[] 1. Cover 2. Table of contents ஆச்சார்ய தேவோ பவ ஆச்சார்ய தேவோ பவ   ஷிவார்ப்பணா   shivarpana.bee@gmail.com   மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC-BY-SA-NC கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   மின்னூலாக்கம் - ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/aacharya_devo_bava மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com அட்டைப்படம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்கம்: ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Cover Image: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Creation: Iswarya Lenin - aishushanmugam09@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation பதிவிறக்கம் செய்ய - http://freetamilebooks.com/ebooks/aacharya_devo_bava This Book was produced using LaTeX + Pandoc சமர்ப்பணம். எழுத்தோடு பலவும் கற்றுக் கொடுக்கும் நம் ஆசிரியர்களுக்கு இந்த நூல் சமர்ப்பணம். Dedication This book is dedicated to those unsung heroes and heriones in our lives, ‘Our Teachers’. முன்னுரை பொதுவாக நம் சிறு வயதில் அன்பைப் பொழிந்தும், கண்டித்தும் , ஊக்குவித்தும், தலையில் தட்டியும், சேர்ந்து சிரித்தும், இடித்துரைத்தும் , நம்மை உருவாக்குவதில் பெற்றோர் , சகோதர சகோதிரிகள், நண்பர்கள் ஆகியோருக்கு முக்கிய பங்கு இருக்கும். எனக்கு இந்த லிஸ்ட்டில் என் ஆசிரியர்களும் சேர்ந்து கொண்டார்கள். சமயத்தில் மேல் சொன்ன ரோல்களையும் ஒவ்வொரு காலகட்டத்தில் இவர்களில் சிலர் எனக்கு செய்திருக்கிறார்கள். அவர்களையும் அவர்களுடனான என் சுவையான அனுபவங்களையும் இந்த நூலில் நினைவு கூர்கிறேன். அப்படி நினைவு கூர்வதன் மூலம் என் நன்றியை அவர்களுக்கு உரித்தாக்குகிறேன். இதை எழுதி முடிக்கும்போது என் ஆறாம் வகுப்பிலிலிருந்து , கல்லூரி படிப்பு , அதற்கு பின் நான் சேர்ந்த கம்ப்யூட்டர் இன்ஸ்டிட்டியூட் என்று வரிசையாக எத்தனை அருமையான ஆசிரியர்களைச் சந்திதிருக்கிறேன் என்று எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. எல்லோருக்குமே இத்தனை ரகமான அறிவும் அக்கறையும் நகைச்சுவை உணர்வும் கொண்ட ஆசிரியர்கள் இத்தனை பேர் அமைந்திருப்பார்களா? அப்படி இல்லை என்றால் இது என் பூர்வ ஜன்மத்தில் நான் தப்பி தவறி செய்த புண்ணியமாகவோ இல்லை நான் படித்த அந்த கல்வி நிறுவனங்களின் ராசியாகவோதான் இருக்கவேண்டும். “ஏய்! ஓவரா சீன் போடாத! வித்தியாசமா எதையாவது எழுதினாதான் படிப்பாங்கன்னு, ஒரு செண்ட்டிமெண்ட் டாப்பிக்க செலெக்ட் பண்ணிட்டு வரிசையா அந்த மிஸ் இந்த சார் அப்படினு இஷ்ட்டத்துக்கு இன்ட்ரஸ்ட்டிங்கா கற்பனைக் பண்ணி எழுதினா எங்களுக்கு தெரியாம போய்டுமா?” என்று நினைக்கும் வாசகர்களுக்கு - இந்த கல்வி நிறுவனங்களும் , இந்த ஆசிரியர்களும் , அவர்களைப் பற்றி நான் பகிர்ந்திருக்கும் அனுபவங்களும் நிஜம். அவற்றில் சில அங்கொன்றும் இங்கொன்றுமாக அந்த ஆசிரியர்களுக்கும் என் சக மாணவிகளுக்கும் நினைவிருக்கலாம். இல்லாமலும் போகலாம். என் வரையில் நேர்மையாக எழுதியிருக்கிறேன். இன்னூலைப் படிக்கும்போது " அட! இப்படியும் ஆசிரியர்கள் உண்டா? " என்று வியக்கவோ, “எனக்கும் கிட்டத்தட்ட இப்படி ஒரு ஆசிரியர் இருந்திருக்கிறாரே” என்று உங்கள் அற்புதமான ஆசிரியர் ஒருவரையேனும் நீங்கள் நினைவு கூரவோ, இந்தத் தொகுப்பு உங்களைத் தூண்டியதென்றால் அதைவிட சந்தோஷமான விஷயம் எனக்கு வேறொன்றுமில்லை. B ஷிவார்ப்பணா (shivarpana.bee@gmail.com) ## எஸ்.ஆர்.சி, திருச்சி SRC, Trichy. கணபதி சார். கல்லூரி முடித்துப் பல வருடங்கள் கழித்து ஒருமுறை என் சகோதரியின் வீட்டிற்கு நான் சென்றிருந்தபோது, வாசற்படியில் நின்று “லக்ஷ்மணன் இல்லையா?” என்று கேட்டவரைப் பார்த்து நான் அதிர்ந்து போனேன். வரவேற்கவேண்டும் என்ற அறிவு கூட இல்லாமல் திருதிரு என்று விழித்தேன். அவரும் என்னை அடையாளம் கொண்டுவிட்டார். “என்னம்மா? என்னைத் தெரியலையா? நீ என்னை வேஷ்டியிலேயே பார்த்து பழகியிருப்ப. இப்போ பேண்ட் போட்டுண்டிருக்கேன் இல்லையா? அதான் இப்டி முழிக்கற” என்றார். எங்கள் காலேஜ் கணக்கு ப்ரொஃபசர் கணபதி சார். மனிதர் வெகுவாக மாறிப் போயிருந்தார். சுதாரித்துக் கொண்டு வரவேற்றேன். காஃபி கொடுத்தேன். நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். எஸ்.ஆர்.சி காலேஜைவிட்டு விட்டு பிரபல பொறியல் கல்லூரி ஒன்றில் சேர்ந்துவிட்டிருந்தார். அந்த கல்லூரிக்கு ஆழமான கணக்கு புரிதலும் சொல்லிக் கொடுக்கும் திறனும் உள்ள ஒரு வாத்தியார் கிடைத்திருக்கிறார் என்று எண்ணிக் கொண்டேன். இந்த காலத்து ப்ரமாண்ட சிலபஸுக்கும் இளைஞர்களின் அவசர ஓட்டத்திற்கும் நுனிப் புல் மேயும் வழக்கத்திற்கும் இவர் ஸ்லோ என்று தோன்றும். மார்க்குகாக மட்டும் படிக்காமல் உண்மையிலேயே கணிதத்தை ஆர்வத்தோடு விரும்பிப் படிக்கும் மாணவர்களுக்கு இவர் ஒரு வரப் பிரசாதம். பாவம்! “இந்த காலேஜ்ல என்ன பேண்ட் போட வெச்சிட்டா” என்றார். நான் படித்த போது கணபதி சார் அரைக் கை சட்டையும் வேட்டியும் உடுத்தி கல்லூரிக்கு வருவார். எங்கள் கல்லூரி கலாசாரத்திற்கும் அறிவுக்கும் முக்கியத்துவம் கொடுத்து மற்ற விஷயங்களை அவ்வளவாக கண்டு கொள்ளாது விட்டுவிடும். (பஞ்சகச்சம் வைத்து வேட்டி கட்டிக் கொண்டு தலையில் சிறிய குடுமியுடன் இன்டியன் கல்சர் என்ற வகுப்பை நடத்த ஒரு காந்தியவாதி வருவார். அவர் காந்திஜியை நேரில் பார்த்தவர். பூ போல வந்து நடத்திவிட்டு போவார். அவரிடம் எவ்வளவோ கேட்டு தெரிந்து கொண்டிருக்கலாம். நான் செய்யவில்லை. அந்த வயது அப்படி!) கையில் ஒரு சிறிய ப்ளாஸ்டிக் கூடையில் அட்டை போட்ட மாணிக்கவாசகம் பிள்ளையின் மேத்ஸ் புக்கை வைத்து தூக்கிக் கொண்டு கணபதி சார் விர்ரென்று புயல் போல் உள்ளே நுழைவார். மாணவிகளுக்கு அவர் ஒரு டெரர். அவர் விளக்கங்கள் மிக நேர்த்தியாக ஆழமாகத் தெளிவாக இருக்கும். ஒரே மாடலில் பல கணக்குகள் போட வைப்பார். அப்போது கல்லூரி சிலபசில் ஆழ உழாமல் அகல உழும் ட்ரெண்ட் ஆரம்பித்துவிட்டிருந்தது. இவர் ஸ்டைலில் கற்றுக் கொடுத்தால் கற்றுக் கொடுத்தவரை சந்தேகமே வராது புரியும். ஆனால் பரிட்சைக்கு முன் சிலபஸ் முடிக்கமுடியாது. எண்பது பர்சண்ட் தான் முடித்திருப்பார். அதை மட்டும் முழுவதுமாக கொஞ்சம் போட்டுப் பார்த்தால் எழுபத்தைந்து பர்சண்ட்டுக்கு மேல் தாரளமாக வாங்கிவிடலாம். எண்பது பர்சண்ட் தொன்னூறு பர்சண்ட் என்று வாங்க விரும்பும் மாணவிகளுக்கு சிலபஸ் முடியாதது குறையாக இருக்க, ஒரு சிலர் அவரைப் பற்றி புகார் சொல்ல ஆரம்பித்தனர். அவர் க்ளாசில் வந்து " சிலபஸ் முடிக்கறதில்லைனு கம்ப்ளெயிண்ட்டாமே? உங்க சிலபஸ் எவ்ளோ காம்ப்ளெக்ஸ் தெரியுமா? கிடுகிடுன்னு நடத்திண்டு போனா சரியா புரியுமா? சரி! இனிமேல் எக்ஸ்ட்ராவா க்ளாசஸ் இருக்கும்" என்று சொல்லி மேத்ஸ் வகுப்புக்கு முந்திய க்ளாஸ், அடுத்த க்ளாஸ் என்று பர்மிஷன் வாங்கி நடத்த ஆரம்பித்தார். சில நாட்கள் தொடர்ந்து மூன்று மணி நேரம் இடைவேளை இன்றி கணக்கு க்ளாஸ். சில நாட்கள் அரை மணியில் லஞ்சைச் சுறுக்கிக் கொண்டு வர சொல்லியும் க்ளாஸ் எடுப்பார். ஹாஸ்ட்டல் மாணவிகள் பாடு திண்டாட்டம். ஏற்கனவே இரண்டு மணி நேரம் மேத்ஸ் க்ளாசில் கவனித்துவிட்டு மெஸ்சில் சாம்பார், ரசம், மோர் என்று சாப்பிட்டுவிட்டு ஓடி வந்து உட்காருவோம். எனக்குக் கண்ணைச் சுழற்றிக் கொண்டு வரும். நான் கடைசி பெஞ்சில் இருந்த குட்டை மாணவி. எனவே லஞ்சுக்கு அடுத்த வகுப்பில் எனக்கு முன்வரிசையில் உயரமாக நாலைந்து பேர் இருக்கும் தைர்யத்தில் குனிந்த தலை நிமிராமல் கொஞ்சம் தூங்கி கொள்வது வழக்கம். அவருக்கு நான் தூங்கி வழிவது தெரிய வாய்ப்பில்லை என்று எண்ணியிருந்தேன். ஒரு நாள் டிஃப்ரன்ஷியல் ஈக்வேஷனில் ஒரு கணக்கை போர்டில் போட்டு விளக்கி கொண்டிருந்தவர் திடீரென்று “அடுத்த ஸ்டெப் என்ன? யாராவது இந்த கணக்க வந்து கம்ப்ளீட் பண்ணுங்கோ பார்க்கலாம்.” என்றார். பலர் முயன்று தோற்க, சற்று நேரம் மௌனம் நிலவியது. அந்த திடீர் நிசப்தம் எனக்கு விழிப்பைக் கொடுக்க கணக்கைப் பார்த்தேன். ஃபிலோமினாஸில் மெர்லின் மிஸ்ஸிடம் கேல்குலஸ் படித்த எனக்கு அது சுலபம் என்று தோன்றியது. சட்டென்று எழுந்து போய் விறுவிறு என்று போட்டு முடித்தேன். விடை சரிதான் என்பதும் புரிந்துவிட்டது. திரும்பி கணபதி சாரைப் பார்த்தேன். “இன்னிக்கு முழிச்சிண்டுருந்தியாக்கும்?” என்றார். இவர் நோ பாலில் கூட சிக்சர் அடிக்கத் தெரிந்தவர்! கணக்கு வகுப்பில் அரிதாய் எனக்குக் கிடைத்த பெருமையை மூட்டைக் கட்டிவிட்டு சாக்பீசை மேஜையில் வைத்துவிட்டு லாஸ்ட் பெஞ்சை நோக்கி கிட்டத் தட்ட ஓடினேன். கணக்கில் இருக்கும் அறிவு மாணவிகளை ஓட்டுவதிலும் இருக்கும். க்ளாசில் ஒருவர் பெயரும் தெரியாது. “ஏய் ஆம்பூர்! ஏய் சிதம்பரம்!” என்று ஊர் பெயரை வைத்துதான் கூப்பிடுவார். ஒரு மாணவி மிகுந்த ஈடுபாட்டுடன் க்ளாசில் தன்னை மறந்து காலை ஆட்டியவாறு கவனித்து கொண்டு இருந்தாள். இவர் அவளைக் கூப்பிட்டு " நீ போன ஜென்மத்துல டெய்லரா இருந்தியா?" என்பார். இன்னொரு மாணவிக்கு தலையை சாய்த்துக் கொண்டு மூக்குக் கண்ணாடி மூக்கு நுனிக்கு நழுவ கண்ணாடிக்கும் கண்ணுக்கும் இடைப்பட்ட கேப் வழியாக சில சமயம் பார்க்கும் வழக்கம் உண்டு. " ஏம்மா காக்காவா நீ ? அதுதான் சாதத்தப் போட்டா தலைய சாச்சு சாச்சு பாத்துண்டிருக்கும்." இப்படி இஷ்ட்டத்திற்கு ஓட்டுவார். யாருக்கும் அவர் க்ளாசில் வாய்விட்டு சிரிக்க பயம். சத்தம் போட்டு சிரித்து அடுத்த டார்கெட்டாக மாட்டிக் கொள்ள விருப்பம் இல்லாததால், அவர் வகுப்பில் சத்தம் போடாமல் சிரிக்கும் கலையில் எல்லோரும் அபாரமாய்த் தேர்ச்சி பெற்றோம். ஆப்பரேஷன்ஸ் ரிசர்ச் என்று ஒரு பேப்பர். அவர் அதை அற்புதமாக நடத்தினார். ஒரு நீண்ட இடைவெளிக்கு பின் எம்.சி.ஏ. சேர்ந்தேன். அதில் ஆப்பரேஷன்ஸ் ரிசர்ச் பேப்பர் இருந்தது. பலர் திணற, எனக்கு அது அதி சுலபமாக இருந்தது, கணபதி சார் புண்ணியத்தில். என் சகோதரியின் கணவரைத் தேடி வந்தவர் விடை பெறும் போது “தேங்க்ஸ் ஃபார் தி எக்சலண்ட் காஃபி” என்றார். எனக்கு அன்று கணக்கில் செண்ட்டம் வாங்கிய சந்தோஷம்! எகனாமிக்ஸ் சார். எங்களுக்கு இண்டஸ்ட்ரியல் எகநாமிக்ஸ் என்று ஒரு பேப்பர் இருந்தது. அந்த ப்ரொஃபசர் பெயர் எனக்கு நினைவில் இல்லை. காரசாரமான விவாதங்களும் அட்டகாசமான நகைச்சுவையும் அதிரடி ஜோக்குகளுமாக இருக்கும் அவர் க்ளாஸ். அவர் வகுப்பை யாருமே மிஸ் செய்ய விரும்பமாட்டோம். முதல் நாள் வகுப்பே அதிரடியாய் ஆரம்பித்தது. " என் வகுப்பில் நீங்கள் தாராளமாக தூங்கலாம்!" நாங்கள் விழிக்க, " இந்தியா இஸ் அ புவர் கண்ட்ரி என்று ஆரம்பிப்போம். அப்புறம் தியரிகள் பேசுவோம். நீங்கள் தூங்க ஆரம்பிப்பீர்கள். உறக்கத்திலிருந்து விழித்து பார்த்தால் மீண்டும் இந்தியா இஸ் அ புவர் கண்ட்ரி என்று அதே பல்லவியைத்தான் பாடிக் கொண்டிருப்போம்" என்பார். ஆனால் அவர் வகுப்பில் தூக்கம் பற்றிய நினைப்பே வராது. ஒரு முறை " இந்தியர்கள் பல பேர் பெரிய பணக்காரர்களாக இல்லை. இதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?" என்றார். ஆளுக்கொரு காரணம் சொல்லிக் கொண்டு வர. வரிசையாக நிறைய பெண் குழந்தைகள் இருந்த கூட்டு குடும்ப அனுபவத்தில் நான் " வருஷக் கணக்கா சேர்த்து வெச்ச பணத்த லாபகரமா இன்வெஸ்ட் பண்ணாம ரெண்டே நாள் கல்யாணத்துல வேட்டு விட்டுட்றாங்க. அதுவும் ஒரு காரணம்." என்று சொன்னேன். “அது நம் கலாசாரம், குடும்ப சந்தோஷம்” என்றெல்லாம் சில மாணவிகள் விவாதிக்க, ஒரு கல்யாணத்தில் தேவையில்லாத செலவுகளை நான் பட்டியலிட, இகனாமிக்ஸ் சார் இடைவெட்டினார். " இவ்வளவு பேசறீங்களே? கேன் யூ அக்சப்ட் அ மேரேஜ் வித்தவ்ட் அ தாலி?" " ஒய் நாட்?" " நீங்க வேற எதாவது சொல்வீங்கன்னு எதிர்பார்த்தேன். ஒய் நாட்னு சொல்லிட்டீங்க. ஐ சல்யூட் யூ!" அது ஒரு வயது! கலாச்சாரத்தின் பழமையான பல விஷயங்களின் முக்கியத்துவம் புரியாத வயது. தாலியின் முக்கியத்துவம் புரியாத வயது. பல வருடங்கள் கழித்து தாலி கட்டித்தான் திருமணம் செய்து கொண்டேன். தினமும் தாலி சரடுக்கு மஞ்சள் தடவித்தான் குளிக்கிறேன். ஆனால் என் கல்யாணம் சிம்பிளாய் லிங்கபைரவி கோவிலில் நடந்தது. இரண்டே வேளை உணவு. மதியமே நண்பர்கள் விடை பெற்றுவிட உறவினர்கள் மாலை விடை பெற குறைந்த பட்ச செலவுகளோடு நடந்தது. அதைவிட சிம்பிளாய் செய்ய முடியவில்லை. நம் நலனில் அக்கறை கொண்ட ஜீவன்கள் வந்து அட்சதை போடாமல் ஒரு வேளையேனும் உணவு உண்ணாமல் என்ன திருமணம்? அதிக பட்சம் கோவிலில் வைத்து கொண்டு மண்டப செலவு வானவேடிக்ககளைத் தவிர்க்கலாம். இலையில் பெருமைக்கு ஐந்தாறு வகை ஸ்வீட்டுகளும் ஏகப்பட்ட சாத டிஃபன் வகைகளையும் குறைத்து சென்சிபிளாய் ஒரு ஸ்வீட் ஒரு வடை ஒரு மீல்ஸ் ஒரு டிபன் என்று நிறைவாய் போட்டுக் கொள்ளலாம். அப்படித்தான் நடந்தது. கல்யாண ஏற்பாடுகள் நடக்கும் சமயத்தில் எகனாமிக்ஸ் சாரையும் எங்கள் விவாத்தத்தையும் நினைத்துக் கொண்டேன். இவர் தன் வாழ்வில் இருந்து சொல்லும் நிகழ்ச்சிகள் மிக சுவையாக இருக்கும். சிறுவயதில் ஒரு முறை தன் பாட்டியுடன் சந்திரலேகா படம் பார்க்க போயிருக்கிறார். ஒரு குறிப்பிட்ட சீன் வந்ததும் அவர் பாட்டி அவரை இழுத்து மடியில் சாய்த்துக் கொண்டு கண்ணையும் காதையும் பொத்தி விட்டாராம். இவர் வளர்ந்து தானாக சினிமா பார்க்கும் வயது வந்ததும் அப்படி என்னதான் அந்த சீனில் வருகிறது என்று பார்த்துவிட வேண்டும் என்று சந்திரலேகா படம் போனாராம். “அது என்ன சீன் சார்?” என்றோம். எங்களில் பலர் சன் டீவி கே டிவி உபயத்தில் சந்திரலேகா படம் பார்த்திருந்தோம். எங்களுக்குத் தெரிந்து அதில் பார்க்கக் கூடாத சீன் எதுவும் கிடையாது. அவர் அந்த சீனை நடித்தே காட்டினார். " ஒன்னுமே கிடையாது மா. ஹீரோ இந்த ஓரத்துல, இப்பிடி நிப்பாரு. பத்தடி தள்ளி ஹீரோயின் நிப்பாங்க. அந்தம்மா ஹீரோவ பார்த்து ‘உங்கள்… பெயர்… என்னவோ?’ ன்னு ஒரு வார்த்தைக்கும் மறுவார்த்தைக்கும் பத்து செகண்ட் கேப் விட்டு கேப்பங்க. அவரு அதே மாதிரி கேப்போட “என்… பெயர்… பாபா” ன்னுவாரு. இவங்க, “ஓ… பாபாவா?” ன்னுவாங்க. அப்றம் ஆளுக்கொரு திசைக்கு நகர்ந்துடுவாங்க. இதப் போய் அந்த பாட்டி நான் கெட்டுப் போய்டுவேன்னு நெனச்சு பாக்கவிடாம பண்ணிடுச்சு. வீட்டுக்கு போய் பாட்டிக்கிட்ட சண்டை போட்டேன்." படு சகஜமாக எங்களோடு பேசுவார். " இப்போல்லாம் கோ எஜுகேஷன் ஸ்கூல் காலேஜ் நிறைய வர ஆரம்பிச்சுடுச்சு. இது நல்லது. ஆரோக்கியமான விஷயம். எங்க காலத்துல மருந்துக்குக் கூட நமகோ எஜுகேஷன் கிடையாது. லேடீஸ பாக்கறது அவங்களோட பேசறது எல்லாம் ரொம்ப அபூர்வம். கரஸ்பாண்டஸ் கோர்ஸ் சேர்ந்தப்போ ஒரே சந்தோஷம். காண்டாக்ட் க்ளாஸ்க்கு லேடீஸ் வருவாங்களே? காண்ட்டாக்ட் க்ளாஸ் இருக்குன்னா நாங்க ஷர்ட்ட நாலு தடவ அயர்ன் பண்ணி ஷூவ மணிக்கணக்கா பாலீஷ் பண்ணி அப்பா திட்டற வரைக்கும் கண்ணாடி முன்னாடி நின்னு தலை வாரிட்டு போவோம். லெக்ச்சரர் வரவரைக்கும் பெருமையா க்ளாஸ்ல மேல கீழ நடை பழகுவோம். " கேர்ள்ஸ் ஸ்கூலிலும் லேடீஸ் காலேஜிலும் படித்த எங்களுக்கு இந்த கதைகள் சுவாரஸ்யமாக இருக்கும். “அப்புறம் சார்?” என்று தூண்டுவோம். " ஒரு விஷயம் நடந்துச்சு. அதுக்கப்புறம் அயர்ன் பண்றது அலட்டறதெல்லாம் விட்டுட்டேன். நான் பெஞ்ச்ல கார்னர் சீட். அழகான ஒரு பொண்ணு என் பெஞ்சுக்கு பக்கத்து பெஞ்ச்ல ஓர சீட்ல உக்காந்திருந்தாங்க. அவங்க பேனா கீழ உழுந்துடுச்சு. நான் பாஞ்சு எடுத்து குடுத்தேன்" " அவங்க தேங்க்ஸ் சொல்ல மாட்டேனுட்டாங்களா?" " தேங்க்ஸ் எல்லாம் சொன்னாங்க. தேங்க்ஸ் சொல்லிட்டு, என்ன தம்பின்னு கூப்டுட்டாங்கம்மா! தம்பி கொஞ்சம் இந்த நோட்ட அந்த கார்னர்ல ரெட் ஸாரி கட்டிட்டிருக்கறவங்க கிட்ட குடுத்துடறீங்களான்னு கேட்டுட்டாங்க!" நாங்கள் விழுந்து விழுந்து சிரிப்போம். ஒவ்வொரு க்ளாஸிலும் இப்படி எதாவது ஒரு காமெடி கதை இருக்கும். இவர் வகுப்பில் நுழையும்போதே க்ளாஸ் எடுக்க வரும் தோரணையில் வரமாட்டார். எதோ ரொம்ப நெறுங்கிய தோழர்களையும், தோழமையான தங்கைளையும் சந்தித்து அளவளாவ வந்தவர் போல முகத்தில் ஒரு பெரிய புன்னகையோடும் குதுகலத்தோடும்தான் நுழைவார். ஆனால் அதற்காக பாடம் நடத்துவதில் எந்த குறையும் வைக்க மாட்டார். எகனாமிக்ஸ்ஸில் ஆனா ஆவன்னா தெரியாத எங்களுக்கு பொறுமையாய் தியரிகளை சொல்லிக் கொடுத்தார். அற்புதமான உதாரணங்களோடு விளக்குவார். ஆனால் இதனாலெல்லாம் நன்றாக படித்துவிடுவோம் நிறைய மதிப்பெண் வாங்கி அவருக்கு பெருமை சேர்ப்போம் என்ற மூட நம்பிக்கையெல்லாம் அவருக்கு கிடையாது. பரிட்சைக்கு சில நாட்களுக்கு முன் " எகனாமிக்ஸைப் பொருத்தவரை, பேப்பர் வேல்யுவேஷன் - இப்படித்தான் இருக்கும் " என்று உள்ளங்கையை விரித்து எடை போடுவது போல் மேலும் கீழும் அசைத்தார். " நிறைய மார்க் வேணும்னா நிறைய பேஜஸ் எழுதணும்" இது ரொம்ப சரியான டிப். எனக்கு கொஞ்சம் லேட்டாகவே புரிந்தது. நான் சயின்ஸ் பேப்பர் எழுதுவதுபோல் எல்லா கேள்விகளுக்கும் சரியாக க்ரிஸ்ப்பாக பதில் எழுதிவிட்டு எண்பது பர்சண்ட்டுக்கு மேல் வரும் என்று ஜாலியாக இருந்தேன். ரிசல்ட் வந்தது. என்னிடம் முக்கியமான கான்செப்டுகளை மெஸ்ஸில் சாப்பிடும்போதெல்லாம் விவரித்து விளக்க சொல்லிக் கேட்ட தோழி அறுபது பர்சண்ட். நான் பார்டர் பாஸ். காரணம் கேட்டேன். அவள் அறுபத்து மூன்று பக்கங்கள் எழுதியிருந்தாள். நான் வெறும் இருபத்து சொச்சம் பக்கங்கள். நன்றாக எல்லா கேள்விக்கும் விடை எழுதினாலும் கூட இருபது பக்கங்களுக்கு மேலே எழுத என்ன இருக்கிறது என்று அவளிடம் கேட்டேன். அவள் சொன்னது இன்றைய தேதிக்கு எல்லா தியரி பேப்பர்களிலும் அதிகம் படிக்கமாலேயே பாஸாவதற்கு ஏற்ற நல்லதொரு வழி : " லா ஆஃப் டிமாண்ட் அண்ட் சப்ளை பத்தின கேள்விய எடுத்துகிட்டா மொதல்ல லாவ தெளிவா டிஃபைன் பண்ணிடுவேன். அப்புறம் அது என்ன சொல்லுதுனு எழுதுவேன். அப்புறம் ஆப்பிளை உதாரணமாக வைத்து அதை எக்ஸ்ப்ளெயின் பண்ணுவேன். இது முதல் ஒன்னரை , ரெண்டு பக்கத்துக்கு வரும். அவ்ளோதான் பொறுமையா படிப்பாங்க. அப்புறம் நீட்டா கலர் ஃபுல்லா ண்ட் அண்டு சப்ளை க்ராஃப் போட்டு அதையும் விளக்குவேன். அதுலயே இந்த பேப்பர் ஓரளவு நல்லா படிக்கற ஸ்டூடண்ட் பேப்பர்ன்ற இம்ப்ரெஷன் வந்துடும். அப்புறம் நாம எழுதறத அவ்ளோ கவனமா பாக்கமாட்டங்க. நான் தொடர்ந்து அந்தக் கேள்விக்கு ஒட்டின மாதிரி வார்த்தைங்கள வெச்சு எதாவது கதை ஓட்டுவேன் அப்றம் ஆப்பிள் வெச்சு எக்ஸ்ப்ளெயின் பண்ண மாதிரியே ஆரஞ்சு வெச்சு எக்ஸ்ப்ளெயின் பண்ணுவேன். இப்டியே மாத்தி மாத்தி செஞ்சா ஃபாஸ்ட்டா பேஜ் ஆஃப்ட்டர் பேஜ் ரொப்பித் தள்ளாலாம். " என்றாள் அந்த எதற்கும் அசராத உற்சாக மாணவி. பார்டர் பாஸானாலும் எகனாமிக்ஸ் க்ளாஸ் பற்றிய நினைவுகள் இன்றும் ஞாபகம் வரும்போதெல்லாம் குதூகலத்தை ஏற்படுத்துகின்றன. காரணம் அந்த ப்ரொஃபஸர். அப்பா சார் " இஃப் முத்துஸ்வாமி சார் காண்ட் ஹெல்ப் யூ, நோபடி கேன்" காலேஜில் என் சீனியரும் என் தந்தையின் நண்பரின் மகளுமான அந்தப் பெண் திண்ணையில் உட்கார்ந்து சொன்னாள். பி.