[] []                                                                                                         எழிலரசி கிளியோபாத்ரா                                                                         சி.ஜெயபாரதன்  நூல் : எழிலரசி  கிளியோபாத்ரா  ஆசிரியர் : சி. ஜெயபாரதன், கனடா மின்னஞ்சல் :  jayabarathans@gmail.com    மின்னூலாக்கம் : த . தனசேகர் மின்னஞ்சல் : tkdhanasekar@gmail.com வெளியிடு : FreeTamilEbooks.com உரிமை: Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International  License. உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.     பொருளடக்கம் முன்னுரை 6  முன்னுரை:  11  பெர்னார்ட் ஷாவின் சீஸர் & கிளியோபாத்ரா நாடகத் துவக்கவுரை 17  அங்கம்: 1 பாகம்: 2 20  அங்கம் -1 பாகம் -3 24  அங்கம் -2 பாகம் -4 29  அங்கம் -2 பாகம் -5 36  அங்கம் -2 பாகம் -6 42  அங்கம் -2 பாகம் -7 48  அங்கம் -2 பாகம் -8 54  அங்கம் -2 பாகம் -9 60  அங்கம் -2 பாகம் -10 66  அங்கம் -2 பாகம் -11 72  அங்கம் -2 பாகம் -12 79  அங்கம் -2 பாகம் -13 84  அங்கம் -2 பாகம் -14 90  அங்கம் -2 பாகம் -15 96  அங்கம் -3 காட்சி -1 102  அங்கம் -3 காட்சி -2 107  அங்கம் -3 காட்சி -3 114  அங்கம் -3 காட்சி -4 120  அங்கம் -4 காட்சி -1 126  அங்கம் -4 காட்சி -1 பாகம் -2 134  அங்கம் -5 காட்சி -1 143  அங்கம் -5 காட்சி -2 பாகம் -1 152  அங்கம் -5 காட்சி -3 162  அங்கம் -5 கட்சி -4 169  அங்கம் -5 காட்சி -5 179  அங்கம் -5 காட்சி -6 187  அங்கம் -5 காட்சி -7 196  அங்கம் -5 காட்சி -8 205  அங்கள் -5 காட்சி -9 214  அங்கம் -5 காட்சி -10 220  அங்கம் -5 காட்சி -11 230  அங்கம் -5 காட்சி -12 239  அங்கம் -6 காட்சி -1 245  அங்கம் -6 காட்சி -2 252  அங்கம் -6 காட்சி -3 260  அங்கம் -6 காட்சி -4 269  அங்கம் -6 காட்சி -5 278  அங்கம் -7 காட்சி -1 286  அங்கம் -7 காட்சி -2 294  அங்கம் -7 காட்சி -3 300  அங்கம் -7 காட்சி -4 307  அங்கம் -7 காட்சி -5 314  அங்கம் -7 காட்சி -6 322  அங்கம் -7 – காட்சி -7 330  அங்கம் -7 காட்சி -8 334  அங்கம் -7 காட்சி -9 341  அங்கம் -7 காட்சி -10 348  அங்கம் -8 காட்சி -1 355  அங்கம் -8 காட்சி -2 366  அங்கம் -8 காட்சி -3 373  அங்கம் -8 காட்சி -4 384  அங்கம் -8 காட்சி -5 389  அங்கம் -8 காட்சி -6 395  அங்கம் -8 காட்சி -7 400  அங்கம் -8 காட்சி -8 408  அங்கம் -8 காட்சி -9 416  அங்கம் -8 காட்சி -10 423  அங்கம் -8 காட்சி -11 430    முன்னுரை   சி. ஜெயபாரதன், கனடா   வயது ஏறினும் வாடாது அவள் மேனி வழக்க மரபுகளால் குலையாதவள் எழில். வரம்பிலா விதவித வனப்பு மாறுபாடு! அவளது உடல் வனப்பை விளக்கப் போனால், எவரும் சொல்லால் வர்ணிக்க இயாலாது ! இயற்கை மிஞ்சியக் கற்பனைச் சிற்பம், வீனஸ் அணங்கினும் மேம்பட்ட சிலை !  வில்லியம் ஷேக்ஸ்பியர் [அண்டனி & கிளியோபாத்ரா]   எழிலரசி கிளியோபாத்ராவால் ரோமாபுரி அரசியல் தீரர்கள், ஜூலியஸ் சீஸர், மார்க் ஆண்டனி ஆகிய இருவரது வாழ்க்கை இடையே முறிந்து, இறுதியில் கொல்லப்பட்டு, ரோமாபுரி வரலாறே மாறிப்போனது. எகிப்த்தின் எழிலரசி கிளியோபாத்ராவின் வரலாறு பேராசை, வஞ்சகம், ஏமாற்றம், மோகம், போகம், சோகம், கொலை, மரணம் ஆகிய அனைத்தும் பின்னிய ஒரு காதல் நாடகம்! கிரேக்க மகாவீரர் அலெக்ஸாண்டர் பரம்பரையில் பிறந்த எகிப்தின் எழிலரசி அவள்! அவளது வாழ்க்கையில் குறுக்கிட்டு அவள் காதலித்து மணந்த ரோமாபுரித் தளபதி ஜூலியஸ் சீஸர், பிறகு அவரது சீடர் மார்க் அண்டனி ஆகியோரது கோர மரணத்துக்கு ஓரளவு அவளது தொடர்பே காரணமானது!  ஃபெரோவின் பரம்பரைகளில் வந்த எகிப்திய ராணிகளில் மிக்கப் புகழ் பெற்றவள் கிளியோபாத்ரா. எடுப்பான தோற்றமும், வசீகரக் கவர்ச்சியும், கூரிய ஞானமும், தேசப் பற்றும், போர் வல்லமையும், பேச்சுத் திறமையும் கொண்டவள். ஆனால் அவள் எகிப்திய மாதில்லை! மாஸபடோமியா மன்னர் வழிமுறையில் டாலமியின் வம்சத்தில் ஏழாம் டாலமியின் புதல்வியாக உதித்தவள். கி.மு. 69 ஆம் ஆண்டில் அலெக்ஸாண்டிரியாவில் கிளியோபாத்ரா பிறந்தாள். அப்போது எகிப்தின் தலைநகராக அலெக்ஸாண்டிரியா நிலவியது. கிளியோபாத்ரா என்று பலர் அவள் வம்சத்தில் பெயரைக் கொண்டிருந்தாலும், கடைசியாகப் பட்டத்தரசியாக வாழ்ந்த ஏழாவது கிளியோபாத்ராவே ஜூலியஸ் சீஸரின் காதலியாகவும், மார்க் அண்டனியைக் காதலித்த மாதாகவும் எகிப்த், ரோமானிய வரலாற்றில் முக்கியத்துவம் பெறுபவள்.  முடிவில் கிளியோபத்ரா சீஸரின் உதவியால் எகிப்தின் பட்டத்து ராணியாக மகுடம் சூடுகிறாள். மூன்று ஆண்டுகள் சீஸர் கிளியோபாத்ராவின் தேன்நிலவு நீடித்து அவளுக்கு ஓர் ஆண் மகவு பிறந்தது. குழந்தைக்கு டாலமி சீஸர் என்று பெயரிடுகிறாள். ரோமாபுரியில் கல்பூர்ணியாவை ஏற்கனவே திருமணம் செய்த சீஸருக்குப் பிள்ளை யில்லாத ஒரு குறையைக் கிளியோபாத்ரா தீர்த்தாலும், அவரது கள்ளத் தனமான தாம்பத்திய வாழ்க்கையை ரோமானியர் பலர் ஏற்று கொள்ள வில்லை! அன்னிய மாதுடன் உறவு கொண்ட சீஸர் மீது ரோமாபுரிச் செனட்டர் பலருக்கு வெறுப்பும், கசப்பும், கோபமும் உண்டானது! முடிசூடிக் கொள்ள ரோமுக்குச் சீஸர் மீண்டார். கிளியோபாத்ரா குழந்தையுடன் கோலகலமாக ரோமுக்குச் சென்று சீஸருடன் தங்கிய சில தினங்களில், செனட்டர்கள் சிலர் மறைமுகமாகச் செய்த சதியில் சீஸர் கொல்லப் பட்டார். உயிருக்குப் பயந்த கிளியோபாத்ரா உடனே சிறுவனுடன் எகிப்துக்குத் திரும்பினாள். சீஸர் கொலைக்குப் பின் ரோமில் பெரும் குழப்பம் உண்டாகிச் சதிகாரர் அனைவரும் மார்க் அண்டனியால் ஒழிக்கப் படுகிறார். மார்க் அண்டனி, அக்டேவியன், லிபிடஸ் ஆகிய மூவரது நேரடிக் கண்காணிப்பால் ரோம் சாம்ராஜியத்தில் அமைதி நிலவுகிறது. கிளியோபாத்ரா ரோமாபுரி விசாரணைக்கு மீள வேண்டும் என்ற மார்க் அண்டனியின் உத்தரவை மீறுகிறாள். பிறகு நேரடியாக அலெக்சாண்டிரியாவுக்கு வரும் அண்டனியைத் தன் கவர்ச்சியால் மயக்கித் திறமையுடன் அவனையும் தன் காதல் அடிமையாய் ஆக்குகிறாள் கிளியோபாத்ரா. ஏற்கனவே அக்டேவியான் தமக்கையை மணந்த அண்டனி, எகிப்தில் கிளியோபாத்ராவை மணந்து கொள்கிறான். அண்டனியின் காதல் தேனிலவு நீடித்து கிளியோபாத்ரா இரண்டு குழந்தைகளைப் பெறுகிறாள். சீஸருக்கு ஏற்பட்ட கதி அண்டனிக்கும் உண்டாகுகிறது. ரோமானிய செனட்டர்களின் சினத்தையும், வெறுப்பையும் மார்க் அண்டனி பெறுகிறான். அக்டேவியன் தலைமையில் ரோமானியப் படை அண்டனியுடன் போர் தொடுக்கிறது! போரிட்டு வெற்றியும் அடைகிறது. எகிப்தில் தனித்துப் போன அண்டனி தற்கொலை செய்து கொள்கிறான். அக்டேவியன் உடன்படிக்கைக்கு அடி பணியாத கிளியோபாத்ரா மகனைத் தப்ப வைத்து, நாகத்தைத் தனது மார்பின் மீது தீண்ட விட்டு முடிவில் தானும் சாகிறாள்.  இறக்கும் போது அவளுக்கு வயது 39. ஆங்கில நாடக மேதைகள் பெர்னார்ட்ஷா எழுதிய “சீஸர் & கிளியோபாத்ரா”, ஷேக்ஸ்பியர் எழுதிய, “ஜூலியஸ் சீஸர்”, “அண்டனி & கிளியோபாத்ரா” ஆகிய முப்பெரும் நாடகங்களை ஓரளவுச் சுருக்கித் தமிழில் கிளியோபாத்ரா என்னும் ஒற்றை நாடகமாக எழுத விரும்புகிறேன்.  நான் மதுரைக் கல்லூரியில் படித்த (1950-1952) ஆண்டுகளில் எனக்கு ஷேக்ஸ்பியரின் நாடகம், “ஜூலியஸ் சீஸர்” ஆங்கிலப் பாட நூலாக அமைந்தது. அப்போது அந்த நாடகத்தின் உன்னதப் படைப்பான “அண்டனியின் அரிய சொற்பொழிவைத்” [Antony’s Oration] தமிழாக்கம் செய்தேன். அந்த வேட்கை மிகுதியால் இப்போது கிளியோபாத்ராவின் முழு வரலாற்றையும் நாடகமாகத் தமிழ்கூறும் நல்லுலகுக்கு வழங்க முற்படுகிறேன்.     பெர்னாட்ஷா தன் நாடகத்தில் சீஸரை முதன்முதல் சந்திக்கும் போது, கிளியோபாத்ராவின் வயதை 17 என்று காட்டுகிறார். ஆனால் உண்மையில் அப்போது அவளது வயது 20 அல்லது 21 என்பது தெரிய வருகிறது!  மேலும் கிளியோபாத்ராவை வெறும் கவர்ச்சியை மட்டும் பயன்படுத்தித் தானும் காதலில் மயங்கி ஆடவரை வசப்படுத்தும் மங்கை யாகவும், கூரிய மதியில்லாத பெண்ணாகவும், சிறு வயதிலே கெட்ட பழக்கங்களில் ஊறிப் போன மாதாகவும் காட்டுகிறார். ஆனால் மெய்யான கிளியோபாத்ரா மிகவும் கல்வி ஞானம் உள்ளவள்; வனப்பு மிகுந்த வனிதையாக இல்லாவிட்டாலும், அவள் வசீகரம் மிக்கவள். இனிய குரலில் சுவையாகப் பேசிப் பகைவரையும் நண்பராக்கும் வல்லமை கொண்டவள். போர் ஞானம் உள்ளவள். ஏழு மொழிகள் பேசும் திறமை பெற்றவள். நான் எழுதும் நாடகத்தில் கூடியவரை மெய்யாக நிலவி வந்த கிளியோபாத்ரா, ஜூலிய சீஸர், மார்க் அண்டனி, அக்டேவியன் ஆகியோரைத்தான் காட்ட விரும்புகிறேன ஜார்ஜ் பெர்னாட் ஷா எழுதிய வரலாற்று நாடகங்களில் ஒன்றாகக் கருதப் படுவது, சீஸர் & கிளியோபாத்ரா நாடகம். இந்த நாடகத்தின் பின்பாகத் தொடர்ச்சி போல் ஷேக்ஸ்பியர் எழுதிய ஜூலியஸ் சீஸர் நாடகம் ஏறக்குறைய அமைப்பில் உள்ளதாகத் தெரிகிறது.  ஆனால் ஷேக்ஸ்பியர் (1564 – 1616) பெர்னாட் ஷாவுக்கு (1856 - 1950) முன்னால் பிறந்தவர் ஆதலால் ஜூலியஸ் சீஸர், ஆண்டனி & கிளியோபாத்ரா நாடகங்கள், பெர்னாட் ஷா எழுதிய சீஸர் & கிளியோபாத்ரா நாடகத்துக்கு முன்னதாகவே வடிக்கப்பட்டவை. உலக உன்னத நாடக இலக்கியங்களாக கருதப்படும் ஷேக்ஸ்பியரின் “ஜூலியஸ் சீஸர்”, “ஆண்டனி & கிளியோபாத்ரா”, பெர்னாட் ஷாவின் “சீஸர் & கிளியோபாத்ரா” ஆகியவை இப்போது “எழிலரசி கிளியோபாத்ரா என்னும் தமிழ் நாடக இலக்கிய நூலாக வெளியாகிறது. ஷேக்ஸ்பியர் எழுதிய சோக நாடங்களில் மிகச் சிறப்பானது “ஜூலியஸ் சீஸர்”.  அடுத்து ஷேக்ஸ்பியர் எழுதிய சோக நாடகம் “ஆண்டனி & கிளியோபாத்ரா” ஜூலியஸ் சீஸர் நாடகத்தின் தொடர்ச்சியாக எழுதப்பட்டுள்ளது. பெர்னாட் ஷா நாடகங்கள் பொதுவாகப்  படிப்பதற்கும், நடிப்பதற்கும், திரைப்பட எடுப்புக்கும் எழுதப் பட்டவை.  சீஸர் & கிளியோபாத்ரா நாடகக் காட்சிகள் 2006 – 2007 ஆண்டுகளில் தொடர்ந்து திண்ணை வலையிதழில் வெளியிடப் பட்டன.  முதற்கண் திண்ணை வலை ஆசிரியர்கள் ராஜாராம், துக்காராம் ஆகியோருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  இந்த நாடகத்தில் இடையிடையே அரிய வாய்மொழிகள்  வருகின்றன.  அவற்றைத் தகுந்த படத்துடன் இணைத்த பெருமை பதிப்பாசிரியர் வையவனைச் சாரும்.   கிளியோபாத்ரா வரலாற்று நாடகத்தைச் சிறப்பாக வெளியிட்ட தாரிணி பதிப்பக அதிபர் திரு. வையவன் அவர்களுக்கு அடுத்து என் நன்றி உரித்தாகுக.   சி. ஜெயபாரதன் கிங்கார்டின், அண்டாரியோ கனடா (பிப்ரவரி 21, 2017)   எழிலரசி  கிளியோபாத்ரா [பேரங்க நாடகம்] மூலம்: ஷேக்ஸ்பியர் & பெர்னாட்ஷா தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா     வயது ஏறினும் வாடாது அவள் மேனி வழக்க மரபுகளால் குலையாதவள் வாலிபம் வரையிலா விதவித  வனப்பு  மாறுபாடு ......! படகில் அவள் அமர்ந்துள்ளது பொன்மய ஆசனம்! கடல்நீரும் பொன் மயமாகும் அதன் ஒளியால். படகின் மேற்தளப் பரப்பு தங்கத் தகடு மேடை மிதப்பிகள் நிறம் பழுப்பு! பரவும் நறுமணத் தெளிப்பு காற்றுக்கும் அதனால் காதல் நோய் பீடிக்கும்! படகுத் துடுப்புகள் யாவினும் வெள்ளி மினுக்கும். ஊது குழல் முரசு தாளத்துக் கேற்ப உந்தி, வேகமாய்த் தள்ளும் காதல் துடிப்பு போல் ! அவளது மேனி வனப்பை விளக்கப் போனால், எவரும் சொல்லால் வர்ணிக்க  இயாலாது !    வில்லியம் ஷேக்ஸ்பியர் [அண்டனி & கிளியோபாத்ரா]     முன்னுரை:    கிளியோபாத்ராவின் வரலாறு பேராசை, வஞ்சகம், ஏமாற்றம், மோகம், போகம், சோகம், கொலை, மரணம் ஆகிய அனைத்தும் பின்னிய ஒரு காதல் நாடகம்! கிரேக்க மகாவீரர் அலெக்ஸாண்டர் பரம்பரையில் பிறந்த எகிப்தின் எழிலரசி அவள்! அவளது வாழ்க்கையில் குறுக்கிட்டு அவள் காதலித்து மணந்த ரோமாபுரித் தளபதி ஜூலியஸ் சீஸர், பிறகு அவரது சீடர் மார்க் அண்டனி ஆகியோரது கோர மரணத்துக்கு ஓரளவு அவளது தொடர்பே காரணமானது!   ஃபெரோவின் பரம்பரைகளில் வந்த எகிப்திய ராணிகளில் மிக்கப் புகழ் பெற்றவள் கிளியோபாத்ரா. எடுப்பான தோற்றமும், வசீகரக் கவர்ச்சியும், கூரிய ஞானமும், தேசப் பற்றும், போர் வல்லமையும், பேச்சுத் திறமையும் கொண்டவள். ஆனால் அவள் எகிப்திய மாதில்லை! மாஸபடோமியா மன்னர் வழிமுறையில் டாலமியின் வம்சத்தில் ஏழாம் டாலமியின் புதல்வியாக உதித்தவள். கி.மு. 69 ஆம் ஆண்டில் அலெக்ஸாண்டிரியாவில் கிளியோபாத்ரா பிறந்தாள். அப்போது எகிப்தின் தலைநகராக அலெக்ஸாண்டிரியா நிலவியது. கிளியோபாத்ரா என்று பலர் அவள் வம்சத்தில் பெயரைக் கொண்டிருந்தாலும், கடைசியாகப் பட்டத்தரசியாக வாழ்ந்த ஏழாவது கிளியோபாத்ராவே ஜூலியஸ் சீஸரின் காதலியாகவும், மார்க் அண்டனியைக் காதலித்த மாதாகவும் எகிப்த், ரோமானிய வரலாற்றில் முக்கியத்துவம் பெறுபவள். []   சீஸர் & கிளியோபாத்ரா   தந்தை ஏழாம் டாலமி நாடு கடத்தப் பட்ட சமயத்தில் கிளியோபாத்ராவின் மூத்த தமக்கை எகிப்தின் ராணியாகப் பட்டம் சூடினாள். பிறகு அவள் எப்படியோ கொலை செய்யப் பட்டாள். மீட்சியாகி வந்த தந்தை நான்கு ஆண்டுகள் ஆண்டபின் மரணம் எய்தினார். அதன் பிறகு ஏழாம் கிளியோபாத்ராவும் அவளது இளைய தமையன் டாலமியும் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து ஆண்டார்கள். அப்போது கிளியோபாத்ராவுக்கு 17 வயது. பண்டைக் கால எகிப்திய வழக்கப்படிக் கிளியோபாத்ரா சட்ட விதிகள் ஏற்காதவாறு 12 வயது தம்பியைத் திருமணம் புரிந்து, அவளே தன் விருப்பப்படி நாட்டை ஆண்டு வந்தாள். மூன்றாண்டுகள் கழித்துக் கணவனும் தம்பியுமான 15 வயது டாலமி கிளியோபாத்ராவை நாடு கடத்தித் தானே அரசாண்டான். சிரியாவுக்கு ஓடிய கிளியோபாத்ரா, அங்கிருந்து கொண்டு தமையனைப் பலிவாங்கும் சதிகளில் ஈடுபட்டாள். அப்போது ரோமானியத் தளபதி பாம்ப்பியைத் தாக்க அலெக்ஸாண்டிரியாவுக்கு வந்த ஜூலியஸ் சீஸரைக் காணும் வாய்ப்பை எதிர்பார்த்தாள், கிளியோபாத்ரா. ரோமாபுரித் தளபதி ஜூலியஸ் சீஸருக்கும், அவரது ரோமானியப் பழைய நண்பன் பாம்ப்பேயிக்கும் நடந்த போரில், டாலமி சீஸரின் பக்கமிருந்து பாம்ப்பேயின் படுகொலைக்குக் காரணமானான். பாம்ப்பே டாலமி உதவியால் கொல்லப் பட்டதை விரும்பாத சீஸர் கோபப்பட்டு முடிவில் டாலமியைத் தண்டிக்க முற்படுகிறார்! கிளியோபாத்ராவும், டாலமியும் தன் முன் வரவேண்டும் என்று சீஸர் ஆணையிட்டார். சிரியாவிலிருந்து வெளியேறி மறைமுகமாகச் சீஸரைத் தனியாகச் சந்தித்தாள் கிளியோபாத்ரா. சீஸரைத் தன் மேனி அழகால் மயக்கி, எகிப்துக்குத் தானே அரசியாக வேண்டு மென்றும், சகோதரன் டாலமி அகற்றப்பட வேண்டு மென்றும் வற்புறுத்திப் பலிவாங்கும் திட்டத்தில் வெற்றியும் பெறுகிறாள். சீஸர் டாலமி செய்த சில தீவிரக் குற்றங்களுக்குக் கொலைத் தண்டனை விதிக்கிறார். முடிவில் கிளியோபத்ரா சீஸரின் உதவியால் எகிப்தின் பட்டத்து ராணியாக மகுடம் சூடுகிறாள். மூன்று ஆண்டுகள் சீஸர் கிளியோபாத்ராவின் தேன்நிலவு நீடித்து அவளுக்கு ஓர் ஆண் மகவு பிறந்தது. குழந்தைக்கு டாலமி சீஸர் என்று பெயரிடுகிறாள். ரோமாபுரியில் கல்பூர்ணியாவை ஏற்கனவே திருமணம் செய்த சீஸருக்குப் பிள்ளை யில்லாத ஒரு குறையைக் கிளியோபாத்ரா தீர்த்தாலும், அவரது கள்ளத் தனமான தாம்பத்திய வாழ்க்கையை ரோமானியர் பலர் ஏற்று கொள்ள வில்லை! அன்னிய மாதுடன் உறவு கொண்ட சீஸர் மீது ரோமாபுரிச் செனட்டர் பலருக்கு வெறுப்பும், கசப்பும், கோபமும் உண்டானது! முடிசூடிக் கொள்ள ரோமுக்குச் சீஸர் மீண்டார். கிளியோபாத்ரா குழந்தையுடன் கோலகலமாக ரோமுக்குச் சென்று சீஸருடன் தங்கிய சில தினங்களில், செனட்டர்கள் சிலர் மறைமுகமாகச் செய்த சதியில் சீஸர் கொல்லப் பட்டார். உயிருக்குப் பயந்த கிளியோபாத்ரா உடனே சிறுவனுடன் எகிப்துக்குத் திரும்பினாள்.   []   சீஸர், கிளியோபாத்ரா, அண்டனி சீஸர் கொலைக்குப் பின் ரோமில் பெரும் குழப்பம் உண்டாகிச் சதிகாரர் அனைவரும் மார்க் அண்டனியால் ஒழிக்கப் படுகிறார். மார்க் அண்டனி, அக்டேவியன், லிபிடஸ் ஆகிய மூவரது நேரடிக் கண்காணிப்பால் ரோம் சாம்ராஜியத்தில் அமைதி நிலவுகிறது. கிளியோபாத்ரா ரோமாபுரி விசாரணைக்கு மீள வேண்டும் என்ற மார்க் அண்டனியின் உத்தரவை மீறுகிறாள். பிறகு நேரடியாக அலெக்சாண்டிரியாவுக்கு வரும் அண்டனியைத் தன் கவர்ச்சியால் மயக்கித் திறமையுடன் அவனையும் தன் காதல் அடிமையாய் ஆக்குகிறாள் கிளியோபாத்ரா. ஏற்கனவே அக்டேவியான் தமக்கையை மணந்த அண்டனி, எகிப்தில் கிளியோபாத்ராவை மணந்து கொள்கிறான். அண்டனியின் காதல் தேனிலவு நீடித்து கிளியோபாத்ரா இரண்டு குழந்தைகளைப் பெறுகிறாள். சீஸருக்கு ஏற்பட்ட கதி அண்டனிக்கும் உண்டாகுகிறது. ரோமானிய செனட்டர்களின் சினத்தையும், வெறுப்பையும் மார்க் அண்டனி பெறுகிறான். அக்டேவியன் தலைமையில் ரோமானியப் படை அண்டனியுடன் போர் தொடுக்கிறது! போரிட்டு வெற்றியும் அடைகிறது. எகிப்தில் தனித்துப் போன அண்டனி தற்கொலை செய்து கொள்கிறான். அக்டேவியன் உடன்படிக்கைக்கு அடி பணியாத கிளியோபாத்ரா மகனைத் தப்ப வைத்து, நாகத்தைத் தனது மார்பின் மீது தீண்ட விட்டு முடிவில் தானும் சாகிறாள்.  . இறக்கும் போது அவளுக்கு வயது 39.   கிளியோபாத்ரா நாடகப் படைப்பு:    []   ஆங்கில நாடக மேதைகள் பெர்னார்ட்ஷா எழுதிய “சீஸர் & கிளியோபாத்ரா”, ஷேக்ஸ்பியர் எழுதிய, “ஜூலியஸ் சீஸர்”, “அண்டனி & கிளியோபாத்ரா” ஆகிய முப்பெரும் நாடகங்களை ஓரளவுச் சுருக்கித் தமிழில் கிளியோபாத்ரா என்னும் ஒற்றை நாடகமாக எழுத விரும்புகிறேன்.  நான் மதுரைக் கல்லூரியில் படித்த (1950-1952) ஆண்டுகளில் எனக்கு ஷேக்ஸ்பியரின் நாடகம், “ஜூலியஸ் சீஸர்” ஆங்கிலப் பாட நூலாக அமைந்தது. அப்போது அந்த நாடகத்தின் உன்னதப் படைப்பான “அண்டனியின் அரிய சொற்பொழிவைத்” [Antony’s Oration] தமிழாக்கம் செய்தேன். அந்த வேட்கை மிகுதியால் இப்போது கிளியோபாத்ராவின் முழு வரலாற்றை நாடகமாகத் தமிழ்கூறும் நல்லுலகுக்கு வழங்க முற்படுகிறேன்.   பெர்னார்ட்ஷா தனது நாடகம் “சீஸர் & கிளியோபாத்ரா” ஆரம்பத்தில் அவரிருவரும் முதன்முதல் சந்திக்கும் தளத்தையும், நிகழ்ச்சியையும் மாற்றி யிருக்கிறார். மனிதத் தலைச் சிங்கத்தின் [Sphinx] அருகில் ஒருவருக்கொருவர் யாரென்று தெரியாத போது முதன்முதல் சந்திப்பதாகவும், அப்போது சீஸர் தன்னை யாரென்று சொல்லாமல் நழுவுவதாகவும் காட்டியுள்ளார். மெய்யாக வரலாற்றில் நடந்தது முற்றிலும் வேறானது. மேலும் பெர்னாட்ஷா தன் நாடகத்தில் சீஸரைச் சந்திக்கும் போது, கிளியோபாத்ராவின் வயதை 17 என்று காட்டுகிறார். ஆனால் உண்மையில் அப்போது அவளது வயது 20 அல்லது 21 என்பது தெரிய வருகிறது!  மேலும் கிளியோபாத்ராவை வெறும் கவர்ச்சியை மட்டும் பயன்படுத்தித் தானும் காதலில் மயங்கி ஆடவரை வசப்படுத்தும் மங்கை யாகவும், கூரிய மதியில்லாத பெண்ணாகவும், சிறு வயதிலே கெட்ட பழக்கங்களில் ஊறிப் போன மாதாகவும் காட்டுகிறார். ஆனால் மெய்யான கிளியோபாத்ரா மிகவும் கல்வி ஞானம் உள்ளவள்; வனப்பு மிகுந்த வனிதையாக இல்லாவிட்டாலும், அவள் வசீகரம் மிக்கவள். இனிய குரலில் சுவையாகப் பேசிப் பகைவரையும் நண்பராக்கும் வல்லமை கொண்டவள். போர் ஞானம் உள்ளவள். ஏழு மொழிகள் பேசும் திறமை பெற்றவள். நான் எழுதும் நாடகத்தில் கூடியவரை மெய்யாக நிலவி வந்த கிளியோபாத்ரா, ஜூலிய சீஸர், மார்க் அண்டனி, அக்டேவியன் ஆகியோரைத்தான் காட்ட விரும்புகிறேன்.   []     வயது ஏறினும் வாடாது அவள் மேனி வழக்க மரபுகளால் குலையாதவள் எழில். வரம்பிலா விதவித வனப்பு மாறுபாடு!  அவளது உடல் வனப்பை விளக்கப் போனால், எவரும் சொல்லால் வர்ணிக்க இயாலாது ! தோரணம் தொங்கும் அலங்காரப் பந்தலில் ஆரணங்கு படுத்திருந்தாள், பொன்னிற மேனி ! இயற்கை மிஞ்சியக் கற்பனைச் சிற்பம் அவள், வீனஸ் அணங்கினும் மேம்பட்ட சிலையவள்!   வில்லியம் ஷேக்ஸ்பியர் [அண்டனி & கிளியோபாத்ரா]   பெர்னார்ட் ஷாவின் சீஸர் & கிளியோபாத்ரா நாடகத் துவக்கவுரை   [மெம்ஃபிஸில் எகிப்தின் தேவாதிபதி கழுகுத் தலையுடைய “ரா” தெய்வத்தின் ஆலயம் [Chief Egyptian Deity “Ra”] இருளடைந்து போயுள்ளது. அங்கிருந்து ஓர் அசரீரிக் குரல் எழுகிறது] “அமைதி! அமைதி! கேளுங்கள் நான் கூறப் போவதை! எகிப்த் நாடு ரோமாபுரிச் சாம்ராஜியத்தின் கீழிருந்தது. நான்தான் “ரா” தெய்வ அதிபதி. எகிப்த் நாட்டில் ஃபெரோ வேந்தர்களின் உன்னதப் பராக்கிரமக் கடவுளாக இருந்தவன், ஒரு காலத்தில்! நான் வணங்கப்பட்ட போது ரோம் நகரம் பண்டைய ரோமாபுரி, புதிய ரோமாபுரி என்று துண்டு பட்டிருந்தது! இரண்டிற்கும் இடையே ரோமானிய மாந்தர் நசுக்கப்பட்டுக் குழப்பத்தில் திண்டாடினர்! பண்டைய ரோமாபுரி ஏழ்மையானது, பேராசை பிடித்தது, கொடூரமானது! தீய எண்ணங்கள் மிக்கது! பாழடைந்த அதன் மனது குறுகியது! சிறுமையும், வறுமையும், இல்லாமையும் நிரம்பியது! பிச்சைக்காரன் குதிரையில் ஏறி அமர்ந்தைப் போலிருந்தது! குதிரையில் உட்கார்ந்த பிச்சைக்காரன் நேராக பிசாசுகளை நோக்கிச் செல்வான், என்று ஒரு பழமொழி சொல்கிறது! பண்டைய ரோமாபுரி வெறுங்கையில் வாளேந்திச் செல்வம் திரட்டும் வழியும், புகழடையும் முறையும் எதுவென்றால், ஏழ்மை நாடுகள் மீது படை யெடுத்துத் திருடிக் கொள்ளை அடிப்பது, மெலிந்தோரை அடிமையாக்கி மிதிப்பது! ரோமானியர் ஏழை மக்களின் நிலங்களைப் பறித்து ரோமாபுரியோடு சேர்த்துக் கொண்டே வந்தார். எகிப்தில் அவ்விதம் ரோமா புரிக்கு அடிமை ஆனபோது, நான் வேதனையில் குமுறிச் சிரித்தேன். காரணம், ரோமானியர் சாம்ராஜியம் பெருகிக் கொண்டே வருகையில், சிறுத்துப் போன அவரது நெஞ்சங்களின் பரிமாணம் மாறாமல் அப்படியே இருந்தது! அடிக்க அடிக்கத் தலை குனியும் எகிப்துக்கு ஆதரவாக ஜூலியஸ் சீஸர் விஜயம் செய்தார். ரோமானிய மாந்தர் இரண்டுபட்ட ரோமுக்கு இடையே முரண்டு செய்த போது, வல்லமை கொண்ட போர்த் தளபதி பாம்ப்பி என்பவர் ரோமாபுரியில் மேலோங்கி வந்தார். பாம்ப்பி பண்டைய ரோமைக் கட்டுப்படுத்தி ஆண்டுவந்த தளபதி! படையாட்கள் யாவரும் நோக்கிப் போவது மரணத்தை! படைத் தீரர்களே சமூகத்தில் மேலோங்கி வரமுடியும்! பிறகு அதே சமயத்தில் போர்த் தளப்தி ஜூலியஸ் சீஸர் மேலோங்கி வந்தார். ஆனால் அவர் புதிய ரோமாபுரியின் தீரர்! கடவுளாகப் போற்றப்படும் ஃபெரோ மன்னரின் எகிப்தியப் பரம்பரைகள் புதிய ரோமையும், புதிய ரோமா புரியின் வீரர் ஜூலியஸ் சீஸரையும் ஆதரித்து வரவேற்றனர்! பாம்ப்பேயின் நண்பரான ஜூலியஸ் சீஸர் எகிப்திய மன்னர் சார்பில் பண்டைய ரோமின் குறுகிய கட்டுப்பாடுக்கு அப்பால் புதிய வழியில் சென்றார். சீஸர் ஒரு பெரும் பேச்சாளர், சிறந்த அரசியல்வாதி! அண்டை நாடுகளைக் கைப்பற்றிப் பொன்னும், பொருளும் ஏராளமாகச் சேமித்து ரோமில் கொட்டினார்! மேலும் நாடுகளைக் கைப்பற்றிப் போர் வெற்றிகளை அடுத்தடுத்துச் சீஸர் கொண்டு வரவேண்டும் என்று ரோமானியர் எதிர்பார்த்தனர். சீஸர் அந்த வாணிபத்தில் இறங்கி வெற்றிமேல் வெற்றி பெற்றுப் போரில் பலரைக் கொன்றார். கிரேக்க வீரர் மகாஅலெக்சாண்டரைப் போல், வெற்றிப்படைத் தீரனாகப் பேரும் புகழும் பெற்றுத் தன் பெயரை நிலைநாட்டினார்.  ஆனால் ரோமானியர் சட்டம், கடமை பற்றி எப்போதும் பேசிய பாம்ப்பியின் மீது சலிப்புற்றனர். “பண்டைய ரோமின் கடூரச் சட்டங்களை முறிக்க வேண்டும். அப்போது தான் நான் புதிய ரோம சம்ராஜியத்தை ஆள முடியும்! அவ்விதம் நேராவிட்டால் கடவுள் எனக்களித்த நாடாளும் கொடைப்பரிசு பலன் தராது அழிந்து விடும்,” என்று சீஸர் கலங்கினார். நாளடைவில் நண்பர்கள் பகைவர் ஆயினர்! பாம்ப்பி மறுத்துக் கூறினார்: “சட்டந்தான் எல்லாவற்றும் மேலானது. அதை நீ முறித்தால், நீ உயிரிழக்க வேண்டிய திருக்கும்.” என்று சீஸருக்கு எச்சரிக்கை செய்தார்! சீஸர் நிமிர்ந்து சொன்னார், “சட்டத்தை முறிக்கிறேன் நான்! யார் என்னைக் கொல்ல வருகிறார் என்று பார்க்கிறேன்,” என்று சவால் விட்டு சட்டத்தை முறித்தார். []   பழைய ரோமின் விதிகளைப் பாதுகாக்கப் பாம்ப்பி பெரும் படை திரட்டிச் சீஸர் மீது போர் தொடுத்தார். சீஸர் ஏட்டிரியாடிக் கடலைத் தாண்டி நழுவி ஓடி விட்டார்! சீஸரைக் கவிழ்த்து, உலகத்தின் முன்பு அவர் முகத்தில் கரியைப் பூச பழைய ரோம் புறப்பட்டது! அதே சமயத்தில் சட்டத்தைப் பின்பற்றும், உன்னத உள்ளம் படைத்த பாம்ப்பியை உயர்த்தினர், பழைய ரோமானியர். பாம்ப்பி சீஸரை விரட்டிக் கொண்டு எகிப்துக்குச் சென்றார். சீஸர் பாம்ப்பியை எதிர்த்து எகிப்தில் போரிட்டார். கடைசியில் இரண்டு ரோமனியப் படைகளும் மோதின! பாருங்கள் பாம்ப்பியின் ரோம் ஒருபுறம்! சீஸரின் ரோம் எதிர்ப்புறம்! இரண்டில் எப்போர் வீரன் மிக்க வலிமை கொண்டவனோ, எகிப்து அவனோடு சேர்ந்து கொண்டு நலிந்தவனை நசுக்க முற்பட்டது. போரின் முடிவில் பாம்ப்பியின் பேராற்றல் நொறுங்கிச் சிதைந்தது. பாம்ப்பியை வஞ்சகமாக வரவேற்ற ரோமானியத் தளபதி லூசியஸ் செப்டிமியஸ் அவனைத் தோற்கடித்தான். முடிவில் பாம்ப்பி கொல்லப் படுகிறான். எகிப்து வெற்றி வீரர் சீஸரை வரவேற்று உபசரித்தது! ரோமானியரின் உட்புறச் சண்டைகளைக் கேட்டு சலிப்படைந்தீரா? பாருங்கள், இதோ வருகிறாள், கிளியோபாத்ரா! அந்த ஒழுக்கமற்ற நங்கையின் கதையைக் கேட்க வேண்டுமா? வசீகர மங்கை கிளியோபாத்ராவின் வரலாறைக் கேட்க ஆசைப் படுகிறீரா? அவள் வாலிபம் பெறாத ஓர் வனப்பு மங்கை! ஆயா ஒருத்தி ஆட்டிப் படைக்கும் கைப்பொம்மை அவள்! எமது எகிப்து நாட்டில் சீஸர் இப்போது கால்வைத்திருக்கிறார். இனிமேல் வரும் கதையை நான் சொல்ல மாட்டேன். நீங்களே அதைக் காணப் போகிறீர்! அமைதியாக அமர்ந்து நாடகத்தைப் பாருங்கள். வருகிறேன் நான்! தயவு செய்து எனக்குக் கைதட்டாதீர்!   []     அங்கம்: 1 பாகம்: 2 நாடகப் பாத்திரங்கள்:   ஜூலியஸ் சீஸர்: ரோமானியப் போர்த் தளபதி [52 வயது] கிளியோபாத்ரா: எகிப்தின் பட்டத்தரசி [20 வயது] டாலமி XIV: கிளியோபாத்ராவின் தனயன் (கணவன்), எகிப்தின் மன்னன் [15 வயது] ·பிதாதீதா: கியோபாத்ராவின் ஆயா [45 வயது] போதினஸ்: டாலமியின் பாதுகாப்பாளன் [40 வயது] தியோடோடஸ்: டாலமியின் ஆசிரியர் [50 வயது] அக்கில்லாஸ்: டாலமியின் போர்த் தளபதி [35 வயது] பிரிட்டானஸ்: சீசரின் அரசாங்கச் செயலாளர் [40 வயது] ரூஃபியோ: சீஸரின் லெஃப்டினன்ட் [40 வயது] லூசியஸ் செப்டிமியஸ்: ரோமானிய இராணுவ அதிகாரி [50 வயது] அபெல்லோடோரஸ்:  ஒரு ஸிசிலியன்   பெல்ஸானர்: கிளியோபாத்ராவின் காவலர் காப்டன் [35 வயது] பெல் அஃப்பிரிஸ்: மெம்ஃபிஸ் “ரா” தேவாலயத்தின் மதாதிபதி. ரோமானியப் படையாளிகள். கிளியோபாத்ராவின் அடிமைச் சேடிகள். எகிப்தின் படையாளிகள்     நாடகக் காலம், நேரம், இடம்: கி.மு. 48. எகிப்தின் நீள நைல் நதிக்கருகில் உள்ள பாலைவனம். ஒளிமிக்க பௌர்ணமி முழுநிலவு பொங்கி எழுகிறது. நீல நிற வானில் காளான்கள் முளைப்பது போல் விண்மீன்கள் விழித்தெழுகின்றன. பிரமிட் பின்னால் நிற்க, முன்னால் பிரம்மாண்டமான மனிதத் தலைச் சிங்கம் படுத்திருக்கிறது! நாடகப் பாத்திரங்கள்: ஜூலியஸ் சீஸர், அவரது லெஃப்டினன்ட் ரூஃபியோ, ரோமானியக் காவலர் சிலர், கிளியோபாத்ராவின் காப்டன் பெல்ஸானர், உதவிக் காப்டன், எகிப்திய காவலர் சிலர் சிங்கச் சிற்பத்தின் அருகே நடமாடி வருகிறார்கள். திடகாத்திரமும், உடல் உறுதியும் படைத்த பெல்ஸானர் தூரத்தில் வரும் ரோமானியப் படைவீரர் கூட்டத்தைக் கண்டு வியப்புற்று நிற்கிறான். பெல்ஸானர்: அதோ ரோனியப் படையினர்! யாரது ரோமானியப் படைகள் முன்னே பீடு நடையிட்டு வருவது? எங்கோ பார்த்த முகம் போல் தெரிகிறது. யாராக இருக்க முடியும்? போருடை அணியாத வயதான மனிதராகத் தெரிகிறது! அடே அப்பா! என்ன உயரம்? என்ன கம்பீரமான தோற்றம்? பின்னால் வருவர் யாரென எனக்குத் தெரியும். ராணுவ உடையில் இருப்பவர் ரூஃபியோ. ஜூலியஸ் சீஸரின் ரோமானிய லெஃப்டினென்ட்! ரூஃபியோவுக்கு முன்னால் சிங்கம் போல் நிமிர்ந்து வருபவர் யார்? உதவிக் காப்டன்: காப்டன்! பார்த்தால் ரோமானியத் தளபதி ஜூலியஸ் சீஸர் போல் தெரிகிறது. ஆமாம், அவருக்குப் பின்னால் வருபவர் நிச்சயம், லெஃப்டினன்ட் ரூஃபியோதான். ஆனால் சீஸர் எதற்காக போருடை யின்றி, மாறு வேடத்தில் வருவது போல் வர வேண்டும்? … அதோ சீஸர் சிங்கச் சிற்பத்தின் முன்பாக நிற்கிறார். மனிதச் சிங்கத்தை உற்று உற்றுப் பார்க்கிறார் சீஸர்! அதன் கம்பீரத் தோற்றத்தைக் கண்டு பிரமித்து  நிற்கிறேன் []     ஜூலியஸ் சீஸர்: [பிரம்மாண்டமாக வீற்றிருக்கும் மனிதச் சிங்கச் சிற்பத்தை (Sphinx) நோக்கி] மனிதச் சிங்கமே! கால வெள்ளம் அடித்துச் செல்லாத ஸ்ஃபிங்ஸ் சிற்பமே! பாலை வனத்தில் மண்புயல் இழுத்துச் செல்லாத மகத்தான படைப்புச் சிற்பமே! வெற்றி மமதையுடன் நீ வீற்றிருக்கிறாய்! உனக்கு ஜூலியஸ் சீஸர் வணக்கம் செய்கிறார்! ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக எகிப்தின் பாலைவனக் காவலனாக நிமிர்ந்து கண்ணிமைக்காது படுத்திருக்கிறாய்! முதிய உன் வயதுக்கும், பெருத்த உன் வடிவுக்கும் நான் தலை குனிந்து வணங்குகிறேன். பல நாடுகளைக் கைப்பற்றி நான் இப்போது உன் முன் நிற்கிறேன். உன் நாட்டை எங்கள் ரோமாபுரி அடிமைப் படுத்தினாலும், உன் முன் நான் தவழ்ந்து வரும் ஒரு சிறுவனே! பிரமிக்கத் தக்க பிரமிட்களைக் கட்டி ஃபெரோ மன்னர் உன்னைப் பாலைவனத்தில் உருவாக்க எத்தனை ஆண்டுகள் எடுத்தனரோ? எத்தனை ஆயிரம் பணியாட்கள் உன்னையும், உன் பின்னால் நிற்கும் பிரமிடையும் எழுப்பினாரோ? எத்தனை பேர் உங்களைப் படைக்கும் போது செத்தனரோ? உன்னை விட வயதில் நான் சின்னவன் ஆயினும், இந்தப் பாலை வனத்தில் உனக்கு நிகரானவன் நான்! சமமான வல்லமை படைத்தவன் நான்! நீ படுத்தே கிடக்கிறாய்! போர் தொடுத்தே நான் வாழ்கிறேன்! பொறுமையாக அமர்ந்து வேடிக்கை பார்க்கிறாய் நீ! போராடிக் களைத்து ஓய்வெடுக்க வந்துள்ளேன் நானிங்கு! மகத்தான மனிதச் சிங்கமே! நீயும் நானும் ஒரே குறிக்கோள் உடையவர்! உன்னைப் புரிந்து கொள்வது எப்படிச் சிரமமானதோ, அப்படிக் கடினமானது என்னை அறிந்து கொள்வதும்! சிறுவனாக உள்ள போது நான் உன்னைப் பற்றி அறிவேன்! உன் நிழலில் எனது பராக்கிரமும் வல்லமையும் வளர வேண்டும் என்று சிறு வயதில் கனவு கண்டதுண்டு! இன்று அக்கனவு மெய்யானது! உங்கள் எகிப்து நாட்டுக்கும் நான் ஓர் அதிபதி! ரோம் பைத்தியகாரின் விளையாட்டுத் தளம்! ஆனால் எகிப்து நாடு பொன்னும், பொருளும் குவிந்த நாடு! ரோம் உங்களது நாட்டால் செல்வ நாடாகச் செழித்திருக்கிறது! ரோம சாம்ராஜியத்தைத் தாங்கி நிற்கும் பிரதான தூண்களில் எகிப்தும் ஒன்று! உன் மகத்துவம், உன்னதம் வாழ்க! உனது நாட்டுக்கு இரண்டு மன்னர்! ஆண் மன்னர் டாலமி! பெண் மன்னர் கிளியோபாத்ரா! அவர்களிருவரும் ஒருவர் முகம் ஒருவர் பாராமல், ஒருவரை ஒருவர் ஒழித்துக் கட்ட விழிப்பாக உள்ளார்! யார் தலை விழப் போகிற தென்று தெரிய வில்லை! அவரது சண்டையை நிறுத்த நான் வந்திருக்கிறேன். மன்னர் டாலமிக்கு 12 வயதாமே! அந்த பாலகன் இந்த நாட்டு வேந்தனா? விளையாட்டுப் பிள்ளை எப்படி வேந்தனாக ஆசனத்தில் அமர்ந்திருக்கிறான்? ஆமாம் கிளியோபாத்ராக்கு 20 வயதாமே! கவர்ச்சி நங்கையை நான் சந்திக்க வேண்டும். எங்கே ஓடிவிட்டாள் உங்கள் ராணி?   +++++++++++++++++ []     அங்கம் -1 பாகம் -3 அவளது கண்கள் தீவிர சக்தி வாய்ந்தவை! அணங்கின் வனப்பிற்கும் அப்பாற் பட்டவை! வான்வெளி நிலவையும் வசீகரம் செய்பவை! வாக்கு வன்மையில் நெகிழ வைப்பவள்!    ஜான் டிரைடென் [John Dryden, Drama: All for Love]   “வாழ்க்கையில் நடந்த தொடர் நிகழ்ச்சிகள் யாவும் தானாக நேர்ந்த விளைவுகள் அல்ல! அவை ஒவ்வொன்றும் உள்ளத் தூண்டலின் தேவையால்தான் ஏற்பட்டது!” ஹன்னா ஸெனிஷ், யூதப் பெண் கவிஞர் [Hanna Senesh (1921-1944)]   நாடகப் பாத்திரங்கள்: ஜூலியஸ் சீஸர்: ரோமானியப் போர்த் தளபதி [52 வயது] கிளியோபாத்ரா: எகிப்தின் பட்டத்தரசி [20 வயது] டாலமி XIV: கிளியோபாத்ராவின் தனயன் (கணவன்), எகிப்தின் மன்னன் [15 வயது] ·பிதாதீதா: கியோபாத்ராவின் ஆயா [45 வயது] போதினஸ்: டாலமியின் பாதுகாப்பாளன் [40 வயது] தியோடோடஸ்: டாலமியின் ஆசிரியர் [50 வயது] அக்கில்லாஸ்: டாலமியின் போர்த் தளபதி [35 வயது] பிரிட்டானஸ்: சீசரின் அரசாங்கச் செயலாளர் [40 வயது] ரூஃபியோ: சீஸரின் லெ·ப்டினன்ட் [40 வயது] லூசியஸ் செப்டிமியஸ்: ரோமானிய இராணுவ அதிகாரி [50 வயது] அபெல்லோடோரஸ்: ஸிசிலியன் மற்றும்: பெல்ஸானர்: கிளியோபாத்ராவின் காவலர் காப்டன் [35 வயது] பெல் அ·ப்பிரிஸ்: மெம்·பிஸ் “ரா” தேவாலயத்தின் மதாதிபதி. ரோமானியப் படையாளிகள். கிளியோபாத்ராவின் அடிமைச் சேடிகள். எகிப்தின் படையாளிகள் காலம், நேரம், இடம்: கி.மு. 48. எகிப்தின் நீள நைல் நதிக்கருகில் உள்ள பாலைவனம். ஒளிமிக்க பௌர்ணமி முழுநிலவு பொங்கி எழுகிறது. நீல நிற வானில் காளான்கள் முளைப்பது போல் விண்மீன்கள் விழித்தெழுகின்றன. பிரமிட் பின்னால் நிற்க, முன்னால் பிரம்மாண்டமான மனிதத் தலைச் சிங்கம் படுத்திருக்கிறது! நாடகப் பாத்திரங்கள்: ஜூலியஸ் சீஸர், அவரது லெஃப்டினன்ட் ரூஃபியோ, ரோமானியக் காவலர் சிலர், கிளியோபாத்ராவின் காப்டன் பெல்ஸானர், உதவிக் காப்டன், எகிப்திய காவலர் சிலர் சிங்கச் சிற்பத்தின் அருகே நடமாடி வருகிறார்கள். திடகாத்திரமும், உடல் உறுதியும் படைத்த பெல்ஸானர் தூரத்தில் வரும் ரோமானியப் படைவீரர் கூட்டத்தைக் கண்டு வியப்புற்று நிற்கிறான். ஜூலியஸ் சீஸர்: [பிரம்மாண்டமாக வீற்றிருக்கும் மனிதச் சிங்கச் சிற்பத்தை (Sphinx) நோக்கி] மனிதச் சிங்கமே! கால வெள்ளம் அடித்துச் செல்லாத சிற்பமே! பாலை வனத்தில் மண்புயல் இழுத்துச் செல்லாத மகத்தான படைப்புச் சிற்பமே! வெற்றி மமதையுடன் நீ வீற்றிருக்கிறாய்! உனக்கு ஜூலியஸ் சீஸர் வணக்கம் செய்கிறார்! ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக எகிப்தின் பாலைவனக் காவலனாகக் கண்மூடாது நிமிர்ந்து படுத்திருக்கிறாய்! நீயும் நானும் ஒரே குறிக்கோள் உடையவர்! உன்னைப் புரிந்து கொள்வது எப்படிச் சிரமமானதோ, அப்படிக் கடினமானது என்னை அறிந்து கொள்வதும்! சிறுவனாக உள்ள போது நஉன்னைப் பற்றி அறிவேன்! உன் நிழலில் எனது பராக்கிரமும் வல்லமையும் வளர வேண்டும் என்று சிறு வயதில் கனவு கண்டதுண்டு! அக்கனவு மெய்யானது! உங்கள் எகிப்து நாட்டுக்கும் நான் ஓர் அதிபதி! ரோம் பைத்தியகாரின் விளையாட்டுத் தளமாகி விட்டது! ஆனால் எகிப்து நாடு பொன்னும், பொருளும் குவிந்த நாடு! உங்களது நாட்டால் ரோம் செல்வ நாடாகச் செழித்திருக்கிறது! ரோம சாம்ராஜியத்தைத் தாங்கி நிற்கும் பிரதான தூண்களில் எகிப்தும் ஒன்று! உன் மகத்துவம், உன்னதம் வாழ்க! உனது நாட்டுக்கு இரண்டு மன்னர்! ஆண் மன்னர் டாலமி! பெண் மன்னர் கிளியோபாத்ரா! அவர்களிருவரும் ஒருவர் முகம் ஒருவர் பாராமல், ஒருவரை ஒருவர் ஒழித்துக் கட்டத் துணிந்து விட்டார்! யார் தலை விழப் போகிற தென்று தெரிய வில்லை! அவரது சண்டையை நிறுத்த நான் வந்திருக்கிறேன். மன்னர் டாலமிக்கு பதினைந்து வயதாமே! அந்த பாலகன் இந்த நாட்டு வேந்தனா? விளையாட்டுப் பிள்ளை எப்படி வேந்தனாக ஆசனத்தில் அமர்ந்திருக்கிறான்? கிளியோபாத்ராக்கு வாலிப வயதாமே! கவர்ச்சி நங்கையை நான் சந்திக்க வேண்டும். எங்கே ஓடிவிட்டாள் உங்கள் ராணி? [கிளியோபாத்ராவின் காப்டன் பெல்ஸானர், உதவிக் காப்டன் மற்றும் எகிப்த் காவலர் ரோமானியரை நெருங்கி ஜூலியஸ் சீஸருக்கு ராவணுவ முறையில் வணக்கம் செய்கிறார்கள்] பெல்ஸானர்: [சீஸர் கையைக் குலுக்கி] வருக, வருக ரோமாபுரித் தளபதி அவர்களே! எகிப்து அரசு உங்களைக் கனிவுடன் வரவேற்கிறது! நான்தான் காப்டன் பெல்ஸானர். அரசி கிளியோபாத்ராவின் காப்டன். இவர்தான் உதவிக் காப்டன். ஜூலியஸ் சீஸர்: [புன்னகையுடன்] கனிந்த வரவேற்புக்கு மகிழ்ச்சி. இவர்தான் ரூஃபியோ, லெஃப்டினென்ட் ரூஃபியோ. அரசி கிளியோபாத்ராவின் காப்டன் என்றால், அரசர் டாலமிக்கு வேறொரு காப்டனா? பெல்ஸானர்: ஆமாம் ஜெனரல். அக்கில்லாஸ் என்பவர் டாலமியின் போர்த் தளபதி. அரசர் டாலமிக்கு ஆசிரியர் ஒருவரும் உண்டு. தியோடோடஸ் என்பது அவர் பெயர். டாலமியின் முதல் மந்திரி அவர். அவரே அரசாங்க அதிகாரி. பல மொழிகளைக் கற்றவர். ஆனால் எங்கள் அரசி கிளியோபாத்ராவுக்கு ஏழு மொழிகள் எழுதப் பேசத் தெரியும். எகிப்திய மொழியில் எழுதவும், பேசவும் அறிந்த முதல் கிரேக்க அரசி அவர். ஜூலியஸ் சீஸர்: கிளியோபாத்ரா எங்கே இருக்கிறார்? நான் அலெக்ஸாண்டிரியா போகிறேன். நான் கண்டு பேச வேண்டும் உங்கள் ராணியை. ஏற்பாடு செய்வீரா? பெல்ஸானர்: ஜெனரல் அவர்களே! நீங்கள் தேடிப் போக வேண்டாம். அவரே உங்களைக் காணத்தான் முயன்று கொண்டிருக்கிறார். மன்னர் டாலமி எங்கள் அரசியியை நாடு கடத்தி விட்டார்! சிரியா நாட்டில் வசித்து வருகிறார் தற்போது. ஆனால் அவர் சிரியாவில் எங்கே யிருக்கிறார் என்பதை அறிய முடியாது. அவருக்குச் சேதி அனுப்பவும் முடியாது! டாலமியின் ஒற்றர் அவர் ஒளிந்திருக்கு மிடத்தைக் கண்டால், அவரது உயிருக்கே ஆபத்து! அவரைத் தேடிக் காண்பதும் அத்தனை எளிதன்று. டாலமியின் ஓநாய்கள் எங்கள் அரசியைத் தேடி அலைகின்றன! ஜூலியஸ் சீஸர்: ஏனிப்படி உமது ராணியார் ஒளிந்து, ஒளிந்து உயிர் வாழ்கிறார்? யாரிடம் அத்தனை பயம்! டாலமிக்கு கிளியோபாத்ரா மீது ஏனிந்த வெறுப்பு? அவள் டாலமியின் ச்கோதரி அல்லவா? பெல்ஸானர்: டாலமியிடம்தான் பயம்! நாடு கடத்திய பிறகும் டாலமி தமக்கையை நசுக்கத்தான் காத்திருக்கிறார். பாலைவனத்தில் அலைய விட்ட பாவை நாளை அவர் உயிரைப் பறிக்க வரலாம் என்று டாலமி அஞ்சுகிறார். ஜூலியஸ் சீஸர்: ஆச்சரியமா யிருக்கிறது. டாலமிக்கு அஞ்சுபவர் அரசி கிளியோபாத்ராவா? கிளியோபாத்ராவுக்கு அஞ்சுபவர் அரசர் டாலமியா? எகிப்தின் பால மன்னர்கள் ஒருவரை ஒருவர் பிடிக்கக் கண்ணாமூச்சி விளையாடுகிறாரா? யார் யாரை பிடித்துக் கவிழ்த்தப் போகிறாரோ? …. நான் எகிப்துக்கு வந்திருப்பதின் காரணம் டாலமி கிளியோபாத்ரா இருவரையும் ஒன்று சேர்ப்பதற்கே! ஒரு தந்தைக்குப் பிறந்த இருவரும் கைகோர்த்து எகிப்தை ஆள வேண்டும் என்று ஆசைப் படுகிறேன். அவ்விதமே ரோமா புரியும் ஆசைப் படுகிறது. பெல்ஸானர்: மதிப்புக் குரிய தளபதி அவர்களே! இருவரும் ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர்தான்! கணவன் மனைவியாக எகிப்தின் விதிப்படித் திருமணம் புரிந்து கொண்டவர்தான்! ஆனால் இது மிகவும் சிக்கலான ஆட்சி! பிரச்சனை மிக்கது! ஆண் அரசர் போடும் ஒரு சட்டத்தைப் பெண்ணரசர் பிடிக்காமல் நிராகரிக்கிறார்! பெண்ணரசி போடும் சட்டத்தை டாலமி ஏற்றுக் கொள்வதில்லை! இருவருக்கும் இடையில் மக்கள் வேதனைப் படுகிறார்! இருவர் ஒரு நாட்டை ஆள முடியாது! ஒருவர் ஆள ஒருவர் மேற்பார்வை யிடலாம்! ஒருவர் ஆள ஒருவர் ஓய்வெடுத்துக் கொள்ளலாம்! ஆனால் ஒரு நாட்டுக்கிரு மன்னர் கூட்டாட்சி நடத்த முடியாது! யாராவது ஒருவர் ஆள்வதுதான் மதியுடைமை. வயதில் மூத்த, கல்வி ஞானமுள்ள, கலைப் பேறுள்ள எங்கள் அரசி கிளியோபாத்ராதான் நாட்டை ஆளத் தகுதி பெற்றவர்! டாலமி அடுத்தவர் ஆட்டி வைக்கும் கைப்பொம்மை ஆடி வருகிறார்! அவருக்கு வயது பதினைந்து! முகத்தில் இன்னும் பால் வடிகிறது! கல்வி அறிவு, உலக அனுபவம் டாலமிக்குப் போதாது! அவருக்கு எகிப்தைப் பற்றியும் அறிவு போதாது! ரோமைப் பற்றி எதுவும் அறியதவர்!  ஜூலியஸ் சீஸர்: கிளியோபாத்ராவும் வாலிப மங்கை என்று கேள்விப் பட்டேன். பெண்ணரசி நாட்டை ஆள முடியுமா? கண்ணுக்கு மையிடும் மாதரசி, கட்டளை யிட்டுப் படைகளை நடத்த முடியுமா? மென்மை மிகுந்த பெண்ணரசி குதிரை ஏறி, வாள் வீசிப் போரிட முடியுமா? ஆயிரம் ஆயிரம் சேனைகளை ஆணையிட்டு நாட்டைப் பிடிக்க ஆசை உள்ளதா? பெல்ஸானர்: எமது அரசி மகா வீரர் அலெக்ஸாண்டர் வம்சா வழியில் பிறந்தவர்! மீன் குஞ்சுக்கு நீந்தத் தெரியுமா என்று கேட்கிறீர்! இருபது வயது அரசி கிளியோபாத்ராவுக்கு உள்ள திறமை நாற்பது வயது ரோமானியத் தளபதிக்குக் கூடக் கிடையாது! கணித அறிவு மிக்கவர். விஞ்ஞான அறிவு மிக்கவர். வானியல் ஞானம் உள்ளவர்! தினமும் படிக்கிறார். புதுப்புது மொழிகளைக் கற்கிறார். பூகோள ஞானம் மிக்கவர்! போர் புரியும் வல்லமை உடையவர். அலெக்ஸாண்டர் இந்தியா மீது படையெடுத்துச் சென்று வென்றதைப் படித்தவர்! இந்தியாவுக்குப் பயணம் செய்யும் பாதைகளைக் கூடத் தெளிவாகத் தெரிந்தவர்! ஜூலியஸ் சீஸர்: ஆச்சரியப் படுகிறேன்! வாலிபத்தின் வாசலில் கால் வைத்த ஒரு பால்ய மங்கைக்கு இத்தனை ஆழ்ந்த அறிவா? மெச்சுகிறேன்! மகா வீரர் அலெக்ஸாண்டர் இந்தியாவுக்குப் போன பாதையை அறிந்தவர், நிச்சயம் மகா அறிவாளியாக இருக்க வேண்டும். கிளியோபத்ராவை நான் நேராகக் காண வேண்டும். உடனே ஏற்பாடு செய்வீரா? பெல்ஸானர்: ஜெனரல் அவர்களே! கிளியோபாத்ரா எங்கு ஒளிந்துள்ளார் என்று எனக்கே தெரியாது! எங்கள் அரசியைத் தனியாகக் காண்பது அத்தனை எளிய காரிய மில்லை! அவர் ஓரிடத்தில் இரண்டு நாள் தங்குவதில்லை! கொஞ்சம் பொறுங்கள். அவரிடத்தை முதலில் நான் தெரிந்தாக வேண்டும். தெரிந்த பின் உங்களுக்குத் தகவல் அனுப்புவேன். ********************* []   அங்கம் -2 பாகம் -4 “கிளியோபாத்ரா நடை, உடை, பாவனைகளில் தென்படும் அவளது பண்பு நளினம், மாந்தரைச் சந்திக்கும் போது உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் வகையில் மெச்சும்படிப் பிரமிக்க வைக்கும். அவளது பேச ஆரம்பித்தால் பேச்சுக் குரலினிதாகிக் கேட்போரைக் கவர்ந்து விடும்”.    சிஸெரோ [Cicero, on Cleopatra’s Death, First Century B.C]   அவளது கண்கள் தீவிரக் கவர்ச்சி வாய்ந்தவை! அணங்கின் வனப்பிற்கும் அப்பாற் பட்டவை! வான்வெளி நிலவையும் வசீகரம் செய்பவை! வாக்கு வன்மையில் நெகிழ வைப்பவள்! பேசத் துவங்கின் கேட்போர் எவரும் பகலிரவு மாறுவது அறியாமல் போவார்! கவர்ச்சி மொழியாள்! காந்த விழியாள்! வயது மலரும் அவள் வளமையில் செழித்து! பொங்கிடு மிளமை அங்க மனைத்தும்! அவள் புன்னகையில், ஆலயப் பட்டரும் வைத்தகண் வாங்காது சிலையாய் நிற்பார்!     ஜான் டிரைடென் [John Dryden, Drama: All for Love]   நேரம், இடம்:    அலெக்ஸாண்டிரியாவில் எகிப்த் மன்னர் அரண்மனை. ·பாரோ மன்னர் வரலாற்று ஓவியங்கள் உயர்ந்த சுவர்களை அலங்கரிக்கின்றன. பகல் வேளை.   நாடகப் பாத்திரங்கள்:     பால்ய அரசன் டாலமி, போதினஸ், தியோடோடஸ், அக்கில்லஸ், ஜூலியஸ் சீஸர், ரூஃபியோ, ரோமானியக் காவலர், எகிப்தின் படையினர்.   காட்சி அமைப்பு:     பதினைந்து வயது பால்ய அரசன் டாலமி, [கிளியோபட்ராவின் தமையன் (கணவன்)] பல படிகள் உள்ள பீடத்தின் உயரத்தில் பாதுகாப்பாளர் போதினஸ் அருகில் வர அரச ஆசனத்தை நோக்கிப் படிகளில் ஏறுகிறான். டாலமியின் பயிற்சியாளர் தியோடோடஸ் வலது புறம் படி ஏறுகிறார். படைத் தளபதி அக்கில்லஸ் இடது புறத்தில் இருக்கிறார். மற்ற அரண்மனை அதிகாரிகள், காவலர் சற்று தூரத்தில் கூடி யுள்ளனர். அனைவரும் எழுந்து நின்று மன்னர் டாலமிக்கு வணக்கம் தெரிவித்த பிறகு, அரசன் அமர்ந்த பின் தாமும் உட்காருகின்றனர்.   போதினஸ்: [எழுந்து நின்று] அமைதி! அமைதி! எகிப்த் மன்னர் உங்களுக்கு ஓர் உரையாற்றப் போகிறார்! அமைதி! அமைதி! அவர் பேசுவதைக் கேளுங்கள். [அமர்கிறார்] தியோடோடஸ்: [எழுந்து] அரசர் முக்கியமான செய்தியை அறிவிக்கப் போகிறார். எல்லோரும் கேளுங்கள். [அமர்கிறார். அவையில் அரவம் ஒடுங்குகிறது] டாலமி: [எழுந்து நின்றதும், அவையில் பூரண அமைதி நிலவுகிறது] எல்லோரும் கேளுங்கள். நான் அறிவிக்கப் போகும் தகவல் உங்களுக்கு! காது கொடுத்துக் கேளுங்கள். கவனமாகக் கேளுங்கள். நான்தான் உங்கள் மன்னர் ஐயூலெடஸின் முதல் மைந்தன். எனது மூத்த சகோதரி பெரினிஸ் தந்தையைக் காட்டுக்குத் துறத்தி விட்டு நாட்டை ஆண்டு வந்தார். அது மன்னருக் கிழைத்த மாபெரும் அநீதி! … அடுத்து நான் என்ன சொல்ல வேண்டும் …. மறந்து விட்டேனே! [தியோடோஸையும், போதினஸையும் மாறி மாறிப் பார்க்கிறான்] போதினஸ்: [துணியில் எழுதப்பட்ட தகவலைப் பார்த்து] ஆனால் கடவுள்கள் வேதனைப்படக் கூடாது! டாலமி: ஆமாம். கடவுகள்கள் வேதனைப் படக் கூடாது! … (மெல்லிய குரலில்) எந்தக் கடவுள்? .. என்ன எனக்கே புரியவில்லை! … [போதினஸைப் பார்த்து] எந்தக் கடவுள் வேதனைப் படக் கூடாது? … சொல்லுங்கள். எனக்கே குழப்பம் உண்டாகுது! தியோடோடஸ்: அரசரின் பாதுகாவளர் போதினஸ் அரசரின் சார்பாகப் பேசுவார். தொடர்வார். டாலமி: ஆமாம். போதினஸே பேசட்டும். கிளிப்பிள்ளை மாதிரி நான் புரியாமல் பேசக் கூடாது. தொடருங்கள் போதினாஸ். [டாலமி ஆசத்தில் அமர்கிறான்] போதினஸ்: [மெதுவாகத் தயக்கமுடன் எழுந்து தகவலைப் பார்த்து] மன்னர் உங்களுக்குச் சொல்ல விரும்புவது இதுதான். நான் அரசர் கூற்றுக்குச் சற்று விளக்கம் சொல்கிறேன். ·பரோ மன்னர் நமக்குக் கடவுள். ஆகவேதான் கடவுள்கள் வேதனைப்படக் கூடாது என்றார் மன்னர். அதாவது தந்தையைக் காட்டுக்கு அனுப்பி வேதனைப்பட விட்டு, தமக்கை நாட்டை ஆண்டதைக் குறிப்பிடுகிறார். தமக்கை தண்டிக்கப் படவேண்டும் என்றும் கருதுகிறார். டாலமி: [சட்டென எழுந்து வேகமாக] இப்போது ஞாபகம் வருகிறது எனக்கு. அறிக்கையை நான் தொடர்கிறேன். … ஆமாம், கடவுள்கள் வேதனைப்படக் கூடாது! அந்த வேதனையைத் தவிர்க்க நமது சூரியக் கடவுள் ரோமிலிருந்து மார்க் அண்டோனியை எகிப்துக்கு அனுப்பி வைக்கிறார். போதினஸ்: [மெதுவாக டாலமி காதுக்குள்] மார்க் அண்டனி யில்லை, ஜூலியஸ் சீஸர் என்று சொல்லுங்கள். எகிப்துக்கு வந்திருப்பது ஜூலியஸ் சீஸர். டாலமி: ஆம்… மார்க் அண்டனி வரவில்லை. .. ரோமிலிருந்து ஜூலியஸ் சீஸர் எகிப்துக்கு அனுப்பப் பட்டிருக்கிறார். ரோமானியர் உதவியால்தான் மீண்டும் என் தந்தை மன்னரானார். தமக்கையின் தலை துண்டிக்கப் பட்டது. தந்தை மரணத்துக்குப் பிறகு மற்றுமோர் தமக்கை, கிளியோபாத்ரா எனக்குப் போட்டியாக வந்தாள். எகிப்தை என்னிடமிருந்து கைப்பற்ற முனைந்தாள்! எப்படி? என்னைக் கவிழ்த்தி விட்டு என் ஆசனத்தில் ஏற முற்பட்டாள்! என்னை யாரும் எளிதில் ஏமாற்ற முடியாது! இரவுக்கு இரவே அவள் தூங்கும் போது அவளைச் சிறைப் பிடித்து, நாடு கடத்தி விட்டேன்! நல்லவேளை, அவளைக் கொல்லாது அவிழ்த்து விட்டேன்! பாலைவனத்தை ஆளும்படி ஆணையிட்டேன்! பாவம் கிளியோபாத்ரா! பாம்புகளும், தேள்களும் நடமாடும் பாலைவனத்தில் வாழ வேண்டும்! பருவ மங்கை சாவாளா அல்லது பிழைப்பாளா, யார் அறிவார்? அவளுக்குத் துணையிருக்கக் காவலரை அளித்தேன். பாவம் கிளியோபாத்ரா! என்னருமை மனைவி அல்லவா அவள்? திருமணத்துக்கு முன்பு அவள் என் தமக்கை! திருமணத்துக்குப் பின்பு அவள் என் தாரம்! அவளைக் கொல்ல மனமில்லை.  போதினஸ்: மகா மன்னரே! உங்களுக்கு பரிவு மிகுதி! கிளியோபாத்ராவை உயிரோடு விட்டது நம் தவறு! மீண்டும் வந்து உங்களைத் தாக்க மாட்டாள் என்பதில் என்ன உறுதி உள்ளது? தமக்கையானாலும் அஞ்சாமல் உங்களைத் தாக்குவாள்! மனைவியானாலும் கணவனைக் கொல்லத் துணிபவள் கிளியோபாத்ரா! டாலமி: கவலைப் பாடாதே போதினஸ்! அவள் என்னைக் கொல்ல மாட்டாள். நான் அறிவேன் அவளை. பாலை வனத்தில் எந்தப் பாம்பு தீண்டியதோ? எத்தனைத் தேள்கள் கொட்டினவோ? உறுதியாகச் சொல்கிறேன், அவள் உயிருடன் இல்லை! நம் ஒற்றர் கண்களுக்குத் தப்பி அவள் நடமாட முடியாது! உயிரோடு தப்பிவந்து அவள் எகிப்தில் தடம் வைத்தால், தலையைத் துண்டிக்குமாறு ஆணையிட்டிருக்கிறேன். அக்கில்லஸ்: தெய்வ மன்னரே! கிளியோபாத்ரா உயிரோடிருக்கிறாள். என் காதில் விழுந்த செய்தி இதுதான்! கிளியோபத்ரா பாலைவனத்தில் சாகவில்லை! சிரியாவில் உயிரோடிருப்பதாக நான் அறிகிறேன். மந்திரக்காரி பிதாதீதா திறமையால், கிளியோபாத்ரா ஜூலியஸ் சீஸரைத் தன்வசப் படுத்தி விடுவாள்! ரோமானியப் படை உதவியால் உங்களைக் கவிழ்த்தி, எகிப்தின் ஏகமகா ராணியாகப் பட்டம் சூட்டிக் கொள்வாள்! அப்படிப் பேசியதாகக் கேள்விப் பட்டேன். போதினஸ்: [கோபத்துடன் சட்டென எழுந்து] தேவ மன்னரே! ஓர் அன்னியத் தளபதி உங்கள் ஆசனத்தைப் பறிக்க நாம் விடக் கூடாது! ஜூலியஸ் சீஸரைக் கிளியோபாத்ரா தன்வசப் படுத்துவதற்கு முன்பு, நாம் அவளைப் பிடிக்க வேண்டும்! அவளது மூத்த தமக்கை போன உலகுக்கு அவளையும் அனுப்ப வேண்டும்! அக்கில்லஸ்! சொல்லுங்கள்! எத்தனை ரோமானியப் படை வீரர்கள் எகிப்தில் தங்கி யிருக்கிறார்? எத்தனை ரோமானியக் குதிரைப் படை வீரர்கள் இருக்கிறார்? அக்கில்லஸ்: ஜூலியஸ் சீஸருக்குப் பின்னால் மூவாயிரம் காற்படைகளும், ஓராயிரத்துக்கும் குறைவான குதிரைப் படைகளும் உள்ளன. [அதிகாரிகள் ஆரவாரம் செய்து கைதட்டுகிறார். திடீரென சங்கநாதம் முழங்க, வாத்தியங்கள் சத்தமிட ரோமானியத் தளபதி ஜூலியஸ் சீஸர் வருகை அறிவிக்கப் படுகிறது! முதலில் ரோமானிய லெ·ப்டினென்ட் ரூ·பியோ கம்பீர நடையில் அரண்மனைக்குள் நுழைகிறார். பின்னால் அணிவகுத்து ரோமனியக் காற்படை வீரர்கள் பின் வருகிறார்.] ரூஃபியோ: வருகிறார், வருகிறார் ரோமாபுரித் தளபதி ஜூலியஸ் சீஸர் வருகிறார். [ஓசை அடங்குகிறது] [டாலமி மன்னரைத் தவிர அரண்மனையில் யாவரும் எழுந்து ஜூலியஸ் சீஸருக்கு மரியாதை செய்கிறார்.] தியோடோடஸ்: [எழுந்து நிமிர்ந்து] மன்னாதி மன்னர் டாலமி ரோமானியத் தளபதியை வரவேற்கிறார். [ராணுவ உடையில் ஜூலியஸ் சீஸர் நிமிர்ந்த நடையுடன் நுழைகிறார். தலை வழுக்கை தெரிவதை மலர் வலையத்தால் சீஸர் மறைத்துள்ளது தெரிகிறது. அவருக்கருகில் நாற்பது வயதுச் செயலாளர் பிரிட்டானஸ் நிற்கிறார். ஜூலியஸ் சீஸர் டாலமியை நெருங்கி, போதினஸை உற்றுப் பார்க்கிறார்.] ஜூலியஸ் சீஸர்: [டாலமி, போதினஸை மாறி மாறிப் பார்த்து] யார் மன்னர்? பால்யப் பையனா? அல்லது பக்கத்தில் நிற்கும் மனிதரா? போதினஸ்: நான் போதினஸ். என் பிரபுவின் உயிர்க் காவலன். [டால்மியைக் காட்டி] மகா மன்னர் டாலமிக்கு அருகில் நிற்பவன். [டாலமி உட்கார்ந்து கொண்டே சிரிக்கிறான்] ஜூலியஸ் சீஸர்: [கனிவுடன் டாலமியின் முதுகைத் தட்டி] மெச்சுகிறேன் டாலமி! உலகமறிந்த வீரருக்குக் கிடைக்காத உன்னத பதவி உமக்குக் கிடைத்திருக்கிறது! என் தமையனின் மகன் அக்டேவியன் போல் நீ இருக்கிறாய்! அவனுக்கும் உன்னைப் போல் உலக அனுபவ மில்லை! நீ எகிப்தின் வேந்தன்! அவன் ரோமாபுரியின் வீரன்! ஆனால் பிற்கால வேந்தன்! இல்லை, பிற்காலத் தளபதி! ரோமானியருக்கு ஏனோவேந்தர்களைப் பிடிக்காது! டாலமி: எகிப்தின் மன்னர், கடவுளுக்கு நிகரான கடவுளை சீஸருக்குப் பிடிக்குமா? ஜூலியஸ் சீஸர்: சீஸருக்குப் பிடிக்காமலா, சீஸர் எகிப்துக்கு வருகிறார்? எனக்கு டாலமியைப் பிடிக்கும். கிளியோபாத்ராவையும் பிடிக்கும்! டாலமி: எனக்கு கிளியோபாத்ராவை அறவே பிடிக்காது! சொல்லுங்கள் சீஸரே! நீங்கள்தான் ரோமாபுரியின் மன்னாதி மன்னரா? ஜூலியஸ் சீஸர்: டாலமி! சிறிது நேரத்துக்கு முந்திதான் சொன்னேன்! ரோமானியருக்கு மன்னர் என்னும் சொல்லே காதில் படக் கூடாது! நான் ரோமாபுரியின் முதன்மையான போர்த் தளபதி! டாலமி: [ஏளனமாய்க் கேலியுடன்] அட! நீங்கள் கோழிச் சண்டைத் தளபதியா? அதோ என் போர்த் தளபதி அக்கில்லஸ்! அவர்தான் உங்களுக்கு நிகரானவர்! ஜூலியஸ் சீஸர்: டாலமி! கடவுள் உமக்கு ஆசனம் மட்டும் அளித்து அனுபவத்தை எப்போது கொடுப்பாரே? நான் கோழிச் சண்டைக்குத் தளபதி அல்லன்! ரோமாபுரிச் சாம்ராஜியத்தின் தலைவிதியை நிர்ணயம் செய்யும் பராக்கிரமசாலி! நான் ரோமானியச் சக்கிரவர்த்தி! டாலமி: [மெதுவாக தியோடோடஸ் காதில்] அதென்ன வர்த்தி? சக்கிர… சக்கிரவர்த்தி? தியோடோடஸ்: அதாவது ரோமனியப் பெருமன்னர் என்று அர்த்தம்! சீஸர்தான் ரோமாபுரியின் மகா மன்னர்! அப்படி அழைக்கப்படா விட்டாலும், அவர்தான் மகா வேந்தருக்கு நிகரானவர்! டாலமி: அப்படியா [எழுந்து நின்று சீஸரின் கைகளைக் குலுக்குகிறான்] மகாமன்னர் ஜூலியஸ் சீஸருக்கு எகிப்த் நாடு வந்தனம் கூறி வரவேற்கிறது! வாருங்கள், வாருங்கள் வந்து அமருங்கள் ஆசனத்தில். [ஜூலியஸ் சீஸர் டாலமிக்கு அருகில் உள்ள ஆசனத்தில் அமர்கிறார்.] ********************* []     அங்கம் -2 பாகம் -5 “அவளது கனிவுக்குரல் மொழிகள் வாத்திய இசைக் கருவியின் பல்வேறு நாண் கம்பிகள் போன்றவை. மாந்தரின் முகப்புகழ்ச்சி மொழிகள் நான்கு தரப்பின; ஆனால் அவளிட மிருந்தவையோ ஆயிரம்!”   புளூடார்க், கிரேக்க வரலாற்றுப் பதிவாளர் [Plutarch (46-120) A.D.] வயது மலரும் அவள் வளமையில் செழித்து! பொங்கிடு மிளமை அங்க மனைத்தும்! வான்வெளி நிலவையும் வசீகரம் செய்பவள்! வாக்கு வன்மையில் நெகிழ வைப்பவள்! நானவளை வெறுப்பேன் ஆயினும் அவள் மோக உடலை நோக்குவேன்! கவரும் எழிலைச் சபிப்பேன் ஆயினும் அவளைத் தழுவக் கைகள் தானாய்த் தாவிடும்! ஜான் டிரைடென் [John Dryden, Drama: All for Love] வயது ஏறினும் வதங்காது அவள் மேனி! வழக்க மரபுகளால் குலையாது அவள் பாணி! வரம்பிலா விதங்களில் அவளோர் வனப்பு ராணி! வில்லியம் ஷேக்ஸ்பியர் [அண்டனி & கிளியோபாத்ரா]     நேரம், இடம்: அலெக்ஸாண்டிரியாவில் எகிப்த் மன்னர் அரண்மனை. ·பாரோ மன்னர் வரலாற்று ஓவியங்கள் உயர்ந்த சுவர்களை அலங்கரிக்கின்றன. பகல் வேளை. நாடகப் பாத்திரங்கள்: பால்ய அரசன் டாலமி, போதினஸ், தியோடோடஸ், அக்கில்லஸ், ஜூலியஸ் சீஸர், ரூஃபியோ, ரோமானியக் காவலர், எகிப்தின் படையினர், கிளியோபாத்ரா, கம்பள வணிகர். காட்சி அமைப்பு: பதினைந்து வயது பால்ய அரசன் டாலமி, [கிளியோபட்ராவின் தமையன் (கணவன்)] பல படிகள் உள்ள பீடத்தின் உயரத்தில் பாதுகாப்பாளர் போதினஸ் அருகில் வர அரச ஆசனத்தை நோக்கிப் படிகளில் ஏறுகிறான். டாலமியின் பயிற்சியாளர் தியோடோடஸ் வலது புறம் படி ஏறுகிறார். படைத் தளபதி அக்கில்லஸ் இடது புறத்தில் இருக்கிறார். மற்ற அரண்மனை அதிகாரிகள், காவலர் சற்று தூரத்தில் கூடி யுள்ளனர். அனைவரும் எழுந்து நின்று மன்னர் டாலமிக்கு வணக்கம் தெரிவித்த பிறகு, அரசன் அமர்ந்த பின் தாமும் உட்காருகின்றனர். சிறிது நேரம் கழித்து ஆங்கே ஜூலியஸ் சீஸர், அவரது அரசாங்கச் செயலாளர் பிரிட்டானஸ் மற்றும் ரோமானியக் காவலர் சிலரும் நுழைகிறார். [அகில்லஸ் ஜூலியஸ் சீஸர் முன்வந்து கைகுலுக்கிறான்] அக்கிலஸ்: [சிரித்துக் கொண்டு] ஜெனரல்! நான்தான் அக்கிலஸ். பூரிப்பான என்னினிய வரவேற்பு உங்களுக்கு! டாலமி மாவேந்தரின் படைத் தளபதி நான்! எகிப்த் நாட்டின் போர்த் தளபதி! ஏகத் தளபதி! ஜூலியஸ் சீஸர்: அப்படியா? உங்களைச் சந்தித்ததில் எனக்கும் மிக்க பூரிப்பே. நீங்கள்தான் எகிப்தின் ஏகத் தளபதியா? நேற்று நான் மனிதச் சிங்கத்தின் அருகில் சந்தித்த பெல்ஸானரும் எகிப்தின் படைக் காப்டன் என்று கூறினாரே! அப்படி என்றால் எகிப்துக்கு இணையான இரட்டைத் தளபதிகளா? போரென்று வந்தால் யார் படைகளை நடத்திச் செல்வார், நீங்களா அல்லது பெல்ஸானரா? அக்கிலஸ்: [வெடிச் சிரிப்புடன்] ஓ! பெல்ஸானரா? அவர் எனக்கு உதவிப் பதவியில் உள்ளவர்! ஆனால் எனக்கு இப்போது எதிரியாகப் போனார்! அவரது அரசி கிளியோபாத்ராவே தலைமறைவாக எங்கோ ஒளிந்து கொண்டுள்ளார்! பெல்ஸானர் அவளுடைய நிழலாக நடமாடுகிறார்! போர் வந்தால் யார் படைகளை நடத்துவார்? நல்ல கேள்வி! எகிப்தின் ஏகத் தளபதி நான்தான் நடத்திச் செல்வேன். பெல்ஸானர் உயிரும், உடலுமற்ற ஓர் எலும்புக் கூடு! ஜூலியஸ் சீஸர்: ஓ! அப்படியா சங்கதி? [தியோடோடஸைப் பார்த்து] .. நீங்கள் …யார்? தியோடோடஸ்: [எழுந்து நின்று கைகொடுத்து] நான் தியோடோடஸ்! வேந்தரின் பயிற்சியாளர். ஜூலியஸ் சீஸர்: [சிரித்துக் கொண்டு] ஓ! நீங்கள்தான் பாலகன் டாலமிக்கு அறிவூட்டும் அமைச்சரா? அரசாங்க நிர்வாகத்தில் அறிவுரை கூறி நடத்தும் நிபுணரா? நல்ல பணி உமக்கு. நீங்கள்தான் மெய்யாக எகிப்தின் போலி மன்னர்! … [டாலமியைப் பார்த்து] …. நானிங்கு வந்த காரணத்தைச் சொல்ல வேண்டுமே! ….. மாமன்னர் டாலமி அவர்களே! எமக்கு நிதி தேவைப்படுகிறது! ஆண்டாண்டு கப்பம் செலுத்தும் நாளும் கடந்து விட்டது! எத்தனை நாள் கடந்து விட்டது என்பதை விட, எத்தனை மாதம் என்று நான் சொல்வது நல்லது. டாலமி: [போதினஸைப் பார்த்து] என்ன தகாத புகாரிது? நாம் கப்பம் கட்டவில்லை என்று சீஸர் நம்மைக் குற்றம் கூறி நிதி கேட்கும் நிலைக்கு வைக்கலாமா? …[சீஸரைப் பார்த்து] சொல்லுங்கள், எத்தனை மாதம் ஆகிறது! ஜூலியஸ் சீஸர்: ஆறு மாதங்கள் ஓடி விட்டன! எங்கள் பொக்கிசம் காலி! செலவுக்குப் பணம் அனுப்ப நாங்கள் ரோமுக்குச் செய்தி அனுப்பும் நிர்ப்பந்தம் வந்துவிட்டது! போதினஸ்: [வருத்தமுடன்] ஜெனரல் சீஸர் அவர்களே! எங்கள் பொக்கிசமும் காலியாகப் போய்விட்டது! என்ன செய்வது? ஓராண்டு காலம் வரி வாங்கத் தவறி விட்டோம்! ஆறு மாதம் கப்பம் கட்டாமல் உங்கள் பொறுமையை முறித்ததற்கு எங்களை மன்னிக்க வேண்டும்! அடுத்த நைல் நதி அறுவடை வரும்வரை பொறுப்பீரா? ஜூலியஸ் சீஸர்: [வெகுண்டு எழுந்து] இந்த சாக்குப் போக்கெல்லாம் எதற்கு? எங்கள் பொறுமை எல்லை கடந்து விட்டது! இனி பொறுப்பதில்லை! டாலமி: [கோபமாக எழுந்து] என்ன நமது பொக்கிசமும் காலியா? என்னவாயிற்று நம் நிதி முடிப்புகள்? போதினஸ்: மகா மன்னரே! நாம் கிளியோபாத்ராவை நாடு கடத்தும் முன்பே அவள் நமது பொக்கிச நிதியைக் கடத்தி விட்டாள்! டாலமி: எனக்குத் தெரியாமல் போனதே! கள்ள ராணி! என் பொக்கிசத்தைக் களவாடிய கொள்ளை ராணி! … [அக்கிலஸப் பார்த்து] கிளியோபத்ரா எங்கு ஒளிந்திருக்கிறாள் என்று கண்டுபிடித்து, அவளைக் கொன்று வா! கொள்ளைப் பணத்தைக் கொண்டுவா! .. போ! .. அவள் எங்கிருந்தாலும் சரி! போய்ப் பிடி! அவள் எகிப்தில் கால் வைக்கக் கூடாது! ஆனால் நம்முடைய முழு நிதியையும் கைப்பற்றிக் கொண்டுவா! …. [சீஸரைப் பார்த்துக் கெஞ்சலுடன்] .. முடிந்தால் இநத முறை கிளியோபாத்ராவிடம் வாங்கிக் கொள்ளுங்கள்! அவளிடம் உள்ளது எங்கள் நிதி! அந்தப் பணம் உங்களைச் சேர்ந்தது! அவளும் எகிப்தின் அரசிதான்! மேலும் உங்களுக்கும் பிடித்தவள் அவள்! … அடுத்த முறை கப்பம் அளிப்பது எனது கடமை! ஒருமுறை டாலமி, ஒருமுறை கிளியோபாத்ரா என்று மாற்றி மாற்றி, நீங்கள் கப்பம் பெற்றுக் கொள்வதே நியாயமானது. ஜூலியஸ் சீஸர்: என்ன கேலிக் கூத்தாய்ப் போச்சு? பாலகர் டாலமி நியாயம் பேசுகிறாரா? இந்த பொறுப்பற்ற போக்கு எமக்குப் பிடிக்காது! ஒருவேளை கிளியோபாத்ரா செத்துப் போயிருந்தால்…! டாலமி: கப்பத்தை நான் கட்டி விடுகிறேன். கிளியோபாத்ரா செத்துப் போனாளா அல்லது உயிரோடிருக்கிறாளா வென்று உமது ஒற்றர்களை உளவறியச் சொல்வீர்! எமது ஆட்களும் அவளது எலும்புக் கூட்டை பாலை வனத்தில் தேடிக் கொண்டுதான் இருக்கிறார்! ஆனால் அவளது அழகிய மேனி உயிரோடு நடமாடி வருவதாகவே நான் கருதுகிறேன். சீக்கிரம் அவளைப் பிடித்தால், நிச்சயம் உங்கள் கப்பத் தொகையைக் கறந்து விடலாம்! பிரிட்டானஸ்: [அழுத்தமாக] கிளியோபாத்ரா உயிரோடிருக்கிறாளா, எலும்புக் கூடாய்ப் போனாளா என்பதைப் பற்றி எமக்குக் கவலை யில்லை! எங்கள் கண்ணில் அரசராகத் தெரிபவர் நீங்கள் ஒருவரே! கடத்தப் பட்ட கிளியோபாத்ராவைத் தேடிப் பிடிப்பது எமது பொறுப்பில்லை! அது உமது வேலை! எமக்குத் தேவை கப்பத் தொகை! சட்டப்படி எகிப்த் ரோமாபுரிக்குக் கப்பம் செலுத்த உங்கள் தந்தை மன்னராய் உள்ள போது கையெழுத்திட்டு ஒப்புக் கொண்ட உடன்படிக்கை! அந்த ஒப்பந்தத்தின்படி அப்பணத்தை உங்களிடமிருந்து பெற்றுக் கொள்வது சீஸரின் கடமை! டாலமி: [சீஸர்ப் பார்த்து] சட்டம் பேசும் இந்த ஞானியை நீங்கள் எமக்கு அறிமுகப் படுத்த வில்லையே! ஜூலியஸ் சீஸர்: [சற்று கனிவுடன்] டாலமி, இவர்தான் பிரிட்டானஸ், என் செயலாளர்! அரசாங்கச் செயலாளர்! நீங்கள் சொன்னது போல், ஐயமின்றி அவர் ஓரு சட்ட ஞானிதான்! அதோ அவர் ரூ·பியோ, எனது படைத் தளபதி. …[கோபமாக] அது சரி. இப்போது எனக்குத் தேவை 1600 டாலென்ட் நாணயம் [Talent]. அதுவும் உடனே தேவை! …. டாலமி! எம்முடன் விளையாடாதீர்! உமது பொறுப்பற்ற முறை எமக்குப் பிடிக்காது! பணத்தை வாங்காமல் யாமின்று வெளியேறப் போவதில்லை! …. நீவீர் தர வில்லையானால், எமது படையாட்கள் உமது பொன் ஆபரணங்களைப் பறிக்கும்படி நேரிடும்! போதினஸ்: [மனக் கணக்கிட்டு, பெருமூச்சுடன் கலங்கி] 1600 டாலென்ட் நாணயம் என்றால் 40 மில்லியன் ஸெஸ்டர்ஸ் [Sesterces]. ஜெனரல், அத்த¨னைப் பெரிய தொகை எமது பொக்கிசத்தில் இல்லை, நிச்சயம்! ஜூலியஸ் சீஸர்: [சற்று தணிவுடன்] கொஞ்சத் தொகைதான்! 1600 டாலென்ட் நாணயம் மட்டுமே! அதை ஏன் ஸெஸ்டர்ஸ் நாணயத்தில் மாற்றிப் பெரிது படுத்த வேண்டும்? டாலமிக்கு அதிர்ச்சி கொடுக்கவா? ஸெஸ்டர்ஸ் நாணயம் ஒன்றில் வெறுமனே ஒற்றைத் துண்டு ரொட்டி வாங்கலாம்! போதினஸ்: யார் சொன்னது? அது தப்பு! ஒரு ஸெஸ்டர்ஸ் நாணயத்தில் குதிரை ஒன்றை வாங்கலாமே. உங்கள் மதிப்பீடு மிகவும் கீழானது! தப்பானது! கிளியோபாத்ரா செய்த கலகத்தில் ஓராண்டு வரிகளை வாங்க முடியாமல் தவற விட்டது எங்கள் தப்புதான். எகிப்த் செல்வந்த நாடு! உங்கள் கப்பத்தைச் செலுத்தி விடுவோம், கவலைப் படாதீர்! சற்று பொறுங்கள். ரூஃபியோ: [சற்று கோபமுடன்] போதினஸ்! போதும் உமது சாக்குப் போக்குகள்! எப்படி நாட்டை ஆள வேண்டும், வரி திரட்ட வேண்டும் என்று ஆலோசனை கூறுவது எமது வேலை யில்லை! ஏன் கால தாமதப் படுத்துகிறீர்? சீஸர் கோபத்தைத் தூண்டாதீர்! போதினஸ்: [கசப்புடன்] உலகைக் கைப்பற்றிய போர்த்தளபதி சீஸருக்குக் கப்பத் தொகை திரட்டும் சிறிய பணியும் உள்ளதா? கைச் செலவுக்குக் கூடப் பணமில்லாமல், இப்படி திடீரென கையேந்தி வரலாமா? ஜூலியஸ் சீஸர்: நண்பனே! உலகைக் கைப்பற்றிய தளபதிக்குக் கப்பத் தொகையைக் கறப்பதைத் தவிர முக்கியப் பணி வேறில்லை! நாமின்று பணம் வாங்காது இங்கிருந்து நகரப் போவதில்லை! போதினஸ்: [கவலையுடன்] என்ன செய்வது? கப்பத்தைக் கறக்க ஒற்றைக் காலில் நிற்கிறீர்! நாங்கள் ஆலயத் தங்கத்தைத்தான் உருக்கி நாணயமாக்கித் தர வேண்டும். குறைந்தது இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஆகும். அதுவரைப் பொறுப்பீர்களா? ஜூலியஸ் சீஸர்: அப்படியானால் மூன்று நாட்கள் உங்கள் விருந்தினராய் நாங்களிங்கு தங்க வேண்டும். அத்தனை பேருக்கும் உணவும், மதுவும், படுக்கையும் அளிப்பீர்களா? டாலமி: [எழுந்து நின்று] நிச்சயம், நீங்கள் எங்கள் விருந்தாளி! மூன்று நாட்கள் என்ன? முப்பது நாட்கள் கூட எமது அரண்மனையில் அனைவரும் தங்கலாம். உண்டு, உறங்கி, மதுவருந்தி, ஆடிப்பாடி, இன்புற்று எமது அரண்மனை விருந்தினர் அறையில் தங்கலாம்! இப்போதே நாணய அச்சடிப்புக்கு ஆணையிடுகிறேன். [போதினஸ் காதில் ஏதோ சொல்ல அவர் விரைந்து செல்கிறார்] ஜூலியஸ் சீஸர்: எமக்குப் பணம் கிடைத்தால் போதும்! உமது அரசியல் பிரச்சனையையும் தீர்த்து வைக்கிறேன். … அதற்கு கிளியோபாத்ராவும் வருவது நல்லது! டாலமியும், கிளியோபாத்ராவும் சேர்ந்து எகிப்தை ஆள்வதையே யாம் விரும்புகிறோம். உமக்குள்ளிருக்கும் பகைமை யாம் அகற்றுவோம்! போதினஸ்: கிளியோபாதரா அலெக்ஸாண்டிரியாவில் இல்லை. சிரியாவுக்கு ஓடிவிட்டதாகக் கேள்விப் பட்டோம். உயிருக்கு அஞ்சாது அவள் எகிப்தில் கால் வைக்க மாட்டாள்! வைத்தால் அவள் தலையைக் கொய்ய எங்கள் படையாட்கள் வாளோடு தயாராக உள்ளார்! அவளில்லாமல்தான் நீங்கள் அரசியல் பிரச்சனையைத் தீர்க்க வேண்டும். கிளியும், பூனையும் ஒன்றாக வாழுமா என்பது சந்தேகம்தான்! [அப்போது காவலன் ஒருவன் ஒரு ரத்தினக் கம்பள வணிகனை அழைத்து வருகிறான். வணிகனைத் தொடர்ந்து, மூச்சுத் திணறி அவனது கையாள் கனமான கம்பளத்தைத் தோளில் தூக்கிக் கொண்டு வருகிறான். கம்பளத்தை மெதுவாக இறக்கித் தரையில் விரிக்கிறான், கையாள். கம்பளத்திலிருந்து தாமரை மலர் போல ஒரு வனப்பு மங்கை, புன்னகையுடன் எழுகிறாள்.] ******************** []   அங்கம் -2 பாகம் -6   தேன்மொழி நாவால் நெகிழ வைப்பவள்! மீன்விழிக் கணையால் நெஞ்சைப் பிளப்பவள்! சூழ்ந்த கவர்ச்சி காந்த மண்டலம்! அவ்வலையில் வீழ்ந்தவர் மீண்டும் உயிர்தெழ மாட்டார்! வனப்பினில் மயங்கிக் கனவினில் அணைப்போர் மனதினில் நீங்கா ஓவியம் வரைபவள்!    கிளியோபாத்ராவைப் பற்றி … “அவளது கனிவுக்குரல் மொழிகள் வாத்திய இசைக் கருவியின் பல்வேறு நாண் கம்பிகள் போன்றவை. மாந்தரின் முகப்புகழ்ச்சி மொழிகள் நான்கு தரப்பின; ஆனால் அவளிட மிருந்தவையோ ஆயிரம்!” புளூடார்க், கிரேக்க வரலாற்றுப் பதிவாளர் [Plutarch (46-120) A.D.] நேரம், இடம்: அலெக்ஸாண்டிரியாவில் எகிப்த் மன்னர் அரண்மனை. ·பாரோ மன்னர் வரலாற்று ஓவியங்கள் உயர்ந்த சுவர்களை அலங்கரிக்கின்றன. பகல் வேளை. நாடகப் பாத்திரங்கள்: பால்ய அரசன் டாலமி, போதினஸ், தியோடோடஸ், அக்கில்லஸ், ஜூலியஸ் சீஸர், ரூபியோ, ரோமானியக் காவலர், எகிப்தின் படையினர், கிளியோபாத்ரா, கம்பள வணிகர். காட்சி அமைப்பு: [காவலன் ஒருவன் ஒரு ரத்தினக் கம்பள வணிகனை அழைத்து வருகிறான். வணிகனைத் தொடர்ந்து, மூச்சுத் திணறி அவனது கையாள் கனமான கம்பளத்தைத் தோளில் தூக்கிக் கொண்டு வருகிறான்.] வாயிற் காவலன்: [வாளை நீட்டி] நில்! யார் நீ? தோளில் எதைத் தூக்கிக் கொண்டு வருகிறீர்? கம்பள வணிகன்: நான் கம்பள வணிகன்! சிரியாவிலிருந்து வருகிறேன்! சிரியா மன்னர் விலை மதிப்பில்லா ஒரு கம்பளத்தை ரோமாபுரித் தளபதி சீஸருக்கு அனுப்பி யுள்ளார்! சீஸரிங்கு வந்துள்ளாய் நான் அறிந்தேன்! சிறப்பாக நெய்யப்பட்ட இந்தக் கம்பளத்தை நான் நேராக அவரிடம் சேர்க்க வேண்டியது என் பொறுப்பு. வாயிற் காவலன்: அப்படியா? சற்று பொறு! நாங்கள் சீஸரிடம் வினாவி வருகிறோம். [உள்ளே ஒரு காவலன் செல்கிறான். சிறிது நாழி கழித்து வெளியே வருகிறான்] இரண்டாம் காவலன்: ரோபாபுரித் தளபதி கம்பளக் கொடையாளியை அழைத்து வரச் சொல்கிறார். [காவலன் கம்பள வணிகனையும், பணியாளியையும் உள்ளே சீஸர் முன்பாக அழைத்து வருகிறான்] கம்பளி வணிகன்: மகாமகா மேன்மை தங்கிய ஜெனரல் சீஸர் அவர்களுக்கு எனது பணிவான வணக்கம். எங்கள் சிரியாவின் மன்னர் விலைமிக்க இந்த கம்பளத்தைத் தங்களுக்கு அளித்துள்ளார்! ஏற்றுக் கொள்வீரா? முதன்முதல் தங்க கம்பிகளைப் பயன்படுத்தி நெய்த கம்பளமிது! ரோம சாம்ராஜியம் காணாத கம்பளமிது! ஜூலியஸ் சீஸர்: [கம்பளத்தை உற்று நோக்கி] அப்படியா? ஏற்று கொள்கிறேன். வெகு அழகான வேலைப்பாட்டைக் காண்கிறேன். இறக்கி வைத்துச் செல்! சீஸர் நன்றி கூறியதாக சிரியா மன்னருக்குச் சொல்! [ரூபியோவைப் பார்த்து] ரூபியோ கம்பளத்தை வாங்கி என்னறையில் வை! ரோமுக்கு மீளும் போது, மறக்காமல் படகில் ஏற்றிவிடு! கம்பளி வணிகன்: ஜெனரல் அவர்களே! இது ரோமாபுரிக்குப் போகும் கம்பளமில்லை! தங்கள் அலெக்ஸாண்டிரியா அறையை அலங்கரிக்க வேண்டியது! கம்பளத்தின் வெளிப்படைப்பு வேலைப்பாட்டைப் புகழ்ந்தீர்! அதன் உள்ளழகு வெளியழகை மிஞ்சுவது! நான் விரித்துக் காட்டலாமா? பார்த்தால் பூரித்துப் போவீர்! ஜூலியஸ் சீஸர்: வேண்டாம்! எனக்கு வேலை உள்ளது! சும்மா வைத்து விட்டுப் போ! கம்பளி வணிகன்: [பணியாள் கம்பளத்தைக் கீழிறக்கி வைக்க வணிகன் கவனமாக, மெதுவாகத் தரையில் அதை விரிக்கிறான். கம்பளத்துக் குள்ளிருந்து ஓரிளம் மங்கை புன்னகையுடன் உடலை முறித்துக் கொண்டு எழுகிறாள்! [அனைவரும் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைகிறார்] ஜூலியஸ் சீஸர்: [சினத்துடன்] என்ன வேடிக்கையிது? பெண்ணை ஒளித்து வைத்து என்னோடு சிரியா மன்னர் பகடை ஆடுகிறாரா? ஈதென்ன கோமாளித்தனமாக உள்ளது? முதலில் இந்தப் பெண் யாரென்று சொல்ல வேண்டும்! எதற்காக இப்படி ஒளிமறைவில் என்னைக் காண வருகிறாள்? என்னால் இவளுக்கு ஆவதென்ன? அல்லது அவளால் எனக்கு கிடைப்பதென்ன? …யார் நீ? சொல்! கள்ளத்தனமாக கம்பளத்துக்குள்ளே ஏன் ஒளிந்து வந்தாய்? மாயக்காரியா? மந்திரக்காரியா? அல்லது சூனியக்காரியா? யார் நீ? கிளியோபாத்ரா: [எழுந்து ஒய்யாரமாக நின்று, புன்சிரிப்புடன்] மகாமகா சீஸர் அவர்களே! என்னை யாரென்று தெரியவில்லையா? அரச வம்சத்தில் பிறந்து அரசை யிழந்துவிட்ட அரசியைத் தெரிய வில்லையா? ஜூலியஸ் சீஸர்: [ஆச்சரியம் பொங்க] யார்? கிளியோபாத்ராவா? நம்ப முடியவில்லையே! டாலமி: [சினத்துடன்] ஜெனரல்! இவளொரு ஜிப்ஸி! நாடோடி! இவள் கிளியோபாத்ரா இல்லை! நிச்சயமாகக் கிளியோபாத்ரா இத்தனைக் கீழ்த்தரமாகக் கம்பளச் சுருளில் ஒளிந்து வரமாட்டாள்! அவள் நேராக வரும் ஒரு வீர மங்கை! இந்தக் கோமாளி வணிகன் யாரையோ பிடித்து வந்து எகிப்தின் அரசி கிளியோபாத்ரா வென்று ஏமாற்றுகிறான்! [அக்கிலஸைப் பார்த்து] வணிகனைச் சவுக்கால் அடி! அயோக்கியன்! [சீஸரைப் பார்த்து] ஜெனரல்! இந்த கூத்தாடிப் பெண்ணை என்னிடம் ஒப்படைத்து விடுங்கள்! அவளை நான் தண்டிக்கிறேன்! [அக்கிலஸைப் பார்த்து] அக்கிலஸ்! அந்த நாடோடிப் பெண், அவள் கைக்கூலி வணிகன், பணியாள் மூவரையும் கைது செய் உடனே! யாரை ஏமாற்ற இந்த நாடகம்? கிளியோபாத்ரா: [எழுந்தோடி சீஸரின் பின்புறம் நின்று கொள்கிறாள்] மேன்மை மிகு சீஸர் அவர்களே! நான் நாடோடி யில்லை! நாடகம் போடவு மில்லை! நான் கிளியோபாத்ரா! அதோ! அந்தப் பாலகன் டாலமி! என் தமையன் அவன்! நான் மணம் புரிந்து கொண்டவன்! என்னைக் கொலை செய்ய எகிப்தியப் படைகளை அனுப்பிய என்னருமைக் கணவன்! நான் யாரென்று குருநாதர் தியோடோஸைக் கேளுங்கள்! அவர் உண்மை பேசுபவர்! நான் யாரென்று பாதுகாப்பாளி போதினஸைக் கேளுங்கள்! படைத் தளபதி அக்கிலஸைக் கேளுங்கள்! எப்போதும் டாலமி பொய் பேசியே ஏமாற்றுபவன்! ஜூலியஸ் சீஸர்: [தியோடோடஸைப் பார்த்து] யாரிந்த மங்கை? சொல்! [போதினஸைப் பார்த்து] யாரிந்தக் குமரி? சொல்! [அக்கிலஸைப் பார்த்து] யாரிந்த வாலிப மங்கை? சொல்! தியோடோடஸ்: ஜெனரல்! அவர் மகாராணி கிளியோபாத்ரா! போதினஸ்: ஆம் ஜெனரல்! அவர் எகிப்தின் அரசி கிளியோபாத்ரா! அக்கிலஸ்: மேன்மை மிகு சீஸர் அவர்களே! அவர் எங்கள் டாலமி மன்னரின் மனைவி கிளியோபாத்ரா! ஜூலியஸ் சீஸர்: [டாலமியைப் பார்த்து] பாலகனே! உன் கண்ணில் கோளாறா? அல்லது மூளையில் கோளாறா? உன் தமக்கையை நாடோடி என்று ஒதுக்கி விட்டாயே! ஏன் அவளைக் கூத்தாடி என்றுக் கேலி செய்தாய்? தந்தத்தில் செதுக்கிய இந்த அழகுச் சிலையா கூத்தாடி? டாலமி: [கெஞ்சலுடன்] கண்ணே கிளியோபாத்ரா! நலமா? சந்தனத் தண்டுபோல் தளதள வென்றிருந்த நீ எப்படித் தளர்ந்துபோய் மெலிவா யிருக்கிறாய்? பாலை வனத்தில் ஈச்சம் பழத்தைத் தின்று, நீரைக் குடித்தே வாழ்ந்தாயா? பாவம், உன்னைப் பாலை வனத்துக்கு அனுப்பாமல், அரண்மனைச் சிறையிலே நான் பூட்டி வைத்திருக்கலாம்! அரச குமாரியை அனாதை போல் திரிய விட்டது எனது தவறுதான்! கிளியோபாத்ரா: [சீஸரின் உடை வாளை உருவி, நேரே டாலமியை அருகி அதட்டலுடன்] அடே! அயோக்கியா! போதும் உன் பாசாங்கு! போதும் உன் பரிவு! என்னைக் கண்டு பாகாய் உருகாதே! உன்னைக் கண்டு என் நெஞ்சம் கொதிக்கிறது! இறங்குடா கீழே ஆசனத்தை விட்டு! இந்த தங்க ஆசனம் என் ஆசனம்! நான் அமர்ந்து எகிப்த் ராணியாய் அரசாண்டது! [டாலமி பயந்து நடுங்கி ஆசனத்தை விட்டு எழுகிறான். கிளியோபாத்ரா ஆசனத்தின் முன் நின்று வாளை ஓங்கி விரட்டுகிறாள்] டாலமி! ஓடுடா! உன் கழுத்தைக் காப்பாற்றிக் கொள்! [டாலமி ஓடிப்போய் சீஸரின் பின்னால் ஒளிந்து கொள்கிறான்] … உயிருக்குப் பயந்து ஓடும் ஓணான் நீ! என்னைச் சாகடிக்க நீ அனுப்பிய அதே பாலை வனத்துக்கு நான் உன்னைத் துரத்துகிறேன்! உலக அனுபவம் உண்டாகும் உனக்கு! டாலமி: [சீஸர் கையைப் பற்றிக் கொண்டு] தளபதி! என்னைக் காப்பாற்றுங்கள்! நான் பாலகன்! இந்தப் பாதகி என்னைப் பாலை வனத்துக்கு அனுப்புவதைப் பார்த்துக் கொண்டு நிற்காதீர்! ஐயோ! கருந்தேள் என்னைக் கடிக்கும்! கருநாகம் என்னைக் கொட்டிவிடும்! நான் ஆளா விட்டாலும், சாக விரும்பவில்லை! காப்பாற்றுவீர் என்னை! ஜூலியஸ் சீஸர்: [முகத்தைத் தடவி] டாலமி! நீ பாலகன்! உன்னைப் பாதுகாப்பது எம்பணி! கிளியோபாத்ராவை நீ பாலைக்கு ஏன் துரத்தினாய்? அவள் உன் உடன்பிறந்த தமக்கை! நீங்கள் இருவரும் கணவன் மனைவி வேறு! எகிப்தை ராஜா ராணியாய் நீங்களிருவரும் ஒன்றாக ஆள்வதையே நான் விரும்புகிறேன். அதற்காகதான் நான் அலெக்ஸாண்டிரியாவுக்கு வந்துள்ளேன்! கிளியோபாத்ரா: [கோபத்துடன் சீஸரை நோக்கி] தளபதி சீஸர் அவர்களே! உங்கள் ஆசை நிறைவேறாது! டாலமி! பாலகன் வடிவத்தில் காணப்படும் அயோக்கியன்! நாங்கள் இருவரும் ஒரே அரண்மனையில் நிம்மதியாகத் தூங்க முடியாது! எகிப்தை ஈரரசர் ஆள முடியும் என்று கனவு காணாதீர்! எகிப்தியர் இரண்டு அரசருக்குப் பணி புரிய இயலாது! ஒருவர் கழுத்தை ஒருவர் தேடும் இந்தக் கண்ணாமூச்சிப் போராட்டத்தில் யாராவது ஒருவர் கண்மூட வேண்டும்! நிச்சயம் அந்தப் பிறவி நானில்லை! ஜூலியஸ் சீஸர்: [சினத்துடன்] கிளியோபாத்ரா! போதும் நிறுத்து உன் பேச்சை! டாலமியைப் பலிவாங்க நீ புறப்பட்டு விட்டாய்! உங்களுக்குள் பிரிவும், போரும் நேர்வதை எகிப்தியர் யாரும் விரும்பார்! உள்நாட்டுக் கலவரம் உங்களால் நிகழ்வதை ரோமாபுரியும் விரும்பாது! நீங்கள் இருவரும் எப்படிச் சேர்ந்து நாடாள்வீர் என்பதைப் பற்றி வாதிப்போம்! முடிவு செய்வோம்! டாலமி! என்ன சொல்கிறாய் அதற்கு? டாலமி: இரட்டையர் ஆட்சிக்கு நான் ஒப்புக் கொள்கிறேன்! ஆனால் கிளியோபாத்ரா அதற்குத் தயாரில்லை! நாட்டை இரண்டாக வெட்டினால் நாங்கள் தனித்தனியாக அரசாட்சி நடத்தலாம்! நிம்மதியாக இரவில் தூங்கலாம்! ஒரே அரண்மனையில் தலைக்குமேல் கத்தி தொங்கும் போது நாங்கள் எப்படி உறங்க முடியும்? கிளியோபாத்ரா: எகிப்தைத் துண்டாட நான் விடமாட்டேன்! எகிப்து ஒரு நாடு! அதை ஆள்பவர் ஒருவரே! அதுவும் கிளியோபாத்ரா ஒருத்திதான்! ஜூலியஸ் சீஸர்: தனித்தனி மாளிகையில் குடித்தனம் நடத்துங்கள்! நீங்களிருவரும் சேர்ந்தாண்டால், சைப்பிரஸ் தீவை உங்களுக்குச் சன்மானமாக அளிக்கிறேன்! போதினஸ்: சைப்பிரஸ் தீவா? ஒன்றும் விளையாத பன்றித் தீவு சைப்பிரஸா? எமக்கு வேண்டாம் அது! கிளியோபாத்ரா: [முகமலர்ச்சியுடன்] நல்ல நன்கொடை சீஸர்! சைப்பிரஸ் தீவில் நூற்றுக் கணக்கானத் திராட்சைத் தோட்டங்கள் உண்டே! ஒயின் உற்பத்தி செய்து எகிப்து ரோமாபுரிக்கு விற்கலாமே! ஜூலியஸ் சீஸர்: ஒயினை ஏன் விற்க வேண்டும்? ரோமாபுரி ஆண்டுக் கப்பத்துக்கு ஈடாக அனுப்பலாமே! டாலமி: கள்ள ராணி! கப்பம் என்றதும் களவு போன பொக்கிசம் நினைவுக்கு வருகிறது! எங்கே பொக்கிச நிதி? கப்பம் கட்டும் நிதியைக் களவாடிப் போனாயே! கொடு அதைச் சீஸர் கையில்! எங்கே ஒளித்து வைத்திருக்கிறாய், சொல்? கிளியோபாத்ரா: டாலமி! அது என் நிதி! தந்தையார் சாகும் போது எனக்கு அளித்தது! அது உன் நிதி என்று யார் சொன்னார்? கணக்கு விபரம் தெரியாத அறிவிலி நீ! வரவு செலவு புரியாத அறிவாளி நீ! என்னைத் துரத்திவிட்டு வரிப்பணத்தை வாங்கத் தவறியவன் நீ! அரசனாகக் காலம் கடத்திய நீதான் சீஸருக்குக் கப்பம் செலுத்த வேண்டும்! நாடு கடத்தப்பட்ட நான் ஏன் தர வேண்டும்? டாலமி: சீஸர் அவர்களே! உமது கப்பப் பணம் கிளியோபாத்ராவிடம் உள்ளது! அந்தக் கள்ளியிடம் பெற்றுக் கொள்ளுங்கள்! விடாதீர் அந்த வேடக்காரியை! எங்களிடம் பணம் கைவசமில்லை! கிளியோபாத்ரா: [கனிவுடன் சீஸரைப் பார்த்து] தளபதி! கப்ப நிதி நான் கட்டத் தயார், ஏகப் பெரும் பட்டத்து ராணியாய் நான் மகுடம் சூட்டப் பட்டால்! டாலமி அகற்றப்பட வேண்டும்! நான் தனி ராணியாக ஆசனத்தில் அமர வேண்டும்! சீஸரே! நாமிருவரும் ஒன்று சேர்ந்தால் உலகையே கைப்பற்றலாம்! எனது பெரியப்பா மகா அலெக்ஸாண்டர் கிழக்கே சென்று இந்தியாவைக் கைப்பற்றினார்! எனக்கு அந்தப் பாதை நன்கு தெரியும்! நாமிருவரும் சேர்ந்தால் நமது பராக்கிரமத்தால் சீனாவைக் கூடப் பிடித்து விடலாம்! ********************* []   அங்கம் -2 பாகம் -7   கிளிபாத்ரா ஓர் நாகப் பாம்பு! பார்க்க அழகாக இருக்கிறது! ஆனால் பக்கத்தில் நெருங்கினால் பாம்பு கொட்டி விடும்!”   டாலமி XIII   ஓ! உன்னத வாழ்வே! விலை மதிப்பிலா ஒளிக்கற்கள், வேண்டாம் எனக்கு! நீண்ட நாள் வாழ்ந்திட மட்டும் வேண்டி நிற்பவள் நான்! சாதாரணச் சமயத்தில் கூட இருபது முறை பாவையவள் சாவதைப் பார்த்தி ருக்கிறேன்! மரணமும் வலையை வீசி மாதின் மீது காதல் கொள்கிறது! மரணமும் மயங்கிக் கரம் பற்றும் புகழ்மாது!   வில்லியம் ஷேக்ஸ்பியர் [அண்டனி & கிளியோபாத்ரா]   நேரம், இடம்: அலெக்ஸாண்டிரியாவில் எகிப்த் மன்னர் அரண்மனை. ·பாரோ மன்னர் வரலாற்று ஓவியங்கள் உயர்ந்த சுவர்களை அலங்கரிக்கின்றன. பகல் வேளை. நாடகப் பாத்திரங்கள்: பால்ய அரசன் டாலமி, போதினஸ், தியோடோடஸ், அக்கில்லஸ், ஜூலியஸ் சீஸர், ரூபியோ, ரோமானியக் காவலர், எகிப்தின் படையினர், கிளியோபாத்ரா, கம்பள வணிகன், பணியாளி. கிளியோபாத்ரா: [கனிவுடன் சீஸரைப் பார்த்து] ரோமாபுரித் தளபதியாரே! கப்பநிதி கட்ட நான் தயார்! இரண்டு நிபந்தனைகள் அதற்கு! முதல் நிபந்தனை டாலமி அகற்றப்பட வேண்டும்! இரண்டாவது நான் எகிப்தின் தனி ராணியாக மகுடம் சூடி ஆசனத்தில் அமர வேண்டும்! அருமை நண்பரே! நாமிருவரும் ஒன்று சேர்ந்தால் இந்த உலகையே கைப்பற்றலாம்! எனது பெரியப்பா மகா அலெக்ஸாண்டர் கிழக்கே சென்று இந்தியாவைக் கைப்பற்றினார்! அந்தப் பாதை எனக்குத் தெரியும்! நாமிருவரும் சேர்ந்தால் நமது பராக்கிரமத்தால் சீனாவைக் கூடப் பிடித்து விடலாம்! டாலமி: [கோவென அழத் தொடங்குகிறான்] ஜெனரல் சீஸர்! என்னைக் காப்பாற்றுங்கள். எகிப்தை என்னிடமிருந்து பறிக்காதீர். நாடோடி நங்கைக்கு மகுடம் சூட்டாதீர். கிளியோபாத்ரா ஓர் நாகப் பாம்பு! பார்க்க அழகாக இருக்கிறது பாம்பு! ஆனால் பக்கத்தில் நெருங்கினால் பாம்பு கொட்டி விடும்! எச்சரிக்கை செய்கிறேன்! உமது உடைவாளை உருவி, என்னை ஒரு நொடியில் கீழே தள்ளி விட்டாள். அவள் சொல்லைக் கேட்டு என்னை அகற்றி விடாதீர்! எனக்கு நீங்கள்தான் அடைக்கலம் தரவேண்டும். ஜூலியஸ் சீஸர்: [டாலமியைத் தட்டிக் கொடுத்து] கவலைப் படாதே, டாலமி! உன் உயிருக்கு ஒரு கேடும் வராது! உன்னைக் காப்பது என் பொறுப்பு. நீயும், அவளும் சேர்ந்து வாழ வேண்டும் என்பது என் ஆசை! அதை நிறைவேற்றி வைப்பது என் கடமை! போதினஸ்: [கோபத்துடன்] ஜெனரல் சீஸர் அவர்களே! உண்மையைச் சொல்லுங்கள்! நீங்கள் வற்புறுத்திக் கேட்கும் பெருந்தொகை எங்கள் விடுதலை வாங்க யாம் உமக்கு அளிக்கும் விலைப்பணம்! தருகிறோம் உமக்கு! ஆனால் வாங்கிக் கொண்டு திரும்பிப் பார்க்காது செல்ல வேண்டும் நீங்கள்! எங்கள் அரசியல் பிரச்சனைகளில் தலையிட வேண்டாம்! எம் தோளிலிலிருந்து இறங்குவீர்! நீங்களும் உங்கள் படைகளும் பணத்தைப் பெற்றுக் கொண்டு உடனே வெளியேறுங்கள்! எகிப்த் நாடு எகிப்தியருக்கு உரிமை யானது! ஜூலியஸ் சீஸர்: [வெடித்துச் சிரிக்கிறார்] நல்ல வேண்டுகோள் போதினஸ்! எகிப்து ரோமாபுரியின் ஆக்கிரமிப்பு நாடு! எங்களை யாரும் விரட்ட முடியாது! கிளியோபாத்ரா: [கெஞ்சலாக] மேன்மைமிகு ஜெனரல் அவர்களே! நீங்கள் வெளியேறக் கூடாது! ரோமானியப் படை வெளியேறினால் நான் எகிப்தின் ராணியாக முடியாது! டாலமிக் கழுகுகள் என்னை உயிரோடு தின்றுவிடும்! உங்கள் பாதுகாப்பில்தான் நான் எகிப்தை ஆள முடியும்! அரண்மனையை விட்டு உங்கள் படையினர் நீங்கினாலும், நீங்கள் தங்கி யிருக்க வேண்டும்! ரூஃபியோ: [கொதிப்புடன்] போதினஸ்! வாயை மூடு! எகிப்த் நாடு எகிப்தியருக்குத்தான்! ஆனால் ரோமாபுரிப் படையன்று எகிப்தில் பல்லாண்டு காலம் உள்ளதை மறந்தீரா? எகிப்த் நாடு ரோமாபுரிக்குக் கீழிருப்பதை மறந்தீரா? யாமிதை விட்டு நீங்க மட்டோம்! மதிப்புடன் உரையாடி மதிப்பைப் பெறாமல் நாக்கு பிறழ்வதைக் காண்கிறோம்! எச்சரிக்கை செய்கிறேன்! அறிவோடு உரையாடுவீர்! சிறிய பாலகன் போல் பேசாதீர்! ஜூலியஸ் சீஸர்: [கனிவுடன் கிளியோபாத்ராவை அணுகி] கண்ணே, கிளியோபாத்ரா! உன்னை எகிப்துக்குப் பட்டத்து ராணியாக மகுடம் சூட வைப்பது என் பொறுப்பு! டாலமி இன்னும் பாலகனாக இருப்பது எமக்கு வருத்தமாக உள்ளது! நானிதைச் சற்றும் எதிர்பார்க்க வில்லை! மன்னர் டாலமி பொம்மை ராஜாவாக ஆசனத்தில் அமர, அமைச்சர் போதினஸ் உண்மை ராஜாவாக ஆள்வதை நான் விரும்பவில்லை! அக்கிலஸ்: [சினத்துடன்] ஜெனரல் அவர்களே! உமது தவறான கூற்றை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்! எமது மன்னர் டாலமியை ஆசனத்திலிருந்து நீக்க உமக்கு எந்த உரிமையுமில்லை! எமது விரோதி கிளியோபாத்ராவை எகிப்துக்கு ராணி ஆக்கவும் உமக்கு உரிமை யில்லை! ஒருதலைப்பட்ட உமது முயற்சி நாட்டில் குழப்பத்தை உண்டாக்கும்! தியோடோடஸ்: ஜெனரல் சீஸர் அவர்களே! எகிப்த் நாட்டுக்கு வருகை தந்த நீங்கள் எமக்குப் புதியவர்! எங்கள் நாகரீகம் அறியாதவர்! எங்கள் கலாச்சாரம் புரியாதவர்! யார் நாட்டை ஆளத்தகுதி உள்ளவர் என்பது எமக்குத்தான் தெரியும்! உமக்குத் தெரியாது! எகிப்தை ஒரு பெண்ணரசி ஆள்வது எனக்கு அறவே பிடிக்கவில்லை! காலை முதல் மாலை வரை கண்ணாடி முன்னின்று தனது வனப்பை எப்படி மிகையாக்குவது என்பதிலே காலம் களிப்பவர்! நாட்டைக் கவனிக்க பெண்ணரசிக்கு நேரம் ஏது? நினைப்பேது? கிளியோபாத்ராவை உயிரோடு நாடு கடத்தியது எமது தவறே! அவள் தற்போது உமது நிழலில் நின்று கொண்டு மன்னர் டால்மியின் ஆசனத்தைப் பிடுங்கப் பார்க்கிறாள்! கிளியோபாத்ரா: [கைவாளை தியோடோடஸ் கழுத்தருகில் நீட்ட, தியோடோடஸ் நடுங்குகிறார்] கிழட்டுக் குருவே! எமது உப்பைத் தின்று உமக்குத் திமிர் மிஞ்சி விட்டது! டாலமிக்கு கூட்டல், கழித்தலைத் தவிர, பெருக்கல், வகுத்தல் தெரியாது. பிரமிடில் ஒளிந்திருக்கும் வான சாஸ்திரம் தெரியாது! வானத்தில் பரிதிக்குப் பக்கம் எந்த கோள் சுற்றுகிறது என்பது தெரியாது. சூரிய கிரகணம் எப்படி வருகுது என்று அறிய மாட்டான்! பிரமிடை அவனுக்காகக் கட்டினாலும், பித்தகோரஸ் கோட்பாடு தெரியாத மடையன்! கிழட்டுக் குருவே! எனக்கு நீவீர் சொல்லிக் கொடுத்த எதுவும் டாலமியின் மண்டை ஒட்டுக்குள் ஏன் நுழைய வில்லை? எனக்குள்ள அறிவும், ஞானமும், திறனும் அவனுக்குக் கிடையாது! அவன் பொம்மை ராஜாவாக இருந்தால், உம்மைப் போன்ற அரசாங்க ஊழியருக்குக் கொண்டாட்டம்தான்! ஜூலியஸ் சீஸர்: [மிகவும் ஆச்சரியமடைந்து, கிளியோபாத்ராவின் கூந்தலைத் தடவி] மெச்சுகிறேன் கிளியோபாத்ரா! இருபது வயதுக் குமரிக்கு எத்தனை ஞானம் உள்ளது? பிரமிடின் அமைப்புக்கு வரைகணித மூலமான பித்தகோரஸ் கோட்பாடு உனக்குத் தெரியுமா? எனக்குக் கூடத் தெரியாதே! குருநாதரைப் படபட வென்று வெளுத்துக் காயப் போட்டு விட்டாயே! ஐயமின்றி எகிப்தை ஆளத் தகுதி பெற்ற பெண்ணரசி நீதான்! நீ ஒருத்திதான்! பாராட்டுகிறேன் உன்னை! எகிப்தின் பேரரசியாக வர வேண்டுமென உன்னை நீயே தயார் செய்து கொண்டது, என்னை வியப்பில் தள்ளுகிறது! உன்னைப் போலொரு ஞானப் பெண்ணை நான் எங்கும் கண்டதில்லை! நீயே எகிப்தைத் தனியாக ஆட்சி செய்வதை நான் விரும்புகிறேன்! உன்னை ஆசனத்தில் அமர்த்தி மகாராணியாக மகுடம் சூட்டிய பிறகுதான் நான் ரோமுக்கு மீளுவேன்! இது உறுதி! கிளியோபாத்ரா: [புன்னகையோடு சீஸரின் கன்னத்தைத் தடவி] என்னருமைத் தளபதி! நீங்கள்தான் மெய்யான ரோமாபுரித் தீரர்! என் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட நண்பர்! என்னருமை நண்பர்! நீங்கள் எகிப்தை விட்டு ஏன் ரோமுக்குப் போக வேண்டும்? இங்கே எமது அரண்மனை விருந்தினராகத் தங்கி சில காலம் இருக்க வேண்டும்! ஜூலியஸ் சீஸர்: என்னருமைக் கிளியோபாத்ரா! அது முடியாது! நான் ரோமாபுரிக்கு உடனே மீள வேண்டும்! கவலைப் படாதே! உன்னை எகிப்தின் ராணியாக ஆக்கிய பிறகுதான் செல்வேன். கிளியோபாத்ரா: நீங்கள் எகிப்தை விட்டு நீங்கினால், நான் நிரந்தர ராணியாக ஆட்சி செய்ய முடியாது! ஈதோ பாருங்கள் கழுகுகளை! கண்களில் கனல் பறக்கிறது! உங்கள் துணை அருகில் இல்லா விட்டால், என்னைக் கொன்று விடுவார்! நான் உங்களை விட்டுத் தனியாக எப்படி அரசாளுவேன்? டாலமி: [கோபத்துடன்] பார்த்தீரா பசப்பியை? குழைந்து, நெளிந்து, மெழுகாய் உருகி விட்ட பாவையை! தியோடோடஸ்: [சற்று மெதுவாக] மெழுகாய் உருகியது கிளியோபாத்ரா இல்லை! மகா வீரர் ஜூலியஸ் சீஸர்! சில வினாடிகளுக்கு முன்பு டாலமியும், கிளியோபாத்ராவும் ஒன்றாக ஆளப் போவதைக் கனவு கண்டார். சில வினாடிகளில் டாலமியை மறந்தார்! வாலிப மங்கை மீது வாஞ்சை வந்து விட்டது! சீஸர் சரியான ராஜ தந்திரி! சரியான அரசியில்வாதி! சரியான பச்சோந்தி! பாவையைக் கண்டதும் அவரது மோகக் கண்கள் திறந்து விட்டன! எகிப்த் ரோமா புரிக்கு அடிமை நாடு! ஆனால் சீஸர் கிளியோபாத்ராவின் அடிமை! இனிமேல் சீஸர் கிளியோபாத்ராவின் கைப் பொம்மைதான்! அக்கிலஸ்: [போதினஸ் காதுகளில் மெதுவாக] தெரியுமா உனக்கு! சீஸருக்குச் சென்ற விடமெல்லாம் காதலியர் உண்டு! ஆம் இப்ப்போது எகிப்தில் ஓர் ஆசைக் கிளி! இது எத்தனை நாட்களுக்கோ? போதினஸ்: [கோபத்துடன்] அக்கிலஸ்! அந்த காதல் பேச்சு உனக்குத் தேவை யில்லை! உனக்கு அறிவிருக்கு மானால், சீக்கிரம் சிறைப்படுத்து கிளியோபாத்ராவை! .. ஏன் தயங்குகிறாய்? போ கைப்பற்று அவளை! [அக்கிலஸ் உருவிய வாளோடு நகர்கிறான்] ரூபியோ: [கோபத்துடன் வழிமறைத்து] நில் அக்கிலஸ்! நகராதே! மகாராணி கிளியோபாத்ரா பக்கத்தில் அடிவைத்தால், உமது சிரம் அறுபட்டுக் கீழே உருண்டோடும்! அங்கேயே நில்! எகிப்தின் பெண்ணரசிக்கு ரோமாபுரிப் படையினர் பாதுகாப்பு அளிக்கிறோம்! தள்ளி விலகி நில்! … என்ன மடத்தனமான செயலுக்கு உடன்பட்டிருக்கிறாய்? கூடவே ஜெனரல் சீஸரையும் சிறைப்படுத்தப் போகிறீரா? [வெடித்துச் சிரிக்கிறான்] *********************   []     அங்கம் -2 பாகம் -8 தைபர் நதிக்கரை மீதுள்ள ரோமாபுரி எரிந்து உருகிடலாம்! சாம்ராஜி யத்தின் விரிந்த தோரண வளையம் கவிழ்ந்திடலாம்! நானாடும் அரங்கவெளி இங்குளது! பேரரசுகள் வெறுங் களிமண்! நம்மிருண்ட தாரணியும் மண்ணே! எதிர்த் திசையில் அதுவும் மனித ரெனக் கருதி, காட்டு விலங்குக்கு ஊட்டும் உணவு! ஆண்பெண் இருவர் சேர்ந்து புரியும் வாழ்வின் மகத்துவம் அதுவே!   