது விஷமாகி விட்டது. 12 மனிதனின் முடிவுகள் நான் ஒரு சிறு கதை கூறுகிறேன். இது சீனாவில் லாவோட்சு வாழ்ந்த காலங்களில் நிகழ்ந்தது. இந்த கதையை லாவேட்சு மிகவும் விரும்பினார். லாவேட்சுவை பின்பற்றியவர்கள் பல தலைமுறையாக இந்த கதையை திரும்ப திரும்ப கூறி வந்தனர். இந்த கதையில் மேலும் மேலும் அதிக அர்த்தத்தை அவர்கள் உணர்ந்தனர். இந்த கதை தொடர்ந்து வந்தது. இது ஒரு வாழும் உண்மையென மாறி விட்டது. கதை மிகவும் எளிமையானது. ஒரு கிராமத்தில் வயதான ஏழை ஒருவன் இருந்தான். ஆனால் அரசர்களே பொறாமை கொள்ளுமளவு அழகான வெண் குதிரை ஒன்று அவனிடம் இருந்தது. யாரும் அப்படிப்பட்ட அழகான, வலிமை பொருந்திய, அம்சமான. கம்பீரமான குதிரையை அதற்குமுன் பார்த்திருக்க முடியாது. அரசன் அந்த குதிரையை என்ன விலை கொடுத்தாவது வாங்க தயாராக இருந்தான். ஆனால் அந்த மனிதன், “இந்த குதிரை என்னை பொருத்தவரை வெறும் குதிரையல்ல, என் குடும்பத்தில் ஒருவன். நான் எப்படி மனிதர்களை விற்கமுடியும்? அவன் ஒரு நண்பன். அவன் ஒரு உடமையல்ல, உன்னால் நண்பனை விற்க முடியுமா? அது சாத்தியமில்லை.” என்று கூறி விட்டான். அவன் மிகவும் ஏழை, எல்லா வழியிலும் சபலம் வர வாய்ப்பிருந்தது. ஆனால் அவன் அந்த குதிரையை விற்கவில்லை. ஒருநாள் காலை லாயத்தில் குதிரை இல்லை என்பதை அவன் கண்டான். முழு கிராமமும் ஒன்று திரண்டு, “நீ ஒரு முட்டாள் கிழவன். இப்படி நடக்குமென்று – என்றாவது ஒருநாள் யாராவது குதிரையை திருடி விடுவார்கள் என – எங்களுக்கு முன்பே தெரியும். நீயோ மிகவும் ஏழை – இப்படிப் பட்ட அரிதான ஒன்றை உன்னால் எப்படி பாதுகாக்க முடியும்? இதற்கு பதிலாக அதை நீ முன்பே விற்றிருக்கலாம். நீ என்ன விலை கேட்கிறாயோ அந்த விலைக்கு விற்றிருக்கலாம். நினைத்து பார்க்க முடியாத விலை கிடைத்திருக்கும். இப்போது குதிரை போய்விட்டது. உனக்கு இது ஒரு கெட்டநேரம், இது ஒரு சாபம்” என்றனர். அந்த கிழவன், “அதிகம் பேச வேண்டாம் – குதிரை லாயத்தில் இல்லை என்று மட்டும் கூறுங்கள். இதுதான் உண்மை மற்ற அனைத்தும் அனுமானங்களே. இது அதிர்ஷ்டமா இல்லையா என்பது யாருக்கு தெரியும்? எப்படி உங்களால் முடிவு செய்ய முடியும்?” என்றான். மக்கள், “எங்களை முட்டாளாக்காதே. நாங்கள் சிறந்த தத்துவவாதிகளல்ல, ஆனால் இதற்குத் தத்துவம் எதுவும் தேவையில்லை. அரிதான ஒன்று காணாமல் போய்விட்டது. அது கெட்டநேரம் என்பது மிக சாதாரண உண்மை.” என்றனர். அந்த கிழவன், “லாயம் காலியாக உள்ளது, குதிரை போய்விட்டது என்பது உண்மை என நானும் ஒத்துக்கொள்கிறேன். மற்றபடி எதுவும் எனக்குத் தெரியாது – அது கெட்டநேரமா நல்லநேரமா – ஏனெனில் இது நிகழ்வின் ஒரு பகுதியே. இதை தொடர்ந்து என்ன நடக்குமென்பது யாருக்கு தெரியும்?” என்றான். மக்கள் சிரித்தனர். கிழவனுக்கு புத்தி பிசகிவிட்டதென அவர்கள் நினைத்தனர். அவன் எப்போதும் கொஞ்சம் கிறுக்கனாகவே இருப்பான். அது எல்லோருக்கும் தெரியும். இல்லாவிடில் இந்த குதிரையை நல்ல விலைக்கு விற்று பணக்காரனாகி இருக்கலாம். ஆனால் அவன் விறகுவெட்டியாகவே வாழ்ந்துவந்தான். அவனுக்கும் மிக வயதாகிவிட்டது. இருப்பினும் காட்டுக்கு சென்று மரங்களை வெட்டி கொண்டுவந்து விற்றுக் கொண்டிருந்தான். அவன் சம்பாதிப்பது கைக்கும் வாய்க்குமே போதவில்லை. அவன் வறுமையிலும் வேதனையிலும் வாடிக் கொண்டிருந்தான். இப்போது அவன் ஒரு கிறுக்கன் என்பது மிகவும் ஊர்ஜிதமாகிவிட்டது. பதினைந்து நாட்களுக்கு பிறகு, திடீரென ஒரு இரவில் அந்த குதிரை திரும்பி வந்துவிட்டது. இது திருடப்பட வில்லை. அது காட்டுக்கு தப்பி ஓடிவிட்டது. இப்போது தான் மட்டுமின்றி அது தன்னுடன் கூட தன் இனத்தைச் சேர்ந்த ஒரு டஜன் குதிரைகளையும் கூட்டிக் கொண்டு திரும்பி வந்துள்ளது. திரும்பவும் கிராமத்து மக்கள் திரண்டு வந்து,“அந்த கிழவனிடம், பெரியவரே, நீங்கள் சொன்னது சரிதான், நாங்கள் கூறியது தவறாகிவிட்டது. அது கெட்டநேரமல்ல. அது நல்லநேரம்தான் என்பது நிருபணமாகிவிட்டது. நாங்கள் வலியுறுத்தி கூறியதற்காக மன்னித்துக் கொள்ளுங்கள்.” என்றனர். அந்த கிழவன், “மறுபடியும் நீங்கள் அதிகமாக யோசிக்கிறீர்கள். அந்த குதிரை திரும்ப வந்துவிட்டது என்றும் அதனுடன் இன்னும் பனிரெண்டு குதிரைகள் வந்துள்ளன என்று மட்டும் கூறுங்கள்.- ஆனால் தீர்மானிக்காதீர்கள். இது ஆசீர்வாதமா இல்லையா என்பது யாருக்கும் தெரியாது. இது ஒரு நிகழ்வின் ஒரு பகுதியே. முழு கதையும் தெரியாமல் எப்படி உங்களால் முடிவு செய்ய முடிகிறது? ஒரே ஒரு பக்கத்தை படித்துவிட்டு முழு புத்தகத்தையும் எப்படி விமர்சனம் செய்ய முடியும்? ஒரு பக்கத்தில் ஒரே ஒரு வரியை படித்துவிட்டு எப்படி அந்த பக்கத்தை பற்றி பேச முடியும்? ஒரே ஒரு எழுத்தை மட்டும் பார்த்துவிட்டு எப்படி அந்த வரியை பற்றி கூற முடியும்? நமது கையில் அந்த எழுத்து அளவு கூட இல்லை, வாழ்வு மிகப் பெரியது – எழுத்தின் பகுதிதான் இருக்கிறது. நீங்கள் முழு வாழ்வையும் பற்றி முடிவெடுக்கிறீர்கள். இது ஒரு ஆசீர்வாதம் எனக் கூற வேண்டாம், யாருக்கும் தெரியாது. முடிவெடுக்காமல் இருப்பதே எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. அதனால் என்னை தொந்தரவு செய்யாதீர்கள்.” என்றார். இந்த முறை மக்கள் எதுவும் கூறவில்லை. அந்த பெரியவர் சொல்வது சரியாக இருக்கலாம். அதனால் அவர்கள் மெளனமாக இருந்துவிட்டனர், ஆனால் உள்ளே இவன் கூறுவது தவறு என நினைத்துக் கொண்டனர். பனிரெண்டு குதிரைகள் அந்த குதிரையுடன் வந்திருக்கின்றன. சிறிதளவு பயிற்சி கொடுத்தால் போதும் அவைகளை விற்று ஏகப்பட்ட பணம் சம்பாதிக்கலாம் என நினைத்தனர். அந்த பெரியவருக்கு ஒரே ஒரு மகன் இருந்தான். அவன் இளஞன். இவன் அந்த குதிரைகளுக்கு பயிற்சி கொடுக்க ஆரம்பித்தான். ஒரு வாரத்திற்க்குள் ஒரு குதிரை மேலிருந்து விழுந்து அவனது கால் எலும்பு முறிந்துவிட்டது. மக்கள் திரும்பவும் கூடி – மக்கள் எப்போதும் எங்கும் ஒரே மாதிரிதான், உங்களைப் போலவே தான் – தீர்மானித்தனர். அவர்களின் முடிவு மிக எளிதாக வந்துவிடக் கூடியது. அவர்கள், “நீங்கள் கூறியது சரிதான். மறுபடியும் நீங்கள் சொல்வதுதான் சரி என நிருபணமாகியிருக்கிறது. இது ஒரு வரப்பிரசாதமல்ல, இது ஒரு கெட்டகாலம்தான். உனது ஒரே மகன் தனது கால்களை இழந்துவிட்டான். உன்னுடைய வயதான காலத்தில் அவன்தான் உனக்கு ஒரே ஆதரவு. இப்போது நீ மிகவும் கஷ்டப் படப் போகிறாய்.” என்றனர். அந்த வயதானவன், “நீங்கள் முடிவெடுப்பதற்க்கு மிகவும் ஆவலாக உள்ளீர்கள். வெகுதூரம் நினைப்பை ஓடவிட வேண்டாம். எனது மகன் தனது கால்களை ஒடித்துக் கொண்டான். என மட்டும் கூறுங்கள். இது ஒரு சாபமா வரமா என யாருக்குத் தெரியும்?– யாருக்கும் தெரியாது. மறுபடியும் இது நிகழ்வின் ஒரு பகுதியே, முழுமையாக கொடுக்கப்படவில்லை. வாழ்க்கை பகுதிகளாகத்தான் நிகழ்கிறது, முடிவு முழுமையை ஒட்டித்தான் எடுக்க முடியும்.” என்றான். இது நிகழ்ந்து சில வாரங்களுக்குப் பின் இந்த நாடு பக்கத்து நாட்டுடன் சண்டையிட சென்றது. நகரத்தின் அனைத்து வாலிபர்களும் படைக்கு வலுக்கட்டையமாக அழைத்து செல்லப்பட்டனர். அந்த பெரியவரின் மகன் மட்டும் விட்டுவைக்கப் பட்டான். ஏனெனில் அவன் முடமானவன். மக்கள் எல்லோரும் அழுது அரற்றினர். ஏனெனில் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் இளைஞர்கள் வலுக்கட்டாயமாக கூட்டிச் செல்லப் பட்டனர். அவர்கள் திரும்பி வருவதற்க்கான சாத்தியக் கூறே இல்லை, ஏனெனில் அவர்கள் சண்டையிடப் போகும் நாடு மிகப் பெரியது. இந்த சண்டை தோல்வியுறப் போகும் சண்டைதான். அவர்கள் திரும்பி வரப் போவது இல்லை. அந்த நகரம் முழுவதும் அழுது கொண்டும், அரற்றிக் கொண்டும் விம்மிக் கொண்டும் இருந்தது.  அவர்கள் அந்த வயதானவனிடம் வந்து, “நீங்கள் சொன்னது சரியே பெரியவரே! கடவுளுக்குத்தான் தெரியும்! நீங்கள் கூறியது மிகவும் சரிதான் – இது வரம்தான் என்பது நிருபணமாகிவிட்டது. உனது மகன் முடமாகி இருக்கலாம், ஆயினும் அவன் உன்னுடன் இருப்பான். எங்களது மகன்கள் ஒரேயடியாக போகப் போகிறார்கள். குறைந்தபட்சம் இவன் உயிருடன் உன்னோடு இருப்பான், மெது மெதுவாக நடக்கக் கூட ஆரம்பிக்கலாம், சிறிதளவு நொண்டி நடப்பானாக இருக்கலாம், ஆனாலும் அவன் சரியாகி விடுவான்.” என்றனர். அந்த வயதானவன், “உங்களுடன் பேசவே முடியாது. நீங்கள் மேன்மேலும் கற்பனை செய்துகொண்டே போகிறீர்கள். – முடிவெடுத்துக் கொண்டே இருக்கிறீர்கள். யாருக்கும் தெரியாது உங்களது மகன்கள் வலுக்கட்டாயமாக படைக்கு போர்முனைக்கு இழுத்துச் செல்லப் படுகிறார்கள்., என்னுடைய மகன் இழுத்துச் செல்ல பட வில்லை என்பதை மட்டும் கூறுங்கள். இது வரமா சாபமா என்பது யாருக்கும் தெரியாது. யாராலும் தெரிந்து கொள்ளவும் முடியாது. கடவுளே அறிவார்.” என்றார். நாம் கடவுளே அறிவார் எனக் கூறுவதன் அர்த்தம் முழுமைக்கு மட்டுமே தெரியும் என்பதுதான். முடிவெடுக்காதே, முடிவெடுத்தால், தீர்மானித்தால், ஒருபோதும் உன்னால் முழுமையுடன் ஒருங்கிணைய முடியாது. நிகழ்வின் பகுதிகளால் கவரப்பட்டு விடுவீர்கள். சிறிய விஷயங்களின் மூலம் முடிவெடுக்கவும் தீர்மானிக்கவும் ஆரம்பித்து விடுவீர்கள். 13 ஆன்மீக வியாபாரம் நிரந்தரத்திற்காக படும் இந்த ஆசை எப்படியும் ஆரோக்கியமானதல்ல. ஆனால் அது உள்ளது. எனவேதான் ஆன்மீக நிறுவனங்கள் – ஆம், நான் அவற்றை நிறுவனங்கள் என்றே அழைக்கிறேன். – கிறிஸ்துவ, இந்து, முகம்மதிய நிறுவனங்கள் நூற்றாணடுகளாக மிகப் பெரிய வியாபாரத்தை நடத்தி வந்திருக்கின்றன. இன்னும் செய்கின்றன……. அவர்களது வியாபாரத்திற்கு முடிவே கிடையாது, ஏனெனில் அவர்களது வியாபாரப் பொருள் பார்க்கக்கூடிய விஷயமல்ல என்பதுதான் ஒரே காரணம். அவர்கள் உங்களிடமிருந்து பார்க்கக்கூடிய பொருட்களை எடுத்துக் கொண்டு நீ நம்ப மட்டுமே கூடிய விஷயத்தை உனக்கு கொடுக்கின்றனர். எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது. ஒரு ராஜா முழு உலகத்தையே ஜெயித்துவிட்டான். ஆனாலும் அவன் அமைதியின்றி இருந்தான் – இப்போது, என்ன செய்வது உலகத்தையே ஜெயித்தபின் நிம்மதியாக ஓய்வாக இருக்கலாம் என அவன் நினைத்திருந்தான். தான் அமைதியின்றி இருப்போம் என அவன் ஒருபோதும் நினைத்ததே இல்லை. அவன் அமைதியின்றி இருந்ததே இல்லை. போரிடும்போது, தொடர்ந்து வெற்றி பெற்றுக் கொண்டே இருக்கும்போது – ஏனெனில் எப்போதும் ஜெயிக்க வேண்டிய எதிரி, பிடிக்க வேண்டிய தேசம், போக வேண்டிய இடம் இருந்து கொண்டே இருந்தது – சிந்திக்க காலமோ, நேரமோ அவனுக்கு இருந்ததேயில்லை. அவன் எப்போதும் ஆக்ரமிக்கப் பட்டு இருந்தான். ஆனால் இப்போது அவன் இந்த முழு உலகத்தையும் ஜெயித்து விட்டான் – ஆனாலும் அமைதியின்றி இருக்கிறான் – என்ன செய்வது இப்போது. ஒரு ஏமாற்றுக்காரன் இதைக் கேள்விப் பட்டான். அவன் அரணமனைக்கு வந்து, அமைதியின்றி இருப்பவர்களுக்காக தேவையான மருந்து என்னிடம்  இருக்கிறது எனக் கூறி அரசனை சந்திக்க அனுமதி கேட்டான். உடனடியாக அவன் உள்ளே அழைத்துச் செல்லப் பட்டான். ஏனெனில் எல்லா மருத்துவர்களும் தோற்றுப் போய்விட்டனர். அரசனால் உட்கார முடியவில்லை, தூங்க முடியவில்லை, அமைதியின்றி கவலையோடு அலைந்துகொண்டே இருந்தான். அவன், “இனி என்ன செய்வது? வேறு ஏதாவது உலகம் இருக்கிறதா? கண்டுபிடியுங்கள், அதையும் நாம் ஜெயிப்போம்.” எனக் கேட்டான். இந்த ஏமாற்றுக்காரன் அரசவைக்கு வந்து, “கவலைப்படாதீர்கள் அரசே, இந்த உலகையே ஜெயித்த முதல் மனிதர் நீங்கள்தான் – கடவுள் தானே அணியும் ஆடைகளை பெற தகுதியுடையவர் தாங்கள்தான். என்னால் இதை பெற்றுத்தர முடியும்” என்றான். இது ஒரு சிறப்பான யோசனையாக இருந்தது. அரசன் உடனடியாக ஆர்வம் கொண்டான். அவன், “நீ இந்த வேலையை செய்ய ஆரம்பித்து விடு. கடவுளின் சொந்த ஆடைகள்……… அவை ஏற்கனவே இந்த பூமிக்கு வந்திருக்கின்றனவா?” எனக் கேட்டான். அந்த மனிதன், “இல்லை, ஏனெனில் அவைகளை பெறகூடிய தகுதியை யாரும் இதுவரை பெறவில்லை. நீங்கள்தான் முதல் மனிதர். அதனால் முதல்தடவையாக, சொர்க்கத்திலிருந்து நான் உங்களுக்காக அந்த உடைகளை தருவிக்கிறேன்.” என்றான். அரசன், “எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிடு……. எவ்வளவு செலவாகும்?” எனக் கேட்டான். அந்த மனிதன், “அவை விலைமதிப்பற்றவை. ஆனாலும் கோடிக்கணக்கான ரூபாய்கள் தேவைப்படும் – ஆனால் அதன் மதிப்பிற்கு முன் இந்த செலவு ஒன்றுமேயில்லை.” என்றான். அரசன், “கவலைப்படாதே. பணம் ஒரு பொருட்டல்ல. ஆனால் என்னை ஏமாற்ற முயற்சி செய்யக் கூடாது.” என்றான். அந்த மனிதன், “ஏமாற்றுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. நான் அரண்மனையிலேயே தங்குவேன். நீங்கள் உங்கள் படையை அரண்மனையை சுற்றி நிறுத்தி வைத்து விடுங்கள். நான் இங்கேயேதான் வேலை செய்வேன். ஆனால் நான் உள்ளிருந்து தட்டும்வரை எனது அறை திறக்கப்படக் கூடாது. நீங்கள் அந்த அறையை வெளியே பூட்டிவிடலாம், அப்போதுதான் நான் தப்ப முடியாது என்று நீங்கள் திருப்தியோடு இருக்கலாம். ஆனால் நான் கேட்கும் பணத்தை நான் கூறும் நபர்களுக்கு நீங்கள் அனுப்பி விடவேண்டும். மூன்று வாரங்களுக்குள் இந்த வேலை முடிந்து விடும்.” என்று கூறினான். மூன்று வாரங்களுக்குள் அவன் கோடிக்கணக்கான ரூபாய்களை வாங்கி விட்டான். ஒவ்வொரு நாளும் ஒரு பெயர் – காலை, மாலை, மதியம், இரவு – உடனடியாக அவசரம். இந்த வேலை அப்படிப் பட்டது என்பதை அரசன் அறிவான். … இந்த மனிதன் அரசனை ஏமாற்ற முடியாது. அவன் எங்கே போக முடியும்? ஏனெனில் அவன் உள்ளே பூட்டப் பட்டிருக்கிறான். உறுதியாக அவன் தப்பிப் போக முடியாது. மூன்று வாரங்களுக்குப் பின் அவன் உள்ளிருந்து கதவை தட்டினான். கதவு திறக்கப் பட்டது. அவன் ஒரு அழகான மிகப் பெரிய பெட்டியுடன் உள்ளிருந்து வந்தான். அவன் உள்ளே போகும்போது, “நான் உங்களுக்காக தருவிக்கப் போகும் ஆடைகளுக்காக இந்த பெட்டியை உள்ளே என்னுடன் எடுத்துச் செல்கிறேன்.” எனக் கூறி அந்த பெட்டியை உள்ளே எடுத்துச் சென்றிருந்தான். ஏமாறாமல் இருப்பதற்க்காக அரசன் அந்த பெட்டியினுள் ஏதாவது ஆடை இருக்கிறதா எனப் பார்த்தான். இல்லை, அது காலியாக இருந்தது, அதில் ஏமாற்ற எதுவும் இல்லை. அந்த பெட்டி அவனிடம் கொடுக்கப் பட்டது. இப்போது அந்த ஏமாற்றுக் காரன் வெளியே வந்து, “இந்த பெட்டி அனைவரின் – கற்றவர்கள், பண்டிதர்கள், அறிவாளிகள், ராணி, ராஜா, இளவரசன், இளவரசி – முன்னிலையிலும் திறக்கப்பட வேண்டும். இது ஒரு தனித்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாகையால் அனைவரும் வர வேண்டும்.” என்றான். அந்த மனிதன் உண்மையிலேயே மிகவும் தைரியசாலி. ஏமாற்றுக் காரர்கள் அப்படித்தான் இருப்பார்கள். அவன் அரசரிடம், “அருகில் நெருங்கி வாருங்கள். நான் இந்தப் பெட்டியை திறக்கப் போகிறேன். உங்களுடைய தலைப்பாகையை கொடுங்கள். அதை நான் இந்த பெட்டியினுள் போட வேண்டும். இப்படித்தான் செய்ய வேண்டும் என எனக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. முதலில் உங்களுடைய இந்த தலைப்பாகையை உள்ளே போட்டு விட்டு, கடவுள் அளித்திருக்கும் தலைப்பாகையை வெளியே எடுத்து உங்களிடம் கொடுப்பேன். நீங்கள் அணிந்து கொள்ளலாம்.” என்றவன், ராஜசபையிடம் திரும்பி, “ஒரே ஒரு நிபந்தனை. இந்த உடைகள் தெய்வீகமானவை, அதனால் யார் தங்களது சொந்த தகப்பனுக்கு பிறந்தவர்களோ அவர்கள் கண்ணுக்கு மட்டுமே இந்த உடை தெரியும். யார் அப்படி இல்லையோ, அவர்கள் கண்களுக்குத் தெரியாது. இதில் நான் எதுவும் செய்ய முடியாது.” எனக் கூறினான். ஆனால் ஒவ்வொருவரும், “இதில் பிரச்னை எதுவும் இல்லை. நாங்கள் எங்கள் சொந்த தகப்பனாருக்கு பிறந்தவர்கள்தான்”. என்றனர். அரசரின் தலைப்பாகை உள்ளே சென்றது, ஏமாற்றுக்காரனின் வெறுமையான கை வெளியே வந்தது, அவன் அரசரிடம், “தலைப்பாகையின் அழகைப் பாருங்கள்” என்றான். அவனது கைகளில் ஏதுமில்லை. ஆனால் ராஜசபை முழுவதும் கைதட்டியது. ஒவ்வொருவரும் இதுபோன்ற அழகான ஒன்றை இதுவரை பார்த்ததேயில்லை என மற்றவரை மிஞ்சும் வண்ணம் சத்தமிட்டனர். இப்போது அரசன், நான் இவனது கைகளில் ஏதுமில்லை என்று சொன்னால் நான் மட்டுமே வேசி மகன் என ஆகி விடுவேன். இந்த வேசி மகன்கள் அனைவரும் தங்களது சொந்த தகப்பனாருக்கு பிறந்தவர்களாகி விடுவர். அதனால் பேசாமலிருப்பதே சிறந்தது என நினைத்தான். உண்மையில் இதுதான் ஒவ்வொருவரின் நிலையும். எல்லோரும் அந்த மனிதனின் கைகளில் ஏதுமில்லை எனக் கண்டனர். ஆனால் யார் இதை வெளியே சொல்வது? எல்லோரும் எதையோ பார்ப்பது போல நடிக்கும்போது யார் அங்கு ஒன்றுமில்லை என்பதை சொல்வது? ஒவ்வொருவரும், “நான் வேசி மகனாக இருக்கக்கூடுமோ, அதனால் பேசாமலிருப்பதே சிறந்தது. தேவையில்லாமல் ஏன் இவர்களால் இகழப் பட வேண்டும்?” என சந்தேகப் பட்டனர். அதனால் அவர்கள் அதனுடைய அழகைப் பற்றி அதிக சத்தமாக கூற ஆரம்பித்தனர். அரசன் இல்லாத தலைப்பாகையை தனது தலையில் அணிந்தான். ஆனால் தலைப்பாகை மட்டுமல்ல, மற்ற உடைகளும் மறைய ஆரம்பித்தன. கடைசியில் அவனது உள்ளாடை மட்டுமே எஞ்சியது. அரசன் ஒரு விநாடி, “என்ன செய்வது இப்போது” என யோசித்தான். ஆனால் காலம் கடந்து விட்டது. “தலைப்பாகையை பார்த்தாயிற்று, மேலாடையை பார்த்தாயிற்று, சட்டையை பார்த்தாயிற்று, பின் எப்படி உள்ளாடையை பார்க்க முடியாது இப்போது பார்க்கத்தான் வேண்டும். திரும்பி போக முடியாது. இந்த மனிதன்……….” அந்த மனிதன் இல்லாத உள்ளாடையை அவனது கைகளில் ஏந்தி, எல்லோரிடமும் காட்டினான். “பாருங்கள், எத்தனை வைரங்கள் இந்த உள்ளாடையில் என்று பாருங்கள்”. என்றான். முழு அரசவையும் கைதட்டி பாராட்டி, “மனித வரலாற்றிலேயே இப்படி ஒரு அனுபவம் நிகழ்ந்ததேயில்லை.” என்றது. அரசனின் உள்ளாடையும் உள்ளே சென்றது. ஆனால் அந்த ஏமாற்றுக்காரன் வித்தியாசமானவன். அவன், “நான் இதை பெறும்போது, கடவுள் என்னிடம், ‘இந்த உடைகள் முதன்முறையாக உலகத்திற்கு வருகின்றன, அதனால் அரசர் இந்த உடைகளை போட்டுக் கொண்ட பின் இந்த தலைநகரத்தை ஒருமுறை சுற்றி வரச் சொல்லி நான் சொன்னதாக அவரிடம் சொல். அப்போதுதான் எல்லா மக்களும் இந்த உடைகளை பார்க்க முடியும். இல்லாவிடில் ஏழை மக்களால் இந்த உடைகளை ஒருபோதும் பார்க்கவே முடியாது’ என கூற சொன்னார். அதனால் ரதம் தயாராக இருக்கிறது வாருங்கள்.” என்றான். இப்போது முடியாது என மறுப்பது சாத்தியமில்லை. அரசன் “இந்த விஷயத்தை தலைப்பாகையோடு நிறுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் – ஆனால் இப்போது காலம் கடந்துவிட்டது. நான் நிர்வாணமாக இருக்கிறேன் என்பதை நான் கூறினால்…..முழு அரசவையும் சிரிக்குமே.” என நினைத்தான். மற்றவர்கள், “ஆமாம், அரசே அதுதான் சரி. கடவுள் கூறியிருந்தால் அப்படியே நடந்தாக வேண்டும். அதுவே இந்த உடைகளுக்கு நாம் அளிக்கும் மிகச் சரியான வரவேற்பாகும்.” என்றனர். பாதை நெடுக மக்கள் கூட்டம் அலைமோதியது. கடவுளின் ஆடைகளை பற்றிய செய்தி நாடு முழுக்க பரவியிருந்தது. அரசன் சம்மதித்தான். அவன் நிர்வாணமாக தனது தேரில் ஏறி நின்றான். தேருக்கு முன் சென்ற இந்த மனிதன் எல்லோருக்கும் கேட்கும்படியாக, “இந்த கடவுளின் உடைகள் யார் தங்களது சொந்த தகப்பனாருக்கு பிறந்தவர்களோ அவர்களுக்கு மட்டுமே தெரியும்”. என அறிவித்தான். அதனால் பார்த்த அனைவரும் எதுவுமே கூறவில்லை. ஆனால் ஒரு சிறிய குழந்தை, தனது தந்தையின் தோளின் மீது அமர்ந்திருந்த அது, “அப்பா, அரசர் அம்மணமாக இருக்கிறார்” என்றது. அந்த தந்தை, “முட்டாளே, வாயை மூடு நீ வளர்ந்த பிறகு உன்னால் அந்த உடைகளை பார்க்க முடியும். அதற்கு ஒருவிதமான பக்குவம் தேவைப் படுகிறது. உன்னைப் போன்ற குழந்தையால் அதைப் பார்க்க முடியாது. நீ அதை பார்க்க விரும்பினால் சும்மாயிரு. ஆரம்பத்திலிருந்தே உன்னை கூட்டிக் கொண்டு வருவதில் எனக்கு விருப்பமில்லை”. என்றார். ஆனால் அந்த குழந்தையால் சும்மாயிருக்க முடியவில்லை. திரும்ப திரும்ப அது, “நான் அவர் அம்மணமாக நிற்பதை தெளிவாக பார்த்தேன்”. என்றது. அந்த தந்தை அந்த குழந்தையுடன் கூட்டத்திலிருந்து விலகி சென்றார். ஏனெனில் அந்த குழந்தை சொல்வது மற்றவர்கள் காதில் விழுந்துவிட்டால் அந்த குழந்தை அவனுடையது அல்ல, வேறு யாருக்கோ பிறந்தது என அர்த்தமாகி விடுமே. பார்க்க முடியாத பொருட்களை விற்பனை செய்யும்போது மிக சுலபமாக மக்களை ஏமாற்றலாம், அவர்களுக்கு எதிரான விஷயங்களை அவர்களையே செய்ய கட்டாயப் படுத்தலாம். – அதுதான் துறவறம். கடவுளின், உண்மையின், மோட்சத்தின், நிர்வாணாவின் பெயரால் போலி பூசாரிகளால் செய்யப் படுவது மனித தன்மையுடையதே அல்ல. அவர்களது பெயர்கள் மாறுபடலாம். ஆனால் இந்த உலகத்தில் பூசார்கள்தான் மிகப் பெரிய ஏமாற்றுக்காரர்கள். மற்ற ஏமாற்றுக்காரர்கள் எல்லோரும் திருடர்கள், அவ்வளவுதான். அவர்கள் வேறு என்ன உன்னை ஏமாற்ற முடியும் ஆனால் பூசாரிகள், குறி சொல்பவர், மத போதகர், குருக்கள், தீர்த்தங்கரர்கள் – இவர்கள்தான் மிகப் பெரிய ஏமாற்றுக் காரர்கள். அவர்கள் இதுவரை யாரும் பார்த்திராத, யாரும் பார்க்கவே முடியாத விஷயங்களை விற்பனை செய்கின்றனர். இதுவரை பார்த்த சாட்சி ஒன்று கூட இல்லை. மரணத்திலிருந்து திரும்பி வந்து யாரும், “ஆம், இது அழிவற்ற அழகு, அழிவற்ற சந்தோஷம், முடிவற்ற அமைதி, அழியாத மெளனம்”. எனக் கூறியதில்லை. அந்த வியாபாரம் நடந்து கொண்டே இருக்கிறது. ஏனெனில் யாரும் இதுவரை அதற்கு மாற்றுக் கூறியதில்லை – நீ அதை மறுத்து கூறினால் நீதான் தவறானவன். ஏனெனில் இந்த முழு உலகமும் அதை நம்புகிறது. 14 குரு செய்யும் வேலை கர்ண பரம்பரை கதை ஒன்று உண்டு. ஒருமுறை ஒரு நிறை கர்ப்பிணியான பெண் சிங்கம் ஒரு மலை உச்சியிலிருந்து மற்றொரு மலை உச்சிக்கு தாவும்போது அதன் வயிற்றிலிருந்த குட்டி கீழே விழுந்து விட்டது. அந்த குட்டி அந்த சமயத்தில் அந்த இடத்தில் போய்கொண்டிருந்த ஆட்டு மந்தைக்குள் போய் விழுந்துவிட்டது. அதனால் அது ஆடுகளுடன் கலந்து, ஆடுகளுடன் வாழ்ந்து, ஆடுகளைப் போலவே இருந்து கொண்டிருந்தது. தான் ஒரு சிங்கமாக இருக்கக் கூடும் என்ற ஒரு நினைப்பு அதன் கனவில் கூட இல்லை. எப்படி இருக்க முடியும்?  அதைச் சுற்றி இருந்த அனைத்தும் ஆடுகளே. அது ஒரு சிங்கம் போல ஒருபோதும் கர்ஜித்ததே இல்லை. ஒரு ஆடு கர்ஜிப்பது இல்லை. அது ஒரு சிங்கம் போல தனித்து இருந்ததே இல்லை. ஒரு ஆடு ஒருபோதும் தனித்து இருக்காது. அது எப்போதும் கூட்டத்தில்தான் இருக்கும். – கூட்டம் கதகதப்பானது, உத்தரவாதமானது, பாதுகாப்பானது. ஆடுகள் நடப்பதை நீ கவனித்து பார்த்தால் அவை ஒன்றையொன்று உரசிக்கொண்டு நெருக்கமாகத்தான் நடக்கும். அவை தனித்திருக்க மிகவும் பயப்படும். இந்த சிங்கம் வளர்ந்தது. இது மிகவும் மாறுபட்ட ஒரு நிகழ்வு. அது மனதளவில் தன்னை ஒரு சிங்கமாக நினைக்கவில்லை என்றாலும் கூட உடலியல் அதனுடன் ஒத்துப் போகவில்லை. இயற்கை உன்னை பொருட்படுத்துவது இல்லை. அது மிகவும் அழகான இளைய சிங்கமாக உருவெடுத்தது. ஆனால் வளர்ச்சி மிகவும் மெதுவானதாக இருந்ததால் சிங்கம் ஆடுகளுடன் ஒத்து போனதைப் போலவே ஆடுகளும் இந்த சிங்கத்தை ஏற்றுக் கொண்டு விட்டன. ஆடுகள் இது ஒரு சிறிதளவு வளர்ச்சியில் வேறு பட்டது என நினைத்தன. அது வேறுபட்டு நடந்து கொள்ளவில்லையே – ஒரு சிறு உடலியல் மாறுதல் தானே – சிங்கம் வளர்ந்து கொண்டே வந்தது. அப்படி வளரக் கூடாது. சிங்கத்தைப் போல தோற்றமளிக்கக் கூடாது…….. ஆனால் இது சிங்கமல்ல. இது பிறந்ததிலிருந்தே அவை பார்த்துக் கொண்டிருக்கின்றன, அவை தான் இதை வளர்த்தன, அவைதான் இதற்கு பால் கொடுத்தன.  இந்த சூழ்நிலையில் வளர்ந்த இது சைவமாகதான் இருந்தது. எந்த சிங்கமும் சைவமல்ல. ஆனால் இந்த சிங்கம் சைவமாக இருந்தது, ஏனெனில் ஆடுகள் சைவமே. இது புல்லை மிகவும் மகிழ்ச்சியோடு சாப்பிட்டது. ஆடுகள் இது மிகவும் பெரிதாகவும் சிங்கத்தை போல இருப்பதையும் ஏற்றுக் கொண்டன. ஒரு அனுபவசாலியான ஆடு, இது இயற்கையின் தவறு. எப்போதாவது ஒருமுறை இப்படி நடப்பது இயல்புதான். என்றது. அதுவே அதுதான் உண்மை என நினைத்துக் கொண்டது. சிங்கத்தின் நிறம், உடல் எல்லாமே வேறுபட்டுள்ளது – சாதாரணமானதாக இல்லாமல் வித்தியாசமானதாக – ஆனால் இது ஒரு சிங்கமாக இருக்கக் கூடும் என்ற நினைப்பே சாத்தியமில்லை.  அது எப்போதும் ஆடுகளால் சூழப் பட்டிருந்தது. அவை இதனிடம், கவலைப்படாதே, நீ ஒரு சிறிதளவு வித்தியாசமானவனாக இருக்கிறாய் அவ்வளவே. நாங்கள் உன்னை பார்த்துக் கொள்கிறோம். என்றன. ஆனால் ஒருநாள் ஒரு வயதான சிங்கம் ஆட்டுமந்தைகளுக்கிடையில் இந்த இளைய சிங்கம் இருப்பதை பார்த்தது. அதனால் அதன் கண்களையே நம்ப முடியவில்லை. ஒரு சிங்கம் ஆட்டுமந்தைகளுக்கிடையில் இருப்பதையோ, அதை பார்த்து எந்த ஆடும் பயப்படாததையோ சரித்திரத்திலேயே கேள்வி பட்டதுமில்லை, பார்த்ததுமில்லை. சிங்கம் ஆட்டைபோலவே நடந்தது, புற்களை கொறித்தது. வயதான சிங்கத்தால் தனது கண்களையே நம்ப முடியவில்லை. தன்னுடைய காலை உணவாக ஒரு ஆட்டை பிடிக்கவேண்டும் என்பதையே முற்றிலுமாக மறந்து அது அந்த சிங்கத்தை பிடிக்க பாய்ந்தது. ஆனால் இதற்கு வயதாகிவிட்டது. அதற்கோ சிறு வயது. – அதனால் வேகமாக ஓடியது.  அது தான் ஒரு ஆடு என நினைத்தாலும் கூட, ஆபத்து வரும்போது மனதின் அடையாளம் மறந்துபோய் விடுகிறது. அது ஒரு சிங்கம் போல ஓடியது. வயதான சிங்கத்திற்கு அதை பிடிப்பது மிகவும் சிரமமாக இருந்தது. ஆனால் இறுதியில் அதை பிடித்தபோது அது அழுதுகொண்டே என்னை மன்னித்து விட்டுவிடு, நான் ஒரு ஆடு என்றது. வயதான சிங்கம், முட்டாளே, அழுவதை நிறுத்து, என்னுடன் குளக்கரைக்கு வா என்றது. அருகிலேயே ஒரு குளம் ஒன்று இருந்தது. இது அதை அங்கே கூட்டி சென்றது. இளைய சிங்கத்திற்கு போக விருப்பமேயில்லை விருப்பமேயில்லாமல்தான் சென்றது. நீ ஒரு ஆடாக இருக்கும் பட்சத்தில் ஒரு சிங்கத்தை எதிர்த்து என்ன செய்ய முடியும். நீ அதன் பேச்சை கேட்காவிட்டால் அது உன்னை கொன்றுவிடும். அதனால் இது அதனுடன் சென்றது. குளம் மிகவும் சலனமின்றி, அலைகளில்லாமல், ஒரு கண்ணாடி போல இருந்தது. வயதான சிங்கம்  இதனிடம், பார், என் முகத்தை பார், உன் முகத்தையும் பார். என் உடல் பார், உன் உடலையும் பார். தண்ணீரில் பார். என்றது. ஒரு விநாடியில் அங்கே ஒரு கர்ஜனை எழுந்தது. அது எல்லா மலைகளிலும் எதிரொலித்தது. ஆடு மறைந்து அங்கே சிங்கம் எழுந்தது. அவன் வேறுபட்டவன். அவன் தன்னை அறிந்து கொண்டான். தான் ஒரு ஆடு என்று கொண்ட அடையாளம் உண்மையல்ல, அது ஒரு கருத்து மட்டுமே. அவன் இப்போது உண்மையை கண்டுகொண்டான். வயதான சிங்கம், இப்போது நான் எதுவும் கூற வேண்டியதில்லை, நீ புரிந்து கொண்டு விட்டாய். என்றது. இளைய சிங்கம் இதுவரை அறிந்திராத வேறுபட்ட வலிமையை உணர்ந்தது…… அந்த வலிமை இதுவரை தடைபட்டிருந்தது. அது இப்போது அளவற்ற சக்தியை உணர்ந்தது. அது இதுவரை ஒரு வலிமையற்ற, பணிவான ஆடாக இருந்தது. அந்த பலமற்ற, வலிமையற்ற தன்மை காற்றில் கரைந்துவிட்டது. 15 ஆன்மீக வியாபாரம் நிரந்தரத்திற்காக படும் இந்த ஆசை எப்படியும் ஆரோக்கியமானதல்ல. ஆனால் அது உள்ளது. எனவேதான் ஆன்மீக நிறுவனங்கள் – ஆம், நான் அவற்றை நிறுவனங்கள் என்றே அழைக்கிறேன். – கிறிஸ்துவ, இந்து, முகம்மதிய நிறுவனங்கள் நூற்றாணடுகளாக மிகப் பெரிய வியாபாரத்தை நடத்தி வந்திருக்கின்றன. இன்னும் செய்கின்றன……. அவர்களது வியாபாரத்திற்கு முடிவே கிடையாது, ஏனெனில் அவர்களது வியாபாரப் பொருள் பார்க்கக்கூடிய விஷயமல்ல என்பதுதான் ஒரே காரணம். அவர்கள் உங்களிடமிருந்து பார்க்கக்கூடிய பொருட்களை எடுத்துக் கொண்டு நீ நம்ப மட்டுமே கூடிய விஷயத்தை உனக்கு கொடுக்கின்றனர். எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது. ஒரு ராஜா முழு உலகத்தையே ஜெயித்துவிட்டான். ஆனாலும் அவன் அமைதியின்றி இருந்தான் – இப்போது, என்ன செய்வது உலகத்தையே ஜெயித்தபின் நிம்மதியாக ஓய்வாக இருக்கலாம் என அவன் நினைத்திருந்தான். தான் அமைதியின்றி இருப்போம் என அவன் ஒருபோதும் நினைத்ததே இல்லை. அவன் அமைதியின்றி இருந்ததே இல்லை. போரிடும்போது, தொடர்ந்து வெற்றி பெற்றுக் கொண்டே இருக்கும்போது – ஏனெனில் எப்போதும் ஜெயிக்க வேண்டிய எதிரி, பிடிக்க வேண்டிய தேசம், போக வேண்டிய இடம் இருந்து கொண்டே இருந்தது – சிந்திக்க காலமோ, நேரமோ அவனுக்கு இருந்ததேயில்லை. அவன் எப்போதும் ஆக்ரமிக்கப் பட்டு இருந்தான். ஆனால் இப்போது அவன் இந்த முழு உலகத்தையும் ஜெயித்து விட்டான் – ஆனாலும் அமைதியின்றி இருக்கிறான் – என்ன செய்வது இப்போது. ஒரு ஏமாற்றுக்காரன் இதைக் கேள்விப் பட்டான். அவன் அரணமனைக்கு வந்து, அமைதியின்றி இருப்பவர்களுக்காக தேவையான மருந்து என்னிடம்  இருக்கிறது எனக் கூறி அரசனை சந்திக்க அனுமதி கேட்டான். உடனடியாக அவன் உள்ளே அழைத்துச் செல்லப் பட்டான். ஏனெனில் எல்லா மருத்துவர்களும் தோற்றுப் போய்விட்டனர். அரசனால் உட்கார முடியவில்லை, தூங்க முடியவில்லை, அமைதியின்றி கவலையோடு அலைந்துகொண்டே இருந்தான். அவன், “இனி என்ன செய்வது? வேறு ஏதாவது உலகம் இருக்கிறதா? கண்டுபிடியுங்கள், அதையும் நாம் ஜெயிப்போம்.” எனக் கேட்டான். இந்த ஏமாற்றுக்காரன் அரசவைக்கு வந்து, “கவலைப்படாதீர்கள் அரசே, இந்த உலகையே ஜெயித்த முதல் மனிதர் நீங்கள்தான் – கடவுள் தானே அணியும் ஆடைகளை பெற தகுதியுடையவர் தாங்கள்தான். என்னால் இதை பெற்றுத்தர முடியும்” என்றான். இது ஒரு சிறப்பான யோசனையாக இருந்தது. அரசன் உடனடியாக ஆர்வம் கொண்டான். அவன், “நீ இந்த வேலையை செய்ய ஆரம்பித்து விடு. கடவுளின் சொந்த ஆடைகள்……… அவை ஏற்கனவே இந்த பூமிக்கு வந்திருக்கின்றனவா?” எனக் கேட்டான். அந்த மனிதன், “இல்லை, ஏனெனில் அவைகளை பெறகூடிய தகுதியை யாரும் இதுவரை பெறவில்லை. நீங்கள்தான் முதல் மனிதர். அதனால் முதல்தடவையாக, சொர்க்கத்திலிருந்து நான் உங்களுக்காக அந்த உடைகளை தருவிக்கிறேன்.” என்றான். அரசன், “எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிடு……. எவ்வளவு செலவாகும்?” எனக் கேட்டான். அந்த மனிதன், “அவை விலைமதிப்பற்றவை. ஆனாலும் கோடிக்கணக்கான ரூபாய்கள் தேவைப்படும் – ஆனால் அதன் மதிப்பிற்கு முன் இந்த செலவு ஒன்றுமேயில்லை.” என்றான். அரசன், “கவலைப்படாதே. பணம் ஒரு பொருட்டல்ல. ஆனால் என்னை ஏமாற்ற முயற்சி செய்யக் கூடாது.” என்றான். அந்த மனிதன், “ஏமாற்றுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. நான் அரண்மனையிலேயே தங்குவேன். நீங்கள் உங்கள் படையை அரண்மனையை சுற்றி நிறுத்தி வைத்து விடுங்கள். நான் இங்கேயேதான் வேலை செய்வேன். ஆனால் நான் உள்ளிருந்து தட்டும்வரை எனது அறை திறக்கப்படக் கூடாது. நீங்கள் அந்த அறையை வெளியே பூட்டிவிடலாம், அப்போதுதான் நான் தப்ப முடியாது என்று நீங்கள் திருப்தியோடு இருக்கலாம். ஆனால் நான் கேட்கும் பணத்தை நான் கூறும் நபர்களுக்கு நீங்கள் அனுப்பி விடவேண்டும். மூன்று வாரங்களுக்குள் இந்த வேலை முடிந்து விடும்.” என்று கூறினான். மூன்று வாரங்களுக்குள் அவன் கோடிக்கணக்கான ரூபாய்களை வாங்கி விட்டான். ஒவ்வொரு நாளும் ஒரு பெயர் – காலை, மாலை, மதியம், இரவு – உடனடியாக அவசரம். இந்த வேலை அப்படிப் பட்டது என்பதை அரசன் அறிவான். … இந்த மனிதன் அரசனை ஏமாற்ற முடியாது. அவன் எங்கே போக முடியும்? ஏனெனில் அவன் உள்ளே பூட்டப் பட்டிருக்கிறான். உறுதியாக அவன் தப்பிப் போக முடியாது. மூன்று வாரங்களுக்குப் பின் அவன் உள்ளிருந்து கதவை தட்டினான். கதவு திறக்கப் பட்டது. அவன் ஒரு அழகான மிகப் பெரிய பெட்டியுடன் உள்ளிருந்து வந்தான். அவன் உள்ளே போகும்போது, “நான் உங்களுக்காக தருவிக்கப் போகும் ஆடைகளுக்காக இந்த பெட்டியை உள்ளே என்னுடன் எடுத்துச் செல்கிறேன்.” எனக் கூறி அந்த பெட்டியை உள்ளே எடுத்துச் சென்றிருந்தான். ஏமாறாமல் இருப்பதற்க்காக அரசன் அந்த பெட்டியினுள் ஏதாவது ஆடை இருக்கிறதா எனப் பார்த்தான். இல்லை, அது காலியாக இருந்தது, அதில் ஏமாற்ற எதுவும் இல்லை. அந்த பெட்டி அவனிடம் கொடுக்கப் பட்டது. இப்போது அந்த ஏமாற்றுக் காரன் வெளியே வந்து, “இந்த பெட்டி அனைவரின் – கற்றவர்கள், பண்டிதர்கள், அறிவாளிகள், ராணி, ராஜா, இளவரசன், இளவரசி – முன்னிலையிலும் திறக்கப்பட வேண்டும். இது ஒரு தனித்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாகையால் அனைவரும் வர வேண்டும்.” என்றான். அந்த மனிதன் உண்மையிலேயே மிகவும் தைரியசாலி. ஏமாற்றுக் காரர்கள் அப்படித்தான் இருப்பார்கள். அவன் அரசரிடம், “அருகில் நெருங்கி வாருங்கள். நான் இந்தப் பெட்டியை திறக்கப் போகிறேன். உங்களுடைய தலைப்பாகையை கொடுங்கள். அதை நான் இந்த பெட்டியினுள் போட வேண்டும். இப்படித்தான் செய்ய வேண்டும் என எனக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. முதலில் உங்களுடைய இந்த தலைப்பாகையை உள்ளே போட்டு விட்டு, கடவுள் அளித்திருக்கும் தலைப்பாகையை வெளியே எடுத்து உங்களிடம் கொடுப்பேன். நீங்கள் அணிந்து கொள்ளலாம்.” என்றவன், ராஜசபையிடம் திரும்பி, “ஒரே ஒரு நிபந்தனை. இந்த உடைகள் தெய்வீகமானவை, அதனால் யார் தங்களது சொந்த தகப்பனுக்கு பிறந்தவர்களோ அவர்கள் கண்ணுக்கு மட்டுமே இந்த உடை தெரியும். யார் அப்படி இல்லையோ, அவர்கள் கண்களுக்குத் தெரியாது. இதில் நான் எதுவும் செய்ய முடியாது.” எனக் கூறினான். ஆனால் ஒவ்வொருவரும், “இதில் பிரச்னை எதுவும் இல்லை. நாங்கள் எங்கள் சொந்த தகப்பனாருக்கு பிறந்தவர்கள்தான்”. என்றனர். அரசரின் தலைப்பாகை உள்ளே சென்றது, ஏமாற்றுக்காரனின் வெறுமையான கை வெளியே வந்தது, அவன் அரசரிடம், “தலைப்பாகையின் அழகைப் பாருங்கள்” என்றான். அவனது கைகளில் ஏதுமில்லை. ஆனால் ராஜசபை முழுவதும் கைதட்டியது. ஒவ்வொருவரும் இதுபோன்ற அழகான ஒன்றை இதுவரை பார்த்ததேயில்லை என மற்றவரை மிஞ்சும் வண்ணம் சத்தமிட்டனர். இப்போது அரசன், நான் இவனது கைகளில் ஏதுமில்லை என்று சொன்னால் நான் மட்டுமே வேசி மகன் என ஆகி விடுவேன். இந்த வேசி மகன்கள் அனைவரும் தங்களது சொந்த தகப்பனாருக்கு பிறந்தவர்களாகி விடுவர். அதனால் பேசாமலிருப்பதே சிறந்தது என நினைத்தான். உண்மையில் இதுதான் ஒவ்வொருவரின் நிலையும். எல்லோரும் அந்த மனிதனின் கைகளில் ஏதுமில்லை எனக் கண்டனர். ஆனால் யார் இதை வெளியே சொல்வது? எல்லோரும் எதையோ பார்ப்பது போல நடிக்கும்போது யார் அங்கு ஒன்றுமில்லை என்பதை சொல்வது? ஒவ்வொருவரும், “நான் வேசி மகனாக இருக்கக்கூடுமோ, அதனால் பேசாமலிருப்பதே சிறந்தது. தேவையில்லாமல் ஏன் இவர்களால் இகழப் பட வேண்டும்?” என சந்தேகப் பட்டனர். அதனால் அவர்கள் அதனுடைய அழகைப் பற்றி அதிக சத்தமாக கூற ஆரம்பித்தனர். அரசன் இல்லாத தலைப்பாகையை தனது தலையில் அணிந்தான். ஆனால் தலைப்பாகை மட்டுமல்ல, மற்ற உடைகளும் மறைய ஆரம்பித்தன. கடைசியில் அவனது உள்ளாடை மட்டுமே எஞ்சியது. அரசன் ஒரு விநாடி, “என்ன செய்வது இப்போது” என யோசித்தான். ஆனால் காலம் கடந்து விட்டது. “தலைப்பாகையை பார்த்தாயிற்று, மேலாடையை பார்த்தாயிற்று, சட்டையை பார்த்தாயிற்று, பின் எப்படி உள்ளாடையை பார்க்க முடியாது இப்போது பார்க்கத்தான் வேண்டும். திரும்பி போக முடியாது. இந்த மனிதன்……….” அந்த மனிதன் இல்லாத உள்ளாடையை அவனது கைகளில் ஏந்தி, எல்லோரிடமும் காட்டினான். “பாருங்கள், எத்தனை வைரங்கள் இந்த உள்ளாடையில் என்று பாருங்கள்”. என்றான். முழு அரசவையும் கைதட்டி பாராட்டி, “மனித வரலாற்றிலேயே இப்படி ஒரு அனுபவம் நிகழ்ந்ததேயில்லை.” என்றது. அரசனின் உள்ளாடையும் உள்ளே சென்றது. ஆனால் அந்த ஏமாற்றுக்காரன் வித்தியாசமானவன். அவன், “நான் இதை பெறும்போது, கடவுள் என்னிடம், ‘இந்த உடைகள் முதன்முறையாக உலகத்திற்கு வருகின்றன, அதனால் அரசர் இந்த உடைகளை போட்டுக் கொண்ட பின் இந்த தலைநகரத்தை ஒருமுறை சுற்றி வரச் சொல்லி நான் சொன்னதாக அவரிடம் சொல். அப்போதுதான் எல்லா மக்களும் இந்த உடைகளை பார்க்க முடியும். இல்லாவிடில் ஏழை மக்களால் இந்த உடைகளை ஒருபோதும் பார்க்கவே முடியாது’ என கூற சொன்னார். அதனால் ரதம் தயாராக இருக்கிறது வாருங்கள்.” என்றான். இப்போது முடியாது என மறுப்பது சாத்தியமில்லை. அரசன் “இந்த விஷயத்தை தலைப்பாகையோடு நிறுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் – ஆனால் இப்போது காலம் கடந்துவிட்டது. நான் நிர்வாணமாக இருக்கிறேன் என்பதை நான் கூறினால்…..முழு அரசவையும் சிரிக்குமே.” என நினைத்தான். மற்றவர்கள், “ஆமாம், அரசே அதுதான் சரி. கடவுள் கூறியிருந்தால் அப்படியே நடந்தாக வேண்டும். அதுவே இந்த உடைகளுக்கு நாம் அளிக்கும் மிகச் சரியான வரவேற்பாகும்.” என்றனர். பாதை நெடுக மக்கள் கூட்டம் அலைமோதியது. கடவுளின் ஆடைகளை பற்றிய செய்தி நாடு முழுக்க பரவியிருந்தது. அரசன் சம்மதித்தான். அவன் நிர்வாணமாக தனது தேரில் ஏறி நின்றான். தேருக்கு முன் சென்ற இந்த மனிதன் எல்லோருக்கும் கேட்கும்படியாக, “இந்த கடவுளின் உடைகள் யார் தங்களது சொந்த தகப்பனாருக்கு பிறந்தவர்களோ அவர்களுக்கு மட்டுமே தெரியும்”. என அறிவித்தான். அதனால் பார்த்த அனைவரும் எதுவுமே கூறவில்லை. ஆனால் ஒரு சிறிய குழந்தை, தனது தந்தையின் தோளின் மீது அமர்ந்திருந்த அது, “அப்பா, அரசர் அம்மணமாக இருக்கிறார்” என்றது. அந்த தந்தை, “முட்டாளே, வாயை மூடு நீ வளர்ந்த பிறகு உன்னால் அந்த உடைகளை பார்க்க முடியும். அதற்கு ஒருவிதமான பக்குவம் தேவைப் படுகிறது. உன்னைப் போன்ற குழந்தையால் அதைப் பார்க்க முடியாது. நீ அதை பார்க்க விரும்பினால் சும்மாயிரு. ஆரம்பத்திலிருந்தே உன்னை கூட்டிக் கொண்டு வருவதில் எனக்கு விருப்பமில்லை”. என்றார். ஆனால் அந்த குழந்தையால் சும்மாயிருக்க முடியவில்லை. திரும்ப திரும்ப அது, “நான் அவர் அம்மணமாக நிற்பதை தெளிவாக பார்த்தேன்”. என்றது. அந்த தந்தை அந்த குழந்தையுடன் கூட்டத்திலிருந்து விலகி சென்றார். ஏனெனில் அந்த குழந்தை சொல்வது மற்றவர்கள் காதில் விழுந்துவிட்டால் அந்த குழந்தை அவனுடையது அல்ல, வேறு யாருக்கோ பிறந்தது என அர்த்தமாகி விடுமே. பார்க்க முடியாத பொருட்களை விற்பனை செய்யும்போது மிக சுலபமாக மக்களை ஏமாற்றலாம், அவர்களுக்கு எதிரான விஷயங்களை அவர்களையே செய்ய கட்டாயப் படுத்தலாம். – அதுதான் துறவறம். கடவுளின், உண்மையின், மோட்சத்தின், நிர்வாணாவின் பெயரால் போலி பூசாரிகளால் செய்யப் படுவது மனித தன்மையுடையதே அல்ல. அவர்களது பெயர்கள் மாறுபடலாம். ஆனால் இந்த உலகத்தில் பூசார்கள்தான் மிகப் பெரிய ஏமாற்றுக்காரர்கள். மற்ற ஏமாற்றுக்காரர்கள் எல்லோரும் திருடர்கள், அவ்வளவுதான். அவர்கள் வேறு என்ன உன்னை ஏமாற்ற முடியும் ஆனால் பூசாரிகள், குறி சொல்பவர், மத போதகர், குருக்கள், தீர்த்தங்கரர்கள் – இவர்கள்தான் மிகப் பெரிய ஏமாற்றுக் காரர்கள். அவர்கள் இதுவரை யாரும் பார்த்திராத, யாரும் பார்க்கவே முடியாத விஷயங்களை விற்பனை செய்கின்றனர். இதுவரை பார்த்த சாட்சி ஒன்று கூட இல்லை. மரணத்திலிருந்து திரும்பி வந்து யாரும், “ஆம், இது அழிவற்ற அழகு, அழிவற்ற சந்தோஷம், முடிவற்ற அமைதி, அழியாத மெளனம்”. எனக் கூறியதில்லை. அந்த வியாபாரம் நடந்து கொண்டே இருக்கிறது. ஏனெனில் யாரும் இதுவரை அதற்கு மாற்றுக் கூறியதில்லை – நீ அதை மறுத்து கூறினால் நீதான் தவறானவன். ஏனெனில் இந்த முழு உலகமும் அதை நம்புகிறது. 16 திறன் பிறந்தது ஒரு குரு வேலை செய்யும் விதம் திருடன் வேலை செய்யும் விதத்தைப் போன்றது. ஒரு ஜென் கதை. ஜென்குருக்கள் இதை மிகவும் விரும்புவர். நீ இந்த கதையை முதன்முறையாக கேட்கும்போது மிகவும் ஆச்சரியப் படுவாய். – இது ஒரு திருடன் குருவான கதை. ஜப்பானில் ஒரு திருடன் மிகச் சிறந்த திருடனாக இருந்தான். அவன் நாடு முழுவதும் பிரபலமானவனாக, எல்லோருக்கும் தெரிந்தவனாக இருந்தான். அவன் திருட்டில் கை தேர்ந்தவனாக இருந்ததால் யாராலும் அவனை பிடிக்க முடியவில்லை. அவன் கையும்களவுமாக பிடிபட்டதேயில்லை. – அவன்தான் திருடியவன் என எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும்கூட – அரசரின் கஜானாவிலிருந்து கூட அவன் திருடியிருக்கிறான். அவன் தனது முத்திரையை பதித்துவிட்டு போவதால் அவன்தான் வந்து போயிருக்கிறான் என எல்லோரும் அறிவர். அதன்மூலம் அது ஒரு கௌரவமான விஷயமாக மாறிவிட்டது. அந்த கை தேர்ந்த கள்வன் உன்னிடம் வந்து திருட உன்னிடம் ஏதோ ஒரு பொருள் இருக்கிறது என்பதே ஒரு மரியாதையாக மாறிவிட்டது. அதனால் அது ஒரு கௌரவம். மக்கள், “நேற்று இரவு அந்தக் கள்வன் என் வீட்டிற்க்கு வந்திருந்தான். என பெருமையாக சொல்லிக் கொண்டனர். ஆனால் அவனுக்கு வயதாகி விட்டது. அவனது மகன் இளைஞன். அவன் தனது தந்தையிடம், உங்களுக்கு வயதாகி விட்டது. அந்தக் கலையை எனக்குக் கற்றுக் கொடுங்கள். எனக் கேட்டான். அந்த தந்தை, சரி இன்று இரவு என்னுடன் வா – ஏனெனில் அது சொல்லித் தரக் கூடிய விஷயமல்ல. என்னுடைய ஆற்றலை கண்டுக் கொள்ளத் தான் வேண்டும். உனக்கு புத்திசாலித் தனமிருந்தால் அதை நீ கணடு கொள்வாய். அதை உனக்கு கற்றுத் தர முடியாது, ஆனால் உன்னால் அதை பிடித்துக் கொள்ள முடியும். நான் உனக்கு தர முடியாது, ஆனால் உன்னால் தெரிந்து கொள்ள முடியும். என்னுடன் இன்றிரவு வா. பார்க்கலாம். என்றான். முதல்தடவை என்பதால் மகன் மிகவும் பயந்தான். இயல்புதானே! சுவற்றை உடைத்து மாளிகைக்குள் சென்றனர். அந்த வயதான காலத்தில்கூட தந்தையின் கரங்கள் நடுங்கவில்லை, ஆடவில்லை, ஒரு டாக்டரின் கரங்கள் போல ஆடாமல் அசையாமல் உறுதியாக நின்றது. அவன் தனது சொந்த வீட்டில் வேலை செய்வதுபோல பயமின்றி சுவற்றில் ஓட்டை போட்டான். சத்தம் கேட்டுவிடுமோ என சந்தேகமே படாமல் தனது வேலையின் திறமை மீது நம்பிக்கை கொண்டு அங்கே, இங்கே யாராவது வருகிறார்களா என திரும்பியே பார்க்கவில்லை. ஆனால் அது குளிர்கால இரவாக இருந்தபோதிலும் இளைஞனுக்கு வேர்த்து கொட்டியது. அவன் பயத்தில் நடுங்கினான். ஆனால் தந்தை தனது வேலையை சப்தமின்றி செய்தான். கள்வன் வீட்டினுள் நுழைந்தான். மகன் தொடர்ந்து  நுழைந்தான். அவனது கால்கள் நடுங்கியது. அவன் எந்த விநாடியும் விழுந்துவிடுவோம் என நினைத்தான். அவனுக்கு சுயஉணர்வே இல்லை. ஏனெனில் பயம்……… பிடிபட்டுவிட்டால் பின் என்ன செய்வது. தந்தை அந்த வீட்டினுள் ஏதோ அது அவனது சொந்த வீடு போல நுழைந்தான். அவனுக்கு அந்த வீட்டைப்பற்றி, வீட்டினுள் உள்ள பொருட்கள் இருக்கும் இடம் எல்லாமே தெரிந்திருந்தது. அந்த இருட்டில் கூட எந்த சாமான்கள் மீதும் மோதிக்கொள்ளாமல், கதவில் முட்டிக்கொள்ளாமல் சென்றான். சப்தமேயில்லாமல், எந்த சப்தமும் செய்யாமல் அவன் அந்த மாளிகையின் உள்ளறையை சென்றடைந்தான். அவன் ஒரு அலமாரியை திறந்து மகனிடம் உள்ளே போய் ஏதாவது விலைமதிப்பான பொருட்கள் இருக்கிறதா என பார்க்கச் சொன்னான். மகன் உள்ளே போனான். தந்தை கதவை மூடி வெளியே தாழிட்டுவிட்டு, திருடன், திருடன் ஓடிவாங்க என கத்தியபடி சுவற்றில் அவர்கள் உருவாக்கியிருந்த ஓட்டை வழியாக தப்பிப் போய்விட்டான். இப்போது இது மிகவும் அதிகம். மகனால் என்ன இது என புரிந்துகொள்ள முடியவில்லை. இப்போது அவன் அந்த அலமாரிக்குள் நடுங்கி வேர்த்துக் கொட்டியபடி இருந்தான். வீடு முழுவதும் விழித்துக் கொண்டு விட்டது. திருடன் எங்கே என தேடியது. அப்பாவா இது, என்னை கொன்றே விட்டார், என நினைத்தான். என்ன வகையான பாடம் இது அவன் இதுபோன்ற ஒரு விஷயத்தை கனவில்கூட நினைத்துப் பார்த்ததில்லை. தந்தை பயங்கரமான கனவை மகனுக்கு தந்து விட்டார். இவன் பிடிபடுவது உறுதியாகி விட்டது. தந்தை வெளியேயிருந்து கதவை தாழிட்டுவிட்டார். மகன் கதவை திறந்து தப்பித்து போகமுடியாது. ஒரு மணிநேரத்திற்கு பின் மகன் வீட்டை அடைந்தபோது தந்தை குறட்டைவிட்டு தூங்கிக் கொண்டிருந்தான். மகன் அவன் போர்வையை விலக்கி, என்ன மடத்தனம் இது, எனக் கேட்டான். தந்தை, நீ திரும்பி வந்து விட்டாய். என்ன நடந்தது என சொல்ல வேண்டிய அவசியம் இல்லை – நீயும் போய் தூங்கு. இப்போது உனக்கும் இந்தக் கலை தெரிந்துவிட்டது. நாம் இதை விவாதிக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் மகன், என்ன நடந்ததென்று நான் உங்களிடம் சொல்லியே தீர வேண்டும். என்றான். தந்தை, நீ சொல்ல விரும்பினால் சொல், மற்றபடி அது எனக்கு அவசியமில்லை. நீ திரும்பி வந்ததே போதுமான அத்தாட்சி. நாளை இரவிலிருந்து நீயே சொந்தமாக போய் செய்ய ஆரம்பிக்கலாம். ஒரு திருடனுக்கு தேவையான புத்திசாலித்தனமும் சுதாரிப்பும் கவனமும் உன்னிடம் உள்ளது. எனக்கு உன்னைப் பற்றி மிகவும் சந்தோஷமாக உள்ளது, என்றான். ஆனால் மகன் மிகவும் ஆர்வமாக இருந்தான். அவன் முழு விஷயத்தையும் விவரித்து சொல்ல விரும்பினான். அவன் அத்தகைய மிகப் பெரிய வேலை செய்திருந்தான். அவன், கேளுங்களேன். இல்லாவிடில் என்னால் தூங்கவே முடியாது. நான் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன். நீங்கள் கிட்டத்தட்ட என்னை கொன்றே விட்டீர்கள். என்றான். தந்தை, அது அப்படிப்பட்ட கடினமான காரியம்தான். ஆனால் ஒரு குருவானவர் இப்படிதான் வேலை செய்தாக வேண்டும். என்ன நடந்தது முழு கதையையும் சொல் என்றார். மகன், எங்கிருந்தோ – உறுதியாக அது என்னுடைய மனதிலிருந்தோ, என்னுடைய அறிவிலிருந்தோ அல்ல – அது உதித்தது. என்றான். தந்தை, நீ ஒரு திருடனோ, தியானம் செய்பவனோ, காதலனோ, விஞ்ஞானியோ, கவிஞனோ, ஓவியனோ அது முக்கியம் அல்ல. வாழ்வு என்னவாக இருந்தாலும் இதுதான் திறவுகோல். வாழ்வின் தளம் எதுவாக இருப்பினும் நிகழ்வது ஒன்றே – எதுவும் தலையிலிருந்து நிகழ்வது அல்ல. எல்லாமும் நாபியிலிருந்து நிகழ்வதுதான். அதை உள்ளுணர்வு என்றோ, மனமற்ற நிலை என்றோ, தியானம் என்றோ கூறிக்கொள்ளலாம். இவை யாவும் ஒரே விஷயத்தின் வேறுவேறு பெயர்கள். அவ்வளவுதான். அது உன்னுள் செயல்பட ஆரம்பித்துவிட்டது. அதை நான் உன்னுடைய முகத்தில் பார்க்கிறேன். உன்னைச் சுற்றி சக்தி இயக்கத்தை பார்க்கிறேன். நீ ஒரு கை தேர்ந்த கள்வனாக போகிறாய். கை தேர்ந்த கள்வனாக இருப்பதன் மூலமாக நான் தியானநிலையை அடைய முடிந்தது. அதனால் நினைவில் கொள். இதுதான் உனக்கும் தியானத்தை அடைவதற்கான வழி. என்றார். மகன், நான் அந்த அலமாரிக்குள் நின்று கொண்டிருந்தேன். மக்கள் எழுந்து திருடனை தேடிக் கொண்டிருந்தனர். ஒரு வேலைக்காரி கையில் விளக்குடன் வந்ததை சாவித் துவாரத்தின் வழியாக பார்த்தேன். எங்கிருந்தோ உதித்த யோசனையின் பேரில் பூனையை போல சத்தம் கொடுத்தேன் நான். இதற்குமுன் நான் அப்படி செய்ததேயில்லை. – வேலைக்காரி பூனை அலமாரிக்குள் மாட்டிக் கொண்டுவிட்டது என நினைத்து அலமாரி கதவை திறந்தாள். அவள் கதவை திறந்தவுடன் நான் என்ன செய்தேன் எப்படி செய்தேன் என எனக்குத் தெரியாது. ஆனால் அது நிகழ்ந்தது – நான் மெழுகுவர்த்தியை ஊதி அணைத்துவிட்டு, அந்த பெண்ணை தள்ளிவிட்டு ஓடினேன். மக்கள் என்னை துரத்தினார்கள். வீட்டிலுள்ளவர்கள் எல்லோரும் விழித்துக் கொண்டு விட்டனர். பக்கத்து வீட்டுக்காரர்களும் விழித்துக் கொண்டு விட்டனர். தப்பித்து ஓடி வந்த என்னை எல்லோரும் துரத்தி வந்தனர். அவர்கள் என்னை பிடித்து விடக் கூடிய அளவு நெருங்கி வந்துவிட்டனர். அந்த சமயத்தில் நான் ஒரு கிணற்றை கடந்து ஓடினேன். கிணற்றின் ஓரத்தில் பெரிய பாறை ஒன்று இருப்பதை பார்த்தேன். இப்போது அந்த பாறையை என்னால் தூக்க முடியுமா என்பது சந்தேகம்தான். ஆனால் அதை அப்போது நான் செய்தேன். அது போன்ற அபாயமான சந்தர்ப்பங்களில் உங்களது முழு சக்தியையும் உங்களால் செலவிடமுடியும். நீங்கள் மேம்போக்காக இருக்க மாட்டீர்கள். வாழ்க்கை அபாயத்தில் இருக்கும்போது முழு சக்தியோடு இருப்பீர்கள். நான் அந்த பாறையை நகர்த்தி, அதை தூக்கினேன். – அதை என்னால் நகர்த்த முடியும் என்பதையே என்னால் நம்ப முடியாது. அதை எடுத்து கிணற்றில் வீசிவிட்டு ஓடினேன். பாறை கிணற்றில் விழுந்த சத்தத்தால் என்னை பின்தொடர்ந்த மக்கள் என்னை பின் தொடர்வதை நிறுத்தி விட்டனர். அவர்கள் அந்த கிணற்றை சூழ்ந்து கொண்டனர். நான் கிணற்றில் குதித்து விட்டதாக அவர்கள் நினைத்துக் கொண்டனர். இப்படித்தான் நான் தப்பி வந்தேன். என்றான். தந்தை, நீ இப்போது தூங்கு போ, என் வேலை முடிந்தது. இனிமேல் எதையும் என்னை கேட்காதே. உன்னிஷ்டப்படி செயல்படலாம் என்றார். 