எஸ்.சி. இண்டஸ்ரியல் எலக்ட்ரானிக்ஸ்சில் ஒரு மாதத்திற்கு மேல் தாமதமாக சேர்ந்ததால் எல்லாவற்றிற்கும் அடிப்படையான சர்க்யூட் தியரி புரியாமல் போனது. இந்த பெண்ணிடம் உதவி கேட்க அவள் தனக்கு டச் விட்டு போய்விட்டதால் தன்னால் முடியாது என்றும் இதில் எக்ஸ்பெர்ட்டான முத்துசுவாமி சாரை அணுகுமாறும் கைக்காட்டிவிட்டாள். முத்துசுவாமி சார் எஸ்.ஆர் மகளிர் பாலிடெக்னிக்கில் ப்ரின்ஸ்பால். எஸ்.ஆர் ஈவ்னிங் காலேஜில் இண்டஸ்ட்ரியல் இலக்ட்ரானின்க்ஸ் க்ரூப்பிற்கு சில பேப்பர்கள் எடுப்பார். எங்கள் ப்ரின்ஸிபால் ரெகமடேஷனில் எனக்கு அவர் தினம் ஒரு மணி நேரம் ட்யூஷன் சொல்லித்தர ஒப்புக்கொண்டார். அவரது அலுவலகத்தில் அவர் மேஜைக்கு எதிர்த்தார் போல் சேரில் என்னை அமரச் சொல்லி கற்றுத் தருவார். எப்போதும் சிரித்த முகமாக இருப்பார். கண்களிலும் எப்போதும் ஒரு சிரிப்பு இருக்கும். தெளிவாக சொல்லித்தருவார். பலமுறை அவருக்கு வரும் டீயையும் பிஸ்கட்டையும் எனக்கு பங்கிட்டு கொடுத்திருக்கிறார். அவர் புண்ணியத்தில் நான் அரியர் வைப்போமோ என்று பயந்த பேப்பரில் முதல் மதிப்பெண்னோ இரண்டாம் மதிப்பெண்ணோ பெறும் அளவு தேரினேன். என் சீனியர் சொன்னது முற்றிலும் உண்மை. இவர் சொல்லிக் கொடுத்தும் புரியாவிட்டால் அந்த மாணவிக்கு யார் சொல்லிக் கொடுத்தாலும் புரியாது. மூன்றாவது வருடம் இவர் எலக்ட்ரிக்கல் டெக்னாலஜி சொல்லித் தர வந்த போது நானடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை. அழகாக பொறுமையாக கற்று கொடுப்பார். கோபமே வராது. அந்தப் பாடம் எல்லோருக்குமே சுலபமாக இருந்தாலும் அவர் டெஸ்ட் என்று சொல்லிவிட்டால் தயார் செய்து கொள்ளாமல்தான் போவோம். அவர் நுழைந்ததும் “சார்! சார்! படிக்கலை சார். கொஞ்சம் டயம் குடுங்க” என்போம். மற்ற வகுப்புகளில் இப்படிப் பேச முடியாது. இவர் " நா ஸ்டூடெண்டா இருக்கும்போதும் இப்படித்தான் இருந்தேன். எவ்ளோ நல்லா படிச்சிருந்தாலும் டெஸ்ட் போஸ்ட்போன் ஆகாதானு ஒரு நப்பாசை இருக்கும். இட்ஸ் ஓ.கே. லெட்ஸ் ஹாவ் இட் டுமாரோ" என்று சிரித்த முகம் மாறாது சொல்வார். புயல் போல் உள்ளே நுழையும் கணக்கு ப்ரொஃபஸருக்கு அடுத்த க்ளாஸில் தென்றல் போல் மென்மையாக உள்ளே நுழைவார். உருவம் படு கம்பீரமாக இருந்தாலும் உள்ளத்தில் ஒரு குழைவுத் தன்மையும் முகத்தில் ஒரு கனிவும் இருக்கும். அவர் குடும்பத்தைப் பற்றி சில சமயங்களில் கேள்விகள் கேட்போம். தன் மனைவியைப் பற்றி பேசும்போது மற்றவர்களைப் போல் ‘அவள்’ என்றோ ‘மை வைஃப்’ என்றோ சொல்லமாட்டார் , ‘மை பெட்டர் ஹாஃப்’ என்று தான் குறிப்பிடுவார். அதில் அன்பும் மரியாதையும் சேர்ந்து ஒலிக்கும். தன் தந்தையிடம் மிகவும் ஒட்டுதல் கொண்ட எங்கள் வகுப்பு தோழி அவருக்கு “அப்பா சார்” என்று பெயர் வைத்தாள். எனக்கு அவர் குழந்தைகளை நினைத்து பொறாமையாக இருக்கும். இன்றைக்கும் அவரைப் பற்றிய நினைவு வரும்போது “அப்பா சார்” என்ற பெயர்தான் முதலில் உள்ளே ஒலிக்கிறது. ஆனந்தவல்லி மிஸ். இண்டராக்டிவ் இங்கிலீஷ் பேப்பர் எடுத்தவர். ஆங்கிலம் அழகாக பேசுவார். அதேபோல் எல்லோரையும் பேசவைக்கும் திறமையும் பெற்றவர். அழகாக இருப்பார். ஒரு இளவரசியைப் போன்ற கம்பீரம் அவரிடம் இருக்கும். ஆனால் எளிமையானவர். க்ளாஸ் முழுவதும் அரட்டையும், விவாதமும் தான். அதை ஆங்கிலத்தில் செய்ய வேண்டும். பேச பேச நாங்கள் பேசும் விஷயங்களை ஒட்டி கேள்விகள் கேட்பதும் கருத்தும் சொல்வதும் மெச்சுவதற்கும் ஊடே எங்கள் ஆங்கிலத்தையும் கரெக்ட் செய்துவிடுவார். அது எங்களை உறுத்தாமலும் அவமானப் படுத்தாமலும் இயல்பாகவும் நளினமாகவும் நடக்கும். ஆங்கிலம் பேசுவதில் தயக்கமும் பயமும் கொண்ட மாணவிகள் பலர் அவர் வகுப்பில் தங்களையும் அறியாது சரளமாகவும் தைர்யமாகவும் தெளிவாகவும் இன்கிலீஷில் பேச ஆரம்பித்துவிடுவார்கள். சுவையான தலைப்புகளையும் ஆர்வத்தையும் சிந்தனையையும் தூண்டும் விஷயங்களையும் அவர் வகுப்பில் விவாதித்திருக்கிறோம். உதாரணமாக, " இஃப் யூ ஆர் கோயிங்க் டு டை டுமாரோ, வாட் வில் யூ டூ டுடே?" என்ற கேள்வியைக் கேட்டு ஒவ்வொரு மாணவியாக பதில் சொல்ல வைப்பார். யாருக்கு எது ரொம்ப முக்கியம் என்பது வெளியே வரும். " கடைக்கு போய் நிறைய ஐஸ்க்ரீம் வாங்கி சாப்பிடுவேன்" என்று சாப்பாட்டு ராமத்தனமான பதிலிலிருந்து " சிறு வயதில் நான் சண்டை போட்டு பிரிந்த தோழியிடம் மன்னிப்பு கேட்பேன்" போன்ற செண்டிமெண்ட்டல் பதில்வரை சொல்லுவார்கள். நான் " என் பர்சனல் டயரிகளையெல்லாம் எரித்துவிடுவேன்" என்று சொன்னேன். அவர் " டயரி எழுதும் பழக்கத்தை விட்டுவிட்டால் நீ சந்தோஷமான ஆளாக மாறிவிடுவாய். என் அனுபவத்தில் சொல்கிறேன். " என்றார். முயற்சி செய்து பார்த்தேன். அது எனக்கு வேலை செய்தது. டயரி எழுதி யாரோடும் பேசாது கொஞ்சம் உர்ரென்று இருந்த நான், டயரிகளைக் கடாசிவிட்ட பின் கொஞ்சம் மற்றவர்களோடு பழக ஆரம்பித்தேன். பாடத்தின் ஒரு பகுதியாக ஒரு நாவல் இருந்தது - சார்லஸ் டிக்கென்ஸ்ஸின் “டேல் ஆஃப் டூ சிட்டீஸ்” நாங்களாகவே அதைப் படித்து கொள்ளவேண்டும். பிறகு அதில் அஸைன்மெண்ட் கொடுக்கப்படும். அந்த கதையைச் சுருக்கமாக சொன்னவர் வீடியோ ஹாலுக்கு அழைத்துப் போய் அந்த படத்தை போட்டு காட்டினார். எங்களோடு அமர்ந்து ஆங்காங்கே பாஸ் செய்து விளக்கங்கள் கொடுத்தார். நான் நாவலின் ஒரிஜனலை லைப்ரரியில் வாங்கிப் படித்தேன். அஸைன்மெண்டில் காரக்ட்டர் அனாலிசிஸ் செய்ய சொல்லிக் கேட்டிருந்தது. எழுதி சப்மிட் செய்த பின் கேண்டீனில் பார்த்தபோது, " பொதுவா இங்க்லீஷ்ல ஃபுல் மார்க் கொடுக்க மாட்டோம். முதல் தடவையா உனக்கு நான் ஃபுல் மார்க் குடுத்திருக்கேன். இட் வாஸ் வெரி வெல் ரிட்டன். கீப் இட் அப்" என்றார். பேசாமல் இங்க்லீஷ் லிட்ரேச்சர் அல்லது தமிழ் இலக்கியம் எடுத்திருக்கலாம். இப்படி புலியைப் பார்த்து சூடு போட்டுக் கொண்ட பூனை போல், எல்லோரும் செய்வதை நாமும் செய்யாவிட்டால் தப்போ என்கிற எண்ணத்தில் ஹார்ட்வேரையும் சாஃட்வேரையும் கட்டிக் கொண்டு ஏன் அழுதோம் என்று இன்று தோன்றுகிறது. எனக்கு கிடைத்த அற்புதமான தமிழ் இங்கிலீஷ் டீச்சர்கள் என் இயல்பான மொழி ஆர்வத்தையும் சிறிதளவு எழுத்துத் திறமையையும் புரிந்து கொண்டு என்னை ஊக்குவித்தாலும் விவரம் இல்லாத்தன்மையும் ஆட்டு மந்தை புத்தியும் என் வாழ்வின் போக்கை மாற்றிவிட்டன. உமா மிஸ் முதல் செமஸ்டர் படித்துக் கொண்டிருந்தபோது ஹாஸ்டல் வாசலில் திருடா! திருடா! பட ஹீரா ஜாடையில் நீண்ட ஒற்றை ஜடையுடன் அழகாக சுடிதார் அணிந்து ஒரு சீனியர் நின்றிருந்தார். " ஒரு இண்டர்வ்யூ இருக்கு. உன்னோட புத்ஸ் கொஞ்ச நேரம் கொடுக்க முடியுமா? ரெஃபர் பண்ணிட்டு தரேன். " என்ற போது ஏதோ மந்திரத்திற்குக் கட்டுப்பட்டதுபோல் தூக்கி கொடுத்தேன். என் நெருங்கிய தோழிகள் புருவம் உயர்த்தினர். தங்கம் கேட்டால் தூக்கிக் கொடுத்துவிடுவேன், புத்தக விஷயத்தில் மகா அல்ப்பம். படிக்கிறோனோ இல்லையோ, புத்த்கம் கொடுக்க மனம் வராது. இன்ட்டர்வ்யூவில் தேறி எங்கள் க்ளாசுக்கு லெக்ச்சராக வந்தார். " புஸ்தகம் குடுத்தியே? ஞாபகம் இருக்கா?" என்று பேச ஆரம்பித்தார். கொஞ்சம் கொஞ்சமாக லெக்சரர் ஸ்டூடண்ட் என்ற வித்யாசமெல்லாம் காணமல் போய் நெருங்கிய தோழிகள் போல் , சகோதரிகள் போல் ஆனோம். வகுப்பில் எல்லோருடனும் அவர் அப்படித்தான் பழகினார். கல்லூரியில் பல இடங்களில் ஸ்டோன் பெஞ்ச்கள் போடப் பட்டிருக்கும். க்ளாஸ் முடிந்ததும் அவற்றில் அமர்ந்து மணிக்கில் பேசிக் கொண்டிருப்போம். சில காரணங்களால் நடுவே டே ஸ்காலராகவும் நான் வர நேர்ந்தது. அப்போது ஒரு பெஞ்சில் அமர்ந்து பேசுவோம். சிறிது நேரம் கழித்து எழுந்து நடந்தவாறு பேசுவோம். பின் கொஞ்சம் தள்ளி இருக்கும் மற்றொரு பெஞ்சில் அமர்ந்து பேசுவோம். இப்படியே பெஞ்ச் பெஞ்சாக அமர்ந்து பேசி வெளியே பஸ் ஸ்டாண்டை அடைவதற்குள் சில நாட்கள் பசியே எடுக்க ஆரம்பித்துவிடும். விறு விறுவென்று நடந்து வசந்த பவனுக்கு போய் தோசை ஆர்டர் செய்துவிட்டு பேச ஆரம்பித்துவிடுவோம். சாப்பிடும் நேரம் மட்டும்தான் பேச்சு நிற்கும். ஒரு முறை பேச்சு சுவாரஸ்யத்தில் அவசரம் அவசரமாக சர்வர் என்று நினத்து ஒருவரிடம் ஆர்டர் சொல்லிவிட்டு அவர் " நானும் சாப்பிடத்தான் வந்திருக்கேன்" என்று முறைக்க, அசடு வழிந்தோம். தோழி போல் பழகினாலும் வகுப்பில் எங்கள் நடத்தையைக் கண்டுகொள்ளாமலோ கண்டிக்காமலோ விட்டதில்லை. நடு வரிசையில் கடைசி பெஞ்ச் எங்களுடையது. என்னையும் சேர்த்து அதில் ஐந்து பேர். அதில் மெஜாரிட்டி கொஞ்சம் போஷாக்கான உடல்வாகு உடையவர்கள். எல்லோரும் ப்ரசண்ட் என்றால் கொஞ்சம் நெருக்கிப் பிடித்து உட்கார வேண்டியிருக்கும். தவிர டெஸ்க்கைவிட பெஞ்ச் நீளம். விளைவு, கீத்து என்கிற கீத்தாஞ்சலிவரை டெஸ்க் வராது. டெஸ்க் மறைப்பு இல்லாமல் வரிசையில் துறுத்திக் கொண்டு உட்கார நேரும்போது அவள் என்ன செய்தாலும் மாட்டிக் கொள்வாள். கம்பைண்டு ஸ்டடி பண்ணும் நாங்கள் இருவரும் ஏதோ பெரிய படிப்பாளிகள் போல் நிறைய விவாதிப்போம். ஒருமுறை அவர் வகுப்பில் கீத்துவை நோக்கி நான் ஏதோ டெக்னிக்கல் பீலா விட்டுக் கொண்டிருக்க, மிஸ்ஸின் நேரடிப் பார்வையில் இருந்தவள் பாடு திண்டாட்டம் ஆனது. யாரையும் புண்படுத்த விரும்பாத அவள் காதை எனக்கும் கண்களை உமா மிஸ்ஸுக்கும் கொடுத்து மல்ட்டி டாஸ்க்கிங்க் செய்து கொண்டிருந்தாள். உமா மிஸ் " கீத்தாஞ்சலி! உனக்கு அவ சொல்றது முக்கியம்னு தோனினா முழுசா அவ பக்கம் திரும்பி உக்காந்துக்கோ. அவ சொல்றதக் கேட்டுட்டு என்னைப் பார்த்து தலையாட்டாத. ரொம்ப இன்சல்ட்டிங்கா இருக்கு" என்றார். திட்டுவதிலும் கண்டிப்பதிலும் ஒரு புத்திசாலித்தனம் இருக்கும். க்ளாசுக்கு வெளியே எங்கள் ரேஞ்சுக்கு பேசுவதும் சண்டை போடுவதும் நடக்கும். ஸ்டோன் பெஞ்சில் உட்கார்ந்து, கல்லூரியில் யார் ரொம்ப அழகான மாணவி என்று மார்க் போட்டு விவாதித்திருக்கிறோம். சினிமா பாடல்கள் பற்றி நிறைய விவாதிப்போம். அப்போதெல்லாம் டி.எம்.எஸ் குரலையோ சிவாஜியின் நடிப்பையோ எனக்கு ரசிக்கத் தெரியாது. என்னைவிட மூன்று வயதே பெரியவரான அவர் , “உனக்கு டேஸ்ட் இன்னும் மெச்சூர் ஆகல” என்று அழகாகச் சொல்வார். உனக்கு ம்யூசிக் தெரியலை என்றோ கற்பூர வாசனை தெரியவில்லை என்கிற கிண்டலோ இருக்காது. கல்ச்சரல் ஃபெஸ்டிவல் போது எங்கள் மேஜரில் பாட்டு போட்டியில் கலந்து கொள்ள எங்கள் ஜூனியர் காயத்ரி என்கிற ஒரு சமர்த்து மாணவி பெயர் கொடுத்திருந்தாள். சீனியர் என்பதற்காகப் பணிவாக எங்களிடம் எந்த மாதிரி பாடல் சரி வரும் என்று கேட்டு மாட்டிக் கொண்டாள். நாங்கள் இம்ப்ராக்டிக்கலாக “பொன் வானம் பன்னீர் தூவுது இந்நேரம்’ போன்ர ரொம்ப அழகான கஷ்ட்டமான பாடல்கள் லிஸ்ட் ஒன்றைத் தேர்வு செய்து கொடுத்து அவளைப் பாடாய்ப் படுத்திக்கொண்டிருந்தோம். உமா மிஸ் அந்த பாடலில் எஸ்.ஜானகி ஒரே வார்த்தையை ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாதிரி பாடுவதையும் அந்தப் பாடல் இன்ஸ்ட்ருமெண்ட்டல் ம்யூஸிக்கை அதிகம் சார்ந்து இருப்பதையும் சுட்டிக் காட்டினார். அந்தப் பாடலை பாடுவது மிகக் கடினம் என்று சொல்லி வேறு பாடல் தேர்வு செய்து கொடுத்து எங்களிடமிருந்து அவளை மீட்டார். அவளுக்கு பயிற்சியும் கொடுத்தார். வகுப்பில் ஒரு முறை”வந்தாள் மஹாலக்ஷ்மியே!" என்ற எஸ்.பி.பியின் பாடலை அவரைப் போலவே கம்பீரமாகப் பாடிக் காட்டினார். இன்றும் அந்த பாடல் கேட்கும் போதெல்லாம் உமா மிஸ் ஞாபகம் வரும். பட்டப் படிப்பு முடிந்தும் எங்கள் நட்பு தொடர்ந்தது. அவர் எங்கள் வீட்டுக்கு வருவதும் நாங்கள் அவர் வீட்டுக்கும் செல்வதும் பலமுறை நடந்தது. எத்தனயோ முறை நான் என் சகோதரியையும் அவள் கணவரையும் அழைத்துக் கொண்டு அவர் வீட்டிற்கு சென்றிருக்கிறேன். தேங்காய் எண்ணை மணக்கும் அருமையான பாலக்காட்டு சமையலை அவர் அம்மா சமைத்துப் போட வளைத்து கட்டி சாப்பிட்டிருக்கிறோம். அவர் மட்டுமல்லாது அவர் குடும்பத்தில் எல்லோருமே எளிதில் பழகக்கூடிய தன்மையுடையவர்களாக இருந்தார்கள். ஏதோ நெருங்கிய உறவினர்கள் போல் ஒரு சகஜ பாவம் இருக்கும். அவர் கல்யாணத்தில் எனக்கு பல விஷய்ங்கள் சொல்லி கொடுத்து பல பொறுப்புகளையும் கொடுத்தார். “என் மறதி பத்தி உங்களுக்கு நல்லா தெரியும். ஏன் மிஸ் என்கிட்ட இந்த மாதிரி பொறுப்பையெல்லாம் குடுக்கறீங்க?” என்று கேட்டேன். அவர் " எனக்குத் தங்கை யாரும் கிடையாது. நீதான் பார்துக்கணும்" என்றார். அவர் பிராமணர். ஒரு பிராமண விவாகத்தில் நிச்சயதார்த்தம், விரதம், மாப்பிள்ளை அழைப்பு, ஊஞ்சல், கன்யாதானம், நலங்கு, ரிசப்ஷன் என்று மணப்பெண் பலமுறை புடவை மாற்ற வேண்டியிருக்கும். ஒவ்வொன்றையும் ஒரு டவலோடு தனித்தனி கவரில் வைத்துப் பெயர் எழுதி எடுத்துக் கொடுக்க வசதியாக வரிசையாக அடுக்க சொல்லிக் கொடுத்தார். அலங்கரத்திற்குத் தேவையானவற்றையும் ஆர்கனைஸ் பண்ணி வைப்பதும், தாலி உட்பட எல்லாவற்றையும் பத்திரமாக வைத்திருந்து எடுத்துக் கொடுக்கும் பொறுப்பும் அளிக்கப்பட்டது. அந்த மாதிரி விஷயங்களை கையாண்டு பழக்கம் இலாத்தால் எடுத்துக் கொடுக்கும்போது கை லேசாக நடுங்க, அவர் அம்மா " பயப்படாம இரு. கை நடுங்கறது பார்" என்றார். கல்யாணம் முடிந்து மறுநாள் காலை தூங்கி எழுந்தபோது மிஸ்ஸின் அப்பா என்னைப் பார்த்து, “எழுந்துட்டியா? போய் பல் தேச்சு மூஞ்சி அலம்பிக்கோ. நைஸா சமையல் உள்ளுக்குப் போய் சூடா ஒரு கப் காஃபி சாப்ட்டு வந்துடு. யாரானும் பார்த்து உனக்கு வேலை குடுக்கறதுடப் போறா, ஓடு ஓடு” என்றார் வாஞ்சையாக. நான் " மாமா. இங்க வேல்யுபிள்ஸ் எல்லாம் இருக்கே? ரூம இப்டியே விட்டுட்டு போகமுடியாதே?" என்றேன். அவர் " நீ வர வரைக்கும் நான் இங்கியே இருக்கேன்." என்றார். எனக்கு நம்பிக்கை இல்லை. அவர் மணப்பெண்ணின் தந்தை. எப்போதும் யாரவது ஒருவர் அவரை கூப்பிடுவதையும் அவர் உடனே ஓடுவதையும் நான் பார்த்துக் கொண்டுதான் இருந்தேன். ரூமை விட்டு போக வேண்டி வந்தால் பூட்டிக் கொண்டு போகச் சொல்லி சாவியைக் கொடுத்துவிட்டு போனேன். திரும்பி வந்த போது ரூமை “பா” வென்று திறந்து போட்டுவிட்டு ரூமை விட்டு கொஞ்சம் தூரத்தில் நான்கைந்து பேருக்கு நடுவே உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார். என்னைப் பார்த்ததும் விறுக்கென்று எழுந்தார் " இவா கூப்டான்னு அப்பிடியே வந்து உக்காந்துட்டேன். காஃபி சாப்ட்டியா?" என்றார். " ரூமை ஏன் மாமா பூட்டல?" என்றேன். " மறந்துட்டேன்… பரவாயில்லை இப்பதான் நீ வந்துட்டியே" என்று வாயால் சொன்னாலும் கொஞ்சம் பதட்டமாகவே என்னோடு வந்தார். ரூமில் ஒரு பையைத் திறந்து பார்த்தவர். “போச்சா?” என்றார். என்னைப் பார்த்து " ஒன்னுமில்லை. உன்னை அனுப்பிட்டு செட்டில் பண்ணவேண்டிய பத்தாயிரம் பர்ஸ்ல இருந்தத பைல வெச்சுட்டு நீ வந்ததும் உன்கிட்ட சொல்லிட்டுப் போலாம்னு பார்த்தேன். இவா கூப்ட்டதும் சட்டுனு பூட்டமயே வெளில வந்துட்டேன்." லேசான பதட்டத்துடன் அந்தப் பையைப் புரட்டியும் தட்டியும் கொட்டியும் பார்க்கலானார். அந்தத் தொண்ணூறுகளில் பத்தாயிரம் என்பது ரொம்பவே பெரிய தொகை. போனது போனதுதான். எனக்கு மனதிற்கு ரொம்பவும் கஷ்ட்டமாக போனது. இப்படி நடந்தது நம் ராசியாலோ என்ற எண்ணம் ஏற்பட நான் சோர்ந்து போனேன். அவர் அந்தப் பணத்தை மண்டபத்திற்கோ எதற்கோ கொடுப்பதற்காக வைத்திருந்தார். நான் அவசரத்திற்கு வேண்டுமானால் என் தந்தையிடம் கடன் வாங்கித் தரட்டுமா என்று கேட்டேன். " சின்ன பொண்ணும்மா நீ! இப்டி கேட்டதே போதும்." என்றார். இப்போது அந்த நிகழ்ச்சியைத் திரும்பிப் பார்க்கும்போது அந்த சூழ்னிலையில் என்னை அவர்கள் சந்தேகப் பட்டுவிடுவார்களோ என்ற எண்ணமே எனக்கு ஏற்படவில்லை. அதற்கு காரணம் அவர்கள் என்னிடம் நடந்து கொண்ட விதம். துரியோதனன் கர்ணனிடம் " எடுக்கவோ, கோர்க்கவோ?" என்று கேட்டதைப் போல அந்த மொத்த குடும்பமும் நடந்து கொண்டது. " எத்தனைப் பொறுப்பா சொன்னா? நா வரவரைக்கும் வெளில போய்டாதீங்கோ. அப்டியே போகணும்னா பூட்டிண்டு போங்கோன்னு? அவ சொன்ன மாதிரி செஞ்சிருந்தா அந்தப் பணம் போயிருக்காது." என்றும் " விடுங்கோ! அதயே நினைச்சுண்டிருக்க வேண்டாம். கல்யாணம் ஜோரா நிறைவா நடந்திருக்கு. இப்டி ஏதாவது நடக்காட்டி திருஷ்டி விழுந்துடும். நல்லதுதான்" என்று வித விதமாகப் பேசி சீக்கிரமே அவர்களும் சகஜமாகி என்னையும் சகஜமாக்கினார்கள். இத்தனைக்கும் அவர்களும் அன்றைய தேதிக்கு பத்தாயிரம் என்பது பெரிய தொகையாய்த் தெரியக் கூடிய மிடில் க்ளாஸ்தான். பல வீடுகளில் இப்படி ஒன்று நடந்திருந்தால் கூடி கூடிப் பேசி சந்தேகமாய்ப் பார்த்து பல பேருக்கு திருட்டுப் பட்டம் கட்டி நோகடித்திருப்பார்கள். உமா மிஸ் திருமணம் முடிந்து வடக்கே உள்ள ஒரு ஊருக்கு குடி போன பின்னும் எனக்கு கடிதம் எழுதுவார். அவர் தந்தை நான் வேலைப் பார்த்த இடத்திற்கே மெனக்கெட்டு வந்து எனக்கு ராமபாணம் என்கிற சந்தன முல்லைச் செடியை சிரத்தையாய் பதியன் போட்டு கொண்டு வந்து கொடுத்ததும், வெயிட் ஏறுவதற்கு எள்ளுப் பொடி செய்து தர சொல்லி அதை டப்பாவில் போட்டுக் கொடுத்ததும், உமா மிஸ்ஸின் அம்மா “உனக்கு என்ன காய் பிடிக்கும்?” என்று கேட்டுக் கேட்டு சமைத்துக் கொடுத்ததும். மிஸ்ஸின் தம்பி தனக்குத் தெரிந்த இடத்தில் நான் அப்போது வாங்கிக் கொண்டிருந்த சம்பளத்தைவிட இரண்டு மடங்கு சம்பளத்தில் வேலைக்குச் சொல்லி வைத்துதும் " கேரியர் பில்ட் பண்ண ஆரம்பி. இவாட்ட உன்னப் பத்தி சொல்லியிருக்கேன். உனக்கு ஃபுல் ஃப்ரீடம் குடுப்பா. நிறைய கத்துக்கலாம்." என்று ஒரு சகோதரனைப் போல் உதவ முன்வந்ததும், அட்வைஸ் செய்ததும். நான் மறுத்த போது “இவளுக்கு கல்யாண ஆசை வந்துடுத்துனு நினைக்கறேண்டீ. எவ்ளோ நல்ல ஆஃபர வேண்டாங்கறா பார்” என்று மிஸ்சிடம் உரிமையோடு என்னப் பற்றிப் புகார் சொன்னதும், டெலிவரிக்காக என் வீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆனவுடன் சிசேரியனுக்கு முந்திய நாள் உமா மிஸ் தன் கணவ்ரோடு என் வீட்டிற்கு வந்து என் சகோதரியின் மூன்று மாதக் குழந்தையைக் கொஞ்சிவிட்டு போனதும், ஆஸ்பத்திரியில் குழந்தை பிறந்த பின் நான் கால் வலி என்று சொல்ல மிஸ்ஸின் அம்மா என்னைக் கால் நீட்ட சொல்லிப் பிடித்துவிட்டதும் நினைத்து பார்க்கும்போது மிஸ்ஸின் நம்பரைத் தொலைத்துவிட்டதால் நான் ஒரு அன்பான அருமையான சகஜமான உறவினர் குடும்பத்தை இழந்து விட்டது போல் உணர்கிறேன். இந்த இன்டர்நெட் காலத்தில் கூட என்னால் இவரை மீண்டும் தொடர்பு கொள்ள முடியாது போனது என் துரதிர்ஷ்ட்டம். IGCAR - கல்பாக்கம் ராஜகோபால் சார் நாங்கள் பி.