[] []                                                                            எழுதுகோல் கவிதைகள்                                                                     ச ரவிச்சந்திரன்  நூல் : எழுதுகோல் கவிதைகள் ஆசிரியர் : ச ரவிச்சந்திரன்   மின்னஞ்சல்  : saktheee2009@gmail.com     மின்னூலாக்கம் : த . தனசேகர் மின்னஞ்சல் : tkdhanasekar@gmail.com வெளியிடு : FreeTamilEbooks.com   உரிமை: Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International  License. உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம். பொருளடக்கம் நூல் ஆசிரியர் அறிமுக உரை 6  1. இறப்பை விசாரித்தல் 8  2. உறவெனும் நெருப்பில் 9  3. வெளியே மழை 10  4. எழுதுகோல்களே! 11  5. ஆழியே அழகே 13  6. காதலை தொலைத்தவர்கள் 14  7. அவளின் மௌனம் 15  8. பார்வை வரம் தருவாயா ? 16  9. அரிதார அரசியல் 18  10. பார்வை தவறுகள் 19  11. இன்றைய உலகம் 20  12. சருகுகளே தடம் பதித்து செல்லுங்கள் 21  13. நேற்று இன்று நாளை 22  14. என் தேடலின் தடங்கள் 23  15. இலக்கு அறிந்து கணை தொடுப்பீர் 25  16. என் கவிதைப் பயணம் 27  17. வெற்றுப் புணர்வுக்கென்றா நினைத்தாய்? 28  18. காதலை தேடி 29  19. எழுதப்பட்டுவிடும்-- நாளைய காவியம் 31  20. என் மகளுக்கு  கவிதை [பிறந்த நாள்] வாழ்த்துக்கள் 33  21. இம்மை மாறி மறுமை ஏகினும் 34  22. உன் நேச வரம் தருவாயா? 35  23. தூங்கா விளக்கு 36  24. சொல்லறை கட்டி வைத்தேன் 37  25. விழித்திடு தமிழா! 38  26. மண்ணின் அஞ்சறை பெட்டிகள் 39  27. நிர்வாணம் 40  28. ராமனை மணக்க 41  29. புது நெறி வகுப்பீர்! 43  30. மறந்துவிடு மனமே 45  31. நாலாயிரம் பொன் 47  32. விழிகளில் கரைந்தவன் 48  33. ஓர் மகனின் கதறல் 50  34. யாழினிது 51  35. மழை [வெள்ளம் ] 52  36. காதலை தொலைத்தவர்கள் 53  37. சொல்லறை கட்டி வைத்தேன் 54  38. மண்ணின் அஞ்சறை பெட்டிகள் 55  39. நிர்வாணம் 56  40. வழிகாட்டி புன்னகைகள் 57  41. பெண்ணே நீ சிரி 58  42. சீதைகளை வேண்டி 59  43. புது நெறி வகுப்பீர்! 61  44. மறந்துவிடு மனமே 63  45. ஜீவநதி காதல் 65  46. கவிதையே!  உனக்கொரு கவிதை 66  47. ஆதலினால் காதல் செய்வீர் ! 67  48. என்னவளே! 68  49. ஏறு தழுவுக 69    நூல் ஆசிரியர் அறிமுக உரை   நூல் ஆசிரியர்  ச ரவிச்சந்திரன். இவரின் வாழிடம் பேரறிஞர் அண்ணா  பிறந்த ஊரான காஞ்சிபுரம்   இவர் ஐம்பத்திநான்கு  அகவை நிரம்பியவர்  இருபத்தி ஐந்தாண்டுகள்  தமிழக காவல் துறையில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர்  இவர் ஏறத்தாழ நான்கு  ஆண்டுகள் கல்லூரி விரிவுரையாளராக பணியாற்றி யுள்ளார்  இவரது கல்வித்தகுதிகள்   இளங்கலை : வணிகவியல் முதுகலை : பொருளியல்   முதுகலை : ஆங்கிலம் முதுகலை : வணிகவியல் இளம் முனைவர் : பொருளியல் பட்டயங்கள் : முதுகலை பட்டயம் : முதுகலை கணினி பயன்பாடு இளங்கலை பட்டயம் : ஆங்கிலம் கற்பித்தல் சான்றிதழ் கல்வி : சரக்கு மற்றும் சேவை வரி   இவர் தமிழ் மொழியில் ஏறத்தாழ முன்னூறு கவிதைகளும்  ஆங்கிலத்தில்  முன்னூறுக்கும் மேற்பட்ட  கவிதைகளும் எழுதியுள்ளார்  இவரது ஆங்கில கவிதைகள் பல்வேறு தேசிய  மற்றும் சர்வ தேச மின்வலை தளங்களில் பிரசூரமாகியுள்ளது இவரது தமிழ் கவிதைகள் பெரும்பாலும் வார்ப்பு என்ற மின்னிதழில் பிரசூரமாகியுள்ளது   எழுதுகோல் கவிதைகள்  இவரது முதல் தமில் கவிதை தொகுதியாகும் இதன் வரவேற்பும் அங்கிகாரமும் அடுத்தடுத்த தொகுதிகளின் வெளியீட்டுக்கு  உதவும் எழுதுகோல் கவிதைகள் முரண்பட்ட நிகழ்வுகளின் தாக்கத்தால்  முரண்பட்ட கவிதைகளின் ஊர்வலம்  முடிந்தவரை  என் எழுதுகோலை தீட்டி  எழுதிய கவிதைகளை  உங்கள் பார்வைக்கும்  விமரிசனங்களுக்குமாய்  அனுப்புகிறேன்   ஆர்ப்பரித்து வரட்டும் உங்கள் விமர்சனங்கள்  அலை அலையாய்  என் கவிதைகளை அலங்கரித்து  என்னையும் களிப்பிக்கட்டும்                                                                                                                     கவிஞர் ச .ரவிச்சந்திரன்    1. இறப்பை விசாரித்தல்   இதயத்தின் நெகிழ்வை சொல்வது இங்கு  இதயத்தின் வலியை இதயத்தால் உணர்வது  உதடுகளின் ஸ்பரிசத்தால்  வார்த்தைகளால் மருந்திடுவது வெறும் வார்த்தைகளுக்காக வரவில்லை உன்  வேதனை சுமையை சிறிதாவது இறக்கிவைக்க  வீடு வாசல் விட்டு வந்து அந்த  வலியின் வீச்சை குறைக்க முற்படுவது  காடு செல்லும் சவ ஊர்வலத்தில் கால் கடுக்க போவதும்  கண்ணீர் சிந்தி இதயம் நெகிழ்வதும்  மண்ணில் துயரின் வேகத்தை குறைக்கத்தான்  இது வெற்று பாரம்பர்யம் அல்ல  இதயத்தின் இதமான வருடல்  துயரின் பள்ளத்தில் உள்ளவரை  துவளாமல் மேலே கொண்டுவருவது  உடைந்த இதயத்தை அன்பால் ஒன்று சேர்ப்பது  அடைபட்டு போன அன்பின் வழியை அதே  அன்பால் திறப்பது  அதனால் இறப்பை விசாரித்தல்  வெற்று மரபல்ல –அன்பின் எச்சம் மானுட  பண்பின் உச்சம்                 2. உறவெனும் நெருப்பில்   உறவெனும் நெருப்பில் எரிந்து கருகி பிறந்துஇறந்து  பெரும் பாடெய்தி கருவரைதனிலே  கை கால்  முடக்கி கவலைகள் சுமந்து  புவியில் பிறந்து காசு பணமெனும்  மாயையை துரத்தி அவலப்பட்டு அல்லல்கள் சூழ கல்லறை நோக்கி பயணப்படுவோம் இடையே காணும்   இன்னல்களிடையே மனிதம் பேணி  மகத்துவம் காப்போம் மன்பதை உய்ய  தன்னலம் துறப்போம் இத்தகு பிறவியில் வாழ்வின் நடுவில் எத்தனை எத்தனை கோப தாபங்கள் சித்தததை  ஓர் கணம் நிறுத்தியதுண்டா? சிவமதை ஓர் கணம் நினைத்ததுண்டா ? அத்தனும் அவனே ! அப்பனும் அவனே! மொத்தமும் அவனே ! முழுமையும் அவனே ! நித்தியம் அருளும்  நிதியமும் அவனே அத்தகு ஈசனை அடிபணிவோர்க்கு நித்தமும் நலமே!  