வில்லியம் ஷேக்ஸ்பியர் [அண்டனி & கிளியோபாத்ரா]       நேரம், இடம்:    அலெக்ஸாண்டிரியாவில் எகிப்த் மன்னர் அரண்மனை. ·பாரோ மன்னர் வரலாற்று ஓவியங்கள் உயர்ந்த சுவர்களை அலங்கரிக்கின்றன. பகல் வேளை.   நாடகப் பாத்திரங்கள்:     பால்ய அரசன் டாலமி, போதினஸ், தியோடோடஸ், அக்கில்லஸ், ஜூலியஸ் சீஸர், ரூபியோ, ரோமானியக் காவலர், எகிப்தின் படையினர், கிளியோபாத்ரா, கம்பள வணிகன், பணியாளி.   ரூஃபியோ: [கோபத்துடன் வழிமறைத்து] நில் அக்கிலஸ்! நகராதே! மகாராணி கிளியோபாத்ரா பக்கத்தில் அடிவைத்தால், உமது சிரம் அறுபட்டுக் கீழே உருண்டோடும்! அங்கேயே நில்! எகிப்தின் பெண்ணரசிக்கு ரோமாபுரிப் படையினர் பாதுகாப்பு அளிக்கிறோம்! தள்ளி விலகி நில்! … என்ன மடத்தனமான செயலுக்கு உடன்பட்டிருக்கிறாய்? கூடவே ஜெனரல் சீஸரையும் சிறைப்படுத்தப் போகிறீரா? [வெடித்துச் சிரிக்கிறான்] போதினஸ்: [தயக்கத்துடன்] எங்கள் எதிரி கிளியோபாத்ரா மட்டுமே! அவரைக் கைது செய்து சிறையில் அடைப்போம்! ரோமாபுரியின் ஜெனரல் எங்கள் சிறப்பு விருந்தினர்! எங்கள் இனிய நண்பர்! எங்கள் மதிப்பிற்கும், துதிப்பிற்கும் உரிய ரோமாபுரித் தளபதி! ரூஃபியோ: [அழுத்தமாக] அதைப் போல கிளியோபாத்ரா ரோமாபுரியின் நண்பர்! ஜெனரல் சீஸர் எகிப்துக்குப் பேரரசியாக மகுடம் சூடப் போகும் மாண்புமிகு மாது! ரோமாபுரியின் மதிப்புக்கும் பாதுகாப்புக்கும் உரியவர்! அவரைச் சிறை செய்வது, சீஸரைச் சிறைப்படுத்தியதற்குச் சமம்! போதினஸ்: எங்களுக்கு ரோமானியர் அனைவரும் நண்பர்! ரோமானியருக்கு கிளியோபாத்ரா நண்பர்! ஆனால் கிளியோபாத்ரா எங்களுக்கு நண்பர் அல்லர்! பெரும் பகையாளி! இன்றைக்கு அவர் உங்கள் நேரடிப் பாதுகாப்பில் தப்பி வாழ்கிறார். ஆனால் அவளைக் கைது செய்ய யாம் என்றும் தயங்க மாட்டோம்! பிரிட்டானஸ்: நீங்கள் யாவரும் தற்போது சீஸரின் அரசியல் கைதிகள்! ஜூலியஸ் சீஸர்: [முகத்தில் முறுவலுடன்] ஓ! இல்லை!இல்லை!இல்லை! நீங்கள் அனைவரும் சீஸரின் விருந்தாளிகள். கிளியோபத்ரா: [ஆத்திரமோடு] ஜெனரல் அவர்களே! பிரிட்டானஸ் சொல்வதுதான் சரி! டாலமி, டாலமியின் குரு, டாலமியின் படை அதிபதி அத்தனை பேரும் மூர்க்கவாதிகள்! அவரைச் சிறையிலிட்டு என்ன செய்வீர்! அறுசுவை உண்டி அளித்து உடலைக் கொழுக்க வைக்கப் போகிறீரா? உங்கள் நிலையில் நானிருந்தால் அத்தனை தலைகளும் இப்போது அறுக்கப்பட்டுத் தரையில் உருண்டோடிக் கொண்டிருக்கும்! அவரை எல்லாம் நீங்கள் சிரச்சேதம் செய்யப் போவதில்லையா? ஜூலியஸ் சீஸர்: [சற்று அவளை உற்று நோக்கி] என்ன? உன் தமையன் பாலகன் டாலமியின் தலையைத் துண்டிக்கச் சொல்கிறாயா? கிளியோபாத்ரா: ஏன் துண்டிக்கக் கூடாது! வாய்ப்புக் கிடைத்தால் டாலமி என் தலையை வாளால் சீவி எறிய மாட்டானா? கேளுங்கள்! ..[டாலமியைப் பார்த்து] டாலமி! எல்லோர் முன்பாக உண்மையைச் சொல்! என்னைச் சிரச்சேதம் செய்யாமல் பிழைத்து வாழ விட்டுவிடுவாயா? டாலமி: [சற்று மிரட்சியுடன்] பாம்பும், பாவையும் என் பக்கத்தே தீண்ட வந்தால், பாம்பை விட்டுவிட்டு நான் பாவையைத்தான் முதலில் அடித்துக் கொல்வேன்! ஏன்! பெரியவனானால் நானே அவள் தலையைத் வாளால் துண்டிக்கவும் தயங்க மாட்டேன்! கிளியோபாத்ரா: பார்த்தீரா? ஆல கால விஷம் கக்கும் டாலமிப் பாலகனை! ஜூலியஸ் சீஸர்: [தீர்மானமாக] டாலமி! போதினஸ்! தியோடோடஸ்! நீங்கள் யாவரும் போகலாம். விடுதலை உங்களுக்கு! போகும் போது உங்கள் படைகளையும் கூட்டிச் செல்லுங்கள். போதினஸ்: [தயக்கமுடன்] ஏன் நாங்கள் போக வேண்டும்! எங்கள் அரண்மனை யிது! போக வேண்டியது கிளியோபாத்ரா! ஜூலியஸ் சீஸர்: [சற்று கடுமையாக] போதினஸ்! கிளியோபாத்ரா எகிப்தின் பேரரசியாகப் போகிறவள்! அவள் கையில் பிடிபட்டு உங்கள் தலையை யிழக்க விரும்புகிறீரா? அல்லது உங்கள் தலையை உடம்பில் ஒட்டியபடித் தூக்கித் தப்பிச் செல்ல விரும்புகிறீரா? உயிர் பிழைத்துக் கொள்ள ஒரு வாய்ப்பை அளிக்கிறேன் உமக்கு! ஒப்புக் கொண்டு உடனே வெளியேறுங்கள். அல்லது மறுத்துக் கொண்டு கியோபாத்ராவிடம் மாட்டிக் கொள்ளுங்கள். உங்கள் உண்மைத் தோழர்கள் வெளியே தெருவிலும் உள்ளார்! அதுதான் உங்கள் உலகம்! வெளியேறுவீர் சீக்கிரம்! தியோடோடஸ்: மேன்மைமிகு சீஸர் அவர்களே! மறந்து விட்டீரா, உமது ஆருயிரைக் காப்பாற்றியவர் யாமென்று? ஜூலியஸ் சீஸர்: என்ன? என்ன? புதிராக உள்ளதே! என்னுயிரைக் காப்பாற்றியவர் நீங்களா? எங்கே எப்போது என்னுயிரைக் காப்பாற்றி யிருக்கிறீர்? அதுவும் எனக்குத் தெரியாமல்! வியப்பாக உள்ளதே! தியோடோடஸ்: ஆம், அது உண்மைதான். உங்கள் இனிய உயிருக்குப் பாதுகாப்பு! உங்கள் மகத்தான வெற்றிகளுக்குப் பாதுகாப்பு! உங்கள் பொன்மயமான எதிர்காலத்துக்குப் பாதுகாப்பு! அந்த மூன்றையும் நீங்கள் அறியாமலே பாதுகாத்தோம். போதினஸ்: மேன்மைமிகு சீஸர் அவர்களே! அதை நிரூபிக்க நானொரு சாட்சியை வரவழைக்கப் போகிறேன். [எகிப்தியர் படையாட்களில் ஒருவரைச் சுட்டிக் காட்டி] அதோ! அங்கே நிற்கிறார், லூசியஸ் ஸெப்டிமியஸ். அவரது தலைமையில்தான் அப்பணி நிறைவேறியது. [லூசியஸை நோக்கி] லூசியஸ்! நான் அழைப்பது உனக்குக் கேட்கிறதா? சீஸர் முன்வந்து நீ நடந்ததைச் சொல்வாயா? [நல்ல உடற்கட்டும், நிமிர்ந்த பார்வையும் கொண்ட 40 வயது வாலிபன், ரோமன் உடை அணிந்தவன் சீஸர் முன் வருகிறான்.] போதினஸ்: உண்மையைச் சொல், லூசியஸ்! ஜெனரல் சீஸர் எகிப்துக்கு ஏன் வந்தார்? தன் பகைவன் ரோமாபுரி பாம்ப்பியை தேடிப் பிடிக்க வந்தாரில்லியா? எகிப்தியர் நாம் என்ன செய்தோம்? பாம்ப்பியை எகிப்தில் ஒளித்து வைத்தோமா? லூசியஸ்: [அழுத்தமாக] ஜெனரல் சீஸர் அவர்களே! பாம்ப்பியின் காற்தடம் எகிப்தின் கரையில் பட்டவுடன், அவரது தலையை என் வாளால் வெட்டித் துண்டித்து விட்டவன் நான்! தியோடோடஸ்: [ஆணித்தரமாக] அவரது மனைவி, பிள்ளை இருவர் முன்னிலையில் சிரச்சேதம் செய்யப் பட்டான் பாம்ப்பி! நினைவிருக்கட்டும் ஜெனரல் சீஸர்! கப்பலை விட்டுக் கரையில் கால் வைக்கும் போது அவரிருவரும் கண்வலிக்கக் கண்ட காட்சி! நீங்கள் பலிவாங்கக் காத்திருந்ததை, நாங்கள் செய்தோம். ரோமாபுரி ஜெனரலுக்காக, எகிப்தியர் செய்த நன்றிக் கொலை! உங்கள் அன்பைக் கவர நாங்கள் செய்வத நல்ல காரியம், பாம்ப்பியைக் கொன்றது! ஜூலியஸ் சீஸர்: [மனவேதனை யுற்று, தடுமாறி அங்குமிங்கும் நடந்து] பாவிக் கொலைகாரர்களா! நீவீர் புரிந்தது படுகொலை! நன்றிக் கொலையா அது? நரபலிக் கொலை! ரோமாபுரித் தளபதி பாம்ப்பி வீரத்தில் எனக்கு நேரானவன்! போரிடுவதில் எனக்கு நிகரானவன்! போரிட்டுக் கொல்லாமல் வீரனை படுகொலை செய்த நீவீர் அனைவரும் கொலைகாரர்கள்! குற்றவாளிகள்! உம்மைச் சும்மா விட்டுவிட மாட்டேன்! பகைவனாயினும் ஒரு ரோமனைப் போரிடாமல் கொல்வது, என்னெறிப்படி ஒரு படுகொலை! யாரிந்த சதியைத் திட்டமிட்டது? ஏ! லூசியஸ்! யாருனக்கு ஆணை யிட்டது? யாருன்னை அனுப்பிக் கொலை செய்யத் தூண்டியது? என் மனத்தைத் துடிக்கச் செய்த அந்த பயங்கரவாதி யார்? .. யார்? …யார்? போதினஸ்: துணிச்சலான அச்செயல் ஜெனரல் சீஸருக்காகச் செய்யப் பட்டது! அதைத் திட்டமிட்டவன் நான்தான்! நினைத்ததை முடித்த நான் அதற்குப் பெருமைப் படுகிறேன்! பயங்கரத் தளபதி பாம்ப்பியைக் கொன்றதற்குச் சான்றுகள் இன்னும் உள. [அக்கில்லஸைப் பார்த்து] அக்கில்லஸ்! கொண்டுவா அடுத்த குடத்தை! ஜெனரல் சீஸருக்குக் காட்டு அடுத்த சான்றை! [அக்கில்லஸ் முன்வர இரண்டு அடிமைகள் மூடிய ஒரு பானையைத் தூக்கிக் கொண்டு வந்து தரையில் வைக்கிறார்கள்.] அக்கில்லஸ்: [பானை மூடியைத் திறந்து] ஜெனரல் சீஸர் அவர்களே! இதோ, பாம்ப்பியின் தலை! துண்டிக்கப் பட்ட தலை! பார்க்க விரும்புகிறீரா? உங்கள் பகைவனை ஒழித்து விட்டோம்! [அடிமைகள் மூடியைத் திறந்து தலையை எடுக்க முனைகிறார்கள்] ஜூலியஸ் சீஸர்: [மனமுடைந்து, அலறிக் கொண்டு] கொலைகாரரே! நிறுத்துங்கள்! நானதைக் காண விரும்பவில்லை! அயோக்கியர்களே! முரடர்களே! பாம்ப்பி என்னும் ரோமாபுரி வீரன் என் பகையாளி என்று மட்டுமா நினைத்தீர்? அவன் என் மகள் ஜூலியாவை மணந்தவன். என் மருமகன் அவன்! காலமான பாம்ப்பியின் முதல் மனைவி எனது ஒரே மகள் ஜூலியா! அவளும் என்றோ காலமாகி விட்டாள்! கடவுளே! என்ன கொடுமை யிது? ஓ! பாம்ப்பி! நீ இப்படியா இந்த மூர்க்கர் கையில் அறுபட்டுச் சாவாய்? அக்கில்லஸ்: [சீஸரை அணுகி, வருத்தமுடன்] இதோ பாம்ப்பியின் அடையாள மோதிரம்! ஜூலியஸ் சீஸர்: [சோகத்துடன் கையில் வாங்கிக் கொண்டு அழுகிறார்] இந்த மோதிரத்தைப் பாம்ப்பியின் கைவிரலில் முதன்முதல் போட்டவள் என்னருமைப் புதல்வி ஜூலியா! ரோமாபுரித் தளபதி கை மோதிரமிது! பரிசும், பாராட்டும் பெற வேண்டிய மோதிரமிது! கொலைகாரர் களவாடினாலும் விலை மதிப்பில்லா மோதிரமிது! … யாரங்கே! ரூபியோ! பிரிட்டானஸ்! விலங்கோடு வாருங்கள்! கொலைகாரர் யாவரையும் கைது செய்யுங்கள்! முதலில் போதினஸை இன்றே சிரச்சேதம் செய்ய வேண்டும்! டாலமியைக் கைது செய்து சிறையில் தள்ளுங்கள்! அரண்மனை அனைத்தும் ரோமானியக் காவலரை நிறுத்துங்கள்! கிளியோபாத்ராவுக்கு முழுப் பாதுகாப்பு அளித்திடுங்கள்! *********************   []   அங்கம் -2 பாகம் -9 “ஓவ்வோர் அங்கமும் தன்னிடமுள்ள முழுமையற்ற தன்மையை நீக்கிப் பூர்த்தியாகத் தனது முழுமையை நோக்கிப் பிணைந்திட விரைந்து கொண்டு செல்கிறது!” லியனார்டோ டவின்ஸி, ரோமானிய ஓவிய மேதை (1452-1519)   “கிளியோபாத்ரா பல்வேறு நாட்டுத் தூதர்களோடு அவரவர் மொழியிலே பேசித்தான் பதிலளிப்பாள். சிறுபான்மையான சில காட்டுமிராண்டி நாட்டு அரசரோடு உறையாற்றும் போது மட்டும், அம்மொழி விளக்குநரின் உதவியை நாடுவாள். எதியோப்பியன், ஹீபுரூஸ், அரேபியன், சிரியன், பார்த்தியன், டிரோகிளோடைட்ஸ், மீடேஸ் [Troglodytes, Medes] மற்றும் சில தேசத்துத் தூதருடன் பேசும் போது அவரவர் சொந்த மொழியில் பேசித் தன் நண்பராக்கிக் கொள்வார். அவளுக்கு முன்னாண்ட எகிப்திய அரசருக்கு எகிப்திய மொழியில் உரையாடும் அறிவு கூட கிடையாது! அவர்களில் பலர் மாஸிடோனியா மொழியைக் கூடப் பேச விருப்பமின்றிப் புறக்கணித்தவர்! புளூடார்க், கிரேக்க வரலாற்றுப் பதிவாளர் [Plutarch (46-120) A.D.]   “சில மாதர் கொண்டுள்ள ஆத்மாவில் சீஸரின் ஆங்கார உணர்ச்சியை நீ காண முடியும்.” ஆர்டிமிஸியா ஜென்டிலெஷி ரோமானிய ஓவிய மாது (1593-1653)   “பேராசைக் குணம் கொண்டவரையே முடிவில் கொல்கிறது!” டால்முட் புனிதநூல் [The Talmud: Yomah 86 b]   “அளவற்ற ஆசை, பேராசை, காமம் அனைத்தும் பைத்தியக் குணத்தின் கார மசாலாக்கள்.” பெனிடிக் ஸ்பைனோஸா, ஒழுக்கவியல் (1632-1677) “பேராசைத்தனமே ஒரு துர்குணம் ஆயினும், அதுவே நன்னெறிக்கும் தாயாக உள்ளது.” குயின்டில்லியன் ரோமானியக் கல்வி மேதை (கி.மு.35-கி.பி.95)   நேரம், இடம்: அலெக்ஸாண்டிரியாவில் எகிப்த் மன்னர் அரண்மனை. ·பாரோ மன்னர் வரலாற்று ஓவியங்கள் உயர்ந்த சுவர்களை அலங்கரிக்கின்றன. பகல் வேளை. நாடகப் பாத்திரங்கள்: பால்ய அரசன் டாலமி, போதினஸ், தியோடோடஸ், அக்கில்லஸ், ஜூலியஸ் சீஸர், ரூபியோ, ரோமானியக் காவலர், எகிப்தின் படையினர், கிளியோபாத்ரா, கம்பள வணிகன், பணியாளி. காட்சி அமைப்பு: பதினைந்து வயது பால்ய அரசன் டாலமி, [கிளியோபட்ராவின் தமையன் (கணவன்)] பல படிகள் உள்ள பீடத்தின் உயரத்தில் பாதுகாப்பாளர் போதினஸ் அருகில் வர அரச ஆசனத்தை நோக்கிப் படிகளில் ஏறுகிறான். டாலமியின் பயிற்சியாளர் தியோடோடஸ் வலது புறம் படி ஏறுகிறார். படைத் தளபதி அக்கில்லஸ் இடது புறத்தில் இருக்கிறார். மற்ற அரண்மனை அதிகாரிகள், காவலர் சற்று தூரத்தில் கூடி யுள்ளனர். அனைவரும் எழுந்து நின்று மன்னர் டாலமிக்கு வணக்கம் தெரிவித்த பிறகு, அரசன் அமர்ந்த பின் தாமும் உட்காருகின்றனர். சிறிது நேரம் கழித்து ஆங்கே ஜூலியஸ் சீஸர், அவரது அரசாங்கச் செயலாளர் பிரிட்டானஸ் மற்றும் ரோமானியக் காவலர் சிலரும் நுழைகிறார். டாலமியிடம் சீஸர் கப்ப நிதி பற்றிப் பேசும் போது கம்பள வணிகன் ஒருவன் விலை உயர்ந்த கம்பளத்துடன் அவர் முன்பு வருகிறான். கம்பளச் சுருளிலிருந்து எழுந்த கிளியோபாத்ரா, தன்னை எகிப்துக்கு ராணியாக்க சீஸரை வேண்டுகிறாள். சீஸர் கிளியோபத்ராவின் அறிவையும், திறமையையும் மெச்சி அவளை ராணியாக்க ஒப்புக் கொள்கிறார். சீஸரின் பகைவனும், மருமகனுமாகிய ரோமாபுரித் தளபதி பாம்ப்பியை டாலமியின் படையினர் இரகசியமாகக் கொன்றதை அறிந்து சீஸர் வேதனைப் படுகிறார்.  அக்கில்லஸ்: [சீஸரை அணுகி வருத்தமுடன்] இதோ பாம்ப்பியின் அடையாள மோதிரம்! ஜூலியஸ் சீஸர்: [சோகத்துடன் கையில் வாங்கிக் கொண்டு அழுகிறார்] இந்த மோதிரத்தைப் பாம்ப்பியின் கைவிரலில் முதன்முதல் போட்டவள் என்னருமைப் புதல்வி ஜூலியா! ரோமாபுரித் தளபதி கை மோதிரமிது! பரிசும், பாராட்டும் பெற வேண்டிய மோதிரமிது! கொலைகாரர் களவாடினாலும் விலை மதிப்பில்லா மோதிரமிது! … யாரங்கே! ரூஃபியோ! விலங்கோடு வா! கொலைகாரர் யாவரையும் கைது செய்! முதலில் போதினஸை இன்றே சிரச்சேதம் செய்ய வேண்டும்! டாலமியைக் கைது செய்து சிறையில் தள்ளு! அரண்மனை அனைத்தும் ரோமானியக் காவலரை நிறுத்து! கிளியோபாத்ராவுக்கு மட்டும் முழுப் பாதுகாப்பு அளித்திடு! கிளியோபாத்ரா: [மனமுடைந்து சீஸரை அணுகிக் கண்ணீரைத் தன்னுடையால் துடைத்து விட்டு] என்ன அதிர்ச்சியான சேதி! என் நெஞ்சமும் கொதிக்கிறது! உங்கள் மருமகன் ரோமாபுரித் தளபதியைக் கொன்றவர் மூர்க்கவாதிகள்! உங்கள் அருமைப் புதல்வியின் கணவரைக் கொன்றவர் கொடூரவாதிகள்! எப்படித் தாங்கிக் கொள்ளும் உங்கள் நெஞ்சம்? எகிப்திய மாதான என்னால் கூடத் தாங்கிக் கொள்ள முடியவில்லை! எப்படி உங்களுக்கு நான் ஆறுதல் சொல்ல முடியும்? உங்களுக்கு அமைதி உண்டாக்க என்னிடம் உருக்கமான வார்த்தைகளில்லை! உங்கள் குடும்பத் துக்கத்தில் நானும் பங்கு கொள்கிறேன்! ஜூலியஸ் சீஸர்: [கிளியோபாத்ராவை அணைத்துக் கொள்கிறார்] நன்றி கிளியோபாத்ரா! என் கண்களில் கொட்ட வேண்டிய கண்ணீர் மழை, அருவிபோல் உன் கண்களில் பெய்கிறது! உன் பாச உணர்ச்சி என்னை நெகிழச் செய்கிறது. [போதினஸைப் பார்த்து சினத்துடன்] மூர்க்கனே! ரோமாபுரிக்கே நீ தீ வைத்து விட்டாய்! முரடனே! ரோமுக்கும், எகிப்துக்கும் தீராப் பகைமையை வளர்த்து விட்டாய்! மூடனே! ரோமாபுரித் தளபதி வீர மரணம் அடையாது, அடிமை நாட்டுப் பொடியன் ஒருவனால் கொல்லப் பட்டான் என்னும் செய்தி ரோமாபுரியில் பெரும் கொந்தளிப்பை உண்டாக்கப் போகிறது! நீங்கள் ரகசியமாய்ப் பாம்ப்பியைக் கொன்றது அவருக்குத் தெரியாது! என் ஆணைப்படி பாம்ப்பியை உங்கள் மூலம் பலிவாங்கிக் கொண்டேன் என்று ரோமானியர் கோபத்துக்கு ஆளாகி விட்டேன். என் மருமகனைக் கொன்றது மில்லாமல் என்னைப் பிறர் வெறுப்பதற்குக் காரணமானீர்! என் பகைவர் என்னை ஒழித்துக் கட்ட முனைவதற்கும் வழி வகுத்தீர்! போதினஸ்: உங்கள் பகைவரை ஒழித்த எங்களைப் போற்றுவதற்குப் பதிலாக நீங்கள் தூற்றுகிறீர்! செய்நன்றி மறந்தீர்! பலிவாங்கும் பணியை நீங்கள் புரிந்தால் என்ன, நாங்கள் புரிந்தால் என்ன? ஒரே முடிவு தானே நிகழ்ந்தது! பாம்ப்பியின் மரணம்! ஜூலியஸ் சீஸர்: ஒரே முடிவென்றாலும் ஆயுதமற்ற ரோமானியனைக் கொன்றது குற்றம்! அதுவும் ஆக்கிரமிப்பு நாட்டான் ஆதிக்க நாட்டானைக் கொன்றது முன்னதை விடப் பெருங்குற்றம்! பாம்ப்பி எனது பூர்வீக நண்பன்! என்மகளை மணந்தவன். என் மருமகன்! ஈருபத்து ஆண்டுகளாய் ரோமாபுரியின் மாவீரன் எனப் பெயரெடுத்தவன் பாம்ப்பி! முப்பது ஆண்டுகளாய் மாபெரும் போர்களில் வெற்றிமாலை சூடியவன் பாம்ப்பி. அவன் பின்னால் நின்று ஒரு கோழை வீழ்த்தியது மாபெரும் கொடூரத்தனம்! [லூசியஸைப் பார்த்து] …. ஒழிந்துபோ! என்முன் நிற்காதே! அனைவரும் வெளியே செல்லுங்கள். [டாலமி, போதினஸ், அக்கிலஸ் அனைவரும் ரோமானியக் காவலர் பின்தொடர வெளியேறுகிறார்] ரூஃபியோ: தளபதி அவர்களே! குற்றவாளிகளை எப்படித் தண்டிக்காமல் விடுவது? அப்படியே தப்பிச் செல்ல விட்டுவிட்டால், ரோமாபுரி மாந்தர் உங்கள் மீது வெறுப்புக் கொள்வார்! அதை நாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. ரோமாபுரின் சட்டப்படிக் கொலைகாரர் தண்டிக்கப்பட வேண்டும்! ஜூலியஸ் சீஸர்: [கோபத்துடன்] போதினஸைச் சிரச்சேதம் செய்! அக்கிலஸைச் சிறையிடு! டாலமியை நாடு கடத்து! ரூஃபியோ: அப்படிச் செய்ய எனக்கு விருப்பமில்லை. யாரையும் நான் சிறைப்படுத்தப் போவதில்லை. அவரைச் சிரச்சேதம் செய்யப் போகிறேன். [சீஸருக்கு வணக்கமிட்டு வெளியே செல்கிறான்] கிளியோபாத்ரா: [சீஸரை நெருங்கிக் கனிவுடன் கன்னத்தைத் தடவி] என் கனவு பலித்தது! ஒரு கணத்திலே எகிப்தின் பட்டத்து ராணியாக என்னை ஆக்கி விட்ட உமது திறமையைப் பாராட்டுகிறேன். அதற்கு ஆயிரம் முத்தங்கள் பரிசு! [சீஸரை மீண்டும், மீண்டும் முத்தமிட்டு அணைத்துக் கொள்கிறாள்] … ஆனால் ஒரு வேண்டுகோள். டாலமியை நீங்கள் அவிழ்த்துவிடக் கூடாது! அந்தக் காளங் கன்றை வெளியே அலைய விடக் கூடாது! எனக்கெதிராக படை திரட்டுவான்! டாலமியின் கால்நிழல் எகிப்தில் மீண்டும் ஊர்ந்து செல்லக் கூடாது! ஜூலியஸ் சீஸர்: டாலமியை என்ன செய்ய வேண்டும் என்பது பிரிட்டானஸ் ஒருவனுக்குத்தான் தெரியும்! பிரிட்டானஸ்! டாலமியைப் பின்பற்று! [பிரிட்டானஸ் டாலமியைப் பின்தொடர்கிறான்] [பரிவுடன் கிளியோபாத்ராவை நோக்கி] கண்ணே, கிளியோபாத்ரா! உனக்கும் நான் தக்க தண்டனை தர வேண்டும்! சதிகாரன் டாலமியின் மனைவி நீ! கொலைகாரன் டாலமியின் தமக்கை நீ! உன்னை என்ன செய்ய வேண்டுமென்று நீயே சொல்லிவிடு! கிளியோபாத்ரா: [சற்று சினத்துடன்] பாலை வனத்துக்கு என்னைத் துரத்திய டாலமி என் கணவன் அல்லன்! கூடப் பிறந்த தமையனும் அல்லன்! எகிப்தை ஆள்பவரும், அவரது மனைவியும் ·பாரோ மன்னரின் பரம்பரையாக இருக்க வேண்டும் என்பது பூர்வீக விதி! என்னை விலக்கி வைத்து விரட்டியன் என் கணவன் என்பது என்றோ முறிந்து விட்டது! நானிப்போது மணமாகாத ஒரு தனி மாது! எகிப்தின் ராணியாகிய பிறகு மறுமணம் செய்து கொள்வேன்! டாலமி தமக்கையான எனக்கு நானே தண்டனை கொடுத்துக் கொள்கிறேன்! [நடந்து போய் டாலமி விட்டுச் சென்ற அரச ஆசனத்தில் அமர்கிறாள்] மகாவீரர் சீஸர் அவர்களே! நீங்கள் ரோமாபுரிக்குப் போகும் முன்பு, நான்தான் எகிப்தின் ஏகபோக ராணி என்று எனக்குப் பட்டம் சூடி உலகுக்கு அறிவிக்க வேண்டும். ஜூலியஸ் சீஸர்: [மகிழ்ச்சியுடன் நோக்கி] அப்படியே செய்கிறேன், கண்மணி கிளியோபாத்ரா! உனக்கு மகுடம் சூட்டிய பிறகுதான் நான் ரோமாபுரிக்குச் செல்வேன். அது மட்டும் உறுதி! …. ஆமாம், பட்டத்து ராணியாக முடி சூடிய பிறகு, யாரை நீ மணந்து கொள்ளப் போகிறாய்? யாரந்த அதிர்ஷ்டசாலி? நான் தெரிந்து கொள்ளலாமா? கிளியோபாத்ரா: [எழுந்து நின்று தன்னைச் சிங்காரித்துக் கொண்டு] நான் வரப் போகும் கணவரைத் தேர்ந்தெடுத்து விட்டேன்! அவரொரு மாவீரர்! யாரென்று உமக்குச் சொல்ல மாட்டேன்! நீங்களே அந்த திருமணத்தில் பங்கெடுத்து எம்மைப் பாராட்டுவீர்! என்னை நீங்கள் ராணி ஆக்கியதற்கு முதலில் நான், உமக்கு மாபெரும் பரிசை அளிக்கப் போகிறேன்! ஜூலியஸ் சீஸர்: [கிளியோபாத்ராவின் அருகில் அமர்ந்து] என்ன வெகுமதி எனக்கு அளிக்கப் போகிறாய்? சொல்ல மாட்டாயா கிளியோபாத்ரா? யாரந்த மாவீரன்? கிளியோபாத்ரா: உமது வெகுமதி என்ன என்பது ரகசியம். அதை நான் உமக்குச் சொல்லப் போவதில்லை! அவை எல்லாம் சொல்லித் தெரிவதில்லை! நீங்களே கண்டு கொள்வீர்! ஜூலியஸ் சீஸர்: [கனிவுடன் நெருங்கி] முதலில் நான் கேட்கும் பரிசை நீ கொடுப்பாயா? கிளியோபாத்ரா: [சீஸரின் மார்பில் சாய்ந்து காதை வைத்து] மகாவீரர் சீஸரின் நெஞ்சம் ஏனிப்படிப் போர் முரசம் அடிக்கிறது? உமது மார்புத் துடிப்புக்கள் எனது மார்பில் ஏனிப்படித் தாவி வருகின்றன? உங்கள் கைகள் ஏன் நடுங்குகின்றன? மங்கை எவளும் உம்மருகில் அமர்ந்ததில்லையா? என்ன? என்னவாயிற்று? உங்கள் தொடை ஆடுகிறதே! உடம்பு முழுதும் நடுங்கிறதே! கண்ணிமைகள் ஏன் மூடுகின்றன? நில நடுக்கம் போல் உடல் நடுக்க மாகிறதே! [கவலைப் பட்டு சீஸரைப் பிடித்துக் கொள்கிறாள்] [கைகள் நழுவ நாற்காலியிலிருந்து சரிந்து சீஸர் தரையில் விழுகிறார்! கண்கள் மூடிப் போய் கைகால்கள் வெட்டி வெட்டி யிழுக்கின்றன. கிளியோபத்ரா எழுந்து மணியை அடித்து சேடிகளை விளிக்கிறாள். சில ரோமானிய வீரர்களும், கிளியோபாத்ராவின் சேடிகளும் ஓடி வருகிறார்கள்.] ரோமானியப் பாதுகாவலன்: [தயங்கிக் கொண்டு] மகாராணி! .. சீஸருக்கு .. காக்காய் வலிப்பு! [ஓடிச் சென்று ஒரு பெட்டியிலிருந்து இரும்புத் துண்டை எடுத்து வந்து சீஸரின் வாயைப் பிளந்து பற்களுக்கு இடையே வைக்கிறான். மெதுவாக சீஸரின் உடற்துடிப்பு நிற்கிறது!] கிளியோபாத்ரா: [கவலையுடன் கண்ணீர் பொங்க] மகாவீரர் சீஸருக்கு இழுப்பு நோயா? [சூரியக் கடவுளின் முன்னின்று] சூரியக் கடவுளே! உன்னை வணங்குகிறேன்! ஜூலியஸ் சீஸரைக் காப்பாற்று! எனக்காகவும், எகிப்துக்காகவும் அவர் உயிருடன் வாழ வேண்டும். நீண்ட நாள் வாழ வேண்டும். அவருக்கு எந்த ஆபத்தும் வரக் கூடாது. … [ரோமானியரை விளித்து] சீஸரை விருந்தினர் அறைப் படுக்கையில் கிடத்துங்கள். [சேடிகளைப் பார்த்து] அரண்மனை மருத்துவரை அழைத்து வாருங்கள்! [ரோமானியரைப் பார்த்து] உங்கள் இராணுவ மருத்துவரைக் கூட்டி வாருங்கள்! உம், சீக்கிரம்! … [ரோமானியர் சீஸரை மெதுவாகத் தூக்கிச் செல்கிறார்கள். சிலர் மருத்துவரை அழைத்துவரச் செல்கிறார்] *********************   []   அங்கம் -2 பாகம் -10 “எனது மரணத்துக்கு நான் மணமகன்! காதலியின் மெத்தைக்கு ஆசைப்படுவது போல் நான் மரணத்தை நோக்கி விரைகிறேன்.” …  (கிளியோபாத்ரா) “எல்லாவிதப் பயங்கரமான அதிசயச் சம்பவங்களை வரவேற்கிறோம்! ஆனால் ஆறுதல் மொழிகளை அறவே வெறுப்போம்.” வில்லியம் ஷேக்ஸ்பியர் [அண்டனி & கிளியோபாத்ரா]   “துக்கமுற நான் எந்த தளத்தையும் விட்டு வைக்க வில்லை! அதற்கென எந்த அறையும் எனக்கில்லை! போகும் பாதையில் வேதனையும், பேரிழப்புகளும் எனக்காகக் காத்திருப்பதை நான் முன்பே எதிர்பார்த்திலேன்.” கிளாடிஸ் லாலெர் [Gladys Lawler (Age: 93)]   “உனது கப்பல் நுழைவதற்கு நீ முதலில் துறைமுகம் ஒன்றைக் கட்ட வேண்டும்.” கே அல்லென்பாக் [Kay Allenbaugh, Author of Chocolate for a Woman’s Soul]   “இடையூறுகள் என்னை ஒருபோதும் நசுக்குவதில்லை. ஒவ்வோர் இடையூறும் தீர்வு காண்பதற்கு சவால் விடுகிறது. எவன் ஒருவன் விண்மீன் ஒன்றின் மீது கண்வைத்து விட்டானோ, அவன் அந்தக் குறிக்கோளிலிருந்து என்றும் விட்டு விலகுவதில்லை.” லியனார்டோ டவின்ஸி, ரோமானிய ஓவிய மேதை (1452-1519)   “நம்மில் பலருக்குப் பெருத்த ஏமாற்றமாவது, ஒருவர் குறிக்கோளை உயரத்தில் வைத்து விட்டு, முடிவில் அவர் குறைவாகச் சாதிப்பதிலில்லை! குறிக்கோளைத் தணிவாக வைத்து, அதை ஒருவர் வெற்றிகரமாகச் செய்து காட்டுவதுதான்.” மைக்கேலாஞ்சலோ ரோமானிய ஓவிய மேதை (1475-1564)   நேரம், இடம்: அலெக்ஸாண்டிரியாவில் எகிப்த் மன்னர் அரண்மனை. ·பாரோ மன்னர் வரலாற்று ஓவியங்கள் உயர்ந்த சுவர்களை அலங்கரிக்கின்றன. பகல் வேளை. நாடகப் பாத்திரங்கள்: ஜூலியஸ் சீஸர், மெய்க்காப்பாளி, கிளியோபாத்ரா, சேடியர். காட்சி அமைப்பு: கிளியோபாத்ரா, டாலமியை அகற்றி விட்டுத் தன்னை எகிப்துக்கு ராணியாக்க சீஸரை வேண்டுகிறாள். சீஸர் கிளியோபத்ராவின் அறிவையும், திறமையையும் மெச்சி அவளை ராணியாக்க ஒப்புக் கொள்கிறார். சீஸரின் பகைவனும், மருமகனுமாகிய ரோமாபுரித் தளபதி பாம்ப்பியை டாலமியின் படையினர் இரகசியமாகக் கொன்றதை அறிந்து சீஸர் வேதனைப் பட்டுக் கோபம் அடைகிறார். டாலமியும் அவரது ஆலோசகரும் அதற்குத் தண்டனை அடைகிறார். மனம் மகிழ்ந்து, கிளியோபாத்ரா தன் உடற் கவர்ச்சியால் வசீகரிக்கையில் சீஸர் காக்காவலிப்பு நோயால் தாக்கப்பட்டு, துடிப்புடன் தரையில் விழுகிறார். மருத்துவர் பணிக்குப் பிறகு சீஸர் படுக்கையில் புத்துயிர் பெற்று எழுந்து அமர்கிறார். கிளியோபாத்ரா: [பக்கத்தில் அமர்ந்து கிளியோபாத்ரா பரிவுடன் சீஸரை நோக்கி] நேற்றிரவு முழுவதும் எனக்குத் தூக்கம் வரவில்லை! நான் சூரியக் கடவுளை வேண்டினேன்! உடல்நலம் பெற்று நீங்கள் உயிர்த்தெழ வேண்டுமென்று! நீங்கள் ஆழ்ந்து தூங்கினீர்களா? உங்களுக்குப் பாதகம் ஏதாவது நேர்ந்தால் என் நிலைமை என்னவாகும் என்று சிந்தித்தேன்! தூக்கம் போய் ஏக்கம் பற்றிக் கொண்டது. நீங்கள் என்னைப் பிரிந்து போய்விடுவீரோ என்று அச்சம் உண்டாகிறது! எகிப்தின் அரசியானாலும், தனியாக உள்ள எனக்கு நீங்கள்தான் தக்க துணைவர்! சீஸரின் பராக்கிரமக் கரங்களுக்குள் நான் அரண் கட்டி வாழ விரும்புகிறேன்! கனல்மிக்க உங்கள் மார்பின் மீது, என் கண்கள் தொட்டில் கட்டித் தூங்க வேண்டும்! நான் உங்கள் அடிமை அரசி! உங்கள் துணையில் உயிர் வாழும் எனக்குத் துடிக்குது, உங்களுக்கு எதுவும் நேரக் கூடாது! ஜூலியஸ் சீஸர்: [கனிவுடன்] கண்மணி கிளியோபாத்ரா! நான்தான் உன் அடிமைத் தளபதி! ரோமாபுரியை மறக்க வைத்தவள் நீ! மனைவி கல்பூர்ணியாவை மறக்க வைத்தவள் நீ! தீயாய்ச் சுடும் அலெக்ஸாண்டிரியாவைத் தேனாய் ஆக்கியவள் நீ! ரோமாபுரி மாவீரன் உன் விழிகளுக்கு அடிமை! சீஸருக்குப் பாதகமாய் ஏதும் நிகழாது! நானிந்த இழுப்பு நோயிக்கெல்லாம் அஞ்சுபவனில்லை! நீ ஏன் எனக்காகப் பயப்படுகிறாய்? காக்காய் வலிப்பு நோயோடு நான் பல்லாண்டுகள் வாழ்ந்து விட்டேன்! அஞ்சாமல் போரிட்டு, ரோம சாம்ராஜியத்தை எத்தனை பெரிதாக ஆக்கி விட்டேன் தெரியுமா? நான் போய்விட்டால் உனக்கு என்னவாகும் என்று அஞ்சுகிறாய்? கிளியோபாத்ரா: என் விஷமத் தமையன் டாலமி உயிரோடிருக்கிறான்! அவன் வாழும் வரையில் என்னுயிர் அங்குமிங்கும் ஊசலாடிக் கொண்டிருக்கும்! அந்த மிருகங்கள் உயிரோடுள்ளவரை எனக்குச் சரியாகத் தூக்கம் வராது! ஜூலியஸ் சீஸர்: டாலமியைப் பற்றி உனக்கினிக் கவலை வேண்டாம்! நேற்று மாலையில் அவனை ரோமானியப் படையாளர் விரட்டிச் செல்லும் போது, அவன் நைல் நதியில் குதித்து மூழ்கிப் போனதாகச் செய்தி வந்துள்ளது! அவனது உடம்பு ஒருவேளை கடலுக்குள் சங்கமம் ஆகியிருக்கலாம்! அல்லது முதலைகளின் அடிவயிற்றில் செறிக்கப் பட்டிருக்கலாம்! போதினஸ், தியோடோடஸ், அக்கிலஸ் அனைவரும் கொல்லப் பட்டார். உனக்கோ அல்லது உன் மகுடத்துக்கோ இனி எதிரி யாருமில்லை, கிளியோபாத்ரா! கிளியோபாத்ரா: [பெருமூச்சு விட்டு] நன்றி சீஸர் அவர்களே! நன்றி! மிக்க நன்றி! நானார்க்கு மினி அஞ்ச வேண்டியதில்லை! எகிப்தின் ஏகப்பெரும் அரசி கிளியோபாத்ரா வென்னும் போது, என் மெய் சிலிர்க்கிறது! என் பரம்பரையான ·பாரோ மன்னரின் கால்தடத்தில் நடக்கிறேன் என்னும் போது, என் மேனி நடுங்குகிறது! என் கனவு நிறைவேறியது, உங்களால்! கிளியோபாத்ரா கட்டுப்பட்டவள் உங்களுக்கு! கடமைப் பட்டவள் உங்களுக்கு! மகாவீரர் சீஸரே, உமக்கு நன்றி! உலகைக் கைக்கொள்ளும் தொடர்க் கனவை நிறைவேற்ற உதவப் போகிறேன் உங்களுக்கு! ஜூலியஸ் சீஸர்: [தயக்கமுடன்] கிளியோபாத்ரா! உனக்கு வயது 20! எனக்கு வயது 52! எனது போர்க் கோலப் பராக்கிரம வயது போய் விட்டது! நானினிப் பெரும் போர் புரியப் போவதில்லை! கிளியோபாத்ரா: [அரண்மனைப் பீடத்தில், பளிங்குப் பேழையில் வைக்கப்பட்ட காலஞ்சென்ற அலெக்ஸாண்டர் உடலைக் காட்டிச் சீஸரை அழைத்துச் சென்று] பாருங்கள்! மகாவீரர் அலெக்ஸாண்டரை! முப்பதியிரண்டு வயதில் அவர் ஒருவர் சாதித்ததை நாமிருவரும் சமாளிக்கப் போகிறோம்! நமது சராசரி வயது, 36. உங்களால் என் வயது முதிர்ச்சியாகி ஏறுகிறது! என்னால் உங்கள் முதிய வயது இளமையாகிறது! அவரது கனவை முடிக்க வேண்டியது உங்கள் கடமை! என் கடமையும் கூட! அதாவது நம் கடமை! வரலாற்றுப் புகழ் பெற்ற அவரது வாளை உங்களுக்குப் பரிசாகத் தரப் போகிறேன். ஜூலியஸ் சீஸர்: [அலெக்ஸாண்டர் பேழையைத் தொட்டுப் பெருமையுடன் கண்ணீர் சிந்தி] வேண்டாம் கிளியோபாத்ரா! புதைந்து போன அவரது வாளைக் கையில் தொடத் தகுதியற்றவன் நான்! அலெக்ஸாண்டர் அல்லன் நான்! அவர் பற்றிய வாள் எனக்குக் கனமாகத் தெரிகிறது! கிளியோபாத்ரா: பேழைக்குள்ளிருக்கும் அலெக்ஸாண்டர் உடலைப் பார்த்து எதற்காகக் கண் கலங்குகிறீர்? ஜூலியஸ் சீஸர்: கிளியோபாத்ரா! இந்தியாவின் வடபகுதியை வென்று, வெற்றிமாலை சூடிய மகா வீரர் அலெக்ஸாண்டர் சாகும் போது அவருக்கு வயது 32! இப்போது எனக்கு வயது 52. அலெக்ஸாண்டரின் கனல் பறக்கும் நெஞ்சத்தை நானிழந்து விட்டேன்! எனது கண்கள்  வெந்நீரைக் கொட்டுகின்றன, அதனால்! எனக்கு 32 வயதாகிய போது, ஸ்பெயினைக் கைப்பற்றப் போனேன். அப்போதும் அங்கிருந்த அலெக்ஸாண்டர் சிலையைக் கண்டதும், இதேபோல் நான் அழுதேன்! அவரது பராக்கிரம் எனக்கில்லை என்றுதான்! எனது வாழ்நாள் காய்ந்து முற்றிப் போனதென்று நான் அழுதேன்! அவர் உலகைக் கைப்பற்றினார்! ஆனால் உலகு என்னைக் கைப்பற்ற முயல்கிறது என்று நான் அஞ்சுகிறேன்! கிளியோபாத்ரா: [சீஸரின் கண்ணீரைத் தனது துணியால் துடைத்து] அலெக்ஸாண்டரின் மறுபிறவி என்று நீங்கள் எண்ணிக் கொள்ளுங்கள்! அவரது கனவுகளை உங்கள் கனவாக்கிக் கொள்ளுங்கள். அவருடைய வாள் உங்களது வெற்றி வாளாகட்டும்! அவர் விட்டுச் சென்ற ஆசிய முனையிலிருந்து தொடரட்டும் உங்கள் படையெடுப்பு! இந்தியாவுக்குச் செல்லும் பாதை எனக்குத் தெரியும்! அலெஸாண்டரின் போர்த்தளப் படம் என்னிடம் உள்ளது! ஜூலியஸ் சீஸர்: [சிந்தனையுடன்] ஆச்சரியமாக உள்ளது! கிளியோபாத்ரா! இருபது வயதில் உனக்குத் தெரிந்துள்ள போர் ஞானம் வேறு யாருக்கும் கிடையாது! ஆனால் அலெக்ஸாண்டருடைய வாள் எனக்குக் கனமாய்த் தெரிகிறது! உலகப் பேராசை ஆக்கிரமிப்பில் அலெக்ஸாண்டர் தோல்வி அடைந்தார்! கிளியோபாத்ரா: அவர் வயது 32! உங்கள் வயது 52! அவருக்குப் போர்ப் பண்பில் கொளுந்து விட்டெரியும் மனப்போக்கிருந்தது! ஆனால் உங்களுக்கு அவரை விட 20 வருடப் போர் அனுபவம் உள்ளது! அலெக்ஸாண்டர் எப்படி இறந்தார் என்று அறிவீரா? வட இநெதியாவைக் கைப்பற்றிய அலெக்ஸாண்டர் மேற்புறப் பகுதியில் செல்லும் போது, அங்குள்ள விஷக் கொசு கடித்துச் கடும் காய்ச்சலில் திரும்ப வேண்டியதாயிற்று! பிறகுப் போரிடும் பராக்கிரம மிழந்தார். கடும் காய்ச்சலுக்குச் சிகிட்சை யில்லாமல் கடைசியில் செத்து விட்டார். அது ஒருவித மரணக் கொசு என்று கேள்விப் பட்டேன்! அலெக்ஸாண்டரின் அசுர வல்லமை உங்களுக்கு உள்ளது. அவர் விட்டுச் சென்ற இடத்திலிருந்து தொடங்குவீர்! ரோமானியப் படையுடன் எகிப்தின் படையும் ஒன்றிணைந்து போரிடும்! மகாவீரர் சீஸரே! உலகம் நமது கைகளில்! நீங்களும், நானும் ரோமாபுரிக் கடியில் உலகை ஒன்றாக்குவோம்! இந்தப் பூமியில் ஒரே உலகம்! ஒரே நாடு! ஒரே மக்கள்! சமாதானமாக அனைவரும் வாழ்வோம் போரின்றி. ஜூலியஸ் சீஸர்: [சினத்துடன்] ஓ! தெரிந்து கொண்டேன். அதுதான் நீ என்னிடம் எதிர்பார்ப்பதா? அதற்குத்தான் நீ என்னை உருவாக்குகிறாயா? பலே கிளியோபாத்ரா! நானொரு ரோமன்! அலெக்ஸாண்டரைப் போலக் கிரேக்கன் அல்லன்! ஒரே உலகம்! ஒரே நாடு! ஒரே மக்கள்! நல்ல சிந்தனைதான்! ஆனால் அது வெறும் கனவு! நடக்காத கனவு! அந்த உலகத்தின் தலைநகர் உனது அலெக்ஸாண்டிரியாவா? கிளியோபாத்ரா: [ஆங்காராமாக] அந்த உலகுக்கு எனது அலெக்ஸாண்டிரியா தலநகரில்லை! உங்கள் ரோமாபுரிதான் தலைநகர்! ஒரே உலகை ஆக்கப் போன அலெக்ஸாண்டர் தோல்வி யுற்றார்! ஆனால் நம்மிருவர் முயற்சியில் வெல்வோம், நிச்சயம்! அலெக்ஸாண்டர் கிரேக்கர்! நீங்கள் ரோமானியர்! நான் எகிப்திய மாது! அதனால் என்ன? அலெக்ஸாண்டரின் போர்ப்படை மாஸபடோமியாவிலிருந்து கிளம்பியது! நமது படைகள் ரோமிலிருந்து புறப்படட்டும்! ரோமும், எகிப்தும் இரட்டைக் காளைகள் போல் இரட்டை வலுவுடன், இருமடங்கு படைகளுடன் போரிடும்! அதனால் நமக்கு வெற்றி உறுதி! அலெக்ஸாண்டர் வாளை நாமிருவரும் தூக்கிச் செல்வோம்! [கிளியோபாத்ரா விரைந்து சென்று சீஸரின் தோள்களைப் பற்றிக் கொண்டு பதிலை எதிர்பார்க்கிறாள்] ஜூலியஸ் சீஸர்: [கனிந்து போய் கிளியோபாத்ராவை அணைத்துக் கொண்டு] மாபெரும் போர் ஞானி நீ என்பதை அழகாகக் காட்டி விட்டாய், கிளியோபாத்ரா! அரசியலையும், உணர்ச்சியையும் ஒன்றாக்க முயல்கிறாய் நீ! அவை யிரண்டும் ஒன்று சேரா! அரசியல் ஒருபுறம் நுழையும் போது, உணர்ச்சி மறுபுறம் வெளியேறும் என்று உனக்குத் தெரியாதா? என்னுடைய விதியில் கையில் என்னை விட்டுவிடு! எனக்கு வயது 52! அலெக்ஸாண்டருக்கு அப்போது வயது 32! அவரது பாதையைக் காட்டி என் பாதையை மாற்ற முற்படாதே! அவர் போன பாதை தோல்விப் பாதை! தோல்விப் பாதையைப் பின் தொடர்ந்து, நான் எப்படி வெற்றிப் பாதை ஆக்க முடியும்? கிளியோபத்ரா: உங்களுடன் நான் ஒன்று சேர்வதால் நமது பாதை வெற்றிப் பாதையாக மாறும்! தோல்வி என்பது என் அகராதியில் இல்லை! வீழ்ச்சி என்பது உங்கள் அகராதியில் இல்லை! என் சிந்தனை முற்போக்கான சிந்தனை! அலெக்ஸாண்டரின் போரங்கி உங்களுக்குப் பொருந்தும்! எகிப்துவரை பரவிய சீஸரின் பெயர் ஆசியா வெங்கும் பரவும்! நீங்கள் ரோமாபுரி, எகிப்த் நாடுகளுக்கு மட்டும் வேந்தர் அல்லர்! அரேபிய நாடுகள், இந்தியா, தாய்லாந்து, சைனா ஆகிய நாடுகளுக்கும் வேந்தராக ஆட்சி செய்வீர்! நீங்களும், நானும் ஆண்ட பிறகு, நமக்குப் பிறக்கும் ஆண்மகன் உலகை அரசாளுவான். மாவீரர் சீஸரே! நிச்சயம் நான் சொல்கிறேன்! நமக்குப் பிறப்பது ஆண்மகவே! அது மட்டும் உறுதி! ஜூலியஸ் சீஸர்: [மகிழ்ச்சியுடன்] ஆண்மகவா? ஆனந்தம் அடைகிறேன்! என் மனைவி கல்பூர்ணியா அளிக்காத ஆண்மகவை நீ பெற்றுத் தருவாயா? எனக்கு மகிழ்ச்சியே! … ஆனால் ரோமாபுரி எப்படி என் ஆண்மகவை ஏற்றுக் கொள்ளுமோ தெரியாது? அவன் பாதி ரோமானியன்! பாதி எகிப்தியன் ஆயிற்றே! நான் ரோமுக்கு விரைவில் திரும்ப வேண்டும், கிளியோபாத்ரா? கிளியோபாத்ரா: [அருகில் நெருங்கி மிக்கக் கனிவுடன்] ஆனாலும் அவன் உங்கள் மகன்! ரோமானிய மாது கல்பூர்ணியா அளிக்க முடியாத ஆண் பரம்பரையை, எகிப்தின் கிளியோபாத்ரா ஆக்கித் தருகிறாள்! மாவீரர் சீஸரே! நீங்கள் ரோமுக்கு மீள்வதைச் சற்று தள்ளிப் போடுங்கள்! எனக்கு உங்கள் கையால் எகிப்து மகாராணி என்று முதலில் மகுடம் சூட வேண்டும்! என் மாளிகையில் எனது சிறப்பு விருந்தினராகச் சில நாட்கள் தங்கிச் செல்ல வேண்டும்! எனக்குப் பிறக்கப் போகும் ஆண்மகவை உங்கள் ஆசைக் கரங்களில் முத்தமிடக் கொடுத்து நான் ஒப்படைக்க வேண்டும்! அதன் பிஞ்சு வாயில் தவழும் புன்னகையை நீங்கள் மனதில் படமெடுத்து ரோமாபுரிக்குக் கொண்டு செல்ல வேண்டும்.   +++++++++++++++++++++++ []     அங்கம் -2 பாகம் -11 மேலங்கியை மாட்டு! எனக்கு மகுடத்தைச் சூட்டு! மேலோங்கி எழுகிற தெனக்குள் தெய்வீக வேட்கை! …     (கிளியோபாத்ரா)   கடவுளுக் களிக்கும் சுவைத் தட்டு மடந்தை யவள் என்று நானறிவேன், உடல் மீது பிசாசு அவளுக்கு ஆடை அணியா விட்டால்! வில்லியம் ஷேக்ஸ்பியர் [அண்டனி & கிளியோபாத்ரா]   “ஆத்ம உள்ளுணர்வு கைகளோடு ஒன்றி உழைக்கா விட்டால், உன்னதக் கலைகளைப் படைக்க முடியாது.” “மேதையர் சில சமயங்களில் பணிப்பாரம் குறைவாக உள்ள போது மேலானவற்றைச் சாதிப்பார்! அப்போதுதான் அவர் தமதரிய கண்டுபிடிப்புகளைச் சிந்தித்து, ஓர் உன்னதக் கருவை விரிவாக்கி அவரது கைகள் அதனைப் பிறகு ஓவியமாக்கி வெளிப்படுத்து கின்றன.” லியனார்டோ டவின்ஸி, ரோமானிய ஓவிய மேதை (1452-1519)   “பளிங்குக் கல்லில் ஒரு தேவதையை (ஞானக் கண்ணில்) நான் பார்த்தேன். அதனைக் கல்லில் செதுக்கி அவளுக்கு விடுதலை அளித்தேன்.” “அழகுணர்ச்சியைப் புறக்கணிப்பது போல அல்லது அதைப் பற்றி அறிய மறுப்பது போல, கவர்ச்சியான ஒன்று மாந்தருக்குத் துயர் கொடுப்பது வேறு எதுவு மில்லை!” மைக்கேலாஞ்சலோ ரோமானிய ஓவிய மேதை (1475-1564) ++++++++++++++++++ கதைச் சுருக்கம்:    கிரேக்க மகாவீரர் அலெக்ஸாண்டர் பரம்பரையில் வந்த எகிப்தின் வசீகர மங்கை, ஏழாம் டாலமியின் புதல்வியாக கி.மு. 69 ஆம் ஆண்டில் அலெக்ஸாண்டிரியாவில் பிறந்தாள். தந்தை டாலமி மரணம் எய்திய பிறகு கிளியோபாத்ராவும் அவளது இளைய தமையன் டாலமியும் ஒன்றாகச் சேர்ந்து எகிப்தை ஆண்டார்கள். மூன்றாண்டுகள் கழித்துக் கணவனும், தம்பியுமான 15 வயது டாலமி கிளியோபாத்ராவை நாடு கடத்திப் பிறகு தானே அரசாண்டான். சிரியாவுக்கு ஓடிய கிளியோபாத்ரா, தம்பியைப் பலிவாங்க அப்போது அலெக்ஸாண்டிரியாவுக்கு வந்த ரோமானியத் தளபதி ஜூலியஸ் சீஸரின் உதவியை நாடுகிறாள். சீஸரைக் கவர்ச்சியால் மயக்கி, எகிப்துக்குத் தானே அரசியாக வேண்டு மென்றும், சகோதரன் டாலமி அகற்றப்பட வேண்டு மென்றும் வற்புறுத்தி வெற்றியும் பெற்றாள். சீஸர் கிளியோபாத்ராவின் தேன்நிலவு நீடித்து அவளுக்கு ஓர் ஆண் மகவு பிறந்தது. எகிப்தில் நடத்திய சீஸரின் தாம்பத்திய வாழ்க்கையை ரோமானியர் ஏற்று கொள்ளாமல் அவரை வெறுத்தனர்!   முடிசூட்டிக் கொள்ள ரோமுக்குச் சீஸர் மீண்டதும், செனட்டர் செய்த சதியில் சீஸர் கொல்லப்பட்டார். சீஸர் கொலைக்குப் பின் ரோமில் பெரும் குழப்பம் உண்டாகி மார்க் ஆண்டனி, அக்டேவியன் ஆகியோரது நேரடிக் கண்காணிப்பால் ரோம் சாம்ராஜியத்தில் அமைதி நிலவியது. நேரடியாக அலெக்சாண்டிரியாவுக்குக் காண வந்த ஆண்டனியைக் கவர்ச்சியால் மயக்கித் தன் காதல் அடிமையாய் ஆக்கினாள் கிளியோபாத்ரா. ஆண்டனியின் தேனிலவு நீடித்து ரோமானிய செனட்டர்களின் சீற்றத்தையும், வெறுப்பையும் மார்க் ஆண்டனி பெறுகிறான். அக்டேவியன் தலைமையில் ரோமானியப் படை ஆண்டனி மீது போர் தொடுத்து வெற்றி அடைகிறது. எகிப்தில் தனித்துப் போன ஆண்டனியும், அக்டேவியன் உடன்படிக்கைக்கு அடி பணியாத கிளியோபாத்ராவும் பயங்கர முடிவைத் தேடிக் கொள்கிறார்கள். ++++++++++++++++   []   நேரம், இடம்:     அலெக்ஸாண்டிரியாவில் எகிப்த் மன்னர் அரண்மனை. ·பாரோ மன்னர் வரலாற்று ஓவியங்கள் உயர்ந்த சுவர்களை அலங்கரிக்கின்றன. பகல் வேளை.   நாடகப் பாத்திரங்கள்: ஜூலியஸ் சீஸர், மெய்க்காப்பாளி, கிளியோபாத்ரா, சேடியர்.    காட்சி அமைப்பு:    கிளியோபாத்ரா, டாலமியை அகற்றி விட்டுத் தன்னை எகிப்துக்கு ராணியாக்க சீஸரை வேண்டுகிறாள். சீஸர் கிளியோபத்ராவின் அறிவையும், திறமையையும் மெச்சி அவளை ராணியாக்க ஒப்புக் கொள்கிறார். சீஸரின் பகைவனும், மருமகனுமாகிய ரோமாபுரித் தளபதி பாம்ப்பியை டாலமியின் படையினர் இரகசியமாகக் கொன்றதை அறிந்து சீஸர் வேதனைப் பட்டுக் கோபம் அடைகிறார். டாலமியும் அவரது ஆலோசகரும் அதற்குத் தண்டனை அடைகிறார். மனம் மகிழ்ந்து, கிளியோபாத்ரா தன் உடற் கவர்ச்சியால் வசீகரிக்கையில் சீஸர் காக்காவலிப்பு நோயால் தாக்கப்பட்டு, துடிப்புடன் தரையில் விழுகிறார். மருத்துவர் பணிக்குப் பிறகு சீஸர் படுக்கையில் புத்துயிர் பெற்று எழுந்து அமர்கிறார். சீஸர் ரோமுக்கு மீள்வதை நிறுத்தி கிளியோபாத்ரா அவரைத் தன் கவர்ச்சியால் மயக்கி ஆண்மகவு பெற்றுத் தருவாய் உறுதி அளித்து மகிழ்ச்சி ஊட்டுகிறாள்.   கிளியோபாத்ரா: [அருகில் நெருங்கி மிக்கக் கனிவுடன்] ஆனாலும் அவன் உங்கள் மகன்! ரோமானிய மாது கல்பூர்ணியா அளிக்க முடியாத ஆண் பரம்பரையை, எகிப்தின் கிளியோபாத்ரா ஆக்கித் தருகிறாள்! மாவீரர் சீஸரே! நீங்கள் ரோமுக்கு மீள்வதைச் சற்று தள்ளிப் போடுங்கள்! எனக்கு உங்கள் கையால் எகிப்து மகாராணி என்று முதலில் மகுடம் சூட வேண்டும்! என் மாளிகையில் எனது சிறப்பு விருந்தினராகச் சில நாட்கள் தங்கிச் செல்ல வேண்டும்! எனக்குப் பிறக்கப் போகும் ஆண்மகவை உங்கள் ஆசைக் கரங்களில் முத்தமிடக் கொடுத்து நான் ஒப்படைக்க வேண்டும்! அதன் பிஞ்சு வாயில் தவழும் புன்னகையை நீங்கள் மனதில் படமெடுத்துக் கொண்டு ரோமாபுரிக்குச் செல்ல வேண்டும். ஜூலியஸ் சீஸர்: அப்படியே செய்கிறேன். எனக்கு ஆண்பிள்ளை வேண்டுமென்று வெகு நாட்களாக ஆசை யிருப்பது உண்மை. அந்த ஆசையை என் மனைவி கல்பூர்ணியா பூர்த்தி செய்ய முடியவில்லை. அந்த ஆசையை நீ நிறைவேற்றுவாய். ஆனால் என் ஏக மகனை ஆசை நாயகியின் மோகப் பிள்ளை எனப் பலர் ஏசுவதை நான் விரும்பவில்லை. கிளியோபாத்ரா: அந்தக் குறையை நிவர்த்தி செய்கிறேன். உங்களை நான் மணந்து நமக்குப் பிறக்கும் பிள்ளை சட்டப்படி உதித்த உங்கள் மகனென்று சரித்திரம் சொல்ல வைப்பேன். கிளியோபாத்ராவுக்கும், சீஸருக்கும் பிறந்த பட்டத் திளவரசன் என்று எகிப்தின் மாந்தர் பாராட்டுவார்! ரோமாபுரியின் எதிர்கால வேந்தன் என்று ரோமானியர் கொண்டாடுவார்! அது மட்டுமல்ல, உங்களை நான் எகிப்தின் மன்னராகவும் அறிவித்து விடுகிறேன்! ஜூலியஸ் சீஸர்: [மன மகிழ்ச்சியுடன் ஆனால் சற்று தயக்கமுடன்] கண்ணே கிளியோபாத்ரா! என்னை மணந்து நீ ஓர் ஆண்மகனைப் பரிசாக அளிப்பதே எனக்குப் போதும்! நான் ஒரு ரோமன்! நான் ·பாரோ கடவுள்களின் பரம்பரையில் வந்தவன் அல்லன்! என்னை எப்படி எகிப்துக்கு மன்னன் ஆக்குவாய் நீ! அந்த மதிப்பு எனக்குத் தேவையு மில்லை! எகிப்த் ரோமாபுரியின் ஆக்கிரமிப்பு நாடு! ரோமாபுரிக்கு யார் அதிபதியாயினும் அவரே எகிப்துக்கும் தளபதி! அதை நீ அறிவிக்கத் தேவையில்லை! பிறக்கும் மகனைப் பார்த்த பிறகே நான் ரோமாபுரிக்குப் போக ஏற்பாடு செய்யவேன். அங்கே நிரம்ப வேலை இருக்கிறது எனக்கு! கிளியோபாத்ரா:  ஃபெரோ மன்னரின் பரம்பரைப் பாவையான நான், உங்களை எகிப்துக்கு மன்னராக்குவேன், கவலைப்பட வேண்டாம். அலெக்ஸாண்டிரியாவில் சில நாட்கள் ஓய்வெடுங்கள். மாபெரும் வேந்தர் சீஸரின் அருகில் நான் உள்ள போது, நீங்கள் ஒரு வேலையும் செய்யத் தேவை யில்லை! மன்னர்களுக்கு வேலை யில்லை! மன்னர்கள் வேலை செய்யக் கூடாது! ஜூலியஸ் சீஸர்: யார் சொல்வது, மன்னருக்கு வேலை யில்லை என்று? வாலிப ராணி கிளியோபாத்ராவுக்கு வேலை யில்லை! அதே போல் வயோதிக சீஸருக்கும் வேலை யில்லை என்பதா? வேடிக்கையாக இருக்கிறதே! கிளியோபாத்ரா: எகிப்தில் என் தந்தை சில ஆண்டுகள் மன்னராக இருந்தார்; அவர் என்றைக்கும் வேலை செய்ததில்லை. அவர் மாபெரும் மன்னரே! ஆனால் மிகவும் பொல்லாதவர்! புரட்சி செய்து நாட்டைப் பிடுங்கி அரசாண்ட, என் மூத்த சகோதரியின் கழுத்தை அறுத்தவர்! ஜூலியஸ் சீஸர்: அப்படியா? பிறகு நாட்டை மீண்டும் எப்படிக் கைப்பற்றினார், உன் தந்தை? கிளியோபாத்ரா: [கண்களில் ஒளிவீசப் புன்னகையுடன்] எப்படி என்று சொல்லவா? பாலை வனத்தைக் கடந்து பராக்கிரமம் மிக்க ஒரு மன்மத வீரன் பல குதிரைப்படை ஆட்களோடு வந்தார்! தமக்கையின் கணவரைக் கொன்றார்! தந்தையை ஆட்சிப் பீடத்தில் மீண்டும் அமரச் செய்தார்! அப்போது எனக்கு வயது பன்னிரண்டு! அந்த வாலிபர் என் கண்ணுக்குள்ளே நின்று காட்சி அளிக்கிறார்! மீண்டும் இப்போது வந்தால் ஆனந்தம் அடைவேன்! நானிப்போது பட்டத்து அரசி! அப்படி வந்தால் அவரை என் கணவராக்கிக் கொள்வேன்! ஜூலியஸ் சீஸர்: [ஆர்வமுடன்] அப்படியானால் என்கதி என்னவாகும்? நான் உன்னைத் திருமணம் செய்யப் போகிறேனே! ஆண்மகவு ஒன்றைக் கூட எனக்குப் பரிசாக அளிப்பதாகக் கூறுகிறாய்! கிளியோபாத்ரா: அந்த வாலிபர் என் வயதுக் கேற்றவர்! நீங்கள் என் வயதுக்கு மீறிய வயோதிகர்! பிறக்கும் என் ஆண்மகவின் தந்தை நீங்கள்! ஆனால் எனக்குப் பொருத்த மில்லாதவர்! பிறக்கப் போகும் நமது மகனுக்குத் தந்தை சீஸர் என்பதை ரோம சாம்ராஜியத்துக்கு அறிவிக்கவே உங்களைத் திருமணம் செய்ய உடன்படுகிறேன்! ரோமாபுரியில் உங்கள் மனைவி கல்பூர்ணியா, உங்களுக்குக் காத்துக் கொண்டிருக்கிறாள். வயோதிகரா அல்லது வாலிபரா என்று என்னைக் கேட்டால், யாரை நான் கணவனாக தேர்ந்தெடுப்பேன்? ஐயமின்றி ஓர் வாலிபரைத்தான்! ஜூலியஸ் சீஸர்: [சட்டென] உன் கற்பனை வாலிபனும் ஏற்கனவே திருமணம் ஆனவன்தான்! கிளியோபாத்ரா: அப்படியா? மீன் குஞ்சிக்கு நீந்தக் கற்றுக் கொடுக்கத் தேவை யில்லை! அவளுடைய இடத்தைப் பிடிக்க எனக்குத் தெரியும். அந்த வாலிபர் என் கண்வலையில் சிக்கி விட்டால், மீண்டுமவர் தன் மனைவியைக் கண்டு கொள்ள மாட்டார்! என் மந்திரக் கண்களின் தந்திரப் பிடியிலிருந்து அவர் தப்ப முடியாது! விளக்குத் தீயை ஆராதிக்கும் எந்த விட்டிலும் தீபத்திலே எரிந்து சாம்பலாகும்! [மிக்க ஆர்வமுடன்] அவரது உண்மைப் பெயரென்ன? உங்களுக்குத் தெரியுமா? மீண்டும் அவரை அலெக்ஸாண்டிரியாவுக்கு அழைத்து வரச் செய்ய முடியுமா? ஜூலியஸ் சீஸர்: [சிரித்துக் கொண்டு] முடியும், என்னால் முடியும். முதலில் உன் தந்தைக்கு உதவி செய்ய அந்தக் கவர்ச்சி வாலிபனை அனுப்பியவன் நான்தான்! கிளியோபாத்ரா: [சீஸரை நெருங்கி] அப்படியா? அந்த வசீகர வாலிபனை உங்களுக்குத் தெரியுமா? அவர் பெயரென்ன கூறுவீரா? உங்களை விட வயதில் சிறியவர்தானே! உங்களுடன் இப்போது வந்திருக்கிறாரா? ஜூலியஸ் சீஸர்: இல்லை! என்னுடன் வரவில்லை. ஆம், அவன் என்னை விட வயதில் சிறியவன்தான். அந்த வாலிபன் பெண்களின் வசீகரன்! உன்னைப்போல் அவன்மீது கண்வைத்திருக்கும் பெண்கள் அநேகம்! நீ அவனை மோகிக்கிறாய்! அவனுக்கு உன்னைப் பிடிக்குமா என்பது எனக்குத் தெரியாது! வசீகர வாலிபருக்கு ஒரு வனிதைமேல் மட்டும் வாஞ்சை உண்டாகாது! அவருக்கு ஆயிரம் வனிதைகள் உள்ளார்! ஆயிரத்தில் ஒருத்தியாக நீ யிருக்க விரும்புகிறாயா? கிளியோபாத்ரா: நான் ஆயிரத்தில் ஒருத்தியான ஆசைநாயகி யில்லை! ஆயிரத்தில் முதல்வி, அவரது ஆசை மனைவியாக வாழ்வேன்! அவர் என்னைக் காதலித்தால், அவரை என் வசப்படுத்தி மற்ற ஆசை நாயகிகளைக் கொல்லும்படிச் செய்வேன். சொல்லுங்கள் அவர் பெயரை! சொல்லுங்கள் எங்கிருக்கிறார் என்று! நான் அவரை நேசிக்கிறேன். அவர் என்னை விரும்புகிறாரா என்று நான் தெரிந்து கொள்ள வேண்டும். ஜூலியஸ் சீஸர்: அவன் ஒரு காப்டன். குதிரைச் சவாரி வீரன்! ரோமாபுரிப் பெண்டிரின் கனவு மைந்தவன் அவன்! கிளியோபாத்ரா: [கெஞ்சலுடன்] அவர் உண்மைப் பெயரென்ன கூறுங்கள்! அவர் என் தெய்வம். நான் அவரை அழைப்பது, “ஹோரஸ்” [*1] என்றுதான்! எங்களுடைய கடவுள்களில் ஹோரஸ்தான் மிக்க எழிலான கடவுள். ஆனால் அவரின் உண்மைப் பெயரை அறிய ஆவல். ஜூலியஸ் சீஸர்: அவன் பெயர்தான் மார்க் ஆண்டனி! ரோமின் மாவீரன் மார்க் ஆண்டனி! என் பிரதமச் சீடன், மார்க் ஆண்டனி! எனக்காக உயிரைக் கொடுக்கவும் அஞ்சாத மார்க் ஆண்டனி! கிளியோபாத்ரா: [மனம் நெகிழ்ந்து இசையோடு உச்சரித்து] ஆஹா! மார்க் ஆண்டனி! என்ன அழகிய பெயர்! மார்க் ஆண்டனி! உங்களுக்குச் சீடன்! ஆனால் எனக்குத் தேவன்! மார்க் ஆண்டனி! உங்களுக்காக உயிரைக் கொடுப்பவர்! ஆனால் மார்க் ஆண்டனிக்காக நான் உயிரைக் கொடுப்பேன்! எங்கே உள்ளார் மார்க் ஆண்டனி? அழைத்து வாருங்கள் மார்க் ஆண்டனியை! சீஸர், கனல் பற்றி எரியும் நெஞ்சில், பாலை வார்த்தீர்கள்! அலெக்ஸாண்டிரியாவுக்கு வந்து என்னைக் காண ஏற்பாடு செய்வீரா? ஜூலியஸ் சீஸர்: [சற்று தயக்கமுடன்] மார்க் ஆண்டனி ரோமாபுரியில் உல்லாசமாக இருக்கிறான்! அலெக்ஸாண்டிரியாவுக்கு ஆண்டனியை அழைத்து வருபது எளிய தில்லை! நான் போனால்தான் அவன் வருவான். ரோமாபுரிக்கு நான் போய்த்தான் அவனை அனுப்ப வேண்டும்! நான் ரோமுக்குப் போனால் எகிப்துக்குத் திரும்ப மாட்டேன்! ஆண்டனி எகிப்துக்கு வந்தால், அவன் ரோமுக்கு மீள மாட்டான்! ********************* [*1] “ஹோரஸ்” [Horus is the Sun God of the Egyptians] +++++++++++++++++++ []   அங்கம் -2 பாகம் -12 “எனக்கு முன்னால் நடக்காதீர்; உங்களை நான் பின்பற்றப் போவதில்லை! என் பின்னால் வர வேண்டாம்; ஏனெனில் உம்மை நான் வழிநடத்தப் போவதில்லை! வாழ்க்கையில் ஒரே ஒரு மகிழ்ச்சி மட்டும்தான் உள்ளது: நேசிப்பதும், நேசிக்கப் படுவதும்! “கலைப் படைப்பாளியின் குறிநோக்கு, மனித உள்ளத்துக்கு ஒளி பாய்ச்சுவது.” ஜியார்ஜ் ஸான்ட் பிரெஞ்ச் பெண் எழுத்தாளர் [George Sand (1804-1876)]   ஆண்டனி மீண்டும் என் தேவன் ஆனதால், நான் கிளியோபாத்ரா மறுபடியும்!…. வண்ண உடையில் அவர் மாட்டி யிருப்பது, வாலிப ரோஜா மலர்! … (கிளியோபாத்ரா) வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஆண்டனி & கிளியோபாத்ரா]   குறுகிய பூமியில் அவர் (சீஸர்), பெருநடை போடுகிறார்! ஓ மனிதா! கீழான காலாட் படைநாம் அவர் நீள் காலிடைப் புகுந்து தலை நீட்டுகிறோம், சுய மதிப்பினை யிழந்து! மனிதரே அதிபதி! சில வேளை, அவரது ஊழ் விதிக்கு! தவறு வானத்துக் கிரகங்களில் அல்ல, அருமை புரூட்டஸ்! நம்மிடமே உள்ளது! வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]   நேரம், இடம்: அலெக்ஸாண்டிரியாவில் எகிப்த் மன்னர் அரண்மனை. ·பாரோ மன்னர் வரலாற்று ஓவியங்கள் உயர்ந்த சுவர்களை அலங்கரிக்கின்றன. பகல் வேளை. நாடகப் பாத்திரங்கள்: ஜூலியஸ் சீஸர், மெய்க்காப்பாளி, கிளியோபாத்ரா, சேடியர். காட்சி அமைப்பு:   கிளியோபாத்ரா, டாலமியை அகற்றி விட்டுத் தன்னை எகிப்துக்கு ராணியாக்க சீஸரை வேண்டுகிறாள். சீஸர் கிளியோபத்ராவின் அறிவையும், திறமையையும் மெச்சி அவளை ராணியாக்க ஒப்புக் கொள்கிறார். சீஸரின் பகைவனும், மருமகனுமாகிய ரோமாபுரித் தளபதி பாம்ப்பியை டாலமியின் படையினர் இரகசியமாகக் கொன்றதை அறிந்து சீஸர் வேதனைப் பட்டுக் கோபம் அடைகிறார். டாலமியும் அவரது ஆலோசகரும் அதற்குத் தண்டனை அடைகிறார். மனம் மகிழ்ந்து, கிளியோபாத்ரா தன் உடற் கவர்ச்சியால் வசீகரிக்கையில் சீஸர் காக்காவலிப்பு நோயால் தாக்கப்பட்டு, துடிப்புடன் தரையில் விழுகிறார். மருத்துவர் பணிக்குப் பிறகு சீஸர் படுக்கையில் புத்துயிர் பெற்று எழுந்து அமர்கிறார். சீஸர் ரோமுக்கு மீள்வதை நிறுத்தி கிளியோபாத்ரா அவரைத் தன் கவர்ச்சியால் மயக்கி ஆண்மகவு பெற்றுத் தருவாய் உறுதி அளித்து மகிழ்ச்சி ஊட்டுகிறாள்.     கிளியோபாத்ரா: [மனம் நெகிழ்ந்து இசையோடு உச்சரித்து] ஆஹா! மார்க் ஆண்டனி! என்ன அழகிய பெயர்! மார்க் ஆண்டனி! உங்களுக்குச் சீடர்! ஆனால் எனக்குத் தேவர்! மார்க் ஆண்டனி! உங்களுக்காக உயிரைக் கொடுப்பவர்! மார்க் ஆண்டனிக்காக நான் உயிரைக் கொடுப்பேன்! எங்கே உள்ளார் மார்க் ஆண்டனி? அழைத்து வாருங்கள் மார்க் ஆண்டனியை! சீஸர், கனல் பற்றி எரியும் நெஞ்சில், பாலை வார்த்தீர்கள்! அலெக்ஸாண்டிரியாவுக்கு வந்து மார்க் ஆண்டனி என்னைக் காண ஏற்பாடு செய்வீரா? ஜூலியஸ் சீஸர்: [சற்று தயக்கமுடன்] மார்க் ஆண்டனி ரோமாபுரியில் உல்லாசமாக இருக்கிறான்! அலெக்ஸாண்டிரியாவுக்கு ஆண்டனியை அழைத்து வருபது எளிய தில்லை! நான் போனால்தான் அவன் வருவான். ரோமாபுரிக்கு நான் போய்த்தான் அவனை அனுப்ப வேண்டும்! நான் ரோமுக்குப் போனால் எகிப்துக்குத் திரும்ப மாட்டேன்! ஆண்டனி எகிப்துக்கு வந்தால், அவன் ரோமுக்கு மீள மாட்டான்! எனக்கு வேலை இருக்கிறது. நான் என் அறைக்குப் போக வேண்டும். கிளியோபாத்ரா: [கெஞ்சிக் கொண்டு] என்னருகில் அமர்ந்து, என்னுள்ளம் குளிரக் கொஞ்சம் மார்க் ஆண்டனியைப் பற்றிப் பேசுங்கள். ஜூலியஸ் சீஸர்: நான் போகாவிட்டால் டாலமியின் படைக் காவலர் அலெக்ஸாண்டிரியா துறைமுகத்திலிருது ரோமானியப் படையை வெட்டிவிடுவார்! கிளியோபாத்ரா: [விறுவிறுப்புடன் பதறி] டாலமியே செத்த பிறகு அவனுடைய படையாட்கள் எப்படி ரோமானியரைத் தாக்க முடியும்? ஜூலியஸ் சீஸர்: [சட்டென வெகுண்டு] டாலமி செத்த பிறகு அவரது மெய்க்காப்பாளி போதினஸ், போர்த் தளபதி அக்கிலஸ் ஆகியோர் தப்பி ஓடிவிட்டதாக அறிந்தேன். அவர்கள் அலெக்ஸாண்டியாவில் ரோமானிய ஆக்கிரமிப்புப் படையினருக்குத் தொல்லை கொடுத்து வருவதாகக் கேள்விப் படுகிறேன். … [வாயில் புறம் பார்த்து] .. அதோ! என் ரோமானியப் படைவீரன் ஒருவன் நொண்டிக் கொண்டு வருகிறான்! முகத்தைப் பார்த்தால் மகிழ்ச்சி ஊட்டும் செய்தியாகத் தெரிய வில்லை. [சீஸர் பதறிக் கொண்டு காவலனைக் கனிவுடன் நோக்குகிறார்] படைவீரன்: [காயங்களைக் காட்டி] பிரிட்டானஸ்! பாருங்கள் என்ன நடந்து விட்டதென? இனியென்ன செய்வீர்? [சீஸரைப் பார்த்து] ஜெனரல், பாருங்கள் என் படுகாயத்தை! காயப் பட்டது நான்! தாக்கப் பட்ட படைவீரர் இருவர் மாண்டு போனார் அங்காடி வீதியில்! ஜூலியஸ் சீஸர்: [கவனமுடன்] ஏன் அவர்கள் தாக்கப் பட்டார்? எப்படி உனக்குக் காயம் உண்டானது? படைவீரன்: அக்கில்லஸ் தலைமையில் படைக்குழு ஒன்று அலெக்ஸாண்டிரியாவில் நுழைந்தது. உடனே எகிப்திய மக்கள் அவருடன் சேர்ந்து, ரோமானியரைத் தாக்க ஆரம்பித்தனர். ரோமானியர் உதைக்கப் பட்டார். எனக்குக் கிடைத்த உதையில் நான் தப்பினேன். மற்ற இருவர் மாண்டு போனார். ஜூலியஸ் சீஸர்: உன்னுயிர் தப்பியதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். … [படைவீரனைப் பார்த்து] உள்ளே சென்று காலுக்கு மருந்து போட்டுக்குள். [படைவீரன் உள்ளே செல்கிறான்.] [சீஸரின் படைவீரர் லெஃப்டினென்ட் ரூஃபியோ வேகமாக வருகிறார்] []   ரூஃபியோ: [ஆங்காரமாக] சீஸர்! மகா அவமானம் நமக்கு! நமது ஆக்கிரமிப்புப் படையை எகிப்த் படை அடைத்துச் சூழ்ந்து கொண்டிருக்கிறது. யாருமிதை எதிர்பார்க்க வில்லை! உயிர்ச் சேதமும், பொருட் சேதமும் உண்டாகும்! ஜூலியஸ் சீஸர்: ரூ·பியோ! நமது கப்பல்கள் சில மேற்குத் துறைமுகத்தில் உள்ளன. அவற்றில் எல்லாம் தீவைத்து விடுங்கள்! ரூஃபியோ: [ஆச்சரியமுடன்] என்ன கப்பல்களை எரித்து விடவா? ஜூலியஸ் சீஸர்: ஆம் அவற்றை எரித்து விடு! ஆனால் கிழக்குத் துறைமுகத்திலிருக்கும் ஒவ்வொரு கப்பலையும் பயன்படுத்தி ·பரோக்களின் படகுகளைக் கைப்பற்று. அந்த தீவையும் பிடித்து விடு! விடாதே! பாதிப் படையினரை கடற்கரையில் காவல் வை. மீதிப் பேரை வெளியே படகில் நிறுத்து. ரூஃபியோ: [முழுவதும் உடன்படாமல்] அலெக்ஸாண்டிரியா நகரை விட்டுவிடச் சொல்கிறீரா? ஜூலியஸ் சீஸர்: நாமின்னும் அதைக் கைப்பற்ற வில்லை, ரூ·பியோ! கைவசப்படாத ஒன்றை எப்படி நாமிழக்க நேரிடும்? இந்த மாளிகை நம்முடையது! அடுத்தது அந்த மாளிகை, என்ன பெயர் அதற்கு? ரூஃபியோ: நாடக அரங்கம். ஜூலியஸ் சீஸர்: ஆமாம், நாடக அரங்கமும் நமதே! மற்ற எகிப்தின் பகுதிகள் எகிப்தியருக்குச் சொந்தம். ரூஃபியோ: சீஸர்! உங்களுத்தான் எல்லாம் தெரியும்! சரி நான் விடை பெறுகிறேன். ஜூலியஸ் சீஸர்: அந்தக் கப்பல்கள் அனைத்தும் எரிக்கப் பட்டனவா? ரூஃபியோ: இதோ போகிறேன்! ஆணைப்படி நிறைவேறும்! கால தாமத மாகாது! [வெளியேறுகிறார்] பிரிட்டானஸ்: சீஸர்! டாலமியின் மெய்க்காப்பாளி போதினஸ், உங்களுடன் பேச விரும்புகிறார். அவருடைய போக்கு சரியில்லை! அவருக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும். ஜூலியஸ் சீஸர்: போதினஸ், எங்கிருக்கிறார்? அனுமதி அளியுங்கள் அவருக்கு! [போதினஸ் நுழைகிறார்] .. ஹலோ போதினஸ்! உமக்கு என்ன வேண்டும்? நண்பனாக வந்திருக்கிறாயா? அல்லது ரோமானியருக்கு நாச காலனாக வந்துள்ளாயா? போதினஸ்: உங்களுக்கு முடிவுரை கூற வந்துள்ளேன்! உங்களுக்கு முடிவு காலம் வந்து விட்டது! ஜூலியஸ் சீஸர்: [கோபமாக] எங்களுக்கு முடிவு காலமா? சீஸருக்கு முடிவுரையா? கூறுவது யார்? தலையில்லாத முண்டமா? உங்கள் அரசர் டாலமிக்கு என்ன ஆயிற்று தெரியுமா? … நாங்கள் விரட்டிச் சென்ற போது, நைல் நதியில் குதித்து மூழ்கி விட்டார்! ·பரோ பரம்பரைக்காரி கிளியோபாத்ராவைத் தவிர உமக்கு அரசர் யாருமில்லை! அவர்தான் எகிப்தின் ராணி என்று ஒப்புக் கொள்ளுங்கள். கிளியோபாத்ரா எங்கள் பாதுக்காப்பில் இருக்கிறார். நீங்கள் அவரை ஏற்றுக் கொள்ளா விட்டால். உங்களை அரண்மனையில் தடம் வைக்க விட மாட்டார்! போதினஸ்: [ஆங்காரமாக] நாங்கள் கிளியோபாத்ராவை ராணியாக ஏற்றுக் கொள்ள முடியாது! உங்களையும் எகிப்த் ஆக்கிரமிப்புத் தளபதியாக ஒப்புக் கொள்ள முடியாது! டாலமியின் அடுத்த சகோதரி அரச பீடத்தில் அமரத் தயாராக உள்ளார்! அவர்தான் எங்கள் புது ராணி! ஜூலியஸ் சீஸர்: [கோபத்துடன்] முதலில் நீவீர் எமது போர்க்கைதி! போரை அறிவிக்காமல் போர் தொடுத்து, ரோமானிய வீரர் இருவரைக் கொன்றது உங்கள் குற்றம். பிரிட்டானஸ்! கைது செய் போதினஸ் போர்க் கைதியை! ++++++++++++++++ []   அங்கம் -2 பாகம் -13 “எனது உள்ளம் ஒருவரால் கவரப்பட்ட வேளையில், ஒருமாதிரி ஆங்காரப் பூரிப்போடு, நிதானமாக அதன் காரணத்தை வெளியேற்றக் கதவைத் திறந்து வைத்தேன்! தர்க்கமின்றி, போராட்ட மின்றி, பொய் வெட்கமின்றி, மன வேதனை யின்றி, நெஞ்சக் கலக்க மின்றி அனைத்துக்கும் உடன்பட்டேன், அனைத்தையும் நான் நம்பினேன்! முகம் சிவந்து ஒருத்தி வெட்கப் படுவது எப்படி, ஒருவரால் ஈர்க்கப்பட்டு ஆராதிக்கப்படும் போது?”   ஜியார்ஜ் ஸான்ட் பிரெஞ்ச் பெண் எழுத்தாளி [George Sand (1804-1876)] “ஒவ்வொரு பாறைத் துண்டமும் ஒரு சிலையைத் தன்னுள் ஒளித்து கொண்டுள்ளது! சிற்பியின் கலைப்பணி அச்சிலையை அதில் கண்டுபிடிப்பதுதான்!” மைக்கேலாஞ்சலோ [1474-1564]   “என்னைப் பாராட்டுபவன் எவனையும் நான் பாராட்டுவேன்! நாட்டைக் கைப்பற்றப் போர்க் களத்தில் நான் புரிந்த மாவீரச் செயல்களை யாரேனும் மறுக்க முடியுமா?” அண்டனி வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஆண்டனி & கிளியோபாத்ரா]   “சீஸர்! பத்துத் தலைமுறைகளுக்கு [முன்னூறு ஆண்டுகள்] ஒருதரம் உலகத்துக்கு ஓர் உன்னத நூல் கிடைக்கிறது. வரலாறின்றிப் போனால், மரணம் உங்களை மூடப் படைவீரன் அருகிலே புதைத்து விடும்!” [தியோடோடஸ், அலெக்ஸாண்டிரியா நூலகம் தீப்பற்றி எரியும் போது] பெர்னாட் ஷா [சீஸர் & கிளியோபாத்ரா]     நேரம், இடம்: அலெக்ஸாண்டிரியாவில் எகிப்த் மன்னர் அரண்மனை. ·பாரோ மன்னர் வரலாற்று ஓவியங்கள் உயர்ந்த சுவர்களை அலங்கரிக்கின்றன. பகல் வேளை. நாடகப் பாத்திரங்கள்: ஜூலியஸ் சீஸர், மெய்க்காப்பாளி, கிளியோபாத்ரா, சேடியர். காட்சி அமைப்பு: கிளியோபாத்ரா, டாலமியை அகற்றி விட்டுத் தன்னை எகிப்துக்கு ராணியாக்க சீஸரை வேண்டுகிறாள். சீஸர் கிளியோபத்ராவின் அறிவையும், திறமையையும் மெச்சி அவளை ராணியாக்க ஒப்புக் கொள்கிறார். சீஸரின் பகைவனும், மருமகனுமாகிய ரோமாபுரித் தளபதி பாம்ப்பியை டாலமியின் படையினர் இரகசியமாகக் கொன்றதை அறிந்து சீஸர் வேதனைப் பட்டுக் கோபம் அடைகிறார். டாலமியும் அவரது ஆலோசகரும் அதற்குத் தண்டனை அடைகிறார். மனம் மகிழ்ந்து, கிளியோபாத்ரா தன் உடற் கவர்ச்சியால் வசீகரிக்கையில் சீஸர் காக்காவலிப்பு நோயால் தாக்கப்பட்டு, துடிப்புடன் தரையில் விழுகிறார். மருத்துவர் பணிக்குப் பிறகு சீஸர் படுக்கையில் புத்துயிர் பெற்று எழுந்து அமர்கிறார். சீஸர் ரோமுக்கு மீள்வதை நிறுத்தி கிளியோபாத்ரா அவரைத் தன் கவர்ச்சியால் மயக்கி ஆண்மகவு பெற்றுத் தருவாய் உறுதி அளித்து மகிழ்ச்சி ஊட்டுகிறாள். வெளியே டாலமியின் படைவீரர் ரோமானியரைத் தாக்கி, அவரது கப்பல்களுக்குத் தீவைக்கிறார்! ++++++++++++++ ஜூலியஸ் சீஸர்: [கோபத்துடன்] முதலில் நீவீர் எமது போர்க்கைதி! போரை அறிவிக்காமல் போர் தொடுத்து, ரோமானிய வீரர் இருவரைக் கொன்றது உங்கள் குற்றம். பிரிட்டானஸ்! கைது செய் போதினஸ் போர்க் கைதியை! போதினஸ்: [கேலியாக] நானா உங்கள் கைதி? வியப்பாக இருக்கிறதே! நீங்கள் தங்கி யிருப்பது எங்கே என்று தெரிகிறதா? அலெக்ஸாண்டிரியாவில்! எகிப்தியர் பூமியில்! டாலமியின் படைவீரர் உங்களை விட மிகையான எண்ணிக்கையில் அலெக்ஸாண்டிரியாவை முற்றுகை செய்துள்ளதைச் சற்றேனும் அறிவீரா? ஜூலியஸ் சீஸர்: [கோபத்துடன்] நண்பா! வந்த வழியே திரும்பிச் செல், உன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள விரும்பினால்! சீக்கிரம் செல்! தூதன் என்பதால் உன்னைத் தப்பிச் செல்ல விடுகிறேன்! வெளியே உன் படையாட்களிடம் உடனே சொல், ரோமானியரை இனிமேலும் கொல்ல வேண்டாமென்று! அல்லாவிடில் நீ கொல்லப் படுவாய், அறிந்து கொள். என்னைப் போல் பரிவு மிக்கவர், என்படை வீரர் என்று எண்ணாதே! பிரிட்டானஸ், செய்தியைப் பரப்பு; எனது போர்க் கவசத்தை எடுத்து வரச்சொல்! [பிரிட்டானஸ் போகிறான். ரூ·பியோ நுழைகிறான்.] ரூஃபியோ: [ஜன்னல் பக்கம் சீஸரை அழைத்துச் சென்று, தூரத்தில் எழுகின்ற புகை மூட்டத்தைக் காட்டி] பாருங்கள் வெடிப் புகையை. [போதினஸ் ஓடி வந்து பார்க்கிறான்] ஜூலியஸ் சீஸர்: [கவசத்தை அணிந்து கொண்டே] ஓ, அதற்குள் கலகம் ஆரம்பித்து விட்டதா? எனக்குத் தெரியாமல் என்ன நடக்கிறது? எப்படி நடக்கிறது? நம் கண்முன்பாகவே நமது ரோமானியர் கொல்லப் படுவது அவமானம்! அக்கிரமம்! அயோக்கியத்தனம்!     ரூ·பியோ: நமது ஐம்பெரும் கப்பல்கள் துறைமுகத்தில் தகர்க்கப் பட்டன! கப்பலுக்கான எண்ணைக் கலன்களை ஏந்திச் சென்ற கட்டுமரமும் எரிக்கப் பட்டது! எகிப்தியர் படை மேற்குத் துறைமுகத்தைக் கைப்பற்றி விட்டது உண்மை! அவர்கள் வைத்த தீ வளர்ந்தோங்கி வருகிறது! ஜூலியஸ் சீஸர்: [சீற்றமுடன், கவசத்தை சரிசெய்து கொண்டு] அப்படியானால் கிழக்குத் துறைமுகம் யார் கையில் உள்ளது? கலங்கரை விளக்கம் யார் கையில் உள்ளது, ரூ·பியோ? ரூ·பியோ: [கோபத்துடன்] சீஸர்! நீங்களே களத்துக்கு வந்து கட்டளை யிடுங்கள்! ஐந்து நிமிடத்தில் என்னால் படை திரட்டித் தாக்க முடியாது! கிளியோபாத்ராவின் பட்டம் சூட்டு விழாவுக்கு நீங்கள் ஒத்திகை பார்த்து வருகிறீர், அலெக்ஸாண்டிரியாவை எகிப்தியர் அபகரிக்கும் போது! நாம் விழித்தெழா விட்டால், நம்மையும் சிறைப் படுத்திக் கொன்று விடுவர் டாலமியின் ஆட்கள்! ஜூலியஸ் சீஸர்: [சற்று நிதானமுடன்] எகிப்த் ரோமாபுரியின் ஆக்கிரமிப்பு நாடு! ஜூலியஸ் சீஸர் உள்ள வரை அலெக்ஸாண்டிரியா ஒருபோதும் அவரது கையிக்கு மீளாது, ரூஃபியோ! [அப்போது தியோடோடஸ் அலறிக் கொண்டு ஒருபுறம் நுழைகிறார். கிளியோபாத்ரா தீயெரிப்புகளைப் பற்றிக் கேள்விப்பட்ட பின்பு ஆத்திரப் பட்டு மாளிகைக்குள் நுழைகிறாள்] தியோடோடஸ்: [பயங்கரக் குரலுடன்] எகிப்திய மாந்தர்காள்! நமது நகரம் நரக மாகுது! அலெக்ஸாண்டிரியாக் கடற்கரை எங்கெங்கு நோக்கினும் தீ மயம்! நமது உன்னத நூலகம் வெந்து சாம்பலாகுது! நமது எகிப்த் நாகரீகம் மாயுது! நமது கலாச்சாரம் எரிந்து போகுது! [எல்லாரும் மாளிகை ஜன்னல் வழியாகத் தூரத்தில் தீ மண்டலங்களைக் காண்கிறார்] கிளியோபாத்ரா: [ஆங்காரமாக, கொதிப்புடன்] காட்டுமிராண்டியர், ரோமானியர்! நூலகத்தில் எப்படித் தீ வைக்கலாம்? அலெக்ஸாண்டிரியா நூலகம் வரலாற்றுக் களஞ்சியம்! உலகின் முதல் நூலகம் எரியுது! வான சாஸ்திரம், கணித சாஸ்திரம், அண்ட கோள்களின் நகர்ச்சி விளக்கம், கட்டடக் கலைகள், பிரமிட்களின் அமைப்பு அனைத்தும் எரிந்து புகையாய்ப் போகின்றன! வரலாற்றுப் புகழ் பெற்ற எங்கள் நூலகம் கருஞ் சாம்பலாகுது! பிளாடோவின் உரையாடல் நூல் வெந்து போகுது! அரிஸ்டாடலின் படைப்புகள் கரும் புகையாய் போகுது! அலெக்ஸாண்டரின் இந்தியப் படையெடுப்பு வரலாறுகள் கரிந்த சாம்பலாகின்றன! கிரேக்க, ·பாரோ வரலாறுகள், காவியங்கள், ஹீப்ரூ படைப்புகள் அனைத்தும் நாசமாகின்றன! காட்டுமிராண்டித்தனம் சீஸரே! ஜூலியஸ் சீஸர்: [சற்று கனிவோடும், சீற்றத்தோடும்] வருந்துகிறேன், கிளியோபாத்ரா! நூலகத்துக்கு யாரும் திட்டமிட்டுத் தீ வைக்க வில்லை! டாலமியின் படகுகளில் வைத்த தீ காற்றடித்தால் நூலகத்தில், தாவிப் பற்றி யிருக்க வேண்டும், என்பது எனது யூகம்! கிளியோபாத்ரா: வருந்துகிறேன் என்று வெறும் வாய் வார்த்தை போதாது! நூலகம் திரும்பவும் மீளுமா? எப்படி அதை மீண்டும் உருவாக்குவது? முதலில் தீயை அணைக்க யாரும் போக வில்லை! ஜூலியஸ் சீஸர்: [சற்று குற்ற உணர்வுடன்] டாலமியின் படையினர் எமது கப்பல் மீது முதலில் இட்ட தீ! ரோமானியர் யாரும் அந்தப் போரை ஆரம்பிக்க வில்லை! டாலமியின் ஆட்கள் ரோமானியரைக் கொல்லத் தொடங்கினர். பிறகு என்ன நடக்கும், போரைத் தவிர? ரோமானியரும் வெடிப்புக் குண்டுகளை எகிப்தியர் கப்பல்கள் மீது வீசினர்! அந்தத் தீயைக் காற்று தூக்கிச் சென்று தவறாக நூலகத்தில் விட்டுவிட்டது! கிளியோபாத்ரா: [கோபத்துடன்] நூலகத்தின் பெயர் முன்னால் காட்டப் பட்டுள்ளது. அதைப் பார்க்காமல், அதன் அருகே எப்படி வெடிகுண்டை வீசலாம்! காட்டுமிராண்டிகள்தான் சிந்தனை யில்லாமல், கண்ணால் பாராமல் இப்படிச் செய்வார்! ஜூலியஸ் சீஸர்: [தன் படையாட்களை வெளியே போகச் சொல்லி, அவர்கள் சென்ற பிறகு, பெருங் கோபத்துடன்] வாயை மூடு! ரோமானியரைக் காட்டுமிராண்டிகள் என்று எப்படி நீ திட்டலாம்? ஒழுக்கமுள்ள ரோமானியப் படைக்கு நிகராக எப்படையும் கிடையாது! நாகரீக மற்றவர் எகிப்தியர்தான்! ரோமானியர் அல்லர்! நான் ஜூலியஸ் சீஸர்! ரோமானியர் தலைவனாய்ப் போற்றுப் படுபவன்! கிளியோபாத்ரா: நான் கிளியோபாத்ரா! எகிப்தியர் வணங்கும் மகாராணி! ஐஸிஸ் [1*] கடவுளாக வணங்கப் படுபவள் நான்! ·பாரோ மன்னர் நாகரீகம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே உதயமானது! எங்கள் நாகரீகம் எப்படிப் பட்டதென்று நேராகப் பார்க்க வேண்டுமா? அதோ அங்குள்ள எங்கள் பிரமிட் கோபுரத்தில் புதைத்து வைத்துள்ள களஞ்சியங்களைப் பாருங்கள்! அதோ அங்கு படுத்துள்ள மனிதத் தலைச் சிங்கத்தைப் பாருங்கள்! ஈராயிரம் ஆண்டுக்கு முன் விருத்தியான எங்கள் கட்டடக் கலைக்கு நிகராக எந்த நாட்டில் உள்ளது? ஜூலியஸ் சீஸர்: கிளியோபாத்ரா! அவை எல்லாம் புராணக் கதைகள்! நீங்கள் இப்போது எங்கள் அடிமை! எகிப்த் நாடு ரோமுக்குக் கீழ் உள்ளது! நீ எப்போது எகிப்தின் அரசி ஆவாய் என்பது என் கையில் உள்ளது! நீ எகிப்தின் தேவதை ஐஸிஸ்தான்! ஆனால் நீ வெறும் ஓர் அழகுப் பதுமை! உன்னை அரசியாக என்றைக்கு நான் ஆசனத்தில் ஏற்றுவேனோ அன்றுதான் நீ எகிப்தின் ராணி! அதுவரை நீ வெறும் கவர்ச்சி மாதுதான்! காட்டுமிராண்டி என்று எங்களைத் திட்டியதற்கு நீ மன்னிப்புக் கேட்க வேண்டும்! கிளியோபாத்ரா: சீஸரே! அது மட்டும் நடக்காது! ஐஸிஸ் கடவுளான கிளியோபாத்ரா யாரிடமும் மன்னிப்புக் கேட்க மட்டாள்! எகிப்தியர் நாகரீக மற்றவர் என்று அறிவில்லாமல் ஏளனப் படுத்திய நீங்கள்தான் என்னிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். அதுவரை உங்கள் முகத்தில் நான் விழிக்கப் போவதில்லை! நான் போகிறேன்! [கிளியோபாத்ரா கோபத்துடன் வெளியேறுகிறாள். சீஸர் பரிதாபமாய் விழித்துக் கொண்டு நிற்கிறார்] [1*] ISIS – Egyptian Goddess ********************* []   அங்கம் -2 பாகம் -14 “காதல் சம்பந்தப்பட்ட வரையில் பாலுணர்ச்சிகளைப் பொய்யாக எண்ணுவதைப் நானொரு மனிதப் பாபமாகக் கருதுகிறேன். அதே சமயத்தில் காதல் முழுதாயின்றிப் பின்னமாக உள்ள போது ஏற்படும் உணர்ச்சிகளை போலித்தனமானத் தவறென்று நான் மதிப்பீடு செய்கிறேன். நான் நம்புவதையே சொல்கிறேன்: காதலுற்ற போது ஒருவரை ஒருவர் முடிந்தவரை முழுமையாக நேசிக்க வேண்டும். அல்லாவிட்டால் என்ன நேர்ந்தாலும் சரி, ஒருவர் முழுக் கற்புடன் தனிமையாக வாழ வேண்டும்.”   ஜியார்ஜ் ஸான்ட் பிரெஞ்ச் பெண் எழுத்தாளி [George Sand (1804-1876)]   “இறைவா! எப்போதும் நான் சாதிக்கக் கூடுவதை விட மிகையாக வேட்கை கொள்வதையே எனக்கு அளித்திடு.” மைக்கேலாஞ்சலோ [1474-1564]   “ஒரு நாளைப் பொழுதில் கடிது உழைத்துக் காலத்தைச் செலவழித்த பிறகு அன்றிரவில் ஆழ்ந்த சுகமான தூக்கம் வருவதைப் போல், நன்னெறியுடன் வாழ்ந்த வாழ்க்கை மகிழ்ச்சியான மரணத்தை அளிக்கிறது!” லியானார்டோ டவின்ஸி [1452-1519]   “என் எகிப்து நாடே! நன்கு அறிவாய் நீ! நின் திசைதிருப்பிப் பின்தட்டுடன் கயிற்றால் பிணைக்கப் பட்டு துள்ள தென்  இதயம் ! பிறகு நீதான் இழுத்துச் செல்ல வேண்டும்!” [கிளியோபாத்ரா] வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஆண்டனி & கிளியோபாத்ரா]     நேரம், இடம்:    அலெக்ஸாண்டிரியாவில் எகிப்த் மன்னர் அரண்மனை. ·பாரோ மன்னர் வரலாற்று ஓவியங்கள் உயர்ந்த சுவர்களை அலங்கரிக்கின்றன. பகல் வேளை.   நாடகப் பாத்திரங்கள்:     ஜூலியஸ் சீஸர், மெய்க்காப்பாளி, கிளியோபாத்ரா, சேடியர்.   காட்சி அமைப்பு:    கிளியோபாத்ரா, டாலமியை அகற்றி விட்டுத் தன்னை எகிப்துக்கு ராணியாக்க சீஸரை வேண்டுகிறாள். சீஸர் கிளியோபத்ராவின் அறிவையும், திறமையையும் மெச்சி அவளை ராணியாக்க ஒப்புக் கொள்கிறார். சீஸரின் பகைவனும், மருமகனுமாகிய ரோமாபுரித் தளபதி பாம்ப்பியை டாலமியின் படையினர் இரகசியமாகக் கொன்றதை அறிந்து சீஸர் வேதனைப் பட்டுக் கோபம் அடைகிறார். டாலமியும் அவரது ஆலோசகரும் அதற்குத் தண்டனை அடைகிறார். மனம் மகிழ்ந்து, கிளியோபாத்ரா தன் உடற் கவர்ச்சியால் வசீகரிக்கையில் சீஸர் காக்காவலிப்பு நோயால் தாக்கப்பட்டு, துடிப்புடன் தரையில் விழுகிறார். மருத்துவர் பணிக்குப் பிறகு சீஸர் படுக்கையில் புத்துயிர் பெற்று எழுந்து அமர்கிறார். சீஸர் ரோமுக்கு மீள்வதை நிறுத்தி கிளியோபாத்ரா அவரைத் தன் கவர்ச்சியால் மயக்கி ஆண்மகவு பெற்றுத் தருவாய் உறுதி அளித்து மகிழ்ச்சி ஊட்டுகிறாள். வெளியே டாலமியின் படைவீரர் ரோமானியரைத் தாக்கி, அவரது கப்பல்களுக்குத் தீவைக்கிறார்! முடிவில் அலெக்ஸாண்டரியா நூலகம் எரிகிறது!      தியோடோடஸ்: [சீஸரைக் கூர்ந்து நோக்கி] உலகப் புகழ் பெற்ற எங்கள் பெரு நூலகம் தீப்பற்றிக் கரியாகக் காரணமானீர்! உலக வரலாற்றை உருவாக்கும் மாவீரர் நீங்கள் பூர்வீக வரலாற்றை அழிப்பதில் பூரண விருப்பமா? எரிந்து போன நூல்களைப் புதிதாகப் பெற்றுத் தர வேண்டும். அல்லது நீங்கள் நட்ட ஈடு தர வேண்டும் எங்களுக்கு! ஜூலியஸ் சீஸர்: [சற்று சீற்றமுடன்] ரோமானியக் கப்பலில் தீவைத்தது யார்? எகிப்தியப் படைகள்! கலகம் உண்டாக்கி நூலகத் தீயை அணைக்க முயலும் ரோமானியப் படைகளைத் தடுப்பது யார்? உங்கள் பரம்பரை! தொட்டில் பிள்ளையைக் கிள்ளி விட்டு, தாலாட்ட தாயைத் தேடுகிறீரா? உன்னத நூலகத்தின் மதிப்பை அறியாதவர் உங்கள் மூட மக்கள்! அறிவு கெட்டதனமாய் ரோமானியர் மீது பழி சுமத்த வேண்டாம்! உமது அறிவும் பழுதாகி விட்டது. ஏனிப்படிச் சும்மா நின்று கொண்டு என்னுடன் வாதாடிக் கொண்டிருக்கிறீர்? மெய்யாகவே நூலகத்தைக் காக்க விரும்பினால், வெளியே போய் தீயை அணைப்பீர்! [தியோடோடஸ் பக்கத்தில் நிற்கும் போதினஸைப் பார்த்தவண்ணம் விரைந்து வெளியேறுகிறார்] போதினஸ்: தியோடோடஸ், நான் போக முடியாது உன்னுடன்! நானொரு வீட்டுக் கைதி இங்கே! வெளியே எங்கும் உன்னைப் போல் நடமாட முடியாது நான்! தியோடோடஸ்: [நடந்து கொண்டே] என்ன நீ ஒரு கைதியா? நூலகத்தை என்னால் முடிந்தவரைக் காக்க வேண்டும்! [போகிறார்] ஜூலியஸ் சீஸர்: போதினஸ் நீதான் சொல்ல வேண்டும், உலக வரலாறுகள் எரிந்தழியும் இந்த நேரத்தில்! தியோடோடஸ் மூலம் செய்தி அனுப்பு, இனிமேலும் ரோமானியரைக் கொல்ல வேண்டா மென்று! என் நெஞ்சம் கொதிக்கிறது! போரிடாமல் வாளா நிற்கும் ரோமானியரைக் கொல்லத் துணியாதீர்! உமது உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவாவது, எமது படையினரைக் காப்பாற்றுவீரா? போதினஸ்: [கோபமாக] உமது படையினர் உயிர் உமது கையில் உள்ளது! அவரைக் கப்பலில் ஏற்றி வந்தவன் நானில்லை! ஆனால் எமது உயிரைப் போக்கத் துணிந்தால், அதற்குப் பதிலாக நீவீர் பெருமிழப்பை ஏற்க வேண்டிய திருக்கும்! ஜூலியஸ் சீஸர்: [சினத்துடன்] டாலமியும், நீயும் அக்கிலஸ் மூலமாக ஆயுதமற்ற என் மருமகன், ரோமானிய மாவீரன், பாம்ப்பியின் தலையை வெட்டிய பயங்கர வாதிகள்! உங்கள் குற்றத்துக்குத் தக்க தண்டனை கிடைக்கும்! அதில் ஐயமில்லை! நீவீர் நிரபராதி என்று நிரூபிக்கப்படும் வரையில் முதல்தரக் கொலையாளியாகத்தான் எண்ணப்படுவீர்! ரூஃபியோ: [அவசரமாய்க் குறுக்கிட்டு] ஜெனரல் சீஸர்! உங்கள் வருகை தேவைப் படுகிறது! உங்கள் முடிவு வேண்டப் படுகிறது! [துறைமுகம் வழியே எட்டிப் பார்த்து, படை வீரனிடம்] கிழக்கில் நிற்கும் சிறிய படகுகளை வெளியேற்று! நீண்ட படகுகளை என்ன செய்ய வேண்டுமென்று ஆணையிடச் சீஸர் வருவதாகச் சொல்! [சீஸரைப் பார்த்து] எங்கே அந்த எகிப்திய பயங்கர வாதிகளை? கொலைகாரர் அவர்கள்! அவர் மீது உங்களுக்குப் பரிவு மிகுந்து விட்டதா? அவருக்கு விடுதலை அளித்து விட்டீர்களா? பாம்ப்பியைக் கொன்ற அந்த பாதகரைச் சும்மா விடலாமா? ஜூலியஸ் சீஸர்: ரூஃபியோ! நூலகத் தீயை அணைக்க தியோடோடஸை அனுப்பி யுள்ளேன்! உலக வரலாறுகளை, காவியங்களைப் பாதுகாக்க வேண்டும். போதினஸ் சிறைக் கைதியாக வைக்கப் பட்டிருக்கிறான்! நினைவில் வைத்துக் கொள் ரூ·பியோ! எத்தனை எகிப்தியனை நாம் சிறைப் படுத்தி வைத்திருக்கிறோம்! அதே சமயத்தில் ஒவ்வோர் எகிப்தியனுக்கும், இரட்டை ரோமானியக் காவலரைச் சிறைப்படுத்தி வைத்துள்ளோம், பாதுகாக்க. ரூஃபியோ: சீஸர்! உங்கள் கசப்பான சுவைப் பேச்சில் ஏதோ ஒரு குள்ள நரித்தனம் தெரிகிறது எனக்கு! எகிப்தியர் மீது ஏன் உங்களுக்கு அத்தனை பரிவு? [பலகணி நோக்கிச் சென்று வெளியே எட்டிப் பார்த்து] சொல், என்ன நடக்கிறது துறைமுகத்தில்? ஜூலியஸ் சீஸர்: [அங்குமிங்கும் பார்த்து] என்ன? பிரிட்டானஸ் தூங்கி விட்டானா? எனது கவசத்தைக் கொண்டுவர ஏற்பாடு செய்தேன். .. பிரிட்டானஸ்! எங்கே போய் விட்டாய்? கவசத்தைக் கொண்டுவா! காத்துக் கொண்டிருக்கிறேன். … யாரங்கே வருவது? [அப்போது கிளியோபாத்ரா வெளியிலிருந்து சீஸரின் வாள், தலை கெல்மெட்டை பிரிட்டானஸிட மிருந்து பறித்துக் கொண்டு, ஆங்காரமாக உள்ளே நுழைகிறாள். அவளைப் பின்பற்றி பிரிட்டானஸ் தொடர்கிறான். சீஸருக்கு இடப்புறம் கிளியோபாத்ராவும், வலப்புறம் பிரிட்டானஸ¤ம் நிற்கிறார்கள்.] கிளியோபாத்ரா: [ஆர்வமுடன்] ரோமன் கெல்மெட்டைப் பார்க்கவே வெகு அழகு! அதில் ஆண்மை தெரிகிறது! ஆண்மையின் வல்லமை தெரிகிறது. ஆண்மையின் அதிகாரம் தெரிகிறது. அதைத் தலையில் வைத்தால் ஆடவரின் உயரம் கூடுகிறது! முக லட்சணம் பராக்கிரமத்தைக் காட்டுகிறது! உங்களின் ஆண்மைத் தோன்றத்தைப் பன்மடங்கு அதிகரிக்கிறது! எடுப்பான உங்கள் முகத்தைப் பார்த்தால், பகைவரின் தொடைகள் நடுங்கும்! வயிற்றுக் குடல் வெளியே வந்திடும்! ஆடவருக்கு அப்படி ஓர் அதிகாரக் கெல்மெட் உள்ளது போல, பெண்டிருக்கு ஏன் செய்யப் படவில்லை? எனக்கொன்று அதுபோல் வேண்டும்! ஜூலியஸ் சீஸர்: [சிரித்துக் கொண்டு] எங்கள் ரோமானியப் படையில் பெண் வாசமே அடிப்பதில்லை! மருத்துவக் குழுவில் கூட பெண்டிர் எவரும் கிடையாது! போர்ப்படையில் பெண்டிருக்கு யாம் வேலை தர மாட்டோம்! வீட்டுப் போரில் பங்கெடுப்பவர் எமது பெண்டிர்! வெளிப் போரில் பங்கெடுப்பவர் ஆடவர்! வீட்டுப் போரில் பெண்ணை ஆடவர் வெல்ல முடியாது! வெளிப் போரில் பெண்டிர் எம்மை மிஞ்ச முடியாது! வீராங்கனை உனக்கு ஓர் கெல்மெட் தேவைதான்! தயார் செய்து அனுப்பச் சொல்கிறேன். உன்னைப் போல் ஒரு வீரப் பெண்ணை ரோமில் எங்கும் காண முடியாது! கிளியோபாத்ரா: [சிரித்துக் கொண்டு] ஆடவர் நீங்கள் வீட்டில் பெண்டிரை ஆராதித்துக் கொண்டு, அரவணைத்துக் கொண்டு, அலங்காரப் பொம்மைகளாய் நடத்திக் கொண்டு வருகிறீர்! என்னைப் போல் பெண்டிர் ரோமிலில்லை என்று கூறி மூடி மறைக்காதீர்! கையில் வாளைக் கொடுத்து, கவசத்தை மார்பில் கட்டி, குதிரையில் ஏற வாய்ப்பைக் கொடுத்தால் என்னைப் போன்ற பெண் ஏன் உருவாக மாட்டாள்? ஜூலியஸ் சீஸர்: [சிரித்துக் கொண்டு] கிளியோபாத்ரா! அது உண்மைதான்! ரோமானியப் பெண்டிர் உன் வீரக் கண்களைப் பார்த்தவுடனே பக்கத்தில் வாள் உள்ளதா வென்று அவரது கைகள் தேட ஆரம்பித்து விடும்! நான் ரோமுக்குப் போகும் போது நீ அவசியம் என்னுடன் வா! உன்னை ரோமாபுரியின் பிரதான வீதிகளில் அழைத்துச் செல்கிறேன்! யாவரும் வாழ்த்தி வரவேற்பார்! கிளியோபாத்ரா: [பூரிப்புடன் அருகி சீஸர் தோளைப் பற்றிக் கொண்டு] என் வயிற்றில் வளரும் உங்கள் ஆண்மகவு பிறந்து நடக்க ஆரம்பித்ததும் ரோமாபுரிக்கு வருகிறேன்! நிச்சயம் வருகிறேன்! ரோமாபுரியின் வருங்கால வாரிசு மன்னனான உங்கள் புதல்வனை, என் கரத்தில் பற்றிக் கொண்டு வருகிறேன். ஜூலியஸ் சீஸர்: [மகிழ்ச்சியுடன் கிளியோபாட்ராவைத் தழுவி] ஆனந்தம் அடைகிறேன், கிளியோபாத்ரா! நீ தாயா? என் மகவுக்கு அன்னையா? மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்….. ஆனால் அது எப்படி ஆண்மகவு என்று அப்படி உறுதியாகச் சொல்கிறாய்? கிளியோபாத்ரா: [சீஸரின் பிடியிலிருந்து மெல்ல விடுவித்துக் கொண்டு] எங்கள் அரண்மனை ஜோதிட நிபுணர் மூவரும் கூறினார், எனக்குப் பிறக்கப் போவது ஆண் மகவென்று! அதை நான் நம்புகிறேன்! அவர் வான சாஸ்திரம் அறிந்தவர். அலெக்ஸாண்டர் இந்தியாவைப் படை யெடுத்து மீண்ட சமயத்தில், அங்கிருந்த வான சாஸ்திர வல்லுநர் மூலம் கிரேக்க ஞானிகள் அறிந்த கலை. வாழையடி வாழையாக அந்த வான சாஸ்திரக் கலை எகிப்திலும் பரவி வளர்ச்சி பெற்றது. [கனிவுடன்] சீஸர்! சீஸர்! சீஸர்! நான் பிறந்ததின் உன்னத பலனைப் பெறுகிறேன். நிச்சயம், நமது முதல் குழந்தை ஆண்மகவு! அந்த எதிர்பார்ப்பில் சிறிதேனும் ஐயமில்லை எனக்கு! அந்த ஆண்மகவு உங்கள் வாரிசு! ரோமாபுரியின் எதிர்கால வேந்தர் வேந்தன்! எகிப்த் நாட்டின் வருங்கால மாமன்னன்! ஜூலியஸ் சீஸர்: [ஆனந்தக் கண்ணீர் சொரிய] கிளியோபாத்ரா! என் கனவை நிஜமாக்கியவள் நீ! எனது மனைவி கல்பூர்ணியா பெற முடியாத ஆண்மகவை எனக்கு ஈடிணை யில்லாத அற்புதப் பரிசாக அளிக்கப் போகிறாய்! அரசனாக ஏற்றுக் கொள்ளா விட்டாலும், பிரதான பிள்ளைச் செல்வமாய், ரோமாபுரியும் என் குமரனை வரவேற்கும்! நிச்சயம் வரவேற்கும்! எனக்குக் கிடைக்கும் மதிப்பு என் எகிப்திய மகனுக்கும் கிடைக்கும்! [கிளியோபாத்ரா சீஸர் மார்பில் சாய்ந்து கொள்கிறாள்] ++++++++++++++++++++ []   அங்கம் -2 பாகம் -15 “எவனொருவன் உன்னதக் களிப்பினை கவிதையின் உணர்வுகளிலிருந்து  கவர்ச்சி செய்கின்றானோ,  அவனே உண்மையான கவிஞனாகக் கருதப் படுகிறான், ஒருவரிக் கவிதை எழாதா விட்டாலும் கூட!”   ஜியார்ஜ் ஸான்ட் பிரெஞ்ச் பெண் எழுத்தாளி [George Sand (1804-1876)]   ஒவ்வொரு பளிங்குப் பாறைத் துண்டிலும் எனக்கு நேர் எதிராகத் தோன்றும் வடிவம் ஒன்று உருவாகி முழுமையுடன் நடமாடுவதைக் காண்கிறேன். வெளிச்சுவரை உடைத்துச் சிறையினில் அடைபட்டிருக்கும் அந்த வடிவத்தை வெளியேற்ற, என் மனக்கண் கண்டு துடிப்பது போல் மற்றவரும் காணும்படிச் செய்வதே எனது படைப்புப் பணியாகும். மைக்கேலாஞ்சலோ [1474-1564]   இயற்கை படைத்துள்ளதைப் போன்று எளிமையாக, நளினமாக, நேரிடையாக எதிலும் ஒன்று குறையாமலும், ஒன்று கூடாமலும், கூரிய அறிவுள்ள மனிதன் ஒருபோதும் ஆக்க முடியாது! லியானார்டோ டவின்ஸி [1452-1519]   எடுத்து வா எனது அங்கியை! சூட்டி விடு எனது கிரீடத்தை! தெய்வீக வேட்கை எழுகிறது என்னுள்! என் உதடுகளை நனைக்கா தினிமேல், எகிப்தின் இனிய திராட்சைப் பழரசம்! அதோ! அதோ! அருமை ஐராஸ், சீக்கிரம்! … விடை பெறுகிறேன், நீண்ட விடுமுறைக்கு! … (கிளியோபாத்ரா) வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஆண்டனி & கிளியோபாத்ரா]     நேரம், இடம்:    அலெக்ஸாண்டிரியாவில் எகிப்த் மன்னர் அரண்மனை. ·பாரோ மன்னர் வரலாற்று ஓவியங்கள் உயர்ந்த சுவர்களை அலங்கரிக்கின்றன. பகல் வேளை.   நாடகப் பாத்திரங்கள்:    ஜூலியஸ் சீஸர், மெய்க்காப்பாளி, கிளியோபாத்ரா, சேடியர். ரோமனியக் காவலர். அரசியாக அலங்கரிக்கப் பட்டு, ராஜ கிரீடத்தை அணிந்து கம்பீரமாக ஆசனத்தில் அமர்ந்திருக்கிறாள். அருகில் உள்ள ஆசனத்தில் சீஸர் ராணுவத் தளபதி உடுப்பணிந்து அவளுடன் பேசிக் கொண்டிருக்கிறார்.   காட்சி அமைப்பு:    [கிளியோபாத்ரா, டாலமியை அகற்றி விட்டுத் தன்னை எகிப்துக்கு ராணியாக்க சீஸரை வேண்டுகிறாள். சீஸர் கிளியோபத்ராவின் அறிவையும், திறமையையும் மெச்சி அவளை ராணியாக்க ஒப்புக் கொள்கிறார். சீஸரின் பகைவனும், மருமகனுமாகிய ரோமாபுரித் தளபதி பாம்ப்பியை டாலமியின் படையினர் இரகசியமாகக் கொன்றதை அறிந்து சீஸர் வேதனைப் பட்டுக் கோபம் அடைகிறார். டாலமியும் அவரது ஆலோசகரும் அதற்குத் தண்டனை அடைகிறார். மனம் மகிழ்ந்து, கிளியோபாத்ரா தன் உடற் கவர்ச்சியால் வசீகரிக்கையில் சீஸர் காக்காவலிப்பு நோயால் தாக்கப்பட்டு, துடிப்புடன் தரையில் விழுகிறார். மருத்துவர் பணிக்குப் பிறகு சீஸர் படுக்கையில் புத்துயிர் பெற்று எழுந்து அமர்கிறார். சீஸர் ரோமுக்கு மீள்வதை நிறுத்தி கிளியோபாத்ரா அவரைத் தன் கவர்ச்சியால் மயக்கி ஆண்மகவு பெற்றுத் தருவாய் உறுதி அளித்து மகிழ்ச்சி ஊட்டுகிறாள். வெளியே டாலமியின் படைவீரர் ரோமானியரைத் தாக்கி, அவரது கப்பல்களுக்குத் தீவைக்கிறார்! முடிவில் அலெக்ஸாண்டரியா நூலகம் எரிந்து, கிளியோபாத்ராவின் கோபத்தைத் தூண்டி விடுகிறது. டாலமியும், அவனது போர் அதிகாரிகளும் கொல்லப் பட்ட பிறகு சீஸரின் பாதுகாப்புடன், கிளியோபாத்ரா எகிப்தின் ஏக போக அரசியாய் முடிசூட்டிக் கொள்கிறாள்.]    