17 இரவு அரசன் ரவீந்திரநாத் தாகூரின் மிக அழகான கவிதைகளில் ஒன்று ‘இரவு அரசன்’. மிகப் பெரிய பழமை வாய்ந்த இரவு அரசனின் கோவில் ஒன்று இருந்தது. அதில் ஆயிரம் மதகுருக்கள் இருந்தனர். ஒருநாள் தலைமை பூசாரியின் கனவில் இரவு அரசன் தோன்றி, “நாளை நான் கோவிலுக்கு விஜயம் செய்யப் போகிறேன். சுத்தப் படுத்தி தயாராக வைத்திருங்கள். நான் அங்கு பல நூற்றாண்டுகளாக வரவில்லை. நான் வேறு பல கோவில்களுக்கும் போக வேண்டும்” என்று கூறினார். தலைமை பூசாரி வேர்த்துக் கொட்டியபடி விழித்து எழுந்தார், ‘நீங்கள் வர வேண்டும், தரிசனம் தர வேண்டும், உங்களுடைய ஒளி பொருந்திய தரிசனத்தை நாங்கள் பெற வேண்டும்.’ என்றுதான் தினமும் வேண்டிக் கொண்டிருக்கிறார். இப்போது இந்த மாதிரி கனவு வந்துள்ளது. ஆனால் இந்த கனவு- – –. நடு இரவில் அவர் மற்ற அனைத்து மதகுருக்களையும் எழுப்பி அழைத்து, “உங்களை தொந்தரவு செய்வதற்கு மன்னிக்கவும். ஆனால் இந்த பிரச்னை உண்மையிலேயே சிக்கலானது. என் கனவில் இரவு அரசன் தோன்றி கோவிலை சுத்தம் செய்து தயார் படுத்துங்கள் நாளை நான் கோவிலுக்கு வரப் போகிறேன் என்றார்.” என்று கூறினார். மற்ற குருக்கள் அனைவரும் சிரித்தனர். “உங்களுக்கு மிகவும் வயதாகிவிட்டது என்பது தெரிகிறது. ஒரு கனவிற்காக அனாவசியமாக எங்கள் எல்லோரையும் தொல்லைப் படுத்தி விட்டீர்கள்”. என்றனர். அதற்கு அவர், “நீங்கள் எதனால் என்னைப் பார்த்து சிரிக்கிறீர்கள் என எனக்குப் புரிகிறது. நீங்கள் சிரிக்கிறீர்கள். எல்லோரையும் எழுப்புவதற்கு முன்னால் நான் இதைப் பற்றி யோசித்தேன். ஆனால் தயாராக வைப்பதில் தப்பில்லையே. எப்படியும் இந்த கோவிலுக்கு வெள்ளையடித்து சுத்தம் செய்தாக வேண்டும். நீண்ட நாட்களாக எதுவுமே செய்யவில்லை”. என்றார். இந்த கோவிலை மக்கள் முற்றிலுமாக புறக்கணித்து விட்டனர். இது அடர்த்தியான வனத்திற்கு நடுவில், மக்கள் நடமாட்டத்திற்கு வெகு தொலைவில் தள்ளி இருக்கிறது. மதகுருக்களும் கொஞ்சம் கொஞ்சமாக சந்தேகப் பட ஆரம்பித்துவிட்டனர். பலர் பிரார்த்தனை செய்வதைக் கூட நிறுத்தி விட்டனர். பலர் நாத்திகர்களாகி விட்டனர். “இரவு அரசன் இருக்கிறாரா இல்லையா என்பது யாருக்குத் தெரியும்? நாம் இங்கேயேதான் இருக்கிறோம். நாம் அவரை பார்த்ததேயில்லை. நமது பெற்றோர்களும் இங்கேயேதான் இருந்தனர். அவர்களும் அவரைப் பார்த்ததேயில்லை. அவர்களது பெற்றோர்களும் இங்கேயேதான் இருந்தனர். அவர்கள் கூட அவரை பார்க்க முடிந்தது இல்லை. நூற்றாண்டுகள் கடந்து விட்டன. நாம் இந்த சிலைகளுக்கு சேவை செய்துகொண்டே இருக்கிறோம், இப்போது திடீரென நீங்கள் உங்கள் கனவை நம்ப சொல்லி சொல்கிறீர்கள்.” என்றனர். தலைமை குரு, “நானே அந்த கனவை நம்பவில்லை, ஆனால் அதில் தவறேதும் இல்லையே! ஒருகால் இது உண்மையாக இருந்து அவர் வந்து விட்டால்……… என்று நினைத்துப் பாருங்கள்.  அதற்கு வாய்ப்பில்லை என எனக்குத் தெரியும், ஆனால் ஒரே ஒரு சதவிகிதம் சாத்தியக் கூறு உள்ளது. அவர் வருவதற்கான வாய்ப்பு 99 சதவிகிதம் இல்லை. அது ஒரு கனவு! ஆனால் அப்படி நடந்துவிட்டால்…. அவர் வந்து, அவரை வரவேற்க இனிப்புகள் இன்றி மலர்கள் இல்லாமல் இசையோ, நடனமோ, தீபமோ இல்லாமல், நாம் தயாராக இல்லாமல் மோசமாக இருப்பதை பார்த்தால் என்ன நினைப்பார்?  ஆயிரம் பேர்! எல்லோரும் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என கேட்கமாட்டாரா? நாம் கோவிலை சுத்தம் செய்து மலர்களால் அலங்கரித்து தீபங்கள் ஏற்றி வைத்திருந்தால் அவர் வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி அதனால் ஒன்றும் தப்பில்லை. இது நமது கோவில், நாம் இங்கே வாழ்கிறோம், நாம் இதை கொண்டாடுவோம். விருந்தாளி வருகிறேன் எனக்கூறி வராமல் போய்விடலாம், அலங்கரிப்பதில் எதுவும் தப்பில்லையே! ஆனால் தயார் படுத்தாமல் இருந்தால் மிகப் பெரிய இழப்பாகிவிடும். அதற்கு நான் தயாரில்லை.” என்றார். இந்த கூட்டம் முடியும்போது கிட்டத்தட்ட விடிந்து விட்டது. தலைமைகுரு சொல்வது சரி என எல்லோரும் நினைத்தனர். கோவில் சுத்தப்படுத்தப் பட்டது. நூற்றுக்கணக்கான சிலைகள் பல ஆண்டுகளாக கவனிக்கப் படாமல் அழுக்கோடும் தூசியோடும் இருந்தன. கோவிலை சுத்தப்படுத்தி மலர்களாலும் தீபங்களாலும் அலங்கரித்து, வாசனை திரவியம் உபயோகப்படுத்தி மணம் வீசுமாறு செய்து சிறப்பான உணவும் இனிப்பும் தயாரித்து காத்திருந்தனர். பாதிநாள் கடந்தது. உடனே சந்தேகம் எழுந்தது. நண்பகலாகி விட்டது, அவர் இதுவரை வரவில்லை. ‘நாம் இந்த கிழவனின் கனவால் தேவையில்லாமல் அல்லல் படுகிறோம். எந்த கோவிலுக்காவது எந்த கடவுளாவது வந்ததாக யாராவது கேள்வி பட்டதுண்டா? நடைமுறையிலேயோ, சரித்திரித்திலேயோ அப்படிக் கிடையாது. நாம் கனவை நம்பி வீணாக அவதிப் படுகிறோம். விருந்தாளி வராமல் நாம் சாப்பிடவும் முடியாது’ என எல்லோரும் பொருமினர். இது அந்த கோவிலில் உள்ள விதி. முதலில் கடவுளுக்கு படைக்கப் பட வேண்டும். பின் அந்த குருவினர் அந்த உணவை பகிர்ந்து கொள்ளலாம். இதுவரை அது மிகவும் சுலபமான விஷயமாக இருந்தது. ஏனெனில் கடவுள்கள் அனைத்தும் கல்சிலைதான். இன்று அது கடினமான ஒன்றாகி விட்டது. மிகவும் நேரமாகி விட்டது. சூரியன் இறங்க துவங்கிவிட்டான். ஒவ்வொருவரும் அந்த வயதான குரு மீது கோபப்பட்டனர். ‘இது மிகவும் பெரிய கோவிலாகையால் சுத்தப்படுத்த நிறைய ஆட்களை வைத்தும் சுத்தப்படுத்தவும் மலர்களுக்காகவும் ஏகப்பட்ட பணத்தை வீண் செலவு செய்துவிட்டோம்.’         வயதான குரு, “என்னை மன்னித்துவிடுங்கள். நான் வேறு என்ன சொல்வது? இனிமேலும் அவர் வரக்கூடும்.” என்றார். இரவாகி விட்டது. வயதான குருவின் பேச்சை கேட்பதில்லை என அவர்கள் முடிவெடுத்தனர். “இனிமேலும் காத்திருப்பது வீண்! சூரியன் மறைந்து விட்டது. நாள் முழுவதும் வேலை செய்து பட்டினி கிடந்திருக்கிறோம். அதனால் சோர்வாக இருக்கிறது சாப்பிட்டு படுக்கப் போகலாம்!”. என்றனர். அந்த வயதான குரு, “ஒரு இரவு காத்திருக்கலாம். ஏனெனில் அவர் இரவு அரசர் – நாம் அதை முற்றிலுமாக மறந்து விட்டோம். அவர் பகலில் வரமாட்டார். வருவதாக இருந்தால் இரவில்தான் வருவார்”. என்றார். அதற்கு அவர்கள், “உங்களுடைய கனவை நம்பி பசியுடன் முழு இரவும் காத்திருப்பது முட்டாள்தனம். நாங்கள் அப்படி நம்ப தயாரில்லை”. என்றனர். அவர்கள் கலகம் செய்ய ஆரம்பித்தனர். அதற்கு அந்த வயதான குரு, “கலகம் செய்ய தேவையில்லை. நானும் பசியோடு சோர்வாக இருக்கிறேன், நானும் உங்களோடு சேர்ந்து கொள்கிறேன். அது ஒரு கனவாக மட்டுமே கூட இருக்கலாம்”. என்றார். அவர்கள் அந்த கோவிலின் இறைவனுக்காக தயார் செய்து வைத்திருந்த சுவையான உணவுகளை சாப்பிட்டுவிட்டு சோர்வாக இருந்ததால் முன் இரவிலேயே தூங்க சென்று விட்டனர். நடு இரவில் அந்த கோவிலின் இறைவனான இரவு அரசர் தங்க ரதம் அங்கு வந்தது. ரதம் மண் பாதையில் வந்ததால் அதன் சுவடுகள் கோவிலின் முகப்பில் பதிந்தன. அந்த கோவிலின் கதவை அடைய ஆயிரம் படிகள் ஏறி வர வேண்டும். இறைவன் ஆயிரம் படிகளையும் கடந்து கதவருகில் வந்து நின்றார். ரதம் மண் பாதையில் வந்த சத்தம் கேட்ட போது, பாதி தூக்கத்தில் இருந்த ஒருவர், “எனக்கு மிகப் பெரிய ரதம் வரும் சத்தம் கேட்கிறது. அவர் வந்து விட்டார் போல இருக்கிறது”. என்றார். அதற்கு வேறொருவர், “தொந்தரவு செய்யாதே, ரதமும் கிடையாது, ஒன்றும் கிடையாது! ஒரு மேகம் இடிக்கிறது, அவ்வளவுதான்!  போதும் கற்பனை”. என்றார். கடவுள் கதவருகில் வந்து நின்ற போது மற்றொருவர், “ஆனால் நான் காலடி சத்தத்தை கேட்டேன், யாரோ கதவருகில் வந்திருக்கிறார்”. என்றார். பலர் ஒன்று சேர்ந்து, “சத்தம் போடாமல் அமைதியாக இரு, அது பலமான காற்றடிக்கிறது. அதனால் கதவு சத்தமிடுகிறது. ஏமாந்து போகாதே! கடவுள் கதவை தட்டுவார் என நினைக்காதே”. என்றனர். காலையில் மண்பாதையில் ரதம் வந்துபோன தடயத்தையும் ஆயிரம் படிகளில் யாரோ ஏறி வந்த காலடி சுவடையும் பார்த்துவிட்டு அவர்கள் கதறினர். “கடவுள் வந்திருக்கிறார் – ஆனால் நாம் தூங்கி விட்டோமே”! உன்னை தட்டி எழுப்பக்கூடிய குருவை கண்டுபிடிப்பது சாத்தியம்தான், ஆனால் நீ தூங்கிக் கொண்டிருந்தால் அந்த தூக்கத்தில் ஆயிரத்தோரு காரணங்களை தூங்கிகொண்டே இருப்பதற்கு கண்டு பிடிப்பாய். தவிர்ப்பதற்க்காக ‘அது காற்றாக இருக்கும், மேகமாக இருக்கும்’ என ஏதாவது ஒரு காரணத்தை கண்டு பிடிப்பாய். யாரும் வரவில்லை என கூறிக் கொண்டு திரும்பி படுத்து மறுபடியும் தூங்க ஆரம்பித்து விடுவாய். விருந்தாளி வருவதற்காக கதவருகில் முழு விழிப்போடு ஆழமான நம்பிக்கை உணர்வோடும் அளப்பரிய அன்போடும் காத்திருக்கும் உனது உள்ளுணர்வை பொறுத்தது அது. உண்மையில் உனது நேசிப்பும் நம்பிக்கை உணர்வும்தான் உருவாக்குகிறது – யாரும் வருவதில்லை. உனது நேசம் உருவாக்குகிறது, உனது நம்பிக்கையுணர்வு உருவாக்குகிறது – வேறு யாரும் வரப் போவதில்லை உனது நேசமும் நம்பிக்கையுணர்வும் மலர்ந்து உன்னைச் சுற்றி மணம் வீசும். உன்னைச் சுற்றி ஆயிரத்தோரு தீபங்கள் ஒளி வீசும்! அது உனது சக்திதான்! உனது அளப்பரிய சக்திதான்! அதைத் தவிர வேறு கடவுள் என எதுவுமில்லை. 18 ஆன்மீகத்தேடல் ஒரு பழைய கதை …. எனக்கு இந்த கதை எப்போதும் மிகவும் பிடிக்கும். ஒரு விறகுவெட்டி வயதானவன், ஏழை, அனாதை. அவன் சாப்பாட்டிற்கு ஒரே வழி நாள்தோறும் காட்டிற்கு வந்து விறகு வெட்டி கொண்டு சென்று விற்று வரும் பணத்தில் சாப்பிடுவதுதான். காட்டிற்குள் நுழையும் இடத்தில் ஒரு அழகிய அரசமரம் இருந்தது. கௌதம புத்தர் ஞானமடைந்த மரம் அதுதான். அதனால்தான் அது அரசமரம் என்றழைக்கப் படுகிறது. ஒரு விஷயம் தெரியுமா உனக்கு? மரங்களிலேயே அரசமரம்தான் மிகவும் உணர்வுபூர்வமானதும் மிக புத்திசாலியான மரமும் கூட. அந்த மரத்தில் மற்ற மரங்களில் இல்லாத ஒருவகையான அமிலம் சுரக்கிறது. அந்த அமிலம் புத்திசாலித்தனம் வளர மிக அத்தியாவசியமான ஒன்று என்பதை மிக சமீபத்தில்தான் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர் என்பதை அறிந்தால் நீ மிகவும் வியப்படையக்கூடும். புத்தர் அந்த மரத்தின் கீழ் ஞானம் பெற்றது ஒரு தற்செயலான செயல் அல்ல! இந்த விறகுவெட்டி அந்த மரத்தின் கீழ் ஒரு வயதான ஞானி உட்கார்ந்திருப்பதை பார்ப்பான். அவர் இரவு, பகல், வெயி்ல், மழை, குளிர் என எல்லாநேரங்களிலும் எல்லா காலங்களிலும் அங்கே இருப்பதை பார்ப்பான். அதனால் காட்டிற்குள் நுழையும் முன் அவர் காலில் விழுந்து வணங்குவான். அவன் வணக்கம் சொல்லும் ஒவ்வொரு முறையும் அவர் அவனைப் பார்த்து, சிரித்தபடி, ‘நீ ஒரு முட்டாள்’ எனக் கூறுவார். விறகுவெட்டி ஆச்சரியமடைவான். ஒவ்வொரு முறை வணங்கும்போதும் அவர் ஆசி கூறுவதற்கு பதிலாக முட்டாள் எனக் கூறுகிறாரே என நினைத்துக் கொண்டு போவான். ஒருநாள் தைரியத்தை வளர்த்துக் கொண்டு அவரிடம், “ஏன் இப்படி கூறுகிறீர்கள்?” என்று கேட்டான். அதற்கு அவர், “நீ தினமும் இந்த காட்டினுள் சென்று விறகு வெட்டி கொண்டு வருகிறாய். ஆனால் இதனுள் இன்னும் சிறிது தூரம் சென்றால் செம்பு சுரங்கம் உள்ளது. அங்கு சென்று செம்பு எடுத்து சென்றால் ஏழு நாட்களுக்கு கவலையில்லாமல் உட்கார்ந்து சாப்பிடலாம். ஒரு முட்டாளுக்கு மட்டுமே அது தெரியாமல் போகும். உனது வாழ்நாள் முழுவதும் நீ இந்த காட்டினுள் சுற்றிக் கொண்டு இருக்கிறாய். நீ அதை பார்த்திருந்தால் இப்படி தினமும் வந்து விறகு வெட்டிகொண்டு செல்ல வேண்டிய அவசியம் நேர்ந்திருக்காது.” என்றார். விறகுவெட்டியால் அவர் சொல்வதை நம்ப முடியவில்லை. ஏனெனில் அவனுக்கு அந்த காடு முழுவதும் நன்றாகத் தெரியும். அவர் ஏதோ கேலி செய்கிறார் என நினைத்தான். ஆனாலும் அவர் சொல்வதில் ஏதேனும் உண்மை இருக்குமானால்…………..சரி, சிறிதுதூரம் போய் தேடுவதால் என்ன தீங்கு வந்துவிடப் போகிறது என நினைத்துகொண்டு இன்னும் சிறிது தூரம் காட்டினுள் சென்று ஏதேனும் செம்பு சுரங்கம் இருக்கிறதா என்று கவனமாகவும் விழிப்போடும் தேடினான். அங்கே அவன் செம்பு சுரங்கத்தை கண்டான். அவர் எப்போதும் நீ ஒரு முட்டாள், தேவையில்லாமல் இந்த வயதான காலத்திலும் தினமும் வேலை செய்துகொண்டிருக்கிறாய் என ஏன் சொல்லிக் கொண்டு இருந்தார் என்பது இப்போது அவனுக்கு புரிந்தது. இப்போது அவன் வாரத்திற்கு ஒருமுறைதான் சென்றான். ஆனாலும் அந்த பழைய வழக்கம் தொடர்ந்தது. அவர் காலை தொட்டு வணங்கினான். அவர் மறுபடியும் அதேபோலவே சிரித்தபடி, “நீ ஒரு முட்டாளேதான்” என்றார். அவனுக்கு குழப்பமாக இருந்தது. “ஏன்? நான்தான் செம்பு சுரங்கத்தை கண்டுபிடித்து விட்டேனே! பிறகும் ஏன் இப்படி கூறுகிறீர்கள்?” எனக் கேட்டான். அவர் இன்னும் சிறிது தூரம் சென்றால் வெள்ளி சுரங்கம் இருக்கிறது என்று கூறினார். விறகுவெட்டி அதிர்ச்சியுற்றான். “ஏன் இதை முதலிலேயே கூறவில்லை?” எனக் கேட்டான். அதற்கு அவர், “நீ என்னை செம்பு சுரங்கம் பற்றி கூறியபோதே நம்பவில்லை. பிறகு எப்படி வெள்ளி சுரங்கம் பற்றி கூறினால் நம்புவாய்? இன்னும் சிறிது தூரம் உள்ளே செல்” எனக் கூறினார். அது எப்படி இருக்கும் என்ற சந்தேகம் தோன்றினாலும் இந்த தடவை ஒருவிதமான நம்பிக்கையுணர்வு அவனுள் தோன்றியிருந்ததால் அவன் இன்னும் சிறிது தூரம் உள்ளே தேடிச் சென்ற போது வெள்ளி சுரங்கத்தை கண்டறிந்தான். வெள்ளியை எடுத்துக் கொண்டு அவரிடம் திரும்பி வந்து, “இப்போது மாதத்திற்கு ஒருமுறை வந்தால் எனக்கு போதும். ஆனால் எனக்கு உங்களை பிரிவது மிகவும் கடினமானதாக இருக்கிறது. உங்களை பார்க்காமல் நான் எப்படி இருக்கப் போகிறேன் என்று எனக்குத் தெரியவில்லை. உங்களிடமிருந்து நீ ஒரு முட்டாள் என்பதை இனி நான் கேட்க முடிய போவதில்லை என்பது எனக்கு மிகவும் வருத்தமானதாக இருக்கிறது. நீங்கள் என்னை நீ ஒரு முட்டாள் என்று கூறுவதை நான் விரும்ப தொடங்கி விட்டேன்.” என்றான். அதற்கு அவர், “நீ சர்வ நிச்சயமாக முட்டாளேதான். அதில் எந்த சந்தேகமும் இல்லை” என்றார். அதற்கு அவன், “நான் வெள்ளி சுரங்கத்தை கண்டு விட்டபிறகுமா இப்படிக் கூறுகிறீர்கள்?” எனக் கேட்டான். “ஆம், இதன் பின்னும் நீ முட்டாள்தான்! அதைத் தவிர வேறில்லை. ஏனெனில் இன்னும் சிறிது தூரம் சென்றால் அங்கு தங்க சுரங்கம் இருக்கிறது. அதனால் இன்னும் ஒரு மாதம் வரை காத்திருக்கத் தேவையில்லை. நாளையே வா.” என்றார். இந்த முறை அவர் நிச்சயமாக கிணடல் செய்கிறார் எனத் தோன்றியது. ஏனெனில் அப்படி அங்கே தங்கம் இருந்திருக்குமானால் இவர் ஏன் இப்படி இந்த மரத்தடியில் மற்றவர்கள் கொணடு வந்து தரும் உணவை நம்பி, -அவர்கள் கொண்டு வருகிறார்கள் பலதடவை கொண்டு வருவதில்லை.- இதுபோல வெயிலுக்கு ஒரு மறைப்பின்றி, மழைக்கு குடையின்றி குளிருக்கு போதுமான கம்பளியின்றி கஷ்டப் பட வேண்டும். அதனால் அவர் இந்த தடவை கேலிதான் செய்கிறார். ஆனால் அவர் சொல்வது எப்போதும் உண்மையாகத் தான் இருந்திருக்கிறது. மேலும் இதில் என்ன தீங்கு இருக்கிறது. யாருக்குத் தெரியும்? இந்த கிழவன் ஒரு புதிரான ஆளாகத் தான் இருக்கிறார்! இன்னும் சிறிது தூரம் சென்றபின் அங்கே மிகப் பெரிய தங்க சுரங்கத்தைக் கண்டான். அவனால் தன் கண்களையே நம்ப முடியவில்லை. இந்த காட்டில்தான் அவன் தன் வாழ்நாள் முழுவதும் விறகுவெட்டி கழித்து வந்தான். அந்த கிழவன் இந்த காட்டின் ஆரம்பத்தில் உள்ள மரத்தடியில் உட்கார்ந்துகொண்டு இருக்கிறான். ஆனால் அவனுக்குத் தெரிந்தது, தனக்குத் தெரியவில்லை. பை நிறைய தங்கத்தை எடுத்துக் கொண்டுவந்தவன் ஞானியிடம் வந்து, “இனிமேலும் நீ ஒரு முட்டாள் என்று சொல்ல மாட்டீர்கள் என நினைக்கிறேன்.” என்றான். அதற்கு அவர், “அப்படியேதான் தொடர்ந்து சொல்லுவேன். இது ஆரம்பம்தான். முடிவல்ல, அதனால் நாளை வா.” என்றார். அவன், “என்னது தங்கம் கிடைத்தது முடிவல்லவா, ஆரம்பம்தானா! என வியந்தான். அதற்கு அவர், “ஆம், நாளை இன்னும் சிறிது தூரம் உள்ளே சென்றால் அங்கே வைரங்களைக் காண்பாய். ஆனால் அதுவும் முடிவல்ல, ஆனால் நான் உனக்கு அதிகப்படியாக எதுவும் சொல்லமாட்டேன். ஏனெனில் சொல்லிவிட்டால் உன்னால் இன்று இரவு தூங்க முடியாது. அதனால் வீட்டிற்குப் போ. நாளை காலை முதலில் காட்டிற்குள் போய் வைரங்களை எடுத்துக் கொண்டு பின் வந்து என்னை சந்தி.” என்றார். அவனால் இரவு முழுவதும் தூங்கவே முடியவில்லை. ஒரு ஏழை விறகுவெட்டி அவனுக்கு செம்பு, வெள்ளி, தங்கம், மற்றும் வைர சுரங்கமும் கூட சொந்தமாகப் போகிறது என்பதை அவனால் நம்பவே முடியவில்லை. ஆனால் அவர் இதை ஆரம்பம் என்றல்லவோ கூறுகிறார், வைரத்திற்கு மேல் என்ன இருக்கமுடியும் என்பது அவனுக்கு புரியவில்லை. யோசித்து, யோசித்து பார்த்தபோதும் அவனுக்கு விளங்கவேயில்லை. அடுத்தநாள் காலை அதிகாலையிலேயே அவன் அங்கே வந்துவிட்டான். அவர் உறங்கிக் கொண்டு இருந்தார். அவர் காலைத் தொட்டு வணங்கினான். அவர் கண் விழித்து அவனைப் பார்த்தார். “வந்து விட்டாயா? எனக்குத் தெரியும். உன்னால் இரவு முழுவதும் உறங்கியிருக்க முடியாது. போய் அந்த வைரங்களை பார்த்துவிட்டு வா.” என்றார். அவன் “வைரங்களை விட உயர்வானவையாக என்ன இருக்க முடியும் எனச் சொல்லுங்கள்.” எனக் கேட்டான். அதற்கு அவர் முதலில் வைரங்கள், பின்பு அடுத்தது, ஒன்றன் பின் ஒன்று! இல்லாவிடில் உனக்கு பைத்தியம் பிடித்துவிடும்.” என்றார். அவன் சென்று வைரங்களை எடுத்துக் கொண்டு சந்தோஷத்தில் நடனமாடிக் கொண்டே வந்து அவரிடம், “நான் வைரங்களை கணடுவிட்டேன், இப்போது நீங்கள் என்னை முட்டாள் என சொல்லமுடியாது.” என்றான். அவர் சிரித்துக் கொண்டே, “இன்னும் நீ முட்டாள்தான்.” என்றார். அவன், “இதை நீங்கள் விளக்கிச் சொல்லாவிட்டால் நான் இங்கிருந்து போகப் போவதில்லை” என்றான். அதற்கு அவர், இந்த செம்பு, வெள்ளி, தங்க, வைர சுரங்கங்களைப் பற்றி எனக்குத் தெரியும். ஆனால் நான் அவைகளைத் தேடி போவதில்லை. நான் அவைகளைப் பற்றி கவலைப்படுவதில்லை. ஏனெனில் அவைகளை விட மதிப்புள்ள விஷயம் சிறிது தூரத்தில், வெளியே காட்டின் உள்ளே அல்ல – உள்ளே சிறிது தூரத்தில் உள்ளது. அதை நான் கண்டு விட்டதால் வெளியே உள்ள வைரங்களைப் பற்றி கவலைப் படுவதில்லை. இப்போது நீதான் முடிவெடுக்க வேண்டு்ம். உன்னுடைய பயணம் இந்த வைரங்களோடு முடிவடைந்து விட்டது என்றால் என்னைப் பொறுத்தவரை நீ இன்னும் முட்டாள்தான். எனக்கு இந்த சுரங்கங்களைப் பற்றித் தெரியும், ஆனால் நான் அவற்றைப் பற்றிக் கவலைப் படவில்லை. எவ்வளவுதூரம் வெளியே போனாலும் கிடைக்காத ஏதோ ஒன்று உள்ளே கிடைக்கிறது என்பதற்கு நானே சிறந்த சாட்சி. அது உன் உள்ளேதான் கிடைக்கும்,” என்றார். அவன் வைரங்களை கீழே போட்டான். “நான் உங்கள் அருகே உட்காரப் போகிறேன். நான் ஒரு முட்டாள் என்ற உங்களுடைய எண்ணத்தை நீங்கள் மாற்றிக் கொள்ளும்வரை நான் இங்கிருந்து நகரப் போவதில்லை.” என்றான். அவன் ஒரு அப்பாவி, வெகுளித்தனமான விறகுவெட்டி. தகவல் அறிவுநிரம்பிய ஆசாமிகளுக்கு உள்ளே செல்வது கடினம். அந்த விறகு வெட்டிக்கு அது கடினம் அல்ல. விரைவிலேயே அவன் ஒரு ஆழ்ந்த அமைதிக்கு, ஒரு ஆனந்தத்திற்கு, ஒரு உள்ளார்ந்த மௌனத்திற்கு ஆளானான். ஞானி அவனை உலுக்கி, “இதுதான் அது! இனி நீ காட்டிற்குள் போக வேண்டிய அவசியம் இல்லை. நான் உன்னை சொன்ன முட்டாள் என்ற வார்த்தைகளை விலக்கிக் கொள்கிறேன். நீ ஒரு விவேகி. இப்போது நீ உன் கண்களைத் திறக்கலாம். இந்த உலகம் முன்பு எப்படி எந்த கலரில் இருந்ததோ, அப்படி இல்லாமல் புது விதமாக புது மாதிரியாக, தோன்றுவதைப் பார்க்கலாம். மக்கள் என்பு தோல் போர்த்திய உடம்பாக இல்லாமல், அவர்களும் ஒளிவிடும் ஆன்மீக உயிர்களாக ……… இந்த பிரபஞ்சத்தில் தன்னுணர்வு எனும் கடலாக பார்க்கலாம்.” என்றார். விறகுவெட்டி கண்களைத் திறந்தான். அவன் ஞானியைப் பார்த்து, “நீங்கள் மிகவும் வித்தியாசமானவர். இதை நீங்கள் முன்பே கூறியிருக்க வேண்டும். நான் கிட்டதட்ட என் வாழ்நாள் முழுவதும் இந்த காட்டிற்கு வந்து கொண்டு இருக்கிறேன்.. நீங்கள் இந்த மரத்தடியில் உட்கார்ந்து கொண்டு இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். ஏன் இவ்வளவு நாள் காத்திருந்தீர்கள்?” என்று கேட்டான். அதற்கு அவர். “நான் சரியான தருணத்திற்கு காத்திருந்தேன். காலம் கனிவது என்பதன் பொருள், கேட்பது மட்டுமல்லாமல் புரிந்து கொள்ளப்படவும் வேண்டும். பயணம் மிகச் சிறியதுதான். ஆனால் ஒவ்வொரு அடியும் ஒரு சென்றடைதல்தான். அதையும் தாண்டி செல்லலாம் என்பதை கற்பனைகூட செய்து பார்க்க முடியாத அளவிற்கு அந்த சென்றடைதல் மிகவும் நிறைவானதாக இருக்கும். எனவே சரியான காலம் முக்கியம்” என்றார். 19 குரு மலர்தல் ஒரு பழமையான சீனக் கதை கூறுகிறேன். மிகப் பெரிய மடாலயம் ஒன்றில் ஒரு குரு இருந்தார். அதில் 5000 பிட்சுக்கள் இருந்தனர். அவர்கள் அனைவரும் தியான பாதையை – தன்னை உணர்தல் – பின்பற்றினர். தன்னை உணர்தல் புத்தர் கூறிய வழிகளில் ஒன்று. ஒருநாள் ஒரு மனிதன் அந்த மடாலயத்திற்கு வந்தான். அவன் ஒரு சீடனாக விரும்பினான். குரு அவனை ஏற்றுக் கொண்டார். ஆனால் அவன் கிராமத்தான், படிக்காதவன், எளிமையானவன். அதனால் குரு அவனிடம், சமையலறையில் போய் அரிசியை சுத்தம் செய்வதுதான் உன் வேலை என்றார். அங்கு சமையலறை மிகப் பெரியது. 5000 துறவிகளுக்கானது. இந்த ஏழை அதிகாலையில் அரிசியை சுத்தம் செய்ய ஆரம்பித்தால் இரவு வரை செய்தான். சொற்பொழிவுகளுக்கோ, பிரார்த்தனைகளுக்கோ போக அவனுக்கு நேரமில்லை.. சமய நூல்களை படிக்கவோ, ஆன்மீக விவாதங்களை கேட்கவோ அவனுக்கு நேரமில்லை. இந்த 5000 துறவிகளும் பண்டிதர்கள். அதனால் இந்த மடாலயம் நாடு முழுவதும் ஆன்மீக விவாதங்களுக்கு மிகவும் பெயர் போனது. இருபது வருடங்கள் கடந்தன. அந்த மனிதன் இத்தனை ஆண்டுகளாக அரிசியை சுத்தம் செய்வதை தவிர வேறெதுவும் செய்யவில்லை. அவன் வருடங்களை கணக்கிடுவதை மறந்துவிட்டான். என்ன பயன் அவன் நாட்களை, தேதிகளை என யாவற்றையும் மறந்தான். இறுதியில் அவன் தனது பெயரைக் கூட மறந்துவிட்டான். இருபது வருடங்களாக யாரும் அதை உபயோகிக்கவில்லை. யாரும் அவனை பெயர் சொல்லிக் கூப்பிடவில்லை. அது அவனது பெயர்தானா என்பதுகூட அவனுக்கு சந்தேகமாகிவிட்டது. இருபது வருடங்களாக அவன் அரிசியை சுத்தம் செய்யும் ஒரே ஒரு சிறிய விஷயத்தை மட்டுமே தொடர்ந்து செய்து வந்தான். காலையில் எழுந்ததிலிருந்து இரவு படுக்க போகும் வரை அதை மட்டுமே செய்தான். குரு தான் இறக்கும் நேரம் வந்துவிட்டதை அறிவித்தார். அவர் தனது வாரிசை தேர்ந்தெடுக்க விரும்பினார். அதற்காக அவர் ஒரு அறிவிப்பு செய்தார். தன்னை உணர்ந்து விட்டதாக யாராவது நினைத்தால் அவர் உண்மையை உணர்ந்த விதமாக ஏதாவது ஒரு வாக்கியத்தை எனது குடிலின் சுவற்றில் எழுத வேண்டும் எனக் கூறினார். அந்த மடத்தில் உள்ள துறவிகளிலேயே தன்னை மிகச் சிறந்த பண்டிதராக நினைத்த ஒருவர் முயற்சித்தார். ஆனால் அவர் அந்த குடிலின் சுவரில் எழுதிய வாசகம் அவருடைய சொந்த அனுபவம் அல்ல. அது அவருக்கும் தெரியும். எப்படி அது அவருக்குத் தெரியாமல் போகும் அவர் நூல்களிலிருந்து எடுத்ததுதான் அது. இந்த வயதான குருவை ஏமாற்றுவது மிகவும் கடினம். சொந்த அனுபவத்திலிருந்து வந்தது அல்ல இது என அவர் எளிதாக கண்டுபிடித்துவிடுவார் என பயந்தார். அதனால் அவர் தனது பெயரை எழுதவில்லை. காலையில் வயதான குரு வந்து பார்த்துவிட்டு வேலையாளை கூப்பிட்டு அங்கு எழுதியிருந்ததை அழித்துவிடும்படி கூறு, எனது சுவற்றை பாழடித்த முட்டாள் யாரென்று கண்டுபிடி. என்றார். அந்த பண்டிதர் குரு இது ஒரு சிறப்பான உணர்தல் என பாராட்டினால் பின் நான்தான் இதை எழுதினேன் எனக் கூறலாம். இல்லாவிடில் மௌனமாக இருந்து விடலாம். யாருக்குத் தெரியும். 5000 பேரில் யார் வேண்டுமானாலும் இப்படி எழுதக் கூடும் என நினைத்ததால் அவர் அதில் கையொப்பமிடவில்லை. கிட்டத்தட்ட பன்னிரண்டு பண்டிதர்கள் முயற்சித்தனர். ஆனால் யாருக்கும் தனது பெயரை எழுத தைரியம் வரவில்லை. குரு எல்லா நாளும் அழித்து வந்தார். அவர், தன்னை உணரும் பக்குவம் உங்களில் யாருக்கும் வரவில்லை. தான் என்ற பெயரில் எல்லோரும் நானைத் தான் வளர்த்துக் கொண்டுள்ளீர்கள். நான் உங்களுக்கு திரும்ப திரும்பக் கூறி வந்திருக்கிறேன். ஆனால் நான் என்பது ஒரு சுகம், அதிலும் ஆன்மீக நான் என்பது மற்ற எல்லா வகையான நான்களை விட மிகவும் சுகமானது. அதனால் அடுத்த தலைமை யார் என நானே கண்டு பிடிக்கிறேன். என்றார். ஒருநாள் இரவு வயதான குரு இருபது வருடங்களுக்கு முன் வந்த மனிதனிடம் சென்றார். இருபது வருடங்களாக அவன் அரிசியை சுத்தம் செய்வதைத் தவிர வேறெதுவும் செய்யாததால் குருவை அவன் பார்க்கவே இல்லை. குரு அவனை எழுப்பினார். அந்த மனிதன் குருவைப் பார்த்து யார் நீ எனக் கேட்டான். ஏனெனில் இருபது வருடங்களுக்கு முன் தீட்சையளித்த போது சில நிமிடங்கள் தான் பார்த்தான். அதனால் என் தூக்கத்தைக் கெடுத்ததன் காரணம் என்ன எனக் கேட்டான். குரு, நான்தான் உன் குரு. மறந்து விட்டாயா உனக்கு உன் பெயராவது நினைவில் இருக்கிறதா எனக் கேட்டார். அந்த மனிதன் அது சிரமம். ஏனெனில் நீங்கள் எனக்கு கொடுத்த வேலையை செய்ய பெயர், புகழ், படிப்பு, பதவி, பட்டம் என எதுவும் தேவையில்லை. இது மிக எளிமையான வேலை. எனவே நான் எல்லாவற்றையும் மறந்து விட முடிகிறது. இதுதான் எனது பெயர் என என்னால் உறுதியாக கூற முடியவில்லை. சில பெயர்கள் எனது நினைவுக்கு வருகிறது. ஆனால் அதில் எது என்னுடையது என எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் உங்களுக்கு மிகவும் நன்றி கூற கடமைப் பட்டிருக்கிறேன். எனக் கூறி அவர் குருவின் பாதத்தில் விழுந்தார். தயவுசெய்து எனது வேலையை மாற்றி விடாதீர்கள். நான் எல்லாவற்றையும் மறந்து விட்டேன். ஆனால் நான் எல்லாவற்றையும் அடைந்து விட்டேன். நான் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத ஒரு நிலை இப்போது எனக்கு கிடைத்து விட்டது. வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு மௌனத்தை நான் அடைந்து விட்டேன். சில சமயங்களில் நான் பேரானந்த நிலையை உணர்கிறேன். அந்த தருணங்களில் இறந்தால் கூட நான் வருத்தம் கொள்ள மாட்டேன், வாழ்க்கை என்னை வஞ்சித்துவிட்டது எனக் கூற மாட்டேன். என் தகுதியை விட அதிகமாகத்தான் அது எனக்கு அளித்திருக்கிறது. எனது வேலையை மாற்றி விடாதீர்கள். நான் அதை நன்றாகத் தான் செய்திருக்கிறேன். யாராவது எனது வேலையை பற்றி புகார் கூறினார்களா என்றார். குரு, இல்லை, யாரும் புகார் கூற வில்லை. ஆனால் உனது வேலை மாறி விட்டது, ஏனெனில் உன்னைத்தான் எனக்கு அடுத்த தலைமையாக தேர்ந்தெடுத்திருக்கிறேன். என்றார். அந்த மனிதன், நான் அரிசி சுத்தம் செய்பவன். குருவாக இருப்பதைப் பற்றியோ, சீடர்களைப் பற்றியோ எனக்கு எதுவுமே தெரியாதே. எனக்கு எதுவும் தெரியாது என்னை மன்னித்து விடுங்கள். நான் தலையை பதவியை ஏற்க வில்லை. ஏனெனில் அவ்வளவு பெரிய பதவியை சமாளிக்க என்னால் முடியாது. எனக்கு அரிசி சுத்தம் செய்ய மட்டுமே தெரியும். என்றான். குரு, மற்றவர்கள் அடைய முயற்சி செய்து தோல்வியுற்றனர். அதில் நீ வெற்றி பெற்று விட்டாய். நீ முயற்சி செய்யாததால் நீ அடைந்து விட்டாய். நீ இந்த சிறிய விஷயத்தை மட்டுமே செய்து கொண்டிருந்தாய். அதில் நினைவுகளுக்கோ, உணர்ச்சிகளுக்கோ, கோபத்துக்கோ, போராட்டத்துக்கோ, ஒப்பிடுதலுக்கோ, லட்சியங்களுக்கோ, இடமில்லை. அதனால் மெதுமெதுவாக உனது அகந்தை அழிந்து விட்டது. அந்த அகந்தையுடன் உனது பெயரும் அழிந்தது. நீ பெயருடன் பிறக்கவில்லை. அகந்தைதான் பெயருடன் இருந்தது. அதுதான் அகந்தையின் ஆரம்பம். ஏனெனில் அந்த அகந்தை தான் உன்னை என்னிடம் கொண்டு வந்தது. அகந்தை அழிந்ததின் விளைவாக நீ உனது குருவான என்னைக் கூட மறந்து விட்டாய். அந்த வினாடி வரை ஆன்மீக லட்சியபாதையில் இருந்தாய். இப்போது நீ அடைந்து விட்டாய். நீதான் சரியானவன். அதனால் எப்போதும் குரு அவரது அடுத்த வாரிசுக்கு கொடுக்கும் இந்த அங்கி, இந்த தொப்பி, இந்த வாள் ஆகிய எல்லாவற்றையும் பெற்றுக் கொள். ஆனால் ஒரு விஷயம் நினைவில் கொள். இவற்றை பெற்றுக் கொண்டு இந்த மடத்தை விட்டு எவ்வளவு தூரம் போக முடியுமோ, அவ்வளவு தூரம் ஓடிப் போய்விடு. ஏனெனில் உனது உயிர் அபாயத்தில் உள்ளது. இந்த அகந்தை பிடித்த 5000 பேரும் உன்னைக் கொன்று விடுவார்கள். நீ மிகவும் எளிமையாக, வெகுளியாக, இருப்பதால் அவர்கள் உன்னிடம் வந்து அங்கி, தொப்பி, வாள் இவற்றை கேட்பார்கள். நீயும் கொடுத்துவிடுவாய். நீ இவற்றை எடுத்துக் கொண்டு எவ்வளவு தூரம் போக முடியுமோ அவ்வளவு தூரம் மலை ஏறி போய்விடு. விரைவில் எப்படி மலர் மலர்ந்தால் தேனீக்கள் தேடி வருமோ அதுபோல மக்கள் உன்னை வந்தடைவர். நீ மலர்ந்து விட்டாய். நீ சீடர்களை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. வெகு தொலைவான ஒரு இடத்தில் வெறுமனே அமைதியாக இருந்தால் போதும், மக்கள் உன்னைத் தேடி வருவர். நீ என்ன செய்தாயோ, அதையே மற்றவர்களுக்கும் சொல்லிக் கொடு. என்றார். ஆனால் என்ற அந்த மனிதன் நான் எந்த பாடத்தையும் படிக்கவில்லை. எப்படி சொல்லிக் கொடுப்பது என எனக்குத் தெரியாதே. என்றான். குரு, சிறிய விஷயங்களை அமைதியாக, மௌனமாக, எந்த குறிக்கோளும் இல்லாமல். இந்த உலகத்திலோ, அடுத்த உலகத்திலோ எதையாவது பெற வேண்டும் என்ற ஆசையின்றி, செய்யச் சொல். அப்போதுதான் வெகுளித்தனமானவனாக, ஒரு குழந்தையை போல மாற முடியும். அந்த வெகுளித்தனம்தான் உண்மையான ஆன்மீகம் என்பதை சொல்லிக் கொடு, என்றார். 20 தன்ணுணர்வின் கதை ஒரு உண்மையான ஆன்மீக வாதியின் ஒழுக்கம் எதுவும் அவன்மேல் திணிக்கப்பட்டதாக இருக்காது. அது அவனது தன்னுணர்விலிருந்து எழுந்ததாக இருக்கும். அவன் சரியானதை செய்ய வேண்டும் என்று முயற்சி செய்ய மாட்டான். தவறானது எதையும் செய்துவிடக் கூடாது எனவும் முயல மாட்டான். அவன் எதையும் விழிப்புணர்வோடு பார்ப்பான், அவனது தன்னுணர்விலிருந்து செயல்படுவான். அதனால் அவன் செய்வது எதுவோ அதுவே சரியானது. உண்மையில் தன்னுணர்வோடு இருக்கும்போது தவறானது எதையும் செய்யமுடியாது. நாகார்ஜூனா என்ற மிகச் சிறந்த ஞானியைப் பற்றி ஒரு அழகான கதை உண்டு. அவர் ஒரு நிர்வாணமாக திரியும் பக்கிரி, ஆனால் உண்மையான தேடுதல் உடையவர்கள் அனைவராலும் நேசிக்கப்பட்டார். ஒரு நாட்டின் அரசி கூட நாகார்ஜூனா மீது மிகவும் பக்தியோடு இருந்தாள். அவள் ஒருநாள் நாகார்ஜூனாவை அரண்மனைக்கு விருந்தாளியாக அழைத்தாள். நாகார்ஜூனா அரண்மனைக்குச் சென்றார். அரசி தனக்கு ஒரு உதவி வேண்டும் எனக் கேட்டாள். அவர் என்ன உதவி வேண்டும் எனக் கேட்டார். அதற்கு அரசி உங்களது பிச்சைப் பாத்திரம்தான் வேண்டும் என்றாள். நாகார்ஜூனா கொடுத்துவிட்டார் – அது ஒன்றுதான் அவரிடம் உள்ள பொருள் – பிச்சைப் பாத்திரம். ராணி உள்ளே சென்று வைரங்கள் பதிக்கப்பட்ட தங்கத்திலான பிச்சைப் பாத்திரம் ஒன்றைக் கொண்டு வந்து நாகார்ஜூனாவிடம் கொடுத்தாள். அவள், இதை வைத்துக் கொள்ளுங்கள். வருடக் கணக்காக உங்கள் கைகளில் இருந்த அந்த பிச்சை பாத்திரத்தை நான் வழிபட போகிறேன் – உங்களின் துடிப்பில் சிறிதளவாவது அது கொண்டிருக்கும். இனி அது என் கோவிலாக இருக்கும். உங்களைப் போன்ற மனிதர் ஒரு சாதாரண மரத்திலான பிச்சை பாத்திரத்தை ஏந்தக் கூடாது. இந்த தங்க பாத்திரத்தை வைத்துக் கொள்ளுங்கள். நான் இதை உங்களுக்காகவே விசேஷமாக செய்தேன். என்றாள். அது உண்மையிலேயே விலையுயர்ந்தது. நாகார்ஜூனா சாதாரண முனிவர்கள் போல இருந்திருந்தால், நான் இதை தொட மாட்டேன். நான் துறவி. இந்த உலகத்தை துறந்து விட்டேன் என்று கூறியிருப்பார். ஆனால் அவரைப் பொறுத்தவரை எல்லாமும் ஒன்றுதான், அதனால் அவர் அந்த பாத்திரத்தை எடுத்துக் கொண்டார். அவர் அரண்மனையை விட்டுப் போகும்போது, ஒரு திருடன் அவரைப் பார்த்தான். அவனால் அவனது கண்களையே நம்ப முடியவில்லை. ஒரு நிர்வாண சந்நியாசியிடம் இவ்வளவு விலையுயர்ந்த பொருளா இவரால் எவ்வளவு காலம் இதை பாதுகாக்க முடியும் அதனால் திருடன் அவரை பின்தொடர்ந்தான். நாகார்ஜூனா ஊருக்கு வெளியே உள்ள ஒரு பாழடைந்த கோவிலில் தங்கியிருந்தார் – கதவுகளும் இல்லை, ஜன்னல்களும் இல்லை. மிகவும் பாழடைந்தது. திருடன் அதைப் பார்த்தவுடன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். சீக்கிரமே அவர் தூங்கப் போய்விடுவார். பின் எந்த கஷ்டமும் இல்லை. நான் அந்த பாத்திரத்தை எடுத்துக் கொள்வேன் என நினைத்தான். திருடன் கதவுக்கு வெளியே ஒரு சுவறின் அருகில் பதுங்கியிருந்தான். நாகார்ஜூனா அந்த பாத்திரத்தை வெளியே விட்டெறிந்தார். திருடனால் நடந்ததை நம்பவே முடியவில்லை. நாகார்ஜூனா இந்த திருடன் தன்னை பின் தொடர்ந்து வருவதை பார்த்திருந்தார். இவன் தனக்காக வரவில்லை, இந்த பாத்திரத்திற்காகத் தான் வருகிறான் என்பதை நன்கு அறிந்த அவர் அதை வெளியே வீசி விட்டார். எதற்கு அனாவசியமாக அவன் காத்திருக்க வேண்டும் எடுத்துக் கொண்டு அவன் போகட்டும், நானும் ஓய்வெடுக்கலாம் என நினைத்தார். இவ்வளவு விலையுயர்ந்த பொருளை நாகார்ஜூனா இவ்வளவு சுலபமாக வீசி விட்டாரே என ஆச்சரியப்பட்ட திருடனுக்கு அது தனக்காகத் தான் வீசப்பட்டது என நன்றாகத் தெரிந்தது. அதனால் அவருக்கு நன்றி சொல்லாமல் அவனால் போக முடியவில்லை. அவன், தலையை உள்ளே நீட்டி, சாமி, மிகவும் நன்றி. ஆனால் நீங்கள் மிக வித்தியாசமான மனிதர் – என் கண்களையே என்னால் நம்பமுடியவில்லை. மேலும் எனக்கு ஆழமான ஆசை ஒன்று எழுகிறது. ஒரு திருடனாக இருந்து என் வாழ்நாளை நான் வீணடித்துவிட்டேன். ஆனால் உங்களைப் போன்றவர்களும் இருக்கிறார்களா நான் உள்ளே வந்து உங்கள் காலில் விழலாமா எனக் கேட்டான். நாகார்ஜூனா சிரித்தார், அவர், வா, அதற்காகத்தான் அந்த பாத்திரத்தை வெளியே வீசினேன். அப்போதுதான் நீ உள்ளே வருவாய். என்றார். திருடன் மாட்டிக் கொண்டான். உள்ளே வந்து பாதங்களை தொட்டான். அந்த சமயத்தில் திருடன் மிகவும் வெளிப்படையாக இருந்தான். ஏனெனில் இவர் சாதாரண மனிதர் அல்ல என்பதை அவன் கண்டான். அவன் மிகவும் மென்மையாகவும், திறந்தும், நன்றியோடும், திகைத்தும், உள்வாங்கத்தயாராகவும் இருந்தான். அவன் அவர் காலில் விழுந்து வணங்கிய போது, வாழ்க்கையில் முதன்முறையாக அவன் தெய்வீகத்தை உணர்ந்தான். அவன் நாகார்ஜூனாவிடம், நானும் உங்களைப் போல மாற இன்னும் எத்தனை பிறவிகள் ஆகும் எனக் கேட்டான். நாகார்ஜூனா, எத்தனை பிறவிகளா அது இங்கேயே இப்போதே, இன்றே நடக்கலாம் என்றார். திருடன், நீங்கள் கிண்டல் செய்கிறீர்கள். அது இப்போது எப்படி நிகழமுடியும் நான் ஒரு திருடன், நாடே அறியும். அவர்களால் என்னை பிடிக்க முடிய வில்லை. அரசர் கூட என்னை பார்த்து பயப்படுவார். ஏனெனில் மூன்றுமுறை பொக்கிழத்திற்க்குள் நுழைந்து திருடிக் கொண்டு போயிருக்கிறேன். அவர்களுக்கு அது நான்தான் எனத் தெரியும். ஆனால் அத்தாட்சியில்லை. நான் ஒரு பக்கா திருடன் – நீங்கள் இந்த பகுதிக்கு அன்னியராக இருப்பதால் உங்களுக்கு இவை தெரியாமலிருக்கலாம். இப்போதே நான் எப்படி மாற முடியும் என்றான். நாகார்ஜூனா ஆயிரக்கணக்கான வருடங்களாக வெளிச்சமே இன்றி இருண்டு கிடக்கும் ஒரு வீட்டிற்க்குள் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றிக் கொண்டு வந்தால், இருள் ஆயிரக்கணக்கான வருடங்களாக நான் இங்கே இருக்கிறேன். ஒரு தீபத்தை உள்ளே கொண்டு வந்ததால் மட்டுமே என்னால் வெளியே போக முடியாது. நான் நெடுங்காலமாக இங்கே இருக்கிறேன். எனக் கூற முடியுமா இருள் சண்டையிட முடியுமா ஒருநாள் இருட்டு, ஆயிரக்கணக்கான வருட இருட்டு என இருட்டில் பேதம் உண்டா எனக் கேட்டார். திருடனால் அதை புரிந்து கொள்ள முடிந்தது, இருள் வெளிச்சத்தை எதிர்க்க முடியாது. வெளிச்சம் வரும்போது, இருள் மறைந்துவிடும். நாகார்ஜூனா, நீ பல பிறவி பிறவியாக இருளில் இருந்திருக்கலாம். – அது ஒரு பொருட்டேயல்ல. நான் உனக்கு ஒரு ரகசியத்தை கொடுக்கிறேன். அதன்மூலம் நீ உன் இருப்பில் வெளிச்சத்தை கொண்டு வர முடியும். என்றார். திருடன், என் தொழில் அதை நான் விட வேண்டுமா எனக் கேட்டான். நாகார்ஜூனா அதை நீதான் தீர்மானிக்க வேண்டும். எனக்கு உன் தொழிலைப் பற்றியோ உன்னைப் பற்றியோ அக்கறையில்லை. உன் இருப்பில் வெளிச்சத்தை கொண்டுவரக்கூடிய ஒரு ரகசியத்தை நான் உனக்குத் தருவது மட்டுமே நான் செய்வது. மற்றபடி எல்லாமே உன்னை பொறுத்தது. என்றார். திருடன், ஆனால் நான் மற்ற சன்னியாசிகளிடம் சென்றபோது, அவர்கள் எப்போதும், முதலில் திருடுவதை நிறுத்து – பின்புதான் தீட்சையளிக்க முடியும் எனக் கூறுவர். என்றான். நாகார்ஜூனா சிரித்து, நீ சன்னியாசிகளிடம் செல்லாமல் திருடர்களிடம் சென்றிருக்கலாம். அவர்களுக்கு ஒன்றும் தெரியாது. நீ வெறுமனே உன் சுவாசத்தை கவனி – இது புத்தரின் முறை – உன் சுவாசம் உள்ளே போவதையும் வெளியேறுவதையும் கவனி. எப்போதெல்லாம் நினைவு வருகிறதோ, அப்போதெல்லாம் உன் சுவாசத்தை கவனி. திருடப் போகும்போது, வேறு யாருடைய வீட்டிற்க்குள் இரவில் நுழையும்போதும், உன் சுவாசத்தை கவனி. பொக்கிஷத்தை திறக்கும்போதும், வைரங்கள் அங்கே இருப்பதை பார்க்கும்போதும் உன் சுவாசத்தை கவனி. என்ன செய்ய விரும்புகிறாயே அதை செய் – ஆனால் சுவாசத்தை கவனிக்க மறந்து விடாதே. என்றார். திருடன், இது மிகவும் எளிதானதாக தோன்றுகிறதே. ஒழுக்கம் தேவையில்லையா குணநலன் வேண்டாமா வேறு எதுவும் தேவையில்லையா என்றான். நாகார்ஜூனா, நிச்சயமாக வேறு எதுவுமில்லை. உன் சுவாசத்தை கவனி. அவ்வளவுதான் என்றார். பதினைந்து நாட்களுக்கு பிறகு திருடன் திரும்ப வந்தான். ஆனால் அவன் முற்றிலும் புதியவனாக இருந்தான். அவன் நாகார்ஜூனாவின் காலில் விழுந்து வணங்கி, என்னை சிக்க வைத்து விட்டீர்கள். நான் ஒரு துளி கூட சந்தேகப் பட முடியாத விதத்தில் மிக அழகாக என்னை சிக்க வைத்து விட்டீர்கள். நான் இந்த பதினைந்து நாட்களாக முயற்சி செய்தேன் – அது நடக்கவே இல்லை. நான் என் சுவாசத்தை கவனித்தால் என்னால் திருட முடியவில்லை. நான் திருடினால், என் சுவாசத்தை என்னால் கவனிக்க முடியவில்லை. சுவாசத்தை கவனித்தால் நான் மிகவும் மௌனமாக, விழிப்போடு, தன்னுணர்வோடு, கவனமானவனாக இருக்கிறேன். அப்போது வைரங்கள் கூட கூழாங்கற்களாக தோன்றுகிறது. நீங்கள் எனக்கு ஒரு கஷ்டத்தை, அலைபாயுதலை உருவாக்கி விட்டீர்கள். நான் இப்போது என்ன செய்வது என்று கேட்டான். நாகார்ஜூனா, வெளியே போ – நீ என்ன செய்ய விரும்புகிறாயோ அதை செய். அந்த அமைதி, அந்த மௌனம், அந்த ஆனந்தம் என உன் சுவாசத்தை நீ கவனிக்கும் போது கிடைப்பது வேண்டும் என நினைத்தால் அதை தேர்ந்தெடு. அதை விட வைரமும் தங்கமும் வெள்ளியும் விலைமதிப்புள்ளது என முடிவெடுத்தால் அதை தேர்ந்தெடு. நீதான் தேர்ந்தெடுக்க வேண்டும். உன் வாழ்வில் தலையிட நான் யார் எனக் கேட்டார். அந்த மனிதன், என்னால்  தன்னுணர்வற்ற நிலையை தேர்ந்தெடுக்க முடியாது. இதுபோன்ற கணங்களை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. என்னை உங்களது சீடனாக ஏற்றுக் கொள்ளுங்கள். எனக்கு தீட்சையளியுங்கள் என்று கேட்டான். நாகார்ஜூனா, நான் உனக்கு ஏற்கனவே தீட்சையளித்து விட்டேன் என்றார். 