[] 1. Cover 2. Table of contents இந்திய கம்யூனிஸ்ட் இயக்க நூற்றாண்டு - 2 இந்திய கம்யூனிஸ்ட் இயக்க நூற்றாண்டு - 2   தீக்கதிர்     மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC-BY-SA-NC கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   மின்னூலாக்கம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/century_of_indian_communist_movement_2 மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com அட்டைப்படம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்கம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Cover Image: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Creation: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation உலகப் புகழ்பெற்ற மீரட் கம்யூனிஸ்ட் சதி வழக்கு - 1 - என்.ராமகிருஷ்ணன் -டிசம்பர் 16, 2019 […] ஆங்கிலேய அரசாங்கம் இந்தியா சுதந்திரம்பெற தகுதியுள்ளதா? என்பதைக்கண்டறிய சைமன்கமிஷன் என்ற குழுவினரை இந்தியாவுக்கு அனுப்பியது. இந்தக் குழுவை எதிர்த்து நாடு முழுவதிலும் அதுவரை கண்டிராத அளவில் பெரும் மக்கள் ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் நடத்தும்படியும் பிப்ரவரி 3ஆம் தேதியை எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கும்படியும் காங்கிரஸ் கட்சி விடுத்த அறைகூவலை ஏற்று கம்யூனிஸ்ட்டுகள் தலைமையில் தொழிலாளி வர்க்கம் மிகப்பெருமளவில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றது. பம்பாய், கல்கத்தாவில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். இந்தியாவை ஆண்ட ஆங்கிலேய அரசாங்கம் 1929ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் தேதியன்று இந்நாட்டின் இளம் கம்யூனிஸ்ட் தலைவர்களையும், கம்யூனிஸ்டுகளோடு நெருக்கமாக இருந்த தோழர்களையும் சேர்த்து 31 பேரை கைது செய்து ஒரு மாபெரும் சதி வழக்கை தொடுத்தது. அன்றைய நாளில்தான் இன்றைய உத்தரப்பிரதேசத்தில் உள்ள மீரட் என்ற சிறிய நகரின் மாவட்ட நீதிபதி இந்த 31 பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார். அதுதான் உலகப் புகழ்பெற்றதும் நான்காண்டு காலம் நீடித்ததுமான மீரட் சதி வழக்கு. 1924ஆம் ஆண்டில் முசாபர் அகமது, எஸ்.ஏ.டாங்கே, சௌகத் உஸ்மானி, நளினி குப்தா உள்ளிட்ட நான்கு பேர் மீது கான்பூர் சதி வழக்கை ஆங்கிலேய அரசாங்கம் தொடுத்து நான்காண்டு கால கடுங்காவல் தண்டனை விதித்தது. அந்த வழக்கு இந்தியப் பத்திரிகைகளில் மிகப் பெரிய செய்தியாக வந்து நாடு முழுவதிலும் கம்யூனிஸ்ட்டுகள் குறித்து பெரும் தகவல்களை தந்திருந்ததால் இம்முறை ஆங்கிலேய அரசாங்கம் அத்தகைய பெரிய செய்திகள் வராமல் இந்த வழக்கை நடத்துவதற்காக அன்று மிகச் சிறிய நகரமாக இருந்த மீரட் நகரில் இந்த வழக்கை நடத்தியது. இந்த வழக்கை நடத்துவதற்கு என்ன காரணம்? 1928ஆம் ஆண்டில் ஆங்கிலேய அரசாங்கம் இந்தியா சுதந்திரம் பெற தகுதியுள்ளதா? என்பதைக் கண்டறிய சைமன் கமிஷன் என்ற குழுவினரை இந்தியாவுக்கு அனுப்பியது. இந்தக் குழுவை எதிர்த்து நாடு முழுவதிலும் அதுவரை கண்டிராத அளவில் பெரும் மக்கள் ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் நடத்தும்படியும் பிப்ரவரி 3ஆம் தேதியை எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கும்படியும் காங்கிரஸ் கட்சி விடுத்த அறைகூவலை ஏற்று கம்யூனிஸ்ட்டுகள் தலைமையில் தொழிலாளி வர்க்கம் மிகப் பெருமளவில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றது. பம்பாய், கல்கத்தாவில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். சைமன் தூதுக்குழு சென்ற இடங்களில் எல்லாம் ‘மைசனே! திரும்பிப்போ’ என்ற மக்களின் முழக்கம் எங்கும் எதிரொலித்தது. நாட்டின் பல்வேறு இடங்களில் காவல்துறை கொடூரமான தடியடி நடத்தியது. பஞ்சாபில் பிரபல காங்கிரஸ் தலைவர் லாலா லஜபதிராயின் மார்பில் காவலர்கள் தடியால் அடித்தனர். இதன் விளைவாக சிறிது காலத்திற்குள் அவர் காலமானார். இதே 1928ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பம்பாய் பஞ்சாலை தொழிலாளிகள் நடத்திய வேலைநிறுத்தம் இந்திய நாட்டின் வரலாற்றிலேயே மகத்தானதாகும்.ஆறு மாத காலம் நீடித்த இந்த வேலைநிறுத்தத்திற்கு கம்யூனிஸ்ட்டுகள் முன்முயற்சி எடுத்து தலைமை தாங்கினர். இதைத்தொடர்ந்து 80 ஆயிரம் உறுப்பினர்கள் கொண்ட பம்பாய் பஞ்சாலைத் தொழிலாளர்கள் சங்கம் (பம்பாய் கிர்ணி காம்கார் சங்கம்) உருவானது. அதேபோன்று கல்கத்தாவில் லட்சக்கணக்கான சணல் தொழிலாளிகள் செங்கொடி ஏந்தி வீரஞ்செறிந்த போராட்டங்களை நடத்தினர். இவ்வாறு இந்தியாவில் தொழிலாளி வர்க்க போராட்டங்கள் தீரமிக்க முறையில் அதிகரித்து வருவதையும் கம்யூனிஸ்ட்டுகள் செல்வாக்கு வளர்ந்து வருவதையும் கண்ட ஆங்கிலேய அரசாங்கம் அதிர்ச்சியடைந்து பெரும் தாக்குதலுக்கு திட்டமிட்டது. அதன் விளைவு தான் இந்த மீரட் கம்யூனிஸ்ட் சதி வழக்கு. ஆங்கிலேய அரசாங்கத்தின் கோபத்திற்கு மற்றொரு காரணம் உண்டு. இங்கிலாந்து நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களான பெர்சி கார்டினும், ஜார்ஜ் அலிசனும் பிலிப்ஸ் பிராட்டும், பென் பிராட்லியும், இந்திய கம்யூனிஸ்ட்டுகளுக்கு உதவி செய்வதற்காக இங்கே வந்தனர். அதேபோன்று ஆஸ்திரேலிய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரான ஜே.எப்.ரியான் என்பவரும் நவம்பர் மாதம் இந்தியா வந்தார். இவர்களைத் தொடர்ந்து எச்.எல்.ஹட்சின்சன் என்ற இங்கிலாந்து கம்யூனிஸ்ட்டும் இங்கே வந்தார். ஆங்கிலேயர்களான இவர்கள் அனைவரும் இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு உதவி செய்ய வந்தது ஆங்கிலேய அரசாங்கத்திற்கு மேலும் கோபம் உண்டாக்கியது. எனவே தான் இந்த அனைத்துக் காரணங்களையும் வைத்து மீரட் சதி வழக்கு தொடங்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் யார்? 1. விஸ்வநாத் முகர்ஜி - ஐக்கிய மாகாண தொழிலாளி- விவசாயிகள் கட்சியின் தலைவர் 2. கேதார்நாத் சைகல் - பஞ்சாப் காங்கிரஸ் குழுவின் தலைவர் 3. கௌரி சங்கர் - ஐக்கிய மாகாண தொழிலாளிகள் - விவசாயிகள் கட்சியின் நிர்வாகக்குழு உறுப்பினர் 4. சிவநாத் பானர்ஜி - வங்காள சணல் தொழிலாளர் சங்கத் தலைவர் 5. எம்.ஜி.தேசாய் - ‘ஸ்பார்க்’ (பொறி) ஏட்டின் ஆசிரியர் பம்பாயிலிருந்து வெளிவந்த தீவிர சோசலிஸ்ட் ஏடு 6. லட்சுமன் ராவ் கடம் - 4 ஜான்சியில் நகராட்சி ஊழியர்களின் அமைப்பாளர். 7. டி.ஆர்.தெங்டி - தொழிற்சங்க காங்கிரசின் முன்னாள் தலைவர், நிர்வாகக்குழு உறுப்பினர், அகில இந்திய காங்கிரஸ் குழுவின் உறுப்பினர் 8.எஸ்.எச். ஜாப்வாலா - அகில இந்திய ரயில்வே தொழிலாளர் சம்மேளனத்தின் அமைப்புச் செயலாளர் 8. ஏ.ஏ - ஆல்வே : பஞ்சாலை ஊழியர், பம்பாய் கிர்னி காம்கார் சங்கத்தின் தலைவர் 9. ஜி.ஆர் காஸ்லே - பஞ்சாலை தொழிலாளி, கிர்னி காம்கார் சங்கத்தின் நிர்வாகி 10. கிஷோரிலால் கோஷ் - வங்காள மாகாண தொழிற்சங்க சம்மேளனத்தின் செயலாளர் (இந்த 11 பேரும் கம்யூனிஸ்ட் அல்லாத இடதுசாரி தலைவர்கள் - பெரும் வெகுஜன இயக்கங்களின் தலைவர்கள்) - தொடரும் உலகப் புகழ்பெற்ற மீரட் கம்யூனிஸ்ட் சதி வழக்கு- 2 - என்.ராமகிருஷ்ணன் -டிசம்பர் 17, 2019 […] பின்வருபவர்கள் தங்களை கம்யூனிஸ்ட் என்று அறிவித்துக் கொண்டவர்கள்: 12. பிலிப் ஸ்பிராட் - இங்கிலாந்திலிருந்து வந்த இளம் கம்யூனிஸ்ட் இந்தியாவிலுள்ள கம்யூனிஸ்ட்டுகளுடன் வேலை செய்து கொண்டிருந்தார். 13. முசாபர் அகமது - தொழிற்சங்க காங்கிரசின் துணைத்தலைவர், வங்காள விவசாயி- தொழிலாளிகள் கட்சியின் பொதுச் செயலாளர். 14. எஸ்.ஏ.டாங்கே - தொழிற்சங்க காங்கிரசின் உதவிச் செயலாளர். கம்யூனிஸ்ட்டுக் கட்சி தலைமையின் கீழ்உள்ள பம்பாய் பஞ்சாலைத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர். 15. எஸ்.வி.காட்டே - 1927ல் தொழிற்சங்க காங்கிரசின் உதவிச் செயலாளர், பம்பாய் முனிசிபல் தொழிலாளர் சங்கத்தின் உதவித்தலைவர். 16. கே.என்.ஜோக்லேகர் - G.J.P. ரயில்வே தொழிலாளர் சங்கத்தின் அமைப்புச் செயலாளர், அகில இந்திய காங்கிரஸ் குழுவின் உறுப்பினர். 17.சௌகத் உஸ்மானி- பம்பாயிலிருந்து வெளிவந்த தொழிலாளி வர்க்க உருது ஏட்டின் ஆசிரியர். 18. பென் பிராட்லி - இங்கிலாந்தின் ஒருங்கிணைந்த இஞ்சினியரிங் சங்கத்தின் லண்டன் மாவட்டக்குழுவின் முன்னாள் உறுப்பினர். G.J.P.ரயில்வே தொழிலாளர் சங்கம், பம்பாய் பஞ்சாலை சங்கத்தின் நிர்வாகக்குழு உறுப்பினர். 19. S.S. மிராஜ்கர் - ஐக்கிய மாகாண தொழிலாளிகள் மற்றும் விவசாயிகள் கட்சியின் செயலாளர் 20. பி.சி.ஜோஷி- ஐக்கிய மாகாண தொழிலாளி - விவசாயிகள் கட்சியின் செயலாளர் 16. கோபால் பாசக் - 1928ஆம் ஆண்டில் சோசலிஸ்ட் வாலிபர் மாநாட்டின் தலைவர் 22. டாக்டர் ஜி.அதிகாரி - ஜெர்மனியில் இருந்தபோது கம்யூனிஸ்ட் கட்சியில் ஒரு உறுப்பினர். 1928ல் பம்பாயில் இருந்த கம்யூனிஸ்ட் குழுவில் இணைந்தார். ‘ஸ்பார்க்’ என்ற சோசலிச ஏட்டிற்கு கட்டுரைகள் எழுதினார். 23. எம்.ஏ.மஜித் - கிலாபத் இயக்கத்தின் போது 1920 ஆம் ஆண்டில் இந்தியாவிலிருந்து ரஷ்யாவிற்கு சென்றார். திரும்பியவுடன் கைது செய்யப்பட்டார். பஞ்சாபின் கீர்த்தி - கிசான் கட்சியின் செயலாளர், பஞ்சாபில் ‘நவ்ஜவான் பாரத் சபையை’ உருவாக்கியவர்களில் ஒருவர். 24. ஆர்.எஸ்.நிம்ப்கர் - பம்பாய் தொழிற்சங்க கவுன்சிலின் செயலாளர், பம்பாய் மாகாண காங்கிரஸ் குழுவின் செயலாளர், அகில இந்திய தொழிலாளிகள் - விவசாயிகள் கட்சியின் செயலாளர், பம்பாய் பஞ்சாலைத் தொழிலாளர் சங்கத்தின் உதவித் தலைவர். 17. ராதாராமன் மித்ரா - வங்காள சணல் தொழிலாளர் சங்கத்தின் செயலாளர். 26. தரணி கே.கோஸ்வாமி - வங்காள தொழிலாளிகள் மற்றும் விவசாயிகள் கட்சியின் துணைச் செயலாளர் ஒரு பிரபலமான தொழிற்சங்க தலைவர். 27. சம்சுல் ஹுதா- வங்காள போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் செயலாளர். 28. கோபேந்திர சக்கரவர்த்தி - கிழக்கிந்திய ரயில்வே தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகி. கரக்பூர் ரயில்வே தொழிலாளர் போராட்டத்தில் ஒன்றேகால் ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவர். 29. சோகன் சிங் ஜோஷ் - அகில இந்திய தொழிலாளிகள் மற்றும் விவசாயிகள் மாநாட்டின் தலைவர். 30. அயோத்யா பிரசாத் - வங்கத் தொழிலாளிகள் விவசாயிகள் கட்சியின் செயலுக்கமுள்ள ஊழியர். 18. எச்.எல். ஹட்சின்சன் - ‘புதிய ஸ்பார்க்’ என்ற ஏட்டின் ஆசிரியர். 32ஆவது குற்றவாளி லெஸ்சர் ஹட்சின்சன், ஒரு ஆங்கிலேய பத்திரிகையாளர், ‘புதிய ஸ்பார்க்’ ஆசிரியரான ஹட்சின்சன் கைதானபின் அந்த ஏட்டின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றார். அதனால் அவர் கைது ஆனார். கம்யூனிஸ்ட்டுகளை கைது செய்தால் தொழிலாளர்கள் பெரும் கிளர்ச்சி செய்வார்கள் என்று பயந்த ஆங்கிலேய அரசாங்கம் பம்பாயில் ராணுவத்தை தயார் நிலையில் வைத்தது என்ற போதிலும் பம்பாயிலும், கல்கத்தாவிலும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேலைநிறுத்தங்கள் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஆங்கிலேய அரசாங்கம் இளம் கம்யூனிஸ்ட் தலைவர் அமீர் ஹைதர்கானையும் இந்த வழக்கில் சேர்த்தது. ஆனால் அவர் தலைமறைவாக இருந்ததால் கைது செய்யப்பட முடியவில்லை. இந்த வழக்கை நடத்துவதற்கு அரசாங்க வழக்கறிஞராக லாங்போர்டு ஜேம்ஸ் என்ற வழக்கறிஞர் நியமிக்கப்பட்டார். அவருக்கு ஆங்கிலேய அரசு அந்நாட்களில் கொடுத்த மாதச் சம்பளம் 34 ஆயிரம் ரூபாய். - தொடரும் உலகப் புகழ்பெற்ற மீரட் கம்யூனிஸ்ட் சதி வழக்கு - 3 - என்.ராமகிருஷ்ணன் -டிசம்பர் 18, 2019 […] நாங்கள் குற்றம்சாட்டுபவர்கள்… மீரட் கம்யூனிஸ்ட் சதி வழக்கு என்பது ஒரு பழிவாங்கும் செயல் என்பதைக் கண்ட காங்கிரஸ் கட்சியின் தலைமை பிரபல காங்கிரஸ் தலைவர் மோதிலால் நேரு தலைமையில் ஒரு பாதுகாப்புக்குழுவை உருவாக்கியது. மோதிலால் நேரு பண்டித ஜவஹர்லால் நேருவின் தந்தையாவார். அத்துடன் சி.பி.குப்தா, கே.என்.கட்ஜூ போன்ற வழக்கறிஞர்களான காங்கிரஸ் தலைவர்கள் இந்த வழக்கில் கம்யூனிஸ்ட்டுகளுக்கு உதவி செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மீரட் சிறைக்கு கொண்டு வரப்பட்டபின் அவர்கள் அனைவரும் இந்த வழக்கில் எவ்வாறு வாதாடுவது, எந்த முறையில் வாதாடுவது என்று யோசித்தனர். 1848 ஆம் ஆண்டில் ஜெர்மன் நாட்டின் கொலோன் நீதிமன்றத்தில் இதேபோன்று குற்றம் சாட்டப்பட்ட மார்க்ஸும், ஏங்கெல்சும் எவ்வாறு அந்த நீதிமன்றத்தை பயன்படுத்தி கம்யூனிஸ்ட் பிரச்சாரம் செய்தார்களோ அதேபோன்று இப்பொழுதும் செய்வதென மீரட் சிறைத் தோழர்கள் தீர்மானித்தனர். முதலில் கீழமை நீதிமன்றத்தில் ஏழு மாத விசாரணைக்குப்பின் 1930 ஜனவரி 11ஆம் தேதியில் நீதிபதி மில்னர் ஒயிட் என்பவர் ஒருவரை மட்டும் விடுவித்து மற்றவர்கள் மீது இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியினை அகற்ற இவர்கள் சதி செய்தார்கள் என்று கூறி இந்த வழக்கை செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்தார். அவர்கள் சிறையிலிருந்து நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படும் பொழுதும் திருப்பி கொண்டு வரப்படும் பொழுதும் புரட்சி முழக்கத்தை எழுப்பினர். முசாபர் அகமது தனது வாக்குமூலத்தில் பின்வருமாறு கூறினார்: ‘‘நான் ஒரு புரட்சிகரமான கம்யூனிஸ்ட், நான் கைது செய்யப்படும் வரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில்தான் உறுப்பினராக இருந்தேன். நான் கைது செய்யப்பட்ட நேரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கம்யூனிஸ்ட் அகிலத்தில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டிருக்கவில்லை. மற்றபடி கம்யூனிஸ்ட் அகிலத்தின் கோட்பாடுகளில், கொள்கைகளில், அதன் திட்டத்தில் எங்களது கட்சி முழு நம்பிக்கை கொண்டுள்ளது. முடிந்த அளவு அவற்றை எங்களது கட்சி பிரச்சாரம் செய்தும் உள்ளது.” பென் பிராட்லி இவ்வாறு கூறினார்: “அரசு தரப்பினர் என்ன விரும்புகின்றனரோ அதற்கு நேர் எதிரான விளைவினைத்தான் இந்த வழக்கு ஏற்படுத்தும் என்று நான் நம்புகின்றேன். இந்த வழக்கு இந்திய மக்களுக்கு விழிப்புணர்வினையூட்டும். அதேநேரத்தில் காலனி நாட்டு மக்கள் போராட்டத்தில் இங்கிலாந்து தொழிலாளர்கள் இன்னும் அதிகமான பங்கினை வகிக்கும்படி நிச்சயமாகத் தூண்டும்.” பி.சி.ஜோஷி பின்வருமாறு முழங்கினார்: “இந்த வழக்கில் குற்றவாளி கூண்டில் நிற்பது நாங்களல்ல; ஆங்கிலேய ஏகாதிபத்தியம் தான். இங்கே இறுதித் தீர்ப்பு வழங்கப்போவது இந்திய மக்கள்தான். இந்த வழக்கிலே நாங்கள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அல்ல. மாறாக, குற்றம் சாட்டுபவர்கள். இந்திய மக்கள் எனும் அந்த உண்மையான நீதிபதிகள் கூறப்போகும் இறுதித்தீர்ப்பு புரட்சியை நோக்கி முன்னேறுங்கள் என்பதாகத்தான் இருக்கும் என்பதில் எங்களுக்கு சந்தேகமில்லை.” குற்றம் சாட்டப்பட்டவர்களில் முசாபர்அகமது, ஜோஷி, காட்டே உள்ளிட்டு 18 பேர் சார்பாக பம்பாய் தோழர் நிம்ப்கர் ஒரு நீண்ட அறிக்கையை வாசித்தார். அது 308 பக்கங்களில் 1.5 லட்சம் வார்த்தைகள் கொண்ட புத்தகமாகவே வந்துள்ளது. அவர் முன்வைத்த முக்கிய அம்சங்கள்: “இந்த வழக்கானது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்காக திகழப்போகிறது. இது ஏதோ காவல்துறையினர் தங்கள் அன்றாட நடவடிக்கையில் 31 குற்றவாளிகள் மீது தொடுக்கும் வழக்கைப் போன்றதல்ல. அது வர்க்க போராட்டத்தின் ஒரு நிகழ்வாகும். ஒரு திட்டவட்டமான அரசியல் கொள்கையின் பகுதியாகவே இந்த வழக்கு துவங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்தச் சதி வழக்கில் அரசாங்கத் தரப்பு என்னதான் மறுத்தபோதும், இது தொழிலாளிகளுடைய, தொழிற்சங்க இயக்கத்தின் மீது ஏவப்பட்ட தாக்குதலாகும். ஆங்கிலேய ஏகாதிபத்தியம் இந்தியா சுதந்திரம் பெற வேண்டும் என்பதற்காக நடத்தப்படும் இயக்கத்தின் மீது நடத்தும் தாக்குதலாகும். இந்த நீதிமன்றத்தின் முன்பு இரக்கம் காட்டக்கோரியோ, ஏன் நீதி வழங்கக்கோரியோ நாங்கள் வாதாடவில்லை. இது ஒரு வர்க்க நீதிமன்றமாகும். இந்த நீதிமன்றம் எங்களுக்கு நீதி வழங்காது என்பது எங்களுக்கு தெரியும். இருந்தபோதிலும், ஏகாதிபத்தியத்தின் கொடுங்கோன்மைக்கு எவ்வித எதிர்ப்பையும் காட்டாமல் எங்களை தியாகம் செய்து கொள்ள மாட்டோம். எங்களைப் பழிதீர்த்து அதனுடைய சாம்ராஜ்யம் முழுவதிலுமுள்ள ஒடுக்கப்பட்ட வர்க்கங்களையும், ஒடுக்கப்பட்ட மக்களையும் வம்புக்கு இழுக்க முடியுமா என்று ஏகாதிபத்திற்கு நாங்கள் சவால் விடுகிறோம். இந்த நீதிமன்றத்திற்கும் அதன்மூலம் உலகிற்கும் அதிலும் குறிப்பாக முதலாளித்துவ மற்றும் ஏகாதிபத்திய உலகத்திற்கும் இந்தியாவில் நில உரிமையாளர் மற்றும் நிலப்பிரபுத்துவ உலகத்திற்கும் நாங்கள் ஒரு விசயத்தை அறிவிக்க விரும்புகிறோம். நாங்கள் கம்யூனிஸ்ட்டுகள் என்பதே அது. ‘கம்யூனிஸ்ட்டுகள் தங்களுடைய கருத்துக்களையும், லட்சியங்களையும் ஒழித்து வைக்க விரும்பாதவர்கள்’ என்ற மார்க்ஸ், ஏங்கெல்சின் வார்த்தைகளை நாங்கள் திரும்பக் கூறுகிறோம். இன்று நிலவும் சமூக அமைப்பை வன்முறை மூலம் தூக்கியெறிவதன் மூலம் தங்களுடைய நோக்கத்தை அடைய முடியும் என்று அவர்கள் பகிரங்கமாகப் பிரகடனம் செய்கின்றனர். “இதே ஆய்வின் மூலம் நாங்கள் மற்றொரு முடிவையும் ஏற்கிறோம். அதாவது இந்தியா போன்ற ஒரு காலனி ஆதிக்க நாட்டில் பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கு முன்னதாக நடைபெறக்கூடிய புரட்சியானது முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சித் தன்மை கொண்டதாக இருக்குமென்று நாங்கள் நம்புகிறோம். இது ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் கட்டுப்பாட்டில் இருந்து இந்தியாவிற்கு முழு சுதந்திரம் பெற்றுத்தரும். அனைத்துவித பிரபுத்துவ மற்றும் பிரபுத்துவத்திற்கு முந்தைய சமூக அமைப்பின் வடிவங்களை முற்றிலும் அழித்துவிடும். அத்துடன் ஒரு சுதந்திர ஜனநாயக குடியரசு உருவாவதில் போய் முடியும். இந்த புரட்சிக்காகத்தான் நாங்கள் பாடுபட்டுக் கொண்டிருந்தோம். புரட்சியை நடத்தி முடிக்கிற திறன் படைத்த அனைத்து வர்க்கங்களையும் கொண்ட ஏகாதிபத்திய - எதிர்ப்பு ஐக்கிய முன்னணி திட்டத்தை நாங்கள் நாட்டின் முன்பு வைக்கிறோம். இந்தத் திட்டம் மட்டுமே அதை அடைவதற்கான ஒரே முறையான திட்டம் என்று நாங்கள் நம்புகிறோம்…..” இந்த பொது அறிக்கையில் கையொப்பமிட்டவர்கள்: முசாபர் அகமது, ஆர்.எஸ்.நிம்ப்கர், ஜி.அதிகாரி, அயோத்யா பிரசாத், ஜி.சி.பார்க், பி.என்.பிராட்லி, ஜி. சக்ரவர்த்தி, சம்சுல் ஹூதா, டி,கோஸ்வாமி. எஸ்.வி.காட்டே. கே.என்.ஜோக்லேகர், பி.சி.ஜோஷி, எம்.ஏ.மஜீத், ஆர்.ஆர்.மித்ரா, பிலிப் ஸ்பிராட், சோகன் சிங் ஜோஷ், எஸ்.எஸ்.மிராஜ்கர், சௌகத் உஸ்மானி. குற்றம்சாட்ட இதரர்கள் தங்கள் அறிக்கைகளை தனித்தனியாக கொடுத்தனர். - தொடரும் ஐன்ஸ்டீன், ரோமன் ரோலந்து எதிர்ப்பு - என்.ராமகிருஷ்ணன் -டிசம்பர் 19, 2019 […] உலகப் புகழ்பெற்ற மீரட் கம்யூனிஸ்ட் சதி வழக்கு - 4 1929ஆம் ஆண்டு தொடங்கிய மீரட் சதிவழக்கு விசாரணை நான்காண்டு காலம் நடைபெற்று 1932 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் முடிவுற்றது. அதன்பின் தீர்ப்பினை எழுத நீதிபதி ஆர்.எல்.யார்க் என்பவர் ஐந்து மாதங்கள் எடுத்துக் கொண்டார். 1933 ஜனவரி 16ஆம் தேதி அவர் தீர்ப்பளித்தார். வழக்கு விசாரணை மொத்தத்தில் நான்காண்டுகள் எடுத்துக் கொண்டது. தீர்ப்பில் கிஷோரிலால் கோஷ், சிவநாத் பானர்ஜி, விஸ்வநாத் முகர்ஜி ஆகிய மூவர் மட்டும் விடுதலை செய்யப்பட்டனர். முசாபர் அமகதுவிற்கு ஆயுள் தண்டனை தரப்பட்டது. காட்டே, பிலிப் ஸ்பிராட், ஜோக்லேகர், நீம்ப்கர், டாங்கே ஆகியோருக்கு 12 ஆண்டுகால கடுங்காவல், பென் பிராட்லி, மிராஜ்கர் சௌகத் உஸ்மானி, அப்துல்மஜீத் ஆகியோருக்கு 10 ஆண்டு கால கடுங்காவல். சோகன் சிங் ஜோஷ், தரணி கோஷ்வாமி, அயோத்யா பிரசாத் ஆகியோருக்கு ஏழு ஆண்டு கால தண்டனை. ஜி. அதிகாரி, பி.சி.ஜோஷி, எம்.ஜி.தேசாய், கோபன் சக்ரவர்த்தி, ஹட்சின்சன் ஆகியோருக்கு ஐந்து ஆண்டு கடுங்காவல் தண்டனை. ராதாராமன் மித்ரா, கோபால் பாசக், கேதார்நாத் சைகால் மற்றும் சம்சுல் ஹூதா ஆகியோருக்கு நான்காண்டு கடுங்காவல். ஆல்வே காஸ்லே, கௌரி சங்கர், கதம் ஆகியோருக்கு மூன்று ஆண்டு கால தண்டனை. இந்த தீர்ப்பிற்கு எதிராக உலகம் முழுவதிலிருந்து கடும் கண்டனம் எழுந்தது. வேதியியல் விஞ்ஞானியான டாக்டர் ஜி.அதிகாரிக்கு அளிக்கப்பட்ட தண்டனையை கண்டித்து உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி டாக்டர் ஐன்ஸ்டின் ஒரு கண்டன அறிக்கை வெளியிட்டார். தனக்கு பெர்லின் நகரிலேயே நன்கு அறிமுகமானவரும், அற்புதமான விஞ்ஞானியுமான டாக்டர் அதிகாரியை உடனே விடுதலை செய்ய வேண்டுமென்று கூறி ஐன்ஸ்டின் இங்கிலாந்து பிரதமர் மக்டொனால்டுக்கு பகிரங்க கடிதம் எழுதினார். உலகப் புகழ்பெற்ற அறிஞர் ரோமன் ரோலந்து, இந்தத் தீர்ப்புக்கெதிராக குரல் கொடுத்தார். தீர்ப்பை வழங்கிய ஆங்கிலேய நீதிபதி ஆர்.எஸ்,.யார்க், கம்யூனிஸ்ட்டுகள் மீது கொண்ட ஆத்திரத்தினால் அவர்கள் மூன்றாம் வகுப்பு தண்டனைக் கைதிகளாக நடத்தப்பட வேண்டுமென்று உத்தரவிட்டார். இதுவும், மக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பைக் கிளப்பியது. எனவே அரசியல் கைதிகளுக்கு விசேஷ ஏற்பாடு செய்ய விதிகள் ஏற்படுத்தப்பட்டன. இந்த விதிகளை ஏற்படுத்தியதில் மீரட் கம்யூனிஸ்ட் கைதிகளுக்குப் பெரும் பங்குண்டு. ஆங்கிலேய அரசாங்கம் இந்தக் கைதிகள் அனைவரையும் இரண்டாம் வகுப்புக் கைதிகளாக நடத்த உத்தரவிட்டது. - தொடரும் மீரட் சிறையில் மகாத்மா காந்தி மீரட் சதி வழக்கு விசாரணை நடைபெற்று வரும் பொழுது மகாத்மா காந்தி லாகூருக்கு போகும் வழியில் மீரட் கம்யூனிஸ்ட் கைதிகளை சந்தித்துப் பேச மீரட் சிறைக்கு வந்தார். அந்த குறிப்பிட்ட நாளில் மாலை 3 மணிக்கு அவர் சிறைக்குள் வந்தார். கம்யூனிஸ்ட் கைதிகள் அவரைக் கண்டதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். சிறையின் நடுவில் இருந்த திறந்தவெளியில் அவருக்கு ஒரு நாற்காலி போடப்பட்டிருந்தது. அவர் அந்த நாற்காலியில் அமர்ந்தார். அந்த நிகழ்வை எஸ்.வி.காட்டே விவரிக்கிறார்: “அவர் திரும்பி எங்களிடம் வந்தார். நாங்கள் அவரைச் சுற்றிலும் அமர்ந்து கொண்டோம். சௌரிசௌரா நிகழ்ச்சி பற்றி கேட்டோம். (அங்கு சில போலீசார் கொலையுண்டதால் போராட்டத்தை நிறுத்திவிட்டார் காந்திஜி). பலாத்காரம் நிகழ்ந்துவிட்டது என்று கூறி போராட்டத்தை நிறுத்தி விட்டதைப் பற்றிக் கேட்டோம். அதற்கு அவர், “இதோ பாருங்கள். நான் இப்போது ஒரு இயக்கத்தைத் துவக்கவுள்ளேன். எல்லாவிதமான மனிதர்களிடமிருந்தும் எனக்கு ஒத்துழைப்பு தேவை.அதற்கு எந்தவிதமான முட்டுக்கட்டையும் இருக்க வேண்டாம் என்பது எனது விருப்பம். உங்கள் மனப்பான்மை என்ன?” என்றார். டாங்கே எழுந்து பதில் சொன்னார், “நல்லது, உங்கள் போராட்டத்தை ஆதரித்து ஒத்துழைக்க எமக்கு எத்தகைய ஆட்சேபமுமில்லை. ஆனால் ஒரு நிபந்தனை. இயக்கம் நடந்து கொண்டிருக்கையில் அது வேகமடைந்துவரும் சரியான வேளையில் இங்கும் அங்கும் வன்முறை நடந்தது என இயக்கத்தை நிறுத்திவிடலாகாது. நாங்கள் இயக்கம் தொடர்ந்து நடைபெறுவதையே விரும்புகின்றோம். அங்கோ இங்கோ ஏதோ நடந்துவிட்டது என்று சொல்லி இயக்கத்தை வாபஸ் பெறக்கூடாது. காந்திஜி பதில் கூறியது இவ்வாறு இருந்தது: “சிறிது வன்முறை நடந்தால் போராட்டத்தை நிறுத்த மாட்டேன். என நான் வாக்களிக்கின்றேன். இயக்கம் வாபஸ் பெறப்பட மாட்டாது! அதன் பின்னர் “உங்கள் போராட்டத்திற்கு ஒத்துழைப்புத் தருவதற்கு எத்தகைய ஆட்சேபமும் எங்களுக்கு இல்லை” என்றோம். அதன்பின் காந்தி அனைவரிடமும் விடைபெற்றுச் சென்றார். நெருப்பை நெய்விட்டு அணைத்துவிட எண்ணுவது… - என்.ராமகிருஷ்ணன் -டிசம்பர் 20, 2019 […] உலகப் புகழ்பெற்ற மீரட் கம்யூனிஸ்ட் சதி வழக்கு - 5 “அரசாங்கத்தின் செலவில், நீதிமன்ற மேடையை தங்களுடைய தத்துவத்தை ஒலிபரப்பும் இடமாக மாற்றியதைப் போன்ற நிகழ்ச்சிகள் வரலாற்றில் ஒன்றிரண்டு தான் இருக்க முடியும். மீரட் சதி வழக்கானது இந்தியாவின் ஆங்கிலேய அரசாங்கத்திற்கு கிடைத்த ஒரு அரசியல் தோல்வியாகும். இது இந்தியக் கம்யூனிஸ்ட்டுகளுக்கு கிடைத்த வெற்றியாகும்.” மீரட் சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட டி.ஆர்.தெங்டி தீர்ப்பு எழுதப்பட்டு வந்த சமயத்தில் காலமானார். 68 வயது நிரம்பிய பொறியாளரான அவர் பம்பாய் தொழிலாளிகள் விவசாயிகள் கட்சியில் தலைவராவார். இந்த வழக்கில் விடுதலை செய்யப்பட்டவர்கள் கோரக்பூரைச் சேர்ந்த ஹோமியோபதி வைத்தியர் விஸ்வநாத் முகர்ஜி, கல்கத்தாவைச் சேர்ந்த சிவநாத் பானர்ஜி மற்றும் கிஷோரிலால் கோஷ் ஆகிய மூவர் மட்டுமே. தண்டிக்கப்பட்டவர்கள் சார்பாக அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக வாதாடுவதற்கு வழக்கறிஞரை அமர்த்த பணம் எதுவும் கிடையாது. இவர்களுக்காக பாதுகாப்புக் குழுவை உருவாக்கிய காங்கிரஸ் கட்சி 1930ஆம் ஆண்டு மறியல் இயக்கம் நடத்துவதால் இவர்களுக்கு உதவி செய்ய இயலாது என பின்வாங்கிவிட்டது. இங்கிலாந்து கம்யூனிஸ்ட் கட்சியின் முன்முயற்சியினால் இங்கிலாந்து தொழிலாளிகள், ரெஜினால்டு பிரிட்ஜ்மேன் என்பவரை செயலாளராகக் கொண்டு ஒரு பாதுகாப்புக் குழுவை லண்டனில் அமர்த்தியிருந்தனர். இப்பொழுது உயர்நீதிமன்றத்தில் வழக்கை நடத்துவதற்கும் மீரட் கம்யூனிஸ்ட் கைதிகள், அந்தக்குழுவை நம்பியே செயல்பட வேண்டியிருந்தது. இங்கிலாந்தின் தொழிலாளி வர்க்கம் மீண்டும் உதவிக்கரம் நீட்டியது. ஆகையால் தண்டிக்கப்பட்டவர்கள் சார்பாக வாதாட டாக்டர் கைலாஷ்நாத் கட்ஜூ என்ற பிரபல வழக்கறிஞர் நிச்சயிக்கப்பட்டார். இவர், காங்கிரஸ் கட்சியின் முக்கியமான தலைவர்களில் ஒருவருமாவார். இந்த மேல்முறையீடு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் பிரதம நீதிபதி டாக்டர் சுலைமான் மற்றும் டக்ளஸ் யங் என்பவர் முன்னிலையில் வந்தது. எட்டு நாட்கள் விவாதம் நடைபெற்றது. தண்டிக்கப்பட்டவர்கள் சார்பாக கைலாஷ்நாத் கட்ஜூ வாதாடினார். பின்னர் தீர்ப்பு வழங்கப்பட்டது. எம்.ஜி.தேசாய், எச். எல். ஹட்சின்சன், எச்.எஸ்.ஜாப்வாலா, ராதாராமன் மித்ரா, கேதார்நாத் சைகால், ஜி.ஆர்.கஸ்லே, கௌரி சங்கர், எஸ்.ஆர்,கதம், அர்ஜூன் ஆத்மாராம் அல்வே முதலிய ஒன்பது பேரும் விடுதலை செய்யப்பட்டனர். அயோத்யா பிரசாத், பி.சி.ஜோஷி, ஜி.பாசக், டாக்டர் அதிகாரி, சம்சுல்ஹூதா ஆகிய ஐவரும் இதுவரை அனுபவித்த தண்டனையே போதுமானது என்று கூறி விடுதலை செய்யப்பட்டனர், கோபென் சக்ரவர்த்தியின் தண்டனை ஏழு மாதங்களாக குறைக்கப்பட்டது. முசாபர் அகமது, எஸ்.ஏ. டாங்கே, சௌகத் உஸ்மானி ஆகிய மூவரின் தண்டனையும், 3 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது. பிலிப் ஸ்பிராட்டுக்கு தண்டனைக்காலம் இரண்டு வருடமாகக் குறைக்கப்பட்டது. எஸ்.வி.காட்டே, கே.என்.ஜோக்லேகர், ஆர்.எஸ்.நிம்ப்கர், பிராட்லி, எஸ்.எஸ்.மிராஜ்கர், சோகன் சிங் ஜோஷ், தரணி கோஸ்வாமி, மிர் அப்துல் மஜீத் ஆகிய எட்டு பேருக்கு ஓராண்டு சிறைத்தண்டனையாக குறைக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பு 1933 ஆகஸ்ட் 5ஆம் தேதி அளிக்கப்பட்டது. இத்துடன் 41/2 வருடக் காலம் நீடித்த ‘மீரட் சதி வழக்கு’ ஒரு முடிவுக்கு வந்தது. முசாபர் அகமது கூறுகிறார்: “மீரட் சதி வழக்கை உருவாக்கியதன் மூலம் இந்தியாவில் உருவாகி வரும் கம்யூனிஸ்ட் இயக்கத்தை அழித்துவிடலாம். கம்யூனிஸ்ட்டுகள் தலைதூக்காதபடி செய்துவிடலாம் என்று ஆங்கிலேய ஏகாபதிபத்தியம் மனப்பால் குடித்தது. ஆனால் இந்தியாவின் இளம் கம்யூனிஸ்ட்டுகள், ஏகாதிபத்தியத்தின் இந்த சதித்திட்டத்தை தகர்த்தெறிந்தார்கள். “அரசாங்கத்தின் செலவில், நீதிமன்ற மேடையை தங்களுடைய தத்துவத்தை ஒலிபரப்பும் இடமாக மாற்றியதைப் போன்ற நிகழ்ச்சிகள் வரலாற்றில் ஒன்றிரண்டு தான் இருக்க முடியும். மீரட் சதி வழக்கானது இந்தியாவின் ஆங்கிலேய அரசாங்கத்திற்கு கிடைத்த ஒரு அரசியல் தோல்வியாகும். இது இந்தியக் கம்யூனிஸ்ட்டுகளுக்கு கிடைத்த வெற்றியாகும்.” 1030 - 31 ஆம் ஆண்டுகளில் உலக சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதன் இறுதியில் சோவியத் நாட்டிற்கு சென்று அங்குள்ளவற்றை வியப்புடன் கண்டு மார்க்சிய சிந்தனையுடன் இந்தியா திரும்பிய பெரியார் ஈவேரா மீரட் தீர்ப்பை குறித்து தனது ‘குடியரசு’ ஏட்டில்’ உணர்ச்சிமிக்க தலையங்கம் எழுதினார்: ‘பொது உடமைக் கொள்கை என்பதை 27 பேரைத் தண்டித்தோ அல்லது 27 லட்சம் பேரைத் தண்டித்தோ அல்லது 27 லட்சம் பேரை சமணர்களைக் கழுவேற்றியது போல நடுத்தெருவில் நிறுத்தி கழுவில் ஏற்றிக் கொள்வதன் மூலமோ அடக்கி விடலாம் என்று நினைப்பது கொழுந்துவிட்டு எரியும் நெருப்பை நெய்விட்டு அணைத்து விடலாம் என்று எண்ணுவது போலத்தான் முடியும். ஆகவே மீரட்டின் முடிவை நாம் மேளதாளத்துடன் வரவேற்பதுடன் தண்டனை கிடைத்த தோழர்களை மனதார, வாயாற, கையாற பாராட்டுகிறோம். மூக்காலும் பாராட்டுகிறோம். நமக்கு நம் போன்ற வாலிபர்களுக்கு இப்பெரும் பேர் கிடைக்க பெரும் நிலையை அடைய முடியவில்லையே என்று வருந்தி மற்றுமொரு முறை பாராட்டுகிறோம். மீரட் நீதிமன்ற மேடையிலிருந்து கம்யூனிஸ்ட்டுகள் செய்த பிரச்சாரமானது இந்தியாவிலிருந்த பயங்கரவாத இயக்கத் தலைவர்களிடம் மறு சிந்தனைக்கு இட்டுச் சென்றது. இதன் விளைவாக இந்தியாவிலும், அந்தமான் தீவுச் சிறையிலும் அடைப்பட்டிருந்த அந்த இயக்கத்தினர் 1930ஆம்ஆண்டுகளின் இறுதிக்குள்ளாகவே பெரும் எண்ணிக்கையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர். டாக்டர் நாராயண் ராய், சிவவர்மா, பண்டிட் கிஷோரிலால், கணேஷ் கோஷ், சதீஷ் பக்ராஷி, வீராங்கனை கல்பனா தத், சுபோத்ராய் போன்ற பலரும் இதில் அடங்குவர். எல்லோரும் ‘தோழர்’ ஆனார்கள் - என்.ராமகிருஷ்ணன் -டிசம்பர் 21, 2019 […] மார்க்சியத்திற்கு பெரியார் செய்த தொண்டு - 1 தமிழகம் கண்ட மகத்தான சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவர், சுய மரியாதை இயக்கத்தை இந்தியாவில் முதன்முதலில் துவக்கிய அறிஞர் மற்றும் 20ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் மாபெரும் சமூக சீர்திருத்த சிந்தனையாளர் போன்ற பெருமைக்குரிய ஈவெரா பெரியார் அவர்கள் 1931 ஆம் ஆண்டில் மேல் நாடுகளுக்குச் சென்று அங்குள்ள அரசியல் இயக்கங்கள், அரசியல், பொருளாதார, சமூக அமைப்பு போன்றவற்றை நேரில் கண்டு வரவேண்டுமென்று விரும்பினார். இதன் பொருட்டு வழக்கறிஞரும் தனது நெருங்கிய நண்பருமான எஸ்.ராமநாதன் துணையுடன் பெரியார் 1931ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி சென்னையிலிருந்து கப்பலில் புறப்பட்டுச் சென்றார். எகிப்து, கிரீஸ், துருக்கி, ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், போர்ச்சுக்கல் மற்றும் இங்கிலாந்திற்கு சென்று சுமார் 11 மாத காலம் சுற்றுப்பயணம் சென்றார். இந்நாடுகளில் இருந்த பல்வேறு அமைப்புகளுடன் கலந்துரையாடினார். தொழிலாளர் தலைவர்கள் பலருடன் விவாதம் நடத்தினார். அந்த நாட்டு மக்களின் வாழ்க்கை முறை, விஞ்ஞான வளர்ச்சி, பொருளாதார நிலைமை, மக்களின் வாழ்க்கை நிலைமை மற்றும் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் போன்றவற்றை அவர் கேட்டுத் தெரிந்துகொண்டார். இங்கிலாந்தில் இருக்கும் பொழுது ஒரு சில தொழிலாளர் கூட்டங்களிலும் அவர் பேசினார். இந்த நாடுகளைச் சுற்றிப்பார்த்த பின் பெரியாருக்கு சோவியத் நாட்டைக் காண வேண்டும் என்ற விருப்பம் எழுந்தது. அங்கே சோசலிச முறை எவ்வாறு செயல்பட்டு வருகிறது என்பதை நேரில் காண அவருக்கு பெரும் விருப்பம் இருந்தது. எனவே, அவர் இந்திய வம்சாவளியினரும், இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராகவும் இருந்த சாபூர் சக்லத்வாலாவைச் சந்தித்துப் பேசி தன் விருப்பத்தை தெரிவித்தார். அவரும் சோவியத் நாட்டிற்குச் சிபாரிசு கடிதம் கொடுத்தார். அதைக் கொண்டு பெரியாரும், எஸ்.ராமநாதனும் சோவியத் நாட்டிற்குச் சென்றனர். சோவியத் நாட்டில் அவர் கண்ட காட்சிகள் அவரைப் பெரிதும் ஈர்த்தன. கடவுள் பயமின்றி அந்நாட்டு மக்கள் வாழ்ந்தது, கல்வி வசதி, மருத்துவ வசதி, உயர்ந்த கலாச்சார வாழ்க்கை, முதலாளி, நிலப்பிரபு என்பதே இல்லாமல் அனைவரும் வேலை செய்து நல்வாழ்வு வாழ்ந்தது, குழந்தைகள் மிகுந்த ஆரோக்கியமானவர்களாக இருந்தது, ஒவ்வொரு உழைப்பாளிக்கும் ஓய்வுகால வசதிகள், ஆண்-பெண் சமத்துவம், பகுத்தறிவுப்பூர்வமான வாழ்க்கை, மூட நம்பிக்கை சிறிதும் இல்லாதது போன்றவை அவர் மீது பெரும் தாக்கம் செலுத்தியது, இவை அனைத்தும் கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ் உருவாக்கப்பட்டு வரும் சோசலிச சமுதாயத்தின் சாதனை என்று பெரியார் உணர்ந்தார். லண்டன் மெக்ஸ்பரோ லேக் பூங்காவில் நடைபெற்ற தொழிலாளர் கூட்டத்தில் பெரியார் பேசியது (நாள் 20-06-1932) “இந்தியர்களாகிய எங்களை நீங்கள் ஒரு பரிகசிக்கத்தக்க சமூகமாகக் கருதலாம். ஆனால் நாங்கள் பிரிட்டிஷ் தொழிற் கட்சியை மிக மிகப் பரிகசிக்கத்தக்க விஷயமாய் கருதுகிறோம் என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம். ‘இந்தியச் சுரங்கங்களில் 10 மணி நேர வேலைக்கு 8அணா கூலி கொடுத்து இந்தியர்களிடம் வேலை வாங்கப்படுகி றது. சுமார் 40 ஆயிரம் பெண்கள் தினமும் 5 அணா கூலிக்கு பூமிக்குள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்தக் கொடுமையையும் ஆபாசத்தையும் நிறுத்த தொழிற்கட்சி அரசாங்கம் என்ன செய்தது? அவ்வளவோடு மாத்திரம் அல்லாமல் இந்தியாவா னது இந்திய அரசர்களும், ஜமீன்தார்களும், முதலாளி மார்களும், அய்ரோப்பிய வியாபாரிகளுமே ஆதிக்கம் வகிக்கும்படியானதும், குடித்தனக்காரர்களுக்குப் பாத்தியமும், பொறுப்பும் இல்லாததுமான ஒரு அரசியல் சபை மூலம் நிர்வாகம் நடக்கும்படியான காரியத்திற்கு உதவி செய்கிறார்கள். ‘ஆதலால் யார்க் ஷயர்’ தொழிலாளிகளே! நீங்கள் இந்தப் போலிக் கட்சிகளையும், கொள்கைகளையும் நம்பாமல் மனித சமூக விடுதலைக்கும், சுதந்திரத்திற்கும், சமத்து வத்திற்கும் உண்மையாகவே போராடுவதற்காக உலகத் தொழிலாளரின் ஒற்றுமையை எதிர்நோக்கிக் கொண்டி ருங்கள்! அந்நாட்டின் தொழிற்சாலைகள், கல்வி நிலையங்கள், விவசாயப் பண்ணைகள், குடியிருப்புகள், அனைத்தையும் அவர் பார்வையிட்டார். அவர்கள் சென்ற அனைத்து இடங்களிலும் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சோவியத் நாட்டின் அரசாங்க விருந்தினர்களாக பெரியாரும், ராமநாதனும், மூன்று மாதக் காலம் தங்கி அதன் பின் 1932ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்தியாவிற்கு திரும்பினார். இந்த மூன்று மாதக் கால சுற்றுப்பயணமானது பெரியாரின் சிந்தனையில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. சாதி,மத வித்தியாசம், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற வேறுபாடு, ஏழை, பணக்காரன் என்ற பிளவு, கடவுள் பயம், மூட நம்பிக்கை ஏதும் இல்லாதது, அவரை மகிழ்ச்சிக்குள்ளாக்கியது. அனைவரும் தோழர்கள் என்றே அழைக்கப்பட்டு வந்தது போன்றவை அவருக்கு வியப்பாக இருந்தது. தமிழகத்தில் அனைவரும் சுய மரியாதையுடன் இருக்க வேண்டுமென்ற தனது விருப்பம் சோவியத் நாட்டில் அமலாகி வருவது கண்டு அவர் பெரும் மகிழ்ச்சியடைந்தார். கம்யூனிச அமைப்புதான் இதற்கெல்லாம் காரணம் என்ற புரிதலைக் கொண்ட பெரியார் அந்த கம்யூனிசக் கொள்கையை தமிழகத்திலும் பரப்ப வேண்டுமென்று முடிவு செய்தார். அதன் முதல் நடவடிக்கையாக நவம்பர் 13ஆம் தேதிய ‘குடியரசு’ இதழில் பின்வரும் செய்தி வெளிவந்தது. இதைத் தொடர்ந்து ‘குடி அரசு’ ஏட்டில் அனைத்துப் பெயர்களுக்கும் முன்னால் ‘தோழர்’ என்ற பெயர் சேர்க்கப்பட்டுவிட்டது. தோழர் காந்தி, தோழர் ராஜகோபாலாச்சாரி, தோழர் ஈ.வெ.ரா என்றே அனைத்து பெயர்களும் எழுதப்பட்டன. முக்கிய குறிப்பு இயக்கத் தோழர்களும், இயக்க அபிமானத் தோழர்களும் இனி ஒருவருக்கொருவர் அழைத்துக் கொள்வதிலும், பெயருக்கு முன்னால் பின்னால் மரியாதை வார்த்தை சேர்ப்பது என்பதிலும் ஒரே மாதிரியாக தோழர் என்கின்ற பதத்தையே உபயோகிக்க வேண்டுமென்றும், மகா-ள ஸ்ரீ, திருவாளர், திரு., தலைவர், பெரியார், திருமதி, ஸ்ரீஜித் என்பது போன்ற வார்த்தைகளை சேர்த்துப் பேசவோ, எழுதவோ கூடாது என்றும் வணக்கமாய் வேண்டிக் கொள்கிறேன். ‘குடிஅரசிலும்’, அடுத்த வாரம் முதல் அந்தப் படியே செய்ய வேண்டுமென்று தெரிவித்துக் கொண்டிருக்கிறேன். -ஈ.வெ.ராமசாமி கம்யூனிஸ்ட் அறிக்கையை முதலில் வெளியிட்டவர் - என்.ராமகிருஷ்ணன் -டிசம்பர் 22, 2019 […] நாகப்பட்டினத்தைச் சேர்ந்த கம்யூனிஸ்ட்டும், சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவருமான டி.எம்.ராமசந்திரன் எழுதிய ’ஒவ்வொரு தொழிலாளியும் பொதுவுடமை கட்சியில் சேர வேண்டியது ஏன்? என்ற கட்டுரையையும் பெரியார், குடியரசு’ இதழில் தொடர்ந்து வெளியிட்டார். பெரியார் ரஷ்யாவைக் குறித்து தொடர்ந்து பல கட்டுரைகளை ‘குடியரசு இதழில்’ வெளியிட்டார். ‘ரஷ்யாவைப் பற்றிய உண்மை விபரம் என்ன’, ரஷ்யாவில் சுகாதார வைத்திய முறைகள்’, ‘ரஷ்யாவில் பெண்கள் நிலை - அழகைப்பற்றிய கவலை அணு அளவுமில்லை’, ‘மாதர்களுக்கு சம உரிமை உள்ள நாடு ரஷ்யா ஒன்றுதான்’ போன்ற தலைப்புகளில் பல கட்டுரைகள் வெளி வர ஆரம்பித்தன. அத்துடன் குடியரசு ஏட்டில் ‘புரட்சி ஓங்குக! பொதுவுடமை தோணுக! ‘கடவுள் உணர்ச்சியை ஒழிப்பது பணக்காரத் தன்மையை ஒழிப்பதாகும்’ போன்ற பெட்டிச் செய்திகளும் வெளிவந்தன. மே தினத்தை சமதர்மப் பெருநாளாக சுய மரியாதை இயக்கத்தினர் கொண்டாட வேண்டுமென்று 1933ஆம் ஆண்டில் பெரியார் அறிவித்தார். அவரது அறிக்கை பின்வருமாறு: ‘சமதர்ம சபைகள் யாவும், சமதர்மக் கொள்கைகளை ஏற்றுக் கொண்ட சங்கங்கள் யாவும், அத்தினத்தை பெருந்தினமாகக் கொள்ளல் மிக்க நலமாகும். அன்று காலையிலும், மாலையிலும் அந்தந்தக் கிராமங்களிலும் பட்டிணங்களிலும் சமதர்மிகள் ஊர்வலம், சமதர்ம சங்கீதங்களுடன் வரலாம். ஆங்காங்கு கூட்டங்கள் கூட்டி சமதர்ம இன்னதென்றும் தொழிலாளருக்கும், விவசாயிகளுக்கும் விளக்கமுறச் செய்யலாம்’ என்று ஈ.வே.ரா. தன் பெயரில் அறிவிப்பை வெளியிட்டார். பெரியார் மற்றொரு காரியத்தையும் செய்தார். பொதுவாக அக்காலத்தில் காங்கிரஸ் இயக்கம் அரசியல் கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்ல பொது மாநாடுகளை நடத்துவதுண்டு. பெரியார் அதே வழியில் சமதர்ம லட்சியத்தை பிரச்சாரம் செய்யும் பொருட்டு பல பொது மாநாடுகளை நடத்தினார். 1. தொழிலாளர் மாநாடு 2. விவசாயிகள் மாநாடு 3. ஜமீன்தார் ஒழிப்பு மாநாடு 4. லேவாதேவி ஒழிப்பு மாநாடு 5. நாத்திகர் மாநாடு 6. இளைஞர் மாநாடு 7. ஜமீன்தார் அல்லாதார் மாநாடு போன்ற மாநாடுகளை பல மாவட்டங்களில் நடத்தினார். இச்சமயத்தில் தீவிர காங்கிரஸ் ஊழியரும், நாத்திகரும், முற்போக்கு சிந்தனையாளரும், சோசலிஸ்ட்டுமான ஜீவா என்ற ப.ஜீவானந்தம் என்ற சிறந்த தளபதி பெரியாருக்குக் கிடைத்தார். சிறாவயல் என்ற கிராமத்தில் காந்தி ஆசிரமம் என்ற ஒன்றை நடத்தி வந்த ஜீவா 1930ஆம் ஆண்டில் நடைபெற்ற மறியல் போரில் கலந்து கொண்டு ஓராண்டு கடுங்காவல் தண்டனை பெற்று திருச்சி சிறையில் அடைக்கப்பட்டவர். அச்சமயத்தில் அங்கு காவலில் வைக்கப்பட்டிருந்த சுரேந்திர மோகன் கோஷ் திவாரி, பிரதுல் சந்திர கங்குலி போன்ற பகத்சிங்கின் சக தோழர்கள் நட்பு அவருக்கு கிடைத்தது. அவர்கள் பயங்கரவாதத்திலிருந்து அப்பொழுது மார்க்சியத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் கொடுத்த கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை உள்ளிட்ட நூல்களைப் படித்து கம்யூனிஸ்ட் ஆனார் ஜீவா. விடுதலையாகி வெளிவந்ததும் சோசலிசப் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார். சிறந்த பேச்சாளரான ஜீவா குறித்து அறிந்த பெரியார் அவரோடு உரையாடி அவரை சுய மரியாதை இயக்கத்திற்கு ஈர்த்தார். பெரியாரும், ஜீவாவும் ஏராளமான மாநாடுகளில் கலந்து கொண்டு அற்புதமான உரைகள் ஆற்றி சுயமரியாதை இயக்கத்தை வளர்த்தனர். பெரியார் மார்க்சியத்திற்கு மற்றொரு சிறப்பான பங்கை இக்கால கட்டத்தில் செய்தார். மார்க்சும் ஏங்கெல்சும் எழுதிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை தன் சக தோழர் எஸ்.ராமநாதனுடன் இணைந்து தமிழில் வெளியிட்டார். சமதர்ம அறிக்கை என்ற பெயரில் அந்த அறிக்கை தமிழில் வெளிவந்தது. இதன்மூலம் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை தமிழில் முதன் முதலாக வெளியிட்ட பெருமை பெரியாரையே சாரும். அத்துடன் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த கம்யூனிஸ்ட்டும், சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவருமான டி.எம்.ராமசந்திரன் எழுதிய ’ஒவ்வொரு தொழிலாளியும் பொதுவுடமை கட்சியில் சேர வேண்டியது ஏன்? என்ற கட்டுரையையும் பெரியார், குடியரசு’ இதழில் தொடர்ந்து வெளியிட்டார். பெரியாரும் எஸ்.ராமநாதனும் சேர்ந்து லெனின் எழுதிய ‘மதத்தைக் குறித்து’ என்ற தலைப்பிலான கட்டுரைகளை தமிழாக்கம் செய்து வெளியிட்டனர். பிரெடரிக் ஏங்கெல்ஸ் எழுதிய கம்யூனிசக் கோட்பாடுகள் என்ற நூலையும் தமிழில் வெளியிட்டார். இச்சமயத்தில் உடல்நலம் குன்றியிருந்த மார்க்சிய அறிஞர் ம.சிங்காரவேலர் ஏராளமான கட்டுரைகளை எழுதி குடியரசு ஏட்டிற்கு உதவினார். விஞ்ஞான சோசலிசத்தை விளக்கியும், மேல்நாடுகளில் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை குறித்தும் மூட நம்பிக்கைகளை அம்பலப்படுத்தியும், சாதி, மதம் போன்றவை எவ்வாறு தோன்றின? அவற்றின் அடிப்படை எவை? என்பன போன்றவை குறித்தும் இக்கட்டுரைகள் அமைந்திருந்தன. பெரியார், ஜீவா ஆகியோரின் சோசலிசப் பிரச்சாரமும், சமூக சீர்திருத்தப் பிரச்சாரங்களும் சிங்காரவேலரின் அறிவுறுத்தும் கட்டுரைகளும், புதிய ரஷ்யாவைக் குறித்து பெரியார் கூறிய விபரங்கள், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை பரவியது ஆகிய அனைத்தும் சேர்ந்து சுயமரியாதை இயக்கச் செயல்வீரர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்தது. அந்த இயக்கத்தை வெறும் சமூக சீர்திருத்த இயக்கமாக வைத்துக் கொள்வதா அல்லது மார்க்சிய அடிப்படைக் குறிக்கோள் கொண்ட ஒரு இயக்கமாக மாற்றலாமா? என்ற கருத்து பெரியாருக்கும், அதேபோன்று அந்த இயக்கத்தின் முக்கியத் தலைவர்கள் பலருக்கும் ஏற்பட்டது. ‘சுய மரியாதை இயக்கத்தை அரசியல் கொள்கையுடைய இயக்கமாக மாற்ற பெரியார் எண்ணினார். உடனே அவர் சிங்காரவேலரைச் சந்தித்து தன் விருப்பத்தை தெரிவித்து சுய மரியாதை இயக்கத்திற்கு ஒரு வேலைத்திட்டத்தை எழுதித் தரும் படி கேட்டுக் கொண்டார். அவரும் அதன்படி ஒரு வேலைத்திட்டத்தை தயாரித்துக் கொடுத்தார். (சாமி/ சிதம்பரனார்: ‘தமிழர் தலைவர் பெரியார்’ என்ற நூலில்) அதுதான் மகத்தான ஈரோட்டுப் பாதை திட்டமாகும். மார்க்சியத்திற்கு பெரியார் செய்த தொண்டு - 3 ஈரோட்டுப் பாதை - என்.ராமகிருஷ்ணன் -டிசம்பர் 23, 2019 […] பெரியார் கேட்டுக் கொண்டபடி மார்க்சிய அறிஞர் சிங்காரவேலர் ஒரு அற்புதமான வேலைத் திட்டத்தை சுயமரியாதை இயக்கத்திற்கு எழுதிக் கொடுத்தார். சாராம்சத்தில் அது கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் போன்றே இருக்கும். ஈரோட்டுப் பாதை என்று அந்நாட்களில் மிகவும் புகழப்பட்ட அந்த ஈரோட்டுத் திட்டம் இரண்டு பிரிவுகளைக் கொண்டது: ஒன்று, சுயமரியாதை இயக்க லட்சியம். மற்றொன்று வேலைத்திட்டம். லட்சியம் என்பது இங்கிலாந்து உள்ளிட்ட எல்லாவித முதலாளித்துவத் தன்மை கொண்ட ஆட்சியிலிருந்தும் இந்தியாவை பூரண விடுதலை அடையச் செய்வது; தேசத்தின் அனைத்து கடன்களையும் ரத்து செய்வது; ரயில்வே, வங்கிகள், நீர் வழிப்பாதை சாதனங்களை மக்கள் உடைமையாக்குவது; தரிசு நிலங்கள், காடுகள், ஸ்தாவர சொத்துக்களை மக்கள் உடைமையாக்குவது விவசாயிகளும், தொழிலாளிகளும் வட்டிக்காரர்களுக்கு, கடன்காரர்களுக்கு தரவேண்டிய கடன்களை ரத்து செய்வது; அடிமை ஒப்பந்தங்களை ரத்து செய்வது; சுதேசி சமஸ்தானங்கள் உள்ளிட்டு இந்தியா முழுவதையும் தொழிலாளிகள், விவசாயிகள் மற்றும் உழைக்கும் மக்களின் நேரடி ஆட்சியில் கொண்டு வருவது; ஏழு மணி நேர வேலைநாள், கூலி உயர்வு உள்ளிட்டவையாகும். வேலைத்திட்டம் என்பது நாட்டு மக்களை பொருளாதாரக் கொடுமை, சாதிமதக் கொடுமையிலிருந்து விடுவித்து சுதந்திர மனிதர்களாக்கும் பொருட்டு மக்கள் அவசியத்திற்கான தொழில் முறைகள்; போக்குவரத்துச் சாதனங்கள் போன்றவற்றின் நிர்வாகத்தையும், லாபத்தையும் தனிநபர்கள் அடையாமல் இருப்பதற்கு வேண்டிய காரியங்களை அரசியல் அமைப்புகள் மூலம் செய்ய வேண்டும்; மாவட்ட சபை முதல் சட்டமன்றம் வரை வயது வந்தோர் வாக்குரிமையால் தேர்ந்தெடுக்கப்படுதல்; விவசாயத் தொழிலாளிகளுக்கு நியாயமான பங்கு; மத அமைப்புகளின் வருவாயை மக்களுக்காகப் பயன்படுத்துதல்; அரசாங்க ஆவணங்களில் சாதி, மதப் பிரிவுகள் குறிக்காதிருத்தல்; உள்ளாட்சிகள் மூலம் போக்குவரத்து, வீட்டுவசதி, பால், வைத்திய வசதிகளைச் செய்து தருவது; தேர்தலுக்கு கட்சியின் பெயரால் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள். வேட்பாளர்கள் கட்சித்திட்டத்திற்கு வாக்குறுதி அளித்தல்- போன்ற திட்டங்களை கொண்டது இந்த வேலைத்திட்டம். சிங்காரவேலர் எழுதிய இந்தத் திட்டம் பெரியாருக்கு கிடைத்ததும் அவர் அது குறித்து விவாதிக்க 1932ஆம் ஆண்டு டிசம்பர் 28,29 தேதிகளில் ஈரோடு நகரில் சுயமரியாதை தொண்டர்களின் கூட்டத்தை கூட்டினார். இக்கூட்டத்தில் அதை விளக்கி சிங்காரவேலர் உரையாற்றினார். இந்தத்திட்டத்திற்கு பெரியாரின் நெருங்கிய நண்பரும், தமிழில் பெரியார் வாழ்க்கை வரலாறை எழுதியவருமான சாமி சிதம்பரனார் உள்பட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். சுய மரியாதை இயக்கம் அரசியல் இயக்கமானால் அது சமூக சீர்திருத்த வேலையை சரிவர செய்ய முடியாது என்று அவர்கள் கூறினர். அதற்கு பெரியார் தரப்பில் தக்க பதிலும் கூறப்பட்டது. அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதன் மூலம் சமூக சீர்திருத்தத்தை சீர் செய்யலாம் என்று கூறப்பட்டது. சுய மரியாதை இயக்கம் எப்போதும்போல் சமூக சீர்திருத்த இயக்கமாக இருந்து வரும் நேரத்திலேயே அதற்குள் சமதர்மக் கட்சி என்ற ஒரு தனி அரசியல் பிரிவை வைத்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டது. இறுதியில் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் ஒருமனதாக ஈரோட்டுப் பாதையை ஏற்றுக் கொண்டனர். இக்கூட்டத்தின் முடிவில் ஈரோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இந்தத் திட்டத்தை விளக்கி பெரியார், சிங்காரவேலர் மற்றும் ஜீவா ஆகியோர் உரையாற்றினர். இந்த மாநாட்டைத் தொடர்ந்து பெரியாரும், ஜீவாவும், மாவட்டம் தோறும் ஈரோட்டுப் பாதையை விளக்கி மாநாடுகளையும், கூட்டங்களையும் நடத்தி வந்தனர். இச்சமயத்தில் பெரியாருக்கு ஒரு பெரும் இழப்பு ஏற்பட்டது. அவருடைய சமூக அரசியல் வாழ்க்கைக்கு பெரும் துணையாக இருந்த அவரது துணைவியார் நாகம்மாள் 1933 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் தேதி காலமானார். நாகம்மாள் பெரியாருடன் சேர்ந்து சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் பங்கெடுத்தவர். மகாத்மா காந்தி கள்ளுக்கடைக்கு முன்னால் மறியல் போராட்டம் நடத்த வேண்டுமென்று காங்கிரஸ் ஊழியர்களுக்கு கட்டளையிட்ட பொழுது அதையேற்று பெரியார் தன் தோட்டத்தில் கள் இறக்குவதற்காக குத்தகைக்கு விட்டிருந்த 500 தென்னை மரங்களையும், ஒரே இரவில் வெட்டி வீழ்த்தச் செய்தார். அவர் துணைவியார் நாகம்மாளும், பெரியாரின் சகோதரி கண்ணம்மாளும், ஈரோட்டில் கள்ளுக்கடைகளுக்கு முன்பாக மறியல் செய்தனர். ஆயிரக்கணக்கானோர் அவர்கள் ஆதரவாக திரண்டு விட்டனர். இதைத் தொடர்ந்து நாடெங்கும் இந்தச் செய்தி பரவி கள்ளுக்கடைகளுக்கு முன்னால் பெரும் மறியல் போராட்டங்கள் நடக்கத் துவங்கின. இதனால் ஆங்கிலேய அரசாங்கத்திற்கு ஆப்காரி எனப்படும் கள்ளுக்கடை வரி குறைந்து போயிற்று. எனவே ஒரு பெரிய அரசாங்க அதிகாரி மகாத்மா காந்தியைச் சந்தித்து அந்த இயக்கத்தை நிறுத்தும் படி கேட்டுக் கொண்டார். ஆனால் காந்தி சொன்னப் பதில் : அது என் கையில் இல்லை. ஈரோட்டில் இரண்டு பெண்களிடம் இருக்கிறது! நாகம்மாள் - கண்ணம்மாள் போராட்டம் அந்தளவுக்கு இந்தியாவில் பிரசித்தி பெற்றது. பொருளாதாரக் கொள்கை சமதர்மமே! - என்.ராமகிருஷ்ணன் -டிசம்பர் 24, 2019 […] மார்க்சியத்திற்கு பெரியார் செய்த தொண்டு - 4 பெரியாரின் சமதர்மப் பிரச்சாரத்தையும், அரசாங்க - விரோதப் பேச்சுக்களையும், எழுத்துக்களையும் கவனித்து வந்த ஆங்கிலேய அரசாங்கம் அவரை கைது செய்வதற்காக ஒரு வாய்ப்பை எதிர்நோக்கியிருந்தது. அதுவும் விரைவில் வந்தது. 1933 ஆம் ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதிய இதழில் ‘இன்றைய ஆட்சி என் ஒழிய வேண்டும்’ என்ற தலைப்பில் ‘குடி அரசில்’ தலையங்கம் வெளியானது. அதில், “மக்களின் வரிப்பணம் பெரிதும் செல்வந்தர்களுக்கே செலவிடப்படுகிறதென்றும், அது ஏழைகளுக்குப் பயன்படும் வகையில் செலவிடப்படுவதில்லையென்றும் விமர்சனம் செய்திருந்தது. பிஏ, எம்ஏ, படித்தவர்கள் 15 ரூபாய், 20 ரூபாய் சம்பளம் கூட கிடைக்காமல் திணறும்போது அரசாங்க நிர்வாகங்களில் 500, 1000, 5000 என்று சம்பளங்களை அள்ளிக்கொடுப்பதென்றால் இப்படிப்பட்ட அரசாங்கமும், நிர்வாகமும் பாமர ஏழை மக்களைச் சுரண்டும் கூட்டுக் கொள்ளை ஸ்தாபனம்தானே. இன்றைய ஆட்சியை அழிக்க வேண்டுமென்பதற்கு இது ஒரு உதாரணமல்லவா” என்று அந்தத் தலையங்கம் கேட்டது. இந்த அரசாங்கமானது முதலாளித்துவ அரசாங்கம் என்றும், அதன் கல்வியின் தத்துவமும், கல்வி இலாகாவும், செல்வந்தர் வீட்டுப் பிள்ளைகளுக்கு மட்டும் கிடைக்கும்படியாக அமைந்துள்ளதென்றும் அந்தத் தலையங்கம் குற்றஞ்சாட்டியது. இதைக் கண்ட ஆங்கிலேய அரசாங்கம் பெரியாரையும், அந்த குடியரசு ஏட்டின் வெளியீட்டாளரான அவர் சகோதரி கண்ணம்மாவையும், டிசம்பர் 20ஆம் தேதி கைது செய்து கோவை சிறையில் அடைத்தது. இவ்விருவர் மீதும் ராஜத் துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. நீதிமன்றத்தில் பெரியார் ஒரு அறிக்கை சமர்ப்பித்தார்: ‘இந்த வழக்கு தொடரப்பட்டிருப்பதானது, தமது ‘சமதர்மப் பிரச்சாரத்தை நிறுத்துவதற்காக’ முதலாளி சர்க்காரோ அல்லது மத சம்பிரதாயக்காரர்களோ செய்த சூழ்ச்சியாக இருக்குமென்ற முடிவுக்குத் தான் வர வேண்டியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.’ (புரட்சி ஏடு 4.2.1934) ஆனால் நீதிமன்றம் இவர்கள் இருவரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்து 1934ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பெரியாருக்கு 6மாத கடுங்காவல் தண்டனையும், 300 ரூபாய் அபராதமும் விதித்தது. கண்ணம்மாளுக்கு மூன்று மாதம் சிறை வாசமும், 300ரூபாய் அபராதமும் விதித்தது. அபராதம் செலுத்தத் தவறினால் மேலும் ஒரு மாதகாலம் வெறும் காவல் தண்டனை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இருவரும் அபராதம் செலுத்த மறுத்து, சிறைச்சாலை சென்றனர். இதே சமயத்தில் அரசாங்கம் வேறொரு அடக்குமுறையையும் கையாண்டது. அதன் காரணமாக குடியரசு நிறுத்தப்பட்டு விட்டது. புரட்சி என்ற பெயரில் புதிய பத்திரிகை வெளியானது. அதற்கு இடையூறு ஏற்பட்டு பகுத்தறிவு என்ற பெயரில் பத்திரிகை வெளிவந்தது. அதுவும் அடக்குமுறை காரணமாக நிறுத்தப்பட்டு விட்டது. கோவை சிறையில் பெரியாரும், வேலூர் பெண்கள் சிறையில் கண்ணம்மாவும் அடைக்கப்பட்டனர். அச்சமயத்தில் கோவை சிறையில் காங்கிரஸ் தலைவர் ராஜாஜியும் தண்டிக்கப்பட்ட கைதியாக இருந்தார். இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆவர். ராஜாஜியின் நோக்கம் முழுவதும் பெரியாரை எப்படியாவது மீண்டும் காங்கிரஸ் கட்சிக்குள் கொண்டு வர வேண்டும் என்பதாக இருந்தது. காங்கிரசோடு இணைந்து செயல்பட பெரியாருக்கும் சம்மதமே, ஆனால் அதற்கு ஒரு நிபந்தனை விதித்தார். தான் ஒரு வேலைத்திட்டத்தை தருவதாகவும், அதை காந்திஜி ஏற்றுக் கொண்டால் காங்கிரசோடு சேர்ந்து பணியாற்ற சம்மதிப்பதாகவும் தெரிவித்தார். ராஜாஜியும் அதை ஏற்றுக் கொண்டார். அதன்படி பெரியார் ஒரு வேலைத்திட்டத்தை தயாரித்து அதை ராஜாஜியிடம் கொடுத்தார். அதில் எண்ணிக்கைக்குத் தகுந்தபடி அரசியல் பிரதிநிதித்துவமும் வேலை வாய்ப்பும், கொடுக்கப்பட வேண்டுமென்று பெரியார் கோரியிருந்தார். ஆனால் காந்தி அதை ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டார். தண்டனைக் காலம் முடிந்து 1935ஆம் ஆண்டில் இருவரும் விடுதலையாகினர். அவ்வாண்டு நவம்பர் மாதத்தில் மத்திய சட்டசபைக்கு (இன்றுள்ள மக்களவை போல்) தேர்தல் வரவிருந்தது. பெரியார் ஒரு புதிய வேலைத் திட்டத்தை வெளியிட்டார். அது ஈரோட்டுப் பாதையையும், சிறையில் ராஜாஜியிடம் கொடுத்த வேலைத்திட்டத்தைப் போன்றும் இருந்தது. பெரியார் ஒரு அறிவிப்புச் செய்தார். இந்த புதிய வேலைத்திட்டத்தை யார் ஏற்றுக்கொள்கிறார்களோ, அவர்களுடன் சேர்ந்து வேலை செய்வதாகவும் கூறி அதை காங்கிரஸ் கட்சிக்கும், நீதிக்கட்சிக்கும் அனுப்பினார். காங்கிரஸ் கட்சி அதை ஏற்கவில்லை. நீதிக்கட்சி அதை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தது. எனவே பெரியார் நீதிக்கட்சியை ஆதரித்துப் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார். பெரியாரின் இந்தப் போக்கிற்கு அவருடைய சுயமரியாதை இயக்கத்திற்குள் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. சிங்காரவேலர், ஜீவா போன்றவர்கள் இந்த முடிவு தவறானது, நீதிக்கட்சி பிற்போக்கான கட்சி, ஆங்கிலேயரை ஆதரிக்கும் கட்சி என்று கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் கூறியதை ஏற்க பெரியார் மறுத்துவிட்டார். நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும் வெற்றிபெற்றது. நீதிக்கட்சி படுதோல்வி அடைந்தது. இந்தியாவில் உருவாகிவரும் இளம் கம்யூனிஸ்ட் இயக்கத்தை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும் என்று முடிவெடுத்த ஆங்கிலேய அரசாங்கம் 1934 ஆம் ஆண்டில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை தடைசெய்தது. கம்யூனிஸ்ட் கட்சிக்கு அடுத்தாற் போல் இந்தியாவில் சோசலிச, கம்யூனிச பிரச்சாரம் செய்து வந்த சுயமரியாதை சமதர்ம கட்சியையும், தாக்குவதற்கு அது திட்டமிட்டது. இதைத் தொடர்ந்து அக்கட்சியின் அச்சகமான ‘உண்மை விளக்கும் பிரஸ்’ என்ற அச்சகம் வெளியிட்ட பலஅரசியல் புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றில் ஒன்று பகுத்தறிவு நூல் பதிப்புக்கழகம் வெளியிட்ட நான் ஏன் நாத்திகனானேன்? புரட்சி வீரர் பகத்சிங் எழுதியிருந்த இந்த நூலை மொழியாக்கம் செய்த ஜீவாவையும், இந்நூலை பதிப்பித்த பெரியாரின் அண்ணன் ஈ.