ஜூலியஸ் சீஸர்: [கிளியோபாத்ராவின் வலது கையைப் பற்றி முத்தமிட்டு] கண்மணி கிளியோபாத்ரா! உனது முடிசூட்டு விழா சிறப்பாக முடிந்தது. நீ எகிப்தின் ஏகாந்த, இணையற்ற அரசி! உனக்குப் போட்டியான உன் தனையன் டாலமி நைல் நதியில் மூழ்கிப் போனான்! எதிரிகள் உனக்கில்லை இப்போது! உன்னை அரசியாக்க வேண்டும் என்ற எனது பொறுப்பு முடிந்தது. ரோம சாம்ராஜியத்துக்கு எகிப்து நாடு அடிமை நாடாயினும், ஆண் வாரிசை எனக்கு அளிக்கப் போகும் நீ ஓர் அடிமை அரசி யில்லை! ஜூலியஸ் சீஸரின் மனைவி மதிப்பைப் பெற்றவள் நீ! ஆம் எனது இரண்டாம் மனைவி நீ! கூடிய சீக்கிரம் ரோமுக்குப் போகும் நான் உன்னையும் கூட்டிச் செல்வேன்! எனக்குக் கிடைக்கும் மதிப்பும், சமூக உயர்வு நிலையும் உனக்கும் கிடைக்கும். கிளியோபாத்ரா: [முக மலர்ச்சியுடன்] மாண்புமிகு சீஸர் அவர்களே! கிளியோபாத்ராவின் கனவை நிறைவேற்றினீர்! எகிப்தின் வரலாற்றை மாற்றினீர்! உங்களுக்கு நான் என்றென்றும் கடமைப் பட்டவள்! உங்கள் எல்லையற்ற அன்புக்கும், ஆதரவுக்கும் கட்டுப் பட்டவள்! ·பாரோ மன்னர்களின் ராஜ பரம்பரைத் தகுதி எனக்குக் கிடைக்க வாய்ப்பளித்து, வல்லமை அளித்து, பக்கத்தில் பாதுகாப்பு அரணாக நிற்பவர். ஒப்பற்ற சீஸரை, எனக்கு உயிரளித்த சீஸரை, ஆட்சி உரிமை தந்த சீஸரை, என்னை ராணியாய் உயர்த்திய சீஸரை என்னுயிர் நீங்கும் வரை மறக்க மாட்டேன்! உங்களை என் உடமை ஆக்கி, என் உறவாளி ஆக்கி, என் ஆண்மகவுக்குத் தந்தை என்னும் வெகுமதி அளிக்கிறேன் என் கைமாறாக! ஜூலியஸ் சீஸர்: [கிளியோபாத்ரா தோள்களைப் பற்றிக் கொண்டு கனிவுடன்] கிளியோபாத்ரா! உன்னைப் போன்ற அறிவும், வீரமும் கொண்ட பெண்ணை நான் எங்கும் கண்டதில்லை! உன்னைப் போன்ற எழில் மிக்க மங்கையை நான் எங்கும் சந்தித்த தில்லை! நெஞ்சு உறுதியும், எடுப்பான நடையும், மிடுக்கான சொல்லும், நாக்கில் நளினமும் பெற்ற நங்கையை என் கண்கள் எங்கும் கண்ட தில்லை! [கிளியோபாத்ரா சீஸரைப் பாசமுடன் அணைத்துக் கொள்கிறாள்] கிளியோபாத்ரா: [சீஸரை ஊன்றி நோக்கி] உங்கள் மார்பு பரந்தது; அதை விட உங்கள் மனம் விரிந்தது! அந்த எ·கு மனத்தை நான் பற்ற முடிந்தது எனக்குப் பூரிப்பளிக்கிறது. உங்கள் தோள் உயர்ந்தது; அதை விட உங்கள் உள்ளம் உன்னத மானது! அந்த உள்ளத்தில் நான் குடியேறியது எனக்குக் குளிர்ச்சி அளிக்கிறது! .. ஆனால் உங்கள் ரோமானிப் போர்த் தளபதிகள் பொல்லாதவர்! எனது முடிசூட்டு விழாவின் போது விஜயம் செய்த எல்லா மன்னர்களும் மண்டி யிட்டபோது, அவர்கள் மட்டும் நின்று விழித்துக் கொண்டு என்னை அவமானப் படுத்தினர்! என்ன அகங்காரம் அவருக்கு? நீங்கள் கூட மண்டியிட்டு எனக்கு மதிப்பளித்தீர்; அது எனக்கு மனம் மகிழ்ச்சி தந்தது! ஆனால், உங்கள் கொடிய தளபதிகள் …! ஜூலியஸ் சீஸர்: [சிரித்துக் கொண்டு] நான் கடைசியில் அவர்களுக்குக் கையசைத்து மண்டியிட வைத்தேன்! ரோமாபுரியில் யாரும் எவருக்கும் மண்டியிட்டு மதிப்பளிப்ப தில்லை! அதுவும் ஒரு பெண்ணரசிக்கு ஆடவர் மண்டி யிடுவதில்லை! எங்கள் நாட்டுக்கு அரசரே கிடையாது! அதுவும் உன்னைப் போலொரு வாலிபப் பெண் அரசியாக முடியாது! அடுப்பூதும் எமது அணங்குகள் உன்னைப்போல் கையில் செங்கோல் ஏந்திக் கம்பீர நடை போடுபவ ரில்லை! கிளியோபாத்ரா: [சீஸரைக் கூர்ந்து நோக்கி] ரோமாபுரி சாம்ராஜியத்தின் சர்வாதிகாரியான நீங்கள், ரோமின் சக்கரவர்த்தி அல்லவா? ரோமாபுரியின் வேந்தர் வேந்தன் என்று முடி சூடத்தானே, நீங்கள் சீக்கிரம் போவதாக உள்ளது! ஜூலியஸ் சீஸர்: [சற்று வருத்தமுடன்] கிளியோபாத்ரா! ரோமாபுரிக்கு நான் அதிபதியாகச் சென்றாலும், என்னை வேந்தன் என்று ரோமானியர் ஏற்றுக் கொள்ள மாட்டார். ரோமாபுரியின் சக்கரவர்த்தி போல் ரோமானியர் எனக்கு மதிப்பளித்தாலும், என்னை அரசன் என்று ஒப்புக் கொள்ள மாட்டார். கிளியோபாத்ரா: [சற்று கவனமாக] அரசராகக் கருதப் படாமல், உங்களுக்கு என்ன விதமான ஆதிக்கமும், அதிகாரமும் உள்ளது? நீங்கள் அரசனில்லை என்றால், நாட்டை ஆட்சி புரிவது யார்? நாட்டுப் பிரச்சனைகளைத் தீர்ப்பது யார்? நாட்டைப் பகைவரிடமிருந்து பாதுகாப்பது யார்? ஜூலியஸ் சீஸர்: கிளியோபாத்ரா! எகிப்த் ரோமின் அடிமை நாடுகளில் ஒன்று! ஆனால் எகிப்தில் உனக்கிருக்கும் அதிகாரம், உன்னை விட ஆற்றல் மிக்க எனக்கு ரோமில் கிடைக்காது! ரோமாதிபதிக்கு ஆலோசனை கூறி ரோமா புரியை முழுநேரமும் கண்காணித்து வருவது, குடியாட்சி மக்களின் பிரதிநிதிகளான வட்டாரச் செனட்டர்கள்! செனட்டரின் தீர்மானமே குடியாட்சியின் தெய்வ வாக்கு! முடியாட்சியில் நம்பிக்கை யில்லாத ரோமாபுரியில் நானோர் மன்னனாக ஆட்சி செய்ய முடியாது! கிளியோபாத்ரா: அப்படி யானால் நீங்கள் வெறும் பொம்மை ராஜாவா? குடியாட்சி என்றால் என்ன? எனக்குப் புதிராக உள்ளது! புரிய வில்லை, குடியாட்சி என்றால்! செனட்டர் குடித்து விட்டு நடத்தும் ஆட்சியா? குடித்து விட்டுக் கொட்ட மடிக்கும் ஆட்சி எப்படிக் கோமாளித்தனமாக இருக்கும்? குடிக்காமல் அறிவோடு நடத்தும் ஆட்சியே குழப்பத்தையும், கொந்தளிப்பையும் தூண்டும் போது, குடியாட்சி மட்டும் எப்படிக் கோணத்தனமாய் இருக்காது என்பதை என்னால் கற்பனை செய்ய முடிய வில்லை! ஜூலியஸ் சீஸர்: [சிரித்துக் கொண்டு] குடிக்கும், குடியாட்சிக்கும் எந்தச் சம்பந்தமு மில்லை! முடியாட்சி என்பது உன்னைப் போன்ற ஒரு மன்னன் ஆட்சி புரிவது! அது ஒற்றை மனிதன் செய்வது! மன்னருக்கு ஓரிரு மந்திரிகள் ஆலோசனை கூற அருகிலிருப்பார். குடியாட்சியில் தலைவன் என்னைப் போலொரு போர்த் தளபதி! ஆனால் அவன் முடிசூடா மன்னன்! அவனுக்கு ஆலோசனை சொல்பவர் ஓரிருவர் மட்டும் அல்லர்! நூறு அல்லது அல்லது இருநூறு செனட்டர்கள். நாட்டு வட்டாரங்களின் அதிபதிகள் அவர். செனட்டர் மூலமாகக் குடியாட்சியில் நாட்டின் மூலை முடுக்கிலுள்ள மக்களின் பிரச்சனைகள் கவனிக்கப் படுகின்றன. முடியாட்சியைக் கண்காணிப்பது இரண்டு கண்கள் என்றால், குடியாட்சியைக் கவனிப்பது ஆயிரம் கண்கள். தளபதி பொம்மை அரசன் அல்லன்! பிரச்சனையின் தீர்வை முடிவு செய்பவன் தளபதி. பிரச்சனையை எப்படி அணுகுவது என்று திசை காட்டுபவன் தளபதி. புரிகிறதா? கிளியோபாத்ரா: [சற்று வெறுப்புடன்] என்ன இருந்தாலும் எனக்குள்ள ஆற்றலும், அதிகாரமும் உங்களுக் கில்லை. உலக சாம்ராஜியங்கள் எல்லாம் முடியாட்சியில்தான் உன்னதம் அடைந்தன! குடியாட்சி எதையும் சாதிக்குமா என்பது எனக்குத் தெரியவில்லை. அங்கே பல தலைகள் ஒரே சமயத்தில் எழுவதால் குழப்பம்தான் உண்டாகும். ஜூலியஸ் சீஸர்: அதை ஒப்புக் கொள்கிறேன். ரோமாபுரி ஆட்சி அரங்கில் இனவாரி ஆதிக்கம் தலைதூக்கி வருகிறது! என் பகைவன் பாம்ப்பியின் சகாக்கள் எண்ணிக்கையில் மிகுதி! அதாவது எனக்கு எதிரிகள் அதிகம். என் ஆணைகள் எதுவும் வாசலைத் தாண்டுமா என்பது ஐயம்தான்! என் கொள்கைகள் எதுவும் ஏற்றுக் கொள்ளப்படுமா என்பது ஐயம்தான்! நீண்ட காலம் ஆட்சிப் பீடத்தில் நான் அதிகாரம் செலுத்துவேனா என்பதும் ஐயம்தான்! ரோமாபுரியில் என் ஆணைக்கு மதிப்பில்லை! என் அதிகார மெல்லாம் நான் கைப்பற்றிய அன்னிய நாடுகளில்தான்! கிளியோபாத்ரா: [வருத்தமுடன்] அப்படி யானால் உள்ளூரில் பொம்மை ராஜா! வெளி ஊரில் உண்மை ராஜா! ஜூலியஸ் சீஸர்: [சிரித்துக் கொண்டு] அப்படியே வைத்துக்கொள். நான் ரோமுக்குச் சீக்கிரம் புறப்பட வேண்டும்! போனால்தான் என்னிலையே எனக்குத் தெரியும்! கிளியோபாத்ரா: [கவலையுடன்] நான் உங்களைப் பிரிந்து எப்படி அரசாளுவேன்? என் மகன் பிறக்கும் போது, நீங்கள் என்னருகில் இருக்க வேண்டும்! ரோமுக்குப் போன பின்பு, எப்போது எகிப்துக்குத் திரும்புவீர்? நீங்களின்றித் தனிமையில் நான் வாழ முடியாது. ஜூலியஸ் சீஸர்: ரோம் எனக்கு ஒருபோக்குப் பாதை! நானினி எகிப்துக்கு மீள மாட்டேன்! பாலை வனத்தின் தீக்கனலில் வெந்து நான் பல்லாண்டுக் காலம் பிழைத்திருக்க முடியாது! நீ எகிப்தை விட்டு ரோமுக்கு வந்துவிடு! நிரந்தரமாக வந்துவிடு! என்னோடு நீண்ட காலம் வாழலாம்! கிளியோபாத்ரா: [ஆங்காரமாக] அதெப்படி முடியும்? நான் எகிப்திய ராணி! நான் ரோமாபுரி ராணி யில்லை! ரோமாபுரிக்கு ஒருமுறை நான் விஜயம் செய்யலாம், என் மகவோடு! அத்துடன் சரி! நிரந்தரமாக அங்கே நான் எப்படித் தங்க முடியும்? ரோமில் தங்கிக் கொண்டு கிளியோபாத்ரா ஒருபோதும் எகிப்தை ஆள முடியாது! ஆனால் அதே சமயம் நான் உங்களைப் பிரிந்து ஒருபோதும் தனியாக வாழ முடியாது! ஜூலியஸ் சீஸர்: [வெறுப்புடன்] கிளியோபாத்ரா! அது உன் பிரச்சனை! அதை என்னால் தீர்க்க முடியாது! நான் ரோமன்! எகிப்திலே உன் விருந்தினனாக என் வாழ்நாள் முழுதும் தங்க முடியுமா? சொல் கிளியோபாத்ரா! உன்னை எகிப்துக்கு ராணி ஆக்கியதும் என் கடமை முடிந்து விட்டது! நான் போக வேண்டும். நாமிருவரும் ஒரே நாட்டில் நீண்ட காலம் சேர்ந்து வாழ முடியாது! நீயும் நானும் நிரந்தரமாகப் பிரிந்துதான் வசிக்கப் போகிறோம்! நீயும், நானும் தனித்தனி உலகில் தனியாகத்தான் வாழ வேண்டும்! கிளியோபாத்ரா: [ஏக்கமுடன்] அப்படியானால் பிறக்கப் போகும் ஆண்மகவின் கதி? அவன் உங்கள் புத்திரன்! அவன் உங்கள் வாரிசு. அவன் வாழப் போகுமிடம் ரோமாபுரியா? அல்லது எகிப்து நாடா? ஜூலியஸ் சீஸர்: [வெறுப்புடன்] எனக்குத் தெரியாது கிளியோபாத்ரா! உன்னிடம் அவன் வாழ்வதுதான் சரியாகத் தெரிகிறது எனக்கு! ரோமாபுரியில் எனக்கு எதிரிகள் மிகுதி! அவரிடம் என் மகன் சிக்கிக் கொண்டால், அவனைக் கொன்று விடவும் அவர் தயங்க மாட்டார்! அவன் ரோமுக்கு வாரிசாக வந்து விடுவான் என்று வாளெடுத்துச் சிறுவன் தலையைச் சீவி விடுவார்! பாதுகாப்பாக என் மகன் உன்னிடம் இருப்பதே மேலானது! ********************* []   அங்கம் -3 காட்சி -1 கண்களை மட்டும் கவர்ந்திடும் வனப்பு, கணப்பொழுதில் மலர்ந்து கருகுவது! ஏனெனில் மானிடக் கண்கள் எப்போதும் ஆத்மாவின் ஜன்னல்கள் அல்ல!” ஜியார்ஜ் ஸான்ட் பிரெஞ்ச் பெண் எழுத்தாளி [George Sand (1804-1876)]   “உலகத்தின் வாக்குறுதிகள் பெரும்பான்மையாக வீண் மாயைகள்தான்! ஒருவன் தன்மீது உறுதியாக நம்பிக்கை கொண்டு, ஒரே ஒரு வினையில் தகுதியும், மதிப்பும் பெறுவதே மானிடத்தின் மிகச் சிறந்த நடைமுறைப் போக்கு.” மைக்கேலாஞ்சலோ [1474-1564]   “இயற்கை நியதிகள் யாவும் மூல காரணங்களால் எழுப்பப் பட்டு, அனுபவ முடிவுகளாய் எழுதப்பட்டாலும், நாம் அதற்கு நேர்மாறாகச் செய்ய வேண்டும். அதாவது நாம் நமது அனுபவத்திலிருந்து ஆரம்பித்து, காரணத்தை உளவ முனைய வேண்டும்.” லியானார்டோ டவின்ஸி [1452-1519]   அண்டனி அழைப்பது எனக்குக் கேட்கிறது! என் பணியைப் பாராட்டத் தன்னைத் தூண்டிக் கொள்கிறார்! சீஸரின் அதிர்ஷ் டத்தைக் கேலி செய்யும் அவர் குரல் கேட்கிறது எனக்கு! கோபத் தணிப்பை மனிதர் முடக்கிக் கொள்ள கடவுள் தந்த விடுவிப்பு அது! எந்தன் பதியே ! நானுடன் வருவேன்! அந்தப் பெயரின் தகுதிக்குச் சான்ற ளிக்கும் என் நெஞ்சழுத்தம்! நான் அக்கினி! நான் வாயு! நான் அனைத்து மூலகங்கள் ஆவேன்! நான் உயிர் மூலத்தை அளிப்பவள்! வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஆண்டனி & கிளியோபாத்ரா]   நாடகப் பாத்திரங்கள்:   ரோமாபுரியில்: தளபதி மார்க் ஆண்டனி [35 வயது], மற்றும் செனட்டர்கள்: புரூட்டஸ் [40 வயது], காஸியஸ் [30 வயது]. ஜூலியஸ் சீஸரின் மனைவி கல்பூர்ணியா [45 வயது]. நேரம், இடம்:    ரோமாபுரியில் ஜூலியஸ் சீஸரின் மாளிகை. காலை வேளை    நாடகப் பாத்திரங்கள்:  ஜூலியஸ் சீஸரின் மனைவி கல்பூர்ணியா, மார்க் ஆண்டனி   காட்சி அமைப்பு:    [கல்பூர்ணியா கவலையுடன் அமர்ந்திருக்கிறாள். அப்போது ரோமாபுரியின் ஆட்சி அதிபதி மார்க் ஆண்டனி விரைவாக உள்ளே நுழைகிறான்.] கல்பூர்ணியா: [கண்ணீரைத் துடைத்துக் கொண்டு] வா, ஆண்டனி! உன் வருகைக்கு நான் காத்திருக்கிறேன். [எழுந்து வரவேற்கிறாள்] உட்கார், சிஸிலி மதுபானம் தருகிறேன். உன்னுடன் நான் பேச வேண்டும். ஆண்டனி: [தலைகுனிந்து வந்தனம் செய்து] வந்தனம், கல்பூர்ணியா! என்ன நடந்தது? கண்களில் நீர் கொட்டுகிறதே! உனக்கென்ன கவலை? கல்பூர்ணியா: ஆண்டனி! இன்னமும் என்ன நடக்க வேண்டும்? நடக்கக் கூடாதது நடந்து விட்டது! நான் உயிரோடு வாழ வேண்டுமா? யாருக்காக வாழ வேண்டும்? நான் அனாதை ஆகி விட்டேன்! என்னைத் துறந்து விட்டார் சீஸர்! மறந்து விட்டார் சீஸர்! என் கணவர் கிளியோபாத்ராவின் காலடியில் கிடக்கிறார்! ரோமாபுரியை அவர் மறக்கும்படி, மகுடி ஊதி மயக்கி விட்டாள் அந்த மாயக்காரி. அவரது அன்பு மனைவியைக் கூட துறக்க வைத்து விட்டாள் அந்த மாதரசி! வருகிறேன், வருகிறேன் என்று சொல்லிச் சீஸர் என்னை ஏமாற்றி வருகிறார்! கணவரின் காலைக் கட்டி, கதவைப் பூட்டிச் சிறை வைத்திருப்பவள் அந்த காதகி! என்னை இராப்பகலாய்த் துடிக்கச் செய்பவள் அந்த நடிப்பரசி! என் கணவர் மருமகனைத் தேடி எகிப்துக்குப் போயிருக்கக் கூடாது! ஆண்டனி: [ஆறுதலாக] கல்பூர்ணியா! கவலைப் படாதே! சீஸர் வந்து விடுவார்! கண்டதும் கொள்ளும் காதல் நிலையற்றது! கருகிக் காய்ந்து போவது! தீப்பிடிக்கும் அந்த பாலை வனத்தில் மனிதர் நீண்ட காலம் வசிக்க முடியாது! சீஸரின் பெண் மோகம் நீடிக்காது! அவருக்கோ வயது 52. அவளுக்கு வயது 20. அந்த கிழவர் குமரி மோகம் தளர்ந்து போகும் காமம். சீஸரின் பிரதம மனைவி கல்பூர்ணியாவின் இடத்தை அந்தக் கன்னி என்றும் பிடிக்க முடியாது! கிளியோபாத்ரா ஒரு விளையாட்டுக் கன்னி! கல்பூர்ணியா: [வெகுண்டு சீற்றமாய்] என்ன அவளொரு கன்னியா? அவள் கன்னி கழிந்து மாதங்கள் கடந்து விட்டன! அது, உனக்குத் தெரியாதா? சீஸரின் குழந்தையை எகிப்த் ராணி சுமப்பதாக நான் கேள்விப் பட்டேன். [சட்டெனக் கண்ணீர் பொங்கி அழுகிறாள்] நான் பெற முடியாத பிள்ளையைக் கிளியோபாத்ரா சீஸருக்குப் பெற்றுத் தருகிறாள்! சீஸர் எதற்காக இனி எனை நாடி வரப் போகிறார்? இங்கே இல்லாத குடும்பம், எகிப்தில் உள்ள போது ஏன் சீஸர் எனைத் தேடி வருவார்? ஆண்டனி: [சினத்துடன்] கிளியோபாத்ராவின் குழந்தையைச் சீஸர் தன் மகவாகத் தாலாட்டினாலும், ரோமாபுரி அதை ஏற்றுக் கொள்ளாது! கல்பூர்ணியா! அதைக் கள்ளப் பிள்ளையாகத்தான் ரோம் புறக்கணிக்கும்! கல்பூர்ணியா: இ ல்லை ஆண்டனி இல்லை! அது கள்ளப் பிள்ளை இல்லை! கிளியோபாத்ராவை சீஸர் எகிப்த் வழக்கப்படி மணந்து கொண்டதாக நான் கேள்விப் பட்டேன்! நான் முதல் மனைவி யானாலும், அவள் சட்டப்படி இரண்டாம் மனைவி! அதுவும் சீஸரின் எதிர்கால வாரிசை வேறு வயிற்றில் தாங்கிக் கொண்டிருக்கிறாள்! பிள்ளை யில்லாமல் போன வரண்ட பாலை என் வயிறு! பிள்ளையைப் பெற்றுத் தன்னைப் பெண்ணென்று நிரூபித்த கிளியோபாத்ரா ஒரு பாலைவனப் பசுஞ்சோலை! அவர் வராமல் ஏன் காலம் கடத்துகிறார் என்று தெரிகிறதா ஆண்டனி? கிளியோபாத்ரா ஒரு மாது! நானொரு மலடி! ஆண்டனி: எல்லாம் எனக்குத் தெரியும் கல்பூர்ணியா! ஆனாலும் அந்தத் திருமணம் ரோமாபுரியில் செல்லாது. ரோமானியர் ஒப்புக் கொள்ள மாட்டார்! அது போலித் திருமணம்! கிளியோபாத்ராவை ஏமாற்ற சீஸர் புரிந்த கேலித் திருமணம் அது! கீழ்நாட்டுக் குடியினர் காட்டுத்தனமாய்ப் புரிந்து கொள்ளும் திருமணம் மேல்நாட்டு மாந்தர் ஏற்றுக் கொள்வதில்லை! அந்தப் போலி மனைவிக்காக மனதை வாட்டிக் கொள்ளாதே, கல்பூர்ணியா! கல்பூர்ணியா: [சூதாக] கிளியோபாத்ரா வயிற்றுக்குள் உதைக்கும் சீஸரின் குழந்தையும் போலியா? கிளியோபாத்ராவைப் போலி மனைவி என்று நீ சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை! சீஸர் அவளுடன் செய்த திருமணமும் போலித் திருமண மில்லை! உண்மையாகச் சொல்லப் போனால், நான்தான் சீஸரின் போலி மனைவி! பிள்ளை பெற்றுத் தரமுடியாத கல்பூர்ணியா போலி மனைவியா? அல்லது கர்ப்பவதியான கிளியோபாத்ரா போலி மனைவியா? ஆண்டனி: கல்பூர்ணியா! நீ தெளிந்த அறிவு கொண்டவள்! கிளியோபாத்ரா உன்னைப் போல் அறிவாளி யில்லை! கீழ்நாட்டுக்காரி மேல்நாட்டுக்காரி உனக்கீடு ஆவாளா? நீ எங்கே? அவள் எங்கே? உன் வயதும், உலக அனுபவமும் அவளுக்கில்லை! அவளொரு சிறுமி! கல்பூர்ணியா: ஆண்டனி! என்ன பேசுகிறாய்? உனக்குக் கிளியோபாத்ராவைப் பற்றிச் சரிவரத் தெரியவில்லை! அவளுக்கு ஒன்பது மொழிகள் நன்றாகத் தெரியும்! ·பாரோ வேந்தர் பரம்பரையில் பிறந்தவள்! பதினெட்டு வயதிலேயே எகிப்திய ராணியாய்த் தமையனுடன் பட்டம் சூடியவள்! ஒருபுறம் அலெக்ஸாண்டரின் சந்ததி என்றும் கேள்விப் பட்டேன்! அவளுக்கு யாரோ, பித்த .. பித்த..கோரஸ் கோட்பாடு கூடத் தெரியுமாம்! யாரவன் பித்தகோரஸ்? உனக்குத் தெரியுமா? அவன் என்ன கோட்பாடைக் கூறினான்? ஆண்டனி: [தலைகுனிந்து] யாரோ ஒரு மடையன்! எனக்குத் தெரியாது! கல்பூர்ணியா: [சிரித்துக் கொண்டு] பார், உனக்கே தெரியவில்லை! அவனொரு .. கணித மேதையாம்! அவன் கொள்கையைப் பயன்படுத்தித்தான் பிரமிட் கோபுரங்களே எகிப்தில் கட்டப் பட்டனவாம்! ஆண்டனி: [சிரித்துக் கொண்டு] எகிப்தில் நான் அந்த பிரமிட்களைப் பார்த்திருக்கிறேன். பிரம்மாண்டமான கோபுரங்கள்! செத்துப் போன ·பாரோ மன்னரைப் புதைக்க அத்தனைப் பெரிய பீடங்கள் கட்ட வேண்டுமா? அதன் அடிப்படைப் பித்தகோரஸின் கோட்பாடு என்று நீ சொல்லித்தான் கற்றுக் கொண்டேன்! பார்த்தாயா? நான் சொன்னபடி நீதான் தெளிந்த அறிவுள்ளவள். கல்பூர்ணியா: எனக்கு என்ன இருந்தாலும், நான் கிளியோபாத்ராவுக்கு ஈடானவளில்லை! அவள் ஒரு ஞானப் பெண்! எகிப்தின் எழிலரசி! சீஸர் அவளது அழகிலும், அறிவிலும் மயங்கியதில் வியப்பில்லை! அவளை ஆசை நாயகியாக அவர் வைத்துக் கொள்ளட்டும்! சீஸருக்கு எத்தனையோ ஆசை நாயகிகள் உள்ளார்! ஆனால் கிளியோபாத்ராவை மட்டும் ஏன் மணந்து கொள்ள வேண்டும்? என்னை எதற்காக அவர் ஒதுக்க வேண்டும்? என்னை ஏன் அவர் மறக்க வேண்டும்? என்னை ஏன் அவர் துறக்க வேண்டும்? வயதாகிப் போன கிழ மாதால் அவருக்கு ஏது பயனுமில்லை! அவரைப் பிடித்து வைத்துக் கொள்ள ஒரு பிள்ளையாவது பெற்றேனா? அவரைக் கவர்ந்து கொள்ள ஆண்டவன் எனக்கு அழகை யாவது கொடுத்தானா? நான் எதை வைத்தினி என்னவராய் ஆக்கிக் கொள்வேன்? என் சீரும், செல்வமும், மாளிகையும் அவரை என்னிடம் மீட்டுக் கொண்டு வரவில்லை! என் ஆடம்பர வாழ்க்கை என் கணவரைக் கவரவில்லை! ஆண்டனி: [ஆர்வமுடன்] கல்பூர்ணியா! கண் கலங்காதே! நான் சீஸரை அழைத்து வர ஏற்பாடு செய்கிறேன். நிச்சயம் நான் உனக்குச் செய்வேன். கவலைப் படாதே! கல்பூர்ணியா: ஆண்டனி! என் பெயரைச் சொல்லி நீ அவரை அழைக்க வேண்டாம்! என் கண்ணீரைக் காட்டி அவரை நீ விளிக்க வேண்டாம்! என் தூங்காத நாட்களை கூறி நீ அவரை இழுத்து வரவேண்டாம்! அவர் தானாக என்னைத் தேடி வரட்டும்! ஏனென்றால் என் பெயரைக் கேட்டால், சீஸர் வந்த பாதையில் மீண்டும் திரும்பி விடுவார்! என்னைத் தேடி வராதவர் எனக்கு வேண்டாம்! நான் போலி மனைவியா அல்லது கிளியோபாத்ரா போலி மனைவியா என்பதை நான் அறிந்தாக வேண்டும்! ஆண்டனி! என் பெயரைச் சொல்லி அவரை அழைக்காதே! வேண்டாம், அவரை அந்தக் கள்ளியிடமே விட்டுவிடு! அவளைக் கட்டிய மனைவியாக ரோமாபுரி அறிந்த பிறகு, நானினி அவரது மனைவி என்று சொல்ல நாணம் அடைகிறேன்! அவளது அதரங்களை முத்தமிட்ட சீஸர், பிறகு என் வாயில் முத்தமிடுவதை நான் அறவே வெறுக்கிறேன்! ********************* []   அங்கம் -3 காட்சி -2 “ஒருவரை நேசிப்பது, திருப்பி அவரால் நேசிக்கப்படுவது ஒன்றுதான் நமது வாழ்க்கையில் இன்பம் அளிப்பது. .. வயதாகி மூப்புநிலை அடையும் வரைத் துடிப்புடன் உன் ஆத்மாவை இளமையாகவே வைத்திரு. மாதர் எப்போதும் நேசிக்கிறார். ஆனால் அவர் நிற்கும் பூமி தடத்தை விட்டு அகலும் போது, அவர்கள் மேலுலகை நோக்கிச் சரண் அடைகிறார்.”   ஜியார்ஜ் ஸான்ட் பிரெஞ்ச் பெண் எழுத்தாளி [George Sand (1804-1876)]   “ஒரு நாட்டில் உன்னத ஒழுக்கமாகக் கருதப்படும் ஒரு பண்பு, மற்றோர் நாட்டில் மிகச் துச்சமாக எண்ணப் பட்டு ஒதுக்கப் படலாம். .. மனித இச்சை வாழ்க்கைப் போக்கில் ஒரு பாதியாவைப் போல், கவனமின்மை என்பது மரணத்தின் ஒரு பாதியாகும். .. இரவின் பாதை வழியாக நடக்காது, ஒருவன் காலை உதயத்தை அணுக முடியாது.” கலில் கிப்ரான் ஓவியர், கவிஞர் [Kahlil Gibrahn (1883-1931)]   “மெய்யான ஒரு கலைப் படைப்பு, தெய்வீகப் பூரணத்தின் ஒரு நிழலே தவிர வேறில்லை. என் கையில் உளி ஒன்று உள்ள போதுதான், என் மனம் எனக்குக் குளிர்ச்சியை அளிக்கிறது. … செதுக்கப் படாத ஒரு பளிங்குக் கல், மகத்தான ஒரு சிற்பியின் பல்வேறு கற்பனை வடிவங்களைக் காட்டுகிறது!” மைக்கேலாஞ்சலோ [1474-1564]   “எனது படைப்பு பெறக் கூடிய உன்னத தரத்தை எட்டாது போனால், கடவுளையும், மனித சமூகத்தையும் அவமதித்தாக நான் கருதுகிறேன்!” லியானார்டோ டவின்ஸி [1452-1519]   “புலால் உண்ண மாட்டேன் ! மதுபானம் அருந்த மாட்டேன் ! பொருளற்ற வார்த்தைகள் புகல நேர்ந்தால், உறக்கம் வாரா தெனக்கு! என் அரண்மனைப் பேர் நாசமாகும்! எது வேண்டினும் செய்யட்டும், அக்டேவியஸ்! உன் அதிபதியின் நீதி மன்றத்தில் என் கால்கள் ஒருபோதும் நிற்க மாட்டா!” … (கிளியோபாத்ரா) வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஆண்டனி & கிளியோபாத்ரா]     நாடகப் பாத்திரங்கள்: கிளியோபாத்ரா, அடிமைச் சேடிகள். எகிப்தின் படையாளிகள் ரோமாபுரியில்: தளபதி மார்க் ஆண்டனி [35 வயது], மற்றும் செனட்டர்கள்: புரூட்டஸ் [35 வயது], காஸியஸ் [30 வயது]. ஜூலியஸ் சீஸரின் மனைவி கல்பூர்ணியா [45 வயது].   அங்கம்: 3 காட்சி: 2 நேரம், இடம்: அலெக்ஸாண்டிரியாவில் கிளியோபாத்ராவின் அரண்மனையில் தனியிடம். காலை வேளை. நாடகப் பாத்திரங்கள்: கிளியோபாத்ரா, மருத்துவச்சி, சேடியர், மற்றும் ஜோதிடர் எதிர்பார்ப்போடு பரபரப்பில் உள்ளார். கிளியோபாத்ராவின் ஆயா பிதாதீதா இங்கும் அங்கும் கவலையோடு ஓடிக்கொண்டிருக்கிறாள். ஜூலியஸ் சீஸர், மெய்க்காப்பாளி, ரோமானியப் போர்த் தளபதிகள் வெளியே காத்திருக்கிறார். காட்சி அமைப்பு: [கிளியோபாத்ரா தனிப்பட்ட பிரசவ அறையில் படுத்திருக்கிறாள். அவளுக்குக் குழந்தை பிறக்கப் போவதை எதிர்பார்த்து ஜூலியஸ் சீஸர் ஆர்வமுடன் அறை வாயிலில் நின்று கொண்டிருக்கிறார். கிளியோபாத்ராவைச் சுற்றி மருத்துவச்சி மூன்று பேர் அருகில் கண்காணிப்புடன் நிற்கிறார். திரைமறைவுக்கு அடுத்த அறையில் எகிப்திய ஜோதிட நிபுணர் வானநூல் ஏடுகளுடன் குழந்தை பிறக்கும் நேரத்தின் அம்சங்களை ஆய்வு செய்து கொண்டிருக்கிறார். ரோமானிய தளபதிகள் வெளியே மதுவருந்திய வண்ணம் கேலிக்கையில் உரையாடிக் கொண்டுள்ளார்.] பிதாதீதா: [ஆவேசமாய் அறை வாசல் முன்பு] மாண்புமிகு அதிபதி அவர்களே! கிளியோபாத்ராவுக்குக் குழந்தை பிறக்கப் போகிறது. மகாராணிக்கு வேதனை அதிகம். எனக்குப் பயமாய் உள்ளது! அவருக்கு முதல் குழந்தை அல்லவா? ஐஸிஸ் தெய்வம் அருகில் நின்று மகாராணிக்குச் சுகப் பிரசவத்தை அளிக்கும். [மேலே நோக்கி கைகளை உயர்த்தி] ஐஸிஸ் தெய்வமே! எங்கள் ராணிக்குச் சுகப் பிரசவத்தைக் கொடு. தாயும், சேயும் நலமாக வேண்டும். ஜூலியஸ் சீஸர்: மாதே, நீ யார்? அநேக முறை உன்னை அரண்மனையில் பார்த்திருக்கிறேன். நீ யார்? உன் வேலை என்ன? நீ தந்த தகவல் இனிய தகவல். கிளியோபாத்ராவுக்கு எப்போது குழந்தை பிறக்கும், சொல்? பிதாதீதா: மதிப்புக்குரிய அதிபதி அவர்களே! என் பெயர் பிதாதீதா! மகாராணியின் வளர்ப்பு ஆயா நான். பொழுது சாய்வதற்குள் குழந்தை பிறந்து விடும். ஜூலியஸ் சீஸர்: பேத்தா தூத்தா, என்ன பெயரிது? வாயிலே கூட வரமாட்டாது போல் தெரியுது! நீ வளர்ப்புத் தாயா? பிதாதீதா: என்னை பிதாதீதா என்றுதான் அழைக்கிறார்! எனக்கு வைத்த உண்மையான பெயர் ·பிடாடாடீட்டா! என் வயிலே கூட என் உண்மைப் பெயர் வருவதில்லை! அதனாலே என்னை பிதாதீதா என்று விளித்தாலே போதும், நான் துள்ளி ஓடி வந்து விடுவேன்! ஆமாம் நான் வளர்ப்புத் தாய். மகாராணி குழந்தையாக உள்ள போதே நான் தாலாட்டுப் பாடி வளர்த்தவள். ஜூலியஸ் சீஸர்: நானுன்னைச் சுருக்கமாக எப்படி அழைப்பது? உன் உண்மைப் பெயரை நீ நூறு முறைச் சொன்னாலும், என் நாக்கால் அதைக் கூற முடியாது! … அது சரி, கிளியோபாத்ரா எப்படி இருக்கிறார்? குழந்தை பிறக்கும் வேளை நெருங்கி விட்டதா? பிதாதீதா: குழந்தை மெதுவாகத்தான் இறங்குகிறது. மகாராணியாருக்கு வேதனை மிகுதி! ஐஸிஸ் தெய்வம்தான் அருள் புரிய வேண்டும். [அப்போது பிரசவ அறையிலிருந்து சேடி ஒருத்தி ஓடி வருகிறாள்] சேடி: பிதாதீதா! வா, சீக்கிரம் உள்ளே வா! மகாராணி உன்னை அழைத்து வரச் சொன்னார். மிக்க அவசரம். வா! [பிதாதீத்தா சேடியுடன் பிரசவ அறைக்குள் விரைவாக நுழைகிறாள்] கிளியோபாத்ரா: [கட்டிலில் படுத்துக் கொண்டே, சற்று வேதனையுடன்] பிதாதீதா! வா என்னருகில். சொல்வதைக் கவனித்துக் கேள்! குழந்தை பிறந்ததும், அதைத் துடைத்து ஆடை, ஆபரணம் எல்லாம் அணிந்து தூக்கிக் கொண்டு சீஸரிடம் செல்ல வேண்டும்! அவரது அருகில் நிற்கும் ரோமாபுரி அதிகாரிகள் அனைவர் கண்களில் தெரியும்படிக் குழந்தையைக் காட்ட வேண்டும். அனைவர் காதிலும் கேட்கும்படி உரக்கக் குழந்தை, சீஸரின் குழந்தை என்று சொல்ல வேண்டும். குழந்தை ஆண்மகவு என்று உரைக்க வேண்டும். உலகை ஆளப் பிறந்த குழந்தை என்று மொழிய வேண்டும். புரிகிறாதா உனக்கு! பிதாதீதா: மகாராணி! உங்கள் உத்தரவுப்படியே செய்கிறேன். [வெளியே போகிறாள்] கிளியோபாத்ரா: [அருகில் நின்ற ஜோதிடரைப் பார்த்து] ஜோதிட குருவே! பிள்ளை பிறக்கும் நேரத்தைக் குறித்து, அலெக்ஸாண்டர் போல அவன் உலகை ஆளுவானா என்பதைப் பார்க்க வேண்டும். [ஜோதிடர் வெளியே போகிறார்]     ஜூலியஸ் சீஸர்: [அறை வெளியே முணுமுணுப்புடன், பரபரப்புடன்] கிளியோபாத்ரா வுக்கு என்ன மகவு பிறக்கப் போகிறதோ? பிறப்பது ஆண் பிள்ளையாக இருந்தால் அவனை ரோமில் வைத்து நான் வளர்க்கலாம். அப்படி யில்லாமல் பெண் குழந்தையாகப் போனால் என்ன செய்வது? எகிப்திலே விட்டுச் செல்வேன்! கிளியோபாத்ராதான் அவளை வளர்க்க வேண்டும். பெண் குழந்தைக்குத் தாயின் துணை வேண்டும் எப்போதும். ஆனால் ஆண் மகனை என் கண்காணிப்பில் நான் வளர்த்து வருவேன். கிளியோபாத்ராவின் மன உறுதி, ஞானம், ஆட்சித் திறம் அவனுக்கு உடன்பிறக்கும்! சீஸரின் கம்பீரத் தோற்றம் அவனுக்கு முகக்களை உண்டாக்கும்! அலெக்ஸாண்டரின் பேராசைக் குணம் அவனுக்கு உண்டாக வேண்டும்! என் மகன் இந்தியாவையும் தாண்டிச் சென்று சைனாவின் மீது படையெடுப்பான்! உலக வரலாற்றில் எனக்குக் கிடைக்காத புகழை அவன் பெறுவான். அலெக்ஸாண்டரைப் போல உன்னதப் போர்வீரன் என்று பெயர் எடுப்பான். [அப்போது ஓர் எச்சரிக்கை மணியோசை கேட்க சீஸரும், ரோமானியப் போர் அதிகாரிகளும் திரும்பிப் பிரசவ அறைமீது கண்ணோட்டம் விடுகிறார்கள். பிதாதீதா தனது கைகளில் அலங்கரித்த குழந்தை ஒன்றைத் தொட்டிலில் தூக்கி வருகிறாள். அவளைப் பின் தொடர்ந்து குலாவிப் பாடிக் கொண்டு சேடியர் பலர் வருகிறார். அனைவரும் சீஸரை நோக்கி அருகில் வருகிறார்.] பிதாதீதா: மாண்புமிகு சீஸர் அவர்களே! உங்களுக்கு ஆண்மகவு பிறந்திருக்கிறது! விலை மதிப்பில்லா வெகுமதியை எங்கள் மகாராணி தந்திருக்கிறார். மகுடத்தைச் சூட்டினீர் எங்கள் மகாராணிக்கு! அந்த மகத்தான செயலுக்கு, ஆண் மகனைப் பரிசாக அளித்துள்ளார் உங்களூக்கு! உலகாளப் பிறந்த குழந்தை இது! ·பாரோ மன்னரின் பரம்பரைக் குழந்தை இது! ஜூலியஸ் சீஸர்: [முன்னோக்கி வந்து இரு கரங்களில் குழந்தையைத் தூக்கிக் கொண்டு பெரு மகிழ்ச்சியுடன்] ஆண்மகவு! எல்லோரும் பாருங்கள் ஆண்மகவு! எனக்கு மகன் பிறந்திருக்கிறான்! [கைகளில் பிள்ளையை மேலே தூக்கிய வண்ணம் சுற்றுகிறார். அருகில் நிற்கும் ரோமானியர் அவைவரும் கைதட்டி ஆரவாரம் செய்கிறார்கள்.] பிரிட்டானஸ்: [பூரிப்புடன்] களிப்புடன் வாழ்த்துக்கள். வாழ்க, வாழ்க உங்கள் ஆண் குழந்தை நீடூழி வாழ்க! ரூஃபியோ: ரோமின் எதிர்காலப் போர்த் தளபதி! ரோமின் வருங்கால அதிபதி! வாழ்க! வாழ்க! நீடூழி வாழ்க! ஜூலியஸ் சீஸர்: [குழந்தையைத் தொட்டிலில் வைத்து விட்டு, மகிழ்ச்சியுடன்] பெயர் மறந்து போச்சே! தீத்தா பீத்தா! மகாராணி கிளியோபாத்ரா எப்படி உள்ளார்? நான் பார்க்கலாமா? பிதாதீதா: மகாராணி நலமாக உள்ளார்! ஐஸிஸ் தெய்வீகமுள்ள எங்கள் அரசிக்குச் சுகப் பிரசவமே! கவலை கொள்ளாதீர் தளபதி. ஆனால் இப்போது நீங்கள் பார்க்க முடியாது. நான் கேட்டு வந்து உங்களை அழைத்துச் செல்வேன். … என் பெயர், பிதாதீதா. … பிதா..தீதா! ஜூலியஸ் சீஸர்: சீக்கிரம் உள்ளே போய்க் கேட்டுவா, பீத்தா தீத்தா! பிதாதீதா: உடனே உள்ளே போய்க் கேட்டு வருகிறேன் தளபதியாரே! சிறிது பொறுங்கள். [குழந்தையைத் தூக்கிக் கொண்டு எல்லாரும் திரும்பி உள்ளே போகிறார்.] (முணுமுணுத்துக் கொண்டு) அட தெய்வமே! ரோமானிய தீரருக்கு என் பெயரைக் கூட உச்சரிக்க முடிய வில்லையே! …. (பிரசவ அறைக்கு முன்னால் நின்று திரும்பி உரத்த குரலில்) தளபதி அவர்களே! என் பெயர் பிதாதீதா! பிதாதீதா! பிதாதீதா! (உள்ளே நுழைந்து முணுமுணுத்துக் கொண்டு) படுக்கும் போது பத்துத் தடவைச் சொல்லிப் பழகுங்கள் தளபதி! பிதாதீதா வென்று சொல்லத் தெரியாதா? ரோமானியர் நாக்கிலே என்ன நரம்புதான் நெளியுமோ? என் பெயரை விட நீளமான மகாராணி பெயரை எப்படிக் கிளியோபாத்ரா வென்று நாக்கு விளிக்கிறது! ஆடவர் ஒரு பெண்ணை நேசித்தால் கனவில் கூட அந்தப் பெயர் சரியாக வந்துவிடுதே! [குழந்தையுடன் உள்ளே நுழைகிறாள்] [சிறிது நேரம் கழித்து பிதாதீதா வெளியே சீஸரிடம் ஓடி வருகிறாள்] பிதாதீதா: மாண்புமிகு தளபதியாரே! வாருங்கள் உள்ளே! வாருங்கள்! எங்கள் மகாராணியை இப்போது காணலாம். என்னுடன் வாருங்கள். மகாராணி காத்திருக்கிறார். ஜூலியஸ் சீஸர்: என் ஆண்மகவின் அன்னைக்கு நன்றி கூற வேண்டும். என் மனைவி கல்பூர்ணியா பெற்றுத் தர முடியாத உயிர்க்கனியை கிளியோபாத்ரா எனக்குத் தந்திருக்கிறாள். நான் வழிதவறி எகிப்துக்கு வந்தது நல்லதாய்ப் போயிற்று! மருமகன் பாம்ப்பியை விரட்டி எகிப்துக்கு வந்தது பலனை அளித்து விட்டது. சீஸரின் பெயரைச் சொல்ல ஓர் ஆண்மகன் பிறந்து விட்டான்! வருகிறேன் பீத்தா தீத்தா [சீஸர் பிதாதீதாவின் பின்னே செல்கிறார்] *********************   அங்கம் -3 காட்சி -3 “எனக்குத் தொழில் சுதந்திரமாக வாழ்ந்து வருவது.” “நியாயத்தையும், ஆண்பாலாரிடையே சமத்துவத்தையும் வற்புறுத்தும் ஓரிறைவனைத் தவிர, வேறு எந்தக் கடவுள் மீதும் நம்பிக்கை வைக்காதே!” ஜியார்ஜ் ஸான்ட் பிரெஞ்ச் பெண் எழுத்தாளி [George Sand (1804-1876)]   “நீ தெரிந்த கொள்ள வேண்டியவற்றின் முடிவை நெருங்கும் போது, நீ உணர்ந்து கொள்ள வேண்டிவற்றின் ஆரம்பத்திற்கு வருகிறாய்!” கலில் கிப்ரான் ஓவியர், கவிஞர் [Kahlil Gibrahn (1883-1931)]   விதியே! அறிவோம் நினது கேளிக்களை! ஒருநாள் மடிவோம் என்று அறிவோம்! நேரம் வரும் தருணம் ஒன்றை அறியோம்! நீடிக்கும் ஆயுளை  மிதித்து முறிப்போம்! … [புரூட்டஸ்] வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]   ஆண்டனி குழப்ப மடைந்து வீட்டுக்கு ஓடினார்! மானிடரே! மாதரே! சிறுவரே! நீவீரும் ஓடுவீர்! வானை நோக்கிக் கதறுவீர், அழுவீர், அலறுவீர், வையக மின்று அழியப் போகுதென! .. [செனட்டர்: டிரிபோனஸ்] வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]   மண்டியிட வைத்தார் என்னை என்பிரபு புரூட்டஸ்! மண்ணில் விழ வைத்தார் என்னை மார்க் ஆண்டனி! நேர்மையாளி, பண்பாளி, அறிவாளி, தீரர் எனக்கூற ஆணை யிட்டவர் புரூட்டஸ், நான் பணிபவன் ஆதலால்! வல்லவர், வாஞ்சை உள்ளவர், அஞ்சாதவர் சீஸர் மாட்சிமை மிக்க அரச கம்பீரம் கொண்டவர், சீஸர்! புரூட்டஸை நேசிப்பவன் ! மதிப்பவன் நான்! ஆனால் சீஸர் ஒருவருக்கு அஞ்சுகிறேன்! …. [புரூட்டஸின் வேலையாள்] வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]   நாடகப் பாத்திரங்கள்:   ரோமாபுரியில்: தளபதி மார்க் ஆண்டனி [35 வயது], மற்றும் செனட்டர்கள்: புரூட்டஸ் [35 வயது], காஸியஸ் [30 வயது]. காஸ்கா [40 வயது], கவிஞர் சின்னா [35], சிசெரோ [50 வயது], அக்டேவியன் [24] டிரிபோனஸ் மற்றும் ஜூலியஸ் சீஸரின் மனைவி கல்பூர்ணியா [45 வயது].   நேரம், இடம்: பகல் நேரம், ரோமாபுரியின் செனட் மாளிகை. நாடகப் பாத்திரங்கள்: புரூட்டஸ், ஆண்டனி, காஸியஸ், காஸ்கா, சின்னா, சிசெரோ, அக்டேவியன், கல்பூர்ணியா. காட்சி அமைப்பு: ரோம் செனட் மாளிகைப் படிகளில் செனட்டர்கள், புரூட்டஸ், காஸியஸ், காஸ்கா, சின்னா, சிசெரோ, அக்டேவியன் ஆகியோர் நின்று உரையாடிக் கொண்டிருக் கிறார். காஸியஸ், காஸ்கா இருவரும் ஆங்காரத்துடன் காணப்படுகிறார். சீஸரை அறவே வெறுக்கும் காஸியஸ், காஸ்கா ஆகியோர் வாக்குவாதத்தில், சீஸரின் நெருங்கிய ஆதரவாளிகளை, எதிர்ப்பாளிகளாய் மாற்ற முனைகிறார்கள். சற்று தொலைவில் ஆண்டனியும், கல்பூர்ணியாவும் செனட்டை நோக்கி வந்து கொண்டிருக்கிறார். காஸியஸ்: [கோபத்துடன் நடந்து கொண்டு] பண்புமிகு புரூட்டஸ்! ரோமிதை நிச்சயம் ஏற்றுக் கொள்ளாது! கேட்டீரா சீஸருக்கு ஆண்மகவு பிறந்துள்ளதாம்! எகிப்தை ஆளப் போகும் எதிர்கால ஆண்வாரிசு! ரோமானியரை ஆளப் போகும் அடிமை ராணியின் அற்புத மகன்! ஆண்பிள்ளைக்கு வெகுநாட்களாய் ஆசைபட்டார் சீஸர்! கல்பூர்ணியா பெற்றத் தர முடியவில்லை! ரோமானியப் பெண் பெற்றுத் தர முடியாத பிள்ளைச் செல்வத்தை, எகிப்த் ஆசைக் காதலி பெற்றுத் தந்தாள்! அடிமை நாட்டு எழிரசி பெற்றுத் தந்திருக்கிறாள்! புரூட்டஸ்! உங்களைத் தன் மகனாகப் பாவித்தார் சீஸர்! அந்த மதிப்பு உங்களை விட்டு நீங்கப் போகிறது! அந்த அடிமையின் பிள்ளை உங்களுக்கு ஈடாகுமா? புரூட்டஸ்: [மனம் கலங்காமல்] ஆத்திரப் படாதே, காஸியஸ்! பிறந்து பல் முளைக்காத பிள்ளைக்கு யாராவது அஞ்சுவாரா? சீஸருக்கு ஆண்மகவு பிறந்த செய்தி எனக்குப் பூரிப்பை அளிக்கிறது! சீஸர் என்னைத் தன் மகன் என்று மதிப்பது என்றும் மாறப் போவதில்லை! சீஸரின் மூத்த மகன் நான்! கிளியோபாத்ராவின் மகனை என் செல்லத் தம்பியாகக் கருதுகிறேன்! காஸ்கா: [ஆங்காரமாக, துச்சமாக] கிளியோபாத்ரா ஒரு பரத்தை! அவள் பெற்ற பிள்ளைக்கு நீ எப்படித் தமையன் ஆவாய்! அவன் பாதி எகிப்தியன்! புரூட்டஸ்: [வெகுண்டு] அவன் பாதி ரோமானியன் என்பதை மறக்காதே, காஸ்கா! கிளியோபாத்ரா சீஸரின் மனைவி! எகிப்த் ராணியைப் பரத்தை என்று எள்ளி நகையாடுவது, ரோமானியத் தளபதிச் சீஸரைப் பழிப்பதாகும்! அப்படிச் சொன்ன அந்த நாக்கை அறுப்பது சட்டப்படிக் குற்ற மாகாது! உன் நாக்கைக் கட்டுப்படுத்து! காஸ்கா! நீ எப்படிப் பட்டவன் என்பதை மறந்து விட்டாயா? சூதாடி! கொலைகாரன்! களவாடி! புளுகன்! போதுமா, இன்னும் நான் அடுக்கவா? காஸியஸ்: காஸ்கா! நீ கவனத்துடன் பேச வேண்டும்! கிளியோபாத்ராவை எகிப்தின் ராணியாக ஆக்கியவர் சீஸர்! சீஸரை எகிப்தின் மன்னராய் ஆக்கியவள் கிளியோபாத்ரா! அவளை நீ தாழ்வாகப் பேசலாமா? புரூட்டஸ் சொன்னதில் பொருள் உள்ளது! சிசெரோ: [குறுக்கிட்டு] எகிப்துக்கு வேந்தரான சீஸர் ரோமாபுரிக்கும், ரோமானிய சாம்ராஜியத்துக்கும் பேரரசனாக முடிசூட்டிக் கொள்ளப் போவதாக அறிந்தேன்! அந்தப் பேராசைக்கு விதை யிட்டவள் கிளியோபாத்ரா! ரோமின் குடியரசை ஒழிக்க சீஸர் முடிவெடுத்து விட்டார்! அறிந்து கொள்வீர்! காஸியஸ்: ஆமாம், புரூட்டஸ்! சீஸரின் பேராசைக்கோர் அளவில்லை! எல்லை யில்லை! அரணில்லை! அதை முளையிலே களை எடுப்பது செனட்டரின் கடமை! அதைத் தடுத்து நிறுத்துவது நமது பணி! சீஸர் மன்னரானால், செனட்டர்களை ஆட்டுக் குட்டிகளாய் ஆக்கி விடுவார்! செனட்டரின் சொற்கள் அவரது செவியில் ஏறா! புரூட்டஸ்: [கேலியாக] அதென்ன நமது கடமை என்று சொல்கிறீர்! உங்கள் சதிக் கூட்டத்தில் என்னைச் சேர்க்காதீர்! அதோ வருகிறார், ரோமானிய ஆட்சித் தளபதி, ஆண்டனி! அவர் காதில் உமது சங்கொலி முதலில் ஒலிக்கட்டும்! [ஆண்டனி சீஸர் பெயரைக் கேட்டதும் செனட்டர் அருகே வருகிறார். கூடவே கல்பூர்ணியாவும் வருகிறாள்] காஸ்கா: [கேலியாக] ஆண்டனி! நினைவில் வைத்துக்கொள்! உனது பொற்காலம் கற்காலமாகப் போகுது! சீஸர் வரப் போவதாய்க் கேள்விப் பட்டோம்! சீக்கிரம் நீ ரோமாபுரித் தலைமை பதவியைத் துறக்க வேண்டி திருக்கும்! சீஸர் வருகிறார்! எப்போதென்று தெரியுமா? எகிப்தின் கடவுள் வரப் போகிறார்! வரவேற்பு பலமாய் இருக்கட்டும்! கல்பூர்ணியா: [மிக்க மகிழ்ச்சியுடன்] என் பதி வரப் போகிறாரா? எப்போது வருகிறார்? காஸ்கா! அவரை ஏன் எகிப்தின் கடவுள் என்று ஏளனமாகச் சொல்கிறாய்? காஸ்கா: கல்பூர்ணியா! சீஸர் வரப் போகிறார். எப்போதென்று என்னைக் கேட்காதே! கிளியோபாத்ராவைக் கேட்டால் தெரியும்! அந்த நாள் சீஸருக்கே தெரியுமா என்பது என் சந்தேகம்! கிளியோபாத்ரா ஐஸிஸ் தெய்வத்தின் அவதாரமாம்! அவளைத் திருமணம் செய்த சீஸரை எகிப்தியர் தேவனாகக் கொண்டாடுவதில் தவறில்லை! மேலும் ·பாரோ பரம்பரையில் வந்தவள் கிளியோபாத்ரா! அவளை மனைவியாக ஏற்றுக் கொண்ட சீஸருக்கு, ஃபெரோ சந்ததியைப் பெற்றவர் என்று வரலாறு பாராட்டும்! கல்பூர்ணியா: என் பதி முழுக்க முழுக்க ஒரு ரோமானியர்! எத்தனை மத்திய ஆசியப் பெண்களை அவர் மணந்தாலும், அவரது முகவரி மாறாது! அவரை எகிப்தியக் கடவுள் என்று ஏளனம் செய்யாதே! காஸியஸ்: கல்பூர்ணியா! சீஸர் ரோமாபுரிக்கு மீளாத வேளையில், ரோமானியரும் அவரைக் கடவுளாக மதிக்கிறார் தெரியுமா? பிற்கால வரலாறு சீஸர் கிளியோபாத்ராவின் பதி என்று சொல்லுமே தவிர, கல்பூர்ணியாவின் பதி என்று சொல்லப் போவதில்லை! ஆண்டனி: காஸியஸ்! உன்னைப் போல் ஒருவனும் சொல்லப் போவதில்லை! சீஸரின் முதல் மனைவி கல்பூர்ணியா வென்பதை வரலாறு மாற்ற முடியாது! சீஸரின் ஆணைக்குக் கட்டுப்பட்டு ஆட்சி செய்பவன் நான்! அவர் வெற்றியைப் பங்கீட்டு ஆளுபவன் நான்! எங்கிருந்தாலும் அவர்தான் ரோமானிய சாம்ராஜியத்தின் அதிபதி! சிசெரோ: ஆனால் அவர் ரோமாபுரியின் ஏதேட்சை அதிகாரி என்பது உனக்குத் தெரியாதா? ரோமானிய சாம்ராஜியத்தின் வேந்தர் அவர் என்பது உனக்குத் தெரியாதா? ரோமாபுரியின் குடியரசை சிதைக்கப் பிறந்தவர் என்பது உனக்குத் தெரியாதா? ரோமாபுரியின் மன்னராக சீஸர் முடிசூடப் போவது உனக்குத் தெரியாதா? ஆண்டனி: தெரியாது! ரோமாபுரியின் மன்னராகப் பதவி ஏற்கச் சீஸர் எப்போதும் விரும்பிய தில்லை! நான் சொல்கிறேன், கேட்பீர்! ரோமின் குடியரைச் சீஸர் ஒருபோதும் முறிக்கப் போவதில்லை! மாற்றப் போவதில்லை! செனட்டர்களை எப்போதும் வரவேற்பவர் சீஸர்! சிசெரோ: ஆண்டனி! நீ சீஸரை மிகவும் நேசிப்பதால், உன் கண்ணுக்கு அவரது சூழ்ச்சிகள் புரிவதில்லை! அவரது தவறுகள் தெரிவதில்லை! வெளிநின்று நோக்கும் எங்களுக்குப் பளிச்செனத் தெரிகிறது! அக்டேவியன்: நான் ஒன்று கேட்கிறேன், கல்பூர்ணியா! கிளியோபாத்ராவுக்குப் பிறந்த சீஸரின் மகனைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்? கல்பூர்ணியா: ஆண்மகவைப் பற்றி எனக்குப் பூரண திருப்தியே! என் பதியின் ஆண்பிள்ளை அது! என் பதியின் அன்புக் குழந்தை அது! என் பதி ஏற்றுக் கொண்ட ஆண்மகவு யாருக்குப் பிறந்திருந்தால் என்ன! அந்த பிள்ளை எனக்கும் சொந்தப் பிள்ளைதான்! சீஸரின் பெயரைச் சொல்லப் பிறந்த ஆண்பிள்ளை அது! என் பதியின் காதலி என் மதிப்புக்கும், வரவேற்பிற்கும் உரியவள்! சீஸரின் வாரிசு அந்த சிறுவன் என்பது நன்றாகத் தெரியும் எனக்கு. அந்தச் சின்னஞ் சிறு குழந்தை மீது உங்களுக்கு ஏன் வெறுப்பென்று தெரியவில்லை எனக்கு! அக்டேவியன்: எனக்கு அதிகாரம் கிடைக்கும் போது, சீஸரின் வாரிசை ஒழிக்க நான் முனைவேன் என்பதை அறிந்துகொள், கல்பூர்ணியா? யானைகொரு காலம்! பூனைக்கொரு காலம்! பூனை ஆட்சிக்கு வரும்போது அந்த எலியைப் பிடித்து விழுங்கி விடும் என்று அறிந்துகொள் கல்பூர்ணியா! அது ஒரு விஷப் பாம்பு! பாலைவன நச்சுப் பாம்பு! கிளியோபாத்ராவே ஒரு நாகப் பாம்பு! அவள் வயிற்றில் பாம்பு பிறக்காமல் பிறகு வேறென்ன பிறக்கும்? ஒருநாள் என் வாளுக்கிரையாகும் அந்த நாகம்! அந்த நாகத்தின் குட்டியை நான் விட்டு வைக்கப் போவதில்லை. *********************   அங்கம் -3 காட்சி -4 “லிஸ்ஸட் [Liszt] சொல்கிறார்: கடவுள் ஒன்றுதான் ஒருவர் நேசிக்கப்பட உகந்தது. உண்மையாக இருக்கலாம் அக்கூற்று. ஆனால் ஓர் ஆடவனை ஒருத்தி நேசிக்கும் போது, கடவுளை நேசிப்பது என்பது வேறுபட்ட தன்மை யானது.”   “எளிமைப் பண்பு என்பது உலகிலே கைவசப் படாத மிகக் கடினமான நடப்பு! அது ஒருவர் அனுபவத்தின் எல்லையில் வரக் கூடியது. மாமேதைகள் கைக்கொள்ளும் இறுதியான முயற்சி.” ஜியார்ஜ் ஸான்ட் பிரெஞ்ச் பெண் எழுத்தாளி [George Sand (1804-18 76)]   “உன்னத படைப்புகள் [Masterpieces] என்பவைத் தனிப்பட்ட ஆக்கமோ அல்லது ஒற்றை உதயமோ அல்ல. ஒருவரின் பல்லாண்டு காலச் சிந்தனையில் எழுந்து, மற்றும் மானிடக் குழுக்களின் பங்கீட்டுச் சிந்திப்புக்களில் பின்னி உதயமானவை அவை; பொது மாந்தர் அனுபவத் தொகுப்புகளைப் பின்னணியாகக் கொண்டு, ஒருவரது வாக்கு மூலமாக வடிக்கப் படுபவை.” [Example: Leo Tolstoy’s War & Peace]  வெர்ஜினியா ஊஃல்ப், ஆங்கில எழுத்தாளி [Viginia Woolf (1882-1941)]   விடுதலை நாட்டில் சீஸரைப் போல வாழ்ந்தவன் நான்! நீயும் அப்படித்தான்! நானும், நீயும் நன்றாகத் தின்று, கொளுத்து, குளிர் காலத்துக் கடும்பனியும் தாங்குவோம், சீஸரைப் போல! வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]   கானப் பாக்கள் சிலவற்றை எழுப்பிடு! மோன முகக் கோணல் நிமிர்த்தி, காதலை வணிக மாக்கிடத் துணியும்! …. நானவளை ஒருதரம்தான் நோக்கினேன், நாற்பது எட்டுகளில் தடம் வைத்தாள், தெருவினில் மாந்தர் நடமாடும் போது! பெருமூச்சுடன் அவள் பேசினாள், செம்மை நெறியைப் பழுது படுத்தியதாக, விம்மினாள் மூச்சுத் திணர! வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஆண்டனி & கிளியோபாத்ரா]     நாடகப் பாத்திரங்கள்:   நேரம், இடம்: அலெக்ஸாண்டிரியா அரண்மனையில், கிளியோபாத்ராவின் தனியறை. பகல்வேளை நாடகப் பாத்திரங்கள்: கிளியோபாத்ரா, ஜூலியஸ் சீஸர், அவரது மகன், சேடிகள் காட்சி அமைப்பு: ஜூலியஸ் சீஸர் ரோமாபுரிக்குத் திரும்பிச் செல்ல ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார். புதல்வனோடு கிளியோபாத்ரா வருந்திய வண்ணம் நிற்கிறாள். ஜூலியஸ் சீஸர்: [விறுவிறுப்பாக] கண்ணே! கிளியோபாத்ரா! என்னைத் தடுத்து நிறுத்தாதே! தங்கச் சொல்லி வற்புறுத்தாதே! நமது செல்வ மகனுக்கு ஒருவயது வந்ததும் போகலாம் என்று கூறியதை மறந்து விட்டாயா? ஓராண்டு நானிங்கு தங்கி விட்டேன்! என்னாசை மகனுடன் விளையாடி விட்டேன்! இனி ஒருநாள் தாமதித்தால், ரோமானிய செனட்டரின் சினத்துக்கு ஆளாவேன் நான். எனக்குச் செனட்டில் பகைவர் பெருக என் தாமதப் பயணம் தூண்டிவிடும். முடிவாகச் சொல்கிறேன்! விடைகொடு கண்ணே! நான் ரோமாபுரியின் பொறுப்பையும், ரோம சாம்ராஜியத்தின் பொறுப்பையும் செனட்டர் முன்பாக நான் ஏற்றுக் கொள்ள வேண்டும். ரோமாபுரி ஏகாதிபத்திய அதிபதியாக என்னை முடிசூட்ட எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது! கிளியோபாத்ரா: [சீஸரின் கைகளைப் பற்றிக் கொண்டு] என்னைத் தனியே விட்டுச் செல்வது நியாயமாகுமா? தந்தையைத் தேடுவானே நம் அன்புப் புதல்வன்! அன்புச் செல்வனுக்குத் தம்பி, தமக்கை வேண்டாமா? நமக்கொரு மகன் போதாது! நானொரு வளமை மிக்க நைல் நதி! அநேக ஆண்மகவை உங்களுக்குப் பெற்றுத் தருவேன்! என்னைத் தவிக்க விட்டுப் பிள்ளையே பெறாத கல்பூர்ணியாவை நாடிப் போவதா? என்னைச் சுற்றிலும் பகைவர் சூழ்ந்திருக்கிறார்! பயமின்றித் தனியாக நான் எப்படி வாழ்வேன்? இன்னும் ஓராண்டு எங்களுடன் தங்க வேண்டும். ரோமாபுரிக்கு உங்களுக்குப் பொறுத்திருக்கும்! நம்பத் தக்க ஆண்டனி உங்கள் துணை ஆளுநர்! நீங்களின்றிச் சாமர்த்தியமாய் ரோமாபுரியை ஆண்டனி ஆட்சி செய்து வருகிறார்! நீங்கள் ரோமின் தளபதி மட்டுமில்லை! இப்போது என் பதி! எகிப்தின் வேந்தர்! ரோமாபுரி மீதுள்ள பரிவு உங்களுக்கு எகிப்து மீதில்லையா? [கைகளைப் பற்றி நெஞ்சோடு வைத்துக் கொள்கிறாள்] ஜூலியஸ் சீஸர்: [கனிவுடன்] கிளியோபாத்ரா! ஆம் நான் உன் பதிதான்! அதை உலகே அறியும்! எகிப்தின் பெயரை எண்ணும் போதெல்லாம் எழிலரசி கிளியோபாத்ரா என் நெஞ்சைப் பற்றிக் கொள்கிறாள். முதல் மனைவி கல்பூர்ணியா ஆயினும், இளம் மனைவி கிளியோபாத்ராதான் என்னை ஆட்டிப் படைப்பவள்! ரோமாபுரியில் கல்பூர்ணியா ஆளுக்கு மேல் ஆளாக அனுப்பி, என்னை ஆங்கு வரும்படி அழைக்கிறாள்! பல்லாண்டுகள் நானவளைப் பார்க்க வில்லை. இம்முறை நான் போகாவிட்டால், அவள் கண்ணாடி இதயம் துண்டாக உடைந்து விடும்! பிறகு அவள் என்னை விலக்கிப் போய் விடுவாள்! நான் ரோமில் எப்படித் தனியாக வாழ்வது? கிளியோபாத்ரா: [மிக்க ஆர்வமுடன்] நானங்கு வந்து விடுகிறேன், உங்கள் தனிமையைப் போக்க! நானும் தனி மாதாக எகிப்தில் தவிக்க வேண்டாம்! நீங்களும் தனி ஆணாக ரோமில் நோக வேண்டாம்! நானும் நம் செல்வனும் உங்கள் கண்ணெதிரிலே வாழ்வோம். நாங்கள் ரோமுக்கு உங்களுடன் வரலாமா? ஜூலியஸ் சீஸர்: [சற்று கவலையுடன்] வேண்டாம் கிளியோபாத்ரா! தக்க தருண மில்லை இது! ரோமாபுரி உனக்கும், நம் மகனுக்கும் எந்த முறையில் மதிப்பளிக்கும் எனத் தெரியாது எனக்கு. உன்னை அவமதித்தால் உனக்கும் தாங்காது! எனக்கும் தாங்காது! அதோடு என் முதல் மனைவி கல்பூர்ணியா எப்படி உன்னை வரவேற்பாள் என்பதும் தெரியாது எனக்கு! நீ எகிப்தை ஆளப் பிறந்தவள். இங்கு நீ மகிழ்ச்சியோடு இருக்கிறாய். ரோமாபுரியில் நீ அடைப்பட்டுப் போவாய்! ஒருமாதிரியாக உன்னைப் பார்ப்பார் ரோமானியர்! நீ வேதனைப் படுவாய்! இப்போது வேண்டாம். ஓரிரு வருடம் கழித்து வா! நான் முதலில் சென்று மக்கள் மனதை அறிய வேண்டும். உன்னைப் பற்றிச் செனட்டர் என்ன நினைக்கிறார் என்று நான் உளவு செய்ய வேண்டும். கிளியோபாத்ரா: [சினத்துடன், உரத்த குரலில்] சீஸர்! செனட்டர் அனுமதி கேட்டா என் உதட்டில் முத்த மிட்டீர்? செனட்டர் அனுமதி கேட்டா என் மெத்தையில் படுத்தீர்? செனட்டர் அனுமதி கேட்டா எனக்குப் பிள்ளை உண்டாக்கினீர்? பிறகு செனட்டர் அனுமதி கேட்டா என்னைத் திருமணம் செய்தீர்? ரோமாபுரிக்கு வரும் எனக்கு செனட்டார் வாசற் கதவு திறப்பாரா என்று உங்கள் வாய் பிதற்றுவதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்! சீஸருக்கு ஆண்மகவை முதலில் அளித்த கிளியோபாத்ரா பெரியவளா? உங்கள் தனி உரிமைக் கட்டுப்படுத்தும் ரோமாபுரிச் செனட்டர் பெரியவரா? ஜூலியஸ் சீஸர்: [சற்று அழுத்தமுடன்] கிளியோபாத்ரா! ஐயமின்றி நான் செனட்டர் தீர்மானத்துக்குக் கட்டுப்பட்டவன்! செனட்டர் பேரவைக்கு நான் அதிபதி ஆனாலும், அவரது பெரும்பான்மைக் குரலுக்குத் தலை சாய்க்க வேண்டும் நான்! நீ என் மனைவிதான்! ஆனாலும் செனட்டர் தணிக்கைக்கு நீயும் தலை வணங்க வேண்டும்! ஆண்மகவை ஈன்ற நீ வீட்டுக்கு பெரியவள்தான்! ஆனால் குடிமக்களின் பிரதிநிதிகள் நாட்டுக்குப் பெரியவர்! கிளியோபாத்ரா: [சீற்றத்துடன்] கிளியோபாத்ரா கீழ்நாட்டுக்காரி என்பதாலா? அல்லது எகிப்த் ரோமின் அடிமை நாடு என்பதாலா? நான் எகிப்தின் மகாராணி! நான் சீஸரின் மனைவி! உங்கள் செனட்டாருக்கு நான் கீழ்ப்படிய முடியாது! நான் அன்றும் விடுதலை ராணி! இன்றும் விடுதலை ராணி! என்றும் விடுதலை ராணி! ஜூலியஸ் சீஸர்: [கனிவுடன்] ஆமாம் கிளியோபாத்ரா! நீ என் மனைவிதான்! அதுபோல் கல்பூர்ணியாவும் என் மனைவிதான். ஆனால் கல்பூர்ணியா செனட்டார் கட்டுப்பாட்டுக்கு உட்பட வேண்டும், தெரியுமா? செனட்டார் கண்முன்பாக ரோமும் ஒன்றுதான்! எகிப்தும் ஒன்றுதான்! அந்த முறையில் எந்த ஓரவஞ்சகமு மில்லை, செனட்டருக்கு! கண்ணே கிளியோபாத்ரா! உன்னுயிருக்கு அஞ்சுகிறேன் நான்! ரோமானியர் அன்னியப் பெண்ணென்று உன்மீது வெகுண்டு உன்னைக் கொன்று விடக் கூடாது! செனட்டார் சினங்கொண்டு நம் சிறு பாலகனைக் கொன்று விடக் கூடாது! குறைந்தது ஓராண்டு கூடியது ஈராண்டாடு நீ காத்திருப்பது நல்லது. மகனுக்கும் மூன்று வயதாகும். ரோமில் ஓடியாடி மகிழ்வான். கிளியோபாத்ரா: [சற்று சமாதானம் அடைந்து] சீஸர்! நாட்களை நான் எண்ணிக் கொண்டிருப்பேன்! ரோமாபுரியில் உங்களைச் சுற்றிலும் கன்னியர் முற்றுகை யிடுவார்! கண்களைச் சுழற்றி, உடம்பைக் குலுக்கி மன்மதக் கணைகளை உம்மீது ஏவி விடுவார்! கல்பூர்ணியா மீது துளியும் உங்களுக்குக் காதல் கிடையாது! ஆகவே உங்கள் நெஞ்சக் கவசம் உறுதியாக இருக்கட்டும்! உங்கள் மனது கல்லாகட்டும்! சீஸருக்குச் சென்ற விடமெல்லாம் காதற் பெண்டுகள் என்பது பழமொழி! பெண்களைக் கண்டால் கண்களை மூடிக் கொள்வீர்! கண்கள் வழியாகத்தான் ஆடவருக்கு வலை வீசுவர் பெண்கள்! அந்த வலையில் சிக்கிக் கொண்டு தவிக்காதீர்! உள்ளே இடம் பிடித்துக் கொண்ட பெண்டிரை வெளியே விரட்டுவது கடினம்! ஜூலியஸ் சீஸர்: [பெரிதாகச் சிரித்து] எகிப்த் எழிலரசி வலையில் சிக்கிக் கொண்டு தப்பிக் கொள்ள முடியாமல் நான் திண்டாடுவது போதாதா? பெண்டிரைக் கண்டால் கண்களை எப்படி மூடிக் கொள்வது? பெண்களின் கவர்ச்சி மின்னல் போல் நெஞ்சைத் தாக்கும் போது, என்னிரும்புக் கவசம் அதைத் தடுக்க முடியாது! அவ்விதம் தடுக்கும் நெஞ்சக் கவசத்தை யார் செய்ய முடியும்? சீஸர் மகாவீரன் ஆயினும், பெண்டிரின் கணைகளின் முன் பலமற்றவனே! எனது எ·கு நெஞ்சிக்குள் உள்ளது பஞ்சுப் பொதி! கிளியோபாத்ரா: [கேலியாகச் சிரித்து] எந்த ஆடவன்தான் பாவையைக் கண்டால் பாகாய் உருகா திருக்கிறான்? என்னாசை நம் செல்வனை ரோமானியர் கண்டு பாராட்ட வேண்டும் என்பதே! அவன் உலகாளப் பிறந்தவன்! அலெக்ஸாண்டரைப் போல ஆவேச வேட்கை கொள்பவன்! சீஸரைப் போல பல தேசங்கள் வெல்பவன்! ஆனால் என்னையும், புதல்வனையும் கல்பூர்ணியா வரவேற்க மாட்டாள் என்பது எனக்குத் தெரிந்ததே! என்னால் நீங்கள் செனட்டர்களைப் பகைத்துக் கொள்ள வேண்டாம். நான் காத்திருக்கிறேன். போய் வாருங்கள். ஜூலியஸ் சீஸர்: [சிரித்துக் கொண்டு] கிளியோபாத்ரா! மாறாக நம் புதல்வனைக் காண கல்பூர்ணியா காத்துக் கொண்டிருக்கிறாள். சீஸரின் மகன் என்று கல்பூர்ணியா ஏற்றுக் கொள்வது வியப்பாக இருக்கிறது. கிளியோபாத்ரா: [சற்று விரக்தியுடன்] அப்படியானல் என்னைக் கல்பூர்ணியா வரவேற்க மாட்டாள் என்று மறைவாகக் கூறுகிறீரா? அதாவது அவளுக்கு என் மகன் வேண்டும், ஆனால் அவனைப் பெற்ற அன்னை வேண்டாம்! உண்மைதானே! ஜூலியஸ் சீஸர்: உண்மைதான் கிளியோபாத்ரா! சற்று சிந்தித்துப் பார்! நான் வேறொரு வாலிப மாதை உன் மாளிகைக்கு அழைத்து வந்தால், நீ அவளை வரவேற்பாயா? அல்லது வாசற் கதவை மூடித் துரத்துவாயா? கிளியோபாத்ரா: [ஆங்காரமாக] நிச்சயம் நானவளை வரவேற்க மாட்டேன்! வாசலில் நிறுத்தித் துரத்தவும் மாட்டேன்! வாளால் தலையைத் துண்டித்து, உடலைக் கழுகுக்கிரை ஆக்குவேன்! [அப்போது பிரிட்டானஸ், ரூஃபியோ விரைவாக உள்ளே நுழைகிறார்கள்] பிரிட்டானஸ்: சீஸர்! கப்பல் தயாராக உள்ளது ரோமாபுரிக்கு. நீங்கள் கிளம்ப வேண்டிய தருணமிது. அலைகள் நமக்குச் சாதகமாக அடித்துக் கொண்டிருக்கின்றன. காற்றடிக்கும் திசையும் பாய்மரக் கப்பலுக்கு அனுகூலமாய் வீசுகிறது! புறப்படுங்கள்! உங்கள் பெட்டிகள் எல்லாம் கப்பலில் ஏற்றப்பட்டு விட்டன! ஜூலியஸ் சீஸர்: [கனிவுடன்] கண்ணே! கிளியோபாத்ரா! கண்ணீரைத் துடைத்துக் கொள்! நான் போய் வருகிறேன். பூரிப்புடன் விடை கொடு எனக்கு! [சீஸரைக் கிளியோபாத்ரா அணைத்துக் கொள்கிறாள். சேடி தூக்கி யிருக்கும் மகனின் நெற்றியில் சீஸர் முத்தமிடு கிறார். கிளியோபாத்ராவை நோக்கி] கிளியோபாத்ரா! நீ அஞ்ச வேண்டாம்! ரூ·பியோவை எனது சார்பில் எகிப்தின் பாதுகாப்புக்கு விட்டுச் செல்கிறேன். அவருடன் உள்ள ஐயாயிரம் ரோமானியப் படையினர் உன் ஆணைக்கு அடி பணிவர். அவர் உன்னையும் பாதுகாப்பார். எகிப்தையும் பாதுகாப்பார். சென்று வருகிறேன். [கிளியோபாத்ராவை முத்தமிடுகிறார்] கிளியோபாத்ரா: [கண்ணீர் கலங்க] மிக்க நன்றி சீஸர்! சென்று வாருங்கள். ஈராண்டுகள் கழித்து ரோமாபுரிக்கு நானும், நம் மைந்தனும் வருவோம். நிச்சயம் வருவோம். ஜூலியஸ் சீஸர்: நானங்கு காத்திருப்பேன் உங்களுக்கு. [சீஸர் பிரிட்டானஸ் பின்னால் தொடர மாளிகையை விட்டு வெளியேறுகிறார்] *********************   அங்கம் -4 காட்சி -1 பூரிப்பு அடைகிறேன், எனது வலுவிலாச் சொற்கள் தீப்பற்ற வைத்தன, புரூட்டஸ் நெஞ்சிலே!    காஸ்ஸியஸ் பருத்த உடல் கொண்டோர் என் பக்கத்தில் வரட்டும், மென்மை மூளையோடு ஓய்வும் எடுப்போர் ! அதோ பார் ஆண்டனி! பசித்த பார்வையும், நலிந்த மேனியும் படைத்த காஸ்ஸியஸ் ! ஆழ்ந்து உளவிடும் அத்தகை மாந்தர் அபாய மனிதர்கள்! ஜூலியஸ் சீஸர் வில்லியம் ஷேக்ஸ்பியர் என்ன சாதித்து விட்டார் சீஸர்? எந்த வெற்றியோடு ரோமுக்கு வருகிறார்? அறிவில்லா மூடர்களே! கல் நெஞ்சர்களே! பாம்ப்பியை நினைவில்லையா? பாம்ப்பியின் புதல்வரைக் கொன்று, சீஸர் ரோமுக்கு மீள்கிறார்! மரத்தின் மீதும், வீட்டின் மீதும் ஏறி மாவீரர் பாம்ப்பி வந்ததைப் பார்த்தீர்! இரதத்தில் அவர் சென்ற போது, தைபர் நதி தாளமிட வில்லையா? புத்தாடை அணிந்து சீஸரை வரவேற்பதா? விடுமுறை என அறிவித்துப் பாம்பியின் குருதியில் மிதித்த பாவி மனிதர் சீஸரை வரவேற்பதா? பாதை யெல்லாம் வண்ணமலர் வீசுவதா? ஒழிந்து போவீர்! ஓடிச் செல்வீர்! உமது வீட்டில் மண்டி யிட்டு மன்னிப்புக் கேட்பீர்!  [மாருல்லஸ் பாம்ப்பின் அனுதாபி] ஓடுவீர்! கூடுவீர் ! நல்லோரே! நாடுவீர் தைபர் நதிக்கரை! கண்ணீர் விடுவீர், நதியில் கலந்திட, ஆறாய்ப் பெருகிச் சங்கமம் அடைய! நிறுத்துவீர் சீஸரை வரவேற்கும் தெரு விழாக்களை! சீஸர் சிலைக்குப் பொன்னாடையா? நீக்குவீர் அதைச் சீக்கிரம்! முளைத்தெழும் சீஸரின் சிறகை அறுத்து விடுவீர் ! கீழே விழட்டும் ஈசல்! அடிமையாய் நாம் உழல வானில் எப்படிப் பறப்பார் சீஸர்? [ஃபிளாவியஸ் பாம்ப்பின் அனுதாபி] வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்] Julius Caesar Arrives in Rome  நாடகப் பாத்திரங்கள்:     ரோமாபுரியில்: தளபதி மார்க் ஆண்டனி [35 வயது], மற்றும் செனட்டர்கள்: புரூட்டஸ் [35 வயது], காஸ்ஸியஸ் [30 வயது (புரூட்டஸின் மைத்துனன்)]. காஸ்கா [40 வயது], கவிஞர் சின்னா [35], சிசெரோ [50 வயது], அக்டேவியன் [24] டிரிபோனஸ் மற்றும் ஜூலியஸ் சீஸரின் மனைவி கல்பூர்ணியா [45 வயது]. ஒரு ஜோதிடன், காஸ்ஸியஸின் சதிகாரக் கூட்டம். பாம்ப்பியின் அனுதாபிகள். சீஸரின் சீடர்கள். ரோமானியப் படையாட்கள். பொது நபர்கள். நேரம், இடம்: பகல் வேளை. செனட் மாளிகைக்கு அருகில் ரோமாபுரியின் பெருவீதி. நாடகப் பாத்திரங்கள்: ஜூலியஸ் சீஸர், படை வீரர்கள், தெருவின் இருபுறமும் வரவேற்கும் பொதுமக்கள் காட்சி அமைப்பு: ரோமாபுரியில் ஒரு பொதுத்தளம். நகர மக்கள் ஆரவாரம் செய்ய, படையினர் வாத்தியங்கள் முழங்க ஜூலியஸ் சீஸர் கையை உயர்த்தி அசைத்துக் கொண்டு குதிரை வாகனத்தில் ரோமாபுரிக்குத் திரும்பி வருகிறார். ஒரு ஓரத்தில் பாம்ப்பியின் அனுதாபிகள் சீஸருக்கு எதிராக உரையாற்றி விழாக்களைத் தடை செய்து வருகிறார்கள். சீஸரின் பகைவர் மற்றும் செனட்டர் சிலர் அடுத்தொரு பகுதியில் சீஸர் வரவேற்பைத் தடை செய்து வருகிறார்கள். ஜோதிடன் ஒருவன் வரப் போகும் அபாயத்தை சீஸருக்கு எச்சரிக்கை செய்கிறான். கல்பூரினியா, ஆண்டனி, புரூடஸ், காஸ்ஸியஸ், காஸ்கா ஆகியோர் கூட்டத்தில் காணப் படுகிறார். சீஸர் இரதத்திலிருந்து கீழிறங்கி கல்பூர்ணியாவிடம் வருகிறார்.   []     ஜூலியஸ் சீஸர்: [கனிவுடன், கைகளை நீட்டி] கண்ணே! கல்பூர்ணியா! உன்னைக் காண வந்து விட்டேன். உன்னைப் பிரிந்து எத்தனை ஆண்டுகள் கடந்து விட்டன? எனக்கே மறந்து விட்டது. கல்பூர்ணியா: [சீஸரைக் கட்டிப் பிடித்துக் கொண்டு, கண்ணீர் பெருக] என்னை மறந்து எத்தனை ஆண்டுகள் ஆயின என்பது எப்படி நினைவில் இருக்கும், உங்களுக்கு? நான் புறக்கணிக்கப் பட்ட மாது! உங்களுக்கோ அடுத்தடுத்துப் பல போர்கள்! அடுத்தடுத்து பல நாடுகள்! அடுத்தடுத்துப் பல மாதர்கள்! என்னை எப்படி நினைவிருக்கும் உங்களுக்கு? நாளும், கிழமையும் நினைவில் தங்காத உங்களுக்கு எப்படி மாதம், வருடம் ஞாபகம் இருக்கும்? மெலிந்து போன என் உடம்பு கூட உங்களுக்குத் தெரிவில்லை! நீங்களோ தலை வழுக்கையாகி வயதான வாலிபராய்க் காணப்படுகிறீர்! ஜூலியஸ் சீஸர்: வயதான வாலிபரா நான்? நல்ல கணிப்பு, கல்பூர்ணியா! .. சரி சரி! பார் ஆடவர் நிர்வாணப் பந்தயம் தொடங்குகிறது! அதோ ஆண்டனி ஓடிவரும் பாதையில் நில்! … ஆண்டனி! என்னைப் பார்! ஆண்டனி: அழைத்தீரா என் மதிப்புக்குரிய அதிபதி அவர்களே? ஜூலியஸ் சீஸர்: ஆமாம் ஆண்டனி! ஓடிவரும் வேகத்தில் உனது கை, கல்பூர்ணியா மீது படட்டும்! நம் மூதாதையரின் பண்டை நடப்புப்படி, நிர்வாண ஆடவர் புனித விரட்டலின் போது மலடியர் மீது கரங்கள் பட்டால், அவரது மலடு நீங்கிச் சாபம் ஒழிந்து போய்விடும்! கல்பூர்ணியா: [உரத்த குரலில் சினத்துடன்] பல்லாண்டுகளுக்குப் பிறகும் என்னை மலடியெனப் பழி சுமத்தும் உங்கள் பழக்கம் இன்னும் போக வில்லையே! ரோமானியர் முன்பாக என்னை மீண்டும் மலடி என்று முரசடிக்கலாமா? [அழுகிறாள்]. .. ஆண்டனி! என்னருகில் வராதே! உன் கையால் என்னைத் தொடாதே! என் மலட்டுத் தன்மை உன் முரட்டுக் கரங்கள் படுவதால் நீங்காது! போதும் உமது மூட நம்பிக்கை! [சீஸரிடமிருந்து விலகிக் கொள்கிறாள்] ஆண்டனி: [முறுவலுடன்] என் அதிபதி சீஸர் சொல்லி விட்டார். அதை நிறைவேற்றுவது என் பணி! Caesar & Calpurnia in Rome []     [கூட்டத்திலிருந்து சீஸர், சீஸர் என்றோர் உரத்த குரல் கேட்கிறது] ஜூலியஸ் சீஸர்: [காதைத் திருப்பி, கவனமுடன்] யாரென் பெயரைச் சொல்லி அழைப்பது? காஸ்கா: நிசப்தம்! அமைதி! யாரோ அழைக்கிறார், சீஸரை? அமைதி! அமைதி! ஜூலியஸ் சீஸர்: கூட்டத்தில் யாரென்னைக் கூப்பிடுகிறார்? குரலில் ஏதோ சோகத் தொனி ஒலிக்கிறது! யாரங்கே? அவரை என் முன்னே அழைத்து வா! ஜோதிடன்: எச்சரிக்கை உமக்கு! வருகிற மார்ச் 15 ஆம் தேதி! ஜூலியஸ் சீஸர்: நீ என்ன சொல்கிறாய்? சரியாகக் காதில் விழவில்லை! மீண்டும் ஒருமுறை சொல்! ஜோதிடன்: கவனம், வருகிற மார்ச் 15 ஆம் தேதி! எச்சரிக்கை உமக்கு! ஜூலியஸ் சீஸர்: [புறக்கணிப்புடன்] அவன் கனவு காண்பவன்! ஒதுக்கித் தள்ளுங்கள் அவனை! காஸ்ஸியஸ்: புரூட்டஸ்! மலடிப் பெண்களை நிர்வாண வாலிபர் அடிக்கும் வேடிக்கையை நீங்கள் பார்க்கப் போக வில்லையா? புரூட்டஸ்: அந்தக் கோமாளித்தனத்தை நான் பார்க்கப் போவதில்லை! எனக்கு வேலைப் பளு மிகுதி. சீஸரை நான் வரவேற்று நேராக உரையாட வேண்டும். காஸ்ஸியஸ்: நீங்கள் முன்போல் இல்லை இப்போது! உங்களிடமிருந்த பரிவும், பாசமும் தற்போது மைத்துனன் என்மீதில்லை! நீங்கள் ஒதுங்கிச் செல்வதை நான் பார்த்தேன். என்னைப் புறக்கணிக்கக் காரணம் என்ன, புரூட்டஸ்?   புரூட்டஸ்: காஸ்ஸியஸ்! நீ ஒரு பயங்கரவாதி! என்னை நீ அண்டுவதே ஏதோ ஒரு சுயநலத் தேவைக்கு! எனக்குத் தெரியும் அது! ஆனால் உன் உள்மனதை அறிவது கடினம். என்ன வினை புரிய என்னை வசப்படுத்துகிறாய்?  காஸ்ஸியஸ்: புரூட்டஸ், பேரதிபதி சீஸர் ரோமாபுரிக்கு வந்திருப்பது ஏனென்று தெரியுமா? ரோம் ஏகாதிபத்தியத்துக்குச் சக்கரவர்த்தியாக! நம்மை யெல்லாம் அடிமையாக்க! ரோமை ஏகாதிபத்திய நாடாக்க! [அப்போது சீஸரைச் சுற்றிலும் நிற்கும் கூட்டத்தின் ஆரவாரம் கேட்கிறது] புரூட்டஸ்: [சட்டெனத் திரும்பி] என்ன கூக்குரல் அது? ரோமானியர் சீஸரை வேந்தராக்கத் தேர்ந்தெடுக்கிறார் என்று ஓர் அச்சம் எழுகிறது எனக்கு. காஸ்ஸியஸ்: அப்படியானால் அதை நாம் தடுக்க வேண்டும் புரூட்டஸ்! சீஸர் வேந்தராவது உங்களுக்கும் பிடிக்க வில்லை என்று தெரிகிறது எனக்கு! என்னால் அதைத் தாங்கிக் கொள்ள முடியாது! எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ராவைத் திருமணம் புரிந்தபின், சீஸர் ·பாரோ மன்னர் பரம்பரையாகி விட்டார்! ·பாரோ மன்னர் போல் கடவுள்களில் ஒருவராகி விட்டார்! மேலும் ·பாரோ பரம்பரையில் ஓர் ஆண்மகவைப் பெற்றுக் கொண்டு விட்டார்! தற்போது ரோமாபுரியில் அவரைக் கடவுளாகவே வணங்கி வருகிறார்! நான் குனித்து வளைந்து அந்த சீஸருக்கு வணக்கம் செய்ய வேண்டும்! சீஸர் நீட்டி நிமிர்ந்து தலை அசைத்து என்னை ஆசீர்வதிப்பார்! எனக்குத் தெரியும் அவரது நோயைப் பற்றி! ஸ்பெயினில் போரிடும் போது காக்கா வலிப்பு வந்து வாயில் நுரை தள்ளி, அந்த கடவுள் தரையில் வீழ்ந்தார்! துடித்தார்! புரண்டார்! மனிதர் மடிந்தாரா? அதுதான் கிடையாது. விழுந்தும், விழாமலும், மடிந்தும் மாளாமலும் வாழும் நோயாளி சீஸர். நோயாளி சீஸரா நமக்கு தேவன்? நமக்கு வேந்தன்?  [மறுபடியும் கூட்டத்தின் ஆரவாரமும், கைதட்டலும் கேட்கின்றன] []   புரூட்டஸ்: மீண்டும் ஆரவாரம், கைதட்டல்! சீஸருக்குப் புதுப்புது விருதுகள் கிடைக்கின்றன என்று நினைக்கிறேன். பாராட்டுகிறேன் அவரை! நேசிக்கிறேன் அவரை! காஸ்ஸியஸ்: பரிசுக்கும், பதவிக்கும் உயிரைக் கொடுப்பவர் சீஸர்! ரோமாபுரிக்கு ஏகாந்த வேந்தனாவதே அவரது குறிக்கோள்! சீஸரின் பிரதமச் சீடர் ஆண்டனி அதைத்தான் செய்வார்! ஆண்டனியின் உன்னத அதிபதி சீஸர் அதைத்தான் நாடி வருகிறார்! புரூட்டஸ்! அதை நான் தடுப்பேன்! நிச்சயம் தடுப்பேன்! அதை நீங்களும் தடுப்பீரா? சீஸர் என்னும் பூத மனிதர் நம்மை எல்லாம் மிதிக்க இடம் கொடுக்கலாமா? புரூட்டஸ்: மெய்யாக நீ என்னை நேசிப்பது தெரிகிறது எனக்கு! மெய்யாக என் உதவியை நீ நாடுவது புரிகிறது எனக்கு! நீ சொல்லியதில் உண்மை இருக்கிறது! சீஸரின் போக்கு வரவேற்கத் தக்கதாக இல்லை! ஆனாலும் அவரை நான் நேசிக்கிறேன்! கிரேக்க வீரர் மகா அலெக்ஸாண்டருக்கு நிகராக ரோமாபுரியில் தோன்றியவர் சீஸர்! அவருக்கு இணை அவரே! அவரை ரோமாபுரியின் அதிபதியாகப் பெற்றதில் நான் பெருமைப் படுகிறேன். உனது கருத்துக்களைப் பற்றி நான் சிந்திக்க வேண்டும். உனது கூற்றுக்களை ஒருவர் ஒதுக்கவும் முடியாது! அதுபோல் ஒப்புக் கொள்ளவும் முடியாது! எனக்கு அவகாசம் தேவை! காஸ்ஸியஸ்: மிக்க மகிழ்ச்சி புரூட்டஸ்! எனது வலுவற்ற சொற்கள் உங்கள் வைர நெஞ்சில் தீப்பொறி உண்டாக்கியதே போதும். ஆனால் அந்த தீப்பொறி அணைந்து விடாமல் பார்த்துக் கொள்வீர். பண்பு மிகும் புரூட்டஸ்! சீக்கிரம் முடிவு செய்யுங்கள்! சீஸர் முடிசூடி ரோமின் வேந்தனாய் ஆசனத்தில் அமரக் கூடாது! நாம் அதைத் தடுக்க வேண்டும்! உடனே நிறுத்த வேண்டும்! நாமெல்லாம் அதற்கு உறுதிமொழி எடுக்க வேண்டும். ++++++++++++++++++    அங்கம் -4 காட்சி -1 பாகம் -2 புரூட்டஸ்! விழும் நோய் சீஸருக் கில்லை! உனக்கும், எனக்கும் உள்ளது! உத்தமன் காஸ்கா வுக்கும் உள்ளது! காஸ்ஸியஸ் குறுகிய நம் நாட்டின்மேல்  காலைப் பரப்பி, பெரும் பூதம்போல் நிற்கிறார் சீஸர்! நீண்ட கால்களின் கீழ் நடந்து நம், பிரேதக் குழிகளை எட்டிப் பார்க்க வைப்பார்! விதிக்கு மனிதர் சில வேளையில் அதிபதியா யிருப்பார்! அருமை புரூட்டஸ் ! தவறு, நாம் பிறக்கும் போதிருக்கும் விண்கோளிட மில்லை! நம் வினைக்கு நாமே காரண கர்த்தா! காஸ்ஸியஸ் ஆண்டனி ! காஸ்ஸியஸைக் கண்டு அஞ்ச வில்லை நான்! சீஸர் என்னும் பெயர் அச்சம் ஊட்டுவதா? காஸ்ஸியஸ் போல் விரைவில் யாரை ஒதுக்க வேண்டும் என்றறியேன்! காஸ்ஸியஸ் மெத்தப் படித்தவன்! உற்று நோக்குவன்! மனிதர் போக்கை நுணுக்கி ஆய்பவன்! நாடகம் விரும்பான்! பாடலைக் கேளான், நகைப்பது அவன் அபூர்வம்! நகைப்பினும் தன்னை ஏளனப் படுத்தும் தன்மைதான்! அமைதியில் ஆறாது அவனது இதயம் ! அத்தகையோர் ஆதலால் அபாய மாந்தர்! ஜூலியஸ் சீஸர் வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்] ரோமாபுரியில்: தளபதி மார்க் ஆண்டனி [35 வயது], மற்றும் செனட்டர்கள்: புரூட்டஸ் [35 வயது], காஸ்ஸியஸ் [30 வயது (புரூட்டஸின் மைத்துனன்)]. காஸ்கா [40 வயது], கவிஞர் சின்னா [35], சிசெரோ [50 வயது], அக்டேவியன் [24] டிரிபோனஸ் மற்றும் ஜூலியஸ் சீஸரின் மனைவி கல்பூர்ணியா [45 வயது]. ஒரு ஜோதிடன், காஸ்ஸியஸின் சதிகாரக் கூட்டம். பாம்ப்பியின் அனுதாபிகள். சீஸரின் சீடர்கள். ரோமானியப் படையாட்கள். பொது நபர்கள். []   நேரம், இடம்: பகல் வேளை. செனட் மாளிகைக்கு அருகில் ரோமாபுரியின் பெருவீதி. நாடகப் பாத்திரங்கள்: ஜூலியஸ் சீஸர், படை வீரர்கள், தெருவின் இருபுறமும் பொதுமக்கள் காட்சி அமைப்பு: ரோமாபுரியில் ஒரு பொதுத்தளம். நகர மக்கள் ஆரவாரம் செய்ய, படையினர் வாத்தியங்கள் முழங்க ஜூலியஸ் சீஸர் கையை உயர்த்தி அசைத்துக் கொண்டு குதிரை வாகனத்தில் ரோமாபுரிக்குத் திரும்பி வருகிறார். ஒரு ஓரத்தில் பாம்ப்பியின் அனுதாபிகள் சீஸருக்கு எதிராக உரையாற்றி வருகிறார். சீஸரின் பகைவர், சில செனட்டர்கள் அடுத்தொரு பகுதியில் சீஸர் வரவேற்பைத் தடை செய்து வருகிறார். ஜோதிடன் ஒருவன் வரப் போகும் அபாயத்தை சீஸருக்கு எச்சரிக்கிறான். கல்பூரிணியா, ஆண்டனி, புரூடஸ், காஸ்ஸியஸ், காஸ்கா, ஒரு ஜோதிடன் கூட்டத்தில் காணப் படுகிறார். சீஸருக்கு மார்ச் 15 ஆம் நாள் வரப் போகும் அபாய எச்சரிக்கையை ஜோதிடன் உரக்கக் கூறுகிறான்! அவன் கனவு காண்பவன் என்று ஒதுக்கிறார் சீஸர்! அவருடைய நிழலில் ஒளிந்து கொண்டு சில சதிகாரர் ஓர் பயங்கர நிகழ்ச்சிக்கு விதையிடுகிறார்.   காஸ்ஸியஸ்: மிக்க மகிழ்ச்சி புரூட்டஸ்! வலுவற்ற எனது சொற்கள் உங்கள் வைர நெஞ்சில் தீப்பொறி உண்டாக்கியதே போதும். ஆனால் அந்த தீப்பொறி அணைந்து விடாமல் பார்த்துக் கொள்வீர். பண்பு மிகும் புரூட்டஸ்! சீக்கிரம் முடிவு செய்வீர்! சீஸர் முடிசூடி ரோமின் வேந்தனாய் ஆசனத்தில் அமரக் கூடாது! நாம் அதைத் தடுக்க வேண்டும்! உடனே நிறுத்த வேண்டும்! புரூட்டஸ்: ஆரவாரம் குறைந்து விட்டது, அரங்கத்தில். அதோ சீஸர் எழுந்து வெளியே வருகிறார். காஸ்ஸியஸ்: புரூட்டஸ்! கூட்டத்தில் என்ன நடந்தது என்பதை நாமறிய வேண்டும்! சீஸரை முந்திக் கொண்டு காஸ்கா வருகிறான்! அவனைப் பிடித்து நம்பக்கம் இழுக்க வேண்டும். கைதட்டலுக்கும், எதிரான கூச்சலுக்கும் என்ன காரணம் என்று தெரிய வேண்டும். காஸ்கா கையைப் பற்றி விக்கென இழுப்பீரா புரூட்டஸ்? புரூட்டஸ்: நிச்சயம் செய்கிறேன். ஆனால் சீஸரை பார்த்தாயா? கோபக் கனல் அவர் கண்களில் சுடர்விட்டு எரிகிறது! பின்னால் வரும் சீஸரின் ஆட்டு மந்தை பொறுமை யிழந்து ஏமாந்த முகத்துடன் தொடர்கிறது! கல்பூர்ணியாவின் கன்னங்கள் ஏன் வெளுத்துப் போயுள்ளன? மாமேதை சிசெரோ ஆந்தை விழியில் பேதலித்துக் காணப் படுகிறார்! ரோமாபுரி மன்றத் தர்க்கத்தில், செனட்டர் அவரை குறுக்கிட்டு எதிர்க்கும் போது, அப்படித்தான் சிசெரோ ஆந்தை விழியில் விழித்துக் கொண்டு நிற்பார்! காஸ்ஸியஸ்: அதைத்தான் ஏனென்று காஸ்காவிடம் கேட்கப் போகிறோம். அவனைத் துளைத்து நாம் வினவ வேண்டும்! அவன் வாயிலிருந்து வார்த்தைகளைக் கறப்பது மிகக் கடினம், புரூட்டஸ்! [போட்டி முடிந்து பிறகு, ரோமானியர் சூழ சீஸர் கல்பூர்ணியாவுடன் வீதியில் நடக்கிறார். ஆண்டனி கூடவெ வருகிறார்] ஜூலியஸ் சீஸர்: ஆண்டனி! ஆண்டனி! ஆண்டனி: [சற்று பின்னிருந்து முன் தாவி] சீஸர், எதற்காக அழைத்தீர் என்னை? ஜூலியஸ் சீஸர்: ஆண்டனி! என்னைச் சுற்றிலும் பருத்த உடலுடைய ரோமானியர்தான் நிற்க வேண்டும்! அதோ! அங்கே பார்! பசித்த பார்வையும், மெலிந்த மேனியும் கொண்ட காஸ்ஸியஸ்! கழுகுக் கண்களுடன் யாரையோ கொத்தித் தின்னக் காத்துக் கொண்டிருக்கிறான்! ஆழமாய்ச் சிந்திக்கிறான்! அதிகமாய் யோசிக்கிறான்! எதையும் குதர்க்கமாய் ஆராய்கிறான்! அங்குமிங்கும் அலை மோதுகிறான்! அத்தகைய மனிதர் அபாயகரமானவர்! ஆண்டனி: அஞ்ச வேண்டாம் சீஸர், அவனுக்கு! பயங்கரவாதி யில்லை காஸ்ஸியஸ்! பண்பு மிக்க ரோமானியன் அவன்! பரிவு மிக்கவன் அவன்! பயப்பட வேண்டாம் அவனுக்கு! ஜூலியஸ் சீஸர்: அவனிடம் பயமில்லை எனக்கு! ஆனால் அவனது மனக் கொந்தளிப்பால் ரோமாபுரிக்கு என்ன தீங்கு நேரப் போகிறது என்று தெரியவில்லை! பூமிக்குள் பதுங்கி யிருக்கும் எரிமலை போல் அவன் நெஞ்சத்தில் புகையும் தீப்பொறி என் கண்களுக்குத் தெரிகிறது! காஸ்ஸியஸ் நிரம்பப் படிக்கிறான்! ஆவேசமாய்த் தர்க்கம் புரிகிறான்! தன்னெஞ்சில் எரியும் தீயை அவன் பிறர் உள்ளத்திலும் ஏற்றுகிறான்! அமைதியாக அமர்ந்து அவன் நாடகம் பார்ப்பதில்லை! காதுக்கினிய கீதம் ஒன்றைக் கேட்பதில்லை! முகத்தில் புன்முறுவல் கிடையாது! சிரித்தாலும் அதிலும் தன்மீது ஓர் ஏளனம் கொக்கரிக்கும்! அம்மாதிரி நபரின் மனம் எப்போதும் கொந்தளிப்பில் குமுறும்! .. எனக்கு ஒன்று மட்டும் புரிய வில்லை! புரூட்டஸை நான் என் புதல்வனாய்க் கருதுகிறேன்! அவன் காஸ்ஸியஸ் அருகே ஏன் நிற்கிறான்? காஸ்ஸியஸ் கூறுவதைக் காது கொடுத்து ஏன் கேட்கிறான்? ஆண்டனி! நீ பேசும் போது எனது வலப்புறம் வந்துவிடு! என்னிடது காது செவிடு! .. வலப்புறம் வந்து காஸ்ஸியஸைப் பற்றி உன் கருத்தைச் சொல்! புனிதன் புரூட்டஸைப் பற்றி எனக்குத் தெரியும்.   [ஜூலியஸ் சீஸர், கல்பூர்ணியா, ஆண்டனி அனைவரும் வெளியேறுகிறார். அச்சமயம் இடையில் செல்லும் காஸ்காவின் கையைப் பற்றி புரூட்டஸ் இழுக்கிறார்.] காஸ்கா: [சற்று சீற்றமுடன்] புரூட்டஸ்! எதற்காக என்னை இழுத்தீர்? ஏதாவது என்னுடன் நீ பேச வேண்டுமா? [புரூட்டஸை நேராக நோக்கி அருகில் வருகிறான்] புரூட்டஸ்: ஆமாம் காஸ்கா! அங்கே பெருங் கூச்சலில் என்ன நடந்தது? எனக்கும் காஸ்ஸியஸ¤க்கும் எதுவும் தெரியாது. நடந்ததை எமக்குச் சொல்வாயா? ஏன் சீஸர் முகத்தில் புன்னகை யின்றிச் சிடுசிடு வென்று கடூரம் காணப் படுகிறது? கல்பூர்ணியா பேய் அறைந்தவள்போல் ஏன் காணப்படுகிறாள்? காஸ்கா: ஏனென்றா கேட்கிறீர்? சீஸருக்கு முடிசூட ஓர் மகுடம் அளிக்கப் பட்டது! ஆனால் தலையில் வைத்துக் கொண்ட சீஸரோ அதைக் கையால் தடுத்து நிராகரித்தார்! உடனே கூட்டத்தார் கூச்சலிட்டனர்! எல்லார் முன்பாக மலடி என்று சீஸர் மறைமுகமாகக் காட்டியது, கல்பூர்ணியாவுக்கு அறவே பிடிக்க வில்லை! அதனால் கல்பூர்ணியா உம்மென்று முகத்தைக் காட்டிக் கொண்டு நடந்தாள்! புரூட்டஸ்: இரண்டாவது கூச்சல் ஏன் கேட்டது? காஸ்கா: அதுவும் அதே காரணத்துக்குத்தான்! மகுடம் சூடப் போன இரண்டாம் தடவையும் சீஸர் தடுத்தார்! காஸ்ஸியஸ்: மூன்று முறை கூச்சல் கேட்டதே! கடைசி ஆரவாரம் எதற்கு? காஸ்கா: அந்தக் கூச்சலும் அதற்குத்தான், புரூட்டஸ்! காஸ்ஸியஸ்: என்ன? மூன்று முறையா சீஸருக்கு மகுடம் அளிக்கப் பட்டது? யாரளித்தார் மகுடத்தை? காஸ்கா: ஆமாம் மெய்யாக மூன்று தரம் முடிசூடினர் சீஸருக்கு! மூன்று முறையும் முறுவலுடன் சீஸர் கிரீடத்தை ஏற்றுக் கொண்டார்! கூட்டத்தார் பூரித்துப் போய் கை தட்டினர்! அடுத்த சிறிது கணத்தில் சீஸர் மகுடத்தை நிராகரித்துக் கீழே வைத்தார்! உடனே கூட்டத்தார் அதை விரும்பாது கூச்சலிட்டார்! யார் துணிச்சலுடன் சீஸருக்கு அப்படி மகுடம் சூடுவார்? ஆண்டனிதான்! சீஸரின் தாசர் ஆண்டனி! புரூட்டஸ்: அருமை நண்பனே! அந்த வேடிக்கையைச் சற்று விளக்கமாகக் கூறுவாயா? [] Calpurnia helping Caesar  காஸ்கா: [கேலியாக] நான் தூக்கில் தொங்கலாம், அந்த கூத்தை விளக்குவதற்குப் பதிலாக! அது ஒரு நகைச்சுவை நாடகம்! விருப்பமுடன் ஆண்டனி சீஸருக்கு கிரீடம் வைப்பது! வேண்டாம், வேண்டாம் என்று சீஸரின் வாயில் வெறும் வார்த்தைகள்தான் வரும்! ஆனால் சீஸரின் கரங்கள் விரும்பி ஏற்றுக் கொள்ளும்! சீஸரின் வாய் உண்மை பேசுகிறா? அல்லது அவரது உடல் உண்மை பேசுகிறதா என்பதி அறிவது கடினம்! அது மெய்யாக ஓர் அரச கிரீடமில்லை! நாடகக் கிரீடம் மாதிரி தெரிந்தது! நடுத் தெருவில் யாரோ தயார் செய்தது! மூன்று முறை ஆண்டனி முடிமேல் சூடினார்! மூன்று தரமும் புன்முறுவலுடன் ஏற்றுக் கொண்டார்! ஆனால் ஏனோ அவரது தலை நடுங்கும்! அடுத்த கணம் சீஸர் மகுடத்தை எடுத்து ஆண்டனி கரங்களிலே கொடுத்து விடுவார்! எனக்கு ஒன்றும் புரியவில்லை! ஆனால் மூன்றாம் தடவை மகுடத்தைக் கொடுத்த பிறகு கை கால்கள் ஆடிக், கண்கள் மூடி, தடாலெனச் சீஸர் மயக்கமுற்றுக் கீழே வீழ்ந்தார்! காஸ்ஸியஸ்: [கண்களை அகல விரித்து] என்ன? முடிசூட்டு விழாவில், சீஸருக்குக் காக்காய் வலிப்பு வந்து விட்டதா? எல்லார் முன்பும் பரிதாபமாகக் கீழே வீழ்ந்தாரா? என்ன அவமானம் ரோமுக்கு? வயதாகி முதிர்ந்த கிழட்டு மரம் அப்படி எத்தனை தரம் விழப் போகிறதோ? சீஸர் தளபதியா? அல்லது கிழபதியா? புரூட்டஸ்: ஆமாம்! சீஸருக்கு வீழும் நோய் உள்ளது உனக்குத் தெரியாதா? காஸ்ஸியஸ்: [சினத்துடன்] சீஸருக்கு வீழும்நோய் கிடையாது புரூட்டஸ்! உனக்கும், எனக்கும், உத்தமன் காஸ்காவுக்கும்தான் உள்ளது, வீழும்நோய்! நிமிர்ந்து நோக்கும் எதேட்சை அதிபதி சீஸர்! நாமெல்லாம் கூன் விழுந்து அவருக்குப் பணிசெய்யும் அடிமைகள்! காஸ்கா: நீ என்ன உட்பொருளில் பேசுகிறாய் என்று புரியவில்லை எனக்கு! சீஸர் எல்லார் முன்பும் தடலாலென விழுந்து மண்ணில் புரண்டார்! பற்களை நறநற வென்று அரைத்தார்! கல்பூர்ணியா மண்டி யிட்டு அமர்ந்து, மடிமேல் சீஸர் தலையை வைத்துக் கொண்டாள். ஆண்டனி தன் வாளுறையை சீஸர் வாயில் நுழைத்தார். நுரை தள்ளிய சீஸரின் வாய் பிறகு ஓய்ந்து உலர்ந்தது! என்ன பயங்கரமான காட்சி அது! காஸ்ஸியஸ்! நான் உத்தமன் அல்லன்! புரூட்டஸ்: நினைவு பெற்று எழுந்ததும் சீஸர் என்ன சொன்னார்? காஸ்கா: உயிர் பெற்றுக் கண்விழித்த சீஸரைத் தூக்கியவர் ஆண்டனியும், கல்பூர்ணியாவும்! சீஸரின் பேச்சு பரிதாபமாக இருந்தது. தழுதழுத்து குரலில் ஏதோ பிதற்றினார்! மயக்கமுற்ற தருவாயில் தான் ஏதாவது உளறி யிருந்தால், தன்னை மன்னிக்குமாறு வேண்டிக் கொண்டார்! காஸ்ஸியஸ்: கண்ட விடமெல்லாம் கவிழ்ந்து வீழும் சீஸரா நமக்கு வேந்தர்? ரோமுக்கு ராஜா? வியாதியில் வேதனை அடையும் சீஸர் வீட்டில் முடங்கிக் கிடக்க வேண்டும்! சீஸருக்கு வேறு ராஜ மகுடமா? தகுதியற்ற தளபதிக்கு மூன்று தரம், ஆண்டனி முடிசூட வேண்டுமா? அறிவு கெட்ட ஆண்டனி! ஆசை மிக்க சீஸர்! அடிமை ஆகப் போகிறவர் நாம்! ரோமானியர்! புரூட்டஸ்: மாமேதை சிசெரோ என்ன பேசினார்? சீஸர் மகுடம் ஏற்பதை ஒப்புக் கொண்டாரா? காஸ்கா: அவர் கிரேக்க மொழியில் ஏதோ பேசினார்! கிரீடம் வைக்கப் போகும் போது, கை தட்டவில்லை சிசெரோ! கிரீட்டத்தை சீஸர் புறக்கணிக்கும் போது ஆரவாரம் செய்ய வில்லை! ஆதலால் சிசெரோ மனதில் என்ன நினைத்தார் என்பது தெரியாது எனக்கு! காஸ்ஸியஸ்: காஸ்கா! என் வீட்டுக்கு இன்றிரவில் வருவாயா? என்னுடன் விருந்துண்ண வருவாயா? உன்னுடன் பேச வேண்டும் நான். காஸ்கா: உணவருந்த வருகிறேன்! உயிரோடிருந்தால் வருகிறேன்! உம்மில்ல உணவு அறுசுவையோடிருந்தால் வருவேன்! காஸ்ஸியஸ்: நாங்கள் வீட்டில் காத்திருப்போம் உனக்கு. காஸ்கா: போய் வருகிறேன், புரூட்டஸ்! காஸ்ஸியஸ்! [போகிறான்] புரூட்டஸ்: என்ன கேலித்தனமாய்ப் பேசுகிறான், இந்த காஸ்கா! வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என்று மொட்டையாக அல்லவா பேசுகிறான் காஸ்கா! எந்தக் காட்டுப் பள்ளியில் படித்தவன் இந்த காஸ்கா! பண்பில்லாமல் உளறுகிறான்! உயிரோடிருந்தால் வருவானாம்! உணவு அறுசுவையாய் இருந்தால் வருவானாம்! கோமாளி மாதிரி அல்லவா பிதற்றுகிறான்! காஸ்ஸியஸ்: காஸ்கா எப்போதும் அப்படித்தான் யாரையும், தன்னையும் ஏளனம் செய்வான். முக்கியமான ஒரு திட்டத்தைப் பற்றிப் பேச வேண்டும், புரூட்டஸ்! விருந்தில் நீங்களும் கலந்து கொள்வீரா? புரூட்டஸ்: முக்கியமான திட்ட மென்றால் நீ என் வீட்டுக்கு வா! நான் பலரது முன்பாக ரகசியம் பேசுபவன் அல்லன். நீயும் நானும் என்னிலத்தில் பேசுவோம். எதை வேண்டுமானாலும் பேசலாம்! எத்தனை நேரமானாலும் பேசலாம்! நாளைக்கு வருகிறாயா? நானிப்போது போயாக வேண்டும். போய் வருகிறேன், காஸ்ஸியஸ்! காஸ்ஸியஸ்: நல்லது புரூட்டஸ்! நாளை இரவில் வருவேன் உன்னிலத்துக்கு. நானும் காஸ்காவும் இன்றிரவு பேசுவோம்! முக்கியத் திட்டம் என்பதை விட ரகசியத் திட்டம் என்பது தகுதியான தலைப்பு! …. போய் வருவீர், புரூட்டஸ்! பேய் உலகைப் பற்றிச் சிந்திப்பீர்! பேய்கள் நம்மைத் தின்பதற்கு முன்பு, நாம் பேய்களை ஓட்ட வேண்டும்! [புரூட்டஸ் வெளியேறுகிறார்] காஸ்ஸியஸ்: நல்லது புரூட்டஸ்! நீ ஒரு பண்பாளன்! அரசியல் சந்தையில் மந்தை ஆடுகள் குழிக்குள் விழுப் போவதை அறியாதவன் நீ! ஆட்டிடையன் அரசனாக ஆவப் போவதையும் அறியாதவன் நீ! சீஸர் புரூட்டஸை மிகவும் நேசிக்கிறார்! புரூட்டஸ் சீஸர் மீது தீராத மதிப்பை வைத்துள்ளார். அந்த பிணைப்புச் சங்கிலியை உடைப்பது எப்படி? சீஸர் மீதுள்ள பாசத் தீயில் புரூட்டஸ் என்னை உருக்கி விடக் கூடாது! என் வைர நெஞ்சை மாற்றி விடக் கூடாது! பேராசைக்காரன் சீஸர்! அவரது இறக்கைகளை நறுக்கப் போவது உறுதி! அவரது கொடி ரோமாபுரியில் பறப்பப் போவதில்லை! எவர் தடுப்பினும் நில்லேன், அஞ்சேன்! சீஸர் ஆசனத்தில் அதிபதியாய் அமர்வதை ரோமாபுரி காணப் போவதில்லை! *********************   அங்கம் -5 காட்சி -1 []                                          ரோமாபுரிக்கு கிளியோபாத்ரா விஜயம்   கிரேக்க வனிதை தெஸ்ஸா லியனை மிஞ்சிடும், கிளியோ பாத்ராவின் மேனிக் கவர்ச்சி! வானத்து நிலவையும் கவ்வி வசப்படுத்திடும் ! தேன்குரல் எவரையும் திகைக்க வைத்திடும்! பேசத் தொடங்கின் இரவு பகலை நீடிக்கும் ! வயது அவளைப் பார்த்து மொட்டு விடும்! வாலிபத்தைக் கண்டு பொங்கி எழும்! பாதிரியும் வைத்தகண் வாங்காமல் பார்ப்பார், பாவையின் புன்சிரிப்பு இதழில் மின்னிலால்!    ஆங்கில நாடக மேதை: ஜான் டிரைடன் [John Dryden (1631-1700)]   வயது ஏறினும் வதங்காது அவள் மேனி! வழக்க மரபுகளால் குலையாது அவள் வனப்பு! வரம்பற்றது அவள் விதவித வனப்பு மாறுபாடு! … அவளது உடல் வனப்பை விளக்கிடப் போனால், எவரும் எழுத இயாலாது எழுத்தால் வர்ணித்து! தோரணம் தொங்கும் அலங்காரப் பந்தலில் ஆரணங்கு படுத்திருந்தாள், பொன்னிற மேனி! இயற்கை மிஞ்சியக் கற்பனைச் சிற்பம்! வீனஸ் அணங்கினும் மேம்பட்ட சிலையவள்! வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஆண்டனி & கிளியோபாத்ரா]   வாடா மல்லிகை அவள்! விழி வீச்சின் வலையில் வீழ்ந்தவர், சூடா மலருக்குள் தேனாகி விடுவார்! கண்ணால் கண்டவர் எவரும் பின்னால் மூடார் தமது கண்களை மீண்டும் ! ஒருமுறை அவளைப் பார்த்தவர், மனத்தில் திரும்பித் தேடார் வேறோர் அழகிய மாதை!   []   நாடகப் பாத்திரங்கள்:   ரோமாபுரியில்: தளபதி மார்க் ஆண்டனி [35 வயது], மற்றும் செனட்டர்கள்: புரூட்டஸ் [35 வயது], காஸ்ஸியஸ் [30 வயது (புரூட்டஸின் மைத்துனன்)]. காஸ்கா [40 வயது], கவிஞர் சின்னா [35], சிசெரோ [50 வயது], அக்டேவியன் [24] டிரிபோனஸ் மற்றும் ஜூலியஸ் சீஸரின் மனைவி கல்பூர்ணியா [45 வயது]. ஒரு ஜோதிடன், காஸ்ஸியஸின் சதிகாரக் கூட்டம். பாம்ப்பியின் அனுதாபிகள். சீஸரின் சீடர்கள். ரோமானியப் படையாட்கள். பொது நபர்கள். []     நேரம், இடம்: பகல் வேளை. செனட் மாளிகைக்கு அருகில் ரோமாபுரியின் பெருவீதி.    நாடகப் பாத்திரங்கள்:    ஜூலியஸ் சீஸர், படை வீரர்கள், தெருவின் இருபுறமும் ரோமானியப் பொதுமக்கள், எகிப்திய விருந்தாளிகள். கல்பூர்ணியா, புரூட்டஸ்ஸின் மனைவி போர்ஷியா, காஸ்ஸியஸ், காஸ்கா, சிசெரோ மற்ற செனட்டர்கள். கிளியோபாத்ரா, மகன் சிஸேரியன் [வயது 4]   காட்சி அமைப்பு:    ரோமாபுரியில் ஒரு பொதுத்தளம். நகர மக்கள் ஆரவாரம் செய்ய, படையினர் வாத்தியங்கள் முழங்க ஜூலியஸ் சீஸர் மேடை ஆசனத்தில் கல்பூர்ணியாவுடன் அமர்ந்திருக்கிறார். அருகில் ஆண்டனி, புரூட்டஸ், புரூட்டஸின் மனைவி போர்ஷியா, அக்டேவியஸ் மற்றும் செனட்டர் சூழ்ந்திருக்கிறார். எகிப்தின் எழில் ராணி கிளிபாத்ராவின் வருகை அறிவிக்கப் படுகிறது. அரசாங்கப் பிரமுகர் அனைவரும் கிளியோபாத்ராவையும், சீஸரின் மகன் சிஸேரியனையும் வரவேற்கக் காத்திருக்கிறார்கள். எகிப்தின் நர்த்தகிகளின் ஆட்டம், பாட்டுகளுடன், எகிப்த் ஆடவர், அலங்காரிகள் அணிவகுப்புடன் கிளியோபாத்ரா [ஸ்·பிங்ஸ்] மனிதத் தலைச் சிங்க ரதத்தில் கோலாகலமோடு வருகிறாள். வீதியில் மக்களின் ஆரவாரம் கேட்கிறது. ஜூலியஸ் சீஸர்: என் மகனைப் பார்த்து மூன்று ஆண்டுகள் ஓடிவிட்டன! அவனுக்கு என்னை அடையாளம் தெரியாது! அவனைப் பார்க்க ஆர்வமாக இருக்கிறேன் நான். கிளியோபாத்ரா என்றைக்கும் வாடா மல்லிகை! ஆண்டனி: கிளியோபாத்ராவை நான் பார்த்துப் பல ஆண்டுகள் ஆகி விட்டன! அவளைப் பார்க்க ஆவலோடிருக்கிறேன் நான். பதினாறு வயதினிலே பார்த்தது! அப்போதே அவளது உருட்டு விழிகளும், துடுக்கு மேனியும் என்னை மயக்கின! சீஸர்! நீங்கள் மிக்க அதிர்ஷ்டசாலி! அவளைப் போன்ற பாவைக்கு வாழ்நாள் முழுதும், ஓர் ஆடவன் பக்கத்தில் அடிமையாக இருக்கலாம். உங்களுக்கு அப்படி ஓர் வாய்ப்பு கிடைத்தது! ஜூலியஸ் சீஸர்: கவலைப் படாதே ஆண்டனி! உனக்கும் அப்படி ஓர் வாய்ப்பு வரும்! கிளியோபாத்ரா உன்மீது ஒரு கண் வைத்திருக்கிறாள்! அலெக்ஸாண்டிரியாவில் அவளுடன் படுக்கையில் நானிருந்த போதும், அவள் உன்னைத்தான் நினைத்தாள்! அவள் அதரங்களை நான் முத்தமிட்ட போதும், அவள் மனக்கண்ணில் நீதான் காட்சி அளித்தாய்! எனது வயதான முகத்தில், உன் வாலிப முகத்தைத் தேடினாள்! அவள் வருவது என்னைக் காண்பதற்கு மட்டுமில்லை! என்னைக் காரணமாக வைத்து உன்னையும் காணத்தான். நான் விரும்பியபடி எனக்கோர் ஆண்மகவைக் கொடுத்தாலும், அவளுக்கு வேண்டியவன் நீதான்! என்னை அவள் மகனுக்காக மணந்தாலும், உன்னைத்தான் அவள் உயிராய் நேசிக்கிறாள். []   ஆண்டனி: அப்படியா? என்னால் நம்ப முடியவில்லையே! அவள் என்னை நேசித்தாலும், நானவளை நேசிக்க வில்லை! அவளின்று சீஸரின் மனைவி. சீஸருக்கு ஆண்மகனை அளித்த எகிப்த் மாது! அவளை நான் பார்க்க விரும்புவது உண்மை. ஆனால் எனது ஆசை நாயகியாக எண்ண முடிய வில்லை! கல்பூர்ணியா: [காதுகளை மூடிக் கொண்டு] நான் அருகில் உள்ளது தெரியவில்லையா! சீஸர்! ஆண்டனி! போதும் உங்கள் காதல் பேச்சுகள்! கிளியோபாத்ராவை நீங்களிருவரும் பங்கிட்டுக் கொள்வது எனக்குக் கேட்பதற்குச் சங்கடமாக உள்ளது! உங்கள் அருமைப் புதல்வனைக் காண நான் காத்துக் கொண்டிருக்கிறேன்! அவனை என்னிரு கரங்களில் தூக்கி அணைத்துக் கொள்வேன்! கிளியோபாத்ராவைப் பற்றி என் முன்னால் பேச வேண்டாம்! அருவருப்பாய் உள்ளது! வெந்நீர்க் குளியறையில் பேசிக் கொள்வீர். [அப்போது சிரித்துக் கொண்டு போர்ஷியா கல்பூர்ணியாவுக்கு அருகில் வருகிறாள். சீஸரும், ஆண்டனியும் மெதுவாக வேறிடத்துக்கு நழுவுகிறார். வீதியில் மக்களின் பலத்த ஆரவாரம் கேட்கிறது.] போர்ஷியா: எதற்காக மந்தைக் கூட்டம் இப்படிக் கூச்சல் போடுகிறது? கல்பூர்ணியா! சீஸரை மயக்கிய அந்தச் சிறுக்கி கிளியோபாத்ராவுக்கு ரோமாபுரியில் கோலாகல வரவேற்பா? ஆனால் அவளைப் பார்க்க சீஸர் முகத்தில் மலர்ச்சியைக் காணோம்! ஆண்டனியின் கண்கள் இரண்டும் அவள் வரும் திக்கையே நோக்கி யுள்ளன! ரோமானிய செனட்டர் அத்தனை பேரும் அலங்காரமாக வரவேண்டுமா? கிளியோபாத்ராவை மயக்கவா? மாதரெல்லாம் ஒய்யார உடையில் வாசனைத் திரவத்தை வீச வேண்டுமா? மூக்கைத் துளைக்கும் அவை! ரோமானிய ஆண்கள் யாருமே பெண்ணைப் பார்த்ததில்லையா? அவள் என்ன அப்படி ஓர் அதிசயப் பெண்ணா? அவள் மூக்கு சற்று கோணியது என்று கேள்விப் பட்டேனே!  []   கல்பூர்ணியா: கிளியோபாத்ராவுக்கு ஏழு மொழிகள் தெரியுமாம்! போர்ஷியா! உனக்கு இத்தாலிய மொழியைத் தவிர வேறென்ன தெரியும்? நீள நைல் ஓடும் மாபெரும் எகிப்த் நாட்டின் மகாராணி அவள்! நீ எந்த நாட்டுக்கு ராணி? சொல், போர்ஷியா! எனக்குப் பிள்ளை உண்டாவதில்லை! சீஸருக்கு ஆண்மகனைப் பெற்றுத் தந்திருக்கிறாள், கிளியோபாத்ரா! எல்லாவற்றிலும் உன்னை விடப் பெரியவள் மட்டுமில்லை, கிளியோபாத்ரா என்னை விடவும் பலபடி உயர்ந்தவள்! ஆம், அவள் ஓர் அதிசயப் பெண்! ஓர் அற்புதப் பெண், ஐயமின்றி. போர்ஷியா: நிறுத்து கல்பூர்ணியா! என்ன அடுக்கிக் கொண்டே போகிறாயே! கிளியோபாத்ரா ஒரு பரத்தை! அவளை ஓர் அற்புதப் பெண் என்று நீ புகழ்வது தவறாகத் தெரிகிறது எனக்கு! ஏற்கனவே அவள் கூட்டாகப் பட்டம் சூடிக் கொள்ளத் தமையன் டாலமியை மணம் புரிந்து கொண்டவள்! பிறகு டாலமியைக் கொல்வதற்கு சீஸர் உதவியை நாடியவள்! ஆண்மகவைப் பெற்றுத் தருகிறேன் என்று சீஸரைக் கவர்ந்து திருமணம் செய்து கொண்டவள்! கல்பூர்ணியா! சட்டப்படி நீ சீஸரின் மனைவி! அவள் உண்மையாகச் சீஸரின் மனைவி யில்லை! வைப்பு மாது அவள்! உன்னிடத்தில் அவள் அமர்ந்து சீஸரின் பிரதான மனைவி என்று முரசடிப்பதில் உன் உதிரம் கொதிக்க வில்லையா? என்னுதிரம் கூடக் கொதிக்கிறதே! கல்பூர்ணியா: என் கொதிப்பெல்லாம் அடங்கி என்னாவி திரும்பி விட்டது! கிளியோபாத்ரா மீது துளியும் பொறாமை இல்லை எனக்கு! துளியும் வெறுப்பில்லை எனக்கு! ஆயிரம் இருந்தாலும் அவள் என்னிடத்தைப் பிடிக்க முடியாது! ஆயிரம் இல்லா விட்டாலும் முதல் மனைவி நான் என்பதை யாரும் மாற்ற முடியாது. சீஸருக்கு ஆண்மகனை அளித்த கிளியோபாத்ரா என் மதிப்புக்கு உரியவள்! சீஸர் நேசித்து மணந்தவள் என் பரிவுக்கு உரியவள்!   []     போர்ஷியா: கல்பூர்ணியா! சீஸருக்கும், காதலுக்கும் வெகு தூரம்! கண்டதும் காதல் கொள்பவர் சீஸர்! சீஸருக்கு ஆசை நாயகிகள் எத்தனை என்பதே அவருக்கே தெரியாது! வனப்பில் மயங்குபவர் சீஸர்! வயிற்றுக்குத் தேவை உணவு! உடலுக்குத் தேவை ஒரு பாவை! அதுதான் அவரது காதல் விதி! பாலை வனத்தில் அவரது தாகத்திற்கு நீர் அளித்த பசுஞ்சோலை அந்த கிளியோபாத்ரா! பஞ்ச வர்ணக் கிளியான கிளியோபாத்ரா வயதான சீஸரை நேசிப்பதாக நீ கனவு காணாதே! உன்னை நேசித்தா சீஸர் திருமணம் புரிந்தார்? ரோமாபுரியில் உன்னில்லம் மேல்தட்டுக் குடும்பம்! [வீதியில் மக்களின் ஆரவாரம் கேட்கிறது. தங்கக் கிரீடம் ஒளிவீச மகாராணி கிளியோபாத்ரா, மகனைக் கையில் பற்றிக் கொண்டு ரதத்திலிருந்து இறங்கிச் சிவப்புக் கம்பளத்தில் நடந்து வருகிறாள். ரோமானியர் அவள் மீது மலர்களைத் தூவி ஆரவாரம் செய்கிறார்] கல்பூர்ணியா: [எழுந்து நின்று] அதோ வருகிறாள் கிளியோபாத்ரா! அதோ வருகிறான் சீஸரின் அழகு மகன்! தாமரை மலர்போல் தெரிகிறாள், கிளியோபாத்ரா! மல்லிகை தண்டுபோல் வருகிறான் மகன்! ஜூலியஸ் சீஸர்: [எழுந்துபோய் முகமலர்ச்சியுடன் வரவேற்கிறார். சீஸர் கிளியோபாத்ராவைத் தழுவிக் கொள்கிறார். மகனைத் தூக்கிக் கொண்டு கன்னத்தில் முத்தமிடுகிறார். அருகில் கல்பூர்ணியா, போர்ஷியா, ஆண்டனி, புரூட்டஸ் வருகிறார். சீஸர் அனைவரையும் அறிமுகம் செய்கிறார்] வருக! வருக! கிளியோபாத்ரா! ரோமாபுரி உன்னையும், என் செல்வனையும் வாஞ்சையோடு வரவேற்கிறது. பார்! உங்களை வரவேற்க ஆயிரக் கணக்கான மக்கள் மணிக்கணக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்! … இதோ கல்பூர்ணியா! .. ஆண்டனி! .. புரூட்டஸ்! .. புரூட்டஸின் மனைவி போர்ஷியா! அக்டேவியஸ்! என் சகோதரனின் மகன் [கிளியோபாத்ரா அனைவருக்கும் முறுவலுடன் கை கொடுக்கிறாள்] கல்பூர்ணியா: [சீஸரிடமிருந்து மகனை வாங்கி, பாசமோடுக் கன்னத்தில் பலமுறை முத்தமிட்டு] வாடா கண்ணே வா! நானும் உன் அன்னைதான்! உன் பெயர் என்ன சொல்! சிஸேரியன்: என் பெயர் சிஸேரியன்! நீங்களும் எனக்கு ஓர் அன்னையா? எனக்கு ஓர் அன்னைதானே! ரோமிலும் ஓர் அன்னை உள்ளது தெரியாது! போர்ஷியா: [அருகில் வந்து சிறுவன் கன்னத்தைத் தடவி] என்ன அழகாக இத்த்தாலிய மொழியில் பேசுகிறான்? உனக்கு யார் இத்தாலி பேசக் கற்றுக் கொடுத்தது? சிஸேரியன்: என் தாய்தான்! அம்மாவுக்கு ஏழு மொழி தெரியும்! எனக்கு மூனு மொழி தெரியும். சொல்லட்டுமா? எகிப்து மொழி, இத்தாலிய மொழி, ஹீப்ரூ மொழி! கிளியோபாத்ரா: [சிரித்துக் கொண்டு] அரண்மனை ஆசிரியர் சொல்லித் தருகிறார். நான் அவனுடன் இத்தாலிய மொழியிலும் பேசுவேன். ஜூலியஸ் சீஸர்: அப்படியா, எனக்குத் தெரியாதே! என் மகன் இத்தாலியில் எப்படி எளிதாகப் பேசுகிறான்! [மகன் கன்னத்தில் முத்தமிடுகிறார்] அக்டேவியஸ்: [சற்றுத் தள்ளிச் சென்று, காஸ்ஸியஸைப் பார்த்து] காஸ்ஸியஸ்! பார்த்தாயா, சீஸரின் எதிர்கால வாரிசை! இத்தாலிய மொழி எல்லாம் சொல்லிக் கொடுத்துத் தயாராக அழைத்து வந்திருக்கிறாள் கிளியோபாத்ரா! அரை இத்தாலியன் முழு இத்தாலியனை ஆளப் போகிறானா? சிஸேரியன் ஓர் அரைப் பிறவி [Half Breed] தெரியுமா? நானும்தான் பார்க்கப் போகிறேன். ரோமாபுரியைக் கைக் கொள்ளப் போவது ஓர் அரைப் பிறவியா? அல்லது ஒரு முழுப் பிறவியா? அந்த அரைப் பிறவியை நசுக்கிக் குறைப் பிறவியாக ஆக்கா விட்டால், நானோர் ரோமானியன் அல்லன்! காஸ்ஸியஸ்: அக்டேவியஸ்! நமது பகைவன் நான்கு வயதுப் பாலகனா? [சிரிக்கிறான்] வேடிக்கையாக உள்ளது, நீ உறுதி மொழி உரைப்பது! யானை எதிரியாக உள்ள போது, யாராவது பூனையை விரட்டிச் செல்வாரா? அக்டேவியஸ்: [வியப்புடன்] யாரை யானை என்று கூறுகிறாய்? காஸ்ஸியஸ்: நமக்குக் குறி சீஸர்! சிஸேரியன் அல்லன்! அக்டேவியஸ்: [ஆச்சரியமாக] என்ன பிதற்றுகிறாய்? சீஸர் எனது சித்தப்பா! எனக்கோர் வழிகாட்டி! எனது பகைவன் ஐயமின்றி அந்த நான்கு வயது எகிப்த் பாலகன்தான்! ரோமின் எதிர்கால மன்னன்… ! கிளியோபாத்ரா எதற்கு வந்திருக்கிறாள் என்று தெரியுமா? எதிர்கால ரோமாபுரியின் வேந்தன் சிஸேரியனைக் காட்ட வந்திருக்கிறாள் நமக்கு! எத்தனை நாளைக்கு சீஸரோடிருப்பாள் என்பதை நானும் பார்க்கத்தான் போகிறேன்! அவள் சீஸருக்கு மனைவி யானாலும், எகிப்தின் ராணி! ரோமின் அடிமை ராணி! காஸ்ஸியஸ்: மார்ச் பதினைந்தாம் தேதி ஒரு பெரும் மாறுதல் வருமென்று ஜோதிடன் எச்சரிக்கை விட்டிருக்கிறான்! என்ன நடக்கும் என்பது தெரியாது எனக்கு! எச்சரிக்கை விட்டது நமக்கல்ல! சீஸருக்கு! சீஸரின் ஆசைநாயகி கிளியோபாத்ராவுக்கு! சீஸரின் வாரிசான சிஸேரியனுக்கு! காஸ்கா: [கிளியோபாத்ராவின் வனப்பில் மயங்கி] சீஸர் அருகில் நிற்காமல் இருந்தால், கிளியோபாத்ராவை நானே தூக்கிக் கொண்டு போயிருப்பேன்! என்ன எடுப்பான உடல்! என்ன மிடுக்கான தோற்றம்! மயில் போன்ற நடை! உடுக்கை போன்ற இடுப்பு! கண்களைக் குத்தும் தூக்கிய மார்புகள்! சீஸர் அதிர்ஷ்டக்காரர்! காஸ்ஸியஸ்: காஸ்கா! காமம் உன் கண்களைக் குருடாக்குகிறது! ஆண்டனியும் அந்த மாயக்காரி வனப்பில் மயங்கிப் போய் விட்டார்! பார்! அவள் தங்கக் கிரீடத்தில் உள்ளவை என்ன? ஒரு நாகமில்லை! பல நாகங்கள்! கருநாகங்கள்! கவனம் வைத்துக் கொள்! அவளது நச்சு அதரங்களை முத்தமிட்டவர் யாரும் உயிருடன் வாழ்வதில்லை! விரைவில் செத்து விடுவார்! அவளை மணந்த டாலமி நைல் நதியில் மூழ்கினான்! அடுத்து அவளை மணந்த சீஸருக்கு என்ன ஆகுமோ தெரியாது எனக்கு! அடுத்து ஆண்டனி வேறு அதே கோட்டைப் பின்பற்றிப் போகிறார்! கிளியோபாத்ரா, எழில்ராணி யில்லை! விதவை ராணி அவள்! அவள் ஒரு கரும்விதவை! யாரைத் திருமணம் செய்கிறாளோ, அவர் செத்துவிடுவார்! சீக்கிரம் செத்துவிடுவார்! அங்கம் -5 காட்சி -2 பாகம் -1 ரோமாபுரியில் சீஸருக்குப் பட்டாபிசேக முடிவு     “காதல் நோக்குவது கண்கள் மூலமன்று! உள்ளத்தின் மூலமே ஊடுருவும்!”  “காதலின் மெய்யான போக்கு கரடு முரடு.” வில்லியம் ஷேக்ஸ்பியர் [வேனிற்காலக் கனவு]   பண்ணிசை உள்ளம் பெறாத மனிதன், இன்னிசைத் தொனிக்கு உருகாத மனிதன், பாழானவன்! வஞ்சகம் செய்பவன்! பகைவனாய் ஏமாற்றும் பாதகன்! வில்லியம் ஷேக்ஸ்பியர் [வெனிஸ் வர்த்தகன்]   வெளிச்சம் பொழியும் வெண்ணிலவு! இம்மாதிரி இரவு வேளையில் தான் மரங்களை அணைத்து முத்த மிடும் மிருதுவாய், சித்தம் குளிரும் தென்றல்! வில்லியம் ஷேக்ஸ்பியர் [வெனிஸ் வர்த்தகன்] []   ரோமாபுரியில்: தளபதி மார்க் ஆண்டனி [35 வயது], மற்றும் செனட்டர்கள்: புரூட்டஸ் [35 வயது], காஸ்ஸியஸ் [30 வயது (புரூட்டஸின் மைத்துனன்)]. காஸ்கா [40 வயது], கவிஞர் சின்னா [35], சிசெரோ [50 வயது], அக்டேவியன் [24] டிரிபோனஸ் மற்றும் ஜூலியஸ் சீஸரின் மனைவி கல்பூர்ணியா [45 வயது]. ஒரு ஜோதிடன், காஸ்ஸியஸின் சதிகாரக் கூட்டம். பாம்ப்பியின் அனுதாபிகள். சீஸரின் சீடர்கள். ரோமானியப் படையாட்கள். பொது நபர். நேரம், இடம்: பகல் வேளை. ரோமாபுரியில் சீஸரின் தனி மாளிகை. நாடகப் பாத்திரங்கள்: ஜூலியஸ் சீஸர், கிளியோபாத்ரா, மகன் சிஸேரியன், ஆண்டனி, புரூட்டஸ், அக்டேவியன், காஸ்ஸியஸ், காஸ்கா, சிசெரோ, மற்றும் சில செனட்டர்கள். காட்சி அமைப்பு: ரோமாபுரியில் ஜூலியஸ் சீஸர் தன் தனி மாளிகையில் ஆசன மெத்தையில் மகனுடன் அமர்ந்திருக்கிறார். கிளியோபாத்ரா சற்று தூரத்தில் நின்று சீஸரையும், மகனையும் கவனிக்கிறாள். அறையில் வரப் போகும் செனட்டர்களுக்காக பல நாற்காலிகள் போடப் பட்டுள்ளன. ஜூலியஸ் சீஸர்: [மகனை மடிமேல் அமர்த்தி] கண்மணி! ரோமாபுரி அலெக்ஸாண்டிரியா போல் உள்ளதா? ரோம் தலைநகரம் உனக்குப் பிடித்திருக்கிறதா? நீச்சல் கற்றுக் கொண்டாய் என்று உன் அன்னை சொன்னாள். சிஸேரியன்: [முகத்தைச் சுழித்து] ரோம் எனக்குப் பிடிக்க வில்லை அப்பா! என்னைப் பார்ப்பவர் எல்லாம் ஒருமாதிரி விழிக்கிறார்! பரிவும், பாசமும் என்மேல் யாருக்கு மில்லை! முகத்தை உம்மென்று வைத்து ஆந்தை போல் கூர்ந்து பார்க்கிறார்! அலெக்ஸாண்டிரியாவில் புன்னகை முகத்தையே பார்ப்பேன். சேடியர் எனது கன்னத்தில் முத்தமாய்ப் பொழிவார்! யாரும் என்னருகில் வராமல் தள்ளியே நிற்கிறார்! எனக்கு ரோம் அறவே பிடிக்க வில்லை அப்பா! அலெக்ஸாண்டிரியாவுக்குத் திரும்பிப் போக விரும்புகிறேன். []   ஜூலியஸ் சீஸர்: [ஆச்சரிமுடன்] அப்படிச் சொல்லாதே கண்மணி! எகிப்த் உன் அன்னை ஊர்! ரோமாபுரி உன் தந்தை ஊர்! நீ ஒருநாள் ரோமாபுரிக்கு ராஜாவாகப் போகிறாய்! ரோம் பிடிக்க வில்லை என்று சொல்லக் கூடாது! ரோமானியர் வெளிப்புறத்தில் கடூரமாய்த் தோன்றினாலும், உள்ளத்தில் அன்பு கொண்டவர். ஆயிரக் கணக்கான் ரோமானியர் உன்னையும் உன் தாயையும் ஆரவாரமோடு வரவேற்க வில்லையா? நீ வந்து சில தினங்கள்தான் ஆகின்றன. போகப் போக ரோமானியரின் பரிவு தெரியும் உனக்கு. பார், கொஞ்ச நாட்களுக்குப் பிறகு ரோமானியர், உன்னைத் தோளில் தூக்கி வைத்து ஆடுவார்! பாடுவார்! நாடுவார்! சிஸேரியன்: அப்பா! எனக்குக் கத்திச் சண்டை போட ஆசை. வில்லம்பு ஏவிட ஆசை. பயிற்சிக்கு ஏற்பாடு செய்வீரா? தினமும் அலெக்ஸாண்டிரியாவில் எனக்கு மொழிப்பயிற்சி உண்டு. கிரேக்க மொழி கற்றுக் கொள்ள ஆசை எனக்கு. அதற்கும் ஏற்பாடு செய்வீரா? கிரேக்க வீரர் அலெக்ஸாண்டர் கதையை அம்மா எனக்குச் சொல்லி யிருக்கிறார். ஜூலியஸ் சீஸர்: ஈதோ, ஏற்பாடு செய்கிறேன். [மணி அடித்துக் காவலனை அழைக்கிறார். காவலன் சிறுவனைக் கூட்டிச் செல்கிறான்.] [கிளியோபாத்ரா புன்னகையுடன் சீஸர் வருகிறாள். சீஸர் அவளை முத்தமிடுகிறார்] []   கிளியோபாத்ரா: சிஸேரியன் கிரேக்க மொழி கற்றுக் கொள்வேன் என்று பிடிவாதமாய் உள்ளான். ரோமில் அதைக் கற்றுக் கொள்ள அவனுக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. .அது சரி, நாளை ரோமாபுரியின் மக்கள் மன்றத்தில் உங்களுக்குப் பட்டாபிசேக விழா அல்லவா? வரலாற்றில் முக்கியமான நிகழ்ச்சி அல்லவா அது? சீஸரின் பொற்காலம் என்று என் குருநாதர் சொல்கிறார்! செனட்டர் செய்த முடிவுதான் என்ன? எப்படிப் பட்டம் சூடப் போகிறார் உங்களுக்கு? ஜூலியஸ் சீஸர்: [கவலையுடன்] ரோமாபுரிக்கு வெறும் ஏகாதிபதியாக என்னை நியமிக்கப் போகிறார்! பெருத்த ஏமாற்றம் எனக்கு! எதிர்பாராத அடி எனக்கு! வெற்றிமேல் வெற்றி பெற்ற எனக்கு ரோமானியர் அளிக்கும் வெகுமதி வெறும் அதிபதி! அதுவும் ஏகாதிபதி! கிளியோபாத்ரா: [ஆத்திரமுடன்] என்ன ஏகாதிபதியா? ஏமாற்றம் எனக்கும்தான்! ரோமாபுரிக்கு வேந்தரில்லையா நீங்கள்? வேடிக்கையாக உள்ளதே உங்கள் விநோத செனட்டர் முடிவு! அதை ஏற்றுக் கொள்ளப் போகிறீரா? தளபதியை அதிபதியாக ஆக்கியதில் என்ன மதிப்பிருக்கிறது? ரோமானிய செனட்டர்கள் கோமாளிகள்! ஜூலியஸ் சீஸர்: நிச்சயம், ஒப்புக் கொள்ளப் போவதில்லை நான்! வேறு வழி என்ன என்று சிந்திக்கிறேன். [அப்போது செனட்டர்கள் வருகையைக் காவலன் அறிவிக்கிறான். சீஸர் அனுமதி அளிக்க ஆண்டனி, சின்னா, புரூட்டஸ், அக்டேவியன், சிசெரோ, காஸ்ஸியஸ், காஸ்கா ஆகிய செனட்டர் உள்ளே நுழைந்து நாற்காலியில் அமர்கிறார்கள். சீஸரும், கிளியோபாத்ராவும் ஆசனத்தில் அமர்கிறார்.] ஆண்டனி: [எழுந்து நின்று] மாண்புமிகு தளபதி அவர்களே! செனட்டாரின் ஏகோபித்த முடிவை நான் அவர்கள் சார்பாக உங்களுக்குக் கூற விரும்புகிறேன். நாளை நடக்கும் பட்டாபிசேக விழாவில் ரோமாபுரியின் ஏகாதிபதியாக ஏற்றுக் கொள்ளப் படுவீர் தாங்கள். [செனட்டர் யாவரும் ஆரவாரமுடன் கைதட்டுகிறார்கள்] ஜூலியஸ் சீஸர்: [சீற்றத்துடன் எழுந்து] நிறுத்துங்கள் கைதட்டலை! நிராகரிக்கிறேன் உமது முடிவை! முதலில் நான் ஏற்றுக் கொள்ள மறுக்கிறேன், உமது ஏகோபித்த முடிவை! புறக்கணிக்கிறேன் உமது போலித் தனமான வேடிக்கை முடிவை! புரூட்டஸ்: [எழுந்து நின்று கண்ணியமாக] மாண்புமிகு தளபதியாரே! மாபெரும் மத்திய கடற்கரை வெற்றி வீரருக்கு வேறென்ன வேண்டும்? ஏகாதிபதி என்பது ரோமாபுரியின் உன்னதப் பட்டமல்லவா? சீஸர் அதை வேண்டாம் என்று வெறுப்பதின் காரணத்தை அறிந்து கொள்ளலாமா? ஜூலியஸ் சீஸர்: [சற்று குரலைத் தணித்து] அருமை புரூட்டஸ்! என்னை நீ அறிவாய்! என் போர் வல்லமையை நீ அறிவாய்! பல்லாண்டு போரிட்டுச் சலிக்காதவன் நான்! ஸ்பெயின் முதல் எகிப்த் வரைக் கைப்பற்றியதை நீ அறிவாய்! பன்முறைப் போரிட்டு ரோமானிய சாம்ராஜியத்தைப் பல்லாயிரம் சதுர மைல் விரித்தவன் நான்! பார்புகழும் ஓர் மாவீரருக்கு அளிக்கும் வெகுமதியா இது? ஏமாற்றம் அடைந்தேன் புரூட்டஸ்! பெருத்த ஏமாற்றம் அடைந்தேன்! நான் எதிர்பார்த்தது இதுவன்று! []   காஸ்ஸியஸ்: [எழுந்து நின்று] மேன்மைமிகு தளபதியாரே! நீங்கள் எதிர்பார்த்தது என்ன வென்று தெளிவாகச் சொல்வீரா? உங்கள் பேராற்றலை செனட்டார் யாரும் குறைக்க வில்லையே! வெறும் பட்டப் பெயரில் என்ன உள்ளது? ஜூலியஸ் சீஸர்: [அழுத்தமுடன்] ஏகாதிபதியாக இருக்க விருப்ப மில்லை எனக்கு! ரோமாபுரியின் ஆற்றல் மிக்க ஏகச் சக்ரவர்த்தியாக விளங்க விழைகிறேன்! ரோமின் வேந்தராகப் பட்டாபிசேகம் ஆக விரும்புகிறேன். ரோமானிய சாம்ராஜியத்தின் முடி சூடிய மாமன்னராக அறிவிக்கப்பட வேண்டுகிறேன்! [செனட்டருக்குள் பல முணுமுணுப்புகள் எழுகின்றன] காஸ்ஸியஸ்: [ஆத்திரமுடன்] வேந்தராக ஒருவர் ரோமுக்கு ஆகிவிட்டால், செனட்ட ராகிய எமக்கு வேலை யில்லை! குடியாட்சியைப் புதைத்து முடியாட்சியைப் புகுத்த விழைகிறீர்! எமது ஆற்றல் மங்கிப் போகும்! எமது குரல் மதிப்பற்றுப் போகும்! நூற்றுக் கணக்கான செனட்டர்களைக் கீழே தள்ளிவிட்டு நாங்கள் எதற்கு ஓர் வேந்தரை நியமிக்க வேண்டும் ரோமுக்கு? ஜூலியஸ் சீஸர்: [சீற்றத்துடன்] பேராற்றல் படைத்த எனது அரசியல் உரிமையைச் செனட்டர் அபகரித்துக் கொள்வதை ஏற்கப் போவதில்லை நான்! என்றைக்கும் உடன்படப் போவதில்லை நான்! புரூட்டஸ்: [சற்று யோசனையுடன்] மேன்மைமிகு தளபதியாரே! நாங்கள் அதைப் பற்றித் தனியாகச் சிந்திக்க வேண்டும்! சற்று அவகாசம் தேவை. கொடுப்பீரா? ரோமாபுரிக்கு ஒரு வேந்தர் தேவையா என்று செனட்டர்கள் ஆராய வேண்டும்! தர்க்கத்துக்குரிய பிரச்சனை அது! கூடிப் பேசி முடிவு செய்ய வேண்டிய பிரச்சனை அது! காஸ்ஸியஸ்: [கோபத்துடன்] செனட்டர் தீர்மானம் செய்ய வேண்டாம் அதை! ரோமாபுரிக்கு மன்னர் பதவி தேவை யில்லை. மன்னர் ஆட்சியில் செனட்டருக்கு என்ன வேலை? சிசெரோ: [எழுந்து நின்று] மன்னிக்க வேண்டும், சீஸர் நான் குறுக்கீடு செய்வதற்கு! செனட்டர்கள் கூடிப் பேச சில மணிநேரம் அவகாசம் வேண்டும். அடுத்த அறையில் உடனே முடிவு செய்கிறோம் நாங்கள்! ஜூலியஸ் சீஸர்: அப்படியே செய்யுங்கள். அனுமதி அளிக்கிறேன். [ஆண்டனி, புரூட்டஸ் மற்றும் ஏனைய செனட்டர் அனைவரும் வெளியேறுகிறார். மூடிய அடுத்த அறையில் கூடி அளவளாவுகிறார்கள்] கிளியோபாத்ரா: [ஆத்திரமோடு அருகில் வந்து] மகா அலெக்ஸாண்டருக்குப் பிறகு மாவீரர் பரம்பரையில் சீஸரை மிஞ்சியவர் யார்? பல்லாயிரம் சதுர மைல் நாடுகளைப் பிடித்து ரோமானியப் பேராற்றலைக் காட்டியது யார்? உங்களை வேந்தர் என்று உங்கள் ரோமானியரே ஏற்றுக் கொள்ளாதது வியப்பாக உள்ளது எனக்கு! உங்கள் செனட்டார் அனைவரும் மூடர்கள்! ஜூலியஸ் சீஸர்: ஆத்திரப் படாதே, கிளியோபாத்ரா! எகிப்திய மகாராணி ரோமானிய கலாச்சாரத்தைப் புரிந்து கொள்வது கடினம்! நான் தளபதி ஆயினும், ரோமானிய செனட்டரைப் புறக்கணிக்க முடியாது. அத்தனை பேரது பகையையும் நான் தேடிக் கொள்ளலாகாது! கிளியோபாத்ரா: [சினத்துடன்] சீஸர்! ·பாரோவின் பரம்பரை வாரிசைப் பெற்ற நீங்கள் தேவனுக்குச் சமமானவர்! என்னை மணந்ததால் எகிப்த் உங்களை மன்னராக ஏற்றுக் கொண்டது! ஆனால் ரோமாபுரி ஏன் ஏற்றுக் கொள்ளத் தயங்குகிறது? என்னை மணந்த காரணமா? அல்லது உங்களுக்கு ஓர் மகன் பிறந்த காரணமா? பரம்பரை முடியாட்சியை செனட்டார் வெறுக்கிறாரா? சொல்லுங்கள். குழப்பமாய் உள்ளது எனக்கு! ஜூலியஸ் சீஸர்: அப்படி எல்லாம் சந்தேகப் படாதே கிளியோபாத்ரா. [அப்போது செனட்டர்கள் யாவரும் உள்ளே நுழைகிறார். நாற்காலியில் அமர்கிறார்] புரூட்டஸ்: [எழுந்து நின்று] மேன்மைமிகு தளபதி அவர்களே! செனட்டார் யாவரும் செய்த முடிவு இதுதான். ரோம் சாம்ராஜியத்துக்கு வேந்தர்! ஆனால் ரோமுக்கு நீங்கள் ஏகாதிபதி! ரோமாபுரியின் ஆட்சியில் செனட்டரின் முடிவு முதலிடம் பெறும்! ரோமாபுரிக்கு வெளியே நீங்கள் வேந்தராக அறிவிக்கப் படுவீர். ஜூலியஸ் சீஸர்: [ஆங்காரச் சிரிப்புடன்] என்ன? சீஸர் வெளி உலகுக்கு மட்டும் வேந்தர்! ஆனால் உள்ளூருக்குள் வெறும் தளபதி, அதாவது ஏகாதிபதி! வேடிக்கையான பட்டாபிசேகம்! உள் நாட்டில் வெறும் பீடம்! வெளிநாடு போகும் போது ராஜ கிரீடம்! உள்ளூரில் பொம்மை ராஜா! வெளியூரில் உண்மை ராஜா! வேண்டாம் எனக்கு இந்த இரட்டை வேடம்! எனக்குத் தேவை ஒரே வேடம்! ராஜக் கிரீடம்! ரோமாபுரியின் ஏகச் சக்ரவர்த்தி! காஸ்ஸியஸ்: தளபதியாரே! செனட்டர் ஏகோபித்த முடிவை நீங்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கிறீர்! அவமானம் எங்களுக்கு! எகிப்த் ராணியின் முன்பாக அனைத்து செனட்டரை அவமதித்தால் வெளியேறுகிறோம் நாங்கள்! உங்களுடன் பேச்சில்லை எமக்கு! காஸ்கா: [சினத்துடன்] கிளம்புங்கள் வெளியே! நமக்கினிப் பேச்சில்லை! முடியாட்சி ரோமில் முளைத்திட யாம் அனுமதிக்க மாட்டோம்! காஸ்ஸியஸ்: செனட்டர் கடமை ரோமாபுரியைக் காப்பாற்றுவது! குடியாட்சியைக் கீழே தள்ள நாம் எப்படி உடன்படுவோம்? [ஆண்டனி, புரூட்டஸைத் தவிர அனைத்து செனட்டரும் வேகமாக வெளியேறுகிறார்] புரூட்டஸ்: [கண்ணியமாக] செனட்டார் சொல்வதைச் சீஸர் கேட்பது சாலச் சிறந்தது. செனட்டர் சினத்துக்குச் சீஸர் தீனி போடுவது நல்லதன்று! செனட்டர் நெஞ்சில் கனலை வளர்ப்பது எரிமலையைத் தூண்டுவது போலாகும். ஜூலியஸ் சீஸர்: [கோபமாக] புரூட்டஸ்! உனக்கு உலகம் தெரியாது! நீ வாலிபன்! உன் அறிவுரை தேவை யில்லை எனக்கு! செனட்டர் பக்கம் சேரும் நீயும் அவருடன் வெளியேறிச் செல்! [புரூட்டஸ் தலைகுனிந்து கொண்டு பரிதாபமாக வெளியேறுகிறார்] []   ஆண்டனி: [கனிவாக] சீஸர்! கொஞ்சம் கொஞ்சமாக நீங்கள் கோட்டையைப் பிடிக்கலாம்! ஒப்புக் கொள்ளுங்கள் சீஸர்! நீங்கள் கேட்டதில் முக்கால் பாகம் கிடைத்துள்ளதே! அது போதாதா? ரோம் ராஜியம் உங்கள் நேரடி ஆட்சிக்குக் கீழ்! ரோமாபுரி மட்டும் செனட்டர் ஆட்சிக்குக் கீழ்! ஏற்றுக் கொள்ளுங்கள் சீஸர் முதலில்! மாற்றிக் கொள்ளலாம் அவரைப் பின்னால்! ஜூலியஸ் சீஸர்: [சற்று யோசனையுடன்] சிந்தித்துச் சொல்கிறேன் ஆண்டனி! அவகாசம் தேவை எனக்கும்! நன்றி உன் ஆலோசனைக்கு! ஆண்டனி: [கிளியோபாத்ரா அருகில் சென்று] ரோமாபுரியின் கொந்தளிப்பில் உங்களைச் சந்தித்தது என் துர்பாக்கியமே! எத்தனை நாட்கள் ரோமில் தங்குவதாக உங்கள் திட்டம்? தனியாகப் பேச வேண்டும் நான் உங்களுடன்! உங்கள் வருகையால் ரோமாபுரியில் ஒளி வெள்ளம் பரவி உள்ளது! சீஸருக்கு ஆண்மகவைக் கொடுத்த கிளியோபாத்ரா ரோமாபுரியின் வரலாற்றைச் செழிப்பாக்கியவர். கிளியோபாத்ரா: [புன்னகையுடன்] மிக்க நன்றி ஆண்டனி! மூன்று மாதங்கள் ரோமில் நான் தங்குவேன்! எகிப்துக்கு நீங்கள் ஒருமுறை விஜயம் செய்ய வேண்டும்! அங்கே அரசாங்க விருந்தாளியாக நீங்கள் என் அரண்மனையில் தங்க வேண்டும். ஆண்டனி: மார்ச் பதினைந்தாம் தேதி சீஸருக்குப் பட்டாபிசேக விழா! என் அரசியல் பொறுப்புகளை அவர் மீது போட்ட பிறகுதான் எனக்கு விடுதலை! எகிப்துக்கு நான் வருவதை உறுதியாகச் சொல்ல முடியாது! அழைப்புக்கு மிக்க நன்றி, கிளியோபாத்ரா! [அருகில் வந்து கிளியோபாத்ராவின் வலது கரத்தில் முத்தமிடுகிறார்.] … போய் வருகிறேன் சீஸர்! கிளியோபாத்ரா! [ஆண்டனி வெளியேறுகிறார்]  கிளியோபாத்ரா: [அழுத்தமுடன்] ஒப்புக் கொள்ளுங்கள் சீஸர்! புரூட்டஸ் சொல்வதிலும், ஆண்டனி சொல்வதிலும் பொருள் உள்ளதாகத் தெரிகிறது எனக்கு! சிறுகச் சிறுகப் பிடி என்று ஆண்டனி கூறியது ஒரு வேத வாக்கு! செனட்டரின் கோபத்துக்கு நீங்கள் ஆளாக வேண்டாம்! வயதில் சிறியவள் ஆயினும், என் அறிவுரையை ஏற்றுக் கொள்ளுங்கள். வயதில் பெரியவர் ஆயினும், ஒப்புக் கொள்வதில் உங்களுக்குத் தாழ்மை யில்லை! மகா அலெக்ஸாண்டரின் வெற்றிப் பாதை உங்களுக்குத் திறந்து விட்டது! அவர் விட்ட இடத்திலிருந்து தொடருங்கள்! இந்தியாவின் சிந்து நதியைத் தாண்டி, கங்கைக் கரையைத் தாண்டிச் சென்று சைனாவைக் கைக்கொண்டு புது வரலாற்றைப் படைக்க வேண்டும் சீஸர். இது ஒருபெரும் வாய்ப்பு. இழந்து விடாதீர் அதனை! ஜூலியஸ் சீஸர்: [சிரித்துக் கொண்டு] கிளியோபாத்ரா! ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று முதலில் நீதான் என்னுடன் வாதாடினாய்! ஏற்றுக்கொள் என்று மாறாக நீ வழக்காடு கிறாய்! ஒரு கணத்தில் 180 டிகிரி கோணத்துக்குத் திரும்பி விட்டாய்! ஆனால் நான் அப்படி ஒரு கணத்தில் மாறுபவன் அல்லன்! நான் போர்த்தளபதி! பிடித்துக் கொண்டதை எளிதில் விட்டுவிடுபவன் அல்லன்! ரோமாபுரிக்கு வேந்தர் பட்டாபிசேகம்! அதை வேண்டி நின்ற பின்னர், வேறு எதனையும் விரும்ப மாட்டேன் நான்! நாளை நடக்கப் போகும் வேடிக்கையைப் பார்! *********************   அங்கம் -5 காட்சி -3 நேற்றைய தினம் பட்டப் பகலிலே அங்காடிச் சந்தையில் குந்தி அலறிக் கொண்டு ஊளை யிட்டது ஓர் ஆந்தை! இயற்கைக்குப் புறம்பான நிகழ்ச்சிகள் அவ்விதம் ஒருங்கே கூடி முழங்கினால், மனிதர் சொல்லக் கூடாது : “அது இயற்கை என்று அபாய நிகழ்ச்சிக்கு அஞ்ச வேண்டாம் என்று !”    வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]   வால்மீன்கள் தெரியா பிச்சைக்காரர் செத்தால்! வானமே தீப்பற்றும் இளவரசன் மாண்டால்! வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]   கோழையர் மடிவதற்கு முன் பன்முறைச் சாவார்! வல்லவர் ஒருமுறை தான் சாவைச் சுவைப்பார்! வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]   எல்லாம் வல்ல தெய்வங்களே கொல்லும் முடிவைத் தீர்மானித்த பின், எவர்தான் அந்த பயங்கர விளைவைத் தவிர்த்து நிறுத்த முடியும்? வானத்தின் வயிற்றைக் கிழிக்குது மின்னல் நெஞ்சைக் கீறி அடிக்குது இடி மின்னல் நாட்டுருவைச் சிதைக்குது புயல் நகர்த் தெருவை துடைக்குது மழை! வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]   []   நாடகப் பாத்திரங்கள்:  ரோமாபுரியில்: தளபதி மார்க் ஆண்டனி [35 வயது], மற்றும் செனட்டர்கள்: புரூட்டஸ் [35 வயது], காஸ்ஸியஸ் [30 வயது (புரூட்டஸின் மைத்துனன்)]. காஸ்கா [40 வயது], கவிஞர் சின்னா [35], சிசெரோ [50 வயது], அக்டேவியன் [24] டிரிபோனஸ் மற்றும் ஜூலியஸ் சீஸரின் மனைவி கல்பூர்ணியா [45 வயது]. ஒரு ஜோதிடன், காஸ்ஸியஸின் சதிகாரக் கூட்டம். பாம்ப்பியின் அனுதாபிகள். சீஸரின் சீடர்கள். ரோமானியப் படையாட்கள். பொது நபர். நேரம், இடம்:    சீஸர் பட்டாபிசேகத்திற்கு முந்தைய தினம். பகல் வேளை. ரோமாபுரியில் மாவீரன் பாம்ப்பியின் நினைவு மாளிகை.   நாடகப் பாத்திரங்கள்:     காஸ்ஸியஸ், காஸ்கா, சின்னா, சிசேரோ மற்றும் சில சதிகாரர்கள், புரூட்டஸ், புரூட்டஸின் மனைவி போர்ஷியா.   காட்சி அமைப்பு:    மார்ச் பதினாங்காம் தேதி இரவு. பயங்கரப் புயல், இடி, மின்னல், பேய்மழை அனைத்தும் தலை விரித்தாடி ரோமாபுரியைக் கொந்தளிக்க வைக்கின்றன. சிசேரோவும், காஸ்காவும் எதிர்த் திசையிலிருந்து நெருங்கி வருகிறார். அவரது உடம்பெல்லாம் மழையில் நனைந்துள்ளது. துணியால் தலை, முகத்தை மூடி நடக்கிறார்கள். சிசேரோ: [வியப்புடன்] யாரது? … காஸ்காவா? எங்கிருந்து வருகிறாய்? சீஸரைக் கோலாகலமாய் வரவேற்று ரோமாபுரி மாளிகையில் விட்டுவிட்டு வருகிறாயா? நல்லது! … அடடா! ஏனிப்படி உனக்கு மூச்சு வாங்குகிறது? ஏனிப்படி உன் கண்களில் ஆத்திரம் பொங்குகிறது? யாரை உற்று உற்றுப் பார்க்கிறாய்? காஸ்கா: [ஆங்காரமாய்] சிசேரோ! நீ என்ன? கல்லா? களிமண்ணா? அல்லது மரக்கட்டையா? எதுவும் உன்னைப் பாதிக்க வில்லையா பூமியே குப்புறக் கவிழ்ந்து ஆடும்போது? நானிதுவரை ரோமில் பார்க்காத பிரளயமிது! நானிதுவரைக் கண்ட புயலில்லை இது! நானிதுவரைப் பார்த்த கடல் பொங்குதலில்லை இது! நானிதுவரைக் கேட்ட பேரிடி ஓசையில்லை இது! ரோமாபுரி ஏனின்று பேயாட்டம் ஆடுதென்று தெரியவில்லை எனக்கு! யாரோ தெய்வங்களுக்குத் ஆராதனை செய்துப் பேரழிவு நாசம் புரியப் புயலை அனுப்பி யுள்ளது தெரிய வில்லையா உனக்கு? சிசேடோ: [சிந்தனையுடன் தடுமாறி] எனக்குத் தெரியவில்லை காஸ்கா? நீ ஏதாவது விபரீதத்தைக் கண்டாயா? காஸ்கா: விபரீதமா? ரோமாபுரியின் வீழ்ச்சியைக் கண்டேன்! ரோமானியர் அடிமைகள் ஆவதைக் கண்டேன்! வேறென்ன விபரீதத்தைக் காண வேண்டும் என் கண்கள்? வானம் துடிப்பதுபோல் என் மனமும் துடிக்கிறது! சிசேரோ! உன் மனது பாறாங்கல்லா? ஒரு துடிப்பு மில்லாமல் நட்ட கல்போல் நிற்கிறாயே! நேற்றைய தினம் பட்டப் பகலிலே நமது அங்காடிச் சந்தையில் ஆந்தையின் அலறைக் கேட்டேன்! புயலும், மழையும், இடியும், மின்னலும், ஆந்தை அலறலும் ஒன்று மில்லை என்று புறக்கணிக்காதீர்! அவை நமக்கு எச்சரிக்கை செய்யும் அபாயத்தை எல்லாம் பொய்யென்று ஒதுக்காதீர்! சிசேரோ: [சற்று கவலையுடன்] விநோத எச்சரிக்கைதான்! என்ன அபாய எச்சரிக்கையாக நினைக்கிறாய் நீ? நாளை மக்கள் மன்றத்துக்கு மன்னராய்ப் பட்டம் சூட சீஸர் வருகிறாரா? காஸ்கா: [தலையில் அடித்துக் கொண்டு] ஆமாம். நிச்சயம் சீஸர் மன்றத்துக்கு வருவார்! ஆனால் மன்னராக்கப்பட மாட்டார்! நீவீர் என்ன செய்ய வேண்டும் என்று ஆண்டனி மூலம் உனக்குச் செய்தி அறிவிக்கப் படும். சிசேரோ: அப்படியா, சரி! நான் போய் வருகிறேன்! நீ பயங்கர ராத்திரி நேரத்தில் பசிக்கலையும் கரடி போல் திரியாதே! நீயே பேரிடிக் கிரையாகி விடுவாய்! [வெளியேறுகிறார்] காஸ்கா: போய்வா சிசேரோ! [தனக்குள்] பேரிடிக் கிரையாவது நானா அல்லது சீஸரா என்பது நாளை தெரியும்! உனக்குத் தலையும் புரியாது! வாலும் புரியாது! [வேறு திசையிலிருந்து காஸ்ஸியஸ் நுழைகிறான்] காஸ்ஸியஸ்: [காரிருளில் சரிவரத் தெரியாது] யாரங்கே, தலையில் துணியுடன் நடமாடுவது? காஸ்கா: ஒரு ரோமன்! குடியாட்சி விரும்பும் ரோமன்! குடிமகன்! காஸ்ஸியஸ்: [புன்னகையுடன்] வருக, வருக குடிமகனே! … ஆம் காஸ்காவின் குரல்! காஸ்கா: உன் செவியின் கூர்மையை மெச்சுகிறேன். என்ன மாதிரிக் கோர ராத்திரி இது? காஸ்ஸியஸ்: உத்தமரை மகிழ வைக்கும் ராத்திரி! உலுத்தரை கலக்கிவிடும் ராத்திரி! உனக்கு எப்படித் தெரியுது காஸ்கா? காஸ்கா: எனக்குச் சூனியக் காட்சிதான் தெரியுது! ரோமாபுரியின் அத்தமனம் தெரிகிறது! நாளை பட்டாபிசேக விழாவில் என்ன நிகழப் போவது என்று தெரியவில்லை எனக்கு? காஸ்ஸியஸ்: [அழுத்தமாக] நீ ஓர் பயந்தாங் கொள்ளி! இடி மின்னலுக்கு அஞ்சி ஒடுங்குகிறாய்! அச்சமில்லை எனக்கு! ரோமாபுரியின் குடியாட்சி தொடுவானில் தெரியுது! ஏன் வெளுத்து விட்டது உன் முகம்? ஏன் விறைத்து விட்டன உன் விழிகள்? பயப் போர்வையைப் போர்த்திக் கொண்டு நடுங்குகிறாய் நீ! அதற்கெல்லாம் காரண கர்த்தா யார் தெரியுமா? இந்தப் பயங்கரப் புயலுக்கும், இடி மின்னலுக்கும், பேய் மழைக்கும் யார் காரண கர்த்தா சொல்லட்டுமா? உன்னை விட அவர் வல்லவரில்லை! என்னை விட அவர் பராக்கிரமனில்லை! காஸ்கா: யாரைச் சொல்கிறாய்? சீஸரைச் சுட்டிக் காட்டுகிறாயா? காஸ்ஸியஸ்: யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும்! ரோமானியரின் உறுப்புகள் பூர்வீகமாகித் துருவேறி விட்டன! கெட்ட காலம்! நம் முன்னோரின் வீர நெஞ்சங்கள் செத்து விட்டன! நமது அன்னையாரின் உணர்ச்சிகள் நம்மை ஆட்கொண்டன! ஆதலால் அடிமைத்தனம் சுற்றிக் கொண்டு, நம்மைப் பெண்டிராக்கி விட்டது! காஸ்கா: [அழுத்தமாக] நான் கேள்விப் பட்டேன்! நாளைய தினம் செனட்டர் சிலர் சீஸருக்கு, நிலத்துக்கும், கடலுக்கும் வேந்தராகக் கிரீடம் சூடப் போகிறாராம்! அவர் வெற்றிமாலை சூடிய எல்லா நாடுகளுக்கும் மாமன்னர், இத்தாலிய நாட்டுக்குத் தவிர! காஸ்ஸியஸ்: [கைவாளை உருவி] அப்போது எனக்குத் தெரியும் வாளை எவ்விடத்தில் அணிந்து கொள்ள வேண்டும் என்பதை! அடிமைப் பந்தத்திலிருந்து நீங்கிக் காஸ்ஸியஸ், விடுதலை அளிப்பான் காஸ்ஸியஸ¤க்கு! கொடுங் கோன்மை ஆட்சிக்கு விடுவிப்பு அளிப்பான், காஸ்ஸியஸ். காஸ்கா: காஸ்ஸியஸ்! அவ்விதமே நானும் செய்வேன். அடிமைத் தளையை உடைக்க ரோமன் ஒவ்வொருவன் கரத்திலும் ஆற்றல் உள்ளது! []   காஸ்ஸியஸ்: பிறகு ஏன் சீஸர் கொடுங்கோலனாய் நெஞ்சை நிமிர்த்துகிறார்? பாவம் சீஸர்! ஓநாயா சீஸர்? ஆயினும் அவர் கண்களுக்கு ரோமானியர் ஆட்டுக் குட்டிகளய்த் தென்படுகிறார்! சிங்கமாக இருக்கலாம் சீஸர்! ஆனால் ரோமானியர் பெண்மான்கள் அல்லர். நான் தீர்மானிக்க வேண்டும்! நான் தயாராக வேண்டும். நான் துணிந்து விட்டேன்! என் கத்தியைக் கூர்மைப் படுத்த வேண்டும்! என் குறிக்கோள் நிறைவேறும் வரை உறக்க மில்லை எனக்கு! மதுபானக் குடியில்லை எனக்கு! மனைவியுடன் சல்லாபமில்லை எனக்கு! குழந்தையுடன் விளையாட்டில்லை எனக்கு! காஸ்கா: [அருகில் சென்று வலது கரம் நீட்டி] காஸ்ஸியஸ்! உன் துணிச்சலை மெச்சுகிறேன்! உதவிக்கு நானுடன் வருவேன்! எங்கு நீ அழைத்தாலும் வருவேன்! எதைச் செய்யென்றாலும் செய்வேன்! உன் வாளோடு என் வாளும் ஒரே உடலைக் குத்தும்! ஒரே இடத்தில் குத்தும்! காஸ்ஸியஸ்: [காஸ்ஸியஸ் கையைக் குலுக்கி] உன்னை நம்புகிறேன் காஸ்கா! ஒப்பந்தம் செய்து கொள்வோம்! ரோமாபுரியில் நகராத பெரும் குன்றுகளை நகர்த்தி விட்டேன் நான்! ரோமின் பண்பாள மேதைகள் சிலரை வசப்படுத்தி விட்டேன் நான். என் அபாயத் திட்டங்களுக்கு ஆதரவு தருவதாய் அவர்கள் வாக்களித்துள்ளார்! நாம் புரியப் போகும் நாளைக் கோர நிகழ்ச்சிக்கு இடி முரசு தட்டுகிறது! மின்னல் வழிகாட்டுகிறது! புயல் புல்லாங்குழல் வாசிக்கிறது! மழை மனதைக் குளிர வைக்கிறது! காஸ்கா: [வியப்புடன்] இடி, மின்னல், மழை, புயல் எழுவது என்மனத்தில் வேறுவித முடிவை எச்சரிக்கின்றது! நமக்கு ஏதாவது ஆபத்து நாளை ஏற்பட்டு விடாமா வென்று ஐயப்பாடு உண்டாகிறது! காஸ்ஸியஸ்: அஞ்சாதே! அந்த அபசகுனங்கள் நமக்கில்லை! அவை எச்சரிப்பது சீஸரை! ஏற்கனவே மார்ச் பதினைந்தாம் நாள் அபாயத்தை சகுன ஞானி ஒருவன் சீஸர் நெஞ்சில் பொறித்து வைத்துப் போயிருக்கிறான்! நீ நினைவில் வைத்துக்கொள்! தூங்கிப் போய் விடாதே! நாளைதான் நமது தீர்வு நாள்! காஸ்கா: போய் வருகிறேன் காஸ்ஸியஸ்! நாளை தினத்தில் நான் எழுந்திட மறந்தாலும், காலைப் பரிதி என்னை எழுப்பி விடும்! கவலைப் படாதே! [காஸ்கா போகிறான். அப்போது சின்னா நுழைகிறான்] காஸ்ஸியஸ்: யாரது வருவது? ஓ கவிஞர் சின்னாவா? சின்னா: ஆம். ஆம் காஸ்ஸியஸ். என்ன பயங்கர ராத்திரி யிது? வானத்தின் வயிற்றைக் கிழிக்குது மின்னல்! நெஞ்சில் வெடிக்குது இடி! நகரைச் சிதைக்குது புயல்! தெருவை வழித்துப் போகுது மழை! நம்மில் மூவர் அல்லது நால்வருக்குத்தான் அவற்றின் எச்சரிக்கை புரிகிறது. காஸ்ஸியஸ்! ஆண்டனியை வசப்படுத்த முடியாது! அவர் சீஸரின் வலதுகை! ஆனால் புரூட்டஸை நாம் வசப்படுத்த வேண்டுமே. காஸ்ஸியஸ்: கவலைப் படாதே சின்னா! புரூட்டஸ் சீஸரின் மூத்த மகன்! ஏற்கனவே நான் புரூட்டஸ் மனதில் விதையை நட்டுவிட்டேன்! எப்போது அது முளைக்கும் என்று தெரியாது! அவரை நம் திக்கில் திருப்புவது கடினம்! ஆனாலும் நான் தொடர்வேன்! அடிமேல் அடி வைத்தால் பிரமிடையும் உடைக்கலாம்! சின்னா! நான் சொல்வதைச் செய்! [கையில் கட்டான காகிதத் தகவலை எடுத்து] … பார்! இந்த தகவல் சுருளைப் புரூட்டஸ் வீட்டுப் பலகணி வழியே வீசி எறி! அப்புறம் இதை வீட்டு முன்பு புரூட்டஸ் சிலைக்கு அருகில் வைத்திடு! .. சீக்கிரம் செல் சின்னா! [கையில் சுருள்களை வாங்கிக் கொண்டு சின்னா வெளியேறுகிறான்] காஸ்ஸியஸ்: [தனிக்குரலில்] ஓ புரூட்டஸ்! நீயின்றி அத்துணிகர நிகழ்ச்சி நிகழாது! நீயின்றி ரோமாபுரிக்கு விடுதலை கிடையாது! நீயின்றி முடியாட்சியைத் தடுக்க முடியாது! நீயின்றிக் குடியாட்சியை நிலைநாட்ட முடியாது! தூங்கிக் கொண்டிருக்கும் புரூட்டஸை நான் எழுப்பியாக வேண்டும் இன்றிரவு! குழம்பிப் போன புரூட்டஸை இன்றே மாற்றியாக வேண்டும்! தயங்கிக் கொண்டிருக்கும் புரூட்டஸை இன்று தைரியசாலி யாக்க வேண்டும்! [காஸ்ஸியஸ் விரைவாக வெளியே போகிறான்] *********************   அங்கம் -5 கட்சி -4 வானத்தின் வயிறைக் கிழிக்குது மின்னல் வைர நெஞ்சில் அடிக்குது பேரிடிச் சத்தம் நாட்டின் வடிவைச் சிதைக்குது பேய்ப்புயல் நகர்த் தெருவை நிரப்புது பெருமழை!  ************** பாதிக் கோளத்தில் (பரிதியின் மறைவால்) இறந்து விட்டன இயற்கை நிகழ்ச்சிகள்! வேதனைக் கனவுகள் சீரழிக் கின்றன, திரைமறைவில் எழுந்திடும் துக்கமதை. வில்லியம் ஷேக்ஸ்பியர் [மாக்பெத்]   (சீஸர்) மரணத்தால் மட்டும் தீரும் சிக்கல். சினமில்லை எனக்குத் தனித்த முறையில் குடிமக்கள் நலத்தை எண்ணுபவன் நான் முடி சூட்டுவார் பேராசைச் சீஸருக்கு. முடி சூட்டுவீர் சீஸருக்கு! பிறகு அவரை உடை வாளால் குத்தி நான் ஊடுருவ விடை தருவீர் எனக்குடனே அனுமதி! …. (புரூட்டஸ்) வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]   “உறங்கு  கின்றாய், விழித்தெழு புரூட்டஸ்! நோக்கிடு உன்னை நீயே, ரோமுக் காகப் போராடு! உரையாடு! தீர்த்திடு பிரச்சனை ஓர் வேந்தர் ரோமை ஒடுக்கி ஆள்வதா?” … (காஸ்ஸியஸின் கடிதம்) வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]   சதியே! புன்சிரிப்பில் ஒளிந்து கொள். பாயப் பாயப் பதுங்கிக் கொள், பணிவுத் தன்மையில், பாதையில் நடந்தால்  மெய்யுரு தெரிந்திடும் காரிருளும் உன்னை காட்டிக் கொடுத்திடும்! …. (புரூட்டஸ்) வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]   சீசரின் ஒற்றை உறுப்பே ஆண்டனி! … தேச நேசர் நாமெல்லாம் அறிவீர்! நாசக் கொலைஞர் அல்லர்  நாம்! சீசரின் பேரா சைக்கு எதிரிகள் நாம்! உறுப்பை அறுப்பது நம்பணி யன்று! ….. மறுக்க வேண்டும் மார்க் ஆண்டனி! சீசரின் சிரம் அறுக்கப் பட்ட பிறகு செய்வ தென்ன வீண் உறுப்புகள் ? வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]   ரோமாபுரியில்:    தளபதி மார்க் ஆண்டனி [35 வயது], மற்றும் செனட்டர்கள்: புரூட்டஸ் [35 வயது], காஸ்ஸியஸ் [30 வயது (புரூட்டஸின் மைத்துனன்)]. காஸ்கா [40 வயது], கவிஞர் சின்னா [35], சிசெரோ [50 வயது], அக்டேவியன் [24] டிரிபோனஸ் மற்றும் ஜூலியஸ் சீஸரின் மனைவி கல்பூர்ணியா [45 வயது]. ஒரு ஜோதிடன், காஸ்ஸியஸின் சதிகாரக் கூட்டம். பாம்ப்பியின் அனுதாபிகள். சீஸரின் சீடர்கள். ரோமானியப் படையாட்கள். பொது நபர்.   நேரம், இடம்:    சீஸர் பட்டாபிசேகத்திற்கு முந்தைய தினம். நள்ளிரவு வேளை. ரோமாபுரியில் புருட்டஸின் மாளிகைத் தோட்டம்.   நாடகப் பாத்திரங்கள்: புரூட்டஸ், புரூட்டஸின் மனைவி போர்ஷியா. புரூட்டஸின் பணியாள் லூசியஸ், காஸ்ஸியஸ், காஸ்கா, சின்னா, மற்றும் சில சதிகாரர்கள்,    காட்சி அமைப்பு:    மார்ச் பதினாங்காம் தேதி இரவு. பயங்கரப் புயல், இடி, மின்னல், பேய்மழை அனைத்தும் தலை விரித்தாடி ரோமாபுரியைக் கொந்தளிக்க வைக்கின்றன. புரூட்டஸ் தோட்டத் தாழ்வாரத்தின் கீழ் உலாவி வண்ணம் சிந்தித்துக் கொண்டிருக்கிறார். தாழ்வாரத்தில் மெழுகுவர்த்திகள் எரிந்த வண்ணம் உள்ளன.   புரூட்டஸ்: [தனக்குள் பேசியபடி] எப்படி அந்த பிரச்சனைக்குத் தீர்வு காண்பது? சீஸரின் மரணத்தால்தான் ரோமுக்கு விடுதலை என்றால் அப்படியே ஆகட்டும்! எனக்குச் சீஸர் மீது தனிப்பட்ட முறையில் வெறுப்பில்லை! பகையில்லை! வேற்றுமை யில்லை! குடிமக்கள் நலமே எனது குறிக்கோள்! ஆதலால் வேந்தராகச் சீஸரை முடிசூட்டுவது முறையன்று. அவரைக் கொன்றுதான் அதைத் தடுக்க வேண்டும் நான்! [அப்போது பணியாள் லூசியஸ் ஒரு சுருள் கட்டோடு வருகிறான்] லூசியஸ்: பலகணி வழியாகப் போகும் போது என் கண்ணில் தெரிந்தது. யாரோ சொருகி வைத்த காகிதச் சுருளிது. ஏதோ அவசரசத் தகவல் போல் தெரிகிறது. [சுருளைப் புரூட்டஸ் கையில் கொடுத்து உள்ளே போகிறான்] புரூட்டஸ்: [மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் படிக்கிறார்] “புரூட்டஸ்! நீ தூங்கிக் கொண்டிருக்கிறாய்! விழித்தெழு! உன்னையே நீ ஆராய்ந்து செய்! ரோமுக்காக உரையாடு! குடியாட்சிக்குப் போராடு! செம்மைப் படுத்து ரோம் ஆட்சியை! விழித்தெழு புரூட்டஸ், விழித்தெழு!” [கதவைத் தட்டும் அரவம் கேட்கிறது] புரூட்டஸ்: “விழித்தெழு புரூட்டஸ், விழித்தெழு!” விழித்துக் கொண்டுதான் இருக்கிறேன். யாரோ கதவைத் தட்டுகிறார்! லூசியஸ்! கதவைத் திறந்து யாரென்று பார்! .. காஸ்ஸியஸ் என் நெஞ்சின் கதவைத் தட்டியது முதலாக சரிவரத் தூக்க மில்லை எனக்கு! [லூசியஸ் மீண்டும் வருகிறான்] லூசியஸ்: காஸ்ஸியஸ் வந்திருக்கிறார். உங்களைக் காண விரும்புகிறார். புரூட்டஸ்: தனியாக வந்திருக்கிறாரா? லூசியஸ்: இல்லை! கூட்டமாக வந்திருக்கிறார்கள். முகத்தை மூடியிருப்பதால் மற்றவர் யாரென்று தெரியவில்லை! புரூட்டஸ்: உள்ளே தோட்டத்துக்கு அழைத்து வா. [லூசியஸ் போகிறான்] ஓ சதியே! நீ ஒளிவ தெங்கே? புன்னகையிலும், பணிவுப் போர்வைக் குள்ளேயும் பதுங்கிக் கொள்! வெளியே நீ தலை நீட்டினால், காரிருள் கூட உன்னைக் காட்டிக் கொடுத்திடும்! [காஸ்ஸியஸ், காஸ்கா, சின்னா, தீசியஸ், மெத்தலஸ், திரிபோனியஸ் ஆகிய சதிகாரர் அனைவரும் முக்காடு முகத்துடன் நுழைகிறார்கள்] காஸ்ஸியஸ்: அர்த்த ராத்திரியில் உங்களை எழுப்பி விட்டோமா? மன்னிக்க வேண்டும் புரூட்டஸ்! புரூட்டஸ்: நட்ட நிசியானாலும் விழித்துக் கொண்டுதான் இருக்கிறேன். ஏனோ இன்று உறக்கம் வரவில்லை எனக்கு! அறிமுகப் படுத்துவீர் காஸ்ஸியஸ். இவர்களில் பலரைத் தெரியாது எனக்கு! காஸ்ஸியஸ்: பயங்கர இந்த இரவில் பண்பாளர் யாரும் தூங்க முடியாது. அறிமுகம் செய்கிறேன் புரூட்டஸ். யாவரும் உங்கள் மீது மதிப்பு வைத்திருப்பவர். இவர் திரிபோனஸ், இவர் தீசியஸ், இவர் காஸ்கா, இவர் சின்னா, இவர் மெத்தலஸ். புரூட்டஸ்: வரவேற்கிறேன் அனைவரையும். கைகளை நீட்டுவீர். [ஒவ்வொருவருவர் கையையும் குலுக்கிறார்] காஸ்ஸியஸ்: [எல்லோரையும் பார்த்து அழுத்தமாக] நாமெல்லாம் இன்று உறுதிமொழி உரைப்போம். []   புரூட்டஸ்: வேண்டாம், உறுதி எடுக்கத் தேவை யில்லை! எல்லாரது துணிச்சலை நம்புவோம். நமது பணிக்கு யாரும் உறுதி கூறத் தேவை யில்லை! கோழைகள்தான் உறுதிமொழி கூற வேண்டும்! நெஞ்சில் உரமில்லாதவர்தான் உறுதி எடுக்க வேண்டும். உன்னத மானது நமது நாட்டுப் பணி! உறுதி எடுக்கத் தேவை யில்லை அதற்கு! நம்பத் தக்க தீரர் அனைவரும், காஸ்ஸியஸ்! காஸ்ஸியஸ்: சிசேரோவைப் பற்றி என்ன நினைக்கிறீர்! சேர்த்துக் கொள்ளலாமா நம்முடன்? காஸ்கா: சேர்த்துக் கொள்ள வேண்டும் சிசேரோவை. முதிய நபர் அவர். அவரது நரைத்த முடி அனுபவம் நமக்கு உதவும். அவரைச் சேர்ப்பதால், அவரைப் பின்பற்றுவோர் ஆதரவும் கிட்டும் நமக்கு. புரூட்டஸ்: வேண்டாம் நமக்கு சிசேரோ. நம் சதித் திட்டம் அவர் காதில் விழக் கூடாது! செவிடன் காதில் ஊதிய சங்கொலி ஆகும் அது. வீண் முயற்சி! பிறர் சொல்வதைப் பின்பற்றுபவர் அல்லர் சிசேரோ! காஸ்ஸியஸ்: சரி வேண்டாம், விட்டுத் தள்ளுங்கள் சிசேரோவை. தீசியஸ்: சீஸர் ஒருவரைத்தான் தீர்த்துக்கட்ட வேண்டுமா? வேறு யாரையும் கொல்ல வேண்டுமா? காஸ்ஸியஸ்: [சிந்தித்து] சீஸரின் ஆருயிர்த் தோழர் மார்க் ஆண்டனியை விட்டுவிடுவது சரியா? ஆண்டனி சூட்சிக்காரர்! நம் திட்டத்தைப் பற்றித் தெரிந்தால், நிச்சயம் நிறுத்த முயல்வார் ஆண்டனி! அவரை விட்டுவிடுவது சரியில்லை! சீஸரோடு ஒன்றாகச் செத்து வீழட்டும் ஆண்டனியும்! புரூட்டஸ்: அது பெரும் குருதிப்போர் ஆகிவிடும், காஸ்ஸியஸ்! நாம் கசாப்புக் கடைக் கொலைகாரர் அல்லர்! நாட்டு நேசர் நாமெல்லாம்! தலையைத் துண்டித்த பிறகு அங்கத்தை வெட்டுவதில் என்ன பலன்? மார்க் ஆண்டனி சீஸருக்கு வெறும் உறுப்புதான்! நாமெல்லாம் எதிர்ப்பது சீஸரின் பேராசைக் குணத்தை! சீஸரின் அங்க உறுப்புகளைத் துண்டு துண்டாக்குவது நம் தொழிலில்லை! சீஸரின் குருதி ஆறாய் ஓடப் போகிறது! அருமை நண்பர்களே! அஞ்சாமல் துணிச்சலோடு சீஸரைத் தீர்த்துக் கட்டுவோம்! ஆங்காரமாய்க் கொல்ல வேண்டாம்! பண்பாடு படைத்துவர் நாமெல்லாம்! கோரக் கொலைகாரர் அல்ல நாம்! மார்க் ஆண்டனியை மறந்து விடுங்கள்! சீஸர் தலை கீழே உருண்ட பிறகு, அவரது வலது கரமான ஆண்டனி என்ன செய்வான்? அழுவான்! தொழுவான்! ஏன் சீஸரோடு தானும் விழுவான்! காஸ்ஸியஸ்: [சற்று அழுத்தமுடன்] ஆயினும் ஆண்டனிக்கு அஞ்சுகிறேன் நான்! அவர் சீஸர் மீது கொண்டுள்ள அன்பு ஆழமாக வேரூன்றியது! ஆண்டனியை நானென்றும் நம்புவதே யில்லை, புரூட்டஸ்! சீஸர் மாண்டதும் ஆண்டனி என்ன செய்வான் என்பது யாருக்கும் தெரியாது! புரூட்டஸ்: அருமைக் காஸ்ஸியஸ்! ஆண்டனியைப் பற்றிக் கவலைப் படாதீர்! சீஸர் செத்ததும் உடலை வைத்து அழுவதற்கு ஆண்டனி போவான்! அப்புறம் மனமுடைந்து ஆண்டனியும் சாவான். திரிபோனியஸ்:னாம், புரூட்டஸ் சொல்வதே சரி, அஞ்ச வேண்டாம் ஆண்டனிக்கு! அவர் மடியத் தேவையில்லை! நமது குறி சீஸர் மட்டுமே. [அப்போது டங், டங் கடிகார மணியோசை கேட்கிறது] புரூட்டஸ்: [சற்று தயங்கி] கேளுங்கள் மணியோசையை! காஸ்ஸியஸ்: மூன்று மணி ஆகிறது. கிழக்கு வெளுப்பதற்குள் நாம் கலைய வேண்டும். திரிபோனியஸ்: போகும் நேரம் வந்து விட்டது. []   காஸ்ஸியஸ்: [சற்று கவலையுடன்] சீஸர் காலை மக்கள் மன்றத்துக்கு வருவாரா என்பது சந்தேகமே! பேரிடி, பெருமழை, பேய்ப்புயல், மின்னல் ஆகியவற்றைப் பார்த்துப் பயப்படுவார் சீஸர்! நிரம்ப சகுனம் பார்ப்பவர் சீஸர்! இன்று ராத்திரி வானத்தில் நடக்கும் கோர நாட்டியங்கள் அவரை வெளியில் வராமல் நிறுத்தி விடலாம்! அல்லது அஞ்சிவிடும் கல்பூர்ணியாவே அவரைத் தடுத்து விடலாம். என்ன செய்யலாம்? தீசியஸ்: கவலைப் படாதே காஸ்ஸியஸ்! நானவரை இழுத்துக் கொண்டு வருவேன். அவரிடம் சக்கரையாகப் பேசி அழைத்து வருவேன்! உயர்வு நவிற்சியில் அவரைப் புகழ்ந்தால், மனிதர் மெழுகாய் உருகிடுவார்! முகத்துதியில் அவரைக் கவர்வது எளிது! சீஸர் முகத்துதிவாதிகளை அறவே வெறுப்பவர்! ஆனால் முகப் புகழ்ச்சி செய்தால் வேம்பாய் இருப்பவர் கரும்பாய் மாறுவார்! காஸ்ஸியஸ்: கொக்கு தலையில் வெண்ணை வைத்துப் பிடிப்பவன் அல்லவா நீ? சீஸரை மக்கள் மன்றத்துக்கு இழுத்து வரும் பணி உன்னுடையது! அதே சமயத்தில் சீஸர் அருகில் வராமல் ஆண்டனியை ஒதுக்க வேண்டுமே? யார் செய்ய முடியும் அதை? மெத்தலஸ்: கவலைப் படாதே காஸ்ஸியஸ்! அழகியைக் கண்டால் மெழுகாகிப் போவார் ஆண்டனி! எனக்குத் தெரிந்த பேரழகி ஒருத்தி ஆடல் புரிய வந்திருக்கிறாள். அவளது காந்த விழிகளைக் காட்டிச் சில மணிநேரம் ஆண்டனியைத் தாமதிக்க வைக்கிறேன்! அவள் மேனி அழகு ஆண்டனியைக் கட்டிப் போட்டுவிடும்! அந்த பணியை நான் அழகாகச் செய்து முடிப்பேன். காஸ்ஸியஸ்: விடியப் போகிறது! கிழக்கு வெளுத்து விட்டது! நமது திட்டமும் தலைதூக்கி விட்டது! நாமெல்லாம் நீங்கும் வேளை வந்து விட்டது! மெய்யான ரோமானியராய் நம்மைக் காட்டிக் கொள்ளும் நேரம் வந்து விட்டது! போய் வாருங்கள் தோழர்களே! வாயைத் திறக்காதீர்! வாளைக் கூர்மை ஆக்குவீர்! புரூட்டஸ்: ஆம் அருமை நண்பர்களே! உங்கள் முகமும், வாயும் நம் திட்டத்தைக் காட்டி விடக் கூடாது! [அனைத்துச் சதிகாரரும் புரூட்டஸ் தோட்டத்தை விட்டுப் போகிறார்கள். தூக்கம் கலைந்து புரூட்டஸின் மனைவி போர்ஷியா வருகிறாள்.] போர்ஷியா: [கவலையுடன்] முக்காடு போட்டு முகத்தைக் காட்டாமல் போகும் அவர்கள் யார்? விடிந்தும், விடியாத இந்தக் காலை வேளையில் நமது வீட்டுக்குள் நுழைந்த அவர்கள் யார்? என்னைப் பார்த்தும், பாராமல், வாய்மூடி வணக்கம் கூடச் சொல்லாமல் நழுவிச் செல்லும் அந்த அநாகரீக மனிதர்கள் யார்? என்ன சொல்ல வந்தார் அனைவரும்? ஏன் நீங்கள் அதிகாலையில் எழுந்து வந்தீர்? ஏன் உங்கள் முகம் கரிந்து போய் உள்ளது? மின்னல் அடித்து விட்டதா உங்கள் முகத்தில்? புரூட்டஸ்: [ஆச்சரியம் அடைந்து] நீ ஏன் அதிகாலையில் எழுந்து வந்தாய்? தூக்கம் ஏன் கலைந்தது உனக்கு? காலைத் தூக்கம் கலைந்தால், உனக்குத் தலை சுற்றுமே? போர்ஷியா: அதே கேள்விகளை நான் உங்களைக் கேட்கிறேன்? நள்ளிரவுத் தூக்கம் இல்லா விட்டால், உங்களுக்கும் நல்ல தில்லையே! உறக்க மில்லாத உடம்பு வலுவின்றிப் போகுமே! உங்கள் முகம் சோகத்துடன் காணப் படுவதின் காரணம் என்ன? சொல்லுங்கள் எனக்கு! புரூட்டஸ்: போர்ஷியா! உடம்புக்கு நலமில்லை எனக்கு. உறக்கம் வரவில்லை எனக்கு. []   போர்ஷியா: என்ன? உடம்புக்கு நலமில்லையா? உடம்புக்குச் சுகமில்லை என்றால் படுக்கையில் அல்லவா ஓய்வெடுக்க வேண்டும்? பத்து ஆட்களுடன் என்ன உரையாடல் வேண்டிக் கிடக்கிறது? புரூட்டஸ¤க்கு நலமில்லையா? நலமில்லாதவர் அதிகாலைக் குளிரில் நடமாடினால் என்ன ஆகும்? உடல்நலம் மேலும் குறையுமே! உங்கள் உள்ளத்தில் ஏதோ ஒரு நோய் உள்ளது! எனக்கது தெரிந்தாக வேண்டும். உங்கள் ஆருயிர் மனைவிடம் உங்கள் சிரமத்தைப் பகிர்ந்து கொள்ளக் கூடாதா? ஏழெட்டுப் நபர்கள் ஏன் முகத்தை மூடி வீட்டிலிருந்து வெளியேறிச் சென்றார்? சொல்லுங்கள் நடந்ததை? நான் உங்கள் மனைவி அல்லவா? [மண்டியிட்டு மன்றாடுகிறாள்] புரூட்டஸ்: கண்மணி போர்ஷியா! மண்டி யிடாதே! மன்றாடாதே! எனக்கொன்றும் கொடிய நோயில்லை! வெறும் தலைவலிதான்! போர்ஷியா: [வியப்புடன்] வெறும் தலைவலியைச் சொல்லவா இத்தனை தயக்கம்? நம்ப முடியவில்லை என்னால்! எதையோ சொல்ல மறுக்கிறீர்! எதையோ சொல்லக் கூடாதென்று மறைக்கிறீர்! நான் உங்கள் மனைவி என்பதையும் மறக்கிறீர்! உண்டி படைப்பதற்கும், படுக்கையில் ஒட்டி உறங்குவதற்கும் மட்டுமா உங்களுக்கு மனைவி? போர்ஷியா மனைவில்லை! வெறும் உடல் விருந்தாளி உங்களுக்கு! புரூட்டஸ்: [போர்ஷியாவை அணைத்துக் கொண்டு] அப்படி சொல்லாதே போர்ஷியா? ஆருயிர் மனைவி நீ! அன்பு மனைவி நீ! ஆசை மனைவி நீ! அழகிய மனைவி நீ! அறிவுப் பெண்மணி நீ! போகப் போக நீயே தெரிந்து கொள்வாய்! போர்ஷியா: அன்பு மனைவி, அழகு மனைவி, அறிவு மனைவி என்றெல்லாம் அடைமொழி கொடுத்து என்னை நீங்கள் ஏமாற்றுகிறீர்! நான் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் தராமல் மறைக்கிறீர். அவர்கள் யாரென்று சொல்லுங்கள்! யாரிடமும் நான் கூறப் போவதில்லை. புரூட்டஸ்: போகப் போகத் தெரிந்து கொள்வாய் போர்ஷியா! [அப்போது கதவைத் தட்டும் அரவம் கேட்கிறது] பார்! போர்ஷியா உள்ளே போ! யாரோ வருகிறார்? உள்ளே போ! நிம்மதியாக இரு! [போர்ஷியா உடனே உள்ளே போகிறாள். லூசியஸ் ஆழ்ந்து தூங்குகிறான். புரூட்டஸ் கதவைத் திறக்கச் செல்கிறார்] புரூட்டஸ்: யாரது மீண்டும் என்னைக் கலக்க வருகிறார்? முதலில் சதிக் கூட்டம்! அப்புறம் போர்ஷியா! அடுத்தினி என்னை யார் ஆட்டி வைக்க வருகிறார்? ஒருநாள் உறக்கம் போனது உயிர் போனது போல் உணர்கிறேன்! விதியே! சதி யாரை விழுங்கப் போகிறது? சீஸரையா? அல்லது புரூட்டஸையா? விதவை ஆகப் போவது கல்பூர்ணியாவா? அல்லது போர்ஷியாவா? சதி கால் முளைத்து நடக்க ஆரம்பித்து விட்டது! அந்த பூதத்தை யாராலுமினி நிறுத்த முடியாது! *********************   அங்கம் -5 காட்சி -5   மகத்தான மரணம், மர்மமான மரணம் புகட்டலாம் அதனை இரு விதங்களில் என்றோ ஒருநாள் சாவது உறுதி எப்படிச் சாவு வரும் நமக்கு எப்போது சாவு வரும் நமக்கு என்பதி லில்லை உறுதி!    ஸொகியால் ரின்போச், திபெத் வேதாந்தி   கடலில் பயணிக்க ஒரு படகையும், குடியிருந்து வாழ ஒரு வீட்டையும் முடிவு செய்வது போல நான் வாழ்வு யாத்திரை முடிக்க தேர்ந்தெ டுப்பது மரணத்தை! செனேகா, ரோமன் வேதாந்தி   வானும், பூமியும் வாழ்த்திடும் சீஸரை! வீணாய்க் கலக்கம், ஏனோ அறியேன்? நற்கனவே கல்பூர்ணியா கண்டது நேற்று! முற்றிலும் தவறு துர்க்கனா வென்பது! … தீஸியஸ் வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]   []   நாடகப் பாத்திரங்கள்: ரோமாபுரியில்: தளபதி மார்க் ஆண்டனி [35 வயது], மற்றும் செனட்டர்கள்: புரூட்டஸ் [35 வயது], காஸ்ஸியஸ் [30 வயது (புரூட்டஸின் மைத்துனன்)]. காஸ்கா [40 வயது], கவிஞர் சின்னா [35], சிசெரோ [50 வயது], அக்டேவியன் [24] டிரிபோனஸ் மற்றும் ஜூலியஸ் சீஸரின் மனைவி கல்பூர்ணியா [45 வயது]. ஒரு ஜோதிடன், காஸ்ஸியஸின் சதிகாரக் கூட்டம். பாம்ப்பியின் அனுதாபிகள். சீஸரின் சீடர்கள். ரோமானியப் படையாட்கள். பொது நபர்கள். []   நேரம், இடம்: சீஸர் பட்டாபிசேக தினம். அதிகாலை வேளை. ரோமாபுரி சீஸரின் மாளிகையில் படுக்கை அறை. நாடகப் பாத்திரங்கள்: ஜூலியஸ் சீஸர், சீஸரின் மனைவி கல்பூர்ணியா, பணியாள், செனட்டர் தீஸியஸ் காட்சி அமைப்பு: மார்ச் பதினைந்தாம் தேதி அதிகாலைப் பொழுது. இராப்பகலாய்ப் பயங்கரப் புயல், இடி, மின்னல், பேய்மழை தலை விரித்தாடி ரோமாபுரியைக் கொந்தளிக்க வைக்கின்றன. சீஸர் மெத்தையில் தூங்கிக் கொண்டிருக்கிறார். அருகில் உறங்கும் கல்பூர்ணியா பயங்கரக் கனவுகள் கண்டு கலங்கிப் புரண்டு அலறுகிறாள். சீஸர் தூக்கம் முறிந்து அதிர்ச்சியுடன் எழுந்து ஒன்றும் புரியாது நடமாடுகிறார். ஜூலியஸ் சீஸர்: வானமும், பூமியும் ஏனின்று கொந்தளித்துக் கூக்குரல் போடுகின்றன? மூன்று தரம் கல்பூர்ணியா தூக்கத்தில் அலறி விட்டாள்! “ஐயோ சீஸரைக் கொல்கிறார்” என்று மும்முறைக் கத்தி விட்டாள், கல்பூர்ணியா! பாழாய்ப் போன ராத்திரி அவளுக்குப் பயங்கரக் கனவுகளைக் காட்டி உலுக்கி விட்டது! யாருக்கு நெஞ்சுறுதி உள்ளது சீஸர் மீது வாளை வீசிட? அஞ்சாதே கல்பூர்ணியா! நான் உயிரோடுதான் உள்ளேன்! உன் கனவுக்கு ஓர் அர்த்த மில்லை! உன் கணவரைக் கொல்லும் எந்தப் பகைவனும் ரோமாபுரியில் இல்லை? அஞ்சாதே கண்ணே! அலறாதே கல்பூர்ணியா! …. யாரங்கே? பணியாள்: [உள்ளே விரைந்து] பிரபு! நான்தான் உங்கள் பணியாள். என்ன செய்ய வேண்டும், சொல்லுங்கள்? ஜூலியஸ் சீஸர்: போ! ஆலயப் பாதிரிகளைக் கண்டு விலங்குகளைப் பலியிடச் சொல்! குருதியைத் தொட்டு பின்னால் என்ன நடக்கப் போகுதென்று அவரை அறியச் சொல்! சொல்லும் தகவலைக் கேட்டு வா! சீக்கிரம் போ! பணியாள்: அப்படியே செய்கிறேன் பிரபு! [பணியாள் போகிறான். கல்பூர்ணியா கண்விழித்துப் பயமுடன் எழுந்து கவலையுடன் சீஸரை அண்டுகிறாள்] கல்பூர்ணியா: [சோக முகத்துடன்] என்ன சொல்கிறீர் பிரபு? வெளியே போகக் கூடாது நீங்கள்! வீட்டுப் படியைத் தாண்டி வெளியேறக் கூடாது நீங்கள்! வெளியேற விடமாட்டேன் நான்! நான் கண்ட தீக்கனா என் நெஞ்சைப் பிளந்து விட்டது! ஜூலியஸ் சீஸர்: ஏனப்படிச் சொல்கிறாய்? எனக்கென்ன நேரப் போகுது? என்னை பயமுறுத்துபவை முதுகுப் புறத்தில்தான் நிகழும். முகத்தைப் பார்த்தால் பயந்து ஓடிவிடும். கல்பூர்ணியா: பிரபு! சகுனங்களைப் பொருட் படுத்தாதவள் நான். ஆயினும் அவையின்று எனக்கு அச்சம் ஊட்டுகின்றன. பயங்கரக் கனவுகள் வந்து என்னை வாட்டுகின்றன. குழந்தை யில்லாத எனக்கு நீங்கள் ஒருவர்தான் உறவு! அந்த உறவு பறிபோவதாய்க் காட்டுது என் கனவு! என்ன சொல்வேன் என் அன்புக்குரியவரே! எப்படிச் சொல்வேன் என் ஆருயிரே! உங்கள் உயிருக்கு ஆபத்து என்றெண்ணும் போது என் எலும்பும், சதையும், ஆத்மாவும் ஆடுகின்றன! என்னிதயம் வில்லடி பட்ட பறவைபோல் துடிக்கிறது! கனவிலே உங்களைச் சுற்றிக் கூரிய கத்திகள் நெருங்கிடக் கண்டேன்! வீதியில் ஒரு வேங்கை குருதி சிந்தி வீறிட்டு ஓடுவதைக் கண்டேன்! பிரேதக் குழிகளில் எழுந்த பிணங்கள் உம்மைத் தழுவிக் கொள்வதைக் கண்டேன்! வானத்தில் பிசாசுகள் போரிட்டு மக்கள் மன்றத்தில் குருதி பொழியக் கண்டேன்! பேய்களும், பிணங்களும் தீயைக் கையில் ஏந்தித் தெருவெல்லாம் சுற்றி வரக் கண்டேன்! அவை எல்லாம் அடிவயிற்றைக் கலக்கி அச்சமும் பீதியும் அடைகிறேன்! மக்கள் மன்றத்துக்கு நீங்கள் போக வேண்டாம்! போகக் கூடாது! போக விடமாட்டேன்! []   ஜூலியஸ் சீஸர்: [கவலையுடன்] வரப் போகும் முடிவை யாரால் தடுக்க முடியும்? வருவது வந்தே தீரும்! வராததைக் கனவில் கண்டு வருமென நீ வருந்தலாமா? வரும் என்று நீ எதிர்பார்ப்பது வராது! வராது என்று வாளா விருக்கும் சமயம் வந்திடும் அது! விதியின் விளையாட்டு வேடிக்கையானது, மர்மமானது! பராக்கிரமன் சீஸர் அவற்றுக் கெல்லாம் பயந்தவனில்லை! அழைப்பை ஒப்புக் கொண்ட நான், மன்றத்துக் கின்று போகத்தான் வேண்டும், கல்பூர்ணியா! நீ கண்ட அபசகுனங்கள் சீஸருக்கு மட்டுமல்ல! ரோமானியர் அனைவருக்கும் எச்சரிக்கை அவை! கல்பூர்ணியா: உண்மை! முற்றிலும் உண்மை! உங்களுக்கு ஆபத்தென்றால் அது ரோமா புரிக்குத்தானே எச்சரிக்கை! பிச்சைக்காரன் செத்தால் வான்மீன் வருவதில்லை! சாவு மணி அடிப்பதில்லை! ஆனால் ஓர் வேந்தன் மாண்டால், வான மண்டலமே வெடித்துப் பிளக்கிறது! ஜூலியஸ் சீஸர்: கல்பூர்ணியா! ஆறிலும் சாவு! நூறிலும் சாவு! பிறப்பும், இறப்பும் நாணயத்தின் இரு முகங்கள்! கோழையர் மரணம் வருவதற்கு முன்பாகப் பன்முறை மடிவார்! வல்லவன் ஒருமுறைதான் சுவைக்கிறான் மரணத்தை! ஆச்சரியமாக உள்ளது! மரணம் மனிதனின் முடிவென்று அறிந்தும் ஏனவன் அதற்கு அஞ்சி ஒளிய வேண்டும்! அஞ்சி ஒளிந்தாலும், அவரை மரணம் தேடிப் பிடித்திடும்! யார் அதைத் தடுப்பார்? யார் அதிலிருந்து தப்புவார்? யார் அவரைக் காக்க முடியும்? [பணியாள் அப்போது ஓடி வருகிறான்] பணியாள்: பிரபு! சகுனத்தை விளக்கும் ஆலய ஜோதிடர் பலியிட்ட பிறகு சொன்னார், மன்றத்தில் உங்களுக்கு ஆபத்து வரலாம் என்று! ஜூலியஸ் சீஸர்: [அலட்சியமாக] ஆபத்து வரும் என்று உறுதியாகச் சொல்ல வில்லையே! வரலாம் என்றால் ஐயப்பாடு அல்லவா தொனிக்கிறது! தெய்வப் பீடாதிபதிகள் என்னைக் கோழையாக்க முயல்கிறார். சீஸர் ஒருபோதும் அஞ்சி ஒளிவ தில்லை! அபாயத்துக்குத் தெரியுமா, அபாயத்தை விட நான் அபாயமானவன் என்று! பராக்கிரம சீஸர் பயந்து பின்தங்க மாட்டான். கல்பூர்ணியா: [கெஞ்சலுடன்] பிரபு! ஊக்கமும், உறுதியும் உங்கள் அறிவை மீறுகிறது! துணிவும், பலமும் உங்களைக் குருடாக்குகிறது! சீஸரை நிறுத்தியது, கல்பூர்ணியாவின் அச்சம் என்று எண்ணிக் கொள்வீர்! அது என் முடிவாகட்டும்! மார்க் ஆண்டனியை அனுப்பி, சீஸருக்கு உடல்நல மில்லை என்று மன்றத்தில் அறிவிக்கச் சொல்வீர்! உங்கள் காலில் விழுந்து மன்றாடுகிறேன். [சீஸர் முன்பு மண்யிட்டு அழுகிறாள்] ஜூலியஸ் சீஸர்: [கேலிச் சிரிப்புடன்] “சீஸருக்கு நலமில்லை! மன்றத்துக் கின்று வரமாட்டார்!” என்று மார்க் ஆண்டனி சொன்னால், என்ன கேலிக் கூத்தாக இருக்கும்? செனட்டர் எல்லாரும் அதைக் கேட்டுச் சிரிக்காமல் இருப்பாரா? [பணியாள் வந்து செனட்டர் தீஸியஸ் வந்துள்ளதாக அறிவித்த பிறகு, தீஸியஸ் உள்ளே நுழைகிறார்] தீஸியஸ்: வணக்கம், மேன்மை மிகு தளபதியாரே! வணக்கம், மாண்பு மிகு கல்பூர்ணியா அம்மையாரே! நான் தளபதியை மக்கள் மன்றத்துக்கு அழைத்துச் செல்ல வந்திருக்கிறேன்! நீங்கள் தயாரானதும் உங்களுடன் வர புரூட்டஸ், ஆண்டனி, காஸ்ஸியஸ், காஸ்கா, சின்னா மற்றும் சில செனட்டர்கள் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஜூலியஸ் சீஸர்: [முகத்தைத் திருப்பிக் கொண்டு] நன்றி தீஸியஸ், நல்லது, பூரிப்படைகிறேன்! சரியான சமயத்தில் வந்திருக்கிறாய்! செனட்டருக்கு என் நன்றியை எடுத்துரை! ஆனால் மன்றத்துக்கு நான் வர முடியா தென்று சொல்! முடியா தென்பது சரியல்ல! மன்றத்துக்கு வரப் போவதில்லை என்று சொல்! கல்பூர்ணியா: [சட்டென] சீஸருக்கு உடல்நல மில்லை என்று சொல். சுகமின்றி சீஸர் வீட்டில் படுத்திருக்கிறார் என்று சொல்! ஜூலியஸ் சீஸர்: [தயக்கமுடன்] சீஸர் பொய் சொல்லாமா? கூடாது! கூடவே கூடாது! பேரவைக்கு சீஸர் வரப் போவதில்லை என்று சொல்! தீஸியஸ்: [தயக்கமுடன், கெஞ்சலில்] பராக்கிரம பிரபு! ஏதாவது ஒரு காரணம் நான் சொல்ல வேண்டாமா? அல்லது மன்றத்தில் என்னைப் பார்த்து எல்லாரும் கைகொட்டிச் சிரிக்க மாட்டாரா? ஜூலியஸ் சீஸர்: காரணம் என்ன? என் மன விருப்பம் என்று சொல்! செனட்டருக்கு அது போதும். ஆனால் உனக்கு மட்டும் உண்மைக் காரணம் சொல்கிறேன், நீ எனக்கு விருப்பமானன் என்னும் முறையில். கல்பூர்ணியா கெட்ட கனவு கண்டு என்னைத் தடுத்து விட்டாள்! நிறுத்தி என்னை வீட்டில் தங்க வைத்திருக்கிறாள். அவளது பயங்கரக் கனவில் என் சிலையைக் கண்டாளாம்! சிலை மீதிருந்து பல குருதி ஊற்றுக்கள் பீச்சி எழுவதைக் கண்டாளாம்! ரோமானிய மூர்க்கர் சிரித்துக் கொண்டு அந்தக் குருதியில் கைகளைக் குளிப்பாட்டினாராம்! அவற்றைக் கண்டதில் அச்சம் கொண்டு என்னை போக வேண்டாமெனத் தடுத்து மன்றாடுகிறாள்! தீஸியஸ்: [சிரித்துக் கொண்டு] வானமும், பூமியும் முன்கூட்டி சீஸரை வாழ்த்துவதைத் தவறாகப் புரிந்திருக்கிறார்! வானம் கொட்டி முழக்குது! பூமி புயலடித்துப் பூரிக்குது! மழை நீர்ப் பூக்களைத் தெளிக்குது! நீரும், நிலமும், வானும் ஒருங்கே சீஸரை வேந்தராக வரவேற்குது! சீஸர் சிலையில் பீறிட்டெழும் குருதி, ரோம சாம்ராஜியத்தை விரிவாக்க அவர் செய்த தியாகத்தைக் காட்டுகிறது! பராக்கிரமப் பிரபு! கல்பூர்ணியா நேற்று கண்டது நற்கனவே! துர்க்கனவாய் எடுத்துக் கொள்வது சரியல்ல! ஜூலியஸ் சீஸர்: [பேருகையுடன்] பார்த்தாயா கல்பூர்ணியா! தீஸியஸ் கூறும் விளக்கமே சிறந்ததாய்த் தெரியுது எனக்கு! உன் பயங்கர விளக்கம் தவறு! ஆலயப் பீடாதிபதிகள் சொன்னதும் தவறு! தீஸியஸ் சொல்வதே சரி. … தீஸியஸ்! நான் மன்றத்துக்கு வருவதாகச் செனட்டாரிடம் சொல்! கல்பூர்ணியா: [கண்ணீர் வடித்து] மகா பிரபு! தீஸியஸ் சொல்வதுதான் தவறு! என் மனதில் அப்படித் தோன்ற வில்லை! வல்லமை மிக்க விதி உங்களை வலை போட்டுப் பிடிக்கிறது! தீயஸிஸ் சொல்வதில் தீமை ஒளிந்துள்ளதாகத் தெரியுது எனக்கு! போகாதீர் பிரபு, போகாதீர்! தீஸியஸ்: பிரபு! செனட்டார் யாவரும் சீஸருக் கின்று பொற்கிரீடம் அணிவிக்கப் போவதாய்த் தீர்மானம் செய்துள்ளார்! தாங்கள் வரப் போவ தில்லை என்றால் அனைவரும் வருந்துவார்! பிறகு மனம் மாறி விடுவார். பெருஞ்சினங் கொண்டு மன்றத்தைக் கலைத்து விடுவார்! “தள்ளிப் போடுங்கள் பட்டாபிசேக நாளை, கல்பூர்ணியா நற்கனவு காணும் வரை!” என்று எள்ளி நகையாடுவார்! பிரபு! தங்கள் தலையை ஒப்பனை செய்த தங்கக் கிரீடம் தயாராக உள்ளது, மன்றத்தில்! தங்களை வேந்தராக ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறார் செனட்டார்! வாருங்கள் மன்றத்துக்கு! வந்து ஏற்றுக் கொள்வீர் வெகுமதியை! பராக்கிரம சீஸரே! உமது பொற்காலமிது! உமது மகத்தான பாராட்டு விழா இது! ஒருமுறைதான் வருமிது! விட்டுவிடாதீர் வீராதி வீரரே! ஜூலியஸ் சீஸர்: [கோபத்துடன்] எத்தகை அவமானத்தை எனக்கு உண்டாக்கி விட்டாய் கல்பூர்ணியா? உன் கனவைக் கேட்டு நான் ஒளிந்து கொள்வதா? தீஸியஸ்! வருகிறேன் மன்றத்துக்கு! மகிழ்ந்திடு கல்பூர்ணியா! …. யாரங்கே? கொண்டுவா எனது மேலங்கியை! குளித்து, முழுகி, ஆடை அணிந்து நான் தயாராக வேண்டும்! ….(மெதுவாக) ஆனால் தீஸியஸ்! இங்கு நடந்த அர்த்தமற்ற வாதங்களை வெளியில் எவருக்கும் சொல்லாதே! கல்பூர்ணியா என்னைத் தடுத்து நிறுத்தினாள் என்று யாரிடமும் கூறாதே! கெட்ட சகுனங்களைக் கண்டு சீஸர் அஞ்சினார் என்று எள்ளி நகையாட எவருக்கும் இடங் கொடாதே! … போ! சீஸர் மன்றத்துக்கு வருகிறார் என்று பறைசாற்று! என் பொற்காலம் உதயமாகட்டும்! [தீஸியஸ் போகிறான்] *********************   அங்கம் -5 காட்சி -6       பல்வித முகக் கவசம் பூண்டது மரணம்! மரணம் அறிவிக் காது வரும் தருணம்! வெடியோ, கடலோ, வெந்திடும் தீயோ, இடியோ, மின்னலோ, வாளோ, கயிறோ முடிவில் சாவது முன் தெரி யாது! ************* உலகப் பகட்டினில் உழலும் போது, நிழலாய்ப் பின்வரும் சாவினை அறியாய்! இடிபோல் தாக்கும் மனிதனை மரணம், தடாலெனத் தலையில் அடித்து! …. மரணப் படுக்கையில் புரள்வோன் ஆயுளை மருத்துவர் நீட்டலும் அரிதே! உந்தன் குருதேவர் கூட்டலும் அரிதே! ஜெட்ஸன் மிலரேப்பா, திபெத் கவியோகி   இலையுதிர் காலத்து முகில்போல் நிலை யிலாதது நமது வாழ்வு! கதக்களி போல் துவங்கி முடிவது, மனிதரின் பிறப்பும் இறப்பும்! வானில் அடிக்கும் மின்னல் வீச்சே, மானிடக் கால இறுதிக் காட்சி ! செங்குத் தான மலைமே லிருந்து உருண்டு வீழும், நதி போன்றதே நமது வாழ்வு! கௌதம புத்தர் (கி.மு.560-480)   கவனம் வைப்பீர் சீஸர்! புரூட்டஸ் மீதும், காஸ்ஸிஸ் மீதும் நம்பிக்கை வேண்டாம். காஸ்கா அருகிலே வராதீர்! தீஸியஸ் உம்மை நேசிக்க வில்லை! சின்னா மீது ஒருகண் வைப்பீர்! அன்னார் மனத்திலும் உள்ள தொன்றே! கடவுள் உம்மைக் காத்திட வேண்டும்! …… என் மடலைப் படித்தால் சீஸர் தப்புவார்! இன்றேல் விதியால் சதிக்கிரை யாவார்! .. [ஆர்டிமிடோரஸ், சீஸரின் நண்பன்] வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]   நெஞ்சுக்கும், நாவுக்கு மிடையே, நிற்குது மாபெரும் மலையே! ஆடவன் உள்ளமும், ஆயிழை உறுதியும் கூடவே என்னுடன் கொண்டுள்ளேன்! எத்தனைக் கடினம் இரகசியம் காப்பது உத்தமப் பெண்ணான ஒருத்திக்கு? .. [போர்ஷியா, புரூட்டஸின் மனைவி] வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்] []     ரோமாபுரியில்: தளபதி மார்க் ஆண்டனி [35 வயது], மற்றும் செனட்டர்கள்: புரூட்டஸ் [35 வயது], காஸ்ஸியஸ் [30 வயது (புரூட்டஸின் மைத்துனன்)]. காஸ்கா [40 வயது], கவிஞர் சின்னா [35], சிசெரோ [50 வயது], அக்டேவியன் [24] டிரிபோனஸ் மற்றும் ஜூலியஸ் சீஸரின் மனைவி கல்பூர்ணியா [45 வயது]. ஒரு ஜோதிடன், காஸ்ஸியஸின் சதிகாரக் கூட்டம். பாம்ப்பியின் அனுதாபிகள். சீஸரின் சீடர்கள். ரோமானியப் படையாட்கள். பொது நபர்கள். []     நேரம், இடம்:     சீஸர் பட்டாபிசேக தினம். காலை வேளை. ரோமாபுரியில் கிளியோபாத்ரா தங்கி இருக்கும் அரசாங்க விருந்தினர் மாளிகை.   நாடகப் பாத்திரங்கள்:     கிளியோபாத்ரா, சிறுவன் சிஸேரியன், சேடிகள், ஜூலியஸ் சீஸர், தீஸியஸ், புரூட்டஸ், ஆண்டனி, காஸ்ஸியஸ் மற்றும் சில செனட்டர்கள்.   காட்சி அமைப்பு:     மார்ச் பதினைந்தாம் தேதி காலைப் பொழுது. கிளியோபாத்ரா தன்னையும், மகனையும் ஒப்பனை செய்து கொண்டு மக்கள் மன்றத்துக்குச் செல்லத் தயாராக ஆசனத்தில் அமர்ந்திருக்கிறாள். ஜூலியஸ் சீஸர், தீஸியஸ், புரூட்டஸ், ஆண்டனி, காஸ்ஸியஸ் மற்றும் சில செனட்டர் புடைசூழ மக்கள் மன்றத்துக்கு வந்து கொண்டிருக்கிறார்.   கிளியோபாத்ரா: [மகிழ்ச்சியுடன்] கண்மணி! இன்றைக்குக் கொண்டாட்ட நாள்! உன் தந்தை ரோம் சாம்ராஜியத்துக்குச் சக்கரவர்த்தியாக மகுடம் சூடப் போகிறார்! ஒருகாலத்தில் இப்படி நீயும் ரோமாபுரிக்குப் பெரு வேந்தனாய் முடிசூட்டப் படுவாய்! நீயும், நானும் அந்த கோலாகல விழாவை நேராகக் காணப் போகிறோம். உன் தந்தை முதலில் நம்மைக் காண வருகிறார். அவருக்குப் பின்னால் நாமும் போகப் போகிறோம்!  சிஸேரியன்: [தாயைச் சுட்டிக் காட்டி] நீங்கள் எகிப்துக்கு மகாராணி! தந்தை ரோமாபுரிக்கு மகாராஜா! நான் எகிப்துக்கும் மகா இளவரசன்! ரோமுக்கும் இ ளவரசன் அல்லவா? கிளியோபாத்ரா: [சிரித்துக் கொண்டு] சரியாகச் சொன்னாய் கண்மணி! [கன்னத்தில் முத்தமிடுகிறாள்] உலகை ஆளப்போகும் நீ எதிர்கால அலெக்ஸாண்டர்! மகா, மகா இளவரசன்! நீ சைனாவைப் பிடிக்க வேண்டும் தெரியுமா? சிஸேரியன்: சைனாவுக்கு வழி தெரியாதே எனக்கு! அரிஸ்டாடில் மாதிரி எனக்கொரு குரு, முதலில் பாதை காட்டிக் கொடுக்க வேண்டுமே! கத்திச் சண்டை தெரியும் எனக்கு! ஏற்றி விட்டால் குதிரை ஓட்டத் தெரியும் எனக்கு! []   கிளியோபாத்ரா: அலெக்ஸாண்டிரியாவில் ஏற்பாடு செய்திருக்கிறேன், உனக்கொரு குருவை. கணித மேதை பித்தகோரஸ் வம்சாவளியில் வந்தவர்! உனக்குக் கணிதம், வான சாஸ்திரம், வரலாறு, பூகோளப் பாடம் அனைத்தும் சொல்லிக் கொடுப்பார்! [அப்போது சேடி ஒருத்தி சீஸர் வருவதை அறிவிக்கிறாள். சீஸர் செனட்டர்களை வாசலில் நிறுத்தி விட்டு கிளியோபாத்ரா மாளிகைக்குள் நுழைகிறார். கிளியோபாத்ரா எழுந்து சென்று சீஸரை வரவேற்கிறாள். சிஸேரியன் ஓடிச் சென்று சீஸர் கையப் பற்றுகிறான். மகனைத் தூக்கி முத்தமிடுகிறார் சீஸர். கிளியோபாத்ராவையும் முத்தமிடுகிறார்.] ஜூலியஸ் சீஸர்: கண்ணே! கிளியோபாத்ரா! மன்றத்துக்குப் போகிறேன் நான். நீ மகனைக் கூட்டிக் கொண்டு வருகிறாயா, என் முடிசூட்டு விழாவைக் காண! கிளியோபாத்ரா: [மகிழ்ச்சியுடன்] நானும், மகனும் வந்திருப்பது கோலாகல விழாவில் கலந்து கொள்ளத்தானே! உங்கள் பின்னால் என் தூக்கு ரதமும் வரும். நான் வராமல் போவேனா? என்ன கேள்வி யிது? ஜூலியஸ் சீஸர்: [சற்று கவலையுடன்] ஆனால் கல்பூர்ணியா வரப் போவதில்லை மன்றத்துக்கு! நானங்கு போவதும் பிடிக்க வில்லை அவளுக்கு! கிளியோபாத்ரா: [ஆச்சரியமுடன்] ஏன் கல்பூர்ணியா வரப்போவ தில்லை? நீங்கள் போவது ஏன் அவளுக்குப் பிடிக்க வில்லை? நான் உங்களுக்கு அருகில் இருப்பேன் என்று வருந்துகிறாளா? []   ஜூலியஸ் சீஸர்: என்னருகில் நீ இருப்பது அவளுக்கு வெறுப்பூட்ட வில்லை! நேற்றடித்த பயங்கரப் புயலிடி, மின்னல் அவள் மனதைப் பாதித்து விட்டது! படுக்கையில் பயங்கரக் கனவு கண்டு பலமுறை அலறி விட்டாள்! அந்தக் கனவில் என் சிலை மீதிருந்து குருதி பீறிட்டெழுவதைக் கண்டாளாம்! ரோமாரியில் பலர் தீப்பந்தங்கள் ஏந்தி வீதியெங்கும் பதறி ஓடுவதைக் கண்டாளாம்! வானிலிருந்து மலர் வளையம் ஒன்று பாம்ப்பியின் சிலைக் காலடியில் விழுவதைக் கண்டாளாம்! என்னுயிருக்குப் பயந்து என்னைத் தடுத்து நிறுத்த முயன்றாள்! கிளியோபாத்ரா: [ஆச்சரியமும், அச்சமும் கலந்து] அப்படியா! இப்போது நினைவுக்கு வருகிறது. எனது சூனியக்காரியும் ஒருமாதிரியாகச் சொன்னாள்! இப்போது புரிகிறது எனக்கு! பாம்ப்பியின் சிலை அடியில் மலர் வளையம் விழுந்ததா? அப்படி என்றால் உங்கள் பகைவர், உயிரிழந்த பாம்ப்பி உங்களைப் பலி வாங்கப் போவதாகத் தெரிகிறது எனக்கு! அவள் அஞ்சியது சரியே! சீஸர்! நீங்கள் மன்றத்துக்குப் போவதில் ஆபத்து இருப்பதாகத் தெரிகிறது எனக்கு! ஜூலியஸ் சீஸர்: [கவலையுடன்] எனக்கு கனவில் நம்பிக்கை யில்லை! ஆனால் உன் சூனியக்காரி என்ன சொன்னாள்? எனக்குச் சகுனத்தில் நம்பிக்கை யில்லை! ஆனால் அவள் கூற்றை விளக்கமாய்ச் சொல்! []   கிளியோபாத்ரா: இன்று காலை கடவுளைத் தியானிக்கத் தீ வளர்த்த போது சூனியக்காரி கண்மூடிச் சொன்னது: “ரோமுக்குக் கெட்ட காலம் வருகுது! ரோமானியர் தீ ஏந்தி தெருவெங்கும் ஓடப் போகிறார்! ரோமா புரியை விட்டுச் சிஸேரியனை அழைத்துப் படகில் போவேன் என்றாள்!” எனக்கு அப்போது ஒன்றும் புரிய வில்லை! சீஸர்! என் நெஞ்சில் அச்சம் உண்டாகுகிறது. நீங்கள் மன்றத்துக்குத் தனியாகப் போவது சரியாகத் தெரிய வில்லை! ஆண்டனியை அருகில் வைத்துக் கொள்ளுங்கள். சீஸர்! எனக்கும், நமது மகனுக்கும் கூட ஆபத்து உண்டாகலாம்! பாதுகாப்போடு இருக்க வேண்டும் நீங்களும், நாங்களும்! ஜூலியஸ் சீஸர்: [சிரித்துக் கொண்டு] அஞ்சாதே கிளியோபாத்ரா! எனக்கும் அச்சத்தை உண்டாக்காதே! உனக்கொன்றும் நேராது. எனக்கொன்றும் விளையாது! கல்பூர்ணியா போல் பேசி நீயும் என்னைத் தடுக்கிறாய்! சகுனங்களைக் கண்டு நான் அஞ்சி ஒளிபவனில்லை! கிளியோபாத்ரா! போர்க் களத்தில் நாற்புறத்திலும் பகைவர் முன்பாகவே நடமாடிய நான், யாரைக் கண்டும் அஞ்சுபவனில்லை! ரோமானிய செனட்டர் யாவரும் என்னாட்டு மாந்தர்! அன்னியர் அல்லர்! ஏனவர்க்கு நான் அஞ்ச வேண்டும்? நான் தினமும் அஞ்சி அஞ்சிச் சாகும் தெரு மனிதன் அல்லன்! கிளியோபாத்ரா: எனது தெய்வத்தை நான் வணங்குகிறேன்! உங்கள் தெய்வத்தை நீங்கள் வழிபடுங்கள்! உங்கள் உயிருக்கு ஆபத்தென்றால், எங்கள் கதி என்னவாகும்? மன்றத்தில் எங்களுக்கும் ஆபத்து ஏற்படலாம் அல்லவா? அன்னியரான நானும் மகனும் கவனமாகக் கண்விழிப்புடன் இருக்க வேண்டும். ஏதேனும் உங்களுக்கு நேர்ந்தால், எங்களுக்கும் ரோமில் ஆபத்து விளையலாம்! மன்றத்துக்கு நான் மகனுடன் செல்வதைப் பற்றி இப்போது சிந்திக்கிறேன்! []   ஜூலியஸ் சீஸர்: [கம்பீரமாக] கிளியோபாத்ரா, எனக்கொன்றும் நேராது! உனக்கொன்றும் நேராது! பட்டம் சூட்டும் விழாவில் நீ பங்கெடுக்காமல் போனால், மிக்க வேதனைப் படுவேன் நான்! மனதை மாற்றாதே கிளியோபாத்ரா! நீ வர வேண்டும். என் புதல்வன் வர வேண்டும். [அப்போது தீஸியஸ் உள்ளே நுழைகிறான்] தீஸியஸ்: மேதகு அதிபதி அவர்களே! நேரம் நெருங்கி விட்டது! நீங்கள் போகும் நேரம் வந்து விட்டது! செனட்டார் மன்றத்தில் காத்துக் கொண்டிருக்கிறார். வாருங்கள் போகலாம்! ஜூலியஸ் சீஸர்: [கிளியோபாத்ராவையும், மகனையும் முத்தமிட்டு] நான் போகிறேன் கல்பூர்ணியா! பின் தொடர்ந்து நீயும், மகனும் வாருங்கள்! [தீஸியஸ் உடன் வர, புரூட்டஸ், ஆண்டனி, காஸ்ஸியஸ் மற்றும் செனட்டார் பின்வர சீஸர் மக்கள் மன்றம் நோக்கிச் செல்கிறார்] *********************   அங்கம் -5 காட்சி -7   ஜூலியஸ் சீஸர் கொலை.   சீரோங்கும் ரோமாபுரிச் செம்மை நிலத்தில், சீஸர் செத்து வீழும் முன்பாக, பிரேதங்கள் குழியைக் காலி செய்து ஆடை உடுத்தி வீதியில் ஆடின, வானில் காணும் விண்மீன் ஒளிபோல்! பரிதியில் சிதறிய குருதித் துளிபோல்! கடல் தேவன் நெப்டியூன் கடாட்சம் படும் கிரகணப் பரிதியின் பிரளய நாள்போல்!    வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஹாம்லெட் நாடகம்]   தேடிச் செல்லாதே உன் மரணத்தை! தேடி வருதே உன்னை மரணம்! தேடிச்செல், மரணம் பூரணமாகும் திக்கினை நோக்கி! டாக் ஹாம்மர்ஷோல்டு.   மரணம் என்பது என்ன? உணர்ச்சி அதிர்வு கட்கு ஓய்வு! ஆசைகளின் அந்திமப் பிரிவு! சிந்தனைக் கோலங் கட்கு முடிவு! உடலின் உழைப்புக்கும் விடுப்பு! மார்கஸ் அரேலியஸ்   அஞ்சா நெஞ்சன் என்பவன் மெய்யாய் அஞ்சாத மனிதன் அல்லன், என்பேன்! அது மடமை, தர்க்க ரீதியில் தவறு! மகத்துவ மனம் பயத்தைத் தணித்து, இயற்கையில் நேரும் விபத்தை ஏற்று, தயங்காது செல்பவன் அஞ்சா மனிதன்! ஜோவானா பைல்லி, நாடக மேதை, கவிஞர்   அந்தோ! செத்ததும் செல்வ தெங்கோ? புதைந்து பனிமூடி முடங்குவ தெங்கோ? கண்காணா, காற்றிலாச் சிறையுட் பட்டு, பயங்கர மரண மென்று அலறுவதோ? கொடுமையிலும் மிகக் கோரம் அந்தோ! வில்லியம் ஷேக்ஸ்பியர் [Measure for Measure]   ஏற்றி வைத்த மெழுகு வர்த்தி ஒருநாள், காற்றில் அணைந்து விடும் குப்பென! நேற்று சுவாசித்து வாழ்ந்தவன் சாம்பல், ஆற்றில் கரைந் தோடு மின்று! []   ரோமாபுரியில்:    தளபதி மார்க் ஆண்டனி [35 வயது], மற்றும் செனட்டர்கள்: புரூட்டஸ் [35 வயது], காஸ்ஸியஸ் [30 வயது (புரூட்டஸின் மைத்துனன்)]. காஸ்கா [40 வயது], கவிஞர் சின்னா [35], சிசெரோ [50 வயது], அக்டேவியன் [24] டிரிபோனஸ் மற்றும் ஜூலியஸ் சீஸரின் மனைவி கல்பூர்ணியா [45 வயது]. ஒரு ஜோதிடன், காஸ்ஸியஸின் சதிகாரக் கூட்டம். பாம்ப்பியின் அனுதாபிகள். சீஸரின் சீடர்கள். ரோமானியப் படையாட்கள். பொது நபர்கள்.   []     நேரம், இடம்:    சீஸர் பட்டாபிசேக தினம். பகல் வேளை. ரோமாபுரியில் மக்கள் மன்றம் கூடுகிறது. பாம்ப்பியின் சிலைக்குக் கீழ் பெரிய ஆசனம் போடப்பட்டு உள்ளது. பக்கத்து மேடையில் தங்க மகுடம் ஒன்று வைக்கப் பட்டுள்ளது. மன்றத்துக்குப் போகும் மேற்படிக் கருகில் கிளியோபாத்ராவின் புதிய சிலை ஒன்று உருவாக்கப்பட்டு மன்றத்துக்கு வருவோரை வரவேற்க நிறுத்தப் பட்டுள்ளது.   நாடகப் பாத்திரங்கள்:    ஜூலியஸ் சீஸர், தீஸியஸ், புரூட்டஸ், ஆண்டனி, காஸ்ஸியஸ், காஸ்கா மற்றும் பல ரோமானிய செனட்டர்கள்.   காட்சி அமைப்பு:    மார்ச் பதினைந்தாம் தேதி பகல் வேளை. ஜூலியஸ் சீஸர், தீஸியஸ், புரூட்டஸ், ஆண்டனி, காஸ்ஸியஸ், காஸ்கா, சின்னா, மெத்தலஸ், திரிபோனஸ், ஆர்டிமிடோரஸ், பொப்பிலஸ் மற்றும் சில செனட்டர்கள் புடைசூழ மக்கள் மன்றத்துக்கு வந்து கொண்டிருக்கிறார். வழியில் ஜோதிட நிபுணன் சீஸர் முன்பாக எதிர்ப்படுகிறான். ஜூலியஸ் சீஸர்: [மன்றத்தின் அருகில் நின்று ஜோதிட நிபுணனைப் பார்த்துக் கேலியாகச் சிரித்து] என்னப்பா! மார்ச் பதினைந்தாம் தேதி வருது, வருது என்று எனக்குப் பயமூட்டினாயே! அதுவும் வந்தாயிற்றே! ஒன்றும் நேர வில்லையே எனக்கு! ஜோதிடர்: மேதகு சீஸரே! பதினைந்தாம் தேதி இன்னும் கடந்து செல்ல வில்லை என்பதை மறக்காதீர்! ஜூலியஸ் சீஸர்: ஜோதிடரே! நான் எதற்கும் அஞ்சி ஒளிய மாட்டேன். பயங்காட்டியே பிழைக்கும் நீ இனி என்கண் முன் எதிர்ப்படாதே! எதிரே கண்டால் உன்னைக் காலால் எற்றி விடுவேன்! கண்முன் நில்லாமல் ஓடிப் போய்விடு! ஜோதிடன்: [விரைந்து போய்க் கொண்டே] இதுதான் கடைசி முறை. நானினி உங்களைக் காணப் போவதில்லை! நீங்களும் என்னைக் காண மாட்டீர் இனிமேல்! [ஓடிப் போகிறான்] ஆர்டிமிடோரஸ்: [சீஸரை நிறுத்தித் தலை வணங்கி] மேதகு அதிபதி! வாழ்க நீடூழி! என் பட்டியலைத் படித்துப் பாருங்கள்! கட்டாயம் நீங்கள் வாசிக்க வேண்டும்! உங்கள் நண்பர் யார், பகைவர் யார் என்னும் அட்டவணை இது. தயவு செய்து படியுங்கள்! []   தீஸியஸ்: [சீஸர் முன் தலை வணங்கி] தளபதி வாழ்க! முதலில் என்னுடைய விண்ணப்பத்தை படியுங்கள். அவசர மில்லை அவன் பட்டியலுக்கு! என் பிரச்சனை முக்கிய மானது! படியுங்கள் இதை முதலில்! யார் உங்கள் நண்பர் என்று ஒருவன் எழுதிக் காட்ட வேண்டுமா? ரோமில் உங்களுக்குப் பகைவர்கள் கிடையா. ஆர்டிமிடோரஸ்: வாசிக்க வேண்டாம் அதை! உங்களை முதலில் அண்டியவன் நான்தான்! முதலில் வந்தவனுக்கு முதலிடம் அளிப்பீர்! தீஸியஸ் பிரச்சனையை தீர்க்க முடியாதது! என் பட்டியல் உங்களைப் பாதிக்கும்! ஏன் ரோமாபுரியையே பாதிக்கும்! ஒதுக்கித் தள்ளுங்கள் அவனை! எனது பட்டியல் பாதுகாப்பு நபர்களைச் சுட்டிக் காட்டும்! அவசரம் பாருங்கள்! அவசியம் பாருங்கள்! அலட்சியம் வேண்டாம்! காஸ்ஸியஸ்: போடா போ! உன் பட்டியலுக்கு என்ன அவசரம்? பாதையில் சீஸரை நிறுத்தி பட்டாபிசேக நேரத்தை வீணாகக் கடத்துகிறாய்! உன் விண்ணப்பத்தை மன்றத்துக்கு வந்து பின்னர் காட்டு! [சீஸர் தொடர்ந்து நடக்கிறார். மன்றத்தை அடைந்து பாம்ப்பியின் சிலைக்கருகில் உள்ள ஆசனத்தில் சீஸர் அமர்கிறார்.] பொப்பிலஸ்: [சீஸரை நெருங்கி மண்டியிட்டு] மேதகு மன்னா! அடியேன் வணக்கம்! நீண்ட காலம் நீங்கள் வாழ வேண்டும்! எனக்கொரு கோரிக்கை! நிறைவேற்ற வேண்டும்! உங்கள் பட்டாபிசேக நாளென்று எனக்கோர் வேண்டுகோள் உள்ளது! காஸ்ஸியஸ்: [புரூட்டஸிடம் மெதுவாகத் தடுமாறி, ஆங்காரமாய்] புரூட்டஸ்! நமது ரகசியம் கசிந்து யார் காதிலும் பட்டுவிடக் கூடாது! நமது திட்டம் விரைவில் நிறைவேற வேண்டும்! நமது மர்மச் சதி சீஸர் காதுக்கு எட்டுவதற்குள், நம் கத்திகள் முந்திக் கொள்ள வேண்டும். நமது சதித் திட்டம் வெளியானால், குத்திக் கொண்டு நான் செத்து வீழ்வேன்! புரூட்டஸ்! கால தாமதம் கூடாது! கத்திகள் விஷ நாக்குகளை நீட்ட வேண்டும், சீக்கிரம்! புரூட்டஸ்: சற்று பொறு காஸ்ஸியஸ்! புறாவைக் கூண்டில் அடைத்தாகி விட்டது! கையில் பிடிபட்ட புறா நம்மிட மிருந்து தப்ப முடியாது! நாம் அனைவரும் சீஸரைச் சுற்றி முற்றுகை இட வேண்டும்! நேரம் வந்து விட்டது, காஸ்ஸியஸ்! உறங்கும் வாளை ஓசையின்றி உருவுங்கள்! காஸ்ஸியஸ்: [மெதுவாக] புரூட்டஸ்! அதோ பாருங்கள்! நமது முதல் திட்டம்! காலத்தை அறிந்தவன் திரிபோனஸ்! ஆண்டனியைப் பின்புறமாய்க் கடத்திப் போகிறான்! … [காஸ்காவை நெருங்கி] சரியான சமயம்! சட்டெனச் செய்! சீஸரின் பின்பக்கம் செல்! அங்கே காத்து நில்! முதலில் நீதான் சீஸரின் முடிவு விழாவைத் துவங்க வேண்டும்! போ, காஸ்கா போ! பூனைபோல் நடந்து புலிபோல் தாக்கு! யானை சாகாது ஓரடியில்! அடுத்து அடிமேல் அடி வைப்பது நாங்கள்! போ, காஸ்கா போ! கால தாமதம் வேண்டாம்! []   மெத்திலஸ்: [திடீரென சீஸர் காலில் விழுந்து] பராக்கிரமச் சக்கரவர்த்தி! பாராளும் வேந்தே! வல்லமை மிக்க பிரபு! உலகம் சுற்றிய உங்கள் உன்னத பாதங்களில் விழுகிறேன்! என் தமையன் மீது பரிவு கொள்ள வேண்டும்! ஜூலியஸ் சீஸர்: சக்கரை மொழிகளில் என்னை மெழுகாக்க முனையாதே! கூழைக் கும்பிடு போட்டு வாளை நீட்டாதே! நீ எதற்கு என்னை நெருங்கி வருகிறாய் என்று தெரியும் எனக்கு! நாடு கடத்தப் பட்ட உன் தமையனுக்காக எதுவும் என்னிடம் கேளாதே! அவன் தேசத் துரோகி! தேசத் துரோகிகளை விலங்குபோல் வேட்டையாட வேண்டும்! உயிரோடு அவனை நான் விரட்டியதற்கு நீ பூரிப்படைய வேண்டும்! சீஸர் அவனைத் தண்டித்தது காரணமோடுதான்! போய்விடு! மெத்திலஸ்: [தலையைத் திருப்பி] மாபெரும் மக்கள் மன்றத்தில் என் குரலுக்கு வேறு ஆதரவு கிடையாதா? என் சகோதரனை மீண்டும் அனுமதிக்க எனக்கு வழிமொழிபவர் எவரு மில்லையா? [எழுகிறான்] புரூட்டஸ்: [தலை குனிந்து] உங்கள் கரத்தை முத்த மிடுகிறேன் சீஸர், முகத்துதிக்காக இல்லை! மெத்தலஸ் தமையனை நீங்கள் மன்னித்து, மீண்டும் ரோமானிய பிரஜையாக மாற அனுமதிப்பீர்! ஜூலியஸ் சீஸர்: [ஆச்சரியத்துடன், சினத்துடன்] புரூட்டஸ்! தேசத் துரோகியை நீயுமா மன்னிக்கச் சொல்கிறாய்? மெத்தலஸ் அயோக்கியன்! அவன் தமையன் அவனை விட அயோக்கியன்! அவனை நீ ஆதரித்து மன்னிக்கச் சொல்வது அதை விட அயோக்கியத்தனம்! [புரூட்டஸ் எழுந்து பின் செல்கிறான்] காஸ்ஸியஸ்: [சட்டென முன் வந்து தலைவணங்கி] மன்னிக்க வேண்டும் சீஸர்! மெத்தலஸ் தமையனை மன்னிக்க வேண்டும் நீங்கள்! தவறுவது மனித இயல்பு! மன்னிப்பது தெய்வ இயல்பு! ஆனால் தண்டிப்பது அரச இயல்பு என்று சொல்ல மாட்டேன் நான்! மெத்தலஸ் தமையனின் தண்டனையை நீக்கி நாடு திரும்ப அனுமதிப்பீர்! ஜூலியஸ் சீஸர்: காஸ்ஸியஸ்! உன்னைப் போல் நானிருந்தால், உருகிப் போவேன் நானும் ஒருகணம்! பிறரை மாற்ற உன்னைப் போல் பிரார்த்தனை செய்தால், நானும் மெழுகாய்ப் போவேன்! ஆனால் நானொரு துருவ நட்சத்திரம்! அதன் நிலைப்பு மாறாது! அதன் இருப்பிடம் மாறாது! அதன் ஒளிவீச்சு மாறாது! அதுபோல் என் மனமும் மாறாது! அவன் தமையன் வாழ்நாள் முழுதும் தண்டனை அனுபவிக்கத்தான் வேண்டும்! ¡வனுக்கு விடுவிப்பில்லை! சின்னா: [காஸ்ஸியஸ் எழுந்து நகர, மண்டியிடுகிறான்] சீஸர்! சீஸர்! சீஸர்! பரிவு கொள்வீர்! மன்னிப்பீர்! பரிதவிக்கும் பாபியை வர அனுமதிப்பீர்! []   ஜூலியஸ் சீஸர்: ஒலிம்பஸ் மலையை யாரும் நகர்த்த முடியாது! அலை, அலையாய் படை எடுத்தாலும், மலையை யாரும் தள்ள முடியாது! ஓநாயை வேங்கை வேட்டையாடத்தான் செய்யும். [திடீரெனப் பின்னாலிருந்து கத்தியால் முதுகில் குத்துகிறான் காஸ்கா. ஆவென அலறுகிறார் சீஸர். செனட்டார் அனைவரும் ஆவேசமுடன் எழுந்து, பயந்துபோய் ஆரவாரம் செய்கிறார்கள்.] காஸ்கா: [ஆங்காரமாய்க் கத்தியை உருவி] ஏன் முடியாது? வேங்கையின் மூச்சை நான் நிறுத்த முடியும்! [அடுத்தடுத்து தீஸியஸ், சின்னா, காஸ்ஸியஸ், திரிபோனஸ், மெத்தலஸ் ஆகியோர் சீஸர் உடம்பைக் குத்திக் கிழிக்கிறார். சீஸர் தடுமாறிக் கொண்டு புரூட்டஸ் உதவியை நாடி மெதுவாய்ச் செல்கிறார். சட்டெனத் திரும்பிய புரூட்டஸ் தன் கைவாளை உருவி, சீஸரின் வயிற்றில் பாய்ச்சுகிறான்.] ஜூலியஸ் சீஸர்: [கண்ணீர் சிந்தச் சிந்த] நீயுமா புரூட்டஸ்? பிறகு சீஸர் சாக வேண்டியதுதான்! [பொத்தென பாம்ப்பியின் சிலைக் காலடியில் சீஸர் விழுந்து உயிரை விடுகிறார். மக்கள் மன்றத்தில் கூச்சலுடன் செனட்டர்கள் அங்குமிங்கும் பயந்து ஓடுகிறார்கள்.] சின்னா: [கையில் வாளை உயர்த்தி] விடுதலை! விடுதலை! ரோமுக்கு விடுதலை! ஏதேட்சை அதிகாரம் ஒழிந்தது! தெருவெல்லாம் முரசடிப்பீர் செனட்டர்களே! செத்தொழிந்தான் சீஸர்! கொடுங்கோல் ஆட்சி ஒழிந்தது! தேச நேசர்கள் மேடையில் பேசுவார்! வெற்றி நமக்கு! விடுதலை நமக்கு! நல்ல காலம் நமக்கு! [தீஸியஸ், புரூட்டஸ், காஸ்ஸியஸ், காஸ்கா, சின்னா, மெத்தலஸ், திரிபோனஸ், ஆர்டிமிடோரஸ், பொப்பிலஸ் அனைவரும் குருதி சொட்டும் வாளை உயர்த்திக் கொண்டு செத்து வீழ்ந்த சீஸரின் உடலைச் சுற்றி வருகிறார்] *********************   அங்கம் -5 காட்சி -8 மன்னித் திடுவாய் என்னை! மண்ணில் துவளும் குருதித் துண்டமே! கசாப்புக் கடை கொலைஞர் முன்னே கனிவாய், கோழைபோல் காட்டிக் கொண்டேன்! காலச் சரித்திர அலை யடிப்பில் என்றும் மேலாய் நிமிர்ந்து வீழ்ந்த சிதைவுப் பிண்டமே! …     [ஆண்டனி]   வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]   ஓ! பராக்கிரம சீஸரே! இந்தக் கீழ் மண்ணிலா கிடக்குதுன் மேனி? உந்தன் வெற்றி, கீர்த்தி, வீராப்பு, மகிமை சிறுத்துப் போய் இப்படிச் சீரழிந்ததோ? எந்த உலகும் எனக்குவப் பூட்டா, இந்த யுகத்தின் உயர்ந்த ஆத்மா ஏகிச் சிந்திய குருதி ஓடிய தளம்போல்! … [ஆண்டனி] வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]   சீஸரை எதிர்த்தது ஏனெனக் கேட்பின் நான் தரும் பதில் இதுதான்: நான் சீஸரைக் குறைவாய் நேசிக்க வில்லை! நேசித்தேன் ரோமைச் சீஸர்க்கும் மேலாய்! சீஸர் வாழ்ந்து நாம் அடிமையாய்ச் சாவதினும், சீஸர் செத்து ரோமர் விடுதலை மேலாம்! நேசித்த சீஸரை நினைத்தழு கின்றேன்! பராக்கிர சீஸரைப் பாராட்டு கின்றேன், பேராசை பிடித்ததால், குத்தினேன் வயிற்றில்! மதிப்பு வல்லமைக்கு! மரணம் பேராசைக்கு! நாட்டை நேசிக்கா நபரிங்கு உளரோ? ….   (புரூட்டஸ் சொற்பொழிவு) வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]   விதியின் கொடுமை அறிவோம். ஒருநாள் நாம் சாவது உறுதி! காலத்தை நீடிக்க மனிதர் ஏன் கவனம் திருப்பிட வேண்டும் ? …. (புரூட்டஸ்) வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]   மானிட துயர்த்தீ ஓர் பயங்கரச் சக்தி செப்பணிடும் பண்பை, அறிவை, ஆத்மாவை! புதுப்பிக்கும் மானிட மகத்து வத்தை! அதுவே படைப்பின் கண்படா ஆணிவேர்! ஆக்கப் படுவது அருக முடியாது அச்சம் ஊட்டலாம்! நம்பிக்கை நீக்கலாம்! முரணாய், முறிவாய், புரட்சியாய்த் தோன்றலாம்! பெக் எலியட் மாயோ, பெண் கலைத்துவ மேதை   நினைவில் வைத்திடு நடக்கும் நண்பனே! உனைப் போல்நான் இருந்தேன் ஒருநாள்! எனைப்போல் நீயும் ஆவாய் ஒருநாள்! எனைத் தொடர்ந்து வரத் தயாராய் இரு! ஒரு கல்லறை வாசகம்     நாடகப் பாத்திரங்கள்:   ரோமாபுரியில்: தளபதி மார்க் ஆண்டனி [35 வயது], மற்றும் செனட்டர்கள்: புரூட்டஸ் [35 வயது], காஸ்ஸியஸ் [30 வயது (புரூட்டஸின் மைத்துனன்)]. காஸ்கா [40 வயது], கவிஞர் சின்னா [35], சிசெரோ [50 வயது], அக்டேவியன் [24] டிரிபோனஸ் மற்றும் ஜூலியஸ் சீஸரின் மனைவி கல்பூர்ணியா [45 வயது]. ஒரு ஜோதிடன், காஸ்ஸியஸின் சதிகாரக் கூட்டம். பாம்ப்பியின் அனுதாபிகள். சீஸரின் சீடர்கள். ரோமானியப் படையாட்கள். பொது நபர்கள்.   