21 ஆணவத்தின் ஏமாற்றம் ஒருவர் சக்ரவர்த்தி ஆவது ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் நிகழக்கூடும் என்றும் அவர் ஒரு தனிப்பிறவி என்றும் அதனால் சக்ரவர்த்தியான ஒருவர் இறந்தால் அவருக்கு சொர்க்கத்தில் தனிப்பட்ட மரியாதைகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டு, சிறப்பான ஒரு இடம் கொடுக்கப்படும் என்றும் சொல்லப்படுவதுண்டு. ஜைன மத நூல்களில் சொர்க்கத்தில் இமயமலையை போன்ற ஒரு மலை உண்டு எனக் கூறப்பட்டுள்ளது. இந்த இமயமலை பாறைகளாலும் மண்ணாலும் பனியாலும் உருவாக்கப்பட்டுள்ளது. சொர்க்கத்தில் உள்ள அந்த மலைக்கு பெயர் சுமிரு. சுமிரு என்றால் மிக உயர்ந்த மலை எனப் பொருள். அதை விட சிறந்த, அதை விட அழகானது வேறில்லை என்பது அதன் அர்த்தம். அது தங்கத்தால் உருவானது. அதில் பாறைகளுக்கு பதிலாக வைரங்களும் பவளங்களும் மரகதங்களும் உள்ளன. சக்ரவர்த்தி ஒருவர் இறந்தால் அவரது பெயர் அந்த மலை மீது பொறிக்கப்படும். அப்படி ஒரு சக்ரவர்த்தி இறந்த சமயம் அவரது பெயரை சுமிரு மலை மீது பொறிப்பதற்காக அவரை கூட்டிப் போனார்கள். அது ஒரு அரிதான தருணம். அது ஆயிரம் வருடங்களில் ஒருமுறையே நிகழும். இந்த மன்னன் தன் பெயரை சுமிரு மலை மீது தான் பொறிக்கப்போவதை எண்ணி மிகவும் மனக்கிளர்ச்சியடைந்தான். இதுவரை இருந்த மிகச் சிறந்தவர்களில் ஒருவனாகப் போவதோடு, வரப்போகிற சிறந்தவர்களுக்கும் ஒரு பாடமாக, வழிகாட்டியாக இருக்கப்போகிறான். அந்த சக்ரவர்த்தி அசாதாரணமானவர்களில் ஒருவனாகப் போகிறான். அந்த வாயில் காவலன் மலைமீது அவரது பெயரை பொறிப்பதற்க்கு தேவையான கருவிகளை கொடுத்தான். சக்ரவர்த்தி தன்னுடன் இன்னும் சிலரை கூட்டிச் செல்ல விரும்பினான். சக்ரவர்த்தியின் வாழ்நாள் பூராவும் அவருடன் இருந்து அவரது வெற்றிக்கு துணை நின்ற அவரது மனைவி, அமைச்சர், தளபதி ஆகியோர் சக்ரவர்த்தி இறந்தபோது அவரின்றி வாழ முடியாது என தற்கொலை செய்துகொண்டு அவருடன் கூடவே உயிர் விட்டு அவருடன் இப்போது சொர்க்கத்துக்கு வந்துள்ளனர். அவர்களையும் கூட்டிச் செல்ல அனுமதிக்குமாறு வாயில் காப்போனைக் கேட்டார். ஏனெனில் தன்னந்தனியே போய் தன் பெயரை பதித்துவிட்டு வருவதில் என்ன சந்தோஷம் இருக்கப் போகிறது—அங்கு அதைப்பார்க்க யாருமே இல்லாவிடில் மகிழ்ச்சி எப்படி வரும்—ஏனெனில் இந்த முழு உலகமும் பார்ப்பதில்தான் சந்தோஷமே இருக்கிறது. வாயில் காவலன், என்னுடைய பேச்சை தயவு செய்து கேளுங்கள். இது என்னுடைய பரம்பரை தொழில். என்னுடைய அப்பா, தாத்தா, அவருடைய அப்பா என நாங்கள் ஆயிரக்கணக்கான நூற்றாண்டுகளாக இந்த சுமிரு மலையின் வாயில் காப்பவர்கள். அதனால் என் பேச்சைக் கேளுங்கள். இவர்கள் யாரையும் உங்களுடன் கூட்டிச் செல்லாதீர்கள். இல்லையெனில் வருத்தப்படுவீர்கள். என்றான். சக்ரவர்த்தியால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் அவரால் அவனது பேச்சைக் கேட்காமலும் இருக்க முடியவில்லை. ஏனெனில் அவரைத் தடுப்பதால் அவனுக்கு என்ன லாபம்… வாயில் காப்போன், நீங்கள் இவர்களை இப்போதேக் கூட்டிச் செல்வதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் அவர்களைக் கூட்டிச் சென்று விட்டு பின் அங்குள்ள நிலையை பார்த்துவிட்டு ஒருக்கால் காண்பிக்க வேண்டாம் என முடிவெடுத்தால் அப்போது அதை செயல்படுத்த வழியும் இருக்காது, வாய்ப்பும் இருக்காது. அவர்கள் உங்களுடன்தான் இருப்பார்கள். எனவே இப்போது நீங்கள் தனியே சென்று உங்கள் பெயரை பொறித்துவிட்டு வாருங்கள். பின் இவர்கள் பார்க்கத்தான் வேண்டும் என விரும்பினால் திரும்பி வந்து இவர்களை கூட்டிச் செல்லுங்கள். என்றான். இது மிகச் சரியான யோசனையாகத் தோன்றியதால் சக்ரவர்த்தி, மற்றவர்களிடம், நான் தனியாகப் போய் எனது பெயரை பொறித்துவிட்டு திரும்ப வந்து உங்கள் எல்லோரையும் அழைத்துச் செல்கிறேன். என்றார். வாயில் காப்போன், இதுதான் மிகச் சரியானது என்றான். சக்ரவர்த்தி சென்று ஆயிரக்கணக்கான சூரியன்களுக்கு அடியில் தகதகத்துக் கொண்டிருந்த சுமிரு மலையைக் கண்டார். – ஏனெனில் சொர்க்கத்தில் ஒரே ஒரு சூரியனோடு ஏழை போன்று இருக்க முடியாது – ஆயிரக்கணக்கான சூரியன்கள், இமயமலையைவிட பெரிதான தங்க மலை. இமயமலையே இரண்டாயிரம் மைல் நீளம் உடையது. சக்ரவர்த்தியால் கண்களை திறக்கவே முடியவில்லை. அவ்வளவு தகதகப்பு – பின் மெதுவாக கண்களை பழக்கப்படுத்திக்கொண்டு தனது பெயரை பொறிக்க சரியான ஒரு இடத்தைத் தேடினார். ஆனால் அவர் மிகவும் வியப்படைந்தார். அங்கு இடமே இல்லை. மலை முழுவதும் பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தன. அவரால் தனது கண்களையே நம்ப முடியவில்லை. முதல் தடவையாக அவர் தான் யாரென்று உணர்ந்தார். இதுவரை ஆயிரம் வருடங்களில் ஒருமுறை மட்டுமே உருவாகக் கூடிய சிறப்பான மனிதனாக தன்னை நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால் காலம் முடிவற்றது. அதில் ஆயிரம் வருடங்கள் என்பது எந்தப்பெரிய மாறுதலையும் ஏற்படுத்தி விடாது. அது ஒரு பொருட்டே அல்ல. அதனால் ஏகப்பட்ட சக்ரவர்த்திகள் ஏற்கனவே இருந்திருக்கிறார்கள். அவ்வளவு பெரிய மலையில் இவருடைய சிறிய பெயரை எழுத இடமே இல்லை. அவர் திரும்பி வந்தார். உன்னுடைய மனைவி, அமைச்சர்கள், தளபதி மற்றும் நெருங்கிய நண்பர்கள் என யாரையும் உன்னுடன் கூட்டிச் செல்ல வேண்டாம் என காவலாளி தடுத்தது ஏன் என இப்போது புரிந்தது. அவர்கள் இந்த காட்சியை பார்க்காமல் இருந்தது நல்லது. தங்களது சக்ரவர்த்தி ஒரு அரிய பிறவி என்றே அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கட்டும். அவர் காவலாளியை உள்ளே தனியே அழைத்து, அங்கே இடமே இல்லை என்பதைக் கூறினார். காவலாளி, இதைத்தான் நான் உங்களிடம் கூறினேன். நீங்கள் சில பெயர்களை அழித்துவிட்டு உங்களது பெயரை எழுதிவிட்டு வாருங்கள். அப்படித்தான் செய்திருக்கிறார்கள். என் வாழ்வில் பலர் இப்படி செய்வதை பார்த்திருக்கிறேன். எனது தந்தையும் இப்படி நடந்திருக்கிறது எனக் கூறியிருக்கிறார். எனது தாத்தா ஏன் எனது பரம்பரையில் யாருமே சுமிரு மலை காலியாக இருந்தோ, சிறிதளவு இடம் இருந்தோ பார்த்ததில்லை. எப்போதுமே ஒரு சக்ரவர்த்தி வந்தால் அவர் சில பெயர்களை அழித்துவிட்டு தனது பெயரை எழுதுவார். இதுவரை இருந்த எல்லா சக்ரவர்த்திகளின் பெயரும் இதனுள் இருக்கிறது என்று கூறிவிட முடியாது. பலமுறை அழிக்கப்பட்டு பலமுறை பொறிக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் உங்களது பெயரை எழுதிவிட்டு பின் உங்களது நண்பர்களிடம் காட்ட விரும்பினால் அவர்களை உள்ளே அழைத்துச் செல்லுங்கள். என்றான். சக்ரவர்த்தி, இல்லை, நான் அவர்களிடம் காட்டவும் விரும்பவில்லை, என்னுடைய பெயரை நான் எழுதவும் போவதில்லை. அதனால் என்ன பயன் – ஒருநாள் யாராவது ஒருவர் வந்து அதை அழிக்கப் போகிறார். என்னுடைய முழு வாழ்வும் இப்போது பொருளற்றதாகி விட்டது. சொர்க்கத்தில் உள்ள சுமிரு மலையில் எனது பெயர் பொறிக்கப் படும் என்பதுதான் எனது ஒரே நம்பிக்கையாக இருந்தது. இதற்காகவே நான் வாழ்ந்தேன். இதற்காகவே நான் எனது வாழ்க்கை முழுவதையும் பணயம் வைத்தேன். இதற்காகவே நான் இந்த உலகம் முழுவதையும் கொல்லத் தயாராக இருந்தேன். ஆனால் இப்போது வேறு யார் வேண்டுமானாலும் வந்து எனது பெயரை அழித்துவிட்டு தங்களது பெயரை எழுதக்கூடும் எனும்போது அதில் எழுதுவதில் என்ன பொருளிருக்கிறது— நான் அதில் எழுதப் போவதில்லை. என்றார். காவலாளி சிரித்தான். சக்ரவர்த்தி, ஏன் சிரிக்கிறாய் எனக் கேட்டார். காவலாளி, ஆச்சரியமாயிருக்கிறது. ஏனெனில் சக்ரவர்த்திகள் வந்து, இதைப் பார்த்துவிட்டு, கேட்டுவிட்டு, தங்கள் பெயரை எழுதாமல் திரும்பி போன கதையையும் நான் எனது தாத்தாவிடமிருந்து கேட்டிருக்கிறேன். நீங்கள் மட்டுமல்ல, ஒரு சிறிதளவாவது புத்திசாலித்தனம் உள்ள யாரும் இதையேதான் செய்வர். என்றான். 22 வாழ்வின் உண்மை நான் ஒரு பழமையான சூபி கதையை உங்களுக்கு கூறுகிறேன்…….. ஒரு அரசர் தனது அரசவையிலுள்ள அறிஞர்களிடம், நான் எனக்காக ஒரு அழகான மோதிரம் செய்யப் போகிறேன். அதில் மிகச்சிறந்த வைரங்கள் பதிக்கப் போகிறேன். அந்த மோதிரத்திற்க்குள் மிக மோசமான சமயத்தில் படித்தால் எனக்கு உதவக்கூடிய ஒரு செய்தியை வைத்திருக்க விரும்புகிறேன். அது மிகவும் சிறியதாக இருக்கவேண்டும். அப்போதுதான் அதை மோதிரத்தில் பதிக்கும் வைரத்தின் கீழே மறைத்து வைக்கமுடியும். அப்படி ஒரு செய்தி வேண்டும். என்று கேட்டான். அவர்கள் யாவரும் அறிஞர்கள், மிகச்சிறந்த பண்டிதர்கள். அவர்களால் மிகச்சிறந்த உபதேசங்களை எழுத முடியும். ஆனால் மிக மோசமான தருணத்தில் உதவக்கூடிய இரண்டு அல்லது மூன்று வார்த்தைகளுக்குள் அடங்கும் ஒரு செய்தியை எழுதுவது என்றால்…… அவர்கள் சிந்தித்தனர், தங்களது புத்தகத்தில் தேடிப்பார்த்தனர், ஆனால் அவர்களால் அப்படி ஒன்றை கண்டு பிடிக்கவே முடிய வில்லை. அரசரிடம் ஒரு வயதான வேலையாள் இருந்தான். அவனுக்கு அவரது தந்தையின் வயது. அவன் அரசரது தந்தையின் வேலையாள். அரசி சிறுவயதிலேயே மரணமடைந்து விட்டதால் இந்த வேலையாள்தான் அரசரை பாதுகாப்பாக வளர்த்தான். அதனால் அரசர் இவனை ஒரு வேலையாளாக கருதுவதில்லை. அவனிடம் மிகவும் மதிப்பு வைத்திருந்தான். அந்த வயதானவன், நான் அறிவாளியுமல்ல, பண்டிதனுமல்ல, படித்தவனுமல்ல, ஆனால் எனக்கு அந்த செய்தி என்னவென்று தெரியும் – அப்படி பட்ட செய்தி ஒன்றே ஒன்றுதான் உள்ளது. இவர்களால் அதை உங்களுக்கு கொடுக்கமுடியாது. ஏனெனில் தன்னை உணர்ந்த ஒரு மனிதனால்தான், ஒரு ஞானியால்தான் அது போன்ற ஒரு செய்தியை கொடுக்கமுடியும். என்றான். இவ்வளவு காலம் இந்த அரண்மனையில் இருந்ததால் நான் பல்வேறு தரபட்ட மக்களை சந்தித்திருக்கிறேன். அதில் ஒருமுறை ஒரு ஞானியை சந்தித்திருக்கிறேன். அவர் உனது தந்தையின் விருந்தாளியாக வந்திருந்தார். அவருக்கு சேவை செய்வதற்காக உனது தந்தை என்னை அனுப்பினார். அவர் விடைபெறும்போது, நான் அவருக்கு செய்த பணிவிடைகளுக்கு நன்றியுரைக்கும் விதமாக அவர் இந்த செய்தியை எனக்கு அளித்தார். எனக்கூறி அந்த செய்தியை ஒரு சிறுதாளில் எழுதி அதை சுருட்டி அரசரிடம் கொடுத்து, இதை படிக்க வேண்டாம். மோதிரத்தில் வைத்துக் கொள்ளுங்கள். எல்லாமும் முடிந்து விட்டது, வேறு வழியேயில்லை எனும் சமயத்தில் இதை திறந்து பாருங்கள் என்றார். அந்த சமயமும் விரைவிலேயே வந்தது. அந்த நாட்டின்மீது படையெடுப்பு நடந்தது. அரசர் தனது நாட்டை போரில் இழந்தார். அவர் தனது குதிரையில் தப்பித்து ஓடினார். அவரது பின்னால் அவரது எதிரி படை வீரர்கள் குதிரையில் துரத்தி வந்தனர். அவர் ஒரு ஆள், அவர்கள் பலர். அவர் ஒரு பாதை முடிவுக்கு, அதற்கு மேல் பாதையில்லை என்ற இடத்திற்கு, ஒரு மலைமுகடுக்கு வந்து விட்டார். கீழே பெரும் பள்ளத்தாக்கு, அதில் விழுந்தால் முடிந்தது. அவரால் திரும்பியும் போக முடியாது, எதிரிகள் வந்து கொண்டிருந்தனர், குதிரைகளின் குளம்படி சத்தம் கேட்டது. – முன்னேயும் போக முடியாது, அங்கே வழியில்லை. திடீரென அவருக்கு மோதிரத்தின் நினைவு வந்தது. அவர் அந்த மோதிரத்தை திறந்து, அந்த பேப்பரை எடுத்தார், அதில் மிகச் சிறந்த பொருளுடைய ஒரு வாசகம் இருந்தது. அது இதுவும் கடந்து போகும் அந்த வாசகத்தை படித்தவுடன் அவருக்குள் மிகப் பெரும் அமைதி வந்தமர்ந்தது. இதுவும் கடந்து போகும், அதுவும் கடந்து போயிற்று. எல்லாமும் கடந்து போகும், எதுவும் இந்த உலகில் தங்காது. அரசரை பின்தொடர்ந்து வந்த எதிரிகள் வழி மாறி போய் விட்டனர், வேறு வழியில் அவரை தேடி சென்று விட்டனர். குதிரைகளின் குளம்பொலி படிப்படியாக குறைந்து தேய்ந்து போய் விட்டது. அரசருக்கு அந்த ஞானியிடமும், அந்த வேலையாளிடமும் அளப்பரிய நன்றியுணர்வு தோன்றியது. இந்த வார்த்தைகள் அபூர்வ சக்தி படைத்தவை. அவர் அந்த தாளை மடித்து, திரும்பவும் அந்த மோதிரத்தினுள் வைத்தார். பின் தனது படைகளை திரட்டிக் கொண்டு வந்து, திரும்பவும் போராடி தனது அரசை வென்றார். அவர் தனது தலைநகரத்தில் வெற்றியோடு நுழையும்போது, ஆடல்பாடலோடு கோலாகலமாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. அரசர் தன்னைப் பற்றி பெருமையாக உணர்ந்தார். அந்த வேலையாள் அவரது ரதத்தின் கூட நடந்து வந்து கொண்டிருந்தார். அவர், இதுவும் சரியான தருணம். அந்த வாசகத்தை திரும்பவும் பாருங்கள். என்றார். அரசர், என்ன சொல்கிறீர்கள், இப்போது நான் வெற்றி பெற்று இருக்கிறேன். மக்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள், நான் தோல்வியுற்ற நிலையில் இல்லையே. வேறு வழியே இல்லை என்ற நிலையில் நான் இப்போது இல்லையே. எனக் கேட்டார். அந்த வயதானவன், பாருங்கள், இதைத்தான் ஞானி என்னிடம் கூறினார். அந்த செய்தி கையறு நிலைக்கானது மட்டுமல்ல, அது சந்தோஷ தருணங்களுக்கானதும்தான். நீங்கள் தோல்வியுற்ற நிலையில் மட்டுமல்ல, வெற்றி பெற்ற நிலையில் கூட அந்த செய்தி உண்மையானது தான். நீ தொலைந்து போன சமயத்தில் மட்டுமல்லாமல் முதல் ஆளாக நீ இருக்கும் நேரத்தில்கூட அது தேவைதான். என்று கூறினார் அரசர் தனது மோதிரத்தை திறந்து, இதுவும் கடந்து போகும் என்ற செய்தியை படித்தார். உடனே திடீரென அந்த கூட்டத்தினுள்ளும், மகிழ்ந்து கூத்தாடிக் கொண்டிருக்கும் அந்த நேரத்திலும் அதே அமைதி, அதே மௌனம் கவிழ்ந்தது. அந்த பெருமை, அந்த ஆணவம் அகன்றது. எல்லாமும் கடந்து போகும். 23 இணைப்புணர்வின் கதை இந்த குறிப்பிட்ட வகையான சூழ்நிலைகள்தான் முக்தி நிலையை அடைய உதவும் என்று எதுவும் கிடையாது. உன்னுடைய தேடல், உனது ஆழ்ந்த ஏக்கம், அதற்காக எதையும் செய்யத் தயாராக இருக்கும் உனது நிலை – இவை அனைத்தும் ஒருங்கிணைந்து உன்னைச் சுற்றி உருவாக்கும் ஒரு சக்தி நிலைதான் அது நிகழக்கூடியசாத்தியக்கூறை உருவாக்கும். அதை நீ உருவாக்க முடியாது. ஒவ்வொரு சாதகனும் ஆரம்ப நிலையில் இருந்துதான் ஆரம்பிக்க வேண்டும். இதில் மற்றவரை பார்த்து நீ எதையும் கற்றுக் கொள்ள முடியாது. அப்படித்தான் எல்லா மதங்களும் செய்து கொண்டிருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட பிராத்தனை, ஒரு குறிப்பிட்ட விதமாக உட்காருவது, ஒரு குறிப்பிட்ட செயல், ஒரு குறிப்பிட்ட விதமாக சுவாசிப்பது என. ஆனால் எதுவும் உதவப் போவதில்லை. ஒரு கதை இது எனக்கு எப்போதும் மிகவும் பிடிக்கும்…. ஒரு தீவில் உள்ள மூன்று பேர் மிகவும் சிறந்த புனிதர்கள் என மக்களிடம் பிரபலமடைந்து வந்தனர். இதை அறிந்த ரஷ்யாவின் ஆர்ச் பிஷப் மிகவும் ஆத்திரமடைந்தார். இது கிறிஸ்துவ மதத்துக்கு எதிரானது. மதங்களிலேயே கிறிஸ்துவ மதம்தான் மிகவும் முட்டாள்தனமானது. புனிதர் என்பது ஏதோ ஒரு பட்டம் போல, ஒரு படிப்பு தகுதி போல, அது சர்ச் அமைப்பினால் அங்கீகரிக்கப் பட வேண்டும் என்பர். சர்ச் அங்கீகரிக்கும்போதுதான் ஒருவர் புனிதர் ஆகிறார். தன்னிடம் அங்கீகாரம் பெறாமலேயே இந்த மூன்று பேரும் புனிதர்கள் என்று பெயர் பெறுவதை ஆர்ச் பிஷப்பால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. மிகவும் கோபமடைந்தார். ஆயிரக்கணக்கான மக்கள் அவர்களிடம் ஆசி பெறவும் காலை தொட்டு வணங்கவும் செல்வது அவருக்கு மிகவும் கோபமூட்டியது. ஒருநாள் அவர்கள் என்ன வகையான புனிதர்கள் என்று பார்ப்பதற்காக நேரில் போய் பார்ப்பது என முடிவு செய்தார். அவர் மோட்டார் படகில் சென்று அந்த தீவை அடைந்தார். அது ஒரு மிகச் சிறிய தீவு. இந்த மூவர் மட்டுமே அங்கு வசித்து வந்தனர். அது ஒரு காலை நேரம். இந்த மூவரும் ஒரு மரத்தின் கீழ் அமர்ந்திருந்தனர். அவர்கள்படிப்பறிவற்ற, நாகரீகமற்ற, சாதாரண மனிதர்கள் போல தோன்றினர். ஆர்ச் பிஷப் வரும் வழியில் ஆயிரக்கணக்கான மக்களை தன்பால் ஈர்த்த மூன்று பேரை எப்படி சந்திப்பது என்ற பதட்டத்தோடுதான் வந்தார். இப்போது இங்கு எந்த பிரச்னையும் இல்லை என நினைத்தார் – இவர்கள் முட்டாள்கள். அவர் அவர்களிடம் சென்றவுடன் அவர்கள் இவர் காலைத் தொட்டு வணங்கினார்கள். அவர்திருப்தியடைந்தார். நீங்கள் புனிதர்கள் என நீங்கள் நினைக்கிறீர்களா என அவர்களிடம் கேட்டார். அவர்கள், – நாங்கள் படிக்காத, பாமர மக்கள். எங்களால் எப்படி அவ்வளவு உயர்ந்த விஷயங்களை நினைத்துப்பார்க்க முடியும் – நாங்கள் அப்படி அல்ல. ஆனால் நாங்கள் என்ன செய்வது, மக்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள். நாங்கள் அவர்களை தடுக்க முயற்சி செய்தோம், உங்களிடம்தான் போக வேண்டும் எனக் கூறினோம். ஆனால் அவர்கள் கேட்பதே இல்லை – என்றனர் ஆர்ச் ஆணித்தரமான குரலில், உங்களது பிரார்த்தனை என்ன எனக் கேட்டார். மூவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். ஒருவரையொருவர் மறுத்துக் கொண்டனர். ஒருவர் நீ சொல் என்றார். மற்றவர் நீ சொல் என்றார். ஆர்ச் பிஷப், யார் வேண்டுமானாலும் சொல்லலாம். அதில் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் சொல்லுங்கள் என்றார். அவர்கள் – உண்மையில் இது ஒரு பிரார்த்தனையே அல்ல. நாங்கள் அதை உருவாக்கிக் கொண்டோம். எங்களுக்கு அதைச் சொல்ல மிகவும் வெட்கமாக இருக்கிறது என்றனர். ஆர்ச்பிஷப் உண்மையிலேயே மிகவும் ஆத்திரமடைந்தார். நீங்களே பிரார்த்தனையை உருவாக்கிக் கொண்டீர்களா அது என்ன பிரார்த்தனை – என்றார். ஒருவர், நீங்கள் கேட்கிறீர்கள். அதனால் நாங்கள் சொல்லித்தான் தீர வேண்டும். ஆனால் எங்களுக்கு வெட்கமாக இருக்கிறது. ஏனெனில் எங்களது பிரார்த்தனை மிகவும் எளியது, சிறப்பானது அல்ல. “நீங்களும் மூவர், நாங்களும் மூவர் எங்களிடம் கருணை காட்டுங்கள்” என்பதே எங்களது பிரார்த்தனை. என்றார். ஆர்ச்பிஷப் கோபத்தில்கூட சிரித்துவிட்டார். இதுதான் உங்களது பிரார்த்தனையா, மிகவும் நன்றாக இருக்கிறது. என்றார். அந்த பாமர மக்கள் மூவரும், நாங்கள் கற்க தயாராக உள்ளோம். சரியான பிரார்த்தனையை, வழிபடும் முறையை நீங்கள் சொல்லிக் கொடுத்தால் நாங்கள் முயற்சி செய்கிறோம். ஆனால் அது பெரிதாக இருந்தால் நாங்கள் அதை மறந்து விடுவோம் அல்லது தவறு செய்து விடுவோம் அல்லது குழம்பி போய் விடுவோம். எங்களதுபிரார்த்தனை மிகவும் சிறியதாக இருப்பதால் நாங்கள் அதை மறப்பதில்லை, அதில் தவறு எதுவும் செய்வதில்லை. என்றனர். ஆர்ச்பிஷப், ரஷ்யாவின் மிகப் பழமையான சர்ச்சின் சம்பிரதாயமான பிரார்த்தனை முழுவதையும் படித்தார். அது மிகப் பெரியது. இந்த பாமர மக்கள் மூவரும், இது மிக நீளமானதாக இருக்கிறது. தயவுசெய்து மறுபடியும் சொல்லுங்கள் என்றனர். மூன்று தடவை சொன்ன பின்னும் அவர்கள் தயவுசெய்து மறுபடியும் ஒருமுறை மட்டும் சொல்லுங்கள், அப்போது எங்களால் நினைவு கொள்ள முடியும் என்றனர். ஆர்ச் பிஷப் இவ்ரகள் முட்டாள்கள் என எண்ணி மிகவும் மகிழ்ந்தார். இவர்களுக்கு ஒன்றும் தெரியாது, சர்ச்சின் பிரார்த்தனையை கூட முழுதாக சொல்ல இவர்களால் முடியவில்லை என்பதை எடுத்துக் கூறி மக்களை என்னால் எளிதாக ஏற்றுக் கொள்ள செய்து திசை திருப்பி விட முடியும். அதில் எந்த பிரச்னையும் இல்லை என நினைத்தார். அவர்கள் ஆர்ச்பிஷப்பின் காலைத் தொட்டு வணங்கி நன்றி கூறினர். அவர் இனிமேல் வர வேண்டிய தேவையே இல்லை என்றும், அவர் கூறி அனுப்பினால் போதும், தாங்கள் வந்து அவரை சந்திப்பதாகவும் அவர்கள் கூறினர். அவர் எதற்கு சிரமப்பட வேண்டும், எப்போது அவர் சந்திக்க விரும்பினாலும் செய்தி சொல்லி அனுப்பினால் போதும், நாங்கள் சர்ச்சுக்கு வந்து சேருகிறோம் என்று கூறினர். சந்தோஷத்தோடும், திருப்தியோடும் ஆர்ச்பிஷப் விடை பெற்றார். அவர் ஏரியின் நடுவில் சென்று கொண்டிருக்கும் போது மூன்றுபேரும் தண்ணீரின் மேல் ஓடி வந்தபடி, நில்லுங்கள், நாங்கள் பிரார்த்தனையை மறந்துவிட்டோம். மறுபடியும் ஒருமுறை சொல்லுங்கள் என்று கேட்டனர். ஆர்ச் பிஷப் அவர்கள் தண்ணீரின் மேல் ஓடி வந்ததையும், அவர்கள் பேசும்போது தண்ணீரின் மேல் நின்று கொண்டு அவர்கள் பேசிக் கொண்டிருப்பதையும் பார்த்தார். அவருக்கு சிறிதளவாவது புத்திசாலித்தனம் இருந்திருக்க வேண்டும். அவர், என்னை மன்னித்துவிடுங்கள். உங்களுடைய பிரார்த்தனைதான் சரியானது. நீங்கள் உங்களது பிரார்த்தனையையே தொடர்ந்து செய்யுங்கள். உங்களது பிரார்த்தனை சென்றடைந்து விட்டது. எனது பிரார்த்தனை அடைய வில்லை. நீங்கள்தான் உண்மையான புனிதர்கள். உங்களை சர்ச் புனிதர்களாக அங்கீகரித்துள்ளதா இல்லையா என்பது இங்கு ஒரு விஷயமே அல்ல. யார் உண்மையிலேயே புனிதர்கள் இல்லையோ அவர்களுக்குத்தான் அங்கீகாரம் தேவைப்படும். உங்களது இருப்பே அதை உறுதி செய்கிறது. உங்களது வாழ்வில் குறுக்கிட்டதற்காக என்னை மன்னித்து விடுங்கள். என்றார். இது லியோ டால்ஸ்டாயின் கதை. இது சாத்தியம்தான். இருதயசுத்தியோடு மனத் தெளிவோடு அமைதியாக செய்யும்போது நீங்களும் மூவர், நாங்களும் மூவர் எங்களிடம் கருணை காட்டுங்கள் என்று கூறுவதுகூட பிரார்த்தனையாக மாறும். அந்த மிகச் சிறந்த எதிர்பாராதது நிகழும். ஆனால் நீ அதை காப்பியடிக்க முடியாது. அதைப் போலவே செய்து பார்க்க முடியாது. அதுதான் பிரச்னை. 24 இருப்பின் புனிதம் கோமோரா மற்றும் சோடாம் நகரங்களை பற்றிய ஒரு அழகிய கதை ஹசிடீஸ் மக்களிடம் உண்டு. அதற்கு பழைய ஏற்பாட்டிலோ வேறு எந்த பழைமையானவற்றிலோ எந்த ஆதாரமும் கிடையாது. அதனால் நிச்சயமாக அது ஒரு ஹசிடீஸ் மக்களின் கண்டுபிடிப்பு, கற்பனை, ஒரு உருவாக்கம்தான். ஆனால் எனக்கு அந்த கதையை மிகவும் பிடிக்கும். அதை நான் உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். கடவுள் –  யூத மக்களின் கடவுள் மிகவும் கோபக்காரர். – ஒருநாள்  அவர் கோமோரா மற்றும் சோடாம் நகர மக்கள் மீது கோபம் கொண்டு அந்த நகரங்களை அழிக்க முடிவு செய்கிறார். அப்போது ஒரு ஹசிடீஸ் ஞானி கடவுளை அணுகி, சோடாம் நகரத்தில் ஒரு நூறு நல்லவர்களும் ஒரு ஆயிரம் கெட்டவர்களும் இருப்பதாக வைத்துக்கொண்டால் நீங்கள் அந்த நகரத்தை அழிக்கும்போது அந்த நூறு நல்லவர்களும் சேர்ந்து அழிந்து போவார்கள் அல்லவா, எனக் கேட்டார். கடவுள் யோசித்தார். நான் இப்படி சிந்திக்கவில்லை. சரி போகட்டும், நான் அழிக்காமல் விடுகிறேன், ஆனால் நீ எனக்கு நூறு நல்லவர்களை காட்ட வேண்டும். என்றார். ஞானி, பொறுங்கள். என்னால் நூறு பேர்களை காட்ட முடியாமல் போகலாம், ஆனால் பத்து நல்லவர்கள் மட்டும் இருந்தால் அந்த நகரத்தை அழிப்பது முறைதானா நீங்கள் அந்த நகரத்தை அழிக்கும்போது அந்த பத்துபேரும் சேர்ந்து அழிந்து போவார்களே என்று கேட்டார். கடவுள் நான் இதைப்பற்றி சிந்திக்க வேண்டும். சரி நூறோ பத்தோ எண்ணிக்கை முக்கியமல்ல. ஆனால் நீ எனக்கு பத்து நல்லவர்களை காட்ட வேண்டும். ஞானி, சிறிது பொறுங்கள். இன்னும் ஒரே ஒரு கேள்வி பாக்கியிருக்கிறது. ஒரே ஒரு நல்லவன் இருந்தால் நீங்கள் அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள், நூறாயிரம் மக்களின் கெட்டதனத்தை விட ஒரே ஒரு நல்லவனின் நல்லதன்மை மதிப்பு வாய்ந்தது அல்லவா, கேடு நினைப்பது ஒரு எதிர்மறையான குணம் அதற்கு மதிப்பு கிடையாது, ஆனால் நல்லதன்மைக்கு மதிப்பு உண்டல்லவா, நீங்கள் அதை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் இருக்கக்கூடாது. அந்த ஒரு நல்லவனை நீங்கள் ஒதுக்கி விட முடியாது என்றார். கடவுள், உன்னுடைய தர்க்கம் சரியானதுதான். ஆயிரமோ, நூறோ, ஒரே ஒருவனோ, நான் நல்லவர்கள் பக்கம்தான். ஆனால் நீ ஒரு நல்லவன் இருக்கிறான் என்பதை நிரூபித்தாக வேண்டும். என்றார். ஞானி, இதோ நானிருக்கிறேன், நான் வேறு எங்கும் போக வேண்டிய அவசியமில்லை. அதனால்தான் நான் எண்ணிக்கையை குறைத்துக் கொண்டே வந்தேன். என்னால் ஆயிரம் பேர்களையோ, நூறு பேர்களையோ கண்டு பிடிக்க முடியாமல் போகலாம். எப்படி அடையாளம் காண்பது. நான் நல்லவனான கணத்திலிருந்து யாரையும் நல்லவன்  கெட்டவன் எனப்பிரிப்பதுப் பார்ப்பதை நான் நிறுத்திவிட்டேன். என்னைப் பொறுத்தவரை எல்லோரும் நல்லவரே. நான் யாரிடமும் கெட்டதனத்தை பார்ப்பதில்லை. ஏனெனில் கெட்டதன்மை என்பது ஒரு நிழல் போன்றது. மேலும் அது ஒரு மனிதனின் உண்மை தன்மை ஆகாது. கெடுதல் உண்டாக்கும் செயல்களை அவன் செய்திருக்கலாம். ஆனால் அது அவனது இருப்பையே கெடுத்திருக்காது. ஒரு செயல், இரண்டு செயல், மூன்று செயல் ஏன் நூறு செயல் கூட கெட்டதை செய்திருக்கலாம், ஆனால் அவனது இருப்பு எப்போதும் தூய்மையானதாகவே இருக்கிறது. இருப்பு தனது செயல்களிலிருந்து வெளியே வர முடியும். அது தனது செயல்களை விட்டு விட முடியும். அது தனது கடந்த காலத்தை உதறி விட முடியும். அப்போது அந்த வினாடியிலிருந்து அந்த மனிதன் புனிதன் ஆகிறான். யாரும் அவனை தடுக்க முடியாது. நல்லவன் கெட்டவன் என்பதை எப்படி தீர்மானிக்க முடியும், தீர்மானிக்க வழியே இல்லை. அதனால்தான் நான் எண்ணிக்கையை குறைத்துக் கொண்டே வந்தேன். அந்த நகரங்களில் நல்லவர்களே இல்லை என்று அர்த்தமல்ல. உண்மையில் நான் இரண்டு நகரங்களிலும் இருந்திருக்கிறேன், நான் நல்லவர்களை மட்டுமே பார்த்திருக்கிறேன். என்றார். நீ நல்லவனாகும்போது, நீ தீர்மானிப்பதை விட்டு விடுகிறாய் மக்களை எடை போடுவதை விட்டு விடுகிறாய். ஏனெனில் எடை போடுவது செயல்கள் மூலம்தான். ஆனால் செயல் என்பது வெளி விஷயம்தான். நீர்குமிழ் மூலம் கடலை எடை போட முடியுமா, அது மடத்தனம். நீர்குமிழ் என்பது கடலின் மேல் பரப்பில் உருவாவது. செயல்கள் நீர்மேல் வரையும் கோலம் போன்றது, அதை நீ முடிக்கும் முன்னே அது அழிந்து விடும். இருப்பு செயல்களை கடந்தது. அது அழியாதது. நீ செய்வதை பொறுத்தது அல்ல அது. நீ யார் என்பதே கேள்வி. ஹசிடீஸ் ஞானி, நான் மக்களின் இருப்பை மட்டுமே பார்க்கிறேன். சில நேரங்களில் மிக அழகானவர்களாக, நல்லவர்களாக, புனிதர்களாக இருக்கும் மக்கள் செய்யும் செயல் கெடுதலாக தோன்றுகிறது. மன்னிக்க முடியாத விஷயமாக ஆகிறது. ஆனால் அந்த செயல் மூலம் அவர்களை மதிப்பிடமுடியாதல்லவா, அதனால்தான் நான் எண்ணிக்கையை குறைத்துக் கொண்டே வந்தேன், என்றார். இதோ நானிருக்கிறேன். நான் இரண்டு நகரங்களிலும் இருக்கிறேன். வருடத்தில் பாதி நாள் அந்த நகரத்திலும் மீதி நாள் இந்த நகரத்திலும் இருப்பேன். என்னையும் சேர்த்து நீங்கள் அழித்து விடப் போகிறீர்களா எனக் கேட்டார். இதன்பின் கடவுள் அந்த இரண்டு நகரங்களையும் அழிக்கும் எண்ணத்தை கைவிட்டு விட்டதாக ஹசிடீஸ் கதை கூறுகிறது. 25 ஞானத்தின் பக்குவம் ஒரு நாள் இரவு நான் ஒரு சூஃபி கதையை படித்துக் கொண்டிருந்தேன். எனக்கு அது மிகவும் பிடித்தது. நான் அதை அனுபவித்தேன். நான் அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஒரு சூஃபி ஞானி கடவுளை தேடி நாடுநாடாக அலைந்து திரிந்து கொண்டிருந்தார். அவர் பல குருமார்களை சந்தித்தார். ஆனால் எதுவும் அவருக்கு திருப்தியளிக்க வில்லை. இதயத்தை அர்ப்பணிக்க கூடிய இடத்தை அவரால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. ஏமாற்றத்தோடும் நிராசையோடும் அவர் வெளியே குருவை தேடுவதை நிறுத்தி விட்டு உள் குரலை கேட்பது என்று முடிவு செய்து, தனித்து இருப்பதற்காக காட்டுக்குச் சென்றார். அங்கு அவர் ஒரு மிக அழகான தேக்கு மரக் கூட்டத்தை கண்டார். பழமையான வயதான பல தேக்கு மரங்கள் ஒன்று கூடி ஒரு கூடாரம் போல உருவாகியிருந்தன. அதன் கிளைகள் ஒன்றுடன் ஒன்று பின்னி பிணைந்து இயற்கையின் மழை, காற்று, வெயில் ஆகிய எல்லாவற்றிலிருந்தும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் உருவாகியிருந்தது. அருகில் ஒரு ஏரி இருந்தது. அந்த கூடாரம் மிகவும் அமைதியானதாக, காட்டின் நடுவில் யாரும் வராத இடத்தில் இருந்தது. அந்த சூஃபி அதனுள் சென்றார். அவருக்கு அந்த இடம் மிகவும் பிடித்தது. அதற்கே உரிதான அழகுடன் அந்த இடம் இருந்தது. அவர் அங்கே உட்கார்ந்து தியானம் செய்ய ஆரம்பித்தார். வாரத்திற்கு ஒருமுறை அவர் அந்த இடத்தை விட்டு வெளியே வந்து பக்கத்து கிராமத்துக்குப் போய் கொஞ்சம் உணவு வாங்கி சாப்பிட்டு விட்டு திரும்பவும் வந்து உட்கார்ந்து தியானம் செய்ய ஆரம்பித்து விடுவார். சூஃபிக்கள் கடவுளின் பெயரை அல்லா என்று திரும்ப திரும்ப உச்சரிப்பர். முகம்மதியர்களின் மந்திரமான இதன் பொருள், `கடவுள் என்று யாரும் இல்லை.  ஆனால் கடவுள் உண்டு.` ஆனால் சூஃபிகள் இதை  அல்லா என்ற ஒரே வார்த்தைக்குள் சுருக்கி விட்டனர். இதற்கு அவர்கள் கூறும் காரணம் திடீரென ஒருநாள் மந்திரத்தை உச்சரித்துக் கொண்டிருக்கும் போதே இறந்து விடக்கூடும். அப்படி உச்சரித்துக் கொண்டிருக்கும்போதே இறந்து விட்டால் பாதியில் கடவுள் இல்லை என்று கூறிக் கொண்டிருக்கும்போது இறக்க நேரிட்டால் நீ ஒரு நாத்திகனாக இறந்து விடுவாய். கடைசி நிமிடத்தில் எல்லாமும் குழம்பி விடும். எதிர்மறையாளனாகி விடுவாய். அதனால் அது ஆபத்தானது என்பதாகும். அதனால் அவர்கள் இந்த முகம்மதிய மந்திரத்தை அதன் முழுவதுமாக சொல்வதில்லை. வெறுமனே அல்லா அல்லா எனக் கூறுவதோடு சரி. அல்லா எனக் கூறிக் கொண்டே இருந்தால் கடைசி நிமிடத்தில் கூட அவர்கள் இதயம் நிரம்பி, அவர்கள் மூச்சுக் காற்றுக்கூட அல்லா எனக் கூறும், கடவுளின் நினைவாகவே இறப்பர். இந்த நிலையைத்தான் அவர்கள் ஜீக்குரா என்று அழைக்கின்றனர். இந்த சூஃபி தன்னுடைய மந்திரமான அல்லா, அல்லா என்பதை மாதக்கணக்கில் உச்சரித்துக் கொண்டேயிருந்தார். அவர் மிகவும் அமைதியாகவும், சாந்தமானவராகவும், தன்மையானவராகவும், மாறுவதை அவர் உணர ஆரம்பித்தார். அந்த கூடாரத்தை சுற்றி மிகவும் ஆழ்ந்த மௌனம் இருந்தது. அது மிகவும் அமைதியானதாக இருந்தது. அவர் தனக்குள்ளும் அந்த மௌனத்தை உணர துவங்கினார். அவரது இருப்பின்னுள்ளும் அந்த அமைதி பரவியது. ஆனால் அவர் மகிழ்ச்சியாக இல்லை. அது போதாது.  முக்தி நிலை, ஞானமடைதல் அதற்கு இன்னும் வெகு தூரம் போக வேண்டும். வருடங்கள் கடந்தன. அந்த கூடாரம் ஒரு தூய்மையான இடமாக மாறி விட்டது. தேக்கு மரங்கள் மிகவும் வளமடைந்தன. அவை புதிதாக நிறைய கிளைகள் விட்டு, இலைகள் விட்டு செழிப்படைந்தன. அந்த கூடாரமே அழகால் நிரம்பியிருந்தது. – ஆனால் அந்த சூஃபியின் இதயம் மிகவும் வருத்தத்தில் இருந்தது. ஆனால் அவர் காத்துக் கொண்டேயிருந்தார். அவர் அவரால் செய்யக்கூடிய எல்லாவற்றையும் செய்து விட்டார். அவர் தியானமும் பிரார்த்தனையும் செய்து கொண்டேயிருந்தார். பதினெட்டு வருடங்கள்  கடந்துவிட்டன. ஆனால் அவர் முக்தி நிலை பெறவேயில்லை. அவர் ஆழ்ந்த மௌனத்திலும் அமைதியிலும் இருந்தார். ஆனாலும் அவர் ஞான நிலை கிட்ட வில்லை. இருந்தது கரைந்து விட்டது, ஆனால் எதுவும் அவருக்கு நிகழவில்லை. இருந்தது போய் வெறுமையாகி விட்டது, வெறுமை ஒரு விதமான அமைதிதான், ஆனாலும் வெறுமை வெறுமையாகவே இருந்தது. வேறு எதுவும் செய்ய வழியில்லை. ஒரு நாள் நடு இரவில் திடீரென அவருக்கு ஒரு ஐயம் எழுந்தது. ஒரு சந்தேகம் தோன்றியது. ஏனெனில் பதினெட்டு வருடங்கள் என்பது மிகவும் அதிகமானது, அவர் மிகவும் முயற்சி செய்து பார்த்து விட்டார், அவர் தனது முழு மனதோடு அதில் ஈடு பட்டு இருந்தார், அவர் எதையும் பிடித்து வைக்கவில்லை, அப்படியும் அது நடக்கவில்லை என்றால் அது எப்போதுமே நடக்காது போல தோன்றுகிறது. ஒரு சந்தேகம் எழுந்தது, அவர் சிந்தித்து பார்க்க ஆரம்பித்தார். இந்த தேக்கு மரக் கூட்டம் எப்படி மழையையும், வெயிலையும் உள்ளே அனுமதிப்பதில்லையோ, அது போல எனது பிரார்த்தனையையும் வெளியே போக அனுமதிப்பதில்லையோ?  இதன் கிளைகள் மிகவும் அடர்த்தியாக உள்ளதால் எனது பிரார்த்தனைகள் உள்ளேயே நின்று விடுகின்றதோ, இறைவனை போய் சேர வில்லையோ? எப்படி சூரிய ஒளி இந்த கூடாரத்துக்குள் ஊடுருவ முடிந்ததில்லையோ, அது போல எனது பிரார்த்தனை இறைவனைப் போய் சேர வில்லையோ?  இந்த கூடாரம் ஒரு டிராகுலா போன்றதோ, ஒரு ஒட்டுண்ணியோ என நினைத்தார். பயந்து போய் நட்ட நடு இரவில் இருளில் உடனே அந்த கூடாரத்தை விட்டு தப்பியோடி விட்டார். ஆனால் அதே சமயத்தில் அந்த அடர்ந்த மரக் கூட்டத்திலிருந்து வெகு தொலைவில் உள்ள சாலையில் ஒரு பிச்சைக்காரன் ஒரு நகரத்திலிருந்து இன்னொரு நகரத்திற்க்கு போய் கொண்டிருந்தான். திடீரென அவனுக்கு காட்டிற்க்குள் போக வேண்டுமென்ற தீவிர வேட்கை எங்கிருந்தோ தோன்றியது. அவன் அந்த அவாவை அலட்சியம் செய்தான். காலைக்குள் அடுத்த ஊருக்குப் போய் சேர்ந்தாக வேண்டும், இன்னும் பாதி தூரம் கூட போய் சேர வில்லை. எதற்காக காட்டிற்க்குள் போக வேண்டும்?  அது ஆபத்தானது, காட்டிற்க்குள் விலங்குகள் இருக்கும், அவனுக்கு அங்கென்ன வேலை என நினைத்தான். ஆனால் ஏதோஒன்று அவனை இழுத்தது. அவனால் எதுவும் செய்ய முடியவில்லை. அவன் வகையற்று போனான். அவன் பைத்தியம் பிடித்தாற்போல காட்டிற்க்குள் ஓடலானான். நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என அவன் நினைத்தான். ஆனால் அவனது உடல் அவனது கட்டுப்பாட்டில் இல்லாமல் அதன் போக்கில் இயங்கியது. அவன் தப்பியோட நினைத்தான். காட்டுக்குள் செல்வது மிகவும் ஆபத்தானது, அவன் பயந்தான், நடுங்கினான் – ஆனால் பயனில்லை. ஆனால் அவன் அந்த மரக்கூடாரத்தை நெருங்கியவுடன் அவனுக்கு புரிந்தது. அந்த மரக்கூடாரத்திலிருந்து ஒரு மெல்லிய குரல் வந்தது. என்னிடம் வா. அது புற செவிகளுக்கு கேட்காது, ஆனால் அது அவனுக்கு கேட்டது. அந்த கூடாரம் நம்பவே முடியாத அளவு ஜொலித்தது. அந்த முழு கானகமும் இருட்டில் இருக்க, இந்த கூடாரம் மட்டும் தனியாக நீல வண்ணத்தில் மின்னியது. அது ஏதோ வேறு ஒரு உலகம் போலவும், அந்த மரத்திற்கு அடியில் ஏதோ ஒரு புத்தர் அமர்ந்திருப்பது போலவும், அதன் அடியில் யாரோ ஒருவர் ஞானமடைந்தது போலவும், அந்த மரத்தை சுற்றி ஞானஒளியும், முக்தி நிலையின் அமைதியும் பரவசமும் பரவி படர்ந்திருந்தது. அவன் அந்த மரத்தைச் சுற்றி ஒரு அதிர்வலை இருந்ததை உணர்ந்தான். இப்போது அந்த பயம் போய் விட்டது. அவன் அந்த மரக்கூடாரத்தினுள் நுழைந்தான். நுழைந்த அந்த கணமே அந்த நிலைமாற்றமடைந்தான். ஒரு புதிய மனிதனாக பரிமணித்தான். அவனால் அவனை நம்பவே முடிய வில்லை. அவன் ஒரு சாதாரண மனிதன், நல்லவனுமல்ல, கெட்டவனுமல்ல, ஒரு சராசரியான மனிதன். அன்றாட வாழ்க்கையின் சிக்கல்களில், குழப்பங்களில், ஆழ்ந்து கிடப்பவன். அவன் ஒரு ஆத்திகனுமல்ல, நாத்திகனுமல்ல. உண்மையில் அவன் கடவுளைப்பற்றி எனக் குறிப்பாக எதையும் நினைத்தது கிடையாது. மதத்தைப்பற்றி எந்த கொள்கையும் கிடையாது. அவன் அதைப் பற்றி கவலைப் பட்டதே கிடையாது. வாழ்க்கையின் பல பிரச்னைகளோடு அவன் போராடிக் கொண்டிருந்தான்…..ஆனால் திடீரென அந்த மரக்கூடாரத்தில் நுழைந்தவுடன் அவன் ஒரு சுழலில் சிக்குண்டான். அவன் ஒரு மரத்தடியில் அமர்ந்தான், அவனால் நம்பவே முடியவில்லை. – அவன் அந்த விதமாக அது வரை அமர்ந்ததே இல்லை. அவன் ஒரு சூஃபி ஞானியை போல அமர்ந்தான். அவனுள் ஒரு லயம் பரவியது, அவன் இருப்பினுள் ஒரு நாதம் எழுந்தது. அவனது உள்ளிருந்து ஒரு ஓசை ஒலித்தது. என்ன நடக்கிறதென்றே அவனுக்கு புரிய வில்லை. அது ஒரு அதிசயம். இன்னவென்று அவன் அறிந்திராத ஒரு சத்தம் அவனுக்குள்ளிருந்து வெடித்துக் கிளம்பியது. மெதுமெதுவாக, அந்த பரபரப்பு அடங்கியவுடன், எல்லாமும் அமைதி பட்டவுடன் அவனால் அந்த சத்தத்தை கேட்க முடிந்தது, அந்த ஓசை தெளிவடைந்தது, வடிவற்றது வடிவமடைந்தது, அப்போது அது என்னவென்று அவனுக்கு தெரிந்தது. அது வேறு எதுமல்ல – அல்லா, அல்லா – இப்போது  அவனையும் அறியாது அவனே அதை சொல்லத் துவங்கினான். அவன் அதை சொல்ல வில்லை. அவன் செய்பவனல்ல. அது நிகழ்ந்தது. அவன் ஒரு சாட்சியாளனாக இருந்து அதைப் பார்த்தான். ஏதோ ஒரு பிரபஞ்ச கடலின் கரையில் அவன் இருப்பதைப் போலவும், பெரும் அலை வந்து அவன் மீது நீரை வாரி இறைப்பதை போலவும் இருந்தது. – அல்லா, அல்லா, அல்லா – கடலின் பிரமாண்டமான அலை கரையில் இருந்த அவனை முழுவதுமாக நனைத்து சென்றது. நிலைமாற்றமடைந்த அவன் பல்லாயிரம் தடவை அன்றைய இரவில் இறந்து பிறந்தான். பதினெட்டு வருடங்கள் அந்த சாதகன் அங்கே இருந்தான், எதுவும் நடக்கவில்லை. பதினெட்டு மணி நேரங்களில் அந்த பிச்சைக்காரன் புத்தனாகி விட்டான். அவன் எதுவும் செய்யவில்லை. எனக்கு இந்த கதை மிகவும் பிடித்தது. லா வேட்ஸூ இந்த கதையை மிகவும் விரும்பி இருப்பார். அவரால் இந்த கதையை புரிந்து கொள்ள முடியும். இதன் ரகசியம் என்ன? இது இயல்புக்கு முரணானதாக தெரிகிறது. பதினட்டு வருடங்கள் முயற்சி செய்தவனுக்கு எதுவும் நிகழ வில்லை, பிரார்த்தனையே செய்யாதவனுக்கு பதினட்டு மணி நேரங்களில் எல்லாமும் கிடைத்து விட்டது. இந்த கதையின் பொருள் என்ன? லா வேட்ஸூ எப்போதும் ஒரு வார்த்தை கூறுவார். அது வூ வீ. அதன் பொருள் செயலற்ற செயல். செயலற்று செயல் செய்தல். செயல் செய்தலும் செயலற்று போதலும் ஒருங்கிணைத்து இருப்பது. இதுதான் ரகசியம். அந்த சாதகன் அதிகப்படியாக செய்தான். அவன் தன்னை சமமாக நிலை நிறுத்திக் கொள்ளவில்லை. அவன் அதிகமாக செய்தது செய்யாதது போன்றதுதான். வாழ்க்கை ஒரு சமன்பாடுதான். அவன் சமப்படுத்திக் கொள்ள வில்லை. அடைவதற்கான பேராசையினால், லட்சியத்தினால், அவன் எல்லைக்கே சென்று விட்டான். அவன் மிகவும் ஈடுபட்டு விட்டான். எப்போதெல்லாம் நீ மிகவும் செயல்படுபவனாக இருக்கிறாயோ, எப்போதெல்லாம் செயல்படுபவனாக மட்டுமாக இருக்கிறாயோ, அப்போது இந்த உலகின் விஷயங்கள் அனைத்தும் ஒத்துவரும் – ஆனால் அக உலகின் விஷயங்கள் உனக்கு நிகழாது போய் விடும். ஏனெனில் நீ மிகவும் பதற்றத்தோடும், தவிப்போடும் இருப்பதால் ஏற்றுக் கொள்வதற்க்குரிய நிலையில் நீ இல்லை. செயலுக்கும் செயலற்ற நிலைக்கும் இடையில் சமனோடு, நேர்மறைக்கும் எதிர்மறைக்கும் இடையில் சமனோடு, எல்லா இரட்டை தன்மைகளுக்கும் இடையில் சமமாக யார் இருக்கிறார்களோ அவர்களால்தான் பெற்றுக் கொள்ள முடியும். 26 அறிவுரைக்கான தகுதி ஒரு பெண் தனது குழந்தையினால் மிகவும் தொந்தரவுக்குள்ளானாள். அவளுக்கு ஒரே ஒரு குழந்தை. அவளது கணவன் இறந்துவிட்டான். அவள் பெரும் பணக்காரிதான். ஆனால் அவளுக்கு வாழ்வில் மிகவும் சலிப்பாகிவிட்டது. அவள் தனது குழந்தைக்காகத்தான் வாழ்ந்தாள். சில சந்தர்ப்பங்களில் குழந்தைகள் மிகவும் தொந்தரவாகி விடுவர். அந்த பையன் இனிப்பைத் தவிர வேறு எதுவும் சாப்பிடுவதில்லை. டாக்டர்கள் இது மிகவும் தவறான பழக்கம். அவனது உடல்நிலை கெட்டுவிடும் எனக் கூறி விட்டனர். ஆனால் அந்த குழந்தை கேட்பதேயில்லை. அவள் ஒரு சூஃபி ஞானியிடம் எப்போதும் செல்வாள். அதனால் அவள், இவன் நான் சொல்வதை கேட்பதேயில்லை. அவர் அவருக்கு அருகில் வரும் அனைத்து மக்களையும் ஈர்க்கும் சக்தியுடையவராக இருக்கிறார். அதனால் இவன் அவர் சொன்னால் கேட்கக் கூடும். என்று நினைத்தாள். அதனால் அவள் அந்த குழந்தையை அந்த ஞானியிடம் கூட்டி சென்று, இவன் இனிப்பைத் தவிர வேறு எதையும் சாப்பிடுவதேயில்லை. நானும் ஒவ்வொரு நாளும் சொல்லிக் கொண்டே இருக்கிறேன்.  கேட்க மாட்டேன் என்கிறான். அதற்கு பதிலாக பட்டினி கூட கிடக்கிறான். டாக்டர்கள் உடல்நிலை கெட்டுவிடும் என்கிறார்கள். அவன் யார் சொன்னாலும் கேட்க மாட்டேன் என்கிறான். எனது கணவர் இறந்துவிட்டார். இவன் எனது ஒரே குழந்தை இவனுக்காகத்தான் இருக்கிறேன். என்னால் இவன் பசியாக இருப்பதை பார்க்க முடியாது, அதனால் இவனுக்கு இனிப்பு கொடுக்க வேண்டி வருகிறது. இனிப்பு இவனுக்கு விஷம் என்று தெரிந்தே கொடுக்க வேண்டி வருகிறது. சர்க்கரை வெள்ளை விஷம். அதனால் நான் இவனை இங்கே கூட்டி வந்தேன். இவனுக்கு ஏதாவது அறிவுரை கூறுங்கள். நீங்கள் மனிதரில் தெய்வம். நீங்கள் கூறும் வார்த்தைகளுக்கு பலன் இருக்கக் கூடும். அந்த ஞானி குழந்தையை பார்த்தார். அவர், என்னால் இந்த குழந்தைக்கு இப்போது அறிவுரை கூற முடியாது. ஏனெனில் இப்போது நானே இனிப்பை மிகவும் விரும்பி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். இன்னும் இரண்டு வாரங்கள் கழித்து வாருங்கள். அதற்குள் இந்த இரண்டு வாரங்களும் நான் இனிப்பு சாப்பிடாமல் இருக்கிறேன். இதை என்னால் செய்ய முடிந்தால் பிறகு என்னால் அறிவுரை கூற முடியும். இல்லாவிடில் இந்த அறிவுரை கூற சரியான ஆள் நானல்ல. என்றார். அந்த பெண்மணியால் நம்பவே முடிய வில்லை. இது இன்னும் அபாயகரமானது. ஆனால் அந்த குழந்தை மிகவும் ஈர்ப்படைந்தான். அவன் அந்த ஞானியின் காலில் விழுந்தான். அவன், என் அம்மா பல பேரிடம் என்னை அழைத்து சென்றிருக்கிறாள். அத்தனை பேரும் உடனே எனக்கு அறிவுரை கூறினார். ஆனால் நேர்மையான முதல் ஆள் நீங்கள்தான். இரண்டு வாரங்கள் கழித்து வருகிறேன். நீங்கள் என்ன சொன்னாலும் செய்கிறேன். நான் உங்களை நம்புகிறேன். என்று கூறினான். குழந்தையின் முன் தனது தவறை ஒத்துக் கொண்ட ஒரு வளர்ந்த மனிதன், நானே இப்போது இனிப்பு விரும்பி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். அதனால் இப்போது அறிவுரை கூறும் இடத்தில் நான் இல்லை. அதனால் இரண்டு வாரங்களில் இந்த அறிவுரையை நானே கடைபிடித்து பார்க்கிறேன். நான் தோற்றுவிட்டால், என்னை மன்னித்துவிடு. என்னால் அறிவுரை கூற முடியாது. நான் வென்றுவிட்டால் அப்போது அறிவுரை கூறுவேன். ஒரு வயதான மனிதன் நானே வென்றுவிடும்போது உனக்கு இள வயது, அதிக ஆற்றலுடன், அதிக புத்திசாலித்தனமாக இருக்கிறாய். உன்னாலும் வெற்றியடைய முடியும். அதனால் ஒரு முயற்சி செய்து பார் என்று கூற முடியும். என்றார். அந்த தாய் மிகவும் அதிர்ச்சியடைந்தாள். அந்த ஞானி கூறிய இரண்டு வாரங்களில் அவரால் அதை கடைபிடிக்க முடியாவிட்டால் எல்லாமும் முடிந்தது. பின் அந்த குழந்தையை கூட்டிச் செல்ல வேறு எந்த இடமும் இல்லை. இரண்டு வாரங்கள் சென்றபின் அவர்கள் திரும்பி வந்தனர். ஞானி அந்த குழந்தையிடம், மகனே, அது கடினம்தான். ஆனால் இயலாதது அல்ல. இந்த இரண்டு வாரங்களும் இனிப்பு சாப்பிடாமல் என்னால் சமாளிக்க முடிந்தது. நான் இனி என் வாழ்வு முழுவதும் இனிப்பு சாப்பிடப் போவதேயில்லை என உனக்கு உறுதியளிக்கிறேன். அப்போது உனக்கு அறிவுரை கூற தகுதி இருக்கிறது என நீ நினைக்கிறாயா – எனக்கு நீ  அனுமதியளித்தால் என்னால் உனக்கு அறிவுரை கூற முடியும். எனக் கேட்டார். அந்த பையன், எதுவும் கூற வேண்டிய தேவையில்லை. எனக்கு புரிந்துவிட்டது. உங்களுக்கு எனது நன்றிகள். உங்களை போன்ற ஒருவர் எனக்கு அறிவுரை கூறுவதற்காக தனது வாழ்நாள் பூராவும் இனிப்பு சாப்பிடாமல் இருப்பது- தானே அப்படி இருப்பது – நம்பிக்கையுணர்வு வைக்க தகுதியானதே. நான் உங்கள் மேல் நம்பிக்கையுணர்வு கொண்டிருக்கிறேன். இந்த வினாடியிலிருந்து இனிமேல் நானும் இனிப்பு சாப்பிடப் போவதில்லை என உங்களுக்கு உறுதியளிக்கிறேன் என்றான். 27 பந்தமின்றி இருத்தல் ஒரு நாட்டின் ராஜா ஒவ்வொரு நாள் இரவும் நகர்வலம் வருவான். அப்போது அவன் தினமும் ஒரு இளைஞன் மரத்தடியில் அசைவின்றி சிலைபோல அமர்ந்திருப்பதை போல பார்ப்பான். அவனுக்கு அமைதியாக அந்த இளைஞன் அமர்ந்திருப்பதை பார்க்க மிகவும் ஆச்சரியமாக இருக்கும். அவனால் தனது ஆர்வத்தை கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. அதனால் ஒருநாள் தனது குதிரையை நிறுத்தி இறங்கி, “இளைஞனே, உனது தியானத்தைக் கலைத்ததற்காக என்னை மன்னித்துக் கொள்.” என்றான். அந்த இளைஞன் தனது கண்களை திறந்து, இங்கே எந்த மன்னிப்புக்கும் இடமே இல்லை, நான் தியானம் செய்யவில்லை, இங்கே தியானம்தான் இருக்கிறது – யாரும் அதை தொந்தரவு செய்ய முடியாது. ஆனால் உனது ஆர்வம் எதுவோ அதை பூர்த்தி செய்துகொள். என்றான். அரசன், “நீங்கள் எனது அரண்மனைக்கு வர வேண்டும். நான் உங்களை கவனித்துக் கொள்வேன். இந்த மரத்தடியில் உட்கார்ந்து கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்களதுதவத்தினாலும், உங்களது பொலிவினாலும், அமைதியினாலும் நான் ஈர்க்கப்பட்டு விட்டேன்.அமைதியாக இந்த மரத்தடியில் நீங்கள் அமர்ந்திருப்பதை பார்த்தால் ஒரு புத்தரை பார்ப்பது போல இருக்கிறது. நான்தான் இந்த நாட்டின் அரசன், நான் உங்களை எனது அரண்மனைக்கு அழைக்கிறேன்.”  என்றான். இப்படித்தான் காட்டுமிராண்டிதனமான மனம் வேலை செய்கிறது. அரசன் அந்த இளைஞனை தனது அரண்மனைக்கு வருமாறு அழைக்கிறான் – ஆனால் அவனது ஆழ் மனதில் இவர் தனது அழைப்பை ஏற்றுக் கொள்ளக் கூடாதென தோன்றுகிறது. ஏனெனில் அப்போது அவர் அரண்மனையையும் ஆடம்பரத்தையும் விரும்புகிறார் என ஆகி விடுமென பயப்படுகிறான். ஆனால் அந்த இளைஞன் எழுந்து நின்று, “போகலாம்” எனக் கூறுகிறான். இப்போது உடனடியாக அந்த சூழ்நிலையே மாறுகிறது. அரசனின் மனம், “நான் இப்போது என்ன செய்வது?  அரசனின் விருந்தாளியாக இருப்பதற்கு, அரண்மனையில்  இருக்கும் சுகங்களைஅனுபவிப்பதற்கு இவர் ஆர்வமாக இருப்பது போல தோன்றுகிறதே, இவர் உண்மையான துறவியேஅல்ல.” என நினைக்கிறது. எந்த அளவு ஒருவர் தன்னை துன்புறுத்திக் கொள்கிறாரோ அந்த அளவு அவர் ஒரு துறவி என்பது பழமையான ஒரு கருத்து. வசதியின்றி இருப்பது மதம். நோய், பசி, என தன்னைத்தானே துன்புறுத்திக் கொள்ள ஆயிரம் வழிகள்…….. அப்போது ஒரு சிறப்பான துறவி. அரசனின் மனதில் இந்த இளைஞன் தனது துறவிதன்மையிலிருந்து கீழிறங்கி விட்டார். ஆனால் இப்போது ஒன்றும் செய்ய முடியாது. தனது வார்த்தையிலிருந்து மாற முடியாது. ஆனால் இந்த இளைஞன் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் எதுவும் பேசவில்லை. அரசன் அரண்மனையின் சிறப்பான இடத்தை கொடுத்து நல்ல  வேலையாட்களைஅமர்த்தி இளைஞனை கவனித்துக்கொள்ள இளம்பெண்களை ஏற்பாடு செய்தான். துறவி இது ஒவ்வொன்றையும் ஏற்றுக் கொள்ள கொள்ள அரசனின் மனதில் தனது துறவிதன்மையிலிருந்து கீழிறங்கி கொண்டே வந்தான். என்ன வகையான துறவி இவர்?  