வே.கிருஷ்ணசாமியையும், 1935ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25 ஆம் நாள் காவல்துறை கைது செய்தது. அவ்விருவர் மீதும் ராஜத் துரோகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இந்த வழக்கு, விசாரணையில் இருக்கும் போதே பெரியார் மீது ஆங்கிலேய அரசாங்கம் பல்வேறு நிர்பந்தங்களை செலுத்தியது. அவர் சோசலிசப் பிரச்சாரத்தைக் கைவிடவில்லையென்றால் அவரது இயக்கம் தடை செய்யப்பட்டு ஒடுக்கப்படும் என்று பெரியாரின் நீதிக்கட்சி நண்பர்கள் மூலம் ஆங்கிலேய அரசாங்கம் பயமுறுத்தியது. இது பெரியாரை பெரும் கவலையில் ஆழ்த்தியது. பெரியார் சிறைக்குச் செல்ல அஞ்சியவர் இல்லை. ஆனால் அவரது இயக்கம் நிறுத்தப்பட்டு விடக்கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார். எனவே சோசலிசப் பிரச்சாரத்தைக் கைவிட்டு ஆங்கிலேய அரசாங்கத்தை ஆதரிக்க முடிவு செய்தார். மார்ச் 10ஆம் தேதியன்று பின்வரும் அறிக்கையை அவர் குடியரசில் வெளியிட்டார். ‘சுயமரியாதை இயக்கத்தின் அரசியல் கொள்கையானது பார்ப்பன ஆதிக்கக் காங்கிரசை எதிர்ப்பதும் அதற்காக எவ்வளவு அவசியப்பட்டாலும் அவ்வளவு அரசாங்கத்துடன் ஒத்துழைப்பதும் சமுதாய இயலில் சாதிமத பேதங்களை அகற்றுவதும், மூட நம்பிக்கைகளை ஒழிப்பதும் பொருளியலில் சமதர்மமுமேயாகும். இவை பற்றிய விஷயங்களை மக்களிடையே பிரச்சாரம் செய்யவும், அமலுக்குக் கொண்டு வருவதுமான காரியங்கள் நடைபெற வேண்டுமானால் காங்கிரஸ் ஆட்சியைவிட பிரிட்டிஷ் ஆட்சியே மேலானது என்பது என்னுடைய வெகு நாளைய அபிப்பிராயமாகும்.’ பெரியார் இந்த அறிக்கை வெளியிட்டது மட்டுமல்ல, நான் ஏன் நாத்திகன் ஆனேன்’ என்ற புத்தகத்தை மொழியாக்கம் செய்ததற்காகவும், அச்சிட்டு வெளியிட்டதற்காகவும், ஜீவாவையும், தன் அண்ணன் கிருஷ்ணசாமியையும் ஆங்கிலேய அரசாங்கத்திற்கு வருத்தம் தெரிவித்து கடிதம் எழுதிக் கொடுத்து விடுதலையாகும்படி கூறினார். இதைக்கேட்டு ஜீவா பெரும் ஆத்திரம் கொண்டார் என்ற போதிலும், கட்சித் தலைவர் கட்டளைக்கிணங்க அவ்வாறு எழுதித்தர வேண்டியதாயிற்று. அவ்வாறே இருவரும் விடுதலை பெற்றனர். அவர்கள் இருவரும் அவ்வாறு செய்ததற்கான பொறுப்பை தான் ஏற்றுக் கொண்டதாகக் கூறி, பெரியார் பின்வரும் அறிக்கையை வெளியிட்டார். ‘இந்தப்படி இரு தோழர்களும் வருத்தம் தெரிவித்து விடுதலை அடைந்தார்கள் என்பதற்கு அவர்களே முழு ஜவாப்தாரிகள் அல்ல என்பதையும் பெரும்பான்மை அளவுக்கு நானே ஜவாப்தாரி என்பதையும் முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்’ ‘இந்த வருத்தம் தெரிவித்ததும், அதை அரசாங்கம் ஏற்றுக் கொண்டதும் ஆகிய இரண்டு காரியமும் மிகுதியும், இந்த வழக்கைப் பொருத்து மாத்திரம் அல்ல, என்பது இதில் முக்கிய விஷயமாகும். (குடியரசு : 31.3.1935) பெரியார் எடுத்த ஆங்கிலேய ஆதரவு நிலைபாட்டை ஜீவா, சிங்காரவேலர் மற்றும் சோசலிச நோக்கம் கொண்ட அந்த இயக்கத்தவர் கடுமையாக ஆட்சேபித்தனர். இதைத் தொடர்ந்து திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற சோசலிச சமதர்ம மாநாட்டில் ஜீவாவுக்கும் பெரியாருக்குமிடையே கடும் வாக்குவாதம் எழுந்தது. போகிறவர்கள் இயக்கத்தை விட்டுப் போகலாம் என்று பெரியார் முடிவாகக் கூறிவிட்டார். இதைத் தொடர்ந்து ஜீவாவும், இதர தோழர்களும் அந்தக் கட்சியிலிருந்து வெளியே வந்து சிங்காரவேலரின் வழிகாட்டலுடன் சுயமரியாதை சோசலிசக் கட்சியை உருவாக்கினர். பெரியார் 1925ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து சுயமரியாதை இயக்கத்தை நடத்த ஆரம்பித்தார். 1927ஆம் ஆண்டு முதல் நாத்திகப் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார். இடையில் 1932 முதல் 1934 ஆம் ஆண்டு வரை முழுக்க முழுக்க சோசலிசப் பிரச்சாரம் செய்தார். கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை உள்ளிட்டு மார்க்சிய நூல்களை முதன் முதலில் தமிழில் வெளியிட்டார். ஆனால் அவரது வாழ்நாள் முழுவதிலும் அவர் நாத்திகராகவே இருந்து நாத்திகப் பிரச்சாரத்தையும், கடவுள் மறுப்பு பிரச்சாரத்தையும் தொடர்ந்து செய்தார். இந்த நாத்திகப் பிரச்சாரமானது மார்க்சியத்திற்கு உதவிய பிரச்சாரமாகும். ஏனென்றால் மார்க்சியத்தின் தத்துவமான இயக்கவியல் பொருள் முதல்வாதம் என்பது முழுக்க முழுக்க விஞ்ஞானப்பூர்வ நாத்திகத்தை அடிப்படையாக கொண்டதாகும். இயற்கைதான் முதன்மையானது, அதை கடவுள் என்று யாரும் படைக்கவில்லை என்பதை அடிப்படையாகக் கொண்டது இயக்கவியல் பொருள் முதல்வாதம். பிள்ளையார் சிலை உடைப்பு போன்ற சில பிறழ்வுகள் அவர் இயக்கத்தில் இருந்தபோதிலும், பெரியார் 20ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் தலைசிறந்த நாத்திகராகத் திகழ்ந்தார் என்பது வரலாற்று உண்மை. இதன்மூலம் அவர் சர் சார்லஸ் பிராட்லா, இங்கர்சால் பெட்ரண்ட் ரஸ்ஸல் போன்ற உலகப் புகழ்பெற்ற நாத்திக அறிஞர்கள் வரிசையில் இடம்பெறுகிறார். வழிகாட்டும் தியாகச் சுடர் கீழ வெண்மணி - கே.பாலகிருஷ்ணன் -டிசம்பர் 25, 2019 […] விவசாயிகள் - விவசாயத் தொழிலாளர் எழுச்சியின் வீரமிகு வரலாறு இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றாண்டை எழுச்சியுடன் கொண்டாடி வருகிற இந்த தருணத்தில், கீழத் தஞ்சை பூமியில் பேரெழுச்சியுடன் எழுந்த விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் போராட்டங்களின் உச்சகட்ட ரத்த சாட்சியமான கீழ்வெண்மணி தியாகிகளின் மாபெரும் வரலாறு நமக்கு மேலும் மேலும் உத்வேகத்தை அளிக்கக் கூடியதாக வழிகாட்டுகிறது. இந்திய வரலாற்றில் அழியாப் புகழ் பெற்ற ஏராளமான சதி வழக்குகள் பற்றி நாம் அறிவோம். பெஷாவர் சதி வழக்கு, மீரட் சதி வழக்கு, கான்பூர் சதி வழக்கு ஆகிய கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிரான சதி வழக்குகள் துவங்கி சென்னை சதி வழக்கு, மதுரை சதி வழக்கு, நெல்லை சதி வழக்கு உட்பட கம்யூனிஸ்டுகளை குறி வைத்து, விடுதலைப் போராட்டக் காலத்தில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களாலும், அதற்குப் பின்னரும் புனையப்பட்ட வழக்குகள் ஏராளம், ஏராளம். நாடு முழுவதும் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் பேரெழுச்சிக்கு வித்திட்ட கம்யூனிஸ்டுகளின் மகத்தான போராட்ட வரலாற்றைப் பறைசாற்றுவதாக இந்த சதி வழக்குகள், சரித்திரத்தில் இடம்பெற்றிருக்கின்றன. கீழத்தஞ்சை மண்ணில் மூன்று சதி வழக்குகள் அத்தகைய மகத்தான சரித்திரத்தில் இடம் பெற்றிருக்கிற மூன்று முக்கியமான சதி வழக்குகள் கீழத்தஞ்சை மண்ணின் மிகப் பிரம்மாண்டமான விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் எழுச்சியை என்றென்றும் பறைசாற்றி நிற்கின்றன. நாணலூர் சதி வழக்கு, நெடும்பலம் சதி வழக்கு, சிறுக்கை சதி வழக்கு ஆகிய அந்த மூன்று சதி வழக்குகளின் தொடர்ச்சியாக கீழத்தஞ்சை பூமியில் பேரெழுச்சியுடன் எழுந்தது விவசாயிகள் - விவசாயத் தொழிலாளர்களின் மகத்தான போராட்ட வரலாறு. முந்தைய சதி வழக்குகள் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் புனையப்பட்டவை என்றால், நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, கம்யூனிஸ்டுகள் மீது புனையப்பட்ட சதி வழக்குகள் அநேகமாக கீழத்தஞ்சை மாவட்டத்தில் புனையப்பட்ட மேற்கண்ட மூன்று சதி வழக்குகள்தான் என்று குறிப்பிடலாம். கீழத்தஞ்சை பூமியில் 1940களில் துவங்கி, நிலப்பிரபுக்களின் கொடூரமான அடக்குமுறைகளுக்கு எதிராக விவசாயிகள், சிறு விவசாயிகள், குத்தகைதாரர்கள், பண்ணை அடிமைகளாக இருந்த விவசாயத் தொழிலாளர்கள் கிளர்ச்சி செய்ய ஆரம்பித்திருந்தனர். 1947 -இல் நாடு விடுதலை அடைந்த பிறகும் இந்தப் போராட்டம் தொடர்ந்தது. 1948 முதல் 1952 வரை இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது. இந்தக் காலத்தில், கீழத்தஞ்சை பூமியில் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் மீது கடுமையான அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது. இந்தக் காலக்கட்டத்தில்தான் மேற்கண்ட மூன்று சதி வழக்குகள் அரங்கேற்றப்பட்டன. நாணலூர் சதி வழக்கு பண்ணையாளர்களை எதிர்த்து, கூலி உயர்வு கேட்டும், குத்தகைதாரர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும் நிலவெளியேற்றத்தை எதிர்த்தும் விவசாயிகள்- விவசாயத் தொழிலாளர்களின் மிகப்பெரிய போராட்டங்கள் நடந்து கொண்டிருந்தன. திருத்துறைப்பூண்டி வட்டம் குன்னியூரில் விக்கிரபாண்டியம் எனும் கிராமத்தில் விவசாயத் தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு போராட்டம் நடத்தினர். அங்கு, வெளியூரிலிருந்து அடியாட்களை இறக்கி, விவசாயத் தொழிலாளர்களுக்கு பதிலாக அவர்களை நிலத்தில் வேலை செய்ய வைத்தனர். இதை எதிர்த்து உள்ளூர் விவசாயத் தொழிலாளர்களை திரட்டி நடைபெற்ற போராட்டத்தின் போது, வெளியூரிலிருந்து வந்த அடியாட்களில் இரண்டு பேர் பலியாகும் நிலை ஏற்பட்டது. இந்த சம்பவத்தையொட்டித்தான், விவசாயத் தொழிலாளர்களின் துடிப்பு மிக்க தலைவரான களப்பால் குப்பு மீது வழக்கு புனையப்பட்டு, கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு, சிறையிலேயே விஷம் வைத்து படுகொலை செய்யப்பட்டார். களப்பால் குப்பு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை நிலப்பிரபுக்களும் பண்ணையாளர்களும் கொண்டாடி மகிழ்ந்தனர். ‘குப்பு செத்தான்; செங்கொடி வீழ்ந்தது’ என்று பூரிப்படைந்தனர். ஊர் முழுவதும் பட்டாசு கொளுத்தி கொண்டாடினார்கள். களப்பால் கிராமத்திலேயே அன்றைக்கு இருந்த பெரிய பண்ணையார்கள், குறிப்பாக, காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த டி.கே. சீனிவாச ஐயர், வேதாரண்யம் வேதரத்தினம் பிள்ளை போன்றவர்கள் எல்லாம் கூட்டம் போட்டு, இனிமேல் கம்யூனிஸ்ட் கட்சியில் யாரும் சேரக் கூடாது என்று, விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களை அச்சுறுத்தும் விதமாக பேசினார்கள். அந்தக் கூட்டத்தை முடித்துவிட்டு, திரும்புகிற போது நாணலூர் என்ற இடத்தில் அவர்களது காரை விவசாயத் தொழிலாளர்கள் மறித்தனர். கம்யூனிஸ்ட் கட்சி ஒழிந்து விட்டது என்று எப்படிப் பேசலாம் என்று பண்ணையார்களிடம் சீறிய விவசாயத் தொழிலாளர்கள், காரை நகர விடாமல் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து, காவல்துறை வருகிறது. மறியலில் ஈடுபட்ட விவசாயத் தொழிலாளர்களை கண்மூடித்தனமாக சுட்டுத் தள்ளுகிறது. அந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டாவதாக களப்பலியாகிறார் நாணலூர் நடசேன். விவசாயத் தொழிலாளர்களை கடுமையான முறையில் தாக்குகிறது காவல்துறை. இது உள்ளூர் காவல்துறை அல்ல; மலபார் போலீஸ். விவசாயிகள்-விவசாயத் தொழிலாளர்கள் எழுச்சியை ஒடுக்குவதற்காகவே கொடூரமான அடக்குமுறையை ஏவும் நோக்கத்துடன் மலபார் போலீசை கீழத்தஞ்சையின் பல பகுதிகளில் இறக்கி இருந்தது அரசு. இதையொட்டி, பதிவு செய்யப்பட்ட வழக்குதான் நாணலூர் சதி வழக்கு. இதன் அடிப்படை அம்சம் என்னவென்றால், விவசாயிகள்-விவசாயத் தொழிலாளர்கள், பெரும் நிலப்பிரபுக்களிடமும் பண்ணையார்களிடமும் கூலி உயர்வு கேட்டு, குத்தகைதாரர்களின் நில வெளியேற்றத்தை எதிர்த்து, குரல் எழுப்பினாலே- போராட்டம் நடத்தினாலே , அது அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் என்று அரசு கருதியது. இந்த அடிப்படையில்தான் நாணலூர் சதி வழக்கு போடப்பட்டது. ஏ.நடராஜன் உட்பட 200-க்கும் மேற்பட்டவர்களின் பெயர்கள் நாணலூர் சதி வழக்கில் சேர்க்கப்பட்டு, கைது செய்யப்பட்டனர். மூன்றாண்டு காலம் திருச்சி சிறையில் விசாரணைக் கைதிகளாகவே அடைத்து வைத்த கொடுமையும் அரங்கேற்றப்பட்டது. இந்த வழக்கிற்கு பின்னர் நிலப்பிரபுக்கள், ஜமீன்தார்களுக்கு எதிரான பல்வேறு போராட்டங்களில் மகத்தான தியாகிகளான கோட்டூர் ராஜூ, வாட்டாக்குடி இரணியன், ஜாம்பானோடை சிவராமன், ஆம்பலாப்பட்டு ஆறுமுகம் ஆகியோர் காவல்துறையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட கொடூர சம்பவங்களும் நடந்தன. நெடும்பலம் சதி வழக்கு திருத்துறைப்பூண்டி வட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள கிராமம் செருகளத்தூர். அங்கு, விவசாயத் தொழிலாளர்களும் சிறு விவசாயிகளும் கரம் கோர்த்து, செங்கொடியை ஏந்தி பிரம்மாண்டமான போராட்டங்களை நடத்தினார்கள். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் ஒரே வர்க்கமாக அணிதிரண்டு, இந்தப் போராட்டத்தை நடத்தினார்கள். இங்கும் பண்ணையார்கள் சதித் திட்டம் தீட்டுகிறார்கள். போராட்டத்தை எப்படி உடைப்பது என சூழ்ச்சி செய்கிறார்கள். விவசாயத் தொழிலாளர்களின் குடியிருப்பான காலனிப் பகுதிக்கு அடியாட்களை ஏவி, அவர்களது குடிசைகளையெல்லாம் சூறையாடியும் தீயிட்டுக் கொளுத்தியும் வெறியாட்டம் போடுகின்றனர். அதுமட்டுமல்ல, குடிசைகளையெல்லாம் பிய்த்து எறிந்து, அந்த நிலத்தை அவர்களே உழுது வாழைக்கன்றுகளையும் நடுகிறார்கள். இதை எதிர்த்து, விவசாயத் தொழிலாளர்களும் விவசாயிகளும் ஆவேசம் கொள்கிறார்கள். போராட்டம் இன்னும் எழுச்சி பெறுகிறது. அதில் ஒரு பகுதியினர், பண்ணையார்களின் வீடுகளை அடித்து நொறுக்குகிறார்கள். பலரது வீடுகளை தகர்த்து தரைமட்டமாக்குகிறார்கள். போலீஸ் வருகிறது. தடியடி, தாக்குதல், சூறையாடல், வெறியாட்டம் என பண்ணையார்களுக்கு ஆதரவாக போலீஸ் தாண்டவம் ஆடுகிறது. இதையொட்டி புனையப்பட்டதுதான் நெடும்பலம் சதி வழக்கு. இதில்தான் சிவராமன் உட்பட 150 மீது வழக்கு போடப்பட்டு கைது செய்யப்படுகிறார்கள். சிறுக்கை சதிவழக்கு இதேபோல, மயிலாடுதுறைக்கு அருகில் குத்தாலம் ஒன்றியத்தில் உள்ள காஞ்சிவாய் என்ற கிராமம். அங்கு, குத்தகை விவசாயிகளின் போராட்டம் வீறுகொண்டு எழுகிறது. கூலி விவசாயிகளும் இணைந்து கொள்கிறார்கள். விவசாயத் தொழிலாளர்களும் கரம் கோர்க்கிறார்கள். இவர்களுக்கும் போலீசுக்கும் மோதலாகிறது. ஏராளமான விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் வீடுகளில் புகுந்து போலீஸ் வெறியாட்டம் போடுகிறது. நர வேட்டையாடுகிறது. ஆண்கள்-பெண்கள் அத்தனை பேரையும் கைது செய்கிறது. இதுதான் சறுக்கை சதி வழக்கு என்ற மூன்றாவது சதி வழக்கு. இதில்தான் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் கோ.பாரதிமோகன், கே.ஆர்.ஞானசம்பந்தம், காஞ்சிவாய் நல்லக்கண்ணு, சம்பா ராமசாமி ஆகியோர் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்கள். இந்த மூன்று சதி வழக்குகளும் இந்திய விவசாயிகள்-விவசாயத் தொழிலாளர்கள் எழுச்சியில் முக்கியத்துவம் வாய்ந்தவை என்று சொல்லலாம். வங்கத்தில் தேபாகா எழுச்சி, மகாராஷ்டிராவில் வொர்லி பழங்குடியினர் எழுச்சி, கேரளத்தின் புன்னப்புரா வயலார், தெலுங்கானா ஆகிய மகத்தான போராட்ட வரலாறுகளின் வரிசையில் கீழத்தஞ்சை விவசாயிகள் எழுச்சியும் இடம்பெறுகிறது என்றபோதிலும், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் போராட்டத்தின் காரணமாக, அவர்கள் மீது அடுத்தடுத்து மூன்று சதி வழக்குகள் புனையப்பட்டது என்பது அநேகமாக கீழத்தஞ்சையில் மட்டும்தான் என்று சொல்லலாம். 1952 தேர்தல் இத்தகைய பேரெழுச்சியும் அடக்குமுறையும் 1952 ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது பொதுத் தேர்தலுக்கு முன்பாகவே அரங்கேறுகின்றன. அடக்குமுறைகளால் விவசாயிகள்-விவசாயத் தொழிலாளர்கள் எழுச்சி வீழ்ந்து விடவில்லை. மாறாக, இன்னும் வீறுகொண்டு எழுந்தது. அந்த எழுச்சியின் விளைவாக, இந்தப் போராட்டங்களின் தள கர்த்தர்களாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள், 1952 தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றனர். கீழத்தஞ்சை மாவட்டத்தில் மொத்தம் 19 சட்டமன்ற தொகுதிகள் அவற்றில் 6 தொகுதிகளில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களும் நான்கு தொகுதிகளில் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர்களும் நிறுத்தப்பட்டு, 10 வேட்பாளர்களுமே மாபெரும் வெற்றி பெற்றனர். மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியில், முன்னாள் ரயில்வே அமைச்சராக இருந்த சந்தானத்தை எதிர்த்து, கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவரும் ரயில்வே தொழிலாளர்களின் உன்னத தலைவருமான கே.அனந்தநம்பியார் போட்டியிட்டு மாபெரும் வெற்றியை ஈட்டினார். அமைப்பாய் அணி திரண்டனர் இந்த தேர்தலுக்கு முன்னதாகத்தான் கீழத்தஞ்சை வர்க்கப் போராட்ட எழுச்சியின் நாயகன் தோழர் பி.சீனிவாசராவ் இந்த மண்ணுக்கு வந்து சேர்கிறார். அவர் வந்த பிறகு கீழத் தஞ்சை விவசாயிகளையும், விவசாயத் தொழிலாளர்களையும் அமைப்பு ரீதியாக அணிதிரட்டுவதும், செங்கொடியின் வீரியமிக்க நிலமாக கீழத் தஞ்சை மண் மாறியதும் நடந்தது. தோழர் பி.சீனிவாசராவ் தலைமையில் கம்யூனிஸ்ட் கட்சியின் உத்வேகமிக்க தலைவர்களும் ஆயிரமாயிரம் விவசாயத் தொழிலாளர் - விவசாயிகளும் கிராமங்கள் தோறும் செங்கொடியை உயர்த்திப் பிடித்தனர். மிகத் தெளிவான வர்க்கப் போராட்டம் இந்த மண்ணில் கோலோச்சிய நிலப்பிரபுக்களும் பண்ணையார்களும் ஒரே சாதியை சார்ந்தவர்கள் அல்ல. அய்யர், அய்யங்கார், பிள்ளை, தீட்சிதர், தேவர், வாண்டையார், நாயுடு என பல்வேறு சாதிகளை சார்ந்தவர்கள். ஆனால் அடிப்படையில் அவர்கள் ‘நிலப்பிரபு’ என்ற ஒரே சாதியாக - ஒரே வர்க்கமாக கரம் கோர்த்திருந்தார்கள். ஈவிரக்கமற்ற சுரண்டலில் ஈடுபட்டார்கள். இதற்கு எதிராக எழுந்த விவசாயிகள் - விவசாயத் தொழிலாளர்களும் பெரும்பாலானவர்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களை சார்ந்தவர்கள். நிலப்பிரபுத்துவ வர்க்கத்தின் கொடூர சுரண்டலுக்கு எதிராக - விவசாயி, விவசாயத் தொழிலாளி வர்க்கம் என ஒரே வர்க்கமாக ஒன்றுபட்டு செங்கொடி உயர்த்தி களத்தில் நின்றனர். மிகத் தெளிவான வர்க்கப் போராட்டமாக தேசத்திற்கே கீழத் தஞ்சை மண் வழிகாட்டியது என்றால் மிகையல்ல. இப்படி நிலப்பிரப்புக்கள், பண்ணையார்களின் அடக்குமுறையையும் கொடிய ராஜ்ஜியத்தையும் எதிர்த்து, வீறுகொண்டு எழுந்த இந்த நீண்ட நெடிய போராட்ட வரலாற்றின் தொடர்ச்சிதான் 1968 டிசம்பர் 25 அன்று கீழ வெண்மணியில், நடந்த நடுக்க வைக்கும் மனிதப் படுகொலையாகும். எங்கள் வாழ்வை உயர்த்திய செங்கொடியை எக்காரணம் கொண்டும் கீழிறக்க முடியாது என்று முழக்கமிட்ட காரணத்திற்காகவும் தான், கொடிய பண்ணையார்களால் ராமய்யாவின் குடிசையில் உயிரோடு தீ வைத்து கொளுத்தப்பட்டனர். 3 வயது குழந்தை முதல் 70 வயது முதியவர் வரையிலானவர்கள் இந்த 44 தியாக தீபங்களின் ஒளிச்சுடர் என்றென்றும் போராட்ட பெருநெருப்பின் அனல் குண்டமாக விளங்குகிறது. வெண்மணி நெருப்பை விழிகளில் ஏந்துவோம். அவர்களது கனவை நனவாக்க களமாடுவோம். முதலாளித்துவத்திலிருந்து கம்யூனிசத்திற்கு இங்கிலாந்தில் கம்யூனிஸ்ட் எம்.பி.யான இந்தியர் - ப.முருகன் -டிசம்பர் 26, 2019 […] இங்கிலாந்து நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று செயல்பட்ட இந்தியர் சக்லத்வாலா. அவரது முழுப்பெயர் சாபூர்ஜி தொராப்ஜி சக்லத்வாலா. இவர் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருந்த மூன்று பேர்களில் ஒருவர். இவருக்கு முன்னதாக தாதாபாய் நௌரோஜியும் அவரை அடுத்து மஞ்சேர்ஜி போவநாக்ரீ. இவர்கள் மூவருமே பார்சி இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பது ஓர் அபூர்வ ஒற்றுமை. சக்லத்வாலா இந்தியாவின் பிரபலமான தொழில் அதிபர் குடும்பமான டாடா குழுமத்தைச் சேர்ந்தவராவார். இவர் டாடா குழுமத் தலைவர் ஜாம்ஜெட்ஜி நௌரோஜி டாடாவின் மருமகன் ஆவார். டாடாவின் உருக்கு நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றிய சக்லத்வாலா அன்றைய தேசிய அரசியலால் கவரப்பட்டு அதில் தீவிரம் காட்டியதால் அவர் இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டருக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சக்லத்வாலா மும்பையில் 1874 மார்ச் 28 அன்று பிறந்தார். செயிண்ட் சேவியர் கல்லூரியில் பயின்றார். அவர் மும்பையின் குடிசைப்பகுதியில் வாழ்ந்த தொழிலாளர்கள் நலனில் அக்கறை காட்டினார். அத்துடன் தேசிய இயக்கத்திலும் ஈடுபட்டார். இதனால் தங்களது தொழில் பாதிக்கப்படும் என்று கருதியே - நாடு கடத்துவது போல- அவர் மான்செஸ்டரில் உள்ள டாடா அலுவலகத்திற்கு 1905 ஆம் ஆண்டு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் மலேரியா நோயால் பாதிக்கப்பட்டு மேட்லாக் நகரில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சைபெற்று குணமானார். அங்கு சிகிச்சை பெற்ற காலத்தில் பணிப்பெண்ணாக இருந்த சாரா மார்ஸ் என்பவரை 1907ஆம் ஆண்டு மணந்து கொண்டார். பின்னர் அங்கிருந்து லண்டன் சென்று 1909ஆம் ஆண்டு தொழிலாளர் கட்சியில் இணைந்தார். அங்கு இந்திய தொழிலாளர்கள் பணிபுரியும் இடங்களுக்குச் சென்று அவர்களின் பிரச்சனைகளுக்காக பேசலானார். அங்கு இண்டியன் ஹோம்ரூல் லீக் அமைப்பின் உறுப்பினரானார். 1917ஆம் ஆண்டு தொழிலாளர் நல லீக் என்ற அமைப்பின் நிறுவன உறுப்பினரானார். இந்த அமைப்பு லண்டனில் இந்திய கப்பல் பணியாளர்களின் தொழில் நிலைமை பற்றி கவனித்தது. பின்னர் மற்ற பகுதிகளிலும் உள்ள அனைத்து இந்திய தொழிலாளர்களின் நிலைமையை மேம்படுத்துவதற்காக தனது பணியை விரிவுபடுத்தியது. இந்த நிலையில் 1920 மற்றும் 30களில் சக்லத்வாலாவின் பெயர் இங்கிலாந்து முழுவதும் இருந்த இந்திய மாணவர்கள் மத்தியிலே பிரபலமானது. இந்நிலையில் 1921ஆம் ஆண்டு பாட்டர்சி வடக்கு தொகுதியில் தொழிலாளர் கட்சி வேட்பாளராக போட்டியிட்டார். அதே ஆண்டில் இங்கிலாந்து கம்யூனிஸ்ட் கட்சியிலும் இணைந்தார். 1922 நவம்பரில் நடந்த தேர்தலில் வெற்றிபெற்றார். ஆயினும் 1923 டிசம்பரில் நடந்த தேர்தலில் தோல்வியுற்றார். எனினும் 1924 அக்டோபரில் நடந்த தேர்தலில் கம்யூனிஸ்ட் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்றார். தொடர்ந்து 1929ஆம் ஆண்டுவரை அந்தத் தொகுதியின் உறுப்பினராக செயல்பட்டார். சக்லத்வாலா நாடாளுமன்றத்தில் இந்திய பிரச்சனைகள் தொடர்பாக முழங்கினார். இந்திய மக்களின் விடுதலைக்காக, இந்தியாவின் உரிமைகளுக்காக குரல் எழுப்பினார். இந்தக் காலத்தில்தான் இந்தியாவில் 1925 டிசம்பர் 25ல் நடக்கவிருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் மாநாட்டை துவக்கி வைப்பதற்காக சக்லத்வாலாவுக்கு சத்யபக்தாவால் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆயினும் அவருக்கு இந்தியா வருவதற்கான பயணத்தொகையை சத்யபக்தா அனுப்பி வைக்க முடியாததால் அவர் வர இயலவில்லை. அதை அடுத்தே சிங்காரவேலர் மாநாட்டுக்கு தலைமை வகித்து உரையாற்றினார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த மாநாட்டிற்கு அவர் வர இயலாமல் போனாலும் 1927ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வருகை தந்தார். ஜனவரி 14ஆம் நாள் கப்பல் மூலம் மும்பை வந்து சேர்ந்த அவருக்கு பம்பாய் மாகாண காங்கிரஸ் குழு வரவேற்று தேநீர் விருந்தளித்தது. பம்பாய்க்கு வந்திருந்த சக்லத்வாலாவை தமிழகத்திற்கு வருமாறு சிங்காரவேலர் தந்தி மூலம் கேட்டுக் கொண்டார். அந்தத் தந்தியில் இந்தியத் தொழிலாளர்களின் விடுதலை என்ற புகழ்பெற்ற கொள்கையை பிரச்சாரம் செய்ய வேண்டுமென்றும் அனைத்து நாடுகளின் ஒற்றுமையை பறைசாற்ற வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். அத்துடன் லாகூரில் நடைபெறவிருக்கும் கம்யூனிஸ்ட்டுகளின் மாநாட்டிற்கு தலைமை தாங்க வேண்டுமென்றும் அந்தத் தந்தியில் வேண்டுகோள் விடுத்திருந்தார். சக்லத்வாலா இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கும் சென்றுவிட்டு பிப்ரவரி 24 அன்று சென்னைக்கு வருகை புரிந்தார். சிங்காரவேலரின் தலைமையில் தொழிற்சங்கங்கள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த வரவேற்புக்குழு அவருக்கு சிறப்பான வரவேற்பை அளித்தது. சென்னையில் சக்லத்வாலா இரண்டு இடங்களில் உரையாற்றினார். சூளை எட்வர்டு பூங்காவில் பஞ்சாலைத் தொழிலாளர்கள் கூட்டத்திலும், பெரம்பூரில் ரயில்வே தொழிலாளர்கள் கூட்டத்திலும் பேசினார். பின்னர் திருவல்லிக்கேணி கடற்கரையில் காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலும் கோகலே ஹாலில் படித்தவர்களுக்காக நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் கம்யூனிஸ்ட் லட்சியங்கள் பற்றியும் பேசினார். இந்த கூட்டங்களில் பங்கேற்று பேசிய பின்னர் சென்னை அரசாங்கத்தின் நிர்வாக அறிக்கை அவரது வருகை பற்றி பின்வருமாறு குறிப்பிட்டது. அதில் “சக்லத்வாலா சென்னை பாட்டாளி வர்க்கம் என ஒன்றை கண்டுபிடித்தார் என்பது மட்டுமல்ல, அதன் உறுப்பினர்களை தொழிற்சங்கங்களில் சேர்த்து விவசாயிகள், தொழிலாளர்கள் கட்சி போன்ற ஒரு அமைப்பையும் இளம் தோழர்கள் சங்கம் என்ற ஒன்றையும் உருவாக்கத் தூண்டினார்” என்று குறிப்பிட்டிருந்தது. அத்துடன் இந்தியாவின் பல்வேறு இடங்களில் நிகழ்த்திய உரைகளையும், அவரது நடவடிக்கைகளையும் கண்டு ஆத்திரமடைந்த ஆங்கிலேய அரசாங்கம் அவர் இங்கிலாந்துக்கு திரும்பிய பின்னர் மீண்டும் இந்தியா செல்வதற்கு தடைவிதித்துவிட்டது. இதற்கு அவரது கம்யூனிஸ்ட்டுகளுடனான தொடர்பை காரணமாகக் கூறியது. சக்லத்வாலா இந்தியாவில் தொழிலாளர்களுடன் உறவு கொண்டிருந்தார் என்பதால், இங்கிருந்து இங்கிலாந்திற்கு அவரது குடும்பத்தினரால் அனுப்பி வைக்கப்பட்டதும், அவர் கம்யூனிஸ்ட்டுகளோடு தொடர்பு கொண்டிருப்பதால் இந்தியா செல்வதற்கு இங்கிலாந்து அரசால் தடை விதிக்கப்பட்டதும் ஒரே கண்ணோட்டத்தில் உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். வறுமையை ஒழிக்க வழி தேடிய சக்லத்வாலா… - ப.முருகன் -டிசம்பர் 27, 2019 […] முதலாளித்துவத்திலிருந்து கம்யூனிசத்திற்கு - 2 சாபூர்ஜி சக்லத்வாலா இந்தியாவிலிருந்து இங்கிலாந்து சென்ற பின் தாய்நாட்டுக்கு 3 முறை தான் வருகை புரிந்தார். 1912-13 காலத்தில் முதல் முறையாக குடும்ப நிகழ்வுகள் தொடர்பாகவும் 1913-14ல் இரண்டாவது தடவை தனிப்பட்ட முறையிலும் 1927ல் மூன்றாவது முறை அரசியல் ரீதியாகவும் இந்தியாவுக்கு வந்திருந்தார். இந்த மூன்றாவது முறை பயணத்தின்போதுதான் பல்வேறு மாநாடுகளிலும் பொதுக்கூட்டங்களிலும் வரவேற்பு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். அவருக்கு பல்வேறு நகரங்களில் உற்சாகமான பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த சமயத்தில்தான் சென்னைக்கும் வருகை தந்து பல்வேறு கூட்டங்களில் உரையாற்றினார். அவர் இங்கிலாந்தின் தொழில்நகரமான மான்செஸ்டர் வந்த பின் அங்கு தொழிலாளர்கள் மத்தியிலும் காலனி நாடுகளின் விடுதலை தொடர்பான நிகழ்வுகளிலும் தீவிரமாக பங்கேற்றார். செல்வந்த முதலாளி குடும்பத்தில் பிறந்த அவரது அரசியல் பயணம் சோசலிசத்தை நோக்கி ஈர்க்கப்பட்டது பற்றி இங்கிலாந்தின் கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவரான ரஜினி பாமிதத் புகழ்ந்துரைத்துள்ளார். சக்லத்வாலா பலமுனைகளில் செயல்படும் வீரமிக்க பிரபலமான தலைவராகத் திகழ்ந்தார். சர்வதேச கம்யூனிசம், இந்திய தேசிய விடுதலை மற்றும் பிரிட்டிஷ் தொழிலாளர் வர்க்க இயக்கம் ஆகியவற்றில் மிகுந்த செயலூக்கத்துடன் செயல்பட்டார். பிரிட்டிஷ் தொழிலாளர்களால் மிகவும் அன்போடு நேசிக்கப்பட்ட முதல் இந்திய தலைவராக அவர் விளங்கினார் என்று ரஜினி பாமிதத் குறிப்பிட்டிருந்தது கவனத்தில் கொள்ளத்தக்கது. சக்லத்வாலா இந்தியாவில் வறுமையை ஒழிக்கவும், மக்களின் துயரங்களை போக்கவும் மத வழிப்பட்ட தீர்வைக் காண முயற்சித்தார். ஆனால் அதனால் பயனேதும் விளையாது என்று புரிந்து கொண்ட பின்பு அறிவியல் முன்னேற்றத்தால் இந்திய சமூகத்தை மாற்றிட முடியும் என்று நினைத்தார். அந்த சமயத்தில் பாம்பே குடிசைப் பகுதியில் பிளேக் நோய் பாதிப்பை சரிசெய்ய தீவிரமாக பணியாற்றினார். ஆயினும் அதுவும் பயனற்றதே என்று தனது அனுபவம் மூலம் தெரிந்து கொண்டார். அதையடுத்து தொழில் வளர்ச்சி மூலம் சமூகத்தை முன்னேற்ற முடியும் என்று அவர் எண்ணினார். அந்த சமயத்தில்தான் இந்தியாவில் டாடா இரும்பு மற்றும் உருக்கு தொழிற்சாலை நிறுவப்பட்டது. அப்போதும் கூட அவரது எண்ணம் நிறைவேறவில்லை. இந்த சமயத்தில் தான் அவர் அவரது குடும்பத்தாரால் இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டார். அங்கு கடைசியாக நேஷனல் லிபரல் கிளப் மூலம் ஆன்மீக நிகழ்வுகளில் பங்குபெறத் துவங்கினார். அதிலிருந்தே பின்னர் பிரிட்டிஷ் தொழிற்சங்க அரசியலுக்குள் நுழைந்தார். நேஷனல் லிபரல் கிளப்பில் பங்கேற்றிருந்தவர்களின் கபடத்தனமான, வெளிப்பூச்சுக்கு நன்றாக காட்டிக் கொள்ளும் நடவடிக்கைகளே அவர் அதிலிருந்து வெளியேறி தொழிற்சங்க அரசியலுக்குள் நுழைவதற்கு காரணமாக இருந்தது. தொழிற்சங்க அரசியலுக்குள் வந்த பின் தேசிய விடுதலை, தொழிலாளர் முன்னேற்றம், சோசலிச அரசியல் என்ற வழியில் பயணித்த அவர் கம்யூனிஸ்ட்டாக ஆனார். அவர் இங்கிலாந்து வந்த பின் அவரது குடும்பத்தினர்கள் நிரந்தர அங்கத்தினர்களாக இருந்த நேஷனல் லிபரல் கிளப் அவருக்கு இங்கிலாந்தின் ஒரு நல்ல அறிமுகத்தை தந்தது. அதனால் அவர் இந்திய விடுதலைக்காக பாடுபடும் மக்கள் மத்தியில் ஒரு மரியாதைக்குரியவராகவும் அவர்களின் சிறந்த நண்பராகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டார். அந்த கிளப்பின் உறுப்பினரான லார்டு மார்லியின் இந்துக்கள், முஸ்லிம்களை தனி வாக்காளர்களாக ஆக்கும் திட்டமான இந்திய தேசிய இயக்கத்தை பிளவுபடுத்தி சீர்குலைக்கும் திட்டமான, மார்லி - மிண்டோ சீர்திருத்தம் 1909ல் அறிமுகப்படுத்தப்பட்டது. அதை எதிர்த்து இங்கிலாந்தில் தனது வாதத்தை முன் வைத்தார். அதன்மூலம் நேஷனல் லிபரல் அமைப்பின் கபடத்தன்மையை அம்பலப்படுத்தி இந்திய மக்களின் நலன்கள் மீதான அக்கறையை வெளிப்படுத்தினார். இதை அவர் தீரமுடன் செய்தது பின்னர் அந்த அமைப்பிலிருந்து அவர் வெளியேறுவதற்கு காரணமாய் அமைந்தது. அதுவே 1910ஆம் ஆண்டு பிரிட்டிஷ் தொழிலாளர் வர்க்க அரசியல் வழியாக சுதந்திர லேபர் பார்ட்டியில் இணைவதற்கு இட்டுச் சென்றது. இந்தியாவில் ஆட்சி செய்த பிரிட்டிஷாரை அவர்களது நாட்டிலேயே எதிர்த்து குரல் கொடுப்பதற்கான சூழலை அவருக்கு ஏற்படுத்தியது. ஒரு முதலாளி குடும்பத்தில் பிறந்தவர் தொழிலாளர் நலன் சார்ந்த அரசியலுக்குள் வருவதற்கும் உலகின் வறுமையை ஒழிக்கும் தத்துவத்தை தேடுவதற்கும் கொண்டு சென்றது. சக்லத்வாலா இங்கிலாந்து நாடு முழுவதும் பயணம் செய்தார். அங்கு குடிசைப் பகுதிகளின் மோசமான நிலைமையையும், வேலையின்மையின் கொடுமையையும், தொழிற்துறை மற்றும் விவசாயத் துறைகளில் வேலைசெய்யும் தொழிலாளர்களை இரக்கமற்றுச் சுரண்டுவதையும் கண்டு உள்ளம் நொந்தார். வறுமை என்பது இந்திய நாட்டின் பிரச்சனை அல்ல, அது உலகளாவியது. எனவே உலகம் முழுவதும் உள்ள ஏழ்மையையும் வறுமையையும் ஒழிப்பதற்கான அரசியல் தத்துவம் சோசலிசமே என்பதை உணர்ந்து கொண்டார். சர்வதேச தொழிலாளர்கள் ஒன்றுபட வேண்டியது, உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் தங்களது பிரச்சனைகளை தீர்ப்பதற்காக, வர்க்க சமுதாயத்தை மாற்றுவதற்கான சர்வதேச போராட்டத்தில் ஈடுபடுவதே இதற்கான தீர்வு என்றும் சோசலிசமே அதை கொண்டுவரும் என்றும் முடிவுக்கு வந்தார். இதன் விளைவாகவே அவர் பிரிட்டிஷ் தொழிலாளி வர்க்க நலன்களுக்காக உரக்கக் குரல்கொடுத்தார். தொழிலாளர்களின் அவலநிலையை போக்குவதற்காக முதலாளித்துவத்தையும் ஏகாதிபத்தியத்தையும் எதிர்ப்பது இன்றியமையாதது என்று தெளிவுகொண்டார். இதன் மூலம் பிரிட்டிஷ் அரசு காலனி நாடுகளாக ஆக்கிரமித்திருக்கும் இந்தியா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் உள்ள தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் ஆதரவான நிலையை எடுத்தார். அந்த நாடுகளின் விடுதலைக்கும் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தார். இந்தக் காலத்தில்தான் ரஷ்யாவில் லெனின் தலைமையிலான புரட்சி வெற்றிபெற்று தொழிலாளி வர்க்கம் ஆட்சிக்கு வந்தது. அந்த சமயத்தில் நடைபெற்ற முதல் உலகப்போரின்போது இங்கிலாந்து ரஷ்யா மீது தாக்குதலை தொடுத்ததை எதிர்த்து சக்லத்வாலா தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ரஷ்ய கம்யூனிஸ்ட் அரசு பற்றி இங்கிலாந்தில் பரப்பப்பட்ட பொய்ச் செய்திகளையும் வதந்திகளையும் சோவியத் எதிர்ப்புப் பிரச்சாரத்தையும் முறியடிக்க அந்த நாடு பற்றிய உண்மை செய்திகளை வெளிப்படுத்துவதற்காக முனைந்து செயல்பட்டார். அதற்காக 1918ஆம் ஆண்டு இங்கிலாந்தில் ஏற்படுத்தப்பட்டிருந்த, மக்கள் ரஷ்ய தகவல் நிலையத்தில் இணைந்து ரஷ்ய புரட்சி பற்றிய செய்திகளை நாடு முழுவதும் பிரச்சாரம் செய்தார். ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னின்ற சக்லத்வாலா… - ப.முருகன் -டிசம்பர் 28, 2019 […] முதலாளித்துவத்திலிருந்து கம்யூனிசத்திற்கு - 3 இந்தியாவில் இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்து கம்யூனிஸ்ட்டுகள் செயல்பட்டது போலவே சக்லத்வாலா இங்கிலாந்தில் தொழிலாளர் கட்சியில் இணைந்து செயல்பட்டார். கம்யூனிஸ்ட்டான அவர் 1922ஆம் ஆண்டு தொழிலாளர் கட்சியின் சார்பில் போட்டியிட்டே நாடாளுமன்ற உறுப்பினரானார். அவர் காலனி நாடுகளின் மக்களுக்கும் உலகத் தொழிலாளர் வர்க்கத்துக்கும் பாடுபட்ட மாபெரும் தலைவராவார். இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் வெஸ்ட் மின்ஸ்டர் அரங்கில் அவரது தனித்த குரல் உரத்து ஒலித்தது. பிரிட்டிஷ் தொழிலாளர்களின் நலன்களுக்கும் உலகின் இதர பகுதிகளில் உள்ள உழைப்பாளிகளின் நலன்களுக்கும் அவர் எந்த முரண்பாட்டையும் காணவில்லை. இந்த இரண்டின் வெற்றியைச் சார்ந்தே சோசலிசத்தின் சாதனைகள், விளைவுகள் இருக்கும் என்று சக்லத்வாலா கருதினார். அதனால்தான் 1926ல் அவர் எழுதிய பிரசுரம் ஒன்றில், சோசலிசம் என்பதன் பொருள் பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் சிதைவது என்றும் கூறலாம் என்று குறிப்பிட்டார். ஏகாதிபத்திய எதிர்ப்பு நாடாளுமன்றவாதியின் போராட்டங்களுக்கு பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் இதயப் பகுதியில் அயராமல் அஞ்சாமல் செயல்பட்ட சக்லத்வாலாவின் தீரமிக்க நடவடிக்கைகளே சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். பிரிட்டிஷ் இடதுசாரிகளின் வரலாற்றில் அவருக்கென சிறந்ததோர் இடம் இப்போதும் உண்டு. ஆனால் அத்தகைய மகத்தான மனிதரை இன்றைய இளைய தலைமுறைக்கு எடுத்துரைப்பது மிகவும் அவசியமாகும். 1924ஆம் ஆண்டு அக்டோபரில் கூடிய தொழிலாளர் மாநாடு, தொழிலாளர் கட்சியின் சார்பில் கம்யூனிஸ்ட்டுகளை வேட்பாளராக நிறுத்துவதற்கு தடைவிதித்தது. இதையடுத்து சக்லத்வாலா தொழிலாளர் கட்சியின் உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். இந்த மாநாட்டின் பிரதிநிதியாக தொழிலாளர் கட்சியின் சார்பில் சக்லத்வாலா கலந்து கொண்டிருந்தார். இந்நிலையில் அவர் கட்சியிலிருந்து விலக்கப்பட்டதால் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராகவே பாட்டர்சி வடக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். ஆயினும் நாடாளுமன்றத்தில் சுதந்திர தொழிலாளர் கட்சியின் இடதுசாரி ஸ்காட்டிஷ் உறுப்பினர்களுடன் நெருங்கிய உறவை கொண்டிருந்தார். இது அவரது விரிந்து பரந்த அரசியல் பார்வையை வெளிப்படுத்தியது. நாடாளுமன்றத்தில் காலனி நாடுகளில் உள்ள தொழிலாளர்கள், விவசாயிகள் குறிப்பாக இந்தியாவில் உள்ள தொழிலாளர்கள், விவசாயிகள் உரிமைகள் பற்றி விரிவாக உரையாற்றினார். 1920ஆம் ஆண்டு அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் உருவாக்கப்பட்டதும், அதன் பிரிட்டன் கிளையாக தொழிலாளர் நல லீக் செயல்பட்டது. இந்த அமைப்பில் சக்லத்வாலா முன்னின்று பணியாற்றினார். அதன் தொடர்ச்சியாகவே அவர் இந்தியாவுக்கு வருகை தந்து பல்வேறு கூட்டங்களிலும் கலந்து கொண்டு உரையாற்றினார். 1926ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற பொது வேலைநிறுத்தத்தில் தொழிலாளர் நல லீக் முக்கிய பங்கு வகித்தது. அதற்கு காரணம் சக்லத்வாலாவின் தீவிர முயற்சிகளே. இதையடுத்து சக்லத்வாலாவின் நடவடிக்கைகளை அந்த அரசாங்கம் கண்காணிக்கத் துவங்கியது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டு இரண்டு மாத சிறை தண்டனை அனுபவிக்க நேர்ந்தது. இந்தக் காலத்தில் அவருடைய வீடு மற்றும் பிரபல கம்யூனிஸ்ட்டுகளாக அறியப்பட்டவர்களின் வீடுகளில் எல்லாம் பிரிட்டன் காவல்துறை சோதனைகளை நடத்தியது. ஆனால் அதன் பின்னரும் சக்லத்வாலாவின் நடவடிக்கை தீவிரமடையவே செய்தது. அவர் விடுதலை அடைந்த பின்னர் மூடப்பட்ட சுரங்கங்களின் தொழிலாளர்கள் கூட்டங்களில் கலந்து கொண்டு அவர்களுக்கு எழுச்சியூட்டும் உரையாற்றினார். அரசாங்கத்தின் அடக்குமுறை நடவடிக்கைகள் சக்லத்வாலாவின் போராட்ட உணர்வுகளுக்கு அணை போட முடியவில்லை. அவரது செயல்பாடுகள் அதிகரிக்கவே செய்தன. இந்தக் காலங்களில்தான் இங்கிலாந்து மட்டுமின்றி, பிற நாடுகளுக்கும் சக்லத்வாலா சென்றுவந்தார். ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணி என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. 1926 பிப்ரவரி மாதத்தில் பெர்லின், பிரஸ்ஸல்ஸ் நகரங்களில் நடந்த கூட்டங்களுக்குப் பிறகு அங்கும் ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணி அமைக்கப்பட்டது. அதன் தலைவராக ஜார்ஜ் லான்ஸ் பர்ரி செயல்பட்டார். அவரது பதவிவிலகலுக்குப் பிறகு, ஜேம்ஸ் மாக்ஸ்டன் பதவியேற்றார். இந்த அமைப்பின் நிர்வாகக் குழு உறுப்பினர்களாக ஜவஹர்லால் நேரு, சக்லத்வாலா, மெக்ஸிகோ நாட்டின் டியாகோ ரிவியேரா ஆகியோர் செயல்பட்டனர். இந்த அமைப்பு உலக பத்திரிகைகள் மத்தியில் பெரிதாக பிரபலமாகவில்லை. ஆயினும் அந்த அமைப்பினுடைய வெளியீடுகளை பிரிட்டிஷாரின் இந்திய அரசாங்கம் தடைசெய்தது. அதையடுத்து அரசின் கண்காணிப்பு தீவிரமாகியது. சக்லத்வாலா 1929ல் கொலோன் நகரில் நடைபெற்ற கூட்டத்திற்கு செல்வதற்கு அனுமதிக்கவில்லை. ஆனால் அந்நாட்டு அரசாங்கம் அவருடன் சென்ற ஐந்து பேரில் இருவரை பயணத்தை தொடர அனுமதித்தது. மற்ற மூவரையும் கைது செய்து பிரிட்டனுக்கு திருப்பி அனுப்பியது. இந்த நிலையில் கம்யூனிஸ்ட் அகிலத்தின் ஆறாவது உலக மாநாடு 1928ஆம் ஆண்டு கோடைக்காலத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட சக்லத்வாலா, ரஜினிபாமிதத், ஹாரிபாலிட் ஆகியோர் கொள்கையில் தீவிர மாற்றம் தேவை என்று கோரினர். அவர்களது கோரிக்கை 11-ஆவது மாநாட்டில் நிறைவேறியது. அதன் பின்னர் 1929ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சக்லத்வாலா தோல்வி அடைந்தார். ஆயினும் பிந்தைய நாட்களில் சக்லத்வாலா நாடு முழுவதும் பயணம் செய்து பல்வேறு கூட்டங்களில் உரையாற்றினார். அவரது உரையின் முக்கிய விசயமாக வேலையின்மையே இடம்பெற்றிருந்தது. அவர் தனது வாழ்நாளின் கடைசிக் காலம் வரை தீவிரமாக செயல்பட்டுக் கொண்டே இருந்தார். 1936ல் இறப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு கூட பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். 1927ஆம் ஆண்டுக்குப் பின்னர் சக்லத்வாலா இந்தியா செல்வதற்கு நிரந்தரத் தடையை விதித்தது இங்கிலாந்து அரசாங்கம். அதுபோலவே எகிப்து செல்வதற்கும் அனுமதி மறுக்கப்பட்டது. 1929ல்ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணியின் கூட்டத்தில் கலந்துகொள்ள பெல்ஜியம் செல்வதற்கும் அனுமதி மறுக்கப்பட்டது. ஆனாலும் இங்கிலாந்து முழுவதும் அவரது பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது. இரண்டாம் உலகப்போருக்கு முந்தைய காலக்கட்டத்தில் பாசிசம் தீவிரமானது. ஜெர்மனியில் ஹிட்லர் அந்நாட்டின் நாடாளுமன்ற கட்டிடமான ரீச் ஸ்டாக் கட்டிடத்திற்கு அவர்களே தீ வைத்துவிட்டு அதன் பழியை கம்யூனிஸ்ட்டுகள் மீது போட்டு அவர்களை கைது செய்து வேட்டையாடி சித்ரவதை செய்தான். அதைக் கண்டித்து சக்லத்வாலா இங்கிலாந்தில் மிகப்பெரிய தொழிலாளர் கூட்டம் ஒன்றை கூட்டி கம்யூனிஸ்டுகள் மீதான வழக்குகளை ரத்து செய்து அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென்று முழங்கினார். நிலம், சொத்து, தொழில் தொழிலாளர் நல்வாழ்வுக்காகவே… - ப.முருகன் -டிசம்பர் 29, 2019 […] முதலாளித்துவத்திலிருந்து கம்யூனிசத்திற்கு - 4 1927 ஆம் ஆண்டு சென்னைக்கு வந்த சக்லத்வாலா தொழிலாளர் கூட்டங்களில் நிகழ்த்திய உரை ‘நவசக்தி’ நாளிதழில் வெளிவந்தது. அந்த உரை என்.ராமகிருஷ்ணன் எழுதிய தமிழகத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும் நூலில் தரப்பட்டுள்ளது. அது வருமாறு: சென்னைக்கு வந்ததும் முதன்முதலில் தொழிலாளர் முன்பு பேசும் வாய்ப்பு கிடைத்தது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். பிரிட்டிஷ் தொழிற்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் இன்னும் சிலர் உங்களிடையே வந்த பேசிப்போயிருக்கிறார்களென்று தலைவர் கூறினார். நானும் தொழிற்கட்சியைச் சேர்ந்தவன் தான். ஆனால், அதைவிட தீவிரமான கொள்கைகளையுடைய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவன் நான். நிலம், சொத்து,தொழில் முதலியவை பணக்காரர்களுக்கு லாபம் தருவதற்காகவே ஏற்பட்டன அல்ல என்பது எங்கள் கொள்கை. உடம்பை உழைத்து வேலை செய்யும் தொழிலாளர்களின் நல்வாழ்வுக்காகவே அவை இருக்கவேண்டுமென்று நாங்கள் நம்புகிறோம். தொழிலாளர்கள் படிக்காதவர்களாகவும் அறியாமையிலும் இருப்பதால் அவர்கள் கல்வி அறிவு பெறும் வரை தங்கள் உரிமைக்காக காத்திருக்கவேண்டுமென்று சிலர் சொல்கிறார்கள். நாங்கள் அதற்கு மாறான நம்பிக்கை உடையவர்கள். முதலில் உரிமைகளை அளித்தால் கல்வி அறிவும் முன்னேற்றமும் தானே ஏற்படுமென்பது எங்கள் கொள்கை. பிரிட்டிஷ் தொழிலாளரும் ஒரு காலத்தில் அறியாமையில் மூழ்கியேயிருந்தார்கள். 1868ஆம் ஆண்டில் அவர்கள் தொழிற்சங்க உரிமையும் அரசியல் உரிமையும் பெற்றார்கள். நான்கு வருடத்திற்கெல்லாம் நாட்டிலுள்ள ஒவ்வொருவருக்கும் கல்விதரும் கடமை அரசாங்கத்திற்கு ஏற்பட்டது. ‘ருஷியாவில் ஜார்ஆட்சின் கீழ் 100க்கு ஆறுபேரே எழுத்தப் படிக்கத் தெரிந்தவர்கள். 1917-ல் அங்கே தொழிலாளர் அரசியல் உரிமை பெற்றனர். பின்னர் ஆறு வருடத்திற்குள் அங்கே கல்வி அதிவிரைவாக பரவியது. இப்போது 100க்கு 86 பேர் படிக்கத் தெரிந்தவராய் இருக்கிறார்கள். ஆகையினால் தான் இந்தியர் கல்வி பெறும் வரை உரிமை பெற முடியாதென்று சொல்வோரின் கூற்று தவறு என கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நாங்கள் சொல்கிறோம். சுயநலக்காரர்களும், பணக்காரர்களும் உங்களுக்குத் தாங்களாக கல்வியும் தரமாட்டார்கள். உரிமையும் கொடுக்கமாட்டார்கள். முதலில் நீங்கள் பெற வேண்டுவது உரிமை. அப்போது சுயநலக்காரர்கள் உங்களுக்கு அளிக்கக்கூடிய கல்வியை விட சிறந்த கல்வியை நீங்களே வெகு எளிதில் பெறக்கூடும். ‘ படித்த வகுப்பார் என்று கூறப்படுவோர் உங்களை பயமுறுத்துவர். உங்கள் காரியங்களை நீங்களே கவனித்துக் கொள்ள முடியாதென்று சொல்வர். இது தவறான சுயநலமுள்ள கொள்கை. தொழிலாளர்களுக்கு நல்ல சம்பளம் மட்டும் கொடுத்தால் அவர்களால் தங்கள் காரியங்களை மட்டுமின்றி தொழிற்சாலைகளையும் கூட அதிகத்திறமையாக நடத்திக்கொள்ள முடியும். ‘தற்போதுள்ள சமூதாயம் நிலைமையின் கீழ் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் ஓயாத ஒழியாத யுத்தம் நடந்து கொண்டு வருகிறது. இந்த யுத்தம் துப்பாக்கிகளினாலும், வெடிகுண்டுகளினாலும் நடக்கவில்லை. ‘ஏழைகளை பட்டினிபோடும் ஆயுதத்தைக் கொண்டு நடத்தப்படுகிறது. மனிதனை ஐந்து நிமிடத்தில் கொன்று விடும் சாதாரண யுத்தத்தை விட இது கொடுமையானது என்று நாங்கள் கூறுகிறோம். ஆனால், ஐரோப்பிய தேசங்களில் உள்ளது போல் இந்த யுத்தம் அவ்வளவு கொடுமையாயிறாது என்று காந்தி உள்பட இந்திய அரசியல் வாதிகள் பெறும்பாலோர் கூறுகின்றனர். (குறுக்கீடு)இவர்கள் நிலமையை சரியாக உணர்ந்து கொள்ளவில்லை என்றும் பணக்காரர் கட்சியில் மயங்கியிருக்கிறார்கள் என்றும் நாங்கள் சொல்லுகிறோம். திருவிக: மகாத்மா காந்தி நீங்கலாக சொல்லுங்கள் சக்லத் வாலா: காந்தியும் உள்படத்தான் கூட்டத்தில் சிலர்: ஒருநாளும் இல்லை, நீங்கள் சொல்வது முற்றும் தவறு திருவிக: மகாத்மா காந்தி பாரமார்த்திக பொதுவுடமை கட்சியினர். அவரது உள்ளக்கிடக்கையை நீங்கள் இன்னும் நன்கு உணரவில்லை. சக்லத் வாலா : இங்குள்ள நிலைமையை ஆராய்ந்து பார்த்ததில் இந்தியாவிலுள்ள ஏழைகளுக்கு இழைக்கப்படும் கொடுமையானது ஐரோப்பாவில் உள்ளதை விட நூறு மடங்கு கேவலமாய் இருக்கிறதென்னும் முடிவுக்கு நாங்கள் வந்திருக்கிறோம். ‘ ஐரோப்பிய நாடுகளில் தொழிலாளிக்கு குறைந்த சம்பளம் தினத்திற்கு ஐந்து ரூபாய் ஆகும். சிலர் நாள் ஒன்றுக்கு 15 ரூபாயும், 20 ரூபாயும் கூட பெறுகிறார்கள். ஒவ்வொரு தொழிலாளிக்கும் தனி வீடு உண்டு. வைத்திய வசதி உண்டு. குழந்தைகளுக்கு கல்வி உண்டு. தொழிலாளிக்கு வேலை இல்லாத போது அரசாங்கம் உபகாரச்சம்பளம் கொடுக்கிறது. அது நீங்கள் பெறும் கூலியை விட அதிகமானது. எனவே ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் நடக்கும் யுத்தம் ஐரோப்பாவைவிட இந்தியாவில் கொடுமையானதன்றோ? ‘மற்றொரு உதாரணம் தருகிறேன். ஐரோப்பாவில் முதலாளி வர்க்கத்தைச் சேர்ந்த குடும்பங்களில் ஆயிரத்துக்கு 60 வீதம் குழந்தைகள் இறந்து போகின்றனர். தொழிலாளர் குழந்தைகளே ஆயிரத்துக்கு நூறு வீதம் இறக்கின்றனர். ஆனால் இந்தியாவிலுள்ள வேற்றுமை இதைவிட மகாகொடியது. இங்கே முதலாளிகளின் குழந்தைகள் ஆயிரத்துக்கு 86 வீதம் மரணமடைகையில் தொழிலாளர் குழந்தைகள் பம்பாயில் ஆயிரத்துக்கு 800 வீதம் சாகின்றன. ‘ இந்திய அரசியல் கட்சியினர் தொழிலாளர் பக்கம் நின்று தொழிலாளர் ஆதரவையும் பெற்றால் வலிமையுள்ள கட்சியினர் ஆவர். ஏகாதிபத்திய ராணுவ பலத்தை எதிர்ப்பதற்கு வெறும் அரசியல் கட்சியால் மட்டும் ஆகாதென்பதும் அமைப்பு பெற்ற தொழிலாளர் இயக்கபலம் அவசியம் என்பதும் ருஷ்யா, துருக்கி, மெக்ஸிகோ, சீனம் இவ்விடங்களில் விளக்கியிருக்கின்றன. ‘ தொழிலாளர் தமக்கு பலம் தேடிக்கொள்ள வேண்டுமானால் தொழிற்சங்கங்களில் சேர வேண்டும். மத விஷயங்களை பார்க்கிலும் சங்க விஷயங்களில் அதிக உண்மையுடன் இருக்கவேண்டும். நீங்கள் சங்கங்களில் சேர்வது மட்டும் போதாது. கிராமங்களுக்குச் சென்று அங்குள்ளோருக்கு முதலில் தொழிற்சங்கத்தில் சேராமல் தொழிற்சாலையில் வேலைக்கு போகக்கூடாதென்று சொல்லி கட்டுப்பாடு செய்யவேண்டும். உங்கள் எஜமானர்கள் உங்களை ஆலையிலிருந்து துரத்தும் போது நீங்கள் கிராமங்களுக்கே போகவேண்டியிருக்கும். கிராமத்து நண்பர்கள் உங்களை மாதக்கணக்காக ஆதரிக்கும் படி நேரிடும். ‘தொழிற்சங்கமானது நேராக அரசியலில் ஈடுபடாவிட்டாலும் தொழிற்சங்க அங்கத்தினர்களுக்கு அந்த உரிமை உண்டு. இந்தியாவிலுள்ள தொழிலாளர் எல்லோரும் ஒரேயடியாகத் தொழிற்சங்களில் சேர்ந்து பின்னர் அரசியலில் காங்கிரஸ் கட்சியை பகிரங்கமாகவும் தைரியமாகவும் ஆதரிக்க வேண்டுமென்றே நான் விரும்புகின்றேன். காங்கிரஸ் தலைவர்களும் தொழிலாளர்களாகிய உங்களுக்குப் பணஉதவி செய்தும், மற்ற வழிகளில் உங்களை பாதுகாப்பதும் தங்கள் கடமை என்பதை உணர வேண்டும்.’ முதலாளித்துவத்திலிருந்து கம்யூனிசத்திற்கு - 5 அவர் படுத்துறங்க நெரிசலான ரயிலின் நடைபாதை போதும்… - ப.முருகன் -டிசம்பர் 30, 2019 […] சக்லத்வாலாவின் சென்னை உரையின் முதற்பகுதியை தலைவர் சிங்காரவேலரும் பிற்பகுதியை திருவிகவும் தமிழாக்கம் செய்தனர். பின் அவரது உரைக்கு நன்றி தெரிவித்து திருவிக பேசும்போது, சக்லத்வாலாவின் கொள்கையில் தனக்கு கருத்து வேறுபாடில்லை என்றும் ஆனால் அவர் காந்திஜியின் கொள்கையை தவறாக உணர்ந்து கூறுகிறார் என்றும் தெரிவித்தார். காந்திஜியின் கதர் இயக்கமானது கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படையான கொள்கையை நடைமுறைக்கு கொண்டு வருவதாக கூறிய திருவிக, காந்திஜி ஏழையிலும் ஏழை வாழ்வு நடத்துகிறார் என்றும் காந்திஜியும் சக்லத்வாலாவும் சேர்ந்து வேலை செய்தால் இந்தியாவுக்கு விரைவில் விடுதலை கிடைத்திடும் என்றும் குறிப்பிட்டார். இந்திய அரசியலில் காந்தியின் இருப்பையும் அவரது முக்கியத்துவத்தையும் சக்லத்வாலா உணர்ந்தே இருந்தார். என்றாலும் அவரது கொள்கையிலும் நடைமுறைகளிலும் வேறுபாடு கொண்டிருந்தார். ஆயினும் இந்திய ஆட்சியாளர்களான பிரிட்டிஷார் மக்களை பிளவுபடுத்திடும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை உணர்ந்த சக்லத்வாலா வகுப்பு ஒற்றுமைக்கு - இந்து முஸ்லிம் மக்களின் ஒற்றுமைக்கு முக்கியத்துவம் அளித்தார். அது இந்திய விடுதலைப் போராட்டத்துக்கு அவசியமானது என்றும் கூறினார். அதனால் தான் இந்திய இடதுசாரிகள், காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து செயல்பட வேண்டுமென்று அவர் கேட்டுக் கொண்டார். ஆயினும் அவர் இந்தியாவுக்கு புறப்படுவதற்கு முன்னதாகவே காந்தியின் கொள்கைகளை கடுமையாக விமர்சனம் செய்து திறந்தமடல் ஒன்றை எழுதினார். அவருக்கு காந்தியும் பதில் எழுதினார். காந்தியின் கடிதம் 1927 மார்ச் 17 அன்றைய மும்பை பத்திரிகையான டெய்லி மெயிலில் வெளியானது. அவர்களுக்கிடையே நடைபெற்ற கடிதப்போக்குவரத்துக்கள் எல்லாம் பின்னாளில் 1970ஆம் ஆண்டில் தனி நூலாகவே வெளிவந்தது. இது காந்தி - ஜோஷி கடிதப் போக்குவரத்துக்கு முன்பே நிகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சக்லத்வாலா 1905ஆம் ஆண்டு இங்கிலாந்து சென்றது முதல் அவரது வாழ்நாளின் இறுதிவரை பிரிட்டிஷ் தொழிலாளி வர்க்க இயக்கத்துக்காகவே பாடுபட்டார். அவரது ஓய்வு ஒழிச்சல் இல்லாத இடைவிடாத தன்னலமற்ற தொழிற்சங்கப் பணியைப் புகழ்ந்து ‘டெய்லி ஒர்க்கர்’ பத்திரிகை மிகச் சிறப்பாக எழுதியிருந்தது. இரவென்றும் பகலென்றும பாராமல் தொழிலாளர்களைச் சந்திப்பதற்காக நாடு முழுவதும் பயணித்தார். தொழிலாளர்களை போராடச் செய்தார்; கற்றுக் கொடுத்தார்; அமைப்பாக ஆக்கினார். அவரைப் போல் உழைத்தவர்களை காண்பது அரிது. உடல்நலம் குன்றியிருந்தாலும் கூட தொழிற்சங்கப் பணியை அவர் கைவிட்டது இல்லை. செல்வந்த குடும்பத்தில் பிறந்த அவர் சாதாரண வகுப்புகளிலேயே ரயில் பயணம் செய்தார். கூட்டம் அதிகமாக இருந்தாலும் அவர் தூங்குவதற்கு நடைபாதை இடைவெளியே போதுமானதாக இருந்தது. அவர் ஒரு போதும் முதல் வகுப்பு தூங்கும் வசதி கேட்டதில்லை என்று அந்தப் பத்திரிகை புகழ்ந்து உரைத்துள்ளது அவரது தன்னலமறுப்புக்குச் சான்றாகும். அவரது அரசியல், தொழிற்சங்கப் பணிக்காலத்தில் இந்திய, உலகத் தலைவர்கள், எழுத்தாளர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள், பிரபலங்கள் என நிறையப் பேரைச் சந்தித்தார். ஏஐடியுசியின் தலைவராகவும் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் எம்பியாகவும் செயல்பட்ட தாதாபாய் நௌரோஜி, அவருக்குப் பின் எம்பியாக இருந்த மஞ்சேர்ஜி மெர்வான்ஜி பொவ்நாக்ரீ, கிரேட் பிரிட்டன் கம்யூனிஸ்ட் தலைவர்கள் கிளமென்ஸ் பாமிதத், ரஜினி பாமிதத், கிருஷ்ணமேனன், முற்போக்கு எழுத்தாளர் முல்க் ராஜ் ஆனந்த், ஹரால்டு லாங்கி, வால்டர் நியூபால்டு, ஜோமோ கென்யாட்டா, ஜார்ஜ் பத்மோர், இலங்கையைச் சேர்ந்த எஸ்.ஏ. விக்ரமசிங்கே உள்ளிட்டவர்களுடன் தொடர்பு வைத்திருந்தார். அவரது மகள் சேஹ்ரி சக்லத்வாலாவும் அவரது செயல்பாடுகளில் பங்கேற்றார். அவர் இங்கிலாந்து நாட்டில் இருந்த பல்வேறு அமைப்புகளில் இணைந்து செயல்பட்டார். கிழக்கிந்திய சங்கம், இந்திய ஹோம் ரூல் லீக், இந்தியா லீக், ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணி, நேசனல் லிபரல் லீக், சமூக ஜனநாயக பவுண்டேசன், தொழிலாளர் நல லீக், இண்டிபெண்டன்ட் லேபர் பார்ட்டி (சுதந்திர தொழிலாளர் கட்சி), கம்யூனிஸ்ட் கட்சி என பல்வேறு அமைப்புகளில் அவரது பங்களிப்பு இருந்தது. அவரது அர்ப்பணிப்புமிக்க, தன்னலமற்ற தீவிரமான உழைப்பு, நேரம் காலம் கருதாத தொழிலாளர் சந்திப்பு ஆகியவற்றின் காரணமாக பிரிட்டன் தொழிலாளர்கள் மத்தியில் சக்லத்வாலாவின் புகழ் பரவியது. அவரது கூட்டங்களில் பெருந்திரளாக தொழிலாளர்கள் கூடுவது சாதாரணமான நிகழ்வாகிப் போனது. அவர் காலத்தில் மற்ற அரசியல், தொழிற்சங்கவாதிகள் பேசும் கூட்டங்களில் மிகக்குறைந்த எண்ணிக்கையிலேயே தொழிலாளர்கள், மக்கள் கூடியிருந்த போது சக்லத்வாலாவின் கூட்டங்களில் 1500க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள் என்பதிலேயே அவரது பேச்சுத்திறன் தெரியும். அவரது நாவன்மை பாசிச ஆதரவாளர்களைக் கூட கம்யூனிஸ்ட் ஆதரவாளர்களாக மாற்றிடும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். நல்ல பேச்சாளர் நாவசைந்தால் நாடே அசையும் என்ற பொன்மொழிக்கும் சக்லத்வாலாவே சான்று. அவர் இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கும் தலைவர்களுக்கும் முன்னுதாரணமாக என்றென்றும் திகழ்ந்திடுவார் என்பதில் ஐயமில்லை. இந்தியத் தொழிலாளர்களுக்காக பாடுபட்ட இங்கிலாந்து பட்டறைத் தொழிலாளி - ப.முருகன் -டிசம்பர் 31, 2019 […] பெஞ்சமின் பிரான்ஸிஸ் பிராட்லி இந்தப் பெயர் இந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றில் ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. அவர் கிரேட் பிரிட்டனில் உள்ள வால்த்தம்ஸ்டவ் நகரில் 1898ல் பிறந்தவர். இவர் கிரேட் பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சியால் இந்தியாவில் தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதற்காக அனுப்பப்பட்டவர். அவருடன் மற்றொரு கம்யூனிஸ்ட்டான பிலிப் ஸ்பிராட்டும் இந்தியாவுக்கு வந்து சேர்ந்தார். இந்தியாவில் அவர்கள் இருவரும் தொழிற்சங்க செயல்பாடுகளில் தீவிரமாகப் பணியாற்றினார். அந்தக் காலத்தில்தான் பிரிட்டிஷ் அரசாங்கம், வளர்ந்து வரும் தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் கம்யூனிஸ்ட்டுகளை தேடிப்பிடித்து அரசாங்கத்திற்கு எதிராக சதி செய்து கவிழ்க்க முயன்றனர் என்று கூறி சதி வழக்குகளைப் போட்டது. அப்படி போடப்பட்ட உலகின் மிகப்பெரிய சதி வழக்கான மீரட் சதி வழக்கில் பெஞ்சமின் பிராட்லியும் பிலிப் ஸ்பிராட்டும் பிரிட்டிஷ் காவல்துறையினரால் சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கு விசாரணையின்போது பெஞ்சமின் பிராட்லி, “அரசுத் தரப்பினர் என்ன விரும்புகின்றனரோ அதற்கு நேர் எதிரான விளைவையே இந்த வழக்கு ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன். இந்த வழக்கு இந்திய மக்களுக்கு விழிப்புணர்வை ஊட்டும். அதே நேரத்தில் காலனி நாட்டு மக்கள் போராட்டத்தில் இங்கிலாந்து தொழிலாளர்கள் மேலும் அதிகமாக பங்கேற்கும்படி உறுதியாக தூண்டிவிடும்” என்று கூறினார். ஐந்தாண்டுகள் நடந்த இந்த வழக்கில் பெஞ்சமின் பிராட்லிக்கு பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அது மேல் முறையீட்டின்போது ஓராண்டு கடும் காவல்தண்டனையாக குறைக்கப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்புக்குப் பின்னர் விடுதலையான பெஞ்சமின் பிராட்லி இங்கிலாந்து திரும்பினார். அங்கு பிரிட்டனின் காலனி ஆதிக்கத்தை எதிர்த்து தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டார். அதேநேரத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாடுகளிலும் அதிக ஈடுபாடு காட்டினார். அவர் இயல்பிலேயே ஒரு பட்டறைத் தொழிலாளி. அதனால் தொழிற்சங்க நடவடிக்கைகளில் தீவிரமான ஈடுபாடு கொண்டிருந்ததில் வியப்பேதும் இல்லை. 