எஸ்.சி கடைசி வருடம் ப்ரொஜக்ட்டை கல்பாக்கம் இந்திரா காந்தி அணு மின்நிலையத்தில் செய்தோம். தோழிகளான நாங்கள் ஆறு பேர் அங்கு வேலைப் பார்த்த கீத்தாஞ்சலியின் அப்பா ரெக்கம்டேஷனில் அனுமதி பெற்றோம். முதலில் இருவேறு டிபார்ட்மெண்ட்டுகளுக்கு எங்களை அனுப்பினார்கள். ராஜகோபால் சார் எங்கள் ப்ராஜக்ட் கைட். ஐ.ஐ.டி வார்ப்பு. நான், தளிர், கீத்து மூவரும் இவரை முதல் முறை சந்தித்த போது , " இங்க நீங்க பண்ற வேலை உங்களுக்கும் யூஸ்புஃல்லா இருக்கணும் எங்களுக்கும் யூஸ்ஃபுல்லா இருக்கணும். ஆர்டிஃபிஷியல் ந்யூரல் நெட்வரக்கை உபயோகித்து வேவ் ரெகக்னிஷன் பண்ணப் போறோம். நீங்க நெட்வர்க்க இங்கிலீஷ் ஆல்ப்ஹபெட்ஸ் புரிஞ்சுக்கற மாதிரி ட்ரெயின் பண்ண சாஃப்ட்வேர் எழுதணும். அது வர்க் ஆனா அதை வேவ் அனலிசிஸ்க்கு யூஸ் பண்ணுவோம். முடிஞ்ச அளவுக்கு ப்ராக்ரஸ் பண்ணுங்க. அடுத்த க்ரூப் வந்தா அவங்க இல்லாட்டி நாங்க, நீங்க விட்ட இடத்துலேர்ந்து தொடரணும். நம்ம சிஸ்ட்டம் ஸ்பீடுக்கு இத கரெக்டா வர்க் பண்ண வைக்கறது கொஞ்சம் சேலஞ்சிங்காதான் இருக்கும். கைல ஒரு வர்க்கிங் சாஃப்ட்வேர் இல்லாம போக வேண்டி வந்தா உங்களுக்கு காலேஜ் சைட்ல மார்க்ஸுக்கு ப்ராப்ளம் ஆகலாம். ஆனா எங்ககிட்ட இப்போ சாஃட்வேர் சைட்ல இதுதான் இருக்கு. ரிஸ்க்குனு தோணினா ஹார்ட்வேர் சைட் எதாவது ஒரு டிப்பார்ட்மெண்ட்ல ட்ரை பண்ணலாம். யோசிச்சு சொல்லுங்க" என்றார். எனக்கும் ஹார்ட்வேருக்கும் ஏழாம் பொருத்தம் என்பதால் நானும், சாப்ட்வேரில் இருந்த ஆர்வத்தால் கீத்துவும், தளிரும் அவரிடமே சேர்ந்துவிட்டோம். அவர் ஒவ்வொரு செயலிலும் ஐ.ஐ,டியின் ஆழமும் முழுமையும் ரீஃபைன்மெண்ட்டும் இருந்தன. முதல் நாள் எங்கள் ப்ராஜக்ட் பற்றி லைப்ரரியில் போய் விஷயங்கள் தெரிந்து கொண்டு டிஸ்கஷனுக்கு வர சொன்னார். எங்களைப் பேச வைத்து கேள்விகள் கேட்டு எங்கள் புரிதலை ஆங்காங்கே சரி செய்தார். மேலும் ஆழப் படுத்திக்கொள்ளத் தூண்டும் கேள்விகளை கேட்டார். " லெட்ஸ் ஹேவ் ஒன் மோர் டிஸ்கஷன் டுமாரோ" என்றார். இது சில முறைகள் நடந்து எங்களுக்கு அடிப்படை பிடிபட்டதும் , இந்த நெட்வர்க்கை இப்ப ஒரு மூனு நாலு ஆல்ஃபபெட்ஸ்ச எப்டி எழுதினாலும் புரிஞ்சுக்கற மாதிரி பண்ண ட்ரெயின் பண்ணனும்னா உங்க சாஃட்வேர்ல என்னென்ன மாட்யூல்ஸ் எழுத வேண்டியிருக்கும்னு டிஸ்கஸ் பண்ணிட்டு வாங்க" என்றார். அதையும் இதே போல் சில நாட்கள் டிஸ்கஷனுக்கு பிறகு எங்கள் டிசைனை ஃபைனலைஸ் செய்து தினம் அவர் கேபினில் அவருக்கும் இன்னொரு சயிண்டிஸ்ட்டுக்குமாக இருந்த இரண்டு சிஸ்ட்டம்களில் ஒன்றை மாற்றி மாற்றி உபயோகிக்கக் கொடுத்தார். செல் ஃபோன், லேப் டாப், இன்டர்நெட் இதெல்லாம் இல்லாத தொன்னூறுகளின் ஆரம்பத்திலும் மத்தியிலும் பல மாநிலங்களிலிருந்து வந்த மெத்த படித்தவர்கள் வேலை பார்த்த ஐஜிகாரில் சென்னை கோவைத் தவிர திருச்சி மதுரை ஈரோடு போன்ற ஊர்களிலிருந்து வரும் மாணவர்கள் கொஞ்சம் ஊர் நாட்டானைப் போல் தெரிவோம். டாஸ் மட்டுமே தெரிந்து விண்டோஸ் பற்றிக் கேள்விப்பட்டிராத எங்களைக் கம்ப்யூட்டரின் “மௌஸ்” என்கிற அந்த சிறிய வஸ்து பாடாய் படுத்த, நாங்கள் பதிலுக்கு அதைப் படுத்தினோம். ராஜகோபால் சார் கை வைத்தால் திரையில் மௌஸ் பாயிண்ட்டர் சமர்த்தாய் அவர் நினைத்த இடத்திற்கெல்லாம் செல்லும். அவர் அதை அசைப்பதே தெரியாமல் மிக நாசூக்காக அசைப்பார். அதே நாங்கள் கை வைத்தால் பாயிண்ட்டர் நகரவே மாட்டேன் என சண்டித்தனம் செய்யும். நாங்களும் வித விதமாக அதை நகர்த்தி பார்த்தோம். ஒன்றுக்கும் மசியவில்லை. அரை மணி நேரம் போராடி சலித்த பின் கடைசி முயற்சியாய் அதைத் தர தர என்று டேபிளின் நீளத்திற்கு வேகமாக இழுத்து போக, தளிர் " ஏய்! நகருது! நகருது!" என்று குதித்தாள். உற்சாகமடைந்த நான் அதை இன்னும் வேகமாக இழுக்க, மௌஸ் பாயிண்ட்டர் கோபித்து கொண்டு மானிட்டரை விட்டு எங்கோ ஓடிப் போய்விட்டது. ஏ.ஸியை மீறி வியர்த்து போய் நின்றிருந்தோம். டீ சாப்பிட்டு வந்த ராஜகோபால் சார் டென்ஷனாக கம்ப்யூட்டரைச் சுற்றி நின்று பாயிண்ட்டர் யாரால் காணமல் போனது என்று சண்டை போட்டுக் கொண்டிருந்த எங்களைப் பார்த்து " வாட் ஹேப்பண்ட்?" என்றார். " இங்க இருந்த ஏரோ மார்க்க காணோங்க சார்" என்றாள் தளிர். நாங்கள் மௌஸ் பாயிண்ட்டரைத்தான் சொல்கிறோம் என்பது புரிய லேசாகப் புன்னகைத்தவர் , டேபிளின் முனையில் இருந்த மௌஸைப் பார்த்ததும் வாய்விட்டுச் சிரித்தார். மௌஸைக் கையில் எடுத்து அதன் அடி பாகத்தில் இருந்த சிறிய பந்தை விரலால் சுழற்றிக் காட்டி மௌஸ் சூட்சுமத்தைப் பற்றி சொல்லி கொடுத்தார். எதைப் பற்றியேனும் டிஸ்கஸ் பண்ண வேண்டும் என்றால் ஒரு ப்ளாக்ககும் இன்னொரு ப்ளாக்குக்கும் நடுவே இருந்த தோட்டத்தில் வட்டமாக அமர்ந்து கொள்வோம். கொஞ்சம் டிஸ்கஷன் கொஞ்சம் அரட்டை கொஞ்சம் காக்கா, குறுவி, அனில், நத்தை என்று வேடிக்கை பார்ப்பது என்று இருப்போம். நடுவே அங்கே புல் செதுக்கும் பெண்களிடம் " நீங்க எந்த ஊருங்கக்கா?" என்று ஃப்ரெண்ட்ஷிப் வேறு. ஒரு முறை அவர்கள் அன்போடு கொடுத்த முந்திரி பழத்தை சாப்பிடத் தெரியாமல் சாப்பிட்டு அதன் துவர்ப்பு தொண்டையை அடைக்க தண்ணிரைத் தேடி ஒடினோம். பில்டிங்குக்கு உள்ளே தண்ணீர் குடித்துட்டு மீண்டும் தோட்டத்துக்கு போனோம். “இனி பாட்டில்ல தண்ணி கொண்டு வந்துடணும்பா” என்று பேசிக் கொண்டிருந்த போது , சார் அந்த பக்கம் க்ராஸ் செய்ய, எழுந்து விஷ் செய்தோம். எங்களை வினோதமாகப் பார்த்துக் கொண்டே போனார். ஒரு நாள் கம்ப்யூட்டரை எங்களுக்கு விட்டுவிட்டு அவர் ஒரு புத்தகதில் ஆழ்ந்திருந்தார். நான் மெல்ல தளிரிடம் “ஏய்! பாத்ரூம் போகணும்” என்றேன். “எனக்கும் தான். சார் உக்காந்துட்டிருக்காரே? எந்திரிச்சு போனா திட்டுவாரோ? பர்மிஷன் கேட்டுட்டு போலாமா?” எங்களில் கேந்த்ரீய வித்யாலயாவில் படித்ததாலும் கல்பாக்கம் குவார்ட்டர்ஸில் பல தரப்பட்ட மக்களுக்கு நடுவே வசித்ததாலும் ஒரளுவுக்கு நெளிவு சுளிவும் நாசூக்கும் உள்ள கீத்தாஞ்சலி " பசங்களா, பாத்ரூம் போறேன்னு போயா அவர்கிட்ட சொல்ல போறீங்க? தண்ணி குடிக்க போறேன்னு சொல்லுவோம்" அவரிடம் தயங்கித் தயங்கி தண்ணீர் குடிக்க போவதற்கு பர்மிஷன் கேட்டோம். வெளியே வந்து ஏதோ சாதித்த பெருமை. மறுபடி உள்ளே நுழைந்த எங்களை " கம் வித் மீ" என்று அடுத்த ஃப்ளோருக்கு அழைத்து போய் கேஃபிடேரியாவைக் காட்டினார். யாராலும் தொடர்ந்து வேலை செய்ய முடியாது என்றும் தேவைப் படும்போது கேண்டீனில் உட்கார்ந்து டீ சாப்பிட்டுக் கொண்டே டிஸ்கஸ் செய்து கொள்ளலாம் என்றும் நாங்கள் ஒவ்வொன்றிற்கும் அவரிடம் அனுமதி கேட்கத் தேவையில்லை என்றும் சொன்னார். நகர நாகரிகங்கள் பற்றி அதிகம் அறியாது கொஞ்சம் நாட்டுப்புறமாக இருந்த எங்களைக் கேலி செய்யாமல் மென்மையாக, கௌரவமாக நடத்தினார். ப்ரொக்ராம் எழுதும்போது எப்போதும் ரிவர்ஸில் போய் அதை எப்படி இன்னும் ஷார்ட்டாகவும் சிம்பிளாகவும் எழுதுவது என்று நோண்டும் பழக்கம் எனக்கு உண்டு. அதைப் புரிந்து கொண்டு என்னிடம் இது நல்ல பழக்கம்தான் என்றாலும் இந்த ரேஞ்சில் போனால் இரண்டு மாதங்களுக்குள் முடிக்க முடியாது. முதலில் வேலை செய்யும் அளவுக்கு கோட் எழுதுங்கள். வைவா முடிந்த பின் அதை ரீஃபைன் செய்து கொள்ளலாம் என்றார். கல்லூரியில் வைவா டேட் நெருங்கிக் கொண்டிருந்தது. நாங்கள் மெதுவாய் முன்னேறிக் கொண்டிருந்தோம். பல நாட்களாய் முயன்றும் ஒரு குறிப்பிட்ட மாட்யூல் வேலை செய்யாது தண்ணீர் காட்டி வந்தது. அவர் " டூ யூ நீட் மோர் கம்ப்யூட்டர் டைம்?" என்றார். நாங்க " முடிஞ்சா குடுங்க சார்" என்றோம். மறுநாள் தளிருக்கு ஜுரமும் கீத்துவுக்கு உறவினர் வீட்டு விசேஷமும் வர நான் தனியாக போக நேர்ந்தது. “இன்னிக்கு முழுசா நீங்களே கம்ப்யூட்டர யூஸ் பண்ணிக்கோங்க. எனக்கு வேற இடத்துல கொஞ்சம் வேலை இருக்கு” என்று போய்விட்டார். ஆரம்பத்தில் தோழிகளை மிஸ் செய்த நான் கொஞ்ச நேரத்தில் ப்ரொக்ராமில் மூழ்கி போனேன். நடுவே சார் வந்ததும், லைட்டை அணைத்துவிட்டு என் பின்னால் சேரை இழுத்து போட்டுக் கொண்டு அமர்ந்ததும் தெரிந்தாலும் கொஞ்ச நேரத்தில் அவர் இருப்பே எனக்கு மறந்து போனது. எனக்கு நானே பேசுவதும் பேப்பரில் கிறுக்குவதும் தலையை சொறிவதும் பிறகு மாற்றி டைப் செய்வதுமாக இருந்தேன். அவர் என்னைத் தொந்தரவோ விமரிசனமோ செய்யவேயில்லை. லஞ்சுக்கு அவர் போய்விட்டு உள்ளே நுழைந்ததும் " இட்ஸ் வர்க்கிங் சார்!" என்றேன். வந்து மானிட்டரைப் பார்த்தார். ஆங்கில எழுத்து ஏ யை கம்ப்யூட்டர் ரீட் செய்வதை அந்த மாட்யூல் ஒரு சீட் பாயிண்ட் பிக்சல் பிக்சலாக நகர்ந்து அழகாய் ட்ரேஸ் செய்வது போல் காட்டியது. அதைப் பார்த்தும் சந்தோஷமானார். தன் நண்பர்களை எல்லாம் அழைத்து காண்பித்தார். ஒரு வழியாக ப்ராஜக்ட் வர்க் ஆனது. அடுத்து இன்னும் இரண்டு மூன்று எழுத்துகளுக்கு ப்ரொக்ராம் எழுதி நெட்வர்க்கை ட்ரெயின் செய்தால் போதும் என்று உத்வேகத்துடன் செய்ய, எங்கள் அதி புத்திசாலி நெட்வர்க் குழம்பிப் போன எல்.கே.ஜி குழந்தை போல் எந்த எழுத்தைக் கொடுத்தாலும் தனக்குத் தெரிந்த எல்லா எழுத்தக்களையும் இதில் கொஞ்சம் அதில் கொஞ்சம் என்று கலந்தடித்து ஒரு புது எழுத்தை கண்டுபிடித்து வரைந்து காட்டியது. என்னென்னவோ செய்து பார்த்துவிட்டோம். அது மசியவில்லை. சாரும் அவுட்புட்டைப் பார்த்துவிட்டு " இத்தனை இஃபர்ட் போட்டதுக்கு முழுசா வொர்க் ஆகியிருந்தா நல்லா இருந்திருக்கும். இது எக்ஸ்பிரிமெண்ட்டல் ப்ராஜக்ட். நீங்க இந்த அளவுக்கு ரெண்டு மாசத்துல ப்ராக்ரஸ் ஆனது பெரிய விஷயம். நா உங்க ப்ரின்ஸ்பாலுக்கும் ஹெச்.ஓ.டிக்கும் லெட்டர் தரேன். சியர் அப்." என்றார். நாலைந்து முறை மொத்த கோடையும் சரிப்பார்த்துவிட்டோம். எல்லாம் சரியாகத் தானிருந்தது. தளிர், “காலேஜ்ல நம்மள உதைக்கப் போறாங்க. போற போக்கப் பாத்தா ப்ராஜக்ட்ல அரியர் வெச்சு சாதனை பண்ணிடுவோம் போல இருக்கு.” என்று புலம்ப , எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. " கொஞ்சமாவது பயமிருக்கா? சிரிக்கறா பாரு!" என்று அவள் என் மேல் பாய, நான் அவளுக்கு பயந்து ஜன்னலோரம் நின்று வெளியே வேடிக்கை பார்ர்க்க ஆரம்பித்தேன். மனம் ப்ராஜக்ட்டை சுற்ற ஆரம்பித்த்து. A என்ற எழுத்தை எப்படி வரைந்தாலும் A என்று ஒத்துக் கொண்டு சரியாக கன்வர்ஜ் ஆன நெட்வர்க், B,C,D,E எல்லாமும் ட்ரெயின் செய்தால் ஏன் குழப்பிகொள்கிறது? அப்படியென்ன இந்த எழுத்துக்களில் சிக்கல்? அலுப்புடன் நோட்டை மூடி வைத்தேன். ரிப்போர்ட் ப்ரிண்ட் ஆகி அழகாக வந்திருந்தது. அதைப் புரட்டினேன். முதல் பக்கத்தில் ஹாப்ஃபீல்ட் நியூரல் நெட்வர்க் பற்றிய அறிமுகத்தில் “தி நெட்வர்க் கேன் ரிக்னைஸ் பேட்டர்ன்ஸ் தட் ஆர் பெர்ஃபெக்ட்லி ஆர்தோக்னல்” என்ற வரி கண்ணில் பட்டது. நான் மீண்டும் நோட்டில் நாங்கள் வரைந்த A,B,C,D,E யைப் பார்த்தேன். ஆர்த்தாக்னல் என்றால் 90 டிகிரி வித்தியாசத்தில் இருக்கும் கோடுகள் என்று அர்த்தம். அந்த விதிக்குள் இதில் A,C ரெண்டு மட்டும்தான் வரமுடியும் என்பது உரைத்தது. மீண்டும் கேபினுக்குள் ஓடி சிஸ்டமை ஆன் செய்தேன். A,C யை மட்டும் வைத்துக் கொண்டு B,D,E யைத் தூக்கிவிட, அழகாய் அந்த இரண்டு எழுத்துக்களையும் கற்றுக் கொண்டு எவ்வளவு மோசமாக A,C வரைந்து ஃபீட் செய்தாலும் அழகாக புரிந்து கொண்டு சரியாக வரைந்து கட்டியது. எல்லாம் முடிந்து சாரிடம் அவர் மனைவியையும் மகளையும் பார்க்க விருப்பம் தெரிவித்தோம். அந்த ஞாயிறு அவர் வீட்டுக்கு எங்களை அழைத்தார். கலகலப்பான அவர் மனைவியையும் சுட்டியான அவர் மகளையும் பார்த்து நிறைய நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு விடை பெற்றோம். அப்போது மிக புதிதாக இருந்த நியூரல் நெட்வர்க்ஸ் கான்செப்ட்டும், டேட்டா கம்ப்ரஷன் அவ்வளவாக பிரபலமாகாத அந்த சமயத்தில் நிறைய டேட்டா ஹேண்டில் செய்ய வேண்டி இருந்ததால் டேட்டா கம்ப்ரஷனுக்கும் நாங்களே கோட் எழுதிக் கொண்டு சென்றதும் டெமோ அழகாக வர்க் ஆனதும், ராஜகோபால் சார் ட்ரெயினிங்கில் கோர்வையாய் ப்ரெசண்டேஷன் கொடுத்ததும், வைவாவில் எக்ஸ்டர்னல் எக்சாமினர் கேட்ட கேள்விக்கெல்லாம் தயக்கமில்லாது பதில் சொன்னதும், எங்களுக்கு உச்ச பட்ச மார்க்கைப் பெற்று தந்தது. அடிப்படை டெக்னாலஜி எக்ஸ்போஷர்கூட இல்லாத மூன்று மாணவிகளை ஒரு பெரிய நிறுவனத்திலிருந்து வந்த எக்ஸ்டர்னல் எக்ஸாமினர் பாராட்டும் வண்ணம் ப்ராஜக்ட்டும் ப்ரெசண்டேஷனும் செய்ய வைத்த, கர்வமும் அலட்டலும் இல்லாத அந்த சயிண்டிஸ்ட் ராஜகோபால் சாருக்கு நாங்கள் நன்றி சொல்லக் கடமை பட்டிருக்கிறோம். FGS - Trichy பிரசாத் சார். நான் படித்த கம்ப்யூட்டர் இன்ஸ்டிட்யூட்டில் ஃபாக்ஸ்ப்ரோ சொல்லிக் கொடுத்தவர். நெடு நெடு என்று உயரமாக இருப்பார். புத்திசாலி. திறமைசாலி. கோர்ஸ் முடித்து நான் அங்கேயே வேலைக்கு சேர்ந்த போது, ட்ரெயினிங்கில் என்னைப் பாடாய் படுத்தி புடம் போட்டவர். ட்ரெயினிங் போது டாப்பிக் சொல்லி டயம் கொடுத்து ப்ரசண்டேஷன் கொடுக்க சொல்வார். முதல் தலைப்பு கம்ப்யூட்டர் ஃபண்டமெண்டல்ஸ் அண்டு ஆர்.டி.பி.எம்.எஸ். கான்செப்ட்ஸ். கம்ப்யூட்டர் ஃபண்டமெண்டல்ஸ் ஆரம்பித்து ஐந்தே நிமிடத்தில் அடுக்கடுகாகப் பல கேள்விகள் கேட்டு நான் திரு திரு என்று விழிக்க, இன்று போய் நாளை வா என்று அனுப்பி விடுவார். கூடவே என் பாடி லேங்க்வேஜ், போர்டை மறைத்துக் கொண்டு எழுதும் ஸ்டைல், கொஞ்சம் புக்கிஷாகப் பதில் சொல்லும் தன்மை என்று எல்லாவற்றையும் விமர்சிப்பார். மூன்று நாண்கு முறை முயற்சியில் கொஞ்சம் கம்ப்யூட்டர் ஃபண்டமெண்டல்ஸ் சுமாராக எடுக்க வந்ததும் ஆர்.டி.பி.எம்.