நிமித்தமும் நலமே! சித்தமும் நலமே ! சகமெலாம் நலமே !   3. வெளியே மழை   வெளியே மழைவெள்ளமாய் வீதிகளில் தண்ணீர்  உள்ளுக்குள் வேண்டும் வேகாத புழுக்கம் அரண்மனை வாயில்  அடுக்கடுக்காய் தங்க கட்டிகள்  அள்ள அள்ள குறையாத நவரத்தினங்கள்  உள்ளுக்குள் அழுக்கு கந்தையோடு நான்  வெளிச்சமாய் வானத்தில் வெண்ணிலா  ஒளிப்புள்ளிகளாய் நட்சத்திரங்கள்  உள்ளுக்குள் குமையும் இருட்டு வனாந்திரம்  தாய் தந்தை பிள்ளைகள் என உறவுக்கூட்டம் வெளியே உள்ளுக்குள் ஒருவருமே இல்லாத துறவியாய் மனம்  எத்தனை முரண்பாடுகள் எத்தனை எத்தனை எதிர்பக்கங்கள் நான் யாரென்று தெரிவதற்குள்  என் மயக்கம் தெளிவதற்குள் என் வாழ்வின் கடைசி பக்கத்தை  புரட்டுகிறான் -அவன்  வெளிவேஷங்களை உண்மையென்று  வெற்று கோஷங்களோடு நான்  வெளிவருவதற்குள் அடுத்த பிறவி  தெளியுமா இந்த மயக்கம்  தெளிவை தேடி நான் உள்ளுக்குள் போகிறேன்  4. எழுதுகோல்களே!   கடற்கரையின் படகுகளின் பின்னால்  கன்னியரும் காளையரும்  உடற்திணவை தணித்து கொள்வதா காதல் ? ஆளில்லா திரையரங்குகளில்  ஆண்மையிடம்  தன்னை இழப்பதா காதல் ? சோலையின் புதர்மறைவில்  சோரம் போவதா காதல் ? பார்வையால் காமத்தை உமிழ்வதா காதல் ? விடுதி அறைகளில் தன்னை  விற்றுக்கொள்வதா காதல் ? எது காதல் எது காமம் என்று  எதுவுமே தெரியாமல்  எதை எதையோ காதல் என்று  கதைப்பதும் காட்சிப்படுத்துவதும்  நடப்பதால் தானோ என்னவோ பெண்மை தன்நலன் குன்றி  மண் மீது கிடக்கிறது விண் முட்ட நின்ற பெண்மை  வீரம் விளைத்த பெண்மை  கண்ணினும் மேலான பெண்மை  கண்ணியம் காத்து நின்ற பெருமை காசுக்காக காமத்தை விற்கும்  கயவர்களால்  கீழ்மை பட்டு கிடக்கிறது ஊடகங்கள் என்ற பாலில்  நஞ்சை கலந்து  வரையறை இன்றி வாரி தருவதால் தலை நிமிர்த்து நின்ற மகத்தான பெண்மை  நிலைகுலைந்து கிடக்கிறது  நிமிருமா பெண்ணின் பெருமை  நீணிலத்தில் திரும்புமா நம்மவர் மேன்மை? எழுதுகோல்களே! நேர்மையாய் எழுதுங்கள் ! எதுவும்நடக்கும் !எல்லாமும் திரும்பும்     5. ஆழியே அழகே   ஆழியே அழகே  அகண்டு பரந்து விரிந்து கிடந்தாய் . அலையும் அலைகளின் ஆற்றல் மேவி  அகிலம் காக்கும் அரணென ஆனாய்  அசையும் புவியின் ஆற்றலுக்கேற்ப  ஆழி பேரலை தான் உருவாக்கி  அண்டம் முழுவதும் பரவி பாய்ந்து  சண்ட மாருத ஆட்டம் ஆடி  மண்டலம் தன்னை விழுங்கி முடிப்பாய்  பகலவன் வெம்மையின் தாக்கம் தணித்து பாரோர் செழிக்க மாரியை தந்து  சகமதை காக்கும் உன்னதம் நீயே  இகமதில் என் கவி பொருளாய் நீ வா  பாரோர் பசிப்பிணி தீர்க்கும் தேவி கார்முகில் கன்னியின் அணுக்க தோழி  சீர் மிகு செவ்விய பொறுமையின் அணியே  செப்பிட என் கவி சிறந்திட நீ வா  ஊழிப்பெருநீர் நீயே நீயே  உலகோர் போற்றும் உன்னதம் நீயே  வாழி! வாழி ! வலிமையின் உருவே  ஆழியே அழகே வாழி! வாழி!    6. காதலை தொலைத்தவர்கள்   வாழ்க்கை வழக்கில்  வாதியாய் நான் பிரதி  வாதியாய் நீ  வாய்தாக்களாய் பார்வைகள்  காதலை சொல்ல துடித்தும்  வாய் பூட்டு போட்டதுன் நாணம் - குடும்பச் சூழல் என்னை மௌனியாக்க  வழக்கை சொல்லாமலே  வாயடைத்து பிரிந்தோம் நாம்  உனக்கென்று ஒரு குடும்பம்  எனக்கென்று ஒரு குடும்பம்  தனி தனியாய் - என் தவிப்பை  உணர முடியாத தொலைவில் நீ  உணர்த்த முடியாத தொலைவில் நான்  முடிவுக்கு வராமலே முடிவுக்கு வந்தது  பிரிவை தீர்ப்பாக்கி நம் காதலை  மனதிற்குள்ளே உயிரோடு புதைக்க  மனதில் புதைத்த அந்த இடம்  மௌன புள்ளியாய்  மரணம் வரை வலிக்கத்தான் போகிறது  உரக்க சொல்லமுடியாமல்  உள்ளுக்குள் அழுது நிற்கும்  உள்ளமுடைந்த மனிதர்களுள்  நானும் ஒருவன் நீயும் ஒருத்தி  7. அவளின் மௌனம்   ஆழ்ந்த மௌனத்தில்  ஆயிரமாயிரம் காவியங்கள்  அவளின் கடை விழி பார்வை ஒன்று போதாதா ? அவனியை பூக்காடாக்காதா ? அவள் பேசும் வரைதான்  அழகு நம்மோடு பேசும்  அவள் பேசிவிட்டாலோ  அவள் வார்த்தைகளோடு  மனம் உறவாட போய்விடும்  அவள் மௌனமே ஓர் தவம் அந்த  அழகான தவத்தில் பிறக்கும் காதலே வரம் வரம் கொடுக்கும் தேவதைகளின்  வார்த்தைகளை தேடி ஓடாமல்  வாழ்க்கை வரத்தை  அவள் மௌனத்தில் தேடுங்கள்                      8. பார்வை வரம் தருவாயா ?   ஒரு வினாடி ஒரே வினாடி  உன் பார்வையில் விழுந்தால் போதும்  உருகும் இமயப்பனிமலை  சுருங்கும் வான பெருவரை  விழிகளா அவைகள்  எதிரியின் கரம் இருந்து புறப்படும் ஏவுகணைகள்  துளைக்கமுடியாத  பெரு வரைகளையும் துகள் துகளாக்கும்  என் இதயம் எம்மாத்திரம் கண்ணே  அன்றே பல்லாயிரம் துகளாகி விட்டது  ஒன்று சேர்க்க உ ன் அருகாமை வேண்டுமடி  அன்றேல் முடிந்து விடும் என் யாக்கை  மலர்கள் உன்னை பார்க்கும் வரை என்னை மயக்கத்தில் ஆழ்த்தியது  மங்கையே உன்னை பார்த்த பின்போ  மயக்கம் என்ற சொல்லே மயங்கி வீழ்ந்தது  முழு நிலவிடம் நான் மோகம் கொண்டதுண்டு  முகில் இளைப்பாறும் முகத்தழகி உன் முகம் பார்த்த பின்போ- மோகம் என்ற சொல்லே  உன் முகத்தை வசீகரித்து கொண்டது  தென்றலை முன்பு நான் காதலித்ததுண்டு  தேன்மொழியே உன் சொல் கேட்டபின் தென்றலும் எனக்கு கசந்ததடி  தேடாமல் வந்தாய்  என் விழி முன் நின்றாய் இன்று  தேடியும் காணாமல் போனாய்  வாலிபம் நகர்ந்து வயோதிகம் வந்து  வாழ்க்கையின் மையம் சேர்ந்தும்  கனவுகளில் உன்னை தேடி களைத்து போகிறது  வருவாயா கண்மணி வந்துன் பார்வை வரம் தருவாயா      []     9. அரிதார அரசியல்   காவியை தூற்றி  கடவுளை மறுத்து  கருப்பில் உலா