1934-40 வரை ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணியின் செயலாளர்களில் ஒருவராக பணியாற்றினார். அத்துடன் கம்யூனிஸ்ட் கட்சியின் காலனி நாடுகளுக்கான செய்திப்பிரிவிலும் செயல்பட்டார். அவர் இந்தக் காலத்தில் பத்திரிகை பணியில் ஈடுபட்டதோடு அதன் விநியோகப் பணிகளிலும் பங்கேற்றார். கிரேட் பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகையான ‘டெய்லி ஒர்க்கர்’ பத்திரிகை 1930ல் துவங்கப்பட்டது. 1945 முதல் அந்தப் பத்திரிகை பீப்பிள்ஸ் பிரஸ் பிரிண்டிங் சொசைட்டி மூலம் நடத்தப்பட்டது. அது 1966ஆம் ஆண்டு ‘மார்னிங் ஸ்டார்’ பத்திரிகை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த பத்திரிகைகளில் பிராட்லி பல்வேறு கட்டுரைகளையும் செய்திகளையும் எழுதினார். தொழிற்சங்க நடவடிக்கைகளில் மட்டுமின்றி காலனி நாடுகளின் விடுதலைக்கான போராட்டத்திலும் தீவிரம் காட்டினார். அவர் பிரபல கம்யூனிஸ்ட் தலைவரான ரஜினி பாமிதத்துடன் இணைந்து காலனி நாடுகளுக்கான செயல் திட்டமாக தத் - பிராட்லி கோட்பாடு உருவாக்கினார். இது இந்தியாவின் ஏகாதிபத்திய எதிர்ப்பு மக்கள் முன்னணி ஒன்றை உருவாக்க வேண்டுமென கம்யூனிஸ்ட்டுகளைக் கேட்டுக் கொண்டது. அதனடிப்படையில் இந்தியாவில் இயங்கிய கம்யூனிஸ்ட்டுகள் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயல்பட்டனர். அத்துடன் காங்கிரஸ் கட்சியின் மாநாடுகளில் முற்போக்கான தீர்மானங்களை கொண்டுவருவதற்கு முயன்றனர். அது பல இடங்களிலும் மாநாடுகளிலும் சாத்தியமானதாகவே இருந்தது. இதுபற்றி இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்களில் முக்கியமானவரான ஹர்கிஷன் சிங் சுர்ஜித் பின்னாளில் கட்டுரை ஒன்றில் சிறப்பாக குறிப்பிட்டிருக்கிறார். ‘இந்த ஆவணம் (தத் - பிராட்லி கோட்பாடு) அந்தக் காலத்தில் சுதந்திரப் போராட்டத்தின் நடைமுறைகளில் நீண்டகால கொள்கை மற்றும் உடனடிக் கொள்கைகள் தொடர்பாக ஒரு முக்கியமான பங்கைச் செலுத்தியது. இந்த ஆவணத்தின் அடிப்படையில் கம்யூனிஸ்ட் கட்சி இயங்கியதால் நாட்டு விடுதலைப் போராட்டத்தில் முன்னணிக்கு வந்தது; அது மக்களிடம் தாக்கத்தையும் ஏற்படுத்தியது. இந்த நடவடிக்கைகளின் விளைவாக அடுத்தடுத்த காங்கிரஸ் மாநாடுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அதன் செல்வாக்கை உயர்த்தின. பல காங்கிரஸ் கமிட்டிகள் கம்யூனிஸ்ட்டுகளின் கைகளுக்கு வந்தன. அதன் மூலம் விடுதலைப் போராட்ட இயக்கத்தில் அவர்களால் தீவிர மாற்றம் செய்ய முடிந்தது. இந்த ஆவணம் இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் சரியான நிலைபாட்டை எடுப்பதற்கு மிகப்பெரும் பங்காற்றியது. அத்துடன் காங்கிரசின் தலைமையில் செயல்பட்ட வர்க்க அமைப்புகளான விவசாயிகள் சங்கம் மற்றும் இதர தொழிற்சங்கங்களில் இருந்தவர்களை புரட்சிகரமான நடவடிக்கைகளில் ஈடுபட செய்வதற்கு உதவியது’ என்று கூறியிருப்பது இந்த ஆவணத்தின் முக்கியத்துவத்தை விளக்குவதாகும். பிரிட்டனில் இருந்த இந்திய லீக் நடத்தும் கூட்டங்களில் 1930-1940 காலகட்டங்களில் பெஞ்சமின் பிராட்லி முக்கிய பேச்சாளராக இடம்பெற்றிருந்தார். அவர் இந்தியாவின் தலைவர்கள் மற்றும் எழுத்தாளர்கள் பலருடன் தொடர்பு கொண்டிருந்தார். முற்போக்கு எழுத்தாளர் முல்க் ராஜ் ஆனந்த், இக்பால் சிங், கிருஷ்ணராவ் செல்வாங்கர், சசாதர் சின்கா போன்றோர் அவர்களில் முக்கியமானவர்கள். இந்தியாவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான கிருஷ்ணமேனனுடன் இருந்த தொடர்பு பரஸ்பரம் இருவருக்கும் உதவிகரமாக இருந்தது. பிரிட்டனில் தொழிற்சங்க, தொழிலாளி வர்க்க செயல்பாடுகளுக்கு பிராட்லி மிகுந்த முக்கியத்துவம் அளித்தார். அவர் பிரபல கம்யூனிஸ்ட் தலைவர்களான மிச்செல் காரிட், ஹாரிபாலிட் போன்றவர்களுடனும் இணைந்து செயல்பட்டார். அவர் 1934ஆம் ஆண்டு ‘இந்தியாவின் பின்னணி’ என்ற நூலை எழுதினார். 1936ல் ரஜினி பாமிதத்துடன் இணைந்து ‘இந்தியாவில் ஏகாதிபத்திய எதிர்ப்பு மக்கள் முன்னணி’ எனும் நூலை வெளியிட்டார். 1938ல் ‘இந்திய தேசிய காங்கிரசின் உதயம்’ குறித்து எனும் நூலை ஹாரிபாரிட், ரஜினி பாமிதத் ஆகியோருடன் இணைந்து எழுதியுள்ளார். இதுதவிர இந்தியாவின் புகழ்மிக்கத் தலைவராக பின்னாளில் மலர்ந்த ஜோதிபாசு, பி.பி.ராய் சௌத்ரி, எஸ்.எம்.குமாரமங்கலம், சாபுர்ஜி சக்லத்வாலா, ஹரால்டு லாஸ்கி, எஸ்.ஏ.விக்ரமசிங்கே போன்றோருடன் தொடர்புகொண்டிருந்தார். அத்துடன் அவர் இந்திய லீக், இந்திய தேசிய காங்கிரஸ், ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணி ஆகிய அமைப்புகளில் செயல்பட்டார். அவர் தனது வாழ்நாளில் இறுதிக்காலத்தில் பிரிட்டன் - சீனா நட்புறவு சங்கத்தின் தேசிய அமைப்பாளராக செயல்பட்டார். அவர் பணியாற்றிய பத்திரிகையான ‘டெய்லி ஒர்க்கர்ஸ்’ சர்வதேசியத்தையும், கம்யூனிஸ்ட் செயல்பாடுகளையும் உயர்த்திப் பிடிப்பதாக அமைந்திருந்தது. படக்குறிப்பு - நின்று கொண்டிருப்பவர்களில் (இடமிருந்து வலமாக) 5வதாக இருப்பவர் பெஞ்சமின் பிரான்சிஸ் பிராட்லி, 7வதாக இருப்பவர் பிலிப் ஸ்பிராட். கம்யூனிசக் கொள்கையைப் பரப்ப இந்தியாவுக்கு வந்த பிலிப் ஸ்பிராட் - ப.முருகன் -ஜனவரி 1, 2020 […] இங்கிலாந்தில் பிறந்து இந்தியாவுக்கு வந்து கம்யூனிஸ்ட் இயக்கத்தை வளர்ப்பதற்காக பாடுபட்டவர்களில் பிலிப் ஸ்பிராட்டும் ஒருவர். இவர் பெஞ்சமின் பிரான்சிஸ் பிராட்லியுடன் இணைந்து செயல்பட்டார். இவர்கள் இருவரும் மீரட் சதி வழக்கில் சிறை தண்டனை பெற்றனர். பிலிப் ஸ்பிராட் ஒரு எழுத்தாளர் மற்றும் அறிவு ஜீவி. அவர் சோவியத் நாட்டின் தலைநகரான மாஸ்கோவில் செயல்பட்ட கம்யூனிஸ்ட் அகிலத்தின் பிரிட்டிஷ் பிரிவால் இந்தியாவில் கம்யூனிசத்தை பரப்புவதற்காக ஆரம்ப காலத்தில் அனுப்பி வைக்கப்பட்டார். அவர் மெக்சிகோவிலும் இந்தியாவிலும் கம்யூனிஸ்ட் கட்சியைத் துவக்கிய எம்.என்.ராயுடன் இணைந்து செயல்பட்டார். இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி துவக்கப் பணிகளில் செயல்பட்ட பிலிப் ஸ்பிராட் அதன் நிறுவகர்களில் ஒருவராக திகழ்ந்தார். பிலிப் ஸ்பிராட் கேம்பர்வெல் என்ற நகரத்தில் 1902 செப்டம்பர் 26 அன்று பிறந்தார். அவரது தந்தை ஹெர்பெர்ட் ஸ்பிராட் பள்ளி ஆசிரியர். தாய் நோரா ஸ்பிராட். இந்த தம்பதியரின் 5 குழந்தைகளில் ஒருவர் பிலிப் ஸ்பிராட். இவரது மூத்த சகோதரர் டேவிட் ஸ்பிராட் முதலாம் உலகப்போரில் பிரிட்டிஷ் படையில் பணியாற்றிய போது 1917ஆம் ஆண்டு கொல்லப்பட்டார். இவரது தந்தை தீவிர கிறிஸ்தவர். ஆனால் பிலிப் ஸ்பிராட்டோ மதத்தை மறுப்பவராக இருந்தார். அவர் 17ஆவது வயதில் 19ஆம் நூற்றாண்டின் உடற்கூறு அறிவியலில் நல்ல ஞானம் பெற்றிருந்தார். அதன்பின்னர் உயிரியலை ஆர்வத்தோடு கற்றார். தினமும் தேவாலயம் சென்ற பிறகு மாலையில் அந்தப் பகுதியில் நடைபயிற்சி மேற்கொள்வார். அத்துடன் நூலகத்திற்குச் சென்று நிறைய நேரம் படிப்பதில் செலவழிப்பார். கல்லூரியில் சேர்ந்து கணக்குப் பாடத்தில் திறமையாக படித்ததால் கேம்ப்ரிட்ஜ் நகரின் டவுனிங் கல்லூரியில் 1921ஆம் ஆண்டு பல்கலைக் கழகத்தின் உதவித்தொகையைப் பெற்றார். அத்துடன் அவர் இலக்கியம், தத்துவம், உளவியல், மானுடவியல் ஆகியவற்றிலும் ஈடுபாடு கொண்டு கற்றார். அவர் யூனியன் சொசைட்டி, பல்கலைக்கழக தொழிலாளர் மன்றம் ஆகியவற்றில் பங்கேற்று தனது நேரத்தை அதில் செலவழித்தார். அந்தக் காலத்தில் பிரிட்டனில் எழுத்தாளர்கள், வரலாற்றாசிரியர்கள், தொழிற்சங்க தலைவர்கள் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பு அந்தப் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டது. அதில் ஜே.டி.பெர்னால், பிராங்க் பி. ராம்சே, வரலாற்றாசிரியர் ஆலன் ஹட், எழுத்தாளர் மைக்கேல் ராபர்ட்ஸ் உள்ளிட்டோரும் இடம்பெற்றிருந்தனர். பல்கலைக்கழகத்திற்கு அருகே இருந்த ரயில்வே ஸ்டேசனில் ஸ்பிராட், உல்ப் ராபர்ட்ஸ் ஆகியோர் ‘ஒர்க்கர்ஸ் வீக்லி’பத்திரிகையை ரயில்வே தொழிலாளர்கள் மத்தியில் விற்பனை செய்வதில் ஈடுபட்டனர். லண்டன் யுனிவர்சிட்டி லேபர் பார்ட்டியிலும் உறுப்பினராக இருந்தார். இந்த நிலையில்தான் 24வது வயதில் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த நிலையில் பிலிப் ஸ்பிராட் 1926ம் ஆண்டு ரஜினி பாமிதத்தின் மூத்த சகோதரர் கிளமென்ஸ் தத்தால் இந்தியாவுக்குச் சென்று கம்யூனிஸ்ட் கட்சியில் செயல்படுவதற்காக கம்யூனிஸ்ட் அகிலத்தின் பிரதிநிதியாக அனுப்பி வைக்கப்பட்டார். இந்தியா வந்தபின் கம்யூனிஸ்ட் கட்சியின் நடவடிக்கைகளிலும் குறிப்பாக தொழிலாளர் விவசாயி கட்சியின் நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்தினார் ஸ்பிராட். அத்துடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களை காங்கிரஸ் கட்சி, தொழிற்சங்கங்கள் இளைஞர் அமைப்புகளில் தலைமைப் பொறுப்புக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். இந்தக் காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கைகளிலும் கம்யூனிஸ்ட் கட்சியை வளர்ப்பதற்கான முயற்சிகளிலும் பெஞ்சமின் பிராட்லியுடன் இணைந்து செயல்பட்டார். இந்தியாவின் பல நகரங்களில் இருந்த கம்யூனிஸ்ட்டுகள், தொழிற்சங்க வாதிகள், காங்கிரஸ்காரர்கள் மற்றும் பலரது செயல்பாடுகளையும் பிரிட்டிஷ் போலீசார் கண்காணித்து வந்தனர். ஆயினும் இந்தக் காலங்களில் தொழிலாளி விவசாயிகள் கட்சி நடவடிக்கைகளில் ஸ்பிராட் தீவிரமாகப் பணியாற்றினார். இந்தியாவில், கம்யூனிஸ்ட் கட்சியை வளரவிடாமல் செய்வதற்காக பிரிட்டிஷ் அரசு ஒரு சதி வழக்கைத் தொடர்ந்து இடையூறு செய்தது. 1927ஆம் ஆண்டு மீரட் சதி வழக்கில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் ஸ்பிராட்டும் சேர்க்கப்பட்டார். அதற்கு அவரது வீட்டில் சட்டவிரோதமான கடிதங்கள் மற்றும் பிரசுரங்கள் இருந்ததாக காரணம் கூறப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சியினை கவிழ்ப்பதற்கு சதி செய்ததாகக் கூறி 25 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை 5 ஆண்டு காலம் நடந்தது. அதில் ஸ்பிராட்டுக்கு 12 ஆண்டு கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அது பின்னர் மேல்முறையீட்டின்போது 2 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. தண்டனை முடிந்து 1934 அக்டோபர் ஸ்பிராட் விடுதலை ஆனார். அவரது சிறை அனுபவம் குறித்து அன்றைய மனநிலை குறித்தும் கல்கத்தாவிலிருந்து வெளிவந்த மாடர்ன் ரெவ்யூ இதழில் 1937ல் கட்டுரை எழுதினார். 1930ஆம் ஆண்டுகளில் துவக்கத்தில் ரஷ்யாவிலும் மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் நடைபெற்ற நிகழ்வுகளை கூர்ந்து கவனித்து வந்தார். இந்தக் காலத்தில் அவர் கம்யூனிசத்தின் மீது தனது நம்பிக்கையை மேலும் மேலும் உறுதிப்படுத்திக் கொண்டார். அதன் பின்னர் ஒத்துழையாமை இயக்கக் காலத்தின்போது மீண்டும் கைது செய்யப்பட்டார். பெல்காம் முகாம் சிறையில் 18 மாத காலம் சிறைவாசம் அனுபவித்தார். அதற்குப் பின்னர் 1936 ஜுன் மாதத்தில் விடுதலையானார். மீரட் சதி வழக்கில் தண்டனைப் பெற்று சிறைவாசம் அனுபவித்தப் போது, ஸ்பிராட் இந்தி கற்றுக் கொண்டார். அப்போதுதான் மகாத்மா காந்தியின் சத்திய சோதனை உள்ளிட்ட நூல்களைப் படித்தார். 1934ஆம் ஆண்டில் விடுதலைப் பெற்ற ஸ்பிராட் சென்னை வந்தார். அங்கு சிங்காரவேலரின் அண்ணன் மகள் சீதா என்பவரை 1939ல் திருமணம் செய்து கொண்டார். அவருக்கு மூன்று மகன்கள், ஒரு மகள் பிறந்தனர். 1939ஆம் ஆண்டு சோவியத் நாடு ஹிட்லரின் படையெடுப்பிலிருந்து ரஷ்யாவைப் பாதுகாப்பதற்காக பின்லாந்து நாட்டை தன் ஆளுகைக்கு உட்படுத்தியது. ஆயினும் ஹிட்லர் முறியடிக்கப்பட்ட பின்னர் பின்லாந்தை சுதந்திர நாடாகவே செயல்படச் செய்தது சோவியத் நாடு. ஆனால் ஸ்பிராட் இந்த நடவடிக்கையை விமர்சனம் செய்தார். அதன்பின்னர் 1943ஆம் ஆண்டு எம்.என்.ராயின் தீவிர ஜனநாயகக் கட்சியில் ஸ்பிராட் இணைந்து 1948ஆம் ஆண்டு வரை அதில் செயல்பட்டார். 1951ஆம் ஆண்டு புதிதாக உருவான இந்திய கலாச்சார சுதந்திர காங்கிரஸ் அமைப்பின் செயலாளராக செயல்பட்டார். அந்த அமைப்பின் பத்திரிகையில் அடிக்கடி கட்டுரைகள் எழுதிவந்தார். 1952ஆம் ஆண்டு காஷ்மீர் தலைவர் ஷேக் அப்துல்லாவுக்கு ஆதரவு தெரிவித்தார். காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு சுதந்திரம் வழங்க வேண்டும் என்று கூறினார். இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் நேரு அரசாங்கம் கடைப்பிடித்த கொள்கைகளை விமர்சிப்பதில் தனித்து விளங்கினார். அதன்பின்னர் பெங்களூரில் நிரந்தரமாக குடியேறினார். அங்கு அமெரிக்க ஆதரவு பத்திரிகையான ‘மைஸ் இன்டியா’வின் முதன்மை ஆசிரியராக 1964ஆம் ஆண்டுவரை பணியாற்றினார். கடைசியாக சென்னைக்கு குடிபெயர்ந்தார். அங்கு ராஜாஜி நடத்திய ‘சுவராஜ்யா’ பத்திரிகையில் பணிபுரிந்தார். இந்தக் காலங்களில் பல்வேறு தலைப்புகளில் ஏராளமான பிரசுரங்கள் கட்டுரைகளை எழுதினார். அத்துடன் பிரெஞ்ச், ஜெர்மனி, தமிழ், சமஸ்கிருதம், இந்தி ஆகிய மொழிகளிலிருந்து ஆங்கிலத்தில் மொழிப்பெயர்ப்பு செய்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர், 1971ஆம் ஆண்டு மார்ச் 8 அன்று காலமானார். இருந்தது இங்கிலாந்தில்… சிந்தித்தது இந்தியா பற்றி! - ப.முருகன் -ஜனவரி 2, 2020 […] இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கு மட்டுமல்லாது உலக கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கும் மிகச்சிறந்த பங்களிப்பைச் செய்த இங்கிலாந்து கம்யூனிஸ்ட் தலைவர் ரஜினிபாமிதத். இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் வளர்வதற்கு உதவி செய்த இங்கிலாந்து கம்யூனிஸ்ட் தலைவர்கள் பெஞ்சமின் பிராட்லி, பிலிப் ஸ்பிராட். ஆனால் இந்தியாவில் பிறந்த சக்லத்வாலா இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கு உதவியதோடு இங்கிலாந்தின் தொழிலாளி வர்க்கத்துக்கும் கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கும் பாடுபட்டு அங்கேயே காலமானார். ஆனால் இங்கிலாந்தில் பிறந்த இந்தியரான ரஜினி பாமிதத் (1896) இங்கிலாந்து கம்யூனிஸ்ட் கட்சிக்காகவும் கம்யூனிஸ்ட் அகிலத்துக்காகவும் பணியாற்றியதோடு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை வளர்க்கவும் மார்க்சிய வழிப்படுத்தவும் பேருதவி புரிந்த பெருந்தகையாவார். சக்லத்வாலா இந்தியாவுக்கு மூன்று முறை வருகை புரிந்தார். தத் அவர்களோ ஒரே ஒரு முறை மட்டுமே வருகை தந்தார். ஆனால் அவரது நூல்களும் கருத்துக்களும் நேரடி ஆலோசனைகளும் வழிகாட்டுதல்களும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு மிகவும் உதவிகரமாக அமைந்திருந்தன. ரஜினி பாமிதத் எல்லோராலும் ஆர்.பி.தத் என்றே தோழமையுடன் அழைக்கப்பட்டார். அவரது தந்தை டாக்டர் உபேந்திரா தத், தாயார் சுவீடன் நாட்டைச் சேர்ந்த அன்னா பால்மே. இவரது தந்தையாரின் வீடு இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய விருந்தினர்களுக்காக எப்போதும் திறந்திருந்தது. அதனால் இயல்பாகவே தத்துக்கும் இந்திய சுதந்திரத்தின் மீது நாட்டம் அதிகரித்தது. அவர் கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே முதல் உலகப் போரை எதிர்த்துப் பிரச்சாரம் செய்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆனாலும் கல்வியில் சிறந்து விளங்கினார். அதனால் கூர்த்த மதியும் ஆழ்ந்த அறிவும் கொண்டிருந்தார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்த காலத்திலேயே (1914) இஸ்டிபெண்டண்ட் லேபர் பார்ட்டியில் இணைந்து செயல்பட்டார். இடதுசாரி புள்ளியியல் நிலையமான தொழிலாளர் ஆய்வு துறையில் 1919ல் சேர்ந்தார். பின்னர் 1921ல் கிரேட் பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். அது முதல் தனது வாழ்நாள் இறுதிவரை கம்யூனிஸ்ட் லட்சியத்துக்காக அரும்பாடுபட்டார். அதே 1921ல் தொடங்கப்பட்ட லேபர் மன்த்லி பத்திரிகையின் ஆசிரியராக ஏறத்தாழ 50 ஆண்டுகள் - அவர் இறக்கும் வரை சிறப்பாகச் செயல்பட்டார். அத்துடன் கம்யூனிஸ்ட் கட்சியின் வார பத்திரிகையான ஒர்க்கர்ஸ் வீக்லியின் ஆசிரியராகவும் 1922ஆம் ஆண்டில் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்தக் காலத்தில்தான் பின்லாந்தைச் சேர்ந்த சல்மே முர்ரிக் என்பவரை மணம் புரிந்தார். அவர் கம்யூனிஸ்ட் அகிலத்தின் பிரதிநிதியாக 1920ல் கிரேட் பிரிட்டன் வந்தார். அவரும் சிறந்த கம்யூனிஸ்ட் என்பதால் தத் எழுதும் கட்டுரைகள், பிரசுரங்கள், நூல்களை சல்மே படித்துத் தருவது வழக்கமாக இருந்தது. தத் மிகச் சிறந்த மார்க்சிய அரசியல் தத்துவ அறிஞராகத் திகழ்ந்தார். 1923-1965 வரை கிரேட் பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை தத்துவாசிரியராக விளங்கினார். 1923ல் முதல்முறையாக சோவியத் யூனியனுக்குச் சென்றார். கம்யூனிஸ்ட் அகிலத்தின் நிர்வாகக்குழுவில் பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதியாக இடம்பெற்றார். 1924ஆம் ஆண்டு அகிலத்தின் மாற்றுத் தலைவர்களில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டார். 1925ஆம் ஆண்டில் உடல்நலக்குறைவு காரணமாக ஒர்க்கர்ஸ் வீக்லி பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகினார். கம்யூ. அகிலத்தில் பெல்ஜியம் மற்றும் சுவீடன் நாடுகளுக்கான பிரதிநிதியாக பல ஆண்டுகள் செயல்பட்டார். அதுபோலவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாடுகளுக்கு வழிகாட்டும் பொறுப்பில் கம்யூனிஸ்ட் அகிலத்தின் சார்பில் முக்கியப் பங்காற்றினார். அத்தகைய வழிகாட்டுதலின் ஒரு பகுதிதான் பெஞ்சமின் பிராட்லியுடன் இணைந்து உருவாக்கிய பிராட்லி - தத் கோட்பாடு. அது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சரியான வழியில் செயல்படச் செய்ய பேருதவியாக இருந்தது என்பதை கட்சியின் பொதுச் செயலாளர்களாகச் செயல்பட்ட பி.சி.ஜோஷி, ஹர்கிஷன் சிங் சுர்ஜித் போன்றோர் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளனர். 1939ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் துவங்கிய போது கம்யூனிஸ்ட் இயக்கத்துக்குள் அது பற்றிய நிர்ணயிப்பில் குழப்பம் இருந்தது. அதில் தத் மிகத் தெளிவாக முடிவு எடுத்தார். சோவியத் யூனியன் மீது ஹிட்லரின் படைகள் தாக்குதலை தொடுத்ததும் அவரது முடிவு சரியாக இருந்தது நிரூபணமானது. இந்தக் காலத்தில் கிரேட் பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த ஹாரி பாலிட் பதவி விலக நேர்ந்ததும் ரஜினி பாமிதத்தே 1941 வரை பொதுச் செயலாளராக செயல்பட்டார். தத்தின் மிகச்சிறந்த புத்தகங்களில் ஒன்று பாசிசமும் சமூகப் புரட்சியும். இந்தியா பற்றிய அவரது முக்கியமான புத்தகம் ‘இன்றைய இந்தியா’. இதில் அன்றைய இந்தியாவின் அரசியல் நிலையையும் இந்திய கம்யூனிஸ்ட கட்சி செயல்பட வேண்டிய வழியையும் மிகத் தெளிவாக விளக்கியிருந்தார். அவரது முந்தைய நூலான ‘நவீன இந்தியா’ எனும் நூலும் குறிப்பிடத் தகுந்ததாகும். மார்க்சிய - லெனினிய தத்துவத்தில், கம்யூனிஸ்ட் கோட்பாடுகளில் ஆழ்ந்த ஞானம் கொண்டிருந்ததால் தான் அவரால் இத்தகைய நூல்களை எழுத முடிந்தது. 1920 முதல் 1967வரை 34 புத்தகங்கள் அவரால் எழுதப்பட்டன. அவற்றில் ஒன்றிரண்டு மட்டுமே சிறு பிரசுரங்கள். பொது வேலை நிறுத்தத்தின் பொருள் என்ன? (1926), பிரிட்டனில் முதலாளித்துவ சோசலிசமா? (1931), ஜனநாயகமும் பாசிசமும் (1933), இந்த போர் ஏன்? (1939) ஆகியவை அத்தகைய பிரசுரங்கள். இந்தியா எழுகிறது (1928), இந்தியாவில் இடதுசாரி தேசியம் (1936) ஆகியவையும் குறிப்பிடத்தக்கவை. சக தோழராய் செயல்பட்ட சக்லத்வாலா பற்றி எழுதிய நூல் சாபுர்ஜி சக்லத்வாலா பற்றிய நினைவுகள் (1936) குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதாகும். அவரது செயல்பாடுகளும் எழுத்துக்களும் இன்றைய இளம் கம்யூனிஸ்ட்டுகளுக்கு மட்டுமல்லாது அனைவருக்கும் வழிகாட்டக் கூடியவையாகும். கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கு சுந்தரய்யாவை ஈர்த்த எச்.டி.ராஜா - என்.ராமகிருஷ்ணன் -ஜனவரி 3, 2020 […] முதல் திருச்சி சதி வழக்கு என்று குறிப்பிடப்பட்ட தென்னிந்திய ரயில்வே போராட்ட வழக்கில் சிங்காரவேலர் திருச்சி சிறையிலிருந்த நேரத்தில் 1929ஆம் ஆண்டில் பம்பாய் வாலிபர் கழகத்தைச் (யூத்லீக்) சேர்ந்த எச்.டி.ராஜா சென்னைக்கு வந்தார். ஹரிஹர தர்மராஜா என்ற முழுப் பெயரைக் கொண்ட எச்.டி.ராஜா பம்பாயில் வசிக்கும் தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்தவர். மார்க்சிய கருத்துக்களினால் கவரப்பட்ட எச்.டி.ராஜா, பம்பாய் வாலிபர் கழகத்தில் தீவிரப் பங்கெடுத்து வந்தார். சென்னையில் வாலிபர் கழகத்தை உருவாக்கவும், வாலிபர்களையும், மாணவர்களையும் அதில் ஈர்த்து மார்க்சிய கருத்துக்களை பிரச்சாரம் செய்வதற்காகவும் அவர் சென்னைக்கு வந்தார். இத்தகைய தொடர்புக்காக அவர் முதலில் லயோலா கல்லூரியைத் தேர்ந்தெடுத்தார். சில மாணவர்களுடன் தொடர்பு கொண்டு ஒரு கூட்டத்தை கூட்டச் செய்து மார்க்சியத்தைக் குறித்து விளக்கினார். அதில் பி.ஏ., எம்.ஏ. வகுப்பில் படிக்கும் பல மாணவர்கள் கலந்து கொண்டனர். கம்மம்பாடி சத்யநாராயணா, பி.சுந்தரராமரெட்டி. வி.கே.நரசிம்மன் போன்றோர் அக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த பி.சுந்தரராமரெட்டிதான் பின்னாட்களில் பி.சுந்தரய்யா என்று மிகப் பிரபலமாக விளங்கிய கம்யூனிஸ்ட் தலைவராவார். அவர் அச்சமயத்தில் இண்டர்மீடியட் வகுப்பில் படித்து வந்தார். எச்.டி. ராஜாவுடனான சந்திப்பு குறித்து சுந்தரய்யா நினைவுப்படுத்திக் கூறுகிறார்: ‘… அந்நாட்களில் தான் எச்.டி.ராஜா எங்கள் மாணவர் விடுதிக்கு கம்யூனிஸ்ட் அறிக்கையையும்’ மற்ற சோசலிஸ்ட் நூல்களையும் கொண்டு வந்தார். அவர் வருகையையொட்டி நாங்கள் எங்கள் மாணவர் விடுதியில் ஒரு சிறிய கூட்டத்தை ஏற்பாடு செய்தோம். கம்யூனிசம் என்றால் என்ன என்பதை அவர் விவரித்தார். தன்னுடன் ஏதோ பத்திரிகையும் கொண்டு வந்திருந்தார். அதற்கு எங்களை சந்தா கட்டக் கோரினார். ‘எல்லாவற்றையும் விட ‘கம்யூனிஸ்ட் அறிக்கை’ என்னுள் ஆழமான முத்திரையைப் பதித்தது. ஏற்கெனவே விலை, மதிப்பு மூலதனம் ஆகியவை அறிக்கை சிறுசிறு பிரசுரங்கள் படித்திருந்தாலும் ‘கம்யூனிஸ்ட் அறிக்கை’ என்னிலே ஒரு மாபெரும் மாற்றம் ஏற்படுத்துவதிலே பிரதான பங்கு வகித்தது. விவேகானந்தர், காந்திஜி போன்றவர்களின் சங்கதி எப்படியிருந்தாலும் கம்யூனிஸ்ட் அறிக்கை சிறந்த பாதை காட்டுகிறதென்றே எண்ணினேன். எங்கள் நண்பர் குழாமை கம்யூனிஸ்ட் இயக்கத்திலே இணைக்க வேண்டுமென முடிவு செய்தோம். மற்ற மாணவர்களை வாலிபர் கழகத்தில் (யூத் லீக்) சேர்த்துக்கொள்ள வேண்டுமென கருதினோம். அதாவது அப்போதே நாங்கள் கம்யூனிஸ்ட் அனுதாபிகளாக மாறிவிட்டோம். கம்யூனிசம் குறித்து மேலும் தெரிந்து கொள்ள வேண்டுமென்பது எங்கள் நோக்கம். ‘இந்தக் காலக்கட்டத்திலேயே ‘மீரட் சதி வழக்கு’ ஆரம்பமாயிற்று. சென்னையிலிருக்கும் எங்களுக்கு அதுபற்றிய விவரங்கள் தெரிவது சிரமம்தான்! ஆனால் பத்திரிகைகளில் வரும் சிறு குறிப்புகளையும் நாங்கள் சிரத்தையுடன் படித்து வந்தோம். பம்பாயிலிருந்தும் நாங்கள் கம்யூனிஸ்ட் புத்தகங்களை வரவழைப்போம். அக்காலத்தில் புத்தகங்களை வரவழைப்பது அவ்வளவு சுலபமல்ல! ரகசியமாகவும், திருட்டுத்தனமாகவும் வரவழைத்துக் கொள்ள வேண்டியதுதான்! அல்லது யாராவது புத்தகக் கடைக்காரருடன் தொடர்பு வைத்துக் கொண்டு அவர் மூலமாக பெரும் கஷ்டத்தோடு புத்தகங்களை வரவழைத்துக் கொள்ள வேண்டும்…’ இந்தச் சந்திப்பிற்குப் பின் சுந்தரய்யாவும், அவரது சக நண்பர்களும் மீரட் சதி வழக்கு விசாரணை, பகத்சிங் வெடிகுண்டு வழக்கு, பகத்சிங்கின் நெருங்கிய தோழர் ஜதீன்சக்கரவர்த்தி உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்தது போன்றவை குறித்து பத்திரிகைகளில் வரும் விபரங்களை மிகுந்த ஆர்வத்துடன் படிக்கலாயினர். சுதந்திரப் போராட்ட இயக்கத்திலும் தீவிர நாட்டம் செலுத்த ஆரம்பித்தனர். சுந்தரய்யாவின் படிப்பு அதிக காலம் நீடிக்கவில்லை. 1930ஆம் ஆண்டில் சுதந்திரப் போராட்ட இயக்கம் வீறு கொண்டு எழலாயிற்று. உப்புச் சத்தியாகிரகம், ஒத்துழையாமை இயக்கம் போன்றவை தோன்றின. சுந்தரய்யா அதில் குதிக்க விரும்பினார். கல்லூரிப் படிப்பு உதவாக் கரையானது என்ற முடிவுக்கு வந்தார். ஆண்டுத்தேர்வு எழுதக்கூட அவருக்கு விருப்பமில்லை. ஆனால் குடும்பத்தினர் விருப்பத்திற்கிணங்க தேர்வு எழுதியதோடு படிப்பைக் கைவிட்டார். சுதந்திரப் போராட்டத்தில் இறங்கினார். ஜூன் மாதத்தில் கைது செய்யப்பட்டு இரண்டாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு 18 வயது நிரம்பாததால் தஞ்சாவூரிலுள்ள சிறுவர்கள் சீர்திருத்தப் பள்ளியில் (பார்ஸ்டல் பள்ளி) அடைக்கப்பட்டார். அங்கிருந்து திருச்சி சிறைக்கும். அதன் பின் ராஜமகேந்திரபுரம் சிறைச்சாலைக்கும் கொண்டு செல்லப்பட்டார். இவ்விரு சிறைச்சாலைகளில் இருக்கும்பொழுது சுந்தரய்யா, தன் சக தொண்டர்களுக்கு அரசியல் வகுப்புகள் நடத்தினார். அவற்றின் பிரதான கருத்து இதுதான். ‘காந்திஜி காட்டும் வழியிலே சுதந்திர இயக்கம் நாட்டின் விடுதலையைப் பெற முடியாது. ரஷ்யப் புரட்சியைப் போன்றதொரு புரட்சி இந்தியாவிலும் ஏற்பட்டால்தான் நமது லட்சியம் நிறைவேறும். எனவே நாம் விடுதலையான பிறகு ரஷ்யப்புரட்சி குறித்து நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சியிலே சேர்ந்து சோவியத் சமூக அமைப்பைப் போன்றதொரு சமூக அமைப்பை நம் நாட்டிலும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்’. சுந்தரய்யா, ராஜ மகேந்திரபுரம் சிறையில் இருக்கும்பொழுது பகத்சிங்கின் சமூக தோழர்களும், பயங்கரவாதப் புரட்சியாளர்களாகவுமிருந்த சிவவர்மாவையும், விஜயகுமார் சின்ஹாவையும் அங்கே சந்தித்துப்பேசும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. சிவவர்மா, அப்பொழுது பயங்கரவாதத்திலிருந்து மார்க்சியத்தை நோக்கி வரத் தொடங்கியிருந்த காலம். அவருடனான சந்திப்பும், சுந்தரய்யாவுக்கு உதவியாக இருந்தது. 1931ஆம் ஆண்டில் காந்திஜி- வைஸ்ராய் இர்வின் உடன்பாடு ஏற்பட்டதையொட்டி போராட்டம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து சுந்தரய்யாவும் அவரது அணியினரும் மார்ச் மாதத்தில் விடுதலை செய்யப்பட்டனர். காந்திஜி இயக்கத்தை பாதியில் நிறுத்தியது சுந்தரய்யாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. சுந்தரய்யா தன்னுடைய படிப்பைத் தொடர வேண்டுமென்று அவரது தாயார் விரும்பினார். காங்கிரஸ் இயக்கத்தை நிறுத்திவிட்டதால் நீ ஏன் மீண்டும் கல்லூரியில் சேர்ந்து படிக்கக்கூடாது? காங்கிரஸ் மீண்டும் இயக்கத்தைத் தொடங்கினால் நீ அதில் சேர்ந்து கொள்ளலாம் இல்லையா என்று அவர் கேட்டது சுந்தரய்யாவுக்கு நியாயமானதாகத் தோன்றியது. பெங்களூரில் உள்ள மூத்த சகோதரி வீட்டில் தங்கிப் படிக்க சம்மதம் தெரிவித்தார். ஆனால் அதற்கும் ஒரு நிபந்தனை விதித்தார். கதராடை உடுத்தவும், ராட்னத்தில் நூல் நூற்கவும் அனுமதி தந்தால்தான் படிக்க முடியுமென்று கண்டிப்பாகக் கூறினார் சகோதரியின் கணவர் அதற்குச் சம்மதித்து வீட்டில் தனியாரிடம் ஒதுக்கிக் கொடுத்தார். அவர் அச்சமயத்தில் மாவட்ட நீதிபதியாக இருந்தார். சுந்தரய்யாவின் படிப்பு அதிக காலம் நீடிக்கவில்லை. விரைவிலேயே முற்றுப்பெற்றது. கம்யூனிஸ்ட் இயக்கம் மீண்டும் அவரை ஈர்த்தது. ஆங்கில ஆட்சி எதிர்ப்புப் போராட்டமும் அந்தமான் தீவு சிறைத் தண்டனையும் - பி.ராமமூர்த்தி -ஜனவரி 4, 2020 […] இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான தலைவர்களில் ஒருவரான தோழர் பி.ராமமூர்த்தி அவர்கள் பள்ளிப் பருவத்திலிருந்தே விடுதலைப் போராட்டத்திலும் சாதி ஒழிப்பு சமூக நீதி போராட்டத்திலும் முன்னின்றவர். நாட்டு மக்கள் அந்நிய ஆட்சியிலிருந்து விடுதலை பெறவும், அனைத்து வகைச் சுரண்டல்களிலிருந்தும் விடுதலை பெறவும், தனது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர். பகத்சிங்கின் அமைப்பிலும் தொழிற்சங்கங்களிலும் காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளில் செயல்பட்ட சிறந்த தலைவர். இந்திய சுதந்திரத்தின் பொன்விழா சமயத்தில் அவரால் எழுதப்பட்ட கட்டுரையின் ஒரு பகுதி. ஒவ்வொரு நாட்டிலுள்ள கம்யூனிஸ்ட் இயக்கமும், வரலாற்றில் வேறெந்த அரசியல் இயக்கமும் சந்தித்திராத அவதூறு, நிந்தனை, சொல்லொணா ஒடுக்குமுறைகள், சித்ரவதைகளுக்கு ஆட்பட வேண்டியிருக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான உழைக்கும் மக்களும், தீவிர ஊழியர்களும் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் தங்கள் இன்னுயிரை, கட்சிக்காக மகிழ்வுடன் அர்ப்பணித்தனர். இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல. 1917ஆம் ஆண்டில் நடைபெற்ற ரஷ்யப்புரட்சி முடிவுற்று, ஒரு சில வருடங்கள் வரையில், இந்தியாவில், மார்க்சியக் கருத்துக்கள் குறித்து, முற்றிலும் அறியப்படாமலே இருந்தது. அன்றிருந்த ஆங்கிலேயே காலனி ஆதிக்க அரசாங்கமானது, மார்க்சிய நூல்கள் இந்தியாவிற்குள் வருவதைக் கடல் சுங்கச் சட்டத்தின் கீழ் தடை செய்தது. ‘கருத்துக்களை ஒரு பொழுதும் தடை செய்ய முடியாது. அவைகள் சுங்கம் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் பார்வையிலிருந்து தப்பிப் பயணம் செய்வதற்கான வழியை எப்படியோ கண்டுபிடித்து விடுகின்றன என்று 1928ஆம் ஆண்டில் நடைபெற்ற லாகூர் காங்கிரஸ் மாநாட்டில் தலைமை உரை நிகழ்த்துகையில் பண்டிட் ஜவஹர்லால் நேரு குறிப்பிட்டார். 1920ஆம் வருடங்களின் ஆரம்பத்தில், தாஷ்கண்டிலிருந்து கீழ்த்திசை நாடுகளின் பல்கலைக்கழகத்தில் கலந்து கொண்டு இந்தியாவிற்குத் திரும்பிய சிலருக்கெதிராக முதல் கம்யூனிஸ்ட் சதி வழக்கு போடப்பட்டது. அவர்களுக்கு நீண்டகாலச் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. எனினும், 1925ஆம் ஆண்டுவாக்கில், சிதறிக்கிடந்த கம்யூனிஸ்ட் குழுக்களும், தனிநபர்களும் ஒன்று சேர்ந்து, இந்திய மண்ணில் முதல் கட்சி மாநாட்டை நடத்தினர். அவ்வாண்டு, டிசம்பர் மாதத்தில், சிங்காரவேலு செட்டியார் தலைமையில் முதல் மாநாடு கான்பூர் நகரில் நடைபெற்றது. சிங்காரவேலு செட்டியார், தமிழகத்தின் பிரபல காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராவார். இந்த முதல் மாநாட்டுக்குப் பின் கம்யூனிஸ்டுகள், தொழிலாளி வர்க்கத்திடையேயும், அமைப்பு ரீதியாக அணிதிரட்டப்பட்ட வெகுஜன தொழிற்சங்கங்களிலும் தீவிரமாகப் பணிபுரிய ஆரம்பித்தனர். கம்யூனிஸ்டுகளின் தலைமையில் கீழ் பெரும் வேலைநிறுத்தப் போராட்டங்கள் நடைபெற ஆரம்பித்தன. பம்பாய் ஜவுளி ஆலைத் தொழிலாளிகள் நடத்திய போராட்டமும், வங்காளத்து சணல் ஆலைத் தொழிலாளிகள் நடத்திய போராட்டமும், தென்னிந்திய ரயில்வே (எஸ்.ஐ.ஆர்) மற்றும் இந்திய தீபகற்ப ரயில்வே நடத்திய போராட்டமும் வரலாற்றுப் பிரசித்திபெற்றவையாகும். இத்தகைய தொழில்களில் மிகப்பெரும்பான்மையானவை. ஆங்கிலேய நிறுவனங்களுக்குச் சொந்தமாயிருந்த நிலையில் இத்தகைய போராட்டங்கள், ஆங்கிலேய - எதிர்ப்புப் போராட்டத்தின் பகுதியாக விளங்கின. ஆங்கிலேய அரசாங்கம் இந்தப் போராட்டங்களைக் கண்டு பயங் கொள்ள ஆரம்பித்தது. “தேசிய பாதுகாப்பு மசோதா” என்ற பெயரைக் கொண்ட ஒரு மசோதாவை இயற்றியது. இந்தச் சட்டத்தின் கீழ், குற்றப்பத்திரிகை கொடுக்காமல் யாரையும் விசாரணையின்றி காவலில் வைக்க முடியும். நூற்றுக்கணக்கான கம்யூனிஸ்டுகளும், பயங்கரவாதிகள் என்று சந்தேகிக்கப்பட்டவர்களும், இதன் கீழ் கைது செய்யப்பட்டு அந்தமான் தீவிற்குக் கொண்டு போகப்பட்டு போர்டபிளேயர் என்ற இடத்திலுள்ள சிறையில் அடைக்கப்பட்டனர். அதன்பின், நடைபெற்றது மீரத் சதிவழக்கு. மிகப் பிரபலமான, செயலூக்கமுள்ள கம்யூனிஸ்ட் தலைவர்களும், தொழிற்சங்க இயக்கத்தைச் சேர்ந்த சிலரும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டிருந்தனர். அந்தச் சமயத்தில் ‘சுயராஜ்யக் கட்சி’ என்ற பெயரில் செயல்பட்டுக் கொண்டிருந்த காங்கிரஸ்காரர்கள், இத்தகைய ஒடுக்குமுறைகளை முழுக்க முழுக்க எதிர்த்தனர் என்பதை இங்கே குறிப்பிட வேண்டியது அவசியம். அதைப் போலவே, முஸ்லிம் தலைவர்களும் மத்திய சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த ஒவ்வொருவரும், இதைக்கண்டித்தனர். அவர்கள் எதிர்ப்பு முழுவதும் மத்திய சட்டசபையில் பேசுவதோடு நின்றுவிட்டது. சட்டசபைக்கு வெளியே, நாட்டில் எவ்வித எதிர்ப்புப் பிரச்சாரமும் செய்யப்படவில்லை. மீரத் சதிவழக்கு மூன்று வருடங்கள் நீடித்தது. இறுதியில், பலர் நீண்டகால சிறைவாசத் தண்டனை விதிக்கப்பட்டனர். தென்னிந்திய ரயில்வே சதி வழக்கில், அதில் சம்பந்தப்படுத்தப்பட்ட சிங்காரவேலு செட்டியாருக்கு, திருச்சி செஷன்ஸ் நீதிபதி 6 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தார். அப்பொழுது சிங்காரவேலு செட்டியாருக்கு 50 வயதிற்கும் அதிகம். எனினும், சென்னை உயர்நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்டின் காரணமாக, அவருடைய தண்டனை வெகுவாகக் குறைக்கப்பட்டது. மீரத் சதிவழக்கிலும், இதர வழக்குகளிலும் சம்பந்தப்பட்டிருந்த இத்தகைய தோழர்கள் விடுதலை செய்யப்பட்டு கட்சியின் வேலையைத் துவக்கிய ஒரு சில மாதங்களுக்குள்ளாவே, கட்சி, சட்ட விரோதமானதென்று பிரகடனப்படுத்தப்பட்டது. இந்தத்தடை, 1942ஆம் ஆண்டு முதல் பாதிவரை நீடித்தது. எனினும், கட்சி சட்ட விரோதமாகச் செயல்பட ஆரம்பித்தது. அறிமுகம் இல்லாத ஊரில் தங்கி அமைப்பை உருவாக்கிய அமீர் ஹைதர் கான் - ஜோ.ராஜ்மோகன் -ஜனவரி 5, 2020 […] இந்திய விடுதலை இயக்கத்துக்காகவும், புரட்சி இயக்கத்துக்காகவும் தனது வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்ட மிக சிறந்த கம்யூனிஸ்ட் அமீர் ஹைதர்கான், மீரட் சதி வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டு பிரிட்டிஷ் போலீசாரால் தேடப்பட்டவர். எனினும் போலீஸ் வசம் சிக்காமல் தலைமறைவாக இருந்து கொண்டு கம்யூனிஸ்ட் கட்சியை கட்டுவதற்கான அடிப்படை பணிகளை மேற்கொண்டவர். தென்னிந்தியாவில் தலைமறைவாக பணியாற்றிக் கொண்டிருந்த போது தோழர்கள் பி.சுந்தரய்யா, வி.சுப்பையா, கம்பம்பாடி சத்யநாராயணா (சீனியர்) பி.சீனிவாசராவ், எஸ்.எம்.ராமையா, சி.எஸ்.சுப்ரமணியம், ரஷ்யா மாணிக்கம், அவரது சகோதரர் ராஜவடிவேலு, ஆர்யா என்னும் கே.பாஷ்யம், வி.கே.நரசிம்மன் போன்ற ஆளுமைமிக்க புரட்சிக்காரர்களை கம்யூனிஸ்டுகளை உருவாக்கி, தென்னிந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அடித்தளமிட்டார் ஹைதர்கான். இவர் தென்னிந்தியாவில் சங்கர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். அமீர் ஹைதர்கானை பம்பாயிலிருந்து சென்னைக்கு ஸ்பென்சர் கம்பெனியில் வேலை பார்த்த ஒரு அதிகாரியை சந்திக்கும்படி சுகாசினி (சரோஜினி நாயுடுவின் சகோதரி) கடிதம் ஒன்றை கொடுத்து அனுப்பி வைத்தார். அவர் தோழர் அமீர் ஹைதர்கான் சென்னையில் வேலை செய்வதற்கான அனைத்து வசதிகளையும் செய்து தருவதாக கூறியிருந்தார். ஆனால் அந்த அதிகாரி அச்சத்தின் காரணமாக தம்மால் எவ்வித உதவியும் செய்து தர இயலாது என்று கூறி பம்பாய்க்கே திரும்பி சென்று விடுமாறு கானை கேட்டுக்கொண்டார். ஆனால் கான், சென்னையிலிருந்து திரும்பி சென்றுவிட மனமில்லை. எவ்வித அறிமுகம் இல்லா ஊரில் பேசும் மொழி தெரியாத நிலையிலும் மார்க்சியத்தை பவரச் செய்வது, கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்குவது என்ற லட்சியத்தில் உறுதியோடு இருந்தார் ஹைதர்கான். சென்னை ரயில் நிலையம் அருகில் உள்ள விடுதி ஒன்றில் தங்கிக் கொண்டு புதிய தொடர்புகளை உருவாக்கிட திட்டமிட்டார். அந்த விடுதியில் கத்தோலிக்க கிறிஸ்தவரான மாத்யூ அறிமுகமானார். அவருடன் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்டார். மாத்யூ தனக்கு கீழே பணியாற்றிய சிலரை அமீர்கானிடம் அறிமுகம் செய்து வைத்தார். அப்போது விஞ்ஞானத்திலும், புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளிலும் ஆர்வம் கொண்ட வெங்கட்ராமன் அறிமுகமானார். சுதந்திர நாடுகள் தான் விஞ்ஞான கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கமளிக்க முடியும் என்று சுதந்திர வேட்கையை அவரிடமும் ஏற்படுத்தினார் அமீர் கான். அவரிடம் தனக்கு இளைஞர்களை அறிமுகம் செய்து வைக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். லயோலா கல்லூரியில் பி.ஏ.ஹானர்ஸ் படித்து வந்த வி.கே.நரசிம்மன் என்பவரை கானுக்கு அறிமுகப்படுத்தினார் வெங்கட்ராமன். அதேபோல் ஜெயராமன் என்ற தனது பயிற்சியாளரையும் அறிமுகம் செய்து வைத்தார். இவ்வாறாக சேர்ந்த மாணவர்களை வைத்து இளம் தொழிலாளர்கள் சங்கம் என்ற ஒரு குழுவை உருவாக்கினார் அமீர்கான். ஜெயராமனை மாஸ்கோவிற்கு அனுப்பி வைத்தார். அங்கு அவர் மார்க்சிய கல்வி பயின்று வந்தார். அங்கு ஒரு அறுவை சிகிச்சையின் போது அவர் மரணமுற்றார். இளம் தொழிலாளர் சங்கம் வாராவாரம் ரகசியக் கூட்டங்களை நடத்தியது. இவர்களுக்கு மார்க்சியம் பற்றியும் இந்திய விடுதலை இயக்கம் குறித்தும் வகுப்பெடுத்தும், விவாதித்தும் வந்தார். சென்னை தீவுதிடலில் அச்சுத் தொழிலாளியான மாணிக்கம் என்பவர் அறிமுகமானார். தனது சகோதரர் ராஜவடிவேலு சிறந்த தேசியவாதி என்றும் அவர் ஒரு பத்திரிகையும் நடத்தி வருவதாகவும் மாணிக்கம் கூறினார். உடனே அவரை சந்திக்க விரும்பினார் அமீர் ஹைதர்கான். பழைய இந்து அலுவலகத்திற்கு அருகில் ஒரு குறுகிய சந்தில் உள்ள ராஜவடிவேலு வீட்டிற்கு அமீர் ஹைதர்கானை மாணிக்கம் அழைத்துச் சென்றார். நீதி கட்சியின் மீது அதிருப்தியில் இருந்த ராஜவடிவேலுவிடம் வஞ்சிக்கப்பட்டு கிடக்கும் மக்களை அமைப்பு ரீதியில் ஒன்று திரட்டுவது வர்க்க உணர்வுள்ளோர் அனைவரது கடமை என்றும், எனவே சுரண்டப்பட்டு கிடக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் தான் நாம் அணிதிரட்டப்பட வேண்டியவர்கள் என்றும் கூறினார் அமீர்கான். ராஜவடிவேலு நடத்திவந்த ஜனமித்திரன் என்ற பத்திரிகையை முன்னேற்றம் என்று பெயர் மாற்றம் செய்து இளம் தொழிலாளர் சங்கத்தின் பத்திரிகையாக நடத்தச் செய்தார். ஜெர்மனியிலிருந்து வெளியாகிவந்த கம்யூனிஸ்ட் அகிலத்தின் செய்தித்தாள்களை சில தோழர்கள் அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதில் வந்த கட்டுரைகளையும் இந்திய நாட்டில் நிலவும் சூழல்கள் பற்றியக் கட்டுரைகளையும் தாங்கி வந்தது ‘முன்னேற்றம்’. கம்யூனிஸ்ட் அகிலத்தின் சார்பாக இந்தியா செல்வதற்கு வழிச் செலவுக்கென கொடுத்த 150 டாலரில் பயணச் செலவு போக எஞ்சியதை மிகச்சிக்கனமாக செலவு செய்து தனது கடமைகளை ஆற்றினார். பல நாட்கள் பசியும் பட்டினியுமாக இருந்தார் அமீர்கான். இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஸ்தாபனத்தை உருவாக்குவது, அகிலத்துடன் இணைப்பது, மார்க்சியத்தை பரவச் செய்வது என்பதே அவரது இலட்சியமாக இருந்ததால் வறுமையையும் கடும் சோதனைகளையும் எளிமையாக கடந்தார். தென்னிந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியை கட்டுவதற்கு அடித்தளத்தை அமைத்தார். லயோலா கல்லூரியில் பயின்று வந்த போதே தேசிய இயக்கத்தில் பங்கெடுத்து வந்த கம்பம்பாடி சத்யநாராயணா, காந்திஜி அன்னியதுணி புறக்கணிப்பு போராட்டத்தையும், கள்ளுக்கடை மறியல் போராட்டங்களையும் நிறுத்தியதாலும் உப்பு சத்தியாகிரகத்தை வாபஸ் பெற்றதாலும் அதிருப்தியடைந்திருந்த சத்யநாராயணாவை சந்தித்து அமீர்ஹைதர்கான் உரையாடினார். அதனால் மார்க்சிய லெனினிய பாதையை ஏற்றுக்கொண்ட சத்யநாராயணா, அமீர் ஹைதர்கானின் வேண்டுகோளின்படி தனது மனைவியை அழைத்து வந்து சென்னையில் குடியேறினார். சென்னை கட்சி குழுவில் முழுநேர ஊழியராக பணியை மேற்கொண்டார். பின்னர் ஆந்திரா சென்று தோழர் சுந்தரய்யாவுடன் சேர்ந்து கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கினார். பின்னாளில் பிரஜாசக்தி விசாலாந்திரா பத்திரிகையில் ஆசிரியராக தனிப்பெரும் மதிப்புமிக்க தலைவராக உருவானார். தோழர் அமீர் ஹைதர் கான் தலைவர்களின் மாபெரும் தலைவர் - ஜோ.ராஜ்மோகன் -ஜனவரி 6, 2020 இதே காலத்தில் வி.கே.நரசிம்மன் மூலம் தோழர் கே.பாஷ்யம் (ஆர்யா) அமீர் ஹைதர் கானுக்கு அறிமுகமானார். பொறியியல் மாணவர் கோபாலை பாஷ்யம், கானுக்கு அறிமுகப்படுத்தினார். கோபால் எங்கிருந்தோ ஒரு தட்டச்சுப்பொறியை கொண்டு வந்தார். தட்டச்சு வேலைகள் அதில்தான் நடைபெற்றன. சாந்தி நிகேதனில் படித்த குடாபக்ஸ் எனும் ஒரு இஸ்லாமிய இளைஞர் சைக்ளோஸ்டைல் மெஷின் ஒன்றை கொண்டு வந்து சேர்த்தார். இளம் தொழிலாளர் சங்க உறுப்பினர்கள் கொடுத்த நிதி உதவியுடன் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, அரசும் புரட்சியும், காரல்மார்க்ஸ் வாழ்க்கையும் அவரது போதனைகளும் ஆகியவை சிறு வெளியீடாகவும், பத்திரிகையாகவும் வெளிவந்தன. தோழர்களின் வீடுகளில் மார்க்சியம் குறித்த வகுப்புகளும் ரகசியமாக நடைபெற்று வந்தன. இளம் தொழிலாளர் சங்கத்திற்குள்ளாகவே ரகசியக் குழு ஒன்றை அமீர்ஹைதர் கான் ஏற்படுத்தினார். இக்குழுவில் ஜெயராமன், வி.கே.நரசிம்மன், ராஜவடிவேலு, ரஷ்யா மாணிக்கம், கம்பம்பாடி சத்யநாராயணா ஆகியோர் இருந்தனர். இக்குழுவின் செயலாளராக வி.கே.நரசிம்மன் செயல்பட்டார். மாத்யு மூலம் அறிமுகமான வெங்கட்ராமனின் சகோதரர் அஞ்சலகத்தில் வேலை பார்த்தார். அவரது உதவியுடன் கடிதங்களை ரகசிய போலீசார் எப்படி தணிக்கை செய்கின்றனர் என்பதை அறிந்து கொண்டு அத்தகவலைப் பெற்று போலீசாரின் பிடியிலிருந்து தப்பிக்க வழியையும் உருவாக்கினார் கான். எம்.எஸ்.எம். தொழிற்சாலை வேலைநிறுத்தம், பக்கிங்ஹாம் கர்னாடிக் மில் தொழிலாளர்கள் பஞ்சப்படி கேட்டு வேலைநிறுத்தம் ஆகியவற்றுக்கு வழிகாட்டியதோடு அவற்றை முழுமையாக ஆதரித்தார் அமீர் ஹைதர் கான். தொழிற்சங்க போராட்டத்தில் சுப்பாராவ் என்ற தோழர் அறிமுகமானார். லீக் ஆப் யூத் என்ற அமைப்பின் தோழர்களை தோழர் சுப்பாராவ் அமீர் ஹைதர்கானுக்கு அறிமுகப்படுத்தினார். லீக் ஆப் யூத் அமைப்பைச் சேர்ந்த பல தோழர்களை கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாடுகளில் ஈடுபாடுகொள்ளச் செய்தார் கான். அப்படி மிகச்சிறந்த ஊழியராக உருவானவர்தான் அச்சமாம்பாள் என்ற பெண்மணி. இவர் எம்.பி.பி.எஸ் பயின்று மிகச்சிறந்த மருத்துவராகவும் ஒரு கம்யூனிஸ்ட்டாகவும் சேவையாற்றினார். தெலுங்கு மொழியில் நிறைய நூல்களை எழுதியுள்ளார். தோழர் சுப்பாராவ் மற்றொரு உறுதிமிக்க தேசியவாதியாக இருந்த வ.சுப்பையாவை அமீர்கானுக்கு அறிமுகப்படுத்தினார். புதுச்சேரி பண்டையக் காலத்தில் பொதுக்கே என்று அழைக்கப்பட்டது. 17ஆம் நூற்றாண்டு முதல் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகியவை பிரெஞ்சு ஏகாதிபத்திய ஆட்சியின் கீழ் இருந்தன. 1954அக்டோபர் 20 ஆம் நாள் இந்திய யூனியனுடன் இப்பகுதிகள் இணைக்கப்பட்டன. பிரெஞ்சிந்திய விடுதலை இயக்கத்தின் தந்தையாக போற்றப்பட்டார் வ.சுப்பையா. 1932 ஆம் ஆண்டுக்கு பிறகு சமூக அரசியல் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபடலானார். மிதவாத காங்கிரஸ் மீதான விமர்சனமும் இவருக்குள் கனன்று கொண்டே இருந்தது. இக்காலத்தில்தான் அமீர் ஹைதர்கான் சந்திக்கிறார். அதன்பிறகே கம்யூனிஸ்ட் கட்சி மீதான பற்று ஏற்படுகிறது. அமீர் ஹைதர்கானோடும், பி.சுந்தரய்யாவோடும் சென்னை மாகாணத்தில் கம்யூனிஸ்ட் கட்சியை கட்டுவது குறித்து மிக தீவிரமாக விவாதித்தார். காந்திய கோட்பாடுகளிலிருந்து விலகி மார்க்சிய லெனினிய கோட்பாடுகளுக்கு வ.சுப்பையா மாறியது இப்படித்தான். பிரெஞ்சிந்திய விடுதலை இயக்கத்தின் தந்தையாக விளங்கியவர். தென்னகத்தின் மிகப்பெரும் கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவராக உயர்ந்தார். பிரெஞ்சு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் விடுதலை பெற்ற பின்னர் அமைச்சராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் பல்வேறு பொறுப்புக்களை வகித்தவர். பிரெஞ்சிந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றையும் தோழர் வ.சுப்பையாவின் வரலாற்றையும் பிரிக்க முடியாது. இப்படிப்பட்ட மகத்தான ஆளுமையை ஈர்த்ததிலும் கம்யூனிஸ்ட்டாக மாற்றியதிலும் தோழர் அமீர்ஹைதர் கானுக்கு பெரும் பங்குண்டு. மாணவப் பருவத்தின்போது தேசிய இயக்கத்தின் மீது ஈடுபாடு கொண்ட தோழர் பி.சுந்தரய்யா 1928 சைமன் கமிஷன் புறக்கணிப்பு போராட்டங்களில் பங்கேற்றிருந்தார். சென்னை லயோலா கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் மாணவர்கள் நடத்திய சுதந்திர தின ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். உப்பு சத்தியா கிரகப் போராட்டத்தில் 2 ஆண்டுகாலம் சிறைத் தண்டனை அனுபவித்தார். 18 வயதுக்குட்பட்டவர் என்பதால் சிறுவர் சீத்திருத்த பள்ளியில் தஞ்சாவூர், திருச்சி, ராஜமகேந்திரபுரம் ஆகிய சிறைச்சாலைகளில் தண்டனை காலத்தை கழித்தார். 1931ல் காந்தி. இர்வின் ஒப்பந்தத்தைத் தொடர்ந்து விடுதலை செய்யப்பட்டார். பெங்களூரில் தனது உறவினர் வீட்டில் தங்கி கல்லூரியில் பயின்று வந்த சுந்தரய்யாவை காண்பதற்காக தோழர் அமீர் ஹைதர்கான் பெங்களூர் சென்றார். சுந்தரய்யாவை சென்னையில் சந்திக்க முடியாமல் போனது பற்றி அமீர் ஹைதர்கான் வருத்தம் தெரிவித்ததோடு நீண்ட உரையாடலை அவரோடு நடத்தினார். இப்படித்தான் மார்க்சியத்தின்பால் சுந்தரய்யா ஈர்க்கப்பட்டார். தனது உறவினர் வீட்டில் பிரிட்டிஷ் கொடி ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வீட்டையும் கல்லூரிப் படிப்பையும் உதறிவிட்டு தனது ஊருக்கு சென்றார் சுந்தரய்யா. 1934ல் பம்பாய் சென்று சென்னை திரும்பிய ஹைதர்கான், பிரிட்டிஷ் போலீசாரால் தீவிரமாக தேடப்பட்டு வந்தார். எப்போது வேண்டுமானாலும் கைதாகலாம் என்ற நிலை ஹைதர்கானுக்கு இருந்தது. மீண்டும் பம்பாய் பயணமாவதற்கு முன்பு தனக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால் சுந்தரய்யா என்ற அமைப்பாளரை - புரட்சிக்காரனை கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டியில் தென்னிந்தியாவின் பிரதிநிதியாக நியமிக்க வேண்டும் என அமீர் ஹதர்கான் சிபாரிசு செய்தார். 1934ஆகஸ்ட் 31ல் அமீர் ஹைதர்கான் கைது செய்யப்பட்டார். மறுநாளே சென்னை மாகாண போலீசார் நெல்லூர் ஜில்லாவிலுள்ள தோழர் சுந்தரய்யாவின் வீட்டில் சோதனை நடத்தினார். அமீர் ஹைதர்கான் கைதான பின்பு பம்பாய் தோழர்களுடன் தொடர்பு கொண்டார் சுந்தரய்யா. தென்னிந்தியாவின் பிரதிநிதியாக கட்சியின் மத்திய கமிட்டியில் இணைக்கப்பட்டார். 1935 ஜனவரியில் அச்சுத் தொழிலாளர்களின் அகில இந்திய மாநாட்டினை சென்னையில் நடத்தினார். சுந்தரய்யா, போலீசாரின் பிடியில் சிக்காமல் தலைமறைவாகவே கட்சிப் பணியாற்றினார். பின்னர் ஆந்திராவின் தனிப்பெரும் கம்யூனிஸ்ட் தலைவராய் வீரம்செறிந்த தெலுங்கானா போராட்டத்திற்கு தலைமையேற்றார். பின்னாளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக திறம்பட பணியாற்றினார். தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டதில் தோழர் பி.சுந்தரய்யாவின் பங்கு மகத்தானது. ஒரு சரியான நபரிடம் தத்துவார்த்த தெளிவையும் அர்ப்பணிப்பு உணர்வை உருவாக்கியதோடு பொருத்தமான நபரை அடையாளம் கண்டு மகத்தான தலைவராக உருவாக்கிய பெருமை தோழர் அமீர் ஹைதர்கானையே சாரும். சீனிவாசராவின் அறிவுக் கண்ணை அகலத் திறந்த ஆசான்… -ஜனவரி 7, 2020 […] கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, லெனின் எழுதிய ஏகாதிபத்தியம், அரசும் புரட்சியும் ஆகிய புத்தகங்களை சீனிவாசராவுக்கு அமீர் ஹைதர்கான் கொடுத்து படிக்கச் சொன்னார். இப்புத்தகங்களை படித்த சீனிவாசராவ் அமீர்ஹைதர்கானோடு நீண்ட விவாதத்தை மேற்கொண்டார். பின்பு மார்க்சிய- லெனினிய கோட்பாட்டை அவர் ஏற்றுக் கொண்டார். தனது அறிவுக்கண்ணை அகலத்திறந்த ஆசான் அமீர் ஹைதர்கான் என்று பின்பு சீனிவாசராவே குறிப்பிட்டுள்ளார். தென் கன்னடத்தில் பிறந்த பி.சீனிவாசராவ் 1919ல் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலையைக் கண்டு கொதிப்படைந்து கல்லூரிப் படிப்பை உதறிவிட்டு தேசிய இயக்கத்தில் இணைந்தார். இதற்காக அவர் வீட்டைவிட்டு விரட்டப்பட்டார். ஊர் ஊராக சுற்றி விடுதலை இயக்கத்தில் பங்கேற்றார். பின்னர் சிங்கப்பூர் சென்று ஒரு உணவுக்கூடத்தை நடத்தி வந்தார். பிறகு 1930ல் பி.சீனிவாசராவ் இந்தியா திரும்பினார். கான்பூர் சதி வழக்கு, சைமன் கமிஷனுக்கு எதிரான போராட்டம், மீரட் சதி வழக்கு போன்றவை தேசிய இயக்கத்தில் இவரை ஈடுபாட்டை அதிகரிக்கச் செய்தது. 1930களில் சென்னை நகரில் நடந்த பல போராட்டங்களில் பி.சீனிவாசராவ் தொண்டனாக பங்கேற்றார். அப்போது காவல்துறையின் தாக்குதலுக்கு உள்ளானதோடு கைதும் செய்யப்பட்டார். 1932ல் அந்நிய துணிக்கடைகள் முன்பு நாள்தோறும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் ஒரு நாள் தவறாமல் சீனிவாசராவ் கலந்து கொண்டார். பிரிட்டிஷ் போலீசார் பலமுறை சீனிவாசராவை நையப்புடைத்துள்ளனர். ஆனாலும் அடுத்த நாள் போராட்டக் களத்தில் நிற்பார். இப்படி ஒரு நாள் மிகக் கொடூரத் தாக்குதல் அவர் மீது நடத்தப்பட்டது. துப்பாக்கிக் கட்டையால் அவரது முகத்திலும் புற முதுகிலும் குத்தினர். மயங்கி விழுந்தவரை விடாமல் பூட்ஸ் கால்களால் மிதித்தனர். சுயநினைவை இழந்த நிலையில் சீனிவாசராவை சாக்கடையில் வீசியெறிந்தனர். அப்போது பிரபல ஆங்கில பத்திரிகையொன்று காங்கிரஸ் தொண்டர் பி.எஸ்.சீனிவாசராவ், போலீசாரின் தாக்குதலில் இறந்துவிட்டார் என்று செய்தி வெளியிட்டது. ஆனால் சிலர் அவரை காப்பாற்றி சிகிச்சை அளித்தனர். இதில் இருந்து மீண்ட சீனிவாசராவ் அடுத்த மாதமே அன்னியத் துணிக்கடை மறியலில் கைதானார். 6 மாத காலம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சிறையிலிருக்கும் போது சுபாஷ் சந்திர போஸ், முகுந்தலால் சர்க்கார், அமீர் ஹைதர்கான் ஆகியோரை சந்தித்து பேசினார். கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, லெனின் எழுதிய ஏகாதிபத்தியம், அரசும் புரட்சியும் ஆகிய புத்தகங்களை சீனிவாசராவுக்கு அமீர் ஹைதர்கான் கொடுத்து படிக்கச் சொன்னார். இப்புத்தகங்களை படித்த சீனிவாசராவ் அமீர்ஹைதர்கானோடு நீண்ட விவாதத்தை மேற்கொண்டார். பின்பு மார்க்சிய- லெனினிய கோட்பாட்டை அவர் ஏற்றுக் கொண்டார். தனது அறிவுக்கண்ணை அகலத்திறந்த ஆசான் அமீர் ஹைதர்கான் என்று பின்பு சீனிவாசராவே குறிப்பிட்டுள்ளார். மீண்டும் ஒரு முறை சேலம் சிறையில் அமீர் ஹைதர்கானை சீனிவாசராவ் சந்தித்தார். சரியான கம்யூனிசப் பாதைக்கு சீனிவாசராவை அழைத்து வந்த பெருமை அமீர் ஹைதர்கானையே சாரும். சிறையிலிருந்து வெளிவந்த பின் சீனிவாசராவ் சுந்தரய்யாவுடன் இணைந்து தொழிலாளர் பாதுகாப்பு சங்கத்தை உருவாக்க பல நிறுவனங்களிலும் தொழிலாளர் யூனியனை அமைத்தனர். 1934ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்டதால் சென்னை மாகாணத்தில் தோழர்கள் காட்டே, பி.ராமமூர்த்தி, ஜீவா, சி.எஸ்.சுப்ரமணியம், ஏ.எஸ்.கே.அய்யங்கார், கே.முருகேசன், வி.கருப்பையா ஆகியோரோடு பி.சீனிவாசராவ் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியாக செயல்பட்டார். 1936ல் சேலத்தில் நடந்த தமிழ்நாடு காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் முதல் மாநாட்டில் அதன் முதல் செயலாளராக தோழர் பி.சீனிவாசராவ் தேர்வு செய்யப்பட்டார். தமிழகத்தில் கம்யூனிச இயக்க ஸ்தாபனத்தை உருவாக்கிய தோழர் பி.எஸ்.ஆர். என்று அன்போடு தமிழகத்தின் ஒடுக்கப்பட்ட மக்களின் மனங்களில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் மகத்தான தலைவரை உருவாக்கிக் கொடுத்தவர் அமீர் ஹைதர்கான் என்பதை பார்க்கும் போது உண்மையில் அமீர் ஹைதர்கானின் ஆளுமை நம்மை பிரமிக்க வைக்கிறது. தேடித் தேடி ஊழியர்களை, தலைவர்களை, உருவாக்கிய மிகப்பெரும் அறிவுஜீவியான அவர் பிறரை, தன்னை நோக்கி ஈர்க்கும் ஆற்றலையும் பெற்றிருந்தார் என்பது நமக்கு வியப்பாகவே இருக்கிறது. இத்தகைய பெருமை மிகுந்த அமீர் ஹைதர்கான் 1900 ஆண்டில் ராவல்பிண்டிக்கு அருகிலுள்ள (தற்போது பாகிஸ்தான் நாட்டில் உள்ளது) கல்வார் மாவட்டத்தில் கலியன் இலாரியன் என்ற கிராமத்தில் பிறந்தார். குடும்ப வறுமையினால் சிறு வயதிலேயே ஹைதர்கான் தனது ஊரைவிட்டு புறப்பட்டு சென்றார். அவரது ஊருக்கு அருகிலுள்ள மவுலாதாத் என்பவர் மூலம் ஜெர்மன் கப்பல் ஒன்றில் சிறு அதிகாரியாகப் பணியில் சேர்ந்தார். 1915 முதல் 1916 வரை கப்பல் மாலுமியாக பணியாற்றினார். 1918ல் மாலுமியாக டோக்கியோ, ஹாங்காங் துறைமுகங்களுக்கு சென்றார். அதே ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்க பிரஜை ஆவதற்காகப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். பின்னர் அமெரிக்க போக்குவரத்து சர்வீசில் பணியாற்றினார். 1921ல் நியூயார்க் நீதிபதி முன்பு அமெரிக்க பிரஜை எனக் கருதப்படுவார் எனும் உரிமை பெற்றார். 1921ல் நியூயார்க் மாகாணத்தில் ஒலியன் என்ற இடத்தில் ரயில்வே தொழிற்சாலையில் கான் பணிபுரிந்தார். விமான ஓட்டியாகப் பயிற்சிபெற்று லைசென்சும் பெற்றார் அமீர்ஹைதர்கான். டெட்ராய்ட் நகரில் உள்ள பாக்கார்ட் மோட்டார் கம்பெனியில் சிறிது காலம் வேலை செய்தார். அமெரிக்காவில் இந்துஸ்தான் கதார் கட்சியுடன் தொடர்பு கொண்டார். பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்பு ஏற்பட்டது. 