எஸ் (ரிலேஷனல் டேட்டாபேஸ் மேனேஜ்மெண்ட் சிஸ்டம்ஸ்) கான்செப்ட்ஸ்சில் ப்ரசண்டேஷன் கொடுக்க சொன்னார். விழுந்து விழுந்து ப்ரிப்பேர் செய்தேன். இன்டர்நெட்டுக்கு சில வருடங்கள் முன்னால். கூகிள் சர்ச் சௌகர்யம் இல்லாத காலம். ப்ரோக்ராமிங் கம்ப்யூட்டரில் உட்கார்ந்து பொறுமையாக உழைத்தால் வசப்பட்டுவிடும். ஆனால் தியரியும் கான்சப்ட்சும் அப்படி இல்லை. ஒன்று, அக்கு வேறு ஆனி வேராய்க் கற்றுக் கொடுக்கும் புத்தகம் வேண்டும். இல்லை, கேட்டுத் தெரிந்து கொள்ள யாரேனும் எக்ஸ்பர்ட் அருகிருக்க வேண்டும். ட்வெல்வ் ரூல்ஸ் ஆஃப் காட்ட் பற்றிப் நான் பேச ஆரம்பித்ததும் பிரசாத் சார் என் விளக்கங்கள் எத்தனை அபத்தம் என்பதை தெளிவாக்க, நான் திணறிப் போனேன். " இந்த ஒரு டாப்பிக்கை மட்டும் நீங்க ஒழுங்கா எடுத்துட்டீங்கன்னா நேரா க்ளாஸ் எடுக்க அனுப்பிடுவேன்" என்று சொல்லிவிட்டு போய்விட்டார். என் தன்னம்பிக்கை மொத்தமாய் விடைபெற்று போய்விட்டது. நேரே டைரக்டரைத் தேடிப் போய் , “எனக்கு ஒன்னுமே தெரியலைனு தெரியுது. நான் டீச்சரா இருக்க லாயக்கில்லை. என்னை விட்டுடுங்க. நான் போயிடறேன்.” என்றேன். என் சகோதரியின் தோழரான அவர், ஏதேதோ சமாதானம் சொல்லி அனுப்பிவிட்டார். டைனிங் ரூமில் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தேன். பிரசாத் சார் உள்ளே வந்தார். " வேலைய விட்டுட்டு போறேன்னு சொன்னிங்களாமே? நீங்க இவ்ளோ ஃபீல் பண்ணி அழறதால சொல்றேன். ஒரு காலத்துல நானும் இப்படி இருந்திருக்கேன். என் முதல் இண்டர்வ்யூவுக்குப் போகும்போது ஃபாக்ஸ்ப்ரோல என்ன கேள்வி கேட்டாலும் நம்மளால பதில் சொல்ல முடியும்னு கான்ஃபிடண்டா போனேன். இண்டெர்வ்யூல நார் நாரா கிழிச்சு அனுப்பிட்டாங்க. எனக்கு வெறுத்து போச்சு. நீங்களாலாவது அழறதோட நிக்கறீங்க, நான் என் சர்டிஃபிகேட்ட கிழிக்கற அளவுக்கு போய்ட்டேன். ஆனா கண்ட்ன்யூவஸா வர்க் பண்ணதுல இப்போ நிலமை வேற. அத விட பத்து மடங்கு ட்ஃபான இன்ட்ர்வ்யூவையும் சுலபமா பாஸ் பண்ண என்னால முடியும். உங்களுக்கு நான் சொன்ன ஃபீட்பேக்கெல்லாம் உங்கள இம்ப்ரூவ் பண்ணிக்கறதுக்கு சொன்னது. ட்வெள்வ் ரூல்ஸ் ஆஃப் காட்ட் எல்லாம் எதுக்கு டச் பண்றீங்க? பாக்க சுலபமா இருக்கற மாதிரி இருந்தாலும் அதெல்லாம் கொஞ்சம் டீப்பான விஷயம். சிம்பிளா அடிப்படையான விஷயங்கள் மட்டும் எடுத்துட்டு ப்ரிப்பேர் பண்ணுங்க." என்று என்னைத் தேற்றினார். ஓரளவிற்கு கான்செப்ட்ஸில் தேறி, ப்ரொக்ராமிங் சொல்லிக் கொடுப்பதும் ப்ராக்டிக்கல்ஸ் டெமோ எடுப்பதும் சுலபம் என்று எண்ணிக் கொண்டிருந்த எனக்கு என் ஆரக்கிள் முதல் பேட்ச்சில் அடுத்த உதை விழுந்தது. அதில் ஒரு அதி ஆர்வ மாணவன் இருந்தான். ஒவ்வொரு க்ளாசிலும் ஒரு பெரிய புன்னகையுடன் டேட்டாபேசிலிருந்து ஏதோ ஒரு படு சிக்கலான தகவல் ஒன்றைச் சொல்லி, இதை ஒரே க்வெரியில் எடுக்க முடியுமா என்று கேட்பான். அந்த மாதிரி விஷயம் எனக்கு முற்றிலும் புதிதாக இருந்தது. நான் முயற்சித்துப் பார்த்து சொல்வதாகச் சொன்னேன். இது தொடர்ந்து பல முறை நடக்க, அவன் என் மதிப்பில் உயர்ந்து கொண்டே போனான். நான் அவன் பார்வையில், அவன் மதிப்பில் கொஞ்சம் கொஞ்சமாகக் கீழே இறங்கிக் கொண்டே வந்தேன். நான் மறுபடியும் வேலையை விடுவது பற்றி யோசிக்க ஆரம்பித்தேன். அப்போது ஹெட் ஆஃ தி சென்டராகச் சேர்ந்த லோகநாதன் என்னைத் தனியே அழைத்துப் பேசினார். " உங்க கான்ஃபிடன்ஸ் லெவல் இப்ப எப்படி இருக்கு?" என்றார். நான் என் சோகக் கதையை அவரிடம் சொன்னேன். சில மாணவர்கள் கேட்கும் கேள்விகளைப் பார்த்தால் நமக்கேன் இந்த மாதிரி கேள்விகள் தோன்றாமல் போயிற்று என்று வருத்தமாக இருப்பதைச் சொன்னேன். " நீங்க ஸ்டூடண்ட்டா இருந்தப்ப உங்கள பத்தி இந்த மாதிரி சில டீச்சர்ஸ் பேசி இருக்காங்க, அதுனாலதான் நீங்க இன்னிக்கு இங்க இருக்கீங்க. ஃபர்ஸ்ட் ப்ரெசண்டேஷன் முடிஞ்சதும் எனக்கு ஒன்னுமே தெரியலைன்னு அழுதீங்களாம். அது நல்லது. நமக்கு தெரியலனு அக்னாலெட்ஜ் பண்ணாதான் நம்ம நாலெட்ஜ அப்டேட் பண்ண ஆரம்பிப்போம். கீப் அப்டேட்டிங். இன்னும் கொஞ்ச நாள்ல நீங்க எங்கியோ போய்டுவீங்க. பிரசாத் வில் கைட் யூ" என்றார். நான் ப்ரசாத் சாரை நாடினேன். " ஆரக்கிளுக்கு ஆரக்கிள் குக் புக்னு ஒன்னு இருக்கு அது ஆரக்கிள் கம்பெனி புக் , ஒரிஜினல் சாஃட்வேர் வாங்கும்போது கிடைக்கும் . அது நம்ப லைப்ரரில இருக்காது. சூரி சார் கஸ்டடில இருக்கும். அத வாங்கி படிங்க. கான்செப்ட்ஸ் தெளிவாய்டும். மத்தபடி அந்த பையன் கேட்ட க்வெரீஸ் நீங்க ட்ரை பண்ணிதான் பாக்கணும்." என்றார். ஆரக்கிள் குக் புக் எனக்கு சர்வ ரோக நிவாரணியாக அமைந்தது. முயற்சி செய்ய செய்ய அந்தப் பையன் கேட்ட கேள்விகளுக்கு முதலில் கொஞ்சம் நீட்டி முழக்கி பெரிய க்வெரியாகவும் பின் அதையே அடக்கமாக சிம்பிளாக சிறிய க்வெரியாகவும் செய்வதோடு அது போன்ற சவாலான கேள்விகளை சுயமாக உருவாக்கவும் முடிந்தது. மூன்றே மாதங்களில் என்னிடம் ஆரக்கிள் கற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு மாணவர்கள் வந்து சேர்வதாக சொல்லி லோகநாதன் சார் கங்க்ராஜுலேஷன்ஸ் சொன்னார். பிரசாத் சாரின் ஃபீட் பேக், கைடன்ஸ் இல்லாவிட்டால் இது நடந்திருக்காது. தான் ஒரு நல்ல டீச்சராக இருந்ததோடு நல்ல டீச்சராக விரும்பும் அரைவேக்காடான என்னை சரியாக வழி நடத்தவும் செய்தார். ஆனால் இதனாலெல்லாம் அவர் ரொம்ப சீரியஸான மனிதர் என்று எண்ணிவிட வேண்டாம். பிரசாத் சார் கற்பிப்பதிலும் வல்லவர், அடுத்தவர்களைக் கலாய்ப்பதிலும் வல்லவர். உணவுக்கு முன் டைனிங் ரூமில் தியானம் செய்யும் போது என் முன்னால் " நீங்கதான் விஸ்வாமித்திரர், நான்தான் மேனகை. நா டான்ஸ் ஆடி உங்க தவத்த கலைக்கப் போறேன்." என்று சொல்லி தாம் தோம் என்று குதித்துவிட்டு , பின் " பரவாயில்லை! சிரிச்சீங்களேத் தவிர கண்ணைத் திறக்கல! நாட் பேட்!" என்று சர்டிபிகேட் கொடுப்பார். தன்னுடன் ஷட்டில் விளையாட வராமல் ஹிண்டு க்ராஸ்வேர்டில் மூழ்கி இருக்கும் நண்பர்களைக் கலாய்க்க , பேப்பர் வந்ததும் க்ராஸ்வெர்டில் கட்டத்தில் சம்பந்தமில்லாது கன்னாப்பின்னாவென்று வார்த்தைகளைப் போட்டு ரொப்பிவிட்டு அவர்களை வெறுப்பேற்றுவார். எல்லோருடைய பெயரையும் வார்த்தைகளை மாற்றிப் போட்டு ( உதாரணத்திற்கு, ராஜேஸ்வரி என்பதை ஜாரேஸ்வரியாக மாற்றுவது) பேசும் பழக்கத்தை ஆரம்பித்து வைத்து வெற்றிகரமாகப் பலரையும் அப்படியே பேசவைத்து விட்டார். அந்த பழக்கதோஷத்தில் சங்கீதா என்பவர் “மந்தை சலுகை” என்ற வித்தியாசமான பெயர் கொண்ட மாணவனுக்கு “சந்தை மலுகை” என்ற பெயரில் சர்டிபிகேட் எழுதி விட்டுப் பின் மாற்றி எழுதினாராம். காசிம் சார். பிரசாத் சாருடன் ஒரு சமயம் பேசிக் கொண்டிருந்தபோது , " இன்ட்ரெஸ்ட் இருக்கறவங்களுக்கு எவ்ளோ வேணா என்னால சொல்லித்தர முடியும். இன்ட்ரஸ்ட் இல்லாதவங்களுக்கும் இன்ட்ரஸ்ட் வரமாதிரி எடுக்கணும்னு காசிம் சார் சொல்லுவாரு. நா அவர்கிட்ட தான் படிச்சேன். ஒரு தடவை க்ளாஸ்ல அவர் போர்ட்ல போட்ட ப்ரொக்ராம்ல ஒரு மிஸ்டேக் இருந்துது. க்ளாஸ்ல சொல்லவேண்டாம்னு அவர வெளில மீட் பண்ணி சொன்னேன். ரொம்ப அப்ரிஷியேட் பண்ணாரு. அடுத்த க்ளாஸ்ல என்ன எல்லார் முன்னாடியும் நிக்க வெச்சு ‘நேத்து க்ளாஸ்ல போர்ட்ல இந்த மாதிரி ஒரு மிஸ்டேக் பண்ணிட்டேன். இந்த ஸ்டூண்ட் அத கண்டுபிடிச்சு வெளில வந்து எனக்கு சொன்னாரு’ ன்னு பாராட்டி சொன்னாரு. இத செஞ்சிருக்கத் தேவையில்ல. ஆனா செஞ்சாரு. குணத்துல அவர மாதிரி இன்னொருத்தர நா பாத்ததில்ல." என்றார். எனக்கு அப்படிப்பட்ட ஒரு டீச்சரை நாம் பார்க்கவில்லையே என்றிருந்தது. என் அதிர்ஷ்ட்டம் வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருந்தவர் தன் திருமணத்திற்காக லீவில் ஊருக்கு வந்தார். தினம் கொஞ்ச நேரம் இன்ஸ்டியூட்டுக்கு வருவார். ரொம்ப மிருதுவானவராக இருப்பார். " எனக்கு பிடித்த ரெண்டு விஷயம் சமைக்கறது, டீச் பண்றது. இது ரெண்டுக்கும் எப்பவுமே நல்ல டிமாண்டும் இருக்கும். ரிட்டயர்மெண்ட்டுக்கப்றம் நான் இது ரெண்டுமே பண்ணலாம்னு இருக்கேன்." என்பார். அவர் எங்களுக்காக எடுத்த ஒரு செமினாரில் கற்பிப்பதில் அவருக்கு இருந்த ஆர்வத்தையும் அதில் அவர் கடைப்பிடித்த நேர்மையையும் காணமுடிந்தது. எல்லாருடைய க்ளாசிலும் ஒரு முறை புகுந்து புறப்படுவார். ஒரு நாள் " இன்னிக்கு உங்க க்ளாஸ்ல உக்காரலாம்னு நினைக்கறேன். எத்தனை மணிக்கு உங்க க்ளாஸ்?" என்று கேட்க , நான் அலறினேன். அப்போது இருப்பதிலேயே அனுபவம் கம்மியான டீச்சர் நான்தான். இவர் முன்னால் க்ளாஸ் எடுக்கும் தைரியம் எனக்கு இல்லை. " சார்! நீங்க தயவு செஞ்சு என் க்ளாசுக்கு மட்டும் வந்துடாதீங்க. உங்களுக்கு புண்ணியமா போகும்" என்றேன். " அட! நா குறை கண்டுபிடிக்க வரலம்மா. எனக்குத் தேவை நல்ல எக்ஸாம்பிள்ஸ். நா குடுக்கற எக்ஸாம்பிள்ஸ் விட மத்தவங்களோடது நல்லா இருந்தா அவங்ககிட்டேர்ந்து அதை எடுத்துக்கலாமேன்னுதான் வரேன்" என்றார். " என் க்ளாசுல அப்டியெல்லாம் உங்களுக்கு எதுவும் கிடைக்க வாய்ப்பில்லை சார். நீங்க வரவேண்டாம்" என்று அவர் பதிலுக்குக் காத்திருக்காமல் ஓடிவிட்டேன். க்ளாஸ் ஆரம்பித்து கொஞ்ச நேரத்தில் க்ளாஸ் வாசலில் நோட் பேடும் பேனாவுமாக நின்று உள்ளே வர அனுமதி கேட்டார். நான் இதை எதிர்பார்க்கவில்லை. சுதாரித்துக் கொண்டு சாமர்த்தியமாக “இந்த க்ளாஸ்ல ஃபுல் ஸ்ட்ரெந்த். சேர் எதுவும் காலி இல்லை. சாரி” என்று கதவை சார்த்திவிட்டேன். அவர் என்ன நினைத்துக் கொள்வார் என்பது பற்றியெல்லாம் யோசிக்கவேயில்லை. என் பயம் எனக்கு! மதியம் டைனிங் ரூமில் எல்லோரும் பேசிக் கொண்டிருந்தோம். " இவங்க என்ன க்ளாஸ்ல உடமாட்டேன்னு சொல்லிட்டாங்க. நீங்க சொல்லுங்க, நா இவங்க க்ளாசுக்குப் போலாமா கூடாதா?" என்று டைரக்டரான சூரியைப் பார்த்து கேட்க. " தாராளமா போகலாம். இன்னுரு தடவ விடமாட்டேன்னு சொன்னாங்கன்னா என்கிட்ட சொல்லுங்க." என்றார். இப்படிப் போய் மாட்டிக் கொண்டோமே என்றிருந்தது. பிரசாத் சாரிடம் " காசிம் சார் எப்ப சார் ஊருக்கு போவாரு?" என்று கேட்டேன். அவர் சிரித்தார். " அவரு கடசீ ரோல கடசீ சீட்லதான் உக்கருவாரு. ஒரு கேள்வியும் கேக்க மாட்டாரு. இன் ஃபாக்ட் நம்மள நிமிர்ந்துகூட பாக்க மாட்டாரு. என் க்ளாசுக்கு பல தடவ வந்துருக்காரு. பயப்படாம போங்க" என்றார். அடுத்த க்ளாஸ் போது கதவு தட்டப்பட்டது. வெளியே உஷாராக கையில் ஒரு சேரோடு நின்றிருந்தார். அப்படியும் நான் மறுத்தால் அதட்ட கூடவே லோகநாதன் வேறு நின்றிருந்தார். நான் கடவுள் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு உள்ளே அனுமத்தித்தேன். முடிந்தவரை அவர் திசையில் பார்க்காது க்ளாஸ் நடத்தினேன். யதேச்சையாக அவரைப் பார்த்த போதெல்லாம் குனிந்த தலை நிமிராமல் நோட்டில் ஏதோ எழுதிக் கொண்டிருந்தார். க்ளாஸ் முடிந்ததும் ஃபேகல்டி ரூமில் " ஒரே ஒரு ஃபீட்பேக்தான், இந்த கும்பலுக்கு க்ளாஸ் இன்னும் கொஞ்சம் வேகமா நடத்தலாம். மத்தபடி தி க்ளாஸ் வாஸ் குட் மா." என்றார். “என் க்ளாஸ் சுமார்தான்னு எனக்கு தெரியும் சார். நீங்க சும்மா என்ன என்கரேஜ் பண்ண இப்டி பேசறீங்க” என்றேன். " வென் சம்படி அப்ரிஷியேட்ஸ் யூ, அண்ட் கிவ்ஸ் யூ அ காம்ப்ளிமெண்ட், ஒய் டோண்ட் யூ அக்சப்ட் இட் க்ரேஸ்ஃபுலி?" என்றார். " கரெக்டுதான் சார்! தேங்க்யூ!" என்றேன். இருந்த கொஞ்ச நாட்களில் இதுபோல் பலதும் கற்றுக் கொடுத்தார். ப்ராஜெக்ட் செய்ய விரும்பியபோது என் தோழி வீட்டுக்கு வந்து எங்களுக்கு சாஃப்ட்வேர் ஒன்று இன்ஸ்டால் செய்து கொடுத்தார். அற்புதமான டீச்சர். மிக அற்புதமான மனிதர். St.Philomena’s Girls’ Higher Secondary School சரோஜா மிஸ். அப்போதெல்லாம் தமிழ் டீச்சரை அம்மா என்று அழைக்கும் பழக்கம் சில பள்ளிகளில் உண்டு. இவர் எங்களுக்கு அம்மாவாகவே வாழ்ந்தவர். முதல் வகுப்பிலேயே “ஸ்கூலுக்கு வந்துட்டீங்கனா நாந்தான் உங்களுக்கு அம்மா” என்றார். கடைசிவரை அப்படித்தான் இருந்தார். இவர் ப்ளஸ் ஒன் ப்ளஸ் டூ தமிழ் ஆசிரியர். எனக்கு இவர் அறிமுகம் ஏழாவது படிக்கும்போதே ஏற்பட்டுவிட்டது. அப்போது என் அக்கா ப்ளஸ் டூ. அவள் ஸ்பெஷல் க்ளாஸ் முடித்து வரும்வரை நான் தோழிகளோடு விளையாடிக் கொண்டிருப்பேன். ஒரு நாள் நானும் என் தோழியும் நேரத்தை வீணாக்க வேண்டாமே என்று குச்சி ஐஸ் வாங்க ஓடிவிட்டோம். அன்றைக்கு என்று ஐஸ் வண்டிக்காரரிடம் ஏகப்பட்ட கூட்டம். பஞ்சாமிர்த ஐஸை சந்தோஷமாய் சுவைத்தவாறு நாங்கள் வந்து சேர்வதற்குள் நேரமாகிப் போய்விட்டது. அக்கா கணக்கு டீச்சர் (பெயர் நினைவில்லை) உட்பட தன்னுடைய மற்ற டீச்சர்கள் புடைசூழ நின்றிருந்தாள். நாங்கள் நெருங்கியதும் " உன் அக்கா ப்ளஸ்டூ. நீ இப்டி ஆடி அசஞ்சு வந்தினா எப்போ வீட்டுக்குப் போய், எப்போ படிக்க ஆரம்பிப்பா?" என்று அவள் மேல் உள்ள அக்கறையில் என்னை ரவுண்டு கட்டி திட்ட ஆரம்பித்தார்கள். தலை குனிந்து திட்டு வாங்கிக் கொண்டு இருந்த நான் திடீரென்று நிமிர்ந்து அக்காவை பரிதாபமாகப் பார்த்தவாறு நெளிய ஆரம்பித்தேன். ஆசிரியர்களைப் பார்த்ததும் அனிச்சையாக குச்சி ஐஸ் பிடித்த கையை பின் பக்கமாக மறைத்து கொண்டு நிற்க ஐஸ் உருகி யூனிஃபார்மை நனைக்க ஆரம்பித்துவிட்டிருந்தது. மற்ற டீச்சர்கள் திட்டுவதில் மும்முரமாக இருக்க எல்லரையும்விட ஒரு பிடி உயரமாக , உயர்த்திற்கு ஏற்ற பருமனாக சுருட்டை முடியும் சிரிப்பு மின்னும் கண்களுமாக, எல்லவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தவர் " அந்த ஐஸ் உருகுது பார். எடுத்து சூப்பு பொண்ணே!" என்றார். நான் டக்கென்று எஞ்சிய ஐஸ்ஸை வாய்க்குள் திணித்து கொண்டேன். திட்டிய டீச்சர் அவை சிரித்தவாறு கலைந்துவிட்டது. எனக்கு பஞ்சாமிர்த ஐஸைக் காப்பாற்றிக் கொடுத்தவர் தமிழ் டீச்சர் சரோஜா மிஸ், நகைச்சுவை உணர்வுக்கும் மாணவியரோடு சுலபமாக பழகும் இயல்பிற்கும் பெயர் போனவர் என்று பின்னர் அக்கா மூலம் அறிந்தேன். பின் நான் ப்ளஸ் டூ வந்தபோது இவர் எனக்கு கடவுள் கொடுத்த வரமாகவே தெரிந்தார். ஆசிரியர் என்று உயரத்தில் போய் உட்கார்ந்து கொள்ளமாட்டார். தாயைப் போன்ற அக்கறையாலும் தந்தையைப் போல் ஒரு முதிர்ந்த பக்குவமான, கண்டிப்பான அணுகுமுறையாலும் சகோதரியைப் போல் தோழமையாலும் எங்கள் மனதிற்கு மிக நெருக்கமாகிப் போனார். புற்று நோயுடன் போராடிகொண்டிருந்த தாயையும் கஷ்ட்டமான குடும்ப சூழலையும் கொண்ட என்னை இவர் தூண்போலத் தாங்கினார். பல நாட்கள் வகுப்பில் குனிந்த தலை நிமிராமல் வீட்டு ப்ரச்சனைகளில் சிக்கிப் போய் கவனமில்லாமல் அமர்ந்திருப்பேன். தமிழ் வகுப்பு முடிந்ததும் என்னைக் கையோடு கூட்டிக் கொண்டு போய் விடுவார். லைப்ரரி வாசலில் பேசி பேசி என்னை திசை திருப்பினார். அவர் சொன்ன சில விஷயங்கள் இப்போதும் என் மனதில் இருக்கிறது. " மத்தவங்கதான் அவங்க வாழ்க்கைய கெடுத்துக்கிட்டாங்கன்னா நீயும் அதப் பத்தி யோசிச்சு உன் வாழ்க்கைய கெடுத்துக்கக் கூடாது. மொட்டுலயே கருகிப் போய்டாத. இந்த வயசுல படிப்பு மட்டும்தான் உன் மனசுல இருக்கணும். கேன்சர் வலி முத்திடுச்சின்னா அம்மாவால தாங்க முடியாது. அவங்கள அதிகம் கஷ்ட்டப் படுத்தாம சீக்கிரம் கூப்ட்டுக்கோன்னு கடவுள் கிட்ட வேண்டு. அவ்ளோமட்டும்தான் நம்ம கைல இருக்கு, வீட்ல யாரு சமைக்கறாங்க? நா உனக்கும் சேர்த்து டிபன் கொண்டு வரவா?". அம்மாவின் இறப்பை அதிர்ச்சி இல்லாமல் ஏற்றுக் கொண்டதற்கும் அதை மீறி ப்ளஸ் டூவில் பள்ளியில் இரண்டாம் மாணவியாய் நான் தேரியதற்கும் இவர் முக்கியமான காரணம். தனிப்பட்ட முறையில் கஷ்ட்டப்படும் மாணவியரை அரவணைத்துக் கொள்வது, வகுப்பில் பப்ளிக் எக்ஸாமுக்கு முன் எல்லோரையும் அமர்த்தி கண்ணில் நீர் வழிய ப்ரேயர் செய்வது என்று எங்களைத் தன் அன்பில் கட்டி வைத்திருந்தார். அலாதியான நகைச்சுவை உணர்வு கொண்டவர். மற்ற பேப்பர்கள் திருத்தி கொடுக்கும் நாட்களில் ஏற்படும் பயம் இவர் தமிழ் பேப்பர் திருத்திக் கொடுக்கும்போது இருக்காது. தவறுகளை கூட நகைச்சுவயாய் சுட்டிக் காட்டுவார். அகநானூற்று பாடல் ஒன்றுக்கு பொருள் எழுதும்போது ஒரு மாணவி ஏதோ குழப்பத்தில் சம்பந்தமேயில்லாது கடைசியில் ஒரு வரி “தேர் புறப்பட ஆரம்பித்துவிட்டது” என்று எழுதி வைத்துவிட்டாள். இவர் அதை உரக்க வாசித்துவிட்டு " ஏன்? நீதான் விசில் அடிச்சியா?" என்றார். அந்த மாணவி உட்பட எல்லோரும் சொல்லி சொல்லி சிரித்து கொண்டிருந்தோம். வகுப்பில் சுஜாதா என்று ஒரு மாணவி இருந்தாள். கலையான முகம். எப்போதும் சந்தோஷமாய் சிரித்து கொண்டே இருப்பாள். அழும் மாணவிகளை அரவணைத்துக் கொள்வது போல் சிரித்த முகமாய் இருப்பவரை பாராட்டவும் செய்வார். எதையாவது சொல்லிவிட்டு அவளைப் பார்த்து “என்ன சுஜாதா?” என்பார். அவள் சிரிப்பாள். ஒரு முறை அவளைப் பார்த்து “சுஜாதா! ஐ லைக் யூ சுஜாதா!” என்ற சினிமா பாடல் வரியைப் பாட அவள் புத்தகத்தால் முகத்தை மூடிக் கொண்டு சிரித்தாள். அதற்குப் பின் எப்போது அவர் அவளை பார்த்தாலும் அந்த பெண் முகத்தை மூடிக்கொண்டு சிரிக்க, வகுப்பு கலகலக்கும். ஒரு முறை கணக்கு டீச்சர் “உங்க க்ளாஸுக்கு இனி நான் வரமாட்டேன்” என்று கோபித்து கொண்டு போய்விட மொத்த க்ளாஸும் செய்வதறியாது ஒருவரை ஒருவர் உன்னாலதான் என்று திட்டியவாறு நின்று கொண்டிருந்தோம். அடுத்தாற்போல் உள்ளே நுழைந்த சரோஜா மிஸ் “கணக்கு பிள்ளை ஏம்மா கோச்சிட்டு போகுது?” என்றார். அன்றைக்கு அவர் ஏகப்பட்ட ஜோக்குகள் சொல்லி எங்களை சிரிக்க வைத்தபின், “ரெண்டு பேர் மட்டும் மேத்ஸ் டீச்சர்ட்ட போய் சாரி சொல்லுங்க. மன்னிச்சுருவாங்க” என்று சொல்லிக் கொடுத்தார். அவருடைய அறிவுரைகளுக்கும் கண்டிப்பிற்கும் அடித்த ஜோக்குகளுக்கும் அவர் மாணவிகளின் மேல் கொண்ட அக்கறையே அடிப்படையாய் இருந்தது. இன்று அவர் உயிருடன் இல்லை. இப்படி ஒரு ஆசிரியர் என் வாழ்வின் மிக சிக்கலான நேரத்தில் எனக்கு கிடைத்தது கடவுள் அருள். தில்ஷாத் மிஸ் இவர் எங்கள் பள்ளியின் ஃபிஸிக்ஸ் டீச்சர். பதினொன்றாம் பன்னிரண்டாம் வகுப்புகளில் இவரிடம் படித்தேன் மிகத் தெளிவாய் விளக்குவார். மிக மெல்லிய குரல். ஆனால் வகுப்பில் அத்தனைப் பேர் கவனத்தையும் மிக எளிதாக பிடித்து வைத்திருப்பார். ஒரு மாணவிக்கு புரியாவிட்டாலும் அவள் முகத்தை வைத்தே அதை தெரிந்து கொண்டு மிகப் பொறுமையாக சொல்லிக் கொடுப்பார். ட்யூஷன் கோச்சிங் கிளாஸ் எல்லாம் அப்போது மெதுவாய் முக்கியமாகிக் கொண்டிருந்தன. அதிலும் கோச்சிங் கிளாஸ் என்பது புது ஃபாஷனாகவே மாற ஆரம்பித்துவிட்டிருந்தது. வகுப்பில் முக்கால் வாசி பேர் இஞ்ஜினியரிங், மெடிசன் கனவுகளுடன் எதோ ஒரு கோச்சிங் செண்டரில் சேர்ந்திருந்தார்கள். எப்போது பார்த்தாலும் அங்கே அவர்களுக்கு எதாவது ஒரு பரிட்சை இருக்கும். வகுப்பில் நடக்கும் தேர்வுகளை விட அவர்கள் அந்தத் தேர்வுகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள். அவர்கள் பேசிக்கொள்வதையும் விழுந்து விழுந்து படிப்பதையும் பார்த்து இன்ஜினியரிங் கனவுகள் எதுவும் இல்லாவிட்டாலும் நாம் ரொம்பவும் பின் தங்கிவிடுவோமோ என்கிற பயத்தில் வீட்டுக்கு பக்கத்தில் இருந்த ஒரு கல்லூரி மாணவியிடம் எதற்கும் இருக்கட்டும் என்று ட்யூஷன் சேர்ந்தேன். ஒரு ஞாயிறு அன்று முதல் ட்யூஷன் வகுப்பு நடந்தது. அங்கே மணிக்கணக்காய் அமர்ந்ததில் ஒரு முக்கியமான உண்மை புரிந்தது. பள்ளியில் நன்றாய் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்கள் அமைந்துவிட்டால் ட்யூஷன் என்கிற ஒன்று தேவையே இல்லை. அது வீண் அலைச்சல் நேர விரயம். ஆழமாகவும் அக்கறையோடும் டீச்சர் கற்றுக்கொடுத்த பாடங்களை ஊன்றிப் படித்து மனதில் பதித்துக் கொள்ள நேரம் இல்லாமல் போய்விடும். தெரியாத்தனமாய் வந்து மாட்டிக் கொண்டோம்! எப்படி விலகுவது? என்று யோசித்துக் கொண்டே திங்கள் கிழமை பள்ளியில் நுழைந்தேன். வகுப்பில் தில்ஷாத் மிஸ் கேள்விகள் கேட்க ஆரம்பித்தார். ஒரு குறிப்பிட்ட கேள்விக்கு யாருமே சரியாக பதில் அளிக்கவில்லை. ஏன் படிக்கவில்லை என்று கேட்ட போது சொல்லி வைத்தார் போல் எல்லோரும் ட்யூஷன் போய்விட்டோம் என்றோ ட்யூஷனில் பரிட்சை என்றோ சொல்லி வர மிஸ் முகம் கடுமையாக ஆனது. என் முறை வந்தது. எனக்கும் விடை தெரியவில்லை. நான் ட்யூஷன் போயிருப்பேன் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார் போலும். " நேத்து ஒரு நாள் லீவ் இருந்துதே? படிக்காம என்ன பண்ண? வெட்டி முறிச்சியா?" என்றார். " இல்லை மிஸ் … ட்யூஷன்…" அவ்வளவுதான். ஸ்கேல் எடுத்து அடி விளாசிவிட்டார். " ஏன்? உனக்கு தானா படிக்கற அளவுக்கு மூளை இல்லையா? கிளாஸ்ல சொல்லித்தரது பத்தலையா? " என்னோடு சேர்ந்து பதில் தெரியாமல் நின்று கொண்டிருந்த அத்தனை பேருக்கும் அன்றைக்கு மண்டகப்படி நடந்தது. அன்றோடு ட்யூஷனுக்கு முழுக்கு போட்டவர்களில் நானும் ஒருத்தி. கற்றுக் கொடுப்பதில் அக்கறையும் தன்னம்பிக்கையும் உடையவர்.