வரும் காவிய மாந்தர்கள் தன்னையே  சாமியாய் நிறுத்தி கொள்வதே  அரிதார அரசியலின் முதல் பாடம்        10. பார்வை தவறுகள்   பசிக்காக படுக்கையை விரித்தவளுக்கு  சிறையும் தண்டனையும்  பதவிக்காக பகிர்ந்தவளுக்கோ  பவிசோடு பதவியும் புகழும்                      11. இன்றைய உலகம்   இன்றைய உலகம் இன்னம்  வற்றிபோகவில்லை மனிதம் என்னும் மகத்தான  கனிமரங்களால் நிழல் பரவி கிடக்கிறது  அதில் தான்  எத்தனை எத்தனை பறவைகள்  புதிது புதிதாய்  சித்தம் இனிக்க இசை பாடி களிக்கிறது பார்வையும்  பார்வையின் கோணமும் தான்  பார்க்கும் இடத்தை  பாறையாகவும் பசும்சோலையாகவும்  பதிகிறது மனதில் அதுவே  வார்த்தைகளாகவும் எழுத்தாகவும்  வடிகிறது கவிதை வரிகளில்  கவிஞனே கனிவை  கவிதையில் கொண்டு வா  காசினி கண் முன்னே தெரியும்  கவினுறு சோலையாய்          12. சருகுகளே தடம் பதித்து செல்லுங்கள்   சருகுகளே தடம் பதித்து செல்லுங்கள் உங்கள் தடங்களின் வழியே  எங்கள் வாழ்க்கை தொடரட்டும்  உங்களின் நீண்ட பசுமையான நினைவுகளில்  உலகம் இளைப்பாறியதை  உங்களின் தடங்களில் விதைத்து செல்லுங்கள்  காற்றோடு செல்லும் முன்  காசினியின் மணல் வெளியில் புரண்டு பறந்தாலும்  குப்பை மேடுகளில் புதைந்து போனாலும்  ஒப்பிலா உரமாகி  அடுத்த தலைமுறைக்கு வலுவூட்டட்டும்  நிறம் மாறி பழுத்து போனாலும்  மரம் விட்டு தரைக்கு வந்தாலும்  உறவுகளோடு உறவாடிய அந்த  சிறப்புகளை நினைவு கூறட்டும்  உலகப்பந்தின் மேலாடையாய் உவகை உலா வந்ததும்  உங்களின் தடங்களில் காணப்படட்டும்  நாட்களால் வயதால் மூத்த சருகுகளே  நாங்களும் உ திர்வோம் சருகுகளாவோம்  சருகாகி உதிரும் முன் சரித்திரம் படைக்க  உங்கள் தடங்கள்வழிகாட்டி உதவட்டும்  சருகுகளே தடம் பதித்து செல்லுங்கள்      13. நேற்று இன்று நாளை   இன்றும் நாளையும் நேற்றின் எச்சங்கள் நேற்றைய பொழுதின்றி  இன்றும் நாளையும் இல்லை  ஒவ்வொரு விடியலும் ஓராயிரம்  நிகழ்வுகளை ஒளித்து வைத்தபடியே விடிகிறது அந்த ஓராயிரம் நிகழ்வுகளும் நேற்றைய  நிகழ்வுகளின் தொடர்ச்சிகளே  நேற்றைய நிகழ்வுகள் மறக்கப்பட இன்றைய நிகழ்வுகள்  புதுப்பித்தபடியே தொடர்கிறது நேற்று நம் நம் அப்பா இன்று நாம் நாளை நம் பிள்ளைகள்  மூன்றும் ஒரே நேர்கோட்டில் ஒன்றுக்கொன்று முரண்பாடின்றி  ஏதோ ஒன்றில் தொடர்புடையதாய்                      14. என் தேடலின் தடங்கள் என் தேடல் என் அறிவின் உதயத்தில் தொடங்க என்னோடு பயணித்தபடி இருக்கிறது எது எனத்தேடல் என்று அறியுமுன் அகவை ஐம்பது கடந்த போதிலும்  என் தேடலின் சுவாரசியம் மட்டும்  இன்னும் அதே வேகத்தோடு  என் நிழலை விட நெருக்கமாய் தொடர்கிறது  கல்வியை தேடி அலைந்த நான்  கல்விக்கூடங்களோடு நின்று விடாமல்  காணும் ஒவ்வொன்றிலும் தேட தேட  காட்சிகள் யாவும் பாடங்களாய் நின்றது  பட்டங்கள் தராத நிறைவை என்  பட்டறிவு எனக்குள்ளே நிறைத்தது  பதக்கங்கள் பாராட்டுகள் தராத களிப்பை பகலும் இரவும் எனக்கு தந்து தந்து போனது  எட்டி பிடிக்க முடியாத மாய மான்  என் தேடல் என்பதை  என் மனம் எத்தனையோ முறை கூறியும்  எனோ என் அறிவு தேடலின் சிகரம் தொட முயல்கிறது  யாக்கையின் நிறைவு வரை  என் தேடல் பயணம் தொடரும் என்று  எத்தனையோ பேர் ஏளனம் செய்த போதும்  எனோ துவளாமல்  புது புது பாதைகளை தேடி  என் விழிகளும் கால்களும் பயணித்தபடி இருக்கிறது  ஏக்கம் அது மட்டும் இல்லாமல்  எனக்கின்றி போயிருந்தால்  என் தேடலின் முடிவு என்றோ தெரிந்திருக்கும்  ஏக்கமும் அதன் தாக்கமும்  என்னுள் தொடர்ச்சியாய் இருப்பதால் தானோ  என் தேடல் இன்னும் தொடர்ந்தபடி இருக்கிறது  எது என் தேடல் எது என் தேவை  என்று எனக்கே தெரியாமல்  எதையோ தேடி பயணித்தபடி நானும் என் மனமும் புது புது வழிகளில் புகுந்து புறப்படுகிறேன்  என் தேடலின் நிறைவை என்று நான் அடைவேனோ  என்னை இந்த உலகிற்கு தந்தவனிடமே கேட்க என்னை ஆள்பவனே எனக்கு காட்டட்டும்  தேடலுடன் முடிவினை அறியாமல் கவிதையை முடிக்கும்  []                           15. இலக்கு அறிந்து கணை தொடுப்பீர்   சினந்து போதும்  சிந்திப்பீர் களம் புகுமுன்  எங்கே உங்கள் பகை  யார் மீது உங்கள் சினம்  கணை தொடுக்கும் முன்  கருத்தரிவீர் யார் உங்கள் பகைவன்  பூணூல் அணிந்த அந்தணனா  பூணூலை இழித்து அதன்மீது வெறுப்பை உமிழ்ந்த அரசியல் வீணனா  அந்தண எதிர்ப்பை அரசியலாக்கி அந்த வெப்பத்தில்; அடுப்பெரித்து ஆவி பறக்க நம் ரத்தம் குடிக்கும் அரசியல் எத்தனா  அந்தணன் அன்று  வெள்ளை பறங்கியனை எதிர்த்து  விடுதலை வேள்வியில் உயிர் விட்டு தன்னை தரவில்லையா  அந்தணன் தானே என்று  அந்த பாரதியை ஒதுக்க முடியுமா  அம்பேத்கரின் ஆசானை  அந்தணன் என்று தூற்ற தான் முடியுமா  ஏவுகணை பிதாமகன்  அப்துல் கலாமின் ஆசானும் ஓர் அந்தணன் தானே  அவரையும்  அரசியல் வியாபாரிகள்  சாயம் பூசி தங்கள் பதவிபசிக்கு இரையாக்கி கொள்வார்கள்  பிரிவினை பேசுவோரை  சேர்க்காதீர்கள் நாம்  பிரிந்தால் தான் அவர்கள்  தலைமுறைகளுக்கு சேர்க்க முடியும்  ஓட்டுக்காக எதையும் அவர்கள்  கட்டுபாடில்லா நா பேசும் நம்  ஒற்றுமையின் மையத்தில்  வேற்றுமையை விதைக்கும்  நம் பிணங்களின் மீது அரசாட்சி செய்யும்  நலங்கெட்ட அரசியல் எத்தர்களை நம்பாதீர்      16. என் கவிதைப் பயணம்   கவிதைகளை வார்க்க  கனலை தேடி புறப்பட்டேன் கவிதையோ எனக்கு முன்னே  கனலாய் தகித்துக்கொண்டு இருந்தது  தென்றலை வருடி சுகப்பட என்  கவிதைகள் மாளிகையின் உப்பரிகையிலிருந்து  புறப்பட்டதல்ல  உழைத்து பசித்த வயிற்றில் இருந்து  எரிதழலாய் புறப்பட்ட அக்கினி பிழம்பு  சாதிக்கொடுமைகள் என்ற  சாக்காட்டை மோதி பிளந்து  நீதி தேடி புறப்பட்ட கணைகள் என் கவிதைகள்  தேர்வுகள் என்னும் பெயரில்  தேடித் தேடி கொல்லும் ஆட்கொல்லி களைகளை சாடிக் களையும் வரை ஓயாது என் கவிதைகள்  புத்தம் புதிய உலகம்  புத்தம் புதிய வாழ்க்கை  நெஞ்சினிக்கும் கல்வி  வஞ்சனை இல்லா சுற்றம்  சபிக்கப்படாத ஏழ்மை  ஒதுக்கப்படாத வாழ்க்கை  தொடர்ந்து வரும் வாய்ப்புகள்  முடிவே இல்லா களிப்பு  இத்தனையும் தேடி புறப்பட்ட  இளைய தலைமுறையின் கணைகள் என் கவி    17. வெற்றுப் புணர்வுக்கென்றா நினைத்தாய்?   