1926 ஜனவரியில் கதார் கட்சியினர் 5 பேரும் தோழர் அமீர் ஹைதர்கானும் மாஸ்கோவிலுள்ள கீழைநாட்டு பல்கலைக்கழகத்தில் பயிற்சி பெறுவதற்காக அனுப்பப்பட்டனர். ஹைதர்கான் 1928ல் இந்தியா திரும்பினார். பம்பாயில் சவுரி என்ற இடத்தில் ஜெனரல் மோட்டார்ஸ் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தார். கம்யூனிஸ்ட் அகிலத்திற்கும் இந்திய கம்யூனிஸ்ட்டுகளுக்கும் இடையே ரகசியத் தொடர்புகளுக்கும் கடிதப் போக்குவரத்திற்கும் அமீர் ஹைதர்கான் ஏற்பாடு செய்தார். மாஸ்கோவிலிருந்து இந்தியா புறப்பட அவரின் லட்சிய உறுதியே காரணம் - ஜோ.ராஜ்மோகன் -ஜனவரி 8, 2020 1929ல் வி.எச். ஜோஷி என்பவரை மாஸ்கோவுக்கு அனுப்புவதற்கு ஏற்பாடு செய்தபோது அமீர் ஹைதர்கான் தங்கியிருந்த இல்லம் சோதனையிடப்பட்டது. மீரட் சதி வழக்கில் இவர் மீது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. எனவே பம்பாயிலிருந்து தலைமறைவாகி சென்னை வந்து கப்பலேறி மார்செல்ஸ், பெர்லின் வழியாக மாஸ்கோ அடைந்தார். மாஸ்கோவில் கம்யூனிச அகிலத்தின் பிரதிநிதி அவரை ரயில்நிலையத்தில் வரவேற்றார். மாஸ்கோவில் கம்யூனிஸ்ட் குடும்பம் வாழ்ந்து வந்த வீட்டிலுள்ள ஒரு அறையில் கான் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சிவப்பு தொழிற்சங்க காங்கிரஸ் (Red International Labour Union) மாஸ்கோவில் நடைபெறவிருந்து, அதில் கிழக்குப் பிரிவு பொறுப்பு ஹைதர்கானுக்கு அளிக்கப்பட்டது. அதன் தயாரிப்பு பணிகள் பற்றிய கூட்டங்களில் கான் பங்கு கொண்டார். அப்போது தோழர் பாலாபுஷேவிச் என்பவருடன் அறிமுகமானார். 1930ல் நடைபெற்ற சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் 16ஆவது காங்கிரசுக்கு கட்சித் தோழர்களின் ஆணைப்படி அழைத்துச் செல்லப்பட்டார். மாநாட்டு ஆலோசனை கூட்டத்திலும் அவர் கலந்து கொண்டார். சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்த லுசாவ்ஸ்கியுடனும் அமெரிக்க பிரதிநிதி கஸ்ஹால் ஆகியோருடனும் இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஸ்தாபனத்தை உருவாக்குவது குறித்து விவாதித்தார். அம்மாநாட்டில் மிஸ்ரா என்ற பெயரில் இந்திய தொழிற்சங்க காங்கிரசின் சார்பாக தலைமை குழுவிற்குத் தோழர் ஹைதர்கான் தேர்வு செய்யப்பட்டார். மாநாட்டின் போது சோவியத் தொழிற்சங்கங்களின் பிரதிநிதி தோழர் ஷ்வெர்னிக். இவர் பின்னர் சோவியத் குடியரசின் தலைவர் ஆனார். சீன பிரதிநிதி லியு - ஷோ - சி. இவர் பின்னர் மக்கள் சீன குடியரசின் தலைவரானார். மற்றும் ஏங்கெல்சின் சமகாலத்தவரான தோழர் டாம்மான் ஆகியோரையும் சந்தித்து கான் விவாதித்தார். கம்யூனிஸ்ட் கட்சி அகிலம் மற்றும் சிவப்பு சர்வதேசியம் (பிரோபின்டர்னின்) கூட்டங்களில் ஒருமுறை கடும் விவாதம் மேலெழுந்தது. இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியை அமைப்பதற்கு இவ்விரு அமைப்புகளும் காட்டி வந்த மெத்தனப்போக்கை அமீர் ஹைதர்கான் கடுமையாக விமர்சித்தார். இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஸ்தாபனத்தை உருவாக்குவது குறித்து நீங்கள் அக்கறை காட்டவில்லை என்று கான் கூறினார். இதற்கு பதிலளித்து பேசுகையில் லுசாவ்ஸ்கி கடுமையாக அமீர் ஹைதர்கானை திருப்பி தாக்கினார். புரட்சி இந்தியாவில் உருவாக்கப்பட வேண்டும், மாஸ்கோவிலன்று. கம்யூனிஸ்ட் அகிலம் இந்திய இயக்கத்துக்கு எந்த வழியில் உதவ முடியும் என்று கேட்டு சலிப்படைந்துவிட்டார்கள் என்று லுசாவ்ஸ்கி கூறினார். அதற்கும் பதிலளித்த ஹைதர்கான் வேறுவழிகள் இல்லை. இந்திய கட்சி ஊழியர்களுக்கு பெரிய அளவில் பயிற்சி தந்தாக வேண்டும் என்று ஹைதர்கான் தனது அழுத்தமான கோரிக்கையை முன்வைத்தார். அதனால்தான் கான் கம்யூனிஸ்ட் அகிலத்திடம் முன்வைத்த எல்லா நியாயமான திட்டங்களுக்கும் உடனே ஒப்புதல் தந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் லுசாவ்ஸ்கியை சந்தித்து அமீர் ஹைதர்கான் இந்தியாவிற்கு செல்ல வேண்டும் என்று கூறினார். அதற்கு, கம்யூனிஸ்ட் கட்சி, கட்சி ஸ்தாபனம் என்பதொன்றில்லாமல் உங்களால் எதையும் சாதிக்க முடியாது. எனவே இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஸ்தாபனத்தை உருவாக்குங்கள் என்று லுசாவ்ஸ்கி கூறினார். நல்ல வசதிகளையும் தோழமை உணர்ச்சி ததும்பும் சுற்றுச்சார்பையும் துறந்து மாஸ்கோவை விட்டு வெளியேறத் துணிந்ததற்கு எனது லட்சிய உறுதியே காரணம் என்று அமீர் ஹைதர்கான் குறிப்பிட்டுள்ளார். தொழிலாளி வர்க்கம் பற்றிய அறிவிருந்தும் ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் 1918ஆம் ஆண்டு நடைபெற்ற வீரம்செறிந்த போராட்டங்கள் பலமான கம்யூனிஸ்ட் கட்சிகள் இல்லாத காரணத்தால் தோல்வி கண்டன. ஜாரின் ரஷ்யாவில் மகத்தான சோசலிஸ்ட் புரட்சி வெற்றி பெற்றதெனில் அதற்கு லெனினது போல்ஷ்விக் கட்சியே காரணம் என்பதை அமீர் ஹைதர்கான் நன்கு உணர்ந்திருந்தார். லுசாவ்ஸ்கியின் சொற்கள் கானை உறங்கவிடவில்லை. இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியை அல்லது கட்சி குழுவை உருவாக்க அனைத்து முயற்சிகளையும் செய்ய வேண்டும் என்ற லட்சிய உறுதியோடுதான் இந்தியா புறப்பட்டார். கொஞ்சம் எழுதப்படிக்கத் தெரிந்த இளைஞர்களையும் தொழிலாளர்களையும் உழவர் குடிமக்களையும் தேடித் தருமாறு பி.டி.ரணதிவே மூலம் ஹைதர்கான் கேட்டுக் கொண்டார். கம்யூனிஸ்ட் கட்சி ஸ்தாபனத்தை உருவாக்க ஹைதர்கான் இந்தியா வந்ததற்குப் பின்னால் ஏராளமான இளைஞர்களை மாஸ்கோவிற்கு அனுப்பி வைத்தார். தென்னிந்திய மொழிகள் தனக்கு தெரியாதென்றாலும், பெரும் நம்பிக்கையோடு தென்னிந்தியாவில் வந்து கம்யூனிஸ்ட் கட்சியை கட்டுவதற்கு அரும்பாடு பட்டார். அதற்காக பல்வேறு அடக்குமுறைகளையும் சிறைக் கொடுமைகளையும் அனுபவித்தார். 1932 மே 8ஆம் நாள் சென்னையில் கைது செய்யப்பட்டார். 6 மாத காலம் தண்டனை பெற்றார். அப்போது அரசியல் கைதிகளை சரியாக நடத்தாததைக் கண்டித்து தொடர் உண்ணாவிரதம் இருந்தார். இதனால் அவரது உடல்நிலை மோசமடைந்தது. அப்போதுதான் அதே சிறையில் இருந்த சுபாஷ் சந்திரபோசுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார். சேலம், கோயமுத்தூர், ராஜமகேந்திரபுரம் முசாபர்பூர், நாசிக் சிறைச் சாலைகளில் தண்டனையை சிறைக் கொடுமைகளை அனுபவித்தார். இந்தியா- பாகிஸ்தான் பிளவை அவர் விரும்பவில்லை. கடுமையாக எதிர்த்தார். 1945ல் ராவல்பிண்டிக்கு சென்றார். பாகிஸ்தானில் கம்யூனிஸ்ட் கட்சியை கட்ட முயற்சித்தார் என்றும் பல்வேறு சதிகளில் ஈடுபட்டார் எனவும் பாகிஸ்தான் அரசு அவர் மீது குற்றம் சுமத்தியது. 1948 முதல் 1961 வரை மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறைக் கொடுமையை அனுபவித்தார். கம்யூனிஸ்ட் கட்சியை கட்டுவதற்காக தியாகம் செய்வதையே தனது வாழ்க்கையாக அமைத்துக் கொண்டவர் அமீர் ஹைதர்கான். இந்திய துணைக் கண்டத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம் வளர்ச்சியடைந்ததற்கு மிக முக்கிய பங்களிப்பு செய்தவராக அமீர் ஹைதர்கான் திகழ்ந்தார். ஒரு கம்யூனிஸ்ட் கட்சி ஊழியன், தலைவன், எப்படி திகழ வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்திய கம்யூனிஸ்ட் இயக்க நூற்றாண்டு கால பயணத்தில் தனித்து நிற்கிறார் தோழர் அமீர் ஹைதர்கான். மாவீரன் பகத்சிங்கின் அமைப்பில் பி.ராமமூர்த்தி - ஹர்கிஷன் சிங் சுர்ஜித் - எஸ். ஏ. பெருமாள் -ஜனவரி 9, 2020 […] காந்திஜி மீதான நம்பிக்கை குறைவு காங்கிரஸ் இயக்கத்தின் வழிமுறைகள் மீதே பகத்சிங்கிற்கு நம்பிக்கை குறைவை ஏற்படுத்தியது. இளைஞர்களையும், யுவதிக ளையும் மாணவ - மாணவிகளையும் நாட்டு விடுதலைக்கான எழுச்சிகரப் போரில் ஈடுபடுத்த தீரமிக்க அமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டுமென்று அவர் கருதினார். தன் சக தோழர்களுடன் விவாதித்த அவர் “நவ ஜவான் பாரத் சபா” (இளம் வீரர் பாரத சங்கம்) என்ற பெயரில் புதிய அமைப்பை உருவாக்கி னார். ரகசியச் சங்கமாக உருவாக்கப்பட்ட இந்த சபையின் தலைவராக பகவதி சரணும், பொதுச் செயலாளராக பகத்சிங்கும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த அமைப்பின் துவக்கக் கூட்டம் தேசியக் கல்லூரியின் பிராட்லா மண்ட பத்தில் நடைபெற்றது. புரட்சிப் பேரொளி கர்தார் சிங்கின் உருவப்படம் திறந்து வைக்கப்பட்டது. அதன்பின் பகவதி சரணும், பகத்சிங்கும் உணர்ச்சிமிகு உரையாற்றினர். பகத்சிங் பேசும்பொழுது ஆயுதப் போராட்டம் மூலமே, இந்திய நாட்டின் விடுதலையைப் பெற முடியுமென்று எடுத்துக் கூறி அதற்காக நமது உயிரையும் தியாகம் செய்வோம் என்றுசூளுரைத்தார். தனது உரையின் முடிவாக ‘புரட்சி ஓங்குக’ என்று அவர் உரத்து முழக்க மிட்டார். உணர்ச்சி வெள்ளத்தில் சூழ்ந்திருந்த மக்கள் திரளும் அதை எதிரொலித்தது. புதிய முழக்கங்கள் பகத்சிங் பேசி முடித்ததும் தனது விரலை கீறி அதில் வழிந்த ரத்தத்தால் கர்தார் சிங்கின் படத்திலும், பாரத மாதாவின் படத்திலும் திலகமிட்டார். கூட்டமே உணர்ச்சிமயமாகி மீண்டும் இன்குலாப் முழக்கமிட்டது. இக்கூட்டத்தில் சில முடிவுகள் எடுத்தனர். காந்தி முழங்கி வந்த அரகர மகாதேவ், அல்லா ஹூ அக்பர், சத்ஸ்ரீஅகால் போன்ற மத கோஷங்களை நிறுத்துவது, அதற்குப் பதிலாக ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ கோஷமிடுவது என்று முடிவு செய்யப்பட்டது. அத்துடன் ‘ஏகாதிபத்தி யம் ஒழிக’ என்ற கோஷமும் சேர்க்கப்பட்டது. மேலும் நவ ஜவான் பாரத் சங்க உறுப்பினர்கள் தங்கள் மதச் சின்னங்களை அணியக்கூடாது என்றும் முடிவு செய்தனர். பகத்சிங் அன்று முதல் தலைமுடியை வெட்டித் தாடியை மழித்து முறுக்கு மீசை, தொப்பியுடன் தன்னை மாற்றிக் கொண்டார். அவரது மீசையும், தொப்பியுடன் இளைஞர்களிடம் பிற்காலத்தில் பகத்சிங் மீசை பகத்சிங் தொப்பி என்று பிரபலமாகியது. மகாத்மா காந்தி, திலகர் போன்ற தலைவர்களே இந்துமத உணர்வுக ளைப் பிரச்சாரம் செய்து தூண்டிவந்த அந்தக் காலத்தில் பகத்சிங்கும் அவரது தோழர்களும் தங்கள் மத்தையே தூக்கியெறிந்தது புரட்சிகரமானதுதான். நவ ஜவான்பாரத் சபா வெகு விரையில் நாடு முழுவதும் பிரபலமானது. குறிப்பாக பஞ்சாப், தில்லி, ஐக்கிய மாகாணம் போன்றவற்றில் மிகுந்த செல்வாக்குப் பெற்றது. பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்களை அது மிகவும் ஈர்த்தது. இந்த அமைப்பு மற்றொரு துணை அமைப்பையும் உருவாக்கியது. “ஜாத் பாத் தோடக் மண்டல்” என்ற பெயரில் சாதியை நொறுக்கும் சபையையும் துவக்கி யது. இது சாதி ஒழிப்பிற்காகவும், சமூக சீர்திருத்தத்திற்காகவும் பாடுபட்டது. “நவ ஜவான் பாரத் சபா”வின் நோக்கத்தையும், திட்டத்தையும் பகத் சிங்கின் சகதோழர் சிவவர்மா விவரிக்கிறார்: “இந்த அமைப்பானது ஒரு விதத்தில் புரட்சி இயக்கத்தின் பகிரங்க மேடையாகும். பொதுக் கூட்டங்கள், அறிக்கைகள், துண்டுப் பிரசுரங்கள் ஆகிய வற்றின் மூலம் புரட்சியாளர்களின கருத்துக்களையும் நோக்கங்களையும் பிரச்சாரம் செய்வதே இதன் முக்கிய செயல்திட்டமாகும். அவர்கள் உலகம் முழுவதும் உள்ள பிரச்சனைகளை, அதாவது சுரண்டல் வறுமை, சமத்துவ மின்மை போன்றவைகளை ஆராய்ந்து இந்தியாவிற்கு அரசியல் சுதந்திரத்து டன் பொருளாதாரச் சுதந்திரமும் தேவை என்றும் முடிவிற்கு வந்திருந்தனர். பயாஸ்கோப்பில் - “சிலைடுகளின்” வழியாக அமரத் தியாகிகளான புரட்சி யாளர்களின் படங்களைக் காட்டி விளக்கம் தந்து புரட்சி இயக்கம் பற்றி பிரச்சாரம் செய்வதும், இந்த அமைப்பின் குறிக்கோளாக இருந்தது. அது, பிரச்சாரத்திற்கு ஒரு வலுவான சாதனமாக விளங்கியது. ரகசியக் காரியங்களுக்கு விரிவான களத்தை அமைப்பதற்கும், மக்களிடையே ஏகாதிபத்திய எதிர்ப்பு, தேசியக் கருத்துக்களைப் பரப்புவதற்கும் இந்த அமைப்பு நிறுவப்பட்டது. “நவ ஜவான் பாரத் சபா”வின் உறுப்பினர்களில் இருவர் பின்னாட்களில் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பிரபலத் தலைவர்களானார்கள். ஒருவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களுள் ஒருவரான மறைந்த தோழர் பி.ராமமூர்த்தி. மற்றொருவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா ளரான தோழர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித். பி.ராமமூர்த்தி அப்பொழுது காசி இந்து பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி. பட்ட வகுப்பு மாணவர். தீவிர தேச பக்த மாணவரான அவர் “ஜாதியை நொறுக்கும் சபையிலும்” செயல்பட்டார். கல்லூரி இறுதித் தேர்வு முடிந்த அடுத்தநாள் காலையில் அந்நியத் துணியை பகிரங்கமாக எரித்து 6 மாத கடுங்காவல் தண்டனை பெற்றார். மற்றொருவரான ஹர்கிஷன் சிங் சுர்ஜித் அச்சமயத்தில் பள்ளி மாணவரா யிருந்தார். பகத்சிங்கின் வீரமும், தீரமும் அவரைக் கவர்ந்திழுத்தது. பகத்சிங்கின் உயிர்தியாகம் அவரது படிப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்தது. அதை அவரே கூறுகிறார்: “நான் எனது 14வது வயதில் நவஜான் பாரத் சபாவில் சேர்ந்தேன். பகத் சிங்கும் அவரது தோழர்களும் வெளிப்படுத்திய வீரச் செயல்கள் மட்டுமின்றி அவர் பிரச்சாரம் செய்த விஞ்ஞான சோசலிசக் கருத்துக்களும் என்னைக் கவர்ந்தன…” லாகூர் காங்கிரஸ் மாநாட்டில் பூரண சுதந்திரம் வேண்டும் என்ற முழக்கங்கள் எதிரொலித்தன. நாட்டு மக்களிடையே சட்டமறுப்பு இயக்கம் மிகப்பரந்தளவில் செல்வாக்குப் பெற்றிருந்தது. அதற்கு அடுத்த வருடம் பகத்சிங்கின் உயிர்த்தியாகம் அரங்கேறியது. தனிப்பட்ட முறையில் அந்த நிகழ்ச்சி என்னை மிகவும் உலுக்கிவிட்டது. அவரது மகத்தான தியாகத்தைத் தொடர்ந்து நான் படிப்பைத் துறந்தேன். தேசவிடுதலைப் போருக்கு என்னை முழுமையாக அர்ப்பணித்தேன்”. வீட்டில் துவங்கிய போராட்டம் - பி.ராமமூர்த்தி -ஜனவரி 10, 2020 […] காங்கிரஸ், காங்கிரஸ் சோசலிஸ்ட், கம்யூனிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான தலைவர்களில் ஒருவராகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர்களில் ஒருவராகவும் புகழ்மிக்க தொழிற்சங்கத் தலைவராகவும் இந்திய தொழில்வளர்ச்சிக்கு உறுதுணையாய்த் திகழ்ந்த தனிப்பெரும் தலைவராகவும் சிறப்புற்று விளங்கிய தோழர் பி.ராமமூர்த்தி அவர்கள். அவர் இளமைக் காலம் முதலே குறிப்பாக மாணவப் பருவம் முதலே நாட்டின் விடுதலைப் போரிலும் மக்களின் சமத்துவ வாழ்வுக்கான போரிலும் முன்னின்றவர். அவர் காங்கிரஸ் கட்சி, பகத்சிங்கின் நவஜவான் பாரத் சபா, காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றில் தீரமுடன் செயல்பட்டவர். அவர் கம்யூனிஸ்ட்டாக பரிணமித்தது பற்றிய அவரது கருத்துக்கள் இங்கே தரப்படுகின்றன. முதலாம் உலகயுத்தத்திற்குப் பின் 1919ல் காங்கிரஸ் இயக்கம் ஒரு பிரபல இயக்கமாக வளர்ந்து வந்தது. காந்தி அரசியல் மேடையில் பிரபலமடைய ஆரம்பித்த நேரம். பிரிட்டிஷ் அரசு ரௌலட் சட்டம் என்ற ஆள்தூக்கிச் சட்டத்தை நிறைவேற்றியது. அச்சட்டத்தின்கீழ் எந்தவொரு குடிமகனும் விசாரணையின்றி கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்படலாம் அல்லது நாடு கடத்தப்படலாம். இத்தகைய மிருகத்தனமான சட்டத்தை எதிர்த்து ஏப்ரல் மாதம் 6ஆம்தேதி அவரவர் வீட்டில் உண்ணாவிரதம் இருக்கும்படியும், மாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ளும்படியும் காந்தி நாட்டு மக்களுக்கு அறைகூவல் விடுத்திருந்தார். நாடு பூராவிலும் உண்ணாவிரதம் அனுஷ்டிக்கப்பட்டது. நானும் என் வீட்டில் உண்ணாவிரதம் இருந்தேன். அன்று மாலை திருவல்லிக்கேணி கடற்கரையில் மிகப்பெரிய கூட்டம் நடைபெற்றது. அக்காலத்தில் ஒலிபெருக்கி வசதி ஏற்பட்டிராததால் அந்த பெரிய கூட்டம் திலகர் கட்டத்திலிருந்து சுங்குவார் தெரு சந்திப்புவரை 6 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு முதல் கூட்டத்தில் ஒருவர் பேசியவுடன் அதே பேச்சு இதர ஆறு பகுதிகளிலும் ஆறு பேச்சாளர்களால் திருப்பிக் கூறப்பட்டது. அதே ஆண்டு ஏப்ரல் 13ஆம்தேதியன்று ஜாலியன் வாலாபாக்கில் நடைபெற்ற பயங்கர படுகொலையைக் கண்டித்து நாடெங்கும் பெரும் கண்டனக் கூட்டங்கள் நடைபெற்றன. திருவல்லிக்கேணி கடற்கரையில் நடைபெற்ற மாபெரும் கண்டன பொதுக்கூட்டத்தில் நானும் கலந்து கொண்டேன். வீட்டிலே ஒரு போராட்டம் அன்னிய துணிகளைப் பகிஷ்காரம் செய்ய வேண்டுமென்று காந்திஜி விடுத்த கட்டளைக்கிணங்க, வீட்டில் எனக்கு வாங்கிக் கொடுத்திருந்த அந்நியத் துணிகளை உடுத்த மறுத்தேன். கதர்த்துணி வாங்கிக்கொடுக்கும்படி வீட்டில் அடம்பிடித்தேன். என் அண்ணன் மறுத்துவிட்டார். அவர் அரசாங்க ஊழியராக இருந்ததால் கதர்கட்டுவதில் மிகுந்த பயம் அவருக்கு உண்டு. எனவே என்னுடைய கோரிக்கையை அடைவதற்காக, பள்ளிக்குச் செல்ல மறுத்து வீட்டிலேயே கோவணத்தை மட்டும் கட்டிக்கொண்டு உட்கார்ந்துகொண்டேன். இரண்டு நாட்களுக்குப் பின் என் அண்ணன் கதர்த்துணி வாங்கித்தர சம்மதித்தார். அதன் பின் தான் பள்ளிக்குச் சென்றேன். நேருவின் பள்ளியில் சுயராஜ்யக் கட்சி உருவானதும் 1923ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாநகராட்சித் தேர்தலில், திருவல்லிக்கேணி தொகுதியில், அக்கட்சியின் சார்பாக எஸ்.சத்தியமூர்த்தி போட்டியிட்டார். அவருடைய வீடு புரசைவாக்கத்திலிருந்ததென்றாலும், அவர் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டார். நான் அவருடைய தேர்தல் வேலைகளில் தீவிரமாகப் பங்கு கொண்டேன். அப்பொழுதுதான் முதல் தடவையாக காமராஜைச் சந்தித்தேன். சுயராஜ்யக் கட்சியில் சேர்ந்திருந்த காமராஜ், சத்தியமூர்த்தியின் தேர்தல் வேலைக்காக திருவல்லிக்கேணிக்கு வந்திருந்தார். நாங்களிருவரும் மிக நெருங்கிய நண்பர்களானோம். அதே நேரத்தில்தான் சத்தியமூர்த்தியோடும், என்.சீனிவாச அய்யங்காரோடும் எனக்கு நெருங்கிய தொடர்பேற்பட்டது. அந்தத் தேர்தலில் சத்தியமூர்த்தி வெற்றியடைந்தார். சத்தியமூர்த்தியின் தேர்தல் சமயத்தில் ஹிந்து உயர்நிலைப்பள்ளியில் ஐந்தாவது படிவத்தில் படித்துக் கொண்டிருந்தேன். தேர்தல் முடிந்த பின், அந்தப் பள்ளிப்படிப்பின் மீது எனக்கு ஒரு வகை புரியாத ஒரு வெறுப்பேற்பட்டது. அச்சமயத்தில் அலகாபாத்திலிருந்த தேசியப் பள்ளியை புருஷோத்தம தாஸ் தாண்டனும், ஜவஹர்லால் நேருவும் நடத்திக் கொண்டிருந்தார்கள். அப்பள்ளியில் சேர வேண்டுமென்று முடிவு செய்து கையிலிருந்த சிறிது பணத்துடன், டிக்கெட் இல்லாமல், வீட்டில் யாருக்கும் தெரிவிக்காமல் புறப்பட்டுவிட்டேன். டிக்கெட் இல்லாததால் பல இடங்களில் இறக்கிவிட்டார்கள். ஒன்றிலிருந்து மற்றொரு ரயிலுக்கு மாறி மாறி அலகாபாத்துக்கு போய்ச் சேர்ந்தேன். அலகாபாத்தை வந்தடைந்தவுடன் லோகாகஞ்ச் என்றழைக்கப்படும் “இரும்புப் பேட்டையிலிருந்த” தேசியப் பள்ளியைத் தேடி வந்தடைந்தேன். பள்ளியில் என்னைச் சேர்த்து கொண்டார்கள். 15 மாணவர்கள் மட்டுமே அப்பொழுது படித்து வந்தார்கள். ஏனென்றால் தேசியப் பள்ளிகள் ஆங்கிலேய அரசுக்கு எதிரானது. காங்கிரஸ் தலைவர்கள் கூட தங்கள் பிள்ளைகளை அப்பள்ளிக்கு அனுப்புவதில்லை. அப்பள்ளியை நடத்தி வந்த புருஷோத்தமதாஸ்தாண்டனும், ஜவஹர்லால்நேருவும் அடிக்கடி வந்து பல்வேறு விஷயங்களைக் குறித்து பிரசங்கம் செய்வார்கள். நேரு மீது எனக்கு மிகுந்த அபிமானம் உண்டு. அங்கிருந்த மாணவர்களிலேயே நான்தான் வயதில் மிகவும் சிறியவன் என்பதோடு, நாட்டின் அரசியலில் எனக்கிருந்த ஆர்வத்தைக் கண்டு நேருவுக்கு என் மீது பிரியம் உண்டு. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அவருடைய இல்லமான ஆனந்த பவனுக்கு, உணவருந்த வரும்படி கூப்பிடுவார். சில மாதங்கள் கழித்து அங்கிருந்த மாணவர்கள் ஒவ்வொருவராக பள்ளியைவிட்டு வெளியேறிவிட்டார்கள். கடைசியில் 1925 ஏப்ரல் மாதத்தில் நானும், மற்றொரு மாணவனுமே மிஞ்சினோம். இனி மேலும் அங்கே தங்கியிருப்பது பயனற்றது என்று தீர்மானித்துநேருவிடமும், தாண்டனிடமும் என் முடிவைக் கூறினேன். நேர வாங்கிக் கொடுத்த டிக்கெட்டோடு, ஏப்ரல் மாதத்தில் சென்னைக்கு திரும்ப வந்து சேர்ந்தேன். என் வீட்டில் என்னைத் திட்டினார்கள். அதே ஆண்டில் ஹிந்து உயர்நிலைப் பள்ளியில் திரும்பவும் ஐந்தாவது படிவத்தில் சேர்ந்து படிக்க ஆரம்பித்தேன். என் உயர்நிலைப்பள்ளி படிப்பில் இரண்டு வருட காலம் பின்னுக்குத் தள்ளப்பட்டது. என்னுடன் பள்ளியில் படித்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் எஸ்.ஆர்.கைவார் (பின்னாளில் தமிழக அரசின் பிரதம காரியதரிசியாக பணியாற்றியவர்) ராகவேந்திரராவ், விண்வெளியியல் நிபுணர் எஸ்.சந்திரசேகரன், (இவர் சர்.சி.வி.ராமனின் சகோதரர் சி.எஸ்.அய்யரின் மகன்) வே.பா.கோபால், பிரபல கர்நாடக இசை வித்வானாக விளங்கிய ஜி.என்.பாலசுப்பிரமணியம் முதலியவர்கள். வாலிபர் கழகம் 1925ஆம் ஆண்டில் சென்னை நகரில், வாலிபர் கழகத்தை ஆரம்பித்தோம். அதில் என்னுடன் சேர்ந்திருந்தவர்களில் சிலர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் (திரைப்பட டைரக்டர்), வி.கே.சேஷகிரி, எஸ்.எம்.பாசில் முதலியோர், ஆங்கிலேய எதிர்ப்பு உணர்வை வாலிபர்கள் மத்தியில் உருவாக்கவும், அவர்களை தேசிய எண்ணங் கொண்டவர்களாக மாற்றவும் ஒரு பரந்த வாலிபர் இயக்கத்தை உருவாக்கவும் இந்தக் கழகம் பணியாற்றியது. கங்கை நதியில் 40 படகுகளில் சைமன் கமிஷனை எதிர்த்துப் போராட்டம் - பி.ராமமூர்த்தி -ஜனவரி 11, 2020 காங்கிரஸ், காங்கிரஸ் சோசலிஸ்ட், கம்யூனிஸ்ட் 2 1926ஆம் ஆண்டு நடைபெற்ற பள்ளி இறுதி வகுப்புத் தேர்வில் மிக அதிகமான மதிப்பெண்களுடன் தேர்வடைந்து மாநிலக் கல்லூரியில் சேர்ந்தேன். கல்லூரியில் நான் சேர்ந்து மூன்று மாத காலத்திற்குள்ளாக தேர்தல்கள் நடைபெறவிருந்தன. அக்காலத்தில் நடைபெற்ற தேர்தல்களில் வோட்டளிக்கும் உரிமை அனைவருக்கும் கிடையாது. சொத்துரிமை உள்ளவர்களுக்கு மட்டுமே அந்த உரிமை இருந்தது. அந்த நிலைமையிலும் நீதிக் கட்சியை விட அதிகளவு இடங்கள் ‘சுயராஜ்யக் கட்சி’க்கு கிடைத்தது. ஆனால் அமைச்சர் பொறுப்பை ஏற்பதில்லை என்ற சுயராஜ்யக் கட்சி முடிவுக்கிணங்க, அவர்கள் அமைச்சரவை அமைக்கவில்லை. இந்தத் தேர்தலில் சுயராஜ்யக் கட்சியின் வெற்றிக்காக நான் தீவிரமாக உழைத்தேன். தேர்தல் முடிந்தவுடன், மாநிலக் கல்லூரி பிரின்சிபால், பைசன் என்னைக் கூப்பிட்டுக் கண்டித்தார். ‘இனிமேல் இம்மாதிரி அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டால் இக்கல்லூரியைவிட்டு வெளியேற்றுவதோடு வேறெந்தக் கல்லூரியிலும் நீ சேர முடியாத படி செய்துவிடுவேன் என்று எச்சரித்தார். இது எனக்கு மிகுந்த வெறுப்பை அளித்தது. இந்த எச்சரிக்கை கொடுத்த ஒரு வார காலத்திற்குள்ளாக, எனக்கு தகுதியினடிப்படையில் அரசாங்க உபகாரச் சம்பளம் கிடைத்தது. ஆதலால் நான் கல்லூரியில் சேரும் பொழுது செலுத்திய, முதல் மூன்று மாத காலத்து கட்டணமான ரூபாய் முப்பத்திரண்டை எனக்கு திருப்பியளித்தார்கள். அந்தப் பணம் கையில் வந்தவுடன் இனிமேல் இந்தக் கல்லூரியில் படிக்கக்கூடாதென்று முடிவு செய்தேன். கையிலிருந்த ரசாயன, பௌதீகப் புத்தகங்களை மூர் மார்க்கெட்டில் கொண்டுபோய் விற்றுவிட்டு அதில் கிடைத்த எட்டு ரூபாய் பணத்துடன் மொத்தம் நாற்பது ரூபாய் கையிருப்புடன் காசி நகரத்திற்கு (பெனாரஸ்) டிக்கெட்டில்லாமல், வீட்டில் யாருக்கும் தெரியாமல் புறப்பட்டுவிட்டேன். டிக்கெட் இல்லாததால் பல ரயில் நிலையங்களில் வண்டியிலிருந்து வெளியே அனுப்பினார்கள். அடுத்து வரும் ரயில்களில் நுழைந்து, சில நாட்களில் காசி நகரத்திற்கு வந்து சேர்ந்தேன். காசி சர்வகலாசாலையில்… காசி நகரத்தில் அப்பொழுது பிரபல தேசபக்தரான பண்டித மதன் மோகன் மாளவியா, பெனாரஸ் ஹிந்து சர்வகலா சாலையை நடத்தி வந்தார். தேசிய எண்ணங்கொண்ட மாணவர்களின் புகலிடமாக இருந்தது அது. எனவே ரயில்நிலையத்திலிருந்து நேராக சர்வ கலா சாலைக்குச் சென்று பண்டித மதன் மோகன் மாளவியாவைச் சந்தித்து நடந்த விபரங்கள் அனைத்தையும் கூறி, என்னையும், சர்வகலா சாலையில் சேர்த்துக் கொள்ளும்படி மன்றாடினேன். சென்னையிலிருந்து செல்லும் பொழுது கல்லூரியிலிருந்து என்னுடைய எஸ்எஸ்எல்சி சர்டிபிகேட் கூட இல்லாது சென்றிருந்தேன். நான் கூறிய விபரங்களனைத்தையும் பொறுமையுடன் கேட்ட மாளவியா நான் தேசிய மனப்பான்மையுள்ளவன் என்று திருப்தியடைந்து, இரண்டாமாண்டு இறுதிக்குள் என்னுடைய எஸ்எஸ்எல்சி சர்டிபிகேட்டை கொடுத்தால் போதுமென்று கூறி என் மீது அனுதாபங்கொண்டு இண்டர் மீடியட் விஞ்ஞான வகுப்பில் சேர்ந்து கொள்ளும்படி அனுமதித்தார். என்னுடைய சாப்பாட்டுச் செலவுக்காக மாதம் பனிரெண்டு ரூபாய் உபகார சம்பளத்தையும் வழங்கினார். ஹாஸ்டலில் தங்கியிருக்கவும் அனுமதித்தார். என் குடும்பத்தினர் திடீரென்று நான் காணாமற் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்து பல இடங்களிலும் தேடியிருக்கிறார்கள். காஞ்சிபுரம் சங்கராச்சாரியாரிடம் போய் நான் திரும்பி வருவேனா என்றெல்லாம் கேட்டிருக்கிறார்கள். ஒன்றரை வருட காலத்திற்குப்பின் என்னுடைய எஸ்எஸ்எல்சி சர்டிபிகேட்டை வாங்கி அனுப்பும்படி நான் காசியிலிருந்து கடிதம் எழுதிய பின்புதான் என்னைப் பற்றிய விபரங்கள் அவர்களுக்கு தெரியவந்தது. சைமன் கமிஷன் வருகை இந்த சமயத்தில் நடந்த ஒரு முக்கிய சம்பவத்தை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். காந்திஜி ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தியபின், இந்திய அரசியலில் ஒரு தேக்கம் ஏற்பட்டது. பல இடங்களில் பயங்கரவாத இயக்கம் தோன்ற ஆரம்பித்தது. மறுபுறத்தில் ஆங்கிலேய அரசு ஏழு வெள்ளைக்காரர்களைக் கொண்டதும் சைமன் என்பவரால் தலைமை தாங்கப் பெற்றதுமான ஒரு அரசாங்க கமிஷனை இந்தியாவிற்கு அனுப்பியது. சைமன் கமிஷன் என்ற பெயரில் அழைக்கப்பட்ட அந்தக் கமிஷன் இந்தியா சுயாட்சிக்கு எவ்வளவு தகுதிபெற்றுள்ளது; எவ்வளவு உரிமைகள் இந்தியர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதை விசாரித்து, ஆங்கிலேய அரசுக்கு ஒரு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக அனுப்பப்பட்டது. காங்கிரஸ் கட்சி இந்தக் கமிஷனை புறக்கணிக்கும்படி அறைகூவல் விடுத்தது. ஆனால் காங்கிரஸ் மிதவாதிகளும், நீதிக்கட்சியினரும் இந்தக் கமிஷனுடன் ஒத்துழைத்து சாட்சியம் கூறினார்கள். சைமன் கமிஷன் விஜயம் செய்த நகரங்களில் எல்லாம் அதை எதிர்த்து ஹர்த்தால்களும், ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன. பல இடங்களில் போலீஸ் தடியடி நடைபெற்றது. லக்னோவில் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்த பண்டித கோவிந்த வல்லப பந்தும் இதர ஆர்ப்பாட்டக்காரர்களும் கடுமையான தடியடிக்குள்ளானார்கள். அவர் அப்பொழுது, உத்தரப்பிரதேச சட்டமன்றத்தில் சுயராஜ்யக் கட்சியின் தலைவராயிருந்தார். லாகூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கு கொண்டவர்கள் மீது பலத்த தடியடிப் பிரயோகம் நடந்தது. அந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்த லாலா லஜபதிராய் பலத்த காயத்திற்குள்ளானார். அதனால் பின்னர் மாண்டார். இந்தச் சம்பவங்களெல்லாம், மாணவர்களாகிய எங்கள் மத்தியில் பெரும் ஆத்திரத்தை உண்டாக்கியிருந்தது. அப்பொழுது காசி நகரத்திற்கும் சைமன் கமிஷன் விஜயம் செய்வதாயிருந்தது. எனவே அதற்கெதிராக நாங்களும் பெரும் ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிட்டோம். எங்களது திட்டத்தைத் தெரிந்து கொண்ட அரசாங்கம், அதைத் தவிர்ப்பதற்காக, சைமன் கமிஷன் குழுவினர் தங்குவதாயிருந்த இடமான ராம்நகர் மாளிகைக்கு அவர்களை கங்கை நதியில் படகுகள் மூலம் கொண்டு செல்லத் திட்டமிட்டது. இதையறிந்த நாங்கள் 40 படகுகளை வாடகைக்கு அமர்த்தி சைமன் கமிஷன் சென்ற படகுகளுக்குப் பின் எங்களது படகுகளைச் செலுத்தி ‘சைமனே திரும்பிப் போ’ என்ற கோஷத்தையும், ஆங்கில அரசுக்கெதிரான கோஷங்களையும் முழக்கி, ராம்நகர் மாளிகை வரை சைமன் கமிஷனை துரத்திச் சென்றோம். இந்த ஆர்ப்பாட்டத்தை மாணவர்களிடையே உருவாக்குவதில் நான் குறிப்பிடத்தக்க பங்காற்றினேன். ஜாதி ஒழிப்பு சபை 1927ம் ஆண்டு டாக்டர் எம்.ஏ.அன்சாரி தலைமையில் சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாடு “பூரண சுயராஜ்யம்” வேண்டுமென்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. இந்த மாநாட்டின் முடிவுகள் நாட்டு மக்களிடையே ஒரு புத்துணர்ச்சியை உண்டாக்கினாலும், அந்த லட்சியத்தை அடைவதற்காக காங்கிரஸ் கட்சிக்கு எவ்வித வேலைத் திட்டமோ, செயல் முறையோ இருக்கவில்லை. சாதாரண ஆர்ப்பாட்டங்கள் மட்டுமே நடைபெற்றன. இதன் காரணமாக பயங்கரவாதக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட இளைஞர்களைக் கொண்ட வாலிபர் குழுக்கள் பல தோன்றலாயின. ‘நவ ஜவான் பாரத் சபா’ என்ற பெயரில் வாலிபர் இயக்கத்தின் வெகுஜன அமைப்பு ஒன்று தோன்றியது. இந்த சபாவின் உறுப்பினர்களில் முக்கியமான சிலர் சேர்ந்து ‘இந்துஸ்தான் குடியரசுப்படை’ என்ற ரகசிய இயக்கத்தை உருவாக்கினார்கள். இந்தக் குடியரசுப் படையைச் சேர்ந்தவர்கள் இந்த இயக்கத்தை நடத்த தேவையான பணத்திற்காக பல இடங்களில் அரசாங்க உப - கஜானாக்களை கொள்ளையடித்தார்கள். காகோரி என்ற இடத்தில் ரயிலில் அரசாங்க கஜானா கொள்ளையடிக்கப்பட்டது. காசி நகரத்தில் நவஜவான் பாரத் சபையின் உறுப்பினராக நான் தீவிரப் பங்காற்றினேன். அத்தோடு ‘ஜாத் பாத், தோடக் மண்டல்’ என்ற ஜாதியை நொறுக்கும் சபையை நவ்ஜவான் பாரத் சபா ஆரம்பித்தது. இது ஜாதியை ஒழிப்பதற்காக பாடுபட்டது. இதனால் வாலிபர் குழுக்கள் ஆகர்ஷிக்கப்பட்டன. ஆழம் பார்த்த அமீர் ஹைதர் கான் - பி.ராமமூர்த்தி -ஜனவரி 12, 2020 […] 1930 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆரம்பித்த சட்டமறுப்பு இயக்கம், குறிப்பாக உப்புச் சத்யாகிரகமும், அந்நியத் துணிகள் பகிஷ்காரமும் இந்தியா முழுவதும் நடைபெற்று வந்தது. ஏப்ரல் மாதம் என்னுடைய இறுதியாண்டு கல்லூரி தேர்வை (பி.எஸ்.ஸி) எழுதி முடித்த அடுத்த நாளே நான் சட்டமறுப்பு இயக்கத்தில் ஈடுபட்டேன். காசி நகரில் கோதேலியா என்ற வர்த்தக ஸ்தலத்தில் அங்கு கூடியிருந்த மக்களிடையே அந்நியத் துணியை எரித்தேன். உடனே கைது செய்யப்பட்டு 6 மாத கடுங்காவல் தண்டனை விதிக்கப்பெற்று பரூக்காபாத்திலிருந்த பதேகர் சிறைக்கு அனுப்பப்பட்டேன். தண்டனைக் காலம் முடிந்து சென்னைக்குத் திரும்பினேன். சென்னையில் அப்பொழுது டி.பிரகாசத்தின் தலைமையில் உப்புச்சத்யாகிரக இயக்கம் நடந்துவந்தது. பிரகாசம் கைதான பின் துர்க்காபாய் (தேஷ்முக்) தலைமையிலும், அவர் கைதான பின் இன்னும் பல காங்கிரஸ் தலைவர்கள் தலைமையிலும் சத்யாக்கிரஹம் நடந்து போராட்டம் ஒரு தேக்க நிலையில் இருந்தது. எனவே இயக்கத்தை மீண்டும் உயிர்ப்பிக்க, சிறையிலிருந்து திரும்பிய சில காங்கிரஸ் ஊழியர்களுடனும் குறிப்பாக ஸ்ரீபாத சங்கர், கணபதி முதலியோருடன் சேர்ந்த பாடுபட்டேன், இயக்கத்தை மீண்டும் துவக்கினோம். அப்போது நாங்கள் வெளிமாவட்டங்களிலிருந்து இயக்கத்தில் சேரும்படி பல வாலிபர்களை ஊக்குவித்து அவர்களைச் சென்னைக்குக் கொண்டு வந்து அந்நியத் துணிக்கடை மறியல் இயக்கத்தை ஆரம்பித்து நடத்தினோம். அப்பொழுது இயக்கத்தை நடத்துவதற்கு தேவைப்பட்ட பணத்திற்கு, சென்னையிலிருந்த ராம்னாத் கோயங்கா, மதுரை டி.வி.சுந்தரமய்யங்கார், ஹாஜா ஷெரீப்பின் மாமாவும், கப்பல் கம்பெனி ஏஜெண்டுமான ஷேக் முகமது ராவுத்தர் முதலானவர்களுடைய தொடர்பினால் இயக்கத்திற்கு ரகசிய பண உதவி கிடைத்தது. 1931ஆம் ஆண்டு காந்தி - இர்வின் ஒப்பந்தத்தையொட்டி சிறையிலிருந்தவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். “சுதந்திரச் சங்கு” பத்திரிகையைப் பற்றி சில விபரங்களை இங்கே கூற விரும்புகின்றேன். நீண்ட நாள் காங்கிரஸ்காரரான சங்குகணேசன் இப்பத்திரிகையை நடத்தி வந்தார். அவர் காந்திஜியின் நூல்களை வெளியிடும் உரிமையை வாங்கி, பல ஆண்டுகள் வெளியிட்டு வந்தார். 1930ஆம் ஆண்டின் சட்டமறுப்பு இயக்கம் ஆரம்பமானவுடனேயே “ சுதந்திரச் சங்கு” பத்திரிகையை காலணா விலையில் (இன்றைய கணக்கில் 2 நயா பைசா) டெம்மி சைசில் நாலு பக்கத்தில் வெளியிட்டு வந்தார். செய்திகள் இருக்காது. விடுதலைப் போராட்டத்தை ஆதரித்து விறுவிறுப்பான கட்டுரைகள் இப்பத்திரிகையில் வெளியாகும். நான் நடத்தி வந்த இந்தி வகுப்புகளில் பயின்று வந்த மாணவர்களை, தட்சிணபாரத் ஹிந்தி பிரச்சார சபை, அவர்கள் நடத்தி வந்த இரண்டாம் நிலை தேர்வுக்கு (மத்யமா) நேரடியாக அனுப்பிவிடுவார்கள். இந்த மாணவர்களின் இந்திமொழி அறிவின் தரம் அதிகமாயிருந்ததால் முதல் கட்ட தேர்வான ‘பிராத்மிக்’ குக்கு அனுப்புவதில்லை. இத்தேர்வுகளில் மிகப் பெரும்பான்மையான மாணவர்கள் பெருவாரியான மதிப்பெண்களுடன் வெற்றியடைந்தார்கள். அதனால் 1931ஆம் ஆண்டு ‘ தமிழ்நாட்டில் ’ சிறந்த ஹிந்தி பிரச்சாரகர் என்ற நற்சாட்சிப் பத்திரத்தை காந்திஜி எனக்கு தட்சிண பாரத் இந்தி பிரச்சார சபை மூலம் அனுப்பி வைத்திருந்தார். அப்பொழுது தட்சிண பாரத் சபா நிர்வாகஸ்தர்களாக இருந்த ஹரிகர சர்மா, மோட்டூரி சத்ய நாராயண முதலியோருடனும் மற்றும் பல இந்திப் பிரச்சாரகர்களுடனும் நெருங்கியதொடர்பேற்பட்டது. மறியலுக்கு உதவிய சக ஊழியர்கள் 1932ஆம் ஆண்டில் லண்டனில் நடைபெற்ற வட்டமேஜை மாநாடு தோல்வியில் முடிந்தது. காந்திஜி, நேரு, கான்அப்துல கபார்கான் முதலிய காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து இரண்டாவது சத்யாகிரஹப் போராட்டம் ஆரம்பித்தது. சென்னையில் சத்யாகிரஹப் போராட்டத்தை நடத்தும் பொறுப்பை, மாவட்டக்காங்கிரஸ் கமிட்டி ஜகன்னாத்தாஸிடமும், என்னிடமும் ஒப்படைத்தது. போராட்டத்தை நடத்துவதற்காக என்னுடைய வேலையை ராஜினாமா செய்தேன். ஆனால் என்னுடன் வேலைசெய்த இதர ஊழியர்கள், என்னுடைய மேலதிகாரிகள் ஆகியோர் ஒரு ஏற்பாடு செய்தனர். என்னுடைய ராஜினாமா கடிதத்தை தேதியிடாமல், என் மேலதிகாரியான ஆடிட்டர் நடராஜனிடம் கொடுக்கும்படியும், நான் கைதானால் அந்த ராஜினாமா முந்திய தேதியிட்டு ஏற்கப்பட்டுவிடுமென்றும், நான் கைதாகவில்லையென்றால் தினமும் அலுவலகத்திற்கு வந்து கையெழுத்திட்டுவிட்டுப் போகும்படியும் கூறி அவ்வாறே ஏற்பாடும் செய்தனர். சீனிவாசராவுடன் தொடர்பு போராட்டக்காலத்தில் என்னுடைய முக்கியமான வேலை மறியல் செய்வதற்கு தொண்டர்களைத் தேர்ந்தெடுப்பது, அன்றாடம் அவர்கள் உணவிற்குப் பணம் கொடுப்பது, அவர்களை ரகசியமாகச் சந்தித்துத் திட்டமிடுவது போன்றவைகள், அந்நாட்களில் அனேகமாக நான் திருவல்லிக்கேணியிலிருந்த ஜகன்னாத தாஸ் வீட்டில் தான் தங்குவது வழக்கம். என்னுடைய வீட்டிற்குப் போவதில்லை. ஜகன்னாத தாஸின் குடும்பத்தினருக்கு தமிழ் தெரியாது. தெலுங்கு மட்டும்தான் தெரியும். அவர்களிடம் பேச வேண்டிய அவசியமேற்பட்டதால் தெலுங்குபேச கற்றுக்கொண்டேன். இச்சமயத்தில்தான் பி.சீனிவாசராவுடன் தொடர்பேற்பட்டது. இப்போராட்டக்காலத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக பல்வேறு மாநிலங்களில் இயக்கத்தை நடத்திச் செல்ல ஜெயப்பிரகாஷ் நாராயணன் நியமிக்கப்பட்டிருந்தார். அவரும் தலைமறைவாகவே சென்னைக்கு வந்திருந்தார். நான் இருக்கும்பொழுது மும்முறை அவர் வந்திருந்தார். அச்சமயத்தில் தான் அவருடன் எனக்கு தொடர்பேற்பட்டது. சிறிது காலத்திற்கு முன்புதான் தன் பட்டப்படிப்பை அமெரிக்காவில் முடித்துவிட்டு ஜெயப்பிரகாஷ் நாராயணன் இந்தியாவிற்குத் திரும்பியிருந்தார். இதே நேரத்தில்தான் தென்னிந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியை அமைப்பதற்காக தலைமறைவாக வந்த அமீர் ஹைதர்கானைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அமீர்கானின் யோசனை அமீர் ஹைதர்கான் , மீரட் சதி வழக்கில் சம்பந்தப்பட்டவர், ஆனால் அதிலிருந்து கைதாகாமல் தப்பிவிட்டவர். அவர் முதலில் என்னைச் சந்தித்த பொழுதெல்லாம் கம்யூனிசம் பற்றி எதுவும் பேசவில்லை. அவர் ஒரு கம்யூனிஸ்ட் என்றும் எனக்குத் தெரியாது. என்னுடன் பேசியபொழுதெல்லாம் என்னை ஆழம் பார்த்தார். தொழிலாளி வர்க்கம் பங்கெடுக்காமல் சத்யாகிரஹப் போராட்டத்தினால் ஒன்றும் பயன் ஏற்படாது என்ற யோசனையைக் கூறியதோடு விவாதம் செய்து என்னை கம்யூனிஸ்ட் ஆக்கலாமா என்ற ஆரம்பப் பரிசோதனை வேலைகளில் ஈடுபட்டிருந்தார் அமீர் ஹைதர்கான். ஜெயப்பிரகாஷ் நாராயணனிடம் அமீர் ஹைதர்கான் கூறிய யோசனையைக் கூறினேன். அவரும் அதை ஏற்றுக்கொண்டார். நானும் ஜெ.பியும் இந்த விஷயத்தை விவாதித்து, சத்யாகிரஹப்போராட்டம் வெற்றிகரமாக நடைபெற வேண்டுமானால் போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைக்க வேண்டுமென்றும் ரயில்வேயில் ஸ்டிரைக் நடந்தால் நல்லதாயிருக்கும்மென்று முடிவு செய்து, அப்பொழுது ரயில்வே தொழிற்சங்கத் தலைவராயிருந்த வி.வி.கிரியை சென்று கண்டோம். ரயில்வேயில் ஸ்டிரைக் நடத்தும் பொறுப்பை வி.வி.கிரி ஏற்றுக் கொண்டார். ஆனால் அவரால் அதைச் செய்ய முடியவில்லை. சோசலிச, மார்க்சிய நூல்கள் அறிமுகம் -பி.ராமமூர்த்தி -ஜனவரி 13, 2020 அபராதம் செலுத்த மறுப்பு சத்தியாகிரஹப் போராட்டத்தை நடத்தியதற்காக எனக்கு மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆறுமாத கடுங்காவல் தண்டனையும், 500 ரூபாய் அராதமும் விதித்தார்கள். அபராதம் கட்டத் தவறினால் மேலும் மூன்று மாத காலம் கடுங்காவல் தண்டனை என்று தீர்ப்பளிக்கப்பட்டது. நான் அபராதத்தை செலுத்த மறுத்துவிட்டேன். சிறையில் எனக்கு இரண்டாம் வகுப்பு கொடுத்தார்கள். அப்பொழுது ஏ.பி. வகுப்புக் கைதிகளை வேலூர் சிறையில்தான் வைப்பது வழக்கம். ஆனால் எனக்கு உடல்நலம் சரியில்லாதிருந்ததால் சென்னை சிறையிலேயே வைத்திருந்தார்கள். சென்னை சிறையிலிருக்கும் பொழுதுதான் வி.கே.நரசிம்மனை நான் சந்தித்தேன். வி.கே.நரசிம்மன் பின்னாட்களில் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையின் தில்லிப் பதிப்பு ஆசிரியராக இருந்தார். அவர் சிறைக்கு வரும் முன்பே அமீர் ஹைதர்கானுடன் தொடர்பு கொண்டு கம்யூனிஸ்ட்டாக மாறி சிறைக்கு அனுப்பப்பட்டவர். அச்சமயத்தில் வேலூர் மத்தியச் சிறையின் கண்காணிப்பாளராயிருந்த முகமது மூசாகான். வேலூர் சிறையிலிருக்கும் ஏ, பி வகுப்புக் கைதிகளை இதரர்களுடன் பழகாமல் தனித்தனியாக வைப்பது சிரமமாயிருக்கிறதென்று மேலிடத்திற்கு எழுதியதால் அங்கிருந்த பல ‘பி’ வகுப்பு கைதிகளை மதுரை மத்தியச் சிறைக்கு மாற்றினார்கள். சென்னையிலிருந்த என்னையும் மதுரை மத்தியச் சிறைக்கு மாற்றினார்கள். மதுரை மத்தியச் சிறையில் இருக்கும் பொழுதுதான், ராஜாஜி எழுதிய ‘அபேதவாதம்’ நூலையும், பேபியின் சொஸைட்டி வெளியிட்ட பெர்னாட்ஷாவின் புத்தகங்களையும் படித்தேன். ராஜாஜி 1930ம் ஆண்டில் தன்னுடன் சிறையிலிருந்த இதர அரசியல் கைதிகளுக்கு கம்யூனிசத்தைப் பற்றி எளிமையாக விளக்கி செய்த பிரசுரங்களே ‘அபேதவாதம்’ என்ற பெயரில் வெளியிடப்பட்டிருந்தது. இந்தப் புத்தகங்கள் தான் சோசலிசக் கருத்துக்களைப் பற்றி, ஆரம்பத்தில் நான் படித்த புத்தகங்கள். சென்னை சதி வழக்கு ஹரிஜன சேவா சங்கத்தில் ஓராண்டுக் காலம் செயல்பட்ட பின், அத்தகையதொரு பணியின் மூலம் ஹரிஜனங்களை முன்னேற்ற முடியாது என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. இது ஒருவகைப்பட்ட சமூக சீர்திருத்தமே தவிர, சுதந்திர இயக்கமாக மாற முடியாது என்ற எண்ணம் ஏற்பட்டதன் விளைவாக ஹரிஜன சேவா சங்க வேலையில் ஒரு சலிப்புத் தட்டியது. இச்சமயத்தில்தான் சென்னை சதி வழக்கு விசாரணை நடைபெறத் தொடங்கியது. இவ்வழக்கில் சம்பந்தப்படுத்தப்பட்டவர்கள் முகுந்தலால் சர்க்கார், டி.ஆர்.சுப்ரமணியம், அருண் என்ற அருணாசலம் ஆகியோருடன் ஆந்திராவைச் சேர்ந்த சில இளம் காங்கிரஸ்காரர்களும் இருந்தார்கள். இவர்களெல்லோரும் 1930-31ம் ஆண்டுகளில் திருச்சி சிறையிலிருந்தபொழுது வட இந்தியாவிலிருந்து அங்கே கொண்டுவரப்பட்டிருந்த ஜீவன்லால் சாட்டர்ஜி, சுரேந்திரமோகன் கோஷ் ஆகிய பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்களின் தொடர்பால், அந்த இயக்கத்திற்கு ஈர்க்கப்பட்டவர்கள். 1931ம் ஆண்டு சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் ஆயுதங்கள் சேகரிப்பது, பயங்கரவாத இயக்கத்திற்கு ஆதரவாகப் பிரசுரங்களை வெளியிட்டு விநியோகிப்பது போன்ற காரியங்களில் ஈடுபட்டிருந்தார்கள். ஆங்கிலேய அரசு இவர்களை கைது செய்து ஒரு சதி வழக்கை உருவாக்கியது. இந்த வழக்கில் சம்பந்தப்படுத்தப்பட்டிருந்தவர்களில் மற்றும் சிலரையும் நான் அறிவேன். எனவே இவர்களுக்காக வாதாட ஜகன்னாததாஸை நான் அணுகினேன். அவரும் அதற்கு ஒத்துக்கொண்டார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை பாதுகாக்க ‘ஒரு பாதுகாப்புக் கமிட்டியை’ அமைத்தோம். அக்கமிட்டிக்கு ஜகன்னாததாஸ் தலைவராகவும், நான் காரியதரிசியாகவும் செயல்பட்டோம். நாங்கள் வசூலித்த பணம் போதுமானதல்ல. இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட ஆந்திராவைச் சேர்ந்த கைதிகளின் பெற்றோர்கள் கொடுத்த பணத்தைக் கொண்டு இவ்வழக்கை நடத்தினோம். பிரபலமாயிருந்த வி.ராஜகோபாலாச்சாரி, என்.எஸ்.மணி போன்ற சில வழக்கறிஞர்களையும் இதற்காக ஏற்பாடு செய்திருந்தோம். சிந்தாதிரிப்பேட்டை விசேஷ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்த இவ்வழக்கில் பயங்கரவாத இயக்கத்தைப் போற்றி எழுதப்பட்ட அறிக்கைகள், தஸ்தாவேஜூகள் சாட்சியங்களாக சமர்ப்பிக்கப்பட்டன. இவ்வழக்கின் முழு விபரத்தையும் படித்து குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் சார்பாக வாதாடுவதற்காக குறிப்புகளை தயாரிக்கும்பொழுது பயங்கரவாத இயக்கத்தின் மீது எனக்குச் சிறிது அபிமானம் தோன்றியது. காந்திஜியின் இயக்கத்தின் மூலம் சுதந்திரம் வராது. இப்படி ஏதாவது செய்தால்தான் நடக்கும் என்று தோன்றியது. மார்க்சிய நூல்கள் அறிமுகம் இந்த நேரத்தில்தான் தடை செய்யப்பட்டிருந்த மார்க்சிய நூல்களைப் படிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. லண்டனிலிருந்து அச்சமயத்தில் ‘லிட்டில் லெனின் லைப்ரரி’ என்ற வரிசையில் பல புத்தகங்கள் வெளியாகி வந்தன. ‘ஏகாதிபத்தியம், முதலாளித்துவத்தின் உச்சகட்டம்’ ‘அரசாங்கமும் புரட்சியும்’, ‘செய்ய வேண்டியது என்ன?’, ‘துரோகி காவுட்ஸ்கி’ போன்ற லெனினுடைய நூல்களைப் படித்தேன். சிறிது காலம் கழித்து காரல்மார்க்ஸ் எழுதிய ‘மூலதனம்’ ஏங்கெல்ஸ் எழுதிய ‘விஞ்ஞான சோசலிசமும், கற்பனாவாத சோசலிசமும்’ முதலிய நூல்களைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ‘மூலதனம்’ முதலில் படிக்கும்பொழுது புரியவே இல்லை. பலமுறை திருப்பித் திருப்பிப் படித்தேன். பல மாதங்கள் நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு வழக்கை ‘செஷன்சுக்’கு அனுப்பினார்கள். ஆந்திராவைச் சேர்ந்த கைதிகளின் பெற்றோர்கள். டி.பிரகாசத்தை வழக்காட ஏற்பாடு செய்யும்படி கூறியதால் பிரகாசத்தைச் சந்தித்து வழக்காட ஏற்பாடு செய்தேன். பிரபல காங்கிரஸ் தலைவரான பிரகாசம் அப்பொழுதுதான் சிறையிலிருந்து திரும்பி வழக்கறிஞராக பணியாற்றத் தொடங்கியிருந்தார். தினமும் இரவில் அவருடைய இல்லத்திற்குச் சென்று வழக்கைப் பற்றிய விபரங்களைக் கூறி அவருக்கு உதவியாக தேவையான குறிப்புகளைத் தேடித் தருவது வழக்கம். பிரகாசம் அப்போது மைலாப்பூர் எல்லப்பமாதா கோவில் தெருவில் குடியிருந்தார். பிரகாசத்திற்கு உதவியாக இருக்கும் பொருட்டு ‘சாட்சி சட்டம், ‘குற்றச்சட்டத் திருத்தம்’ ஆகியவற்றை முழுமையாகப் படித்தேன். விவாதத்திற்கான குறிப்புகளை பிரகாசத்திற்கு தயாரித்தேன். ஆனால் செஷன்ஸ்கோர்ட்டில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட்டார்கள். இரண்டு வருடத்திலிருந்து ஆறு வருடகாலம் வரை கடுங்காவல் தண்டனை அளிக்கப்பட்டது. சதிவழக்கு முடிந்தவுடன், வேறு எதுவும் இல்லாததால், திருவல்லிக்கேணியில் ஒரு நெய்க்கடையை ஆரம்பித்தேன். அப்பொழுதுதான் பி.சீனிவாசராவ் சிறையிலிருந்து விடுதலையாகியிருந்தார். 1932ல் எனக்கு அறிமுகமாயிருந்த பி.எஸ்.ஆர். 1933ல் மறுபடியும் கைது செய்யப்பட்டிருந்ததார். சிறையிலிருந்து மீண்டபின், எப்பொழுதும் போல் கடற்கரையில் (இப்பொழுது போர்ட்டிரஸ்ட் இருக்குமிடத்தில்) அரசியல் நோட்டீஸ்களை விநியோகிப்பார். நான் நெய்க்கடையை ஆரம்பித்த சில நாட்களுக்குள் மீண்டும் என்னிடம் தொடர்பு கொண்டார். அடிக்கடி என்னிடம் வந்து பேசிக்கொண்டிருப்பார். மிக நெருக்கமான பழக்கம் ஏற்பட்டது. என்னால் முடிந்தளவு பண உதவி செய்வதுண்டு. அச்சமயத்தில்தான் அவருக்கு பி.சுந்தரய்யாவுடன் தொடர்பேற்பட்டிருந்தது. சுந்தரய்யா அப்பொழுது சென்னையில் ஏ.எஸ்.கே.அய்யங்காருடன் சேர்ந்து ‘தொழிலாளர் பாதுகாப்புக்குழு’ என்ற அமைப்பை ஆரம்பித்திருந்தார். சில மாதங்கள் கழிந்த பின் நானும் அந்த பாதுகாப்புக்குழு உறுப்பினரானேன். இதற்கிடையில் பலருக்கு கடன் கொடுத்து பாக்கியை வசூலிக்க முடியாமற் போனதால், இனி வியாபாரம் செய்ய லாயக்கில்லை என்று முடிவு செய்து நெய் வியாபாரத்தை நிறுத்திவிட்டேன். காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியில் சேர ஜீவா ஒப்புக் கொண்டார் - பி.ராமமூர்த்தி -ஜனவரி 14, 2020 […] 1934ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி மீதிருந்த தடை நீக்கப்பட்டது. தனிநபர் சத்தியாகிரஹப் போராட்டமும் நிறுத்தப்பட்டது. அவ்வருடத்தில்தான் முதன்முறையாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலக்குழு உறுப்பினரானேன். முத்துரெங்க முதலியார் மாநிலக் கமிட்டியின் தலைவர். அவ்வருட இறுதியில் பாட்னாவில் காங்கிரஸ் மாநாடு நடந்தது. அதற்கு நானும் ஒரு பிரதிநிதியாகச் சென்றிருந்தேன். இம்மாநாட்டில் கலந்து கொண்ட ஜெயப்பிரகாஷ் நாராயணன், டாக்டர் சம்பூர்ணானந்த், ஆச்சார்யா நரேந்திரதேவ், அச்சுதப்பட்டவர்த்தன், தினகர்மேத்தா, எம்.ஆர்.மசானி, யூசுப் மெஹ்ரலி முதலியோரின் முயற்சியால் காங்கிரஸ் மாநாட்டையொட்டி ஒரு தனி மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில்தான் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி உருவானது. இதில் நானும் கலந்து கொண்டேன். இதைத்தொடர்ந்து தமிழகத்தில் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி நடவடிக்கை எதுவும் இல்லை. அதன்பின்தான் “தீவிர இளைஞர்கள் மாநாடு” ஒன்றை சென்னையில் நடத்தினோம். இம்மாநாட்டிற்கு, மீரட் சதி வழக்கில் சம்பந்தப்பட்ட ஆர்.எஸ்.நிம்கர் தலைமை வகித்தார். சுந்தரய்யா, மனிபென்காரா, எச்.டி.ராஜா, பி.எஸ்.ஆர்.முதலியோர் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர். இம்மாநாடு முடிந்த சில நாட்களில் சென்னைக்கு வரவிருந்த டாக்டர் ராஜேந்திர பிரசாத்துக்கு அளிக்கும் வரவேற்பில் கலந்து கொள்வதா, வேண்டாமா என்ற விஷயம் குறித்து மாநாட்டில் பலத்த விவாதம் நடைபெற்றது. சுந்தரய்யாவின் யோசனைப்படி, இவ்வரவேற்பில் கலந்து கொள்ளக்கூடாது என்று பி.எஸ்.ஆரும் இன்னும் சிலரும் வாதித்தனர். இதை நான் எதிர்த்தேன். பெருந்திரளான மக்கள் அதிலும் அரசியல் மனோபாவங்கொண்ட மக்கள் கூடும்பொழுது, இத்தகைய மக்களுடன் நெருங்கியிருந்தால்தான் அவர்கள் நமது கருத்துக்காதரவாகத் திரட்ட முடியுமென்று நான் கூறி வரவேற்பில் கலந்து கொள்ள வேண்டுமென்றேன். இறுதியில் என்னுடைய தீர்மானத்தை மாநாடு ஏற்றுக் கொண்டது. இம்மாநாடு முடிந்த பின் சுந்தரய்யா “ராமமூர்த்தி காங்கிரஸ்காரர், அவரிடம் எச்சரிக்கையாக இரு” என்று பி.எஸ்.ஆரை எச்சரித்திருக்கிறார். சில தினங்கள் கழித்து சென்னைக்கு வந்த ராஜேந்திர பிரசாத்துக்கு சென்ட்ரல் ரயில்நிலையத்தில் அளிக்கப்பட்ட மிகப்பெரும் வரவேற்பில் நானும் கலந்து கொண்டேன். மீரட் மாநாடு காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் இரண்டாவது மாநாடு மீரட் நகரில் நடைபெற்றது. அதில் நான் கலந்து கொண்டேன். இம்மாநாட்டில் அஜய்கோஷ், இ.எம்.எஸ்.நம்பூதிரிபாத் மற்றும் பல தோழர்களைச் சந்தித்தேன். அஜய்கோஷ் மாறுபெயரிலிருந்தார். “மார்க்சிஸ்ட் இலக்கியங்களை உனக்கு அனுப்புகிறேன். படி” என்று அஜய் என்னிடம் கூறினார். மத்திய நிர்வாகக்குழுவிற்கு இ.எம்.எஸ். தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழகத்தின் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியை உருவாக்க நான் பொறுப்பேற்றுக் கொண்டு சென்னைக்குத் திரும்பினேன். இச்சமயத்தில்தான் 1934ஆம் ஆண்டில் நடைபெற்ற சர்வதேச கம்யூனிஸ்ட் அகிலத்தின் மாநாட்டு முடிவின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட ‘பிராட்லி - தத் அறிக்கை’ இந்தியாவிற்கு வந்தது. பாசிசத்திற்கெதிராக ஐக்கிய முன்னணி அமைப்பது பற்றி டிமிட்ரோவின் தத்துவ நிலையையும், காலனி நாடுகளில் ஏகாதிபத்தியத்திற்கெதிராக, அனைத்து ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளையும் கொண்ட ஐக்கிய முன்னணியை உருவாக்க வேண்டுமென்ற வாங் மிங் தத்துவ நிலையையும் அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது பிராட்லி - தத் அறிக்கை. இந்தியாவிலிருந்த கம்யூனிஸ்ட் குழுவிற்காக அனுப்பப்பட்ட இந்த அறிக்கை வந்து சேர்ந்தவுடன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நடைமுறை உத்தி மாற்றப்பட்டது. ஆந்திராவில் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியை அமைக்க சுந்தரய்யா வேலை செய்தார். சென்னையில் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியில் வேலை செய்ய பி.எஸ்.ஆர். ஒப்புக் கொண்டார். சென்னையில் பி.எஸ்.ஆரும் நானும் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியை உருவாக்குவதில் முனைந்தோம். காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியில் கம்யூனிஸ்ட்டுகளும் சேர்ந்து பணியாற்றுவதை ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஏற்றுக் கொண்டார். ஆனால் மசானியும் மற்றும் சிலரும் எதிர்த்தார்கள். ஈரோட்டுப் பாதை 1926ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்ற சுயராஜ்யக் கட்சி மந்திரி சபை பதவியை ஏற்காததால், ஜஸ்டிஸ் கட்சியைச் சேர்ந்த முனுசாமி நாயுடு முதலமைச்சரானார். அவர் ‘வகுப்புவாரி பிரதிநிதித்துவ மசோதா’ ஒன்றைக் கொண்டுவந்தார். அதன்படி, அரசாங்க வேலைகளில் பிராமணர்கள் அதிகமாயிருக்கிறார்கள் என்று கூறி அரசாங்க வேலைகளுக்கு ஆள் எடுப்பதில் 1 பிராமணர், 2 பிராமணரல்லாதவர்கள், 1 கிறிஸ்தவர் அல்லது முஸ்லிம் என்ற விகிதத்தில் இருக்க வேண்டும் என்று கூறி ஒரு மசோதாவைக் கொண்டு வந்தார். சுயராஜ்யக் கட்சியின் சார்பில் சத்தியமூர்த்தி அந்த மசோதாவை எதிர்த்தார். சத்தியமூர்த்தி இம்மசோதாவை எதிர்த்ததைக் கண்ட ஈவெரா கோபம் அடைந்தார். காங்கிரஸ் பிராமணர்கள் ஆதிக்கம் நிறைந்தது. பிராமணர்கள் ஆதிக்கம் செலுத்தத்தான் சுயராஜ்யம் கேட்கிறார்கள் என்று கூறி வகுப்புவாரி பிரதிநிதித்துவ மசோதாவை வரவேற்றார். அந்நேரத்திலேயே, பெரியார் ஈவெரா சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்த பிறகு கலப்புமணம், புரோகிதர் இல்லாத திருமணம், பெண் விடுதலை, சமூக சீர்திருத்தங்களை ஆரம்பித்து இறுதியில் நாஸ்திகப் பிரச்சாரம் செய்து வந்தார். 1930ம் ஆண்டு ஈவெராவும் எஸ்.ராமநாதனும் இங்கிலாந்துக்குச் சென்றிருந்தார்கள். அங்கே, கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவராக விளங்கிய சபூர்ஜி சக்லத்வாலாவைச் சந்தித்து ‘குடியரசு’ பத்திரிகையில் வெளியான கட்டுரைகளின் மொழிபெயர்ப்பைக் கொடுத்தார். சக்லத்வாலாவின் கடிதத்துடன் அவ்விருவரும் சோவியத் ரஷ்யாவிற்குச் சென்றார்கள். சோவியத் ரஷ்யாவில் ஸ்டாலின் தலைமையில் ஏற்பட்டிருந்த முன்னேற்றமும், ஜாதி, மத, இன பாகுபாடற்ற ஒரு சோசலிஸ்ட் சமூக அமைப்பும் ஈவெராவை மிகவும் கவர்ந்திருந்தது. எனவே சோவியத் ரஷ்யாவிலிருந்து திரும்பியவுடன் பலமான சோசலிஸ்ட் பிரச்சாரத்தை நடத்த ஆரம்பித்தார். 1931ல் ஈரோட்டில் ஒரு மாநாடு கூட்டி “ஈரோட்டுப்பாதை” என்று தீர்மானத்தை நிறைவேற்றினார். கடவுள் மறுப்பு மாநாடு. ஜாதி ஒழிப்பு மாநாடு, லேவாதேவி ஒழிப்பு மாநாடு, ஜமீன்தார் ஒழிப்பு மாநாடு, முதலாளித்துவ ஒழிப்பு மாநாடு முதலிய பல மாநாடுகளை தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் நடத்தினார். இது ஏராளமான வாலிபர்களைக் கவர்ந்திழுத்தது. ஈவெராவின் சோசலிஸ்ட் பிரச்சாரத்தை விரும்பாத ஆங்கிலேய அரசு, இப்பிரச்சாரத்தை ஈவெரா நிறுத்த வேண்டுமென்று ஜஸ்டிஸ் கட்சியிலிருந்த ஈவெராவின் நண்பர்கள் மூலம் சொல்லி அனுப்பியது. இப்பிரச்சாரத்தை நிறுத்தவில்லையென்றால், ஈவெராவும் மற்றும் பலரும் சிறையிலடைக்கப்படுவார்கள் என்று கூறியதால், ஈவெரா சோஷலிஸ்ட் பிரச்சாரத்தை நிறுத்திவிட்டு, சமூகப் பிரச்சாரம், நாஸ்திகப் பிரச்சாரம், பிராமணர் எதிர்ப்பு மாநாடு போன்றவற்றில் மட்டும் ஈடுபட்டார். ஜீவாவுடன் தொடர்பு “ஈரோட்டுப் பாதை”யை ஈவெரா கைவிட்ட பின், அதிலிருந்த சில முக்கியமான தோழர்களான ப.ஜீவானந்தம், எஸ்.ராமநாதன் ஆகியோர் 1934ல் “சுயமரியாதை சோசலிஸ்ட் கட்சி” என்ற தனிக்கட்சியை ஆரம்பித்து, ஒரு மாநாட்டையும் நடத்தினார்கள். ஜீவாவுடன் அப்பொழுதுதான் நான் தொடர்புகொண்டு பல முறை விவாதங்கள் நடத்தி, அதன்பின் அவர் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியில் சேர ஒத்துக் கொண்டார். அவர்களுடைய இரண்டாவது மாநாட்டை 1935ம் ஆண்டு திருச்சியில் நடத்தினார்கள். இம்மாநாட்டிற்கு டாங்கேயை வரவழைத்திருந்தார்கள். அம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட ஒரே ஒரு தீர்மானம் ‘சுயமரியாதை சோசலிஸ்ட் கட்சியைக் கலைத்துவிட்டு அதன் உறுப்பினர்கள் அனைவரும் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியில் சேர வேண்டும்’ என்பதே. எனவே அந்தத் தீர்மானத்தின்படி ஜீவாவும், கே.முருகேசனும் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியில் சேர்ந்தனர். வெகுவிரைவிலேயே ஜீவா, காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் மிக முக்கியத் தலைவர்களில் ஒருவராக ஆனார். பாசிச சக்திகள் தலைதூக்கிய காலம் - பி.