தன் மாணவிகள் ட்யூஷனுக்கு சென்றால் அதை அவமானமாகவும் கருதும் அளவிற்கு தன் தொழிலை மதித்தவர் அவர். பத்தாவது வரை எங்களுடன் படித்து பின் ப்ளஸ் ஒன்னுக்கு வேறு ஒரு பெரிய பள்ளியில் சேர்ந்துவிட்ட ஒரு தோழி தில்ஷாத் மிஸ் கற்றுத்தரும் நேர்த்தியைப் பற்றி எங்கள் மூலம் கேள்விப்பட்டு, ஒரு சண்டே ஸ்பெஷல் கிளாஸ் நடக்கும்போது ஸ்பெஷல் பர்மிஷன் வாங்கிக் கொண்டு வந்து கலந்து கொண்டாள். “ரொம்ப நல்லா நடத்தறாங்க” என்று அவள் சொன்ன போது “எங்க மிஸ்” என்றோம் பெருமையாக. மெர்லின் ஜூலியட் மிஸ். ப்ளஸ் ஒன் ப்ளஸ் டூவில் எங்கள் கணக்கு டீச்சர். தில்ஷாத் மிஸ் வகுப்பு ஆழமான நதி என்றால் மெர்லின் மிஸ் க்ளாஸ் அருவி , காட்டாற்று வெள்ளம். வரம் வாங்கி வந்த கும்பகர்ணிகளைப் போல் எல்லா கிளாசிலும் தூங்கிவிடும் மாணவிகளால் கூட இவர் வகுப்பில் தூங்க முடியாது. தீப்பிடித்தாற் போல் பர பரவென்று இருக்கும். கடினமான தலைப்புகள் நடத்திக் கொண்டிருக்கும் போது நடுவில் திடீரென்று " உருளைக் கிழங்கு கறி பிடிக்காத ஜீவன் யாரவது இருக்கியா க்ளாசுல?" என்று ஆரம்பிப்பார். சோர்வுற்ற மாணவிகள் சட்டென்று உற்சாகமாகி வேக வைத்த கறி, வதக்கிய கறி,வெங்காயம் போட்டது, மசாலா போட்டது என்று விவரித்து முகமும் மூளையும் ஃப்ரெஷாக ஆனதும் மறுபடி சட்டென்று பாடத்துக்கு தாவுவார். இதைப் போல் அவரின் டூர் கதைகள் மற்றொரு உற்சாக பானம். ஜயண்ட் வீல், ரோலர் கோஸ்டர், வித விதமான ரங்க ராட்டினங்கள், வயிற்றைக் கலங்க வைக்கும் ஜாய் ரைட்கள் அவற்றில் ஏறும், அமரும் லாவகம் என்று அவர் பேச்சைக் கேட்டு எங்களுக்கு உடலும் மனமும் படு சுறுசுறுப்பாய் ஆனதும் அப்படியே அந்த பரபரப்பை வைத்து எங்களை விறுவிறுவென்று கணக்குகள் போட வைத்திருக்கிறார். ஊஞ்சலில் இருவர் நின்று கொண்டு ஆடுவது எப்படி? எப்படி மேலே போனதும் சீசா போல் உயர இருப்பவர் கீழே உட்காருவது போல் குனிந்து உந்த வேண்டும் என்று சொல்லி விவரிப்பார். முக்கொம்பு பிக்னிக்கின் போது எங்களில் ஒருவராக சொன்னது போல் ஆடியும் காண்பித்தார். நீண்ட நேரம் ஒவ்வொருவராக பல மாணவிகளோடு ஜோடி போட்டுக் கொண்டு ஊஞ்சல் ஆடினார். இவருடைய உற்சாகத்துக்கும் சக்திக்கும் அளவே இல்லையோ என்று தோன்றியது. ப்ளஸ் ஒன்னில் கெமிஸ்ட்ரி வண்டி வண்டியாய் படித்து ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டிய ஒரு பாடமாக எங்களை மிரட்டியது. முதல் மாதாந்திர பரிட்சையில் அறுபது மாணவிகளுக்கு பக்கமாய் இருந்த வகுப்பில் இரண்டு பேரைத் தவிர எல்லோரும் ஃபெயில். அதிலும் பலர் ஒரு டிஜிட்டில் மார்க் வாங்கி இருந்தோம். தெரியாமல் இந்த பாடத்தை எடுத்து கொண்டுவிட்டோமோ? பொதுத் தேர்வில் இதில் கோட்டடித்து விடுவோமோ? என்று பேசிக் கொண்டோம். அப்போது ஒரு மாணவி " நான் கண்டிப்பாய் பப்ளிக்கில் ஃபெயில்தான். போகிற போக்க பார்த்தா அக்டோபரில் அட்டெம்ப்டில் கூட நான் பாஸாக மாட்டேன் போல இருக்கே!" என்று புலம்ப, க்ளாஸின் பயந்தாங்கொள்ளி மாணவிகள் நாலைந்து பேர் தீவிரமாய் க்ரூப் மாறுவது பற்றி பேசிக் கொள்ள ஆரம்பித்தோம். இது எப்படியோ மெர்லின் மிஸ் செவிக்கு எட்டிவிட்டது. அடுத்த க்ளாசில் " கெமிஸ்டிரிக்கு பயந்து க்ரூப் மாறணும்னு சொல்லிட்டிருக்கியாமே? (யாரையும் பெயர் குறிப்பிடாமல் மொத்த கிளாசையும் ஒட்டுமொத்தமாய் சேர்த்து ஒருமையில் அழைப்பது அவர் வழக்கம்) எந்த க்ரூப்புக்கு போவ? தர்ட் க்ரூப்புக்கா? அக்கவுண்டன்ஸி கூடப் பிடிபட கொஞ்ச நாளாகும். அதுக்கு பயந்துட்டு வொக்கேஷனல் க்ரூப்புக்கு போறேன்னு சொல்லுவியா? அசட்டுத்தனம் பண்ணாத! எப்பிடி ஞாபகம் வெச்சுக்கறதுனு கெமிஸ்ட்ரி மிஸ்கிட்ட கேட்டு படி. முன்ன வெச்ச கால பின்ன வெக்காத." என்றார். இப்படி க்ளாசில் நடக்கும் ஒவ்வொரு விஷயமும் எங்கள் ஒவ்வொரு அசட்டுத்தனமும் எப்படியோ தெரிந்து கொண்டு எங்களைச் சரியாய் வழி நடத்தி இருக்கிறார். ஒரு நாள் திடீரென்று " செய்யற தப்ப தப்பில்லாம செய். பெத்தவங்க சம்மதமில்லாம இந்த சிறு வயசுல கல்யாணம் செஞ்சே தீறுவேன்ற முடிவுக்கு வந்துட்டவ டீச்சர் சொல்லியா மாறப் போற? ஓடிப் போறத பப்ளிக் எக்ஸாம் முடிச்சு மார்க் ஷீட் டி.சி. ரெண்டும் கைல வாங்கிட்டு அப்றமா செய். பரிட்சைக்கு முன்னாடி ஓடிட்டு சந்தர்ப்பம் , சூழ்நிலைனா ஒரு ப்ளஸ்டூ சர்ட்டிபிகேட் கூட இல்லாம எந்த வேலைக்கு போவ?" கேட்கும்போது பகீர் என்று இருந்தாலும் பின்னர் அந்த அறிவுரை யாருக்காக வழங்கப் பட்டதோ அந்த மாணவியால் அது சரியாக புரிந்துகொள்ளப்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும், கிளாசில் ப்ளஸ் டூ பரிட்சை யாரும் எழுதாமல் விடவில்லை. ப்ளஸ் டூவில் மாதம் ஒருவரை க்ளாஸ் லீடராகவும் , இன்னொரு மாணவியை அசிஸ்ட்டெண்ட்டாகவும் நியமிப்பார்கள். என் முறை வந்தபோது இரண்டு முரட்டு மாணவிகளுக்கு இடையே நடந்த சண்டயில் சம்பந்தமில்லாமல் ஒரு அப்பாவி மாணவி மனம் நோகும்படி ஆயிற்று. அந்த பெண் மறுநாள் தன் தந்தையை அழைத்து வந்துவிட்டாள். அடித்துக் கொண்ட முரட்டு மாணவிகள் நைசாய் ஒதுங்கிவிட லீடர் என்ற முறையில் நான் மாட்டிக் கொண்டு திரு திரு என்று விழித்தேன். எவ்வளவோ சமாதானம் சொல்லியும் அந்த தோழியின் தந்தை " உன்னோட என்னம்மா ப்ரச்சனை? நீ அந்தப் பொண்ணைக் கூட்டிட்டு வா" என்றார். தன்னைத் தானே அந்தப் பள்ளியின் போலீஸாகவும் நீதிபதியாகவும் நியமித்து கொண்டு சுற்றிக் கொண்டிருந்த அந்த பெண் கண்டிப்பாய் பணிவாகப் பேசமாட்டாள், மன்னிப்பும் கேட்கமாட்டாள். பிரச்சனை பெரிதாகிவிடும். நான் மெர்லின் மிஸ்ஸிடம் ஓடினேன். என் க்ளாஸ் மாணவிகள் சிலருக்கு சந்தேகங்களை நீக்கிகொண்டு இருந்தார். பயத்தில் எனக்கு குரல் எழும்பவில்லை. மற்றவர்களைப் பார்த்து, “இந்த பூனக்குட்டி என்னம்மா மிய்யா மிய்யாங்குது?” என்றார். யாரும் பதில் சொல்லவில்லை. பின் என்னிடமே “என்ன நடந்துச்சு. தெளிவா சொல்லு” என்றார். சொன்னேன். “நான் பார்த்துக்கறேன். வா” என்றார். அந்த தந்தையின் தவிப்பையும் அந்த மாணவியின் மன சங்கடத்தையும் முழுவதாய் புரிந்து கொண்டு நடந்த விஷயம் தவறுதான் என்றும் அந்த மாணவியைத் தான் கண்டிப்பதாகவும் அவர் மகளுக்கு இனி எந்த தொந்தரவும் இல்லாமல் தான் பார்த்துக் கொள்வதாகவும் கூறினார். மந்திரம் போட்டது போல் அவர் கோபம் தணிந்து சந்தோஷமாய் விடை பெற்றார். இதை மெர்லின் மிஸ் தன் ஐந்து நிமிட பேச்சிலேயே சாதித்துவிட்டார். அந்த ஆளுமை அவருக்கு உண்டு. எதற்கும் அசராதவர். எங்களின் பல கிறுக்குத்தனங்களை இயல்பாய் சமாளித்தவர். கடினமான கணித வகுப்பை உற்சாகமானதாய் மாற்றிக் கொடுத்தவர். மறக்க முடியாதவர். கெமிஸ்ட்ரி மிஸ். வகுப்பு ஆரம்பித்து பல நாட்கள் வரை இவர் பெயர் எனக்குத் தெரியாது. இவர் ‘கெமிஸ்ட்ரி மிஸ்’. எப்போதும் கெமிஸ்ட்ரி கற்பிப்பார். மிகப் பொறுமையாக. கடல் போல் , சிக்கிய நூல் கண்டு போல், புலிக் குகை போல் எங்களில் பலர் கெமிஸ்ட்ரியை உணர அதைப் புரிந்து கொண்டு ஆரம்பத்தில் இரண்டு பேர் மட்டுமே பாஸ் (யாமினியும் கீத்தாஞ்சலியும் என்று நினைக்கிறேன்) என்கிற நிலையில் இருந்த எங்கள் வகுப்பை ஆல் பாஸுக்கு கொண்டு வந்தார். எதற்கும் திட்டியதில்லை யாரையும் கடிந்து கொண்டதில்லை. மாதாந்திரத் தேர்வில் பலர் ஒற்றை இலக்கத்தில் மதிப்பெண் வாங்கி ஃபெயில் ஆனபோது கூட ஒரு வார்த்தை கடுமையாய்ப் பேசவில்லை. எப்படி ஞாபகம் வைத்துக் கொள்வது என்று அவ்வப்போது குறிப்புகள் கொடுக்க ஆரம்பித்தார். எத்தனையோ முறை இவர் வகுப்பில் சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டு இண்டர்வலில் போய் கேட்டிருக்கிறேன். லாபில் ஆர்வக் கோளாரில் டெஸ்ட் ட்யூபை உடைப்பது கெமிக்கல்ளை சிதறடிப்பது என்று நாங்கள் செய்த தவறுகளை ஒரு நாளும் பெரிது படுத்தியதில்லை. முதலில் எட்டிக்காயாய் கசந்த கெமிஸ்ட்ரி கொஞ்சம் கொஞ்சமாய் பிடிபட ஆரம்பித்தது. எங்கள் வகுப்பில் பலர் பி.எஸ்.ஸி கெமிஸ்ட்ரியில் சேர்ந்தார்கள். மறதிக்குப் பேர் போன நான் என் அம்மா இறந்து பல சவால்களுக்கு நடுவேயும் ப்ளஸ் டூவில் கெமிஸ்ட்ரியில் கௌரவமாய் மார்க் வாங்கி தேர்ந்தேன். இவருக்கு, இவர் பொறுமைக்கு ஈடு கிடையாது. க்ளாசில் அதிகம் பேசாமாட்டார். டீச்சர்ஸ் டே என்று நினைக்கிறேன். நாங்கள் பாட சொல்லிக் கேட்டபோது அலட்டிக் கொள்ளாமல் உடனே பாடினார். “நீயே கதி ஈஸ்வரி” . அவர் குரலும் ஈக்விவலெண்ட் மாஸ் ஆஃப் தி எளிமெண்ட்டும் இன்றும் நினைவில் இருக்கிறது. அனுராதா மிஸ் இவர் எங்கள் பள்ளியின் முதல் கம்ப்யூட்டர் டீச்சர் என்று நினைக்கிறேன். ஹோம்லி லுக்கும் அலட்டல் இல்லாத சகஜ பாவமும் இவரது ப்ளஸ். தொன்னூற்றெட்டு பர்செண்ட் வாங்கிய மாணவியை இரண்டு பர்சண்ட் எப்படி போயிற்று என்று கேட்டு சங்கட படுத்தாமல் கங்க்ராஜுலேஷன் சொன்ன வித்தியாசமான டீச்சர். எண்பதுகளில் எங்களில் பலர் முதல் முதலாய் கம்ப்யூட்டரை பள்ளியில் தான் பார்த்தோம். க்ளாஸ் ரூமின் பின்பகுதியில் கண்ணாடிச் சுவரும் கதவும் வைத்து இரண்டு கம்ப்யூட்டர்களை கொண்டு வந்து வைத்தார்கள். நாங்கள் பட்டிகாட்டான் ஏரோப்ளேனைப் பார்ப்பது போல் திரும்பி திரும்பி பார்த்து கொண்டிருந்தோம். உள்ளே அனுமதித்த போது ஒரே பரவசமாக இருந்தது. மூன்று வயதிலேயே கம்ப்யூட்டர் இயக்க ஆரம்பித்துவிடும் இந்த தலைமுறை போல் இல்லாமல் ஆனா ஆவன்னா கூட தெரியாது நுழைந்த எங்களை ஃப்ளோ சார்ட் , அல்காரிதம், ப்ரோகிராம் என்று படி படியாக பரிச்சயப் படுத்தினார். பின்னாளில் கல்லூரியில் பல சாஃப்ட்வேர் பேப்பர்கள் செல்ஃப் ஸ்டடி (சுயமாய் படித்து கொள்ள வேண்டும் டீச்சரோ வகுப்போ கிடையாது) பேப்பர்களாய் அறிவித்துவிட அனுராதா மிஸ் பள்ளியில் போட்டு கொடுத்த அடித்தளத்தை வைத்து கொண்டு நான் சுலபமாக படித்ததோடு கம்ப்யூட்டர் பரிச்சயமின்றி வந்த சில மாணவிகளுக்குக் கற்று கொடுக்கவும் செய்தேன். பள்ளி இறுதி முடித்து பதினான்கு வருடம் கழித்து ஒரு முறை பஸ்சில் செல்லும்போது என் பக்கத்து சீட்டில் அனுராதா மிஸ் வந்து அமர்ந்தார். என்னை உடனடியாக அடையாளம் கண்டுகொண்டு உற்சாகமாக பேசினார். என்னையும் எங்கள் பேட்ச் மாணவிகளையும் இத்தனை வருடம் கழித்தும் அவர் ஞாபகம் வைத்திருந்து விசாரித்தது எனக்கு பெரிய ஆச்சர்யத்தைக் கொடுத்தது. அவர் போட்ட அடித்தளத்தினால் புதிய சாஃப்ட்வேர் கற்பது இன்றளவும் சுலபாமாக இருக்கிறது என்றும் நான் அப்போதுகூட ஒரு கடைக்கான ப்ராஜக்ட்டிற்கு பொறுப்பேற்று அதை இன்ஸ்ட்டால் செய்யத்தான் போய்க் கொண்டு இருக்கிறேன் என்றும் சொன்னதும் ரொம்பவும் சந்தோஷப்பட்டார். இன்று அவர் உயிருடன் இல்லை. அவர் போட்டுக் கொடுத்த அடித்தளம் இன்றும் ஸ்ட்ராங்காக என்னுள் இருக்கிறது. வின்ஸி மிஸ் எங்கள் இங்கிலீஷ் டீச்சர். சந்தோஷமான பெண்மணி. கடகடவென்று சிரிப்பார். பாடத்தோடு நின்றுவிடாமல் நிறைய கதைகளும் சொல்லுவார். ‘கான் வித் த விண்ட்’ கதையை இவர் கூற கேட்டது இன்றும் நினைவில் இருக்கிறது. ஆங்கிலத்தில் காமிக்ஸ் , குழந்தைகளுக்கான அட்வென்ச்சர் கதைகளில் இருந்து நாவல் உலகிற்கு நகர இவர் ஒரு உந்துதல். சயின்ஸ் க்ரூப் என்பதால் பாடச்சுமையில் திணறிக் கொண்டிருந்த எங்களுக்கு இவர் வகுப்பு பெரிய ஆசுவாசம். ட்ரான்ஸ்லேட் பண்ணும்போது வார்த்தைக்கு வார்த்தை அப்படியே மொழிபெயர்ப்பதால் ஏற்படக்கூடிய அபத்தங்களை விளக்கிய விதம் அலாதியானது. ‘ஷீ இஸ் அ மாடல் இன் லைஃப்’ என்ற வரியை வார்த்தைக்கு வார்த்தை லிட்ரலாக மொழி பெயர்த்தால் ’ அவள் ஒரு மாதிரி’ என்பது போல் அபத்தமாய் ஆகிவிடும். மொத்த பாராவையும் படித்து அதன் முழு அர்த்தத்தையும் உள் வாங்கிக் கொண்டு செய்யுங்கள் என்று சிறிய ஊரில் பிறந்து வளர்ந்ததால் அவ்வளவாக ஆங்கில பரிச்சயம் இல்லாத எங்களுக்கு அழகாக டிப்ஸ் கொடுத்தார். நான், பி. கவிதா, சுபஸ்ரீ என்று மூவர் எங்கள் பெஞ்சில். மூவருமே சிரிப்பை அடக்கத் தெரியாத ரகம். ஏதேனும் காமெடி நடந்தால் நினைத்து நினைத்து சிரிப்போம். ஒருவாறாக சிரித்து ஓய்ந்ததும் “ஏய்! இனி படிக்கலாம்” என்று சீரியஸாக புத்தகத்தை பிரிப்போம். தப்பித் தவறி ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துவிட்டால் மீண்டும் சிரிக்க ஆரம்பித்துவிடுவோம். அப்போது “ஹாரிஸ் இன் தி மேஸ்” என்று ஒரு பாடம். ஒரு மேஸில் அகப்பட்டுக் கொண்டு ஆரம்பித்த இடத்திற்கே கதா பாத்திரங்கள் திரும்ப திரும்ப வந்து திரு திரு என்று விழிப்பதாக கதை. அன்றைக்கு கண்களில் நீர் வழிய சிரித்தோம். இப்படி கழன்ற கேஸாக சிரிக்கும் மாணவிகளுக்கு மற்ற வகுப்புகளில் பனிஷ்மெண்ட் கிடைக்கும். வின்ஸி மிஸ் கொடுத்தது வாய்ப்பு. எங்கள் மூவரையும் ஆல் இண்டியா ரேடியோவில் வேடிக்கை வினாடி வினாவுக்கு அழைத்து சென்று விட்டார். ரெகார்டிங்கிற்கு சென்றோம். நிகழ்ச்சியை வடிவமைத்து நடத்தியவர் தன் திறமையில் அசையாத நம்பிக்கை கொண்டவர். எங்கள் மூவரையும் ஒரு மைக்கைச் சுற்றி நிறுத்திவிட்டார். அவர் ஒரு மைக் முன் நின்று கொண்டு கேள்வி கேட்க ஆரம்பித்தார். முதல் கேள்வியே அதிரடியாய் இருந்தது. " இந்த மிருகத்தின் பெயரில் முதல் இரண்டு எழுத்துகள் துள்ளும். கடைசி இரண்டு எழுத்துகள் மறைக்கும். அது என்ன?" என்று கேட்டார். “குதிரை!” என்றேன் பட்டென்று. இந்த மாதிரி அசட்டு கேள்விகளுக்கு என்னிடம் கரெக்டாய் பதில் வந்துவிடும். " சரியான விடை!" என்றவர் சற்று நேரம் பொறுத்து பார்த்துவிட்டு “ம்.. சிரிங்க” என்றார். கேள்வி பதிலைவிட மொக்கை ஜோக்குக்கு அவர் சிரிக்க சொன்ன விதம் எங்களுக்குள் வெடிச்சிரிப்பை ஏற்படுத்தியது. வட்டமாய் வேறு நின்றிருந்ததால் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து நிகழ்ச்சி முழுவதும் அவர் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே சிரித்து அவரை பெருமைப் படுத்திவிட்டு வெளியே வந்தோம். அவர் மிஸ்ஸிடம் தன் பரம திருப்தியை வெளிபடுத்தியிருப்பார் என்று நினைக்கிறேன். ஒரு ஓரமாய் நின்று கிக்கி கிக்கி என்று சிரித்து கொண்டிருந்த எங்களைப் பார்த்து மிஸ் சந்தோஷமாகச் சிரித்தார். இந்த நிகழ்ச்சியைப் பின்னோக்கி பார்க்கும்போது ஒன்று புரிகிறது. " இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்." என்பது போல் பல மாணவர்களுக்கு நடுவே எந்த விஷயத்திற்கு யார் சரி என்று தேர்ந்தெடுக்கும் திறன் இந்த ஆசிரியர்களுக்கு கைவந்த கலை என்பதுதான் அது. டென்த் - சிக்ஸ்த் ஸ்டாண்டர்ட் ரூபி சிஸ்ட்டர். பத்தாவதில் எங்கள் க்ளாஸ் டீச்சர். ஆங்கிலமும் ஹிஸ்ட்ரி ஜியாக்ரஃபியும் கற்றுக் கொடுத்தார். மிக வித்தியாசமான சிஸ்ட்டர். பத்தாவதில் படிப்பு முக்கியமாகி விட்டாலும், படிக்க வேண்டும் என்றால் அடிப்படையான சில விஷயங்கள் சரியாக இருக்கவேண்டும். இவர் அவற்றை ஒவ்வொரு மாணவிக்கும் தனிப்பட்ட அக்கறையோடு கவனித்து கொண்டார். லஞ்சின் போது சுற்றி வந்து ஒவ்வொருவரின் டிபன் பாக்ஸையும் பார்வையிடுவார். ரொம்ப கம்மியாக சாப்பிடும் மாணவிகளை “ஸ்டைல் சாப்பாடல்லாம் கூடாது. இந்த வயசுல நல்லா சாப்பிடணும். நாளைலேர்ந்து நிறைய கொண்டு வரணும். நான் செக் பண்ணுவேன்” என்பார். நடுவே பசி கேஸ்களான நானும் அகிலாவும் ரெஸ்ட் ரூம் ப்ரேக்கின் போதே பாதி டிபனைக் காலி செய்துவிட்டு லஞ்சின் போது கம்மியாய் வைத்து கொண்டு உட்கார்ந்திருப்பதைப் பார்த்து புன்னகைத்தவாறு நகர்ந்துவிட்டார். எப்போதாவது அபூர்வமாக சிரிக்கும் அவர் சிரிக்கும்போது அத்தனை அழகாக இருப்பார். ஸ்டடி பீரியட் போது ஒவ்வொரு மாணவியாக தன்னிடம் வரவழைத்து பேசுவார். படிப்புக்குத் தடையாய் அந்த மாணவிக்கு இருக்கும் பிரச்சனைகளை இனம் கண்டு தீர்க்க முனைவார். பல மாணவிகளுக்கு அவர்கள் பெற்றோரை வரவழைத்து பேசியிருக்கிறார். எனக்கு கணக்கோடு ரொம்ப பிணக்கு. அறுபது பர்சண்ட் வாங்க மெனக்கெட வேண்டிய நிலையில் இருந்தேன். செய்முறை புரிந்தாலும் கூட்டல் கழித்தல் படு மோசமாக செய்து சொதப்புவேன். இதை ஆங்கில டீச்சராக இருந்து கொண்டு அவர் புரிந்து கொண்டது ஆச்சர்யம். மிகச் சரியாக பொட்டில் அறைவது போல் சொன்னார். " சொதப்பிடுவோம்ங்கிற எண்ணம் ஆழமாக பதிஞ்சிருக்கு. அதனால் தான் இத்தனை மிஸ்டேக்ஸ் வருது. அத மாத்திக்கிட்டா உன்னால செண்ட்டம் கூட வாங்கிட முடியும். கணக்கு போடும்போது தைரியமாப் போடு" என்றார். டைம் டேபிள் போ/ட்டு படிக்கும் வித்தையை கற்றுக் கொடுத்தார். கணக்குக்கு கொஞ்சம் அதிக நேரம் ஒதுக்க சொன்னார். சித்திரமும் கைப் பழக்கம் என்பது போல கூட்டல் கழித்தலும் வசப்பட்டது. சயின்ஸுக்கு புதிதாய் டெம்பரரியாக வந்த டீச்சர் சொல்லி கொடுக்கும் முறை பேப்பர் திருத்தும் முறை எல்லாம் வினோதமாக இருந்தது. சயின்ஸ் புத்தகத்தை கரைத்து குடித்து அப்படியே வார்த்தை வரி பிசகாமல் வாந்தி எடுக்கத் தெரிந்தால் மட்டுமே அவரிடம் மார்க் வாங்க முடியும். ஒரு முறை ஹெச்.