நிலவென்றோம்  மலரென்றோம் மழையென்றும் உன்னை சொன்னதெல்லாம்  இல்லையடி என் கண்ணே  சொல்லில் வடித்தேன் என் காதலை  சொல்லொணாக் காதலின் உச்சமாம் - புணர்வை  சொல்லிலா மௌனத்தின் பின் தள்ளி வைத்தேன்  பெண்மையே நீயே மண்ணின் மாண்பும் மரபுமாய் நின்றாய்  விண்ணும் பொழிய உன் விழியில் ஆனநதம்  கண்ணீராக அன்றோ வழிய வேண்டும்  உன்னிலும் உயர்ந்ததொன்றுண்டோ நீ என்னிலும் உயர்ந்தவள் அன்றோ அன்பே  உன்னாலே என்குலம் தழைத்தது  உன்னாலே என் சோகம் அழிந்தத்து  உன்னருருகாமை இன்றி நகருமோ? என் எஞ்சிய வாழ்வும் புவியும் ?              18. காதலை தேடி காதலை தேடி காலமெல்லாம் ஓடினேன்  காதல் மறைந்து கொண்டு பொல்லா  காமம் தலை காட்டி நின்றது  காமத்தை காதலென்று ஓர் கூட்டம் சொன்னது காமத்தை காதலினும் மெல்லிதென  காசினி சொன்னது  காணாமல் போன காதலோ  கடந்து போன நாற்பதோடு மறைந்தது  வாலாட்டிய காமமோ இவ் வையத்தின் அரியணை ஏறி வென்றது  விடலை பருவத்தின் மயக்கத்தை  வியனுலகோ காதலென்று கதைத்து  மடமை இருளில் வாலிபத்தை தொலைத்தது  திரை படங்களோ  திரை மறை காமத்தை  திரை யிட்டு காட்டி கோடிகளை குவித்தது  ஊடகங்களோ  ஓடிப்போன காமப்பிசிறுகளை  தேடிப்போய் காட்டி மகிழ்ந்தது  விளம்பரப்படங்களிலும்  விதவிதமாய் விரசக்காட்சிகள்  களங்கப்பட்டது தமிழகமும் தமிழரும் தான்  விபசார வியாபாரத்தில் விண்ணை தொட்டது  விலைபோன சில கருப்பு தொலைக்காட்சிகள்.....................  விலை கொடுப்பதோ  கண்ணீரோடு நம் சமூகமே  விபரீதங்கள் தொடர்கதையாகும் முன்  வைப்போமா ? முற்றுப்புள்ளி  நாளைய சமூகத்தை காக்க  எடுப்போமா? எழுதுகோல்  போர்ப்பரணி பாட  எதிர்காலம் எழுந்து நின்று  எழுச்சி கீதம் பாட  உங்கள் முன் வரிசையில் நிற்கிறேன்  உயிரும் சதையுமான தோழமையே ! என் வரிசையின் பின் வந்தால்     19. எழுதப்பட்டுவிடும்-- நாளைய காவியம் வீதிகளில் கேட்பாரற்று  விடப்பட்ட தெய்வங்கள்  குப்பைமேட்டு கோயில்களில்  கொலுவிருக்கும் மனித மிச்சங்கள்  பாவப்பட யாருமின்றி  பராரியாய் பசியோடு கையேந்தும்  எதிர்கால தேசத்தின் மன்னர்கள்  இந்த விக்ரகங்களை கண்டுகொள்ளாமல் புதிய கும்பாபிஷேகங்களுக்கு நாள் குறிக்கும்  விந்தையான ஆத்தீகர்களே  சிந்தையை சற்று வீதியோரம் திருப்புங்கள் நம்  சொந்தத்தின் மிச்சங்கள்  எச்சில் இலைகளோடு போராடுவதை பாருங்கள்  ஆன்மிகம் தேவையில்லை  என்றுரைக்க வரவில்லை  மனிதத்தோடு ஆன்மிகம்  மன்பதையில் வேண்டுமென்கிறேன்  கல்யாண விருந்துகளில்  காசை கரியாக்கும் கனவான்களே  விருந்து என்பதை எழுத்தில் கூட பாராத வியப்பின் உச்சங்களுக்கு விருந்திடுங்கள்  விதி முடிந்து போகும்போது  உங்களோடு கூட வரும் விழைவுடன் உங்கள் நற்பெயர்  பிள்ளையில்லா கனவான்களே  பிள்ளைகள் கோடானுகோடி வீதியில்  தனித்து விடப்பட்ட விடுதிகளில்  உள்ளன்போடு தத்தெடுப்பீர்  உங்கள் வாழ்க்கையின் பெரும்பகுதி அர்த்தப்படும்  மனிதத்தை காப்பீர் மனித இனத்தின்  மாண்பினை காப்பீர்  புனிதப்பட்டு விடும் இந்த பாரதத்தின்  தனித்துவமிக்க புதிய சரித்திரம்  எழுதப்பட்டுவிடும் நாளைய காவியம்        20. என் மகளுக்கு  கவிதை [பிறந்த நாள்] வாழ்த்துக்கள் இன்றைய விடியல் எனக்கு  இன்பங்களை அள்ளி தர வந்த நாள் இன்னமுதாய் உன்னை எனக்கு தந்த நாள்  புன்னகையை உன் உருவில் தந்த நாள்  இருபத்திரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும்  நறுமண முகையை புவிக்கு தந்த நாள்  என் வாழ்வின் விடியலை  அன்று இருபத்தியொராண்டுகளுக்கு முன் நன்கொடையாய் தந்த நாள்  என் தேவதையின் முதல் சிரிப்பை  நான் கண்டு களிகூர்ந்த நாள்  என் வாழ்வின் வளமையை  என் கண்களால் நானே கண்ட நாள்  என் அருகே வர இன்னம்  ஏழு வாரங்கள் இருப்பினும் அவள் இரவு நேரங்களில் முகம் காட்டி களிப்பூட்டிய  உறவின் உன்னதம் அவள்  என் மகளாய் வந்து என் தாயாய் மாறி என்னை தாங்கும் தேவமகள்  இன்று போல் என்றும் இன்பங்கள் பெருகி பொலிக ! பொலிகவே!    21. இம்மை மாறி மறுமை ஏகினும் அவளின் சில அலுங்கல்களும்  சிணுங்கல்களும்  தேவைப்படத்தான் செய்கிறது  அவளின் வேதனைகள் மத்தியில்  அரும்பும் புன்னக அந்த நாளையே மலர்ச்சியுடன் வைக்கிறது  அடுப்பங்கரையில் அவதிப்பட்டாலும் அவள் முகத்தில் மட்டும் எப்படி இப்படி ஓர்  அசாத்தியமான சிறுநகை கீறல்?  அக்கினி நட்சத்திர வெய்யிலின் நடுவிலும்  'அவள் தீண்டலில் எப்படி இப்படி ஓர் குளிர்ச்சி? அலுக்கவே அலுக்காத அழகு  அவளுக்கு மட்டும் எப்படி உரித்தானது?  