அழகான மிகப் பெரிய படுக்கையை ஏற்றுக் கொண்டார். அரண்மனையின் சிறப்பான உணவு வகைகளை உண்டார். அரசன், “கடவுளே, மடையன் நான். இவன் என்னை ஏமாற்றிவிட்டான். இவன் வலை விரித்து பிடித்துவிட்டான். நான் ஒவ்வொரு நாள் இரவும் போகும் வழி அறிந்து அந்த இடத்தில் ஒரு புத்தரைப் போல அமர்ந்து என்னை ஏமாற்றும் வகை அறிந்து என்னை வீழ்த்தியிருக்கிறான். நானும் ஏமாந்து விட்டேன். இப்போது இவனை மெல்லவும் முடியாது, துப்பவும் முடியாது. அரண்மனைக்குள் வந்துவிட்டான். மிகவும் ஏமாற்றுக்காரன் இவன்.” என்று நினைத்தான். ஆனால் இப்படிப்பட்ட மனநிலையோடு எவ்வளவு நாள் தாக்கு பிடிக்கமுடியும்? ஆறு மாதம் கழித்து ஒருநாள் அதிகாலையில் தோட்டத்தில் உலாவியபடி பேசிக் கொண்டிருக்கையில், அரசன், ஒரு விஷயம் உங்களிடம் கேட்க வேண்டும். அது என்னை துன்புறுத்திக் கொண்டிருக்கிறது. என்னால் அதிலிருந்து விடுபட முடியவில்லை. அதனால் ஆறு மாதங்களாக சரியாக தூங்கக் கூட முடியவில்லை. என்றான். இளைஞன், நீ எதை வேண்டுமானாலும் கேட்கலாம். என்று கூறினான். நான் இப்படி உங்களிடம் கேட்கக்கூடாது. ஆனாலும் உங்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று எனக்கு தெரிய வேண்டும். நீங்களும் அரண்மனையில்தான் இருக்கிறீர்கள், எல்லா சுகங்களையும் அனுபவிக்கிறீர்கள், உங்களுக்கும் எனக்கும் உள்ள வேறுபாடு என்ன? என்றாவது ஒருநாள் இந்த கேள்வி வரும் என்று எனக்குத் தெரியும். உண்மையில் நான் இங்கே வருவதற்காக மரத்தடியில் எழுந்து நின்றபோதே அது உன்னுள் எழுந்து விட்டது. நீ தைரியசாலி அல்ல. நீ இந்த கேள்வியை அப்போதே கேட்டிருக்க வேண்டும். ஆறு மாதங்கள் தேவையின்றி உனது தூக்கத்தை கெடுத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை, ஆறு மாதங்களை வீணடித்திருத்த வேண்டியதில்லை. நான் உனது கேள்விக்கு பதிலை இங்கு சொல்ல போவதில்லை. நீ என்னுடன் உனது எல்லையை தாண்டி வர வேண்டும். என்றான் இளைஞன். அந்த இடம் ஒன்றும் அதிக தூரம் இல்லை. சில மைல் தூரத்தில் உள்ள நதிகரைதான் அரசனின் எல்லை. அரசன், அங்கே போக வேண்டிய தேவை என்ன? நீங்கள் எனக்கு இங்கேயே பதில் கூறுங்கள்.என்றார். இளைஞன், இல்லை, அவசியம் இருக்கிறது. என்றார். இருவரும் நதியை கடந்தனர். கரையை கடந்தவுடன் இளைஞன் நான் தொடர்ந்து போகப் போகிறேன். என்னுடன் வர நீங்கள் தயாரா இதுதான் என் பதில் என்றார். அரசன், “என்னால் எப்படி வர முடியும்?  என்னுடைய அரண்மனை, என்னுடைய அரசாங்கம், என்னுடைய மனைவி, என்னுடைய குழந்தைகள்……. ஆயிரக்கணக்கான கவலைகளும் பிரச்னைகளும் எனக்கு உள்ளன. என்னால் எப்படி உங்களோடு வர முடியும்?” என்றான். இளைஞன், வித்தியாசத்தை பார்த்தாயா, நான் போகிறேன். எனக்கு அரண்மனை, குழந்தைகள், மனைவி, பிரச்னைகள் என எதுவும் இல்லை. நான் அரண்மனையில் எவ்வளவு மகிழ்வோடு இருந்தேனோ அதே மகிழ்வோடுமரத்தடியிலும் இருப்பேன் – இம்மியளவும் கூடவும் குறைவும் இல்லாமல். நான் காட்டில்இருந்தாலும் சரி, அரண்மனையில் இருந்தாலும் சரி எனது விழிப்புணர்வு அதேதான். என்றார். தான் இவ்வளவு மோசமாக நினைத்ததை எண்ணி அரசன் மிக வருந்தினான். அவன் இளைஞனின் காலில் விழுந்து, இப்படி நினைத்ததற்காக  என்னை மன்னித்து விடுங்கள். என்னை நினைத்தால் எனக்கே கேவலமாக இருக்கிறது. என்றான். இளைஞன், அப்படி நினைக்காதே. நீ மன்னிப்பு கேட்டு கண்ணீர் விடுவதால் திரும்பி வருவதற்கு எனக்கு எந்தவிதமான தயக்கமும் இல்லை. ஆனால் நீ திரும்பவும் கடவுளே, என்னை இவன் திரும்பவும் ஏமாற்றிவிட்டானோ என்று நினைக்க ஆரம்பித்துவிடுவாய். நான் திரும்பவும் வருவதில் எனக்கு எந்த வித கஷ்டமும் இல்லை. ஆனால் உன் மீதுள்ள கருணையால் நான் வரப் போவதில்லை. என்னைபோகவிடு. இந்த முழு உலகமும் பரந்து விரிந்திருக்கிறது, எனக்கு எதுவும் பெரிதாகதேவையில்லை. ஒரு மரநிழல் மட்டுமே போதுமானது. எதுவாக இருந்தாலும் சரியே. என்றார். ஆனால் அரசன், இல்லை, இல்லை. நீங்கள் வராவிட்டால் நான் மிகவும் கவலைப்படுவேன், காயப்பட்டுப்போவேன், நான் என்ன செய்துவிட்டேன் என வருத்தப்பட்டுப் போவேன். என்று வலியுறுத்திச் சொன்னான். அந்த மனிதர், நீ இப்போது என்னை தர்மசங்கடத்தில் ஆழ்த்திவிட்டாய். நான் வருவதில் எனக்கு எந்த கஷ்டமும் இல்லை என நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். ஆனால் நினைவில் வைத்துக் கொள், என்ன வித்தியாசம் என திரும்பவும் உனக்கு தோன்ற ஆரம்பித்துவிடும், என்றார். 28 புத்தரின் புரிதல் நான் சொல்லும் இதை தியானம் செய்து பாருங்கள். சோசுவை, ஒரு துறவி  “ஒரு நாய்க்கு புத்தத்தன்மை இருக்கிறதா இல்லையா?” என்று கேட்டார். சோசு, “இருக்கிறது”. என பதில் கூறினார். இதை ஆழ்ந்து பார்க்க வேண்டும். ஒரு நாய்க்கு புத்த தன்மை இருக்குமானால் அது உனக்கும் இருக்கும். நாயும் ஒருநாள் புத்தராக கூடும் என்றால் உனது லட்சியம் வெகு தொலைவில் இல்லை. இதில் பல விஷயங்கள் உள்ளன. ஒரு நாய் புத்த தன்மை உடையது என்றால் பின் அது உனக்கும், உனது எதிரிக்கும்கூட இருக்கும். எல்லா உயிர்களுக்கும், உடையதுதானே – இதில் உயர்வு தாழ்வு ஏது? விழித்துக் கொள்ளலாமா வேண்டாமா என்று முடிவெடுப்பதில்தான் முக்கியத்துவம் இருக்கிறது. இன்னும் சிறிது நேரம் தூங்கலாமா வேண்டாமா என்று நீ முடிவெடுப்பதில்தான் இருக்கிறது – புரண்டு படுத்து போர்வையை இழுத்து போர்த்தி தூங்குவதில்தான் சுகம். ஆனால் போர்வைக்குள் தூங்கும்போது, அதிகாலையை அனுபவித்தால் நீ புத்தர்தான். அது உன்னைப் பொறுத்தது. புத்தர் மரத்தடியில் உட்கார தீர்மானித்தார், நீ படுக்கையில் படுத்திருக்க தீர்மானித்திருக்கலாம். அது மிக முக்கியமான வித்தியாசம் அல்ல. ஒரு புத்தர் மரத்தடியில் ஞானத்தன்மை பெற முடியுமானால் உன்னாலும் போர்வைக்குள் ஞானத்தன்மை பெற முடியும். அது உண்மையிலேயே சிறப்பானதாக இருக்கும். ஏனெனில் நீ எதிர்கால மனித சமுதாயத்துக்கு ஒரு புதிய சாத்தியத்கூறை உண்டாக்குகிறாய். இல்லாவிடில் மக்கள் மரத்தடியில்தான் உட்கார வேண்டும் என எப்போதும் நினைக்க ஆரம்பித்து விடுவார்கள். அதிலும் குறிப்பாக மழைக்காலத்தில், குளிர்காலத்தில், ஏதாவது சூழ்நிலையில் பிரச்னை இருக்கும்போதெல்லாம் அவர்கள் புத்ததன்மையை ஒத்திப் போட்டு விடுவார்கள். அதில் எந்த பிரச்னையும் இல்லை என நான் உனக்கு கூறுகிறேன். போர்வைக்குள் கதகதப்பாக இருந்தபடியே நீ புத்தராகலாம். அதில் எந்த பிரச்னையும் இல்லை. ஏனெனில் புத்தராவதற்க்கும் மரத்தடியில் உட்காருவதற்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அப்படித்தான் என்று கிடையாது. அதேபோல பத்மாசனத்தில் உட்காருவதற்கும் ஞானத்தன்மைக்கும் எந்த தொடர்பும் இல்லை. பத்மாசனத்தில் அமர்வது தேவை என்றால் நாய்களால் ஞானத்தன்மை பெற முடியாது. எப்படி ஒரு நாயால் பத்மாசனத்தில் உட்கார முடியும்?. போர்வைக்குள் இருக்கும் போது நடைபெறக்கூடும் என்றால் உங்களில் அதிகம் பேர் அதைத்தான் தேர்ந்தெடுப்பீர்கள் என நினைக்கிறேன். புத்தர் மரத்தடியில் அமர்ந்திருக்கும்போது அது நிகழ்ந்தது தற்செயலானது. அது போர்வைக்குள் இருக்கும் போதும் நிகழக்கூடும் என்பது அவருக்குத் தெரியாது. உண்மையில் இதே கேள்வி அவரது மனைவி அவரைப் பார்த்து கேட்டாள்…….. பனிரெண்டு வருடங்கள் கழித்து அவர் தனது அரண்மனைக்கு வருகிறார். தந்தை மிக மிக கோபமாக இருப்பார் என்பது அவருக்கு மிக நன்றாக தெரியும். தந்தைக்கு மிகவும் வயதானபின் பிறந்த மகன், ஒரே மகன், தந்தையின் நம்பிக்கைகள் எல்லாம் இவரை சார்ந்துதான் இருந்தது. அவர் மிகவும் சக்தியிழந்து போய் விட்டார், ஓய்வெடுக்க விரும்பினார். தனது மகன் ராஜீய பொறுப்புக்களை ஏற்றுக் கொள்ளவதற்காக காத்திருந்தார். அதற்கு முன்னதாக கௌதம புத்தர் அரண்மனையிலிருந்து சென்றுவிட்டார். இந்த கதையில் மனித மனம் மிக அழகாக வெளிப்பட்டிருக்கும். கௌதம புத்தர் கிளம்புவதற்கு முன்தினம்தான் அவருக்கு ஒரு குழந்தை பிறந்திருந்தது. தனது வாரிசை, தனது துணைவிக்கும் தனக்கும் உள்ள அன்பின் வெளிப்பாட்டை, கிளம்புவதற்குமுன் ஒருமுறை காண விரும்பினார். அதனால் அவர் தனது மனைவியின் அறைக்கு சென்றார். அவள் தூங்கிக் கொண்டிருந்தாள், குழந்தை போர்வைக்குள் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது. அவர் போர்வையை விலக்கி குழந்தையின் முகத்தை ஒரு முறை காண நினைத்தார். ஏனெனில் அவர் திரும்ப வராமலும் போகலாம். அவர் புரிபடாத யாத்திரைக்குச் செல்கிறார். அவருக்கு என்ன நடக்கும் என்று அவருக்கே தெரியாது. அவர் தனது நாடு, மனைவி, குழந்தை, தன்னை, எல்லாவற்றையும் ஞானவிழிப்படைய பணயம் வைக்கிறார். அதற்காகவே அலைந்து திரிந்து ஞானமடைந்த வெகு சிலரிடமிருந்து கேள்விப்பட்ட ஒரு சாத்தியக்கூறாக மட்டுமே உள்ள ஒன்றை தேடி செல்கிறார். உங்களைப் போலவே அவருக்கும் ஏகப்பட்ட குழப்பங்கள், கேள்விகள். ஆயினும் ஒரு முறை முடிவு பெற்று விட்டால்……. அவர் மரணத்தை, முதுமையை, நோயை, பார்த்த அந்த நாள், அவர் தனது வாழ்வில் முதன்முறையாக ஒரு சந்நியாசியை பார்த்த அந்த நாள்…… அவருள், “மரணம் உறுதி எனும்போது பின் அரண்மனையில் காலத்தை செலவிடுவது ஆபத்தானது. மரணம் வருவதற்கு முன் இறப்பை கடந்தும் இருப்பதை கண்டடைந்தேயாக வேண்டும்”. என்ற இறுதி நிலைப்பாட்டுக்கான கேள்வி எழுந்தது. அவர் செல்ல முடிவெடுத்துவிட்டார். ஆனாலும் மனித மனம், மனித இயல்பு…… தனது குழந்தையின் முகத்தை ஒரு முறை பார்க்க விரும்பினார் –  அவர் இன்னும் குழந்தையை பார்க்கவேயில்லை. ஆனால் போர்வையை விலக்கும்போது யசோதரா – அவரது மனைவி – விழித்துவிட்டால், அவள் எழுந்து கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. அவள் எழுந்துவிட்டால், “இந்த இரவில் என் அறையில் நீங்கள் என்ன செய்கிறீர்கள், நீங்கள் எங்கோ செல்ல தயாராகி இருப்பதுபோல தோன்றுகிறதே?” எனக் கேட்பாள். தேர் வாசலில் தயாராக இருக்கிறது, எல்லாமும் ரெடி, அவர் கிளம்ப வேண்டியதுதான் பாக்கி. அவர் தனது தேரோட்டியிடம், “ஒரு நிமிடம் பொறு, நான் எனது குழந்தையின் முகத்தை ஒரு முறை பார்த்துவிட்டு வந்துவிடுகிறேன். ஏனெனில் நான் திரும்ப வராமலும் போகலாம்”. என்று  கூறியிருந்தார். ஆனால் அவர் தனது குழந்தையின் முகத்தை பார்க்கவில்லை, ஏனெனில் யசோதரா எழுந்து அழுது, நீங்கள் என்ன செய்கிறீர்கள்?, எதற்கு இந்த துறவறம்?, நீங்கள் எங்கே செல்கிறீர்கள்?, ஞானமடைதல் என்பது என்ன? என்று கதற தொடங்கிவிட்டால்…. என்று பயப்பட்டார். ஒரு பெண்ணைப் பற்றி யாருக்கும் ஒன்றும் தெரியாது – அவள் முழு அரண்மனையையும் விழிக்க வைத்துவிடக் கூடும். தந்தை வந்துவிடுவார், எல்லாமும் முடிந்துவிடும். அதனால் அவர் நழுவி சென்றுவிட்டார். பனிரெண்டு வருடங்களுக்குப் பிறகு, ஞானமடைந்தபின் அவர் செய்த முதல் வேலை, தந்தையிடம், மனவியிடம், பனிரெண்டு வயதடைந்த மகனிடம் மன்னிப்பு கேட்க திரும்பி வந்ததுதான். அவர்கள் கோபமாக இருப்பார்கள் என்பதை அவர் அறிவார். தந்தை மிகவும் ஆத்திரமாக இருந்தார். புத்தரை பார்த்தவுடன், அரைமணி நேரம் திட்டி தீர்த்தார். பின் திடீரென தான் கூறிய எந்த விஷயமும் தன் மகனை தொடவில்லை, அவன் ஒரு பளிங்குச்சிலை போல நிற்கிறான் என்பதை உணர்ந்தார். தந்தை தன்னை கவனித்தவுடன் புத்தர், “இதைத்தான் நான் விரும்பினேன். கண்ணீரை  துடைத்துக் கொள்ளுங்கள். என்னைப் பாருங்கள். அரண்மனையை விட்டு சென்றபோது இருந்தவன் அல்ல நான். உங்களது மகன் முன்னரே இறந்து விட்டான். நான் தோற்றத்தில் உங்களது மகன்போல இருக்கலாம். ஆனால் எனது இருப்பு மிகவும் வேறுபட்டது. என்னைப் பாருங்கள்”. என்றார். “நான் பார்த்துக் கொண்டிருந்தேன், அரைமணி நேரம் நான் உன்னைத் திட்டிக் கொண்டிருந்தேன், நீ எதுவுமே பேசவில்லை. நீ எவ்வளவு ஆத்திரக்காரன் என்று எனக்குத் தெரியும். உன்னால் அமைதியாக இருந்திருக்க முடியாது. இப்படி அமைதியாக இருந்தவிதமே நீ மாறிவிட்டாய் என்பதை காட்டுகிறது. உனக்கு என்ன நிகழ்ந்தது?” என்று கேட்டார். புத்தர், “சொல்கிறேன். அதற்குமுன் நான் போய் என் மனைவியையும் மகனையும் பார்த்துவிட்டு வருகிறேன். நான் வந்திருக்கிறேன் என்பதை அவர்கள் கேள்விப்பட்டிருப்பார்கள். அவர்கள் எனக்காக காத்திருப்பார்கள்.” என்றார். அவரை பார்த்தவுடன் அவர் மனைவி, “நீங்கள் மாறியிருப்பதை என்னால் பார்க்க முடிகிறது. இந்த பனிரெண்டு வருடங்கள் மிகவும் துன்பமான காலங்கள். நீங்கள் சென்று விட்டதல்ல காரணம், நீங்கள் என்னிடம் எதுவும் சொல்லாமல் சென்றதே காரணம். நான் உண்மையை தேட செல்கிறேன் என என்னிடம் கூறியிருந்தால் நான் உங்களை தடுத்து நிறுத்தியிருப்பேன் என நினைத்தீர்களா? நீங்கள் என்னை கேவலப் படுத்தி விட்டீர்கள். இந்த பனிரெண்டு வருடங்களும் என்னை வருத்திய விஷயம் இதுதான். நீங்கள் உண்மையை தேட சென்றது வருத்தப்பட வைக்க வில்லை, அது சந்தோஷமான விஷயம்தான். நீங்கள் ஞானத்தை தேடி சென்றது குற்றமல்ல. நான் உங்களை தடுத்து நிறுத்தியிருக்க மாட்டேன். நானும் ஷத்திரிய குலத்தை சேர்ந்தவள்தான். கத்தி கதறி அழுது உங்களை தடுக்கும் அளவு பலவீனமானவளாகவா என்னை நினைத்தீர்கள்?, நீங்கள் என்னை நம்பவில்லையே என்பதுதான் இந்த பனிரெண்டு வருடங்களும் என்னை வேதனைப்படுத்திக் கொண்டிருக்கிறது. நான் நீங்கள் செல்ல அனுமதித்திருப்பேன், நான் உங்களுக்கு விடை கொடுத்திருப்பேன், தேர் வரை வந்து வழியனுப்பி வைத்திருப்பேன். நீங்கள் அடைந்திருப்பது எதுவோ அதை இங்கிருந்தே அடைந்திருக்க முடியாதா என்பதுதான் இந்த பனிரெண்டு வருடங்களும் உங்களை நான் கேட்க துடித்துக் கொண்டிருந்த கேள்வி. நீங்கள் எதையோ அடைந்திருப்பது தெளிவாகத் தெரிகிறது…….. இந்த அரண்மனையிலிருந்த சென்ற நபர் அல்ல நீங்கள். நீங்கள் வேறுவிதமாக ஜொலிக்கிறீர்கள், உங்களது இருப்பு முற்றிலும் புதிதாக, புத்துணர்வோடு இருக்கிறது. உங்களது கண்கள் மேகமற்ற வானம் போல தெளிவாகவும் தூய்மையாகவும் இருக்கிறது. நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள். நீங்கள் எப்போதும் அழகுதான், ஆனால் இந்த அழகு புறஅழகல்ல, அகஅழகு உங்களுக்குள் பூத்திருக்கிறது. உங்களுக்கு கிடைத்தது என்னவோ அது இங்கே நீங்கள் இருந்தால் கிடைத்திருக்காதா? இந்த அரண்மனை நீங்கள் ஞானம் பெறுவதை தடுத்து நிறுத்தி விடுமா?” என்று கேட்டாள். இது மிக புத்திசாலித்தனமான கேள்வி. இதை கௌதம புத்தர் ஏற்றுக் கொள்ள வேண்டி வந்தது. “நான் இங்கிருந்தே அடைந்திருக்கலாம். ஆனால் அப்போது எனக்கு எதுவும் தெரியாது. இப்போது என்னால் ‘இங்கிருந்தே அடைய முடியும், எந்த மலைகளுக்கும் செல்ல வேண்டியதில்லை, எங்கேயும் செல்ல வேண்டியதில்லை’ என சொல்ல முடியும். நான் என்னுள் சென்றாலே போதும், நான் எங்கே இருந்தாலும் அது நிகழும். வெளியே வேறு எங்கும் செல்ல வேண்டியதில்லை. இந்த அரண்மனையும் மற்ற இடங்களைப் போன்றதே. ஆனால் என்னால் இதை இப்போது சொல்ல முடியும், அப்போது இதைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாதே. நான் உன்னைப் பற்றியோ உன் தைரியத்தைப் பற்றியோ சந்தேகபடவில்லை. உண்மையில் நான் என்னைப் பற்றித்தான் சந்தேகப்பட்டேன். அதனால் என்னை மன்னித்துவிடு. நீ எழுந்துவிட்டாலோ, நம் குழந்தையை நான் பார்த்துவிட்டாலோ, “நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன்?, என்னுடைய அழகான மனைவியை, இந்த முழுமையான அன்பை, என்னிடம் அவள் கொண்டிருக்கும் முழுமையான அர்ப்பணிப்பை விட்டு விலகுவதா?, இந்த ஒரு நாளே ஆன குழந்தை என்ன செய்தது?, நான் அவனை விட்டு போகிறேன் என்றால் ஏன் இவனை பெற்றெடுத்தேன்?, நான் என்னுடைய பொறுப்புகளிலிருந்து தப்பிப் போவதா? என்று நான் யோசிக்க ஆரம்பித்து விடுவேன். என்னுடைய தந்தை விழித்துக் கொண்டு விட்டாலோ என்னால் போகவே முடியாது. நான் உன்னை நம்பவில்லை என்பதல்ல, நான் என்னைத்தான் நம்பவில்லை. நான் முழுமையாக துறக்கவில்லை, அங்கு ஒரு அலைபாய்தல் இருக்கிறது என்று எனக்குத் தெரியும். என்னுள் ஒரு பாகம், ‘ஏய், நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்? என்றது. மற்றொரு பாகம், ‘செல்வதற்கு இதுதான் சரியான சந்தர்ப்பம், இதை நீ விட்டுவிட்டால் போவது மேலும் மேலும் கடினமானதாகி விடும். உனக்கு முடி சூட்டுவதற்கு உனது தந்தை ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார். முடி சூட்டிக் கொண்டு அரசனாகி விட்டால் பின் செல்வது மிகவும் கடினம்’. என்றது.” என்று கூறினார். யசோதரா, “நான் உங்களிடம் கேட்க நினைத்த ஒரே ஒரு கேள்வி இதுதான். அதை எங்கிருந்தாலும் அடைய முடியும், இங்கிருந்தாலும் அடைந்திருக்க கூடும் என நீங்கள் கூறிய பதிலின் உண்மை தன்மையில் என் உள்ளம் குளிர்ந்தது. இதோ உங்கள் மகன், இவன் உங்களைப் பற்றிக் கேட்கும் போதெல்லாம் நான், “பொறு, அவர் திரும்பி வருவார். அவரால் மனிததன்மையற்று, கருணையின்றி, கொடூரமாக நடந்து கொள்ள முடியாது. ஒரு நாள் அவர் திரும்பி வருவார். அவர் எதை உணர சென்றிருக்கிறாரோ அதற்கு நாள் பிடிக்கும். ஆனால் அதை உணர்ந்த உடனே அவர் செய்யும் முதல் விஷயம் இங்கே திரும்பி வருவதுதான்.” என பதில் கூறுவேன். உங்களது மகனுக்கு நீங்கள் தரப் போகும் சொத்து என்ன?, அவனுக்குத் தர நீங்கள் என்ன வைத்திருக்கிறீர்கள்?, அவனுக்கு உயிர் கொடுத்திருக்கிறீர்கள், வேறு என்ன அவனுக்கு கொடுக்கப்போகிறீர்கள்?” என்று கேட்டாள். புத்தரிடம் பிச்சைப் பாத்திரத்தை தவிர வேறு எதுவும் இல்லை. அவர் தனது மகனை – அவன் பெயர் ராகுல். ஏன் அவன் பெயர் ராகுல் என்பதை நான் பிறகு சொல்கிறேன் அந்த பெயர் கௌதம புத்தர் அவனுக்கு கொடுத்தது – அருகில் அழைத்தார். ராகுலை அருகில் அழைத்து பிச்சைப் பாத்திரத்தை அவன் கையில் கொடுத்தார். “என்னிடம் வேறு எதுவும் இல்லை. இதுதான் என்னிடமுள்ள ஒரே விஷயம். இனிமேல் நான் என் கைகளையே பிச்சைப் பாத்திரமாக உபயோகப் படுத்தி பிச்சை எடுத்துக் கொள்வேன். இந்த பிச்சைப் பாத்திரத்தை உனக்கு கொடுத்ததன் மூலமாக நான் உனக்கு சந்நியாசம் கொடுத்துவிட்டேன். நான் கண்டறிந்த மிகப் பெரிய அரிதான விஷயம் இதுதான். நீயும் இதை கண்டறிய வேண்டும் என நான் விரும்புகிறேன்.” என்றார். அவர் தனது மனைவியிடம், “நீயும் எனது சந்நியாசிகளின் கூட்டத்தில் ஒரு பாகமாக தயாராகு,” என்றார். தனது மனைவிக்கும் தீட்சையளித்தார். புத்தரின் தந்தை வந்து இவையனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தார். “ஏன் என்னை மட்டும் விட்டு விட்டாய்?, நீ கண்டறிந்ததை உன் வயதான தந்தையுடன் பகிர்ந்து கொள்ள உனக்கு விருப்பமில்லையா?, என்னுடைய மரணம் நெருங்கிக் கொண்டிருக்கிறது…… எனக்கும் தீட்சை கொடு” என்று அவர் கேட்டார். புத்தர், “உங்கள் எல்லோரையும் என்னுடன் கூட்டிச் செல்லத்தான் நான் இங்கு வந்தேன். ஏனெனில் அழியாத, யாராலும் பறித்துக் கொள்ள முடியாத, முற்றிலும் பெரியதான சாம்ராஜ்யத்தை நான் அறிந்தேன். நான் இங்கே வந்தால் என்னுடைய இருப்பை, என்னுடைய தெளிவை, உங்களால் உணர முடியும் என்றே நான் இங்கே வந்தேன். என்னை பின் தொடர்ந்து வாருங்கள் என நான் உங்களை அழைக்க முடியும்.” எனக் கூறி அவர்கள் மூவருக்கும் தீட்சையளித்தார். இந்திய புராணங்களில் சந்திர கிரகணம் என்பது சந்திரனுக்கு உள்ள இரண்டு எதிரிகளான ராகுவும் கேதுவும் சந்திரனை பிடித்து கொல்ல முயற்சி செய்கின்றனர். ஒவ்வொரு முறையும் சந்திரன் அவர்கள் பிடியிலிருந்து தப்பித்துக் கொள்கிறான். என்பதை தான் சந்திரகிரகணம் என்று கூறப் படுகிறது. கௌதம புத்தர், “இந்த மகன்தான் எனக்கு மிகப் பெரும் தடையாக இருக்கப் போகிறான், இவன்தான் என்னுடைய எதிரியாக இருக்கப் போகிறான், இமயமலைக்கு நான் செல்வதை தடுக்கப் போவது இவன்தான். இவன்மேல் நான் வைக்கும் அன்பு, இவனுடன் நான் கொண்டுள்ள நேசம், பாசம். இவைதான் என்னுடைய விலங்குகளாக இருக்கப் போகின்றன.” என்று நினைத்ததால் அவர் தன் மகனுக்கு ராகுல் என பெயர் வைத்தார். அவர்கள் எல்லா சந்நியாசிகளும் தங்கியிருந்த, ஊரை விட்டு வெளியே தள்ளியுள்ள காட்டுக்கு வந்தனர். அன்று மாலை அவர் சந்நியாசிகளிடையே உரை நிகழ்த்துகையில், “எனது மனைவி யசோதரா என்னை ஒரு கேள்வி கேட்டாள். அது மிக முக்கியத்துவம் வாய்ந்த கேள்வி. ஒரு அரசராக வாழ்ந்து கொண்டே ஞானம் பெறுவது சாத்தியமில்லையா என்று கேட்டாள். ‘இடத்தைப் பற்றியோ, நேரத்தைப் பற்றியோ கேள்வியே கிடையாது. ஒருவர் எங்கேயிருந்தாலும் சரி ஞானம் பெற முடியும் – ஆனால் அந்த நேரம் இதை சொல்வதற்கு எனக்கு யாருமில்லை. எங்கே இதை பெற முடியும், யாரிடம் இதை கேட்பது, எங்கே போவது என்று எனக்கு எந்த யோசனையும் இல்லை. நான் அறியாததற்க்குள் குதித்து விட்டேன்.’ என்று உண்மையை கூறினேன். ஆனால் இப்போது, நீ எங்கே இருந்தாலும் கவனத்தோடும் விழிப்போடும் இருப்பதற்காக எதை வேண்டுமானாலும் பணயம் வைக்க கூடிய தைரியம் உன்னிடம் இருக்குமானால் ஞானமடைதல் நிகழும் என்று என்னால் கூற முடியும்.” என்றார். 29 காலிக் கோப்பை நான்சேன் என்பவர் மிகப் பிரபலமான ஜென் ஞானிகளில் ஒருவர். அவரைப் பற்றி பல கதைகள் கூறப் படுகின்றன. அதில் ஒன்று நான் உங்களுக்கு பல முறை கூறியிருக்கிறேன். நான் அதை திரும்பக் கூறுகிறேன். ஏனெனில் இது போன்ற கதைகளை திரும்ப திரும்ப கூறுவதன் மூலம் நீங்கள் அதை நன்கு உள்வாங்கிக் கொள்ள முடியும். அவை உங்களை வளப்படுத்தும். ஒவ்வொருநாளும் நீங்கள் ஊட்டம் பெற வேண்டும். நேற்று காலை நான் உணவு சாப்பிட்டு விட்டேன், அதனால் இப்போது எனக்கு உணவு வேண்டாம் என்று நீங்கள் கூறுவதில்லை. ஒவ்வொரு நாளும் நீங்கள் சாப்பிட்டாக வேண்டும். நேற்று நான் சாப்பிட்டுவிட்டேன். இப்போது ஏன் சாப்பிடவேண்டும் என்று கேட்பதில்லை. இந்த வித கதைகள் – இவை உங்களை வளப்படுத்தும் கதைகள். இந்தியாவில் இவற்றைப் பற்றிக் குறிப்பிடுவதற்கு ஒரு குறிப்பிட்ட வார்த்தை உண்டு. அதை மொழிமாற்றம் செய்ய முடியாது, ஆங்கிலத்தில் “படிப்பது” என்ற ஒரு வார்த்தை உண்டு. இந்தியாவில் இரண்டு விதமான வார்த்தைகள் உண்டு. ஒன்று படிப்பது, மற்றொன்று படித்ததையே திரும்ப திரும்ப படிப்பது. அதன் ஒரு பாகமாகி விடுவது. ஒவ்வொரு நாளும் காலையில் நீ கீதையை படிக்கிறாய். அது படிப்பது அல்ல. ஏனெனில் நீ அதை பலமுறை படித்திருக்கிறாய். இப்போது அது ஒருவிதமான வளப்படுத்துதல். நீ அதை படிக்கவில்லை. நீ அதை ஒவ்வொரு நாளும் உண்கிறாய். அது ஒரு சிறந்த அனுபவமாகும். ஏனெனில் ஒவ்வொரு நாளும் நீ வெவ்வேறு விதமான மனநிலையில் வருவதால் பல்வேறு விதமான அர்த்தங்கள் புரிகின்றன. அதே புத்தகம், அதே வார்த்தைகள் ஆனால் ஒவ்வொரு நாளும் புது ஆழத்தை நீ உணர்கிறாய். ஒவ்வொரு நாளும் புதிதான ஏதோ ஒன்றை படிப்பது போன்று நீ உணர்கிறாய். ஏனெனில் கீதை அல்லது அது போன்ற புத்தகங்களில் ஆழமான உண்மை உண்டு. அவற்றை ஒருமுறை படித்தால் மேலோட்டமாக இருக்கும், இரண்டாவது, மூன்றாவது தடவை படிக்க படிக்க ஆழ்ந்து செல்வாய். ஆயிரம் தடவைகள் படித்தபின் அந்த புத்தகங்களை முழுவதுமாக படிப்பது என்பது சாத்தியமில்லாதது என்பதை புரிந்து கொள்வாய். அதிக அளவு கவனமாக, விழிப்புணர்வுடன் இருக்க இருக்க உனது தன்னுணர்வு ஆழமாகும். இதுதான் இதன் பொருள். நான் நான்சேனின் கதையை திரும்பவும் கூறுகிறேன். ஒரு பேராசிரியர், தத்துவ பேராசிரியர் அவரைக் காண வந்தார். தத்துவம் ஒரு நோய், அது கேன்சர் போன்றது. அதற்கு மருந்து கிடையாது, அதை நீ வெட்டிதான் எறிய வேண்டும். ஒரு பெரிய அளவிலான அறுவை சிகிச்சைதான் செய்தாகவேண்டும். தத்துவமும் அப்படிப்பட்ட ஒருவிதமான வளர்ச்சியாகும். ஒருமுறை அது உன்னுள் வந்துவிட்டால் அது உன்னுடைய சக்திகளை எடுத்துக் கொண்டு அது அதன் போக்கில் வளரும். அது ஒட்டுண்ணி. நீ பலவீனமடைந்து கொண்டே போவாய், அது மேலும் மேலும் பலமடைந்து கொண்டே போகும். ஒரு வார்த்தை மற்றொரு வார்த்தையை உருவாக்கும். அது முடிவில்லாமல் போய்க் கொண்டே இருக்கும். ஒரு தத்துவவாதி நான்சேனை காண வந்தார். நான்சேன் ஒரு சிறிய குன்றின் மேல் வசித்துவந்தார். அவர் மலைஏறி வந்ததால் மிகவும் வியர்த்து களைத்து வந்தார். அவர் நான்சேனின் குடிசைக்குள் நுழைந்த உடனேயே உண்மை என்பது என்ன எனக் கேட்டார். நான்சேன், உண்மை கொஞ்ச நேரம் காத்திருக்கலாம், அதற்கு அவசரமில்லை. இப்போது உங்களுக்குத் தேவை ஒரு கோப்பை டீதான். நீங்கள் மிகவும் களைத்திருக்கிறீர்கள் எனக் கூறி விட்டு டீ தயார் செய்ய சென்றார். இதை ஒரு ஜென்குருவிடம் மட்டுமே காண முடியும். இந்தியாவில் சங்கராசாரியா உனக்காக டீ தயார் செய்வது சாத்தியமில்லாதது – உனக்காக, சங்கராசாரியாவா டீ தயார் செய்வதா, நடக்கவே நடக்காது. அல்லது மகாவீரர் உனக்காக டீ தயார் செய்வது…….. மடத்தனம். ஆனால் ஒரு ஜென்குருவிடம் இது நிகழக் கூடும். அவர்களிடம் வித்தியாசமான அணுகுமுறை உள்ளது. அவர்கள் வாழ்க்கையை காதலிக்கின்றனர். அவர்கள் வாழ்க்கைக்கு எதிரி அல்ல. அவர்கள் எளிமையாக வாழலாம், ஆனால் அவர்கள் வாழ்க்கைக்கு எதிர்மறையானவர்கள் அல்ல. அவர்கள் சாதாரண மக்கள். அவர்கள் சாதாரணமாக வாழ்வதுதான் அசாதாரணமான ஒரு விஷயம் என்று கூறுகிறார்கள். அவர்கள் மிகவும் எளிமையான வாழ்க்கை வாழ்கின்றனர். நான் எளிமையானது என்று கூறும்போது உண்மையான எளிமையைதான் குறிப்பிடுகிறேன். திணிக்கப்பட்ட எளிமை அல்ல. இந்தியாவில் அப்படிப்பட்ட திணிக்கப்பட்ட எளிமையை நீ காணலாம். எளிமை திணிக்கப்படுகிறது. அவர்கள் நிர்வாணமாக இருந்தாலும் முழு நிர்வாணமாக இருந்தாலும் அவர்கள் எளிமையானவர்களாக இல்லை. அவர்களது நிர்வாணம் மிகவும் சிக்கலானது. அவர்களது நிர்வாணம் ஒரு குழந்தையினுடைய நிர்வாணம் போன்றதல்ல. அவர்கள் அதை உருவாக்கிக் கொண்டனர். உருவாக்கப்பட்ட ஒரு விஷயம் எப்படி எளிமையானதாக இருக்கமுடியும், தங்களை அவர்கள் அப்படி வரையறுத்துக் கொண்டுள்ளனர், வரையறுத்த ஒரு விஷயம் எப்படி எளிமையானதாக இருக்க முடியும், அது மிகவும் சிக்கலானது. ஜைன திகம்பர சாமியாரின் நிர்வாணத்தை விட உங்களது ஆடைகள் எளிமையானவைதான். அவர் அதற்காக பல ஆண்டுகள் கஷ்டப்பட்டிருக்கிறார். அதற்கு ஐந்து படிகள் உள்ளன. நீ ஒவ்வொரு படியையும் ஒன்றன்பின் ஒன்றாக பூர்த்தி செய்ய வேண்டும், அதன்பின்தான் நீ நிர்வாணமாக இருக்கமுடியும். அது ஒரு லட்சியம், ஒரு லட்சியம் எப்படி எளிமையானதாக இருக்கும், நீ அதற்காக பல வருடங்கள் உழைத்திருந்தால், அதை அடைவதற்காக நீ பல முயற்சிகள் செய்திருக்கும்போது அது எப்படி எளிமையானதாக இருக்கமுடியும், இப்போதே, இங்கேயே, உடனடியாக கிடைக்கும், அதற்காக உழைக்கவேண்டிய அவசியமில்லாத ஒரு விஷயம் மட்டுமே எளிமையானதாக இருக்க முடியும். நிர்வாணம் எளிமையான ஒரு விஷயமாக இருக்கும்போது அது மிக கம்பீரமான காட்சிஅற்புதம். நீ வெறுமனே உடைகளை விட்டுவிடலாம். அது மகாவீரருக்கு நடந்தது. அது எளிமையானது. அவர் அவரது மாளிகையை விட்டு கிளம்பும்போது அவர் ஆடை அணிந்திருந்தார். ஒரு ரோஜாபுதரை தாண்டும்போது அவரது ஆடை அதில் சிக்கிக் கொண்டது. அது ஒரு மாலை நேரம், எனவே அந்த ரோஜாசெடி தூங்கும்நேரம், எனவே அதை பிரித்து எடுத்து அதன் தூக்கத்தை கலைக்கக் கூடாது, எனவே அவர் சிக்கிக் கொண்ட ஆடையை மட்டும் கிழித்து விட்டுவிட்டு பாதி ஆடையுடன் சென்றார். அடுத்த நாள் ஒரு பிச்சைக்காரன் வந்து யாசகம் கேட்டான். அவனுக்கு தர ஏதுவுமில்லை இந்த பாதி ஆடையை தவிர. எனவே இந்த பாதி ஆடையையும் அவனுக்கு கொடுத்துவிட்டு நிர்வாணமாகி விட்டார். அவரது நிர்வாணம் மிகவும் அழகானது, இயற்கையானது, எளிமையானது, அது நிகழ்ந்தது. அது பயிற்சி செய்யப்பட்டதல்ல. ஆனால் ஒரு ஜைனதுறவி அதை பயிற்சி செய்கிறார். ஜென்குருக்கள் மிகவும் எளிமையான மக்கள். அவர்கள் மற்றவர்களைப் போலவேதான் வாழ்கிறார்கள். அவர்கள் எந்த வித்தியாசத்தையும் உண்டாக்கிக் கொள்வதில்லை. ஏனெனில் அடிப்படையிலேயே ஆணவம் இருந்தால்தான் வித்தியாசம் வரும். இந்த விளையாட்டை நீ பல வழிகளில் விளையாடலாம், ஆனால் விளையாட்டு ஒன்றேதான். நான் உன்னை விட உயர்ந்தவன். விளையாட்டு ஒன்றுதான், என்னிடம் உன்னைவிட அதிக பணம் இருக்கிறது, நான் உன்னைவிட உயர்ந்தவன், நான் உன்னைவிட படித்தவன், நான் உன்னை விட உயர்ந்தவன், நான் உன்னை விட அதிக மதவாதி, அதனால் நான் உன்னைவிட உயர்ந்தவன், நான் அதிகம் துறந்திருக்கிறேன், அதனால் நான் உன்னைவிட உயர்ந்தவன், நான்சேன் உள்ளே சென்று டீ தயாரித்துக் கொண்டு வெளியே வந்தார், கோப்பையை விரிவுரையாளரின் கைகளில் கொடுத்தார், கெட்டிலில் இருந்து டீயை ஊற்ற ஆரம்பித்தார். கோப்பை நிறைந்துவிட்டது. அந்த வினாடி வரை வந்தவர் பொறுத்திருந்தார், ஏனெனில் அதுவரை எல்லாமே சாதாரணமாகதான் நடந்தது, ஒரு களைப்பான மனிதனுக்காக இரக்கப்பட்டு டீ தயாரித்துக் கொண்டு வந்தார். அது அப்படித்தான் இருக்கும். நீ கோப்பையில் டீயை ஊற்றுகிறாய் – அதுவும் சரிதான், ஆனால் பின்தான் அசாதாரணமானது நடந்தது. நான்சேன் ஊற்றிக் கொண்டே இருந்தார். கோப்பை நிறைந்து வழிந்தது. இப்போது விரிவுரையாளர் சிறிது ஆச்சரியமடைந்தார். இவர் என்ன செய்கிறார், இவருகென்ன பயித்தியம் பிடித்துவிட்டதா, ஆனாலும் பொறுத்தார் – அவர் மிகவும் நாகரீகமடைந்த மனிதர், இது போன்ற சிறிய விஷயங்களை ஒரளவுக்கு தாங்கிக் கொள்ள முடியும். ஒரு சிறிதளவு பைத்தியக்காரத்தனத்தை….. ஆனால் கோப்பையின் கீழே இருந்த தட்டும் நிறைந்து வழிந்தது, நான்சேன் ஊற்றிக் கொண்டே இருந்தார். இது மிகவும் அதிகம். இப்போது ஏதாவது செய்தாக வேண்டும், எதையாவது சொல்லியாக வேண்டும், வந்தவர் நிறுத்துங்கள் என கத்தினார். ஏனெனில் இப்போது டீ தரையில் வழிந்தோடிக் கொண்டிருக்கிறது. நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள், கோப்பை இனிமேலும் கொள்ளாது. இதைக்கூட உங்களால் பார்க்க முடியவில்லையா, உங்களுக்கு என்ன பயித்தியமா எனக் கேட்டார். நான்சேன் சிரித்துக் கொண்டே, இதைதான் நானும் நினைத்துக் கொண்டிருக்கிறேன், உங்களுக்குகென்ன பயித்தியமா கோப்பை நிறைந்து விட்டது அதில் இன்னும் கொஞ்சம்கூட ஊற்ற முடியாது என்பதை பார்க்க முடிகின்ற உங்களால் உங்களது மூளை நிறைந்து வழிகிறது அதில் சிறிதளவுகூட உண்மை ஏறாது என்பதை ஏன் பார்க்க முடியவில்லை. இந்த டீயைப் போலவே உங்களது மண்டையிலிருந்து நிறைந்து வழியும் தத்துவம் என் குடிசை முழுவதும் பரவி இருப்பதை உங்களால் பார்க்க முடிகிறதா, நீங்கள் ஒரு பொருள்முதல்வாதி, உங்களால் டீயை பார்க்க முடிகிறது. இப்போது அடுத்த விஷயத்தையும் பார்ப்போம் வாருங்கள். என்று கூறினார். இந்த நான்சேன் என்பவர் மக்கள் விழிப்புணர்வு பெற பல வழிகளிலும், பல முறைகளிலும், பல விதங்களிலும் பலருக்கு உதவியுள்ளார். வேறுபட்ட பல விதங்களிலும் பல விதமான சூழ்நிலைகளை உருவாக்கி மக்கள் விழிப்புணர்வு பெற உதவியுள்ளார். 30 கூட்டத்தின் பலம் உனது மனதின் உள்ள விஷயங்கள் அனைத்தும் கட்டுதிட்டத்தினாலும் திட்டமிடுதலாலும் உருவாக்கப்பட்டவைதான். சமுதாயம் இதைத்தான் செய்கிறது. நாம் கடந்த காலம் முழுவதும் இது போன்ற அசிங்கமான வகையில்தான் வாழ்ந்து வந்திருக்கிறோம். அங்கு அப்படி எதுவும் இல்லாத போதும் மற்றவர்களால் அது உருவாக்கப்படுகிறது என்ற கருத்தை எனது பேராசிரியர்களில் ஒருவர் ஏற்றுக் கொள்ள வில்லை. நான் இதை நிருபிக்கிறேன் என்று நான் கூறினேன்.. அவருக்கு என்னை மிகவும் பிடிக்கும், அவரது மனைவியும் என்னிடம் மிகவும் அன்பாக இருப்பார். நான் அவரது மனைவியிடம் சென்று, நாளை காலை பேராசிரியர் எழுந்தவுடன், நீங்கள் அதிர்ச்சியடைந்தது போல காட்டிக் கொண்டு அவரிடம் சென்று, என்னாயிற்று உங்களுக்கு? இரவு படுக்கைக்கு செல்லும்போது நன்றாகத்தானே இருந்தீர்கள்! இப்போது உங்களது முகம் வெளுத்தாற்ப்போல இருக்கிறதே, உடம்பு சரியில்லையா உங்களுக்கு? எனக் கேட்க வேண்டும் எனக் கூறினேன். அடுத்த நாள் காலை பேராசிரியர் இதை உடனே மறுத்து விட்டார். அவர் “என்ன உளருகிறாய்? நான் நன்றாகத்தான் இருக்கிறேன்”. என்று கூறி விட்டார். நான் அடுத்ததாக அவரது தோட்டக்காரரிடம், “அவர் தோட்டத்துக்கு  வந்தவுடன் நீங்கள், என்னவாயிற்று? கடவுளே! என்ன நிகழ்ந்தது? உங்களால் நடக்க முடிய வில்லை, நீங்கள் நடுங்குகிறீர்கள். உங்களுக்கு என்னவோ நடந்து விட்டது, உள்ளே சென்று உட்கார்ந்து ஓய்வு எடுங்கள். நான் போய் டாக்டரை கூப்பிடுகிறேன் என்று கூற வேண்டும்.” என்று கூறினேன். மேலும் நான் இவர்கள் இருவரிடமும் அவர் என்ன கூறினாரோ அதை அப்படியே அவரது வார்த்தைகளிலேயே எழுதி வையுங்கள். நான் வந்து பெற்றுக் கொள்கிறேன். என்று கூறினேன். அவர் தோட்டக்காரரிடம், “ஆமாம், என்னவோ போல இருக்கிறது, நான் ஓய்வு எடுக்க வேண்டும், என்னால் பல்கலைகழகத்துக்கு போக முடியாது. ஆனால் டாக்டரை கூப்பிட வேண்டிய அவசியம் இல்லை.” எனறார். அவர் முழு ஆரோக்கியத்துடன் இருந்தார். எந்த பிரச்னையும் இல்லை. அதனால் அவர் பல்கலைகழகத்துக்கு அரை மணி நேரமோ ஒரு மணி நேரமோ போவதாக முடிவெடுத்தார். அவர் செல்லும் வழியில் நான் நம்பும் பலரிடமும் சொல்லி வைத்தேன்…. அடுத்ததாக வழியில் ஒரு போஸ்ட் மாஸ்டர் இருந்தார், நான் அவரிடம், “நீங்கள் மிகவும் வேலையாக இருந்தால் கூட தவற விட்டு விடாதீர்கள். பேராசிரியர் உங்களை கடந்து செல்லும் போது எங்கே செல்கிறீர்கள்?, என்ன செய்கிறீர்கள்?, உங்களுக்கு பயித்தியமா? உங்களுக்கு உடம்பு சரியில்லை, நீங்கள் என் வீட்டிற்கு வந்து ஓய்வு எடுங்கள், நான் டாக்டரை கூப்பிடுகிறேன் என்று சொல்லுங்கள். அவர் கூறுவதை குறித்துக் கொள்ளுங்கள்.” என்றேன். நான் குறிப்புகளை சேகரித்து கொள்கிறேன் என்று கூறினேன். பேராசிரியர், “ஆமாம், நேற்று இரவிலிருந்து என்னவோ தவறாகிப் போனது போல ஒரு உணர்வு. என்ன தவறாகிப் போனது என்று எனக்கு சரியாக தெரியவில்லை. ஆனால் என்னவோ சரியில்லை. நான் இன்னும் நெடுநாள் வாழப் போவதில்லை என்பது போன்ற ஒரு அச்சம், ஒரு நடுக்கம் உள்ளே ஓடுகிறது.” என்றார். அவரது வீடும் பல்கலைகழகமும் கிட்டதட்ட ஒரு கிலோமீட்டர் தூரம் இருக்கும். அவர் எப்போதும் நடந்துதான் போவார். ஆனால் அன்று அவர் வழியில் வந்த மற்றொரு பேராசிரியரின் காரை நிறுத்தி, “என்னால் நடந்து பல்கலைகழகத்தை வந்தடைய முடியுமா என்று தெரியவில்லை”. என்றார். பல்கலைகழகம் இருந்த இடம் மலைப்பகுதி, மேடும் பள்ளமுமானது. இவரது வீட்டிலிருந்து அவரது தத்துவ பிரிவு இருந்த இடம் மேடானது. அந்த பிரிவு மலைஉச்சியின் மீது அமைந்திருந்தது. அவரது வீடு கீழே பள்ளத்தில் இருந்தது. பேராசிரியர், “எனக்கு மூச்சு வாங்குகிறது… உடம்பு நடுங்குகிறது. எனக்கு காய்ச்சல் என்று நான் நினைக்கிறேன். என்ன என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை. எனக்கு என்னமோ போல் இருக்கிறது”. எனக் கூறி லிப்ட் கேட்டார். அவரை கடந்து போன பேராசிரியரும் என்னால் அனுப்பி வைக்கப்பட்டவரே. அவர் மிக மோசமான நிலையில் இருப்பதைப் போல நீங்கள் காரை நிறுத்தி, என்ன பிரச்னை என கேட்க வேண்டும் என்று கூறியிருந்தேன்.. காருக்குள் இவர், “நீங்கள் வந்திருக்கக் கூடாது, நீங்கள் டாக்டரிடம் போயிருக்க வேண்டும். உங்களது கண்கள் பஞ்சடைத்துப் போயிருக்கிறது, உங்களது முகம் வெளுத்துப் போயிருக்கிறது, பழுதாகிப்போன ஓவியம் போல இருக்கிறீர்கள். ஒரே நாள் இரவு என்னவாயிற்று? இரவில் ஹார்ட் அட்டாக் வந்ததா என்ன? அது மிகவும் மோசமாக பாதித்திருக்கும் போலிருக்கிறதே.” என்று கூறினார். அதற்கு அவர், “நான் தூங்கிக் கொண்டிருக்கும் போது ஹார்ட் அட்டாக் வந்திருக்கும்போல இருக்கிறது. அப்போது எனக்குத் தெரியவில்லை, இப்போது என்னால் உணர முடிகிறது. எல்லா விதமான அறிகுறிகளும் எனது வாழ்வு முடிவுக்கு வந்து விட்டது போல காட்டுகிறது”. என்றார். அவர், தத்துவ பிரிவுக்குள் நுழையும் போது அங்கு வாசலில் உட்கார்ந்திருக்கும் பியூனிடம் நான், அவர் வந்தவுடன் நீ உடனே எழுந்து அவரை தாங்கிப் பிடித்துக் கொள் என்று கூறியிருந்தேன். அவன், “ஆனால் அவர் மிகவும் கோபப்படுவாரே, நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என்றே எனக்குப் புரியவில்லை. நீங்கள் இதுபோல இதற்கு முன் கேட்டதே இல்லையே.” என்றான். அதற்கு நான், “நானும் பேராசிரியரும் ஒருவிதமான பரிட்சார்த்தமான நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறோம். நீ, நான் சொல்வதை மட்டும் செய். குறுக்கிடாதே. நீ அவரை பிடித்துக் கொண்டு, நீங்கள் விழ இருந்தீர்கள் என்று சொல்.” என்றேன். அவனும் அப்படியே செய்தான். பேராசிரியர் அவனுக்கு நன்றி கூறினார். அநத பியூன் அவரிடம் நீங்கள் கீழே விழ இருந்தீர்கள் என்று சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. அவரே அவனிடம், “நீ இங்கில்லையென்றால் நான் கீழே விழுந்திருப்பேன்!” என்று கூறினார். பிரிவினுள்ளே நான் அவருக்காக காத்துக் கொண்டிருந்தேன். நான் அவரைப் பார்த்தவுடன், “கடவுளே, நீங்கள் ஆவி போல காணப்படுகிறீர்கள், உங்களுக்கு என்ன நடந்தது?” என்று கேட்டேன். அவரைப் பிடித்து, ஒரு சாய்வான நாற்காலியில் உட்கார வைத்தேன். அவர், “ஒரு விஷயம் நான் உன்னிடம் சொல்ல வேண்டும். என்னுடைய குழந்தைகள் மிகவும் சிறியவர்கள். – அவருக்கு இரண்டு குழந்தைகள் – என்னுடைய மனைவி அனுபவமற்ற சிறிய பெண். என் தாயும் தந்தையும் இறந்து விட்டனர். வேறு யாரும் எனக்கு கிடையாது. நான் போய் விட்டால் அவர்களை காப்பாற்ற கூடிய வேறு யாரையும் எனக்குத் தெரியாது. நான் உன்னைத்தான் நினைத்தேன்” என்றார். நான், “நீங்கள் கவலைப்படாதீர்கள். நான் உங்கள் குழந்தைகள் மற்றும் உங்கள் மனைவி ஆகியோரை உங்களை விட நன்றாக வைத்துக் காப்பாற்றுவேன். ஆனால் நீங்கள் இந்த உலகத்தை விட்டு போவதற்கு முன் நான் உங்களிடம் சில குறிப்புகளை காண்பிக்க விரும்புகிறேன்.” என்றேன். அவர், “சில குறிப்புகளா என்ன?” என்றார். “நான் போய் அவற்றை சேகரித்துக் கொண்டு வருகிறேன்” என்றேன். அவர், “யாரிடமிருந்து?” என்று கேட்டார். நான், “உங்கள் மனைவி, உங்கள் தோட்டக்காரர், போஸ்ட் மாஸ்டர், உங்களை இங்கே இறக்கி விட்ட பேராசிரியர், நீங்கள் விழாமல் உங்களை பிடித்த பியூன்.” என்றேன். அவர், “இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்?” எனக் கேட்டார். நான், “இதெல்லாமே ஏற்கனவே திட்டமிடப்பட்டதுதான். இல்லாத ஒன்றை வைத்து மனிதனை ஏமாற்ற முடியாது என நீங்கள் சொல்ல வில்லை?” என்றேன். நான் சென்று எல்லா குறிப்புகளையும் பெற்று வந்தேன். அதை ஒவ்வொன்றாக அவரிடம் காண்பித்தேன். மேலும் நான் அவரிடம், “எப்படி நீங்கள் சிக்கிக் கொண்டீர்கள் என்று நீங்களே பாருங்கள். ஒன்றுமில்லை என்பதை உங்கள் மனைவியிடம் முற்றிலுமாக மறுத்தீர்கள். தோட்டக்காரரிடம், ஒரு வேளை ஏதாவது இருக்கலாம் என்று கூறியுள்ளீர்கள். ஆனால் அது ஒருவேளை என்றுதான் இருக்கிறது. அதில் உங்களுக்கு உறுதி இல்லை. ஆனால் அந்த எண்ணம் வந்து விட்டது. போஸ்ட் மாஸ்டரிடம், ஆமாம், ஏதோ ஆகி விட்டது. காலையிலிருந்து ஏனோ நான் மிகவும் நன்றாக இல்லாமல்தான் இருக்கிறேன், மிகவும் சோர்வாக இருக்கிறது என்று கூறி இருக்கிறீர்கள். பேராசிரியரிடம் காரில் வரும்போது நீங்களே தூங்கும்போது ஹார்ட் அட்டாக் வந்துவிட்டதாக ஒத்துக் கொண்டு இருக்கிறீர்கள். மிகவும் சோர்வாக உணர்ந்திருக்கிறீர்கள் – அவர் மிகவும் வலிமையுள்ள மனிதர் – தத்துவ பிரிவு வரை நடந்து வர முடியாது என நீங்களே நினைத்தீர்கள். மேலும் அந்த பியூன் குதித்து உங்களை தாவிப் பிடித்துபோது, நீங்கள் நான் விழ இருந்தேன், பிடித்துவிட்டாய், மிகவும் நன்றி என்று கூறியிருக்கிறீர்கள். இது உங்கள் மீது திணிக்கப்பட்ட ஒரு கருத்து. அவ்வளவுதான்.” என்று கூறினேன். என்ன நிகழ்ந்தது பார்த்தீர்களா? இதை தொடர்ந்து நிகழ்த்தியிருந்தால் இந்த மனிதன் இறந்து போகக்கூடும். ஒரு தர்க்க வாதத்தில் அவர் ஒத்துக் கொள்ளாத ஒரு நிலையை நான் நிரூபிக்க முயன்றேன், அவ்வளவுதான். அவர் இறந்து போவதை நான் விரும்ப வில்லை. இல்லாவிடில் டாக்டரிடம் பேசி, அவர், “உனது நாட்கள் எண்ணப்படுகின்றன, அதனால் என்ன செய்ய விரும்புகிறாயோ – உயில் எழுதுவது மற்றும் வேறு ஏதாவது – அதை செய். நான் உதவக்கூடியது எதுவுமே இல்லை, உனது இதயத்தின் வாழ்நாள் முடிந்து விட்டது. அது எந்த நிமிடமும் ஓய்வெடுத்துக் கொள்ளக்கூடும்.” என்று அவரை சொல்ல சொல்லியிருக்கலாம். நான் அவரை ஒரு கருத்தின் மூலமாக கொன்றிருக்க முடியும். இந்த குறிப்புகளை பார்த்த உடனேயே அவர் சரியாகி விட்டார், மிகவும் ஆரோக்கியமாகி விட்டார். அவர் சிரித்துக் கொண்டே பியூனைப்பார்த்து, “அவர் சொல்வதை கேட்காதே, அவர் மிகவும் அபாயகரமான மனிதர், அவர் கிட்டதட்ட என்னை கொன்று விட்டார்,” என்றார், மேலும் அவர் அந்த மற்றொரு பேராசிரியரிடம், “இது சரியல்ல, நீ எனக்கு ஹார்ட் அட்டாக் என்று பரிந்துரை செய்தாய்” என்று கூறினார். போஸ்ட் மாஸ்டரிடம், “நீங்கள் எனது பக்கத்து வீட்டுக்காரர், என்னை இறப்பு வரை தள்ளுவது சரியா”  என்று கேட்டார், அவர் மிகவும் கோபமடைந்தது தனது மனைவியிடம்தான். அவர், “அவன் மற்ற எல்லோரையும் சரி கட்டிவிட்டான். – அவர் எல்லோருடைய மதிப்பையும் பெற்றிருந்தார் – ஆனால் என்னுடைய மனைவியே என்னை ஏமாற்றி விட்டாள், அவன் பேச்சைக் கேட்டாள் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. நாங்கள் ஒரு வாத போட்டியில் இருந்தோம், அது என்னுடைய மதிப்பு மரியாதை சம்பந்தப்பட்டது, நீ அதை கெடுத்துவிட்டாய்” எனக் குற்றஞ்சாட்டினார். ஆனால் அவரது மனைவி, “நீங்கள் அவருக்கு நன்றி செலுத்தவேண்டும், இல்லாத ஒன்றிற்காக மனிதனை கட்டுதிட்டம் செய்ய முடியும் என அவர் உங்களுக்கு நிரூபித்ததற்காக நீங்கள்தான் நன்றி சொல்ல வேண்டும்.” என்றார். நீ கிறிஸ்துவன் என நீ உன்னை பற்றி நினைக்கிறாயா? அது உன் மேல் திணிக்கப்பட்டது. நீ உன்னை கடவுள் என நினைக்கிறாயா?  ஒரு கருத்து உன்மேல் திணிக்கப்பட்டது. சொர்க்கம் நரகம் என்பது உண்டென்று நினைக்கிறாயா? அது வேறொன்றுமில்லை, திட்டமிட்டதுதான். உன்னுள் உள்ள அனைத்தும் திட்டமிட்டதுதான். 31 நீ யார் ? நான் என்பது என்ன நீ இதைப் பற்றி அமைதியாக சிந்தித்துப் பார்த்திருக்கிறாயா அது உன்னுடைய காலா, கையா, அல்லது உன்னுடைய இதயமா, தலையா  அல்லது இது வெறும் அகங்காரமா? எது உன்னுடைய ‘ நான் ‘? எங்கே உன்னுடைய  ‘ நான் ‘? உன்னுடைய ஆணவமா? அது அங்கிருத்தலின் உணர்வு இருக்கிறது, ஆனாலும் அதை குறிப்பாக எங்கேயும் காண முடியவில்லை. மௌனமாக ஒரு நிமிடம் அமர்ந்து அந்த ‘ நானை ’ தேடிப் பார். நீ ஆச்சரியமடைவாய். எவ்வளவு ஆழமாக தேடினாலும் உன்னை எங்கும் கண்டு பிடிக்க முடியாது. ஆனால் ஆழமாக தேடும்போது ‘ நான் ‘ என்று ஒன்று இல்லை என்பதை உணர்வாய். அது போல ஆணவம் என்பதும் கிடையாது. சுயத்தின் உண்மை அங்கிருக்கும்போது ‘ நான் ‘ அங்கிருக்காது. எல்லோராலும் நன்கு மதிக்கப்பட்ட நான்சென் என்ற ஞானியை அப்போதிருந்த மாமன்னன் மாலிண்ட் தனது அரசவைக்கு அழைத்தான். தூதுவன் நான்சென்னிடம் சென்று, “குரு நான்சென் அவர்களே, அரசர் உங்களை காண விரும்புகிறார். நான் உங்களை அழைப்பதற்காக வந்திருக்கிறேன்.” என்றான். நான்சென், “நீ விரும்பினால் நான் வருகிறேன், ஆனால் நான்சென் என்று யாரும் இங்கு இல்லை. அது வெறும் ஒரு பெயர்தான், ஒரு தற்காலிக குறியீடு.” என்றார். தூதுவன் அரசரிடம் சென்று நான்சென் ஒரு வித்தியாசமான மனிதர், அவர் வருவதாக ஒத்துக் கொண்டார், ஆனால் நான்சென் என்று யாரும் இல்லை என்று அவர் கூறியதைக் கூறினான். மாமன்னன் ஆச்சரியமடைந்தான். நான்சென் வருவதாக கூறிய நேரத்தில் தேரில் அழைத்து வரப் பட்டார். மன்னன் வாசலில் நின்று அவரை, “குரு நான்சென் அவர்களே, வாருங்கள், வாருங்கள்!” என வரவேற்றான். இதைக் கேட்டவுடன், துறவி சிரித்தார். “நான்சென்னாக நான் உன்னுடைய வரவேற்பை ஏற்றுக் கொள்கிறேன், ஆனால் நினைவில் கொள், நான்சென் என்ற பெயருடைய யாரும் இங்கு இல்லை.” என்றார். அரசன், “நீங்கள் வித்தியாசமாக பேசுகிறீர்கள், நீங்கள்,  நீங்கள் இல்லை என்றால் யார் என்னுடைய அழைப்பை ஏற்றுக் கொண்டது? யார் என்னுடைய வரவேற்புக்கு பதில் சொல்வது?” என்று கேட்டான். நான்சென் பின்னே திரும்பி பார்த்து கேட்டார், “நான் வந்த ரதம் அதுதானே?” “ஆம், அதுவேதான். இதுதான்” “தயவுசெய்து குதிரைகளை கழற்றி விடுங்கள்” என்றார். அது செய்யப்பட்டது. குதிரைகளை காட்டி, “அது ரதமா?” என்று கேட்டார் நான்சென். அரசர், “குதிரைகளை எப்படி ரதம் என்று அழைக்க முடியும்?” என்று கேட்டார். துறவி கூறியதின் பேரில் குதிரைகளை கட்டும் நுகத்தடி கழற்றப்பட்டது. “அந்த நுகத்தடிதான் ரதமா?” என்று துறவி கேட்டார். “அது எப்படி?, அவை நுகத்தடிகள், அது ரதமல்ல.” துறவி கூற கூற, ஒவ்வொரு பாகமாக கழற்றப்பட்டது, ஒவ்வொரு பாகமாக கழற்றப்பட, பட அரசரின் பதில் ‘ இது ரதமல்ல ‘ என்பதாக இருந்தது. கடைசியில் ஒன்றும் மிச்சமில்லை. துறவி, “எங்கே உனது ரதம்? ஒவ்வொரு பாகம் எடுத்துச் செல்லப் பட்டபோதும் இது ரதமல்ல என்று நீயே கூறினாய். ஆகவே இப்போது சொல், உனது ரதம் எங்கே?” என்று கேட்டார். அரசரிடம் ஒரு நிலைமாற்றம் நிகழ்ந்தது. துறவி தொடர்ந்தார், “நான் சொல்வதை புரிந்து கொண்டாயா? ரதம் என்பது ஒரு கூட்டுமுயற்சி. சில குறிப்பிட்ட விஷயங்கள் சேர்ந்த சேகரிப்பு. ரதம் என்பது தனித்து இருப்பதல்ல. இப்போது உள்ளே பார். எங்கே உனது ஆணவம்?, எங்கே உனது ‘ நான் ‘?. நீ எங்கேயும் ‘ நானை ‘ கண்டு பிடிக்க முடியாது. அது பல சக்திகள் ஒன்று சேர்ந்த ஒருமித்த ஒரு வெளிப்பாடு. அவ்வளவுதான். ஒவ்வொரு உறுப்பையும் எண்ணிப்பார், உன்னுடைய ஒவ்வொரு பார்வையை பற்றியும் நினைத்துப்பார், பின் ஒவ்வொன்றாக வெளியேற்று, இறுதியில் ஒன்றுமற்றது தான் இருக்கும். 