எம். உங்கள் வகுப்பில் சயின்ஸில் இத்தனை பேர் இவ்வளவு கம்மியாக மதிப்பெண் வாங்க என்ன காரணம்? சொல்லி கொடுப்பது புரியவில்லையா? புது டீச்சர் எப்படி சொல்லிக் கொடுக்கிறார் என்று கேட்க, மொத்த க்ளாஸும் மௌனம் சாதித்தது. நானும் எஸ்.ஸ்ரீவித்யாவும் உள்ளது உள்ளபடி சொல்லிவிட்டோம். பின் எப்படியோ விவரம் அறிந்து கொண்ட அந்த டீச்சரின் பெரும் கோபத்துக்கு ஆளானோம். பேப்பர் திருத்தும் விதத்தை அந்த டீச்சர் மாற்றிக் கொண்டாலும் எங்கள் இருவரையும் அவருக்கு பிடிக்காமல் போய்விட்டது.அவரிடம் கிட்டதட்ட தினம் நாங்கள் இருவரும் திட்டு வாங்குவோம். மனம் நொந்திருந்த எங்களை ரூபி சிஸ்டர் தேற்றினார். “ஏன் பிள்ளைங்களா, ஹெச்.எம். வந்து கேட்டா வாயை திறந்து எல்லாரும் உண்மைய சொல்ல வேண்டியதுதானே? இந்த ரெண்டும் மட்டும் உங்க எல்லத்துக்கும் சேர்த்து பேசிட்டு இப்பொ டீச்சர்ட்ட குட்டு வாங்குது பார். உங்களுக்கு டீம் ஸ்பிரிட்டே கிடையாதா?” என்றார். இவர் இப்படி பேசியது எங்களுக்கு அந்த சயின்ஸ் டீச்சரின் வசவுகளை பாதிப்பில்லாமல் ஏற்றுக் கொள்ள உதவியது. சிலபஸ் சீக்கிரமே முடிக்கப்பட்டு ரிவிஷன், ரிவிஷன் தேர்வுகள் நோக்கி நகர்ந்த போது ஒரு நாள் " இது ரொம்ப முக்கியமான டைம். இப்போ லீடரா இருக்கறவங்க பொறுப்பானபவங்களா இருக்கணும். தன்னோட ப்ளஸ் மைனஸ் தெரிஞ்சவங்களாவும் அதே சமயம் அடுத்தவங்க மேல அக்கறை உள்ளவங்களாகவும் இருக்கணும். அதனால இந்த மூனு மாசம் இவங்க ரெண்டு பேரும்தான் க்ளாஸ் மானிட்டர்ஸ்" என்று என்னையும் எஸ் ஸ்ரீவித்யாவையும் லீடர்களாக நியமித்துப் பெருமைப் படுத்தினார். ரிவிஷனின் போது அடிக்கடி எங்களில் சிலரை (கண்காணிப்பு இல்லமலும் படிப்போம் என்று அவர் நம்பிய சிலரை) இரண்டிரண்டு பேராய் இரண்டு மூன்று நாட்களுக்கு லீவ் எடுத்து ஸ்கூல் வந்து போகும் நேர விரயம் இல்லாது தொடர்ந்து படித்து ஒவ்வொரு சப்ஜெக்டாக முழுவதுமாய் படித்து முடிக்க வைத்தார். இந்த அணுகுமுறை வித்யாசமானதாகவும் மிக பலனளிப்பதாகவும் இருந்தது. எங்களில் பத்தாவதில் பலர் தங்கள் இமேஜைத் தகர்த்து நிறைய மதிப்பெண் பெற்றதற்கு மிக முக்கியமான காரணம் இவரே. ஆக்னஸ் ஜெம்மா மிஸ் இந்த மிஸ் நிஜமாகவே ஜெம்தான். பத்தாவதில் கணக்கு டீச்சர். அது அவர் வேலையில் சேர்ந்த புதிது. மிக நேர்த்தியாக புடவை உடுத்தி, பள்ளி இறுதி அல்லது கல்லூரிப் பெண் போல தோற்றத்தில் மட்டும் அல்லாது பழகும் விதத்திலும் இருந்தவர். பொதுவாக கணிதம் கற்பிக்கும் ஆசிரியர்களிடம் இருக்கும் கண்டிப்பு அவரிடம் நாங்கள் பார்த்ததில்லை. பத்தாவது வரை கூட்டல் கழித்தல் தவறுகள் அதிகம் நான் செய்ததால் கணக்கில் என் மதிப்பெண்கள் ரொம்பவே சுமாராக இருக்கும். எந்த அளவுக்கு என்றால், ஒவ்வொரு டெஸ்ட்டிலும் என் மதிப்பெண் அதிக பட்சம் ஐம்பத்தைந்துதான். ஆனால் இவர் பரிட்சைக்கு முன் ஒவ்வொரு முறையும் சளைக்காமல் " சில பேர் இருக்கீங்க, எந்த மாதிரி கணக்கு குடுத்தாலும் போட்டுடுவீங்க" என்று என்னையும் என் அருகில் அமர்ந்திருக்கும் எஸ்.கே.அகிலாவையும் பார்த்து சொல்வார். " ஆமாம்! கணக்குல நான் புலி! நீ சிறுத்தை!" என்று நாங்கள் இருவரும் ஜோக் அடித்துக் கொள்வோம். பரிட்சை முடிந்து பேப்பர் கொடுக்கும்போதும் எங்கள் சிக்கனமான மார்க் அவரின் அந்த எண்ணத்தை மாற்றவில்லை. நாங்கள் இருவரும் பேப்பரை வைத்துக் கொண்டு, " பாவம் யா, இந்த மிஸ்! இவங்களுக்காகவாவது நெக்ஸ்ட் டைம் நல்லா எழுதணும்". பத்தாவது பொதுத்தேர்வில் தொன்னூறு மதிபெண்களுக்கு மேல் பெற்ற பின் அவரைப் பார்த்து நன்றி சொல்லவில்லை என்பது எனக்கு உறுத்தலாக இருக்கிறது. ப்ளஸ் டூவில் மார்க் ஷீட் வாங்கி வெளியே வந்தபோது, என்னை அழைத்து பேசினார். " அம்மா இறந்து ரெண்டு மாசத்துல பரிட்சை எழுதி ஸ்கூல் செகண்ட் வந்திருக்க. உனக்கு நல்ல சூழ்நிலை அமஞ்சிருந்தா ஸ்டேட் ரேங்க் கூட வாங்கியிருப்ப. விஷயம் கேள்வி பட்டப்ப எப்பிடி பரிட்சை எழுதப் போறியோன்னு பயந்தேன். சூப்பர்பா!" என்று கை பிடித்து பாராட்டினார். மிக தோழமையான எளிமையான ஒரு கணக்கு டீச்சர். பயமுறுத்தும் பழக்கமே இல்லாதவர். மிக அரிதானவர். லீமா மிஸ். ஒன்பதாம் வகுப்பில் இருந்து எங்களுக்கு கேம்ஸ் டீச்சர் இவர். கேம்ஸில் அதிக ஆர்வமோ திறமையோ இல்லாத காரணத்தால் கேம்ஸ் பீரியட்டிலும் டீச்சரிடமும் சற்று பட்டும் படாமலும் ஒதுங்கியே இருந்த என்னை சகஜமாக ஆக்கியவர். எல்லோரிடமும் பாராட்ட ஏதோ விஷயம் இவருக்கு கிடைத்துவிடும். ஒன்பதாவதில் எங்களில் பலர் அவரவர் உடல் வளர்த்திக்கு ஏற்றார்போல் யூனிஃபார்மை ஸ்கர்ட்டில் இருந்து பாவாடை சட்டை, பாவாடை சட்டையிலிருந்து பாவாடை தாவணி என மாற்றிக் கொண்டபோது அதைக் குறிப்பிட்டு சொல்லி பாராட்டினார். “தானாவே புரிஞ்சிட்டு மாத்திக்கிட்டடீ பிள்ள. இது புத்திசாலி க்ளாஸ். சில க்ளாஸ்ல நாங்க கூப்பிட்டு சொல்லும்படி ஆகுது.” என்றார். ஸ்போர்ட்ஸ் டேக்கு சில வாரங்கள் முன்பிருந்தே மாஸ் ட்ரில் ப்ராக்டீஸ் தினம் காலை நடக்கும். ஸ்டேஜில் கேம்ஸ் டீச்சர்கள் ஒருவர் மாற்றி ஒருவர் ட்ரம்ஸ் வாசிக்க பல மாணவிகள் சேர்ந்து ட்ரில் பயிற்சி செய்வோம். “ப்ரிஸ்க்கா செய்! ஸ்மார்ட்டா செய்! கம்பீரமா செய்!” என்று பொதுவான கேம்ஸ் டீச்சர்களின் உத்தரவுகளுக்கு நடுவே “அழகா செய்! க்ரேஸ்ஃபுல்லா செய்!” என்று லீமா மிஸ்ஸின் குரல் கேட்டது. அதுதான் லீமா மிஸ்ஸின் குணாதிசயம். நன்றாய் விளையாடுகிறாயா என்று பார்ப்பதோடு நின்றுவிட மாட்டார். எதை செய்தாலும் க்ரேஸ்ஃபுல்லாக செய்யவேண்டும் என்பார். சில சமயம் கடைசி பீரியட் போது ஸ்டேஜ் ப்ரொக்ராம் நடக்கும். அது முடியும்போது பள்ளி முடியும் நேரம் ஆகி விட்டிருக்கும். பையை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு ஓடும் அவசரம் மாணவிகளைத் தொற்றிக் கொள்ளும். மாடியில் உள்ள வகுப்பறைகளுக்கு செல்லும் படிகட்டில் ஒரு சமயத்தில் இடித்துக் கொள்ளாமல் மூன்று மாணவிகள் வரைதான் ஏறமுடியும். முண்டியடித்துக் கொண்டு பல மாணவிகள் ஏறும் போது யாரேனும் விழுந்துவிடும் அபாயம் இருந்தது. படிகட்டு நல்ல உயரம். எங்கள் வகுப்பு மாடியில் இருந்ததால் இவர் எங்களை உட்கார்த்திவைத்து கும்பலாய் ஏறுவதில் உள்ள ஆபத்துகளை விவரித்து காத்திருந்து அமைதியாய் ஏறும் பழக்கத்தை ஏற்படுத்தி வைத்தார். பொறுமையாய் வரிசையாக நாங்கள் ஏறுவதைச் சுட்டிக் காட்டி மற்ற வகுப்பு மாணவிகளை கைத்தட்ட வைத்திருக்கிறார். ஒருமுறை ஹோவென்று கத்திக் கொண்டு ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டு முண்டியத்துக் கொண்டு கண்மூடித்தனமாக ஏறியது ஒரு மாணவிகள் கும்பல். லீமா மிஸ் விசலடித்து பார்த்தார். சத்தமாய்ப் பேசி வரிசை படுத்த பார்த்தார். அந்த கும்பல் மசியவில்லை. உள்ளே புகுந்து கையில் அகப்பட்டவரை எல்லாம் முதுகில் போட ஒருவாறாய் கும்பல் கட்டுக்குள் வந்தது. அந்த கும்பலின் போக்கில் என்னை அறியாமல் சிக்கி இழுப்பட்டு முதல் அடி வாங்கிக் கொண்டவள் அடியேன்தான். அதைக் கவனித்து விட்டார். மறுநாள் எங்கள் டீச்சர் ஒருவர் ஆப்செண்ட் ஆகிவிட இவர் உள்ளே நுழைந்தார். நுழைந்தவுடன் என்னை அருகில் அழைத்தார். " உன்னைப் போய் அடிச்சிட்டேண்டீ பிள்ள! சொன்ன பேச்ச கேக்கற க்ளாஸ் இது. இந்த க்ளாஸ் ஸ்டூடன்ஸ் அந்த மாதிரி முட்டாள்தனம் செய்யமாட்டிங்கனு தெரியும். மத்த பசங்கள அடக்க உங்கள்ல சில பேத்தயும் நான் அடிக்க வேண்டியதா போய்டுச்சு" என்று புலம்பி தள்ளிவிட்டார். “பரவாயில்லை மிஸ். எங்களுக்கு வலிக்கவேயில்லை” என்று நாங்கள் அவரை சமாதானம் செய்ய வேண்டியதாயிற்று. ப்ளஸ்டூ ரிவிஷன் எக்ஸாமில் கடைசி நிமிடம்வரை எழுதித் தள்ளிக் கொண்டிருந்த என்னை " என்னம்மா வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கியா?" என்று கிண்டலடித்தார். மாணவிகளைப் பேசியே ஒழுங்கபடுத்த தெரிந்த அற்புதமான டீச்சர். மங்கள மேரி மிஸ். ஒன்பதாம் பத்தாம் வகுப்பில் எங்கள் தமிழ் டீச்சர். இதைவிட அழகாகக் கற்றுக் கொடுக்க முடியாது என்று எண்ணும் அளவிற்கு இருக்கும் இவர் வகுப்புகள். பழைய தமிழ் பாடல்களை நடத்தும்போது அந்த காலத்திற்கும் இடத்துக்குமே அழைத்துப் போய்விடுவார். நெடுநல்வாடை குளிர்கால வர்ணனை என்ற பாடத்தை நடத்தும்போது அந்த பதினோறு மணி திருச்சி வெய்யிலில் வகுப்புக்குள் நாங்கள் குளிர்காலத்தை அனுபவித்தோம். பேப்பர் திருத்துவதிலும் ஒரு அலாதியான முறையைக் கடைபிடித்தார். ஒரு கேள்விக்கான விடையை வகுப்பின் அத்தனை மாணவிகளுக்கும் திருத்தி மதிப்பெண் போட்டுக் கொண்டு வருவார் பின் அடுத்த கேள்வியை எல்லோருக்கும் திருத்துவார். கேட்ட போது “இப்படி செஞ்சாதான் என்னை அறியாம பாரபட்சமா மார்க் விழுந்திறாம இருக்கும்.” என்பார். ஒவ்வொரு பதிலுக்கும் பிரத்தியேகமான கமெண்ட்டுகளும் அளித்து அத்தனை கவனமாக பேப்பர் திருத்துவதை என் அம்மா பார்த்துவிட்டு மங்கள மேரி மிஸ்சின் விசிறியாக ஆனாள். பாடம் நடத்துவதில் மட்டும் அல்லாமல் சோர்வுற்ற மாணவிகளை தேற்றுவதிலும் வல்லவர். ஒரு முறை ஸ்கூல் டே ட்ராமவிற்கு சற்று முன்னால் யாரிடமோ செமத்தியாய் திட்டு வாங்கி அழுது கொண்டிருந்த என்னைப் பலதும் சொல்லி உற்சாகமூட்டப் பார்த்தார். நான் மசியவில்லை. அதற்கு அசராத அந்த மிஸ் சொன்னது இன்றும் என்னால் மறக்க முடியாது " இன்னிக்கு நீ நடிக்கறத பாத்திட்டு உன்ன திட்டின டீச்சர் இனி எல்லா ட்ராமாவுக்கும் உன்னயே ஹீரோயினா போடப் போராங்க பார்! அழாத. நீ எவ்ளோ புத்திசாலி? என்னவிட நீதான் புத்திசாலி!" நான் சிரித்துவிட்டேன். என் அம்மா இதைக் கேட்டிருந்தால் தலையில் அடித்துக் கொண்டிருப்பாள். என் வீட்டில் எனக்கு பட்டப் பெயர் ட்யூப் லைட். அழும் மாணவியை சமாதானப் படுத்த இந்த மிஸ் என்ன வேண்டுமானாலும் சொல்வார். மொழிகள் கற்றுக் கொள்வது எனக்கு பிடிக்கும். ஐந்தாவது வரை சி.பி.எஸ்.சி பள்ளியில் படித்ததில் ஆங்கிலத்தில் எனக்கு கிடைத்த அஸ்திவாரம் தமிழில் கிடைக்கவில்லை. சி.பி.எஸ்.சி பள்ளியின் ஸ்டான்டர்டுக்குத் தமிழில் எப்போதும் நான் தான் ஸ்கூல் ஃபர்ஸ்ட். ஆறாவதில் ஸ்டேட் போர்ட்டுக்கு மாறியபோதுதான் தமிழில் என் லட்சணம் என்னவென்று எனக்கு புரிந்தது. எழுந்து வாசிக்க சொன்ன போது ஐந்தாவது நிமிடம் " இந்த பிள்ள இப்பத்தான் எழுத்து கூட்டுது. உக்காரு…" என்றோ " நம்மூர் மழை மாதிரி விட்டுவிட்டு வாசிக்குது பார்…" என்றோ உட்கார்த்திவிட்டு வேறு எவரையேனும் வாசிக்கச் சொல்லிவிடுவார்கள். வாசிப்பதிலேயே கான்ஃப்டன்ஸ் போய்விட, இலக்கண ஆர்வம் மொழி ஆர்வம் எல்லாம் ஓரமாக ஒதுங்கி விட்டன. இலக்கண குறிப்புகள் புரியவில்லை கேட்கவும் தைர்யமில்லை. கஷ்ட்டப்பட்டு மனப்பாடம் செய்து எழுதும்போது எல்லோரும் புரிந்து செய்பவர் போல் காணப்பட நான் மட்டும் அவஸ்த்தைப் பட்டேன். ஒன்பதாவதில் மங்கள மேரி மிஸ் தமிழ் ஆசிரியையாய் வந்தபோதுதான் இலக்கணக் குறிப்புகள் புரிய ஆரம்பித்தன. இயல்பான இலக்கண ஆர்வம் விளக்கமாக தெளிவாக சொல்லிக் கொடுப்பவர் கிடைத்ததும் ஆழமானது. இலக்கணம் அல்வா சாப்பிடுவது போல் ஆனது. இலக்கணமும் பொதுக் கட்டுரையும் சேர்ந்து இரண்டாம் தாளில் நிறைய மதிப்பெண் அள்ள ஆரம்பித்தேன். முதல் தாள் சுமாராகவே செய்தேன். பேப்பர் கொடுக்கும்போது " பொது கட்டுரை பொறுத்தவரைக்கும் உங்க வகுப்புல இந்த பொண்ணு எந்த தலைப்பு குடுத்தாலும் ரொம்ப நல்லா எழுதிடுவா" என்று எல்லார் முன்னிலையிலும் பாராட்டியவர் என்னை தனியே அழைத்து " இலக்கணத்துல இருக்கற ஆர்வம் உனக்கு செய்யுள் உரைநடைல இல்ல. இரண்டாம் தாள் இல்லன்னா தமிழ்ல உன் மார்க் படு சுமாரா தான் இருக்கும். ஷோபனாவோட ஃபர்ஸ்ட் பேப்பர வாங்கி பாரு. எவ்ளோ அழகா எழுதியிருக்குது அந்த பிள்ள. இத்தனைக்கும் அவ தாய் மொழி கன்னடம். " என்று கடிந்து கொண்டார். திட்டாத டீச்சர் திட்டியதும் நான் ஷோபனாவின் பேப்பரை வாங்கிப் பார்த்தேன். அவள் எங்கள் வகுப்பின் ஃபர்ஸ்ட் ரேங்க் மாணவி. சயின்ஸ் மேத்ஸுக்கு போடும் அளவு உழைப்பை அவள் தமிழுக்கும் போட்டிருந்தாள். தமிழை தாய் மொழியாகக் கொண்ட நாங்கள் எல்லோரும் கோனார் தமிழ் உரையை கட்டிக் கொண்டு அழ கன்னடப் பெண்ணான அவள் தீர்க்கமாக எனக்கு அறிவுரை கூறினாள் " கைட தொடவே தொடத. செய்யுள மனப்பாடப் பகுதி மனப்பாடம் பண்ண வேண்டாத பகுதின்னு பிரிக்காத. முழு செய்யுளும் மனப்பாடம் பண்ணு. எழுதும்போது மேற்கோள் காட்டி எழுது" என்றாள். கஜ சோம்பேறியான நான், “ஐய்யோ! வண்டி வண்டியா இருக்கே? எப்டி மனப்பாடம் பண்ணி எவ்ளோனு ஞாபகம் வெச்சுக்கறது?” என்றேன். " களையாத துன்பமிக் காரிகைக்குக் காட்டி வளையாத செங்கோல் வளைந்தது! இது என்கொல்!…." அவள் சிலப்பதிகார செய்யுள் பகுதியை வாசித்து காண்பித்தாள். " எப்டி சந்தத்தோட அழகா வருது பார். இத ஞாபகம் வெச்சிக்கறது ரொம்ப ஈஸி." என்றாள். “அட! ஆமாம்” என்றேன். அன்று முதல் தமிழ் இலக்கண புத்த்கத்தோடு தமிழ் செய்யுளையும் அட்டை டு அட்டை படிக்கும் மாணவி ஆனேன். முப்பது வருடம் கழித்து இன்றும் சில செய்யுள் அடிகள் அப்படியே நினைவில் இருக்கின்றன. ஆனால் இலக்கணம் சுத்தமாக மறந்து போய்விட்டது. எழுத்தில் ஆர்வமும் வாய்ப்பும் அமையும் சமயம் வல்லினம் மிகும் இடம் மிகா இடம் என்று இண்டர்னெட்டை உருட்டி கொண்டிருக்கும்போது மங்கள மேரி மிஸ்சிடம் மீண்டும் படிக்க மாட்டோமா என்ற ஏக்கம் வருகிறது. " நல்லா இருக்கிறியா பாப்பா?" கிட்டத்தட்ட 33 வருடங்கள் கழித்து அவரைத் தொடர்பு கொண்டபோது அதே குரல், அதே வாஞ்சை. இத்தனை வருடங்கள் கழித்து பேசிய மாணவியை அடையாளம் கண்டு கொண்டு பேசியதும், அதற்கு பின் தானாகவே ஃபோன் செய்து " நல்லா இருக்கியா? எழுதிட்டிருக்கியா?" என்று அவர் அவ்வப்போது விசாரிப்பதும் என் கணவருக்கு பெரிய ஆச்சரியம். எளிமையானவர். அன்பானவர். மிகத் திறமையானவர். ட்டெஸி சிஸ்ட்டர். ஒன்பதவதில் இங்க்லீஷும் ஹிஸ்ட்ரி ஜ்யாக்ரஃபியும் கற்பித்தவர். எங்கள் க்ளாஸ் டீச்சர். இவர் கல்கத்தாவில் இருந்து வந்ததாகக் கூறினார். தமிழ் பேசி நாங்கள் கேட்டதில்லை. தமிழ் இலக்கணத்திற்கு மங்கள மேரி மிஸ் போல் இங்க்லீஷ் க்ராமருக்கு ட்டெஸி சிஸ்ட்டர். இலக்கண சுத்தமாக பேசவும் எழுதவும் கற்றுக் கொடுத்ததோடு ஒரு முக்கியமான குறிப்பையும் கொடுத்தார். இங்க்லீஷைப் பொறுத்தவரை கேட்பதற்கு நன்றாக ஒலிக்கவில்லை என்றால் நீங்கள் எங்கோ க்ராமரில் சொதப்புகிறீர்கள் என்று அர்த்தம் என்றார். அந்த குறிப்பு இன்று வரை எனக்கு உண்மையாகவும் உபயோகமாகவும் இருக்கிறது. ஒரு முறை இங்க்லீஷ் பரிட்சையில் லெட்டர் ரைட்டிங்கில் " வீ ஹாட் அ ஸ்மாஷிங்க் பார்ட்டி" என்பது போல் நான் எழுதிவிட ரௌண்ட்ஸ் வரும்போது அந்த வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா எண்று கேட்டார். சுற்றி வளைத்து அந்த வார்த்தையை எங்கே உபயோகிக்க வேண்டும் எப்படி கையாள வேண்டும் என்றெல்லாம் சொன்னேனே தவிர நச்சென்று இதுதான் அர்த்தம் என்று ஒரு வார்த்தையில் சொல்ல எனக்கு தெரியவில்லை. வீட்டில் டிக்ஷ்னரி இல்லயா? என்று கேட்டுவிட்டு போய்விட்டார். நான் ஒழுங்காக டிக்ஷ்னரி உபயோகிக்கத் தொடங்கியது அப்போதுதான். ஒவ்வொரு மாணவியின் பெற்றோரையும் தனியே வரவழைத்து பேசி அவர்கள் வளர்ச்சியில் ஒரு கண் வைத்து கொள்வார். அவரை சந்தித்துவிட்டு வந்த தந்தை " நைஸ் லேடி. நல்ல இங்க்லிஷ்." என்று சொன்னதை ஷோபனாவிடம் சொல்ல அவள் " ஏய்! எங்கப்பாவும் இதே நாலு வார்த்தய தான் சொன்னாங்க" என்றாள். அதுதான் நிஜம். ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால் ட்டெஸி சிஸ்ட்டர் “நைஸ் லேடி, நல்ல இங்க்லிஷ்” என்று தான் சொல்ல வேண்டும். எந்த விஷயத்திலும் ஆர்வத்தை எற்படுத்தி வளர்க்கத் தெரிந்தவர். ஹிஸ்ட்ரி ஜ்யாக்ரஃபி என்றால் தூங்கும் பீரியட் என்பதை மாற்றி படு உற்சாகமானதாக ஆக்கினார். இந்த ஒரு பாடத்தை முக்கால்வாசி பேர் கடைசி நிமிடத்தில் படிக்கும் பாடமாக ஒதுக்கி வைப்பது வழக்கம். ஒரு நாள் அவர் பேசிய விதத்தில் ஹிஸ்ட்ரி ஜ்யாக்ரஃபி மேல் எங்களுக்கு காதலே வந்துவிட்டது. க்ளாஸ் முடியும்போது ஒரு டீச்சர் போய் அடுத்தவர் வரும் இடைவெளி நேரத்தைக் கூட வீணாக்காது படிக்கலாம் என்று ஐடியா கொடுத்துவிட்டு போக, நாங்கள் ஆர்வமாக ஹிஸ்ட்ரி புக்கைப் பிரித்து வைத்து கொண்டோம். எந்த ராஜா அல்லது ராஜ்ஜியத்தைப் பற்றி கேட்டாலும் சளைக்காமல் " ட்யூரிங்க் தெயர் பீரியட் ஆர்ட் ஆர்கிடெக்சர் அண்டு லிட்ரேச்சர் ஃப்ளரிஷ்ட். தே வேஜ்டு மெனி வார்ஸ் அண்ட் வொன் மெனி பேட்டில்ஸ் …" (அவர்கள் ராஜ்ஜியத்தில் பல கலைகள் வளர்ந்தன , அவர்கள் பல படையெடுப்புகளைச் செய்து பல போர்களில் வென்றார்கள்…) என்பது போல் பொதுப்படையாகவே எழுதி திருத்துபவர் வேறு வழியில்லாமல் ஒரு மார்க் இரண்டு மார்க் என்று போட்டுக் கொண்டே வர கடைசியில் 35% பார்டர் பாஸ் வாங்கிவிடும் எங்கள் க்ளாஸ் அகட விகட சக்ரவ்ர்த்தினி கூட அன்று சின்ஸியராக ஹிஸ்ட்ரி படிக்க , அடுத்த படியாக உள்ளே நுழைந்த அப்போதைய கணக்கு டீச்சர் பின் ட்ராப் சைலன்ஸில் சின்ஸியராகப் படிக்கும் மாணவிகளைப் பார்த்ததும் அகமகிழ்ந்தார். அழகாய் புன்னைத்தவாறு முதல் பென்ச் மாணவியரை நெருங்கிய போது எல்லார் கையிலும் கணக்கு புத்தகத்துக்கு பதிலாக ஹிஸ்ட்ரி புக்கைப் பார்த்தவுடன் “நாய் ஜென்மங்களா… பசங்க மேத்ஸ் படிக்க காத்துட்டிருக்குமேன்னு ஆஸ்பத்திரி போனவ ஓடி ஓடி வந்தா ஹிஸ்ட்ரி புக்க வெச்சிட்டு உக்காந்திருக்கீங்களா?” என்று ஆரம்பித்து திட்டிவிட்டு போய்விட. எங்கள் ஆர்வக் கோளாறால் ஏற்பட்ட தவறை எடுத்து சொல்லி அவரை சமாதானப் படுத்தி கூட்டி வர எங்கள் க்ளாஸ் லீடர் அவர் பின்னால் ஓடினாள். எனக்குத் தெரிந்து இந்த அளவிற்கு ஹிஸ்ட்ரியில் எந்த டீச்சரும் ஆர்வத்தை தூண்டி விட்டதில்லை. ரெஜினா மிஸ். எட்டாவதில் எங்கள் க்ளாஸ் டீச்சர். ஒல்லியாய் உயரமாய் கன்னத்தில் ஒரு பெரிய மச்சத்தோடு இருப்பார். சயின்ஸ் சொல்லிக் கொடுத்தார். வாஞ்சையோடு பழகுவார். திட்டுவது பனிஷ்மண்ட் கொடுப்பது எல்லாமே மிக மென்மையாக செய்வார். ‘கண்ணுகளா! தாயிகளா!’ என்று இவர் மாணவிகளைக் கூப்பிடுவதே அழகாக இருக்கும். மற்ற டீச்சர்களிடம் பெட்டிப் பாம்பாய் அடங்கிப் போகும் மாணவிகள் இவர் வகுப்பில் இல்லாத லூட்டி அடிப்போம். ஒப்புக்கு ஸ்கேல் வைத்திருப்பார். அடிக்க மனது வராது. அதிக பட்சம் வயிற்றைப் பிடித்துக் கிள்ளுவார். நாங்கள் அவர் கிள்ள கை கொண்டுவரும் போதே வயிற்றை எக்கிக் கொண்டுவிடுவோம். பாவம் சட்டையைப் பிடித்துக் கிள்ளிக்கொண்டிருப்பார். நிறைய மார்க் வாங்குபவர் மேல் மட்டுமே கவனம் வைக்கும் சயின்ஸ் டீச்சர்களுக்கு நடுவில் ஒவ்வொரு மாணவியின் அறிவையும் திறமைகளையும் அடையாளம் கண்டு கொண்டு ஊக்குவிப்பார். வீட்டுக்கு செல்லும் வழியில் கைக்கு அகப்படும் செடிகளை எல்லாம் தூக்கிக் கொண்டு போய் " மிஸ் இது எந்த ஃபேமிலி?" என்று பலமுறை அவர் க்ளாஸை டைவர்ட் செய்திருக்கிறோம். பொறுமையாய்ப் பார்த்து பதில் சொல்வார். பாடப் புத்தகத்தில் இல்லாத உதாரணங்களை எழுதினால் மார்க் கொடுக்கும் ஒரே சயின்ஸ் டீச்சர் இவர்தான். தனியே கூப்பிட்டு பாராட்டவும் செய்வார். " அறிவு! அறிவு! நீயெல்லாம் படிச்சா ஃபர்ஸ்ட் ராங்க் வாங்கலாம் தானே தாயி?" என்று அந்த முறை இருபதாவது ரேங்க் வாங்கிய மாணவியை வயிற்றில் கிள்ளுவார். அனேகமாகப் பலருக்கு அம்மா அப்பாவிடம் கூட இவ்வளவு செல்லம் கிடைத்திருக்காது. வேர்ல்டு கப் கிரிக்கெட் போட்டி அந்த வருடம் நடந்தது. செமி ஃபைனல்ஸ் என்று நினைக்கிறேன். மிஸ் நோட் திருத்தும்போது அருகில் நின்றிருந்த ஷாந்தினியும் நானும் கிரிகெட் பற்றி அவரிடம் லொட லொடத்துக் கொண்டிருந்தோம். அன்றைய மேட்ச் முக்கியமான மேட்ச். இந்தியா இன்கிலாந்து போட்டியிட்ட செமி ஃபைனல்ஸ். அநியாயத்துக்கு இப்படி ஸ்கூல் நாளில் மேட்ச் நடக்கிறதே என்று நாங்கள் புலம்பிய புலமபலில் மனம் இளகி எங்கள் இருவருக்கும் ரகசியமாக மத்தியானம் லீவ் போட்டுவிட்டு போய் மேட்ச் பார்க்க அனுமதி கொடுத்தார். மேட்சில் இந்தியா தோற்றுவிடாலும் நைஸாக மதியம் மிஸ்சிடம் மட்டும் டாட்டா காட்டிவிட்டு எவர் கண்ணிலும் படாமல் வீட்டுக்கு ஓடிய த்ரில்லும் குதூகலமும் இன்றும் இனிக்கும் நினைவு. அதை எங்களுக்கு அளித்த தேவதை ரெஜினா மிஸ். ரீட்டா மிஸ். மாரல் சயின்ஸ் என்று ஒரு சப்ஜக்ட். முக்கால் வாசி கதை மூலம் ஏதேனும் மாரல் கற்றுத் தரும் பாடம். ஆறாவதிலிருந்து அந்த சப்ஜக்ட் டீச்சர் ரீட்டா மிஸ். நடிப்பு திறமை எந்த வகுப்பில் ஒளிந்திருந்தாலும் கண்டுபிடித்து மேடையேற்றிவிடுவார். ஏழாவதில் இலக்கிய கூட்டத்தில் எங்கள் வகுப்பின் பங்கிற்கு ஒரு நாடகம் போடுவது என்று முடிவெடுத்திருந்தோம். நானும் ஷோபனாவும் கதை ஸ்க்ரிப்ட் ரெடி செய்தோம், கதை முழுவதும் ஒரு வகுப்பறையிலேயே நடக்கும். டீச்சராக நடிக்க உயரமான மாணவியாக வேண்டும் என்று ஒரு மாணவியைத் தேர்ந்தெடுத்து கெஞ்சி கூத்தாடி நடிக்க வைத்தோம். உயரம், ஸ்ட்ரிக்டான முகபாவம் என்று அவள் கனக் கச்சிதமாகப் பொருந்தினாள். என்ன ஒன்று , வசனம் பாதி நேரம் காதில் விழாது. விழும்போது கொஞ்சம் மாற்றிப் பேசிவிடுவாள். தினமும் ரிஹர்ஸலின்போது சளைக்காமல் பிறந்த நாள் சாக்லேட் கொடுக்கும் மாணவியிடம் உனக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துகள் என்று சொல்வதற்கு பதிலாக " உனக்கு எனக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்." என்றே சொல்லி வந்தாள். ஷோபனா டென்ஷன் ஆனாள். " கரக்டா பேசு யா! இப்டி பேசினா சிரிக்க மாட்டாங்களா?" அவள் என்னை முறைத்தவாறே இந்த முறை " உனக்கும் எனக்கும் பிறந்தநாள் வாழ்த்துகள்" என்று சொல்லிவிட்டு முகத்தை உர் என்று வைத்துக் கொண்டாள். " ஏய்! என்னாப்பா இது?" " விடு ஷோபனா. எப்டியும் அவ வாய்ஸ் வெளில கேக்காது, பக்கத்துல இருக்கறவங்களுக்குக் கேட்டா பெரிய விஷயம். " பெரிய மனுஷி போல் பேசிய எனக்கு அந்த வசனத்தை வெறுமனே " பிறந்த நாள் வாழ்த்துகள்." என்று எளிமைப்படுத்தலாம் என்பது உறைக்கவில்லை. எதனாலோ டீச்சர்களிடம் உதவி கேட்காமல் நாங்களாகவே எல்லாம் செய்து டீச்சர்களிடம் பாராட்டு வாங்கும் ஆசை வேறு எங்களுக்கு வந்து தொலைத்தது. க்ளாஸுக்கு வெளியே ஒரு பெரிய தூங்கு மூஞ்சி மரத்தடிதான் எங்கள் நாடக மேடை. மரத்துக்கு பின்னால் பரபரப்பாக மேக்கப் நடக்க ஆரம்பித்தது. டீச்சராக நடிப்பவளுக்கு புடவை கட்ட வேண்டும். ஒரு தோழி “நான் கட்றேன். எங்கம்மா கட்டும்போது பாத்திருக்கேன்” என்ற போது சந்தோஷமாக எங்கள் ‘டீச்சரை’ ஒப்படைத்தோம். ஸ்டிஃபாய் அட்டென்ஷனில் நின்றவளுக்கு புடவை கட்டும்போது “அவுந்துராதில்ல?” என்று யாரோ கேட்டுவிட, அவள் “நல்லா டைட்டா கட்டிடறேன். டோண்ட் வொரி” என்றாள். ஏனோ எனக்கு வயிற்றைக் கலக்கியது. இந்த நாடகம் ஊற்றிக் கொண்டால் என்னையும் ஷோபனாவையும் எல்லோரும் வறுத்து எடுத்துவிடுவார்கள். ஏழாம் வகுப்பில் நான்கு செக்ஷன் மாணவிகளும் டீச்சர்கள் கை ஸ்கேலுக்கு பயந்து சமர்த்தாக மரத்தடியில் வரிசையாக அமர்ந்திருந்தார்கள். நாடகத்தின் முதல் சீன். டீச்சர் டேபிள் ஒன்றும் மாணவிகள் பென்ச் டெஸ்க் ஒன்றும் போடப்பட்டிருந்தன. மாணவிகளாக நடித்த நான்கு பேரும் ரொம்ப நேரமாகியும் ‘டீச்சர்’ வராததால் ‘திரு திரு’ என்று விழித்துக் கொண்டிருந்தார்கள். எதனாலோ போவதற்கு தயங்கிய எங்கள் ‘டீச்சரை’ “ஏய்! போப்பா” என்றோம். அவள் “இருப்பா. நடக்க முடியல” என்றாள். புடவை அவ்வளவு டைட்டாக சுற்றப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட அழும் நிலையில் இருந்த எங்களைப் பார்த்து மனம் கேளாமல் பிரம்மப் பிரயத்தனத்துடன் அடி எடுக்க, தடுக்கி விழப்போனாள். மரத்தைப் பிடித்துக் கொண்டு சமாளித்தவள், நடந்து போகும் முயற்சியைக் கைவிட்டு அப்படியே ஆக்ஷன் ஹீரோயின் போல் மரத்துக்குப் பின்னால் இருந்து நாடகக் க்ளாஸ் ரூமிற்குள் குபீரென்று பாய்ந்தாள். இப்படி ஒரு அதிரடி க்ராண்ட் எண்ட்ரியை எதிர் பார்க்காததால் ஒரு நிமிடம் திகைத்த மாணவியர் கூட்டம் மறு நிமிடம் அவள் கடமை உணர்வுடன் தத்திக் கொண்டும் தாவிக் கொண்டும் டீச்சர் டேபிளை அடைய கட்டுக்கடங்காமல் சிரிக்க தொடங்கியது, அவமானத்திலும் கோபத்திலும் அவள் குரல் ஆட்டோமேட்டிக்காய் உயர்ந்தது. “சைலன்ஸ்!” என்று கம்பீரமாக முழங்கினாள். “சபாஷ்!” நானும் ஷோபனாவும் கை குலுக்கிக் கொண்டோம். எங்கள் சந்தோஷமும் கூட்டத்தின் அமைதியும் அதிக நேரம் நீடிக்கவில்லை. பிறந்த நாள் சாக்லேட் கொடுத்த மாணவியிடம், தத்தித் தாவியதில் அதிகரித்துவிட்ட லங்க் கெபாஸிட்டியினால் பெரிய குரலில், " எனக்கு உனது பிறந்த நாள் வாழ்த்துகள்" என்று கூற கூட்டம் மீண்டும் குபீரென சிரித்தது. பின் டீச்சர் தத்தி தாவி க்ளாசைவிட்டு போகும் சீன், வரும் சீன் என்று வரிசையாக வர மாணவிகள் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தார்கள் இப்படியாக எங்கள் படு சீரியஸான நாடகம் ஆரம்பம் முதல் கடைசி வரை படு காமெடியாய் நடந்தேறியது. செவன்த் ஏ மானத்தை ஒட்டுமொத்தமாய் கப்பலேற்றிவிட்ட எங்களை எல்லோரும் கழுவி கழுவி ஊற்ற, ரீட்டா மிஸ் தனியே கூப்பிட்டு திட்டினாலும் மற்றவர்களிடம், “திறமைசாலி பசங்க தாம்பா. என்னவோ செய்யத் தெரியாம செஞ்சிருச்சுங்க.” என்று விட்டுக் கொடுக்காமல் பேசினார். எட்டாவதில் டீச்சர்ஸ் டே அன்று பள்ளி மேடையில் நாடகம் போடும் வாய்ப்பைக் கெஞ்சி கேட்டு வாங்கிய எங்கள் முயற்சியைப் பலர் கேலி செய்தார்கள். ரீட்டா மிஸ் சிரித்தவாறே, " போன வருஷம் கிண்டல் அடிச்சவங்க பாராட்டற அளவுக்கு செய்யணும் பிள்ளைங்களா. எதாவது ஹெல்ப் வேணும்னா கேளுங்க" என்றார். எங்கள் மீது நம்பிக்கை மாறாமல் அவர் சொன்னது எங்களுக்கு டானிக் போல் இருந்தது. உத்வேகமாகக் களத்தில் குதித்தோம். இந்த முறை நகைச்சுவை நாடகமாகவே போட்டுவிடுவது என்று தீர்மானித்தோம். ’ முட்டாள் முனியன் ’ என்பது தலைப்பு. இன்றைக்கு ஆடிப்பெருக்கு என்று சொன்னால் ஆடிக் கொண்டே தரையைக் கூட்டும் முட்டாள் வேலைக்காரன் கதைதான். பிற்காலத்து ‘சுப்பாண்டியின் சாகஸம்’ காமிக் கேரக்ட்டரின் முன்னோடியாக இந்த மாதிரி கதைகள் வலம் வந்தன. பெரும்பாலும் அறுவை ஜோக்குகளாக இருக்கும் விஷயங்கள்தான் என்றாலும் பங்கேற்ற‍ மாணவிக‍ளின் உற்சாகமான‍ நடிப்பாலும் சின்ன‍ சின்ன‍ ஐடியாக்களாலும் எங்கள் நாடகம் களை கட்டியது. பண்ணையார் போண்டாவும டீயும் வாங்கி வரச் சொல்லி பணம் கொடுக்க , மறந்து போய்விடுமோ என்று வழியெல்லாம் போண்டா டீ! போண்டா டீ! என்று ஜெபித்துக் கொண்டே வந்து நடுவில் அது எப்படியோ பொண்டாட்டீயாக மாறிவிடும், வேலைகார முனியனாக நடித்த ஷோப‍னா டீக்கடைக்காரனிடம் படு அலட்சியமாக ரூபாய் நோட்டை நீட்டி “எங்க அய்யா பொண்டாட்டி வாங்கிட்டு வர சொன்னாரு. இந்தாய்யா ரூபா! சீக்கிரம் கொடு” என அரங்கு அதிர்ந்தது. டீக்கடைக்காரனும் அவன் மனைவியும் " கீசி புடுவேன் கீசி! நெஞ்சுல இருக்கற மஞ்சா சோத்த எடுத்துருவேன்" என்று சென்னை செந்தமிழில் பாய்ந்து பாய்ந்து சண்டை போட, கூட்டம் வெகுவாக ரசித்து கைத் தட்டியது. அந்த நாடகத்துக்குப் பிறகு எல்லா பள்ளி நாடகங்களிலும் எங்கள் வகுப்பில் யாராவது ஒருவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. எங்கள் நாடகம் ஊற்றிக் கொண்டபோதும் எங்கள் திறமையில் நம்பிக்கை வெளிப்படுத்தி தட்டிக் கொடுத்த ரீட்டா மிஸ்ஸை எங்களால் மறக்க முடியாது. டீக்கடைக்காரன் பெண்டாட்டியாக சண்டை போடும் வேடத்தில் நடித்த பின் எனக்கு வரிசையாக துடுக்குத் தனமான ஆண் வேடங்களே அளிக்கப்பட்டன. என் தோழிகள் அழகாய் அம்மாவின் பட்டு புடவையை உடுத்தி ஒற்றை ஜடை, பூ, மேக்கப் என்று லட்சணமாக மேடை ஏற, நான் ஒவ்வொரு நாடகத்திலும் பெண் போலீஸ் போன்ற ஹேர் ஸ்டைலும், யாரோ ஒரு மாணவியின் தம்பியின் பேண்ட் சட்டையையும். ஐ ப்ரோ பென்சிலில் வரைந்த மீசையுமாக மேடை ஏறுவேன். ஒரு முறை இன்ஸ்பெக்ஷன்போது ஷேக்ஸ்பியர் எழுதிய ‘மெர்சண்ட் ஆஃப் வெனிஸ்’ புத்தகத்தின் ஒரு காட்சி வகுப்பில் நாடகமாக போட எங்கள் இங்க்லீஷ் டீச்சர் முடிவு செய்தார். அதில் எனக்கு ஹீரோயின் ரோல் கொடுத்தார். என் துரதிர்ஷ்ட்டம், அந்த காட்சி, ஹீரோயின் போர்ஷியா ஆண் வேடம் பூண்டு கோர்ட்டில் வாதாடும் சீன். நான் நொந்து போனேன். அடுத்த ஸ்கூல் டே நாடகத்தில் வேடங்கள் பிரிக்கும்போது எந்த ஆண் கேரக்டருக்கு என்னைப் போடுவது என்று டீச்சர்கள் விவாதிக்க உள்ளே நுழைந்த ரீட்டா மிஸ் , " மிஸ், இவ கீச்சு தொண்டைக்காரி! இவளுக்கு இனி ஆம்பள வேஷம் குடுக்காதீங்க. பேண்ட் சட்டை போட்டுக்கிட்டு மேடைல ஏறி கிச்சு கீச்சுனு பேசறா" என்று கூறி என் வயிற்றில் பாலை வார்த்தார். ரீட்டா மிஸ் புண்ணியத்தில் நானும் ஆசை தீரப் புடவை கட்டி மேடை ஏறினேன். ஷகுந்தலா மிஸ். ஆறாவதில் தமிழும். ஏழாவதில் ஆங்கிலம், ஹிஸ்ட்ரி ஜியாக்ரஃபியும் கற்பித்தவர். எனக்கு தெரிந்து தமிழ் ஆங்கிலம் இரண்டுமே கற்று கொடுக்கக்கூடிய திறம் படைத்த ஒரே ஆசிரியர் அவர். கொஞ்சம் கண்டிப்பானவர். ஆனால் மாணவிகளிடம் நிறைய அக்கறை கொண்டவர். நோஞ்சான் மாணவிகளான என்னையும் இன்னும் ஓரிருவரையும் எந்த ஆசிரியரும் வெய்யிலில் நிற்க வைத்து பேசுவதைப் பார்த்துவிட்டால் நேராக அவர்களை அழைத்து, " அது உடம்பு சுகமில்லாத பிள்ளை. அத வெய்யில்ல அலைய விடாதீங்க!" என்று கண்டிப்பாகச் சொல்லிவிடுவார். அவர் வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர் என்பதால் எந்த டீச்சரும் அவர் வார்த்தைக்கு மறுவார்த்தை பேசமாட்டார்கள். அதே போல் நியாயமாக இருக்கவேண்டும் என்பதிலும் மிக உறுதியாக இருப்பார். அப்போதெல்லாம் வகுப்பில் மாணவிகளை ஐந்தைந்து பேராக ஸ்குவாட் பிரித்து ஒப்பிக்க வைப்பது, மேப் ட்ராயிங் முடிக்க வைப்பது, ஆல்பம் தயாரிப்பது போன்ற வேலைகளை அந்தந்த ஸ்குவாட்டின் லீடர் மேற்பார்வை பார்வையில் செய்ய வைக்கும் வழக்கம் இருந்தது. நான் ஆல்பம் தயாரிப்பதை ஆர்வத்தோடு செய்வேன். இன்ஸ்பெக்ஷன் நடந்தபோது இன்ஸ்பெக்டர் " க்ரீன் ஸ்குவாட் செஞ்ச ஆல்பம் ரொம்ப அழகாக இருக்கு. லீடர் யார்?" என்று கேட்டு என் ஸ்குவாட் லீடரைப் பாராட்ட, இவர் என்னை எழுப்பிவிட்டு, ஆல்பம் செஞ்சது இந்த பிள்ளைதான் என்று அவர்களிடம் என்னை அறிமுக படுத்தினார். இது போல் பல நிகழ்ச்சிகள். ஒரு நாள் எதற்காகவோ பள்ளியில் கலர் ட்ரெஸ்ஸில் வரச் சொல்லியிருந்தார்கள். ஊரிலிருந்து வந்திருந்த என் உறவுக்கார பெண் கைவண்ணத்தில் நான் நதியா கொண்டை, நதியா ஃப்ராக் ஒரு ஒற்றை ரோஜா என்று அலங்கரித்து கொண்டு பெருமையாகப் போனேன். பக்கத்து சீட்டில் இருந்த ஒரு மாணவி, " அய்யோ! கொண்டையெல்லாம் டீச்சர்ஸ்தான் போடணும். நாம போட்டா திட்டுவாங்க" என்றாள். எனக்குக் கிலி பிடித்து கொண்டது. ஷகுந்தலா மிஸ் கூப்பிட்டு அனுப்பினார். அந்தத் தோழி " போச்சு மாட்டின!" என்றாள். நான் அவசர அவசரமாக அவள் உதவியுடன் கொண்டையை அவிழ்த்து போனி டெயில் ஆக்கிக்கொண்டு ஓடினேன். அவர் அறைக்குள் நுழைந்தேன். நான் ஐஸ் சாப்பிட்டு திட்டுவாங்கிய அதே கணக்கு (அக்காவின்) டீச்சர் அவரோடு இருந்தார். ‘இவர் வேறு கூட இருக்கிறாரா? செத்தேன்!’ என்று எண்ணினேன். ஆனால் ஷகுந்தலா மிஸ் " அடடா! கொண்டைய ஏன்டீ அவுத்த? நல்லா இருந்துச்சே! மிஸ்கிட்ட காட்டலாம்னு நெனச்சேன். மிஸ்! இது என் பில்ளை. ரொம்ப நல்லா படிப்பா. ரொம்ப நல்ல பிள்ள. " என்று ஒரு கையால் என்னை அணைத்துக் கொண்டு பேசினார். அந்த டீச்சர் " இவள தெரியும் மிஸ். இவ அக்கா என் ஸ்டூண்ட்தான்." என்றார். அதற்கு பின் அடிக்கடி சகுந்தலா மிஸ் படிப்பில் என் புராக்ரசைப் பற்றி அவரிடம் கூறியிருப்பார் போலும், அக்காவிற்காக என்னைத் திட்டிய அந்த கணக்கு டீச்சர் அதன்பின் என்னை வைத்து அக்காவைத் திட்ட ஆரம்பித்துவிட்டார். " உன் தங்கை க்ளாஸ்ல எவ்ளோ ஸ்டூடியசா இருக்கா பாத்தியா?" என்று அவளைத் திட்ட, அவள் “எல்லாம் நேரம்டீ!” என்றாள். என்னை கண்டித்தும், அக்கறையாக கவனித்துக் கொண்டும், ஊக்குவித்தும் வந்தவர் நான் எட்டாவது படிக்கும்போது கேன்சரில் காலமானார். அவர் நினைவின்றி படுத்திருந்தபோது நாங்கள் பார்க்க சென்றிருந்தோம். என் கண்களுக்கு உடல் இளைத்திருந்தாலும் அதே கம்பீரமும் தூய்மையுமாக சாதாரணமாக உறங்குவது போல் தான் தெரிந்தார். இப்போதும் அவர் முகமும் சிரிப்பும் அவர் பேசும்விதமும் எனக்கு நினைவில் இருக்கின்றன. க்ரிஸ்டெல்லா மிஸ் ஃபிலோமினாஸில் ஆறாம் வகுப்பு க்ளாஸ் டீச்சர். ஆங்கிலமும் கணக்கும் கற்றுக்கொடுத்தவர், க்ளாஸ் டீச்சர். சீ. பி. எஸ். சி பள்ளியில் இருந்து ஸ்டேட் போர்ட் மாறியிருந்த என்னிடம் பலர் ஸ்டேட் போர்ட்டில் ஸ்டான்ட்ர்டு கம்மியாக இருக்கும் என்று சொல்லி பயமுறுத்தி வந்தார்கள். இந்த மிஸ்ஸின் ஆங்கில வகுப்பும் கணக்கு வகுப்பும் சீ. பி. எஸ். சி பள்ளியின் வகுப்பைவிட அழகாகவும் தெளிவாகவும் இருந்தன. ஆறாவதில் பொருளாதார சூழ்நிலையால் பெரிய பணக்கார பள்ளிகளிருந்து இங்கே மாறியவர்கள், ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் மீடியத்தில் படித்து ஆறாவ்தில் ஆங்கில மீடியத்தில் சேர்ந்தவர்கள், சென்ற வருடம் ஃபெயிலாகி மீண்டும் ஆறாவது படிப்பவர்கள் என்று கலவையாகக் கிட்டத்தட்ட அறுபது மாணவிகள் இருந்தனர். இந்த மிஸ் அந்த வகுப்பை அழகாக பேலன்ஸ் செய்து கொண்டு சென்றார். சிறிய உருவம், கறுப்பான துறு துறு என்ற முகம். சன்னமான குரல். அழுத்தம் திருத்தமான தெளிவான பேச்சு. பொதுவாய் எல்லோர் மேலும் ஒரு வாஞ்சை உண்டு. ரொம்ப பாஸிட்டவாக பேசுவார். மற்றவர்கள் “அடங்காதது. விஷமம், ஓவர் குறும்பு” என்று வர்ணிக்கும் இடத்தில் இவர் அவர்களை “சுட்டி” என்பார். கணக்கு பீரியட்டில் உளறினால் “அட மன்னாரு!” என்று அழகாக அழைத்து மீண்டும் சொல்லித்தருவார். மாலையில் நான், பதினொன்றாவது படித்துக் கொண்டிருந்த என் அக்கா, அவள் க்ளாஸ்மேட் சுதா (பெயர் மாற்றி இருக்கிறேன்) என்று மூவராக பள்ளியிலிருந்து வெளியே வந்தோம். சுதா என்னிடம் பேச்சு கொடுத்தாள். எந்த பாடத்திற்கு எந்த டீச்சர் என்று கேட்டுக் கொண்டே வந்தாள். ஒரு குறிப்பிட்ட டீச்சரின் பெயரைச் சொன்னதும் சட்டென்று " ஓ அதுவா? அது எப்பப்பாரு எல்லாத்தையும் திட்டிக்கிட்டே இருக்குமே?" என்று சொன்னாள். வந்தது வினை. சுதாவுக்கல்ல, எனக்கு. என் பின்னாடியே வந்த சவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மாணவி நேரே அந்த டீச்சரிடம் சென்று சிக்ஸ்த் ஏ மாணவியான நான் அவரை அது இது என்று மரியாதை இல்லாமல் பேசியதாகப் புகார் சொல்லிவிட்டாள். என் பெயரில் இன்னொரு