ஒவ்வொரு இரவின் முடிவிலும்  அவளை பிரிய முடியாமல் நான் என்னை பிறையை முடியாமல் அவள்  இந்த தொடர் இனிமையின் பெயர் தான் காதலோ ? இம்மை மாறி மறுமை ஏகினும்  யானாகியர் அவள் நெஞ்சு நேர்பவனே         22. உன் நேச வரம் தருவாயா? விழிஈர்ப்பு விசையும் நிஜம் தானோ உன்  விழி வட்டத்திற்குள் நுழைந்த நான்  இன்னும் மீளவே இல்லை  உன் விழி வலயங்களில் தான்  உலக காவியங்கள் பிறக்கிறதோ உலகம் உன் விழிதிறப்பில் தான் புலர்கிறதோ  வழி தவறி அலையும் கோடானு கோடி  வாலிப நெஞ்சங்களில் நானும் ஒருவன்  வழிப்படுத்த மாட்டாயோ  வனிதையே என் வாலிபம் தொடங்கும் போது வலிந்து நுழைந்தவளே  வாலிபம் என்னை விட்டு நீங்க  அழியாத நினைவுகளாய் என்னுள்  அரியாசனம் இட்டு அமர்ந்தவளே  என் விழி பார்வை வலுவிழந்த போதும்  உன் உருவத்தை இன்னம் பார்த்தபடியே இருக்கிறது  என்னவளே நீ எங்கே என்று  என் வழியெங்கும் தேடுகிறேன்  இம்மை மாறி மறுமை ஏக  உன்னருகாமை என்னும் வரம் போதும்  என்நெஞ்சிய காலங்கள்  மறுமை நோக்கி விரைந்தோடும்  மறுமைக்காவது உன் நேச வரம் தருவாயா?  23. தூங்கா விளக்கு அவள் இமை தடங்களில்  நான் இளைப்பாறிய காலங்கள் சுகமானவை  அவள் கரங்களில் நான் தஞ்சம் அடைந்த கணங்களோ என் வாழ்வின் வசந்த காலம்  அவளோடு இணைந்து நடந்த பாதையை  அசைபோட்டு பார்க்கிறேன்  நடக்கமுடியாமல் முட்டிகளில் வலிசுமந்த போதும் இந்த தருணத்தில்  நினைவு தடங்களில் அவள்  நின்று ஒளிரும் தூங்கா விளக்கு  அவளோடு கல்லூரி நூலகத்தில்  அமைதிமொழி பேசிய அந்த தருணங்கள்  அழிக்க முடியாத காவியமாக  அந்த காவியத்தின் பக்கங்களை  அமைதியின் துணையோடு படிக்கிறேன் மவுனமாக  என் நினைவுகளை குறுக்கிடாதீர்கள்  அவளோடு பயணிக்கட்டும்  என் எஞ்சிய காலங்களை  இது ஐம்பதை கடந்தவனின் காதல்  இந்த நினைவுகளின் எச்சமாக கண்களில்  இரண்டு துளி கண்ணீர்  என் கண்களின் ஈரப்பசை காயாமல்  என்னோடு வரும் என் இறுதி வரை            24. சொல்லறை கட்டி வைத்தேன் கண்மணி நீ சற்று இளைப்பாற வெற்று சொல்லறை அல்ல கண்ணே என் கவிதை  நல்லதோர் கவிதை மாளிகை  நாயகி நீ உலா செல்ல  நயமுடன் கட்டி வைத்தேன்  உள்ளத்தே உன்னை வைத்து  சொற்களை தேடி தேடி பார்த்து பார்த்து  உற்றதோர் உறைவிடம் உனக்கென படைத்தேன்  உயிரே! என் மாளிகை வெளிச்சம் பெற  உறைவாயா ? உலகம் உள்ளவரை என் சொல்லறை  உயரும் காவியமாய் மறுத்தால்  உளுத்துப்போன கல்லறையாய் மாறும்  எழுதுவேன் அன்பே ! என்விரல்கள் மறத்து போய் எழுத மறுக்கும் வரை  என் இனியவளே !  உன் புன்னகையால் ஒளியூட்டுவாயா ?                  25. விழித்திடு தமிழா! அரிமா ஒன்றுறங்க அதன்மேல் ஏறிநின்றது ஓர் எலி  நின்று சொன்னது  நானே இங்கு வல்லவன்  என் வல்லமையை புவி இனி காணும் என்று  உறங்கும் சிங்கமோ பாவம் என்று  உறக்கம் கலையாது தொடர்ந்து நடித்தது  உறுமிய சுண்டெலி உலா வந்தது  செறுமிய குரலில் இறுமாந்து நின்றது  சிம்மம் மெல்ல தூக்கம் கலைத்து சுற்றும் முற்றும் திரும்பி பார்த்தது  சிங்கம் எழுந்ததை அறிந்த சுண்டெலி  அங்கம் பதைக்க ஓடி மறைந்தது  தங்க தமிழ்த்தாய் மக்காள் கேளிர்  சிங்கம் என்றும் சளைத்தது அன்று  சுண்டெலி அரியணை ஏறவியலா மன்பதை விழிக்க மறைந்தே ஓடும்  சிங்கம் சிங்கமே அரியணைக்குரியது  சுண்டெலி ஓடி மறையும் இயல்பது  தாய் தமிழ்நாடே நம்மை காக்கும்  தூயவரே நம்மை ஆளத்தக்கவர்  உணர்வீர் இங்கு சிம்மம் ஏதென ? சுண்டெலி ஏதென ?        26. மண்ணின் அஞ்சறை பெட்டிகள் காதல் ஒருபோதும்  தூங்குவதே இல்லை  காசினியை நிரப்பி  நம்மை தினம் தினம் உயிர்ப்பித்துக்கொண்டிருக்கிறது  மலர்களின் நிறமாக தென்றலின் குளிராக  மழையின் இனிமையாக  மழலையின் பேச்சாக  ஏன்  நம் கண்ணுக்கு தெரியாத கடவுளின்  அன்புநிறை அரவணைப்பாக  பரவி நிறைந்த காதல்  ஒருபோதும் தூங்குவதில்லை தோழா  கல்லறைகள் சவக்கூடுகளை சுமக்கும்  மண்ணின் அஞ்சறை பெட்டிகள்                          27. நிர்வாணம் மனிதனின் முதலாடை நிர்வாணம்  மரித்த பின்னும் நிர்வாணம்  யார் சொன்னது நிர்வாணம் -ஆபாசமென்று  அருவருப்பின் உச்சமென்று ? ஆடைகள் இல்லாத நிலையில்  மனிதனில் களங்கம் இல்லை ஆடைகள்  மூடிய தேகத்தில்தான் ஒளிந்திருந்தது  முடைநாற்றம் வீசும் அவலமும் கீழ்மையும்  குழந்தையின் நிர்வாணம்  அழகின் வீச்சு  ஞானியின் நிர்வாணம்  உண்மை ஞானத்தின் உச்சம் இயற்கையின் நிர்வாணம் புனைவிலா கவிதை  களங்கம் புகுந்தது எங்கனம் ? பார்வையின் மனதின் மாயைதானே                28. ராமனை மணக்க அன்று சீதைகள் காத்திருந்தனர்  ராமனை மணக்க இன்றோ சீதைகளை வேண்டி எத்தனையெத்தனை ராமன்கள் பெண் தேடி அலைகின்றனர்  அன்று வரதட்சிணைகள்  அவள் திருமணத்தை நிர்ணயித்தன இன்றோ  அவள் நிர்ணயிக்கிறாள்- மணமகனின் உச்சபட்ச சம்பளத்தை வைத்து  அன்று சீதைகள் இருந்தனர் கன்னிகளாய் முதிர்கன்னிகளாய் இன்றோ ராமன்கள் கல்யாண வரம் கிடைக்காமலேயே  தனியன்களாய் மொட்டை மரங்களாய் பூக்கமுடியாமல் காய்த்து கனிய முடியாமல்  இறுதியை நோக்கி பயணிக்கும்  இவர்களின் தலை நரைத்து கூன் விழும் வரை சீதைகள் வேண்டாம் -ஓர் கூனி கூட கிடைக்கவில்லை  இளமையை கரைத்து வாலிபம் போன  இவர்கள் கடந்த தலைமுறை சாபத்தின் மிச்சங்கள்  சீதைகள் நடத்தும் சுயம்வரத்தில்  லட்சங்களில் சம்பளமும் சொந்த வீடுகளுமே நுழைவு தகுதிகளாயின  ஆயிரங்களில் சம்பளமும்  வாடகை வீடுகளில் வசிப்போர்களும் சபிக்கப்பட்டனர் ஆயுள் முழுமையும் தனிமரங்களாகவே தவிக்க  அடுத்த தகுதி என்ன தெரியுமா  மணமகனுக்கு தாய் தகப்பன் இருக்கவே கூடாது  இருந்தாலும் அவர்கள் வந்து போகவே கூடாது  அன்னான் தம்பிகள் கூடவே கூடாது  இப்படியெல்லாம் நிபந்தனைகளோடு  சீதைகள் சுயம்வரத்தில்  மணமகன்களோ செரிக்கமுடியாமல்  கண்ணீரின் விளிம்பில் நின்றபடி  வாலிபத்தை தொலைத்துவிட்டு  வயோதிகத்தை எதிர்நோக்கி இருக்கும் அவலத்தை  வரலாறுகள் எழுதப்போகின்றன  இது மிகைப்படுத்தப்பட்டவை அல்ல இன்றைய இளைஞர்களின்  கையறு நிலை கவிஞரே !                      