32 தேடல் ஒரு இளைஞன் உண்மையை தெரிந்து கொள்ளவேண்டும் எனும் தீராத ஆவலால் தனது குடும்பம், தனது சுற்றம் எல்லோரையும் துறந்து தனக்கு ஒரு குருவைத் தேடி புறப்பட்டான். அப்படி அவன் தனது நகரத்தை விட்டு புறப்பட்டுச் செல்லும்போது ஒரு அறுபது வயது குறிப்பிடத்தக்க ஒருவர் ஒரு மரத்தடியில் மிகவும் அமைதியாகவும், மிகவும் வசீகரத்தோடும் அமர்ந்திருப்பதை பார்த்தான். அவர் எல்லோரையும் கவர்ந்திழுக்கக் கூடியவராகவும், மிகவும் காந்த சக்தியுடையவராகவும் இருந்தார். அவனையறியாமலேயே தற்செயலாக அவன் அவரிடம் சென்று தான் ஒரு குருவைத் தேடி புறப்பட்டு இருப்பதை கூறினான். “நீங்கள் ஒரு மூதறிஞர், உங்களுடைய ஞானத்தைஎன்னால் உணர முடிகிறது. உங்களைச் சுற்றியுள்ள உயிர்துடிப்பை என்னால் உணர முடிகிறது. நான் எங்கே போவது? இவர்தான் என்னுடைய குரு என்பதை நான் எப்படி கண்டு பிடிப்பது? அதன் அறிகுறி என்ன? இங்கே பலகுருமார்கள் இருக்கின்றனர், ஆனால் யார்எனக்கு முடிவற்றதற்கு வழி காட்டக் கூடியவர் என்பதை நான் எப்படி உணர்ந்து கொள்வது? என்று எனக்கு கூற முடியுமா?” என்று கேட்டான். அந்த வயதானவன், “அது மிகவும் சுலபம்” என்று கூறிவிட்டு, “அந்த குரு எப்படி இருப்பார், அவரைச் சுற்றி எந்த விதமான சூழ்நிலை இருக்கும், அவருக்கு எவ்வளவு வயதிருக்கும்,” எனறெல்லாம் கூறிவிட்டு ‘அவர் எந்த மரத்தடியில் அமர்ந்திருப்பார்’ என்பதைக் கூட கூறினார். இளைஞன் அவருக்கு நன்றி கூறினான். அப்போது அவர், “நீ எனக்கு நன்றி கூறும் நேரம் இன்னும் வரவில்லை, நான் காத்திருக்கிறேன்” என்றார். “ஏன் அவர் இப்படி கூறுகிறார், எதற்காக அவர்காத்திருக்கிறேன் என்கிறார்” என்பது இளைஞனுக்கு புரியவில்லை. சுமார் முப்பது வருடங்கள் அவன் குருவைத் தேடி காடு, மலை, வனம், வனாந்திரம், பாலைவனமெல்லாம் அலைந்தான். ஆனால் எல்லா விதத்திலும் பொருந்தக் கூடியவரை அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. தோல்வியடைந்தவனாய், விரக்தியுற்று, சோர்வாக அவன் வீடு திரும்பிக் கொண்டிருந்தான். அவன் இப்போது இளைஞன்அல்ல. அவன் கிளம்பும்போது அவனுக்கு வயது முப்பது, இப்போது அவனுக்கு வயது அறுபது. ஆனால் அவன் தன்னுடைய நகரத்தினுள் நுழையும் சமயம் அவன் அந்த வயதானவன் இன்னும் மரத்தடியில் உட்கார்ந்து கொண்டிருப்பதை பார்த்தான். அவனால் தனது கண்களையே நம்ப முடிய வில்லை. “அடக் கடவுளே இவர்தானா அவர் குறிப்பிட்ட மனிதர்! – அவருக்கு 90 வயதிருக்கும் என்று கூட குறிப்பிட்டாரே…… மேலும் மரத்தைப் பற்றி கூட சொன்னார். அவர் அமர்ந்திருந்த மரம் என்ன என்பதைக் கூட பார்க்க முடியாத அளவு முழுமையாக தன்னுணர்வின்றி இருந்திருக்கின்றேனே. அவர் குறிப்பிட்ட அந்த மணம் – அந்த பிரகாசம், அந்த இருப்பு, அவரைச்சுற்றியுள்ள அந்த உயிர் துடிப்பு………” அவன் அவர் காலடியில் விழுந்தான். “என்ன விதமான வேடிக்கை இது,! முப்பது வருடங்களாக நான் பாலைவனத்திலும், மலைகளிலும் தேடி அலைந்தேன். இது உங்களுக்கு மிக நன்றாகத் தெரியும். ஆனாலும் இப்படி என்னை தேடி அலையவிட்டு விட்டீர்களே” என்று கேட்டான். அவர் கூறினார், “எனக்கு தெரிந்திருப்பது ஒரு பொருட்டே அல்ல. உன்னால் தெரிந்துகொள்ள முடிகிறதா என்பதுதான் கேள்வி. நான் முழுமையாக தெளிவாக விளக்கிக் கூறினேன். ஆனால் நீ இந்த முப்பது வருடங்கள் தேடி திரிய வேண்டும். இந்த முப்பது வருடங்கள் அலைச்சலுக்குப் பிறகுதான் உனக்கு ஒரு சிறிதளவு கவனம் வந்திருக்கிறது. அன்று நீ எனக்கு நன்றி கூறியபோது, நான் அதற்கான நேரம் இன்னும் வரவில்லை, ஒருநாள் அந்த நேரம் வரும் எனக் கூறினேன் அல்லவா? நீ உன்னுடைய முப்பது வருடங்கள் தேடி அலைந்ததைப் பற்றி மிகவும் கவலைப்படுகிறாய், ஆனால் நான் இங்கே முப்பது வருடங்களாக உனக்காக உட்கார்ந்துகொண்டு இருக்கிறேன். என்னுடைய சொந்த வேலை எப்போதோ முடிந்து விட்டது.என்னுடைய படகு வந்து எனக்காக காத்துக் கொண்டிருக்கிறது. நான் ஒத்திப் போட்டு,ஒத்திப்போட்டுகொண்டே வந்திருக்கிறேன். முட்டாளே முப்பது வருடங்கள் எடுத்துக்கொண்டிருக்கிறாயே! – நான் மரத்தைப் பற்றிக்கூட விவரித்தேனே, என்னுடைய ஒவ்வொன்றையும் பற்றியும் விவரமாக கூறினேனே – என்னுடைய மூக்கு, என்னுடைய தாடி, என்னுடைய கண்கள்!. நான் விரிவாக விளக்கமாக எல்லாவற்றையும் கூறினேன். நீ என்னைத் தேடி அவசரமாக ஓடினாய். ஆனால் இன்னும் தாமதமாகி விடவில்லை. நான் இறந்து போய்விட்டால் எனது வார்த்தை, எனது வாக்குறுதி நிறைவேற்றப்படாமல் போய்விடுமே என்றுஅஞ்சினேன். கூடிய விரைவில் இந்த முட்டாள் வந்துவிடுவான், ஆனால் நான் இங்கே இல்லையென்றால் எனது வர்ணனை, என்னைப்பற்றிய எனது குறிப்பு, எல்லாமே வீணாகிப் போய்விடுமே, எல்லாம் பொய்யென்று ஆகிவிடுமே என்று கவலைப்பட்டேன். அதை நிரூபிப்பதற்காக, நான் இந்த மரத்தடியில் முப்பது வருடங்களாக உட்கார்ந்து கொண்டிருக்கிறேன். நீ என்னை அன்றே தேர்ந்தெடுத்துவிட்டாய், ஆனால் நீ அதை உணர முடியாது, உனக்கு அந்த கண்கள் அன்று இல்லை. நீ என் வார்த்தைகளை கேட்டாய், ஆனால் அதன் பொருளை உன்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. நான் உன் முன்னால் இருந்தேன்,என்னை நானே விவரித்துக் கூறினேன், ஆனால் நீ என்னை எங்கோ தேடும் எண்ணத்தில்இருந்தாய்” என்று கூறினார். 33 யார் பிராமணன் நான் ஜபல்பூர் எனப்படும் ஊரில் இருபது வருடங்கள் தங்கி இருந்தேன். அதன் பழைய பெயர் ஜபலாபுர். அது மிகப் பெரிய ஞானிகளில் ஒருவரும், உபநிஷதத்தை எழுதியவருள் ஒருவருமான சத்யகம் ஜபால் என்ற ஞானியின் பெயரால் அழைக்கப்பட்டது. இந்த கதை சத்யகம் ஜபால் தெடர்புடையது. சத்யகம் குழந்தையாய் இருக்கும் போதே மிகவும் கேள்வி கேட்டுக் கொண்டே இருப்பார். அவர் அனுபவிக்காதவரை அவர் எதையும் நம்புவதில்லை. அவர் இளைஞனாக ஆன போது – அவருக்கு பன்னிரெண்டு வயதானபோது – அவர் தனது தாயிடம், “இந்த நாட்டின் இளவரசன் காட்டில் இருக்கும் குருகுலம் செல்கிறான். அவனுக்கும் எனது வயதுதான். நானும் போக விரும்புகிறேன், நானும் வாழ்க்கை என்றால் என்னவென்று கற்றுக் கொள்ள விரும்புகிறேன். அதற்கு இதுதான் நேரம்.” என்றார். தாய், “அது மிகவும் கஷ்டம், சத்யகம். ஆனால் எனக்குத் தெரியும், நீ பிறவியிலேயே தேடுதல் ஆர்வமுடையவன். நீ உன்னை ஒருநாள் ஒரு குருவிடம் அனுப்பச் சொல்லிக் கேட்பாய் என்று நான் பயந்து கொண்டேதான் இருந்தேன். நான் ஒரு ஏழைபெண். ஆனால் அது பிரச்னையல்ல. பிரச்னை என்னவென்றால் நான் இளமையாக இருந்தபோது பல வீடுகளில் வேலை செய்துகொண்டிருந்தேன். நான் ஏழை, ஆனால் அழகானவளாக இருந்தேன். அதனால் உனது தந்தை யாரென்று தெரியாது. நான் உன்னை ஒரு குருவிடம் அனுப்பினால் அவர்கள் உன் தந்தை யாரென்று கேட்பார்கள். உன் தந்தை யாரென்று தெரியாது என்று சொன்னால் அவர்கள் உன்னை ஏற்றுக் கொள்ளாமல் போகக் கூடும். ஆனால் முயற்சி செய்வதில் எதுவும் தப்பில்லை. நீ போய் நான் உன்னிடம் இப்போது சொன்னது போலவே உண்மையை அப்படியே சொல். நான் ஏழையாக இருந்ததால் பலர் என்னுடைய உடலை உபயோகித்திருக்கின்றனர். என்னுடைய தந்தை யாரென்று எனக்குத் தெரியாது என்பதை சொல். உன்னுடைய பெயர் சத்யகம் என்றும் உன் தாய் பெயர் ஜபாலா என்றும் சொல். அப்போது அவர்கள் உன்னை சத்யகம் ஜபால் என்று அழைக்கட்டும். உண்மையை பொறுத்தவரை உனது தந்தை யாரென்பது ஒரு பிரச்னையல்ல.” சத்யகம் காட்டில் உள்ள ஒரு வயதான குருவிடம் சென்றான். நிச்சயமாக முதல் கேள்வி, உன்னுடைய பெயர் என்ன? உன்னுடைய தந்தை பெயர் என்ன? என்று கேட்பார்கள் என்று தெரிந்தே போனான். அவர்கள் கேட்டவுடன் அவன் தன் தாய் சொன்னதை அப்படியே சொன்னான். அங்கு பல இளவரசர்கள், பணக்காரர்களின் புதல்வர்கள் ஆகியோர் சீடர்களாக இருந்தனர். அவர்கள் சிரிக்க ஆரம்பித்தனர். ஆனால் அந்த வயதான குரு, “நான் உன்னை என் சீடனாக ஏற்றுக் கொள்கிறேன். உனது தந்தை யாரென்பது பொருட்டல்ல. நீ ஆணித்தரமாகவும், நேர்மையாகவும், பயமில்லாமலும் இருப்பது தான் இங்கு முக்கியமான விஷயம். எந்தவிதமான தர்மசங்கடமும் இல்லாமல் உண்மையை சொல்லும் நேர்மை உன்னிடம் இருப்பதுதான் சிறப்பு.  உன் தாய் உனக்கு சரியான பெயர்தான் கொடுத்திருக்கிறாள் சத்யகம் சத்யகம் என்றால் உண்மையை அடைவது மட்டுமே தேடுதலாக கொண்டவன் என்று பொருள். உனக்கு மிக அழகான தாய் கிடைத்திருக்கிறாள், நீ இன்றிலிருந்து சத்யகம் ஜபால் என்று அழைக்கப்படுவாய். இங்கு பிராமணர்கள் மட்டுமே சீடர்களாக ஏற்றுக்கொள்ளப் படுவது தான் சம்பிரதாயம். நான் உன்னை ஒரு பிராமணன் என்று பிரகடனப்படுத்துகிறேன். ஏனெனில் பிராமணர்களுக்கு மட்டுமே இந்த உண்மையை ஒத்துக் கொள்ளும் தைரியம் இருக்கும்.”  என்றார். அவை மிக அழகான நாட்கள். அந்த வயதான குருவின் பெயர் உதாலக். சத்யகம் அவருடைய மிக நெருங்கிய அன்பான சீடனாக ஆனான். அவருக்கு தகுதி இருந்தது. அவர் மிகவும் தூய்மையானவராகவும் மிகவும் நிர்மலமானவராகவும் இருந்தார். ஆனால் உதாலக்கு சில வரையறைகள் இருந்தன. அவர் கற்றுக் கொடுப்பதில் மிகச் சிறந்தவராக இருந்த போதிலும் அவர் ஞானமடையவில்லை. அதனால் அவர் சத்யகமுக்கு எல்லா சமயநூல்களையும் கற்றுக் கொடுத்தார், அவருக்கு தெரிந்த எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்தார், ஆனால் அவர் எல்லோரையும் நம்பவைப்பது போல சத்யகம்மை நம்பவைக்கவில்லை. சத்யகம் கேள்வி கேட்பார் என்பதற்காக அல்ல. அவருடைய நிர்மலமான தன்மை அந்த அளவு உண்மையானதாக இருந்தது. அவர், “நான் உனக்கு சொல்லிக் கொடுத்தது எல்லாமே நான் நூல்களில் இருந்து படித்ததுதான். அவை எனக்கு சொந்தமானவை  அல்ல. நான் அவற்றை அனுபவப்படவில்லை. அதை நான் வாழ்ந்து பார்த்ததில்லை. இன்னும் உள்ளே காட்டிற்க்குள் வாழும் ஒரு மனிதரை எனக்குத் தெரியும். அவர் மிகவும் அன்பானவர், கருணையானவர், உண்மையே வடிவானவர். நீ அவரிடம் போ.” என்று கூறி சத்யகம்மை அவரிடம் அனுப்பி வைத்தார். உதாலக் அவரைப் பற்றிக் கேள்விப் பட்டிருந்தாரே தவிர அவரை நேரில் பார்த்ததில்லை. உதாலக் மிகப் பிரபலமானவர், சிறந்த பண்டிதர்……. சத்யகம் அந்த இன்னொருவரிடம் சென்றார். அவர் சத்யகம்முக்கு பல புதிய சமய நூல்களையும், எல்லா வேதங்களையும், இந்த உலகத்தின் பழைமையான நூல்களையும் கற்பித்தார். பல வருடங்களுக்கு பிறகு, “இப்போது உனக்கு அனைத்தும் தெரியும், இனி கற்பதற்கு எதுவும் இல்லை. நீ திரும்பி வீட்டுக்குப் போகலாம்.” என்றார். முதலில் சத்யகம் உதாலக்கை காண சென்றார். உதாலக் ஜன்னல் வழியே காட்டிக்குள்ளிலிருந்து வரும் ஒத்தையடிப் பாதையின் வழியே சத்யகம் வருவதை பார்த்தார். அவர் அதிர்ச்சியடைந்தார். சத்யகம்மின் நிர்மலமான தன்மை காணாமல் போயிருந்தது. அதற்கு பதிலாக பெருமை குடியிருந்தது – எல்லோருக்கும் ஆவது போலவே, அவருக்கு இப்போது இந்த உலகத்திலுள்ள தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தும் தெரியும் என்ற நினைப்பே ஆணவத்தை கொடுத்திருந்தது. அவர் உள்ளே வந்தார். அவர் உதாலக்கின் பாதங்களை தொட குனியும்போது உதாலக், “எனது பாதங்களில் விழாதே. முதலில் நீ உன்னுடைய நிர்மலமான தன்மையை எங்கே தொலைத்தாய் என எனக்குத் தெரிய வேண்டும். நான் உன்னை தவறான மனிதரிடம் அனுப்பி விட்டேன் போலத் தெரிகிறது” என்றார். சத்யகம், “தவறான மனிதரிடமா, அவர் அறிய வேண்டிய அனைத்தையும் எனக்கு கற்றுக் கொடுத்தார் .“ என்று கூறினார். உதாலக், “நீ எனது பாதங்களில் விழுவதற்கு முன் நான் உன்னை ஒன்று கேட்க விரும்புகிறேன் – நீ எதையாவது அனுபவப்பட்டாயா அல்லது எல்லாமே வெறும் தகவல்கள் மட்டும்தானா? ஏதாவது நிலைமாற்றம் நிகழ்ந்ததா? உனக்கு தெரிந்திருப்பவை அனைத்தும் உன்னுடையவை என்று கூற முடியுமா?” என்று கேட்டார். சத்யகம், “அப்படி எதையும் கூற முடியாது. நான் அறிந்திருப்பவை அனைத்தும் நூல்களில் உள்ளவை மட்டுமே. நான் எதையும் அனுபவப்படவில்லை” என்று கூறினார். அப்போது உதாலக், “நீ போன பிறகு வேறொரு மனிதரைப் பற்றி நான் கேள்விப்பட்டேன். நீ அவரிடம் போ. உனக்கு அனுபவப்படாத வரை திரும்பி வராதே. நான் உன்னை அனுப்பும் போது இருந்ததை விட மதிப்பு குறைந்தவனாக திரும்பி வந்திருக்கிறாய். மதிப்பிட முடியாத ஒன்றை நீ இழந்து விட்டாய். அறிவு என்று நீ அழைப்பது கடன் வாங்கப் பட்டதாக இருந்தால் அது உனது அறியாமையை மூடி மறைப்பதாக மட்டுமே இருக்கும். அது உன்னை அறிந்தவனாக ஆக்காது. நான் சொல்லும் இந்த மனிதரிடம் செல், அவரிடம், உண்மையை பற்றி, கடவுளைப் பற்றி, அன்பைப் பற்றி மேலும் அதிக விவரங்கள் பெறுவதற்காக வரவில்லை என்று கூறு. நீ கடவுளை, அன்பை, உண்மையை தெரிந்து கொள்வதற்காக வந்திருக்கிறாய் என்று சொல். உங்களால் இதை செய்ய முடியுமென்றால் நான் இங்கே இருக்கிறேன். இல்லையென்றால் நான் நேரத்தை வீணாக்காமல் வேறு ஒரு குருவை தேடிப் போகிறேன் என்று சொல்” என்று கூறினார். சத்யகம் சென்று அப்படியே கூறினார். அந்த குரு ஒரு மரத்தடியில் தனது சில சீடர்களுடன் உட்கார்ந்திருந்தார். இந்த கோரிக்கையை கேட்டவுடன் அவர், “அது சாத்தியமானதுதான், ஆனால் நீ வித்தியாசமான ஒன்றை கேட்கிறாய். இங்கே பல சீடர்கள் உள்ளனர். அவர்கள் இன்னும் அதிக விவரமான தகவல்கள் கேட்கின்றனர். இதைப் பற்றி, அதைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்புகின்றனர். ஆனால் உனக்கு தகவல்கள் சேகரிக்க விருப்பம் இல்லையென்றால், நீ உண்மையை தெரிந்து கொள்வதற்காக எதையும் செய்ய தயார் என்றால் சத்தியத்திற்கான உனது தேடுதல் உன்னையே நீ அர்ப்பணித்துக்கொள்ள தயாராக இருக்குமானால் நான் உனக்காக ஒரு வழி கண்டுபிடிக்கிறேன்”. என்றார். சத்யகம், “நான் எனது வாழ்க்கையை அர்ப்பணிக்க தயாராக இருக்கிறேன். ஆனால் உண்மையறியாமல் திரும்பி செல்ல என்னால் முடியாது. எனக்கு சதயகம் என்று பெயரிட்ட எனது தாயிடமோ, அல்லது நான் உண்மையை கூறிய ஒரே காரணத்தினாலேயே நான் பிராமணனா இல்லையா என்று கவலைப் படாமல் என்னை ஏற்றுக் கொண்ட எனது குருவிடமோ திரும்பி போக முடியாது. என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள்.” என்று கேட்டான். குரு, “இங்கே நீ பார்க்கும் இந்த பசுக்களை கூட்டிக் கொண்டு உள்ளே காட்டிற்க்குள் சென்று விடு. எந்த மனிதருடனும் தொடர்பு கொள்ள முடியாத வண்ணம் எவ்வளவு அடர்ந்த காட்டிற்க்குள் செல்ல முடியுமோ அவ்வளவு தூரம் உள்ளே சென்று விடு. நீ மொழியை, வார்த்தைகளை மறக்கவேண்டும் என்பதுதான் காரணம். பசுக்களுடன் வாழ், அவற்றை பாதுகாத்து வா, உனது குழலுடன் விளையாடு, நடனமாடு – ஆனால் வார்த்தைகளை மறந்துவிடு. இந்த பசுக்களின் எண்ணிக்கை ஆயிரம் ஆனவுடன் திரும்பி வா.” என்றார். இங்கே இருந்த மற்ற சீடர்களுக்கு என்ன நிகழ்கிறதென்றே புரியவில்லை – ஏனெனில் அங்கு இருந்தது ஒரு டஜன் அல்லது இரண்டு டஜன் பசுக்கள்தான். அவை எப்போது ஆயிரம் பசுக்கள் ஆவது ? ஆனால் சத்யகம் பசுக்களை கூட்டிக் கொண்டு அடர்ந்த காட்டுக்குள், மனித சஞ்சாரமற்ற இடத்துக்கு, மனித வாடையற்ற இடத்துக்கு சென்றார். முதல் சில தினங்களுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. பசுக்கள் மட்டுமே அவரது தோழமையாக இருந்தன. அவை மிக அமைதியான மக்கள். அவன் தனது புல்லாங்குழலை வாசிப்பான், காட்டில் தனியாக நடனமாடுவான், மரத்தடியில் படுத்து ஓய்வெடுப்பான். முதல் சில வருடங்கள் தொடர்ந்து பசுக்களை கணக்கெடுத்து வந்தான். பின் மெது மெதுவாக அதை விட்டு விட்டான். ஏனெனில் அவை ஆயிரமாக மாறுவது இயலாததாக தோன்றியது. மேலும் எப்படி கணக்கெடுப்பது என்பதையும் அவன் மறந்துவிட்டான். மொழி மறைந்துவிட்டது. வார்த்தைகள் மறைந்துவிட்டன. கணக்கு எடுக்க இயலவில்லை. இந்த கதை மிகவும் அழகானது. பசுக்களின் எண்ணிக்கை ஆயிரம் அடைந்தவுடன் பசுக்கள் கவலைப்பட ஆரம்பித்தன. ஏனெனில் அவைகள் வீடு செல்ல விரும்பின. இவனுக்கு எப்படி எண்ணுவது என்பது மறந்து போய் விட்டது. இறுதியில் பசுக்கள், “நாம் இவனுக்கு சொல்லியாக வேண்டும். இல்லாவிடில் இந்த தனிமையான வனமே நமது கல்லறையாகிவிடும்.” என்று முடிவெடுத்தன. அதனால் ஒருநாள் பசுக்கள் சத்யகம்மை பிடித்து நிறுத்தி, “இங்கே பார், சத்யகம், நாங்கள் இப்போது ஆயிரம் பசுக்களாகி விட்டோம். நாம் இப்போது வீடு திரும்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது.” என்றன. சத்யகம், “உங்களுக்கு மிகவும் நன்றி. நீங்கள் இப்போது என்னிடம் இதை சொல்லியிராவிட்டால்…….. நான் வீட்டை பற்றியும் திரும்பி போவது பற்றியும் மறந்து விட்டேன். ஒவ்வொரு கணமும் மிகவும் அழகானதாக….. பரவசமாக இருக்கிறது. இந்த மௌனத்தில் மலர்கள் பூச்சொரிகின்றன. நான் எல்லாவற்றையும் மறந்து விட்டேன். நான் யார் என்பதையும் நான் எதற்காக இங்கே வந்தேன் என்பதையும் நான் மறந்து விட்டேன். இங்கே எல்லாமும் முடிவடைந்துவிட்டது. புல்லாங்குழல் வாசிப்பது மட்டுமே போதும். மரத்தடியில் ஓய்வெடுப்பது மட்டுமே போதும், இந்த அழகான பசுக்கள் சுற்றிலும் அமைதியாக இருப்பதை பார்ப்பது மட்டுமே மிக அருமையானது. ஆனால் நீங்கள் வற்புறுத்தினால், நாம் திரும்பிப் போவோம்.” என்றான். அந்த குருவின் சீடர்கள் சத்யகம் ஆயிரம் பசுக்களோடு திரும்பி வருவதை பார்த்தனர். அவர்கள் குருவிடம், “அவன் ஆயிரம் பசுக்களோடு திரும்பி வருவான் என நாங்கள் நினைக்கவேயில்லை. அவன் வந்து விட்டான். நாங்கள் எண்ணி விட்டோம் அவை மிகச் சரியாக ஆயிரம் பசுக்கள் உள்ளன. அவன் வருகிறான்.” என்றனர். அவன் வந்து நின்றான்……..பசுக் கூட்டத்தின் நடுவே நின்றான். குரு தனது சீடர்களிடம், “நீங்கள் தவறாக எண்ணியிருக்கிறீர்கள். அங்கே ஆயிரத்தோரு பசுக்கள் உள்ளன. நீங்கள் சத்யகம்மை எண்ண மறந்து விட்டீர்கள். அவன் உங்களது உலகத்தை விட்டு தாண்டி போய் விட்டான். அவன் நிர்மலமான தன்மையினுள், மௌனத்தினுள், அறிவுக்கெட்டாதனுள் நுழைந்து விட்டான். அவன் பசுக்கள் எப்படி நிற்கிறதோ அங்கேயே நிற்கிறான் பாருங்கள்.” என்றார். குரு, “சத்யகம், நீ வெளியே வரலாம். இப்போது நீ உன்னை இங்கே அனுப்பிய உனது குருவிடம் செல்லலாம். அவர் மிகவும் வயதானவர், அவர் உன் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கக் கூடும். உன் தாய் உனக்காக காத்துக் கொண்டிருப்பாள்.” என்றார். சத்யகம் தனது முதல் ஆசிரியரிடம் – சத்யகம் ஒரு தகவல் களஞ்சியமாக மட்டுமே மாறியதால் தனது வெகுளித்தனத்தை தொலைத்து,தனது நிலையிலிருந்து கீழிறங்கி ஒரு பிராமணனாக இல்லாமல் போய் விட்டார் எனக் கூறி தனது பாதத்தில் விழக் கூடாது என தடுத்த உதாலக்கிடம் – திரும்பி வந்தார். இவர் வருவதை ஜன்னல் வழியாக பார்த்த உதாலக் பின் வாசல் வழியாக ஓடிப் போய் விட்டார். ஏனெனில் இப்போது சத்யகம் தனது பாதங்களில் விழ அனுமதிக்க கூடாது. தான்தான் அவர் பாதங்களில் விழ வேண்டும். ஏனெனில் உதாலக் இப்போது வெறும் பண்டிட் மட்டுமே, ஆனால் சத்யகம் இப்போது விழிப்புணர்வு பெற்று அறிந்தவராகி விட்டார். உதாலக் வீட்டிலிருந்து தப்பிப் போய் விட்டார். “என்னால் அவரை சந்திக்க முடியாது. நான் வெட்கமடைகிறேன். உதாலக் இறந்து போய்விட்டார். அவர் உன்னை நினைத்துக் கொண்டே இறந்தார் என சத்யகம்மிடம் சொல்லி விடு. அவரை அவருடைய தாயிடம் போக சொல்” என தனது மனைவியிடம் சொல்ல சொல்லிவிட்டு போய் விட்டார். வெவ்வேறு விதமான மக்கள் இருக்கிறார்கள். சத்யகம் வீடு திரும்பினார். தாய்க்கு மிகவும் வயதாகி விட்டிருந்தது. ஆனால் அவள் காத்துக் கொண்டே………..இருந்தாள். “உண்மை எப்போதும் ஜெயிக்கும் என்பதை நீ நிரூபித்துவிட்டாய், சத்யகம். பிராமணன் என்பவன் பிறப்பது இல்லை, பிராமணன் என்பது அடையவேண்டிய ஒரு குணாதிசியம் என்பதை நீ நிரூபித்துவிட்டாய். ஒவ்வெருவரும் பிறப்பால் சூத்திரர்தான், ஏனெனில் ஒவ்வொருவரும் பிறப்பில் ஒன்றானவரே. ஒருவன் தன்னை தூய்மைப் படுத்திக் கொள்வதனாலும், ஒருமை படுத்திக் கொள்வதனாலும், மையம் மற்றும் ஞானத்தை அடைவதனாலும், தான் ஒரு பிராமணன் என்பதை நிரூபிக்கவேண்டும். பிராமண குடும்பத்தில் பிறப்பதால் மட்டுமே அவன் பிராமணன் ஆவதில்லை.” என்றாள். 34 கூட்ட மனப்பான்மை கலீல் கிப்ரானின் புத்தகத்தில் ஒரு அழகான சூஃபி கதை ஒன்று உண்டு. உண்மையில் நிகழ்ந்ததாக கூறப்படும் அந்தக் கதையில் ஒரு கிராமத்தில் இரண்டு கிணறுகள் இருந்தன. ஒன்று அரண்மனையில் இருந்தது. அதை மந்திரியும் அரச குடும்பத்தினரையும் தவிர வேறு யாரும் உபயோகிக்க முடியாது. மற்றொன்று ஊரின் நடுவே இருந்தது. அதை மற்ற அனைவரும் உபயோகித்தனர். ஆனால் ஒருநாள், ஒரு மந்திரவாதி அந்த ஊருக்கு வந்து சில மந்திரங்களை கூறிக்கொண்டே ஏதோ ஒன்றை அந்த பொது கிணற்றினுள் போட்டான். மக்கள் எல்லோரும் அதைப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் யாருக்கும் என்ன நிகழ்கிறதென்று புரியவில்லை! அவன் இந்த கிணற்றிலிருந்து தண்ணீர் பருகுபவர் யாராயிருந்தாலும் அவர்கள் பைத்தியமாகி விடுவர் என்று கூறிவிட்டு மறைந்துவிட்டான். தண்ணீர் குடிக்க வேறு வழியில்லை, அரண்மனைக்கு போக முடியாது. எனவே தாங்கள் பைத்தியமாகி விடுவோம் என தெரிந்தபோதிலும் மக்கள் வேறு வழியில்லாமல் இந்த தண்ணீரையே குடித்தனர். சூரியன் மறையும்போது அந்த தண்ணீரைக் குடித்த வயது முதிர்ந்த கிழவனிலிருந்து சிறு குழந்தை வரை அனைவருக்கும் பைத்தியம் பிடித்துவிட்டது. ராஜா, ராணி, இளவரசன், மந்திரி ஆகியோரைத் தவிர தலைநகர் முழுமைக்கும் பைத்தியம் பிடித்துவிட்டது. யாருக்கும் சுயநினைவில்லை! ஏனெனில் எல்லோரும் பைத்தியமாக இருக்கும்போது யாருக்கு சுய உணர்விருக்கும்? ஹிப்பிகள் சொல்வதுபோல ஒவ்வொருவரும் தாங்கள் விரும்பியதை செய்தனர். மக்கள் அம்மணமாக திரிந்தனர், கத்தி கதறி கூக்குரலிட்டனர், பெண்கள் நிர்வாணமாக தெருவில் ஓடினர்! ஒருவர் தலைகீழாக நின்றார், மற்றொருவர் யோகாசனம் செய்தார், எல்லோரும் கொண்டாடிக்கொண்டிருந்தனர்! என்ன செய்வது? நகர் முழுவதும் பைத்தியமாகிவிட்டனர். எல்லோரும் பைத்தியமாகிவிட்டதால் எடுத்துச் சொல்ல யாருமே அங்கு இல்லையே! மந்திரியும் அரச குடும்பத்தினரும் மட்டுமே சோகமாக இருந்தனர். எல்லோரும் பைத்தியமாகி விட்டனரே என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்தனர். உண்மையில் தங்களது உணர்வைப் பற்றி அவர்களுக்கே சந்தேகமாக இருந்தது. நாம்தான் பைத்தியமாகிவிட்டோமோ என்று சந்தேகப்பட ஆரம்பித்துவிட்டனர். அப்போது அங்கு ஒரு வித்தியாசமான விஷயம் நடந்தது. நகர் முழுவதும் அரசரும் மந்திரியும் வித்தியாசமாக இருப்பதை உணர்ந்தது. அரசரும் மந்திரியும் பைத்தியமாகிவிட்டனர்என்ற வதந்தி பரவியது. கூட்டம் முழுமையும் அரண்மனை முன் ஒன்று கூடி அரசன் பைத்தியமாகிவிட்டான் என சத்தமிட ஆரம்பித்தனர். எல்லோருக்கும் பைத்தியம் பிடித்திருந்தது. எனவே அரசர் நம்மைப் போல இல்லை எனும் விஷயத்தில் எல்லோரும் ஒன்றுபட்டனர். காவலாளிகள், போலீஸ், படைபட்டாளம் ஆகிய அனைத்தும் பைத்தியமாகிவிட்டனர்! அதனால் அங்கு எந்த பாதுகாப்பும் இல்லை. அவர்களும் சேர்ந்து கூடி கூத்தாடிக் கொண்டு, “மரியாதையாக இயல்பாகி விடு, இல்லையேல் அரண்மனையை விட்டு வெளியே வா! நாங்கள் எங்களைப் போலவே இருக்கும் ஒருவரை புதிய அரசராக தேர்ந்தெடுத்துக் கொள்கிறோம்,” என கூக்குரலிட்டனர். அரசர், மந்திரியிடம், “நமது படைகளுக்கும் கூட பைத்தியம் பிடித்து விட்டதே! என்ன செய்வது? நமக்கு பாதுகாப்பில்லையே!” என்று கேட்டார். மந்திரி விவேகமுள்ளவர், வயது முதிர்ந்த அனுபவசாலி. அவர், “ஒரே ஒரு வழிதான் உள்ளது! முன்வாசலை அடைத்துவிட்டு பின்வாசல் வழியே தப்பி சென்று அவர்கள் தண்ணீர் பருகிய அந்த கிணற்றிலிருந்தே தண்ணீர் எடுத்து குடித்து நாமும் பைத்தியமாகி விட வேண்டியதுதான். இல்லாவிடில் இந்த பைத்தியகார கும்பல் நம்மை கொன்றுவிடும்.” என்றார். அந்த அறிவுரை மிகவும் சரியானது. அரசரும் மந்திரியும் அரச குடும்பத்தினரும் பின்வாசல் வழியே ஓடினர். அந்த மந்திரவாதி ரசாயன மாற்றம் செய்திருந்த அந்த கிணற்று தண்ணீரைக் குடித்தனர். பின் அவர்கள் பின்வாசல் வழியேவரவில்லை, ஆடிக் கொண்டும், கத்திக் கொண்டும், குதித்துக் கூத்தாடிக் கொண்டும், முன் வாசல் வழியே வந்தனர். தங்களது அரசரும் மந்திரியும் இயல்பாகி விட்டதைக் கண்ட கூட்டம் மிகவும் மகிழ்ச்சியடைந்தது. அன்று இரவு தலைநகரம், ‘அரசரும் அரச குடும்பத்தினரும் மந்திரியும் இயல்பு நிலையடைந்து விட்டனர் ‘ என்று மிகவும் கோலாகலமாக இருந்தது. 35 சொர்க்கம் மற்றும் நரகத்தின் கதவுகள் இந்த கதை அழகானது. ஜென் குரு ஹேக்குன் அபூர்வ மலர்களில் ஒருவர். ஒரு போர்வீரன் அவரிடம் வந்தான். ஒரு சமுராய், ஒரு சிறந்த வீரன் வந்து ஹேக்குனிடம் நரகம் என்று ஏதாவது உள்ளதா ? சொர்க்கம் என்று ஏதாவது உள்ளதா ? நரகம் மற்றும் சொர்க்கம் என்று ஒன்று இருக்குமானால் அவைகளின் கதவுகள் எங்கே உள்ளன ? நான் எங்கேயிருந்து உள்ளே செல்வது ? நான் எவ்வாறு நரகத்தை தவிர்த்துவிட்டு சொர்க்கத்தை தேர்ந்தெடுப்பது ? என கேட்டான், அவன் ஒரு எளிய வீரன். வீரர்கள் எப்போதும் எளிமையானவர்கள். எளிமையாக இருக்கும் ஒரு வியாபாரியை கண்டுபிடிப்பது கடினம். ஒரு வியாபாரி எப்போதும் தந்திரமான புத்தியை உடையவன். இல்லாவிடில் அவன் ஒரு வியாபாரியாக இருக்கமுடியாது. ஒரு வீரன் எப்போதும் எளிமையானவன், இல்லாவிடில் அவன் ஒரு வீரனாக இருக்கமுடியாது. ஒரு வீரன் இரண்டு விஷயங்களை மட்டுமே அறிவான், வாழ்க்கை மற்றும் இறப்பு – அதிகமல்ல. அவனுடைய வாழ்க்கை எப்போதும் பணயத்திலேயே உள்ளது, அவன் எப்போதும் சூதாடிக்கொண்டிருக்கிறான், அவன் ஒரு எளிமையான மனிதன். அதனால்தான் வியாபாரிகள் ஒரே ஒரு மகாவீரரையோ, ஒரே ஒரு புத்தரையோ கூட உருவாக்கமுடியவில்லை. பிராமணர்களும்கூட ஒரு இராமரையோ, ஒரு புத்தரையோ, ஒரு மகாவீரரையோ உருவாக்கமுடியவில்லை. பிராமணர்களும் தந்திரசாலிகள், வேறு ஒரு வகையில் தந்திரசாலிகள். அவர்களும் ஒரு வேறுபட்ட உலகத்தின், மறு உலகத்தின் வியாபாரிகளே. அவர்கள் இந்த உலகத்தை சேராத ஒரு வியாபாரத்தை செய்கிறார்கள், ஆனால் அது மறு உலகத்தை சேர்ந்தது. அவர்களுடைய பூசாரித்தனம் ஒரு வியாபாரம். அவர்களுடைய மதம் கணிதம், கணக்கீடு. அவர்களும் தந்திரசாலிகளே, வியாபாரிகளை விட அதிக தந்திரசாலிகள். வியாபாரி அவனுடைய உலகத்திற்கு உட்பட்டவன், அவர்களுடைய தந்திரம் அதையும் கடந்து செல்கிறது. அவர்கள் எப்போதும் மறு உலகத்தைப்பற்றி, அவர்கள் மறு உலகத்தை அடையும்போது அங்கு கிடைக்கபோகும் பரிசுகள் பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய சடங்குகள், அவர்களுடைய முழு மனமும் மறு உலகில் அதிக சுகத்தை எப்படி பெறுவது என்பது குறித்து சிந்தித்துகொண்டிருக்கிறது. அவர்களது கவலை சுகத்தை பற்றியது. வியாபாரிகளால் முடியவில்லை. பிராமணர்கள்கூட ஒரு புத்தரை உருவாக்கமுடியவில்லை. இது அதிசயமாய் உள்ளது. 24 தீர்த்தங்கரர்கள் அனைவரும் சத்திரியர்கள், வீரர்கள். புத்தர் ஒரு சத்திரியர், இராமன் மற்றும் கிருஷ்ணர் இருவரும் சத்திரியர்கள். அவர்கள் எளிமையான மக்கள், அவர்களுடைய மனதில் எந்த தந்திரமும், எந்த கணக்கீடும் இல்லை. அவர்களுக்கு இரண்டு விஷயங்கள் மட்டுமே தெரியும் – வாழ்க்கை மற்றும் இறப்பு. இந்த எளிமையான வீரன் ஹேக்குனிடம் சொர்க்கம் எங்கே இருக்கிறது மற்றும் நரகம் எங்கே இருக்கிறது என்று கேட்பதற்காக வந்துள்ளான், அவன் எந்த கோட்பாடுகளையும் தெரிந்துகொள்வதற்காக வரவில்லை. அவன் கதவுகளை தெரிந்துகொள்ள விரும்பினான். அதனால் அவன் நரகத்தை தவிர்த்துவிட்டு சொர்க்கத்தில் நுழையலாம் ஹேக்குன் ஒரு வீரன் மட்டுமே புரிந்துகொள்ளகூடிய வகையில் பதிலளித்தார். அங்கு ஒரு பிராமணன் இருந்திருந்தால், வேதங்கள் தேவைப்பட்டிருக்கும், அவர் வேதங்கள், உபநிடதங்கள், பைபிள், குரான், ஆகியவற்றிலிருந்து மேற்கோள் காட்டியிருப்பார் அப்போதுதான் ஒரு பிராமணன் புரிந்துகொள்ளமுடியும். ஒரு பிராமணனுக்கு தேவையானவை அனைத்தும் வேதங்களில் உள்ளது, வேதங்களே உலகம். ஒரு பிராமணன் வார்த்தைகளில், சொற்களில் வாழ்கிறான். ஒரு வியாபாரி அங்கு இருந்திருந்தால், ஹேக்குன் கொடுத்த பதில், இந்த வீரனோடு அவர் நடந்துகொண்ட விதம், ஆகியவற்றால் இந்த விடையை புரிந்துகொண்டிருக்கமாட்டான். ஒரு வியாபாரி எப்போதும் உன்னுடைய சொர்க்கத்தின் விலை என்ன ? என்ன விலை ? நான் அதனை எப்படி அடைவது?  நான் என்ன செய்யவேண்டும்? எவ்வளவு புண்ணியம் செய்திருக்கவேண்டும்? அங்குள்ள நாணயம் எது? சொர்க்கத்தை அடைய நான் என்ன செய்யவேண்டும்? என்றே கேட்டுகொண்டிருப்பான். அவன் எப்போதும் விலையை கேட்பான். நான் ஒரு அழகான கதையை கேள்விப்பட்டிருக்கிறேன். இது தொடக்கத்தில் கடவுள் உலகத்தை படைத்தபோது நடந்தது. கடவுள் வெவ்வேறு இனத்தை சேர்ந்தவர்களிடம் பத்து கட்டளைகளை பற்றி கேட்பதற்காக பூமிக்கு வந்தார். வாழ்வின் பத்து விதிமுறைகள். யூதர்கள் அந்த பத்து விதிமுறைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்துவிட்டார்கள் – கிறிஸ்துவர்களும் முகமதியர்களும். இந்த மதங்கள் அனைத்தும் யூதத்தன்மை உடையவை, அடிப்படை யூதம், யூதன் ஒரு சரியான வியாபாரி. இப்படி அதனை கேட்பதற்காக கடவுள் வந்தார், அவர் இந்துகளிடம் வந்து பத்து கட்டளைகளை பெற்றுகொள்ள விரும்புகிறீர்களா என கேட்டார். இந்துகள் முதல் கட்டளை என்ன ? எங்களுக்கு இந்த பத்து கட்டளைகள் என்னவென்று தெரியாது எங்களுக்கு கண்டிப்பாக ஒரு உதாரணம் தேவை என்றனர். கடவுள் உயிர்களை கொல்லக்கூடாது என கூறினார். இந்துகள் எங்களுக்கு அது கடினமாக இருக்கும். வாழ்க்கை சிக்கலானது, கொல்வதும் உள்ளடங்கியுள்ளது. அது ஒரு பெரிய பிரபஞ்ச விளையாட்டு, அதில் பிறப்பு, இறப்பு, போராட்டம், போட்டி, எல்லாம் உள்ளது. எல்லா போட்டிகளும் எடுக்கப்பட்டுவிட்டால் முழு விஷயமும் தட்டையாக துடிப்பற்றதாகிவிடும். எங்களுக்கு இந்த கட்டளைகள் பிடிக்கவில்லை. அவை முழு விளையாட்டையும் அழித்துவிடும். என கூறினர். பிறகு அவர் முகமதியர்களிடம் சென்று  தவறான உறவில் ஈடுபடக்கூடாது என அவர்களுக்கும் அவர் ஒரு உதாரணம் கொடுத்தார். அவர்களும் உதாரணம் கேட்டனர். முகமதியர்கள் இது கடினமாக இருக்கும். வாழ்க்கை எல்லா அழகையும் இழந்துவிடும், குறைந்தபட்சம் நான்கு மனைவிகளாவது தேவை. நீங்கள் அதனை பலவந்தம் என அழைக்கலாம், ஆனால் இதுதான் வாழ்வைத் தரக்கூடியது, எல்லா புனிதமான மக்களும் பெற வேண்டியது. மறு உலகத்தைப்பற்றி யார் அறிவார் ? இதுதான் உலகம், அனுபவிப்பதற்காக எங்களிடம் நீங்கள் இந்த உலகத்தை அளித்துள்ளீர்கள் ஆனால் இப்போது நீங்கள் இந்த பத்து கட்டளைகளோடு வந்துள்ளீர்கள். இது முரண்பாடானது என கூறினர். கடவுள் சுற்றி சுற்றி வந்தார். பிறகு அவர் மோசஸிடம், யூதர்களின் தலைவரிடம் வந்தார். மோசஸ் உதாரணத்தைச் சிறிதும் கேட்கவில்லை, மேலும் கடவுள் பயப்பட்டார், மோசஸ் முடியாது என்று சொல்லிவிட்டால், யாரும் இல்லை, மோசஸ்தான் கடைசி நம்பிக்கை. கடவுள் மோசஸை கேட்டபோது – கடவுள் என்னிடம் பத்து கட்டளைகள் உள்ளன என்று சொன்ன நொடியில் –- மோசஸ் என்ன பதிலளித்தார் ? அவர் அவை என்ன விலை? என்று கேட்டார். இப்படித்தான் ஒரு வியாபாரி யோசிப்பான். அவன் தெரிந்துகொள்ள விரும்பும் முதல் விஷயம் விலை. கடவுள் அவை இலவசம் என கூறினார். மோசஸ் பிறகு நான் பத்தை வைத்துக்கொள்கிறேன். அவை இலவசமாக இருக்கும் பட்சத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என கூறினார். அப்படித்தான் பத்து கட்டளைகளும் பிறந்தன. ஆனால் இந்த சமுராய் ஒரு யூதனல்ல, அவன் ஒரு வியாபாரியல்ல, அவன் ஒரு போர்வீரன். அவன் ஒரு எளிமையான கேள்வியோடு வந்துள்ளான். அவனுக்கு வேதங்களிலோ, விலையிலோ, சொல்லும் பதிலிலோ, ஆர்வமில்லை. அவன் உண்மையின் மீது ஆர்வம் கொண்டிருந்தான். மற்றும் ஹேக்குன் என்ன செய்தார் ? அவர் நீ யார் ? என கேட்டார் போர்வீரன் நான் ஒரு சமுராய் என பதிலளித்தான். ஒரு சமுராயாக இருப்பது ஜப்பானில் மிகவும் பெருமை வாய்ந்த ஒரு விஷயம். அதன் பொருள் ஒரு சிறந்த போர்வீரன், அவனுடைய வாழ்க்கையை இழப்பதற்கு ஒரு நொடிகூட தயங்கமாட்டான். அவனைப்பொறுத்தவரை, வாழ்வும் இறப்பும் வெறும் ஒரு விளையாட்டு. அவன் நான் ஒரு சமுராய், சமுராய்களின் தலைவன். அரசரும்கூட எனக்கு மரியாதை அளிக்கிறார், என கூறினான். ஹேக்குன் சிரித்துவிட்டு, நீ ஒரு சமுராய் ? நீ ஒரு பிச்சைக்காரனைப்போல இருக்கிறாய் என கூறினார். உடனே சமுராயின் பெருமை காயப்பட்டுவிட்டது, அவனுடைய ஆணவம் அடி வாங்கிவிட்டது. அவன் எதற்காக வந்தான் என்பதை அவன் மறந்துவிட்டான். அவன் அவனுடைய வாளை எடுத்து ஹேக்குனை கொல்லப்போனான். சொர்க்கத்தின் கதவைப்பற்றியும் நரகத்தின் கதவைப்பற்றியும் கேட்க இந்த குருவிடம் அவன் வந்துள்ளான் என்பதையே அவன் மறந்துவிட்டான். அப்போது ஹேக்குன் சிரித்துவிட்டு இதுதான் நரகத்தின் கதவு. இந்த வாளோடு, இந்த கோபம், இந்த ஆணவம், கதவு இங்குதான் திறக்கிறது என கூறினார். இதைத்தான் ஒரு போர்வீரன் புரிந்துகொள்ளமுடியும். உடனடியாக அவன் புரிந்துகொண்டான், இதுதான் கதவு. அவன் அவனுடைய வாளை அதன் உறைக்குள் போட்டான். அப்போது ஹேக்குன் இங்கு சொர்க்கத்தின் கதவு திறக்கிறது என கூறினார். நரகமும் சொர்க்கமும் உனக்குள் உள்ளன. இரண்டு கதவுகளும் உனக்குள் உள்ளன. நீ உணர்வற்று செயல்படும்போது அங்கு நரகத்தின் கதவு உள்ளது, நீ கவனமாகவும், உணர்வுடனும் இருக்கும்பொழுது, அங்கு சொர்க்கத்தின் கதவு உள்ளது. இந்த சமுராய்க்கு என்ன நடந்தது? ஹேக்குனை கொல்லப்போகும் அந்த சமயத்தில் அவன் உணர்வோடு இருந்தானா ? அவன் என்ன செய்யப்போகிறான் என்பதுபற்றி அவன் உணர்வோடு இருந்தானா ? அவன் எதற்காக இங்கு வந்துள்ளான் என்பதுபற்றி உணர்வோடு இருந்தானா ? எல்லா உணர்வும் மறைந்துவிட்டது. ஆணவம் ஆட்கொள்ளும்போது, நீ கவனமாக இருக்கமுடியாது. ஆணவம் ஒரு போதை, அந்த போதை உன்னை முழுமையாக உணர்வற்றவனாக்கிவிடும். நீ செயல்படுவாய் ஆனால் அந்த செயல் உனது உணர்வற்ற நிலையிலிருந்து வெளிப்படும் உன்னுடைய உணர்வு நிலையிலிருந்து வெளிப்படாது. மற்றும் உணர்வற்ற நிலையிலிருந்து எந்த செயல் வந்தாலும் அப்போதெல்லாம், நரகத்தின் கதவு திறந்துள்ளது. நீ என்ன செய்தாலும், நீ என்ன செய்கிறாய் என்ற உணர்வு உனக்கு இல்லாவிட்டால் நரகத்தின் கதவு திறந்துவிடுகிறது. திடீரென, ஹேக்குன் இதுதான் கதவு அதை நீ ஏற்கனவே திறந்துவிட்டாய் என சொன்னவுடன் உடனடியாக சமுராய் கவனமடைந்தான் – சூழ்நிலையே கண்டிப்பாக கவனத்தை உண்டாக்கியிருக்கவேண்டும். வெறுமனே கற்பனை செய்து பார். நீ போர்வீரனாக இருந்திருந்தால், சமுராயாக இருந்திருந்தால், வாளை கையில் ஏந்திகொண்டு, கொல்லப்போகிறாய். என்ன நடந்திருக்கும். ஒரு நொடி அதிகமாகியிருந்தால் ஹேக்குனின் தலை வெட்டப்பட்டிருக்கும், ஒரு நொடி அதிகமாகியிருந்தால் அது உடலிலிருந்து பிரிக்கப்பட்டிருக்கும். அப்போது ஹேக்குன் இதுதான் நரகத்தின் கதவு என கூறினார். இது ஒரு தத்துவார்த்தமான பதில் அல்ல. எந்த ஞானியும் தத்துவார்த்தமான முறையில் பதில் அளிப்பதில்லை, சாதாரண ஞானமடையாத மனங்களுக்கு மட்டுமே தத்துவம் இருக்கிறது. ஞானி பதிலளிக்கிறார். அப்போது அந்த பதில் வார்த்தைகளால் ஆனதல்ல. அது முழுமையானது. இந்த மனிதன் அவரை கொன்றிருக்கலாம் என்பது பொருட்டல்ல. நீ என்னை கொன்றால் நீ கவனம் பெறுவாய் என்றால், அது தகுதிவாய்ந்ததே – ஹேக்குன் விளையாட்டை விளையாடினார். ஒரு வினாடி தப்பியிருந்தாலும் அந்த மனிதன் அவரை கொன்றிருக்கலாம். ஆனால் சரியான நொடியில் ஹேக்குன் இதுதான் கதவு என கூறினார். நீ ஒருவேளை சமுராயைப்பற்றி கேள்விபடாமல் இருக்கலாம். நீ ஒரு சமுராயை கொல்லப்போவதாக வைத்துகொள்வோம், உன்னுடைய வாள் உன்னுடைய கையில் உள்ளது, அது இப்போது அவனுடைய கழுத்தை தொடப்போகிறது. அவன் உனக்கு முன்னால், பாதுகாப்பு ஏதுமின்றி, எந்த ஆயுதமும் இன்றி, நின்றுகொண்டிருக்கிறான். சமுராய்கள் ஒரு குறிப்பிட்ட சத்தத்தை வைத்திருக்கிறார்கள், ஒரு மந்திரம். அவன் ஒரே ஒரு வார்த்தையை மிகவும் சத்தமாக கூறுவான், நீ உன்னுடைய சக்தி அனைத்தையும் இழந்துவிடுவாய். நீ இறந்ததை போல, ஒரு சிலைபோல ஆகிவிடுவாய். அவன் வெறுமனே ஒருவேளை ஹே என்று கூறலாம். நீ நிள்றுவிடுவாய். உனது கை நகராது. அந்த சத்தம் எல்லாவற்றையும் கட்டுபடுத்தும் இதயத்தில் குத்தும். உன்னுடைய கை நின்றுவிடும், உன்னுடைய மனம் அதிர்ச்சி அடையும், எல்லா செயல்பாடுகளும் மறைந்துவிடும். அவன் ஆயுதம் ஏதுமின்றி இருந்தால்கூட உன்னால் ஒரு சமுராயை கொல்லமுடியாது. ஒரு சத்தம் அவனுக்கு பாதுகாப்பாகிவிடும். நீ ஒரு துப்பாக்கி வைத்திருந்தால், உன்னுடைய கைகள் நகரமுடியாது, அல்லது நீ குறியை தவறவிடுவாய். அது வெறும் ஒரு சத்தம், ஒரு குறிப்பிட்ட முறையில் எழுப்பபடவேண்டிய ஒரு சத்தம், ஆனால் அது உனது இதயத்திற்குள் ஆழமாக சென்று உன்னுடைய செயல்பாட்டை முழுமையாக மாற்றிவிடும், உன்னுடைய செயல்பாட்டின் வழக்கத்தை மாற்றிவிடும். ஹேக்குன் இதுதான் கதவு என கூறியபோது சமுராய் சிலைபோல கண்டிப்பாக நின்றிருக்கவேண்டும். அந்த சிலைபோன்ற நிலையில், எல்லா செயல்களும் உறையும்போது, நீ கவனமடைகிறாய். ஏதாவது செயல் தேவை . . . இல்லாவிடில் உனது உணர்வற்ற தன்மை உடைந்து நீ உணர்வு பெறுவாய். ஒரு மனிதன் ஆறு மணிநேரம் எதுவும் செய்யாமல் அமர்ந்திருந்தால் அவன் ஞானடைந்துவிடுவான் என ஜென் கூறுகிறது. வெறும் ஆறு மணிநேரம் . . .ஆனால் ஆறுமணிநேரம் உண்மையிலேயே மிக அதிகம். நான் ஆறு நிமிடங்கள் போதும் என கூறுகிறேன். நீ முற்றிலுமாக எந்த செயல்பாடும் இன்றி இருக்கமுடியுமானால் ஆறு நொடிகள் கூட போதும். நீ ஏதும் செய்யாமல் இருக்கும்போது, நீ உணர்வற்று இருக்கமுடியாது, நீ ஏதும்செய்யாமல் இருக்கும்போது உன்னுடைய முழு சக்தியும் உணர்வுதன்மை அடைகிறது. ஒரு பிரம்மாண்ட வெடித்தல் நிகழ்கிறது. 36 பிடிப்பின் வலை எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது. ஒரு குரு இறக்கும் தருவாயில் இருந்தார். அப்போது அவர் தனது தலைமை சீடரை அருகில் கூப்பிட்டு அவரது காதில் மெதுவாக “ஒரு விஷயத்தை நன்றாக நினைவில் கொள், ஒரு போதும் பூனையை வீட்டிற்குள் அனுமதிக்காதே.” என்று சொல்லி விட்டு இறந்து விட்டார். “இது என்ன? எதற்காக அவர் என்னை கூப்பிட்டு வீட்டிற்க்குள் பூனையை அனுமதிக்காதே” என்றார் என்று புரியவில்லை அந்த தலைமை சீடருக்கு. அவர் வயது முதிர்ந்த கிழவர்களிடம் கேட்டுப்பார்த்தார். இதில் ஏதோ ஒரு செய்தி இருக்க வேண்டும் என அவர் நினைத்தார். இது ஏதோ ஒரு குறியீடாக இருக்கலாம், இல்லாவிடில் அவர் இதை ஏன் சொல்ல வேண்டும் இதற்கு எந்த விளக்கமும் கொடுக்காமல் அவர் இறந்து போய் விட்டார். ஏன் நீங்கள் பூனைகளுக்கு எதிராக இருக்கிறீர்கள் என்று நான் கேட்டிருப்பேன். உங்களது வாழ்க்கை முழுவதும்….  உங்களது ஒழுக்கம் வழிமுறை நெறிமுறை விளக்கம் வரையறை அனைத்தும் இதற்குத்தானா? – பூனையை வீட்டினுள் அனுமதிக்காதே. ஒரு வயதான மனிதர் கூறினார், “எனக்கு அது என்ன என்று தெரியும். இது அவரது குருவால் அவருக்கு கொடுக்கப்பட்ட செய்தி. ஏனெனில் அவர் ஒரு பூனையால் அவதிக்குள்ளானார். அந்த குரு கிராமத்துக்கு வெளியே ஒரு குடிசையில் வசித்து வந்தார். அவரிடம் இரண்டே இரண்டு கோவணங்கள் மட்டுமே இருந்தன”. ஒரு துறவிக்கு அது மட்டுமே உடை. உங்களுக்கு அது உள்ளாடை ஆனால் அவருக்கு அது மட்டுமே ஆடை. அவரிடம் இரண்டு கோவணங்கள் மட்டுமே இருந்ததில் பிரச்னை என்னவென்றால் அங்கிருந்த எலிகள் அவருடைய கோவணத்தை கடித்து விடுகின்றன. அவர் கிராமத்திலுள்ளவர்களிடம் “இந்த எலிகள் மிகவும் தந்திரமானவை. அவை என்னுடைய கோவணத்தை கடித்து விடுகின்றன. என்ன செய்வது?” என்று கேட்டார். ஒருவர், “அது மிகவும் சுலபம். நாங்கள் கிராமத்தில் பூனையை வைத்துக் கொள்வோம். நீங்களும் ஒரு பூனையை வைத்துக் கொள்ளுங்கள். நான் ஒரு பூனையை பிடித்துவந்து தருகிறேன்.” என்றார். அந்த குரு, “சரி, இது ஒரு எளிய வழிதான்.” என்று ஒத்துக் கொண்டார். பூனை வந்தது. அது அதன்  வேலையை மிகச் சரியாக செய்தது. எல்லா எலிகளையும் தின்று முடித்து விட்டது. இப்போது பிரச்னை துவங்கி விட்டது. எலிகள் தீர்ந்துவிட்டன. பூனைக்கு பசி வந்துவிட்டது. அது எனக்கு பால் வேண்டும் எனக் கேட்டது. அது எப்போதும் துறவி எதிரே வந்து பசியோடு உட்கார்ந்து கொண்டிருந்தது. பூனைகள் பசியோடிருக்கும்போது பார்த்தால் மிகவும் பாவமாக தோன்றும். அது அதன் வேலையை முடித்து விட்டது. ‘நான் உனக்கு என்னாலான எல்லா உதவிகளையும் செய்து விட்டேன், எல்லா எலிகளையும் தின்று விட்டேன். ஆனால் இப்போது எனக்கு பசிக்கிறது’ என்று சொல்லாமல் சொல்லியது. அந்த குரு திரும்பவும் வந்து, “இப்போது என்ன செய்வது அந்த பூனை என் முன்னால் வந்து உட்கார்ந்து கொண்டு பசியோடு என்னை பார்க்கிறது. எனக்கு உணவு கொடு இல்லாவிடில் நான் போகிறேன். நான் போய் விட்டால் எலிகள் திரும்பவும் வந்து விடும். என்பது போல பார்க்கிறது. அதை அது சொல்லவில்லை, ஆனால் நான் அதை அதன் கண்களில் பார்க்கிறேன். அதற்கு பால் கொடுப்பதற்கு எனக்கு பால் வேண்டும். “ என்று கேட்டார். அந்த மனிதன், “ஒவ்வொரு நாளும் நீங்கள் பாலுக்கு வர வேண்டியிருக்கும். என்னிடம் பல பசுக்கள் உள்ளன. அதில் ஒன்றை கொடுக்கிறேன். அதை வைத்துக் கொள்ளுங்கள்.” என்றான். அவர் பசுவை வாங்கிக் கொண்டு சென்றார். ஆனால் அதனால் பிரச்னைகள்தான் அதிகமாயின. இப்போது பசுவுக்கு புல் தேவை பட்டது. அதனால் அவர் திரும்பவும் கிராமத்துக்குச் சென்றார். மக்கள், “நீ ஒரு கிறுக்கன், பிரச்னை பிரச்னை. நீங்கள் ஏன் உங்கள் குடிசையை சுற்றி உள்ள இடத்தில் புல் வளர்த்துக் கொள்ளக் கூடாது?. அங்கே ஏகப்பட்ட இடம் சும்மா தரிசாக கிடக்கிறது. நாங்கள் விதை தருகிறோம். இந்த விதைகளை வைத்து எதையாவது விதைத்து வளர்த்துக் கொள்ளுங்கள். அது உங்களுக்கும் உதவும். நீங்களும் சாப்பிட்டு பசுவுக்கும் எதையாவது கொடுங்கள்.” என்றனர். அதனால் அந்த குரு, விதை விதைத்து வளர்க்க ஆரம்பித்தார். ஆனால் திரும்பவும் பிரச்னை வந்தது. இப்போது அந்த பயிரை அறுவடை செய்ய வேண்டும். ஆனால் அவரோ ஒரு துறவி, அவர் இந்த வேலைகளை செய்ய கூடாது. ஆனால் ஒரு விஷயம் மற்றொரு விஷயத்திற்கு கொண்டு செல்கிறது. அதனால் அவர் திரும்பவும் கிராமத்திற்கு சென்றார். “பயிர் அறுவடைக்கு தயாராகி விட்டது. ஆனால் அதை செய்ய என்னிடம் கருவிகள் எதுவும் கிடையாது. அதனால் எனக்கு உதவி வேண்டும்.” என்று கேட்டார். மக்கள், “இங்கே பாருங்கள் உங்களோடு மிகவும் தொந்தரவாகி விட்டது. உங்களால் எந்த பயனும் இல்லை. எதற்கும் உங்களால் தீர்வு காண முடியாது. நாங்கள் தான் எதற்கும் தீர்வு காண வேண்டும். இது மிகவும் எளிது. இங்கே ஒரு விதவை பெண் இருக்கிறாள். அவள் உங்களை, உங்கள் பசுவை, உங்கள் பயிரை, உங்கள் உணவை, எல்லாவற்றையும் – எல்லாவற்றையும் என்றால் பூனை. எலி …… அவள் மிகவும் அனுபவம் வாய்ந்த பெண்.” ஆனால்! என்ற துறவி நான் ஒரு துறவி. என்றார். அவர்கள், இந்த துறவு எல்லாவற்றையும் மறந்து விடுங்கள். என்ன வகையான துறவி நீங்கள்.! உங்களிடம் பசு, பூனை, நிலம். பயிர் ஆகிய எல்லாமும் உள்ளன. ஆனால் நீங்கள் நான் ஒரு துறவி என்று சொல்லிக் கொள்கிறீர்கள். எல்லாவற்றையும் மறந்து விடுங்கள். மேலும் இந்த திருமணம் போலியான ஒன்று. உங்களுக்கு அந்த பெண்ணிடம் எந்த உறவும் கிடையாது. அவள் வறுமையில் கஷ்டத்தில் இருக்கிறாள். நீங்களும் சிரமத்தில் இருக்கிறீர்கள். இருவரும் சேர்ந்து இருந்தால் உங்களுக்கு நல்லது.” என்றனர். அவர், “அப்படியானால் சரி, அது சட்டபூர்வமானதாக இல்லாவிடில் சரி. அதில் எந்த சிரமமும் இல்லை. ஏனெனில் எனது குரு திருமணம் செய்து கொள்ளாதே என்று தான் கூறியுள்ளார். இதற்கு எதிராக எதுவுமே சொல்லவில்லை. நான் தான் திருமணம் செய்யவில்லையே. நான் அந்த பெண்ணுடன் வாழ்வதைப் பற்றி இந்த கிராமம் எதுவும் சொல்லாமல் இருக்கத்தான் இந்த ஏற்பாடு என்பதால் இது எனக்கு சரிதான். நான் அவளை எனது மனைவி என்று சொல்லிகொள்ளலாம், ஆனால் உண்மையில் நான் அவளது கணவனாக எதுவும் செய்யவேண்டியதில்லை, அவளும் எனது மனைவியாக உண்மையில் எதுவும் செய்யவேண்டியதில்லை.” என்று ஒத்துக் கொண்டார். அவர் அந்த பெண்ணுடன் பேசினார். அவள், எனக்கு மறுபடியும் திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை. ஒருமுறை செய்ததே போதும். ஆனால் நீங்களும் சிரமத்தில் இருக்கிறீர்கள், நானும் சிரமத்தில் இருக்கிறீர்கள். அதனால் ஒருவருக்கொருவர் ஒத்தாசை செய்து கொள்வோம். அந்த விதத்தில் இது எனக்கு சரிதான்.” என்றாள். அதனால் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இப்போது எல்லாமும் நன்றாக போய்க் கொண்டிருந்தது. அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகும் சில நாட்களில் அவள் அவருக்கு சிசுரிஷை செய்தாள். மெதுமெதுவாக அவர் அந்த பெண்ணை விரும்ப ஆரம்பித்தார். ஒரு ஆண் ஆண்தான், ஒரு பெண் பெண்தான். பெண்ணும் அவரை விரும்ப ஆரம்பித்தாள். அவர்கள் இருவருமே தனிமையை உணர்ந்தனர். ஒரு குளிர்கால இரவில் இங்கே குளிராக இருக்கிறது நாம் ஏன் நெருங்கி இருக்கக் கூடாது என மற்றவர் கேட்கவேண்டும் என இருவருமே விரும்பினர். இறுதியில் அந்த பெண், இங்கே மிகவும் குளிராக இருக்கிறது என்று கூறினாள். அந்த துறவியும் இங்கேயும் குளிராக இருக்கிறது என்றார். அப்போது அந்த பெண், உங்களுக்கு தைரியம் இல்லைபோல தோன்றுகிறதே என்றாள். அவர், அதுசரிதான். நீ இங்கே வா, எனக்கு தைரியம் இல்லை. நான் ஒரு துறவி, நீ ஒரு அனுபவமுள்ள பெண்மணி. நீ இங்கே வா. இருவரும் சேர்ந்திருந்தால் கதகதப்பாக இருக்கும். என்றார். கதகதப்பாகத்தானே இருக்கும். இப்படித்தான் அவரது முழு துறவறமும் வீணாகிப்போனது. அவர் இறக்கும்போது அவர் தனது சீடர்களிடம் உங்களுடன் எந்த பூனையையும் தங்க விடாதீர்கள். என்று கூறி விட்டு இறந்தார். வயதான மனிதன் அந்த தலைமை சீடரிடம், “அதிலிருந்து உங்களது பாதையில் ஒவ்வொரு குருவும் தனது சீடர்களிடம் பூனையைப் பற்றி கவனமாக இருங்கள் என்று கூறுவது வழக்கமாகிப் போனது. பூனையைப் பற்றி கவனமாக இருப்பது மிகவும் கடினம். எப்படியோ பூனை உள்ளே வந்து விடும் – வாழ்க்கை மிகவும் விசித்திரமானது” என்றார். 