மாணவியும் இருந்ததால் மகராஜி நேரே க்ளாஸுக்கு வந்து சந்தனக் கலர் பொட்டு வைத்திருக்கும் மாணவி என்று என்னைக் குறிப்பாக அடையாளம் காட்டிவிட்டு “தேங்க் யூ மிஸ்” என்று டீச்சரை வணங்கிவிட்டுப் போனாள். போன ஜென்மத்தில் நான் இந்த சவிதாவுக்குக் கண்டிப்பாய் எதோ தீங்கு செய்திருக்கிறேன். இல்லாவிட்டால் யாரோ செய்த தவறை நான் செய்ததாக மெனக்கெட்டு க்ளாஸ் தேடி வந்து ஏன் சொல்லவேண்டும்? மிஸ் கூப்பிட்டு திட்ட, நான் சொல்லவில்லை என்று மறுக்க, தெளிவாக சிந்திக்கவோ பேசவோ திறன் இல்லாத அந்தப் பதினொரு வயதில் அக்காவின் தோழியான சுதா தான் அப்படி பேசினாள் என்பதையோ எங்கள் வீட்டில் சிறு குழந்தைகளை மட்டுமே அதுவும் செல்லமாகத் தான் ‘அது இது’ என்று பேசுவோம். பெரியவர்களை அப்படிப் பேசும் பழக்கமில்லை (இன்று நான் வசிக்கும் இடத்தில் அக்கம் பக்கத்து மக்கள் “அம்மா வந்துச்சு, அப்பா சொன்னிச்சு, பாட்டி தூங்குது என்று பேசுவதை இயல்பாகக் கொண்டுள்ளனர். வட்டார வழக்கு!) என்பதையோ எடுத்துச் சொல்லத் தெரியவில்லை. அந்த மிஸ்ஸின் கோபமும் எனக்குப் புதிது. இந்த அளவுக்கு அன்றுவரை என்னை யாரும் திட்டியதில்லை. அதிர்ச்சியில் கிளிப்பிள்ளைப் போல்”நான் அப்படிச் சொல்லவில்லை மிஸ்" என்பதையே திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தேன். அந்த மிஸ் " மரியாதை இல்லாம பேசறதையும் பேசிட்டு என்கிட்ட பொய் வேற சொல்றியா? அவ்வளவு நெஞ்சழுத்தமா உனக்கு? வெளிய போ!" என்று விரட்டிவிட்டார். மறு நாள் நான் வகுப்பில் அமர்ந்திருந்ததைப் பார்த்தவுடன் மீண்டும் திட்ட ஆரம்பித்தார். நான் மீண்டும் ‘நான் சொல்லலை மிஸ்’ என்ற பல்லவியைப் பாட “மரியாத தெரியாத பிள்ளைங்களுக்கு, பொய் பேசற பிள்ளைங்களுக்கு இங்க இடமில்ல. வெளிய போ. இனி நீ என் வகுப்புக்கு வரக்கூடாது” என்றார். அடுத்த நாளிலிருந்து அவர் வகுப்பில் நுழையும் முன் நான் வெளியேறி வராந்தாவில் நின்று கொள்வேன். அக்கம் பக்கத்து வகுப்பு மாணவிகள், டீச்சர்கள் என்னை ஒரு மாதிரி பார்க்க ஆரம்பித்தார்கள். ஒரு நாள் க்ரிஸ்ட்ல்லா மிஸ் என்னைக் கூப்பிட்டு விசாரித்தார். அன்பாகப் பேசும் அவரிடம் நடந்ததை விளக்குவது எளிதாக இருந்தது. அவர் என் அக்காவையும் அந்த சுதாவையும் அழைத்து விசாரித்தார். “கவலைப்படாத. நான் அந்த டீச்சர்கிட்ட பேசறேன். புரிஞ்சுக்குவாங்க” என்றார். என்ன காரணத்தினாலோ அந்த டீச்சர் அதையெல்லாம் ஏற்றுக் கொள்ளவில்லை. நான் அவர் வகுப்பில் வெளியே நிற்பது தொடர்ந்தது. சலித்துப் போன நான் ஒரு நாள் அவர் வகுப்பில் நுழைந்து அமர்ந்ததும் உள்ளே சென்று, " நான் தெரியாம அப்டிப் பேசிட்டேன். என்னை மன்னிச்சுடுங்க மிஸ். இனி அப்டிப் பேச மாட்டேன்" என்று செய்யாத தவறுக்கு மன்னிப்பு கேட்டு கெஞ்சினேன். அவர் பெருந்தன்மையாக , " நீ மனசாட்சி உள்ள பிள்ளைதான். அந்த மனசாட்சி உன்னைக் குத்தி இருக்கு. மன்னிப்பு கேக்கற. போய் உக்காரு." என்றார். அதன் பிறகு பொதுவாக என்னை நன்றாக நடத்தினாலும் நான் எதேனும் தவறு செய்தால் உடனே மரியாதை தெரியாத பிள்ளை என்று ஞாபகமாக அதையும் நினைவு கூர்ந்து சேர்த்து வைத்து திட்டுவார். செய்த தவறுக்கு தண்டனைப் பெற்றால் அது அவ்வளவாக பாதிப்பதில்லை. அது நியாயம்தானே என்று ஒரு சமாதானம் இருக்கும். செய்யாத தவறுக்கு தண்டிக்கப்படுவதும் வேறு வழியின்றி மன்னிப்புக் கேட்கும் சூழ்நிலைக்குத் தள்ளப் படுவதும் ஒருவரின் மொரேலை பாதிக்கும் விஷயங்கள். அந்த சிறு வயதில் ஆழமான பயங்களையும் மூட நம்பிக்கைகளையும் எனக்குள் அது ஏற்படுத்தி விட்டது. வருடக் கணக்காக எனக்குப் பிடித்த மஞ்சள் நிற ஆடை அணிவதையும் மஞ்சள் நிறப் பொட்டு வைப்பதையும் தவிர்த்தேன். இது நடந்த அன்று வாசலில் நான் போட்ட கோலத்தை பிறகு ஒரு போதும் போடவில்லை. என் அக்காவின் க்ளாஸ் மேட்களுடன் ஒன்றாய் நடப்பதைத் தவிர்த்தேன். அந்த சவிதாவை எங்கு பார்த்தாலும் ஓடி ஒளிய ஆரம்பித்தேன் - அவள் கண்களில் பட்டுத் தொலைத்தால் மீண்டும் யாரோ பேசும் பேச்சுக்கெல்லாம் என்னை மாட்டிவிட்டு வகுப்புக்கு வெளியே நிற்க வைத்துவிடுவாளோ என்ற பயம். பல நாட்களுக்கு கிட்டத்தட்ட தெனாலியைப் போல் திரிந்தேன். இதை புரிந்து கொண்ட க்ரிஸ்டெல்லா மிஸ் அதற்கு ஈடு செய்யும் விதமாக என்னை லீடராக்கி , ஹோம் வொர்க் செய்ய மறந்து விட்டால் பெரிது படுத்தாமல் என்னைக் கொஞ்சம் செல்லமாகவே வைத்திருந்தார். அவர் இதையெல்லாம் செய்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. மாணவிகள் முகம் வாடாது அவர்களை சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும் என்ற ஆசை உடையவர் அவர். அதற்கு அடுத்த வருடம் யூரோப் போய்விட்டார். சிறிது காலம் கழித்து திரும்பியவர், கன்னியாஸ்த்ரி பயிற்சியில் சேர்ந்து காவி நிறச் சேலை அணிந்து சைக்கிளில் பள்ளியைவிட்டு வெளியே சென்று கொண்டிருந்தார். என்னைப் பார்த்ததும் ப்ரேக் அடித்து நின்று கொஞ்ச நேரம் அளவளாவிவிட்டுதான் போனார். இன்றுவரை அவர் எனக்காக மெனக்கெட்டு விசாரணை நடத்திய விதமும் அவர் இனிமையான குரலும், அவரின் “அட மன்னாரு” வில் இழையோடும் அன்பும் என் நினைவில் அப்படியே இருக்கின்றன. தனிப்பட்ட முறையில் கற்பித்தவர்கள் ஹிந்தி மாஸ்ட்டர் இவர் எங்கள் வீட்டுக்கு மிக அருகே இருந்தவர். எங்கோ வேலை பார்த்துக் கொண்டே காலை மாலை ஹிந்தி சொல்லிக் கொடுத்து மாணவர்களை ஹிந்தி பிரசார் ச்பா பரிட்சைகளுக்கு அனுப்புவார். பொறுமையின் சிகரம். ஹிந்தியில் அதிக ஆர்வம் இல்லாமல் அம்மாவின் வற்புறுத்தலால் ஹிந்தி க்ளாசுக்கு சென்ற நான், அம்மா மேலிருந்த கோபத்தில் ஒரு நாள் நான் ஏன் ஹிந்தி படிக்க வேண்டும்? என்று அவர் பாடம் நடத்தும்போது கவனிக்காமல் நோட்டில் படம் வரைய ஆரம்பித்தேன். பாடத்தை நிறுத்திய அவர் என் நோட்டை வாங்கிப் பார்த்தார். திட்டுவார் என்று நினைத்தேன். " பிள்ளையார் படம் ரொம்ப அழகா போட்டிருக்கியேமா, வெரி குட்" என்றார். அவர் பெருந்தன்மை என்னை சங்கடப் படுத்த அதன் பின் வகுப்பில் படம் வரைவதை விட்டுவிட்டேன். இவர் யாரையும் கடிந்து கொண்டு பார்த்ததில்லை. நோகடித்து பார்த்ததில்லை. வாழ்வில் பல பிரச்சனைகள் வந்தாலும் விட்டு கொடுத்து போகும் அவருடைய குணம் காலனியில் பிரசித்தம். பல வருடங்கள் கழித்து அவரை சந்திக்க நேர்ந்த போதும் அப்படியேதான் இருந்தார். ஒரே காலனிக்காரர்கள் என்ற முறையில் பரஸ்பரம் குடும்ப விஷயங்கள் பேசிக் கொண்டிருந்தபோதும் " விட்டு கொடுத்தவர் கெட்டு போவதில்லை" என்றார். அந்த எண்ணம் ரொம்ப ஆழமாக அவரிடம் இருப்பது அவரை ரொம்ப இனிமையானவராக ஆக்கியிருந்தது. அவருக்கிருக்கும் தன்மையில் பத்து பர்சண்ட் என்னிடம் இருந்தால் நன்/ராக இருக்குமே என்று எண்ணிக் கொண்டே விடை பெற்றேன். ஏ.வி.எஸ் மாமா. இவர் ஈ.வே.ரா காலேஜில் சிறிது காலம் ப்ரின்ஸிபாலாக இருந்தவர். கனித பேராசிரியர். எங்கள் வீட்டில் பேயிங்க் கெஸ்ட்டாக சிறிது காலம் தங்கியிருந்தார். தந்தையின் நண்பர். சௌஜன்யமாக பேசிச் சிரித்து குடும்பத்தில் ஒருவராக மாறிப் போய்விட்டதால் அவர் பெரிய பதவியில் இருந்த ஒரு பேராசிரியர் என்பதெல்லாம் எனக்கு அவ்வளவாக உறைக்காது போனது. எட்டாவதில் சுத்தமாகப் படிக்காமல் விளையாடுவதும் மரம் ஏறுவதுமாக இருந்து ரேங்க் ஐந்தாவதுக்குள்ளிருந்து மெதுவாக பத்தாவதுக்குள் என்றாகி ஒரேயடியாக இருவது தாண்டி போனதால் ஆனுவல் லீவில் அம்மா இவரிடம் மேத்ஸ் படிக்கச் சொல்லிவிட்டார். எல்லோரும் விளையாட்டு, அரட்டை, கதை புத்தகம் என்று இருக்கும் விடுமுறையில் நான் மட்டும் படிக்கவேண்டுமா? அதுவும் கணக்கு! என்ன அநியாயம்! அழுது புரண்டு ரகளை செய்து பார்த்தேன். அதை அம்மாவோ ஹாலில் நாவல் படித்து கொண்டு அமர்ந்திருந்த மாமாவோ காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை. வழக்கம்போல் எத்தனை அழுதாலும் மசியாத அம்மாவிடம் ரகளை செய்வது வேஸ்ட் ஆஃப் டைம் என்பது உறைத்ததும் கண்ணைத் துடைத்துக் கொண்டு க்ளாசில் ஒழுங்காக கவனிக்காமல் ஹோம்வர்க் கொடுத்தால் செய்யாமல் அந்த மாமாவையாவது படுத்தி என் கோபத்தைத் தீர்த்து கொள்ளும் முடிவோடு அவரிடம் போனேன். அந்த மாமா புத்திசாலி. எனக்கு வரைவதில் க்ராஃப்ட் வர்க் செய்வதிலெல்லாம் இருந்த ஆர்வம் தெரிந்திருந்ததால் எடுத்தவுடன் ஜியாமெட்ரி மென்சுரேஷன் என்று என்னை பேப்பர் கத்திரிக்கோல் கொண்டு வரச் சொல்லி ஒவ்வொரு ஷேப்பாகக் கட் பண்ணி மெதுவாக ரேடியஸ், ஏரியா, சர்கம்ஃப்ரன்ஸ் என்று சொல்லிக் கொடுத்து நைசாக என்னை ஆர்வமாக கணக்குகள் போட வைத்துவிட்டார். நான் அதே முறையில் என் தோழிக்கும் கட் செய்து விளக்கி பீற்றிக் கொண்டேன். அதன் பிறகு அவ்வப்போது கொஞ்சம் டிமிக்கி கொடுத்தாலும் பெரும்பாலும் அவரிடம் ஒழுங்காகக் கற்றுக் கொண்டேன் ஒழுங்காக ஹோம்வர்க் செய்தேன். கஷ்ட்டமான கணக்குகள் வரும்போது அதை விளக்கி முடித்ததும் “அவ்ளோதான்!” என்பார். அந்த அவ்ளோதான் ஒரு மந்திரச் சொல்லைப் போல் எனக்கு வேலை செய்தது. கணித பேராசிரியராகவும் ஒரு கல்லூரியின் பிரின்ஸிபாலாகவும் இருந்தவருக்கு என்னைப் போல் ஒரு ரெண்டுன்கெட்டான் அரைவேக்காடு எட்டங்க்ளாஸுக்கு சொல்லித்தரும் பொறுமை இருந்ததுதான் ஆச்சர்யம். அவர் புண்ணியத்தில் ஒரு ஃபார்முலாவை மனப்பாடம் செய்து குருட்டாம்போக்கில் கணக்கை சால்வ் செய்ய முய்ற்சிக்கும் பழக்கம் போய் ஒவ்வொரு ஃபார்முலாவையும் அலசி புரிந்துக்கொள்ளும் முயற்சி ஏற்பட்டது. ஒவ்வொரு கணக்கையும் நிதானமாகப் படித்துப் பார்த்து என்ன கேட்கப்பட்டிருக்கிறது என்பதை புரிந்து கொண்டு விடை எழுத ஆரம்பிக்கும் பழக்கமும் வந்தது. ஆனால் கவனமினமையால் எப்போதும் கூட்டல் கழித்தல் தவறுகள் இருக்கத்தான் செய்தது. என் பத்தாவது ரிசல்டை அவருக்கு ஃபோன் செய்து சொன்னபோது அம்மா கணக்கில் நான் செண்ட்டம் வாங்கவில்லை குறைப்பட்டுக் கொண்டாள். அவர் “அதனால என்னம்மா? சயின்ஸ்ல 98 ப்ர்சண்ட் வாங்கியிருக்காளே?” என்று அம்மாவைச் சமாதானம் செய்தார். சேஷாத்ரி மாமா. பன்னிரண்டாவதில் அம்மா இறந்து வரிசையாக சடங்குகள் இருக்க, கிட்டத்தட்ட பதினைந்து நாட்கள் நான் லீவ் போடும்படி ஆனது.அதில் க்ளாசில் கணக்கில் ஒரு சேப்ட்டரே முடிந்துவிட அந்த ஒரு சேப்ட்டர் மட்டும் ஞாயிறுகளில் அப்பாவின் தோழரான சேஷாத்ரி மாமாவிடம் பயின்றேன். அப்போதிருந்த மனநிலையில் நான் கொஞ்சம் இயந்திரத்தனமாகவே படித்தேன். எனக்கு அந்த மாமா பேசுவது எதுவதும் மனதில் பதியவில்லை. ஒருமுறை " எக்ஸ் டிவைடட் பை ஸீரோ இஸ்…" என்று ஆரம்பிக்க, நான் இயந்திர கதியில் “இன்ஃபினிட்டி” என்றேன். அவர் சிரித்தார். “இத சொல்லி குடுத்திருப்பாங்க. எநி நம்பர் பை ஸீரோ ஏன் இன்ஃபினிட்டி தெரியுமா?” என்றதும் நான் என்னை அறியாமல் இயந்திர கதியில் இருந்து விடுப்பட்டு " அது தெரியாதே" என்றேன் ஆர்வமாக. எனக்கு அந்த கேள்வி எப்போதுமே உண்டு. யாரிடமும் கேட்கத் தோன்றியதில்லை. அவர் தொடர்ந்தார். " என் கைல ஒரு ஆப்பிள் இருக்கு. அத நாலா கட் பண்றேன். எத்தனைப் பேருக்கு குடுக்கலாம்?" " நாலு பேருக்கு" " பத்து பீஸா கட் பண்ணா?" " பத்து பேருக்கு" " எத்தன பீஸா கட் பண்றேனோ அத்தனைப் பேருக்கு குடுக்கலாம் இல்லையா? அதாவது எத்தனையால டிவைட் பண்றேணோ அத்தனை. இப்போ நான் கட் பண்ணவே இல்லை. அதாவ்து டிவைட் பை ஸீரோ . எத்தனைபேருக்கு ப்ராமிஸ் பண்ணல்லாம்? எத்தனைப் பேருக்கு வேணாலும் இல்லயா?….அதனால இன்ஃபினிட்டி" என்றார். ஆகா! என்றேன். அதன் பிறகு எல்லா பிரச்சனைகளயும் மறந்து உற்சாகமாகக் கற்க ஆரம்பித்தேன். அந்த ஒரு விஷயம் ஒரு விளக்கம் அவர் சொன்னது அப்படியே பதிந்து இன்றுவரை நினைவில் இருக்கிறது. முடிவுரை என்னைப் பொறுத்தவரை இந்த ஆசிரியர்கள் ஒவ்வொருவருமே நல்லாசிரியர் விருது பெறத் தகுதியானவர் தான். இவர்களைத் தவிரவும் எனக்குக் கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள் பலரையும் எனக்கு நினைவிருக்கிறது. அவர்களோடு நான் அதிகம் பழகியதோ பேசியதோ இல்லை என்பதால்தான் இந்த நூலில் அவர்களைப் பற்றி நான் எழுதவில்லையே தவிர அவர்கள் அனைவரும் என் மரியாதைக்குரியவர்களே. அனைவருக்கும் என் நன்றியை உரித்தாக்குகிறேன். B ஷிவார்ப்பணா. (shivarpana.bee@gmail.com) FREETAMILEBOOKS.COM மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? அமேசான் கிண்டில் கருவியில் தமிழ் ஆதரவு தந்த பிறகு, தமிழ் மின்னூல்கள் அங்கே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை நாம் பதிவிறக்க இயலாது. வேறு யாருக்கும் பகிர இயலாது. சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FREETAMILEBOOKS.COM இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. http://www.vinavu.com 2. http://www.badriseshadri.in  3. http://maattru.com  4. http://www.kaniyam.com  5. http://blog.ravidreams.net  எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் CREATIVE COMMONS உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். துவக்கம் உங்களது வலைத்தளம் அருமை (வலைதளத்தின் பெயர்). தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/  நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM  FB : https://www.facebook.com/FreeTamilEbooks  G plus: https://plus.google.com/communities/108817760492177970948    நன்றி. முடிவு மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைFREETAMILEBOOKSTEAM@GMAIL.COM எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.  ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும்.   மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.  தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.  எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.  - EMAIL : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM   - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks   - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948   இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/    SUPPORTED BY கணியம் அறக்கட்டளை http://kaniyam.com/foundation     கணியம் அறக்கட்டளை []   தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும்  கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு  – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.   தற்போதைய செயல்கள் - கணியம் மின்னிதழ் – http://kaniyam.com - கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச தமிழ் மின்னூல்கள் – http://FreeTamilEbooks.com   கட்டற்ற மென்பொருட்கள் - உரை ஒலி மாற்றி –  Text to Speech - எழுத்துணரி – Optical Character Recognition - விக்கிமூலத்துக்கான எழுத்துணரி - மின்னூல்கள் கிண்டில் கருவிக்கு அனுப்புதல் – Send2Kindle - விக்கிப்பீடியாவிற்கான சிறு கருவிகள் - மின்னூல்கள் உருவாக்கும் கருவி - உரை ஒலி மாற்றி – இணைய செயலி - சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஐஒஎஸ் செயலி - WikisourceEbooksReportஇந்திய மொழிகளுக்ககான விக்கிமூலம் மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல் - FreeTamilEbooks.com – Download counter மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல்   அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள்   - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - முழு நேர நிரலரை பணியமர்த்தி பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குதல் - தமிழ் NLP க்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல் - கணியம் வாசகர் வட்டம் உருவாக்குதல் - கட்டற்ற மென்பொருட்கள், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வளங்களை உருவாக்குபவர்களைக் கண்டறிந்து ஊக்குவித்தல் - கணியம் இதழில் அதிக பங்களிப்பாளர்களை உருவாக்குதல், பயிற்சி அளித்தல் - மின்னூலாக்கத்துக்கு ஒரு இணையதள செயலி - எழுத்துணரிக்கு ஒரு இணையதள செயலி - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - http://OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல் - தமிழ்நாடு முழுவதையும் http://OpenStreetMap.org ல் வரைதல் - குழந்தைக் கதைகளை ஒலி வடிவில் வழங்குதல் - http://Ta.wiktionary.org ஐ ஒழுங்குபடுத்தி API க்கு தோதாக மாற்றுதல் - http://Ta.wiktionary.org க்காக ஒலிப்பதிவு செய்யும் செயலி உருவாக்குதல் - தமிழ் எழுத்துப் பிழைத்திருத்தி உருவாக்குதல் - தமிழ் வேர்ச்சொல் காணும் கருவி உருவாக்குதல் - எல்லா http://FreeTamilEbooks.com மின்னூல்களையும் Google Play Books, GoodReads.com ல் ஏற்றுதல் - தமிழ் தட்டச்சு கற்க இணைய செயலி உருவாக்குதல் - தமிழ் எழுதவும் படிக்கவும் கற்ற இணைய செயலி உருவாக்குதல் ( aamozish.com/Course_preface போல)   மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை  kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.   வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், 100% வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும்.இந்த இணைப்பில் செயல்களையும், இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account   UPI செயலிகளுக்கான QR Code []   குறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும். Note: Sometimes UPI does not work properly, in that case kindly use Account number and IFSC code for internet banking.