29. புது நெறி வகுப்பீர்! பிறந்த நாள் முதலாய்  பேசி வரும் தமிழை ஆராய  முதுகலை பட்டம் வேண்டுமாம் அத்துடன்  மூதறிஞர் ஒருவரின் வழிகாட்டுதல் வேண்டுமாம்  ஆய் வியல் முனைவர் பட்டம் பெற இத்தனை நெறிகள்  பல்கலை கழகங்கள் இன்றுவரை  பழைய நெறிகளை தடை கற்களாய் வைத்திருக்கும் அவலம்  இங்குமட்டும் தான்  இன்றளவும் தொடர்கிறது  பாரெங்கும் மாற்றங்கள் ஏற்பட்ட போதும்  சீர்கெட்ட மாறாத நெறிகள் இங்கு மட்டும் தான்  வினைத்தொகையும் பண்புத்தொகையும்  உருவகத்துடன் உவமைத்தொகை அறிந்தும்  திணைகள் பலவின் இலக்கணம் அறிந்தும்  அதனை ஆராய முதுகலை பட்டம் கோரும்  அறமற்ற நெறிகள் உலாவும்  திறமற்ற பல்கலை கழங்கங்கள் இங்குமட்டும் தான்  தற்குறிப்பேற்றமும் ஏகதேசமும் அறிந்தும்  நற்றிணை பாக்களை ஆய  விற்பன்னர் ஒருவரின் வழிகாட்டுதல் வேண்டுமாம்  எதற்கெதற்கோ அயல்நாட்டை பார்க்கும்  பல்கலை கழகங்களே எட்டுவயதில் கணிதத்தில் ஆராயும் மேன்மையை  கொணர்வீரே  பழையன கழிப்பீர் புதியன புகுத்துவீர்  பிழைகளை களைந்து  புது நெறி வகுப்பீர்  திறனுடை நம்மவர் சால்பை  பறையறிந்து உரைப்பீர் பாரோர் தெளிய    30. மறந்துவிடு மனமே கணவன் கொடூரமானால் காரிகை என்ன செய்வாள்  கடந்தது எல்லாம் கசப்பாக  நடப்பததாவது இனிமை தேடி அன்பை நாடினால்  காசினி சொல்கிறது -அவள்  நடத்தை கெட்டவளாம்  ஆண் ஆதிக்கம் படைத்த சமூகம் சொல்கிறது  அவள் ஒரு வேசி என்று  அன்பை தேடி பயணிக்கும் உயிர்களில்  பெண் மட்டும் என்ன அந்நியமானவளா? அவள் உலகத்தில் அன்பு என்ன தடை செய்யபட்ட வார்த்தையா?  ஆண் ஒருவன் நேசித்தால் காதலாம்  அதே  பெண் ஒருத்தி அன்பை யாசித்தால் அது  நடத்தை தவறலா  ஊடங்களும் உலகமும் இதே பொய்யை சொல்லி சொல்லி  பூமிப்பந்தை களங்கப்படுத்தி வருகிறது  காயப்படுத்தப்பட்ட பெண்மையோ  மருந்துக்காக மூலையில் முடங்கிக்கிடக்கிறது  காயமும் வலியும் அவளுக்கு மட்டும் தானா  இதோ புறப்பட்டுவிட்டது என் கேள்வி ஏவுகணையாய் உளுத்து போன சமூகத்தின்  உதவாக்கரை சட்டங்களை தகர்க்க  வன்முறையில் எனக்கு விருப்பம் இல்லை ஆனால்  வன்முறையை நன்முறையாய் கொண்ட சமூகமே  உன் முறையில் திருப்பித்தருகிறேன் என்பதிலை  பெண்மையின் மென்மையை என்  மனமே மறந்துவிடு        31. நாலாயிரம் பொன் அன்று அம்பிகையின்  காதணி  அபிராமி பட்டன் களிக்க நிலவானது  இன்றோ  காதலன் களிக்க-அவள்  துடைத்தெறிந்த நெற்றிப்பொட்டு நிலவானது  மொத்தத்தில் நிலவுகள் களிப்பின் அடையாளமானது  நல்ல கவிதைக்கு- இதோ  நாலாயிரம் பொன்                            32. விழிகளில் கரைந்தவன் நினைவு பள்ளங்களில்  நீதானே நீங்காமல்  நின்றாட்சி செய்கிறாய் நீ நின்ற இடம்  அமர்ந்த இடம்  அமர்ந்து நம் காதலை பகிர்ந்த இடம் உன்  நீல விழிகளில் நான் கரைந்த இடம் என நீயும் நானும் கழித்த  நிமிடங்கள் தானே வரிசையாக வருகிறது நீ இருந்த ஒவ்வொரு  நிமிடமும் நினைவிருக்க நீ என்னைவிட்டு நீங்கிய அந்த நிமிடம் மட்டும்  நீர்க்குமிழி போல் எங்கே  நீங்கி போனது என்  நிகழ்காலத்தை வாங்கி போனது நீ விலகி மறைந்த அந்த  நிமிடம் முதல்  நிகழ்காலம் என்  நீண்ட தனிமை சிறையானது நித்திலமே! நீ வந்தென் நீண்ட தனிமைக்கு முடிவுரைப்பாய்- என நித்தம் நித்தம் என்  நெடுவாசல் வந்து காத்திருப்பேன் வருவாய் வந்தென்  தனிமைச்சிறை உடைப்பாய்- என்ற வடியாத நம்பிக்கைகளோடு என்  விழிப்பூக்களை வழியெங்கும்  விதைத்திருக்கிறேன் உன்  வருகையின் நலம் தெரிவிக்கும் என விடியாத இரவின் விடியல் கனவுகளோடு  விழி மலர்த்தி காத்திருக்கும் உன் நீல  விழிகளில் கரைந்தவன்     33. ஓர் மகனின் கதறல் பசியென்றதும்  புசியென்று உன் தட்டத்தை எனக்கு வைத்து  பசியோடு இரவை கழித்து  பறக்க பறக்க காலையில் வேலைக்கு போய் உன்  பட்டு கரங்கள் காய்ப்பேறி புண்பட்ட போதும்  பதைப்போடு நீ சமைத்தளித்த சோறு தானே என் பங்களாவும் கார்களும் தந்தது  பாவிமகள் சொன்னாளென்று  பாவி நான் உன்னை விலக்கி வைத்தேனே -நீ  பசிக்க பார்த்திருக்கும் அவலத்தை பார்த்தும் உயிரோடு இருக்கும் அந்த  பரமனும் சகிக்க மாட்டானே இந்த பாவத்தை கழுவ எந்த கங்கையில் மூழ்குவது ?                34. யாழினிது யாழினிது  யாழினும் அவள் குரலோசை இனிதினிது  குழல் இனிது குழலினும் அவள் சிரிப்பின் ஒலிஇனிது  ஏழிசை சுரம் இனிது  ஏந்திழையாழ் கொஞ்சுமொழி இனிதினிது  ஆழ்கடல் முத்தழகு  ஆழ்கடல் முதினும் அவள் கொண்ட பல் வரிசை அழகழகு  சூழ் பொழில் மலரழகு சூழ் பொழில் மலரினும் அவள் கொண்ட முகம் அழகு  வீழ் அருவி தான் அழகு  வீழா அவள் கார்குழல் பேரழகு  வனிதை அவள் அசைவழகு  வஞ்சியவள் வடிவழகு  கனி இதழாள் வடிவழகு  கற்கண்டு மொழிஅழகு  மான் விழியாள் நடை அழகு  மங்கை யவள் பேரழகு  தேன்மொழியாள் அழகுறைக்கும் தெள்ளு தமிழ் கவி அழகு  நானவள் அழகுறைக்கும்  நாழிகைகள் தான் அழகு  நங்கையவள் பார்வைபட  நானிலமே அழகாமே          35. மழை [வெள்ளம் ] வாரி கொடுக்கும் கொடையை கூட வாங்க முடியாமல் மானுடம் ஒரு  வாய் தண்ணீருக்கு அடுத்த மாநிலத்தை  அண்டி பிழைப்பது ஏன் ?  பூமிபள்ளங்களில் கான்க்ரீட் நிரப்பிய  புத்திசாலிகளே ! சாமியையும் மழையையும்  சபிப்பதேன் ? ஏரிகளை தூர்த்து  குடியிருப்புகளாக்கிய மேதைகளே! நாளை தண்ணீருக்கு  அமெரிக்காவை கேட்பீர்களா ?  குளங்களில் வீடுகட்டிவிட்டு  குடியிருக்கும் குணவான்களே!  ஓடிவரும் மழை நீர் குளத்திற்கு வற்றாமல்  கோட்டைக்கா போகும் ? தண்ணீர் தேங்கிநிற்கிறது என்று  கண்ணீர் விடும் கதறி அழும் கனவான்களே!  குளங்களை அபகரிக்க யார் சொன்னது ? குளங்களில் குடியிருப்பை யார் கட்ட சொன்னது ? லஞ்சம் கொடுத்து அனுமதியை யார் பெற சொன்னது? இப்போது  தஞ்சம் என்று பள்ளிகளில் முடங்க யார் சொன்னது?  