நேரம், இடம், கட்டம்: சீஸர் பட்டாபிசேக தினம். பகல் வேளை. ரோமாபுரியில் மக்கள் மன்றம் கூடியுள்ளது. பாம்ப்பியின் சிலைக்குக்கீழ் சீஸர் படுகொலை செய்யப்பட்டு குருதி ஓட விழுந்து கிடக்கிறார்.    நாடகப் பாத்திரங்கள்:    ஜூலியஸ் சீஸர், தீஸியஸ், புரூட்டஸ், ஆண்டனி, காஸ்ஸியஸ், காஸ்கா மற்றும் பல ரோமானிய செனட்டர்கள்.   காட்சி அமைப்பு:    மார்ச் பதினைந்தாம் தேதி பகல் வேளை. தீஸியஸ், புரூட்டஸ், காஸ்ஸியஸ், காஸ்கா, சின்னா, மெத்தலஸ், திரிபோனஸ், ஆர்டிமிடோரஸ், பொப்பிலஸ் மற்றும் சில செனட்டர்கள், குத்தப்பட்டுச் செத்துக் கிடக்கும் ஜூலியஸ் சீஸர் உடலைச் சுற்றிலும் நிற்கிறார்கள். செனட்டரும், பொது மக்களும் பயந்து போய் ஓடுகிறார்கள். சின்னா: [கையில் வாளை உயர்த்தி] விடுதலை! விடுதலை! ரோமுக்கு விடுதலை! ஏதேட்சை அதிகாரம் ஒழிந்தது! செத்தொழிந்தான் சீஸர்! தெருவெல்லாம் முரசடிப்பீர் செனட்டர்களே! கொடுங்கோல் ஆட்சி ஒழிந்தது! நாட்டு நேசர்கள் மேடையில் பேசுவார்! வெற்றி நமக்கு! விடுதலை நமக்கு! நல்ல காலம் நமக்கு! காஸ்ஸியஸ்: மேடையில் ஏறிப் பேசு சின்னா! [வாளை உயர்த்தி] விடுதலை முழக்கம் ரோமாபுரி முழுவதும் ஒலிக்க வேண்டும்! குரலை உயர்த்து! கதவுகளை ஊடுறுவி உன் விடுதலை முழக்கம் செல்ல வேண்டும்! புரூட்டஸ்: செனட்டர்களே! பொதுமக்களே! பயந்து ஓடாதீர்! உங்கள் உயிருக்குப் பங்கமில்லை! நமது பகைவர் செத்து வீழ்ந்தார்! எங்கள் கடமை முடிந்தது! ஓடாதீர்! உங்களை யாரும் தாக்கப் போவதில்லை! உங்களுக்காக, ரோமா புரிக்காகச் சீஸரை வீழ்த்தினோம். காஸ்ஸியஸ்: மேடையில் நின்று பேசுங்கள் புரூட்டஸ்! பண்பாளர் உங்கள் மொழிக்கு மதிப்புண்டு! புரூட்டஸ்: [திடீரென] எங்கே ஆண்டனி? கடத்திப் போனவர் என்ன ஆனார்? சீஸர் செத்து வீழ்ந்தது தெரியுமா ஆண்டனிக்கு? திரிபோனஸ்: புரூட்டஸ்! ஆண்டனி தன் இல்லத்துக்கு ஓடி விட்டதாய் அறிந்தேன்! சீஸர் கொல்லப் பட்டதை யாரோ சொல்லி யிருக்க வேண்டும்! பிரளயம் வந்து விட்டதாய் எண்ணி வீதியில் ஆண், பெண், சிறுவர், முதியோர் அலறிக் கொண்டு ஓடுகிறார். ஆண்டனியும் அப்படி ஓடிவிட்டார். புரூட்டஸ்: விதியின் விளையாட்டை நாம் அறிவோம். ஒருநாள் நாம் சாவது உறுதி! ஆயுளை நீடிக்க மனிதர் கனவு காண்பது விந்தையே! காஸ்கா: ஏன் புரூட்டஸ்? இருபது வருட ஆயுளை ஒருவன் வெட்டி விட்டால், அத்தனை வருட மரணப் பயம் அகற்றப் படுகிறது! புரூட்டஸ்: அப்படியானால் மரணம் வரவேற்கப்பட வேண்டிய நன்மையாயிற்றே! சீஸருக்கு அத்தகைய வெகுமதி அளித்ததைக் கொண்டாடுவோம். அவரது மரணப் பயத்தைக் குறைத்தோம்! நண்பர்களே! சீஸரைச் சுற்றி வட்டமாய் வாருங்கள்! நமது கரங்களைச் சீஸர் குருதியில் குளிப்பாட்டுவோம்! முழங்கை வரையிலும் பூசிக் கொள்வீர்! கை வாளையும் குருதியில் மூழ்க்குவீர்! குருதி சிந்தச்சிந்த அவ்வாளை உயர்த்திக் கொண்டு அங்காடித் தெருவில் நாம் நடந்து செல்வோம்! எல்லாரும் ஒருங்கே முழக்குவோம்: ரோமுக்கு விடுதலை! சமாதானம்! குடியரசு! காஸ்ஸியஸ்: ரோமாபுரிக்கு விடுதலை அளித்த வீரரென்று நம்மை வருங்காலம் பாராட்டும்! வரலாற்று நூல்களில் நமது பெயரைப் பதிவாக்கி நிரந்தர மாக்கும்! ரோமாபுரி நகரில் நமது சிலைகளை நட்டு மதிப்பளிக்கும்! நம் எல்லாரையும் புரூட்டஸ் வழிநடத்த, அவருக்கு ஆதரவு அளிப்பீர்! ஒதுங்கி நிற்பீர்! முன்னே செல்லட்டும் புரூட்டஸ்! பின்பற்றிச் செல்வோம் நாமெல்லாம்! ரோமாபுரி பெற்றெடுத்த பண்பாளர், பராக்கிரசாலி நமது புரூட்டஸ்! அங்காடி வீதிக்கு அவர் பின்னால் செல்வோம். புரூட்டஸ்: [மெதுவான குரலில்] அமைதி! பேச்சை சற்று நிறுத்துவீர்! … யாரிங்கே வருவது? அதோ ஆண்டனியின் வேலைக்காரன். [ஆண்டனியின் வேலையாள் நுழைகிறான்] வேலைக்காரன்: [புரூட்டஸ் முன் மண்டியிட்டு] என் பிரபு இப்படித்தான் உங்களை வணங்கச் சொன்னார். புரூட்டஸ் பண்பாளர், உண்மையாளர், வல்லவர், அறிவாளி என்று பாராட்டுகிறார். சீஸரைத் தைரியசாலி, பராக்கிரசாலி, திறமையான ஆட்சியாளர் என்று போற்றுகிறார். புரூட்டஸை நேசிப்பதாகவும், மதிப்பதாகவும் சொல்கிறார் அவர். சீஸருக்கு அவர் பயந்ததாகவும், ஆனால் நேசித்ததாகவும், மதித்ததாகவும் சொல்கிறார். உங்களைச் சந்திக்க அவர் வருவதில், உங்களுக்கு விருப்பம் உண்டா என்று கேட்கச் சொன்னார். பிரச்சனைகளைத் சமாதானமாய்த் தீர்த்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறார். சீஸரைக் கொலை பண்ணியது சரியா என்று மனமுடைகிறார். சீஸர் வீழ்ந்ததை மார்க் ஆண்டனி விரும்ப வில்லை! ஆயினும் நன்னம்பிக்கையுடன் உங்களிச் சந்திக்க விழைகிறார் என் அதிபதி! அவர் வருவதற்கு அனுமதி தருவீரா? புரூட்டஸ்: அனுமதி உண்டு ஆண்டனிக்கு! உன் அதிபதி உயர்ந்த ரோமன்! அழைத்து வா எங்களிடம்! அவருக்கு ஒரு தீங்கும் நேராது! எந்த இடரின்றி அவர் திரும்பிச் செல்லலாம்! போ, அவரை உடனே அழைத்து வா! அன்றும் அவர் எங்கள் நண்பர்தான்! இன்றும் அவர் எங்கள் நண்பர்தான்! [வேலைக்காரன் போகிறான்] []   காஸ்ஸியஸ்: [கவனகாக] புரூட்டஸ்! பழைய ஆண்டனி வேறு! புது ஆண்டனி வேறு! ஆண்டனி எப்படி மாறிப்போய் உள்ளார் என்று நமக்குத் தெரியாது! குத்துப்பட்டு செத்துக் கிடக்கும் சீஸரைப் பார்த்தால், ஆண்டனி இதயம் கொதித்து நம்மை எதிர்த்தால் என்ன செய்வது? தனியாக வராமல், ரோமானியப் படையுடன் வந்து நம்மைத் தாக்கினால் என்ன ஆவது? சிந்திக்காமல் சீஸரின் தோழனை நாம் நண்பன் என்று எதிர்பார்க்கலாமா? புரூட்டஸ்: கவலைப் படாதே காஸ்ஸியஸ்! நம்மைத் தாக்கும் திட்டம் உடையவன் முதலில் தன் பணியாளை அனுப்பி நம்மிடம் அனுமதி கேட்க மாட்டான்! திடீரென நம்மைத் தாக்க மாட்டானா? … அமைதி! ஆண்டனி வருவது போல் தெரிகிறது. [ஆண்டனி தனியாக நுழைகிறார். அவரது விழிகள் கீழே வீழ்ந்து கிடக்கும் சீஸரை முதலில் காண்கின்றன] ஆண்டனி: [சீஸர் உடலை நெருங்கி மண்டியிட்டுக் கண்ணீருடன்] அந்தோ, பராக்கிரம சீஸரே! படுத்துள்ள இடம் இத்தனைக் கீழான மண் தளமா? உங்கள் வெற்றி, கீர்த்தி, வீராப்பு, மகிமை எல்லாம் குறுகிப் போய் இத்தனை கீழான நிலைக்குச் சிறுத்து விட்டதா? [புரூட்டஸை நோக்கி] பெருந்தன்மை கொண்டவரே! யார் யாரெல்லாம் இன்னும் தம் உயிரைப் போக்க வேண்டும் என்று தீர்மானித்துள்ளீர்? யார் யார் குருதி எல்லாம் சீஸர் குருதியுடன் கலக்க வேண்டும் என்று வரிசைப் படுத்தியுள்ளீர்? உமது வாளில் குருதி உலர்வதற்குள் வேலையை முடித்து விடுவீர்! ஆயிரம் ஆண்டுகள் நான் வாழ்ந்தாலும், இப்படி ஒரு தருணமும், தளமும் வாய்க்கா எனக்கு! இந்த யுகத்தின் மகத்தான ஆத்மாவின் அருகிலே நானும் அடங்கிப் போவது, பூரிப்பு அளிக்கும் எனக்கு! புரூட்டஸ்: [பரிவுடன்] அப்படி எண்ணாதே ஆண்டனி! உன் மரணத்தை எங்களிடம் கேட்காதே ஆண்டனி! நீ ஓர் உயர்ந்த ரோமன்! சீஸரை வீழ்த்தி நாங்கள் ரோமின் விடுதலையைக் காத்தோம்! எங்கள் கைவாள் விடுதலை அளிப்பது! கசாப்புக்கடை அரிவாள் போல் ஆடுகளின் கழுத்தை அறுப்பபை அல்ல! குருதி சிந்திடும் எங்கள் கத்தியைப் பார்க்காதே! குணமுள்ள எமதினிய இதயத்தைப் பார்! எமக்கு நீ பகைவன் அல்லன்! நாங்கள் உனது நண்பர்! நம்பிடு எங்களை! நாங்கள் உன்னை மதிக்கிறோம்! எங்கள் புரட்சியை நீ ஏற்றுக் கொள்ள வேண்டும்! எங்கள் நாட்டு பணிக்கு நீ நல்லாதரவு அளிக்க வேண்டும். ஆண்டனி: [கண்ணீர் சொரிய] சீஸர் ஓர் உன்னத ரோமானியர்! உயர்ந்த ரோமானியர் எல்லாம் உயிரைக் கொடுக்க நேரிடுதே! அதனால் உங்கள் கையாலே நானும் உயிரிழக்கத் தயார். சீஸருக்கு நான் வாழ்விலும் தோழன்! சாவிலும் தோழனாக விழைகிறேன்! ஆனால் சாவதற்கு முன்னொரு வேண்டுகோள்! ..[தயக்கமுடன்] .. நீங்கள் ஏன் சீஸரை வீழ்த்தினீர் என்று காரணம் சொல்வீரா? புரூட்டஸ்: கவலைப் படாதே ஆண்டனி! காரணத்தைச் சொல்கிறேன் உனக்கு! அங்காடி மேடையில் நானின்று பேசப் போகிறேன்! கேட்டுக்கொள் ஆண்டனி! ஆனால் கேட்ட பிறகு நீ உன்னுயிரைக் கொடுக்க வேண்டாம்! உன்னுயிர் எம்மால் நீக்கப் படாது! சீஸரைத் தீர்த்துக் கட்டிய பிறகு, எங்கள் கடமை தீர்ந்தது! நாட்டுக்கு விடுதலை! நாட்டுக்குக் குடியரசு! நாட்டுக்கு நல்ல காலம்! ஆண்டனி: சீஸர் மடிந்ததால் நாட்டுக்கு நல்ல காலம் பிறக்குதா? எனக்குப் புரிய வில்லை! உங்கள் விருப்பம் நிறைவேற வேண்டும்! குருதி கலந்த உங்கள் கரங்களை நீட்டுங்கள்! ஒவ்வொன்றாக நான் குலுக்க வேண்டும்! நாட்டுக்கு நீங்கள் செய்த நற்பணிக்கு நன்றி! புரூட்டஸ்! பொன்னான உன் கரத்தை முதலில் கொடு! [குலுக்குகிறான்] அடுத்து காஸ்ஸியஸ் உன்கரம். [குலுக்குகிறான்] அடுத்து தீஸியஸ், மெத்தலெஸ், சின்னா, காஸ்கா. உங்கள் மகத்தான செயலுக்கு நன்றி! நண்பர்களே! சீஸரை நேசித்த நான், அவரைக் கொன்ற உங்கள் கைகளைக் குலுக்குவது சரியில்லைதான்! அவரது சடலத்துக்கு அருகில், குருதி உலர்வதற்குள் அவரது எதிரிகளுடன் உடன்படிக்கை செய்கிறேன். [கதறி அழுகிறான்] காஸ்ஸியஸ்: ஆண்டனி! என்ன சொல்கிறாய் நீ? முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறாயே! ஆண்டனி: மன்னித்துடு காஸ்ஸியஸ்! தெரியாமல் உளறிவிட்டேன்! நண்பர்கள் நீங்கள்! சீஸர் போனபின் நீங்கள்தான் என் நண்பர்! மறந்து விட்டேன், மன்னிப்பீர்! காஸ்ஸியஸ்: சீஸரைப் பற்றி நீ புகழ்வதை யாம் பொறுத்துக் கொள்கிறோம். ஆனால் எம்மை மட்டும் திட்டாதீர்! நாங்கள் அனைவரும் ஆழ்ந்து தர்க்கம் செய்து எடுத்த முடிவிது! உனக்குத் தெரியாது! ஆண்டனி: ஆம், தெரியாது எனக்கு! சீஸரை நீவீர் கொன்றதுக்குக் காரணம் சொல்வீரா? சீஸரால் ரோமுக்கு என்ன அபாயம் நேரும் என்பதை விளக்குவீர் எனக்கு! புரூட்டஸ்: ஆண்டனி! சீஸரின் புதல்வன் நீ! நிச்சயம் சொல்வேன் உனக்கு! அங்காடி மேடைக்கு வா! ஆண்டனி: [தயக்கமுடன்] முதலில் ஓர் அனுமதி வேண்டும், புரூட்டஸ்! சீஸரின் உடலை மேடையில் கிடத்திப் பேச வேண்டும் நண்பன் என்ற முறையில்! அனுமதிப்பீரா? புரூட்டஸ்: அனுமதி உண்டு ஆண்டனி உனக்கு! சீஸரின் பிரேதப் பேச்சை நிகழ்த்த நீயே தகுதி யானவன்! அவரது ஈமக் கிரியைகளை நீ செய்! அனுமதி அளிக்கிறோம்! காஸ்ஸியஸ்: [மிக்க கவனமாக] பொறு புரூட்டஸ்! தனியாகப் பேச வேண்டும் நான் உன்னுடன்! [தனியாக ஒதுக்குப் புறத்தில் இருவரும் போய்] என்ன செய்கிறீர் என்று தெரிகிறதா? ஆண்டனி அங்காடி மேடையில் பேசுவதற்கு ஒப்புக்கொள்ளாதீர்! சீஸர் பிரேதத்தை முன்வைத்து, ரோமானியர் கல்நெஞ்சைக் கூடக் கரைத்து விடுவான் ஆண்டனி! புரூட்டஸ்: முதலில் நான் பேசிச் சீஸரைக் கொன்றதின் காரணத்தைக் கூறுவேன்! நம் அனுமதியில் பேசும் ஆண்டனி தடம் மாறினால், தடுப்பேன் நான்! சீஸருக்குப் பிரேத அடக்கம் செய்ய சட்டப்படி ஆண்டனிக்கு அனுமதி அளிப்பதில் நமக்குத்தான் பாராட்டு. காஸ்ஸியஸ்: என்ன நேருமோ என்பது தெரியாது! புரூட்டஸ்! உமது கூற்றில் நம்பிக்கை யில்லை எனக்கு! ஊமையாகத் தோன்றும் ஆண்டனி ஓர் எரிமலை என்று உமக்குத் தெரியாது! புரூட்டஸ்: ஆண்டனி! சீஸரின் உடலை நீ தூக்கிச் செல்! அனுமதி உண்டு ஆண்டனி உனக்கு! மேடையில் சீஸரின் மேன்மையைப் பற்றிப் பேசு! பிரேதப் பேச்சில் விடுதலை வீரரைத் திட்டிப் பேசாதே! பேச்சு மீறினால், பிரேத அடக்கம் நிறுத்தப்படும்! உன்னக்கோர் எச்சரிக்கை அது! கவனம் வை! நான் பேசிய அதே தளத்தில் நின்றுதான் நீ உரையாற்ற வேண்டும்! குருதியில் ஊறிய உடலைத் துடைத்துத் தூக்கிக் கொண்டு வா! அல்லாவிட்டால் பார்ப்போர் மயங்கிப் போய் விழுவார்! நாங்கள் போகிறோம். எம்மைத் தொடர்ந்து வா! [அனைவரும் ஆண்டனியைத் தனியே விட்டுவிட்டு வெளியேறுகிறார்கள்] ஆண்டனி: [சீஸரின் உடலை உற்று நோக்கி] குருதியில் துவண்ட மண் துண்டமே! மன்னிப்பாய் என்னை! கசாப்புக் கடைக் கொலைஞர் முன்னே, கனிவாகக் கோழையாகக் காட்டிக் கொண்டேன்! மேலாக வாழ்ந்து சிதைக்கப் பட்ட மேதை மனிதரே! காலச் சரித்திரம் செதுக்கி வைத்த சிலையே! விலை மதிப்பில்லா உன் குருதியை வெளியாக்கிய கரங்களைக் கைகுலுக்கியதற்கு வேதனைப் படுகிறேன். இந்தக் கொடுமையான நாற்றம் பூமிக்கு மேலே போகும்! [அப்போது செனட்டர் அக்டேவியஸின் பணியாள் வருகிறான்] ஆண்டணி: [சட்டென எழுந்து] நீ அக்டேவியஸின் வேலைக்காரன் அல்லவா? பணியாள்: ஆம், மார்க் ஆண்டனி! ஆண்டனி: அக்டேவியஸ் ரோமுக்கு வரவேண்டும், பட்டாபிசேகத்தில் பங்கு ஏற்க வேண்டும் என்று சீஸர் அழைப்பு விட்டிருந்தார். பணியாள்: ஆம், அந்தக் கடிதம் கிடைத்தது. அக்டேவியஸ் ரோமை நோக்கி வந்து கொண்டிருக்கிறார். [அப்போது குனிந்தவன் குருதியில் துவண்ட சீஸரின் உடலைக் காண்கிறான்; ஆ வென்று அலறி] மேதகு சீஸர்! என்ன! செங்கோல் வேந்தருக்குச் செங்குருதிப் பட்டாபிசேகமா இது? [கதறி அழுகிறான்] ஆண்டனி: அழாதே! திரும்பிப் போ! அக்டேவியஸ் ரோமுக்கு வருவதை நிறுத்து! ரோமில் பயங்கரப் பூகம்பம் ஏற்பட்டுள்ளது! அதற்கு முதற்பலி ஆகிவிட்டார் சீஸர்! அடுத்தது நானாக இருக்கலாம்! அப்புறம் அக்டேவியஸ்! போ! ஓடிப் போ! அக்டேவியஸ் ரோமில் தடம் வைத்தால், அவர் தலை துண்டிக்கப் படலாம்! போ! போ! போ! [பணியாள் ஓடுகிறான்] ஆண்டனி: ரோமில் காட்டு மிருகங்கள் வேட்டையாட நுழைந்து விட்டன! ரோம் ஒரு பயங்கர நகரம்! சீஸருக்கு பிறகு ஆண்டனி! ஆண்டனிக்குப் பின்னே அக்டேவியஸ்! சீஸர் சடலத்தின் மீது பேசும் உரையில் நான் கேட்கப் போகிறேன்! சீஸர் உடலைக் குத்திக் குத்திக் கூறாக்கியது ஏனென்று கேட்கப் போகிறேன்! யாரெங்கே? சீஸரை என் கரங்களில் தூக்கிச் செல்ல வேண்டும்! என் கடைசி உரைகள் அவர் காதில் விழவேண்டும்! அவரது ஈமக் கிரியைகளை என் கரங்கள் செய்ய வேண்டும். சீஸரின் புதல்வன் எனப்படும் நான் அவர் உத்தம உடலுக்குத் தீ வைக்க வேண்டும்! [பணியாள் வந்து உதவி செய்ய, ஆண்டனி சீஸர் சடலத்தைத் தூக்கிச் செல்கிறார்] ********************* []   அங்கள் -5 காட்சி -9 உறவு என்றொரு விதி இருந்தால் பிரிவு என்றொரு முடி விருக்கும்! கனவுக்குப் பின்னோர் கதை பிறந்தால், சிதைவுக்கு வாசல் திறந்தி ருக்கும்! உலகுக்கு வழங்கும் ஈசன், கொடுத்த வற்றை எல்லாம் எடுத்துக் கொள்வான் மீண்டும்! தொட்ட பணிகளை அற்று விடுவான் முடிக்க விடாமல்!    ****** கதறி அழும் ரோமிங்கே! பயங்கர ரோமிங்கே! எனது மரண உரையைக் கேட்ட பின் எப்படி ஏற்பர் மக்கள், இரத்த வெறியர் கோரச் செயலை? வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]     []   நாடகப் பாத்திரங்கள்:    ரோமாபுரியில்:  தளபதி மார்க் ஆண்டனி [35 வயது], மற்றும் செனட்டர்கள்: புரூட்டஸ் [35 வயது], காஸ்ஸியஸ் [30 வயது (புரூட்டஸின் மைத்துனன்)]. காஸ்கா [40 வயது], கவிஞர் சின்னா [35], சிசெரோ [50 வயது], அக்டேவியன் [24] டிரிபோனஸ் மற்றும் ஜூலியஸ் சீஸரின் மனைவி கல்பூர்ணியா [45 வயது]. ஒரு ஜோதிடன், காஸ்ஸியஸின் சதிகாரக் கூட்டம். பாம்ப்பியின் அனுதாபிகள். சீஸரின் சீடர்கள். ரோமானியப் படையாட்கள். பொது நபர்கள்.   []     நேரம், இடம், கட்டம்: சீஸர் பட்டாபிசேக தினம். மாலை வேளை. ரோமாபுரியில் மக்கள் மன்றம் கூடிய சமயம் பாம்ப்பியின் சிலைக்குக்கீழ் சீஸர் படுகொலை செய்யப்பட்டுக் குருதியில் கிடக்கிறார். ஆண்டனி சீஸர் உடலை ஏந்திக் கொண்டு அங்காடி மேடைக்குப் போகிறார். மனமுடைந்த கல்பூர்ணியாவைக் காண கிளியோபாத்ரா மகனுடன், பாதுகாவலருடன் அவளது மாளிகைக்குச் செல்கிறாள். நாடகப் பாத்திரங்கள்:    கல்பூர்ணியா, அக்டேவியா, போர்ஷியா கிளியோபாத்ரா, மகன் சிஸேரியன், பாதுகாவலர், மற்றும் சேடியர்.   காட்சி அமைப்பு:    மார்ச் பதினைந்தாம் தேதி மாலை வேளை. கண்ணீரும் கம்பலையுமாய்ப் படுக்கையில் கல்பூர்ணியா அழுது கொண்டிருக்கிறாள். ஆண்டனியின் மனைவி அக்டேவியா, புரூட்டஸின் மனைவி போர்ஷியா ஆறுதல் கூறி அருகில் நிற்கிறார்கள். அப்போது கிளியோபாத்ரா நுழைகிறாள்.   அக்டேவியா: [மிகக் கனிவோடு] கல்பூர்ணியா! அழுது, அழுது கண்ணீர் ஆறாய் ஓடுகிறது! கண்ணீர் சுரப்பிகள் காய்ந்து போய் விட்டன! தொண்டை நீர் வரண்டு போனது! ராத்திரி உறக்க மில்லாததால் கண்விழிகள் வெளியே வந்து விட்டன! புலம்பிப் புலம்பி உன் நெஞ்சும் குழிந்து போனது. வயிற்றில் உணவின்றிக் கிடக்கிறாய்! எழுந்து சிறிது பழரசத்தைக் குடி! அல்லாவிட்டால் நீயும் சீஸரோடு சேர்ந்து போய் விடுவாய். கல்பூர்ணியா: [சிறிது தெளிவுடன்] சீஸரோடு போகத்தான் ஆசை! எப்படி உயிரைப் போக்கிக் கொள்ளலாம் என்றொரு வழியைக் காட்டு! நான் எதற்கினி உயிர் வாழ வேண்டும்? பிள்ளையும் கிடையாது! பதியும் கிடையாது. நஞ்சைக் குடித்து உயிரை மாய்த்துக் கொள்வேன். எத்தனை முறை தடுத்தேன் அவரை? மன்றத்துக்குப் போக வேண்டாம், போக வேண்டாம் என்று மன்றாடினேன்! கேட்டாரா? பாவிச் செனட்டர் தீஸியஸ் பதியை ஏமாற்றி இழுத்துச் சென்றான்! இடி, மழை, புயல், மின்னல் எதுவும் அவரை நிறுத்த முடிய வில்லை. []   போர்ஷியா: [கண்ணீருடன்] உன் துயருக்கு என் கணவரும் ஒரு காரண கர்த்தா என்று அறிந்து வருந்துகிறேன், கல்பூர்ணியா! நான் கேட்கக் கேட்கச் சொல்லாமல் மர்மாய்ச் செய்த படுகொலை இது! என் பதிக்குக் கிடைக்கும் தண்டனை எனக்கும் கிடைக்க வேண்டும்! செனட்டார் சேர்ந்து படுகொலை செய்ய சீஸர் செய்த குற்றம்தான் என்ன? கிளியோபாதா: [அழுது கொண்டு] கல்பூர்ணியா! நானும் சீஸரைத் தடுத்தேன்! என் எச்சரிக்கையையும் மீறித்தான் சென்றார்! ரோமாபுரிக்கு மீள வேண்டாம், சற்று பொறுங்கள் என்று எகிப்திலேயே தங்க வைக்க முயன்றேன். கேட்க வில்லை சீஸர்! [போர்ஷியாவை முறைத்து] எதற்காக முதலைக் கண்ணீர் வடிக்கிறாய் நீ? நீ புரூட்டஸைத் தடுக்க நிறுத்தி இருக்கலாம். ஆனால் தடுக்க வில்லை! சதியைப் பிறருக்குத் தெரிவித்திருக்கலாம். ஆனால் தெரிவிக்க வில்லை! புரூட்டஸ் தலைமையில் பல நாட்களாய்ச் சதிக் கூட்டம் மர்மமாய் நடமாடியது உனக்குத் தெரியாதா? போர்ஷியா: கிளியோபாத்ரா! நான் விடும் கண்ணீர் மெய்யானது! உண்மையைச் சொல்கிறேன்! என் வீட்டில்தான் செனட்டர் கூட்டம் நேற்று நடுநிசியில் குசுகுசுவெனப் பேசி முடிவெடுத்தது! என்ன பேசினார்கள் என்பது மெய்யாகத் தெரியாது எனக்கு! கூட்டம் சென்றபின் புரூட்டஸைக் கேட்டேன். மன்றாடிக் கேட்டேன். பலனில்லை கிளியோபாத்ரா [அழுகிறாள்]. நான் சீஸரைக் காப்பாற்றி யிருக்க முடியும். ஆனால் முடியாமல் போனதே! [கதறி அழுகிறாள்] கிளியோபாத்ரா: கல்பூர்ணியா! என் பதியாக சீஸர் எகிப்தில் வாழ்ந்தாலும், மெய்யாக சீஸர் உன் பதி! நீ பறிகொடுத்தது என் பதியில்லை! அவர் உன் பதி! சீஸர் எனக்கோர் விருந்தாளி! இப்போது நான் கண்ணீர் விடுவது, என் பதிக்கில்லை! உன் பதிக்கு! கல்பூர்ணியா: அப்படியானால் சீஸரின் அருமைப் புதல்வன் சிஸேரியன் கதி என்ன? அவன் உன் மகன் அல்லவா? நானிழந்தது போல் சீஸரை நீ யிழக்க வில்லையா? கிளியோபாத்ரா: எகிப்தை விட்டுச் சீஸர் எப்போது நீங்கினாரோ, அப்போதே எங்கள் உறவும் அற்று விட்டது, கல்பூர்ணியா! ஆனால் சிஸேரியன் என் மகனாயினும் அவன் சீஸரின் வாரிசு! ரோமா புரியின் எதிர்கால வேந்தன்! சீஸர் போனாலும், அவனை உன்னிடம் விட்டுச் செல்லலாமா என்று சிந்திக்கிறேன்! கல்பூர்ணியா: ஐயோ வேண்டாம் கிளியோபாத்ரா! வேண்டாம்! ரோமா புரியில் வேந்தராய் மகுடம் சூடப் போன சீஸருக்கு என்ன கதி ஆகி விட்டது? அதே கதிதான் சீஸரின் வாரிசுக்கும் கிடைக்கும்! நான் சொல்வதைக் கேள்! சீஸர் போனபின் சிறுவன் உன் மகன் என்பதை மறவாதே! உனக்குப் பகைவர்கள் மிகுதி ரோமா புரியில்! நீயினித் தங்குவது உனக்கு அபாயம்! சிறுவன் சிஸேரியனுக்கும் அபாயம்! சீக்கிரம் போய்விடு கிளியோபாத்ரா! போய்விடு! உன்னுரைக் காப்பாற்றிக் கொள்! உன் மகன் உயிரைக் காப்பாற்றிக் கொள்! கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்! சீஸருக்கு வந்த கத்திகள் அடுத்துச் சீஸரின் நேசருக்கும் வரும் என்பதை மறவாதே! கிளியோபாத்ரா: [சிந்தித்துக் கவலையோடு] நல்ல யோசனை கல்பூர்ணியா! ஆம், நாங்கள் தங்கி யிருப்பது நல்லதல்ல! செல்கிறோம் இப்போதே! யாருக்கும் தெரிய வேண்டாம்! ஆனால் ஆண்டனிக்கு மட்டும் சொல்லலாம். நான் வருகிறேன். கடவுள்தான் உனக்கும், ரோமா புரிக்கும் பரிவு காட்ட வேண்டும். [கிளியோபாத்ரா மகனுடன் விரைவாக வெளியேறுகிறாள்] []   *********************   அங்கம் -5 காட்சி -10 ஆண்டனி ஆற்றிய மரணப் பேருரை   பிறந்தவன் எவனும் மரணத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது ! மரணம் அனைவ ருக்கும் நண்பன்! எல்லா விதத் துயர்களி லிருந்தும் நமக்கு அது விடுதலை அளிப்பதால், நம் நன்றி உணர்வுக் குரியது!    மகாத்மா காந்தி (1869-1948)   சீஸரை சிறிதுதான் நேசித்தேன் எனச் சிந்திக் காதீர், ரோமர்காள்! நான் நேசித்தது மிகையாய் ரோமா புரியென நினைத் திடுவீர் அன்பர்காள்! சீஸர் வாழ்ந்து நீவீர் எல்லாம் அடிமையாய் மடிவதை விட, சீஸர் செத்து நீவீர் எல்லாம் விடுதலை அடைவது மேலானது! சீஸருக்கு விடுகிறேன் கண்ணீர், நெருங்கி நேசித்ததால் அவர் என்னை! ஆயினும் சீஸரைக் குத்தினேன் வாளால், அவர் ஆசை தன்னை அழித்திட ! …. (புரூட்டஸ்) வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]   []   ரோமாபுரியில்:    தளபதி மார்க் ஆண்டனி [35 வயது], மற்றும் செனட்டர்கள்: புரூட்டஸ் [35 வயது], காஸ்ஸியஸ் [30 வயது (புரூட்டஸின் மைத்துனன்)]. காஸ்கா [40 வயது], கவிஞர் சின்னா [35], சிசெரோ [50 வயது], அக்டேவியன் [24] டிரிபோனஸ் மற்றும் ஜூலியஸ் சீஸரின் மனைவி கல்பூர்ணியா [45 வயது]. ஒரு ஜோதிடன், காஸ்ஸியஸின் சதிகாரக் கூட்டம். பாம்ப்பியின் அனுதாபிகள். சீஸரின் சீடர்கள். ரோமானியப் படையாட்கள். பொது நபர்கள். []     நேரம், இடம், கட்டம்:    சீஸர் பட்டாபிசேக தினம். மார்ச் பதினைந்தாம் தேதி மாலை வேளை. ரோமாபுரியில் மக்கள் மன்றம் கூடிய சமயம் பாம்ப்பியின் சிலைக்குக்கீழ் படுகொலை செய்யப்பட்டுக் குருதியில் கிடக்கும் சீஸர் உடலை ஏந்திக் கொண்டு ஆண்டனி அங்காடி மேடைக்கு வருக்கிறார். மேடை முன்பு ரோமானியர் மரணச் சடங்கு உரைகளைக் கேட்க ஆர்வமோடு, ஆரவாரமோடு நிற்கிறார்கள்.   நாடகப் பாத்திரங்கள்:    புரூட்டஸ், காஸ்ஸியஸ், காஸ்கா, சின்னா மற்றும் சீஸர் கொலையில் ஈடுபட்ட சதிகாரர்கள், ஆண்டனி, ஆண்டனியின் தோழர்கள், ரோமானிய மக்கள்.   காட்சி அமைப்பு:    அங்காடி மேடையில் புரூட்டஸ் முதல் பேச்சாளராய் நிற்கிறார். பக்கத்தில் காஸ்ஸியஸ், காஸ்கா, சின்னா மற்றும் ஏனைய சதிகாரர் கையில் குருதியில் மூழ்க்கிய கைவாளை ஏந்தி விடுதலை வீரர்களாய்க் காட்டிக் கொண்டு நிமிர்ந்து நிற்கிறார்கள்.   பொதுமக்கள்: [கூக்குரலில்] பேசுங்கள்! புரூட்டஸ் பேசுங்கள்! சீஸரைக் கொன்றதின் காரணம் சொல்வீரா? காத்திருக்கிறோம் உங்கள் பேச்சைக் கேட்க. புரூட்டஸ்: [கையை உயர்த்தி] அமைதி! ரோமானியரே! அமைதி! என்னுரையைக் கேட்பீர்! சீஸரைக் கொன்ற எமது காரணம் கேட்பீர். என்னுரையைக் கேட்பவர் என்முன் தங்குவீர்! அதோ காஸ்ஸியஸ்! அவர் உரையைக் கேட்க அவர் பின்னால் செல்வீர். பொதுநபர் ஒருவர்: உங்கள் பேச்சைக் கேட்பேன் நான். நீங்கள்தான் பிரதானத் தலைவர் சதிக்கு! புரூட்டஸ்: ரோமர்களே! குடிமக்களே! அன்பர்களே! பொறுமையாய் இருப்பீர் இறுதிவரை. அமைதியாய்க் கேட்பீர்! எனது பண்பான தேசப் பணிக்கு மதிப்பளிப்பீர்! உங்கள் தெளிந்த ஞானத்தால் என்னை எடை போடுங்கள்! உங்கள் அறிவு விழித்து எழட்டும்! உங்களில் ஒருவர் சீஸரைக் கொன்றது ஏனென்று கேட்டால் என் பதிலிதுதான்! சீஸர் மீது நான் கொண்ட நேசிப்பு சிறிதில்லை! ஆனால் ரோமின் மீது நான் கொண்ட பற்று மிகுந்தது! அதுதான் காரணம்! சீஸர் ஏதேட்சைவாதியாய்த் தலைதூக்கி, ரோமானியர் அடிமைகளாய்க் கிடப்பதை விட, சீஸர் செத்து மடிந்து நீவீர் விடுதலை அடைவது மேல் அல்லவா? என்னை நேசித்த சீஸர் இறந்து போனதற்குக் கதறி அழுகிறேன்! ஆனால் அவரது பேராசையை ஒழிக்க அவரைக் கூரிய வாளால் குத்தினேன்! சீஸரின் பராக்கிரமத்திற்கு மெச்சுகிறேன்! ஆனால் அவரது பேராசைக்கு முடிவு அவரின் மரணம்தான்! யாரிங்கே உள்ளார் அடிமைகளாய் வாழும் ஆசையோடு? வாரீர் என் முன்னே! உங்களை நான் அவமதித்து விட்டேனா? யாரிங்கே உள்ளார் நாட்டின் மீது வாஞ்சை யில்லாதவர்? சொல்லுங்கள் பதில்! காத்திருக்கிறேன் உமது கருத்தறிய! []   கூட்டத்தில் சிலர் குரல்: இல்லை புரூட்டஸ்! இல்லை! நீவீர் செய்தது நியாயமே! சீஸருக்கு உகந்த வெகுமதி கிடைத்தது! நாட்டுக்கு செய்த உமது பணி உயர்ந்தது! ஈடு இணை அற்றது! பாராட்டுகிறோம் உம்மை! உன்னத தேச நேசர் சீஸரில்லை! உண்மையான தேச நேசர் நீங்கள்தான், புரூட்டஸ் நீங்கள்தான்! யாரையும் அவமதிக்க வில்லை நீங்கள்! புரூட்டஸ்: அப்படியானால் எவரையும் நான் அவமதிக்க வில்லை! கேட்கப் பூரிப்பாக உள்ளது. சீஸருக்கு நான் செய்தது போல்தான், நீங்கள் புரூட்டஸ¤க்குச் செய்கிறீர். நல்லது. கேளுங்கள்! சீஸரின் மரணச் சம்பவம் மக்கள் மன்றத்தில் பதிவாகி விட்டது! அவரது வெற்றிகள், சாதனைகள் எவையும் புறக்கணிக்கப்பட வில்லை! அதுபோல் சீஸரின் தவறுகள் எவையும் உயர்த்தப்பட்டு மேலாக எழுதப்பட வில்லை! சீஸர் செத்ததால் ரோமாபுரிக்கு விடுதலை! எங்கள் கடமை தீர்ந்தது! [அப்போது ஆண்டனி சீஸரின் உடலைத் தாங்கிய வண்ணம், கண்ணீர் சொரிய மேடை நோக்கி வருகிறார்] புரூட்டஸ்: ஈதோ! பாரீர்! துக்கப்படும் ஆண்டனியின் கரங்கள் ஏந்தி, சீஸரின் சடலம் வருகிறது! ஆண்டனி ஓர் உத்தமர்! சீஸரின் மரணத்தில் எங்களுடன் பங்கேற்க வில்லை ஆண்டனி! ஆனால் சீஸர் மரணத்தின் பலாபலனை முற்றும் அடைவார்! விடுதலை அடைந்த ரோமின் குடிமக்களில் ஒருவராய் இடம் பெறுவார்! சீஸர் மரணத்தால் உமக்குக் கிடைக்கும் வெகுமதி, நண்பர் ஆண்டனிக்கும் கிடைக்கும்! இத்துடன் என்னுரை முடிக்கிறேன், அன்பர்களே! நினைவில் வைப்பீர்! மீண்டும் ஒருமுறை உரைப்பேன்! அழுத்தமாய்ச் சொல்கிறேன்! என் ஆத்ம நண்பர் சீஸரை நான் கொன்றது, ரோமா புரியின் மேன்மைக்காகச் செய்தது! எனக்காகச் செய்ய வில்லை! உமக்காகச் செய்தேன்! மறக்காதீர்கள் அன்பர்களே! சீஸரைக் குத்திய அதே கத்திதான் என் கையில் உள்ளது! நாட்டுக்குத் தேவையானல் என்னுயிரையும் போக்கிக் கொள்ள நான் தயார், அதே கத்தியால்!   [புரூட்டஸ் மேடையிலிருந்து கீழே இறங்குகிறார்] பொதுமக்கள்: [ஒன்றாகக் கூக்குரலில்] வாழ்க, வாழ்க, புரூட்டஸ் வாழ்க! நீண்ட காலம் புரூட்டஸ் வாழ்க! பொதுநபரில் ஒருவர்: சிலை வைப்பீர் புரூட்டஸ¤க்கு! சிலை வைப்பீர் புரூட்டஸின் மனைவிக்கு! சிலை வைப்பீர் புரூட்டஸின் மூதாதையருக்கும், புரூட்டஸின் சந்ததியாருக்கும்! மற்றொருவர்: ரோமுக்குப் புரூட்டஸை அதிபதி ஆக்குவீர்! புரூட்டஸை அரசர் ஆக்குவீர்! சீஸரின் ஆசனத்தில் பண்பாளர் புரூட்டஸ் அமரட்டும்! ரோமா புரியை நேசிக்கும் புரூட்டஸ்தான் அதன் ஆட்சிப் பீடத்தில் அமரத் தகுதி பெற்றவர்! சீஸர் செத்தது நாட்டுக்கு நல்லது! நமக்கு நல்லது! நம் சந்ததிக்கும் நல்லது! மற்றொருவர்: ரோமைக் காப்பாற்றிய புரூட்டஸ¤க்கு சீஸரின் மகுடத்தைச் சூட்டுவீர்! புரூட்டஸ் நமது அடுத்த தளபதி! []   புரூட்டஸ்: [திரும்பிப் பார்த்து, தயக்கமுடன்] என்னருமை நாட்டவர்களே! என்ன சொல்கிறீர்? ரோமின் அரசியல் நியதி குடியாட்சி! முடியாட்சி வேண்டாம் உமக்கு! நீங்கள் என்னை மன்னராக்கி மகுடம் அளித்தால் அது செல்லாது! செனட்டார் முடிவு செய்ய வேண்டிய தீர்வுப் பதவி அல்லவா அது? ரோமர்களே! என்னைத் தனியே போக விடுவீர்! நான் சீஸரைப் போல் ஆளப் பிறந்தவன் அல்லன்! போய் வருகிறேன், மேடைக்கு ஆண்டனி ஏறிவரட்டும்! முடிந்து விட்டதென் பணி! ஆண்டனியின் உரையைக் கேளீர்! அவர் எங்கள் அனுமதியில் பேச வருகிறார்! சீஸருக்கு மூத்த மகனாகக் கருதப்படும் ஆண்டனி சீஸருக்கு மரண உரையாற்றி ஈமச் சடங்குகளைச் செய்யப் போகிறார்! எங்களைச் சேராத அவருக்குப் பேச அனுமதி தாருங்கள்! [புரூட்டஸ் சீஸர் சடலத்தைக் காணச் சகிக்காமல், முகத்தைத் திருப்பிக் கொண்டு வெளியேறுகிறார்] கூட்டத்தில் ஒருவன்: அமைதி! அமைதி! ஆண்டனி பேச்சைக் கேட்போம். அடுத்தவன்: மேடைக்கு ஏறிச்செல் ஆண்டனி! சீஸர் உடலைத் தரையில் இறக்கி வை! சீஸரைச் சுமந்தது போதும்! சீஸருக்கு நீங்கள் கண்ணீர் விட்டது போதும்! செத்த சீஸர் புதையப் போவது பூமியில்! பேச்சைத் துவங்குவீர்! [சீஸரின் சடலத்தைப் பூமியில் கிடத்தி, ஆண்டனி மேடைக்குச் செல்கிறான்] ஆண்டனி: [கண்ணீரைத் துணியில் துடைத்துக் கொண்டு] மிக்க நன்றி புரூட்டஸ்! நான் புரூட்டஸ் அனுமதி பெற்றுப் பேச வந்திருக்கிறேன். தனியே வந்திருக்கிறேன், சீஸர் சடலத்துடன்! [கண்ணீரைத் துடைத்துக் கொண்டு] நான் நின்றாலும், பாரீர் என் கண்ணீர் நிற்க மறுக்கிறது! உங்களைக் காணத் தடையாய் என் கண்ணீர் திரையிடுகிறது! கொஞ்சம் அவகாசம் கொடுங்கள், கண்ணீர் நிற்கும் வரை! முன்னிற்கும் ஒருவன்: அந்தோ பாவம் ஆண்டனி! கண்ணீர் தைபர் நதிபோல் கரை புரண்டு ஓடுகிறது! மங்கலான கண்களால் எப்படி நம்மைக் காண முடியும்? என் கண்களைக் கொடுக்கத் தயார், ஆனால் எப்படிக் கொடுப்பது? … அமைதி! அமைதி! ஈதோ ஆண்டனி பேசப் போகிறார்! ஆண்டனி: [தழுதழுத்த குரலில், சீஸர் சடலத்துக்கு அருகில் நின்று துக்கமோடு] நண்பர்காள்! ரோமர்காள்! நாட்டு மக்காள்! சீஸரை நான் புதைக்க வந்துளேன்! புகழ்த்த வந்திலேன்! மனிதரின் தீங்குகள் மறைந்தபின் நிலைபெறும்! நற்பணி யாவும் புதைபடும் எலும்புடன்! சீஸரைப் பேராசை யாளராய் ஏசினார் புரூட்டஸ்! பண்புள்ள புரூட்டஸ்! அப்படி யாகின் அது வருத்திடும் தவறு! அதற்குச் சீஸர் தன்னுயிர் நீத்தார்! புரூட்டஸ் மற்ற புரட்சியர் அனுமதிக்க உரைதனை ஆற்ற வந்துளேன் ஈங்கு! புரூட்டஸ் மிக்க பண்பாடு உடையவர்! அத்தனை பேரும் பண்புடை மாந்தர்! சீஸரின் அகால மரணச் சடங்கில் பேச வந்துளேன்! அவரென் நண்பர், நம்பிக்கை யானவர், நியாய வாதி! ஆனால் ஆசையாளி என்றார் புரூட்டஸ்! புரூட்டஸ் உன்னதப் பண்பாடு உடையவர்! []     பன்னாடுகள் வென்று பொற்காசுகள் திரட்டி அடிமைகள் பிடித்துப் பெரும்பணம் உருட்டி ரோமின் பொக்கிசம் நிரப்பிய சீஸரா பேராசை மனிதர்? பேராசை மனிதர்? ஏழையர் கதறிடச் சீஸரும் அழுதார்! கல்நெஞ் சாளர் கைக்கொளும் வேட்கை! சீஸரை ஆசை யாளியாய்க் காட்டுமா? ஆயினும் கூறினார் அரிய புரூட்டஸ் சீஸர் ஓர் பேராசைக் காரர் என்று! உன்னத பண்பாடு உடையவர் புரூட்டஸ்! அன்று நான் மும்முறை சீஸருக்கு மகுடம் சூட்டப் புகுந்த வேளை ஏற்றிலர் சீஸர்! இதுவா பேரவா? ஆயினும் சொன்னார் பேராசை என்று, உன்னத புரூட்டஸ் ! உண்மையா அது ? மெய்யாய்ப் புரூட்டஸ் மேன்மை யானவர் ! புரூட்டஸ் உரைத்ததைத் தவறெனக் கூறி நிரூபிக்க வர வில்லை நானிங்கு! எனக்குத் தெரிந்ததை எடுத்துச் சொன்னேன்! காரண மோடுதான் ஒருகா லத்தில் நீவீர் யாவரும் நேசித்தீர் சீஸரை! எந்தக் காரணம் உமது துயரை இந்தக் கணத்தில் நிறுத்திட முடியும் ? நீதியே! நீ எங்கே போனாய் ? விலங்கின மூர்க் கத்தை நோக்கி ஓடிவிட் டாயா? மனிதர் இங்கே நன்னெறி மறந்தார்! மன்னித் திடுமின்! சீஸரின் சவத்தொடு சேர்ந்துள தென்மனம்! திரும்பிடும் வரைநான் இருந்திட வேண்டுமே! முதல் நபர்: ஆண்டனி பேசுவதில் அர்த்தம் உள்ளது! கேட்டீரா? மும்முறை கிரீடத்தை அணிவித்த போது அம்முறை ஏற்றுக் கொள்ள வில்லை சீஸர்! நிச்சயம் அவர் ஒரு பேராசைக்காரர் இல்லை! அடுத்த நபர்: பாருங்கள்! அழுது, அழுது ஆண்டனி கண்களில் செந்நிறம் பூத்துக் கனல் பறக்கிறது! முதல் நபர்: ஆண்டனி போன்ற ஓர் புனித மனிதன் ரோம் எங்கிலும் கிடையாது! இரண்டாம் நபர்: பேசியது போதும், ஈதோ ஆண்டனி தொடர்ந்து பேசப் போகிறார். *********************   அங்கம் -5 காட்சி -11 சீஸரின் புண்கள் பேசா வாய்கள்! எனக்காய் நீவீர் இயங்கிடச் செய்வீர்! ….. இங்குதான் குத்தினான் வஞ்சகக் காஸ்கா! இனிய புரூட்டஸ் குத்தியது இங்கே !… பாம்ப்பியின் சிலைக் காலடியில் சீறிடும் குருதி சிந்தச் சிந்த சீஸரும் வீழ்ந்தார் ! சீஸர் வீழ்ந்ததும் மோசச் சதிதான் நேசர் நம்மேல் வீசிச் சென்றிட நீங்களும் நானும் ஏங்கியே வீழ்ந்தோம்! எத்தகை வீழ்ச்சி என்னாட் டவர்காள்! ….   (ஆண்டனி) வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]     []   நாடகப் பாத்திரங்கள்:   ரோமாபுரியில்:    தளபதி மார்க் ஆண்டனி [35 வயது], மற்றும் செனட்டர்கள்: புரூட்டஸ் [35 வயது], காஸ்ஸியஸ் [30 வயது (புரூட்டஸின் மைத்துனன்)]. காஸ்கா [40 வயது], கவிஞர் சின்னா [35], சிசெரோ [50 வயது], அக்டேவியன் [24] டிரிபோனஸ் மற்றும் ஜூலியஸ் சீஸரின் மனைவி கல்பூர்ணியா [45 வயது]. ஒரு ஜோதிடன், காஸ்ஸியஸின் சதிகாரக் கூட்டம். பாம்ப்பியின் அனுதாபிகள். சீஸரின் சீடர்கள். ரோமானியப் படையாட்கள். பொது நபர்கள்.     []     நேரம், இடம், கட்டம்:    சீஸர் பட்டாபிசேக தினம். மார்ச் பதினைந்தாம் தேதி மாலை வேளை. ரோமாபுரியில் மக்கள் மன்றம் கூடிய சமயம் பாம்ப்பியின் சிலைக்குக்கீழ் படுகொலை செய்யப்பட்டுக் குருதியில் கிடக்கும் சீஸர் உடலை ஏந்திக் கொண்டு ஆண்டனி அங்காடி மேடைக்கு வருக்கிறார். மேடை முன்பு ரோமானியர் மரணச் சடங்கு உரைகளைக் கேட்க ஆர்வமோடு, ஆரவாரமோடு நிற்கிறார்கள்.   நாடகப் பாத்திரங்கள்:    புரூட்டஸ், காஸ்ஸியஸ், காஸ்கா, சின்னா மற்றும் சீஸர் கொலையில் ஈடுபட்ட சதிகாரர்கள், ஆண்டனி, ஆண்டனியின் தோழர்கள், ரோமானிய மக்கள்.   காட்சி அமைப்பு:    அங்காடி மேடையில் புரூட்டஸ் முதல் பேச்சாளராய் நிற்கிறார். பக்கத்தில் காஸ்ஸியஸ், காஸ்கா, சின்னா மற்றும் ஏனைய சதிகாரர் கையில் குருதியில் மூழ்க்கிய கைவாளை ஏந்தி விடுதலை வீரர்களாய்க் காட்டிக் கொண்டு நிமிர்ந்து நிற்கிறார்கள்.   இரண்டாம் நபர்: பேசியது போதும், ஈதோ ஆண்டனி தொடர்ந்து பேசப் போகிறார். ஆண்டனி: [மேடையில் நின்று தொடர்கிறார்] நேற்று சீஸரின் வாய்ச்சொல் வலுத்து நின்றது உலகின் முன்பு ! ஈதோ கிடக்குது அவர் உடல், எளியோர் கூட நோக்கி மதிக்கா வண்ணம்! என் மேலதி பதிகளே! நான்பழி வாங்கிக், கலகம் விளைந்திட மக்கள் மனதை உசுப்பி விட்டால், தவறி ழைப்பேன் புரூட்டஸ், காஸ்ஸியஸ் ஆகி யோர்க்கு! இருவரும் அறிவீர் மாபெரும் ரோமர் ! ஈதோ பாரீர் ! சீஸரின் சாசனம் ! கையெழுத் தோடு கண்டேன் பெட்டியில்! ஆயினும் மன்னிப்பீர் என்னை, அதைப் படித்திட விரும்பேன்! அதனைக் கேட்டால் அனைவரும் சீஸரின், செத்த புண்களை முத்தமிட வருவீர்! புனிதக் குருதியில் துணிகளை மூழ்க்கிச் சீஸரின் மயிரைச் சிறிது கொடுவென நேசமாய்க் கேட்பீர்  நினைவில் வைத்திட! சாகும் சமயம் உமது உயில் எழுதி சந்ததி களுக்கும் சொந்தப் படுத்துவீர்!   []     முதல் நபர்: வாசிப்பாய் உடனே அந்த சாசனத்தை, ஆண்டனி! இரண்டாம் நபர்: சாசனம்! சாசனம்! சீஸரின் சாசனம்! வாசிப்பாய் சீஸரின் சாசனம்! ஆண்டனி: பொறுப்பீர் அன்பு நண்பர்களே, பொறுப்பீர்! நான் அதைப் படிப்பது தவறு! சீஸர் உம்மை நேசித்த பாங்கை நீவீர் அறிவது சரி யில்லை ! மரமில்லை நீவீர்! கல்லில்லை நீவீர்! மக்களே நீவீர்! சீஸரின் உயிலை மனிதராய்க் கேட்பின், உம்மைக் கொதித்தெழச் செய்யும், பித்தராய் ஆக்கி! தெரியா திருப்பதே உமக்கு நல்லது, நீவீர் அவரது வாரிசு என்று! அறிந்தால் உமக்கு ஆவது என்னவோ ? முதல் நபர்: உயிலை வாசிப்பாய்! உடனே வாசிப்பாய்! சீஸர் உயிலை வாசி! பலரது கூக்குரல்: சாசனம் வாசி! சீஸரின் சாசனம்! யாமதைக் கேட்போம்! ஆண்டனி: அமைதி! அமைதி! பொறுப்பீர் ஒருகணம்! எல்லை மீறிச் சென்று விட்டேன்! குத்திக் கொன்ற உத்தமர்க் கெதிராய் பேசி விட்டேன், பெரும்பிழை செய்தேன்! சீஸரின் சாசனம் வாசிக்க மறுப்பேன்! மன்னிப்பீர் என்னை, அன்புடை மக்காள்! இரண்டாம் நபர்: துரோகிகள் அவர்! உத்தமரா அவர்? அடுத்தவன்: கொலைப் பித்தர்கள் அவர்! குணவாளரா அவர்? முதல் நபர்: முதலில் படியப்பா உயிலை! என்னதான் எழுதி வைத்திருக்கிறார் சீஸர்?   ஆண்டனி: அப்படி யானால் கேட்பீர்  அவரது உயிலை! கட்டாய மாக வாசிக்க வைத்தீர்! எனது சொற்படிச் செய்வீர் முதலில் ! வட்டமாய்ச் சவத்தைச் சுற்றி நிற்பீர்! சாசனம் வடித்த சீஸரைக் காண்பீர்! கீழிறங்கி நானவர் அருகில் வரவா? அனுமதி தருவீரா? முதல் நபர்: அனுமதி உண்டு, ஆண்டனி உனக்கு! இரண்டாம் நபர்:  சீஸர் சவத்தைச் சுற்றி வட்டமாய் நிற்பீர்! முதல் நபர்: இடம் அளிப்பீர் ஆண்டனி நுழைய. [சீஸர் உடலைச் சுற்றி வட்டமாக நிற்கிறார்கள்] ஆண்டனி: கண்ணீர் இருந்தால் சொட்டுவீர் இக்கணம்! இந்த அங்கியை யாவரும் அறிவீர்! கோடை மாலையில் முதல்முறை அணிந்தார்! நெர்வியை வென்றது போது கிடைத்தது. காண்பீர், இங்குதான் ஆழமாய்க் குத்திக் கிழித்தான் ஆங்காரக் காஸ்ஸியஸ்! இங்குதான் குத்தினான், வஞ்சகக் காஸ்கா! இங்கே குத்தினார் இனியர் புரூட்டஸ் ! கத்தியை புரூட்டஸ் எடுத்ததும் பீறிட்டு கதவை உடைத்தது போல் விரைந்து வெளியே குருதி வந்ததைப் பாரீர்! ஏனெனில் புரூட்டஸ் சீஸரின் நேசன்! உத்தமன் புரூட்டர் குத்துதல் முறையா? செப்பிடு நீதி ! தீர்ப்பளி தெய்வமே! எப்படி நேசித்தார் புரூட்டஸை சீஸர்? அனைத்திலும் கொடூரக் குத்து தான்அது! குணவான் சீஸர் புரூட்டஸ் குத்தவும் பலத்தை இழந்தார்! பலிக்கிரை யாகிப் பாம்ப்பியின் சிலைக் காலடியில் சீறிடும் குருதி சிந்தச் சிந்த சீஸரும் விழுந்தார்! எத்தகை வீழ்ச்சி என்னாட் டவர்காள்! சீஸர் வீழ்ந்ததும் மோசச் சதிதான் நேசர் நம்மேல் வீசிச் சென்றிட, நீங்களும் நானும் ஏங்கியே வீழ்ந்தோம்! அந்தோ நீவீர் இக்கணம் அழுகிறீர்! பரிவுக் கண்ணீர் பெரிதாய்ப் பொழிகிறீர் கரையுள அங்கியைக் கண்டே அழுகிறீர்! கனிவு ஆத்மா கதறும் இங்கே! பாரீர்  சீஸரின் பரிதாப நிலையை! நாட்டுத் துரோகிகள் காட்டுத் தனமாய்க் குத்திக் கிழித்து கூறாக்கிய சீஸரின் உடலைப் பாரீர் !   ஆண்டனி [அங்கியை சீஸர் மேனியிலிருந்து நீக்கி வெளியே எறிகிறான்] []     முதல்வன்: ஐயோ பாரிதாபம்! கண்கொளாக் காட்சி! அடுத்தவன்: குணாளர் சீஸர்! உத்தமர் சீஸர்! துரோகி புரூட்டஸ்! துரோகி காஸ்கா, காஸ்ஸியஸ், சின்னா. அனைவரும் நாட்டுத் துரோகிகள்! ஆண்டனி: அப்படிச் சொல்லாதீர்! அனைவரும் விடுதலைத் தீரர்கள்! முடியாட்சி ஒழித்தவர்! குடியாட்சியை நிலை நாட்டியவர்! அடிமையாகப் போகும் நம்மைப் பாதுகாத்த பிதாக்கள்! புரூட்டஸைப் போல் நானொரு பெரும் பேச்சாளன் அல்லன்! சாதா மனிதன்! சீஸரின் ஈமக் கிரியை செய்ய வந்திருக்கிறேன். சீஸரின் புண்கள் பேசா வாய்கள்! எனக்காய் நீவீர் பேசிட வைப்பீர்! நானும் புரூட்டஸ் போல் பேச்சாளி ஆயின், ஊனை உருக்கி உலகைக் கலக்கி சீஸர் ஊமைப் புண்களில் ஒரு வாய் வைத்து ரோமின் கற்களும் நிமிர்ந்து தாக்கிடப் புரட்சி செய்வேன், இரங்கற் பேச்சிலே! எல்லோரும்: புரட்சி செய்கிறோம் ஆண்டனி! உன் பேச்சே போதும்! துரோகி புரூட்டஸ் ஆக வேண்டாம்! முதல்வன்: முதலில் புரூட்டஸ் வீட்டுக்குத் தீ வைப்போம்! [தீப் பந்தத்தைத் தூக்குகிறான்] இரண்டாம் நபர்: சீஸரைப் புண்படுத்திய புரூட்டஸ் வயிற்றைக் கிழிப்போம்! [வாளை உயர்த்துகிறான்] மூன்றாம் நபர்: துரோகிகள் அத்தனை பேர் வீட்டிலும் தீ வைப்போம்! கொலைகாரருக்குக் கொள்ளி வைப்போம். [தீக் கம்பத்தைத் தூக்குகிறான்] முதல்வன்: அமைதி, அமைதி, அமைதி! பண்பாளர் புரூட்டஸ் ஏதோ சொல்கிறார். என்ன வென்று கேட்போம்! ஆண்டனி: நண்பர்களே! புரூட்டஸ் வீட்டில் தீ வைக்காதீர்! காஸ்ஸியஸ் வீட்டில் தீவைக்காதீர்! காஸ்கா வீட்டில் தீ வைக்காதீர்! சின்னா வீட்டில் தீ வைக்காதீர்! அத்தனை பேரும் உத்தமர்! செத்த சீஸருக்காக உத்தமர் உயிரைப் பழிவாங்க வேண்டாம்! சீஸரின் சாசனத்தைக் கேட்க மறந்து விட்டீரே! எல்லோரும்: ஆம், ஆம் மறந்து விட்டோம். வாசிப்பாய் ஆண்டனி சாசனத்தை. முதலில் அதைக் கேட்போம். முதல்வன்: ஆண்டனியின் பட்டியலைக் கேட்டால் யார் யாரை முதன் முதலில் தாக்க வேண்டும் என்று சொல்வது போல் அல்லவா உள்ளது. ஆண்டனி: கேளுங்கள், சீஸரின் சாசனத்தை. வாசிக்கிறேன். ரோமா புரியில் ஒவ்வொரு நபருக்கும் 75 நாணயங்கள் அளிக்கப்படும். இரண்டாம் நபர்: [ஆனந்தம் அடைந்து] அடடா! ரோமானியர் மீது எத்தனை பரிவு, கனிவு, அன்பு! ஆண்டனி: மேலும் கேளுங்கள்! சீஸரின் பூங்காக்கள், பூந்தோட்டங்கள் பொதுமக்களுக்கு விடுவிக்கப் படுகின்றன. அதுபோல் தைபர் நதிக்கரை அருகே உள்ள அவரது வயற்காட்டுக் குடில்கள், வயல்கள் பொது நபருக்குப் போகும். அவை எல்லாம் உங்களுக்கும், உங்கள் சந்ததியார்க்கும் சொந்தம். அவற்றை உமக்கு எழுதி வைத்த சீஸருக்கு வாழக் கொடுத்து வைக்க வில்லை! ஈதோ கிடக்குது அவர் சடலம்! சீஸரைப் போலொரு அதிபதி இனிமேல் ரோமா புரியில் பிறப்பாரா? எல்லோரும்: இல்லை, இல்லை ஆண்டனி! சீஸர் போலொரு வேந்தரினிப் பிறக்கப் போவதில்லை! முதல்வன்: வாரீர், சீஸர் உடலைத் தூக்குவீர்! அவரது உடலைப் புண்ணிய தளத்தில் வைத்துத் தகனம் செய்வோம். துரோகிகள் வீட்டெரித்தத் தீயைக் கொண்டு வந்து கொள்ளி வைப்போம் அவருக்கு, அவரது பிள்ளைகளாய்! எல்லாரும்: தீப்பந்தம் ஏந்தி புரூட்டஸ் இல்லத்துக்குச் செல்வோம். மரப் பலகணிகளை உடைத்துக் கொண்டு வாருங்கள்! மேஜை, நாற்காலி, கட்டில் எதுவாயினும் பரவாயில்லை! கொண்டு வாருங்கள். [சீஸர் சடலத்தைக் தூக்கிக் கொண்டு சிலர் விரைகிறார்கள். கத்திகளை, தீக் கம்பங்களை ஏந்திக் கொண்டு புரூட்டஸ் வீட்டுக்கு ஓடுகிறார் மற்றவர் எல்லோரும்.] *********************   அங்கம் -5 காட்சி -12 சீஸர் வீழ்ந்ததும் மோசச் சதிதான் நேசர் நம்மேல் வீசிச் சென்றிட நீங்களும் நானும் ஏங்கியே வீழ்ந்தோம்! எத்தகை வீழ்ச்சி என்னாட் டவர்காள்! ….     (ஆண்டனி)   வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]   []   புரூட்டஸின் இறுதிக் காலம்   நேரம், இடம், கட்டம்: சீஸர் கொல்லப்பட்ட மறுநாள். அங்காடிப் பொதுமனை அருகில் சீஸரின் சடலம் எரிக்கப் படுகிறது. ரோமாபுரிப் பொதுமக்கள் ஆண்டனியின் மரணப் பேருரை கேட்டதும் கோபத்துடன் கிளம்பிப் புரூட்டஸ், காஸ்ஸியஸ் மற்ற சதிகாரர் வீடுகளில் தீயிட்டுக் கொளுத்துகிறார்கள். சதிகாரர் அனைவரும் தப்பிக்கொண்டு ரோமை விட்டு ஓடி வெளியேறுகிறார். ஆண்டனி, அக்டேவியஸ் [சீஸருடைய சகோதர் மகன்], தளபதி லெபிடஸ் ஆகிய மூவரும் ஒன்று சேர்ந்து ரோமானியப் படையுடன் கொலைகாரர்களைப் பிடிக்க விரட்டிக் கொண்டு செல்கிறார்கள். படையினரில் ஒரு சிறு பகுதி புரூட்டஸைப் பின்பற்றிச் செல்கிறது. அனைவரும் ·பிலிப்பி [Philipi] என்னும் பகுதிக் காட்டில் சந்தித்துப் போரிடுகிறார். நாடகப் பாத்திரங்கள்: ஆண்டனி, அக்டேவியஸ், லெபிடஸ், புரூட்டஸ், காஸ்ஸியஸ், மற்றும் சீஸர் கொலையில் ஈடுபட்ட சதிகாரர்கள், ஏராளமான ரோமானியப் படையினர். காட்சி அமைப்பு: ஆண்டனி, அக்டேவியஸ், லெபிடஸ் படையினர் மலைக் காடுகளில் ஒருபுறமும், புரூட்டஸ், காஸ்ஸியஸ் சதிகாரர் படையினர் மறுபுறமும் கூடாரத்தில் தங்கி உள்ளனர். []   ஆண்டனி துரோகிகளைத் துரத்துகிறான் ஆண்டனி: [கையில் தாளை வைத்துக் கொண்டு] அக்டேவியஸ்! இந்தப் பெயர்கள் எல்லாம் உன் குறிப்பிலும் உள்ளனவா? முதலில் நட்புத் துரோகி புரூட்டஸ்! அடுத்து நிஜத் துரோகிகள் காஸ்ஸியஸ், கஸ்கா, சின்னா …. பட்டியல் நீள்கிறது! சதிகாரர் எந்த சந்து பொந்தில், மலைக் குகையில் பதுங்கிக் கிடந்தாலும் பிடித்துக் கொல்லப் படவேண்டும். அக்டேவியஸ்: ஆம்! அந்த அயோக்கியர் பெயர் அத்தனையும் உள்ளன! … லெப்பிடஸ்! உன் சகோதரன் பெயரும் பட்டியலில் உள்ளது தெரியுமா? அதற்கு உன் ஒப்புதல் தேவை. லெப்பிடஸ்: [சற்று மனக் கசப்புடன்] ஒப்புக் கொள்கிறேன்! என் தமையன் புரட்சிக் குழுவோடு ஏன் சேர்ந்தான் என்பது வியப்பாக உள்ளது எனக்கு! என்னருமை மைத்துனியை எப்படி விதவைக் கோலத்தில் பார்ப்பது என்று தெரியவில்லை! பாவம் அவள். வருவாயின்றி எப்படித் தனியாக அவள் வாழப் போகிறாள் என்று நினைக்கும் போது எனக்கு வருத்தமாய் உள்ளது! ஐயோ, அவளும் உயிரைப் போக்கிக் கொள்வாள்! அக்டேவியஸ்: [ஆத்திரமாக] ஆண்டனி! உன் தங்கையின் மகன் பப்ளியஸ் பட்டியலில் உள்ளதா? ஆண்டனி: மறந்து விட்டேன், அந்த மூடனை, அக்டேவியஸ்! எழுதிக் கொல்வோம்! அப்புறம் வேறு யாரும் நம் பட்டியலில் விடப் பட்டுள்ளனவா? லெப்பிடஸ்: சரி! மன்னிக்க வேண்டும். என்னகொரு அவசரப் பணி உள்ளது! உங்களை மக்கள் மன்றத்தின் வாசலில் பிறகு சந்திக்கிறேன். [லெப்பிடஸ் போகிறான்] ஆண்டனி: போகட்டும் லெப்பிடஸ்! நமது தளபதிதான், ஆனால் தலையில் மூளையைத் தவிர மற்றவை எல்லாம் உள்ளன! முரட்டுப் பலம் மட்டும் உள்ளது! ஆனால் மூளை காலி! அக்டேவியஸ்: ஆம், ஆம் ஆனால் அவனொரு பராக்கிரமத் தளபதி, சீஸரைப் போல்! உனக்குத்தான் பிடிக்க வில்லை அவனை! அவன் இடத்தை நிரப்ப யாராலும் முடியாது. தளபதிகள் அறிவுச் சுடராக இருக்கக் கூடாது. மூர்க்கமும், முரட்டுத்தனமும் பராக்கிரமமும்தான் ஒரு தளபதிக்குத் தேவை. அவை அனைத்தும் கனலாய்க் கொதிக்கிறது லெப்பிடஸ் நெஞ்சில்! அவன் அஞ்சா நெஞ்சம் படைத்தவன்! ஆண்டனி: அதுபோல் என் குதிரையும் படைத்தது அஞ்சா நெஞ்சம், அக்டேவியஸ்! போரில் பயமின்றி என் குதிரை பாயும் தெரியுமா! சரி அவனை விட்டுத் தள்ளு! ஆக வேண்டிய போர்த் தயாரிப்புக்குச் சிந்திப்போம்! மலைக்கு அப்புறம் புரூட்டஸ், காஸ்ஸியஸ் படை திரட்டி நம்மைத் தாக்கப் போவதாக ஒற்றர் மூலம் அறிந்தேன். உனக்குத் தெரியுமா? அக்டேவியஸ்: தெரியும். நாமிருவரும் முதலில் அந்தக் காட்டு நரிகளை வேட்டையாட வேண்டும். அவர்கள் யாரும் உயிருடன் ரோமுக்குத் திரும்பக் கூடாது. [இருவரும் போகிறார்கள். மலைக்கு அப்புறம் உள்ளக் கூடாரத்தில் புரூட்டஸ், காஸ்ஸியஸ் காரசாரமாக வாதாடிக் கொண்டிருக்கிறார்கள்] காஸ்ஸியஸ்: [கோபத்துடன் கைகளைப் பிசைந்து கொண்டு] பாருங்கள் புரூட்டஸ்! எல்லாம் உங்களால் நேர்ந்தது! மாளிகையில் ஆள வேண்டிய நாம் இப்போது, மலை அடிவாரத்தில் ஒளிந்து கொண்டிருக்கிறோம். சீஸரைக் குத்திய அதே கத்தியால், ஆண்டனி குடலையும் உருவி யிருந்தால் இப்படி ஆகுமா? நீங்கள் வேண்டாமெனத் தடுத்தீர்! பிரேதப் பேச்சுரையில் ஆண்டனி பேசக் கூடாதெனத் தடுத்தேன்! கேட்க வில்லை நீங்கள்! பொதுமக்கள் யாவரும் மெழுகுப் பொம்மைகள்! களிமண் சட்டிகள்! ஆட்டுக் குட்டிகள்! ஆண்டனி வில்லைக் காட்டியது ஆடுகளுக்குப் புல்லைக் காட்டியது போல்! சாய்ந்தால், சாயிறப் பக்கமே சாயிற செம்மறி ஆடுகள் மக்கள்! புல்லைக் காட்டி ஆடுகளைப் புலியாய் ஆக்கி விட்டான், ஆண்டனி! புலியாய் இருந்த நாம் இப்போது ஆடுகளாய்ப் போய்விட்டோம்! புரூட்டஸ்: காஸ்ஸியஸ்! என்னை நீ மன்னிக்க வேண்டும்! மாபெரும் தவறு செய்து விட்டேன் நான்! ஆண்டனியை உயிரோடு விட்டது தப்பு! மேடையில் ஆண்டனியைப் பேச விட்டது தப்பு! ஆண்டனி, பசுத்தோல் போர்த்திய புலியெனத் தெரியாமல் போனது எனக்கு! என்னைப் பண்பாளன் என்று பாராட்டிப் பாராட்டி, மக்களிடம் பாசாங்கு பண்ணினான்! சிறிது நேரத்துக்குள் நம்மை வரவேற்ற கும்பல், சீஸரைப் பாராட்டத் துவங்கியது. நம்மை ஆதரித்த கைகள், தீப்பந்தம் ஏந்தி நம் வீட்டுக்கே தீயிட்டது! …[கண்ணீருடன்] … காஸ்ஸியஸ்! எப்படித் தாங்கிக் கொள்வேன் இதை! நேற்று மனைவி போர்ஷியா மாண்டு போனாள்! கும்பல் வீட்டுக்கு வைத்த தீ அவளது உடலுக்கும் வைத்த கொள்ளி ஆயிற்று! காஸ்ஸியஸ்: [வருத்தமுடன் தோள் மீது கை வைத்து] எத்தகைய அதிர்ச்சி, புரூட்டஸ்! எப்படி இதுவரை பொறுத்துக் கொண்டாய்? ஆட்டு மந்தையை அரக்கர் மந்தையாய் ஆக்கியவன் ஆண்டனி! [கை வாளை உருவி] சீஸரைக் குத்திய இதே வாளால், பார்ப்பீர் ஆண்டனி வயிற்றையும் கிழிப்பேன்! ·பிலிப்பி போர்த் தளத்தில் இந்த வாளால் ஒன்று ஆண்டனி மடிவான், அல்லது நான் உயிரைப் போக்கிக் கொள்வேன். புரூட்டஸ்! போரில் நான் மாண்டு போனால், உங்களுக்குத் தவறு செய்த என்னை நீங்கள் மன்னிக்க வேண்டும்! சீஸரின் உயிர் நண்பனான உங்களை மாற்றிய வஞ்சகன் நான்! சீஸர் மீது வெறுப்பு உண்டாக நான் முற்பட்டது மாபெரும் தவறு! என்னால் உங்கள் மனைவி போர்ஷியாவும் மாண்டு போக நேர்ந்தது! உங்கள் குடும்ப வாழ்வைச் சீர்குலைத்தது நான்! என்னை மன்னிப்பீர்களா புரூட்டஸ்? []   Final War at Philipi புரூட்டஸ்: காஸ்ஸியஸ்! நம் முடிவு நெருங்கி விட்டதாய், என் மனதில் ஓர் உணர்வு எழுந்து விட்டது! நேற்றுக் கனவில் சீஸர் வந்து என்னை ·பிலிப்பியில் சந்திக்க வா என்று அழைப்பு விடுத்துள்ளார்! நம்மால் ஆற்றல் மிக்க ரோமானியப் படையை எதிர்க்க முடியாது. அவரது எண்ணிக்கை மிகுதி! காஸ்ஸியஸ்! நீ மாற்ற முயன்றாலும், என்னை மாற்றிக் கொண்டவன் நான்தான்! ஓர் உன்னத செயலைச் செய்து முடித்ததாகத்தான் தோன்றுகிறது எனக்கு! முடியாட்சி ஒழித்தோம் நாமிருவரும்! குடியாட்சிக்கு விடிவு தந்தோம் நாமிருவரும்! கவலைப்படாதே! நீ என் தோழன்! யார் யாருக்கு மன்னிப்பு அளிப்பது? ..அதை எல்லாம் மறப்போம்! இப்போது நாம் செய்ய வேண்டியது இறுதிப்போர். ஓடி ஒளிய வேண்டாம் நாம்! கூடிப் போரிட்டு மாய்வோம். [இருவரும் கைகோர்த்துக் குலுக்கித் தழுவிக் கொள்கிறார்கள்.] ·பிலிப்பியில் நடந்த போரில் தோற்கடிக்கப் பட்டுப் பிடிபடாமல் காஸ்ஸியஸ், புரூட்டஸ் இருவரும் தமது உயிரைத் தாமே மாய்த்துக் கொள்கிறார்கள். ஆண்டனி, அக்டேவியஸ் சதிகாரர் அனைவரையும் கொன்று பலரைக் கைது செய்து ரோமுக்கு மீள்கிறார்கள்.]   [இரண்டாம் பாகம் முற்றும்] +++++++++++++++ 1. முதல் பாகம்: சீஸர் & கிளியோபாத்ரா [முற்றிற்று] 2. இரண்டாம் பாகம்: ஜூலியஸ் சீஸர் [முற்றிற்று] 3. மூன்றாம் பாகம்: ஆண்டனி & கிளியோபாத்ரா [ ஆரம்பம்] *********************   அங்கம் -6 காட்சி -1 வாழ வேண்டும் நீ! அல்லது மதிப்போடு மீள வேண்டும் வாழ நீ,  குருதியில் மூழ்கி மாள எதிராகப் போரிட்டு! …. (ஆண்டனி) வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)   தைபர் நதி ரோமில் உருகிப் போகட்டும்! ரோம் சாம்ராஜி யத்தின் தோரண வளையம் குப்புற வீழட்டும்! என் வசிப்புத் தளம் இதுதான்! அரசு மாளிகை அனைத்தும் களிமண்! சாணிப் பூமி யானது, மானி டனுக்கும் மிருகத் துக்கும் தீனி யிடுவது வெவ்வேறு முறையில்! வாழ்வின் புனிதம் இவ்விதம் புரிவது: ஒருவரை ஒருவர் விரும்பி யிருவர் ஒன்றாய்ப் பின்னிப் பிணைப்பது  ! …  (ஆண்டனி) வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)   என்னை நேசிப்பது நீ உண்மை என்றால் எவ்வள வென்று சொல்ல முடியுமா ? …. (கிளியோபாத்ரா) வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)   []     கதைச் சுருக்கம்: கிரேக்க மகாவீரர் அலெக்ஸாண்டர் பரம்பரையில் வந்த எகிப்தின் வசீகர மங்கை, ஏழாம் டாலமியின் புதல்வியாக கி.மு. 69 ஆம் ஆண்டில் அலெக்ஸாண்டிரியாவில் பிறந்தாள். தந்தை டாலமி மரணம் எய்திய பிறகு கிளியோபாத்ராவும் அவளது இளைய தமையன் டாலமியும் ஒன்றாகச் சேர்ந்து எகிப்தை ஆண்டார்கள். மூன்றாண்டுகள் கழித்துக் கணவனும், தம்பியுமான 15 வயது டாலமி கிளியோபாத்ராவை நாடு கடத்திப் பிறகு தானே அரசாண்டான். சிரியாவுக்கு ஓடிய கிளியோபாத்ரா, தம்பியைப் பலிவாங்க அப்போது அலெக்ஸாண்டிரியாவுக்கு வந்த ரோமானியத் தளபதி ஜூலியஸ் சீஸரின் உதவியை நாடுகிறாள். சீஸரைக் கவர்ச்சியால் மயக்கி, எகிப்துக்குத் தானே அரசியாக வேண்டு மென்றும், சகோதரன் டாலமி அகற்றப்பட வேண்டு மென்றும் வற்புறுத்தி வெற்றியும் பெற்றாள். சீஸர் கிளியோபாத்ராவின் தேன்நிலவு நீடித்து அவளுக்கு ஓர் ஆண் மகவு பிறந்தது. எகிப்தில் நடத்திய சீஸரின் தாம்பத்திய வாழ்க்கையை ரோமானியர் ஏற்று கொள்ளாமல் அவரை வெறுத்தனர்! முடிசூட்டிக் கொள்ள ரோமுக்குச் சீஸர் மீண்டதும், செனட்டர் செய்த சதியில் சீஸர் கொல்லப்பட்டார். சீஸர் கொலைக்குப் பின் ரோமில் பெரும் குழப்பம் உண்டாகி மார்க் ஆண்டனி, அக்டேவியன் ஆகியோரது நேரடிக் கண்காணிப்பால் ரோம் சாம்ராஜியத்தில் அமைதி நிலவியது. நேரடியாக அலெக்சாண்டிரியாவுக்குக் காண வந்த ஆண்டனியைக் கவர்ச்சியால் மயக்கித் தன் காதல் அடிமையாய் ஆக்கினாள் கிளியோபாத்ரா. ஆண்டனியின் தேனிலவு நீடித்து ரோமானிய செனட்டர்களின் சீற்றத்தையும், வெறுப்பையும் மார்க் ஆண்டனி பெறுகிறான். அக்டேவியன் தலைமையில் ரோமானியப் படை ஆண்டனி மீது போர் தொடுத்து வெற்றி அடைகிறது. எகிப்தில் தனித்துப் போன ஆண்டனியும், அக்டேவியன் உடன்படிக்கைக்கு அடி பணியாத கிளியோபாத்ராவும் பயங்கர முடிவைத் தேடிக் கொள்கிறார்கள்.  நாடகப் பாத்திரங்கள்: எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவில்: கிளியோபாத்ரா: எகிப்தின் பட்டத்தரசி ஆண்டனி: ரோமாபுரியின் மூன்று தளபதிகளில் ஒருவர் டையோமீடிஸ்: கிளியோபாத்ராவின் பணியாள் ஸெலியூகஸ்: கிளியோபாத்ராவின் கணக்காளி பெல்லோடோரஸ்: கிளியோபாத்ராவின் பாதுகாப்புக் காவலன். பிதாதீதா: கியோபாத்ராவின் ஆயா சிஸேரியன்: கிளியோபாத்ராவின் மகன் ரோமாபுரியில்: ரோமின் தளபதி: மார்க் ஆண்டனி, அக்டேவியஸ் சீஸர்: ரோமின் இரண்டாம் தளபதி, ஜூலியஸ் சீஸரின் சகோதரன் மகன் லெப்பிடஸ், ரோமின் மூன்றாம் தளபதி எனோபரஸ் (ஆண்டனியின் பாதுகாவலன்), டெமிட்ரியஸ்: ஆண்டனியின் நண்பன் •பிலோ: ஆண்டனியின் நண்பன் ஸெக்டஸ் பாம்ப்பி (கொல்லப்பட்ட போர்த் தளபதி பாம்ப்பியின் வாலிப மகன்) அக்டேவியா (ஆண்டனியின் இரண்டாம் மனைவி, அக்டேவியஸின் சகோதரி)   ரோமா புரியின் நிலைமை:  ஃபிலிப்பிப் போரில் புரூட்டஸ், காஸ்ஸியஸ் மற்ற சதிகாரர் யாவருமிறந்த பிறகு, ஆண்டனி, அக்டேவியஸ், லெப்பிடஸ் மூவர்களின் கூட்டு மேற்பாட்டில் ரோமாபுரி இயங்கி வருகிறது. ஜூலியஸ் சீஸர் கொலையாகி இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஆண்டனி கிளியோபாத்ராவைக் காண எகிப்த் வருகிறான். மனைவி •புல்வியா மரணம் அடைந்த பிறகு, ஆண்டனி தனிமையாகிக் கிளியோபாத்ரா மீது நாட்டம் உண்டாகுகிறது. அதே சமயத்தில் நிதிக் களஞ்சியம் காலியாகிப் போர்வீரர்களுக்குக் கூலி கொடுக்க நிதியின்றிப் பணம் திரட்ட வேண்டி, ஆண்டனி எகிப்து செல்லத் திட்டமிடுகிறான். எகிப்த் அரசியிடம் நேராகக் கையேந்திப் பிச்சை கேட்கத் துணிவின்றி, கிளியோபாத்ரா தன்னைக் காண வரவேண்டும் என்று காவலர் மூலம் உத்தரவு அனுப்புகிறான். ஆனால் கிளியோபாத்ரா எகிப்த் தளத்தில் தானிருப்பதாகவும், ஆண்டனிதான் அவளைக் காண வரவேண்டும் என்று மறுமொழி அனுப்புகிறாள்.  நேரம், இடம்:   அலெக்ஸாண்டியா, கிளியோபாத்ராவின் மாளிகை. பகல் வேளை. நாடகப் பாத்திரங்கள்: கிளியோபாத்ரா, சேடிகள், ஆண்டனி, ஆண்டனியின், பாதுகாவலர், படையாட்கள் காட்சி அமைப்பு: கிளியோபாத்ராவின் மாளிகையில் ரோமானிய படையினர் •பிலோ, டெமிடிரியஸ் இருவரும் தமது தளபதி ஆண்டனியைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது கிளியோபாத்ராவும், ஆண்டனியும் தம் சகாக்களோடு உள்ளே நுழைகிறார்கள்.   []     ஃபிலோ: [வெறுப்புடன்] சகிக்க முடிய வில்லை, டெமிடிரியஸ்! பார், தளபதியின் நிமிர்ந்த தலை தணிந்து விட்டது! தீக்கனல் கக்கி செவ்வாய் போல் செவ்வொளி மின்னிய கண்கள் கறைபட்டு நிலவுபோல் மங்கி விட்டன! அவரது இரும்பு நெஞ்சம் தளர்ந்து, இடையில் கட்டியுள்ள பெல்டும் சூம்பி விட்டது! வெள்ளைப் புறாவைப் போல் மனைவி •புல்வியா ரோமிலே காத்துக் கிடக்க, பளுப்பு மேனி ஜிப்ஸியைத் தேடி வர வேண்டுமா? கிளியோபாத்ரா மோகத்தைத் தணிக்க ஓடி வர வேண்டுமா? சீஸரைக் கவர்ந்த ஜிப்ஸியின் சிலந்தி வலையில் பிடிபடப் போவது அடுத்து ஆண்டனி. டெமிடிரியஸ்: கிளியோபாத்ரா ஒரு கருப்பு விதவை தெரியுமா? அவளை மணந்தவன் சிறிது நாட்களில் செத்துப் போகிறான். முதல் கணவன் டாலமி, சீஸரின் ஆட்கள் விரட்டி நைல் நதியில் மூழ்கிக் போனான்! இரண்டாம் கணவர் ஜூலியஸ் சீஸருக்கு என்ன ஆனது நமக்குத் தெரியும். அவரும் கொல்லப்பட்டார்! இப்போது ஆண்டனி! அவருக்கு என்ன ஆகுமோ? [அப்போது வாத்தியக் கருவிகள் முழங்க, அறிவிப்புடன் கிளியோபாத்ரா, அவரது சேடியர், அடிமைப் பெண்கள் பின்சூழ நுழைகிறார். பின்னால் ஆண்டனி அவரது பாதுகாவலர் சூழ வந்து கொண்டிருக்கிறார்] ஃபிலோ: பார் அங்கே, டெமிடிரிஸ்! எத்தனை கம்பீரமாக கிளியோபாத்ரா நடந்து வருகிறாள்! ஆனால் ஆண்டனி அடிமைபோல் பின்னால் வருவதைப் பார்! வேங்கை போலிருந்த ஆண்டனி, ஜிப்ஸியின் வனப்பில் மயங்கி மது அருந்திய மந்திபோல் நடந்து வருவது எப்படி யிருக்கிறது? டெமிடிரியஸ்: [கிளியோபாத்ராவுக்கு முன் சென்று] மகாராணி ! ஆண்டனி உங்கள் கவர்ச்சிக்கு அடிமை! அவருக்கு உங்கள் மேல் ……! கிளியோபாத்ரா: [திரும்பி நோக்கி] யாரது? ரோமானியப் படையாளா? முதலில் என்முன் மண்டியிட்டுப் பேசு! எகிப்தின் விதிகள் உனக்குத் தெரியாதா? யார் உனது படைத் தளபதி? டெமிடிரியஸ்: [நின்று கொண்டே] மகாராணி! ஆண்டனிதான் எங்கள் தளபதி! கிளியோபாத்ரா: [கோபத்துடன், சீறி] அறிவு கெட்டவனே! அகந்தையோடு என்முன் நின்று கொண்டு பேசாதே! என் செவியில் எதுவும் விழாது! முதலில் என்முன் மண்டியிட்டுப் பேசு! டெமிடிரிஸ்: மகாராணி! ரோமில் யாரும் மண்டியிடுவதில்லை! குடியரசு நாட்டில் யாவரும் சமம்! கிளியோபாத்ரா: முட்டாள்! நீ நிற்பது எங்கே? ரோமிலா? எகிப்த் பூமியில்! மண்டியிடு அல்லது வெளியேறு! காட்டுமிராண்டிகள் ரோமில் செத்த வேந்தர் சீஸரைக் குப்பைக் கூளம்போல் எரித்தார்! எகிப்தில் மாபெரும் பிரமிட் கட்டி, நாங்கள் செத்தவரைப் புதைக்கிறோம்! []   ஆண்டனி: [கோபத்துடன், முன்வந்து] கிளியோபாத்ரா! எப்படி ரோமானியனரை நீ காட்டுமிராண்டிகள் என்று சொல்வாய்? கிளியோபாத்ரா: [முகத்தில் முறுவலுடன்] ஓ! மார்க் ஆண்டனியா? ரோமாபுரியின் முப்பெரும் தளபதியில் ஒருவரா? வருக, வருக, தங்கள் வரவு நல்வரவாகுக! ஆண்டனி: போதும் உன் சாது மொழிகள்! மன்னிப்புக் கேள் என்னிடம்! காட்டுமிராண்டிகள் எகிப்தியர்! ரோமானியர் அல்லர்! கிளியோபாத்ரா: மண்டியிட மறுக்கும் உங்கள் மடையனுக்காக மன்னிப்புக் கேட்க வேண்டியது நீங்கள்! சீஸரிங்கே தங்கி யிருந்த போது, எங்கள் மாபெரும் நூலகத்தை எரித்தார் உமது ரோமானியர்! அவர் முன்பாகவும் இப்படித்தான் காட்டுமிராண்டிகள் என்று கத்தினேன்! இப்போது மீண்டும் சொல்கிறேன்! சீஸரைக் குப்பையாக எரித்த ரோமானியர் காட்டுமிராண்டிகளே! மகத்தான பீடத்தில் புதைக்கப்பட வேண்டிய மன்னர் உங்கள் சீஸர்! அவர் சடலம் எகிப்தில் கிடந்தால், அவருக்கொரு பிரமிட் கட்டி நிரந்தமாகப் புதைத்திருப்போம். … சொல்லுங்கள், எதற்காக வந்தீர்கள் இங்கே? ஆண்டனி: [கனிவுடன், குரல் தடுமாறி] கிளியோபாத்ரா! உன்னைக் காணத்தான் வந்தேன்! மூன்றாண்டுகள் ஓடிவிட்டன! எப்போது உன்னைச் சந்திப்போம் என்று கனவு கண்டேன்! நாளும், பொழுதும் என் மனம் உன்னைத்தான் நினைத்துக் கொண்டிருந்தது! கிளியோபாத்ரா: [கிண்டலாக] உங்கள் மனைவி •புல்வியாக்கு உங்கள் கனவைச் சொன்னீர்களா? அவளுக்குத் தெரியாமல் என்னை நினைப்பது சரியா? கட்டிய மனைவி உங்களைச் சும்மா விட்டாளா? ஆண்டனி: [கண்ணீர் கலங்க] கிளியோபாத்ரா! •புல்வியா இறந்துபோய் விட்டாள்! என்னை விட்டுப் பிரிந்து போய் விட்டாள்! நான் தனித்துப் போய்விட்டேன். கிளியோபாத்ரா: [கிண்டலாக] ஏன் பிரிந்து போக மாட்டாள், கணவன் பிறமாதைக் கனவில் நினைத்துக் கொண்டிருந்தால் ! …. அடடா, ஆண்டனி! கண்களில் கண்ணீர் கொட்டுகிறதே! •புல்வியா மீது இப்படி பரிவும் நேசமும் கொண்ட நீங்கள், கிளியோபாத்ராவைத் தேடி வந்தேன் என்று சொல்வது முழுப் பொய்யல்லாவா? ரோமில் உமக்கொரு மங்கை கிடைக்க வில்லையா? சொல், எது உண்மை? •புல்வியா மீது உள்ள நேசமா? அல்லது கிளியோபாத்ரா மீதிருக்கும் காதலா? எது உண்மை? சொல், சொல் ஆண்டனி! ஆண்டனி: [சற்று மனம் தேறி] •புல்வியா மீது எனக்கு வெறும் பரிவுதான்! ஆனால் நான் நேசிப்பது கிளியோபாத்ராவை! அதுதான் உண்மை! செத்துப் போன •புல்வியாவோடு, அவள் மீதிருந்த என் நேசமும் செத்து விட்டது! உன்னைக் கண்டதும் நேச மனம் புத்துயிர் பெற்று மீண்டும் எழுந்து விட்டது! கிளியோபாத்ரா: ஓ, அப்படியா? ஆண்டனி! நீ என்னை நேசிப்பது உண்மையானால் எவ்வளவென்று எனக்கு சொல்! நீ நேசிப்பது என்னை என்றால் எனக்கு நிரூபித்துக் காட்டு! *********************   அங்கம் -6 காட்சி -2 வயது ஏறினும் வதங்காது அவள் மேனி! வழக்க மரபுகளால் குலையாது, வாலிபம் வரையிலா வெவ்வேறு வனப்பு மாறுபாடு! ….. உடல் நளினத்தை விளக்கிடப் போனால், எவரும் வருணித்து எழுத இயாலாது ! ….. தோரணம் தொங்கும் அலங்காரப் பந்தலில் ஆரணங்கு படுத்தி ருந்தாள், அவளது பொன்னிற மேனி, இயற்கை மிஞ்சியக் கற்பனைச் சிற்பம், வீனஸ் அணங்கினும் மேம்படும் சிலை!    வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)   படகில் அமர்ந்தது அவள் பொன்மய ஆசனம்! கடல் நீரும் தங்கமய மாகும் அதனால்! படகின் மேல்தளம் முழுதும் பொன்தட்டு! மிதப்பிகள் நிறம் பழுப்பு! பரவிடும் நறுமணத் தெளிப்பு! அதனால் தென்ற லுக்கும் காதல் நோய் பற்றும்! படகின் துடுப்புகள் அனைத்தும் வெள்ளி! ஊது குழலின் தாளத்துக் கேற்ப கடல் அலைகளை உதைத்துத் துடுப்புகள் வேகமாய்த் தள்ளும் காதல் துடிப்பு போல்! அவள் மேனி வனப்பை விளக்க நினைப்பின், எவர்தான் வருணித்து எழுதிட முடியும் ? வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)   என்னை நேசிப்பது நீ உண்மை என்றால் எவ்வளவு என்று சொல்ல முடியுமா ? ….(கிளியோபாத்ரா) வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)   []     நாடகப் பாத்திரங்கள்: எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவில்: கிளியோபாத்ரா: எகிப்தின் பட்டத்தரசி ஆண்டனி: ரோமாபுரியின் மூன்று தளபதிகளில் ஒருவர் டையோமீடிஸ்: கிளியோபாத்ராவின் பணியாள் ஸெலியூகஸ்: கிளியோபாத்ராவின் கணக்காளி பெல்லோடோரஸ்: கிளியோபாத்ராவின் பாதுகாப்புக் காவலன். பிதாதீதா: கியோபாத்ராவின் ஆயா சிஸேரியன்: கிளியோபாத்ராவின் மகன் ரோமாபுரியில்: ரோமின் தளபதி: மார்க் ஆண்டனி, அக்டேவியஸ் சீஸர்: ரோமின் இரண்டாம் தளபதி, ஜூலியஸ் சீஸரின் சகோதரன் மகன் லெப்பிடஸ், ரோமின் மூன்றாம் தளபதி எனோபரஸ் (ஆண்டனியின் பாதுகாவலன்), டெமிட்ரியஸ்: ஆண்டனியின் நண்பன் ஃபிலோ: ஆண்டனியின் நண்பன் ஸெக்டஸ் பாம்ப்பி (கொல்லப்பட்ட போர்த் தளபதி பாம்ப்பியின் வாலிப மகன்) அக்டேவியா (ஆண்டனியின் இரண்டாம் மனைவி, அக்டேவியஸின் சகோதரி)   ரோமா புரியின் நிலைமை: ·பிலிப்பிப் போரில் புரூட்டஸ், காஸ்ஸியஸ் மற்ற சதிகாரர் யாவருமிறந்த பிறகு, ஆண்டனி, அக்டேவியஸ், லெப்பிடஸ் மூவர்களின் கூட்டு மேற்பாட்டில் ரோமாபுரி இயங்கி வருகிறது. ஜூலியஸ் சீஸர் கொலையாகி இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஆண்டனி கிளியோபாத்ராவைக் காண எகிப்த் வருகிறான். மனைவி ·புல்வியா மரணம் அடைந்த பிறகு, ஆண்டனி தனிமையாகிக் கிளியோபாத்ரா மீது நாட்டம் உண்டாகுகிறது. அதே சமயத்தில் நிதிக் களஞ்சியம் காலியாகிப் போர்வீரர்களுக்குக் கூலி கொடுக்க நிதியின்றிப் பணம் திரட்ட வேண்டி, ஆண்டனி எகிப்து செல்லத் திட்டமிடுகிறான். எகிப்த் அரசியிடம் நேராகக் கையேந்திப் பிச்சை கேட்கத் துணிவின்றி, கிளியோபாத்ரா தன்னைக் காண வரவேண்டும் என்று காவலர் மூலம் உத்தரவு அனுப்புகிறான். ஆனால் கிளியோபாத்ரா எகிப்த் தளத்தில் தானிருப்பதாகவும், ஆண்டனிதான் அவளைக் காண வரவேண்டும் என்று மறுமொழி அனுப்புகிறாள். நேரம், இடம்: அலெக்ஸாண்டியா, கிளியோபாத்ராவின் மாளிகை. பகல் வேளை. நாடகப் பாத்திரங்கள்: கிளியோபாத்ரா, சேடிகள், ஆண்டனி, ஆண்டனியின், பாதுகாவலர், படையாட்கள் காட்சி அமைப்பு: கிளியோபாத்ராவின் மாளிகையில் ரோமானிய படையினர் ·பிலோ, டெமிடிரியஸ் இருவரும் தமது தளபதி ஆண்டனியைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது கிளியோபாத்ராவும், ஆண்டனியும் தம் சகாக்களோடு உள்ளே நுழைகிறார்கள். கிளியோபாத்ரா: ஓ, அப்படியா ஆண்டனி! நீ என்னை நேசிப்பது உண்மையானால் எவ்வளவென்று எனக்கு சொல்! நீ நேசிப்பது என்னைத் தவிர வேறு எவருமில்லை என்றால் இப்போது நிரூபித்துக் காட்டு! ஆண்டனி: கிளியோபாத்ரா! உன்னை நான் நேசித்தது இன்றல்ல, நேற்றல்ல! என் காதல் காலம் கடந்தது! எல்லை கடந்தது! இனம் கடந்தது! நிறுத்துக் கூற முடியாது அதன் அளவை என்னால்! நிரூபித்துக் காட்ட முடியாது என்னால்! பல்லாண்டுக்கு முன் உன் தந்தையைக்கு உதவிட நான் வந்த போது, இளம் மங்கையாக இருந்த நீ அப்போதே என்னை நீ கவர்ந்தாய்! உன்னை நான் நேசித்தேன். சீஸரைக் காண நீ ரோம் வந்த போது உன் கண்கள் சீஸரை நோக்கின; என் விழிகள் உன்னைத் தேடின! சீஸரை நீ முத்தமிட்ட போது, என் உதடுகள்தான் உன் அதரங்களைச் சுவைத்தன! சீஸரை நீ அணைத்த போது உன் ஆலிங்கனம் என் மார்பைத்தான் தழுவிக் கொண்டது! சீஸர் இன்றில்லை! இருப்பது நீயும், நானும்தான் இப்போது! கிளியோபாத்ரா: [சற்று கவலையுடன்] ஆனாலும் சீஸரை என்னால் மறக்க முடியவில்லை! சீஸர் என் தேவர்! சீஸர் என் அலெக்ஸாண்டர்! சீஸர் என் ·பாரோ வேந்தர்! அவரைப் போலொரு தீரர் ரோமிலினி எப்போது பிறப்பார்? அவரை இழந்தது ரோம் மட்டுமில்லை! எகிப்தும் அவரை இழந்து விட்டது! எகிப்த் ராணி கிளியோபாத்ராவும் அவரின்றி ஏங்கிக் கொண்டிருக்கிறாள் [முகத்தைத் திருப்பி கண்ணீரைத் துடைத்துக் கொள்கிறாள். []     ஆண்டனி: கிளியோபாத்ரா! சீஸருக்காக என் கண்களும் அன்றும் அழுதன! இன்றும் அழுகின்றன! நாளை தினமும் அவை ஏங்கித் தவிக்கும். உண்மையாக உனக்குத்தான் சீஸர் மீது நேசம்! அவருக்கு உன்மீது நேசம் கிடையாது; உன்மீது சீஸர் கொண்டது வெறும் மோகம்! கிளியோபாத்ரா: [சினத்துடன்] அப்படி நீங்கள் சொல்வது தவறு! என்மீது சீஸருக்கு உயிர்! என் மகன் மீது சீஸருக்கு உயிர்! இப்படி வஞ்சகமாகப் பேசி என்னை நீங்கள் கவர முடியாது! ஆண்டனி: [சிரித்துக் கொண்டு] சீஸருக்கு யார் மீதும் பாசமோ, பற்றோ, நேசமோ உள்ளதாகத் தெரியவில்லை எனக்கு! நிச்சயம் உன் மீது கிடையாது! உன் மகன் மீது பாசம், நேசமிருக்கலாம், அவரது புதல்வன் என்பதால்…! கிளியோபாத்ரா: [வெடிப்பாக] பிடிக்காத என்னை எப்படி மணம் புரிந்தார் சீஸர்? நீங்கள் சொல்வது முற்றிலும் தவறு! ஆண்டனி: [சிரித்துக் கொண்டு] கிளியோபாத்ரா! திருமணம் நடந்தது உனக்கும் சீஸருக்கு மில்லை! ரோமுக்கும் எகிப்துக்கும் நடந்த தேசத் திருமணம் அது! சீஸர் செத்ததும் எகிப்த் விதவை ஆகி விட்டது! எகிப்து இனி ரோமைப் பற்றி ஏங்குவது சரியில்லை. [சிரிக்கிறான்] கிளியோபாத்ரா: [சோகமாக] அப்படியானால் கிளியோபாத்ராவை விதவை என்று கேலி பண்ணுகிறீர்! ஆண்டனி: ஆண்டனி அப்படிச் சொல்ல வில்லை! கிளியோபாத்ராதான் அப்படிச் சொல்கிறாள்! அறுந்து போன உறவைப் பிணைக்கத்தான் ஆண்டனி எகிப்துக்கு வந்திருக்கிறான்! ஏன் வந்தாய் என்று கேட்டாய் அல்லவா? அதற்குப் பதிலிதுதான். கிளியோபாத்ரா: [கவலையோடு] சீஸர் என்னுயிர் நேசர்! அவரின்றி என் மனம் தனிமையில் நோகும்! தனித்துப் போனேன் நான்! பகலிலும் அவர் நினைவு! இரவிலும் அவர் நினைவு! கனவிலும் அவர்தான்! நினைவிலும் அவர்தான்! காலியான என் நெஞ்சிலினிக் குடியேறுவது யார்? எகிப்தின் பாலைவனம் என்னுள்ளத்தில் பரவி விட்டது! பாலை நெஞ்சில் நைல் நதி மீண்டும் என்னை எப்போது தொடும்? சீஸர் உடலைக் கொண்டுவந்து எகிப்த் பிரமிடில் அடக்கம் செய்திருக்க வேண்டும்! ·பாரோ வேந்தரில் ஒருவரான சீஸரின் சடலம் பிரமிடில் புதைக்க வேண்டியது. மடையர்கள் சடலத்தை ரோமில் எரித்துச் சாம்பலாக்கி விட்டார்! அது வேறு என் மனதை வாட்டுகிறது! நான் செய்ய முடியாமல் போன பெரிய தவறாகத் தெரிகிறது. ஆண்டனி: எனக்கும் ரோமாபுரி சலித்து விட்டது! புல்வியா செத்த பிறகு முற்றிலும் கசந்து விட்டது! உன்னைப் போல் நானும் இப்போது ஒரு தனிமரம், கிளியோபாத்ரா! அதனால்தான் எகிப்துக்கு வந்தேன்! பிரம்மாண்டமான அந்த பிரமிட் ஒன்றில் ஆயிரம், ஆயிரம் ஆண்டுகள் கண்துஞ்ச வேண்டும் என்று நான் கனவு கண்டதுண்டு! []   கிளியோபாத்ரா: ஆண்டனி! அறிவோடுதான் நீங்கள் பேசுகிறீர்களா? பிரமிடில் நீங்கள் எப்படி உறங்க முடியும்? முழுக்க முழுக்க நீங்கள் ஒரு ரோமன்! ரோமா புரியாளும் முப்பெரும் தளபதிகளில் மூத்தவர் நீங்கள்! நீங்கள் எப்படிப் ·பாரோ மன்னரின் பரம்பரை ஆவீர்? ஆண்டனி: ரோமானியாரான சீஸருக்கு மட்டும் எப்படி பிரமிட் கோபுரம் சொந்தமாகும்? கிளியோபாத்ரா: சீஸர் என்னைத் திருமணம் செய்து ·பாரோ மன்னரின் பரம்பரை ஆகிவிட்டார்! ஆண்டனி: [சிந்தித்து] கிளியோபாத்ரா! சீஸரின் நிழல்தான் நான்! சீஸர் சென்ற பாதையைப் பின்பற்றப் போகிறேன் நான்! சீஸர் வழியே என் வழி! சீஸர்தான் என் குரு! கிளியோபாத்ரா: [சட்டெனக் குறுக்கிட்டு] அப்படியானால் என்னைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறீரா ஆண்டனி? … நீங்கள் சீஸர் ஆக முடியாது, அவர் வழியைப் பின்பற்றினாலும். ஆண்டனி: கிளியோபாத்ரா! சீஸர் வயதானவர்! நான் வாலிபன்! சீஸருக்குக் காதலிகள் பலர்! எனக்குக் காதலர் யாருமிலர்! நான் தனித்துப் போனவன்! நீயும் தனித்துப் போனவள்! உன்னை மணக்க என்ன தகுதி யில்லை எனக்கு? சொல்! கிளியோபாத்ரா: [சினத்துடன்] என்னைத் திருமணம் செய்த சீஸருக்கு என்னவாயிற்று என்று தெரியும் உங்களுக்கு! சீஸரைப் பற்றி ரோம் என்ன சொல்லியது என்று தெரியும் உங்களுக்கு! என்னைப் பற்றி அசிங்கமாக ரோமாபுரி என்ன சொன்னது என்று தெரியும் உங்களுக்கு! ரோமைப் பற்றி ஏதும் கவலைப் பட வில்லையா நீங்கள்? ஆண்டனி: [வெகுண்டு] தைபர் நதி ரோமா புரியில் உருகினால் என்ன? வெற்றி வளையம் ரோமில் குப்புற வீழ்ந்தால் என்ன? எனக்கொரு கவலை யில்லை! நான் வாழப் புகுந்த தளம் எகிப்துதான்! ராஜ மாளிகை வெறும் களிமண்! சாணிப் பூமி மானிடனுக்கும், மிருகத்துக்கும் தீனி அளிப்பது வெவ்வேறு விதங்களில்! நான் மனிதன்! தனிமைத் தளையை அறுத்துப் பாசமுடன் ஒருத்தியை நேசித்துப் பிணைத்துக் கொள்ள விரும்புபவன்! ரோமா புரியில் மிருகங்கள் பெருத்து விட்டன! ஒரு காலத்தில் மனிதர் மிருகத்தை வேட்டை ஆடினார்! இப்போது ரோமில் மிருகங்கள் மனிதரை வேட்டை ஆடுகின்றன! நான் எனது துணைப் பறவையைத் தேடி வந்திருக்கிறேன்! கிளியோபாத்ரா: [கேலியாகச் சிரித்து] உன் துணைப் புறா எகிப்தில் இருக்கிறதா? … ஆமாம் ஒன்று நான் தெரிந்து கொள்ள வேண்டும் முதலில். … நேச விருப்பமின்றி பாசம் மட்டும் கொண்டு புல்வியாவை எப்படி மணந்தீர்? ஆண்டனி: திருமணம் கணநேரத்தில் முடிவில் செய்தது! திருமணம் முடிந்து உடல்கள் முத்தமிட்ட பிறகு ஏமாற்றம் என்னைத் தொடர்ந்தது! புல்வியாக்கு ஏற்ற கணவனில்லை நான் என்று கண்டு கொண்டேன்! ஆமாம், என் துணைப்புறா எகிப்தில்தான் உள்ளது. கிளியோபாத்ரா: தப்பு! தப்பு! தப்பு! புல்வியா உமக்கேற்ற மனைவி யில்லை என்பதைத் தானே கண்டு கொண்டீர்! நீவீர் மணக்க விரும்பும் துணைப்புறா ரோமுக்குக் குடிப்பெயராது என்று தெரியுமா? ஆண்டனி: தெரியும்! அதனால்தான் ஆண்டனி எகிப்துக்குக் குடிப்பெயர்ப்பு செய்யத் துணிந்து விட்டான். கிளியோபாத்ரா! ஏனிப்படிக் கண்ணாமூச்சி விளையாடுகிறாய்? []   கிளியோபாத்ரா: ஆண்டனி! நீங்கள் என்னைத் தேடி எகிப்துக்கு வருவீரா என்று நான் ஏங்கியதுண்டு! நீங்கள் வரும் வழிமேல் விழி வைத்திருந்தேன்! நீங்கள் வருவீர் என்று அறிவேன் நான்! சீஸர் விட்டுப் போன என் நெஞ்சக் கூண்டை ஆண்டனிக்காகத் திறந்து வைத்தேன்! நீங்கள் என் நெஞ்சக் கதவைத் தட்டுவீர் என்று தெரியும் எனக்கு! என் கனிந்த உதடுகளைத் தேடி உங்கள் உலர்ந்த உதடுகள் ஓடி வருவதைக் கனவில் கண்டேன்! என் கனவில் இப்போதெல்லாம் சீஸர் வருவதில்லை! நீங்கள் சொன்னது உண்மைதான்! சீஸர் என்னை நேசித்திருந்தால் அவரல்லவா என் கனவில் வர வேண்டும்? உங்கள் கனவில் கிளியோபாத்ரா வருகிறாளா? தினமும் வருகிறாளா? அப்படி வந்தால் என்றைக்கு வந்தாள் என்பது நினைவிருக்கிறதா? ஆண்டனி: கண்ணே, கிளியோபாத்ரா! கனவில் நீ! நினைவில் நீ! என் கண்ணில் படும் பெண்கள் எல்லாம் உன்முகம் கொண்டுள்ளத்தைக் கண்டேன்! காட்சி எல்லாம் நீ! ரோமை விட்டு நீ போனதும் என் நெஞ்சம் காலியாய்ப் போனது! மெய்யாகப் பாதி உயிர் போனது! எனது மறுபாதியைத் தேடி எகிப்துக்கு வந்திருக்கிறேன். எனக்கு எகிப்த் வாசல் கதவுகள் வரவேற்பு அளிக்கும் என்று தெரியும். ரோமாபுரிக்கு நான் மீளப் போவதில்லை! எகிப்தே நாடே என் சொர்க்கபுரி! கடைசிக் காலத்தைக் கடத்தப் போகும் புனிதத் தளம்! *********************   அங்கம் -6 காட்சி -3  (ஆண்டனி, பிரிந்து செல்லும்) மெல்லோசை கேட்டால் (கிளியோபாத்ரா) அக்கணமே உயிரை விடுவாள்! ஒன்று மில்லா சிறு நிகழ்ச் சிக்கும் பன்முறை அப்படிச் சாவதை நான் கண்டுளேன் ; மரணம் மீதவள் கொண்டுள்ள மோகம் மிகைதான். எனோபரஸ் வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா) []   நாடகப் பாத்திரங்கள்: எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவில்: கிளியோபாத்ரா: எகிப்தின் பட்டத்தரசி ஆண்டனி: ரோமாபுரியின் மூன்று தளபதிகளில் ஒருவர் டையோமீடிஸ்: கிளியோபாத்ராவின் பணியாள் ஸெலியூகஸ்: கிளியோபாத்ராவின் கணக்காளி பெல்லோடோரஸ்: கிளியோபாத்ராவின் பாதுகாப்புக் காவலன். பிதாதீதா: கியோபாத்ராவின் ஆயா சிஸேரியன்: கிளியோபாத்ராவின் மகன்  ரோமாபுரியில்: ரோமின் தளபதி: மார்க் ஆண்டனி, அக்டேவியஸ் சீஸர்: ரோமின் இரண்டாம் தளபதி, ஜூலியஸ் சீஸரின் சகோதரன் மகன் லெப்பிடஸ், ரோமின் மூன்றாம் தளபதி எனோபரஸ் (ஆண்டனியின் பாதுகாவலன்), டெமிட்ரியஸ்: ஆண்டனியின் நண்பன் ஃபிலோ: ஆண்டனியின் நண்பன் ஸெக்டஸ் பாம்ப்பி (கொல்லப்பட்ட போர்த் தளபதி பாம்ப்பியின் வாலிப மகன்) அக்டேவியா (ஆண்டனியின் இரண்டாம் மனைவி, அக்டேவியஸின் சகோதரி)   ரோமா புரியின் நிலைமை: •பிலிப்பிப் போரில் புரூட்டஸ், காஸ்ஸியஸ் மற்ற சதிகாரர் யாவருமிறந்த பிறகு, ஆண்டனி, அக்டேவியஸ், லெப்பிடஸ் மூவர்களின் கூட்டு மேற்பாட்டில் ரோமாபுரி இயங்கி வருகிறது. ஜூலியஸ் சீஸர் கொலையாகி இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஆண்டனி கிளியோபாத்ராவைக் காண எகிப்த் வருகிறான். மனைவி •புல்வியா மரணம் அடைந்த பிறகு, ஆண்டனி தனிமையாகிக் கிளியோபாத்ரா மீது நாட்டம் உண்டாகுகிறது. அதே சமயத்தில் நிதிக் களஞ்சியம் காலியாகிப் போர்வீரர்களுக்குக் கூலி கொடுக்க நிதியின்றிப் பணம் திரட்ட வேண்டி, ஆண்டனி எகிப்து செல்லத் திட்டமிடுகிறான். எகிப்த் அரசியிடம் நேராகக் கையேந்திப் பிச்சை கேட்கத் துணிவின்றி, கிளியோபாத்ரா தன்னைக் காண வரவேண்டும் என்று காவலர் மூலம் உத்தரவு அனுப்புகிறான். ஆனால் கிளியோபாத்ரா எகிப்த் தளத்தில் தானிருப்பதாகவும், ஆண்டனிதான் அவளைக் காண வரவேண்டும் என்று மறுமொழி அனுப்புகிறாள். நேரம், இடம்:   அலெக்ஸாண்டியா, கிளியோபாத்ராவின் மாளிகை. பகல் வேளை. நாடகப் பாத்திரங்கள்: கிளியோபாத்ரா, சேடிகள், ஆண்டனி, ஆண்டனியின், பாதுகாவலர், படையாட்கள் காட்சி அமைப்பு: கிளியோபாத்ராவின் மாளிகையில் ரோமானிய படையினர் •பிலோ, டெமிடிரியஸ் இருவரும் தமது தளபதி ஆண்டனியைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது கிளியோபாத்ராவும், ஆண்டனியும் தம் சகாக்களோடு நிற்கும் போது, எனோபரஸ், சார்மியான், அலெக்ஸாஸ், ஜோதிடர் உள்ளே நுழைகிறார்கள். []   சார்மியான்: அலெக்ஸாஸ் பிரபு! என்னருமைப் பிரபு! அன்றைக்கு மகாராணி கிளியோபாத்ராவிடம் நீங்கள் புகழ்ந்த அந்தப் பெயர் போன ஜோதிடரை எங்கே? என் கையைக் காட்ட வேண்டும். என் திருமணத்தைப் பற்றிக் கேட்க வேண்டும். எத்தனை மனைவிகள் என்றும் தெரிந்து கொள்ள வேண்டும்? செல்வந்த மாதரா அல்லது சிங்கார மாதரா என்று அறியவும் ஆசை! அலெக்ஸாஸ்: நம்மை நோக்கி அந்த ஜோதிட மேதை அதோ வருகிறார்! ஜோதிடர்: [சிரித்துக் கொண்டு] மாளிகை ராணி, மன்னர் தேடும் என்னை எந்த வழிப்போக்கனும் காண முடியாது! யார் நீங்கள்? பொற் காசுகள் உள்ளனவா? சார்மியான்: இவரா அந்த ஜோதிடர்? ஏதோ வட்டிக் கடைக்காரர் போலிருக்கிறது! இவரா புகழ்பெற்ற ஜோதிடர்? ஜோதிட சிகாமணியே! உங்களுக்கு மட்டும் எப்படி எதிர்காலம் தெரிகிறது? கடந்த காலம் தெரிகிறது! உங்களுக்கு நிகழ் காலம் தெரியுமா? ஜோதிடர்: [சினத்துடன்] எக்காலமும் அறிந்தவன் நான்! உங்களுக்கு வேண்டியது போனதா? வருவாதா? அல்லது நிகழ்வதா? இயற்கையின் முடிவில்லா மர்ம, மாய நூலில் அடியேன் அறியாதன எதுவு மில்லை! அலெக்ஸாஸ்: சார்மியான்! உன் கையைக் காட்டு, ஜோதிடர் என்ன சொல்கிறார் பார்க்கலாம். சார்மியான்: [கையை நீட்டி] ஜோதிட சிகாமணி! எனக்கு நல்ல சேதிகளைக் கொடுங்கள்! எனக்குத் திருமணம் எப்போது? செல்வப் பெண்ணா? அல்லது சிங்காரப் பெண்ணா? ஜோதிடர்: அட, கடவுளே! என்னால் கொடுக்க முடியாது! செல்வப் பெண்ணைத் தேடிப் போனால் சிங்காரப் பெண் கிடைப்பாள்! சிங்காரப் பெண்ணைத் தேடிப் போனால், செல்வப் பெண் கிடைப்பாள்! சிங்காரப் பெண் உன் பையில் கையை விடுவாள்! செல்வப் பெண் பார்க்க அசிங்கமாய் இருப்பாள்! கடந்த காலம் ஓர் சதுராட்டம்! எதிர்காலம் ஒரு புதிராட்டம்! நிகழ் காலம் ஓர் அரங்கேற்றம்! எதைப் பற்றியும் நான் சொல்வேன்! சார்மியான்: சொல்லுங்கள், சொல்லுங்கள்! எனக்கு நல்லதாகப் பார்த்துச் சொல்லுங்கள். ஜோதிடர்: இப்போது இருப்பதை விட நீ வெள்ளையாக இருக்க வேண்டியவன். சார்மியான்: [முகத்தைச் சுருக்கி] என் தோலின் நிறத்தைச் சொல்கிறீரா? யாரதை உம்மிடம் கேட்டது? வெள்ளையாக இருந்தால் என்ன? கருப்பாக இருந்தால் என்ன? காசு நிரம்பச் சம்பாதிப்பேனா? பணமில்லாமல் இருந்தால், மனைவியாவது கொண்டு வருவாளா? ஜோதிடர்: [கைரேகையை உற்று நோக்கி] முகத்தில் சுருக்கு விழாமல் பார்த்துக் கொள். சார்மியான்: ஜோதிடரே! நீர் என் முகத்தைப் பார்த்தா சொல்கிறீர். கைரேகையைப் பார்க்கப் பணம் கொடுத்தால் முகரேகையைப் பார்ப்பதா? அலெக்ஸாஸ்: அவமரியாதை செய்யாதே அவரை! ஜோதிடர் மகாராணிக்கு ஜோதிடம் சொல்பவர். கோபம் உண்டாக்கினல் எதுவும் சொல்லாமலே போய்விடுவார். அவர் சொல்வதைக் கேட்டுக் கொள். ஜோதிடர்: உன் காதலி மீது நீ அன்பைச் சொரிய வேண்டும். மனைவி இருந்தால் அவளை மிகவும் நேசிக்க வேண்டும் நீ. சார்மியான்: [சிரித்துக் கொண்டு] மதுபானம் குடித்து என் கல்லீரலைச் சூடாக்கலாம் காதல் புரிய. எனக்கு மனைவியு மில்லை, காதலியு மில்லை! நல்ல ஜோதிடமிது. பேரதிர்ஷ்டம் வருவதுபோல் தெரியுது! மூன்று அரசிளங் குமரிகளைக் காலையில் மணந்து மாலையில் விதவை ஆக்க வேண்டும்! அலெக்ஸாஸ்: மனைவி எப்படி விதவை ஆவாள், நீ சாகாமல்? அதுவும் மூன்று தரம் எப்படிச் சாவாய் நீ? கொஞ்சம் யோசித்துப் பேசு! ஜோதிடர்: [கூர்மையாக நோக்கி] நீ எந்த ராணிக்குப் பணிபுரிகிறாயோ, அவளை விட நீண்ட ஆயுளோடு வாழ்வாய்! []   ஆண்டனி சார்மியான்: [சிரித்துக் கொண்டு] ஓ! எனக்கு நீண்ட ஆயுளா? பெருமகிழ்ச்சி! இரண்டு அல்லது மூன்று தரம் திருமணம் செய்து கொள்ளலாம். அலெக்ஸாஸ்: ஜோதிட சிகாமணி! என்ன சொல்கிறீர்? அப்படியானால் கிளியோபாத்ராவுக்குக் குறைந்த ஆயுளா? சார்மியான் ஆயுளைப் பற்றி யார் கவலைப் படுகிறார்? கிளியோபாத்ரா ஆயுளைப் பற்றி சார்மியான் கைரேகை எப்படிக் காட்டும்? ஜோதிடரே! நீவீர் சொல்வது உண்மைதானா? சார்மியான்: சத்தமாகப் பேசலாமா பிரபு! அரண்மனைக்குச் சுவரிலும் காது! தரையிலும் காது! ராணியின் காதில் விழுந்தால், உங்கள் கழுத்தல்லவா துண்டிக்கப்படும்! மகாராணியைப் பற்றி நாம் பேச வேண்டாம். அலெக்ஸாஸ்: ஐரிஸ் சீமாட்டி! வா, வந்து உன் கையை ஜோதிட சிகாமணியிடம் காட்டு! ஐரிஸ் சீமாட்டி: [ஜோதிடரிடம் கையைக் காட்டி] எனக்கு எத்தனை கணவர் சொல்லுங்கள்? சார்மியான்: [வியப்புடன்] ஐரிஸ் கண்மணி! எப்போது நீ உன் கணவனை விலக்கப் போகிறாய்? ஐரிஸ்: அதை எல்லாம் நான் சொல்ல மாட்டேன்! என் வீட்டு ரகசியம் கூரையைத் தாண்டி வராது. சார்மியான்: அந்த ரகசியம்தான் உன் வாயிலிருந்து உதிர்ந்து விட்டதே! எத்தனை திருமணம் என்று கேட்பதின் அர்த்தம் என்ன? …. இப்போதே என் பெயரைப் போடுகிறேன், அடுத்த கணவன் பட்டியலில்! உன்மீது எனக்கு மோகம் உண்டு சிறு வயது முதலே! எனக்கு வீடு, வாசல், தோட்டம், வயல் எல்லாம் உள்ளன! 40 வயது எனக்கு! இது என் அரை ஆயுள்! முழு ஆயுள் எனக்கு 80 வரை என்று வேறு ஜோதிட சிகாமணி சொல்லி யிருக்கிறார். ஐரிஸ், கண்மணி! ஏற்றுக் கொள்வாயா என்னை அடுத்த கணவனாக? ஐரிஸ்: [சிரித்துக் கொண்டு] அடாடா! எப்படிப் பொருத்தம் இருக்கும்? உமது வயதில் பாதி வயது நான்! தகப்பனுக்கு மகள் தாரம் போலிருக்கும்! உமது மகளுக்குத் தர வேண்டிய சீதனங்களை எனக்கு ஏன் அளிக்க வேண்டும்? ஜோதிடர்: ஐரிஸ் சீமாட்டி! நீண்ட காலம் வாழ்வாய் நீயும்! உன் ராணி காலத்துக்கும் பிறகும் வாழ்வாய். சார்மியான்: ஜோதிடரே! மகாராணி கிளியோபாத்ரா ஆயுளைப் பற்றிப் பேசக் கூடாதென்று சொன்னேன். உன் காதில் விழவில்லையா? மெதுவாகப் பேசுங்கள் என்றேன்! அதுவும் உம் காதில் விழவில்லை. .. ஐரிஸ் கண்ணே! பார்த்தாயா? நீயும் நானும் நீண்ட காலம் வாழப் போகிறோம். மகாராணி ஆயுளுக்குப் பிறகும் ஒன்றாய் வாழலாம்! ஐரிஸ்: ஏன் முடியாது? தனித் தனியாக மணந்து வெவ்வேறு குடும்பங்கள்! [உஷ்] ஈதோ மகாராணி வருகிறார். வாயை மூடு! [அப்போது கிளியோபாத்ரா, தன் சகாக்களுடன் நுழைகிறாள்] கியோபாத்ரா: [கோபமாக] ஐரிஸ்! என் சீமான், ரோமானியக் கோமான் எங்கே என்று தெரியுமா? இங்கே இல்லையா? ஐரிஸ்: [சிரம் தாழ்த்தி வணங்கி] மகாராணி! அவரை அடியாள் காண வில்லை! பார்த்து வருகிறேன். கிளியோபாத்ரா: தேடி வந்து எனக்குச் சொல்! உடனே சொல்! போ விரைவில். [ஐரிஸ் ஓடிச் செல்கிறாள்] ஆண்டனிக்கு மோகமுண்டு, போகமுண்டு! ரோமின் மீது தாகமுண்டு! ஏதாவது தகவல் வந்ததா ரோமிலிருந்து? என்னை தேடி எகிப்துக்கு வந்து என்னிடம் கண்ணாம்மூச்சு விளையாடுகிறார்! எங்கே ஆண்டனி! எனோபரஸ்! போ நீ ஒரு பக்கம்! தேடிப் பிடித்து வா, ஆண்டனியை! அலெக்ஸாஸ்: ஈதோ எமது சீமான் வருகிறார். உங்களை நோக்கித்தான் வருகிறார். [ஆண்டனி, ஒரு தூதுவன் பின்வர நுழைகிறான்] கிளியோபாத்ரா: [வேகமாக] நம்மை ஆண்டனி பார்க்கக் கூடாது; வாருங்கள் போவோம். [கிளியோபாத்ரா, அலெக்ஸாஸ், ஐரிஸ், சார்மியான், ஜோதிடர் அனைவரும் விரைவாக வெளியேறுகிறார்] ஆண்டனி: [உணர்ச்சியோடு, கவலையுடன்] என்ன ஆனது என் மனைவிக்கு? விபரமாகச் சொல்! புல்வியா எப்படிச் செத்தாள்? எங்கே செத்தாள்? தூதுவன்: உங்கள் மனைவி புல்வியா போர்க்களத்துக்கு வந்தார் முதலில்! ஆண்டனி: என் சகோதரன் லூஸியஸை எதிர்த்துத்தானே! தூதுவன்: ஆமாம் பிரபு. ஆனால் பிறகு அவர்களுடன் சேர்ந்து கொண்டு புல்வியா அக்டேவியஸைத் தாக்க முனைந்தார். முத்தளபதிகளில் மூர்க்கரான அக்டேவியஸின் ரோமானியப் படை முன்பாக யாரும் நிற்க முடியுமா? ஆண்டனி: என்ன கோர விளைவுகள் நிகழ்ந்தன வென்று சொல்? புல்வியாவுக்கு என்ன ஆனது என்று முதலில் சொல்? அக்டேவியஸ் வல்லமையைப் பற்றி யார் கேட்டார்? தூதுவன்: சொல்லத் துணிவில்லை எனக்கு. எப்படிச் சொல்வேன் பிரபு? உங்கள் மனைவிக்கு என்ன ஆனது என்று முழுவதும் தெரிய வில்லை பிரபு! ஆண்டனி: யாரங்கே வருகிறார்? சரி நீ ரோமுக்குப் போய் என் வீட்டில் நான் சொன்னதாகச் சொல்! எகிப்தில் நலமாக உள்ளேன் என்று சொல்! கிளியோபாத்ரா மாளிகையில் விருந்தினன் ஆக இருப்பதாகச் சொல். எனக்கு எல்லா வசதிகளும் உள்ளதாகச் சொல்! []   முதல் தூதுவன்: அப்படியே செய்கிறேன் பிரபு. [முதல் தூதுவன் போகிறான். இரண்டாம் தூதுவன் வருகிறான்] இரண்டாம் தூதுவன்: [அழுதுகொண்டே] பிரபு! பிரபு! உங்கள் மனைவி புல்வியா போர்க்களத்தில் இறந்து போனார். ஆண்டனி: கேள்விப்பட்டேன். எங்கே இறந்தாள்? எப்படி இறந்தாள்? அதை நான் தெரிந்து கொள்ள வேண்டும். விபரமாகச் சொல்! தூதுவன்: ஸிசியான் என்னும் இடத்தில் இறந்து போனார், பிரபு. போர்க்களத்தில் கடும் நோய் தாக்கியது. வந்த நோயிக்கு மருந்து எடுத்துக் கொள்ள மறுத்தார் என்று தெரிகிறது. சாகும் போது உங்கள் நினைவில் புலம்பினார். உங்களைத் தேடினார்! உங்களைக் காண விரும்பினார்! ஆண்டனி எங்கே? ஆண்டனி எங்கே என்று அலறினார். ஆண்டனி: [மிக்க வருத்தமுடன்] போய்விட்டாயா புல்வியா? உன்னைத் தனித்துப் போகவிட்டேன்! நானிப்போது தனித்துப் போய்விட்டேன்! புல்வியாவின் மரணத்துக்குப் பாதிக் காரணம் நான்! என் அரசியல் வாழ்க்கையில் முழுப் பங்கு எடுத்தாள். அவள் அடுப்பறையில் குழல் ஊதும் மாதில்லை! ஈட்டி எடுத்துப் போரிடுபவளும் இல்லை! போர்த் தளபதிகள் அருகிலிருந்து உதவி புரியும் மந்திரி அவள்! அவள் இப்போதில்லை. உயிருடன் உள்ள போது அவள் மீது எனக்கு வெறுப்பு மிகுதி. செத்த பிறகு அவள் மீது பரிவு பாசம் ஏற்படுகிறது. கள்ளி கிளியோபாத்ரா மேல் கொண்ட மோகத்தில் புல்வியாவை மறந்தேன். அவள் மன நோயிக்கும், நிஜ நோயிக்கும் காரணம் நான்தான். புல்வியா! மன்னிப்பாயா நீ? அவள் அருகிலிருந்து அவளை நோயிலிருந்து காப்பாற்றி இருக்கலாம் … ஆனால் கட்டழகி கிளியோபாத்ராவை எப்படி மறப்பது? மோகினியை எப்படித் துறப்பது? புல்வியாவை மறக்க வைத்தவள் இந்தக் கள்ளி! இவளை விட்டுவிட்டு ரோமா புரிக்கு நான் மீள வேண்டும்.  *********************   அங்கம் -6 காட்சி -4   எங்கே ஆண்டனி? எவருடன் உள்ளார்? என்ன செய்கிறார்? என்னைக் கூறாய் உன்னை அனுப்பிய தென்று! ஆண்டனி சோகமா யிருந்தால், சொல்வாய் அவரிடம், ஆடிப் பாடி உள்ளேன் என்று! அவர் பூரித்தி ருந்தால் நோயில் துடிப்பதாய்க் கூறிடு! போய்வா சீக்கிரம் ! … (கிளியோபாத்ரா) வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)   கண்ணியப் பிரபு! ஒரு வார்த்தை புகல்வேன்! பிரியத்தான் வேண்டும் நீங்களும் நானும்! அது மட்டு மில்லை! நேசிப்ப துண்மை நீங்களும், நானும் ! அது மட்டு மில்லை! நிச்சயம் அறிவீர் நீவீர்! சொல்கிறேன், மறக்கும் என் நினைவு, என்னைத் துறக்கும் ஆண்டனி போன்றது! … (கிளியோபாத்ரா) வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)   என்னை மறந்து ஆண்டனி ஒதுங்கினால் முன்னம் பீடிக்கும் மனநோய் என்னை! மின்னலாய் நீங்கிப் பொங்கும் உடல்நலம், அன்புக் காதலை ஆண்டனி காட்டினால்! … (கிளியோபாத்ரா) வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)   முகத்தைத் திருப்பி அழுவாய் அப்புறம் மனைவிக் காக நீ ஆண்டனி ! என்னிடம் விடைபெற்று ஏகுவாய், இப்புறம் எகிப்துக்குக் கண்ணீர் விடுவதாய்க் கூறி ! … (கிளியோபாத்ரா) வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா) []     நாடகப் பாத்திரங்கள்: எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவில்: கிளியோபாத்ரா: எகிப்தின் பட்டத்தரசி ஆண்டனி: ரோமாபுரியின் மூன்று தளபதிகளில் ஒருவர் டையோமீடிஸ்: கிளியோபாத்ராவின் பணியாள் ஸெலியூகஸ்: கிளியோபாத்ராவின் கணக்காளி பெல்லோடோரஸ்: கிளியோபாத்ராவின் பாதுகாப்புக் காவலன். பிதாதீதா: கியோபாத்ராவின் ஆயா சிஸேரியன்: கிளியோபாத்ராவின் மகன் ரோமாபுரியில்: ரோமின் தளபதி: மார்க் ஆண்டனி, அக்டேவியஸ் சீஸர்: ரோமின் இரண்டாம் தளபதி, ஜூலியஸ் சீஸரின் சகோதரன் மகன் லெப்பிடஸ், ரோமின் மூன்றாம் தளபதி எனோபரஸ் (ஆண்டனியின் பாதுகாவலன்), டெமிட்ரியஸ்: ஆண்டனியின் நண்பன் •பிலோ: ஆண்டனியின் நண்பன் ஸெக்டஸ் பாம்ப்பி (கொல்லப்பட்ட போர்த் தளபதி பாம்ப்பியின் வாலிப மகன்) அக்டேவியா (ஆண்டனியின் இரண்டாம் மனைவி, அக்டேவியஸின் சகோதரி) [] கிளியோபாத்ரா     ரோமா புரியின் நிலைமை: •பிலிப்பிப் போரில் புரூட்டஸ், காஸ்ஸியஸ் மற்ற சதிகாரர் யாவருமிறந்த பிறகு, ஆண்டனி, அக்டேவியஸ், லெப்பிடஸ் மூவர்களின் கூட்டு மேற்பாட்டில் ரோமாபுரி இயங்கி வருகிறது. ஜூலியஸ் சீஸர் கொலையாகி இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஆண்டனி கிளியோபாத்ராவைக் காண எகிப்த் வருகிறான். மனைவி •புல்வியா மரணம் அடைந்த பிறகு, ஆண்டனி தனிமையாகிக் கிளியோபாத்ரா மீது நாட்டம் உண்டாகுகிறது. அதே சமயத்தில் நிதிக் களஞ்சியம் காலியாகிப் போர்வீரர்களுக்குக் கூலி கொடுக்க நிதியின்றிப் பணம் திரட்ட வேண்டி, ஆண்டனி எகிப்து செல்லத் திட்டமிடுகிறான். எகிப்த் அரசியிடம் நேராகக் கையேந்திப் பிச்சை கேட்கத் துணிவின்றி, கிளியோபாத்ரா தன்னைக் காண வரவேண்டும் என்று காவலர் மூலம் உத்தரவு அனுப்புகிறான். ஆனால் கிளியோபாத்ரா எகிப்த் தளத்தில் தானிருப்பதாகவும், ஆண்டனிதான் அவளைக் காண வரவேண்டும் என்று மறுமொழி அனுப்புகிறாள். நேரம், இடம்: அலெக்ஸாண்டியா, கிளியோபாத்ராவின் மாளிகை. பகல் வேளை. நாடகப் பாத்திரங்கள்: கிளியோபாத்ரா, சேடிகள், ஆண்டனி, ஆண்டனியின், பாதுகாவலர், படையாட்கள் காட்சி அமைப்பு: கிளியோபாத்ராவின் மாளிகையில் ரோமானிய படையினர் ஆண்டனியைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார். போர்க்களத்தில் தனித்துப் போய் மரணம் அடைந்த மனைவி புல்வியாவை எண்ணிக் கலங்கிய வண்ணம் ஆண்டனி ரோமாபுரிக்கு மீள வேண்டும் என்று அலை மோதிய நிலையில் இருக்கிறான். அப்போது கிளியோபாத்ரா ஐரிஸ், சார்மியான், அலெக்ஸாஸ் சகாக்களோடு வருகிறாள். []   கிளியோபாத்ரா: [ஆத்திரமுடன்] அலெக்ஸாஸ்! சார்மியான்! எங்கே ஆண்டனி? யாரோ டிருக்கிறார்? தேடிப் பாருங்கள். எகிப்தில் நடமாடிக் கொண்டு என் கண்களில் படாமல் என்ன செய்கிறார் என்று தெரிந்து வாருங்கள். என்னை விட்டுப் போக அவரைக் கவர்ச்சி செய்வது எது? சார்மியான்: மகாராணி! நாலைந்து நாட்களாக நானும் ஆண்டனியைப் பார்க்க வில்லை. அலெக்ஸாஸ்: மகாராணி! அவரது மனைவி புல்வியாவை நினைத்துப் புலம்பிக் கொண்டிருந்தார். கிளியோபாத்ரா: [சினத்துடன்] உயிரோடு கிளியோபாத்ரா உள்ள போது, செத்துப் போன புல்வியாவை நினைத்தா புலம்பிக் கொண்டிருக்கிறார்? அவளைத் தனியாகப் போர்க்களத்தில் விட்டு வந்த ஆண்டனிக்கு, அவள் மீது எப்படி அனுதாபம் வந்தது? அலெக்ஸாஸ்: அவள் தனியே நோயில் சாகட்டும் என்று ஆண்டனிதான் காத்திருந்தார். கிளியோபாத்ரா: அப்படி என்றால் அவள் செத்துவிட்டாள் என்று ஆண்டனி ஆனந்தமாகத்தான் இருப்பார்! போய்ப் பார்த்து வா அலெக்ஸாஸ்! அவர் ஆனந்தமாக இருந்தால், கிளியோபாத்ரா திடீரொன நோயால் தாக்கப் பட்டுப் படுக்கையில் கிடக்கிறாள் என்று சொல். சார்மியான்: அப்படி யில்லை மகாராணி! அலெக்ஸாஸ் சொல்வது தவறு. ஆண்டனி மனக் கவலையில் வாடுகிறார் என்பது நானறிந்த உண்மை. கிளியோபாத்ரா: [ஆர்வமோடு] அப்படியா? போய்ப் பார்த்து வா, சார்மியான்! ஆண்டனி மனக் கவலையில் இருந்தால், கிளியோபாத்ரா ஆடிப் பாடி ஆனந்தமாய் இருக்கிறாள் என்று சொல். ஐரிஸ்: மகாராணி, நீங்கள் ஆண்டனி பிரபுவை நேசிப்பது போல், உங்கள் மீது அவர் தீராக் காதல் கொள்ளும்படிச் செய்ய வேண்டும். கிளியோபாத்ரா: எப்படிச் செய்வது சொல் ஐரிஸ். நான் என்ன செய்யாமல் தவறுகிறேன்? ஐரிஸ்: அவர் கேட்பதை எல்லாம் அளித்து விடுங்கள். எதையும் குறுக்கிட்டு மாட்டேன் என்று எதிர்க்காதீர்கள். கிளியோபாத்ரா: முட்டாளைப் போல் பேசுகிறாய் ஐரிஸ்! அவரை இழக்கும் முறைகளைச் சொல்லிக் கொடுக்கிறாய். ஐரிஸ்: கவர்ச்சியாகப் பேசுங்கள், கனிவாகப் பேசுங்கள், காரமாய்ப் பேசினால் பாராமல் போவார். அதோ அங்கே, ஆண்டனி கோமான் வருகிறார். [ஆண்டனி சோகமாய் நுழைகிறார்] []   கிளியோபாத்ரா: [தலையில் கைவைத்து ஆண்டனியைப் பார்க்காது] எனக்குத் தலைவலி! மனவலி! உடல் வலி! ஐரிஸ்! மதுபானம் கொண்டுவா! மருந்தைக் கொண்டுவா! அலெக்ஸாஸ், நீ போய் மருத்துவரை அழைத்து வா! வரும் போது ஜோதிடரைக் கண்டு என்னைப் பார்க்க வரச் சொல். ஏன் என்னை நோய் தாக்குது என்று கேட்க வேண்டும். [ஐரிஸ், அலெக்ஸாஸ் வெளியேறுகிறார்கள்] ஆண்டனி: [வருத்தமுடன்] அன்பே! கிளியோபாத்ரா! என்ன செய்கிறது உடம்புக்கு? சொல்லி விடக் கூடாதா எனக்கு? நானிங்கே வந்திருப்பது உனக்காக! ரோமை விட்டு வந்திருப்பது உனக்காக! நாட்டை ஆளாது நானிங்கு வந்திருப்பது உனக்காக! வீட்டை, மனைவியை விட்டு வந்திருப்பது உனக்காக! [ஐரிஸ் மதுக் கிண்ணமுடன் மருந்தைக் கொண்டு வந்து கிளியோபாத்ராவுக்குத் தருகிறாள்] கிளியோபாத்ரா: ஐரிஸ்! பிடித்துக் கொள் என்னை! தலை சுற்றுகிறது. [ஆண்டனி ஓடி வந்து கிளியோபாத்ராவைப் பிடித்துக் கொள்கிறான்] ஆண்டனி: நான் உன்னருகில் இருக்கிறேன், கிளியோபாத்ரா! உன் தலை சுற்றாமல் நான் பிடித்துக் கொள்கிறேன். [கிளியோபாத்ராவை மெதுவாக மெத்தையில் படுக்க வைக்கிறான்] ஐரிஸ்! மருந்தை என்னிடம் கொடு! எனக்கும் மது பானம் கொண்டு வா! கிளியோபாத்ரா: ஐரிஸ்! மருந்தை என் கையில் கொடு. தன் வேளையில் மும்முரமாய் உள்ளவர் எனக்கு உதவி செய்ய வேண்டாம்! பாரா முகமாய்க் காணாமல் போனவர் பரிவு எனக்கு வேண்டாம். [ஆண்டனியைப் பார்த்து] புல்வியாவின் ஈமக் கிரியைக்குப் போக வில்லையா? ஆண்டனி: போவதா, கூடாதா என்று அலைமோதும் என் இதயம்! போக நினைத்துப் படகில் ஏறி நான் அமர்ந்தேன்! உன் நினைவு வந்தது! கீழே இறங்கி வந்து விட்டேன்! கவலப் படாதே கிளியோபாத்ரா! உன்னை விட்டு ஒருபோதும் நீங்க மாட்டேன்! கிளியோபாத்ரா: நீங்கள் சொல்வது உண்மையா? உங்கள் புல்வியாவை விட முக்கியமானவளா நான்? முறைப்படி உங்களை மணந்தவள் அவள்! எனக்கென்ன பிடியுள்ளது? உங்களை உரிமையாக பிணைத்துக் கொள்ள என்னிடம் என்ன உள்ளது? நீங்கள் நினைத்தால் வருவீர்; நினைத்தால் போவீர்! அலெக்ஸாண்டிரியா அரண்மனை ரோமானியரின் சத்திரமாகி விட்டது! சாவடியாகி விட்டது! ஆண்டனி: கண்ணே, கிளியோபாத்ரா! அப்படிச் சொல்லாதே! ஆண்டனிக்கு ரோமாபுரிதான் ஒரு சத்திரமாகி விட்டது. அலெக்ஸாண்டிரியா சொந்த பூமியாகி விட்டது! கிளியோபாரா எனக்குச் சொந்தமாகப் போகிறாள். []   கிளியோபாத்ரா: எகிப்த் எப்படி உங்களுக்குச் சொந்த பூமியானது! செத்துப் போன சீஸரின் மனைவி என்றுதான் எல்லாரும் என்னை நினைக்கிறார்கள். எப்போது நீங்கள் என்னைச் சொந்த மாக்கப் போகிறீர்? ஆண்டனி: [வருத்தமுடன்] புல்வியா செத்து அவள் ஆத்மா போய் விட்டாலும், அது என்னைச் சுற்றிக் கொண்டுள்ளது இப்போது! அவள் போய்விட்டாலும் அவளது நிழல் என்னைப் பின்பற்றி வருகிறது. அந்த மனக் கனவுகள் என்னை விட்டு அகல வேண்டும். உன்னை நான் ஏற்றுக் கொள்ளும் போது, என்மனம் உன்னைத்தான் முற்றுகையிட வேண்டும். புல்வியாவின் ஆவி என்னைச் சுற்றி வரும்போது, நான் எப்படி உன்னைப் பற்றிக் கொள்வது? கிளியோபாத்ரா: [ஆத்திரமாக] ஆண்டனி! ரோமுக்குப் போங்கள்! புல்வியா புதைக்கப் பட்ட பூமியில் உங்கள் கண்ணீரைக் கொட்டுங்கள்! எகிப்தில் உங்கள் கண்ணீர் ஒருதுளி சிந்தக் கூடாது! உங்கள் உடல் எகிப்தில் இருந்தாலும் உள்ளம் ரோமில்தான் உலவிக் கொண்டு வருகிறது! புல்வியாவுக்கு புனிதக் கண்ணீரும், கிளியோபாத்ராவுக்கு முதலைக் கண்ணீரும் விட வேண்டாம். அப்புறம் திரும்பி அவளுக்காக அழுவீர் ஆண்டனி! இப்புறம் என்னிடம் விடைபெற்று ஏகுவீர், கண்ணீரை எகிப்துக்கு விடுவதாய்க் கூறி! ஆண்டனி: [கோபமாக] கிளியோபாத்ரா! என் குருதியைக் கொதிக்க வைக்கிறாய்! போதும் நிறுத்து உன் புலம்பலை! கிளியோபாத்ரா: [கனிவுடன்] ஆண்டனி! ஒரு வார்த்தை சொல்கிறேன்! நீங்களும் நானும் பிரிய வேண்டும்! அது மட்டு மில்லை! நீங்களும் நானும் ஒருவரை ஒருவர் நேசித்தோம். அது போகட்டும்! உங்களைப் போல் எனக்கும் மறதி வரட்டும்! நிம்மதியாக மறந்து நான் தனியாகக் கிடக்கலாம். நீங்கள் என்னருகில் இருந்தாலும், நான் தனிமையில்தான் நோகிறேன். உங்கள் அரசாங்கப் பணிகள் உங்களை அழைக்கின்றன! எனது கனிவு மொழிகளைக் காதில் போட்டுக் கொள்ள வேண்டாம். போங்கள்! வெற்றி உங்களுக்குத்தான்! தோல்வி எனக்குத்தான்! பிரிவு எனக்குத்தான்! வேதனை எனக்குத்தான்! ஆண்டனி: சரி போகிறேன், கிளியோபாத்ரா! போனதும் வந்து விடுகிறேன்! கண நேரப் பிரிவு! கண நேரப் பிணைப்பு! பிணைப்பும், பிரிவும் மாறி மாறி வரும் பகலிரவு போல! கண்ணிமைப் பொழுதில் சேர்கிறோம்! கண்ணிமைப் பொழுதில் பிரிகிறோம்! பிணைப்பு பிரிவுக்கு வழி யிடுகிறது! பிரிவு பிணைப்புக்கு முயல்கிறது! பிணைப்பும், பிரிவும் ஒரு நாணயத்தின் இரண்டு முகங்கள்! ஒருமுக நாணயத்தை எங்காவது கண்டிருக்கிறாயா? போய் வருகிறேன், கிளியோபாத்ரா! [ஆண்டனி வெளியேறுகிறார். கிளியோபாத்ரா கண்ணீருடன் ஆண்டனி போகும் திசையை நோக்குகிறாள்] *********************   அங்கம் -6 காட்சி -5 தூக்க பானத்தைக் கொடுத்திடு! காலப் பெரு இடைவெளி கடந்திட! எனைவிட் டேகினார் என்னினிய ஆண்டனி! …     கிளியோபாத்ரா வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)   எங்குள்ளார் ஆண்டனி? நிற்கிறாரா? குந்தி யுள்ளாரா? நடக்கிறாரா? அன்றிக் குதிரைமேல் சவாரியா? ஆண்டனி பளுவைச் சுமக்கும் குதிரையே! யாரைச் சுமந்தேன் எனும் தீர நடையில் செல்! … (கிளியோபாத்ரா) வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)   என்னரும் ராணி அவர் இறுதியாய்ச் செய்தது! முத்த மிட்டார் இவ்வாசிய முத்தை இருமுறை! அப்பிக் கொண்டன நெஞ்சை அந்த மொழிகள்! “அருமை நண்பா! நிமிர்ந்த ஆண்டனி எகிப்து அழகிக்குச் சிப்பிக் களஞ்சியம் அனுப்பிய தாக உரைத்திடு” என்பார். பிணைப்பேன் அவள் பொன் ஆசனத்துடன், பிடித்த என் நாடுகளை எல்லாம். ஆசிய நாடுகள் அனைத்தும் அவளை ஆசை நாயகியாய் அழைக்கும் எனச்சொல்! … (அலெக்ஸாஸ்) வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)   பனித்த குருதியில் என்னறியாப் பருவத்தில், நல்லது, கெட்டது புரியாத் தருணத்தில், தனித்து அப்பாவி போல் சொல்லியது : கொண்டுவா தாளையும், மையையும். எகிப்த் குடியினர் அனைவரும் அனுதினம் எழுதிக் கடிதம் போகும் ஆண்டனி அவர்க்கு! … கிளியோபாத்ரா வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)   []   நாடகப் பாத்திரங்கள்: எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவில்: கிளியோபாத்ரா: எகிப்தின் பட்டத்தரசி ஆண்டனி: ரோமாபுரியின் மூன்று தளபதிகளில் ஒருவர் டையோமீடிஸ்: கிளியோபாத்ராவின் பணியாள் ஸெலியூகஸ்: கிளியோபாத்ராவின் கணக்காளி பெல்லோடோரஸ்: கிளியோபாத்ராவின் பாதுகாப்புக் காவலன். பிதாதீதா: கியோபாத்ராவின் ஆயா சிஸேரியன்: கிளியோபாத்ராவின் மகன் ரோமாபுரியில்:  ரோமின் தளபதி: மார்க் ஆண்டனி, அக்டேவியஸ் சீஸர்: ரோமின் இரண்டாம் தளபதி, ஜூலியஸ் சீஸரின் சகோதரன் மகன் லெப்பிடஸ், ரோமின் மூன்றாம் தளபதி எனோபரஸ் (ஆண்டனியின் பாதுகாவலன்), டெமிட்ரியஸ்: ஆண்டனியின் நண்பன் ஃபிலோ: ஆண்டனியின் நண்பன் ஸெக்டஸ் பாம்ப்பி (கொல்லப்பட்ட போர்த் தளபதி பாம்ப்பியின் வாலிப மகன்) அக்டேவியா (ஆண்டனியின் இரண்டாம் மனைவி, அக்டேவியஸின் சகோதரி)   []     ரோமா புரியின் நிலைமை: ஃபிலிப்பிப் போரில் புரூட்டஸ், காஸ்ஸியஸ் மற்ற சதிகாரர் யாவருமிறந்த பிறகு, ஆண்டனி, அக்டேவியஸ், லெப்பிடஸ் மூவர்களின் கூட்டு மேற்பாட்டில் ரோமாபுரி இயங்கி வருகிறது. ஜூலியஸ் சீஸர் கொலையாகி இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஆண்டனி கிளியோபாத்ராவைக் காண எகிப்த் வருகிறான். மனைவி ஃபுல்வியா மரணம் அடைந்த பிறகு, ஆண்டனி தனிமையாகிக் கிளியோபாத்ரா மீது நாட்டம் உண்டாகுகிறது. அதே சமயத்தில் நிதிக் களஞ்சியம் காலியாகிப் போர்வீரர்களுக்குக் கூலி கொடுக்க நிதியின்றிப் பணம் திரட்ட வேண்டி, ஆண்டனி எகிப்து செல்லத் திட்டமிடுகிறான். எகிப்த் அரசியிடம் நேராகக் கையேந்திப் பிச்சை கேட்கத் துணிவின்றி, கிளியோபாத்ரா தன்னைக் காண வரவேண்டும் என்று காவலர் மூலம் உத்தரவு அனுப்புகிறான். ஆனால் கிளியோபாத்ரா எகிப்த் தளத்தில் தானிருப்பதாகவும், ஆண்டனிதான் அவளைக் காண வரவேண்டும் என்று மறுமொழி அனுப்புகிறாள். எகிப்துக்கு வந்த ஆண்டனி தன் மனைவி புல்வியா போர்க்களத்தில் தனித்துப் போய் நோயில் மரணமடைந்த தகவல் கேட்டு மனம் நோகிறான். ரோமுக்கு மீளவும் விரும்பாது, கிளியோபாத்ராவின் கவர்ச்சியிலிருந்து மீளவும் முடியாது திண்டாடுகிறான் ஆண்டனி. ரோமாபுரி அரண்மனையில் தளபதி அக்டேவியஸ் எகிப்திலிருந்து ஆண்டனி போரில் கலந்து கொள்ள வரவில்லை என்று செய்தி கொண்டுவந்த கடிதத்தைக் கையில் பார்த்துக் கொண்டு ஆத்திரமோடு உள்ளார். கொல்லப்பட்ட பாம்ப்பியின் மகன் ஸெக்டஸ் பாம்ப்பி தனது படைகளுடன் ரோமைக் கைப்பற்ற வந்து கொண்டிருக்கிறான். அக்டேவியஸ்: பார் லெப்பிடஸ்! ஆண்டனி வரவில்லை! எகிப்தில் கட்டாய வேலை யிருப்பதால், ஆண்டனி போரில் கலந்த கொள்ள முடியாதாம். ஸெக்டஸ் பாம்ப்பி ரோமின் எல்லையில் உள்ளதாய் அறிந்தேன்! லெப்பிடஸ்! நீ ஒருவன் மட்டும் பாம்ப்பியை எதிர்க்க முடியாது! ஆண்டனி முன்போல் படை வீரரை நடத்திச் செல்ல வேண்டும். ஆனால் கிளியோபாத்ரா கவர்ச்சி வலையில் மிதந்து கொண்டிருக்கிறார் ஆண்டனி! என்ன கட்டாய வேலை எகிப்தில் உள்ளது ஆண்டனிக்கு? கிளியோபாத்ரா கண்சிமிட்டும் போது முத்தமிடுவதைத் தவிரக் கட்டாய வேலை வேறு என்ன ஆண்டனிக்கு?   []   லெப்பிடஸ்: நமது நிதிக் களஞ்சியம் வற்றிப் போனதை மறந்து விட்டாயா, அக்டேவியஸ்! நமது படையாட்கள் பல மாதங்கள் சம்பளம் தரப்படாமல் முணங்குவது உன் காதில் கேட்க வில்லையா? கிளியோபாத்ராவை ஆசை ராணியாக வைத்துக் கொண்டால்தானே பொன் நாணயங்களை ஆண்டனி கறந்து கொண்டு வரலாம். என்னாற்றல் மீது அவருக்கு உறுதி உள்ளது. அதனால்தான் அவர் வரவில்லை! நான் உள்ள போது நீயேன் கலங்க வேண்டும்? அக்டேவியஸ்: சீஸருக்குப் பிறகு ரோமாபுரியின் பராக்கிரமத் தளபதியாய், ஆண்டனி தனித்து நிற்கிறார். அவரிடம் நாம் குற்றம் காணக் கூடாது! ஆனால் மாவீரர் ஆண்டனி யில்லாமலே நான் பாம்ப்பியின் படைகளை நசுக்க முடியும். எனக்கு நம்பிக்கை உள்ளது! அக்டேவியஸ்: உன் நம்பிக்கை மட்டும் போதாது லெப்பிடஸ்! நமது ரோமானியப் படைகள் சாதாரண மனிதர். அவரைப் புலிகளாகப் பாய வைக்க ஒரு தளபதியால் முடியும்! அதே புலிகளைப் பூனைகளாகவும் ஒரு தளபதி ஆக்கிவிட முடியும். ஆண்டனி சாதாரணப் படை வீரரை ஆவேசப் புலிகளாக ஆக்க வல்லவர்! நமது பொறுப்பில் விட்டுவிட்டு ஆண்டனி கிளியோபாத்ரா மடியில் படுத்துக் கிடப்பது எனக்கு வேதனை தருகிறது. பாம்ப்பியை நாமிருவரும் தோற்கடித்தால் அவர் தன் முதுகில்தான் தட்டிக் கொள்வார். மாறாக நாமிருவரும் தோற்றுப் போனால், உன்னையும் என்னையும் திட்டி ஊரெங்கும் முரசடிப்பார்! லெப்பிடஸ்: ஈதோ போர் முனையிலிருந்து நமக்கு முதல் தகவல் வருகிறது. [அப்போது ஒரு படைத் தூதுவன் வருகிறான்] []   முதல் தூதுவன்: மாண்புமிகு தளபதி அவர்களே! ஒவ்வொரு மணிக்கும் தகவல் வருமினி உங்களுக்கு. வெளி நாட்டுப் போர்க்களம் எப்படி உள்ள தென்று சொல்லவா? பாம்ப்பியின் கடற் படைப்பலம் வல்லமை உள்ளது. அக்டேவியஸ் தீரருக்கு அஞ்சியவர் அனைவரும் பாம்ப்பியின் பக்கம் போய்ச் சேர்ந்திருக்கிறார். அவரது ஒற்றர் அவருக்குத் தவறான தகவலைக் கொடுக்க வழி செய்தோம் நாங்கள்! அக்டேவியஸ்: மெச்சினேன் உன்னை! தப்பான தகவல் கொடுங்கள்! தவறான பாதையைக் காட்டுங்கள்! மாட்டிக் கொண்டதும் அவரைச் சுற்றித் தாக்கி ஈட்டியால் குத்துங்கள்! [முதல் தூதுவன் போகிறான். அடுத்த தூதுவன் நுழைகிறான்] இரண்டாம் தூதுவன்: மாபெரும் கடற் கொள்ளைக்காரர் பலரைப் பாம்ப்பி படைவீரராய்ச் சேர்த்திருக்கிறார். அந்த பயங்கர வாதிகள் பரிவுள்ள மனிதர் அல்லர். வன விலங்குகள்! நாம் மிகக் கவனமாகப் போரிட வேண்டும். அக்டேவியஸ்: முன்பே அறிவித்ததற்கு நன்றி. போய் வா [தூதுவன் போகிறான்] லெப்பிடஸ்! புதிதாகப் பயிற்சி பெற்ற அந்த வாலிப படைகளை அனுப்பி வை! வாலிபர் நெஞ்சம் வைரம் போன்றது. கடற் கொள்ளைக்காரர் ஓய்வெடுக்கும் நேரம் பார்த்துக் கப்பலுக்குள் அவர் நுழைய வேண்டும். திடீரெனத் தாக்கி அவருக்கு மரண அதிர்ச்சி கொடுக்க வேண்டும். ஆண்டனி யிருந்தால் அவரது ஆலோசனை பயன்படும். அவர் கடற்போர் புரியும் நேரத்தில் கிளியோபாத்ராவுடன் குளத்தில் நீராடிக் கொண்டிருப்பார். லெப்பிடஸ்: ஆண்டனியால் நமக்கும் அவமானம்!, அவருக்கும் அவமானம்! தன்மான மின்றி அடிமையாய்ப் பெண்மானின் காலை வருடிக் கொண்டிருக்கிறார்! ஆண்டனி கிளியோபாத்ராவுக்கு அடிமையா? அல்லது கிளியோபாத்ரா ஆண்டனிக்கு அடிமையா? .. நான் கவலைப் படவில்லை. நமது படைகள் கூடட்டும்! நமது கலப்பு யோசனைகள் சேரட்டும்! நாம் எதிர்த்து முன்னேறா விட்டால், பாம்ப்பி நமது சோம்பலில் பலப் பெறுவார்! நாளை நமது கடற்படையைத் திரட்டித் தயார் செய்கிறேன்! நான் போகட்டுமா? விடை பெறுகிறேன். [வெளியேறுகிறான்] அக்டேவியஸ்: போய்வா லெப்பிடஸ்! … ஆண்டனி! உனக்கு அழிவு காலம் உதய மாகி விட்டது. அறிவை அடகு வைத்து அணங்கின் பிடியில் வீரன் நீ அகப்பட்டுக் கிடக்கிறாய்! உன் கண்கள் காதலில் மூழ்கி ஒளியிழந்து குருடாகி விட்டன! நீ கண்ணை மூடினால் ரோமாபுரி இருட்டாகி விடாது! [போகிறான்]     []     கிளியோபாத்ரா: [மனம் நொந்துபோய்] ஐரிஸ்! அந்த மயக்க பானத்தை எனக்கு எடுத்து வா! [ஐரிஸ் போகிறாள்] நான் மறக்க வேண்டும் என் மன வேதனையை! நான் தூங்க வேண்டும், கால இடைவெளியைக் கடக்க! தூங்கி விழிக்கும் போது ஆண்டனி என் கண் முன்னே நிற்க வேண்டும்! அதுவரை எனக்கு உணவில்லை! கனவில்லை! நினைவில்லை! எதுவுமில்லை! ஆண்டனி விழிமுன் நின்றால், கண்ணிமைகள் தானாகவே திறக்கும். சார்மியான்! வாசலில் போய் நில், வருகிறாரா என்று பார்த்துச் சொல்! [சார்மியான் போகிறான்]. அலெக்ஸாஸ்! எனக்குத் தெரியாமல், எனக்குச் சொல்லாமல் ஆண்டனி ரோமாபுரிக்குப் போய் விட்டாரா என்று அறிந்து வா! போனால் எப்போது திரும்பி எகிப்துக்கு வருவாரெனத் தெரிந்து வா! [அலெக்ஸாஸ் போகிறான்] [ஐரிஸ் கொண்டு வரும் தூக்க பானத்தை அருந்திப் படுக்கையில் சாய்கிறாள்] கிளியோபாத்ரா: [எழுந்து] மார்டியான்! ஆண்டனி எங்கே போயிருக்க முடியும் என்று உன்னால் ஊகிக்க முடியுதா? எங்காவது காத்துக் கொண்டு நிற்கிறாரா? கவலையுடன் நெற்றியில் கைவைத்து எங்காவது உட்கார்ந் திருப்பாரா? ரோமுக்குப் போவதா, வேண்டாமா வென்று திக்குமுக்காடி அங்குமிங்கும் நடக்கிறாரா? அல்லது குதிரை மீதேறிச் சவாரியில் அப்பால் போய்க் கொண்டிருக்கிறாரா? அப்படியானல் அவரது பளுவைத் தாங்கும் அந்த குதிரை ஓர் அதிர்ஷ்டக் குதிரை! எத்தகைய கோமானைச் சுமக்கிற தென்று அக்குதிரை பெருமைப் பட்டுக் கொள்ளலாம்! [அப்போது கையில் சிறு பேழையோடு அலெக்ஸாஸ் நுழைகிறான்] அலெக்ஸாஸ்: மகாராணி! ஈதோ ஒரு பரிசை ஆண்டனி அனுப்பி யிருக்கிறார்! உள்ளிருப்பது நல்முத்து ! மூன்று முறை முத்தமிட்டு ஆண்டனி அளித்ததாகத் தூதர் சொல்கிறார். இது ஆசிய முத்து! ஆண்டனியின் இனிய அதரங்கள் அன்புடன் முத்தமிட்டு அளித்த முத்து ஈதோ! [கையில் கொடுக்கிறான்] []   கிளியோபாத்ரா: ஆண்டனி முத்தமிட்ட முத்தென்றால் அதன் மதிப்பு ஆயிரம் மடங்கு! அடுத்தொரு முத்து வந்தால் காதணியாக மாட்டிக் கொள்வேன். என் தலையணைக் கடியில் வைத்துக் கொள்கிறேன். எனக்கினிய கனவுகள் வரும்! அக்கனவுகளில் முத்தை முத்தமிட்ட ஆண்டனி என்னை முத்தமிட வருவார்! அலெக்ஸாஸ்: மகாராணி! ஆண்டனி தூதர் மூலம் ஒரு கடிதமும் அனுப்பியுள்ளார் உங்களுக்கு. ஈதோ கடிதம் [கடித்ததைக் கொடுக்கிறான்] கிளியோபாத்ரா: [கடித்தை வாசிக்கிறாள்] “ஆசியச் சிப்பியின் முத்தை உனக்கு அனுப்பியிருக்கிறேன். அது தனித்துவம் படைத்தது. ஏனெனில் எனதினிய முத்தங்களைச் சுமந்து கொண்டு வருகிறது. கண்ணே கிளியோபாத்ரா! ஈதோ என் மாபெரும் பரிசு! நான் கைப்பற்றிய நாடுகளை எல்லாம், உனது எகிப்திய அரசுடன் இணைப்பேன். கிழக்காசிய நாடுகளும் உன்னைத் தம் ஆசை ராணியாகப் போற்றும்!” [பூரித்து எழுகிறாள்] யாரங்கே! அலெக்ஸாஸ்! தாளும், மையும் கொண்டுவா! நான் ஆண்டனிக்குக் கடிதம் எழுத வேண்டும். எகிப்தில் எழுதத் தெரிந்த அத்தனை பேரையும் தினமொரு முறை எழுத வைத்து, ஆண்டனிக்குக் கடிதம் அனுப்புவேன். முதல் கடிதம் என் கடிதம் என்னாசைக் காதலருக்கு! ********************* ஆண்டனி & கிளியோபாத்ரா மூன்றாம் பாகம் அங்கம் -7 காட்சி -1 அவளோர் தர்க்க ராணி! வாயாடி மாது! அவளைப் பற்றிவை  இவற்றுள் அடங்கும்: திட்டுவாள்! சிரிப்பாள்! அழுவாள்! கொதித்தெழும் ஆவேசம், ஆத்திர உணர்ச்சி, உன் கவனம் கவரும்! போற்ற விழைவாய்! உண்மை யாய்த் தோன்றும் அவை உனக்கு! …..     ஆண்டனி    வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)   . []     நாடகப் பாத்திரங்கள்: எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவில்: கிளியோபாத்ரா: எகிப்தின் பட்டத்தரசி ஆண்டனி: ரோமாபுரியின் மூன்று தளபதிகளில் ஒருவர் டையோமீடிஸ்: கிளியோபாத்ராவின் பணியாள் ஸெலியூகஸ்: கிளியோபாத்ராவின் கணக்காளி பெல்லோடோரஸ்: கிளியோபாத்ராவின் பாதுகாப்புக் காவலன். பிதாதீதா: கிளியோபாத்ராவின் ஆயா சிஸேரியன்: கிளியோபாத்ராவின் மகன் ரோமாபுரியில்: ரோமின் தளபதி: மார்க் ஆண்டனி, அக்டேவியஸ் சீஸர்: ரோமின் இரண்டாம் தளபதி, ஜூலியஸ் சீஸரின் சகோதரன் மகன் லெப்பிடஸ், ரோமின் மூன்றாம் தளபதி எனோபரஸ் (ஆண்டனியின் பாதுகாவலன்), டெமிட்ரியஸ்: ஆண்டனியின் நண்பன் ·பிலோ: ஆண்டனியின் நண்பன் ஸெக்டஸ் பாம்ப்பி (கொல்லப்பட்ட போர்த் தளபதி பாம்ப்பியின் வாலிப மகன்) அக்டேவியா (ஆண்டனியின் இரண்டாம் மனைவி, அக்டேவியஸின் சகோதரி)   []   ரோமா புரியின் நிலைமை: ஃபிலிப்பிப் போரில் புரூட்டஸ், காஸ்ஸியஸ் மற்ற சதிகாரர் யாவருமிறந்த பிறகு, ஆண்டனி, அக்டேவியஸ், லெப்பிடஸ் மூவர்களின் கூட்டு மேற்பாட்டில் ரோமாபுரி இயங்கி வருகிறது. ஜூலியஸ் சீஸர் கொலையாகி இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஆண்டனி கிளியோபாத்ராவைக் காண எகிப்த் வருகிறான். மனைவி ·புல்வியா மரணம் அடைந்த பிறகு, ஆண்டனி தனிமையாகிக் கிளியோபாத்ரா மீது நாட்டம் உண்டாகுகிறது. அதே சமயத்தில் நிதிக் களஞ்சியம் காலியாகிப் போர்வீரர்களுக்குக் கூலி கொடுக்க நிதியின்றிப் பணம் திரட்ட வேண்டி, ஆண்டனி எகிப்து செல்லத் திட்டமிடுகிறான். எகிப்த் அரசியிடம் நேராகக் கையேந்திப் பிச்சை கேட்கத் துணிவின்றி, கிளியோபாத்ரா தன்னைக் காண வரவேண்டும் என்று காவலர் மூலம் உத்தரவு அனுப்புகிறான். ஆனால் கிளியோபாத்ரா எகிப்த் தளத்தில் தானிருப்பதாகவும், ஆண்டனிதான் அவளைக் காண வரவேண்டும் என்று மறுமொழி அனுப்புகிறாள். எகிப்துக்கு வந்த ஆண்டனி தன் மனைவி புல்வியா போர்க்களத்தில் தனித்துப் போய் நோயில் மரணமடைந்த தகவல் கேட்டு மனம் நோகிறான். ரோமுக்கு மீளவும் விரும்பாது, கிளியோபாத்ராவின் கவர்ச்சியிலிருந்து மீளவும் முடியாது திண்டாடுகிறான் ஆண்டனி. இளைய பாம்ப்பி ரோமாபுரியைத் தன்வசமாக்க முயற்சிக்கிறான். கிளியோபாத்ராவிடம் மனதைப் பறிகொடுத்த ஆண்டனி ரோமுக்கு மீளத் தயங்குகிறான். அக்டேவியஸ் தன் தங்கையை மணக்க வழி செய்து ஆண்டனி ரோமுக்கு வரத் தந்திரம் செய்கிறான்.  ++++++++++++++++++ நேரம், இடம்: அலெக்ஸாண்டியா, கிளியோபாத்ராவின் மாளிகை. பகல் வேளை.  நாடகப் பாத்திரங்கள்: கிளியோபாத்ரா, சேடிகள், அடிமைகள், ஐரிஸ், அலெக்ஸாஸ், சார்மியான்.  காட்சி அமைப்பு: ஆண்டனியைக் காணாமல் கிளியோபாத்ரா கவலையுடன் அலைமோதிக் கொண்டிருக்கிறாள்.  அலெக்ஸாஸ்: மகாராணி! ஒரு முக்கியமான செய்தி! ஆண்டனி எகிப்திலில்லை! தளபதி ஆண்டனி ரோமாபுரிக்குப் போயிருப்பாதாக எனக்குத் தகவல் கிடைத்துள்ளது. கிளியோபாத்ரா: [கவலையுடன்] எப்போது போனார்? எதற்காகப் போனார்? நமது ஒற்றர் படை அறியாமல் எப்படிப் போனர்? என்னிடம் சொல்லாமல் போனாரே! அலெக்ஸாஸ்: ரோமுக்கு வரும்படி ஆண்டனிக்கு அவசரச் செய்தி வந்திருக்கிறது! பாம்ப்பியின் போர்ப்பலம் அதிகமென்று தெரிந்ததால் அக்டேவியஸ் அவசரத் தூதரை அனுப்பி யுள்ளார். ஆண்டனி போகாவிட்டால், பாம்ப்பியின் படையினர் ரோமாபுரியைப் பிடித்து விடுவார் என்னும் பயம் உண்டாகி விட்டது. போரை முன்னின்று நடத்தி, பாம்ப்பியை முறியடிக்க ஆண்டனி ஒருவரால்தான் முடியும் என்பது அக்டேவியஸ் முடிவு. அதன் விளைவு ஆண்டனி மறைவு! கிளியோபாத்ரா: [மன வேதனையுடன்] அப்படியானல் ரோமில் போர் நிகழப் போவது உண்மைதானா? போர்க்களத்தின் முன்னணியில் நின்று போரிடும் ஆண்டனிக்கு ஏதாவது நிகழ்ந்தால் என்கதி என்னவாகும்? சீஸர் கொல்லப் பட்டதும் என்மனம் இப்படித்தான் அலைமோதியது. சீஸர் மாண்ட பிறகு எகிப்தின் ஆதரவாய் ஆண்டனி இருப்பார் என்று ஆனந்தமாய் இருந்தேன். சீஸர் போனதும் எனக்கு ஆண்டனி உதவியாக இருப்பார் என்று மகிழ்ச்சியாக இருந்தேன். ஆண்டனிக்கு எந்த ஆபத்தும் வந்தால் என்னால் தாங்கிக் கொள்ள முடியாது. சீஸர் காலிசெய்த என்னிதயத்தில் ஆண்டனிக்கு ஓரிடம் வைத்திருந்தேன்! ஆனால் அவரது மனம் வேறிடம் தேடிப் போகிறதே! அலெக்ஸாஸ்: மகாராணி! ஆண்டனிக்குப் போரில் ஒன்றும் நிகழாது. அவர் மகா வீரர்! அப்படி அவருக்கு ஏதேனும் ஆனால் அக்டேவியஸ் உள்ளார். அவர் எகிப்தின் ஆதரவாளர் அல்லவா? கிளியோபாத்ரா: [சினத்துடன்] இல்லை! சீஸரையும் அப்படித்தான் நினைத்தேன். அவருடைய நண்பன் புரூட்டஸே சீஸர் வயிற்றில் குத்தினார்! அக்டேவியஸ் எகிப்தின் ஆதரவாளி அல்லர்! எகிப்தை உரிமை நாடாகக் கருதாமல், அடிமை நாடாக மிதிக்க எண்ணுபவர் அவர். எகிப்தின் மீது அவருக்குப் பரிவுமில்லை! பகையுமில்லை! ஆனால் சீஸரை நான் மணந்தது அவரது வாரீசான அக்டேவியஸ¤க்குப் பிடிக்க வில்லை! எனக்கும் சீஸருக்கும் ஆண் மகவு பிறந்ததும் அக்டேவியஸ¤க்குப் பிடிக்க வில்லை! நான் ரோமாபுரிக்குச் சென்ற போது, அக்டேவியஸ் என்னைப் பார்த்த அந்த அடாத பார்வை என் நினைவில் பதிந்து போயுள்ளது. என் மகனைப் பார்த்த அவரது கழுகுப் பார்வையை நான் மறக்கவில்லை. அக்டேவியஸ் மெய்யாக என் பகைவர்! அதனால் எகிப்துக்கும் பகைவர்! அக்டேவியஸை நான் நம்ப மாட்டேன். அலெக்ஸாஸ்: மகாராணி! நீங்கள் சொல்வதில் ஓர் உண்மை யிருக்கிறது. அக்டேவியஸ் ஆண்டனியை உங்களிடமிருந்து பிரிக்க வழி செய்வதாகத் தெரிகிறது. கிளியோபாத்ரா: [ஆர்வமோடு] எதை வைத்து அப்படிச் சொல்கிறாய்? எனக்குப் புரிய வில்லை! எகிப்தின் நண்பரை என்னிட மிருந்து பிரிப்பதால் அவருக்கென்ன அனுகூலம்? அலெக்ஸாஸ்: மகாராணி! ஆண்டனிக்கு மறுமணம் செய்து வைக்க அக்டேவியஸ் முற்படுவதாகக் கேள்விப் பட்டேன்! []   கிளியோபாத்ரா: [கையிலிருந்த மதுக் கிண்ணத்தை வீசி எறிந்து] என்ன? ஆண்டனிக்கு அடுத்தோர் திருமணமா? மனைவி புல்வியா செத்தின்னும் பத்து நாட்கள் கூட ஆகவில்லை! அவளைப் புதைத்த பூமியில் இன்னும் புல் கூட முளைக்க வில்லை! புல்வியாவுக்கு வடித்த கண்ணீர் ஆண்டனிக் கின்னும் வற்றி உலரவில்லை! அதற்குள் அடுத்தோர் திருமணமா? நம்ப முடிய வில்லை! யாரந்த புதுப்பெண்? அலெக்ஸாஸ்: அவள் பெயர் அக்டேவியா! கிளியோபாத்ரா: [கோபத்தில் அலறி] யாரந்த சிறுக்கி? அவளுக்கு ஆண்டனி மேல் காதலா? அல்லது ஆண்டனிக்கு அவள் மீது மோகமா? புல்வியா போனதும் புதுப் பெண் மீது கண் விழுந்து விட்டதா? அலெக்ஸாஸ்: அக்டேவியஸின் தங்கை அவள்! அக்டேவியா ஓர் அழகியாம்! பதினாறு வயதாம்! பார்த்தவர் மயங்கிப் போகும் பாவையாம்! ஆண்டனிக்கு அவள் மீது ஆசையாம்! கிளியோபாத்ரா: [ஆத்திரமோடு] அப்படி நிச்சயம் இருக்க முடியாது. அக்டேவியஸே ஆண்டனிக்கு வயதில் சிறியவர்! அவருடைய தங்கை எப்படி யிருப்பாள்? ஆண்டனிக்கு அருமை மகளைப் போலிருப்பாள்! மனைவியாக உடம்பு இருக்காது. அந்த சிறுக்கியை மணந்து கொள்ள ஆண்டனி சம்மதம் தந்து விட்டாரா? அலெக்ஸாஸ்: [மிக்க பயமுடன்] மகாராணி! நானொரு தூதுவன். என் மேல் கோபப் படாதீர்கள்! எப்படிச் சொல்வது என்று தயங்கினேன். ஆண்டனி ஒப்புக்கொண்டு விட்டார் என்று அறிந்தேன், மகாராணி! கிளியோபாத்ரா: [கண்களில் கோபக்கனல் பறக்க] என்னை வஞ்சித்து அவளை மணக்க ஆண்டனி சம்மதித்து விட்டாரா? என்னை நோக வைக்க ஆண்டனி செய்வதாக நான் உணர்கிறேன்! ரோமானியர் அனைவரும் வஞ்சகர், சீஸரைத் தவிர! அலெக்ஸாஸ்! உடனே நமது ஒற்றனை ரோமாபுரிக்கு அனுப்பு! அங்கே என்ன நடக்கிற தென்று நான் அறிய வேண்டும். ஒருத்தன் அல்ல ஒன்பது பேரை அனுப்பு. அனுதினமும் எனக்குச் செய்தி கிடைக்க வேண்டும். போ அலெக்ஸாஸ் போ! [அலெக்ஸாஸ் போகிறான். முகத்தைத் திருப்பிக் கொண்டு அழுகிறாள்] ஐரிஸ்! மதுபானம் கொண்டுவா! [மதுபானத்தைக் கிண்ணத்தில் ஊற்றித் தருகிறாள்] ஐரிஸ்! இப்போது ரோமில் என்ன நடக்கும்? எப்படி இருப்பாள் அந்தக் குமரி அக்டேவியா? என்னை விட அழகானவளா? என்னை விட அறிவானவளா? என்னை விட உயரமாக இருப்பாளா? அல்லது குட்டையாக இருப்பாளா? என்னைப் போல் வெள்ளையாக இருப்பாளா? []   ஐரிஸ்: மகாராணி! பதினாறு வயதுப் பேதை எப்படி யிருப்பாள்? பிரபு ஆண்டனிக்கு அவளைப் போல் மூன்று மடங்கு வயது! மகளும், தந்தையும் மணமேடையில் அமர்ந்தால் எப்படி யிருக்கும்? பார்க்கச் சகிக்காது! பல்லாங்குழி விளையாடும் பாவையைப் பைத்தியகாரர் தளபதிக்கு மணமுடிக்கிறார்! கிளியோபாத்ரா: ஐரிஸ்! ஆண்டனி திருமணத்தை நிறுத்த வேண்டுமே, எப்படிச் செய்வது? ஐரிஸ்: மகாராணி! திருமணத்தைத் தடுக்க முடியாது! ஆனால் ஆண்டனியின் புதுப் பெண்ணைப் பிரித்து விடலாம். அதைச் செய்வது எளிது! கவலைப் படாதீர்கள், மகாராணி! நான் ஏற்பாடு செய்கிறேன். கிளியோபாத்ரா: [தனக்குள் மெதுவாக] வரட்டும் ஆண்டனி! அவரை மயக்க வேண்டும் மதுவைக் கொடுத்து! அவரை மணக்க வேண்டும் நான் மணாளனாக! அக்டேவியா ஆண்டனியின் மனைவியா? கிளியோபாத்ரா உள்ளவரை அது நிகழாது! ரோமுக்கு ஆண்டனி மீளாதபடிச் செய்வது என் கடமை! பார்க்கிறேன், யார் பெரியவள் என்று? வாலிபக் குமரி கிளியோபாத்ராவா? அல்லது இளங்குமரி அக்டேவியா? [ஆங்காரமாக] அக்டேவியா ஆண்டனியின் மனைவியாக எகிப்த் மண்ணில் கால் வைத்தால், தடம்பட்ட தளமெல்லாம் நாகப் பாம்புகளை நடமாட விடுவேன்! அவளை நான் உயிரோட வாழ விடமாட்டேன்! ஆண்டனி எனக்குச் சொந்தம்! அவரை வேறெந்த மாதும் என் முன்பாக முத்தமிடப் பொறுக்க மாட்டேன்! *********************   அங்கம் -7 காட்சி -2 செம்மைப் போர்  கடற்படை என் கைப்பலம்! எம்மை ரோமாபுரி மிகவே நேசிக்கும்! எனது பராக்கிரமம் பெருகும்! ஜோதிட முன்னறிப்பு மெய்யாகும்! என்னாசை நிறைவேறும்! வெளிப்புற விருந்தில் எகிப்தி லிருப்பார் ஆண்டனி! போர் புரிய ரோமா புரிக்குப் போகார்.   இளைய பாம்ப்பி வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா) அக்டேவியஸ், லெப்பிடஸ் எகிப்தி லிருப்பார், ஆண்டனி எங்குளார் எனத் தேடிக் கொண்டு ! மையல் மோகினி கிளியோ பாத்ராவின் மந்திரக் கவர்ச்சியில் மயங்கிக் கிடப்பார்! …     இளைய பாம்ப்பி   வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா) []   ரோமா புரியின் நிலைமை: ·பிலிப்பிப் போரில் புரூட்டஸ், காஸ்ஸியஸ் மற்ற சதிகாரர் யாவருமிறந்த பிறகு, ஆண்டனி, அக்டேவியஸ், லெப்பிடஸ் மூவர்களின் கூட்டு மேற்பாட்டில் ரோமாபுரி இயங்கி வருகிறது. ஜூலியஸ் சீஸர் கொலையாகி இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஆண்டனி கிளியோபாத்ராவைக் காண எகிப்த் வருகிறான். மனைவி ·புல்வியா மரணம் அடைந்த பிறகு, ஆண்டனி தனிமையாகிக் கிளியோபாத்ரா மீது நாட்டம் உண்டாகுகிறது. அதே சமயத்தில் நிதிக் களஞ்சியம் காலியாகிப் போர்வீரர்களுக்குக் கூலி கொடுக்க நிதியின்றிப் பணம் திரட்ட வேண்டி, ஆண்டனி எகிப்து செல்லத் திட்டமிடுகிறான். எகிப்த் அரசியிடம் நேராகக் கையேந்திப் பிச்சை கேட்கத் துணிவின்றி, கிளியோபாத்ரா தன்னைக் காண வரவேண்டும் என்று காவலர் மூலம் உத்தரவு அனுப்புகிறான். ஆனால் கிளியோபாத்ரா எகிப்த் தளத்தில் தானிருப்பதாகவும், ஆண்டனிதான் அவளைக் காண வரவேண்டும் என்று மறுமொழி அனுப்புகிறாள். எகிப்துக்கு வந்த ஆண்டனி தன் மனைவி புல்வியா போர்க்களத்தில் தனித்துப் போய் நோயில் மரணமடைந்த தகவல் கேட்டு மனம் நோகிறான். ரோமுக்கு மீளவும் விரும்பாது, கிளியோபாத்ராவின் கவர்ச்சியிலிருந்து மீளவும் முடியாது திண்டாடுகிறான் ஆண்டனி. இளைய பாம்ப்பி ரோமாபுரியைத் தன்வசமாக்க முயற்சிக்கிறான். கிளியோபாத்ராவிடம் மனதைப் பறிகொடுத்த ஆண்டனி ரோமுக்கு மீளத் தயங்குகிறான். அக்டேவியஸ் தன் தங்கையை மணக்க வழி செய்து ஆண்டனி ரோமுக்கு வரத் தந்திரம் செய்கிறான். []   நேரம், இடம்: ஸிசிலித் தீவின் மெஸ்ஸினா முனையில் இளைய பாம்பியின் போர்க் கூடாரம்.  நாடகப் பாத்திரங்கள்: போர்த் தளபதி பாம்ப்பி, படை வீரர்கள் மெனாஸ், மெனிகிரேட்ஸ்  காட்சி அமைப்பு: பாம்ப்பி, மேனாஸ், மெனிகிரேடஸ் போருடையில் உள்ளார்கள். போர்முகாமில் போர் செய்யும் முறைகள், பாதைகள் ஆராயப் படுகின்றன. இளைய பாம்ப்பி: தெய்வங்கள் நியாயமாக நடந்தால், நியாயவாதிகளுக்கு வெற்றியைத் தரவேண்டும். தெய்வங்கள் எப்போதும் நியாயமற்ற அயோக்கியருக்குத்தான் உதவி செய்கின்றன! என் தந்தைக்கும் அப்படித்தான் ஆனது. எல்லா தெய்வங்களும் அவரைக் கடைசியில் கைவிட்டன! எகிப்தில் தணித்து விடப்பட்டு அவரது தலையை எகிப்தியர் துண்டாக்கினர்! ஜூலியஸ் சீஸர் அதிர்ஷ்டக்காரர். சென்ற விட மெல்லாம் சீஸருக்குத்தான் வெற்றி மேல் வெற்றிகள்! சீஸரை வரவேற்க, சீஸரை மகிழ்விக்க தந்தையின் தலை காணிக்கையாக தரப்பட்டது! சீஸரை என்னால் கொல்ல முடிய வில்லை! அதற்குள் அவரது செனட்டர்களே அவரைக் குத்திக் கொன்றார்! சீஸரைப் பலிவாங்கா விட்டாலும், நான் சீஸரின் சீடர்களைப் பலிவாங்க வேண்டும். மேனாஸ்: உங்கள் கொள்கைப்படி பார்த்தால், வெற்றி வீரர் சீஸர் பக்கம்தான் நியாயம் இருந்ததாகத் தெரிகிறது. உங்கள் தந்தையின் பரம எதிரி சீஸர் அல்லவா? உங்கள் தந்தையை விரட்டிச் சென்றவர் சீஸர் அல்லவா? பாம்ப்பி: உண்மைதான்! எகிப்தில் என் தந்தை தலை துண்டிப்புக்குக் காரணமானவர் சீஸர்! அந்த அநியாயத் தளபதிக்கு தெய்வங்கள் உதவி செய்தன! நியாதிபதியான என் தந்தைக்குக் கிடைத்த பரிசு மரணம்! நமது பிரார்த்தனைகள் தெய்வத்தின் செவியில் கேட்பதில்லை. இம்ம்முறை நான் முழு ஆற்றலுடன் போரிடப் போகிறேன். ரோமாபுரியை மீட்பதில் வெற்றி பெற்றே தீருவேன்! இதுதான் தக்க தருணம்! நம் கடற்படை பெரியது! நமது கப்பல்கள் ஏவுகணைகள் கொண்டவை! நாம் வெல்ல வேண்டுமென்று ரோமானியர் விரும்புகிறார்! நமது படை வீரர்கள் பகைவர் எண்ணிக்கையை விட அதிகம். நல்ல நேரமிது! ஆண்டனி ரோமில் கிடையாது! சுகவாசி எகிப்தில் கிளியோபாத்ராவின் மோக மயக்கத்தில் கிடக்கிறார். கவர்ச்சி மாது கிளியோபாத்ராவின் மடியில் தலைவைத்து மதுவைக் குடித்துக் கொண்டிருக்கிறார். தக்க தருணம் இதுவே! மேனாஸ்: பாம்ப்பி! ஆண்டனி எகிப்தில் இல்லை! அக்டேவியஸ் அவரை வரும்படி அழைத்திருக்கிறார். ரோமை நோக்கி ஆண்டனி வருவதாக அறிந்தேன். அவரில்லாமல் அக்டேவியஸ், லெப்பிடஸ் இருவருமே நமக்கு இணையாகப் போரிடுவர் அல்லவா? பாம்ப்பி: அப்படியில்லை மேனாஸ்! ஆண்டனிக்குள்ள போர்த் திறமை கோழையான அக்டேவியஸ், லெப்பிடஸ் இருவருக்கும் கிடையாது. ஆண்டனி எகிப்தை விட்டு எப்போது புறப்பட்டார்? மையல் மோகினியின் மந்திர வலையில் சிக்கிய ஆண்டனி மதி மயங்கிக் கிடப்பதாகத்தான் நான் அறிந்தேன். யார் சொன்னது ஆண்டனி ரோமுக்கு வருவதாக? மேனாஸ்: கழுதை கண்ணுக்குத் தெரியும்படி காரெட்டைக் காட்டி, அக்டேவியஸ் ஒரு தந்திரம் செய்தார். மனைவி புல்வியா மாண்டு போனதும் ஆண்டனி மனநிலை சரியில்லை. தங்கை அக்டேவியாவை மண முடித்துத் தருவதாக ஆண்டனி அழைக்கப் பட்டிருக்கிறார்! எகிப்தில் காதல் மோகினி இருந்தாலும், ரோமில் ஆண்டனிக்கு ஒரு ராணி வேண்டுமல்லவா? அதனால் அவர் ரோமுக்கு வருவதாக நான் அறிந்தேன். []   பாம்ப்பி: பயங்கரத் திட்டமாகத் தெரிகிறது எனக்கு. பால்யத் திருமணம் போலத் தெரிகிறது எனக்கு. ஆண்டனி அதற்கு உடன்படுவாரா என்பது தெரியாது எனக்கு. நம்மைத் தோற்கடிக்க அக்டேவியஸ் செய்யும் மாபெரும் சதியாகத் தெரிகிறது எனக்கு! ஆண்டனியும் அக்டேவியஸ¤ம் ஒட்டிய நண்பர் அல்லர்! வெட்டிக் கொள்ளும் விரோதியர் அல்லர்! உள்ளார ஒருவர் மீது ஒருவருக்கு எதிர்ப்பாடு ஒளிந்துள்ளது. அந்த ஊமைப் போரை முறிக்க அக்டேவியஸின் யுக்தி உன்னதமானது. வெல்ல முடியாவிட்டால் பகவனை நண்பனாக்கிக் கொள் என்பது பழமொழி! ஆண்டனியை ஒருபடி மேலாக மைத்துனன் ஆக்கிக் கொள்கிறார் அக்டேவியஸ்! எல்லாம் நம்மை முறியடிக்கச் செய்யும் அக்டேவியஸ் தந்திரம்! மேனாஸ்: அக்டேவியஸ் தங்கையை மணந்து கொண்டாலும், ஆண்டனிக்கு எகிப்த் ராணி மீதுதான் கண்ணோட்டம் இருக்கும். மைத்துனர் ஆண்டனி மந்திர வசீகரியின் மையலில் விழாதபடித் தடுக்க முனைகிறார். அது நடக்காது பாம்ப்பி! முதல் நாளே கிளியோபாத்ரா ஆண்டனியைத் தன்னவன் ஆக்கிக் கொண்டாள்! [மெதுவாக] முதல் நாளே ஆண்டனியும், கிளியோபாத்ராவும் மதுவருந்திக் காதல் மயக்கத்தில் ஒரே அறையில்தான் உறங்கி னாராம்! முதல் நாளே …. காதலனைக் கணவனாக்கிக் கொண்டாள் அந்த மோக மாது! கிளியோபாத்ரா … இப்போது … கர்ப்பவதி … என்று கேள்விப்பட்டேன்! பாம்ப்பி: [அதிர்ச்சியுடன்] என்ன? கிளியோபாத்ரா கர்ப்பவதியா? ஆண்டனியின் மகவு கிளியோபாத்ராவின் வயிற்றில் வளர்ந்து வருகிறதா? அப்படியானால் ஆண்டனியின் திருமணத்தைக் கேள்விப்படும் கிளியோபாத்ரா ஆங்காரியாக மாறிவிடுவாளே! ஆண்டனியின் கழுத்தைத் துண்டித்து விடுவாளே! இந்த அதிர்ச்சி செய்தி அக்டேவியஸ¤க்குத் தெரியுமா? சீஸரின் மகனை கிளியோபாத்ரா பெற்றதும் அக்டேவிஸ் சீறி எழுந்தார்! சீஸரின் வாரிசு ஓர் எகிப்த் ஜிப்ஸியின் பிள்ளை என்றதும், ரோமாபுரியின் தூய கலாச்சாரம் போனது என்று வெகுண்டு எழுந்தார்! ஆண்டனியை வெறுக்கும் அக்டேவியஸ், கிளியோபாத்ராவை வேசியெனத் திட்டும் அக்டேவியஸ் எத்தகைய அதிர்ச்சி அடைவார் என்று எண்ணிப் பார்க்க முடியவில்லை!  மேனாஸ்: அவருக்குத் தெரிந்தால் தங்கை திருமணத்தை ஏற்பாடு செய்வாரா? கிளியோபாத்ராவைப் பற்றி சரியாகச் சொல்கிறேன்! வயிற்றில் வளரும் மகவுக்குத் தந்தையான ஆண்டனி என்ன செய்தாலும் பொறுத்துக் கொள்வாள் கிளியோபாத்ரா! ஆனால் நிச்சயம் அதிர்ச்சி அடைவாள், திருமணத்தைப் பற்றி அறிந்தால்! கவலைப் படாதீர்! அக்டேவியாவைப் பிரித்து ஆண்டனியை மீண்டும் பிடித்து விடுவாள், கிளியோபாத்ரா! இந்த திருமணச் சதித் திட்டத்தில் வெல்லப் போவது கிளியோபாத்ரா! தோற்கப் போவது அக்டேவியஸ்! பாம்ப்பி: அதே போல் பார், நமது ரோமாபுரிப் போரிலும் தோற்கப் போவது அக்டேவியஸ்தான்! ஆண்டனியைப் போல் அக்டேவியஸ¤க்கு அனுபவம் போதாது! கிளியோபாத்ராவுக்கு உள்ள அறிவுக் கூர்மை புது மணப்பெண் அக்டேவியாவுக்குக் கிடையாது! ஆண்டனி கிளியோபாத்ராவின் மடியில் கிடந்தால் என்ன? புது மணப்பெண் அணைப்பில் கிடந்தால் என்ன? எனக்குக் கவலை யில்லை! ஆண்டனி போரை நடத்துவதற்கு முன்பு, நாம் போரை நடத்திச் செல்வோம்! ஒன்றாய் அக்டேவியஸையும், லெப்பிடஸையும் முறியடிப்போம். ரோமைக் கைப்பற்றுவோம்! போர் முரசம் தட்டுவோம். புறப்படு ரோமாபுரி நோக்கி! ஆண்டனி கால் வைப்பதற்கு முன்பு நாம் தடம் வைக்க வேண்டும் ரோமில்! *********************   அங்கம் -7 காட்சி -3 அழகு, ஞானம், பணிவு ஆண்டனியின் இதயத்தில் நிலைத்து விட்டால் அவருக்கு (புது மணப்பெண்) அக்டேவியா ஓர் அதிர்ஷ்டப் பரிசு! ….     மேஸினாஸ் வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)   அற்பச் சிறு போரில் நிற்கார் ஆண்டனி! அவரது அரிய போர்த் திறமை மற்ற இருவரை விட இரட்டிப் பானது! ஆழ்ந்த ஊகிப்பைத் தொடர்வோம்! எகிப்தின் எழில் விதவை மடியை விட்டு கடத்தி வருவது கடிது கடிது, மோகக் களைப் பற்ற ஆண்டனியை ! வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)   நேரம், இடம்: ரோமாபுரி அரண்மனை. பகல் வேளை.  நாடகப் பாத்திரங்கள்: போர்த் தளபதிகள் ஆண்டனி, அக்டேவியஸ், லெப்பிடஸ், அக்கிரிப்பா பாதுகாவலர்.  காட்சி அமைப்பு: அக்டேவியஸ், லெப்பிடஸ், அக்கிரிப்பா ஆகிய மூவரும் கூடிப் பேசிக் கொண்டுள்ள போது ஆண்டனி நுழைகிறார்.  லெப்பிடஸ்: அக்டேவியஸ், எனக்குத் தெரியும். நிச்சயம் ரோமுக்கு வருவார் ஆண்டனி! நம்மைத் தனியே போரில் தடுமாற விட்டுவிட்டு அவர் கிளியோபாத்ராவின் அணைப்பிலே கிடக்க மாட்டார். வருவேன் என்று தகவல் அனுப்பியவர் வராமல் எப்படிப் போவார்? []   அக்டேவியஸ்: நீ ஏமாறப் போகிறாய் லெப்பிடஸ்! எனக்கு நம்பிக்கை இல்லை. ஆண்டனி வரமாட்டார், பார். எகிப்தா, ரோமா என்று நாணயத்தைச் சுண்டி விட்டால், ஆண்டனிக்கு எகிப்துதான் விழும்! போர், போகம் என்று நாணயத்தைச் சுண்டி விட்டால், போகம் என்றுதான் ஆண்டனிக்கு விழும்! ஏனென்றால் ஆண்டனி நாணயத்தின் இருபுறத்திலும் அச்சாகி யிருப்பது ஒன்றேதான் போகம், போகம்! கிளியோபாத்ரா ஒரு மோகினிப் பிசாசு! ஆண்டனி ஒரு போகப் பிரியர்! புல்வியா செத்ததும் தனித்து விட்ட ஆண்டனிக்கு கிளியோபாத்ராவின் இதழ்கள் ஏன் இனிப்பாக இருக்காது? ஆண்டனியை விடச் செத்துப் போன அவரது மனைவி புல்வியா உண்மையில் ஒரு வீர மாது! என்னுடன் போரிட்ட புல்வியா மெய்யாக ஒரு தீர மங்கை! ஆண்டனி போல் அவள் மோகத் தீயில் மூழ்க வில்லை! ரோமைப் புறக்கணிக்க வில்லை! நாட்டுப் பாதுகாப்பை மறந்து காதலுக்காக மனதைப் பறிகொடுக்க வில்லை! [அப்போது காவலன் ஒருவன் வந்து ஆண்டனி வருவதை அறிவிக்கிறான். சிறிது வினாடிகள் கழித்து நுழைகிறார் ஆண்டனி] லெப்பிடஸ்: [மகிழ்ச்சியுடன்] நான் சொன்னதுதான் உண்மையானது. [வணக்கம் செய்து] வாருங்கள் ரோமாபுரித் தளபதியாரே! உங்கள் வருகைக்கு நாங்கள் காத்திருக்கிறோம். [ஆண்டனி முதலில் லெப்பிடஸின் கை, பிறகு அடேவியஸின் கையைக் குலுக்குகிறான்] அக்டேவியஸ்: [சற்று கடுமையுடன்] வருக, வருக ஆண்டனி! எனது ஆழ்ந்த அனுதாபம், புல்வியாவின் அகால மரணத்துக்கு! நீ வருவாய் என்று அவள் உயிர் உனக்காகக் காத்திருந்தது! நீ வரவில்லை என்று தெரிந்ததும் அவள் உயிர் உடனே நீங்கியது! எகிப்தை வீட்டு ஏன் நீ உடனே வரவில்லை! புல்வியா அடக்கத்தின் போது ரோமாபுரி நகரே நீ வருவாய் என்று காத்துக் கிடந்தது! உன்னை வரவிடாமல் எகிப்தில் எந்த பிசாசு தடுத்தது? உன்னைப் பிடித்த வைத்த மந்திரக்காரியை உதறி விட்டு நீ வந்திருக்கலாம்! அப்படி நீ செய்ய வில்லை! ஏன்? ஏன்? ஏன்? சொல் ஆண்டனி! லெப்பிடஸ்: கோபப்படாதீர் அக்டேவியஸ்! குற்றம் பார்க்கின் சுற்றமில்லை! பாம்ப்பியை நாம் மூவரும் சேர்ந்து தோற்கடிக்க வேண்டும்! நமது பகைவன் நமக்குள் இல்லை. நமக்குள் சண்டை என்று தெரிந்தால் பாம்ப்பி அதைக் கொண்டாடுவான்! நமது பிரச்சனை சிறியது! ஆனால் நமது மனது பெரியது! போரை எவ்விதம் நடத்திச் செல்ல வேண்டும் என்று நாம் சிந்திப்போம்! பாம்ப்பியின் கடற்படை வலுவாகி விட்டது! அதனை வெல்வது சிரமம். அதற்குரிய வழிகளைத் திட்டமிடுவோம். ஆண்டனி: [சினத்துடன்] எகிப்தில் நான் ஏன் ஒதுங்கிக் கிடந்தேன் என்று அக்டேவியஸ் ஏன் கேட்கிறார்? அக்டேவியஸ் ரோம் சாம்ராஜியத்தைச் சுற்றிப் பார்வை யிடாது, ரோமிலே ஏன் பதுங்கிக் கிடந்தார் என்று நான் கேட்கிறேனா? கப்பம் கட்டாத எகிப்த் தேசம் ஒப்பிய நிதியைத் திரட்டப் போனது என் தப்பா? படை வீரர்கள் மாதச் சம்பளம் தரப்படாமல் கும்பி குலைவதை அறிவீரா? கிளியோபாத்ரா ரோமுக்கு வாரிசு அளித்த சீஸரின் மனைவி! சீஸர் மாண்டதும் அவளது சிநேகத்தை அற்றுவிட வேண்டுமா? எகிப்த் ரோமாபுரின் ஆக்கிரமிப்பு நாடு! ஆம், கிளியோபாத்ரா என்னினிய காதல் தோழிதான்! என் காதலை இல்லை என்று நான் மறுக்க வில்லை! நாட்டுப் பற்று என்னை ரோமுக்குப் போகச் சொன்னாலும், ஏதோ ஒரு பாசம் என்னை எகிப்தில் கட்டிப் போட்டது! அக்டேவியஸ்: உனது மனைவி புல்வியாவும், சகோதரனும் சேர்ந்து கொண்டு, என்னை எதிர்த்துப் போர் புரிந்தார். உனக்கு அது தெரியாதா? நீ ஏன் அவர்களைத் தடுத்து நிறுத்த வில்லை? நான் மடிய வேண்டும் என்று நினைத்தாயா? அல்லது அவர்கள் போரில் கொல்லப் படட்டும் என்று விட்டு விட்டாயா? ஆண்டனி: அப்படி யில்லை அக்டேவியஸ். தப்பான எண்ணம் அது! உன்னுடன் போரிட என் மனைவியை நான் ஏன் அனுப்ப வேண்டும்? என் சொற்படிக் கேட்பவன் அல்லன் என் சகோதரன். அது உனக்கும் தெரியும்! என்னை எகிப்திலிருந்து இழுத்துவர புல்வியா செய்த புரட்சி அது! அதில் அவள் வெற்றி பெறவில்லை. என் சகோதரன் உன்னுடன் போரிட்டதற்கு நான் பொறுப்பாளி அல்லன். அக்டேவியஸ்: அலெக்ஸாண்டிரியாவில் கலகம் நேர்ந்த போது, மூன்று முறை நானுனக்குக் கடிதம் எழுதினேன்! அவற்றைப் பையிக்குள் போட்டு விட்டு நீ பதில் போடாமல் பதுங்கிக் கொண்டாய்! ஏன்? ஆண்டனி: முப்பெரும் அரசர்களுக்கு கிளியோபாத்ரா அளித்த விருந்தில் அப்போது கலந்து கொண்டிருந்தேன்! அச்சமயம் வந்தது முதல் கடிதம். மற்ற கடிதங்களை நான் பெற்றுக் கொள்ள வில்லை! அக்டேவியஸ்: ஒப்புக்கொள் ஆண்டனி! நமது கூட்டு ஒப்பந்தத்தை நீ முறித்தாய்! பகைவன் ரோமாபுரியின் வாசலில் நின்ற போது நீ கிளியோபாத்ராவின் மாளிகை வாசலில் மயங்கிக் கிடந்தாய்! நாட்டுப் பாதுகாப்பு உன் நாட்குறிப்பில் இடம் பெறவில்லை! நாட்டைத் துறந்து, நட்பைத் துறந்து, நம்பிய மனைவியைத் துறந்து நாசக்காரியின் மடியில் நீ மயங்கிக் கிடந்தாய்! லெப்பிடஸ்: நமது வீட்டுப் போரை முதலில் நிறுத்தி, வெளி நாட்டு போரைப் பற்றி சற்றுப் பேசுவோமா? அக்கிரிப்பா: எனக்கோர் நல்ல யோசனை உதயமாகி உள்ளது! ஆண்டனி தற்போது தனிமையாய்ப் போனவர்! அக்டேவியஸ்! உங்கள் தாய் வழிப் பிறந்த சித்தியின் புதல்வி அழகி அக்டேவியாவை …. ஆண்டனிக்கு … அக்டேவியஸ்: போதும், நிறுத்திக் கொள்! உன் யோசனையைக் கிளியோபாத்ரா கேள்விப் பட்டால், உன் கழுத்தை அறுத்து விடுவாள்! தடாலென மயக்கமுற்று விழுந்திடுவாள்! அக்டேவியா வாலிப மங்கை! ஆண்டனி வயோதிகத் தளபதி! முதலில் அக்டேவியா ஆண்டனியை ஏற்றுக் கொள்வாளா? வயதுப் பொருத்தம் இல்லையே! மனப் பொருத்தம் உள்ளதா? எனக்குத் தெரியாது. ஆண்டனி: நல்ல யோசனை அக்கிரிப்பா! நீ சொல்ல வந்ததைச் சொல்லி முடி! நான் இப்போது மணமாகாதவன். அக்டேவியா எப்படி இருப்பாள் சொல்? அழகாய் இருப்பாளா? எடுப்பான உடம்பா? ஒடுங்கிய இடுப்பா? எத்தனை வயதிருக்கும்? நானவளைப் பார்த்தில்லை! அக்கிரிப்பா: ஆனால் அக்டேவியா உங்களைப் பார்த்திருக்கிறாள் ஆண்டனி! இருபத்தியைந்து வயது! பேரழகி! குதிரை போல மதமதத்த தோற்றம்! உங்களுக்கு ஏற்றவள்! ஆண்டனி: நான் கண்டு பேச வேண்டுமே முதலில்! என்னைப் பற்றி அக்டேவியா என்ன நினைப்பாள்? அக்கிரிப்பா: கவலைப் படாதீர்! புல்வியா செத்த பின் அக்டேவியா உங்களைப் பற்றித்தான் கனவு காண்கிறாள். உங்களைக் காணத் துடித்துக் கொண்டிருக்கிறாள். அவளது விருப்பத்தை உங்களுக்குச் சொல்லும் வேளை வந்ததால் சொல்கிறேன். கிளியோபாத்ரா உணர்ச்சியைப் பற்றி நான் கவலைப் படவில்லை! ஆனால் …… அவள் ஒரு ….! அக்டேவியஸ்: ஆண்டனி! அவள் ஒரு விதவை, தெரியுமா? சமீபத்தில் அவள் கணவர் காலமாகி விட்டார்! அவள் கணவன் செத்த கவலையில் உண்ணாமல், உறங்காமல், ஓடாய்ப் போய் விட்டாள்! ஆண்டனி: ஆகா! என்ன பொருத்தம்? இப்படி அமைவது எனக்கு ஓர் அதிர்ஷ்டம்! நானும் மனைவி இழந்தவன்! புல்வியா சமீபத்தில் செத்தது அவளுக்குத் தெரிந்திருக்கிறது! நானும் புல்வியா போன துக்கத்தில்தான் மன வேதனை அடைகிறேன்! மனப் பொருத்தம் உள்ளது எங்கள் இருவருக்கும். புல்வியாயை இழந்த எனக்கு ஆறுதல் அளிப்பாள் அக்டேவியா! கணவனை இழந்த அக்டேவியாவுக்கு ஆதராவாய் இருப்பேன் நான்! அக்டேவியஸ்: ஆண்டனி! கவனகாகக் கேள்! அக்டேவியாவின் கணவன் ஏகதார விரதன்! அவனுக்கு ஒரே ஒரு மனைவி அக்டேவியா! அவனுக்கு ரோமில் ஒரு மனைவியும், எகிப்தில் ஒரு காதலியும் கிடையாது! அவன் விட்டுப் போன இடத்தை நீ நிரப்புவாய் என்று எனக்கு நம்பிக்கை யில்லை! []   ஆண்டனி: கிளியோபாத்ராவை நீ நேராகப் பார்த்தால் அப்படிச் சொல்ல மாட்டாய்! கிளியோபாத்ரா என் காதலி யில்லை! கிளியோபாத்ரா என் மனைவி யில்லை! அவள் எனக்கு வெறும் தோழி மட்டுமே! என்னைப் பார்க்கும் போதெல்லாம் அவள் சீஸரைப் பற்றித்தான் பேசுவாள்! நான் அவளிடம் கொண்டிருப்பது வெறும் நட்பு! ஆனால் அது கள்ள நட்பில்லை! அவளைக் காதல் தோழி என்று நான் சொல்லியது தப்பு! அக்டேவியஸ்: நல்ல நட்பு என்று சொல்ல வருகிறாய்! எனக்குத் தெரியும்! உன்னிதயக் கோட்டையில் வசந்த மாளிகை இரண்டு உள்ளன. ஒன்றில் எப்போதும் கிளியோபாத்ராதான் குடியிருப்பாள்! அவளை உன்னால் வெளியேற்ற முடியாது! அடுத்த மாளிகை ஒரு சத்திரம் போன்றது! யாரும் வரலாம், போகலாம், அடிக்கடி மாற்றிக் கொள்ளலாம்! அந்த மாளிகைக்கு அக்டேவியா வரமாட்டாள்! ஆண்டனி: அப்படிக் கேலி செய்யாதே அக்டேவியஸ்! இப்போதே நான் அக்டேவியாவைப் பார்க்க வேண்டும்! ஏற்பாடு செய்வாயா? அவளை நான் மணந்து கொள்கிறேன். என்னால் தனிமையில் நோக முடியாது! அக்டேவியஸ்: அக்டேவியா ஒரு நற்குண மாது! புல்வியாவை விட்டுவிட்டு நீ எகிப்துக்குப் போனது போல் செய்தால், அவள் தாங்கிக் கொள்ள மாட்டாள்! அவள் மென்மையான இதயத்தை உடைத்து விடுவாய்! அக்கிரிப்பா: ஆண்டனி, நான் நினைத்தபடி செய்து விட்டேன்! முக்கியமான இந்த திருமணத்தால் அக்டேவியஸின் மைத்துனன் ஆகிவிட்டாய் நீ! அதனால் அக்டேவியஸின் பராக்கிரமம் இரட்டிப்பாகிறது! உங்கள் பழைய வெறுப்புகள் கரைந்து போகின்றன! உங்கள் பொறாமைக் குணங்கள் மறைந்து விடுகின்றன. நீங்கள் மூவரும் பகைவன் பாம்ப்பியை விரட்ட ஒன்றுபடுகிறீர்! இந்த திருமணம் அதை நிறைவேற்றி விடும். ஆண்டனி: கேளுங்கள்! பாம்ப்பி நமக்குப் பகைவன் அல்லன்! சமீபத்தில் அவன் எனக்கு எழுதிய கடிதத்தில் மதிப்புடன் நடந்து மன்றாடி யிருக்கிறான்! போர் வேண்டாம் என்று என் காலில் விழுகிறான்! நான் போரை முன்னின்று நடத்தில் தான் வெல்ல முடியாது என்று தாழ்ச்சியுடன் முறையிட்டுள்ளான். ஆகவே அவனுக்கு எதிராக நான் வாளுயர்த்த மாட்டேன்! அக்டேவியஸ்: [அதிர்ச்சி அடைந்து] என்னால் இதை நம்ப முடியவில்லை! பாம்ப்பி ஏமாற்றுகிறானா என்று தெரியவில்லை! ஆண்டனி! நீ சொல்வது உண்மை என்றால், பல மாதங்களாக அவன் ஏன் தன் கடற் படையைப் பலப்படுத்தி வந்தான் என்று விளக்கு! உனக்கும், எனக்கும் பகை உண்டாக்க வழி செய்கிறான்! ஆண்டனி: காரணம் சொல்கிறேன்! போரை நிறுத்த பாம்ப்பி முயல்வது எனக்கு நன்றாகத் தெரிகிறது. பொறுங்கள் நமது ஒற்றரை அனுப்பி பாம்ப்பியின் மனதை அறிந்து வருகிறேன். நல்ல சமயத்தில்தான் அக்டேவியாவைத் திருமணம் செய்கிறேன். போருக்கு நான் செல்வதைப் புதுமணப் பெண் அக்டேவியா எப்படிப் பொறுத்துக் கொள்வாள்? அக்டேவியஸ், போரை நான் நிறுத்த முடியும்! புதுமணப் பெண்ணை நான் முதலில் திருமணம் செய்து கொள்ள வேண்டும்! திருமணத்துக்கு ஏற்பாடு செய்வீர் என் புது மைத்துனரே! [சிரித்துக் கொண்டு அக்டேவியஸின் கைகளைக் குலுக்குகிறான்] *********************   அங்கம் -7 காட்சி -4 (கிளியோபத்ரா) அரசிளங் குமரி! மாவீரர் சீஸரின் கை வாளையும் படுக்கை மீது விழ வைத்தவள்! உடலுறவு கொண்ட சீஸருக் கொரு மகனைப் பெற்ற மாது அவள்!    வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)   அந்தோ ஆண்டனி! நில்லாதே அக்டேவியஸ் அருகில்! உன்னைக் காக்கும் ஆத்ம தேவதை உன்னத மானது! அஞ்சாதது! ஈடிணை யற்றது! அவ்வித மல்ல அக்டேவியஸ் ஆத்மா! ஆக்கிர மிக்கும், அச்ச மூட்டும்! ஆதலால் நீ தூர விலகி நில்! …. [ஜோதிடன் எச்சரிக்கை] வில்லியம் ஷேக்ஸ்பியர் [அண்டனி & கிளியோபாத்ரா]     [] Cleopatra near Nile Resort  ரோமா புரியின் நிலைமை: ·பிலிப்பிப் போரில் புரூட்டஸ், காஸ்ஸியஸ் மற்ற சதிகாரர் யாவருமிறந்த பிறகு, ஆண்டனி, அக்டேவியஸ், லெப்பிடஸ் மூவர்களின் கூட்டு மேற்பாட்டில் ரோமாபுரி இயங்கி வருகிறது. ஜூலியஸ் சீஸர் கொலையாகி இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஆண்டனி கிளியோபாத்ராவைக் காண எகிப்த் வருகிறான். மனைவி ·புல்வியா மரணம் அடைந்த பிறகு, ஆண்டனி தனிமையாகிக் கிளியோபாத்ரா மீது நாட்டம் உண்டாகுகிறது. அதே சமயத்தில் நிதிக் களஞ்சியம் காலியாகிப் போர்வீரர்களுக்குக் கூலி கொடுக்க நிதியின்றிப் பணம் திரட்ட வேண்டி, ஆண்டனி எகிப்து செல்லத் திட்டமிடுகிறான். எகிப்த் அரசியிடம் நேராகக் கையேந்திப் பிச்சை கேட்கத் துணிவின்றி, கிளியோபாத்ரா தன்னைக் காண வரவேண்டும் என்று காவலர் மூலம் உத்தரவு அனுப்புகிறான். ஆனால் கிளியோபாத்ரா எகிப்த் தளத்தில் தானிருப்பதாகவும், ஆண்டனிதான் அவளைக் காண வரவேண்டும் என்று மறுமொழி அனுப்புகிறாள். எகிப்துக்கு வந்த ஆண்டனி தன் மனைவி புல்வியா போர்க்களத்தில் தனித்துப் போய் நோயில் மரணமடைந்த தகவல் கேட்டு மனம் நோகிறான். ரோமுக்கு மீளவும் விரும்பாது, கிளியோபாத்ராவின் கவர்ச்சியிலிருந்து மீளவும் முடியாது திண்டாடுகிறான் ஆண்டனி. இளைய பாம்ப்பி ரோமாபுரியைத் தன்வசமாக்க முயற்சிக்கிறான். கிளியோபாத்ராவிடம் மனதைப் பறிகொடுத்த ஆண்டனி ரோமுக்கு மீளத் தயங்குகிறான். அக்டேவியஸ் தன் தங்கையை மணக்க வழி செய்து ஆண்டனியை மைத்துனன் ஆக்கிக் கொள்கிறான். திருமணத்தைக் கேள்விப்பட்ட கிளியோபாத்ரா வெகுண்டெழுகிறாள்.  ++++++++++++++++++ நேரம், இடம்: ரோமாபுரி அரண்மனை. பகல் வேளை.  நாடகப் பாத்திரங்கள்: ஆண்டனி, அக்டேவியா, ஜோதிடர்.  காட்சி அமைப்பு: திருமணம் முடிந்த பிறகு புதுமணத் தம்பதிகள் ஆண்டனி,  மனைவி அக்டேவியா உரையாடிக் கொண்டிருக்கிறார்கள். சிறிது நேரத்தில் ஜோதிடர் வருகிறார்.  ஆண்டனி: [ஒரு கையில் மதுக் கிண்ணமும், மறு கையில் அக்டேவியாவை அணைத்துக் கொண்டு] கண்ணே அக்டேவியா! இன்று நமது பொன்னாள்! எனக்கினி மதுக்கிண்ணம் நீதான்! நீ அருகே உள்ள போது, ஸிஸிலி மதுவும் சுவை அளிப்பதில்லை! புல்வியா காலி செய்த உள்ளத்தை நிரப்பி விட்டாய் நீ! காய்ந்து போன என் நெஞ்சத்தில் மீண்டும் காதல் தேனாறு ஓடுகிறது! நீ வாலிப மாது! உன்னை விட நான் வயோதிகன்! உன்னால் எனக்கு வாலிபம் மீள்கிறது! ஆயினும் என்னால் உனக்கு வயோதிகம் வரக் கூடாது. அக்டேவியா: இந்த நாளுக்கு நான் காத்திருந்தேன். என் கணவர் மாண்டதும் தனித்துப் போனேன் மீண்டும் நான்! தனிமையில் வாடினேன், வதங்கினேன், வாழ்வதை வெறுத்தேன். அப்போது போர்க்களத்தில் புல்வியா செத்த செய்தி வந்தது! உடனே என்னைப் போல் தனித்துப் போன உங்கள் மீது அனுதாபம் கொண்டேன்! எகிப்திலே ஒட்டிக் கொண்ட ஆண்டனியை எப்படி வெட்டிக் கொண்டு வருவது என்று சிந்தித்தேன்! நண்பன் அக்கிரிப்பா, தமையன் அக்டேவியஸ் உதவியை நாடினேன். தமையன் உங்களை ரோமுக்கு இழுத்து வந்தார்! அக்கிரிப்பா நம்மைப் பிணைத்து வைத்தார்! நாமின்று புதுமணத் தம்பதிகள். ரோமுக்கு மீண்டும் நீங்கள் திரும்பிப் போவீரா? என்னைத் தனியே விட்டுவிட்டு போவீரா? []   ஆண்டனி: கண்ணே அக்டேவியா! நானொரு நாடோடி! என் மனம் போல் மாறுவது நான் வாழுமிடம்! வாழ்க்கை முழுதும் நான் ரோமிலே அடைபட்டுக் கிடக்க மாட்டேன். எகிப்துக்கு நான் மீண்டும் போக வேண்டிய திருக்கும்! நான் ஆரம்பித்த சில பணிகள் இன்னும் முடியவில்லை! என்னிதயத்தில் பாதியிடம் ரோமுக்கும், மீதியிடம் எகிப்துக்கும் உள்ளதை நான் தவிர்க்க முடியாது! அக்டேவியா: [மிக்க கவலையுடன்] அப்படியானால் உங்கள் பாதி உள்ளம் கிளியோபாத்ராவுக்கு என்று சொல்கிறீரா? எனக்குப் பாதியிடம் போதாது ஆண்டனி! உங்கள் உள்ளமும், உடலும் எனக்கு வேண்டும்! கிளியோபாத்ரா செத்துப் போன சீஸரின் மனைவி! சீஸருக்கு ஆண் மகனை அளித்தாலும், மெய்யாக வேசி அவள்! நேற்று சீஸர்! இன்று நீங்கள்! நாளை யாரோ? யாருக்குத் தெரியும்? எனக்கீடாக உங்களை உரிமை யாக்கத் தகுதி அற்றவள் அந்த மந்திரக்காரி! ஆண்டனி: பாவம் கிளியோபாத்ரா! சீஸரை இழந்து உன்னைப் போல் தனித்துப் போனவள். என்னை நம்பிக் கொண்டிருக்கிறாள்! அவளை வேசி என்று திட்டாதே! அவள் ·பாரோ மன்னர் பரம்பரையில் வந்தவள்! மகா வீரர் அலெக்ஸாண்டர் வம்சா வழியில் உதித்தவள். பல மொழிகள் தெரிந்த, பராக்கிரப் பாவை அவள்! எகிப்தைச் சீரிய முறையில் ஆண்டு வருபவள் அவள்! அவள் என்னாசைத் தோழி! ஆனால் நீ என்னாசை மனைவி! உனக்கீடாக மாட்டாள்! அக்டேவியா: [ஆண்டனி கைகளைப் பற்றிக் கொண்டு, கவலையுடன்] நீங்கள் ரோமுக்குப் போகும் போது நானும் உடன் வருவேன்! நீங்கள் எகிப்திலும், நான் ரோமிலும் தனித்திருக்கக் கூடாது! எகிப்த் ரோமுக்குச் சொந்தம்! உங்களுக்குச் சொந்தமில்லை! நீங்கள் எனக்குரிமை யானவர்! ஆனால் கிளியோபாத்ரா உங்களுக் குரியவள் அல்ல. நீங்கள் எகிப்துக்குத் தனியே போகக் கூடாது! கிளியோபாத்ரா உங்களைச் சிறைப் படுத்தி விடுவாள்! சீஸரும் அப்படித்தான் அவளிடம் சிறைப்பட்டுப் போனாள்! வாக்குறுதி அளிப்பீரா? [அப்போது ஜோதிடர் நுழைகிறார்] ஜோதிடர்: மாண்புமிகு தளபதியாரே! மாதரசி அக்டேவியா! வந்தனம் உங்களுக்கு! அழைத்தீராமே! ஆண்டனி: [கேலியாக] ஜோதிடரே, சொல்வீர்! எகிப்தில் குடியிருக்க விரும்புவீரா? ஜோதிடர்: நான் அந்த நாட்டில் பிறந்தவன் அல்லன். நீங்களும் அங்கே பிறந்தவர் அல்லர். எதற்காகக் கேட்கிறீர் என்னை? கிளியோபாத்ராவின் அரண்மனையில் ஜோதிடருக்கு வேலை கிடைக்குமா? எகிப்த் மொழி தெரியாது எனக்கு! மேலும் எகிப்த் ஜோதிட நிபுணர்கள் என்னை விட சாமர்த்தியசாலிகள்! வேலை தேடிப் போனாலும் நிராகரிக்கப் படுவேன்! ஆண்டனி: [கையைக் காட்டி] சொல்லப்பா ஜோதிடம்! யாருடைய அதிஷ்டம் உயர்ந்தது? என் அதிர்ஷ்டமா? அல்லது அக்டேவியஸ் அதிர்ஷ்டமா? அக்டேவியா: [கையைக் காட்டி] ஜோதிடரே! முதலில் எனக்குச் சொல்லுங்கள். நான் எகிப்துக்குச் செல்வேனா? ஜோதிடர்: மன்னிக்க வேண்டும். முதலில் ஆண்டனிக்குச் சொல்கிறேன்! உங்கள் அதிர்ஷ்டம் தாழ்ந்து போனது! அக்டேவியஸ் அதிர்ஷ்டம் கொடிகட்டிப் பறக்கப் போகிறது! ஆண்டனி: எப்படி அதைச் சொல்வீர்? என் கையில் அக்டேவியஸ் ரேகை கிடையாது! ஜோதிடர்: அக்டேவியஸ் கையை நான் பார்த்திருக்கிறேன். ஆண்டனி! அக்டேவியஸ் அருகில் நில்லாதீர்! அவரது ஆத்மா வலிமை மிக்கது! அச்சம் உண்டாக்குவது! ஆக்கிரமித்து அடிமை ஆக்குவது! உங்களின் ஆத்மா உன்னத மானது! அச்சமில்லாதது! ஈடிணை அற்றது. அவரை விட்டுத் தள்ளியே நில்லுங்கள்! அவரை எதிர்த்துச் செல்லாதீர்! ஆண்டனி: [கவனமுடன்] யாரிடமும் அதைச் சொல்லாதே! []   ஜோதிடர்: யாரிடமும் சொல்ல மாட்டேன், உங்களைத் தவிர. இனிமேலும் சொல்ல மாட்டேன், உங்களுக்குத் தேவையான வேளை தவிர. எதிலும் போட்டி என்று வந்தால் நீங்கள் அவரிடம் நிச்சயம் தோற்றுப் போவீர்! அக்டேவியஸின் அதிர்ஷ்ட தேவதை எந்த எதிர்பாரா விளைவிலிருந்தும் விடுவித்து அவருக்கு வெற்றியைத் தருவாள்! உங்களுடைய ஒளி அக்டேவியஸ் அருகிலே மங்கித்தான் போகும்! உங்களுடைய ஆத்மா அவர் அருகில் ஆட்சி செய்ய அஞ்சி ஒதுங்கி விடும்! ஆண்டனி: [கோபத்துடன்] வாயை மூடிக் கொண்டு வெளியேறு! உன் வாக்குகள் யாவும் அர்த்த மற்றவை. ஜோதிடர்: ஆண்டனி, மன்னித்து விடுங்கள். அக்டேவியா என்னிடம் கேட்டதைச் சொல்லி விட்டுப் போகிறேன். [அக்டேவியாவைப் பார்த்து] ஆமாம் என்ன கேட்டீர்? எகிப்துக்குப் போவேனா என்று கேட்டீர். காட்டுங்கள் கையை. [அக்டேவியா கையை நீட்டுகிறாள்] போவீர் நிச்சயம் எகிப்துக்கு! நிரம்ப பேரீச்சம் பழங்கள் தின்னுங்கள்! ஆண்டனி எகிப்துக்குப் போவார்! அவரோடு நீங்களும் போகலாம். அக்டேவியா: [கெஞ்சலாக] எகிப்தில் நானும் ஆண்டனியும் சேர்ந்து வாழ்வோமா? அல்லது பிரிந்து போவோமா? எனக்குப் பயமாய் இருக்கிறது ஆண்டனி எகிப்த் போவதற்கு! ஆண்டனி: ஜோதிடரே! உமது வாயிலின்று வருவதெல்லாம் பொய்கள். உமது எச்சரிக்கையில் என்னை மட்டும் குழப்பியது போதும். எதையாவது தப்பாகச் சொல்லி அக்டேவியா தூக்கத்தைக் கெடுக்க வேண்டாம். போ, சீக்கிரம் போ! திரும்பிப் பாராமல் போ! [ஜோதிடர் விரைந்து வெளியேறுகிறார்] எகிப்த் நாடுதான் எனக்கு ஏற்றது! மனச் சாந்திக்கு என் திருமணம்! ஆனால் எகிப்தில்தான் என் சொர்க்கம் உள்ளது. நான் எகிப்துக்குப் போகத் தயார் செய். முதலில் நான் மட்டும் தனியே போவேன்! கிளியோபாத்ரா உன்னைக் கண்டால் என்ன செய்வாளோ, எனக்குத் தெரியாது. அவள் மனத்தைப் பக்குவப் படுத்தி உன்னை ஏற்றுக் கொள்ள ஒப்ப வைப்பேன்! அதுவரை அக்டேவியா, நீ பொறுமையாக இருக்க வேண்டும். *********************   அங்கம் -7 காட்சி -5 என் தூண்டிலை எடுத்து வா! நைல் நதியில் மீன் பிடிப்போம் ! இன்னிசை பின்னணியில் கேட்க வஞ்சிப்பேன் செதில் மீன் குழுவை! வளைந்த கொக்கி வாயைக் குத்தி இழுத்திடும் போது அவை அனைத்தும் ஆண்டனி என நினத்துக் கூறுவேன்: “ஆகா! நீ அகப்பட்டுக் கொண்டாய்” ….     கிளியோபாத்ரா வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)    “ஆண்டனி செத்தார்” என்று சொன்னால் மாண்டு போவாள் உன்னாசை ராணி! உயிருடன் சுகமாய் உள்ளார் என்றால் உனக்கு கிடைக்கும் பொற் காசுகள்!   கிளியோபாத்ரா   வில்லியம் ஷேக்ஸ்பியர் [அண்டனி & கிளியோபாத்ரா]   பேசும் முன்பே உன்னை அடித்திட என் மனம் துடிக்கும். ஆண்டனி நலமென்றால் அது போது மெனக்கு! அக்டே வியாக்கு நண்பன், ஆண்டனி போரில் பிடிபட வில்லை என்றால் பொழிவேன் பொற்காசுப் பரிசு! செல்வ முத்துக்கள் அள்ளித் தருவேன். ….   கிளியோபாத்ரா   வில்லியம் ஷேக்ஸ்பியர் [அண்டனி & கிளியோபாத்ரா]   ஆண்டனியை நான் புகழ்வதால் அக்டேவியஸின் பகை யானேன் ….   கிளியோபாத்ரா வில்லியம் ஷேக்ஸ்பியர் [அண்டனி & கிளியோபாத்ரா]   []     நேரம், இடம்: அலெக்ஸாண்டிரியாவில் கிளியோபாத்ராவின் அரண்மனை. பகல் வேளை.  நாடகப் பாத்திரங்கள்: கிளியோபாத்ரா, தோழிகள்: ஐரீஸ், ஈராஸ், சார்மியான், மர்டியான் [அலி], பணியாள் அலெக்ஸாஸ்.  காட்சி அமைப்பு: கிளியோபாத்ரா ஆண்டனி எகிப்துக்கு மீண்ட செய்தியைக் கேள்விப்பட்டுப் பரபரப்புடன் இருக்கிறாள். ரோமுக்கு அனுப்பிய தூதுவன் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாள்.  கிளியோபாத்ரா: [மனக் கவலையுடன்] ஐரீஸ்! வாத்திய இசைக் குழுவை அழைத்துவா! துயர்க்கடலில் மூழ்கிப் போன என்னை இன்னிசைதான் கரை சேர்க்க வேண்டும்! என் மன வேதனை தீருவது எப்போது? மதுவும் கசந்தது! படுக்கையும் முள்ளானது! நேற்றிரவில் எனக்குத் தூக்க மில்லை! ஏன், நிற்கிறாய் போ அழைத்துவா! [ஐரீஸ் போகிறாள்] சார்மியான், வா நாம் பில்லியர்டு விளையாடுவோம். சார்மியான்: மகாராணி! என் கையில் காயம் பட்டு விட்டது. என்னால் விளையாட முடியாது. மர்டியான் கூட விளையாடுங்கள். கிளியோபாத்ரா: மர்டியான் ஓர் அலி! அது ஆணுமில்லை! பெண்ணுமில்லை! மரப் பொம்மை அது! மரப்பாச்சிப் பொம்மையோடு குழந்தைதான் விளையாடும். பெண்ணோடு பெண் விளையாடுவதில் பேரின்பம்! சார்மியான் வா! உன்னோடுதான் நான் விளையாடுவேன்! நீதான் எனக்கு அருமைத் தோழி! [அப்போது வாத்திய இசைக்குழு நுழைகிறது] சார்மியான்: ஈதோ, வாத்தியக் குழு வந்து விட்டது. மகாராணி கான வெள்ளத்தின் பின்னணியில் பில்லியர்டு விளையாடலாம். கிளியோபாத்ரா: [மனம் மாறி] வேண்டாம், நாமெல்லாம் நைல் நதிக்குப் போவோம்! எனது தூண்டிலை எடுத்துவா. மீன் பிடிக்கலாம். வாத்தியக் குழுவின் இசைப் பின்னணியில், நான் வஞ்சிப்பேன் செதில் முளைத்த மீன் குழுவை. தூண்டில் கொக்கி பிடித்து வாய் கிழியும் ஒவ்வொரு மீனையும் ஆண்டனி என்று நினைத்துச் சொல்வேன், “ஆஹா, என்னிடம் பிடிபட்டுக் கொண்டாய் ஆண்டனி.” என்று. []   சார்மியான்: மகாராணி! ஆண்டனி ஒரு விநோத மீன்! அந்த மீனுக்கு இரட்டைத் தலை! அது முன்னும் போகும், திரும்பாமல் பின்னும் போகும்! ஒருமுகம் எகிப்தைப் பார்க்கும்! மறுமுகம் ரோமை நோக்கும்! அந்த இரண்டு வாயில் ஒரு வாயைத்தான் உங்கள் தூண்டில் கிழிக்கும்! அது எந்த வாய் என்று சொல்வீர்? கிளியோபாத்ரா: நல்ல உவமை! ரோமைப் பார்க்கும் அந்த கோர முகத்தைக் கிழிக்கும் என் தூண்டில்! இரண்டு முகமும் என்னை நோக்க வேண்டும்! என்னைத்தான் தேட வேண்டும்! என்ன செய்யலாம் அதற்கு? எங்கே அந்த தூதுவன்? வந்து விட்டானா? ரோமில் ஆண்டனி என்ன செய்கிறார் என்று உளவு செய்யப் போனான்! … [சிரித்துக் கொண்டு] கால தேவன் அறிவான்! அன்றொரு நாள் நான் நகையாடிக் கேலி செய்து, ஆண்டனியின் பொறுமையைச் சோதித்தேன்! அன்றிரவு முறுவல் பூண்டு அவரை அமைதிப் படுத்தினேன்! அடுத்த நாள் காலையில் ஆண்டனியைக் குடிபோதையில் தள்ளிப் படுக்கையில் கிடத்தினேன். அதன் பிறகு என் முகத் துண்டையும், அங்கியையும் அவர் மீது போர்த்தி, அவரது உடை வாளைக் கைப்பற்றினேன்! சார்மியான்: அப்படியா? அத்தனை பெரிய தளபதி ஆண்டனியை மடக்கிச் சிறைக்குள்ளே தள்ளிவிட்டீர்! வீரமும் வசீகரமும் சண்டை யிட்டால், வசீகரந்தான் வெல்லுகிறது! பெண்ணின் வசீகரமே ஆணின் வாளைவிடக் கூரியது! [அப்போது ஒரு தூதுவன் வருகிறான். வணங்குகிறான்.] கிளியோபாத்ரா: [கோபமுடன்] எங்கிருந்து வருகிறாய் ? இத்தாலியிருந்தா வருகிறாய்? நல்ல செய்தியா? அல்லது கெட்ட செய்தியா? செவிக் கினிய செய்தியைச் சொல்! நாட்கள் ஆகிவிட்டன நல்ல செய்தியைக் கேட்டு! சொல் என்ன செய்தி கொண்டு வந்திருக்கிறாய்? தூதுவன்: [மண்டியிட்டு] வணக்கம், மகாராணி! … நான் சொல்ல வருவது…. என்ன வென்றால்..! கிளியோபாத்ரா: [பொறுமையின்றி] செத்து விட்டார் ஆண்டனி என்றால் கொன்று விடுவாய் உன் ஆசை ராணியை! நலமுடன் உள்ளார், யாருடனும் இல்லாமல் தனியாக உள்ளார் என்றால், உனக்குப் பொற்காசு வெகுமதி கிடைக்கும். பேரரசர் நக்கி முத்தமிட நடுங்கும் என் கையை முத்தமிடத் தருவேன் உனக்கு! []   [பொற்காசுகளைத் தந்து தன் கரத்தை நீட்டுகிறாள்] தூதுவன்: [தயக்கமுடன், பயமுடன்] மகாராணி! முதல் செய்தி. … ஆண்டனி நலமாக உள்ளார். கிளியோபாத்ரா: [மகிழ்ச்சியுடன்] ஈதோ இன்னும் தருகிறேன் பொற்காசுகள்! அப்படி நல்ல செய்தியாகச் சொல். போருக்குப் போனவர் உயிரோடு உள்ளார்! அவர் சாகவில்லை! அது போதும். என் நெஞ்சில் தேன் ஊறுகிறது! அடுத்த நல்ல செய்தி என்ன? தூதுவன்: ஆமாம், மகாராணி, அவர் உயிருக்கு ஒன்றும் நேரவில்லை. ஏனென்றால் எதிர்பார்த்தபடி போர் எதுவும் நிகழ வில்லை! ஆனால் மேலும் நான் சொல்லப் போவது ….. கோபம் ஊட்டலாம் உங்களுக்கு! … கேளுங்கள் மகாராணி! கிளியோபாத்ரா: [கோபத்துடன்] என்ன ஆனால் ஆனால் …! எனக்குப் பிடிக்காது அந்த ஆனால்! நீ வாயைத் திறப்பதற்கு முன் உன்னை உதைக்க வேண்டும்! ஆண்டனி நலமாய் உள்ளார் என்றாய், நல்லது. அக்டேவியஸ் கையில் பிடிபடாமல் அவருக்கு நண்பராகி விட்டார் என்றால் நல்லது! தூதுவன்: ஆமாம், ஆண்டனி அக்டேவியஸின் நண்பர் ஆகிவிட்டார். அக்டேவியஸின் மைத்துனர் ஆகிவிட்டார்! …. ஆனால் … ! கிளியோபாத்ரா: ஆனால், ஆனால் என்று நீ சொல்வது எனக்குப் பிடிக்காதது! மைத்துனர் ஆகிவிட்டார் என்றால் …எனக்குப் புரிய வில்லை. மார்தட்டிப் போரிட்டவர் எப்படி மைத்துனர் ஆகிவிட்டார்? தூதுவன்: மகாராணி! மகாராணி! அடிக்காதீர் என்னை! நானிதைச் சொல்லத்தான் வேண்டும்! அக்டேவியாவை மணந்து கொண்டார் ஆண்டனி! அக்டேவியஸின் ஒன்றுவிட்ட தங்கை அவள். கிளியோபாத்ரா: [பக்கத்தில் இருந்த மதுக் கிண்ணத்தை தூதுவன் மீது விட்டெறிகிறாள். கைவாளை உருவி எடுத்து] முட்டாள்! என்ன சொன்னாய்? என்ன சொன்னாய்? ஆண்டனிக்குத் திருமணமா? நானிருக்க வேறு மணமா? அழைப்பிதழ் எனக்கு வரவில்லை! பொய்! பொய்! பொய்! பொய் சொல்லாதே! நீ யுருடன் உலவக் கூடாது! [விரட்டி விரட்டித் தூதுவனைக் குத்தப் போகிறாள்] தூதுவன்: மகாராணி! நான் தூதுவன்! நான் ஏழை! என்னைக் கொல்லாதீர். எனக்கு மனைவி, மக்கள் உள்ளார். ஆண்டனியின் திருமணத்தால் என்னுயிரை வாங்காதீர். [ஓடுகிறான்] கிளியோபாத்ரா: [ஆங்காரமாகக் கூச்சலிட்டு, விரட்டிக் கொண்டு] அயோக்கியப் பயலே! உன் கண்ணைக் குடைந்து எடுக்கிறேன், பார்! என்ன சொன்னாய்? திருமணம் செய்து கொண்டாரா? நானிருக்க அக்டேவியா சிறுக்கியை ஆண்டனி எப்படித் திருமணம் செய்யலாம்? காதல் சல்லாபத்துக்குக் கிளியோபாத்ரா! கல்யாணத்துக்கு அக்டேவியா? அந்த செய்தியை ஏன் கொண்டு வந்தாய்? அதை ஏன் எனக்குச் சொன்னாய்? [மறுபடியும் விரட்டுகிறாள்] ஆண்டனிக்குத் திருமணமா? சார்மியான்: மகாராணி, பாபம் தூதுவன், தயவு செய்து விட்டுவிடுவீர்! தகவல் கொண்டுவந்த தூதுவனைக் கொலை பண்ணுவது பாபம்! மகாப் பாபம்! உங்கள் கோபம் ஆண்டனி மீது! தூதுவன் மீதல்ல! []   தூதுவன்: [ஓடிக் கொண்டே] நான் செத்தாலும் உண்மையைச் சொல்கிறேன்! மகாராணி! அக்டேவியாவை மணந்து கொண்டார் ஆண்டனி. கிளியோபாத்ரா: [நின்று ஆனால் ஆங்காரம் அடங்காமல்] நாசமாய் போகட்டும் ரோமாபுரி! பேரிடி விழட்டும் அக்டேவியா மீது! பெரு மின்னல் அக்டேவியஸ் கண்களை எரிக்கட்டும்! நைல் நதி பொங்கி பாலை வனத்தில் பாயட்டும்! என் ஆண்டனி திருமணம் செய்து கொண்டாரா? எவர் உண்மையான ஆண்டனி? என்னை நேசித்த ஆண்டனியா? அக்டேவியாவை மணந்த ஆண்டனியா? சார்மியான்: உங்களை நேசித்த ஆண்டனிதான் மெய்யானவர் மகாராணி! கிளியோபாத்ரா: [தளர்ந்து போய்] ஐரிஸ்! சார்மியான்! அருகில் வாருங்கள், மயக்கம் வருகுது எனக்கு! பிடித்துக் கொள்வீர் என்னை! தாங்க முடியாது இந்த வேதனையை! … அலெக்ஸாஸ்! போ ரோமுக்கு! அக்டேவியாவைப் பற்றி எனக்குத் தகவல் வேண்டும்! அவள் வயதென்ன? அவள் குட்டையா? நெட்டையா? முகம் எப்படி என்று கண்டு வா! எடுப்பான உடம்பா? அல்லது எலும்புக் கூடா? எனக்குத் தெரிய வேண்டும்! கூந்தலின் நிறமென்ன? கண் பூனைக் கண்ணா? அல்லது என்னைப் போல் புலிக் கண்ணா? பார்த்து வா! போ அலெக்ஸெஸ் போ! சீக்கிரம் செல்! உடனே தெரிந்து வா! [அலெக்ஸெஸ் போகிறான்] கிளியோபாத்ரா: ஐரிஸ்! சார்மியான்! படுக்கை அறைக்கு என்னைக் கொண்டு செல்வீர். [இருவரும் கிளியோபாத்ராவைத் தாங்கிக் கொண்டு போகிறார்] *********************   அங்கம் -7 காட்சி -6 மேதகு மாண்புடை ராணி! உங்களை யூத மன்னன் ஏரோத் கூடக் காண கண்முன் அஞ்சுவான், சினத்துடன் களிப்பு மாறிக் கடுகடுக்கும் போது! …. வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா) (அக்டேவியா) என்னை விட உயரமா? … பேசக் கேட்டாயா? வாய்க்குரல் கீச்சலா? … கோழை மனதா? குள்ள மாதா? நீண்ட காலம் அவளுடன் ஆண்டனி வாழ மாட்டார்! மந்த புத்தி! குள்ளி!  எனைப்போல்…. கம்பீரத் தோற்றம் கொண்டவளா? … (கிளியோபாத்ரா) வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)   []   கதைச் சுருக்கம்: கிரேக்க மகாவீரர் அலெக்ஸாண்டர் பரம்பரையில் வந்த எகிப்தின் வசீகர மங்கை, ஏழாம் டாலமியின் புதல்வியாக கி.மு. 69 ஆம் ஆண்டில் அலெக்ஸாண்டிரியாவில் பிறந்தாள். தந்தை டாலமி மரணம் எய்திய பிறகு கிளியோபாத்ராவும் அவளது இளைய தமையன் டாலமியும் ஒன்றாகச் சேர்ந்து எகிப்தை ஆண்டார்கள். மூன்றாண்டுகள் கழித்துக் கணவனும், தம்பியுமான 15 வயது டாலமி கிளியோபாத்ராவை நாடு கடத்திப் பிறகு தானே அரசாண்டான். சிரியாவுக்கு ஓடிய கிளியோபாத்ரா, தம்பியைப் பலிவாங்க அப்போது அலெக்ஸாண்டிரியாவுக்கு வந்த ரோமானியத் தளபதி ஜூலியஸ் சீஸரின் உதவியை நாடுகிறாள். சீஸரைக் கவர்ச்சியால் மயக்கி, எகிப்துக்குத் தானே அரசியாக வேண்டு மென்றும், சகோதரன் டாலமி அகற்றப்பட வேண்டு மென்றும் வற்புறுத்தி வெற்றியும் பெற்றாள். சீஸர் கிளியோபாத்ராவின் தேன்நிலவு நீடித்து அவளுக்கு ஓர் ஆண் மகவு பிறந்தது. எகிப்தில் நடத்திய சீஸரின் தாம்பத்திய வாழ்க்கையை ரோமானியர் ஏற்று கொள்ளாமல் அவரை வெறுத்தனர்! முடிசூட்டிக் கொள்ள ரோமுக்குச் சீஸர் மீண்டதும், செனட்டர் செய்த சதியில் சீஸர் கொல்லப்பட்டார். சீஸர் கொலைக்குப் பின் ரோமில் பெரும் குழப்பம் உண்டாகி மார்க் ஆண்டனி, அக்டேவியன் ஆகியோரது நேரடிக் கண்காணிப்பால் ரோம் சாம்ராஜியத்தில் அமைதி நிலவியது. நேரடியாக அலெக்சாண்டிரியாவுக்குக் காண வந்த ஆண்டனியைக் கவர்ச்சியால் மயக்கித் தன் காதல் அடிமையாய் ஆக்கினாள் கிளியோபாத்ரா. ஆண்டனியின் தேனிலவு நீடித்து ரோமானிய செனட்டர்களின் சீற்றத்தையும், வெறுப்பையும் மார்க் ஆண்டனி பெறுகிறான். அக்டேவியன் தலைமையில் ரோமானியப் படை ஆண்டனி மீது போர் தொடுத்து வெற்றி அடைகிறது. எகிப்தில் தனித்துப் போன ஆண்டனியும், அக்டேவியன் உடன்படிக்கைக்கு அடி பணியாத கிளியோபாத்ராவும் பயங்கர முடிவைத் தேடிக் கொள்கிறார்கள். []   நேரம், இடம்: அலெக்ஸாண்டிரியாவில் கிளியோபாத்ராவின் அரண்மனை. பகல் வேளை.  நாடகப் பாத்திரங்கள்: கிளியோபாத்ரா, தோழிகள்: ஈராஸ், சார்மியான், பணியாள் அலெக்ஸாஸ், தூதுவன்  காட்சி அமைப்பு: அலெக்ஸஸ் ரோமுக்குப் போக முடியாமல் ரோமுக்கு அனுப்பிய தூதுவன் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான். அப்போது கிளியோபாத்ரா நுழைகிறாள்.  கிளியோபாத்ரா: அலெக்ஸாஸ்! நீதான் ரோமுக்குப் போக வில்லை. யாரை அனுப்பினாய் ரோமுக்கு? ஆண்டனி எப்போது அலெக்ஸாண்டியாவுக்கு வருகிறார்? அக்டேவியா எப்படி இருக்கிறாள் நான் என்று தெரிய வேண்டும். அலெக்ஸாஸ்: உங்களிடம் போன தடவை உதை வாங்கினானே, அதே தூதுவன்தான் போயிருக்கிறான். வந்து விட்டான் இப்போது. கிளியோபாத்ரா: எங்கே அந்தத் தூதுவன்? அலெக்ஸாஸ்: மகாராணி! உங்கள் முன்வரப் பயந்து போய் ஒளிந்து நிற்கிறான். []   கிளியோபாத்ரா: [கோபமாக] வரச் சொல் அவனை! போன தடவை என்முன் வந்ததால் அடி வாங்கினான்! இந்த தடவை என்முன் வராததால் அடி வாங்கப் போகிறான்! உடனே அழைத்து வா அவனை! அலெக்ஸாஸ்: மேதகு மகாராணி! உங்கள் முகம் கடுகடுப்பாய் உள்ள போது, யூதர்களின் அந்த கோர மன்னன் ஏரோத் கூட உங்களுக்கு நேரே நிற்கப் பயப்படுவான். உங்கள் சினத்துக்கு அஞ்சாத ஆண் புலிகள் அலெக்ஸாண்டிரியாவில் கிடையாது. கிளியோபாத்ரா: போதும் நிறுத்து, அலெக்ஸாஸ்! ஏரோத் எதிரே என்முன் நின்றால், நானே அவன் தலையை வாளால் சீவி விடுவேன்! அந்த பாப வேலையை ஆண்டனி வாளால் செய்ய ஆணை யிடுவேன். ஆனால் ஆண்டனி அருகிலில்லை! ரோமில் அக்டேவியாயை முத்தமிட்டுக் கொண்டிருக்கிறார்! தூதுவனை அழைத்து வா என் கோபம் எரிமலையாய் வெடிக்கும் முன்பு! [அலெக்ஸாஸ் வெளியே போய் தூதுவனை அழைத்து வருகிறான். அஞ்சி நடுங்கிய வண்ணம் அலெக்ஸாஸ் பின்னால் நடந்து வருகிறான். அடி வாங்கினாலும் தாங்கிக் கொள்ள, எ·குக் கவசம் அணிந்துள்ளான்.] அலெக்ஸாஸ்: வா, பயப்படாமல் வா. உனக்கு ஒன்றும் நேராது. அடி விழுந்தாலும், உனக்குக் கவசம் உள்ளது. கிளியோபாத்ரா: நீ பயந்து கொண்டு வருவதைப் பார்த்தால், பாதகச் செய்தி கொண்டு வருவது போல் தோன்றுகிறது எனக்கு! ஆண்டனியிடம் என் கடிதத்தைக் கொடுத்தாயா? அக்டேவியாவைப் பார்த்தாயா? தூதுவன்: [மண்டியிட்டு வணங்கித் தழுதழுத்த குரலில்] மகாராணி! தங்கள் கடிதம் கண்டு ஆண்டனி களிப்படைந்தார். இதோ அவரது பதில் கடிதம் தங்களுக்கு. [கடிதத்தைக் கொடுகிறான்]. ஆம் அக்டேவியாவைப் பார்த்தேன். கிளியோபாத்ரா: [கடிதத்தை வாங்கிக் கொண்டு] எங்கே பார்த்தாய் அக்டேவியாவை? []   தூதுவன்: மகாராணி, ரோமில் பார்த்தேன். திருமணம் ஆயினும், அக்டேவியாவின் முகத்தில் நான் மகிழ்ச்சியைக் கணவில்லை! திருமணம் நடந்தாலும், ஆண்டனிக்கும் அவளுடைய சகோதரர் அக்டேவியஸ¤க்கும் மனப்பிளவு மறுபடியும் உண்டாவதாகக் கேள்விப்பட்டேன். ஒரு பக்கம் அன்புக் கணவர் ஆண்டனி! மறு பக்கம் ஆற்றல் மிக்க சகோதரர் அக்டேவியஸ்! இரண்டுக்கும் இடையில் அக்டேவியா நசுக்கப் படுகிறாள். கிளியோபாத்ரா: [சிரிக்கிறாள்] நல்ல செய்தி அல்லவா அது? நசுங்கிச் கசங்கட்டும் அவள்! என் நெஞ்சை வெந்து போக வைத்தவள்! உன் தகவல் என் நெஞ்சைக் குளிரச் செய்கிறது. ஆண்டனியின் பக்கம் அவள் சேர்ந்தால், அக்டேவியஸ் அவளை ஒதுக்கி விடுவார். அக்டேவியஸின் பக்கம் அவள் சேர்ந்தால் ஆண்டனி அவளைப் புறக்கணிப்பார்! .. ஆமாம், என்னைப் போல் அவள் உயரமா? தூதுவன்: இல்லை மகாராணி! அக்டேவியா குட்டை! மிகவும் குட்டை! ஆண்டனியின் மார்பு உயரம் கூட இல்லை. முத்தம் கொடுக்க வேண்டு மென்றால், அக்டேவியாவைத் தூக்கித்தான் அவர் முத்தமிட வேண்டும். கிளியோபாத்ரா: [சிரித்துக் கொண்டு] அவள் குள்ளச்சியா? அப்படித்தான் இருப்பாள் என்று நினைத்தேன். குட்டை மாதையும், நெட்டை ஆணையும் பார்த்தால் தந்தை, மகளைப் போல் தெரிவார்கள். ஆண்டனி நடக்கும் போது அவளைப் பின்னே விட்டுத் தான் முன்னே வருவார். யாரும் சிரிக்காமல் இருக்க வேண்டுமே! அவள் குரல் எப்படி உள்ளது? குருவி போல் கீச்சுக் குரலா? தூதுவன்: ஆமாம் மகாராணி! தாங்கள் சொல்வது சரியே! தாழ்வான குரல், மேலான குடும்பத்தில் பிறந்தாலும்! கிணற்றுக் குள்ளிருந்து பேசுவது போல் தணிந்த குரல்! கேட்போருக்குக் காதுதான் நீள வேண்டும்! கிளியோபாத்ரா: என்னை மாதிரிப் பரம்பரை ராஜ வம்சத்தில் பிறந்தவள் ரோமில் எங்கே கிடைப்பாள்? ஆண்டனிக்கு ஏற்ற அரசிளங் குமரி எகிப்தில் காத்திருக்க, வேண்டாத குள்ளியை எப்படி அவர் ஏற்றுக் கொள்ளலாம்? எனக்குள்ள வீரம், கம்பீரம், ஆடம்பரம் அக்டேவியாவுக்கு உள்ளதா? ஆண்டனி என்னை மணந்தால், எகிப்த் நாட்டையே அவருக்குச் சீராக அளிப்பேன்! அக்டேவியாவை மணந்த ஆண்டனிக்குப் படுத்துக் கொள்ள ஓர் அரண்மனை கூடக் கிடைக்காது! வேறென்ன விகாரங்கள் அக்டேவியாவுக்கு? சொல்! தூதுவன்: நடக்கும் போது நண்டு போல் ஊர்ந்து செல்கிறாள்! நடப்பதும் நிற்பதும் ஒரே மாதிரி! அக்டேவியாவைப் பார்த்தால் உடல்தான் தெரிகிறது! உயிரோட்டமே தெரியவில்லை! நட்ட சிலைப் போல் உள்ளாள்! சுவாசிக்கும் ஓர் உயிர்ப் பிறவியாகக் காணப்பட வில்லை அவள்! கிளியோபாத்ரா: [வெடிப்புச் சிரிப்புடன்] உண்மையாகவா? குட்டைப் பெண்ணை அக்டேவியஸ் ஆண்டனியின் தோளில் சுமக்க வைத்தது வெகு சாமர்த்தியம்! ஆண்டனியை மைத்துனனாய் வாங்கியது ஒரு பெரும் ராஜ தந்திரம்! அடுத்து என்ன சொல்ல வைத்திருக்கிறாய்? தூதுவன்: மகாராணி! முக்கியமான தகவலிது! சொல்ல மறந்துவிட்டேன்! நினைவில் இப்போதுதான் வந்தது! அக்டேவியா ஒரு விதவைப் பெண்! கணவனை இழந்தது சமீபத்தில்தான்! அவளுக்கு முப்பது வயதிருக்கலாம் என்று கேள்விப்பட்டேன்! கிளியோபாத்ரா: [கண்களில் கனல் பறக்க] விதவைப் பெண்ணா அவள்? மெச்சுகிறேன் அக்டேவியஸ் திறமையை! அவள் ஒரு விதவையா? ஆண்டனியை ஏமாற்றி விலை போகாத குதிரையை எப்படி வாங்க வைத்தார்? நேற்றுக் கணவனைப் பறிகொடுத்தவள் எப்படி யின்று ஒருவரை ஏற்றுக் கொண்டாள்? வியப்பாக உள்ளதே! நானும் விதவை மாதுதான்! ஆனால் சீஸர் மாண்ட பத்தாவது நாளே நான் திருமணம் செய்ய வில்லை! … அவள் முகம் வட்டமாக உள்ளதா? கோழி முட்டை மாதிரி உள்ளதா? தூதுவன்: வட்ட முகம்தான் மகாராணி! அதிலும் கோண வட்டம்தான்! முழுமதி போலில்லை! பதிமூன்றாம் நாள் பிறை போல் முகம்! பார்க்கச் சகிக்க வில்லை! []   கிளியோபாத்ரா: பதிமூன்றாம் நாள் பிறையா? நல்ல உதாரணம்தான்! அக்டேவியாவுக்குச் சட்டி மூஞ்சி நேராகச் சொல்! முக அம்சம் கூட இல்லையா? கூந்தல் என்ன நிறம்? கூந்தல் நீளமாகத் தொங்குதா? தூதுவன்: கூந்தல் பழுப்பு நிறம்! நீளமான கூந்தல்தான்! பொய் முடியாக இருக்குமோ என்று சந்தேகப் படுகிறேன்! நெற்றி சிறியது! கிளியோபாதரா: [புன்னகையுடன்] ஈதோ, வாங்கிக் கொள் பொற்காசுகளை. நல்ல தகவல் இம்முறை கொண்டு வந்திருக்கிறாய்! சரி, போய் வா! [தூதுவன் போகிறான். சார்மியானைப் பார்த்து] சார்மியான்! ஆண்டனி புது மணப்பெண் மோகத்தில் மயங்கிக் கிடக்கிறார்! ஆசை அறுபது நாள்! மோகம் முப்பது நாள்! காமம் சொற்ப நாழி! ரோமின் தைபர் நதி ஆண்டனியின் தாகத்தைத் தீர்க்காது! தாகம் தீராத ஆண்டனி நைல் நதியைத் தேடித்தான் வருவார்! எப்போது வருவார் என்பதுதான் தெரிய வேண்டும் எனக்கு. எகிப்துக்கு ஆண்டனியைக் கவர்ந்து வர என்ன தந்திரம் செய்யலாம்? வந்து என் கண்வலையில் மாட்டிக் கொண்ட ஆண்டனியை அரண்மனையில் கட்டிப் போட என்ன செய்யலாம்? சொல் சார்மியான்! சொல்! *********************   அங்கம் -7 – காட்சி -7 எல்லா வற்றையும் நம்ப வேண்டாம்! அவ்விதம் நீவீர் நம்பி னாலும் எல்லா வற்றையும் ஏற்க வேண்டாம்! உங்களுக்கும் என் சகோதர னுக்கும் பிளவு ஏற்பட்டால், வேதனைப் பட்டு பெருந்துயர் அடைபவள் நான்! …     (அக்டேவியா) வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)   நல்ல தெய்வங்கள் நகையாடும் என்னை! கணவர் வெற்றி பெற வேண்டு மென்று கடவுளை நான் வேண்டிக் கொண்டால் தமையன் தோல்வி அடைவார்! உடனே அவ்விதம் வேண்டாம் என்றலறித் தமையன் வெல்லட்டும் என்று விழைவேன் கணவன் வெல்க! தமையன் வெல்க! என மாறி, மாறி நான் வேண்டினால் என் துதியே அடுத்த துதியை அழித்திடும்! நடுவழி யில்லை இச்சை இரண்டில்! (அக்டேவியா) வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)   []     நேரம், இடம்: ரோமிலே ஆண்டனியின் அரண்மனை. காலை வேளை. நாடகப் பாத்திரங்கள்: ஆண்டனி, புது மனைவி அக்டேவியா காட்சி அமைப்பு: அக்டேவியஸ் தளபதி மீது புகார்களைக் கூறிக் கொண்டு ஆண்டனி கோபத்தோடு அங்குமிங்கும் நடமாடுகிறார். அக்டேவியா தன் சகோதரன் செய்த குற்றங்களைத் தெரியாதவள் போன்று காட்டிக் கொள்கிறாள். ஆண்டனி: அவை மட்டுமல்ல கண்ணே அக்டேவியா! உன்னருமைச் சகோதரன் அக்டேவியஸ் என்னை அவமதித்துச் செய்த அற்ப வினைகள் ஆயிரக் கணக்கானவை! எதை மன்னிப்பது, எதைத் தண்டிப்பது என்று உறுதிப் படுத்த முடியாது. அவர் செய்த பெரும் தவறு இளைய பாம்ப்பியின் மீது புதிய போர்களைத் துவக்கியது, எனக்கு அறிவிக்காமல்! நம்முடன் போரிடப் போவதில்லை என்று பாம்ப்பி என்னிடம் கூறியதை அவர் நம்பவில்லை. ரோம் போரிடப் போவதாகக் கூறி நகரெங்கும் முரசடித்து விட்டார்! என்னப் பற்றி அவதூறாகப் பேசி யிருக்கிறார்! அதுவும் என் காதில் எட்டி விட்டது. என் தங்கையின் கணவர் நீ, என்னருமை மைத்துனர் நீ என்று என் முன்னால் காது குளிரப் பேசுகிறார், உன் சகோதரன். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் உத்தமரை என்ன செய்வது, அக்டேவியா! சொல். என்னுடன் கைகுலுக்கும் போது அவர் கைதான் சூடாக உள்ளது! ஆனால் உள்ளத்தில் வீசுவது குளிர் காற்று! நொய்ந்து நோய்ப்பட்டு ஈரம் வற்றிப் போன நெஞ்சம். நான் நல்ல ஒத்துழைப்பைக் கொடுத்தாலும், உள்ளத்திலிருந்து நன்றி பிறக்காமல், அவரது கோரப் பற்கள்தான் பதில் உரைக்கின்றன. அக்டேவியா: என்னருமைப் பிரபு! எல்லாவற்றையும் நம்ப வேண்டாம்! அப்படி நம்பினால் நீங்கள் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ள வேண்டாம்! உங்களுக்கும் சகோதனுக்கும் பிளவு ஏற்பட்டால், வேதனைப்படும் அபாக்கியவதி நான்தான்! சகோதரனை நீங்கள் வெறுக்கலாம். ஆனால் அக்டேவியஸை என்னால் வெறுக்க முடியாது. அவரை நீங்கள் திட்டும் போதெல்லாம், அந்த அடி என் நெஞ்சில் படுகிறது. உங்கள் இருவரிடையே நின்று இருபுறமும் அடி வாங்கிக் கொள்கிறேன். அப்போது உங்களுக்கும், சகோதரனுக்கும் பிரார்த்தனை செய்கிறேன். நீங்கள் போடும் ஊமைச் சண்டையில் பாதிக்கப் பட்டு மனமுடைந்து போவது நான்!   ஆண்டனி: உன் தமையனுக்கு என்னை எப்போதுமே பிடிக்காது! உன்னை மணந்த பின் அவர் மாறுவார் என்றெண்ணி ஏமாந்தேன்! எனக்குத் தெரியாமல் போருக்கு மறுபடியும் ஏற்பாடு செய்கிறார்! அது எனக்குப் பிடிக்க வில்லை! ரோமுக்கும் அது உகந்ததல்ல. அக்டேவியா: நல்ல தெய்வங்கள் எள்ளி நகையாடும் என்னை! கணவர் வெற்றி பெறச் செய்யென்று, கடவுளைத் துதித்தால் தமையன் தோல்வி அடைவார்! உடனே அவ்விதம் வேண்டாம் என்று அலறி தமையன் வெல்லட்டும் என்று நான் விழைகிறேன்! கணவன் வெல்க, தமையன் வெல்க என்று மாறி, மாறி நான் வேண்டினால் என் துதிப்பே என் துதிப்பினை அழித்திடும்! நடுவழி யில்லை எல்லை கடந்த எனது இச்சை இரண்டுக்கும்! ஆண்டனி: கண்ணே, அக்டேவியா! ஒருவரை ஒருவர் பல்லாண்டுகள் வெறுக்கும் தளபதிகள் இருவரை ஒரே சமயத்தில் ஒரே தன்மையில் நீ நேசிக்கிறாய்! யாராவது ஒருவர் பக்கம் சேர்ந்து கொள்! எனக்குக் கவலை யில்லை நீ உன் தமையன் பக்கம் சேர்ந்தால். என் தன்மானம்தான் எனக்குப் பெரியது! அது அழிந்து போனால் நானோர் ஆண்மகனில்லை! உனக்காகவோ, உன் தமையனுக்காகவோ நான் என் சுயமதிப்பை இழக்க மாட்டேன்! உன் சகோதரனுக்காக நான் உன்னை இழக்க நேர்ந்தாலும், கவலைப் படமாட்டேன். அக்டேவியா: என்னருமை ஆண்டனி! அப்படி எல்லாம் சொல்லாதீர். நீங்கள்தான் முதலில் எனக்கு முக்கிய நபர்! ஆனால் பாசம் சகோதரர் மீது பாய்வதை என்னால் தடுக்க முடியவில்லை. … நானொன்று செய்ய விரும்புகிறேன். உங்களுக்காக, நான் தூது செல்கிறேன். தமையனை உங்களுடன் பிணைப்பதற்காக நான் தூது செல்கிறேன். அதை என் விருப்பம் ஆண்டனி. ஆண்டனி: அப்படி நீ பிணைக்க முனைவதை நான் தடுக்க மாட்டேன்! ஆனால் அக்டேவியஸ் கடுஞ்சினம் கொண்டவர்! எளிதாக எதனையும் நம்பாதவர். நல்லது. நீ தூது செல்! அவர் வெறுப்பு தணிந்து என்னுடன் நட்பு கொண்டால் எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால் அது நடக்குமா? அக்டேவியா: நிச்சயம் நான் உங்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பேன். என் உறவுத் தூது வெற்றியடைய வாழ்த்துவீர், என்னருமை ஆண்டனி! ஆண்டனி: போய்வா கண்மணி! உன் தூது எமக்குள் மீண்டும் உறவை உண்டாகட்டும்! அக்டேவியஸை மீண்டும் எனது மைத்துனன் ஆக்கு! உன் பிரார்த்தனையால் எங்கள் உறவு உறுதியாகட்டும். நீ தூது செல்! நான் எகிப்துக்குச் செல்ல வேண்டும். நான் விட்டு வந்த பணிகளை முடிக்க வேண்டும். அக்டேவியா: நன்றி ஆண்டனி. தூது செல்கிறேன். நல்ல செய்தியுடன் உங்களை எகிப்தில் சந்திப்பேன். விடை பெறுகிறேன். []   ஆண்டனி: போய்வா கண்ணே, போய்வா! நிச்சயம் எகிப்தில் சந்திப்போம், கிளியோபாத்ரா அரண்மனையில். அக்டேவியா: கிளியோபாத்ராவின் மயக்க மாளிகையில் என்னை மறக்காமல் தினமும் நினைப்பீரா ? எனக்குக் கடிதம் எழுதுவீர், வாரம் ஒருமுறை. அப்படி நீங்கள் எழுதா விட்டால், எகிப்துக்கு நான் முன்பாகவே புறப்பட்டு விடுவேன். [ஆண்டனியை முத்தமிட்டுப் போகிறாள்] ஆண்டனி: கவலைப் படாதே கண்மணி! வாரமொரு கடிதம் உனக்கு வரும். நல்ல செய்தி எனக்குக் கொண்டுவா. … மதி எங்களைச் சேர்க்க நினைத்தாலும், விதி உறவை அறுத்து விடுகிறது. உறவு ஒரு முட்டை போன்றது. ஒருமுறை கீறல் உண்டாகி அது பிளந்து விட்டால், அதை ஒட்டி வைக்க முடியாது. கிளியோபாத்ராவை நான் உடனே காண வேண்டும். அவளுடன் ஒட்டிக் கொண்ட என் உறவை விதி வெட்ட முடியாது. ஆயிரம் மாதர் என்னைத் தேடினாலும், என் மனம் நாடுவது கிளியோபாத்ராவை! அக்டேவியாவின் பிரிவு என்னை உறுத்தாமல் இருக்க நான் எகிப்துக்குச் செல்ல வேண்டும். என் உடல் உள்ளது ரோமில்! ஆனால் என் ஆத்மா உள்ளது எகிப்தில்! ரோமாபுரி சாம்ராஜியத்தில் அடங்கியது எகிப்தின் ஆத்மா! ரோமும், எகிப்தும் சேரும் போதுதான் உடலும், உயிரும் கூடி இன்பம் அடைகிறது. [போகிறான்]  ********************* []   அங்கம் -7 காட்சி -8 எனது அங்கியைக் கொண்டுவா! எனக்கு மகுடத்தைச் சூட்டு! என்னுள் எழும்பும் அழியா ஆசைகள்! எகிப்தின் திராட்சைகள் இனிமேல் என்னுதடை நனைக்கா! வேண்டாம்! அதோ கேள் ஈராஸ்! ஆண்டனி அழைக்கும் குரல் கேட்கும் எனக்கு! அவரை நோக்கின் என்மேல் ஆசை எழும்! உன்னதச் செய்கை என்றெனைப் புகழ்வார்! நான் புரிவதைக் கண்டு அவர் நகைப்பது என் செவியில் கேட்கும்! அக்கினி நான்! காற்றும் நான்! ஐம்புல உணர்வை விடுப்பேன் அடிப்படை வாழ்வின் தேவைக்கு! …     கிளியோபாத்ரா வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா) . []     நேரம், இடம்: அலெக்ஸாண்டிரியாவில் கிளியோபாத்ராவின் அரண்மனை. காலை வேளை. நாடகப் பாத்திரங்கள்: கிளியோபாத்ரா, ஆண்டனி, அலெக்ஸாஸ், ஐரிஸ் காட்சி அமைப்பு: அரண்மனைச் சிம்மாசனத்தில் கிளியோபாத்ரா சோகமாக அமர்ந்திருக்கிறாள். அலெக்ஸாஸ் ஆண்டனி வருகையை அறிவிக்கிறான். []   கிளியோபாத்ரா: ஐரிஸ்! எங்கே என்னருமை ஆண்டனி? காத்துக் காத்துக் கண்கள் களைத்து விட்டன. ஏன் இத்தனை நாட்கள் என்னைக் காண விரும்பாமல் ஒளிந்து கொண்டார்? எப்படி என்னை மறந்தார்? வந்தால் நான் அவரைக் காண விரும்பவில்லை என்று சொல். வந்த வழியே திரும்பிச் செல்லும்படிச் என்று சொல்! எனக்கும் அவருக்கும் என்ன உறவு? ஐரிஸ்: மகாராணி! அதோ அலெக்ஸாஸ் முறுவலோடு வருகிறார். நல்ல செய்தி கொண்டு வருவது அவரது நடையிலே தெரிகிறது! [அலெக்ஸாஸ் நுழைகிறான்] அலெக்ஸாஸ்: மேன்மை மிகு மகாராணி! ரோமாபுரியின் முத்தலைவர்களில் மூத்தோரான ஆண்டனி வருகிறார். [ஆண்டனி மெய்க்காவலர் பின்னால் தொடரக் கிளியோபாத்ராவை நோக்கி வருகிறார். கிளியோபாத்ரா சட்டென எழுந்து விரைந்து சென்று ஆண்டனியைத் தழுவிக் கொள்கிறாள்] கிளியோபாத்ரா: [மகிழ்ச்சியுடன் கண்களில் நீர் பொங்க] ஆண்டனி! என்னை எப்படி மறந்தீர்? என்னை ஒதுக்கி விட்டு வேறொருத்தியை மணந்து கொண்டீர்! எனது தூக்கத்தைக் கெடுத்து மன ஊக்கத்தை அழித்தீர்! எனது உணவை வெறுக்க வைத்தீர்! மதுவைக் குடிக்க விட்டு மயக்கத்தில் படுக்க வைத்தீர்! என் மன வேதனை அறியாமல் மரணத்தைத் தேட வைத்தீர்! ஆண்டனி: [மனமுருகி] கண்ணே கிளியோபாத்ரா! உன்னை எப்போது காண்பேன் என்றுதான் நானும் நாட்களை எண்ணிக் கொண்டிருந்தேன். உன்னை என்றுமினிப் பிரிய மாட்டேன்! நானுன்னைப் பிரிந்தது தவிர்க்க முடியாதது! கண்ணே உன் மடியில்தான் நானினித் தலைவைத்து உறங்குவேன்! நீதான் எனக்கு! நீதான் எனக்கு ஆத்மா! நீயின்றி நான் வெறும் எலும்புக் கூடுதான்! கிளியோபாத்ரா: [மனம் தெளிவுற்று] உண்மையாகவா? அப்படியானால் ஏன் அக்டேவியாவை எனக்குத் தெரியாமல் உடனே திருமணம் செய்து கொண்டீர்? அவளுக்கு என்னைப் போல் அழகிருக்கா? என்னைப் போல் அறிவிருக்கா? என்னைப் போல் ஆழ்ந்த அன்பிருக்கா? ஆட்சி புரிய என்னைப் போல் ஆண்மை யிருக்கா? என்ன உள்ளது அவளுக்கு? என்னை விட அக்டேவியா எந்த விதத்தில் உன்னத மானவள்? ஏனொரு விதவையை மணந்தீர்? அக்டேவியா உங்களுக்கு மனைவி! கிளியோபாத்ரா ஓர் ஆசைக் கிழத்தியா? ஆண்டனி: [சிரித்துக் கொண்ட்] கண்ணே கிளியோபாத்ரா! எங்கள் திருமணம் ஒரு பொம்மைத் திருமணம்! உண்மையாக அக்டேவியா மீது எனக்கு விருப்போ, வெறுப்போ கிடையாது. அக்டேவியாவைத் தேடி நான் போகவில்லை! அவள் அழகில் நான் மயங்க வில்லை! விருப்பம் மாறி என்னை வெறுத்த தளபதி அக்டேவியஸ் எனக்களித்த தண்டனை அது! “ஒன்று, என் தங்கை அக்டேவியாவை மணந்து எனக்கு மைத்துனன் ஆகு! அல்லது எனக்குப் பகைவனாய் மாறி நீ தனித்துப் போ”, என்று அவன் போட்ட நிபந்தனையில் சிக்கிக் கொண்டேன். பாவம், பதியை இழந்த அந்தப் பெண்! அவள் மனதைக் கெடுத்தவன் அவள் ஒன்றுவிட்ட அண்ணன் அக்டேவியன். வேண்டா வெறுப்பாகத்தான் அவளை நான் ஏற்றுக் கொண்டேன். கிளியோபாத்ரா: [கண்களைக் கூர்ந்து நோக்கி] விருப்போ அல்லது வெறுப்போ கிடையா தென்றால், இப்போதே அக்டேவியாவை மணவிலக்கு செய்வீரா? அப்போதுதான் என் மனம் குளிரும்! இரவில் என்னருகில் படுத்துள்ள ஆண்டனி எனக்குரியவர் என்னும் உணர்ச்சி என்னுள் பொங்க வேண்டும். வேறொருத்தியின் பதி என்னருகில் படுத்துள்ளார் என்றால் எனக்கு நிம்மதி யில்லை! என்னுயிரான ஆண்டனியை வேறு எந்தப் பெண்ணும் பகிர்ந்து கொள்ள விடமாட்டேன்! அவளை மணவிலக்கு செய்வீரா? அதுவும் உடனே செய்வீரா ஆண்டனி! ஆண்டனி: [கவனமாக] கண்ணே கிளியோபாத்ரா! அக்டேவியாவை மணமுறிவு செய்து முத்தளபதிகளில் ஒருவரை நான் இப்போது பகைத்துக் கொள்வது அறிவுள்ள செயலாகாது! நான் அக்டேவியஸின் எதிரியானால், ரோமானியரின் கோபத்துக்கு ஆளாவேன். ரோமானிய செனட்டருக்கு என்னைப் பிடிக்கும்! ஆனால் உன்னை பிடிக்காது! அக்டேவியாவை மணவிலக்கு செய்து விட்டால், செனட்டாரும் என்னை வெறுப்பார். என் தளபதி பதவி போய்விடும்! எனக்கு நீயும் வேண்டும்! செனட்டாரின் ஆதரவும் வேண்டும்! அல்லாவிடில் சீஸரின் முடிவுதான் எனக்கும் கிடைக்கும்! []   கிளியோபாத்ரா: [கண்ணீர் பொங்கி] வேண்டாம், சீஸரின் முடிவு உங்களுக்கு வர வேண்டாம்! ரோமில் அன்று நான் பட்ட வேதனை போதும். அந்த கோர முடிவு உங்களுக்கு நேர வேண்டாம். பிறகு என்ன செய்யலாம் என்று நினைக்கிறீர்? ஆண்டனி: கண்ணே கிளியோபாத்ரா! கட்டிய மனைவியை விட்டு நான் ஏனிங்கு வந்தேன்? அக்டேவியாவைத் திருமணம் செய்தாலும், என்னிதயத்தில் ஒளிந்திருந்தவள் கிளியோபாத்ரா ஒருத்திதான்! அக்டேவியா என் அரசியல் மனைவி! எனது பொம்மை ராணி! நீதான் எனக்கு உண்மை ராணி! எப்படி அதை நான் நிரூபிக்க முடியும் உனக்கு? கிளியோபாத்ரா: [அழுத்தமாக] ஏன் முடியாது? வாருங்கள், உறுதி மொழி கூறுங்கள், எங்கள் குல தெய்வம் முன்பாக! நான்தான் உங்கள் மனைவி என்று மெய்யாக தெய்வத்தின் முன்பு அறிவிப்பு செய்யுங்கள். எகிப்தின் காதிலும் விழட்டும்! ரோமின் செவிகளும் கேட்க வேண்டும்! ஆண்டனி: கண்ணே, கிளியோபாத்ரா! அப்படி உடனே நான் அறிவிப்பது நமக்கு அபாயம் விளைவிக்கும். அக்டேவியாவை மணவிலக்கு செய்வதும் அப்படிச் சொல்வதும் ஒன்றுதான். சொல்லாமல் செய்ய வேண்டும். நமக்குள்ள உறவு யாருக்கும் தெரியக் கூடாது. நாம் கணவன் மனைவி போல் வாழப் போவதை எவரும் அறியக் கூடாது. கிளியோபாத்ரா: [வெறுப்புடன்] ஆண்டனியின் கள்ளக் காதலியாக நானிருக்க விரும்ப வில்லை. எகிப்துக்கு ராணி நான்! எப்படிக் கள்ளக் காதலியாய் நான் அரசாள முடியும்? எகிப்த் மக்களுக்கு நான் எப்படி ஒரு வழிகாட்டியாக, மாதிரி ராணியாக சிம்மாசனத்தில் உட்காருவது? கிளியோபாத்ரா ·பாரோ பரம்பரையில் வந்தவள்! மகா அலெக்ஸாண்டர் வம்ச மரபில் பிறந்தவள்! எகிப்த் வரலாற்றில் ரோமானிய மகாவீரரின் மனைவி கிளியோபாத்ரா என்னும் உன்னத மதிப்பை நீங்கள் அளிக்க வேண்டும் எனக்கு! ஆண்டனி: [சிரித்துக் கொண்டு] உன்னை மணந்து கொள்கிறேன் கிளியோபாத்ரா! ஆனால் ஒரு நிபந்தனை, அக்டேவியாவை நான் மணவிலக்கு செய்ய முடியாது. உனக்கு என்னிலையைப் புரிய வைக்கிறேன். ஒருபுறம் இளைய பாம்ப்பி ரோமாபுரியைத் தாக்கத் தயாராக வாசலில் நிற்கிறான். மறுபுறம் அக்டேவியஸ் என்னை வெட்டி விட வாய்ப்பை எதிர்நோக்கி யுள்ளான். நான் தனித்து விடப் படுவேன். என்னை வேட்டையாட ரோமாபுரி வேங்கைகள் எகிப்தை நோக்கிப் பாய்ந்து வரும்! கிளியோபாத்ரா: [ஆங்காரமாக] கவலைப் படாதீர் ஆண்டனி! அக்டேவியஸ் உங்களை வேட்டையாட வந்தால், எகிப்த் உங்களைப் பாதுகாக்கும். உங்களை எதிர்ப்பவர் எவரும் எகிப்தின் எதிரியாக எண்ணப்படுவார். எங்கள் படைவீரர் உங்கள் ஆணைக்குப் பணிவார். உங்களுக்காகப் போரிடுவார். நான் உங்களுடன் சேர்ந்து போரிடுவேன். []   ஆண்டனி: [மகிழ்ச்சியுடன்] மெச்சுகிறேன் கிளியோபாத்ரா! எகிப்த் படையினர் என் ஆணைக்குப் படிந்து போரிட்டால், அக்டேவியஸை நான் நசுக்கி விட முடியும். கிளியோபாத்ரா: எகிப்து எப்போதும் உங்கள் நாடு. நீங்கள் கப்பலில் நெடுந்தூரம் பயணம் செய்துள்ளீர்! ஓய்வெடுக்க வேண்டும். விருந்தினர் அறை உங்களுக்காக அலங்கரிக்கப் பட்டிருக்கிறது. நிம்மதியாகத் தூங்கிடுவீர். [கிளியோபாத்ராவை முத்தமிட்டு ஆண்டனி விருந்தினர் அறைக்குச் செல்கிறார்] \ *********************   அங்கம் -7 காட்சி -9   ரோமாபுரி மூழ்கிப் போகட்டும்! நம்மை எதிர்த்துப் பேசுவோரின் நாக்குகள் அழுகிப் போகட்டும்! போரைப் பற்றிப் புகார்  நம்மேல்! ஆடவனைப் போல் நாட்டரசி நான் அங்குமுன் நிற்பேன்! அதை எதிர்த்துப் பேசாதீர் ! பின்தங்கி நில்லேன்! …. (கிளியோபாத்ரா). வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)   ஆண்குதிரை பெண்குதிரை இரண்டும் அணியில் சேர்ந்து போருக்குப் போனால் கவனம் திரும்பிப் போர்க் களத்தில் காணாமல் போகும் ஆண்குதிரை! பெண்குதிரை வீரரைச் சுமந்து ஆண்குதிரை தன்னையும் ஏற்றித் தனியே செல்லும். … (எனோபார்பஸ்) வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா) []   நேரம், இடம்: அலெக்ஸாண்டிரியாவில் கிளியோபாத்ராவின் அரண்மனை. காலை வேளை. நாடகப் பாத்திரங்கள்: கிளியோபாத்ரா, ஆண்டனி, ஐரிஸ், எனோபார்பஸ் (ஆண்டனியின் ஆலோசகர்). கனிடியஸ் (ஆண்டனியின் போர்த் தளபதி) காட்சி அமைப்பு: ஆண்டனி தன் மனைவியை மறந்து எகிப்தில் நிரந்தரமாகத் தங்கிக் கிடப்பது ரோமானியத் தளபதி அக்டேவியஸின் சினத்தைக் கிளப்புகிறது. படை திரட்டிக் கொண்டு அக்டேவியஸ் எகிப்த் நோக்கி வருகிறான். கிளியோபாத்ரா, எனோபார்பஸ் இருவரும் வரப் போகும் போரைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ஆண்டனி விருந்தினர் அறையிலிருந்து வருகிறார். பின்னால் அவரது படைத் தளபதி கனிடியஸ் வருகிறான். கிளியோபாத்ரா: [ஆங்காரமாக] எனக்குத் தெரியும். அக்டேவியஸ் எகிப்த் நோக்கி ஒருநாள் படையுடன் வருவார் என்று. எகிப்த் அவரை எதிர்க்கத் தயாராக உள்ளது! நானும் போர் முனைக்குச் செல்வேன்! அதில் எந்த ஐயப்பாடும் கொள்ளாதே. எனோபார்பஸ்: ஏன் மகாராணி? நீங்கள் ஏன் போரை முன்னடத்திச் செல்ல வேண்டும்? []   கிளியோபாத்ரா: ஆண்டனியுடன் சேர்ந்து போரிடுவேன் எகிப்துக்காக. என்னை யாரென்று நினைத்தாய்? நான் அலெக்ஸாண்டர் பரம்பரையில் வந்தவள். என்னுடலில் ஓடுவது போர்க்குருதி, வெறும் நீர்க்குருதி யில்லை! எங்கள் நாட்டெல்லையில் கால்வைக்கும் எந்தப் பகைவரும் உயிருடன் மீள்வதில்லை! தெரிந்துகொள். எனோபர்பஸ்: [தலையைத் திருப்பி தனக்குள் முணுமுணுத்து] ஆண்குதிரைகளோடுப் பெண்குதிரைகளும் சேர்ந்து போருக்குப் போனால், ஆண்குதிரைகளின் கவனம் திரும்பிக் காணாமல் போகும். பெண்குதிரைகள் படைவீரரைக் கீழே தள்ளிவிட்டு, ஆண்குதிரைகளை நாடிச் செல்லும். குதிரைகளுக்குக் கொண்டாட்டம்! படைவீரருக்குத் திண்டாட்டம். கிளியோபாத்ரா: [கவனத்துடன்] என்ன முணுமுணுக்கிறாய் நீ? முகத்தை பார்த்து விளக்கமாகப் பேசு. எனோபர்பாஸ்: மகாராணி! மன்னிக்க வேண்டும் என்னை! போரில் உங்கள் இருக்கை ஆண்டனிக்கு வியப்பூட்டும்! வேதனை யாக இருக்கும்! உங்களுக்கு எந்த விதக் காயமும் பட்டுவிடக் கூடாது என்று கவலைப் படுவார். அழகில் மயங்கிடும் ஆடவர் மனது எதிரிகளை முறியடிப்பதை மறந்து போகும். வனிதயரைப் பல மாதங்கள் பார்க்காத படைவீரர் பெண்ணைக் கண்டால் பித்தராய் ஆவார். அவரது கவனம் போரை மறந்து அழகைப் பார்க்கும். அதனால் படை வீரர் உயிருக்கே ஆபத்து வரலாம்! வாளேந்திய வீரர் மோகக் கனலில் மூழ்கிப் போவார். வனப்பு போர் வாள்களை மடக்கி விடும். கடைசியில் வாளுக்கும், வனப்புக்கும் ஏற்படும் போரில் மடிவது ஆடவர். ஆண்டனியின் எ•கு இதயம் உங்கள் இருக்கையால் உருகி விடும். ஏற்கனவே ரோமில் ஆண்டனி கோழையாக மெலிந்து விட்டார் என்ற புகார் எழுந்து விட்டது. அதனால் அவரது பெயர் தேய்ந்து வருகிறது. எகிப்தில் அலிகளும், அரசியின் அடிமைகளும் மேற்பார்வை செய்து புரியும் போரிது என்று ரோமானியர் எள்ளி நகையாடுகிறார்.  []   கிளியோபாத்ரா: [வெகுண்டெழுந்து] ரோமாபுரி மூழ்கிப் போகட்டும்! எம்மைக் கேலி செய்பவர் நாக்குகள் அழுகிப் போகட்டும்! அடிமைகளும், அலிகளும் நடத்தும் போர் என்று கிண்டல் செய்வோரை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். என்னைக் குறை கூறியது மகா அலெக்ஸாண்டரை அவமதித்ததாகும். ஐயாயிரம் மைல்கள் நடந்து ஆயிரக் கணக்கான படைவீரர்களை வழிநடத்தி மூன்றாண்டுகள் ஆசியாவைக் கலக்கியவர் அலெக்ஸாண்டர்! எகிப்தின் எல்லையைக் கூடத் தொடாத ரோமானியர் அலெக்ஸாண்டர் பரம்பரைப் படையினரை எள்ளி நகையாடுவதா? நான் போருக்கஞ்சி ஒளிந்து கொள்ள மாட்டேன்! முன்னின்று நடத்தி வெற்றிமாலை சூடுவேன்! தெரிந்து கொள். எனோபர்பாஸ்: மகாராணி! அடியேனின் கோரிக்கை! ரோமின் படைப்பலம் வலிமை மிக்கது! அவரது கப்பலிருந்து ஏவப்படும் தீக்கனல் ஏவுகணைகள் தாக்கி உங்கள் அழகிய மேனியில் கறைபட்டுவிடக் கூடாது. அதுதான் எனது அச்சம்! … அதோ! தளபதி ஆண்டனி வருகிறார். [ஆண்டனி அவரது படைத்தலை அதிபதி கனிடியஸ்யுடன் நுழைகிறார்] ஆண்டனி: [சிந்தனையுடன்] அது எப்படி முடிந்தது? ஓரிரு நாட்களில் கடற்படை கொண்டு டோரின் நாட்டைக் கைப்பற்றினார் அக்டேவியஸ் என்பது வியப்பாக உள்ளது! மின்னடித் தாக்கல் போல் தெரிகிறது கானிடியஸ்! கிளியோபாத்ரா: வேகத் தாக்குதலைப் பற்றி வியப்புறுவர் யார்? கண்காணிப்பற்ற, கவனமற்ற, கண்விழிப்பில்லா மனிதர்கள்தான்! ஆண்டனி: நன்றாகத் திட்டுகிறாய் கிளியோபாத்ரா! பாராட்டுகிறேன் கண்ணே! … கானிடியஸ்! கடற்படை மூலமாகவே நாம் அக்டேவியஸைக் கலக்கி அடிப்போம். கிளியோபாத்ரா: வேறெந்த முறையில் அவரை விரட்ட முடியும்? கானிடியஸ்: தளபதியாரே! ஏன் கடற்படை மூலமென்று எண்ணுகிறீர்? எனக்கு அப்படித் தோன்றவில்லை. ஆண்டனி: அப்படித்தானே போரிட வருகிறார் அக்டேவியஸ்! []   கானிடியஸ்: ஆண்டனி! சீஸரும், பெரிய பாம்ப்பியும் போரிட்ட அதே பார்ஸாலியா என்னும் தளத்தில் நாமும் கடல்யுத்தம் புரிவதா? எனோபார்பஸ்: உங்கள் கடற்படைக்கு அத்தகைய வலுவில்லை ஆண்டனி! உங்கள் கப்பலைச் செலுத்த தகுந்த ஓட்டுநரில்லை! உங்கள் கடற்படை வீரர்கள் கழுதை மேய்ப்பவர்கள்! குடியானவராய் ரோமில் ஏர் உழுதவர்! அவர்கள் கடல் நீரை உழுது கப்பலை இயக்க அருகதை அற்றவர்! அக்டேவியஸ் கடற் போருக்கு அழைத்தால், நீங்கள் மறுப்பதில் அவமானமில்லை. அவசியம் மறுப்புக் கூறுங்கள்! பாம்ப்பியின் கப்பல் எடை குறைந்தது! எளிதில் செலுத்தப் படுவது! வேகமாய்ச் செல்வது! உங்களுடைய கப்பல் கனத்தது! மெதுவாய் ஊர்ந்து செல்வது. எதிரிகள் தாக்கிட வசதி அளிப்பது! தயது செய்து மறுப்பெழுதி அனுப்புங்கள் அக்டேவியஸ் தளபதிக்கு. தரைப் போரே நமக்குத் தகுந்தது! ஆண்டனி: எனது ஒரே முடிவு கடற்போர்! கடற்போர்! கடற்போர்! எமது கப்பல் மெதுவாகச் சென்றாலும், எண்ணிக்கை மிக்கக் கனல் பீரங்கிகள் தாக்கிட உள்ளன. தகர்த்துவிடும் அவை எதிரிகளின் கப்பல்களை. எனோபர்பாஸ்: மதிப்புக்குரிய தளபதி! உங்கள் தரைப்போர் யுக்தியைக் கைவிடுகிறீர்! உங்கள் தனித்துவப் படைத் தாக்கத்தைப் பயன்படுத்தும் வாய்ப்பிழக்கிறீர்! வெற்றிதரும் மலைர்ப் பாதையை விட்டுவிட்டு தோல்வி தரும் முட்பாதையைத் தேர்ந்தெடுக்கிறீர்! ஆண்டனி: என் ஒரே முடிவு, கடற்போர்தான். அதில் எந்த மாற்றமுமில்லை எனக்கு. கிளியோபாத்ரா: எங்களிடம் அறுபது போர்ப் படகுகள் உள்ளன. அக்டேவியஸ் கப்பலுக்கு எந்த விதத்திலும் குறைந்தவை அல்ல அவை. ஆண்டனி: வேண்டாத கப்பல்களை எரிப்போம். அவற்றின் கப்பல் ஓட்டிநர் மற்ற கப்பல்களை நிரப்பட்டும். ஆக்டியம் நோக்கி நமது கடற்படை ஏகி அக்டேவியஸ் கடற்படையைத் தாக்க வேண்டும். ஒருவேளை நாம் தோற்றால் தளப்போரில் மீண்டும் தாக்கலாம். கனிடியஸ்! நமது பத்தொன்பது அணிப் படைகளைக் கப்பல்களில் ஏற்று! பன்னிரண்டாயிரம் குதிரைகளைப் பிரித்து ஒவ்வொரு கப்பலுக்கும் அனுப்பு. [கனிடியஸ் போகிறான். அடுத்தொரு படை வீரன் வருகிறான்] படைவீரன்: மேன்மைமிகு தளபதி! கடல் வழிப்போர் வேண்டாம். கீறல் விழுந்த நமது கப்பல்களை நம்பிக் கடற் போருக்குப் போக வேண்டாம். எகிப்தியரும், அந்நாட்டு அலிகளும் மீன் பிடிக்கப் போகட்டும்! தரையில் காலூன்றி ஒருவனுக்கு ஒருவனாய் எதிர் நின்று போரிடுவோம். அதில்தான் நமக்கு வெற்றி கிடைக்கும். ஆண்டனி: போதும் நிறுத்து! போ, போ உன் வேலையைச் செய். [ஆண்டனி கிளியோபாத்ரா, எனோபர்பாஸ் அடிமைகள் யாவரும் போகிறார்கள்] படைவீரன்: [தனியாக] எது நடக்கக் கூடாது என்று எதிர்க்கிறோமோ, அதுதான் நடக்கிறது! தவிர்க்க வேண்டியது எதுவோ, அதுவே தலை விரித்தாடுகிறது! நாமெல்லாம் ஆடவர் ஆணைக்குக் கீழ் வேலை புரிய வில்லை! பெண்ணுக்குப் பணி புரியும், படை வீரராய் மாறி விட்டோம்! ஆண்டனி கிளியோபாத்ராவின் மீன் படகுகளை நம்பி ரோமுடன் போருக்குப் போகிறார். ரோமாபுரியின் கரடிக் கப்பல்கள் ஒரே பாய்ச்சலில் மீன் படகுகளைப் பற்றி விழுங்கி விடும்! பாவம் ஆண்டனி! [போகிறான்] *********************   அங்கம் -7 காட்சி -10   ரோமைப் புறக்கணித்தார் ஆண்டனி! அதற்கு மேலும் அடாதன செய்தார் அவரது பண்பாடே அப்படித்தான்! அங்காடித் தளத்து வெள்ளி மேடையில் ஆண்டனியும், கிளியோ பாத்ராவும் பொன்னா சனத்தில் அமர்ந்து எல்லோ ருக்கும் தெரியும்படி அரசன், அரசியென அறிவித்தார்! அவரது காலடியில் சீஸரின் புதல்வன்! காம மோகத்தில் மீறிய போக்கு! சிரியா, ஸைப்பிரஸ், லிடியா நாடுகள் பரிசாக அளித்து அவளை ஏகாதி பத்திய மகா ராணி ஆக்கினார்! … (தளபதி அக்டேவியஸ்) வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)   கள்ளத் தனமாய் உள்ளே வந்தது ஏனோ? ஆண்டனியின் மனைவிக்குக் காவலர் தேவை, உள்ளே நுழையுமுன் வருகையை அறிவிக்க! ரோமின் சந்தைப் பெண்போல் நுழைகிறாய்! நமது செல்வந்தப் பந்தத்தைச் சிதைத்தாய்! அதனை இழப்பின் அன்பின் பிணைப் பறுபடும்! கடற்படை யுடன் நாட்டில் உன்னை வாழ்த்தி வரவேற்க நாங்கள் வருவோம். … [தளபதி அக்டேவியஸ்] வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா) என்னரும் சகோதரி ஏமாந்தாய்! கிளியோபாத்ரா உன்னரும் பதியைத் தன்வசப் படுத்தினாள்! ஆண்டனி  நாடுகள் தானம் செய்தார் வேசிக்கு! கப்பப் பணத்தை அரசரிடம் கறந்து, போருக்கு அழைக்கிறாள் எம்மை இன்று ! … [தளபதி அக்டேவியஸ்] வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)   ஒவ்வொரு ரோமானிய இதயமும் உன்னை நேசிக்கும் சகோதரி ! உன் மீது அனுதாபம் காட்டும். பிற மனையாள் பின் சென்றுனை மறந்த ஆண்டனியை அறவே வெறுப்பர்! வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)     []     நேரம், இடம்: போர் முனையில் ஓரிடம், பகல் வேளை. நாடகப் பாத்திரங்கள்: தளபதி அக்டேவியஸ், தங்கை அக்டேவியா, போர்த் தளபதி அக்கிரிப்பா, மெஸ்ஸேனஸ் காட்சி அமைப்பு: ஆண்டனி மனைவி அக்டேவியாவை மறந்து எகிப்தில் நிரந்தரமாகக் கிளியோபாத்ராவுடன் அரண்மனையில் தங்கிக் கிடப்பது ரோமானியத் தளபதி அக்டேவியஸின் சினத்தைக் கிளப்புகிறது. தங்கையிடம் கூறித் தன் வெறுப்பைக் காட்டி எகிப்துக்குச் செல்ல முற்படுகிறான். அக்டேவியஸ்: அக்கிரிப்பா! பாரிந்த அநியாயத்தை! பரிதாபப் படுகிறேன் பரிவுள்ள என் சகோதரிக்கு! படுதுயரில் அவளைத் தனியே தவிக்க விட்டு, ஆண்டனி பரத்தையின் காலடியில் கிடக்கிறார்! ரோமாபுரியின் பாராக்கிரச் சிங்கம் காமாந்தகியின் காந்த விழிகளால் சுடப்பட்டு வீழ்ந்து கிடக்கிறது. சீஸரும் அப்படித்தான் மோசக்காரியின் தாசரானார்! அவள் ஒரு வேசி! கப்பம் கட்டி நமக்குக் கும்பிடு போட வேண்டிய மோகினி, ஒப்பற்ற ஆண்டனியைப் பெட்டிப் பாம்பாய் ஆக்கி விட்டாள்! அதற்குக் காரணி கிளியோபாத்ராவா? இல்லை, இல்லை! ஆண்டனிதான்! அக்கிரிப்பா! பார்! எகிப்துக்குச் சென்று ஆண்டனியைக் கைது செய்து, நான் அக்டேவியாவின் காலடியில் விழ வைப்பேன்! என் உறுதி மொழி யிது! அக்கிரிப்பா: சீஸரும் அப்படித்தான் சினத்துடன் எகிப்துக்குச் சென்றார்! அப்புறம் என்ன ஆனது? ஆண்டனியும் அவரைப் போல் கிளியோபாத்ராவை அடக்கத்தான் போனார்! அத்தனை பேரும் அப்புறம் அவளுக்கு அடிமை யானார்! அவளது கைப் பொம்மையாய் அடங்கிப் போனார்! இப்போது நீங்கள் அவரைப் பின்பற்றி எகிப்துக்குப் போகிறேன் என்று உறுதி கூறுகிறீர்! கிளியோபாத்ரா ஒரு சிலந்தி பூச்சி! அவளது வலையில் சிக்கினால் நீங்களும் விழுங்கப் படுவீர்! அவளது மேனியின் தீக்கனலில் நீங்களும் மெழுகாய் உருகிப் போவீர்! அக்டேவியஸ்: அலெக்ஸாண்டிரியாவுக்கு நான் செல்வது கிளியோபாத்ராவை அடக்குவதற்கு அல்ல, ஆண்டனியைப் பிடிப்பதற்கு. ரோமானிய செனட்டரைத் திட்டி யிருக்கிறார் ஆண்டனி! அலெக்ஸாண்டிரியா அங்காடி வீதிப் பீடத்தில் அகங்காரியுடன் பொன்னாசனத்தில் அமர்ந்து, தன்னை எகிப்தின் சக்கிரவர்த்தி என்று அறிவித்திருக்கிறார்! அருகில் சீஸரின் மகன் சிஸேரியன் அமர்ந்திருந்தானாம்! சிரியா, சைப்பிரஸ், லிதியா நாடுகளைக் கிளியோபாத்ராவுக்கு வெகுமதியாக அளித்திருக்கிறார் ஆண்டனி! அது ஒப்பந்த துரோகம்! என்னைக் கேளாமல், லெப்பிடஸ் அறியாமல் ரோம் சாம்ராஜியத்தின் மூன்று நாடுகளைக் காமக் கிழத்திக்குத் தானம் கொடுத்துள்ளார்? கிழக்காசிய நாடுகளுக்கு கிளியோபாத்ராவை முழு ஆதிக்க மகாராணியாக ஆக்கியுள்ளார். அனைத்தும் எங்களுக்குத் தெரியாமல்! அனைத்தும் ரோமுக்கு எதிராகச் செய்த ராஜதுரோகம்! என்னால் தாங்க முடியவில்லை! வேசிக்கு பொன்னும் பொருளும் கொடுக்கலாம்! தேசங்களை யார் வேசிக்கு கொடுப்பார்? காமப் பித்தன்தான் அப்படித் தானம் செய்வான்! மெஸ்ஸேனஸ்: மாளிகை விருந்துகளில் சிற்றரசருடன் கலந்து உரையாடும் போது கிளியோபாத்ராவின் கணவனாகக் காட்டிக் கொள்கிறாராம் ஆண்டனி! எப்போது அவரது ரகசியத் திருமணம் நடந்தது என்பது தெரியவில்லை? [அப்போது திடீரென அக்டேவியா தலைவிரி கோலமாய் ஆவேசமுடன் நுழைகிறாள்] []   அக்டேவியா: [வேதனையுடன்] என்ன, என் கணவருக்கு அடுத்தொரு திருமணமா? நானிருக்க எப்படி வேறொருத்தியை மனைவியின் பீடத்தில் அவர் வைக்கலாம்? மெஸ்ஸேனஸ்: அக்டேவியா! கிளியோபாத்ராதான் ஆண்டனிக்கு முதல் மனைவி! நீங்கள் அவருக்கு இரண்டாம் … மனைவிதான்! அக்டேவியா: [சினத்துடன், கண்ணீர் கலங்க] மூடு வாயை! அப்படிச் சொல்லாதே. என் நெஞ்சம் கொதிக்கிறது! கிளியோபாத்ராவை அவர் மணக்க வில்லை என்று என் மனம் சொல்கிறது. அதுதான் உண்மை. அக்டேவியஸ்: [கேலியாக] அந்த பாலைவன மோகினி உன் கணவரின் ஆசை நாயகி என்று உன் மனம் சொல்கிறதா? அந்த ஆசை நாயகி ஒர் வேசி என்று உன் மனம் சொல்கிறதா? அந்த வேசிக்கு உன் கணவர் ஒரு தாசன் என்று உன் மனம் சொல்கிறா? [சிரிக்கிறான்] அக்டேவியா: [முகத்தை மூடிக் கொண்டு] சகோதரா, போதும் அவரைக் குத்தி பேசி என்னைக் கொல்லாதே! … அந்த உத்தம ரோமனை நீதான் என் கழுத்தில் கட்டினாய்! அதைத்தான் என் மனம் சொல்கிறது. அக்டேவியஸ்: அருமைச் சகோதரி! தலை விரிகோலத்தோடு அரசி உடைகளை அணியாது ரோமாபுரி வேலைக்காரி போல் காட்சி தருகிறாய்! உன்னைக் கண்டால் ஆணழகன் ஆண்டனி மயங்க வேண்டாமா? கிளியோபாத்ராபோல் ஒப்பனையாக அணிந்து வாலிப மாதான நீ ஆடவனைக் கவர வேண்டாமா? சகோதரி! முத்தளபதிகளில் மூத்தவரை நீ மணந்தவள்! மறந்து விடாதே! உனக்கெனச் சில பாதுகாப்பாளர் தேவை. நீ வரும் முன்பு உன் வருகை அறிவிக்க ஒரு காவலன் தேவை. எப்போது நீ ராஜ பரம்பரையில் வந்ததாகக் காட்டிக் கொள்ளப் போகிறாய்? அக்டேவியா: [கண்ணீருடன்] நான் திடீரென ஏன் ஓடி வந்தேன் என்று தெரிந்து கொள் சகோதரா! என் கணவர் மீது கோபங் கொண்டு, எனக்காகப் போர் தொடுக்க நீ புறப்பட்ட செய்தி கேட்டு அவர் வருந்துகிறார். என் கடித்ததில் நமக்குள் போர் வேண்டாம் என்று சொல்ல உன்னிடம் என்னைத் தூதாக அனுப்பி யிருக்கிறார். சகோதரா! என்னிரு கண்களான நீங்கள் இருவரும் சண்டை யிட்டுத்தான் சாக வேண்டுமா? ஆண்டனி மாண்டால் என் கதி என்னவாகும்? மீண்டும் விதவையாக வேதனைப் பட வேண்டுமா? அல்லது என்னுறவுச் சகோதரனை நானிழக்க வேண்டுமா? ஒருவேளை நானிருவரையும் இழக்க நேர்ந்தால் முற்றிலும் தனித்துப் போவேன். அக்டேவியஸ்: அக்டேவியா! உன்னை மட்டும் ஆண்டனி புறக்கணிக்க வில்லை! ரோமாபுரி கைப்பற்றிய நாடுகளைத் தன் காமக் கிழத்திக்கு தானமாகக் கொடுத்தது மன்னிக்க முடியாத குற்றம்! நாட்டுத் துரோகம்! உனக்காகப் போரிட வேண்டாம் என்றாலும், ரோமுக்காக நான் ஆண்டனியுடன் போரிடத்தான் வேண்டும்! என்னைத் தடுக்காதே! நான் உனக்குச் சகோதரன்! ஆனால் ரோம் சாம்ராஜியத்துக்கு நான் முதன்மைக் காவலன்! போரை நிறுத்த முடியாதென்று உன் கணவனுக்குக் கடிதம் எழுது! []   அக்டேவியா: [கண்ணீர் கலங்கி] சகோதரா! போரை நிறுத்த வேண்டுமானால் நீ விடும் நிபந்தனைகள் என்ன? அதை நான் என் கணவருக்கு முதலில் எழுத வேண்டும். எப்படியாவது நான் போரை நிறுத்த வேண்டும். அக்டேவியஸ்: என் நிபந்தனைகள் இவைதான்! முதல் நிபந்தனை: கிளியோபாத்ராவுக்குத் தானம் வார்த்த நாடுகளை, மீட்டு ரோமாபுரிக்கு மாற்ற வேண்டும். இரண்டாம் நிபந்தனை: கிளியோபாத்ராவைக் கைவிட்டு உன்னிடம் மீள வேண்டும் ஆண்டனி. மூன்றாம் நிபந்தனை: எகிப்த் நாட்டை ரோமாபுரியிலிருந்து ஆட்சி செய்ய, ஆண்டனி எங்களுடன் ஒன்றாய்ச் சேர வேண்டும். அக்டேவியா: முதல் நிபந்தனையும், மூன்றாம் நிபந்தனையும் ஒப்புக் கொள்ளப் படலாம்; ஆனால் இரண்டாம் நிபந்தனை நிறைவேறுமா என்று தெரியாது எனக்கு! கிளியோபாத்ரா என் கணவரின் மனத்தைக் கட்டிப் போட்டிருக்கிறாள். என்னால் அந்த முடிச்சை அவிழ்க்க முடியவில்லை. அக்டேவியஸ்: அக்டேவியா! அதைச் செய்யத்தான் நான் எகிப்துக்குப் போகிறேன். உன்னால் செய்ய முடியாததை என்வாள் சாதிக்கும் பார்! கிளியோபாத்ராவின் காலடியில் அடிமையாய்க் கிடக்கிறார் ஆண்டனி! அவருக்கு விடுதலை அளிக்கத்தான் நான் அலெக்ஸாண்டிரியாவுக்குப் போகிறேன். அக்டேவியா: சகோதரனுக்கும், கணவனுக்கு மிடையே நசுக்கப் படுவது நான்! யார் பக்கம் சேர்வது நான்? யார் பக்கம் சேரக் கூடாது நான்? தெரியவில்லை எனக்கு! தெளிவான பாதை எது? சிந்தை குழப்பம் அடைகிறது. தலை சுற்றுகிறது. [களைப்பு மிகுந்து ஆசனத்தில் சாய்கிறாள்] யாரை நானிழக்கப் போகிறேன்? மெஸ்ஸேனஸ்: [பரிதாபப்பட்டு] அம்மையாரே! மனத்தளர்ச்சி அடையாதீர். ரோமானியர் ஒவ்வொருவரும் உங்களை நேசிக்கிறார்! உங்கள் மீது பரிவு கொள்கிறார். கிளியோபாத்ராவை மனதாரத் திட்டுகிறார். வஞ்சகம் செய்யும் ஆண்டனி மீது ஆத்திரம் கொள்கிறார். அவரது மனத்தில் குடிகொண்டவர் நீங்கள். அக்டேவியா: [மன வேதனையுடன்] அப்படியா ரோமானியர் வருத்தப் படுகிறார்! .. ஆனால் ரோமானியர் போரை நிறுத்துவாரா? …. என் கணவரும் வாழ வேண்டும். என் சகோதரனும் வாழ வேண்டும். …. மயக்கமாக உள்ளது எனக்கு! அக்டேவியஸ்: அருமைச் சகோதரி! ஓய்வெடுத்துக் கொள்! ஆண்டனியைக் கைது செய்து உன்வசம் ஒப்படைப்பது என் கடமை! நானோர் உத்தம ரோமன்! ரோமா புரியின் துரோகிகளை ஒழிப்பது என் கடமை! என்னுயிரும் போகாது! ஆண்டனி உயிரும் போகாது! உன் கணவரைக் கொல்வதற்கு நான் போரிட வில்லை! உயிருடன் அவரை ரோமுக்கு இழுத்து வருவேன். என் கடமை அது! உனக்கு நான் அளிக்கும் ஓர் உறுதி மொழி! *********************   அங்கம் -8 காட்சி -1 நடக்காதே என்மீதெனப் பூமி சொல்லும் அந்தோ! நண்பர்காள்! அவமானப் படும் என்னைச் சுமக்க! தவறிப் பாதையை விட்டேன் நிரந்தரமாய்! தாமத மாகி விட்டேன் தயாரிப்பில்! பொன் நிறைந்த கப்பல் ஒன்றுளது! பங்கிட் டளித்து அக்டேவிய ஸோடு சமாதானம் செய்ய விரைந்து செல்வீர்! …     (போரில் தோற்ற ஆண்டனி)   வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)   (போர்க்களம்) விட்டு ஓடினேன்! கோழைகளை புற முதுகு காட்ட ஆணை யிட்டேன்! போவீர் தோழரே! நானோர் போக்கில் மாறினேன்! நீவீர் தேவை யில்லை எனக்கு! போவீர்! துறைமுகக் கப்பலில் உளதுபொன் களஞ்சியம்! விரைவாய்ச் சென்றதை அளித்திடு! என்தலை மயிர்கூட எதிர்க்குது என்னை! … (போரில் தோற்ற ஆண்டனி) வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)   பிரார்த்தனை செய்வீர்! வருத்தப் படாதீர்! … நினைப்பேன் சிறப்பாய் உம்மையும் கப்பலையும்! எனைவிட் டகல்வீர்! வேண்டிக் கொள்கிறேன்! பிரார்த்தனை செய்வீர், இச்சம யத்தில்! இழந்தேன் இப்போது என் ஆணைத் திறமையை! உமக்குநான் பிரார்த்தனை செய்வேன்! போவீர் … (போரில் தோற்ற ஆண்டனி) வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)     []     []   ரோமா புரியின் நிலைமை: •பிலிப்பிப் போரில் புரூட்டஸ், காஸ்ஸியஸ் மற்ற சதிகாரர் யாவருமிறந்த பிறகு, ஆண்டனி, அக்டேவியஸ், லெப்பிடஸ் மூவர்களின் கூட்டு மேற்பாட்டில் ரோமாபுரி இயங்கி வருகிறது. ஜூலியஸ் சீஸர் கொலையாகி இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஆண்டனி கிளியோபாத்ராவைக் காண எகிப்த் வருகிறான். மனைவி •புல்வியா மரணம் அடைந்த பிறகு, ஆண்டனி தனிமையாகிக் கிளியோபாத்ரா மீது நாட்டம் உண்டாகுகிறது. அதே சமயத்தில் நிதிக் களஞ்சியம் காலியாகிப் போர்வீரர்களுக்குக் கூலி கொடுக்க நிதியின்றிப் பணம் திரட்ட வேண்டி, ஆண்டனி எகிப்து செல்லத் திட்டமிடுகிறான். எகிப்த் அரசியிடம் நேராகக் கையேந்திப் பிச்சை கேட்கத் துணிவின்றி, கிளியோபாத்ரா தன்னைக் காண வரவேண்டும் என்று காவலர் மூலம் உத்தரவு அனுப்புகிறான். ஆனால் கிளியோபாத்ரா எகிப்த் தளத்தில் தானிருப்பதாகவும், ஆண்டனிதான் அவளைக் காண வரவேண்டும் என்று மறுமொழி அனுப்புகிறாள். எகிப்துக்கு வந்த ஆண்டனி தன் மனைவி புல்வியா போர்க்களத்தில் தனித்துப் போய் நோயில் மரணமடைந்த தகவல் கேட்டு மனம் நோகிறான். ரோமுக்கு மீளவும் விரும்பாது, கிளியோபாத்ராவின் கவர்ச்சியிலிருந்து மீளவும் முடியாது திண்டாடுகிறான் ஆண்டனி. இளைய பாம்ப்பி ரோமாபுரியைத் தன்வசமாக்க முயற்சிக்கிறான். கிளியோபாத்ராவிடம் மனதைப் பறிகொடுத்த ஆண்டனி ரோமுக்கு மீளத் தயங்குகிறான். அக்டேவியஸ் தன் தங்கையை மணக்க வழி செய்து ஆண்டனியை மைத்துனன் ஆக்கிக் கொள்கிறான். திருமணத்தைக் கேள்விப்பட்ட கிளியோபாத்ரா வெகுண்டெழுகிறாள். ஆண்டனி எகிப்துக்கு மீண்டு மனைவியை மறந்து கிளியோபாத்ராவிடம் மனதைப் பறிகொடுத்து மயங்கிக் கிடக்கிறான். ஆண்டனியைத் தண்டிக்க அக்டேவியஸ் ரோமானியப் படையுடன் ஆக்டியக் கடற் பகுதியில் தாக்க வருகிறான். []   நேரம், இடம்: ஆக்டியம் கடற்போர் முனை, பகல் வேளை. நாடகப் பாத்திரங்கள்: ஆண்டனி, போர்த் தளபதி எனோபரஸ், கான்டிடஸ், கிளியோபாத்ரா, சார்மியான், ஈராஸ், ஆண்டனியின் கப்பல் போர்ப் படையினர், கிளியோபாத்ராவின் கப்பற்படை வீரர்கள், தளபதி அக்டேவியஸ், போர் அட்மிரல் அக்கிரிப்பா, ரோமானியக் கடற்படை வீரர்கள், டாரஸ் காட்சி அமைப்பு: கீரிஸின் அருகில் ஆக்டியம் பகுதியில் ஆண்டனி அக்டேவியஸைக் கடற்போருக்கு அழைத்துப் போரிடுகிறான். கிளியோபாத்ராவும் தனது 60 போர்க் கப்பலுடன் ஆண்டனிக்கு உதவியாகப் போர்க்களத்துக்கு வருகிறாள். அக்டேவியஸ் 230 கப்பல்களுடன் கடற்போருக்குத் தயாராகிறார். கடற்போர் பீரங்கிக் கனல்வெடிகளுடன் துவங்கிறது. அக்டேவியஸின் போர் அட்மிரல் அக்கிரிப்பா சாமர்த்தியமாக ஊடே புகுந்து, ஆண்டனியின் கடற்படை ஓட்டத்தைத் தடுத்து, உணவு, போர்த் தளவாடச் சாதனங்களின் அனுப்புதலைத் துண்டிக்கிறான். போர் தோற்காத போது போர் தோற்று விட்டதாய் எண்ணி, கிளியோபாத்ரா, ஆண்டனியை விட்டுவிட்டு அலெக்ஸாண்டிரியாவுக்கு மீள்கிறாள். ஆண்டனி தன் போர்ப் படையினரை விட்டுவிட்டு, கிளியோபாத்ரா பின்னால் போகிறான். ஆண்டனியின் படையினர் பட்டினியால் வாடிப் போரிட இயலாது முடிவில் அக்டேவியஸ் ஆண்டனியைத் தோற்கடிக்கிறான். முதன்முதல் தனக்கிளைய தளபதியிடம் தோற்று அவமானப்பட்ட ஆண்டனி, போர்க் களத்தை விட்டு ஓடுகிறான். பின்தங்கிய ஆண்டனியின் படையினரை அக்கிரிப்பா போர்க்கைதிகளாகச் சிறைப்படுத்துகிறான். []   கடற்போரில் தோற்றோடும் ஆண்டனி முதன்முறையாகச் சுயமதிப்பிழந்து சோகமாக துணைக்காவலர் கூட உரையாடுகிறார். ஆண்டனி: [மனம் நொந்துபோய்த் தடுமாறிய குரலில்] மானம், மதிப்பெல்லாம் போய்விட்டது! உயிர் போன வெற்றுக் கூடாய் அலைகிறேன்! சீஸருக்கு வாரீசுத் தீரனாய் வலு படைத்தவன், போரை விட்டு ஓடிவந்து புலம்பிக் கொண்டிருக்கிறேன். வெட்கப் படுகிறேன்! எப்படி ரோமாபுரி முகத்தில் தலை நிமிர்ந்து விழிக்கப் போகிறேன்? செவில் படுகிறதா? என் மீது நடக்காதே என்று நான் நிற்கும் பூமியும் கட்டளை யிடுகிறது! என்னைத் தாங்கிக் கொள்ள அது அவமானப் படுகிறது. என் நண்பர்களே! சொல்வதைக் கேளுங்கள். நான் தாமதித்து விட்டேன் போரில். அதனால் மோதி மிதிக்கப் பட்டேன். பாதை தவறி விட்டேன்! படைப்பல மிழந்து விட்டேன். பழி வாங்கப் பட்டேன். முதல் வீரனாய்த் திகழ்ந்தவன், மூன்றாம் நிலைக்குத் தள்ளப் பட்டேன். என் உன்னத தோள்கள் தாழ்ந்து விட்டன. இந்த அவமானத்தைத் தாங்கிக் கொண்டு வாழ முடியுமா நான்? காவலனே! என் பொற்களஞ்சிய கப்பல் அதோ அங்கே நிற்கிறது. அதிலிருக்கும் பொன் நாணயங்களை அக்டேவியஸ் கைகளில் அளித்து சரண் அடைந்தேன் என்று தகவலைத் தெரிவித்திடு! என் சமாதானச் செய்தியைக் கொண்டு போ! பறந்து போ!  காவலன்: எப்படிப் பறப்பது? விரைந்து செல்கிறேன் பிரபு. []   ஆண்டனி: போ! விரைந்து போ! நான் வெகுதூரம் ஓடி வந்து விட்டேன்! என் படை வீரர்களையும் ஓடச் சொல்லி உத்தரவு செய்தேன்! புற முதுகு காட்ட வைத்துத் தீரர்களைக் கோழைகள் ஆக்கினேன்! போய் விடுவீர், இனித் தேவை யில்லை நீவிர்! துறைமுகத்துக்கு அருகில் களஞ்சியக் கப்பல் நங்கூரத்தில் நிற்கிறது. பொன் நாணயங்களைக் கொடுத்து அக்டேவியஸை விரட்டுங்கள்! நமது பீரங்கிகளின் மூச்சு நின்று விட்டது. என் தலை மயிர் கூட எதிர்க்கிறது என்னை! காவலன்: ஈதோ போகிறேன் பிரபு. ஆண்டனி: பிரார்த்தனை செய்! மனம் நோகாதே! உங்கள் யாவரையும் நான் மறக்க மாட்டேன். உங்களைச் சுமந்த கப்பலையும் மறக்க மாட்டேன். எனக்கு இப்போது தனிமை தேவை! என்னைத் தனியே விட்டுப் போவீர்! பிரார்த்தனை புரிவேன் நானும்! என் மானமிழந்தேன்! என் மதிப்பிழந்தேன்! என் படைகளை ஆணையிடும் வல்லமை யிழந்தேன்! என்னை விட்டுச் செல்வீர். [மன வேதனையுடன் பாறை மீது அமர்கிறார்] [அப்போது கிளியோபாத்ரா, சார்மியான், ஈராஸ் சூழ நுழைகிறாள்] []   ஈராஸ்: [கவலையுடன் உள்ள ஆண்டனியை நோக்கி] மகாராணி! மாண்புமிகு தளபதி மனவருந்திக் காணப்படுகிறார். ஆறுதல் கூறுவீர் அவருக்கு! பராக்கிரமசாலி பரிதாப நிலையில் தலை குனிந்திருக்கிறார். சார்மியான்: ஆமாம் மகாராணி! நீங்கள்தான் ஆறுதல் கூற வேண்டும். வேறு யாரும் நெருங்க முடியாது. கிளியோபாத்ரா: [பரிவுடன் நெருங்கி, அருகில் அமர்ந்து] மனம் நோகாதீர்! தோல்வி வெற்றியின் முதற்படி! அக்டேவியஸ் வெற்றி ஆக்டியத்துடன் முடிந்தது! அலெக்ஸாண்டிரியாவுக்குள் அவர் நுழைய முடியாது! அங்கே கால்வைத்தால் என் படையினர் அவரது கால்களைத் துண்டித்து விடுவார். [தலையைக் கோதி விடுகிறாள்] ஆண்டனி: [புலம்பிய வண்ணம்] பில்லிப்பி போர்க்களத்தில் தன்னை மாய்த்துக் கொண்ட புரூட்டஸ் இப்போது என்னைப் பழி வாங்கி விட்டார். என் போர் அனுபவம் என்ன? என் வயதென்ன? என் திறமை என்ன? அனைத்தும் ஒரு நாளில் பயனற்றுப் போயின! நான் துணையற்றுப் போனேன்! நான் தனித்துப் போனேன்! எனக்கும் ரோமுக்கும் உள்ள பந்தம் அறுந்து போனதே! கிளியோபாத்ரா: [கலக்கமுடன்] அப்படிச் சொல்லாதீர் ஆண்டனி! நானிருக்கும் போது துணையில்லை என்று சொல்லாதீர்! தனித்துப் போனதாக வருத்தப் படாதீர். நானிருக்கிறேன், என் எகிப்த் உள்ளது! ரோமாபுரி கைவிட்டாலும், எகிப்த் நாடு உங்களை விட்டுவிடாது. உங்களுக்குத் தோள் கொடுக்கும், துணை யிருக்கும், படை கொடுக்கும். ஆண்டனி: கிளியோபாத்ரா! எகிப்த் துணையால் நான் ரோமை யிழந்தேன்! அக்டேவியஸ் என்னைத் தோற்கடித்து என்னிட மிருந்து ரோம் சாம்ராஜியத்தைப் பிடுங்கிக் கொண்டான்! அத்துடன் என் மானம், என் மதிப்பு, என் மகிமை அனைத்தும் போயின. கிளியோபாத்ரா: எனது சொற்பப் படகுகள், ரோமின் அற்பக் கப்பல்கள் முன்பு முன்னேற முடியவில்லை. []   ஆண்டனி: [தனிமொழியில்] எகிப்தே! உன் திசைதிருப்பியுடன் என்னிதயத்தைக் கயிற்றில் கட்டி யிழுக்கிறாய்! உன் பராக்கிரமத்தில் என் ஆத்மாவைப் பறித்துக் கொண்டாய்! கிளியோபாத்ரா: அப்படி நினைக்காதீர் ஆண்டனி! உங்களுக்கு அடைக்கலம் தந்துள்ளது எகிப்த் நாடு! உங்கள் ஆத்மாவுக்கு உறுதி கொடுக்கும் எமது எகிப்த் நாடு! நீங்கள் அப்படி நினைப்பது வருத்தம் அளிக்கிறது எனக்கு. ஆண்டனி: நான் தணிந்து போய் அக்டேவியஸோடு உடன்படிக்கை செய்ய வேண்டும். நான் பிடித்த நாடுகளை எல்லாம் உன்னிடமிருத்து பிரித்து அக்டேவியஸின் வசம் ஒப்படைக்க வேண்டும். வருந்த வேண்டியவள் நீயும்தான்! நீ அறிய மாட்டாய், என்னைக் கைப்பற்றி வைத்திருக்கும் மோகினி நீ யென்று! என் பராக்கிரம வாள் உன் முன் பலமிழந்து போய்க் கிடக்கிறது! என்ன காரணம் இருப்பினும், என் வாள் உனக்கு வணக்கம் செய்கிறது. கிளியோபாத்ரா: [கண்ணீர் கலங்க] அப்படியா? நீங்கள் எனக்கு வெகுமதியாக அளித்த நாடுகளை அக்டேவியஸ் எடுத்துக் கொள்வாரா? வேதனைப் படுகிறேன் நானும். ஆண்டனி: [கிளியோபாத்ரா கண்ணீரைத் துடைத்து] எளிதாகக் கிடைத்தவை எளிதாக நீங்கின! அதிர்ஷ்ட தேவதைக்கு க் கண்கள் குருடு! யாரிடம் எடுத்து யாருக்குக் கொடுக்கும் என்பது தெரியாது. என்னிடம் உள்ளது ஒன்றுமில்லை இப்போது, என் முத்தத்தைத் தவிர! [கெஞ்சியபடி] முத்தமிடு என்னை கிளியோபாத்ரா! உன் கனல் முத்தம் என் இதயக் கனலைத் தணிக்கட்டும். உள்ளம் குளிர என்னை உன் உடற்கனலால் சுற்றிக்கொள். என் பசிக்கும் உடலுக்கு உன் அ¨ணைப்பு விருந்தளி! எனக்கு ரோமாபுரி ஆட்சி, ரோமானியரின் ஆதரவு எதுவும் வேண்டாம்! நீ தான் எனக்குத் துணைவி. நீதான் எனக்கு மனைவி! நானினி ரோமுக்கு மீளப் போவதில்லை! வாழ்நாள் முழுதும் உன் நிழலிலே கிடப்பேன்! எகிப்தின் நைல் நதி நீரே என் தாகத்தைத் தீர்க்க வல்லது. []   [கிளியோபாத்ரா ஆண்டனியை முத்தமிடுகிறாள்] *********************   அங்கம் -8 காட்சி -2 ஆண்டனியின் சொத்துக்குரிய அதிபதி! அவர் வந்தனம் தெரிவிக்கிறார் உமக்கு! எகிப்தில் வாழ விருப்பமாம்! இல்லை யெனின், பூமிக்கும் வானுக்கும் இடையே மூச்சு விட்டு ஏதென்ஸில் தனித்திருக்க வேண்டுகிறார். கிளியோ பாத்ரா அடிபணிவாள் உம் ஆணைக்கு!     (அக்டேவியஸின் அம்பாசிடர்) வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா) வாக்குத் திறமை காட்டு, தருண மிதுதான்! கிளியோ பாத்ராவைக் கவர்ந்து பிரித்திடு ! பெருத்த அதிர்ஷ்டம் மாதர் உறுதி கலைக்கும்! விருப்புடன் செயற்படு! தந்திரம் கைக்கொள்! நாம் சட்டம் மூலம் பதில் அளிப்போம். …… காண்பாய் நீயே! தனது தவறுக்குள் ஆண்டனி குப்புறக் கவிழ்ந்து வீழ்வதை! அவரது மோகம் நடத்தையில் தெரியும்! …. (அக்டேவியஸ்) வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா) கனிவுத் தூதனே! அக்டேவியஸிடம் சொல், வெற்றிக் கையை முத்தமிடு கிறேன்! பொற் கிரீடத்தை அவர் பாதத்தில் வைப்பேன்! மண்டி யிடுகிறேன்! உரைத்திடு அவரிடம், முழு மூச்சாய் அவர் கட்டளை முழக்கும், முடிவுக் காலம் எகிப்தில் நெருங்கு தென்று! வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா) []     ஆண்டனி எகிப்துக்கு மீண்டு மனைவியை மறந்து கிளியோபாத்ராவிடம் மனதைப் பறிகொடுத்து மயங்கிக் கிடக்கிறான். ஆண்டனியைத் தண்டிக்க அக்டேவியஸ் ரோமானியப் படையுடன் ஆக்டியக் கடற் பகுதியில் தாக்க வருகிறான். நேரம், இடம்: அலெக்ஸாண்டிரியாவில் கிளியோபாத்ராவின் அரண்மனை, பகல் வேளை. நாடகப் பாத்திரங்கள்: கிளியோபாத்ரா, சார்மியான், ஈராஸ், ஆண்டனி, போர்த் தளபதி எனோபர்பஸ், அக்டேவியஸின் அம்பாசிடர், தூதுவன் திடயாஸ். காட்சி அமைப்பு: கிளியோபாத்ரா ஆண்டனியின் போர்த் தளபதியுடன் வாதாடுகிறாள். ஆக்டியப் போரில் வெற்றி பெற்ற அக்டேவியஸ் நிபந்தனைகளை நிறைவேற்ற தனது அம்பாசிடரை எகிப்துக்கு அனுப்புகிறான். அந்த நிபந்தனைகள் ஆண்டனி, கிளியோபாத்ரா இருவரையும் பெருமளவில் பாதிக்கின்றன. கிளியோபாத்ரா: (மன வருத்தமுடன்) இப்போது என்ன செய்வது எனோபர்பஸ் ? எனது முப்பது கப்பல்கள் மூழ்கிப் போயின! மூவாயிரம் எகிப்தியர் செத்துக் கடலில் மூழ்கினார்! இதுவரை எகிப்த் இப்படித் தோற்றுப் போனதில்லை! என்ன செய்வது? இத்தோல்விக்கு யார் காரணம் நாங்களா அல்லது ஆண்டனியா? எனோபர்பஸ்: மகாராணி! தோற்றுப் போனதற்கு நீங்கள் காரணமில்லை! ரோமானி யருடன் ரோமானிர் போரிட்டால் தோற்பதும் ரோமானியர், வெற்றி பெறுவதும் ரோமானியர்! அக்டேவியஸ் வெற்றி பெற்ற ரோமானியர்! ஆண்டனி தோற்றப் போன ரோமானியர்! ஆண்டனிதான் தோல்விக்குக் காரணம்! வேறெவரும் இல்லை. கடற்போர் வேண்டா மென்று தடுத்தும் ஆண்டனி கேட்கவில்லை. தரைப் போருக்கு அக்டேவியஸை அழைப்போம் என்று கூறிய ஆலோசனையைக் கேட்கவில்லை, ஆண்டனி. அவர் செய்த தவறுகளால் அவரே அவமானப் பட்டார். … ஈதோ, வருகிறார் ஆண்டனி, அக்டேவியஸின் அம்பாசிடருடன்! [அப்போது அக்டேவியஸ் அனுப்பிய அம்பாசிடருடன், ஆண்டனி வருகிறார்] []   ஆண்டனி: அதுதான் அக்டேவியஸின் முடிவான பதிலா? அம்பாசிடர்: ஆமாம் பிரபு! அவரது அழுத்தமான பதில் அதுதான்! ஆண்டனி: எகிப்த் மகாராணி நமது மதிப்புக்குரியர், அவரை விட்டுவிட வேண்டும். நமது வீட்டுச் சண்டைக்குள் கிளியோபாத்ராவை இழுத்து வர வேண்டாம்! போர் எனக்கும் அக்டேவியசுக்கும்தான்! அம்பாசிடர்: போருக்கு மூலமாக இருப்பது எகிப்த் மகாராணி என்பது அக்டேவியஸ் எண்ணம்! அது அக்டேவியஸ் பிரபுவின் முடிவு, நான் வெறும் தூதுவன்! துங்களுக்கு ஆலோசனை சொல்லும் அமைச்சன் அல்லன்! ஆண்டனி: [கோபமாக] சிறுவன் அக்டேவியஸின் செவியில் விழும்படிச் செய்! அவரது ஆணையை நிறைவேற்றுவேன் என்று சொல்! அவரது நிபந்தனைப் பத்திரத்தைக் காட்டு! ஆனால் இனிப் போரிட்டால் வாளுக்கு வாள் தனிப்போர் என்று சொல்! கடற் போரல்ல! கப்பல் போர் அல்ல! தரைப் போரல்ல! என் வாளுக்கும், அவர் வாளுக்கு மட்டுமே சண்டை! அதற்கு அக்டேவியஸ் உடன்பாடா என்று கேட்டுவா! கிளியோபாத்ரா: என்னினிய ஆண்டனி! தனித்தனி வாட்போர் எதற்கினி ? அக்டேவியஸ் ரோமாபுரியின் வெற்றித் தளபதி! நாமறிவோம் அதை. சிறுவன் என்று சொல்லாதீர்! ஏகாதிபதியாக மாறிய புதிய சீஸர் அவர்! அவருக்குத் தலை வணங்குவது உங்கள் கடமை! எங்கள் கடமை! நிபந்தனைகளைக் கேட்போம். []   (அப்போது அக்டேவியஸின் அடுத்த தூதுவன் திடயாஸ் வருகிறான். ஆண்டனிக்கும், கிளியோபாத்ராவுக்கும் வணக்கம் செய்கிறான்) கிளியோபாத்ரா: தூதனே! முதலில் நீ யாரென்று சொல்? எதற்காக வந்திருக்கிறாய் என்று சொல்! திடயாஸ்: வணக்கம் மகாராணி, என் பெயர் திடயாஸ். என்னை அனுப்பியர் ரோமாபுரித் தளபதி மகா அக்டேவியஸ். கிளியோபாத்ரா: மகா அக்டேவியஸ் ஒரு கடவுள்! அலெக்ஸாண்டர் போல் பேரதிபதி அவர். ஆண்டனியை வென்றிருக்கிறார். எனினும் எனது மதிப்பு தணியாமல் உள்ளது. ஆனால் அவர் ஆணைக்குக் கீழ்ப்படுவோம்! சொல், அவர் உன்னை அனுப்பியதன் காரணம் என்ன? திடயாஸ்: அக்டேவியஸை நீங்கள் பூரிக்கச் செய்ய வேண்டும். இரண்டு நிபந்தனைகள்! அவைதான் அவர் வேண்டுபவை! கிளியோபாத்ரா: அவரை எப்படி மகிழச் செய்ய வேண்டும் சொல் ? திடயாஸ்: மகாராணி! அது அக்டேவியஸின் பெரிய நிபந்தனை! ஆண்டனி உங்களுக்கு வெகுமதியாக அளித்த நாடுகளை அக்டேவியஸின் அதிகாரி வசம் ஒப்புவிக்க வேண்டும்! அதன் பின் எகிப்த் படை அந்நாடுகளை விட்டு நீங்க வேண்டும். கிளியோபாத்ரா: [ஆங்காரமாக] ஒப்புக்கொள்ள மாட்டேன். வெகுமதி நாடுகள் என்னைச் சேர்ந்தவை! தோற்றது கிளியோபாத்ராவா இல்லை ? ஆண்டனி. அந்த நிபந்தனைக்கு நான் உடன்பட மாட்டேன். []   திடயாஸ்: மன்னிக்க வேண்டும் மகாராணி ! தோற்றது ஆண்டனி என்பதை ஒப்புக் கொள்கிறீர். ஆகவே அவர் வென்ற நாடுகள் உங்களைச் சேரா! அவை அனைத்தும் அக்டேவியஸைச் சேர வேண்டும். ஈதோ இந்த உரிமைப் பத்திரத்தில் ஆண்டனியும், நீங்களும் கையெழுத்திட வேண்டும். (பத்திரத்தை நீட்டுகிறான்) கிளியோபாத்ரா: [கவலையுடன்] ஆண்டனி! சொல்லுங்கள் அது நியாமாகுமா? அது போர் நெறியா? நீங்கள் அளித்த நாடுகளை நானிழக்க வேண்டுமா? ஆண்டனி: (தலைகுனிந்து) ஆமாம் கிளியோபாத்ரா! அந்த நாடுகளை நானும் இழந்து விட்டேன். நீயும் இழந்து விட்டாய். திடயாஸ் கொண்டு வந்திருக்கும் உரிமைப் பத்திரத்தில் கையெழுத்திட்டுக் கொடுத்துவிடு. கிளியோபாத்ரா: [மிடுக்குடன்] ஈராஸ்! எடுத்துவா மையும் எழுத்துத் தோகையும். திடயாஸ்! பத்திரத்தை எடுத்துக் கொண்டு திரும்பிப் பார்க்காமல் போய்விடு! இனிமேல் நீ இங்கு நிற்கக் கூடாது! திடயாஸ்: போய் விடுகிறேன், மகாராணி! ஆனால் இன்னுமோர் சிறிய நிபந்தனை! கிளியோபாத்ரா: [வெறுப்புடன்] சிறிய நிபந்தனையா? சொல்லித் தொலை! []   திடயாஸ்: அக்டேவியஸ் பூரிப்படைவார் அதை நீங்கள் நிறைவேற்றினால்! மகாராணி! அவமானப்பட்ட ஆண்டனியை நீங்கள் வெளியேற்ற வேண்டுமாம்! உங்கள் அரண்மனையில் அவர் தங்கக் கூடாது! எகிப்தை விட்டு நீங்க வேண்டும் ஆண்டனி நிரந்தரமாக! அவரது சிறிய நிபந்தனை அதுதான்! கிளியோபாத்ரா: [மிடுக்குடன்] கனிவு பொங்கும் தூதனே! மகா அக்டேவியஸிடம் சொல்! வெற்றி மகுடம் சூடிய அவரது வீரக் கரங்களை முத்தமிடுகிறேன், மண்டியிட்டு மரியாதை செலுத்துவேன்! என் பொன் மகுடத்தை அவரது பாதங்களில் சமர்ப்பணம் செய்கிறேன். அறிவு கெட்ட தூதனே! அவரது கடுமையான கட்டளைகள் எகிப்தின் முடிவுக் காலச் சங்கை காதிலே ஊதுகின்றன! எகிப்த் நாட்டின் சொந்தம் வேறு! என் உடற் பந்தம் வேறு! என் மகுடம் வேறு. என் மனம் வேறு! என் சொத்து வேறு! என் ஆத்மா வேறு! என் உள்ளம் வேறு! என் உயிர் வேறு! ஆனால் நான் வேறில்லை, ஆண்டனி வேறில்லை! என் உள்ளத்தின் உள்ளே ஆணிவேர் ஆனவர் ஆண்டனி! எப்படி அந்த ஆணி வேரை என்னால் பிடுங்கி எறிய முடியும்? என் ஆத்மாவின் சிதைவல்லவா அது! கனிவாகப் பேசி கள்வனாய் வந்த தூதுவனே! நில்லாதே! ஓடிப் போ, என் வாளால் துண்டாகும் முன்பு! [வாளை உருவி தூதனை விரட்டுகிறாள்] []   *********************   அங்கம் -8 காட்சி -3     []   போர்க்கட்டம்: கிளியோபாத்ராவிடம் மனதைப் பறிகொடுத்த ஆண்டனி ரோமுக்கு மீளத் தயங்குகிறான். அக்டேவியஸ் தன் தங்கையை மணக்க வழி செய்து ஆண்டனியை மைத்துனன் ஆக்கிக் கொள்கிறான். திருமணத்தைக் கேள்விப்பட்ட கிளியோபாத்ரா வெகுண்டெழுகிறாள். ஆண்டனி எகிப்துக்கு மீண்டு மனைவியை மறந்து கிளியோபாத்ராவிடம் மனதைப் பறிகொடுத்து மயங்கிக் கிடக்கிறான். ஆண்டனியைத் தண்டிக்க அக்டேவியஸ் ரோமானியப் படையுடன் ஆக்டியக் கடற் பகுதியில் போரிட்டு வெற்றி அடைகிறான். தோற்றுப் போன ஆண்டனிக்கு ஆக்டேவியஸ் தூதரை அனுப்பி நிபந்தனைகளில் கையொப்பமிடச் சொல்கிறான்.  நேரம், இடம்: அலெக்ஸாண்டிரியாவில் கிளியோபாத்ராவின் அரண்மனை, பகல் வேளை. நாடகப் பாத்திரங்கள்: கிளியோபாத்ரா, சார்மியான், ஈராஸ், ஆண்டனி, போர்த் தளபதி எனோபர்பஸ், அக்டேவியஸின் அம்பாசிடர், தூதுவன் திடயாஸ். காட்சி அமைப்பு: கிளியோபாத்ரா ஆண்டனியின் போர்த் தளபதியுடன் வாதாடுகிறாள். ஆக்டியப் போரில் வெற்றி பெற்ற அக்டேவியஸ் நிபந்தனைகளை நிறைவேற்ற தனது அம்பாசிடரை எகிப்துக்கு அனுப்புகிறான். அந்த நிபந்தனைகள் ஆண்டனி, கிளியோபாத்ரா இருவரையும் பெருமளவில் பாதிக்கின்றன. ஆண்டனி: [கோபத்துடன்] திடயாஸ், மடையா ! உன்னைச் சவுக்கால் அடிக்க வேண்டும்! உன் வாயைக் கிழிக்க வேண்டும். அந்தச் சிறுவன் அக்டேவியஸ் ஆத்திரத்தில் கொட்டிய வார்த்தைகளை என்னிடம் முதலில் சொல்லாமல், எப்படி நீ மகாராணியிடம் கூறலாம் ? என்னை அவமதித்து எகிப்த் ராணியையும் எப்படி நீ அவமதிக்கலாம்? யாரங்கே ? இழுத்துச் செல்லுங்கள் இவனை, சவுக்கால் அடித்து இரத்தம் சொட்டுச் சொட்டாய் ஒழுக வேண்டும் ! [எனோபர்பஸ் வாயில் முணுமுணுத்துக் கொண்டு தூதுவனை இழுத்துச் செல்கிறான்.] []   எனோபர்பஸ்: [திரும்பி ஆண்டனியைப் பார்த்து மௌனமாக] பல்போன கிழட்டுச் சிங்கத்துக்குப் பணி செய்வதை விட பல் முளைக்கும் சிங்கக் குட்டிக்கு வேலை செய்யலாம். ஆண்டனி: சவுக்கால் அடியுங்கள், ஆனால் சாகக் கூடாது அவன் ! அது கொலை ஆகும், வேண்டாம். சவுக்கடியை அவன் ஆத்மா அணு அணுவாய்ச் சுவைக்க வேண்டும். தான் சொல்லியது தவறு தவறு என்று சிந்தும் செங்குருதித் துளிகள் அனைத்தும் அலற வேண்டும்! சவுக்கடி விழட்டும், மின்னல் அடிப்பது போல்! இடியாய் வெடிக்கட்டும் அவன் விடும் அழுகுரல். திடயாஸ்: (திரும்பிப் பார்த்து) தளபதியாரே! நான் தூதுவன்! … என்ன பதில் சொல்ல வேண்டும் அக்டேவியசுக்கு? ஆண்டனி: சவுக்கடி வாங்கிய பின் திரும்பி வா! அக்டேவியசுக்குப் பதில் தருகிறேன். [திடயாஸ் இழுத்துச் செல்லப் படுகிறான்] [கிளியோபாத்ராவைப் பார்த்து] கண்ணே கிளியோபாத்ரா, நீ ஒரு நவரத்தினக் கல்! மாதருள் மாணிக்கம்! மங்கையர்க்கரசி! நான் திரும்பி வருவதற்குள் உன்னைக் காயப்படுத்தி விட்டானே அந்த உலுத்தன் ! கிளியோபாத்ரா: [புன்முறுவல் பூத்து, ஆண்டனியை நெருங்கி] உங்களை அவமதித்தவன் என்னை அவமதிதவனே! நீங்கள் நிறுத்தாவிட்டால் அவனது தலையைச் சீவி இருப்பேன். பிழைத்துக் கொண்டான். ஆண்டனி: [கோபத்துடன்] ஆனால் கிளியோபாத்ரா! உன் மனம் அலைமோதுதே ஏன் ? என்னை நீ வெளியே தள்ள வேண்டும் என்று அக்டேவியஸ் ஆணையிட்ட போது, அதை நிறைவேற்ற இசைபவள் போல் ஏன் பாசாங்கு செய்தாய் ? அது உண்மையா? அல்லது நடிப்பா? வெளியே முறுவல் பூக்கும் நீ உள்மனதில் கள்ளமுடன் உள்ளாய்! ஆக்டியப் போர் முடிவதற்குள் என்னைத் தனியே விட்டுவிட்டு ஏனிங்கு ஓடிவந்தாய்? கிளியோபாத்ரா: [கவலையுடன்] என்மீது சந்தேகப் படாதீர். நீங்கள் யுத்த களத்தில் மாண்டு விட்டதாக புரளியைக் கிளப்பி விட்டார்கள்? என்னைப் பயம் பற்றிக் கொண்டது! அதனால்தான் ஓடிவந்தேன். நீங்கள் போன பின் என்னைக் காப்பவர் யார்? அக்டேவியசின் மூர்க்கக் கரங்களில் சிக்கிக் கொள்ள நான் விரும்பவில்லை. சீஸர் மாண்டதும் என்கதி அப்படித்தான் ஆனது. அலெக்ஸாண்டிரியாவுக்கு ஓடி வந்து விட்டேன், நினைவிருக்கிறதா? ஆண்டனி: [கேலியாக] சீஸர் செத்தபின் ஆண்டனி! ஆண்டனி செத்தபின் அக்டேவியஸைப் பிடித்துக் கொள்ளலாம் என்று தானே ஓடிவந்தாய்? கிளியோபாத்ரா: [அருவருப்பாக] என்ன கீழ்த்தரமாகப் பேசுகிறீர்? போர்களத்தில் காணாமல் போன் உங்களைத் தேடி எகிப்த் ராணி சென்றால் என்ன ஆகியிருக்கும் தெரியாதா? நானும் அக்டேவியஸின் சிறைக் கைதியாய் அடைக்கப்பட்டு இப்போது உங்கள் முன் நிற்க மாட்டேன்.. தனிப்பட்டுப் போன நான் வேறென்ன செய்வேன் ? இங்கு எனக்குப் பாதுகாப்பு உள்ளது. நடுக்கடலில் என்ன இருக்கிறது ? [அப்போது சவுக்கடி வாங்கித் தொய்ந்து வரும் திடயாஸை இழுத்து வருகிறார்கள்] []   திடயாஸ்: [ஆண்டனி காலில் விழுந்து] தளபதி, அறிவு வந்தது எனக்கு ! உங்கள் பாதங்களை என் குருதி கழுவுகிறது. நான் சாவதற்குள் சீக்கிரம் உங்கள் பதிலை அக்டேவியசுக்குக் கொண்டு செல்ல வேண்டும். எகிப்திலே என்னுடல் புதைக்கப் படக் கூடாது. ஆண்டனி: அந்தப் பொடியன் அக்டேவியஸிடம் இந்தச் செய்தியைக் கொடு! என் கோபத்தைக் கிளறினார் என்று சொல்! கிளியோபாத்ராவின் மனத்தைக் கீறினார் என்று சொல்! எகிப்தை விட்டு நான் நீங்க மாட்டேன் என்று சொல்! கிளியோபாத்ரா என்னை மணந்து கொண்டாள் என்று சொல். ஆயினும் அவன் அருமைத் தங்கை அக்டேவியாவை விலக்கிட வில்லை என்று சொல்! போ நான் சொன்னதை எல்லாம் விடாமல் சொல்! கிளியோபாத்ரா: [ஆங்காரமாக] ஆண்டனி என் கணவர் என்று அக்டேவியஸிடம் சொல்! அவரது குழந்தை என் வயிற்றில் வளர்ந்து வருகிற தென்று சொல்! ரோமாபுரியில் அவருக்கு இடமில்லை என்றால் எகிப்தில் அவர் நிரந்தரமாக என்னுடன் வாழ்வார் என்று சொல். நீ போகலாம் இப்போது. [திடயாஸ் வணக்கம் செய்து போகிறான்] ஆண்டனி: (கிளியோபாத்ரா நெருங்கி அணைத்துக் கொண்டு) அக்டேவியஸ்! ரோமை நீயே ஆட்சி செய், ஆனால் எங்களை வாழ விடு! நாங்கள் மகிழ்ச்சியோடு இங்கே வாழ்கிறோம். …… கிளியோபாரா, உன்னை நான் சந்தேகப்பட்டதற்கு என்னை மன்னித்து விடு. தோற்றுப் போன என்மனம் திசை தெரியாமல் அலைகிறது. யாரையும் என்னால் நம்ப முடிய வில்லை. கிளியோபாத்ரா: (ஆண்டனியை நெருங்கி) என்னருமை ஆண்டனி! என்னை நம்புங்கள். எனக்கு நீங்கள்தான் துணை. என் மனதில் உங்களைத் தவிர வேறு யாருமில்லை! உங்களுக்குப் பிறகு இனி என்னுள்ளத்தில் வேறு யாரும் நுழைய முடியாது. … ஓ, இன்று எனது பிறந்த நாள்! கோலாகலப் பிறந்தநாள் கொண்டாட்டம் உள்ளது! மன்னர்களுக்கு விருந்தும் கன்னியர்கள் ஆட்டமும் உள்ளது. எனது பிறந்தநாள் பரிசு நீங்கள்! நான் அதற்கு பிரதி உபகாரம் அளிக்க வேண்டும். []        (ரோமானிய வீரர்களைப் பார்த்து) பரிவு காட்டுவீர் எனக்கு இந்த இரவில் ! உங்கள் கடமை நிழலான என்னை இனிக் காணா திருப்பது நல்லது ! வேறோர் அதிபருக் குழைக்கச் செல்வீர் ! உங்களைப் பார்த்தால் என்னிடம் விடைபெறும் நபராய்த் தெரியுது. விரட்ட வில்லை நான் உங்களை ! மரணம் வரும்வரை கடமை தவிர்த்து பிரிந்து செல்லேன், பரிவு காட்டுவீர், உத்தமப் படை வீரரே! இரண்டு மணி நேரம் மட்டும் இன்றைய இரவில் உடனிருப்பீர் வேறெதுவும் வேண்டேன். (ஆண்டனி) வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா) ஈதோ இங்குள நான்தான் ஆண்டனி ! மூர்க்கனே, எனது இந்த தோற்றதை இனிக் காட்ட இயலாது ஆயினும் ! போர் புரிந்தது நான் எகிப்துக் காக ! எகிப்த் ராணிக் காக ! அவள் இதயம் கவர்ந்தாய் எண்ணினேன், ஏனெனில் அழுத்தமாய் இதயத்தைப் பிடித்துக் கொண்டாள் ! என்னுடைய தாயினும் அவள் இதயத்தை இழந்தோன், அத்துடன் ஆயிரம் ஆயிரம் ரோம் இதயங்களும் இழந்து போயின ! அழாதே அருமை ஈராஸ் ! நமது முடிவுகளை நாமே முடித்திட நாம் கடமைப் பட்டிருக்கிறோம் ! (ஆண்டனி) வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)   []     நேரம், இடம்: அலெக்ஸாண்டிரியாவுக்கு அருகில் உள்ள ஓரிடத்தில் அக்டேவியஸின் ரோமானியக் கூடாரங்கள், பகல் வேளை. நாடகப் பாத்திரங்கள்: ரோம் தளப்தி அக்டேவியஸ், அக்கிரிப்பா, மேஸனெஸ், ரோமானியக் காவலர், படைகள். காட்சி அமைப்பு: அக்டேவியஸ் தன் கூடாரத்தில் நின்று கொண்டு கடிதம் ஒன்றை வாசிக்கிறான். அக்டேவியஸ்: [கோபத்துடன்] மகா பெரிய ஆண்டனி என்னைச் சின்னப் பையா என்று விளித்திருக்கிறார் ! என்ன திமிர் அவருக்கு! சீஸருக்குப் பிறகு ரோமாபுரிக்கு நான்தான் சீஸரின் வாரிசு! துரோகிகள், காஸியஸ், புரூட்டஸ் ஆகியோரைத் தோற்கடித்த தீரன் நான்! ஆண்டனி திட்டமிட்டாலும் முன்னின்று போரிட்டுச் சதிகாரரைச் சரணடைய வைத்தவன் நான். வேசி கிளியோபாத்ரா மடிமேல் தலைவைத்துக் கொண்டு, ஆண்டனி என்னைப் பொடியன் என்று கேலி செய்கிறார். எனது தூதனைச் சவுக்கால் அடித்திருக்கிறார் ஒற்றைக்கு ஒற்றை எனச் சவால் விட்டு எனைச் சண்டைக்கு அழைக்கிறார். வயதான மூர்க்கன் ஆண்டனி அறியட்டும். பலவழிகள் உள்ளன நான் சாவதற்கு! போயும், போயும் அவர் கையில் நான் ஏன் சாக வேண்டும்? எல்லாரும் சிரிக்க வேண்டும் அவரது சவாலைப் பார்த்து! மேஸனெஸ்: சிந்திக்க வேண்டும் அக்டேவியஸ்! மகா பெரிய ஆண்டனி அப்படி ஆத்திரமாக உங்களைக் கடிந்தால் அவரை விரட்டி வேட்டையாடுவோம். மூச்சு விட முடியாதபடி அவரை நசுக்க வேண்டும். கோபப்பட வேண்டாம் நீங்கள்! ஆண்டனியைப் பிடித்து உங்கள் காலில் விழ வைக்கிறோம். அக்டேவியஸ்: படை வீரர் அனைவருக்கும் தெரியட்டும். நாளை நமது இறுதிப் போர்! நாமெல்லாம் வல்லமையோடு போரிட வேண்டும். நமது படைக்குழுவில் ஆண்டனியிடம் பணிசெய்த வீரர் உள்ளார், நினைவில் இருக்கட்டும். நீங்கள் அவரைப் பின்னால் தள்ளிவிட்டு, ஆண்டனியை முற்றுகை செய்வீர்! உயிரோடு ஆண்டனியைப் பிடித்துக் கொண்டு வாருங்கள்! அக்கிரிப்பா! முதலில் அனைத்து வீரருக்கும் பெரு விருத்து அளித்திடு! வயிறு புடைக்க உண்ணட்டும்! பட்டினிப் படைத் தட்டி விழுந்திடும் என்பது பழமொழி! நடக்கட்டும் நல்விருந்து! நாமும் கலந்து கொள்வோம். [எல்லாரும் போகிறார்கள்] நேரம், இடம்: அலெக்ஸாண்டிரியாவில் கிளியோபாத்ராவின் அரண்மனை, பகல் வேளை. நாடகப் பாத்திரங்கள்: கிளியோபாத்ரா, ஆண்டனி, சார்மியான், ஈராஸ், அலெக்ஸாஸ், போர்த் தளபதி எனோபர்பஸ், காட்சி அமைப்பு: தோற்றுப் போன ஆண்டனிக்கும், ரோமாபுரியின் தளபதிக்கு அக்டேவியசுக்கும் பகைமை அதிகரித்து அவரிடையே மறுபடியும் போர் மூளும் பிரச்சனைகள் எழுகின்றன. ஆண்டனி, எனோபர்பஸ் இருவரும் அக்டேவியஸை எதிர்த்து மீண்டும் தளப்போருக்குப் போகத் தயாராகிறார்கள். ஆண்டனி: எனோபர்பஸ், என்ன சொன்னாய் ? அக்டேவியஸ் என்னுடன் ஏன் போரிட வரமாட்டான்? எனோபர்பஸ்: அவரினி உங்களுடன் போரிட மாட்டார். ஆண்டனி: ஏன் போரிடப் போவதில்லை? []   எனோபர்பஸ்: அக்டேவியஸ் உங்களை விடத் தன்னிடம் இருபது மடங்கு படைப்பலம் உள்ளதாகப் பெருமைப்பட்டுக் கொள்கிறார். உங்களிடம் உள்ள ஒவ்வொரு ரோமானிய வீரனுக்கும் அவரிடம் இருபது போர் வீரர் இருக்கிறாராம். ஆண்டனி: திடீரென நாம் தாக்க வேண்டும். நாளைக்கே நாம் போருக்கு போவோம். கடற் போராயினும் சரி, தளப் போராயினும் சரி, நான் தயார். அல்லாவிடில் நான் உயிர்வாழ்ந்து என் குருதியிலே குளித்துச் செத்து விடுவேன். எகிப்து ரோமானியருக்கும், இத்தாலிய ரோமானியருக்கும் நடக்கும் போரில் நீ என்னுடன் சேர்ந்து போரிடுவாயா? இறுதிவரை சேர்ந்து போர் புரிவாயா? எனோபர்பஸ்: நிச்சயம் சேர்ந்து போரிடுவேன். ஏனப்படிக் கேட்கிறீர்? உமக்காகப் போரிட்டு என்னுயிரை இழக்கத் தயார். ஆனால் முடிவில் மடிபவர் அனைவரும் ரோமானியர்! ரோமானியரே ரோமானியரைக் கொல்லும் ரோமானிப் போர்! எந்த ரோமானியன் யார் பக்கம் சேர்வதென்று எங்களிடையே குழப்பம் உண்டாகி விட்டது, ஆண்டனி! நானே குழம்பிக் போயுள்ளேன். [அப்போது காயப்பட்டு நொண்டிக் கொண்டு நான்கு படைவீரர் நுழைகிறார்) ஆண்டனி: [எழுந்து வரவேற்று கைகுலுக்கக் கையை நீட்டி] கொடுங்கள் உமது கரங்களை. உத்தரவுக்குப் பணிந்து மெய்வருத்திப் போரிட்ட நீவீர் யாவரும் உத்தமர். செம்மையாகப் போரிட்டீர். புகழ் பெற்றீர். ஆனால் நீங்கள் தோற்றது என்னால். தவறு என்மீதுதான். கடற்போர் வேண்டமென என்னைத் தடுத்த போர் ஆலோசகரை எல்லாம் புறக்கணித்தேன். உன்னத வீரர் நீவீர்! உமக்குத் தலை வணங்குகிறேன்! உம்மைப் போல் ஓராயிரம் வீரர் இருந்தால் போதும். கிளியோபாத்ரா: (எனோபர்பசுடன் மெதுவாகப் பேசி) ஈதென்ன பேசுகிறார் ஆண்டனி? எனக்கொன்றும் புரிய வில்லையே. படைவீரருடன் என்ன பரிவாகப் பேசுகிறார்? எனோபர்பஸ்: [மெதுவாக] இது பழைய சாதுரியம் ! மன வேதனையில் கொட்டும் சோக வரிகள்! உண்மையான ஆண்டனி மாதிரி அவர் பேசவில்லை. ஆண்டனி: [சோகக் கண்ணீருடன்] சேனை வீரர்களே ! நீவீர் உண்மையாய்ப் போரிட்ட வீரர்கள்! தீரர்கள்! உத்தமர்கள்! ஆனால் நீங்கிச் செல்வீர் என்னை விட்டு! என் ஆதிக்கம் முடிவடைந்தது! வேறொரு தளபதிக்கு வேலை செய்யப் போவீர்! உங்கள் கண் என்னை நோக்கினாலும், உங்கள் கால்கள் உங்களை வாசலுக்குத் திருப்புகின்றன! நீங்கிச் செல்வீர் என்னை விட்டு! மரணம் வரும்வரை என் வாள் உயிருடன் என் கரத்தில் நிற்கும். என்னைக் காப்பதினி உங்கள் பொறுப்பில்லை! நீங்கிச் செல்வீர்! நான் என்னைக் காப்பாற்றிக் கொள்கிறேன். எனோபர்பஸ்: [வெறுப்புடன்] போதும், போதும் ஆண்டனி! போர் வீரர் விழிகளில் கண்ணீர் விழுவதைப் பாருங்கள்! ஆடவரைப் பெண்களாய் மாற்றிக் கோழைகளாய் அழவிடாதீர்! ஆண்டனி: என் கண்ணில் நீர் வடிந்தால், அவர் கண்ணிலும் நீர் வழியும்! ஆண்டனி அழவில்லை! தோற்காத ஆண்மை வீரன் ஆண்டனி அன்றே செத்து விட்டான்! பிழைத்திருக்கும் இந்த ஆண்டனி அவனுடைய நிழல். கோழை ரோமன்! ஆன்மா பறந்துபோய் வெற்றுக் கூடாக உலவி வரும் நான் உண்மையாக ஆண்டனி அல்லன். நீங்கிச் செல்வீர் என்னை விட்டு!   []   கிளியோபாத்ரா: [கோபமாக] அப்படிச் சொல்லாதீர் ஆண்டனி! ரோமானியச் சேனை நமக்குத் தேவை. தோற்றுக் கீழே விழுவது தவறாகாது. ஆனால் விழுந்து கிடப்பவர் எழுந்து நிற்காதுதான் தவறு. எழுந்து நில் ஆண்டனி! நிமிர்ந்து செல் ஆண்டனி! போரிட்டு வெல் ஆண்டனி! இன்னும் சூரியன் அத்தமிக்க வில்லை! நானிருக்கிறேன் உமக்கு! எகிப்த் படை உள்ளது உங்கள் உதவிக்கு. ஆண்டனி: கிளியோபாத்ரா! போதும் உன் உதவி! ஆனால் போதாது உன் உதவி! உன்னுரைகள் உறுதி அளித்த அந்த ஆண்டனி உன்முன் னில்லை ! அவன் ஆக்டியம் கடற்போரில் என்றோ மூழ்கி விட்டான். மீண்டும் எழ முடியாத ஆழத்தில் அடங்கி விட்டான்! உன் காதல் மூச்சு அவனை உயிர்ப்பித்து எழுப்பாது! உங்கள் பிரமிட் கோபுரத்தில் எனக்கு ஓரிடம் ஒதுக்கு! மன்னனில்லாத ரோமானியனை பிரமிட் கோபுரம் ஏற்றுக் கொள்ளுமா? *********************   அங்கம் -8 காட்சி -4 வா, அருகில் வா அந்த வாளைக் கொடு ! விடை பெறுகிறேன், கண்மணியே விடை கொடு எனக்கு ! இனிமேல் நடக்கப் போவது என்ன வாயினும், படை வீரன் தரும் இறுதி முத்தம், இகழத் தக்கது வரட்டு வாழ்த்துதான், இரும்புக் கவச உடை யோடு உன்னை விட்டு நான் அகல்கிறேன் போரிடும் நீயும் என் பின்னே வந்திடு … (ஆண்டனி) வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)   நானொரு வஞ்சகன் இந்த மண்ணிலே ! வீணாய் மனது அடித்துக் கொள்ளும் ! அந்தோ ஆண்டனி ! எத்தகை ஊதியம் என்பணிக் களித்தாய், பொன் மகுடம் சூட்ட உனக்கு ? என்னிதயம் நொறுங்கிடும், ஆயினும். உன்னை எதிர்த்துப் போரிடேன் நானினி. ஒரு புதைகுழி தேடுவேன் என்னுடலை மூடிட, இறுதிக் காலம் கேவல மானது ! [எனோபர்பஸ்] வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)   []     நேரம், இடம்: அலெக்ஸாண்டிரியாவில் அரண்மனைக்கு வெளியே ஓரிடம். இரவு வேளை. நாடகப் பாத்திரங்கள்: கிளியோபாத்ரா, அண்டனி, ஈராஸ் மற்றும் ஆண்டனியிக்குக் கீழிருக்கும் ரோமானியப் படையினர். காட்சி அமைப்பு: ஆண்டனியின் போர்க் கூடாரங்கள். ரோமானியப் படையினர் கூட்டமாகப் பேசிக் கொண்டிருக்கிறார். வேறிடத்தில் ஆண்டனி போருக்குத் தயாராகிறான். முதல் சேனாபதி: போய் வா, நல்லது இன்று நாம் உயிரோடிருக்கிறோம். நாளைக்கு மறுபடியும் போர். நாமெல்லாம் இதே வேளையில் நாளை உயிருடன் இருப்போமா என்பதை அறியோம். போய்த் தூங்கு ! பொல்லாத கனவுகள் வந்தால் என்னைத் திட்டாதே ! நல்ல கனவுகள் வந்தால் என்னைப் பாராட்டு. நாளைப் போரில் நீ பிழைத்தால் அது மறுபிறப்பாய் எண்ணிக்கொள். போய்வா. இரண்டாவது சேனாபதி: [போகாமல் நின்று] யுத்தகளம் நமக்குச் செத்தகளம் ! போனவர் மீளார் ! மீண்டவர் வாழார் ! யுத்தகளம் படைக்கு ஒருபோக்குப் பாதை ! []   முதல் சேனாபதி: சேதி கேட்டாயா? நமது தளபதி எனோபர்பஸ் ஆண்டனியை விட்டுவிட்டு அக்டேவியஸிடம் சேர்ந்து கொண்டார்! நம்மை நடத்திச் செல்ல நமக்கு இப்போது யார் போர்த் தளபதி ? இரண்டாம் சேனாபதி: என்ன ? என்னால் நம்ப முடியவில்லையே ! எனோபர்பஸ் பகைவருடன் சேர்ந்து கொண்டாரா? அது ராஜ துரோகம் ஆயிற்றே ! ஆண்டனிக்குச் செய்யும் வஞ்சகம். போர் நடுவே தோளுக்குத் தோள் கொடுத்துப் போரிட்ட நம்மை யெல்லாம் விட்டுப் போய்விட்டாரா? புதுத் தளபதி வேறு யாராக இருக்க முடியும் ? தளபதி ஆண்டனி ஒருவர்தான் அதற்குத் தகுதி உடையவர். முதல் சேனாபதி: என்னுடைய அச்சம் மிகையானது. ஆண்டனி வணங்கிவரும் தெய்வம் ஹெர்குலிஸ் அவரை விட்டு நீங்கிச் செல்வதாக உணர்கிறேன். [ஆண்டனி, கிளியோபாத்ரா, ஈராஸ், சார்மியான் நுழைகிறார்கள்] ஆண்டனி: [ஆங்காரமாக] ஈராஸ் ! கொண்டுவா எனது போர்க் கவசவ உடைகளை ! எங்கே என் உடைவாள் ? எடுத்துவா அதனையும் ! சீக்கிரம் ! கிளியோபாத்ரா: [கவலையுடன் நெருங்கி] இந்த அகால வேளையிலா போருக்குப் போக வேண்டும் ? சிறிது நேரம் தூங்கி அதிகாலையில் போரைத் துவக்கலாமே ! ஆண்டனி: எனக்கு இன்று தூக்கம் வராது ! திடீரென்று அக்டேவியஸைத் தாக்க வேண்டும். இரவு முழுதும் விழித்திருப்பதை விடப் போரிட்டு அக்டேவியஸின் மார்பைக் கிழிக்கலாம் ! ஒன்று அவன் சாக வேண்டும் அல்லது நான் சாக வேண்டும், கிளியோபாத்ரா, நாங்கள் இருவரும் இனிமேல் தனித்தனியாக வாழ முடியாது என்றாகி விட்டது. உன்னைப் பிரியப் போகும் காலம் வந்து விட்டது. ஆனால் நான் அத்தனை எளிதாய் உன்னை விட்டுப் பிரிய மாட்டேன். அழாதே கிளியோபாத்ரா [கண்ணீரைத் துடைக்கிறான்]  [ஈராஸ் போர்க் கவசங்களைக் கொண்டு வருகிறான். கிளியோபாத்ராவும், ஈராசும் ஆண்டனிக்குக் கவசம் அணிகிறார்கள்] []   கிளியோபாத்ரா: ஆண்டனி, இந்த முறை தளப்போர்தானே நடக்கப் போகிறது ? கடற் போரென்றால் இரவில் நடத்த முடியாதே. நீங்கள் தளப்போர் வீரராயிற்றே. வெற்றி உங்களுக்கே ! ஆண்டனி: ஆம் இம்முறை தரைப்போருக்குத்தான் தயார் செய்கிறோம். ஆம் வெற்றி எனக்குத்தான், கிளியோபாத்ரா. ஈராஸ் ! ஈராஸ் ! எங்கே எனோபர்பஸ் ? என்னருகில் சில மணிநேரத்துக்கு முன் இருந்தாரே. கூப்பிடு அவரை. [அப்போது படைவீரன் ஒருவன் விரைவாகக் கையில் கடிதமுடன் வருகிறான்] படைவீரன்: [வந்தனம் செய்து] வந்தனம் தளபதி ! எனோபர்பஸ் கடிதம் இது. [கையில் கொடுக்கிறான்] []   ஆண்டனி: [கடிதத்தைப் படித்துக் கோபத்துடன்] கிளியோபாத்ரா ! எனது வலது கை போய் விட்டது. எனோபர்பஸ் என்னைப் புறக்கணித்துப் போய்விட்டான். அக்டேவியஸ் படையுடன் சேர்ந்து கொண்டாராம். என்ன வஞ்சகச் செயல் இது ? வஞ்சகம் மட்டுமில்லை ! என்னைக் கொல்லச் செய்த சதி ! நானென்ன தவறு செய்தேன் ? அக்டேவியஸ் செய்த சூழ்ச்சியா ? அல்லது எனோபர்பஸ் செய்த தந்திரமா ? என்னைக் கைப்பற்ற என் தளபதியே தயாராகி விட்டானா ? அக்டேவியஸ் பணம் கொடுத்து எனேபர்பஸை வாங்கியதாகத் தெரியுது எனக்கு. கிளியோபாத்ரா ! ஏன் என்னைப் பிடிக்க உன்னைக் கூட விலைக்கு வாங்கி விடுவான் அந்த அயோக்கிய அக்டேவியஸ் ! கிளியோபாத்ரா: [கவலையுடன்] என்னை அப்படி எந்தப் பகைவனும் எளிதாக வாங்கிவிட முடியாது, ஆண்டனி ! .. சரி …. யார் இப்போது போரை முன்னின்று நடத்துவது ? ஆண்டனி: இந்தப் போர் என்னிறுதிப் போர் ! நான் என்னைக் காப்பாற்றப் போராடும் போர். நான்தான் முன்னிற்பேன் ! நானிருக்கும் போது வேறு யாரும் நடத்தத் தேவை யில்லை. அக்டேவியஸை நேருக்கு நேர் எதிர்க்கும் நேரம் வந்து விட்டது! எங்கள் இருவரில் ஒருவருக்கு முடிவு காலம் நெருங்கி விட்டது. எனொபர்பஸ் என்னை விட்டு நீங்கிய பின் அவனோடு என் பாதி பலம் போனது. இழந்த அந்த பாதிப் பலத்தை நீ எனக்குத் தா ! என்னிழலில் நின்று நீயும் போரிட நேரிடலாம் ! போருனக்குப் புதியதில்லை ! நீ யெனக்கு அருகில் நின்றாலே பலமெனக்குப் பெருகும், கிளியோபாத்ரா ! அங்கம் -8 காட்சி -5   பாதகன் பூமியில் நானொருவன் மட்டுமே வேதனை அடைவது நானொருவன் மட்டுமே, எத்தகைப் பரிவு கொண்டவர் ஆண்டனி ? வெடித்துப் போகும் என் மனது ! …. (எனோபர்பஸ்) வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா) விரட்டி அடித்தோம் அவன் கூடாரத் துக்கு ! அறியட்டும் ராணி நம் அதிசயச் செயலை ! நாளை சூரிய உதயம் நமைக் காணும்முன் இன்று வெளிவரும் குருதியைத் தெளிப்போம் ! என் நன்றி  உமக்கு, உம் தீரச் செயலுக்கு, உம் மனைவியர் ஆனந்தக் கண்ணீர் உமது குருதியைக் கழுவிட, நீவீர் உரைப்பீர் நாம் பெறும் வெற்றியை ! …. (ஆண்டனி) வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா) []     நேரம், இடம்: அலெக்ஸாண்டிரியாவில் அரண்மனை. மாலை வேளை. நாடகப் பாத்திரங்கள்: ஆண்டனி, ஈராஸ், கிளியோபாத்ரா மற்றும் ஆண்டனியிக்குக் கீழிருக்கும் ரோமானியப் படையினர். காட்சி அமைப்பு: தளப்போரில் வெற்றி பெற்று, அக்டேவியஸை விரட்டிய ஆண்டனி மகிழ்ச்சியில் அங்குமிங்கும் குதித்து உல்லாசமாகப் படைவீரரிடம் பேசிக் கொண்டுள்ளார். அப்போது கிளியோபாத்ரா நுழைகிறாள். ஆண்டனி: ஈராஸ் ! ஈராஸ் ! நமது வெற்றியைக் கொண்டாட வேண்டும் நாமெல்லாம். முதலில் மகாராணிக்குச் சொல் நமது பராக்கிரமச் செயலை ! அக்டேவியஸ் குதிரை என்ன வேகாய் ஓடியது கூடாரத்தைத் தேடி ! பொடியன் அக்டேவியஸ் குதிரை ஏறப் பழகியது நேற்று ! சிறுவன் அக்டேவியஸ் வாளேந்தக் கற்றது நேற்று. யாரென்று நினைத்தான் என்னை அந்தப் போக்கிரி ! அவன் அப்பாவித் தங்கையை விற்று என்னை எளிதாக விலைக்கு வாங்கி விடாலாம் என்று கனாக் கண்டவன் ! [ஆண்டனிக்கும் அவரது படை வீரருக்கும் சேடிகள் மதுபானம் அளிக்கிறார்.] ஈராஸ்: இதோ போகிறேன் தளபதி ! பாருங்கள், அதோ மகாராணியே செய்தி அறிந்து ஓடி வருகிறார். [கிளியோபாத்ரா உள்ளே நுழைகிறாள்] ஆண்டனி: [மகிழ்ச்சியுடன் மதுவைக் குடித்தபடி] கண்ணே கிளியோபாத்ரா ! கேட்டாயா செய்தியை ? அற்பன் அக்டேவியஸை அடித்துத் துரத்தி விட்டேன் அவனது கூடாரத்துக்கு. தளப்போரில் நான் வீரன் என்பது அவனுக்குத் தெரியாது. எகிப்தில் கால்வைக்க அக்டேவியஸ் இனிச் சிந்திப்பான். [குதித்துக் கொண்டு] எங்கே உன் ஆட்டக்காரிகளை என்முன் ஆடவிடு ! அவரது அழகிய உடம்புகளை கண்முன் ஓடவிடு ! அறுசுவை விருந்தை என் படை வீரருக்குப் படைத்திடு. கிளியோபாத்ரா ! வா என்னருகில் வந்து அமர்ந்திடு ! உனது காந்த விழிகளில் என்னை விழுங்கிடு. உன் மேனியின் கனலில் என்னைச் எரித்துச் சாம்பலாக்கு.. []   கிளியோபாத்ரா: [புன்னகை மின்ன] சார்மியான் ! போ நாட்டியக்காரிகளை அழைத்துவா ! வாத்தியக் கலைஞரை அழைத்துவா ! ரோமானியப் படைக்குப் பெரு விருந்தை அளித்திடு ! போ, [ஆண்டனியைப் பார்த்து] உங்கள் வீரப் படைக்கு மட்டும் விருந்தளிப்புப் போதுமா ? வெற்றிப் பாதையில் செலுத்திய வீரத் தளபதிக்கு எப்படி விருந்தளிக்க வேண்டும் கிளியோபாத்ரா ? சொல்வீர் ஆண்டனி ! இத்தகைய பூரிப்பு பொங்க உங்களை நான் இதுவரைக் கண்டதில்லை. ஆண்டனி: [படை வீரரைப் பார்த்து] நாளை சூரிய உதயத்தை நீங்கள் காணும் முன்பு இன்று வெளியேறிய குருதியை எகிப்தின் மண்ணிலே தெளிப்பீர். எனது நன்றி உமக்கு. எனது நன்றி உமது தீரச் செயலுக்கு. என்னைப் போலவே நீவீர் யாவரும் போரிட்டீர். நகரத்துள் சென்று உங்கள் மனைவியரைத் தழுவிக் கொள்வீர். அவர்கள் விடும் ஆனந்தக் கண்ணீர் உங்கள் குருதியைக் கழுவட்டும் ! அப்போது உமது வீரச் செயல்களைப் பூரிப்புடன் அவரது செவிகளில் உரைப்பீர். [படைவீரர் போகிறார்கள்] [கிளியோபாத்ராவை நெருங்கி] கண்ணே கிளியோபாத்ரா ! வா, அருகில் வா. உன் மலர்க் கரங்களால் என் கழுத்தைச் சுற்றி அணைத்துக் கொள். என் வேர்வைத் துளிகள் உன் அணைப்புக் கனலில் ஆவியாகட்டும். உன்னினிய முத்தங்களால் என் போர்ப் புண்களின் வேதனையைப் போக்கிவிடு ! கொந்தளிக்கும் என்னிதயத் துடிப்புகளை உன் கனிவு நெருக்கம் தணித்துக் குறைக்கட்டும் [கிளியோபாத்ராவை அணைத்துக் கொள்கிறான்] கிளியோபாத்ரா: [அணைப்பிலிருந்து விடுவித்துக் கொண்டு] பிரபுக்களின் அதிபதியே ! மேன்மை மிக்க ஆண்டனி ! எகிப்து ராணியின் பாராட்டுகள். கடல் முதலையைக் களத்தில் போட்டு மிதித்ததற்கு மெச்சுகிறேன். ஐயமின்றி நீவீர் தளப்போர் தளபதியே ! பெருமைப்படுகிறேன் பாராக்கிரமப் பிரபு ! ஆண்டனி: என்னிதயக் குயிலே ! உன்னினிய பாராட்டுகள் எல்லாம் பேரீச்சம் பழமாய்ச் சுவை அளிக்கின்றன. நானின்று பெற்ற வெற்றிக்கு நீதான் காரணம் ! நீ எனக்கு ஊக்க மது அளிப்பதுதான் காரணம். நீ என் நெஞ்சுக்குக் கனல் மூட்டுவதுதான் காரணம் ! எகிப்து ராணி எனக்கும் ராணியே ! நான் உன் தலைவனா ? இல்லை ! நான் உன் அடிமை ! யாருக்கும் அடங்காத இந்த ஆண்டனி, உன் கண்ணசைவுக்குக் கட்டுப்பட்ட வேங்கை ! பெண்டிரை எல்லாம் மிஞ்சிய நீதான் என் தேவதை ! [மண்டியிட்டு மரியாதை செலுத்துகிறான்] []   கிளியோபாத்ரா: [புன்னகை பூண்டு] யாரும் எனக்கு இத்தகைய உன்னத மதிப்பளித்ததில்லை ! மகாவீரர் அலெக்ஸாண்டர் பரம்பரையில் பிறந்தவள் நான் ! மாவீரர் ஜூலியஸ் சீஸர் மரபிலே உதித்தவர் நீவீர் ! அந்த சீஸர் கூட என்னைத் தேவதையாய்ப் போற்ற வில்லை. வீரர்தான் வீராங்கனையைப் பாராட்டுவார், போற்றுவார், வணங்குவார், வழிபடுவார். அதுபோல் உங்களை நானும் மதிக்கிறேன், துதிக்கிறேன், ஆண்டனி: கிளியோபாத்ரா ! சீஸர் உன்னைக் காதலிக்க வில்லை, தெரியுமா ? சீஸர் உன்னை மணந்து கொண்டது உன் மீதிருந்த காதலால் என்று எண்ணாதே ! அது ஓர் அரசியல் திருமணம் ! எகிப்துக்கும், ரோமுக்கும் நடந்த கலப்புத் திருமணம் ! காதல் திருமணமாக நினைத்துக் கனவு காணாதே ! போர் வீரர் சீஸருக்கு வாள்மீதுதான் காதல் ! வனிதையர் மீது எழுவது காதலில்லை, அது காமம் ! காதல் வளர்ச்சி பெறுவது ! பின்னால் தளர்ச்சி அடைவது ! காமம் ஒரு கனல் பொறி! கணப் பொழுதில் தூண்டப்பட்டு மறைந்து போவது. நீயெனக்கு ஒரு காதல் சுடரொளி ! அணைந்து போகாத விண்ணொளி ! கிளியோபாத்ரா: [பூரித்துப் போய்] இந்தச் சுடர் விளக்கிற்கு ஒளி ஏற்றிய சூரியன்தான் ஆண்டனி ! சீஸர் செத்தபின் அணைந்து போன இந்த விளக்கில் ஒளியைத் தூண்டி விட்டவர் ஆண்டனி ! அதை என்றைக்கும் அணையா ஒளியாய் ஆக்கி வைப்பவரும் ஆண்டனி ஒருவரே. ஆனால் வெற்றி வாடாத மலரில்லை. விழித்திருக்க வேண்டும் நாமெல்லாம் ! தோல்விப் புண் ஆறியதும் மீண்டும் ஓநாய்கள் விரட்ட வந்துவிடும். ஆண்டனி: கண்ணே கிளியோபாத்ரா ! எனக்குப் புத்துயிர் அளிப்பவை உன் காதல் விழிகள் ! எனக்கினித் தோல்வியே கிடையாது. ஆனால் தோல்விப் போர்வைக்குள் தூங்காமல் விழித்திருக்கும் அக்டேவியஸ் மீண்டும் எழுந்து வருவான். பன்மடங்கு போர்ப் படைகளைத் திரட்டிக் கொண்டு அடுத்தும் வருவான் ! எனக்குத் தெரியும் கிளியோபாத்ரா ! ஆயினும் நினைவூட்டிய உனக்கு நான் நன்றி கூறுகிறேன்.   []   *********************   அங்கம் -8 காட்சி -6 புனித நிலவே ! நீ சாட்சியாய் நில்  ! மனிதரின் புரட்சியில் வெறுப்பான நினைவுகள் மட்டும் மேலெழும் ! வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)   இந்தப் போக்கிரி எகிப்தியன் எனக்கு இழைத்து விட்டான் துரோகம் ! எனது கடற்படை அணியும் அடி பணியும் தோற்றுப் போய் ! குடித்துக் கும்மாளம் அடித்துக் கூடி தொப்பியைத் தூக்கி மேலெறிந்து வெற்றி ஆரவாரம் எழுந்திடும் ஆங்கே ! மும்முறை மாறிய வேசி ! உன் மீதுதான் வெம்போர் புரியும் என்னிதயம் ! வெளியே அனைவரும் ஒழிவீர் ! ஓடிப் போவீர். .. (ஆண்டனி) வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)   []   நேரம், இடம்: அலெக்ஸாண்டிரியா அரண்மனையில் ஆண்டனியின் மாளிகை. பகல் வேளை. நாடகப் பாத்திரங்கள்: ஆண்டனி, புதிய தளபதி ஸ்காரஸ், ஈராஸ், கிளியோபாத்ரா, பெல்லோடோரஸ்: கிளியோபாத்ராவின் பாதுகாப்புக் காவலன். காட்சி அமைப்பு: இரண்டாவது தளப்போரில் வெற்றி பெற்ற ஆண்டனியை அக்டேவியஸ் மீண்டும் கடற் போருக்கு அழைக்கிறான். ஆண்டனி வருத்தமோடு கடற்போருக்குத் தயாராகிறான். ஆண்டனி [சினத்துடன்] சிறுவன் அக்டேவியஸ் மறுபடிப் போருக்கு அழைக்கிறான் ! மூடன் ! முரடன் ! மூர்க்கன் ! நேற்று நான் கொடுத்த அடியில் பீறிட்ட குருதிகூட இன்னும் காயவில்லை ! போருக்கு மீண்டும் வருகிறான் பொடியன் ! அதுவும் கடற்போருக்கு ! முதல் முறியடிப்பில் மூழ்கிப் போன என் கப்பல்கள் மூச்சிழந்து கடலுக்குள் துருப்பிடித்துக் கிடக்கின்றன ! உடைந்து முடங்கிப் போன கப்பல்களை துறைமுகத்தில் செப்பமிட நேரமில்லை, கப்பல் துறை நிபுணரில்லை ! எப்படிக் கடற்போரில் இறங்குவது ? ஸ்காரஸ் நீ சொல் ! எத்தனை மணிநேரத்தில் கப்பலைச் செப்பமிடலாம் ? பராமரிப்புக் குழுவில் இன்னும் எத்தனை பேர் கைவசம் உள்ளார் ? ஸ்கார்ஸ்: ஆண்டனி ! எத்தனை மணிநேரத்தில் என்று கேட்காதீர், எத்தனை நாட்களில் என்றால் நான் பதில் சொல்ல முடியும். பராமரிப்புத் துறையாளரில் பாதிப் பேர் எனாபர்பஸ் நீங்கிய போது கூடச் சென்று அக்டேவியஸ் படையில் சேர்ந்து கொண்டார் ! அவருக்கு நாமளித்த ஊதியப் பணம் போதாதாம் ! இப்போது நம் கைவசம் உள்ள பராமரிப்பாளர் ஐம்பது அல்லது அறுபது பேர்தான் ! முடங்கிக் கிடக்கும் படகுகளை ஒரு வாரத்தில் செம்மைப் படுத்தலாம் ! கடற்கரையில் தொய்ந்து கிடக்கும் கப்பல்களைச் சீர்ப்படுத்த பல மாதங்கள் ஆகலாம் ! ஆண்டனி: அதை நான் ஏற்க முடியாது, வாரங்களும் மாதங்களும், நாட்களாய் குறைய என்ன வழிகள் உள்ளன ? அதைக் கூறு. பராமரிப்புப் பணிகளுக்கு எகிப்தியர் உதவியை நாடிப் பயன்படுத்திக் கொள் ! []   [கிளியோபாத்ரா சேடிகள், பாதுகாவலருடன் நுழைகிறாள்] கிளியோபாத்ரா: [புன்னகையுடன்] ஆண்டனி, கவலை வேண்டாம். என்னிடம் 75 படகுகளும், 25 கப்பல்களும் எஞ்சி உள்ளன ! கடற்படை வீரர்கள் பத்தாயிரம் பேர் இருக்கிறார், அவர்களில் ஐநூறு பேர் பராமரிப்பு வேலை செய்யத் தகுதி யுள்ளவர். ஆண்டனி: [கனிவுடன்] நல்ல நேரத்தில் வந்தாய் கிளியோபாத்ரா ! கடற் போருக்கு நான் தாயாராக இருக்கிறேன். உன் உதவி எனக்குத் தேவை, கடற் போருக்குத் தேவை. [ஆங்காரமாக] நீரிலும் போரிடுவேன் ! நெருப்பிலும் போர் புரிவேன் ! முடிந்தால் நீல வானிலும் போரிடுவேன் ! [ஸ்காரஸைப் பார்த்து] நாம் குன்றின் சிகரத்தில் உள்ளோம், அது தளப்போருக்கு மட்டும் தகுந்தது ! கடற்போருக்குத் தகாதது ! முதலில் நமது கப்பல்கள் தயாராக வேண்டும் ! பிறகு கூடாரங்கள் துறைமுகத்தின் அருகே அமைக்கப் பட வேண்டும். அக்டேவியஸ் படையினர் என்ன செய்கிறார் என்று முன்கூட்டி நமது ஒற்றர் குழு உளவித் தகவல் அனுப்ப வேண்டும். முதலில் அவரை மாறு வேடத்தில் அனுப்பு. ஸ்காரஸ்: அப்படியே செய்கிறேன் ஆண்டனி ! மகாராணி ! உங்கள் கடற்போர்த் தளபதியை அழைத்து என்னைக் காணும்படி ஏற்பாடு கொடுங்கள். கிளியோபாத்ரா: உடனே செய்கிறேன். [பெல்லோடோரஸைப் பார்த்து] பெல்லோடோரஸ் ! நமது கடற்படைத் தளபதியை என்னிடம் அழைத்து வா [அருகில் நிற்கும் பெல்லோடோரஸை அனுப்பிப் பின்னால் கிளியோபாத்ராவும் வெளியே செல்கிறாள் ] ஸ்காரஸ்: ஆண்டனி ! மகாராணி முன்னால் பேச முடியவில்லை என்னால் ! கிளியோபாத்ராவின் படகுகளில் புறாக்கள் கூடுகட்டி உள்ளன. கப்பல்களின் திசை திருப்பிகள் துருப்பிடித்துப் போயுள்ளன. கப்பலோட்ட அடிமைப் படையினர் மட்டும் ஆயிரக் கணக்கில் உள்ளார் ! கடற்தகுதி பெற்ற கப்பல்கள்தான் எகிப்தில் அதிகமாக இல்லை ! அக்டேவியஸின் பயங்கர ரோமானியக் கப்பல்கள் முன்பு, எகிப்தின் கப்பல்கள் எதிர்த்து மிதக்க முடியாது. ஆண்டனி: அப்படியா ? அந்த போக்கிரி எகிப்தியன் கிளியோபாத்ராவின் கடற்படைத் தளபதி எனக்குத் துரோகம் செய்து விட்டான். முதல் போரில் என்னை வஞ்சித்து விட்டான். பகைவர் வெற்றி பெற அவருக்குப் பாதை காட்டினான். நமது கப்பல்கள் முன்னேறிச் செல்ல முடியாது முடக்கி மூழ்கிப் போக வழி வகுத்தான். அவன் கிளியோபாத்ரா சொற்படிக் கேட்பவன். உன்னுடன் ஒத்துப் போரிடுபவன் என்று மட்டும் எண்ணாதே ! [கடுஞ் சினத்துடன்] கிளியோபாத்ரா முதற் கடற்போரில் என்னை நடுக்கடலில் விட்டுவிட்டு ஓடிப் போனவள் ! மும்முறை வேசி அவள் ! முதற் கணவன் தம்பி டாலமி ! இரண்டாம் கணவர் ஜூலியஸ் சீஸர். மூன்றாவது பதி முதுகெலும்பு ஒடிந்த ஆண்டனி ! அடுத்து அவள் கண்ணோட்டம் அக்டேவியஸ் மீதுள்ளது ! அதனால்தான் நான் தோற்றுப் போனாதாய் எண்ணி என்னைப் போர்க்களத்தில் விட்டுவிட்டு ஓடிப் போய் விட்டாள் ! யாரையும் நான் நம்ப முடியவில்லை ! ராணி உட்பட எகிப்த் நாட்டவர் அனைவரும் வஞ்சகர் ! அவளது வலையில் அடைபட்டுப் போனவன் அப்பாவி ஆண்டனி ! ஸ்காரஸ்: தளபதி இந்த இக்கட்டு நிலைமையிலிருந்து எப்படித் தப்புவது என்று நாம் முதலில் திட்ட மிடுவோம். இல்லாவிட்டால் நாமெல்லாரும் அக்டேவியஸால் கொல்லப் படுவோம். ஆண்டனி: அதிர்ஷ்டம் ஆண்டனியை விட்டுப் போய் நாட்கள் ஆகிவிட்டன. மரணத்தின் நிழல் என்னைத் தொடர ஆரம்பித்து விட்டது. நான் எனது நிழலை அழிக்க முனைகிறேன். நான் அழிந்த பின் அது என்னைத் தொடராது ! என்மீது கிளியோபாத்ராவுக்கு நம்பிக்கை போய்விட்டது. நானினி வெல்ல மாட்டேன் என்றவள் உள்ளத்திலே வேரூன்றி விட்டது. அவர் பார்வை எல்லாம் இப்போது அக்டேவியஸ் மீது விழுந்து விட்டது. நான் எப்போது வீழ்ந்து மடிவேன் என்று நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறாள். [அப்போது கிளியோபாத்ரா பெல்லோடோரஸ், கடற்படைத் தளபதி சூழ வருகிறாள்] கிளியோபாத்ரா: [ஆச்சரியமாக ஆண்டனியை நோக்கி] ஏன் என்னினிய நேசர் ஆண்டனி ஒரு மாதிரி பேசுகிறார் ? என்ன நிகழ்ந்து விட்டது இப்போது ? ஈதோ என் கடற்படைத் தளபதி ! உங்கள் போர்த் திட்டத்தை அவரிடம் விளக்கிக் கூறுங்கள். []   ஆண்டனி: [சற்று கடுமையாக] கிளியோபாத்ரா ! உன்னினிய நேசன் நானில்லை ! அந்தக் காலம் போய்விட்டது. உனக்கொரு புது நேசன் உன்னை ஆட்கொள்ளக் காத்திருக்கிறான். என் வாழ்வு சீஸர் போல் முடியப் போகிறது. கண்ணே கிளியோபாத்ரா ! என்னுயிரைப் போக்க அக்டேவியஸ் தன் வாளைக் கூர்மைப் படுத்திக் கொண்டிருக்கிறான். என் கதை முடியும் ! உன் கதை தொடரும் ! கவலைப் படாதே ! உன்னை மீண்டும் எகிப்த் ராணியாக்கி முடி சூட்டி வைப்பான் அக்டேவியஸ் ! உன் காதல் வரிகளை இனி நீ அவனுக்குப் பாடிப் பரவசப்படுத்து ! ஒழிந்து போ கிளியோபாத்ரா ! நானினி உன் நேசனில்லை ! மோசடியில் மூழ்கி வரும் மூடன் நான் ! நீயோ உன் கடற்படையோ இனி என்னைப் பாதுகாக்க முடியாது. போ கிளியோபாத்ரா போ ! என் முன் நிற்காதே ! [கண்ணீரைத் துடைத்துக் கொள்கிறான்] கிளியோபாத்ரா: [மனம் நொந்து] ஏனிப்படி என்னை அவமானப் படுத்துகிறீர் ஆண்டனி ! இனிதாகப் பேசும் உங்கள் நாக்கு இன்று நஞ்சாகக் கொட்டுகிறதே ஏன் ? ஏன் ? ஏன் ? அப்பாவி ராணியைத் தப்பாகப் பேச எப்படித் துணிந்தீர் ? அத்தனை கீழாகப் பேச நான் என்ன தவறிழைத்தேன் ஆண்டனி ? என்னை ஏன் வெறுக்கிறீர் ? உங்களைத் தவிர எவரையும் நான் மனதில் நினைத்ததில்லை ! அக்டேவியஸ் உங்களுக்கு மட்டும் பகைவன் அல்லன். எனக்கும் பகைவனே ! அந்தப் பொடியனையா நான் நேசிப்பேன் ? [கிளியோபாத்ரா அழுகிறாள்] ********************* அங்கம் -8 காட்சி -7   புள்ளினம் கூடுகட்டி யுள்ளன கிளியோ பாத்ராவின் படகுகளில் ! போர் எப்படி முடியும் என்று உண்மை சொல்லத் தயங்குவர் ஜோதிடர் ! உம்மென முகத்தைக் காட்டித் தம்மறிவை மறைத்துக் கொள்கிறார் ! வீரரே ஆண்டனி, ஆயினும் வெறுப்படைந் துள்ளார். துருப் பிடித்துப் போன அவரது துரதிர்ஷ் டத்தால் பயம், நம்பிக்கை மாறிமாறி வரும், அவரிடம் அதிர்ஷ்டம் உள்ளதா இல்லையா எவரதை அறிவார் ? (ஆண்டனியின் படைத் தளபதி) வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா) போவது நல்லது நீ, வாழ்வதில் பலனிருந்தால் ! கோபத்திற்கு ஆளானாய் (கிளியோ பாத்ரா) ! ஒரு மரணம் பல சாவுகளைத் தவிர்க்கும் ! …… மாயக் காரி மரித்து போக வேண்டும் ! சருக்கி வீழ்ந்தேன் சதித் திட்டத் துள்ளே !     (ஆண்டனி)   வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)   எனக்குதவி செய்ய வாரீர்  தோழியரே ! மனநோய் பற்றியது ஆண்டனிக்கு ! ….. பிரமிட் புதையகத்தில் மறைந்து வாளால் மரணம் அடைந்தேன் என்று அறிவிப்பாய் !, அலறினேன் முடிவில் “ஆண்டனி” யென்று பரிவாய் உரைத்திடு ! பாசம் என்மேல் வருகுதா எனப் பார் எனது மரணச் செய்தி கேட்டு ! (கிளியோபாத்ரா) வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)   []     நேரம், இடம்: அலெக்ஸாண்டிரியா அரண்மனையில் கிளியோபாத்ராவின் மாளிகை. பகல் வேளை. நாடகப் பாத்திரங்கள்: கிளியோபாத்ரா, தோழியர் சார்மியான், ஐரிஸ், மர்டியான், ஆண்டனி, புதிய படைத்தளபதி ஸ்காரஸ், ஈராஸ், காட்சி அமைப்பு: கிளியோபாத்ரா படுக்கையில் கவலையுடன் படுத்திருக்கிறாள். அருகில் சார்மியான், ஐரிஸ், மர்டியான் ஆகியோர் நிற்கிறார். கிளியோபாத்ரா: [மனம் நொந்துபோய்] சார்மியான், மனக்கவலை தீர்க்க எனக்கு உதவி செய். ஆண்டனி வெறியுடன் என்னை வெறுத்து ஒதுக்குகிறார். ஏனென்று தெரிய வில்லை ? கடற்போரில் மீண்டும் தோற்றுப் போய் எங்கோ ஒளிந்து கொண்டிருக்கிறார். எனக்கொரு யுக்தியைச் சொல்லிக் கொடு. மறுபடியும் ஆண்டனியைக் கவருவது எப்படி என்று ஆலோசனை சொல். என் மூளை வேலை செய்ய மறுக்கிறது. நேற்று எனக்குத் தூக்க மில்லை ! ஏக்கம், ஏக்கம், வெறும் ஏக்கம்தான் ! சொல் எனக்கொரு வழி ! தனிமை என்னைக் கொல்கிறது ! மனத் தவிப்பு என்னை எரிக்கிறது ! சார்மியான்: மகாராணி ! எனக்கோர் ஆலோசனை தோன்றுகிறது. பிரமிடுக்கு நீங்கள் போக வேண்டும். உங்களுக்காகக் கட்டப் பட்டிருக்கும் புதைப் பெட்டகத்தில் ஒளிந்து கொண்டு அரணைப் பூட்டிக் கொள்ளுங்கள். பிறகு செத்து விட்டதாக ஆண்டனிக்குச் செய்தியை அனுப்புங்கள். உடலும் ஆத்மாவும் பிரிவினால் பிளக்கப் படாது. மரணம் ஒன்றே பிளக்கும் வலு உடையது மகாராணி ! []   கிளியோபாத்ரா: நல்ல ஆலோசனை சார்மியான். அப்படியே செய்கிறேன். பிரமிட் புதையகத்தில் நான் குத்திக் கொண்டு செத்து விட்டதாய் ஆண்டனிக்குச் செய்தி அனுப்பு ! சாகும் போது இறுதியாக நான் அலறிச் சொல்லியது, “ஆண்டனி” என்று கூற வேண்டும் ! அதைப் பரிவாகப் பணிவாகக் கண்ணீருடன் ஆண்டனி நம்பும்படிச் சொல்ல வேண்டும் தெரியுமா ? என் மரணச் செய்தியைக் கேட்டு ஆண்டனி எப்படி நடந்து கொண்டார் என்பதைச் சொல்ல என்னிடம் வா ! போ, சீக்கிரம் போ ! சார்மியான் ! பிரமிட் வாயிலைத் திறக்கக் காவலரை அனுப்பு ! நான் போவதற்கு வாகனத்தைத் தயார் செய். [கிளியோபாத்ரா தன் தோழியரோடு போகிறாள். வேறு திசையிலிருந்து ஆண்டனியும், ஈராஸம் நுழைகிறார்கள்] ஈராஸ்: ஏதோ சிந்தையில் மூழ்கி இருப்பதுபோல் தெரிகிறது ? ஆண்டனி: ஆம் ஈராஸ் ! உன் கண்களுக்கு என் தோற்றம் இன்னும் தெரிகிறதா ? தீயணைந்து போய், நெருப்பு மறைந்து நான் புகை வடிவத்தில்தான் உலவி வருகிறேன். சில நாட்களில் புகையும் கண்ணுக்குத் தெரியாமல் போய்விடும் ! வான மண்டலத்தில் மேகங்கள் சில சமயம் டிராகனைப் [தீயினைக் கக்கும் விலங்கு] போல் நமக்குத் தெரியும். சில சமயம் புகை ஆவி சிங்கம் போல் அல்லது கரடி போல் தெரிந்து நம்மைப் பயமுறுத்தும். அப்படி ஆனது என் தோற்றம் ! என் வீரமும், தீரமும் வரலாறாய்ப் போயின ! என் பேரும் புகழும் இதிகாசக் கதையாய்ப் போனது. ஈராஸ்: பேராற்றல் படைத்த அலெக்ஸாண்டர் நோய்வாய்ப்பட்டுச் செத்தார் ! ஜூலியஸ் சீஸர் சதிகாரர் வாளுக்கு இரையானார் ! ஆனால் உயிரோடிருக்கும் ஆண்டனிக்கு அருகில் எந்தப் பகைவனும் நெருங்க முடியாதே ! ஆண்டனி: எனக்குப் பகை இப்போது என் ஆத்மாவிலே வேரூன்றி யுள்ளது ! நான் போரிட்டது எகிப்துக்கு ! எகிப்தின் எழில் ராணிக்கு ! கிளியோபாத்ராவின் மனதைக் கவர்ந்து விட்டதாக எண்ணினேன் ! காரணம் அவள் என் மனதைக் கவர்ந்தவள் ! என்னுள்ளம் அவள் நெஞ்சுக்குள் இருந்தாலும், வேறொருவர் இதயமும் அதனுள்ளே இடம் பெற்று விட்டது ! என்னால் என்ன செய்ய முடியும் ? என் நெஞ்சம் ஒடுங்கியது ! குறுகியது ! ஆழமானது ! கிளியோபாத்ராவின் இதயம் அகண்டது ! ஆழமற்றது ! அவளது கவர்ச்சியை நான் இழந்துவிட்டேன். தோற்ற பிறகு எனது கவர்ச்சி போய்விட்டது ! அவள் கவனம் வேறொருவர் மீது செல்கிறது. அவளுக்காக ரோமானியரை நிரந்தரமாகப் பகைத்துக் கொண்டேன். ரோமானியரை என் வாளால் கொன்றேன். இப்போது நான் ரோமானியனுமில்லை ! எகிப்தியனுமில்லை ! நாடற்ற, நாதியற்ற அகதியாகப் போனேன் ! (ஈராஸ் கண்ணீர் வடிக்கிறான்) அழாதே ஈராஸ் ! நம் முடிவை நாமே முடித்துக் கொள்ள நமக்குத் தருணம் வந்து விட்டது ! [அப்போது மர்டியான் கிளியோபாத்ராவின் செய்தியைக் கொண்டு வருகிறாள்] []   மர்டியான்: [ஆண்டனிக்கு வணக்கம் செலுத்தி] வந்தனம் மேன்மைமிகு தளபதியாரே ! மகாராணியின் தகவலைக் கொண்டு வந்திருக்கிறேன். ஆண்டனி: கெட்ட செய்தியாகத்தான் இருக்க வேண்டும் ! நல்ல தகவல் என் காதில் விழுந்து பல நாட்கள் ஆகிவிட்டன ! என் உடைவாளைப் பறித்துக் கொண்டாள் உன் மகாராணி ! நானொரு வீரன் அல்லன். போலி வீரன் ! என்னைப் போலி ஆண்டனி ஆக்கியவள் உங்கள் ராணி. மர்டியான்: இல்லை தளபதியாரே. எங்கள் மகாராணி உங்களை மிகவும் நேசித்தார். உண்மை அதுதான் ! யாரோ உங்களை மாற்றி விட்டார் ! அவரது ஊழ்விதி உங்கள் கையில் உள்ளது. அவரது நல்லது, கெட்டதில் உங்கள் பங்கு நிரம்ப உள்ளது. அவரது அதிர்ஷ்ட தேவதை உங்கள் தோள்மீதுதான் சவாரி செய்கிறாள். ஆண்டனி: அலி தேவதையே ! உங்கள் ராணியின் அதிர்ஷ்ட தேவதை என்தோள் மீதிருந்து குதித்தோடி விட்டாள். என்னை வஞ்சித்து விட்டவள் உங்கள் மகா, மகாராணி ! அவளுக்கு மரண தண்டனை விதிக்கிறேன். கிளியோபாத்ரா ஒரு நயவஞ்சகி ! மர்டியான்: [குழப்பம் அடைந்து தடுமாறி] என்ன சொல்கிறீர் தளபதி ? மரண தண்டனையா ? எனக்கொன்றும் புரியவில்லை ! மரணம் வருவது ஒருவருக்கு ஒரு முறைதான் ! மரணத்துக்குச் சரணம் ஒரே முறைதான் ! உங்கள் கையிக்கு அந்த வேலையை அளிக்காது, தானே செய்து கொண்டார் எங்கள் உத்தம ராணி ! நீங்கள் மகாராணிக்கு ஏன் மரண தண்டனை விதிக்க வேண்டும் ? மரித்துப் போன எங்கள் மகாராணிக்கா மறுபடி ஓர் மரணம் ! பிரமிடின் புதைக்குழியில் மீளா உறக்கத்தில் பள்ளி கொண்டார் எமது ராணி ! இறப்பதற்கு முன் எங்கள் ராணியின் உதடுகள் உரைத்தவை: “ஆண்டனி ! என்னினிய ஆண்டனி.” மகாராணி தன்னினிய உயிரைப் போக்கிக் கொண்டாள். இறுதியில் உயிர் போகும் போது அலறிய குரலில் “ஆண்டனி” என்னும் பெயர் இதயத்துக்கும் உதடுகளுக்கும் இடையே ஊஞ்சல் ஆடியது. உங்கள் பெயரும் அவரது உள்ளத்தில் புதைக்கப் பட்டிருக்கிறது. ஆண்டனி: [மன வேதனையுடன்] ஆ! கண்ணே ! கிளியோபாத்ரா ! நீ மரித்து விட்டாயா ? மர்டியான்: [கண்ணீர் சொரிய] ஆம் ராணி மரித்து விட்டார். எங்கள் மகாராணி மரித்து விட்டார் ! [அழுகிறாள்]   []   ஆண்டனி: என் கண்மணி கிளியோபாத்ரா போய்விட்டாளா ? போய் வருகிறேன் என்று சொல்லிக் கொள்ளாமலே என்னை விட்டுப் போய்விட்டாள் ! என்னை ஏங்க வைக்கத் தான் முந்திக் கொண்டுவிட்டாள்! என் கண்ணீரைக் கொட்டி உலகின் முன் நான் அலற விட்டுவிட்டுத் தான் முந்திக் கொண்டு விட்டாள்! அக்டேவியஸின் உதடுகள் அடுத்து அவளை முத்தமிடப் போவதாய் கற்பனை செய்தேன். ஆனால் அவள் மரணத்தை முத்தமிட்டு அதைத் தழுவ முந்திக் கொண்டாள் ! எனது உடைவாள் அவளது குருதியைச் சுவைக்க வேண்டும் என்று நான் தீட்டிக் கொண்டிருந்தேன். இனி எதற்கு எனக்கு உடைவாள் ? தேவையில்லை [வாளைத் தரையில் விட்டெறிகிறான்]. போ மர்டியான் போ ! உன் பணியைத் திறம்படச் செய்தாய் ! பிரமிடில் உறங்கும் உன் ராணியிடம் சொல் ! என மனது விண்டு போனது என்று சொல் ! என் நெஞ்சம் துடியாய்த் துடிக்குது எனச் சொல் ! என் மூளை மரத்துப் போனதெனச் சொல் ! என் கண்கள் மங்கிப் போயின என்று சொல் ! என் செவிகள் அடைத்துப் போயின என்று சொல் ! என் வாய் ஊமையானது என்று சொல் ! போ மர்டியான் போ, பிரமிட வாயிலைத் திறந்து வைக்கச் சொல் ! கிளியோபாத்ராவின் உயிர்த் துணைவன் ஆண்டனி கண்ணீரைக் கொட்ட வருகிறான் என்று சொல் ! அவளது ஈமக்கிரியையில் நான் கலந்து கொள்ள வேண்டும். [மர்டியான் அழுது கொண்டே போகிறாள்] *********************   அங்கம் -8 காட்சி -8 (கிளியோபாத்ரா இறந்த செய்தி கேட்டு)   என் உடைவாளை அகற்று ஈராஸ் ! இன்றைய பொழுதின் வேலை முடிந்தது ! தூங்கும் நேரம் வந்து விட்டது ! …….. உன்னுடன் இணைவேன் கிளியோபாத்ரா ! மன்னிப்பு வேண்டிக் கண்ணீர் விடுகிறேன். என் நீண்ட ஆயுள் முடிந்தது எரித்தீபம் அணைந்து போனதால் ! என்னினிய ராணி ! உன்னிடம் வருகிறேன் ! எனக்காக நீ காத்திரு ! ….. (ஆண்டனி) வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)     []     ரோமா புரியின் நிலைமை: ஃபிலிப்பிப் போரில் புரூட்டஸ், காஸ்ஸியஸ் மற்ற சதிகாரர் யாவருமிறந்த பிறகு, ஆண்டனி, அக்டேவியஸ், லெப்பிடஸ் மூவர்களின் கூட்டு மேற்பாட்டில் ரோமாபுரி இயங்கி வருகிறது. ஜூலியஸ் சீஸர் கொலையாகி இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஆண்டனி கிளியோபாத்ராவைக் காண எகிப்த் வருகிறான். மனைவி •புல்வியா மரணம் அடைந்த பிறகு, ஆண்டனி தனிமையாகிக் கிளியோபாத்ரா மீது நாட்டம் உண்டாகுகிறது. அதே சமயத்தில் நிதிக் களஞ்சியம் காலியாகிப் போர்வீரர்களுக்குக் கூலி கொடுக்க நிதியின்றிப் பணம் திரட்ட வேண்டி, ஆண்டனி எகிப்து செல்லத் திட்டமிடுகிறான். எகிப்த் அரசியிடம் நேராகக் கையேந்திப் பிச்சை கேட்கத் துணிவின்றி, கிளியோபாத்ரா தன்னைக் காண வரவேண்டும் என்று காவலர் மூலம் உத்தரவு அனுப்புகிறான். ஆனால் கிளியோபாத்ரா எகிப்த் தளத்தில் தானிருப்பதாகவும், ஆண்டனிதான் அவளைக் காண வரவேண்டும் என்று மறுமொழி அனுப்புகிறாள். எகிப்துக்கு வந்த ஆண்டனி தன் மனைவி புல்வியா போர்க்களத்தில் தனித்துப் போய் நோயில் மரணமடைந்த தகவல் கேட்டு மனம் நோகிறான். ரோமுக்கு மீளவும் விரும்பாது, கிளியோபாத்ராவின் கவர்ச்சியிலிருந்து மீளவும் முடியாது திண்டாடுகிறான் ஆண்டனி. இளைய பாம்ப்பி ரோமாபுரியைத் தன்வசமாக்க முயற்சிக்கிறான். கிளியோபாத்ராவிடம் மனதைப் பறிகொடுத்த ஆண்டனி ரோமுக்கு மீளத் தயங்குகிறான். அக்டேவியஸ் தன் தங்கையை மணக்க வழி செய்து ஆண்டனியை மைத்துனன் ஆக்கிக் கொள்கிறான். திருமணத்தைக் கேள்விப்பட்ட கிளியோபாத்ரா வெகுண்டெழுகிறாள். ஆண்டனி எகிப்துக்கு மீண்டு மனைவியை மறந்து கிளியோபாத்ராவிடம் மனதைப் பறிகொடுத்து மயங்கிக் கிடக்கிறான். ஆண்டனியைத் தண்டிக்க அக்டேவியஸ் ரோமானியப் படையுடன் ஆக்டியக் கடற் பகுதியில் போரிட்டு வெற்றி அடைகிறான். தோற்றுப் போன ஆண்டனி ஆக்டேவியஸ் தூதரை விட்டு அனுப்பிய நிபந்தனைகளில் கையொப்பமிடுகிறான். ஆயினும் இருவருக்குள்ளும் நிரந்தரப் பகை உண்டாகி, ஆண்டனி எகிப்தில் அடைபட்டுப் போகிறான். போரில் தோல்வியுற்று அவமானப் பட்டு வேதனையில் உள்ள போது, கிளியோபாத்ரா அவன் கவனத்தைக் கவரத் தான் செத்து விட்டதாகச் செய்தி அனுப்புகிறாள். ஆண்டனி மரணத் தகவல் கேட்டு மனமுடைந்து தன்னுயிரை மாய்த்துக் கொள்ள முனைகிறான்.   []   நேரம், இடம்: அலெக்ஸாண்டிரியா அரண்மனையில் கிளியோபாத்ராவின் மாளிகை. பகல் வேளை. நாடகப் பாத்திரங்கள்: ஆண்டனி, படைத்தளபதி ஈராஸ், டையமீடிஸ் (கிளியோபாத்ராவின் தூதன்], காவலளர்கள். காட்சி அமைப்பு: மர்டியான் கிளியோபாத்ரா அனுப்பிய பொய் மரணச் செய்தியைக் கேட்டு மெய்யெனக் கருதி, ஆண்டனி மனமுடைந்து தன்னுயிரை மாய்த்துக் கொள்ளத் துணிகிறான். அதற்கு ஈராஸ் உதவியை நாடுகிறான் ஆண்டனி. ஆண்டனி: [மனமுடைந்து, கண்ணீருடன்] ஈராஸ் ! என் கண்மணி கிளியோபாத்ரா தன்னுயிர் நீத்தபின் எனக்கினி எகிப்தில் வேலை இல்லை ! என் போருடையை அகற்று ! அதற்கும் இனி ஓய்வுதான் ! என் உடைவாளை உறைக்குள் போட்டு என்னோடு புதைத்து விடு. எனக்கும் விடுதலை ! என் உடைவாளுக்கும் விடுதலை ! நான் உறங்கச் செல்ல வேண்டும் ! மீண்டெழாத நீண்ட தூக்கத்தில் ஆழ்ந்துவிட வேண்டும். அதுவே நிம்மதி அளிக்கும் எனக்கு ! கிளியோபாத்ராவுடன் இணைந்து கொள்ள வேண்டும் நான் ! திசை தெரியாமல் போய்க் கொண்டிருந்த எனக்கு, போகும் திசையைக் காட்டியவள் கிளியோபாத்ரா ! சொல்லிக் கொள்ளாமல் போன கிளியோபாத்ராவின் திடீர் மரணம் என் இதயத்தில் துடிப்பு அலைகளை உண்டாக்கி விட்டது. ஏழடுக்குக் கவச உடுப்பு கூட அந்த துடிப்பை அடக்க முடியாது ! ஒரு காலத்தில் என்னிதயம் உடலை விட ஊக்கமோடும், உறுதியோடும் இருந்தது. இப்போது என் உடலில் கீறல் விழுந்து விட்டது. கிளியோபாத்ரா எனக்காகக் காத்திருப்பாள் ! அவளுடன் நான் சேர்ந்து கொள்ள வேண்டும். அதற்கு நீ உதவுவாயா ஈராஸ் ? ஈராஸ்: [கவலையோடு] தளபதி ! என்ன சொல்கிறீர் ? எனக்குப் பயமாக இருக்கிறது. என்ன உதவி செய்ய வேண்டும் நான். பிரமிடுக்கு அழைத்துச் செல்ல வேண்டுமா ? கிளியோபாத்ரா மரித்துக் கிடக்கும் இடத்துக்கு உம்மை அழைத்துச் செல்வதில் எனக்குச் சிரமம் இல்லை ! அது ஒன்றும் பெரிய உதவி இல்லை. ஆண்டனி: ஈராஸ் ! அந்த உதவியை நான் உன்னிடம் கேட்க வில்லை. கிளியோபாத்ரா மரணத்துக்கு நான்தான் காரண கர்த்தா ! அக்டேவியஸிடம் நான் தோற்றுப் போனதை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை ! அவளைக் காப்பாற்ற வந்த அதி வீரன் நான் தோற்றுப் போய் என்னுயிரைக் காப்பாற்ற வேண்டிய அவமான நிலை எனக்கு ! எப்படிப் பொறுத்துக் கொள்வாள் அத்தோல்வியை ? என் ஆண்மை வீரம் அழிந்துபோய், பெண்ணுக்குள்ள நெஞ்சுறுதி கூட இல்லை என்னும் கேவல நிலைக்கு வீழ்ந்து விட்டேன். நான் அக்டேவியஸின் சிறையில் அவமானப் படுவதை விட உயிரை மாய்த்துக் கொள்வதே முறையானது என்னும் முடிவுக்கு வந்து விட்டேன். எனக்கு முன்பே நீ வாக்களிதிருக்கிறாய். அந்த ஒப்பந்தப்படி நான் ஆணையிட்டால் அதை நிறைவேற்றுவாயா ? ஈராஸ்: [நடுங்கிக் கொண்டே] என்ன ஆணை என்று தெரியாமல் நான் எதுவும் ஒப்புக் கொள்ள முடியாது, தளபதி. []   ஆண்டனி: ஈதோ என் உடைவாள் ! அதை என் உடலில் பாய்ச்ச வேண்டும் ! ஆம் அதுதான் என் ஆணை ! உடனே செய் ஈராஸ் ! தருணம் வந்து விட்டது ஈராஸ், என் மரணத்தை நானே முடித்துக் கொள்ள ! நீ எனக்கு மரண வாசலைத் திறந்திடுவாயா ? ஈராஸ்: [கண்களில் விழி பிதுங்க] தளபதி ! என்னால் முடியாது ! நான் வாக்களித்தது இதுவன்று. இந்த பயங்கரக் கொலையை நான் செய்ய முடியாது ! நான் பணிபுரியும் ரோமாபுரிப் பிரபுவின் உடல் மீது இந்தக் கை எப்படி உடைவாளை உள்ளே செலுத்தும் ? வலுமிக்க என் கைகள் வலுவிழந்து தொங்குகின்றன ! எப்படிச் செய்வேன் இந்த மரண வேதனையை ? மன்னிக்க வேண்டும் தளபதி ! உங்கள் உயிரைக் காப்பது என் பணியே தவிர, உயிரைப் பிரிப்பதில்லை ! என் வாக்கை நான் மீறத் தயார் ! ஆனால் உங்கள் உயிரைப் போக்க நான் தயாரில்லை ! அழகிய மாது அக்டேவியா விதவை ஆவதை நான் தாங்கிக் கொள்ள முடியாது ! தெய்வங்கள் என்னைத் தண்டிக்கும் ! தீராத மன நோயில் வெந்து சாவேன் ! ஆண்டனி: ஈராஸ் ! ரோமாபுரி இல்லத்தின் பலகணியில் நீ நின்று கொண்டு, தெரு வழியே உன் பிரபு சிரம் கவிழ்ந்து, மண்டியிட்டுக் கைகள் கட்டப்பட்டு வெளுத்துப் போய் சோக முகத்துடன் அவமானம் நெஞ்சத்தை உள்ளே அரித்து வர, இரு சக்கிரத் தேரில் அக்டேவியஸ் இறுமாப்புடன் கடந்து செல்லும் சீரழிவுக் கோரத்தைக் காண விரும்புகிறாயா ? ஈராஸ்: [முகத்தைத் திருப்பிக் கொண்டு] வேண்டாம் அந்த அவமானம் உங்களுக்கு தளபதி ! என்னால் அதையும் தாங்கிக் கொள்ள முடியாது பிரபு ! ஆண்டனி: அப்படியானால் என் வேண்டுகோளை நிறைவேற்று ! இக்கணமே நிறைவேற்று ! என் வாளைத் தொட அஞ்சினால் உன் வாளால் என்னைக் குத்திவிடு ! ஒரே ஒரு முறைதான் ! அது என் இறுதி ஆணை. நாட்டுக்கு உதவிய உன் போர்வாளால் ஓர் உன்னத பணியை எனக்குச் செய் ! ஈராஸ்: மன்னித்திடுவீர் ! மறுக்கிறேன் உங்கள் கட்டளையை ! ஆண்டனி: சொன்னதைச் செய் ! உருவிடு உன் வாளை ஈராஸ் ! என் வேளை நெருங்கி விட்டது ! உன் கடமை என் கட்டளைக்குப் பணிவது ! ஒருமுறை மட்டும் பணிந்திடு ! உனக்கினி ஆணை என்னிடமிருந்து வராது ! ஈராஸ்: [மனம் ஒப்பிக் கண்ணீருடன்] நானிதைச் செய்ய வேண்டு மென்றால் நீங்கள் அப்புறம் திரும்பிக் கொள்ள வேண்டும். உங்கள் உன்னத முகம் நான் செய்வதைக் காணக் கூடாது ! ஆண்டனி : சரி, உன் ஆணைக்கு நான் அடி பணிகிறேன். [ஆண்டனி அப்புறம் திரும்பிக் கொள்கிறான். ஈராஸ் தன் வாளை உருவுகிறான்] ஈராஸ்: [மனம் வெதும்பி அழுகையுடன்] உருவி விட்டேன் என் வாளை, உங்கள் கட்டளைப்படி ! கட்டளை நிறைவேற வேண்டுமா ? ஆண்டனி: நன்றி ஈராஸ் ! ஓங்கிக் குத்து ! ஒரே குத்திலே என் வாழ்வு முடிய வேண்டும் ! செய், சீக்கிரம் செய். என்ன சிந்தனை செய்கிறாய் ? ஈராஸ்: என்னரிய பிரபு ! என்னினிய தலைவா ! என்னுயர்ச் சக்கரவர்த்தி ! என்னிறுதி வணக்கம் ! ஓங்கிக் குத்துவதற்கு முன் உம்மிட மிருந்து விடை பெறுகிறேன் ! விடை பெறுகிறேன் ! விடை அளிப்பீர் என் வேந்தே ! [கத்தியைத் தன் வயிற்றிக் குத்திக் கொண்டு அலறிய வண்ணம் வலியுடன் கீழே துடித்து வீழ்கிறான். குருதியில் புரள்கிறான்.] ஆண்டனி: [திரும்பிக் கொண்டு கீழே குனிந்து ஈராஸைத் தாங்கிக் கொண்டு] ஈராஸ் ! ஈராஸ் ! என்ன காரியம் செய்தாய் ? என்னைக் கொல்லக் கட்டளை இட்டால், உன்னைக் கொன்று விட்டாயே ! உன் மரணத்துக் காரண கர்த்தாவாக என்னைத் திருப்பி விட்டாயே ! [கோவென தலையில் கைவைத்து அழுகிறான்] ஈராஸ்: மகாவீரரே ! உம்மைக் கொல்வதிலிருந்து தப்பி விட்டேன் ….. விடை பெறுகிறேன். [ஈராஸ் கண்மூடி மரிக்கிறான்] ஆண்டனி: [மிக்க கவலையுடன்] முதலில் என் இதய ராணி போனாள், இப்போது என் படைத் தலைவனா ? தனிப்பட்டுப் போகிறேன் அனுதினமும் நான் ! எப்படிச் சாவது என்று தெரியாமல் போன எனக்கோர் வழி காட்டினாய் ஈராஸ் ! நீ கற்றுக் கொடுத்த பயிற்சியை நான் முயற்சி செய்கிறேன். நானொரு மணமகன் இப்போது ! காதலர் படுக்கையான கத்தியின் மீது நான் விழப் போகிறேன் ! [கீழே கிடந்த தன்வாளைத் தளத்தில் நட்டு அதன் மீது விழுகிறான், அலறுகிறான், புரள்கிறான், துடிக்கிறான். குருதி பொங்கி ஓடுகிறது.] [காவலரை நோக்கி] என்னுடலை அப்புறப் படுத்துங்கள். ஒரு வேண்டுகோள். என்னுயிர் குடித்த இந்த வாளை, என்னிறுதிக் கொடையாய் அக்டேவியஸ¥க்கு அளித்திடுவீர். முதல் காவலன்: அப்படியே செய்கிறோம் தளபதி. தெய்வமே ! நமது பெரும் தளபதியும் மாய்ந்தார். [யரோ வரும் அரவம் கேட்கிறது] யாரங்கே ? [கிளியோபாத்ராவின் தூதுவன் டையோமீடிஸ் வருகிறான்] டையோமீடிஸ்: நான்தான் டையோமீடிஸ் ! கிளியோபாத்ரா அனுப்பிய தூதன் ! தளபதி ஆண்டனிக்குத் தகவல் தர வந்திருக்கிறேன். எங்கே தளபதி ஆண்டனி ? ஆண்டனி: [தழுதழுத்த குரலில்] டையோமீடிஸ், ஈதோ கிடக்கிறேன் தரையில் ! உன்னை எப்போ அனுப்பினாள் கிளியோபாத்ரா ? எங்கே உள்ளாள் கிளியோபாத்ரா ? வானுலகத்திலா அல்லது வையகத்திலா ? செத்தவளா உன்னைத் தூது அனுப்பினாள் ? []   டையோமீடிஸ்: மகாராணி சாகவில்லை ! தளபதி, மகாராணி சாகவில்லை ! அவர் இன்னும் உயிரோடு இருக்கிறார். செத்ததாகச் செய்தி அனுப்பி உங்கள் கவனத்தைக் கவரச் செய்தார் ! அடடா என்ன தவறு நேர்ந்து விட்டது ? விளையாட்டு வினையாகி விட்டதே ! இப்போது மெய்யாக நீங்கள் மரணமாகி மகாராணி கவனத்தைக் கவர்ந்து விட்டீர் ! உண்மை பொய்யாகி விட்டது ! பொய் மெய்யாகி விட்டது ! உண்மை வாசலைத் தாண்டுவதற்குள் பொய் மூன்று தரம் உலகைச் சுற்றி விட்டதே ! ஆண்டனி: டையோமீடிஸ் ! காவலர் உதவியுடன் என்னை மாளிக்கைக்கு எடுத்துச் செல் ! கிளியோபாதராவிடம் விடை பெற வேண்டும். என்னைத் தூக்கிச் செல்வீர். [காவலர் உதவியுடன் டையோமீடிஸ் ஆண்டனியைத் தூக்கிச் செல்கிறான்] *********************   அங்கம் -8 காட்சி -9 மரித்துக் கொண்டி ருக்கிறேன்  ! மடிகிறேன் இனிய எகிப்த் நாடே ! அடியேன் விழைவது நொடிப் பொழுது தாமதம், ஆயிரம் முத்தம் உன்னுதடுகள் அளிக்கும் வரை எனக்கு ! ..     (ஆண்டனி)   வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)   இடருடன் மாறிப் போகும் என் முடிவு ! முந்தைய பெருமை எண்ணி மகிழ்ந்திடு ! வருந்த வேண்டாம் ! துக்கம் வேண்டாம் ! உன்னத மாதே ! ஒளிந்து சாகாதே ! ஒருமுறை இளவேந்தாய் உலகாண்டேன் ! ரோமனே ஒரு ரோமனை ஒழிக்கிறான் ! என் ஆத்மா நீங்குது ! என்னால் இனி ஏதும் இயலாது மாதே ! (ஆண்டனி) வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)   மரணம் வரும்முன் ஒருவர் கட்டிய மரண அரணுக்குள் வருவது தவறு ! மகிழ்வா ? எப்படி வரும் சார்மியான் ? மாதரே ! மாதரே! அணையும் நம் விளக்கு ! வெளியேறும் நம்மொளி ! பரிவுடன் வாரீர் ! புதைப்போம் அவரை, ரோமின் முறைப்படி ! பெருமை அளித்து மரணம் மதிப்போம் ! உன்னத இவ்வுடல் குளிர்ந்து போனது ! மாதரே ! மாதரே ! வாரீர் ! நமக்கு ஆதரவிலை வேதனை முடிவின்றி  ! … (கிளியோபாத்ரா) வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)   []   ரோமா புரியின் நிலைமை:  ஆண்டனியைத் தண்டிக்க அக்டேவியஸ் ரோமானியப் படையுடன் ஆக்டியக் கடற் பகுதியில் போரிட்டு வெற்றி அடைகிறான். தோற்றுப் போன ஆண்டனி ஆக்டேவியஸ் தூதரை விட்டு அனுப்பிய நிபந்தனைகளில் கையொப்பமிடுகிறான். ஆயினும் இருவருக்குள்ளும் நிரந்தரப் பகை உண்டாகி, ஆண்டனி எகிப்தில் அடைபட்டுப் போகிறான். போரில் தோல்வியுற்று அவமானப் பட்டு வேதனையில் உள்ள போது, கிளியோபாத்ரா அவன் கவனத்தைக் கவரத் தான் செத்து விட்டதாகச் செய்தி அனுப்புகிறாள். ஆண்டனி மரணத் தகவல் கேட்டு மனமுடைந்து, தன் கத்திமேல் பாய்ந்து தன்னுயிரை மாய்த்துக் கொள்கிறான். உயிர் பிரிவதற்குள் கிளியோபாத்ராவைக் காண விரும்பி, தன்னைத் தூக்கிச் செல்ல காவலரை வேண்டுகிறான்.   []   நேரம், இடம்: கிளியோபாத்ராவின் பிரமிட் மரண அரண். பகல் வேளை. நாடகப் பாத்திரங்கள்: கிளியோபாத்ரா, சார்மியான், ஈராஸ் மற்றும் சேடியர், தூதன் டையமீடிஸ், குற்றுயிருடன் பாடையில் ஆண்டனி. மற்றும் காவலளர்கள், காட்சி அமைப்பு: அக்டேவியஸ் தன்னைச் சிறைப்படுத்தி விடுவான் என்னும் அச்சமுடன் கிளியோபாத்ரா தனது மரண அரணில் ஒளிந்திருக்கிறாள். கிளியோபாத்ரா தன்னைத் தேடி ஆண்டனி வர வேண்டும் என்று காத்திருக்கிறாள். டையமீடிஸ் முன்வரக் காவலளர் குற்றுயிரான ஆண்டனியைப் பாடையில் தூக்கி வருகிறார். சார்மியான்: [கவலையுடன்] மகாராணி ! எத்தனை நாட்களுக்கு நாமினி மரண அரணில் இப்படி உயிரோடு அடங்கிக் கிடப்பது ? செத்தவரைப் புதைக்கும் கோட்டையில் உயிருடன் இருக்கும் நமக்கு வேலை இல்லை ! கிளியோபாத்ரா: நான் வெளியேறப் போவதில்லை சார்மியான் ! மரண அரணுக்கு வெளியே அக்டேவியஸின் ஓநாய்கள் காத்து நிற்கின்றன ! ஓநாய்களுக்கு உணவாகக் கிளியோபாத்ரா ஒருபோதும் ஆகமாட்டாள் ! இந்த மரண அரணை யாரும் அண்ட முடியாது ! என்னை அபகரிக்கவும் முடியாது ! சாகும் வரை பாதுகாப்பாக வாழும் அரணிது ! செத்த பின்னும் பாதுகாப்பாக அடங்கும் அரணிது ! என்னைப் பாதுகாக்க வந்த என்னரும் ஆண்டனியும் எங்கோ ஒளிந்திருக்கிறார். அவரது உயிருக்கும் ஆபத்துள்ளது. அதனால் ஆண்டனி என்னை இப்போது காப்பாற்ற இயலாது ! என்னைக் காத்துக் கொள்வது இனிமேல் நான்தான் ! சார்மியான்: எகிப்தின் மகாராணி நீங்கள் ! உங்கள் திருமுகத்தைக் காணாது மக்கள் புரட்சி எழும் எகிப்த் தேசத்தில் ! நீங்களின்றி அரசாங்கம் எப்படி நடக்கும் ? கிளியோபாத்ரா: அக்டேவியஸ் எகிப்தின் எல்லையில் வேட்டை நாய்போல் நிற்கும் போது நமது அரசாங்கம் சீராய் நடக்காது. வேண்டாம் சார்மியான். என்னைக் கட்டாயப் படுத்தாதே. நமக்கு வரும் இடர்கள் கணக்கில் அடங்கா ! வெளியேறுவதால் நமக்கு இடர்கள் அதிகமாகும். எதற்கு நாம் பழியாக வேண்டும் ? ஆண்டனிக்கு என்ன வாயிற்று என்று தெரியவில்லை ? என்னைக் காண வருவாரா ? [குற்றுயிரான ஆண்டனியைப் பாடையில் தூக்கிக் காவலர் வர, டையமீடிஸ் உள்ளே நுழைகிறான்] சார்மியான்: மகாராணி ! யாரோ கூட்டமாய் கோட்டைக் குள்ளே நுழைகிறார். [அதட்டலுடன்] யார் உள்ளே நுழைவது ? … மகாராணி ! அக்டேவியஸ் படைகளாய் இருக்குமா ? டையமீடிஸ்: நான்தான் டையமீடிஸ் ! அனுமதியுடன் நுழைகிறேன். ஆண்டனியைத் தூக்கி வருகிறோம். மரண வேதனையில் கிடக்கிறார் ! ஆண்டனியின் உயிரின்னும் ஒட்டி இருக்கிறது ! மகாராணியைக் காண ஆசைப்படுகிறார். இறுதியாக ஒருமுறை ! கிளியோபாத்ரா: [கோவெனக் கதறி] ஆண்டனி ! என்னருமை ஆண்டனி ! இந்த நிலையில் பார்க்கவா இன்னும் நான் உயிரோடு இருக்கிறேன் ? எனது பொய் மரணத்தை அறிவிக்க நான் தூதனுப்ப, உமது மெய் மரணத்தைச் சொல்ல நேராக வந்து விட்டீர் ! சூரியக் கடவுளே ! எரித்திடு எமது வானியல் கோளத்தை ! காலத்தின் கோலத்தை நானினிக் கண்டறிந்து என்ன பயன் ? கால மாற்றத்தை நம்மால் தடுக்க முடிய வில்லையே ! ஆண்டனி ! என்னுயிர் ஆண்டனி ! யாரும்மை இப்படிக் குத்தியது ? அக்டேவியஸின் ஒற்றரா ? பாதுகாப்புள்ள உமக்கு எப்படி இது நேர்ந்தது ? டையோமீடிஸ்: இல்லை ! ஆண்டனியைக் குத்தியது அக்டேவியஸின் ஓற்றரில்லை. மகாராணி செத்து மரண அரணில் புதைக்கப் பட்ட செய்தியை மெய்யென்று நம்பி விட்டார் ஆண்டனி ! மகாராணியைப் பின்தொடர தானே தன்னைக் குத்திக் கொண்டார் ! ஆண்டனி: [தலையைத் திருப்பி] செத்துக் கொண்டிருக்கிறேன் கிளியோபாத்ரா ! உன்னை விட்டு நீங்கிக் கொண்டிருக்கிறேன் ! எகிப்தை விட்டுப் போகிறேன் ! .. போகும் முன் என் இச்சை இது ! இந்த உயிர் பிரியும் முன் எனக்கு, உன்னினிய உதடுகளில் ஆயிரம் முத்தங்களைக் கொடு ! உன் முத்தங்கள் என் ஆயுளைச் சிறிது நீடிக்கும் ! அதற்குத்தான் இந்த உயிர் இன்னும் ஒட்டிக் கொண்டிருக்கிறது ! முத்தமிடு என்னை ! []   ஆண்டனியின் இறுதி மூச்சு கிளியோபாத்ரா: [பயத்துடன்] வேண்டாம் என்னிள வேந்தே ! ஆயிரம் முத்தமா ? வேண்டாம் ஆண்டனி ! நான் வெளியே வந்தால் அக்டேவியஸ் என்னைப் பற்றிக் கொள்வான் ! ரோமாபுரி வீதிகளில் அடிமையாய் இழுத்துச் சென்று என்னை அவமானப் படுத்துவான் ! என் அரணில் பாதுகாப்பாய் இருப்பது போதும். உங்களுக்காக இப்போது என் கண்ணீர்த் துளிகளை விடுகிறேன் ! ஆண்டனி: அச்சத்தின் பிடியில் உள்ளாய் கண்ணே ! ஆனால் அக்டேவியஸ் இங்கில்லை ! என் ஆத்மா பிரிவதற்குள் முத்தம் அளிப்பாய் ! இல்லையேல் விடை பெறுகிறேன் ! கிளியோபாத்ரா: [அரணிலிருந்து வெளியேறி ஓடி வந்து] ஈதோ வருகிறேன் என் பிரபு ! (மடியில் ஆண்டனியின் தலையை வைத்து) என் கண்ணீர் துளிகள் விடை கொடுக்கும். என் முத்தங்களும் விடை கொடுக்கும். முதல் முத்தம் தந்த என் உதடுகள் இறுதி முத்தமும் தர வேண்டும் [படுத்துள்ள ஆண்டனியின் கன்னங்களைத் தடவி விடாமல் முத்தமிடுகிறாள்] ஆண்டனி: மகிழ்ச்சியுடன் சாகிறேன் மகாராணி ! விடை கொடு ! தாகத்திற்குச் சிறிது மதுரசம் தா. [சார்மியான் மதுரசம் கொடுக்கிறாள்] நான் குடிக்கும் இறுதிக் குவளை மது ! நான் பேசும் கடைசி வார்த்தை இது ! கண்களில் ஒளி மங்கி வருகிறது ! குரலில் ஓசை தடுமாறிப் போகிறது. நினைவுகள் என்னிடம் விடை பெறுகின்றன ! என்னுலகம் இருள் பூசி வருகிறது ! [கண்களை மூடி] வருந்தாதே கண்ணே! வரலாற்றுச் சின்னமாகி விடுவேன் ! …… [ஆண்டனியின் உயிர் பிரிகிறது] கிளியோபாத்ரா: [கண்ணீருடன்] என்னுயிர்க் காதலர் மறைந்தார் ! ஆண்டனியை இழந்த பின் எனக்கு ஏதினி வாழ்வு ? நானொரு மூட மாது ! என் மரணத்தை காட்டித் துணைவர் மரணத்துக்கு வழி வகுத்தேன் ! விளையாட்டுத்தனத்தால் பெரும் பழியைத் தேடிக் கொண்டேன் ! பூமியில் தங்கக் கோலமிடும் பொன்னிலவு எனக்கில்லை இனி! பாலைவனப் புயலைத் தவிர எனக்கினித் தென்றல் வீசாது ! என்னினிய ஆண்டனி ! எப்படி விடை கொடுப்பேன் ? ஈராஸ்: [கண்ணீருடன்] மகாராணி ! ஆண்டனியின் உயிர் பிரிந்து விட்டது ! சார்மியான்: [கண்ணீருடன்] ஆம் மகாராணி ! ரோமாபுரிச் சிங்கத்தின் உயிர் பிரிந்து விட்டது ! டையமீடிஸ்: ஆண்டனியின் இறுதி இச்சை நிறைவேறியது. []   கிளியோபாத்ரா: மறுபடியும் விதவையாகி விட்டேன் ! என்னை மெய்யாக நேசித்த உன்னத வீரர் ! தனிமையில் நோக விட்டார் ! சீஸர் செத்தபின் என் சிறகுகள் ஒடிந்தன ! இப்போது ஆண்டனி மரித்தபின் என் கால்கள் முறிந்தன ! முடமாகிப் போனேன் ! சார்மியான் ! எனக்குச் செங்கோல் இனி எதற்கு ? [வீசி எறிகிறாள். சார்மியான் அதை எடுத்துப் பாதுகாப்பாய் வைக்கிறாள்] எனக்குக் கிரீடம் இனி எதற்கு ? [வீசி எறிகிறாள். சார்மியான் அதை எடுத்துப் பாதுகாப்பாய் வைக்கிறாள்] எனது இதயமான எகிப்த் நாடு இனி எதற்கு ? உயிருடன் மரண அரணுக்கு நான் ஓடி வந்ததது மாபெரும் தவறு ! பாபச் செயல் ! அதற்குக் கிடைத்த தண்டனை இது ! மாளிகையில் என் விளக்கொளி அணைந்தது ! என்னுலகம் இருள் பூசி வருகிறது ! சார்மியான் எனக்கினி யாருமில்லை துணைக்கு ! தனித்தினி வாழ முடியாது நான் ! எனக்கினி வாழ்க்கை இல்லை ! எனக்கொரு முடிவை நானே தீர்மானிப்பேன் ! *********************   அங்கம் -8 காட்சி -10   ஓ ஆண்டனி ! நின் இறப்புக்கு காரணம் நானே ! உனக்குத் தேயும் நாளாய்ச் செய நேரும் ! வெளி உலகில் சேர முடியாமல் போனது ! வருந்திக் கண்ணீர் வடிக்கிறேன் நானே, குருதி நெஞ்சு போல் நமக்கு அரச உறவு ! சகோதரா ! போட்டி எனக்கு நீ ! ஆயினும் ரோமாபுரிப் போரில் துணை நீ எனக்கு ! படைப்பில் உயர்ந்தவன் ! பார்க்கப் போனால் ரோம்சாம் ராஜியத் தோழன் நீ எனக்கு, (அக்டேவியஸ்) வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)   புரோகியூலியஸ் ! போ ! (கிளியோபாத்ராவிடம்) மானபங்கம் செய்யோம், மதிப்போம் என்று சொல் ! ஆறுதல் படுத்த அவள் பண்பாடுக்கு ஏற்ப ஆசா பாசத்துடன் பேசிடு இனிக்க ! இன்றேல் மானிட வலுவால் அவள் கீர்த்தி நமை வீழ்த்திட லாம் ! அவளை வெற்றிப் பரிசாய் ஏந்தி ரோமில் கெட்டி வைக்கலாம் நிரந்தர மாக ! விரைவாய்ச் செல் அவள் உரைப்பதைச் சொல்ல வா ! வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)   போர் நிலைமை: ஆண்டனியைத் தண்டிக்க அக்டேவியஸ் ரோமானியப் படையுடன் ஆக்டியக் கடற் பகுதியில் போரிட்டு வெற்றி அடைகிறான். தோற்றுப் போன ஆண்டனி ஆக்டேவியஸ் தூதரை விட்டு அனுப்பிய நிபந்தனைகளில் கையொப்பமிடுகிறான். ஆயினும் இருவருக்குள்ளும் நிரந்தரப் பகை உண்டாகி, ஆண்டனி எகிப்தில் அடைபட்டுப் போகிறான். போரில் தோல்வியுற்று அவமானப் பட்டு வேதனையில் உள்ள போது, கிளியோபாத்ரா அவன் கவனத்தைக் கவரத் தான் செத்து விட்டதாகச் செய்தி அனுப்புகிறாள். ஆண்டனி மரணத் தகவல் கேட்டு மனமுடைந்து, தன் கத்திமேல் பாய்ந்து தன்னுயிரை மாய்த்துக் கொள்கிறான். உயிர் பிரிவதற்குள் கிளியோபாத்ராவைக் காண விரும்பி, தன்னைத் தூக்கிச் செல்ல காவலரை வேண்டுகிறான்.  []   நேரம், இடம்: அலெக்ஸாண்டிரியாவில் ரோமாபுரித் தளபதி அக்டேவியஸின் கூடாரம். பகல் வேளை. நாடகப் பாத்திரங்கள்: அக்டேவியஸ், அக்கிரிப்பா, தொலபெல்லா, புரோகியூலியஸ் மற்றும் ரோமானியப் படைக் காவலளர்கள், ஆண்டனியின் தூதன் டெர்செட்டஸ். காட்சி அமைப்பு: அக்டேவியஸ் ஆசனத்தில் அமர்ந்து தனது போர் ஆலோசகருடன் உரையாடிக் கொண்டிருக்கிறான். ஆண்டனியைப் பார்த்துப் பேசி வரத் தூதன் தொலபெல்லாவை அனுப்பிட அழைக்கிறான். அக்டேவியஸ்: ஆண்டனி எங்கே ஒளிந்துள்ளார் என்று தெரிய வேண்டும் எனக்கு. கிளியோபாத்ரா அவருடன் இருக்கிறாளா அல்லது தனியே கிடக்கிறாளா என்று தெரிய வேண்டும் எனக்கு. தொலபெல்லா ! நீ ஆண்டனிக்கு முன்பு பணி புரிந்தவன் ஒரு சமயம் ! எகிப்தின் மறைவிடங்கள் தெரியும் உனக்கு ! கிளியோபாத்ராவின் அந்தரங்க அறைகளும் தெரியும் உனக்கு ! நீதான் தகுதியானவன். அதனால்தான் ஆண்டனியைக் கண்டு பேச உன்னை அனுப்புகிறேன் தொலபெல்லா ! தொலபெல்லா: ஆண்டனிடன் முடிவில் உடன்படிக்கை செய்து கொள்ளவா ? அக்டேவியஸ்: ஆண்டனி என் மைத்துனர். தங்கை அக்டேவியாவை ரோமாபுரி மாந்தர் அறிய திருமணம் புரிந்தவர். மேலும் ஆண்டனி ஒரு ரோமன் ! எதிப்த் வேசி கிளியோபாத்ரா ஆண்டனியின் மனைவியாகத் தகுதியற்றவள். ரோமில் காத்துக் கொண்டிருக்கிறாள் தங்கை அக்டேவியா. ரோமுக்கு மீளும் போது நான் ஆண்டனியோடுதான் செல்வேன். தொலபெல்லா: ஆண்டனி வர மறுத்தால் என்ன செய்ய வேண்டும் தளபதி ? அக்டேவியஸ்: [கோபமாக] என் தங்கை இதயம் பிளந்து விடும் தொலபெல்லா ! வெறுங்கையாகப் போனால் அக்டேவியா என் கையை நறுக்கித் துண்டாக்கி விடுவாள் ! சிறை செய்வேன் நிச்சயம் ஆண்டனியை ! சிங்கத்தைக் கூண்டில் அடைப்பதுபோல் அவரைப் பிடித்துத் தங்கை அக்டேவியா வசம் ஒப்படைத்த பிறகுதான் என் வேலை முடியும் எகிப்தில் ! தொலபெல்லா: முதல் பிரச்சனை சிங்கத்தை எப்படிப் பிடிப்பது ? பிடிக்க முடிந்தால்தானே பிறகு கூண்டில் அடைக்கலாம். []   அக்டேவியஸ்: அதற்குத்தான் நான் உன்னை அனுப்புகிறேன். மாறு வேடத்தில் படை வீரர்களைக் கூட்டிச் செல். தந்திரமாகப் பேசி, தனியாகப் பேசி ஆண்டனியைக் கைப்பற்ற வேண்டும். அக்கிரிப்பா: யாரோ வரும் அரவம் கேட்கிறது ! [அப்போது கையில் உடைவாளுடன் தூதன் டெர்செட்டஸ். நுழைகிறான்] யார் நீ ? எங்கிருந்து வருகிறாய் ? குருதி உலர்ந்த வாளை ஏன் கையில் வைத்திருக்கிறாய் ? டெர்செட்டஸ்: [அக்டேவியஸை வணங்கி] மேன்மை மிகு தளபதி அவர்களே ! இந்த வாள் எனது தளபதி ஆண்டனியின் உடைவாள் ! நான் ஆண்டனிக்குப் பணிசெய்த படைத் தூதன் ! அவரே என் தலைவராக இருந்தார் ! தன்னிகரில்லா தகுதி உள்ளவர் ! அவருக்குப் பணிசெய்த ரோமானியன் இப்போது உங்கள் படையில் சேர விரும்புகிறேன் ! அக்டேவியஸ்: [தூதனைக் கூர்ந்து நோக்கி] ஏன் உடைவாளில் குருதி உலர்ந்துபோய் உள்ளது ? ஆண்டனியின் உடைவாள் உன் கையிக்கு எப்படி வந்தது ? நீ அவரைக் குத்தினாயா ? டெர்செட்டஸ்: மதிப்புக்குரிய மகாப்பிரபு ஆண்டனி மரித்து விட்டார் ! ஆனால் நான் அவரைக் கொல்ல வில்லை. அந்த தகவலை முதலில் உங்களுக்குத் தெரிவிக்கிறேன். அடுத்து உங்கள் ரோமானியப் படையில் என்னைச் சேர்த்துக் கொள்வீரா ? அக்டேவியஸ்: [ஆவேசமாக எழுத்து] என்ன சொன்னாய் ? ஆண்டனி மரித்து விட்டாரா ? நம்ப முடியவில்லையே என்னால் ! நீ கொல்ல வில்லை என்றால், பிறகு எப்படி மரித்தார் என்று உடனே சொல். எதையோ நீ மறைக்க விரும்புகிறாய். டெர்செட்டஸ்: உண்மைதான் தளபதி ! உன்னதக் குருதி தோய்ந்த இந்த உடைவாளே அதற்குச் சாட்சி. தரையில் இந்த வாளை ஊன்றி அதன்மேல் பாய்ந்து தன்னுயிரை மாய்த்துக் கொண்டார். சாகும் போது இந்த வாளை உங்களுக்கு அடையாளச் சின்னமாகக் காட்ட வேண்டுமென என்னை வேண்டிக் கொண்டார் ! [உடைவாளை அக்டேவியஸ் கையில் தருகிறான்] அக்டேவியஸ்: [வருத்தமுடன் வாளைக் கையில் வாங்கிக் கொண்டு] அக்டேவியா விதவையாகிப் போனாள் மீண்டும் ! எப்படி அவள் முகத்தில் விழிப்பேன் ? ஆண்டனியை உயிருடன் ரோமுக்குக் கொண்டு வருவதாக அவளுக்கு வாக்களித்தேன் ! இப்போது அவர் செத்த உடலைக் கூட எடுத்துச் செல்ல வழியின்றிப் போனது ! இந்த உடைவாளை அக்டேவியா கையில் எப்படி நான் கொடுப்பேன் ? அக்கிரிப்பா: உத்தம ரோமாபுரித் தளபதியின் உன்னத வாளிது ! ஆண்டனிக்குத் தரும் மரியாதை அவரது உடைவாளுக்கு அளிக்கப்படும். அக்டேவியஸ்: அதிர்ச்சி தரும் அத்தகவல் ஆழமாகத் துளைக்கும் என் நெஞ்சை ! ஆண்டனியின் மரணம் அறிவிப்பு ஒரு பேரிடி எனக்கு ! ரோமுக்கு ! முத்தலைவரில் ஒருவர் செத்து விட்டார் ! அதுவும் முத்தலைவரில் மூத்தவர் ! ஆண்டனியில் பெயரில் ஒப்பந்தப்படிப் பாதி ரோம் உலகு உள்ளது ! ஜூலியஸ் சீஸருக்குப் பிறகு பேரும் புகழும் பெற்றது அந்தப் பெயர் ! சீஸரைக் குத்திக் கொலை செய்த கொடும் பகைவரை விரட்டியது அந்த உடைவாள் ! அது ஒரு வரலாற்றுச் சின்னமாக ரோமில் பாதுகாப்பாய் வைக்கக்படும். டெர்செட்டஸ்: அந்த வாளைக் கொண்டு வந்த எனக்கு உங்கள் படையில் பணிபுரிய ஒரு வாய்ப்பைத் தருவீரா ? அக்டேவியஸ்: [மனம் நொந்து, கண்ணீருடன்] நான்தான் காரணம் ஆண்டனி மரிப்பதற்கு ! கடற்படையைத் திரட்டி அவரை விரட்டிச் சென்றேன். தோற்கடித்து அவரது கப்பல்களை மூழ்கச் செய்தேன் ! விரட்டி விரட்டி வேங்கையை மூலையில் துரத்தி முடமாக்கினேன் ! மரிக்கச் செய்தேன் ! அரச வம்ச உறவு நீ ! சகோதரன் நீ ! எனக்கு போட்டி நீ ! ஆயினும் ரோமானியப் போரில் எனக்குத் துணைவன் நீ ! கடவுள் படைப்பிலே உயர்ந்தவன் ! பார்க்கப் போனால் ரோம் சாம்ராஜியத்தில் எனக்குத் தோழன் நீ,  அக்கிரிப்பா: [ஆச்சரியமுடன்] அக்டேவியஸ் ! இத்தனை மென்மையான மனதை உடையவர் நீவீர் என்பது இப்போதுதான் எனக்குத் தெரிந்தது ! …. யாரோ வரும் அரவம் கேட்கிறது ! யாரது வருவது ? எங்கிருந்து வருகிறாய் ? [ஓர் எகிப்தியன் நுழைகிறான்] எகிப்தியன்: நானோர் எளிய எகிப்தியன். எங்கள் மகாராணி என்னை இங்கே அனுப்பியுள்ளார். மறைவாக அவர் தன் மரண அரணில் தனியாக இருக்கிறார். தங்கள் ஆணைக்குக் கட்டுப்படத் தயாராக உள்ளார். அவளது சிற்சில அற்ப வேண்டுகோளுக்கு நீங்கள் உடன்படுவதாய் இருந்தால் நேரில் சந்திக்க வருவார் ! மகாராணிக்குரிய மதிப்பையும், பாதுகாப்பையும் அளித்தால், அவர் உங்களுடன் நேரில் உரையாட வருவார். அக்டேவியஸ்: [மகிழ்ச்சியுடன்] ஓ கிளியோபாத்ராவின் தூதனா நீ ! அஞ்ச வேண்டாம் ! ரோமானியர் கண்ணியமானவர், பரிவு மிக்கவர், பெண்ணை மதிப்பவர் ! ஆயுதம் ஏந்தாமல் எம்மைக் காணவரும் எந்த அரசியாரும் எமது மரியாதைக் குரியர். எகிப்தியன்: எங்கள் எகிப்த் தெய்வம் உங்களை ஆசிர்வதிக்கும் ! []   அக்டேவியஸ்: பூரிப்படைகிறேன். [புரொகியூலியஸைப் பார்த்து] புரொகியூலியஸ் ! வா இங்கே. இந்த எகிப்தியன் கூடச் செல் ! அக்டேவியஸ் அனுப்பிய தூதன் என்று சொல் ! கிளியோபாத்ரா, நமது விருந்தாளி என்று ஏற்றுக் கொள் ! மகாராணிக்குரிய மரியாதை அளிக்கப்படும் என்று வாக்கு அளித்திடு. அவளை ரோமுக்கு நமது வெற்றிச் சின்னமாய் அழைத்துச் செல்வோம் என்று சொல். போ விரைவில் போ ! நான் சொல்லிய தகவலைச் சொல்லி, கிளியோபாத்ராவின் பதிலையும் எனக்குக் கூறிடச் சீக்கிரம் வா ! ஆண்டனி மரித்த பிறகு கிளியோபாத்ரா எப்படி இருக்கிறாள் என்று அறிந்து வா !  [புரோகியூலிஸ் போகிறான்.] *********************   அங்கம் -8 காட்சி -11 இறுதிக் காட்சி எகிப்த் அரசியைப் பிச்சை எடுக்க வைத்தால் இப்படிக் கேட்பாள் என்று அவரிடம் சொல் ! “எகிப்த் நாட்டுக்கு மீண்டும் என்னையே பட்டத்து ராணி யாக்கு என்றுதான் ! என் வசப்பட்ட நாடுகளை மகனுக்கு நான் ஈவதுபோல் எழுத வேண்டும் அக்டேவியஸ் ! முன்னால் அவருக்கு மண்டி யிட்டு நன்றி சொல்லத் தயார் என்றும் சொல் ! …     (புரோகியூலியஸிடம் கிளியோபாத்ரா) வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)     எனக்குள்ள தெய்வ நியதி இது: என் வேந்தருக்கும் என் பிரபுவுக்கும் அடி பணிவது ! எனது காரணத்தை தெளிவு படுத்துவேன். என் காம இச்சைக் குறைகள், மிகைகள் என் பலவீனமாய் ஒப்புக் கொள்வேன் ! … ஈதோ என் நிதியாளர், எடுத்துக் கொடுப்பார் எனது சொத்து, நகை, பொன் நாணயம் அனைத்தும் கொடுப்பார் உமக்கு ! என்னிறுதி உறுதி மொழி அதுவே ! ….   (கிளியோபாத்ரா) வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)   சிறையில் கிடப்பேன் என்று எண்ணாதீர் ! மதுவருந்த மாட்டேன் நான் அங்கு ! புலால் உண்ண மாட்டேன் நான் அங்கு ! வைக்கோல் மெத்தையில் துயில மாட்டேன் ! ரோமானிய மன்றக் கூண்டில் என்னை ஏற்றலாம் என்று கனவு காணாதீர் ! ரோமானிய வீதிகளில் என்னை வெற்றிச் சிறை மாதாய்க் காட்டி சுற்றிடலாம் என்று எண்ணாதீர் ! அதற்குப் பதிலாக எகிப்த் குப்பைக் கிடங்கில் புதைந்து போவதில் பூரிப்ப டைவேன் ! என்னாட்டில் மாபெரும் பிரமிட் ஆலயம் எழுந்து நிற்குது எனை ஏற்றுக் கொள்ள ! (கிளியோபாத்ரா) வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)   உன்னை, என்னை எகிப்த் பொம்மையாய் ரோமாபுரி வீதிகளில் காட்டிச் செல்லவா ? பொதுநபர், ஊழியர் அழுக்கு உடையில் கம்பு, சுத்தியலுடன் கைகளை உயர்த்தி ஆரவாரம் செய்ய, அவரது அருவருப்பு வேர்வை ஆவியை சுவாசிக்கவா ? அதோ “வேசி போகிறாள்” என்றவர் ஒன்றாய்த் தூசிப்பதை நம் காதில் கேட்பதா ? (கிளியோபாத்ரா) வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)     []     போர் நிலைமை : ஆண்டனியைத் தண்டிக்க அக்டேவியஸ் ரோமானியப் படையுடன் ஆக்டியக் கடற் பகுதியில் போரிட்டு வெற்றி அடைகிறான். தோற்றுப் போன ஆண்டனி ஆக்டேவியஸ் தூதரை விட்டு அனுப்பிய நிபந்தனைகளில் கையொப்பமிடுகிறான். ஆயினும் இருவருக்குள்ளும் நிரந்தரப் பகை உண்டாகி, ஆண்டனி எகிப்தில் அடைபட்டுப் போகிறான். போரில் தோல்வியுற்று அவமானப் பட்டு வேதனையில் உள்ள போது, கிளியோபாத்ரா அவன் கவனத்தைக் கவரத் தான் செத்து விட்டதாகச் செய்தி அனுப்புகிறாள். ஆண்டனி மரணத் தகவல் கேட்டு மனமுடைந்து, தன் கத்திமேல் பாய்ந்து தன்னுயிரை மாய்த்துக் கொள்கிறான். உயிர் பிரிவதற்குள் கிளியோபாத்ராவைக் கண்டு பேசி அவள் முன்பாக ஆண்டனி உயிரை விடுகிறான். அக்டேவியஸ் ஆண்டனி இறந்த செய்தியைக் கேட்டு, கிளியோபாத்ராவுக்குத் தூதனை அனுப்புகிறான்.    []   நேரம், இடம்: அலெக்ஸாண்டிரியாவில் கிளியோபாத்ராவின் தனியறை. பகல் வேளை. நாடகப் பாத்திரங்கள்: கிளியோபாத்ரா, மகன் சிஸேரியன் (எட்டு வயது), ஈராஸ், சார்மியான், புரோகியூலியஸ், அக்டேவியஸ், தொலபெல்லா, மற்றும் ரோமானியப் படையினர். காட்சி அமைப்பு: கிளியோபாத்ரா ஆண்டனி மரித்த துக்கத்தில் சோகமாய்க் கண்ணீருடன் வீற்றிருக்கிறாள். பக்கத்தில் மகன் சிஸேரியன் தாயின் சோகத்தைக் கண்டு வருந்துகிறான். அப்போது அக்டேவியஸின் தூதன் புரோகியூலிஸ் நுழைகிறான். சிஸேரியன்: [தாயின் கண்ணீரைத் துடைத்து] அன்னையே ! ஏன் உங்கள் கண்கள் சிவந்துபோய் உள்ளன ? கண்கள் என்றும் இல்லாதபடி ஏனின்று கண்ணீரைப் பொழிகிறது ? கிளியோபாத்ரா: [வருத்தமுடன் மகன் சிஸேரியனை பார்த்து] மகனே ! மனப்புண் ஆறாமல் போகும் போது அது கண்களில் ஆறாகப் பெருகுகிறது. மனத்தின் கொதிப்பே கனல் நீராகக் கண்களில் சிந்துகின்றன. சிஸேரியன்: அன்னையே ! மனப் புண்ணுக்கு மருந்தில்லையா ? கிளியோபாத்ரா: ரணப் புண்ணுக்குத்தான் மருந்துண்டு ! மனப் புண்ணுக்கு மருந்தில்லை மகனே ! தீராக் கவலையே ஆறா மனப் புண்ணை உண்டாக்கும். சிஸேரியன்: தீராக் கவலை எப்படி உண்டானது அன்னையே ? கிளியோபாத்ரா: தீராக் கவலை முதலில் உன்னைப் பற்றி ! ஆறாக் கவலைப் பிறகு என்னைப் பற்றி ! என்னை முதலில் பாதுகாத்த உன் மாவீரத் தந்தை சீஸர் கொல்லப்பட்டு மாண்டார் ! பிறகு என்னைக் காப்பாற்றி வந்த ஆருயிர்க் காதலர் ஆண்டனி உயிரை மாய்த்துக் கொண்டார் ! இனி நமக்குத் துணைவர் யாருமில்லை ! அதனால் எனக்கு ஆறாக் கவலை ! உன்னைக் காத்து வந்த எனக்கு இப்போது அபாய எச்சரிக்கை வந்திருக்கிறது ! உன்னை இனிமேல் யார் பாதுகாப்பது என்பது எனக்குத் தீராக் கவலை ! []   சிஸேரியன்: அன்னையே நீங்கள் இப்படி அஞ்சியதை நான் இதுவரைக் கண்டதில்லையே ! என்ன அபாயம் உங்களுக்கு வரப் போகிறது ? நமது எகிப்த் படைகள் இருக்க ஏன் பயப்பட வேண்டும் ? கிளியோபாத்ரா: நீ ரோமாபுரிக்கு வேந்தன் ஆவாய் என்னும் கனவு உன் தந்தை சீஸர் செத்ததும் அழிந்து போனது ! நீ எகிப்துக்கு பாரோ பரம்பரை வேந்தனாய் ஆளுவாய் என்னும் கனவு ஆண்டனி மரித்ததும் அழிந்து போனது ! இப்போது உன் உயிரைக் காப்பது எப்படி என்பதே பிரச்சனையாகி விட்டது ! நமது பகைவரின் படைப்பலம் நம்மை விடப் பலமடங்கு மிகையானது ! சிஸேரியன்: நான் எங்கே போக வேண்டும் அன்னையே ? எகிப்த்துக்கு என்ன நேரிடப் போகுது ? கிளியோபாத்ரா: என்ன நடக்கும் என்று எனக்கே தெரியாது மகனே ! நம் நாட்டுக்குப் பாதுகாப்பாக இருந்த வேலி முறிந்து போனது ! எந்த நேரத்திலும் எகிப்தைக் கைப்பற்றிப் பகைவர் நம்மை மீண்டும் அடிமைப் படுத்தலாம். ஆதலால் என்னுடன் வாழ்ந்த நீ இப்போது வேறு இல்லத்தில் வாழப் போகிறாய். அன்னியருடன் நீ வாழப் போகும் தருணம் வந்து விட்டது ! என்னை மீண்டும் காணும் தருணம் எப்போது என்பது தெரியாது ! நான் உன்னைப் பிரியும் வேளை வந்து விட்டது மகனே ! [கண்ணீருடன் கட்டிப் பிடித்து முத்தமிடுகிறாள்] [சார்மியானைப் பார்த்து] சார்மியான் சிஸேரியனை அழைத்துச் செல் ! நான் ஏற்பாடு செய்த நபரிடம் அடைக்கலம் செய்திடு ! சீக்கிரம் போ ! யாரோ வருகிறார் [மகனைத் தழுவி மீண்டும் முத்தமிடுகிறாள். சார்மியான் சிஸேரியனை அழைத்து விரைவாகச் செல்கிறாள்.] [அப்போது வேறு திசையிலிருந்து அக்டேவியஸின் தூதன் புரோகியூலியஸ் நுழைகிறான்] புரோகியூலியஸ்: [மகாராணிக்கு வந்தனம் செய்து] மகாராணி ! என்பெயர் புரோகியூலியஸ். ரோமாபுரித் தளபதி அக்டேவியஸ் அனுப்பிய தூதன் நான் ! நல்ல தகவலைக் கொண்டு வந்திருக்கிறேன் ! உங்களுக்கு அக்டேவியஸ் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறார் ! ரோமாபுரித் தளபதி ஆண்டனி உங்கள் நாட்டிலே உயிர் மரித்ததற்கு வருத்தம் தெரிவிக்கிறார் ! கிளியோபாத்ரா: ஓ ! நீதான் புரோகியூலியஸா ? நினைவிருக்கிறது எனக்கு. ஆண்டனி உன்னைப் பற்றி என்னிடம் சொல்லி இருக்கிறார். உன்னை நம்பலாம் என்றும் என்னிடம் சொல்லி இருக்கிறார். என்னை நீ ஏமாற்றினாலும் அதுவும் ஏற்புடையதே. உங்கள் தளபதி எகிப்த் மகாராணியைப் பிச்சைக்காரி ஆக்க நினைத்தால் அவரிடம் நீ சொல் ! எகிப்த் நாட்டைக் கொடுத்து என்னை மீண்டும் பட்டத்து ராணியாக்கு என்றுதான் பிச்சை கேட்பேன் என்று சொல் ! இன்னும் சொல்லப் போனால், எகிப்தைச் சேர்ந்த நாடுகளுக்கு என் மகனை வேந்தனாக்கு என்று பிச்சை கேட்பேன் என்று சொல் ! என் கைவசமுள்ள நாடுகளை மகனுக்கு நான் அளிப்பதுபோல், அக்டேவியஸ் அவனுக்குத் தரவேண்டும். அதற்கு அவர் முன்னால் நான் மண்டியிட்டுக் கேட்கவும் தயார் என்று சொல் ! புரோகியூலியஸ்: [மகிழ்ச்சியோடு] அஞ்ச வேண்டாம் மகாராணி ! தளபதி அக்டேவியஸ் உங்களைப் பரிவுடன் நடத்துவார் ! ஆசைப் பட்டதை அவரிடம் கேளுங்கள் ! அளிப்பார் அவர் ! உங்கள் கோரிக்கையை அவரிடம் சொல்கிறேன் ! அவரை அன்புடன் நாடும் உங்களைப் பற்றி எடுத்துச் சொல்வேன் உறுதியாக ! எங்கள் வெற்றிப் பிரபு உங்களை மதிப்புடன் வரவேற்பார். கிளியோபாத்ரா: [மிக்கப் பணிவுடன்] அக்டேவியஸின் ஆணைக்குக் கட்டுப்படும் மகாராணி நான். அவரை எகிப்த் நாட்டின் தலைவராக ஏற்றுக் கொண்டு என் வாழ்த்துக்களை அனுப்புகிறேன். புரோகியூலியஸ்: உங்கள் பணிவான வாழ்த்துக்களைத் தளபதிக்கு வழங்குகிறேன் மகாராணி ! ஆண்டனி மரித்துத் தனியாகப் போன உங்கள் பரிதாப வாழ்வுக்கு வருந்துகிறேன் ! [அப்போது பெருத்த ஆரவாரம் கேட்கிறது. திடீரென பத்துப் பதினைந்து ரோமானியப் படையினர் உள்ளே புகுந்து கிளியோபாத்ராவைக் கைது செய்கிறார்] ஈராஸ்: [ஓவென்று அலறிக்கொண்டு] மகாராணி ! என்ன வஞ்சம் இது ? [சார்மியான் தனியாக ஓடி வருகிறாள்] சார்மியான்: [கோபத்துடன்] மூர்க்கர் ! முரடர் ! வஞ்சகர் ! புரோகியூலியஸ்: [தாழ்மையுடன்] மன்னிக்க வேண்டும் மகாராணி ! ரோமானியச் சம்பிரதாயம் இது ! ரோமானியப் படையினர் உங்களை இனிமேல் பாதுகாப்பார் ! பயப்பட வேண்டாம் ! எங்கே உங்கள் மகன் சிஸேரியன் ? அவனுக்கும் தனியாக ரோமானியப் பாதுகாப்பு உண்டு. [ரோமானியப் படைகளிடம்] அக்டேவியஸ் வரும்வரை கிளியோபாத்ராவைப் பாதுகாப்பீர் ! கிளியோபாத்ரா: [திடீரென்று தன் வாளை உருவிப் படைகளை நோக்கி] தொடாதீர் என்னை ! என் மகன் எங்குள்ளான் என்பது தெரியாது. [புரோகியூலியஸைப் பார்த்து] தேனாகப் பேசிய தெல்லாம் தேளாகக் கொட்டுவதற்கா ? ரோமானியர் யோக்கியர் என்று தவறாக எடை போட்டு விட்டேன் ! உங்களிடம் சிறைப்படும் முன்பு நான் உயிருக்கு விடுதலை அளிப்பேன் ! புரோகியூலியஸ்: [வேகமாய் நெருங்கி] மகாராணி ! வேண்டாம் ! அது தவறு ! உங்கள் உயிரைப் போக்கிக் கொள்ள முனையாதீர் ! அஞ்ச வேண்டாம் ! அக்டேவியஸ் உங்களுடன் நேராக உரையாடப் போகிறார் ! ரோமானியப் பாதுகாப்பு அதற்குத்தான். [கிளியோபாத்ராவின் கைவாளைப் பிடுங்கிக் கொள்கிறான்] கிளியோபாத்ரா: [கோபத்துடன்] உங்கள் தளபதியைக் காண எனக்கு விருப்ப மில்லை இப்போது ! வஞ்சகருடன் உரையாட விருப்ப மில்லை எனக்கு ! ஆண்டனி மரித்த நாளே நானும் மரணம் அடைந்திருக்க வேண்டும் ! காலம் தாமதித்தது தவறாகப் போனது. புரோகியூலியஸ்: ரோமானியப் பாதுகாப்பில் மகாராணிக்கு எந்த மானபங்கமும் நேராது ! அஞ்ச வேண்டாம் ! அக்டேவியஸ் பரிவு மிக்கவர் ! உங்களையும், உங்கள் அருமைப் புதல்வனையும் ரோமாபுரிக்கு அழைத்துச் செல்ல அக்டேவியஸே நேராக வரப் போகிறார். கிளியோபாத்ரா: [கோபத்துடன்] அயோக்கியர்களே ! அருகில் நிற்காதீர் ! நான் சிறையில் கிடப்பேன் என்று எண்ணாதீர் ! புலால் உண்ண மாட்டேன் நான் ! மதுவருந்த மாட்டேன் நான் ! வைக்கோல் மெத்தையில் துயில மாட்டேன் ! பட்டினி கிடந்து சாவேன் ! ரோமானிய மன்றக் கூண்டில் என்னை ஏற்றலாம் என்று கனவு காணாதீர் ! ரோமானிய வீதிகளில் என்னைச் சிறை மாதாய் இழுத்துச் சென்று சித்திரவதை செய்யலாம் என்று கோட்டை கட்டாதீர் ! அதற்குப் பதிலாக எகிப்த் குப்பைக் கிடங்கில் புதைந்து போவதில் பூரிப்படைவேன் ! பிரம்மாண்டமான பிரமிட் புதை ஆலயம் எழுந்து நிற்கிறது என்னை ஏற்றுக் கொள்ள ! தள்ளி நிற்பீர் ! உங்கள் மூச்சுக் காற்று கூட என்மீது படக் கூடாது ! உமது வாய் எச்சில் என் மீது சிதறக் கூடாது ! தள்ளி நிற்பீர் ! []   [அக்டேவியஸின் தூதன் புரோகியூலிஸ் ரோமானியப் படையுடன் நுழைந்து தந்திரமாகப் பேசிக் கிளியோபாத்ராவைச் சிறைப்படுத்துகிறான்.] கிளியோபாத்ரா: [கோபத்துடன்] அயோக்கியர்களே ! அருகில் நிற்காதீர் ! சிறைப்பட்டாலும், நான் சிறையில் கிடப்பேன் என்று மட்டும் எண்ணாதீர் ! புலால் உண்ண மாட்டேன் நான் ! மதுவருந்த மாட்டேன் நான் ! வைக்கோல் மெத்தையில் துயில மாட்டேன் நான் ! பட்டினி கிடந்து சாவேன் ! ரோமானிய மன்றக் கூண்டில் என்னை ஏற்றலாம் என்று கனவு காணாதீர் ! ரோமானிய வீதிகளில் என்னைச் சிறை மாதாய் இழுத்துச் சென்று அவமானம் செய்யலாம் என்று கோட்டை கட்டாதீர் ! அதற்குப் பதிலாக எகிப்த் குப்பைக் கிடங்கில் புதைந்து போவதில் பூரிப்படைவேன் ! பிரம்மாண்டமான பிரமிட் புதை ஆலயம் எழுந்து நிற்கிறது என்னை ஏற்றுக் கொள்ள ! தள்ளி நிற்பீர் ! உங்கள் மூச்சுக் காற்று கூட என்மீது படக் கூடாது ! உமது வாய் எச்சில் என் மீது சிதறக் கூடாது ! தூரமாய்த் தள்ளி நிற்பீர் ! நான் எகிப்த் மகாராணி ! புரோகியூலியஸ்: மனதைத் தளர விடாதீர் மகாராணி ! உங்கள் உயிருக்குப் பங்கம் விளையாது ! கிளியோபாத்ரா: [ஆத்திரமுடன்] என்னை மான பங்கப் படுத்த உங்கள் படை தயாராக இருப்பது எனக்குத் தெரியாமல் போகவில்லை ! [அப்போது தொலபெல்லா உள்ளே நுழைகிறான்] தொலபெல்லா: புரோகியூலியஸ் ! நீ என்ன பண்ணி விட்டாய் ? மகாராணி கோபத்துடன் தோன்றுகிறார் ! தளபதி அக்டேவியஸ் ஆணைப்படி செய்தாயா ? அல்லது அவமானப் படுத்தினாயா ? அக்டேவியஸ் உன்னை அழைக்கிறார், போ நான் மகாராணியைப் பாதுகாக்கிறேன். புரோகியூலியஸ்: போகிறேன். மகராணியை மதிப்புடன்தான் நடத்தினேன் அவ்விதமே நீயும் நடத்து. பரிவுடன் பேசு. பண்புடன் பேசு. பாசமுடன் பேசு [கிளியோபாத்ராவைப் பார்த்து] மகராணி ! உங்கள் சார்பாக அக்டேவியஸிடம் நான் என்ன சொல்ல வேண்டும் ? கிளியோபாத்ரா: [ஆங்காரமாக] செத்துப் போவேன் என்று சொல் ! புரோகியூலிஸ்: [அதிர்ச்சி அடைந்து] மகாராணி ! எப்படிச் சொல்வேன் அதை ? அவராட்சியைத் தாங்கள் ஏற்றுக் கொள்வதாய்ச் சொல்கிறேன். போய் வருகிறேன். [போகிறான்] தொலபெல்லா: மதிப்புக்குரிய மகாராணி ! நான் சொன்னதைக் கேட்டீர் அல்லவா ! என் கடன் உங்களைப் காப்பதே ! அஞ்ச வேண்டாம் ! []   கிளியோபாத்ரா: அப்படிச் சொல்லித்தான் என்னைச் சிறைப்படுத்தி யுள்ளார். சிறைப்பட்ட எனது உறுப்புகள் யாவும் செயலற்றுப் போயுள்ளன ! என்ன சொன்னாய் நீ என்பது செவியில் படவில்லை எனக்கு. தொலபெல்லா: [பரிவுடன்] உங்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். நான் மோசடி செய்பவன் அல்லன். முழு நம்பிக்கை வைக்கலாம் என்மேல் ! கிளியோபாத்ரா: [ஆத்திரமாக] ரோமானியக் களிமண் எல்லாம் ஒன்றுதான் ! நிறம் வேறாகத் தெரிந்தாலும் குணம் ஒன்றுதான் ! உன் பையில் என்ன சூட்சம் ஒளிந்துள்ளது ? இப்போது போனாரே உமது முதல் தூதர் அவர் சாமர்த்தியமாகப் பேசி என்னைச் சிறைப்படுத்திச் சென்றார். சுற்றி வந்து வஞ்சகமாய்ச் சதி செய்யாமல் நேராகவே உங்கள் திட்டத்தை வெளியிடலாம். நான் அடைபட்டுப் போன மான் ! என் கனவைச் சொன்னால் நீ சிரிப்பாய் ! தொலபெல்லா: நீங்கள் சொல்வது எனக்குப் புரியவில்லை மகாராணி ! கிளியோபாத்ரா: நான் மனத்துயரில் கிடக்கிறேன். எனது முதற்கனவின் விளைவாக ரோமாபுரிச் சக்கரவர்த்தி ஜூலியஸ் சீஸரின் மனைவியாக மாறினேன். அவர் கொல்லப்பட்ட பிறகு அடுத்த என் கனவில் ஆண்டனி மூவரில் ஒரு சக்கரவர்த்தியாக எனக்குத் துணை இருந்தார். இனி அப்படி ஒரு கனவு, தூக்கம் வராத எனக்குத் தோன்றுமா ? கனவு வந்தாலும் அப்படி ஒரு மாவீரரை நான் இனிக் காண்பேனா ?  தொலபெல்லா: நிச்சயம் காண்பீர் மகாராணி ! உங்கள் புதுக்கனவு பலிக்கும் ! அடுத்து வருகிறார் அக்டேவியஸ் ! கிளியோபாத்ரா: ஓக் மரம்போல் உறுதியான ஆண்டனி தேவலோகம் சென்று விட்டார். ஆங்கு சூரிய சந்திரரைப் பாதையில் சீராகத் தூண்டி விட்டு, இச்சிறிய பூமிக்கு விளக்கேற்றினார் ! அந்த விளக்கொளியை அணைக்க இப்போது புயல் அடிக்கப் போகிறது ! தொலபெல்லா: முற்றிலும் உண்மை மகாராணி ! கிளியோபாத்ரா: [சற்று கூர்மையாகப் பார்த்து] எனக்கு அந்தப் புயலைப் பற்றிச் சொல்வாயா ? தொலபெல்லா: நீங்கள் கேட்பது புதிர்போல உள்ளது ! புரியும்படிச் சொல்வீரா ? கிளியோபாத்ரா: [மிக்கக் கவலையுடன்] அக்டேவியஸ் என்னை என்ன செய்யப் போகிறார் என்பது உனக்குத் தெரியுமா ? தொலபெல்லா: எனக்குத் தெரிந்ததைச் சொல்ல அச்சம் உண்டாகுது ! ஆனால் அஞ்ச வேண்டிய தில்லை மகாராணி ! என்வாயால் நான் அதைச் சொல்லக் கூடாது ! சொன்னால் என் தலை துண்டாகும் ! கிளியோபாத்ரா: [கனிவுடன்] நான் படும் இன்னலை அறிவாய் நீ ! தயவு செய்து சொல் ! என் மீது பரிவு காட்டு ! உன் அன்பு மனதைத் திறந்து காட்டு ! தொலபெல்லா: [தடுமாறிக் கொண்டு] மகாராணி ! அக்டேவியஸ் உங்களைக் கண்ணியமாகவே நடத்துவார் ! கவலைப் படாதீர் ! கிளியோபாத்ரா: [ஆங்காரமாக] பொய் சொல்கிறாய் நீயும் ! அறிவு கெட்டவனே சொல் ! ரோமாபுரித் தெரு வீதிகளில் விலங்கிட்டு என்னை வெற்றிச் சின்னமாய் நடத்திச் செல்லப் போகிறார், இல்லையா ? தொலபெல்லா: ஈதோ தளபதியே வருகிறார். கேளுங்கள். தன் சகாக்களுடன் உங்களைக் காண வருகிறார். [ரோமானியக் காவலன் முன்னறிவிக்க அக்டேவியஸ் இராணுவ உடையில் தனது சகாக்களான காலஸ், மாசொனஸ் உடன்வர முன்னே வருகிறார். காவலர் யாவரும் இரைச்சலின்றி அமைதியாக அணியில் நிற்கிறார்.] காவலன்: [பலத்த குரலில்] ஓதுங்கி நிற்பீர் ! ரோமாபுரித் தளபதி மாண்புமிகு அக்டேவியஸ் வருகிறார். அக்டேவியஸ்: [ஆர்வமாக] எங்கே எகிப்த் பேரரசி ? தொலபெல்லா: ஈதோ இருக்கிறார் மகாராணி எமது பாதுகாப்பில் ! கிளியோபாத்ரா: [முன்வந்து மண்டியிட்டு] வந்தனம். வருக, வருக மாவீரர் அக்டேவியஸ் ! உங்கள் தடம்பட்டு எனது எகிப்த் நாடு புனிதம் அடைகிறது ! உங்கள் ஆட்சிக்கு அடிபணிகிறது ! உங்கள் ஆணைக்குக் கீழ்ப்படிய எகிப்தரசி இங்கே காத்திருக்கிறாள் ! அக்டேவியஸ் [கண்ணியமாக] மண்டியிடத் தேவையில்லை மகாராணி ! எழுந்து உனது ஆசனத்தில் உட்காருவீர் ! கிளியோபாத்ரா: [எழுந்த வண்ணம்] அப்படித்தான் எங்கள் தெய்வ நியதியில் எழுதப்பட்டிருக்கிறது. என் பிரபுவுக்கும், என் தெய்வத்துக்கும் நான் கீழ்ப்படிந்து வணங்கக் கடமைப் பட்டவள் ! அக்டேவியஸ்: உனது செயல்கள் எனக்குப் பிடிக்கா விட்டாலும் எகிப்த் நாட்டின் ஆட்சிப் பொறுப்பு ரோமைச் சார்ந்தது. எமக்கு நீ உண்டாக்கிய காயங்கள் ஆறவில்லை ஆயினும், சந்தர்ப்பத்தால் நேர்ந்தன என்று அவற்றை ஒதுக்கி வைக்கிறேன். கிளியோபாத்ரா: [தலை தூக்கி] நான் என்ன காயங்கள் உமக்கு உண்டாக்கினேன் ? எப்போது உண்டாக்கினேன் ? அக்டேவியஸ்: முதலில் சீஸரின் மனைவி கல்பூர்ணியாவை நீ காயப்படுத்தினாய் ! இரண்டாவது ஆண்டனியின் மனைவி அக்டேவியாவை நீ புண்படுத்தினாய் ! அக்டேவியா என்னருமைச் சகோதரி ! அடுத்து சீஸருக்கு ஆண்வாரிசை அளித்து ரோமாபுரி செனட்டாரைக் காயப்படுத்தினாய் ! ஒரு கீழ்நாட்டரசியின் மகன் ரோமாபுரிக்குப் பட்டத்து அரசனாய் வரலாம் என்னும் பயத்தை உண்டாக்கி விட்டாய் ! எகிப்துக்குக் கப்பம் வாங்க வரும் அத்தனை தளபதிகளையும் வசீகரப் படுத்தி விடுகிறாய் ! ரோமானிய மாதரிடம் இல்லாத ஒரு மந்திர சக்தி ஏதோ எகிப்த் மகாராணிக்கு உள்ளது ! கிளியோபாத்ரா: ரோமாபுரியின் குளிர்ச்சியை வெறுத்து எகிப்தின் வெப்பத்தை நாடி வருபவர் உமது படைத் தளபதிகள் ! நான் அவரைத் தேடிப் போகவில்லை ! எகிப்தில் அவருக்குச் சுதந்திரம் அதிகம் ! சுகபோகம் அதிகம் ! உபசரிப்பு அதிகம் ! மதுவும், மாதரும், மன மகிழ்ச்சியும் அதிகம் ! ரோமாபுரியில் ஏன் அவை எல்லாம் மலிவாகக் கிடைப்பதில்லை ? அக்டேவியஸ்: எகிப்தில் திறமையாகப் பேசும் மாதர் அதிகம் என்பது நன்கு தெரிகிறது ! மகாராணி ! இப்போது நான் சொல்வதைக் கேட்பீர் ! என் நிபந்தனைக்கு உட்பட்டால் உமக்குச் சலுகைகள் அளிப்பேன். ஒப்பா விட்டால் …. ! கிளியோபாத்ரா: என் நிபந்தனைக்கு உடன்பட்டால், உங்கள் நிபந்தனைக்கு நான் உடன்படுவேன். சரி நான் ஒப்பா விட்டால் … என்னை என்ன செய்வீர் ? அக்டேவியஸ்: [ஆச்சரியமுடன்] ஓ ! உங்கள் நிபந்தனை ? சொல்வீர் ! ஒப்பா விடாலும், அதைக் கேட்கிறேன், சொல்வீர் ! கிளியோபாத்ரா: எனது சொத்து, நகை, பொன் நாணயங்கள் அத்தனையும் உங்களுக்குத் தருகிறேன். எகிப்த் முழுவதையும் ரோமுக்குத் தந்து விடுகிறேன் ! ஆனால் எகிப்த் நாட்டுக்கு என் மகன் சிஸேரியனை மன்னனாக ஆக்க வேண்டும் ! அதுவே என் வேண்டுகோள், பரிவான நிபந்தனை. அக்டேவியஸ்: [சற்று சிந்தித்து] அதற்கு நான் உடனே பதில் அளிக்க இயலாது. ஆனால் அதற்கொரு நிபந்தனை விடுகிறேன் ! சிஸேரியனை முதலில் நீ எங்களிடம் விட்டுவிட வேண்டும். ரோமில் அவனை அழைத்துச் சென்று நாங்கள் அரசாளப் பயிற்சிகள் அளிக்க வேண்டும் ! கிளியோபாத்ரா: [ஆழ்ந்து சிந்தித்து] நானிதை எப்படி நம்புவது ? சிஸேரியனை ரோம் செனட்டார் எவருக்குமே பிடிக்காது ! சீஸருக்கு நேர்ந்த அதே கதிதான் அவரது மகனுக்கும் கிடைக்கும். ஓநாயிடம் எப்படி முயல் குட்டியை ஒப்படைப்பது ? சிஸேரியனுக்கு ரோமில் யார் பாதுகாப்பு அளிப்பது என்று கூறுவீரா ? என்னருமை மகனை உங்கள் கையில் ஒப்படைக்க மனம் ஒப்பவில்லை ! [] நான் சிறைக் கைதியா ?  []   Cleo’s Killer Snake கிளியோபாத்ரா: [ஆழ்ந்து சிந்தித்து] நானிதை எப்படி நம்புவது ? சிஸேரியனை ரோம் செனட்டார் எவருக்குமே பிடிக்காது ! சீஸருக்கு நேர்ந்த அதே கதிதான் அவரது மகனுக்கும் கிடைக்கும். ஓநாயிடம் எப்படி முயல் குட்டியை ஒப்படைப்பது ? சிஸேரியனுக்கு ரோமில் யார் பாதுகாப்பு அளிப்பது என்று கூறுவீரா ? என்னருமைச் சிறுவனை உங்கள் கையில் ஒப்படைக்க மனம் ஒப்பவில்லை ! அக்டேவியஸ்: சிஸேரியன் சிறுவன் ! அவனை எகிப்துக்கு அரசனாக ஆக்குவதில் அவனுக்கும் ஆபத்து விளையலாம் ! எகிப்துக்கும் அபாயம் நேரலாம் ! பெரியவனாக ஆகும்வரை அவனை எங்களிடம் ஒப்படைத்தால் நாங்கள் போர்ப் பயிற்சி அளிப்போம். பிறகு அவனை யாரும் மிஞ்ச முடியாது. கிளியோபாத்ரா: (ஆங்காரமாக) உங்கள் கையில் அவன் சிக்கிக் கொண்டால் அவன் கதி என்னவாகும் என்று சொல்ல முடியாது ! சிஸேரியன் தாய் நாடான எகிப்திலேதான் வளர்வான் ! எகிப்தையேதான் ஆளுவான் ! எகிப்திலேதான் மாளுவான் ! அக்டேவியஸ்: ஆனால் சிஸேரியனின் தந்தை நாடு ரோமாபுரி சாம்ராஜியம் ! ரோமானிய கலாச்சாரத்திலும் அவன் மூழ்க வேண்டும். சிறுவனுக்கு ஒன்றும் நேராது. மகாராணியின் கடின எதிர்ப்பு எமக்குப் புரியவில்லை. (அப்போது கிளிபோபாத்ராவின் நகைப் பெட்டியை அடிமைகள் தூக்கிக் கொண்டு வருகிறார்கள்.) கிளியோபாத்ரா: [பெட்டியைத் திறந்து காட்டி] ஈதோ எகிப்த் அரச பரம்பரையின் தங்க ஆபரணங்கள் ! இந்த வைர ஆரத்தை உங்கள் அருமை மனைவி லிவியாவுக்கு என் அன்பளிப்பாகத் தருகிறேன்.. இந்த நீலக்கல் ஆரம் உங்கள் தங்கை அக்டேவியாவுக்கு ! ஈதோ பரம்பரையாக ·பாரோ மன்னர் பயன்படுத்திய பொன் உடைவாள் ! இது உங்களுக்கு என் அன்பளிப்பு ! []   அக்டேவியஸ்: [கையில் அவற்றை வாங்கிக் கொண்டு மகிழ்ச்சியுடன்] நன்றி மகாராணி ! லிவியா இத்தனை அழகான ஆபரணத்தைக் கண்டிருக்க மாட்டாள் ! நிச்சயம் பூரித்துப் போவாள் ! நன்றி. ஆண்டனி மரித்த செய்தி கேட்டு மயங்கிக் கிடக்கும் அக்டேவியா கூட இந்த நீலக்கல் கழுத்தணியைக் கண்டதும் உயிர்த்து எழுந்து விடுவாள் ! வரலாற்றுப் புகழ் பெற்ற இந்த பொன்வாள் ரோமாபுரியின் கண்காட்சியை அலங்கரிக்கும். [சற்று கடுமையாக] ஆனால் கிளியோபாட்ரா ! நான் விரும்புவது இவை அல்ல ! விலை மதிப்பில்லா இரண்டு எகிப்த் வைரங்கள் ! கிளியோபாத்ரா: (வியப்புடன்) என்ன ? எகிப்த் வைரங்களா ? பேழையில் இல்லாத பெரு வைரங்களா ? அக்டேவியஸ்: (புன்னகையுடன்) சிஸேரியனை அழைத்துக் கொண்டு மகாராணி ரோமாபுரிக்கு வரவேண்டும் ! அதுதான் என் இச்சை ! செனட்டாருக்குப் பிடிக்கா விட்டாலும், ரோமானியப் பொது மக்கள் உங்கள் இருவரையும் காண ஆவலாய் இருக்கிறார் ! என் பெரியப்பா சீஸரைக் காண ரோமுக்குக் கோலாகலமாய் நீங்கள் இருவரும் வந்ததுபோல், என்னைக் காண மகாராணி மகனுடன் வருகை தர வேண்டும் ! அதுதான் நீங்கள் எனக்களிக்கும் வெகுமதி ! ஆங்கே உம்மைப் பாதுகாப்பது எம்முடைய பணி ! கிளியோபாத்ரா: (சற்று சிந்தித்து) பொறுப்பை ஏற்றுக் கொண்டால் ரோமுக்கு வருவது பற்றி நான் சிந்திக்கலாம் ! ஆனால் நான் மட்டுமே வருகிறேன் ! என் மகனை அழைத்து வர விருப்பமில்லை எனக்கு ! எனது பட்டத்து ஆடை ஆரங்கள் அணிந்து மகாராணியாக வருகிறேன் ! படாடோபமாக, கோலாகலமாக ·பாரோ அரசியாகப் பள்ளக்கில் வருகிறேன் ! அக்டேவியஸ்: (பூரிப்புடன்) மகாராணி ! அழைப்பை ஏற்றுக் கொண்டதற்கு மகிழ்ச்சி அடைகிறேன் ! எகிப்துக்கு நான் வருகை அளித்ததின் குறிக்கோள் நிறைவேறியது ! உங்களை அரசாங்க விருந்தினராய் அழைத்துச் செல்ல வந்தேன் ! வெற்றி எனக்கு ! வெற்றி உமக்கு ! அரண்மனைக்கு வெளியே படையுடன் காத்திருக்கிறேன் ! பட்டத்து ஆடை அணிகள் அணிந்து பள்ளக்கில் நீங்கள் வரும் பாங்கை நாங்கள் பார்த்துப் பரவசப் பட வேண்டும் ! தொலபெல்லா ! வாசலில் காத்திருந்து மகாராணியின் பள்ளக்கை வழிநடத்தி வா ! (அக்டேவியஸ் தன் படைகளுடன் வெளியேறுகிறான்) கிளியோபாத்ரா: (தொலபெல்லாவைப் பார்த்து) தொலபெல்லா ! உண்மையைச் சொல் ! அக்டேவியஸ் எங்கே அவசரமாகப் போகிறார் ? []   Cleo Talking to the Snake தொலபெல்லா: (மெதுவாக) மகாராணி ! உங்கள் மீதுள்ள அன்பால், பரிவால், மதிப்பால் இதைச் சொல்கிறேன். யாருக்கும் தெரியக் கூடாது ! அக்டேவியஸ் சிரியாவுக்கு மூன்று நாள் செல்கிறார் ! இதுதான் தக்க தருணம் ! நீங்களும் உங்கள் சகாக்களும் குழந்தைகளுடன் எங்காவது தப்பிச் செல்லுங்கள் ! தெய்வமே இப்படி ஒரு வழியைக் காட்டுகிறது ! எங்காவது கண்காணா பாலைவனக் குடிசையில் பதுங்கிக் கொள்வீர் ! ஆண்டனிக்குப் பணிபுரிந்து உங்கள் அரண்மை மதுவைப் பருகிய எனது நன்றிக் கடனைத் தீர்த்துக் கொள்கிறேன். ஆண்டனியைக் காக்க முடியாவிட்டாலும், இறுதிக் காலத்தில் உங்களைக் காப்பாற்றினேன் என்று மனச்சாந்தி அடைவேன். கிளியோபாத்ரா: (கண்ணீர் பொங்க) பரிவு உள்ளம் படைத்த ரோமானியனும் இருக்கிறான் என்று பரவசப் படுகிறேன், தொலபெல்லா ! மறக்க முடியாது இந்த உதவியை, நன்றி, வந்தனம். தொலபெல்லா: உங்களுக்கு எந்த விபத்தும் நேராதபடி வெளியே நின்று வாசலில் காவல் புரிகிறேன் ! வேறு வழியாகச் சென்று எங்காவது தப்பியோடிப் பிழைத்துக் கொள்வீர் மகாராணி ! (தொலபெல்லா வெளியேறுகிறான்) கிளியோபாத்ரா: தொலபெல்லா ! எங்கள் உயிரைக் காப்பாற்ற நீ செய்யும் உதவி மகத்தானது ! வெளியே காத்திருங்கள். (தொலபெல்லா தலை மறைந்ததும், அவசரமாக) ஈராஸ் ! அக்டேவியஸ் தேன் மொழிகளை நம்பக்கூடாது ! கொஞ்சு தெல்லாம் வஞ்சகப் பேச்சுகள் ! நாமென்ன செய்யலாம் ? நீ என்ன நினைக்கிறாய் ? நாமிங்கு தாமதிக்கக் கூடாது. ரோமுக்கு நம்மைப் பிடித்துக் கொண்டு போய் தெருவிலே கழுதைமேல் ஏற்றி ஊர்வலம் நடத்தப் போகிறார் ! கூலிக்கார ஊழியர் வேசியென்று கேலி செய்து நம்மீது கல்லெடுத்து வீசுவார் ! குருதி சிந்தச் சிந்த விலங்குகளாய் நடத்தி வீதிகளில் அவமானமாய்ப் பேசுவார். ஈராஸ்: நாம் பாலைவனத்தில் தப்பி ஓடி உயிர் வாழலாம் ! உங்கள் தம்பி டாலமி ஆண்ட போது நீங்கள் பாலையில் தப்பி வாழவில்லையா ? கிளியோபாத்ரா: (சற்றுக் கவலையோடு) அது அந்தக் காலம் ! டாலமி என்னைத் துரத்தி விட்டான். ஆனால் பாலைவனத்தில் என்னைத் தேடி வரவில்லை ! அக்டேவியஸ் அப்படிப் பட்டவர் அல்லர். நாமெங்கு ஒளிந்தாலும் ரோமானியப் படை நம்மைக் கண்டுபிடித்துக் கழுத்தைத் துண்டித்து விடும். (அப்போது சார்மியான் வருகிறாள்) சார்மியான் ! போ எனது கிரீடத்தை எடுத்து வா ! பட்டம் சூடிய போது அணிந்த ஆடைகளைக் கொண்டு வா ! பொன் ஆபரணப் பேழையைத் தூக்கி வா ! தப்பி ஓடும் முன்பாக ஈராஸ், சார்மியான் இருவரும் எனக்கு இறுதி அலங்காரம் செய்ய வேண்டும் ! என் ஒப்பனையில் அக்டேவியஸ் மயங்கி விழ வேண்டும் ! சீக்கிரம் போ ! (சார்மியான் உள்ளே போகிறாள்)   []   கிளியோபாத்ரா: சார்மியான் ! போ பட்டம் சூடிய போது அணிந்த என் ஆடைகளைக் கொண்டு வா ! எனது கிரீடத்தை எடுத்து வா ! பொன் ஆபரணப் பேழையைத் தூக்கி வா ! ஈராஸ், சார்மியான் இருவரும் எனக்கு இறுதி அலங்காரம் செய்ய வேண்டும் ! (சார்மியான் போகிறாள்). ஈராஸ் நீ ஆலயப் பூசாரியை அழைத்துவா ! பூட்டி வைத்திருக்கும் பாம்புப் பெட்டியை எடுத்துவரச் சொல் ! பிரமிட் புதை அறையில் விளக்கேற்றச் சொல் ! வண்ண வண்ணப் பூக்களால் அலங்கரிக்கச் சொல் ! வாசனைப் பத்திகளைக் கொளுத்தி மணம் பரப்பச் சொல் ! ஈராஸ்: அப்படியே செய்கிறேன் மகாராணி ! (ஈராஸ் போகிறாள்) கிளியோபாத்ரா: [தனக்குள் பேசிக் கொள்கிறாள்] நான் விடைபெறும் தருணம் வந்து விட்டது ! என்னை ஆண்டனி கூப்பிடுவது உள்ளத்தில் தெரிகிறது! என்னரிய துணிகரச் செயலைப் போற்றுவார் ஆண்டனி. ஆண்டனி என் பதி ! மனைவி என்னும் மதிப்பான பட்டத்தை எனக்கு அளித்த என் உன்னதப் பதி அவர் ! நானே அக்கினி ! நானே வாயு ! எனது மற்ற பஞ்ச பூதங்களான நீர், நிலம், வானம் ஆகியவற்றை அடிப்படை வாழ்வுக்கு விட்டுவிடுகிறேன். (சார்மியான் ஆடை, அணிகள், கிரீடத்துடன் வந்து கிளியோபாத்ராவுக்கு அலங்காரம் செய்கிறாள். அப்போது ஆலயப் பூசாரியுடன் உள்ளே நுழைகிறாள் ஈராஸ். பூசாரியின் கையில் பாம்புப் பெட்டி இருக்கிறது. ) சார்மியான்: [அலங்காரம் முடிந்த பிறகு பூரிப்புடன்] மகாராணியைப் பார்த்தால் மயங்கி விழாத மனிதர் இருக்க முடியாது ! எத்தனை கொள்ளை அழகு ! நமது ஓவியர் பக்கத்தில் இல்லை, படத்தை வரைவதற்கு ! ஓவியரை அழைத்து வரவா மகாராணி ! கிளியோபாத்ரா: [கவலையுடன்] வேண்டாம், கால தாமதம் ஆகக் கூடாது ! அக்டேவியஸ் வருவதற்குள் நமது வேலை முடிய வேண்டும். மரண தேவனைக் காக்க வைக்கக் கூடாது ! [பூசாரியைப் பார்த்து] மரக் கூடையை என் கையில் கொடு ! (ஆலயப் பூசாரி மரக் கூடையை மேஜையில் வைக்கிறார். அதை இலேசாகத் திறந்து உள்ளே நெளியும் பாம்புக் குட்டிகளைப் பார்க்கிறாள்) உள்ளே நஞ்சிருப்பது தெரியாமல், வெளியே கொஞ்சிக் கொண்டிருக்கும் நல்ல பாம்புக் குட்டிகள் ! எத்தகைய ஈனமான ஆயுதம் இது ! எனக்கு விடுதலை அளிக்கும் கருவி இது ! உன்னத ராணியின் ஒப்பிலா வரலாற்றை முடிக்கப் போகும் சின்னப் புழுக்கள் இனம் ! ஈராஸ் ! எனது தீர்மானம் உறுதியாகி விட்டது ! அதை முன்னோக்கிப் பார்க்கிறேன். பின்னோக்கிப் பார்ப்பதால் ஒளிமிகுந்த என் வாழ்க்கை முன்னோக்கி மீளாது ! என்னுள்ளே இனி எனது பெண்மை இல்லாமல் போனது ! நானோர் ஆத்மா இழந்த கூடுதான் ! இந்தக் கூடு இருந்தால் என்ன ? மரித்தால் என்ன ? ஆவி போயினும் என் ஆத்மா எகிப்தில் நிலைத்து நிற்கும். [பூசாரியைப் பார்த்து] நாகக் குட்டி கொட்டினால் வலிக்குமா ? வலி உணராமல் உயிர் போக வழியுண்டா ? ஆலயப் பூசாரி: [தடுமாறிக் கொண்டு] மகாராணி ! குட்டி நாகத்தின் நச்சுப் பல்லில் வெளிவருவது துளி விஷமே ! முதலில் முள் குத்துவதுபோல் தெரியும். குருதியில் நஞ்சு கலக்கும் போது வலி உண்டாகும். பிறகு பொழுது அடைவது போல் சிறுகச் சிறுக ஒளிமங்கி இருளாகிவிடும் ! கிளியோபாத்ரா: [ஆர்வமாக] இந்தக் குட்டி நாகம் கொட்டி யாராவது சாவதைப் பார்த்திருக்கிறாயா ? ஆலயப் பூசாரி: ஆமாம் மகாராணி ! நேற்று நிகழ்ந்த சம்பவம் ஒன்று ! கணவனால் துரத்தப் பட்ட நடு வயது மாதொருத்தி உயிரை மாய்த்துக் கொள்ள என்னிடம் வந்தாள் ! கண்ணை மூடிக் கொண்டு பெட்டிக்குள் கையை விடு என்று சொன்னேன் ! வலது கையை விட்டவள் அலறினாள் ! தரையில் விழுந்து துள்ளினாள் ! அவ்வளவுதான், சிறிது நிமிடங்களில் அவள் வாழ்வு முடிந்தது ! கிளியோபாத்ரா: [சற்று எரிச்சலுடன்] சரி, சரி, மரப் பெட்டியை வைத்து விட்டுப் போ ! இங்கு நடப்பதை யாரிடமும் சொல்லாதே ! பின்வழியாக ரோமானியப் படைக் கண்ணில் படாமல் வெளியே செல் ! போ ! பிரமிட் புதை அறை பூக்களால் அலங்கரிக்கப்பட வேண்டும். வாசனைப் பத்திகளின் மணம் மூக்கைத் துளைக்க வேண்டும். போ எல்லாவற்றையும் தயார் செய் ! [ஆலயப் பாதிரி நடுங்கிக் கொண்டு விரைகிறான்] கிளியோபாத்ரா: எனது நீண்ட கால இறப்பில்லா வாழ்வு தொடங்கப் போகிறது ! விடை பெறுகிறேன் என்னினிய எகிப்த் நாடே ! இனி உனது திராட்சை ரசம் என் உதடுகளை ஈரப் படுத்தாது !  உன் புனித பூமிமேல் என் பூப்பதங்கள் இனி நடக்கா ! உன் நைல் நதி இனி என் தாகத்தைத் தீர்க்காது ! உன் பரந்த பாலைவனப் பசுஞ்சோலை எனக்கு பஞ்சணை தராது ! விடை பெறுகிறேன் எகிப்த் நாடே ! [நாகப் பெட்டியைப் பார்த்துச் சிந்தித்து] நானிந்த நச்சுக் குட்டிகளைச் சோதிக்க வேண்டும் ! சாவது சீக்கிரமா அல்லது தாமதிக்குமா என்று நான் இப்போது காண வேண்டும் ! அக்டேவியஸ் வருவதற்கு முன்னே நான் போக வேண்டும் ! உயிரற்ற உடலைத்தான் அவர் காண வேண்டும் ! ஈராஸ்: மகாராணி ! நான் சோதனைக்குத் தயார் ! மகாராணி மரிப்பதை நான் என் கண்ணால் பார்க்க மாட்டேன் ! உங்களுக்கு முன்பே நான் சாக வேண்டும் ! கிளியோபாத்ரா: [பாம்புப் பெட்டியைத் திறந்து] என்னிடமிருந்து விடை பெறு ஈராஸ் ! வா ! வந்து வலது கரத்தைப் பெட்டிக்கு உள்ளே விடு ! [ஈராஸ் கையைப் பெட்டிக்குள் விட்டுச் சட்டென எடுக்கிறாள். வலி ஏறிச் செல்ல கையைப் பிடித்துக் கொண்டு தரையில் சாய்கிறாள். சில நிமிடங்களில் மரணம் அடைகிறாள்] கிளியோபாத்ரா: [பாம்புப் பெட்டியை நோக்கி] பயனுள்ள ஆயுதம்தான் ! பாம்பென்றால் படையும் நடுங்கும் ! ஆனால் ஃபெரோ பரம்பரைப் பாவை கிளியோபாத்ரா பயப்பட மாட்டாள் ! பாம்புதான் என்னைக் கண்டு பயப்பட வேண்டும் ! [பெட்டியைத் திறந்து ஒரு குட்டிப் பாம்பைக் கையில் எடுக்கிறாள்] குட்டி நாகமே ! உன் நச்சுப் பையைக் காலி செய் ! உன்னை ஊட்டி வளர்த்த இந்த அரசிக்கு விடுதலை அளித்திடு ! நானிந்த உலகை விட்டு நீங்கி விட்டேன் என்று அக்டேவியசுக்கு எடுத்துச் சொல் ! [பாம்பைத் தன் முலை மீது தீண்ட விட்டு] ஈதோ என் மார்பு ! இதன் வழியாக உன் விஷத்தை என் குருதியில் ஊட்டு ! எனக்கொரு நிம்மதி நிலையைக் காட்டு ! எகிப்த் அரசியை யாரும் கைப்பற்ற முடியாதென நிலைநாட்டு ! [பாம்புக் குட்டியை விட்டெறிகிறாள்] உனக்கும் விடுதலை இன்று ! ஓடிப் போ ! [நெளிந்து நெளிந்து குட்டி நாகம் விரைகிறது] [கிளியோபாத்ரா வலியுடன் தள்ளாடிக் கொண்டு பள்ளியறைப் படுக்கையில் சாய்கிறாள். சிறிது நிமிடங்களில் அவள் உயிர் பிரிகிறது] சார்மியான்: மகாராணி ! மகாராணி ! ஈதோ நானும் வருகிறேன் [பாம்புப் பெட்டியைத் திறந்து கையை விடுகிறாள். சிறிது நேரத்தில் கிளியோபாத்ரா அருகிலே அவளும் மரிக்கிறாள். அப்போது தொலபெல்லா, ரோமானியக் காவலருடன் உள்ளே நுழைகிறான்.] []   எடுத்துவா அங்கியை ! அணிந்திடு கிரீடம் ! என்னுள் மரிக்காது இருக்குது ஆசை ! எகிப்தின் திராட்சை ரசம் இனி ஈரப் படுத்தாது என் உதடை ! அதோ, கேட்குது, ஆண்டனி அழைப்பது ! என் உயர்ந்த செயலை மெச்சிட அவர் எழுந்து வருவது எனக்குத் தெரியுது ! பதியே ! வருகிறேன் ! அந்தப் பட்டம் நிரூபணம் ஆக நிலைக்கும் என் துணிவு ! அக்கினி நான் ! வாயு நான் ! மற்ற நீரும் நிலமும் அடிப்படை வாழ்வுக்கு ! ஏற்றிடு இறுதியாய் என் முத்தத்தின் சூட்டை ! கனிவுள்ள ஈராஸ் ! சார்மியான் ! உம்மிட மிருந்து விடை பெறுகிறேன், நீண்ட விடை பெறுகிறேன் ! …     (கிளியோபாத்ரா)   எத்தகை ஈன ஆயுதம் இது ? ஆயினுமோர் உத்தம வினைதனைச் செய்யப் போகுது ! விடுதலை அளித்திடும் எனக்கு ! என் முடிவு தீர்மான மானது ! என்னுள் இருக்கும் பெண்மை எல்லாம் தீர்ந்தது ! தலைமுதல் தடம்வரை பளிங்குச் சிலையாய் அடங்கிப் போனேன் இக்கணம் ! மாறிப் போனது நிலா ! மற்ற அண்டக்கோள் வேறில்லை எனக்கினி ! …  (கிளியோபாத்ரா)   []     தொலபெல்லா: [ஆச்சரியமுடன்] என்ன அமைதி ! ஒரே அமைதி ! ஓர் அரவங் கூடக் கேட்கவில்லை. [தரையில் நெளிந்தோடும் குட்டிப் பாம்பைப் பார்த்து நடுங்குகிறான்] அரண்மனையில் பாம்புக் குட்டி ஏன் வந்தது ? எங்கே இங்கிருந்த கிளியோபாத்ரா ? எங்கே ஈராஸ் ? எங்கே சார்மியான் ? முதல் காவலன்: [உள்ளே தேடிச் சென்று] ஈதோ ஈராஸ் ! செத்துக் கிடக்கிறாள் ! அதோ சார்மியான் அவளும் செத்துப் போய்விட்டாள் ! தொலபெல்லா: [மிக்க கவலையுடன்] எங்கே எகிப்த் மகாராணி ? இரண்டாம் காவலன்: [படுத்திருக்கும் கிளியோபாத்ராவைப் பார்த்து] ஈதோ அலங்கார உடையில் மகாராணி தூங்குகிறார். தொலபெல்லா: [ஓடிவந்து பார்த்து] அந்தோ தெய்வமே ! தப்பிச் செல்ல யோசனை கூறினேன் ! இப்படியா மகாராணி மரிக்க வேண்டும் ? யாரும் சிறைப்பிடிக்க முடியாத உலகத்துக்குப் போய் விட்டார் மகாராணி ! [அப்போது அக்டேவியஸ் ரோமானியப் படையுடன் உள்ளே நுழைகிறார்] மூன்றாம் காவலன்: ரோமானியத் தளபதி அக்டேவியஸ் வருகிறார். ஒதுங்கி நிற்பீர் ! அக்டேவியஸ்: தொலபெல்லா ! எங்கே கிளியோபாத்ரா ? தொலபெல்லா: [மனக் கவலையுடன்] தளபதி ! மகாராணியை என்னால் காப்பாற்ற முடியவில்லை ! மகாராணியாகவே மரித்து விட்டார். அக்டேவியஸ்: எப்படி மரித்தாள் ? ஒருதுளி இரத்தம் கூடச் சிந்தவில்லையே ! []   தொலபெல்லா: [பாம்புப் பெட்டியைக் காட்டி] அதோ அவள் ஆயுதப் பெட்டி ! கிளியோபாத்ராவைத் தீண்டிய நாகக் குட்டி என்னைத் தாண்டித்தான் ஓடியது ! அக்டேவியஸ்: [கிளியோபாத்ராவின் அருகில் வந்து] எகிப்து ராணி ! பகட்டான உடை ! பளிச்சென மின்னும் கிரீடம் ! சாவிலும் தேவதையாய்க் காட்சி அளிக்கிறாள் ! ராஜ குடும்பத்தில் பிறந்தாள் ! ராஜ குடும்பத்தில் வளர்ந்தாள் ! ராணியாக ஆண்டாள் ! ராணியாகவே மாண்டாள் ! மெய்யாக வென்றவள் கிளியோபாத்ரா ! அவளை ரோமாபுரி வீதியில் இழுத்துச் சென்று வேடிக்கை புரியலாம் என்று நினைத்திருந்தேன் ! அந்த திட்டத்தில் தோல்வி அடைந்தது நான் ! ஆண்டனி புதைக்கப்பட்ட இடத்தருகில் அவளையும் அடக்கம் செய்வீர் ! ரோமாபுரி ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், எகிப்துக்காக இப்படிச் செய்கிறேன். ஆண்டனி கிளியோபாத்ரா இருவரும் வரலாற்றுக் காதலர்கள் ! ஒரே இடத்தில் இருவரும் அடக்கம் ஆகட்டும் ! துன்ப முடிவாகப் போகும் என்று நான் நினைக்க வில்லை ! ரோமாபுரி இராணுவ மரியாதையுடன் ஆண்டனியும் கிளியோபாத்ராவும் அடக்கம் ஆவார் ! நமது கடமை இது. ஏற்பாடு செய் தொலபெல்லா ! அதற்குப் பிறகு நாம் ரோமுக்குத் திரும்புவோம் ! [ரோமானியர் மூன்று சடலங்களையும் தூக்கிக் கொண்டு செல்கிறார்] (கிளியோபாத்ரா நாடகம் முற்றுப் பெறும்) ++++++++++++++ Based on The Plays: 1. Bernard Shaw’s Caesar & Cleopatra [Play-1] 2. William Shakespeare’s Julius Caesar [Play-2] 3. William Shakespeare’s Antony & Cleopatra [Play-3] 4. Britannica Concise Encyclopedia [2003] 5. Encyclopedia Britannica [1978 & 1981] 6. Life of Antony By: Plutarch 7. Life of Pompey the Great Wikipedia Encyclopedia 8. Cleopatra Movie with Elizabeth Taylor & Richard Burton [1967 9.  Cleopatra Movie By Cecil B. DeMille [1934] 10. https://youtu.be/9qszfMmsrXY [Cleopatra Movie Clips]  11. Shakespeare’s Antony & Cleopatra Edited By: David Bevington [1988] 12.  Shakespeare’s Antony & Cleopatra Edited By: M.R. Ridly [1993] 13.  Life of Antony & Fulvia  [http://en.wikipedia.org/wiki/Fulvia]   ++++++++++++++++++++ []