37 தீட்சை பழமையான கதை ஒன்று உண்டு. கடைசி தீட்சை சீடனுக்கு அளிக்கப்படவுள்ளது. குரு, உன்னுடைய கடைசி தீட்சை மிகவும் மறைமுகமான ஒரு வழியிலேயே அளிக்கப்படும், என கூறினார். குரு அவனுடைய வழியில் வைத்த எல்லா கஷ்டங்களிலும் சீடன் தேறிவிட்டான், அவன் தன்னை நிரூபித்துவிட்டான். இப்போது கடைசி தீட்சை . . . மற்றும் அவன் கடைசி தீட்சையிலும் தேறிவிட்டால், அவன் ஞானமடைந்தவன் என அறிவிக்கப்படுவான் சீடன் குருவின் காலை தொட்டு, நான் தயாராக இருக்கிறேன். வெறுமனே எனக்கு கட்டளையிடுங்கள் மற்றும் எது செய்யப்படவேண்டுமோ அதை நான் செய்வேன், என கூறினான். குரு ,நீ அரசரிடம் செல்லவேண்டும், மற்றும் அதிகாலையில் செல்லவேண்டும், அரசரை பார்க்கும் முதல் ஆளாய் நீ இருக்கவேண்டும். ஏனெனில் அரசருக்கு ஒரு பழக்கம் உள்ளது, முதலில் வருபவர்கள் யாராக இருந்தாலும், வருபவர் எதை கேட்டாலும், அரசர் கொடுத்துவிடுவார். ஆனால் நாடு செல்வ செழிப்போடு இருப்பதால் யாராவது செல்வது மிகவும் அபூர்வம். வருடங்கள் கடந்துவிட்டன, எதை கேட்டும் யாரும் போவதில்லை. ஆனால் தவறவிட்டுவிடாதே – மிகவும் சீக்கிரமாகவே அங்கு இரு. அரசர் காலையில் அவருடைய தோட்டத்திற்குள் நுழைவார், சூரியன் உதயமாகும்போது, அரசர் தோட்டத்திற்குள் நுழைவார் – அங்கு இரு. மற்றும் அவர் உன்னை உனக்கு என்ன வேண்டும் ? என்று கேட்பார் மற்றும் உனக்கு என்னவேண்டுமோ, அதை அவரிடம் கேள், என கூறினார். இந்த கடைசி தீட்சை எந்த விதமானது என்பதை சீடனால் புரிந்துகொள்ள முடியவில்லை, ஆனால் கட்டளை பின்பற்றப்படவேண்டும், அவன் சென்றான். அவன் தவறவிடவில்லை, அதிகாலை மூன்று மணிக்கு அவன் அரசருக்காக காத்திருந்தான். சூரியன் உதயமாகும் சமயத்தில், அரசர் தோட்டத்தில் நுழைந்தார் அந்த இளைஞன் அரசரை வணங்கினான். அரசர் ,நீ எதையாவது கேட்பதற்காக வந்திருக்கிறாயா ? நீ எதை வேண்டுமானாலும் கேட்கலாம்! நீ என்ன கேட்டாலும், நான் அதனை உனக்கு தருவேன், என கூறினார். மிகப்பெரிய ஆசை இளைஞனை ஆட்கொண்டது. அவன் ஒரு ஏழை, மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தவன், மற்றும் அரசர் எதுவாக இருந்தாலும் என்று கூறுகிறார் ? நிச்சயமாக தெரிந்துகொள்வதற்காக, அவன் திரும்பவும் கேட்டான். எது வேண்டுமானாலும் என்று சொல்வதன் மூலம் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ? அரசர் சரியாக அதைத்தான் சொல்கிறேன் – எதுவாக இருந்தாலும் நீ என்னுடைய இராஜ்ஜியத்தை கேட்டால் கூட நான் அதனை உனக்கு தந்துவிடுவேன். நீ உனக்கு எவ்வளவு பணம் வேண்டுமோ அவ்வளவு கேட்கலாம். . . . ,என கூறினார். ஏழை இளைஞனால் அதிகமாக யோசிக்கமுடியவில்லை. அவன் ஒருவேளை பத்தாயிரம் ரூபாய் போதுமானது என எண்ணினான். ஆனால் ஓர் ஆசை, ஏன் பத்தாயிரம் ? உனக்கு ஒருவேளை இப்படி ஒரு வாய்ப்பு திரும்பவும் கிடைக்காமலேயே போகலாம் – ஏன் ஒரு இலட்சம் கேட்கக்கூடாது ? மற்றும் பிறகு மற்றொரு ஆசை, மற்றும் ஆசை மேலும் ஆசை. . . ஏனெனில் மனம் தொடர்ந்து இன்னும் இன்னும் என கேட்டுகொண்டேயிருக்கிறது. எனவே அவன் என்ன முடிவு செய்தாலும், மனம் இன்னும் அதிகமாக என்று கேட்டுகொண்டேயிருந்தது. அரசர் நீ கேட்பதற்கு இன்னும் தயாராகவில்லை போல தெரிகிறது, நான் எனது காலை நடைப்பயிற்சிக்கு செல்கிறேன், அந்த நேரத்தில் நீ முடிவு செய். மற்றும் நான் திரும்ப வரும்போது, நீ என்ன கேட்டாலும் அது உனக்குதரப்படும், என கூறினார். அந்த அரை மணிநேரம் சித்ரவதையாக இருந்தது, அவன் போய்கொண்டேயிருந்தான், நான் இதை கேட்கலாம் மற்றும் அதையும் கேட்கலாம், ஒரு தங்க ரதம், மற்றும் பல கோடி ரூபாய் பணம், மற்றும் மிக அதிக அளவிலான நிலம் – நான் எனக்கே உரிய ஒரு சிறிய இராஜ்ஜியத்தை உருவாக்குவேன். ஆசைகள் மற்றும் கனவுகள். . . மற்றும் அரசர் வந்தார். அந்த அரை மணி நேரம் மிகவும் வேகமாக போய்விட்டது. அரசர் அங்கு நின்றுகொண்டிருந்தார் மற்றும் அரசர் , இளைஞனே நீ இன்னும் முடிவு செய்யவில்லையா ? என கேட்டார். பிறகு திடீரென இளைஞன் , நான் எதை கேட்டாலும் அது அரசர் வைத்திருப்பதை விட குறைவாகவே இருக்கும், எனவே ஏன் எல்லாவற்றையும் கேட்ககூடாது ? எண்ணிக்கைக்கு முடிவு கட்டிவிடலாம் என எண்ணினான் ! எனவே அவன் ,ஐயா, நீங்கள் தர விரும்பினால், நான் எல்லாவற்றையும் உங்களிடம் இருப்பது அனைத்தையும் கேட்கிறேன். உங்களுடைய முழு இராஜ்ஜியம், உங்களுடைய அனைத்து செல்வங்களும், உங்களுடைய மாளிகைகள் – – அனைத்தும் வேண்டும். நீங்கள் வெறுமனே அரண்மனையை விட்டு வெளியேறிவிடுங்கள் ! மற்றும் நீங்கள் திரும்பவும் அரண்மனைக்குள் செல்லக்கூடாது. நீங்கள் ஏதையும் எடுத்துகொள்ளக் கூடாது. நீங்கள் வெறுமனே வெளியேறிவிடுங்கள் – – இராஜ்ஜியத்தைப்பற்றி எல்லாவற்றையும் மறந்துவிடுங்கள். நான் உங்களுக்கு நீங்கள் அணிந்திருக்கும் ஆடைகளை மட்டுமே அனுமதிக்கமுடியும். அதைக்கூட அவன் எதிர்ப்போடுதான் செய்தான், அதுகூட அவனுக்கு குறைவதாக தோன்றியது. அரசர் மண்டியிட்டு, கடவுளிடம் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தார், அவருடைய கண்களில் ஆனந்த கண்ணீர் உருண்டோடியது, பரவச கண்ணீர் ! மற்றும் அவர் கடவுளிடம் நான் இப்படிப்பட்ட ஒரு மனிதனுக்காகத்தான் காத்துகொண்டிருந்தேன் ! ஆனால் முடிவில் என்னுடைய பிரார்த்தனைக்கு செவி சாய்த்துவிட்டீர்கள், இப்போது அவன் வந்துவிட்டான், நான் இந்த எல்லா முட்டாள் தனங்களில் இருந்தும் விடுபட்டுவிட்டேன். நன்றி நீங்கள் என் பிரார்த்தனைக்கு செவி சாய்த்துவிட்டீர்கள், அது அதிக இருந்தாலும், நான் அதிக காலம் காத்திருக்க வேண்டியிருந்தது இருந்தாலும், நீங்கள் எனது பிரார்த்தனைக்கு செவிசாய்த்துவிட்டீர்கள், நான் நன்றியால் நிறைந்துள்ளேன் என நன்றி கூறிக்கொண்டிருந்தார். அரசர் இந்த விஷயங்களை கடவுளிடம் கூறிக்கொண்டிருக்கும்பொழுது இளைஞன் அங்கு நின்றுகொண்டிருந்தவன் என்ன விஷயம் ? இராஜ்ஜியத்தை துறப்பது குறித்து இந்த மனிதன் அதிக மகிழ்ச்சியை உணர்கிறான் என்றால், நான் எதற்குள்  நுழைகிறேன் ? இந்த மனிதன் சொல்வதைப்போல் 30 வருடங்களாக என்னுடைய முழு இராஜ்ஜியத்தை ஏற்றுகொள்ளும் ஒருவனை அனுப்பு, என்னுடைய முழு இராஜ்ஜியத்தையும் கேட்கும் ஒருவனை அனுப்பு என இந்த மனிதன் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தான் என்றால் – 30 வருடங்களாக அவன் பிரார்த்தனையில் ஈடுபட்டிருக்கிறான் எனில், பிறகு இது எந்த மதிப்பும் உடையது அல்ல. நான் தேவையற்ற பிரச்சனைக்குள் நுழைகிறேன் என யோசிக்க தொடங்கினான். இளைஞனும் மண்டியிட்டான், அரசரின் கால்களை தொட்டு சார் நான் ஒரு இளைஞன் . . ஓர் இளைய முட்டாள். தயவுசெய்து மன்னித்துவிடுங்கள். எனக்கு எதுவும் வேண்டாம். கடவுளிடம் உங்களுடைய பிரார்த்தனை, கடவுளிடம் உங்களுடைய நன்றியுணர்வு என்னுடைய முழு மனதையும் முடித்துவிட்டது. நான் காட்டிற்கு என்னுடைய குருவிடம் திரும்பி செல்கிறேன், என கூறினான். அரசர் அவனிடம் சம்மதிக்க வைக்க முயன்றார். போகாதே, வெறுமனே பார். அரண்மனைக்குள் வா ! நான் என்னுடைய அரண்மனை, என்னுடைய இராஜ்ஜியம், என்னுடைய செல்வங்கள் மட்டுமல்ல, அதோடு என்னுடைய அழகான பெண்ணையும் உனக்கு தருகிறேன், வந்து வெறுமனே பார் ! என்றார். ஆனால் இளைஞன் நான் இங்கு ஒரு நொடிகூட இருக்கமுடியாது – – ஏனெனில் மனம் என்னை ஏமாற்றிவிடலாம். ஒரு உள்ளார்ந்த புரிதல் நிகழ்ந்துவிட்டது, மற்றும் நீங்கள் கடவுளிடம் நன்றியுணர்வு கொண்டதைபோல நான் உங்களிடம் நன்றியுணர்வோடு இருக்கிறேன். நான் தெளிந்துவிட்டேன் ! என கூறினான். மற்றும் இளைஞன் தன்னுடைய குருவிடம் சென்று நடந்த முழு கதையையும் சொன்னபோது, குரு உன்னுடைய கடைசி தீட்சை முடிந்துவிட்டது. இப்போது எதுவும் எப்போதும் உன்னை ஒரு அடிமையாக்காது. இப்போது நீ கவனமாக, உணர்வோடு, சுதந்திரமாக இருக்கிறாய், நீ தேறிவிட்டாய் – – நான் மகிழ்ச்சியடைகிறேன். நான் இங்கிருந்து கவனித்துகொண்டிருந்தேன், நீ முழு இராஜ்ஜியத்தையும் கேட்டபோது, என்னுடைய இதயம் அழுதது. நான் ,எனவே இந்த முட்டாளிடம் 15 வருட உழைத்தது, எல்லாம் முடிந்தது என நினைத்துகொண்டிருந்தேன். ஆனால் நீ எடுத்த முடிவால் நான் அடைந்த மகிழ்ச்சியை நீ கற்பனை செய்துகூட பார்க்கமுடியாது, என கூறினார். நீ திரும்பவும் வந்துவிட்டாய், உன்னால் அந்த விஷயத்தை பார்க்கமுடிந்தது, நீ கவனித்துகொண்டிருந்தாய். என குரு கூறினார். கவனித்து கொண்டிரு, வெறுமனே கவனி. . . . மக்களிடம் பணம் உள்ளது, மக்களிடம் மாளிகைகள் உள்ளன, மக்களிடம் நீ ஆசைப்படும் அனைத்தும் உள்ளன – – வெறுமனே கவனி, வெறுமனே பார். அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா ? அவர்கள் நிறைவாக இருக்கிறார்களா? அவர்கள் உன்னைவிட மகிழ்ச்சியற்று இருக்கலாம் மற்றும் உன்னைவிட அதிகமாக நிறைவற்று உணரலாம் – – பிறகு அவர்களை பின்தொடராதே. அவர்கள் குருடர்கள் ! அவர்கள் மற்ற குருட்டு மக்களை பின்தொடர்ந்திருக்கிறார்கள். அவர்களை பின் தொடராதே, கூட்டத்தை பார்த்து காப்பியடிக்காதே. 38 மனதின் வழி நான் உங்களுக்கு ஒரு கதை சொல்கிறேன். அது திபெத்தில் நிகழ்ந்தது. வெகு தூரத்தில் உள்ள ஒரு பள்ளத்தாக்கில் சேவை செய்து கொண்டிருந்த லாமா ஒருவர் தனது தலைமையகத்திற்கு மேலும் ஒரு லாமா தேவை என்று தகவலனுப்பினார். மேலும் உடனடியாக அவரை இங்கு அனுப்பி வையுங்கள் என்றும் கேட்டிருந்தார். தலைமை மடாலயத்தின் மதகுரு எல்லா சீடர்களையும் கூப்பிட்டு அனுப்பி இந்த கடிதத்தை படித்து காண்பித்துவிட்டு அவர்களிடம் நான் உங்களில் ஐந்து பேரை அனுப்ப போகிறேன் என்றார். ஒரு லாமா, ஆனால் அவர் ஒருவரை தானே அனுப்பச் சொல்லிக் கேட்டிருக்கிறார் ஏன் ஐந்து பேரை அனுப்ப வேண்டும் என்று கேட்டார். வயதான தலைமை குரு ஏனென்று உனக்கு பின்னால் தெரியும். நான் ஐந்து பேரை அனுப்பப் போகிறேன், ஆனாலும் ஒருவராவது சென்று சேர்வது நிச்சயமில்லை. ஏனெனில் வழி மிகவும் நீண்டது, மற்றும் ஆயிரத்தோரு தடைகள் வரும். என்று கூறினார். எல்லோரும் சிரித்தனர். இந்த வயதான மனிதனுக்கு மூளை குழம்பிவிட்டது. ஒரே ஒருவர் தேவைபடும் இடத்திற்கு ஏன் ஐந்து பேரை அனுப்ப வேண்டும் என்று கேட்டனர். ஆயினும் அவர் வற்புறுத்தியதால் ஐவர் பயணத்திற்கு தயாராயினர். அடுத்த நாள் காலை அவர்கள் ஒரு கிராமத்தை கடக்கும்போது ஒரு அறிவிப்பாளன் அந்த கிராமத்தின் தலைமையிடம் இருந்து செய்தி கொண்டு வந்தான். எங்களது குரு இறந்துவிட்டார். எனவே எங்களுக்கு ஒரு குரு தேவை. நல்ல சம்பளம் கிடைக்கும் என்று கூறினான். அந்த கிராமம் நல்ல செழிப்பானதாகவும் வளமானதாகவும் தோன்றியது. அதனால் அந்த ஐந்து பேரில் ஒருவர் நான் இங்கேயே தங்க விரும்புகிறேன். ஏனெனில் இதுவும் புத்தரின் வேலைதான். ஏன் பள்ளத்தாக்கு வரை செல்ல வேண்டும். இங்கேயும் நான் அதே வேலையைதான் செய்யப் போகிறேன். நீங்கள் நால்வரும் போங்கள் நான் இங்கேயே தங்கப் போகிறேன் என்றார். ஒருவர் குறைந்துவிட்டார். அடுத்தநாள் அவர்கள் ஒரு நகரத்தின் வெளிப்பாதை வழியாக சென்று கொண்டிருந்தனர். அந்த நகரத்தின் அரசன் அந்த வழியே தன் குதிரையில் வந்து கொண்டிருந்தான். அந்த நான்கு பேரில் ஒரு துறவி மிகவும் ஆரோக்கியமானவராகவும் தேஜஸ் பொருந்தியவராகவும் அழகானவராகவும் இருந்தார். உடனே அரசன் நில்லுங்கள். நான் என் பெண்ணிற்கு ஒரு இளைஞனை தேடிக் கொண்டிருந்தேன். நீங்கள் மிகப் பொருத்தமானவராக தோன்றுகிறீர்கள். எனக்கு ஒரே ஒரு மகள்தான். அவளை திருமணம் செய்து கொண்டு இந்த அரசையும் ஏற்றுக் கொள்ளுங்கள். என்றான். இயல்பாகவே அந்த இளம்துறவி தனது சக பயணிகளிடம் போய்வருகிறேன் என்று கூறி விடைபெற்றுக் கொண்டான். அவனும் போய்விட்டான். இரண்டாவது ஆளும் சென்று விட்டான். இப்போது இருந்த மூன்று பேருக்கும் அந்த வயதான குரு அறிவு கெட்டவரல்ல என்பது புரிந்தது. வழி மிகவும் நீண்டது, மேலும் ஆயிரத்தோரு தடைகள் என்பது புரிந்தது. இப்போது மூவரும் நாம் இதுபோன்ற ஒரு போதும் செய்யக்கூடாது என்று முடிவு செய்து கொண்டனர். ஒருவர் அரசராகவும் மற்றொருவர் மிகப் பெரிய குருவாகவும் ஆனதில் அடிமனதில் பொறாமை இருந்தது. என்னதான் நடக்கப் போகிறது இந்த பள்ளத்தாக்கில் என்று எண்ணினர். மூன்றாவது நாள் அவர்கள் வழியை தவற விட்டுவிட்டனர். தூரத்தில் மலைஉச்சியில் ஒரே ஒரு விளக்கு வெளிச்சம் தெரிந்தது. எப்படியோ தட்டுதடுமாறி அந்த விளக்கு வெளிச்சத்தை அடைந்தனர். அது ஒரு வீடு. அங்கே ஒரேஒரு இளம் பெண் இருந்தாள். அவள் இவர்களை பார்த்தவுடன் நீங்கள் கடவுளால் அனுப்பப் பட்டவர்கள் போலத் தெரிகிறீர்கள். எனது தாயும் தந்தையும் வெளியே சென்றவர்கள் இன்னேரம் வந்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை வரவில்லை. எனக்கு தனியாக இருக்க பயமாக இருந்தது. தெய்வம் அனுப்பிய தூதுவர்கள் போல நீங்கள் வந்து விட்டீர்கள். மிகவும் நன்றி. புத்தர்தான் உங்களை அனுப்பி இருக்க வேண்டும். எனது தாய்தந்தை வரும்வரை நீங்கள் என்னுடன் இருங்கள் எனக்கு பயமாக இருக்கிறது என்று கேட்டுக் கொண்டாள். அடுத்த நாள் காலை இவர்கள் கிளம்ப வேண்டும். ஆனால் இவர்களில் ஒருவர் – அந்த பெண்ணுடன் ஆழமாக காதலில் விழுந்து விட – இவளுடைய பெற்றோர் வரும்வரை நான் வர முடியாது. அது முறையல்ல என்று கூறி வர மறுத்தார். முறையல்ல என்பதல்ல விஷயம், பிடிப்புதான் விஷயம். ஆனால் பிடிப்பு அங்கிருக்கும்போது, மக்கள் முறையை பற்றி பேசுகின்றனர். மற்ற இருவரும் இது சரியல்ல. நாம் சென்றடையப் போகிறோம். நீ வரவில்லை. மேலும் நாம் இதுபோல செய்வதில்லை என்று நாம் முடிவு செய்தோம் அல்லவா என்று கேட்டனர். அதற்கு அவன், நான் வாழ்க்கை முழுவதும் கருணையைப் பற்றியே கற்றுக் கொண்டு வந்திருக்கிறேன். இந்த பெண் தனியாக இருக்கிறாள். இவளது பெற்றோர் இன்னும் வரவில்லை. இப்படி விட்டுவிட்டு போவது நல்லதல்ல. இது கெடுதலாகலாம். புத்தர் என்னை மன்னிக்கவே மாட்டார். நீங்கள் போகலாம். நான் இங்கே தங்கப் போகிறேன் என்றான். உண்மையில் அவன் இவர்கள் சென்றுவிட வேண்டும் என விரும்பினான். மூன்றாவது நபரும் விடுபட்டு விட்டார். அடுத்த நாள் வழியில் ஒரு கிராமத்தில் இவர்கள் கூட்டத்தில் மாட்டிக் கொண்டனர். அந்த கிராமத்து மக்கள் ஆத்திகர்கள். அவர்கள் புத்தரை நம்புவதில்லை. அந்த கிராமத்தில் இருந்த ஒரு மிகப் பெரிய பண்டிதர் ஒருவர் இவர்களை பார்த்து புத்தர் கூறியது உண்மை என்று நிரூபியுங்கள் என்று சவால் விட்டார். அவர்களில் ஒருவர் அந்த சவாலை ஏற்றுக் கொண்டார். மற்றொருவர் நீ என்ன செய்கிறாய் இதற்கு எவ்வளவு காலம் பிடிக்குமோ யாருக்குத் தெரியும் நாம் செல்ல வேண்டுமே என்று கேட்டார். அதற்கு அவர், எனது முழு வாழ்வும் போனாலும் சரி, நான் புத்தரின் சீடன். இந்த மனிதன் புத்தரையும் அவரது கொள்கைகளையும் சவால் விடுகிறான். என்று கூறினான். உண்மையில் அது புத்தருக்கான சவால் அல்ல. அது இவனது ஆணவத்துக்கான சவால். நான் வரவில்லை, நான் இந்த கிராமத்தை விட்டு வரமுடியாது. நான் இந்த கிராமம் முழுமையையவும் மாற்றப் போகிறேன். நீ போகலாம். உண்மையில் அங்கு ஒருவர் மட்டும் தானே தேவை. என்று கூறினார். இப்படித்தான் அது நிகழ்ந்தது. இந்த மனிதன் தர்க்கம் செய்வதற்காக இங்கே நின்று விட்டான். ஒரே ஒருவர் மட்டும் போய் சேர்ந்தார். 39 கடவுளுக்கான சான்று ராமகிருஷ்ணர் 19-தாவது நூற்றாண்டின் கடைசியில் வாழ்ந்தவர் மிகவும் வெகுளி. கேசவ் சந்திரசென் என்பவர் மிகவும் படித்தவர், பண்டிதர், அந்த கால கட்டத்தில் மிகவும் படித்த பண்டிதர்களில் ஒருவர். அவர்கள் இருவரும் அருகருகில்தான் வாழ்ந்தனர். கேசவ் கொல்கத்தாவில் இருந்தார், ராமகிருஷ்ணர் கொல்கத்தா அருகே கங்கை நதிகரையோரம் இருந்த தக்ஷ்ணேஷ்வரில் இருந்த சிறிய கோவிலில் பூசாரியாக வேலை செய்தார். கேசவ் சந்திரா அவருடைய புத்திசாலித்தனம், அவருடைய தர்க்க அறிவு, வாதத்திறமை, அவருடைய அறிவு, விவேகம், வேதநூல்களில் அவருக்கிருந்த புலமை ஆகியவற்றிற்க்காக நாடு முழுவதும் போற்றப்பட்டார். மக்கள் எல்லா இடங்களில் இருந்தும் வந்து அவர் காலடியில் அமர்ந்து அவர் பேச்சைக் கேட்டனர். இப்படி இவர் பேச்சைக் வருடக்கணக்கில் கேட்டுக் கொண்டிருந்த மக்கள் தக்ஷிணேஷ்வர் கோவிலில் இருக்கும் ராமகிருஷ்ணரிடம் செல்வதை பார்த்து அவர் மிகவும் குழப்பமடைந்தார். அவருக்கு படிப்பறிவில்லை, எந்த வேதபுத்தகத்தைப்பற்றியும் எதுவும் தெரியாது, அவருக்கு அறிவு ஏதும் இருப்பதாகவே தெரிவதில்லை, அவருக்கு தர்க்கம் ஏதும் செய்ய தெரியாது, எதைப் பற்றியும் பேசி யாருக்கும் அவரால் புரிய வைக்கவும் முடியாது. என்ன நடக்கிறது இங்கே என்று மிகவும் குழப்பமடைந்தார் கேசவ். அவருடன் வருடக்கணக்கில் இருந்து அவர் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த மக்கள் இப்போது அங்கே செல்கின்றனர். அவரிடம் கூட்டம் கூடிக் கொண்டிருந்தது. கேசவ் கேள்விப்பட்ட வகையில் ராமகிருஷ்ணர் கிட்டத்தட்ட அரைப்பைத்தியம் போன்றவர். திடீரென ஆடுவார், பாடுவார். நல்லதொரு பாடலை கேட்டவுடன் சமாதி நிலை அடைந்து விடுவார். பல மணி நேரங்களுக்கு அந்த சமாதி நிலை நீடிக்கும். அவர் அவருள் ஆழ்ந்து போய் விடுவார், அவரை யாராலும் எழுப்ப முடியாது. அது சாதாரண தூக்கமல்ல, அது கோமா போன்றது. ஒரு முறை அவர் அது போன்று 6 நாட்களுக்கு இருந்தார். அவரை எழுப்ப எல்லோரும் இயன்றவரை முயன்று பார்த்தனர். ஆனால் எல்லாமே தோல்வியில்தான் முடிந்தது. அவரை யாராலும் எழுப்ப முடியவில்லை. 6 நாட்களுக்கு பின் எழுந்த அவர் கண்களில் கண்ணீருடன், “ஏன் என்னை தொந்தரவு செய்கிறீர்கள் நான் என்னுள் ஆனந்தமாக இருந்தேன். என்னை வெளி உலகுக்கு இழுத்துக் கொண்டே இருந்தீர்கள், இங்கே ஒன்றுமே இல்லை. நான் எல்லாவற்றையும் அனுபவித்து பார்த்து விட்டேன். என்னுடைய சுயத்தை உணரவோ, முடிவற்ற ஆனந்தத்தை கொடுக்கவோ, அழிவற்ற பரவசத்தை அளிப்பதற்க்கோ  இங்குள்ள எதனாலும் முடியாது. அதனால் நான் எப்போதெல்லாம் நான் உள்ளே சென்றாலும் என்னை தொந்தரவு செய்யாதீர்கள். என்னை விட்டு விடுங்கள்”. என்று கூறினார். 6 நாட்கள் என்பது மிகவும் அதிகமான நாட்கணக்குதான். அவர் கோமாவில் இருந்தால் சீடர்கள் கவலைப்படாமல் என்ன செய்வார்கள்!. இது போல கேசவ்வை வந்து சேர்ந்த செய்திகள் அனைத்துமே இந்த ராமகிருஷ்ணர் ஒரு கிறுக்கு, மறைகழன்றவர், லூசு என்பதாகத்தான் இருந்தது. ஆனால் அவரிடம் வந்து அவர் சொல்வதை கேட்டுக் கொண்டிருந்த அனைவருமே மெத்த படித்தவர்கள், பேராசிரியர்கள், வேத விற்பன்னர்கள். அவர்கள் எப்படி இந்த ராமகிருஷ்ணரிடம் போனார்கள்? இறுதியாக கேசவ் தானே போய் அவரை பார்ப்பது என்று தீர்மானித்தார். பார்ப்பது மட்டுமல்லாமல் அவரிடம் வாதிட்டு அவரை தோற்கடிப்பது என்றும் நினைத்தார். அவர் ராமகிருஷ்ணருக்கு, “நான் இந்த தேதியில் வருகிறேன். தயாராக இருங்கள். நான் இறுதியான விஷயங்களைப் பற்றி பேசி உங்களுடன் தர்க்கம் செய்யப் போகிறேன்.” என்று செய்தி அனுப்பினார். ராமகிருஷ்ணர் இதை கேள்விப்பட்டதும் சிரித்தார். “கேசவ் சந்திராவை சந்திப்பது மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம். அவர் மிகச் சிறந்த தர்க்கவாதி, புத்திசாலி. ஆனால் அவர் யாருடன் தர்க்கம் செய்யப்போகிறார் என்று அவருக்குத் தெரியவில்லை. வரட்டும், நான் இந்த போட்டியை ஒத்துக் கொள்கிறேன். இது ஒரு நல்ல காரணமாக இருக்கும்.” என்றார். அவரது சீடர்கள், “இது நன்றாக இருக்காது. நீங்கள் உங்கள் வாழ்க்கையில் இதுவரை யாருடனும் போட்டியிட்டதேயில்லை. அவர் அவரது சீடர்களுடன் வரப் போகிறார். அத்தனை பேர் முன்னிலையிலும் …….. வேண்டாம் இந்த விஷப்பரீட்சை”. என்றனர். ஆனால் ராமகிருஷ்ணர் கூறியது எப்போதும் நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று. அவர், “நான் வாதிடப் போவதில்லை, ஏனெனில் நான் வாதாடும் மனிதனல்ல. அவர் வரட்டும், எனக்கு சமய நூல்களைப்பற்றி தெரியாது, தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. எனக்கு உண்மை என்னவென்று தெரியும், நான் எதற்கு கடன்வாங்கப்பட்ட தகவலறிவைப் பற்றி கவலைப்பட வேண்டும்? நான் படிக்கவில்லை, எனக்கு எப்படி நிரூபிப்பது, அல்லது நிரூபித்ததை உடைப்பது என்று தெரியாது, தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. என்னுடைய இருப்பே போதுமானது, அவர் வரட்டும்.” என்று கூறினார். கேசவ் சந்திரா இவருடைய இருப்பை எப்படி ஒரு வாதமாக ஏற்றுக் கொள்வார்  என்று சீடர்களுக்கு தெரியாததால் அவர்கள் பயந்தனர். கேசவ் சந்திரா வந்தார். ராமகிருஷ்ணர் வெளியே வந்து இவரை அணைத்து உள்ளே கூட்டிச் சென்றார். கேசவ் இப்படி இவர் வெளியே வந்து காத்திருந்து அணைத்து உள்ளே கூட்டிச் செல்வார் என்று எதிர்பார்க்கவேயில்லை. “நீங்கள் வந்ததற்கு மிகவும் நன்றி. நான் நீங்கள் வருவதற்காக காத்துக் கொண்டிருந்தேன். எப்போதெல்லாம் உங்களுக்கு என்னிடம் வாதிட தோன்றுகிறதோ அப்போதெல்லாம் நீங்கள் என்னிடம் வரலாம். என்னிடம் போட்டியிட நீங்கள் எப்போதும் வரலாம். முன்கூட்டியே சொல்லிவிட்டு வர வேண்டிய அவசியம் இல்லை. நான் எப்போதும் ப்ரீதான். நான் 24 மணி நேரமும் இந்த கோவிலிலேயேதான் இருப்பேன். நீங்கள் இரவு பகல் எந்த நேரமும் வரலாம்”. என்றார்  ராமகிருஷ்ணர். கேசவ் தனக்குத்தானே எதற்காக வந்தோம் என நினைவு படுத்திக் கொண்டார். அது மிகவும் கடினமானதாக இருந்தது. இவர் மிகவும் அன்பானவராக இருந்தார், இவரது அதிர்வே மிகவும் பிடித்தமானதாக இருந்தது. மேலும் ராமகிருஷ்ணர், “முதலில் உங்களது வாக்குவாதத்தை ஆரம்பிக்கும் முன் உங்களை வரவேற்பதற்காக நான் நடனமாடுகிறேன்”. என்றார். அங்கே இருந்த அவரது இசைக்குழுவினர்வாத்தியங்களை வாசிக்க ஆரம்பித்தனர், இவர் நடனமாட ஆரம்பித்தார். கேசவ் சந்திரரால் நம்பவே முடியவில்லை. அவரது சீடர்களாலும் நம்ப முடியவில்லை. சந்திரா பலருடன் வாக்குவாதம் செய்திருக்கிறார். நாடு முழுவதிலும் உள்ள பல பண்டிதர்களை போட்டியிட்டு வென்றிருக்கிறார். ஆனால் நடனம் மூலம் தன்னை வரவேற்ற ஒருவரை இதுவரை அவர் சந்திக்கவில்லை. மேலும் நடனம் மிகவும் அற்புதமாக இருந்தது. அது ஒரு பொங்கிப் பெருகும் அன்பின் அடையாளமாக இருந்தது. அது சாதாரணமானதாக இல்லை, அது வரவேற்பின் உச்சகட்டம். கேசவ் சந்திரர் கூட இவர் சத்தியமானவர் என்பதை உணர்ந்தார். நடனம் முடிந்த பின் ராமகிருஷ்ணர் “இப்போது நீங்கள் ஆரம்பிக்கலாம்” என்று கூறினார். கேசவ் சந்திரா, “நீங்கள் முதலில் கடவுள் இருக்கிறார் என்பதை எனக்கு நிரூபிக்க வேண்டும்” என்றார். ராமகிருஷ்ணர் சிரித்தார். “கடவுள் இருப்பதற்க்கு சான்றா ? நீதான் சான்று.! இல்லாவிடில் எங்கிருந்து இவ்வளவு விவேகம் வந்தது? இது உறுதியாக பிரபஞ்சத்திலிருந்துதான் வந்திருக்க வேண்டும், பிரபஞ்சத்தால் கேசவ் சந்திரா போன்றவரை உருவாக்க முடியும் என்றால் அது தன்னுணர்வற்றது அல்ல, அது விவேகமற்றதுமல்ல. இதைத்தான் நாம் கடவுள் என்றழைக்கிறோம். எப்படி அழைக்கிறோம் என்பது பொருட்டல்ல. நீதான் சான்று. நீதான் சான்று என்பதை அறியாமல் நீயே சான்று கேட்பதுதான் இதில் விந்தை. நான் யாரை வேண்டுமானாலும் கொண்டு வந்து நிறுத்துகிறேன், நீதான் சான்று என்பதை எல்லோரும் ஒத்துக் கொள்வர். நாம் கடவுள் என்றழைப்பது பிரபஞ்சம் புத்திசாலித்தனத்தோடு இருப்பதுதான், பிரபஞ்சம் தன்னுணர்வின்றி இருப்பதில்லை. என்றார். கேசவ் சந்திராவின் சீடர்கள் கேசவ் சந்திரா இவ்வளவு அதிர்ச்சியடைந்து பார்த்தேயில்லை. அவர் மௌனமாகிவிட்டார், என்ன சொல்வதென்றே அவருக்கு தெரியவில்லை. ராமகிருஷ்ணரின் சீடர்கள்கூட அதிர்ச்சியடைந்து விட்டனர். அவர்கள், “அடக் கடவுளே, எப்படி இவர் அவருடன் வாதிடப் போகிறாரோ என நாம் நினைத்தோம், ஆனால் இவர் எந்த சிரமுமில்லாமல் அவரை வாயடைக்கச் செய்து விட்டாரே, எந்த புத்தகத்திலிருந்தும் மேற்கோள் எதுவும் காட்டவில்லை, கேசவ் சந்திராவே தனக்கு எதிரான வாதத்தை செய்து கொண்டு விட்டார்” என்று பேசிக் கொண்டனர். ஒவ்வொரு முறை கேசவ் சந்திரா எதையாவது மிக நன்றாக சொல்லும் போது ராமகிருஷ்ணர் ஒரு குழந்தை போல கை தட்டி பாராட்டுவார். ஆனால் தனக்கு எதிராக தானே விஷயங்களை சொல்லிக் கொண்டிருக்கிறோம் என அவர் நினைக்கவேயில்லை. சீடர்கள், “நான் அவருக்கு எதிராக வாதம் புரிந்து கொண்டிருக்கிறேன், அவர் மகிழ்ச்சியாக கை தட்டிக் கொண்டிருக்கிறார், அவருகென்ன பைத்தியமா என கேசவ் சந்திரா நினைத்தார்” என கூறிக் கொண்டனர். வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தபோது இடையில் ராமகிருஷ்ணர் எழுந்துவந்து கேசவ்வை கட்டிதழுவிக் கொண்டு, “இது மிகவும் அற்புதமான பாயிண்ட். எனக்கு மிகவும்பிடித்திருக்கிறது. நீங்கள் தொடருங்கள்” என்று கூறினார். எந்த வாக்குவாதமும் செய்ய வேண்டிய தேவையேயில்லாமல் அவரிடம் இருந்த அந்த சந்தோஷம், அந்த அன்பு, அந்த அசைக்க முடியாத அமைதி இவைதான் அவருடைய வெற்றியாக அமைந்தன. கேசவ் சந்திரா ராமகிருஷ்ணரின் பாதங்களில் வீழ்ந்து பணிந்து “என்னை மன்னித்துவிடுங்கள். நான் உங்களைப் பற்றி தவறாக புரிந்து கொண்டிருந்தேன்” என்றார். ராமகிருஷ்ணர், “என்ன இது நீங்கள் மிகவும் படித்தவர், நான் படிக்காதவன். படிப்பறிவில்லாதவன், வெகுளி, என்னால் எனது பெயரைக் கூட எழுத முடியாது. எனக்கு என்னைத் தெரியும், ஆனால் எனக்கு கையெழுத்திடத் தெரியாது, எனக்கு படிக்கத் தெரியாது. நீங்கள் இப்படி செய்ய வேண்டியதில்லை” என்றார். கேசவ் சந்திரா ராமகிருஷ்ணரின் பக்தர்களில் ஒருவராக மாறிவிட்டார். ராமகிருஷ்ணரிடம் எந்த கேள்விக்கும் பதில் இல்லை, அவரிடமும் எந்த கேள்வியும் இல்லை. ஆனால் அவரது வெகுளித்தனமும் எளிமையும் பல பேரை கவர்ந்தது, பலபேரை மாற்றியது. அவருடைய அன்பே மிகப்பெரிய இரசாயனமாற்றத்தை தந்தது. 40 மோஜுத் விவரிக்கமுடியாத வாழ்க்கையை கொண்ட மனிதன் முன்னொரு காலத்தில் மோஜுத் என்ற பெயர் கொண்ட ஒரு மனிதன் இருந்தான். அவன் தான் சிறு அதிகாரியாக பதவி வகிக்கும் ஒரு நகரத்தில் வாழ்ந்து வந்தான், மற்றும் அவன் எடைக்கற்களை பரிசோதிக்கும் அதிகாரியாகவே கடைசி வரை தன் நாட்களை கழித்துவிடுவான் என்பது போல தோன்றியது. ஒருநாள் அவன் அவனுடைய வீட்டிற்கு அருகில் உள்ள பழைய கட்டிடத்தின் தோட்டம் வழியாக நடந்துகொண்டிருந்தபோது, இதர் என்றழைக்கப்படும் சூபிகளின் மர்ம வழிகாட்டி பளிச்சென்ற பச்சை நிறத்தில் உடை உடுத்திக்கொண்டு அவன் முன் தோன்றி “ பிரகாசமான எதிர்காலம் உடைய மனிதனே! உன்னுடைய வேலையை விட்டுவிட்டு மூன்று நாளில் ஆற்றோரத்தில் என்னை சந்தி.” என கூறிவிட்டு பிறகு மறைந்துவிட்டார். மோஜுத் அவனுடைய அலுவலக மேலதிகாரியிடம் சென்று அவன் சென்றாக வேண்டும் என கூறினான். விரைவில் நகரத்தில் உள்ள அனைவரும் இதைப் பற்றி கேள்விப்பட்டு, பாவம் மோஜுத்! அவன் பைத்தியமாகிவிட்டான்! என கூறினர். ஆனால், அவனுடைய வேலைக்கு நிறைய ஆட்கள் காத்திருந்த காரணத்தால், அவர்கள் விரைவில் அவனை மறந்துவிட்டனர். சொல்லப்பட்ட தினத்தில், மோஜுத் இதரை சந்தித்தான், அவர், “ உன்னுடைய உடைகளை கிழித்துக்கொண்டு ஆற்றுக்குள் குதி. யாராவது உன்னை காப்பாற்றக்கூடும்” என கூறினார். மோஜுத் தான் பைத்தியமாகிவிட்டோமோ என ஆச்சர்யபட்டாலும் கூட அவன் அவர் சொன்னதை செய்தான். அவனால் நீந்த முடியும் என்பதால், அவன் மூழ்கவில்லை. ஆனால் வெகு தூரம் அடித்துச் செல்லப்பட்டான். ஒரு மீனவன் அவனைப் பிடித்து “முட்டாளே, ஆற்றோட்டம் வேகமாக உள்ளது. நீ என்ன செய்ய முயற்சி செய்தாய்?  என கேட்டுக் கொண்டே அவனைப் படகிற்குள் தூக்கிப் போட்டான். மோஜுத் “எனக்கு உண்மையிலேயே தெரியாது” எனகூறினான். மீனவன் “நீ ஒரு பைத்தியம், ஆனால் நான் ஆற்றோரத்தில் இருக்கும் என்னுடைய குடிசைக்கு உன்னை அழைத்து செல்கிறேன், பிறகு நாம் உனக்காக என்ன செய்யமுடியும் என்பதை பார்க்கலாம்” என கூறினான். மோஜுத் நன்றாக படித்தவன் என கண்டுகொண்ட பிறகு எழுதவும் படிக்கவும் மோஜுத்திடம் இருந்து மீனவன் கற்றுக்கொண்டான். மாற்றாக மோஜுத்திற்கு உணவு தரப்பட்டது மற்றும் மீனவனுக்கு மோஜுத் அவனுடைய வேலையிலும் உதவி செய்தான். ஒரு சில மாதங்களுக்கு பிறகு, இதர் இந்த முறை திரும்பவும் மோஜுத்தின் படுக்கையின் கால்மாட்டில் தோன்றி, “ இப்போது எழுந்து இந்த மீனவனை விட்டு கிளம்பு, உனக்கு தேவையானது அளிக்கப்படும்” என கூறினார். மோஜுத் உடனடியாக குடிசையை விட்டு வெளியே வந்தான், அவன் ஒரு மீனவனைப் போல உடை அணிந்திருந்தான், மற்றும் ஒரு நெடுஞ்சாலையை அடையும் வரை அவன் அலைந்துகொண்டிருந்தான். அதிகாலை விடிந்துகொண்டிருந்தபோது அவன் ஒரு விவசாயி அவனது கழுதையின் மீது சந்தைக்கு சென்றுகொண்டிருப்பதை பார்த்தான். விவசாயி, “ நீ வேலை தேடுகிறாயா?  ஏனெனில் எனக்கு சந்தையில் வாங்கும் பொருட்களை கொண்டு வர உதவிக்கு ஒரு ஆள் வேண்டும்” என கேட்டான். மோஜுத் அவனைப் பின்தொடர்ந்தான். அவன் விவசாயியிடம் கிட்டதட்ட இரண்டு வருடங்கள் வேலை செய்தான், அந்த காலகட்டத்தில் அவன் மற்றவை பற்றி தெரிந்துகொண்டது சிறிதளவே, விவசாயத்தைப் பற்றி அதிகம் தெரிந்துகொண்டான். ஒருநாள் மதியம் அவன் ஆட்டுரோமத்தை அறுத்துகொண்டிருந்தபோது இதர் அவன்முன் தோன்றி “அந்த வேலையை விட்டுவிடு, மோசூல் நகரத்திற்கு நட, மற்றும் உன்னுடைய சேமிப்பை உபயோகப்படுத்தி தோல் வியாபாரியாக மாறு” என கூறினார். மோஜுத் அவர் சொன்னபடி செய்தான். மோசூலில் அவன் ஒரு தோல் வியாபாரியாக அறியப்பட்டான் அவன் அவனுடைய தோல் வியாபாரத்தை மூன்று வருடங்கள் செய்தான், அப்போது அவன் இதரை பார்க்கவேயில்லை. அவன் ஒரு பெரும் தொகையை சேமித்துவிட்டான், மற்றும் ஒரு வீடு வாங்குவதைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தான். இதர் அவன் முன் தோன்றி “உன்னுடைய பணத்தை என்னிடம் தா, இந்த நகரத்தை விட்டு வெகுதூரத்தில் உள்ள சமர்கண்ட் வரை செல், மற்றும் அங்கு உள்ள ஒரு மளிகை கடையில் வேலை செய்” எனக் கூறினார். மோஜுத் அதைச் செய்தான். இப்போது அவன் சந்தேகமில்லாமல் பிரகாசத்தின் குறியீடுகளை காட்ட தொடங்கினான். அவன் நோயுற்றவர்களை குணப்படுத்தினான், அவனுடைய ஓய்வு நேரத்தில் அவன் அருகில் இருந்தவர்களுக்கு உதவி செய்தான், மற்றும் அற்புதத்தை பற்றிய அவனுடைய அறிதல் மேலும் மேலும் ஆழமாகியது. சமய குருமார்களும், தத்துவவாதிகளும் அவனை சந்தித்தனர், அவர்கள் அவனிடம் நீங்கள் யாரிடம் கற்றீர்கள்? என கேட்டனர். “அதைச் சொல்வது கடினம்” என மோஜுத் கூறினான். அவனுடைய சீடர்கள் நீங்கள் எப்படி உங்கள் வாழ்வை தொடங்கினீர்கள்? என கேட்டனர். “சிறு அதிகாரியாக தொடங்கினேன்” என அவன் கூறினான். மற்றும் “உங்களுடைய தேடுதலுக்கு வாழ்க்கையை அர்பணிப்பதற்காக அதனை விட்டுவிட்டீர்களா? என அவர்கள் கேட்டனர். “இல்லை நான் வெறுமனே அதனை விட்டுவிட்டேன்” என அவன் கூறியபோது யாருக்கும் அவன் சொல்வது புரியவில்லை. அவனுடைய வாழ்க்கை சரிதையை எழுதுவதற்காக மக்கள் அவனிடம் வந்தனர். உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் என்னவாக இருந்தீர்கள்? என அவர்கள் கேட்டனர். “நான் ஆற்றுக்குள் குதித்தேன், ஒரு மீனவனாக மாறினேன், பின் நடு இரவில் அவனுடைய குடிசையை விட்டு வெளியேறினேன். அதற்கு பிறகு, நான் ஒரு விவசாய கூலியாக மாறினேன். நான் ஆட்டுரோமத்தை வெட்டிக்கொண்டிருக்கும்போது, நான் மாறிவிட்டேன் மற்றும் மோசூலுக்கு சென்றேன், அங்கு தோல் வியாபாரியாக மாறினேன், அங்கு சிறிது பணத்தை சேமித்தேன். ஆனால் அதை கொடுத்துவிட்டேன். பிறகு சமர்கண்டிற்கு நடந்தேன் அங்கு ஒரு மளிகை கடையில் வேலை செய்தேன். மற்றும் நான் இப்போது இங்கு இருக்கிறேன்.” ஆனால் இந்த விவரிக்கமுடியாத நடத்தை உங்களுடைய வித்தியாசமான அற்புதத்தையும், உங்களின் அருமையான ஆனந்த வாழ்வையும் எந்த விதத்திலும் விளக்கவில்லையே என வாழ்க்கை சரிதம் எழுதுபவர்கள் கேட்டனர். “அது அப்படித்தான்” என மோஜுத் கூறினான். எனவே வாழ்க்கை சரிதம் எழுதுபவர்கள் மோஜுத்திற்காக ஒரு அருமையான மற்றும் விறுவிறுப்பான கதையை உண்டாக்கினர். ஏனெனில் எல்லா துறவிகளும் அற்புதமான ஒரு கதையை கொண்டிருக்கவேண்டும், மற்றும் அந்த கதை கண்டிப்பாக கேட்பவரின் ஆசைக்கு தகுந்தபடி இருக்கவேண்டும், என்று நாம் நினைக்கிறோம். அது வாழ்க்கையின் உண்மைகளின்படி இருக்க வேண்டும் என்று நினைப்பதில்லை, மற்றும் இதரைப்பற்றி நேரடியாக பேச யாருக்கும் அனுமதியில்லை. அதனால்தான் இந்த கதையும் உண்மையல்ல. இது ஒரு வாழ்வின் பிரதிபலிப்பு. இது சிறந்த சூபிகளில் ஒருவரது உண்மை வாழ்க்கைப் பிரதிபலிப்பு. 41 பிரபஞ்ச தன்னுணர்வு கபீரைப் பற்றிய ஒரு கதை எனக்கு நினைவுக்கு வருகிறது. கபீர் ஒரு ஞானி, ஆனால் ஏழை. அவரது வேறுபட்ட நடவடிக்கைகளால் ஒவ்வொரு நாளும்  அவரது மனைவியும் மகனும் சங்கடத்துள்ளானார்கள். ஏனெனில் ஒவ்வொரு நாள் காலையும் நூற்றுக்கணக்கான சீடர்கள் வருவார்கள். கபீர் ஆடுவார், தானே எழுதிய பாடலை பாடுவார். அவர் படித்தவரல்ல. அவர் எந்த சொற்பொழிவும் தருவதில்லை. ஆனால் அவர் பாடுவார், ஆடுவார். அவரது பாடல்கள் மிக ஆழ்ந்ததாக, அற்புதமானதாக, எளிமையான பாடல்களாக இருக்கும். பாடிக் கொண்டே அவர் ஆடுவார். கூட்டம் முழுவதும் அவருடன் சேர்ந்து ஆடும், பாடும். இது மணிக்கணக்கில் தொடரும். பின் மதிய உணவு நேரம் வந்துவிடும். பின் கபீர் ஒவ்வொருவரிடமும் “போய் விடாதீர்கள், இந்த ஏழையின் வீட்டில்சாப்பிட்டுவிட்டுதான் போக வேண்டும்” என்று கூறுவார். மனைவியும் மகனும் சங்கடத்துள்ளாவார்கள். ஒவ்வொருநாளும் அத்தனை பேருக்கான உணவுக்கு எங்கே போவது ? இவர்கள் மூவருக்கான உணவுக்கு சமாளிப்பதே பெரும்பாடு. அவரது மகனும் ஒரு தனித்தன்மை வாய்ந்த மனிதன். அவன் அவன் வழியில் ஒரு குருவாகக் கூடியவன். ஆனால் அவன் கபீரிடம் இருந்து முற்றிலும் வேறுபட்டவன். அவர்கள் இருவரும் ஒரு இடத்தில் கூட ஒத்துப் போனதேயில்லை. கபீர் கமால் மூலமாக மிகவும் சோர்ந்து போய்விட்டார். அவர், கமால் எனக்கு வந்து பிறந்ததால் எனது பாரம்பரியம் முடிந்தது. இவன் நான் அவனுக்கு கொடுக்கும் செல்வங்களை எடுத்துச் செல்ல மாட்டான் என்று எழுதினார். ஏனெனில் கமாலுக்கு என்று ஒரு தனி வழி இருந்தது. அவர்கள் ஒத்துப் போனதேயில்லை. கமால் இந்த பாடலையும் நடனத்தையும் மடத்தனம் என்பான். அவன், மௌனமாக அமர்ந்து இருந்தால் ஏதாவது நிகழலாம் – எதற்கு தேவையில்லாமல் ஏகப்பட்ட சத்தம் போட்டு அக்கம் பக்கத்தாரை தொந்தரவு செய்ய வேண்டும் வயதான காலத்தில் சும்மாயிருக்காமல்……… உங்களால் மற்றவர்களும் அவர்கள் வயதானவர்களாக இருந்தால் கூட ஆட வேண்டி வருகிறது, அவர்கள் சோர்ந்து போகிறார்கள் என்று கூறுவான். அவன் ஒரு போதும் ஆடலிலும் பாடலிலும் பங்கெடுத்துக் கொண்டதேயில்லை. அவன், “மௌனமாக இருப்பது பாடுவதை விட சிறந்தது. இது தேவையேயில்லை. அமைதியாக உட்கார்ந்து இருக்கும்போது இதைவிட அழகான நடனத்தை நான் உணர்கிறேன்.” என்பான். ஒரு கட்டத்தில் மகனும் மனைவியும் கபீரிடம் “நீங்கள் மற்றவர்களை இங்கே சாப்பிட்டுவிட்டு போங்கள் எனக் கூறுவதை நிறுத்துங்கள். நாங்கள் இந்த நகரத்தில் உள்ள எல்லோரிடமும் கடன் வாங்கியாகிவிட்டது. இப்போது யாரும் நமக்கு எதுவும் கடன்தர தயாராக இல்லை. அவர்கள் எப்படி திருப்பித் தரப் போகிறீர்கள் என்று கேட்கிறார்கள். நம்மிடம் இப்போது வீட்டில் எதுவும் இல்லை. நீங்கள் நிறுத்திக் கொள்ளுங்கள் “என்று கூறினார்கள். கபீர், “அது இயலாத காரியம். ஆடி பாடி கொண்டாடிய பிறகு எனது வீட்டிற்கு வந்த மக்களுக்கு சாப்பாடு போடாமல் இருக்க முடியாது. என்னால் அப்படி செய்ய முடியாது. வழி கண்டு பிடியுங்கள். என்னடா பையன் ! நீ ஏதாவது ஒரு வழி கண்டு பிடிக்க முடியாதா ? என்று கேட்டார். கமால் “ நான் திருடனாவது ஒன்றுதான் வழி!” என்றான். கபீர், “அற்புதம்! நீ ஏன் இதை முன்பே யோசிக்கவில்லை.? என்றார். இதுதான் பிரபஞ்ச தன்னுணர்வு. திருடுவது கூட தவறில்லை. இந்தியாவில் கபீரை பின்பற்றும் மக்கள் – அவர்கள் மிகக் குறைந்த அளவில் தான் இருக்கிறார்கள். – இந்த கதையைப் பற்றி குறிப்பிடுவதில்லை. நான் அவரை பின்பற்றும் மக்களிடம் பேசிக் கொண்டிருக்கும்போது இந்த கதையை குறிப்பிட்டேன். உடனே தலைமை குரு என் காதில், தயவுசெய்து இந்த கதையை சொல்லாதீர்கள். ஏனெனில் இது எங்களை பிரச்னையில் கொண்டு போய்விடும். கபீர் இதில் திருடுவது சிறந்த ஐடியா  என்று சொல்கிறார். என்று கிசுகிசுத்தார். ஆனால் கமால் உண்மையிலேயே ஒரு தனித்துவமான மனிதன். அதுதான் கமால் என்ற வார்த்தையின் பொருள். கமால் என்றால் அசாதாரணமான, தனித்துவமான என்று அர்த்தம். அவன் கபீர் அற்புதம் என்று சொன்னதால் அசந்து போய்விடவில்லை. அவன், “சரி, இன்றிரவு நான் போய் திருடுகிறேன். ஆனால் நீங்களும் என்னுடன் வரவேண்டும். நான் என்னால் முடிந்த அளவு முயற்ச்சிக்கிறேன். எனக்கு உதவுங்கள். நான் திருடி தரும் பொருட்களை வெளியே நின்றவாறே வாங்கி கொண்டு வந்து வீடு சேர்த்துவிடுங்கள். இந்த அளவு நீங்கள் செய்தால் போதும்” என்றான். கபீர் “மிகவும் நல்லது” என்றார். அதன்படி அவர்கள் இரவு ஒரு பணக்காரனின் வீட்டிற்கு திருட சென்றனர். பின்புறத்தில் கமால் உள்ளே நுழைவதற்க்காக சுவரில் ஓட்டை போட்டான். கபீர் வெளியே உட்கார்ந்து மெதுவாக அவரது பாடலை பாடிக் கொண்டிருந்தார். கமால், “பாடுவதை நிறுத்துங்கள், மடத்தனமாக இருக்காதீர்கள். நாம் இங்கே துறவிகளல்ல. நாம் திருட வந்துள்ளோம்” என்றான். கபீர், “நாம் எங்கே இருந்தாலும் நாம் எப்படியோ அப்படிதான். நாம் என்ன செய்கிறோம் என்பது ஒரு பொருட்டல்ல. நீ உன் வேலையை செய்கிறாய். நான் என் வேலையை செய்கிறேன். நீ பொருட்களை கொண்டு வந்து கொடு, நான் எடுத்துச் செல்கிறேன். எனக்கு வயதாகிவிட்டது. இல்லாவிடில் நானும் உன்னுடன் வருவேன். “என்றார். கமால் உள்ளே சென்றான். அவன் இந்த விஷயத்தை கடைசி வரை பார்த்துவிடலாம் என முடிவு செய்தான். அவன் பொருட்களை திருடி கொண்டு வந்து துவாரத்தின் வழியே வெளியே போட்டுவிட்டு இவற்றை நீங்கள் எடுத்துச் செல்லுங்கள் என கபீரிடம் கூறிவிட்டு அவனும் அந்த துவாரத்தின் வழியே வெளியே வர முயற்சித்துக் கொண்டிருந்தான். அப்போது அந்த வீட்டிலுள்ள வேலையாட்கள் விழித்துக் கொண்டனர். சுவரை உடைக்கும் சத்தம், யாரோ பாடுவது போன்ற சத்தங்கள் மெலிதாக கேட்டன. மேலும் கமால் உள்ளே போனபின் கபீர், தான் எங்கே இருக்கிறோம் என்பதை முற்றிலுமாக மறந்துவிட்டார். அவர் சத்தமாக பாடி ஆட ஆரம்பித்துவிட்டார். எனவே எல்லோரும் விழித்துக் கொண்டு விட்டனர். அவர்கள் தேடியபடி வந்து உள்ளே பாதி வழியில் இருந்த கமாலின் கால்களை பிடித்துக் கொண்டனர். இந்த கதை மிகவும் வித்தியாசமானது. இது கற்பனையாக இருக்க முடியாது. கமால், “அப்பா,! என்னை பிடித்து விட்டார்கள். இந்த பொருட்களை எடுத்துச் செல்லுங்கள். உள்ளே என் கால்களை பிடித்துக் கொண்டு விட்டனர். போதுமான அளவு சிக்கலில் என்னை சிக்க வைத்து விட்டீர்கள். இதுவே கடைசி – வணக்கம். நான் சிறைக்குப் போகப் போகிறேன்.” என்றான். கபீர், “சிறைக்கா? தேவையில்லை. நான் ஒரு கத்தி வைத்திருக்கிறேன்” என்றார். கமால் “என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டான். கபீர், “நான் உனது தலையை வெட்டி என்னுடன் எடுத்து சென்று விடுகிறேன். திருடன் யார் என்று யாருக்கும் தெரியாது.” என்று கூறினார். கமாலால் நம்பவே முடியவில்லை. அவன் இந்த விளையாட்டை கடைசி வரை விளையாடி பார்க்கலாம் என்று நினைத்தான். –  ஆனால் இந்த கிழவன் அதை முடிவு வரை கொண்டு செல்கிறானே என்று யோசித்தான். ஆனாலும் கமால் ஒரு தீரமுள்ள மனிதன். எனவே அவன் “சரி.!