மழையினும் கொடையாளி யாருமில்லை  மாநிலத்தீர் ! தவறிழைத்தீர் , வருந்துகிறீர். பிழை தவிர்ப்பீர் ,புவிப்பந்தை காப்பீர் . மழை தரும் நிதியை சேமிப்பீர்  36. காதலை தொலைத்தவர்கள் வாழ்க்கை வழக்கில்  வாதியாய் நான் பிரதி  வாதியாய் நீ  வாய்தாக்களாய் பார்வைகள்  காதலை சொல்ல துடித்தும்  வாய் பூட்டு போட்டதுன் நாணம் - குடும்பச் சூழல் என்னை மௌனியாக்க  வழக்கை சொல்லாமலே  வாயடைத்து பிரிந்தோம் நாம்  உனக்கென்று ஒரு குடும்பம்  எனக்கென்று ஒரு குடும்பம்  தனி தனியாய் - என் தவிப்பை  உணர முடியாத தொலைவில் நீ  உணர்த்த முடியாத தொலைவில் நான்  முடிவுக்கு வராமலே முடிவுக்கு வந்தது  பிரிவை தீர்ப்பாக்கி நம் காதலை  மனதிற்குள்ளே உயிரோடு புதைக்க  மனதில் புதைத்த அந்த இடம்  மௌன புள்ளியாய்  மரணம் வரை வலிக்கத்தான் போகிறது  உரக்க சொல்லமுடியாமல்  உள்ளுக்குள் அழுது நிற்கும்  உள்ளமுடைந்த மனிதர்களுள்  நானும் ஒருவன் நீயும் ஒருத்தி    37. சொல்லறை கட்டி வைத்தேன் கண்மணி நீ சற்று இளைப்பாற வெற்று சொல்லறை அல்ல கண்ணே என் கவிதை  நல்லதோர் கவிதை மாளிகை  நாயகி நீ உலா செல்ல  நயமுடன் கட்டி வைத்தேன்  உள்ளத்தே உன்னை வைத்து  சொற்களை தேடி தேடி பார்த்து பார்த்து  உற்றதோர் உறைவிடம் உனக்கென படைத்தேன்  உயிரே! என் மாளிகை வெளிச்சம் பெற  உறைவாயா ? உலகம் உள்ளவரை என் சொல்லறை  உயரும் காவியமாய் மறுத்தால்  உளுத்துப்போன கல்லறையாய் மாறும்  எழுதுவேன் அன்பே ! என்விரல்கள் மறத்து போய் எழுத மறுக்கும் வரை  என் இனியவளே !  உன் புன்னகையால் ஒளியூட்டுவாயா ?           38. மண்ணின் அஞ்சறை பெட்டிகள் காதல் ஒருபோதும்  தூங்குவதே இல்லை  காசினியை நிரப்பி  நம்மை தினம் தினம் உயிர்ப்பித்துக்கொண்டிருக்கிறது  மலர்களின் நிறமாக தென்றலின் குளிராக  மழையின் இனிமையாக  மழலையின் பேச்சாக  ஏன்  நம் கண்ணுக்கு தெரியாத கடவுளின்  அன்புநிறை அரவணைப்பாக  பரவி நிறைந்த காதல்  ஒருபோதும் தூங்குவதில்லை தோழா  கல்லறைகள் சவக்கூடுகளை சுமக்கும்  மண்ணின் அஞ்சறை பெட்டிகள்      39. நிர்வாணம் மனிதனின் முதலாடை நிர்வாணம்  மரித்த பின்னும் நிர்வாணம்  யார் சொன்னது நிர்வாணம் -ஆபாசமென்று  அருவருப்பின் உச்சமென்று ? ஆடைகள் இல்லாத நிலையில்  மனிதனில் களங்கம் இல்லை ஆடைகள்  மூடிய தேகத்தில்தான் ஒளிந்திருந்தது  முடைநாற்றம் வீசும் அவலமும் கீழ்மையும்  குழந்தையின் நிர்வாணம்  அழகின் வீச்சு  ஞானியின் நிர்வாணம்  உண்மை ஞானத்தின் உச்சம் இயற்கையின் நிர்வாணம் புனைவிலா கவிதை  களங்கம் புகுந்தது எங்கனம் ? பார்வையின் மனதின் மாயைதானே          40. வழிகாட்டி புன்னகைகள் கலவர பூமியில்  அமைதி சோலையாய் நீ உன்னை கண்டும் எனோ மனம்  நம்ப மறுக்கிறது அமைதியின்-ஆளுமையை  உன் அமைதியின் முழுமைக்கும்  நான் தானோ எஜமானன்  இன்னமும் நம்பிக்கை வரவில்லை  நான் தான் உன்னவன் என்பதில்  உன் அமைதி கலைத்துச் சொல்லடி  புன்னகை மொழியால்  நீ தெளிக்கும் சின்ன சின்ன புன்னகைகள்  இந்த வாழ்க்கை முழுமைக்கும் தொடர்ந்து வரட்டும்  வழிகாட்டியாய்      41. பெண்ணே நீ சிரி முகம் தெரியாத பேருக்கும்  விரித்தாய் நட்பு நாடி -முத்து கம்பளம்  அகம் நிறைந்த களிப்பை  தெளித்தாய் -புன்னகையால்  பெண்மையே நீ மட்டும் இல்லையென்றால்  மண்ணில் மலர்ச்சியும் மகிழ்வும் ஏது ? உன் புன்னகை ஒளிமட்டும் இல்லையென்றால்  விண் கொண்ட கதிருக்கும், மதிக்கும்  தண்ணொளியும் உயிர்ப்பும் தான் ஏது ?  பெண்ணே நீ சிரி உன் சிரிப்பால் மண்ணில் சுவர்க்கம் தோன்றட்டும்  அதில் இந்த பூமியின்  அணைத்து உயிர்களும் இளைப்பாறட்டும்        42. சீதைகளை வேண்டி அன்று சீதைகள் காத்திருந்தனர்  ராமனை மணக்க இன்றோ சீதைகளை வேண்டி எத்தனையெத்தனை ராமன்கள் பெண் தேடி அலைகின்றனர்  அன்று வரதட்சிணைகள்  அவள் திருமணத்தை நிர்ணயித்தன இன்றோ  அவள் நிர்ணயிக்கிறாள்- மணமகனின் உச்சபட்ச சம்பளத்தை வைத்து  அன்று சீதைகள் இருந்தனர் கன்னிகளாய் முதிர்கன்னிகளாய் இன்றோ ராமன்கள் கல்யாண வரம் கிடைக்காமலேயே  தனியன்களாய் மொட்டை மரங்களாய் பூக்கமுடியாமல் காய்த்து கனிய முடியாமல்  இறுதியை நோக்கி பயணிக்கும்  இவர்களின் தலை நரைத்து கூன் விழும் வரை சீதைகள் வேண்டாம் -ஓர் கூனி கூட கிடைக்கவில்லை  இளமையை கரைத்து வாலிபம் போன  இவர்கள் கடந்த தலைமுறை சாபத்தின் மிச்சங்கள்  சீதைகள் நடத்தும் சுயம்வரத்தில்  லட்சங்களில் சம்பளமும் சொந்த வீடுகளுமே நுழைவு தகுதிகளாயின  ஆயிரங்களில் சம்பளமும்  வாடகை வீடுகளில் வசிப்போர்களும் சபிக்கப்பட்டனர் ஆயுள் முழுமையும் தனிமரங்களாகவே தவிக்க  அடுத்த தகுதி என்ன தெரியுமா  மணமகனுக்கு தாய் தகப்பன் இருக்கவே கூடாது  இருந்தாலும் அவர்கள் வந்து போகவே கூடாது  அன்னான் தம்பிகள் கூடவே கூடாது  இப்படியெல்லாம் நிபந்தனைகளோடு  சீதைகள் சுயம்வரத்தில்  மணமகன்களோ செரிக்கமுடியாமல்  கண்ணீரின் விளிம்பில் நின்றபடி  வாலிபத்தை தொலைத்துவிட்டு  வயோதிகத்தை எதிர்நோக்கி இருக்கும் அவலத்தை  வரலாறுகள் எழுதப்போகின்றன  இது மிகைப்படுத்தப்பட்டவை அல்ல இன்றைய இளைஞர்களின்  கையறு நிலை கவிஞரே !            