ராமமூர்த்தி -ஜனவரி 15, 2020 […] 1934ம் ஆண்டு ஐரோ ப்பாவில் பாசிச சக்திகள் தலை தூக்கி வந்த காலம். பாசிசத்தை எதிர்த்துப் போராடி அதை ஒழிக்க வேண்டியது கம்யூனிஸ்டுகளுடைய, முற் போக்காளர்களுடைய முதற்கடமை என உணர்த்தி வந்த காலம். எனவே 1935ம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச கம்யூ னிஸ்ட் அகிலத்தின் மாநாட்டில் ஜார்ஜ் டிமிட்ரோவ் பாசி சத்திற்கெதிரான போராட்டம் பற்றிய ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்து, அது ஏகமனதாக ஏற்கப்பட்டது. அதில் ஹிட்லர், முசோலினி அதிகாரத்திற்கு வந்த பின்னால், எவ்வாறு பாசிச சக்திகள் பலமடைந்து வரு கின்றன என்பது எடுத்துக்கூறப்பட்டு, அது பரவாமல் தடுத்து நிறுத்தப்பட வேண்டுமானால், ஐரோப்பிய கம்யூ னிஸ்ட் கட்சிகள் பாசிசத்திற்கெதிராக ஒரு பரந்துபட்ட முன்னணியை உருவாக்க வேண்டுமென்ற வழிமுறை ஏற்றுக் கொள்ளப்பட்டது. அத்துடன் ஹிட்லரின் ஆதிக்க விஸ்தரிப்பைத் தடுப்ப தற்கு தயாராக இருக்கக்கூடிய எந்தவொரு ஐரோப்பிய ஏகாதிபத்திய அரசோடும், ராணுவக் கூட்டு ஒப்பந்தம் செய்துகொள்ள சோவியத் யூனியன் தயாராக இருந்தது. எனவே ஐரோப்பிய கம்யூனிஸ்டுக் கட்சிகள் அத்தகைய தொரு கூட்டு ஒப்பந்தத்திற்குப் பாடுபட்டன. இதே சமயத்தில்தான் ஸ்பெயின் நாட்டின் கம்யூ னிஸ்ட் கட்சியும், சோசலிஸ்ட் கட்சியும் வேறு சில ஜன நாயகவாதிகளும் ஒன்றுபட்டு ஒரு மக்கள் முன்னணியை உருவாக்கி தேர்தலில் போட்டியிட்டு பெரும்பான்மையி டங்களைப் பிடித்து, ‘மக்கள் முன்னணி’ அரசாங்கத்தை அமைத்தனர். இந்த மக்கள் முன்னணி அரசு சில முக்கியமான சீர்திருத்தங்களைச் செய்தது. குறிப்பாக ‘லாட்டி பண்ட்டா’ என்று சொல்லக்கூடிய பெரிய நிலப் பிரபுக்களின் எஸ்டேட்டுகளை உடைத்து நிலச்சீர்திருத் தம் செய்தது. இதைக்கண்ட அந்நாட்டின் பிற்போக்குச் சக்திகள், நிலப்பிரபுக்கள், கத்தோலிக்க சர்ச் ஆகியவை, ராணு வத்தில் ஒரு ஜெனரலாக இருந்த பிராங்கோ என்ற கடைந்தெடுத்த பிற்போக்குவாதி மூலம், ராணுவத்தின் ஒரு பகுதியை உடைத்து, மக்கள் முன்னணி அரசாங்கம் மீது யுத்தம் தொடுத்தனர்; உள்நாட்டு யுத்தத்தை உரு வாக்கினர். பிராங்கோவின் இந்த பிற்போக்குக் கலகப் படையினருக்கு ஹிட்லரும், முசோலினியும் ஆயுதங்க ளை அனுப்பி உதவினார்கள். மக்கள் முன்னணி அரசாங்கத்தைப் பாதுகாத்து, பாசிசத்தை முறியடிக்க வேண்டுமென்ற எண்ணம் படைத்த பல்வேறு தேசங்களிலிருந்த கம்யூனிஸ்டுக ளும், இதர முற்போக்காளர்களும் ஒரு சர்வதேச தொண் டர்படையை அமைத்தனர். இந்தத் தொண்டர் படையி னர் ஸ்பெயினுக்குச் சென்று பிராங்கோவின் கலவரப் படைக்கெதிராக ஆயுதங்தாங்கி போராடினர். அச்சமயத்தில் இங்கிலாந்திற்குச் சென்றிருந்த ஜவ ஹர்லால் நேரு, மக்கள் முன்னணி அரசுக்கு ஆதர வாக, ஸ்பெயினில் உள்ள பார்சலோனா என்ற இடத்திற் குப் போய், உள்நாட்டு யுத்தத்தைப் பார்த்து இந்தியா விற்குத் திரும்பி வந்தார். திரும்பி வந்தவுடன் லக்னோ வில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைமை வகித்துப் பேசுகையில், ஸ்பானிஷ் உள்நாட்டு யுத்தத்தைப் பற்றிக்குறிப்பிட்டு இந்திய தேசிய காங்கிரஸ், மக்கள் முன்னணி அரசுக்கு ஆதரவாக நிற்க வேண்டுமென்று வற் புறுத்தினார். ‘ஸ்பானிஷ் உதவி நிதி’ வசூலிக்க வேண்டு மென்று கூறினார். காங்கிரசின் மூத்த தலைவர்கள் யாரும் இதில் அக்கறை காட்டவில்லை. ஆனால் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி இதில் அக்கறை எடுத்து உதவி நிதி வசூல் செய்தது. தமிழ்நாட்டில் சில ஆயிரம் ரூபாய்கள் வசூல் செய்தோம். நான் சென்னையில் பல இடங்களுக்கும் சென்று பணவசூல் செய்து வந்தேன். முன்பின் தெரியாத பலரிடம் சென்று ஸ்பானிஷ் உள்நாட்டு யுத்தத்தைப் பற்றிப் பேசி பண வசூல் செய்துவந்தேன். இதை ஒரு அரசி யல் பிரச்சாரமாகவே செய்துவந்தோம். தம்புச்செட்டி தெரு வில், பல கடைக்காரர்களிடம் போய் பணவசூல் செய்து வரும் பொழுது அங்கிருந்த டி.டி.கிருஷ்ணமாச்சாரி அண்ட் கம்பெனிக்குள்ளும் நுழைந்து, அக்கம்பெனியின் உரிமையாளரான டி.டி.கிருஷ்ணமாச்சாரியை பார்க்க வேண்டுமென்று கூறி ஒரு சிறிய தாளில் என் பெயரை எழுதி அனுப்பினேன். கிருஷ்ணமாச்சாரியும் உள்ளே வரும்படி அழைத்தார். அவரிடமும் நான் ஸ்பானிஷ் உள்நாட்டு யுத்தத்தைப் பற்றிக் கூறிப் பணம்கேட்டேன். டி.டி.கிருஷ்ணமாச்சாரி அச்சமயத்தில் சென்னையில் பிரபல வர்த்தகர்களுள் ஒருவர். அரசியலுக்கு சம்பந்தப் படாதவர். நான் கூறிய விஷயங்கள் அவருக்குப் புதுமை யாக இருந்தன. “என்ன தம்பி, எங்கேயோ ஸ்பெயினில் சண்டை போடுகிறார்கள்; நீங்க ஏன் அதற்கு பணம் வசூலிக்க வேண்டும்? நமக்கும் அதற்கும் என்ன சம்பந்தம்” என்ற பல கேள்விகள் கேட்டார். நான் அவருக்கு பாசிசத்தைப் பற்றியும், இது பரவி னால் எப்படி ஜனநாயகம் அழிக்கப்படும் என்பதைப் பற்றி யும் நீண்ட நேரம் விளக்கினேன். இறுதியில் அவர் திருப்தி யடைந்து ஆயிரம் ரூபாய்க்கு ஒரு ‘செக்’ எழுதிக் கொடுத்தார். அத்தோடு அவர் வீட்டு விலாசத்தைக் கொடுத்து, அவரைச் சந்திக்கும்படி கூறினார். இதைப் பற்றி அதிகமாக தெரிந்துகொள்ள விரும்புவதாகவும் நேரம் கிடைக்கும்பொழுதெல்லாம் அவரைச் சந்தித்துப் பேசும் படியும் கேட்டுக் கொண்டார். ஸ்பானிஷ் உதவி நிதிக்கு தமிழ்நாட்டில் மிக அதிகம் கொடுத்தவர் டி.டி.கே. மட்டுமே. பின்னர் டி.டி.கேவை நான் அடிக்கடி சந்தித்துப் பேசு வது வழக்கமாகிவிட்டது. அச்சமயத்தில் இங்கிலாந்தில் விக்டர் கோலன் ஒரு “இடதுசாரி புத்தக கிளப்” என்ற ஒரு பதிப்பகத்தை நடத்தி வந்தார். பாசிச எதிர்ப்பு, சோவி யத் ஆதரவு, இடதுசாரி ஆதரவு புத்தகங்களை இந்த கிளப் வெளியிட்டு வந்தது. அதில் உறுப்பினராக சேர்பவர்களுக்கு ஒவ்வொரு மாதத்தின் சிறப்புப் புத்தகம் ஒன்றை குறை வான விலைக்கு அனுப்புவார்கள். இந்தக் கிளப்பில் சேரும்படி டி.டி.கே.யிடம் கூறி, அவர் அதில் உறுப்பினரா னார். ஜீவா, காட்டே, பி.எஸ்.ஆர். ஆகியோருக்கு டி.டி. கே யை அறிமுகப்படுத்தி வைத்தேன். பாண்டிச்சேரி தென்னிந்தியாவில் முதலில் உருவான கம்யூனிஸ்ட் இயக்கம் - என்.ராமகிருஷ்ணன் -ஜனவரி 17, 2020 […] 1933ஆம் ஆண்டில் தென்னிந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை உருவாக்குவதற்காக அனுப்பப்பட்ட தோழர் அமீர் ஹைதர்கான் முதலில் சென்னைக்கு வந்தார். மிகுந்த சிரமப்பட்டு பல இளைஞர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு மார்க்சியத்தை குறித்து எடுத்துக்கூறி கம்யூனிஸ்ட்டாக்கினார். அவர்களில் ஒருவர் பிரபல இளம் தேச பக்தர் பாஷ்யம் ஆவார். நள்ளிரவில் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் பறந்து கொண்டிருந்த ஆங்கிலேய அரசாங்கத்தின் யூனியன் ஜாக் கொடியை கீழிறக்கி தேசியக் கொடியை பறக்கவிட்டவர் அவர். அதற்காக கடுங்காவல் தண்டனை அனுபவித்தவரும் கூட. இப்பொழுது அமீர் ஹைதர்கான் அவரிடம் தேசபக்தி மிக்க துணிச்சலான இளைஞர்கள் பற்றி கேட்டபொழுது அவர் பாண்டிச்சேரியில் உள்ள தன் நண்பர் வ.சுப்பையா பற்றி கூறியதும் அமீர் ஹைதர்கான் அவரை அழைத்து வரும்படி கேட்டுக் கொண்டார். வ.சுப்பையா பற்றி சிறிது கூற வேண்டியது அவசியம். அவர் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவராக இருந்தபொழுது மார்க்சிய சிந்தனையாளர் சிங்காரவேலர் எழுதிய நூல்களை படிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. ‘லெனின் வரலாறு’ போன்ற சிங்காரவேலரின் நூல்கள் சுப்பையா மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. அதேபோன்று ரஷ்யப் புரட்சி போன்ற நூல்களும் அவர் மனதைக் கவர்ந்தன. அவர் பாண்டிச்சேரியில் ‘பிரஞ்சிந்திய வாலிபர் சங்கம்’, ‘ராமகிருஷ்ண வாசகசாலை’ போன்ற அமைப்புகளை உருவாக்கி மாணவர்களையும், இளைஞர்களையும் தேசிய இயக்கத்துக்கு ஆதரவாக திரட்டி வந்தார். மகாத்மா காந்தியினால் ஈர்க்கப்பட்டு ‘ஹரிஜன சேவா சங்கம்’ என்ற அமைப்பைத் துவக்கி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பெரும் சேவை புரிந்தார். ஹரிஜன சேவா சங்கத்தின் செயலாளராக செயல்பட்டபொழுது அவருக்கு புதுவை தொழிலாளர்களுடன் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. அந்த தொழிலாளி மக்களில் பெரும்பாலானோர் தாழ்த்தப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். குறைந்த கூலியில் அவர்கள் தினமும் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டியிருந்தது அவர் மனதை உறுத்தியது. 1934ல் மகாத்மாவை பாண்டிச்சேரிக்கு அழைத்து வந்து பெரும் வரவேற்பு கொடுத்தார். சுதந்திரப் போராட்ட இயக்கம் அவரை இளம் வயதிலேயே பாண்டிச்சேரியில் பெரிய தலைவராக்கியது. அச்சமயத்தில் பாண்டிச்சேரி மற்றும் காரைக்கால் போன்றவை பிரெஞ்சு நாட்டின் காலனியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இப்பொழுது அமீர் ஹைதர்கான் கேட்டுக் கொண்டபடி தேச பக்தர் பாஷ்யம், சுப்பையாவை சென்னைக்கு அழைத்து வந்தார். சென்னை ராயப்பேட்டை இந்திய ஊழியர் சங்க கட்டிடத்தில் அச்சமயம் அமீர் ஹைதர்கான் தங்கியிருந்தார். அங்கே சுப்பையா அவரை சந்தித்துப் பேசினார். அன்று முழுவதும் ஹைதர்கான் மார்க்சியம் குறித்தும், கம்யூனிஸ்ட் கட்சி குறித்தும் தொழிலாளி வர்க்கத்தை அரசியல்ரீதியாக திரட்டி வர்க்கப் போராட்டத்தை நடத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் விரிவாக விளக்கினார். இது சுப்பையாவை மிகவும் ஈர்த்தது. மார்க்சியம் தான் மனிதகுலத்தை வாழ்விக்கும், உயர்த்தும் என்ற கருத்து சுப்பையாவின் மனதில் ஆழப்பதிந்தது. மார்க்சியத்தை மேலும் தெரிந்துகொண்டு தொழிலாளி வர்க்கத்தை திரட்டும் பணியில் உறுதியாக ஈடுபடுவதாக சுப்பையா ஹைதர்கானுக்கு உறுதியளித்தார். அமீர் ஹைதர்கானுடன் இருந்த இளம் கம்யூனிஸ்ட் நரசிம்மன் என்பவர் சுப்பையாவுக்கு ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’, ‘மாக்சிம் கார்க்கியின் ‘தாய்’, ஜான்ரீடு எழுதிய ‘உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்’ போன்ற நூல்களை கொடுத்தார். இவையும் சுப்பையாவை ஈர்த்தன. மார்க்சியத்தால் ஈர்க்கப்பட்ட சுப்பையா 1934ஆம் ஆண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரானார். அதைத் தொடர்ந்து புதுச்சேரியில் ரகசியமாக கட்சிக்கிளையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டார். தென்னிந்தியாவில் முதலில் கம்யூனிஸ்ட் கட்சிக்கிளை உருவாக்கப்பட்டது பாண்டிச்சேரியில்தான் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அதன் பின்னர்தான் மலபாரிலும், சென்னையிலும், ஆந்திராவிலும் கம்யூனிஸ்ட் கட்சி கிளைகள் உருவாக்கப்பட்டன. பாண்டிச்சேரிக்கு வந்த சுப்பையா தொழிலாளர்களை திரட்டும் பணியில் இறங்கினார். அச்சமயத்தில் புதுச்சேரியில் ‘சவானா மில்’, ‘ரோடியர் மில்’ மற்றும் ‘கெப்ளே மில்’ ஆகியவற்றில் பத்தாயிரத்திற்கும் அதிகமான தொழிலாளிகள் வேலை செய்து வந்தனர். அவற்றில் வேலை செய்யும் தொழிலாளிகள் தினமும் 12 மணி நேரம் வேலைசெய்ய வேண்டியிருந்தது. சங்கம் வைக்கும் உரிமை அவர்களுக்கு கிடையாது. சொல்லமுடியாத அடக்குமுறைகள், சமூகக் கொடுமைகளை அவர்கள் தினமும் சந்திக்க வேண்டியிருந்தது. சம்பளமோ குறைவு. இப்பொழுது சுப்பையா தினமும் மில் வாயில்களுக்குப் போய் அந்தத் தொழிலாளர்களிடம் அவர்களுடைய சிரமமான வாழ்க்கை நிலைமை, போதுமான குடியிருப்பு இல்லாதது, தினமும் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டிய அவல நிலைமை போன்றவற்றை விளக்கி அவர்கள் தங்கள் நல்வாழ்வுக்காக ஒன்றுபட்டு போராட வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்கூறி அவர்களை தொழிற்சங்க இயக்கத்தில் சேர்த்தார். சங்கத்திற்கு பல ஊழியர்கள் கிடைத்தனர். சுப்பையா அவர்களையும் கம்யூனிஸ்ட்டாக்கினார். பாண்டிச்சேரி இன்னுயிர் ஈந்து கோரிக்கை வென்ற மில் தொழிலாளிகள் - என்.ராமகிருஷ்ணன் -ஜனவரி 18, 2020 […] 1936ஆம் ஆண்டு மே மாதத்தில் தொழிலாளர்களின் பொதுக்கூட்டம் ஒன்றை பாண்டிச்சேரியில் நடத்துவதற்கு தொழிற்சங்கம் அனுமதி கோரியது. ஆனால் புதுவையின் பிரெஞ்சு நிர்வாகம் கூட்டம் நடத்தத் தடை விதித்தது. எனவே ஏராளமான தொழிலாளிகள் வில்லியனூர் பகுதியைத் தாண்டி இந்திய எல்லைக்குள்ளிருந்த பொம்மை என்ற இடத்தில் கூட்டத்தை நடத்தினர். இக்கூட்டத்தில் சுப்பையாவுடன் தொழிற்சங்கத் தலைவர் வி.வி.கிரியும் கலந்து கொண்டு உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விபரங்களை அறிந்த மில் நிர்வாகங்கள் ஆத்திரமடைந்தன. தொழிலாளர்களைப் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டன. நெருக்கடியை உருவாக்கத் தொடங்கின. தொழிலாளர்கள் ஒன்றுபட்டு இந்த நடவடிக்கைகளை எதிர்த்தனர். தொழிலாளரை ரத்த வெள்ளத்தில் ஆழ்த்தி தொழிற்சங்க இயக்கத்தை அழித்தே தீருவது என்ற வெறித்தனமான போக்கில் மில் நிர்வாகங்களும் பிரெஞ்சு ஆட்சியாளர்களும் அதற்குரிய நாளை எதிர்பார்த்திருந்தனர். அந்த நாளும் விரைவிலேயே வந்தது. 1936ஆம் ஆண்டு மே மாதத்தில் தொழிலாளர்களின் பொதுக்கூட்டம் ஒன்றை பாண்டிச்சேரியில் நடத்துவதற்கு தொழிற்சங்கம் அனுமதி கோரியது. ஆனால் புதுவையின் பிரெஞ்சு நிர்வாகம் கூட்டம் நடத்தத் தடை விதித்தது. எனவே ஏராளமான தொழிலாளிகள் வில்லியனூர் பகுதியைத் தாண்டி இந்திய எல்லைக்குள்ளிருந்த பொம்மை என்ற இடத்தில் கூட்டத்தை நடத்தினர். இக்கூட்டத்தில் சுப்பையாவுடன் தொழிற்சங்கத் தலைவர் வி.வி.கிரியும் கலந்து கொண்டு உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விபரங்களை அறிந்த மில் நிர்வாகங்கள் ஆத்திரமடைந்தன. தொழிலாளர்களைப் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டன. நெருக்கடியை உருவாக்கத் தொடங்கின. தொழிலாளர்கள் ஒன்றுபட்டு இந்த நடவடிக்கைகளை எதிர்த்தனர். தொழிலாளரை ரத்த வெள்ளத்தில் ஆழ்த்தி தொழிற்சங்க இயக்கத்தை அழித்தே தீருவது என்ற வெறித்தனமான போக்கில் மில் நிர்வாகங்களும் பிரெஞ்சு ஆட்சியாளர்களும் அதற்குரிய நாளை எதிர்பார்த்திருந்தனர். அந்த நாளும் விரைவிலேயே வந்தது. 1.அமலோற்பவ நாதன், 2.ராஜமாணிக்கம், 3.கோவிந்தசாமி, 4.ஜெயராமன், 5.சுப்புராயன், 6.சின்னையன், 7.பெருமாள், 8.வீராசாமி, 9.மதுரை, 10.ஏழுமலை, 11. குப்புசாமி, 12. ராஜகோபால் இந்த கொடூரமான படுகொலையைக் கண்டித்து இந்தியாவில் மட்டுமல்ல, பிரான்ஸ் நாட்டிலும் கண்டனக் குரல்கள் ஒலித்தது. புதுவை நகரம் இரண்டு நாட்கள் கதவடைப்பு செய்து வெறிச்சோடிக் கிடந்தது. பிரெஞ்சு நாடாளுமன்றத்தில் இருந்த கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் இந்த படுகொலைகளை கண்டித்து ஆவேசமான முழக்கங்கள் எழுப்பினார்கள். அடுத்த சில வாரங்களில் பிரெஞ்சு நாடாளுமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் சோசலிஸ்ட் கட்சி படுதோல்வியடைந்தது. ‘மக்கள் முன்னணி ஆட்சி’ உருவானது. வெற்றி பெற்ற கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் பாண்டிச்சேரி தொழிலாளி வர்க்கம் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டுமென்றும் அவர்களுக்கு தொழிற்சங்க உரிமைகள் அளிக்கப்பட வேண்டுமென்றும் கோரிக்கைகள் எழுப்பினர். இந்தப் பின்னணியில் ஏஐடியுசியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் தலைவர் ஜவஹர்லால் நேரு அக்டோபர் 17ஆம் தேதி பாண்டிச்சேரிக்கு வந்தார். துப்பாக்கிச்சூட்டில் 12 தொழிலாளிகள் கொல்லப்பட்ட இடத்திற்குச் சென்று அவர்கள் நினைவிற்கு மலரஞ்சலி செய்தார். சுப்பையா அவருக்கு பாண்டிச்சேரி நிலைமையை விளக்கினார். அதைக் கேட்ட நேரு சுப்பையாவுக்கு ஒரு ஆலோசனை கூறினார். அதன்படி சுப்பையா பாரீஸ் சென்று அங்குள்ள அரசாங்கத் தலைவர்களிடம் பாண்டிச்சேரி நிலையை பற்றி எடுத்துக்கூற வேண்டுமென்று கூறியதோடு, பாரில் இருந்த தனது நண்பர்கள் சிலருக்கு அறிமுகக் கடிதம் எழுதிக் கொடுத்து அனுப்பினார். அதை யேற்ற சுப்பையா 1937ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பாரிஸ் சென்று அங்கே மக்கள் முன்னணி தலைவர்களையும் கம்யூ னிஸ்ட் தலைவரான மாரிஸ்தோரேவையும், நாடாளுமன்ற கம்யூ னிஸ்ட் உறுப்பினர்களையும் சந்தித்துப் பேசி பாண்டிச்சேரி தொழி லாளர்களுக்கு உரிமை கிடைக்கச் செய்யுமாறு கேட்டுக் கொண்டார். இத்தகைய நிர்ப்பந்தத்தின் விளைவாக புதிய பிரெஞ்சு அரசாங்கம் ஏப்ரல் 6ஆம் தேதியன்று ஒரு உத்தரவிட்டது. தொழிற்சங்கம் அமைக்கும் உரிமைச் சட்டம், தொழிலாளர் பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றை பிரெஞ்சு இந்தியாவில் அமலாக்க ஆணையிட்டது. இந்த உரிமை கொடுக்கப்பட்டதால் அதுவரை அமலில் இல்லாத பேச்சுரிமை, எழுத்துரிமை கொடுக்கப்பட்டது. பொதுக்கூட்டம் நடத்த இருந்த தடை உத்தரவு போன்றவை நீக்கப்பட்டன. இதன் மற்றொரு சிறப்பானது ஆசியக் கண்டத்திலேயே முதன் முதலாக தொழிலாளிகளுக்கு எட்டு மணி நேர வேலை என்பதை கிடைக்கச் செய்தது. அதன் விபரமாவது: 1. தொழிலாளர்களுக்கு சங்கம் அமைக்கும் உரிமை உண்டு, 2. தொழிலாளர்களுக்கு கோரிக்கைகள் மீது வேலைநிறுத்தம் செய்யும் உரிமையும் உண்டு, 3. 1938 ஜனவரியில் இருந்து 8 மணி நேர வேலை நாள் அமல்படுத்தப்படும், 4. கூடுதல் நேர வேலைக்கு பகலில் ஒன்றரை மடங்கு இரவில் 2 மடங்கு ஊதியம் வழங்கப்படும், 5. பெண்களுக்கு இரவு நேர வேலை கிடையாது 6. பெண் தொழிலாளர்களுக்கு பேறுகால விடுமுறை, எட்டு வாரம் தினமும் அரை நாள் ஊதியத்துடன், 7. வாரம் ஒருநாள் கட்டாய விடுப்பு, 8. தொழிற்சாலை உரிமையாளர்கள் இதனை அமல்படுத்த வேண்டும் மீறினால் கடுமையான தண்டனை. கம்யூனிஸ்ட்டுகள் தலைமையில் பாண்டிச்சேரி வீரத் தொழிலாளர் தம் இன்னுயிர் ஈந்து பெற்ற வெற்றி ஆசியாக் கண்டத்திலேயே முதன் முதலாக பெற்ற வெற்றியாகும். எந்த சிக்காக்கோ தொழிலாளர்கள் எட்டு மணி நேர வேலைக்காக தூக்கு மேடை ஏறினார்களோ, அதை தமது ரத்தத் தியாகம் மூலம் பாண்டிச்சேரி தொழிலாளி வர்க்கம் கம்யூனிஸ்ட்டுகள் தலைமையில் பெற்ற வெற்றி மகத்தானது, போற்றுதலுக்குரியது. இந்த வெற்றியுடன் பாரீசிலிருந்து திரும்பிய தோழர் வ.சுப்பையாவுக்கு பாண்டிச்சேரி மாபெரும் வரவேற்பு அளித்தது. காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியும் கம்யூனிஸ்ட்டுகளும் - இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் -ஜனவரி 19, 2020 […] இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாற்றில் பிரிக்க முடியாத அத்தியாயம் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி. இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்களில் ஒருவரான இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் முதல் தமிழகத்தில் விடுதலைப் போராட்ட வீரர்களான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் வரை காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் தளகர்த்தர்களாக திகழ்ந்து, தொழிற்சங்கங்களை வழிநடத்தி, தொழிலாளர் வர்க்கத்தை விடுதலைப் போராட்டத்தில் பிரம்மாண்டமான பேரியக்கமாக ஈடுபடச் செய்து, பூரண சுயராஜ்ஜியம் என்ற முழக்கத்தை முதன்முதலில் முழங்கச் செய்து, கம்யூனிச இயக்கத்தை முன்னேறச் செய்த அடிப்படையான இயக்கம் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி. இக்கட்சி துவங்கியதன் 50ஆம் ஆண்டு விழா, 1985ல் கொண்டாடப்பட்டது. அதையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தத்துவார்த்த ஏடான “மார்க்சிஸ்ட்” (ஆங்கிலம்) ஏட்டில் 1985 அக்டோபர் - டிசம்பர் இதழில், கட்சியின் அன்றைய பொதுச் செயலாளரான இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் எழுதிய கட்டுரை இங்கு தரப்படுகிறது. இக்கட்டுரையில் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் ஒவ்வொரு அம்சத்தையும், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு அது எப்படி பங்காற்றியது பற்றியும் விளக்குகிறார் இஎம்எஸ். காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் துவக்கம் என்பது 1934 மே மாதம் பாட்னாவில் நடைபெற்ற ஒரு துவக்கநிலை கலந்தாலோசனை சந்திப்பில் உதயமானது என்று சொல்ல முடியும். அந்த சந்திப்பில் ஒரு அமைப்புக்குழு உருவாக்கப்பட்டது. அந்தக்குழுவின் கன்வீனராக ஜெயப்பிரகாஷ் நாராயணன் தேர்வு செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து அதே ஆண்டு அக்டோபரில் பம்பாயில் (தற்போது மும்பை) காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் கட்சியின் அமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது; தேசிய தலைமையும் தேர்வு செய்யப்பட்டது. இந்த இரண்டு நிகழ்வுகளிலும் பங்கேற்றுக் கொள்கிற வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதை நான் பெருமையாகக் கருதுகிறேன். காங்கிரஸ்காரர்களை சற்று முன்னோக்கி நகர்த்தி அவர்களில் பலரை முற்போக்குவாதிகளாக இந்த அமைப்பிற்குள்ளேயே மாற்றுவதில் ஒரு குறிப்பிடத்தக்கப் பங்கினை ஆற்றுகிற வாய்ப்பு எனக்கு கிடைத்தது என்பதை உள்ளபடியே பெருமிதத்துடன் கூறிக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். காங்கிரஸ்காரர்களை அப்படி மாற்றுவதற்கு வாய்ப்பு கிடைத்ததன் மூலம் 1930களில் ஒரு சக்திவாய்ந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு ஐக்கிய முன்னணியை உருவாக்குவதற்கான வழியும் பிறந்தது. அத்தகைய ஒரு மகத்தான சோசலிச இயக்கத்தின் அரை நூற்றாண்டு முடிகிற தருவாயில் இதை நாட்டு மக்களுக்கு சுட்டிக்காட்டி எழுதுவதில் உள்ளபடியே நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சிக்குள் இருந்து செயல்படுமாறு எனக்கு பணிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்தப் பணியை உளப்பூர்வமாக ஏற்று செயல்பட்டேன். ஏராளமான இனிய மற்றும் கசப்பான சம்பவங்கள் தொடர்பான நினைவலைகள் இன்றும் என்னை நெகிழச் செய்கின்றன. காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சிக்குள் நடத்திய அத்தகைய போராட்டங்கள்தான் என்னை, காந்தி-நேரு சித்தாந்தத்திலிருந்து மார்க்சிய சித்தாந்தத்திற்கு கொண்டு வந்தது. சில நண்பர்கள் கூடச் சொன்னார்கள், காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி உதயமானதன் 50வது ஆண்டான 1984ஐ, இந்திய சோசலிச இயக்கம் உதயமானதன் பொன்விழா ஆண்டாக கொண்டாடுமாறு! ஆனால் அத்தகையப் பார்வையை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி, இந்திய சோசலிச இயக்கத்தில் மிக முக்கியமான பங்கினை வகித்தது என்ற போதிலும், காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் துவக்கம்தான் இந்திய சோசலிச இயக்கத்தின் உதயம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்திய சோசலிச இயக்கமானது அதற்கு முந்தைய காலத்திலிருந்தே துவங்கிவிட்டது. சோசலிச இயக்கத்தின் முன்னோடிகள் இந்தியாவில் சோசலிசச் சிந்தனைகள் உருவானதும் பரப்பப்பட்டதும் 1912ஆம் ஆண்டிலிருந்தே துவங்கிவிட்டது. அந்த காலக்கட்டத்தில் சில மாத இடைவெளிக்குள் இந்தியிலும் மலையாளத்திலும் காரல்மார்க்சின் வாழ்க்கை வரலாறு வெளியிடப்பட்டுவிட்டது. இந்தியில் காரல் மார்க்சின் வாழ்க்கை வரலாற்று நூலை மாபெரும் புரட்சியாளரான லாலா ஹர்தயாள் எழுதினார். மலையாளத்தில் ராமகிருஷ்ண பிள்ளை எழுதினார். அதற்கும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பே 1908ல் இந்தியாவின் முதல் தொழிலாளி வர்க்க அரசியல் வேலைநிறுத்தம் நடைபெற்றுவிட்டது. பம்பாய் தொழிலாளி வர்க்கம், மகாராஷ்டிராவிலிருந்து இந்தியாவின் மாபெரும் தலைவராக உயர்ந்த கம்பீரமிக்க தேசியத் தலைவரான பாலகங்காதர திலகர் கைது செய்யப்பட்டு குற்றவாளி என அறிவிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டதை எதிர்த்து பிரம்மாண்டமான அரசியல் வேலைநிறுத்தத்தை நடத்தியது. இந்தியாவில் ஒரு அமைப்பு ரீதியான சோசலிச இயக்கம் உதயமாவதற்கு இந்த இரண்டு முன் நிகழ்வுகளும் அடிப்படை காரணங்களாக அமைந்தன. ஒன்று, அரசியல் ரீதியான உணர்வு பெறாத தொழிலாளி வர்க்கத்தின் எழுச்சி; மற்றொன்று மார்க்சியம் தொடர்பான அறிமுகம் கிடைக்கப்பெற்று அதைப் பிரச்சாரம் செய்யும் முனைப்பு. இந்த இரண்டும் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி உருவாக்கப்படுவதற்கு சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் உருவாகிவிட்டது. முதலாம் உலகப்போர் முடிந்த உடனே அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்தியாவில் மிகப்பெரிய அளவிலான புரட்சிகர எழுச்சிகள் நடந்தன. இந்த எழுச்சிகள், போர்க்குணமிக்க தேசிய விடுதலை இயக்கத்தை அடுத்தடுத்து முன்னோக்கிக் கொண்டு சென்றது. இந்திய விடுதலைஇயக்க வரலாற்றில் முதல் முறையாக தொழிலாளி வர்க்கமும், விவசாய வர்க்கமும் போராடிக் கொண்டிருந்த நடுத்தர வர்க்கங்களும், மகாத்மா காந்தியால் தலைமை தாங்கப்பட்ட கிலாபத் இயக்கத்திலும் ஒத்துழையாமை இயக்கத்திலும் ஆயிரம் ஆயிரமாய் அணிவகுக்கத் தொடங்கினர். தொழிற்சாலைகளில் வேலைநிறுத்தம் நடந்தன. மாநகரங்களில் முழு அடைப்பு நடந்தது. பிரம்மாண்டமான ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் நடந்த வண்ணம் இருந்தன. உழைக்கும் மக்களின் அனைத்துத் தரப்பினரும் இவற்றில் அணிதிரண்டனர். இதுவே அந்தக் காலக்கட்டத்தில் நமது தேசத்தின் அரசியல் வாழ்வின் அன்றாட காட்சிகளாக இருந்தன. இந்தப் போராட்டங்கள், போர்க்குணமிக்க பாட்டாளி வர்க்க செயல்பாட்டு வடிவமான வேலைநிறுத்தம் என்ற வடிவத்திற்கு உறுதியான முறையில் மாறின. வேலைநிறுத்தங்களை செயல்படுத்துவதற்கான அமைப்புகள் உருவாகின. தொழிற்சங்கங்கள், வேலைநிறுத்த கமிட்டிகள் அமைக்கப்பட்டன. சங்கங்கள் உருவான பின்னணியில், மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் ஆகியோரது சிந்தனைகளை மக்களிடையே குறிப்பாக தொழிலாளி வர்க்கத்தினரிடையே பிரச்சாரம் செய்வதற்கான இன்னும் திட்டவட்டமான - முறையான ஏற்பாடுகள் உருவாகின. ஒவ்வொரு அடியிலும் அடக்குமுறையை எதிர்கொண்ட முன்னோடிகள் - இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் -ஜனவரி 20, 2020 […] இந்தியாவின் மகத்தான புரட்சிகர இயக்கத்தின் தலைவர் மாவீரன் பகத்சிங்கை குறிப்பிட வேண்டும். அவர் தனது கடைசி நாட்களில் கம்யூனிசத்தை நோக்கி வந்தார். அதைத் தொடர்ந்து அவரது சகாக்கள் பலரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர். ஆசியாவின் இதர பகுதிகளைப் போலவே இந்தியாவிற்கும் கம்யூனிச, சோசலிசச் சிந்தனைகள் என்பவை ரஷ்யாவில் போல்ஷ்விக் கட்சி பிரம்மாண்டமாக எழுந்து மாபெரும் புரட்சி நடத்தி மிகப்பிரம்மாண்டமான ஒரு புதிய சகாப்தத்தை படைத்தது தொடர்பான ஏராளமான செய்திகளும் தகவல்களும் கிடைக்கப்பெற்றதன் மூலமாகவே வந்தடைந்தன. அப்படி கிடைத்த தகவல்களில் பல, கம்யூனிசத்தைப் பற்றிய அவதூறு கருத்துக்களையும் திரிபுகளையும் கொண்டதாக இருந்த போதிலும் கூட, அப்படி வந்து சேர்ந்த செய்திகளின் மூலமாக கம்யூனிசம் என்ற சிந்தனை இந்தியாவில் பரவியது. மகத்தான தலைவர் மா சே துங்-கின் வார்த்தைகளில் சொல்வதானால், “புரட்சிகர ரஷ்யாவிலிருந்து செலுத்தப்பட்ட தீக்கணைகள் இந்தியாவிற்கு கம்யூனிசம் என்ற செய்தியைக் கொண்டு வந்து சேர்த்தது”. போல்ஷ்விக் ரஷ்யாவில் மக்கள் சமூகம் புரட்சிகரமான எழுச்சிகளை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கும் கதைகள், இந்தியாவில் காங்கிரஸ் தலைமையின் சமசரக் கொள்கைகளால் வெறுப்படைந்தும், விரக்தியடைந்தும் இருந்த காங்கிரஸ் தொண்டர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அவர்கள் முன்பு இரண்டு மாற்றுப் பாதைகளை முன்வைத்தது: ஒன்று, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராகவும், அவர்களது இந்திய ஏஜெண்டுகளுக்கு எதிராகவும், ஆயுதமேந்திய தனிமனித போராட்டமே தீர்வு என்பது; மற்றொன்று கம்யூனிசம். பகத்சிங் இங்கே நாம், இந்தியாவின் மகத்தான புரட்சிகர இயக்கத்தின் தலைவர் மாவீரன் பகத்சிங்கை குறிப்பிட வேண்டும். அவர் தனது கடைசி நாட்களில் கம்யூனிசத்தை நோக்கி வந்தார். அதைத் தொடர்ந்து அவரது சகாக்கள் பலரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர். இன்னும் பல போராளிகள் இந்த உலகையே குலுக்கிய ரஷ்யப் புரட்சியால் வெகுவாக ஈர்க்கப்பட்டார்கள். புரட்சியின் பூமிக்கு செல்ல வேண்டுமென்று பயணத்தைத் துவக்கினார்கள். பனி சூழ்ந்த இமயமலையையும், கடினமான சமவெளியையும் கடந்து ரஷ்யாவுக்குச் சென்று புரட்சியின் அடிப்படையை அறிந்துவர முயற்சித்தார்கள். இப்படியாக இந்திய மண்ணில் சோசலிசம், கம்யூனிசம் என்ற விதைகள் தூவப்பட்டன. கம்யூனிஸ்ட் குழுக்களின் தோற்றம் இந்தியாவில் சோசலிச இயக்கத்தின் உதயம் என்பது, 1920களுக்கு முன்பிருந்தே முறையாக வரிசைப்படுத்தப்பட வேண்டும். ஏனென்றால் இந்த இரண்டு இணையான வளர்ச்சிப்போக்குகள் நடந்தன. அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (ஏஐடியுசி) உதயமானது. துவக்ககால கம்யூனிஸ்ட் குழுக்களும் உதயமாகின. இவை இரண்டும் எத்தகைய சூழலில் நடந்தது என்பது மிக முக்கியமானது. எல்லா நாடுகளிலும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னோடிகள் எப்படியெல்லாம் தடைகளையும் துயரங்களையும் தாண்டி திட்டமிட்டப்பாதையில் நடைபோட்டார்களோ அதேபோலத்தான் இந்தியாவிலும் நடந்தது. இந்தத் தலைவர்களைத் தொடர்ந்து அடுத்தடுத்து வந்த தலைமுறையினர், அவர்கள் எதிர்கொண்ட அடக்குமுறைகளையும் சவால்களையும் நினைத்துக் கூட பார்க்க முடியாதது என்பதுதான் உண்மை. முதல் தலைமுறை கம்யூனிஸ்ட்டுகள். எப்படிப்பட்ட கொடிய நிலைமைகளை எதிர்கொண்டு, போராடி, இந்திய நாட்டில் ஒரு அணிதிரட்டப்பட்ட - ஒருங்கிணைக்கப்பட்ட சோசலிச இயக்கத்தை பின்னாட்களில் உருவாக்குவதற்கான வழித்தடத்தை ஏற்படுத்தினார்கள் என்பதை அந்தக் காலத்தில் செயல்பட்ட எந்தவொரு சோசலிஸ்ட்டும் மறந்துவிட முடியாது. துவக்கக்கட்டத்தில் என்ன நடந்தது என்பதை இங்கே நான் விவரிப்பதன் காரணம், காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி செய்த அளப்பரிய பங்களிப்பினை மறுப்பது என்பதல்ல; மாறாக முன்னோடிகள் வகுத்துக்கொடுத்தப் பாதையில் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி தனது பணிகளை முன்னெடுத்துச் சென்றது என்பதை விவரிக்கும் பொருட்டே. நமது முன்னோடிகள் கடுமையான பிரச்சனைகளை எதிர்கொள்வதில் பாதிக்கப்படாமல் இருந்தார்கள் என்று சொல்ல முடியாது; அவர்கள் பல்வேறு குறைபாடுகளையும் பலவீனங்களையும் சரிசெய்துகொண்டே இயங்க வேண்டியிருந்தது; பிரதானமான பெரிய மாநிலங்களில் கிளைகளை உருவாக்கி அதன்மூலம் ஒரு அகில இந்திய கட்சியாக வளர்த்தெடுக்க முடியாத சூழல் என்பது இருந்தது. இந்த பலவீனங்களும் குறைபாடுகளும் இருந்த போதிலும், கம்யூனிஸ்ட் குழுக்கள், பத்தாண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து இயங்கி வந்தன; காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி பிறப்பதற்கு முன்பே இது நடந்து கொண்டிருந்தது; இந்த கம்யூனிஸ்ட் குழுக்களை இயக்கிய முன்னோடிகள்தான் இந்திய சோசலிஸ்ட் இயக்கத்தின் உண்மையான முன்னோடிகள்; இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதன்மையான முன்னோடிகள். அவர்கள் தாங்கள் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியிலும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் அடக்குமுறையை எதிர்கொள்ள நேர்ந்தது. எடுத்த எடுப்பிலேயே மூன்று சதி வழக்குகள் அவர்கள் மீது பாய்ந்தன. பெஷாவர் சதி வழக்கு, கான்பூர் சதி வழக்கு, மீரட் சதி வழக்கு போன்ற முக்கியமான சதி வழக்குகள், சுமார் 10 ஆண்டு காலம், இந்திய மண்ணில் கம்யூனிசத்தின் வளர்ச்சியை தடுத்து நிறுத்துவதற்காக ஆட்சியாளர்களின் ஒரு திட்டமிட்ட முயற்சியாக மேற்கொள்ளப்பட்டன. கம்யூனிஸ்ட்டுகளைப் போலவே நூற்றுக்கணக்கான உறுதிமிக்க தொழிற்சங்க வாதிகளும் முற்போக்கு சிந்தனை கொண்ட காங்கிரஸ்காரர்களும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் வேட்டையாடப்பட்டார்கள். அவர்கள் நாட்டின் எந்தவொரு பகுதியிலேனும் ஏதேனும் ஒரு கம்யூனிஸ்ட் குழுவில் உறுப்பினராக இருந்துகொண்டிருந்தார்கள். அதன் விளைவாக அவர்கள் கடுமையான அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டார்கள். முழு விடுதலை என்று முதலில் முழங்கியது கம்யூனிஸ்ட்டுகளே..! - இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் -ஜனவரி 21, 2020 […] காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியும் கம்யூனிஸ்ட்டுகளும் அரசியல் ரீதியாகவும் இந்திய நிலப்பிரபுத்துவ முதலாளித்துவ வர்க்கத்திடமிருந்து மிகக்கடுமையான எதிர்ப்பினை -சூழ்ச்சியை கம்யூனிஸ்ட்டுகள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஏனென்றால், கம்யூனிஸ்ட்டுகளின் பணியானது, மார்க்சிய - லெனினிய கோட்பாடுகளின் அடிப்படையில் அனைத்து அரசியல் அம்சங்களிலும் பொருத்தி செயல்படுவதாக இருந்தது; எனவே இதை ஒடுக்கும் நோக்கத்துடன் இந்திய நிலப்பிரபுத்துவ முதலாளித்துவ வர்க்கம் செயல்பட்டது. எந்தவொரு காலனி ஆதிக்க, அரைக் காலனி ஆதிக்க அல்லது மற்றொரு நாட்டை சார்ந்திருக்கிற அல்லது மற்றொரு நாட்டிடம் அடிமையாக இருக்கிற நாட்டின் நிலப்பிரபுத்துவ - முதலாளித்துவ வர்க்கத்தின் அடிப்படை குணாம்சம் என்பது - மார்க்சிய - லெனினிய கோட்பாடுகளுடன் செயல்படுகிறவர்களை கடுமையாக ஒடுக்கும் விதமாக இருக்கும் என்பதை புரிந்துகொள்ள முடிந்தது. இத்தகைய சூழலில், இந்த ஒடுக்குமுறைகளை எப்படி எதிர்கொள்வது என்பதில் தத்துவார்த்த - அரசியல் ரீதியான சிரமங்கள் எழுவது இயல்பு; நாட்டில் இயங்கி வந்த பல்வேறு கம்யூனிஸ்ட் குழுக்கள் அடிக்கடி சந்தித்து அவர்களுக்குள் தொடர்ச்சியான விவாதத்தை நடத்தினால் மட்டுமே சிரமங்களையும், தவறுகளையும் விரைவாக சரிசெய்துகொள்ள முடியும் என்ற நிலைமையும் இருந்தது. அத்தகைய விவாதம் தொடர்ந்து நடந்தது; பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் பின்பற்றப்பட்ட திட்டமிட்ட சூழ்ச்சிகரமான நடவடிக்கைகளையும் அணுகுமுறைகளையும் இப்படித்தான் அன்றைய கம்யூனிஸ்ட் குழுக்களின் தலைமை எதிர்கொண்டது. பல்வேறு கடினமான சூழல்களை எதிர்கொண்ட போதிலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிறிய குழுக்களாக, ஒருங்கிணையாமல் வெவ்வேறு இடங்களில் செயல்படுபவையாக கம்யூனிஸ்ட் குழுக்கள் இருந்த போதிலும், அவை, ஒரு போர்க்குணமிக்க தொழிற்சங்க இயக்கமாக முன்னேறுவதை தடுக்க முடியவில்லை; காங்கிரஸ் கட்சியில் இருந்தவர்களிடையே முற்போக்கு சிந்தனை கொண்ட குழுக்கள் மத்தியில் புரட்சிகர சோசலிசம் என்ற முழக்கமும் அதன் இலக்குகளும் பிரபலமடைவதை தடுக்க முடியவில்லை; இந்தப் பணியை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே கொண்டு செல்ல முடியும் என்ற சூழல் இருந்த போதிலும், இந்திய தேசிய காங்கிரசின் கொள்கைகளை கூர்மைப்படுத்தவும் முடிந்தது. அகமதாபாத்தில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயரிலேயே ஒரு அறிக்கை சுற்றுக்குவிடப்பட்டது; பல்வேறு அறிவிப்புகளும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயரிலேயே பிரதிநிதிகளிடையே வழங்கப்பட்டன. இந்தச் செயல்பாடு, இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி மெல்ல மெல்ல எழுந்து வருகிறது என்ற செய்தியை - அதன் புரட்சிகர திட்டம் நிறைவேற்றப்பட்டுவிட்டது என்ற செய்தியை காங்கிரசார் மத்தியில் வலுவாக விதைத்தது. காங்கிரசுக்குள் செயல்பட்ட சிறிய எண்ணிக்கையிலான கம்யூனிஸ்ட்டுகள், தங்களை காங்கிரசுக்குள் இருந்த முற்போக்காளர்களுடன் பிணைத்துக் கொண்டனர்; அதன் மூலம், முழுமையான விடுதலை (பூரண சுயராஜ்யம்) என்ற கருத்தை மக்களிடையே பிரபலப்படுத்தும், அதை வெகுமக்கள் இயக்கமாக முன்னெடுத்துச் செல்லவும் உந்தித் தள்ளும் மகத்தான பணியினை கம்யூனிஸ்ட்டுகள் செய்தனர். அனைத்திற்கும் மேலாக, இந்தியாவில் ஒரு போர்க்குணமிக்க தொழிற்சங்கத்தை உருவாக்கி வளர்த்து கொண்டுசெல்வதில் மற்ற எல்லோரையும்விட கம்யூனிஸ்ட்டுகளே மிகவும் செயலூக்கமிக்கவர்களாக இருந்தார்கள். வெகுமக்கள் இயக்கங்களை முன்னெடுத்துச் செல்வதிலும் அவர்கள் முன்னின்றார்கள்; அதன் மூலமாக மார்க்சிய - லெனினிய தத்துவத்தை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வதில் உறுதிமிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். சிறிய அளவில் இருந்தாலும், இந்த நடவடிக்கைகள், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்குள் ஏகாதிபத்திய எதிர்ப்பு சிந்தனையிலும் செயல்பாடுகளிலும் குறிப்பிடத்தக்க அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியது; ஜவஹர்லால் நேரு, சுபாஷ் சந்திர போஸ் போன்ற ஒரு பகுதி காங்கிரஸ் தலைவர்களிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது; எனினும் அணிதிரட்டப்பட்ட கம்யூனிஸ்ட் இயக்கம் ஏற்படுத்திய அந்தத் தாக்கம், காங்கிரஸ் பின்னால் இருந்த வெகுஜனங்களிடையே ஏற்படவில்லை. உண்மையில், அவர்கள், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் பரப்பப்பட்ட கம்யூனிஸ்ட் எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு பலியாகிக் கிடந்தார்கள். இதற்கு மிக முக்கியக் காரணம் என்னவென்றால், இந்தக் குறிப்பிட்ட தருணத்தில்தான், காங்கிரசின் தலைமைக்குள் இடது, வலது என்ற பிரிவுகளுக்கிடையே மிகக்கடுமையான மோதல் நடந்து கொண்டிருந்தது; இந்த மோதல் காங்கிரசின் லாகூர் மாநாட்டில் எதிரொலித்தது; இதன் உச்சக்கட்டமாக, அந்த மாநாட்டில் காங்கிரசின் இலக்கு முழுமையான விடுதலையே என்ற தீர்மானத்தை நிறைவேற்ற முடிந்தது. இந்த மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் ஜவஹர்லால் நேரு தன்னை ஒரு சோசலிஸ்ட் என்று பிரகடனம் செய்து கொண்டார். அந்த சமயத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்து முதன்மையான மற்றும் அடுத்தக்கட்ட தலைவர்களும் கட்சிக்கு ஆதரவான தொழிற்சங்க வாதிகளும் மீரட் சதி வழக்கு விசாரணைகளில் பங்கேற்றுக் கொண்டிருந்தார்கள். நாடு தழுவிய அளவில் கம்யூனிஸ்ட்டுகளை வேட்டையாடுவதற்கு பயன்படுத்தப்பட்ட இந்த சதி வழக்கும் அதைத் தொடர்ந்த நடவடிக்கைகளும் 1929-33 என முழுமையாக நான்காண்டு காலம் அடிமுதல் நுனி வரை கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபன கட்டமைப்பையே கடுமையாக பாதித்தது. அந்த சமயத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மையம் என ஒன்று செயல்பட முடியவில்லை. எனவே இந்த காலக்கட்டத்தில் கம்யூனிஸ்ட் இயக்கமானது காங்கிரசுடன் முற்றாக எந்தத் தொடர்பிலும் இல்லை என்றும் எனவே அது தேசிய விடுதலை இயக்கத்தில் எந்தவொரு செல்வாக்கும் செலுத்தவில்லை என்றும் கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளர்களால் பிரச்சாரம் செய்யப்படுவது முற்றிலும் அநியாயமானதாகும். புதிதாக பின்னர் தோற்றுவிக்கப்பட்ட காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியும் சில தலைவர்களும் கூட இப்படி பேசினார்கள். அது எந்தவிதத்திலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. 1936ஆம் ஆண்டு மீரட்டில் நடந்த காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் இரண்டாவது அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கூட, கம்யூனிஸ்ட்டுகள் தேசியவிடுதலை இயக்கத்தில் பங்களிப்பு செய்யவில்லை என்று கூறப்பட்டிருந்தது. அதை நாம் அப்போதே முற்றாக நிராகரித்து விட்டோம். புதிய சகாப்தத்திற்கு விதை போட்ட சோவியத் ஒன்றியம் - இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் -ஜனவரி 29, 2020 […] காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியும் கம்யூனிஸ்ட்டுகளும் 21.1.2020 அன்று வெளியான தொடரின் தொடர்ச்சி… எப்படியிருப்பினும், உலகளாவிய முறையில் ஒரு சகாப்தத்தையே புரட்டி போடும் விதமாக நடந்து கொண்டிருந்த நிகழ்வுகளால் இந்தியாவில் காங்கிரசின் பின்னால் திரண்டிருந்த வெகுமக்களும், இதர ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளும் ஈர்க்கப்பட்டனர். அந்த சமயத்தில் உலக முதலாளித்துவ பொருளாதாரமானது மிக மிக ஆழமான நெருக்கடியில் சிக்கி தவித்துக் கொண்டிருந்தது. ஆனால் அதற்கு நேர்எதிராக சோவியத் ஒன்றியத்தின் முதலாவது ஐந்தாண்டு திட்டம் மிகவும் வெற்றிகரமான முறையில் அமலாக்கப்பட்டு, புதிய சகாப்தத்தை துவக்கி வைத்தது. சோசலிசத்தின் கோட்பாடுகள் என்ன சொல்கின்றன என்பது குறித்தும், சோசலிச தத்துவம் என்ன என்பது குறித்தும் பொருளாதார அறிஞர்களால் விவாதிக்காமல் இருக்க முடியவில்லை; அதேவேளை, அந்த கோட்பாடுகள் உலகின் பல்வேறு பகுதிகளில் பரிசோதித்து பார்க்கப்பட்டன; அப்படி பரிசோதித்த போது, நெருக்கடியின் பிடியில் சிக்கித் திணறிக் கொண்டிருக்கும் முதலாளித்துவ பொருளாதாரத்திற்கு மாற்றாக, ஒரு உயரிய தத்துவம் சோசலிசம் என்பது நிரூபணம் ஆவதை கண்டார்கள். இந்தியாவில் செயல்பட்டுக் கொண்டிருந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகள், சோவியத் ஒன்றியத்தில் சோசலிசம் வேகமாக வளர்ச்சியடைந்து கொண்டிருப்பதை பார்த்து, எதிர்காலத்தில் இந்திய நாடும், இப்படி இருக்க வேண்டும் என்று ஒரு வரைபடத்தை தங்கள் மனதில் உருவாக்கிக் கொண்டார்கள். அது நடக்க வேண்டுமானால், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை தூக்கியெறிந்து, நாடு சுதந்திரமடைந்தால் மட்டுமே சாத்தியம் என்பதையும் உணர்ந்தார்கள். இந்த கருத்துக்கள், மார்க்சிய - லெனினிய சித்தாந்தங்களை சுற்றி வலம்வந்து கொண்டிருந்த காங்கிரசின் பல்வேறு தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடையே, ஆர்வத்தையும் வேட்கையையும் தூண்டியது. மார்க்சிய - லெனினியத்தின்பால் அவர்களை ஈர்த்தது. அவர்களது மனக் கண்களை திறந்தது. இது, காங்கிரசின் அகில இந்திய தலைவர்களும், இடதுசாரி பாதையை நோக்கி திரும்பும் விதமான சிந்தனைகளை விதைத்தது; அது அவர்களின் பேச்சுக்களில், அறிவிப்புகளில் பிரதிபலித்தது. லாகூர் காங்கிரஸ் மாநாட்டில் நேரு ஆற்றிய தலைமை உரையே அதற்கு சான்று. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக தீவிரமடைந்த போராட்டம் இந்த காலகட்டத்தில் இந்தியாவிற்குள் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்கள் வேகமெடுத்தன. எண்ணற்ற போராட்டங்கள் நடந்தன. அனைத்தும் உறுதிமிக்க, போர்க்குணமிக்க எழுச்சிகள். ஏனென்றால் இந்த முறை ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தை பார்க்கும் பார்வை மாறியிருந்தது. முன்பைவிட தற்போது அதற்கான நீண்டகால இலக்கும், நடைமுறை உத்திகளும் வகுக்கப்பட்டு களமிறங்கினார்கள். 1930 ஆம் ஆண்டு எழுச்சிமிகு உப்புச் சத்தியாகிரக போராட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து 1932 - 33 ஆம் ஆண்டுகளில் இரண்டாவது சட்டமறுப்பு இயக்கம் நடைபெற்றது. இந்த இயக்கங்களில் இரண்டு முக்கியக் கூறுகள் இருந்தன. இந்த மாபெரும் இயக்கங்களுக்கு தேசிய அளவில் மகாத்மா காந்தியால் பிரதிநிதித்துவம் செய்யப்பட்ட அரசியல் சிந்தனையை கொண்டவர்கள் தலைமை தாங்கினார்கள் என்பது உண்மை. ஆனால் ஒருபுறத்தில் இந்த சிந்தனை கொண்ட, நாடாளுமன்ற ஆட்சிமுறையை ஆதரிப்பவர்களும், மறுபுறத்தில் காந்தியின் சித்தாந்தம், திட்டம் மற்றும் கொள்கைகளோடு கடுமையாக முரண்பட்ட தீவிர மற்றும் முற்போக்குவாத காங்கிரசாரும் களத்தில் நின்றார்கள். நாடாளுமன்ற ஆட்சிமுறை தொடர்பாக தனக்கும் பல்வேறு கருத்து வேறுபாடுகள் உண்டு என்று கூறிய காந்தி, எனினும் அந்த சிந்தனை கொண்டவர்களுக்கு தனது ஆசிகள் உண்டு என்றும் கூறினார். இந்த அடிப்படையில் காங்கிரசின் உயர்மட்ட தலைமையின் ஒரு பகுதியினர் இந்த சிந்தனையின் பால் ஈர்க்கப்பட்டு, ஒருவித மாயையில் சிக்கியிருந்தனர். மறுபுறத்தில், 1930 - 32 ஆண்டுகளில் நடந்த இந்த சத்தியாகிரகப் போராட்டங்களில் நாடு முழுவதும் தொழிலாளர் வர்க்கம் நடத்திய மாபெரும் வேலைநிறுத்தங்களும், இதர வடிவங்களிலான பெருவாரியான மக்கள் பங்கேற்ற நேரடி இயக்கங்களும் இந்த சத்தியாகிரகங்களின் வெற்றிக்கு அடிப்படையாக அமைந்தன. இந்தப் போராட்ட அனுபவங்கள், தொழிலாளர் வர்க்கத்தை மேலும் மேலும் அணிதிரட்டுவதற்கான வழிகளையும், வாய்ப்புகளையும் கண்டறியும் வேட்கையை ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியல் செயற்பாட்டாளர்கள் மத்தியில் உருவாக்கியது. இப்படியாக அவர்கள், கம்யூனிசத்தையும் சோசலிசத்தையும் நோக்கி வரத் துவங்கினார்கள். 1934 மே மாதம் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டம் பாட்னாவில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து 1934 அக்டோபரில் பம்பாயில் இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் காந்தி தலைமையிலான நாடாளுமன்ற திட்ட ஆதரவாளர்களுக்கும், மற்றவர்களுக்கும் இடையே மிகப் பெரிய முரண்பாடும், மோதலும் ஏற்பட்டது. காந்தியின் ஆதரவாளர்களுக்கு காங்கிரஸ் தலைமையில் இருந்த வலதுசாரி சிந்தனை கொண்டவர்கள் தலைமையேற்றனர். மற்றவர்களுக்கு சோசலிஸ்ட்டுகளால் தலைமை தாங்கப்பட்ட இடதுசாரிகள் வழிகாட்டிகளாக இருந்தார்கள். இந்த தருணத்தில் கிட்டத்தட்ட காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி பிறக்கத் துவங்கிவிட்டது என்று கூறலாம். காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே “ஆளும் குழு”விற்கு எதிராக, காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியானது “எதிர்க்கட்சித் தலைவர்” என்ற நிலையில் இருந்து செயல்பட்டது. காந்தியவாதிகள், நாடாளுமன்றவாதிகள் மற்றும் இதர வலதுசாரிகள் காங்கிரஸ் கட்சிக்குள் “ஆளும் குழு”வாக இருந்தார்கள். கம்யூனிஸ்ட்டுகளை பொறுத்தவரை, பல்லாண்டு காலமாக நடந்து கொண்டிருந்த மீரட் சதி வழக்கிலிருந்து இப்போதுதான் நிபந்தனைகளின் பேரில் வெளியில் வந்திருந்தனர். காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி உதயமாவதற்கு சற்று முன்பு பல்வேறு கம்யூனிஸ்ட் குழுக்கள் ஒன்றாக இணைந்து, மையப்படுத்தப்பட்ட ஒரு தலைமையின் கீழ் செயல்பட துவங்கியிருந்தன என்ற போதிலும், அந்த சமயத்தில் நிலவிய சூழலின் பின்னணியில், புதிதாக அமைக்கப்பட்டிருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மையமானது தலைமறைவாகவே செயல்பட வேண்டிய நிலைமை இருந்தது. ஏனென்றால் பிரிட்டிஷ் அரசு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை தடை செய்திருந்தது. எனவே, இந்த குறிப்பிட்ட தருணத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் இடதுசாரிகளின் துரித வளர்ச்சிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பங்களிப்பு முழுவீச்சுடன் மேற்கொள்ளப்பட முடியவில்லை. ஜெயப்பிரகாஷ் நாராயணனின் ‘ஏன் சோசலிசம்?’ - இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் -ஜனவரி 30, 2020 […] காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியும் கம்யூனிஸ்ட்டுகளும் நாம் ஏற்கெனவே விவரித்தபடி காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி, இந்திய தேசிய காங்கிரசுக்குள் ஏற்பட்ட - மேலே கூறப்பட்ட நிகழ்வுப் போக்குகளின் பின்னணியில் உதயமானது. இதற்கான முதல் முன் தயாரிப்பு மாநாடு 1934 மே மாதம் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டம் நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் பாட்னாவில் நடந்தது. அந்தக் கூட்டத்தில்தான் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி எனும் புதிய கட்சியை அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதே ஆண்டில் பம்பாயில், காங்கிரஸ் மாநாடு நடப்பதற்கு சற்று முன்பு காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் முதல் அகில இந்திய மாநாடு நடைபெற்றது. காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் இந்த இரண்டு அமர்வுகளும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்திலும், அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டிலும் சோசலிஸ்ட்டுகள் தரப்பில் நடத்தப்பட வேண்டிய போராட்டத்திற்கான தயாரிப்பாகவே இருந்தது. இப்படியாக, காங்கிரஸ் முன்பு எப்படிப்பட்ட பிரச்சனைகளை முன்வைக்க வேண்டுமென்று இடதுசாரிகள் அணுகினார்கள் என்பதை தெளிவாக உணர்த்தும் விதத்தில் முயற்சிகள் நடந்தன. காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி உதயமாவதற்கும், அதன் வளர்ச்சிக்கும் அடிப்படையாக ஏராளமான ஆவணங்கள் இருக்கின்றன. அவற்றில் ஜெயப்பிரகாஷ் நாராயணன் எழுதிய “ஏன் சோசலிசம்” என்ற நூல் பிரதான இடத்தை பிடிக்கிறது. இந்த நூல், மிகப் பெரும் எண்ணிக்கையிலான இளம் காங்கிரஸ் ஆண்கள் மற்றும் பெண்களின் கண்களை திறக்கும் விதத்தில் எழுதப்பட்டிருந்தது. இந்த இளைய தலைமுறையினர், இந்திய தேசிய காங்கிரசின் வலதுசாரி தலைவர்களால் பின்பற்றப்பட்ட திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளின் அப்பட்டமான தோல்விகளால் விரக்தி அடைந்திருந்த நிலையில், அவர்கள் ஒரு புதிய பாதையை நோக்கி அணிதிரண்டு கொண்டிருந்த சூழலில் இந்த நூல் வெளியானது. தனிப்பட்ட முறையில் நானும் அதை உணர்ந்தேன். அன்றைய நாளில் கேரளத்தில் என்னைப் போன்ற இளம் காங்கிரஸ்காரர்களை ஜெயப்பிரகாஷ் நாராயணனின் ‘ஏன் சோசலிசம்’ என்ற நூல் ஈர்த்தது. அந்த நூலில், சோசலிசம் என்பது காந்தியிசத்தைவிட உயர்வானது என்பது விரிவான முறையில் கூறப்பட்டிருந்தது. காந்தியிசம், நாடாளுமன்ற பாதை மற்றும் தனிநபர் பயங்கரவாதம்- என மூன்று தத்துவார்த்த அணுகுமுறைகள் காங்கிரசுக்குள் இருந்தன. இந்த நிலையில்தான் ஒரு புதிய தத்துவப் பாதையை எதிர்நோக்கியிருந்த எங்களைப் போன்ற இளைய தலைமுறையினருக்கு ஏன் சோசலிசம் என்ற நூல் ஒரு பாடப்புத்தகம் போல கிடைத்தது. உண்மையில் நாடு முழுவதும் ஒரு புதிய தத்துவத்திற்காக ஏங்கிக் கொண்டிருந்த இளம் காங்கிரஸ் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இது ஒரு வெளிச்சத்தை தந்தது. உண்மையில் சொல்லப்போனால், ஜெயப்பிரகாஷ் நாராயணனின் நூல், இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு அதன் பாதை சோசலிசமே என்று அறுதியிட்டு கூறுவதாக இல்லை. ஏனென்றால் சோசலிசம் என்ற தத்துவமே இறுதியானது என்று அறுதியிட்டு கூறினால், பகுத்தறிவு சிந்தனையும், முற்போக்கு சிந்தனையும் கொண்ட காங்கிரஸ்காரர்கள் நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் மிகப் பெரும் எண்ணிக்கையிலான உழைக்கும் வர்க்க மக்களோடு கைகோர்த்துவிடுவார்கள் என்ற எண்ணமும் அதில் அடங்கியிருந்தது. வேறு வார்த்தைகளில் கூறப்போனால், சோசலிசம் என்பதே இறுதி இலக்கு என்று கூற அந்த நூல் தயாராகயில்லை; மாறாக, நாடு விடுதலை பெறுவதற்கு ஒரு சக்தி வாய்ந்த வழிமுறையாக சோசலிசப் பாதை இருக்கும் என்ற அளவில் மட்டும் அது கூறியது. எனவே இந்த நூல், காந்திய செயல்திட்டமான காதி மற்றும் கிராமத் தொழில்கள், அஹிம்சை வழியிலான எதிர்ப்புப் போராட்டங்கள் போன்றவற்றை உள்ளடக்கி அந்தத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதாக இருந்தது. மறுபுறத்தில், காங்கிரஸ் தலைவர்களில் வலதுசாரிப் பிரிவினர் முன்வைத்த நாடாளுமன்ற பாதை என்ற சிந்தனைக்கு மகாத்மாவே முழுமையான ஆசிகளை வழங்கிக் கொண்டிருந்தார். மற்றொரு சிந்தனையோட்டமான தனிநபர் பயங்கரவாதம் என்பது, நாடு முழுவதும் காங்கிரசுக்குள் இருந்த புரட்சியாளர்களின் குழுக்களால் செயல்படுத்தப்பட்டு கொண்டிருந்தது. இந்த நடவடிக்கைகளை எதிர்த்த அதேவேளையில் தொழிலாளர்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் இதர உழைக்கும் மக்கள் பிரிவினரால் நடத்தப்பட்ட வெகுமக்கள் போராட்ட இயக்கங்களை ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆதரித்தார். ஆனால் மறுபுறத்தில் மகாத்மா காந்தியால் முன்வைக்கப்பட்ட புதிய கண்ணோட்டம், புதிய திட்டம் என்பது காங்கிரஸ் இயக்கத்தை ஒரு போராட்ட குணமிக்க அமைப்பு என்பதிலிருந்து ஒரு அரசியலற்ற சேவா சங்கம் என்ற ஒரு கட்டமைப்பாக மாற்றுவதை நோக்கியும், தேர்தல்களை எதிர்கொள்வதற்கான ஒரு சக்திமிக்க கட்சியாக இருந்தால் போதும் என்பதை நோக்கியும் கொண்டு செல்வதாக இருந்தது. மீண்டும் தனிப்பட்ட உணர்வுகளை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். எல்லாம் நிகழ்வுகளையும் என்னால் நினைவுகூர முடியவில்லை. எனினும் இரண்டு சம்பவங்கள் எனது அரசியல் சிந்தனையை செழுமைப்படுத்த காரணமாக அமைந்தன. முதலாவது, ஜெயப்பிரகாஷ் நாராயணனின் கேரள வருகை. 1934 மே மாதம் பாட்னாவில் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் முன் தயாரிப்பு மாநாடு நடந்தபிறகு அவர் கேரளாவுக்கு வருகை தந்தார். கட்சியின் அமைப்புக் குழுச் செயலாளர் என்கிற முறையில் வருகை தந்த அவர், அக்டோபரில் நடைபெறவுள்ள காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி முதலாவது அகில இந்திய மாநாட்டின் தயாரிப்புப் பணிகளை ஆய்வு செய்வதற்காக வந்தார். இந்த வருகையின் போது அவர் ஆற்றிய உரைகள், எங்களோடு அவர் நடத்திய தனிப்பட்ட முறையிலான விவாதங்கள் ஆகியவை, தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய சங்கம் ஆகியவற்றை உருவாக்கி அவர்களை அணிதிரட்ட வேண்டியதன் அவசியத்தை அடிகோடிட்டு காட்டுவதாக அமைந்திருந்தன. இந்த இயக்கங்கள் இல்லாமல் விடுதலைப் போராட்டத்தை தீர்மானகரமான முறையில் முன்கொண்டு செல்ல முடியாது என அவர் உணர்த்தினார். மேலும், காங்கிரஸ் தலைமையின் சமரசக் கொள்கைகளை எதிர்த்து சீரிய முறையில் போராடவும் முடியாது என்றும் அவர் சுட்டிக் காட்டினார். அதேபோல, சட்டமறுப்பு இயக்கம், ஒத்துழையாமை இயக்கம் போன்ற போராட்டங்களின் போது நடந்த மாபெரும் வேலைநிறுத்தங்கள், முழு அடைப்புகள் ஆகியவற்றின் அனுபவங்களையெல்லாம் நாட்டு மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். இதுபோன்ற போர்க்குணமிக்க வெகு மக்கள் போராட்ட இயக்கங்கள் அரசு நிர்வாகத்தை எப்படி ஸ்தம்பித்து போகச் செய்வதற்கு காரணமாக அமைகின்றன என்ற அனுபவங்களையெல்லாம் மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும் என்று வலியுறுத்தினார். இத்தகைய தொழிலாளி வர்க்கத்தின் ஒன்றுபட்ட சக்தியை, அதன் அனுபவத்தை மேம்படுத்துவது தான், சக்தி வாய்ந்த பிரிட்டிஷ் ஆட்சியை உடைத்து நொறுக்குவதற்கான ஒரே சிறந்த வடிவம் என்றும் அவர் ஆர்வத்துடன் கூறினார். இந்த பேச்சுக்களின் மூலம், சத்தியாகிரகத்திற்கு மாற்றாக, நாடாளுமன்றப் பாதைக்கு மாற்றாக, பயங்கரவாத வழிமுறைக்கு மாற்றாக, உண்மையான ஒரு மாற்றுப் பாதை இருக்கிறது என்ற தெளிவினை நாங்கள் அடைந்தோம். வெற்றிடத்தில் இருந்து இயங்கவில்லை ஜெயப்பிரகாஷ் நாராயணன் - இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் -ஜனவரி 31, 2020 காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியும் கம்யூனிஸ்ட்டுகளும் இரண்டாவது ஒரு சம்பவத்தையும் குறிப்பிடவேண்டும். அது 1935ல் பிப்ரவரியில் நடந்தது. நாக்பூரில் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் முதலாவது தேசிய நிர்வாகக்குழு கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்திற்கு இடையே ஜெயப்பிரகாஷ் நாராயணன் எங்களைப் போன்ற தோழர்களுடன் அவ்வப்போது விவாதித்தார். பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு சக்திவாய்ந்த அமைப்பாக காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற திட்டம் தனக்கு இருப்பதாக தெரிவித்தார். காங்கிரசின் ஒரு நிலப்பிரபுத்துவ முதலாளித்துவ தலைவரான சர்தார் வல்லபாய் படேலால் பர்தோலியை உருவாக்க முடியும் என்றால், நாம் நம்முடைய சொந்த சோசலிச பர்தோலிகளை ஏன் உருவாக்க முடியாது என்று ஜெயப்பிரகாஷ் நாராயணன் எங்களிடையே கேள்வி எழுப்பினார். (பர்தோலி என்பது குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு குக்கிராமம். 