எனது தலையை வெட்டி எடுத்து சென்று விடுங்கள் “என்றான். அவன் இது போல நடக்காது என்றுநினைத்தான். ஆனால் கபீர் கமாலின் தலையை வெட்டி அவன் கொண்டு வந்து தந்த பொருட்களுடன் சேர்த்து வீட்டிற்கு எடுத்து சென்று விட்டார். உள்ளே இருந்தவர்கள் கமாலை உள்ளே இழுத்தனர். தலையில்லா முண்டத்தைக் கண்டு, இப்போது இது ஒரு பிரச்னை. யார் இவன் என்று ஆலோசித்தனர். ஒரு வேலையாள், “எனக்குத் தெரிந்த வரை இது கபீரின் மகன் கமால். என்னை தூக்கத்திலிருந்து எழுப்பிய குரல் கபீரினுடையது. அவர் வெளியே இருந்திருக்க வேண்டும். இது போன்ற ஒரு செயலில் அவர் ஈடுபட்டிருப்பது மிகவும் விசித்திரமானது. அவர் ஒரு ஞானி. அவரது சொந்த மகன் இது….. அவர் இவனது தலையை வெட்டி எடுத்து சென்று விட்டார் போல தெரிகிறது.” என்றான். அந்த வேலையாள் கபீரின் வீட்டில் ஒவ்வொரு நாள் காலையிலும் நடக்கும் பிரார்த்தனை கூட்டத்திற்கு சில நாட்கள் போவான். அவன் அந்த செல்வந்தரிடம், “ஒரு வேலை செய்யலாம். கபீரும் அவரது சீடர்களும் பிரார்த்தனை கூட்டத்திற்கு முன் குளிப்பதற்காக கங்கை கரைக்கு வரும் வழியில் உள்ள நால்ரோட்டில் இந்த உடலை தொங்க விடலாம்” என்று கூறினான். அந்த வீட்டின் சொந்தக்காரனான அந்த செல்வந்தன், “அதனால் என்ன நடக்கும்?” என்று கேட்டான். வேலையாள் “இதை மட்டும் செய்யுங்கள் அதில் ஒன்றும்தவறில்லை “ என்றான். உடல் நால்ரோட்டில் தொங்க விடப்பட்டது. கபீர் குளித்துவிட்டு ஆடி பாடியபடி வரும்போது கமால் உடனடியாக தனது கரத்தை உயர்த்தி “இந்த மடத்தனத்தை நிறுத்துங்கள்!” என்றான். இப்படித்தான் அது கமால் என அடையாளம் காணப்பட்டது. நிச்சயமாக அது கமால்தான். அவர்கள் கபீரிடம் உங்களுக்கு அடையாளம் தெரிகிறதா என்று கேட்டனர். அவர் “தெரியுமே! ஏனெனில் அவனது தலை எனது வீட்டில் உள்ளது. நான் தான் வெட்டினேன்.” என்றார். அநத பணக்காரனால் அதை நம்பவே முடியவில்லை. அவன் “ஆனால் நீங்கள் ஒரு ஞானியாயிற்றே?” என்று கேட்டான். கபீர், “நான் ஒரு ஞானிதான். நான் ஞானி போல என்று இருந்திருந்தால் அந்த திருடும் செயலில் ஈடுபட்டிருக்க மாட்டேன். நான் ஒரு ஞானி போல என்று இருந்திருந்தால் நானே எனது மகனை கொன்றிருக்கமாட்டேன். நான் ஒரு ஞானிதான். எனது தன்னுணர்வின் உயர்வுக்கு முன் எதுவுமே ஒரு பொருட்டல்ல. உனது பணம் என்று நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய். அது உன்னுடைய பணமல்ல. அப்படி இருக்கும்போது அதை எடுத்துச் செல்வதில் என்ன தவறு? எதுவுமே யாருடையதுமல்ல எனும்போது திருடுவதில் என்ன தவறு? மகன் எப்படியும் என்றாவது ஒருநாள் சாகத்தான் போகிறான். எனவே அவனது தலையை வெட்டியதில் தப்பென்ன? மரணம் நிச்சியம் நிகழத்தான் போகிறது. என்னுடைய தன்னுணர்வின் முன் எதுவுமே தவறல்ல, எதுவுமே சரியல்ல. “ என்றார். 42 சரணாகதியின் கதை ஓ-நமி – மாபெரும் அலைகள் என்று பொருள் – என்ற பெயர்கொண்ட ஒரு குத்துச் சண்டை வீரன் ஜப்பானில் இருந்தான். அவன் மிகவும் வலிமையானவன். மேலும் குத்துச்சண்டையில் மிகவும் ஆற்றல் படைத்தவனாக இருந்தான். தனிப்பட்ட முறையில், பள்ளியில் பயிலுகையில் அவன் தனது ஆசிரியரைக் கூட வீழ்த்திவிடுவான். ஆனால் பொதுமேடையில் அவனைவிடச் சிறியவர்கள் கூட அவனை தூக்கி வீசி விடுவர். அவனது இந்த பிரச்சனைக்காக அவன் ஒரு ஜென் குருவிடம் சென்றான். அவரது குருகுலம் கடற்கரையோரம் இருந்தது. ஜென் குரு அவனிடம், மாபெரும் அலைகள் என்பது உனது பெயர். ஆகவே இந்த குருகுலத்தில் இன்றிரவு தங்கி கடலின் அலையோசையை கேள். உன்னை அந்த கடலின் அலை என நினைத்துக்கொள். நீ ஒரு குத்துச்சண்டை வீரன் என்பதை மறந்துவிட்டு அந்த கடலலை என எண்ணிக்கொள். அது எப்படி எது எதிரே வந்தாலும் அதை மூழ்கடிக்கிறதோ அது போல உன்னையும் நீ பெரும் அலை என எண்ணிக்கொள். என்றார். ஓ-நமி அங்கே தங்கினான். அவன் அந்த அலையை நினைத்துப்பார்க்க முயன்றான். அவனுக்கு பல்வேறு விஷயங்கள் நினைவுக்கு வந்ததே தவிர அலையை மட்டும் அவனால் நினைக்க முடியவில்லை. பிறகு மெதுமெதுவாக அவன் அந்த அலைகளை மட்டுமே நினைத்தான். இரவு ஏறஏற அலைகள் மேலும் அளவில் பெரிதாகிக் கொண்டே வந்தன. முதலில் புத்தர் சிலைக்கு முன்னே இருந்த பாத்திரத்திலிருந்து பூக்களை கொண்டு சென்றது. பின் அந்த பாத்திரத்தையே கொண்டு சென்றது. பின் புத்தர் சிலையையே கொண்டு சென்றது. அதிகாலையில் அந்த குருகுலம் முழுமையும் நீரால் சூழப்பட்டு இருந்த்து. ஓ-நமி முகத்தில் புன்னகையுடன் அங்கே அமர்ந்திருந்தான். அன்று அவன் பொதுமேடையில் குத்துச்சண்டைக்கு சென்றான், வென்றான். அன்றிலிருந்து ஜப்பானில் யாராலும் அவனை வெல்ல முடிந்த்தில்லை. இது நம்மை பற்றிய நமது கருத்து எப்படி இழப்பது, எப்படி விடுவது, எப்படி அதிலிருந்து வெளியே வருவது என்பதைப்பற்றிய கதை. இதில் படிப்படியாக நாம் உள்ளே நுழையலாம். ஓ-நமி – மாபெரும் அலைகள் என்று பொருள் – என்ற பெயர்கொண்ட ஒரு குத்துச் சண்டை வீரன் ஜப்பானில் இருந்தான். அவன் மிகவும் வலிமையானவன்.. . . . . ஒவ்வொருவரும் அளவற்ற ஆற்றல் படைத்தவர்கள்தாம். உனக்கு உன் பலம் தெரியாது. அது வேறு விஷயம். ஒவ்வொருவரும் பலம் பொருந்தியவர்கள்தாம். அப்படித்தான் இருக்க வேண்டும். ஏனெனில் எல்லோரும் கடவுளிலிருந்து வந்தவர்கள்தான். ஒவ்வொருவரும் இந்த பிரபஞ்சத்திலிருந்து பிறந்தவர்கள்தான். நீ பார்ப்பதற்கு எவ்வளவு சிறியவனாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் நீ சிறியவனல்ல. இருக்கவும் முடியாது. இயல்புப்படி அது அப்படி இருக்கமுடியாது. இப்போது பௌதீக விஞ்ஞானம் சின்னஞ்சிறு அணுவிற்குள் அதீத அளவு சக்தி இருக்கிறது என்று கூறுகிறது. ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய இரு நகரங்களும்அணுசக்தியால்தான் அழிக்கப்பட்டன. அணு மிகவும் சிறியது. யாராலும் அதைப்பார்க்க முடியாது. அது மிகச்சிறிய புள்ளி போன்றது. மிகவும் கடுகளவானது. இன்றைய விஞ்ஞானத்தால் கூட மிகப்பெரிதாக்கிக் காட்டும் கருவிகளின் உதவியால்தான் அதைப் பார்க்க முடிகிறது. ஆனால் அந்த அளவு சிறிய அணுவிற்கே அளவற்ற ஆற்றல் இருக்குமானால் மனிதனைப்பற்றி என்ன சொல்ல. மனிதனுக்குள்ளே உள்ள தன்ணுணர்வுச் சுடரைப்பற்றி என்ன சொல்ல. என்றாவது ஒருநாள் அந்தச்சுடர் மிகப் பெரிதாகி வெடிக்கும். அப்போது அளவற்ற ஆற்றலும் ஒளியும் வெளிப்பட்டே தீரும். அதுதான் ஒரு புத்தருக்கும், ஒரு ஜூஸஸூக்கும் நிகழ்ந்தது. ஒவ்வொருவரும் பலம் பொருந்தியவர்கள்தான். ஏனெனில் ஒவ்வொருவரும் இறைமை பொருந்தியவர்கள்தான். எல்லோரும் பிரபஞ்சத்தில் இறைவனில் வேர் கொண்டவர்கள்தான். அதனால் எல்லோரும் ஆற்றலுடையவர்கள்தான். இதை நினைவில் கொள். மனித மனம் இதை மறந்துவிடத்தான் நினைக்கும். இதை நீ மறந்துவிட்டால் நீ பலமிழந்துவிடுவாய். நீ பலமிழந்துவிட்டால் பின் நீ பலமடைய ஏதாவது செயற்கைவிதமான முயற்சிகளை மேற்கொள்வாய். இதைத்தான் கோடிக்கணக்கான மக்கள் செய்து வருகிறார்கள். பணத்தைத் தேடும்போது உண்மையிலேயே நீ எதைத் தேடுகிறாய். நீ அதிகாரத்தைத் தேடும்போது நீ உண்மையிலேயே பலத்தைத்தான் தேடுகிறாய். கௌரவத்தைத் தேடும்போது, அரசியல் பதவியைத் தேடும்போது எதைத் தேடுகிறாய். நீ அதிகாரத்தை, பலத்தை, ஆற்றலுக்காக தேடுகிறாய் – ஆனால் ஆற்றல் எப்போதும் கதவு மூலையில் காத்துக் கொண்டிருக்கிறது. நீ தவறான இடங்களில் தேடிக் கொண்டிருக்கிறாய். ஓ-நமி – மாபெரும் அலைகள் என்று பொருள் – என்ற பெயர்கொண்ட ஒரு குத்துச் சண்டை வீரன்………………… நாம் கடலின் அலைகள்தான். நாம் மறந்துவிட்டோம். ஆனால் கடல் நம்மை எப்போதும் மறப்பதில்லை. கடல் என்றால் என்ன என்று கேட்குமளவு நாம் அதை மறந்து விட்டோம். ஆனாலும் நாம் கடலில்தான் இருக்கிறோம். அலை தன்னை மறந்து கடலை மறந்து விடலாம். ஆயினும் அது கடலில்தான் இருக்கிறது. ஏனெனில் கடலில்லாவிட்டால் அலை இல்லை. அலையில்லாவிட்டாலும் கடல் இருக்கும். அலையில்லாமல் கடல் உண்டு. ஆனால் கடலில்லாவிட்டால் அலை கிடையாது. அலை கடலின் அலைதான். அது தனியானதல்ல. கடலின் நிகழ்வுதான். அது கடல் தன் இருப்பைக் கொண்டாருதல்தான். கடவுளின் கொண்டாட்டம் மக்கள். கடவுளின் கொண்டாட்டம் பிரபஞ்சம். இது கடலே கடலைத்தேடும் விளையாட்டுதான். அதற்கு அளவு கடந்த சக்தி இருக்கிறது, அதை வைத்துக்கொண்டு என்னசெய்வது. ஓ-நமி – மாபெரும் அலைகள் என்று பொருள் – என்ற பெயர்கொண்ட ஒரு குத்துச் சண்டை வீரன் ஜப்பானில் இருந்தான். அவன் மிகவும் வலிமையானவன்.. . . . . ஆனால் ஒரு அலை, தான் ஒரு அளவற்ற கடலின் பாகம் என்று அறிந்துகொள்ளும்போதுதான் இந்த பலம் சாத்தியப்படும். அந்த அலை இதை மறந்துவிட்டால் அது மிகவும் பலவீனமானதாக இருக்கும். நமது மறக்கும் திறன் அளவற்றது. நமது நினைவு கொள்ளும் திறன் சிறியது, மிகச் சிறியது. ஆனால் மறக்கும் திறன் அளவற்றது. நாம் மறந்துகொண்டே போகிறோம். அதுதான் மிகவும் எளிதானதாகத் தோன்றுகிறது. மிகவும் சுலபமாக மறந்துவிடுகிறோம். இது எப்போதும் நிகழ்கிறது, சுலபமாக மறக்கிறோம். நீ உனது சுவாசத்தை நினைவில் வைத்திருக்கிறாயா. அதில் ஏதாவது பிரச்சனை வரும்போதுதான் அது உன் நினைவுக்கு வருகிறது. சளி, பின் மூச்சுத்திணறல் என ஏதாவது வந்தால்தான், இல்லாவிடில் யார் அதை நினைவில் வைத்திருக்கிறார்கள். அதனால்தான் மக்கள் தங்களுக்கு பிரச்சனை வரும்போதுதான் கடவுளை நினைவு கூறுகிறார்கள். இல்லாவிடில் யார் நினைவு வைத்திருக்கிறார்கள். மேலும் கடவுள் உன்னுடைய மூச்சை விட, உன்னை விட உனக்கு நெருக்கமானவர். அவர் உன்னிடத்தில் உன்னைவிட நெருக்கமாக இருக்கிறார். ஆகவே மறப்பது இயல்பே. நீ அதை கவனித்திருக்கிறாயா. உன்னிடம் எது இல்லையோ அதை நீ நினைவு வைத்திருப்பாய். உன்னிடம் உள்ளதை மறந்து விடுவாய். நீ அதை சாதகமாக எடுத்துக் கொள்வாய். ஏனெனில் கடவுளை இழக்க முடியாது. ஆகவே நினைவில் வைத்துக் கொள்வது மிகவும் கடினம். மிக அரிதான மக்கள் மட்டுமே கடவுளை நினைவில் வைத்துக் கொள்கிறார்கள். உன்னை எப்போதுமே விட்டு விலகாத ஒன்றை நினைவில் வைத்துக்கொள்வது கஷ்டமான செயல். கடலில் உள்ள மீன் கடலை மறந்துவிடும். அதைத் தூக்கி கரையில் சுடுமணலில் வீசினால் அப்போது அதற்கு தெரியும்.அதன் நினைவுக்கு வரும். ஆனால் உன்னைக் கடவுளிலிருந்து பிரித்து வெளியே வீச வழியே இல்லை. அவருக்கு கரை.யே இல்லை. கடவுள் கரைகளற்ற கடல். நீ ஒரு மீன் போன்றவன் அல்ல. நீ ஒரு அலை போன்றவன். நீ கடவுளைப் போன்றவன். உனது இயல்பும் கடவுளின் இயல்பும் ஒன்றேதான். இந்தக் கதைக்கு இந்தப் பெயரை தேர்ந்தெடுத்ததன் காரணம் இதுதான். குத்துச்சண்டையில் மிகவும் ஆற்றல் படைத்தவனாக இருந்தான். தனிப்பட்ட முறையில், பள்ளியில் பயிலுகையில் அவன் தனது ஆசிரியரைக் கூட வீழ்த்திவிடுவான். தனிப்பட்ட முறையில்…………ஏனெனில் தனியாய் இருக்கையில் அவன் தன் அகங்காரத்தை மறந்து விடுகிறான். இந்த சூத்திரத்தை நினைவில் கொள். நீ உன்னை நினைவில் கொள்ளும்போது கடவுளை மறந்து விடுகிறாய். நீ உன்னை மறந்துவிடும்போது நீ கடவுளை நினைவில் கொள்கிறாய். உன்னால் இரண்டையும் நினைவில் வைத்துக்கொள்ள முடியாது. அலை தன்னை அலை என்று நினைவில் வைத்துக்கொள்ளும்போது, அது தான் கடல் என்பதை மறந்து விடுகிறது. அலை தன்னைக் கடலாக உணரும்போது, அது தான் அலை என்பதை எப்படி நினைவில்கொள்ள முடியும். ஏதாவது ஒன்றுதான் சாத்தியம். அலை தன்னை அலை அல்லது கடல் என ஏதாவது ஒன்றைத்தான் நினைவில் கொள்ள முடியும். அது ஒரு கண்கட்டி வித்தை. உன்னால் இரண்டையும் நினைவு கொள்ள முடியாது. அது சாத்தியமில்லை. தனிப்பட்ட முறையில், பள்ளியில் பயிலுகையில் அவன் தனது ஆசிரியரைக் கூட வீழ்த்திவிடுவான். ஆனால் பொதுமேடையில் அவனைவிடச் சிறியவர்கள் கூட அவனை தூக்கி வீசி விடுவர். தனிப்பட்ட முறையில் அவனால் தனது அகங்காரத்தை, தன்னை முழுமையாக மறந்துவிட முடியும். அப்போது அவன் மிகவும் ஆற்றல் உள்ளவனாய் இருக்கிறான். ஆனால் பொது மேடையில் அவன் தன்னை மிகவும் நினைவில் வைத்துக் கொள்கிறான். அப்போது அவன் பலவீனமடைந்து விடுகிறான். நான் – என்பதை நினைவில் வைத்துக் கொள்வது பலவீனம். நான் – என்று நினைவில் கொள்ளாமல் இருப்பது பலம். அவனது இந்த பிரச்சனைக்காக அவன் ஒரு ஜென் குருவிடம் சென்றான். அவரது குருகுலம் கடற்கரையோரம் இருந்தது. ஜென் குரு அவனிடம், மாபெரும் அலைகள் என்பது உனது பெயர். ஆகவே இந்த குருகுலத்தில் இன்றிரவு தங்கி கடலின் அலையோசையை கேள்………………..   ஒரு குரு என்பவர் ஒவ்வொருவருக்கும் ஏற்ற வழிமுறையை உருவாக்குபவர். ஒரு குரு என்பவர் குறிப்பிட்ட வழிமுறை ஏதும் இல்லாதவர். அவர் இந்த ஓ-நமி – மாபெரும் அலைகள் – என்ற மனிதனைப் பார்த்தார். அவனது பெயரிலிருந்தே அவனுக்கு ஒரு வழிமுறையை உருவாக்கிக் கொடுத்தார். இதைத்தான் நானும் செய்து கொண்டிருக்கிறேன். உனக்கு ஒரு பெயரைக் கொடுத்து அதன் மூலம் உனக்கு ஒரு வழிமுறையை உருவாக்கித் தருகிறேன். நீ உன் பெயர் மூலமாக உனது வழிமுறையை நினைவில் கொள்ளலாம். உனது யுக்தியை ஞாபகப்படுத்திக் கொள்ளலாம். அதனால் அது தொடர்ந்து உனக்கு  நினைவில் இருக்கும். உனது பாதையை சுட்டிக் கொண்டிருக்கும் ஒரு குறி போல அது செயல்பட்டுக் கொண்டிருக்கும். அவனது பெயர் ஓ-நமி – மாபெரும் அலைகள் – எனக் கேள்விப்பட்ட குரு கூறினார். மாபெரும் அலைகள் என்பது உனது பெயர். ஆகவே இந்த குருகுலத்தில் இன்றிரவு தங்கி கடலின் அலையோசையை கேள்………………… கடவுளின் கோவிலுக்குள் நுழைவதற்கான அடிப்படை ரகசியங்களில் ஒன்று கவனிப்பது. கவனிப்பது என்றால் ஒன்றுவது. கவனிப்பது என்றால் உன்னை முற்றிலுமாக மறந்து விடுவது. அப்போது மட்டுமே உன்னால் கவனிக்க முடியும். யாரையாவது நீ கவனித்தால் அப்போது உன்னை நீ மறந்து விடுவாய். உன்னை உன்னால் மறக்கமுடியாவிட்டால் நீ கவனிக்கமாட்டாய். நீ உன்னைப்பற்றி நினைத்துக்கொண்டிருந்தால் நீ கவனிப்பது போல பாசாங்குதான் செய்து கொண்டிருப்பாய். கவனிக்க மாட்டாய். நீ உனது தலையை ஆட்டிக் கொண்டிருப்பாய். ஆம் என்றோ இல்லை என்றோசிறிது நேரத்திற்கொருமுறை சொல்லிக் கொண்டிருப்பாய். ஆனால் நீ கவனிக்கமாட்டாய். கவனிக்கும்போது நீ வெறும் வழி போல, கருவறை போல, பெற்றுக்கொள்ளுதல் போல மாறி விடுகிறாய். ஒரு பெண்மை போலாகிவிடுகிறாய். மேலும் சென்றடைய ஒருவர் பெண்மைதன்மை அடைந்தாக வேண்டும். போராடிக்கொண்டு, சண்டையிட்டுக் கொண்டு நீ கடவுளை சென்றடைய முடியாது. நீ கடவுளை சென்றடைய வேண்டுமானால்…….அல்லது இப்படி சொன்னால் சரியாக இருக்கும். நீ பெற்றுக் கொள்பவனாக, பெண்மைதன்மையுடன் இருக்கும்போதுதான் கடவுள் உன்னை வந்தடைவார். நீ – இன் – என்பது போல, ஒரு பெறுபவனாக மாறும்போது கதவு திறக்கிறது. நீ காத்திருக்கிறாய். பொறுமையாளனாக மாற கவனிப்பது உதவும். புத்தர் கவனிப்பதை மிகவும் வலியுறித்தினார். மகாவீரர் கவனிப்பதை மிகவும் வலியுறுத்தினார். கிருஷ்ணமூர்த்தி சரியான கவனித்தல் என்பதை திரும்ப திரும்ப கூறினார். காதுதள் அதன் சின்னம் போல உள்ளதை நீ கவனித்திருக்கிறாயா. உன்னுடைய காதுகள் வெறுமனே ஓட்டைகள் மட்டுமே. வழிதான். வேறெதுவும் இல்லை. உனது காதுகள் உனது கண்களை விட அதிகம் பெண்மையானவை. கண்கள் அதிக ஆண்மையானவை. காதுகள் – இன் – பாகம். கண்கள் – யாங் – பாகம். யாரையாவது பார்க்கும்போது நீ ஆக்கிரமிக்கிறாய். கேட்கும்போது நீ பெறுபவனாகிறாய். அதனால்தான் யாரையாவது உற்றுப்பார்ப்பது நாகரீகமற்றதாக, வன்முறையானதாக மாறுகிறது. அதற்கு அளவு உள்ளது. மனோவியலார் மூன்று நிமிடங்கள் என்று கூறுகின்றனர். மூன்று நிமிடங்கள் ஒருவரை உற்று பார்த்தால் சரி, அதை தாங்கி கொள்ள முடியும். அதற்கு மேல் என்றால் நீ பார்க்கவில்லை. நீ உறுத்துகிறாய். அவரை நீ தண்டிக்கிறாய். நீ அத்துமீறுகிறாய். ஆனால் கவனிப்பதற்கு எல்லை இல்லை. ஏனெனில் காதுகள் அத்து மீறுவதில்லை. அவை எங்கே உள்ளனவோ அங்கேயே இருக்கின்றன. கணகளுக்கு ஓய்வு தேவைப்படுகிறது. இரவில் கவனித்திருக்கிறாயா, கண்களுக்கு ஓய்வு தேவை. காதுகளுக்கு ஓய்வு தேவையில்லை. அவை 24 மணி நேரமும் திறந்திருக்கின்றன – வருடம் பூராவும். கண்கள் சில நிமிடங்கள் கூட திறந்திருப்பதில்லை. தொடர்ந்து சிமிட்டிக் கொண்டே இருக்கின்றன. தொடர்ந்து களைப்படைந்து கொண்டே இருக்கின்றன. ஆக்கிரமித்தல் களைப்படைய செய்யும். ஏனெனில் ஆக்கிரமித்தல் உனது சக்தியை வெளியே எடுக்கிறது. இதனால் கண்கள் ஓய்வெடுப்பதற்காக தொடர்ந்து சமிட்டிக் கொண்டே இருக்கின்றன. அது ஒரு தொடர் செயல். ஆனால் காதுகள் ஓய்வில்தான் இருக்கின்றன. அதனால்தான் பல மதஙகளும் இசையை பிராத்தனைக்கு உபயோகிக்கின்றன. ஏனெனில் இசை உனது காதுகளை மேலும் துடிப்புள்ளதாக, மேலும் உணர்வுள்ளதாக ஆக்குகிறது. ஒருவர் காதுகளாக அதிக அளவிலும் கண்களாக குறைந்த அளவிலும் இருக்க வேண்டும். மாபெரும் அலைகள் என்பது உனது பெயர். ஆகவே இந்த குருகுலத்தில் இன்றிரவு தங்கி கடலின் அலையோசையை கேள்………………… வெறும் காதுகளாக மாறிவிடு – என்ற ஜென் குரு – வெறுமனே கவனி – வேறு எதுவும் செய்ய வேண்டியதில்லை. ஏன் என்றோ என்ன நடக்கிறது என்றோ எந்த கருத்தும் இன்றி கவனித்துக் கொண்டிரு. எந்த இடையூறும் இல்லாமல், உன்னுடைய பங்கிலிருந்து எந்த செயலும் இல்லாமல் கவனித்துக் கொண்டிரு. – என்றார். உன்னை அந்த கடலின் அலை என நினைத்துக்கொள். முதலில் கவனி. பின் அந்த அலைகளுடன் இணைந்து விடு. நீ முழுக்க முழுக்க உள் வாங்குபவனாகவும் மௌனமாகவும்இருப்பதை உணரும் நேரத்தில் உன்னை அந்த அலைகளாக கற்பனை செய்து கொள். இது இரணடாவது படி. முதலில் ஆக்ரோஷமானவனாக இருக்காதே. ஏற்றக் கொள்பவனாக இரு. உள் வாங்குபவனாக மாறும் நேரத்தில் அந்த அலைகளுடன் ஒன்றி விடு. நீ தான் அந்த அலை என கற்பனை செய்துகொள். அவன் தன்னை, தன் ஆணவத்தை மறக்கக்கூடிய ஒரு யுக்தியை அவனுக்கு கொடுத்தார். முதல்படி ஏற்றுக்கொள்பவனாக இருத்தல். ஏனெனில் ஏற்றுக்கொள்ளும் போது ஆணவம் அங்கிருக்க முடியாது. பிரிவினை இருக்கும்போதுதான் ஆணவம் அங்கிருக்க முடியும். நீ உள் வாங்குபவனாக இருக்கும்போது உனது கற்பனைத்திறன் பன்மடங்கு அதிகரிக்கும். ஏற்றுக்கொள்ளும் மக்கள், உணர்ச்சிகரமான மக்கள் கற்பனைத்திறன் உடையவர்கள். தஙகளது பாகத்திலிருந்து எந்த வித ஆக்கிரமிப்பும் இல்லாமல், ஒரு சிறிதளவு ஆக்கிரமிப்பு கூட இல்லாமல் மரத்தின் பசுமையை பார்க்கும் மக்கள். மரத்தின் பசுமையை பருகும் மக்கள். அந்த ஒரு நீருறிஞ்சி போல உறிஞ்சும் மக்கள் யாரோ அவர்கள் படைப்பவர்களாகின்றனர். மிகவும் கற்பனை செய்பவர்களாகின்றனர். அவர்கள்தான் கவிஞர்கள், ஓவியர்கள், நடன கலைஞர்கள், இசையை உருவாக்குபவர்கள். அவர்கள் இந்த பிரபஞ்சத்தை உல் வாங்குதலோடு ஏற்றுக் கொண்டு அவர்கள் எதை உள் வாங்கினார்களோ அதை அப்படியே தருகின்றனர். நீ கடவுளுக்கு அருகில் வர உதவக்கூடிய ஒரு சாதனம் கற்பனை. கடவுள் ஒரு சிறந்த கற்பனைவாதி – ம்ம் – அவருடைய உலகத்தை பார். சிந்தனை செய்து பார். இத்தனை மலர்களுடனும், இத்தனை பட்டாம்பூச்சிகளுடனும், இத்தனை மரங்களுடனும், இத்தனை நதிகளுடனும், இத்தனைவிதமான மக்களுடனும் உலகத்தை கற்பனை செய்துள்ளார். அவருடைய கற்பனைத்திறனை எண்ணிப்பார். இத்தனை நட்ஷத்திரஙகள், இத்தனை உலகங்கள், உலகத்திற்கப்பால் உலகம், முடிவில்லாதது…. அவர் ஒரு சிறந்த கனவு காண்பவராக இருக்க வேண்டும். கிழக்கில் இந்துக்கள் இந்த உலகம் கடவுளின் கனவு என்று கூறுவர். இந்த உலகம் அவரது கண்கட்டிவித்தை. அவரது கற்பனை. அவர் இப்படி கற்பனை செய்துள்ளார். நாம் அவரது கனவின் பாகம்தான். ஜென் குரு ஓ-நமியிடம் உன்னை அந்த அலைகள் போல கற்பனை செய்து கொள் – என்று கூறினார். மேலும் அவர் நீ உருவாக்க முடியும், முதலில் உள் வாங்குபவனாக இருந்தால் பின் உன்னால் உருவாக்கமுடியும். நீ உனது ஆணவத்தை விட்டு விட்டால் பின் நீ வளைந்துகொடுப்பவனாக மாறி விடுவாய். பின் நீ கற்பனை செய்வது நடக்கும். உனது கற்பனை நிஜமாகிவிடும். நீ ஒரு குத்துச்சண்டை வீரன் என்பதை மறந்துவிட்டு அந்த கடலலை என எண்ணிக்கொள். அது எப்படி எது எதிரே வந்தாலும் அதை மூழ்கடிக்கிறதோ அது போல உன்னையும் நீ பெரும் அலை என எண்ணிக்கொள். ஓ-நமி அங்கே தங்கினான். அவன் அந்த அலைகளை நினைக்க முயன்றான். முதலில் அது கடினமாகத்தான் இருக்கும். அவன் பல விஷயங்களை நினைத்தான். அது இயற்கைதான். – ஆனால் அவன் தங்கினான். அவன் மிகவும் பொறுமை வாய்ந்தவனாக இருக்க வேண்டும். பின் மெதுமெதுவாக அவன் அலைகளை மட்டுமே நினைக்க ஆரம்பித்தான். பின் அந்த கணம் வந்த்து………. நீ பொறுமையாக பின் தொடர்ந்தால், பிடிவாதமாக இருநாதால், இந்தக் கணம் வந்தே தீரும். பல பிறவிகளாக நீ ஏங்கிக்கொண்டிருக்கும் அந்த விஷயம் நடக்கும் – ஆனால் பொறுமை தேவை. பிறகு மெதுமெதுவாக அவன் அந்த அலைகளை மட்டுமே நினைத்தான். இரவு ஏறஏற அலைகள் மேலும் அளவில் பெரிதாகிக் கொண்டே வந்தன. இப்போது இவை உண்மையான கடலின் அலைகள் பெரியதாகி வருவதல்ல. இப்போது இவனது கற்பனை அலைகளுக்கும் உண்மையான அலைகளுக்கும் வித்தியாசம் ஏதுமில்லை. அந்த வேற்றுமை மறைந்துவிட்டது. இப்போது அவனுக்கு எது எதுவென்று தெரியாது. எது உண்மை எது கற்பனை என்று தெரியாது. அவன் ஒரு சிறு குழந்தை போலாகிவிட்டான். குழந்தைகளுக்கு மட்டும்தான் அந்தத்திறன் இருக்கிறது. ஒரு குழந்தை தான் கனவில் கண்ட பொம்மை எங்கே என்று காலையில் எழுந்தவுடன் அழும் காட்சியை பார்க்கலாம். அது அந்த பொம்மை வேண்டுமென்று அழும். அது கண்டது கனவென்று சொன்னால் அதற்கு புரியாது. அது பொம்மை எங்கே என்றே அழும். அவனது கனவிற்கும் விழித்திருத்தலுக்கும் வேறுபாடு இருப்பது அவனுக்கு தெரியாது. அவனுக்கு எல்லாமும் ஒன்றுதான். நீ உள் வாங்குபவனாக மாறும்போது நீ ஒரு குழந்தை போலாகிவிடுகிறாய். இப்போது இந்த அலைகள் முதலில் புத்தர் சிலைக்கு முன்னே இருந்த பாத்திரத்திலிருந்து பூக்களை கொண்டு சென்றது. பின் அந்த பாத்திரத்தையே கொண்டு சென்றது. பின் புத்தர் சிலையையே கொண்டு சென்றது. அது அழகு. ஒரு புத்ததுறவிக்கு புத்தரே அடித்துச்செல்லப்பட்டு விட்டார் என்பது கஷ்டமானதாகத்தான் இருக்கும். அவர் தனது மதத்துடன் மிகவும் ஒன்றிவிட்டிருந்தால் இந்த இடத்தில் அவர் தனது கற்பனையிலிருந்து பிரிந்திருப்பார். அவர் – போதும், போதும். புத்தரின் சிலையே அடித்து செல்லப்பட்டு விட்டதா, நான் என்ன செய்வது, இல்லை, நான் அந்த அலை அல்ல. – என்று கூறியிருப்பார். அவர் புத்தர் சிலையின் காலடியில் நின்றிருப்பார். அவர் காலடியில் விழுந்திருப்பார். ஆனால் அதற்கு மேல் எதுவும் நிகழ்ந்திருக்காது. ஆனால் நினைவில் கொள். ஒரு நாள் இந்தப் பாதையில் நீ செல்ல உனக்கு உதவிய அந்த பாதங்களையும் விட்டாக வேண்டும். புத்தர்களும் அடித்து செல்லப்பட்டாக வேண்டும். ஏனெனில் நீ பிடித்துகொண்டிருந்தால் நீ செல்வதற்கு கதவுகளே தடையாக இருக்கும். இரவு ஏறஏற அலைகள் மேலும் அளவில் பெரிதாகிக் கொண்டே வந்தன. முதலில் புத்தர் சிலைக்கு முன்னே இருந்த பாத்திரத்திலிருந்து பூக்களை கொண்டு சென்றது. பின் அந்த பாத்திரத்தையே கொண்டு சென்றது. பின் புத்தர் சிலையையே கொண்டு சென்றது. அதிகாலையில் அந்த குருகுலம் முழுமையும் நீரால் சூழப்பட்டு இருந்தது. அது நிஜமாக நிகழ்ந்தது அல்ல. அது ஓ-நமிக்கு நிகழ்ந்தது. நினைவில் கொள். நீ அந்த சமயத்தில் அந்த கோவிலில்இருந்திருந்தால் அந்த கோவிலை நீர் சூழ்ந்ததை உன்னால் பார்த்திருக்க முடியாது. அது ஓ-நமிக்கு மட்டுமே நிகழ்ந்தது. அது அவனது இருப்பின் முற்றிலும் வேறுபட்ட தளத்தில் நிகழ்ந்தது. கவிதை தளத்தில், கனவு தளத்தில், கற்பனை தளத்தில் நிகழ்ந்தது. வெகுளித்தனமான, குழந்தை போன்ற, பெண்மைதனமான, உள்ளுணர்வில்………………………… அவன் தனது கறபனை யுக்தியின் கதவுகளை திறந்து விட்டான். அலையோசையை கேட்டதன் மூலம், உள் வாங்கிகொள்பவனாய் இருத்தல் மூலம், அவன் கற்பனையியல் சேர்ந்தவனாகிவிட்டான். அவனது கற்பனை ஆயிரம் இதழ் தாமரையாய் மலர்ந்தது. அதிகாலையில் அந்த குருகுலம் முழுமையும் நீரால் சூழப்பட்டு இருந்த்து. ஓ-நமி முகத்தில் புன்னகையுடன் அங்கே அமர்ந்திருந்தான். அவன் புத்தனாகி விட்டான். புத்தருக்கு ஒருநாள் போதிமரத்தடியில் அமர்ந்திருந்தபோது வந்த அதே புன்னகை ஓ-நமிக்கு வந்திருக்க வேண்டும். திடீரென அவன் அங்கே இல்லை. அந்த புன்னகை, திரும்ப வீடு வந்து சேர்ந்துவிட்ட அந்த புன்னகை, வந்து சேர்ந்துவிட்டவரின் புன்னகை, இனி எங்கும் போக வேண்டியதில்லை என்ற புன்னகை, ஆதார மையத்தை வந்தடைந்த புன்னகை, ஒருவர் இறந்து மறுபடி பிறந்த புன்னகை. ஓ-நமி முகத்தில் புன்னகையுடன் அங்கே அமர்ந்திருந்தான். அன்று அவன் பொதுமேடையில் குத்துச்சண்டைக்கு சென்றான், வென்றான். அன்றிலிருந்து ஜப்பானில் யாராலும் அவனை வெல்ல முடிந்ததில்லை. ஏனெனில் அப்போது அது அவனது சக்தியல்ல. அவன் வெறும் ஓ-நமி மட்டுமல்ல, அவன் வெறும் அலையல்ல, அவன் இப்போது கடல். உன்னால் எப்படி கடலை தோற்கடிக்க முடியும். உன்னால் அலைகளை வேண்டுமானால் தோற்கடிக்க முடியும். நீ உன்னுடைய அகங்காரத்தை விட்டுவிட்டால் எல்லா தோல்விகளையும் எல்லா விரக்திகளையும் எல்லா அவமானங்களையும் விட்டுவிட்டாய். அதை சுமந்து சென்றால் நீ தோல்வியில்தான் முட்டிக் கொள்ள வேண்டும். அந்த அகங்காரத்தை விட்டுவிடு. முடிவற்ற ஆற்றல் உன் மூலம் பெருகியோட ஆரம்பிக்கும். அந்த அகங்காரத்தை விடுவதன் மூலம் நீ நதியாகிறாய், நீ ஓட ஆரம்பிக்கிறாய், நீ கரைகிறாய், நீ பெருகியோடுகிறாய். – நீ உயிர் துடிப்புள்ளவனாகிறாய். எல்லா வாழ்வும் முழுமைதான். நீ உன் முயற்சிப்படி வாழ ஆரம்பத்தால் நீ மடத்தனம் செய்கிறாய். அது ஒரு மரத்தில் உள்ள இலை அதன் முயற்சிப்படி வாழ ஆரமபிப்பதை போன்றது. அது மட்டுமல்ல, அது மரத்துடன் சண்டையிடும், வேருடன் சண்டையிடும். இவை யாவும் அதற்கு கெடுதல் செய்வதாக நினைக்கும். நாம் ஒரு மிகப் பெரிய மரத்தில் உள்ள இலைகள்தான். அதை கடவுள் என்றோ, இயற்கை என்றோ, முழுமை என்றோ எப்படி வேண்டுமானாலும் அழை. ஆனால் நாம் அடிமுடியற்ற வாழ்வெனும் மரத்தில் இருக்கும் சிறிய இலைகள்தான். போராட வேண்டிய அவசியம் இல்லை. வீடு வந்து சேர ஒரே வழி சரணடைதல்தான். 43 சாட்சிபாவம் ஒரு மிகப் பெரிய துறவி தன்னுடைய சீடன் ஒருவனிடம் அவனுடைய பாடத்தின் கடைசி அத்தியாயத்தை படிப்பதற்காக அரசவைக்கு போகச் சொன்னார். சீடன் தேர்வு பெற்று விட்டதை அறிவிப்பதற்கு முன் அவன் அரசவைக்கு சென்று அங்கு சில நாட்கள் தங்கி இருக்க வேண்டுமென்று சொன்னார். இதுதான் குருவின் விருப்பமா என்று எண்ணிய சீடன் சென்றான். இந்த அரசர் மிகப் பெரும் துறவியாக இருக்கலாம், அவர் என்னுடைய குருவை விட மிகச் சிறந்தவராக இருக்க வேண்டும் இல்லாவிடில் எப்படி என் குரு தன்னுடைய ஒவ்வொரு சீடனையும் கடைசி தேர்வுக்கு, கடைசி பாடத்திற்கு அங்கே அனுப்புவார் என்று எண்ணினான். ஆச்சரியம்தான், எல்லாவற்றையும் துறந்த ஒரு துறவி தன்னுடைய சீடர்களை எதையும் துறக்காத, பதவி வெறி பிடித்த, அடுத்த நாடுகளை வெற்றி கொள்ளும் வெறி பிடித்த சாதாரண ஒரு அரசனிடம், ஆயிரக்கணக்கான மக்கள் சாவதைப் பற்றி ஒரு சிறிதும் கவலைப்படாத, பொருட்களிடம் பற்றுக் கொண்ட மனிதனிடம் எதற்காக அனுப்புகிறார் அதில் ஏதாவது ரகசியம் இருக்க வேண்டும் நானும் எதற்காக அனுப்பப்படுகிறேன் தெரியவில்லையே என்று நினைத்தவாறே சென்றான். அவன் சென்ற நேரம் மாலை நேரம். அவன் உடனடியாக அரசவைக்கு அழைத்துச் செல்லப் பட்டான். அது அரசர் மதுவருந்தும் நேரம், மேலும் ஒரு அழகான நடன மாது நடனமாட வந்திருந்தாள். அரசவை அந்த மாலை நேரத்தை அனுபவிக்க ஆரம்பித்திருந்தது. இது எல்லாவற்றையும் பார்த்த அந்த இளம் துறவி அதிர்ச்சியடைந்து, திகிலடைந்து போனான். அவன் அரசரிடம் நான் இங்கே சில நாட்கள் தங்க வந்தேன். ஆனால் என்னால் இங்கே ஒரு மணி நேரம்கூட தங்க முடியாது. என்னை என் குருநாதர் எதற்காக இந்த நரகத்திற்கு அனுப்பினார் என்று நினைத்துப் பார்க்க முடியவில்லை. என்றான். அரசர், உன்னை உன் குருநாதர் இங்கே அனுப்பினார் என்றால் அதற்கு ஏதாவது காரணம் இருக்கும். இவ்வளவு சீக்கிரமாக தீர்மானித்துவிடாதே. இரண்டு மூன்று நாட்களில் என்ன நிகழ்ந்துவிடப் போகிறது மேலும் நினைவில் கொள், இது உனது இறுதி கட்ட பரீட்சை. என்னுடைய அங்கீகாரம் இல்லாமல் நீ தேர்வடைந்தவன் என்று ஒரு போதும் அறிவிக்கப்படமாட்டாய். நீ உன்னுடைய குருலத்திலேயேதான் உன் வாழ்நாள் பூராவும் இருக்கவேண்டி வரும். அதனால் நீ உணர்வுடன் பேசு. இங்கே மூன்று நாட்கள் இரு. நீ இங்கே என்னை மதிப்பிட வரவில்லை, நான் உன்னை மதிப்பிடவே நீ இங்கே வந்திருக்கிறாய் என்பதை நினைவில் கொள். இது மிகவும் அதிகம். எல்லாவற்றையும் துறந்த ஒரு துறவியை ஒரு அரசன் மதிப்பிடுவதா ஆத்திரமடைந்தாலும் என்ன செய்வது திரும்பி போனால் குருநாதர் மகிழ்ச்சியடையமாட்டார். எப்படி இருந்தாலும் இங்கே இருந்துதான் தீர வேண்டும் என்பது உறுதி என்றால் எப்படியோ இந்த மூன்று நாட்களை இங்கேயே கடத்திவிட்டு இந்த தலைகனம் பிடித்த மனிதனிடமிருந்து வேண்டியதை சாதித்து சென்று விடலாம். அரசர் கூறினார், அமைதியடைந்து சுயஉணர்வு கொள். முதலில் குளி, நீ வரப் போகும் செய்தி முதலிலேயே எனக்குவந்துவிட்டது. அதனால் நான் உனக்காக எல்லாம் தயார் நிலையில் வைத்திருக்கிறேன். கவலைப்படாதே. இளமை அப்படித்தான். எதையும் சீக்கிரமே தீர்மானம் செய்யச் சொல்லும். தீர்மானம் செய்யாமல் இருக்க, அல்லது உடனடியாக மதிப்பீடு செய்யாமல் இருக்க ஒரு சிறிதளவு அனுபவம் வேண்டும். நீ இதுவரை எதையும் பார்த்ததில்லை. இங்கே மூன்று நாட்கள் இரு, கவனி, பார். நீ மதிப்பீடு உன் வாழ்நாள் முழுவதும் செய்யலாம். அதில் எந்த பிரச்னையும்இல்லை. முதலில் என்னுடைய ஒப்புதல் பெற்றுக் கொள். என்னுடைய மதிப்பீட்டை கவனித்து அதன்படி நடந்து கொள்ள முயற்சி செய். அப்போதுதான் நீ என்னிடமிருந்து சாதகமான தீர்ப்பை பெறலாம். இல்லாவிடில் நீ திரும்ப திரும்ப உனது வாழ்க்கை முழுவதும் இங்கே வர வேண்டியிருக்கும். அதனால் போய் குளி. நான் சகல ஏற்பாடும் செய்து வைத்திருக்கிறேன். இந்த இளம் துறவி இதுவரை அரசனின் குளியலறையை பார்த்ததேயில்லை. அது போன்ற அழகான ஒரு இடத்தில் அவன் இருந்ததேயில்லை. நிர்வாணமான பெண்கள் மசாஜ் செய்ய அங்கே இருந்தனர்…..அவன், கடவுளே, இந்த பரீட்சை என்னை முடித்துவிடும் போலிருக்கிறதே. இந்த மூன்று நாட்களில் இவர் என்னை கொன்று விடப் போகிறார். என்றான். அவன் எதுவும் சொல்வதற்கு முன், உண்மையில் அவன் பதட்டத்தின் உச்சியில் இருந்தான். அவன் எப்போதும் பெண்களிடமிருந்து தப்பித்து வந்திருந்தான், இப்போது இங்கே நிர்வாணமான பெண்கள்…. அவன் இதற்கு முன் இவ்வளவு அழகான பெண்களை பார்த்ததேயில்லை, அதுவும் அவர்கள் மசாஜ் செய்யப் போகிறார்கள். ஆனால் அவன் எதுவும் சொல்வதற்கு முன் உண்மையில் அவனால் எதுவும் பேச முடியவில்லை, அவன் பேசும் சக்தியை இழந்திருந்தான். அவனால் ஆஹாஹாஹா என்று மட்டுமே சொல்ல முடிந்தது. வேறு எதுவும் சொல்ல முடியவில்லை. அவர்கள் அவன் ஆடைகளை கழற்ற ஆரம்பித்தனர். அவன் எதையும் செய்யும்முன், அவன் நிர்வாணமாக நின்றிருந்தான். அந்த நான்கு பெண்களும் அவனை முழுமையாக தங்கள் வசம் எடுத்துக் கொண்டு அவனை குளியல்அறையின் தொட்டியில் அமிழ்த்தினர். அதில் முழுமையாக பன்னீர் இருந்தது. இந்தியாவில் அரசர்களும் மிகப் பெரும் பணக்காரர்களும் பன்னீரில்தான் குளிப்பர். இரவில் குளியல்தொட்டியில்நூற்றுக்கணக்கான ரோஜாக்களை போட்டு வைத்தனர். அதனால் அந்த வாசம் தண்ணீரில் ஊறி விடும். காலையில் அந்த இதழ்களை எடுத்து விட்டால் நீ அந்த ரோஜாக்களை பார்க்காவிட்டாலும் ரோஜாவாசம் உன்னை சூழ்ந்திருக்கும். அவன் இதுவரை தன் வாழ்நாளில் அது போன்ற ஆடம்பரமான எதையும் பார்த்ததேயில்லை. அந்த குளியல் தொட்டி முழுவதும் தங்கத்தால் ஆனது. அரிய வகை எண்ணெய் ஊற்றி அவன் மசாஜ் செய்யப்பட்டான். அதிலிருந்து தப்பிப்பதற்குள் அவனுக்கு போதும் போதுமென்றாகி விட்டது. அதற்குள் அவன் உறைந்தவன் போலாகி விட்டான். பின் அரசர் அவனை விருந்துக்கு அழைத்தார். அவன் இதுவரை இது போன்ற உணவு வகைகளை ருசித்ததேயில்லை. ருசிக்காமல் சாப்பிட வேண்டும் என்றுதான் அவன் இதுவரை படித்துள்ளான். இங்கோ, ருசியான, சுவையான அற்புதமான உணவு. அதன் வாசனையே மணமே உனக்கு பசியெடுக்க வைத்துவிடும். அரசர், உட்கார், உட்காரந்து சாப்பிடு. ருசிக்காமல் சாப்பிட வேண்டும் என்ற உனது ஒழுங்கை நினைவில் கொள். உனது குருநாதரின் இல்லத்தில் உள்ள சுவையில்லாத உணவை சாப்பிடும்போது அதை நினைவில் கொள்வதில் என்ன சிரமம் ஒரு ஒழுங்கினால்தான் அதை அங்கே நினைவில் வைத்துக் கொள்ள வேண்டுமா அங்கே சுவையில்லை. எந்த முட்டாளும் ஒழுங்காக இருப்பான். இங்கே அதை நினைவில் கொள். இளைஞன் அதில் உள்ள கஷ்டத்தை பார்த்தாலும் அதில் உள்ள நியாயத்தையும் பார்த்தான். அரசர், குளியல் எப்படிஇருந்தது சொல்லவே இல்லையே, அந்த பெண்கள் நன்றாக இருந்தார்களா ஏனெனில் அவர்கள்தான் மசாஜ் செய்வதில் சிறந்தவர்கள் நீ திருப்தியடைந்திருப்பாய் என நினைக்கிறேன். அவன் திருப்தியா, நான் மூன்று நாட்களை எப்படியோ கடத்த நினைக்கிறேன். எனக்கு நம்பிக்கை இல்லை, அப்படி கடந்து விட்டால்….. இதுதான் முதல் மாலை. இந்த மூன்று நாட்களும் எனக்கு மூன்று வாழ்க்கை போல இருக்கிறது. இந்த உணவு அதை என் வாழ்நாள் முழுவதும் என்னால் மறக்க முடியாது. நான் துறவி, மேலும் இந்த அழகான பெண்களை என்னால் மறக்கமுடியாது. இது என்ன வகையான பரீட்சை நான் இத்தனை வருடங்களாக என்னை தயார் செய்து வைத்திருப்பதற்கு நேர் எதிரான அனுபவங்களை நீங்கள் எனக்கு கொடுக்கிறீர்கள் என்றான். பின் மது வந்தது. அரசர் அவனுக்கு சிறிது ஊற்றிக் கொடுத்தார். இளைஞன், இது அதிகப்படியானது. ஏனெனில் மது எனது குருநாதரின் இல்லத்தில் தடை செய்யப்பட்ட ஒன்று. என்றான். அரசர், இது உனது குருவின் இல்லம் அல்ல. இது உனது பரிசோதகரின் இல்லம். உனக்கு ஒப்புதல் வழங்கும் பரிட்சை. கவனமாக இரு, நான் சொல்வதை செய். உனது குருநாதர் சுயஉணர்வின்றி இருக்காதே என்று தான் கூறியிருக்கிறார். சுயஉணர்வின்றி இருக்காதே. குடி, சுயஉணர்வை இழக்காமல் இரு. குடிக்காமல் சுயஉணர்வோடு இருப்பதில் என்ன பிரச்னை யாரும் அதை செய்யலாம், எல்லோரும் அப்படித்தான் இருக்கின்றனர். குடி, திருப்தியாகும் வரை குடி. ஏனெனில் திரும்பவும் உனக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காமல் போகலாம். நான் உனக்கு சொல்லுகிறேன். குடிப்பதற்க்கும் சுயஉணர்விழப்பதற்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் உன்னுடன் குடிக்கிறேன். உண்மையில் மாலையில் இருந்து நான் குடித்துக் கொண்டேதான் இருக்கிறேன். நான் சுயஉணர்வை இழந்து விட்டேன் என்று உன்னால் சொல்ல முடியுமா அதனால் குடி. அவன் குடிக்க வேண்டி வந்தது. பின் என்ன நடக்கிறது என்றே அவனுக்கு தெரியாது. என்ற அளவுக்கு அவன் சுயஉணர்வை இழந்து விட்டான். மது, மாது, அழகான உடை, யாவும் அவனை மயக்கி விட்டன. அவன் தங்க வேண்டிய இடத்திற்கு அரசர் அவனை தூக்கிச் சென்றார். அவனால் நம்பவே முடியவில்லை. அவன் தான் சொர்க்கத்திற்கு வந்து விட்டதாக எண்ணினான். மது பலருக்கு சொர்க்கத்தை பற்றிய நினைப்பை கொடுத்து விடும். அதனால்தான் எல்லா மதங்களும் மதுவிற்கு எதிராக இருக்கின்றன. ஏனெனில் மது உனது சொர்க்க ஆசையை பூர்த்திசெய்துவிடும்போது யார் சர்ச், கோவில், ஆசிரமம் ஆகியவற்றைப் பற்றி கவலைப்படுவார்கள் மதுவை குடித்தால் போதும் சொர்க்க ஆசை நிவர்த்தி ஆகும் எனும்போது யார் வேறு எதையும் செய்வார்கள் அவன் தான் சொர்க்கத்தில் இருப்பதாக எண்ணினான். அவன் தான் தேர்வடைய வந்திருப்பதை சுத்தமாக மறந்து விட்டான். அரசர் அவனுக்கு அவனுடைய படுக்கையை காண்பித்தார். அவன் படுத்த மறுகணம் அவன் தன் தலைக்கு மேல் நூலில் ஒரு வாள் தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்தான். எல்லா மயக்கங்களும் காணாமல் போய் விட்டது. திடீரென அவன் தான் சொர்க்கத்தில் இல்லையென கண்டான். அந்த வாள்… யாரையும் எங்கிருந்தாலும் – சாவு – உடனே பூமிக்கு கொண்டு வந்து விடும். அவன் அரசரிடம் எதற்காக இந்த வாள் இங்கே தொங்கிக் கொண்டிருக்கிறதென்று கேட்டான். அரசர், இது உன்னை சுயஉணர்வில் வைத்திருப்பதற்காக அங்கே தொங்கிக் கொண்டிருக்கிறது என்று கூறினார். இதுதான் உனது அறை. இப்போது தூங்கு. கடவுளின் கருணையிருந்தால் நாள் இருவரும் உயிரோடிருந்தால் சந்திப்போம். என்றார். அவன், உங்களுக்கு எதுவும் நடக்காது. நீங்கள் உயிரோடிருப்பீர்கள். பிரச்னை எனக்குத்தான். கடவுளின்கருணையிருந்தால்கூட எனது தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கும் இந்த கூரான வாளை தாங்கிப் பிடிக்கும் சக்தி இந்த நூலுக்கு இருக்குமா என்பது எனக்கு சந்தேகம்தான். ஒரு தென்றல் காற்று போதும், அது எந்த வினாடியும் அறுந்து விழுந்துவிடும். நான் செத்தேன். என்றான். அரசர், கவலைப்படாதே. நீ இறந்து விட்டால்கூட உனது குரு சொல்லிருப்பாரே மறுபிறப்பு பற்றி – நீ மறுபிறப்பு எடுப்பாய் – மறுபடியும் பிறப்பாய். நீ கற்றது அனைத்தும் உன்னுடன் வரும். அதனால் இந்த கடைசி கணங்களை தவற விட்டு விடாதே. அது விழலாம், அதற்கு நான் உறுதிமொழி கொடுக்கமுடியாது. நீ இந்த கணங்களை எப்படி உபயோகப்படுத்திக் கொள்கிறாய் என்பது உன்னை பொறுத்தது. தன்னுணர்வோடு இரு, நீ தன்னுணர்வோடு இறந்தால் அதை விட சிறப்பானது எதுவும் கிடையாது. என்றார். இளைஞன், நான் இறக்க விரும்பவில்லை. நான் இங்கே ஒப்புதல் பெறவே வந்தேன். ஆனால் நீங்கள் என்னைவாழ்விலிருந்தே காலி செய்கிறீர்கள். என்றான். அரசர், இதுதான் ஒருவர் ஒப்புதல் பெறும் வழி. நீ தூங்கு. என்ன நிகழ்கிறதோ அதுவே நிகழும். அதுதான் உனது குருசொல்லிக் கொடுத்தது. இதைதான் இந்துக்கள் சொல்கிறார்கள் அவனின்றி அணுவும் அசையாது, ஒரு இலை கூட அவனது விருப்பமின்றி அசையாது, பின் எப்படி ஒரு வாள் உன்னை கொன்று விடும். அதுதான் அவன் விருப்பம் என்றால் வாளோ, வாளின்றியோ நீ கொல்லப்படுவாய். அதனால் தூங்கு, நான் அப்படித்தான் தூங்கப் போகிறேன். உன்மேல் ஒரே ஒரு வாள்தான் தொங்கிக் கொண்டிருக்கிறது. அங்கே என்மேல் ஆயிரக்கணக்கான வாட்கள் தொங்கிக் கொண்டிருக்கிறது. சீக்கிரமே என் குறட்டை சத்தத்தை அடுத்த அறையில் இருந்து நீ கேட்கலாம். என்றார். இளைஞனால் இரவு முழுவதும் தூங்க முடியவில்லை. இரவு முழுவதும் அடுத்த அறையில் அரசர் விடும் குறட்டை சத்தம் அவனுக்கு கேட்டது. காலையில் அரசர் அவனது அறைக்கு வந்தார். இளைஞன் விழிப்புடன் வாளை பார்த்தவாறே படுத்திருந்தான். இந்த முழு உலகத்திலும் வாளைத் தவிர வேறு எதுவும் இல்லை. அரசர், நான் குளிக்கப் போகிறேன். அவரது அரண்மனைக்கு பின் புனித கங்கை ஆறு ஓடிக் கொண்டிருந்தது. என்னுடன் வா, சிறிது தூரம் நடந்து விட்டு ஆற்றில் நீச்சல் அடித்து வரலாம். வா என அழைத்தார். அவர்கள்சென்றனர். அந்த துறவியிடம் கோவணத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. கோவணம் என்பது ஒரு சிறிய துண்டு துணியைத்தவிர வேறெதுவும் இல்லை. தையல் ஏதுமற்ற மிகச் சிறிய உள்ளாடை. உன்னுடைய இடுப்பைச் சுற்றி ஒரு நூலை கட்டிக் கொண்டு அதில் முன்னால் ஒரு முனையையும் பின்னால் ஒரு முனையையும் கட்டிக் கொண்டால் முடிந்தது. தையல் ஏதும் தேவையில்லை. அதை எங்கேயும் எப்போதும் செய்யலாம். இதைத்தான் இந்து துறவிகள் அணிவர். ஏனெனில் தையல் சிக்கலான விஷயம். அதில் மற்றவர்கள் உதவி தேவை. பணம் தேவை. அவை எல்லாம் தவிர்க்கப்பட வேண்டும். இந்து துறவி எல்லாவற்றையும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தவிர்க்க வேண்டும். ஒரு பிச்சை பாத்திரம்  அதுவும் உலோகத்தால் ஆனது அல்ல. தேங்காய் மூடி அதுதான் பிச்சை பாத்திரம். அதை உன் கையோடு கட்டிக் கொண்டால் முடிந்தது. பிச்சை பாத்திரம் போலவே உன் கோவணமும். ஒரு குச்சி – எதற்காக குச்சி என்று வியப்படைவாய். அது இந்திய நாய்களுக்காக. அவை சீருடைகளுக்கு எதிரானவை.துறவியின் சீருடை பெரிதாக இல்லையென்றாலும் சீருடை சீருடைதானே. பிச்சை பாத்திரம், கோவணம், ஒரு குச்சி ஆகிய இவையே அந்த இளைஞன் தன்னுடன் கொண்டு வந்த பொருட்கள். காலையில் அவன் அந்த மூன்று பொருட்களை திரும்பவும் எடுத்துக் கொண்டான். ஏனெனில் அரசர் கொடுத்த மிக மதிப்பு வாய்ந்த ஆடைகளோடு, உடையோடு வெளியே வர அவனுக்கு மிகவும் தர்மசங்கடமாக இருந்தது. அவன், அரண்மனையில் இருக்கும்போது நான் அவற்றை அணிந்து கொள்கிறேன். ஆனால் வெளியே வரும்போது அவற்றை நான் போட்டிருப்பதை யாராவது பார்த்துவிட்டால் அது எனக்கும் உங்களுக்கும் சங்கடமாகி விடும். அதனால் நான் என் கோவணத்தை கட்டிக் கொள்கிறேன் என்றான். அரசர், அது உன் பிரச்னை என்று கூறி விட்டார். ஆகவே அரசர் தனது ராஜ ஆடையிலும் இவன் தனது கோவணத்தோடும் சென்றனர். இருவரும் தங்களது ஆடைகளை கழற்றி கரையில் வைத்துவிட்டு குளிக்க நதியில் இறங்கினர். அவர்கள் குளித்துக் கொண்டிருக்கும்போது துறவி அரசரிடம் உங்களது அரண்மனையில் தீ பிடித்திருக்கிறது என்று கத்தினான். அரசர், நீ பார்ப்பதற்க்கு முன்பே நான் பார்த்துவிட்டேன். ஆனால் கவலைப்பட ஏதுமில்லை. இப்போது என்ன செய்ய முடியும் அது தீப்பிடித்துவிட்டது. கடவுளின் விருப்பமின்றி எதுவும் நடவாது. அதனால் கவலைப்படாதே. நீ குளி. என்றார். துறவி, என்ன சொல்கிறீர்கள், நான் என் துணிகளை காப்பாற்றிக் கொள்கிறேன். அது அரண்மனைக்கு அருகில் இருக்கிறது என்று கூறியவாறே ஓடிப் போய் தன் ஆடைகளை எடுத்துக் கொண்டான். அரண்மனை பற்றி எரிகிறதுஅரசரின் ஆடைகள் அங்கே இருந்தன. ஆனால் அவன் தனது ஆடைகளை பற்றி மட்டும் கவலைப்பட்டான். அரசர் குளித்துமுடித்தார். அரண்மனை எரிந்து முடிந்தது. அது அவரது ஆணையின்மேல் பற்ற வைக்கப்பட்டிருந்தது. துறவி, அதிர்ச்சியில் நடுக்கத்தில் இருந்தான். கோடிக்கணக்கான ரூபாய்கள்…….. எத்தனை நஷ்டம் என்றான். ஆனால் அரசர், கவலைப்படாதே அது உன்னுடையது அல்லவே உன்னுடைய பொருட்கள் பாதுகாப்பாக உள்ளதா என்றார். அவன் எனது பொருட்கள் பாதுகாப்பாக இருக்கிறது என்றான். அரசர், அது உனக்கு போதும் – நீ உன் பொருட்களை பற்றி மட்டுமே கவலைப்பட வேண்டும். இவைதான் உன் செல்வம், உனது ராஜாங்கம். ஆனால் எனது முழு ராஜாங்கமும் பற்றி எரிந்து போனாலும் நான் கவலைப்படமாட்டேன். அது பிரச்னையே அல்ல. ஏனெனில் நான் இங்கில்லாத போதும் உலகம் இருந்தது, அரசாங்கம் இருந்தது. ஒரு நாள் நான் இல்லாமல் போவேன், அப்போதும் உலகம் இங்கிருக்கும். இங்கே நான் ஒரு சாட்சியாளன், பார்வையாளன் மட்டுமே. இதில் நான் ஏன் ஒன்றி போக வேண்டும் ஆனால் நீ எதையும் துறக்கவில்லை என்பதை நீ நினைவில் கொள்ள வேண்டும். நீ இன்னும் பார்வையாளனாகவில்லை. உன்னால் எனது வீடு பற்றி எரிவதைக்கூட பார்க்கமுடியவில்லை. உனது துணி எரிந்துபோயிருந்தால் உனக்கு பயித்தியம் பிடித்திருக்கும் என்று நினைக்கிறேன். என்னுடைய இழப்பை பார்த்த்திலேயே உனக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது. ஆனால் அதற்க்கும் உனக்கும் என்ன சம்பந்தம் நான் குடித்ததை பார்த்ததிலேயே நீ அதிர்ச்சியடைந்துவிட்டாய், ஆனால் நான் குடிக்கும்போதுகூட நான் ஒருசாட்சியாளன்தான். என்னைச் சுற்றி அழகான பெண்கள் இருந்ததை பார்த்த போது அதிர்ச்சியடைந்து விட்டாய். ஆனால் அப்போதும் நான் பார்வையாளன்தான். ஆனால் நீ சாட்சியாளனாக இல்லை. இந்த இரண்டு நாட்களில் விழித்துக் கொள். காலம் அதிகமில்லை. மிகவும் குறைவாகவே உள்ளது. சாட்சியாளனாக இரு. நான் உனக்கு சான்றிதழ் கொடுப்பதற்கு முன் நீ தேர்வடையவேண்டும். நீ ஒரு பார்வையாளன் என்பதை நீ நிரூபிக்க வேண்டும். அவன் நான் எப்படி நிரூபிப்பது என்று கேட்டான். அரசர், இன்று எல்லாவற்றையும் முயற்சி செய். அது எதுவாக இருந்தாலும் அது நீ கவனிப்பதற்கு உதவி செய்வதாக மாற வேண்டும். வெறுமனே கவனி, தப்பிக்க முயற்சி செய்யாதே. அமுக்காதே, சண்டையிடாதே. தவிர்க்காதே. கவனி, விஷயங்கள் நிகழட்டும். என்றார். மூன்றாவது நாளில் இறுதி பரீட்சை ஒரு அழகிய நடனம். இந்த துறவியின் கையில் எண்ணெய் நிரம்பிய ஒரு கோப்பைகொடுக்கப்பட்டது.  