43. புது நெறி வகுப்பீர்! பிறந்த நாள் முதலாய்  பேசி வரும் தமிழை ஆராய  முதுகலை பட்டம் வேண்டுமாம் அத்துடன்  மூதறிஞர் ஒருவரின் வழிகாட்டுதல் வேண்டுமாம்  ஆய் வியல் முனைவர் பட்டம் பெற இத்தனை நெறிகள்  பல்கலை கழகங்கள் இன்றுவரை  பழைய நெறிகளை தடை கற்களாய் வைத்திருக்கும் அவலம்  இங்குமட்டும் தான்  இன்றளவும் தொடர்கிறது  பாரெங்கும் மாற்றங்கள் ஏற்பட்ட போதும்  சீர்கெட்ட மாறாத நெறிகள் இங்கு மட்டும் தான்  வினைத்தொகையும் பண்புத்தொகையும்  உருவகத்துடன் உவமைத்தொகை அறிந்தும்  திணைகள் பலவின் இலக்கணம் அறிந்தும்  அதனை ஆராய முதுகலை பட்டம் கோரும்  அறமற்ற நெறிகள் உலாவும்  திறமற்ற பல்கலை கழங்கங்கள் இங்குமட்டும் தான்  தற்குறிப்பேற்றமும் ஏகதேசமும் அறிந்தும்  நற்றிணை பாக்களை ஆய  விற்பன்னர் ஒருவரின் வழிகாட்டுதல் வேண்டுமாம்  எதற்கெதற்கோ அயல்நாட்டை பார்க்கும்  பல்கலை கழகங்களே எட்டுவயதில் கணிதத்தில் ஆராயும் மேன்மையை  கொணர்வீரே  பழையன கழிப்பீர் புதியன புகுத்துவீர்  பிழைகளை களைந்து  புது நெறி வகுப்பீர்  திறனுடை நம்மவர் சால்பை  பறையறிந்து உரைப்பீர் பாரோர் தெளிய    44. மறந்துவிடு மனமே கணவன் கொடூரமானால் காரிகை என்ன செய்வாள்  கடந்தது எல்லாம் கசப்பாக  நடப்பததாவது இனிமை தேடி அன்பை நாடினால்  காசினி சொல்கிறது -அவள்  நடத்தை கெட்டவளாம்  ஆண் ஆதிக்கம் படைத்த சமூகம் சொல்கிறது  அவள் ஒரு வேசி என்று  அன்பை தேடி பயணிக்கும் உயிர்களில்  பெண் மட்டும் என்ன அந்நியமானவளா? அவள் உலகத்தில் அன்பு என்ன தடை செய்யபட்ட வார்த்தையா?  ஆண் ஒருவன் நேசித்தால் காதலாம்  அதே  பெண் ஒருத்தி அன்பை யாசித்தால் அது  நடத்தை தவறலா  ஊடங்களும் உலகமும் இதே பொய்யை சொல்லி சொல்லி  பூமிப்பந்தை களங்கப்படுத்தி வருகிறது  காயப்படுத்தப்பட்ட பெண்மையோ  மருந்துக்காக மூலையில் முடங்கிக்கிடக்கிறது  காயமும் வலியும் அவளுக்கு மட்டும் தானா  இதோ புறப்பட்டுவிட்டது என் கேள்வி ஏவுகணையாய் உளுத்து போன சமூகத்தின்  உதவாக்கரை சட்டங்களை தகர்க்க  வன்முறையில் எனக்கு விருப்பம் இல்லை ஆனால்  வன்முறையை நன்முறையாய் கொண்ட சமூகமே  உன் முறையில் திருப்பித்தருகிறேன் என்பதிலை  பெண்மையின் மென்மையை என்  மனமே மறந்துவிடு      45. ஜீவநதி காதல் ஒவ்வொரு இளைஞனையும்  வானளாவ உயர்த்தி நிற்பது  அவரவர் கடந்த பாதையில் தென்படும் காதல் பூக்களே  இந்த காதல் என்ற மட்டும் இல்லையென்றால்  இந்த பூமியில் சலனம் என்பதே இல்லாமல் போயிருக்கும்  உயிர்ப்பும் களிப்பும் காதலின் கொடைகள்  கன்னியின் கடைவிழிப்பார்வையின் மகத்துவம்  உன்னையும் என்னையும் விண்ணவனாக்கி பார்க்கும்  கன்னலை எண்ணத்தில் சேர்க்கும்  மின்னலை பார்வைக்கு ஊட்டும்  அன்னையிடம் பாசமாக தோன்றி  பின்னால் உடன்பிறந்தவளிடம் அன்பாக வளர்ந்து  கன்னியின் பார்வையால்  காதலாக மாற்றம் பெறும் மாய வித்தை  அசடனையும் அறிஞனாக்கி பார்க்கும்  அற்புதமே காதல் கசடு நீக்கி காசினியை புத்தாக்கம் செய்யும்  கற்பமே காதல் இது உன்னையும் என்னையும் ஏதோ ஒரு நொடியில் கடந்திருக்கும் ஐந்து ஆறு என்ற பேதம் இன்றி  எந்த நொடியும் எல்லாவிடத்தும் பரவி பாயும் -ஜீவநதி காதல்     46. கவிதையே!  உனக்கொரு கவிதை கவிதையே!  உனக்கொரு கவிதை சொல்வேன்  உன் கண் கள் இரண்டும்  உவமை அணிக்கு தப்பி பிறந்தன  உன் நாசிக்கு  உருவகம் சொல்ல உலகில் பொருள் இல்லை  உன் கோவை கனிஇதழ்களுக்கு  இல் பொருள் உவமை அணியும் கூட குறைவானதே  உன் வலம்புரி சங்கு கழுத்தோ  உயர்வுநவிற்சிக்கும் மேலாக  நிமிர்ந்த நடை நேர்கொண்ட பார்வை  இவ்விரண்டும்  உள்ளுறை உவமமாக  அன்பே !  உன்னை நான் முதன் முதலாக  சந்திக்கும்போது குறிஞ்சித்திணை  உன்னை காணாத கணங்கள் முல்லை தினை  நீ என்மீது கொண்ட கோபம் மருதமும் என்றால்  உன்னை காணாமல் என் கண்ணீர் நெய்தலாகும்  நீயோ நானோ இப்பிறவியில் சேராமல் போனால் பாலையடி  வறண்ட பாலையடி  உன் சிரிப்போ குறள் வெண்பா  உன் பேச்சோ கொஞ்சிவரும் வஞ்சிப்பா  உன்னடையோ ஆசிரியம்  உன் எழிலோ களிகூர வைக்கும் கலிப்பா  கவிதையே ! நீயே ஓர் கவிதை உனக்கு  எங்கனம் வடிப்பேன் இன்னொரு கவிதை      47. ஆதலினால் காதல் செய்வீர் ! காதலை தொலைத்தவன்  கடவுளை வேண்டி தவமிருந்தான்  காலங்கள் மட்டுமே கடந்தது  கடவுள் வரவே இல்லை அவன்  காலம் முடிந்து மரணிக்கும் போது  கதறி கேட்டான் கடவுளே என்னை என் கைவிட்டீர் என்று  கடவுள் வானொலியாய்சொன்னார்  மடையனே நான் வேறு காதல் வேறா ? என்னை தொலைத்த உன்முன் எப்படி வருவேன் என்று      48. என்னவளே! என்னவளே நீ எங்கிருந்தாய் இதனை நாள்  உன்னை காணாமல் என் வாழ்வின்  உன்னதங்களை தொலைத்தவனாய்  உன்மத்தம் பிடித்தலைந்தபோது வந்தாய்  இன்னமுதாய்!  என் மயக்கம் தெளிவிக்கும் அருமருந்தாய்!  உன் விழிப்பார்வை என்மேல்விழ எனக்குள் கவித்துவம் சிலிர்த்தெழுந்தது  செந்தமிழ் கவிச்சரம் மாலைகளாய் தொடர்ந்தது  வந்தாய் அமுதாய் வனப்பில் என் பித்தம் தெளிவித்தாய்  சென்றதேன் கண்ணே ! கனவு பெண்ணாய்  கதறுகிறேனே கேட்கிலையா -என் காதலின் ஆழத்தில் நானே மூழ்கிப்போகிறேன்  மூச்சடைத்து போவதற்குள் என்  முன் வருவாயா? என்னை மீது போவாயா? உனக்காகவே உன் நினைவுகளோடு  உன் விழிதிறப்பிற்க்காகவே  உன் இமையோரம் காத்திருப்பேன்      49. ஏறு தழுவுக ஏறு தழுவுக இளைஞனே இது சீரிய பண்பாட்டின் உச்சம் இதில்  மாறுபடும் வீணர்களை  வீறுகொண்டு எதிர்கொள் தோழனே  மங்கையை மணப்பதற்கும்  மாநிலம் ஆளும் தலைமை பெறுவதற்கும்  எங்கள் முன்னோர் கண்ட நல்வழி இதனை  எதிர்ப்போர் மிரண்டோட  எழுந்து வா என் தோழனே  திங்களும் செங்கதிரும் தோன்றிய நாள் முதல்  வங்கக்கடல் நீர் வற்றி காயும் வரை  வெல்லும் திரள் தோள் கொண்டோய் துள்ளி வா என் தோழனே  பேதைகள் தெறித்தோடசெய்வோம்  உழவர்களின் மேன்மையை  உலகோர்க்கு உணர்த்தும்  பழந்தமிழ் பண்பாட்டின் நன்னாளாம்  பொங்கல் திருநாளை  எங்கணும், யாவரும் உணர கொண்டாடுவோம்