1928ல் பிரிட்டிஷ் அரசுக்கெதிராக இந்திய விடுதலைப் போராட்டத்தின் மாபெரும் அறைகூவல்களில் ஒன்றான சட்டமறுப்பு இயக்கம் நடந்தபோது, பர்தோலியில் இந்த போராட்டத்திற்கு சர்தார் படேல் தலைமை தாங்கினார். பர்தோலி கிராமத்து விவசாயிகள், கடுமையான வரிக் கொடுமையை தாங்க முடியாமல் தவித்தனர். கொந்தளித்தனர். இந்த நிலையில், சட்டமறுப்பு இயக்கம் அறிவிக்கப்பட்டது. படேல் அந்த விவசாயிகளை திரட்டினார். பிரிட்டிஷ் அரசுக்கு வரி கொடுக்க முடியாது என்று பர்தோலி கிராம விவசாயிகள் பகிரங்கமாக அறிவித்து பெரும் போராட்டத்தை நடத்தினர். இது பர்தோலி சத்தியாகிரகம் என பெயர் பெற்றது. இந்த போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தியதால்தான் சர்தார் படேல் நாடு முழுவதும் பிரபலமடைந்தார்) இது, வெறுமனே சில பொருளாதாரக் கோரிக்கைகளை முன் வைத்து அவற்றுக்காக போராடுவது அல்ல; மாறாக, இந்திய விவசாயிகளை அவர்களே தங்களது சொந்த அரசாங்கங்களை நடத்தச் செய்யும் அளவிற்கு அரசியல் ரீதியாக பயிற்றுவிக்கும் அளவிற்கு நாம் முன்செல்ல வேண்டும் என்றும் ஜெயப்பிரகாஷ் நாராயணன் விளக்கினார். “பிரிட்டிஷ் ராணுவத்தின் பிடியில் உள்ள அதிகார மையங்களை கைப்பற்ற வேண்டும்” என்பதுதான், விவசாயிகளை எந்தப் பாதையில் அணிதிரட்ட வேண்டும் என்பதைக் குறிப்பிடுவதற்காக அவர் பயன்படுத்திய வார்த்தை. நான் இங்கே குறிப்பிட்டுள்ள மேற்கண்ட இரண்டு சம்பவங்களும், சோசலிஸ்ட் அகிலத்தின் தலைவர்கள் சோசலிசம் தொடர்பாக கூறிவரும் விளக்கங்கள் மற்றும் “ஜனநாயக சோசலிசம்” என்ற சிந்தனை தொடர்பாக பகிர்ந்துவரும் கருத்துக்கள் போன்றவையெல்லாம் இருந்தபோதிலும், இந்தியாவில் சோசலிசம் என்பது விடுதலை இயக்கத்தின் தலைமைப் பிரதிநிதிகளாக கருதப்படுகிற நிலப்பிரபுத்துவ முதலாளித்துவ தலைமையின் நிலைப்பாட்டை எதிர்த்து சவால்விடுவதாக இருக்க வேண்டும் என்று ஜெயப்பிரகாஷ் நாராயணன் கருதினார் என்பதை உணர்த்துகின்றன. அவர் காட்டிய பாதை இளம் காங்கிரஸ் ஆண்கள் மற்றும் பெண்களை கவர்ந்திழுப்பதாக இருந்தது. சில மாதங்களிலேயே ஆயிரக்கணக்கானோர் அவரை பின்தொடர்பவர்களாக மாறினர். எனினும் ஜெயப்பிரகாஷ் நாராயணனும் அவரது தோழர்களும் ஏதோ ஒரு வெற்றிடத்தில் இருந்து இயங்கத் துவங்கியவர்கள் அல்லர். அவர்களுக்கு முன்பே, தங்களை கம்யூனிஸ்ட்டுகள் என்று பகிரங்கமாக பிரகடனம் செய்துகொண்டு, கம்யூனிஸ்ட் அகிலத்தின் தலைமையின் கீழ் செயலாற்றிக் கொண்டிருந்த முதல் தலைமுறை இந்திய சோசலிஸ்ட்டுகளின் செறிவுமிக்க அனுபவம் என்பது ஜெயப்பிரகாஷ் நாராயணன் மற்றும் அவரது தோழர்களுக்கு வழிகாட்டியது. இந்த முன்னோடிகள், நான் ஏற்கெனவே குறிப்பிட்டது போல, ஏகாதிபத்தியத்தால் மிகக்கடுமையாக தடைகள் விதிக்கப்பட்டிருந்த காரணத்தால் தங்களை நாடு தழுவிய அளவில் ஒருங்கிணைத்து, நன்கு அணிதிரட்டப்பட்ட ஒரு கட்சியாக மாற்றிக் கொள்ள முடியாத நிலையில் இருந்தார்கள். மேலும், இந்தியாவில் சோசலிசத்திற்கான போராட்டத்தை எப்படி கட்டமைக்க வேண்டும் என்பது தொடர்பான இந்த முன்னோடிகளின் கருத்துக்கள், இந்திய தேசிய காங்கிரசுக்குள் உருவான புதிய குழுவின் கருத்துக்களோடு முரண்பட்டன. மிக முக்கியமான முரண்பாடு அது. காங்கிரஸ் என்பது நிலப்பிரபுத்துவ ஒரு முதலாளித்துவ அமைப்பாக இருக்கிற நிலையில், அது எப்படி சோசலிசத்திற்கான போராட்டத்தின் கருவியாக மாற முடியும் என்ற கேள்வி முன்னுக்கு வந்தது. மார்க்சியமே வழிகாட்டி என ஏற்றுக்கொண்ட மீரட் ஆவணம் - இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் -பிப்ரவரி 1, 2020 […] காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியும் கம்யூனிஸ்ட்டுகளும் இந்த சமயத்தில், முரண்பாடுகள் களையப்பட்டு ஒரு ஒருங்கிணைந்த அகில இந்திய மையத்தை உருவாக்கிக் கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களுக்கும் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் தொடர்பாளர்களுக்கும் இடையில் முக்கியமான பல விவாதங்கள் நடந்தன. இந்த விவாதங்களின் விளைவாக, 1936 ஜனவரியில் மீரட்டில் நடைபெற்ற காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் இரண்டாவது தேசிய மாநாட்டில் ஒரு விரிவான ஆவணம் நிறைவேற்றப்பட்டது. அந்த ஆவணம்தான் மீரட் ஆவணம் என்று அன்றைக்கு பிரபலமாக பேசப்பட்டது. அந்த ஆவணம் இவ்வாறு கூறுகிறது: “காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியானது இரண்டு மிகப்பெரிய தேசிய போராட்டங்களின் அனுபவங்களிலிருந்து உருவானது. கடைசியாக நடந்த ஒத்துழையாமை இயக்கத்தின் நிறைவில் சில காங்கிரஸ்காரர்களால் இது உருவாக்கப்பட்டது. தேசிய இயக்கத்திற்கு ஒரு புதிய பரிணாமத்தை அளிக்க வேண்டியது அவசியம் என்று இந்த காங்கிரசார் நம்புகிறார்கள். தேசிய இயக்கத்தின் இலக்குகளை மறுவரையறை செய்ய வேண்டிய தேவை உள்ளது; அது செயல்படும் நடைமுறைகளை மாற்ற வேண்டியுள்ளது. இந்த பாதையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த முன்முயற்சி, நமது நிகழ்கால சமூகத்தின் சக்திகளைப் பற்றி தத்துவார்த்த ரீதியாக ஆய்வுசெய்து உள்வாங்கிக் கொண்டவர்களால் மேற்கொள்ளப்படுகிறது. காங்கிரஸ் காரர்களாக இருக்கிற இவர்கள், இயல்பாகவே, இந்தப் பாதையில் செல்ல முற்பட்டு, மார்க்சியம்-சோசலிசத்தை ஏற்றுக்கொண்டவர்கள். இது இயல்பான ஒன்றே; ஏனென்றால், இந்த அமைப்பானது இன்றைய சூழலின் தேவைகளை எதிர்கொள்வதற்காக “ஒரு மந்திரச் சொல்லை உயர்த்திப்பிடிக்கிறது: “சோசலிஸ்ட். ‘சோசலிஸ்ட்’ என்ற பதத்திற்கு முன்பு காங்கிரஸ் என்ற பதத்தையும் இணைக்கிறோம்; இப்படி இணைப்பது, இந்த இயக்கம் அதிலிருந்து துவங்கியது என்பதை குறிப்பதற்காக மட்டுமே - தேசிய இயக்கத்தின் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தை ஒருங்கிணைக்கும் விதமாகவே இந்தப் பெயர் சூட்டப்படுகிறது. “நாட்டில் சோசலிச சக்திகள் ஏற்கெனவே செயல்பட்டுக் கொண்டிருந்தன. ஆனால் அந்த சக்திகள் காங்கிரசுடன் எந்தவிதமான தொடர்பும் இல்லாமல் இருந்தன. தேசிய இயக்கத்தில் எந்த செல்வாக்கும் இல்லாமல் இருந்தன. எனவே, ஏற்கெனவே செயல்பட்டுக் கொண்டிருந்த குழுக்களோடு காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி எனும் இயக்கம் உருவாகியிருக்கிறது. இந்த இரண்டு சக்திகளுக்கும் இடையிலான இணைப்பு இப்போது தேவைப்படுகிறது. சரியான மற்றும் உணர்வுப்பூர்வமான உத்திகளை சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் மேற்கொள்வது, அதன் மூலமாக பின்னர் ஒரு இணைப்பை உருவாக்கிக் கொள்வது என முடிவெடுக்கப்படுகிறது. “நமது முன்னால் உள்ள உடனடி இலக்கு என்னவென்றால், தேசிய இயக்கத்தை ஒரு உண்மையான ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கமாக வளர்த்தெடுப்பதுதான்; அந்நிய ஆட்சியிலிருந்து விடுதலை பெறுவது மற்றும் உள்நாட்டில் நடைமுறையில் இருக்கிற சுரண்டல் சமூக அமைப்பு முறையிலிருந்தும் விடுதலை பெறுவது என்ற இலக்குடன் கூடிய இயக்கமாக வளர்த்தெடுப்பதுதான். இதற்காக, இந்த இயக்கம் தற்போதைய நிலப்பிரபுத்துவ-முதலாளித்துவ தலைமையிடமிருந்து பிரிந்து வரவேண்டியது அவசியமாகிறது; இந்த இயக்கத்தை புரட்சிகர சோசலிச தலைமையின்கீழ் கொண்டுவர வேண்டியது அவசியமாகிறது. இந்த இலக்கினை, காங்கிரசுக்குள்ளேயே அணிதிரட்டப்பட்ட முறையில் செயல்படுகிற மார்க்சிய - சோசலிஸ்ட்டுகளின் குழுவால் மட்டுமே செய்துமுடிக்க முடியும். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், தற்போதைய சூழலில், நமது கட்சி மட்டுமே இந்த இலக்கினை நிறைவேற்ற முடியும். காங்கிரசுக்குள் ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகள் வலுப்பெறுவதும் தெளிவுபெறுவதும் அதற்குள் நமது கட்சியின் பலமும் செயல்பாடும் பெரிய அளவிற்கு அதிகரிப்பதைப் பொறுத்தது. கட்சியின் இந்த இலக்கை நிறைவேற்றுவதற்காக, நாட்டில் இயங்கும் இதர பல ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளை நாம் ஒருங்கிணைக்க வேண்டியதும் அவசியமாகிறது. “இந்த இலக்கில் உறுதியுடன் நின்று காங்கிரஸ் மேடைகளில் நமது கட்சி ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலைபாட்டை மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும். காங்கிரஸ் முன்பு முழுமையான சோசலிசத் திட்டத்தை முன்வைக்கிற ஒரு தவறை நாம் செய்துவிடக்கூடாது. ஏகாதிபத்திய எதிர்ப்பு திட்டம் என்பது, தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் கீழ் நடுத்தர வர்க்கங்களைச் சேர்ந்த மக்களை இந்த இயக்கத்தில் அணிதிரட்டும் விதமாக செழுமைப்படுத்தப்பட வேண்டும். “ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற சிந்தனைகளை நமது கட்சி அதன் தத்துவார்த்த அடிப்படைகளிலிருந்து அணுக வேண்டும்; சாத்தியமான அளவிற்கு தேவையான விதத்தில் அதற்கான உத்திகளை பின்பற்ற வேண்டும். பல்வேறு நிகழ்வுகளின் சூழலில் சகிப்பின்மையோடு அல்லது பொறுமையில்லாமல் செயல்பட்டு நாம் எக்காரணம் கொண்டும் தனிமைப்பட்டுவிடக்கூடாது. காங்கிரஸ் கட்சியின் தேசக்கட்டுமானம் தொடர்பான திட்டத்தை தடுத்துநிறுத்தவோ அதில் தலையீடு செய்யவோ கூடாது. மாறாக விஞ்ஞானப்பூர்வமாக அந்த நடவடிக்கைகளை விமர்சிக்க வேண்டும்; அம்பலப்படுத்த வேண்டும். “காங்கிரசில் நடக்கும் தேர்தல்களில், அதன் கமிட்டிகளையோ அல்லது அலுவலகங்களையோ எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்ற ஆர்வத்தை வெளிப்படுத்தக்கூடாது; அதேபோல இந்த நோக்கத்திற்காக அரசியல் ரீதியாக விரும்பத்தகாத குழுக்களுடன் கூட்டணி வைத்துக் கொள்ளவும் கூடாது. “இது, நமது கட்சி தனது சொந்த மேடையில் சோசலிச திட்டத்தை பிரச்சாரம் செய்யக்கூடாது என்று பொருள்படாது. நமது சொந்த மேடையில் கட்டாயம் சோசலிசப் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். அதை இன்னும் அமைப்பு ரீதியாகவும், தீவிரமாகவும் செய்ய வேண்டும். “நமது கட்சியின் சொந்தத் திட்டம் என்பது அவசியம். ஒரு மார்க்சிய திட்டமாக இருக்க வேண்டும். அப்போதுதான் கட்சி தனது இலக்கை நிறைவேற்றுவதை நோக்கி முன்னேற முடியும். ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகள் தங்களது இலக்கை அடைய மார்க்சியம் மட்டுமே வழிகாட்ட முடியும். எனவே கட்சி உறுப்பினர்கள் அவசியம் புரட்சிக்கான வழி என்ன என்பதை முழுமையாக புரிந்துகொள்ள வேண்டும்; வர்க்கப்போராட்டத்தின் தத்துவார்த்த மற்றும் நடைமுறைகளைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டும்; அரசு என்ன செய்யும், அதன் இயல்பு என்ன என்பதைப் பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும்; அந்த அடிப்படையில் சோசலிச சமூகத்தை நோக்கி முன்செல்லும் நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும்”. காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒப்பந்தம் - இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் -பிப்ரவரி 2, 2020 […] மீரட் ஆவணம் நிறைவேற்றப்பட்டு ஓராண்டுக்குப் பிறகு காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் மூன்றாவது மாநாடு பைஸ்பூரில் நடைபெற்றது. இந்த மாநாடு மேலே குறிப்பிட்ட மீரட் ஆவணத்தின் சில கருத்துக்களை மேலும் செழுமைப்படுத்தியது: “ காங்கிரஸ் கட்சியை நாம் ஒரு அடிப்படை அலகாக எடுத்துக்கொண்டு, துவக்கப்புள்ளியாக எடுத்துக்கொண்டு செயல்பட வேண்டும்; ஏகாதிபத்தியத்திற்கு எதிராக அனைத்து சக்திகளையும் ஐக்கியப்படுத்திய ஒரு முன்னணியாக அதை மாற்றுவதற்கான முயற்சியை நாம் அவசியம் மேற்கொள்ள வேண்டும். ஏற்கெனவே தேசிய விடுதலைப் போராட்டத்திற்காக இந்திய மக்களில் விரிவான அளவில் பல்வேறு சக்திகளை ஐக்கியப்படுத்துவதில் காங்கிரஸ் கட்சி ஏற்கெனவே வெற்றிபெற்றிருக்கிறது. இதில் இன்னும் அணிசேராமல் எஞ்சியிருப்பது தேசிய விடுதலை கோரும் பல்வேறு பன்முகத்தன்மை கொண்ட முதன்மையான வெகுமக்கள் இயக்கங்கள்தான்…காங்கிரஸ் கட்சியே ஒரு வெகுமக்கள் இயக்கம்தான் என்றபோதிலும் அதன் தலைமை என்பது பிரதானமாக நிலப்பிரபுத்துவ-முதலாளித்துவ சக்திகளிடம் இருக்கிறது. எனவே அதன் நலன்கள் மற்றும் தேவைகளுக்கு ஏற்றவாறு அல்லாமல், மாபெரும் மக்கள் திரளின் விடுதலைப் போராட்டத்தை மிகப்பெரிய அளவிற்கு வளர்த்துக் கொண்டு செல்ல அந்த தலைமையால் இயலவில்லை. அதேநேரத்தில், காங்கிரஸ் தலைமை நீண்டகாலத்திற்கு ஒற்றுமையாக இருக்காது என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். சமீபத்தில், காங்கிரசுக்குள் மிகத்தெளிவான சிந்தனை கொண்ட இடதுசாரி இயக்கம் உருவாகியுள்ளது. இந்த வளர்ச்சிப்போக்கு, காங்கிரஸ் தலைமையிலும் பிரதிபலித்துக் கொண்டிருக்கிறது… நமது இலக்கு என்பது, காங்கிரஸ் கட்சிக்குள் அதன் நிலப்பிரபுத்துவ-முதலாளித்துவ தலைமையிடமிருந்து ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளை பிரித்து கொண்டுவருவது மட்டுமல்ல, காங்கிரஸ் இயக்கத்தையே ஒரு சக்திவாய்ந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணியாக விரிவுபடுத்தவும் வளர்த்துக்கொண்டு செல்லவும் செய்வது என்பதுதான்.” காங்கிரசை இத்தகைய மாற்றத்துக்கு உள்ளாக்கும் பொருட்டு, அனைத்து சோசலிச சக்திகளையும் ஒருங்கிணைக்க வேண்டியதன் தேவை இருக்கிறது என்ற முடிவுக்கு பைஸ்பூர் ஆவணம் வந்தது: “ இந்த சக்திகள் (சோசலிச சக்திகள்) துரதிர்ஷ்டவசமான முறையில் இன்னும் பிரிந்தே கிடக்கின்றன. துவக்கத்தில் இருந்தே காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி, சோசலிஸ்ட் தலைவர்களிடையே ஒற்றுமை நிலவ வேண்டும் என்ற கருத்தில் உறுதியாக இருக்கிறது… சோசலிஸ்ட் தலைவர்களிடையே ஒற்றுமை அல்லது செயல்பாடுகளில் இயைந்து செல்வது என்பதையும் தாண்டி, இடதுசாரி சக்திகள் ஒருங்கிணைந்து நிற்பதும் கட்சியின் தலைமைக்குள் புரிந்துணர்வு மேம்படுவதும் மிகமிக அவசியமாகும்.” ( நூல் ஆதாரம்:இந்தியாவில் சோசலிச இயக்கம், அசிம்குமார் சவுத்ரி,அத்தியாயம் 2). இப்படியாக,புதிதாக உருவாக்கப்பட்ட காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் தலைமை, அதற்கு முன்பே தோன்றிய சோசலிஸ்ட் -கம்யூனிஸ்டுகளின் குழுக்களோடு மிகப்பெரிய அளவிற்கு இருந்த இடைவெளியை நிரப்புவதற்கான-கைகோர்ப்பதற்கான முயற்சியை மேற்கொண்டது. இவர்களோடு,1930 களின் துவக்கத்தில் சர்வதேசிய-தேசிய வளர்ச்சிப்போக்குகளின் பின்னணியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களோடு செயல்பட்டு, தலைமை பொறுப்புக்கு வந்த சில தலைவர்களுடனும் கைகோர்ப்பதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டது. இந்த முயற்சிகளின் மையமான அம்சம் என்னவென்றால், மறு சீரமைக்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய தலைமையும் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியும் ஒன்றுபட்டு செயல்படுவது என்பதுதான். எனவே இந்த இரண்டு கட்சிகளுக்கு இடையே ஒரு முறையான ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பி.சி.ஜோஷியும் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயப்பிரகாஷ் நாராயணனும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தம்தான் , இரண்டாம் உலகப்போர் வெடிப்பதற்கு முன்பு இந்தியாவில் நடந்த மாபெரும் ஏகாதிபத்திய எதிர்ப்பு எழுச்சிகளில் மிகப்பெரும் பங்கினை ஆற்றியது. இந்த ஒப்பந்தம், இந்திய தொழிற்சங்க இயக்கத்தை ஒன்றுபடுத்த உதவியது. அடுத்தடுத்து ,விவசாயிகள் இயக்கமும் மாணவர் இயக்கமும் உருவாவதற்கு வழிகோலியது. தொழிற்சங்க இயக்கத்தின் ஒருமைப்பாடு மற்றும் விவசாயிகள், மாணவர் இயக்கங்களின் தோற்றம் ஆகிய இரண்டும் அனைத்து ஏகாதிபத்திய சக்திகளின் விரிவான ஒற்றுமையை நோக்கிய நடவடிக்கைகளாக அமைந்தன. அதேநேரத்தில் காங்கிரசாரில் முற்போக்குப் பிரிவினருக்கு அது உதவியது; காங்கிரஸ் அமைப்பிற்குள் வலுவாக அணிதிரட்டப்பட்ட இடதுசாரி இயக்கம் வளர்வதற்கும் அக்கட்சியின் வலதுசாரி தலைமையின் பிடி கொஞ்சம் கொஞ்சமாக பலவீனம் அடைவதற்கும் வழிவகுத்தது. காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட மகாத்மா காந்தியின் வேட்பாளர் தோற்கடிக்கப்பட்டது என்பது காங்கிரஸ் கட்சிக்குள் இடதுசாரி சக்திகளிடையே வலுவடைந்த ஒற்றுமையின் பலனாக ஏற்பட்ட மிகமிக முக்கியமான வெற்றியாக பார்க்கப்பட்டது. மகாத்மா காந்தி இந்த தோல்வியை, தனது தனிப்பட்ட தோல்வி என்று கூறுமளவிற்கு நிலைமை இருந்தது. புதிதாக உருவாக்கப்பட்ட காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சிக்கும் மறு கட்டமைக்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய தலைமைக்கும் இடையிலான ஒப்பந்தம் இந்த இரண்டு கட்சிகளை மட்டும் ஒருங்கிணைக்கவில்லை; அதையும் தாண்டி பெரும் எண்ணிக்கையிலான ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளை நாடு முழுவதும் ஒருங்கிணைக்க உதவியது.காங்கிரசுக்குள் இருந்த இடதுசாரிகளின் மிக உயர்ந்த தலைவர்களான ஜவஹர்லால் நேரு மற்றும் சுபாஷ் சந்திரபோஸ் போன்றவர்களும் இந்த ஒப்பந்தத்தோடு விரிவான அளவில் ஒருங்கிணைப்பு கொண்டிருந்தார்கள். இரண்டாண்டு காலம் காங்கிரஸ் தலைவராக இருந்து நேரு வெளியிட்ட பிரகடனங்கள், அதைத்தொடர்ந்து போஸ் பிரதிபலித்த கருத்துக்கள் , இவையெல்லாம் அந்த இருபெரும் தலைவர்களின் தனிப்பட்ட கருத்துக்களாக அல்ல ; மாறாக காங்கிரசுக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்த ஒட்டுமொத்த இடதுசாரிகளின் கருத்துக்களாக வெளிப்பட்டன. அனைத்து இடதுசாரிகளிடையே இத்தகைய விரிவான ஒப்பந்தம் எப்படி சாத்தியமானது என்றால், அந்த சமயத்தில் உலக அரசியலில் மாபெரும் சகாப்தத்தை படைக்கும் விதத்தில் முதலாளித்துவத்திற்கும் சோசலிசத்திற்கும் இடையே மிகப்பிரம்மாண்டமான போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது ; போருக்கும் அமைதிக்கும் இடையிலான போராட்டம் நடந்துகொண்டிருந்தது என்பதுதான் காரணம். மிகப்பெரும் எண்ணிக்கையிலான காங்கிரஸ்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள், சோசலிசத்தின் பால் ஈர்க்கப்பட்டார்கள். இவர்களை இந்த வரலாற்றுப்பூர்வமான உலக வளர்ச்சிப் போக்குகள் ஈர்த்தன; அவர்களோடு ஏற்கெனவே தங்களை கம்யூனிஸ்டுகள் என்றும் சோசலிஸ்டுகள் என்றும் அறிவித்து கட்சியாக செயல்பட்டுக் கொண்டிருப்பவர்களும் இதர இடதுசாரி கட்சியினரும் தங்களது செயல்பாடுகளை மேலும் மேலும் விரிவுபடுத்துவதற்கு உத்வேகமளித்தன. இந்த நிலையில் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் உருவாக்கம், விரக்தியின் பிடியில் சிக்கியிருந்த காங்கிரஸ்காரர்களை ஒன்றுதிரட்டுவதற்கும் அவர்களுக்கு ஒரு நம்பிக்கையை அளிப்பதற்குமான அமைப்பாக வடிவம் பெற்றது. அவர்களை காங்கிரசுக்கு வெளியில் இருக்கும் கம்யூனிஸ்டுகளுடனும் இதர இடதுசாரி சக்திகளுடனும் இணைந்து ஒன்றுபட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் அதன் முத்தாய்ப்பாக ஒரு சக்திவாய்ந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு ஐக்கிய முன்னணி உருவாவதற்கும் உதவியது. ஏகாதிபத்திய எதிர்ப்பு அணிகளின் ஒற்றுமை -இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் -பிப்ரவரி 3, 2020 […] ஆனால் ஒரு சக்திவாய்ந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணியை உருவாக்கும் பணி என்பது அவ்வளவு எளிதானதாகவோ அல்லது இயல்பாக நடப்பதாக இல்லை. அந்தப் போராட்டம் மிகக்கடுமையானதாக இருந்தது. ஏனென்றால், இதுதொடர்பாக பல்வேறு கட்சிகள் மற்றும் குழுக்களிடையே முரண்பட்ட கருத்துக்கள் இருந்தன. அந்த முரண்பாடு விரிவாகவும் கூர்மையடையவும் செய்தது. குறிப்பாக இத்தகைய முரண்பாடு கம்யூனிஸ்ட்டுகளுக்கும், இதர இடதுசாரிகளுக்கும் இடையே ஏற்பட்டது என்பது உண்மை. இன்னும் குறிப்பாக கம்யூனிஸ்ட்டுகளுக்கும், காங்கிரஸ் சோசலிஸ்ட்டுகள் மற்றும் இடதுசாரிகளாக இருந்த காங்கிரசார் மற்றும் இதர தரப்பினருக்கும் இடையே இந்த முரண்பாடு எழுந்தது. காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி என்ற பெயரே, அது காங்கிரஸ்காரர்களின் ஒரு அமைப்பு என்பதை வெளிப்படுத்துவதாக இருந்தது. காந்தியத்தின் மீது உறுதிகொண்ட காங்கிரஸ்காரர்கள் அதை சோசலிசமாக விரிவுபடுத்துவதில் உறுதிகொண்டவர்களாக இருந்தார்கள், அத்தகைய காங்கிரஸ்காரர்கள்தான் இந்தக் கட்சியில் இருந்தார்கள்; காந்தியம், நேருவியம் மற்றும் காங்கிரஸ் கட்சியின் இதர சித்தாந்தங்களை அவர்கள் பற்றி நின்றார்கள். அவர்களைப் பொறுத்தவரை, அதாவது இடதுசாரி காங்கிரஸ்காரர்களைப் பொறுத்தவரை, சோசலிசம் என்பது காங்கிரசின் லாகூர் மற்றும் கராச்சி மாநாடுகள் நிறைவேற்றிய தீர்மானத்தின் ஒரு மேம்பட்ட வடிவம் என்றே கருதினார்கள். கம்யூனிஸ்ட் செயல்திட்டம் ஆனால் கம்யூனிஸ்ட்டுகள், துவக்கத்திலிருந்தே இந்திய பாட்டாளி வர்க்க மக்களின் நிலை என்ன என்பது பற்றி உலகளாவிய பார்வையுடன் திட்டவட்ட முறையில் ஆய்வு செய்து, திட்டவட்டமான முறையில் நடைமுறை உத்தியையும் நீண்டகால மற்றும் உடனடி போராட்ட நடவடிக்கைகளை வகுப்பதையும் அதற்கு ஏற்றவாறு ஒரு உறுதியான ஸ்தாபனத்தை உருவாக்குவதையும் நோக்கமாக கொண்டிருந்தார்கள். 1930ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட கட்சியின் வரைவு செயல்திட்டம் இவ்வாறு கூறுகிறது: “உலக வரலாறும், இந்தியாவில் நடைபெற்று வரும் வர்க்கப் போராட்ட நிகழ்வுகளும் எதை உணர்த்துகிறது என்று சொன்னால், இந்திய மக்களை அதிகாரம் பெறச் செய்யும் வரலாற்றுப்பூர்வமான இலக்கினை இந்திய தொழிலாளி வர்க்கத்தின் தலைமையால் மட்டுமே நிறைவேற்ற முடியும் என்பதையே உணர்த்துகிறது. அது மட்டுமல்ல, தேசிய அடிமைத்தனத்திலிருந்து விடுதலை, நிலங்களை கையகப்படுத்தி குவித்து வைத்துக் கொண்டு தேசிய வளர்ச்சிக்கு தடையாக இருக்கிற அனைத்து அம்சங்களையும் தகர்த்து அதிலிருந்து விடுதலை மற்றும் அதன் மூலமாக நீண்டகால இலக்குடன் கூடிய புரட்சிகர குணாம்சத்துடனான ஜனநாயக மறுகட்டுமானம் ஆகிய இலக்குகளையும் தொழிலாளி வர்க்கத்தின் தலைமையே நிறைவேற்ற முடியும். இந்திய தொழிலாளி வர்க்கமானது, இந்தியாவில் ஏற்பட்டுள்ள தொழிற்சாலை நடவடிக்கைகள் மூலமாகவும், வர்க்கப் போராட்டங்களின் மூலமாகவும் தொடர்ந்து உறுதிமிக்க முறையில் அணிதிரட்டப்பட்டு வருகிறது; இந்த அணிதிரட்டல் என்பது கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையின்கீழ் நடந்து வருகிறது. அது நாடு முழுவதும் ஆங்காங்கே சிதறிக்கிடக்கிற விவசாயிகள் மற்றும் நகர்ப்புற ஏழைகளை தனது அணிதிரட்டுவது என்ற தனது வரலாற்றுப்பூர்வமான இலக்கினை நிறைவேற்றி வருகிறது; பிரிட்டிஷ் ஆட்சியை ஒழித்துக்கட்டவும், இந்திய நிலப்பிரபுத்துவத்தை தகர்க்கவுமான மாபெரும் போராட்டத்தை இந்த வரலாற்று இலக்குகளை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை நிறைவேற்றும் பொறுப்பினை மேற்கொண்டு வருகிறது. ஆனால், மிகப்பெரும் எண்ணிக்கையிலான வெகுமக்களாக இருக்கிற தொழிலாளர்களை அணிதிரட்டும் பொருட்டு, ஒரு பிரத்யேகமான வர்க்கமாக பாட்டாளி வர்க்கத்தை அணிதிரட்டும் பொருட்டு, அந்த வர்க்கத்தின் பிரத்யேகமான நலன்களை பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வினை ஊட்டி, மக்கள் விடுதலைக்கான தேசிய இயக்கத்தில் போராடுகிற தலைமையை வலுப்படுத்தும் பொருட்டு, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் ஆகிய இருபெரும் வர்க்கங்களின் புரட்சிகர கூட்டணியை உருவாக்கும் பொருட்டு, அதன் மூலமாக இந்தியத் தொழிலாளி வர்க்கத்தை விடுதலை செய்யும் பொருட்டு, இந்திய விவசாயிகள் மற்றும் நகர்ப்புற ஏழைகளை தேசிய சீர்திருத்தவாதத்தின் பிடியிலிருந்து மீட்கும் பொருட்டு, இந்த ஒட்டுமொத்த போராட்டங்களையும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான புரட்சிகர போராட்டமாக வழிநடத்தும் பொருட்டு, நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான புரட்சியாக அதை முன்னெடுத்துச் செல்லும் பொருட்டு, இந்த அனைத்து இலக்குகளையும் வெற்றிகரமாக நிறைவேற்றும் பொருட்டு, தொழிலாளி வர்க்கம் தனக்கே சொந்தமான ஒரு பாட்டாளி வர்க்க கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கி இருக்கிறது. ” இத்தகைய நிலையில், 1930களின் பிற்பகுதியில் சர்வதேச நிலைமை மிகக்கூர்மையான மாற்றங்களை சந்தித்தது. அதன் காரணமாக இந்திய நிலைமையும் மாறியது. 1935-36 ஆண்டுகள் உலகம் முழுவதும் பாசிச எதிர்ப்பு சக்திகள் ஒன்றுபடத் துவங்கின. 1935ஆகஸ்டில் கம்யூனிஸ்ட் அகிலம் விடுத்த அறைகூவலை ஏற்று பாசிச எதிர்ப்பு சக்திகள் தங்களது ஒன்றுபட்ட செயல்பாட்டை உணர்ந்து கரம்கோர்த்தன. இந்தியாவிலும், முதலாளித்துவத்தால் தலைமை தாங்கப்பட்ட விடுதலை இயக்கமானது, உலக அளவில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிரான வலுவான கூட்டணியாக சோவியத் யூனியனையும் இதர சோசலிச - கம்யூனிஸ்ட் சக்திகளையும் பார்க்கத் துவங்கின. இந்த கண்ணோட்டமானது, இந்தியாவில் காங்கிரசால் முற்போக்கான சிந்தனைகளையும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்படுவதற்கு தூண்டுகோளாக அமைந்தது, காங்கிரசுக்குள் இருந்த நேரு மற்றும் போஸ் போன்ற இடதுசாரி தலைவர்களின் செயல்பாடுகளை மட்டுமல்ல, காந்தியால் தலைமை தாங்கப்பட்ட வலதுசாரி தலைவர்களின் பேச்சுக்களிலும் பிரதிபலித்தது. இந்த நிகழ்வுப்போக்குகளுக்கு முன்பே கம்யூனிஸ்ட்டுகள் இந்திய தேசிய காங்கிரசின் திட்டத்திற்கு ஒரு விவசாய எழுச்சி வடிவத்தை கொடுக்கத் துவங்கியிருந்தனர். இத்தகைய திசையில், காங்கிரசின் 1928ஆம் ஆண்டு மாநாட்டில் ஒரு திருத்தம் முன்மொழியப்பட்டது; அது தோற்கடிக்கப்பட்டது. அந்தத் தோல்வியைத் தொடர்ந்து 1930களில் கம்யூனிஸ்ட்டுகள், காங்கிரஸ் சோசலிஸ்ட் மற்றும் இதர முற்போக்காளர்களின் ஒத்துழைப்புடன் விவசாயிகள் சங்கத்தின் கீழ் இந்திய விவசாயிகளை அணிதிரட்டுவதற்கான தீவிரமான முயற்சிகளை மேற்கொள்ளத் துவங்கியிருந்தனர். இந்தப் பின்னணியில்தான், 1930களின் பிற்பகுதியில் ஏற்பட்ட ஏகாதிபத்திய எதிர்ப்பு ஒற்றுமையின் வளர்ச்சிப்போக்காக விவசாயிகள் சங்கத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளில் குறிப்பிடத்தக்க பலன்கள் கிடைத்தன; இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி ஒற்றுமை ஒரு குறிப்பிடத்தக்க, தீர்மானகரமான பங்கினை ஆற்றியது. உலகைக் காத்த சோவியத் ஒன்றியம் - இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் -பிப்ரவரி 4, 2020 […] காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியும் கம்யூனிஸ்ட்டுகளும் வலதுசாரிகளுக்கும் இடதுசாரிகளுக்கும் இடையிலான மோதல் எனினும், ஒன்றுபட்ட ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணி வளர்ந்து வந்த நிலையில் இடதுசாரிகள் தங்களை மேலும் மேலும் அணிதிரட்டிக்கொள்ளவும், வலுப்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பு ஏற்பட்டதால், வலதுசாரிகள் பதற்றமடைந்தனர். அவர்கள், மூன்றாண்டு காலம் நேரு மற்றும் போஸ் ஆகிய இடதுசாரி காங்கிரஸ் தலைவர்களை சகித்துக் கொண்டனர்; அது அவர்களுக்கு 1937ஆம் ஆண்டு தேர்தல் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெறும் அளவிற்கான ஒரு ஸ்தாபனமாக உறுதிப்படுத்தப்படுவதற்கு உதவி செய்தது. எனினும், காங்கிரசின் காரியக்கமிட்டியில் இடதுசாரிகள் சிறுபான்மை எண்ணிக்கையாகவே இருந்தார்கள். நேருவும், போஸும் காங்கிரஸ் தலைவர் பதவியில், அவர்கள் பிரதானமாக வலதுசாரிகளே நிறைந்திருந்த காரியக்கமிட்டியுடன் இணைந்துதான் பணியாற்ற வேண்டும் என்ற அளவிற்கே அனுமதிக்கப்பட்டிருந்தனர். அந்த குறிப்பிட்ட மூன்றாண்டு காலத்தில் இடதுசாரி இயக்கத்தின் வளர்ச்சி என்பது உண்மையிலேயே காங்கிரசின் வலதுசாரி தலைமையை மிகுந்த படபடப்புக்குள்ளாக்கிவிட்டது. தேர்தல் போராட்டத்தில் காங்கிரசின் பின்னால் வெகுமக்களை அணிதிரட்டுவதில் இடதுசாரி இயக்கம் உதவி செய்தது என்ற போதிலும், அந்தத் தேர்தலில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்துகொள்ள முடியாத அளவிற்கு காங்கிரஸ் தலைமைக்குழு எதிராகவும் இடதுசாரி இயக்கம் நின்றது. எனவே, வலதுசாரி தலைமையில் இருந்தவர்கள், காங்கிரஸ் தலைவர் பதவியை மீண்டும் ஓராண்டுகாலம் வகிப்பதற்கு சுபாஷ் சந்திர போஸ் மற்றும் இடதுசாரித் தலைவர்களை அனுமதிக்க மறுத்துவிட்டனர். இதனால் நான்காவது ஆண்டாக காங்கிரஸ் தலைவர் பதவியை கைப்பற்றுவதற்கு இடதுசாரிகளுக்கும் வலதுசாரிகளுக்கும் இடையே காங்கிரசுக்குள் மிகக் கடுமையான போராட்டம் நடைபெற்றது. இடதுசாரிகளின் வேட்பாளராக சுபாஷ் சந்திர போஸும், வலதுசாரிகளின் வேட்பாளராக பட்டாபி சீத்தாராமையாவும் போட்டியிட்டார்கள். மிக முக்கியமான போராட்டமாக இது மாறிவிட்டது. இப்போராட்டத்தில் இடதுசாரிகள் சார்பில் வெற்றிகரமாக சுபாஷ் போஸ் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அதற்குப்பிறகுதான் இன்னும் கடுமையான மோதல் துவங்கியது. அந்த மோதலில், தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் தலைவரை தோல்வியடைந்தவராக ஆக்குவதில் வலதுசாரிகள் சில தவறான உத்திகளை கைக்கொண்டு வெற்றிபெற்றனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, மூன்றாண்டுகளுக்கு முன்பு வலுவாக கட்டமைக்கப்பட்ட ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணியில் விரிசல் விழத் துவங்கியது. 1936ஆம் ஆண்டு லக்னோவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாடு, கம்யூனிஸ்ட்டுகள், காங்கிரஸ் சோசலிஸ்ட்டுகள் மற்றும் காங்கிரசுக்குள் இருந்த இடதுசாரிகள் ஆகிய அனைவரும் ஒத்துழைப்புடன் செயல்படக்கூடிய ஐக்கிய ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணியை துவக்கிவைத்தது என்று சொன்னால், 1939ஆம் ஆண்டு நடைபெற்ற திரிபுரா காங்கிரஸ் மாநாடு அதற்கு முடிவுரை எழுதும் விதமாக அமைந்துவிட்டது. இது காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையிலான உறவிலும் பிரதிபலித்தது. காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சிக்குள் அதன் ஸ்தாபன கட்டமைப்பை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த மாசானி போன்ற தலைவர்கள் தீவிர கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளர்களாக இருந்தார்கள். ஆனால் ஜெயப்பிரகாஷ் நாராயணன் உள்ளிட்ட காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை ஆனது, காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சிக்குள் தனிப்பட்ட தலைவர்களின் விருப்பம் எதுவாக இருந்தாலும், கம்யூனிஸ்ட்கள் மற்றும் காங்கிரஸ் சோசலிஸ்ட்டுகளின் ஒற்றுமை அவசியம் நீடிக்க வேண்டும் என வலியுறுத்தியது. ஏனென்றால், ஜெயப்பிரகாஷ் நாராயணன்தான், ஏன் சோசலிசம் என்ற நூலின் ஆசிரியர்; காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் மீரட் மற்றும் பைஸ்பூர் ஆவணங்களை வடிவமைத்ததில் முதன்மையானவர். இந்த நிலையில், உலகில் குறிப்பிடத்தக்க அடுத்தடுத்த முக்கிய நிகழ்வுப்போக்குகள் நடந்துகொண்டிருந்தன. பாசிச எதிர்ப்பு இயக்கம் தீவிரமாக முன்னேறிக்கொண்டிருந்தது. அதேவேளை, மேற்கத்திய முதலாளித்துவ நாடுகளின் நிலப்பிரபுத்துவ - முதலாளித்துவ தலைவர்களால் பாசிச எதிர்ப்பு இயக்கத்திற்கு எதிரான சூழ்ச்சிகளும் சதிவலைகளும் பின்னப்பட்டன. இத்தகைய உலகச் சூழலில் உலக அளவிலேயே கம்யூனிஸ்ட்டுகளின் சோசலிஸ்ட் ஒற்றுமை தேவை என்பதை ஜெயப்பிரகாஷ் நாராயணன் உணர்ந்திருந்தார். இந்தியாவிலும் கூட ஒன்றுபட்ட இயக்கம் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும் என்றார். சாத்தியமானால் கம்யூனிஸ்ட் மற்றும் சோசலிஸ்ட் கட்சிகளை இணைத்துவிட வேண்டுமென்றும் கூறி வந்தார். மாசானி போன்ற தனது கம்யூனிஸ்ட் எதிர்ப்பு சகாக்களின் கருத்தான, இரண்டு கட்சிகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு என்பது கம்யூனிஸ்ட்டுகளை வலுப்படுத்தவே உதவும் என்பது உண்மைதான் என ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஒப்புக்கொண்டார். எனினும் அவர் அதைப் பொருட்படுத்தவில்லை; அவரைப்பொறுத்தவரை, சோசலிஸ்ட் கட்சியும் சேர்ந்தே வளரும் எனக் கருதினார். எனினும், 1930களின் பிற்பகுதியில் நிலைமை வேகமாக மாறியது. சோவியத் ஒன்றியத்தில் எதிர்ப்புரட்சிக்காரர்களாக மாறிவிட்ட டிராட்ஸ்கியவாதிகளுக்கு எதிராக விசாரணைகள் நடக்கத் துவங்கின; எதிர்ப்புரட்சி பாதைக்கு சென்றுவிட்ட செஞ்சேனையின் சில உயர் அதிகாரிகளும் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டனர். இது தொடர்பான செய்திகள், தாராளவாத சோசலிஸ்ட்டுகளான ஜெயப்பிரகாஷ் நாராயணன் போன்றவர்களை தடுமாற்றம் அடையச் செய்தது. இந்தத் தலைவர்கள், ஏற்கெனவே மாசானி மற்றும் அவரது கூட்டாளிகள் சோவியத் ஒன்றியத்திற்கு எதிராகவும் கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிராகவும் கூறிவந்த சந்தேகக் கருத்துக்களை நம்பத் துவங்கினர். இந்தக் கருத்துக்கள் அடிப்படை அற்றவை என்று இதற்கு முன்பு அவர்கள் கூறிவந்தனர் என்பது கவனிக்கத்தக்கது. அங்கே சோவியத் ஒன்றியத்தில் அடுத்தடுத்து ஏற்பட்டநிகழ்வுப் போக்குகளின் பின்னணியில், சோவியத் தலைவர்கள் நாஜிச ஜெர்மனியுடன் அனாக்கிரமிப்பு உடன்பாட்டில் கையெழுத்திட்டத்தை தொடர்ந்து, இங்கே கம்யூனிஸ்ட்டுகள் மீதான இவர்களது சந்தேகம் மேலும் வலுவடைந்தது. உலக நிகழ்வுப் போக்குகளில் ஏற்பட்ட மாற்றங்கள், காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியில் இருந்த மாசானி, அசோக் மேத்தா, பட்வர்தன் போன்ற தீவிர கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளர்களுடன் ஜெயப்பிரகாஷ் நாராயணனை நெருக்கமானவராக மாற்றியது. எனினும், ஏற்கெனவே வரையறுக்கப்பட்டு பிரகடனம் செய்யப்பட்ட மீரட் மற்றும் பைஸ்பூர் ஆவணங்களின் அடிப்படையில் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியில் இணைந்து மிகப்பெரும் எண்ணிக்கையிலான இளம் காங்கிரஸ் ஆண்களும், பெண்களும் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள்; எனவே தனது முந்தைய நிலைப்பாடான சோவியத் ஆதரவுமற்றும் பாசிச எதிர்ப்பு என்பதிலிருந்து புதிய நிலைப்பாடான கம்யூனிஸ்ட் எதிர்ப்பு என்ற நிலையை நோக்கி ஜெயப்பிரகாஷ் நாராயணனால் நகர்ந்து செல்ல முடியவில்லை. முன்பு நிலவிய உலகச்சூழலில் உலகிலேயே பாசிச எதிர்ப்பு சக்திகளால் மிகவும் ஆதரிக்கப்பட வேண்டிய தளமாக சோவியத் யூனியனே திகழ்கிறது என்றும், எதிரி வர்க்க ஏஜெண்டுகளிடமிருந்து சோவியத் ஒன்றியம் தன்னைத்தானே பாதுகாத்துக்கொள்ள வேண்டி உள்ளது என்றும் உறுதியாக இவர்கள் நம்பினார்கள்; அதனால் சோவியத் ஒன்றியத்தின் தலைமைக்கும் கம்யூனிச அகிலத்தின் தலைமைக்கும் அவர்கள் முழு மனதுடனான ஆதரவினை அளித்திருந்தார்கள். சோவியத் - ஜெர்மனி உடன்பாட்டைப் பொறுத்தவரை, அதை சந்தேகமில்லாமல் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். சோவியத் ஒன்றியத்தை தனிமைப்படுத்தவும் பலவீனப்படுத்தவும் ஏகாதிபத்தியம் ஒவ்வொரு ராஜ்ஜிய ரீதியான மற்றும் அரசியல் வாய்ப்புகளையெல்லாம் பயன்படுத்தியது; அப்படி தனிமைப்படுத்தப்படுவதிலிருந்து தங்களது நாட்டை பாதுகாப்பதற்கு சாத்தியமான ஒவ்வொரு வழியையும், வாய்ப்பையும் சோவியத் தலைவர்கள் பயன்படுத்துவதில் மிக உறுதியாக இருந்தார்கள். அடுத்தடுத்த நிகழ்வுப்போக்குகள் அதை நிரூபித்தன. அனைத்துப் பகுதிகளிலும் தாக்குதல் நடத்திவிட்டு கடைசியாக நாஜிகள் சோவியத் மீது தாக்குதலைத் துவக்கினார்கள். அதை எதிர்த்து சோவியத் மக்கள் வரலாற்றில் முத்திரைப் பதிக்கத்தக்க விதத்தில் மிகப்பெரும் எழுச்சியோடு தடுத்து நிறுத்தி பதிலடி தாக்குதல் நடத்தினார்கள். இந்த நிகழ்வுகளின் உச்சக்கட்டமாக பாசிசத்தை சோவியத் ஒன்றியம் மண்ணோடு மண்ணாக வீழ்த்தியது. இது, சோவியத் ஒன்றியத்தின் தலைமை மேற்கொண்ட நிலைபாடுகள் மிகச்சரியானவை என்பதை வரலாற்றில் நிரூபித்து விட்டன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த கேரள காங்கிரஸ் சோசலிஸ்ட்டுகள் - இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் -பிப்ரவரி 5, 2020 […] காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியும் கம்யூனிஸ்ட்டுகளும் உறவுகளில் முறிவு மேலே குறிப்பிடப்பட்ட காரணங்களின் பின்னணியில், இரண்டாம் உலகப் போர் துவங்குவதற்கு சில மாதங்களுக்கு முன்னும், துவங்கிய பின்னும் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சிக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையிலான உறவுகளில் முறிவு ஏற்பட துவங்கியது. கேரளத்தில் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் ஒட்டுமொத்த உறுப்பினர்கள் உள்பட சில மாநிலங்கள், மாவட்டங்கள் மற்றும் உள்ளூர் மட்ட அளவில் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் கிளைகள் தங்களை தாங்களே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியாக மாற்றிக் கொண்டன. இதுபற்றி காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு வரலாற்றாளர்கள் அவதூறு செய்யும் விதத்தில் எழுதினார்கள். காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சிக்குள்ளேயே இருந்து கொண்டு அக்கட்சியை சீர்குலைக்கும் நோக்கத்துடன் சில கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஊடுருவி விட்டார்கள் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் மீது தனிப்பட்ட முறையில் பழி சுமத்தினார்கள். அப்படி காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சிக்குள் ‘ஊடுருவியதாக’ அவதூறு செய்யப்பட்டு பழிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். இந்த நிலையில், அது தொடர்பான உண்மைகளை நான் சொல்ல வேண்டும். 1934 அக்டோபரில் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் முதலாவது மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட 4 அகில இந்திய இணைச் செயலாளர்களில் நானும் ஒருவன். மாசானி, கோரே மற்றும் கவுதம் ஆகிய மூவர் மற்ற இணைச் செயலாளர்கள் ஆவர். அதேபோல பம்பாயில் நடைபெற்ற மாநாட்டில் கேரளாவிலிருந்து கிருஷ்ணபிள்ளை, ஏ.கே.கோபாலன் ஆகியரோடு நானும் கலந்து கொண்டேன். உண்மையில் எங்களில யாரும் அதற்கு முன்பு கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்பு கிடைக்கப் பெற்றவர்கள் அல்லர். எனவே, “ஒரு கம்யூனிஸ்ட்டான இஎம்எஸ், காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சிக்குள் ஊடுருவ அனுமதிக்கப்பட்டுவிட்டார்” என்ற கேள்விக்கே இடமில்லை. காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் பம்பாய் மாநாடு நடந்து ஓராண்டுக்குப் பிறகுதான் தோழர் கிருஷ்ணப்பிள்ளையும், நானும் தோழர் சுந்தரய்யா மூலமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடனான முதல் தொடர்பு கிடைக்கப் பெற்றோம். இந்த முதல் தொடர்பு கிடைக்கப் பெற்று சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகுத்தான் 1937 ஆம் ஆண்டில், கேரளாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளை அமைக்கப்பட்டது. இந்த ஒட்டுமொத்த காலக்கட்டத்திலும் கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி தலைவர்கள் சோசலிசத்திற்காகவும், தொழிற்சங்கங்கள், விவசாயிகள் சங்கம் மற்றும் இதர வெகுஜன அமைப்புகளையும் உருவாக்குவதற்காகவும் மட்டுமின்றி, காங்கிரஸ் கட்சியை ஒரு முற்போக்கான, ஏகாதிபத்திய எதிர்ப்பு ஸ்தாபனமாக வளர்த்தெடுக்கும் நோக்கத்துடனும் மிகவும் நேர்மையான, பற்றுறுதி மிக்க ஊழியர்களாகவே செயல்பட்டார்கள். கேரளத்தின் நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் இவர்கள் மேற்கொண்ட உறுதிமிக்க பணியினால்தான் அங்கு தொழிற்சங்கமும், விவசாயிகள் இயக்கமும் வளர்ந்தன; இந்தப் பணிகள்தான் எங்களை கேரளத்தின் தலைவர்களாக வளர்த்தெடுத்தன. அதனொரு பகுதியாகத்தான் நாங்கள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்களாக செயல்பட்டோமே தவிர; கேரளத்தில் தொழிற்சங்கமும், விவசாயிகள் இயக்கமும் வளர்ந்ததே தவிர, தீவிர கம்யூனிஸ்ட் எதிர்ப்ப்பாளரான மாசானி மற்றும் கும்பலின் கருணையினால் அல்ல. இதனொரு பகுதியாகத்தான், நான் கேரள மாகாண காங்கிரஸ் கமிட்டி செயலாளராக தேர்வு செய்யப்பட்டதும், சென்னை மாகாண சட்டமன்றத்தின் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதும் கூட. இன்னும் சொல்லப்போனால், தோழர்கள் கிருஷ்ணப்பிள்ளை, ஏ.கே.கோபாலன் மற்றும் நான் ஆகிய மூவரும் எங்களது சொந்த உரிமையின் அடிப்படையிலேயே காங்கிரஸ் சோசலிஸ்ட் தலைவர்களாக இருந்தோமே தவிர ஜெயப்பிரகாஷ் நாராயணனாலோ அல்லது கம்யூனிஸ்ட் எதிர்ப்பு “வரலாற்றாளர்கள்” குறிப்பிடுவது போல மக்களை நம்ப வைப்பதற்காக வேறு சிலராலோ கட்சிக்குள் கொண்டுசெல்லப்பட்டவர்கள் அல்ல. அப்படியானால், கேரளத்தின் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி ஏன் ஒட்டுமொத்தமாக கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தது? ஏனென்றால், கேரளத்தின் காங்கிரஸ் சோசலிஸ்ட்டுகள், சோவியத் ஒன்றியம் தனது முதலாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் மூலம் மேற்கொண்ட மிகப்பிரம்மாண்டமான நடவடிக்கைகளால் உளப்பூர்வமாக ஈர்க்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் இயல்பாகவே, ரஷ்யாவின் சோசலிசப் புரட்சியானது இந்தியப் புரட்சியாளர்களுக்கு வழிகாட்டுகிறது என்ற முடிவுக்கு வந்தார்கள்; பிற நாடுகளைப் போலவே விடுதலைக்காக போராடிக் கொண்டிருந்த இந்தியப் புரட்சியாளர்களுக்கு அதுவே சிறந்த பாதை என்று எண்ணினார்கள். எனவேதான் அவர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த காங்கிரஸ்காரர்களில் முதல் குழுவாக இருந்தார்கள்; தங்களது இறுதி இலக்கு சோசலிசமே என்று பிரகடனம் செய்து அவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார்கள். உண்மையில் இந்தக் குழுவிற்கு தலைவர்களாக இருந்தவர்கள் ஜெயப்பிரகாஷ் நாராயணனும், மாசானியும் மற்றவர்களும்தான் என்பது ஒரு நகைமுரண். இங்கே மற்றொரு விசயத்தையும் குறிப்பிட வேண்டும். உண்மையில் கேரளத்தில் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியை உருவாக்கிய ஸ்தாபகத் தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி உருவாக்கப்படுவதற்கு முன்பே சட்டவிரோதமாக இயங்கிக் கொண்டிருந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்பு கிடைக்கப்பெற்றிருந்தார்கள். அவர்கள் அந்தக் கருத்துக்களால் ஆகர்ஷிக்கப்பட்டிருக்கக் கூடும். அவர்களைப் பொறுத்தவரை, மாசானி மற்றும் கும்பலைப் போல பிரிட்டிஷ் தொழிலாளர் கட்சியின் பின்னணியில் இருந்து வந்தவர்கள் அல்ல; பிரிட்டிஷ் தொழிலாளர் கட்சியும் ‘சோசலிசம்’ பேசியது; ஆனால் அது பேசிய ‘சோசலிசம்’ கம்யூனிஸ்ட் எதிர்ப்பு மற்றும் சோவியத் எதிர்ப்பு உணர்வுகளை உள்ளடக்கியது. காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் வீழ்ச்சி - இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் -பிப்ரவரி 6, 2020 […] காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியும் கம்யூனிஸ்ட்டுகளும் எனவே இயல்பாகவே, கேரளத்தைச் சேர்ந்த காங்கிரஸ் சோசலிஸ்ட்டுகள் அன்றைய சட்டவிரோத இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணையும் போது அவர்களுடன் விரிவான முறையில் விவாதம் நடத்தினர்; இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களால் முன்வைக்கப்பட்ட கொள்கைகளின் சாதக மற்றும் பாதக அம்சங்களை சீர்தூக்கிப் பார்த்தனர். மறுபுறத்தில் மாசானியும் அவரது கும்பலும் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் கொள்கைகளே மிகச் சரியானவை என்ற முடிவுக்கு வந்திருந்தனர்; கேரள காங்கிரஸ் சோசலிஸ்ட்டுகள், அதிலிருந்து கம்யூனிசம் என்ற முடிவுக்கு வந்தது என்பது, அவர்கள் எப்படி காந்தியிசத்திலிருந்து நேருவிய காங்கிரஸ்காரர்களாக மாறி பின்னர் காங்கிரஸ் சோசலிஸ்ட்டுகளாக மாறினார்களோ அதேபோல இயல்பாக நடந்த ஒன்று. இது கேரளாவில் மட்டுமே நடந்த தனித்த நிகழ்வல்ல. பல்வேறு மாநிலங்களில் இதேபோன்ற நிகழ்வுப் போக்குகளே நடந்தன. ஜெயப்பிரகாஷ் நாராயணனின் ஏன் சோசலிசம் என்ற நூலின் மூலம் சோசலிச இயக்கத்திற்குள் வந்தவர்கள், மீரட் மற்றும் பைஸ்பூர் ஆவணங்களின் மூலம் சோசலிச சிந்தனையில் வலுப்பட்டவர்கள், எந்தவிதத்திலும் மாசானி மற்றும் கும்பலால் பிரச்சாரம் செய்யப்பட்ட சோவியத் எதிர்ப்பு மற்றும் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு முயற்சிகளுக்கு உடன்பட மறுத்துவிட்டனர். ஏன் சோசலிசம் என்ற நூலில் ஜெயப்பிரகாஷ் நாராயணன் குறிப்பிட்டது போல, இந்திய விடுதலையை வென்றெடுப்பதற்கு சோசலிசம் என்ற தத்துவம் வலுவான முறையில் முன்வைத்து கொண்டுசெல்லப்படும் நிலையில், சோவியத் எதிர்ப்பு மற்றும் கம்யூனிச எதிர்ப்பு கும்பலின் கூப்பாடுகளுடன் சோசலிஸ்ட்டுகள் எந்தவிதத்திலும் ஒத்துப்போக வேண்டிய நிலையோ, அவசியமோ ஏற்படவில்லை. ஜெயப்பிரகாஷ் நாராயணனும் கூட காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் துவக்க ஆண்டுகளில் மாசானி மற்றும் கும்பலின் இத்தகைய கம்யூனிச எதிர்ப்பு நிலைபாட்டை ஏற்க மறுத்து வந்தார். ஆனால் அந்தக் கும்பல் அவரை கடுமையான முறையில் நிர்ப்பந்தித்து வந்தது. வேறு வழியின்றி அவர் அதற்கு உடன்பட்டார். ஆனால் கேரளத்தின் ஒட்டுமொத்த காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியும் நாட்டின் இதர பகுதிகளில் செயல்பட்ட காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியினரும் கம்யூனிச எதிர்ப்பு முகாமிற்குள் இணைந்து கொள்ளும் ஜெயப்பிரகாஷ் நாராயணனின் முடிவை பின்பற்ற மறுத்துவிட்டனர். ஏன் உடைந்தது? இரண்டாம் உலகப்போருக்கு முன்னும் பின்னும் ஏற்பட்ட இந்த நிகழ்வுப் போக்குகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி இடையிலான ஒற்றுமையில் மிகத் தெளிவான உடைப்பு ஏற்பட்டிருப்பதை உறுதி செய்தன. உண்மையில் 1930களின் பிற்பகுதியில் நாட்டில் இடதுசாரி சக்திகளை ஒருங்கிணைப்பதற்கு இந்த இரண்டு கட்சிகளின் ஒற்றுமை உதவியாக இருந்தது என்பதை மறுக்க முடியாது. இரண்டு கட்சிகளும் கூட்டாக செயல்பட்டது கற்பனைக்கு எட்டாத விதத்தில் இடதுசாரி இயக்கம் அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்வதற்கு குறிப்பிடத்தக்க முறையில் உதவி செய்தது. அப்படிப்பட்ட நிலையில், எந்தக் கட்சியின் நிலைபாடு அதிகபட்சமாக சரியானது என்று நிரூபிக்கப்பட்டதோ அதை பின்பற்றியிருந்தால் இந்த உடைப்பை தவிர்த்திருக்க முடியாதா என்ற கேள்விகளும் எழுந்தன. இரண்டாம் உலகப்போரின் பிற்பகுதியில், அதாவது சோவியத் ஒன்றியத்தை நாஜி ஜெர்மனி தாக்கிய பிறகு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொண்ட நிலைப்பாடுதான், இந்தியாவில் தேசபக்த மக்கள் திரளிடையே தற்காலிகமான முறையில் கட்சி தனிமைப்படுவதற்கு காரணமாக அமைந்தது. அன்றைய நிலையில் இந்தியாவை ஆண்டு கொண்டிருந்த பிரிட்டிஷ் ஆட்சியாளர்களும், இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனிக்கு எதிராக போரிட்டுக் கொண்டிருந்த சூழலை இந்திய மக்களால் புரிந்து கொள்ள முடியவில்லை; நாஜிகளுக்கு எதிரான யுத்தத்தை “ஒரு மக்கள் யுத்தம்” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரையறை செய்தது. மறுபுறத்தில் அன்றைய தினத்தில் இந்தியாவில் வெள்ளையனே வெளியேறு இயக்கம் பெரும் எழுச்சியுடன் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நடந்து கொண்டிருந்தது; அந்தப் போராட்டத்தில் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி மக்களை அணிதிரட்டுவதில் முன்னணிப் பாத்திரம் வகித்து வந்தது. எனவே இந்தத் தருணத்தில் தங்களுக்கும் கம்யூனிஸ்ட்டுகளுக்கும் இடையிலான மோதலில் மக்களின் பேராதரவை தங்களால் பெற முடியும் என்று காங்கிரஸ் சோசலிஸ்ட் தலைவர்கள் நம்பினார்கள். இந்த நிலையில், நாடு விடுதலையடைகிறது. 1947 ஆகஸ்ட் 15 அன்று விடுதலையடைந்த பிறகு, மேலே குறிப்பிடப்பட்ட நிகழ்வுப் போக்குகளின் பின்னணியில் எழுந்த சூழலை கணக்கிட்டு, காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியானது தனது முன்னொட்டாக இருந்த ‘காங்கிரஸ்’ என்ற வார்த்தையை நீக்கி, தன்னை சோசலிஸ்ட் கட்சி என்று அறிவித்துக் கொண்டது. அதன் தலைவர்கள், புதிய ஆளுங்கட்சியான காங்கிரசுக்கு எதிராக மிகப்பெரிய எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை பெற வேண்டுமென்று விருப்பத்துடன் செயல்பட்டார்கள். 1952ல் நாட்டின் புதிய அரசியலமைப்புச் சட்டத்தின்கீழ் முதலாவது பொதுத் தேர்தல் நடந்த போது, மேற்படி சோசலிஸ்ட் கட்சியின் தலைவர்கள் நாட்டின் ஒரே எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தைப் பெறவும் சில மாநிலங்களில் ஆளுங்கட்சியாக ஆவதற்கும் முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் தேர்தல் முடிவுகள் அவர்களது எதிர்பார்ப்புகளுக்கு முரணாக அமைந்துவிட்டன. இத்தேர்தலில் சோசலிஸ்ட் கட்சியானது படுதோல்வி அடைந்தது மட்டுமல்ல; கம்யூனிஸ்ட் கட்சியானது பிரதானமான இடதுசாரி எதிர்க்கட்சிக் குழுவாக வெற்றிபெற்றது. கம்யூனிஸ்ட் கட்சியால் தலைமைதாங்கப்பட்ட ஐக்கிய முன்னணி, இரண்டு தென்னிந்திய மாநிலங்களில், அதாவது, திருவாங்கூர்-கொச்சின் மாகாணம் மற்றும் சென்னை மாகாணம் ஆகியவற்றில் முதல் காங்கிரஸ் அல்லாத ஆட்சியை அமைப்பதற்கான உரிமை கோரக்கூடிய அளவிற்கு வலுவான நிலைமையை பெற்றது; மேற்குவங்கம் மற்றும் ஹைதராபாத் ஆகிய இரண்டு மாகாணங்களில் அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை பெற்றது. நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் கூட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எதிர்க்கட்சி வரிசையில் பிரதான குழுவாக இடம்பெற்றது. தேர்தலில் ஏற்பட்ட இந்தப் படுதோல்வியைத் தொடர்ந்து காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சிக்குள் மிகக்கடுமையான தத்துவார்த்த அரசியல் குழப்பம் ஏற்பட்டது. காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சிக்குள் இருந்த பல கம்யூனிஸ்ட் எதிர்ப்பு தலைவர்கள் வேறு வேறு பாதையில் பிரிந்தார்கள். ஜெயப்பிரகாஷ் நாராயணன் சர்வோதய இயக்கத்திற்கு சென்றார்; மாசானி காங்கிரசிற்குச் சென்றார்; அங்கிருந்து சுதந்திரா கட்சிக்கு தாவினார்; பட்வர்தன் சன்னியாசி ஆகிவிட்டார். இப்படி பலரும் பல திசையில் திரிந்தார்கள். எஞ்சியிருந்தவர்கள் சோசலிஸ்ட் கட்சியை பிரஜா கட்சி என்ற கட்சியுடன் இணைத்து பிரஜா சமாஜ்வாதி கட்சி என்பதாக உருவாக்கினார்கள். அக்கட்சியும் பிறகு பிரஜா சமாஜ்வாதி கட்சி மற்றும் சமாஜ்வாதி கட்சி எனப் பிரிந்தன. பின்னர் அவை இரண்டும் சோசலிஸ்ட் சமாஜ்வாதி கட்சியாக ஒன்றிணைந்தன. விரைவிலேயே அக்கட்சியும் உடைந்தது. படிப்படியாக உடைப்புகள் நடந்து பின்னர் கடைசியாக எஞ்சியிருந்த அனைத்து சோசலிஸ்ட் குழுக்களும் 1977ல் ஜனதா கட்சி என்ற பெயரில் ஒன்றிணைந்தன. அதற்குப் பிறகும் பல குழுக்களாக உடைந்து ஒரு குழு பழைய ஜனதா என்ற பெயருடன் செயல்பட்டது. 1952 முதல் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி, சோசலிஸ்ட் கட்சியை கடும் நெருக்கடிக்குள்ளாக்கி முற்றாக சிதறடித்துவிட்டது. பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தை நோக்கி… - இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் -பிப்ரவரி 7, 2020 […] காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையில் அடிப்படையிலேயே வேறுபட்ட பாதைகளில் பயணித்த முரண்பாடு என்பதுதான் பிரச்சனையாக இருந்தது. கம்யூனிஸ்ட்டுகள் தங்களது வளர்ச்சிப் போக்கில் ஏற்பட்ட அனைத்து பலவீனங்களையும் உணர்ந்து, பல்வேறு தருணங்களில் திருத்திக் கொண்டு, பாட்டாளி வர்க்க சர்வதேசியம் என்ற உறுதியான நிலைப்பாட்டில் நின்றார்கள். சர்வதேசிய மற்றும் தேசிய பிரச்சனைகளை பாட்டாளி வர்க்க கண்ணோட்டத்தோடு அணுகினார்கள். ஆனால் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியானது முதலாளித்துவ கொள்கைகளில் உறுதியாக நின்றது. காங்கிரசுக்குள் இருந்த கம்யூனிஸ்ட்டுகள் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியில் இணைந்து, அதை ஒரு உறுதிமிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு அமைப்பாக வளர்ப்பதற்கு முயற்சித்தனர். காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியில் உறுப்பினர்களாக இணைந்து, பின்னர் அதிலேயே தங்கிவிட்டவர்கள் தங்களை சோசலிஸ்ட் என்று அழைத்துக் கொண்டாலும் அடிப்படையில் காங்கிரஸ்காரர்களாகவே இருந்தார்கள். ஆனால் காங்கிரசில் செயல்பட்ட கம்யூனிஸ்ட்டுகள் கம்யூனிஸ்ட்டுகளாகவே இருந்தார்கள். காங்கிரஸ் சோசலிஸ்ட்டுகள் எப்படியாயினும் காங்கிரஸ் ஸ்தாபனத்திற்கே விசுவாசமாக இருந்தார்கள். ஆனால் கம்யூனிஸ்ட்டுகள் அடிப்படையில் தங்களது வர்க்கத்திற்கும் கட்சிக்கும் விசுவாசமாக இருந்தார்கள். 1942 ஆகஸ்டில் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கம் மற்றும் அதைத்தொடர்ந்த ஆண்டுகளில் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியானது சந்தேகமே இல்லாமல் ஒரு ஏகாதிபத்திய எதிர்ப்பு கட்சியாகத்தான் இருந்தது. ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வுகொண்ட வெகுமக்களை அப்போராட்டத்தில் திரட்டியது. ஆனால் அக்கட்சி, காங்கிரசின் முடிவுகளைத்தான் அமலாக்கியது. காங்கிரஸ் கட்சி, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுடன் பேச்சுவார்த்தை மூலமாக ஒரு தீர்வை எட்டும் நோக்கத்துடன் வெகுமக்கள் போராட்டப் பாதையை கைவிட்ட போது, அதைத் தடுத்த நிறுத்த காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி எதுவும் செய்யவில்லை. ஆனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இரண்டாம் உலகப்போர் சமயத்தில் இந்தியாவில் வெகுமக்களிடையே சற்று தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருந்தபோதிலும், மீண்டும் மிகவும் சக்திவாய்ந்த முறையில் பிரம்மாண்டமான, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாபெரும் போராட்டங்களை நடத்தியது. தெலுங்கானா, புன்னப்புரா-வயலார், தேபாகா என பல போராட்டங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். அந்தக் காலக்கட்டத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்களும் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தின் எழுச்சிக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்களும், சிறைபிடிக்கப்பட்ட இந்திய தேசிய ராணுவ வீரர்களுக்கு ஆதரவாகவும் கம்யூனிஸ்டுகள் எண்ணற்ற போராட்டங்களை நடத்தினார்கள். இத்தகைய போர்க்குணமிக்க வெகுஜன போராட்டங்களின் வாயிலாகத்தான் இந்திய நாட்டின் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தின் மைய நீரோட்டத்திற்கு மீண்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வந்தது. எனினும், இத்தகைய தீவிரமான போராட்டமானது, 1948 இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டாவது அகில இந்திய மாநாட்டிற்குப் பிறகு இடது திரிபுவாத நிலைப்பாடுகளை நோக்கி சென்றது; ஆனால் அந்தத் தருணத்திலும் கூட வெகுஜன மக்களின் எழுச்சிகர உணர்வலைகளுக்கு முரணாக கட்சி செல்லவில்லை; கட்சி தனது நிலைப்பாட்டை சரி செய்து கொண்டது என்ற போதிலும், நாட்டின் விடுதலையைத் தொடர்ந்து அதிகாரத்திற்கு வந்த புதிய காங்கிரஸ் அரசின் மீது மக்களின் விமர்சனங்கள் படியத் துவங்கின. இந்த நிலையில் வெகுமக்களின் உணர்வுகளுக்கு முரணாக கட்சி செல்லவில்லை. மக்களின் உணர்வுகளோடு கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றி நின்றது. அதனால்தான் 1952 பொதுத் தேர்தல்களில் காங்கிரஸ் சோசலிஸ்ட்டுகளைவிட கம்யூனிஸ்ட்டுகள் ஒரு சிறந்த வெற்றியினை ஈட்ட முடிந்தது. தத்துவார்த்த போராட்டம் விடுதலைக்குப் பிறகு முதல் பொதுத் தேர்தலிலும் சரி, அதற்கு பிந்தைய ஆண்டுகளில் எண்ணற்ற போராட்டங்களிலும் சரி, அதன்பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதயமான பிறகு மார்க்சிஸ்ட் கட்சிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் பல்வேறு சோசலிச குழுக்களுக்கும் கிடைத்த மிக முக்கியமான படிப்பினை என்னவென்றால் இந்த சக்திகளெல்லாம் ஒன்றுபட்டு போராட வேண்டும் என்பதுதான்; எதேச்சதிகாரத்தை நோக்கி ஆளுங்கட்சி செல்லும் போது ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக நாட்டின் இதர ஜனநாயக சக்திகள் நடத்தும் போராட்டங்களை, கம்யூனிஸ்ட்டுகளும் இடதுசாரி சக்திகளும் முதலாளித்துவத்திற்கு எதிராக சுயேட்சையான முறையில் உழைக்கும் மக்களை அணிதிரட்டும் தங்களது போராட்டத்திற்கான அடிப்படைப் போராட்டமாக கைக்கொள்ள வேண்டும் என்பதுதான். இடதுசாரி எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை உருவாக்கும் இந்த முயற்சியில், கம்யூனிஸ்ட் மற்றும் சோசலிச இயக்கங்களுக்கு இடையிலான தத்துவார்த்த வேறுபாடு என்பது ஒரு போதும் தடையாக இருக்கவில்லை. சர்வதேசிய பாட்டாளி வர்க்கத்தின் ஒரு பகுதியாக இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் எழுந்து 60 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்ட நிலையில், அது எல்லாவிதமான வெற்றிகளையும் தோல்விகளையும் பார்த்துவிட்டநிலையில், எப்படிப்பட்ட சூழலிலும் தனது நிலைப்பாடுகளில் உறுதியாக நிற்கிறது; கம்யூனிஸ்ட் இயக்கம் தனது தவறுகளை, சறுக்கல்களை சந்தேகமேயின்றி சரிசெய்து, உறுதியான முறையில் அவற்றை வென்றெடுத்துள்ளது; இது எப்படி சாத்தியமானது என்றால் கம்யூனிஸ்ட் கட்சி சர்வதேசிய மற்றும் தேசிய பிரச்சனைகளை பாட்டாளி வர்க்கக் கண்ணோட்டத்தோடு அணுகும் என்ற அதன் அடிப்படை குணாம்சத்தை அனைத்துத் தருணங்களிலும் உயர்த்திப்பிடித்ததால்தான். இத்தகைய வரலாற்றுப் பின்னணியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுவீகரித்துக் கொண்டிருக்கிறது. தொழிலாளி வர்க்கத்தின் ஒரு புரட்சிகர வெகுஜன கட்சியை கட்டிவளர்ப்பதில், பாட்டாளி வர்க்க குணாம்சத்திற்கு எதிரான போக்குகளை எதிர்த்து விழிப்போடு இருக்க வேண்டும் என்ற உணர்வினை அது பெற்றிருக்கிறது. அந்த அடிப்படையில்தான் வலதுசாரி மற்றும் இடது திரிபுவாத போக்குகளுக்கு எதிராக தொடர்ச்சியான தத்துவார்த்த போராட்டங்களை கட்சி நடத்தியது. விமர்சனம், சுயவிமர்சனம் என்ற அடிப்படை அணுகுமுறையை இதற்கு கட்சி பயன்படுத்தியது. இந்த அணுகுமுறை இல்லாமல் தொழிலாளி வர்க்கத்தின் புரட்சிகர வெகுஜன கட்சியாக, தன்னை வளர்த்துக் கொள்ள முடியாது என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறியும். அத்தகைய பாதையில் கட்சி என்றென்றும் பீடுநடை போடும். மார்க்சிஸ்ட் (ஆங்கிலம்) தத்துவ ஏடு, ஜனவரி 1984 தமிழில் : எஸ்.பி.ராஜேந்திரன் பெருமைக்குரிய புகழ்மிக்க தலைவர்கள் -பிப்ரவரி 9, 2020 […] தமிழகத்தின் முதல் கம்யூனிஸ்ட் குழுவின் உறுப்பினர்கள் டி.ஆர்.சுப்ரமணியம் தோழர் டி.ஆர்.சுப்ரமணியம் கோவை மாவட்டம் பேரூரில் பிறந்தார். 12ஆம் வயதில் தேசிய இயக்க ஈர்ப்பு காரணமாக வீட்டை விட்டு ஓடி சென்னைக்கு வந்த அவர் சங்கு கணேசன் என்ற தேசபக்தர் நடத்தி வந்த ‘சுதந்திரச் சங்கு’ என்ற பத்திரிகையில் பணியாற்றினார். தீவிர காங்கிரஸ் ஊழியரான அவர் 1934ஆம் ஆண்டில் முதல் சென்னை சதி வழக்கில் பலஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டார். மீண்டும் 1940ஆம் ஆண்டுகளில் பல முறை சிறைக்குச் சென்றார். கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்ட 1948-51ஆம் ஆண்டுகளில் அவர் 3 1/2 ஆண்டுகள் சிறையில் இருந்தார். மூன்று முறை அவர் சிறையிலிருந்து தப்பியுள்ளார். மொத்தத்தில் 14 ஆண்டுகள் சிறைவாசம் செய்துள்ளார். 1952ஆம் ஆண்டில் அவர் கட்சியின் முடிவுப்படி நெல்லை மாவட்டத்தின் ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் விவசாயிகள் சங்கத்தை உருவாக்கி அதை பலப்படுத்தும் பணிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பலப்படுத்தும் பணிக்கும் தன் வாழ்நாளை அர்ப்பணித்தார். பி.சீனிவாசராவ் தோழர் பி.சீனிவாசராவ் இளம் வயதிலேயே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர். சிறிது காலம் சிங்கப்பூரில் உணவகம் ஒன்றை நடத்திய அவர் பின்னர் சென்னை திரும்பி சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டார். பி.ராமமூர்த்தி போன்ற காங்கிரஸ் ஊழியர்களுடன் சேர்ந்து அந்நிய துணிக்கடை மறியல் போன்றவற்றில் ஈடுபட்டார். இதில் மண்டை உடையும் அளவிற்கு அவர் மீது தடியடி நடந்தது. அவர் இரத்தம் சிந்துவதைக் காணும் பொதுமக்கள் கதர் துணிக்கடைக்குப் போய் கதரை வாங்கிக் கட்டுவார்கள். அந்த அளவிற்கு அவருடைய தியாகம் இருந்தது. 1930ஆம் ஆண்டுகளில் கம்யூனிஸ்ட் தலைவர் அமீர் ஹைதர் கானுடன் சென்னை சிறையில் ஏற்பட்ட தொடர்பு காரணமாக அவர் கம்யூனிஸ்ட் ஆதரவாளரானார். சென்னை அச்சகத் தொழிலாளர் சங்கம் போன்றவற்றிற்கு பெரும் உதவி செய்தார். 1936ஆம் ஆண்டில் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டபோது சீனிவாசராவ் அதன் பொதுச் செயலாளர் ஆனார். 1943ஆம் ஆண்டில் தமிழகத்தில் முதன் முறையாக கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்டபோது சீனிவாசராவ் தஞ்சை மாவட்டத்தில் நிலவிய பண்ணை அடிமை முறையை ஒழிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டு தஞ்சை மாவட்டம் முழுவதும் பயணம் செய்தார். மணலி கந்தசாமி, அமிர்தலிங்கம் போன்ற தோழர்களுடன் சேர்ந்து பண்ணையடிமைகளைத் திரட்டி நிலப்பிரபுக்களுக்கு எதிராக வீரஞ்செறிந்த போராட்டங்களை நடத்தி பண்ணை அடிமை முறையை ஒழித்தார். தமிழகத்தில் விவசாயிகள் சங்கத்தை பலம் வாய்ந்த அமைப்பாக மாற்றினார். 1961ஆம் ஆண்டில் உச்ச வரம்புச் சட்டம் கோரி லட்சம் விவசாயிகள் பங்கேற்ற மாபெரும் மறியல் போருக்கு தலைமை தாங்கினார். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து போராட்டக்காரர்களை உற்சாகப்படுத்திய அவர் அந்தப் போராட்டம் முடிவுற்ற சமயத்தில் ஆஸ்துமா நோயினால் காலமானார். அவரது உடல் தஞ்சையிலிருந்து திருத்துறைப்பூண்டி நகருக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கே பல்லாயிரக்கணக்கான மக்கள் அஞ்சலியுடன் முல்லை ஆற்றங்கரையில் அடக்கம் செய்யப்பட்டது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் அவருடைய நினைவு தினம் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்புடன் அங்கே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சி.பி.இளங்கோ தோழர் சி.பி.இளங்கோ நாகர்கோவிலைச் சேர்ந்தவர். இளமையிலே தேசிய இயக்கத்தில் ஈர்க்கப்பட்ட அவர் 1930-32 ஆம் ஆண்டுகளில் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டார். விடுதலை ஆன பின் ஜீவாவுடன் சேர்ந்து அவர் நடத்தி வந்த சிராவயல் ஆசிரமத்தில் ஆசிரியராகப் பணியாற்றினார். 1942 அக்டோபரில் ஜீவாவுடன் கைதுசெய்யப்பட்ட அவர் ஓராண்டுக் காலத்திற்குப் பின் விடுதலை ஆனார். பின் சென்னையில் அச்சுத்தொழிலாளர் சங்கத்தில் தீவிரமாகச் செயல்பட்டார். 1940ஆம் ஆண்டுக்கு பின் அவர் நாகர்கோவிலுக்குச் சென்று கன்னியாகுமரி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைக்கும் போராட்டத்தில் ஜீவாவுடன் சேர்ந்து ஈடுபட்டார். 1956-ல் கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. அதன் பின் இளங்கோ நாகர்கோவிலில் தன் குடும்பத்துடன் தங்கிவிட்டார். தன் காலம் முழுவதும் தலைசிறந்த தேச பக்தராகவும், கம்யூனிஸ்டாகவும் வாழ்ந்து மறைந்தார். பி.ராமமூர்த்தி தோழர் பி.ராமமூர்த்தி தஞ்சை மாவட்டம் வேப்பத்தூரைச் சேர்ந்தவர். மாணவ பருவத்திலேயே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர். காங்கிரஸ் கட்சியிலும், காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியிலும் செயல்பட்டு கம்யூனிஸ்ட் ஆனவர். தொழிற்சங்க தலைவராக மட்டுமின்றி தொழில் வளர்ச்சியிலும் அக்கறை செலுத்தியவர். சிஐடியுவின் பொதுச் செயலாளராக நீண்டகாலம் பணியாற்றியவர். திருத்துறைப்பூண்டி சுந்தரேசன் தோழர் சுந்தரேசன் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்தவர். சுதந்திரப் போராட்ட வீரர். விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளில் பணியாற்றியவர். கோவை லட்சுமி மில் போராட்டம்: தொழிலாளர்களுக்கு கற்றுத்தந்த செங்கொடி பாசறை -மார்ச் 9, 2020 […] 1929 - 30ஆம் ஆண்டு உலகில் பொருளாதாரப் பெருமந்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து பிரிட்டன், அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளில் முரண்பாடுகள் முற்றி, பல அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தன. அந்த கால கட்டத்தில்தான் - 1933ஆம் ஆண்டு - ஹிட்லர் ஜெர்மன் நாட்டின் அதிபராகப் பதவியேற்றார். தொடர்ந்து வந்த ஆண்டுகளில் ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையே இரண்டாம் உலகப் போர் மேகங்கள் சூழ்ந்து வந்தன. இந்த சூழலில் இந்தியாவில் செயல்பட்ட கம்யூனிஸ்டுகள் பிரிட்டன் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து தேச விடுதலைப் போராட்டத்தை தீவிரப்படுத்தினர். காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியில் செயல்பட்ட கம்யூனிஸ்டுகள் ஒருபுறம் தேச விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றனர். அதேசமயம், நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகள், தொழிலாளர்களைச் சங்கமாக அணிதிரட்டி அவர்களுக்குத் தலைமை ஏற்று வீறுகொண்ட வர்க்கப் போராட்டங்களை நடத்தினர். இப்படியாக நாட்டு விடுதலை என்பது உழைக்கும் மக்களின் விடுதலையை உள்ளடக்கமாகக் கொண்டது என்ற தெளிவுடன் செயல்பட்டனர். எனவே 1930 – 40 காலகட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்கள் பேராதரவுடன் புதிய உத்வேகம் பெற்று கம்யூனிஸ்ட் இயக்கம் எழுச்சியுடன் வளர்ந்தது. தமிழகத்திலும் சென்னை, மதுரை, கோவை என முக்கிய நகரங்களில் ஆலைத் தொழிலாளர்கள் கம்யூனிஸ்டுகளின் தலைமையில் போராட்டக் களத்திற்கு வந்தனர். இன்று இடதுசாரி இயக்கம் அப்பகுதிகளில் ஆழமாக வேரூன்றி இருப்பதற்கு அக்காலத்தில் நடத்தப்பட்ட போராட்டங்களின் மூலமே வித்திடப்பட்டது என்றால் மிகையல்ல. 1937ஆம் ஆண்டு மதராஸ் மாகாணத்தில் (சென்னை மாகாணம்) காங்கிரஸ் அமைச்சரவை பதவிக்கு வந்தது. கொத்தடிமைத்தனமான அடக்குமுறை, சுரண்டலில் சிக்கி இருந்த தொழிலாளர்கள், மக்கள் பிரதிநிதிகளின் ஆட்சி ஏற்பட்ட நிலையில் பெரும் நம்பிக்கையுடன் தங்கள் உரிமைப் போராட்டத்தைத் தொடங்கினர். கோவை பாப்பநாயக்கன்பாளையம் லட்சுமி மில்லில் வேலை செய்த தொழிலாளர்கள் சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைப் போராட்டத்தைத் தொடங்கினர். ஒருபுறம் முதலாளிகளின் ஏவல் ரௌடிகளின் தாக்குதல், மறுபுறம் போலீசின் அடக்குமுறை என இரண்டையும் எதிர்த்து தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். சரியான தலைமை இல்லாமல் தொழிலாளர்களின் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்த முடியாது என்பதை உணர்ந்த கே.ரமணி உள்ளிட்ட முன்னணி தொழிற்சங்க களப் போராளிகள், சென்னை பிராட்வேயில் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி அலுவலகத்துக்குச் சென்று பி.ராமமூர்த்தி, ஜீவானந்தம் போன்ற தலைவர்களை லட்சுமி மில் தொழிலாளர் போராட்டத்துக்கு வழிகாட்டி தலைமை ஏற்கும்படி கேட்டுக் கொண்டனர். கோவை தொழிலாளர் தூதுக்குழுவினரின் வேண்டுகோளை ஏற்று ஜீவா கோவைக்கு அனுப்பப்பட்டார். லட்சுமி மில் தொழிலாளர்களின் இந்த போராட்டத்தில்தான் கோவை ராமதாஸின் “காலுக்குச் செருப்புமில்லை, கால்வயிற்றுக் கூழுமில்லை! பாழுக்கு உழைத்தோமடா, தோழனே! பசையற்றுப் போனோமடா!!” என்ற பாடலை சிம்ம கர்ஜனைக் குரலில் ஜீவா உணர்ச்சிப் பெருக்குடன் பாடுவார். தொழிலாளர் கோரிக்கைகளை கிஞ்சிற்றும் மதிக்காத லட்சுமி மில் நிர்வாகம் அவர்களது வேலைநிறுத்தப் போராட்டத்தை சீர்குலைக்கும் நோக்கத்தில், மில்லைத் திறந்து கருங்காலிகளை உள்ளே அனுப்ப முயன்றது. ஆனால் தொழிலாளர்களும், அவர்களது குடும்பத்தாரும் மறியல் செய்து அம்முயற்சியை முறியடித்தனர். அப்போது பாப்பநாயக்கன்பாளையம் பகுதி முழுவதும் போர்க்களம் போல் காட்சியளித்தது. அதேசமயம் பி.ராமமூர்த்தி சென்னையில் தொழிலாளர் நல அமைச்சர் வி.வி.கிரியை (முன்னாள் ஜனாதிபதி) சந்தித்துப் பேசி லட்சுமி மில் போராட்டத்தில் மாநில அரசு தலையிட்டு உடன்பாடு ஏற்படச் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தினார். இதை ஏற்று அமைச்சர் வி.வி.கிரி கோவைக்கு வந்து பி.ராமமூர்த்தி உடனிருந்து தொழிற்சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் தொழிற்சங்கத்தை நிர்வாகம் அங்கீகரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 13 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு ஒப்பந்தம் ஏற்பட்டது. இது பஞ்சாலைத் தொழிலாளர்களுக்குக் கிடைத்த முதல் வெற்றியாகும். அந்த வெற்றியின் உந்துதலுடன் ஓராண்டு காலத்திற்குள், கோவை மாவட்டத்தில் பஞ்சாலைத் தொழிலாளர்களின் போராட்டங்கள் பெருமளவு வளர்ந்தோங்கின. அதன் விளைவாக, தொழிலாளர் பிரச்சனைகளைத் தீர்க்க, ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி எம்.வெங்கட்ராமையாவை கொண்ட ஒரு விசாரணைக் குழுவை மாநில அரசு அமைத்தது. தமிழ்நாட்டில் அதுதான் முதல் விசாரணைக் குழுவாகும். கோவை மில் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் பி.ராமமூர்த்தி இந்த விசாரணைக் குழுவின் முன் ஆஜராகி வாதிட்டார். அக்காலத்தில் சிறைக் கைதிகளுக்குக் கொடுக்கப்படும் உணவின் மதிப்பைக் கணக்குப் போட்டுக் காட்டிய பி.ராமமூர்த்தி, பஞ்சாலைத் தொழிலாளர்களுக்கு கொடுக்கப்படும் ரூ.7 முதல் ரூ.14 வரையிலான மாதச்சம்பளம் அதைக் காட்டிலும் குறைவு என்பதை புள்ளி விபரத்துடன் விளக்கினார். தொழிலாளர் வீட்டு வாடகை, குழந்தைகள் படிப்புச் செலவு உள்ளிட்ட அவசியத் தேவைகளைச் சுட்டிக் காட்டினார். அத்துடன், கோவையில் இருந்த சத்துணவு ஆராய்ச்சி நிலையத்தின் தலைவராக இருந்த டாக்டர் ஐக்கிராய்ட், நகர்ப்புறத் தொழிலாளர்களுக்கு ஒரு நாளைக்கு 2800 கலோரி உணவு அவசியம் என்று கூறியிருந்ததைச் சுட்டிக்காட்டி, ஒரு தொழிலாளிக்கு இதை ஈடுகட்ட மாதம் ரூ.36 குறைந்தபட்ச சம்பளம் தேவை என வாதிட்டார். இந்த ஆணித்தரமான வாதத்தை ஏற்ற நீதிபதி வெங்கட்ராமையா, உலகில் மிகப்பெரும் பொருளாதார மந்தத்திலும்கூட கோவை மில்கள் அசாதாரண லாபத்தில் ஓடின என்பதைச் சுட்டிக்காட்டி குறைந்தபட்ச சம்பளத்தை ஓரளவு அதிகமாக நிர்ணயித்தார். மில் முதலாளிகள் இதை ஏற்கவில்லை. மீண்டும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஸ்ட்ராட்டி விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. அங்கு காரசாரமான வாதங்களுக்குப் பிறகு கூடுதல் சம்பள உயர்வு வழங்க தீர்ப்பளிக்கப்பட்டது. அத்துடன் வேலைநீக்கம் செய்யப்பட்ட பல தொழிலாளர்கள் வேலைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டனர். அப்போதுதான் தோழர் கே.ரமணி தொழிற்சங்க முழுநேர ஊழியரானார். கோவை பாப்பநாயக்கன்பாளையம் லட்சுமி மில் தொழிலாளர் போராட்டத்துக்கு சுற்று வட்டார மில் தொழிலாளர்களும் ஆதரவளித்து உதவி செய்தனர். இப்போராட்டத்தின் வெற்றி செங்கொடி தலைமையிலான தொழிற்சங்கத்தின் மகத்துவத்தை தொழிலாளர்களுக்கு உணர்த்தியது. அந்த வட்டாரம் முழுவதும் செங்கொடி இயக்கத்தின் கோட்டையாக மாறியது. புதியதோர் உலகம் செய்ய புறப்பட்ட ‘ஜனசக்தி’ - ப.முருகன் -மார்ச் 10, 2020 […] கம்யூனிஸ்ட்டுகள் நேரடியாக செயல்பட முடியாத நிலையில் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியாக செயல்பட்டார்கள். இந்தக் காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளை மக்களிடம் பரப்புவதற்காக ஒரு பத்திரிகை அவசியமாக இருந்தது. 1936ஆம் ஆண்டில் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு அமைப்பு தோழர் எஸ்.வி.காட்டே அவர்களின் ஒருங்கிணைப்பால் தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்டது. அதன் பொதுச் செயலாளராக ஜீவாவும் கூட்டுச் செயலாளர்களாக பி.சீனிவாசராவ், நீலாவதி சுப்ரமணியம் ஆகியோரும் நிர்வாகக் குழு உறுப்பினர்களாக பி.ராமமூர்த்தி, கே.முருகேசன், தூத்துக்குடி சங்கரநாராயணன், திருச்சி கே.ஏ.சாரி போன்றோரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிலையில் சென்னை மாகாண சட்டமன்ற தேர்தலும் வந்தது. தேர்தல் பிரச்சாரம் கம்யூனிஸ்ட்டுகளின் கொள்கையை மக்களிடையே எடுத்துரைப்பதற்கு நல்ல வாய்ப்பாக அமைந்ததால் உடனடியாக கட்சிக்கு பத்திரிகை துவக்குவதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதையடுத்து 1937 நவம்பர் 6 அன்று ‘ஜனசக்தி’ பத்திரிகை வார ஏடாக துவங்கப்பட்டது. அதன் ஆசிரியராக கட்சியின் பொதுச் செயலாளரான ஜீவா செயல்படுவதென முடிவானது. ஜனசக்தியின் முதல் இதழின் பிரகடனம் தலையங்கம் ‘நாம்’ என்ற தலைப்பில் வெளியானது. அந்தப் பிரகடனம் இந்திய சுதந்திரப் போராட்டம் என்பது உலகில் பழமைக்கும் புதுமைக்கும் இடையில் நடக்கும் போராட்டத்தின் ஒரு பகுதியே ஆகும் என்றும் ஏகாதிபத்தியத்தையும், பாசிசத்தையும் எதிர்த்து உலக மக்களால் நடத்தப்படும் மகா யுத்தத்தின் ஒரு பகுதிதான் இந்திய சுதந்திரப் போராட்டம் என்றும் சுட்டிக்காட்டியது. மனித சமூகவாழ்வில் புரட்சிகர சக்திக்கும் அதற்கு எதிரான சக்திகளுக்கும் இடையில் நடக்கும் போராட்டத்தின் ஒரு பகுதிதான் இந்திய சுதந்திரப் போராட்டம் என்றும் இந்திய மக்கள் அனைவரும் அதை உணர வேண்டும் என்றும் கூறியது. செய்ய வேண்டிய அவசர அவசிய வேலையானது விவசாயிகள், தொழிலாளிகள், வாலிபர்களை ஒன்றுதிரட்டி காங்கிரஸ் மகா சபையை மைய அமைப்பாக வைத்து தேசிய ஐக்கிய முன்னணியை உருவாக்கி ஏகாதிபத்தியத்தை கடுமையாக எதிர்த்துப் போராடுவதுதான் என்று அந்த பிரகடனத்தில் கூறப்பட்டது. ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரை நடத்தவும், பூரண சுதந்திரம் பெறவும், சோசலிசத்தை உருவாக்கவும் ஜனசக்தி கடைசி மூச்சு உள்ள வரையில் தயவு தாட்சண்யமின்றி கடும் போர் புரிய போர்க்கோலம் பூண்டு நிற்கும் எனவும் சூளுரைத்தது. ஜனசக்தியின் முதல் இதழ் வெளிவந்ததுமே அது சென்னை மாகாண காங்கிரஸ் அரசாங்கத்தின் கண்களை உறுத்தத் தொடங்கியது. அதனால் ஜனசக்தியை அச்சிட்டு தந்த பி.என். பிரஸ் உரிமையாளர் மிரட்டப்பட்டார். இதனால் ஜனசக்தியை அச்சிட்டு தருவதற்கு அவர் மறுத்துவிட்டார். இதையடுத்து மூன்று இதழே வெளிவந்த நிலையில் ஜனசக்தி நிறுத்தப்பட்டுவிட்டது. அந்த மூன்றாவது இதழில்தான் பாவேந்தர் பாரதிதாசனின் ‘புதியதோர் உலகம் செய்வோம்’ என்ற பிரபலமான பாடல் வெளியானது. அந்தப் பாடல் கம்யூனிஸ்ட்டுகளின் கொள்கையை மக்களுக்கு மிக எளிமையாகவும் அதே சமயத்தில் வலிமையாகவும் எடுத்துச் சொல்வதற்கான மிகச்சிறந்த பாடலாக அமைந்தது. அந்தப் பாடல் என்றென்றும் புகழ்மிக்க பாடலாக விளங்கிக் கொண்டிருக்கிறது. ஜனசக்தி நிறுத்தப்பட்டதனால் சொந்தமாக அச்சகம் இல்லாமல் பத்திரிகை நடத்துவது சிரமமானது என்பதை காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி - கம்யூனிஸ்ட் கட்சி புரிந்து கொண்டது. அதையடுத்து சொந்த அச்சகம் உருவாக்குவதற்காக கட்சித் தலைமை தீவிர நடவடிக்கைகளில் இறங்கியது. நண்பர்களின் உதவியுடன் நிதி வசூலித்து அச்சு இயந்திரமும் அச்சு எழுத்துக்களையும் வாங்கியது. ஆயினும் கட்சித் தலைவர்கள் பெயரில் அச்சகம் துவக்க காங்கிரஸ் அரசாங்கம் அனுமதி அளிக்காது என்பதால் தோழர் பி.சீனிவாசராவின் நெருங்கிய நண்பரான காங்கிரஸ் ஊழியர் பாலன் என்பவரின் பெயரில் அனுமதிகோரி விண்ணப்பிக்கப்பட்டது. அதனால் அனுமதியும் கிடைத்தது. அந்த அச்சகம் சேசு அச்சகம் என்ற பெயரில் செயல்படத் துவங்கியது. இதையடுத்து 1938 ஏப்ரல் 6 அன்று மீண்டும் ஜனசக்தி வெளியானது. ஜனசக்தியின் அந்த இதழில் ‘புதிதாய்ப் பிறந்தோம்’ என்ற தலைப்பில் பிரதானக் கட்டுரை வெளியிடப்பட்டது. அது ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டம் என்பதே இந்திய மக்களின் முதன்மையான முதற்பெரும் காரியம் என்று கூறியது. இந்த யுத்தத்தில் வெற்றிபெற வேண்டுமானால் தேசவிடுதலை இயக்கத்தில் ஆர்வம் கொண்டுள்ள பலதரப்பட்ட மக்களையும் ஓரணியில் சேர்த்து தேசிய ஐக்கிய முன்னணியைக் கட்டித்தீர வேண்டும் என்று வலியுறுத்தியது. தொடர்ந்து ஜனசக்தி ஏடு தொழிலாளர், விவசாயிகள் போராட்டங்கள், அவர்கள் சந்தித்துவரும் பிரச்சனைகளை எடுத்துரைத்தது. காங்கிரஸ், காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சிகளின் செய்திகளை வெளியிட்டது. மாணவர் இயக்கங்கள், விவசாயிகள் கடன்பிரச்சனை, ஜமீன் குடிபிரச்சனைகள், கொடூரமான குற்றப்பரம்பரை சட்டம் போன்றவை குறித்தும் பல குறிப்புகளும் ஜனசக்தியில் வெளியாயின. அத்துடன் ஜனசக்தியில் மாமேதைகள் மார்க்ஸ் - ஏங்கெல்ஸ் பற்றியும், லெனின் தலைமையில் புரட்சி நடத்தி ரஷ்யாவில் புதிய ஆட்சி செய்து வரும் சாதனைகள் பற்றியும் சிறப்புக் கட்டுரைகள் வெளியிடப்பட்டன. புதுமைப்பெண் என்ற தலைப்பில் ஆசிரியரான ஜீவா எழுதிய தொடர் கட்டுரைகள் குறிப்பிட்டு சொல்லப்பட வேண்டிய ஒன்று. அத்துடன் சிறுகதை, திரைப்பட விமர்சனம் போன்றவையும் வெளிவந்தன. காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின், ஆங்கில வார ஏடாக நேஷனல் பிரண்ட் என்னும் பத்திரிகை இதே 1938ஆம் ஆண்டு வெளிவந்தது. அந்த ஏட்டின் கட்டுரைகளும் செய்திகளும் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி என்ற பெயரில் செயல்பட்ட கம்யூனிஸ்ட்டுகளுக்கு வழிகாட்டுவதாக அமைந்தது. இந்தப் பத்திரிகையில் கம்யூனிஸ்ட் தலைவர்களான பி.சி.ஜோஷி, டாக்டர் ஜி.அதிகாரி ஆகியோர் எழுதிய கட்டுரைகள் தமிழாக்கம் செய்யப்பட்டு தொடர்ந்து வெளியிடப்பட்டு வந்தன. அதுமட்டுமின்றி வாசகர் கடிதங்கள் ‘சம்மட்டி அடி’ என்ற பெயரில் வெளியிடப்பட்டது. திருத்தம் திங்கள்கிழமை வெளியான லட்சுமி மில் போராட்டம் கட்டுரையில் குறிப்பிடப்பட்ட ‘காலுக்குச் செருப்புமில்லை’ என்ற பாடல் ஜீவா அவர்களால் எழுதப்பட்டது. அந்தப் பாடலை தொழிலாளர் போராட்ட மேடைகளில் கோவை ராம்தாஸ் மிக உருக்கமாகவும் உணர்ச்சிகரமாகவும் பாடுவார் என்று வாசிக்கவும். உதயமானது அகில இந்திய விவசாயிகள் சங்கம் - ப.முருகன் -மார்ச் 11, 2020 […] விவசாயிகள் நாட்டின் மக்கள்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியாக உள்ளனர். எனவே அவர்களது தேவைகளையும், கோரிக்கைகளையும் கணக்கில் கொள்ளாத எந்த அரசியல், பொருளாதாரத் திட்டமும், தேசியத் திட்டம் என்று கனவில் கூட கூற இயலாது. இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவக தலைவர்களான சிங்காரவேலர், முசாபர் அகமது போன்றவர்கள் ஆரம்பக்காலத்தில் விவசாயிகள், தொழிலாளர்கள் அமைப்பு அல்லது கட்சி என்ற பெயரில் புதிய அமைப்புகளை ஏற்படுத்தினார்கள். ஏனெனில் இந்தியாவில் பெரும்பான்மையாக இருப்பவர்கள் விவசாயம் மற்றும் அதன் சார்பு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்கள் ஆவர். எனவே அவர்களை அணிதிரட்டுவதில் கம்யூனிஸ்ட்டுகளின் பணி இன்றியமையாததானது. கம்யூனிஸ்ட்டுகள் காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி ஆகியவற்றில் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போதே தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், எழுத்தாளர்கள் -கலைஞர்கள் என பல்வேறு பகுதியினருக்கும் தனித்தனி அமைப்புகளை உருவாக்குவதில் தீவிரமாக செயல்பட்டனர். அந்த வகையிலேயே அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ், அகில இந்திய கிஸான் காங்கிரஸ், அகில இந்திய மாணவர் காங்கிரஸ், இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கம், இந்திய மக்கள் நாடக சங்கம் ஆகியவற்றை உருவாக்கினர். இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவக தலைவர்களான சிங்காரவேலர், முசாபர் அகமது போன்றவர்கள் ஆரம்பக்காலத்தில் விவசாயிகள், தொழிலாளர்கள் அமைப்பு அல்லது கட்சி என்ற பெயரில் புதிய அமைப்புகளை ஏற்படுத்தினார்கள். ஏனெனில் இந்தியாவில் பெரும்பான்மையாக இருப்பவர்கள் விவசாயம் மற்றும் அதன் சார்பு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்கள் ஆவர். எனவே அவர்களை அணிதிரட்டுவதில் கம்யூனிஸ்ட்டுகளின் பணி இன்றியமையாததானது. கம்யூனிஸ்ட்டுகள் காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி ஆகியவற்றில் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போதே தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், எழுத்தாளர்கள் -கலைஞர்கள் என பல்வேறு பகுதியினருக்கும் தனித்தனி அமைப்புகளை உருவாக்குவதில் தீவிரமாக செயல்பட்டனர். அந்த வகையிலேயே அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ், அகில இந்திய கிஸான் காங்கிரஸ், அகில இந்திய மாணவர் காங்கிரஸ், இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கம், இந்திய மக்கள் நாடக சங்கம் ஆகியவற்றை உருவாக்கினர். இந்த சங்கத்தின் நோக்கங்களாக, பொருளாதார ஒடுக்குமுறையிலிருந்து முழு விடுதலை பெறுவது விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் முழுமையான பொருளாதார அரசியல் அதிகாரம் வழங்குவது சுரண்டப்படும் அனைத்துப் பிரிவினருக்கும் விடுதலை பெறுவது - ஆகியவையே பிரகடனப்படுத்தப்பட்டன. மேலும் அந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஜமீன்தாரி, முறை மற்றும் அனைத்து வகைப்பட்ட நிலப்பிரபுத்துவ முறைகள் ஒழிக்கப்பட வேண்டுமென்று கோரியது. விவசாயிகளுக்கு நிலத்தின் மீதான அனைத்து உரிமைகளும் வழங்கப்பட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டது. விவசாய வாரம்(குத்தகை), விவசாயப் பொருட்களுக்கான சந்தை, விவசாயிகள் கடன், தரிசு நிலம் மற்றும் மேய்ச்சல் நிலங்களை பஞ்சாயத்துகள் வசம் ஒப்படைத்தல், விவசாயத் தொழிலாளிகளுக்கு குறைந்தபட்சக் கூலி போன்றவை குறித்தும் அந்தத் தீர்மானம் பேசியது. இந்த மாநாட்டின் நிகழ்வுகள் பற்றி அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் முன்னோடித் தலைவர்களில் ஒருவரான ஹர்கிஷன் சிங் சுர்ஜித் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்: “1930களில் வர்க்க ரீதியாக விவசாயிகளைத் திரட்ட வேண்டியதன் அவசியத்தை காங்கிரஸ் கட்சிக்குள் இருந்த இடதுசாரிகள் உணர்ந்தனர். நிலப்பிரபுத்துவத்தை எதிர்ப்பதன் மூலமும், அவர்களின் உடனடி கோரிக்கைகளுக்காக போராடுவதன் மூலமும், விவசாயிகளை தேச விடுதலை போராட்டத்தில் பங்குபெறச் செய்ய இயலுமென அவர்கள் அறிந்தனர். அரசியல் விடுதலைக்கான போராட்டம் என்பதை நிலப்பிரபுத்துவத்தை ஒழிக்கின்ற, புரட்சிகரமாக கிராம சமுதாய கட்டமைப்பை மாற்றுகின்ற போராட்டத்திலிருந்து பிரித்துப் பார்க்க இயலாதது என உணர்ந்தனர். இடதுசாரிக் காங்கிரஸ் காரர்கள், காங்கிரஸ் சோசலிஸ்ட்டுகள் மற்றும் கம்யூனிஸ்ட்டுகள் ஒன்றிணைந்து அகில இந்திய விவசாயிகள் சங்கத்தை தோற்றுவிக்கும் முயற்சியை மேற்கொண்டனர்.” 1936 ஏப்ரல் 11 லக்னோவில் நடைபெற்ற சங்கத்தின் துவக்க நிகழ்வுக்கு முன்பாக மீரட் நகரில் தயாரிப்புக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்திற்குப் பின்னரே அகில இந்திய விவசாயிகள் சங்கம் அமைக்கப்பட்டது. மீரட் கூட்டத்தில் சங்கத்தின் திட்டம் ஸ்தாபன, உறுப்பினர்களை தேசிய விடுதலைப் போராட்டத்தில் இணைப்பதன் மூலம் ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பை மாற்றும் போராட்டத்தை அதன் ஒரு பகுதியாக ஆக்க திட்டமிடப்பட்டது. ஏனெனில் ஏகாதிபத்தியம் நிலப்பிரபுத்துவ சமூக அமைப்புக்கு அரசு ஆதரவை அளிக்க உதவியது. 1936 ஏப்ரல் 11 கூட்டம் நடைபெற்ற போது இந்திய தேசிய காங்கிரஸின் கூட்டமும் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. விவசாயிகள் இயக்கத்தை தேச விடுதலை இயக்கத்தின் ஒரு பகுதியாக முன்னிறுத்துவதற்காகவே அந்த சமயத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் மாநாடு நடைபெறும் காலங்களில் தொடர்புடைய பல மாநாடுகளும் கூட்டமும் நடைபெறுவது வழக்கம். விவசாயிகள் சங்கத்தின் முதல் கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் பின்னாளில் காங்கிரசில் பிரபலமாக இருந்தவர்களாவர். ஜோகன்சிங் ஜோஷ், லால்பகதூர் சாஸ்திரி, கே.டி.மாளவியா, மோகன்லால் கௌதம், பி.சம்பூர்ணானந்த், ஜெயப்பிரகாஷ் நாராயணன், சுவாமி சகஜானந்த சரஸ்வதி, நாபா, கிருஷ்ணசவுத்ரி, இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட், தினகர்மேத்தா, கமல்சர்க்கார், ஹரிகிருஷ்ணமகதாப், என்.ஜி.ரங்கா, இந்துலால் யக்னிக், விஷ்ணுராம் மேதி, சரத்சின்கா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களில் பலரும் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைவர்களாக , பொதுச் செயலாளர்களாக, மாநில அமைப்புகளில் தலைவர்களாகவும் செயலாளர்களாகவும் பின்னாட்களில் பொறுப்பு வகித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விவசாயிகள் சங்கம் துவக்கம் முதல் கொண்டே ஒரு பரந்துவிரிந்த அமைப்பாக விளங்கியது. பல்வேறு அரசியல் கருத்தோட்டங்களை கொண்டிருந்தவர்களையும், விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்கவும், உரிமைகளை நிலைநாட்டவும், விவசாயிகள் சங்கம் தன்வசம் ஈர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது. 1936 ஆகஸ்ட் மாதத்தில் மும்பை நகரில் கூடிய மத்திய கிஸான் கவுன்சில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் அமைப்புக் கூட்டத்தில் எடுத்த முடிவுகள் பற்றி பின்வருமாறு விளக்கியது: விவசாயிகள் நாட்டின் மக்கள்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியாக உள்ளனர். எனவே அவர்களது தேவைகளையும், கோரிக்கைகளையும் கணக்கில் கொள்ளாத எந்த அரசியல், பொருளாதாரத் திட்டமும், தேசியத் திட்டம் என்று கனவில் கூட கூற இயலாது. இந்திய தேசிய காங்கிரஸ் தனது அரசியல் பொருளாதார கொள்கைகளில் இந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வுகாணும் வகையில் கொள்கைகளை உருவாக்க வேண்டும். விவசாய இயக்கம், தேசிய விடுதலை இயக்கம் ஆகிய இரண்டுமே ஒன்றையொன்று சார்ந்தவை. இந்தச் சின்னம் தவிர்க்க இயலாதது - ப.முருகன் -மார்ச் 12, 2020 […] காங்கிரஸ் கட்சிக்குள் இருந்துகொண்டே கம்யூனிஸ்ட்டுகள் அதை இடதுசாரிப் பாதையில் கொண்டுசெல்வதற்காக செயல்படுவது என்ற அடிப்படையிலேயே 1934ஆம் ஆண்டு ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைமையில் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்டது. அதன் தலைமையில்தான் அகில இந்திய விவசாயிகள் சங்கம் அமைக்கப்பட்டது. இத்தகைய நிலைப்பாட்டை ஒட்டியே காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி தலைவர்கள், கம்யூனிஸ்ட்டுகளுடன் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தில் செயல்பட்டனர். ஆயினும் காங்கிரசில் இருந்த பிற்போக்கு மனோபாவம் கொண்ட தலைவர்களான பலரும் விவசாயிகள் சங்கத்தை கலைக்க வேண்டுமென்று கூறுமளவுக்கு சென்றனர். அவர்களில் வல்லபாய் படேலும் ஒருவர். இந்நிலையில் விவசாயிகள் சங்கம், விவசாயிகளின் நலன்களுக்காகவும் நிலப்பிரபுத்துவ சுரண்டலுக்கு எதிராகவும் போராட்டங்களை தீவிரப்படுத்தியது. அதனால் காங்கிரஸ் கட்சி தலைமையில் செயல்பட்ட மாகாண அரசாங்கங்கள் விவசாயிகளின் பிரச்சனைகளில் அவர்களின் நலன்களுக்கு எதிராகவே செயல்பட்டன. மகாத்மா காந்தி, ராஜேந்திர பிரசாத், வல்லபாய் படேல் ஆகியோரும் காங்கிரஸ் அரசாங்கங்களின் செயல்பாடுகளை நியாயப்படுத்தியே பேசினார்கள். இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் பெருமைமிகு நூற்றாண்டு முதல் பகுதி (1920-1964) எனும் நூலில் எழுத்தாளர் என்.ராமகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாபெரும் தலைவர்களில் ஒருவரும் விவசாயிகள் இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான ஹர்கிஷன் சிங் சுர்ஜித் எழுதிய நூலிலிருந்து எடுத்தாண்டுள்ள பின்வரும் மேற்கோள் மனம்கொள்ளத்தக்கது. “காங்கிரஸ் கட்சியிலிருந்த வலதுசாரிகளின் எதிர்ப்பையும் மீறி அகில இந்திய விவசாயிகள் சங்கம் தனது தனித்த அடையாளத்தை நிலைநிறுத்திக்கொண்டே தேசிய இயக்கத்திலும் பங்கேற்றது. அகில இந்திய காங்கிரஸ் அமைப்பின் கூட்டமைப்பிற்குள் இந்து, முஸ்லிம் மதவாதிகளிடமிருந்து எதிர்ப்புக் கிளம்பியது. அவர்கள் அனைவரும் விவசாயிகள் சங்கத்திற்கு எதிராக ஒன்றிணைந்தனர். 1938 மே 11 முதல் 14 வரை கோமில்லா நகரில் நடைபெற்ற சங்கத்தின் மூன்றாவது மாநாட்டின் போது மாநாட்டிலும் பேரணியிலும் முஸ்லிம்கள் பங்கேற்க வேண்டாம் என முஸ்லிம் லீக் கேட்டுக் கொண்டது. இருப்பினும் 25 ஆயிரம் விவசாயிகள் பேரணியில் பங்கேற்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள். அன்று வங்காள மாகாண பிரதமரான கிருஷக் பிரஜா கட்சியைச் சேர்ந்த பஸ்லூல்ஹக் மாநாட்டை நடத்தவிடாமல் இருப்பதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டார். பேரணியில் பங்குபெறுவோர் நடந்து செல்கின்ற பாதையில் குரானின் பக்கங்களை பரப்பி வைத்து ஊர்வலத்தில் செல்பவர்கள் அதன்மீது கால் வைத்தால் மதவெறுப்பு உணர்வுகளை தூண்டுவதாக பிரச்சனையை எழுப்ப மதவாதிகள் தயாராக இருந்தனர். ஆனால் பேரணியில் பங்கேற்றவர்கள் அந்தக் காகிதங்களை கையிலெடுத்து திட்டமிட்டு மதவெறியை முறியடித்தனர். முஸ்லிம் மதவெறியர்களுக்கு தாங்கள் எந்தவிதத்திலும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் இந்து மதவெறியர்கள் செயல்பட்டனர். மதக்கலவரம் ஏற்படப்போகிறது என பொய்யாக துண்டு பிரசுரம் வெளியிட்டு குண்டர்களை வைத்து பேரணிக்கு வருகின்றவர்களை பயமுறுத்தி பங்கேற்பதை தடுக்க முயன்றனர். ஆனால் அவற்றையெல்லாம் முறியடித்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் பேரணியில் கலந்து கொண்டனர். இந்தப் பேரணி விவசாயிகள் சங்கத்தில் அதிகரித்து வரும் வீச்சை பிரதிபலிப்பதாக அமைந்தது.” 1937-38ஆம் ஆண்டுகளில் விவசாயிகள் சங்கம் நாடு முழுவதும் நிலப்பிரபுக்களுக்கு எதிரான பல்வேறுபோராட்டங்களை நடத்தியது. நில உரிமைக்காகவும், கட்டாய உழைப்பை கைவிட செய்வதற்காகவும் ஜமீன்தார்களுக்கும், ஜாகிர்தார்களுக்கும் எதிராக பெரும் போராட்டங்கள் நடைபெற்றன. இந்த போராட்டங்களில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான விவசாயிகள் கைது செய்யப்பட்டு போராட்டங்களை ஒடுக்குவதற்கு காங்கிரஸ் அரசாங்கங்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டன. 1937ல் அசாம் மாநிலம் கர்மா பள்ளத்தாக்கில் நில வெளியேற்றத்தைக் கண்டித்து போராட்டம் நடைபெற்றது. விவசாயிகளின் குடிசைகளை அழிக்க யானைகள் பயன்படுத்தப்பட்டன. இதை எதிர்த்து போராட்டம் நடத்திய குத்தகை விவசாயிகளுடன் கட்டாய உழைப்பு எனும் பெயரில் சுரண்டப்பட்ட ‘நன்கர்கள்’ என்பவர்களும் போராட்டத்தில் இணைந்தனர். ஜமீன்தார்களும், நன்கர்களும் முஸ்லிம்கள். குத்தகை விவசாயிகள் இந்துக்கள். ஆயினும் நன்கர்கள் குத்தகை விவசாயிகளுடன் இணைந்தே போராடினர். அவ்வாறு போராடியவர்களில் 800 பேர் கைது செய்யப்பட்டனர். 1938ஆம் ஆண்டு விவசாய குத்தகையில் சீர்திருத்தம் செய்யக்கோரி நடைபயணம் மேற்கொண்டு 85 மைல் தூரம் நடந்து மாநில சட்டமன்றத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதுபோலவே பஞ்சாப் மாநிலத்தில் நிலத் தீர்வை அதிகரிக்கப்பட்டதை கண்டித்து போராட்டம் நடந்தது. தண்ணீர்க் கட்டணத்தை குறைக்கக்கோரி அமிர்தசரஸ் நகரில் நடைபெற்ற போராட்டத்தில் மாநிலம் முழுவதிலுமிருந்து வந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றனர். நிலவெளியேற்றத்தை எதிர்த்து 40 ஆயிரம் விவசாயிகள் கலந்து கொண்ட ‘நீலிபார்’ போராட்டம் குறிப்பிடத்தக்கதாகும். குஜராத்தில் கொத்தடிமை முறையான ஹாலி எனும் முறையை எதிர்த்து பெரும் போராட்டம் நடைபெற்றது. வடமேற்குப் பகுதியான கல்லாதிரி பகுதியில் நிலவெளியேற்றத்தை எதிர்த்து போராட்டம் நடத்தப்பட்டது. இவ்வாறு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகள் சங்கத்தின் தலைமையில் பெரும் போராட்டங்கள் நடத்தப்படலாயின. பீகார் மாநிலத்தில் தாங்களே செம்மைப்படுத்திய நிலத்தில் விவசாயம் செய்து வந்த விவசாயிகள் (பகஸ்த்) ஜமீன்தார்களால் நிலவெளியேற்றம் செய்யப்படுவதை எதிர்த்து நடந்த போராட்டத்தை சங்கத்தின் தலைவராக இருந்த சகஜானந்த சரஸ்வதி ஒருங்கிணைத்து மாபெரும் இயக்கமாக மாற்றினார். இதையடுத்து பீகார் குத்தகைச் சட்டம் மற்றும் பகஸ்த் நிலவரி சட்டம் ஆகியவை கொண்டுவரப்பட்டது. பிட்டா நகரில் டால்மியா சர்க்கரை ஆலையில் நடைபெற்ற விவசாயிகள் -தொழிலாளர்களின் ஒருங்கிணைந்த போராட்டம் மிக வெற்றிகரமானதாகவும் சங்கத்தின் நோக்கத்தை உணர்த்துவதில் முக்கியத்துவமானதாகவும் அமைந்தது. இந்த நிலையில் 1937 அக்டோபர் மாதம் விவசாயிகள் சங்கம் கொடியையும் அதன் பதாகையையும் அறிவித்தது. இதையடுத்து சங்கத்தின் கொடியில் அரிவாள் சுத்தியல் சின்னம் இருப்பது சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக சங்கம் எடுத்த நிலைபாடு விவசாயிகள், தொழிலாளர் ஒற்றுமைக்கு மற்றொரு எடுத்துக்காட்டாகும். சில பிரதிநிதிகள் அரிவாள் சுத்தியல் சின்னம் விவசாயிகள் சங்கத்தை கம்யூனிஸ்ட்டுகளுடன் அடையாளப்படுத்தும் என விமர்சித்தனர். ஆனால் உலகம் முழுவதும் அச்சின்னம் தொழிலாளி - விவசாயி ஒற்றுமையின் அடையாளம் என்று மற்றவர்கள் வாதிட்டனர். கோமில்லா நகர் அமர்வின் தலைவராக இருந்த சுவாமி சகஜானந்தா சங்கத்தின் கொடியில் உள்ள சின்னத்தை ஆதரித்து கீழ்க்கண்டவாறுப் பேசினார். ‘சிலர் இதை (கொடியை) அந்நியமானது; தேசியத்திற்கு புறம்பானது என்கின்றனர். வேறு சிலர் இச்சின்னத்தை வன்முறையின் சின்னம் என்கின்றனர். இது விவசாயிகளை குழப்பத்தில் ஆழ்த்தும். இதுபோன்ற வாதங்களை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. மூவர்ணக்கொடி தேசியத்தின் அடையாளம். செங்கொடி சுரண்டப்படுகின்றவர்களின் ஒடுக்கப்படுகின்றவர்களின் அபிலாஷைகளை வெளிப்படுத்தும் சர்வதேச ஒற்றுமையை காண்பிக்கும் கொடியாகும். தற்போதைய காலத்தில் தொழிலாளி - விவசாயிகள் போராட்டங்கள் சர்வதேச தன்மையைப் பெற்றுள்ளன. சர்வதேச ஒற்றுமையை வெளிப்படுத்தாமல் அவர்களின் நோக்கங்கள் நிறைவேறாது. எனவே இச்சின்னம் தவிர்க்க இயலாதது.’ அத்துடன் அரிவாள் சுத்தியல் சின்னத்தை ஏற்றுக்கொள்வதால் விவசாயிகள் சங்கம், விடுதலைக்கான தேசியப் போராட்டத்திற்கு எந்த அவமரியாதையையும் செய்யவில்லை என்றும் கூறினார். அந்தமான் தீவுச் சிறையில் உருவான கம்யூனிஸ்டுகள் - என்.ராமகிருஷ்ணன் -மார்ச் 13, 2020 […] 1905ஆம் ஆண்டு உருவான வங்கப்பிரிவினையால் நாட்டில், குறிப்பாக வங்காளத்தில் பயங்கரவாத இயக்கம் தலைதூக்கியதைக் கண்டோம். அது தொடர்ந்து வளர்ந்துகொண்டே போய் 1920ஆம் ஆண்டுகளின் கடைசியில் மேலும் தீவிரமானது. 1928ஆம் ஆண்டில் இந்தியர்கள் சுதந்திரம் பெற தகுதியானவர்கள் தானா என்று பரிசீலனை செய்யும்படி சைமன் குழு என்ற ஒரு குழுவை ஆங்கிலேய அரசாங்கம் இந்தியாவுக்கு அனுப்பியது. இதை தேசிய காங்கிரஸ் இயக்கம் கடுமையாக எதிர்த்தது. நாடு முழுவதும் சைமன் குழு சென்ற இடங்களில் எல்லாம் பெரும் ஆர்ப்பாட்டங்களும் கடையடைப்புகளும் ஹர்த்தால்களும் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து வங்காளத்தில் பயங்கரவாத இயக்கம் மீண்டும் தலைதூக்கியது. அங்குள்ள சிட்டகாங் நகரில் இருந்த ஆங்கிலேய அரசாங்கத்தின் ராணுவக்கிடங்கை புரட்சியாளர்கள் கைப்பற்றினர். அதில் பங்குபெற்ற ஆனந்தசிங், கணேஷ் கோஷ், சுபோத்ராய் போன்றோர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 1932ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அந்தமான் தீவுச்சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கே அடைக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து மற்றவர்களும் அங்கே கொண்டு செல்லப்பட்டனர். இந்த வழக்கில் கைதான ஒரே பெண் கல்பனா தத்திற்கு முதலில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது பின்னர் அது உயர்நீதிமன்றத்தால் ஆண்டு சிறைத்தண்டனையாக குறைக்கப்பட்டு கல்கத்தா சிறையில், அடைக்கப்பட்டார். இதேபோன்று ஏராளமான அரசியல் கைதிகள், குறிப்பாக பயங்கரவாதப் புரட்சியாளர்கள் பல மாநிலங்களில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு அந்தமான் தீவுக்கு அனுப்பப்பட்டனர். இவர்கள் மிகக்கொடிய சித்ரவதைக்கும் வேதனைகளுக்கும் ஆட்படுத்தப்பட்டனர். எனவே அனைவரும் சேர்ந்து உண்ணாவிரதம் இருந்து போராடினர். இதில் சிலர் இறந்தனர். அந்தப்போராட்டம் இந்திய நாட்டையே உலுக்கியது. அதன்பின்னர்தான் ஆங்கிலேய அரசாங்கம் அவர்களுக்கு சில சலுகைகளைக் கொடுத்தது. அவற்றில் ஒன்று அவர்கள் விரும்பும் பத்திரிகைகளை பணம் கொடுத்து வாங்கிக்கொள்ளலாம் என்பதாகும். இவ்வாறு அந்தமான் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டவர்களில் சிலர் மார்க்சியம் குறித்து படித்தவர்கள். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் டாக்டர் நாராயண் ராய் என்பவர். அவருடன் சேர்ந்து சதீஸ் பக்ராசி, நிரஞ்சன் சென் ஆகிய மார்க்சியம் அறிந்தவர்களும் இருந்தனர். இந்த மூவரும் கல்கத்தாவின் அலிப்பூர் சிறையில் இருந்தபொழுது அங்கிருந்த கம்யூனிஸ்டுகளுடன் தொடர்புகொண்டு மார்க்சியம் குறித்து தெரிந்துகொண்டவர்கள் ஆவர். ஆங்கிலேய அரசாங்கம் டாக்டர் நாராயண் ராயையும் நிரஞ்சன் சென்னையும் சத்தீஸ் பக்ராசியையும் அந்தமானுக்கு மாற்ற முடிவு செய்தது. இவர்கள் மூவரும் அந்தச்சிறைக்குச் சென்றபின் மார்க்சியம் குறித்து பரவச் செய்வதற்காக கிடைத்த மார்க்சிய நூல்கள் அனைத்தையும் தங்களுடன் எடுத்துச் சென்றனர். இந்த மூவரும் அந்தமான் சிறைக்கு வந்தபொழுது அங்கே ஏற்கெனவே வைக்கப்பட்டிருந்த பகத்சிங்கின் சக தோழர்களும் லாகூர் சதி வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டவர்களுமான பூதகேஷ்வர் தத், விஜய் சின்ஹா, சிவவர்மா, கமல்நாத் திவாரி, ஜெய்தேவ் கபூர், டாக்டர் கயா பிரசாத் போன்றோர் அனைவரும் ‘சி’ வகுப்புக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்தனர். இப்பொழுது இவர்களும் அங்கிருந்த மற்ற கைதிகளும் சேர்ந்துதான் உரிமைகள் கோரி உண்ணாவிரதப்போராட்டம் நடத்தி பல உரிமைகளை அடைந்தனர். அதன்படி, பத்திரிகைகள், புத்தகங்களை அரசாங்கமே கொடுக்கும்; கைதிகள் சொந்தப் பணத்தில் வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம். கைதிகள் ஒன்றாய் கூடி பத்திரிகைகள், புத்தகங்களைப் படிக்கவோ, விவாதிக்கவோ செய்யலாம். குடும்பத்தினருடன் கடிதப்போக்குவரத்து நடத்துவதில் தடையில்லை. வேலை நேரம் குறைக்கப்பட்டது. பெயரளவு சட்டப்படி எளிமையான வேலை கொடுக்கப்பட்டது. விளையாட்டு வசதிகள் தரப்பட்டன. உணவு முறையில் மாற்றம் செய்யப்பட்டது. இவைகள் தவிர, வேறு பல சலுகைகளும் தரப்பட்டன. இந்தச் சலுகைகள் வழங்கப்பட்டதன் விளைவாக அரசியல் கைதிகள் அனைவரும் ஒன்றுகூட முடிந்தது. கயிறு திரித்தல், கல் உடைத்தல் போன்ற வேலைகளுக்குப் பதிலாக சிறைக்குள்ளிருந்த அச்சகத்தில் புத்தகம் பைண்டிங் செய்யும் வேலை போன்றவை அரசியல் கைதிகளுக்குத் தரப்பட்டன. காலை 8 மணிக்கு ஆரம்பிக்கும் அச்சக வேலை பகல் 12 மணிக்கு முடியும். அதன்பின் அனைவரும் குளித்து மதிய உணவு உண்பார்கள். சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு புத்தகங்கள் படித்தல், விவாதித்தல், மாலையில் விளையாட்டு என்று நாட்கள் செல்ல ஆரம்பித்தன. இந்தத் தண்டனை கைதிகள் தங்களுக்கென்று பத்திரிகைகள் வாங்கிக்கொள்ள கல்வி வாரியம் ஒன்றினை அமைத்தார்கள். லண்டனிலிருந்து வெளியாகும் லேபர் இண்டர்நேஷனல் அபேர்ஸ், வேர்ல்டு ரெவ்யூ ஆப் ரெவ்யூஸ், லண்டன் டைம்ஸ், மான் செஸ்டர் கார்டியன் வார இதழ், நியுயார்க் டைம்ஸ் வார இதழ், நியூ ஸ்டேட்ஸ்மன், இந்தியன் ரெவ்யூ, மைசூர் எகனாமிக் ஜெர்னல், இந்துஸ்தான் ரெவ்யூ, லேபர் கெஜட், மும்பை, பாரத், இந்தி வார இதழ் போன்றவைகளை வாங்கிக்கொண்டனர். மேலும் பின்வரும் புத்தகங்களையும், கல்வி வாரியம் பணம் கொடுத்து வாங்கச் செய்தது. கார்னர் எழுதிய ‘ஸ்பெயின் எழுச்சி’ கொள்கிறது. பிரிட்டோ எழுதிய ‘இன்றைய ஸ்பெயின்’ போன்றவற்றோடு ‘ஐரோப்பா மீது ஹிட்லர்’, ‘பாசிச அச்சுறுத்தல்’, ‘அதிகாரத்திற்கான போராட்டம்’, ‘முதலாளித்துவ நெருக்கடியின் தன்மை’, ‘சீனம் எழுச்சி கொள்கிறது’ ‘நவீன சீனத்தின் அடிப்படைகள்’ ‘நெருக்கடியில் ஜப்பான்’ ‘தூர கிழக்கின் பிரச்சனைகள்’ ‘நவீன காலங்களில் தூர கிழக்கின் வரலாறு’ ‘இங்கிலாந்தும் பாலஸ்தீனமும்’ ‘பால்கன் நாடுகள்’ ‘ரூஸ்வெல்ட் வெற்றி பெறுவாரா’ ‘நடுத்தர வர்க்கத்தின் விதி’ ‘இந்தியப் பொருளாதாரம்’ ‘இந்தியாவின் நிலப்பிரச்சனைகள், சோசலிசம் எதற்காக’ ‘இந்திய நெருக்கடி’ ‘இந்தியாவில் சம்மேளனம்’ போன்ற ஏராளமான ஆங்கில நூல்கள் வாங்கப்பட்டன. அரசியல் கைதிகளுக்காக பொதுவான வகுப்புகள் நடத்தப்பட்டுவந்த நேரத்திலேயே டாக்டர் நாராயண் ராய் அவர்களிடையே மார்க்சியத்தைப் பரப்பும் பணியையும் துவக்கினார். தினமும் மார்க்சிய வகுப்புகள் நடத்தப்பட்டன. முதலில் நிரஞ்சன் சென், சத்தீஸ் பக்ராசி, கோபால் ஆச்சாரியா, பங்கேஸ்வரராய், ஹரிகிருஷ்ண கோனார் மற்றும் சுதான்சு தாஸ் குப்தா ஆகிய ஏழு பேர் இதில் பங்கேற்றனர். நாராயண் ராய் அவர்களுக்கு முதலில் மார்க்சியத்தை விரிவாக விளக்கினார். இவர்கள் தினமும் பகல் ஒருமணிக்குத் துவங்கி மாலை வரை மார்க்சிய உரைகளைக் கேட்பார்கள். இரவில் தனித்தனியாக மார்க்சிய நூல்களைப் படிப்பார்கள். அந்தமான் தீவுச் சிறையில் உருவான கம்யூனிஸ்டுகள் - என்.ராமகிருஷ்ணன் -மார்ச் 15, 2020 […] முதலில் புக்காரின் எழுதிய வரலாற்றுப் பொருள் முதல்வாதம் நூல் அனைவராலும் சேர்ந்து வாசிக்கப்பட்டது. பின்னர் மாஸ்கோ உரையாடல் என்ற ஜூலியஸ் ஹெகருடைய நூல் படிக்கப்பட்டது. அதன்பின் பிளெக்கனோவ் எழுதிய மார்க்சியத்தின் அடிப்படைப் பிரச்சனைகள் படிக்கப்பட்டது. அதன்பின் அரசியல் பொருளாதாரத்தின் சுருக்கம் என்ற நூல் வாசிக்கப்பட்டது. அதன்பின் காரல் மார்க்சின் மூலதனம் நூல் படிக்கப்பட்டது. இந்நூலை ஏற்கெனவேயே சிறையில் நன்கு படித்திருந்த டாக்டர் நாராயண் ராய், தினமும் அதை விளக்கிக் கூறினார். இந்த வகுப்பு மட்டும் 6 மாதங்கள் தொடர்ந்தது. நீங்கள் விடுதலையாகி வெளியே சென்றால் கட்சி வேலையில் மூழ்கி விடுவீர்கள். மூலதனத்தைப் படிக்க நேரம் கிடைக்காது. இப்பொழுது ஏராளமான நேரம் உள்ளது. அதை இப்பொழுதே படிப்பது நல்லது என்று டாக்டர் நாராயண்ராய் இதர தோழர்களை அடிக்கடி வலியுறுத்துவார். இந்த ஏழு பேர் கொண்ட குழு தொடர்ந்து மார்க்சிய நூல்களைப் படித்து விவாதித்து வந்ததைக் கண்ட சக அந்தமான் கைதிகள் ஒருவர்பின் ஒருவராக டாக்டர் நாராயண் ராயைத் தேடிவந்து தங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்க ஆரம்பித்தனர். அவரும் சளைக்காமல் அவர்களுக்குப் பதில் சொல்வதோடு அவர்களுக்கு மார்க்சிய நூல்களைக் கொடுத்து படிக்க வைத்தார். இவ்வாறு நூற்றுக்கணக்கான அந்தமான் கைதிகள் மார்க்சிய தாக்கத்துக்கு ஆளாகி கம்யூனிஸ்டுகள் ஆகினர். அடுத்து ஸ்டாலின் எழுதிய ‘லெனினியம்’ என்ற புத்தகம் கூட்டாக படிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ‘லெனினுடைய பொருள்முதல்வாதமும் அனுபவ வாத விமர்சனமும்’ என்ற நூல் படிக்கப்பட்டது. விரைவில் டாக்டர் நாராயண் ராய் கம்யூனிஸ்ட் ஒருங்கிணைப்புக் குழு என்ற குழுவை (Communist Consolidation Gruop)உருவாக்கினார். இவ்வாறு கம்யூனிஸ்ட் ஆக்கப்பட்ட அந்தமான் கைதிகளில் பலர் விடுதலையானபின் பின்னாட்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தலைவர்களாக விளங்கினர் என்பது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதாகும். அவர்களில் லாகூர் சதி வழக்கு கைதிகளும் பகத்சிங்கின் சக தோழர்களுமான பூதகேஸ்வர் தத், சிவவர்மா, ஜெய்தேவ் கபூர், விஜய் சின்ஹா, சுதின்ராய், அமிர்தேந்து முகர்ஜி, பிரான் கிருஷ்ண சக்ரவர்த்தி, கணேஷ் கோஷ், சதீஷ் பக்ராஷி மற்றும் சுபோத்ராய் ஆகியோராவர். சிவவர்மா பின்னாட்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உத்தரப்பிரதேச மாநில செயற்குழு உறுப்பினராகவும் பிரான் கிருஷ்ண சக்ரவர்த்தி மேற்குவங்க அகதிகள் சங்கத் தலைவலாகவும் அமிர்தேந்த் முகர்ஜி மேற்குவங்க இடதுமுன்னணி அமைச்சராகவும், சுபோத்ராய் சிறந்த மார்க்சிய ஆய்வாளராகவும் விளங்கினர். ‘இந்தியாவில் கம்யூனிசம்’ என்ற தலைப்பில் இந்தியாவில் கம்யூனிசம் குறித்து மூன்று ஆவணங்களை சுபோத்ராய் வெளியிட்டுள்ளார். சதீஸ் பக்ராஷி மொத்தத்தில் 32 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்துள்ளார். கணேஷ் கோஷ் 28 ஆண்டுகள் கொடிய சிறைவாசம் அனுபவித்துள்ளார். இவர்கள் இருவரும் மேற்குவங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களாக விளங்கினர். பின்னாட்களில் கணேஷ் கோஷ் மார்க்சிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. கம்யூனிஸ்டுகள் கொடிய சிறைவாழ்க்கையையும் கல்விச் சாலையாக மாற்றும் திறன் படைத்தவர்கள் என்பதற்கு அந்தமான் தீவுச்சிறை ஒரு உதாரணமாகும். இந்திய ரயில்வேயும் தொழிலாளர்களும் - கே.அனந்தன் நம்பியார் -மார்ச் 16, 2020 […] இந்திய ரயில்வேயின் வரலாறும் ரயில்வே தொழிற்சங்க இயக்கத்தின் வரலாறும் மகத்தானவை. இந்திய ரயில்வே தொழிற்சங்க இயக்கம், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வளர்ச்சியில் பிரிக்க முடியாத ஒரு மாபெரும் அங்கம். விடுதலைப் போராட்டத்திற்கு முன்பும் பின்பும் இந்திய ரயில்வேயும் அதன் தொழிலாளர்களும் தொழிற்சங்கங்களின் வளர்ச்சியும் எப்படி பங்காற்றின என்பது பற்றி 1959 நவம்பர் ஜனசக்தி இதழில், அன்றைக்கு இந்திய ரயில்வே தொழிலாளர்களின் மகத்தான தலைவர்களில் ஒருவராக இருந்த தோழர் கே.அனந்தன் நம்பியார் எழுதியுள்ள கட்டுரையின் சுருக்கம் இது. இந்திய ரயில்வேயின் வரலாற்றையும் ரயில்வே தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கத்தின் வளர்ச்சியையும் புரிந்துகொள்ள இக்கட்டுரை உதவும். ஒரு நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு ரயில்வே போக்குவரத்து மிகவும் அத்தியாவசியமானது. ஆசியாவிலேயே மிகப் பெரியது இந்திய ரயில்வே தான். இன்றுள்ள (1959ல்)இந்திய ரயில்வே பெரும்பாலும் ஆங்கிலேயர்களால் போடப்பட்டதுதான். இந்திய ரயில்வே ஆரம்பிக்கப்பட்டு 106 ஆண்டுகள் கழிந்து விட்டன. இதில் 95 வருட காலம் இந்திய ரயில்வே பிரிட்டிஷ் ஆட்சியாளர் கையில் இருந்தது. 1950-ல் இந்திய சர்க்கார் அதை எடுத்துக் கொண்ட பொழுது, இந்திய ரயில்வே மோசமான நிலைமையிலேயே இருந்தது. யுத்த காலத்தில் ரயில்வே சரிவரக் கவனிக்கப்படவில்லை. ரயில்வே நிர்வாகம் புறக்கணிக்கப்பட்டது. இந்திய - பாகிஸ்தான் நாட்டுப் பிரிவினை ஏற்பட்டதன் விளைவாக 1947ஆம் ஆண்டிலும், அதற்கடுத்த ஆண்டிலும் அகதிகள் பரிமாற்றமும், சொத்துக்கள் பரிமாற்றமும் நடந்தன. இதன் காரணமாக ரயில்வே மட்டுக்கு மிஞ்சி அதிகமாக உபயோகிக்கப்பட்டு, தளவாடங்கள் பழுதடைய நேர்ந்தது. நாடு துண்டாடப்பட்டது போல், ரயில்வேயும் இருபாகமாகப் பிரிக்கப்பட்டது. ஒரு பாகம் இந்தியாவிற்கும், மறுபாகம் பாகிஸ்தானுக்கும் சென்றது. ஆயிரக்கணக்கான ரயில்வே ஊழியர்கள் பாகிஸ்தானுக்குச் சென்றனர். இந்து, முஸ்லிம் என்ற வகுப்புவாத அடிப்படையிலேயே இந்த பரிமாற்றம் நடைபெற்றது. யுத்த காலத்தில் பிரிட்டிஷார் இந்திய ரயில்வேயைப் புறக்கணித்ததன் விளைவாக ரயில்வே மிகமோசமான நிலைமையில் இருந்ததென்பதைப் பார்த்தோம். வாகன்கள், கோச் பெட்டிகள், ரயில் என்ஜின் முதலிய சகல முக்கிய பொருட்களும் பிரிட்டனிலிருந்து தான் நமக்கு வந்து கொண்டிருந்தன. யுத்தகாலத்தில் இவை வருவது தடைப்பட்டுப்போயிற்று. எனவே பழுதடைந்த, பலகாலம் உழைத்த தளவாடங்களே மீண்டும் மீண்டும் உபயோகிக்கப்பட வேண்டியதாயிற்று. தண்டவாளங்களும், ஸ்லிப்பர்களும் கிடைப்பது அரிதாயிற்று, எல்லாவற்றிற்கும் மேலாக 4000 மைல் நீளமுள்ள தண்டவாளங்கள் பெயர்க்கப்பட்டு யுத்த பிராந்தியத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன. பல இஞ்ஜின்களும் லட்சக்கணக்கான ஸ்லிப்பர்களும் யுத்த முகாமுக்கு எடுத்துச்செல்லப்பட்டன. இதுநெருக்கடியை மேலும் தீவிரமாக்கிற்று. இந்தியாவில் பிரிட்டிஷார் அதிகமாக மூலதனமீட்டிருந்த தொழில் ரயில்வே தொழில்தான். ஆண்டுதோறும் லட்சக்கணக்கான ரூபாய் பெறுமானமுள்ள, நீராவி இயந்திரங்கள் வாகன்கள், கோச் வண்டிகள், பாயிலர்கள், ஸ்பேர் தளவாடங்கள் முதலான பொருட்கள் பிரிட்டனிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுவந்தன. போடப்பட்டுள்ள மூலதனத்திற்கு நான்கரை சதவீதம் வட்டி கொடுக்க வேண்டுமென்பது நிபந்தனை. இத்தொகை பிரிட்டிஷ் செலாவணியில் கொடுக்கப்படும். வழக்கமாகக் கொடுக்கப்படும் நாணயச் செலாவணி விகிதத்தைவிட இந்த மூலதன வட்டிக்கு அளிக்கப்பட்ட செலாவணி விகிதம் அதிகமாகும். 