ஒரு சிறிதளவு அசைந்தால்கூட எண்ணெய் சிந்திவிடும். நடனமாதர்கள் – அனைவரும் நிர்வாணமாக – சுற்றிலும் வட்டமாக நடனமாடுவர். அரசர் நடுவில் அமர்ந்திருப்பார். அந்த இளைஞன் அந்த அரிய வகை எண்ணெய் நிரம்பிய கோப்பையை கையில் வைத்துக் கொண்டு சுற்றி வர வேண்டும். ஒரு சிறிதளவு எண்ணெய் சிந்தினாலும் போச்சு, நீ தேர்வடையவில்லை. என்று கூறப்பட்டிருந்தது. அவ்வளவு அழகான மாதர்கள் நடனமாடும்போது  அக்கம் பக்கம் திரும்பி என்ன நடக்கிறதென்று பார்க்கும் ஆசை யாருக்குத்தான் வராது தூண்டுதல் இருக்கத்தான் செய்யும். ஆனால் அந்த கோப்பையிலிருந்து ஒரு சொட்டு எண்ணெய்….. ஒரே ஒரு கணம் கவனமில்லாமை…… பெண்களை அவன் சுற்றி வந்தான். அவர்களை அவன் கடந்து வந்தான். அவன் சுற்றி வர வர, அவனுள் சாட்சிபாவம் மெதுமெதுவே படிந்தது. அவன் நடனத்தை மறந்தான், இக்கணம், எண்ணெய், கவனம் மட்டுமே இருந்தது. கவனித்தல் ஒரு சிறிய விஷயம். ஆனால் அதில் ஏதும் ஆணவத்தை பூர்த்தி செய்யக் கூடியதில்லை. தியானமும் அப்படித்தான். பல்வேறு பெயர்கள் – கவனித்தல், சாட்சி, தியானம், விழிப்போடு இருத்தல் – ஒரே விஷயத்துக்கு பலப் பெயர்கள். இவை யாவும் நீ ஏதும் செய்யாத போதுதான் நிகழும். இப்போது இதுதான் கேள்வி செய்யாமல் இருப்பது என்பது என்ன நீ எப்படி என்று கேள்வி கேட்கும்போது நீ அதை தவற விட்டு விடுகிறாய் ஏனெனில் எப்படி என்றாலே செய்வதுதான் நீ – செய்யாமல் இருப்பதை அடைவதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் என்று கேட்கிறாய். செய்யாமல் இருப்பது என்பதை நீ வெறுமனே புரிந்து கொள்ள வேண்டும். மடத்தனமான கேள்வியை கேட்காதே. செயல் மூலம் உனது ஆணவம் நிறைவடைவதை புரிந்துகொள்ள முயற்சி செய். நீ எதை செய்தாலும் – பிரார்த்தனை, பட்டினி, கோவிலுக்கு போவது, துறவியாவது – நீ எதை செய்தாலும் அது உன் ஆணவத்திற்கு தீனிதான். உனது ஆணவம் உனக்கும், பிரபஞசத்திற்க்கும், உனக்கும், உண்மைக்கும் இடையே தடை. எதையும் செய்யாதே. நீ இந்த மடத்தனம் எதையும் செய்யாமல் ஏன் வாழக்கூடாது பசிக்கும்போது சாப்பிடு. தாகம் எடுக்கும்போது தண்ணீர் குடி தூக்கம் வரும்போது தூங்கு விழிப்பு வரும்போது எழுந்து கொள். மற்ற எல்லாவற்றையும் மறந்துவிடு. தேவையான சிறிய விஷயங்களை செய். சாதாரண வாழ்க்கையை வாழ். நீ கண்டுபிடிப்பாய். ஜீஸஸ் தேடு, கண்டடைவாய் என்றார். நான் தேடினால் கிடைக்காது என்கிறேன். ஜீஸஸ் கேளு அது உனக்கு கொடுக்கப்படும் என்றார். நான் கேட்டால் அது உனக்கு கொடுக்கப்படாது என்கிறேன். ஜீஸஸ் கதவை தட்டு திறக்கும் என்றார் . நான் கதவை தட்டினால் அது ஒருபோதும் உனக்கு திறக்காது என்கிறேன். உண்மையில் தட்ட வேண்டிய அவசியமே இல்லை. கதவு திறந்துதான் இருக்கிறது. உள்ளே நுழை. 44 சீடனின்தன்மை இது ஒரு மிகவும் அழகான கதையாகும். ஆன்மீகத்தின் முழு வரலாற்றிலும் இதற்கு இணையான கதையே கிடையாது. ஆகவே இதை புரிந்து கொள்ள வேண்டும். நீ இதை தவறாக புரிந்து கொள்வாய். இதை தவறாக புரிந்து கொள்வது மிகவும் எளிது. இதை படிக்கும் யாரும் எப்படி புரிந்து கொள்வார்களோ அப்படித்தான் நீயும் புரிந்து கொள்வாய். கேள்வி எழும் : இரண்டு ஞானமடைந்த மனிதர்கள் ஏன் தங்களது குரு இறந்ததால் பாதிக்கப்பட்டனர் ? அவர்கள் பாதிக்கப்படவேயில்லை. அது துயரத்தினால் நிகழ்ந்ததல்ல. அது முற்றிலும் வேறுபட்ட பரிமாணம். ரஜப் திரும்பவும் தனது கண்களை திறக்கவேயில்லை. அவரிடம் ஒருமுறை ஏன் அவர் தனது கண்களை திறப்பதேயில்லை என்று கேட்கப்பட்டது. அவர், “நான் இந்த உலகிலேயே மிக அழகான விஷயத்தை பார்த்து விட்டேன். இனி பார்ப்பதற்கு ஒன்றும் இல்லை” என்று கூறினார். டாடூ ஒரு மிக அழகான மலர். இப்போது உனது கண்களை திறந்து வைப்பதால் என்ன பயன் ? உன்னிடம் கோஹினூர் வைரம் இருக்கும்போது நீ எதற்காக கடற்கரை கூழாங்கற்களை சேகரிக்கிறாய் ? – சேகரிப்பாயா ? ரஜப் பாதிக்கப்படவில்லை. சோகத்தினால் அவர் தனது கண்களை மூடிக்கொள்ளவில்லை. அவர் கண்களிலிருந்து ஒரு சொட்டு கண்ணீர் கூட வரவில்லை. அவர் அழவில்லை, அவர் தேம்பவில்லை. மூடிய கண்களுடன் அவர் டாடூவின் பாடல்களை பாடி ஆடிக் கொண்டிருந்தார். ஆனால் அவர்,  “ஒருமுறை கடவுளை மனித உருவில் பார்த்துவிட்டால் பின் வேறு என்ன இருக்கிறது பார்ப்பதற்கு ? வேறு எதுவும் பார்ப்பதற்கு இல்லை ! நான் எனது கண்களில் பதிந்துள்ள எனது குருவின் உருவத்தை எனது இறுதி பதிவாக வைத்திருக்க விரும்புகிறேன். அதைத் தவிர வேறு எதையும் அதில் படியவைக்க விரும்பவில்லை. அது தூசியால் மூடப்படவும் விரும்பவில்லை. “ என்றார். அம்புபாய், இப்போது இந்த முழு கதையும் வேறுவிதமாக தோன்றுகிறது. இது மிக அபிரிதமான அன்பு. இது குருவின் உடலோடு கொண்டுள்ள ஈடுபாடு அல்ல. இது மிகப் பெரிய புரிதலாகும். நீ ஒரு முறை குருவை பார்த்துவிட்டால் !! ரஜப் தனது குருவோடு நெருக்கமாக வாழ்ந்துவந்தார். அவர் தீட்சை பெற்றபோது அவருக்கு வயது ஏழு. மிகச்சிறிய பையன். ஒரு திருவிழாவில் கலந்துகொள்ள தனது பெற்றோர்களுடன் அவர் வந்திருந்தார். அவருக்கு டாடூவைப் பற்றி எதுவுமே தெரியாது. டாடூவும் அப்போது அங்கிருந்தார். டாடூ ஞானமடைந்தவர் என்பது நாடெங்கும் அறிந்த செய்தியாதலால் ரஜப்பின் பெற்றோர் அவரை வணங்கி செல்ல போனார்கள். அவர்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை, எனினும் அந்த நாடு பாரம்பரியமும் பழமையும் வாய்ந்தது. யாராவது ஞானமடைந்தவர்கள் என்று கேள்விப்பட்டால் அது உண்மையோ, பொய்யோ, போய் அவர்கள் காலை தொட்டு வணங்கி விட்டு வருவார்கள். உண்மையிலேயே அவர் அடைந்திருந்தால் ஏன் வாய்ப்பை தவற விட வேண்டும் ? அவர் உண்மையிலேயே அடையவில்லை யென்றாலும் உனக்கு ஒன்றும் இழப்பில்லையே.! இது தந்திரமானது, வியாபாரத்தனமானது. பெற்றோர் சென்றனர். ரஜப் தொடர்ந்தார். பெற்றோர் அவரது காலை தொட்டு வணங்கினர், ஆனால் ரஜப் நிலைமாற்றமடைந்துவிட்டார். அவர் டாடூவை பார்த்த கணமே தனது சென்ற பிறவிகளிலிருந்து ஏதோ ஒன்றை அடையாளம் கண்டுவிட்டார். இந்த மனிதன் புதிதல்ல. இந்த குணங்களும் புதிதல்ல. அவரை முன்பே தனக்குத் தெரியும் என்பதை உணர்ந்து கொண்டார். நீ ஒரு குருவுடன் வாழ்ந்திருந்தால் உடனடியாக அவரை அடையாளம் கண்டு கொள்வது எப்போதும் நிகழ்வதுதான். அவர் அவரது காலடியில் விழுந்துவிட்டார். பெற்றோர் ரஜப்பை தங்களோடு அழைத்து செல்ல மிகவும் முயற்சித்தனர். ஆனால் ரஜப், “ நான் எனது உண்மையான பெற்றோரை கண்டுவிட்டேன். நீங்கள் போகலாம் “ என்றார். “ நீங்கள் டாடூவின் காலை தொட்டு வணங்கியது போல நானும் உங்கள் காலைத் தொட்டு வணங்குகிறேன், சென்று வாருங்கள் “ என்று கூறி விட்டார், ஏழு வயது பையன்.  பல முற் பிறவிகளில் இந்த பக்குவம் வந்திருக்க வேண்டும். பெற்றோர் கதறி அழுதனர், ஆனால் ரஜப்,  “சாத்தியமேயில்லை, நான் அவரை கண்டுவிட்டேன், இனி ஒரு கணம் கூட அவரை விட்டு விலக என்னால் முடியாது.” என்று கூறி விட்டார். அப்போதிலிருந்து இருபது வருடங்கள் அவர் தனது குருவின் அருகிலேயேதான் இருந்தார். அவரது தேவைகளை கவனித்துக் கொண்டு, அதே அறையில் தூங்கிக் கொண்டு, அவருக்கு என்ன தேவைப்படுகிறது என்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தார். டாடூ இறந்த அன்று ரஜப் வெறுமனே தனது கண்களை மூடிக் கொண்டுவிட்டார். அது இந்த உலகுக்கு தனது கண்களை மூடிக் கொண்டுவிடுவது. அவர், “ இப்போது பார்ப்பதற்கு எதுவும் இல்லை, எதை பார்க்கவேண்டுமோ அதை நான் பார்த்துவிட்டேன். இப்போது ஏன் அனாவசியமாக கண்களை வீணடித்து குப்பையை சேகரித்துக் கொள்ள வேண்டும் ? நீ ஒரு முறை கடவுளை பார்த்து விட்டாலே போதும் ! அங்கு வேறு எதையும் பார்க்க வேண்டிய தேவை இல்லை. நீ இறுதியானதை பார்த்துவிட்டாய் “ என்று கூறியிருக்கிறார். அம்புபாய், ரஜப் தனது கண்களை மூடிக் கொண்டது பந்தத்தினால் அல்ல. அது மிகப் பெரிய புரிதலில் இருந்து வந்தது. அவர் துக்கப்படவில்லை. அவர் நடனமாடிக் கொண்டிருந்தார், அவர் வாழும்வரை மூடியகண்களுடன் பாடியபடி ஆடிக் கொண்டிருந்தார். ஏனெனில் அவர் தனது குருவை உள்ளேயே பார்த்துக் கொண்டிருந்தார். இருபது வருடங்கள் தொடர்ந்து தனது குருவுடன் தொடர்பு கொண்டிருந்தார் அவரது குரு கிட்டத்தட்ட அவரது உயிர் போலாகி விட்டார். கண்களை மூடியதன் மூலம் அவர் தனது குருவுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தார். அவரை தவறாக புரிந்து கொள்ளாதே. ரஜப் இது வரை இருந்த மிக அழகான சீடர்களில் ஒருவர். மற்றொரு சீடரான சுந்தரோ-வுக்கு நடந்தது  என்ன? டாடூ இறந்தவுடன் அவர் படுக்கையில் படுத்துக் கொண்டார். அவர் அந்த படுக்கையிலேயே சாகும்வரை இருந்தார். அந்த படுக்கையை விட்டு அவர் நகரவே இல்லை. குரு அவரது வாழ்நாள் முழுவதும் அந்த படுக்கையில தான் படுத்திருந்தார், அதில் அவரது அதிர்வு இருந்தது, அவரது இருப்பு இருந்தது, அது அதில் முழுமையாக நனைந்திருந்தது. அவர் படுக்கையை விட்டு நகரவேயில்லை. ஏன் என்று மக்கள் கேட்டனர். அதற்கு சுந்தரோ “ போவதற்கு வேறு எந்த இடமும் இல்லை. நான் வந்தடைந்துவிட்டேன். இதுதான் என் வீடு. இதுதான் என் சொர்க்கம், இதுதான் என் மோட்சம். இந்த படுக்கையில் என் குரு உருவாக்கியுள்ள இந்த அற்புதமான இடத்தில்தான் நான் இருக்க விரும்புகிறேன், இறக்க விரும்புகிறேன். “ என்றார். நீ உனது வாழ்வையும் சாவையும்   தனியாக பார்க்காமல் உன்னுடைய குருவுடன் ஒன்றிப் போய் விடுகிறாய். இதுதான் அதன் பொருள். சுந்தரோ சில சமயங்களில் டாடூவைப் போல பேசும் அளவு தன் குருவுடன் ஒன்றி போய் விட்டார். மக்கள் அவரிடம், “ நீங்கள் டாடூ அல்ல! “ என்று கூறுவர். பின் அவர், “ஆம், என்னை மன்னித்து விடுங்கள். நான் மறந்து விட்டேன். ஆனால் உண்மையில் என்னை கேட்டால் நான் டாடூதான். நான் என் குருவுடன் ஒன்றி விட்டேன் “ என்று கூறுவார். இதுதான் சீடனாக இருப்பதன் இறுதி நிலை. சீடன் குருவுடன் ஒன்றி போய் விடுதல். அவர், தான் டாடூ என்று கூறுவார். அவர் பாடல்கள் எழுதுவார், ஆனால் அதில் அவரது பெயர் இருக்காது, டாடூவின் பெயர்தான் இருக்கும். மக்கள் இது தவறு என்று நினைப்பர். பண்டிதர்கள் சுந்தரோ எழுதிய பாடல்களை இடம் மாற்றியமைத்து விட்டனர். அவர்கள் அது டாடூவின் பாடல் அல்ல என்று நினைத்தனர். ஆனால் நான் சொல்கிறேன் அது டாடூவிடமிருந்துதான் வந்தது. சுந்தரோ டாடூவின் வாயில் இருக்கும் ஒரு புல்லாங்குழல் தான். சுந்தரோ ஒரு தனிபட்ட நபராக அங்கு இருக்கவில்லை. இதுதான் ஒரு சீடனின் மிக அதிகபட்ச உயர்நிலை. சீடனும் குருவும் சந்தித்து, இணைந்து ஒன்றாகி விட்டனர். சுந்தரோ தனது குருவுடன் ஒன்றாகி விட்டதால் அவருக்கு டாடூ என்று கையெழுத்திட எல்லா உரிமையும் உண்டு. அவர் தனது கவிதைகளில் டாடூ என்றுதான் கையெழுத்திடுவார். சுந்தரோ என்று கையெழுத்திட மாட்டார். மேலும் நான் முழுமையாக அவருடன் ஒத்துப் போகிறேன். மேலும் இந்த பண்டிதர்கள் இன்னும் சிறிதளவு உணர்வோடு இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். இவை கல்வியறிவுக்கானவை இல்ல. இவை கற்கும் மனிதர்களுக்கானவை அல்ல. இவை நேசிப்பவர்களுக்கானவை. நேசிப்பவர்களால் மட்டும்தான் இது போன்ற விஷயங்களை புரிந்து கொள்ள முடியும். என்ன ஒரு அழகான விஷயம்.! ஒரு சீடன் தனது பெயரை கையெழுத்திட மறந்து குருவின் பெயரை எழுதுவது என்பது என்ன ஒரு அற்புதமான விஷயம். சில சமயங்களில் மக்கள் டாடூவை அழைக்க வருவார்கள், அப்போது சுந்தரோ, “ சரி, நான் வருகிறேன்.” என்பார். அப்போது அவர்கள், “ நாங்கள் உங்களை அழைத்துப் போக வரவில்லை, நாங்கள் டாடூவை அழைத்துப் போக வந்தோம்” என்பர். சுந்தரோ, “நான் யார் ? ஏன் அனாவசியமாக அந்த வயதான மனிதனை தொந்தரவு படுத்துகிறீர்கள் ? நான் இன்னும் இளமையாக இருக்கிறேன். என்னால் வெகுதூரம் பயணம் செய்ய முடியும். என்னால் வர முடியும். ஏன் அவரை தொல்லை செய்ய வேண்டும் ? என்று சொல்வார். மேலும் டாடூ சில சமயங்களில் சுந்தரோவை அனுப்புவார். மக்கள் டாடூவை அழைப்பார்கள், அவர் சுந்தரோவை அனுப்புவார். நாம் குருவை தானே அழைத்தோம், சீடரை அழைக்க வில்லையே என்று மக்கள் குழம்பி போய் விடுவார்கள். ஆனால் அவர்களால் புரிந்து கொள்ள முடியாது. குருவும் சீடனும் நேசிப்பின் உச்சத்தில் ஒருவருக்குள் ஒருவர் கரைந்து போய் விட்டனர். ஆகவே டாடூ இறந்த அன்று சுந்தரோ அதைப்பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. தகனத்திற்கு கூட செல்ல வில்லை. எல்லோரும் தகனத்திற்கு சென்று விட்டனர். ஆயிரக்கணக்கான சீடர்கள் கூடி விட்டனர், எல்லோரும் அழுது கொண்டும் கதறிக் கொண்டும் இருக்கின்றனர். எல்லோரும் துயரத்தில் இருந்தனர். ஆனால் சுந்தரோ என்ன செய்தார். அவர் தனது குருவின் படுக்கையறைக்குள் நுழைந்து அவரது படுக்கையில் படுத்துக் கொண்டு, அவரது போர்வையை போர்த்திக் கொண்டு தானே டாடூவாகி விட்டார். போன மக்கள் திரும்பி வந்து பார்த்தவுடன், இது கிறுக்குத்தனம் என்று நினைத்தனர். அவர்கள் சுந்தரோவிடம், இது சரியல்ல, நீ பைத்தியமாகி விட்டாய் உனக்கு கிறுக்கு பிடித்திருக்கிறதா  என்ன ? இது குருவின் படுக்கை ! எழுந்திரு! என்றனர். ஆனால் சுந்தரோ, “ நான் இனிமேல் இல்லை. சுந்தரோ இறந்து விட்டான். நீங்கள் அவனது தகனத்திற்கா சென்றிருந்தீர்கள்? நீங்கள் சென்று அவனை எரித்து விட்டு வந்திருக்கிறீர்கள். நான் டாடூ. இனி என்னில் டாடூதான் செயல்படுவார் என்றார். அதனால்தான் அம்புபாய், அவர் படுக்கையை விட்டு எழவேயில்லை. ஒரு கணம் கூட எழவில்லை. அவர் அந்த படுக்கையிலேயே வாழ்ந்து அந்த படுக்கையிலேயே இறந்துபோனார். ஏனெனில் இவர் தனது குருவுடன் ஒன்றி குருவாகவே மாறிவிட்டார். நான் இந்த விளையாட்டை MAD விளையாட்டு எனறழைக்கிறேன்.  MAD  என்றால் M என்பது  MASTER  என்ற குருவையும் D என்பது DISCIPLE என்ற சீடனையும் குறிக்கும். குரு – சீடன் விளையாட்டு  அதுதான் கிறுக்கு – MAD – விளையாட்டு. நீ கிறுக்கனானால் ஒழிய உன்னால் இதை புரிந்து கொள்ள முடியாது. மேலும் அம்புபாய், சிறிது கிறுக்குத்தனம் உன்னுள் நுழைந்திருப்பதை பார்க்கிறேன், அதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நீ வந்துகொண்டேயிருக்கிறாய். நீ புத்ததளத்திலிருந்து வெகுநாள் தள்ளி  இருக்க முடியாது. நீ நெருங்கி வருவதை நான் பார்க்கிறேன். கூடிய விரைவில் ஆரஞ்சு வண்ணம் உன் வண்ணமாகப் போகிறது. நீ உனது உடலை விட்டு நீங்கும் முன் இது நிகழ்ந்துவிடும் என்ற நம்பிக்கையோடு நானிருக்கிறேன். ரஜப் போல மாறு, சுந்தரோ போல மாறு அவர்களை பற்றி நினைத்துப் பார்க்காதே. அவர்கள் கண்டனம் செய்வதற்கானவர்கள் அல்ல. அவர்கள் வாழ்ந்து பார்ப்பதற்கானவர்கள். வாழ்வதன் மூலம் மட்டுமே அது போன்ற அற்புதமான ஒரு விஷயத்தை ஒருவர் புரிந்து கொள்ள முடியும். 1 ஓஷோ சாஸ்வதம் தியான் சித்தார்த் – விவரம் தெரிந்த நாள் முதலாய் விவரம் தெரிந்து கொள்ள முடியாததைத் தேடுபவன். விசாரிப்பவன். 1975 ல் ஓஷோ அறிமுகம் – சிறு வயதிலேயே தேடல் துவங்கிவிட்டது. எல்லோரையும் போலவே எல்லா திசைகளிலும் தேடினேன். எனது தனிமையாய் இருந்து ரசித்த அனுபவங்கள் என்னை ஆன்மீகம் பக்கம் ஈர்த்தது. என்னை மிகத் தெளிவாக எனக்கு தெரிந்ததால் – என் குழப்பம், என் பயம், என் ஆசைகள், என் தந்திரங்கள், என் திறமை, என் இயலாமை – இப்படித் தெரிந்ததால், அதோடு இறப்பை நன்கு நான் அறிந்ததால், இவற்றிலிருந்து இன்பத்தைக் காட்டும் ஆன்மீகம் என்னை ஈர்த்தது. ஆக தனிமையும், வெறுமையும், வறுமையும் எனது தேடலை ஆழமான தேடலாக்கியது. இது கடப்பை சச்சிதானந்த யோகீஸ்வரரில் ஆரம்பித்து, இரமணரிடம் வந்து, பிறகு சிவானந்த பரமஹம்சரின் உபதேசம் பெற்று ஓஷோவில் முடிந்தது. நடுவில் காந்தீயம், கம்யூனிசம், நக்ஸல், வானவியல், விஞ்ஞானம், ஆர்தர் கோய்ஸ்லர், பெர்ணான்ட் ரஸ்ஸல் போன்ற ஆங்கில இலக்கியம், தமிழ் இலக்கியம், எழுத்து, கவிதை,  வங்கி வேலை, காதல்கள் எல்லாவற்றிலும் நுழைந்து திரும்பினேன். திருமணம் 1980-ல். மகன் பிறந்தது 1982. அதே ஆண்டு -சாஸ்வதம் ரஜினீஷ் தியான மையம் – உதயம். வங்கி வேலையை உதறல், பல தொழில்களில் ஈடுபடல், சொத்து சேர்ப்பதும் தொலைப்பதும், ஊட்டிவைத்த பயத்தால் பாதுகாப்புத்தேடி தேவையற்ற சிக்கல்கள் என 1995 வரை பெரும்பாலும் வீணான செய்கைகள்தான். ஆனால் ஓஷோவின் தியானங்களை விடாததும், அவரிடம் கொண்டிருந்த இடைவிடா தொடர்பும் எனக்குள் கண்ணாடியாய் நின்று பிரதிபலித்துக் கொண்டிருந்தன. அதன் பயனாய் 1995-ல் எனது விருப்பபடியான எனக்கு மகிழ்ச்சியும் புத்துணர்வும் கொடுக்கும் வாழ்க்கைக்குள் எட்டிக்குதித்தேன். 10 வருட பூனா வாசம். வாழ்க்கையில் முழுதாய் முழ்கினேன். எனது தாகம் தீர வாழ்ந்தேன். போலிகள் எல்லாம், முகமூடிகள் எல்லாம், பொய்கள் எல்லாம் தீய்ந்து நான் தானாய் வாழ ஆரம்பித்தேன். 2006 ல் திரும்பவர நேர்ந்தது. 2008 ல் திரும்ப – ஓஷோ சாஸ்வதம் ஆன்மீகப்பள்ளி- செயல்பட ஆரம்பித்து. இந்த இணைய தளமும் பிறந்தது. தியான் ப்ரியா – தியான் சித்தார்த்தின் ப்ரியை. தியானிக்க வருபவர்களின் தாய். வருபவர்கள் தங்கள் காதலிலிருந்து காபிகுடிப்பது வரை பகிர்ந்துகொள்ளும் தாய். டாய் சீ பயின்று வருகிறார்கள். நிர்தோஷ் – ஓஷோ சந்நியாசிகளின் குழந்தை. தனது 18 மாதத்தில் சந்நியாசம் பெற்றவன். சமூகம் அவனைத் தொடவில்லை. அவனும் சமூகத்தைத் தொடுவதாயில்லை. ஓஷோவின் பரம சீடன். இந்த நாங்கள் மூவரோடு ஆரம்பித்த ஓஷோ சாஸ்வதம் எனும் ஆன்மீகப் பள்ளியில் பயில இப்போது தியான் மைத்ரேயா, மா தேவ ஸகீரா, தேவ நிசிமோ, மா ப்ரேம் மேஹா, தேவ சந்தேஷ், ஆனந் புத்தா, நியோ நரேன், ப்ரேம் பரம், மா பிரேம் வன்யா, ஆனந் உத்சவ், தியான் டோபா,  பிரேம் சரஹா, ஆனந்த் விஸ்வாஸ், பிரேம் சாஹர், தியான் ஜோர்பா, மா பிரேம் பவித்ரோ, மா பிரேம் மைத்ரேயி ஆகியோர் சங்கமித்திருக்கிறார்கள். இந்த ஓஷோ ஆன்மீகப் பள்ளி சுயமரியாதை, சுதந்திரம், தன்ணுணர்வு, எழுச்சியாளனாயிருத்தல் ஆகிய குணங்களை அடிப்படையாகக் கொண்டு இயங்குவதேயன்றி எந்த கருத்து, கொள்கை, கோட்பாடு, விதி, சட்டம் என்ற அடிப்படையில் இயங்குவதல்ல. நிகழ்கணத்தை விழிப்புணர்வோடு நேர்கொள்ளும் வாழ்வே இது இயங்கும் மையம். சுதந்திரமான எழுச்சிமிக்க தன்ணுணர்வோடு கூடிய தனிநபர்கள் கூடி வாழும் விதத்தை பயில்வதே இதன் இயக்கம் . இங்கு அவரவர்களின் தனிப்பட்ட வளர்ச்சியும், மலர்ச்சியுமே முக்கியம். ஆன்மீகப்பள்ளி என்ற அமைப்பு வெறும் பயன்பாட்டு கருவியே, அதன் வளர்ச்சி என்ற மாயைக்கு இங்கு இடமில்லை. இது ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளும், பகிர்ந்து கொள்ளும் ஒரு இடம். அதோடு இங்கு ஓஷோவின் ஞானசக்தி மண்டலத்தில்  கரைபவர்களாகவும் உருவாக்குபவர்களாகவும் நமது தியானம் புதிய பரிமாணம் கொள்கிறது. மேலும் நமது பிரபஞ்ச இணைப்புணர்வை உணரவும் அதில் மூழ்கவும் அந்த மையத்திலிருந்து இந்த உலகை வாழவும் நாம் பயிலும் ஒரு இடம் இது. தன்னை முழுமையாய் தானாய் தன்மயமாய் தன்னியல்பில் கரைந்து உணர்ந்து வாழ, தன்னையே முழுதாய் பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளும் தைரியம் கொண்ட ஓஷோ அன்பர்களுக்கான இடம் இது. வருக. வருக. 2 ஓஷோவின் வாழ்க்கைக் குறிப்பு 1931 – 1953  ஆரம்ப வருடங்கள் மத்தியப் பிரதேசத்தில் உள்ள குச்வாடா என்ற சிறிய கிராமத்தில் 1931 ஆம் ஆண்டு டிசம்பர்  மாதம் 11 ந் தேதி ஓஷோ பிறந்தார். துணிக்கடை வைத்திருந்த ஒரு ஜைனரின் பதினோரு குழந்தைகளில் ஓஷோதான் மூத்தவர். அவரைப் பற்றிய கதைகள், சிறுவயது முதலே அவர் சுதந்திரமானவராகவும், எதிர்க்கத் தயங்காதவராகவும் எல்லா சமூக, மத, தத்துவரீதியான நம்பிக்கைகளையும் எதிர்த்து கேள்வி கேட்பவராகவும் இருந்ததாக அவரை விவரிக்கின்றன. இளைஞனாக இருந்தபோது அவர் பல தியான முறைகளை சோதனை செய்து பார்த்தார். ஜபல்பூரில் உள்ள டி.என். ஜெயின் கல்லூரியில் தத்துவயியல் பயின்று கொண்டிருக்கையில் தனது இருபத்தி ஒன்றாவது வயதில் 1953 ஆம் வருடம் மார்ச் 21 ந் தேதி ஓஷோ ஞானமடைந்தார். கிழக்கில் ஞானமடைதல் என்பது முழுமையான தன்னுணர்வு அல்லது விழிப்புணர்வு நிலை என்பதை குறிப்பிடுவதாகும். கௌதமபுத்தர், கபீர், இரமணர், மற்றும் பலர் இப்படி ஞானம் அடைந்தவர்களாவர். 1953 – 1956 கல்வி 1956 ல் ஓஷோ தத்துவயியலில் முதல் வகுப்பு சிறப்பு நிலை தேர்ச்சி பெற்று, சாகர் பல்கலைகழகத்திடமிருந்து முதுகலை பட்டம் பெறுகிறார். அவர் தனது பட்ட படிப்பில் அகில இந்திய அளவில் தங்கப்பதக்கம் பெற்ற மாணவனாவார். 1957 – 1968 பல்கலைகழக பேராசிரியர் மற்றும் பொதுமேடை சொற்பொழிவாளர்  1957 ல் ரெய்ப்பூரில் உள்ள சமஸ்கிருத கல்லூரியில் ஓஷோ பேராசிரியராக நியமனம் பெறுகிறார். 1958 ல் ஜபல்பூரில் உள்ள பல்கலைகழகத்தில் தத்துவ பேராசிரியராக நியமனம் பெற்ற ஓஷோ 1966 வரை அங்கேயே கல்வி கற்பிக்கிறார். ஆணித்தரமாகவும் அருமையாகவும் பேசக் கூடிய பேச்சாளரான ஓஷோ இந்தியாவின் பல பாகங்களுக்கும் சென்று ஏராளமானமுறை பெருந்திரளான மக்கள் கூட்டத்தில் சொற்பொழிவாற்றி வருகிறார்.  பொதுக் கூட்டத்திலேயே சம்பிராயமான மத தலைவர்களுக்கு சவால் விடுக்கிறார். 1966 ல் ஒன்பது வருட பேராசிரியர் வேலையை விடுத்து, மனித குலத்தின் விழிப்புணர்வை உயர்த்துவதற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்கிறார். இந்தியாவின் மிகப் பெரிய நகரங்களில் உள்ள பரந்த மைதானங்களில் 20,000 முதல் 50,000 பேர் வரை திரளும் கூட்டங்களிடையே அவர் உரையாற்றுகிறார். பத்து நாட்கள் தியான பயிற்சி கொண்ட முகாம்களை வருடத்திற்கு நான்கு முறை நடத்துகிறார்.  1970 ஏப்ரல் மாதம் 14ந் தேதி அவர் தனது ஒப்புயர்வற்ற தியான பயிற்சியான டைனமிக் தியானத்தை அறிமுகம் செய்கிறார். எந்த கட்டுப்பாடும் அற்ற மூச்சு விடுதல் பயிற்சியும், உள் உணர்வுகளை வெளிக் கொட்டுதலும் பின் மௌனமும் அசையாதிருத்தலும் ஆகிய செய்முறைகளைக் கொண்ட தியானம் இது. இந்த தியானம் அப்போதிலிருந்து உலகம் முழுவதிலும் உள்ள டாக்டர்கள், ஆசிரியர்கள், தொழில்முறை பயிற்சியாளர்கள் மனோதத்துவ வல்லுனர்கள் என எல்லோராலும் இன்று வரை உபயோகப்படுத்தப் பட்டு வருகிறது. 1969 – 1974 பம்பாய் வருடங்கள்   1960 ன் பிற்பகுதியில் அவர் இந்தியில் பேசிய பேச்சுக்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாயின. 1970 ஜூலையில் பம்பாய்க்கு வந்த அவர் 1974 வரை அங்கேயே வசித்தார். இந்த கால கட்டத்தில் பகவான் ஸ்ரீ ரஜனீஷ் என்று அழைக்கப்பட்ட அவர் ஆன்மீக சாதகர்களுக்கு தீட்சை அளித்து சிஷ்யர்களாக்கினார். தன்னை கண்டறிதலும் தியானமும் கொண்ட புது சந்நியாசம் என்று அழைக்கப்பட்ட இந்தப் பாதையில் இந்த உலகத்தையோ மற்ற எதையுமோ துறக்க வேண்டிய அவசியம் இல்லை. ‘துறவறம்’  என்பதைப் பற்றி ஓஷோ கூறுவது வழிவழியாக உள்ள கிழக்கத்திய முறைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. அவரைப் பொறுத்தவரை இந்த வெளி உலகை துறக்க வேண்டிய அவசியம் இல்லை. நம்முடைய கடந்த காலத்தை, ஒவ்வொரு தலைமுறையும் அடுத்த தலைமுறை மேல் சுமத்தும் மனக்கட்டுத் திட்டங்களை, நம்பிக்கை அடிப்படையிலான அமைப்பு முறையைத்தான் துறக்க வேண்டுமெனச் சொல்கிறார். நாடு முழுவதிலிருந்து பேசுவதற்கு வரும் அழைப்புகளை ஏற்றுக் கொள்வதை அவர் நிறுத்தி விடுகிறார். ஆனால் ராஜஸ்தானில் உள்ள மவுண்ட் அபு என்ற இடத்தில் தியான முகாம்களை தொடர்ந்து நடத்துகிறார். தனது சக்திகள் அனைத்தையும் தன்னைச் சுற்றி பெருகி கொண்டே வரும் தனது சன்னியாசிகளுக்காகவே அர்ப்பணிக்கிறார். இந்த சமயத்தில் வெளிநாட்டவர்களும் வருகின்றனர். புது சன்னியாசம் பெறுகின்றனர். அவர்களில் பலர் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் மனித வளர்ச்சியின் உயர் சாத்தியக்கூறு பற்றிய இயக்கத்தை சேர்ந்த முன்னிலை மனோ தத்துவவியலாளர்கள் ஆவர். அவர்கள் தங்களது அடுத்த கட்ட உள் வளர்ச்சி நிலைக்காக அவரை தேடி வருகின்றனர். கிழக்கின் ஞானமும் மேற்கின் அறிவியலும் இணைந்த இந்த கால மனிதனுக்கான புதிய, அசலான, தியானமுறை அனுபங்களை அவர்கள் ஓஷோவிடம் அடைகின்றனர். 1974 – 1981 பூனா ஆசிரமம் இந்த ஏழு வருடங்கள் ஓஷோ ஒவ்வொரு நாள் காலையிலும் 90 நிமிடங்கள் ஒரு மாதம் இந்தியிலும் அடுத்த மாதம் ஆங்கிலத்திலும் என ஆன்மீக உரையாற்றிக் கொண்டிருக்கிறார். அவர் யோகா, ஜென், தாவோ, தந்திரா, சூபி என எல்லா ஆன்மீக பாதைகளின் உட்பொருளையும் எடுத்துக் காட்டி உரை நிகழ்த்துகிறார். கௌதமபுத்தர், ஜூஸஸ், லாவோட்ஸீ மற்றும் அனைத்து ஞானமடைந்த ஞானிகளை பற்றியும் எடுத்துரைக்கிறார். இந்த உரைகள் 300 புத்தகங்களாக தொகுக்கப்பட்டு 20 மொழிகளுக்கு மேல் மொழிபெயர்ப்பு செய்யப்படுகிறது. இந்த வருடங்களில் மாலையில் அன்பு, பொறாமை, தியானம், கோபம் போன்ற தனிப்பட்ட விஷயங்களைப் பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்கிறார். ‘தரிசனம்’ எனப்படும் இந்த கேள்வி – பதில் 64 தொகுப்புகளாக உள்ளது. அவற்றில் 40 மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. இந்த காலக் கட்டத்தில்தான் கிழக்கத்திய தியான முறைகளையும் மேற்கத்திய மனோதத்துவ முறைகளையும் உள்ளடக்கிய பல்வேறு குழு மற்றும் தனி அகச்சிகிச்சை முறைகள் ஓஷோவை சுற்றி எழுந்த கம்யூனில் உருப்பெற்றது. உலகின் பல்வேறு இடத்திலிருந்தும் மனோ தத்துவ நிபுணர்கள் வந்தனர். 1980 ல் ‘உலகின் மிக சிறந்த அருமையான வளர்ச்சி மற்றும் அக சிகிச்சை மையம்’ என்ற பெருமையை ஓஷோ கம்யூன் பெற்றது. ஒவ்வொரு வருடமும் 1,00,000 மக்கள் வந்து சென்றனர். 1981 – ஓஷோவிற்கு முதுகுவலி மோசமானது. கிட்டத்தட்ட 15 வருடங்கள் தினமும் உரையாற்றி வந்த ஓஷோ 1981 மார்ச்சில் சொற்பொழிவிலிருந்து அமைதிநிலையை தானே மேற்கொள்கிறார். அவசரமாக அறுவை சிகிச்சை செய்யும் நிலை வரலாம் என்பதால், அவரது டாக்டர்களின் அறிவுரையின் பேரில் அமெரிக்கா பயணப்படுகிறார்.  இந்த வருடத்திலேயே அவரது அமெரிக்க சீடர்கள் 64,000 ஏக்கர் நிலம் அமெரிக்காவில் ஓரேகான் என்று அழைக்கப்படும் ஒரு மாநிலத்தில் வாங்கி அவரை அங்கு அழைக்கின்றனர். இப்படியாக அவர் அமெரிக்காவில் தங்கி இருக்க சம்மதித்து நிரந்தர குடியிருப்புக்கு ஒரு விண்ணப்பம் அவர் சார்பில் கொடுக்க அனுமதிக்கிறார். 1981 – 1985 ரஜ்னீஷ்புரம்  தரிசு நிலமாக பாழடைந்துள்ள மத்திய ஓரேகானின் பகுதியிலிருந்து விவசாயத்தை முதன்மையாகக் கொண்ட, தன்னிறைவு பெற்ற,  முன்மாதிரியான கம்யூன் ஒன்று எழுச்சி பெறுகிறது. அதிக உழைப்பு தேவைப்படுவதாலும், லாபமீட்டும் அளவு பயன்கொடுக்காது என்பதாலும் கைவிடப்பட்ட ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பசுமையாக்கப்படுகின்றன. ரஜனீஷ்புரம் என்ற நகரம் உருப்பெறுகிறது. அதில் 5000 பேர் வசிக்க ஆரம்பிக்கின்றனர். கோடைகால கொண்டாட்டம் அங்கு நடத்தப்படுகிறது. அதில் உலகம் முழுவதிலும் இருந்து 15,000 பேர் பங்கேற்கின்றனர். வெகு விரைவிலேயே  அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவில் ரஜனீஷ்புரம் மிகப் பெரிய அதே சமயம் மிகவும் சர்ச்சைக்கிடமான ஒரு ஆன்மீக்குடியிருப்பாக மலர்கிறது. கம்யூனிற்க்கும் புதுநகருக்கும் அதன் வளர்ச்சியோடு கூடவே எதிர்ப்பும் வலுத்தது. சமூகத்திற்கு எதிரான புது எழுச்சிகளை கண்டு எரிச்சலுறுகின்ற தன்மை அமெரிக்க சமுதாயத்தில், ஜனாதிபதி ரீகனின் இந்த காலகட்டத்தில் எல்லா மட்டத்திலும் பரவி கிடந்தது. அதற்கு ஏற்றார்ப்போல உள்ளுர் மாநில மத்திய அமெரிக்க அரசியல்வாதிகள் ரஜனீஷ்புர மக்களுக்கு எதிராக அனல் கக்கும் பேச்சை வெளிப்படுத்தினர். அமெரிக்க குடியுரிமை சேவை மையம் (INS), அமெரிக்க உளவுத்துறை(FBI), அமெரிக்க கருவூலத்துறை, மது புகையிலை மற்றும் ஆயுத ஏஜென்ஸி(ATF) போன்ற பல பல ஏஜென்ஸிகள் மக்களின் வரிப்பணத்திலிருந்து கோடி கோடியாய் செலவு செய்து, தேவையற்ற மற்றும் எந்த பயனும் அளிக்காத கம்யூன் பற்றிய ஆய்வுகளில், கம்யூனை தொந்தரவு செய்வது மட்டுமே நோக்கமாகக் கொண்டு ஈடுபட்டன. அதே போன்று மிகவும் பணச் செலவு செய்து கம்யூனுக்கு எதிரான பிரசாரம், ஓரேகான் மாநிலத்தில் நடத்தப்பட்டது. 1984 அக்டோபர் – ஓஷோ மூன்றரை வருட மௌனத்தை முடித்துக் கொண்டு தனது இருப்பிடத்திலேயே ஒரு சிறு குழுவினரிடம் பேச ஆரம்பிக்கிறார். 1985 ஜீலை – ஜூலையிலிருந்து ஓஷோ தனது காலை சொற்பொழிவை ஆயிரக்கணக்கான சீடர்கள் கூடும் இரண்டு ஏக்கர் பரப்பளவுள்ள தியான மண்டபத்தில் பேச ஆரம்பிக்கிறார். 1985 செப் – அக் ஓரேகான் கம்யூன் அழிக்கப்படுகிறது. 1985 செப் 14ந் தேதி ஓஷோவின் அந்தரங்க காரியதரிசியும் மற்றும் கம்யூனின் பொறுப்பில் உள்ள சில அங்கத்தினர்களும் திடீரென கம்யூனை விட்டு வெளியேறுகின்றனர். அவர்கள் செய்த கொலை முயற்சி, டெலிபோன் உரையாடலை பதிவு செய்தல், விஷம் கொடுத்தல், தீ வைத்தல் போன்ற சட்ட விரோதமான பல செயல்கள் அம்பலமாயின. நடந்த குற்றங்களை கண்டுபிடிக்க ஓஷோ போலீஸ் துறையினரை அழைக்கிறார். ஆனால் உயர் மட்டத்தில் உள்ளவர்கள் இந்த புகாரை கம்யூனை அழித்துவிட கிடைத்த தங்கமான வாய்ப்பாக உபயோகப்படுத்திக் கொள்கின்றனர். அக்டோபர் 23 – அமெரிக்காவின் போர்ட்லேண்ட் மாநில தலைமை நீதிபதி ஓஷோ மற்றும் ஏழு பேர் குடியுரிமை சட்டத்தை ஏமாற்ற முயன்றதாக சிறிய குற்றங்களை ரகசியமாக சுமத்துகிறார். அக்டோபர் 28 – எந்தவித வாரண்ட்- டும் இல்லாமல் மாவட்ட போலீஸ் தலைமை அதிகாரியும் உள்ளூர் போலீஸும் சேர்ந்து ஓஷோவையும் மற்றவர்களையும் துப்பாக்கி முனையில் நார்த் கரோலினாவில் உள்ள சார்லெட்டில் கைது செய்கின்றனர். மற்றவர்களை விடுதலை செய்துவிட்டு ஓஷோவை மட்டும் பனிரெண்டு நாட்களுக்கு ஜாமீன் கொடுக்காமல் பிடித்து வைத்திருக்கின்றனர். ஐந்து மணி நேரத்தில் ஓரேகான் வந்தடைந்து விடக்கூடிய பயணம் வந்துசேர நான்கு நாட்கள் பிடிக்கிறது. வழியில் ஓக்லஹோமா நகர சிறையில் ஓஷோ அவரது சொந்த பெயரில் இல்லாமல் டேவிட் வாஷிங்டன் என்ற பொய் பெயரில் வெளிஉலகத்திற்குத் தெரியாமல் வற்புறுத்தி அடைத்து வைக்கப்பட்டார். அவர் அந்த சிறையில் இருந்தபோதுதான் அவருக்கு ‘தாலியம்’ என்ற கொடுமையான விஷம் கொடுக்கப்பட்டிருக்கக் கூடும் என்பதற்க்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றன. நவம்பர் – ஓஷோவின் குடியுரிமை வழக்கிற்கு எதிராக பிரச்சாரங்களும் குரல்களும் கிளம்ப ஆரம்பிக்கின்றன. பாதுகாப்பற்ற ஓரேகானில் அவரது உயிரையும் மற்ற சந்நியாசிகளின் நிலையையும் கருத்தில் கொண்டு ஓஷோவின் வக்கீல்கள் அவர் மீது போடப் பட்ட 35 வழக்குகளில் இரண்டை “ஏற்கும் கோரிக்கை” என்ற பிரிவின் கீழ் ஒத்துக் கொள்கின்றனர். இந்த கோரிக்கையின் விதிகளின்படி பிரதிவாதி தனது குற்றமற்ற தன்மையை தொடர்ந்து வலியுறுத்தும் அதே சமயம் அரசு தரப்பில் அவரை குற்றவாளி என்று கருத இடமுண்டு என்பதையும் ஏற்றுக் கொள்கிறார். ஓஷோவும் அவரது வக்கீல்களும் ஓஷோவின் குற்றமற்ற தன்மையை கோர்ட்டில் தொடர்ந்து வலியுறுத்தவே செய்தனர். ஆனால் ஓஷோவுக்கு நான்கு லட்சம் டாலர்கள் அபராதமும் அமெரிக்காவை விட்டு வெளியேறவேண்டும் என்றும் உத்தரவிடப்படுகிறது. ரஜனீஷ்புரத்தை அழிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்று பலரும் கூறியது போலவே சார்லஸ் டர்னர் என்ற போர்ட்லேண்டின் அரசாங்க வக்கீல் பொது மேடையிலேயே அதை வெளிப்படையாக ஒப்புக் கொள்கிறார். 1985 – 1986 உலக சுற்றுப் பயணம் டிசம்பர் 1985 – ஓஷோவின் அந்தரங்க பணியாளர்களுக்கு விசா கொடுக்க மறுத்து இந்திய அரசாங்கம் அவரை தனிமைப்படுத்த முயற்சிக்கிறது. 1986 ஜன, பிப்ர – ஓஷோ நேபாளில் உள்ள காட்மண்டுக்கு வருகிறார். அங்கு அவர் இருந்த இந்த இரண்டு மாதங்களும் தினமும் இருவேளையும் சொற்பொழிவாற்றுகிறார். பிப்ரவரியில் நேபாள் அரசாங்கம் அவரை பார்க்க வரும் பார்வையாளர்களுக்கும் அவரது பணியாளர்களுக்கும் விசா வழங்க மறுக்கிறது. அவர் நேபாளை விட்டு கிளம்பி உலக பயணம் புறப்படுகிறார். பிப்ர, மார்ச் – முதல் நாடாக அவர் முப்பது நாட்கள் சுற்றுலா விசாவில் கிரீஸில் தங்குகிறார். ஆனால் பதினெட்டு நாட்களுக்கு பின் மார்ச் 5ந் தேதி அவர் தங்கியிருந்த வீட்டிற்க்குள் கதவை உடைத்து உள்ளே வந்த போலீஸ் அவரை துப்பாக்கி முனையில் கைது செய்து அழைத்துச் சென்று அவரை நாட்டை விட்டு வெளியேற்றுகிறது. அரசாங்கம் மற்றும் சர்ச் ஆகியவையே போலீஸை இந்த செயல் செய்யத் தூண்டின என கிரீஸ் பத்திரிக்கைகள் குற்றம் சாட்டுகின்றன. இதைத் தொடர்ந்த இரண்டு வாரங்களில் அவர் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் உள்ள 17 நாடுகளுக்கு சுற்றுப்பயண அனுமதி கேட்கவோ, சுற்றுப்பயணமாக செல்லவோ முயற்சிக்கிறார். அனைத்து நாடுகளும் அவருக்கு அனுமதி மறுத்ததுடன் அவரை வெளியேறுமாறு கட்டாயப்படுத்துகின்றன. சில நாடுகள் இவரது விமானம் தரையிறங்கக்கூட அனுமதி தரவில்லை. மார்ச் – ஜூன் – மார்ச் 19ஆம் தேதி அவர் உருகுவே நாட்டிற்குச் செல்கிறார். மே 14ந் தேதி அந்த அரசாங்கம் ஓஷோ உருகுவேயின் நிரந்தர குடிமகனாக அங்கீகரிக்கப்படுவார் என்ற அறிவிப்பை வெளியிடுவதற்க்காக பத்திரிக்கையாளர்களின் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. ஆனால் அந்த கூட்டத்திற்க்கு முந்தியதினம் இரவு வாஷிங்டன் வெள்ளை மாளிகையிலிருந்து டெலிபோன் மூலம் உருகுவே ஜனாதிபதி சன்குன் நெட்டியை அழைத்து ஓஷோவை உருகுவேயில் தங்க அனுமதித்தால் உருகுவே அமெரிக்காவிற்க்கு தர வேண்டிய 6 மில்லியன் டாலர் கடனை உடனடியாக அடைக்க வேண்டியிருக்கும் என்றும் மேற்கொண்டு கடன் எதுவும் தரப்பட மாட்டாது என்றும் கூறப்பட்டதாக ஜனாதிபதி சன்குன் நெட்டி பின்னர் ஒத்துக் கொள்கிறார். இதைத் தொடர்ந்து ஜீன் 18ந் தேதி ஓஷோவை உருகுவேயை விட்டு வெளியேறுமாறு ஆணை பிறப்பிக்கப்படுகிறது. ஜூன் – ஜூலை – இந்த மாதங்களில் அவர் முறையே ஜமைக்காவிலிருந்தும் போர்ச்சுக்கல்லில் இருந்தும் வெளியேற்றப் பட்டார். ஆக மொத்தத்தில் இதுவரை 21 நாடுகள் அவரை நாட்டினுள் பிரவேசிக்க தடைபோட்டன அல்லது அவர் வந்திறங்கி விட்டால் நாடுகடத்தி உத்தரவிட்டன. 1986 ஜூலை 29ந் தேதி அவர் இந்தியா பம்பாய்க்கு திரும்ப வந்துசேர்கிறார். 1987 – 1989 ஓஷோ கம்யூன் இண்டர்நேஷனல் 1987 ஜனவரி – அவர் பூனாவில் உள்ள ஆசிரமத்திற்கு திரும்ப வருகிறார். அது இப்போது ‘ரஜனீஷ்தாம்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இந்திய அரசாங்கம் ஓஷோவின் அன்பர்கள் என அறியப்பட்ட வெளிநாட்டவர் அனைவருக்கும் அனுமதி மறுப்பதை தொடர்ந்து செய்கிறது. 1988 ஜூலை – ஒவ்வொரு நாள் மாலை உரையின் இறுதியிலும் ஒரு தியானத்தை தானே முன்னின்று நடத்தத் துவங்குகிறார். இது இந்த 14 வருடங்களில் இதுவே முதல் முறை. மேலும் மிஸ்டிக் ரோஸ்  (சூட்சம ரோஜா) என்ற புரட்சிகரமான ஒரு புதிய தியான யுக்தியையும் அவர் அறிமுகம் செய்கிறார். 1989 ஜன – பிப்ர – அவர் பகவான் என்ற பெயரை விட்டுவிட்டு ரஜனீஷ் என்ற பெயரை மட்டும் வைத்துக் கொள்கிறார். அப்போது அவரது சீடர்கள் அவரை ஓஷோ என அழைக்க விரும்புவதாக தெரிவித்ததை அடுத்து அவரும் அதை ஏற்றுக் கொள்கிறார். வில்லியம் ஜேம்ஸின் வார்த்தையான ‘ஓஷியானிக்’ என்ற வார்த்தையிலிருந்து தான் ஓஷோ என்ற தன் பெயர் உருவானதாக விளக்குகிறார். ஓஷியானிக் என்றால் கடலில் கரைந்து விடும் அனுபவம், அப்போது அதை அனுபவிப்பவர் எங்கே ? அதற்குத்தான் நாம் ஓஷோ என்று கூறுகிறோம். ‘வானம் மலர் தூவி வாழ்த்தும் ஒரு ஆசீர்வதிக்கப்பட்டவர் ‘ என்ற அர்த்தத்தில் ‘ஓஷோ’ என்ற வார்த்தை கிழக்கு நாடுகளில் முற்காலத்தில் குறிக்கப் பட்டிருப்பதை பின்னர் ஓஷோ கண்டறிகிறார். 1989 – மார்ச் – ஜூன்  அவருக்கு கொடுக்கப்பட்ட விஷம் அவரது உடல்நிலையை மிகவும் பாதித்ததால் அதனுடைய பாதிப்புகளிலிருந்து மீள அவர் ஓய்வு எடுக்கிறார். 1989 ஜூலை – அவரது உடல்நிலை சிறிது சீர்படுகிறது. ஓஷோ குருபூர்ணிமா கொண்டாட்டம் என்று பெயர் மாற்றப்பட்ட விழா நாட்களில் இருவேளையும் மௌன தரிசனம் தருகிறார். 1989 ஆகஸ்ட் – மாலை வேளை தினமும் கௌதமபுத்தா மண்டபத்தில் தரிசனத்திற்கு வந்தமர்கிறார். அவர் மௌனமாக அமர்ந்திருக்க, இசை இசைக்கப்படுகிறது. “விவரிக்க இயலாத அதை உணர மட்டுமே வேண்டும். இது உள் நிலையை, தியான வெளியைப் பெறும் ஒரு மிகப் பெரிய அனுபவம்” என்று அவர் விளக்குகிறார். அவர் ‘ஓஷோ வெள்ளை உடை சகோதர சந்திப்பு’ எனக் கூறப்படும் விசேஷமான குழுவை ஏற்படுத்துகிறார். மாலை தரிசனத்திற்காக வரும் மக்கள் அனைவரும் வெள்ளை உடையில் வருமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். “இந்த சந்திப்பில் ஒரு அற்புதமான சக்தி சேகரமாகும், நாளுக்கு நாள் அவற்றின் திறன் மேலும் மேலும் பெருகும்.” என ஓஷோ கூறுகிறார். ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வார இறுதியில் மூன்றுநாள் தியானமுகாம் ஓஷோவால் வடிவமைக்கப்பட்ட தியான பயிற்சிகளைக் கொண்டு நடத்தப்படுகிறது. பங்கேற்பவர் அனைவரும் மெரூன் நிற அங்கி அணிந்துவர கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். மேலும் ஆசிரமத்தில் வேலை செய்யும் சந்நியாசிகள் அனைவரும் பகல் நேரத்தில் மெரூன் நிற அங்கியே அணியுமாறு ஓஷோ ஆலோசனை கூறுகிறார். அதனால் கம்யூன் பகல் நேரத்தில் மெரூன் நிற ஆடை அணிந்த மக்களாலும், மாலையில் வெள்ளை நிற ஆடை அணிந்த மக்களாலும் நிரம்பியிருக்கும் எனக் கூறுகிறார். 1989 – செப் – ஓஷோ தனது ரஜனீஷ் என்ற பெயரை முற்றிலுமாக விட்டு விடுகிறார். அதன் மூலம் கடந்த காலத்திலிருந்து முற்றிலுமாக விடுபட்டு விடுகிறார். அவர் ஓஷோ என்றே குறிப்பிடப் படுகிறார் அவரது ஆசிரமம் ‘ஓஷோ கம்யூன் இண்டர்நேஷனல்’ எனக் குறிப்பிடப் படுகிறது. 1990 ஓஷோ தனது உடலை விட்டு நீங்குகிறார். 1990 ஜனவரி – ஜனவரி இரண்டாவது வாரத்தில் ஓஷோவின் உடல் குறிப்பிடத்தக்க வகையில் மேலும் சீர் கெடுகிறது. ஜனவரி 18ந் தேதி மாலை கௌதம புத்தா மண்டபத்துக்கு வரமுடியாத அளவு அவர் மிகவும் பலவீனமடைகிறார். ஜனவரி 19 – அவரது நாடித்துடிப்பு தாறுமாறாகிறது. அவரது டாக்டர்கள் அவரிடம் இருதய சீரமைப்பு கருவி கொண்டுவருவதற்காக கேட்கும்போது ஓஷோ, “இல்லை, என்னைப் போக விடுங்கள், இயற்கை நேரத்தை நிர்ணயித்து விட்டது.” என்கிறார். அவர் மாலை 5 மணிக்கு உடலை விட்டு நீங்குகிறார். மாலை 7 மணிக்கு அவரது உடல் கௌதம புத்தா ஹாலுக்கு இறப்பு கொண்டாட்டத்திற்காக கொண்டு வரப் படுகிறது. பின் எரியூட்டுவதற்காக சுடுகாட்டிற்கு கொண்டு செல்லப் படுகிறது. இரண்டு நாட்களுக்குப்பின் அவரது சாம்பல் ஓஷோ கம்யூன் இண்டர்நேஷனலுக்கு கொண்டு வரப் பட்டு சாங் டு ஸூ அரங்கத்திலுள்ள அவரது சமாதியில் வைக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்த நாட்களில் ஓஷோவின் மணமாக கம்யூனில் வீசும் அன்பும் தியானமும் கலந்த சூழ்நிலையை அனுபவிக்கவும் கொண்டாடவும் உலகம் முழுவதிலும் இருந்து மக்கள் பறந்து வந்த வண்ணம் உள்ளனர். அவர் தனது உடலை நீக்குமுன், “என்னை கடந்த காலத்தில் பேச வேண்டாம். என்னுடைய சுமையான இந்த உடலில் இருப்பதை விட இந்த உடலை விட்டபின் என்னுடைய இருப்பு பல மடங்கு மகத்தானதாக இருக்கும். எனது மக்களிடம் கூறுங்கள். அவர்கள் என்னை பலமடங்கு அதிகமாக உணரலாம். உடனடியாக என்னை அவர்கள் அறியலாம்.” என்று கூறுகிறார். எப்படி இந்த கம்யூன் தொடர்ந்து பெரிதாக வேண்டும் என்பதைப் பற்றியும் பேசுகிறார். இனி நான் உடலில் இல்லாமல் போய் விடுகையில் மேலும் பலர் வருவார்கள், மேலும் பலர் ஆர்வம் காட்டுவார்கள், அவரது கம்யூன் நமது கற்பனைக்கு எட்டாத வகையில் விரிவடையும் எனவும் கூறுகிறார்.  பிறகு கூறுகிறார், “நான் எனது கனவுகளை உங்களிடம் விட்டுச் செல்கிறேன்.” 1980 ல் உடலை விட்டு நீங்கியபின் என்ன நிகழும் என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் ஓஷோ, “நான் என் மக்களிடம் கரைந்து விடுவேன். எப்படி கடலின் எந்த துளியை சுவைத்தாலும் அது ஒரே போல உப்பு சுவை கொண்டிருக்குமோ, அதே போல என் சந்நியாசிகள் எல்லோரிடமும் நீ ஆசீர்வதிக்கப்பட்ட ஒருவனின் சுவையை உணரலாம். நான் என் மக்கள் ஆனந்தமாகவும், பரவசமாகவும் வாழ தயார் செய்திருக்கிறேன், அதனால் நான் உடலில் இல்லாதது அவர்களிடம் எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது. அவர்கள் அதே போலவே வாழ்க்கையை வாழ்வார்கள். மேலும் எனது இறப்பு அவர்களிடம் மேலும் ஆழத்தை ஏற்படுத்தும்.” என்கிறார். 1989 ல் இத்தாலியன் நாட்டு டிவி- யின் அதே போன்று கேள்விக்கு பதிலளித்த ஓஷோ, “நான் இயற்கையிடம் முழுமையாக நம்பிக்கையுணர்வு கொண்டிருக்கிறேன். நான் கூறியதில் ஏதாவது உண்மை இருக்குமானால் அது அழியாமல் நிலைத்திருக்கும். என்னுடைய பணியில் ஆர்வமுள்ள மக்கள் எனது தீபத்தை தொடர்ந்து ஏந்தி செல்வர். ஆனால் எதையும் யார்மீதும் கத்தியின் மூலமாகவோ, ரொட்டியின் மூலமாகவோ, உணவைக் காட்டியோ திணிக்க மாட்டார்கள். நான் எனது மக்களுக்கு தொடர்ந்து ஒரு முன்னுதாரணமாக இருப்பேன், அப்படித்தான் எனது சந்நியாசிகளும் உணர்வார்கள். நான் அவர்கள் அவர்களாகவே வளர வேண்டும் என விரும்புகிறேன். உண்மையான அன்பு, அதன் அடிப்படையில் எந்த சர்ச், கோயில் போன்ற ஸ்தாபனங்களையும் உருவாக்க முடியாது, அதே போன்று விழிப்புணர்வு, அதை யாரும் உரிமை கொண்டாட முடியாது, அதே போன்று கொண்டாட்டம், மனமற்று அனுபவித்தல், குழந்தை போன்ற தூய்மையான கண்களோடு இருத்தல் போன்ற குணங்கள் கொண்டவர்களாய், எல்லா மக்களும் வேறு யாரோ ஒருவரின் படி அல்லாமல் தாங்களோ தங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அதற்கான வழி உள்ளே இருக்கிறது.” 3 Free Tamil Ebooks - எங்களைப் பற்றி மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. எனவே ஒரு தமிழ் வாசகர் மேற்கூறிய “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகளை” வாங்கும்போது, அவரால் எந்த ஒரு தமிழ் புத்தகத்தையும் இலவசமாகப் பெற முடியாது. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FreeTamilEbooks.com இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. www.vinavu.com 2. www.badriseshadri.in 3. http://maattru.com 4. kaniyam.com 5. blog.ravidreams.net எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். <துவக்கம்> உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்]. தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/ நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : freetamilebooksteam@gmail.com  FB : https://www.facebook.com/FreeTamilEbooks G +: https://plus.google.com/communities/108817760492177970948 நன்றி. மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைfreetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது ? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும். மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும். நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம். தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும். எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். - email : freetamilebooksteam@gmail.com - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948 இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/ Supported by - Free Software Foundation TamilNadu, www.fsftn.org - Yavarukkum Software Foundation http://www.yavarkkum.org/ 4 உங்கள் படைப்புகளை வெளியிடலாமே உங்கள் படைப்புகளை மின்னூலாக இங்கு வெளியிடலாம். 1. எங்கள் திட்டம் பற்றி – http://freetamilebooks.com/about-the-project/ தமிழில் காணொளி  – http://www.youtube.com/watch?v=Mu_OVA4qY8I 2.  படைப்புகளை யாவரும் பகிரும் உரிமை தரும் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் பற்றி – கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை – ஒரு அறிமுகம் http://www.kaniyam.com/introduction-to-creative-commons-licenses/ http://www.wired.co.uk/news/archive/2011-12/13/creative-commons-101 https://learn.canvas.net/courses/4/wiki/creative-commons-licenses உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தை இங்கே தேர்ந்தெடுக்கலாம். http://creativecommons.org/choose/ 3.மேற்கண்டவற்றை பார்த்த / படித்த பின், உங்கள் படைப்புகளை மின்னூலாக மாற்ற பின்வரும் தகவல்களை எங்களுக்கு அனுப்பவும். 1. நூலின் பெயர் 2. நூல் அறிமுக உரை 3. நூல் ஆசிரியர் அறிமுக உரை 4. உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் 5. நூல் – text / html / LibreOffice odt/ MS office doc வடிவங்களில்.  அல்லது வலைப்பதிவு / இணைய தளங்களில் உள்ள கட்டுரைகளில் தொடுப்புகள் (url) இவற்றை freetamilebooksteam@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்பவும். விரைவில் மின்னூல் உருவாக்கி வெளியிடுவோம். ——————————————————————————————————– நீங்களும் மின்னூல் உருவாக்கிட உதவலாம். மின்னூல் எப்படி உருவாக்குகிறோம்?  – தமிழில் காணொளி – https://www.youtube.com/watch?v=bXNBwGUDhRs இதன் உரை வடிவம் ஆங்கிலத்தில் – http://bit.ly/create-ebook எங்கள் மின்னஞ்சல் குழுவில் இணைந்து உதவலாம். https://groups.google.com/forum/#!forum/freetamilebooks