1 ரூபாய்க்கு 22 பென்ஸ் என்ற செலாவணி விகிதத்தில் இந்த வட்டி கொடுக்கப்பட்டது. ரயில்வேயில் மூலதனம் போடப்பட்ட ஆரம்பகாலத்திலிருந்து இந்திய சர்க்கார் கைக்கு மாற்றப்பட்ட இறுதிக்கட்டம் வரையிலும் உள்ள பிரிட்டிஷ் மூலதனத்திற்கு வட்டி கொடுக்கப்பட்டது. 1950-ல் பிரிட்டிஷாரின் பங்குகள் விலைகொடுத்து வாங்கப்பட்டன. இதற்கான பணம் பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவுக்குத் தரவேண்டிய ஸ்டர்லிங் நிதியிலிருந்து கழித்துக் கொள்ளப்பட்டது. 1926லிருந்து 1949 வரையுள்ள 23 ஆண்டுகளுக்குள்ள வட்டி மட்டும் 677 கோடியே 20 லட்சம் ஆகும். ஆனால் 1949 வரை இத்தொழில் போடப்பட்டிருந்த மொத்த மூலதனமே 736 கோடியே 80 லட்சம் ரூபாய்தான் என்றால் யார்தான் ஆச்சரியப்பட மாட்டார்கள்? பிரிட்டிஷார் ரயில்வேயில் ஈடுபடுத்திய மூலதனத்தைவிட அந்த மூலதனத்திற்காக அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வட்டித்தொகை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியாக, அவர்கள் போட்ட மூலதனமும் ஸ்டர்லிங் நிதியிலிருந்து இந்திய சர்க்கரால் திருப்பிக் கொடுக்கப்பட்டது என்பதைப் பார்த்தோம். இந்திய ரயில்வே ஒருபுறம், பிரிட்டிஷ் ஆட்சியாளருக்கு ஓரிடத்திலிருந்து மற்றொரிடத்திற்குத் துரிதமாக ராணுவத்தை அனுப்பி மக்களைத் தங்கள் உருக்குப் பிடியில் வைத்துக்கொள்ள உதவிற்று. மற்றொரு புறத்தில், அவர்களுக்குக் கொள்ளை லாபம் தரும் தொழிலாகவும் விளங்கிற்று. இந்த நாட்டின் தொழில் முன்னேற்றத்திற்காக ரயில்வே பயன்பட வேண்டும் என்று பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் எண்ணவில்லை. லாபம் தரும் தொழிலாக அது விளங்கவேண்டும் என்றே அவர்கள் கருதினார்கள். ரயில்வே நிர்வாகமும், அமைப்பும் இந்த முறையில் தான் செயல்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலிருந்த அதே நிர்வாக அமைப்பும், இலாப நோக்கும் இன்றும் தொடர்ந்து அனுசரிக்கப்பட்டு வருவதை நாம் பார்க்கிறோம். பிரிட்டிஷார் ஏற்படுத்திய இந்த அதிகார வர்க்க முறையில், நிர்வாகத்தை நடத்துபவர்கள் ஒரு சில ஆபீசர்கள் தான். வேலை செய்யும் இதர குமாஸ்தாக்களும், தொழிலாளர்களும் சம்பளத்துக்காக வேலைசெய்பவர்களே, இவர்களுக்கு நிர்வாகத்தில் எத்தகைய பங்கும் இல்லை. இவர்களுக்கு அளிக்கப்பட்ட சம்பளமும வயிற்றை நனைப்பதற்குப் போதுமானதாக இருந்தது. 1947 ஜனவரியில் தான் இந்த பழைய சம்பளவிகிதம் மாற்றப்பட்டு, புதிய சம்பளவிகிதம் அமலுக்கு வந்தது. அதுவும், பெருங்கிளர்ச்சிக்கு பிறகே மாற்றப்பட்டது. தமிழ்நாடு, கேரளம், ஆந்திரப் பிரதேசம், கன்னடம், மகாராஷ்டிரா ராஜ்யத்தின் ஒரு பகுதி ஆகிய ஐந்து ராஜ்யங்களில் உள்ள ரயில்வேயைத்தான் தென் பிராந்திய ரயில்வே என அழைக்கிறோம். இது 6000 மைல் நீளமுள்ளது. தென்பிராந்திய ரயில்வே மானேஜரால் இது நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இதன் தலைமை ஆபீஸ் சென்னையில் இருக்கிறது. முன்பு தென்னிந்திய ரயில்வே, எம்.எஸ்.எம் .ரயில்வே மைசூர் ஸ்டேட்ரயில்வே என்று மூன்று வெவ்வேறு பகுதிகளாகயிருந்த ரயில்வேக்கள் 1951 ஏப்ரல் 14ஆம் தேதி ஒன்றாகச் சேர்க்கப்பட்டு தென்பிராந்திய ரயில்வே என்று ஆக்கப்பட்டது. இதுபோல் இந்தியாவின் இதர பாகங்களிலுமுள்ள ரயில்வேக்கள் ஏழு பிராந்தியங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் எல்லாம் பெரியது தென்பிராந்திய ரயில்வேதான். ரயில்வேத் தொழிலாளர் சம்மேளனம் - கே.அனந்தன் நம்பியார் -மார்ச் 18, 2020 […] …16.03.2020 அன்று வெளியான கட்டுரையின் தொடர்ச்சி… நாட்டின் முன்னேற்றத்திலும், அதன் வெற்றியிலும் அக்கறை கொண்டோர் ரயில்வே ஊழியர்களின் நலனைப் பற்றியும் அசிரத்தையாக இருக்க முடியாது. இத்துறையில் துரதிர்ஷ்டவசமாக இன்னும் அதிக அபிவிருத்தி ஏற்படவேண்டியுள்ளது. ரயில்வே ஊழியர்கள் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் அடிமை போன்றே நடத்தப்பட்டனர். சம்பளம் பெறும் கூலிகளாகவே அவர்கள் கருதப்பட்டனர். நாம் சுதந்திரம் பெற்றபின்பும் ஏறக்குறைய இந்த நிலையே நீடித்து வருவதைக் காண்கிறோம். ரயில்வே தேசியத் தொழில், ஊழியர்கள் அனைவரும் அதில் பங்காளிகள் என்று கூறப்படுகிறது. ஆனால் நடைமுறையில், பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இருந்ததைப் போன்று அதிகார வர்க்க ஆதிக்கமே தலைதூக்கி நிற்கிறது. ஊழியர்களின் ஒத்துழைப்பைப் பெறுவதற்கு அதிகாரிகள் முன் வருவதில்லை. ஊழியர்களின் ஆலோசனைகளைக் கேட்பதற்கு கூட அவர்கள் தயாராகயில்லை. உண்மையான ஜனநாயகத் தன்மைவாய்ந்த ஒரு ஐக்கிய ரயில்வே தொழிற்சங்கம் நிறுவுவதற்காக பலகாலம் தொடர்ந்த முயற்சி நடைபெற்று வருகிறது. இந்த முயற்சி இன்னும் வெற்றிபெறவில்லை. இந்திய ரயில்வே தொழிற்சங்க சரித்திரம் பழைமையானது. சுதந்திரப் போராட்ட காலத்தில் ரயில்வே ஊழியர்கள் வீரஞ்செறிந்த பல போராட்டங்களையும், வேலை நிறுத்தங்களையும் நடத்தினார்கள். சுதந்திரம் பெற்ற பிறகாவது நிலைமையில் தீவிர மாற்றம் ஏற்படுமென்று அவர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் ஏமாற்றமே அடைந்தனர். தற்போது, ரயில்வே ஊழியர்கள் மத்தியில் இரண்டு சம்மேளனங்கள் உள்ளன. ஒன்று இந்திய ரயில்வே தேசிய சம்மேளனம் ஆகும். மற்றது அகில இந்திய ரயில்வே தொழிலாளர் சம்மேளனம். இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரசில் இணைக்கப்பட்டுள்ள இந்திய ரயில்வே தேசிய சம்மேளனம் ஏற்கனவே அரசு அங்கீகாரம் பெற்றுள்ளது. பம்பாயில் தற்போது காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராயிருக்கும் வாசவதா என்பவர் அதன் தலைவர். அகில இந்திய ரயில்வே தொழிலாளர் சம்மேளனம் தோன்றி 25 ஆண்டுகளாகின்றன. “இரண்டு அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள் இருப்பது தொழிலாளர் நலனுக்கு உகந்ததல்ல” என்ற காரணங்காட்டி அகில இந்திய ரயில்வே தொழிலாளர் சம்மேளனத்திற்குக் கொடுக்கப்பட்டிருந்த அங்கீகாரத்தை அரசாங்கத்தார் வாபஸ் வாங்கிக் கொண்டனர். ஆனால், சமீபத்தில் மீண்டும் இந்த சம்மேளனத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு சம்மேளனங்களையும் இணைப்பதற்காக முயற்சி நடைபெற்றது. அதிகாரிகளின் தலையீட்டால் இந்த இணைப்பு முயற்சி வெற்றி பெறாது போய்விட்டது. இந்த இரு சம்மேளனங்களுமே பலம் வாய்ந்ததாக இல்லை. ஒவ்வொன்றிலும் மொத்த ஊழியர்களில் 15 சதவிகிதத்திற்கும் குறைவான ஊழியர்கள் தான் அங்கத்தினராக உள்ளனர். எட்டு பிராந்திய ரயில்வேக்களிலும் இந்த இரு சம்மேளனங்களுக்கும் கிளை யூனியன்கள் உண்டு. இவற்றில் சில அங்கீகாரம் பெற்றவை. அங்கீகாரம் பெறாதவையும் இதில் உண்டு. பிராந்தியங்களிலுள்ள ரயில்வே யூனியன்களுக்கும், சம்மேளனத்திற்கும் அங்கீகாரம் வழங்குவது பற்றிய ஒரு திட்டவட்டமான கொள்கை அரசாங்கத்தாருக்கும் இல்லை. இதன் விளைவாக சமீப காலத்தில் ரயில்வே ஊழியர்கள் பலருக்கு சங்கத்தைப் பற்றிய சிரத்தை குறைந்து போயிற்று. ரயில்வே தொழிற்சங்கங்களின் அங்கத்தினர்களின் தொகை குறைந்திருப்பதற்கு இதுவும் காரணம் ஆகும். திட்டக் குறிக்கோளை நிறைவேற்றுவதற்கு, ஊழியர்கள் உரிய ஊக்கம்செலுத்தாதிருப்பதையும் நாம் காண்கிறோம். இந்த துக்ககரமான நிலைமை நீடிப்பது நல்லதல்ல. மேலும் முன்னேறிச் செல்வதற்கு இந்த நிலைமை ஒரு முட்டுக்கட்டையாக இருக்கிறது. தென் பிராந்திய ரயில்வே லேபர் யூனியன் தென் பிராந்திய ரயில்வே லேபர் யூனியனைப்பற்றி நாம் தெரிந்து கொள்வது மிகுந்த அவசியமல்லவா? தென் பிராந்திய ரயில்வேயில் நீண்ட நெடுங்கால பாரம்பரியத்தையும், சரித்திரத்தையும் உடையது பலமிக்க (டிஆர்இயு) தென் பிராந்திய ரயில்வே லேபர் யூனியன்தான். இது 1936ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. 1938-ல் இதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. 1949-ல் இந்த அங்கீகாரம் ரத்துச் செய்யப்பட்டது. ரயில்வே தொழிலாளர்களின் வாழ்க்கை நிலையை மேம்படச் செய்வதற்காகப் போராட்டங்களையும், வேலை நிறுத்தங்களையும் நடத்திய ‘குற்றம்தான்’ இதற்குக் காரணம் ஆகும். தென்பிராந்திய ரயில்வே யூனியனை அங்கீகரிக்க இன்றும் அரசாங்கம் மறுத்து வருகிறது. சமீபத்தில் தென்பிராந்திய ரயில்வே லேபர் யூனியனின் 18வது வருடாந்திர மகாநாடு நடைபெற்றது. இன்று இந்த யூனியனில் 20ஆயிரம் தொழிலாளர்கள் அங்கத்தினராக உள்ளனர். அரசாங்கத்திலிருந்தும், ரயில்வே நிர்வாகத்திலிருந்தும் வருகின்ற பல இன்னல்களையும், எதிர்ப்பையும் சமாளித்த தென் பிராந்திய லேபர் யூனியன், ரயில்வே ஊழியர்கள் நலனுக்காக வீரமிக்க முறையில் போராடிவருகிறது. தென் பிராந்திய ரயில்வே லேபர் யூனியனுக்கு அங்கீகாரம் அளிக்க மறுப்பதற்கு ஒரே காரணம் அரசியல் காரணமேயாகும். இதன் மூலம் தென்பிராந்தியத்தில் ரயில் போக்குவரத்து அபிவிருத்தி அடைவதற்கு அரசாங்கம் மறைமுகமாக ஊறுசெய்து வருகிறது. திட்டத்தின் வெற்றிக்காக தென் பிராந்திய ரயில்வே ஊழியர்கள் தாமாகவே ஒத்துழைக்க முன் வருவதை அரசாங்கம் தடுத்து நிறுத்துகிறது. லேபர் யூனியனுக்கு அங்கீகாரம் வழங்க அரசாங்கம் மறுப்பதன் மூலம், இப்பிராந்தியத்திலுள்ள ஒன்றரை லட்சம் தொழிலாளர்களுடைய ஜீவாதார உரிமையான கூட்டுபேர உரிமையை மறுக்கிறது. தென்பிராந்திய ரயில்வேயில் இன்று அங்கீகரிக்கப்பட்டுள்ள யூனியன் ரயில்வே நிர்வாகத்துக்கு ஒத்து ஊதும் அதிகாரிகள் கூற்றுக்கு அப்படியே செவிசாய்க்கும் ஒரு யூனியனே ஆகும். இந்த யூனியனுக்குத்தான் நிர்வாகத்துடன் பேரம் பேசும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. இதன் பொருள் என்ன? பெரும்பாலான ரயில்வே ஊழியர்களுக்கு நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை கூட நடத்துவதற்கு உரிமைஇல்லை என்பது தான் அல்லவா? அது மட்டுமல்ல தென்பிராந்திய லேபர் யூனியனுக்கு ஊழியர்கள் ஆதரவு உண்டா; அது ஒரு பிரதிநிதித்துவ ஸ்தாபனந்தானா என்பதைக் கண்டறிய ரகசிய வாக்கெடுப்பு நடத்தலாம் என்ற யூனியனின் யோசனையையும் நிர்வாகம் நிராகரித்துவிட்டது. எழுச்சி பெற்ற ரயில்வே ஊழியர் கிளர்ச்சி - கே.அனந்தன் நம்பியார் -மார்ச் 19, 2020 […] ரயில்வேக்களில் இன்றுள்ள நிலைமையில் அபிவிருத்தி செய்வதன் பொருட்டு ரயில்வே ஊழியர்கள் சார்பில் பல திட்டவட்டமான ஆலோசனைகள் ரயில்வே இலாகாவிற்கு அனுப்பப்பட்டன. ஒவ்வொரு மட்டத்திலும் ரயில்வே ஊழியர்களின் பிரதிநிதிகளையும், அதிகாரிகளையும் கொண்ட கூட்டுக் கமிட்டிகள் நிறுவவேண்டுமென்பது இந்த ஆலோசனைகளில் ஒன்று. லோக்கோ ஷெட், ஒர்க்சாப், மார்ஷலிங் யார்டு, ரயில்வே ஜங்ஷன், ஸ்டேஷன்கள் ஆகிய இவற்றில் எல்லாம் இக்கூட்டுக் கமிட்டிகள் அமைக்கப்பட்டு திட்ட வெற்றிக்குச் சாத்தியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்; அன்றாட வேலைக் கஷ்டங்களையும், போக்கு வரத்து நெரிசல்களையும், தளவாடப் பற்றாக்குறைகளையும், இம்மாதிரி விஷயங்களையும் கூடிப்பேசி விவாதித்து அவற்றிற்குத் தீர்வுகாண வேண்டும் என்பதே கூட்டுக் கமிட்டிகளின் நோக்கம் ஆகும். இது அமல்நடத்தப்பட்டால் அதிகாரவர்க்கத்தின் ஆதிக்கம் தலைதூக்காது தடுக்கமுடியும்;நிர்வாக வேலையில் அனாவசியத் தாமதம் ஏற்படுவதைத் தடுக்க முடியும்; ஊழியர்களிடையே அக்கறையும், வேலையில் ஆர்வமும் ஏற்படும். இந்த கூட்டுக் கமிட்டி ஆலோசனை கோட்பாட்டளவில் ஒத்துக்கொள்ளப்பட்டது. சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின்போது ரயில்வே மந்திரி ஜகஜீவன்ராம் இந்த யோசனையை ஏற்றுக்கொண்டார். ஆனால் இது இன்றுவரை அமல் நடத்தப்படக் காணோம். நாட்டு மக்களின் விருப்பம் ரயில்வேயில் எங்கு பார்த்தாலும் லஞ்சமும், உழலும் தலைவிரித்தாடுகின்றன. இந்த முறைகேடான பழக்கங்கள், ரயில்வே அமைப்பை, உள்ளிருந்தே கொல்லும் வியாதி போன்றதாகும். மேலே கூறப்பட்ட கூட்டுக் கமிட்டிகள் ஏற்பட்டு அவை சரிவர இயங்குமானால் இந்த லஞ்சஊழல் துர்ப்பழக்கங்களைக் களைந்தெறிவது சாத்தியமாகும். மேலும், தொழிற்சங்கங்கள் இஷ்டப் பூர்வமாக இயங்க அனுமதிக்கப்பட்டு அவற்றின் ஒத்துழைப்புடன் இத்தீய பழக்கங்களை ஒழித்துக் கட்டுவது சாத்தியமாகும். நம் நாட்டில் சோஷலிச சமுதாயத்தை நிர்மாணிக்க வேண்டும் என்று நாட்டு மக்கள் விரும்புகின்றனர். ஆனால் இந்த நாட்டிலுள்ள பிற்போக்கு சக்திகளும், பழைமை விரும்பிகளும் இந்த விருப்பத்திற்கு எதிராகச் செயலாற்றி வருகின்றனர். சம்பளத்தில் ஏற்றத்தாழ்வு ரயில்வே ஊழியர்கள் பெரும்பாலோருக்குக் கொடுக்கப்பட்டு வரும் சம்பளம் மிகக் குறைவானதே, குறைந்த சம்பளம் பெறுவோருக்கும் உயர்ந்த சம்பளம் பெறுவோருக்கும் உள்ள இடைவெளி பெரிது, ஒரு சாதாரண தொழிலாளியின் மாதச் சம்பளம் ரூ.75 , ஆனால் உயர் அதிகாரியின் சம்பளம் மாதத்திற்கு ரூ.4,000 ஆகும். இதுவன்றி, உயர் அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் இலவச ஆடம்பரச் சலுகைகளும் வசதிகளும் ஏராளம். குறைந்தபட்ச சம்பளத்தைவிட, உயர்ந்தபட்ச சம்பளம் 50 பங்கு அதிகம் உள்ளது. 1947 ஜனவரிக்குப் பின் ஏற்பட்ட சம்பள மாற்றத்திற்கும் பிறகும் இவர்கள் வறுமைநிலை நீங்கியபாடில்லை. சம்பள உயர்வுக்கோரிக்கையை ரயில்வே ஊழியர்கள் முன்வைத்துள்ளதற்குக் காரணம் இதுவே. சம்பள விகிதங்கள் மாற்றப்பட வேண்டும் என்று ரயில்வே ஊழியர்கள் செய்துவரும் கிளர்ச்சியை இந்தப் பின்னணியில் இருந்துகொண்டு பரிசீலிக்க வேண்டும். இரண்டாவது சம்பளக்கமிஷன்தனது அறிக்கையைச் சமர்ப்பித்துவிட்டது. கணிசமான சம்பள உயர்வோ, பஞ்சப்படி உயர்வோ கமிஷன் சிபாரிசில் இல்லையென்றே தெரியவருகிறது. பத்திரிகைச் செய்திப்படி ஏதோ ரூ.5 சம்பள உயர்வு இருக்கலாம் என்று அறிகிறோம். இது உண்மையானால், ஊழியர்கள் மத்தியில் பெருத்த அதிருப்தி ஏற்படும் என்பதில் ஐயமில்லை. ரயில்வே ஊழியர்களிடையே அதிருப்தி வளருவதன் காரணமாக, நிர்வாகத் திறமை மேலும் சீர்கெடத்தான் செய்யும். சம்பளக் கமிஷன் அறிக்கையைப் பரிசீலனை செய்யும்போது அரசாங்கம் இதை கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும். ரயில்வேக்கள் திறமையாக நடத்தப்பட வேண்டும். நாடு முழுவதும் நல்ல செம்மையான சாலைகள் அமைக்கப்பட வேண்டும். சாலைகளும், ரயில்வேக்களும் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படவேண்டும் என்றே நாட்டுமக்கள் கருதுகிறார்கள். சாலைப் போக்குவரத்து ரயில்வேக்களுக்கு ஒன்றும் போட்டியாக வரமுடியாது. போக்குவரத்துக்குள்ள நெருக்கடி அவ்வளவு அதிகமாக இருக்கிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இன்றுள்ள ரயில்வே நிர்வாகத்தின் திறமைக் குறைவால் ரயில் மிகத் தாமதமாக வருகிறது; பெரும் விபத்துக்கள் அடிக்கடி ஏற்பட்டு வருகின்றன. போக்குவரத்து வசதிகள் அதிகரிக்கப்பட வேண்டியது அவசரத் தேவையாக உள்ள இன்றைய நிலையில், இத்தகைய திறமையின்மையும், தாமதமும், விபத்துக்களும் ரயில் போக்குவரத்தையே சீர்குலைக்கின்றன. இச்சீர்குலைவைக் களைவதெப்படி? ஆழ்ந்து பரிசீலிக்க வேண்டிய பிரச்சனையிது. இச்சீர்குலைவைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படவேண்டுமென்பதே நாட்டு மக்கள் அனைவரின் நாட்டம். மாணவர் இயக்கம் மலர்ந்தது - ப.முருகன் -மார்ச் 20, 2020 […] மாநாட்டில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர் நேருவும், முகமது அலி ஜின்னாவும் நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் மாணவர்களின் பங்கு அவசியம் என்றும் அவர்களுக்கு இத்தகைய ஒரு அமைப்பு தேவை என்றும் தங்களது உரைகளின் போது சம்மேளனத்தின் துவக்கத்தை அங்கீகரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. உலகில் நடைபெற்ற எந்தவொரு பேரெழுச்சியிலும் மாணவர்களின் பங்கு இல்லாமல் அந்த எழுச்சி வெற்றிபெற்றது இல்லை. இந்தியாவிலும் சுதந்திரப் போராட்டத்தின்போது மாணவர்களின் பங்கேற்பும் பெருமளவில் அமைந்திருந்தது. ஆங்காங்கே நகரங்களில் அமைந்துள்ள கல்விநிலையங்களிலிருந்து சுதந்திரப் போராட்டத்திற்காக குரல்கொடுத்த மாணவர்களை அமைப்பாக அணிதிரட்டுவதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முயற்சி எடுத்தது. இந்தப் பின்னணியில் 1936ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ல்அகில இந்திய மாணவர் சம்மேளனம் லக்னோ நகரில் துவங்கப்பட்டது. அதன் முதல் மாநாட்டில் ஜவஹர்லால் நேருவும், முகமது அலி ஜின்னாவும் கலந்து கொண்டது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏனெனில் அந்தக் காலத்தில் இருவரும் ஒரே மேடையில் பங்கேற்பது அரிதான நிகழ்வாகும். அந்தத் தலைவர்களை மாணவர் சம்மேளன மாநாட்டில் பங்கேற்கச் செய்வதற்கு முயற்சி செய்தவர்கள் ஹிரேன்தாஸ் குப்தா, ஹரி நாராயணன் அதிகாரி, பி.சி.ஜோஷி, ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆகியோர். அந்த மாநாட்டிற்கு தலைமை தாங்கி துவக்கி வைத்துப் பேசிய நேரு சோசலிசத்தின் சிறப்பையும், இந்திய சுதந்திரப்போராட்டம் என்பது உலகம் முழுவதும் நடைபெறும் காலனி ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதி என்பதை மாணவர்கள் உணர வேண்டும் என்பதும் விளக்கினார். பாலஸ்தீன மக்களை விடுதலைப் போராட்டம் ஸ்பெயின் நாட்டின் பாசிசத்திற்கு எதிராக நடத்தப்படும் போராட்டம் ஆகியவற்றை மாணவர்களின் கவனத்திற்கு நேரு கொண்டுவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாநாட்டில் சம்மேளனத்தின் பொதுச் செயலாளராக காங்கிரஸ் மனோபாவம் கொண்ட பிரேம் நாராயணன் பார்கவா என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் கம்யூனிஸ்ட் தலைவர் ஜோலி பாட்டிவாலா என்பவர் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது சோசலிச மனோபாவம் கொண்ட மாணவர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. இந்த மாநாடு 25 தீர்மானங்களை நிறைவேற்றியது. மாநாட்டின் முதல் தீர்மானம் இந்த மாணவர் அமைப்பு உருவாக்க வேண்டியதன் அவசியத்தை விளக்கியது. மாணவர்களுக்கான ஒரு நிரந்தர அகில இந்திய அமைப்பு பின் வரும் நோக்கங்களுக்காக உருவாக்கப்படுகிறது; 1. பல்வேறு மன்னராட்சி மாகாணங்கள் மற்றும் இந்திய மாகாணங்களில் உள்ள மாணவர்களிடையே சமத்துவமான முறையில் கலாச்சார மற்றும் அறிவுப்பூர்வ ஒத்துழைப்புக்கு உற்சாகமளிப்பது. 2. நடப்பு கல்வி முறைகளின் மேம்படுத்துதலுக்கு ஆலோசனை தருவது. 3. மாணவர் சமுதாயத்தின் நலன்களைப் பாதுகாப்பது. 4. முழுமையான நாட்டு விடுதலைக்கான போராட்டத்தில் தங்களுடைய பங்கை மாணவர் சமுதாயம் ஆற்றும் வண்ணம் அவர்களுடைய சமூக, அரசியல் மற்றும் பொருளாதார உணர்வை தட்டி எழுப்புதல். இந்த மாநாட்டில் பொதுவான கல்விச்செலவை குறைக்க வேண்டும் என்பது முதன்மையான தீர்மானமாக அமைந்திருந்தது. இலவச, கட்டாய ஆரம்பக்கல்வி வேண்டும்; தேசவிரோத, ஜனநாயக விரோத கருத்துக்களைக் கொண்டவையாக பாடப்புத்தகங்கள் இருக்கக்கூடாது; மாணவர்களுக்கு பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் மற்றும் வெளியிலும் முழுபேச்சுரிமை ஸ்தாபனம் அமைக்கும் உரிமை ஆகியவை வேண்டும் ஆகிய இதர தீர்மானங்களாகும். இதுபோன்றே மாணவர்களின் நலனை வலியுறுத்துவதற்கான தீர்மானங்கள் பல்வேறு விசயங்கள் பற்றியதாக இருந்தது. இந்த மாநாட்டில் மாணவர்களின் நலன்களையும் கோரிக்கைகளையும் எடுத்துரைப்பதற்காக பத்திரிகை ஒன்றை துவக்குவது என்றும் அந்தப் பத்திரிகைக்கு ‘தி ஸ்டூடண்ட்ஸ் டிரிபியூன்’ என்று பெயர் வைப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது. அந்தப் பத்திரிகைக்கு ஆசிரியராக பிரபோத் சந்திர சின்கா நியமிக்கப்பட்டார். பின்னாளில் இந்தப் பத்திரிகை ‘தி ஸ்டூடண்ட்’ என பெயர் மாற்றப்பட்டது. அந்தக் காலத்தில் நாட்டில் நடந்து கொண்டிருந்த சட்டமறுப்பு இயக்கம் திடீரென்று நிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து உருவான நிலைமைகள், மாவீரன் பகத்சிங்கும் அவரது சக தோழர்களும் லாகூர் நீதிமன்றத்தில் வாதாடிய பொழுது முன்வைத்த புரட்சிகரக் கருத்துக்கள், திட்டமிட்டப் பொருளாதாரம் மூலம் சோவியத் நாட்டின் வளர்ச்சி போன்றவை இந்தியாவின் இளம் அறிவுஜீவிகளிடையேயும் மாணவர் சமுதாயத்தின் இடையேயும் ஒரு புதிய சிந்தனையை உருவாக்கியது. இதன் ஒட்டுமொத்த விளைவுதான் அகில இந்திய மாணவர் சம்மேளனத்தின் தோற்றம் என்றால் அது மிகையாகாது. இந்த மாநாட்டில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர் நேருவும், முகமது அலி ஜின்னாவும் நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் மாணவர்களின் பங்கு அவசியம் என்றும் அவர்களுக்கு இத்தகைய ஒரு அமைப்பு தேவை என்றும் தங்களது உரைகளின் போது சம்மேளனத்தின் துவக்கத்தை அங்கீகரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாநாடு மாணவர்கள் தொடர்பான கல்விக் கட்டணத்தை குறைத்தல், தேர்வு முறையில் மாற்றங்கள், கல்வி முறையை ஜனநாயகப்படுத்துதல், பயிற்சி மொழிக் கொள்கை போன்ற தீர்மானங்களை நாட்டின் கவனத்திற்கு கொண்டு வந்தது. இதே ஆண்டில் லாகூர் நகரில் நவம்பர் 20-ஆம் நாள் அகில இந்திய மாணவர் சம்மேளனத்தின் இரண்டாவது மாநாடு நடைபெற்றது. இந்த சிறப்பு மாநாட்டுக்கு இடதுசாரி மனோபாவம் கொண்ட சரத் சந்திர போஸ் எனும் காங்கிரஸ் தலைவர் தலைமை வகித்தார். இந்த மாநாட்டில் 150க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர். அவர்களில் கணிசமானவர்கள் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாநாட்டில்தான் மாநாட்டுத் துவக்கநாளான நவம்பர் 20 அடுத்த ஆண்டு முதல் அகில இந்திய மாணவர் நாளாக கடைப்பிடிக்க வேண்டுமென்று அறிவிக்கப்பட்டது. இந்த மாநாட்டில் பிரேம் நாராயணன் பார்கவா மீண்டும் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த மாநாட்டில் தான் மாணவர்களுக்கான கோரிக்கை சாசனம் சம்மேளனத்தின் அமைப்புச் சட்டம் ஆகியவை உருவாக்கப்பட்டது. 1938ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சம்மேளனத்தின் மூன்றாவது மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் 11 மாகாணங்களிலிருந்து 200க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் அகில இந்திய மாணவர் சம்மேளனத்தின் மாநாடுகளில் மாணவப் பிரதிநிதிகளின் பங்கேற்பு அதிகரித்த வண்ணம் இருந்தது. நாடு முழுவதும் பரவ ஆரம்பித்த சம்மேளனம் - ப.முருகன் -மார்ச் 21, 2020 […] அகில இந்திய மாணவர் சம்மேளனம் 1936ல் துவங்கப்பட்டபோது, நாடு முழுவதுமிருந்து 936 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் சம்மேளனத்தின் தலைவராக சத்யபால் டாங், பொதுச்செயலாளராக பிரேம் நாராயணன் பார்கவா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இந்த மாநாட்டில் ஜவஹர்லால் நேருவும், முகமது அலி ஜின்னாவும் கலந்து கொண்டிருந்தது முக்கியத்துவம் பெற்றது. அத்துடன் முகமது அலி ஜின்னா மாநாட்டில் கலந்து கொண்ட பிரதிநிதிகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படமும் அந்தக் காலத்தில் பிரபலமாக பேசப்பட்டது. இந்த மாநாடு இரண்டு நாள் லக்னோ நகரின் கங்கா பிரசாத் மெமோரியல் ஹாலில் நடைபெற்றது. சம்மேளனத்தின் முழக்கமாக சுதந்திரம், சமாதானம், முன்னேற்றம் ஆகியவை அறிவிக்கப்பட்டது. 1958ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய சிறப்பு மாநாட்டில் படிப்போம், போராடுவோம் என்ற முழக்கம் ஏற்றுக்கொள்ளப்படும் வரை முந்தைய முழக்கமே சம்மேளனத்தின் முழக்கமாக இருந்தது. மாநாடு முடிவடைந்த பின்னர் நாட்டின் பல்வேறு நகரங்களிலும் உள்ள கல்வி நிலையங்களில் சம்மேளனத்தின் கிளைகளை உருவாக்கும் பணியில் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். அதன் விளைவாக பெரும்பாலான மாகாணங்களில் மாணவர் சம்மேளனத்தின் கிளை அமைப்புகள் உருவாக்கப்பட்டன. அதையொட்டி இந்தக் காலத்தில் சென்னை மாகாணத்திலும் சம்மேளனத்தின் கிளை அமைப்புகளை உருவாக்குவதற்கான முயற்சிகள் நடைபெற்றன. அதன்விளைவாக முதல் அமைப்பு மாநாடு நடந்த அதே 1936ஆம் ஆண்டில் சென்னை மாணவர் சங்கம் (எம்.எஸ்.ஓ) உருவானது. அதில் சென்னை மருத்துவக் கல்லூரி, சட்டக்கல்லூரி, பொறியியல் கல்லூரி ஆகியவற்றில் பயின்ற மாணவர்கள் தீவிரமாக பங்கேற்றனர். சென்னை மருத்துவக் கல்லூரியில் பயின்ற பின்னாளில் பிரபலமான மருத்துவர்களான பி.கே.ஆர். வாரியர், பி.சுந்தரய்யாவின் சகோதரர் ராமச்சந்திர ரெட்டி, கமலாம்மாள், கமலா ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் முக்கியமானவர்கள். அதுபோல அண்ணாமலை பல்கலைக்கழகமும் மதுரை மாநகரின் அமெரிக்கன் கல்லூரியும் மாணவர் சம்மேளனத்தின் முக்கியத்தளங்களாய் விளங்கின. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சுப்பிரமணிய சர்மா தான் முதல் கம்யூனிஸ்ட். அவர் தான் அங்கு மாணவர் சம்மேளனமும் கம்யூனிஸ்ட் கட்சியும் உருவாவதில் முக்கியப் பங்கு வகித்தவர். 1938ஆம் ஆண்டில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பயின்ற மாணவர்களில் முக்கியமானவர்கள் கே.முத்தையா, டாக்டர் எஸ்.ராமகிருஷ்ணன், பாலதண்டாயுதம், திரவியம் (பின்னாளில் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர்), அ.ச.ஞானசம்பந்தம் ஆகியோர். அங்கு அமைக்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சிக் கிளையின் செயலாளராக கே.முத்தையா செயல்பட்டார். மாணவர் சம்மேளனம் அமைக்கப்பட்டதையடுத்து நாட்டு விடுதலைக்காகவும் மாணவர்களின் கல்விக்காகவும் நாடெங்கும் போராட்டங்கள் பெருமளவில் வெடித்தன. இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக 1937ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வங்காளத்தில் நடந்த மாணவர்கள் பேரணியில் கலந்து கொண்டவர்கள் மீது காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலைத் தொடுத்தனர். இதில் ஏராளமான மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது. காவல்துறையின் இந்த செயலைக் கண்டித்து சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பெருந்திரளாக பங்கேற்ற மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக, வெளிநாட்டில் உருவாக்கப்பட்ட குறிப்பாக இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் இருந்த இந்திய மாணவர் அமைப்பின் செயலாளராக செயல்பட்ட மோகன் குமார மங்கலம் இந்தியாவிற்கு வருகை தந்தார். அவர் இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் சம்மேளனத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் உரையாற்றினார். இதையடுத்து 1938ஆம் ஆண்டு அகில இந்திய மாணவர் சம்மேளனத்தின் மூன்றாவது மாநாடு ஜனவரி 1, 2, 3 தேதிகளில் சென்னையில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு சுபாஷ் சந்திர போஸ் தலைமை தாங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் வெளிநாடு சென்றிருந்த காரணத்தால் கவிக்குயில் சரோஜினி நாயுடு மாநாட்டுக்கு தலைமை தாங்கும்படி அழைக்கப்பட்டார். ஆனால் அவரோ தலைமை தாங்க மறுத்துவிட்டார். இந்நிலையில் சம்மேளனத்தின் பழைய நிர்வாகக்குழு மாநிலக்குழுக்களை கலந்து ஆலோசிக்காமல் தலைமை ஏற்பதற்கு மினு மசானியை தேர்வு செய்தது. மாநாடு துவக்கத்தில் அமைதியாக நடைபெற்றது. பின்னர் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதில் மோதல் ஏற்பட்டது. மசானியும் அவரது சீடரான பொதுச் செயலாளர் பிரேம் நாராயணன் பார்கவாவும் கம்யூனிஸ்ட்டுகள் அதிக அளவில் நிர்வாகக்குழுவிற்கு வராமல் தடுக்கும் முயற்சியில் அடாவடியாக செயல்பட்டனர். அத்துடன் போலியான காரணத்தைச் சொல்லி மாநாட்டை கலைத்துவிட்டதாக மசானி அறிவித்தார். அத்துடன் மாநாட்டிலிருந்தும் அவர் வெளியேறினார். மாநாட்டில் கலந்து கொண்ட நூறு பிரதிநிதிகளில் 20 பேர் மட்டுமே அவருடன் சென்றனர். அதன்பின்னர் சர்வோத்தம ஷெட்டி என்பவர் மாநாட்டிற்கு தலைமை தாங்கினார். மசானியையும் அவருடன் வெளியேறியவர்களையும் கண்டித்து மாநாடு ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியது. மாணவர்களின் கோரிக்கைகள் மற்றும் உரிமைகள்; கல்வித் திட்டத்தை சீர்திருத்த வேண்டிய அவசியம்; எழுத்தறியாமையை அகற்றும் தேவை ஆகியவை குறித்து மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்துடன் மாநாட்டில் ரகசிய போலீசார் பங்கேற்றிருந்ததை கண்டித்தது; அவர்கள் உடனே வெளியேற வேண்டுமென்று மாநாடு உத்தரவிட்டது. சம்மேளனத்தின் பல்வேறு அமைப்புகள் சட்டவிரோதமாக்கப்பட்டதைக் கண்டித்தும் தனிப்பட்ட நபர்கள் மீது தடைவிதிக்கப்பட்டதைக் கண்டித்தும் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. பொங்கியெழுந்த மாணவர்கள் - ப.முருகன் -மார்ச் 22, 2020 […] 1938ஆம் ஆண்டு முதல் 1942 வரை நாடு முழுவதும் மாணவர்களின் போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்றன. தமிழகத்தில் அண்ணாமலைப் பல்கலை. மாணவர்கள் மிகப்பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதற்குக் காரணமாக ஒரு அரசியல் சம்பவம் அமைந்துவிட்டது. பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்பு, விடுதலைப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள காலனி நாட்டு மக்களுக்கு ஒருமைப்பாடு என மாணவர்கள் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்திய காலமது. ஸ்பெயின் நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வெகுமக்கள் முன்னணி (Popular Front)யின் அரசுக்கு எதிராக அந்நாட்டின் ராணுவ தளபதி பிராங்கோ செய்த சதியால் உள்நாட்டுப் போர் மூண்டது. அதை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் உலகின் பல நாடுகளிலும் இருந்து சென்ற கம்யூனிஸ்ட் தொண்டர்கள் பங்கேற்றார்கள். இதையடுத்து உலகம் முழுவதுமிருந்து முற்போக்காளர்கள் நிதி வசூல் செய்து வெகுமக்கள் முன்னணிக்கு அனுப்பி வைத்தனர்.  அதன் ஒரு பகுதியாக அண்ணாமலை பல்கலைக்கழகத்திலும் பால தண்டாயுதம்(பாலன்) உள்ளிட்ட மாணவர்கள் முன்னின்று நிதி வசூல் செய்தனர். அதை வைத்திருந்த ஒரு மாணவர் கையாடல் செய்துவிட்டார். இதில், அவரை கண்டித்ததால் பாலதண்டாயுதம் மீது துணைவேந்தர் சீனிவாச சாஸ்திரியாரிடம் அந்த மாணவர் புகார் செய்துவிட்டார். அதனால் விசாரணைக்குள்ளான பாலன் வெளியில் வந்ததும் எதிர்ப்பட்ட அந்த மாணவரை கோபத்தால் அடித்துவிட்டார். இதைக் காரணமாக வைத்து பாலனை பல்கலை.யிலிருந்தே நீக்கிவிட்டார். அத்துடன் கே.சுப்ரமணியம், கே.கணேசன், ஆர்.சாம்பசிவம், எம்.ஏ.அய்யாசாமி, என்.எம்.விவேகானந்தம் ஆகியோரை தற்காலிகமாக நீக்கம் செய்துவிட்டார். இதனால் மாணவர்கள் வகுப்பைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் காவல்துறை பாலனை கைது செய்தது. இதைக் கண்டித்து காவல்நிலையம் வரை 600 மாணவர்கள் முழக்கங்கள் எழுப்பியபடியே சென்றனர். அடுத்த நாள் பாலன் ஜாமீனில் வெளிவந்தார். ஆனால் துணைவேந்தர், பல்கலைக்கு ஒன்றரை மாதம் விடுமுறை அறிவித்துவிட்டார். அத்துடன் பல்கலை. வளாகத்தை காவல்துறையிடம் ஒப்படைத்தும்விட்டார். அதுமட்டுமின்றி தண்ணீர், மின்சாரம் ஆகியவற்றையும் துண்டித்துவிட்டனர். ஆயினும் மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நூற்றுக்கணக்கான மாணவர்கள் பாலன் மற்றும் ஐவர் மீதான நடவடிக்கையை கைவிட வேண்டுமென கோரிக்கை மனு கொடுத்தனர். ஆனால் அவர்கள் அனைவரையும் துணைவேந்தர் தற்காலிக நீக்கம் செய்துவிட்டார். இந்த நடவடிக்கை இன்றைய பாஜக ஆட்சியில் சில துணைவேந்தர்களின் நடவடிக்கையை ஒத்ததாக அமைந்திருக்கிறதல்லவா? என்றாலும் தொடர்ந்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர். திருச்சி மற்றும் தென்னார்க்காடு மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு அளித்தனர். இந்நிலையில் வேறு வழியின்றி மற்ற மாணவர்கள் மீதான தற்காலிக நீக்கத்தை திரும்பப் பெற்றுக் கொண்டார் துணைவேந்தர். ஆனாலும் பாலதண்டாயுதத்தை மீண்டும் சேர்த்துக் கொள்ள மறுத்துவிட்டார். ஆயினும் தான் ஒருவருக்காக மற்றவர்களது படிப்பு கெட்டுவிடக்கூடாது என்பதால் பாலதண்டாயுதம் வேறுவழியின்றி துணைவேந்தரின் நடவடிக்கை ஏற்றுக் கொண்டார். அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் வெற்றிபெறவில்லை எனினும் தமிழகத்தின் இதர பகுதி மாணவர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அத்துடன் மாணவர்கள் மத்தியில் கம்யூனிஸ்ட் கருத்துக்கள் பரவலாக அறிமுகமாவதற்கு வாய்ப்பாக அமைந்தது. சென்னை, திருச்சி நகரங்களில் மட்டுமின்றி மதுரையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது அண்ணாமலை பல்கலைக்கழகப் போராட்டம். இதனால் ஏற்கெனவே தமிழகத்தின் அரசியல் மையமாக விளங்கிய மதுரை மாநகரில் சுதந்திரப் போராட்ட இயக்கத்துக்கு கல்லூரி மாணவர்களை ஈர்ப்பதற்கான சந்தர்ப்பமாக அமைந்துவிட்டது. இதையடுத்து அமெரிக்கன் கல்லூரியில் பயின்ற பூவண்ணன், என்.சங்கரய்யா, சிவகங்கை ராமச்சந்திரன், ராஜலிங்கம், ரங்கசாமி, நாராயணசாமி ஆகியோர் மாணவர் இயக்கத்தை கட்டுவதற்கு தீவிரமாக செயல்பட்டனர். சிறந்த பேச்சாளராக விளங்கிய சங்கரய்யா அமெரிக்கன் கல்லூரி மாணவர் சங்கம், பரிமேலழகர் தமிழ்க்கழகம் போன்றவற்றின் இணைச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது முன்முயற்சியால் கல்லூரி வளாகத்தில் மாணவர்களை அணிதிரட்டுவது நடைபெற்றது. அதற்காக மாணவர் சங்கத் தலைவராக விளங்கிய மோகன் குமாரமங்கலம், மதுரைக்கு அழைத்து வரப்பட்டார். விக்டோரியா எட்வர்டு அரங்கில் நடைபெற்ற மாநாட்டில் மோகன் குமாரமங்கலமும் சங்கரய்யாவும் உரையாற்றினர். அந்த மாநாட்டிலேயே மதுரை மாணவர் சங்கம் உருவாக்கப்பட்டது. அதன் செயலாளராக சங்கரய்யா தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழகத்தில் மாணவர் இயக்கம், காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி, காங்கிரஸ் கட்சி ஆகியவற்றுடன் நெருக்கமான தொடர்புகளை பராமரித்து வந்தது. அதனால் காங்கிரஸ் தலைவர் காமராஜர், காங்கிரஸ் சோசலிஸ்ட் தலைவர் முத்துராமலிங்கத் தேவர், சசிவர்ண தேவர் மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்களும் அடிக்கடி மதுரை வந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வைக்கப்பட்டனர். தமிழகத்தில் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியை பலப்படுத்திக் கொண்டே மாணவர்களை கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு கொண்டுவந்த ஏ.கே.கோபாலன், சுப்பிரமணிய சர்மா, கே.முத்தையா போன்றவர்கள் மதுரைக்கு அடிக்கடி வந்தார்கள். இதையடுத்து மதுரையில் காங்கிரஸ் சோசலிஸ்ட் தலைவராக விளங்கிய ஏ.செல்லையா, எஸ்.ராமநாதன், கே.பி.ஜானகி, எஸ்.குருசாமி போன்றவர்களுடைய தொடர்பும் மாணவர் சங்கத்திற்கு ஏற்பட்டது. அதன் மூலம் மாணவர் இயக்கம் மாவட்டத்தின் இதர பகுதிகளுக்கும் பரவலானது. திண்டுக்கல், உத்தமபாளையம் போன்ற நகரங்களிலும் மாணவர் சங்கத்தை துவக்குவதற்கு சங்கரய்யா பெரும் முயற்சியில் ஈடுபட்டார். அதன் விளைவாக உத்தமபாளையம் மாணவர் சங்கம் உருவானது. அதில் ஜமால் மொய்தீன், குலாம் மொய்தீன், உசேன் மீர், ஏ.அப்துல் வகாப், எஸ்.பி.முகமது உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். திண்டுக்கல்லில் கே.டி. அரசு, சி.பி.ராஜன் உள்ளிட்டோரைக் கொண்ட திண்டுக்கல் மாணவர் சம்மேளனம் துவக்கப்பட்டது. போராட்டப் பெருவெளியில் பீடு நடைபோட்ட மாணவர் சம்மேளனம் - ப.முருகன் -மார்ச் 24, 2020 […] இன்று குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக மாணவர்கள் நாடு முழுவதும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அதுபோலத்தான் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திலும் மக்களைப் பாதிக்கும் திட்டங்களுக்கும் சட்டங்களுக்கும் எதிராக குரல் கொடுத்தார்கள். கொந்தளித்தார்கள். போராடினார்கள். இப்போது சொல்வதைப் போலவே அப்போதும் மாணவர்களுக்கு எதற்கு அரசியல்? அவர்கள் படிப்பதை மட்டும் கவனித்தால் போதும் என்றார்கள். ஆனாலும் கூட தங்களது கல்வி நலன்களுக்காக மட்டுமின்றி சமூக நலன்களுக்காகவும், நாட்டு நலன்களுக்காகவும் மாணவர்கள் போராடத்தான் செய்தார்கள். இப்போதும் தொடர்ந்து போராடவே செய்கிறவர்கள்; ஏனெனில் அது அவர்களுக்கும் மக்களுக்கும் பொதுவானதாகும். மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை என்று சொல்பவர்களுக்கு 1920களிலேயே லாலா லஜபதிராய் கடும் எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறார். அகில இந்திய மாணவர் காங்கிரஸ் மாநாட்டில் தலைமை வகித்துப் பேசும்போது, “மாணவர்கள் அரசியலில் ஈடுபடக்கூடாது என்று நம்புவர்களில் ஒருவனாக நான் இல்லை. அது ஒருமிக முட்டாள்தனமான கோட்பாடு என்று நான் நினைக்கிறேன். மேலும் அது சாத்தியமில்லாதது என்றும் நினைக்கிறேன். அது தெளிவற்ற மூளைகளின் உருவாக்கம் மட்டுமல்ல, நேர்மையற்ற மூளைகளின் உருவாக்கம் என்றும் கருதுகிறேன்” என்று கூறினார். மாணவர்கள் அரசியலுக்கு வந்தால் தங்களின் ஏகபோக ஆதிக்கம் தகர்ந்துவிடும். அரசியலை நன்கு புரிந்து கொள்வார்கள். அதை மக்களுக்கு கற்றுக் கொடுப்பார்கள். தங்களுக்கு எதிராக மக்களைத் திரட்டுவார்கள் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அதனாலேயே அதை நேர்மையற்றவர்களின் உருவாக்கம் என்று லாலா லஜபதிராய் கூறியிருக்கிறார். அத்தகையவர்கள் இன்று அதிகமாகி இருக்கும் சூழலில் அரசியலில் மாணவர்கள் பங்கேற்பது மேலும் மேலும் முக்கியமானதாகிறது. இன்றைய ஆட்சியாளர்கள் மக்களைப் பிரித்தாள நினைப்பதைப் போலவே அன்றைய பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சியாளர்களும் நினைத்தார்கள். ஆனால் மாணவர்கள் அஞ்சவில்லை. தீவிரமாக போராடினார்கள்.’ உலகளவில் பாசிச ஹிட்லரின் ஆதிக்கவெறியும் இனவெறியும் நாடு பிடிக்கும் போரில் கொண்டு போய்விட்டது. அதனால் அன்றைய மாணவர் இயக்கம் மற்றும் கம்யூனிஸ்ட்டுகள் நாட்டு விடுதலைக்காக மட்டுமின்றி உலகப் போரை எதிர்த்துப், பிரச்சாரம் செய்ய வேண்டியதாயிற்று. அத்துடன் மாணவர்களின் உரிமைக்கான போராட்டங்களிலும் ஈடுபடுவது அவசியமானது. அத்துடன் மாணவர் சம்மேளனத்தின் கிளைகளை நாட்டின் அனைத்து நகரங்களிலும் உருவாக்குவது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கடினமானதாகவும் இருந்தது. இந்தக் காலத்தில் போர் எதிர்ப்புப் பிரச்சாரம் செய்த கம்யூனிஸ்ட்டுகள், காங்கிரஸ் சோசலிஸ்ட்டுகள், காங்கிரஸ்காரர்கள் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் கைது செய்யப்பட்டார்கள். மாணவர்களாயிருந்த கம்யூனிஸ்ட்டுகளான பாலதண்டாயுதம், என்.சங்கரய்யா, மீனாட்சி போன்றவர்கள் பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்யப்பட்டனர். அகில இந்திய மாணவர் சம்மேளனத்தை தமிழ்நாடு முழுவதும் பரவலாக்கும் பணியில் என்.சங்கரய்யா தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஏனெனில் முன்பு சென்னை மாகாண மாணவர் சம்மேளனமாக இருந்த பரந்த அமைப்பு, சேலம் நகரில் நடைபெற்ற மாநாட்டில் தமிழ்நாட்டுக்கு என தமிழ்நாடு மாணவர் சம்மேளனத்தை உருவாக்கியது. அதன் பொதுச் செயலாளராக என்.சங்கரய்யா தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் திருநெல்வேலியில் மாணவர்களின் போராட்டம் நடந்து கொண்டிருந்த போது சங்கரய்யா அங்கு சென்றார். இந்துக் கல்லூரி, செயிண்ட் ஜான் கல்லூரி, செயிண்ட் சேவியர் கல்லூரி மாணவர்கள் அணி திரண்டு பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்தனர். நகரில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆயினும் மாணவர்கள் அமைதியான முறையில் ஊர்வலமாகச் சென்று மாவட்ட ஆட்சியரை சந்தித்துப் பேசுவது என்று முடிவெடுக்கப்பட்டது. அதன்படி ஊர்வலம் நடந்தது. ஆனால் ஆட்சியர் அலுவலகத்தை நெருங்கும் சமயத்தில் காவல்துறையினர் தடியடி நடத்தினர். சங்கரய்யா உள்பட மாணவர்கள் பலரும் பலத்த தாக்குதலுக்கு உள்ளாயினர். பல மாணவர்களின் மண்டை உடைந்தது. சங்கரய்யாவும் பலமான குண்டாந்தடி தாக்குதலுக்குள்ளானார். இதனைக் கண்டித்து மாவட்டம் முழுவதும் கண்டனக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. இதையடுத்து 1942 அக்டோபர் மாதத்தில் பாதுகாப்புச் சட்டப்படி சங்கரய்யா கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்தக் காலத்தில் இரண்டாம் உலக யுத்தம் காரணமாக நாட்டில் அரசியல் சூழல் மாறியிருந்தது. இது மாணவர் சம்மேளனத்துக்கு சிரமமானதாக இருந்தது. ஏனெனில் சோவியத் நாடு மீது ஹிட்லரின் படைகள் தாக்குதலைத் தொடுத்ததையடுத்து அந்த யுத்தத்தை ‘மக்கள் யுத்தம்’ என்று கம்யூனிஸ்ட்டுகள் குறிப்பிட்டனர். சோவியத் நாட்டையும் தொழிலாளி வர்க்க அரசையும் பாட்டாளி மக்களின் நலன்களையும் பாதுகாக்கவும் உலகளவில் நடைபெறும் விடுதலைப் போராட்டங்களின் வெற்றிக்காகவும் கம்யூனிஸ்ட்டுகள் குரல் எழுப்பினார்கள். இந்தச் சமயத்தில் பிரிட்டன் மற்றும் பிரான்ஸ், சோவியத்தின் நேச நாடுகள் அணியில் இருந்ததால், இந்திய மக்கள் இந்த அணியை ஆதரிக்க வேண்டும் எனக் கூறியதால் கம்யூனிஸ்ட்டுகள் பழிச்சொல்லுக்கு உள்ளாக்கப்பட்டனர். காங்கிரஸ் கட்சி வெள்ளையனே வெளியேறு போராட்டத்துக்கு அறைகூவல் விடுத்தது. அத்துடன் துரோகி என்றும் ஏகாதிபத்திய தாசர்கள் என்றும் கம்யூனிஸ்ட்டுகள் மீது அவதூறுகளை அள்ளி வீசினர். ஆயினும் 1942 ஆகஸ்டில் நடந்த வெள்ளையனே வெளியேறு போராட்டத்திற்கு தலைமை தாங்கிய ஹெமு கலானி எனும் சிந்து பகுதி, மாணவர் சம்மேளன தலைவர் பிரிட்டிஷ் ராணுவத்தால் கைது செய்யப்பட்டார். 1943ல் பொதுமக்கள் முன்னிலையில் தூக்கிலிடப்பட்டார். அப்போது அவருக்கு வயது 16 தான். இது தவிர சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட சம்மேளன தலைவர் கனக்லதா பருவா பிரிட்டிஷாரின் துப்பாக்கிக் குண்டுக்குப் பலியாகி தியாகியானார். இத்தகைய கடும் நெருக்கடிகளுக்கு மத்தியிலும் சோதனைகளுக்கு இடையிலும் அகில இந்திய மாணவர் சம்மேளனம், சுதந்திரம் - சமாதானம் - முன்னேற்றம் எனும் தனது பதாகையை உயர்த்திப் பிடித்த படியே நடைபோட்டது. கல்விச் சேவையில் மட்டுமின்றி மக்கள் சேவையிலும்… - ப.முருகன் -மார்ச் 25, 2020 […] அகில இந்திய மாணவர் சம்மேளனம் தன்னுடைய செயல்பாடுகளை தீவிரப்படுத்தியது. அத்துடன் மாணவர்களின் உரிமைகளுக்கான போராட்டங்களிலும் ஈடுபட்டது. தமிழ்நாடு மாணவர் சம்மேளனம் அதன் பொதுச் செயலாளர் என்.சங்கரய்யா தலைமையில் மாநிலம் முழுவதும் அமைப்புகளை ஏற்படுத்துவதற்கான பணிகளிலும் தீவிர கவனம் செலுத்தியது. அத்துடன் பல்வேறு போராட்டங்களையும் நடத்தியது. இந்தக் காலத்தில் திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் மாணவர் சம்மேளன உறுப்பினர் ஒருவரை கல்லூரியிலிருந்து நிர்வாகம் விலக்கிவிட்டது. இதை எதிர்த்தும் அந்த மாணவரை மீண்டும் சேர்க்க வலியுறுத்தியும் கல்லூரி மாணவர்கள் ஒற்றுமையாக, ஒட்டுமொத்தமாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை எதிர்பார்ககாத கல்லூரி நிர்வாகம் தன் நிலையிலிருந்து பின்வாங்கியது. விலக்கப்பட்ட மாணவரை ஒரே நாளில் மீண்டும் சேர்த்துக் கொண்டது. இந்தச் சமயத்தில் தான் நெல்லையில் கல்லூரி மாணவர்களின் போராட்டத்தில் கலந்து கொண்டு தடியடிக்குள்ளானார் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சங்கரய்யா. பின்னர் மாணவர்களுக்காக பயிற்சி முகாம் ஒன்றை சாத்தூர் அருகில் உள்ள சிறுகுளம் என்ற ஊரில் நடத்தினார். இதில் சிபிஐ மாநிலச் செயலாளர் எம்ஆர்.வெங்கட்ராமன் சிறப்புரையாற்றினார். என்.சங்கரய்யா, ப.மாணிக்கம், எஸ்.ராமகிருஷ்ணன், பெ.சீனிவாசன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். இந்த முகாம் நடந்து கொண்டிருந்த போது போலீசார் பெ.சீனிவாசனை கைது செய்தனர். பின்னர் அவரும் ஆனந்த கிருஷ்ணன் என்பவரும் அலிப்பூர் சிறைக்கு அனுப்பப்பட்டனர். அதன்பின்னர்தான் என்.சங்கரய்யா பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சிறையிலிருந்து விடுதலையான பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாவட்டச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து 1945 பிப்ரவரி 3, 4 தேதிகளில் திருச்சி மாநகரில் தமிழ்நாடு மாணவர் சம்மேளன மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் என்.சங்கரய்யா பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகினார். புதிய செயலாளராக எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார். எஸ்.ராமகிருஷ்ணன் சேலம் மாநகரில் அகில இந்திய மாணவர் சம்மேளனத்தின் தென் பிராந்திய மாநாட்டை சிறப்பாக நடத்தியிருந்தார் என்பதும் அவருடன் பார்வதி கிருஷ்ணனும் தனது பங்கைச் செலுத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இந்த மாநாட்டில் 300 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அதில் 200 பேர் மாணவர் இயக்கத்துக்குப் புதியவர்கள் ஆவர். இவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள். மாநாட்டுப் பிரதிநிதிகள் பலரும் வெவ்வேறு அரசியல் கொள்கையை உடையவர்கள். அவர்களை எல்லாம் ஒருங்கிணைத்து சம்மேளனத்தைப் பலப்படுத்தி, ஒரு கட்சி சார்பற்ற ஜனநாயக அமைப்பாகத் திகழ்ந்தது. அதனால் மற்ற மாணவர் சங்கங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்கிற அறைகூவலை மாநாடு விடுத்தது. சம்மேளனத்தின் பரந்த திட்டத்தை ஒப்புக் கொள்பவர் எவரும் சம்மேளனத்தில் பணியாற்றலாம் என்றும் அதே நேரத்தில் கருத்து மாறுபாடுகளை கைவிட வேண்டியதில்லை; அவர்களுக்கு தங்கள் கருத்துக்களை பிரச்சாரம் செய்யவும் உரிமையுண்டு என்றும் மாநாடு முக்கியமான பிரகடனத்தையும் வெளியிட்டது. அத்துடன் மாணவர்களின் உரிமைகளுக்காகவும் நாடு தழுவிய கல்வித் திட்டத்துக்காகவும் பாடுபடுவதென மாநாடு முடிவு செய்தது. பஞ்சத்திலும் தொற்று நோயிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் பணியில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வதென்றும் மாநாடு முடிவெடுத்தது. மேலும் பாசிச எதிர்ப்புப் போரில் முழுமையாகப் பங்கெடுக்கும் தேசிய அரசாங்கத்தை அமைக்கவும் உயிருக்குயிரான நோக்கமாகிய விடுதலையைப் பெறவும் காங்கிரஸ் - முஸ்லிம் லீக் ஒற்றுமையை உருவாக்கவும் பாடுபடுவதென மாநாடு உறுதி பூண்டது. 1942ஆம் ஆண்டு ஜூலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சட்டப்பூர்வமாக்கப்பட்டது. இந்த காலத்தில் “காந்தி - ஜின்னா மீண்டும் கூடுக” என்ற தலைப்பில் பிரசுரம் வெளியிட்டது கட்சி. லட்சக்கணக்கில் அந்தப் பிரசுரத்தை மக்களிடம் கொண்டு சென்று மாணவர் சம்மேளனம் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டது. அந்தச் சமயத்தில் நாட்டின் தேசபக்தர்கள் மத்தியில் ஏற்பட்டிருந்த உணர்வுக்கு மாணவர் சம்மேளனம் தகுந்த வடிவம் கொடுத்தது. கட்சி வேறுபாடின்றி மாணவர்களையும் மக்களையும் மாணவர்கள் அணிதிரட்டினர். இத்தகைய சூழ்நிலையால் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து காந்தியும் ஜின்னாவும் சந்தித்துப் பேசினர். இதுகுறித்து கருத்துத் தெரிவித்த காங்கிரஸ் தலைவர் ராஜாஜி “காந்தி - ஜின்னா சந்திப்பு மாணவர் சம்மேளனத்தின் பிரயாசையின் பலன்” என்று பாராட்டினார் என்று எழுத்தாளர் என்.ராமகிருஷ்ணன் தனது தமிழகத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும் எனும் நூலில் மேற்கொள் காட்டியுள்ளார். 1942-43ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட வங்கப் பஞ்சம் உலக யுத்தத்தின் விளைவாக ஏற்பட்டதாகும். வங்கம் மற்றும் ஒரிசா போன்ற கடற்கரையோர மாகாணங்களில் ஜப்பானிய விமானங்களின் குண்டுவீச்சும் அந்தப் படைகள் எந்த நேரமும் உட்புகலாம் என்ற நிலையும் சேர்ந்து விவசாயத்தை மிகவும் பாதித்துவிட்டது. அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரண நிதி வசூல் தமிழகத்தில் முழு வேகத்தில் நடைபெற்றது. கட்சி சார்பில் நாடகங்கள் நடத்தப்பட்டன. வங்கப் பஞ்சம் என்ற நாடகத்தில் கே.பி.ஜானகி, எஸ்.குருசாமி, பி.ராமமூர்த்தி, என்.சங்கரய்யா, கே.பால தண்டாயுதம் போன்ற இளம் தலைவர்கள் நடித்தனர். ஜானகியின் சோகமான பாடல் கேட்போரை கண்கலங்க வைக்கும். நாடகத்தின் முடிவில் நிதி வசூல் நடைபெறும். அதுமட்டுமின்றி மாணவர் சம்மேளனத்தின் சார்பில் மருத்துவ மாணவர்கள் குழு வங்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. எஸ்.ராமகிருஷ்ணன் தலைமையில் இ.பாலகிருஷ்ணன், கமலா மற்றும் பல மருத்துவக் கல்லூரி மாணவர்கள் வங்கம் சென்று மருத்துவ சேவையில் ஈடுபட்டனர். FREETAMILEBOOKS.COM மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? அமேசான் கிண்டில் கருவியில் தமிழ் ஆதரவு தந்த பிறகு, தமிழ் மின்னூல்கள் அங்கே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை நாம் பதிவிறக்க இயலாது. வேறு யாருக்கும் பகிர இயலாது. சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FREETAMILEBOOKS.COM இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. http://www.vinavu.com 2. http://www.badriseshadri.in  3. http://maattru.com  4. http://www.kaniyam.com  5. http://blog.ravidreams.net  எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் CREATIVE COMMONS உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். துவக்கம் உங்களது வலைத்தளம் அருமை (வலைதளத்தின் பெயர்). தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/  நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM  FB : https://www.facebook.com/FreeTamilEbooks  G plus: https://plus.google.com/communities/108817760492177970948    நன்றி. முடிவு மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைFREETAMILEBOOKSTEAM@GMAIL.COM எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.  ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும்.   மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.  தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.  எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.  - EMAIL : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM   - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks   - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948   இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/    SUPPORTED BY கணியம் அறக்கட்டளை http://kaniyam.com/foundation     கணியம் அறக்கட்டளை []   தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும்  கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு  – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.   தற்போதைய செயல்கள் - கணியம் மின்னிதழ் – http://kaniyam.com - கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச தமிழ் மின்னூல்கள் – http://FreeTamilEbooks.com   கட்டற்ற மென்பொருட்கள் - உரை ஒலி மாற்றி –  Text to Speech - எழுத்துணரி – Optical Character Recognition - விக்கிமூலத்துக்கான எழுத்துணரி - மின்னூல்கள் கிண்டில் கருவிக்கு அனுப்புதல் – Send2Kindle - விக்கிப்பீடியாவிற்கான சிறு கருவிகள் - மின்னூல்கள் உருவாக்கும் கருவி - உரை ஒலி மாற்றி – இணைய செயலி - சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஐஒஎஸ் செயலி - WikisourceEbooksReportஇந்திய மொழிகளுக்ககான விக்கிமூலம் மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல் - FreeTamilEbooks.com – Download counter மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல்   அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள்   - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - முழு நேர நிரலரை பணியமர்த்தி பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குதல் - தமிழ் NLP க்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல் - கணியம் வாசகர் வட்டம் உருவாக்குதல் - கட்டற்ற மென்பொருட்கள், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வளங்களை உருவாக்குபவர்களைக் கண்டறிந்து ஊக்குவித்தல் - கணியம் இதழில் அதிக பங்களிப்பாளர்களை உருவாக்குதல், பயிற்சி அளித்தல் - மின்னூலாக்கத்துக்கு ஒரு இணையதள செயலி - எழுத்துணரிக்கு ஒரு இணையதள செயலி - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - http://OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல் - தமிழ்நாடு முழுவதையும் http://OpenStreetMap.org ல் வரைதல் - குழந்தைக் கதைகளை ஒலி வடிவில் வழங்குதல் - http://Ta.wiktionary.org ஐ ஒழுங்குபடுத்தி API க்கு தோதாக மாற்றுதல் - http://Ta.wiktionary.org க்காக ஒலிப்பதிவு செய்யும் செயலி உருவாக்குதல் - தமிழ் எழுத்துப் பிழைத்திருத்தி உருவாக்குதல் - தமிழ் வேர்ச்சொல் காணும் கருவி உருவாக்குதல் - எல்லா http://FreeTamilEbooks.com மின்னூல்களையும் Google Play Books, GoodReads.com ல் ஏற்றுதல் - தமிழ் தட்டச்சு கற்க இணைய செயலி உருவாக்குதல் - தமிழ் எழுதவும் படிக்கவும் கற்ற இணைய செயலி உருவாக்குதல் ( aamozish.com/Course_preface போல)   மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை  kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.   வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், 100% வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும்.இந்த இணைப்பில் செயல்களையும், இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account   UPI செயலிகளுக்கான QR Code []   குறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும். Note: Sometimes UPI does not work properly, in that case kindly use Account number and IFSC code for internet banking.